22. ஸூரத்துல் ஹஜ்

மதனீ, வசனங்கள்: 78

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ ۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَیْءٌ عَظِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاتَّقُوْاஅஞ்சுங்கள்رَبَّكُمْ ۚஉங்கள் இறைவனைاِنَّநிச்சயமாகزَلْزَلَةَநடுக்கம்السَّاعَةِஇறுதி வேளையின்شَیْءٌஒரு காரியம்عَظِیْمٌமகத்தானது
யா அய்யுஹன் னாஸுத்தகூ ரBப்Bபகும்; இன்ன Zஜல்Zஜலதஸ் ஸா'அதி ஷய்'உன் 'அளீம்
மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.
یَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَی النَّاسَ سُكٰرٰی وَمَا هُمْ بِسُكٰرٰی وَلٰكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِیْدٌ ۟
یَوْمَஅந்நாளில்تَرَوْنَهَاநீங்கள் அதைக் காணும்போதுتَذْهَلُமறந்துவிடுவாள்كُلُّஒவ்வொருمُرْضِعَةٍபாலூட்டும் தாயும்عَمَّاۤஎதைاَرْضَعَتْஅவள் பாலூட்டினாளோوَ تَضَعُமேலும் பிரசவித்துவிடுவாள்كُلُّஒவ்வொருذَاتِஉடையவளும்حَمْلٍகர்ப்பம்حَمْلَهَاதன் கருவைوَ تَرَیமேலும் நீர் காண்பீர்النَّاسَமனிதர்களைسُكٰرٰیபோதையுற்றவர்களாகوَ مَاஆனால் இல்லைهُمْஅவர்கள்بِسُكٰرٰیபோதையுற்றவர்களாகوَ لٰكِنَّஎனினும்عَذَابَவேதனைاللّٰهِஅல்லாஹ்வின்شَدِیْدٌமிகக் கடுமையானதாகும்
யவ்ம தரவ்னஹா தத்ஹலு குல்லு முர்ளி'அதின் 'அம்மா அர்ள'அத் வ தள'உ குல்லு தாதி ஹம்லின் ஹம்லஹா வ தரன்னாஸ ஸுகாரா வ மா ஹும் Bபிஸுகாரா வ லகின்ன 'அதாBபல் லாஹி ஷதீத்
அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல; ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّیَتَّبِعُ كُلَّ شَیْطٰنٍ مَّرِیْدٍ ۟ۙ
وَ مِنَஇன்னும்النَّاسِமனிதர்களில்مَنْஎவர்یُّجَادِلُதர்க்கம் செய்கிறாரோفِیபற்றிاللّٰهِஅல்லாஹ்வைப்بِغَیْرِஇன்றிعِلْمٍஅறிவுوَّ یَتَّبِعُமேலும் பின்பற்றுகிறார்كُلَّஒவ்வொருشَیْطٰنٍஷைத்தானையும்مَّرِیْدٍۙகலகக்கார
வ மினன் னாஸி மய் யுஜாதிலு Fபில் லாஹி Bபிகய்ரி 'இல்மி(ன்)வ் வ யத்தBபி'உ குல்லா ஷய்தானிம் மரீத்
இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
كُتِبَ عَلَیْهِ اَنَّهٗ مَنْ تَوَلَّاهُ فَاَنَّهٗ یُضِلُّهٗ وَیَهْدِیْهِ اِلٰی عَذَابِ السَّعِیْرِ ۟
كُتِبَவிதிக்கப்பட்டுள்ளதுعَلَیْهِஅவன் மீதுاَنَّهٗஎன்னவென்றால்مَنْஎவர்تَوَلَّاهُஅவனைப் பின்பற்றுகிறாரோفَاَنَّهٗஆகவே நிச்சயமாக அவன்یُضِلُّهٗஅவனை வழிதவறச் செய்வான்وَ یَهْدِیْهِமேலும் அவனை வழிநடத்துவான்اِلٰیநோக்கிعَذَابِவேதனையைالسَّعِیْرِகொழுந்துவிட்டெரியும் நரகத்தின்
குதிBப 'அலய்ஹி அன்னஹூ மன் தவல்லாஹு Fப அன்னஹூ யுளில்லுஹூ வ யஹ்தீஹி இலா 'அதாBபிஸ் ஸ'ஈர்
அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது; எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.
یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّنَ الْبَعْثِ فَاِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَیْرِ مُخَلَّقَةٍ لِّنُبَیِّنَ لَكُمْ ؕ وَنُقِرُّ فِی الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ۚ وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی وَمِنْكُمْ مَّنْ یُّرَدُّ اِلٰۤی اَرْذَلِ الْعُمُرِ لِكَیْلَا یَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَیْـًٔا ؕ وَتَرَی الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்فِیْஇல்رَیْبٍசந்தேகம்مِّنَபற்றிالْبَعْثِஉயிர்த்தெழுதலைப்فَاِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்مِّنْலிருந்துتُرَابٍமண்ثُمَّபின்னர்مِنْலிருந்துنُّطْفَةٍவிந்துத் துளிثُمَّபின்னர்مِنْலிருந்துعَلَقَةٍஇரத்தக்கட்டிثُمَّபின்னர்مِنْலிருந்துمُّضْغَةٍசதைத்துண்டுمُّخَلَّقَةٍஉருவாக்கப்பட்டوَّ غَیْرِமேலும் அல்லாதمُخَلَّقَةٍஉருவாக்கப்பட்டلِّنُبَیِّنَநாம் தெளிவுபடுத்துவதற்காகلَكُمْ ؕஉங்களுக்குوَ نُقِرُّமேலும் நாம் தங்கவைக்கிறோம்فِیஇல்الْاَرْحَامِகர்ப்பப்பைகள்مَاஎதைنَشَآءُநாம் நாடுகிறோமோاِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைمُّسَمًّیகுறிக்கப்பட்டثُمَّபின்னர்نُخْرِجُكُمْஉங்களை வெளிப்படுத்துகிறோம்طِفْلًاகுழந்தையாகثُمَّபின்னர்لِتَبْلُغُوْۤاநீங்கள் அடைவதற்காகاَشُدَّكُمْ ۚஉங்கள் முழு வலிமையைوَ مِنْكُمْமேலும் உங்களில்مَّنْஎவர்یُّتَوَفّٰیமரணமடைகிறாரோوَ مِنْكُمْமேலும் உங்களில்مَّنْஎவர்یُّرَدُّதிருப்பப்படுகிறாரோاِلٰۤیபால்اَرْذَلِமிகத் தளர்ந்தالْعُمُرِவயதுلِكَیْلَاகூடாது என்பதற்காகیَعْلَمَஅவர் அறியمِنْۢலிருந்துبَعْدِபிறகுعِلْمٍஅறிவுشَیْـًٔا ؕஎதையும்وَ تَرَیமேலும் நீர் பார்க்கிறீர்الْاَرْضَபூமியைهَامِدَةًகாய்ந்து கிடப்பதாகفَاِذَاۤபின்னர் எப்போதுاَنْزَلْنَاநாம் இறக்கினோமோعَلَیْهَاஅதன் மீதுالْمَآءَநீரைاهْتَزَّتْஅது கிளர்ந்தெழுகிறதுوَ رَبَتْமேலும் அது செழிக்கிறதுوَ اَنْۢبَتَتْமேலும் அது முளைப்பிக்கிறதுمِنْலிருந்துكُلِّஒவ்வொருزَوْجٍۭவகைبَهِیْجٍஅழகான
யா அய்யுஹன் னாஸு இன் குன்தும் Fபீ ரய்Bபின் மினல் Bபஃதி Fப இன்னா கலக்னாகும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம மின் 'அலகதின் தும்ம மின் முள்கதின் முகல்லகதி(ன்)வ் வ கய்ரி முகல்லகதின் லினுBபய்யின லகும்; வ னுகிர்ரு Fபில் அர்ஹாமி மா னஷா'உ இலா அஜலின் முஸம்மன் தும்ம னுக்ரிஜுகும் திFப்லன் தும்ம லிதBப்லுகூ அஷுத்தகும் வ மின்கும் மய் யுதவFப்Fப வ மின்கும் மய் யுரத்து இலா அர்தலில் 'உமுரி லிகய்லா யஃலம மின் Bபஃதி 'இல்மின் ஷய்'ஆ; வ தரல் அர்ள ஹாமிததன் Fப இதா அன்Zஜல்னா 'அலய்ஹல் மா'அஹ் தZஜ்Zஜத் வ ரBபத் வ அம்Bபதத் மின் குல்லி Zஜவ்ஜின் Bபஹீஜ்
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّهٗ یُحْیِ الْمَوْتٰی وَاَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟ۙ
ذٰلِكَஅதுبِاَنَّஏனெனில்اللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالْحَقُّசத்தியமானவன்وَ اَنَّهٗமேலும் அவன்یُحْیِஉயிர்ப்பிக்கிறான்الْمَوْتٰیஇறந்தவர்களைوَ اَنَّهٗமேலும் அவன்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌۙபேராற்றலுடையவன்
தாலிக Bபி அன்னல் லாஹ ஹுவல் ஹக்கு வ அன்னஹூ யுஹ்யில் மவ்தா வ அன்னஹூ 'அலாகுல்லி ஷய்'இன் கதீர்
இது ஏனெனில்: நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால்.
وَّاَنَّ السَّاعَةَ اٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا ۙ وَاَنَّ اللّٰهَ یَبْعَثُ مَنْ فِی الْقُبُوْرِ ۟
وَّ اَنَّமேலும் நிச்சயமாகالسَّاعَةَஇறுதி வேளைاٰتِیَةٌவரக்கூடியதுلَّاஇல்லைرَیْبَசந்தேகம்فِیْهَا ۙஅதில்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَبْعَثُஎழுப்புவான்مَنْஎவர்களைفِیஉள்ளேالْقُبُوْرِமண்ணறைகள்
வ அன்னஸ் ஸா'அத ஆதிய துல் லா ரய்Bப Fபீஹா வ அன்னல் லாஹ யBப்'அதுமன் Fபில் குBபூர்
(கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّلَا هُدًی وَّلَا كِتٰبٍ مُّنِیْرٍ ۟ۙ
وَ مِنَமேலும்النَّاسِமனிதர்களில்مَنْஒருவன்یُّجَادِلُதர்க்கம் செய்கிறான்فِیபற்றிاللّٰهِஅல்லாஹ்வைப்بِغَیْرِஇல்லாமல்عِلْمٍஅறிவுوَّ لَاஇல்லாமலும்هُدًیநேர்வழிوَّ لَاஇல்லாமலும்كِتٰبٍவேதம்مُّنِیْرٍۙஒளிமிக்க
வ மினன் னாஸி மய் யுஜாதிலு Fபில் லாஹி Bபிகய்ரி 'இல்மி(ன்)வ் வலா ஹுத(ன்)வ் வலா கிதாBபிம் முனீர்
இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.
