32. ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)

மக்கீ, வசனங்கள்: 30

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلُ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
تَنْزِیْلُஅருளப்பட்டதுالْكِتٰبِஇவ்வேதம்لَاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهِஇதில்مِنْஇருந்துرَّبِّஇறைவனிடம்الْعٰلَمِیْنَؕஅகிலங்களின்
தன்Zஜீலுல் கிதாBபி லா ரய்Bப Fபீஹி மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
اَمْஅல்லதுیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களாافْتَرٰىهُ ۚஅதனை அவர் இட்டுக்கட்டினார்بَلْமாறாகهُوَஅதுالْحَقُّஉண்மையாகும்مِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவனிடம்لِتُنْذِرَநீர் எச்சரிப்பதற்காகقَوْمًاஒரு சமூகத்தைمَّاۤஎந்தவொருاَتٰىهُمْஅவர்களிடம் வரவில்லையோمِّنْஓர்نَّذِیْرٍஎச்சரிப்பாளரும்مِّنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னர்لَعَلَّهُمْஅவர்கள்یَهْتَدُوْنَநேர்வழி பெறுவதற்காக
அம் யகூலூனFப் தராஹு Bபல் ஹுவல் ஹக்கு மிர் ரBப்Bபிக லிதுன்திர கவ்ம மா அதாஹும் மின் னதீரிம் மின் கBப்லிக ல'அல்லஹும் யஹ்ததூன்
ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).
اَللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِیٍّ وَّلَا شَفِیْعٍ ؕ اَفَلَا تَتَذَكَّرُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎவன்خَلَقَபடைத்தானோالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَபூமியையும்وَ مَاஇன்னும் எவற்றைبَیْنَهُمَاஅவையிரண்டிற்கும் இடையில்فِیْஇல்سِتَّةِஆறுاَیَّامٍநாட்களில்ثُمَّபின்னர்اسْتَوٰیநிலைபெற்றான்عَلَیமீதுالْعَرْشِ ؕஅர்ஷின்مَاஇல்லைلَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துدُوْنِهٖஅவனையன்றிمِنْஎந்த ஒருوَّلِیٍّபாதுகாவலனும்وَّ لَاமேலும் இல்லைشَفِیْعٍ ؕபரிந்து பேசுபவனும்اَفَلَاஆகவே நீங்கள் மாட்டீர்களாتَتَذَكَّرُوْنَசிந்தித்து உணர
அல்லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷ்; மா லகும் மின் தூனிஹீ மி(ன்)வ்-வலிய்யி(ன்)வ்-வல ஷFபீ'; அFபலா தததக்கரூன்
அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?
یُدَبِّرُ الْاَمْرَ مِنَ السَّمَآءِ اِلَی الْاَرْضِ ثُمَّ یَعْرُجُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗۤ اَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ۟
یُدَبِّرُநிர்வகிக்கிறான்الْاَمْرَகாரியத்தைمِنَஇருந்துالسَّمَآءِவானம்اِلَیநோக்கிالْاَرْضِபூமிثُمَّபின்னர்یَعْرُجُமேலேறுகிறதுاِلَیْهِஅவனிடம்فِیْஒருیَوْمٍநாளில்كَانَஉள்ளதுمِقْدَارُهٗۤஅதன் அளவுاَلْفَஆயிரம்سَنَةٍஆண்டுகள்مِّمَّاஎவற்றிலிருந்துتَعُدُّوْنَநீங்கள் கணக்கிடுகிறீர்களோ
யுதBப்Bபிருல் அம்ர மினஸ் ஸமா'இ இலல் அர்ளி தும்ம யஃருஜு இலய்ஹி Fபீ யவ்மின் கான மிக்தாருஹூ அல்Fப ஸனதிம் மிம்மா த'உத்தூன்
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
ذٰلِكَ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟ۙ
ذٰلِكَஅவனேعٰلِمُநன்கறிந்தவன்الْغَیْبِமறைவானவற்றையும்وَ الشَّهَادَةِவெளிப்படையானவற்றையும்الْعَزِیْزُமிகைத்தவன்الرَّحِیْمُۙநிகரற்ற அன்புடையவன்
தாலிக 'ஆலிமுல் கய்Bபி வ ஷஹாததில் 'அZஜீZஜுர் ரஹீம்
அவனே மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்; அன்புடையோன்.
