57. ஸூரத்துல் ஹதீத் (இரும்பு)

மதனீ, வசனங்கள்: 29

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
سَبَّحَதுதிக்கின்றனلِلّٰهِஅல்லாஹ்வைمَاஎவையெல்லாம்فِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ۚமற்றும் பூமிوَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
ஸBப்Bபஹ லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன்.
لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ یُحْیٖ وَیُمِیْتُ ۚ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ۚமற்றும் பூமியின்یُحْیٖஅவன் உயிர்ப்பிக்கிறான்وَ یُمِیْتُ ۚமேலும் மரணிக்கச் செய்கிறான்وَ هُوَமேலும் அவன்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றல் உடையவன்
லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யுஹ்யீ வ யுமீது வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۚ وَهُوَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
هُوَஅவனேالْاَوَّلُமுதலானவன்وَ الْاٰخِرُஇறுதியானவனும்وَ الظَّاهِرُவெளிப்படையானவனும்وَ الْبَاطِنُ ۚமறைவானவனும்وَ هُوَமேலும் அவன்بِكُلِّஒவ்வொருشَیْءٍபொருளையும்عَلِیْمٌநன்கறிந்தவன்
ஹுவல் அவ்வலு வல்'ஆகிரு வள் ளாஹிரு வல் Bபாதினு வ ஹுவ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.
هُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ یَعْلَمُ مَا یَلِجُ فِی الْاَرْضِ وَمَا یَخْرُجُ مِنْهَا وَمَا یَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا یَعْرُجُ فِیْهَا ؕ وَهُوَ مَعَكُمْ اَیْنَ مَا كُنْتُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைفِیْஇல்سِتَّةِஆறுاَیَّامٍநாட்களில்ثُمَّபின்னர்اسْتَوٰیநிலைபெற்றான்عَلَیமீதுالْعَرْشِ ؕஅர்ஷின்یَعْلَمُஅவன் அறிகிறான்مَاஎவைیَلِجُநுழைகின்றனவோفِیஇல்الْاَرْضِபூமிوَ مَاமேலும் எவைیَخْرُجُவெளிப்படுகின்றனவோمِنْهَاஅதிலிருந்துوَ مَاமேலும் எவைیَنْزِلُஇறங்குகின்றனவோمِنَஇருந்துالسَّمَآءِவானத்தில்وَ مَاமேலும் எவைیَعْرُجُஏறுகின்றனவோفِیْهَا ؕஅதில்وَ هُوَமேலும் அவன்مَعَكُمْஉங்களுடன்اَیْنَஎங்குمَاஇருந்தாலும்كُنْتُمْ ؕநீங்கள் இருக்கிறீர்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோبَصِیْرٌஉற்று நோக்குபவன்
ஹுவல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷ்; யஃலமு மா யலிஜு Fபிலர்ளி வமா யக்ருஜு மின்ஹா வமா யன்Zஜிலு மினஸ் ஸமா'இ வமா யஃருஜு Fபீஹா வ ஹுவ ம'அகும் அய்ன மா குன்தும்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟
لَهٗஅவனுக்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்وَ اِلَیமேலும் (அவன்) பால்اللّٰهِஅல்லாஹ்تُرْجَعُமீட்கப்படும்الْاُمُوْرُகாரியங்கள்
லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.
یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؕ وَهُوَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
یُوْلِجُஅவன் புகுத்துகிறான்الَّیْلَஇரவைفِیஇல்النَّهَارِபகல்وَ یُوْلِجُமேலும் அவன் புகுத்துகிறான்النَّهَارَபகலைفِیஇல்الَّیْلِ ؕஇரவுوَ هُوَமேலும் அவன்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளிருப்பவற்றைالصُّدُوْرِநெஞ்சங்களின்
யூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ யூலிஜுன் னஹார Fபில் லய்ல்; வ ஹுவ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான்; இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.
اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاَنْفِقُوْا مِمَّا جَعَلَكُمْ مُّسْتَخْلَفِیْنَ فِیْهِ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَاَنْفَقُوْا لَهُمْ اَجْرٌ كَبِیْرٌ ۟
اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رَسُوْلِهٖமேலும் அவனுடைய தூதர் மீதும்وَ اَنْفِقُوْاமேலும் செலவு செய்யுங்கள்مِمَّاஎவற்றிலிருந்துجَعَلَكُمْஅவன் உங்களை ஆக்கினானோمُّسْتَخْلَفِیْنَபிரதிநிதிகளாகفِیْهِ ؕஅதில்فَالَّذِیْنَஎனவே எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمِنْكُمْஉங்களில்وَ اَنْفَقُوْاமேலும் செலவு செய்தார்களோلَهُمْஅவர்களுக்குاَجْرٌநற்கூலிكَبِیْرٌமிகப்பெரியது
ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ அன்Fபிகூ மிம்மா ஜ'அலகும் முஸ்தக் லFபீன Fபீஹி Fபல்லதீன ஆமனூ மின்கும் வ அன்Fபகூ லஹும் அஜ்ருன் கBபீர்
நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.