ثَانِیَ عِطْفِهٖ لِیُضِلَّ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ لَهٗ فِی الدُّنْیَا خِزْیٌ وَّنُذِیْقُهٗ یَوْمَ الْقِیٰمَةِ عَذَابَ الْحَرِیْقِ ۟
ثَانِیَதிருப்பிعِطْفِهٖதன் கழுத்தைلِیُضِلَّவழிகெடுப்பதற்காகعَنْஇருந்துسَبِیْلِபாதைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்لَهٗஅவனுக்குفِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்خِزْیٌஇழிவுوَّ نُذِیْقُهٗமேலும் நாம் அவனைச் சுவைக்கச் செய்வோம்یَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைعَذَابَவேதனையைالْحَرِیْقِசுட்டெரிக்கும் நெருப்பின்
தானிய 'இத்Fபிஹீ லியுளில்ல 'அன் ஸBபீலில் லாஹி லஹூ Fபித்துன் யா கிZஜ்யு(ன்)வ் வ னுதீகுஹூ யவ்மல் கியாமதி 'அதாBபல் ஹரீக்
(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ یَدٰكَ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠
ذٰلِكَஇதுبِمَاகாரணமாகقَدَّمَتْமுற்படுத்தியதோیَدٰكَஉமது இரு கைகள்وَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَیْسَஅல்லبِظَلَّامٍஅநியாயம் செய்பவன்لِّلْعَبِیْدِ۠அடியார்களுக்கு
தாலிக Bபிமா கத்தமத் யதாக வ அன்னல் லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில்'அBபீத்
“உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்)
وَمِنَ النَّاسِ مَنْ یَّعْبُدُ اللّٰهَ عَلٰی حَرْفٍ ۚ فَاِنْ اَصَابَهٗ خَیْرُ طْمَاَنَّ بِهٖ ۚ وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ نْقَلَبَ عَلٰی وَجْهِهٖ ۚ۫ خَسِرَ الدُّنْیَا وَالْاٰخِرَةَ ؕ ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِیْنُ ۟
وَ مِنَமேலும்النَّاسِமனிதர்களில்مَنْஎவன்یَّعْبُدُவணங்குகிறானோاللّٰهَஅல்லாஹ்வைعَلٰیஒருحَرْفٍ ۚவிளிம்பில்فَاِنْஎனவேاَصَابَهٗஅவனுக்கு ஏற்பட்டால்خَیْرُஒரு நன்மைطْمَاَنَّஅவன் திருப்தியடைகிறான்بِهٖ ۚஅதைக் கொண்டுوَ اِنْஆனால்اَصَابَتْهُஅவனுக்கு ஏற்பட்டால்فِتْنَةُஒரு சோதனைنْقَلَبَஅவன் திரும்பி விடுகிறான்عَلٰیமீதுوَجْهِهٖ ۚ۫தன் முகத்தின்خَسِرَஅவன் நஷ்டமடைந்தான்الدُّنْیَاஇவ்வுலகத்தையும்وَ الْاٰخِرَةَ ؕமறுமையையும்ذٰلِكَஅதுதான்هُوَஅதுالْخُسْرَانُநஷ்டமாகும்الْمُبِیْنُதெளிவான
வ மினன் னாஸி மய் யஃBபுதுல் லாஹ 'அலா ஹர்Fபின் Fப இன் அஸாBபஹூ கய்ருனித் ம'அன்ன Bபிஹீ வ இன் அஸாBபத் ஹு Fபித்னதுனின் கலBப 'அலா வஜ்ஹிஹீ கஸிரத் துன்யா வல் ஆகிரஹ்; தாலிக ஹுவல் குஸ்ரானுல் முBபீன்
இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
یَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهٗ وَمَا لَا یَنْفَعُهٗ ؕ ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِیْدُ ۟ۚ
یَدْعُوْاஅவன் அழைக்கிறான்مِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைمَاஎதைلَاசெய்யாதோیَضُرُّهٗஅவனுக்குத் தீங்குوَ مَاஇன்னும் எதைلَاஅளிக்காதோیَنْفَعُهٗ ؕஅவனுக்குப் பயன்ذٰلِكَஅதுهُوَஅதுவேالضَّلٰلُவழிகேடுالْبَعِیْدُۚவெகு தூரமான
யத்'ஊ மின் தூனில் லாஹி மா லா யளுர்ருஹூ வமா லா யன்Fப'உஹ்' தாலிக ஹுவள் ளலாலுல் Bப'இத்
அவன், அல்லாஹ்வையன்றி, தனக்குத் தீங்கிழைக்க முடியாததையும், இன்னும் தனக்கு நன்மையும் செய்யாததையுமே பிரார்த்திக்கிறான் - இதுதான் நெடிய வழிகேடாகும்.
یَدْعُوْا لَمَنْ ضَرُّهٗۤ اَقْرَبُ مِنْ نَّفْعِهٖ ؕ لَبِئْسَ الْمَوْلٰی وَلَبِئْسَ الْعَشِیْرُ ۟
یَدْعُوْاஅவன் அழைக்கிறான்لَمَنْஎவனை என்றால்ضَرُّهٗۤஅவனது தீங்குاَقْرَبُமிக நெருக்கமானதோمِنْவிடنَّفْعِهٖ ؕஅவனது நன்மையைلَبِئْسَநிச்சயமாக மிகக் கெட்டالْمَوْلٰیபாதுகாவலன்وَ لَبِئْسَஇன்னும் நிச்சயமாக மிகக் கெட்டالْعَشِیْرُதோழன்
யத்'ஊ லமன் ளர்ருஹூ அக்ரBபு மின் னFப்'இஹ்; லBபி'ஸல்மவ்லா வ லBபி'ஸல் 'அஷீர்
எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் - திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُدْخِلُநுழைவிப்பான்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைجَنّٰتٍசுவனச்சோலைகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ؕஆறுகள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَفْعَلُசெய்வான்مَاஎதைیُرِیْدُநாடுகிறானோ
இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; இன்னல் லாஹ யFப்'அலு மா யுரீத்
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
مَنْ كَانَ یَظُنُّ اَنْ لَّنْ یَّنْصُرَهُ اللّٰهُ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ فَلْیَمْدُدْ بِسَبَبٍ اِلَی السَّمَآءِ ثُمَّ لْیَقْطَعْ فَلْیَنْظُرْ هَلْ یُذْهِبَنَّ كَیْدُهٗ مَا یَغِیْظُ ۟
مَنْஎவர்كَانَஇருக்கிறாரோیَظُنُّஎண்ணுகிறாரோاَنْஎன்றுلَّنْஒருபோதும் மாட்டான்یَّنْصُرَهُஅவருக்கு உதவி செய்யاللّٰهُஅல்லாஹ்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِமற்றும் மறுமைفَلْیَمْدُدْஅவர் நீட்டட்டும்بِسَبَبٍஒரு கயிற்றைاِلَیநோக்கிالسَّمَآءِவானத்தைثُمَّபிறகுلْیَقْطَعْஅவர் துண்டிக்கட்டும்فَلْیَنْظُرْபின்னர் அவர் பார்க்கட்டும்هَلْஎன்பதைیُذْهِبَنَّநிச்சயமாகப் போக்கிவிடுமாكَیْدُهٗஅவருடைய சூழ்ச்சிمَاஎதுیَغِیْظُஆத்திரமூட்டுகிறதோ
மன் கான யளுன்னு அல்லய் யன்ஸுரஹுல் லாஹு Fபித் துன்யா வல் ஆகிரதி Fபல் யம்துத் BபிஸBபBபின் இலஸ் ஸமா'இ தும்மல் யக்தஃ Fபல்யன்ளுர் ஹல் யுத்ஹிBபன்ன கய்துஹூ மா யகீள்
எவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே! இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்!
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ اٰیٰتٍ بَیِّنٰتٍ ۙ وَّاَنَّ اللّٰهَ یَهْدِیْ مَنْ یُّرِیْدُ ۟
وَ كَذٰلِكَமேலும் இவ்வாறேاَنْزَلْنٰهُஅதனை நாம் இறக்கியருளினோம்اٰیٰتٍۭவசனங்களாகبَیِّنٰتٍ ۙதெளிவானوَّ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَهْدِیْநேர்வழி காட்டுகிறான்مَنْஎவரைیُّرِیْدُஅவன் நாடுகிறானோ
வ கதாலிக அன்Zஜல்னாஹு ஆயாதிம் Bபய்யினாதி(ன்)வ் வ அன்னல் லாஹ யஹ்தீ மய் யுரீத்
இன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـِٕیْنَ وَالنَّصٰرٰی وَالْمَجُوْسَ وَالَّذِیْنَ اَشْرَكُوْۤا ۖۗ اِنَّ اللّٰهَ یَفْصِلُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ الَّذِیْنَமேலும் எவர்கள்هَادُوْاயூதர்களாக இருக்கிறார்களோوَ الصّٰبِـِٕیْنَமேலும் ஸாபியீன்களும்وَ النَّصٰرٰیமேலும் கிறிஸ்தவர்களும்وَ الْمَجُوْسَமேலும் மஜூஸிகளும்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اَشْرَكُوْۤا ۖۗஇணைவைத்தார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَفْصِلُதீர்ப்பளிப்பான்بَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்یَوْمَநாளில்الْقِیٰمَةِ ؕமறுமைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்شَهِیْدٌசாட்சியாக இருக்கிறான்
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வஸ் ஸாBபி'ஈன வன் னஸாரா வல் மஜூஸ வல்லதீன அஷ்ரகூ இன்னல் லாஹ யFப்ஸிலு Bபய்னஹும் யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یَسْجُدُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَكَثِیْرٌ مِّنَ النَّاسِ ؕ وَكَثِیْرٌ حَقَّ عَلَیْهِ الْعَذَابُ ؕ وَمَنْ یُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ ؕ اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یَشَآءُ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்க்கاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்வைیَسْجُدُசிரம் பணிகிறார்கள்لَهٗஅவனுக்குمَنْஎவர்فِیஇல்السَّمٰوٰتِவானங்களில்وَ مَنْஇன்னும் எவர்فِیஇல்الْاَرْضِபூமியில்وَ الشَّمْسُசூரியனும்وَ الْقَمَرُசந்திரனும்وَ النُّجُوْمُநட்சத்திரங்களும்وَ الْجِبَالُமலைகளும்وَ الشَّجَرُமரங்களும்وَ الدَّوَآبُّஉயிரினங்களும்وَ كَثِیْرٌஇன்னும் அநேகர்مِّنَஇருந்துالنَّاسِ ؕமனிதர்களில்وَ كَثِیْرٌஇன்னும் அநேகர்حَقَّஉறுதியாகிவிட்டதுعَلَیْهِஅவர்கள் மீதுالْعَذَابُ ؕவேதனைوَ مَنْஇன்னும் எவரைیُّهِنِஇழிவுபடுத்துகிறானோاللّٰهُஅல்லாஹ்فَمَاஇல்லைلَهٗஅவனுக்குمِنْஎந்த ஒருمُّكْرِمٍ ؕகண்ணியப்படுத்துபவரும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَفْعَلُசெய்கிறான்مَاஎதைیَشَآءُؕ۩நாடுகிறானோ
அலம் தர அன்னல் லாஹ யஸ்ஜுது லஹூ மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ளி வஷ் ஷம்ஸு வல்கமரு வன் னு ஜூமு வல் ஜிBபாலு வஷ் ஷஜரு வத் தவாBப்Bபு வ கதீரும் மினன் னாஸி வ கதீருன் ஹக்க 'அலய்ஹில் 'அதாBப்; வ மய் யுஹினில் லாஹு Fபமா லஹூ மிம் முக்ரிம்; இன்னல்லாஹ யFப்'அலு மா யஷா
வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
هٰذٰنِ خَصْمٰنِ اخْتَصَمُوْا فِیْ رَبِّهِمْ ؗ فَالَّذِیْنَ كَفَرُوْا قُطِّعَتْ لَهُمْ ثِیَابٌ مِّنْ نَّارٍ ؕ یُصَبُّ مِنْ فَوْقِ رُءُوْسِهِمُ الْحَمِیْمُ ۟ۚ
هٰذٰنِஇவ்விருவரும்خَصْمٰنِஇரு எதிர்தரப்பினர்اخْتَصَمُوْاதர்க்கம் செய்துகொண்டனர்فِیْபற்றிرَبِّهِمْ ؗதங்கள் இறைவனைفَالَّذِیْنَஆகவே எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோقُطِّعَتْவெட்டப்படும்لَهُمْஅவர்களுக்குثِیَابٌஆடைகள்مِّنْஇலிருந்துنَّارٍ ؕநெருப்புیُصَبُّஊற்றப்படும்مِنْஇலிருந்துفَوْقِமேல்رُءُوْسِهِمُஅவர்களின் தலைகளின்الْحَمِیْمُۚகொதிக்கும் நீர்
ஹாதானி கஸ்மானிக் தஸமூ Fபீ ரBப்Bபிஹிம் Fபல் லதீன கFபரூ குத்தி'அத் லஹும் தியாBபும் மின் னார்; யுஸBப்Bபு மின் Fபவ்கி ரு'ஊஸிஹிமுல் ஹமீம்
(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.