الَّذِیْۤ اَحْسَنَ كُلَّ شَیْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِیْنٍ ۟ۚ
الَّذِیْۤஎவன்اَحْسَنَஅழகாக்கினானோكُلَّஒவ்வொருشَیْءٍபொருளையும்خَلَقَهٗதான் படைத்தوَ بَدَاَமேலும் தொடங்கினான்خَلْقَபடைப்பைالْاِنْسَانِமனிதனின்مِنْஇருந்துطِیْنٍۚகளிமண்ணில்
அல்லதீ அஹ்ஸன குல்ல ஷய் இன் கலக; வ Bபத அ கல்கல் இன்ஸானி மின் தீன்
அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۚ
ثُمَّபின்னர்جَعَلَஆக்கினான்نَسْلَهٗஅவனது சந்ததியைمِنْஇருந்துسُلٰلَةٍஒரு சத்துمِّنْஇருந்துمَّآءٍநீர்مَّهِیْنٍۚஅற்பமான
தும்ம ஜ'அல னஸ்லஹூ மின் ஸுலாலதிம் மிம் மா'இம்மஹீன்
பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
ثُمَّ سَوّٰىهُ وَنَفَخَ فِیْهِ مِنْ رُّوْحِهٖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟
ثُمَّபின்னர்سَوّٰىهُஅவனைச் செம்மைப்படுத்தினான்وَ نَفَخَமேலும் ஊதினான்فِیْهِஅவனுக்குள்مِنْஇருந்துرُّوْحِهٖதனது ஆன்மாவைوَ جَعَلَமேலும் அவன் ஏற்படுத்தினான்لَكُمُஉங்களுக்குالسَّمْعَசெவிப்புலனைوَ الْاَبْصَارَபார்வைகளையும்وَ الْاَفْـِٕدَةَ ؕஉள்ளங்களையும்قَلِیْلًاமிகக் குறைவாகمَّاதான்تَشْكُرُوْنَநீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்
தும்ம ஸவ்வாஹு வ னFபக Fபீஹி மிர் ரூஹிஹிஹ்; வ ஜ'அல லகுமுஸ் ஸம்'அ வல்-அBப்ஸார வல்-அFப்'இதஹ்; கலீலம் மா தஷ்குரூன்
பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.
وَقَالُوْۤا ءَاِذَا ضَلَلْنَا فِی الْاَرْضِ ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬ بَلْ هُمْ بِلِقَآءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ ۟
وَ قَالُوْۤاமேலும் அவர்கள் கூறினார்கள்ءَاِذَاஎன்ன! எப்போதுضَلَلْنَاநாங்கள் மறைந்துவிட்டால்فِیஇல்الْاَرْضِபூமிءَاِنَّاநிச்சயமாக நாங்களாلَفِیْநிச்சயமாக இல்خَلْقٍபடைப்புجَدِیْدٍ ؕ۬புதியبَلْமாறாகهُمْஅவர்கள்بِلِقَآئِசந்திப்பைرَبِّهِمْதங்கள் இறைவனின்كٰفِرُوْنَநிராகரிப்பவர்கள்
வ காலூ 'அ-இதா ளலல்னா Fபில் அர்ளி 'அ-இன்னா லFபீ கல்கின் ஜதீத்; Bபல் ஹும் Bபிலிகா'இ ரBப்Bபிஹிம் காFபிரூன்
“நாம் பூமியில் அழிந்து போய் விடுவோமாயின் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாவோமா?” எனவும் அவர்கள் கூறுகின்றனர்; ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையே நிராகரிப்போராய் இருக்கிறார்கள்.
