98. ஸூரத்துல் பய்யினா(தெளிவான ஆதாரம்)

மதனீ, வசனங்கள்: 8

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
لَمْ یَكُنِ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِیْنَ مُنْفَكِّیْنَ حَتّٰی تَاْتِیَهُمُ الْبَیِّنَةُ ۟ۙ
لَمْ يَكُنِஇருக்கவில்லைالَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்مِنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களாகியوَالْمُشْرِكِيْنَஇன்னும் இணைவைப்போர்مُنْفَكِّيْنَவிலகியவர்களாகحَتّٰىவரைتَاْتِيَهُمُதங்களிடம் வருகின்றالْبَيِّنَةُ ۙ‏தெளிவான அத்தாட்சி
லம் ய குனில் லதீன கFபரு மின் அஹ்லில் கிதாBபி வல் முஷ்ரி கீன முன் Fபக் கீன ஹத்தா த-திய ஹுமுல் Bபய்யினஹ்
வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.
رَسُوْلٌ مِّنَ اللّٰهِ یَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۟ۙ
رَسُوْلٌதூதர்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துيَتْلُوْاஓதுகின்றார்صُحُفًاஏடுகளைمُّطَهَّرَةً ۙ‏பரிசுத்தமான
ரஸூலும் மினல் லாஹி யத்லு ஸுஹுFபம் முதஹ்ஹரஹ்
(அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).
فِیْهَا كُتُبٌ قَیِّمَةٌ ۟ؕ
فِيْهَاஅவற்றில்كُتُبٌசட்டங்கள்قَيِّمَةٌ ؕ‏நேரான
Fபீஹா குதுBபுன் கய்யிமஹ்
அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
وَمَا تَفَرَّقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنَةُ ۟ؕ
وَمَا تَفَرَّقَபிரியவில்லைالَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْكِتٰبَவேதம்اِلَّاதவிரمِنْۢ بَعْدِபின்னர்مَا جَآءَتْهُمُதங்களிடம் வந்ததுالْبَيِّنَةُ ؕ‏தெளிவான சான்று
வமா தFபர்ரகல் லதீன ஊதுல் கிதாBப இல்-ல மிம் Bபஃதி ம ஜா-அத் ஹுமுல் Bபய்ய்யினஹ்
எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۙ۬ حُنَفَآءَ وَیُقِیْمُوا الصَّلٰوةَ وَیُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِیْنُ الْقَیِّمَةِ ۟ؕ
وَمَاۤ اُمِرُوْۤاஅவர்கள் ஏவப்படவில்லைاِلَّاதவிரلِيَعْبُدُواவணங்குவதற்குاللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِيْنَதூய்மைப்படுத்தியவர்களாகلَـهُஅவனுக்குالدِّيْنَ  ۙவழிபாட்டைحُنَفَآءَஇணைவைப்பை விட்டு விலகியவர்களாகوَيُقِيْمُواஇன்னும் அவர்கள் நிலைநிறுத்துவதுالصَّلٰوةَதொழுகையைوَيُؤْتُواஇன்னும் அவர்கள் கொடுப்பதுالزَّكٰوةَ‌ஸகாத்தைوَذٰلِكَஇன்னும் இதுதான்دِيْنُமார்க்கம்الْقَيِّمَةِ ؕ‏நேரான
வமா உமிரூ இல்லா லி யஃBபுதுல்லாஹ முக்லிஸீன லஹுத்-தீன ஹுன Fபா-அ வ யுகீமுஸ் ஸலாத வ யு-துZஜ் Zஜகாத; வ தாலிக தீனுல் கய்யிமஹ்
“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِیْنَ فِیْ نَارِ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ اُولٰٓىِٕكَ هُمْ شَرُّ الْبَرِیَّةِ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்مِنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களாகியوَ الْمُشْرِكِيْنَஇன்னும் இணைவைப்போர்فِىْ نَارِநெருப்பில்جَهَنَّمَநரகம்خٰلِدِيْنَநிரந்தரமானவர்களாகفِيْهَا ؕஅதில்اُولٰٓٮِٕكَ هُمْஇவர்கள்தான்شَرُّமகா தீயோர்الْبَرِيَّةِ ؕ‏படைப்புகளில்
இன்னல் லதீன கFபரு மின் அஹ்லில் கிதாBபி வல் முஷ்ரி கீன Fபீ னாரி ஜஹன்னம காலி தீன Fபீஹா; உலா-இக ஹும் ஷர்ருல் Bபரீயஹ்
நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ اُولٰٓىِٕكَ هُمْ خَیْرُ الْبَرِیَّةِ ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِۙநற்செயல்களைاُولٰٓٮِٕكَ هُمْஅவர்கள்தான்خَيْرُமிகச் சிறந்தோர்الْبَرِيَّةِ ؕ‏படைப்புகளில்
இன்னல் லதீன ஆமனு வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உல-இக ஹும் கய்ருல் Bபரீய் யஹ்
நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.
جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِیَ رَبَّهٗ ۟۠
جَزَآؤُهُمْஅவர்களுடைய கூலிعِنْدَ رَبِّهِمْஅவர்களின் இறைவனிடம்جَنّٰتُசொர்க்கங்கள்عَدْنٍஅத்ன்تَجْرِىْஓடுகின்றனمِنْ تَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்களாகفِيْهَاۤஅவற்றில்اَبَدًا ؕஎப்போதும்رَضِىَதிருப்தி அடைவான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஅவர்களைப் பற்றிوَرَضُوْاஇன்னும் அவர்கள் திருப்தி அடைவார்கள்عَنْهُ ؕஅவனைப் பற்றிذٰلِكَஇதுلِمَنْ خَشِىَபயந்தவருக்குرَبَّهٗ‏தன் இறைவனை
ஜZஜா-உஹும் இன்த ரBப்Bபிஹிம் ஜன் னாது 'அத்னின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன் ஹாரு காலிதீன Fபீஹா அBபத; ரளிய்-யல்லாஹு 'அன்ஹும் வரளு 'அன் தாலிக லிமன் கஷிய ரBப்Bபஹ்.
அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.