17. பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)

மக்கீ, வசனங்கள்: 111

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰی بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَی الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِیْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِیَهٗ مِنْ اٰیٰتِنَا ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
سُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்الَّذِىْۤஎத்தகையவன்اَسْرٰىஅழைத்துச்சென்றான்بِعَبْدِهٖதன் அடிமையைلَيْلًاஇரவில்مِّنَஇருந்துالْمَسْجِدِமஸ்ஜிதுالْحَـرَامِபுனிதமானதுاِلَىவரைالْمَسْجِدِஅல் மஸ்ஜிதுالْاَقْصَاஅல் அக்ஸாالَّذِىْஎதுبٰرَكْنَاஅருள் வளம் புரிந்தோம்حَوْلَهٗஅதைச் சுற்றிلِنُرِيَهٗநாம் காண்பிப்பதற்காக/அவருக்குمِنْ اٰيٰتِنَا‌ ؕநம் அத்தாட்சிகளில்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْبَصِيْرُ‏உற்று நோக்குபவன்
ஸுBப்ஹானல் லதீ அஸ்ரா Bபி'அBப்திஹீ லய்லம் மினல் மஸ்ஜிதில் ஹராமி இலல் மஸ்ஜிதில் அக்ஸல்-லதீ Bபாரக்னா ஹவ் லஹூ லினுரியஹூ மின் ஆயாதினா;இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல்-Bபஸீர்
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
وَاٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِیْ وَكِیْلًا ۟ؕ
وَاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْـكِتٰبَவேதத்தைوَ جَعَلْنٰهُஇன்னும் ஆக்கினோம் / அதைهُدًىநேர்வழி காட்டியாகلِّبَنِىْۤசந்ததிகளுக்குاِسْرَآءِيْلَஇஸ்ராயீலின்اَلَّا تَتَّخِذُوْاநீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றுمِنْ دُوْنِىْஎன்னைத் தவிரوَكِيْلًا ؕ‏பொறுப்பாளனாக (பாதுகாவலனாக)
வ ஆதய்னா மூஸல்-கிதாBப வ ஜ'அல்னாஹு ஹுதல்-லிBபனீ இஸ்ரா'ஈல்; அல்லா தத்-தகிதூ மின் தூனீ வகீலா.
இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, “என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).
ذُرِّیَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؕ اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا ۟
ذُرِّيَّةَசந்ததிகளேمَنْஎவர்கள்حَمَلْنَاஏற்றினோம்مَعَ نُوْحٍ‌ؕநூஹூடன்اِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருந்தார்عَبْدًاஓர் அடியாராகشَكُوْرًا‏அதிகம் நன்றி செலுத்துகிறவர்
துர்ரிய்யத மன் ஹமல்னா ம'அ னூஹின் இன்னஹூ கான 'அBப்தன் ஷகூரா
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
وَقَضَیْنَاۤ اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ فِی الْكِتٰبِ لَتُفْسِدُنَّ فِی الْاَرْضِ مَرَّتَیْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِیْرًا ۟
وَقَضَيْنَاۤஅறிவித்தோம்اِلٰىக்குبَنِىْۤசந்ததிகள்اِسْرَاۤءِيْلَஇஸ்ராயீலின்فِى الْكِتٰبِவேதத்தில்لَـتُفْسِدُنَّநிச்சயம் விஷமம் செய்வீர்கள்فِى الْاَرْضِபூமியில்مَرَّتَيْنِஇரு முறைوَلَتَعْلُنَّஇன்னும் நிச்சயமாக பெருமைகொள்வீர்கள்عُلُوًّاபெருமைكَبِيْرًا‏பெரியது
வ களய்னா இலா Bபனீ இஸ்ரா'ஈல Fபில் கிதாBபி லதுFப்ஸிதுன்ன Fபில் அர்ளி மர்ரதய்ன்; வ லதஃலுன்ன'உலுவ்வன் கBபீரா
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.
فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰىهُمَا بَعَثْنَا عَلَیْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِیْ بَاْسٍ شَدِیْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّیَارِؕ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا ۟
فَاِذَا جَآءَவரும்போதுوَعْدُவாக்குاُوْلٰٮهُمَاஅவ்விரண்டில் முதல்بَعَثْنَاஅனுப்பினோம்عَلَيْكُمْஉங்கள் மீதுعِبَادًاஅடியார்களைلَّنَاۤநமக்குரியاُولِىْஉடையவர்கள்بَاْسٍபலம்شَدِيْدٍகடுமையானதுفَجَاسُوْاஊடுருவிச் சென்றனர்خِلٰلَநடுவில்الدِّيَارِ ؕவீடுகளுக்குوَكَانَஇருந்ததுوَعْدًاஒரு வாக்காகمَّفْعُوْلًا‏நிறைவேற்றப்பட்டது
Fப-இதா ஜா'அ வஃதுஊலாஹுமா Bப'அத்னா 'அல்ய்கும் 'இBபாதல்-லனா உலீ Bபாஸின் ஷதீதின் Fபஜாஸூ கிலாலத் தியார்; வ கான வஃதம் மFப்'ஊலா
எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும் காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்) கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்; அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும். உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து) விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி நிறைவேறியது.
ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَیْهِمْ وَاَمْدَدْنٰكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِیْرًا ۟
ثُمَّபிறகுرَدَدْنَاதிருப்பினோம்لَـكُمُஉங்களுக்குசாதகமாகالْكَرَّةَதாக்குதலைعَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகوَاَمْدَدْنٰـكُمْஇன்னும் உதவினோம்/உங்களுக்குبِاَمْوَالٍசெல்வங்களைக் கொண்டுوَّبَنِيْنَஇன்னும் ஆண்பிள்ளைகள்وَجَعَلْنٰكُمْஇன்னும் ஆக்கினோம்/ உங்களைاَكْثَرَஅதிகமானவர்களாகنَفِيْرًا‏எண்ணிக்கையில்
தும்ம ரதத்னா லகுமுல் கர்ரத 'அலய்ஹிம் வ அம்தத்-னாகும்-Bபி அம்வாலினுவ் வ Bபனீன்; வ ஜ'அல்னாகும் அக்தர னFபீரா
பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُمْ ۫ وَاِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕ فَاِذَا جَآءَ وَعْدُ الْاٰخِرَةِ لِیَسُوْٓءٗا وُجُوْهَكُمْ وَلِیَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّلِیُتَبِّرُوْا مَا عَلَوْا تَتْبِیْرًا ۟
اِنْ اَحْسَنْتُمْநீங்கள் நன்மை செய்தால்اَحْسَنْتُمْநன்மை செய்தீர்கள்لِاَنْفُسِكُمْ‌உங்கள் ஆன்மாக்களுக்குத்தான்وَاِنْ اَسَاْتُمْநீங்கள் தீமை செய்தால்فَلَهَا ؕஅதுவும் அவற்றுக்கேفَاِذَا جَآءَவந்த போதுوَعْدُ الْاٰخِرَةِமுறை / மறுلِیَسُوْٓءٗاஅவர்கள் கெடுப்பதற்குوُجُوْهَكُمْஉங்கள் முகங்களைوَلِيَدْخُلُواஇன்னும் அவர்கள் நுழைவதற்குالْمَسْجِدَமஸ்ஜிதில்كَمَاஅவர்கள் நுழைந்தது போன்றுدَخَلُوْهُஅதில்اَوَّلَமுதல்مَرَّةٍமுறைوَّلِيُتَبِّرُوْاஇன்னும் அவர்கள் அழிப்பதற்காகمَاஎவற்றைعَلَوْاமிகைத்தனர்تَتْبِيْرًا‏அழித்தல்
இன் அஹ்ஸன்தும் அஹ்ஸன்தும் லி அன்Fபுஸிகும் வ இன் அஸாதும் Fபலஹா; Fப இதா ஜா'அ வஃதுல் ஆகிரதி லியஸூ'ஊ வுஜூ ஹகும் வ லியத்குலுல் மஸ்ஜித கமா தகலூஹு அவ்வல மர்ரதி(ன்)வ் வ லியுதBப்Bபிரூ மா அ'லவ் தத்Bபீரா
நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் அனுப்பினோம்).
عَسٰی رَبُّكُمْ اَنْ یَّرْحَمَكُمْ ۚ وَاِنْ عُدْتُّمْ عُدْنَا ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكٰفِرِیْنَ حَصِیْرًا ۟
عَسٰىஆகலாம்رَبُّكُمْஉங்கள் இறைவன்اَنْ يَّرْحَمَكُمْ‌ ۚகருணை புரிய/உங்களுக்குوَاِنْ عُدْتُّمْநீங்கள் திரும்பினால்عُدْنَا‌ۘநாம் திரும்புவோம்وَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்جَهَنَّمَநரகத்தைلِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குحَصِيْرًا‏விரிப்பாக
'அஸா ரBப்Bபுகும் அ(ன்)ய்யர்ஹமகும்; வ இன் 'உத்தும் 'உத்னா; வ ஜ'அல்னா ஜஹன்னம லில்காFபிரீன ஹஸீரா
(இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம்.
اِنَّ هٰذَا الْقُرْاٰنَ یَهْدِیْ لِلَّتِیْ هِیَ اَقْوَمُ وَیُبَشِّرُ الْمُؤْمِنِیْنَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِیْرًا ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுالْقُرْاٰنَகுர்ஆன்يَهْدِىْநேர்வழி காட்டுகிறதுلِلَّتِىْஎதன் பக்கம்هِىَஅதுاَقْوَمُமிக சரியானதுوَ يُبَشِّرُஇன்னும் நற்செய்தி கூறுகிறதுالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குالَّذِيْنَஎவர்கள்يَعْمَلُوْنَசெய்வார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குاَجْرًاகூலிكَبِيْرًاۙ‏பெரியது
இன்ன ஹாதல் குர்'ஆன யஹ்தீ லில்லதீ ஹிய அக்வமு வ யுBபஷ்ஷிருல் மு'மினீனல் லதீன யஃமலூனஸ் ஸாலிஹாதி அன்ன லஹும் அஜ்ரன் கBபீரா
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.
وَّاَنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟۠
وَّاَنَّஇன்னும் நிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِالْاٰخِرَةِமறுமையைاَعْتَدْنَاஏற்படுத்தி இருக்கிறோம்لَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனையைاَلِيْمًا‏துன்புறுத்தக்கூடியது
வ அன்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி அஃதத்னா லஹும் 'அதாBபன் அலீமா
மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம்.  
وَیَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَآءَهٗ بِالْخَیْرِ ؕ وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا ۟
وَيَدْعُபிரார்த்திக்கிறான்الْاِنْسَانُமனிதன்بِالشَّرِّதீமைக்குدُعَآءَهٗஅவன் பிரார்த்திப்பதைப் (போலவே)بِالْخَيْرِ‌ ؕநன்மைக்குوَكَانَஇன்னும் இருக்கின்றான்الْاِنْسَانُமனிதன்عَجُوْلًا‏அவசரக்காரனாக
வ யத்'உல் இன்ஸானு Bபிஷ்ஷர்ரி து'ஆ 'அஹூ Bபில்கய்ர்; வ கானல் இன்ஸானு 'அஜூலா
மனிதன், நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.
وَجَعَلْنَا الَّیْلَ وَالنَّهَارَ اٰیَتَیْنِ فَمَحَوْنَاۤ اٰیَةَ الَّیْلِ وَجَعَلْنَاۤ اٰیَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ وَلِتَعْلَمُوْا عَدَدَ السِّنِیْنَ وَالْحِسَابَ ؕ وَكُلَّ شَیْءٍ فَصَّلْنٰهُ تَفْصِیْلًا ۟
وَجَعَلْنَاஆக்கினோம்الَّيْلَஇரவைوَالنَّهَارَஇன்னும் பகலைاٰيَتَيْنِ‌இரு அத்தாட்சிகளாகفَمَحَوْنَاۤஇன்னும் மங்கச்செய்தோம்اٰيَةَஅத்தாட்சியைالَّيْلِஇரவின்وَجَعَلْنَاۤஇன்னும் ஆக்கினோம்اٰيَةَஅத்தாட்சியைالنَّهَارِபகலின்مُبْصِرَةًஒளிரக்கூடியதாகلِّتَبْتَغُوْاநீங்கள் தேடுவதற்காகفَضْلًاஅருளைمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَلِتَعْلَمُوْاஇன்னும் அறிவதற்காகعَدَدَஎண்ணிக்கையைالسِّنِيْنَஆண்டுகளின்وَالْحِسَابَ‌ؕஇன்னும் கணக்கைوَكُلَّ شَىْءٍஎல்லா விஷயங்களையும்فَصَّلْنٰهُவிவரித்தோம்/ அவற்றைتَفْصِيْلًا‏விரிவாக
வ ஜ'அல்னல் லய்ல வன்னஹார ஆயதய்னி Fபமஹவ்னா ஆயதல் லய்லி வ ஜ'அல்னா ஆயதன் னஹாரி முBப்ஸிரதல் லிதBப்தகூ Fபள்லம் மிர் ரBப்Bபிகும் வ லிதஃலமூ 'அததஸ் ஸினீன வல்ஹிஸாBப்; வ குல்ல ஷய்'இன் Fபஸ்ஸல்னாஹு தFப்ஸீலா
இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰٓىِٕرَهٗ فِیْ عُنُقِهٖ ؕ وَنُخْرِجُ لَهٗ یَوْمَ الْقِیٰمَةِ كِتٰبًا یَّلْقٰىهُ مَنْشُوْرًا ۟
وَكُلَّஇன்னும் எல்லாاِنْسَانٍமனிதன்اَلْزَمْنٰهُஇணைத்தோம்/அவனுக்குطٰۤٮِٕرَهٗஅவனுடையசெயலைفِىْ عُنُقِهٖ‌ؕஅவனுடைய கழுத்தில்وَنُخْرِجُவெளிப்படுத்துவோம்لَهٗஅவனுக்குيَوْمَநாளில்الْقِيٰمَةِமறுமைكِتٰبًاஒரு புத்தகம்يَّلْقٰٮهُஅதை சந்திப்பான்مَنْشُوْرًا‏விரிக்கப்பட்டதாக
வ குல்ல இன்ஸானின் அல்Zஜம்னாஹு தா'இரஹூ Fபீ 'உனுகிஹீ வ னுக்ரிஜி லஹூ யவ்மல் கியாமதி கிதாBப(ன்)ய் யல்காஹு மன்ஷூரா
ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.
