10. ஸூரத்து யூனுஸ் (நபி)

மக்கீ, வசனங்கள்: 109

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
الٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْحَكِیْمِ ۟
الٓر‌அலிஃப்; லாம்; றாتِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்الْحَكِيْمِ‏ஞானமிகுந்த(து)
அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபில் ஹகீம்
முஹம்மது ஜான்
அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அலிஃப் லாம் றா. இவை ஞானம் நிறைந்த இந்த வேதத்தின் வசனங்களாகும்.
IFT
அலிஃப், லாம், றா இவை, ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அலிஃப் லாம் றா. இவை தீர்க்கமான அறிவு நிறைந்த இவ்வேதத்தின் வசனங்களாகும்.
Saheeh International
Alif, Lam, Ra. These are the verses of the wise Book.
اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَیْنَاۤ اِلٰی رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْ ؔؕ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِیْنٌ ۟
اَكَانَஇருக்கிறதா?لِلنَّاسِமனிதர்களுக்குعَجَبًاஆச்சரியமாகاَنْ اَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்ததுاِلٰى رَجُلٍஒரு மனிதருக்குمِّنْهُمْஅவர்களில்اَنْஎன்றுاَنْذِرِஎச்சரிப்பீராகالنَّاسَமனிதர்களைوَبَشِّرِஇன்னும் நற்செய்தி கூறுவீராகالَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டவர்களுக்குاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குقَدَمَ صِدْقٍநற்கூலிعِنْدَஇடத்தில்رَبِّهِمْؔ‌ؕதங்கள் இறைவன்قَالَகூறினார்(கள்)الْكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்اِنَّநிச்சயமாகهٰذَاஇவர்لَسٰحِرٌசூனியக்காரர்தான்مُّبِيْنٌ‏தெளிவான
'அ கான லின்னாஸி 'அஜாBபன் 'அன் 'அவ்ஹய்னா 'இலா ரஜுலின் மின்ஹும் 'அன் அன்திரின் னாஸ வ Bபஷ்ஷிரில் லதீன 'ஆமனூ 'அன்ன லஹும் கதம ஸித்கின் 'இன்த ரBப்Bபிஹிம்; காலல் காFபிரூன 'இன்ன ஹாதா ல ஸாஹிருன் முBபீன்
முஹம்மது ஜான்
மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, “நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே” என்று கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு வஹ்யி மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுங்கள். எனினும், (இவ்வாறு நீர் கூறுவதைப் பற்றி) இந்நிராகரிப்பவர்கள் உங்களை சந்தேகமற்ற ஒரு சூனியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.
IFT
(அலட்சியத்தில் மூழ்கியிருக்கும்) மக்களை எச்சரிப்பீராக என்றும், ஈமான் நம்பிக்கை கொள்வோர்க்கு அவர்களின் இறைவனிடம் உண்மையான மதிப்பும் கண்ணியமும் உண்டு என்று நற்செய்தி அறிவிப்பீராக என்றும் அவர்களிலிருந்தே ஒரு மனிதருக்கு நாம் வஹி அனுப்பியது அவர்களுக்கு வியப்பாய் இருக்கிறதா? இதனைக் கண்டு இறைநிராகரிப்பாளர்கள் “இவர் ஒரு வெளிப்படையான சூனியக்காரர்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மனிதர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (என்றும்) விசுவாசங்கொண்டார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக அவர்களுக்குத் தங்கள் இரட்சகனிடத்தில் பெரும் பதவியுண்டென்று நீர் நன்மாராயமும் கூறுவீராக! என்று அவர்களில் ஒரு மனிதருக்கு நாம் வஹீ அறிவித்தது மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதா? “நிச்சயமாக இவர் தெளிவான ஒரு சூனியக்காரர்” என்று நிராகரிப்போர் கூறினர்.
Saheeh International
Have the people been amazed that We revealed [revelation] to a man from among them, [saying], "Warn mankind and give good tidings to those who believe that they will have a [firm] precedence of honor with their Lord"? [But] the disbelievers say, "Indeed, this is an obvious magician."
اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ یُدَبِّرُ الْاَمْرَ ؕ مَا مِنْ شَفِیْعٍ اِلَّا مِنْ بَعْدِ اِذْنِهٖ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
اِنَّ رَبَّكُمُநிச்சயமாகஉங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎத்தகையவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَஇன்னும் பூமியையும்فِىْஇல்سِتَّةِஆறுاَيَّامٍநாள்கள்ثُمَّபிறகுاسْتَوٰىஉயர்ந்து விட்டான்عَلَىமீதுالْعَرْشِ‌அர்ஷ்يُدَبِّرُநிர்வகிக்கிறான்الْاَمْرَ‌ؕகாரியத்தைمَا مِنْஅறவே இல்லைشَفِيْعٍபரிந்துரைப்பவர்اِلَّاதவிரمِنْۢ بَعْدِபின்னரேاِذْنِهٖ‌ ؕஅவனுடைய அனுமதிக்குذٰ لِكُمُஅந்தاللّٰهُஅல்லாஹ்தான்رَبُّكُمْஉங்கள் இறைவன்فَاعْبُدُوْஆகவே வணங்குங்கள்هُ‌ ؕஅவனைاَفَلَا تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
இன்ன ரBப்Bபகுமுல் லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி யுதBப்Bபிருல் அம்ர மா மின் ஷFபீ'இன் இல்லா மின் Bபஃதி இத்னிஹ்; தலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; அFபலா ததக்கரூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (இவை சம்பந்தப்பட்ட) எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு (நிர்வகித்து)ம் வருகிறான். அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து காக்கும் இறைவன். ஆகவே, அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவற்றை) நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
IFT
உண்மை யாதெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உங்கள் அதிபதி; அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து (பேரண்டத்தின்) அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகின்றான். எந்தப் பரிந்துரையாளரும் அவனது அனுமதி பெறாமல் பரிந்துரைக்க முடியாது! இத்தகைய அல்லாஹ்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, அவனையே வணங்குங்கள்! நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உங்களுடைய இரட்சகன் அல்லாஹ்தான், அவன் எத்தகையவனென்றால் வானங்களை மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின்மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், (இவைகள் பற்றிய சகல காரியங்களையும் அவனே (திட்டமிட்டு) நிர்வகிக்கின்றான், அவனுடைய அனுமதிக்குப் பின்னரே தவிர (அவனிடம்) பரிந்துரைப்போர் எவருமில்லை, அவன்தான் உங்கள் ரட்சகனாகிய அல்லாஹ்! ஆகவே, அவனையே நீங்கள் வணங்குங்கள், நீங்கள் நினைவு கூறமாட்டீர்களா?
Saheeh International
Indeed, your Lord is Allah, who created the heavens and the earth in six days and then established Himself above the Throne, arranging the matter [of His creation]. There is no intercessor except after His permission. That is Allah, your Lord, so worship Him. Then will you not remember?
اِلَیْهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ اِنَّهٗ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟
اِلَيْهِஅவனிடமேمَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்جَمِيْعًا ؕஅனைவரின்وَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வுடையحَقًّا‌ ؕஉண்மையேاِنَّهٗநிச்சயமாக அவன்يَـبْدَؤُاஆரம்பிக்கிறான்الْخَـلْقَபடைப்பைثُمَّபிறகுيُعِيْدُهٗமீட்கிறான்/அதைلِيَجْزِىَகூலி கொடுப்பதற்காகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநற்செயல்களைبِالْقِسْطِ‌ؕநீதமாகوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لَهُمْஅவர்களுக்குشَرَابٌகுடிபானம்مِّنْ حَمِيْمٍமுற்றிலும் கொதித்தவற்றிலிருந்துوَّعَذَابٌஇன்னும் வேதனையும்اَلِيْمٌۢதுன்புறுத்தும்بِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்يَكْفُرُوْنَ‏நிராகரிக்கின்றனர்
இலய்ஹி மர்ஜி'உகும் ஜமீ 'அ(ன்)வ் வஃதல் லாஹி ஹக்கா; இன்னஹூ யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ லியஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Bபில்கிஸ்த்; வல்லதீன கFபரூ லஹும் ஷராBபுன் மின் ஹமீ மி(ன்)வ் வ 'அதாBபுன் 'அலீமுன் Bபிமா கானூ யக்Fபுரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
இறந்த பின்னர் நீங்கள் அனைவரும் அவனிடமே செல்ல வேண்டியதிருக்கிறது. அல்லாஹ்வுடைய இவ்வாக்குறுதி உண்மையானதே! நிச்சயமாக அவன்தான் படைப்புகளை முதல் தடவையும் உற்பத்தி செய்கிறான். (இறந்த பின் மறுமுறையும்) அவர்களை உயிர்ப்பித்து, அவர்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக (நற்)கூலி கொடுக்கிறான். (இதை) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையாக கொதித்த நீர்தான் (மறுமையில்) குடிக்கக் கிடைக்கும். (இதை) நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
IFT
நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கின்றான். பின்னர், மறுமுறையும் அவனே அவற்றைப் படைப்பான்; ஏனெனில், இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக! மேலும், எவர்கள் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டார்களோ அவர்கள் (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கொதிக்கும் நீரைக் குடிப்பார்கள்; துன்புறுத்தும் தண்டனையை அனுபவிப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் பக்கமே அனைவரின் திரும்பிச் செல்லுதல் இருக்கிறது, அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானது, நிச்சயமாக – அவன்(தான்) படைப்பினங்களை முதல் தடவை (படைக்க) ஆரம்பிக்கிறான், பின்னர், விசுவாசித்து- நற்கருமங்களையும் செய்தோருக்கு நீதமாக (நற்) கூலி கொடுப்பதற்காக (இறந்தபின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி) அவற்றை மீட்டுவான், இன்னும் நிராகரிக்கின்றார்களே அத்தகையோர் அவர்களுக்கு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக முடிவுறக் காய்ந்த (கொதிநீரின்) பானமும் – மிகத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
Saheeh International
To Him is your return all together. [It is] the promise of Allah [which is] truth. Indeed, He begins the [process of] creation and then repeats it that He may reward those who have believed and done righteous deeds, in justice. But those who disbelieved will have a drink of scalding water and a painful punishment for what they used to deny.
هُوَ الَّذِیْ جَعَلَ الشَّمْسَ ضِیَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِیْنَ وَالْحِسَابَ ؕ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَقِّ ۚ یُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟
هُوَஅவனேالَّذِىْஎத்தகையவன்جَعَلَஆக்கினான்الشَّمْسَசூரியனைضِيَآءًஒளியாக(வும்)وَّالْقَمَرَஇன்னும் சந்திரனைنُوْرًاவெளிச்சமாக(வும்)وَّقَدَّرَஇன்னும் நிர்ணயித்தான்هٗஅதைمَنَازِلَதங்குமிடங்களில்لِتَعْلَمُوْاநீங்கள் அறிவதற்காகعَدَدَஎண்ணிக்கையையும்السِّنِيْنَஆண்டுகளின்وَالْحِسَابَ‌ؕஇன்னும் கணக்கையும்مَا خَلَقَபடைக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்ذٰلِكَஇவற்றைاِلَّاதவிரبِالْحَـقِّ‌ۚஉண்மையானதற்கேيُفَصِّلُவிவரிக்கின்றான்الْاٰيٰتِஅத்தாட்சிகளைلِقَوْمٍசமுதாயத்திற்குيَّعْلَمُوْنَ‏அறிகிறார்கள்
ஹுவல் லதீ ஜ'அலஷ் ஷம்ஸ ளியா'அ(ன்)வ் வல்கமர னூர(ன்)வ் வ கத்தரஹூ மனாZஜில லி தஃலமூ 'அததஸ் ஸினீன வல்ஹிஸாBப்; மா கலகல் லாஹு தாலிக இல்லா Bபில்ஹக்க்; யுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
முஹம்மது ஜான்
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்), சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவற்றுக்கு (மாறிமாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குரிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான்.
IFT
அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், சூரியனை மின்னும் ஒளி மிகுந்ததாகவும், சந்திரனை (வெளிச்சந்தரக்கூடிய) பிரகாசமாகவும் ஆக்கினான், இன்னும் வருடங்களின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (சந்திரனாகிய) அதற்கு தங்குமிடங்களையும், அவன் ஏற்படுத்தினான், உண்மையைக் கொண்டே தவிர இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை, அறியக்கூடிய சமூகத்தார்க்கு சான்றுகளை (இவ்வாறு) அவன் விவரிக்கின்றான்.
Saheeh International
It is He who made the sun a shining light and the moon a derived light and determined for it phases - that you may know the number of years and account [of time]. Allah has not created this except in truth. He details the signs for a people who know.
اِنَّ فِی اخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَّقُوْنَ ۟
اِنَّநிச்சயமாகفِى اخْتِلَافِமாறுவதில்الَّيْلِஇரவுوَالنَّهَارِஇன்னும் பகல்وَمَاஇன்னும் எதுخَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்فِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِஇன்னும் பூமிلَاٰيٰتٍ(உ) அத்தாட்சிகள்لِّـقَوْمٍமக்களுக்குيَّتَّقُوْنَ‏அல்லாஹ்வை அஞ்சுகின்றனர்
இன்ன Fபிக் திலாFபில் லய்லி வன்னஹாரி வமா கலகல் லாஹு Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ல ஆயாதின் லிகவ்மி(ன்)ய் யத்தகூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (நல்லுணர்வூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன.
IFT
திண்ணமாக, இரவு பகல் மாறி மாறி வருவதிலும்; வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் (தவறான நோக்கிலிருந்தும் நடத்தையிலிருந்தும்) தவிர்ந்து கொள்ள நாடும் மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இரவு மற்றும் பகல் (ஒன்றன்பின் ஒன்றாக) மாறி மாறி வருவதிலும், வானங்களில், மற்றும், பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் பயபக்தியுடைய சமூகத்தார்க்குப் பல சான்றுகள் திட்டமாக இருக்கின்றன.
