53. ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)

மக்கீ, வசனங்கள்: 62

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالنَّجْمِ اِذَا هَوٰی ۟ۙ
وَالنَّجْمِநட்சத்திரத்தின் மீது சத்தியமாகاِذَا هَوٰىۙ‏அது விழும்போது
வன்னஜ்மி இதா ஹவா
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰی ۟ۚ
مَا ضَلَّவழி தவறவுமில்லைصَاحِبُكُمْஉங்கள் தோழர்وَمَا غَوٰى‌ۚ‏வழி கெடவுமில்லை
மா ளல்ல ஸாஹிBபுகும் வமா கவா
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
وَمَا یَنْطِقُ عَنِ الْهَوٰی ۟ؕ
وَمَا يَنْطِقُஅவர் பேச மாட்டார்عَنِ الْهَوٰىؕ‏மன இச்சையால்
வமா ய்யன்திகு 'அனில்ஹவா
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
اِنْ هُوَ اِلَّا وَحْیٌ یُّوْحٰی ۟ۙ
اِنْ هُوَஇது வேறு இல்லைاِلَّاதவிரوَحْىٌவஹ்யேيُّوْحٰىۙ‏அறிவிக்கப்படுகின்ற(து)
இன் ஹுவ இல்லா வஹ்யு(ன்)ய் யூஹா
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
عَلَّمَهٗ شَدِیْدُ الْقُوٰی ۟ۙ
عَلَّمَهٗஇவருக்கு இதை கற்பித்தார்شَدِيْدُவலிமைமிக்கவர்الْقُوٰىۙ‏ஆற்றலால்
'அல்லமஹூ ஷதீதுல் குவா
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
ذُوْ مِرَّةٍ ؕ فَاسْتَوٰی ۟ۙ
ذُوْ مِرَّةٍؕஅழகிய தோற்றமுடையவர்فَاسْتَوٰىۙ‏நேர் சமமானார்(கள்)
தூ மிர்ரதின் Fபஸ்தவா
(அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰی ۟ؕ
وَهُوَஅவரும்بِالْاُفُقِவான உச்சியில்الْاَعْلٰى ؕ‏மிக உயர்ந்த
வ ஹுவ Bபில் உFபுகில் அஃலா
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۟ۙ
ثُمَّபிறகுدَنَاநெருக்கமானார்فَتَدَلّٰىۙ‏இன்னும் மிக அதிகமாக நெருங்கினார்
தும்ம தனா Fபததல்லா
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
فَكَانَ قَابَ قَوْسَیْنِ اَوْ اَدْنٰی ۟ۚ
فَكَانَஆகிவிட்டார்قَابَமிக நெருக்கமாகقَوْسَيْنِஇரண்டு வில்லின் அளவுக்குاَوْஅல்லதுاَدْنٰى‌ۚ‏அதைவிட
Fபகான காBப கவ்ஸய்னி அவ் அத்னா
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
فَاَوْحٰۤی اِلٰی عَبْدِهٖ مَاۤ اَوْحٰی ۟ؕ
فَاَوْحٰۤىவஹீ அறிவித்தார்اِلٰى عَبْدِهٖஅவனுடைய அடிமைக்குمَاۤ اَوْحٰىؕ‏எதை வஹீ அறிவித்தானோ
Fப அவ்ஹா இலா 'அBப்திஹீ மா அவ்ஹா
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰی ۟
مَا كَذَبَபொய்ப்பிக்கவில்லைالْفُؤَادُஉள்ளம்مَا رَاٰى‏எதை பார்த்தாரோ
மா கதBபல் Fபு'ஆது மா ர ஆ
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
اَفَتُمٰرُوْنَهٗ عَلٰی مَا یَرٰی ۟
اَفَتُمٰرُوْنَهٗஅவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?عَلٰى مَا يَرٰى‏அவர் பார்த்ததில்
அFபதுமாரூனஹூ 'அலா மாயரா
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰی ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகرَاٰهُஅவர் அவரைப் பார்த்தார்نَزْلَةً اُخْرٰىۙ‏மற்றொரு முறை
வ லகத் ர ஆஹு னZஜ்லதன் உக்ரா
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰی ۟
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى‏சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில்
'இன்த ஸித்ரதில் முன்தஹா
