52. ஸூரத்துத் தூர் (மலை)

மக்கீ, வசனங்கள்: 49

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَكِتٰبٍ مَّسْطُوْرٍ ۟ۙ
وَ كِتٰبٍஇன்னும் ஒரு வேதத்தின் மீதும்مَّسْطُوْرٍۙஎழுதப்பட்ட
வ கிதாBபிம் மஸ்தூர்
எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
وَّالْبَیْتِ الْمَعْمُوْرِ ۟ۙ
وَّ الْبَیْتِஇன்னும் இல்லத்தின் மீதும்الْمَعْمُوْرِۙஅதிகம் தரிசிக்கப்படும்
வல் Bபய்தில் மஃமூர்
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
وَالسَّقْفِ الْمَرْفُوْعِ ۟ۙ
وَ السَّقْفِஇன்னும் மேற்கூரையின் மீதும்الْمَرْفُوْعِۙஉயர்த்தப்பட்ட
வஸ்ஸக்Fபில் மர்Fபூ'
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
وَالْبَحْرِ الْمَسْجُوْرِ ۟ۙ
وَ الْبَحْرِஇன்னும் கடலின் மீதும்الْمَسْجُوْرِۙநிரப்பப்பட்ட
வல் Bபஹ்ரில் மஸ்ஜூர்
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ ۟ۙ
اِنَّநிச்சயமாகعَذَابَவேதனைرَبِّكَஉமது இறைவனின்لَوَاقِعٌۙநிகழ்ந்தே தீரும்
இன்ன 'அதாBப ரBப்Bபிக லவாகி'
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
یَّوْمَ تَمُوْرُ السَّمَآءُ مَوْرًا ۟ۙ
یَّوْمَஅந்நாளில்تَمُوْرُசுழலும்السَّمَآءُவானம்مَوْرًاۙகடுமையாக
யவ்ம தமூருஸ் ஸமா'உ மவ்ரா
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்;
وَّتَسِیْرُ الْجِبَالُ سَیْرًا ۟ؕ
وَّ تَسِیْرُமேலும் நகர்ந்து செல்லும்الْجِبَالُமலைகள்سَیْرًاؕவேகமாக நகர்ந்தவாறு
வ தஸீருல் ஜிBபாலு ஸய்ரா
இன்னும், மலைகள் தூள் தூளாகி விடும் போது,
فَوَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ
فَوَیْلٌஆகவே கேடுதான்یَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَۙபொய்ப்பிப்பவர்களுக்கு
Fபவய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில் முகாத்திBபீன்
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
الَّذِیْنَ هُمْ فِیْ خَوْضٍ یَّلْعَبُوْنَ ۟ۘ
الَّذِیْنَஎவர்கள்هُمْஅவர்கள்فِیْஇல்خَوْضٍவீண் பேச்சில்یَّلْعَبُوْنَۘவிளையாடுகிறார்களோ
அல்லதீன ஹும் Fபீ கவ்ளி(ன்)ய் யல்'அBபூன்
எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
یَوْمَ یُدَعُّوْنَ اِلٰی نَارِ جَهَنَّمَ دَعًّا ۟ؕ
یَوْمَஅந்நாளில்یُدَعُّوْنَஅவர்கள் தள்ளப்படுவார்கள்اِلٰیநோக்கிنَارِநெருப்பைجَهَنَّمَநரகத்தின்دَعًّاؕவன்மையாகத் தள்ளப்படுதல்
யவ்ம யுத'-'ஊன இலா னாரி ஜஹன்னம த'-'ஆ
அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
هٰذِهِ النَّارُ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟
هٰذِهِஇதுதான்النَّارُநெருப்புالَّتِیْஎதனைكُنْتُمْநீங்கள்بِهَاஅதனைتُكَذِّبُوْنَபொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ
ஹாதிஹின் னாருல் லதீ குன்தும் Bபிஹா துகத்திBபூன்
அந்நாளில்: (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ ۟ۚ
اَفَسِحْرٌஅப்படியானால் சூனியமா?هٰذَاۤஇதுاَمْஅல்லதுاَنْتُمْநீங்கள்لَاபார்க்கتُبْصِرُوْنَۚவில்லையா?