یُصْهَرُ بِهٖ مَا فِیْ بُطُوْنِهِمْ وَالْجُلُوْدُ ۟ؕ
یُصْهَرُஉருக்கப்படும்بِهٖஅதைக் கொண்டுمَاஎவைفِیْஉள்ளதோبُطُوْنِهِمْஅவர்களின் வயிறுகளில்وَ الْجُلُوْدُؕஇன்னும் தோல்களும்
யுஸ்ஹரு Bபிஹீ மா Fபீ Bபுதூனிஹிம் வல்ஜுலூத்
அதைக் கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும்.
وَلَهُمْ مَّقَامِعُ مِنْ حَدِیْدٍ ۟
وَ لَهُمْமேலும் அவர்களுக்குمَّقَامِعُசம்மட்டிகள்مِنْஆனحَدِیْدٍஇரும்பு
வ லஹும் மகாமி'உ மின் ஹதீத்
இன்னும் அவர்களுக்காக இரும்பினாலான தண்டங்களும் உண்டு.
كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ یَّخْرُجُوْا مِنْهَا مِنْ غَمٍّ اُعِیْدُوْا فِیْهَا ۗ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟۠
كُلَّمَاۤஒவ்வொரு முறையும்اَرَادُوْۤاஅவர்கள் நாடினால்اَنْஎன்றுیَّخْرُجُوْاஅவர்கள் வெளியேறمِنْهَاஅதிலிருந்துمِنْஇருந்துغَمٍّதுக்கத்தினால்اُعِیْدُوْاஅவர்கள் திருப்பப்படுவார்கள்فِیْهَا ۗஅதிலேயேوَ ذُوْقُوْاமேலும் சுவையுங்கள்عَذَابَவேதனையைالْحَرِیْقِ۠சுட்டெரிக்கும்
குல்லமா அராதூ அ(ன்)ய் யக்ருஜூ மின்ஹா மின் கம்மின் உ'ஈதூ Fபீஹா வ தூகூ 'அதாBபல் ஹரீக்
(இந்த) துக்கத்தினால் அவர்கள் அ(ந் நரகத்)தை விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளே திருப்பப்பட்டு, “எரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்” (என்று சொல்லப்படும்).
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ؕ وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُدْخِلُநுழைவிப்பான்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைجَنّٰتٍசுவனபதிகளில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்یُحَلَّوْنَஅவர்கள் அணிவிக்கப்படுவார்கள்فِیْهَاஅவற்றில்مِنْகொண்டுاَسَاوِرَவளையல்களைمِنْஆனذَهَبٍதங்கம்وَّ لُؤْلُؤًا ؕமேலும் முத்துக்களையும்وَ لِبَاسُهُمْமேலும் அவர்களின் ஆடைفِیْهَاஅவற்றில்حَرِیْرٌபட்டாகும்
இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ லு'லு'ஆ; வ லிBபாஸுஹும் Fபீஹா ஹரீர்
ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
وَهُدُوْۤا اِلَی الطَّیِّبِ مِنَ الْقَوْلِ ۖۚ وَهُدُوْۤا اِلٰی صِرَاطِ الْحَمِیْدِ ۟
وَ هُدُوْۤاமேலும் அவர்கள் வழிகாட்டப்பட்டார்கள்اِلَیநோக்கிالطَّیِّبِதூய்மையானதைمِنَஇருந்துالْقَوْلِ ۖۚசொல்லில்وَ هُدُوْۤاமேலும் அவர்கள் வழிகாட்டப்பட்டார்கள்اِلٰیநோக்கிصِرَاطِபாதையைالْحَمِیْدِபுகழுக்குரியவனின்
வ ஹுதூ இலத் தய்யிBபி மினல் கவ்லி வ ஹுதூ இலா ஸிராதில் ஹமீத்
ஏனெனில் அவர்கள் (கலிமா தையிபா எனும்) பரிசுத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும் புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِیْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَآءَ لْعَاكِفُ فِیْهِ وَالْبَادِ ؕ وَمَنْ یُّرِدْ فِیْهِ بِاِلْحَادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَلِیْمٍ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ یَصُدُّوْنَமேலும் தடுக்கிறார்களோعَنْஇருந்துسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்وَ الْمَسْجِدِமேலும் மஸ்ஜிதுல்الْحَرَامِஹராமைالَّذِیْஎதனைجَعَلْنٰهُநாம் ஆக்கினோமோلِلنَّاسِமனிதர்களுக்குسَوَآءَசமமாகلْعَاكِفُதங்கியிருப்பவரும்فِیْهِஅதில்وَ الْبَادِ ؕமேலும் வெளியூரிலிருந்து வருபவரும்وَ مَنْஇன்னும் எவர்یُّرِدْநாடுகிறாரோفِیْهِஅதில்بِاِلْحَادٍۭவரம்பு மீறுதலைبِظُلْمٍஅநியாயமாகنُّذِقْهُநாம் அவருக்கு சுவைக்கச் செய்வோம்مِنْஇருந்துعَذَابٍவேதனையைاَلِیْمٍ۠நோவினை தரும்
இன்னல் லதீன கFபரூ வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வல் மஸ்ஜிதில் ஹராமில் லதீ ஜ'அல்னாஹு லின்னாஸி ஸவா'அனில் 'ஆகிFபு Fபீஹி வல்Bபாத்; வ மய் யுரித் Fபீஹி Bபி இல்ஹாதிம் Bபிளுல்மின் னுதிக்ஹு மின் 'அதாBபின் அலீம்
நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.
وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِیْمَ مَكَانَ الْبَیْتِ اَنْ لَّا تُشْرِكْ بِیْ شَیْـًٔا وَّطَهِّرْ بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْقَآىِٕمِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)بَوَّاْنَاநாம் நிர்ணயித்துக் கொடுத்ததைلِاِبْرٰهِیْمَஇப்ராஹீமுக்குمَكَانَஇடத்தைالْبَیْتِஅந்த ஆலயத்தின்اَنْஎன்றுلَّاவேண்டாம்تُشْرِكْநீர் இணைவைக்கبِیْஎன்னோடுشَیْـًٔاஎதனையும்وَّ طَهِّرْமேலும் தூய்மைப்படுத்துவீராகبَیْتِیَஎனது ஆலயத்தைلِلطَّآىِٕفِیْنَசுற்றி வருபவர்களுக்காகوَ الْقَآىِٕمِیْنَமேலும் நின்று வணங்குபவர்களுக்காகوَ الرُّكَّعِமேலும் குனிந்து வணங்குபவர்களுக்காகالسُّجُوْدِசிரம்பணிந்து வணங்குபவர்களுக்காக
வ இத் Bபவ்வானா லி இBப்ராஹீம மகானல் Bபய்தி அல்லா துஷ்ரிக் Bபீ ஷய்'அ(ன்)வ் வ தஹ்ஹிர் Bபய்திய லிதா'இFபீன வல்கா' இமீன வர்ருக்க 'இஸ் ஸுஜூத்
நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).
وَاَذِّنْ فِی النَّاسِ بِالْحَجِّ یَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰی كُلِّ ضَامِرٍ یَّاْتِیْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِیْقٍ ۟ۙ
وَ اَذِّنْமேலும் அறிவிப்பீராகفِیமத்தியில்النَّاسِமனிதர்களின்بِالْحَجِّஹஜ்ஜைக் குறித்துیَاْتُوْكَஅவர்கள் உம்மிடம் வருவார்கள்رِجَالًاகால்நடையாகوَّ عَلٰیமேலும் மீதும்كُلِّஒவ்வொருضَامِرٍமெலிந்த ஒட்டகத்தின்یَّاْتِیْنَஅவை வரும்مِنْஇருந்துكُلِّஒவ்வொருفَجٍّபாதைعَمِیْقٍۙதொலைதூர
வ அத்தின் Fபின் னாஸி Bபில் ஹஜ்ஜி யாதூக ரிஜால(ன்)வ் வ 'அலா குல்லி ளாமிரி(ன்)ய் யாதீன மின் குல்லி Fபஜ்ஜின் 'அமீக்
ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).
لِّیَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَیَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِیْۤ اَیَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ۚ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآىِٕسَ الْفَقِیْرَ ۟ؗ
لِّیَشْهَدُوْاஅவர்கள் காண்பதற்காகمَنَافِعَபயன்களைلَهُمْதங்களுக்குரியوَ یَذْكُرُواமேலும் அவர்கள் நினைவுகூரاسْمَபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்فِیْۤஇல்اَیَّامٍநாட்களில்مَّعْلُوْمٰتٍகுறிப்பிட்டعَلٰیமீதுمَاஎவற்றின்رَزَقَهُمْஅவர்களுக்கு அவன் வழங்கினானோمِّنْۢஇருந்துبَهِیْمَةِகால்நடைالْاَنْعَامِ ۚவர்க்கத்தின்فَكُلُوْاஆகவே உண்ணுங்கள்مِنْهَاஅவற்றிலிருந்துوَ اَطْعِمُواமேலும் உணவளியுங்கள்الْبَآىِٕسَவறியவர்களுக்கும்الْفَقِیْرَؗஏழைகளுக்கும்
லி யஷ்ஹதூ மனாFபி'அ லஹும் வ யத்குருஸ் மல் லாஹி Fபீ அய்யாமிம்மஃலூமாதின் 'அலா மா ரZஜகஹும் மிம் Bபஹீமதில் அன்'ஆமி Fபகுலூ மின்ஹா வ அத்'இமுல் Bபா'இஸல் Fபகீர்
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
ثُمَّ لْیَقْضُوْا تَفَثَهُمْ وَلْیُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْیَطَّوَّفُوْا بِالْبَیْتِ الْعَتِیْقِ ۟
ثُمَّபின்னர்لْیَقْضُوْاஅவர்கள் போக்கட்டும்تَفَثَهُمْதங்களின் அழுக்குகளைوَ لْیُوْفُوْاஇன்னும் அவர்கள் நிறைவேற்றட்டும்نُذُوْرَهُمْதங்களின் நேர்ச்சைகளைوَ لْیَطَّوَّفُوْاஇன்னும் அவர்கள் தவாஃப் செய்யட்டும்بِالْبَیْتِஅந்த ஆலயத்தைالْعَتِیْقِபழமையான
தும்மல் யக்ளூ தFபதஹும் வல் யூFபூ னுதூரஹும் வல் யத்தவ்வFபூ Bபில் Bபய்தில் 'அதீக்
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை “தவாஃபும்” செய்ய வேண்டும்.
