59. ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)

மதனீ, வசனங்கள்: 24

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
سَبَّحَ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
سَبَّحَதுதிக்கிறதுلِلّٰهِஅல்லாஹ்வைمَاஎவையெல்லாம்فِیஉள்ளதோالسَّمٰوٰتِவானங்களில்وَ مَاமேலும் எவையெல்லாம்فِیஉள்ளதோالْاَرْضِ ۚபூமியில்وَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
ஸBப்Bபஹ லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு செய்கின்றன (துதிக்கின்றன); அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
هُوَ الَّذِیْۤ اَخْرَجَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ دِیَارِهِمْ لِاَوَّلِ الْحَشْرِ ؔؕ مَا ظَنَنْتُمْ اَنْ یَّخْرُجُوْا وَظَنُّوْۤا اَنَّهُمْ مَّانِعَتُهُمْ حُصُوْنُهُمْ مِّنَ اللّٰهِ فَاَتٰىهُمُ اللّٰهُ مِنْ حَیْثُ لَمْ یَحْتَسِبُوْاۗ وَقَذَفَ فِیْ قُلُوْبِهِمُ الرُّعْبَ یُخْرِبُوْنَ بُیُوْتَهُمْ بِاَیْدِیْهِمْ وَاَیْدِی الْمُؤْمِنِیْنَ ۗ فَاعْتَبِرُوْا یٰۤاُولِی الْاَبْصَارِ ۟
هُوَஅவனேالَّذِیْۤஎத்தகையவன் என்றால்اَخْرَجَவெளியேற்றினான்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துاَهْلِமக்கள்الْكِتٰبِவேதمِنْஇருந்துدِیَارِهِمْஅவர்களுடைய இல்லங்களிலிருந்துلِاَوَّلِமுதல்الْحَشْرِ ؔؕவெளியேற்றத்தின் போதுمَاஇல்லைظَنَنْتُمْநீங்கள் நினைத்தீர்கள்اَنْஎன்றுیَّخْرُجُوْاஅவர்கள் வெளியேறுவார்கள்وَ ظَنُّوْۤاமேலும் அவர்கள் நினைத்தார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்مَّانِعَتُهُمْஅவர்களைப் பாதுகாக்கும் என்றுحُصُوْنُهُمْஅவர்களுடைய கோட்டைகள்مِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்فَاَتٰىهُمُஆனால் அவர்களிடம் வந்தான்اللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துحَیْثُஇடத்திலிருந்துلَمْஇல்லைیَحْتَسِبُوْا ۗஅவர்கள் எதிர்பார்த்திருக்கوَ قَذَفَமேலும் அவன் போட்டான்فِیْஇல்قُلُوْبِهِمُஅவர்களுடைய இதயங்களில்الرُّعْبَதிகிலைیُخْرِبُوْنَஅவர்கள் பாழாக்கினார்கள்بُیُوْتَهُمْதங்களது வீடுகளைبِاَیْدِیْهِمْதங்களது கைகளாலேயேوَ اَیْدِیமேலும் கைகளால்الْمُؤْمِنِیْنَ ۗநம்பிக்கையாளர்களுடையفَاعْتَبِرُوْاஆகவே படிப்பினை பெறுங்கள்یٰۤاُولِیஉடையவர்களேالْاَبْصَارِஅகப்பார்வை
ஹுவல் லதீ அகரஜல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி மின் தியாரிஹிம் லி அவ்வலில் ஹஷ்ர்; மா ளனன்தும் அ(ன்)ய் யக்ருஜூ வ ளன்னூ அன்னஹும் மா னி'அதுஹும் ஹுஸூனுஹும் மினல் லாஹி Fபாதாஹுமுல் லாஹு மின் ஹய்து லம் யஹ்தஸிBபூ வ கதFப Fபீ குலூBபிஹிமுர் ருஃBப யுக்ரிBபூன Bபு யூதஹும் Bபி அய்தீஹிம் வ அய்தில் மு'மினீன FபஃதBபிரூ யா உலில் அBப்ஸார்
வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே; எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை; அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்; அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர்; எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.