اِقْرَاْ كِتٰبَكَ ؕ كَفٰی بِنَفْسِكَ الْیَوْمَ عَلَیْكَ حَسِیْبًا ۟ؕ
اِقْرَاْநீ படி!كِتٰبَك ؕஉன் புத்தகத்தைكَفٰىபோதுமானவன்بِنَفْسِكَநீயேالْيَوْمَஇன்றுعَلَيْكَஉனக்கெதிராகحَسِيْبًا ؕ‏விசாரிப்பாளன்
இக்ர கிதாBபக கFபா Bபி னFப்ஸிகல் யவ்ம 'அலய்க ஹஸீBபா
“நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்).
مَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ وَمَا كُنَّا مُعَذِّبِیْنَ حَتّٰی نَبْعَثَ رَسُوْلًا ۟
مَنِஎவர்اهْتَدٰىநேர்வழிசெல்வார்فَاِنَّمَا يَهْتَدِىْஅவர் நேர்வழி செல்வதெல்லாம்لِنَفْسِهٖ ۚதன் நன்மைக்காகوَمَنْஇன்னும் எவர்ضَلَّவழிகெடுவார்فَاِنَّمَا يَضِلُّஅவர் வழிகெடுவதெல்லாம்عَلَيْهَا‌ ؕதனக்கெதிராகوَلَا تَزِرُசுமக்காதுوَازِرَةٌசுமக்கக்கூடியதுوِّزْرَ(பாவச்) சுமையைاُخْرٰى‌ ؕமற்றொன்றின்وَمَا كُنَّاநாம் இருக்கவில்லைمُعَذِّبِيْنَவேதனை செய்பவர்களாகحَتّٰى نَبْعَثَநாம் அனுப்பும் வரைرَسُوْلًا‏ஒரு தூதரை
மனிஹ்ததா Fப இன்னமா யஹ்ததீ லினFப்ஸிஹீ வ மன் ளல்ல Fப இன்னமா யளில்லு 'அலய்ஹா; வலா தZஜிரு வாZஜிரது(ன்)வ் விZஜ்ர உக்ரா; வமா குன்னா மு'அத்திBபீன ஹத்தா னBப்'அத ரஸூலா
எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.
وَاِذَاۤ اَرَدْنَاۤ اَنْ نُّهْلِكَ قَرْیَةً اَمَرْنَا مُتْرَفِیْهَا فَفَسَقُوْا فِیْهَا فَحَقَّ عَلَیْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِیْرًا ۟
وَاِذَا اَرَدْنَاۤநாம் நாடினால்اَنْ نُّهْلِكَநாம் அழிக்கقَرْيَةًஓர் ஊரைاَمَرْنَاஏவுவோம்مُتْرَفِيْهَاஅதன் சுகவாசிகளைفَفَسَقُوْاஆகவேபாவம்புரிவார்கள்فِيْهَاஅதில்فَحَقَّஆகவே நிகழ்ந்துவிடும்عَلَيْهَاஅதன் மீதுالْقَوْلُவாக்குفَدَمَّرْنٰهَاதரைமட்டமாக்கி விடுவோம்/அதைتَدْمِيْرًا‏தரைமட்டமாக்குதல்
வ இதா அரத்னா அன் னுஹ்லிக கர்யதன் அமர்னா முத்ரFபீஹா FபFபஸகூ Fபீஹா Fபஹக்க 'அலய்ஹல் கவ்லு Fபதம்மர்னாஹா தத்மீரா
நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.
وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْ بَعْدِ نُوْحٍ ؕ وَكَفٰی بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟
وَكَمْஎத்தனைاَهْلَكْنَاஅழித்தோம்مِنَ الْقُرُوْنِதலைமுறைகளைمِنْۢ بَعْدِபின்னர்نُوْحٍ‌ؕநூஹூக்குوَكَفٰىஇன்னும் போதுமானவன்بِرَبِّكَஉம் இறைவனேبِذُنُوْبِபாவங்களைعِبَادِهٖதன் அடியார்களின்خَبِيْرًۢاஆழ்ந்தறிபவனாகبَصِيْرًا‏உற்று நோக்குபவனாக
வ கம் அஹ்லக்னா மினல் குரூனி மின் Bபஃதி னூஹ்; வ கFபா Bபி ரBப்Bபிக BபிதுனூBபி 'இBபாதிஹீ கBபீரம் Bபஸீரா
நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.
مَنْ كَانَ یُرِیْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِیْهَا مَا نَشَآءُ لِمَنْ نُّرِیْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَ ۚ یَصْلٰىهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا ۟
مَنْஎவர்كَانَஇருப்பார்يُرِيْدُநாடுகின்றவராகالْعَاجِلَةَஇம்மையைعَجَّلْنَاமுற்படுத்தி கொடுப்போம்لَهٗஅவருக்குفِيْهَاஅதில்مَاஎதைنَشَآءُநாடுவோம்لِمَنْஎவருக்குنُّرِيْدُநாடுவோம்ثُمَّபிறகுجَعَلْنَاஆக்குவோம்لَهٗஅவருக்குجَهَنَّمَ‌ۚநரகத்தைيَصْلٰٮهَاஎரிந்து பொசுங்குவார்/அதில்مَذْمُوْمًاஇகழப்பட்டவராகمَّدْحُوْرًا‏தூரமாக்கப்பட்டவராக
மன் கான யுரீதுல் 'ஆஜிலத 'அஜ்ஜல்னா லஹூ Fபீஹா மா னஷா'உ லிமன் னுரீது தும்ம ஜ'அல்னா லஹூ ஜஹன்னம யஸ்லாஹா மத்மூமம்மத் ஹூரா
எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப் பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.
وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰی لَهَا سَعْیَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ كَانَ سَعْیُهُمْ مَّشْكُوْرًا ۟
وَمَنْஎவர்(கள்)اَرَادَநாடுவார்(கள்)الْاٰخِرَةَமறுமையைوَسَعٰىஇன்னும் முயற்சி செய்வார்(கள்)لَهَاஅதற்குسَعْيَهَاஅதற்குரிய முயற்சிوَهُوَஅவர்(கள்)مُؤْمِنٌநம்பிக்கை கொண்டவர்(களாக)فَاُولٰۤٮِٕكَஅவர்கள்كَانَஇருந்ததுسَعْيُهُمْஅவர்களுடைய முயற்சிمَّشْكُوْرًا‏நன்றி செலுத்தப்பட்டதாக
வ மன் அராதல் ஆகிரத வ ஸ'ஆ லஹா ஸஃயஹா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக கான ஸஃயுஹும் மஷ்கூரா
இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
كُلًّا نُّمِدُّ هٰۤؤُلَآءِ وَهٰۤؤُلَآءِ مِنْ عَطَآءِ رَبِّكَ ؕ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُوْرًا ۟
كُلًّاஎல்லோருக்கும்نُّمِدُّகொடுத்துதவுவோம்هٰٓؤُلَاۤءِஇவர்களுக்குوَهٰٓؤُلَاۤءِஇன்னும் இவர்களுக்குمِنْஇருந்துعَطَآءِகொடைرَبِّكَ‌ ؕஉம் இறைவனின்وَمَا كَانَஇருக்கவில்லைعَطَآءُகொடைرَبِّكَஉம் இறைவனின்مَحْظُوْرًا‏தடுக்கப்பட்டதாக
குல்லன் னுமித்து ஹா 'உலா'இ வ ஹா'உலா'இ மின் 'அதா'இ ரBப்Bபிக்; வமா கான 'அதா'உ ரBப்Bபிக மஹ்ளூரா
இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
اُنْظُرْ كَیْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ ؕ وَلَلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِیْلًا ۟
اُنْظُرْகவனிப்பீராகكَيْفَஎப்படிفَضَّلْنَاமேன்மையாக்கினோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைعَلٰىவிடبَعْضٍ‌ ؕசிலரைوَلَـلْاٰخِرَةُமறுமைதான்اَكْبَرُமிகப் பெரியதுدَرَجٰتٍபதவிகளால்وَّاَكْبَرُஇன்னும் மிகப் பெரியதுتَفْضِيْلًا‏மேன்மையால்
உன்ளுர் கய்Fப Fபள்ளல்னா Bபஃளஹும் 'அலா Bபஃள்; வ லல் ஆகிரது அக்Bபரு தரஜாதி(ன்)வ் வ அக்Bபரு தFப்ளீலா
(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
لَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَقْعُدَ مَذْمُوْمًا مَّخْذُوْلًا ۟۠
لَا تَجْعَلْஆக்காதீர்مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًاஒரு கடவுளைاٰخَرَவேறுفَتَقْعُدَஅமர்ந்து விடுவீர்مَذْمُوْمًاஇகழப்பட்டவராகمَّخْذُوْلًا‏கைவிடப்பட்டவராக
லா தஜ்'அல் ம'அல் லாஹி இலாஹன் ஆகர Fபதக்'உத மதூமம் மக்தூலா
அல்லாஹ்வுடன் மற்றோர் ஆண்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.  
وَقَضٰی رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِیَّاهُ وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا ؕ اِمَّا یَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِیْمًا ۟
وَقَضٰىகட்டளையிட்டு இருக்கின்றான்رَبُّكَஉம் இறைவன்اَلَّا تَعْبُدُوْۤاவணங்காதீர்கள் என்றுاِلَّاۤ اِيَّاهُஅவனைத் தவிரوَبِالْوَالِدَيْنِஇன்னும் பெற்றோருக்குاِحْسَانًا‌ ؕநன்மை புரியுங்கள்اِمَّا يَـبْلُغَنَّநிச்சயமாக அடைந்தால்عِنْدَكَஉன்னிடம்الْكِبَرَமுதுமையைاَحَدُهُمَاۤஅவ்விருவர்களில் ஒருவர்اَوْஅல்லதுكِلٰهُمَاஅவர்கள் இருவரும்فَلَا تَقُلْசொல்லாதே!لَّهُمَاۤஅவ்விருவரையும்اُفٍّ“சீ”وَّلَا تَنْهَرْஇன்னும் வெருட்டாதே!هُمَاஅவ்விருவரைوَقُلْஇன்னும் சொல்!لَّهُمَاஅவ்விருவருக்கும்قَوْلًاசொல்லைكَرِيْمًا‏மரியாதையானது
வ களா ரBப்Bபுக அல்லா தஃBபுதூ இல்லா இய்யாஹு வ Bபில்வாலிதய்னி இஹ்ஸானா; இம்மா யBப்லுகன்ன 'இன்தகல் கிBபர அஹதுஹுமா அவ் கிலாஹுமா Fபலா தகுல் லஹுமா உFப்Fபி(ன்)வ் வலா தன்ஹர்ஹுமா வ குல்லஹுமா கவ்லன் கரீமா
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّیٰنِیْ صَغِیْرًا ۟ؕ
وَاخْفِضْஇன்னும் தாழ்த்துلَهُمَاஅவர்களுக்கு முன்جَنَاحَஇறக்கையைالذُّلِّபணிவின்مِنَ الرَّحْمَةِகருணையுடன்وَقُلْஇன்னும் கூறு!رَّبِّஎன் இறைவாارْحَمْهُمَاநீயும் கருணை புரி!/அவ்விருவருக்குكَمَاஅவர்கள் வளர்த்தவாறேرَبَّيٰنِىْஎன்னைصَغِيْرًا ؕ‏சிறியவனாக
வக்Fபிள் லஹுமா ஜனாஹத் துல்லி மினர் ரஹ்மதி வ குர் ரBப்Bபிர் ஹம்ஹுமா கமா ரBப்Bபயானீ ஸகீரா
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
رَبُّكُمْ اَعْلَمُ بِمَا فِیْ نُفُوْسِكُمْ ؕ اِنْ تَكُوْنُوْا صٰلِحِیْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِیْنَ غَفُوْرًا ۟
رَّبُّكُمْஉங்கள் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைفِىْ نُفُوْسِكُمْ‌ؕஉங்கள் மனங்களில்اِنْ تَكُوْنُوْاநீங்கள் இருந்தால்صٰلِحِيْنَநல்லவர்களாகفَاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்لِلْاَوَّابِيْنَமீளுகிறவர்களுக்குغَفُوْرًا‏மகா மன்னிப்பாளனாக
ரBப்Bபுகும் அஃலமு Bபிமா Fபீ னுFபூஸிகும்; இன் தகூனூ ஸாலிஹீன Fப இன்னஹூ கான லில் அவ்வாBபீன கFபூரா
(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
وَاٰتِ ذَا الْقُرْبٰی حَقَّهٗ وَالْمِسْكِیْنَ وَابْنَ السَّبِیْلِ وَلَا تُبَذِّرْ تَبْذِیْرًا ۟
وَاٰتِஇன்னும் கொடு!ذَا الْقُرْبٰىஉறவினருக்குحَقَّهٗஅவருடைய உரிமையைوَالْمِسْكِيْنَஇன்னும் ஏழைக்குوَابْنَ السَّبِيْلِஇன்னும் வழிப்போக்கருக்குوَلَا تُبَذِّرْஇன்னும் மிதமிஞ்சி செலவழிக்காதே!تَبْذِيْرًا‏மித மிஞ்சி, மிக வீணாக செலவழித்தல்
வ ஆதி தல் குர்Bபா ஹக்கஹூ வல்மிஸ்கீன வBப்னஸ் ஸBபீலி வலா துBபத்திர் தBப்தீரா
இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக; மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.
اِنَّ الْمُبَذِّرِیْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّیٰطِیْنِ ؕ وَكَانَ الشَّیْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا ۟
اِنَّ الْمُبَذِّرِيْنَநிச்சயமாக மிதமிஞ்சி செலவழிப்பவர்கள்كَانُوْۤاஇருக்கின்றனர்اِخْوَانَசகோதரர்களாகالشَّيٰطِيْنِ‌ ؕஷைத்தான்களின்وَكَانَஇன்னும் இருக்கின்றான்الشَّيْطٰنُஷைத்தான்لِرَبِّهٖதன் இறைவனுக்குكَفُوْرًا‏நன்றி கெட்டவனாக
இன்னல் முBபத்திரீன கானூ இக்வானஷ் ஷயாதீனி வ கானஷ் ஷய்தானு லி ரBப்Bபிஹீ கFபூரா
நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
وَاِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَآءَ رَحْمَةٍ مِّنْ رَّبِّكَ تَرْجُوْهَا فَقُلْ لَّهُمْ قَوْلًا مَّیْسُوْرًا ۟
وَاِمَّا تُعْرِضَنَّநீ புறக்கணித்தால்عَنْهُمُஅவர்களைابْتِغَآءَநாடிرَحْمَةٍஓர் அருளைمِّنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்تَرْجُوْهَاஆதரவு வைத்தவனாக/ அதைفَقُلْஆகவே சொல்لَّهُمْஅவர்களுக்குقَوْلًاசொல்லைمَّيْسُوْرًا‏மென்மையானது
வ இம்மா துஃரிளன்ன 'அன்ஹும் உBப்திகா'அ ரஹ்மதிம் மிர் ரBப்Bபிக தர்ஜூஹா Fபகுல் லஹும் கவ்லம் மய்ஸூரா
(உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர் உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை) எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது) அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!