ذٰلِكَ ۗ وَمَنْ یُّعَظِّمْ حُرُمٰتِ اللّٰهِ فَهُوَ خَیْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖ ؕ وَاُحِلَّتْ لَكُمُ الْاَنْعَامُ اِلَّا مَا یُتْلٰی عَلَیْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِ ۟ۙ
ذٰلِكَ ۗஇதுவேوَ مَنْமேலும் எவர்یُّعَظِّمْகண்ணியப்படுத்துகிறாரோحُرُمٰتِபுனிதமானவற்றைاللّٰهِஅல்லாஹ்வின்فَهُوَஅதுخَیْرٌமிகச் சிறந்ததுلَّهٗஅவருக்குعِنْدَஇடத்தில்رَبِّهٖ ؕஅவருடைய இறைவனின்وَ اُحِلَّتْமேலும் அனுமதிக்கப்பட்டுள்ளனلَكُمُஉங்களுக்குالْاَنْعَامُகால்நடைகள்اِلَّاதவிரمَاஎவைیُتْلٰیஓதிக் காட்டப்படுகிறதோعَلَیْكُمْஉங்களுக்குفَاجْتَنِبُواஎனவே விலகிக் கொள்ளுங்கள்الرِّجْسَஅசுத்தத்தைمِنَஆகியالْاَوْثَانِசிலைகள்وَ اجْتَنِبُوْاமேலும் விலகிக் கொள்ளுங்கள்قَوْلَபேச்சைالزُّوْرِۙபொய்யான
தாலிக வ மய் யு'அள்ளிம் ஹுருமாதில் லாஹி Fபஹுவ கய்ருல் லஹூ 'இன்த ரBப்Bபிஹ்; வ உஹில்லத் லகுமுல் அன்'ஆமு இல்லா மா யுத்லா 'அலய்கும் Fபஜ்தனிBபுர் ரிஜ்ஸ மினல் அவ்தானி வஜ்தனிBபூ கவ்லZஜ் Zஜூர்
இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.
حُنَفَآءَ لِلّٰهِ غَیْرَ مُشْرِكِیْنَ بِهٖ ؕ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَكَاَنَّمَا خَرَّ مِنَ السَّمَآءِ فَتَخْطَفُهُ الطَّیْرُ اَوْ تَهْوِیْ بِهِ الرِّیْحُ فِیْ مَكَانٍ سَحِیْقٍ ۟
حُنَفَآءَநேர்மையானவர்களாகلِلّٰهِஅல்லாஹ்வுக்குغَیْرَஅன்றிمُشْرِكِیْنَஇணைவைப்பவர்களாகبِهٖ ؕஅவனுக்குوَ مَنْமேலும் எவர்یُّشْرِكْஇணைவைக்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَكَاَنَّمَاஅவர் போன்றவராவார்خَرَّவிழுந்தவர்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்فَتَخْطَفُهُஅவரைப் பறித்துச் செல்கிறதோالطَّیْرُபறவைاَوْஅல்லதுتَهْوِیْவீசியடிக்கிறதோبِهِஅவரைالرِّیْحُகாற்றுفِیْஒருمَكَانٍஇடத்தில்سَحِیْقٍதொலைதூர
ஹுனFபா'அ லில்லாஹி கய்ர முஷ்ரிகீன Bபிஹ்; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி Fபக அன்னமா கர்ர மினஸ் ஸமா'இ Fபதக் தFபுஹுத் தய்ரு அவ் தஹ்வீ Bபிஹிர் ரீஹு Bபீ மகானின் ஸஹீக்
அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.
ذٰلِكَ ۗ وَمَنْ یُّعَظِّمْ شَعَآىِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَی الْقُلُوْبِ ۟
ذٰلِكَ ۗஅதுவேوَ مَنْமேலும் எவர்یُّعَظِّمْகண்ணியப்படுத்துகிறாரோشَعَآىِٕرَசின்னங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَاِنَّهَاநிச்சயமாக அதுمِنْஇருந்துள்ளதாகும்تَقْوَیஇறையச்சத்தில்الْقُلُوْبِஉள்ளங்களின்
தாலிக வ மய் யு'அள்ளிம் ஷ'ஆ'இரல் லாஹி Fப இன்னஹா மின் தக்வல் குலூBப்
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.
لَكُمْ فِیْهَا مَنَافِعُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ مَحِلُّهَاۤ اِلَی الْبَیْتِ الْعَتِیْقِ ۟۠
لَكُمْஉங்களுக்குفِیْهَاஅவற்றில்مَنَافِعُபயன்கள்اِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைمُّسَمًّیகுறிப்பிடப்பட்டثُمَّபின்னர்مَحِلُّهَاۤஅவற்றின் பலியிடுமிடம்اِلَیபால்الْبَیْتِஅந்த ஆலயத்தின்الْعَتِیْقِ۠பழமையான
லகும் Fபீஹா மனாFபி'உ இலா அஜலிம் முஸம்மன் தும்ம மஹில்லுஹா இலல் Bபய்தில் 'அதீக்
(குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது.
وَلِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّیَذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ؕ فَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَلَهٗۤ اَسْلِمُوْا ؕ وَبَشِّرِ الْمُخْبِتِیْنَ ۟ۙ
وَ لِكُلِّமேலும் ஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திற்கும்جَعَلْنَاநாம் ஏற்படுத்தினோம்مَنْسَكًاஒரு வழிபாட்டு முறையைلِّیَذْكُرُواஅவர்கள் கூறுவதற்காகاسْمَபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்عَلٰیமீதுمَاஎவற்றின்رَزَقَهُمْஅவர்களுக்கு அவன் வழங்கினானோمِّنْۢஇருந்துبَهِیْمَةِமிருகங்களில்الْاَنْعَامِ ؕகால்நடைகளின்فَاِلٰهُكُمْஆகவே உங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌஒருவனேفَلَهٗۤஆகவே அவனுக்கேاَسْلِمُوْا ؕநீங்கள் பணியுங்கள்وَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالْمُخْبِتِیْنَۙபணிவுடையோருக்கு
வ லிகுல்லி உம்மதின் ஜ'அல்னா மன்ஸகல் லியத்குருஸ் மல் லாஹி 'அலா மா ரZஜகஹும் மிம் Bபஹீமதில் அன்'ஆம்; Fப இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹிதுன் Fபலஹூ அஸ்லிமூ; வ Bபஷ்ஷிரில் முக்Bபிதீன்
இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَالصّٰبِرِیْنَ عَلٰی مَاۤ اَصَابَهُمْ وَالْمُقِیْمِی الصَّلٰوةِ ۙ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
الَّذِیْنَஅவர்கள் எத்தகையோரென்றால்اِذَاஎப்போதுذُكِرَநினைவு கூறப்பட்டால்اللّٰهُஅல்லாஹ்وَ جِلَتْஅச்சப்படும்قُلُوْبُهُمْஅவர்களின் இதயங்கள்وَ الصّٰبِرِیْنَமேலும் பொறுமை காப்பவர்கள்عَلٰیமீதுمَاۤஎதன்اَصَابَهُمْஅவர்களுக்கு ஏற்பட்டதோوَ الْمُقِیْمِیஇன்னும் நிலைநிறுத்துவோர்الصَّلٰوةِ ۙதொழுகையைوَ مِمَّاஇன்னும் எவற்றிலிருந்துرَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமோیُنْفِقُوْنَஅவர்கள் செலவிடுவார்கள்
அல்லதீன இதா துகிரல் லாஹு வஜிலத் குலூBபுஹும் வஸ்ஸாBபிரீன 'அலா மா அஸாBபஹும் வல்முகீமிஸ் ஸலாதி வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.
وَالْبُدْنَ جَعَلْنٰهَا لَكُمْ مِّنْ شَعَآىِٕرِ اللّٰهِ لَكُمْ فِیْهَا خَیْرٌ ۖۗ فَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهَا صَوَآفَّ ۚ فَاِذَا وَجَبَتْ جُنُوْبُهَا فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ ؕ كَذٰلِكَ سَخَّرْنٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَ الْبُدْنَமேலும் ஒட்டகங்களைجَعَلْنٰهَاநாம் அவற்றை ஆக்கினோம்لَكُمْஉங்களுக்குمِّنْஇருந்துشَعَآىِٕرِஅடையாளங்களில்اللّٰهِஅல்லாஹ்வின்لَكُمْஉங்களுக்குفِیْهَاஅவற்றில்خَیْرٌ ۖۗநன்மைفَاذْكُرُواஎனவே கூறுங்கள்اسْمَபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْهَاஅவற்றின் மீதுصَوَآفَّ ۚவரிசையாக நிற்கவைத்துفَاِذَاபின்னர் எப்போதுوَجَبَتْசாய்ந்துவிட்டால்جُنُوْبُهَاஅவற்றின் விலாக்கள்فَكُلُوْاஅப்போது உண்ணுங்கள்مِنْهَاஅவற்றிலிருந்துوَ اَطْعِمُواமேலும் உணவளியுங்கள்الْقَانِعَபோதுமென்றிருப்பவருக்கும்وَ الْمُعْتَرَّ ؕமற்றும் இரப்பவருக்கும்كَذٰلِكَஇவ்வாறாகவேسَخَّرْنٰهَاநாம் அவற்றை வசப்படுத்தினோம்لَكُمْஉங்களுக்குلَعَلَّكُمْநீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்துவதற்காக
வல்Bபுத்ன ஜ'அல்னாஹா லகும் மின் ஷ'ஆ'இரில் லாஹி லகும் Fபீஹா கய்ருன் Fபத்குருஸ்மல் லாஹி 'அலய்ஹா ஸவாFப்Fப்; Fப இதா வஜBபத் ஜுனூBபுஹா Fபகுலூ மின்ஹா வ அத்'இமுல் கானி'அ வல்முஃதர்ர்; கதாலிக ஸக்கர்னாஹா லகும் ல'அல்லகும் தஷ்குரூன்
இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.