அFபஸிஹ்ருன் ஹாதா அம் அன்தும் லா துBப்ஸிரூன்
“இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا ۚ سَوَآءٌ عَلَیْكُمْ ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
اِصْلَوْهَاஅதில் எரியுங்கள்فَاصْبِرُوْۤاஎனவே பொறுமை கொள்ளுங்கள்اَوْஅல்லதுلَاபொறுமை கொள்ளாமல்تَصْبِرُوْا ۚஇருங்கள்سَوَآءٌசமமேعَلَیْكُمْ ؕஉங்களுக்குاِنَّمَاநிச்சயமாகتُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்مَاஎதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தீர்களோ
இஸ்லவ்ஹா Fபஸ்Bபிரூ அவ் லா தஸ்Bபிரூ ஸவா'உன் 'அலய்கும் இன்னமா துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
“நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَعِیْمٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِیْنَஇறையச்சமுடையவர்கள்فِیْஇருப்பார்கள்جَنّٰتٍசுவனங்களில்وَّ نَعِیْمٍۙஇன்பத்திலும்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ ன'ஈம்
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
فٰكِهِیْنَ بِمَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۚ وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
فٰكِهِیْنَஇன்பமுற்றவர்களாகبِمَاۤஎதைக் கொண்டுاٰتٰىهُمْஅவர்களுக்கு வழங்கினானோرَبُّهُمْ ۚஅவர்களுடைய இறைவன்وَ وَقٰىهُمْமேலும் அவர்களைக் காப்பாற்றினான்رَبُّهُمْஅவர்களுடைய இறைவன்عَذَابَவேதனையிலிருந்துالْجَحِیْمِநரகத்தின்
Fபாகிஹீன Bபிமா ஆதாஹும் ரBப்Bபுஹும் வ வகாஹும் ரBப்Bபுஹும் 'அதாBபல் ஜஹீம்
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
كُلُوْاஉண்ணுங்கள்وَ اشْرَبُوْاமேலும் பருகுங்கள்هَنِیْٓـًٔۢاஇன்பமாகبِمَاகாரணமாகكُنْتُمْநீங்கள்تَعْمَلُوْنَۙசெய்துகொண்டிருந்தீர்கள்
குலூ வஷ்ரBபூ ஹனீ 'அம் Bபிமா குன்தும் தஃமலூன்
(அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”
مُتَّكِـِٕیْنَ عَلٰی سُرُرٍ مَّصْفُوْفَةٍ ۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟
مُتَّكِـِٕیْنَசாய்ந்தவர்களாகعَلٰیமீதுسُرُرٍகட்டில்களின்مَّصْفُوْفَةٍ ۚவரிசையாக அமைக்கப்பட்டوَ زَوَّجْنٰهُمْமேலும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்بِحُوْرٍஹூர்களுடன்عِیْنٍஅழகிய கண்களையுடைய
முத்தகி'ஈன 'அலா ஸுருரிம் மஸ்FபூFபதி(ன்)வ் வ Zஜவ்வஜ் னாஹும் Bபிஹூரின் 'ஈன்
அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّیَّتُهُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّیَّتَهُمْ وَمَاۤ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَیْءٍ ؕ كُلُّ امْرِىۢ بِمَا كَسَبَ رَهِیْنٌ ۟
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ اتَّبَعَتْهُمْமேலும் அவர்களைப் பின்பற்றினார்களோذُرِّیَّتُهُمْஅவர்களுடைய சந்ததியினர்بِاِیْمَانٍநம்பிக்கையுடன்اَلْحَقْنَاநாம் சேர்ப்போம்بِهِمْஅவர்களுடன்ذُرِّیَّتَهُمْஅவர்களுடைய சந்ததியினரைوَ مَاۤமேலும் இல்லைاَلَتْنٰهُمْநாம் அவர்களுக்குக் குறைத்தோம்مِّنْஇருந்துعَمَلِهِمْஅவர்களுடைய செயல்களில்مِّنْஇருந்துشَیْءٍ ؕஎதையும்كُلُّஒவ்வொருامْرِئٍۭமனிதனும்بِمَاஎதைக் கொண்டுكَسَبَஅவன் சம்பாதித்தானோرَهِیْنٌபிணையாக்கப்பட்டவன்
