76. ஸூரத்துத் தஹ்ர் (காலம்)

மதனீ, வசனங்கள்: 31

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
هَلْ اَتٰی عَلَی الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْـًٔا مَّذْكُوْرًا ۟
هَلْநிச்சயமாகاَتٰیவந்ததுعَلَیமீதுالْاِنْسَانِமனிதன்حِیْنٌஒரு காலம்مِّنَஇருந்துالدَّهْرِநெடுங்காலம்لَمْஇல்லைیَكُنْஇருக்கشَیْـًٔاஒரு பொருளாகمَّذْكُوْرًاகுறிப்பிடப்படும்
ஹல் அதா 'அலல் இன்ஸானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷய்'அம் மத்கூரா
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ ۖۗ نَّبْتَلِیْهِ فَجَعَلْنٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟
اِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنَاபடைத்தோம்الْاِنْسَانَமனிதனைمِنْஇருந்துنُّطْفَةٍவிந்துத் துளிاَمْشَاجٍ ۖۗகலந்தنَّبْتَلِیْهِஅவனைச் சோதிப்பதற்காகفَجَعَلْنٰهُஎனவே நாம் அவனை ஆக்கினோம்سَمِیْعًۢاசெவியுறுபவனாகبَصِیْرًاபார்ப்பவனாக
இன்னா கலக்னல் இன்ஸான மின் னுத்Fபதின் அம்ஷாஜின் னBப்த லீஹி Fபஜ'அல்னாஹு ஸமீ'அம் Bபஸீரா
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
اِنَّا هَدَیْنٰهُ السَّبِیْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا ۟
اِنَّاநிச்சயமாக நாம்هَدَیْنٰهُஅவனுக்கு வழிகாட்டினோம்السَّبِیْلَவழியைاِمَّاஒன்றுشَاكِرًاநன்றியுள்ளவனாகوَّ اِمَّاஅல்லதுكَفُوْرًاநன்றியற்றவனாக
இன்னா ஹதய்னாஹுஸ் ஸBபீல இம்மா ஷாகிர(ன்)வ் வ இம்மா கFபூரா
நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.
اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَلٰسِلَاۡ وَاَغْلٰلًا وَّسَعِیْرًا ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَعْتَدْنَاதயார் செய்துள்ளோம்لِلْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குسَلٰسِلَاۡசங்கிலிகளையும்وَ اَغْلٰلًاவிலங்குகளையும்وَّ سَعِیْرًاகொழுந்துவிட்டு எரியும் நெருப்பையும்
இன்னா அஃதத்னா லில்கா Fபிரீன ஸலாஸில வ அக்லால(ன்)வ் வ ஸ'ஈரா
காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.
اِنَّ الْاَبْرَارَ یَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا ۟ۚ
اِنَّநிச்சயமாகالْاَبْرَارَநல்லோர்கள்یَشْرَبُوْنَஅருந்துவார்கள்مِنْஇருந்துكَاْسٍகிண்ணம்كَانَஇருக்கும்مِزَاجُهَاஅதன் கலவைكَافُوْرًاۚகற்பூரம்
இன்னல் அBப்ரார யஷ்ர Bபூன மின் கா'ஸின் கான மிZஜா ஜுஹா காFபூரா
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும்,
عَیْنًا یَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ یُفَجِّرُوْنَهَا تَفْجِیْرًا ۟
عَیْنًاஒரு நீரூற்றுیَّشْرَبُஅருந்துவார்கள்بِهَاஅதிலிருந்துعِبَادُஅடியார்கள்اللّٰهِஅல்லாஹ்வின்یُفَجِّرُوْنَهَاஅதனைப் பொங்கி எழச் செய்வார்கள்تَفْجِیْرًاநன்கு பொங்கி எழச் செய்தலாக
'அய்ன(ன்)ய் யஷ்ரBபு Bபிஹா 'இBபாதுல் லாஹி யுFபஜ்ஜிரூனஹா தFப்ஜீரா
(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
یُوْفُوْنَ بِالنَّذْرِ وَیَخَافُوْنَ یَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِیْرًا ۟
یُوْفُوْنَஅவர்கள் நிறைவேற்றுவார்கள்بِالنَّذْرِநேர்ச்சையைوَ یَخَافُوْنَமேலும் அஞ்சுவார்கள்یَوْمًاஒரு நாளைكَانَஇருக்கும்شَرُّهٗஅதன் தீமைمُسْتَطِیْرًاபரவக்கூடியதாக
யூFபூன Bபின்னத்ரி வ யகாFபூன யவ்மன் கான ஷர்ருஹூ முஸ்ததீரா
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.
وَیُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسْكِیْنًا وَّیَتِیْمًا وَّاَسِیْرًا ۟
وَ یُطْعِمُوْنَமேலும் அவர்கள் உணவளிக்கிறார்கள்الطَّعَامَஉணவைعَلٰیமீதுحُبِّهٖஅதன் விருப்பம் இருந்தும்مِسْكِیْنًاஏழைக்குوَّ یَتِیْمًاஅனாதைக்கும்وَّ اَسِیْرًاசிறைப்பட்டவனுக்கும்
வ யுத்''இமூனத் த'ஆம 'அலா ஹுBப்Bபிஹீ மிஸ்கீன(ன்)வ் வ யதீம(ன்)வ் வ அஸீரா
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِیْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا ۟
اِنَّمَاநிச்சயமாகنُطْعِمُكُمْஉங்களுக்கு உணவளிக்கிறோம்لِوَجْهِபொருத்தத்திற்காகاللّٰهِஅல்லாஹ்வின்لَاஇல்லைنُرِیْدُநாடுகிறோம்مِنْكُمْஉங்களிடமிருந்துجَزَآءًபிரதிபலனைوَّ لَاமேலும் இல்லைشُكُوْرًاநன்றியை
இன்னாமா னுத்'இமுகும் லி வஜ்ஹில் லாஹி லா னுரீது மின்கும் ஜZஜா'அ(ன்)வ் வலா ஷுகூரா
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).
اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا یَوْمًا عَبُوْسًا قَمْطَرِیْرًا ۟
اِنَّاநிச்சயமாக நாங்கள்نَخَافُஅஞ்சுகிறோம்مِنْஇருந்துرَّبِّنَاஎங்கள் இறைவனிடம்یَوْمًاஒரு நாளைعَبُوْسًاகடுகடுப்பானقَمْطَرِیْرًاமிகக் கடினமான
இன்னா னகாFபு மிர் ரBப்Bபின யவ்மன் 'அBபூஸன் கம்தரீரா
“எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்).
فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْیَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا ۟ۚ
فَوَقٰىهُمُஎனவே அவர்களைக் காத்தான்اللّٰهُஅல்லாஹ்شَرَّதீங்கிலிருந்துذٰلِكَஅந்தالْیَوْمِநாளின்وَ لَقّٰىهُمْமேலும் அவர்களுக்கு வழங்கினான்نَضْرَةًபொலிவையும்وَّ سُرُوْرًاۚமகிழ்ச்சியையும்
Fப வகாஹுமுல் லாஹு ஷர்ர தாலிகல் யவ்மி வ லக்காஹும் னள்ரத(ன்)வ் வ ஸுரூரா
எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.
وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِیْرًا ۟ۙ
وَ جَزٰىهُمْமேலும் அவர்களுக்கு நற்கூலியாக வழங்குவான்بِمَاகாரணமாகصَبَرُوْاஅவர்கள் பொறுமை காத்ததின்جَنَّةًசுவனத்தையும்وَّ حَرِیْرًاۙபட்டு ஆடைகளையும்
வ ஜZஜாஹும் Bபிமா ஸBபரூ ஜன்னத(ன்)வ் வ ஹரீரா
மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.
مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ۚ لَا یَرَوْنَ فِیْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِیْرًا ۟ۚ
مُّتَّكِـِٕیْنَசாய்ந்திருப்பவர்களாகفِیْهَاஅதில்عَلَیமீதுالْاَرَآىِٕكِ ۚஅரியாசனங்களின்لَاமாட்டார்கள்یَرَوْنَஅவர்கள் காணفِیْهَاஅதில்شَمْسًاவெயிலைوَّ لَاமேலும் இல்லைزَمْهَرِیْرًاۚகடும் குளிரை
முத்தகி'ஈன Fபீஹா 'அலல் அரா 'இகி லா யரவ்ன Fபீஹா ஷம்ஸ(ன்)வ் வலா Zஜம்ஹரீரா
அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.
وَدَانِیَةً عَلَیْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِیْلًا ۟
وَ دَانِیَةًநெருங்கியதாகعَلَیْهِمْஅவர்கள் மீதுظِلٰلُهَاஅதன் நிழல்கள்وَ ذُلِّلَتْமேலும் எளிதாக்கப்பட்டிருக்கும்قُطُوْفُهَاஅதன் கனிக்குலைகள்تَذْلِیْلًاமிக எளிதாக
வ தானியதன் 'அலய்ஹிம் ளிலாலுஹா வ துல்லிலத் குதூFபு ஹா தத்லீலா
மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.
وَیُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِیْرَاۡؔ ۟ۙ
وَ یُطَافُமேலும் சுற்றப்படும்عَلَیْهِمْஅவர்களிடம்بِاٰنِیَةٍபாத்திரங்களைக் கொண்டுمِّنْஇலிருந்துفِضَّةٍவெள்ளிوَّ اَكْوَابٍமேலும் குவளைகள்كَانَتْஅவை இருக்கும்قَوَارِیْرَاۡؔ ۙபளிங்குகளாக
வ யுதாFபு 'அலய்ஹிம் Bபி ஆனியதிம் மின் Fபிள்ளதி(ன்)வ் வ அக்வாBபின் கானத் கவாரீரா
(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.
قَوَارِیْرَاۡؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِیْرًا ۟
قَوَارِیْرَاۡؔபளிங்குப் பாத்திரங்கள்مِنْஆனفِضَّةٍவெள்ளிقَدَّرُوْهَاஅவற்றை அவர்கள் அளவிட்டார்கள்تَقْدِیْرًاசரியான அளவாக
கவாரீர மின் Fபிள்ளதின் கத்தரூஹா தக்தீரா
(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள்.
وَیُسْقَوْنَ فِیْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِیْلًا ۟ۚ
وَ یُسْقَوْنَமேலும் அவர்களுக்குப் புகட்டப்படும்فِیْهَاஅதில்كَاْسًاஒரு கிண்ணம்كَانَஇருக்கும்مِزَاجُهَاஅதன் கலவைزَنْجَبِیْلًاۚஇஞ்சி
வ யுஸ்கவ்ன Fபீஹா காஸன் கான மிZஜாஜுஹா Zஜன்ஜBபீலா
மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.
عَیْنًا فِیْهَا تُسَمّٰی سَلْسَبِیْلًا ۟
عَیْنًاஒரு ஊற்றுفِیْهَاஅதில்تُسَمّٰیஅழைக்கப்படும்سَلْسَبِیْلًاஸல்ஸபீல்
'அய்னன் Fபீஹா துஸம்மா ஸல்ஸBபீலா
“ஸல்ஸபீல்” என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.
وَیَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۚ اِذَا رَاَیْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا ۟
وَ یَطُوْفُமேலும் சுற்றி வருவார்கள்عَلَیْهِمْஅவர்களிடம்وِلْدَانٌசிறுவர்கள்مُّخَلَّدُوْنَ ۚஎன்றும் இளமையுடன் இருப்பவர்கள்اِذَاபோதுرَاَیْتَهُمْநீர் அவர்களைக் கண்டால்حَسِبْتَهُمْநீர் அவர்களைக் கருதுவீர்لُؤْلُؤًاமுத்துக்களாகمَّنْثُوْرًاசிதறப்பட்ட
வ யதூFபு 'அலய்ஹிம் வில்தானும் முகல்லதூன இதா ர அய்தஹும் ஹஸிBப்தஹும் லு'லு 'அம் மன்தூரா
இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.