لَنْ یَّنَالَ اللّٰهَ لُحُوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰكِنْ یَّنَالُهُ التَّقْوٰی مِنْكُمْ ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰی مَا هَدٰىكُمْ ؕ وَبَشِّرِ الْمُحْسِنِیْنَ ۟
لَنْஒருபோதும்یَّنَالَசென்றடையாதுاللّٰهَஅல்லாஹ்வைلُحُوْمُهَاஅவற்றின் இறைச்சிகள்وَ لَاமேலும் இல்லைدِمَآؤُهَاஅவற்றின் இரத்தங்கள்وَ لٰكِنْஎனினும்یَّنَالُهُஅவனைச் சென்றடையும்التَّقْوٰیஇறையச்சம்مِنْكُمْ ؕஉங்களிடமிருந்துكَذٰلِكَஇவ்வாறேسَخَّرَهَاஅவற்றை அவன் வசப்படுத்தினான்لَكُمْஉங்களுக்குلِتُكَبِّرُواநீங்கள் பெருமைப்படுத்துவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைعَلٰیமீதுمَاஎதன்هَدٰىكُمْ ؕஅவன் உங்களை நேர்வழிப்படுத்தினானோوَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
ல(ன்)ய் யனாலல் லாஹ லுஹூ முஹா வலா திமா'உஹா வ லாகி(ன்)ய் யனாலுஹுத் தக்வா மின்கும்; கதாலிக ஸக்கர்ஹா லகும் லிதுகBப்Bபிருல் லாஹ 'அலா ம ஹதாகும்; வ Bபஷ்ஷிருல் முஹ்ஸினீன்
(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
اِنَّ اللّٰهَ یُدٰفِعُ عَنِ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُوْرٍ ۟۠
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُدٰفِعُபாதுகாக்கிறான்عَنِசார்பாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْا ؕநம்பிக்கை கொண்டார்களோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاஇல்லைیُحِبُّநேசிப்பான்كُلَّஒவ்வொருخَوَّانٍதுரோகியையும்كَفُوْرٍ۠நன்றிகெட்டவனையும்
இன்னல் லாஹ யுதாFபி' 'அனில் லதீன ஆமனூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு குல்ல கவ்வானின் கFபூர்
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
اُذِنَ لِلَّذِیْنَ یُقٰتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْا ؕ وَاِنَّ اللّٰهَ عَلٰی نَصْرِهِمْ لَقَدِیْرُ ۟ۙ
اُذِنَஅனுமதி அளிக்கப்பட்டுள்ளதுلِلَّذِیْنَஎவர்களுக்குیُقٰتَلُوْنَபோர் தொடுக்கப்படுகிறதோبِاَنَّهُمْஏனெனில் அவர்கள்ظُلِمُوْا ؕஅநீதி இழைக்கப்பட்டார்கள்وَ اِنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுنَصْرِهِمْஅவர்களுக்கு உதவி செய்வதன்لَقَدِیْرُۙபேராற்றல் உடையவன்
உதின லில்லதீன யுகாதலூன Bபி அன்னஹும் ளுலிமூ; வ இன்னல் லாஹ 'அலா னஸ்ரிஹிம் ல கதீர்ர்
போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.
لَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ بِغَیْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ یَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِیَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ یُذْكَرُ فِیْهَا اسْمُ اللّٰهِ كَثِیْرًا ؕ وَلَیَنْصُرَنَّ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ ۟
لَّذِیْنَஎவர்கள்اُخْرِجُوْاவெளியேற்றப்பட்டார்களோمِنْஇருந்துدِیَارِهِمْதங்கள் இல்லங்கள்بِغَیْرِஇன்றிحَقٍّநியாயம்اِلَّاۤதவிரاَنْஎன்றுیَّقُوْلُوْاஅவர்கள் கூறுவதைرَبُّنَاஎங்கள் இறைவன்اللّٰهُ ؕஅல்லாஹ்وَ لَوْ لَاஇல்லாவிட்டால்دَفْعُதடுப்பதுاللّٰهِஅல்லாஹ்வின்النَّاسَமனிதர்களைبَعْضَهُمْஅவர்களில் சிலரைبِبَعْضٍசிலரைக் கொண்டுلَّهُدِّمَتْஇடிக்கப்பட்டிருக்கும்صَوَامِعُமடாலயங்கள்وَ بِیَعٌதேவாலயங்களும்وَّ صَلَوٰتٌஜெப ஆலயங்களும்وَّ مَسٰجِدُபள்ளிவாசல்களும்یُذْكَرُநினைவு கூரப்படும்فِیْهَاஅவற்றில்اسْمُபெயர்اللّٰهِஅல்லாஹ்வின்كَثِیْرًا ؕஅதிகமாகوَ لَیَنْصُرَنَّநிச்சயமாக உதவி செய்வான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்یَّنْصُرُهٗ ؕஅவனுக்கு உதவி செய்கிறாரோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَقَوِیٌّவல்லமையுடையவன்عَزِیْزٌமிகைத்தவன்
அல்லதீன உக்ரிஜூ மின் தியாரிஹிம் Bபிகய்ரி ஹக்கின் இல்லா அ(ன்)ய் யகூலூ ரBப்Bபுனல்லாஹ்; வ லவ் லா தFப்'உல் லாஹின் னாஸ Bபஃளஹும் BபிBபஃளில் லஹுத்திமத் ஸவாமி'உ வ Bபிய'உ(ன்)வ் வ ஸலவாது(ன்)வ் வ மஸாஜிது யுத்கரு Fபீஹஸ்முல் லாஹி கதீரா; வ லயன்ஸுரன்னல் லாஹு மய் யன்ஸுருஹ்; இன்னல் லாஹ ல கவிய்யுன் 'அZஜீZஜ்
இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.
اَلَّذِیْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ ۟
اَلَّذِیْنَஎத்தகையோர்اِنْஎன்றால்مَّكَّنّٰهُمْநாம் அவர்களுக்கு அதிகாரம் அளித்தால்فِیஇல்الْاَرْضِபூமிاَقَامُواஅவர்கள் நிலைநாட்டுவார்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتَوُاஇன்னும் அவர்கள் வழங்குவார்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ اَمَرُوْاஇன்னும் அவர்கள் ஏவுவார்கள்بِالْمَعْرُوْفِநன்மையைوَ نَهَوْاஇன்னும் அவர்கள் தடுப்பார்கள்عَنِஇருந்துالْمُنْكَرِ ؕதீமையைوَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேعَاقِبَةُமுடிவுالْاُمُوْرِகாரியங்களின்
அல்லதீன இம் மக்கன் னாஹும் Fபில் அர்ளி அகாமுஸ் ஸலாத வ ஆதவுZஜ் Zஜகாத வ அமரூ Bபில்மஃரூFபி வ னஹவ் 'அனில் முன்கர்; வ லில்லாஹி 'ஆகிBபதுல் உமூர்
அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّثَمُوْدُ ۟ۙ
وَ اِنْஇன்னும்یُّكَذِّبُوْكَஉம்மைப் பொய்ப்பித்தால்فَقَدْநிச்சயமாகكَذَّبَتْபொய்ப்பித்தனர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்قَوْمُசமுதாயமும்نُوْحٍநூஹின்وَّ عَادٌஆதுவும்وَّ ثَمُوْدُۙஸமூதும்
வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ ஆது(ன்)வ் வ தமூத்
(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்யாக்க முற்பட்டால் (அதற்காக விசனப்படாதீர்; ஏனெனில்) நிச்சயமாக இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தினரும்; ஆது, ஸமூது (சமூகத்தினரும் தத்தம் நபிமார்களைப்) பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்.
وَقَوْمُ اِبْرٰهِیْمَ وَقَوْمُ لُوْطٍ ۟ۙ
وَ قَوْمُமற்றும் சமூகத்தாரும்اِبْرٰهِیْمَஇப்ராஹீமின்وَ قَوْمُமற்றும் சமூகத்தாரும்لُوْطٍۙலூத்தின்
வ கவ்மு இBப்ராஹீம வ கவ்மு லூத்
(இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).
وَّاَصْحٰبُ مَدْیَنَ ۚ وَكُذِّبَ مُوْسٰی فَاَمْلَیْتُ لِلْكٰفِرِیْنَ ثُمَّ اَخَذْتُهُمْ ۚ فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟
وَّ اَصْحٰبُமேலும் வாசிகளும்مَدْیَنَ ۚமத்யன்وَ كُذِّبَமேலும் பொய்ப்பிக்கப்பட்டார்مُوْسٰیமூஸாفَاَمْلَیْتُஆகவே அவகாசம் அளித்தேன்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குثُمَّபின்னர்اَخَذْتُهُمْ ۚஅவர்களைப் பிடித்துக் கொண்டேன்فَكَیْفَஆகவே எப்படிكَانَஇருந்ததுنَكِیْرِஎனது தண்டனை
வ அஸ் ஹாBபு மத்யன வ குத்திBப மூஸா Fப அம்லய்து லில்காFபிரீன தும்ம அகத்துஹும் Fபகய்Fப கான னகீர்
(இவ்வாறே) மத்யன் வாசிகளும் (முற்பட்டனர்); இன்னும் மூஸாவையும் பொய்ப்பிக்கவே முற்பட்டனர் -எனினும் நான் காஃபிர்களுக்கு அவகாசம் கொடுத்துப் பின்னர் அவர்களை நான் பிடித்துக் கொண்டேன்; என் தண்டனை எப்படியிருந்தது? (என்பதை கவனிப்பீராக!)
فَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ اَهْلَكْنٰهَا وَهِیَ ظَالِمَةٌ فَهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَّقَصْرٍ مَّشِیْدٍ ۟
فَكَاَیِّنْஎத்தனையோمِّنْஉள்ளقَرْیَةٍஊர்களைاَهْلَكْنٰهَاநாம் அழித்தோம்وَ هِیَஅவை இருந்த நிலையில்ظَالِمَةٌஅநீதி இழைத்தவையாகفَهِیَஎனவே அவைخَاوِیَةٌவீழ்ந்து கிடக்கின்றனعَلٰیமீதுعُرُوْشِهَاஅவற்றின் மேற்கூரைகளின்وَ بِئْرٍஇன்னும் கிணறுمُّعَطَّلَةٍபாழடைந்தوَّ قَصْرٍஇன்னும் மாளிகைمَّشِیْدٍஉயர்ந்த
Fபக அய்யிம் மின் கர்யதின் அஹ்லக்னாஹா வ ஹிய ளாலிமதுன் Fபஹிய காவியதுன் 'அலா 'உரூஷிஹா வ Bபி'ரிம் மு'அத் தலதி(ன்)வ் வ கஸ்ரிம் மஷீத்
அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம் - அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன).
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ یَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ یَّسْمَعُوْنَ بِهَا ۚ فَاِنَّهَا لَا تَعْمَی الْاَبْصَارُ وَلٰكِنْ تَعْمَی الْقُلُوْبُ الَّتِیْ فِی الصُّدُوْرِ ۟
اَفَلَمْஅப்படியிருக்க, அவர்கள்یَسِیْرُوْاபயணம் செய்யவில்லையாفِیஇல்الْاَرْضِபூமிفَتَكُوْنَஅதனால் இருக்கلَهُمْஅவர்களுக்குقُلُوْبٌஇதயங்கள்یَّعْقِلُوْنَஅவர்கள் சிந்தித்து உணர்வதற்குبِهَاۤஅவற்றைக் கொண்டுاَوْஅல்லதுاٰذَانٌகாதுகள்یَّسْمَعُوْنَஅவர்கள் கேட்பதற்குبِهَا ۚஅவற்றைக் கொண்டுفَاِنَّهَاநிச்சயமாக அதுلَاஇல்லைتَعْمَیகுருடாவதுالْاَبْصَارُபார்வைகள்وَ لٰكِنْஆனால்تَعْمَیகுருடாகின்றனالْقُلُوْبُஇதயங்கள்الَّتِیْஎவைفِیஇல்الصُّدُوْرِநெஞ்சங்கள்
அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fபதகூன லஹும் குலூBபு(ன்)ய் யஃகிலூன Bபிஹா அவ் ஆதானு(ன்)ய் யஸ்ம'ஊன Bபிஹா Fப இன்னஹா லா தஃமல் அBப்ஸாரு வ லாகின் தஃமல் குலூBபுல் லதீ Fபிஸ்ஸுதூர்
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன.
وَیَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ وَلَنْ یُّخْلِفَ اللّٰهُ وَعْدَهٗ ؕ وَاِنَّ یَوْمًا عِنْدَ رَبِّكَ كَاَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ۟
وَ یَسْتَعْجِلُوْنَكَமேலும் அவர்கள் உம்மிடம் அவசரப்படுகிறார்கள்بِالْعَذَابِவேதனையைக் கொண்டுوَ لَنْமேலும் ஒருபோதும்یُّخْلِفَமீறமாட்டான்اللّٰهُஅல்லாஹ்وَعْدَهٗ ؕதன் வாக்குறுதியைوَ اِنَّமேலும் நிச்சயமாகیَوْمًاஒரு நாள்عِنْدَஇடத்தில்رَبِّكَஉமது இறைவனின்كَاَلْفِஆயிரம் போன்றதாகும்سَنَةٍஆண்டுகள்مِّمَّاஎவற்றிலிருந்துتَعُدُّوْنَநீங்கள் கணக்கிடுகிறீர்களோ
வ யஸ்தஃஜிலூனக Bபில்'அதாBபி வ ல(ன்)ய் யுக்லிFபல் லாஹு வஃதஹ்; வ இன்ன யவ்மன் 'இன்த ரBப்Bபிக க'அல்Fபி ஸனதிம் மிம்மா த'உத்தூன்
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ اَمْلَیْتُ لَهَا وَهِیَ ظَالِمَةٌ ثُمَّ اَخَذْتُهَا ۚ وَاِلَیَّ الْمَصِیْرُ ۟۠
وَ كَاَیِّنْஇன்னும் எத்தனையோمِّنْஉள்ளقَرْیَةٍஊர்களுக்குاَمْلَیْتُநான் அவகாசம் அளித்தேன்لَهَاஅதற்குوَ هِیَஅதுظَالِمَةٌஅநியாயக்காரியாகثُمَّபின்னர்اَخَذْتُهَا ۚஅதனைப் பிடித்துக்கொண்டேன்وَ اِلَیَّஇன்னும் என்னிடமேالْمَصِیْرُ۠மீளுதல் இருக்கிறது
வ க அய்யிம் மின் கர்யதின் அம்லய்து லஹா வ ஹிய ளாலிமதுன் தும்ம அகத்துஹா வ இலய்யல் மஸீர்
அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَاۤ اَنَا لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۚ
قُلْகூறுவீராகیٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاِنَّمَاۤநிச்சயமாகاَنَاநான்لَكُمْஉங்களுக்குنَذِیْرٌஎச்சரிப்பவன்مُّبِیْنٌۚதெளிவான
குல் யா அய்யுஹன் னாஸு இன்னமா அன லகும் னதீரும் முBபீன்
“மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவனாகவே இருக்கின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
فَالَّذِیْنَஆகவே எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّ رِزْقٌமேலும் வாழ்வாதாரம்كَرِیْمٌகண்ணியமான
Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
“எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
وَالَّذِیْنَ سَعَوْا فِیْۤ اٰیٰتِنَا مُعٰجِزِیْنَ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்سَعَوْاமுயற்சித்தார்களோفِیْۤஎதிராகاٰیٰتِنَاநம் வசனங்களைمُعٰجِزِیْنَதோற்கடிக்கاُولٰٓىِٕكَஅவர்கள்தாம்اَصْحٰبُவாசிகள்الْجَحِیْمِநரகத்தின்
வல்லதீன ஸ'அவ் Fபீ ஆயாதினா மு'ஆஜிZஜீன உலா இக அஸ்-ஹாBபுல் ஜஹீம்
“ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களை தோற்கடிக்க முயல்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!”
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِیٍّ اِلَّاۤ اِذَا تَمَنّٰۤی اَلْقَی الشَّیْطٰنُ فِیْۤ اُمْنِیَّتِهٖ ۚ فَیَنْسَخُ اللّٰهُ مَا یُلْقِی الشَّیْطٰنُ ثُمَّ یُحْكِمُ اللّٰهُ اٰیٰتِهٖ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟ۙ
وَ مَاۤமேலும் இல்லைاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْஇருந்துقَبْلِكَஉமக்கு முன்னால்مِنْஎந்த ஒருرَّسُوْلٍதூதரையும்وَّ لَاமேலும் இல்லைنَبِیٍّநபியையும்اِلَّاۤதவிரاِذَاபோதுتَمَنّٰۤیஅவர் ஓதியاَلْقَیபோட்டான்الشَّیْطٰنُஷைத்தான்فِیْۤஇல்اُمْنِیَّتِهٖ ۚஅவரது ஓதலில்فَیَنْسَخُபிறகு நீக்கிவிடுகிறான்اللّٰهُஅல்லாஹ்مَاஎதைیُلْقِیபோடுகிறானோالشَّیْطٰنُஷைத்தான்ثُمَّபின்னர்یُحْكِمُஉறுதிப்படுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்اٰیٰتِهٖ ؕதனது வசனங்களைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌۙஞானமிக்கவன்
வ மா அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ரஸூலின்(ன்)வ் வலா னBபிய்யின் இல்லா இதா தமன்னா அல்கஷ் ஷய்தானு Fபீ உம்னிய் யதிஹீ Fப யன்ஸகுல் லாஹு மா யுல்கிஷ் ஷய்தானு தும்ம யுஹ்கிமுல் லாஹு ஆயாதிஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
لِّیَجْعَلَ مَا یُلْقِی الشَّیْطٰنُ فِتْنَةً لِّلَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْقَاسِیَةِ قُلُوْبُهُمْ ؕ وَاِنَّ الظّٰلِمِیْنَ لَفِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟ۙ
لِّیَجْعَلَஆக்குவதற்காகمَاஎதைیُلْقِیபோடுகிறானோالشَّیْطٰنُஷைத்தான்فِتْنَةًஒரு சோதனையாகلِّلَّذِیْنَஅத்தகையோருக்குفِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களுடைய இதயங்கள்مَّرَضٌநோய்وَّ الْقَاسِیَةِமேலும் கடினமானقُلُوْبُهُمْ ؕஅவர்களுடைய இதயங்கள்وَ اِنَّமேலும் நிச்சயமாகالظّٰلِمِیْنَஅநியாயக்காரர்கள்لَفِیْநிச்சயமாக இருக்கிறார்கள்شِقَاقٍۭபிளவில்بَعِیْدٍۙவெகு தூரமான
லியஜ்'அல மா யுல்கிஷ் ஷய்தானு Fபித்னதல் லில்லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)வ் வல்காஸியதி குலூBபுஹும்; வ இன்னள் ளாலிமீன லFபீ ஷிகாகிம் Bப'ஈத்
ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.
وَّلِیَعْلَمَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَیُؤْمِنُوْا بِهٖ فَتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ ؕ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
وَّ لِیَعْلَمَமேலும் அறிந்துகொள்வதற்காகالَّذِیْنَஎவர்கள்اُوْتُواவழங்கப்பட்டார்களோالْعِلْمَகல்விاَنَّهُநிச்சயமாக அதுالْحَقُّஉண்மைمِنْஇருந்துرَّبِّكَஉமது இறைவன்فَیُؤْمِنُوْاஎனவே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்بِهٖஅதில்فَتُخْبِتَஅதனால் பணிந்துவிடும்لَهٗஅதற்குقُلُوْبُهُمْ ؕஅவர்களின் உள்ளங்கள்وَ اِنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهَادِநிச்சயமாக வழிகாட்டுபவன்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِلٰیநோக்கிصِرَاطٍபாதைمُّسْتَقِیْمٍநேரான
வ லியஃலமல் லதீன ஊதுல் 'இல்ம அன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிக Fப யு'மினூ Bபிஹீ Fபதுக்Bபித லஹூ குலூBபுஹும்; வ இன்னல் லாஹ லஹாதில் லதீன ஆமனூ இலா ஸிராதிம் முஸ்தகீம்
(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.
وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ مِرْیَةٍ مِّنْهُ حَتّٰی تَاْتِیَهُمُ السَّاعَةُ بَغْتَةً اَوْ یَاْتِیَهُمْ عَذَابُ یَوْمٍ عَقِیْمٍ ۟
وَ لَاமேலும் இல்லைیَزَالُநீங்குவார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفِیْஇல்مِرْیَةٍசந்தேகம்مِّنْهُஅதைப் பற்றிحَتّٰیவரைتَاْتِیَهُمُஅவர்களிடம் வரும்السَّاعَةُமறுமை நேரம்بَغْتَةًதிடீரெனاَوْஅல்லதுیَاْتِیَهُمْஅவர்களிடம் வரும்عَذَابُவேதனைیَوْمٍஒரு நாளின்عَقِیْمٍபாழாக்கும்
வ லா யZஜாலுல் லதீன கFபரூ Fபீ மிர்யதிம் மின்ஹு ஹத்தா தாதியஹுமுஸ் ஸா'அது Bபக்ததன் அவ் யாதியஹும் 'அதாBபு யவ்மின் 'அகீம்
நிராகரித்தவர்கள் மறுமை நாள் திடீரென அவர்களிடம் வரும் வரை அல்லது மலட்டு நாளின் வேதனை அவர்களிடம் வரும் வரை அதுபற்றி சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்.
اَلْمُلْكُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ؕ یَحْكُمُ بَیْنَهُمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اَلْمُلْكُஆட்சிیَوْمَىِٕذٍஅந்நாளில்لِّلّٰهِ ؕஅல்லாஹ்வுக்கேیَحْكُمُஅவன் தீர்ப்பளிப்பான்بَیْنَهُمْ ؕஅவர்களுக்கிடையேفَالَّذِیْنَஆகவே எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفِیْஇருப்பார்கள்جَنّٰتِசுவனச் சோலைகளில்النَّعِیْمِஇன்பம் நிறைந்த
அல்முல்கு யவ்ம'இதில் லில்லாஹி யஹ்குமு Bபய்னஹும்; Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ஜன்னாதின் ன'ஈம்
அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَا فَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟۠
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ كَذَّبُوْاமேலும் பொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைفَاُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைمُّهِیْنٌ۠இழிவான
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா Fப உலா'இக லஹும் 'அதாBபும் முஹீன்
(ஆனால்) எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களோ, அவர்களுக்குத்தான் இழிவு மிக்க வேதனை உண்டு.
وَالَّذِیْنَ هَاجَرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ قُتِلُوْۤا اَوْ مَاتُوْا لَیَرْزُقَنَّهُمُ اللّٰهُ رِزْقًا حَسَنًا ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்هَاجَرُوْاநாடு துறந்தார்களோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபின்னர்قُتِلُوْۤاகொல்லப்பட்டார்களோاَوْஅல்லதுمَاتُوْاமரணமடைந்தார்களோلَیَرْزُقَنَّهُمُநிச்சயமாக அவர்களுக்கு அளிப்பான்اللّٰهُஅல்லாஹ்رِزْقًاவாழ்வாதாரத்தைحَسَنًا ؕஅழகானوَ اِنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهُوَநிச்சயமாக அவன்தான்خَیْرُமிகச் சிறந்தவன்الرّٰزِقِیْنَவாழ்வாதாரம் அளிப்பவர்களில்
வல்லதீன ஹாஜரூ Fபீ ஸBபீலில் லாஹி தும்ம குதிலூ அவ் மாதூ ல யர்Zஜுகன் னஹுமுல் லாஹு ரிZஜ்கன் ஹஸனா; வ இன்னல் லாஹ ல ஹுவ கய்ருர் ராZஜிகீன்
இன்னும், எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு) ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்பட்டோ அல்லது இறந்தோ விடுகிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் அழகிய உணவை நிச்சயமாக அளிக்கின்றான்; (ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்.