وَلَا تَجْعَلْ یَدَكَ مَغْلُوْلَةً اِلٰی عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُوْمًا مَّحْسُوْرًا ۟
وَلَا تَجْعَلْஆக்காதேيَدَكَஉனது கையைمَغْلُوْلَةًவிலங்கிடப்பட்டதாகاِلٰى عُنُقِكَஉன் கழுத்தில்وَلَا تَبْسُطْهَاஇன்னும் விரிக்காதே / அதைكُلَّ الْبَسْطِமுற்றிலும் விரித்ததாகفَتَقْعُدَஅதனால் தங்கிவிடுவாய்مَلُوْمًاபழிக்கப்பட்டவராகمَّحْسُوْرًا‏முடக்கப்பட்டவராக
வ லா தஜ்'அல் யதக மக்லூலதன் இலா 'உனுகிக வலா தBப்ஸுத் ஹா குல்லல் Bபஸ்தி Fபதக்'உத மலூமம் மஹ்ஸூரா
(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர்.
اِنَّ رَبَّكَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟۠
اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்يَبْسُطُவிரிவாக்குகின்றான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குوَيَقْدِرُ‌ؕஇன்னும் அளவாகக் கொடுக்கின்றான்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்بِعِبَادِهٖதன் அடியார்களைخَبِيْرًۢاஆழ்ந்தறிபவனாகبَصِيْرًا‏உற்று நோக்குபவனாக
இன்ன ரBப்Bபக யBப்ஸுதுர்ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; இன்னஹூ கான Bபி'இBபாதிஹீ கBபீரன் Bபஸீரா
நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  
وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْیَةَ اِمْلَاقٍ ؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِیَّاكُمْ ؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِیْرًا ۟
وَلَا تَقْتُلُوْۤاகொல்லாதீர்கள்اَوْلَادَكُمْகுழந்தைகளை/உங்கள்خَشْيَةَபயந்துاِمْلَاقٍ‌ؕவறுமையைنَحْنُ نَرْزُقُهُمْநாம்/உணவளிக்கின்றோம்/அவர்களுக்குوَاِيَّاكُمْ‌ؕஇன்னும் உங்களுக்குاِنَّநிச்சயமாகقَتْلَهُمْகொல்வது/அவர்களைكَانَஇருக்கிறதுخِطْاًகுற்றமாகكَبِيْرًا‏பெரியது
வ லா தக்துலூ அவ்லாதகும் கஷ்யத இம்லாகின் னஹ்னு னர்Zஜுகுஹும் வ இய்யாகும்; இன்ன கத்லஹும் கான கித் 'அன் கBபீரா
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
وَلَا تَقْرَبُوا الزِّنٰۤی اِنَّهٗ كَانَ فَاحِشَةً ؕ وَسَآءَ سَبِیْلًا ۟
وَلَا تَقْرَبُواநெருங்காதீர்கள்الزِّنٰٓىவிபச்சாரத்தைاِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருக்கின்றதுفَاحِشَةً  ؕமானக்கேடானதாகوَسَآءَஇன்னும் கெட்ட(து)سَبِيْلًا‏வழி
வ லா தக்ரBபுZஜ் Zஜினா இன்னஹூ கான Fபாஹிஷத(ன்)வ் வ ஸா'அ ஸBபீலா
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ ؕ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِوَلِیِّهٖ سُلْطٰنًا فَلَا یُسْرِفْ فِّی الْقَتْلِ ؕ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا ۟
وَلَا تَقْتُلُواகொல்லாதீர்கள்النَّفْسَஉயிரைالَّتِىْஎதுحَرَّمَதடுத்தான்اللّٰهُஅல்லாஹ்اِلَّا بِالْحَـقِّ‌ ؕஉரிமையின்றிوَمَنْஎவர்قُتِلَகொல்லப்பட்டார்مَظْلُوْمًاஅநீதி செய்யப்பட்டவராகفَقَدْ جَعَلْنَاஏற்படுத்தினோம்لِـوَلِيِّهٖஉறவினருக்கு/ அவருடையسُلْطٰنًاஅதிகாரத்தைفَلَا يُسْرِفْஆகவே, அவர் அளவு கடக்க வேண்டாம்فِّى الْقَتْلِ‌ ؕகொல்வதில்اِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்مَنْصُوْرًا‏உதவி செய்யப்பட்டவராக
வ லா தக்துலுன் னFப்ஸல் லதீ ஹர்ரமல் லாஹு இல்லா Bபில்ஹக்க்; வ மன் குதில மள்லூமன் Fபகத் ஜ'அல்னா லிவலிய்யிஹீ ஸுல்தானன் Fபலா யுஸ்ரிFப் Fபில் கத்லி இன்னஹூ கான மன்ஸூரா
(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.
وَلَا تَقْرَبُوْا مَالَ الْیَتِیْمِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ حَتّٰی یَبْلُغَ اَشُدَّهٗ ۪ وَاَوْفُوْا بِالْعَهْدِ ۚ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْـُٔوْلًا ۟
وَلَا تَقْرَبُوْاநெருங்காதீர்கள்مَالَசெல்வத்தைالْيَتِيْمِஅநாதையின்اِلَّاதவிரبِالَّتِىْஎதில்هِىَஅதுاَحْسَنُமிக அழகியதுحَتّٰىவரைيَبْلُغَஅவர் அடையும்اَشُدَّهٗ‌தன் வாலிபத்தைوَاَوْفُوْاஇன்னும் நிறைவேற்றுங்கள்بِالْعَهْدِ‌ۚஒப்பந்தத்தைاِنَّநிச்சயமாகالْعَهْدَஒப்பந்தம்كَانَஇருக்கிறதுمَسْــــٴُـوْلًا‏விசாரிக்கப்படுவதாக
வ லா தக்ரBபூ மாலல் யதீமி இல்லா Bபில்லதீ ஹிய அஹ்ஸனு ஹத்தா யBப்லுக அஷுத்தஹ்; வ அவ்Fபூ Bபில்'அஹ்த், இன்னல் 'அஹ்த கான மஸ்'ஊலா
அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.
وَاَوْفُوا الْكَیْلَ اِذَا كِلْتُمْ وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِیْمِ ؕ ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟
وَاَوْفُواஇன்னும் முழுமையாக்குங்கள்الْـكَيْلَஅளவையைاِذَا كِلْتُمْநீங்கள் அளந்தால்وَزِنُوْاஇன்னும் நிறுங்கள்بِالْقِسْطَاسِதராசைக் கொண்டுالْمُسْتَقِيْمِ‌ؕசரியானதுذٰ لِكَஅதுخَيْرٌமிகச் சிறந்ததுوَّاَحْسَنُமிக அழகியதுتَاْوِيْلًا‏முடிவால்
வ அவ்Fபுல் கய்ல இதா கில்தும் வ Zஜினூ Bபில்கிஸ்தாஸில் முஸ்தகீம்; தாலிக கய்ரு(ன்)வ் வ அஹ்ஸனு த'வீலா
மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்.
وَلَا تَقْفُ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰٓىِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا ۟
وَلَا تَقْفُபின் தொடராதேمَاஎதைلَـيْسَஇல்லைلَـكَஉனக்குبِهٖஅதில்عِلْمٌ‌ ؕகல்வி அறிவுاِنَّநிச்சயமாகالسَّمْعَசெவிوَالْبَصَرَஇன்னும் பார்வைوَالْفُؤَادَஇன்னும் உள்ளம்كُلُّஎல்லாம்اُولٰۤٮِٕكَஇவைكَانَஇருக்கின்றனعَنْهُஅவற்றைப் பற்றிمَسْــٴُـوْلًا‏விசாரிக்கப் படுபவையாக
வ லா தக்Fபு மா லய்ஸ லக Bபிஹீ 'இல்ம்; இன்னஸ் ஸம்'அ வல்Bபஸர வல்Fபு'ஆத குல்லு உலா'இக கான 'அன்ஹு மஸ்'ஊலா
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
وَلَا تَمْشِ فِی الْاَرْضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا ۟
وَلَا تَمْشِஇன்னும் நடக்காதேفِى الْاَرْضِபூமியில்مَرَحًا‌ ۚகர்வம் கொண்டவனாகاِنَّكَநிச்சயமாக நீلَنْ تَخْرِقَஅறவே நீ கிழிக்க(வும்) முடியாதுالْاَرْضَபூமியைوَلَنْ تَبْلُغَஇன்னும் அறவே நீ அடைய(வும்) முடியாதுالْجِبَالَமலைகளின்طُوْلًا‏உயரத்தை
வ லா தம்ஷி Fபில் அர்ளி மரஹன் இன்னக லன் தக்ரிகல் அர்ள வ லன் தBப்லுகல் ஜிBபால தூலா
மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
كُلُّ ذٰلِكَ كَانَ سَیِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا ۟
كُلُّஎல்லாம்ذٰ لِكَஇவைكَانَஇருக்கின்றதுسَيِّئُهٗஇவற்றின் தீமைعِنْدَஇடம்رَبِّكَஉமது இறைவன்مَكْرُوْهًا‏வெறுக்கப்பட்டதாக
குல்லு தாலிக கான ஸய்யி'உஹூ இன்த ரBப்Bபிக மக்ரூஹா
இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.
ذٰلِكَ مِمَّاۤ اَوْحٰۤی اِلَیْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِ ؕ وَلَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتُلْقٰی فِیْ جَهَنَّمَ مَلُوْمًا مَّدْحُوْرًا ۟
ذٰ لِكَஇவைمِمَّاۤஎதிலிருந்துاَوْحٰۤىவஹீ அறிவித்தான்اِلَيْكَஉமக்குرَبُّكَஉம் இறைவன்مِنَஇருந்துالْحِكْمَةِ‌ ؕஞானம்وَلَا تَجْعَلْஇன்னும் ஆக்காதீர்مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًاஒரு கடவுளைاٰخَرَவேறுفَتُلْقٰىஎறியப்படுவீர்فِىْ جَهَنَّمَநரகில்مَلُوْمًاஇகழப்பட்டவராகمَّدْحُوْرًا‏தூரமாக்கப்பட்டவராக
தாலிக மிம்மா அவ்ஹா இலய்க ரBப்Bபுக மினல் ஹிக்மஹ்; வலா தஜ்'அல் ம'அல்லாஹி இலாஹன் ஆகர Fபதுல்கா Fபீ ஜஹன்னம மலூமம் மத் ஹூரா
இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ (மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்; (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.
اَفَاَصْفٰىكُمْ رَبُّكُمْ بِالْبَنِیْنَ وَاتَّخَذَ مِنَ الْمَلٰٓىِٕكَةِ اِنَاثًا ؕ اِنَّكُمْ لَتَقُوْلُوْنَ قَوْلًا عَظِیْمًا ۟۠
اَفَاَصْفٰٮكُمْசொந்தமாக்கினானா?/உங்களுக்குرَبُّكُمْஉங்கள் இறைவன்بِالْبَـنِيْنَஆண் பிள்ளைகளைوَ اتَّخَذَஇன்னும் ஆக்கிக் கொண்டான்مِنَ الْمَلٰۤٮِٕكَةِவானவர்களிலிருந்துاِنَاثًا‌ ؕபெண்களைاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَتَقُوْلُوْنَஉறுதியாக கூறுகின்றீர்கள்قَوْلًاகூற்றைعَظِيْمًا‏பெரிய(து)
அFப அஸ்Fபாகும் ரBப்Bபுகும் Bபில்Bபனீன வத்தகத மினல் மலா'இகதி இனாதா; இன்னகும் லதகூலூன கவ்லன் 'அளீமா
(முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.  
وَلَقَدْ صَرَّفْنَا فِیْ هٰذَا الْقُرْاٰنِ لِیَذَّكَّرُوْا ؕ وَمَا یَزِیْدُهُمْ اِلَّا نُفُوْرًا ۟
وَلَقَدْ صَرَّفْنَاதிட்டமாக விவரித்தோம்فِىْ هٰذَا الْقُرْاٰنِஇந்த குர்ஆனில்لِيَذَّكَّرُوْا ؕஅவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகوَمَاஅதிகப்படுத்தவில்லைيَزِيْدُهُمْஅவர்களுக்குاِلَّاதவிரنُفُوْرًا‏வெறுப்பை
வ லகத் ஸர்ரFப்னா Fபீ ஹாதல் குர்'ஆனி லியத்தக்கரூ வமா யZஜீதுஹும் இல்லா னுFபூரா
இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!
قُلْ لَّوْ كَانَ مَعَهٗۤ اٰلِهَةٌ كَمَا یَقُوْلُوْنَ اِذًا لَّابْتَغَوْا اِلٰی ذِی الْعَرْشِ سَبِیْلًا ۟
قُلْகூறுவீராகلَّوْ كَانَஇருந்திருந்தால்مَعَهٗۤஅவனுடன்اٰلِهَةٌபல கடவுள்கள்كَمَا يَقُوْلُوْنَஅவர்கள் கூறுவது போல்اِذًاஅப்போதுلَّابْتَغَوْاதேடியிருப்பார்கள்اِلٰىபக்கம்ذِى الْعَرْشِஅர்ஷ் உடையவன்سَبِيْلًا‏ஒரு வழியை
குல் லவ் கான ம'அஹூ ஆலிஹதுன் கமா யகூலூன இதல் லBப்தகவ் இலா தில் 'அர்ஷி ஸBபீலா
(நபியே!) நீர் சொல்வீராக: அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அப்போது அவை அர்ஷுடையவன் (அல்லாஹ் தஆலாவின்) அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று) இருக்கும் என்று.
سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یَقُوْلُوْنَ عُلُوًّا كَبِیْرًا ۟
سُبْحٰنَهٗஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَتَعٰلٰىஇன்னும் உயர்ந்துவிட்டான்عَمَّاஎதை விட்டுيَقُوْلُوْنَகூறுகிறார்கள்عُلُوًّاஉயர்வாகكَبِيْرًا‏மிகப் பெரியது
ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்மா யகூலூன 'உலுவ்வன் கBபீரா
அவன் மிகவும் பரிசுத்தமானவன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.
تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِیْهِنَّ ؕ وَاِنْ مِّنْ شَیْءٍ اِلَّا یُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِیْحَهُمْ ؕ اِنَّهٗ كَانَ حَلِیْمًا غَفُوْرًا ۟
تُسَبِّحُதுதிக்கின்றன(ர்)لَهُஅவனையேالسَّمٰوٰتُவானங்கள்السَّبْعُஏழுوَالْاَرْضُஇன்னும் பூமிوَمَنْஇன்னும் எவர்فِيْهِنَّ‌ؕஇவற்றில்وَاِنْஇல்லைمِّنْ شَىْءٍஎந்த ஒரு பொருளும்اِلَّاதவிரيُسَبِّحُதுதிக்கிறதுبِحَمْدِهٖஅவனைப் புகழ்ந்துوَلٰـكِنْஎனினும்لَّا تَفْقَهُوْنَஅறிய மாட்டீர்கள்تَسْبِيْحَهُمْ‌ؕஅவர்களின் துதியைاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்حَلِيْمًاமகா சகிப்பாளனாகغَفُوْرًا‏மகா மன்னிப்பாளனாக
துஸBப்Bபிஹு லஹுஸ் ஸமாவாதுஸ் ஸBப்'உ வல் அர்ளு வ மன் Fபீஹின்ன்; வ இம் மின் ஷய்'இன் இல்லா யுஸBப்Bபிஹு Bபிஹம்திஹீ வ லாகில் லா தFப்கஹூன தஸ்Bபீஹஹும்; இன்னஹூ கான ஹலீமன் கFபூரா
ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
وَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَیْنَكَ وَبَیْنَ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًا ۟ۙ
وَاِذَا قَرَاْتَநீர் ஓதினால்الْقُرْاٰنَகுர்ஆனைجَعَلْنَاஆக்கிவிடுவோம்بَيْنَكَஉமக்கு இடையில்وَبَيْنَஇன்னும் இடையில்الَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِالْاٰخِرَةِமறுமையைحِجَابًاஒரு திரையைمَّسْتُوْرًا ۙ‏மறைக்கப்பட்டது
வ இதா கர' தல் குர்'ஆன ஜ'அல்னா Bபய்னக வ Bபய்னல் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி ஹிஜாBபம் மஸ்தூரா
(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான் கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு திரையை அமைத்து விடுகிறோம்.
وَّجَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِی الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰۤی اَدْبَارِهِمْ نُفُوْرًا ۟
وَّجَعَلْنَاஆக்கிவிடுவோம்عَلٰى قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்கள் மீதுاَكِنَّةًமூடிகளைاَنْ يَّفْقَهُوْهُஅவர்கள் விளங்குவதற்கு / அதைوَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا‌ ؕஇன்னும் காதுகளில்/அவர்களுடைய/கனத்தைوَاِذَا ذَكَرْتَநீர் நினைவுகூர்ந்தால்رَبَّكَஉம் இறைவனைفِى الْقُرْاٰنِகுர்ஆனில்وَحْدَهٗஅவனை மட்டும்وَلَّوْاதிரும்புகின்றனர்عَلٰٓىமீதுاَدْبَارِهِمْதங்கள் பின்புறங்கள்نُفُوْرًا‏வெறுத்து
வ ஜ'அல்னா 'அலா குலூ Bபிஹிம் அகின்னதன் அ(ன்)ய் யFப்கஹூஹு வ Fபீ ஆதானிஹிம் வக்ரா; வ இதா தகர்த ரBப்Bபக Fபில் குர்'ஆனி வஹ்தஹூ வல்லவ் 'அலா அத்Bபாரிஹிம் னுFபூரா
இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.
نَحْنُ اَعْلَمُ بِمَا یَسْتَمِعُوْنَ بِهٖۤ اِذْ یَسْتَمِعُوْنَ اِلَیْكَ وَاِذْ هُمْ نَجْوٰۤی اِذْ یَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ۟
نَحْنُநாம்اَعْلَمُமிக அறிந்தவர்கள்بِمَاஎதற்காகيَسْتَمِعُوْنَசெவிமடுக்கின்றனர்بِهٖۤஅதைاِذْ يَسْتَمِعُوْنَஅவர்கள் செவிமடுக்கும் போதுاِلَيْكَஉமக்குوَاِذْஇன்னும் /போதுهُمْஅவர்கள்نَجْوٰٓىதனித்து பேசுபவர்கள்اِذْ يَقُوْلُகூறும் போதுالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்اِنْ تَتَّبِعُوْنَநீங்கள் பின்பற்றவில்லைاِلَّاஓர் ஆடவரைرَجُلًاதவிரمَّسْحُوْرًا‏(மனித இனத்தை சேர்ந்தவர்,) உண்ணவும் குடிக்கவும் செய்பவர்
னஹ்னு அஃலமு Bபிமா யஸ்தமி'ஊன Bபிஹீ இத் யஸ்தமி'ஊன இலய்க வ இத் ஹும் னஜ்வா இத் யகூலுள் ளாலிமூன இன் தத்தBபி'ஊன இல்லா ரஜுலம் மஸ் ஹூரா
(நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
اُنْظُرْ كَیْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا یَسْتَطِیْعُوْنَ سَبِیْلًا ۟
اُنْظُرْகவனிப்பீராகكَيْفَஎவ்வாறுضَرَبُوْاவிவரித்தார்கள்لَكَஉமக்குالْاَمْثَالَதன்மைகளைفَضَلُّوْاஆகவே வழிகெட்டனர்فَلَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்سَبِيْلًا‏வழி(பெற)
உன்ளுர் கய்Fப ளரBபூ லகல் அம்தால Fபளல்லூ Fபலா யஸ்ததீ'ஊன ஸBபீலா
(நபியே!) உமக்கு அவர்கள் எத்தகைய உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும்! ஆகவே, அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள்.
وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِیْدًا ۟
وَقَالُوْۤاகூறுகிறார்கள்ءَاِذَا كُنَّاநாங்கள் ஆகிவிட்டால்?عِظَامًاஎலும்புகளாகوَّرُفَاتًاஇன்னும் மக்கியவர்களாகءَاِنَّا?/நிச்சயமாக நாம்لَمَبْعُوْثُوْنَஎழுப்பப்படுவோம்خَلْقًاபடைப்பாகجَدِيْدًا‏புதிய
வ காலூ 'அ இதா குன்னா 'இளாம(ன்)வ் வ ருFபாதன் 'அ இன்னா லமBப்'ஊதூன கல்கன் ஜதீதா
இன்னும:; “(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِیْدًا ۟ۙ
قُلْகூறுவீராகكُوْنُوْاஆகிவிடுங்கள்حِجَارَةًகல்லாகاَوْ حَدِيْدًا‏அல்லது இரும்பாக
குல் கூனூ ஹிஜாரதன் அவ் ஹதீதா
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
اَوْ خَلْقًا مِّمَّا یَكْبُرُ فِیْ صُدُوْرِكُمْ ۚ فَسَیَقُوْلُوْنَ مَنْ یُّعِیْدُنَا ؕ قُلِ الَّذِیْ فَطَرَكُمْ اَوَّلَ مَرَّةٍ ۚ فَسَیُنْغِضُوْنَ اِلَیْكَ رُءُوْسَهُمْ وَیَقُوْلُوْنَ مَتٰی هُوَ ؕ قُلْ عَسٰۤی اَنْ یَّكُوْنَ قَرِیْبًا ۟
اَوْஅல்லதுخَلْقًاஒரு படைப்பாகمِّمَّاஉள்ளவற்றில்يَكْبُرُபெரியதாகفِىْ صُدُوْرِكُمْ‌ۚஉங்கள் நெஞ்சங்களில்فَسَيَـقُوْلُوْنَஅவர்கள் கூறட்டும்مَنْயார்?يُّعِيْدُنَا‌ ؕமீட்பார் / எங்களைقُلِகூறுவீராகالَّذِىْஎவன்فَطَرَكُمْபடைத்தான்/உங்களைاَوَّلَமுதல்مَرَّةٍ‌ ۚமுறையாகفَسَيُنْغِضُوْنَஆகவே ஆட்டுவார்கள்اِلَيْكَஉம் பக்கம்رُءُوْسَهُمْதலைகளை/தங்கள்وَيَقُوْلُوْنَபிறகு கூறுவார்கள்مَتٰىஎப்போதுهُوَ‌ ؕஅதுقُلْகூறுவீராகعَسٰٓىகூடும்اَنْ يَّكُوْنَஇருக்கقَرِيْبًا‏சமீபமாக
அவ் கல்கம் மிம்மா யக்Bபுரு Fபீ ஸுதூரிகும்; Fபஸ யகூலூன மய் யு'ஈதுனா குலில் லதீ Fபதரகும் அவ்வல மர்ரஹ்; Fபஸ யுன்கிளூன இலய்க ரு'ஊஸஹும் வ யகூலூன மதாஹூ; குல் 'அஸா அ(ன்)ய் யகூன கரீBபா
“அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!” என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். “அது வெகு சீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக!
یَوْمَ یَدْعُوْكُمْ فَتَسْتَجِیْبُوْنَ بِحَمْدِهٖ وَتَظُنُّوْنَ اِنْ لَّبِثْتُمْ اِلَّا قَلِیْلًا ۟۠
يَوْمَ يَدْعُوْكُمْநாள்/அழைப்பான்/உங்களைفَتَسْتَجِيْبُوْنَபதில் அளிப்பீர்கள்بِحَمْدِபுகழ்ந்துهٖஅவனுடையوَتَظُنُّوْنَஇன்னும் எண்ணுவீர்கள்اِنْ لَّبِثْتُمْநீங்கள் தங்கவில்லைاِلَّاதவிரقَلِيْلًا‏சொற்பமாக
யவ்ம யத்'ஊகும் Fபதஸ்தஜீBபூன Bபிஹம்திஹீ வ தளுன்னூன இல் லBபித்தும் இல்லா கலீலா
உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில், நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில் கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள்.
وَقُلْ لِّعِبَادِیْ یَقُوْلُوا الَّتِیْ هِیَ اَحْسَنُ ؕ اِنَّ الشَّیْطٰنَ یَنْزَغُ بَیْنَهُمْ ؕ اِنَّ الشَّیْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِیْنًا ۟
وَقُلْகூறுவீராகلِّعِبَادِىْஎன் அடியார்களுக்குيَقُوْلُواஅவர்கள் கூறவும்الَّتِىْஎதுهِىَஅதுاَحْسَنُ‌ؕமிக அழகியதுاِنَّநிச்சயமாகالشَّيْطٰنَஷைத்தான்يَنْزَغُகுழப்பம், கெடுதி செய்வான்بَيْنَهُمْ‌ؕஅவர்களுக்கிடையில்اِنَّ الشَّيْطٰنَநிச்சயமாக ஷைத்தான்كَانَஇருக்கின்றான்لِلْاِنْسَانِமனிதனுக்குعَدُوًّاஎதிரியாகمُّبِيْنًا‏தெளிவான
வ குல் லி'இBபாதீ யகூலுல் லதீ ஹிய அஹ்ஸன்; இன்னஷ் ஷய்தான யன்Zஜகு Bபய்னஹும்; இன்னஷ் ஷய்தான கான லில் இன்ஸானி 'அதுவ்வம் முBபீனா
(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.
رَبُّكُمْ اَعْلَمُ بِكُمْ ؕ اِنْ یَّشَاْ یَرْحَمْكُمْ اَوْ اِنْ یَّشَاْ یُعَذِّبْكُمْ ؕ وَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ وَكِیْلًا ۟
رَبُّكُمْஉங்கள் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِكُمْ‌ؕஉங்களைاِنْ يَّشَاْஅவன் நாடினால்يَرْحَمْكُمْ اَوْஅருள் புரிவான்/உங்களுக்கு/அல்லதுاِنْ يَّشَاْஅவன் நாடினால்يُعَذِّبْكُمْ ؕவேதனை செய்வான் / உங்களைوَمَاۤ اَرْسَلْنٰكَஉம்மை நாம் அனுப்பவில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَكِيْلًا‏பொறுப்பாளராக
ரBப்Bபுகும் அஃலமு Bபிகும் இ(ன்)ய் யஷ' யர்ஹம்கும் அவ் இ(ன்)ய் யஷ' யு'அத்திBப்கும்; வ மா அர்ஸல்னாக 'அலய்ஹிம் வகீலா
உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை.
وَرَبُّكَ اَعْلَمُ بِمَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِیّٖنَ عَلٰی بَعْضٍ وَّاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟
وَرَبُّكَஉம் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنْஎவர்களைفِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிوَلَقَدْதிட்டவட்டமாகفَضَّلْنَاமேன்மைப்படுத்தினோம்بَعْضَசிலரைالنَّبِيّٖنَநபிமார்களில்عَلٰى بَعْضٍ‌சிலர் மீதுوَّاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‏ஜபூரை
வ ரBப்Bபுக அஃலமு Bபிமன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ லகத் Fபள்ளல்னா Bபஃளன் னBபிய்யீன 'அலா Bபஃளி(ன்)வ் வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
உம்முடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்கிறோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
قُلِ ادْعُوا الَّذِیْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِهٖ فَلَا یَمْلِكُوْنَ كَشْفَ الضُّرِّ عَنْكُمْ وَلَا تَحْوِیْلًا ۟
قُلِகூறுவீராகادْعُواஅழையுங்கள்الَّذِيْنَஎவர்களைزَعَمْتُمْகூறினீர்கள்مِّنْ دُوْنِهٖஅவனையன்றிفَلَا يَمْلِكُوْنَஉரிமை, ஆற்றல் பெற மாட்டார்கள்كَشْفَநீக்குவதற்குالضُّرِّதுன்பத்தைعَنْكُمْஉங்களை விட்டுوَلَا تَحْوِيْلًا‏இன்னும் திருப்புவதற்கும்
குலித் 'உல் லதீன Zஜ'அம்தும் மின் தூனிஹீ Fபலா யம்லிகூன கஷ்Fபத் ளுர்ரி'அன்கும் வலா தஹ்வீலா
அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்).
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یَدْعُوْنَ یَبْتَغُوْنَ اِلٰی رَبِّهِمُ الْوَسِیْلَةَ اَیُّهُمْ اَقْرَبُ وَیَرْجُوْنَ رَحْمَتَهٗ وَیَخَافُوْنَ عَذَابَهٗ ؕ اِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُوْرًا ۟
اُولٰۤٮِٕكَஇவர்கள்الَّذِيْنَஎவர்களைيَدْعُوْنَபிரார்த்திக்கிறார்கள்يَبْتَغُوْنَதேடுகின்றனர்اِلٰىபக்கம்رَبِّهِمُதங்கள் இறைவன்الْوَسِيْلَةَநன்மையைاَيُّهُمْதங்களில் யார்اَقْرَبُமிக நெருங்கியவராகوَيَرْجُوْنَஇன்னும் ஆதரவு வைக்கின்றனர்رَحْمَتَهٗஅவனுடையஅருளைوَيَخَافُوْنَஇன்னும் பயப்படுகின்றனர்عَذَابَهٗؕவேதனையை/அவனுடையاِنَّநிச்சயமாகعَذَابَவேதனைرَبِّكَஉம் இறைவனின்كَانَஇருக்கின்றதுمَحْذُوْرًا‏பயப்படவேண்டியதாக
உலா'இகல் லதீன யத்'ஊன யBப்தகூன இலா ரBப்Bபிஹிமுல் வஸீலத அய்யுஹும் அக்ரBபு வ யர்ஜூன ரஹ்மதஹூ வ யகாFபூன 'அதாBபஹ்; இன்ன 'அதாBப ரBப்Bபிக கான மஹ்தூரா
(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது.
