27. ஸூரத்துந் நம்லி (எறும்புகள்)

மக்கீ, வசனங்கள்: 93

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
طٰسٓ ۫ تِلْكَ اٰیٰتُ الْقُرْاٰنِ وَكِتَابٍ مُّبِیْنٍ ۟ۙ
طٰسٓ ۫தா-ஸீன்تِلْكَஇவைاٰیٰتُவசனங்கள்الْقُرْاٰنِகுர்ஆனின்وَ كِتَابٍமேலும் ஒரு வேதத்தின்مُّبِیْنٍۙதெளிவான
தா-ஸீன்; தில்க ஆயாதுல் குர்ஆனி வ கிதாBபிம் முBபீன்
தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.
هُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟ۙ
هُدًیநேர்வழிوَّ بُشْرٰیமேலும் நற்செய்திلِلْمُؤْمِنِیْنَۙநம்பிக்கையாளர்களுக்கு
ஹுத(ன்)வ் வ Bபுஷ்ரா லில் மு'மினீன்
(இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.
الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ یُوْقِنُوْنَ ۟
الَّذِیْنَஎவர்கள்یُقِیْمُوْنَநிலைநாட்டுகிறார்களோالصَّلٰوةَதொழுகையைوَ یُؤْتُوْنَமேலும் வழங்குகிறார்களோالزَّكٰوةَஜகாத்தைوَ هُمْமேலும் அவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைهُمْஅவர்கள்یُوْقِنُوْنَஉறுதியாக நம்புகிறார்கள்
அல்லதீன யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் Bபில் ஆகிரதி ஹும் யூகினூன்
(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்.
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ زَیَّنَّا لَهُمْ اَعْمَالَهُمْ فَهُمْ یَعْمَهُوْنَ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்களோبِالْاٰخِرَةِமறுமையைزَیَّنَّاஅழகாக்கினோம்لَهُمْஅவர்களுக்குاَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களைفَهُمْஆகவே அவர்கள்یَعْمَهُوْنَؕதடுமாறுகிறார்கள்
இன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி Zஜய்யன்னா லஹும் அஃமாலஹும் Fபஹும் யஃமஹூன்
நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَهُمْ سُوْٓءُ الْعَذَابِ وَهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள்لَهُمْஅவர்களுக்குسُوْٓءُகொடியالْعَذَابِவேதனைوَ هُمْமேலும் அவர்கள்فِیஇல்الْاٰخِرَةِமறுமைهُمُஅவர்கள்தாம்الْاَخْسَرُوْنَமிகப்பெரிய நஷ்டவாளிகள்
உலா'இகல் லதீன லஹும் ஸூ'உல் 'அதாBபி வ ஹும் Fபில் ஆகிரதி ஹுமுல் அக்ஸரூன்
அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு; மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடைபவர்களாக இருப்பார்கள்.
وَاِنَّكَ لَتُلَقَّی الْقُرْاٰنَ مِنْ لَّدُنْ حَكِیْمٍ عَلِیْمٍ ۟
وَ اِنَّكَநிச்சயமாக நீர்لَتُلَقَّیவழங்கப்படுகிறீர்الْقُرْاٰنَகுர்ஆனைمِنْஇருந்துلَّدُنْபுறம்حَكِیْمٍஞானமிக்கعَلِیْمٍநன்கு அறிந்தவன்
வ இன்னக லதுலக்கல் குர்ஆன மில் லதுன் ஹகீமின் 'அலீம்
(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
اِذْ قَالَ مُوْسٰی لِاَهْلِهٖۤ اِنِّیْۤ اٰنَسْتُ نَارًا ؕ سَاٰتِیْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ اٰتِیْكُمْ بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُوْنَ ۟
اِذْஅப்போதுقَالَகூறினார்مُوْسٰیமூஸாلِاَهْلِهٖۤதன் குடும்பத்தாரிடம்اِنِّیْۤநிச்சயமாக நான்اٰنَسْتُகண்டேன்نَارًا ؕஒரு நெருப்பைسَاٰتِیْكُمْவிரைவில் உங்களிடம் கொண்டு வருவேன்مِّنْهَاஅதிலிருந்துبِخَبَرٍஒரு செய்தியைاَوْஅல்லதுاٰتِیْكُمْஉங்களிடம் கொண்டு வருவேன்بِشِهَابٍஒரு தீப்பந்தத்தைقَبَسٍஎரியும் கொள்ளியைلَّعَلَّكُمْஅதனால் நீங்கள்تَصْطَلُوْنَகுளிர் காயலாம்
இத் கால மூஸா லி அஹ்லிஹீ இன்னீ ஆனஸ்து னாரன் ஸ'ஆதீகும் மின்ஹா BபிகBபரின் அவ் ஆதீகும் BபிஷிஹாBபின் கBபஸில் ல'அல்லகும் தஸ்தலூன்
மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி: “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்” என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!
فَلَمَّا جَآءَهَا نُوْدِیَ اَنْ بُوْرِكَ مَنْ فِی النَّارِ وَمَنْ حَوْلَهَا ؕ وَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَلَمَّاஆகவே எப்போதுجَآءَهَاஅவர் அதனிடம் வந்தாரோنُوْدِیَஅவர் அழைக்கப்பட்டார்اَنْۢஎன்றுبُوْرِكَபாக்கியம் வழங்கப்பட்டுள்ளார்مَنْஎவர்فِیஉள்ளாரோالنَّارِநெருப்பில்وَ مَنْமேலும் எவர்حَوْلَهَا ؕஅதனைச் சுற்றியுள்ளாரோوَ سُبْحٰنَமேலும் தூய்மையானவன்اللّٰهِஅல்லாஹ்رَبِّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
Fபலம்மா ஜா'அஹா னூதிய அம் Bபூரிக மன் Fபின்ன்ன்னாரி வ மன் ஹவ்லஹா வ ஸுBப்ஹானல் லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அவர் அதனிடம் வந்த போது: “நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கியம் அளிக்கப் பெற்றுள்ளது; மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்” என்று அழைக்கப்பட்டார்.
یٰمُوْسٰۤی اِنَّهٗۤ اَنَا اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ
یٰمُوْسٰۤیஓ மூஸாவேاِنَّهٗۤநிச்சயமாகاَنَاநான்اللّٰهُஅல்லாஹ்الْعَزِیْزُவல்லமை மிக்கவன்الْحَكِیْمُۙஞானமிக்கவன்
யா மூஸா இன்னஹூ அனல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
“மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
وَاَلْقِ عَصَاكَ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰی مُدْبِرًا وَّلَمْ یُعَقِّبْ ؕ یٰمُوْسٰی لَا تَخَفْ ۫ اِنِّیْ لَا یَخَافُ لَدَیَّ الْمُرْسَلُوْنَ ۟ۗۖ
وَ اَلْقِஇன்னும் எறிவீராகعَصَاكَ ؕஉமது கைத்தடியைفَلَمَّاபின்னர் எப்போதுرَاٰهَاஅதை அவர் கண்டாரோتَهْتَزُّஅது அசைவதைكَاَنَّهَاஅது போன்றிருந்ததுجَآنٌّஒரு பாம்புوَّلّٰیஅவர் திரும்பினார்مُدْبِرًاபின்வாங்கிوَّ لَمْஇன்னும் இல்லைیُعَقِّبْ ؕஅவர் திரும்பிப் பார்க்கیٰمُوْسٰیமூஸாவேلَاவேண்டாம்تَخَفْ ۫நீர் பயப்படاِنِّیْநிச்சயமாக நான்لَاமாட்டார்கள்یَخَافُஅஞ்சلَدَیَّஎன்னிடத்தில்الْمُرْسَلُوْنَۗۖதூதர்கள்
வ அல்கி 'அஸாக்; Fபலம்ம்மா ர ஆஹா தஹ்தZஜ்Zஜு க அன்னஹா ஜான்னு(ன்)வ் வல்லா முத்Bபிர(ன்)வ் வ லம் யு'அக்கிBப்; யா மூஸா லா தகFப் இன்னீ லா யகாFபு லதய்யல் முர்ஸலூன்
“உம் கைத்தடியைக் கீழே எறியும்;” (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்; “மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்.”
اِلَّا مَنْ ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًا بَعْدَ سُوْٓءٍ فَاِنِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِلَّاதவிரمَنْஎவர்ظَلَمَஅநீதி இழைத்தாரோثُمَّபின்னர்بَدَّلَமாற்றிக் கொண்டாரோحُسْنًۢاநன்மையாகبَعْدَபிறகுسُوْٓءٍதீமைக்குப்فَاِنِّیْஆகவே நிச்சயமாக நான்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
இல்லா மன் ளலம தும்ம Bபத்தல ஹுஸ்னம் Bபஃத ஸூ'இன் Fப இன்னீ கFபூருர் ரஹீம்
ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர; அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.
وَاَدْخِلْ یَدَكَ فِیْ جَیْبِكَ تَخْرُجْ بَیْضَآءَ مِنْ غَیْرِ سُوْٓءٍ ۫ فِیْ تِسْعِ اٰیٰتٍ اِلٰی فِرْعَوْنَ وَقَوْمِهٖ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
وَ اَدْخِلْமேலும் நுழைப்பீராகیَدَكَஉமது கையைفِیْஉள்ளேجَیْبِكَஉமது சட்டையின் கழுத்துப் பகுதியில்تَخْرُجْஅது வெளிப்படும்بَیْضَآءَவெண்மையாகمِنْஎவ்விதغَیْرِஇல்லாமல்سُوْٓءٍ ۫நோயும்فِیْஒன்றாகتِسْعِஒன்பதுاٰیٰتٍஅத்தாட்சிகளில்اِلٰیபால்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَ قَوْمِهٖ ؕமேலும் அவனது சமூகத்தாரிடமும்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்قَوْمًاஒரு சமூகமாகفٰسِقِیْنَவரம்பு மீறியவர்களாக
வ அத்கில் யதக Fபீ ஜய்Bபிக தக்ருஜ் Bபய்ளா'அ மின் கய்ரிஸூ'இன் Fபீதிஸ்'இ ஆயாதின் இலா Fபிர்'அவ்ன வ கவ்மிஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
“இன்னும் உம்முடைய கையை உமது (மார்பு பக்கமாக) சட்டைப் பையில் நுழைப்பீராக!” அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.
فَلَمَّا جَآءَتْهُمْ اٰیٰتُنَا مُبْصِرَةً قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚ
فَلَمَّاஎனவே எப்போதுجَآءَتْهُمْஅவர்களிடம் வந்ததோاٰیٰتُنَاநம்முடைய அத்தாட்சிகள்مُبْصِرَةًகண்கூடாகقَالُوْاஅவர்கள் கூறினார்கள்هٰذَاஇதுسِحْرٌசூனியம்مُّبِیْنٌۚதெளிவானது
Fபலம்மா ஜா'அத் ஹும் ஆயாதுனா முBப்ஸிரதன் காலூ ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள் “இது பகிரங்கமான சூனியமேயாகும்” என்று கூறினார்கள்.