Saheeh International
Indeed, in the alternation of the night and the day and [in] what Allah has created in the heavens and the earth are signs for a people who fear Allah.
اِنَّ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِیْنَ هُمْ عَنْ اٰیٰتِنَا غٰفِلُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்لَا يَرْجُوْنَஆதரவு வைக்க மாட்டார்கள்لِقَآءَنَاநம் சந்திப்பைوَرَضُوْاஇன்னும் விரும்பினர்بِالْحَيٰوةِவாழ்க்கையைالدُّنْيَاஇவ்வுலகம்وَاطْمَاَنُّوْاஇன்னும் நிம்மதியடைந்தனர்بِهَاஅதைக் கொண்டுوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هُمْஅவர்கள்عَنْவிட்டுاٰيٰتِنَاநம் வசனங்கள்غٰفِلُوْنَۙ‏அலட்சியமானவர் களாக
இன்னல் லதீன லா யர்ஜூன லிகா'அனா வ ரளூ Bபில்ஹயாதித் துன்யா வத்ம' அன்னூ Bபிஹா வல்லதீன ஹும் 'அன் ஆயாதினா காFபிலூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை (ஒரு சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் நம் வசனங்களை (புறக்கணித்து) விட்டுப் பராமுகமாக இருக்கின்றனரோ அவர்களும்,
IFT
உண்மை யாதெனில், எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ, மேலும், உலக வாழ்க்கையில் மனநிறைவு கொண்டு அதிலே முழு நிம்மதியும் அடைந்தார்களோ, மற்றும் எவர்கள் நம்முடைய சான்றுகளைக் குறித்து அலட்சியமாக இருக்கின்றார்களோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நம்முடைய சந்திப்பில் ஆர்வம் கொள்ளாது, இவ்வுலக வாழ்க்கையை பொருந்திக்கொண்டு, இன்னும் அதனைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கியும்) விட்டார்களே அவர்களும், இன்னும் நம் வசனங்களைப்(புறக்கணித்து) விட்டு மறந்தவர்களாக இருக்கின்றனரே அவர்களும் - (ஆகிய)
Saheeh International
Indeed, those who do not expect the meeting with Us and are satisfied with the life of this world and feel secure therein and those who are heedless of Our signs -
اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்مَاْوٰٮهُمُஅவர்களுடைய தங்குமிடம்النَّارُநரகம்தான்بِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்يَكْسِبُوْنَ‏செய்கிறார்கள்
உலா'இக ம'வாஹுமுன் னாரு Bபிமா கானூ யக்ஸிBபூன்
முஹம்மது ஜான்
அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகிய) இவர்கள், இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.
IFT
அவர்களின் புகலிடம் (தங்களின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறையினால்) அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணமாக நரகமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகந்தான்.
Saheeh International
For those their refuge will be the Fire because of what they used to earn.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ یَهْدِیْهِمْ رَبُّهُمْ بِاِیْمَانِهِمْ ۚ تَجْرِیْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَ عَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநற்செயல்களைيَهْدِيْهِمْநேர்வழி செலுத்துவான்/அவர்களைرَبُّهُمْஇறைவன்/அவர்களுடையبِاِيْمَانِهِمْ‌ۚஅவர்களின் நம்பிக்கையின் காரணமாகتَجْرِىْஓடுகின்றمِنْ تَحْتِهِمُஅவர்களுக்குக் கீழ்الْاَنْهٰرُநதிகள்فِىْ جَنّٰتِசொர்க்கங்களில்النَّعِيْمِ‏இன்பமிகு
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி யஹ்தீஹிம் ரBப்Bபுஹும் Bபி ஈமானிஹிம் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு Fபீ ஜன்னாதின் ன'ஈம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மிக்க இன்பம் தரும் சொர்க்கங்களுக்குரிய வழியில் செலுத்துகிறான்.
IFT
ஆனால், உண்மையில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அதாவது, இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொண்டு) நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தார்களோ அவர்களை, அவர்களின் ஈமான் நம்பிக்கையின் காரணத்தால் அவர்களுடைய இறைவன் நேர்வழியில் செலுத்துவான். அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில், அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுடைய இரட்சகன் அவர்களின், விசுவாசத்தின் காரணமாக அவர்களுக்கு நேர்வழி காட்டுவான், இன்பந்தரும் சுவனங்களில் (வசிக்கும்) அவர்களுக்குக்கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.
Saheeh International
Indeed, those who have believed and done righteous deeds - their Lord will guide them because of their faith. Beneath them rivers will flow in the Gardens of Pleasure.
دَعْوٰىهُمْ فِیْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَتَحِیَّتُهُمْ فِیْهَا سَلٰمٌ ۚ وَاٰخِرُ دَعْوٰىهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
دَعْوٰٮهُمْஅவர்களின் பிரார்த்தனைفِيْهَاஅதில்سُبْحٰنَكَநீ மிகப் பரிசுத்தமானவன்اللّٰهُمَّஅல்லாஹ்வேوَ تَحِيَّـتُهُஇன்னும் அவர்களின் முகமன்فِيْهَاஅதில்سَلٰمٌ‌ۚஸலாம்وَاٰخِرُஇறுதிدَعْوٰٮهُمْபிரார்த்தனையின்/அவர்களுடையاَنِ الْحَمْدُநிச்சயமாக புகழ்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவன்الْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
தஃவாஹும் Fபீஹா ஸுBப்ஹானகல் லாஹும்ம வ தஹிய்யதுஹும் Fபீஹா ஸலாம்; வ ஆகிரு தஃவாஹும் அனில் ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அதில் அவர்கள்: “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்கள் (நுழைந்ததும்) ‘‘எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்; (நீ மிகப் பரிசுத்தமானவன்)'' என்று கூறுவார்கள். அதில் (தங்கள் தோழர்களைச் சந்திக்கும்போதெல்லாம்) ‘‘ஸலாமுன் (அலைக்கும்)'' என்று முகமன் கூறுவார்கள். முடிவில் ‘‘புகழனைத்தும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபாலிக்கின்றவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமானது'' என்று புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள்.
IFT
“இறைவா! நீயே தூய்மையானவன்” என்பதே அங்கு அவர்களின் துதியாக இருக்கும். மேலும், “சாந்தி நிலவட்டும்!” என்பதே அவர்களின் வாழ்த்தாக இருக்கும். மேலும், “அகிலத்தார்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்பதே அவர்களுடைய அனைத்து விஷயங்களின் முடிவுரையாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவற்றில் அவர்களின் பிரார்த்தனையாகிறது “எங்கள் அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன் என்பதாகும், அதில் (ஒருவர் மற்றவருக்கு கூறும்) அவர்களுடைய காணிக்ககையாவது “ஸலாமுன் (சாந்தி உண்டாவதாக)” என்பதாகும், இன்னும் புகழனைத்தும், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” என்பது அவர்களுடைய பிரார்த்தனையின் முடிவாக இருக்கும்.
Saheeh International
Their call therein will be, "Exalted are You, O Allah," and their greeting therein will be, "Peace." And the last of their call will be, "Praise to Allah, Lord of the worlds!"
وَلَوْ یُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَیْرِ لَقُضِیَ اِلَیْهِمْ اَجَلُهُمْ ؕ فَنَذَرُ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا فِیْ طُغْیَانِهِمْ یَعْمَهُوْنَ ۟
وَلَوْ يُعَجِّلُஅவசரப்படுத்தினால்اللّٰهُஅல்லாஹ்(வும்)لِلنَّاسِமனிதர்களுக்குالشَّرَّதீங்கைاسْتِعْجَالَهُمْஅவர்கள் அவசரப்படுவதுபோல்بِالْخَيْرِநன்மையைلَـقُضِىَமுடிக்கப்பட்டிருக்கும்اِلَيْهِمْஅவர்களுக்குاَجَلُهُمْ‌ؕதவணைக் காலம்/ அவர்களுடையفَنَذَرُஆகவே விட்டுவிடுகிறோம்الَّذِيْنَஎவர்கள்لَا يَرْجُوْنَஆதரவு வைக்க மாட்டார்கள்لِقَآءَنَاநம் சந்திப்பைفِىْஇல்طُغْيَانِهِمْஅவர்களுடைய வழிகேடுيَعْمَهُوْنَ‏கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
வ லவ் யு'அஜ்ஜிலுல் லாஹு லின்னாஸிஷ் ஷர்ர ஸ்திஃ ஜாலஹும் Bபில் கய்ரி லகுளிய இலய்ஹிம் 'அஜலுஹும் Fப னதருல் லதீன லா யர்ஜூன லிகா'அனா Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
முஹம்மது ஜான்
நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நன்மையை அடைய (மனிதர்கள்) அவசரப்படுவதைப் போல் அல்லாஹ்வும் (குற்றம் செய்த) மனிதர்களுக்குத் தீங்கிழைக்க அவசரப்பட்டால் (இதுவரை) நிச்சயமாக அவர்களுடைய காலம் முடிவு பெற்றேயிருக்கும். ஆகவே, (மறுமையில்) நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாதவர்களை அவர்களுடைய வழிகேட்டிலேயே தட்டழிந்து கெட்டலையும்படி (இம்மையில் சிறிது காலம்) நாம் விட்டு வைக்கிறோம்.
IFT
மனிதர்கள் (உலகின்) நன்மைகளைக் கோருவதில் எந்த அளவு அவசரப்படுகின்றார்களோ அந்த அளவு மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதில் அல்லாஹ்வும் அவசரங் காட்டினால், அவர்களின் செயல்பாட்டிற்கான அவகாசம் என்றைக்கோ முடிக்கப்பட்டு விட்டிருக்கும். (ஆனால் இது நமது நியதி அல்ல.) எனவே, எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ அவர்களை அவர்களின் வரம்பு மீறிய செயல்களிலேயே உழன்று கொண்டிருக்கும்படி நாம் விட்டுவிடுகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களுக்கு நன்மையை அடைய அவர்கள் அவசரப்படுவதைப்போல், (கோபத்தில் மனிதர்கள், தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதகமாக பிரார்த்தித்துக் கேட்ட) தீமையை (அவர்களுக்கு) அல்லாஹ்வும் அவசரப்பட்டிருந்தால் (இது வரையில்) நிச்சயமாக அவர்களுடைய காலம் அவர்களுக்கு முடிக்கப் பெற்றே இருக்கும; ஆகவே, நம்முடைய சந்திப்பை (அதன் மூலம் ஏற்படும் தண்டனையை) பயப்படாதவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே தட்டழிந்து கெட்டலையும்படி (இம்மையில்) நாம், விட்டுவிடுகிறோம்.
Saheeh International
And if Allah was to hasten for the people the evil [they invoke] as He hastens for them the good, their term would have been ended for them. But We leave the ones who do not expect the meeting with Us, in their transgression, wandering blindly.
وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ قَآىِٕمًا ۚ فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ یَدْعُنَاۤ اِلٰی ضُرٍّ مَّسَّهٗ ؕ كَذٰلِكَ زُیِّنَ لِلْمُسْرِفِیْنَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَاِذَا مَسَّதீண்டினால்الْاِنْسَانَமனிதனைالضُّرُّதுன்பம்دَعَاபிரார்த்திக்கிறான்نَاநம்மிடம்لِجَنْۢبِهٖۤஅவன் தன் விலாவின் மீதுاَوْஅல்லதுقَاعِدًاஉட்கார்ந்தவனாகاَوْஅல்லதுقَآٮِٕمًا ۚநின்றவனாகفَلَمَّا كَشَفْنَاநாம் நீக்கிவிட்டபோதுعَنْهُஅவனை விட்டுضُرَّهٗஅவனுடைய துன்பத்தைمَرَّசெல்கின்றான்كَاَنْ لَّمْ يَدْعُنَاۤஅவன் நம்மை அழைக்காதது போன்றுاِلٰى ضُرٍّதுன்பத்திற்குمَّسَّهٗ‌ؕதீண்டியது/அவனைكَذٰلِكَஇவ்வாறுزُيِّنَஅலங்கரிக்கப்பட்டனلِلْمُسْرِفِيْنَவரம்பு மீறிகளுக்குمَاஎவைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்கின்றனர்
வ இதா மஸ்ஸல் இன்ஸானள் ளுர்ரு த'ஆனா லி ஜம்Bபிஹீ அவ் கா'இதன் அவ் கா'இமன் Fபலம்மா கஷFப்னா 'அன்ஹு ளுர்ரஹூ மர்ர க அன் லம் யத்'உனா இலா ளுர்ரின் மஸ்ஸஹ்; கதாலிக Zஜுய்யின லில்முஸ்ரிFபீன மா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
அப்துல் ஹமீது பாகவி
மனிதனுக்கு ஒரு தீங்கேற்பட்டால் (அதை நீக்கும்படி) அவன் தன் (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிரார்த்திக்கிறான். ஆனால், அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கிவிட்டாலோ அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்று விடுகிறான்.வரம்பு மீறுகின்ற (இவர்களுக்கு) இவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன.
IFT
மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில், அவனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். ஆனால், நாம் அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நீக்கிவிடும் போது, அவன் தனக்கு ஏற்பட்டிருந்த துன்பத்திற்காக எப்போதுமே நம்மிடம் பிரார்த்திக்காதவன் போல் சென்று விடுகின்றான்! வரம்பு மீறி நடப்பவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் இவ்வாறே அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதனை துன்பம் தீண்டுமானால் (அதனை நீக்குமாறு) அவன் (சாய்ந்து) படுத்தவனாக, அல்லது உட்கார்ந்தவனாக, அல்லது நின்றவனாக நம்மை அவன் (பிரார்த்தித்து) அழைக்கிறான், பின்னர், அவனுடைய துன்பத்தை அவனைவிட்டு நாம் நீக்கிவிட்டோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதது போல் (புறக்கணித்துச்) சென்று விடுகிறான், வரம்பு மீறுவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)து இவ்வாறு அலங்காரமாக ஆக்கப்பட்டுவிட்டது.
