49. ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)

மதனீ, வசனங்கள்: 18

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَیْنَ یَدَیِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تُقَدِّمُوْاமுந்தாதீர்கள்بَیْنَமுன்னால்یَدَیِமுன்னிலையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ رَسُوْلِهٖமேலும் அவனது தூதரின்وَ اتَّقُواஇன்னும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِیْعٌசெவியேற்பவன்عَلِیْمٌநன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ ல துகத்திமூ Bபய்ன யத யில் லாஹி வ ரஸூலிஹீ வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஸமீ'உன் 'அலீம்
முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِیِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَرْفَعُوْۤاஉயர்த்தாதீர்கள்اَصْوَاتَكُمْஉங்கள் குரல்களைفَوْقَமேலேصَوْتِகுரலுக்குالنَّبِیِّநபியின்وَ لَاமேலும் வேண்டாம்تَجْهَرُوْاஉரக்கப் பேசாதீர்கள்لَهٗஅவரிடம்بِالْقَوْلِபேச்சால்كَجَهْرِஉரக்கப் பேசுவதைப் போல்بَعْضِكُمْஉங்களில் சிலர்لِبَعْضٍசிலரிடம்اَنْஆகிவிடாதிருக்கتَحْبَطَவீணாகிاَعْمَالُكُمْஉங்கள் செயல்கள்وَ اَنْتُمْமேலும் நீங்கள்لَاஉணராதتَشْعُرُوْنَநிலையில்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தர்Fப'ஊ அஸ்வாதகும் Fபவ்க ஸவ்தின் னBபியி வலா தஜ்ஹரூ லஹூ Bபில்கவ்லி கஜஹ்ரி Bபஃளிகும் லிBபஃளின் அன் தஹ்Bபத அஃமாலுகும் வ அன்தும் லா தஷ்'உரூன்
முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
اِنَّ الَّذِیْنَ یَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰی ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَغُضُّوْنَதாழ்த்துகிறார்களோاَصْوَاتَهُمْதங்கள் குரல்களைعِنْدَமுன்னிலையில்رَسُوْلِதூதரின்اللّٰهِஅல்லாஹ்வின்اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்الَّذِیْنَஎவர்கள்امْتَحَنَசோதித்தானோاللّٰهُஅல்லாஹ்قُلُوْبَهُمْஅவர்களது உள்ளங்களைلِلتَّقْوٰی ؕஇறையச்சத்திற்காகلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்பும்وَّ اَجْرٌமற்றும் நற்கூலியும்عَظِیْمٌமகத்தானதாகும்
இன்னல் லதீன யகுள் ளூன அஸ்வாதஹும் 'இன்த ரஸூலில் லாஹி உலா'இகல் லதீனம் தஹ் அனல் லாஹு குலூBபஹும் லித்தக்வா; லஹும் மக்Fபிரது(ன்)வ் வ'அஜ்ருன் 'அளீம்
நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
اِنَّ الَّذِیْنَ یُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُنَادُوْنَكَஉம்மை அழைக்கிறார்களோمِنْஇருந்துوَّرَآءِபின்னால்الْحُجُرٰتِஅறைகளின்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْقِلُوْنَவிளங்குகிறார்கள்
இன்னல் லதீன யுனாதூ னக மி(ன்)வ் வரா'இல் ஹுஜுராதி அக்தருஹும் லா யஃகிலூன்
(நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!
وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰی تَخْرُجَ اِلَیْهِمْ لَكَانَ خَیْرًا لَّهُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَ لَوْமேலும், என்றால்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்صَبَرُوْاபொறுமை காத்திருந்தால்حَتّٰیவரைتَخْرُجَநீர் வெளியே வரும்اِلَیْهِمْஅவர்களிடம்لَكَانَஅது இருந்திருக்கும்خَیْرًاமேலானதாகلَّهُمْ ؕஅவர்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
வ லவ் அன்னஹும் ஸBபரூ ஹத்தா தக்ருஜ இலய்ஹிம் லகான கய்ரல் லஹும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
நீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ بِنَبَاٍ فَتَبَیَّنُوْۤا اَنْ تُصِیْبُوْا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰی مَا فَعَلْتُمْ نٰدِمِیْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஅத்தகையோரேاٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டவர்களேاِنْஎனில்جَآءَكُمْஉங்களிடம் வந்தால்فَاسِقٌۢஒரு பாவிبِنَبَاٍஒரு செய்தியுடன்فَتَبَیَّنُوْۤاஅதனைத் தீர விசாரித்துக் கொள்ளுங்கள்اَنْஇல்லையெனில்تُصِیْبُوْاநீங்கள் தீங்கு செய்துவிடக்கூடும்قَوْمًۢاஒரு சமூகத்திற்குبِجَهَالَةٍஅறியாமையினால்فَتُصْبِحُوْاபின்னர் நீங்கள் ஆகிவிடுவீர்கள்عَلٰیகுறித்துمَاஎதைفَعَلْتُمْநீங்கள் செய்தீர்களோنٰدِمِیْنَவருந்துபவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் ஜா'அகும் Fபாஸிகும் BபினBப இன் FபதBபய்யனூ அன் துஸீBபூ கவ்மம் Bபிஜஹலதின் Fபதுஸ்Bபிஹூ 'அலா மா Fப'அல்தும் னாதிமீன்
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
وَاعْلَمُوْۤا اَنَّ فِیْكُمْ رَسُوْلَ اللّٰهِ ؕ لَوْ یُطِیْعُكُمْ فِیْ كَثِیْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَلٰكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَیْكُمُ الْاِیْمَانَ وَزَیَّنَهٗ فِیْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَیْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْیَانَ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الرّٰشِدُوْنَ ۟ۙ
وَ اعْلَمُوْۤاமேலும் அறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகفِیْكُمْஉங்களிடையேرَسُوْلَதூதர்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்لَوْஒருவேளைیُطِیْعُكُمْஅவர் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால்فِیْஇல்كَثِیْرٍஅதிகமானمِّنَஇருந்துالْاَمْرِகாரியங்களில்لَعَنِتُّمْநீங்கள் சிரமத்திற்குள்ளாவீர்கள்وَ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்حَبَّبَபிரியமாக்கினான்اِلَیْكُمُஉங்களுக்குالْاِیْمَانَஈமானைوَ زَیَّنَهٗமேலும் அதை அழகாக்கினான்فِیْஇல்قُلُوْبِكُمْஉங்கள் இதயங்களில்وَ كَرَّهَமேலும் வெறுப்பாக்கினான்اِلَیْكُمُஉங்களுக்குالْكُفْرَநிராகரிப்பைوَ الْفُسُوْقَமேலும் பாவங்களைوَ الْعِصْیَانَ ؕமேலும் மாறு செய்வதைاُولٰٓىِٕكَஅவர்களேهُمُஅவர்கள்الرّٰشِدُوْنَۙநேர்வழி பெற்றவர்கள்
வஃலமூ அன்ன Fபீகும் ரஸூலல் லாஹ்; லவ் யுதீ'உகும் Fபீ கதீரிம் மினல் அம்ரில'அனித்தும் வ லாகின்னல் லாஹ ஹBப்BபBப இலய்குமுல் ஈமான வ Zஜய்யனஹூ Fபீ குலூBபிகும் வ கர்ரஹ இலய்குமுல் குFப்ர வல்Fபுஸூக வல்'இஸ்யான்; உலாஇக ஹுமுர் ராஷிதூன்
அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
فَضْلًا مِّنَ اللّٰهِ وَنِعْمَةً ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
فَضْلًاபேரருளாகمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்وَ نِعْمَةً ؕஇன்னும் அருட்கொடையாகவும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்حَكِیْمٌஞானமிக்கவன்
Fபள்லம் மினல் லாஹி வ னிஃமஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
(இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அருளாக, அருட்கொடையாக உள்ளது; மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.