وَجَحَدُوْا بِهَا وَاسْتَیْقَنَتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا ؕ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟۠
وَ جَحَدُوْاமேலும் அவர்கள் நிராகரித்தார்கள்بِهَاஅவற்றைوَ اسْتَیْقَنَتْهَاۤஅவற்றை உறுதியாக நம்பியிருந்தும்اَنْفُسُهُمْஅவர்களின் உள்ளங்கள்ظُلْمًاஅநியாயமாகவும்وَّ عُلُوًّا ؕஆணவத்தினாலும்فَانْظُرْஎனவே கவனிப்பீராகكَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُفْسِدِیْنَ۠குழப்பம் செய்பவர்களின்
வ ஜஹதூ Bபிஹா வஸ்தய்கனத் ஹா அன்Fபுஸுஹும் ளுல்ம(ன்)வ்-வ 'உலுவ்வா; Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்ன வாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.  
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاٰتَیْنَاநாம் வழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குوَ سُلَیْمٰنَமற்றும் ஸுலைமானுக்குعِلْمًا ۚகல்வியைوَ قَالَاமேலும் அவ்விருவரும் கூறினார்கள்الْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْஅவன் எத்தகையவன் என்றால்فَضَّلَنَاஎங்களை மேன்மையாக்கினான்عَلٰیவிடكَثِیْرٍபலரைمِّنْஇருந்துعِبَادِهِஅவனுடைய அடியார்களில்الْمُؤْمِنِیْنَமுஃமின்களான
வ லகத் ஆதய்னா தாவூத வ ஸுலய்மான 'இல்மா; வ காலல் ஹம்து லில் லாஹில் லதீ Fபள்ளலனா 'அலா கதீரிம் மின் 'இBபாதிஹில் மு'மினீன்
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟
وَ وَرِثَமேலும் வாரிசானார்سُلَیْمٰنُஸுலைமான்دَاوٗدَதாவூதிற்குوَ قَالَமேலும் அவர் கூறினார்یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேعُلِّمْنَاஎங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ளதுمَنْطِقَமொழிالطَّیْرِபறவைகளின்وَ اُوْتِیْنَاமேலும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுمِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْءٍ ؕபொருளும்اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَهُوَநிச்சயமாக அதுவேالْفَضْلُஅருட்கொடைالْمُبِیْنُதெளிவான
வ வரித ஸுலய்மானு தாவூத வ கால யா அய்யுஹன் னாஸு 'உல்லிம்னா மன்திகத் தய்ரி வ ஊதீனா மின் குல்லி ஷய்'இன் இன்ன ஹாதா லஹுவல் Fபள்லுல் முBபீன்
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
وَحُشِرَ لِسُلَیْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّیْرِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَ حُشِرَமேலும் திரட்டப்பட்டனர்لِسُلَیْمٰنَஸுலைமானுக்காகجُنُوْدُهٗஅவருடைய படைகள்مِنَஇருந்துالْجِنِّஜின்கள்وَ الْاِنْسِமற்றும் மனிதர்கள்وَ الطَّیْرِமற்றும் பறவைகள்فَهُمْஎனவே அவர்கள்یُوْزَعُوْنَஅணிவகுத்து நிறுத்தப்பட்டனர்
வ ஹுஷிர ஸுலய்மான ஜுனூதுஹூ மினல் ஜின்னி வல் இன்ஸி வத்தய்ரி Fபஹும் யூZஜ'ஊன்
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
حَتّٰۤی اِذَاۤ اَتَوْا عَلٰی وَادِ النَّمْلِ ۙ قَالَتْ نَمْلَةٌ یّٰۤاَیُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ ۚ لَا یَحْطِمَنَّكُمْ سُلَیْمٰنُ وَجُنُوْدُهٗ ۙ وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
حَتّٰۤیஇறுதியாகاِذَاۤபோதுاَتَوْاஅவர்கள் வந்தعَلٰیமீதுوَادِபள்ளத்தாக்கின்النَّمْلِ ۙஎறும்புகளின்قَالَتْகூறியதுنَمْلَةٌஓர் எறும்புیّٰۤاَیُّهَاالنَّمْلُஎறும்புகளேادْخُلُوْاநுழையுங்கள்مَسٰكِنَكُمْ ۚஉங்கள் இருப்பிடங்களுக்குள்لَاகூடாதுیَحْطِمَنَّكُمْஉங்களை நசுக்கிவிடسُلَیْمٰنُஸுலைமானும்وَ جُنُوْدُهٗ ۙஅவருடைய படைகளும்وَ هُمْஅவர்கள்لَاஉணராதیَشْعُرُوْنَநிலையில்
ஹத்தா இதா அதவ் 'அலா வாதின் னம்லி காலத் னம்லது(ன்)ய் யா அய்யுஹன் னம்லுத் குலூ மஸாகினகும் லா யஹ்திமன்னகும் ஸுலய்மானு வ ஜுனூதுஹூ வ ஹும் லா யஷ்'உரூன்
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَدْخِلْنِیْ بِرَحْمَتِكَ فِیْ عِبَادِكَ الصّٰلِحِیْنَ ۟
فَتَبَسَّمَஅப்போது அவர் புன்னகைத்தார்ضَاحِكًاசிரித்தவராகمِّنْகேட்டுقَوْلِهَاஅதன் பேச்சைوَ قَالَமேலும் அவர் கூறினார்رَبِّஎன் இறைவாاَوْزِعْنِیْۤஎனக்கு நீ அருள்வாயாகاَنْநான்اَشْكُرَநன்றி செலுத்தنِعْمَتَكَஉனது அருட்கொடைக்குالَّتِیْۤஎதைاَنْعَمْتَநீ அருளினாயோعَلَیَّஎன் மீதுوَ عَلٰیமேலும் மீதுوَالِدَیَّஎன் பெற்றோர்وَ اَنْமேலும் நான்اَعْمَلَசெய்யصَالِحًاநற்செயலைتَرْضٰىهُநீ அதனைப் பொருந்திக் கொள்வாய்وَ اَدْخِلْنِیْமேலும் என்னை நுழைவிப்பாயாகبِرَحْمَتِكَஉனது கிருபையால்فِیْஇல்عِبَادِكَஉனது அடியார்கள்الصّٰلِحِیْنَநல்லோர்களான
FபதBபஸ்ஸம ளாஹிகம் மின் கவ்லிஹா வ கால ரBப்Bபி அவ்Zஜிஃனீ அன் அஷ்குர னிஃமத கல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அத்கில்னீ Bபிரஹ்மதிக Fபீ 'இBபாதிகஸ் ஸாலிஹீன்
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.
وَتَفَقَّدَ الطَّیْرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الْهُدْهُدَ ۖؗ اَمْ كَانَ مِنَ الْغَآىِٕبِیْنَ ۟
وَ تَفَقَّدَமேலும் அவர் ஆய்வு செய்தார்الطَّیْرَபறவைகளைفَقَالَபிறகு அவர் கூறினார்مَاஎன்னلِیَஎனக்குلَاۤஇல்லைاَرَیநான் பார்க்கிறேன்الْهُدْهُدَ ۖؗஹுத்ஹுத் பறவையைاَمْஅல்லதுكَانَஅது ஆகிவிட்டதாمِنَஇருந்துالْغَآىِٕبِیْنَமறைந்திருப்பவற்றில்
வ தFபக்கதத் தய்ர Fபகால மா லிய லா அரா அல் ஹுத்ஹுத, அம் கான மினல் கா'இBபீன்
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுத்ஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
لَاُعَذِّبَنَّهٗ عَذَابًا شَدِیْدًا اَوْ لَاَاَذْبَحَنَّهٗۤ اَوْ لَیَاْتِیَنِّیْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
لَاُعَذِّبَنَّهٗநான் அவனை நிச்சயமாகத் தண்டிப்பேன்عَذَابًاதண்டனையால்شَدِیْدًاகடுமையானاَوْஅல்லதுلَاۡاَذْبَحَنَّهٗۤநான் அவனை நிச்சயமாக அறுத்துவிடுவேன்اَوْஅல்லதுلَیَاْتِیَنِّیْஅவன் நிச்சயமாக என்னிடம் வர வேண்டும்بِسُلْطٰنٍஓர் ஆதாரத்துடன்مُّبِیْنٍதெளிவான
ல-உ'அத்திBபன்னஹூ 'அதாBபன் ஷதீதன் அவ் ல அத்Bபஹன்னஹூ அவ் ல யா'தியன்னீ Bபிஸுல்தானிம் முBபீன்
“நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்.
فَمَكَثَ غَیْرَ بَعِیْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَجِئْتُكَ مِنْ سَبَاٍۭ بِنَبَاٍ یَّقِیْنٍ ۟
فَمَكَثَபின்னர் அது தங்கியதுغَیْرَஅதிகبَعِیْدٍநேரமின்றிفَقَالَபிறகு அது கூறியதுاَحَطْتُّநான் முழுமையாக அறிந்து கொண்டேன்بِمَاஎதனைلَمْஇல்லைتُحِطْநீர் அறிந்திருக்கبِهٖஅதைوَ جِئْتُكَமேலும் உம்மிடம் வந்துள்ளேன்مِنْஇருந்துسَبَاٍۭஸபாبِنَبَاٍஒரு செய்தியுடன்یَّقِیْنٍஉறுதியான
Fபமகத கய்ர Bப'ஈதின் Fபகால அஹத்து Bபிமா லம் துஹித் Bபிஹீ வ ஜி'துக மின் ஸBபய்ம் BபினBப இ(ன்)ய்-யகீன்
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுத்ஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
اِنِّیْ وَجَدْتُّ امْرَاَةً تَمْلِكُهُمْ وَاُوْتِیَتْ مِنْ كُلِّ شَیْءٍ وَّلَهَا عَرْشٌ عَظِیْمٌ ۟
اِنِّیْநிச்சயமாக நான்وَجَدْتُّகண்டேன்امْرَاَةًஒரு பெண்ணைتَمْلِكُهُمْஅவர்களை ஆட்சி செய்யும்وَ اُوْتِیَتْமேலும் அவளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதுمِنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْءٍபொருளும்وَّ لَهَاமேலும் அவளுக்கு உண்டுعَرْشٌஓர் அரியணைعَظِیْمٌமகத்தான
இன்னீ வஜத்தும் ர அதன் தம்லிகுஹும் வ ஊதியத் மின் குல்லி ஷய்'இ(ன்)வ் வ லஹா 'அர்ஷுன் 'அளீம்
“நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.
وَجَدْتُّهَا وَقَوْمَهَا یَسْجُدُوْنَ لِلشَّمْسِ مِنْ دُوْنِ اللّٰهِ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ فَهُمْ لَا یَهْتَدُوْنَ ۟ۙ
وَجَدْتُّهَاநான் அவளைக் கண்டேன்وَ قَوْمَهَاஅவளுடைய சமூகத்தாரையும்یَسْجُدُوْنَசிரம் பணிபவர்களாகلِلشَّمْسِசூரியனுக்குمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَ زَیَّنَமேலும் அழகாகக் காட்டினான்لَهُمُஅவர்களுக்குالشَّیْطٰنُஷைத்தான்اَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களைفَصَدَّهُمْஎனவே அவர்களைத் தடுத்தான்عَنِஇருந்துالسَّبِیْلِவழியைفَهُمْஎனவே அவர்கள்لَاஇல்லைیَهْتَدُوْنَۙநேர்வழி பெறுகிறார்கள்
வஜத்துஹா வ கவ்மஹா யஸ்ஜுதூன லிஷ்ஷம்ஸி மின் தூனில் லாஹி வ Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் Fபஸத்தஹும் 'அனிஸ் ஸBபீலி Fபஹும் லா யஹ்ததூன்
“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.