Saheeh International
And when affliction touches man, he calls upon Us, whether lying on his side or sitting or standing; but when We remove from him his affliction, he continues [in disobedience] as if he had never called upon Us to [remove] an affliction that touched him. Thus is made pleasing to the transgressors that which they have been doing.
وَلَقَدْ اَهْلَكْنَا الْقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْا ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا ؕ كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟
وَلَقَدْ اَهْلَـكْنَاதிட்டமாக அழித்துவிட்டோம்الْـقُرُوْنَதலைமுறைகளைمِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னிருந்தلَمَّا ظَلَمُوْا ۙஅவர்கள் அநியாயம் செய்தபோதுوَجَآءَتْهُمْஇன்னும் வந்தனர்/அவர்களிடம்رُسُلُهُمْதூதர்கள்/ அவர்களுடையبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளை கொண்டுوَمَا كَانُوْا لِيُـؤْمِنُوْا ؕஅவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லைكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىநாம் கூலி கொடுப்போம்الْقَوْمَமக்களுக்குالْمُجْرِمِيْنَ‏குற்றம்புரிகின்றவர்கள்
வ லகத் அஹ்லக்னல் குரூன மின் கBப்லிகும் லம்மா ளலமூ வ ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில் Bபய்யினாதி வமா கானூ லியு'மினூ; கதாலிக னஜ்Zஜில் கவ்மல் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பினரை அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்தனர். எனினும் (அவற்றை) அவர்கள் நம்பவேயில்லை. குற்றம் செய்யும் மற்ற மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடு(த்துத் தண்டி)ப்போம்.
IFT
(மக்களே) உங்களுக்கு முன்னர் வாழ்ந்த பல சமுதாயத்தார்களை அவர்கள் கொடுமைகள் புரிந்தபோது நாம் அழித்துவிட்டோம். அவர்களிடமோ அவர்களின் தூதர்கள் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தனர்; ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே இல்லை. இவ்வாறே குற்றம் புரியும் கூட்டத்தாருக்கு அவர்களின் குற்றத்திற்கான கூலியை நாம் அளிக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினரை, அவர்கள் அநியாயம் செய்துவிட்டபோது திட்டமாக நாம் அழித்துவிட்டோம், அவர்களிடம் (நம்மால்) அனுப்பப்பட்ட அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளையே கொண்டுவந்தனர். (அவற்றை) அவர்கள் நம்புபவர்களாகவும் இல்லை, குற்றவாளிகளான சமூகத்தினருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுத்துத் தண்டி)க்கின்றோம்.
Saheeh International
And We had already destroyed generations before you when they wronged, and their messengers had come to them with clear proofs, but they were not to believe. Thus do We recompense the criminal people.
ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟
ثُمَّபிறகுجَعَلْنٰكُمْஆக்கினோம்/ உங்களைخَلٰٓٮِٕفَபிரதிநிதிகளாகفِى الْاَرْضِபூமியில்مِنْۢ بَعْدِهِمْஅவர்களுக்குப் பின்னர்لِنَـنْظُرَநாம் கவனிப்பதற்காகكَيْفَஎப்படிتَعْمَلُوْنَ‏நீங்கள் செய்கிறீர்கள்
தும்ம ஜ'அல்னாகும் கலா'இFப Fபில் அர்ளி மின் Bபஃதிஹிம் லி னன்ளுர கய்Fப தஃமலூன்
முஹம்மது ஜான்
நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை (அவர்களுடைய) பூமிக்கு அதிபதிகளாக்கி, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கவனித்து வருகிறோம்.
IFT
பின்னர், அவர்களுக்குப் பிறகு பூமியில் அவர்களுடைய இடத்தில் இப்பொழுது உங்களை அமர்த்தினோம்; நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நீங்கள் எவ்வாறு செய்கின்றீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக பூமியில் அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுக்கு) பின் தோன்றல்களாக நாம் ஆக்கினோம்.
Saheeh International
Then We made you successors in the land after them so that We may observe how you will do.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ قَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَیْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ ؕ قُلْ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَفْسِیْ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ۚ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
وَاِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஇவர்கள் மீதுاٰيَاتُنَاவசனங்கள்/நம்بَيِّنٰتٍ‌ ۙதெளிவான(வை)قَالَகூறுகின்றனர்الَّذِيْنَ لَا يَرْجُوْنَஎவர்கள்/ஆதரவு வைக்கமாட்டார்கள்لِقَآءَنَاநம் சந்திப்பைائْتِவாரீர்بِقُرْاٰنٍஒரு குர்ஆனைக் கொண்டுغَيْرِஅல்லாதهٰذَاۤஇதுاَوْஅல்லதுبَدِّلْهُ‌ ؕமாற்றுவீராக/அதைقُلْகூறுவீராகمَا يَكُوْنُ لِىْۤமுடியாது/என்னால்اَنْநான்மாற்றுவதுاُبَدِّلَهٗஅதைمِنْ تِلْقَآئِபுறத்திலிருந்துنَـفْسِىْ ۚஎன்اِنْ اَتَّبِعُபின்பற்ற மாட்டேன்اِلَّاதவிரمَاஎதுيُوْحٰۤىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَىَّ‌ ۚஎனக்குاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اِنْ عَصَيْتُநான் மாறுசெய்தால்رَبِّىْஎன் இறைவனுக்குعَذَابَவேதனையைيَوْمٍநாளின்عَظِيْمٍ‏மகத்தான
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன லா யர்ஜூன லிகா'அ ன'தி Bபி குர்'ஆனின் கய்ரி ஹாதா அவ் Bபத்தில்ஹ்; குல் மா யகூனு லீ 'அன் 'உBபத்திலஹூ மின் தில்கா'இ னFப்ஸீ இன் அத்தBபி'உ இல்லா மா யூஹா இலய்ய இன்னீ அகாFபு இன் 'அஸய்து ரBப்Bபீ 'அதாBப யவ்மின் 'அளீம்
முஹம்மது ஜான்
அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘இது அல்லாத வேறொரு குர்ஆனை நீர் கொண்டு வருவீராக; அல்லது எங்கள் இஷ்டப்படி இதை மாற்றிவிடுவீராக'' என்று கூறுகின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர, (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக.
IFT
மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பாதவர்கள், “இதைத் தவிர வேறொரு குர்ஆனைக் கொண்டு வாரும்; அல்லது இதில் கொஞ்சம் மாற்றம் செய்யும்!” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “என் விருப்பப்படி அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்வது என் பணியல்ல. எனக்கு அறிவிக்கப்படுகின்ற இறைச்செய்தியைத்தான் நான் பின்பற்றுகின்றேன். நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் ஒரு மாபெரும் பயங்கர நாளின் வேதனைக்கு அஞ்சுகின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், (மறுமையில்) நம்முடைய சந்திப்பை (அதன்மூலம் ஏற்படும் தண்டனையை) பயப்படாத (இ)வர்கள் “இதல்லாத (வேறொரு) குர் ஆனை நீர் கொண்டுவாரும் அல்லது (நாங்கள் விரும்புகிறவாறு) இதனை மாற்றிவிடும்” என்று கூறுகின்றனர், (அதற்கு “நீங்கள் விரும்புகின்றவாறு) நான் என் புறத்திலிருந்து இதனை மாற்றிவிட எனக்கு எவ்வித உரிமையுமில்லை, எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை, என்னுடைய இரட்சகனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளுடைய வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
And when Our verses are recited to them as clear evidences, those who do not expect the meeting with Us say, "Bring us a Qur’an other than this or change it." Say, [O Muhammad], "It is not for me to change it on my own accord. I only follow what is revealed to me. Indeed I fear, if I should disobey my Lord, the punishment of a tremendous Day."
قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَیْكُمْ وَلَاۤ اَدْرٰىكُمْ بِهٖ ۖؗ فَقَدْ لَبِثْتُ فِیْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّوْ شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்مَاநான் ஓதியிருக்கவும் மாட்டேன்تَلَوْتُهٗஇதைعَلَيْكُمْஉங்கள் மீதுوَلَاۤஇன்னும் அவன் அறிவித்திருக்கவும் மாட்டான்اَدْرٰٮكُمْஉங்களுக்குبِهٖ ۖ இதைفَقَدْ لَبِثْتُதிட்டமாக வசித்துள்ளேன்فِيْكُمْஉங்களுடன்عُمُرًاஒரு (நீண்ட) காலம்مِّنْ قَبْلِهٖ ؕஇதற்கு முன்னர்اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
குல் லவ் ஷா'அல் லாஹு மா தலவ்துஹூ 'அலய்கும் வ லா அத்ராகும் Bபிஹீ Fபகத் லBபித்து Fபீகும் 'உமுரன் மின் கBப்லிஹ்; அFபலா தஃகிலூன்
முஹம்மது ஜான்
“(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்,) கூறுவீராக: ‘‘(உங்களுக்கு நான் இதை ஓதிக் காண்பிக்கக் கூடாதென்று) அல்லாஹ் எண்ணியிருந்தால், நான் இதை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்கவும் மாட்டேன். அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் வசித்துள்ளேன் (அல்லவா? நான் பொய் சொல்பவன் அல்ல என்பதை நீங்கள் நன்கறிந்திருக்கிறீர்கள். இவ்வளவுகூட), நீங்கள் அறிந்துகொள்ள முடியாதா?
IFT
மேலும், நீர் கூறும்: “(நான் ஓதிக் காண்பிக்கக் கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், நான் உங்களுக்கு இந்தக் குர்ஆனை ஒருபோதும் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும், அல்லாஹ்வும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். இதற்கு முன்னர் நீண்ட காலம் நான் உங்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கின்றேன். நீங்கள் சிந்தித்துணர வேண்டாமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் நாடியிருநதால், நான் இதனை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன், இதனை உங்களுக்கு அவன் அறிவித்திருக்கவுமாட்டான், ஆகவே, நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் திட்டமாக தங்கியிருக்கிறேன், ஆகவே, (இதை) நீங்கள் விளங்கிக்கொள்ளக்கூடாதா? என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Saheeh International
Say, "If Allah had willed, I would not have recited it to you, nor would He have made it known to you, for I had remained among you a lifetime before it. Then will you not reason?"
فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ اِنَّهٗ لَا یُفْلِحُ الْمُجْرِمُوْنَ ۟
فَمَنْயார்?اَظْلَمُபெரும் அநியாயக்காரன்مِمَّنِஎவனைவிடافْتَـرٰىஇட்டுக்கட்டினான்عَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்வின்كَذِبًاபொய்யைاَوْஅல்லதுكَذَّبَபொய்ப்பித்தான்بِاٰيٰتِهٖ ؕஅவனுடைய வசனங்களைاِنَّهٗநிச்சயமாகلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்(கள்)الْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகள்
Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுல் முஜ்ரிமூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இந்த) குற்றவாளிகள் வெற்றி அடையவே மாட்டார்கள்.
IFT
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யென்று கூறுபவனைவிட பெரிய அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் ஒருபோதும் வெற்றியடையமாட்டார்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனைச் செய்பவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் வெற்றியடையமாட்டார்கள்.
Saheeh International
So who is more unjust than he who invents a lie about Allah or denies His signs? Indeed, the criminals will not succeed.
وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ وَیَقُوْلُوْنَ هٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ ؕ قُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا یَعْلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟
وَيَعْبُدُوْنَஇன்னும் அவர்கள் வணங்குகிறார்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمَا لَا يَضُرُّஎதை/தீங்கிழைக்காதுهُمْதங்களுக்குوَلَا يَنْفَعُهُمْஇன்னும் பலனளிக்காது / தங்களுக்குوَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்هٰٓؤُلَاۤءِஇவைشُفَعَآؤُசிபாரிசாளர்கள்نَاஎங்கள்عِنْدَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்விடம்قُلْகூறுவீராகاَتُـنَـبِّــــٴُـوْنَஅறிவிக்கிறீர்களா?اللّٰهَஅல்லாஹ்வுக்குبِمَاஎதைلَا يَعْلَمُஅறிய மாட்டான்فِى السَّمٰوٰتِவானங்களில்وَلَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியில்سُبْحٰنَهٗஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَتَعٰلٰىஇன்னும் உயர்ந்து விட்டான்عَمَّاஎவற்றைவிட்டுيُشْرِكُوْنَ‏இணைவைக்கிறார்கள்
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும் வ யகூலூன ஹா'உலா'இ ஷுFப'ஆ 'உனா 'இன்தல் லாஹ்; குல் 'அ துனBப்Bபி 'ஊனல் லாஹ Bபி மா லா யஃலமு Fபிஸ் ஸமாவாதி வலா Fபில் அர்ள்; ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
முஹம்மது ஜான்
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை விட்டுவிட்டு அவர்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய முடியாதவற்றை வணங்குவதுடன் ‘‘இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை'' என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாத(வை உள்ளனவா? அ)வற்றை (இவை மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட மிக உயர்ந்தவன்'' என்று கூறுவீராக.
IFT
இவர்கள், அல்லாஹ்வை விட்டுவிட்டு யாதொரு நஷ்டத்தையும், இலாபத்தையும் தங்களுக்கு அளித்திட இயலாதவற்றை வணங்குகின்றார்கள். மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் என்றும் கூறுகின்றார்கள். (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா?” இவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் தூய்மையானவனும் உயர்ந்தவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வையன்றி, தங்களுக்கு இடர் அளிக்காதவற்றை இன்னும், தங்களுக்குப் பலன் அளிக்காதவற்றை அவர்கள் வணங்குகிறார்கள், “இவர்கள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு பரிந்துரையாளர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர், (ஆகவே, நபியே! நீர் அவர்களிடம்) “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவைகளை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? (அவனோ யாவையும் நன்கறிந்தவன்) அவன் மிகப் பரிசுத்தமானவன், அவர்கள் இணைவைப்பவைகளை விட்டும் உயர்வடைந்துவிட்டான்” என்று கூறுவீராக!