لَیُدْخِلَنَّهُمْ مُّدْخَلًا یَّرْضَوْنَهٗ ؕ وَاِنَّ اللّٰهَ لَعَلِیْمٌ حَلِیْمٌ ۟
لَیُدْخِلَنَّهُمْநிச்சயமாக அவர்களை அவன் புகுத்துவான்مُّدْخَلًاஒரு நுழைவிடத்தில்یَّرْضَوْنَهٗ ؕஅவர்கள் அதனைப் பொருந்திக் கொள்வார்கள்وَ اِنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَعَلِیْمٌநிச்சயமாக நன்கறிந்தவன்حَلِیْمٌமிக்க சகிப்புத்தன்மையுடையவன்
ல யுத்கிலன் னஹும் முத் கல(ன்)ய் யர்ளவ்னஹ்; வ இன்னல் லாஹ ல 'அலீமுன் ஹலீம்
நிச்சயமாக அவன் அவர்கள் விரும்பும் இடத்தில் அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; மேலும்: நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவன், மிக்க பொறுமையுடையவன்.
ذٰلِكَ ۚ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوْقِبَ بِهٖ ثُمَّ بُغِیَ عَلَیْهِ لَیَنْصُرَنَّهُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ۟
ذٰلِكَ ۚஅதுوَ مَنْமேலும் எவர்عَاقَبَபதிலடி கொடுக்கிறாரோبِمِثْلِஅதே அளவுக்குمَاஎதைக் கொண்டுعُوْقِبَஅவர் துன்புறுத்தப்பட்டாரோبِهٖஅதைக் கொண்டுثُمَّபின்னர்بُغِیَஅநீதி இழைக்கப்பட்டால்عَلَیْهِஅவர் மீதுلَیَنْصُرَنَّهُநிச்சயமாக அவருக்கு உதவி செய்வான்اللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَعَفُوٌّநிச்சயமாக பிழை பொறுப்பவன்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்
தாலிக வ மன் 'ஆகBப Bபிமித்லி மா 'ஊகிBப Bபிஹீ தும்ம Bபுகிய 'அலய்ஹி ல யன்ஸுரன்னஹுல் லாஹ்; இன்னல் லாஹ ல 'அFபுவ்வுன் கFபூர்
அது (அப்படியே ஆகும்) எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே (துன்புறுத்தியவனை) தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ وَاَنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟
ذٰلِكَஅதுبِاَنَّஏனென்றால்اللّٰهَஅல்லாஹ்یُوْلِجُபுகுத்துகிறான்الَّیْلَஇரவைفِیஇல்النَّهَارِபகல்وَ یُوْلِجُமேலும் புகுத்துகிறான்النَّهَارَபகலைفِیஇல்الَّیْلِஇரவுوَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌۢசெவியேற்பவன்بَصِیْرٌபார்ப்பவன்
தாலிக Bபி அன்னல் லாஹ யூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ யூலிஜுன் னஹார Fபில் லய்லி வ அன்னல் லாஹ ஸமீ'உம் Bபஸீர்
அது(ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟
ذٰلِكَஅதுبِاَنَّஏனென்றால்اللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالْحَقُّசத்தியமானவன்وَ اَنَّமேலும் நிச்சயமாகمَاஎவற்றைیَدْعُوْنَஅவர்கள் அழைக்கிறார்களோمِنْஅன்றிدُوْنِهٖஅவனையல்லாதவற்றைهُوَஅதுவேالْبَاطِلُபொய்யானதுوَ اَنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவனேالْعَلِیُّமிக உயர்ந்தவன்الْكَبِیْرُமிகப் பெரியவன்
தாலிக Bபி அன்னல் லாஹ ஹுவல் ஹக்கு வ அன்ன மா யத்'ஊன மின் தூனிஹீ ஹுவல் Bபாதிலு வ அன்னல் லாஹ ஹுவல் 'அலிய்யுல் கBபீர்
இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மை (இறைவன்); மற்றும் அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ - அது பொய்யாகும்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் - அவனே உயர்ந்தவன், மிகவும் பெரியவன்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؗ فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةً ؕ اِنَّ اللّٰهَ لَطِیْفٌ خَبِیْرٌ ۟ۚ
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீர்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اَنْزَلَஇறக்கினான்مِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்مَآءً ؗதண்ணீரைفَتُصْبِحُஅதனால் ஆகிவிடுகிறதுالْاَرْضُபூமிمُخْضَرَّةً ؕபசுமையானதாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَطِیْفٌநுட்பமானவன்خَبِیْرٌۚநன்கு அறிந்தவன்
அலம் தர அன்னல் லாஹ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fபதுஸ்Bபிஹுல் அர்ளு முக்ளர்ரஹ்; இன்னல் லாஹ லதீFபுன் கBபீர்
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟۠
لَهٗஅவனுக்கே உரியதுمَاயாவும்فِیஉள்ளவைالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் யாவும்فِیஉள்ளவைالْاَرْضِ ؕபூமியில்وَ اِنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهُوَநிச்சயமாக அவனேالْغَنِیُّதேவையற்றவன்الْحَمِیْدُ۠புகழுக்குரியவன்
லஹூ ம Fபிஸ் ஸமாவாதி வ ம Fபில் அர்ள்; வ இன்னல் லாஹ ல ஹுவல் கனிய்யுல் ஹமீத்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِی الْاَرْضِ وَالْفُلْكَ تَجْرِیْ فِی الْبَحْرِ بِاَمْرِهٖ ؕ وَیُمْسِكُ السَّمَآءَ اَنْ تَقَعَ عَلَی الْاَرْضِ اِلَّا بِاِذْنِهٖ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீராاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَخَّرَவசப்படுத்தினான்لَكُمْஉங்களுக்குمَّاஎவற்றைفِیஇல்الْاَرْضِபூமியில்وَ الْفُلْكَமேலும் கப்பல்களையும்تَجْرِیْசெல்கின்றனفِیஇல்الْبَحْرِகடலில்بِاَمْرِهٖ ؕஅவனது கட்டளையினால்وَ یُمْسِكُமேலும் அவன் தடுத்துக் கொள்கிறான்السَّمَآءَவானத்தைاَنْஎன்றுتَقَعَவிழுவதைعَلَیமீதுالْاَرْضِபூமியின்اِلَّاதவிரبِاِذْنِهٖ ؕஅவனது அனுமதியைக் கொண்டேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِالنَّاسِமனிதர்கள் மீதுلَرَءُوْفٌமிக்க இரக்கமுடையவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
அலம் தர அன்னல் லாஹ ஸக்கர லகும் மா Fபில் அர்ளி வல் Fபுல்க தஜ்ரீ Fபில் Bபஹ்ரி Bபி அம்ரிஹீ வ யும்ஸிகுஸ் ஸமா'அ அன் தக'அ 'அலல் அர்ளி இல்லா Bபிஇத்னிஹ்; இன்னல் லாஹ Bபின்னாஸி ல ர'ஊFபுர் ரஹீம்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.
وَهُوَ الَّذِیْۤ اَحْیَاكُمْ ؗ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ؕ اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ ۟
وَ هُوَமேலும் அவன்தான்الَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَحْیَاكُمْ ؗஉங்களுக்கு உயிரளித்தான்ثُمَّபின்னர்یُمِیْتُكُمْஉங்களை மரணிக்கச் செய்வான்ثُمَّபின்னர்یُحْیِیْكُمْ ؕஉங்களை உயிர்ப்பிப்பான்اِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لَكَفُوْرٌபெரும் நன்றிகெட்டவன்
வ ஹுவல் லதீ அஹ்யாகும் தும்ம யுமீதுகும் தும்ம யுஹ்யீகும்; இன்னல் இன்ஸான ல கFபூர்
இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
لِكُلِّ اُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوْهُ فَلَا یُنَازِعُنَّكَ فِی الْاَمْرِ وَادْعُ اِلٰی رَبِّكَ ؕ اِنَّكَ لَعَلٰی هُدًی مُّسْتَقِیْمٍ ۟
لِكُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்திற்கும்جَعَلْنَاநாம் ஏற்படுத்தினோம்مَنْسَكًاஒரு வழிபாட்டு முறையைهُمْஅவர்கள்نَاسِكُوْهُஅதனைப் பின்பற்றுபவர்கள்فَلَاஎனவே வேண்டாம்یُنَازِعُنَّكَஉம்மிடம் தர்க்கம் செய்யفِیஇல்الْاَمْرِஇக்காரியம்وَ ادْعُமேலும் அழைப்பீராகاِلٰیபால்رَبِّكَ ؕஉமது இறைவனின்اِنَّكَநிச்சயமாக நீர்لَعَلٰیமீதேهُدًیநேர்வழியின்مُّسْتَقِیْمٍநேரான
லிகுல்லி உம்மதின் ஜ'அல்னா மன்ஸகன் ஹும் னாஸிகூஹு Fபலா யுனாZஜி 'உன்னக Fபில் அம்ர்; வத்'உ இலா ரBப்Bபிக இன்னக ல 'அலா ஹுதன் முஸ்தகீம்
(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.
وَاِنْ جٰدَلُوْكَ فَقُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ۟
وَ اِنْமேலும்جٰدَلُوْكَஉம்மிடம் தர்க்கம் செய்தால்فَقُلِநீர் கூறுவீராகاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
வ இன் ஜாதலூக Fபகுலில் லாஹு அஃலமு Bபிமா தஃமலூன்
(நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்: “நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று (அவர்களிடம்) கூறுவீராக.
اَللّٰهُ یَحْكُمُ بَیْنَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்یَحْكُمُதீர்ப்பளிப்பான்بَیْنَكُمْஉங்களுக்கிடையேیَوْمَநாளில்الْقِیٰمَةِமறுமைفِیْمَاஎவற்றில்كُنْتُمْநீங்கள்فِیْهِஅதில்تَخْتَلِفُوْنَமுரண்பட்டுக் கொண்டிருந்தீர்களோ
அல்லாஹு யஹ்குமு Bபய்னகும் யவ்மல் கியாமதி Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
“நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.”
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمَآءِ وَالْاَرْضِ ؕ اِنَّ ذٰلِكَ فِیْ كِتٰبٍ ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
اَلَمْநீர் அறியவில்லையாتَعْلَمْநீர் அறிவீர்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஉள்ளவற்றைفِیஇல்السَّمَآءِவானம்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிاِنَّநிச்சயமாகذٰلِكَஅதுفِیْஇல்كِتٰبٍ ؕஒரு பதிவேடுاِنَّநிச்சயமாகذٰلِكَஅதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வுக்குیَسِیْرٌஎளிதானது
அலம் தஃலம் அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமா'இ வல் அர்ள்; இன்ன தாலிக Fபீ கிதாBப்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது.
