1. அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)

மக்கீ, வசனங்கள்: 7

முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟
بِسْمِபெயரால்اللهِஅல்லாஹ்வின்الرَّحْمٰنِபேரருளாளன்الرَّحِيْمِபேரன்பாளன்
Bபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
முஹம்மது ஜான்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
அப்துல் ஹமீது பாகவி
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
IFT
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
Saheeh International
In the name of Allah, the Entirely Merciful, the Especially Merciful.
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
اَلْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேرَبِّஇறைவன்الْعٰلَمِيْنَۙ‏அகிலத்தார்களின்
அல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.
IFT
எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அனைத்து புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
Saheeh International
[All] praise is [due] to Allah, Lord of the worlds -
الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ
الرَّحْمٰنِபேரருளாளன்الرَّحِيْمِۙ‏பேரன்பாளன்
அர்-ரஹ்மானிர்-ரஹீம்
முஹம்மது ஜான்
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,
IFT
அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன்) அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
The Entirely Merciful, the Especially Merciful,
مٰلِكِ یَوْمِ الدِّیْنِ ۟ؕ
مٰلِكِஅதிபதிيَوْمِநாளின்الدِّيْنِؕ‏கூலி
மாலிகி யவ்மித்-தீன்
முஹம்மது ஜான்
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
அப்துல் ஹமீது பாகவி
தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).
IFT
இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
Saheeh International
Sovereign of the Day of Recompense.
اِیَّاكَ نَعْبُدُ وَاِیَّاكَ نَسْتَعِیْنُ ۟ؕ
اِيَّاكَஉன்னையேنَعْبُدُவணங்குவோம்وَاِيَّاكَஇன்னும் உன்னிடமேنَسْتَعِيْنُؕ‏உதவி தேடுகிறோம்
இய்யாக னஃBபுது வ இய்யாக னஸ்த'ஈன்
முஹம்மது ஜான்
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
IFT
உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Saheeh International
It is You we worship and You we ask for help.
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۙ
اِهْدِنَاஎங்களை நேர்வழி நடத்துالصِّرَاطَபாதையில்الْمُسْتَقِيْمَۙ‏நேரான
இஹ்தினஸ்-ஸிராதல்-முஸ்தகீம்
முஹம்மது ஜான்
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
அப்துல் ஹமீது பாகவி
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
IFT
எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
Saheeh International
Guide us to the straight path -
صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ ۙ۬ غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَلَا الضَّآلِّیْنَ ۟۠
صِرَاطَபாதையில்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمْتَஅருள் புரிந்தாய்عَلَيْهِمْۙ‏அவர்கள் மீதுغَیْرِஅல்லாதவர்கள்الْمَغْضُوْبِகோபிக்கப்பட்டவர்கள்عَلَیْهِمْஅவர்கள் மீதுوَلَاஇன்னும் இல்லைالضَّآلِّيْنَ‏வழிகெட்டவர்கள்
ஸிராதல்-லதீன அன்'அம்த 'அலய்ஹிம் கய்ரில்-மக்ளூBபி 'அலய்ஹிம் வ லள்-ளால்லீன்
முஹம்மது ஜான்
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.
IFT
(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக). (அவ்வழி உன்) கோபத்திற்கு உள்ளானவர்களுடையதும் அல்ல; வழி தவறியவர்களுடையதும் அல்ல.
Saheeh International
The path of those upon whom You have bestowed favor, not of those who have earned [Your] anger or of those who are astray.