وَمَا لَكُمْ لَا تُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۚ وَالرَّسُوْلُ یَدْعُوْكُمْ لِتُؤْمِنُوْا بِرَبِّكُمْ وَقَدْ اَخَذَ مِیْثَاقَكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
وَ مَاமேலும் என்னلَكُمْஉங்களுக்குلَاஇல்லைتُؤْمِنُوْنَநீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள்بِاللّٰهِ ۚஅல்லாஹ்வின் மீதுوَ الرَّسُوْلُஇன்னும் தூதர்یَدْعُوْكُمْஉங்களை அழைக்கிறார்لِتُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்வதற்காகبِرَبِّكُمْஉங்கள் இறைவன் மீதுوَ قَدْமேலும் நிச்சயமாகاَخَذَஅவன் எடுத்துக்கொண்டான்مِیْثَاقَكُمْஉங்களுடைய உடன்படிக்கையைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
வமா லகும் லா து'மினூன Bபில்லாஹி வர் ரஸூலு யத்'ஊகும் லி து'மினூ Bபி ரBப்Bபிகும் வ கத் அகத மீதாககும் இன் குன்தும் மு'மினீன்
உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).
هُوَ الَّذِیْ یُنَزِّلُ عَلٰی عَبْدِهٖۤ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ لِّیُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ وَاِنَّ اللّٰهَ بِكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟
هُوَஅவன்الَّذِیْஎத்தகையவன் என்றால்یُنَزِّلُஇறக்கியருளுகிறான்عَلٰیமீதுعَبْدِهٖۤதனது அடியார்اٰیٰتٍۭவசனங்களைبَیِّنٰتٍதெளிவானلِّیُخْرِجَكُمْஉங்களை வெளியேற்றுவதற்காகمِّنَஇருந்துالظُّلُمٰتِஇருள்களில்اِلَیநோக்கிالنُّوْرِ ؕஒளியைوَ اِنَّமேலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُمْஉங்கள் மீதுلَرَءُوْفٌமிக்க பரிவுள்ளவன்رَّحِیْمٌநிகரற்ற அன்புடையவன்
ஹுவல் லதீ யுனZஜ்Zஜிலு 'அலா 'அBப்திஹீ ஆயாதிம் Bபய்யினாதில் லியுக்ரிஜகும் மினள் ளுலுமாதி இலன் னூர்; வ இன்னல் லாஹ Bபிகும் ல ர'ஊFபுர் ரஹீம்
அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன்.
وَمَا لَكُمْ اَلَّا تُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ لَا یَسْتَوِیْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقٰتَلَ ؕ اُولٰٓىِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِیْنَ اَنْفَقُوْا مِنْ بَعْدُ وَقٰتَلُوْاؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠
وَ مَاமேலும் என்னلَكُمْஉங்களுக்குاَلَّاதடைتُنْفِقُوْاநீங்கள் செலவு செய்யفِیْஇல்سَبِیْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ لِلّٰهِமேலும் அல்லாஹ்வுக்கேمِیْرَاثُவாரிசுரிமைالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்لَاஇல்லைیَسْتَوِیْசமமாக மாட்டார்கள்مِنْكُمْஉங்களில்مَّنْஎவர்اَنْفَقَசெலவு செய்தாரோمِنْஇருந்துقَبْلِமுன்புالْفَتْحِவெற்றிக்குوَ قٰتَلَ ؕமேலும் போர் செய்தாரோاُولٰٓىِٕكَஅவர்கள்اَعْظَمُமகத்தானவர்கள்دَرَجَةًஅந்தஸ்தால்مِّنَவிடالَّذِیْنَஎவர்கள்اَنْفَقُوْاசெலவு செய்தார்களோمِنْۢஇருந்துبَعْدُபிறகுوَ قٰتَلُوْاؕமேலும் போர் செய்தார்களோوَ كُلًّاமேலும் அனைவருக்கும்وَّعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْحُسْنٰی ؕநன்மையைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோخَبِیْرٌ۠நன்கறிந்தவன்
வமா லகும் அல்லா துன்Fபிகூ Fபீ ஸBபீலில் லாஹி வ லில்லாஹி மீராதுஸ் ஸமாவாதி வல்-அர்ள்; லா யஸ்தவீ மின்கும் மன் அன்Fபக மின் கBப்லில் Fபத்-ஹி வ காதல்; உலா'இக அஃளமு தரஜதம் மினல் லதீன அன்Fபகூ மின் Bபஃது வ காதலூ; வ குல்ல(ன்)வ் வ'அத் அல்லாஹுல் ஹுஸ்னா; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.  