وَاِنْ مِّنْ قَرْیَةٍ اِلَّا نَحْنُ مُهْلِكُوْهَا قَبْلَ یَوْمِ الْقِیٰمَةِ اَوْ مُعَذِّبُوْهَا عَذَابًا شَدِیْدًا ؕ كَانَ ذٰلِكَ فِی الْكِتٰبِ مَسْطُوْرًا ۟
وَاِنْ مِّنْஅறவே இல்லைقَرْيَةٍஊர்اِلَّاதவிரنَحْنُநாம்مُهْلِكُوْهَاஅதை அழிப்பவர்களாகقَبْلَமுன்புيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாளுக்குاَوْஅல்லதுمُعَذِّبُوْهَاவேதனை செய்பவர்களாக/அதைعَذَابًاவேதனைشَدِيْدًا‌ ؕகடுமையானதுكَانَஇருக்கின்றதுذٰ لِكَஇதுفِى الْـكِتٰبِபுத்தகத்தில்مَسْطُوْرًا‏எழுதப்பட்டதாக
வ இன் மின் கர்யதின் இல்லா னஹ்னு முஹ்லிகூஹா கBப்ல யவ்மில் கியாமதி அவ் மு'அத் திBபூஹா 'அதாBபன் ஷதீதா; கான தாலிக Fபில் கிதாBபி மஸ்தூரா
இன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை; இது(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது.
وَمَا مَنَعَنَاۤ اَنْ نُّرْسِلَ بِالْاٰیٰتِ اِلَّاۤ اَنْ كَذَّبَ بِهَا الْاَوَّلُوْنَ ؕ وَاٰتَیْنَا ثَمُوْدَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوْا بِهَا ؕ وَمَا نُرْسِلُ بِالْاٰیٰتِ اِلَّا تَخْوِیْفًا ۟
وَمَاதடுக்கவில்லைمَنَعَنَاۤநம்மைاَنْ نُّرْسِلَநாம் அனுப்பிவைக்கبِالْاٰيٰتِஅத்தாட்சிகளைاِلَّاۤதவிரاَنْ كَذَّبَபொய்ப்பித்தார்(கள்)بِهَاஅவற்றைالْاَوَّلُوْنَ‌ؕமுன்னோர்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்ثَمُوْدَஸமூதுக்குالنَّاقَةَபெண் ஒட்டகத்தைمُبْصِرَةًதெளிவான அத்தாட்சியாகفَظَلَمُوْاதீங்கிழைத்தனர்بِهَا‌ؕஅதற்குوَمَا نُرْسِلُஅனுப்ப மாட்டோம்بِالْاٰيٰتِஅத்தாட்சிகளைاِلَّاதவிரتَخْوِيْفًا‏பயமுறுத்தலாகவே
வமா மன'அனா அன் னுர்ஸில Bபில் ஆயாதி இல்லா அன் கத்தBப Bபிஹல் அவ்வலூன்; வ ஆதய்னா தமூதன் னாகத முBப்ஸிரதன் Fபளலமூ Bபிஹா; வமா னுர்ஸிலு Bபில் ஆயாதி இல்லா தக்வீFபா
(நம்முடைய அத்தாட்சிகளை இவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை; (இதற்கு முன்) நாம் “ஸமூது” கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
وَاِذْ قُلْنَا لَكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِ ؕ وَمَا جَعَلْنَا الرُّءْیَا الَّتِیْۤ اَرَیْنٰكَ اِلَّا فِتْنَةً لِّلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُوْنَةَ فِی الْقُرْاٰنِ ؕ وَنُخَوِّفُهُمْ ۙ فَمَا یَزِیْدُهُمْ اِلَّا طُغْیَانًا كَبِیْرًا ۟۠
وَاِذْ قُلْنَاநாம் கூறிய சமயம்لَـكَஉமக்குاِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்اَحَاطَசூழ்ந்து கொண்டான்بِالنَّاسِ‌ ؕமனிதர்களைوَمَا جَعَلْنَاஇன்னும் நாம்ஆக்கவில்லைالرُّءْيَاகாட்சியைالَّتِىْۤஎதுاَرَيْنٰكَஉமக்குகாண்பித்தோம்اِلَّاதவிரفِتْنَةًசோதனையாகلِّلنَّاسِமனிதர்களுக்குوَ الشَّجَرَةَஇன்னும் மரத்தைالْمَلْعُوْنَةَசபிக்கப்பட்டதுفِى الْقُرْاٰنِ‌ ؕகுர்ஆனில்وَنُخَوِّفُهُمْۙஇன்னும் பயமுறுத்துகிறோம்/அவர்களைفَمَا يَزِيْدُஅதிகப்படுத்துவ தில்லைهُمْஅவர்களுக்குاِلَّاதவிரطُغْيَانًاஅட்டூழியத்தைكَبِيْرًا‏பெரியது
வ இத் குல்னா லக இன்ன ரBப்Bபக அஹாத Bபின்னாஸ்; வமா ஜ'அல்னர் ரு'யல் லதீ அரய்னாக இல்லா Fபித்னதல் லின்னாஸி வஷ்ஷஜரதல் மல்'ஊனத Fபில் குர்'ஆன்; வ னுகவ் விFபுஹும் Fபமா யZஜீதுஹும் இல்லா துக்யானன் கBபீரா
(நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.  
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِیْنًا ۟ۚ
وَاِذْ قُلْنَاநாம் கூறிய சமயம்لِلْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِاٰدَمَஆதமுக்குفَسَجَدُوْۤاசிரம் பணிந்தனர்اِلَّاۤதவிரاِبْلِيْسَஇப்லீஸ்قَالَகூறினான்ءَاَسْجُدُநான் சிரம் பணிவதா?لِمَنْஎவருக்குخَلَقْتَநீ படைத்தாய்طِيْنًا‌ ۚ‏மண்ணிலிருந்து
வ இத் குல்னா லில் மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fபஸஜதூ இல்லா இBப்லீஸ கால 'அ-அஸ்ஜுது லிமன் கலக்த தீனா
இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ: “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான்.
قَالَ اَرَءَیْتَكَ هٰذَا الَّذِیْ كَرَّمْتَ عَلَیَّ ؗ لَىِٕنْ اَخَّرْتَنِ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّیَّتَهٗۤ اِلَّا قَلِیْلًا ۟
قَالَகூறினான்اَرَءَيْتَكَநீ அறிவிப்பாயாகهٰذَاஇவர்தானாالَّذِىْஎவர்كَرَّمْتَநீ கண்ணியப்படுத்தினாய்عَلَىَّஎன்னை விடلَٮِٕنْ اَخَّرْتَنِநீ பிற்படுத்தினால் / என்னைاِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாள்لَاَحْتَنِكَنَّநிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்ذُرِّيَّتَهٗۤஇவருடைய சந்ததிகளைاِلَّاதவிரقَلِيْلًا‏குறைவானவர்களை
கால அர'அய்தக ஹாதல் லதீ கர்ரம்த 'அலய்ய ல'இன் அகர்தனி இலா யவ்மில் கியாமதி ல அஹ்தனிகன்ன துர்ரிய்யதஹூ இல்லா கலீலா
“எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَنَّمَ جَزَآؤُكُمْ جَزَآءً مَّوْفُوْرًا ۟
قَالَகூறினான்اذْهَبْபோய்விடுفَمَنْ تَبِعَكَயார்/பின்பற்றினார்/உன்னைمِنْهُمْஅவர்களில்فَاِنَّநிச்சயமாகجَهَـنَّمَநரகம்தான்جَزَآؤُகூலிكُمْஉங்கள்جَزَآءًகூலியாகمَّوْفُوْرًا‏முழுமையானது
காலத் ஹBப் Fபமன் தBபி'அக மின்ஹும் Fப இன்ன ஜஹன்னம ஜZஜா'உகும் ஜZஜா'அம் மவ்Fபூரா
“நீ போய் விடு; அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிறப்பமான கூலியாக இருக்கும்.
وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَیْهِمْ بِخَیْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْ ؕ وَمَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا ۟
وَاسْتَفْزِزْஇன்னும் தூண்டிவிடுمَنِஎவர்اسْتَطَعْتَநீ இயன்றாய்مِنْهُمْஅவர்களில்بِصَوْتِكَஉன் சப்தத்தைக் கொண்டுوَاَجْلِبْஇன்னும் ஏவிவிடுعَلَيْهِمْஅவர்கள் மீதுبِخَيْلِكَஉன் குதிரைப் படைகளைوَرَجِلِكَஇன்னும் உன் காலாட்படைகள்وَشَارِكْهُمْஇன்னும் நீ இணைந்து விடு/அவர்களுடன்فِى الْاَمْوَالِசெல்வங்களில்وَالْاَوْلَادِஇன்னும் சந்ததிகளில்وَعِدْஇன்னும் வாக்களிهُمْ‌ ؕஅவர்களுக்குوَمَا يَعِدُவாக்களிக்க மாட்டான்هُمُஅவர்களுக்குالشَّيْطٰنُஷைத்தான்اِلَّاதவிரغُرُوْرًا‏ஏமாற்றுவதற்கே
வஸ்தFப்ZஜிZஜ் மனிஸ் ததஃத மின்ஹும் Bபிஸவ்திக வ அஜ்லிBப் 'அலய்ஹிம் Bபிகய்லிக வ ரஜிலிக வ ஷாரிக் ஹும் Fபில் அம்வாலி வல் அவ்லாதி வ 'இத்ஹும்; வமா ய'இதுஹுமுஷ் ஷய்தானு இல்லா குரூரா
“இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.
اِنَّ عِبَادِیْ لَیْسَ لَكَ عَلَیْهِمْ سُلْطٰنٌ ؕ وَكَفٰی بِرَبِّكَ وَكِیْلًا ۟
اِنَّ عِبَادِىْநிச்சயமாக என் அடியார்கள்لَـيْسَஇல்லைلَـكَஉனக்குعَلَيْهِمْஅவர்கள் மீதுسُلْطٰنٌ‌ ؕஓர் அதிகாரம்وَكَفٰىபோதுமாகி விட்டான்بِرَبِّكَஉம் இறைவனேوَكِيْلًا‏பொறுப்பாளனாக
இன்ன 'இBபாதீ லய்ஸ லக 'அலய்ஹிம் ஸுல்தான்; வ கFபா Bபி ரBப்Bபிக வகீலா
“நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை” (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்.
رَبُّكُمُ الَّذِیْ یُزْجِیْ لَكُمُ الْفُلْكَ فِی الْبَحْرِ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ كَانَ بِكُمْ رَحِیْمًا ۟
رَبُّكُمُஉங்கள் இறைவன்الَّذِىْஎத்தகையவன்يُزْجِىْசெலுத்துகிறான்لَـكُمُஉங்களுக்காகالْفُلْكَ فِى الْبَحْرِகப்பலை/கடலில்لِتَبْتَغُوْاநீங்கள் தேடுவதற்காகمِنْ فَضْلِهٖؕஅவனுடைய அருளிலிருந்துاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்بِكُمْஉங்கள் மீதுرَحِيْمًا‏பெரும் கருணையாளனாக
ரBப்Bபுகுமுல் லதீ யுZஜ்ஜீ லகுமுல் Fபுல்க Fபில் Bபஹ்ரி லிதBப்தகூ மின் Fபள்லிஹ்; இன்னஹூ கான Bபிகும் ரஹீமா
(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِی الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّاۤ اِیَّاهُ ۚ فَلَمَّا نَجّٰىكُمْ اِلَی الْبَرِّ اَعْرَضْتُمْ ؕ وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا ۟
وَاِذَاஏற்பட்டால்مَسَّكُمُஉங்களுக்குالضُّرُّதீங்கு, துன்பம்فِى الْبَحْرِகடலில்ضَلَّமறைந்துவிடுகின்றனர்مَنْஎவர், எவைتَدْعُوْنَபிரார்தித்தீர்கள்اِلَّاۤதவிரاِيَّاهُ‌ ۚஅவனைفَلَمَّاஅவன் பாதுகாத்தபோதுنَجّٰٮكُمْஉங்களைاِلَى الْبَرِّகரையில்اَعْرَضْتُمْ‌ ؕபுறக்கணிக்கின்றீர்கள்وَكَانَஇருக்கின்றான்الْاِنْسَانُமனிதன்كَفُوْرًا‏மகா நன்றி கெட்டவனாக
வ இதா மஸ்ஸகுமுள்ளுர்ரு Fபில் Bபஹ்ரி ளல்ல மன் தத்'ஊன இல்லா இய்யாஹு Fபலம்மா னஜ்ஜாகும் இலல் Bபர்ரி அஃரள்தும்; வ கானல் இன்ஸானு கFபூரா
இன்னும், கடலில் உங்களை ஏதேனும் துன்பம் தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.
اَفَاَمِنْتُمْ اَنْ یَّخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ اَوْ یُرْسِلَ عَلَیْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ وَكِیْلًا ۟ۙ
اَفَاَمِنْتُمْநீங்கள் அச்சமற்று விட்டீர்களா?اَنْ يَّخْسِفَஅவன் சொருகிவிடுவதைبِكُمْஉங்களைجَانِبَஓரத்தில்الْبَرِّபூமியில்اَوْஅல்லதுيُرْسِلَஅவன் அனுப்புவதைعَلَيْكُمْஉங்கள் மீதுحَاصِبًاகல் மழையைثُمَّபிறகுلَا تَجِدُوْاகாணமாட்டீர்கள்لَـكُمْஉங்களுக்குوَكِيْلًا ۙ‏ஒரு பொறுப்பாளரை
அFப அமின்தும் அ(ன்)ய் யக்ஸிFப Bபிகும் ஜானிBபல் Bபர்ரி அவ் யுர்ஸில 'அலய்கும் ஹாஸிBபன் தும்ம லா தஜிதூ லகும் வகீலா
(கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.