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰی ۟ؕ
عِنْدَهَاஅங்குதான் இருக்கின்றதுجَنَّةُசொர்க்கம்الْمَاْوٰىؕ‏அல்மஃவா
'இன்தஹா ஜன்னதுல் மாவா
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
اِذْ یَغْشَی السِّدْرَةَ مَا یَغْشٰی ۟ۙ
اِذْ يَغْشَىசூழ்ந்து கொள்ளும்போதுالسِّدْرَةَஅந்த சித்ராவைمَا يَغْشٰىۙ‏எது சூழ்ந்து கொள்ளுமோ அது
இத் யக்ஷஸ் ஸித்ரத மா யக்'ஷா
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰی ۟
مَا زَاغَசாயவில்லைالْبَصَرُபார்வைوَمَا طَغٰى‏மீறவுமில்லை
மா Zஜாகல் Bபஸரு வமா தகா
(அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
لَقَدْ رَاٰی مِنْ اٰیٰتِ رَبِّهِ الْكُبْرٰی ۟
لَقَدْ رَاٰىதிட்டவட்டமாக பார்த்தார்مِنْ اٰيٰتِஅத்தாட்சிகளில்رَبِّهِதனது இறைவனின்الْكُبْرٰى‏பெரிய
லகத் ர ஆ மின் ஆயாதி ரBப்Bபிஹில் குBப்ரா
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
اَفَرَءَیْتُمُ اللّٰتَ وَالْعُزّٰی ۟ۙ
اَفَرَءَيْتُمُநீங்கள் அறிவியுங்கள்!اللّٰتَலாத்وَالْعُزّٰىۙ‏இன்னும் உஸ்ஸா
அFபர'அய்துமுல் லாத வல் 'உZஜ்Zஜா
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰی ۟
وَمَنٰوةَஇன்னும் மனாத்தைப் பற்றிالثَّالِثَةَமூன்றாவதுالْاُخْرٰى‏மற்றொரு
வ மனாதத் தாலிததல் உக்ரா
மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)
اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُ ۟
اَلَـكُمُஉங்களுக்கு?الذَّكَرُஆண் பிள்ளையும்وَلَهُஅவனுக்குالْاُنْثٰى‏பெண் பிள்ளையுமா?
அ-லகுமுத் தகரு வ லஹுல் உன்தா
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِیْزٰی ۟
تِلْكَஇதுاِذًاஅப்படியென்றால்قِسْمَةٌஒரு பங்கீடாகும்ضِيْزٰى‏அநியாயமான
தில்க இதன் கிஸ்மதுன் ளீZஜா
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
اِنْ هِیَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَی الْاَنْفُسُ ۚ وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰی ۟ؕ
اِنْ هِىَஇவை வேறில்லைاِلَّاۤ اَسْمَآءٌபெயர்களே தவிரسَمَّيْتُمُوْهَاۤஇவற்றுக்கு பெயர் வைத்தீர்கள்اَنْتُمْநீங்களும்وَاٰبَآؤُكُمْஉங்கள் மூதாதைகளும்مَّاۤ اَنْزَلَஇறக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்بِهَاஇவற்றுக்குمِنْ سُلْطٰنٍ‌ؕஎவ்வித ஆதாரத்தையும்اِنْ يَّتَّبِعُوْنَநீங்கள் பின்பற்றுவதில்லைاِلَّاதவிரالظَّنَّவீண்எண்ணத்தையும்وَمَا تَهْوَىவிரும்புகின்றதையும்الْاَنْفُسُ‌ۚமனங்கள்وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَهُمْவந்துள்ளதுمِّنْ رَّبِّهِمُஅவர்களின் இறைவனிடமிருந்துالْهُدٰىؕ‏நேர்வழி
இன் ஹிய இல்லா அஸ்மா'உன் ஸம்மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா அன்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; இ(ன்)ய்யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வமா தஹ்வல் அன்Fபுஸு வ லகத் ஜா'அஹும் மிர் ரBப்Bபிஹிமுல் ஹுதா
இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰی ۟ؗۖ
اَمْ لِلْاِنْسَانِமனிதனுக்கு கிடைத்துவிடுமா?مَا تَمَنّٰى   ۖ‏அவன் விரும்பியது
அம் லில் இன்ஸானி மா தமன் னா
அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?
فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰی ۟۠
فَلِلّٰهِஅல்லாஹ்விற்கே உரியதுالْاٰخِرَةُமறுமையும்وَالْاُوْلٰى‏இந்த உலகமும்
Fபலில்லாஹில் ஆகிரது வல் ஊலா
ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.  
وَكَمْ مِّنْ مَّلَكٍ فِی السَّمٰوٰتِ لَا تُغْنِیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا اِلَّا مِنْ بَعْدِ اَنْ یَّاْذَنَ اللّٰهُ لِمَنْ یَّشَآءُ وَیَرْضٰی ۟
وَكَمْஎத்தனையோمِّنْ مَّلَكٍவானவர்கள்فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளلَا تُغْنِىْதடுக்காதுشَفَاعَتُهُمْஅவர்களின் சிபாரிசுشَيْــٴًــــاஎதையும்اِلَّا مِنْۢ بَعْدِதவிர/பின்னரேاَنْ يَّاْذَنَஅனுமதிக்குاللّٰهُஅல்லாஹ்வின்لِمَنْ يَّشَآءُஅவன் நாடுகின்றவருக்குوَيَرْضٰى‏இன்னும் அவன் விரும்புகின்ற(வருக்கு)
வ கம் மிம் மலகின் Fபிஸ்ஸமாவாதி லா துக்னீ ஷFபா'அதுஹும் ஷய்'அன் இல்லா மிம் Bபஃதி அ(ன்)ய்யாதனல் லாஹு லிம(ன்)ய் யஷா'உ வ யர்ளா
அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَیُسَمُّوْنَ الْمَلٰٓىِٕكَةَ تَسْمِیَةَ الْاُ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளாதவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைلَيُسَمُّوْنَபெயர் சூட்டுகின்றார்கள்الْمَلٰٓٮِٕكَةَவானவர்களுக்குتَسْمِيَةَபெயர்களைالْاُنْثٰى‏பெண்களின்
இன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி ல யுஸம்மூனல் மலா'இகத தஸ்மியதல் உன்தா
நிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர்.
وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ ۚ وَاِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ۟ۚ
وَمَا لَهُمْஅவர்களுக்கு இல்லைبِهٖஅதைப் பற்றிمِنْ عِلْمٍ‌ؕஎவ்வித கல்வி அறிவும்اِنْ يَّتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுவதில்லைاِلَّاதவிரالظَّنَّ‌ۚவீண் எண்ணத்தைوَاِنَّநிச்சயமாகالظَّنَّவீண் எண்ணம்لَا يُغْنِىْபலன் தராதுمِنَ الْحَـقِّஉண்மைக்கு பதிலாகشَيْـٴًـــاۚ‏அறவே
வமா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன்னள் ளன்ன லா யுக்னீ மினல் ஹக்கி ஷய்'ஆ
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை; நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.
فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰی ۙ۬ عَنْ ذِكْرِنَا وَلَمْ یُرِدْ اِلَّا الْحَیٰوةَ الدُّنْیَا ۟ؕ
فَاَعْرِضْஆகவே, நீர் புறக்கணிப்பீராக!عَنْ مَّنْ تَوَلّٰى ۙவிலகியவர்களைعَنْ ذِكْرِنَاநம் நினைவை விட்டுوَلَمْ يُرِدْஅவர்கள் நாடவில்லைاِلَّاதவிரالْحَيٰوةَ الدُّنْيَا ؕ‏உலக வாழ்க்கையை
Fப அஃரிள் 'அம் மன் தவல்லா 'அன் திக்ரினா வ லம் யுரித் இல்லல் ஹயாதத் துன்யா
ஆகவே, எவன் நம்மை தியானிப்பதை விட்டும் பின் வாங்கிக் கொண்டானோ - இவ்வுலக வாழ்வையன்றி வேறெதையும் நாடவில்லையோ அவனை (நபியே!) நீர் புறக்கணித்து விடும்.