اَلَّا یَسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ یُخْرِجُ الْخَبْءَ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُخْفُوْنَ وَمَا تُعْلِنُوْنَ ۟
اَلَّاசெய்யாமல் இருக்கیَسْجُدُوْاஅவர்கள் ஸஜ்தா செய்யلِلّٰهِஅல்லாஹ்வுக்குالَّذِیْஅவன் எத்தகையவனென்றால்یُخْرِجُவெளிப்படுத்துகிறானோالْخَبْءَமறைவானவற்றைفِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِமற்றும் பூமிوَ یَعْلَمُமேலும் அவன் அறிகிறான்مَاஎவற்றைتُخْفُوْنَநீங்கள் மறைக்கிறீர்களோوَ مَاமேலும் எவற்றைتُعْلِنُوْنَநீங்கள் வெளிப்படுத்துகிறீர்களோ
அல்லா யஸ்ஜுதூ லில்லாஹில் லதீ யுக்ரிஜுல் கBப்'அ Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ யஃலமு மா துக்Fபூன வமா துஃலினூன்
“வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைرَبُّஅதிபதிالْعَرْشِஅர்ஷின்الْعَظِیْمِ۩மகத்தான
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் அளீம்
“அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).
قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்سَنَنْظُرُநாம் பார்ப்போம்اَصَدَقْتَநீ உண்மை சொன்னாயாاَمْஅல்லதுكُنْتَநீ இருக்கிறாயாمِنَஇருந்துالْكٰذِبِیْنَபொய்யர்களில்
கால ஸனன்ளுரு அஸதக்த அம் குன்த மினல் காதிBபீன்
(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
اِذْهَبْ بِّكِتٰبِیْ هٰذَا فَاَلْقِهْ اِلَیْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا یَرْجِعُوْنَ ۟
اِذْهَبْசெல்بِّكِتٰبِیْஎனது கடிதத்துடன்هٰذَاஇந்தفَاَلْقِهْஅதனைப் போடுاِلَیْهِمْஅவர்களிடம்ثُمَّபின்னர்تَوَلَّவிலகி நில்عَنْهُمْஅவர்களிடமிருந்துفَانْظُرْகவனிمَا ذَاஎன்னیَرْجِعُوْنَபதிலளிக்கிறார்கள்
இத்ஹBப் BபிகிதாBபீ ஹாத Fப அல்கிஹ் இலய்ஹிம் தும்ம்ம தவல்ல 'அன்ஹும் Fபன்ளுர் மாதா யர்ஜி'ஊன்
“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).
قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اِنِّیْۤ اُلْقِیَ اِلَیَّ كِتٰبٌ كَرِیْمٌ ۟
قَالَتْஅவள் கூறினாள்یٰۤاَیُّهَاالْمَلَؤُاபிரமுகர்களேاِنِّیْۤநிச்சயமாகاُلْقِیَபோடப்பட்டுள்ளதுاِلَیَّஎன்னிடம்كِتٰبٌஒரு கடிதம்كَرِیْمٌகண்ணியமான
காலத் யா அய்யுஹல் மல'உ இன்னீ உல்கிய இலய்ய கிதாBபுன் கரீம்
(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”
اِنَّهٗ مِنْ سُلَیْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக அதுمِنْஇருந்துسُلَیْمٰنَஸுலைமான்وَ اِنَّهٗ ۙமேலும் நிச்சயமாக அதுبِسْمِபெயரால்اللّٰهِஅல்லாஹ்வின்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளன்الرَّحِیْمِநிகரற்ற அன்புடையோன்
இன்னஹூ மின் ஸுலய்மான வ இன்னஹூ Bபிஸ்மில் லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
اَلَّا تَعْلُوْا عَلَیَّ وَاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟۠
اَلَّاவேண்டாம் என்றுتَعْلُوْاநீங்கள் பெருமையடிக்கعَلَیَّஎன் மீதுوَ اْتُوْنِیْமேலும் என்னிடம் வாருங்கள்مُسْلِمِیْنَ۠கீழ்ப்படிந்தவர்களாக
அல்லா தஃலூ 'அலய்ய வா தூனீ முஸ்லிமீன்
“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).  
قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَفْتُوْنِیْ فِیْۤ اَمْرِیْ ۚ مَا كُنْتُ قَاطِعَةً اَمْرًا حَتّٰی تَشْهَدُوْنِ ۟
قَالَتْஅவள் கூறினாள்یٰۤاَیُّهَاالْمَلَؤُاபிரமுகர்களேاَفْتُوْنِیْஎனக்கு ஆலோசனை கூறுங்கள்فِیْۤஇல்اَمْرِیْ ۚஎனது விவகாரம்مَاஇல்லைكُنْتُநான்قَاطِعَةًமுடிவெடுப்பவளாகاَمْرًاஎந்தவொரு காரியத்தையும்حَتّٰیவரைتَشْهَدُوْنِநீங்கள் முன்னிலையில் இருக்கும்
காலத் யா அய்யுஹல் மல'உ அFப்தூனீ Fபீ அம்ரீ மா குன்து காதி'அதன் அம்ரன் ஹத்தா தஷ்ஹ்ஹதூன்
எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.
قَالُوْا نَحْنُ اُولُوْا قُوَّةٍ وَّاُولُوْا بَاْسٍ شَدِیْدٍ ۙ۬ وَّالْاَمْرُ اِلَیْكِ فَانْظُرِیْ مَاذَا تَاْمُرِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَحْنُநாங்கள்اُولُوْاஉடையவர்கள்قُوَّةٍபலம்وَّ اُولُوْاமேலும் உடையவர்கள்بَاْسٍபோர் வலிமைشَدِیْدٍ ۙ۬கடுமையானوَّ الْاَمْرُமேலும் அதிகாரம்اِلَیْكِஉன்னிடமேفَانْظُرِیْஎனவே சிந்திப்பாயாகمَا ذَاஎன்னتَاْمُرِیْنَநீ கட்டளையிடுகிறாய்
காலூ னஹ்னு உலூ குவ்வதி(ன்)வ் வ உலூ Bபா'ஸின் ஷதீத்; வல் அம்ரு இலய்கி Fபன்ளுரீ மாதா தா'முரீன்
“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.
قَالَتْ اِنَّ الْمُلُوْكَ اِذَا دَخَلُوْا قَرْیَةً اَفْسَدُوْهَا وَجَعَلُوْۤا اَعِزَّةَ اَهْلِهَاۤ اَذِلَّةً ۚ وَكَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟
قَالَتْஅவள் கூறினாள்اِنَّநிச்சயமாகالْمُلُوْكَஅரசர்கள்اِذَاஎப்பொழுதுدَخَلُوْاஅவர்கள் நுழைந்தார்களோقَرْیَةًஓர் ஊரில்اَفْسَدُوْهَاஅதனைப் பாழாக்குவார்கள்وَ جَعَلُوْۤاமேலும் ஆக்குவார்கள்اَعِزَّةَகண்ணியமானவர்களைاَهْلِهَاۤஅதன் மக்களில்اَذِلَّةً ۚசிறுமைப்பட்டவர்களாகوَ كَذٰلِكَமேலும் இவ்வாறேیَفْعَلُوْنَஅவர்கள் செய்வார்கள்
காலத் இன்னல் முலூக இதா தகலூ கர்யதன் அFப்ஸதூஹா வ ஜ'அலூ அ'இZஜ்Zஜத அஹ்லிஹா அதில்லஹ்; வ கதாலிக யFப்'அலூன்
அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
وَاِنِّیْ مُرْسِلَةٌ اِلَیْهِمْ بِهَدِیَّةٍ فَنٰظِرَةٌ بِمَ یَرْجِعُ الْمُرْسَلُوْنَ ۟
وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்مُرْسِلَةٌஅனுப்புகிறேன்اِلَیْهِمْஅவர்களிடம்بِهَدِیَّةٍஓர் அன்பளிப்பைفَنٰظِرَةٌۢபிறகு கவனிப்பேன்بِمَஎதைக் கொண்டுیَرْجِعُதிரும்புவார்கள்الْمُرْسَلُوْنَதூதர்கள்
வ இன்னீ முர்ஸிலதுன் இலய்ஹிம் Bபிஹதிய்யதின் Fபனாளிரதும் Bபிம யர்ஜி'உல் முர்ஸலூன்
“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.”
فَلَمَّا جَآءَ سُلَیْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ ؗ فَمَاۤ اٰتٰىنِ اللّٰهُ خَیْرٌ مِّمَّاۤ اٰتٰىكُمْ ۚ بَلْ اَنْتُمْ بِهَدِیَّتِكُمْ تَفْرَحُوْنَ ۟
فَلَمَّاஎனவேجَآءَவந்தபோதுسُلَیْمٰنَஸுலைமானிடம்قَالَஅவர் கூறினார்اَتُمِدُّوْنَنِநீங்கள் எனக்கு உதவுகிறீர்களாبِمَالٍ ؗசெல்வத்தைக் கொண்டுفَمَاۤஆனால் எதைاٰتٰىنِ َۧஎனக்கு வழங்கியுள்ளானோاللّٰهُஅல்லாஹ்خَیْرٌமேலானதுمِّمَّاۤஎதனை விடاٰتٰىكُمْ ۚஉங்களுக்கு வழங்கியதைبَلْமாறாகاَنْتُمْநீங்கள்தான்بِهَدِیَّتِكُمْஉங்கள் பரிசைக் கொண்டுتَفْرَحُوْنَமகிழ்ச்சியடைகிறீர்கள்
Fபலம்மா ஜா'அ ஸுலய்மான கால அதுமித்தூனனி Bபிமாலின் Fபமா ஆதானியல் லாஹு கய்ரும் மிம்ம்மா ஆதாகும் Bபல் அன்தும் Bபிஹதிய்-யதிகும் தFப்ரஹூன்
அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
اِرْجِعْ اِلَیْهِمْ فَلَنَاْتِیَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ ۟
اِرْجِعْதிரும்பிச் செல்اِلَیْهِمْஅவர்களிடம்فَلَنَاْتِیَنَّهُمْஎனவே நிச்சயமாக நாம் அவர்களிடம் வருவோம்بِجُنُوْدٍபடைகளுடன்لَّاஇல்லைقِبَلَஆற்றல்لَهُمْஅவர்களுக்குبِهَاஅவற்றைوَ لَنُخْرِجَنَّهُمْமேலும் நிச்சயமாக நாம் அவர்களை வெளியேற்றுவோம்مِّنْهَاۤஅதிலிருந்துاَذِلَّةًசிறுமையடைந்தவர்களாகوَّ هُمْமேலும் அவர்கள்صٰغِرُوْنَஇழிவடைந்தவர்களாக
இர்ஜிஃ இலய்ஹிம் Fபலனாதியன் னஹும் Bபிஜுனூதில் லா கிBபல லஹும் Bபிஹா வ லனுக்ரி ஜன்னஹும் மின்ஹா அதில்லத(ன்)வ் வ ஹும் ஸாகிரூன்
“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).