Saheeh International
And they worship other than Allah that which neither harms them nor benefits them, and they say, "These are our intercessors with Allah." Say, "Do you inform Allah of something He does not know in the heavens or on the earth?" Exalted is He and high above what they associate with Him.
وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ فِیْمَا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைالنَّاسُமனிதர்கள்اِلَّاۤதவிரاُمَّةًஒரு சமுதாயமாகوَّاحِدَةًஒரேفَاخْتَلَفُوْا‌ ؕபிறகு மாறுபட்டனர்وَلَوْلَاஇருக்கவில்லையெனில்كَلِمَةٌசொல்سَبَقَتْமுந்தியதுمِنْ رَّبِّكَஉம் இறைவனின்لَـقُضِىَதீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُஅவர்களுக்கிடையில்فِيْمَاஎவற்றில்فِيْهِஅவற்றில்يَخْتَلِفُوْنَ‏மாறுபடுகின்றனர்
வமா கானன் னாஸு இல்லா உம்மத(ன்)வ் வாஹிததன் Fப க்தலFபூ; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும் Fபீ மா Fபீஹி யக்தலிFபூன்
முஹம்மது ஜான்
மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு வகுப்பினராகவே இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பல வகுப்பினராகப்) பிரிந்து விட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில் தான் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று நபியே!) உமது இறைவனின் வாக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்கள் மாறுபாடு செய்து கொண்டிருந்த விஷயத்தில் அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிவு பெற்றே இருக்கும்!
IFT
மேலும், (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகவே இருந்தனர்; பின்னர் பல்வேறு கொள்கைகளையும், வழிமுறைகளையும் தோற்றுவித்தனர். உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்பட்டிராவிட்டால், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மனிதர்கள் (தொடக்கத்தில்) ஒரே சமுதாயத்தினராகவே தவிர இருக்கவில்லை, பின்னரே அவர்கள் (பிரிந்து) மாறுபட்டுவிட்டனர். மேலும் (ஒவ்வொரு காரியத்திற்கும் தவணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற) உமது இரட்சகனின் வாக்கு முந்தியிருக்காவிடில், அவர்கள் எதில் மாறுபட்டிருக்கின்றனரோ அதைப்பற்றி அவர்களிடையே முடிவு செய்யப்பட்டேயிருக்கும்.
Saheeh International
And mankind was not but one community [united in religion], but [then] they differed. And if not for a word that preceded from your Lord, it would have been judged between them [immediately] concerning that over which they differ.
وَیَقُوْلُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ۚ فَقُلْ اِنَّمَا الْغَیْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْا ۚ اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟۠
وَيَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறுகின்றனர்لَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட்டிருக்க வேண்டாமா?عَلَيْهِஅவர் மீதுاٰيَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖ‌ ۚஅவருடைய இறைவன்فَقُلْஆகவே, கூறுவீராகاِنَّمَاஎல்லாம்الْغَيْبُமறைவானவைلِلّٰهِஅல்லாஹ்வுக்குரியனفَانْتَظِرُوْا‌ ۚஆகவே எதிர் பார்த்திருங்கள்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏எதிர்பார்ப்பவர்களில்
வ யகூலூன லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதுன் மிர் ரBப்Bபிஹீ Fபகுல் இன்னமல் கய்Bபு லில்லாஹி Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
முஹம்மது ஜான்
“மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(தவிர ‘‘நாம் விரும்புகிறவாறு) ஏதாவது ஓர் அத்தாட்சி (இறைவனின் நபியாகிய) அவர் மீது அவருடைய இறைவனால் இறக்கப்பட வேண்டாமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் விரும்புகிறவாறு அத்தாட்சியை இறக்கி வைக்காத காரணம் உங்களுக்கு மறைவானது.) மறைவான விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (ஆகவே, அதை நீங்கள் அறிய விரும்பினால்) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் (உங்கள் விஷமக் கூற்றினால் உங்களுக்கு என்ன கேடு வருகிறதென்பதை) உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.''
IFT
மேலும், “இந்த நபியின் மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்று இறக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். நபியே! நீர் கூறும்: “மறைவானவற்றுக்கு உரியவன் அல்லாஹ்வே ஆவான். நீங்கள் எதிர்பாருங்கள்; நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “(முன்பிருந்த நபிமார்களுக்கு கொடுக்கப்பட்டவாறு) ஏதோர் அத்தாட்சி (அல்லாஹ்வின் தூதராகிய) அவர்மீது அவருடைய இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்றும் அவர்கள் கூறுகின்றனர், அதற்கு மறைவானவைகள் அல்லாஹ்விற்கே உரியன, ஆகவே, நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போரில் இருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
And they say, "Why is a sign not sent down to him from his Lord?" So say, "The unseen is only for Allah [to administer], so wait; indeed, I am with you among those who wait."
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِیْۤ اٰیَاتِنَا ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا ؕ اِنَّ رُسُلَنَا یَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ ۟
وَاِذَاۤ اَذَقْنَاநாம் சுவைக்க வைத்தால்النَّاسَமனிதர்களுக்குرَحْمَةًஒரு கருணையைمِّنْۢ بَعْدِபின்னர்ضَرَّآءَஒரு துன்பம்مَسَّتْهُمْதீண்டியது/தங்களைاِذَاஅப்போதுلَهُمْஅவர்களுக்குمَّكْرٌஒரு சூழ்ச்சிفِىْۤ اٰيَاتِنَا‌ ؕவசனங்களில்/நம்قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்اَسْرَعُமிகத் தீவிரமானவன்مَكْرًا‌ ؕசூழ்ச்சி செய்வதில்اِنَّநிச்சயமாகرُسُلَنَاநம் தூதர்கள்يَكْتُبُوْنَபதிவு செய்கிறார்கள்مَاஎதைتَمْكُرُوْنَ‏நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள்
வ இதா அதக்னன் னாஸ ரஹ்மதன் மின் Bபஃதி ளர்ரா'அ மஸ்ஸத் ஹும் இதா லஹும் மக்ருன் Fபீ ஆயாதினா; குலில் லாஹு அஸ்ர'உ மக்ரா; இன்ன ருஸுலனா யக்துBபூன மா தம்குரூன்
முஹம்மது ஜான்
மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; “திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இம்)மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கி (பின்னர் நம்) அருளைக் கொண்டு அவர்கள் இன்பமடையும்படி நாம் செய்தால் (அதற்கு அவர்கள் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) உடனே அவர்கள் நம் வசனங்களில் (தவறான அர்த்தம் கற்பிக்க) சூழ்ச்சி செய்கின்றனர். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிக தீவிரமானவன். (எனவே அவனது சூழ்ச்சி உங்கள் சூழ்ச்சியைவிட முந்திவிடும்)'' என்று கூறுவீராக. நிச்சயமாக நம் தூதர்(களாகிய வானவர்)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
IFT
மனிதர்(களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்)களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் நாம் அவர்களுக்கு அருட் கொடை(யின் சுவை)யை சுவைக்கச் செய்தால், உடனே அவர்கள் நம் சான்றுகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யத் தொடங்கி விடுகின்றார்கள். நீர் கூறுவீராக: “அல்லாஹ் சூழ்ச்சிகளை (முறியடிக்கச்) செய்வதில் மிக விரைவானவன். அவனுடைய வானவர்கள் நீங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மனிதர்களை-அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின் ஒரு அருளைக்கொண்டு இன்பமடையும்படி நாம் செய்தால், அச்சமயம் அவர்கள் நம் வசனங்களில் (தவறான பொருள் கற்பிக்கச்) சூழ்ச்சி செய்வது அவர்களுக்கு (வழக்கமாக) உண்டு, (அதற்கு நபியே! உங்கள் சூழ்ச்சியை முறியடிக்க அல்லாஹ்வின் சூழ்ச்சி முந்திக் கொள்ளும், அவன்) சூழ்ச்சியால் மிகத்தீவிரமானவன் என்று கூறுவீராக! நிச்சயமாக நம்முடைய தூதர்(களாகிய மலக்கு)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
Saheeh International
And when We give the people a taste of mercy after adversity has touched them, at once they conspire against Our verses. Say, "Allah is swifter in strategy." Indeed, Our messengers [i.e., angels] record that which you conspire.
هُوَ الَّذِیْ یُسَیِّرُكُمْ فِی الْبَرِّ وَالْبَحْرِ ؕ حَتّٰۤی اِذَا كُنْتُمْ فِی الْفُلْكِ ۚ وَجَرَیْنَ بِهِمْ بِرِیْحٍ طَیِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِیْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِیْطَ بِهِمْ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ لَىِٕنْ اَنْجَیْتَنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِیْنَ ۟
هُوَஅவன்الَّذِىْஎத்தகையவன்يُسَيِّرُபயணிக்கவைக்கிறான்كُمْஉங்களைفِى الْبَرِّநிலத்திலும்وَالْبَحْرِ‌ؕஇன்னும் நீரிலும்حَتّٰۤىஇறுதியாகاِذَاபோதுكُنْتُمْஇருக்கின்றீர்கள்فِى الْفُلْكِ ۚகப்பல்களில்وَ جَرَيْنَஇன்னும் பயணித்தனبِهِمْஅவர்களை சுமந்துبِرِيْحٍஒரு காற்றால்طَيِّبَةٍநல்லوَّفَرِحُوْاஇன்னும் அவர்கள் மகிழ்ந்தனர்بِهَاஅதன்மூலம்جَآءَتْهَاவந்தது/அவற்றுக்குرِيْحٌகாற்றுعَاصِفٌபுயல்وَّجَآءَஇன்னும் வந்தனهُمُஅவர்களுக்குالْمَوْجُஅலைகள்مِنْஇருந்துكُلِّஎல்லாمَكَانٍஇடம்وَّظَنُّوْۤاஇன்னும் அவர்கள் எண்ணினர்اَنَّهُمْநிச்சயமாக தாம்اُحِيْطَஅழிக்கப்பட்டோம்بِهِمْ‌ ۙதாம்دَعَوُاஅவர்கள் அழைக்கின்றனர்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِيْنَதூய்மைப்படுத்தியவர்களாகلَـهُஅவனுக்குالدِّيْنَۙ வழிபாட்டைلَٮِٕنْ اَنْجَيْتَـنَاநீ பாதுகாத்தால் / எங்களைمِنْ هٰذِهٖஇதிலிருந்துلَنَكُوْنَنَّநிச்சயமாக இருப்போம்مِنَ الشّٰكِرِيْنَ‏நன்றி செலுத்துபவர்களில்
ஹுவல் லதீ யுஸய்யிருகும் Fபில் Bபர்ரி வல்Bபஹ்ரி ஹத்தா இதா குன்தும் Fபில் Fபுல்கி வ ஜரய்ன Bபிஹிம் Bபி ரீஹின் தய்யிBபதி(ன்)வ் வ Fபரிஹூ Bபிஹா ஜா'அத் ஹா ரீஹுன் 'ஆஸிFபு(ன்)வ் வ ஜா'அஹுமுல் மவ்ஜு மின் குல்லி மகானி(ன்)வ் வ ளன்னூ 'அன்னஹும் 'உஹீத Bபிஹிம் த'அ வுல்லாஹ முக்லிஸீன லஹுத் தீன ல'இன் அன்ஜய்தனா மின் ஹாதிஹீ ல னகூனன்ன மினஷ் ஷாகிரீன்
முஹம்மது ஜான்
அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி ‘‘நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு ஒரு வழியுமில்லை)'' என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி ‘‘எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்'' என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள்.
IFT
தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச் செய்பவன் அவனே! பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (தீனை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா!) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம் இறைஞ்சுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கரையில் மற்றும் கடலில் அவனே உங்களை பயணம் செய்ய வைக்கின்றான், முடிவாக, நீங்கள் கப்பல்களில் இருக்கும்போது நல்ல காற்றுடன் அவர்களை அவைகள் கொண்டு செல்கின்றன, (அவ்வாறு நன்கு அவை செல்லும்) அதனைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்திருந்த சமயத்தில் புயல்காற்று அதனிடம் வந்துவிட்டது, எல்லா இடங்களிலிருந்து அவர்களிடம் அலைகளும் வந்து விட்டன, நிச்சயமாக அவர்கள் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டார்கள், (அதிலிருந்து கரைசேர முடியாது” என்றும் அவர்கள் எண்ணிவிட்டனர், (அப்பொழுது) அல்லாஹ்வை–அவனுக்கே மார்க்கத்தை (வணக்கத்தை) கலப்பற்றதாக்கியவர்களாக (தூய உள்ளத்துடன், “எங்கள் இரட்சகனே!) இதிலிருந்து நீ எங்களை காப்பாற்றி விட்டால் நிச்சயமாக நாங்கள் (உனக்கு) நன்றி செலுத்துபவர்களில் உள்ளவர்களாக நாங்கள் இருப்போம்” என்று பிரார்த்திக்கின்றனர்.
Saheeh International
It is He who enables you to travel on land and sea until, when you are in ships and they sail with them by a good wind and they rejoice therein, there comes a storm wind and the waves come upon them from every place and they expect to be engulfed, they supplicate Allah, sincere to Him in religion, "If You should save us from this, we will surely be among the thankful."
