88. ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)

மக்கீ, வசனங்கள்: 26

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْغَاشِیَةِ ۟ؕ
هَلْவந்ததாاَتٰىكَஉமக்குحَدِیْثُசெய்திالْغَاشِیَةِؕசூழ்ந்துகொள்ளும் நிகழ்ச்சியின்
ஹல் அதாக ஹதீதுல் காஷியஹ்
சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ خَاشِعَةٌ ۟ۙ
وُجُوْهٌசில முகங்கள்یَّوْمَىِٕذٍஅந்நாளில்خَاشِعَةٌۙசிறுமையடைந்திருக்கும்
வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் காஷி'அஹ்
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۟ۙ
عَامِلَةٌஉழைப்பவைنَّاصِبَةٌۙகளைப்படைந்தவை
'ஆமிலதுன் னாஸிBபஹ்
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
تَصْلٰی نَارًا حَامِیَةً ۟ۙ
تَصْلٰیநுழையும்نَارًاநெருப்பில்حَامِیَةًۙகடும் சூடான
தஸ்லா னாரன் ஹாமியஹ்
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
تُسْقٰی مِنْ عَیْنٍ اٰنِیَةٍ ۟ؕ
تُسْقٰیபுகட்டப்படுவார்கள்مِنْஇருந்துعَیْنٍஊற்றுاٰنِیَةٍؕகொதிக்கும்
துஸ்கா மின் 'அய்னின் ஆனியஹ்
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
لَیْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِیْعٍ ۟ۙ
لَیْسَஇல்லைلَهُمْஅவர்களுக்குطَعَامٌஉணவுاِلَّاதவிரمِنْஇருந்துضَرِیْعٍۙகள்ளிச் செடி
லய்ஸ லஹும் த'ஆமுன் இல்லா மின் ளரீ'
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
لَّا یُسْمِنُ وَلَا یُغْنِیْ مِنْ جُوْعٍ ۟ؕ
لَّاஇல்லைیُسْمِنُகொழுக்க வைக்கும்وَ لَاமேலும் இல்லைیُغْنِیْதீர்க்கும்مِنْஇருந்துجُوْعٍؕபசி
லா யுஸ்மினு வலா யுக்னீ மின் ஜூ'
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاعِمَةٌ ۟ۙ
وُجُوْهٌமுகங்கள்یَّوْمَىِٕذٍஅந்நாளில்نَّاعِمَةٌۙஇன்பமுற்றிருக்கும்
வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் னா'இமஹ்
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
لِّسَعْیِهَا رَاضِیَةٌ ۟ۙ
لِّسَعْیِهَاதங்கள் முயற்சிக்குرَاضِیَةٌۙதிருப்தியடைந்திருக்கும்
லிஸஃயிஹா ராளியஹ்
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
لَّا تَسْمَعُ فِیْهَا لَاغِیَةً ۟ؕ
لَّاஇல்லைتَسْمَعُநீர் கேட்பீர்فِیْهَاஅதில்لَاغِیَةًؕவீணான பேச்சை
லா தஸ்ம'உ Fபீஹா லாகியஹ்
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
فِیْهَا عَیْنٌ جَارِیَةٌ ۟ۘ
فِیْهَاஅதில்عَیْنٌஒரு நீரூற்றுجَارِیَةٌۘஓடிக்கொண்டிருக்கும்
Fபீஹா 'அய்னுன் ஜாரியஹ்
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
فِیْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۟ۙ
فِیْهَاஅதில்سُرُرٌகட்டில்கள்مَّرْفُوْعَةٌۙஉயர்த்தப்பட்ட
Fபீஹா ஸுருரும் மர்Fபூ'அஹ்
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۟ۙ
وَّ اَكْوَابٌகிண்ணங்களும்مَّوْضُوْعَةٌۙவைக்கப்பட்டிருக்கும்
வ அக்வாBபும் மவ்ளூ'அஹ்
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۟ۙ
