47. ஸூரத்து முஹம்மது (ஸல்)

மதனீ, வசனங்கள்: 38

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ اَضَلَّ اَعْمَالَهُمْ ۟
اَلَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ صَدُّوْاமேலும் தடுத்தார்களோعَنْஇருந்துسَبِیْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்اَضَلَّஅவன் வீணாக்கினான்اَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களை
அல்லதீன கFபரூ வ ஸத்தூ'அன் ஸBபீலில் லாஹி அளல்ல அஃமாலஹும்
எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ اٰمَنُوْاமேலும் நம்பிக்கை கொண்டார்களோبِمَاஎதன் மீதுنُزِّلَஅருளப்பட்டதோعَلٰیமீதுمُحَمَّدٍமுஹம்மதின்وَّ هُوَமேலும் அதுالْحَقُّசத்தியமாகும்مِنْஇருந்துرَّبِّهِمْ ۙஅவர்களின் இறைவனிடம்كَفَّرَஅவன் போக்கினான்عَنْهُمْஅவர்களை விட்டும்سَیِّاٰتِهِمْஅவர்களின் தீமைகளைوَ اَصْلَحَமேலும் அவன் சீராக்கினான்بَالَهُمْஅவர்களின் நிலையை
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ ஆமனூ Bபிமா னுZஜ்Zஜில 'அலா முஹம்மதி(ன்)வ்-வ ஹுவல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம் கFப்Fபர 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ அஸ்லஹ Bபாலஹும்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
ذٰلِكَ بِاَنَّ الَّذِیْنَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَاَنَّ الَّذِیْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ ۟
ذٰلِكَஇதுبِاَنَّஏனெனில்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோاتَّبَعُواபின்பற்றினார்கள்الْبَاطِلَஅசத்தியத்தைوَ اَنَّமேலும் ஏனெனில்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاتَّبَعُواபின்பற்றினார்கள்الْحَقَّசத்தியத்தைمِنْஇருந்துرَّبِّهِمْ ؕதங்கள் இறைவனிடம்كَذٰلِكَஇவ்வாறேیَضْرِبُவிளக்குகிறான்اللّٰهُஅல்லாஹ்لِلنَّاسِமனிதர்களுக்குاَمْثَالَهُمْஅவர்களின் உதாரணங்களை
தாலிக Bபி அன்னல் லதீன கFபருத் தBப'உல் Bபாதில வ அன்னல் லதீன ஆமனுத் தBப'உல் ஹக்க மிர் ரBப்Bபிஹிம்; கதாலிக யள்ரிBபுல் லாஹு லின்னாஸி அம்தாலஹும்
இது ஏனெனில்: நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதையே பின்பற்றுகிறார்கள் - இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களா(கக் கூறி விள)க்குகிறான்.
فَاِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِ ؕ حَتّٰۤی اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوا الْوَثَاقَ ۙۗ فَاِمَّا مَنًّا بَعْدُ وَاِمَّا فِدَآءً حَتّٰی تَضَعَ الْحَرْبُ اَوْزَارَهَا ذٰؔلِكَ ۛؕ وَلَوْ یَشَآءُ اللّٰهُ لَانْتَصَرَ مِنْهُمْ ۙ وَلٰكِنْ لِّیَبْلُوَاۡ بَعْضَكُمْ بِبَعْضٍ ؕ وَالَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ فَلَنْ یُّضِلَّ اَعْمَالَهُمْ ۟
فَاِذَاஎனவேلَقِیْتُمُநீங்கள் சந்தித்தால்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَضَرْبَவெட்டுங்கள்الرِّقَابِ ؕகழுத்துகளைحَتّٰۤیவரைاِذَاۤபொழுதுاَثْخَنْتُمُوْهُمْஅவர்களை நீங்கள் முறியடித்துவிட்டால்فَشُدُّواபலமாகக் கட்டுங்கள்الْوَثَاقَ ۙۗகட்டுகளைفَاِمَّاபிறகு ஒன்றுمَنًّۢاஉபகாரம்بَعْدُபின்னர்وَ اِمَّاஅல்லதுفِدَآءًபிணைத்தொகைحَتّٰیவரைتَضَعَஇறக்கி வைக்கும்الْحَرْبُபோர்اَوْزَارَهَا அதன் சுமைகளைذٰؔلِكَ ۛؕஇதுதான்وَ لَوْமேலும் ஒருவேளைیَشَآءُநாடினால்اللّٰهُஅல்லாஹ்لَانْتَصَرَபழிவாங்கியிருப்பான்مِنْهُمْஅவர்களிடமிருந்துوَ لٰكِنْஆனால்لِّیَبْلُوَاۡசோதிப்பதற்காகبَعْضَكُمْஉங்களில் சிலரைبِبَعْضٍ ؕசிலரைக் கொண்டுوَ الَّذِیْنَமேலும் எவர்கள்قُتِلُوْاகொல்லப்பட்டார்களோفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்فَلَنْஒருபோதும்یُّضِلَّவீணாக்கமாட்டான்اَعْمَالَهُمْஅவர்களின் செயல்களை
Fப-இதா லகீதுமுல் லதீன கFபரூ Fபளர்Bபர் ரிகாBபி, ஹத்தா இதா அத்கன் துமூஹும் Fபஷுத்துல் வதாக, Fப இம்மா மன்ன்னம் Bபஃது வ இம்மா Fபிதா'அன் ஹத்தா தள'அல் ஹர்Bபு அவ்Zஜாரஹா; தாலிக வ லவ் யஷா'உல் லாஹு லன்தஸர மின்ஹும் வ லாகின் லி யBப்லுவ Bபஃளகும் Bபி Bபஃள்; வல்லதீன குதிலூ Fபீ ஸBபீலில் லாஹி Fபல(ன்)ய் யுளில்ல அஃமாலஹும்
(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
سَیَهْدِیْهِمْ وَیُصْلِحُ بَالَهُمْ ۟ۚ
سَیَهْدِیْهِمْஅவர்களுக்கு நேர்வழி காட்டுவான்وَ یُصْلِحُமேலும் சீர்படுத்துவான்بَالَهُمْۚஅவர்களின் நிலையை
ஸ-யஹ்தீஹிம் வ யுஸ்லிஹு Bபாலஹும்
அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; இன்னும், அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.
وَیُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ ۟
وَ یُدْخِلُهُمُமேலும் அவர்களை அவர் புகுத்துவார்الْجَنَّةَசுவனத்தில்عَرَّفَهَاஅதனை அவர் அறியச் செய்துள்ளார்لَهُمْஅவர்களுக்கு
வ யுத்கிலுஹுமுல் ஜன்னத 'அர்ரFபஹா லஹும்
மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تَنْصُرُوا اللّٰهَ یَنْصُرْكُمْ وَیُثَبِّتْ اَقْدَامَكُمْ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஅத்தகையோரேاٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டவர்களேاِنْநீங்கள்تَنْصُرُواஉதவி செய்தால்اللّٰهَஅல்லாஹ்வுக்குیَنْصُرْكُمْஅவன் உங்களுக்கு உதவி செய்வான்وَ یُثَبِّتْமேலும் அவன் உறுதிப்படுத்துவான்اَقْدَامَكُمْஉங்கள் பாதங்களை
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் தன்ஸுருல் லாஹ யன்ஸுர்கும் வ யுதBப்Bபித் அக்தாமகும்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
وَالَّذِیْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ ۟
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَتَعْسًاஆகவே கேடுதான்لَّهُمْஅவர்களுக்குوَ اَضَلَّமேலும் அவன் வீணாக்கினான்اَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களை
வல்லதீன கFபரூ Fபதஃ ஸல் லஹும் வ அளல்ல அஃமாலஹும்
அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான்.
ذٰلِكَ بِاَنَّهُمْ كَرِهُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟
ذٰلِكَஇதற்குக் காரணம்بِاَنَّهُمْஏனெனில் அவர்கள்كَرِهُوْاவெறுத்தார்கள்مَاۤஎதனைاَنْزَلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்فَاَحْبَطَஆகவே அவன் வீணாக்கிவிட்டான்اَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களை
தாலிக Bபி அன்னஹும் கரிஹூ மா அன்Zஜல் அல்லாஹு Fப அஹ்Bபத அஃமாலஹும்
ஏனெனில்: அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்.
اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ دَمَّرَ اللّٰهُ عَلَیْهِمْ ؗ وَلِلْكٰفِرِیْنَ اَمْثَالُهَا ۟
اَفَلَمْஅவர்கள் இல்லையாیَسِیْرُوْاபயணம் செய்யفِیஇல்الْاَرْضِபூமிفَیَنْظُرُوْاபின்னர் அவர்கள் பார்க்க வேண்டாமாكَیْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِیْنَஅத்தகையோரின்مِنْஇருந்துقَبْلِهِمْ ؕஅவர்களுக்கு முன்دَمَّرَஅழித்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمْ ؗஅவர்கள் மீதுوَ لِلْكٰفِرِیْنَமேலும் நிராகரிப்பவர்களுக்குاَمْثَالُهَاஅது போன்றதே
அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fபயன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; தம்மரல் லாஹு 'அலய்ஹிம் வ லில்காFபிரீன அம்தாலுஹா
அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ مَوْلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَاَنَّ الْكٰفِرِیْنَ لَا مَوْلٰی لَهُمْ ۟۠
ذٰلِكَஅதுبِاَنَّஏனெனில்اللّٰهَஅல்லாஹ்مَوْلَیபாதுகாவலன்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ اَنَّமேலும் நிச்சயமாகالْكٰفِرِیْنَநிராகரிப்பாளர்கள்لَاஇல்லைمَوْلٰیபாதுகாவலன்لَهُمْ۠அவர்களுக்கு
தாலிக Bபி அன்னல் லாஹ மவ்லல் லதீன ஆமனூ வ அன்னல் காFபிரீன லா மவ்லா லஹும்
இது ஏனெனில்: அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا یَتَمَتَّعُوْنَ وَیَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُدْخِلُபுகுத்துவான்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைجَنّٰتٍசுவனங்களில்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُ ؕஆறுகள்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیَتَمَتَّعُوْنَசுகம் அனுபவிக்கிறார்கள்وَ یَاْكُلُوْنَமேலும் உண்கிறார்கள்كَمَاபோன்றுتَاْكُلُஉண்கின்றனவோالْاَنْعَامُகால்நடைகள்وَ النَّارُமேலும் நரகம்مَثْوًیதங்குமிடம்لَّهُمْஅவர்களுக்கு
இன்னல்-லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வல்லதீன கFபரூ யதமத்த'ஊன வ ய'குலூன கமா த'குலுல் அன்'ஆமு வன் னாரு மத்வன் லஹும்
நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.
وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ هِیَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْیَتِكَ الَّتِیْۤ اَخْرَجَتْكَ ۚ اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ ۟
وَ كَاَیِّنْஇன்னும் எத்தனையோمِّنْஉள்ளقَرْیَةٍஊர்هِیَஅதுاَشَدُّமிக வலிமையானதுقُوَّةًபலத்தில்مِّنْவிடقَرْیَتِكَஉமது ஊரைالَّتِیْۤஎதுاَخْرَجَتْكَ ۚஉம்மை வெளியேற்றியதோاَهْلَكْنٰهُمْஅவர்களை நாம் அழித்தோம்فَلَاஎனவே இல்லைنَاصِرَஉதவியாளர் எவரும்لَهُمْஅவர்களுக்கு
வ க அய்யிம் மின் கர்யதின் ஹிய அஷத்து குவ்வதம் மின் கர்யதிகல் லதீ அக்ரஜத்க அஹ்லக்னாஹும் Fபலா னாஸிர லஹும்
மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விட்டு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.
اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُیِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟
اَفَمَنْஎனவே எவர்كَانَஇருக்கிறாரோعَلٰیமீதுبَیِّنَةٍதெளிவான சான்றின்مِّنْஇருந்துرَّبِّهٖதன் இறைவனிடம்كَمَنْஅவரைப் போன்றவராزُیِّنَஅழகாக்கப்பட்டதோلَهٗஅவருக்குسُوْٓءُதீமைعَمَلِهٖஅவரது செயலின்وَ اتَّبَعُوْۤاமேலும் அவர்கள் பின்பற்றினார்களோاَهْوَآءَهُمْதங்களின் மனோஇச்சைகளை
அFபமன் கான 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபிஹீ கமன் Zஜுய்யின லஹூ ஸூ'உ 'அமலிஹீ வத்தBப'ஊ அஹ்வா'அஹும்
எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ فِیْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَیْرِ اٰسِنٍ ۚ وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ یَتَغَیَّرْ طَعْمُهٗ ۚ وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۚ۬ وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّی ؕ وَلَهُمْ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ ؕ كَمَنْ هُوَ خَالِدٌ فِی النَّارِ وَسُقُوْا مَآءً حَمِیْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ ۟
مَثَلُஉதாரணம்الْجَنَّةِசுவனத்தின்الَّتِیْஎதுوُعِدَவாக்களிக்கப்பட்டதோالْمُتَّقُوْنَ ؕஇறையச்சமுடையவர்களுக்குفِیْهَاۤஅதில்اَنْهٰرٌஆறுகள்مِّنْஇலிருந்துمَّآءٍநீர்غَیْرِஅல்லாதاٰسِنٍ ۚமாசடைந்தوَ اَنْهٰرٌமேலும் ஆறுகள்مِّنْஇலிருந்துلَّبَنٍபால்لَّمْஇல்லைیَتَغَیَّرْமாறவில்லைطَعْمُهٗ ۚஅதன் சுவைوَ اَنْهٰرٌமேலும் ஆறுகள்مِّنْஇலிருந்துخَمْرٍமதுلَّذَّةٍஇன்பமளிக்கும்لِّلشّٰرِبِیْنَ ۚ۬அருந்துபவர்களுக்குوَ اَنْهٰرٌமேலும் ஆறுகள்مِّنْஇலிருந்துعَسَلٍதேன்مُّصَفًّی ؕதூய்மையானوَ لَهُمْமேலும் அவர்களுக்குفِیْهَاஅதில்مِنْஇலிருந்துكُلِّஎல்லாالثَّمَرٰتِகனிகளும்وَ مَغْفِرَةٌமேலும் மன்னிப்பும்مِّنْஇலிருந்துرَّبِّهِمْ ؕஅவர்களின் இறைவன்كَمَنْஒருவனைப் போன்றவர்களாهُوَஅவன்خَالِدٌநிரந்தரமானவன்فِیஇல்النَّارِநரக நெருப்பில்وَ سُقُوْاமேலும் புகட்டப்படுவார்கள்مَآءًநீரைحَمِیْمًاகொதிக்கும்فَقَطَّعَஅது துண்டு துண்டாக்கிவிடும்اَمْعَآءَهُمْஅவர்களின் குடல்களை
