“நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
مُتَّكِـــِٕيْنَசாய்ந்தவர்களாக இருப்பார்கள்عَلٰى سُرُرٍகட்டில்களில்مَّصْفُوْفَةٍ ۚவரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில்وَزَوَّجْنٰهُمْஅவர்களுக்கு நாம் மணமுடித்துவைப்போம்بِحُوْرٍ عِيْنٍகண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை
அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
وَاَمْدَدْنٰهُمْநாம் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம்بِفَاكِهَةٍபழங்களை(யும்)وَّلَحْمٍமாமிசங்களையும்مِّمَّا يَشْتَهُوْنَஅவர்கள் விரும்புகின்றவற்றின்
எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.
اَمْ لَهُمْஅவர்களுக்கு ?سُلَّمٌஓர் ஏணிيَّسْتَمِعُوْنَசெவியுறுகின்றனராفِيْهِ ۚஅதில்فَلْيَاْتِவரட்டும்مُسْتَمِعُهُمْஅவர்களில் செவியுற்றவர்بِسُلْطٰنٍ مُّبِيْنٍؕதெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு
அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
فَذَرْهُمْஆகவே, அவர்களை விட்டுவிடுவீராக!حَتّٰىவரைيُلٰقُوْاஅவர்கள் சந்திக்கின்றيَوْمَهُمُஅவர்களுடைய நாள்الَّذِىْஎதுفِيْهِஅதில்يُصْعَقُوْنَۙஅழிந்துவிடுகின்ற
எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,