قَالَ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَیُّكُمْ یَاْتِیْنِیْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ یَّاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்یٰۤاَیُّهَاالْمَلَؤُاபிரமுகர்களேاَیُّكُمْஉங்களில் யார்یَاْتِیْنِیْஎன்னிடம் கொண்டு வருவார்بِعَرْشِهَاஅவளது அரியணையைقَبْلَமுன்னதாகاَنْஎன்றுیَّاْتُوْنِیْஅவர்கள் என்னிடம் வருவதற்குمُسْلِمِیْنَகீழ்ப்படிந்தவர்களாக
கால யா அய்யுஹல் மல'உ அய்யுகும் யா'தீனீ Bபி'அர்ஷிஹா கBப்ல அய் யா'தூனீ முஸ்லிமீன்
“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
قَالَ عِفْرِیْتٌ مِّنَ الْجِنِّ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ تَقُوْمَ مِنْ مَّقَامِكَ ۚ وَاِنِّیْ عَلَیْهِ لَقَوِیٌّ اَمِیْنٌ ۟
قَالَகூறினான்عِفْرِیْتٌஓர் இப்ரீத்مِّنَஇருந்துالْجِنِّஜின்களில்اَنَاநான்اٰتِیْكَஉங்களிடம் கொண்டு வருவேன்بِهٖஅதைقَبْلَமுன்னதாகاَنْஎன்றுتَقُوْمَநீங்கள் எழுவதற்குمِنْஇருந்துمَّقَامِكَ ۚஉங்கள் இடம்وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்عَلَیْهِஅதன் மீதுلَقَوِیٌّநிச்சயமாகப் பலமுள்ளவன்اَمِیْنٌநம்பிக்கைக்குரியவன்
கால 'இFப்ரீதும் மினல் ஜின்னி அன ஆதீக Bபிஹீ கBப்ல அன் தகூம மிம் மகாமிக வ இன்னீ 'அலய்ஹி லகவிய்யுன் அமீன்
ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”
قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۖ۫ لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟
قَالَகூறினார்الَّذِیْஎவர்عِنْدَهٗஅவரிடம்عِلْمٌஞானம்مِّنَஇலிருந்துالْكِتٰبِவேதத்தின்اَنَاநான்اٰتِیْكَஉமக்குக் கொண்டு வருவேன்بِهٖஅதைقَبْلَமுன்اَنْஎன்றுیَّرْتَدَّதிரும்புவதற்குاِلَیْكَஉம்மிடம்طَرْفُكَ ؕஉமது பார்வைفَلَمَّاபின்னர் எப்போதுرَاٰهُஅதை அவர் கண்டாரோمُسْتَقِرًّاநிலையாகعِنْدَهٗதம்மிடம்قَالَகூறினார்هٰذَاஇதுمِنْஇலிருந்துفَضْلِஅருட்கொடைرَبِّیْ ۖ۫என் இறைவனின்لِیَبْلُوَنِیْۤஎன்னைச் சோதிப்பதற்காகءَاَشْكُرُநான் நன்றி செலுத்துகிறேனாاَمْஅல்லதுاَكْفُرُ ؕநன்றி மறக்கிறேனாوَ مَنْமேலும் எவர்شَكَرَநன்றி செலுத்துகிறாரோفَاِنَّمَاநிச்சயமாகیَشْكُرُஅவர் நன்றி செலுத்துவதுلِنَفْسِهٖ ۚதமக்காகவேوَ مَنْமேலும் எவர்كَفَرَநன்றி மறக்கிறாரோفَاِنَّநிச்சயமாகرَبِّیْஎன் இறைவன்غَنِیٌّதேவையற்றவன்كَرِیْمٌகண்ணியமானவன்
காலல் லதீ இன்தஹூ 'இல்மும் மினல் கிதாBபி அன ஆதீக Bபிஹீ கBப்ல அய் யர்தத்த இலய்க தர்Fபுக்; Fபலம்மா ர ஆஹு முஸ்தகிர்ரன் 'இன்தஹூ கால ஹாதா மின் Fபள்லி ரBப்Bபீ லி யBப்லுவனீ 'அ-அஷ்குரு அம் அக்Fபுரு வ மன் ஷகர Fப இன்னமா யஷ்குரு லினFப்ஸிஹீ வ மன் கFபர Fப இன்ன ரBப்Bபீ கனிய்யுன் கரீம்
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
قَالَ نَكِّرُوْا لَهَا عَرْشَهَا نَنْظُرْ اَتَهْتَدِیْۤ اَمْ تَكُوْنُ مِنَ الَّذِیْنَ لَا یَهْتَدُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்نَكِّرُوْاஉருமாற்றுங்கள்لَهَاஅவளுக்குعَرْشَهَاஅவளது அரியணையைنَنْظُرْநாம் பார்ப்போம்اَتَهْتَدِیْۤஅவள் நேர்வழி பெறுவாளாاَمْஅல்லதுتَكُوْنُஅவள் இருப்பாளாمِنَஅவர்களில்الَّذِیْنَஎவர்கள்لَاஇல்லைیَهْتَدُوْنَநேர்வழி பெறுபவர்கள்
கால னக்கிரூ லஹா 'அர்ஷஹா னன்ளுர் அதஹ்ததீ அம் தகூனு மினல் லதீன லா யஹ்ததூன்
(இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”
فَلَمَّا جَآءَتْ قِیْلَ اَهٰكَذَا عَرْشُكِ ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ ۚ وَاُوْتِیْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِیْنَ ۟
فَلَمَّاஎனவே எப்போதுجَآءَتْஅவள் வந்தாளோقِیْلَகேட்கப்பட்டதுاَهٰكَذَاஇது போன்றதாعَرْشُكِ ؕஉன்னுடைய அரியணைقَالَتْஅவள் கூறினாள்كَاَنَّهٗஅது போன்றேهُوَ ۚஅதுوَ اُوْتِیْنَاமேலும் எங்களுக்கு வழங்கப்பட்டதுالْعِلْمَஞானம்مِنْஇருந்துقَبْلِهَاஇதற்கு முன்பேوَ كُنَّاமேலும் நாங்கள் இருந்தோம்مُسْلِمِیْنَமுஸ்லிம்களாக
Fபலம்மா ஜா'அத் கீல அஹாகத 'அர்ஷுகி காலத் க'அன்னஹூ ஹூ; வ ஊதீனல் 'இல்ம மின் கBப்லிஹா வ குன்னா முஸ்லிமீன்
ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
وَصَدَّهَا مَا كَانَتْ تَّعْبُدُ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اِنَّهَا كَانَتْ مِنْ قَوْمٍ كٰفِرِیْنَ ۟
وَ صَدَّهَاமேலும் அவளைத் தடுத்ததுمَاஎதனைكَانَتْஅவள் இருந்தாளோتَّعْبُدُவணங்கிக் கொண்டுمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைاِنَّهَاநிச்சயமாக அவள்كَانَتْஇருந்தாள்مِنْசேர்ந்தவளாகقَوْمٍசமூகத்தைச்كٰفِرِیْنَநிராகரிக்கும்
வ ஸத்தஹா மா கானத் தஃBபுது மின் தூனில் லாஹி இன்னஹா கானத் மின் கவ்மின் காFபிரீன்
அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.
قِیْلَ لَهَا ادْخُلِی الصَّرْحَ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَیْهَا ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِیْرَ ؕ۬ قَالَتْ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ وَاَسْلَمْتُ مَعَ سُلَیْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
قِیْلَசொல்லப்பட்டதுلَهَاஅவளிடம்ادْخُلِیநுழைவீராகالصَّرْحَ ۚமாளிகையில்فَلَمَّاஆகவே எப்போதுرَاَتْهُஅதைப் பார்த்தாளோحَسِبَتْهُஅதை எண்ணினாள்لُجَّةًதடாகமென்றுوَّ كَشَفَتْமேலும் வெளிப்படுத்தினாள்عَنْஇருந்துسَاقَیْهَا ؕஅவளுடைய இரு கெண்டைக்கால்களைقَالَஅவர் கூறினார்اِنَّهٗநிச்சயமாக அதுصَرْحٌஒரு மாளிகைمُّمَرَّدٌமெருகூட்டப்பட்டதுمِّنْகொண்டுقَوَارِیْرَ ؕ۬பளிங்குக்கற்களைقَالَتْஅவள் கூறினாள்رَبِّஎன் இறைவனேاِنِّیْநிச்சயமாக நான்ظَلَمْتُஅநீதி இழைத்துக்கொண்டேன்نَفْسِیْஎனக்கு நானேوَ اَسْلَمْتُமேலும் நான் அடிபணிந்துவிட்டேன்مَعَஉடன்سُلَیْمٰنَஸுலைமான்لِلّٰهِஅல்லாஹ்வுக்குرَبِّஇறைவனானالْعٰلَمِیْنَ۠அகிலங்களின்
கீல லஹத் குலிஸ் ஸர்ஹ Fபலம்மா ர அத் ஹு ஹஸிBபத் ஹு லுஜ்ஜத(ன்)வ் வ கஷFபத் 'அன் ஸாகய்ஹா; கால இன்னஹூ ஸர்ஹும் முமர்ரதும் மின் கவாரீர்; காலத் ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ வ அஸ்லம்து ம'அ ஸுலய்மான லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.  
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِیْقٰنِ یَخْتَصِمُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோம்اِلٰیஇடம்ثَمُوْدَஸமூதுاَخَاهُمْஅவர்களின் சகோதரரானصٰلِحًاஸாலிஹைاَنِஎன்றுاعْبُدُواநீங்கள் வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَاِذَاஅப்போதுهُمْஅவர்கள்فَرِیْقٰنِஇரு பிரிவினராகیَخْتَصِمُوْنَதர்க்கித்துக் கொண்டார்கள்
வ லகத் அர்ஸல்னா இலா தமூத அகாஹும் ஸாலிஹன் அனிஃBபுதுல் லாஹ Fப இதா ஹும் Fபரீகானி யக்தஸிமூன்
தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.
قَالَ یٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ ۚ لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்یٰقَوْمِஎன் சமூகத்தாரேلِمَஏன்تَسْتَعْجِلُوْنَஅவசரப்படுகிறீர்கள்بِالسَّیِّئَةِதீமையைقَبْلَமுன்னதாகالْحَسَنَةِ ۚநன்மைக்குلَوْ لَاஏன்تَسْتَغْفِرُوْنَமன்னிப்புத் தேடக் கூடாதுاللّٰهَஅல்லாஹ்விடம்لَعَلَّكُمْநீங்கள்تُرْحَمُوْنَஅருள் செய்யப்படலாம்
கால யா கவ்மி லிம தஸ்தஃஜிலூன Bபிஸ்ஸய்யி'அதி கBப்லல் ஹஸனதி லவ் லா தஸ் தக்Fபிரூனல் லாஹ ல'அல்லகும் துர்ஹமூன்
(அப்போது அவர்:) “என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கமாட்டீர்களா?” எனக் கூறினார்.
