33. ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)

மதனீ, வசனங்கள்: 73

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یٰۤاَیُّهَا النَّبِیُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَالْمُنٰفِقِیْنَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟ۙ
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேاتَّقِஅஞ்சிக் கொள்வீராகاللّٰهَஅல்லாஹ்வைوَ لَاமேலும் வேண்டாம்تُطِعِகீழ்ப்படியالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குوَ الْمُنٰفِقِیْنَ ؕமேலும் நயவஞ்சகர்களுக்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கின்றான்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَكِیْمًاۙஞானமிக்கவனாக
யா அய்யுஹன் னBபிய்யுத் தகில் லாஹ வலா துதி'இல் காFபிரீன வல் முனாFபிகீன்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.
وَّاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟ۙ
وَّ اتَّبِعْமேலும் பின்பற்றுவீராகمَاஎதனைیُوْحٰۤیவஹீயாக அறிவிக்கப்படுகிறதோاِلَیْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَ ؕஉமது இறைவன்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرًاۙநன்கறிந்தவனாக
வத்தBபிஃ மா யூஹா இலய்க மிர் ரBப்Bபிக்; இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
وَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَّ تَوَكَّلْமேலும் நீர் பொறுப்பளிப்பீராகعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِیْلًاபொறுப்பாளனாக
வ தவக்கல் 'அலல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.
مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَیْنِ فِیْ جَوْفِهٖ ۚ وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـِٔیْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚ وَمَا جَعَلَ اَدْعِیَآءَكُمْ اَبْنَآءَكُمْ ؕ ذٰلِكُمْ قَوْلُكُمْ بِاَفْوَاهِكُمْ ؕ وَاللّٰهُ یَقُوْلُ الْحَقَّ وَهُوَ یَهْدِی السَّبِیْلَ ۟
مَاஇல்லைجَعَلَஆக்கினான்اللّٰهُஅல்லாஹ்لِرَجُلٍஒரு மனிதனுக்கும்مِّنْஎந்தقَلْبَیْنِஇரண்டு இதயங்களைفِیْஇல்جَوْفِهٖ ۚஅவனது நெஞ்சில்وَ مَاமேலும் இல்லைجَعَلَஆக்கினான்اَزْوَاجَكُمُஉங்கள் மனைவியரைالّٰٓـِٔیْஎவர்களைتُظٰهِرُوْنَநீங்கள் தாய்க்கு ஒப்பாக்குகிறீர்களோمِنْهُنَّஅவர்களிலிருந்துاُمَّهٰتِكُمْ ۚஉங்கள் தாய்மார்களாகوَ مَاமேலும் இல்லைجَعَلَஆக்கினான்اَدْعِیَآءَكُمْஉங்கள் வளர்ப்பு மகன்களைاَبْنَآءَكُمْ ؕஉங்கள் மகன்களாகذٰلِكُمْஅதுقَوْلُكُمْஉங்கள் கூற்றுبِاَفْوَاهِكُمْ ؕஉங்கள் வாய்களால்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَقُوْلُகூறுகிறான்الْحَقَّஉண்மையைوَ هُوَமேலும் அவன்یَهْدِیவழிகாட்டுகிறான்السَّبِیْلَநேர்வழிக்கு
மா ஜ'அலல் லாஹு லிரஜுலிம் மின் கல்Bபய்னி Fபீ ஜவ்Fபிஹ்; வமா ஜ'அல அZஜ்வாஜகுமுல் லா'ஈ துளாஹிரூன மின்ஹுன்ன உம்மஹாதிகும்; வமா ஜ'அல அத்'இயா'அகும் அBப்னா'அகும்; தாலிகும் கவ்லுகும் Bபி அFப்வா ஹிகும் வல்லாஹு யகூலுல் ஹக்க வ ஹுவ யஹ்திஸ் ஸBபீல்
எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் லிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
اُدْعُوْهُمْ لِاٰبَآىِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا اٰبَآءَهُمْ فَاِخْوَانُكُمْ فِی الدِّیْنِ وَمَوَالِیْكُمْ ؕ وَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ فِیْمَاۤ اَخْطَاْتُمْ بِهٖ ۙ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
اُدْعُوْهُمْஅவர்களை அழையுங்கள்لِاٰبَآىِٕهِمْஅவர்களின் தந்தையர்களின் பெயரால்هُوَஅதுவேاَقْسَطُமிக நீதியானதுعِنْدَமுன்னிலையில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَاِنْஆனால்لَّمْஇல்லைتَعْلَمُوْۤاநீங்கள் அறிந்தால்اٰبَآءَهُمْஅவர்களின் தந்தையர்களைفَاِخْوَانُكُمْஅப்பொழுது உங்கள் சகோதரர்கள்فِیஇல்الدِّیْنِமார்க்கம்وَ مَوَالِیْكُمْ ؕமேலும் உங்கள் நண்பர்களும்وَ لَیْسَமேலும் இல்லைعَلَیْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்فِیْمَاۤஎதில்اَخْطَاْتُمْநீங்கள் தவறிழைத்தீர்களோبِهٖ ۙஅதில்وَ لٰكِنْஆனால்مَّاஎதைتَعَمَّدَتْவேண்டுமென்றே நாடியதோقُلُوْبُكُمْ ؕஉங்கள் உள்ளங்கள்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமன்னிப்பவனாகرَّحِیْمًاநிகரற்ற அன்புடையவனாக
உத்'ஊஹும் லி ஆBபா'இஹிம் ஹுவ அக்ஸது 'இன்தல் லாஹ்; Fப இல்லம் தஃலமூ ஆBபா'அஹும் Fப இக்வானுகும் Fபித் தீனி வ மவாலீகும்; வ லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் Fபீமா அக்தாதும் Bபிஹீ வ லாகிம் மா த'அம்மதத் குலூBபுகும்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
اَلنَّبِیُّ اَوْلٰی بِالْمُؤْمِنِیْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰی بِبَعْضٍ فِیْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِیْنَ وَالْمُهٰجِرِیْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰۤی اَوْلِیٰٓىِٕكُمْ مَّعْرُوْفًا ؕ كَانَ ذٰلِكَ فِی الْكِتٰبِ مَسْطُوْرًا ۟
اَلنَّبِیُّநபிاَوْلٰیநெருக்கமானவர்بِالْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்களுக்குمِنْவிடاَنْفُسِهِمْஅவர்களின் உயிர்களைوَ اَزْوَاجُهٗۤமேலும் அவருடைய மனைவியர்اُمَّهٰتُهُمْ ؕஅவர்களின் அன்னையர்وَ اُولُواமேலும் உடையவர்கள்الْاَرْحَامِஇரத்த உறவுகளைبَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلٰیமேலான உரிமை உடையவர்கள்بِبَعْضٍசிலருக்குفِیْஇல்كِتٰبِவேதத்தில்اللّٰهِஅல்லாஹ்வின்مِنَவிடالْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்களைوَ الْمُهٰجِرِیْنَமேலும் ஹிஜ்ரத் செய்தவர்களைاِلَّاۤதவிரاَنْஎன்றுتَفْعَلُوْۤاநீங்கள் செய்வதுاِلٰۤیநோக்கிاَوْلِیٰٓىِٕكُمْஉங்கள் நண்பர்களுக்குمَّعْرُوْفًا ؕஉபகாரம்كَانَஆகும்ذٰلِكَஅதுفِیஇல்الْكِتٰبِவேதத்தில்مَسْطُوْرًاஎழுதப்பட்டதாக
அன்-னBபிய்யு அவ்லா Bபில் மு'மினீன மின் அன்Fபுஸிஹிம் வ அZஜ்வாஜுஹூ உம்மஹாதுஹும் வ உலுல் அர்ஹாமி Bபஃளுஹும் அவ்லா BபிBபஃளின் Fபீ கிதாBபில் லாஹி மினல் மு'மீனீன வல் முஹாஜிரீன இல்லா அன் தFப்'அலூ இலா அவ்லியா'இகும் மஃரூFபா; கான தாலிக Fபில் கிதாBபி மஸ்தூரா
இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.
وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِیّٖنَ مِیْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ۪ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟ۙ
وَ اِذْஇன்னும் (நினைவுகூர்க)اَخَذْنَاநாம் வாங்கினோம்مِنَஇருந்துالنَّبِیّٖنَநபிமார்களிடம்مِیْثَاقَهُمْஅவர்களின் உடன்படிக்கையைوَ مِنْكَஉம்மிடமிருந்தும்وَ مِنْஇன்னும் இருந்தும்نُّوْحٍநூஹ்وَّ اِبْرٰهِیْمَஇன்னும் இப்ராஹீம்وَ مُوْسٰیஇன்னும் மூஸாوَ عِیْسَیஇன்னும் ஈஸாابْنِமகன்مَرْیَمَ ۪மர்யமின்وَ اَخَذْنَاஇன்னும் நாம் வாங்கினோம்مِنْهُمْஅவர்களிடமிருந்துمِّیْثَاقًاஉடன்படிக்கையைغَلِیْظًاۙஉறுதியான
வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
لِّیَسْـَٔلَ الصّٰدِقِیْنَ عَنْ صِدْقِهِمْ ۚ وَاَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟۠
لِّیَسْـَٔلَகேட்பதற்காகالصّٰدِقِیْنَஉண்மையாளர்களிடம்عَنْபற்றிصِدْقِهِمْ ۚஅவர்களின் உண்மையைوَ اَعَدَّமேலும் அவன் தயார் செய்துள்ளான்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குعَذَابًاவேதனையைاَلِیْمًا۠நோவினை தரும்
லியஸ்'அலஸ் ஸாதிகீன 'அன் ஸித்கிஹிம்; வ அ'அத்த லில்கா Fபிரீன 'அதாBபன் அலீமா
எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்) அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த) காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟ۚ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاذْكُرُوْاநினைவுகூருங்கள்نِعْمَةَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْஉங்கள் மீதுள்ளاِذْபோதுجَآءَتْكُمْஉங்களிடம் வந்தனجُنُوْدٌபடைகள்فَاَرْسَلْنَاஅப்போது நாம் அனுப்பினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுرِیْحًاஒரு காற்றைوَّ جُنُوْدًاமேலும் படைகளைلَّمْஇல்லைتَرَوْهَا ؕநீங்கள் அவற்றைக் காணوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرًاۚநன்கு பார்ப்பவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனுத் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் ஜா'அத்கும் ஜுனூதுன் Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹ(ன்)வ் வ ஜுனூதல் லம் தரவ்ஹா; வ கானல் லாஹு Bபிமா தஃமலூன Bபஸீரா
முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَنَاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ۟
اِذْஅப்போதுجَآءُوْكُمْஅவர்கள் உங்களிடம் வந்தார்கள்مِّنْஇருந்துفَوْقِكُمْஉங்களுக்கு மேலால்وَ مِنْமேலும் இருந்துاَسْفَلَகீழேمِنْكُمْஉங்களிலிருந்துوَ اِذْமேலும் அப்போதுزَاغَتِநிலை குலைந்தனالْاَبْصَارُபார்வைகள்وَ بَلَغَتِமேலும் எட்டினالْقُلُوْبُஇதயங்கள்الْحَنَاجِرَதொண்டைகளைوَ تَظُنُّوْنَமேலும் நீங்கள் எண்ணினீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைப் பற்றிالظُّنُوْنَاபலவிதமான எண்ணங்களை
இத் ஜா'ஊகும் மின் Fபவ்கிகும் வ மின் அஸ்Fபல மின்கும் வ இத் Zஜாகதில் அBப்ஸாரு வ Bபலகதில் குலூBபுல் ஹனாஜிர வ தளுன்னூன Bபில்லாஹிள் ளுனூனா
உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூறுங்கள்.