ذٰلِكَ مَبْلَغُهُمْ مِّنَ الْعِلْمِ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۙ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰی ۟
ذٰ لِكَஅதுதான்مَبْلَـغُهُمْஅவர்களது முதிர்ச்சியாகும்مِّنَ الْعِلْمِ‌ ؕகல்வியின்اِنَّநிச்சயமாகرَبَّكَ هُوَஉமது இறைவன்தான்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنْ ضَلَّவழிதவறியவர்களைعَنْ سَبِيْلِهٖ ۙதனது பாதையை விட்டுوَهُوَஇன்னும் அவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنِ اهْتَدٰى‏நேர்வழி பெற்றவர்களையும்
தலிக மBப்லகுஹும் மினல் 'இல்ம்; இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீ லிஹீ வ ஹுவ அஃலமு Bபிமனிஹ் ததா
ஏனெனில் அவர்களுடைய மொத்தக் கல்வி ஞானம் (செல்வது) அந்த எல்லை வரைதான்; நிச்சயமாக, உம்முடைய இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யார் என்பதை நன்கறிகிறான்; நேரான வழி பெற்றவன் யார் என்பதையும் அவன் நன்கறிகிறான்.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۙ لِیَجْزِیَ الَّذِیْنَ اَسَآءُوْا بِمَا عَمِلُوْا وَیَجْزِیَ الَّذِیْنَ اَحْسَنُوْا بِالْحُسْنٰی ۟ۚ
وَلِلّٰهِஅல்லாஹ்விற்கே உரியனمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவை(யும்)وَمَا فِى الْاَرْضِۙபூமியில்உள்ளவையும்لِيَجْزِىَஇறுதியில் அவன் கூலி கொடுப்பான்الَّذِيْنَ اَسَآءُوْاதீமை செய்தவர்களுக்குبِمَا عَمِلُوْاஅவர்கள் செய்தவற்றுக்குوَيَجْزِىَகூலி கொடுப்பான்الَّذِيْنَ اَحْسَنُوْاநன்மை செய்தவர்களுக்குبِالْحُسْنٰى‌ ۚ‏சொர்க்கத்தை
வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி லியஜ்Zஜியல் லதீன அஸா'ஊ Bபிமா 'அமிலூ வ யஜ்Zஜியல் லதீன அஹ்ஸனூ Bபில்ஹுஸ்னா
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).
اَلَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ؕ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ ۚ فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ ؕ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰی ۟۠
اَلَّذِيْنَஅவர்கள்يَجْتَنِبُوْنَவிலகி இருப்பார்கள்كَبٰٓٮِٕرَ الْاِثْمِபெரும் பாவங்களை விட்டும்وَالْفَوَاحِشَஇன்னும் மானக்கேடான செயல்களை விட்டும்اِلَّاதவிரاللَّمَمَ‌ؕசிறு தவறுகளைاِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்وَاسِعُ الْمَغْفِرَةِ‌ؕவிசாலமான மன்னிப்புடையவன்هُوَஅவன்اَعْلَمُமிக அறிந்தவனாகبِكُمْஉங்களைاِذْ اَنْشَاَكُمْஉங்களை உருவாக்கிய போதும்مِّنَ الْاَرْضِபூமியில் இருந்துوَاِذْ اَنْتُمْநீங்கள் இருந்த போதும்اَجِنَّةٌசிசுக்களாகفِىْ بُطُوْنِவயிறுகளில்اُمَّهٰتِكُمْ‌ۚஉங்கள் தாய்மார்களின்فَلَا تُزَكُّوْۤاஆகவே, பீத்திக் கொள்ளாதீர்கள்اَنْفُسَكُمْ‌ ؕஉங்களை நீங்களேهُوَஅவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنِ اتَّقٰى‏அல்லாஹ்வை அஞ்சியவர்களை
அல்லதீன யஜ்தனிBபூன கBபா'இரல் இத்மி வல்Fபவா ஹிஷ இல்லல் லமம்; இன்ன ரBப்Bபக வாஸி'உல் மக்Fபிரஹ்; ஹுவ அஃலமு Bபிகும் இத் அன்ஷ அகும் மினல் அர்ளி வ இத் அன்தும் அஜின்னதுன் Fபீ Bபுதூனி உம்ம ஹாதிகும் Fபலா துZஜக்கூ அன்Fபுஸகும் ஹுவ அஃலமு Bபிமனித் தகா
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.  