قَالُوا اطَّیَّرْنَا بِكَ وَبِمَنْ مَّعَكَ ؕ قَالَ طٰٓىِٕرُكُمْ عِنْدَ اللّٰهِ بَلْ اَنْتُمْ قَوْمٌ تُفْتَنُوْنَ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்اطَّیَّرْنَاநாங்கள் துர்ச்சகுனம் காண்கிறோம்بِكَஉன்னைக் கொண்டும்وَ بِمَنْமேலும் எவரைக் கொண்டும்مَّعَكَ ؕஉன்னுடன் இருக்கிறார்களோقَالَஅவர் கூறினார்طٰٓىِٕرُكُمْஉங்கள் சகுனம்عِنْدَவசம் (உள்ளது)اللّٰهِஅல்லாஹ்வின்بَلْமாறாகاَنْتُمْநீங்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்تُفْتَنُوْنَசோதிக்கப்படுகிறீர்கள்
காலுத் தய்யர்னா Bபிக வ Bபிமம் ம'அக்; கால தா'இருகும் 'இன்தல் லாஹி Bபல் அன்தும் கவ்முன் துFப்தனூன்
அதற்கவர்கள்: “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்; அவர் கூறினார்: “உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது; எனினும், நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்.”
وَكَانَ فِی الْمَدِیْنَةِ تِسْعَةُ رَهْطٍ یُّفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟
وَ كَانَமேலும் இருந்தார்கள்فِیஇல்الْمَدِیْنَةِஅந்த நகரம்تِسْعَةُஒன்பதுرَهْطٍநபர்கள்یُّفْسِدُوْنَகுழப்பம் விளைவித்தார்கள்فِیஇல்الْاَرْضِபூமிوَ لَاமேலும் இல்லைیُصْلِحُوْنَசீர்திருத்தம் செய்தார்கள்
வ கான Fபில் மதீனதி திஸ்'அது ரஹ்தி(ன்)ய் யுFப்ஸிதூன Fபில் அர்ளி வலா யுஸ்லிஹூன்
இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிகிறார்கள்.
قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَیِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِیِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்تَقَاسَمُوْاசத்தியம் செய்து கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَنُبَیِّتَنَّهٗநிச்சயமாக நாங்கள் அவரை இரவில் தாக்குவோம்وَ اَهْلَهٗஇன்னும் அவருடைய குடும்பத்தாரையும்ثُمَّபின்னர்لَنَقُوْلَنَّநிச்சயமாக நாங்கள் கூறுவோம்لِوَلِیِّهٖஅவருடைய வாரிசிடம்مَاஇல்லைشَهِدْنَاநாங்கள் சாட்சியாக இருந்தோம்مَهْلِكَஅழிவைاَهْلِهٖஅவருடைய குடும்பத்தின்وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَصٰدِقُوْنَஉண்மையாளர்களே
காலூ தகாஸமூ Bபில்லாஹி லனுBபய்யிதன்னஹூ வ அஹ்லஹூ தும்மா லனகூலன லிவலிய் யிஹீ மா ஷஹித்னா மஹ்லிக அஹ்லிஹீ வ இன்னா லஸாதிகூன்
அவர்கள்: “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).
وَمَكَرُوْا مَكْرًا وَّمَكَرْنَا مَكْرًا وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
وَ مَكَرُوْاமேலும் அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்مَكْرًاஒரு சூழ்ச்சியைوَّ مَكَرْنَاநாமும் சூழ்ச்சி செய்தோம்مَكْرًاஒரு சூழ்ச்சியைوَّ هُمْஆனால் அவர்கள்لَاஅதைیَشْعُرُوْنَஉணரவில்லை
வ மகரூ மக்ர(ன்)வ் வ மகர்னா மக்ர(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
(இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.
فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ مَكْرِهِمْ ۙ اَنَّا دَمَّرْنٰهُمْ وَقَوْمَهُمْ اَجْمَعِیْنَ ۟
فَانْظُرْஆகவே பார்ப்பீராகكَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுمَكْرِهِمْ ۙஅவர்களுடைய சூழ்ச்சியின்اَنَّاநிச்சயமாக நாம்دَمَّرْنٰهُمْஅவர்களை அழித்தோம்وَ قَوْمَهُمْமேலும் அவர்களின் சமூகத்தாரையும்اَجْمَعِیْنَஅனைவரையும்
Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபது மக்ரிஹிம் அன்னா தம்மர் னாஹும் வ கவ்மஹும் அஜ்ம'ஈன்
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்.
فَتِلْكَ بُیُوْتُهُمْ خَاوِیَةً بِمَا ظَلَمُوْا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
فَتِلْكَஆகவே அவைبُیُوْتُهُمْஅவர்களுடைய வீடுகள்خَاوِیَةًۢபாழடைந்து கிடக்கின்றனبِمَاகாரணமாகظَلَمُوْا ؕஅவர்கள் அநியாயம் செய்ததன்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதுلَاٰیَةًஓர் அத்தாட்சிلِّقَوْمٍஒரு சமூகத்தாருக்குیَّعْلَمُوْنَஅறியக்கூடிய
Fபதில்க Bபுயூதுஹும் கா வியதம் Bபிமா ளலமூ; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ் மி(ன்)ய்-யஃலமூன்
ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன; நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.
وَاَنْجَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟
وَ اَنْجَیْنَاமேலும் நாம் காப்பாற்றினோம்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ كَانُوْاமேலும் அவர்கள்یَتَّقُوْنَஅஞ்சி நடந்தார்களோ
வ அன்ஜய்னல் லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
மேலும், ஈமான் கொண்டு, (அல்லாஹ்விடம்) பயபக்தியுடையவர்களாக இருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்.
وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ ۟
وَ لُوْطًاலூத்தையும்اِذْபோதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖۤதன் சமுதாயத்தாரிடம்اَتَاْتُوْنَநீங்கள் செய்கிறீர்களாالْفَاحِشَةَமானக்கேடான செயலைوَ اَنْتُمْநீங்கள்تُبْصِرُوْنَபார்த்துக்கொண்டே
வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அதாதூனல் Fபா ஹிஷத வ அன்தும் துBப்ஸிரூன்
லூத்தையும் (நினைவு கூர்வீராக!) அவர் தம் சமூகத்தாரிடம்; “நீங்கள் பார்த்துக் கொண்டே மானக்கேடான செயலைச் செய்கின்றீர்களா?” என்று கூறினார்.
اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ ۟
اَىِٕنَّكُمْநிச்சயமாக நீங்களாلَتَاْتُوْنَஅணுகுகிறீர்கள்الرِّجَالَஆண்களைشَهْوَةًஇச்சையுடன்مِّنْவிட்டுدُوْنِதவிர்த்துالنِّسَآءِ ؕபெண்களைبَلْமாறாகاَنْتُمْநீங்கள்قَوْمٌஒரு சமூகமாகتَجْهَلُوْنَஅறியாமையில் இருக்கிறீர்கள்
அ'இன்னகும் லதாதூனர் ரிஜால ஷஹ்வதம் மின் தூனின் னிஸா'; Bபல் அன்தும் கவ்முன் தஜ்ஹலூன்
“நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்).
فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْیَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟
فَمَاஎனவே இல்லைكَانَஇருந்ததுجَوَابَபதில்قَوْمِهٖۤஅவருடைய சமூகத்தாரின்اِلَّاۤதவிரاَنْஎன்றுقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَخْرِجُوْۤاவெளியேற்றுங்கள்اٰلَகுடும்பத்தாரைلُوْطٍலூத்தின்مِّنْஇருந்துقَرْیَتِكُمْ ۚஉங்கள் ஊர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اُنَاسٌமனிதர்கள்یَّتَطَهَّرُوْنَதூய்மை பேணுபவர்கள்
Fபமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூ ஆலா லூதிம் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
அதற்கவருடைய சமுதாயத்தவர் (தம் இனத்தாரிடம்) “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரைவிட்டு நீங்கள் வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் மிகவும் பரிசுத்தமான மனிதர்களே!” என்று (பரிகாசமாகக்) கூறினார்களே தவிர வேறொரு பதிலும் அவர்களிடமில்லை.
فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗ قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِیْنَ ۟
فَاَنْجَیْنٰهُஎனவே நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ اَهْلَهٗۤமேலும் அவருடைய குடும்பத்தினரையும்اِلَّاதவிரامْرَاَتَهٗ ؗஅவருடைய மனைவியைத்قَدَّرْنٰهَاஅவளை நாம் நிர்ணயித்தோம்مِنَஆகியோரில்الْغٰبِرِیْنَபின்தங்கியவர்களில்
Fப அன்ஜய்னாஹு வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கத்தர்னாஹா மினல் காBபிரீன்
ஆனால், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர (ஈமான் கொள்ளாமல்) பின்தங்கி (அழிந்து) விட்டவர்களில் ஒருத்தியாக அவளை தீர்மானித்தோம்.
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟۠
وَ اَمْطَرْنَاமேலும் நாம் பொழியச் செய்தோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுمَّطَرًا ۚஒரு மழையைفَسَآءَஆகவே மிகக் கெட்டதாகிவிட்டதுمَطَرُமழைالْمُنْذَرِیْنَ۠எச்சரிக்கப்பட்டவர்களின்
வ அம்தர்னா 'அலய்ஹிம்ம் மதரன் Fபஸா'அ மதருல் முன்தரீன்
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்; எனவே, எச்சரிக்கப்பட்ட அவர்கள் மீது பெய்த அம்மழை மிகவும் கெட்டது.  
قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰی عِبَادِهِ الَّذِیْنَ اصْطَفٰی ؕ ءٰٓاللّٰهُ خَیْرٌ اَمَّا یُشْرِكُوْنَ ۟
قُلِகூறுவீராகالْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேوَ سَلٰمٌமேலும் சாந்திعَلٰیமீதுعِبَادِهِஅவனது அடியார்கள்الَّذِیْنَஎவர்களைاصْطَفٰی ؕஅவன் தேர்ந்தெடுத்தானோآٰللّٰهُஅல்லாஹ்வாخَیْرٌசிறந்தவன்اَمَّاஅல்லது எவற்றைیُشْرِكُوْنَؕஅவர்கள் இணைவைக்கிறார்களோ
குலில் ஹம்து லில்லாஹி வ ஸலாமுன் 'அலா 'இBபாதிஹில் லதீனஸ் தFபா; ஆல்லாஹு கய்ருன் அம்ம்மா யுஷ்ரிகூன்
(நபியே!) நீர் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனுடைய அடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக! அல்லாஹ் மேலானவனா? அல்லது அவர்கள் (அவனுக்கு) இணையாக்குபவை (மேலானவை)யா?”  
اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآىِٕقَ ذَاتَ بَهْجَةٍ ۚ مَا كَانَ لَكُمْ اَنْ تُنْۢبِتُوْا شَجَرَهَا ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ هُمْ قَوْمٌ یَّعْدِلُوْنَ ۟ؕ
اَمَّنْஅல்லது எவன்خَلَقَபடைத்தானோالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைوَ اَنْزَلَமேலும் இறக்கினானோلَكُمْஉங்களுக்காகمِّنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءً ۚநீரைفَاَنْۢبَتْنَاபின்னர் நாம் முளைக்கச் செய்தோம்بِهٖஅதைக் கொண்டுحَدَآىِٕقَதோட்டங்களைذَاتَகொண்டبَهْجَةٍ ۚஅழகியمَاஇல்லைكَانَஇருந்ததுلَكُمْஉங்களுக்குاَنْஎன்றுتُنْۢبِتُوْاநீங்கள் முளைக்கச் செய்யشَجَرَهَا ؕஅதன் மரங்களைءَاِلٰهٌஏதேனும் ஒரு இறைவனா?مَّعَஉடன்اللّٰهِ ؕஅல்லாஹ்بَلْமாறாகهُمْஅவர்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்یَّعْدِلُوْنَؕஇணையாக்குகிறார்கள்
அம்மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ அன்Zஜல லகும் மினஸ் ஸமா'இ மா'அன் Fப அன்Bபத்னா Bபிஹீ ஹதா'இக தாத Bபஹ்ஜஹ்; மா கான லகும் அன் துன்Bபிதூ ஷஜரஹா; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; Bபல் ஹும் கவ்மு(ன்)ய் யஃதிலூன்
அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِیَ وَجَعَلَ بَیْنَ الْبَحْرَیْنِ حَاجِزًا ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؕ
اَمَّنْஅல்லது எவன்جَعَلَஆக்கினானோالْاَرْضَபூமியைقَرَارًاதங்குமிடமாகوَّ جَعَلَமேலும் ஆக்கினான்خِلٰلَهَاۤஅதன் இடையேاَنْهٰرًاஆறுகளைوَّ جَعَلَமேலும் ஆக்கினான்لَهَاஅதற்குرَوَاسِیَஉறுதியான மலைகளைوَ جَعَلَமேலும் ஆக்கினான்بَیْنَஇடையில்الْبَحْرَیْنِஇரு கடல்களுக்குحَاجِزًا ؕஒரு தடுப்பைءَاِلٰهٌஓர் இறைவன் இருக்கின்றானாمَّعَஉடன்اللّٰهِ ؕஅல்லாஹ்بَلْமாறாகاَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَعْلَمُوْنَؕஅறிகிறார்கள்
அம்மன்ன் ஜ'அலல் அர்ள கரார(ன்)வ் வ ஜ'அல கிலாலஹா அன்ஹார(ன்)வ் வ ஜ'அல லஹா ரவாஸிய வ ஜ'அல Bபய்னல் Bபஹ்ரய்னி ஹாஜிZஜா; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; Bபல் அக்தருஹும் லா யஃலமூன்
இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
اَمَّنْ یُّجِیْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَیَكْشِفُ السُّوْٓءَ وَیَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ
اَمَّنْஅல்லது எவன்یُّجِیْبُபதிலளிக்கிறானோالْمُضْطَرَّநெருக்கடிக்குள்ளானவருக்குاِذَاபோதுدَعَاهُஅவனை அழைக்கும்وَ یَكْشِفُமேலும் நீக்குகிறானோالسُّوْٓءَதுன்பத்தைوَ یَجْعَلُكُمْமேலும் உங்களை ஆக்குகிறானோخُلَفَآءَபிரதிநிதிகளாகالْاَرْضِ ؕபூமியின்ءَاِلٰهٌஒரு இறைவனாمَّعَஉடன்اللّٰهِ ؕஅல்லாஹ்قَلِیْلًاமிகக் குறைவாகவேمَّاதான்تَذَكَّرُوْنَؕநீங்கள் சிந்திக்கிறீர்கள்
அம்ம(ன்)ய்-யுஜீBபுல் முள் தர்ர இதா த'ஆஹு வ யக்ஷிFபுஸ் ஸூ'அ வ யஜ்'அலுகும் குல Fபா'அல் அர்ளி 'அ-இலாஹுன் ம'அல்லாஹ் கலீலன் மா ததக் கரூன்
கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
اَمَّنْ یَّهْدِیْكُمْ فِیْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ یُّرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ تَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟ؕ
اَمَّنْஅல்லது எவன்یَّهْدِیْكُمْஉங்களுக்கு வழிகாட்டுகிறான்فِیْஇல்ظُلُمٰتِஇருள்களில்الْبَرِّநிலத்தின்وَ الْبَحْرِமற்றும் கடலின்وَ مَنْமேலும் எவன்یُّرْسِلُஅனுப்புகிறான்الرِّیٰحَகாற்றுகளைبُشْرًۢاநற்செய்தியாகبَیْنَமுன்னேیَدَیْகைகளுக்குرَحْمَتِهٖ ؕஅவனது அருளுக்குءَاِلٰهٌஏதேனும் ஒரு இறைவனாمَّعَஉடன்اللّٰهِ ؕஅல்லாஹ்تَعٰلَیமிக உயர்ந்தவன்اللّٰهُஅல்லாஹ்عَمَّاஎவற்றை விட்டும்یُشْرِكُوْنَؕஅவர்கள் இணைவைக்கிறார்களோ
அம்ம(ன்)ய்-யஹ்தீகும் Fபீ ளுலுமாதில் Bபர்ரி வல் Bபஹ்ரி வ ம(ன்)ய் யுர்ஸிலு ரியாஹ Bபுஷ்ரன் Bபய்ன யதய் ரஹ்மதிஹ்; 'அ-இலாஹுன் ம'அல்லாஹ்; த'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
اَمَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ وَمَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَمَّنْஅல்லது எவன்یَّبْدَؤُاதுவங்குகிறானோالْخَلْقَபடைப்பைثُمَّபின்னர்یُعِیْدُهٗஅதனை மீண்டும் படைக்கிறானோوَ مَنْமேலும் எவன்یَّرْزُقُكُمْஉங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறானோمِّنَஇருந்துالسَّمَآءِவானம்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிءَاِلٰهٌஏதேனும் கடவுள் உண்டாمَّعَஉடன்اللّٰهِ ؕஅல்லாஹ்قُلْகூறுவீராகهَاتُوْاகொண்டு வாருங்கள்بُرْهَانَكُمْஉங்கள் ஆதாரத்தைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
அம்ம(ன்)ய் யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ வ ம(ன்)ய்-யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ள்; 'அ-இலாஹுன் ம'அல்லஹ்; குல் ஹாதூ Bபுர்ஹானகும் இன் குன்தும் ஸாதிகீன்
முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”
قُلْ لَّا یَعْلَمُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَیْبَ اِلَّا اللّٰهُ ؕ وَمَا یَشْعُرُوْنَ اَیَّانَ یُبْعَثُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّاஇல்லைیَعْلَمُஅறிவார்مَنْஎவரும்فِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِமற்றும் பூமிالْغَیْبَமறைவானவற்றைاِلَّاதவிரاللّٰهُ ؕஅல்லாஹ்வைوَ مَاமேலும் இல்லைیَشْعُرُوْنَஅவர்கள் உணர்கிறார்கள்اَیَّانَஎப்பொழுதுیُبْعَثُوْنَஅவர்கள் எழுப்பப்படுவார்கள்
குல் லா யஃலமு மன் Fபிஸ் ஸம்மாவாதி வல் அர்ளில் கய்Bப இல்லல் லாஹ்; வமா யஷ்'உரூன அய்யான யுBப்'அதூன்
(இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”
بَلِ ادّٰرَكَ عِلْمُهُمْ فِی الْاٰخِرَةِ ۫ بَلْ هُمْ فِیْ شَكٍّ مِّنْهَا ۫ؗ بَلْ هُمْ مِّنْهَا عَمُوْنَ ۟۠
بَلِமாறாகادّٰرَكَஅற்றுப்போய்விட்டதுعِلْمُهُمْஅவர்களின் அறிவுفِیபற்றிالْاٰخِرَةِ ۫மறுமைبَلْமாறாகهُمْஅவர்கள்فِیْஇல்شَكٍّசந்தேகம்مِّنْهَا ۫ؗஅதைப்பற்றிبَلْமாறாகهُمْஅவர்கள்مِّنْهَاஅதைப்பற்றிعَمُوْنَ۠குருடர்கள்
Bபலித் தாரக 'இல்முஹும் Fபில் ஆகிரஹ்; Bபல் ஹும் Fபீ ஷக்கின் மின்ஹா Bபல் ஹும் மின்ஹா 'அமூன்
ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.  
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْۤا ءَاِذَا كُنَّا تُرٰبًا وَّاٰبَآؤُنَاۤ اَىِٕنَّا لَمُخْرَجُوْنَ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோءَاِذَاஎன்ன? எப்பொழுதுكُنَّاநாம் ஆகிவிட்டால்تُرٰبًاமண்ணாகوَّ اٰبَآؤُنَاۤமேலும் நம் முன்னோர்களும்اَىِٕنَّاநிச்சயமாக நாமா?لَمُخْرَجُوْنَநிச்சயமாக வெளியேற்றப்படுபவர்கள்
வ காலல் லதீன கFபரூ 'அ-இதா குன்னா துராBப(ன்)வ் வ ஆBபா'உனா அ'இன்னா லமுக்ரஜூன்
மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்: “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?
لَقَدْ وُعِدْنَا هٰذَا نَحْنُ وَاٰبَآؤُنَا مِنْ قَبْلُ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
لَقَدْநிச்சயமாகوُعِدْنَاவாக்களிக்கப்பட்டோம்هٰذَاஇதைنَحْنُநாங்களும்وَ اٰبَآؤُنَاமற்றும் எங்கள் முன்னோர்களும்مِنْஇருந்துقَبْلُ ۙமுன்னரேاِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاۤஅன்றிاَسَاطِیْرُகட்டுக்கதைகள்الْاَوَّلِیْنَமுன்னோர்களின்
லகத் வு'இத்னா ஹாதா னஹ்னு வ ஆBபா'உனா மின் கBப்லு இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
நிச்சயமாக, இ(ந்த அச்சுறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டே வருகிறது; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” (என்றுங் கூறுகின்றனர்).
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِیْنَ ۟
قُلْகூறுவீராகسِیْرُوْاபயணம் செய்யுங்கள்فِیஇல்الْاَرْضِபூமிفَانْظُرُوْاபின்னர் பாருங்கள்كَیْفَஎவ்வாறுكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُجْرِمِیْنَகுற்றவாளிகளின்
குல் ஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முஜ்ரிமீன்
“பூமியில் பிரயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக.