وَاِذَا رَاَیْتَ ثَمَّ رَاَیْتَ نَعِیْمًا وَّمُلْكًا كَبِیْرًا ۟
وَ اِذَاமேலும் எப்போதுرَاَیْتَநீர் பார்த்தால்ثَمَّஅங்கேرَاَیْتَநீர் காண்பீர்نَعِیْمًاபேரின்பத்தையும்وَّ مُلْكًاஓர் அரசாட்சியையும்كَبِیْرًاமாபெரும்
வ இதா ர அய்த தம்ம ர அய்த ன'ஈம(ன்)வ் வ முல்கன் கBபீரா
அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.
عٰلِیَهُمْ ثِیَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ ؗ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ۚ وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا ۟
عٰلِیَهُمْஅவர்களின் மீதுثِیَابُஆடைகள்سُنْدُسٍமெல்லிய பட்டுخُضْرٌபச்சைوَّ اِسْتَبْرَقٌ ؗமற்றும் தடிமனான பட்டுوَّ حُلُّوْۤاமேலும் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள்اَسَاوِرَவளையல்கள்مِنْஆனفِضَّةٍ ۚவெள்ளிوَ سَقٰىهُمْமேலும் அவர்களுக்குப் புகட்டுவான்رَبُّهُمْஅவர்களின் இறைவன்شَرَابًاபானத்தைطَهُوْرًاதூய்மையான
ஆலியஹும் தியாBபு ஸுன்துஸின் குள்ரு(ன்)வ் வ இஸ்தBப்ரக், வ ஹுல்லூ அஸாவிர மின் Fபிள்ளதி(ன்)வ் வ ஸகாஹும் ரBப்Bபுஹும் ஷராBபன் தஹூரா
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّكَانَ سَعْیُكُمْ مَّشْكُوْرًا ۟۠
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுكَانَஇருந்ததுلَكُمْஉங்களுக்குجَزَآءًகூலியாகوَّ كَانَமேலும் இருந்ததுسَعْیُكُمْஉங்களுடைய முயற்சிمَّشْكُوْرًا۠அங்கீகரிக்கப்பட்டதாக
இன்னா ஹாதா கான லகும் ஜZஜா 'அ(ன்)வ் வ கான ஸஃயுகும் மஷ்கூரா
“நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று” (என்று அவர்களிடம் கூறப்படும்).  
اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ تَنْزِیْلًا ۟ۚ
اِنَّاநிச்சயமாக நாம்نَحْنُநாமேنَزَّلْنَاஇறக்கி வைத்தோம்عَلَیْكَஉம்மீதுالْقُرْاٰنَகுர்ஆனைتَنْزِیْلًاۚபடிப்படியாக
இன்னா னஹ்னு னZஜ்Zஜல்னா 'அலய்கல் குர்'ஆன தன்Zஜீலா
நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا ۟ۚ
فَاصْبِرْஎனவே பொறுத்திருப்பீராகلِحُكْمِதீர்ப்புக்காகرَبِّكَஉமது இறைவனின்وَ لَاமேலும்تُطِعْகீழ்ப்படியாதீர்مِنْهُمْஅவர்களில்اٰثِمًاபாவிக்குاَوْஅல்லதுكَفُوْرًاۚநன்றிகெட்டவனுக்கு
Fபஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக வலா துதிஃ மின்ஹும் ஆதிமன் அவ் கFபூரா
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக; அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِیْلًا ۟ۖۚ
وَ اذْكُرِமேலும் நினைவு கூர்வீராகاسْمَபெயரைرَبِّكَஉமது இறைவனின்بُكْرَةًகாலையிலும்وَّ اَصِیْلًاۖۚமாலையிலும்
வத்குரிஸ் ம ரBப்Bபிக Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.