مَنْ ذَا الَّذِیْ یُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِیْمٌ ۟ۚ
مَنْயார்ذَاஅவர்الَّذِیْஎவர்یُقْرِضُகடன் கொடுப்பாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குقَرْضًاஒரு கடனைحَسَنًاஅழகியفَیُضٰعِفَهٗஆகவே அதனை அவன் பன்மடங்காக்குவான்لَهٗஅவருக்குوَ لَهٗۤமேலும் அவருக்குاَجْرٌநற்கூலிكَرِیْمٌۚகண்ணியமான
மன் தல் லதீ யுக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனன் Fப யுளா'இFபஹூ லஹூ வ லஹூ அஜ்ருன் கரீம்
அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.
یَوْمَ تَرَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ یَسْعٰی نُوْرُهُمْ بَیْنَ اَیْدِیْهِمْ وَبِاَیْمَانِهِمْ بُشْرٰىكُمُ الْیَوْمَ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ۚ
یَوْمَஅந்நாளில்تَرَیநீர் காண்பீர்الْمُؤْمِنِیْنَமுஃமினான ஆண்களைوَ الْمُؤْمِنٰتِமற்றும் முஃமினான பெண்களைیَسْعٰیவிரைந்து செல்வதைنُوْرُهُمْஅவர்களின் ஒளிبَیْنَமுன்னால்اَیْدِیْهِمْஅவர்களுக்குوَ بِاَیْمَانِهِمْமற்றும் அவர்களின் வலதுபுறங்களிலும்بُشْرٰىكُمُஉங்களுக்கான நற்செய்திالْیَوْمَஇன்றைய தினம்جَنّٰتٌசுவனச்சோலைகள்تَجْرِیْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழேالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِیْنَநிரந்தரமாகத் தங்குபவர்களாகفِیْهَا ؕஅவற்றில்ذٰلِكَஅதுதான்هُوَஅதுالْفَوْزُவெற்றிالْعَظِیْمُۚமகத்தான
யவ்ம தரல் மு'மினீன வல்மு'மினாதி யஸ்'ஆ னூருஹும் Bபய்ன அய்தீஹிம் வ Bபி அய்மானிஹிம் Bபுஷ்ராகுமுல் யவ்ம ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).
یَوْمَ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِیْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْ ۚ قِیْلَ ارْجِعُوْا وَرَآءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًا ؕ فَضُرِبَ بَیْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌ ؕ بَاطِنُهٗ فِیْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُ ۟ؕ
یَوْمَஅந்நாளில்یَقُوْلُகூறுவார்கள்الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்களான ஆண்கள்وَ الْمُنٰفِقٰتُமற்றும் நயவஞ்சகப் பெண்கள்لِلَّذِیْنَஅத்தகையோரிடம்اٰمَنُواஈமான் கொண்டார்களேانْظُرُوْنَاஎங்களுக்காகக் காத்திருங்கள்نَقْتَبِسْநாம் பெற்றுக்கொள்வோம்مِنْஇருந்துنُّوْرِكُمْ ۚஉங்கள் ஒளியைقِیْلَசொல்லப்படும்ارْجِعُوْاநீங்கள் திரும்பிச் செல்லுங்கள்وَرَآءَكُمْஉங்கள் பின்னால்فَالْتَمِسُوْاதேடிக்கொள்ளுங்கள்نُوْرًا ؕஒளியைفَضُرِبَஅப்போது எழுப்பப்படும்بَیْنَهُمْஅவர்களுக்கு இடையில்بِسُوْرٍஒரு மதில்لَّهٗஅதற்குبَابٌ ؕஒரு வாசல்بَاطِنُهٗஅதன் உட்புறம்فِیْهِஅதில்الرَّحْمَةُஅருள்وَ ظَاهِرُهٗஅதன் வெளிப்புறமோمِنْஇருந்துقِبَلِهِஅதன் பக்கம்الْعَذَابُؕவேதனை
யவ்ம யகூலுல் முனாFபிகூன வல்முனாFபிகாது லில் லதீன ஆமனு உன்ளுரூனா னக்தBபிஸ் மின் னூரிகும் கீலர்ஜி'ஊ வரா'அகும் Fபல்தமிஸூ னூரன் FபளுரிBப Bபய்னஹும் Bபிஸூரில் லஹூ BபாBபுன், Bபாதினுஹூ Fபீஹிர் ரஹ்மது வ ளாஹிருஹூ மின் கிBபலிஹி-'அதாBப்
முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.
یُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ؕ قَالُوْا بَلٰی وَلٰكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِیُّ حَتّٰی جَآءَ اَمْرُ اللّٰهِ وَغَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟
یُنَادُوْنَهُمْஅவர்கள் இவர்களை அழைப்பார்கள்اَلَمْஇல்லையாنَكُنْநாங்கள் இருந்தோம்مَّعَكُمْ ؕஉங்களுடன்قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰیஆம்وَ لٰكِنَّكُمْஆனால் நீங்கள்فَتَنْتُمْசோதனையில் ஆழ்த்திக் கொண்டீர்கள்اَنْفُسَكُمْஉங்களையேوَ تَرَبَّصْتُمْமேலும் நீங்கள் காத்திருந்தீர்கள்وَ ارْتَبْتُمْமேலும் நீங்கள் சந்தேகப்பட்டீர்கள்وَ غَرَّتْكُمُமேலும் உங்களை ஏமாற்றியதுالْاَمَانِیُّவீணான ஆசைகள்حَتّٰیவரைجَآءَவந்ததுاَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்وَ غَرَّكُمْமேலும் உங்களை ஏமாற்றினான்بِاللّٰهِஅல்லாஹ்வைப் பற்றிالْغَرُوْرُபெரும் ஏமாற்றுக்காரன்
யுனாதூனஹும் அலம் னகும் ம'அகும் காலூ Bபலா வ லாகின்னகும் Fபதன்தும் அன்Fபுஸகும் வ தரBப்Bபஸ்தும் வர்தBப்தும் வ கர்ரத்குமுல் அமானிய்யு ஹத்தா ஜா'அ அம்ருல் லாஹி வ கர்ரகும் Bபில்லாஹில் கரூர்
இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள்; “மெய்தான்; எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள்; (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்” என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.
فَالْیَوْمَ لَا یُؤْخَذُ مِنْكُمْ فِدْیَةٌ وَّلَا مِنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ مَاْوٰىكُمُ النَّارُ ؕ هِیَ مَوْلٰىكُمْ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
فَالْیَوْمَஎனவே இன்றுلَاஇல்லைیُؤْخَذُபெற்றுக்கொள்ளப்படும்مِنْكُمْஉங்களிடமிருந்துفِدْیَةٌஈட்டுத்தொகைوَّ لَاமேலும் இல்லைمِنَஇடமிருந்துالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْا ؕநிராகரித்தார்களோمَاْوٰىكُمُஉங்கள் தங்குமிடம்النَّارُ ؕநரகம்هِیَஅதுவேمَوْلٰىكُمْ ؕஉங்களுக்குத் தகுதியானதுوَ بِئْسَமேலும் மிகக் கெட்டதுالْمَصِیْرُசேருமிடம்
Fபல் யவ்ம லா யு'கது மின்கும் Fபித்யது(ன்)வ் வலா மினல் லதீன கFபரூ; ம'வாகுமுன் னாரு ஹிய மவ் லாகும் வ Bபி'ஸல் மஸீர்
“ஆகவே, இன்று உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது; உங்களுடைய தங்குமிடம் நரகம் தான்; அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்” (என்றுங் கூறப்படும்).
اَلَمْ یَاْنِ لِلَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ ۙ وَلَا یَكُوْنُوْا كَالَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَیْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ ؕ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
اَلَمْவரவில்லையாیَاْنِநேரம்لِلَّذِیْنَஎவர்களுக்கு என்றால்اٰمَنُوْۤاஈமான் கொண்டார்களோاَنْஎன்றுتَخْشَعَபயபக்தியுடன் பணிய வேண்டும்قُلُوْبُهُمْஅவர்களுடைய உள்ளங்கள்لِذِكْرِநினைவுகூர்வதற்காகاللّٰهِஅல்லாஹ்வைوَ مَاமேலும் எதுنَزَلَஇறங்கியதோمِنَஇருந்துالْحَقِّ ۙசத்தியம்وَ لَاமேலும் கூடாதுیَكُوْنُوْاஅவர்கள் ஆகிவிடكَالَّذِیْنَஎவர்களைப் போல என்றால்اُوْتُواகொடுக்கப்பட்டார்களோالْكِتٰبَவேதம்مِنْஇருந்துقَبْلُஇதற்கு முன்فَطَالَபின்னர் நீண்டதாகிவிட்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالْاَمَدُகாலம்فَقَسَتْஅதனால் கடினமாகிவிட்டனقُلُوْبُهُمْ ؕஅவர்களுடைய உள்ளங்கள்وَ كَثِیْرٌமேலும் அநேகர்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَவரம்பு மீறியவர்கள்
அலம் ய'னி லில் லதீன ஆமனூ அன் தக்-ஷ'அ குலூBபுஹும் லிதிக்ரில் லாஹி வமா னZஜல மினல் ஹக்கி வலா யகூனூ கல்லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லு Fபதால 'அலய்ஹிமுல் அமது Fபகஸத் குலூBபுஹும் வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.
اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟
اِعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحْیِஉயிர்ப்பிக்கிறான்الْاَرْضَபூமியைبَعْدَபிறகுمَوْتِهَا ؕஅதன் இறப்பிற்குقَدْதிட்டமாகبَیَّنَّاநாம் தெளிவுபடுத்தியுள்ளோம்لَكُمُஉங்களுக்குالْاٰیٰتِஅத்தாட்சிகளைلَعَلَّكُمْநீங்கள்تَعْقِلُوْنَவிளங்கிக் கொள்வதற்காக
இஃலமூ அன்னல் லாஹ யுஹ்யில் அர்ள Bபஃத மவ்திஹா; கத் Bபய்யன்னா லகுமுல் ஆயாதி ல'அல்லகும் தஃகிலூன்
அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்.
اِنَّ الْمُصَّدِّقِیْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالْمُصَّدِّقِیْنَதர்மம் செய்யும் ஆண்களும்وَ الْمُصَّدِّقٰتِமேலும் தர்மம் செய்யும் பெண்களும்وَ اَقْرَضُواமேலும் கடன் கொடுத்தார்களேاللّٰهَஅல்லாஹ்வுக்குقَرْضًاகடனாகحَسَنًاஅழகியیُّضٰعَفُபன்மடங்காக்கப்படும்لَهُمْஅவர்களுக்குوَ لَهُمْமேலும் அவர்களுக்குاَجْرٌநற்கூலிكَرِیْمٌகண்ணியமான
இன்னல் முஸ்ஸத்திகீன வல் முஸ்ஸத்திகாதி வ அக்ரளுல் லாஹ கர்ளன் ஹஸ்ஸன(ன்)ய் யுளா'அFபு லஹும் வ லஹும் அஜ்ருன் கரீம்
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۤ اُولٰٓىِٕكَ هُمُ الصِّدِّیْقُوْنَ ۖۗ وَالشُّهَدَآءُ عِنْدَ رَبِّهِمْ ؕ لَهُمْ اَجْرُهُمْ وَنُوْرُهُمْ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟۠
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رُسُلِهٖۤஅவனுடைய தூதர்கள் மீதும்اُولٰٓىِٕكَஅவர்கள்தாம்هُمُஅவர்கள்الصِّدِّیْقُوْنَ ۖۗஉண்மையாளர்கள்وَ الشُّهَدَآءُமேலும் சாட்சியாளர்கள்عِنْدَஇடத்தில்رَبِّهِمْ ؕதங்கள் இறைவனின்لَهُمْஅவர்களுக்குاَجْرُهُمْஅவர்களின் கூலிوَ نُوْرُهُمْ ؕமேலும் அவர்களின் ஒளிوَ الَّذِیْنَமேலும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோوَ كَذَّبُوْاமேலும் பொய்ப்பித்தார்களோبِاٰیٰتِنَاۤநம்முடைய வசனங்களைاُولٰٓىِٕكَஅவர்கள்اَصْحٰبُவாசிகள்الْجَحِیْمِ۠நரகத்தின்
வல்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ உலா'இக ஹுமுஸ் ஸித்தீகூன்; வஷ் ஷுஹதா'உ 'இன்த ரBப்Bபிஹிம் லஹும் அஜ்ருஹும் வ னூருஹும்; வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ் ஹாBபுல் ஜஹீம்
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள்; அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) பேரொளியும் உண்டு; எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.  
اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِیْنَةٌ وَّتَفَاخُرٌ بَیْنَكُمْ وَتَكَاثُرٌ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ ؕ كَمَثَلِ غَیْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَكُوْنُ حُطَامًا ؕ وَفِی الْاٰخِرَةِ عَذَابٌ شَدِیْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟
اِعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاநிச்சயமாகالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاஇவ்வுலகلَعِبٌவிளையாட்டுوَّ لَهْوٌமற்றும் வீணான வேடிக்கைوَّ زِیْنَةٌமற்றும் அலங்காரம்وَّ تَفَاخُرٌۢமற்றும் பெருமையடித்துக் கொள்ளுதல்بَیْنَكُمْஉங்களுக்கிடையேوَ تَكَاثُرٌமற்றும் பெருக்கிக் கொள்வதில் போட்டிفِیஇல்الْاَمْوَالِசெல்வங்கள்وَ الْاَوْلَادِ ؕமற்றும் குழந்தைகள்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதுغَیْثٍமழையின்اَعْجَبَமகிழ்விக்கிறதுالْكُفَّارَவிவசாயிகளைنَبَاتُهٗஅதன் பயிர்கள்ثُمَّபின்னர்یَهِیْجُஅது உலர்ந்து விடுகிறதுفَتَرٰىهُபிறகு அதனை நீர் காண்கிறீர்مُصْفَرًّاமஞ்சள் நிறமாகثُمَّபின்னர்یَكُوْنُஅது ஆகிவிடுகிறதுحُطَامًا ؕசருகாகوَ فِیமேலும் இல்الْاٰخِرَةِமறுமைعَذَابٌவேதனைشَدِیْدٌ ۙகடுமையானوَّ مَغْفِرَةٌமற்றும் மன்னிப்புمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்وَ رِضْوَانٌ ؕமற்றும் திருப்திوَ مَاமேலும் இல்லைالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَاۤஇவ்வுலகاِلَّاதவிரمَتَاعُஅற்ப இன்பம்الْغُرُوْرِஏமாற்றத்தின்