اَفَرَءَیْتَ الَّذِیْ تَوَلّٰی ۟ۙ
اَفَرَءَيْتَநீர் அறிவிப்பீராக!الَّذِىْஒருவன்تَوَلّٰىۙ‏புறக்கணித்தான்
அFபர'அய்தல் லதீ தவல்லா
(நபியே! உறுதியின்றி உம்மை விட்டும் முகம்) திரும்பிக் கொண்டனர் பார்த்தீரா?
وَاَعْطٰی قَلِیْلًا وَّاَكْدٰی ۟
وَاَعْطٰىஇன்னும் கொடுத்தான்قَلِيْلًاகொஞ்சம்وَّاَكْدٰى‏பிறகு நிறுத்திக் கொண்டான்
வ அஃதா கலீல(ன்)வ் வ அக்தா
அவன் ஒரு சிறிதே கொடுத்தான்; பின்னர் (கொடுக்க வேண்டியதைக் கொடாது) நிறுத்திக் கொண்டான்.
اَعِنْدَهٗ عِلْمُ الْغَیْبِ فَهُوَ یَرٰی ۟
اَعِنْدَهٗஅவனிடம் இருக்கிறதா?عِلْمُஅறிவுالْغَيْبِமறைவானவற்றின்فَهُوَஅவன்يَرٰى‏பார்க்கின்றானா?
அ'இன்தஹூ 'இல்முல் கய்Bபி Fபஹுவ யரா
அவனிடம் மறைவானவை பற்றிய அறிவு இருந்து, அப்பால் (அதை) அவன் பார்க்கிறானா?
اَمْ لَمْ یُنَبَّاْ بِمَا فِیْ صُحُفِ مُوْسٰی ۟ۙ
اَمْ لَمْ يُنَبَّاْஅவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?بِمَا فِىْ صُحُفِஏடுகளில் உள்ளவற்றைப் பற்றிمُوْسٰىۙ‏மூஸாவின்
அம் லம் யுனBப்Bபா Bபிமா Fபீ ஸுஹுஹ்Fபி மூஸா
அல்லது, மூஸாவின் ஸுஹுஃபில் - வேதத்தில் இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?
وَاِبْرٰهِیْمَ الَّذِیْ وَ ۟ۙ
وَاِبْرٰهِيْمَஇன்னும் இப்ராஹீமுடையالَّذِىْ وَفّٰىٓ  ۙ‏எவர்/முழுமையாக நிறைவேற்றினார்
வ இBப்ராஹீமல் லதீ வFப்Fபா
(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)
اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ۟ۙ
اَلَّا تَزِرُசுமக்காதுوَازِرَةٌபாவம்செய்த ஆன்மாوِّزْرَபாவத்தைاُخْرٰىۙ‏இன்னொரு பாவியான ஆன்மாவின்
அல்லா தZஜிரு வாZஜிரது(ன்)வ் விZஜ்ர உக்ரா
(அதாவது:) சுமக்கிறவன் பிறிதொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான்;
وَاَنْ لَّیْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰی ۟ۙ
وَاَنْ لَّيْسَஇன்னும் வேறு ஏதுமில்லைلِلْاِنْسَانِமனிதனுக்குاِلَّاதவிரمَا سَعٰىۙ‏அவன் எதை அடைய முயற்சித்தானோ
வ அல் லய்ஸ லில் இன்ஸானி இல்லா மா ஸ'ஆ
இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.
وَاَنَّ سَعْیَهٗ سَوْفَ یُرٰی ۪۟
وَاَنَّஇன்னும் , நிச்சயமாகسَعْيَهٗதனது முயற்சியைسَوْفَ يُرٰى‏விரைவில் காண்பான்
வ அன்ன ஸஃயஹூ ஸவ்Fப யுரா
அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்.