வல்லதீன ஆமனூ வத்தBப'அத் ஹும் துர்ரிய்யதுஹும் Bபிஈமானின் அல்ஹக்னா Bபிஹிம் துர்ரிய்யதஹும் வ மா அலத்னாஹும் மின் 'அமலிஹிம் மின் ஷய்'; குல்லும் ரி'இம் Bபிமா கஸBப ரஹீன்
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟
وَ اَمْدَدْنٰهُمْமேலும் அவர்களுக்கு நாம் வழங்குவோம்بِفَاكِهَةٍகனிகளைوَّ لَحْمٍமற்றும் இறைச்சியைمِّمَّاஎவற்றைیَشْتَهُوْنَஅவர்கள் விரும்புகிறார்களோ
வ அம்தத்னாஹும் BபிFபா கிஹதி(ன்)வ் வ லஹ்மிம் மிம்மா யஷ்தஹூன்
இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
یَتَنَازَعُوْنَ فِیْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِیْهَا وَلَا تَاْثِیْمٌ ۟
یَتَنَازَعُوْنَஅவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள்فِیْهَاஅதில்كَاْسًاகிண்ணத்தைلَّاஇல்லைلَغْوٌவீண்பேச்சுفِیْهَاஅதில்وَ لَاமேலும் இல்லைتَاْثِیْمٌபாவம்
யதனாZஜ'ஊன Fபீஹா கா'ஸல் லா லக்வுன் Fபீஹா வலா தா'தீம்
(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
وَیَطُوْفُ عَلَیْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ ۟
وَ یَطُوْفُமேலும் சுற்றி வருவார்கள்عَلَیْهِمْஅவர்களிடம்غِلْمَانٌசிறுவர்கள்لَّهُمْஅவர்களுக்கெனكَاَنَّهُمْஅவர்கள் எதைப் போலிருப்பார்கள் என்றால்لُؤْلُؤٌமுத்துக்களைப் போன்றுمَّكْنُوْنٌமறைத்து வைக்கப்பட்ட
வ யதூFபு 'அலய்ஹிம் கில்மானுல் லஹும் க அன்னஹும் லு'லு'உம் மக்னூன்
அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
وَ اَقْبَلَமேலும் முன்னோக்குவார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیநோக்கிبَعْضٍமற்றவரைیَّتَسَآءَلُوْنَஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வார்கள்
வ அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா'அலூன்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
قَالُوْۤا اِنَّا كُنَّا قَبْلُ فِیْۤ اَهْلِنَا مُشْفِقِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருந்தோம்قَبْلُமுன்னர்فِیْۤமத்தியில்اَهْلِنَاநம் குடும்பத்தினர்مُشْفِقِیْنَஅச்சமுடையவர்களாக
காலூ இன்னா குன்னா கBப்லு Fபீ அஹ்லினா முஷ்Fபிகீன்
“இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
فَمَنَّ اللّٰهُ عَلَیْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ ۟
فَمَنَّஎனவே அருள்புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَیْنَاஎங்கள் மீதுوَ وَقٰىنَاமேலும் எங்களைக் காப்பாற்றினான்عَذَابَவேதனையிலிருந்துالسَّمُوْمِசுடுநெருப்பின்
Fபமன்ன்னல் லாஹு 'அலய்னா வ வகானா 'அதாBபஸ் ஸமூம்
“ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ ؕ اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِیْمُ ۟۠
اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்مِنْஇதற்குقَبْلُமுன்னர்نَدْعُوْهُ ؕஅவனைப் பிரார்த்திப்பவர்களாகاِنَّهٗநிச்சயமாக அவன்هُوَஅவன்தான்الْبَرُّபெரும் உபகாரியானவன்الرَّحِیْمُ۠நிகரற்ற அன்புடையவன்
இன்னா குன்னா மின் கBப்லு னத்'ஊஹு இன்னஹூ ஹுவல் Bபர்ருர் ரஹீம்
“நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.”  
فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍ ۟ؕ
فَذَكِّرْஎனவே அறிவுரை கூறுவீராகفَمَاۤஇல்லைاَنْتَநீர்بِنِعْمَتِஅருளால்رَبِّكَஉமது இறைவனின்بِكَاهِنٍகுறிசொல்பவரோوَّ لَاமேலும் இல்லைمَجْنُوْنٍؕபைத்தியக்காரரோ
Fபதக்கிர் Fபமா அன்த Bபினிஃமதி ரBப்Bபிக Bபிகாஹினி(ன்)வ் வலா மஜ்னூன்
எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.
اَمْ یَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَیْبَ الْمَنُوْنِ ۟
اَمْஅல்லதுیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களாشَاعِرٌஒரு கவிஞர்نَّتَرَبَّصُநாங்கள் காத்திருக்கிறோம்بِهٖஅவருக்குرَیْبَசுழற்சியைالْمَنُوْنِகாலத்தின்
அம் யகூலூன ஷா'இருன் னதரBப்Bபஸு Bபிஹீ ரய்Bபல் மனூன்
அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா?
قُلْ تَرَبَّصُوْا فَاِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِیْنَ ۟ؕ
قُلْகூறுவீராகتَرَبَّصُوْاகாத்திருங்கள்فَاِنِّیْஆகவே நிச்சயமாக நானும்مَعَكُمْஉங்களுடன்مِّنَஇருந்துالْمُتَرَبِّصِیْنَؕகாத்திருப்பவர்களில் ஒருவனாவேன்
குல் தரBப்Bபஸூ Fப இன்னீ ம'அகும் மினல் முதரBப்Bபிஸீன்
“நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
اَمْ تَاْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَاۤ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
اَمْஅல்லதுتَاْمُرُهُمْஅவர்களுக்குக் கட்டளையிடுகிறதாاَحْلَامُهُمْஅவர்களுடைய அறிவுகள்بِهٰذَاۤஇதைக் கொண்டுاَمْஅல்லதுهُمْஅவர்கள்قَوْمٌஒரு கூட்டத்தினர்طَاغُوْنَۚவரம்பு மீறியவர்கள்
அம் தாமுருஹும் அஹ்லாமுஹும் Bபிஹாதா அம் ஹும் கவ்முன் தாகூன்
அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
اَمْ یَقُوْلُوْنَ تَقَوَّلَهٗ ۚ بَلْ لَّا یُؤْمِنُوْنَ ۟ۚ
اَمْஅல்லதுیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களாتَقَوَّلَهٗ ۚஇதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்بَلْமாறாகلَّاஇல்லைیُؤْمِنُوْنَۚஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்
அம் யகூலூன தகவ்வலஹ்; Bபல் லா யு'மினூன்
அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
فَلْیَاْتُوْا بِحَدِیْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟ؕ
فَلْیَاْتُوْاஅவர்கள் கொண்டு வரட்டும்بِحَدِیْثٍஒரு செய்தியைمِّثْلِهٖۤஅதைப் போன்றاِنْஎன்றால்كَانُوْاஅவர்கள் இருந்தால்صٰدِقِیْنَؕஉண்மையாளர்களாக
Fபல்யாதூ Bபிஹதீதிம் மித்லிஹீ இன் கானூ ஸாதிகீன்
ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
اَمْ خُلِقُوْا مِنْ غَیْرِ شَیْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ ۟ؕ
اَمْஅல்லதுخُلِقُوْاஅவர்கள் படைக்கப்பட்டார்களாمِنْஇருந்துغَیْرِஇன்றிشَیْءٍஎந்தப் பொருளும்اَمْஅல்லதுهُمُஅவர்களேالْخٰلِقُوْنَؕபடைப்பாளர்களா
அம் குலிகூ மின் கய்ரி ஷய்'இன் அம் ஹுமுல் காலிகூன்
அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
اَمْ خَلَقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ بَلْ لَّا یُوْقِنُوْنَ ۟ؕ
اَمْஅல்லதுخَلَقُواஅவர்கள் படைத்தார்களாالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَ ۚபூமியையும்بَلْமாறாகلَّاஇல்லைیُوْقِنُوْنَؕஅவர்கள் உறுதிகொள்கிறார்கள்
அம் கலகுஸ் ஸமாவாதி வல் அர்ள்; Bபல் லா யூகினூன்
அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۜیْطِرُوْنَ ۟ؕ
اَمْஅல்லதுعِنْدَهُمْஅவர்களிடம்خَزَآىِٕنُகருவூலங்கள்رَبِّكَஉமது இறைவனின்اَمْஅல்லதுهُمُஅவர்கள்الْمُصَۜیْطِرُوْنَؕஆதிக்கம் செலுத்துபவர்களா
அம்'இன்தஹும் கZஜா'இனு ரBப்Bபிக அம் ஹுமுல் முஸய்திரூன்
அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
اَمْ لَهُمْ سُلَّمٌ یَّسْتَمِعُوْنَ فِیْهِ ۚ فَلْیَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ؕ
اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குسُلَّمٌஓர் ஏணிیَّسْتَمِعُوْنَஅவர்கள் செவிமடுக்கிறார்களாفِیْهِ ۚஅதில்فَلْیَاْتِஎனவே கொண்டு வரட்டும்مُسْتَمِعُهُمْஅவர்களில் செவிமடுத்தவர்بِسُلْطٰنٍஓர் ஆதாரத்தைمُّبِیْنٍؕதெளிவான
அம் லஹும் ஸுல்லமு(ன்)ய் யஸ்தமி'ஊன Fபீஹி Fபல்யாதி முஸ்தமி'உஹும் Bபிஸுல்தானிம் முBபீன்
அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
اَمْ لَهُ الْبَنٰتُ وَلَكُمُ الْبَنُوْنَ ۟ؕ
اَمْஅல்லதுلَهُஅவனுக்குالْبَنٰتُபெண் மக்கள்وَ لَكُمُமேலும் உங்களுக்குالْبَنُوْنَؕஆண் மக்கள்
அம் லஹுல் Bபனாது வ லகுமுல் Bபனூன்
அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ؕ
اَمْஅல்லதுتَسْـَٔلُهُمْநீர் அவர்களிடம் கேட்கிறீராاَجْرًاகூலியைفَهُمْஅதனால் அவர்கள்مِّنْஇருந்துمَّغْرَمٍகடனால்مُّثْقَلُوْنَؕபாரம் சுமத்தப்பட்டவர்களா
அம் தஸ்'அலுஹும் அஜ்ரன் Fபஹும் மிம் மக்ரமிம் முத்கலூன்
அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟ؕ
اَمْஅல்லதுعِنْدَهُمُஅவர்களிடம்الْغَیْبُமறைவானவைفَهُمْஅதனால் அவர்கள்یَكْتُبُوْنَؕஎழுதி வைக்கிறார்கள்
அம் 'இன்தஹுமுல் கய்Bபு Fபஹும் யக்துBபூன்
அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
اَمْ یُرِیْدُوْنَ كَیْدًا ؕ فَالَّذِیْنَ كَفَرُوْا هُمُ الْمَكِیْدُوْنَ ۟ؕ
اَمْஅல்லதுیُرِیْدُوْنَஅவர்கள் நாடுகிறார்களாكَیْدًا ؕஒரு சூழ்ச்சியைفَالَّذِیْنَஆனால் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோهُمُஅவர்களேالْمَكِیْدُوْنَؕசூழ்ச்சிக்குள்ளானவர்கள்
அம் யுரீதூன கய்தன் Fபல்லதீன கFபரூ ஹுமுல் மகீதூன்
அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
اَمْ لَهُمْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குاِلٰهٌஇறைவன்غَیْرُதவிரاللّٰهِ ؕஅல்லாஹ்سُبْحٰنَதூயவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّاஎவற்றிலிருந்துیُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களோ