وَلَا تَحْزَنْ عَلَیْهِمْ وَلَا تَكُنْ فِیْ ضَیْقٍ مِّمَّا یَمْكُرُوْنَ ۟
وَ لَاமேலும்تَحْزَنْகவலைப்படாதீர்عَلَیْهِمْஅவர்களுக்காகوَ لَاமேலும்تَكُنْஆகிவிடாதீர்فِیْஇல்ضَیْقٍநெருக்கடிمِّمَّاஎவற்றினால்یَمْكُرُوْنَஅவர்கள் சூழ்ச்சி செய்கிறார்களோ
வ லா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வலா தகுன் Fபீ ளய்கின் மிம்மா யம்குரூன்
அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியைப் பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்مَتٰیஎப்பொழுதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குறுதிاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும்: “நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்?)” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
قُلْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ رَدِفَ لَكُمْ بَعْضُ الَّذِیْ تَسْتَعْجِلُوْنَ ۟
قُلْகூறுவீராகعَسٰۤیஒருவேளைاَنْஎன்றுیَّكُوْنَஇருக்கலாம்رَدِفَநெருங்கிவிட்டதுلَكُمْஉங்களுக்குبَعْضُசிலالَّذِیْஎதைتَسْتَعْجِلُوْنَநீங்கள் அவசரப்படுகிறீர்களோ
குல் 'அஸா அ(ன்)ய்-யகூன ரதிFப லகும் Bபஃளுல் லதீ தஸ்தஃஜிலூன்
“நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களுக்கு வந்து சேரக்கூடும்” என்று (நபியே!) நீர் கூறிவிடுவீராக.
وَاِنَّ رَبَّكَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَذُوْநிச்சயமாக உடையவன்فَضْلٍஅருட்கொடைعَلَیமீதுالنَّاسِமனிதர்கள்وَ لٰكِنَّஆனால்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஇல்லைیَشْكُرُوْنَநன்றி செலுத்துகிறார்கள்
வ இன்ன ரBப்Bபக லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரஹும் லா யஷ்குரூன்
இன்னும் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாகவே இருக்கின்றான்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
وَاِنَّ رَبَّكَ لَیَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا یُعْلِنُوْنَ ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَیَعْلَمُநன்கறிவான்مَاஎவற்றைتُكِنُّமறைக்கின்றனவோصُدُوْرُهُمْஅவர்களின் நெஞ்சங்கள்وَ مَاஇன்னும் எவற்றைیُعْلِنُوْنَஅவர்கள் வெளிப்படுத்துகிறார்களோ
வ இன்ன ரBப்Bபக ல யஃலமு மா துகின்னு ஸுதூருஹும் வமா யுஃலினூன்
மேலும்: அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான்.
وَمَا مِنْ غَآىِٕبَةٍ فِی السَّمَآءِ وَالْاَرْضِ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
وَ مَاமேலும் இல்லைمِنْஎந்த ஒருغَآىِٕبَةٍமறைவானதும்فِیஇல்السَّمَآءِவானம்وَ الْاَرْضِமற்றும் பூமிاِلَّاதவிரفِیْஇல்كِتٰبٍஒரு பதிவேடுمُّبِیْنٍதெளிவான
வமா மின் கா'இBபதின் Fபிஸ் ஸமா'இ வல் அர்ளி இல்லா Fபீ கிதாBபின் முBபீன்
வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
اِنَّ هٰذَا الْقُرْاٰنَ یَقُصُّ عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَكْثَرَ الَّذِیْ هُمْ فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاஇந்தالْقُرْاٰنَகுர்ஆன்یَقُصُّவிவரிக்கிறதுعَلٰیமீதுبَنِیْۤசந்ததியினர்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்اَكْثَرَபெரும்பாலானவற்றைالَّذِیْஎதைهُمْஅவர்கள்فِیْهِஅதில்یَخْتَلِفُوْنَமுரண்படுகிறார்களோ
இன்ன ஹாதல் குர்ஆன யகுஸ்ஸு 'அலா Bபனீ இஸ்ரா'ஈல அக்தரல் லதீ ஹும் Fபீஹி யக்தலிFபூன்
நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது.
وَاِنَّهٗ لَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟
وَ اِنَّهٗமேலும், நிச்சயமாக அதுلَهُدًیஒரு நேர்வழியாகும்وَّ رَحْمَةٌமேலும் ஓர் அருளாகும்لِّلْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களுக்கு
வ இன்னஹூ லஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில்மு'மினீன்
மேலும்: நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாக (நல்லருளாக)வும் இருக்கிறது.
اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ بِحُكْمِهٖ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۙۚ
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்یَقْضِیْதீர்ப்பளிப்பான்بَیْنَهُمْஅவர்களுக்கிடையேبِحُكْمِهٖ ۚதனது தீர்ப்பினால்وَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْعَلِیْمُۙۚநன்கறிந்தவன்
இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் Bபிஹுக்மிஹ்; வ ஹுவல் 'அZஜீZஜுல் 'அலீம்
நிச்சயமாக உம் இறைவன் (இறுதியில்) தன் கட்டளையைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான் - மேலும், அவன்தான் மிகைத்தவன்; நன்கறிந்தவன்.
فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّكَ عَلَی الْحَقِّ الْمُبِیْنِ ۟
فَتَوَكَّلْஎனவே நம்பிக்கை வைப்பீராகعَلَیமீதுاللّٰهِ ؕஅல்லாஹ்வின்اِنَّكَநிச்சயமாக நீர்عَلَیமீதுالْحَقِّசத்தியத்தின்الْمُبِیْنِதெளிவான
Fபதவக்கல் 'அலல் லாஹி இன்னக 'அலல் ஹக்கில் முBபீன்
எனவே, (நபியே!) அல்லாஹ்வின் மீதே (முற்றிலும்) நம்பிக்கை வைப்பீராக நிச்சயமாக நீர் தெளிவான உண்மையின் மீது இருக்கின்றீர்.
اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰی وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِیْنَ ۟
اِنَّكَநிச்சயமாக நீர்لَاமாட்டீர்تُسْمِعُகேட்கச் செய்யالْمَوْتٰیஇறந்தோரைوَ لَاமேலும் மாட்டீர்تُسْمِعُகேட்கச் செய்யالصُّمَّசெவிடர்களைالدُّعَآءَஅழைப்பைاِذَاபோதுوَلَّوْاஅவர்கள் திரும்பும்مُدْبِرِیْنَபுறங்காட்டியவர்களாக
இன்னக லா துஸ்மி'உல் மவ்தா வலா துஸ்மி'உஸ் ஸும்மத் து'ஆ இதா வல்லவ் முத்Bபிரீன்
நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; - அவ்வாறே செவிடர்களையும் - அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது - (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது.
وَمَاۤ اَنْتَ بِهٰدِی الْعُمْیِ عَنْ ضَلٰلَتِهِمْ ؕ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ یُّؤْمِنُ بِاٰیٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ۟
وَ مَاۤமேலும் இல்லைاَنْتَநீர்بِهٰدِیவழிகாட்டுபவர்الْعُمْیِகுருடர்களைعَنْஇருந்துضَلٰلَتِهِمْ ؕஅவர்களின் வழிகேட்டில்اِنْஇல்லைتُسْمِعُநீர் கேட்கச் செய்வீர்اِلَّاதவிரمَنْஎவர்یُّؤْمِنُநம்பிக்கை கொள்கிறாரோبِاٰیٰتِنَاநம் வசனங்களின் மீதுفَهُمْஎனவே அவர்கள்مُّسْلِمُوْنَமுஸ்லிம்கள்
வ மா அன்த Bபிஹாதில் 'உம்யி 'அன் ளலாலதிஹிம் இன் துஸ்மி'உ இல்லா மய் யு'மினு Bபி ஆயாதினா Fபஹும் முஸ்லிமூன்
இன்னும்: நீர் குருடர்களையும் அவர்களுடைய வழிகேட்டிலிருந்து (அகற்றி) நேர் வழியில் செலுத்த முடியாது - எவர்கள் நம் வசனங்களை நம்புகிறார்களோ அவர்களைத் தான் (அவற்றைக்) கேட்கும்படி நீர் செய்ய முடியும்; ஏனெனில் அவர்கள் (அவற்றை) முற்றிலும் ஏற்றுக்கொள்வர்.
وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْ ۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰیٰتِنَا لَا یُوْقِنُوْنَ ۟۠
وَ اِذَاமேலும் எப்போதுوَقَعَஉறுதியாகிறதோالْقَوْلُவாக்குعَلَیْهِمْஅவர்கள் மீதுاَخْرَجْنَاநாம் வெளிப்படுத்துவோம்لَهُمْஅவர்களுக்காகدَآبَّةًஒரு பிராணியைمِّنَஇருந்துالْاَرْضِபூமிتُكَلِّمُهُمْ ۙஅவர்களிடம் அது பேசும்اَنَّஎன்றுالنَّاسَமனிதர்கள்كَانُوْاஇருந்தார்கள்بِاٰیٰتِنَاநம் வசனங்களைلَاஇல்லைیُوْقِنُوْنَ۠உறுதியாக நம்புபவர்களாக
வ இதா வக'அல் கவ்லு 'அலய்ஹிம் அக்ரஜ்னா லஹும் தாBப்Bபதன் மினல் அர்ளி துகல் லிமுஹும் அன்னன் னாஸ கானூ Bபி ஆயாதினா லா யூகினூன்
அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
وَیَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ اُمَّةٍ فَوْجًا مِّمَّنْ یُّكَذِّبُ بِاٰیٰتِنَا فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَ یَوْمَஇன்னும் அந்த நாளில்نَحْشُرُநாம் ஒன்று திரட்டுவோம்مِنْஇருந்துكُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயத்தில்فَوْجًاஒரு கூட்டத்தைمِّمَّنْஎவர்கள்یُّكَذِّبُபொய்ப்பிக்கிறார்களோبِاٰیٰتِنَاநம்முடைய வசனங்களைفَهُمْபின்னர் அவர்கள்یُوْزَعُوْنَஅணிவகுக்கப்படுவார்கள்
வ யவ்ம னஹ்ஷுரு மின் குல்லி உம்மதின் Fபவ்ஜன் மிம்ம(ன்)ய் யுகத்திBபு Bபி ஆயாதினா Fபஹும் யூZஜ'ஊன்
(அவர்களிலுள்ள) ஒவ்வொரு சமுதாயத்தாரிலும் நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை(ப் பிரித்து) ஒரு படையாக நாம் சேகரிக்கும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக).
حَتّٰۤی اِذَا جَآءُوْ قَالَ اَكَذَّبْتُمْ بِاٰیٰتِیْ وَلَمْ تُحِیْطُوْا بِهَا عِلْمًا اَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
حَتّٰۤیவரைاِذَاபோதுجَآءُوْஅவர்கள் வந்தقَالَஅவன் கூறுவான்اَكَذَّبْتُمْநீங்கள் பொய்ப்பித்தீர்களாبِاٰیٰتِیْஎன் வசனங்களைوَ لَمْமேலும் இல்லைتُحِیْطُوْاநீங்கள் சூழ்ந்து கொண்டீர்கள்بِهَاஅவற்றைعِلْمًاஅறிவால்اَمَّا ذَاஅல்லது என்னكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தீர்கள்
ஹத்தா இதா ஜா'ஊ கால அகத்தBப்தும் Bபி ஆயாதீ வ லம் துஹீதூ Bபிஹா 'இல்மன் அம்மாதா குன்தும் தஃமலூன்
அவர்கள் யாவரும் வந்ததும்: “நீங்கள் என் வசனங்களைச் சூழ்ந்தறியாத நிலையில் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்பான்.