فَلَمَّاۤ اَنْجٰىهُمْ اِذَا هُمْ یَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّمَا بَغْیُكُمْ عَلٰۤی اَنْفُسِكُمْ ۙ مَّتَاعَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ ثُمَّ اِلَیْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
فَلَمَّاۤபோதுاَنْجٰٮهُمْஅவன் பாதுகாத்தான்/அவர்களைاِذَاஅப்போதேهُمْஅவர்கள்يَبْغُوْنَவரம்பு மீறுகின்றனர்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَـقِّ‌ ؕநியாயமின்றிيٰۤـاَ يُّهَا النَّاسُமனிதர்களேاِنَّمَاஎல்லாம்بَغْيُكُمْவரம்புமீறுதல்/உங்கள்عَلٰٓى اَنْفُسِكُمْ‌ۙஉங்களுக்கே கேடானதுمَّتَاعَசொற்ப இன்பமாகும்الْحَيٰوةِவாழ்க்கைالدُّنْيَا‌இவ்வுலகثُمَّபிறகுاِلَـيْنَاநம் பக்கமேمَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்فَنُنَبِّئُكُمْஅறிவிப்போம்/உங்களுக்குبِمَاஎவற்றைكُنْتُمْஇருந்தீர்கள்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
Fபலம்மா அன்ஜாஹும் இதா ஹும் யBப்கூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; யா அய்யுஹன்னாஸு இன்னமா Bபக் யுகும் 'அலா அன்Fபுஸிகும் மதா'அல் ஹயாதித் துன்யா தும்ம இலய்னா மர்ஜி'உகும் FபனுனBப்Bபி 'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள்; மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்களெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும்; உலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் அவர்களை பாதுகாத்துக் கொண்டாலோ அவர்கள் (கரை சேர்ந்த) அச்சமயமே நியாயமின்றி பூமியில் அநியாயம் செய்யத் தலைப்படுகின்றனர். மனிதர்களே! உங்கள் அடாத செயல்கள் உங்களுக்கே கேடாக முடியும். (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவிக்கலாம். பின்னரோ நம்மிடம்தான் நீங்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை எவை என்பதை அச்சமயம் நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
IFT
ஆயினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றிவிட்டாலோ, உடனே அவர்கள் சத்தியத்திற்கு எதிராக பூமியில் வரம்பு மீறி நடக்கத் தலைப்பட்டு விடுகின்றார்கள். மக்களே! உங்களுடைய இந்த வரம்பு மீறுதல் உங்களுக்குத்தான் கேடு விளைவிக்கும். உலக வாழ்வின் அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்ப வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவன் அவர்களைக் காப்பாற்றியபொழுது, அவர்கள் (கரை சேர்க்கப்பட்ட) அந்நேரமே, நியாயமின்றி பூமியில் அழிச்சாட்டியம் செய்கின்றனர், மனிதர்களே! உங்களுடைய அழிச்சாட்டியமெல்லாம் உங்களுக்கே கேடாக முடியும், (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகமனுபவிக்கலாம், பின்னர், நம்மிடமே உங்கள் திரும்புதல் இருக்கிறது, (அப்போது) நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
Saheeh International
But when He saves them, at once they commit injustice upon the earth without right. O mankind, your injustice is only against yourselves, [being merely] the enjoyment of worldly life. Then to Us is your return, and We will inform you of what you used to do.
اِنَّمَا مَثَلُ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا یَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ ؕ حَتّٰۤی اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّیَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَیْهَاۤ ۙ اَتٰىهَاۤ اَمْرُنَا لَیْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِیْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
اِنَّمَاஎல்லாம்مَثَلُஉதாரணம்الْحَيٰوةِவாழ்க்கையின்الدُّنْيَاஉலகம்كَمَآءٍநீரைப் போன்றுاَنْزَلْنٰهُநாம் இறக்கியمِنَஇருந்துالسَّمَآءِமேகம்فَاخْتَلَطَகலந்து விட்டதுبِهٖஅதன் மூலம்نَبَاتُதாவரம்الْاَرْضِபூமியின்مِمَّاஎதிலிருந்துيَاْكُلُபுசிப்பார்(கள்)النَّاسُமனிதர்கள்وَالْاَنْعَامُؕஇன்னும் கால்நடைகளும்حَتّٰۤىஇறுதியாகاِذَاۤபோதுاَخَذَتِஎடுத்ததுالْاَرْضُபூமிزُخْرُفَهَاதன் அலங்காரத்தைوَازَّيَّنَتْஇன்னும் அலங்காரமானதுوَظَنَّஇன்னும் எண்ணினார்(கள்)اَهْلُهَاۤஅதன் உரிமையாளர்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்قٰدِرُوْنَஆற்றல் பெற்றவர்கள்عَلَيْهَاۤ ۙஅவற்றின் மேல்اَتٰٮهَاۤவந்தது அவற்றுக்குاَمْرُنَاநம் கட்டளைلَيْلًاஇரவில்اَوْஅல்லதுنَهَارًاபகலில்فَجَعَلْنٰهَاஆக்கினோம்/அவற்றைحَصِيْدًاவேரறுக்கப்பட்டதாகكَاَنْபோன்றுلَّمْ تَغْنَஅவைஇருக்கவில்லைبِالْاَمْسِ‌ ؕநேற்றுكَذٰلِكَஇவ்வாறுنُـفَصِّلُவிவரிக்கிறோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍமக்களுக்குيَّتَفَكَّرُوْنَ‏சிந்திக்கின்றார்கள்
இன்னமா மதலுல் ஹயாதித் துன்யா க மா'இன் அன்Zஜல்னாஹு மினஸ் ஸமா'இ Fபக்தலத Bபிஹீ னBபாதுல் அர்ளி மிம்மா ய'குலுன் னாஸு வல் அன்'ஆம்; ஹத்தா இதா அகததில் அர்ளு Zஜுக்ருFபஹா வZஜ்Zஜய்யனத் வ ளன்ன அஹ்லுஹா அன்னஹும் காதிரூன 'அலய்ஹா அதாஹா அம்ருனா லய்லன் அவ் னஹாரன் Fபஜ'அல்னாஹா ஹஸீதன் க 'அன் லம் தக்ன Bபில்-அம்ஸ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
முஹம்மது ஜான்
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
அப்துல் ஹமீது பாகவி
இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவற்றுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்து) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம் கட்டளை(யினால் ஓர் ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவேயில்லையென்று எண்ணக்கூடியவாறு அவற்றை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்.
IFT
(எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வுலக வாழ்க்கையின் உதாரணமெல்லாம் நீரைப் போன்றதாகும், அதை வானத்திலிருந்து நாம் இறக்கி வைத்தோம், அது மனிதர்களும், கால்நடைகளும் புசிக்கக் கூடிய புற்பூண்டு முதலியவைகளுடன் கலந்து (அவை பூத்துக் காய்த்து கதிர்வாங்கி) முடிவாக பூமி தனது செழிப்பை பிடித்து அலங்காரமும் அடைந்தபோது அதன் சொந்தக்காரர்கள், (நாளை) அதன்மீது நிச்சயமாக தாங்கள் அறுவடையை செய்ய) சக்தியுடையவர்கள் என்றும் தங்களை எண்ணிக் கொண்டிருந்தனர், (அச்சமயம்,) இரவிலோ அல்லது பகலிலோ நம்முடைய கட்டளை வந்து (அதை நாம் அழித்துவிட்டோம்.) அதனால், அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இல்லாததைப் போன்று அறுவடை செய்யப்பட்டதாக அதை நாம் ஆக்கிவிட்டோம், சிந்தித்துணரக்கூடிய சமூகத்தார்க்கு நாம் (நம்முடைய) வசனங்களை இவ்வாறே (தெளிவாக) விவரிக்கிறோம்.
Saheeh International
The example of [this] worldly life is but like rain which We have sent down from the sky that the plants of the earth absorb - [those] from which men and livestock eat - until, when the earth has taken on its adornment and is beautified and its people suppose that they have capability over it, there comes to it Our command by night or by day, and We make it as a harvest, as if it had not flourished yesterday. Thus do We explain in detail the signs for a people who give thought.
وَاللّٰهُ یَدْعُوْۤا اِلٰی دَارِ السَّلٰمِ ؕ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
وَاللّٰهُஅல்லாஹ்يَدْعُوْۤاஅழைக்கிறான்اِلٰى دَارِஇல்லத்திற்குالسَّلٰمِؕஈடேற்றத்தின்وَيَهْدِىْஇன்னும் வழிகாட்டுகிறான்مَنْஎவரைيَّشَآءُநாடுகிறான்اِلٰىபக்கம்صِرَاطٍபாதைمُّسْتَقِيْمٍ‏நேரானது
வல்லாஹு யத்'ஊ இலா தாரிஸ் ஸலாமி வ யஹ்தீ ம(ன்)ய் யஷா'உ இலா ஸிராதின் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய (சொர்க்க) வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
IFT
(இந்த நிலையற்ற வாழ்வின் மோகத்தில் நீங்கள் மயங்கிக் கிடக்கின்றீர்கள்). அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது.) தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) அல்லாஹ்வோ சாந்தி அளிக்கக்கூடிய (சுவன) வீட்டின்பால் (உங்களை) அழைக்கின்றான், மேலும், அவன் நாடியவர்களை (அதற்குரிய) நேரான வழியின்பால் செலுத்துகிறான்.
Saheeh International
And Allah invites to the Home of Peace [i.e., Paradise] and guides whom He wills to a straight path.
لِلَّذِیْنَ اَحْسَنُوا الْحُسْنٰی وَزِیَادَةٌ ؕ وَلَا یَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّةٌ ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
لِلَّذِيْنَஎவர்களுக்குاَحْسَنُواநல்லறம் புரிந்தனர்الْحُسْنٰىமிக அழகிய கூலிوَزِيَادَةٌ ؕஇன்னும் அதிகம்وَلَا يَرْهَقُஇன்னும் சூழாதுوُجُوْهَهُمْஅவர்களுடைய முகங்கள்قَتَرٌகவலைوَّلَا ذِلَّـةٌ ؕஅவர்கள் இழிவுاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَـنَّةِ‌ ۚசொர்க்கவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
லில் லதீன அஹ்ஸனுல் ஹுஸ்னா வ Zஜியாதது(ன்)வ் வலா யர்ஹகு வுஜூஹஹும் கதரு(ன்)வ் வலா தில்லஹ்; உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சுவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நன்மை செய்தவர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும். (அதனால் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.) அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்து கொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சொர்க்கவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
IFT
எவர்கள் நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு (கூலி) நன்மையே! இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப் புழுதியும் இழிவும் படியமாட்டா! அவர்கள் சுவனத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் நிலையாக வாழ்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நன்மை செய்தவர்களுக்கு(க்கூலி) நன்மையும், (அவர்கள் செய்ததைவிட) இன்னும் அதிகமும் (-அல்லாஹ்வின் கண்ணியமான முகத்தைக் காணும் பாக்கியமும்) உண்டு, அவர்கள் முகங்களை (துக்கத்தின் காரணமாக தூசிபடிந்தது போன்று) இருளோ அல்லது இழிவோ சூழந்து கொள்ளாது, நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
For them who have done good is the best [reward] - and extra. No darkness will cover their faces, nor humiliation. Those are companions of Paradise; they will abide therein eternally.
وَالَّذِیْنَ كَسَبُوا السَّیِّاٰتِ جَزَآءُ سَیِّئَةٍ بِمِثْلِهَا ۙ وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ كَاَنَّمَاۤ اُغْشِیَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّیْلِ مُظْلِمًا ؕ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَالَّذِيْنَஎவர்கள்كَسَبُواசெய்தனர்السَّيِّاٰتِதீமைகளைجَزَآءُ سَيِّئَةٍ ۢகூலி/தீமையின்بِمِثْلِهَا ۙஅது போன்றதைக் கொண்டுوَتَرْهَقُهُمْஇன்னும் சூழும்/அவர்களைذِلَّـةٌ  ؕஇழிவுمَاஇல்லைلَهُمْஅவர்களுக்குمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْ عَاصِمٍ‌ ۚபாதுகாப்பவர் ஒருவரும்كَاَنَّمَاۤபோன்றுاُغْشِيَتْசூழப்பட்டனوُجُوْهُهُمْஅவர்களுடைய முகங்கள்قِطَعًاஒரு பாகத்தால்مِّنَ الَّيْلِஇரவின்مُظْلِمًا ؕஇருண்டதுاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ ؕநரகவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வல்லதீன கஸBபுஸ் ஸய்யி ஆதி ஜZஜா'உ ஸய்யி'அதின் Bபிமித்லிஹா வ தர்ஹகுஹும் தில்லஹ்; மா லஹும் மினல் லாஹி மின் 'ஆஸிமின் க அன்னமா உக்ஷியத் வுஜூஹுஹும் கித'அன் மினல் லய்லி முள்லிமா; உலா'இக அஸ்-ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப் போன்ற தீமையே! அவர்களை இழிவு வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை. இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தான். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
IFT
மேலும், தீமைகளைச் சம்பாதித்தவர்கள், அத் தீமைக்கேற்பக் கூலி பெறுவார்கள். மேலும், அவர்களை இழிவு சூழ்ந்திருக்கும்; அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுபவர் யாரும் இருக்க மாட்டார்கள். இரவின் இருட்திரைகளால் மூடப் பட்டிருப்பது போன்று அவர்களின் முகங்களில் இருள் படிந்திருக்கும். அவர்கள் நரகத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தீமைகளைச் சம்பாதித்தார்களே அத்தகையோர் அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும், அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களுக்கு, பாதுகாப்பவர் (எவரும்) இல்லை, இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகத்தால் அவர்களுடைய முகங்கள் மூடப்பட்டது போன்று (காணப்படும்.) அவர்கள் நரகவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
But they who have earned [blame for] evil doings - the recompense of an evil deed is its equivalent, and humiliation will cover them. They will have from Allah no protector. It will be as if their faces are covered with pieces of the night - so dark [are they]. Those are the companions of the Fire; they will abide therein eternally.