وَلَوْلَاۤ اَنْ كَتَبَ اللّٰهُ عَلَیْهِمُ الْجَلَآءَ لَعَذَّبَهُمْ فِی الدُّنْیَا ؕ وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابُ النَّارِ ۟
وَ لَوْ لَاۤமேலும் இல்லாவிட்டால்اَنْஎன்றுكَتَبَவிதித்திருக்கاللّٰهُஅல்லாஹ்عَلَیْهِمُஅவர்கள் மீதுالْجَلَآءَநாடு கடத்தப்படுவதைلَعَذَّبَهُمْநிச்சயமாக அவர்களைத் தண்டித்திருப்பான்فِیஇல்الدُّنْیَا ؕஇவ்வுலகம்وَ لَهُمْமேலும் அவர்களுக்குفِیஇல்الْاٰخِرَةِமறுமைعَذَابُவேதனைالنَّارِநெருப்பின்
வ லவ் லா அன் கதBபல் லாஹு 'அலய்ஹிமுல் ஜலா'அ ல'அத்தBபஹும் Fபித் துன்யா வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் னார்
தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான்; இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ وَمَنْ یُّشَآقِّ اللّٰهَ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
ذٰلِكَஇதுبِاَنَّهُمْஏனெனில் அவர்கள்شَآقُّواமாறுசெய்தார்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَ رَسُوْلَهٗ ۚமேலும் அவனது தூதருக்கும்وَ مَنْஇன்னும் எவர்یُّشَآقِّமாறுசெய்கிறாரோاللّٰهَஅல்லாஹ்வுக்குفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனை அளிப்பதில்
தாலிக Bபி அன்னஹும் ஷாக்குல் லாஹ வ ரஸூலஹூ வ ம(ன்)ய் யுஷாக்கில் லாஹ Fப இன்னல் லாஹ ஷதீதுல்-'இகாBப்
அதற்கு(க் காரணம்): நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள்; அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்.
مَا قَطَعْتُمْ مِّنْ لِّیْنَةٍ اَوْ تَرَكْتُمُوْهَا قَآىِٕمَةً عَلٰۤی اُصُوْلِهَا فَبِاِذْنِ اللّٰهِ وَلِیُخْزِیَ الْفٰسِقِیْنَ ۟
مَاஎதனைقَطَعْتُمْநீங்கள் வெட்டினீர்களோمِّنْஇருந்துلِّیْنَةٍபேரீச்ச மரங்களில்اَوْஅல்லதுتَرَكْتُمُوْهَاஅவற்றை நீங்கள் விட்டுவிட்டீர்களோقَآىِٕمَةًநின்ற நிலையில்عَلٰۤیமீதுاُصُوْلِهَاஅவற்றின் அடிமரங்களின்فَبِاِذْنِஅனுமதியைக் கொண்டேاللّٰهِஅல்லாஹ்வின்وَ لِیُخْزِیَமேலும் அவன் இழிவுபடுத்துவதற்காகالْفٰسِقِیْنَபாவிகளை
மா கதஃதும் மில் லீனதின் அவ் தரக்துமூஹா கா'இமதன்'அலா உஸூலிஹா FபBபி இத்னில் லாஹி வ லியுக்Zஜியல் Fபாஸிகீன்
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்.
وَمَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْهُمْ فَمَاۤ اَوْجَفْتُمْ عَلَیْهِ مِنْ خَیْلٍ وَّلَا رِكَابٍ وَّلٰكِنَّ اللّٰهَ یُسَلِّطُ رُسُلَهٗ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَ مَاۤமேலும் எதைاَفَآءَமீட்டுக்கொடுத்தானோاللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுرَسُوْلِهٖதன் தூதருக்குمِنْهُمْஅவர்களிடமிருந்துفَمَاۤஆகவே இல்லைاَوْجَفْتُمْநீங்கள் ஓட்டினீர்கள்عَلَیْهِஅதன் மீதுمِنْஎந்தخَیْلٍகுதிரையையோوَّ لَاமேலும் இல்லைرِكَابٍஒட்டகத்தையோوَّ لٰكِنَّஆனால்اللّٰهَஅல்லாஹ்یُسَلِّطُஅதிகாரம் அளிக்கிறான்رُسُلَهٗதன் தூதர்களுக்குعَلٰیமீதுمَنْஎவர்یَّشَآءُ ؕஅவன் நாடுகிறானோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
வ மா அFபா'அல் லாஹு 'அலா ரஸூலிஹீ மின்ஹும் Fபமா அவ்ஜFப்தும் 'அலய்ஹி மின் கய்லிஇ(ன்)வ் வலா ரிகாBபி(ன்)வ் வ லாகின்னல் லாஹ யுஸல்லிது ருஸுலஹூ 'அலா ம(ன்)ய் யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை; எனினும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰی رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰی فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ كَیْ لَا یَكُوْنَ دُوْلَةً بَیْنَ الْاَغْنِیَآءِ مِنْكُمْ ؕ وَمَاۤ اٰتٰىكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ ۗ وَمَا نَهٰىكُمْ عَنْهُ فَانْتَهُوْا ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟ۘ
مَاۤஎதைاَفَآءَமீட்டுக்கொடுத்தானோاللّٰهُஅல்லாஹ்عَلٰیமீதுرَسُوْلِهٖஅவனுடைய தூதருக்குمِنْஇருந்துاَهْلِமக்களிடமிருந்துالْقُرٰیஊர்களின்فَلِلّٰهِஅது அல்லாஹ்வுக்கும்وَ لِلرَّسُوْلِஇன்னும் தூதருக்கும்وَ لِذِیஇன்னும் உறவினர்களுக்கும்الْقُرْبٰیநெருங்கியوَ الْیَتٰمٰیஇன்னும் அநாதைகளுக்கும்وَ الْمَسٰكِیْنِஇன்னும் ஏழைகளுக்கும்وَ ابْنِஇன்னும் மகனுக்கும்السَّبِیْلِ ۙவழியின்كَیْபொருட்டுلَاஇல்லாமல்یَكُوْنَஇருக்கدُوْلَةًۢஒரு சுழற்சியாகبَیْنَஇடையில்الْاَغْنِیَآءِசெல்வந்தர்களுக்குمِنْكُمْ ؕஉங்களில்وَ مَاۤஇன்னும் எதைاٰتٰىكُمُஉங்களுக்குக் கொடுத்தாரோالرَّسُوْلُதூதர்فَخُذُوْهُ ۗஅதனை எடுத்துக் கொள்ளுங்கள்وَ مَاஇன்னும் எதைنَهٰىكُمْஉங்களை அவர் தடுத்தாரோعَنْهُஅதிலிருந்துفَانْتَهُوْا ۚவிலகிக் கொள்ளுங்கள்وَ اتَّقُواஇன்னும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِیْدُகடுமையானவன்الْعِقَابِۘதண்டனை அளிப்பதில்
மா அFபா'அல் லாஹு 'அலா ரஸூலிஹீ மின் அஹ்லில் குரா Fபலில்லாஹி வ லிர் ரஸூலி வ லிதில் குர்Bபா வல் யதாமா வல்மஸாகீனி வBப்னிஸ் ஸBபீலி கய் லா யகூன தூலதம் Bபய்னல் அக்னியா'இ மின்கும்; வ மா ஆதாகுமுர் ரஸூலு Fபகுதூஹு வமா னஹாகும் 'அன்ஹு Fபன்தஹூ; வத்தகுல் லாஹ இன்னல் லாஹ ஷதீதுல்-'இகாBப்
அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.
لِلْفُقَرَآءِ الْمُهٰجِرِیْنَ الَّذِیْنَ اُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاَمْوَالِهِمْ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا وَّیَنْصُرُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ ۟ۚ
لِلْفُقَرَآءِவறியவர்களானالْمُهٰجِرِیْنَஹிஜ்ரத் செய்தவர்களுக்குالَّذِیْنَஎவர்கள்اُخْرِجُوْاவெளியேற்றப்பட்டார்களோمِنْஇருந்துدِیَارِهِمْதங்களின் இல்லங்கள்وَ اَمْوَالِهِمْமற்றும் தங்களின் சொத்துக்கள்یَبْتَغُوْنَஅவர்கள் தேடுகின்றனர்فَضْلًاஅருளைمِّنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَ رِضْوَانًاமற்றும் பொருத்தத்தைوَّ یَنْصُرُوْنَமேலும் உதவி செய்கின்றனர்اللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَ رَسُوْلَهٗ ؕஅவனுடைய தூதருக்கும்اُولٰٓىِٕكَஇவர்கள்தாம்هُمُஅவர்கள்الصّٰدِقُوْنَۚஉண்மையாளர்கள்
லில்Fபுகரா'இல் முஹாஜி ரீனல் லதீன உக்ரிஜூ மின் தியாரிஹிம் வ அம்வாலிஹிம் யBப்தகூன Fபள்லம் மினல் லாஹி வ ரிள்வான(ன்)வ் வ யன்ஸுரூனல் லாஹ வ ரஸூலஹ்; உலா'இக ஹுமுஸ் ஸாதிகூன்
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.