وَوَقَعَ الْقَوْلُ عَلَیْهِمْ بِمَا ظَلَمُوْا فَهُمْ لَا یَنْطِقُوْنَ ۟
وَ وَقَعَமேலும் உறுதியாகிவிட்டதுالْقَوْلُஅந்த வாக்குعَلَیْهِمْஅவர்கள் மீதுبِمَاகாரணமாகظَلَمُوْاஅவர்கள் அநியாயம் செய்ததின்فَهُمْஎனவே அவர்கள்لَاமாட்டார்கள்یَنْطِقُوْنَபேச
வ வக'அல் கவ்லு 'அலய்ஹிம் Bபிமா ளலமூ Fபஹும் லா யன்திகூன்
அன்றியும், அவர்கள் செய்து வந்த அக்கிரமத்தின் காரணத்தினால் அவர்கள் மீது (வேதனை பற்றிய) வாக்கு ஏற்பட்டு விட்டது; ஆகவே, அவர்கள் பேசமாட்டார்கள்.
اَلَمْ یَرَوْا اَنَّا جَعَلْنَا الَّیْلَ لِیَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
اَلَمْஇல்லையாیَرَوْاஅவர்கள் பார்க்கاَنَّاநிச்சயமாக நாம்جَعَلْنَاஆக்கினோம் என்பதைالَّیْلَஇரவைلِیَسْكُنُوْاஅவர்கள் ஓய்வு பெறுவதற்காகفِیْهِஅதில்وَ النَّهَارَபகலையும்مُبْصِرًا ؕவெளிச்சம் தருவதாகاِنَّநிச்சயமாகفِیْஉள்ளனذٰلِكَஅதில்لَاٰیٰتٍநிச்சயமாக அத்தாட்சிகள்لِّقَوْمٍசமூகத்தாருக்குیُّؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளும்
அலம் யரவ் அன்னா ஜ'அல்னல் லய்ல லி யஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ் மி(ன்)ய்-யு'மினூன்
நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَیَوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَفَزِعَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ وَكُلٌّ اَتَوْهُ دٰخِرِیْنَ ۟
وَ یَوْمَமேலும் அந்நாளில்یُنْفَخُஊதப்படும்فِیஇல்الصُّوْرِசூர் (எக்காளம்)فَفَزِعَஅப்போது திடுக்கிடுவார்கள்مَنْஎவர்فِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ مَنْஇன்னும் எவர்فِیஇல்الْاَرْضِபூமிاِلَّاதவிரمَنْஎவரைشَآءَநாடுகிறானோاللّٰهُ ؕஅல்லாஹ்وَ كُلٌّமேலும் அனைவரும்اَتَوْهُஅவனிடம் வருவார்கள்دٰخِرِیْنَசிறுமையடைந்தவர்களாக
வ யவ்ம யுன்Fபகு Fபிஸ் ஸூரி FபFபZஜி'அ மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ளி இல்லா மன் ஷா'அல் லாஹ்; வ குல்லுன் அதவ்ஹு தாகிரீன்
இன்னும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாளை (நபியே! நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்; அவ்வனைவரும் பணிந்தவர்களாக அவனிடம் வருவார்கள்.
وَتَرَی الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَّهِیَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ؕ صُنْعَ اللّٰهِ الَّذِیْۤ اَتْقَنَ كُلَّ شَیْءٍ ؕ اِنَّهٗ خَبِیْرٌ بِمَا تَفْعَلُوْنَ ۟
وَ تَرَیமேலும் நீர் பார்க்கிறீர்الْجِبَالَமலைகளைتَحْسَبُهَاஅவற்றை நீர் எண்ணுகிறீர்جَامِدَةًஅசையாது நிற்பதாகوَّ هِیَஆனால் அவைتَمُرُّநகர்கின்றனمَرَّநகர்வதைப் போலالسَّحَابِ ؕமேகங்கள்صُنْعَகைவண்ணம்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِیْۤஅவன் எத்தகையவன் என்றால்اَتْقَنَசெம்மையாக்கினான்كُلَّஒவ்வொருشَیْءٍ ؕபொருளையும்اِنَّهٗநிச்சயமாக அவன்خَبِیْرٌۢநன்கு அறிந்தவன்بِمَاஎவற்றைتَفْعَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
வ தரல் ஜிBபால தஹ்ஸBபுஹா ஜாமிதத(ன்)வ் வ ஹிய தமுர்ரு மர்ரஸ் ஸஹாBப்; ஸுன்'அல் லாஹில் லதீ அத்கன குல்ல ஷய்'; இன்னஹூ கBபீருன் Bபிமா தFப்'அலூன்
இன்னும் நீர் மலைகளைப் பார்த்து அவை மிகவும் உறுதியாக இருப்பதாக எண்ணுகிறீர்; (எனினும் அந்நாளில்) அவை மேகங்களைப் போல் பறந்தோடும்; ஒவ்வொரு பொருளையும் உறுதியாக்கிய அல்லாஹ்வின் செயல்திறனாலேயே (அவ்வாறு நிகழும்.) நிச்சயமாக, அவன் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன்.
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ وَهُمْ مِّنْ فَزَعٍ یَّوْمَىِٕذٍ اٰمِنُوْنَ ۟
مَنْஎவர்جَآءَகொண்டு வருகிறாரோبِالْحَسَنَةِநன்மையைفَلَهٗஅவருக்கு உண்டுخَیْرٌசிறந்ததுمِّنْهَا ۚஅதைவிடوَ هُمْமேலும் அவர்கள்مِّنْஇருந்துفَزَعٍதிடுக்கத்தில்یَّوْمَىِٕذٍஅந்நாளின்اٰمِنُوْنَஅச்சமற்றிருப்பார்கள்
மன் ஜா'அ Bபில் ஹஸனதி Fபலஹூ கய்ருன் மின்ஹா வ ஹும் மின் FபZஜ'இ(ன்)ய் யவ்ம'இதின் ஆமினூன்
(அந்நாளில்) எவர் நன்மையைக் கொண்டு வருகிறாரோ, அவருக்கு அதைவிட மேலானது உண்டு - மேலும் அவர்கள் அந்நாளின் திடுக்கத்தை விட்டும் அச்சந் தீர்ந்து இருப்பார்கள்.
وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَكُبَّتْ وُجُوْهُهُمْ فِی النَّارِ ؕ هَلْ تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَ مَنْஇன்னும் எவர்جَآءَவருவாரோبِالسَّیِّئَةِதீமையுடன்فَكُبَّتْஅப்போது குப்புறத் தள்ளப்படும்وُجُوْهُهُمْஅவர்களின் முகங்கள்فِیஉள்ளேالنَّارِ ؕநெருப்பில்هَلْஎன்னتُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்اِلَّاதவிரمَاஎதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்துகொண்டு
வ மன் ஜா'அ Bபிஸ்ஸய் யி'அதி FபகுBப்Bபத் வுஜூஹுஹும் Fபின் னாரி ஹல் துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
இன்னும்: எவர் தீமையைக் கொண்டு வருகிறாரோ அவர்களுடைய முகங்கள் குப்புற (நரக) நெருப்பில் தள்ளப்படும்; “நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு அன்றி (வேறு) நீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று கூறப்படும்.)
اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ رَبَّ هٰذِهِ الْبَلْدَةِ الَّذِیْ حَرَّمَهَا وَلَهٗ كُلُّ شَیْءٍ ؗ وَّاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟ۙ
اِنَّمَاۤநிச்சயமாகاُمِرْتُநான் கட்டளையிடப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَعْبُدَநான் வணங்கرَبَّஇறைவனைهٰذِهِஇந்தالْبَلْدَةِநகரத்தின்الَّذِیْஎவன்حَرَّمَهَاஇதனைப் புனிதமாக்கினானோوَ لَهٗமேலும் அவனுக்கேكُلُّஒவ்வொருشَیْءٍ ؗபொருளும்وَّ اُمِرْتُமேலும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்اَنْஎன்றுاَكُوْنَநான் இருக்க வேண்டும்مِنَஒருவனாகالْمُسْلِمِیْنَۙமுஸ்லிம்களில்
இன்னமா உமிர்து அன் அஃBபுத ரBப்Bப ஹாதிஹில் Bபல்ததில் லதீ ஹர்ரமஹா வ லஹூ குல்லு ஷய்'இ(ன்)வ் வ உமிர்து அன் அகூன மினல் முஸ்லிமீன்
“இந்த ஊரை எவன் கண்ணியப் படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே முற்றிலும் வழிபட்டவானக இருக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று நபியே! நீர் கூறுவீராக).
وَاَنْ اَتْلُوَا الْقُرْاٰنَ ۚ فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَقُلْ اِنَّمَاۤ اَنَا مِنَ الْمُنْذِرِیْنَ ۟
وَ اَنْமேலும் நான்اَتْلُوَاஓதுமாறும்الْقُرْاٰنَ ۚகுர்ஆனைفَمَنِஆகவே எவர்اهْتَدٰیநேர்வழி பெறுகிறாரோفَاِنَّمَاநிச்சயமாக அவர்یَهْتَدِیْநேர்வழி பெறுகிறார்لِنَفْسِهٖ ۚதமக்காகவேوَ مَنْமேலும் எவர்ضَلَّவழிகெடுகிறாரோفَقُلْநீர் கூறுவீராகاِنَّمَاۤநிச்சயமாகاَنَاநான்مِنَஒருவன்الْمُنْذِرِیْنَஎச்சரிக்கை செய்பவர்களில்
வ அன் அத்லுவல் குர்ஆன Fபமனிஹ் ததா Fப இன்னமா யஹ்ததீ லினFப்ஸிஹீ வ மன் ளல்ல Fபகுல் இன்னமா அன மினல் முன்திரீன்
இன்னும்: குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர்வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக: “நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.“
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ سَیُرِیْكُمْ اٰیٰتِهٖ فَتَعْرِفُوْنَهَا ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠
وَ قُلِமேலும் கூறுவீராகالْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேسَیُرِیْكُمْவிரைவில் அவன் உங்களுக்குக் காண்பிப்பான்اٰیٰتِهٖதன் அத்தாட்சிகளைفَتَعْرِفُوْنَهَا ؕஅப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்وَ مَاமேலும் இல்லைرَبُّكَஉமது இறைவன்بِغَافِلٍபராமுகமாகعَمَّاஎவற்றைப் பற்றிتَعْمَلُوْنَ۠நீங்கள் செய்கிறீர்களோ
வ குலில் ஹம்து லில்லாஹி ஸ யுரீகும் ஆயாதிஹீ Fப தஃரிFபூனஹா; வமா ரBப்Bபுக BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
இன்னும் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை.