42. ஸூரத்துஷ் ஷூரா (கலந்தாலோசித்தல்)

மக்கீ, வசனங்கள்: 53

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
كَذٰلِكَ یُوْحِیْۤ اِلَیْكَ وَاِلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكَ ۙ اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
كَذٰلِكَஇவ்வாறுதான்يُوْحِىْۤவஹீ அறிவித்தான்اِلَيْكَஉமக்கும்وَاِلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكَۙஉமக்கு முன்னுள்ளவர்களுக்கும்اللّٰهُஅல்லாஹ்الْعَزِيْزُமிகைத்தவனும்الْحَكِيْمُ‏மகா ஞானவானும்
கதாலிக யூஹீ இலய்க வ இலல் லதீன மின் கBப்லிகல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
(நபியே!) இது போன்றே அல்லாஹ் உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்றான்; அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَهُوَ الْعَلِیُّ الْعَظِیْمُ ۟
لَهٗஅவனுக்குத்தான்مَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவையும்وَمَا فِى الْاَرْضِ‌ؕபூமியில்உள்ளவையும்وَهُوَஅவன்தான்الْعَلِىُّமிக உயர்ந்தவன்الْعَظِيْمُ‏மிக மகத்தானவன்
லஹூ மா Fபிஸ் ஸமா வாதி வமா Fபில் அர்ளி வ ஹுவல் 'அலியுல் 'அளீம்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (சொந்தமானவையாகும்!) மேலும் அவன் மிகவும் உயர்ந்தவன், மகத்தானவன்.
تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلٰٓىِٕكَةُ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِی الْاَرْضِ ؕ اَلَاۤ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
تَـكَادُநெருங்கி விடுகின்றனالسَّمٰوٰتُவானங்கள்يَتَفَطَّرْنَ(அவை) பிளந்துவிடுவதற்குمِنْ فَوْقِهِنَّ‌அவற்றுக்கு மேல் உள்ளوَالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்يُسَبِّحُوْنَதுதிக்கின்றனர்بِحَمْدِபுகழ்ந்துرَبِّهِمْதங்கள் இறைவனைوَيَسْتَغْفِرُوْنَஇன்னும் பாவமன்னிப்புக் கேட்கின்றனர்لِمَنْ فِى الْاَرْضِ‌ؕபூமியில் உள்ளவர்களுக்காகاَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّ اللّٰهَ هُوَநிச்சயமாக அல்லாஹ்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُ‏மகாக் கருணையாளன்
தகாதுஸ் ஸமாவாது யதFபத்தர்ன மின் Fபவ்கிஹின்ன்; வல்மலா'இகது யுஸBப்Bபிஹூன Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ யஸ்தக்Fபிரூன லிமன் Fபில் அர்ள்; அலா இன்னல் லாஹ ஹுவல் கFபூருர் ரஹீம்
அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்; அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
وَالَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ اللّٰهُ حَفِیْظٌ عَلَیْهِمْ ۖؗ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اتَّخَذُوْاஅவர்கள் எடுத்துக் கொண்டார்களோمِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاَوْلِيَآءَஉதவியாளர்களாகاللّٰهُஅல்லாஹ்தான்حَفِيْظٌகண்காணிப்பவன்عَلَيْهِمْ‌ۖஅவர்கள் மீதுوَمَاۤ اَنْتَநீர் இல்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுبِوَكِيْلٍ‏பொறுப்பாளர்
வல்லதீனத் தகதூ மின் தூனிஹீ அவ்லியா'அல் லாஹு ஹFபீளுன் 'அலய்ஹிம் வ மா அன்த 'அலய்ஹிம் Bபிவகீல்
அவனையன்றி(த் தங்களுக்கு வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்; நீர் அவர்கள் மேல் பொறுப்பாளர் அல்லர்.
وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ قُرْاٰنًا عَرَبِیًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰی وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ یَوْمَ الْجَمْعِ لَا رَیْبَ فِیْهِ ؕ فَرِیْقٌ فِی الْجَنَّةِ وَفَرِیْقٌ فِی السَّعِیْرِ ۟
وَكَذٰلِكَஇவ்வாறுதான்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குقُرْاٰنًاகுர்ஆனைعَرَبِيًّاஅரபி மொழியில்لِّـتُـنْذِرَநீர் எச்சரிப்பதற்காகاُمَّ الْقُرٰىமக்காவாசிகளைوَمَنْ حَوْلَهَاஇன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களைوَتُنْذِرَஇன்னும் நீர் எச்சரிப்பதற்காகيَوْمَமறுமை நாளைப் பற்றிالْجَمْعِஒன்று சேர்க்கப்படும்لَا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهِ‌ؕஅதில்فَرِيْقٌஓர் அணிفِى الْجَنَّةِசொர்க்கத்தில்وَفَرِيْقٌஇன்னும் ஓர் அணிفِى السَّعِيْرِ‏நரகத்தில்
வ கதாலிக அவ்ஹய்னா ல்லய்க குர்ஆனன் 'அரBபிய்யல் லிதுன்திர உம்மல் குரா வ மன் ஹவ்லஹா வ துன்திர யவ்மல் ஜம்'இ லா ரய்Bப Fபீஹ்; Fபரீகுன் Fபில் ஜன்னதி வ Fபரீகுன் Fபிஸ்ஸ'ஈர்
அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும்) அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி மொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீ அறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகத்திலும் இருக்கும்.
وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
وَلَوْ شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَجَعَلَهُمْஅவர்களை ஆக்கியிருப்பான்اُمَّةًமார்க்கமுடையவர்களாகوَّاحِدَةًஒரே ஒருوَّلٰـكِنْஎன்றாலும்يُّدْخِلُநுழைக்கின்றான்مَنْ يَّشَآءُதான் நாடியவர்களைفِىْ رَحْمَتِهٖ‌ؕதனது அருளில்وَالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்مَا لَهُمْஅவர்களுக்கு இல்லைمِّنْ وَّلِىٍّஎந்த பாதுகாவலரும்وَّلَا نَصِيْرٍ‏எந்த உதவியாளரும் இல்லை
வ லவ் ஷா'அல் லாஹு லஜ'அலஹும் உம்மத(ன்)வ் வாஹி தத(ன்)வ் வலாகி(ன்)ய் யுத்கிலும(ன்)ய் யஷா'உ Fபீ ரஹ்மதிஹ்; வள் ளாலிமூன மா லஹும் மி(ன்)வ் வலிய்யி(ன்)வ் வலா னஸீர்
அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக - சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் - கிருபையில் - நுழைவிப்பான்; அநியாயக்காரர்களுக்குப் பாதுகாவலர்களோ, உதவிபுரிபவர்களோ இல்லை.
اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ۚ فَاللّٰهُ هُوَ الْوَلِیُّ وَهُوَ یُحْیِ الْمَوْتٰی ؗ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
اَمِ اتَّخَذُوْاஅவர்கள் எடுத்துக் கொண்டார்களா?مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاَوْلِيَآءَ‌ۚபாதுகாவலர்களைفَاللّٰهُ هُوَஅல்லாஹ்தான்الْوَلِىُّபாதுகாவலன்وَهُوَஇன்னும் அவன்தான்يُحْىِஉயிர்ப்பிப்பான்الْمَوْتٰىஇறந்தவர்களைوَهُوَஇன்னும் அவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
அமித் தகதூ மின் தூனிஹீ அவ்லியா'அ Fபல்லாஹு ஹுவல் வலிய்யு வ ஹுவ யுஹ்யில் மவ்தா வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
(நபியே!) அவர்கள் அல்லாஹ்வை அன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ்வோ அவன் தான் பாதுகாவலனாக இருக்கின்றான், அவனே இறந்தோரை உயிர்ப்பிக்கிறான் - அவனே எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
وَمَا اخْتَلَفْتُمْ فِیْهِ مِنْ شَیْءٍ فَحُكْمُهٗۤ اِلَی اللّٰهِ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبِّیْ عَلَیْهِ تَوَكَّلْتُ ۖۗ وَاِلَیْهِ اُنِیْبُ ۟
وَمَاஎதுاخْتَلَـفْتُمْமுரண்படுகிறீர்களோفِيْهِஅதில்مِنْ شَىْءٍஎந்த ஒரு விஷயம்فَحُكْمُهٗۤஅதன் இறுதி தீர்ப்புاِلَى اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின் பக்கம்தான்ذٰ لِكُمُ اللّٰهُஅந்த அல்லாஹ்தான்رَبِّىْஎன் இறைவன்عَلَيْهِஅவன் மீதேتَوَكَّلْتُۖநம்பிக்கை வைத்துள்ளேன்وَاِلَيْهِஇன்னும் அவன் பக்கமேاُنِيْبُ‏திரும்புகின்றேன்
வ மக்-தலFப்தும் Fபீஹி மின் ஷய்'இன் Fபஹுக்முஹூ இலல்லாஹ்; தாலிகுமுல் லாஹு ரBப்Bபீ 'அலய்ஹி தவக்கல்து வ இலய்ஹி உனீBப்
நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.
فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّمِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا ۚ یَذْرَؤُكُمْ فِیْهِ ؕ لَیْسَ كَمِثْلِهٖ شَیْءٌ ۚ وَهُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
فَاطِرُபடைத்தவன்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضِ‌ؕபூமியையும்جَعَلَஏற்படுத்தினான்لَـكُمْஉங்களுக்குمِّنْ اَنْفُسِكُمْஉங்களிலிருந்தேاَزْوَاجًاஜோடிகளை(யும்)وَّ مِنَ الْاَنْعَامِஇன்னும் கால்நடைகளில்اَزْوَاجًا‌ ۚஜோடிகளை(யும்)يَذْرَؤُபடைக்கின்றான்كُمْஉங்களைفِيْهِ‌ ؕ لَيْسَஅதில்/இல்லைكَمِثْلِهٖஅவனைப் போன்றுشَىْءٌ ۚஎதுவும்وَهُوَஅவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْبَصِيْرُ‏நன்கு பார்ப்பவன்
Fபாதிருஸ் ஸமாவாதி வல் அர்ள்; ஜ'அல லகும் மின் அன்Fபுஸிகும் அZஜ்வாஜ(ன்)வ் வ மினல் அன்'ஆமி அZஜ்வாஜய் யத்ர'உகும் Fபீஹ்; லய்ஸ கமித்லிஹீ ஷய்'உ(ன்)வ் வ ஹுவஸ் ஸமீ'உல் Bபஸீர்
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.
لَهٗ مَقَالِیْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
لَهٗஅவனுக்கே உரியனمَقَالِيْدُசாவிகள்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ۚஇன்னும் பூமிيَبْسُطُவிரிவாக்குகின்றான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குوَيَقْدِرُ‌ؕஇன்னும் சுருக்குகின்றான்اِنَّهٗநிச்சயமாக அவன்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன் ஆவான்
லஹூ மகாலீதுஸ் ஸமாவாதி வல் அர்ளி யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; இன்னஹூ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ 
شَرَعَசட்டமாக்கினான்لَـكُمْஉங்களுக்கு(ம்)مِّنَ الدِّيْنِமார்க்கத்தில்مَاஎதைوَصّٰىஉபதேசித்தானோبِهٖஅதையேنُوْحًاநூஹூக்குوَّالَّذِىْۤஇன்னும் எதைاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோமோاِلَيْكَஉமக்குوَمَاஇன்னும் எதுوَصَّيْنَاநாம் உபதேசித்தோமோبِهٖۤஅதைاِبْرٰهِيْمَஇப்ராஹீம்وَمُوْسٰىஇன்னும் மூஸாوَعِيْسٰٓىஇன்னும் ஈஸா(விற்கு)اَنْ اَقِيْمُواநிலை நிறுத்துங்கள்!الدِّيْنَஇந்த மார்க்கத்தைوَ لَا تَتَفَرَّقُوْاநீங்கள் பிரிந்து விடாதீர்கள்!فِيْهِ‌ؕஅதில்كَبُـرَமிக பாரமாக ஆகிவிட்டதுعَلَى الْمُشْرِكِيْنَஇணைவைப்பவர்களுக்குمَاஎதுتَدْعُوْஅழைக்கின்றீரோهُمْஅவர்களைاِلَيْهِ‌ ؕஅதன் பக்கம்اَللّٰهُஅல்லாஹ்يَجْتَبِىْۤதேர்ந்தெடுக்கின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يَّشَآءُதான் நாடுகின்றவர்களைوَيَهْدِىْۤஇன்னும் வழி காட்டுகின்றான்اِلَيْهِதன் பக்கம்مَنْ يُّنِيْبُ‏திரும்புகின்றவர்களுக்கு
ஷர'அ லகும் மினத் தீனி மா வஸ்ஸா Bபிஹீ னூஹ(ன்)வ் வல்லதீ அவ்ஹய்னா இலய்க வமா வஸ்ஸய்னா Bபிஹீ இBப்ராஹீம வ மூஸா வ 'ஈஸா அன் அகீமுத் தீன வலா ததFபர்ரகூ Fபீஹ்; கBபுர 'அலல் முஷ்ரிகீன மா தத்'ஊஹும் இலய்ஹ்; அல்லாஹு யஜ்தBபீ இலய்ஹி மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மய் யுனீBப்
நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: “நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்” என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْیًا بَیْنَهُمْ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی لَّقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّ الَّذِیْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْ بَعْدِهِمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَمَا تَفَرَّقُوْۤاஅவர்கள் பல பிரிவுகளாக பிரியவில்லைاِلَّاதவிரمِنْۢ بَعْدِ مَا جَآءَவந்ததன் பின்னரேهُمُதங்களிடம்الْعِلْمُகல்விبَغْيًاۢபொறாமையினால்தான்بَيْنَهُمْ‌ؕதங்களுக்கு மத்தியில்وَلَوْلَاஇருக்கவில்லை என்றால்كَلِمَةٌஒரு வாக்குسَبَقَتْமுந்தி(யது)مِنْ رَّبِّكَஉமது இறைவன் புறத்தில் இருந்துاِلٰٓى اَجَلٍஒரு தவணை வரைمُّسَمًّىகுறிப்பிட்டلَّقُضِىَதீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُمْ‌ؕஅவர்களுக்கு மத்தியில்وَ اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اُوْرِثُواகொடுக்கப்பட்டவர்கள்الْكِتٰبَவேதம்مِنْۢ بَعْدِபின்னர்هِمْஇவர்களுக்குلَفِىْ شَكٍّசந்தேகத்தில்مِّنْهُஅதில்مُرِيْبٍ‏பெரிய
வமா தFபர்ரகூ இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக இலா அஜலிம் முஸம்மல் லகுளிய Bபய்னஹும்; வ இன்னல் லதீன ஊரிதுல் கிதாBப மிம் Bபஃதிஹிம் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
فَلِذٰلِكَ فَادْعُ ۚ وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ ۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ ۚ وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ ۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَیْنَكُمْ ؕ اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ ؕ لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؕ لَا حُجَّةَ بَیْنَنَا وَبَیْنَكُمْ ؕ اَللّٰهُ یَجْمَعُ بَیْنَنَا ۚ وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟ؕ
فَلِذٰلِكَஇதன் பக்கமேفَادْعُ‌ ۚநீர் அழைப்பீராகوَاسْتَقِمْஇன்னும் நீர் நிலையாக நீடித்து இருப்பீராகكَمَاۤ اُمِرْتَ‌ۚநீர் கட்டளையிடப்பட்டது போன்றேوَلَا تَتَّبِعْநீர் பின்பற்றாதீர்اَهْوَآءَமன விருப்பங்களைهُمْ‌ۚஅவர்களின்وَقُلْஇன்னும் நீர் கூறுவிராகاٰمَنْتُநான் நம்பிக்கை கொண்டேன்بِمَاۤ اَنْزَلَஇறக்கியதைاللّٰهُஅல்லாஹ்مِنْ كِتٰبٍ‌ۚவேதங்களில் இருந்துوَاُمِرْتُபணிக்கப்பட்டுள்ளேன்لِاَعْدِلَநீதமாக நடக்க வேண்டும் என்றுبَيْنَكُمُ‌ؕஉங்களுக்கு மத்தியில்اَللّٰهُஅல்லாஹ்தான்رَبُّنَاஇன்னும் உங்களுக்குوَرَبُّكُمْ‌ؕஇன்னும் உங்கள் அமல்கள்لَـنَاۤஎங்களுக்குاَعْمَالُـنَاஎங்கள் அமல்கள்وَلَـكُمْஇன்னும் உங்களுக்குاَعْمَالُكُمْ‌ۚஉங்கள் அமல்கள்لَا حُجَّةَசண்டை வேண்டாம்بَيْنَنَاநமக்கு மத்தியிலும்وَبَيْنَكُمُ‌ؕஉங்களுக்கு மத்தியிலும்اَللّٰهُஅல்லாஹ்தான்يَجْمَعُஒன்று சேர்ப்பான்بَيْنَنَا‌ۚநமக்கு மத்தியில்وَاِلَيْهِஅவன் பக்கமேالْمَصِيْرُؕ‏மீளுமிடம்
Fபலிதாலிக Fபத்'உ வஸ்தகிம் கமா உமிர்த வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் வ குல் ஆமன்து Bபிமா அன்Zஜலல் லாஹு மின் கிதாBப், வ உமிர்து லி அஃதில Bபய்னகும் அல்லாஹு ரBப்Bபுனா வ ரBப்Bபுகும் லனா அஃமா லுனா வ லகும் அஃமாலுகும் லா ஹுஜ்ஜத Bபய்னனா வ Bபய்ன குமுல் லாஹு யஜ்ம'உ Bபய்னனா வ இலய்ஹில் மஸீர்
எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது” என்றும் கூறுவீராக.
وَالَّذِیْنَ یُحَآجُّوْنَ فِی اللّٰهِ مِنْ بَعْدِ مَا اسْتُجِیْبَ لَهٗ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَیْهِمْ غَضَبٌ وَّلَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟
وَالَّذِيْنَ يُحَآجُّوْنَஎவர்கள் தர்க்கம் செய்கின்றார்களோفِى اللّٰهِஅல்லாஹ்வின் விஷயத்தில்مِنْۢ بَعْدِபின்னர்مَا اسْتُجِيْبَஏற்றுக்கொண்டதன்لَهٗஅவனைحُجَّتُهُمْஅவர்களின்வாதங்கள்دَاحِضَةٌவீணானதே!عِنْدَ رَبِّهِمْஅல்லாஹ்விடம்وَعَلَيْهِمْஇன்னும் அவர்கள் மீது இறங்கும்غَضَبٌகோபம்وَّلَهُمْஇன்னும் அவர்களுக்கு உண்டுعَذَابٌவேதனையும்شَدِيْدٌ‏கடுமையான
வல்லதீன யுஹாஜ்ஜூன Fபில் லாஹி மிம் Bபஃதி மஸ்துஜீBப லஹூ ஹுஜ்ஜதுஹும் தாஹிளதுன் 'இன்த ரBப்Bபிஹிம் வ 'அலய்ஹிம் களBபு(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் ஷதீத்
எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.
اَللّٰهُ الَّذِیْۤ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِیْزَانَ ؕ وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِیْبٌ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِىْۤஎப்படிப்பட்டவன்اَنْزَلَஇறக்கினான்الْكِتٰبَவேதத்தையும்بِالْحَقِّசத்தியத்துடன்وَالْمِيْزَانَ‌ؕதராசையும்وَمَا يُدْرِيْكَஉமக்கு எது அறிவிக்கும்?لَعَلَّ السَّاعَةَமறுமைقَرِيْبٌ‏மிக சமீபமானது
அல்லாஹுல் லதீ அன்Zஜலல் கிதாBப Bபில்ஹக்கி வல் மீZஜான்; வ ம யுத்ரீக ல'அல்லஸ் ஸா'அத கரீBப்
அல்லாஹ்தான் இந்த வேதத்தையும் நீதியையும் உண்மையையும் கொண்டு இறக்கி அருளினான்; இன்னும் (நபியே! தீர்ப்புக்குரிய) அவ்வேளை சமீபமாக இருக்கிறது என்பதை நீர் அறிவீரா?
یَسْتَعْجِلُ بِهَا الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِهَا ۚ وَالَّذِیْنَ اٰمَنُوْا مُشْفِقُوْنَ مِنْهَا ۙ وَیَعْلَمُوْنَ اَنَّهَا الْحَقُّ ؕ اَلَاۤ اِنَّ الَّذِیْنَ یُمَارُوْنَ فِی السَّاعَةِ لَفِیْ ضَلٰلٍ بَعِیْدٍ ۟
يَسْتَعْجِلُஅவசரமாகத் தேடுகின்றனர்بِهَاஅதைالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِهَا‌ ۚநம்பிக்கை கொள்ளாதவர்கள்/அதைوَالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்مُشْفِقُوْنَபயப்படுகின்றனர்مِنْهَا ۙஅதைوَيَعْلَمُوْنَஇன்னும் அறிவார்கள்اَنَّهَاநிச்சயமாக அதுالْحَقُّ ؕஉண்மைதான்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّ الَّذِيْنَ يُمَارُوْنَநிச்சயமாக தர்க்கிப்பவர்கள்فِى السَّاعَةِமறுமை விஷயத்தில்لَفِىْ ضَلٰلٍۢவழிகேட்டில்தான்بَعِيْدٍ‏வெகு தூரமான
யஸ்தஃஜிலு Bபிஹல் லதீன லா யு'மினூன Bபிஹா வல்லதீன ஆமனூ முஷ்Fபிகூன மின்ஹா வ யஃலமூன அன்னஹல் ஹக்க்; அலா இன்னல் லதீன யுமாரூன Fபிஸ் ஸா'அதி லFபீ ளலாலின் Bப'ஈத்
அதன் மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதைப்பற்றி அவசரப்படுகின்றனர்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அதனை (நினைத்து) பயப்படுகிறார்கள்; நிச்சயமாக அது உண்மையே என்பதை அவர்கள் அறிகிறார்கள்; அறிந்து கொள்க: அவ்வேளை குறித்து எவர்கள் வீண்வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் நெடிய வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
اَللّٰهُ لَطِیْفٌ بِعِبَادِهٖ یَرْزُقُ مَنْ یَّشَآءُ ۚ وَهُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟۠
اَللّٰهُஅல்லாஹ்தான்لَطِيْفٌۢமிக கருணையும் தயவும் உடையவன்بِعِبَادِهٖதன் அடியார்கள் மீதுيَرْزُقُஉணவளிக்கின்றான்مَنْ يَّشَآءُ‌ۚதான் நாடுகின்றவர்களுக்குوَهُوَஅவன்தான்الْقَوِىُّமிக வலிமை உள்ளவன்الْعَزِيْزُ‏மிகைத்தவன்
அல்லாஹு லதீFபும் Bபி'இBபாதிஹீ யர்Zஜுகு மய் யஷா'உ வ ஹுவல் கவிய்யுல் 'அZஜீZஜ்
அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
مَنْ كَانَ یُرِیْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِیْ حَرْثِهٖ ۚ وَمَنْ كَانَ یُرِیْدُ حَرْثَ الدُّنْیَا نُؤْتِهٖ مِنْهَا ۙ وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ نَّصِیْبٍ ۟
مَنْயார்كَانَஇருப்பாரோيُرِيْدُநாடுகின்றவராகحَرْثَவிளைச்சலைالْاٰخِرَةِமறுமையின்نَزِدْநாம் அதிகப்படுத்துவோம்لَهٗஅவருக்குفِىْ حَرْثِهٖ‌ۚஅவருடைய விளைச்சலில்وَمَنْஇன்னும் யார்كَانَஇருப்பாரோيُرِيْدُநாடுகின்றவராகحَرْثَவிளைச்சலைالدُّنْيَاஉலகத்தின்نُؤْتِهٖஅவருக்கு நாம் கொடுப்போம்مِنْهَاஅதில் இருந்துوَمَاஇல்லைلَهٗஅவருக்குفِى الْاٰخِرَةِமறுமையில்مِنْ نَّصِيْبٍ‏எவ்வித பங்கும்
மன் கான யுரீது ஹர்தல் ஆகிரதி னZஜித் லஹூ Fபீ ஹர்திஹீ வ மன் கான யுரீது ஹர்தத் துன்யா னு'திஹீ மின்ஹா வமா லஹூ Fபில் ஆகிரதி மின் னஸீBப்
எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ அவருடைய விளைச்சலை நாம் அவருக்காக அதிகப்படுத்துவோம்; எவர் இவ்வுலகின் விளைச்சலை மட்டும் விரும்புகிறாரோ, அவருக்கு நாம் அதிலிருந்து ஓரளவு கொடுக்கிறோம் - எனினும் அவருக்கு மறுமையில் யாதொரு பங்கும் இல்லை.
اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّیْنِ مَا لَمْ یَاْذَنْ بِهِ اللّٰهُ ؕ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّ الظّٰلِمِیْنَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اَمْ لَهُمْஇவர்களுக்கு உண்டா?شُرَكٰٓؤُاஇணைதெய்வங்களும்شَرَعُوْاசட்டமாக்(கு)கி(ன்ற)னர்لَهُمْஇவர்களுக்குمِّنَ الدِّيْنِமார்க்கத்தில்مَا لَمْ يَاْذَنْۢஎதை/அனுமதிக்கவில்லையோبِهِஅதைاللّٰهُ‌ؕஅல்லாஹ்وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِதீர்ப்பின் வாக்கு மட்டும்/இல்லை என்றால்لَقُضِىَதீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُمْ‌ؕஅவர்களுக்கு மத்தியில்وَاِنَّநிச்சயமாகالظّٰلِمِيْنَஅநியாயக்காரர்கள்لَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌவேதனைاَلِيْمٌ‏வலி தரக்கூடியது
அம் லஹும் ஷுரகா'உ ஷர'ஊ லஹும் மினத் தீனி மா லம் ய'தன் Bபிஹில் லாஹ்; வ லவ் லா கலிமதுல் Fபஸ்லி லகுளிய Bபய்னஹும்; வ இன்னள் ளாலிமீன லஹும் 'அதாBபுன் அலீம்
அல்லது: அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? மேலும், (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் - நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
تَرَی الظّٰلِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ رَوْضٰتِ الْجَنّٰتِ ۚ لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟
تَرَىநீர் பார்ப்பீர்!الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களைمُشْفِقِيْنَபயந்தவர்களாகمِمَّا كَسَبُوْاஅவர்கள் செய்தவற்றின் காரணமாகوَهُوَ وَاقِعٌۢஅது நிகழ்ந்தே தீரும்بِهِمْ‌ؕஅவர்களுக்குوَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைفِىْ رَوْضَاتِசோலைகளில்الْجَـنّٰتِ‌ۚசொர்க்கங்களின்لَهُمْஅவர்களுக்கு உண்டுمَّا يَشَآءُوْنَஅவர்கள் நாடுகின்றவைعِنْدَ رَبِّهِمْ‌ؕஅவர்களின் இறைவனிடம்ذٰلِكَ هُوَஇதுதான்الْفَضْلُசிறப்பாகும்الْكَبِيْرُ‏மிகப் பெரிய
தரள் ளாலிமீன முஷ்Fபிகீன மிம்மா கஸBபூ வ ஹுவ வாகி'உம் Bபிஹிம்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ரவ்ளாதில் ஜன்னாதி லஹும் மா யஷா'ஊன 'இன்த ரBப்Bபிஹிம்; தாலிக ஹுவல் Fபள்லுல் கBபீர்
(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர்; ஆனால் அது அவர்கள் மீது நிகழவே செய்யும்; ஆனால் எவர் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கப் பூங்காவனங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்பியது அவர்களுடைய இறைவனிடம் கிடைக்கும். அதுவே பெரும் பாக்கியமாகும்.
ذٰلِكَ الَّذِیْ یُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِی الْقُرْبٰی ؕ وَمَنْ یَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِیْهَا حُسْنًا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ ۟
ذٰ لِكَஇதுالَّذِىْஎதுيُبَشِّرُநற்செய்தி கூறுகின்றான்اللّٰهُஅல்லாஹ்عِبَادَهُதன் அடியார்களுக்குالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِ‌ؕநன்மைகளைقُلْகூறுவீராக!لَّاۤ اَسْــٴَــــلُـكُمْநான் உங்களிடத்தில் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகاَجْرًاஎந்த கூலியையும்اِلَّا الْمَوَدَّةَஅன்பைத் தவிரفِى الْقُرْبٰى‌ؕஉறவினால் உள்ளوَمَنْ يَّقْتَرِفْயார் செய்வாரோحَسَنَةًஅழகிய அமலைنَّزِدْஅதிகப்படுத்துவோம்لَهٗஅவருக்குفِيْهَاஅதில்حُسْنًا‌ ؕஅழகைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்شَكُوْرٌநன்றியறிபவன்
தாலிகல் லதீ யுBபஷ் ஷிருல் லாஹு 'இBபாதஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாத்; குல் லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இல்லல் மவத்தத Fபில் குர்Bபா; வ மய் யக்தரிFப் ஹஸனதன் னZஜித் லஹூ Fபீஹா ஹுஸ்னா; இன்னல் லாஹ கFபூருன் ஷகூர்
ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்துவரும் தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயங் கூறுவதும் இதுவே: (நபியே!) நீர் கூறும்: “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!” அன்றியும், எவர் ஒரு நன்மை செய்கிறாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் (பல) நன்மையை அதிகமாக்குவோம்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நன்றியை ஏற்றுக் கொள்பவனாகவும் இருக்கின்றான்.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ۚ فَاِنْ یَّشَاِ اللّٰهُ یَخْتِمْ عَلٰی قَلْبِكَ ؕ وَیَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَیُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اَمْ يَقُوْلُوْنَகூறுகிறார்களா?افْتَـرٰىஇட்டுக்கட்டினார்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًا‌ ۚபொய்யைفَاِنْ يَّشَاِநாடினால்اللّٰهُஅல்லாஹ்يَخْتِمْமுத்திரையிட்டு விடுவான்عَلٰى قَلْبِكَ‌ ؕஉமது உள்ளத்தின் மீதுوَيَمْحُஇன்னும் அழித்துவிடுவான்اللّٰهُஅல்லாஹ்الْبَاطِلَபொய்யைوَيُحِقُّஇன்னும் உறுதிப்படுத்துவான்الْحَقَّசத்தியத்தைبِكَلِمٰتِهٖۤ‌ ؕதனது கட்டளைகளைக் கொண்டுاِنَّهٗநிச்சயமாக அவன்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளதை
அம் யகூலூனFப் தர 'அலல் லாஹி கதிBபன் Fப-இ(ன்)ய் யஷ' இல்லாஹு யக்திம் 'அலா கல்Bபிக்; வ யம்ஹுல் லாஹுல் Bபாதில வ யுஹிக்குல் ஹக்க Bபி கலிமாதிஹ்; இன்னஹூ 'அலீமுன் Bபிதாதிஸ் ஸுதூர்
அல்லது (உம்மைப் பற்றி) அவர்கள்: “அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுகிறார்” என்று சொல்கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்; அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்; நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை அவன் மிக அறிந்தவன்.
