64. ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்)

மதனீ, வசனங்கள்: 18

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ؗ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
یُسَبِّحُதுதிக்கின்றனلِلّٰهِஅல்லாஹ்வைمَاஎவையெல்லாம்فِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் எவையெல்லாம்فِیஉள்ளதோالْاَرْضِ ۚபூமியில்لَهُஅவனுக்கேالْمُلْكُஆட்சிوَ لَهُமேலும் அவனுக்கேالْحَمْدُ ؗபுகழ்وَ هُوَமேலும் அவன்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
யுஸBப்Bபிஹு லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி லஹுல் முல்கு வ லஹுல் ஹம்த், வ ஹுவ 'அலா குல்லி ஷய் 'இன் கதீர்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன; அவனுக்கே ஆட்சி உரியது; இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே; அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
هُوَஅவன்الَّذِیْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தானோفَمِنْكُمْஆக உங்களில்كَافِرٌநிராகரிப்பவரும் உண்டுوَّ مِنْكُمْமேலும் உங்களில்مُّؤْمِنٌ ؕநம்பிக்கையாளரும் உண்டுوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
ஹுவல் லதீ கலககும் Fபமின்கும் காFபிரு(ன்)வ் வ மின் கும் மு'மின் ; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
(மானிடர்களே!) அவனே உங்களைப் படைத்தவன்; உங்களில் காஃபிரும் உண்டு; முஃமினும் உண்டு - இன்னும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நோக்கியவாறே இருக்கின்றான்.
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ ۚ وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
خَلَقَஅவன் படைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைبِالْحَقِّஉண்மையுடன்وَ صَوَّرَكُمْமேலும் உங்களை உருவமைத்தான்فَاَحْسَنَபின் அழகாக்கினான்صُوَرَكُمْ ۚஉங்கள் உருவங்களைوَ اِلَیْهِமேலும் அவனிடமேالْمَصِیْرُதிரும்புமிடம்
கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்கி வ ஸவ்வரகும் Fப அஹ்ஸன ஸுவரகும் வ இலய்ஹில் மஸீர்
வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான்; அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது.
یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
یَعْلَمُஅவன் அறிகிறான்مَاஎவற்றைفِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِமற்றும் பூமியில்وَ یَعْلَمُமேலும் அவன் அறிகிறான்مَاஎவற்றைتُسِرُّوْنَநீங்கள் மறைக்கின்றீர்களோوَ مَاமேலும் எவற்றைتُعْلِنُوْنَ ؕநீங்கள் வெளிப்படுத்துகின்றீர்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளவற்றைالصُّدُوْرِநெஞ்சங்களின்
யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ யஃலமு மா துஸிர்ரூன வமா துஃலினூன்; வல்லாஹு 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும்; பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்.
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؗ فَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اَلَمْவரவில்லையாیَاْتِكُمْஉங்களிடம்نَبَؤُاசெய்திالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துقَبْلُ ؗமுன்னர்فَذَاقُوْاஎனவே அவர்கள் சுவைத்தார்கள்وَبَالَதீய விளைவைاَمْرِهِمْதங்கள் செயலின்وَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌநோவினைமிக்க
அலம் ய'திகும் னBப'உல் லதீன கFபரூ மின் கBப்லு Fபதாகூ வBபால அம்ரிஹிம் வ லஹும் 'அதாBபுன் அலீம்
இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? பின்னர்; அவர்கள் தங்கள் (தீய) காரியத்தின் பலனை அனுபவித்தனர் - அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ یَّهْدُوْنَنَا ؗ فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَی اللّٰهُ ؕ وَاللّٰهُ غَنِیٌّ حَمِیْدٌ ۟
ذٰلِكَஇதுبِاَنَّهٗஏனெனில்كَانَتْஇருந்ததுتَّاْتِیْهِمْஅவர்களிடம் வந்தார்கள்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَقَالُوْۤاஅப்போது அவர்கள் கூறினார்கள்اَبَشَرٌமனிதர்களாیَّهْدُوْنَنَا ؗநமக்கு நேர்வழி காட்டுவதுفَكَفَرُوْاஎனவே அவர்கள் நிராகரித்தார்கள்وَ تَوَلَّوْاமேலும் புறக்கணித்தார்கள்وَّ اسْتَغْنَیமேலும் தேவையற்றவனாகி விட்டான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَنِیٌّதேவையற்றவன்حَمِیْدٌபுகழுக்குரியவன்
தாலிக Bபி அன்னஹூ கானத் த'தீஹிம் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபகாலூ அ Bபஷரு(ன்)ய் யஹ்தூனனா FபகFபரூ வ தவல்லவ்; வஸ்தக்னல் லாஹ்; வல்லாஹு கனிய்யுன் ஹமீத்
இதற்குக் காரணம்: நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர்; ஆனால் அப்போது அவர்களோ: (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?” என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள்; அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன்; அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்.
زَعَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ یُّبْعَثُوْا ؕ قُلْ بَلٰی وَرَبِّیْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ؕ وَذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
زَعَمَகருதினார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்களோاَنْஎன்றுلَّنْஒருபோதும்یُّبْعَثُوْا ؕஎழுப்பப்படமாட்டார்கள்قُلْகூறுவீராகبَلٰیஅப்படியல்லوَ رَبِّیْஎன் இறைவனின் மீது சத்தியமாகلَتُبْعَثُنَّநிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்ثُمَّபின்னர்لَتُنَبَّؤُنَّநிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள்بِمَاஎதைعَمِلْتُمْ ؕநீங்கள் செய்தீர்களோوَ ذٰلِكَமேலும் அதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்یَسِیْرٌஎளிதானது
Zஜ'அமல் லதீன கFபரூ அல்-ல(ன்)ய் யுBப்'அதூ; குல் Bபலா வ ரBப்Bபீ லதுBப்'அதுன்ன தும்ம லதுனBப்Bப'உன்ன Bபிமா 'அமில்தும்; வ தாலிக 'அலல் லாஹி யஸீர்
(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; “அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِیْۤ اَنْزَلْنَا ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
فَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رَسُوْلِهٖஅவனுடைய தூதர் மீதும்وَ النُّوْرِமேலும் ஒளியின் மீதும்الَّذِیْۤஎதனைاَنْزَلْنَا ؕநாம் இறக்கி வைத்தோமோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرٌநன்கு அறிந்தவன்
Fபஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வன்னூரில் லதீ அன்Zஜல்னா; வல்லாஹு Bபிம தஃமலூன கBபீர்
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
یَوْمَநாளில்یَجْمَعُكُمْஅவன் உங்களை ஒன்றுசேர்ப்பான்لِیَوْمِநாளுக்காகالْجَمْعِஒன்றுசேர்க்கும்ذٰلِكَஅதுதான்یَوْمُநாள்التَّغَابُنِ ؕநஷ்டத்திற்குரியوَ مَنْமேலும் எவர்یُّؤْمِنْۢநம்பிக்கை கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ یَعْمَلْமேலும் செய்கிறாரோصَالِحًاநற்செயல்களைیُّكَفِّرْஅவன் நீக்கிவிடுவான்عَنْهُஅவரிடமிருந்துسَیِّاٰتِهٖஅவருடைய தீமைகளைوَ یُدْخِلْهُமேலும் அவரை நுழைவிப்பான்جَنّٰتٍசுவனங்களில்تَجْرِیْஓடிக்கொண்டிருக்கும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிரந்தரமாகத் தங்குபவர்களாகفِیْهَاۤஅவற்றில்اَبَدًا ؕஎன்றென்றும்ذٰلِكَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُமகத்தான
யவ்ம யஜ்ம'உகும் லி யவ்மில் ஜம்'இ தாலிக யவ்முத் தகாBபுன்; வ ம(ன்)ய்-யுமிம் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுகFப்Fபிர் 'அன்ஹு ஸய்யி ஆதிஹீ வ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ كَذَّبُوْاமேலும் பொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاۤநம் வசனங்களைاُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُவாசிகள்النَّارِநரகத்தின்خٰلِدِیْنَநிரந்தரமாகத் தங்குபவர்கள்فِیْهَا ؕஅதில்وَ بِئْسَமேலும் மிகக் கெட்டதுالْمَصِیْرُ۠சேருமிடம்
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி காலிதீன Fபீஹா வ Bபி'ஸல் மஸீர்
அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாதிகளே; அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அது மிகவும் கெட்ட சேருமிடமாகும்.  
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
مَاۤஇல்லைاَصَابَஏற்பட்டதுمِنْஎந்தவொருمُّصِیْبَةٍதுன்பமும்اِلَّاதவிரبِاِذْنِஅனுமதியால்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ مَنْமேலும் எவர்یُّؤْمِنْۢநம்பிக்கை கொள்கிறாரோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுیَهْدِநேர்வழி காட்டுகிறான்قَلْبَهٗ ؕஅவரது இதயத்திற்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
மா அஸாBப மிம் முஸீ Bபதின் இல்லா Bபி-இத்னில் லாஹ்; வ ம(ன்)ய் யு'மிம் Bபில்லாஹி யஹ்தி கல்Bபஹ்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّیْتُمْ فَاِنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
وَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَ ۚதூதருக்குفَاِنْஆனால்تَوَلَّیْتُمْநீங்கள் புறக்கணித்தால்فَاِنَّمَاநிச்சயமாகعَلٰیமீதுرَسُوْلِنَاநம் தூதரின்الْبَلٰغُஎடுத்துரைப்பதுதான்الْمُبِیْنُதெளிவாக
வ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல்; Fப இன் தவல்லய்தும் Fப இன்னமா 'அலா ரஸூலினல் Bபலாகுல் முBபீன்
ஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ؕஅவனைوَ عَلَیமேலும் மீதுاللّٰهِஅல்லாஹ்வின்فَلْیَتَوَكَّلِநம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹூ; வ 'அலல் லாஹி Fபல்யத வக்கலில் மு'மினூன்
அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டார்களோاِنَّநிச்சயமாகمِنْஇருந்துاَزْوَاجِكُمْஉங்கள் துணைகளிலும்وَ اَوْلَادِكُمْஇன்னும் உங்கள் பிள்ளைகளிலும்عَدُوًّاபகைவர்கள்لَّكُمْஉங்களுக்குفَاحْذَرُوْهُمْ ۚஆகவே அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்وَ اِنْமேலும் நீங்கள்تَعْفُوْاமன்னித்துوَ تَصْفَحُوْاஇன்னும் விட்டுக்கொடுத்துوَ تَغْفِرُوْاமேலும் மன்னிப்பீர்களானால்فَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமிகவும் மன்னிப்பவன்رَّحِیْمٌமிக்க கிருபையுடையவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்ன மின் அZஜ்வாஜி கும் வ அவ்லாதிகும் 'அதுவ்வல் லகும் Fபஹ்தரூஹும்; வ இன் தஃFபூ வ தஸ்Fபஹூ வ தக்Fபிரூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.
اِنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ؕ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟
اِنَّمَاۤநிச்சயமாகاَمْوَالُكُمْஉங்கள் செல்வங்களும்وَ اَوْلَادُكُمْஉங்கள் பிள்ளைகளும்فِتْنَةٌ ؕஒரு சோதனையேوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عِنْدَهٗۤஅவனிடத்தில்اَجْرٌநற்கூலிعَظِیْمٌமகத்தானது
இன்னமா அம்வாலுகும் வ அவ்லாதுகும் Fபித்னஹ்; வல்லாஹு 'இன்தஹூ அஜ்ருன் 'அளீம்
உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.
فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِیْعُوْا وَاَنْفِقُوْا خَیْرًا لِّاَنْفُسِكُمْ ؕ وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
فَاتَّقُواஎனவே அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَاஉங்களால் இயன்றاسْتَطَعْتُمْவரைوَ اسْمَعُوْاமேலும் செவிமடுங்கள்وَ اَطِیْعُوْاமேலும் கீழ்ப்படியுங்கள்وَ اَنْفِقُوْاமேலும் செலவிடுங்கள்خَیْرًاநன்மையாகلِّاَنْفُسِكُمْ ؕஉங்கள் ஆத்மாக்களுக்கேوَ مَنْமேலும் எவர்یُّوْقَகாக்கப்படுகிறாரோشُحَّகஞ்சத்தனத்திலிருந்துنَفْسِهٖதனது ஆத்மாவின்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர்தான்هُمُஅவர்கள்الْمُفْلِحُوْنَவெற்றியாளர்கள்
Fபத்தகுல் லாஹ மஸ்ததஃதும் வஸ்ம'ஊ வ அதீ'ஊ வ அன்Fபிகூ கய்ரல் லி அன்Fபுஸிகும்; வ ம(ன்)ய்-யூக ஷுஹ் ஹ னFப்ஸிஹீ Fப-உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعِفْهُ لَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِیْمٌ ۟ۙ
اِنْஎனில்تُقْرِضُواநீங்கள் கடன் கொடுத்தால்اللّٰهَஅல்லாஹ்வுக்குقَرْضًاகடனாகحَسَنًاஅழகியیُّضٰعِفْهُஅதை அவன் பன்மடங்காக்குவான்لَكُمْஉங்களுக்குوَ یَغْفِرْமேலும் அவன் மன்னிப்பான்لَكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்شَكُوْرٌநன்றியறிபவன்حَلِیْمٌۙசகிப்புத்தன்மையுடையவன்
இன் துக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸன(ன்)ய் யுளாஇFப்ஹு லகும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு ஷகூருன் ஹலீம்
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்.
عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
عٰلِمُஅறிந்தவன்الْغَیْبِமறைவானவற்றைوَ الشَّهَادَةِமற்றும் வெளிப்படையானவற்றைالْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُ۠ஞானமிக்கவன்
'ஆலிமுல்-கய்Bபி வஷ்-ஷஹாததில் 'அZஜீZஜுல் ஹகீம்
மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.