وَالَّذِیْنَ تَبَوَّؤُ الدَّارَ وَالْاِیْمَانَ مِنْ قَبْلِهِمْ یُحِبُّوْنَ مَنْ هَاجَرَ اِلَیْهِمْ وَلَا یَجِدُوْنَ فِیْ صُدُوْرِهِمْ حَاجَةً مِّمَّاۤ اُوْتُوْا وَیُؤْثِرُوْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ۫ؕ وَمَنْ یُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟ۚ
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்تَبَوَّؤُகுடியேறினார்களோالدَّارَஇல்லத்தில்وَ الْاِیْمَانَமேலும் ஈமானில்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னர்یُحِبُّوْنَஅவர்கள் நேசிக்கிறார்கள்مَنْஎவர்هَاجَرَஹிஜ்ரத் செய்து வந்தாரோاِلَیْهِمْஅவர்களிடம்وَ لَاமேலும் இல்லைیَجِدُوْنَஅவர்கள் காண்கிறார்கள்فِیْஇல்صُدُوْرِهِمْதங்களுடைய உள்ளங்களில்حَاجَةًஎந்தத் தேவையையும்مِّمَّاۤவழங்கப்பட்டதிலிருந்துاُوْتُوْاஅவர்களுக்குக் கொடுக்கப்பட்டوَ یُؤْثِرُوْنَமேலும் முன்னுரிமை அளிக்கிறார்கள்عَلٰۤیவிடاَنْفُسِهِمْதங்களது ஆத்மாக்களைوَ لَوْஇருந்தபோதிலும்كَانَஇருந்தாலும்بِهِمْஅவர்களுக்குخَصَاصَةٌ ۫ؕவறுமைوَ مَنْமேலும் எவர்یُّوْقَகாக்கப்படுகிறாரோشُحَّகஞ்சத்தனத்திலிருந்துنَفْسِهٖதனது ஆத்மாவின்فَاُولٰٓىِٕكَஅத்தகையோர் தான்هُمُஅவர்கள்الْمُفْلِحُوْنَۚவெற்றியாளர்கள்
வல்லதீன தBபவ்வ'உத் தார வல் ஈமான மின் கBப்லிஹிம் யுஹிBப்Bபூன மன் ஹாஜர இலய்ஹிம் வலா யஜிதூன Fபீ ஸுதூரிஹிம் ஹாஜதம் மிம்மா ஊதூ வ யு'திரூன 'அலா அன்Fபுஸிஹிம் வ லவ் கான Bபிஹிம் கஸாஸஹ்; வ ம(ன்)ய் யூக ஷுஹ்ஹ னFப்ஸிஹீ Fப உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
وَالَّذِیْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَلَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
وَ الَّذِیْنَமேலும் எவர்கள்جَآءُوْவந்தார்களோمِنْۢஇருந்துبَعْدِهِمْஅவர்களுக்குப் பின்یَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவனேاغْفِرْமன்னிப்பாயாகلَنَاஎங்களுக்குوَ لِاِخْوَانِنَاமேலும் எங்கள் சகோதரர்களுக்கும்الَّذِیْنَஎவர்கள்سَبَقُوْنَاஎங்களை முந்திவிட்டார்களோبِالْاِیْمَانِஈமானைக் கொண்டுوَ لَاமேலும்تَجْعَلْஆக்காதேفِیْஇல்قُلُوْبِنَاஎங்கள் உள்ளங்களில்غِلًّاகுரோதத்தைلِّلَّذِیْنَஎவர்கள் மீதுاٰمَنُوْاஈமான் கொண்டார்களோرَبَّنَاۤஎங்கள் இறைவனேاِنَّكَநிச்சயமாக நீرَءُوْفٌமிக்க இரக்கமுடையவன்رَّحِیْمٌ۠நிகரற்ற அன்புடையவன்
வல்லதீன ஜா'ஊ மின் Bபஃதிஹிம் யகூலூன ரBப்Bபனாக் Fபிர் லனா வ லி இக்வானி னல் லதீன ஸBப்கூனா Bபில் ஈமானி வலா தஜ்'அல் Fபீ குலூBபினா கில்லலில் லதீன ஆமனூ ரBப்Bபனா இன்னக ர'ஊFபுர் ரஹீம்