وَهُوَ الَّذِیْ یَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَیَعْفُوْا عَنِ السَّیِّاٰتِ وَیَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۟ۙ
وَهُوَஅவன்الَّذِىْஎப்படிப்பட்டவன்يَقْبَلُஏற்றுக்கொள்கிறான்التَّوْبَةَதிருந்துவதைعَنْ عِبَادِهٖதனது அடியார்களிடமிருந்துوَيَعْفُوْاஇன்னும் மன்னிக்கிறான்عَنِ السَّيِّاٰتِபாவங்களைوَيَعْلَمُஇன்னும் நன்கறிகின்றான்مَا تَفْعَلُوْنَ ۙ‏நீங்கள் செய்வதை
வ ஹுவல் லதீ யக்Bபலுத் தவ்Bபத 'அன் 'இBபாதிஹீ வ யஃFபூ 'அனிஸ் ஸய்யிஆதி வ யஃலமு மா தFப்'அலூன்
அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோருதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.
وَیَسْتَجِیْبُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ وَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟
وَيَسْتَجِيْبُஇன்னும் பதில் அளிக்கின்றான்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைوَيَزِيْدُஇன்னும் அதிகம் கொடுப்பான்هُمْஅவர்களுக்குمِّنْ فَضْلِهٖ‌ؕதனது அருளால்وَالْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்لَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌவேதனைشَدِيْدٌ‏கடுமையான(து)
வ யஸ்தஜீBபுல் லதீன ஆமனூ வ 'அமிலு ஸாலிஹாதி வ யZஜீதுஹும் மின் Fபள்லிஹ்; வல் காFபிரூன லஹும் 'அதாBபுன் ஷதீத்
அன்றியும் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்(களின் பிரார்த்தனை)களையும் ஏற்று அவர்களுக்குத் தன் அருளை அதிகப்படுத்துகிறான்; இன்னும், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு.
وَلَوْ بَسَطَ اللّٰهُ الرِّزْقَ لِعِبَادِهٖ لَبَغَوْا فِی الْاَرْضِ وَلٰكِنْ یُّنَزِّلُ بِقَدَرٍ مَّا یَشَآءُ ؕ اِنَّهٗ بِعِبَادِهٖ خَبِیْرٌ بَصِیْرٌ ۟
وَلَوْ بَسَطَவிசாலமாக்கினால்اللّٰهُஅல்லாஹ்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِعِبَادِهٖதனது அடியார்களுக்குلَبَغَوْاஅவர்கள் எல்லை மீறி விடுவார்கள்فِى الْاَرْضِபூமியில்وَلٰكِنْஎன்றாலும்يُّنَزِّلُஇறக்குகின்றான்بِقَدَرٍஅளவுடன்مَّا يَشَآءُ ؕதான் நாடியதைاِنَّهٗநிச்சயமாக அவன்بِعِبَادِهٖதன் அடியார்களைخَبِيْرٌۢஆழ்ந்தறிபவன்بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
வ லவ் Bபஸதல் லாஹுர் ரித்க லி'இBபாதிஹீ லBபகவ் Fபில் அர்ளி வ லாகி(ன்)ய் யுனZஜ்Zஜிலு Bபிகதரிம் மா யஷா'; இன்னஹூ Bபி'இBபாதிஹீ கBபீருன் Bபஸீர்
அல்லாஹ் தன் அடியார்களுக்கு, உணவு (மற்றும் வசதிகளை) விரிவாக்கி விட்டால், அவர்கள் பூமியில் அட்டூழியம் செய்யத் தலைப்பட்டு விடுவார்கள்; ஆகவே அவன், தான் விரும்பிய அளவு கொடுத்து வருகின்றான்; நிச்சயமாக அவன் தன் அடியார்களை நன்கறிபவன்; (அவர்கள் செயலை) உற்று நோக்குபவன்.
وَهُوَ الَّذِیْ یُنَزِّلُ الْغَیْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوْا وَیَنْشُرُ رَحْمَتَهٗ ؕ وَهُوَ الْوَلِیُّ الْحَمِیْدُ ۟
وَهُوَஅவன்தான்الَّذِىْஎப்படிப்பட்டவன்يُنَزِّلُஇறக்குகின்றான்الْغَيْثَமழையைمِنْۢ بَعْدِ مَا قَنَطُوْاஅவர்கள் நிராசை அடைந்த பின்னர்وَيَنْشُرُஇன்னும் பரப்புகின்றான்رَحْمَتَهٗ‌ ؕதனது அருளைوَهُوَஅவன்தான்الْوَلِىُّபாதுகாவலன்الْحَمِيْدُ‏மகா புகழாளன்
வ ஹுவல் லதீ யுனZஜ்Zஜிலுல் கய்த மின் Bபஃதி மா கனதூ வ யன்ஷுரு ரஹ்மதஹ்; வ ஹுவல் வலிய்யுல் ஹமீத்
அவர்கள் நிராசையான பின்னர் மழையை இறக்கி வைப்பவன் அவனே; மேலும் அவன் தன் ரஹ்மத்தை (அருளை)ப் பரப்புகிறான்; இன்னும் அவனே புகழுக்குரிய பாதுகாவலன்.
وَمِنْ اٰیٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِیْهِمَا مِنْ دَآبَّةٍ ؕ وَهُوَ عَلٰی جَمْعِهِمْ اِذَا یَشَآءُ قَدِیْرٌ ۟۠
وَ مِنْ اٰيٰتِهٖஅவனது அத்தாட்சிகளில்خَلْقُபடைத்திருப்பதுالسَّمٰوٰتِ وَالْاَرْضِவானங்களையும் பூமியையும்وَمَاஇன்னும் எவற்றைبَثَّபரத்தி இருக்கின்றானோفِيْهِمَاஅவ்விரண்டில்مِنْ دَآبَّةٍ‌ ؕஉயிரினங்களில் இருந்துوَهُوَ عَلٰى جَمْعِهِمْஅவன் அவர்களை ஒன்று சேர்ப்பதற்குاِذَا يَشَآءُஅவன் நாடுகின்றபோதுقَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வ மின் ஆயாதிஹீ கல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபத்த Fபீஹிமா மின் தாBப்Bபஹ்; வ ஹுவ 'அலா ஜம்'இஹிம் இதா யஷா'உ கதீர்
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், அவையிரண்டிலும் உயிரினங்களை பரப்பி வைத்திருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும் - ஆகவே, அவன் விரும்பியபோது அவற்றை ஒன்று சேர்க்க பேராற்றலுடையவன்.
وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِیْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَیْدِیْكُمْ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ۟ؕ
وَمَاۤஎதுاَصَابَكُمْஉங்களுக்கு ஏற்பட்டதோمِّنْ مُّصِيْبَةٍசோதனைகளில்فَبِمَا كَسَبَتْசெய்தவற்றினால்தான்اَيْدِيْكُمْஉங்கள் கரங்கள்وَيَعْفُوْاஇன்னும் மன்னித்துவிடுகிறான்عَنْ كَثِيْرٍؕ‏அதிகமான தவறுகளை
வ மா அஸாBபகும் மின் முஸீBபதின் FபBபிமா கஸBபத் அய்தீகும் வ யஃFபூ 'அன் கதீர்
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ فِی الْاَرْضِ ۖۚ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟
وَمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَநீங்கள் தப்பித்துவிட முடியாதுفِى الْاَرْضِ ۖۚஇந்த பூமியில்وَمَا لَـكُمْஇன்னும் உங்களுக்குஇல்லைمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمِنْ وَّلِىٍّஎந்த பாதுகாவலரும்وَّلَا نَصِيْرٍ‏எந்த உதவியாளரும் இல்லை
வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன Fபில் அர்ளி வமா லகும் மின் தூனில் லாஹி மி(ன்)வ் வ லிய்யி(ன்)வ் வலா னஸீர்
இன்னும், நீங்கள் பூமியில் (எங்கு தஞ்சம் புகுந்தாலும்) அவனை இயலாமல் ஆக்குபவர்கள் இல்லை; மேலும், உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர, பாதுகாவலனோ, உதவிபுரிபவனோ இல்லை.