وَمِنَ الَّیْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَیْلًا طَوِیْلًا ۟
وَ مِنَஇன்னும்الَّیْلِஇரவில்فَاسْجُدْஆகவே ஸுஜூது செய்வீராகلَهٗஅவனுக்குوَ سَبِّحْهُமேலும் அவனைத் துதிப்பீராகلَیْلًاஇரவில்طَوِیْلًاநீண்ட நேரம்
வ மினல் லய்லி Fபஸ்ஜுத் லஹூ வ ஸBப்Bபிஹ்ஹு லய்லன் தவீலா
இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக; அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக.
اِنَّ هٰۤؤُلَآءِ یُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَیَذَرُوْنَ وَرَآءَهُمْ یَوْمًا ثَقِیْلًا ۟
اِنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்یُحِبُّوْنَவிரும்புகிறார்கள்الْعَاجِلَةَஅவசரமானதைوَ یَذَرُوْنَமேலும் விட்டுவிடுகிறார்கள்وَرَآءَهُمْதங்களுக்குப் பின்னால்یَوْمًاஒரு நாளைثَقِیْلًاகடினமான
இன்ன ஹா'உலா'இ யுஹிBப்Bபூன 'ஆஜிலத வ யதரூன வரா'அஹும் யவ்மன் தகீலா
நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர்; அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ ۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِیْلًا ۟
نَحْنُநாம்خَلَقْنٰهُمْஅவர்களைப் படைத்தோம்وَ شَدَدْنَاۤமேலும் நாம் பலப்படுத்தினோம்اَسْرَهُمْ ۚஅவர்களின் அமைப்பைوَ اِذَاமேலும் எப்போதுشِئْنَاநாம் நாடுகிறோமோبَدَّلْنَاۤநாம் மாற்றிவிடுவோம்اَمْثَالَهُمْஅவர்களைப் போன்றவர்களைتَبْدِیْلًاமுழுமையான மாற்றமாக
னஹ்னு கலக்னாஹும் வ ஷதத்னா அஸ்ரஹும் வ இதா ஷி'னா Bபத்தல்னா அம்தால ஹும் தBப்தீலா
நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟
اِنَّநிச்சயமாகهٰذِهٖஇதுتَذْكِرَةٌ ۚஓர் அறிவுரையாகும்فَمَنْஎனவே எவர்شَآءَநாடுகிறாரோاتَّخَذَஅமைத்துக் கொள்வாராகاِلٰیபால்رَبِّهٖதன் இறைவனின்سَبِیْلًاஒரு வழியை
இன்ன ஹாதிஹீ தத்கிரதுன் Fப மன் ஷா'அத் தகத இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟ۗۖ
وَ مَاமேலும் இல்லைتَشَآءُوْنَநீங்கள் நாடுவீர்கள்اِلَّاۤதவிரاَنْஎன்றுیَّشَآءَநாடுவதுاللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِیْمًاநன்கறிந்தவனாகحَكِیْمًاۗۖஞானமிக்கவனாக
வமா தஷா'ஊன இல்லா அ(ன்)ய்யஷா'அல் லாஹ்; இன்னல் லாஹா கான'அலீமன் ஹகீமா
எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ وَالظّٰلِمِیْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟۠
یُّدْخِلُஅவன் புகுத்துகிறான்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோفِیْஇல்رَحْمَتِهٖ ؕதனது அருளில்وَ الظّٰلِمِیْنَமேலும் அநியாயக்காரர்களுக்குاَعَدَّஅவன் தயார் செய்திருக்கிறான்لَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனையைاَلِیْمًا۠நோவினை தரும்
யுத்கிலு மய் யஷா'உ Fபீ ரஹ்மதிஹ்; வள்ளாலிமீன அ'அத்த லஹும் 'அதாBபன் அலீமா
அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.