நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
وَنُرِيْدُஇன்னும் நாடினோம்اَنْ نَّمُنَّநாம் அருள்புரிவதற்கு ?عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْاபலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீதுفِى الْاَرْضِபூமியில்وَنَجْعَلَهُمْஇன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்குاَٮِٕمَّةًஅரசர்களாகوَّنَجْعَلَهُمُஇன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்குالْوٰرِثِيْنَۙவாரிசுகளாக
ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.
நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.
وَقَالَتِகூறினாள்امْرَاَتُமனைவிفِرْعَوْنَஃபிர்அவ்னின்قُرَّتُகுளிர்ச்சியாகும்عَيْنٍகண்لِّىْ وَلَكَ ؕஎனக்கும் உனக்கும்لَا تَقْتُلُوْهُஅதைக் கொல்லாதீர்கள்!ۖ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤஅது நமக்கு நன்மை தரலாம்اَوْ نَـتَّخِذَهٗஅல்லது அதை நாம் வைத்துக்கொள்ளலாம்وَلَدًاபிள்ளையாகوَّهُمْஇன்னும் அவர்கள்لَا يَشْعُرُوْنَஉணரவில்லை
வ காலதிம் ர அது Fபிர்'அவ்ன குர்ரது 'அய்னில் லீ வ லக்; லா தக்துலூஹு 'அஸா அய்யன்Fப'அனா அவ் னத்தகிதஹூ வலத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
வ அஸ்Bபஹ Fபு'ஆது உம்மி மூஸா Fபாரிகன் இன் காதத் லதுBப்தீ Bபிஹீ லவ் லா அர்ரBபத்னா 'அலா கல்Bபிஹா லிதகூன மினல் மு'மினீன்
மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.
நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: “உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.”
இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.
وَلَمَّاபோதுبَلَغَஅடைந்தார்اَشُدَّهٗஅவர் தனது வலிமையைوَاسْتَوٰٓىஅவர் முழுமை பெற்றார்اٰتَيْنٰهُநாம் அவருக்கு தந்தோம்حُكْمًاஞானத்தையும்وَّعِلْمًا ؕஅறிவையும்وَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىநாம்கூலிதருகிறோம்الْمُحْسِنِيْنَநன்மை செய்பவர்களுக்கு
இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தோம் - இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம்.
وَدَخَلَஇன்னும் நுழைந்தார்الْمَدِيْنَةَநகரத்தில்عَلٰى حِيْنِநேரத்தில்غَفْلَةٍகவனமற்று இருந்தمِّنْ اَهْلِهَاஅதன் வாசிகள்فَوَجَدَகண்டார்فِيْهَاஅதில்رَجُلَيْنِஇருவரைيَقْتَتِلٰنِ அவ்விருவரும் சண்டை செய்தனர்هٰذَاஇவர்مِنْ شِيْعَتِهٖஅவருடைய பிரிவை சேர்ந்தவர்وَهٰذَاஇன்னும் இவர்مِنْ عَدُوِّهٖۚஅவருடைய எதிரிகளில் உள்ளவர்فَاسْتَغَاثَهُஅவரிடம் உதவி கேட்டான்الَّذِىْ مِنْ شِيْعَتِهٖஇவருடைய பிரிவைச் சேர்ந்தவன்عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙதனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராகفَوَكَزَهٗ مُوْسٰىமூஸா அவனை குத்து விட்டார்فَقَضٰىகதையை முடித்து விட்டார்عَلَيْهِ அவனுடையقَالَகூறினார்هٰذَاஇதுمِنْ عَمَلِசெயலில் உள்ளதுالشَّيْطٰنِ ؕஷைத்தானின்اِنَّهٗநிச்சயமாக அவன்عَدُوٌّஎதிரி ஆவான்مُّضِلٌّவழி கெடுக்கின்றவன்مُّبِيْنٌதெளிவான
வ தகலல் மதீனத 'அலா ஹீனீ கFப்லதிம் மின் அஹ்லிஹா Fபவஜத Fபீஹா ரஜு லய்னி யக்ததிலானி ஹாதா மின் ஷீ'அதிஹீ வ ஹாத மின் 'அதுவ்விஹீ Fபஸ்தகாதஹுல் லதீ மின் ஷீ'அதிஹீ 'அலல் லதீ மின் 'அதுவ்விஹீ FபவகZஜஹூ மூஸா Fபகளா 'அலய்ஹி கால ஹாத மின் 'அமலிஷ் ஷய்தானி இன்னஹூ 'அதுவ்வும்ம் முளில்லும் முBபீன்
(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்ظَلَمْتُஅநீதி இழைத்தேன்نَفْسِىْஎனக்குفَاغْفِرْ لِىْஆகவே, என்னை மன்னித்துவிடுفَغَفَرَஆகவே அவன் மன்னித்தான்لَهٗؕஅவரைاِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُமகா கருணையாளன்
கால ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ Fபக்Fபிர் லீ FபகFபரலஹ்; இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
“என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!بِمَاۤசத்தியமாகاَنْعَمْتَஅருள் புரிந்ததின் மீதுعَلَىَّஎனக்குفَلَنْ اَكُوْنَஆகவே நான் ஆகவே மாட்டேன்ظَهِيْرًاஉதவுபவனாகلِّلْمُجْرِمِيْنَகுற்றவாளிகளுக்கு
கால ரBப்Bபி Bபிமா அன்'அம்த 'அலய்ய Fபலன் அகூன ளஹீரல் லில்முஜ்ரிமீன்
“என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.
பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.
وَجَآءَஇன்னும் வந்தார்رَجُلٌஓர் ஆடவர்مِّنْ اَقْصَاஇறுதியிலிருந்துالْمَدِيْنَةِநகரத்தின்يَسْعٰىவிரைந்தவராகقَالَகூறினார்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنَّநிச்சயமாகالْمَلَاَபிரமுகர்கள்يَاْتَمِرُوْنَஆலோசிக்கின்றனர்بِكَஉமக்காகلِيَـقْتُلُوْكَஅவர்கள் உம்மைக் கொல்வதற்குفَاخْرُجْஆகவே, நீர் வெளியேறிவிடும்!اِنِّىْநிச்சயமாக நான்لَـكَஉமக்குمِنَ النّٰصِحِيْنَநன்மையை நாடுபவர்களில் ஒருவன்
வ ஜா'அ ரஜுலும் மின் அக்ஸல் மதீனதி யஸ்'ஆ கால யா மூஸா இன்னல் மல அ யா தமிரூன Bபிக லியக்துலூக Fபக்ருஜ் இன்னீ லக மினன் னாஸிஹீன்
பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
فَخَرَجَஆக, அவர் வெளியேறினார்مِنْهَاஅதிலிருந்துخَآٮِٕفًاபயந்தவராகيَّتَرَقَّبُஎதிர்பார்த்தவராகقَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!نَجِّنِىْஎன்னைப் பாதுகாத்துக்கொள்!مِنَ الْقَوْمِமக்களிடமிருந்துالظّٰلِمِيْنَஅநியாயக்கார
Fபகரஜ மின்ஹா கா 'இFப(ன்)ய்-யதரக்கBப்; கால ரBப்Bபி னஜ்ஜினீ மினல் கவ்மிள் ளாலிமீன்
ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.
வ லம்மா வரத மா'அ மத்யன வஜத 'அலய்ஹி உம்மதம் மினன்னாஸி யஸ்கூன வ வஜத மின் தூனிஹிமும் ர அதய்னி ததூதானி கால மா கத்Bபுகுமா காலதா லா னஸ்கீ ஹத்தா யுஸ்திரர் ரி'ஆ'உ வ அBபூனா ஷய்குன் கBபீர்
இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
فَسَقٰىஆகவே, அவர் நீர் புகட்டினார்لَهُمَاஅவ்விருவருக்காகثُمَّபிறகுتَوَلّٰٓىதிரும்பிச் சென்றார்اِلَىபக்கம்الظِّلِّநிழலின்فَقَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்لِمَاۤ اَنْزَلْتَநீ எதன் பக்கம் இறக்கினாய்اِلَىَّஎனக்குمِنْ خَيْرٍநன்மையின்فَقِيْرٌதேவை உள்ளவன்
ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
(சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.
அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”
கால இன்னீ உரீது அன் உன்கிஹக இஹ்தBப் னதய்ய ஹாதய்னி 'அலா அன் தா'ஜுரனீ தமானிய ஹிஜஜ்; Fப இன் அத்மம்த 'அஷ்ரன் Fபமின் 'இன்திக வமா உரீது அன் அஷுக்க 'அலய்க்; ஸதஜிதுனீ இன் ஷா'அல் லாஹு மினஸ் ஸாலிஹீன்
(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”
(அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது; “தூர்” (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார்.
“உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”
உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்” (என்றும் அவருக்கு கூறப்பட்டது).