وَاِنْ طَآىِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِیْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَیْنَهُمَا ۚ فَاِنْ بَغَتْ اِحْدٰىهُمَا عَلَی الْاُخْرٰی فَقَاتِلُوا الَّتِیْ تَبْغِیْ حَتّٰی تَفِیْٓءَ اِلٰۤی اَمْرِ اللّٰهِ ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَیْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
وَ اِنْமேலும் (அவ்வாறு) ஆயின்طَآىِٕفَتٰنِஇரு பிரிவினர்مِنَஉள்ளالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்اقْتَتَلُوْاசண்டையிட்டுக் கொண்டால்فَاَصْلِحُوْاஅப்பொழுது சமாதானம் செய்து வையுங்கள்بَیْنَهُمَا ۚஅவ்விருவருக்கும் இடையில்فَاِنْۢபிறகு (அவ்வாறு) ஆயின்بَغَتْஅத்துமீறினால்اِحْدٰىهُمَاஅவ்விருவரில் ஒரு பிரிவினர்عَلَیமீதுالْاُخْرٰیமற்றொரு பிரிவினர்فَقَاتِلُواஅப்பொழுது போரிடுங்கள்الَّتِیْஎந்தப் பிரிவினர்تَبْغِیْஅத்துமீறுகிறதோحَتّٰیவரைتَفِیْٓءَதிரும்பும்اِلٰۤیபக்கம்اَمْرِகட்டளையின்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَاِنْபிறகு (அவ்வாறு) ஆயின்فَآءَتْஅது திரும்பிவிட்டால்فَاَصْلِحُوْاஅப்பொழுது சமாதானம் செய்து வையுங்கள்بَیْنَهُمَاஅவ்விருவருக்கும் இடையில்بِالْعَدْلِநீதியுடன்وَ اَقْسِطُوْا ؕமேலும் நேர்மையாக நடங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُقْسِطِیْنَநீதி செலுத்துபவர்களை
வ இன் தா'இFபதானி மினல் மு'மினீன னக்ததலூ Fப அஸ்லிஹூ Bபய்னஹுமா; Fப-இம் Bபகத் இஹ்தாஹுமா 'அலல் உக்ரா Fபகாதிலுல் லதீ தBப்கீ ஹத்தா தFபீ'அ இலா அம்ரில் லாஹ்; Fப-இன் Fபா'அத் Fப அஸ்லிஹூ Bபய்னஹுமா Bபில்'அத்லி வ அக்ஸிதூ, இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَیْنَ اَخَوَیْكُمْ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟۠
اِنَّمَاநிச்சயமாகالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்اِخْوَةٌசகோதரர்கள்فَاَصْلِحُوْاஎனவே சமாதானம் செய்து வையுங்கள்بَیْنَஇடையேاَخَوَیْكُمْஉங்கள் இரு சகோதரர்களுக்குوَ اتَّقُواமேலும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைلَعَلَّكُمْநீங்கள்تُرْحَمُوْنَ۠அருள் செய்யப்படுவீர்கள்
இன்னமல் மு'மினூன இக்வதுன் Fப அஸ்லிஹூ Bபய்ன அகவய்கும் வத்தகுல் லாஹ ல'அல்லகும் துர்ஹமூன்
நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰۤی اَنْ یَّكُوْنُوْا خَیْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰۤی اَنْ یَّكُنَّ خَیْرًا مِّنْهُنَّ ۚ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ ؕ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِیْمَانِ ۚ وَمَنْ لَّمْ یَتُبْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்یَسْخَرْகேலி செய்யقَوْمٌஒரு சமூகத்தினர்مِّنْமற்றொருقَوْمٍசமூகத்தினரைعَسٰۤیஇருக்கலாம்اَنْஎன்றுیَّكُوْنُوْاஅவர்கள் இருக்கخَیْرًاசிறந்தவர்களாகمِّنْهُمْஅவர்களை விடوَ لَاமேலும் வேண்டாம்نِسَآءٌபெண்கள்مِّنْமற்றொருنِّسَآءٍபெண்களைعَسٰۤیஇருக்கலாம்اَنْஎன்றுیَّكُنَّஅவர்கள் இருக்கخَیْرًاசிறந்தவர்களாகمِّنْهُنَّ ۚஅவர்களை விடوَ لَاமேலும் வேண்டாம்تَلْمِزُوْۤاகுறை கூறاَنْفُسَكُمْஉங்களையேوَ لَاமேலும் வேண்டாம்تَنَابَزُوْاஅழைக்கبِالْاَلْقَابِ ؕபட்டப் பெயர்களால்بِئْسَமிகக் கெட்டதுالِاسْمُபெயர்الْفُسُوْقُபாவம்بَعْدَபிறகுالْاِیْمَانِ ۚஈமானுக்குப்وَ مَنْமேலும் எவர்لَّمْஇல்லையோیَتُبْதவ்பா செய்தவராகفَاُولٰٓىِٕكَஅத்தகையோர் தான்هُمُஅவர்கள்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா யஸ்கர் கவ்மும் மின் கவ்மின் 'அஸா அ(ன்)ய்யகூனூ கய்ரம் மின்ஹும் வலா னிஸா'உம் மின் னிஸா'இன் 'அஸா அய் யகுன்ன கய்ரம் மின்ஹுன்ன வலா தல்மிZஜூ அன்Fபுஸகும் வலா தனாBபZஜூ Bபில் அல்காBப்; Bபி'ஸல் இஸ்முல் Fபுஸூகு Bபஃதல் ஈமான்; வ மல்-லம் யதுBப் Fப-உலா'இக ஹுமுள் ளாலிமூன்