قُلْ یَتَوَفّٰىكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِیْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟۠
قُلْகூறுவீராகیَتَوَفّٰىكُمْஉங்களைக் கைப்பற்றுவார்مَّلَكُவானவர்الْمَوْتِமரணத்தின்الَّذِیْஎவர்وُكِّلَநியமிக்கப்பட்டுள்ளாரோبِكُمْஉங்கள் மீதுثُمَّபின்னர்اِلٰیநோக்கிرَبِّكُمْஉங்கள் இறைவன்تُرْجَعُوْنَ۠திருப்பப்படுவீர்கள்
குல் யதவFப்Fபாகும் மலகுல் மவ்தில் லதீ வுக்கில Bபிகும் தும்ம இலா ரBப்Bபிகும் துர்ஜ'ஊன்
“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  
وَلَوْ تَرٰۤی اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْ ؕ رَبَّنَاۤ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا اِنَّا مُوْقِنُوْنَ ۟
وَ لَوْஇன்னும் ஒருவேளைتَرٰۤیநீர் காண்பீரானால்اِذِஅப்போதுالْمُجْرِمُوْنَகுற்றவாளிகள்نَاكِسُوْاதொங்கவிட்டவர்களாகرُءُوْسِهِمْதங்கள் தலைகளைعِنْدَமுன்னிலையில்رَبِّهِمْ ؕதங்கள் இறைவனின்رَبَّنَاۤஎங்கள் இறைவனே!اَبْصَرْنَاநாங்கள் பார்த்துவிட்டோம்وَ سَمِعْنَاமேலும் நாங்கள் செவியுற்றுவிட்டோம்فَارْجِعْنَاஎனவே எங்களை திருப்பி அனுப்புவாயாகنَعْمَلْநாங்கள் செய்வோம்صَالِحًاநற்செயல்களைاِنَّاநிச்சயமாக நாங்கள்مُوْقِنُوْنَஉறுதியாளராகிவிட்டோம்
வ லவ் தரா இதில் முஜ்ரிமூன னாகிஸூ ரு'ஊஸிஹிம் 'இன்த ரBப்Bபிஹிம் ரBப்Bபனா அBப்ஸர்னா வ ஸமிஃனா Fபர்ஜிஃனா னஃமல் ஸாலிஹன் இன்னா மூகினூன்
மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்” என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).
وَلَوْ شِئْنَا لَاٰتَیْنَا كُلَّ نَفْسٍ هُدٰىهَا وَلٰكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّیْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟
وَ لَوْமேலும், நாம் நாடியிருந்தால்شِئْنَاநாம் நாடியிருந்தால்لَاٰتَیْنَاநாம் கொடுத்திருப்போம்كُلَّஒவ்வொருنَفْسٍஆத்மாவுக்கும்هُدٰىهَاஅதற்குரிய நேர்வழியைوَ لٰكِنْஎனினும்حَقَّஉறுதியாகிவிட்டதுالْقَوْلُவாக்குمِنِّیْஎன்னிடமிருந்துلَاَمْلَـَٔنَّ(அதாவது) நிச்சயமாக நான் நிரப்புவேன்جَهَنَّمَநரகத்தைمِنَஇருந்துالْجِنَّةِஜின்கள்وَ النَّاسِமற்றும் மனிதர்கள்اَجْمَعِیْنَஅனைவரையும் கொண்டு
வ லவ் ஷி'னா லஆதய்னா குல்ல னFப்ஸின் ஹுதாஹா வ லாகின் ஹக்கல் கவ்லு மின்னீ ல அம்ல'அன்ன ஜஹன்னம மினல் ஜின்னதி வன்னாஸி அஜ்ம'ஈன்
மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
فَذُوْقُوْا بِمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ۚ اِنَّا نَسِیْنٰكُمْ وَذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
فَذُوْقُوْاஎனவே சுவையுங்கள்بِمَاகாரணமாகنَسِیْتُمْநீங்கள் மறந்ததன்لِقَآءَசந்திப்பைیَوْمِكُمْஉங்கள் நாளின்هٰذَا ۚஇந்தاِنَّاநிச்சயமாக நாம்نَسِیْنٰكُمْஉங்களை மறந்துவிட்டோம்وَ ذُوْقُوْاமேலும் சுவையுங்கள்عَذَابَவேதனையைالْخُلْدِநிரந்தரமானبِمَاகாரணமாகكُنْتُمْநீங்கள்تَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்ததன்
Fபதூகூ Bபிமா னஸீதும் லிகா'அ யவ்மிகும் ஹாத இன்னா னஸீனாகும் வ தூகூ 'அதாBபல் குல்தி Bபிமா குன்தும் தஃமலூன்
ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததின் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம்; மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
اِنَّمَا یُؤْمِنُ بِاٰیٰتِنَا الَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகیُؤْمِنُநம்பிக்கை கொள்வார்கள்بِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைالَّذِیْنَஎவர்கள்اِذَاஎப்பொழுதுذُكِّرُوْاஅவர்கள் நினைவூட்டப்படுகிறார்களோبِهَاஅவற்றைக் கொண்டுخَرُّوْاஅவர்கள் விழுவார்கள்سُجَّدًاஸஜ்தா செய்தவர்களாகوَّ سَبَّحُوْاமேலும் அவர்கள் துதிப்பார்கள்بِحَمْدِபுகழுடன்رَبِّهِمْதங்கள் இறைவனின்وَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یَسْتَكْبِرُوْنَ۩பெருமையடிக்க
இன்னமா யு'மினு Bபி ஆயாதினல் லதீன இதா துக்கிரூ Bபிஹா கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ ஸBப்Bபஹூ Bபிஹம்தி ரBப்Bபிஹிம் வ ஹும் லா யஸ்தக்Bபிரூன்
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.