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نَافَقُوْا یَقُوْلُوْنَ لِاِخْوَانِهِمُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ لَىِٕنْ اُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِیْعُ فِیْكُمْ اَحَدًا اَبَدًا ۙ وَّاِنْ قُوْتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ ؕ وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீர்اِلَیநோக்கிالَّذِیْنَஎவர்கள்نَافَقُوْاநயவஞ்சகம் செய்தார்களோیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்لِاِخْوَانِهِمُதங்கள் சகோதரர்களுக்குالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோمِنْஇருந்துاَهْلِமக்களில்الْكِتٰبِவேதلَىِٕنْநிச்சயமாக ஒருவேளைاُخْرِجْتُمْநீங்கள் வெளியேற்றப்பட்டால்لَنَخْرُجَنَّநிச்சயமாக நாங்களும் வெளியேறுவோம்مَعَكُمْஉங்களுடன்وَ لَاமேலும் இல்லைنُطِیْعُநாங்கள் கீழ்ப்படிவோம்فِیْكُمْஉங்கள் விஷயத்தில்اَحَدًاஎவருக்கும்اَبَدًا ۙஒருபோதும்وَّ اِنْமேலும் ஒருவேளைقُوْتِلْتُمْஉங்களுடன் போரிடப்பட்டால்لَنَنْصُرَنَّكُمْ ؕநிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்وَ اللّٰهُமேலும் அல்லாஹ்یَشْهَدُசாட்சி கூறுகிறான்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَكٰذِبُوْنَநிச்சயமாக பொய்யர்கள்
அலம் தர இலல் லதீன னாFபகூ யகூலூன லி இக்வானிஹிமுல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி ல'இன் உக்ரிஜ்தும் லனக்ருஜன்ன ம'அகும் வலா னுதீ'உ Fபீகும் அஹதன் அBபத(ன்)வ்-வ இன் கூதில்தும் லனன்ஸுரன் னகும் வல்லாஹு யஷ்ஹது இன்னஹும் லகாதிBபூன்
(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான்.
لَىِٕنْ اُخْرِجُوْا لَا یَخْرُجُوْنَ مَعَهُمْ ۚ وَلَىِٕنْ قُوْتِلُوْا لَا یَنْصُرُوْنَهُمْ ۚ وَلَىِٕنْ نَّصَرُوْهُمْ لَیُوَلُّنَّ الْاَدْبَارَ ۫ ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟
لَىِٕنْநிச்சயமாகاُخْرِجُوْاஅவர்கள் வெளியேற்றப்பட்டால்لَاமாட்டார்கள்یَخْرُجُوْنَஅவர்கள் வெளியேறمَعَهُمْ ۚஅவர்களுடன்وَ لَىِٕنْமேலும் நிச்சயமாகقُوْتِلُوْاஅவர்கள் போரிடப்பட்டால்لَاமாட்டார்கள்یَنْصُرُوْنَهُمْ ۚஅவர்களுக்கு அவர்கள் உதவوَ لَىِٕنْமேலும் நிச்சயமாகنَّصَرُوْهُمْஅவர்களுக்கு அவர்கள் உதவினால்لَیُوَلُّنَّநிச்சயமாக அவர்கள் திருப்புவார்கள்الْاَدْبَارَ ۫முதுகுகளைثُمَّபின்னர்لَاமாட்டார்கள்یُنْصَرُوْنَஅவர்கள் உதவி செய்யப்பட
ல'இன் உக்ரிஜூ லா யக்ருஜூன ம'அஹும் வ ல'இன் கூதிலூ லா யன்ஸுரூனஹும் வ ல'இன் னஸரூஹும் ல யுவல்லுன்னல் அத்Bபார தும்ம லா யுன்ஸரூன்
அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள்; மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள்; அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.