அம் லஹும் இலாஹுன் கய்ருல் லா; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
அல்லது, அவர்கள் அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
وَاِنْ یَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا یَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ ۟
وَ اِنْஇன்னும்یَّرَوْاஅவர்கள் கண்டால்كِسْفًاஒரு துண்டுمِّنَஇருந்துالسَّمَآءِவானம்سَاقِطًاவிழுவதைیَّقُوْلُوْاஅவர்கள் கூறுவார்கள்سَحَابٌமேகம்مَّرْكُوْمٌஅடுக்கப்பட்டது
வ இ(ன்)ய் யரவ் கிஸ்Fபம் மினஸ் ஸமா'இ ஸாகித(ன்)ய் யகூலூ ஸஹாBபும் மர்கூம்
வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
فَذَرْهُمْ حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ فِیْهِ یُصْعَقُوْنَ ۟ۙ
فَذَرْهُمْஎனவே அவர்களை விட்டுவிடுவீராகحَتّٰیவரைیُلٰقُوْاஅவர்கள் சந்திக்கும்یَوْمَهُمُஅவர்களுடைய நாளைالَّذِیْஎத்தகையதென்றால்فِیْهِஅதில்یُصْعَقُوْنَۙஅவர்கள் மூர்ச்சையாக்கப்படுவார்கள்
Fபதர்ஹும் ஹத்தா யுலாகூ யவ்மஹுமுல் லதீ Fபீஹி யுஸ்'அகூன்
ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
یَوْمَ لَا یُغْنِیْ عَنْهُمْ كَیْدُهُمْ شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ؕ
یَوْمَஅந்நாளில்لَاஇல்லைیُغْنِیْபயனளிக்கும்عَنْهُمْஅவர்களுக்குكَیْدُهُمْஅவர்களின் சூழ்ச்சிشَیْـًٔاசிறிதும்وَّ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یُنْصَرُوْنَؕஉதவி செய்யப்படுவார்கள்
யவ்ம லா யுக்னீ 'அன்ஹும் கய்துஹும் ஷய்'அ(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது; அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
وَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகلِلَّذِیْنَஅத்தகையோருக்குظَلَمُوْاஅநீதி இழைத்தார்களோعَذَابًاஒரு வேதனைدُوْنَமுன்னதாகذٰلِكَஅதற்குوَ لٰكِنَّஆனால்اَكْثَرَهُمْஅவர்களில் பெரும்பாலோர்لَاஅறியیَعْلَمُوْنَமாட்டார்கள்
வ இன்ன லில்லதீன ளலமூ 'அதாBபன் தூன தலிக வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْیُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ
وَ اصْبِرْமேலும் பொறுத்திருப்பீராகلِحُكْمِதீர்ப்புக்காகرَبِّكَஉமது இறைவனின்فَاِنَّكَஏனெனில் நிச்சயமாக நீர்بِاَعْیُنِنَاநம் கண்காணிப்பில்وَ سَبِّحْமேலும் துதிப்பீராகبِحَمْدِபுகழுடன்رَبِّكَஉமது இறைவனின்حِیْنَபொழுதுتَقُوْمُۙநீர் எழும்
வஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக Fப இன்னக Bபி-அஃயுனினா வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக ஹீன தகூம்
எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ ۟۠
وَ مِنَமேலும் இரவின் ஒரு பகுதியிலும்الَّیْلِஇரவின்فَسَبِّحْهُஅவனைத் துதிப்பீராகوَ اِدْبَارَமேலும் மறையும் போதும்النُّجُوْمِ۠நட்சத்திரங்கள்
வ மினல் லய்லி FபஸBப்Bபிஹ்ஹு வ இத்Bபாரன் னுஜூம்
இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!