72. ஸூரத்துல் ஜின்னு(ஜின்கள்)

மக்கீ, வசனங்கள்: 28

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ اُوْحِیَ اِلَیَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْۤا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًا عَجَبًا ۟ۙ
قُلْகூறுவீராக!اُوْحِىَவஹீ அறிவிக்கப்பட்டதுاِلَىَّஎனக்குاَنَّهُநிச்சயமாக செய்தியாவதுاسْتَمَعَசெவியுற்றனர்نَفَرٌசில நபர்கள்مِّنَ الْجِنِّஜின்களில்فَقَالُوْۤاமேலும் அவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்سَمِعْنَاசெவியுற்றோம்قُرْاٰنًاகுர்ஆனைعَجَبًا ۙ‏அதிசயமான
குல் ஊஹிய இலய்ய அன்ன்ன ஹுஸ்தம'அ னFபரும் மினல் ஜின்னி Fபகாலூ இன்னா ஸமிஃனா குர்'ஆனன் அஜBபா
நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்:) “நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
یَّهْدِیْۤ اِلَی الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖ ؕ وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۟ۙ
يَّهْدِىْۤஅது வழிகாட்டுகிறதுاِلَى الرُّشْدِநேர்வழிக்குفَاٰمَنَّا بِهٖ‌ ؕஆகவே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம்/அதைوَلَنْ نُّشْرِكَஇன்னும் நாங்கள் இணையாக்க மாட்டோம்بِرَبِّنَاۤஎங்கள் இறைவனுக்குاَحَدًا ۙ‏ஒருவரையும்
யஹ்தீ இலர் ருஷ்தி Fப ஆமன்னா Bபிஹீ வ லன் னுஷ்ரிக Bபி ரBப்Bபினா 'அஹதா
“அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது; ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்” (என்று அந்த ஜின் கூறலாயிற்று).
وَّاَنَّهٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۟ۙ
وَّاَنَّهٗஇன்னும் நிச்சயமாக செய்தியாவதுتَعٰلٰىமிக உயர்ந்ததுجَدُّமதிப்புرَبِّنَاஎங்கள் இறைவனின்مَا اتَّخَذَஅவன் எடுத்துக் கொள்ளவில்லைصَاحِبَةًமனைவியை(யும்)وَّلَا وَلَدًا ۙ‏பிள்ளைகளையும்
வ அன்னஹூ த'ஆலா ஜத்து ரBப்Bபினா மத்'தகத ஸாஹிBபத(ன்)வ் வலா வலதா
“மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது; அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
وَّاَنَّهٗ كَانَ یَقُوْلُ سَفِیْهُنَا عَلَی اللّٰهِ شَطَطًا ۟ۙ
وَّ اَنَّهٗஇன்னும் நிச்சயமாக செய்தியாவதுكَانَஇருந்தான்يَقُوْلُகூறுபவனாகسَفِيْهُنَاஎங்களில் உள்ள மூடன்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுشَطَطًا ۙ‏அநியாயமான விஷயத்தை
வ அன்னஹூ கான யகூலு ஸFபீஹுனா 'அல் அல்லஹி ஷததா
“ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَی اللّٰهِ كَذِبًا ۟ۙ
وَّاَنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்ظَنَنَّاۤநம்பினோம்اَنْ لَّنْ تَقُوْلَசொல்ல மாட்டார்கள்الْاِنْسُமனிதர்களும்وَالْجِنُّஜின்களும்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًا ۙ‏பொய்
வ அன்னா ளனன்னா அல் லன் தகூலல் இன்ஸு வல் ஜின்னு 'அல் அல்லாஹி கதிBபா
மேலும் “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்” என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ یَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۟ۙ
وَّاَنَّهٗஇன்னும் நிச்சயமாக செய்தியாவதுكَانَஇருந்தார்(கள்)رِجَالٌஆண்கள் சிலர்مِّنَ الْاِنْسِமனிதர்களில் உள்ளيَعُوْذُوْنَபாதுகாவல் தேடுபவர்களாகبِرِجَالٍஆண்கள் சிலரிடம்مِّنَ الْجِنِّஜின்களில் உள்ளفَزَادُوْهُمْஎனவே அவர்கள் அவர்களுக்கு அதிகப்படுத்தினர்رَهَقًا ۙ‏கர்வத்தை
வ அன்னஹூ கான ரிஜாலுன் மினல் இன்ஸி ய'ஊதூன Bபி ரிஜாலின் மினல் ஜின்னி Fப Zஜாதூஹும் ரஹகா
“ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர்; இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.
وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّبْعَثَ اللّٰهُ اَحَدًا ۟ۙ
وَّاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்ظَنُّوْاஎண்ணினர்كَمَا ظَنَنْتُمْநீங்கள் எண்ணுவது போன்றுதான்اَنْ لَّنْ يَّبْعَثَஅறவே எழுப்ப மாட்டான்اللّٰهُஅல்லாஹ்اَحَدًا ۙ‏ஒருவரையும்
வ அன்னஹும் ளன்னூ கமா ளனன்தும் அல் ல(ன்)ய் யBப்'அதல் லாஹு 'அஹதா
“இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.
وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِیْدًا وَّشُهُبًا ۟ۙ
وَّاَنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்لَمَسْنَاதேடினோம்السَّمَآءَவானத்தைفَوَجَدْنٰهَاஅதை நாங்கள் கண்டோம்مُلِئَتْநிரப்பப்பட்டிருப்பதாகحَرَسًاகாவல்களாலும்شَدِيْدًاகடுமையானوَّشُهُبًا ۙ‏இன்னும் எரி நட்சத்திரங்களாலும்
வ அன்னா லமஸ்னஸ் ஸமா'அ Fப வஜத்னாஹா முலி'அத் ஹரஸன் ஷதீத(ன்)வ் வ ஷுஹுBபா
“நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.
وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ؕ فَمَنْ یَّسْتَمِعِ الْاٰنَ یَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا ۟ۙ
وَّاَنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்نَقْعُدُஉட்காருபவர்களாகمِنْهَاஅதில்مَقَاعِدَபல இடங்களில்لِلسَّمْعِ‌ ؕஒட்டுக்கேட்கفَمَنْயார்يَّسْتَمِعِஒட்டுக் கேட்பாரோالْاٰنَஇப்போதுيَجِدْ لَهٗதனக்கு காண்பார்شِهَابًاஎரி நட்சத்திரத்தைرَّصَدًا ۙ‏எதிர்பார்த்திருக்கின்ற
வ அன்னா குன்னா னக்'உது மின்ஹா மகா'இத லிஸ்'ஸம்'இ Fபம(ன்)ய் யஸ்தமி'இல் 'ஆன யஜித் லஹூ ஷிஹாBபர் ரஸதா
“(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.
وَّاَنَّا لَا نَدْرِیْۤ اَشَرٌّ اُرِیْدَ بِمَنْ فِی الْاَرْضِ اَمْ اَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا ۟ۙ
وَّاَنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்لَا نَدْرِىْۤஅறியமாட்டோம்اَشَرٌّ اُرِيْدَதீமை ஏதும் நாடப்பட்டதா?بِمَنْ فِى الْاَرْضِபூமியில் உள்ளவர்களுக்குاَمْ اَرَادَஅல்லது நாடினானா?بِهِمْஅவர்களுக்குرَبُّهُمْஅவர்களின் இறைவன்رَشَدًا ۙ‏நேர்வழியை
வ அன்னா லா னத்ரீ அஷர்ருன் உரீத Bபிமன் Fபில் அர்ளி 'அம் 'அராத Bபிஹிம் ரBப்Bபுஹும் ரஷதா
“அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.
وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَ ؕ كُنَّا طَرَآىِٕقَ قِدَدًا ۟ۙ
وَّاَنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்مِنَّاஎங்களில்الصّٰلِحُوْنَநல்லவர்களும்وَمِنَّاஇன்னும் எங்களில்دُوْنَ ذٰلِكَ‌ؕமற்றவர்களும்كُنَّاநாங்கள் இருந்தோம்طَرَآٮِٕقَபிரிவுகளாகقِدَدًا ۙ‏பலதரப்பட்ட
வ அன்னா மின்னஸ் ஸாலிஹூன வ மின்னா தூன தாலிக குன்னா தரா'இக கிததா
“மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர்; அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர்; நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِی الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۟ۙ
وَّاَنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்ظَنَنَّاۤஅறிந்தோம்اَنْ لَّنْ نُّعْجِزَநாங்கள் அறவே இயலாமல் ஆக்கிவிட முடியாதுاللّٰهَஅல்லாஹ்வைفِى الْاَرْضِபூமியில்وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۙ‏இன்னும் அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது/ஓடி
வ அன்னா ளனன் னா அல் லன் னுஃஜிZஜல் லாஹ Fபில் அர்ளி வ லன் னுஃஜிZஜஹூ ஹரBபா
“அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமாலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.
وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰۤی اٰمَنَّا بِهٖ ؕ فَمَنْ یُّؤْمِنْ بِرَبِّهٖ فَلَا یَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًا ۟ۙ
وَّاَنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்لَمَّا سَمِعْنَاநாங்கள் செவியுற்ற போதுالْهُدٰٓىநேர்வழியைاٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِهٖ‌ ؕஅதைفَمَنْஎவர்يُّؤْمِنْۢநம்பிக்கை கொள்வாரோبِرَبِّهٖதன் இறைவனைفَلَا يَخَافُபயப்படமாட்டார்بَخْسًاகுறைவதையும்وَّلَا رَهَقًا ۙ‏அநியாயத்தையும்
வ அன்னா லம்மா ஸமிஃனல் ஹுதா ஆமன்னா Bபிஹீ Fபம(ன்)ய் யு'மின் Bபி ரBப்Bபிஹீ Fபலா யகாFபு Bபக்ஸ(ன்)வ் வலா ரஹகா
“இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்.” எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.
وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقٰسِطُوْنَ ؕ فَمَنْ اَسْلَمَ فَاُولٰٓىِٕكَ تَحَرَّوْا رَشَدًا ۟
وَّاَنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்مِنَّاஎங்களில்الْمُسْلِمُوْنَமுஸ்லிம்களும்وَمِنَّاஇன்னும் எங்களில்الْقٰسِطُوْنَ‌ؕஅநியாயக்காரர்களும்فَمَنْயார்اَسْلَمَஇஸ்லாமை ஏற்றாரோفَاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்تَحَرَّوْاநன்கு தேடினார்கள்رَشَدًا‏நேர்வழியை
வ அன்னா மின்னல் முஸ்லிமூன வ மின்னல் காஸிதூன Fபமன் அஸ்லம Fப உலா'இக தஹர்ரவ் ரஷதா
“இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.
وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۟ۙ
وَاَمَّا الْقٰسِطُوْنَஆக, அநியாயக்காரர்கள்فَكَانُوْاஇருக்கின்றனர்لِجَهَنَّمَநரகத்தின்حَطَبًا ۙ‏எரி கொல்லிகளாக
வ அம்மல் காஸிதூன Fப கானூ லி ஜஹன்னம ஹதBபா
“அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்” (என்று அந்த ஜின் கூறிற்று).
وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَی الطَّرِیْقَةِ لَاَسْقَیْنٰهُمْ مَّآءً غَدَقًا ۟ۙ
وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْاஅவர்கள் நிலையாக இருந்திருந்தால்عَلَى الطَّرِيْقَةِநேரான மார்க்கத்தில்لَاَسْقَيْنٰهُمْநாம் அவர்களுக்கு புகட்டி இருப்போம்مَّآءًநீரைغَدَقًا ۙ‏பலன்தரக்கூடிய அதிகமான
வ அல்ல விஸ் தகாமூ 'அலத் தரீகதி ல அஸ்கய்னாஹும் மா'அன் கதகா
“(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
لِّنَفْتِنَهُمْ فِیْهِ ؕ وَمَنْ یُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ یَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۟ۙ
لِّنَفْتِنَهُمْநாம் சோதிப்பதற்காக/அவர்களைفِيْهِ‌ ؕ وَمَنْஅதன்மூலம்/எவர்يُّعْرِضْபுறக்கணிப்பாரோعَنْ ذِكْرِஅறிவுரையைرَبِّهٖதன் இறைவனின்يَسْلُكْهُபுகுத்துவான்/அவரைعَذَابًا صَعَدًا ۙ‏தண்டனையில்/ கடினமான
லினFப்தினஹும் Fபீஹ்; வ ம(ன்)ய் யுஃரிள் 'அன் திக்ரி ரBப்Bபிஹீ யஸ்லுக் ஹு 'அதாBபன் ஸ'அதா
“அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக; ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۟ۙ
وَّاَنَّஇன்னும் நிச்சயமாகالْمَسٰجِدَமஸ்ஜிதுகள்لِلّٰهِஅல்லாஹ்விற்குفَلَا تَدْعُوْاஆகவேஅழைக்காதீர்கள்مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اَحَدًا ۙ‏வேறு ஒருவரை
வ அன்னல் மஸாஜித லில் லாஹி Fபலா தத்'ஊ ம'அல் லாஹி 'அஹதா
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.
وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ یَدْعُوْهُ كَادُوْا یَكُوْنُوْنَ عَلَیْهِ لِبَدًا ۟ؕ۠
وَّاَنَّهٗநிச்சயமாக செய்திلَمَّا قَامَநின்ற போதுعَبْدُ اللّٰهِஅல்லாஹ்வின் அடியார்يَدْعُوْهُஅவனை அழைப்பதற்காகكَادُوْاமுயற்சித்தனர்يَكُوْنُوْنَஆகிவிடعَلَيْهِஅவருக்கு எதிராகلِبَدًا ؕ‏எல்லோரும் சேர்ந்து
வ அன்னஹூ லம்மா காம 'அBப்துல் லாஹி யத்'ஊஹு காதூ யகூனூன 'அலய்ஹி லிBபதா
“மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்.”  
قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا ۟
قُلْகூறுவீராக!اِنَّمَاۤ اَدْعُوْاநான் அழைப்பதெல்லாம்رَبِّىْஎன் இறைவனைوَلَاۤ اُشْرِكُஇன்னும் இணையாக்க மாட்டேன்بِهٖۤஅவனுக்குاَحَدًا‏ஒருவரையும்
குல் இன்னமா அத்'ஊ ரBப்Bபீ வ லா உஷ்ரிகு Bபிஹீ 'அஹதா
(நபியே!) நீர் கூறும்: “நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்.”
قُلْ اِنِّیْ لَاۤ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا ۟
قُلْகூறுவீராக!اِنِّىْநிச்சயமாக நான்لَاۤ اَمْلِكُஉரிமை பெறமாட்டேன்لَـكُمْஉங்களின்ضَرًّاகெட்டதற்கும்وَّلَا رَشَدًا‏நல்லதற்கும்
குல் இன்னீ லா அம்லிகு லகும் ளர்ர(ன்)வ் வலா ரஷதா
கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.”
قُلْ اِنِّیْ لَنْ یُّجِیْرَنِیْ مِنَ اللّٰهِ اَحَدٌ ۙ۬ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟ۙ
قُلْகூறுவீராக!اِنِّىْநிச்சயமாக நான்لَنْ يُّجِيْرَنِىْஎன்னை அறவே காப்பாற்ற மாட்டார்مِنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துاَحَدٌ  ۙஒருவரும்وَّلَنْ اَجِدَஇன்னும் அறவே காணமாட்டேன்مِنْ دُوْنِهٖஅவனையன்றிمُلْتَحَدًا ۙ‏ஒதுங்குமிடத்தை
குல் இன்னீ ல(ன்)ய் யுஜீரனீ மினல் லாஹி 'அஹது(ன்)வ், வ லன் அஜித மின் தூனிஹீ முல்தஹதா
கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.
اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ ؕ وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۟ؕ
اِلَّاதவிரبَلٰغًاஎடுத்துரைப்பதற்கும்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَرِسٰلٰتِهٖ‌ ؕஅவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும்وَمَنْஎவர்يَّعْصِமாறு செய்வாரோاللّٰهَஅல்லாஹ்விற்கு(ம்)وَرَسُوْلَهٗஅவனது தூதருக்கும்فَاِنَّநிச்சயமாகلَهٗஅவருக்குنَارَநெருப்புதான்جَهَنَّمَநரகخٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்فِيْهَاۤஅதில்اَبَدًا ؕ‏எப்போதும்
இல்லா Bபலாகம் மினல் லாஹி வ ரிஸாலாதிஹ்; வ ம(ன்)ய் யஃஸில் லாஹ வ ரஸூலஹூ Fப இன்ன லஹூ னார ஜஹன்னம காலிதீன Fபீஹா 'அBபதா
“அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும்.
حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ فَسَیَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا رَاَوْاஅவர்கள் பார்த்தால்مَا يُوْعَدُوْنَதாங்கள் எச்சரிக்கப்பட்டதைفَسَيَعْلَمُوْنَஅறி(ந்து கொள்)வார்கள்مَنْஎவர்اَضْعَفُமிக பலவீனமானவர்نَاصِرًاஉதவியாளரால்وَّاَقَلُّஇன்னும் மிக குறைவானவர்عَدَدًا‏எண்ணிக்கையால்
ஹத்தா இதா ர அவ் மா யூ'அதூன Fபஸயஃலமூன மன் அள்'அFபு னாஸிர(ன்)வ் வ அகல்லு 'அததா
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும்; எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.
قُلْ اِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ یَجْعَلُ لَهٗ رَبِّیْۤ اَمَدًا ۟
قُلْகூறுவீராக!اِنْ اَدْرِىْۤஅறியமாட்டேன்اَقَرِيْبٌசமீபமாக உள்ளதாمَّا تُوْعَدُوْنَநீங்கள் எச்சரிக்கப்படுவதுاَمْ يَجْعَلُ لَهٗஅல்லது ஆக்கி இருக்கின்றானா?/அதற்குرَبِّىْۤஎன் இறைவன்اَمَدًا‏ஒரு அவகாசத்தை
குல் இன் அத்ரீ அ கரீBபும் மா தூ'அதூன அம் யஜ்'அலு லஹூ ரBப்Bபீ 'அமதா
(நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.
عٰلِمُ الْغَیْبِ فَلَا یُظْهِرُ عَلٰی غَیْبِهٖۤ اَحَدًا ۟ۙ
عٰلِمُநன்கறிந்தவன்الْغَيْبِமறைவான ஞானங்களைفَلَا يُظْهِرُவெளிப்படுத்த மாட்டான்عَلٰى غَيْبِهٖۤஅவன் தன் மறைவான ஞானங்களைاَحَدًا ۙ‏ஒருவருக்கும்
'ஆலிமுல் கய்Bபி Fபலா யுள்ஹிரு அலா கய்Bபிஹீ 'அஹதா
“(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.
اِلَّا مَنِ ارْتَضٰی مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ یَسْلُكُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۟ۙ
اِلَّاதவிரمَنِஎவர்(களை)ارْتَضٰىதிருப்திகொண்டானோمِنْ رَّسُوْلٍதூதர்களில்فَاِنَّهٗநிச்சயமாக அவன்يَسْلُكُஅனுப்புவான்مِنْۢ بَيْنِ يَدَيْهِஅவர்களுக்கு முன்னும்وَمِنْ خَلْفِهٖஅவர்களுக்குப் பின்னும்رَصَدًا ۙ‏பாதுகாவலர்களை
இல்லா மனிர் தளா மிர் ரஸூலின் Fப இன்னஹூ யஸ்லுகு மின் Bபய்னி யதய்ஹி வ மின் கல்Fபிஹீ ரஸதா
“தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.
لِّیَعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَیْهِمْ وَاَحْصٰی كُلَّ شَیْءٍ عَدَدًا ۟۠
لِّيَـعْلَمَஅவர் அறிவதற்காகاَنْஎன்றுقَدْதிட்டமாகاَبْلَغُوْاஎடுத்துரைத்தார்கள்رِسٰلٰتِதூதுத்துவ செய்திகளைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَاَحَاطَஇன்னும் சூழ்ந்து அறிவான்بِمَا لَدَيْهِمْஅவர்களிடம் உள்ளவற்றைوَاَحْصٰىஇன்னும் கணக்கிட்டுள்ளான்كُلَّ شَىْءٍஎல்லா பொருள்களையும்عَدَدًا‏எண்ணிக்கையால்
லியஃலம அன் கத் அBப்லகூ ரிஸாலாதி ரBப்Bபிஹிம் வ அஹாத Bபி மா லதய்ஹிம் வ அஹ்ஸா குல்ல ஷய்'இன் 'அததா
“தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”