اَمْ اَمِنْتُمْ اَنْ یُّعِیْدَكُمْ فِیْهِ تَارَةً اُخْرٰی فَیُرْسِلَ عَلَیْكُمْ قَاصِفًا مِّنَ الرِّیْحِ فَیُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْ ۙ ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ عَلَیْنَا بِهٖ تَبِیْعًا ۟
اَمْ اَمِنْتُمْஅல்லது பயமற்று இருக்கின்றீர்களா?اَنْ يُّعِيْدَஅவன் மீட்பதைكُمْஉங்களைفِيْهِஅதில்تَارَةًமுறைاُخْرٰىமற்றொருفَيُرْسِلَஅனுப்புவான்عَلَيْكُمْஉங்கள் மீதுقَاصِفًاஉடைத்தெரியக் கூடியதுمِّنَஇருந்துالرِّيْحِகாற்றுفَيُغْرِقَكُمْஅவன் மூழ்கடிப்பான்/உங்களைبِمَا كَفَرْتُمْ‌ۙநீங்கள் நன்றி கெட்டதால்ثُمَّபிறகுلَا تَجِدُوْاகாணமாட்டீர்கள்لَـكُمْஉங்களுக்குعَلَيْنَاநம்மிடம்بِهٖஅதற்காகتَبِيْعًا‏பழிதீர்ப்பவரை
அம் அமின்தும் அ(ன்)ய் யு'ஈதகும் Fபீஹி தாரதன் உக்ரா Fப யுர்ஸில 'அலய்கும் காஸிFபம் மினர் ரீஹி Fப யுக் ரிககும் Bபிமா கFபர்தும் தும்ம லா தஜிதூ லகும் 'அலய்னா Bபிஹீ தBபீ'ஆ
அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்காக(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِیْۤ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰی كَثِیْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِیْلًا ۟۠
وَلَـقَدْதிட்டவட்டமாகكَرَّمْنَاநாம் கண்ணியப்படுத்தினோம்بَنِىْۤசந்ததிகளைاٰدَمَஆதமுடையوَحَمَلْنٰهُمْஇன்னும் வாகனிக்கச் செய்தோம்/அவர்களைفِى الْبَرِّகரையில்وَالْبَحْرِஇன்னும் கடலில்وَرَزَقْنٰهُمْஇன்னும் உணவளித்தோம்/அவர்களுக்குمِّنَஇருந்துالطَّيِّبٰتِநல்லவைوَفَضَّلْنٰهُمْஇன்னும் மேன்மைப்படுத்தினோம்/அவர்களைعَلٰىவிடكَثِيْرٍஅதிகமானதுمِّمَّنْஎவற்றிலிருந்துخَلَقْنَاநாம் படைத்தோம்تَفْضِيْلًا‏மேன்மையாக
வ லகத் கர்ரம்னா Bபனீ ஆதம வ ஹமல்னாஹும் Fபில் Bபர்ரி வல்Bபஹ்ரி வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி வ Fபள்ளல்னாஹும் 'அலா கதீரிம் மிம்மன் கலக்னா தFப்ளீலா
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.  
یَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍ بِاِمَامِهِمْ ۚ فَمَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ فَاُولٰٓىِٕكَ یَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا یُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
يَوْمَநாள்نَدْعُوْاநாம் அழைப்போம்كُلَّஒவ்வொருاُنَاسٍۢமனிதன்بِاِمَامِهِمْ‌ۚஅவர்களின் தலைவர்களுடன்فَمَنْஎவர்(கள்)اُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்)كِتٰبَهٗதமது புத்தகத்தைبِيَمِيْنِهٖதமது வலக்கையில்فَاُولٰۤٮِٕكَஅத்தகையவர்கள்يَقْرَءُوْنَவாசிப்பார்கள்كِتٰبَهُمْதங்கள் புத்தகத்தைوَلَا يُظْلَمُوْنَஇன்னும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்فَتِيْلًا‏ஒரு நூல் அளவு
யவ்ம னத்'ஊ குல்ல உனாஸிம் Bபி இமாமிஹிம் Fபமன் ஊதிய கிதாBபஹூ Bபி யமீனிஹீ Fப உலா'இக யக்ர'ஊன கிதாBபஹும் வலா யுள்லமூன Fபதீலா
(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக; அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகைய நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
وَمَنْ كَانَ فِیْ هٰذِهٖۤ اَعْمٰی فَهُوَ فِی الْاٰخِرَةِ اَعْمٰی وَاَضَلُّ سَبِیْلًا ۟
وَمَنْஎவர்كَانَஇருந்தார்فِىْ هٰذِهٖۤஇம்மையில்اَعْمٰىகுருடராகفَهُوَ فِى الْاٰخِرَةِஅவர் மறுமையில்اَعْمٰىகுருடர்وَاَضَلُّஇன்னும் மிக வழிகெட்டவர்سَبِيْلًا‏பாதையால்
வ மன் கான Fபீ ஹாதிஹீ அஃமா Fபஹுவ Fபில் ஆகிரதி அஃமா வ அளல்லு ஸBபீலா
யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.
وَاِنْ كَادُوْا لَیَفْتِنُوْنَكَ عَنِ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ لِتَفْتَرِیَ عَلَیْنَا غَیْرَهٗ ۖۗ وَاِذًا لَّاتَّخَذُوْكَ خَلِیْلًا ۟
وَاِنْ كَادُوْاநிச்சயமாக நெருங்கி விட்டனர்لَيَـفْتِنُوْنَكَஅவர்கள் திருப்பிவிட/உம்மைعَنِவிட்டுالَّذِىْۤஎதைاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குلِتَفْتَرِىَஏனெனில் நீர் இட்டுக்கட்டுவதற்காகعَلَيْنَاநம் மீதுغَيْرَهٗ‌அது அல்லாததைۖ  وَاِذًاஅப்போதுلَّاتَّخَذُوْكَஎடுத்துக் கொண்டிருப்பார்கள்/உம்மைخَلِيْلًا‏உற்ற நண்பராக
வ இன் காதூ ல யFப்தினூனக 'அனில் லதீ அவ்ஹய்னா இலய்க லிதFப்தரிய 'அலய்னா கய்ரஹூ வ இதல்லத் தகதூக கலீலா
(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே, அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்,) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَیْهِمْ شَیْـًٔا قَلِیْلًا ۟ۗۙ
وَلَوْلَاۤ اَنْ ثَبَّتْنٰكَநாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால்/உம்மைلَقَدْ كِدْتَّநெருங்கி இருப்பீர்تَرْكَنُநீர் சாய்ந்துவிடاِلَيْهِمْஅவர்கள் பக்கம்شَيْــٴًـــاஓர் அளவுقَلِيْلًا  ۙ‏கொஞ்சம்
வ லவ் லா அன் தBப்Bபத்னாக லகத் கித்த தர்கனு இலய்ஹிம் ஷய்'அன் கலீலா
மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.
اِذًا لَّاَذَقْنٰكَ ضِعْفَ الْحَیٰوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَیْنَا نَصِیْرًا ۟
اِذًاஅப்போதுلَّاَذَقْنٰكَசுவைக்க வைத்திருப்போம்/உம்மைضِعْفَஇரு மடங்கு தண்டனையையும்الْحَيٰوةِஇவ்வாழ்க்கையில்وَضِعْفَஇன்னும் இரட்டிப்புالْمَمَاتِமரணத்திற்குப் பின்ثُمَّபிறகுلَا تَجِدُகாணமாட்டீர்لَـكَஉமக்குعَلَيْنَاநமக்கு எதிராகنَصِيْرًا‏உதவக்கூடியவரை
இதல் ல அதக்னாக ளிஃFபல் ஹயாதி வ ளிஃFபல் மமாதி தும்ம லா தஜிது லக 'அலய்னா னஸீரா
(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
وَاِنْ كَادُوْا لَیَسْتَفِزُّوْنَكَ مِنَ الْاَرْضِ لِیُخْرِجُوْكَ مِنْهَا وَاِذًا لَّا یَلْبَثُوْنَ خِلٰفَكَ اِلَّا قَلِیْلًا ۟
وَاِنْ كَادُوْاநிச்சயமாக முயற்சிக்கின்றனர்لَيَسْتَفِزُّوْنَكَஅவர்கள் தூண்டிவிட/உம்மைمِنَ الْاَرْضِஊரிலிருந்துلِيُخْرِجُوْكَஅவர்கள் வெளியேற்றுவதற்காக/உம்மைمِنْهَا‌அதிலிருந்துوَاِذًا لَّا يَلْبَـثُوْنَஅப்போது வசித்திருக்க மாட்டார்கள்خِلٰفَكَஉமக்குப் பின்னால்اِلَّا قَلِيْلًا‏சொற்ப காலமே தவிர
வ இன் காதூ ல யஸ்தFபிZஜ்Zஜூனக மினல் அர்ளி லியுக்ரி ஜூக மின்ஹா வ இதல் லா யல்Bபதூன கிலாFபக இல்லா கலீலா
(நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள்.
سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِیْلًا ۟۠
سُنَّةَநடைமுறைمَنْஎவர்قَدْதிட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்قَبْلَكَஉமக்கு முன்புمِنْ رُّسُلِنَا‌நம் தூதர்களில்وَلَا تَجِدُநீர் காணமாட்டீர்لِسُنَّتِنَاநம் நடைமுறையில்تَحْوِيْلًا‏மாற்றத்தை
ஸுன்னத மன் கத் அர்ஸல்னா கBப்லகமிர் ருஸுலினா வலா தஜிது லிஸுன்னதினா தஹ்வீலா
திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம் தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து வந்தது; நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.  
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰی غَسَقِ الَّیْلِ وَقُرْاٰنَ الْفَجْرِ ؕ اِنَّ قُرْاٰنَ الْفَجْرِ كَانَ مَشْهُوْدًا ۟
اَقِمِநிலை நிறுத்துவீராகالصَّلٰوةَதொழுகையைلِدُلُوْكِசாய்ந்ததிலிருந்துالشَّمْسِசூரியன்اِلٰى غَسَقِஇருள் வரைالَّيْلِஇரவின்وَقُرْاٰنَஇன்னும் தொழுகைالْـفَجْرِ‌ؕஃபஜ்ர் உடையاِنَّ قُرْاٰنَநிச்சயமாக தொழுகைالْـفَجْرِஃபஜ்ர்كَانَஇருக்கின்றதுمَشْهُوْدًا‏வானவர்கள் கலந்து கொள்ளக்கூடியதாக
அகிமிஸ் ஸலாத லிதுலூ கிஷ் ஷம்ஸி இலா கஸகில் லய்லி வ குர்'ஆனல் Fபஜ்ரி இன்ன குர்'ஆனல் Fபஜ்ரி கான மஷ்ஹூதா
(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக); நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.
وَمِنَ الَّیْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ۖۗ عَسٰۤی اَنْ یَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا ۟
وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْஇரவில்/உறங்கி எழுந்து தொழுவீராகبِهٖஅதை (ஓதி)نَافِلَةًஉபரியா(னதா)கلَّكَஉமக்குۖ  عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَஎழுப்புவான்/உம்மைرَبُّكَஉம் இறைவன்مَقَامًاஇடத்தில்مَّحْمُوْدًا‏மஹ்மூது
வ மினல் லய்லி Fபதஹஜ்ஜத் Bபிஹீ னாFபிலதல் லக 'அஸா அ(ன்)ய் யBப்'அதக ரBப்Bபுக மகாமம் மஹ்மூதா
இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்ற (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.
وَقُلْ رَّبِّ اَدْخِلْنِیْ مُدْخَلَ صِدْقٍ وَّاَخْرِجْنِیْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّیْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِیْرًا ۟
وَقُلْஇன்னும் கூறுவீராகرَّبِّஎன் இறைவாاَدْخِلْنِىْநுழையவை/என்னைمُدْخَلَநுழைவிடத்தில்صِدْقٍநல்லதுوَّ اَخْرِجْنِىْஇன்னும் வெளியேற்று / என்னைمُخْرَجَவெளியேறுமிடத்தில்صِدْقٍநல்லதுوَّاجْعَلْஇன்னும் ஏற்படுத்துلِّىْஎனக்குمِنْ لَّدُنْكَஉன்னிடமிருந்துسُلْطٰنًاஓர் ஆதாரத்தைنَّصِيْرًا‏உதவக்கூடியதாக
வ குர் ரBப்Bபி அத்கில்னீ முத்கல ஸித்கி(ன்)வ் வ அக்ரிஜ்னீ முக்ரஜ ஸித்கி(ன்)வ் வஜ்'அல் லீ மில்லதுன்க ஸுல்தானன் னஸீரா
“என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக.
وَقُلْ جَآءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ؕ اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا ۟
وَقُلْஇன்னும் கூறுவீராகجَآءَவந்ததுالْحَـقُّசத்தியம்وَزَهَقَஇன்னும் அழிந்ததுالْبَاطِلُ‌ؕஅசத்தியம்اِنَّ الْبَاطِلَநிச்சயமாகஅசத்தியம்كَانَஇருக்கின்றதுزَهُوْقًا‏அழியக்கூடியதாக
வ குல் ஜா'அல் ஹக்கு வ Zஜஹகல் Bபாதில்; இன்னல் Bபாதில கான Zஜஹூகா
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
وَنُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۙ وَلَا یَزِیْدُ الظّٰلِمِیْنَ اِلَّا خَسَارًا ۟
وَنُنَزِّلُஇறக்குகிறோம்مِنَ الْـقُرْاٰنِகுர்ஆனில்مَاஎதுهُوَஅதுشِفَآءٌநோய் நிவாரணிوَّرَحْمَةٌஇன்னும் அருள்لِّـلْمُؤْمِنِيْنَ‌ۙநம்பிக்கையாளர்களுக்குوَلَا يَزِيْدُஅதிகப்படுத்தாதுالظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّا خَسَارًا‏நஷ்டத்தைத் தவிர
வ னுனZஜ்Zஜிலு மினல் குர்'ஆனி மா ஹுவ ஷிFபா'உ(ன்)வ் வ ரஹ்மதுல்லில் மு'மினீன வலா யZஜீதுள் ளாலிமீன இல்லா கஸாரா
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ یَـُٔوْسًا ۟
وَاِذَاۤ اَنْعَمْنَاநாம் அருள் புரிந்தால்عَلَى الْاِنْسَانِமனிதனுக்குاَعْرَضَபுறக்கணிக்கின்றான்وَنَاٰ بِجَانِبِهٖ‌ۚஇன்னும் தூரமாகி விடுகிறான்وَاِذَا مَسَّهُஅணுகினால் / அவனைالشَّرُّஒரு தீங்குكَانَஆகிவிடுகின்றான்يَـــٴُـوْسًا‏நிராசையுடையவனாக
வ இதா அன்'அம்னா 'அலல் இன்ஸானி அஃரள வ னஆ Bபிஜானி Bபிஹீ வ இதா மஸ்ஸஹுஷ் ஷர்ரு கான ய'ஊஸா
நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.