இஃலமூ அன்னமல் ஹயா துத் துன்யா ல'இBபு(ன்)வ் வ லஹ்வு(ன்)வ் வ Zஜீனது(ன்)வ் வ தFபாகுரும் Bபய்னகும் வ தகாதுருன் Fபில் அம்வாலி வல் அவ்லாத், கமதலி கய்தின் அஃஜBபல் குFப்Fபார னBபாதுஹூ தும்ம யஹீஜு Fபதராஹு முஸ்Fபாரன் தும்ம யகூனு ஹுதாமா; வ Fபில் ஆகிரதி 'அதாBபுன் ஷதீது(ன்)வ் வ மக் Fபிரதும் மினல் லாஹி வ ரிள்வான்; வ மல் ஹய்யா துத்துன் யா இல்லா மதா'உல் குரூர்
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
سَابِقُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَالْاَرْضِ ۙ اُعِدَّتْ لِلَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ؕ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
سَابِقُوْۤاமுந்துங்கள்اِلٰیநோக்கிمَغْفِرَةٍமன்னிப்பைمِّنْஇடமிருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவனின்وَ جَنَّةٍமேலும் ஒரு சுவனத்தைعَرْضُهَاஅதன் அகலம்كَعَرْضِஅகலத்தைப் போன்றதுالسَّمَآءِவானத்தின்وَ الْاَرْضِ ۙமற்றும் பூமியின்اُعِدَّتْதயார் செய்யப்பட்டுள்ளதுلِلَّذِیْنَஎவர்களுக்காகவெனில்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுوَ رُسُلِهٖ ؕமேலும் அவனது தூதர்கள் மீதும்ذٰلِكَஅதுفَضْلُஅருளாகும்اللّٰهِஅல்லாஹ்வின்یُؤْتِیْهِஅதனை அவன் வழங்குகிறான்مَنْஎவருக்குیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்ذُوஉடையவன்الْفَضْلِஅருளைالْعَظِیْمِமகத்தான
ஸாBபிகூ இலா மக்Fபிரதிம் மிர் ரBப்Bபிகும் வ ஜன்னதின் 'அர்ளுஹா க-'அர்ளிஸ் ஸமா'இ வல் அர்ளி உ'இத்தத் லில்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹ்; தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி ம(ன்)ய் யஷா'; வல் லாஹு துல் Fபள்லில் 'அளீம்
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ فِی الْاَرْضِ وَلَا فِیْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِیْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْرَاَهَا ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟ۚۖ
مَاۤஇல்லைاَصَابَஏற்படுவதுمِنْஎந்தவொருمُّصِیْبَةٍதுன்பமும்فِیஇல்الْاَرْضِபூமிوَ لَاமேலும் இல்லைفِیْۤஇல்اَنْفُسِكُمْஉங்கள் உயிர்கள்اِلَّاதவிரفِیْஇல்كِتٰبٍஒரு பதிவேடுمِّنْஇருந்துقَبْلِமுன்னதாகவேاَنْஎன்றுنَّبْرَاَهَا ؕநாம் அதனை உருவாக்குவதற்குاِنَّநிச்சயமாகذٰلِكَஅதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்یَسِیْرٌۚۖஎளிதானது
மா அஸாBப மின் முஸீBபதின் Fபில் அர்ளி வலா Fபீ அன்Fபுஸிகும் இல்லா Fபீ கிதாBபிம் மின் கBப்லி அன் னBப்ர அஹா; இன்னா தாலிக 'அலல் லாஹி யஸீர்
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
لِّكَیْلَا تَاْسَوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰىكُمْ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِ ۟ۙ
لِّكَیْلَاநீங்கள் கூடாது என்பதற்காகتَاْسَوْاகவலைப்படعَلٰیமீதுمَاஎதன்فَاتَكُمْஉங்களை விட்டுத் தவறிப்போனதோوَ لَاமேலும் நீங்கள் கூடாதுتَفْرَحُوْاபூரிக்கبِمَاۤஎதைக் கொண்டுاٰتٰىكُمْ ؕஅவன் உங்களுக்குக் கொடுத்தானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்لَاஇல்லைیُحِبُّவிரும்புகிறான்كُلَّஒவ்வொருمُخْتَالٍபெருமையடிப்பவரைفَخُوْرِۙதற்பெருமை பேசுபவரை
லிகய்லா த'ஸவ் 'அலா மா Fபாதகும் வலா தFப்ரஹூ Bபிமா ஆதாகும்; வல்லாஹு லா யுஹிBப்Bபு குல்ல முக்தாலின் Fபகூர்
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ ؕ وَمَنْ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟
ِ۟الَّذِیْنَஎவர்கள்یَبْخَلُوْنَகஞ்சத்தனம் செய்கிறார்களோوَ یَاْمُرُوْنَமேலும் ஏவுகிறார்களோالنَّاسَமனிதர்களைبِالْبُخْلِ ؕகஞ்சத்தனத்தைக் கொண்டுوَ مَنْமேலும் எவர்یَّتَوَلَّபுறக்கணிக்கிறாரோفَاِنَّஆகவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்الْغَنِیُّதேவையற்றவன்الْحَمِیْدُபுகழுக்குரியவன்
அல்லதீன யBப்கலூன வ யாமுரூனன் னாஸ Bபில் Bபுக்ல்; வ ம(ன்)ய் யதவல்ல Fப இன்னல் லாஹ ஹுவல் கனிய்யுல் ஹமீத்
எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ; எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ - (இவர்களே நஷ்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்.
لَقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَیِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِیْزَانَ لِیَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ ۚ وَاَنْزَلْنَا الْحَدِیْدَ فِیْهِ بَاْسٌ شَدِیْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ وَرُسُلَهٗ بِالْغَیْبِ ؕ اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟۠
لَقَدْநிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்رُسُلَنَاநம்முடைய தூதர்களைبِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்وَ اَنْزَلْنَاமேலும் நாம் இறக்கினோம்مَعَهُمُஅவர்களுடன்الْكِتٰبَவேதத்தைوَ الْمِیْزَانَமேலும் தராசைلِیَقُوْمَநிலைநிறுத்துவதற்காகالنَّاسُமனிதர்கள்بِالْقِسْطِ ۚநீதியுடன்وَ اَنْزَلْنَاமேலும் நாம் இறக்கினோம்الْحَدِیْدَஇரும்பைفِیْهِஅதில்بَاْسٌஆற்றல்شَدِیْدٌகடுமையானوَّ مَنَافِعُமேலும் பயன்கள்لِلنَّاسِமனிதர்களுக்குوَ لِیَعْلَمَமேலும் அறிந்துகொள்வதற்காகاللّٰهُஅல்லாஹ்مَنْயார்یَّنْصُرُهٗஅவனுக்கு உதவுகிறார்களோوَ رُسُلَهٗமேலும் அவனுடைய தூதர்களுக்குبِالْغَیْبِ ؕமறைவாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَوِیٌّவல்லமையுள்ளவன்عَزِیْزٌ۠மிகைத்தவன்
லகத் அர்ஸல்னா ருஸுலனா Bபில்Bபய்யினாதி வ அன்Zஜல்னா ம'அஹுமுல் கிதாBப வல் மீZஜான லியகூமன் னாஸு Bபில்கிஸ்த், வ அன்Zஜல்னல் ஹதீத Fபீஹி Bபா'ஸுன் ஷதீது(ன்)வ் வ மனாFபி'உ லின்னாஸி வ லியஃலமல் லாஹு ம(ன்)ய் யன்ஸுருஹூ வ ருஸுலஹூ Bபில்கய்Bப்; இன்னல் லாஹ கவிய்யுன் 'அZஜீZஜ்
நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.  
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّاِبْرٰهِیْمَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
وَ لَقَدْமேலும் நிச்சயமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்نُوْحًاநூஹைوَّ اِبْرٰهِیْمَமேலும் இப்ராஹீமையும்وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்فِیْஇல்ذُرِّیَّتِهِمَاஅவ்விருவரின் சந்ததியினர்النُّبُوَّةَநபித்துவத்தைوَ الْكِتٰبَமேலும் வேதத்தையும்فَمِنْهُمْஆகவே அவர்களில்مُّهْتَدٍ ۚநேர்வழி பெற்றவர்கள்وَ كَثِیْرٌமேலும் அதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَவரம்பு மீறியவர்கள்
வ லகத் அர்ஸல்னா னூஹ(ன்)வ் வ இBப்ராஹீம வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹிமன் னுBபுவ்வத வல் கிதாBப Fபமின்ஹும் முஹ்தத்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.