هُنَالِكَ ابْتُلِیَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِیْدًا ۟
هُنَالِكَஅவ்விடத்தில்ابْتُلِیَசோதிக்கப்பட்டார்கள்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்وَ زُلْزِلُوْاமேலும் குலுக்கப்பட்டார்கள்زِلْزَالًاஅதிர்ச்சியால்شَدِیْدًاகடுமையான
ஹுனாலிகBப் துலியல் மு'மினூன வ Zஜுல்Zஜிலூ Zஜில்Zஜாலன் ஷதீதா
அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள்.
وَاِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اِلَّا غُرُوْرًا ۟
وَ اِذْமேலும் எப்போதுیَقُوْلُகூறினார்களோالْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்கள்وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்فِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்கள்مَّرَضٌநோய்مَّاஇல்லைوَعَدَنَاநமக்கு வாக்களித்தான்اللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗۤஇன்னும் அவனுடைய தூதரும்اِلَّاதவிரغُرُوْرًاஏமாற்றத்தை
வ இத் யகூலுல் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளும் மா வ'அதனல் லாஹு வ ரஸூலுஹூ இல்லா குரூரா
மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தையும் நினைவு கூறுங்கள்.
وَاِذْ قَالَتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ یٰۤاَهْلَ یَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا ۚ وَیَسْتَاْذِنُ فَرِیْقٌ مِّنْهُمُ النَّبِیَّ یَقُوْلُوْنَ اِنَّ بُیُوْتَنَا عَوْرَةٌ ۛؕ وَمَا هِیَ بِعَوْرَةٍ ۛۚ اِنْ یُّرِیْدُوْنَ اِلَّا فِرَارًا ۟
وَ اِذْமேலும் (அப்போது)قَالَتْகூறியதுطَّآىِٕفَةٌஒரு கூட்டத்தினர்مِّنْهُمْஅவர்களில்یٰۤاَهْلَஓ மக்களேیَثْرِبَயஸ்ரிப்لَاஇல்லைمُقَامَதங்குமிடம்لَكُمْஉங்களுக்குفَارْجِعُوْا ۚஎனவே திரும்பிச் செல்லுங்கள்وَ یَسْتَاْذِنُமேலும் அனுமதி கோருகின்றனர்فَرِیْقٌஒரு பிரிவினர்مِّنْهُمُஅவர்களில்النَّبِیَّநபியிடம்یَقُوْلُوْنَஅவர்கள் கூறுகின்றனர்اِنَّநிச்சயமாகبُیُوْتَنَاஎங்களது வீடுகள்عَوْرَةٌ ۛؕபாதுகாப்பற்றவைوَ مَاமேலும் இல்லைهِیَஅவைبِعَوْرَةٍ ۛۚபாதுகாப்பற்றவையாகاِنْஇல்லைیُّرِیْدُوْنَஅவர்கள் நாடுகிறார்கள்اِلَّاதவிரفِرَارًاதப்பியோடுவதை
வ இத் காலத் தா'இFபதும் மின்ஹும் யா அஹ்ல யத்ரிBப லா முகாமா லகும் Fபர்ஜி'ஊ; வ யஸ்தாதினு Fபரீகும் மின்ஹுமுன் னBபிய்ய யகூலூன இன்ன Bபுயூதனா 'அவ்ரஹ்; வமா ஹிய Bபி'அவ்ரதின் இ(ன்)ய் யுரீதூன இல்லா Fபிராரா
மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) “யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன” என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
وَلَوْ دُخِلَتْ عَلَیْهِمْ مِّنْ اَقْطَارِهَا ثُمَّ سُىِٕلُوا الْفِتْنَةَ لَاٰتَوْهَا وَمَا تَلَبَّثُوْا بِهَاۤ اِلَّا یَسِیْرًا ۟
وَ لَوْஇன்னும் ஒருவேளைدُخِلَتْநுழையப்பட்டிருந்தால்عَلَیْهِمْஅவர்கள் மீதுمِّنْஇருந்துاَقْطَارِهَاஅதன் திசைகளில்ثُمَّபின்னர்سُىِٕلُواஅவர்களிடம் கேட்கப்பட்டால்الْفِتْنَةَகுழப்பம் செய்யلَاٰتَوْهَاநிச்சயமாக அவர்கள் அதைச் செய்திருப்பார்கள்وَ مَاமேலும் இல்லைتَلَبَّثُوْاஅவர்கள் தாமதித்திருக்கبِهَاۤஅதில்اِلَّاதவிரیَسِیْرًاசிறிது நேரமே
வ லவ் துகிலத் 'அலய்ஹிம் மின் அக்தாரிஹா தும்ம ஸு'இலுல் Fபித்னத ல ஆதவ்ஹா வமா தலBப்Bபதூ Bபிஹா இல்லா யஸீரா
அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே தவிர தாமதப் படுத்த மாட்டார்கள்.
وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ لَا یُوَلُّوْنَ الْاَدْبَارَ ؕ وَكَانَ عَهْدُ اللّٰهِ مَسْـُٔوْلًا ۟
وَ لَقَدْநிச்சயமாகவேكَانُوْاஅவர்கள்عَاهَدُواஉடன்படிக்கை செய்திருந்தார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்مِنْஇதற்குقَبْلُமுன்னர்لَاமாட்டோம் என்றுیُوَلُّوْنَதிருப்பالْاَدْبَارَ ؕபுறமுதுகுகளைوَ كَانَமேலும் ஆகும்عَهْدُஉடன்படிக்கைاللّٰهِஅல்லாஹ்வின்مَسْـُٔوْلًاகேள்வி கேட்கப்படக் கூடியதாக
வ லகத் கானூ 'ஆஹதுல் லாஹ மின் கBப்லு லா யுவல் லூனல் அத்Bபார்; வ கான 'அஹ்துல் லாஹி மஸ்'ஊலா
எனினும், அவர்கள் (போரிலிருந்து) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதி பற்றி (அவர்களிடம்) கேட்கப்படும்.
قُلْ لَّنْ یَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
قُلْகூறுவீராகلَّنْஒருபோதும்یَّنْفَعَكُمُஉங்களுக்குப் பயனளிக்காதுالْفِرَارُதப்பியோடுதல்اِنْஒருவேளைفَرَرْتُمْநீங்கள் தப்பியோடினால்مِّنَஇருந்துالْمَوْتِமரணம்اَوِஅல்லதுالْقَتْلِகொல்லப்படுதல்وَ اِذًاஅவ்வாறாயின்لَّاமாட்டீர்கள்تُمَتَّعُوْنَநீங்கள் சுகமளிக்கப்படاِلَّاதவிரقَلِیْلًاசிறிது காலமே
குல் ல(ன்)ய் யன்Fப'அகுமுல் Fபிராரு இன் Fபரர்தும் மினல் மவ்தி அவில் கத்லி வ இதல் லா துமத்த'ஊன இல்லா கலீலா
“மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قُلْ مَنْ ذَا الَّذِیْ یَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْٓءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ؕ وَلَا یَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
قُلْகூறுவீராகمَنْயார்ذَاஅவன்الَّذِیْஎவன்یَعْصِمُكُمْஉங்களைப் பாதுகாப்பான்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்விடம்اِنْஒருவேளைاَرَادَஅவன் நாடினால்بِكُمْஉங்களுக்குسُوْٓءًاதீமையைاَوْஅல்லதுاَرَادَஅவன் நாடினால்بِكُمْஉங்களுக்குرَحْمَةً ؕஅருளைوَ لَاமேலும் இல்லைیَجِدُوْنَஅவர்கள் காண்பார்கள்لَهُمْதங்களுக்குمِّنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَلِیًّاபாதுகாவலனைوَّ لَاஇன்னும் இல்லைنَصِیْرًاஉதவியாளனை
குல் மன் தல் லதீ யஃஸிமுகும் மினல் லாஹி இன் அராத Bபிகும் ஸூ'அன் அவ் அராத Bபிகும் ரஹ்மஹ்; வலா யஜிதூன லஹும் மின் தூனில் லாஹி வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
“அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
قَدْ یَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِیْنَ مِنْكُمْ وَالْقَآىِٕلِیْنَ لِاِخْوَانِهِمْ هَلُمَّ اِلَیْنَا ۚ وَلَا یَاْتُوْنَ الْبَاْسَ اِلَّا قَلِیْلًا ۟ۙ
قَدْநிச்சயமாகیَعْلَمُஅறிவான்اللّٰهُஅல்லாஹ்الْمُعَوِّقِیْنَதடைசெய்பவர்களைمِنْكُمْஉங்களில்وَ الْقَآىِٕلِیْنَமேலும் கூறுபவர்களையும்لِاِخْوَانِهِمْதங்கள் சகோதரர்களிடம்هَلُمَّவாருங்கள்اِلَیْنَا ۚஎங்களிடம்وَ لَاமேலும் இல்லைیَاْتُوْنَஅவர்கள் வருவார்கள்الْبَاْسَபோருக்குاِلَّاதவிரقَلِیْلًاۙமிகக் குறைவாகவே
கத் யஃலமுல் லாஹுல் மு'அவ்விகீன மின்கும் வல்கா'இலீன லி இக்வானிஹிம் ஹலும்ம இலய்னா, வலா யா'தூனல் Bபாஸ இல்லா கலீலா
உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, “நம்மிடம் வந்து விடுங்கள்” என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்.
اَشِحَّةً عَلَیْكُمْ ۖۚ فَاِذَا جَآءَ الْخَوْفُ رَاَیْتَهُمْ یَنْظُرُوْنَ اِلَیْكَ تَدُوْرُ اَعْیُنُهُمْ كَالَّذِیْ یُغْشٰی عَلَیْهِ مِنَ الْمَوْتِ ۚ فَاِذَا ذَهَبَ الْخَوْفُ سَلَقُوْكُمْ بِاَلْسِنَةٍ حِدَادٍ اَشِحَّةً عَلَی الْخَیْرِ ؕ اُولٰٓىِٕكَ لَمْ یُؤْمِنُوْا فَاَحْبَطَ اللّٰهُ اَعْمَالَهُمْ ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
اَشِحَّةًகஞ்சத்தனம் உடையவர்களாகعَلَیْكُمْ ۖۚஉங்கள் மீதுفَاِذَاஎனவே எப்போதுجَآءَவந்ததோالْخَوْفُபயம்رَاَیْتَهُمْநீர் அவர்களைக் காண்பீர்یَنْظُرُوْنَஅவர்கள் பார்க்கிறார்கள்اِلَیْكَஉம்மை நோக்கிتَدُوْرُசுழல்கின்றனاَعْیُنُهُمْஅவர்களுடைய கண்கள்كَالَّذِیْஒருவனைப் போலیُغْشٰیமயக்கமுற்றعَلَیْهِஅவன் மீதுمِنَஇருந்துالْمَوْتِ ۚமரணம்فَاِذَاபிறகு எப்போதுذَهَبَநீங்கிவிட்டதோالْخَوْفُபயம்سَلَقُوْكُمْஅவர்கள் உங்களைச் சாடுவார்கள்بِاَلْسِنَةٍநாவுகளைக் கொண்டுحِدَادٍகூர்மையானاَشِحَّةًபேராசை கொண்டவர்களாகعَلَیமீதுالْخَیْرِ ؕநன்மையின்اُولٰٓىِٕكَஅத்தகையோர்لَمْஇல்லைیُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்ளفَاَحْبَطَஎனவே அழித்துவிட்டான்اللّٰهُஅல்லாஹ்اَعْمَالَهُمْ ؕஅவர்களுடைய செயல்களைوَ كَانَமேலும் இருக்கிறதுذٰلِكَஅதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்یَسِیْرًاமிக எளிதானது
அஷிஹ்ஹதன் 'அலய்கும் Fப-இதா ஜா'அல் கவ்Fபு ர அய்தஹும் யன்ளுரூன இலய்க ததூரு அஃயுனுஹும் கல்லதீ யுக்ஷா 'அலய்ஹி மினல் மவ்தி Fப இதா தஹBபல் கவ்Fபு ஸல்கூகும் Bபி அல்ஸினதின் ஹிதாதின் அஷிஹ்ஹதன் 'அலல் கய்ர்; உலா'இக லம் யு'மினூ Fப அஹ்Bபதல் லாஹு அஃமாலஹும்; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
(அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக் கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம் ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில் மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள் சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம் நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள் விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை; ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.