قُلْ كُلٌّ یَّعْمَلُ عَلٰی شَاكِلَتِهٖ ؕ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰی سَبِیْلًا ۟۠
قُلْகூறுவீராகكُلٌّஒவ்வொருவரும்يَّعْمَلُஅமல் செய்கிறார்عَلٰى شَاكِلَتِهٖؕதனது பாதையில்فَرَبُّكُمْஆகவே, உங்களது இறைவன்தான்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنْயார் என்பதைهُوَஅவர்اَهْدٰىமிக நேர்வழி பெற்றவர்سَبِيْلًا‏பாதையால்
குல் குல்லு(ன்)ய் யஃமலு 'அலா ஷாகிலதிஹீ Fப ரBப்Bபுகும் அஃலமு Bபிமன் ஹுவ அஹ்தா ஸBபீலா
(நபியே!) நீர் கூறுவீராக: “ஒவ்வொருவனும் தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கு அறிவான்.”
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الرُّوْحِ ؕ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّیْ وَمَاۤ اُوْتِیْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِیْلًا ۟
وَيَسْــٴَــلُوْنَكَகேட்கிறார்கள்/உம்மிடம்عَنِபற்றிالرُّوْحِ‌ ؕரூஹ்قُلِகூறுவீராகالرُّوْحُரூஹ்مِنْ اَمْرِகட்டளையினால்رَبِّىْஎன் இறைவன்وَمَاۤ اُوْتِيْتُمْநீங்கள் கொடுக்கப்படவில்லைمِّنَ الْعِلْمِகல்வியில்اِلَّاதவிரقَلِيْلًا‏சொற்பமே
வ யஸ்'அலூனக 'அனிர்ரூஹ்; குலிர் ரூஹு மின் அம்ரி ரBப்Bபீ வ மா ஊதீதும் மினல் 'இல்மி இல்லா கலீலா
(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
وَلَىِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهٖ عَلَیْنَا وَكِیْلًا ۟ۙ
وَلَٮِٕنْ شِئْنَاநாம் நாடினால்لَنَذْهَبَنَّநிச்சயம் போக்கி விடுவோம்بِالَّذِىْۤஎவற்றைاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குثُمَّபிறகுلَا تَجِدُகாணமாட்டீர்لَـكَஉமக்குبِهٖஅதற்குعَلَيْنَاநமக்கு எதிராகوَكِيْلًا ۙ‏ஒரு பொறுப்பாளரை
வ ல'இன் ஷி'னா லனத் ஹBபன்ன Bபில்லதீ அவ்ஹய்னா இலய்க தும்ம லா தஜிது லக Bபிஹீ 'அலய்னா வகீலா
(நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَیْكَ كَبِیْرًا ۟
اِلَّاஆனால்رَحْمَةًஅருள்مِّنْ رَّبِّكَ‌ ؕஉம் இறைவனுடையاِنَّநிச்சயமாகفَضْلَهٗஅவனுடைய அருள்كَانَஇருக்கிறதுعَلَيْكَஉம்மீதுكَبِيْرًا‏மிகப் பெரிதாக
இல்லா ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; இன்ன Fபள்லஹூ கான 'அலய்க கBபீரா
ஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை); நிச்சயமாக உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே இருக்கிறது.
قُلْ لَّىِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰۤی اَنْ یَّاْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا یَاْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِیْرًا ۟
قُلْகூறுவீராகلَّٮِٕنِ اجْتَمَعَتِஒன்று சேர்ந்தால்الْاِنْسُமனிதர்கள்وَالْجِنُّஇன்னும் ஜின்கள்عَلٰٓىமீதுاَنْ يَّاْتُوْاஅவர்கள் வரبِمِثْلِபோன்றதைக் கொண்டுهٰذَاஇதுالْقُرْاٰنِகுர்ஆன்لَا يَاْتُوْنَவர மாட்டார்கள்بِمِثْلِهٖஇது போன்றதைக் கொண்டுوَلَوْ كَانَஇருந்தாலும் சரியேبَعْضُهُمْஅவர்களில் சிலர்لِبَعْضٍசிலருக்குظَهِيْرًا‏உதவியாளராக
குல் ல'இனிஜ் தம'அதில் இன்ஸு வல்ஜின்னு 'அலா அ(ன்)ய் ய'தூ Bபிமித்லி ஹாதல் குர்'ஆனி லா ய'தூன Bபிமித்லிஹீ வ லவ் கான Bபஃளுஹும் லிBபஃளின் ளஹீரா
“இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.
وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ ؗ فَاَبٰۤی اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ۟
وَلَقَدْதிட்டவட்டமாகصَرَّفْنَاவிவரித்தோம்لِلنَّاسِமக்களுக்குفِىْ هٰذَاஇதில்الْقُرْاٰنِகுர்ஆன்مِنْ كُلِّ مَثَلٍஎல்லா உதாரணங்களையும்فَاَبٰٓىமறுத்தனர்اَكْثَرُஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்اِلَّاதவிரكُفُوْرًا‏நிராகரிப்பதை
வ லகத் ஸர்ரFப்னா லின்னாஸி Fபீ ஹாதல் குர்'ஆனி மின் குல்லி மதலின் Fப அBபா அக்தருன் னாஸி இல்லா குFபூரா
நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.
وَقَالُوْا لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی تَفْجُرَ لَنَا مِنَ الْاَرْضِ یَنْۢبُوْعًا ۟ۙ
وَقَالُوْاஇன்னும் கூறினர்لَنْ نُّـؤْمِنَநம்பிக்கை கொள்ளவே மாட்டோம்لَـكَஉம்மைحَتّٰىவரைتَفْجُرَநீர் பிளந்து விடுவீர்لَنَاஎங்களுக்குمِنَ الْاَرْضِபூமியில்يَنْۢبُوْعًا ۙ‏ஓர் ஊற்றை
வ காலூ லன் னு'மின லக ஹத்தா தFப்ஜுர லனா மினல் அர்ளி யம்Bபூ'ஆ
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.
اَوْ تَكُوْنَ لَكَ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الْاَنْهٰرَ خِلٰلَهَا تَفْجِیْرًا ۟ۙ
اَوْஅல்லதுتَكُوْنَஇருக்கிறதுلَـكَஉமக்குجَنَّةٌஒரு தோட்டம்مِّنْஇருந்துنَّخِيْلٍபேரிட்சை மரம்وَّعِنَبٍஇன்னும் திராட்சை செடிفَتُفَجِّرَபிளந்தோடச் செய்கின்றீர்الْاَنْهٰرَநதிகளைخِلٰلَهَاஅதற்கு மத்தியில்تَفْجِيْرًا ۙ‏பிளப்பதாக
அவ் தகூன லக ஜன்னதும் மின் னகீலி(ன்)வ் வ 'இனBபின் FபதுFபஜ்ஜிரல் அன்ஹார கிலாலஹா தFப்ஜீரா
“அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும்.
اَوْ تُسْقِطَ السَّمَآءَ كَمَا زَعَمْتَ عَلَیْنَا كِسَفًا اَوْ تَاْتِیَ بِاللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ قَبِیْلًا ۟ۙ
اَوْஅல்லதுتُسْقِطَநீர் விழவைக்கின்றீர்السَّمَآءَவானத்தைكَمَاபோன்றுزَعَمْتَநீர் கூறியதுعَلَيْنَاஎங்கள் மீதுكِسَفًاதுண்டுகளாகاَوْஅல்லதுتَاْتِىَ بِاللّٰهِஅல்லாஹ்வை வரவைக்கின்றீர்وَالْمَلٰۤٮِٕكَةِஇன்னும் வானவர்களைقَبِيْلًا ۙ‏கண்முன்
அவ் துஸ்கிதஸ் ஸமா'அ கமா Zஜ'அம்த 'அலய்னா கிஸFபன் அவ் த'திய Bபில்லாஹி வல் மலா'இகதி கBபீலா
“அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை; அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்குமுன்) நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி.
اَوْ یَكُوْنَ لَكَ بَیْتٌ مِّنْ زُخْرُفٍ اَوْ تَرْقٰی فِی السَّمَآءِ ؕ وَلَنْ نُّؤْمِنَ لِرُقِیِّكَ حَتّٰی تُنَزِّلَ عَلَیْنَا كِتٰبًا نَّقْرَؤُهٗ ؕ قُلْ سُبْحَانَ رَبِّیْ هَلْ كُنْتُ اِلَّا بَشَرًا رَّسُوْلًا ۟۠
اَوْஅல்லதுيَكُوْنَஇருக்கும்لَـكَஉமக்குبَيْتٌஒரு வீடுمِّنْ زُخْرُفٍதங்கத்தில்اَوْஅல்லதுتَرْقٰىநீர் ஏறுவாய்فِى السَّمَآءِ ؕவானத்தில்وَلَنْ نُّـؤْمِنَஅறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்لِرُقِيِّكَஉமது ஏறுதலுக்காகحَتّٰىவரைتُنَزِّلَஇறக்கி வைப்பீர்عَلَيْنَاஎங்கள் மீதுكِتٰبًاஒரு வேதத்தைنَّـقْرَؤُهٗ‌ ؕஅதைப் படிக்கின்றோம்قُلْகூறுவீராகسُبْحَانَமிகப்பரிசுத்தமானவன்رَبِّىْஎன் இறைவன்هَلْ?كُنْتُஇருக்கின்றேன்اِلَّاதவிரبَشَرًاஒரு மனிதராகرَّسُوْلًا‏தூதரான
அவ் யகூன லக Bபய்தும் மின் Zஜுக்ருFபின் அவ் தர்கா Fபிஸ் ஸமா'இ வ லன் னு'மின லிருகிய்யிக ஹத்தா துனZஜ்Zஜில 'அலய்னா கிதாBபன் னக்ர'உஹ்; குல் ஸுBப்ஹான ரBப்Bபீ ஹல் குன்து இல்லா Bபஷரர் ரஸூலா
“அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்” என்று கூறுகின்றனர். “என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?” என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.  
وَمَا مَنَعَ النَّاسَ اَنْ یُّؤْمِنُوْۤا اِذْ جَآءَهُمُ الْهُدٰۤی اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا ۟
وَمَا مَنَعَதடுக்கவில்லைالنَّاسَமனிதர்களைاَنْ يُّؤْمِنُوْۤاஅவர்கள் நம்பிக்கைகொள்வதுاِذْபோதுجَآءَهُمُஅவர்களுக்கு வந்ததுالْهُدٰٓىநேர்வழிاِلَّاۤதவிரاَنْ قَالُـوْۤاஅவர்கள் கூறியதுاَبَعَثَஅனுப்பினானா?اللّٰهُஅல்லாஹ்بَشَرًاமனிதரைرَّسُوْلًا‏தூதராக
வமா மன'அன் னாஸ அ(ன்)ய் யு'மினூ இத் ஜா'அஹுமுல் ஹுதா இல்லா அன் காலூ அBப'அதல் லாஹு Bபஷரர் ரஸூலா
மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது, “ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்” என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை.
قُلْ لَّوْ كَانَ فِی الْاَرْضِ مَلٰٓىِٕكَةٌ یَّمْشُوْنَ مُطْمَىِٕنِّیْنَ لَنَزَّلْنَا عَلَیْهِمْ مِّنَ السَّمَآءِ مَلَكًا رَّسُوْلًا ۟
قُلْகூறுவீராகلَّوْ كَانَஇருந்திருந்தால்فِى الْاَرْضِபூமியில்مَلٰۤٮِٕكَةٌவானவர்கள்يَّمْشُوْنَநடக்கின்றனர்مُطْمَٮِٕنِّيْنَநிம்மதியானவர்களாகلَـنَزَّلْنَاஇறக்கியிருப்போம்عَلَيْهِمْஅவர்களிடம்مِّنَஇருந்துالسَّمَآءِவானம்مَلَـكًاவானவரைرَّسُوْلًا‏ஒரு தூதராக
குல் லவ் கான Fபில் அர்ளி மலா 'இகது(ன்)ய் யம்ஷூன முத்ம'இன் னீன லனZஜ்Zஜல்னா 'அலய்ஹிம் மினஸ் ஸமா'இ மலகர் ரஸூலா
(நபியே!) நீர் கூறும்: “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று.
قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِیْرًا بَصِیْرًا ۟
قُلْகூறுவீராகكَفٰىபோதுமாகி விட்டான்بِاللّٰهِஅல்லாஹ்வேشَهِيْدًۢاசாட்சியாளனாகبَيْنِىْஎனக்கிடையில்وَبَيْنَكُمْ‌ؕஇன்னும் உங்களுக்கிடையில்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்بِعِبَادِهٖதன் அடியார்களைخَبِيْرًۢاஆழ்ந்தறிந்தவனாகبَصِيْرًا‏உற்று நோக்கினவனாக
குல் கFபா Bபில்லாஹி ஷஹீதம் Bபய்னீ வ Bபய்னகும்; இன்னஹூ கான Bபி'இBபாதிஹீ கBபீரம் Bபஸீரா
“எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَمَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ وَمَنْ یُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِیَآءَ مِنْ دُوْنِهٖ ؕ وَنَحْشُرُهُمْ یَوْمَ الْقِیٰمَةِ عَلٰی وُجُوْهِهِمْ عُمْیًا وَّبُكْمًا وَّصُمًّا ؕ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِیْرًا ۟
وَمَنْஎவரைيَّهْدِநேர்வழி செலுத்துவான்اللّٰهُஅல்லாஹ்فَهُوَஅவர்தான்الْمُهْتَدِ‌ ۚநேர்வழி பெற்றவர்وَمَنْஇன்னும் எவரைيُّضْلِلْவழிகெடுப்பான்فَلَنْ تَجِدَஅறவே காணமாட்டீர்لَهُمْஅவர்களுக்குاَوْلِيَآءَஉதவியாளர்களைمِنْ دُوْنِهٖ‌ ؕஅவனையன்றிوَنَحْشُرُஇன்னும் ஒன்றுசேர்ப்போம்هُمْஅவர்களைيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்عَلٰى وُجُوْهِهِمْதங்கள் முகங்கள் மீதுعُمْيًاகுருடர்களாகوَّبُكْمًاஇன்னும் ஊமையர்களாகوَّصُمًّا‌ ؕஇன்னும் செவிடர்களாகمَاْوٰٮهُمْஅவர்களுடைய தங்குமிடம்جَهَـنَّمُ‌ ؕநரகம்தான்كُلَّمَا خَبَتْஅது அனல் தணியும் போதெல்லாம்زِدْنٰهُمْஅதிகப்படுத்துவோம்/அவர்களுக்குسَعِيْرًا‏கொழுந்து விட்டெரியும் நெருப்பை
வ மய் யஹ்தில் லாஹு Fபஹுவல் முஹ்தத்; வ மய் யுள்லில் Fபலன் தஜித லஹும் அவ்லியா'அ மின் தூனிஹ்; வ னஹ்ஷுருஹும் யவ்மல் கியாமதி 'அலா வுஜூஹிஹிம் உம்ய(ன்)வ் வ Bபுக்ம(ன்)வ் வ ஸும்மா; ம'வாஹும் ஜஹன்னமு குல்லமா கBபத் Zஜித்னாஹும் ஸ'ஈரா
அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.