لَاَنْتُمْ اَشَدُّ رَهْبَةً فِیْ صُدُوْرِهِمْ مِّنَ اللّٰهِ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
لَاَنْتُمْநிச்சயமாக நீங்கள்اَشَدُّஅதிகرَهْبَةًஅச்சம்فِیْஇல்صُدُوْرِهِمْஅவர்களின் நெஞ்சங்கள்مِّنَவிடاللّٰهِ ؕஅல்லாஹ்வைذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَوْمٌஒரு சமூகம்لَّاஇல்லைیَفْقَهُوْنَஅவர்கள் புரிந்து கொள்கிறார்கள்
ல அன்தும் அஷத்து ரஹ்Bபதன் Fபீ ஸுதூரிஹிம் மினல் லாஹ்; தாலிக Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
நிச்சயமாக, அவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது; (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்து கொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை!
لَا یُقَاتِلُوْنَكُمْ جَمِیْعًا اِلَّا فِیْ قُرًی مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍ ؕ بَاْسُهُمْ بَیْنَهُمْ شَدِیْدٌ ؕ تَحْسَبُهُمْ جَمِیْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰی ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟ۚ
لَاமாட்டார்கள்یُقَاتِلُوْنَكُمْஅவர்கள் உங்களுடன் போரிடجَمِیْعًاஒன்று சேர்ந்துاِلَّاதவிரفِیْஇல்قُرًیஊர்களில்مُّحَصَّنَةٍஅரணமைக்கப்பட்டاَوْஅல்லதுمِنْஇருந்துوَّرَآءِபின்னால்جُدُرٍ ؕமதில்களின்بَاْسُهُمْஅவர்களின் பகைبَیْنَهُمْஅவர்களுக்கு இடையேشَدِیْدٌ ؕகடுமையானதுتَحْسَبُهُمْஅவர்களை நீர் எண்ணுகிறீர்جَمِیْعًاஒன்றுபட்டவர்களாகوَّ قُلُوْبُهُمْமேலும் அவர்களின் உள்ளங்கள்شَتّٰی ؕசிதறிக் கிடக்கின்றனذٰلِكَஅதுبِاَنَّهُمْஏனென்றால் அவர்கள்قَوْمٌஒரு சமூகத்தினர்لَّاஇல்லைیَعْقِلُوْنَۚஅவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள்
லா யுகாதிலூனகும் ஜமீ'அன் இல்லா Fபீ குரம் முஹஸ் ஸனதின் அவ் மி(ன்)வ் வரா'இ ஜுதுர்; Bபா'ஸுஹும் Bபய்னஹும் ஷதீத்; தஹ்ஸBபுஹும் ஜமீ'அ(ன்)வ்-வ குலூBபுஹும் ஷத்தா; தாலிக Bபிஅன்னஹும் கவ்முல் லா யஃகிலூன்
கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை; (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்: மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.
كَمَثَلِ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَرِیْبًا ذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟ۚ
كَمَثَلِஉதாரணத்தைப் போன்றதேالَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னால்قَرِیْبًاஅண்மையில்ذَاقُوْاசுவைத்தார்கள்وَبَالَதீய பலனைاَمْرِهِمْ ۚதங்கள் காரியத்தின்وَ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِیْمٌۚதுன்புறுத்தும்
கமதலில் லதீன மின் கBப்லிஹிம் கரீBபன் தாகூ வBபால அம்ரிஹிம் வ லஹும் 'அதாBபுன் அலீம்
இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
كَمَثَلِ الشَّیْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ ۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟
كَمَثَلِஉதாரணத்தைப் போலالشَّیْطٰنِஷைத்தானின்اِذْபோதுقَالَஅவன் கூறினான்لِلْاِنْسَانِமனிதனிடம்اكْفُرْ ۚநிராகரிப்பாயாகفَلَمَّاபின்னர் எப்போதுكَفَرَஅவன் நிராகரித்தானோقَالَஅவன் கூறினான்اِنِّیْநிச்சயமாக நான்بَرِیْٓءٌவிலகியவன்مِّنْكَஉன்னிடமிருந்துاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّஇறைவனானالْعٰلَمِیْنَஅகிலங்களின்
கமதலிஷ் ஷய்தானி இத்கால லில் இன்ஸானிக் Fபுர் Fபலம்மா கFபர கால இன்னீ Bபரீ'உம் மின்க இன்னீ அகாFபுல் லாஹ ரBப்Bபல் 'ஆலமீன்
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது; (அவன்) மனிதனை நோக்கி: “நீ (இறைவனை) நிராகரித்து விடு” என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் “நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்றான்.