یَحْسَبُوْنَ الْاَحْزَابَ لَمْ یَذْهَبُوْا ۚ وَاِنْ یَّاْتِ الْاَحْزَابُ یَوَدُّوْا لَوْ اَنَّهُمْ بَادُوْنَ فِی الْاَعْرَابِ یَسْاَلُوْنَ عَنْ اَنْۢبَآىِٕكُمْ ؕ وَلَوْ كَانُوْا فِیْكُمْ مَّا قٰتَلُوْۤا اِلَّا قَلِیْلًا ۟۠
یَحْسَبُوْنَஅவர்கள் எண்ணுகிறார்கள்الْاَحْزَابَஅந்தப் படைகள்لَمْஇல்லைیَذْهَبُوْا ۚசென்றுவிட்டதாகوَ اِنْமேலும் ஒருவேளைیَّاْتِவந்தால்الْاَحْزَابُஅந்தப் படைகள்یَوَدُّوْاஅவர்கள் விரும்புவார்கள்لَوْஒருவேளைاَنَّهُمْதாங்கள்بَادُوْنَவசிப்பவர்களாகفِیஇடையேالْاَعْرَابِகிராமவாசிகளின்یَسْاَلُوْنَவிசாரித்துக் கொண்டிருக்கعَنْபற்றிاَنْۢبَآىِٕكُمْ ؕஉங்கள் செய்திகளைப்وَ لَوْமேலும் ஒருவேளைكَانُوْاஅவர்கள் இருந்திருந்தால்فِیْكُمْஉங்களிடையேمَّاமாட்டார்கள்قٰتَلُوْۤاபோரிட்டிருக்கاِلَّاதவிரقَلِیْلًا۠மிகக் குறைவாகவே
யஹ்ஸBபூனல் அஹ்ZஜாBப லம் யத்ஹBபூ வ இ(ன்)ய் யா'தில் அஹ்ZஜாBபு யவத்தூ லவ் அன்னஹும் Bபாதூன Fபில் அஃராBபி யஸலூன 'அன் அம்Bபா'இகும் வ லவ் கானூ Fபீகும் மா காதலூ இல்லா கலீலா
அந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ் எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் - ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிட மாட்டார்கள்.  
لَقَدْ كَانَ لَكُمْ فِیْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ یَرْجُوا اللّٰهَ وَالْیَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِیْرًا ۟ؕ
لَقَدْநிச்சயமாகكَانَஇருக்கிறதுلَكُمْஉங்களுக்குفِیْஇடத்தில்رَسُوْلِதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்اُسْوَةٌமுன்மாதிரிحَسَنَةٌஅழகியلِّمَنْஎவருக்குكَانَஇருக்கிறாரோیَرْجُواஆதரவு வைக்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வைوَالْیَوْمَமேலும் நாளைالْاٰخِرَஇறுதிوَ ذَكَرَமேலும் நினைவு கூர்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வைكَثِیْرًاؕஅதிகமாக
லகத் கான லகும் Fபீ ரஸூலில் லாஹி உஸ்வதுன் ஹஸனதுல் லிமன் கான யர்ஜுல் லாஹ வல் யவ்மல் ஆகிர வ தகரல் லாஹ கதீரா
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَ ۙ قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗ وَصَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗ ؗ وَمَا زَادَهُمْ اِلَّاۤ اِیْمَانًا وَّتَسْلِیْمًا ۟ؕ
وَ لَمَّاஇன்னும் எப்போதுرَاَகண்டார்களோالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்الْاَحْزَابَ ۙகூட்டுப் படைகளைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்هٰذَاஇதுمَاஎதனைوَعَدَنَاநமக்கு வாக்களித்தார்களோاللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗஇன்னும் அவனுடைய தூதரும்وَ صَدَقَமேலும் உண்மையையே கூறினார்கள்اللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗ ؗஇன்னும் அவனுடைய தூதரும்وَ مَاமேலும் இல்லைزَادَهُمْஅவர்களுக்கு அதிகப்படுத்தியதுاِلَّاۤஅன்றிاِیْمَانًاநம்பிக்கையையும்وَّ تَسْلِیْمًاؕஇன்னும் கீழ்ப்படிதலையும்
வ லம்மா ர அல் மு'மினூனல் அஹ்ZஜாBப காலூ ஹாதா மா வ'அதனல் லாஹு வ ரஸூலுஹ்; வ ஸதகல் லாஹு வ ரஸூலுஹ்; வமா Zஜாதஹும் இல்லா ஈமான(ன்)வ் வ தஸ்லீமா
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, “இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்” என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.
مِنَ الْمُؤْمِنِیْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَیْهِ ۚ فَمِنْهُمْ مَّنْ قَضٰی نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ یَّنْتَظِرُ ۖؗ وَمَا بَدَّلُوْا تَبْدِیْلًا ۟ۙ
مِنَஇருந்துالْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்களில்رِجَالٌஆண்கள்صَدَقُوْاஉண்மையாக நடந்தனர்مَاஎதைعَاهَدُواஅவர்கள் உடன்படிக்கை செய்தார்களோاللّٰهَஅல்லாஹ்விடம்عَلَیْهِ ۚஅதன் மீதுفَمِنْهُمْஆகவே அவர்களில்مَّنْஎவர்قَضٰیநிறைவேற்றிவிட்டாரோنَحْبَهٗதனது நேர்ச்சையைوَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்یَّنْتَظِرُ ۖؗகாத்திருக்கிறாரோوَ مَاமேலும் இல்லைبَدَّلُوْاஅவர்கள் மாற்றினார்கள்تَبْدِیْلًاۙஎந்த மாற்றத்தையும்
மினல் மு'மினீன ரிஜாலுன் ஸதகூ மா 'ஆஹதுல் லாஹ 'அலய்ஹி Fபமின்ஹும் மன் களா னஹ்Bபஹூ வ மின்ஹும் மய் யன்தளிரு வமா Bபத்தலூ தBப்தீலா
முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.
لِّیَجْزِیَ اللّٰهُ الصّٰدِقِیْنَ بِصِدْقِهِمْ وَیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ اِنْ شَآءَ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ
لِّیَجْزِیَநற்கூலி வழங்குவதற்காகاللّٰهُஅல்லாஹ்الصّٰدِقِیْنَஉண்மையாளர்களுக்குبِصِدْقِهِمْஅவர்களின் உண்மைக்காகوَ یُعَذِّبَமேலும் தண்டிப்பதற்காகالْمُنٰفِقِیْنَநயவஞ்சகர்களைاِنْஅவன்شَآءَநாடினால்اَوْஅல்லதுیَتُوْبَமன்னிப்பளிக்கعَلَیْهِمْ ؕஅவர்களுக்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்غَفُوْرًاமிக்க மன்னிப்பவனாகرَّحِیْمًاۚநிகரற்ற அன்புடையவனாக
லி யஜ்Zஜியல் ஆஹுஸ் ஸாதிகீன Bபிஸித்கிஹிம் வ யு'அத்திBபல் முனாFபிகீன இன் ஷா'அ அவ் யதூBப 'அலய்ஹிம்; இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
وَرَدَّ اللّٰهُ الَّذِیْنَ كَفَرُوْا بِغَیْظِهِمْ لَمْ یَنَالُوْا خَیْرًا ؕ وَكَفَی اللّٰهُ الْمُؤْمِنِیْنَ الْقِتَالَ ؕ وَكَانَ اللّٰهُ قَوِیًّا عَزِیْزًا ۟ۚ
وَ رَدَّமேலும் திருப்பி அனுப்பினான்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோبِغَیْظِهِمْஅவர்களின் கோபத்துடன்لَمْஇல்லைیَنَالُوْاஅவர்கள் அடையخَیْرًا ؕஎந்த நன்மையையும்وَ كَفَیமேலும் போதுமானவன்اللّٰهُஅல்லாஹ்الْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்குالْقِتَالَ ؕபோரில்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்قَوِیًّاவலிமைமிக்கவன்عَزِیْزًاۚமிகைத்தவன்
வ ரத்தல் லாஹுல் லதீன கFபரூ Bபிகய்ளிஹிம் லம் யனாலூ கய்ரா; வ கFபல் லாஹுல் மு'மினீனல் கிதால்; வ கானல் லாஹு கவிய்யன் 'அZஜீZஜா
நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்.
وَاَنْزَلَ الَّذِیْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَیَاصِیْهِمْ وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِیْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِیْقًا ۟ۚ
وَ اَنْزَلَமேலும் அவன் இறக்கினான்الَّذِیْنَஎவர்கள்ظَاهَرُوْهُمْஅவர்களுக்கு உதவி செய்தார்களோمِّنْஇருந்துاَهْلِமக்கள்الْكِتٰبِவேதمِنْஇருந்துصَیَاصِیْهِمْஅவர்களின் கோட்டைகள்وَ قَذَفَமேலும் அவன் போட்டான்فِیْஇல்قُلُوْبِهِمُஅவர்களின் இதயங்கள்الرُّعْبَதிகிலைفَرِیْقًاஒரு பிரிவினரைتَقْتُلُوْنَநீங்கள் கொன்றீர்கள்وَ تَاْسِرُوْنَமேலும் நீங்கள் சிறைபிடித்தீர்கள்فَرِیْقًاۚஒரு பிரிவினரை
வ அன்Zஜலல் லதீன ளாஹ ரூஹும் மின் அஹ்லில் கிதாBபி மின் ஸ யாஸீஹிம் வ கதFப Fபீ குலூBபிஹிம்ம் முர் ருஃBப Fபரீகன் தக்துலூன வ தா'ஸிரூன Fபரீகா
இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.
وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِیَارَهُمْ وَاَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَـُٔوْهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟۠
وَ اَوْرَثَكُمْமேலும் அவன் உங்களுக்கு வாரிசாக்கினான்اَرْضَهُمْஅவர்களுடைய நிலத்தைوَ دِیَارَهُمْமேலும் அவர்களுடைய வீடுகளைوَ اَمْوَالَهُمْமேலும் அவர்களுடைய செல்வங்களைوَ اَرْضًاமேலும் ஒரு நிலத்தைلَّمْஇல்லைتَطَـُٔوْهَا ؕநீங்கள் அதை மிதித்திருக்கوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرًا۠பேராற்றலுடையவனாக
வ அவ்ரதகும் அர்ளஹும் வ தியாரஹும் வ அம்வாலஹும் வ அர்ளல் லம் தத'ஊஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீரா
இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.  