ثُمَّ یُجْزٰىهُ الْجَزَآءَ الْاَوْفٰی ۟ۙ
ثُمَّபிறகுيُجْزٰٮهُஅதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்الْجَزَآءَகூலியைالْاَوْفٰىۙ‏மிக பூரணமான
தும்ம யுஜ்Zஜாஹுல் ஜZஜா 'அல் அவ்Fபா
பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.
وَاَنَّ اِلٰی رَبِّكَ الْمُنْتَهٰی ۟ۙ
وَاَنَّஇன்னும் , நிச்சயமாகاِلٰى رَبِّكَஉமது இறைவன் பக்கம்தான்الْمُنْتَهٰىۙ‏இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது
வ அன்ன இலா ரBப்Bபிகல் முன்தஹா
மேலும் உம் இறைவனின் பால்தான் இறுதி (மீளுதல்) இருக்கிறது.
وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰی ۟ۙ
وَاَنَّهٗ هُوَஇன்னும் , நிச்சயமாக அவன்தான்اَضْحَكَசிரிக்க வைக்கின்றான்وَاَبْكٰىۙ‏இன்னும் அழ வைக்கின்றான்
வ அன்னஹூ ஹுவ அள்ஹக வ அBப்கா
அன்றியும், நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழச் செய்கிறான்.
وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَاَحْیَا ۟ۙ
وَاَنَّهٗ هُوَஇன்னும் நிச்சயமாக அவன்தான்اَمَاتَமரணிக்க வைக்கின்றான்وَ اَحْيَا ۙ‏இன்னும் உயிர் கொடுக்கின்றான்
வ அன்னஹூ ஹுவ அமாத வ அஹ்யா
இன்னும் நிச்சயமாக அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் உயிர்ப்பிக்கிறான்.
وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
وَاَنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்தான்خَلَقَபடைத்தான்الزَّوْجَيْنِஇரு ஜோடிகளைالذَّكَرَஆணை(யும்)وَالْاُنْثٰىۙ‏பெண்ணையும்
வ அன்னஹூ கலகZஜ் Zஜவ்ஜய்னித் தகர வல் உன்தா
இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -
مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰی ۪۟
مِنْ نُّطْفَةٍஇந்திரியத்தில் இருந்துاِذَا تُمْنٰى‏செலுத்தப்படுகின்ற
மின் னுத்Fபதின் இதா தும்னா
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.
وَاَنَّ عَلَیْهِ النَّشْاَةَ الْاُخْرٰی ۟ۙ
وَاَنَّஇன்னும் நிச்சயமாகعَلَيْهِஅவன்மீதே கடமையாகஇருக்கிறதுالنَّشْاَةَஉருவாக்குவதும்الْاُخْرٰىۙ‏மற்றொரு முறை
வ அன்ன 'அலய்ஹின் னஷ் அதல் உக்ரா
நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.
وَاَنَّهٗ هُوَ اَغْنٰی وَاَقْنٰی ۟ۙ
وَاَنَّهٗ هُوَஇன்னும் நிச்சயமாக அவன்தான்اَغْنٰىசெல்வந்தராக ஆக்கினான்وَ اَقْنٰىۙ‏இன்னும் சேமிப்பைக் கொடுத்தான்
வ அன்னஹூ ஹுவ அக்னா வ அக்னா
நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.
وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعْرٰی ۟ۙ
وَاَنَّهٗ هُوَஇன்னும் நிச்சயமாக அவன்தான்رَبُّஇறைவன்الشِّعْرٰىۙ‏ஷிஃரா நட்சத்திரத்தின்
வ அன்னஹூ ஹுவ ரBப்Bபுஷ் ஷிஃரா
நிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.
وَاَنَّهٗۤ اَهْلَكَ عَادَا لْاُوْلٰی ۟ۙ
وَاَنَّهٗۤஇன்னும் நிச்சயமாகஅவன்اَهْلَكَஅழித்தான்عَادَا۟ஆது சமுதாயத்தைاۨلْـٮُٔـوْلٰى ۙ‏முந்திய
வ அன்னஹூ அஹ்லக் 'ஆதனில் ஊலா
நிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.