ثُمَّ قَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّیْنَا بِعِیْسَی ابْنِ مَرْیَمَ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ ۙ۬ وَجَعَلْنَا فِیْ قُلُوْبِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً ؕ وَرَهْبَانِیَّةَ بْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَیْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَایَتِهَا ۚ فَاٰتَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ ۚ وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
ثُمَّபிறகுقَفَّیْنَاநாம் தொடரச் செய்தோம்عَلٰۤیமீதுاٰثَارِهِمْஅவர்களின் அடிச்சுவடுகளின்بِرُسُلِنَاநம்முடைய தூதர்களைوَ قَفَّیْنَاமேலும் நாம் தொடரச் செய்தோம்بِعِیْسَیஈஸாவைابْنِமகன்مَرْیَمَமர்யமுடையوَ اٰتَیْنٰهُமேலும் அவருக்கு நாம் வழங்கினோம்الْاِنْجِیْلَ ۙ۬இன்ஜீலைوَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்فِیْஇல்قُلُوْبِஇதயங்களில்الَّذِیْنَஎவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்களோرَاْفَةًஇரக்கத்தைوَّ رَحْمَةً ؕமேலும் கிருபையைوَ رَهْبَانِیَّةَமேலும் துறவறத்தைِ۟ابْتَدَعُوْهَاஅதனை அவர்களே புதிதாக உருவாக்கிக் கொண்டார்கள்مَاஇல்லைكَتَبْنٰهَاஅதனை நாம் கடமையாக்கினோம்عَلَیْهِمْஅவர்கள் மீதுاِلَّاதவிரابْتِغَآءَநாடிرِضْوَانِபொருத்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்فَمَاஆனால் இல்லைرَعَوْهَاஅதனை அவர்கள் பேணினார்கள்حَقَّமுறைப்படிرِعَایَتِهَا ۚஅதனைப் பேண வேண்டியفَاٰتَیْنَاஎனவே நாம் வழங்கினோம்الَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோمِنْهُمْஅவர்களில்اَجْرَهُمْ ۚஅவர்களின் கூலியைوَ كَثِیْرٌமேலும் அதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَபாவிகளாக இருக்கின்றனர்
தும்ம கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி ருஸுலினா வ கFப்Fபய்னா Bபி 'ஈஸBப் னி மர்யம வ ஆதய்னாஹுல் இன்ஜீல வ ஜ'அல்னா Fபீ குலூBபில் லதீனத் தBப'ஊஹு ர'Fபத(ன்)வ் வ ரஹ்மத(ன்)வ் ரஹ்Bபானிய்யதன் இBப்தத'ஊஹ மா கதBப்னாஹா 'அலய்ஹிம் இல்லBப் திகா'அ ரிள்வானில் லாஹி Fபமா ர'அவ்ஹா ஹக்க ரி'ஆயதிஹா; Fப ஆதய்னல் லதீன ஆமனூ மின்ஹும் அஜ்ரஹும்; வ கதீரும் மின்ஹும் Fபாஸிகூன்
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ یُؤْتِكُمْ كِفْلَیْنِ مِنْ رَّحْمَتِهٖ وَیَجْعَلْ لَّكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ۚۙ
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்களோاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اٰمِنُوْاமேலும் நம்பிக்கை கொள்ளுங்கள்بِرَسُوْلِهٖஅவனுடைய தூதர் மீதுیُؤْتِكُمْஅவன் உங்களுக்கு வழங்குவான்كِفْلَیْنِஇரு பங்குகளைمِنْஇருந்துرَّحْمَتِهٖஅவனது அருளில்وَ یَجْعَلْமேலும் அவன் ஆக்குவான்لَّكُمْஉங்களுக்குنُوْرًاஓர் ஒளியைتَمْشُوْنَநீங்கள் நடப்பீர்கள்بِهٖஅதைக் கொண்டுوَ یَغْفِرْமேலும் அவன் மன்னிப்பான்لَكُمْ ؕஉங்களுக்குوَ اللّٰهُமேலும் அல்லாஹ்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்رَّحِیْمٌۚۙமிக்க கிருபையுடையவன்
யா அய்யுஹல் லதீன ஆமானுத் தகுல்லாஹ வ ஆமினூ Bபி ரஸூலிஹீ யு'திகும் கிFப்லய்னி மிர் ரஹ்மதிஹீ வ யஜ்'அல் லகும் னூரன் தம்ஷூன Bபிஹீ வ யக்Fபிர் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்.
لِّئَلَّا یَعْلَمَ اَهْلُ الْكِتٰبِ اَلَّا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّنْ فَضْلِ اللّٰهِ وَاَنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟۠
لِّئَلَّاஎன்பதைیَعْلَمَஅறிந்து கொள்வதற்காகاَهْلُமக்கள்الْكِتٰبِவேதاَلَّاஎன்றுیَقْدِرُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்عَلٰیமீதுشَیْءٍஎந்த ஒன்றின்مِّنْஇருந்தும்فَضْلِஅருளில்اللّٰهِஅல்லாஹ்வின்وَ اَنَّமேலும் நிச்சயமாகالْفَضْلَஅருள்بِیَدِகையில்اللّٰهِஅல்லாஹ்வின்یُؤْتِیْهِஅதை அவன் வழங்குகிறான்مَنْஎவருக்குیَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்ذُوஉடையவன்الْفَضْلِஅருளைالْعَظِیْمِ۠மகத்தான
லி'அல்ல யஃலம அஹ்லுல் கிதாBபி அல்லா யக்திரூன 'அலா ஷய்'இன் மின் Fபள்லில் லாஹி வ அன்னல் Fபள்ல Bபி யதில் லாஹி யு'தீஹி ம(ன்)ய் யஷா'; வல்லாஹு துல் Fபளிலில் 'அளீம்
அல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்); அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது; தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.