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا فَتَعَالَیْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِیْلًا ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேقُلْகூறுவீராகلِّاَزْوَاجِكَஉம் மனைவியரிடம்اِنْஒருவேளைكُنْتُنَّநீங்கள்تُرِدْنَவிரும்பினால்الْحَیٰوةَவாழ்க்கையைالدُّنْیَاஇவ்வுலகوَ زِیْنَتَهَاஅதன் அலங்காரத்தையும்فَتَعَالَیْنَஎனவே வாருங்கள்اُمَتِّعْكُنَّஉங்களுக்குப் பொருளுதவி அளிப்பேன்وَ اُسَرِّحْكُنَّமேலும் உங்களை விடுவிப்பேன்سَرَاحًاவிடுவிப்பதாகجَمِیْلًاஅழகிய
யா அய்யுஹன் னBபிய்யு குல் லி அZஜ்வாஜிக இன் குன்துன்ன துரித்னல் ஹயாதத் துன்யா வ Zஜீனதஹா Fபத'ஆலய்ன உமத்திஃகுன்ன வ உஸர்ரிஹ்குன்ன ஸராஹன் ஜமீலா
நபியே! உம்முடைய மனைவிகளிடம்: “நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்.
وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِیْمًا ۟
وَ اِنْஆனால்كُنْتُنَّநீங்கள்تُرِدْنَநாடுபவர்களாக இருந்தால்اللّٰهَஅல்லாஹ்வையும்وَ رَسُوْلَهٗஅவனுடைய தூதரையும்وَ الدَّارَஇல்லத்தையும்الْاٰخِرَةَமறுமைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اَعَدَّதயார் செய்திருக்கிறான்لِلْمُحْسِنٰتِநன்மை செய்யும் பெண்களுக்குمِنْكُنَّஉங்களில்اَجْرًاகூலியைعَظِیْمًاமகத்தான
வ இன் குன்துன்ன துரித்னல் லாஹ வ ரஸூலஹூ வத் தாரல் ஆகிரத Fப இன்னல் லாஹ அ'அத்த லில் முஹ்ஸினாதி மின் குன்ன அஜ்ஜ்ரன் 'அளீமா
“ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!
یٰنِسَآءَ النَّبِیِّ مَنْ یَّاْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ یُّضٰعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَیْنِ ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
یٰنِسَآءَமனைவிகளேالنَّبِیِّநபியின்مَنْஎவர்یَّاْتِசெய்கிறாரோمِنْكُنَّஉங்களில்بِفَاحِشَةٍமானக்கேடான செயலைمُّبَیِّنَةٍபகிரங்கமானیُّضٰعَفْஇரட்டிப்பாக்கப்படும்لَهَاஅவருக்குالْعَذَابُவேதனைضِعْفَیْنِ ؕஇருமடங்காகوَ كَانَமேலும் ஆகும்ذٰلِكَஅதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்یَسِیْرًاஎளிதானது
யா னிஸா'அன் னBபிய்யி மய் யாதி மின்குன்ன BபிFபா ஹிஷதிம் முBபய்யினதி(ன்)ய் யுளா'அFப் லஹல் 'அதாBபு ளிஃFபய்ன் வ கான தாலிக 'அலல் லாஹி யஸீர
நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!  
وَمَنْ یَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًا نُّؤْتِهَاۤ اَجْرَهَا مَرَّتَیْنِ ۙ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِیْمًا ۟
وَ مَنْமேலும் எவர்یَّقْنُتْஅடிபணிந்து நடக்கிறாரோمِنْكُنَّஉங்களில்لِلّٰهِஅல்லாஹ்வுக்கும்وَ رَسُوْلِهٖஅவனுடைய தூதருக்கும்وَ تَعْمَلْமேலும் செய்கிறாரோصَالِحًاநற்செயலைنُّؤْتِهَاۤஅவருக்கு நாம் வழங்குவோம்اَجْرَهَاஅவருடைய கூலியைمَرَّتَیْنِ ۙஇருமுறைوَ اَعْتَدْنَاமேலும் நாம் தயார் செய்துள்ளோம்لَهَاஅவருக்குرِزْقًاவாழ்வாதாரத்தைكَرِیْمًاகண்ணியமான
வ மய் யக்னுத் மின்குன்ன லில்லாஹி வ ரஸூலிஹீ வ தஃமல் ஸாலிஹன் னு'திஹா அஜ்ரஹா மர்ரதய்னி வ அஃதத்னா லஹா ரிZஜ்கன் கரீமா
அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
یٰنِسَآءَ النَّبِیِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَیْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَیَطْمَعَ الَّذِیْ فِیْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۟ۚ
یٰنِسَآءَஓ மனைவிகளேالنَّبِیِّநபியின்لَسْتُنَّநீங்கள் அல்லكَاَحَدٍஎவரைப் போலவும்مِّنَஇருந்துالنِّسَآءِபெண்களில்اِنِநீங்கள்اتَّقَیْتُنَّஇறையச்சம் கொண்டிருந்தால்فَلَاஎனவேتَخْضَعْنَகுழைந்து பேசாதீர்கள்بِالْقَوْلِபேச்சில்فَیَطْمَعَஆசை கொள்ளக்கூடும்الَّذِیْஎவர்فِیْஉள்ளேقَلْبِهٖஅவரது உள்ளத்தில்مَرَضٌநோய்وَّ قُلْنَமேலும் பேசுங்கள்قَوْلًاபேச்சைمَّعْرُوْفًاۚமுறையான
யா னிஸா'அன் னBபிய்யி லஸ்துன்ன க அஹதிம் மினன் னிஸா'இ இனித் தகய்துன்ன Fபலா தக்ளஃன Bபில்கவ்லி Fப யத்ம'அல் லதீ Fபீ கல்Bபிஹீ மரளு(ன்)வ் வ குல்ன கவ்லம் மஃரூFபா
நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
وَقَرْنَ فِیْ بُیُوْتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِیَّةِ الْاُوْلٰی وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِیْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ لِیُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَیْتِ وَیُطَهِّرَكُمْ تَطْهِیْرًا ۟ۚ
وَ قَرْنَமேலும் தங்கியிருங்கள்فِیْஉள்ளேبُیُوْتِكُنَّஉங்கள் வீடுகளில்وَ لَاமேலும் வேண்டாம்تَبَرَّجْنَவெளிப்படுத்தாதீர்கள்تَبَرُّجَவெளிப்படுத்துவதைப் போல்الْجَاهِلِیَّةِஅறியாமைக் காலத்தின்الْاُوْلٰیமுந்தையوَ اَقِمْنَமேலும் நிலைநாட்டுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَ اٰتِیْنَமேலும் வழங்குங்கள்الزَّكٰوةَஜகாத்தைوَ اَطِعْنَமேலும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗ ؕமேலும் அவனுடைய தூதருக்கும்اِنَّمَاநிச்சயமாகیُرِیْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்لِیُذْهِبَநீக்குவதற்குعَنْكُمُஉங்களிடமிருந்துالرِّجْسَஅசுத்தத்தைاَهْلَகுடும்பத்தினரேالْبَیْتِவீட்டின்وَ یُطَهِّرَكُمْமேலும் உங்களைத் தூய்மைப்படுத்தتَطْهِیْرًاۚமுற்றிலும் தூய்மையாக
வ கர்ன Fபீ Bபு யூ திகுன்ன வலா தBபர்ரஜ்ன தBபர்ருஜல் ஜாஹிலிய்யதில் ஊலா வ அகிம்னஸ் ஸலாத வ ஆதீனZஜ் Zஜகாத வ அதிஃனல் லாஹ வ ரஸூலஹ்; இன்னமா யுரீதுல் லாஹு லியுத்ஹிBப 'அன்குமுர் ரிஜ்ஸ அஹ்லல் Bபய்தி வ யுதஹ்ஹிரகும் தத்ஹீரா
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
وَاذْكُرْنَ مَا یُتْلٰی فِیْ بُیُوْتِكُنَّ مِنْ اٰیٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ لَطِیْفًا خَبِیْرًا ۟۠
وَ اذْكُرْنَமேலும் நினைவு கூருங்கள்مَاஎவற்றைیُتْلٰیஓதிக்காட்டப்படுகிறதோفِیْஇல்بُیُوْتِكُنَّஉங்கள் வீடுகள்مِنْஇலிருந்துاٰیٰتِவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்وَ الْحِكْمَةِ ؕமற்றும் ஞானத்தைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்لَطِیْفًاநுட்பமானவன்خَبِیْرًا۠நன்கு அறிந்தவன்
வத்குர்ன மா யுத்லா Fபீ Bபு யூதிகுன்ன மின் ஆயாதில் லாஹி வல் ஹிக்மஹ்; இன்னல் லாஹ கான லதீFபன் கBபீரா
மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.  
اِنَّ الْمُسْلِمِیْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِیْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِیْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِیْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِیْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِیْنَ وَالْمُتَصَدِّقٰتِ وَالصَّآىِٕمِیْنَ وَالصّٰٓىِٕمٰتِ وَالْحٰفِظِیْنَ فُرُوْجَهُمْ وَالْحٰفِظٰتِ وَالذّٰكِرِیْنَ اللّٰهَ كَثِیْرًا وَّالذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟
اِنَّநிச்சயமாகالْمُسْلِمِیْنَமுஸ்லிம்களான ஆண்களுக்கும்وَ الْمُسْلِمٰتِமுஸ்லிம்களான பெண்களுக்கும்وَ الْمُؤْمِنِیْنَநம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும்وَ الْمُؤْمِنٰتِநம்பிக்கைகொண்ட பெண்களுக்கும்وَ الْقٰنِتِیْنَகீழ்ப்படியும் ஆண்களுக்கும்وَ الْقٰنِتٰتِகீழ்ப்படியும் பெண்களுக்கும்وَ الصّٰدِقِیْنَஉண்மையாளரான ஆண்களுக்கும்وَ الصّٰدِقٰتِஉண்மையாளரான பெண்களுக்கும்وَ الصّٰبِرِیْنَபொறுமைகாக்கும் ஆண்களுக்கும்وَ الصّٰبِرٰتِபொறுமைகாக்கும் பெண்களுக்கும்وَ الْخٰشِعِیْنَஉள்ளச்சமுடைய ஆண்களுக்கும்وَ الْخٰشِعٰتِஉள்ளச்சமுடைய பெண்களுக்கும்وَ الْمُتَصَدِّقِیْنَதர்மம் செய்யும் ஆண்களுக்கும்وَ الْمُتَصَدِّقٰتِதர்மம் செய்யும் பெண்களுக்கும்وَ الصَّآىِٕمِیْنَநோன்பு நோற்கும் ஆண்களுக்கும்وَ الصّٰٓىِٕمٰتِநோன்பு நோற்கும் பெண்களுக்கும்وَ الْحٰفِظِیْنَபாதுகாத்துக் கொள்ளும் ஆண்களுக்கும்فُرُوْجَهُمْதங்களது மறைவிடங்களைوَ الْحٰفِظٰتِபாதுகாத்துக் கொள்ளும் பெண்களுக்கும்وَ الذّٰكِرِیْنَநினைவு கூரும் ஆண்களுக்கும்اللّٰهَஅல்லாஹ்வைكَثِیْرًاஅதிகமாகوَّ الذّٰكِرٰتِ ۙநினைவு கூரும் பெண்களுக்கும்اَعَدَّதயார் செய்திருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةًமன்னிப்பைوَّ اَجْرًاகூலியையும்عَظِیْمًاமகத்தான
இன்னல் முஸ்லிமீன வல் முஸ்லிமாதி வல் மு'மினீன வல் மு'மினாதி வல்கானிதீன வல்கானிதாதி வஸ்ஸாதிகீன வஸ்ஸாதிகாதி வஸ்ஸாBபிரீன வஸ்ஸாBபிராதி வல்காஷி'ஈன வல்காஷி'ஆதி வல்முதஸத்திகீன வல்முதஸத்திகாதி வஸ்ஸா'இமீன வஸ்ஸா'இமாதி வல்ஹாFபிளீன Fபுரூஜஹும் வல்ஹாFபிளாதி வத் தாகிரீனல் லாஹ கதீர(ன்)வ் வத் தாகிராதி அ'அத்தல் லாஹு லஹும் மக்Fபிரத(ன்)வ் வ அஜ்ரன் 'அளீமா
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَی اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ یَّكُوْنَ لَهُمُ الْخِیَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِیْنًا ۟ؕ