மதலுல் ஜன்னதில் லதீ வு'இதல் முத்தகூன Fபீஹா அன்ஹாரும் மின் மா'இன் கய்ரி ஆஸினி(ன்)வ் வ அன்ஹாரும் மில் லBபனில் லம் யதகய்யர் தஃமுஹூ வ அன்ஹாரும் மின் கம்ரில் லத்ததின் லி ஷாரிBபீன வ அன்ஹாரும் மின் 'அஸலிம் முஸFப்Fப(ன்)வ் வ லஹும் Fபீஹா மின் குல்லித் தமராதி வ மக்Fபிரதும் மிர் ரBப்Bபிஹிம் கமன் ஹுவ காலிதுன் Fபின் னாரி வ ஸுகூ மா'அன் ஹமீமன் Fபகத்த'அ அம்'ஆ'அஹும்
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ حَتّٰۤی اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا ۫ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ طَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟
وَ مِنْهُمْமேலும் அவர்களில்مَّنْஎவர்یَّسْتَمِعُசெவிமடுக்கிறாரோاِلَیْكَ ۚஉம்மிடம்حَتّٰۤیமுடிவில்اِذَاபொழுதுخَرَجُوْاஅவர்கள் வெளியேறியمِنْஇருந்துعِنْدِكَஉம்மிடத்துقَالُوْاஅவர்கள் கூறுகிறார்கள்لِلَّذِیْنَஎவர்களுக்குاُوْتُواவழங்கப்பட்டதோالْعِلْمَகல்விمَا ذَاஎன்னقَالَஅவர் கூறினார்اٰنِفًا ۫சற்றுமுன்اُولٰٓىِٕكَஇவர்கள்தாம்الَّذِیْنَஎத்தகையோர் என்றால்طَبَعَமுத்திரையிட்டுவிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் இதயங்களின்وَ اتَّبَعُوْۤاமேலும் அவர்கள் பின்பற்றினார்கள்اَهْوَآءَهُمْதங்களின் மனோ இச்சைகளை
வ மின்ஹும் மய் யஸ்தமி'உ இலய்க ஹத்தா இதா கரஜூ மின் 'இன்திக காலூ லில் லதீன ஊதுல் 'இல்ம மாதா கால ஆனிFபா; உலா'இகல் லதீன தBப'அல் லாஹு 'அலா குலூBபிஹிம் வத்தBப'ஊ அஹ்வா'அஹும்
இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து: “அவர் சற்று முன் என்ன கூறினார்?” என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.
وَالَّذِیْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًی وَّاٰتٰىهُمْ تَقْوٰىهُمْ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اهْتَدَوْاநேர்வழி பெற்றார்களோزَادَهُمْஅவர்களுக்கு அதிகமாக்கினான்هُدًیநேர்வழியைوَّ اٰتٰىهُمْமேலும் அவர்களுக்கு வழங்கினான்تَقْوٰىهُمْஅவர்களின் இறையச்சத்தை
வல்லதீனஹ் ததவ் Zஜாதஹும் ஹுத(ன்)வ் வ ஆதாஹும் தக்வாஹும்
மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.
فَهَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً ۚ فَقَدْ جَآءَ اَشْرَاطُهَا ۚ فَاَنّٰی لَهُمْ اِذَا جَآءَتْهُمْ ذِكْرٰىهُمْ ۟
فَهَلْஎனவேیَنْظُرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கிறார்களாاِلَّاஅன்றிالسَّاعَةَஇறுதி வேளையைاَنْஅதுتَاْتِیَهُمْஅவர்களிடம் வருவதைبَغْتَةً ۚதிடீரென்றுفَقَدْதிண்ணமாகجَآءَவந்துவிட்டனاَشْرَاطُهَا ۚஅதன் அடையாளங்கள்فَاَنّٰیஎவ்வாறுلَهُمْஅவர்களுக்குاِذَاபோதுجَآءَتْهُمْஅது அவர்களிடம் வந்துவிட்டால்ذِكْرٰىهُمْஅவர்கள் படிப்பினை பெறுவது
Fபஹல் யன்ளுரூன இல்லஸ் ஸா'அத அன் த'தியஹும் Bபக்ததன் Fபகத் ஜா'அ அஷ்ராதுஹா; Fப அன்னா லஹும் இதா ஜா'அத் ஹும் திக்ராஹும்
எனவே இவர்கள் தங்கள்பால் திடுகூறாக (தீர்ப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன; ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்.
فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰىكُمْ ۟۠
فَاعْلَمْஎனவே அறிந்துகொள்வீராகاَنَّهٗநிச்சயமாகلَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاஅன்றிاللّٰهُஅல்லாஹ்வைوَ اسْتَغْفِرْமேலும் மன்னிப்புத் தேடுவீராகلِذَنْۢبِكَஉமது பாவத்திற்காகوَ لِلْمُؤْمِنِیْنَமேலும் முஃமினான ஆண்களுக்காகவும்وَ الْمُؤْمِنٰتِ ؕமேலும் முஃமினான பெண்களுக்காகவும்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُநன்கறிவான்مُتَقَلَّبَكُمْஉங்கள் நடமாட்டத்தைوَ مَثْوٰىكُمْ۠மேலும் உங்கள் தங்குமிடத்தையும்
Fபஃலம் அன்னஹூ லா இலாஹ இல்லல் லாஹு வஸ்தக்Fபிர் லிதம்Bபிக வ லில்மு'மினீன வல்மு'மினாத்; வல்லாஹு யஃலமு முதகல்லBபகும் வ மத்வாகும்
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚ فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِیْهَا الْقِتَالُ ۙ رَاَیْتَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یَّنْظُرُوْنَ اِلَیْكَ نَظَرَ الْمَغْشِیِّ عَلَیْهِ مِنَ الْمَوْتِ ؕ فَاَوْلٰى لَهُمْ ۟ۚ
وَ یَقُوْلُமேலும் கூறுகிறார்கள்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோلَوْ لَاஏன்نُزِّلَتْஅருளப்படவில்லைسُوْرَةٌ ۚஓர் அத்தியாயம்فَاِذَاۤஆனால் எப்போதுاُنْزِلَتْஅருளப்படுகிறதோسُوْرَةٌஓர் அத்தியாயம்مُّحْكَمَةٌதெளிவானوَّ ذُكِرَமேலும் குறிப்பிடப்படுகிறதோفِیْهَاஅதில்الْقِتَالُ ۙபோர்رَاَیْتَநீர் காண்பீர்الَّذِیْنَஎவர்களைفِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் இதயங்கள்مَّرَضٌநோய்یَّنْظُرُوْنَஅவர்கள் பார்ப்பதைاِلَیْكَஉம்மைنَظَرَபார்வையைالْمَغْشِیِّமயக்கமுற்றவரின்عَلَیْهِஅவர் மீதுمِنَஇருந்துالْمَوْتِ ؕமரணம்فَاَوْلٰیஆகவே கேடுதான்لَهُمْۚஅவர்களுக்கு
வ யகூலுல் லதீன ஆமனூ லவ் லா னுZஜ்Zஜிலத் ஸூரதுன் Fப இதா உன்Zஜிலத் ஸூரதும் முஹ்கமது(ன்)வ் வ துகிர Fபீஹல் கிதாலு ர அய்தல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)ய் யன்ளுரூன இலய்க னளரல் மக்ஷிய்யி 'அலய்ஹி மினல் மவ்தி Fப'அவ்லா லஹும்
இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்: “(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?” என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதோ அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான்.
طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌ ۫ فَاِذَا عَزَمَ الْاَمْرُ ۫ فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَكَانَ خَیْرًا لَّهُمْ ۟ۚ
طَاعَةٌகீழ்ப்படிதல்وَّ قَوْلٌமேலும் சொல்مَّعْرُوْفٌ ۫நன்மையானதுفَاِذَاஆகவே எப்போதுعَزَمَஉறுதியாகிவிட்டதோالْاَمْرُ ۫காரியம்فَلَوْஅப்போதுصَدَقُواஅவர்கள் உண்மையாக நடந்திருந்தால்اللّٰهَஅல்லாஹ்விடம்لَكَانَநிச்சயமாக அது இருந்திருக்கும்خَیْرًاமேலானதாகلَّهُمْۚஅவர்களுக்கு
தா'அது(ன்)வ் வ கவ்லும் மஃரூFப்; Fப இதா 'அZஜமல் அம்ரு Fபலவ் ஸதகுல் லாஹ லகான கய்ரல் லஹும்
(ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
فَهَلْ عَسَیْتُمْ اِنْ تَوَلَّیْتُمْ اَنْ تُفْسِدُوْا فِی الْاَرْضِ وَتُقَطِّعُوْۤا اَرْحَامَكُمْ ۟
فَهَلْஆகவேعَسَیْتُمْஒருவேளை நீங்கள்اِنْஎன்றால்تَوَلَّیْتُمْநீங்கள் அதிகாரத்தை ஏற்றீர்கள்اَنْஎன்றுتُفْسِدُوْاகுழப்பம் விளைவிப்பீர்கள்فِیஇல்الْاَرْضِபூமிوَ تُقَطِّعُوْۤاமேலும் துண்டிப்பீர்கள்اَرْحَامَكُمْஉங்கள் இரத்த உறவுகளை
Fபஹல் 'அஸய்தும் இன் தவல்லய்தும் அன் துFப்ஸிதூ Fபில் அர்ளி வ துகத்தி'ஊ அர்ஹாமகும்
(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰۤی اَبْصَارَهُمْ ۟
اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்الَّذِیْنَஎத்தகையோரென்றால்لَعَنَهُمُஅவர்களைச் சபித்தான்اللّٰهُஅல்லாஹ்فَاَصَمَّهُمْஆகவே அவர்களைச் செவிடாக்கினான்وَ اَعْمٰۤیமேலும் குருடாக்கினான்اَبْصَارَهُمْஅவர்களின் பார்வைகளை
உலா'இகல் லதீன ல'அனஹுமுல் லாஹு Fப அஸம்மஹும் வ அஃமா அBப்ஸாரஹும்
இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.
اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰی قُلُوْبٍ اَقْفَالُهَا ۟
اَفَلَاஅவர்கள் ... மாட்டார்களாیَتَدَبَّرُوْنَசிந்திக்கالْقُرْاٰنَகுர்ஆனைاَمْஅல்லதுعَلٰیமீதுقُلُوْبٍஉள்ளங்களின்اَقْفَالُهَاஅவற்றின் பூட்டுகள்
அFபலா யததBப்Bபரூனல் குர்ஆன அம் 'அலா குலூBபின் அக்Fபாலுஹா
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
اِنَّ الَّذِیْنَ ارْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدَی ۙ الشَّیْطٰنُ سَوَّلَ لَهُمْ ؕ وَاَمْلٰی لَهُمْ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்ارْتَدُّوْاதிரும்பிச் சென்றார்களோعَلٰۤیமீதுاَدْبَارِهِمْதங்கள் முதுகுகளின்مِّنْۢஇருந்துبَعْدِபிறகுمَاஎதுتَبَیَّنَதெளிவாகிவிட்டதோلَهُمُஅவர்களுக்குالْهُدَی ۙநேர்வழிالشَّیْطٰنُஷைத்தான்سَوَّلَஅழகாகக் காட்டினான்لَهُمْ ؕஅவர்களுக்குوَ اَمْلٰیமேலும் ஆசையூட்டினான்لَهُمْஅவர்களுக்கு
இன்னல் லதீனர் தத்தூ 'அலா அத்Bபாரிஹிம் மின் Bபஃதி மா தBபய்யன லஹுமுல் ஹுதஷ் ஷய்தானு ஸவ்வல லஹும் வ அம்லா லஹும்
நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.
ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لِلَّذِیْنَ كَرِهُوْا مَا نَزَّلَ اللّٰهُ سَنُطِیْعُكُمْ فِیْ بَعْضِ الْاَمْرِ ۖۚ وَاللّٰهُ یَعْلَمُ اِسْرَارَهُمْ ۟
ذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَالُوْاகூறினார்கள்لِلَّذِیْنَஎவர்களிடம்كَرِهُوْاவெறுத்தார்களோمَاஎதனைنَزَّلَஅருளினானோاللّٰهُஅல்லாஹ்سَنُطِیْعُكُمْநாங்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவோம்فِیْஇல்بَعْضِசிலالْاَمْرِ ۖۚகாரியங்களில்وَ اللّٰهُஇன்னும் அல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்اِسْرَارَهُمْஅவர்களின் இரகசியங்களை
தாலிக Bபி அன்னஹும் காலூ லில்லதீன கரிஹூ மா னZஜ்Zஜலல் லாஹு ஸனுதீ'உகும் Fபீ Bபஃளில் அம்ரி வல்லாஹு யஃலமு இஸ்ராரஹும்
இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்” என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.
فَكَیْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۟
فَكَیْفَபிறகு எப்படிاِذَاபோதுتَوَفَّتْهُمُஅவர்களின் உயிர்களைக் கைப்பற்றும்الْمَلٰٓىِٕكَةُவானவர்கள்یَضْرِبُوْنَஅடித்தவாறுوُجُوْهَهُمْஅவர்களின் முகங்களில்وَ اَدْبَارَهُمْமேலும் அவர்களின் முதுகுகளில்
Fபகய்Fப இதா தவFப்Fபத் ஹுமுல் மலா'இகது யள்ரிBபூன வுஜூஹஹும் வ அத்Bபா ரஹும்
ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,
ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟۠
ذٰلِكَஅதுبِاَنَّهُمُஏனெனில் அவர்கள்اتَّبَعُوْاபின்பற்றினார்கள்مَاۤஎதைاَسْخَطَகோபமூட்டியதோاللّٰهَஅல்லாஹ்வைوَ كَرِهُوْاமேலும் அவர்கள் வெறுத்தார்கள்رِضْوَانَهٗஅவனது பொருத்தத்தைفَاَحْبَطَஆகவே அவன் வீணாக்கினான்اَعْمَالَهُمْ۠அவர்களுடைய செயல்களை
தாலிக Bபி அன்னஹுமுத் தBப'ஊ மா அஸ்கதல் லாஹ வ கரிஹூ ரிள்வானஹூ Fப அஹ்Bபத அஃமாலஹும்
இது ஏனெனில்: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.
اَمْ حَسِبَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ یُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ ۟
اَمْஅல்லதுحَسِبَஎண்ணினார்களாالَّذِیْنَஎவர்கள்فِیْஇல்قُلُوْبِهِمْஅவர்களின் இதயங்கள்مَّرَضٌநோய்اَنْஎன்றுلَّنْஒருபோதும்یُّخْرِجَவெளிப்படுத்த மாட்டான்اللّٰهُஅல்லாஹ்اَضْغَانَهُمْஅவர்களின் குரோதங்களை
அம் ஹஸிBபல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் அல் ல(ன்)ய் யுக்ரிஜல் லாஹு அள்கானஹும்
அல்லது: எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா?