وَمِنْ اٰیٰتِهِ الْجَوَارِ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ؕ
وَمِنْ اٰيٰتِهِஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்الْجَوَارِமிதந்து செல்லக்கூடிய கப்பல்கள்فِى الْبَحْرِகடலில்كَالْاَعْلَامِؕ‏மலைகளைப் போன்று
வ மின் ஆயாதிஹில் ஜ வாரிFபில் Bபஹ்ரி கல் அஃலம்
இன்னும், மலைகளைப் போல் கடலில் செல்பவையும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.
اِنْ یَّشَاْ یُسْكِنِ الرِّیْحَ فَیَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰی ظَهْرِهٖ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟ۙ
اِنْ يَّشَاْஅவன் நாடினால்يُسْكِنِஅமைதியாக்கி விடுவான்الرِّيْحَகாற்றுகளைفَيَظْلَلْنَஆகிவிடும்رَوَاكِدَஅசையாமல் நிற்கக்கூடியதாகعَلٰى ظَهْرِهٖؕஅதன் மீதேاِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் இருக்கின்றனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّـكُلِّஎல்லோருக்கும்صَبَّارٍபெரும் பொறுமையாளர்கள்شَكُوْرٍۙ‏நன்றி உள்ளவர்கள்
இ(ன்)ய் யஷா யுஸ்கினிர் ரீஹ Fப யள்லல்ன ரவாகித 'அலா ளஹ்ரிஹி; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகுல்லி ஸBப்Bபாரின் ஷகூர்
அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான். அதனால் அவை (கடலின்) மேற்பரப்பில் அசைவற்றுக் கிடக்கும், நிச்சயமாக இதில், பொறுமையாளர், நன்றி செலுத்துவோர் யாவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
اَوْ یُوْبِقْهُنَّ بِمَا كَسَبُوْا وَیَعْفُ عَنْ كَثِیْرٍ ۟ؗ
اَوْஅல்லதுيُوْبِقْهُنَّஅவற்றை அவன் அழித்து விடுவான்بِمَا كَسَبُوْاஅவர்கள் செய்தவற்றின் காரணமாகوَيَعْفُஇன்னும் மன்னித்து விடுகிறான்عَنْ كَثِيْرٍ‏அதிகமான தவறுகளை
அவ் யூBபிக்ஹுன்ன Bபிமா கஸBபூ வ யஃFபு 'அன் கதீர்
அல்லது அவர்கள் சம்பாதித்த (தீ)வினையின் காரணத்தினால் அவற்றை அவன் மூழ்கடிக்கச் செய்து விடுவான்; மேலும் அவன் பெரும்பாலானவற்றை மன்னித்தருளுகிறான்.
وَّیَعْلَمَ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِنَا ؕ مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟
وَّيَعْلَمَஅவன் நன்கறிவான்الَّذِيْنَ يُجَادِلُوْنَதர்க்கிப்பவர்களைفِىْۤ اٰيٰتِنَا ؕநமது வசனங்களில்مَا لَهُمْஅவர்களுக்கு இல்லைمِّنْ مَّحِيْصٍதப்பிக்கும் இடம் ஏதும்
வ யஃலமல் லதீன யுஜாதிலூன Fபீ ஆயாதினா மா லஹும் மின் மஹீஸ்
அன்றியும், நம்முடைய வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருப்போர் - அவர்களுக்கு (தப்பித்துக் கொள்ள) புகலிடம் ஏதுமில்லை என்பதை அறிவார்கள்.
فَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی لِلَّذِیْنَ اٰمَنُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚ
فَمَاۤ اُوْتِيْتُمْநீங்கள் கொடுக்கப்பட்டுள்ள எல்லாம்مِّنْ شَىْءٍபொருள்கள்فَمَتَاعُஇன்பமாகும்الْحَيٰوةِவாழ்க்கையின்الدُّنْيَا‌ۚஇவ்வுலகوَمَاஎது உள்ளதோعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்خَيْرٌமிகச் சிறந்தது(ம்)وَّاَبْقٰىமிக நிரந்தரமானது(ம்)لِلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களுக்குوَعَلٰى رَبِّهِمْஇன்னும் தங்கள் இறைவனையேيَتَوَكَّلُوْنَۚ‏சார்ந்திருப்பார்கள்
Fபமா ஊதீதும் மின் ஷய்'இன் Fபமதா'உல் ஹயாதித் துன்யா வமா 'இன்தல் லாஹி கய்ரு(ன்)வ் வ அBப்கா லில்லதீன ஆமனூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும்.
وَالَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ یَغْفِرُوْنَ ۟ۚ
وَالَّذِيْنَ يَجْتَنِبُوْنَஇன்னும் /எவர்கள்/விலகிவிடுவார்கள்كَبٰٓٮِٕرَ الْاِثْمِபெரும் பாவங்களை விட்டும்وَالْفَوَاحِشَமானக்கேடான விஷயங்களை விட்டும்وَاِذَا مَا غَضِبُوْا هُمْஅவர்கள் கோபப்படும்போதுيَغْفِرُوْنَ‌ۚ‏மன்னித்து விடுவார்கள்
வல்லதீன யஜ்தனிBபூன கBபா'இரல் இத்மி வல் Fபவாஹிஷ வ இதா மா களிBபூ ஹும் யக்Fபிரூன்
அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
وَالَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ ۪ وَاَمْرُهُمْ شُوْرٰی بَیْنَهُمْ ۪ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۚ
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اسْتَجَابُواபதில் அளிப்பார்கள்لِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குوَاَقَامُوْاஇன்னும் நிலைநிறுத்துவார்கள்الصَّلٰوةَதொழுகையைوَاَمْرُهُمْஇன்னும் அவர்களது காரியம்شُوْرٰىஆலோசிக்கப்படும்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்وَمِمَّا رَزَقْنٰهُمْஇன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்துيُنْفِقُوْنَ‌ۚ‏தர்மம் கொடுப்பார்கள்
வல்லதீனஸ் தஜாBபூ லி ரBப்Bபிஹிம் வ அகாமுஸ் ஸலாத வ அம்ருஹும் ஷூரா Bபய்னஹும் வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
وَالَّذِیْنَ اِذَاۤ اَصَابَهُمُ الْبَغْیُ هُمْ یَنْتَصِرُوْنَ ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اِذَاۤ اَصَابَهُمُஅவர்களுக்கு நிகழ்ந்தால்الْبَغْىُஅநியாயம்هُمْ يَنْتَصِرُوْنَ‏அவர்கள் பழிவாங்குவார்கள்
வல்லதீன இதா அஸாBபஹுமுல் Bபக்யு ஹும் யன்தஸிரூன்
அன்றியும். அவர்களுக்கு அக்கிரமம் செய்யப்பட்டால் (அதற்கு எதிராக நீதியாகத் தக்க முறையில்) பழி தீர்ப்பார்கள்.
وَجَزٰٓؤُا سَیِّئَةٍ سَیِّئَةٌ مِّثْلُهَا ۚ فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟
وَجَزٰٓؤُاதண்டனைسَيِّئَةٍதீமையின்سَيِّئَةٌதீமைதான்مِّثْلُهَا‌ۚஅது போன்றفَمَنْயார்عَفَاமன்னிப்பாரோوَاَصْلَحَஇன்னும் சமாதானம் செய்வாரோفَاَجْرُهٗஅவரது கூலிعَلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் மீதுاِنَّهٗநிச்சயமாக அவன்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
வ ஜZஜா'உ ஸய்யி'அதின் ஸய்யி'அதும் மித்லுஹ Fபமன் 'அFபா வ அஸ்லஹ Fப அஜ்ருஹூ 'அலல் லாஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுள் ளாலிமீன்
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهٖ فَاُولٰٓىِٕكَ مَا عَلَیْهِمْ مِّنْ سَبِیْلٍ ۟ؕ
وَلَمَنِயார்انْتَصَرَபழிவாங்குவாரோبَعْدَ ظُلْمِهٖதனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்فَاُولٰٓٮِٕكَ مَا عَلَيْهِمْஅவர்கள் மீது இல்லைمِّنْ سَبِيْلٍؕ‏எவ்வித குற்றமும்
வ லமனின் தஸர Bபஃத ளுல்மிஹீ Fப உலா'இக மா 'அலய்ஹிம் மின் ஸBபீல்
எனவே, எவரொருவர் அநியாயம் செய்யப்பட்டபின், (அதற்கு எதிராக நீதியாக) பழி தீர்த்துக் கொள்கிறாரோ, அ(த்தகைய)வர் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியுமில்லை.
اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَظْلِمُوْنَ النَّاسَ وَیَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّمَا السَّبِيْلُகுற்றமெல்லாம்عَلَى الَّذِيْنَ يَظْلِمُوْنَஅநியாயம் செய்பவர்கள் மீதும்النَّاسَமக்களுக்குوَ يَبْغُوْنَஇன்னும் வரம்பு மீறுகிறார்கள்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَقِّ‌ؕஅநியாயமாகاُولٰٓٮِٕكَ لَهُمْஅவர்களுக்கு உண்டுعَذَابٌவேதனைاَلِيْمٌ‏வலிதரக்கூடியது
இன்னமஸ் ஸBபீலு 'அலல் லதீன யள்லிமூனன் னாஸ வ யBப்கூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; உலா'இக லஹும் 'அதாBபுன் அலீம்
ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟۠
وَلَمَنْ صَبَرَயார் பொறுமையாக இருப்பாரோوَغَفَرَஇன்னும் மன்னிப்பாரோاِنَّ ذٰلِكَநிச்சயமாக அதுلَمِنْ عَزْمِ الْاُمُوْرِ‏மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும்
வ லமன் ஸBபர வ கFபர இன்ன தாலிக லமின் 'அZஜ்மில் உமூர்
ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்.
وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِیٍّ مِّنْ بَعْدِهٖ ؕ وَتَرَی الظّٰلِمِیْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ یَقُوْلُوْنَ هَلْ اِلٰی مَرَدٍّ مِّنْ سَبِیْلٍ ۟ۚ
وَمَنْயாரைيُّضْلِلِவழிகெடுத்தானோاللّٰهُஅல்லாஹ்فَمَاஇல்லைلَهٗஅவனுக்குمِنْ وَّلِىٍّஎந்தப் பாதுகாவலரும்مِّنْۢ بَعْدِهٖ‌ ؕஅவனுக்குப் பிறகுوَتَرَىநீர் காண்பீர்!الظّٰلِمِيْنَபாவிகளைلَمَّا رَاَوُاஅவர்கள் பார்க்கும் போதுالْعَذَابَவேதனையைيَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்هَلْ اِلٰى مَرَدٍّதிரும்புவதற்கு உண்டா?مِّنْ سَبِيْلٍ‌ۚ‏ஏதேனும் வழி
வ மய் யுள்லி லில்லாஹு Fபமா லஹூ மி(ன்)வ் வலிய்யின் மின் Bபஃதிஹ்; வ தரள் ளாலிமீன லம்மா ர அவுல் 'அதாBப யகூலூன ஹல் இலா மரத்தின் மின் ஸBபீல்
“இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது; (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?” என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.
وَتَرٰىهُمْ یُعْرَضُوْنَ عَلَیْهَا خٰشِعِیْنَ مِنَ الذُّلِّ یَنْظُرُوْنَ مِنْ طَرْفٍ خَفِیٍّ ؕ وَقَالَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ الْخٰسِرِیْنَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اَلَاۤ اِنَّ الظّٰلِمِیْنَ فِیْ عَذَابٍ مُّقِیْمٍ ۟
وَتَرٰٮهُمْநீர் காண்பீர்/அவர்களைيُعْرَضُوْنَசமர்ப்பிக்கப்படுவர்களாகعَلَيْهَاஅதன் முன்خٰشِعِيْنَதலைகுனிந்தவர்களாகمِنَ الذُّلِّஇழிவினால்يَنْظُرُوْنَஅவர்கள் பார்ப்பார்கள்مِنْ طَرْفٍபார்வையால்خَفِىٍّ‌ ؕதிருட்டுوَقَالَஇன்னும் கூறுவார்கள்الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்கள்اِنَّநிச்சயமாகالْخٰسِرِيْنَநஷ்டவாளிகள்الَّذِيْنَ خَسِرُوْۤاநஷ்டமிழைத்தவர்கள்தான்اَنْفُسَهُمْதங்களுக்கு(ம்)وَاَهْلِيْهِمْதங்கள்குடும்பத்திற்கும்يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕமறுமை நாளில்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகالظّٰلِمِيْنَஅநியாயக்காரர்கள்فِىْ عَذَابٍவேதனையில்مُّقِيْمٍ‏நிலையான
வ தராஹும் யுஃரளூன 'அலய்ஹா காஷி'ஈன மினத்துல்லி யன்ளுரூன மின் தர்Fபின் கFபிய்ய்; வ காலல் லதீன ஆமனூ இன்னல் காஸிரீனல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் வ அஹ்லீஹிம் யவ்மல் கியாமஹ்; அலா இன்னள் ளாலிமீன Fபீ 'அதாBபின் முகீம்
மேலும், சிறுமைப்பட்டுத் தலை கவிழ்ந்தவர்களாகவும், (மறைவாகக்) கடைக்கண்ணால் பார்த்த வண்ணமாகவும் அவர்கள் (நரகத்தின் முன்) கொண்டுவரப் படுவதை நீர் காண்பீர்; (அவ்வேளை) ஈமான் கொண்டவர்கள் கூறுவார்கள்: “எவர் தங்களுக்கும், தம் குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை தேடிக் கொண்டார்களோ, கியாம நாளில் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் நஷ்டவாளர்தாம்.” அறிந்து கொள்க! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள்.
وَمَا كَانَ لَهُمْ مِّنْ اَوْلِیَآءَ یَنْصُرُوْنَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ سَبِیْلٍ ۟ؕ
وَمَا كَانَஇருக்க மாட்டார்கள்لَهُمْஅவர்களுக்குمِّنْ اَوْلِيَآءَபாதுகாவலர்கள் யாரும்يَنْصُرُوْنَهُمْஅவர்களுக்கு உதவுகின்ற(னர்)مِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வையன்றிوَمَنْயாரைيُّضْلِلِவழிகெடுப்பானோاللّٰهُஅல்லாஹ்فَمَا لَهٗஅவருக்கு இல்லைمِنْ سَبِيْلٍؕ‏எந்த வழியும்
வமா கான லஹும் மின் அவ்லியா'அ யன்ஸுரூனஹும் மின் தூனில் லாஹ்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஸBபீல்
(அந்நாளில்) அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவிபுரியும் உபகாரிகளில் எவரும் இருக்கமாட்டார்கள்; அன்றியும், அல்லாஹ் எவரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அவருக்கு வேறு வழியொன்றுமில்லை.
اِسْتَجِیْبُوْا لِرَبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ ؕ مَا لَكُمْ مِّنْ مَّلْجَاٍ یَّوْمَىِٕذٍ وَّمَا لَكُمْ مِّنْ نَّكِیْرٍ ۟
اِسْتَجِيْبُوْاநீங்கள்பதில் அளியுங்கள்!لِرَبِّكُمْஉங்கள் இறைவனுக்குمِّنْ قَبْلِமுன்اَنْ يَّاْتِىَவருவதற்குيَوْمٌஒரு நாள்لَّا مَرَدَّஅறவே தடுத்துவிட முடியாதுلَهٗஅதைمِنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்விடமிருந்துمَا لَكُمْஉங்களுக்கு இருக்காதுمِّنْ مَّلْجَاٍஒதுங்குமிடம் எதுவும்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்وَّمَا لَكُمْஇன்னும் உங்களுக்கு இருக்க மாட்டார்مِّنْ نَّكِيْرٍ‏தடுப்பவர் யாரும்
இஸ்தஜீBபூ லி ரBப்Bபிகும் மின் கBப்லி அ(ன்)ய் யாதிய யவ்முல் லா மரத்த லஹூ மின் அல்லாஹ்; மா லகும் மின் மல்ஜ' இ(ன்)ய் யவ்ம'இதி(ன்)வ் வமா லகும் மின் னகீர்
அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது; (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது.