وَ مَاமேலும் இல்லைكَانَதகாதுلِمُؤْمِنٍஒரு முஃமினான ஆணுக்குوَّ لَاஇன்னும் இல்லைمُؤْمِنَةٍஒரு முஃமினான பெண்ணுக்குاِذَاஎப்போதுقَضَیதீர்மானித்துவிட்டால்اللّٰهُஅல்லாஹ்وَ رَسُوْلُهٗۤஅவனுடைய தூதரும்اَمْرًاஒரு காரியத்தைاَنْஎன்பதுیَّكُوْنَஇருப்பதுلَهُمُஅவர்களுக்குالْخِیَرَةُசுய விருப்பம்مِنْஇருந்துاَمْرِهِمْ ؕஅவர்களுடைய காரியத்தில்وَ مَنْஇன்னும் எவர்یَّعْصِமாறு செய்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗஅவனுடைய தூதருக்கும்فَقَدْநிச்சயமாகضَلَّஅவர் வழிதவறிவிட்டார்ضَلٰلًاவழிகேட்டில்مُّبِیْنًاؕதெளிவான
வமா கான லிமு'மினி(ன்)வ் வலா மு'மினதின் இதா களல் லாஹு வ ரஸூலுஹூ அம்ரன் அய் யகூன லஹுமுல் கியரது மின் அம்ரிஹிம்; வ மய் யஃஸில் லாஹ வ ரஸூலஹூ Fபகத் ளல்ல ளலாலம் முBபீனா
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
وَاِذْ تَقُوْلُ لِلَّذِیْۤ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِ وَاَنْعَمْتَ عَلَیْهِ اَمْسِكْ عَلَیْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِیْ فِیْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِیْهِ وَتَخْشَی النَّاسَ ۚ وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰىهُ ؕ فَلَمَّا قَضٰی زَیْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا لِكَیْ لَا یَكُوْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ حَرَجٌ فِیْۤ اَزْوَاجِ اَدْعِیَآىِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟
وَ اِذْமேலும் எப்போதுتَقُوْلُநீர் கூறினீரோلِلَّذِیْۤஎவருக்குاَنْعَمَஅருள் புரிந்தானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِஅவர் மீதுوَ اَنْعَمْتَமேலும் நீரும் அருள் புரிந்தீரோعَلَیْهِஅவர் மீதுاَمْسِكْநிறுத்தி வைத்துக்கொள்عَلَیْكَஉன்னிடமேزَوْجَكَஉமது மனைவியைوَ اتَّقِமேலும் அஞ்சுவீராகاللّٰهَஅல்லாஹ்வைوَ تُخْفِیْமேலும் நீர் மறைத்து வைத்தீர்فِیْஇல்نَفْسِكَஉமது மனதிற்குள்مَاஎதனைاللّٰهُஅல்லாஹ்مُبْدِیْهِஅதனை வெளிப்படுத்தவிருந்தானோوَ تَخْشَیமேலும் நீர் பயந்தீர்النَّاسَ ۚமனிதர்களைوَ اللّٰهُஆனால் அல்லாஹ்اَحَقُّமிகவும் தகுதியுடையவன்اَنْஎன்றுتَخْشٰىهُ ؕஅவனை நீர் பயப்படுவதற்குفَلَمَّاபின்னர் எப்போதுقَضٰیமுடித்துக் கொண்டாரோزَیْدٌஜைதுمِّنْهَاஅவளிடமிருந்துوَطَرًاதேவையைزَوَّجْنٰكَهَاநாம் அவளை உமக்கு மணம் முடித்து வைத்தோம்لِكَیْஎதற்காகவென்றால்لَاஇல்லைیَكُوْنَஇருக்கக் கூடாதுعَلَیமீதுالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்குحَرَجٌஎந்த நெருக்கடியும்فِیْۤவிஷயத்தில்اَزْوَاجِமனைவியர்اَدْعِیَآىِٕهِمْஅவர்களின் வளர்ப்புப் புதல்வர்களுடையاِذَاஎப்போதுقَضَوْاஅவர்கள் முடித்துக் கொண்டார்களோمِنْهُنَّஅவர்களிடமிருந்துوَطَرًا ؕதேவையைوَ كَانَமேலும் இருக்கிறதுاَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வுடையمَفْعُوْلًاநிறைவேற்றப்படக் கூடியதாக
வ இத் தகூலு லில்லதீ அன்'அமல் லாஹு 'அலய்ஹி வ அன்'அம்த 'அலய்ஹி அம்ஸிக் 'அலய்க Zஜவ்ஜக வத்தகில் லாஹ வ துக்Fபீ Fபீ னFப்ஸிக மல் லாஹு முBப்தீஹி வ தக்-ஷன் னாஸ வல்லாஹு அஹக்கு அன் தக்-ஷாஹ்; Fபலம்மா களா Zஜய்தும் மின்ஹா வதரன் Zஜவ்வஜ்னா கஹா லிகய் லா யகூன 'அலல் மு'மினீன ஹரஜுன் Fபீ அZஜ்வாஜி அத்'இயா'இஹிம் இதா களவ் மின்ஹுன்ன வதரா; வ கான அம்ருல் லாஹி மFப்'ஊலா
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
مَا كَانَ عَلَی النَّبِیِّ مِنْ حَرَجٍ فِیْمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ؕ سُنَّةَ اللّٰهِ فِی الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلُ ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ قَدَرًا مَّقْدُوْرَا ۟ؗۙ
مَاஇல்லைكَانَஇருந்ததுعَلَیமீதுالنَّبِیِّநபியின்مِنْஎந்தவொருحَرَجٍசங்கடமும்فِیْمَاஎதில்فَرَضَவிதியாக்கினானோاللّٰهُஅல்லாஹ்لَهٗ ؕஅவருக்குسُنَّةَவழிமுறையாகும்اللّٰهِஅல்லாஹ்வுடையفِیவிஷயத்தில்الَّذِیْنَஎவர்கள்خَلَوْاசென்றுவிட்டார்களோمِنْஇருந்துقَبْلُ ؕமுன்னர்وَ كَانَமேலும் இருக்கிறதுاَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வுடையقَدَرًاவிதியாகمَّقْدُوْرَاؗۙநிர்ணயிக்கப்பட்டதாக
மா கான 'அலன் னBபிய்ய்யி மின் ஹரஜின் Fபீமா Fபரளல் லாஹு லஹூ ஸுன்னதல் லாஹி Fபில் லதீன கலவ் மின் கBப்ல்; வ கான அம்ருல் லாஹி கதரம் மக்தூரா
நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
لَّذِیْنَ یُبَلِّغُوْنَ رِسٰلٰتِ اللّٰهِ وَیَخْشَوْنَهٗ وَلَا یَخْشَوْنَ اَحَدًا اِلَّا اللّٰهَ ؕ وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟
ِ۟الَّذِیْنَஎவர்கள்یُبَلِّغُوْنَஎடுத்துரைக்கின்றார்களோرِسٰلٰتِதூதுகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَ یَخْشَوْنَهٗமேலும் அவனுக்கு அஞ்சுகின்றார்களோوَ لَاமேலும் இல்லைیَخْشَوْنَஅஞ்சுவார்கள்اَحَدًاஎவருக்கும்اِلَّاதவிரاللّٰهَ ؕஅல்லாஹ்வைوَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்حَسِیْبًاகணக்கெடுப்பவனாக
அல்லதீன யுBபல்லிகூன ரிஸாலாதில் லாஹி வ யக்-ஷவ் னஹூ வலா யக்க்-ஷவ்ன அஹதன் இல்லல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி ஹஸீBபா
(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
مَا كَانَ مُحَمَّدٌ اَبَاۤ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِیّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟۠
مَاஇல்லைكَانَஇருந்தார்مُحَمَّدٌமுஹம்மதுاَبَاۤதந்தையாகاَحَدٍஎவருக்கும்مِّنْஇருந்துرِّجَالِكُمْஉங்கள் ஆண்களில்وَ لٰكِنْஆனால்رَّسُوْلَதூதராகاللّٰهِஅல்லாஹ்வின்وَ خَاتَمَமேலும் இறுதியானவராகالنَّبِیّٖنَ ؕநபிமார்களின்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِكُلِّஅனைத்துشَیْءٍபொருளையும்عَلِیْمًا۠நன்கறிந்தவனாக
மா கான முஹம்ம்மதுன் அBபா அஹதிம் மிர் ரிஜாலிகும் வ லாகிர் ரஸூலல் லாஹி வ காதமன் னBபிய்யீன்; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوا اللّٰهَ ذِكْرًا كَثِیْرًا ۟ۙ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاذْكُرُواநினைவுகூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைذِكْرًاநினைவுகூர்தலாகكَثِیْرًاۙஅதிகமாக
யா அய்யுஹல் லதீன ஆமனுத் குருல் லாஹ திக்ரன் கதீரா
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.
وَّسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِیْلًا ۟
وَّ سَبِّحُوْهُமேலும் அவனைத் துதியுங்கள்بُكْرَةًகாலையிலும்وَّ اَصِیْلًاமாலையிலும்
வ ஸBப்Bபிஹூஹு Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
هُوَ الَّذِیْ یُصَلِّیْ عَلَیْكُمْ وَمَلٰٓىِٕكَتُهٗ لِیُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ وَكَانَ بِالْمُؤْمِنِیْنَ رَحِیْمًا ۟
هُوَஅவனேالَّذِیْஎத்தகையவன் என்றால்یُصَلِّیْஅருள் புரிகிறான்عَلَیْكُمْஉங்கள் மீதுوَ مَلٰٓىِٕكَتُهٗஅவனுடைய வானவர்களும்لِیُخْرِجَكُمْஉங்களை வெளியேற்றுவதற்காகمِّنَஇருந்துالظُّلُمٰتِஇருள்களில்اِلَیநோக்கிالنُّوْرِ ؕஒளியைوَ كَانَமேலும் அவன் இருக்கிறான்بِالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களிடம்رَحِیْمًاமிகக் கிருபையுடையவனாக
ஹுவல் லதீ யுஸல்லீ 'அலய்கும் வ மலா'இகதுஹூ லியுக்ரிஜகும் மினள்ளுலுமாதி இலன்-னூர் வ கான Bபில்மு'மினீன ரஹீமா
உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே; இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்;) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.
تَحِیَّتُهُمْ یَوْمَ یَلْقَوْنَهٗ سَلٰمٌ ۚۖ وَاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِیْمًا ۟
تَحِیَّتُهُمْஅவர்களின் முகமன்یَوْمَநாளில்یَلْقَوْنَهٗஅவர்கள் அவனைச் சந்திக்கும்سَلٰمٌ ۚۖஸலாம்وَ اَعَدَّமேலும் அவன் தயார் செய்துள்ளான்لَهُمْஅவர்களுக்குاَجْرًاநற்கூலியைكَرِیْمًاகண்ணியமான
தஹிய்யதுஹும் யவ்ம யல்கவ்னஹூ ஸலாமு(ன்)வ் வ அ'அத்த லஹும் அஜ்ரன் கரீமா
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் “ஸலாமுன்” (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۙ
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேاِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنٰكَஉம்மை அனுப்பினோம்شَاهِدًاசாட்சியாகوَّ مُبَشِّرًاநற்செய்தி கூறுபவராகவும்وَّ نَذِیْرًاۙஎச்சரிப்பவராகவும்
யா அய்யுஹன் னBபிய்யு இன்னா அர்ஸல்னாக ஷாஹித(ன்)வ் வ முBபஷ்ஷிர(ன்)வ் வ னதீரா
நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
وَّدَاعِیًا اِلَی اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِیْرًا ۟
وَّ دَاعِیًاஅழைப்பவராகவும்اِلَیநோக்கிاللّٰهِஅல்லாஹ்வைبِاِذْنِهٖஅவனது அனுமதியுடன்وَ سِرَاجًاஒரு விளக்காகவும்مُّنِیْرًاஒளிவீசும்
வ தா'இயன் இலல் லாஹி Bபி இத்னிஹீ வ ஸிராஜம் முனீரா
இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)
وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ بِاَنَّ لَهُمْ مِّنَ اللّٰهِ فَضْلًا كَبِیْرًا ۟
وَ بَشِّرِமேலும் நற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்குبِاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்فَضْلًاஅருள்كَبِیْرًاமிகப்பெரிய
வ Bபஷ்ஷிரில் மு'மினீன Bபி அன்ன்ன லஹும் மினல் லாஹி Fபள்லன் கBபீரா
எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக!
وَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَالْمُنٰفِقِیْنَ وَدَعْ اَذٰىهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَ لَاமேலும் வேண்டாம்تُطِعِகீழ்ப்படியالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குوَ الْمُنٰفِقِیْنَஇன்னும் நயவஞ்சகர்களுக்கும்وَ دَعْஇன்னும் விட்டுவிடுவீராகاَذٰىهُمْஅவர்களின் தொல்லைகளைوَ تَوَكَّلْஇன்னும் பொறுப்புச்சாட்டுவீராகعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ كَفٰیமேலும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்وَكِیْلًاபொறுப்பேற்பாளராக
வ லா துதி'இல் காFபிரீன வல்முனாFபிகீன வ தஃஅதாஹும் வ தவக்கல் 'அலல்லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக; அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَكُمْ عَلَیْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَا ۚ فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِیْلًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاஈமான் கொண்டார்களோاِذَاஎப்போதுنَكَحْتُمُநீங்கள் மணமுடித்தால்الْمُؤْمِنٰتِமுஃமினான பெண்களைثُمَّபின்னர்طَلَّقْتُمُوْهُنَّஅவர்களை நீங்கள் தலாக் செய்துவிட்டால்مِنْஇருந்துقَبْلِமுன்اَنْஆகتَمَسُّوْهُنَّஅவர்களை நீங்கள் தீண்டுவதற்குفَمَاஆகவே இல்லைلَكُمْஉங்களுக்குعَلَیْهِنَّஅவர்கள் மீதுمِنْஎந்தعِدَّةٍஇத்தாவும்تَعْتَدُّوْنَهَا ۚஅதனை நீங்கள் கணக்கிடுவதற்குفَمَتِّعُوْهُنَّஆகவே அவர்களுக்கு வசதி அளியுங்கள்وَ سَرِّحُوْهُنَّமேலும் அவர்களை விடுதலை செய்யுங்கள்سَرَاحًاவிடுதலையாகجَمِیْلًاஅழகிய முறையில்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னகஹ்துமுல் மு'மினாதி தும்ம தல்லக்து மூஹுன்ன மின் கBப்லி அன் தமஸ் ஸூஹுன்ன Fபமா லகும் 'அலய்ஹின்ன மின் 'இத்ததின் தஃதத்தூனஹா Fபமத்தி'ஊஹுன்ன வ ஸர்ரி ஹூஹுன்ன ஸராஹன் ஜமீலா
ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே “தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَكَ اَزْوَاجَكَ الّٰتِیْۤ اٰتَیْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَكَتْ یَمِیْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَیْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِیْ هَاجَرْنَ مَعَكَ ؗ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِیِّ اِنْ اَرَادَ النَّبِیُّ اَنْ یَّسْتَنْكِحَهَا ۗ خَالِصَةً لَّكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَیْهِمْ فِیْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ اَیْمَانُهُمْ لِكَیْلَا یَكُوْنَ عَلَیْكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேاِنَّاۤநிச்சயமாக நாம்اَحْلَلْنَاஆகுமாக்கினோம்لَكَஉமக்குاَزْوَاجَكَஉம்முடைய மனைவியரைالّٰتِیْۤஎவர்களுக்குاٰتَیْتَநீர் கொடுத்துவிட்டீரோاُجُوْرَهُنَّஅவர்களின் மஹர்களைوَ مَاஇன்னும் எவற்றைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டதோیَمِیْنُكَஉமது வலது கைمِمَّاۤஎவற்றிலிருந்துاَفَآءَபோர் வெற்றியாக அளித்தானோاللّٰهُஅல்லாஹ்عَلَیْكَஉமக்குوَ بَنٰتِஇன்னும் புதல்விகளைعَمِّكَஉமது தந்தையின் சகோதரருடையوَ بَنٰتِஇன்னும் புதல்விகளைعَمّٰتِكَஉமது தந்தையின் சகோதரிகளுடையوَ بَنٰتِஇன்னும் புதல்விகளைخَالِكَஉமது தாயின் சகோதரருடையوَ بَنٰتِஇன்னும் புதல்விகளைخٰلٰتِكَஉமது தாயின் சகோதரிகளுடையالّٰتِیْஎவர்கள்هَاجَرْنَஹிஜ்ரத் செய்தார்களோمَعَكَ ؗஉம்முடன்وَ امْرَاَةًஇன்னும் ஒரு பெண்ணையும்مُّؤْمِنَةًமுஃமினானاِنْஒருவேளைوَّهَبَتْஅவள் அர்ப்பணித்தால்نَفْسَهَاதன்னைلِلنَّبِیِّநபிக்குاِنْஒருவேளைاَرَادَநாடினால்النَّبِیُّநபிاَنْஎன்றுیَّسْتَنْكِحَهَا ۗஅவளை மணம் முடிக்கخَالِصَةًஇது பிரத்யேகமானதுلَّكَஉமக்குمِنْதவிரدُوْنِஅன்றிالْمُؤْمِنِیْنَ ؕமற்ற முஃமின்களுக்குقَدْதிண்ணமாகعَلِمْنَاநாம் அறிந்துள்ளோம்مَاஎதனைفَرَضْنَاநாம் கடமையாக்கினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுفِیْۤவிஷயத்தில்اَزْوَاجِهِمْஅவர்களின் மனைவியர்وَ مَاஇன்னும் எவற்றைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டதோاَیْمَانُهُمْஅவர்களின் வலது கரங்கள்لِكَیْلَاஏற்படாதிருக்கیَكُوْنَஆகுவதற்குعَلَیْكَஉம்மீதுحَرَجٌ ؕஎந்த நெருக்கடியும்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமிக்க மன்னிப்பவன்رَّحِیْمًاநிகரற்ற அன்புடையவன்
யா அய்யுஹன் னBபிய்யு இன்னா அஹ்லல்னா லக அZஜ்வா ஜகல் லாதீ ஆதய்ய்த உஜூர ஹுன்ன வமா மலகத் யமீனுக மிம்மா அFபா'அல் லாஹு 'அலய்க வ Bபனாதி 'அம்மிக வ Bபனாதி 'அம்மாதிக வ Bபனாதி காலிக வ Bபனாதி காலா திகல் லாதீ ஹாஜர்ன ம'அக வம்ர' அதன் மு'மினதன் இ(ன்)வ் வஹBபத் னFப்ஸஹா லின் னBபிய்யி இன் அராதன் னBபிய்யு அய் யஸ்தன் கிஹஹா காலிஸதன் லக மின் தூனில் மு'மினீன்; கத் 'அலிம்னா மா Fபரள்னா 'அலய்ஹிம் Fபீ அZஜ்வாஜிஹிம் வமா மலகத் அய்மானுஹும் லி கய்லா யகூன 'அலய்க ஹரஜ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
تُرْجِیْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـْٔوِیْۤ اِلَیْكَ مَنْ تَشَآءُ ؕ وَمَنِ ابْتَغَیْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَیْكَ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَنْ تَقَرَّ اَعْیُنُهُنَّ وَلَا یَحْزَنَّ وَیَرْضَیْنَ بِمَاۤ اٰتَیْتَهُنَّ كُلُّهُنَّ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَلِیْمًا ۟
تُرْجِیْநீர் தள்ளி வைக்கலாம்مَنْயாரைتَشَآءُநீர் நாடுகிறீரோمِنْهُنَّஅவர்களில்وَ تُـْٔوِیْۤமேலும் நீர் சேர்த்துக்கொள்ளலாம்اِلَیْكَஉம்மிடம்مَنْயாரைتَشَآءُ ؕநீர் நாடுகிறீரோوَ مَنِஇன்னும் யாரைابْتَغَیْتَநீர் விரும்புகிறீரோمِمَّنْஎவர்களிலிருந்துعَزَلْتَநீர் ஒதுக்கி வைத்திருந்தீரோفَلَاஎனவே இல்லைجُنَاحَகுற்றம்عَلَیْكَ ؕஉம் மீதுذٰلِكَஅதுاَدْنٰۤیமிக நெருக்கமானதுاَنْஎன்பதற்குتَقَرَّகுளிர்ச்சியடையاَعْیُنُهُنَّஅவர்களின் கண்கள்وَ لَاமேலும் இல்லைیَحْزَنَّஅவர்கள் கவலைப்படوَ یَرْضَیْنَமேலும் அவர்கள் திருப்தியடையبِمَاۤஎதைக் கொண்டுاٰتَیْتَهُنَّநீர் அவர்களுக்கு வழங்கினீரோكُلُّهُنَّ ؕஅவர்கள் அனைவரும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்مَاஎதுفِیْஉள்ளதோقُلُوْبِكُمْ ؕஉங்கள் இதயங்களில்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَلِیْمًاமிக்க சகிப்புத்தன்மையுடையவனாக
துர்ஜீ மன் தஷா'உ மின்ஹுன்ன வ து'வீ இலய்க மன் தஷா'உ வ மனிBப்த கய்த மிம்மன் 'அZஜல்த Fபலா ஜுனாஹ 'அலய்க்; தாலிக அத்னா அன் தகர்ர அஃயுனுஹுன்ன வலா யஹ்Zஜன்ன வ யர்ளய்ன Bபிமா ஆதய்தஹுன்ன குல்லுஹுன்ன்; வல் லாஹு யஃலமு மா Fபீ குலூ Bபிகும்; வ கானல் லாஹு 'அலீமன் ஹலீமா
அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
لَا یَحِلُّ لَكَ النِّسَآءُ مِنْ بَعْدُ وَلَاۤ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَكَتْ یَمِیْنُكَ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ رَّقِیْبًا ۟۠
لَاஇல்லைیَحِلُّஆகுமானதுلَكَஉமக்குالنِّسَآءُபெண்கள்مِنْۢஇருந்துبَعْدُபிறகுوَ لَاۤமேலும் இல்லைاَنْநீர்تَبَدَّلَமாற்றிக்கொள்வதுبِهِنَّஅவர்களுக்குப் பதிலாகمِنْவேறுاَزْوَاجٍமனைவிகளைوَّ لَوْமேலும் என்றாலும்اَعْجَبَكَஉம்மைக் கவர்ந்ததுحُسْنُهُنَّஅவர்களின் அழகுاِلَّاதவிரمَاஎவர்களைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டதோیَمِیْنُكَ ؕஉமது வலது கைوَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்رَّقِیْبًا۠கண்காணிப்பவனாக
லா யஹில்லு லகன் னிஸா'உ மிம் Bபஃது வ லா அன் தBபத்தல Bபிஹின்ன மின் அZஜ்வாஜி(ன்)வ் வ லவ் அஃஜBபக ஹுஸ்னுஹுன்ன இல்லா மா மலகத் யமீனுக்க்; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இர் ரகீBபா
இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتَ النَّبِیِّ اِلَّاۤ اَنْ یُّؤْذَنَ لَكُمْ اِلٰی طَعَامٍ غَیْرَ نٰظِرِیْنَ اِنٰىهُ ۙ وَلٰكِنْ اِذَا دُعِیْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِیْنَ لِحَدِیْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ یُؤْذِی النَّبِیَّ فَیَسْتَحْیٖ مِنْكُمْ ؗ وَاللّٰهُ لَا یَسْتَحْیٖ مِنَ الْحَقِّ ؕ وَاِذَا سَاَلْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْـَٔلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰلِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِیْمًا ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோلَاவேண்டாம்تَدْخُلُوْاநீங்கள் நுழையبُیُوْتَவீடுகளுக்குள்النَّبِیِّநபியுடையاِلَّاۤதவிரاَنْஎன்றுیُّؤْذَنَஅனுமதி வழங்கப்பட்டால்لَكُمْஉங்களுக்குاِلٰیநோக்கிطَعَامٍஉணவிற்குغَیْرَஇன்றிنٰظِرِیْنَகாத்திருப்பவர்களாகاِنٰىهُ ۙஅது தயாராவதைوَ لٰكِنْஆனால்اِذَاஎப்போதுدُعِیْتُمْநீங்கள் அழைக்கப்பட்டால்فَادْخُلُوْاஅப்போது நுழையுங்கள்فَاِذَاபின்னர் எப்போதுطَعِمْتُمْநீங்கள் உண்டு முடித்துவிட்டால்فَانْتَشِرُوْاகலைந்து செல்லுங்கள்وَ لَاமேலும் வேண்டாம்مُسْتَاْنِسِیْنَஆர்வம் கொண்டவர்களாகلِحَدِیْثٍ ؕபேச்சில்اِنَّநிச்சயமாகذٰلِكُمْஅதுكَانَஇருந்ததுیُؤْذِیதொந்தரவு தருவதாகالنَّبِیَّநபிக்குفَیَسْتَحْیٖஎனவே அவர் வெட்கப்படுகிறார்مِنْكُمْ ؗஉங்களிடம்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیَسْتَحْیٖவெட்கப்படுவதில்லைمِنَகுறித்துالْحَقِّ ؕசத்தியத்தைوَ اِذَاமேலும் எப்போதுسَاَلْتُمُوْهُنَّநீங்கள் அவர்களிடம் கேட்டால்مَتَاعًاஒரு பொருளைفَسْـَٔلُوْهُنَّஅப்போது அவர்களிடம் கேளுங்கள்مِنْஇருந்துوَّرَآءِபின்னால்حِجَابٍ ؕதிரைக்குப்ذٰلِكُمْஅதுவேاَطْهَرُமிகவும் தூய்மையானதுلِقُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களுக்குوَ قُلُوْبِهِنَّ ؕமேலும் அவர்களின் உள்ளங்களுக்கும்وَ مَاமேலும் இல்லைكَانَதகுதியானதுلَكُمْஉங்களுக்குاَنْஎன்றுتُؤْذُوْاநீங்கள் துன்புறுத்துவதுرَسُوْلَதூதரைاللّٰهِஅல்லாஹ்வின்وَ لَاۤமேலும் கூடாதுاَنْஎன்றுتَنْكِحُوْۤاநீங்கள் திருமணம் செய்வதுاَزْوَاجَهٗஅவருடைய மனைவியரைمِنْۢஇருந்துبَعْدِهٖۤஅவருக்குப் பிறகுاَبَدًا ؕஎன்றென்றும்اِنَّநிச்சயமாகذٰلِكُمْஅதுكَانَஆகும்عِنْدَமுன்னிலையில்اللّٰهِஅல்லாஹ்வின்عَظِیْمًاமிகப்பெரியதாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்குலூ Bபு யூதன் னBபிய்யி இல்லா அய் யு'தன லகும் இலா த'ஆமின் கய்ர னாளிரீன இனாஹு வ லாகின் இதா து'ஈதும் Fபத்குலூ Fப இதா த'இம்தும் Fபன்தஷிரூ வலா முஸ்தானிஸீன லிஹதீத்; இன்ன தாலிகும் கான யு'தின் னBபிய்ய Fப யஸ்தஹ்யீ மின்கும் வல்லாஹு லா யஸ்தஹ்யீ மினல் ஹக்க்; வ இதா ஸ அல்துமூஹுன்ன மதா'அன் Fபஸ்'அலூஹுன்ன மி(ன்)வ் வரா'இ ஹிஜாBப்; தாலிகும் அத்ஹரு லிகுலூBபிகும் வ குலூBபிஹின்ன்; வமா கான லகும் அன் து'தூ ரஸூலல் லாஹி வ லா அன் தன்கிஹூ அZஜ்வாஜஹூ மிம் Bபஃதிஹீ அBபதா; இன்ன தாலிகும் கான 'இன்தல் லாஹி 'அளீமா
முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.
اِنْ تُبْدُوْا شَیْـًٔا اَوْ تُخْفُوْهُ فَاِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟
اِنْநீங்கள்تُبْدُوْاவெளிப்படுத்தினாலும்شَیْـًٔاயாதொன்றையும்اَوْஅல்லதுتُخْفُوْهُஅதனை மறைத்தாலும்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمًاநன்கறிந்தவனாக
இன் துBப்தூ ஷய்'அன் அவ் துக்Fபூஹு Fப இன்னல் லாஹ கான Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.
لَا جُنَاحَ عَلَیْهِنَّ فِیْۤ اٰبَآىِٕهِنَّ وَلَاۤ اَبْنَآىِٕهِنَّ وَلَاۤ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَآىِٕهِنَّ وَلَا مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ ۚ وَاتَّقِیْنَ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدًا ۟
لَاஇல்லைجُنَاحَகுற்றம்عَلَیْهِنَّஅவர்கள் மீதுفِیْۤவிஷயத்தில்اٰبَآىِٕهِنَّஅவர்களின் தந்தையர்கள்وَ لَاۤமேலும் இல்லைاَبْنَآىِٕهِنَّஅவர்களின் மகன்கள்وَ لَاۤமேலும் இல்லைاِخْوَانِهِنَّஅவர்களின் சகோதரர்கள்وَ لَاۤமேலும் இல்லைاَبْنَآءِமகன்கள்اِخْوَانِهِنَّஅவர்களின் சகோதரர்களின்وَ لَاۤமேலும் இல்லைاَبْنَآءِமகன்கள்اَخَوٰتِهِنَّஅவர்களின் சகோதரிகளின்وَ لَاமேலும் இல்லைنِسَآىِٕهِنَّஅவர்களின் பெண்கள்وَ لَاமேலும் இல்லைمَاஎவர்களைمَلَكَتْசொந்தமாக்கிக் கொண்டார்களோاَیْمَانُهُنَّ ۚஅவர்களின் வலக்கரங்கள்وَ اتَّقِیْنَமேலும் அஞ்சுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்شَهِیْدًاசாட்சியாக
லா ஜுனாஹ 'அலய்ஹின்ன Fபீ ஆBபா'இஹின்ன வ லா அBப்னா'இஹின்ன வ லா இக்வானிஹின்ன்ன வ லா அBப்னா'இ இக்வானிஹின்ன வ லா அBப்னா'இ அகவாதிஹின்ன வலா னிஸா'இ ஹின்ன வலா மா மலகத் அய்மானுஹுன்ன்; வத்தகீனல் லாஹ்; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீதா
(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
اِنَّ اللّٰهَ وَمَلٰٓىِٕكَتَهٗ یُصَلُّوْنَ عَلَی النَّبِیِّ ؕ یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَیْهِ وَسَلِّمُوْا تَسْلِیْمًا ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்வும்وَ مَلٰٓىِٕكَتَهٗஅவனுடைய வானவர்களும்یُصَلُّوْنَஅருள் புரிகின்றனர்عَلَیமீதுالنَّبِیِّ ؕநபியின்یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோصَلُّوْاஸலவாத்துச் சொல்லுங்கள்عَلَیْهِஅவர் மீதுوَ سَلِّمُوْاமேலும் ஸலாம் கூறுங்கள்تَسْلِیْمًاமுழுமையாக
இன்னல் லாஹ வ மலா'இ கதஹூ யுஸல்லூன 'அலன் னBபிய்ய்; யா அய்யுஹல் லதீன ஆமனூ ஸல்லூ 'அலய்ஹி வ ஸல்லிமூ தஸ்லீமா
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
اِنَّ الَّذِیْنَ یُؤْذُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِیْنًا ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یُؤْذُوْنَதுன்புறுத்துகிறார்களோاللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗஅவனுடைய தூதரையும்لَعَنَهُمُஅவர்களைச் சபித்தான்اللّٰهُஅல்லாஹ்فِیஇல்الدُّنْیَاஇவ்வுலகம்وَ الْاٰخِرَةِமற்றும் மறுமைوَ اَعَدَّமேலும் தயார் செய்தான்لَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِیْنًاஇழிவான
இன்னல் லதீன யு'தூனல் லாஹ வ ரஸூலஹூ ல'அனஹுமுல் லாஹு Fபித் துன்யா வல் ஆகிரதி வ அ'அத்த லஹும் 'அதாBபம் முஹீனா
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.
وَالَّذِیْنَ یُؤْذُوْنَ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَیْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟۠
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்یُؤْذُوْنَதுன்புறுத்துகிறார்களோالْمُؤْمِنِیْنَமுஃமினான ஆண்களைوَ الْمُؤْمِنٰتِஇன்னும் முஃமினான பெண்களைبِغَیْرِஇல்லாமல்مَاஎதையும்اكْتَسَبُوْاஅவர்கள் செய்திருக்கفَقَدِநிச்சயமாகاحْتَمَلُوْاஅவர்கள் சுமந்து கொண்டார்கள்بُهْتَانًاஅவதூறைوَّ اِثْمًاமேலும் பாவத்தைمُّبِیْنًا۠தெளிவான
வல்லதீன யு'தூனல் மு'மினீன வல் மு'மினாதி Bபிகய்ரி மக் தஸBபூ Fபகதிஹ் தமலூ Bபுஹ்தான(ன்)வ் வ இத்மம் முBபீனா
ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.  
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِیْنَ یُدْنِیْنَ عَلَیْهِنَّ مِنْ جَلَابِیْبِهِنَّ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یُّعْرَفْنَ فَلَا یُؤْذَیْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
یٰۤاَیُّهَاالنَّبِیُّநபியேقُلْகூறுவீராகلِّاَزْوَاجِكَஉமது மனைவியரிடமும்وَ بَنٰتِكَமேலும் உமது புதல்விகளிடமும்وَ نِسَآءِமேலும் பெண்களிடமும்الْمُؤْمِنِیْنَஇறைநம்பிக்கையாளர்களின்یُدْنِیْنَஅவர்கள் தொங்கவிட்டுக் கொள்ளட்டும்عَلَیْهِنَّதங்களின் மீதுمِنْஇருந்துجَلَابِیْبِهِنَّ ؕதங்களின் மேலாடைகளைذٰلِكَஅதுاَدْنٰۤیமிகவும் ஏற்றதுاَنْஅவர்கள்یُّعْرَفْنَஅறியப்படுவதற்குفَلَاஎனவேیُؤْذَیْنَ ؕதுன்புறுத்தப்பட மாட்டார்கள்وَ كَانَமேலும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமிக்க மன்னிப்பவனாகرَّحِیْمًاமகா கருணையாளனாக
யா அய்யுஹன் னBபிய்யு குல் லி அZஜ்வாஜிக வ Bபனாதிக வ னிஸா'இல் மு'மினீன யுத்னீன 'அலய்ஹின்ன மின் ஜலாBபீ Bபிஹின்ன்; தாலிக அத்னா அய் யுஃரFப்ன Fபலா யு'தய்ன்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
لَىِٕنْ لَّمْ یَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِی الْمَدِیْنَةِ لَنُغْرِیَنَّكَ بِهِمْ ثُمَّ لَا یُجَاوِرُوْنَكَ فِیْهَاۤ اِلَّا قَلِیْلًا ۟
لَىِٕنْநிச்சயமாகلَّمْஇல்லையென்றால்یَنْتَهِவிலகிக்கொள்ளالْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்கள்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்فِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களில்مَّرَضٌநோய் (உள்ளதோ அவர்கள்)وَّ الْمُرْجِفُوْنَமேலும் வதந்திகளைப் பரப்புபவர்கள்فِیஇல்الْمَدِیْنَةِமதீனாவில்لَنُغْرِیَنَّكَநிச்சயமாக நாம் உம்மை ஏவிவிடுவோம்بِهِمْஅவர்களுக்கு எதிராகثُمَّபிறகுلَاமாட்டார்கள்یُجَاوِرُوْنَكَஉமக்கு அண்டை வீட்டார்களாக இருக்கفِیْهَاۤஅதில்اِلَّاதவிரقَلِیْلًاசிறிது காலம்
ல'இல் லம் யன்தஹில் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)வ் வல்முர் ஜிFபூன Fபில் மதீனதி லனுக்ரி யன்னக Bபிஹிம் தும்ம லா யுஜாவிரூனக Fபீஹா இல்லா கலீலா
முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.