وَثَمُوْدَاۡ فَمَاۤ اَبْقٰی ۟ۙ
وَثَمُوْدَا۟இன்னும் ஸமூது சமுதாயத்தைفَمَاۤ اَبْقٰىۙ‏ஆக, அவன் விட்டு வைக்கவில்லை
வ தமூத Fபமா அBப்கா
“ஸமூது” (சமூகத்தாரையும் அழித்தவன் அவனே); எனவே, (அவர்களில் எவரையும் மிஞ்சுமாறு) விடவில்லை.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰی ۟ؕ
وَقَوْمَஇன்னும் மக்களையும்نُوْحٍநூஹூடையمِّنْ قَبْلُ‌ؕஇதற்கு முன்னர்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்كَانُوْا هُمْஇவர்கள் இருந்தனர்اَظْلَمَமிகப் பெரிய அநியாயக்காரர்களாகوَاَطْغٰىؕ‏இன்னும் மிகப் பெரிய வரம்பு மீறிகளாக
வ கவ்ம னூஹிம் மின் கBப்லு இன்னஹும் கானூ ஹும் அள்லம வ அத்கா
இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰی ۟ۙ
وَالْمُؤْتَفِكَةَஇன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தைاَهْوٰىۙ‏அவன்தான் கவிழ்த்தான்
வல் மு'தFபிகத அஹ்வா
அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.
فَغَشّٰىهَا مَا غَشّٰی ۟ۚ
فَغَشّٰٮهَاஅதனால் அவன் அவர்களை மூடினான்مَا غَشّٰى‌ۚ‏எதைக் கொண்டு மூடவேண்டுமோ
Fபகஷ்ஷாஹா மா கஷ்ஷா
அவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكَ تَتَمَارٰی ۟
فَبِاَىِّ اٰلَاۤءِஅத்தாட்சிகளில் எதில்رَبِّكَஉமது இறைவனின்تَتَمَارٰى‏தர்க்கம்செய்கின்றாய்?
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிக ததமாரா
எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?
هٰذَا نَذِیْرٌ مِّنَ النُّذُرِ الْاُوْلٰی ۟
هٰذَاஇவர்نَذِيْرٌஓர்எச்சரிப்பாளர்தான்مِّنَ النُّذُرِஎச்சரிப்பாளர்களில் இருந்துالْاُوْلٰٓى‏முந்தியவர்கள்
ஹாதா னதீரும் மினன் னுதுரில் ஊலா
இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம்.
اَزِفَتِ الْاٰزِفَةُ ۟ۚ
اَزِفَتِநெருங்கிவிட்டதுالْاٰزِفَةُ‌ۚ‏நெருங்கக்கூடியது
அZஜிFபதில் ஆZஜிFபஹ்
நெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது.
لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ۟ؕ
لَيْسَ لَهَا(யாரும்) அதற்கு இல்லைمِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைكَاشِفَةٌ ؕ‏வெளிப்படுத்துபவர்
லய்ஸ லஹா மின் தூனில் லாஹி காஷிFபஹ்
(அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.
اَفَمِنْ هٰذَا الْحَدِیْثِ تَعْجَبُوْنَ ۟ۙ
اَفَمِنْ هٰذَا الْحَدِيْثِ?/இந்த குர்ஆனினால்تَعْجَبُوْنَۙ‏நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா
அFபமின் ஹாதல் ஹதீதி தஃஜBபூன்
இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
وَتَضْحَكُوْنَ وَلَا تَبْكُوْنَ ۟ۙ
وَتَضْحَكُوْنَஇன்னும் சிரிக்கின்றீர்களா?وَلَا تَبْكُوْنَۙ‏நீங்கள் அழாமல்
வ தள்ஹகூன வலா தBப்கூன்
(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?
وَاَنْتُمْ سٰمِدُوْنَ ۟
وَاَنْتُمْநீங்களோ இருக்கின்றீர்கள்سٰمِدُوْنَ‏அலட்சியக்காரர்களாக
வ அன்தும் ஸாமிதூன்
அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.
فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ۟
فَاسْجُدُوْاசிரம் பணியுங்கள்!لِلّٰهِஅல்லாஹ்விற்கேوَاعْبُدُوْا ۩‏இன்னும் வணங்குங்கள்!
Fபஸ்ஜுதூ லில்லாஹி வஃBபுதூ
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.