قَالَஅவர் கூறினார்:رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்قَتَلْتُகொன்றுள்ளேன்مِنْهُمْஅவர்களில்نَفْسًاஓர் உயிரைفَاَخَافُஆகவே, நான் பயப்படுகிறேன்اَنْ يَّقْتُلُوْنِஅவர்கள் என்னை கொல்வதை
கால ரBப்Bபி இன்னீ கதல்து மின்ஹும் னFப்ஸன் Fப அகாFபு அய் யக்துலூன்
(அதற்கு அவர்): “என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்” என்று கூறினார்.
இன்னும்: “என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றுங் கூறினார்).
(அல்லாஹ்) கூறினான்: “நாம் உம் கையை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது; நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து விடுவீர்கள்.”
ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.
வ கால மூஸா ரBப்Bபீ அஃலமு Bபிமன் ஜா'அ Bபில்ஹுதா மின் 'இன்திஹீ வ மன் தகூனு லஹூ 'ஆகிBபதுத் தாரி இன்னஹூ லா யுFப்லிஹுள் ளாலிமூன்
(அப்போது மூஸா) கூறினார்: “அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்.”
وَقَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்يٰۤـاَيُّهَا الْمَلَاُபிரமுகர்களே!مَا عَلِمْتُநான் அறியமாட்டேன்لَـكُمْஉங்களுக்கு (இருப்பதை)مِّنْ اِلٰهٍஒரு கடவுள்غَيْرِىْ ۚஎன்னை அன்றிفَاَوْقِدْஆகவே, நெருப்பூட்டுلِىْஎனக்காகيٰهَامٰنُஹாமானே!عَلَى الطِّيْنِகுழைத்தகளிமண்ணைفَاجْعَلْஉருவாக்குلِّىْஎனக்காகصَرْحًاமுகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தைلَّعَلِّىْۤ اَطَّلِعُநான் தேடிப்பார்க்க வேண்டும்اِلٰٓى اِلٰهِகடவுளைمُوْسٰى ۙமூஸாவின்وَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்لَاَظُنُّهٗஅவரை கருதுகிறேன்مِنَ الْـكٰذِبِيْنَபொய்யர்களில் (ஒருவராக)
வ கால Fபிர்'அவ்னு யா அய்யுஹல் மல-உ மா 'அலிம்து லகும் மின் இலாஹின் கய்ரீ Fப அவ்கித் லீ யா ஹாமானு 'அலத்தீனி Fபஜ்'அல் லீ ஸர்ஹல் ல'அல்லீ அத்தலி'உ இலா இலாஹி மூஸா வ இன்னீ ல அளுன்னுஹூ மினல் காதிBபீன்
இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.
மேலும் அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர், மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள்.
ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும்.
وَجَعَلْنٰهُمْஅவர்களை ஆக்கினோம்اَٮِٕمَّةًமுன்னோடிகளாகيَّدْعُوْنَஅழைக்கின்றனர்اِلَى النَّارِۚநரகத்தின் பக்கம்وَيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்لَا يُنْصَرُوْنَஅவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).
மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை; (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம்; அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன; அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை; அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை; எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்.
وَمَا كُنْتَநீர் இருக்கவில்லைبِجَانِبِஅருகில்الطُّوْرِமலைக்குاِذْ نَادَيْنَاநாம் அழைத்தபோதுوَلٰـكِنْஎனினும்رَّحْمَةًஅருளினால்مِّنْ رَّبِّكَஉமது இறைவனின்لِتُنْذِرَஏனெனில், நீர் எச்சரிக்க வேண்டும்قَوْمًاஒரு மக்களைمَّاۤ اَتٰٮهُمْஅவர்களிடம் வரவில்லைمِّنْ نَّذِيْرٍஎச்சரிப்பாளர் எவரும்مِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَஅவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
வமா குன்த BபிஜானிBபித் தூரி இத் னாதய்னா வ லாகிர் ரஹ்மதம் மிர் ரBப்Bபிக லிதுன்திர கவ்மம் மா அதாஹும் மின் னதீரிம் மின் கBப்லிக ல'அல்லஹும் யததக்கரூன்
இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).
