1. அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்)

மக்கீ, வசனங்கள்: 7

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟
بِسْمِபெயரால்اللّٰهِஅல்லாஹ்வின்الرَّحْمٰنِஅளவற்ற அருளாளன்الرَّحِیْمِநிகரற்ற அன்புடையோன்
Bபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
اَلْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவன்الْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
அல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ
الرَّحْمٰنِஅளவற்ற அருளாளன்الرَّحِیْمِۙநிகரற்ற அன்புடையோன்
அர்-ரஹ்மானிர்-ரஹீம்
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
مٰلِكِ یَوْمِ الدِّیْنِ ۟ؕ
مٰلِكِஅதிபதிیَوْمِநாள்الدِّیْنِؕதீர்ப்பு
மாலிகி யவ்மித்-தீன்
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
اِیَّاكَ نَعْبُدُ وَاِیَّاكَ نَسْتَعِیْنُ ۟ؕ
اِیَّاكَஉன்னையேنَعْبُدُவணங்குகிறோம்وَ اِیَّاكَமேலும் உன்னிடமேنَسْتَعِیْنُؕஉதவி தேடுகிறோம்
இய்யாக னஃBபுது வ இய்யாக னஸ்த'ஈன்
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۙ
اِهْدِنَاஎங்களை வழிநடத்துவாயாகالصِّرَاطَபாதையில்الْمُسْتَقِیْمَۙநேரான
இஹ்தினஸ்-ஸிராதல்-முஸ்தகீம்
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ ۙ۬ غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَلَا الضَّآلِّیْنَ ۟۠
صِرَاطَவழிالَّذِیْنَஎவர்கள்اَنْعَمْتَநீ அருள்புரிந்தாயோعَلَیْهِمْ ۙ۬ۦஅவர்கள் மீதுغَیْرِஅல்லாதالْمَغْضُوْبِகோபத்திற்குள்ளானோர்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَ لَاமேலும் அல்லالضَّآلِّیْنَ۠வழிதவறியவர்கள்
ஸிராதல்-லதீன அன்'அம்த 'அலய்ஹிம் கய்ரில்-மக்ளூBபி 'அலய்ஹிம் வ லள்-ளால்லீன்
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.