وَیَوْمَ نَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِیْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ ۚ فَزَیَّلْنَا بَیْنَهُمْ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِیَّانَا تَعْبُدُوْنَ ۟
وَيَوْمَநாளில்نَحْشُرُஒன்று சேர்ப்போம்هُمْஅவர்கள்جَمِيْعًاஅனைவரையும்ثُمَّபிறகுنَقُوْلُகூறுவோம்لِلَّذِيْنَஎவர்களுக்குاَشْرَكُوْاஇணைவைத்தனர்مَكَانَكُمْஉங்கள் இடத்தில்اَنْتُمْநீங்களும்وَشُرَكَآؤُஇன்னும் இணைகள்كُمْ‌ۚஉங்கள்فَزَيَّلْنَاநீக்கி விடுவோம்بَيْنَهُمْ‌அவர்களுக்கிடையில்وَقَالَஇன்னும் கூறுவார்شُرَكَآؤُஇணை(தெய்வங்)கள்هُمْஅவர்களுடையمَّا كُنْتُمْநீங்கள் இருக்கவில்லைاِيَّانَاஎங்களைتَعْبُدُوْنَ‏வணங்குகிறீர்கள்
வ யவ்ம னஹ்ஷுருஹும் ஜமீ'அன் தும்ம னகூலு லில் லதீன அஷ்ரகூ மகானகும் அன்தும் வ ஷுரகா'உகும்; FபZஜய்யல்னா Bபய்னஹும் வ கால ஷுரகா'உஹும் மா குன்தும் இய்யானா தஃBபுதூன்
முஹம்மது ஜான்
(இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்” நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
(விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி ‘‘நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்'' என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக அவர்கள் வணங்கி வந்தவை) அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்றும்,
IFT
மேலும், ஒரு நாளில் அவர்கள் அனைவரையும் (நம்முடைய நீதிமன்றத்தில்) நாம் ஒன்று திரட்டுவோம். பின்னர் இறைவனுக்கு இணைவைத்தவர்களிடம், “நீங்களும், நீங்கள் ஏற்படுத்திய கடவுளர்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். பின்னர் அவர்களுக்கிடையிலிருந்த அறிமுகமற்ற நிலையை அகற்றிவிடுவோம். அப்போது அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்கள், “நீங்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை என்று கூறுவார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளை (நபியே! அவர்களுக்கு நினைவு கூர்வீராக!) பின்னர், இணைவைத்துக் கொண்டிருந்தார்களே அவர்களுக்கு “நீங்களும் (அல்லாஹ்வின் வணக்கத்தில் கூட்டாக்கிய) உங்கள் இணையாளர்களும் உங்கள் இடத்திலேயே (அதை விட்டு நகராது) நில்லுங்கள்” என்று கூறுவோம், (பின்னர்) “எங்களை நீங்கள் வணங்கக் கூடியவர்களாக இருக்கவே இல்லை என்று அவர்களின் இணையாளர்கள் கூறியவர்களாக இருக்க அவர்களுக்கு மத்தியில் (இருந்த தொடர்பை நீக்கி) நாம் பிரித்து விடுவோம்.
Saheeh International
And [mention, O Muhammad], the Day We will gather them all together - then We will say to those who associated others with Allah, "[Remain in] your place, you and your 'partners.'" Then We will separate them, and their "partners" will say, "You did not used to worship us,
فَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنَنَا وَبَیْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِیْنَ ۟
فَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேشَهِيْدًۢاசாட்சியால்بَيْنَـنَاஎங்களுக்கிடையில்وَبَيْنَكُمْஇன்னும் உங்களுக்கிடையில்اِنْ كُنَّاநிச்சயம் நாங்கள்عَنْ عِبَادَتِكُمْவிட்டு/வழிபாடு/உங்கள்لَغٰفِلِيْنَ‏கவனமற்றவர்களாகவே
FபகFபா Bபில்லாஹி ஷஹீதன் Bபய்னனா வ Bபய்னகும் இன் குன்னா 'அன் 'இBபாததிகும் லகாFபிலீன்
முஹம்மது ஜான்
“நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
(இதற்கு) ‘‘நமக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்; நீங்கள் (எங்களை) வணங்கியதை அறவே நாங்கள் அறியவும் மாட்டோம்'' என்றும் கூறும்.
IFT
எங்களுக்கும் உங்களுக்குமிடையே அல்லாஹ்வின் சாட்சி போதுமானது. (நீங்கள் எங்களை வணங்கியிருந்தாலும்) உங்கள் வணக்கத்தை நாங்கள் அறவே அறியாதிருந்தோம்’ என்றும் கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, எங்களுக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே சாட்சியாக இருக்கப்போதுமானவன், உங்கள் வணக்கத்தைப்பற்றி நிச்சயமாக, நாங்கள் அறியாதவர்களாக இருந்தோம்” (என்றும் கூறுவர்).
Saheeh International
And sufficient is Allah as a witness between us and you that we were of your worship unaware."
هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ وَرُدُّوْۤا اِلَی اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠
هُنَالِكَஅங்குتَبْلُوْاசோதிக்கும்كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாمَّاۤஎவற்றைاَسْلَفَتْ‌அது முன்செய்ததுوَرُدُّوْۤاஇன்னும் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்مَوْلٰٮهُمُதங்கள் எஜமானன்الْحَـقِّ‌உண்மையானவன்وَضَلَّஇன்னும் மறைந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டுمَّاஎதுكَانُوْاஇருந்தனர்يَفْتَرُوْنَ‏இட்டுக்கட்டுகின்றனர்
ஹுனாலிக தBப்லூ குல்லு னFப்ஸின் மா 'அஸ்லFபத்; வ ருத்தூ இலல் லாஹி மவ்லாஹுமுல் ஹக்கி வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
முஹம்மது ஜான்
அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
அப்துல் ஹமீது பாகவி
அங்கு ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
IFT
அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தான் செய்த வினைக(ளுக்குரிய கூலிக)ளை அனுபவிப்பான். மேலும், தம்முடைய உண்மையான எஜமானனாகிய அல்லாஹ்விடம் அவர்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் கற்பனை செய்து வந்த பொய்(த் தெய்வங்)கள் அனைத்தும் அவர்களை விட்டுக் காணாமல் போய்விடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்விடத்தில் ஒவ்வோர் ஆத்மாவும் தான் முற்படுத்தியதைச் சோதித்து(க்கண் கூடாகப்பார்த்து)க் கொள்ளும், மேலும், அவர்கள் தங்களுடைய உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படுவார்கள், அவர்கள் (பொய்யாகக்)கற்பனை செய்து கொண்டிருந்தார்களே அவை அவர்களை விட்டு மறைந்தும் விடும்.
Saheeh International
There, [on that Day], every soul will be put to trial for what it did previously, and they will be returned to Allah, their master, the Truth, and lost from them is whatever they used to invent.
قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ یَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَمَنْ یُّخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَمَنْ یُّدَبِّرُ الْاَمْرَ ؕ فَسَیَقُوْلُوْنَ اللّٰهُ ۚ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ ۟
قُلْகூறுவீராகمَنْயார்يَّرْزُقُكُمْஉணவளிக்கிறார்/உங்களுக்குمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துوَالْاَرْضِஇன்னும் பூமிاَمَّنْஅல்லது யார்يَّمْلِكُஉரிமை கொள்வார்السَّمْعَசெவிوَالْاَبْصَارَஇன்னும் பார்வைகள்وَ مَنْஇன்னும் யார்?يُّخْرِجُவெளிப்படுத்துவார்الْحَـىَّஉயிருள்ளதைمِنَ الْمَيِّتِஇறந்ததிலிருந்துوَيُخْرِجُஇன்னும் வெளிப்படுத்துவார்الْمَيِّتَஇறந்ததைمِنَ الْحَـىِّஉயிருள்ளதிலிருந்துوَمَنْஇன்னும் யார்?يُّدَبِّرُநிர்வகிக்கிறான்الْاَمْرَ‌ؕகாரியத்தைفَسَيَـقُوْلُوْنَகூறுவார்கள்اللّٰهُ‌ۚஅல்லாஹ்فَقُلْகூறுவீராகاَفَلَا تَتَّقُوْنَ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
குல் மய் யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ளி அம்ம(ன்)ய் யம்லிகுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வ மய் யுக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யிதி வ யுக்ரிஜுல் மய்யித மினல் ஹய்யி வ மய் யுதBப்Bபிருல் அம்ர்; Fபஸ யகூலூனல் லாஹ்; Fபகுல் அFபலா தத்தகூன்
முஹம்மது ஜான்
“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் (அவர்களை நோக்கி) ‘‘வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லாக் காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகித்து நிகழ்த்துபவன் யார்?'' என்று கேட்பீராக! அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக.
IFT
(நபியே! இவர்களிடம்) கேளும்: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? மேலும், உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? மேலும், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார்? மேலும், அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்?” அதற்கவர்கள் “அல்லாஹ்தான்” என்று பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்கள் (உண்மைக்கு மாறாக நடப்பதை) தவிர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேளும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லது செவிப்புலனையும், பார்வைகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பவன் யார்?” இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும் உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துபவனும் யார்? (அகிலத்தாரின் சகல காரியங்களைத் திட்டமிட்டு நிகழ்த்துபவனும் யார்?” என நபியே! நீர் (அவர்களைக்) கேட்பீராக!! அ(தற்க)வர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள், அவ்வாறாயின், “(அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா?” என்று நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "Who provides for you from the heaven and the earth? Or who controls hearing and sight and who brings the living out of the dead and brings the dead out of the living and who arranges [every] matter?" They will say, "Allah," so say, "Then will you not fear Him?"
فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّ ۚ فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۖۚ فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟
فَذٰلِكُمُஅந்தاللّٰهُஅல்லாஹ்தான்رَبُّكُمُஉங்கள் இறைவன்الْحَـقُّ ۚஉண்மையானவன்فَمَاذَا(வேறு) என்ன?بَعْدَபின்னர்الْحَـقِّஉண்மைக்குاِلَّاதவிரالضَّلٰلُ‌ ۚவழிகேடுفَاَنّٰىஎவ்வாறுتُصْرَفُوْنَ‏நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
Fபதாலிகுமுல் லாஹு ரBப்Bபுகுமுல் ஹக்க்; Fபமாதா Bபஃதல் ஹக்கி இல்லள் ளலாலு Fப அன்ன துஸ்ரFபூன்
முஹம்மது ஜான்
உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
‘‘அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். (இந்த) அளவு உண்மை விவரிக்கப்பட்ட பின்னர் (நீங்கள் அவனுக்கு அடிபணியாது இருப்பது) வழிகேட்டைத் தவிர வேறில்லை. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?'' (என்றும் நபியே! கேட்பீராக).
IFT
ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன்! இந்த உண்மையைக் கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன எஞ்சியிருக்கும்? நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இத்தகைய தகுதிகளுக்குறிய) அவன்தான் உங்களுடைய உண்மையான இரட்சகனாகிய அல்லாஹ், இந்த உண்மைக்குப் பின்னர், வழிகேட்டைத் தவிர வேறு (எஞ்சியிருப்பது) யாது? (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்” என்று (நபியே!) நீர் கேட்பீராக!
Saheeh International
For that is Allah, your Lord, the Truth. And what can be beyond truth except error? So how are you averted?
كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَی الَّذِیْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
كَذٰلِكَஅவ்வாறேحَقَّتْஉண்மையாகி விட்டதுكَلِمَتُசொல்رَبِّكَஉம் இறைவனின்عَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்فَسَقُوْۤاமீறினார்கள்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
கதாலிக ஹக்கத் கலிமது ரBப்Bபிக 'அலல் லதீன Fபஸகூ அன்னஹும் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் நம்பிக்கை கொள்ளாத) அவ்வாறே பாவத்தில் ஆழ்ந்து கிடக்கும் மற்றவர்களும், நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்ற உமது இறைவனின் வாக்கு உண்மையாகி விட்டது.
IFT
(நபியே! பாரும்:) இவ்வாறு இறைக்கட்டளைக்கு மாறு செய்யும் போக்கினை மேற்கொள்வோர் குறித்து “திண்ணமாக அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்ற உம் இறைவனின் வாக்கு உண்மையாகிவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(இவர்கள் நிராகரித்த) இவ்வாறே பாவம் செய்பவர்கள் மீது நிச்சயமாக அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்” என்ற உமதிரட்சகனின் வாக்கு உண்மையாகிவிட்டது.
Saheeh International
Thus the word [i.e., decree] of your Lord has come into effect upon those who defiantly disobeyed - that they will not believe.
قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ قُلِ اللّٰهُ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
قُلْகூறுவீராகهَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ?/ இருந்து/இணைதெய்வங்கள்/உங்கள்مَّنْஎவன்يَّبْدَؤُاஆரம்பிக்கிறான்الْخَـلْقَபடைப்புகளைثُمَّபிறகுيُعِيْدُهٗ‌ ؕமீட்கிறான் / அவற்றைقُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்தான்يَـبْدَؤُاஆரம்பிக்கிறான்الْخَـلْقَபடைப்புகளைثُمَّபிறகுيُعِيْدُهٗ‌ؕமீட்கிறான்/அவற்றைفَاَنّٰىஎவ்வாறு?تُؤْفَكُوْنَ‏நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
குல் ஹல் மின் ஷுரகா 'இகும் மய் யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹ்; குலில் லாஹு யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ Fப அன்னா து'Fபகூன்
முஹம்மது ஜான்
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரணித்த பின்) அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியவனும் அல்லாஹ்தான்'' (என்று கூறி ‘‘இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கிறீர்கள்?'' என்றும் கேட்பீராக.
IFT
“நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களுள் படைப்புகளை முதன்முறையில் படைத்து பின்னர் மறு முறையும் அவற்றைப் படைக்கக்கூடியவர் எவரும் உள்ளனரா?” என்று (நபியே!) நீர் கேளும் நீர் கூறும்: “அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையும் படைக்கின்றான்; பின்னர் அவற்றை மறுமுறையும் படைக்கின்றான். இதன் பிறகும் நீங்கள் எவ்வாறு வழி மாற்றப்படுகின்றீர்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களுடைய இணையாளர்களில் தொடக்கமாகப் படைப்பைத் தொடங்கி (அது அழிந்த) பின்னர் அதனை மீட்டுபவர் (யாரேனும்) உண்டா? என்று நபியே!) நீர் கேட்பீராக! (நீரே அவர்களிடம்) அல்லாஹ்தான் சிருஷ்டிகளை முதலாவதாக உற்பத்தி செய்து (அவை மரித்த) பின்னர், அவற்றை அவன் மீளவைப்பான்” (என்று கூறி, “இந்த உண்மையை விட்டு) நீங்கள் எப்படித்தான் திருப்பப்படுகின்றீர்கள்?”, என்று நீர் கேட்பீராக!