فَكَانَ عَاقِبَتَهُمَاۤ اَنَّهُمَا فِی النَّارِ خَالِدَیْنِ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟۠
فَكَانَஎனவே ஆனதுعَاقِبَتَهُمَاۤஅவ்விருவரின் முடிவுاَنَّهُمَاநிச்சயமாக அவ்விருவரும்فِیஇல்النَّارِநரக நெருப்புخَالِدَیْنِநிரந்தரமானவர்களாகفِیْهَا ؕஅதில்وَ ذٰلِكَமேலும் அதுجَزٰٓؤُاகூலியாகும்الظّٰلِمِیْنَ۠அநியாயக்காரர்களின்
Fபகான 'ஆகிBபதஹுமா அன்னஹுமா Fபின் னாரி காலிதய்னி Fபீஹா; வ தாலிக ஜZஜா'உள் ளாலிமீன்
அவ்விருவரின் முடிவு, நிச்சயமாக அவர்கள் என்றென்றும் தங்கும் நரக நெருப்புத்தான், அநியாயக் காரர்களின் கூலி இதுவேயாகும்.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
یٰۤاَیُّهَاالَّذِیْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டீர்களோاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ لْتَنْظُرْமேலும் கவனித்துப் பார்க்கட்டும்نَفْسٌஒவ்வோர் ஆத்மாவும்مَّاஎதைقَدَّمَتْமுற்படுத்தி வைத்துள்ளதோلِغَدٍ ۚநாளைக்காகوَ اتَّقُواமேலும் அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்خَبِیْرٌۢநன்கு அறிந்தவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல்-லாஹ; வல்தன்ளுர் னFப்ஸும் மா கத்தமத் லிகதிவ் வத்தகுல்லாஹ்; இன்னல்லாஹ கBபீரும் Bபிமா தஃமலூன்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰىهُمْ اَنْفُسَهُمْ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
وَ لَاமேலும் வேண்டாம்تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடكَالَّذِیْنَஅவர்களைப் போலنَسُواமறந்தார்களோاللّٰهَஅல்லாஹ்வைفَاَنْسٰىهُمْஅதனால் அவன் அவர்களை மறக்கச் செய்தான்اَنْفُسَهُمْ ؕதங்களையேاُولٰٓىِٕكَஅவர்கள்தாம்هُمُஅவர்கள்الْفٰسِقُوْنَவரம்பு மீறியவர்கள்
வ லா தகூனூ கல்லதீன னஸுல் லாஹ Fப அன்ஸாஹும் அன்Fபுஸஹும்; உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.
لَا یَسْتَوِیْۤ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَنَّةِ ؕ اَصْحٰبُ الْجَنَّةِ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
لَاஇல்லைیَسْتَوِیْۤசமமாவார்கள்اَصْحٰبُவாசிகள்النَّارِநரகத்தின்وَ اَصْحٰبُமற்றும் வாசிகள்الْجَنَّةِ ؕசொர்க்கத்தின்اَصْحٰبُவாசிகள்الْجَنَّةِசொர்க்கத்தின்هُمُஅவர்களேالْفَآىِٕزُوْنَவெற்றியாளர்கள்
லா யஸ்தவீ அஸ்-ஹாBபுன் னாரி வ அஸ்ஹாBபுல் ஜன்னஹ்; அஸ் ஹாBபுல் ஜன்னதி ஹுமுல் Fபா'இZஜூன்
நரக வாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள்; சுவர்க்கவாசிகளே பெரும் பாக்கியம் உடையோர்.
لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰی جَبَلٍ لَّرَاَیْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْیَةِ اللّٰهِ ؕ وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَفَكَّرُوْنَ ۟
لَوْஒருவேளைاَنْزَلْنَاநாம் இறக்கியிருந்தால்هٰذَاஇந்தالْقُرْاٰنَகுர்ஆனைعَلٰیமீதுجَبَلٍஒரு மலையின்لَّرَاَیْتَهٗநிச்சயமாக நீர் அதைக் கண்டிருப்பீர்خَاشِعًاபணிந்ததாகمُّتَصَدِّعًاபிளந்து போயிருப்பதாகمِّنْகாரணமாகخَشْیَةِஅச்சத்தின்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَ تِلْكَமேலும் அந்தالْاَمْثَالُஉதாரணங்களைنَضْرِبُهَاநாம் அவற்றை விவரிக்கிறோம்لِلنَّاسِமனிதர்களுக்காகلَعَلَّهُمْஅவர்கள்یَتَفَكَّرُوْنَசிந்திப்பதற்காக
லவ் அன்Zஜல்னா ஹாதல் குர்'ஆன 'அலா ஜBபிலில் லர அய்தஹூ காஷி'அம் முத ஸத்தி'அம் மின் கஷியதில் லாஹ்; வ தில்கல் அம்தாலு னள்ரிBபுஹா லின்னாஸி ல'அல்லஹும் யதFபக்கரூன்
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ ۚ هُوَ الرَّحْمٰنُ الرَّحِیْمُ ۟
هُوَஅவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவனென்றால்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۚஅவனைعٰلِمُஅறிந்தவன்الْغَیْبِமறைவானவற்றையும்وَ الشَّهَادَةِ ۚவெளிப்படையானவற்றையும்هُوَஅவன்الرَّحْمٰنُஅளவற்ற அருளாளன்الرَّحِیْمُநிகரற்ற அன்புடையவன்
ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவ 'ஆலிமுல் கய்Bபி வஷ்-ஷஹாத; ஹுவர் ரஹ்மானுர்-ரஹீம்
அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
هُوَ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَیْمِنُ الْعَزِیْزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
هُوَஅவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِیْஎத்தகையவன்لَاۤஇல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ۚஅவனைاَلْمَلِكُபேரரசன்الْقُدُّوْسُமிகப் பரிசுத்தமானவன்السَّلٰمُசாந்தியளிப்பவன்الْمُؤْمِنُஅபயமளிப்பவன்الْمُهَیْمِنُபாதுகாப்பவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْجَبَّارُஅடக்கியாள்பவன்الْمُتَكَبِّرُ ؕபெருமைக்குரியவன்سُبْحٰنَதூயவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّاஎவற்றை விட்டும்یُشْرِكُوْنَஅவர்கள் இணைவைக்கிறார்களோ
ஹுவல்-லாஹுல்-லதீ லா இலாஹ இல்லா ஹுவல்-மலிகுல் குத்தூஸுஸ்-ஸலாமுல் முமினுல் முஹய்மினுல்-'ஆZஜீZஜுல் ஜBப்Bபாருல்-முதகBப்Bபிர்; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.
هُوَ اللّٰهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْاَسْمَآءُ الْحُسْنٰی ؕ یُسَبِّحُ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
هُوَஅவன்اللّٰهُஅல்லாஹ்الْخَالِقُபடைப்பவன்الْبَارِئُஉருவாக்குபவன்الْمُصَوِّرُஉருவமளிப்பவன்لَهُஅவனுக்கேالْاَسْمَآءُதிருநாமங்கள்الْحُسْنٰی ؕமிக அழகியیُسَبِّحُதுதிக்கின்றனلَهٗஅவனைمَاயாவும்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِ ۚமற்றும் பூமியில்وَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُமிகைத்தவன்الْحَكِیْمُ۠ஞானமிக்கவன்
ஹுவல் லாஹுல் காலிகுல் Bபாரி 'உல் முஸவ்விர்; லஹுல் அஸ்மா'உல் ஹுஸ்னா; யுஸBப்Bபிஹு லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.