وَلَوْلَاۤ اَنْ تُصِيْبَـهُمْஅவர்களுக்கு ஏற்பட்டுمُّصِيْبَةٌۢஒரு சோதனைبِمَا قَدَّمَتْமுற்படுத்தியதால்اَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்فَيَقُوْلُوْاஅவர்கள் கூறாதிருப்பதற்காகرَبَّنَاஎங்கள் இறைவா!لَوْلَاۤ اَرْسَلْتَநீ அனுப்பி இருக்கக்கூடாதா?اِلَـيْنَاஎங்களிடம்رَسُوْلًاஒரு தூதரைفَنَـتَّبِعَநாங்கள் பின்பற்றி இருப்போமே!اٰيٰتِكَஉனது வசனங்களைوَنَـكُوْنَநாங்கள்ஆகியிருப்போமேمِنَ الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களில்
வ லவ் லா அன் துஸீBபஹும் முஸீBபதும் Bபிமா கத்தமத் அய்தீஹிம் Fப யகூலூ ரBப்Bபனா லவ் லா அர்ஸல்த இலய்னா ரஸூலன் Fபனத்தBபி'அ ஆயாதிக வ னகூன மினல் மு'மினீன்
அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய (தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே!” என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்).
Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ லவ் லா ஊதிய மித்ல மா ஊதியா மூஸா; அவலம் யக்Fபுரூ Bபிமா ஊதிய மூஸா மின் கBப்லு காலூ ஸிஹ்ரானி தளாஹரா வ காலூ இன்னா Bபிகுல்லின் காFபிரூன்
எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.
قُلْகூறுவீராகفَاْتُوْا بِكِتٰبٍஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள்مِّنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துهُوَஅதுاَهْدٰىமிக்க நேர்வழிمِنْهُمَاۤஅவ்விரண்டை விடاَتَّبِعْهُநான் அதை பின்பற்றுகிறேன்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَஉண்மையாளர்களாக
குல் Fபா'தூ Bபி கிதாBபிம் மின் 'இன்தில் லாஹி ஹுவ அஹ்தா மின்ஹு மா அத்தBபிஃஹு இன் குன்தும் ஸாதிகீன்
ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.
மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
اُولٰٓٮِٕكَஅவர்கள்يُؤْتَوْنَவழங்கப்படுவார்கள்اَجْرَهُمْதங்கள் கூலியைمَّرَّتَيْنِஇருமுறைبِمَا صَبَرُوْاஅவர்கள் பொறுமையாக இருந்ததால்وَيَدْرَءُوْنَஇன்னும் அவர்கள் தடுப்பார்கள்بِالْحَسَنَةِநன்மையைக்கொண்டுالسَّيِّئَةَதீமையைوَمِمَّا رَزَقْنٰهُمْஇன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்துيُنْفِقُوْنَதர்மம் செய்வார்கள்
இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.
அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து: “எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்.
(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.
வ காலூ இன் னத்தBபி'இல் ஹுதா ம'அக னுதகத்தFப் மின் அர்ளினா; அவலம் னுமக்க்கில் லஹும் ஹரமன் ஆமின(ன்)ய் யுஜ்Bபா இலய்ஹி தமராது குல்லி ஷய்'இர் ரிZஜ்கம் மில் லதுன்னா வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
தங்களுடைய வாழ்க்கை வசதிகளின் செருக்கினால் (அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்; அவர்களுக்குப் பின் சொற்பமான நேரம் தவிர அங்கு எவரும் வசிக்க வில்லை; மேலும் நாமே (அவற்றிற்கு) வாரிசுகளாகினோம்.
(நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.
மேலும், உங்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்; ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும் நிலையானவையாகவும் இருக்கின்றன; (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?”
எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து; அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா?
எவர் மீது (அல்லாஹ்வின் தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள், “எங்கள் இறைவா! நாங்கள் எவர்களை வழிகெடுத்தோமோ அவர்கள் இவர்கள் தாம். நாங்கள் வழிகெட்டது போன்றே, இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம் - உன்னிடம் நாங்கள் (அவர்களை விட்டும்) விலகிக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
وَقِيْلَஇன்னும் சொல்லப்படும்ادْعُوْاஅழையுங்கள்شُرَكَآءَதெய்வங்களைكُمْஉங்கள்فَدَعَوْهُمْஅவற்றை அவர்கள் அழைப்பார்கள்فَلَمْ يَسْتَجِيْبُوْاஆனால், அவை பதில் தரமாட்டாلَهُمْஅவர்களுக்குوَرَاَوُاஇன்னும் காண்பார்கள்الْعَذَابَۚதண்டனையைلَوْ اَنَّهُمْ كَانُوْاநிச்சயமாக தாங்கள் இருந்திருக்க வேண்டுமே!يَهْتَدُوْنَநேர்வழி பெற்றவர்களாக
“உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்” என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்).
மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
மேலும்: அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.
(நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா?
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْநீங்கள் அறிவியுங்கள்اِنْ جَعَلَஆக்கிவிட்டால்اللّٰهُஅல்லாஹ்عَلَيْكُمُஉங்கள் மீதுالنَّهَارَபகலைسَرْمَدًاநிரந்தரமாகاِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாள்مَنْஎந்தاِلٰـهٌ(வேறு) ஒரு கடவுள்غَيْرُ اللّٰهِஅல்லாஹ்வை அன்றிيَاْتِيْكُمْஉங்களுக்கு கொண்டு வருவான்بِلَيْلٍஇரவைتَسْكُنُوْنَ فِيْهِؕஅதில் நீங்கள் ஓய்வு எடுக்கின்றீர்கள்اَفَلَا تُبْصِرُوْنَநீங்கள் பார்க்க மாட்டீர்களா?
“கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக!
وَمِنْ رَّحْمَتِهٖஅவன் தனது கருணையினால்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالَّيْلَஇரவைوَالنَّهَارَஇன்னும் பகலைلِتَسْكُنُوْاநீங்கள் ஓய்வு எடுப்பதற்காகفِيْهِஅதில்وَلِتَبْتَغُوْاஇன்னும் நீங்கள் தேடுவதற்காகمِنْ فَضْلِهٖஅவனுடைய அருளைوَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَஇன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
இன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை வைத்துக் கொண்டு (முஷ்ரிக்குகளை நோக்கி) “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்கே சொந்த மென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவை யெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.
இன்ன காரூன கான மின் கவ்மி மூஸா FபBபகா 'அலய்ஹிம் வ ஆதய்னாஹு மினல் குனூZஜி மா இன்ன மFபாதி ஹஹூ லதனூ'உ Bபில்'உஸ்Bபதி உலில் குவ்வதி இத் கால லஹூ கவ்முஹூ லா தFப்ரஹ் இன்னல் லாஹா லா யுஹிBப்Bபுல் Fபரிஹீன்
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).
(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.
அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள்.
கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
فَخَسَفْنَاஆகவே, சொருகிவிட்டோம்بِهٖஅவனையும்وَبِدَارِهِஅவனுடைய இல்லத்தையும்الْاَرْضَபூமியில்فَمَا كَانَஆக, ஏதும் இல்லைلَهٗஅவனுக்குمِنْ فِئَةٍகூட்டம்يَّـنْصُرُوْنَهٗஅவனுக்கு உதவுகின்றمِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَمَا كَانَஇன்னும் அவன் இல்லைمِنَ الْمُنْتَصِرِيْنَஉதவி செய்துகொள்பவர்களில்
FபகஸFப்னா Bபிஹீ வ Bபிதாரிஹில் அர்ள Fபமா கான லஹூ மின் Fபி'அதி(ன்)ய் யன்ஸுரூ னஹூ மின் தூனில் லாஹி வமா கான மினல் முன்தஸிரீன்
ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
வ அஸ்Bபஹல் லதீன தமன்னவ் மகானஹூ Bபில் அம்ஸி யகூலூன வய்க அன்னல் லாஹ யBப்ஸுதுர் ரிZஜ்க லிம(ன்)ய் ய ஷா'உ மின் 'இBபாதிஹீ வ யக்திரு லவ் லா அம் மன்னல் லாஹு 'அலய்னா லகஸFப Bபினா வய்க அன்னஹூ லா யுFப்லிஹுல் காFபிரூன்
முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.
(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.
இன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள ரஹ்மத்தினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை. எனவே நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர்.
وَلَا يَصُدُّنَّكَஉம்மை அவர்கள் திருப்பி விடவேண்டாம்عَنْ اٰيٰتِவசனங்களை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்بَعْدَபின்னர்اِذْ اُنْزِلَتْஅவை இறக்கப்பட்டதன்اِلَيْكَஉமக்குوَادْعُஅழைப்பீராகاِلٰىபக்கம்رَبِّكَஉமது இறைவன்وَلَا تَكُوْنَنَّஇன்னும் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்مِنَ الْمُشْرِكِيْنَۚஇணைவைப்பவர்களில்
வ லா யஸுத்துன்னக 'அன் ஆயாதில் லாஹி Bபஃத இத் உன்Zஜிலத் இலய்க வத்'உ இலா ரBப்Bபிக வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சயமாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக; நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.
அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.