ذٰلِكَ جَزَآؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰیٰتِنَا وَقَالُوْۤا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِیْدًا ۟
ذٰلِكَஇதுجَزَآؤُهُمْகூலி, தண்டனை/அவர்களின்بِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக/அவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بِاٰيٰتِنَاநம் வசனங்களைوَقَالُوْۤاஇன்னும் கூறினர்ءَاِذَا كُنَّاநாங்கள் ஆகிவிட்டால்?عِظَامًاஎலும்புகளாகوَّرُفَاتًاஇன்னும் மக்கியவர்களாகءَاِنَّا?/நிச்சயமாக நாம்لَمَبْعُوْثُوْنَஎழுப்பப்படுவோம்خَلْقًاபடைப்பாகجَدِيْدًا‏புதியது
தாலிக ஜZஜா'உஹும் Bபி அன்னஹும் கFபரூ Bபி ஆயாதினா வ காலூ 'அ இதா குன்னா 'இளாம(ன்)வ் வ ருFபாதன் 'அ இன்னா ல மBப்'ஊதூன கல்கன் ஜதீதா
அவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, “நாம் (மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பபடுவோமா?” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய கூலி இது தான்.
اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ قَادِرٌ عَلٰۤی اَنْ یَّخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ اَجَلًا لَّا رَیْبَ فِیْهِ ؕ فَاَبَی الظّٰلِمُوْنَ اِلَّا كُفُوْرًا ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்الَّذِىْஎத்தகையவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَஇன்னும் பூமியைقَادِرٌஆற்றலுடையவன்عَلٰٓىமீதுاَنْ يَّخْلُقَஅவன் படைக்கمِثْلَهُمْஅவர்கள் போன்றவர்களைوَجَعَلَஇன்னும் ஆக்கினான்لَهُمْஅவர்களுக்குاَجَلًاஒரு தவணையைلَّا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهِ ؕஅதில்فَاَبَىஏற்க மறுத்தார்(கள்)الظّٰلِمُوْنَஅக்கிரமக்காரர்கள்اِلَّاதவிரكُفُوْرًا‏நிராகரிப்பை
அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள காதிருன் 'அலா அ(ன்)ய் யக்லுக மித்லஹும் வ ஜ'அல லஹும் அஜலல் லா ரய்Bப Fபீ; Fப அBபள் ளாலிமூன இல்லா குFபூரா
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை, எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை!
قُلْ لَّوْ اَنْتُمْ تَمْلِكُوْنَ خَزَآىِٕنَ رَحْمَةِ رَبِّیْۤ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْیَةَ الْاِنْفَاقِ ؕ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا ۟۠
قُلْகூறுவீராகلَّوْ اَنْـتُمْ تَمْلِكُوْنَநீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால்خَزَآٮِٕنَபொக்கிஷங்களைرَحْمَةِஅருளின்رَبِّىْۤஎன் இறைவனுடையاِذًاஅப்போதுلَّاَمْسَكْتُمْதடுத்துக் கொண்டிருப்பீர்கள்خَشْيَةَபயந்துالْاِنْفَاقِ‌ ؕதர்மம் செய்வதுوَكَانَஇருக்கின்றான்الْاِنْسَانُமனிதன்قَتُوْرًا‏மகா கஞ்சனாக
குல் லவ் அன்தும் தம்லிகூன கZஜா'இன ரஹ்மதி ரBப்Bபீ இதல் ல அம்ஸக்தும் கஷ் யதல் இன்Fபாக்; வ கானல் இன்ஸானு கதூரா
“என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்” என்று (நபியே!) நீர் கூறும்.  
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی تِسْعَ اٰیٰتٍ بَیِّنٰتٍ فَسْـَٔلْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ اِذْ جَآءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّیْ لَاَظُنُّكَ یٰمُوْسٰی مَسْحُوْرًا ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسٰىமூஸாவிற்குتِسْعَஒன்பதுاٰيٰتٍۢஅத்தாட்சிகள்بَيِّنٰتٍ‌தெளிவானவைفَسْــٴَــلْஆகவே கேட்பீராகبَنِىْۤசந்ததிகளைاِسْرَاۤءِيْلَஇஸ்ராயீலின்اِذْ جَآءَஅவர் வந்த போதுهُمْஅவர்களிடம்فَقَالَகூறினான்لَهٗஅவரைக் நோக்கிفِرْعَوْنُஃபிர்அவ்ன்اِنِّىْநிச்சயமாக நான்لَاَظُنُّكَஎண்ணுகிறேன்/உம்மைيٰمُوْسٰىமூஸாவே!مَسْحُوْرًا‏சூனியக்காரராக
வ லகத் ஆதய்னா மூஸா திஸ்'அ ஆயாதிம் Bபய்யினாதின் Fபஸ்'அல் Bபனீ இஸ்ரா'ஈல இத் ஜா'அஹும் Fபகால லஹூ Fபிர்'அவ்னு இன்னீ ல அளுன்னுக யா மூஸா மஸ் ஹூரா
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்” என்று கூறினான்.
قَالَ لَقَدْ عَلِمْتَ مَاۤ اَنْزَلَ هٰۤؤُلَآءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَآىِٕرَ ۚ وَاِنِّیْ لَاَظُنُّكَ یٰفِرْعَوْنُ مَثْبُوْرًا ۟
قَالَகூறினார்لَقَدْதிட்டவட்டமாகعَلِمْتَநீ அறிந்தாய்مَاۤ اَنْزَلَஇறக்கிவைக்கவில்லைهٰٓؤُلَاۤءِஇவற்றைاِلَّاதவிரرَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِஇன்னும் பூமிبَصَآٮِٕرَ‌ ۚதெளிவான அத்தாட்சிகளாகوَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்لَاَظُنُّكَஎண்ணுகிறேன்/உன்னைيٰفِرْعَوْنُஃபிர்அவ்னேمَثْبُوْرًا‏அழிந்துவிடுபவனாக
கால லகத் 'அலிம்த மா அன்Zஜல ஹா'உலா'இ இல்லா ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி Bபஸா'இர வ இன்னீ ல அளுன் னுக யா Fபிர்'அவ்னு மத்Bபூரா
(அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.
فَاَرَادَ اَنْ یَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَمَنْ مَّعَهٗ جَمِیْعًا ۟ۙ
فَاَرَادَநாடினான்اَنْ يَّسْتَفِزَّஅவன் விரட்டிவிடهُمْஇவர்களைمِّنَ الْاَرْضِபூமியிலிருந்துفَاَغْرَقْنٰهُஆகவே மூழ்கடித்தோம்/ அவனைوَ مَنْஇன்னும் எவர்கள்مَّعَهٗஅவனுடன்جَمِيْعًا ۙ‏அனைவரையும்
Fப அராத அ(ன்)ய் யஸ்தFபிZஜ்Zஜஹும் மினல் அர்ளி Fப அக்ரக்னாஹு வ மம் ம'அஹூ ஜமீ'ஆ
ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
وَّقُلْنَا مِنْ بَعْدِهٖ لِبَنِیْۤ اِسْرَآءِیْلَ اسْكُنُوا الْاَرْضَ فَاِذَا جَآءَ وَعْدُ الْاٰخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِیْفًا ۟ؕ
وَّقُلْنَاஇன்னும் நாம் கூறினோம்مِنْۢ بَعْدِهٖஇதன் பின்னர்لِبَنِىْۤசந்ததிகளுக்குاِسْرَاۤءِيْلَஇஸ்ராயீலின்اسْكُنُواநீங்கள் வசியுங்கள்الْاَرْضَபூமியில்فَاِذَا جَآءَவந்தால்وَعْدُவாக்குறுதிالْاٰخِرَةِமறுமையின்جِئْنَا بِكُمْஉங்களை வரவைப்போம்لَفِيْفًا ؕ‏அனைவரையும், ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக
வ குல்னா மின் Bபஃதிஹீ லி Bபனீ இஸ்ரா'ஈலஸ் குனுல் அர்ள Fப இதா ஜா'அ வஃதுல் ஆகிரதி ஜி'னா Bபிகும் லFபீFபா
இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”
وَبِالْحَقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَقِّ نَزَلَ ؕ وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۘ
وَبِالْحَـقِّஇன்னும் உண்மையைக் கொண்டேاَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்وَبِالْحَـقِّஇன்னும் உண்மையைக் கொண்டேنَزَلَ‌ ؕஇது இறங்கியதுوَمَاۤநாம் அனுப்பவில்லைاَرْسَلْنٰكَஉம்மைاِلَّاதவிரمُبَشِّرًاநற்செய்தி கூறுபவராகوَّنَذِيْرًا ۘ‏இன்னும் எச்சரிப்பவராக
வ Bபில்ஹக்கி அன்Zஜல்னாஹு வ Bபில்ஹக்கி னZஜல்; வ மா அர்ஸல்னாக இல்லா முBபஷ் ஷிர(ன்)வ் வ னதீரா
இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.
وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَی النَّاسِ عَلٰی مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِیْلًا ۟
وَقُرْاٰنًاஇன்னும் குர்ஆனாகفَرَقْنٰهُநாம் தெளிவு படுத்தினோம்/இதைلِتَقْرَاَهٗநீர் ஓதுவதற்காக/இதைعَلَى النَّاسِமக்களுக்குعَلٰى مُكْثٍகவனத்துடன்وَّنَزَّلْنٰهُஇன்னும் இறக்கினோம்/இதைتَنْزِيْلًا‏கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்
வ குர்'ஆனன் Fபரக்னாஹு லிதக்ர அஹூ 'அலன் னாஸி 'அலா முக்தி(ன்)வ் வ னZஜ்Zஜல்னாஹு தன்Zஜீலா
இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம்.
قُلْ اٰمِنُوْا بِهٖۤ اَوْ لَا تُؤْمِنُوْا ؕ اِنَّ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖۤ اِذَا یُتْلٰی عَلَیْهِمْ یَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًا ۟ۙ
قُلْகூறுவீராகاٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِهٖۤஇதைاَوْஅல்லதுلَا تُؤْمِنُوْٓا‌ ؕநம்பிக்கை கொள்ளாதீர்கள்اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டனர்الْعِلْمَகல்விمِنْ قَبْلِهٖۤஇதற்கு முன்னர்اِذَا يُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுيَخِرُّوْنَவிழுவார்கள்لِلْاَذْقَانِதாடைகள் மீதுسُجَّدًا ۙ‏சிரம்பணிந்தவர்களாக
குல் ஆமினூ Bபிஹீ அவ் லா து'மினூ; இன்னல் லதீன ஊதுல் 'இல்ம மின் கBப்லிஹீ இதா யுத்லா 'அலய்ஹிம் யகிர்ரூன லில் அத்கானி ஸுஜ்ஜதா
(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
وَّیَقُوْلُوْنَ سُبْحٰنَ رَبِّنَاۤ اِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُوْلًا ۟
وَّيَقُوْلُوْنَஇன்னும் கூறுவார்கள்سُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்رَبِّنَاۤஎங்கள் இறைவன்اِنْநிச்சயமாகكَانَஇருக்கிறதுوَعْدُவாக்குرَبِّنَاஎங்கள் இறைவனின்لَمَفْعُوْلًا‏நிறைவேற்றப்பட்டதாகவே
வ யகூலூன ஸுBப்ஹான ரBப்Bபினா இன் கான வஃது ரBப்Bபினா லமFப்'ஊலா
அன்றியும், “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
وَیَخِرُّوْنَ لِلْاَذْقَانِ یَبْكُوْنَ وَیَزِیْدُهُمْ خُشُوْعًا ۟
وَيَخِرُّوْنَஇன்னும் விழுவார்கள்لِلْاَذْقَانِதாடைகள் மீதுيَبْكُوْنَஅழுவார்கள் (அழுதவர்களாக)وَيَزِيْدُஇன்னும் அதிகப்படுத்தும்هُمْஅவர்களுக்குخُشُوْعًا ۩‏அச்சத்தை, பணிவை
வ யகிர்ரூன லில் அத்கானி யBப்கூன வ யZஜீதுஹும் குஷூ'ஆ
இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.
قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَ ؕ اَیًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۟
قُلِகூறுவீராகادْعُواஅழையுங்கள்اللّٰهَஅல்லாஹ்اَوِஅல்லதுادْعُواஅழையுங்கள்الرَّحْمٰنَ‌ ؕபேரருளாளன்اَ يًّا مَّاஎப்படி, எதைتَدْعُوْاஅழைத்தாலும்فَلَهُஅவனுக்குالْاَسْمَآءُபெயர்கள்الْحُسْنٰى ۚமிக அழகியவைوَلَا تَجْهَرْமிக சப்தமிட்டு ஓதாதீர்بِصَلَاتِكَஉமது தொழுகையில்وَلَا تُخَافِتْமிக மெதுவாகவும் ஓதாதீர்بِهَاஅதில்وَابْتَغِதேடுவீராகبَيْنَஇடையில்ذٰ لِكَஅதுسَبِيْلًا‏ஒரு வழியை
குலித்'உல் லாஹ அவித்'உர் ரஹ்மான அய்யம் மா தத்'ஊ Fபலஹுல் அஸ்மா'உல் ஹுஸ்னா; வலா தஜ்ஹர் Bபி ஸலாதிக வலா துகாFபித் Bபிஹா வBப்தகி Bபய்ன தாலிக ஸBபீலா
“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.
وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ لَمْ یَتَّخِذْ وَلَدًا وَّلَمْ یَكُنْ لَّهٗ شَرِیْكٌ فِی الْمُلْكِ وَلَمْ یَكُنْ لَّهٗ وَلِیٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِیْرًا ۟۠
وَقُلِஇன்னும் கூறுவீராகالْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதேالَّذِىْஎத்தகையவன்لَمْ يَتَّخِذْஅவன் ஆக்கிக் கொள்ளவில்லைوَلَدًاகுழந்தையைوَّلَمْ يَكُنْஇன்னும் அறவே இல்லைلَّهٗஅவனுக்குشَرِيْكٌஇணைفِى الْمُلْكِஆட்சியில்وَلَمْ يَكُنْஅறவே இல்லைلَّهٗஅவனுக்குوَلِىٌّநண்பன்مِّنَ الذُّلِّ‌பலவீனத்தினால்وَكَبِّرْهُஇன்னும் பெருமைப்படுத்துவீராக/அவனைتَكْبِيْرًا‏பெருமைப்படுத்துதல்
வ குலில் ஹம்து லில்லாஹில் லதீ லம் யத்தகித் வலத(ன்)வ் வ லம் யகுல் லஹூ ஷரீகுன் Fபில் முல்கி வ லம் யகுல் லஹூ வலிய்யும் மினத் துல்லி வ கBப்Bபிர்ஹு தக்Bபீரா
“அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.