وَّ نَمَارِقُதலையணைகளும்مَصْفُوْفَةٌۙவரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்
வ னமாரிகு மஸ்FபூFபஹ்
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
وَّزَرَابِیُّ مَبْثُوْثَةٌ ۟ؕ
وَّ زَرَابِیُّமேலும் கம்பளங்களும்مَبْثُوْثَةٌؕபரப்பப்பட்டவை
வ ZஜராBபிய்யு மBப்தூதஹ்
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
اَفَلَا یَنْظُرُوْنَ اِلَی الْاِبِلِ كَیْفَ خُلِقَتْ ۟ۥ
اَفَلَاஅவர்கள் வேண்டாமாیَنْظُرُوْنَபார்க்கிறார்கள்اِلَیநோக்கிالْاِبِلِஒட்டகங்களைكَیْفَஎவ்வாறுخُلِقَتْۥபடைக்கப்பட்டுள்ளன
அFபலா யன்ளுரூன இலலிBபிலி கய்Fப குலிகத்
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
وَاِلَی السَّمَآءِ كَیْفَ رُفِعَتْ ۟ۥ
وَ اِلَیமேலும் ... பால்السَّمَآءِவானத்தின்كَیْفَஎப்படிرُفِعَتْۥஉயர்த்தப்பட்டுள்ளது
வ இலஸ் ஸமா'இ கய்Fப ருFபி'அத்
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
وَاِلَی الْجِبَالِ كَیْفَ نُصِبَتْ ۟ۥ
وَ اِلَیமேலும் ... பக்கம்الْجِبَالِமலைகளின்كَیْفَஎவ்வாறுنُصِبَتْۥநாட்டப்பட்டுள்ளன
வ இலல் ஜிBபாலி கய்Fப னுஸிBபத்
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
وَاِلَی الْاَرْضِ كَیْفَ سُطِحَتْ ۟ۥ
وَ اِلَیமேலும் ...-ன் பக்கம்الْاَرْضِபூமிكَیْفَஎவ்வாறுسُطِحَتْۥஅது விரிக்கப்பட்டுள்ளது
வ இலல் அர்ளி கய்Fப ஸுதிஹத்
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
فَذَكِّرْ ؕ۫ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ۟ؕ
فَذَكِّرْ ؕ۫எனவே நினைவூட்டுவீராகاِنَّمَاۤநிச்சயமாகاَنْتَநீர்مُذَكِّرٌؕநினைவூட்டுபவர்
Fபதக்கிர் இன்னம அன்த முதக்கிர்
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
لَسْتَ عَلَیْهِمْ بِمُصَۜیْطِرٍ ۟ۙ
لَسْتَநீர் அல்லعَلَیْهِمْஅவர்கள் மீதுبِمُصَۜیْطِرٍۙஅதிகாரம் செலுத்துபவர்
லஸ்த 'அலய்ஹிம் Bபிமுஸய்திர்
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
اِلَّا مَنْ تَوَلّٰی وَكَفَرَ ۟ۙ
اِلَّاஆனால்مَنْஎவர்تَوَلّٰیபுறக்கணித்துوَ كَفَرَۙமேலும் நிராகரிக்கிறாரோ
இல்லா மன் தவல்லா வ கFபர்
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
فَیُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَ ۟ؕ
فَیُعَذِّبُهُஅவனைத் தண்டிப்பான்اللّٰهُஅல்லாஹ்الْعَذَابَவேதனையைالْاَكْبَرَؕமிகப்பெரிய
Fப யு'அத்திBபுஹுல் லாஹுல் 'அதாBபல் அக்Bபர்
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
اِنَّ اِلَیْنَاۤ اِیَابَهُمْ ۟ۙ
اِنَّநிச்சயமாகاِلَیْنَاۤநம்மிடமேاِیَابَهُمْۙஅவர்கள் திரும்புதல்
இன்னா இலய்னா இயாBபஹும்
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
ثُمَّ اِنَّ عَلَیْنَا حِسَابَهُمْ ۟۠
ثُمَّபின்னர்اِنَّநிச்சயமாகعَلَیْنَاநம்மிடமேحِسَابَهُمْ۠அவர்களின் கணக்கு
தும்ம இன்ன 'அலய்னா ஹிஸாBபஹும்
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.