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّمَا لَیْسَ لَهُمْ بِهٖ عِلْمٌ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟
وَ یَعْبُدُوْنَஇன்னும் அவர்கள் வணங்குகிறார்கள்مِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைمَاஎதனைلَمْஇல்லைیُنَزِّلْஅவன் இறக்கிவைக்கبِهٖஅதற்கானسُلْطٰنًاஎந்த ஆதாரத்தையும்وَّ مَاஇன்னும் எதனைلَیْسَஇல்லையோلَهُمْஅவர்களுக்குبِهٖஅதைப் பற்றிعِلْمٌ ؕஅறிவுوَ مَاமேலும் இல்லைلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمِنْஎந்தنَّصِیْرٍஉதவியாளரும்
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான(ன்)வ் வமா லய்ஸ லஹும் Bபிஹீ 'இல்ம்; வமா லிள்ளாலிமீன மின் னஸீர்
மேலும்: இவர்கள் அல்லாஹ் அல்லாததை வணங்குகின்றனர்; இதற்கு அவன் எந்த விதமான அத்தாட்சியையும் இறக்கவில்லை; இதைப்பற்றி இ(வ்வாறு வணங்குப)வர்களுக்கு எவ்விதக் கல்வியாதாரமும் இல்லை; எனவே, இத்தகைய அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் இல்லை.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ تَعْرِفُ فِیْ وُجُوْهِ الَّذِیْنَ كَفَرُوا الْمُنْكَرَ ؕ یَكَادُوْنَ یَسْطُوْنَ بِالَّذِیْنَ یَتْلُوْنَ عَلَیْهِمْ اٰیٰتِنَا ؕ قُلْ اَفَاُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكُمْ ؕ اَلنَّارُ ؕ وَعَدَهَا اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
وَ اِذَاமேலும் எப்போதுتُتْلٰیஓதப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُنَاநம்முடைய வசனங்கள்بَیِّنٰتٍதெளிவானதாகتَعْرِفُநீர் அறிவீர்فِیْஇல்وُجُوْهِமுகங்களில்الَّذِیْنَஎவர்கள்كَفَرُواநிராகரித்தார்களோالْمُنْكَرَ ؕவெறுப்பைیَكَادُوْنَஅவர்கள் முற்படுவார்கள்یَسْطُوْنَதாக்கبِالَّذِیْنَஎவர்கள் மீதுیَتْلُوْنَஓதுகிறார்களோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتِنَا ؕநம்முடைய வசனங்களைقُلْநீர் கூறுவீராகاَفَاُنَبِّئُكُمْநான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?بِشَرٍّதீயதைمِّنْவிடذٰلِكُمْ ؕஇதனைاَلنَّارُ ؕநரகம்وَعَدَهَاஅதனை வாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்களுக்குكَفَرُوْا ؕநிராகரித்தார்களோوَ بِئْسَமேலும் அது மிகக் கெட்டதுالْمَصِیْرُ۠சேருமிடம்
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் தஃரிFபு Fபீ வுஜூஹில் லதீன கFபருல் முன்கர யகாதூன யஸ்தூன Bபில் லதீன யத்லூன 'அலய்ஹிம் ஆயாதினா; குல் அFப உனBப் Bபி'உகும் Bபிஷர்ரிம் மின் தாலிகும்; அன் னாரு வ 'அதஹல் லாஹுல் லதீன கFபரூ வ Bபி'ஸல் மஸீர்
இன்னும் அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், காஃபிர்களுடைய முகங்களில் வெறுப்பை நீர் அறிவீர்; அவர்களிடம் நம் வசனங்களை ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் தாக்கவும் முற்படுவார்கள். “இன்னும் கொடூரமானதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான் நரக) நெருப்பு; அதனை அல்லாஹ் காஃபிர்களுக்கு வாக்களிக்கிறான்; மேலும்: அது மீளும் இடங்களிலெல்லாம் மிகவும் கெட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
یٰۤاَیُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ یَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ ؕ وَاِنْ یَّسْلُبْهُمُ الذُّبَابُ شَیْـًٔا لَّا یَسْتَنْقِذُوْهُ مِنْهُ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேضُرِبَகூறப்படுகிறதுمَثَلٌஓர் உதாரணம்فَاسْتَمِعُوْاஎனவே செவிமடுங்கள்لَهٗ ؕஅதற்குاِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்களைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைلَنْஒருபோதும்یَّخْلُقُوْاஅவர்கள் படைக்கமாட்டார்கள்ذُبَابًاஓர் ஈயைوَّ لَوِஎன்றாலும்اجْتَمَعُوْاஅவர்கள் ஒன்று சேர்ந்தால்لَهٗ ؕஅதற்காகوَ اِنْமேலும்یَّسْلُبْهُمُஅவர்களிடமிருந்து பறித்துக் கொண்டால்الذُّبَابُஅந்த ஈشَیْـًٔاஏதேனும் ஒன்றைلَّاமுடியாதுیَسْتَنْقِذُوْهُஅதனை அவர்களால் மீட்கمِنْهُ ؕஅதனிடமிருந்துضَعُفَபலவீனமானவர்கள்الطَّالِبُதேடுபவனும்وَ الْمَطْلُوْبُதேடப்படுபவனும்
யா அய்யுஹன் னாஸு ளுரிBப மதலுன் Fபஸ்தமி'ஊ லஹ்; இன்னல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி லய் யக்லுகூ துBபாBப(ன்)வ் வ லவிஜ்தம'ஊ லஹூ வ இ(ன்)ய் யஸ்லுBப் ஹுமுத் துBபாBபு ஷய்'அன் லா யஸ்தன்கிதூஹு மின்ஹ்; ள'உFபத் தாலிBபு வல் மத்லூBப்
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே.
مَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِیٌّ عَزِیْزٌ ۟
مَاஇல்லைقَدَرُواஅவர்கள் மதித்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வைحَقَّஉரியقَدْرِهٖ ؕஅவனது தகுதிக்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَقَوِیٌّபேராற்றல் மிக்கவன்عَزِیْزٌமிகைத்தவன்
மா கத்ருல் லாஹ ஹக்க கத்ரிஹ்; இன்னல் லாஹ ல கவிய்யுன் 'அZஜீZஜ்
அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை; நிச்சயமாக அல்லாஹ் வல்லமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
اَللّٰهُ یَصْطَفِیْ مِنَ الْمَلٰٓىِٕكَةِ رُسُلًا وَّمِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ بَصِیْرٌ ۟ۚ
اَللّٰهُஅல்லாஹ்یَصْطَفِیْதேர்ந்தெடுக்கிறான்مِنَஇருந்துالْمَلٰٓىِٕكَةِவானவர்களில்رُسُلًاதூதர்களைوَّ مِنَமேலும் இருந்துالنَّاسِ ؕமனிதர்களில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌۢசெவியேற்பவன்بَصِیْرٌۚபார்ப்பவன்
அல்லாஹு யஸ்தFபீ மினல் மலா'இகதி ருஸுல(ன்)வ் வ மினன் னாஸ்; இன்னல் லாஹ ஸமீ'உன் Bபஸீர்
அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்.
یَعْلَمُ مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟
یَعْلَمُஅவன் அறிவான்مَاஇருப்பதைبَیْنَமுன்னால்اَیْدِیْهِمْஅவர்களுக்குوَ مَاமேலும் இருப்பதைخَلْفَهُمْ ؕஅவர்களுக்குப் பின்னால்وَ اِلَیமேலும்اللّٰهِஅல்லாஹ்விடமேتُرْجَعُதிரும்பக் கொண்டுவரப்படும்الْاُمُوْرُகாரியங்கள்
யஃலமு மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
அவர்களுக்கு முன் (சென்று) இருப்பதையும், அவர்களுக்குப் பின் (வர) இருப்பதையும் அவன் நன்கறிகிறான். இன்னும் அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் (தீர்வுக்காக) மீட்கப்படும்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَاعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَیْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஅத்தகையோரேاٰمَنُواநம்பிக்கை கொண்டவர்களேارْكَعُوْاருகூஃ செய்யுங்கள்وَ اسْجُدُوْاமேலும் ஸுஜூது செய்யுங்கள்وَ اعْبُدُوْاமேலும் வணங்குங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனைوَ افْعَلُواமேலும் செய்யுங்கள்الْخَیْرَநன்மையைلَعَلَّكُمْநீங்கள்تُفْلِحُوْنَۚ۩வெற்றி பெறுவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனுர் க'ஊ வஸ்ஜுதூ வஃBபுதூ ரBப்Bபகும் வFப்'அலுல் கய்ர ல'அல்லகும் துFப்லிஹூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள்.
وَجَاهِدُوْا فِی اللّٰهِ حَقَّ جِهَادِهٖ ؕ هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَیْكُمْ فِی الدِّیْنِ مِنْ حَرَجٍ ؕ مِلَّةَ اَبِیْكُمْ اِبْرٰهِیْمَ ؕ هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِیْنَ ۙ۬ مِنْ قَبْلُ وَفِیْ هٰذَا لِیَكُوْنَ الرَّسُوْلُ شَهِیْدًا عَلَیْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ ۖۚ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِ ؕ هُوَ مَوْلٰىكُمْ ۚ فَنِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟۠
وَ جَاهِدُوْاமேலும் அறப்போர் புரியுங்கள்فِیஇல்اللّٰهِஅல்லாஹ்வின்حَقَّதகுந்தவாறுجِهَادِهٖ ؕஅவனது அறப்போரைهُوَஅவன்தான்اجْتَبٰىكُمْஉங்களைத் தேர்ந்தெடுத்தான்وَ مَاமேலும் இல்லைجَعَلَஏற்படுத்தினான்عَلَیْكُمْஉங்கள் மீதுفِیஇல்الدِّیْنِமார்க்கத்தில்مِنْஎந்தحَرَجٍ ؕசிரமத்தையும்مِلَّةَவழிமுறையைاَبِیْكُمْஉங்கள் தந்தையாகியاِبْرٰهِیْمَ ؕஇப்ராஹீமுடையهُوَஅவன்தான்سَمّٰىكُمُஉங்களுக்குப் பெயரிட்டான்الْمُسْلِمِیْنَ ۙ۬முஸ்லிம்கள் என்றுمِنْஇருந்துقَبْلُமுன்னரேوَ فِیْமேலும் இல்هٰذَاஇதில்لِیَكُوْنَஇருப்பதற்காகالرَّسُوْلُஇத்தூதர்شَهِیْدًاசாட்சியாகعَلَیْكُمْஉங்கள் மீதுوَ تَكُوْنُوْاமேலும் நீங்கள் இருப்பதற்காகشُهَدَآءَசாட்சிகளாகعَلَیமீதுالنَّاسِ ۖۚமனிதர்களின்فَاَقِیْمُواஎனவே நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتُواமேலும் வழங்குங்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ اعْتَصِمُوْاமேலும் பற்றிப் பிடியுங்கள்بِاللّٰهِ ؕஅல்லாஹ்வைهُوَஅவன்தான்مَوْلٰىكُمْ ۚஉங்கள் பாதுகாவலன்فَنِعْمَஎனவே மிகச் சிறந்தவன்الْمَوْلٰیபாதுகாவலன்وَ نِعْمَமேலும் மிகச் சிறந்தவன்النَّصِیْرُ۠உதவியாளன்
வ ஜாஹிதூ Fபில் லாஹி ஹக்க ஜிஹாதிஹ்; ஹுவஜ் தBபாகும் வமா ஜ'அல 'அலய்கும் Fபித் தீனி மின் ஹரஜ்; மில்லத அBபீகும் இBப்ராஹீம்; ஹுவ ஸம்மாகுமுல் முஸ்லிமீன மின் கBப்லு வ Fபீ ஹாத லி யகூனர் ரஸூலு ஷஹீதன் 'அலய்கும் வ தகூனூ ஷுஹதா'அ 'அலன் னாஸ்; Fப அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வஃதஸிமூ Bபில்லாஹி ஹுவ மவ்லாகும் Fபனிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.