تَتَجَافٰی جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ یَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا ؗ وَّمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
تَتَجَافٰیவிலகியிருக்கும்جُنُوْبُهُمْஅவர்களின் விலாப்புறங்கள்عَنِவிட்டுالْمَضَاجِعِபடுக்கைகளைیَدْعُوْنَஅவர்கள் பிரார்த்திப்பார்கள்رَبَّهُمْதங்கள் இறைவனைخَوْفًاஅச்சத்துடன்وَّ طَمَعًا ؗமேலும் ஆசையுடன்وَّ مِمَّاமேலும் எதிலிருந்துرَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமோیُنْفِقُوْنَஅவர்கள் செலவிடுவார்கள்
ததஜாFபா ஜுனூBபுஹும் 'அனில் மளாஜி'இ யத்'ஊன ரBப்Bபஹும் கவ்Fப(ன்)வ் வ தம'அ(ன்)வ் வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِیَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْیُنٍ ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
فَلَاஎனவே இல்லைتَعْلَمُஅறியும்نَفْسٌஎந்த ஓர் ஆத்மாவும்مَّاۤஎவைاُخْفِیَமறைத்து வைக்கப்பட்டுள்ளதோلَهُمْஅவர்களுக்காகمِّنْஇருந்துقُرَّةِகுளிர்ச்சிاَعْیُنٍ ۚகண்களின்جَزَآءًۢகூலியாகبِمَاஎதன்பொருட்டுكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
Fபலா தஃலமு னFப்ஸும் மா உக்Fபிய லஹும் மின் குர்ரதி அஃயுனின் ஜZஜா'அம் Bபிமா கானூ யஃமலூன்
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.
اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا ؔؕ لَا یَسْتَوٗنَ ۟
اَفَمَنْஎனவே எவர்كَانَஇருந்தாரோمُؤْمِنًاஇறைநம்பிக்கையாளராகكَمَنْஒருவரைப் போன்றவராكَانَஇருந்தாரோفَاسِقًا ؔؕபாவியாகلَاஇல்லைیَسْتَوٗنَஅவர்கள் சமமாக மாட்டார்கள்
அFபமன் கான மு'மினன் கமன் கான Fபாஸிகா; லா யஸ்த வூன்
எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.
اَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَاْوٰی ؗ نُزُلًا بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفَلَهُمْஆகவே அவர்களுக்குجَنّٰتُசுவனங்கள்الْمَاْوٰی ؗதங்குமிடமானنُزُلًۢاவிருந்தாகبِمَاகாரணமாகكَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து வந்தார்களோ
அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபலஹும் ஜன்னாதுல் ம'வா னுZஜுலம் Bபிமா கானூ யஃமலூன்
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உபசரிக்கப்படுவார்கள்).