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِیْرًا مِّنَ الظَّنِّ ؗ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا یَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ؕ اَیُحِبُّ اَحَدُكُمْ اَنْ یَّاْكُلَ لَحْمَ اَخِیْهِ مَیْتًا فَكَرِهْتُمُوْهُ ؕ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاجْتَنِبُوْاதவிர்ந்து கொள்ளுங்கள்كَثِیْرًاஅதிகமானவற்றைمِّنَஇருந்துالظَّنِّ ؗசந்தேகங்களில்اِنَّநிச்சயமாகبَعْضَசிலالظَّنِّசந்தேகங்கள்اِثْمٌபாவமாகும்وَّ لَاமேலும் வேண்டாம்تَجَسَّسُوْاதுருவித் துருவி ஆராயوَ لَاமேலும் வேண்டாம்یَغْتَبْபுறம் பேசبَّعْضُكُمْஉங்களில் சிலர்بَعْضًا ؕசிலரைاَیُحِبُّவிரும்புவாரா?اَحَدُكُمْஉங்களில் எவரும்اَنْஎன்பதைیَّاْكُلَஉண்பதைلَحْمَமாமிசத்தைاَخِیْهِதன்னுடைய சகோதரனின்مَیْتًاஇறந்த நிலையில்فَكَرِهْتُمُوْهُ ؕஅதனை நீங்கள் வெறுப்பீர்கள்وَ اتَّقُواஇன்னும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்تَوَّابٌமன்னிப்பை ஏற்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
யா அய்யுஹல் லதீன ஆமனுஜ் தனிBபூ கதீரம் மினள் ளன்னி இன்ன Bபஃளள் ளன்னி இத்மு(ன்)வ் வலா தஜஸ்ஸஸூ வ ல யக்தBப் Bபஃளுகும் Bபஃளா; அ யுஹிBப்Bபு அஹதுகும் அ(ன்)ய் யாகுல லஹ்ம அகீஹி மய்தன் Fபகரிஹ் துமூஹ்; வத்தகுல் லா; இன்னல் லாஹ தவ்வாBபுர் ரஹீம்
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُ وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآىِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَتْقٰىكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌ خَبِیْرٌ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰكُمْஉங்களைப் படைத்தோம்مِّنْஇருந்துذَكَرٍஓர் ஆண்وَّ اُنْثٰیமற்றும் ஒரு பெண்وَ جَعَلْنٰكُمْமேலும் உங்களை ஆக்கினோம்شُعُوْبًاசமூகங்களாகவும்وَّ قَبَآىِٕلَமற்றும் கோத்திரங்களாகவும்لِتَعَارَفُوْا ؕநீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகاِنَّநிச்சயமாகاَكْرَمَكُمْஉங்களில் மிகக் கண்ணியமானவர்عِنْدَஇடத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்اَتْقٰىكُمْ ؕஉங்களில் அதிக இறையச்சமுடையவரேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِیْمٌநன்கறிந்தவன்خَبِیْرٌநுட்பமாக அறிபவன்
யா அய்யுஹன் னாஸு இன்னா கலக்னாகும் மின் தகரி(ன்)வ் வ உன்தா வ ஜ'அல்னாகும் ஷு'ஊBப(ன்)வ் வ கBபா'இல லித'ஆரFபூ இன்ன அக்ரமகும் 'இன்தல் லாஹி அத்காகும் இன்னல் லாஹ 'அலீமுன் கBபீர்
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ؕ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا یَدْخُلِ الْاِیْمَانُ فِیْ قُلُوْبِكُمْ ؕ وَاِنْ تُطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا یَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
قَالَتِகூறினார்கள்الْاَعْرَابُகிராமவாசிகள்اٰمَنَّا ؕநாங்கள் ஈமான் கொண்டோம்قُلْநீர் கூறுவீராகلَّمْஇல்லைتُؤْمِنُوْاநீங்கள் ஈமான் கொள்ளوَ لٰكِنْஆனால்قُوْلُوْۤاநீங்கள் கூறுங்கள்اَسْلَمْنَاநாங்கள் கட்டுப்பட்டோம்وَ لَمَّاஇன்னும் இல்லைیَدْخُلِநுழையالْاِیْمَانُஈமான்فِیْஇல்قُلُوْبِكُمْ ؕஉங்கள் உள்ளங்கள்وَ اِنْமேலும், என்றால்تُطِیْعُواநீங்கள் கீழ்ப்படிந்தால்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗமேலும் அவனுடைய தூதருக்குلَاமாட்டான்یَلِتْكُمْஅவன் உங்களுக்குக் குறைக்கمِّنْஇலிருந்துاَعْمَالِكُمْஉங்கள் செயல்கள்شَیْـًٔا ؕஎதையும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிக மன்னிப்பவன்رَّحِیْمٌமிக்க கிருபையுடையவன்