فَاِنْ اَعْرَضُوْا فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ؕ اِنْ عَلَیْكَ اِلَّا الْبَلٰغُ ؕ وَاِنَّاۤ اِذَاۤ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً فَرِحَ بِهَا ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ فَاِنَّ الْاِنْسَانَ كَفُوْرٌ ۟
فَاِنْ اَعْرَضُوْاஅவர்கள் புறக்கணித்தால்فَمَاۤ اَرْسَلْنٰكَநாம் உம்மை அனுப்பவில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுحَفِيْظًا‌ؕகண்காணிப்பவராகاِنْ عَلَيْكَஉம்மீது கடமை இல்லைاِلَّاதவிரالْبَلٰغُ‌ ؕஎடுத்துரைப்பதைوَاِنَّاۤநிச்சயமாக நாம்اِذَاۤ اَذَقْنَاசுவைக்க வைத்தால்الْاِنْسَانَமனிதர்களுக்குمِنَّاநம்மிடமிருந்துرَحْمَةًஓர் அருளைفَرِحَஅவர்கள் மகிழ்ச்சியடைகிறார்(கள்)بِهَا‌ۚஅதனால்وَاِنْ تُصِبْهُمْஅவர்களுக்கு ஏற்பட்டால்سَيِّئَةٌۢஒரு தீங்குبِمَا قَدَّمَتْமுற்படுத்தியதால்اَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்فَاِنَّ الْاِنْسَانَநிச்சயமாக மனிதன்كَفُوْرٌ‏மிகப்பெரிய நிராகரிப்பாளன்
Fப-இன் அஃரளூ Fபமா அர்ஸல்னாக 'அலய்ஹிம் ஹFபீளன் இன் 'அலய்க இல்லல் Bபலாக்; வ இன்னா இதா அதக்னல் இன்ஸான மின்னா ரஹ்மதன் Fபரிஹ Bபிஹா வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அதுன் Bபிமா கத்தமத் அய்தீஹிம் Fப இன்னல் இன்ஸான கFபூர்
எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ یَهَبُ لِمَنْ یَّشَآءُ اِنَاثًا وَّیَهَبُ لِمَنْ یَّشَآءُ الذُّكُوْرَ ۟ۙ
لِلّٰهِஅல்லாஹ்விற்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ ؕஇன்னும் பூமி(யின்)يَخْلُقُபடைக்கின்றான்مَا يَشَآءُ‌ ؕதான் நாடுவதைيَهَبُவழங்குகின்றான்لِمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குاِنَاثًاபெண் பிள்ளைகளைوَّيَهَبُஇன்னும் வழங்குகின்றான்لِمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குالذُّكُوْرَ ۙ‏ஆண் பிள்ளைகளை
லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; யக்லுகு மா யஷா'; யஹBபு லிமய் யஷா'உ இனாத(ன்)வ் வ யஹBபு லிமய் யஷா'உத் துகூர்
அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.
اَوْ یُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا ۚ وَیَجْعَلُ مَنْ یَّشَآءُ عَقِیْمًا ؕ اِنَّهٗ عَلِیْمٌ قَدِیْرٌ ۟
اَوْஅல்லதுيُزَوِّجُهُمْஅவர்களுக்கு கலந்து கொடுக்கின்றான்ذُكْرَانًاஆண் பிள்ளைகளைوَّاِنَاثًا‌ ۚஇன்னும் பெண் பிள்ளைகளைوَيَجْعَلُஇன்னும் ஆக்குகின்றான்مَنْ يَّشَآءُதான் நாடுகின்றவர்களைعَقِيْمًا‌ؕமலடுகளாகاِنَّهٗநிச்சயமாக அவன்عَلِيْمٌநன்கறிந்தவன்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
அவ் யுZஜவ்விஜுஹும் துக்ரான(ன்)வ் வ இனாத(ன்)வ் வ யஜ்'அலு மய் யஷா'உ 'அகீமா; இன்னஹூ 'அலீமுன் கதீர்
அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.
وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُ ؕ اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ ۟
وَمَا كَانَமுடியாதுلِبَشَرٍஒரு மனிதருக்குاَنْ يُّكَلِّمَهُஅவரிடம் நேரடியாகபேசுவதுاللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரوَحْيًاவஹீ அறிவிப்பதன் மூலம்اَوْஅல்லதுمِنْ وَّرَآىٴِபின்னால் இருந்துحِجَابٍதிரைக்குاَوْஅல்லதுيُرْسِلَஅனுப்புவான்رَسُوْلًاஒரு தூதரைفَيُوْحِىَவஹீ அறிவிப்பான்بِاِذْنِهٖதனது உத்தரவின்படிمَا يَشَآءُ‌ؕதான் நாடுவதைاِنَّهٗநிச்சயமாக அவன்عَلِىٌّமிக உயர்ந்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
வமா கான லிBபஷரின் அ(ன்)ய் யுகல்லிமஹுல் லாஹு இல்லா வஹ்யன் அவ் மி(ன்)வ் வரா'இ ஹிஜாBபின் அவ் யுர்ஸில ரஸூலன் Fப யூஹிய Bபி இத்னிஹீ மா யஷா'; இன்னஹூ 'அலிய்யுன் ஹகீம்
அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ; அல்லது திரைக்கப்பால் இருந்தோ; அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ رُوْحًا مِّنْ اَمْرِنَا ؕ مَا كُنْتَ تَدْرِیْ مَا الْكِتٰبُ وَلَا الْاِیْمَانُ وَلٰكِنْ جَعَلْنٰهُ نُوْرًا نَّهْدِیْ بِهٖ مَنْ نَّشَآءُ مِنْ عِبَادِنَا ؕ وَاِنَّكَ لَتَهْدِیْۤ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟ۙ
وَكَذٰلِكَஇவ்வாறுதான்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குرُوْحًاஅருளாகمِّنْ اَمْرِنَا‌ ؕநமதுகட்டளையினால்مَا كُنْتَநீர் இருக்கவில்லைتَدْرِىْஅறிந்தவராகمَا الْكِتٰبُவேதம் என்றால் என்னوَلَا الْاِيْمَانُஈமான் என்றால் என்னوَلٰـكِنْஎனினும்جَعَلْنٰهُநாம் இதை ஆக்கினோம்نُوْرًاஓர் ஒளியாகنَّهْدِىْநாம் நேர்வழி காட்டுகின்றோம்بِهٖஇதன் மூலம்مَنْ نَّشَآءُநாம் நாடுகின்றவர்களுக்குمِنْ عِبَادِنَا‌ ؕநமது அடியார்களில்وَاِنَّكَநிச்சயமாக நீர்لَتَهْدِىْۤநேர்வழி காட்டுகின்றீர்اِلٰىபக்கம்صِرَاطٍபாதையின்مُّسْتَقِيْمٍۙ‏நேரான
வ கதாலிக அவ்ஹய்னா இலய்க ரூஹன் மின் அம்ரினா; மா குன்த தத்ரீ மல் கிதாBபு வ லல் ஈமானு வ லாகின் ஜ'அல்னாஹு னூரன் னஹ்தீ Bபிஹீ மன் னஷா'உ மின் 'இBபாதினா; வ இன்னக லதஹ்தீ இலா ஸிராதின் முஸ்தகீம்
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.
صِرَاطِ اللّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ اَلَاۤ اِلَی اللّٰهِ تَصِیْرُ الْاُمُوْرُ ۟۠
صِرَاطِபாதையின் பக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِىْஎப்படிப்பட்டவன்لَهٗஅவனுக்கேمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில் உள்ளவை(யும்)اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கமேتَصِيْرُதிரும்புகின்றனالْاُمُوْرُ‏காரியங்கள்
ஸிராதில் லாஹில் லதீ லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; அலா இலல் லாஹி தஸீருல் உமூர்
(அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் - அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.