وَاَمَّا الَّذِیْنَ فَسَقُوْا فَمَاْوٰىهُمُ النَّارُ ؕ كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ یَّخْرُجُوْا مِنْهَاۤ اُعِیْدُوْا فِیْهَا وَقِیْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟
وَ اَمَّاஆனால்الَّذِیْنَஎவர்கள்فَسَقُوْاவரம்பு மீறினார்களோفَمَاْوٰىهُمُஅவர்களின் தங்குமிடம்النَّارُ ؕநரகம்كُلَّمَاۤஒவ்வொரு முறையும்اَرَادُوْۤاஅவர்கள் நாடினால்اَنْஎன்றுیَّخْرُجُوْاவெளியேறمِنْهَاۤஅதிலிருந்துاُعِیْدُوْاஅவர்கள் திருப்பப்படுவார்கள்فِیْهَاஅதிலேயேوَ قِیْلَமேலும் கூறப்படும்لَهُمْஅவர்களுக்குذُوْقُوْاசுவையுங்கள்عَذَابَவேதனையைالنَّارِநரகத்தின்الَّذِیْஎதனைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோبِهٖஅதனைتُكَذِّبُوْنَபொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்
வ அம்மல் லதீன Fபஸகூ Fபம'வாஹுமுன் னாரு குல்லமா அராதூ அ(ன்)ய் யக்ருஜூ மின்ஹா உ'ஈதூ Fபீஹா வ கீல லஹும் தூகூ 'அதாBபன் னாரில் லதீ குன்தும் Bபிஹீ துகத்திBபூன்
ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
وَلَنُذِیْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰی دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ لَنُذِیْقَنَّهُمْமேலும் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் சுவைக்கச் செய்வோம்مِّنَஇருந்துالْعَذَابِவேதனையைالْاَدْنٰیசிறியدُوْنَமுன்னதாகالْعَذَابِவேதனைக்குالْاَكْبَرِபெரியلَعَلَّهُمْஅவர்கள்یَرْجِعُوْنَமீளுவதற்காக
வ லனுதீகன் னஹும் மினல் 'அதாBபில் அத்னா தூனல் 'அதாBபில் அக்Bபரி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ ثُمَّ اَعْرَضَ عَنْهَا ؕ اِنَّا مِنَ الْمُجْرِمِیْنَ مُنْتَقِمُوْنَ ۟۠
وَ مَنْஇன்னும் எவர்اَظْلَمُமிக அநியாயக்காரன்مِمَّنْஅவரை விடذُكِّرَநினைவுறுத்தப்பட்டாரோبِاٰیٰتِவசனங்களைக் கொண்டுرَبِّهٖதன் இறைவனின்ثُمَّபின்னர்اَعْرَضَபுறக்கணித்தாரோعَنْهَا ؕஅவற்றைاِنَّاநிச்சயமாக நாம்مِنَஇருந்துالْمُجْرِمِیْنَகுற்றவாளிகளிடம்مُنْتَقِمُوْنَ۠பழிவாங்குபவர்கள்
வ மன் அள்லமு மிம்மன் துக்கிர Bபி ஆயாதி ரBப்Bபிஹீ தும்ம அஃரள 'அன்ஹா; இன்னா மினல் முஜ்ரிமீன முன்தகிமூன்
எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَلَا تَكُنْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآىِٕهٖ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்مُوْسَیமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைفَلَاஎனவே வேண்டாம்تَكُنْநீர் இருக்கفِیْஇல்مِرْیَةٍசந்தேகம்مِّنْபற்றிلِّقَآىِٕهٖஅவரைச் சந்திப்பதுوَ جَعَلْنٰهُமேலும் நாம் அதனை ஆக்கினோம்هُدًیநேர்வழிகாட்டியாகلِّبَنِیْۤசந்ததியினருக்குاِسْرَآءِیْلَۚஇஸ்ராயீலின்
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபலா தகுன் Fபீ மிர்யதிம் மில் லிகா'இஹீ வ ஜ'அல்னாஹு ஹுதல் லி Bபனீ இஸ்ரா'ஈல்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
وَجَعَلْنَا مِنْهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا ؕ۫ وَكَانُوْا بِاٰیٰتِنَا یُوْقِنُوْنَ ۟
وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்مِنْهُمْஅவர்களிலிருந்துاَىِٕمَّةًதலைவர்களைیَّهْدُوْنَநேர்வழி காட்டும்بِاَمْرِنَاநமது கட்டளைப்படிلَمَّاபோதுصَبَرُوْا ؕ۫அவர்கள் பொறுமை காத்தார்கள்وَ كَانُوْاமேலும் அவர்கள் இருந்தார்கள்بِاٰیٰتِنَاநமது வசனங்களைیُوْقِنُوْنَஉறுதியாக நம்பக்கூடியவர்களாக
வ ஜ'அல்னா மின்ஹும் அ'இம்மத(ன்)ய் யஹ்தூன Bபி அம்ரினா லம்மா ஸBபரூ வ கானூ Bபி ஆயாதினா யூகினூன்
இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.
اِنَّ رَبَّكَ هُوَ یَفْصِلُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவனேیَفْصِلُதீர்ப்பளிப்பான்بَیْنَهُمْஅவர்களுக்கிடையேیَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைفِیْمَاஎதில்كَانُوْاஅவர்கள்فِیْهِஅதில்یَخْتَلِفُوْنَமாறுபட்டுக் கொண்டிருந்தார்களோ
இன்ன ரBப்Bபக ஹுவ யFப்ஸிலு Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
அவர்கள் எ(வ்விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ, (அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.