காலதில்-அஃராBபு ஆமன்னா குல் லம் து'மினூ வ லாகின் கூலூ அஸ்லம்னா வ லம்ம யத்குலில் ஈமானு Fபீ குலூBபிகும் வ இன் துதீ'உல் லாஹ வ ரஸூலஹூ லா யலித்கும் மின் அ'மாலிகும் ஷய்'ஆ; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
“நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ یَرْتَابُوْا وَجٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ۟
اِنَّمَاநிச்சயமாகالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதும்وَ رَسُوْلِهٖஅவனது தூதர் மீதும்ثُمَّபின்னர்لَمْ(எவ்விதச்) சந்தேகமும்یَرْتَابُوْاகொள்ளவில்லையோوَ جٰهَدُوْاமேலும் அறப்போர் புரிந்தார்களோبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டும்وَ اَنْفُسِهِمْமேலும் தங்கள் உயிர்களைக் கொண்டும்فِیْஇல்سَبِیْلِபாதைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اُولٰٓىِٕكَஅத்தகையோரேهُمُதாம்الصّٰدِقُوْنَஉண்மையாளர்கள்
இன்னமல் முஉ'மினூனல் லதீன ஆமனூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ தும்ம லம் யர்தாBபூ வ ஜாஹதூ Bபிஅம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹ்; உலாஇக ஹுமுஸ் ஸாதிகூன்
நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.
قُلْ اَتُعَلِّمُوْنَ اللّٰهَ بِدِیْنِكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
قُلْகூறுவீராகاَتُعَلِّمُوْنَநீங்கள் அறிவிக்கிறீர்களாاللّٰهَஅல்லாஹ்வுக்குبِدِیْنِكُمْ ؕஉங்கள் மார்க்கத்தைப் பற்றிوَ اللّٰهُஅல்லாஹ்வோیَعْلَمُஅறிகிறான்مَاஎவற்றைفِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاஇன்னும் எவற்றைفِیஉள்ளالْاَرْضِ ؕபூமியில்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
குல் அது'அல்லிமூனல் லாஹ Bபிதீனிகும் வல்லாஹு யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
“நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
یَمُنُّوْنَ عَلَیْكَ اَنْ اَسْلَمُوْا ؕ قُلْ لَّا تَمُنُّوْا عَلَیَّ اِسْلَامَكُمْ ۚ بَلِ اللّٰهُ یَمُنُّ عَلَیْكُمْ اَنْ هَدٰىكُمْ لِلْاِیْمَانِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
یَمُنُّوْنَஅவர்கள் உபகாரம் செய்ததாகக் கருதுகிறார்கள்عَلَیْكَஉம் மீதுاَنْஎன்றுاَسْلَمُوْا ؕஅவர்கள் இஸ்லாத்தை ஏற்றதைقُلْநீர் கூறுவீராகلَّاவேண்டாம்تَمُنُّوْاஉபகாரம் செய்ததாகக் கருதعَلَیَّஎன் மீதுاِسْلَامَكُمْ ۚஉங்கள் இஸ்லாத்தைبَلِமாறாகاللّٰهُஅல்லாஹ்یَمُنُّஉபகாரம் செய்திருக்கிறான்عَلَیْكُمْஉங்கள் மீதுاَنْஎன்றுهَدٰىكُمْஅவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதைلِلْاِیْمَانِஈமானின் பால்اِنْஇருந்தால்كُنْتُمْநீங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
யமுன்னூன 'அலய்க அன் அஸ்லமூ குல் லா தமுன்னூ 'அலய்ய இஸ்லாமகும் Bபலில்லாஹு யமுன்னு 'அலய்கும் அன் ஹதாகும் லில் ஈமானி இன் குன்தும் ஸாதிகீன்
அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
اِنَّ اللّٰهَ یَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்غَیْبَமறைவானவற்றைالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்بَصِیْرٌۢஉற்று நோக்குபவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَ۠நீங்கள் செய்கிறீர்களோ
இன்னல் லாஹ யஃலமு கய்Bபஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா தஃமலூன்
“நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.