وَلَوْ نَشَآءُ لَاَرَیْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِیْمٰهُمْ ؕ وَلَتَعْرِفَنَّهُمْ فِیْ لَحْنِ الْقَوْلِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ اَعْمَالَكُمْ ۟
وَ لَوْமேலும் ஒருவேளைنَشَآءُநாம் நாடினால்لَاَرَیْنٰكَهُمْநிச்சயமாக அவர்களை உமக்கு நாம் காண்பித்திருப்போம்فَلَعَرَفْتَهُمْஅப்போது நிச்சயமாக அவர்களை நீர் அடையாளம் கண்டிருப்பீர்بِسِیْمٰىهُمْ ؕஅவர்களின் அடையாளங்களைக் கொண்டுوَ لَتَعْرِفَنَّهُمْமேலும் நிச்சயமாக நீர் அவர்களை அறிந்து கொள்வீர்فِیْஇல்لَحْنِதொனிالْقَوْلِ ؕபேச்சின்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَعْلَمُஅறிகிறான்اَعْمَالَكُمْஉங்கள் செயல்களை
வ லவ் னஷா'உ ல-அரய்னாகஹும் Fபல 'அரFப்தஹும் Bபி ஸீமாஹும்; வ லதஃரிFபன் னஹும் Fபீ லஹ்னில் கவ்ல்; வல்லாஹு யஃலமு அஃமாலகும்
அன்றியும், நாம் நாடினால், திடமாக நாம் அவர்களை உமக்குக் காண்பித்திருப்போம்; அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கு அறிந்து கொள்வீர்; நிச்சயமாக அவர்களுடைய சூழ்ச்சியான பேச்சைக் கொண்டும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; மேலும் அல்லாஹ் உங்கள் செய்கைகளை நன்கறிகிறான்.
وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰی نَعْلَمَ الْمُجٰهِدِیْنَ مِنْكُمْ وَالصّٰبِرِیْنَ ۙ وَنَبْلُوَاۡ اَخْبَارَكُمْ ۟
وَ لَنَبْلُوَنَّكُمْமேலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்حَتّٰیவரைنَعْلَمَநாம் அறியும்الْمُجٰهِدِیْنَஅறப்போரிடுபவர்களைمِنْكُمْஉங்களில்وَ الصّٰبِرِیْنَ ۙஇன்னும் பொறுமையாளர்களையும்وَ نَبْلُوَاۡமேலும் நாம் சோதிப்போம்اَخْبَارَكُمْஉங்கள் செய்திகளை
வ லனBப்லுவன்னகும் ஹத்தா னஃலமல் முஜாஹிதீன மின்கும் வஸ்ஸாBபிரீன வ னBப்லுவ அக்Bபாரகும்
அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدٰی ۙ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ وَسَیُحْبِطُ اَعْمَالَهُمْ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ صَدُّوْاமேலும் தடுத்தார்களோعَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்وَ شَآقُّواமேலும் மாறுசெய்தார்களோالرَّسُوْلَதூதரைمِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاஎதுتَبَیَّنَதெளிவாகிவிட்டதோلَهُمُஅவர்களுக்குالْهُدٰی ۙநேர்வழிلَنْஒருபோதும்یَّضُرُّواஅவர்கள் தீங்கிழைக்க மாட்டார்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குشَیْـًٔا ؕஎதனையும்وَ سَیُحْبِطُமேலும் அவன் வீணாக்குவான்اَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களை
இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி வ ஷாக்குர் ரஸூல மின் Bபஃதி மா தBபய்யன லஹுமுல் ஹுதா ல(ன்)ய் யளுர்ருல் லாஹ ஷய்'அ(ன்)வ் வ ஸ யுஹ்Bபிது அஃமாலஹும்
நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது; அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَكُمْ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஅத்தகையோரேاٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டவர்களேاَطِیْعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَ اَطِیْعُواமேலும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَதூதருக்குوَ لَاமேலும்تُبْطِلُوْۤاவீணாக்காதீர்கள்اَعْمَالَكُمْஉங்கள் செயல்களை
யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வலா துBப்திலூ அஃமாலகும்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ صَدُّوْاமேலும் தடுத்தார்களோعَنْவிட்டுسَبِیْلِபாதையைاللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபின்னர்مَاتُوْاஇறந்தார்களோوَ هُمْஅவர்கள்كُفَّارٌநிராகரிப்பாளர்களாகفَلَنْஒருக்காலும்یَّغْفِرَமன்னிக்க மாட்டான்اللّٰهُஅல்லாஹ்لَهُمْஅவர்களுக்கு
இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி தும்ம மாதூ வ ஹும் குFப்Fபாருன் Fபல(ன்)ய் யக்Fபிரல்லாஹு லஹும்
நிச்சயமாக, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَی السَّلْمِ ۖۗ وَاَنْتُمُ الْاَعْلَوْنَ ۖۗ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ یَّتِرَكُمْ اَعْمَالَكُمْ ۟
فَلَاஎனவேتَهِنُوْاநீங்கள் தளர்ந்து விடாதீர்கள்وَ تَدْعُوْۤاமேலும் நீங்கள் அழைக்காதீர்கள்اِلَیநோக்கிالسَّلْمِ ۖۗசமாதானத்தைوَاَنْتُمُமேலும் நீங்கள்தான்الْاَعْلَوْنَ ۖۗமேலோங்கியவர்கள்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்مَعَكُمْஉங்களுடன் இருக்கின்றான்وَ لَنْமேலும் ஒருபோதும்یَّتِرَكُمْஅவன் உங்களுக்குக் குறைக்க மாட்டான்اَعْمَالَكُمْஉங்கள் செயல்களை
Fபலா தஹினூ வ தத்'ஊ இலஸ் ஸல்மி வ அன்துமுல் அஃலவ்ன வல்லாஹு ம'அகும் வ ல(ன்)ய் யதிரகும் அஃமாலகும்
(முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.
اِنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ ؕ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا یُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا یَسْـَٔلْكُمْ اَمْوَالَكُمْ ۟
اِنَّمَاநிச்சயமாகالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகلَعِبٌவிளையாட்டுوَّ لَهْوٌ ؕமற்றும் வீண் வேடிக்கையுமேயாகும்وَ اِنْமேலும் நீங்கள்تُؤْمِنُوْاநம்பிக்கை கொண்டால்وَ تَتَّقُوْاமேலும் பயபக்தியுடன் நடந்தால்یُؤْتِكُمْஅவன் உங்களுக்கு வழங்குவான்اُجُوْرَكُمْஉங்கள் நற்கூலிகளைوَ لَاமேலும் அவன்يَسْـٴَـــلْكُمْஉங்களிடம் கேட்கமாட்டான்اَمْوَالَكُمْஉங்கள் செல்வங்களை
இன்னமல் ஹயாதுத் துன்யா ல'இBபு(ன்)வ் வ லஹ்வ்; வ இன் து'மினூ வ தத்தகூ யு'திகும் உஜூரகும் வலா யஸ்'அல்கும் அம்வாலகும்
திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது; ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அளிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.
اِنْ یَّسْـَٔلْكُمُوْهَا فَیُحْفِكُمْ تَبْخَلُوْا وَیُخْرِجْ اَضْغَانَكُمْ ۟
اِنْஎனில்يَّسْــٴَـــلْكُمُوْهَاஅவன் உங்களிடம் அவற்றைக் கேட்பான்فَیُحْفِكُمْபின் அவன் உங்களை வற்புறுத்துவான்تَبْخَلُوْاநீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்وَ یُخْرِجْஇன்னும் அவன் வெளிப்படுத்துவான்اَضْغَانَكُمْஉங்கள் குரோதங்களை
இ(ன்)ய் யஸ்'அல்குமூஹா Fப யுஹ்Fபிகும் தBப்கலூ வ யுக்ரிஜ் அள்கானகும்
அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி விடுவான்.
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ فَمِنْكُمْ مَّنْ یَّبْخَلُ ۚ وَمَنْ یَّبْخَلْ فَاِنَّمَا یَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ؕ وَاللّٰهُ الْغَنِیُّ وَاَنْتُمُ الْفُقَرَآءُ ۚ وَاِنْ تَتَوَلَّوْا یَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ ۙ ثُمَّ لَا یَكُوْنُوْۤا اَمْثَالَكُمْ ۟۠
هٰۤاَنْتُمْஇதோ நீங்கள்هٰۤؤُلَآءِஇவர்கள்தாம்تُدْعَوْنَஅழைக்கப்படுகிறீர்கள்لِتُنْفِقُوْاசெலவு செய்யفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَمِنْكُمْஆகவே உங்களில்مَّنْசிலர்یَّبْخَلُ ۚகஞ்சத்தனம் செய்கிறார்கள்وَ مَنْமேலும் எவர்یَّبْخَلْகஞ்சத்தனம் செய்கிறாரோفَاِنَّمَاநிச்சயமாகیَبْخَلُகஞ்சத்தனம் செய்கிறார்عَنْஎதிராகنَّفْسِهٖ ؕதனக்கேوَ اللّٰهُமேலும் அல்லாஹ்الْغَنِیُّதேவையற்றவன்وَ اَنْتُمُமேலும் நீங்கள்الْفُقَرَآءُ ۚதேவையுள்ளவர்கள்وَ اِنْமேலும் ஒருவேளைتَتَوَلَّوْاபுறக்கணித்தால்یَسْتَبْدِلْஅவன் பகரமாக்குவான்قَوْمًاஒரு சமூகத்தைغَیْرَكُمْ ۙஉங்களல்லாதثُمَّபிறகுلَاமாட்டார்கள்یَكُوْنُوْۤاஅவர்கள் இருக்கاَمْثَالَكُمْ۠உங்களைப் போன்றவர்களாக
ஹா அன்தும் ஹா'உலா'இ துத்'அவ்ன லிதுன்Fபிகூ Fபீ ஸBபீலில்லாஹி Fபமின்கும் ம(ன்)ய் யBப்கலு வ ம(ன்)ய் யBப்கல் Fப இன்னமா யBப்கலு 'அன் னFப்ஸிஹ்; வல்லாஹு கனிய்யு வ அன்துமுல் Fபுகரா'; வ இன் ததவல்லவ் யஸ்தBப்தில் கவ்மன் கய்ரகும் தும்ம லா யகூனூ அம்தாலகும்
அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.