اَوَلَمْ یَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنَ الْقُرُوْنِ یَمْشُوْنَ فِیْ مَسٰكِنِهِمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ ؕ اَفَلَا یَسْمَعُوْنَ ۟
اَوَ لَمْஇன்னும் இல்லையாیَهْدِவழிகாட்டلَهُمْஅவர்களுக்குكَمْஎத்தனையோاَهْلَكْنَاநாம் அழித்தோம்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னர்مِّنَஇருந்துالْقُرُوْنِதலைமுறையினரைیَمْشُوْنَஅவர்கள் நடக்கிறார்கள்فِیْஇல்مَسٰكِنِهِمْ ؕஅவர்களுடைய வசிப்பிடங்கள்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதுلَاٰیٰتٍ ؕஅத்தாட்சிகள்اَفَلَاஎனவே இல்லையாیَسْمَعُوْنَஅவர்கள் செவிமடுக்கிறார்கள்
அவலம் யஹ்தி லஹும் கம் அஹ்லக்னா மின் கBப்லிஹிம் மினல் குரூனி யம்ஷூன Fபீ மஸாகினிஹிம்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதின் அFபலா யஸ்ம'ஊன்
இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா? நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
اَوَلَمْ یَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَآءَ اِلَی الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَاْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْ ؕ اَفَلَا یُبْصِرُوْنَ ۟
اَوَ لَمْஅவர்கள்یَرَوْاபார்க்கவில்லையாاَنَّاநிச்சயமாக நாம்نَسُوْقُஓட்டிச் செல்கிறோம்الْمَآءَதண்ணீரைاِلَیநோக்கிالْاَرْضِபூமியைالْجُرُزِதரிசானفَنُخْرِجُபின்னர் நாம் வெளியாக்குகிறோம்بِهٖஅதைக் கொண்டுزَرْعًاபயிர்களைتَاْكُلُஉண்ணுகின்றனمِنْهُஅதிலிருந்துاَنْعَامُهُمْஅவர்களுடைய கால்நடைகள்وَ اَنْفُسُهُمْ ؕஅவர்களும்اَفَلَاஎனவே அவர்கள்یُبْصِرُوْنَபார்க்கவில்லையா
அவலம் யரவ் அன்னா னஸூகுல் மா'அ இலல் அர்ளில் ஜுருZஜி Fபனுக்ரிஜு Bபிஹீ Zஜர்'அன் த'குலு மின்ஹு அன்'ஆமுஹும் வ அன்Fபுஸுஹும் அFபலா யுBப்ஸிரூன்
அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْفَتْحُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்مَتٰیஎப்போதுهٰذَاஇந்தالْفَتْحُவெற்றிاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் Fபத்ஹ் ஹு இன் குன்தும் ஸாதிகீன்
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வாக்களிக்கப்பட்ட) அந்த வெற்றித் (தீர்ப்பு நாள்) எப்பொழுது (வரும்)?” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
قُلْ یَوْمَ الْفَتْحِ لَا یَنْفَعُ الَّذِیْنَ كَفَرُوْۤا اِیْمَانُهُمْ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
قُلْகூறுவீராகیَوْمَநாளில்الْفَتْحِதீர்ப்பின்لَاஇல்லைیَنْفَعُபயனளிக்கும்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاِیْمَانُهُمْஅவர்களின் நம்பிக்கைوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُنْظَرُوْنَஅவகாசம் அளிக்கப்படுவார்கள்
குல் யவ்மல் Fபத்ஹ் ஹி லா யன்Fப'உல் லதீன கFபரூ ஈமானுஹும் வலா ஹும் யுன்ளரூன்
“அந்த வெற்றி(த் தீர்ப்பு) நாளின் போது நிராகரிப்போர், நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு பயன் அளிக்காது - அவர்களுக்குத் தவணையும் கொடுக்கப்பட மாட்டாது.
فَاَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ اِنَّهُمْ مُّنْتَظِرُوْنَ ۟۠
فَاَعْرِضْஎனவே புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களைوَ انْتَظِرْமேலும் காத்திருப்பீராகاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مُّنْتَظِرُوْنَ۠காத்திருப்பவர்கள்
Fப அஃரிள் 'அன்ஹும் வன்தளிர் இன்னஹும் முன்தளிரூன்
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்ப்பீராக! நிச்சயமாக அவர்களும் அதை எதிர்பார்ப்பவர்கள் தாம்.