مَّلْعُوْنِیْنَ ۛۚ اَیْنَمَا ثُقِفُوْۤا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِیْلًا ۟
مَّلْعُوْنِیْنَ ۛۚசபிக்கப்பட்டவர்களாகاَیْنَمَاஎங்கெல்லாம்ثُقِفُوْۤاஅவர்கள் காணப்பட்டாலும்اُخِذُوْاஅவர்கள் பிடிக்கப்படுவார்கள்وَ قُتِّلُوْاமேலும் அவர்கள் கொல்லப்படுவார்கள்تَقْتِیْلًاமுற்றிலுமாக
மல்'ஊனீன அய்னமா துகிFபூ உகிதூ வ குத்திலூ தக்தீலா
அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.
سُنَّةَ اللّٰهِ فِی الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلُ ۚ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِیْلًا ۟
سُنَّةَவழிமுறைاللّٰهِஅல்லாஹ்வின்فِیவிஷயத்தில்الَّذِیْنَஎவர்கள்خَلَوْاசென்றுவிட்டார்களோمِنْஇருந்துقَبْلُ ۚமுன்னர்وَ لَنْமேலும் ஒருபோதும்تَجِدَநீர் காணமாட்டீர்لِسُنَّةِவழிமுறைக்குاللّٰهِஅல்லாஹ்வின்تَبْدِیْلًاமாற்றத்தை
ஸுன்னதல் லாஹி Fபில் லதீன கலவ் மின் கBப்லு வ லன் தஜித லிஸுன்னதில் லாஹி தBப்தீலா
அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
یَسْـَٔلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ ؕ وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِیْبًا ۟
یَسْـَٔلُكَஉம்மிடம் கேட்கிறார்கள்النَّاسُமனிதர்கள்عَنِபற்றிالسَّاعَةِ ؕமறுமை நேரத்தைப்قُلْகூறுவீராகاِنَّمَاநிச்சயமாகعِلْمُهَاஅதன் அறிவுعِنْدَஉள்ளதுاللّٰهِ ؕஅல்லாஹ்விடம்وَ مَاமேலும் எதுیُدْرِیْكَஉமக்குத் தெரிவிக்கும்لَعَلَّஒருவேளைالسَّاعَةَமறுமை நேரம்تَكُوْنُஇருக்கலாம்قَرِیْبًاமிக அருகில்
யஸ்'அலுகன் னாஸு 'அனிஸ் ஸா'அதி குல் இன்னமா 'இல்முஹா 'இன்தல் லாஹ்; வமா யுத்ரீக ல'அல்லஸ் ஸா'அத தகூனு கரீBபா
(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்: “அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று நீர் கூறுவீராக; அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.
اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِیْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِیْرًا ۟ۙ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَعَنَசபித்துள்ளான்الْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களைوَ اَعَدَّமேலும் தயார் செய்துள்ளான்لَهُمْஅவர்களுக்காகسَعِیْرًاۙகொழுந்துவிட்டெரியும் நெருப்பை
இன்னல் லாஹ ல'அனல் காFபிரீன வ அ'அத்த லஹும் ஸ'ஈரா
நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.
خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۚ لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۚ
خٰلِدِیْنَநிலைத்திருப்பவர்களாகفِیْهَاۤஅதில்اَبَدًا ۚஎன்றென்றும்لَاமாட்டார்கள்یَجِدُوْنَஅவர்கள் காண்பார்கள்وَلِیًّاபாதுகாவலனைوَّ لَاமேலும் இல்லைنَصِیْرًاۚஉதவியாளனை
காலிதீன Fபீஹா அBபதா, லா யஜிதூன வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
یَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِی النَّارِ یَقُوْلُوْنَ یٰلَیْتَنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا ۟
یَوْمَஅந்நாளில்تُقَلَّبُபுரட்டப்படும்وُجُوْهُهُمْஅவர்களின் முகங்கள்فِیஇல்النَّارِநெருப்புیَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்یٰلَیْتَنَاۤஅந்தோ! நாங்கள்اَطَعْنَاகீழ்ப்படிந்திருக்க வேண்டுமேاللّٰهَஅல்லாஹ்வுக்குوَ اَطَعْنَاமேலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமேالرَّسُوْلَاதூதருக்கு
யவ்ம துகல்லBபு வுஜூஹுஹும் Fபின் னாரி யகூலூன யா லய்தனா அதஃனல் லாஹ வ அதஃனர் ரஸூலா
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள்.
وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِیْلَا ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறுவார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اَطَعْنَاகீழ்ப்படிந்தோம்سَادَتَنَاஎங்கள் தலைவர்களுக்கும்وَ كُبَرَآءَنَاமேலும் எங்கள் பெரியோர்களுக்கும்فَاَضَلُّوْنَاஆகவே அவர்கள் எங்களை வழிதவறச் செய்தார்கள்السَّبِیْلَاநேர்வழியிலிருந்து
வ காலூ ரBப்Bபனா இன்னா அதஃனா ஸாததனா வ குBபரா'அனா Fப அளல்லூனஸ் ஸBபீலா
“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَیْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِیْرًا ۟۠
رَبَّنَاۤஎங்கள் இறைவனேاٰتِهِمْஅவர்களுக்குத் தருவாயாகضِعْفَیْنِஇருமடங்குمِنَஇருந்துالْعَذَابِவேதனையைوَ الْعَنْهُمْமேலும் அவர்களைச் சபிப்பாயாகلَعْنًاசாபத்தால்كَبِیْرًا۠பெரும்
ரBப்Bபனா ஆதிஹிம் ளிஃFபய் னி மினல் 'அதாBபி வல்'அன்ஹும் லஃ னன் கBபீரா
“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்).  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ اٰذَوْا مُوْسٰی فَبَرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ؕ وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِیْهًا ۟ؕ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டீர்களோلَاஆகாதீர்கள்تَكُوْنُوْاநீங்கள்كَالَّذِیْنَஎவர்களைப் போலاٰذَوْاதுன்புறுத்தினார்களோمُوْسٰیமூஸாவைفَبَرَّاَهُஎனவே அவரைத் தூய்மைப்படுத்தினான்اللّٰهُஅல்லாஹ்مِمَّاஎவற்றிலிருந்துقَالُوْا ؕஅவர்கள் கூறினார்களோوَ كَانَமேலும் அவர் இருந்தார்عِنْدَமுன்னிலையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَجِیْهًاؕகண்ணியமிக்கவராக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூனூ கல்ல தீன ஆதவ் மூஸா Fப Bபர்ர அஹுல் லாஹு மிம்ம காலூ; வ கான 'இன்தல் லாஹி வஜீஹா
ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟ۙ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ قُوْلُوْاமேலும் கூறுங்கள்قَوْلًاசொல்லைسَدِیْدًاۙநேர்மையான
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வ கூலூ கவ்லன் ஸதீதா
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
یُّصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِیْمًا ۟
یُّصْلِحْசீராக்குவான்لَكُمْஉங்களுக்குاَعْمَالَكُمْஉங்கள் செயல்களைوَ یَغْفِرْமேலும் மன்னிப்பான்لَكُمْஉங்களுக்குذُنُوْبَكُمْ ؕஉங்கள் பாவங்களைوَ مَنْமேலும் எவர்یُّطِعِகீழ்ப்படிகிறாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குوَ رَسُوْلَهٗமேலும் அவனுடைய தூதருக்கும்فَقَدْநிச்சயமாகفَازَவெற்றிபெற்றுவிட்டார்فَوْزًاவெற்றியைعَظِیْمًاமகத்தான
யுஸ்லிஹ் லகும் அஃமாலகும் வ யக்Fபிர் லகும் துனூBபகும்; வ மய் யுதி'இல் லாஹ வ ரஸூலஹூ Fபகத் FபாZஜ Fபவ்Zஜன் 'அளீமா
(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.
اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَیْنَ اَنْ یَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْاِنْسَانُ ؕ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்عَرَضْنَاமுன்வைத்தோம்الْاَمَانَةَஅமானிதத்தைعَلَیமுன்பாகالسَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِமற்றும் பூமிوَ الْجِبَالِமற்றும் மலைகள்فَاَبَیْنَஆனால் அவை மறுத்துவிட்டனاَنْஅதனைیَّحْمِلْنَهَاசுமக்கوَ اَشْفَقْنَமேலும் அஞ்சினمِنْهَاஅதைக் குறித்துوَ حَمَلَهَاஆனால் அதைச் சுமந்தான்الْاِنْسَانُ ؕமனிதன்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்ظَلُوْمًاபெரும் அநியாயக்காரனாகجَهُوْلًاۙபெரும் அறிவீனனாக
இன்னா 'அரள்னல் அமானத 'அலஸ் ஸமாவாதி வல்'அர்ளி வல் ஜிBபாலி Fப அBபய்ன அய் யஹ்மில் னஹா வ அஷ்Fபக்ன மின்ஹா வ ஹமலஹல் இன்ஸானு இன்னஹூ கான ளலூமன் ஜஹூலா
நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.
لِّیُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ وَیَتُوْبَ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
لِّیُعَذِّبَதண்டிப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்الْمُنٰفِقِیْنَநயவஞ்சக ஆண்களைوَ الْمُنٰفِقٰتِநயவஞ்சகப் பெண்களையும்وَ الْمُشْرِكِیْنَஇணைவைக்கும் ஆண்களையும்وَ الْمُشْرِكٰتِஇணைவைக்கும் பெண்களையும்وَ یَتُوْبَமேலும் மன்னிப்பை ஏற்பதற்காகاللّٰهُஅல்லாஹ்عَلَیமீதுالْمُؤْمِنِیْنَமுஃமினான ஆண்களின்وَ الْمُؤْمِنٰتِ ؕமுஃமினான பெண்களின் மீதும்وَ كَانَமேலும் இருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமிக மன்னிப்பவனாகவும்رَّحِیْمًا۠நிகரற்ற அன்புடையவனாகவும்
லியு 'அத்திBபல் லாஹுல் முனாFபிகீன வல் முனாFபிகாதி வல்முஷ்ரிகீன வல் முஷ்ரிகாதி வ யதூBபல் லாஹு 'அலல் மு'மினீன வல்மு'மினாத்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
எனவே, (இவ்வமானிதத்தை மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.