Saheeh International
Say, "Are there of your 'partners' any who begins creation and then repeats it?" Say, "Allah begins creation and then repeats it, so how are you deluded?"
قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ ؕ قُلِ اللّٰهُ یَهْدِیْ لِلْحَقِّ ؕ اَفَمَنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ اَحَقُّ اَنْ یُّتَّبَعَ اَمَّنْ لَّا یَهِدِّیْۤ اِلَّاۤ اَنْ یُّهْدٰی ۚ فَمَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟
قُلْகூறுவீராகهَلْ?مِنْஇருந்துشُرَكَآٮِٕكُمْஇணை(தெய்வங்)கள்/உங்கள்مَّنْஎவர்يَّهْدِىْۤநேர்வழி காட்டுவார்اِلَىபக்கம்الْحَـقِّ‌ؕசத்தியம்قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்يَهْدِىْநேர்வழி காட்டுகிறான்لِلْحَقِّ‌ؕசத்தியத்திற்குاَفَمَنْஆகவே எவர்?يَّهْدِىْۤநேர்வழி காட்டுவான்اِلَىபக்கம்الْحَقِّசத்தியத்தின்اَحَقُّமிகத் தகுதியானவனாاَنْ يُّتَّبَعَபின்பற்றப்படுவதற்குاَمَّنْஅல்லது/எவர்لَّا يَهِدِّىْۤநேர்வழி அடைய மாட்டான்اِلَّاۤதவிரاَنْ يُّهْدٰى‌ۚஅவர் நேர்வழி காட்டப்படுவார்فَمَاஎன்ன?لَكُمْஉங்களுக்குكَيْفَஎவ்வாறு?تَحْكُمُوْنَ‏நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
குல் ஹல் மின் ஷுரகா 'இகும் மய் யஹ்தீ இலல் ஹக்க்; குலில் லாஹு யஹ்தீ லில்ஹக்க்; அFபமய் யஹ்தீ இலல் ஹக்கி அஹக்கு அய் யுத்தBப'அ அம்மல் லா யஹித்தீ இல்லா அய் யுஹ்தா Fபமா லகும் கய்Fப தஹ்குமூன்
முஹம்மது ஜான்
உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக; அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(‘‘சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்றும் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்'' (என்று கூறி) ‘‘நேரான வழியில் செலுத்தக்கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்'' என்றும் கேட்பீராக.
IFT
(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “உங்களால் உருவாக்கப்பட்ட கடவுளர்களில் சத்தியத்தின் பக்கம் வழி காட்டக்கூடியவர் எவரேனும் உண்டா?” நீர் கூறும்: “அல்லாஹ்தான் சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுகின்றான். ஆகவே, சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுபவன் பின்பற்றத் தகுந்தவனா? அல்லது பிறர் வழிகாட்டுதலின்றி தானாக நேர்வழியைப் பெறமுடியாதவன் பின்பற்றத் தகுந்தவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எப்படியெல்லாம் (தவறான) முடிவுகளை எடுக்கின்றீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களுடைய இணையாளர்களில் சத்தியத்தின்பால் வழிகாட்டுபவர் உண்டா?” என்று நீர் கேட்பீராக! (நீரே அவர்களிடம்) “அல்லாஹ்தான் சத்திய (மார்க்க)த்திற்கு வழி காட்டுகிறான்”, எனக் கூறுவீராக! சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்பட மிக உரியவனா? அல்லது வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர் வழியை அடைய மாட்டானே அ(வன் பின்பற்றத்தக்க)வனா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு) மாறாக நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?
Saheeh International
Say, "Are there of your 'partners' any who guides to the truth?" Say, "Allah guides to the truth. So is He who guides to the truth more worthy to be followed or he who guides not unless he is guided? Then what is [wrong] with you - how do you judge?"
وَمَا یَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّا ؕ اِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟
وَمَا يَتَّبِعُபின்பற்றவில்லைاَكْثَرُபெரும்பாலானவர்கள்هُمْஅவர்களில்اِلَّاதவிரظَنًّاசந்தேகத்தைؕاِنَّநிச்சயமாகالظَّنَّசந்தேகம்لَا يُغْنِىْபலன் தராதுمِنَவிட்டுالْحَـقِّஉண்மையைشَيْــٴًــا‌ ؕஒரு சிறிதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِمَاஎதைيَفْعَلُوْنَ‏அவர்கள் செய்கிறார்கள்
வமா யத்தBபி'உ அக்தருஹும் இல்லா ளன்னா; இன்னள் ளன்ன லா யுக்னீ மினல் ஹக்கி ஷய்'ஆ; இன்னல் லாஹ 'அலீமுன் Bபிமா யFப்'அலூன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே தவிர வேறொன்றையும் பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
IFT
உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தைத்தான் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஊகமோ சத்தியத்தின் தேவையை சற்றும் நிறைவேற்றாது. இவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களில் பெரும்பாலோர் (அவசியமில்லாத) எண்ணத்தையேயன்றி (வேறெதையும்) பின்பற்றுவதில்லை, நிச்சயமாக (அவசியமில்லாத) எண்ணம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவன்.
Saheeh International
And most of them follow not except assumption. Indeed, assumption avails not against the truth at all. Indeed, Allah is Knowing of what they do.
وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ یُّفْتَرٰی مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟۫
وَمَا كَانَஇல்லைهٰذَا الْقُرْاٰنُஇந்த குர்ஆன்اَنْ يُّفْتَـرٰىஇட்டுக்கட்டப்பட்டதாகمِنْஇருந்துدُوْنِஅல்லாதவர்اللّٰهِஅல்லாஹ்وَلٰـكِنْஎனினும்تَصْدِيْقَஉண்மைப்படுத்துதல்الَّذِىْஎவற்றைبَيْنَ يَدَيْهِதனக்கு முன்னால்وَتَفْصِيْلَஇன்னும் விவரித்துக் கூறுதல்الْكِتٰبِசட்டங்களைلَا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهِஇதில்مِنْஇருந்துرَّبِّஇறைவன்الْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
வமா கான ஹாதல் குர்'ஆனு அய் யுFப்தரா மின் தூனில் லாஹி வ லாகின் தஸ்தீகல் லதீ Bபய்ன யதய்ஹி வ தFப்ஸீலல் கிதாBபி லா ரய்Bப Fபீஹீ மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) தவிர (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதல்ல. மேலும், இதற்கு முன்னுள்ள வேதங்களை இது உண்மையாக்கி வைத்து அவற்றில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தாரின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை.
IFT
இந்தக் குர்ஆன் அல்லாஹ்(வின் வஹியே தவிர அவன்) அல்லாதவர்களால் புனைந்துரைக்கப்பட்டதன்று; உண்மையில் இது தனக்கு முன்னால் வந்துள்ள வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாகவும், ‘அல் கிதாபின்’ விளக்கமாகவும் திகழ்கின்றது. இது அகிலங்களின் அதிபதியிடமிருந்து வந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், இந்தக் குர் ஆன் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதே தவிர (மற்றெவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதன்று, எனினும், (இது) இதற்கு முன்னுள்ள (வேதங்களான)தை உண்மையாக்கி வைத்தது, வேதத்தை (அதிலுள்ளவற்றை) விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது, அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்துள்ள இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
Saheeh International
And it was not [possible] for this Qur’an to be produced by other than Allah, but [it is] a confirmation of what was before it and a detailed explanation of the [former] Scripture, about which there is no doubt, from the Lord of the worlds.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَمْஅல்லதுيَقُوْلُوْنَஅவர்கள் கூறுகின்றனர்افْتَـرٰٮهُ‌ ؕஇதை இட்டுக்கட்டினார்قُلْகூறுவீராகفَاْتُوْاவாருங்கள்بِسُوْرَةٍஒர் அத்தியாயத்தைக் கொண்டுمِّثْلِهٖஅது போன்றوَادْعُوْاஇன்னும் அழையுங்கள்مَنِஎவர்اسْتَطَعْتُمْசாத்தியமானீர்கள்مِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மை சொல்பவர்களாக
'அம் யகூலூனFப் தராஹு குல் Fப'தூ Bபி ஸூரதின் மித்லிஹீ வத்'ஊ மனிஸ் ததஃதும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.
அப்துல் ஹமீது பாகவி
இதை (நம் தூதராகிய) ‘‘அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்'' என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்.''
IFT
என்ன, இவர்கள் இறைத்தூதர் இதனைச் சுயமாக இயற்றியுள்ளார் என்று கூறுகின்றார்களா? நீர் கூறும்: “(இக் குற்றச்சாட்டில்) நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக்கொண்டு வாருங்கள். மேலும், அல்லாஹ்வை விடுத்து (உதவிக்காக) யார் யாரை உங்களால் அழைக்க முடியுமோ அவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (குர் ஆனாகிய) இதனை (நம்முடைய தூதராகிய) “அவர் (பொய்யாகக்)கற்பனை செய்து கொண்டார்” என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறெனின் நபியே! அவர்களிடம் “உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதனைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள், அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்களையும் (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறுவீராக!
Saheeh International
Or do they say [about the Prophet (ﷺ], "He invented it?" Say, "Then bring forth a sūrah like it and call upon [for assistance] whomever you can besides Allah, if you should be truthful."
بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ یُحِیْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا یَاْتِهِمْ تَاْوِیْلُهٗ ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟
بَلْமாறாகكَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِمَا لَمْ يُحِيْطُوْاஎதை/அவர்கள் சூழ்ந்தறியவில்லைبِعِلْمِهٖஅதன் அறிவுوَلَمَّاஇன்னும் வரவில்லைيَاْتِهِمْஇவர்களுக்குتَاْوِيْلُهٗ ؕஅதன் விளக்கம்كَذٰلِكَஇவ்வாறேكَذَّبَபொய்ப்பித்தனர்الَّذِيْنَஎவர்கள்مِنْமுன்னர்قَبْلِهِمْ‌இவர்களுக்குفَانْظُرْஆகவே கவனிப்பீராகكَيْفَ كَانَஎவ்வாறு இருந்ததுعَاقِبَةُமுடிவுالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களின்
Bபல் கத்தBபூ Bபிமா லம் யுஹீதூ Bபி'இல்மிஹீ வ லம்மா ய'திஹிம் த'வீலுஹ்; கதாலிக கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுத் ளாலிமீன்
முஹம்மது ஜான்
அப்படியல்ல; அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும், (நிகழுமென) அதில் கூறப்பட்டவை நிகழாதிருக்கையில் அவற்றையும் (அதில் கூறப்பட்ட மற்றவற்றையும்) பொய்யென அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எப்படி முடிந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.
IFT
உண்மையில் எந்த வேதத்தை இவர்கள், தம் அறிவால் புரிந்து கொள்ளவில்லையோ அந்த வேதத்தையும், அது விடுக்கும் எச்சரிக்கையின் இறுதி விளைவு அவர்களிடம் வராத நிலையில் அதையும் (வெறும் கற்பனையின் அடிப்படையில்) பொய் என்று கூறுகின்றார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன் சென்றுபோன மக்களும் பொய்யென்று கூறி வந்தனர். எனவே, அந்த அக்கிரமக்காரர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பாரும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மாறாக (குர் ஆனாகிய) அதன் அறிவை(ப் பற்றி) அவர்கள் தெரிந்து கொள்ள முடியாததையும், அதன் விளக்கம் பற்றி அவர்களுக்கு வராதவற்றையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர், அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அவற்றைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர், ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை (நபியே) நீர் பார்ப்பீராக.
Saheeh International
Rather, they have denied that which they encompass not in knowledge and whose interpretation has not yet come to them. Thus did those before them deny. Then observe how was the end of the wrongdoers.
وَمِنْهُمْ مَّنْ یُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا یُؤْمِنُ بِهٖ ؕ وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِیْنَ ۟۠
وَ مِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்يُّؤْمِنُநம்பிக்கைகொண்டார்بِهٖஅதைوَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்لَّا يُؤْمِنُநம்பிக்கை கொள்ளமாட்டார்بِهٖ‌ؕஅதைوَرَبُّكَஉம் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِالْمُفْسِدِيْنَ‏விஷமிகளை
வ மின்ஹும் மய் யு 'மினு Bபிஹீ வ மின்ஹும் மல் லா யு'மினு Bபிஹ்; வ ரBப்Bபுக அஃலமு Bபில்முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்; இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும், உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(திரு குர்ஆனில் கூறப்பட்டவை நிகழுமென) அதை நம்பக்கூடியவரும் அவர்களில் உள்ளனர்; (நிகழ்ந்த பின்னரும்) அதை நம்பாதவரும் அவர்களில் உள்ளனர். (அதை நம்பாத) இந்த விஷமிகளை உமது இறைவன் நன்கறிவான்.
IFT
அவர்களில் சிலர் இதன் மீது நம்பிக்கை கொள்வார்கள். வேறு சிலர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். இத்தகைய குழப்பவாதிகளை உம்முடைய இறைவன் நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களில் (குர் ஆனாகிய) இதனை விசுவாசிப்பவரும் உள்ளனர், அவர்களில் இதனை விசுவாசங் கொள்ளாதோரும் உள்ளனர், இன்னும், உம்முடைய இரட்சகன் குழப்பக்காரர்களை மிக அறிந்தவன்.
Saheeh International
And of them are those who believe in it, and of them are those who do not believe in it. And your Lord is most knowing of the corrupters.
وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّیْ عَمَلِیْ وَلَكُمْ عَمَلُكُمْ ۚ اَنْتُمْ بَرِیْٓـُٔوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟
وَاِنْ كَذَّبُوْكَஅவர்கள் உம்மை பொய்ப்பித்தால்فَقُلْகூறுவீராகلِّىْஎனக்குعَمَلِىْஎன் செயல்وَلَـكُمْஇன்னும் உங்களுக்குعَمَلُكُمْ‌ۚஉங்கள் செயல்اَنْـتُمْநீங்கள்بَرِيْٓـــٴُـوْنَநீங்கியவர்கள்مِمَّاۤஎதிலிருந்துاَعْمَلُசெய்கிறேன்وَاَنَاஇன்னும் நான்بَرِىْٓءٌநீங்கியவன்مِّمَّاஎதிலிருந்துتَعْمَلُوْنَ‏நீங்கள் செய்கிறீர்கள்
வ இன் கத்தBபூக Fபகுல் லீ 'அமலீ வ லகும் 'அமலுகும் அன்தும் Bபரீ'ஊன மிம்மா அஃமலு வ அன Bபரீ'உம் மிம்மா தஃமலூன்
முஹம்மது ஜான்
உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உம்மை பொய்யரென அவர்கள் கூறினால் (அவர்களை நோக்கி ‘‘நன்மையோ தீமையோ) என் செயல்(களின் பலன்) எனக்குரியது; (அவ்வாறே) உங்கள் செயல்(களின் பலன்) உங்களுக்குரியது. என் செயலில் இருந்து நீங்கள் விடுபட்டவர்கள்; உங்கள் செயலில் இருந்து நான் விடுபட்டவன்'' என்று கூறுவீராக.
IFT
மேலும், இவர்கள் உம்மைப் பொய்யர் என்று சொன்னால் நீர் கூறும்: “என்னுடைய செயல் எனக்குரியது; உங்களுடைய செயல் உங்களுக்குரியது. நான் செய்கின்ற செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளர்களல்லர். நீங்கள் செய்கின்ற செயல்களுக்கு நானும் பொறுப்பாளன் அல்லன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே) உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால், (நீர் அவர்களிடம்), “என் செயல் (அதன் பலன்) எனக்குரியது, (அவ்வாறே) உங்கள் செயல் (அதன் பலன்) உங்களுக்குரியது, நான் செய்வதிலிருந்து நீங்கள் நீங்கியவர்கள்; நீங்கள் செய்வதிலிருந்து நானும் நீங்கியவன்” என்று கூறுவீராக!
Saheeh International
And if they deny you, [O Muhammad], then say, "For me are my deeds, and for you are your deeds. You are disassociated from what I do, and I am disassociated from what you do."
وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُوْنَ اِلَیْكَ ؕ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا یَعْقِلُوْنَ ۟
وَمِنْهُمْஅவர்களில்مَّنْஎவர்يَّسْتَمِعُوْنَசெவிமடுக்கிறார்கள்اِلَيْكَ‌ؕஉம் பக்கம்اَفَاَنْتَ تُسْمِعُநீர் கேட்கவைப்பீரா?الصُّمَّசெவிடர்களைوَلَوْ كَانُوْاஅவர்கள்இருந்தாலும்لَا يَعْقِلُوْنَ‏சிந்தித்து புரிய மாட்டார்கள்
வ மின்ஹும் மய் யஸ்தமி'ஊன இலய்க்; அFப அன்த துஸ்மி'உஸ் ஸும்ம வ லவ் கானூ லா யஃகிலூன்
முஹம்மது ஜான்
இன்னும் உம் வார்த்தைகளைக் கேட்பவர்கள் (போல் பாவனை) செய்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் - எதுவுமே விளங்கிக் கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்ய முடியுமா?
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில், உங்கள் வார்த்தையைக் கேட்போ(ரைப் போல் பாவனை செய்வோ)ரும் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டார்கள் என்று நீர் எண்ணி விட்டீரா?) ஒன்றையுமே (செவியுற்று) அறிந்து கொள்ள முடியாத முழுச் செவிடர்களை செவி கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?
IFT
மேலும், நீர் கூறுவதைக் கேட்பவர் (கள் போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் விளங்காமல் இருந்தாலும் அச்செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உமக்கு செவியேற்போரும் அவர்களில் இருக்கின்றனர், செவிடர்களை-அவர்கள் (எதனையும்) விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்தாலும் நீர் செவியேற்கச் செய்வீரா?
Saheeh International
And among them are those who listen to you. But can you cause the deaf to hear [i.e., benefit from this hearing], although they will not use reason?
وَمِنْهُمْ مَّنْ یَّنْظُرُ اِلَیْكَ ؕ اَفَاَنْتَ تَهْدِی الْعُمْیَ وَلَوْ كَانُوْا لَا یُبْصِرُوْنَ ۟
وَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்يَّنْظُرُபார்க்கிறார்اِلَيْكَ‌ ؕஉம் பக்கம்اَفَاَنْتَநீர்تَهْدِىநேர்வழிசெலுத்துவீரா?الْعُمْىَகுருடர்களைوَ لَوْ كَانُوْا لَا يُبْصِرُوْنَ‏அவர்கள் இருந்தாலும்/பார்க்க மாட்டார்கள்
வ மின்ஹும் மய் யன்ளுரு இலய்க்; அFப அன்த தஹ்தில் 'உம்ய வ லவ் கானூ லா யுBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கிறார்கள் - (எதுவும்) பார்க்க இயலாத குருடர்களை நீர் நேர்வழியில் செலுத்த முடியுமா?
அப்துல் ஹமீது பாகவி
உம்மைப் பார்ப்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உம்மை அறிந்து கொண்டார்கள் என எண்ணி விட்டீர்களா?) எதையும் பார்க்க முடியாத பிறவிக் குருடர்களைப் பார்க்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?
IFT
மேலும், உம்மைப் பார்ப்பவர்(போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் புலப்படாவிட்டாலும் அக்குருடர்களுக்கு உம்மால் வழிகாட்ட முடியுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உம்மைப் பார்ப்போரும் அவர்களில் (சிலர்) இருக்கின்றனர், குருடர்களுக்கு அவர்கள் பார்க்காதவர்களாக இருப்பினும் நீர் வழிகாட்டுவீரா?
Saheeh International
And among them are those who look at you. But can you guide the blind although they will not [attempt to] see?
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ النَّاسَ شَیْـًٔا وَّلٰكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَظْلِمُஅநீதியிழைக்க மாட்டான்النَّاسَமனிதர்களுக்குشَيْــٴًــاஒரு சிறிதும்وَّلٰـكِنَّஎனினும்النَّاسَமனிதர்கள்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏அநீதியிழைக்கின்றனர்
இன்னல் லாஹ லா யள்லிமுன் னாஸ ஷய்'அ(ன்)வ் வ லாகின் னன்னாஸ அன்Fபுஸஹும் யள்லிமூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு அறவே தீங்கிழைப்பது இல்லை. எனினும், மனிதர்கள் (தீய செயல்களைச் செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.
IFT
உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு கொஞ்சமும் அநீதமிழைக்கமாட்டான், எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றனர்.
Saheeh International
Indeed, Allah does not wrong the people at all, but it is the people who are wronging themselves.
وَیَوْمَ یَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ یَتَعَارَفُوْنَ بَیْنَهُمْ ؕ قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟
وَيَوْمَநாளில்يَحْشُرُஒன்று சேர்ப்பான்هُمْஅவர்களைكَاَنْபோன்றுلَّمْ يَلْبَثُوْۤاஅவர்கள் தங்கவில்லைاِلَّاதவிரسَاعَةًஒரு நேரம்مِّنَ النَّهَارِபகலில்يَتَعَارَفُوْنَஅறிந்துகொள்வார்கள்بَيْنَهُمْ‌ؕதங்களுக்குள்قَدْ خَسِرَதிட்டமாக நஷ்டமடைந்தார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِلِقَآءِசந்திப்பைاللّٰهِஅல்லாஹ்வின்وَمَا كَانُوْاஅவர்கள் இருக்கவில்லைمُهْتَدِيْنَ‏நேர்வழி பெற்றவர்களாக
வ யவ்ம யஹ்ஷுருஹும் க 'அன் லம் யல்Bபதூ இல்லா ஸா'அதன் மினன் னஹாரி யத'ஆரFபூன Bபய்னஹும்; கத் கஸிரல் லதீன கத்தBபூ Bபி லிகா'இல் லாஹி வமா கானூ முஹ்ததீன்
முஹம்மது ஜான்
அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(விசாரணைக்காக) அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் பகலில் ஒரு சொற்ப நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தாங்கள் தங்கவில்லை என்று அவர்கள் எண்ணுவதுடன், தங்களுக்குள் ஒருவரையொருவர் அறிந்தும் கொள்வார்கள். (ஆனால், ஒருவருக்கொருவர் உதவி செய்ய முன்வர மாட்டார்.) அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியவர்கள் நிச்சயமாக (அந்த நாளில்) நஷ்டமடைந்தே இருப்பார்கள். (அந்நஷ்டத்திலிருந்து மீள) வழி காணாதவர்களாகவும் இருப்பார்கள்.
IFT
(இன்று இவர்கள் உலக வாழ்க்கையில் மதிமயங்கிக் கிடக்கின்றார்கள்.) ஆனால் அல்லாஹ் அவர்களை ஒன்று திரட்டும் நாளில், (இவ்வுலக வாழ்க்கை அவர்களுக்கு எவ்வாறு தோன்றுமெனில்) தமக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக பகலின் சொற்ப நேரமே தவிர (உலகில்) தாங்கள் தங்கியிருக்கவில்லை என்பது போல் தோன்றும்! அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யென்று கூறியவர்களும், ஒருபோதும் நேர் வழியின்படி வாழாதவர்களும் நிச்சயமாக பேரிழப்பிற்கு ஆளாகி விட்டார்கள் (என்பதும் அன்று உறுதியாகிவிடும்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களை அவன் ஒன்று திரட்டும் நாளில் (ஒரு) பகலில் சொற்ப நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தாங்கள் தங்கவில்லை என்பதைப் போன்று (அவர்கள் எண்ணுவதுடன்) தங்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வார்கள்; அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியோர் திட்டமாக (அந்நாளில்) நஷ்டமடைந்தே விட்டார்கள்; அவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
Saheeh International
And on the Day when He will gather them, [it will be] as if they had not remained [in the world] but an hour of the day, [and] they will know each other. Those will have lost who denied the meeting with Allah and were not guided.
وَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا یَفْعَلُوْنَ ۟
وَاِمَّا نُرِيَـنَّكَநிச்சயம் உமக்கு காண்பிப்போம்بَعْضَசிலவற்றைالَّذِىْஎதைنَعِدُவாக்களிக்கிறோம்هُمْஅவர்களுக்குاَوْஅல்லதுنَـتَوَفَّيَنَّكَகைப்பற்றிக் கொள்வோம்/உம்மைفَاِلَيْنَاநம் பக்கமேمَرْجِعُهُمْமீளுமிடம்/அவர்களுடையثُمَّபிறகுاللّٰهُஅல்லாஹ்شَهِيْدٌசாட்சியாக இருப்பான்عَلٰى مَا يَفْعَلُوْنَ‏அவர்கள் செய்தவற்றிற்கு
வ இம்ம னுரியன்னக Bபஃளல் லதீ ன'இதுஹும் அவ் னதவFப்Fபயன்னக Fப இலய்னா மர்ஜி'உஹும் தும்மல் லாஹு ஷஹீதுன் 'அலா மா யFப்'அலூன்
முஹம்மது ஜான்
(உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உமது வாழ்க்கை காலத்திலேயே) நீர் பார்க்கும்படிச் செய்வோம்; அல்லது (அவை வருவதற்கு முன்னர்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடம்தான் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்(த்துக் கொண்டே இரு)க்கிறான்.
IFT
அவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்துகொண்டிருக்கின்ற தீய விளைவின் ஒரு பகுதியை (நீர் உயிர் வாழும் போதே) காண்பித்து விட்டாலும் அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மை எடுத்துக் கொண்டாலும் எவ்வாறாயினும் நம்மிடமே அவர்கள் திரும்பி வர வேண்டியுள்ளது. மேலும், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அவற்றுக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (தண்டனைகளில்) சிலவற்றை (உம்முடைய வாழ்நாளிலேயே) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (நீர் பார்ப்பதற்கு முன்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (எவ்வாறாயினும்,) அவர்களுடைய திரும்புதல் நம் பாலேயாகும், பின்னர் அவர்கள் செய்பவற்றிற்கு அல்லாஹ் சாட்சியாளனாவான்.
Saheeh International
And whether We show you some of what We promise them, [O Muhammad], or We take you in death, to Us is their return; then, [either way], Allah is a witness concerning what they are doing.
وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚ فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَلِكُلِّஒவ்வொருவருக்கும்اُمَّةٍஒரு சமுதாயம்رَّسُوْلٌ‌ ۚஒரு தூதர்فَاِذَاபோதுجَآءَவரும்رَسُوْلُهُمْதூதர்/அவர்களுடையقُضِىَதீர்ப்பளிக்கப்படும்بَيْنَهُمْஅவர்களுக்கிடையில்بِالْقِسْطِநீதமாகوَهُمْஇன்னும் அவர்கள்لَا يُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
வ லிகுல்லி உம்மதிர் ரஸூலுன் Fப இதா ஜா'அ ரஸூலுஹும் குளிய Bபய்னஹும் Bபில்கிஸ்தி வ ஹும் லா யுள்லமூன்
முஹம்மது ஜான்
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை.
IFT
ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் இறைத்தூதர் இருக்கிறார். பிறகு (ஏதேனும் உம்மத்தாரிடம்) அவர்களின் தூதர் வந்துவிட்டால், அவர்களுடைய கதி நீதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. மேலும், அவர்கள் மீது (இம்மியளவும்) அநீதி இழைக்கப்படுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு சமூகத்தினருக்கும் (நம்மால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் உண்டு, எனவே, அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்துவிடும்பொழுது அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும், மேலும், அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Saheeh International
And for every nation is a messenger. So when their messenger comes, it will be judged between them in justice, and they will not be wronged.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَيَقُوْلُوْنَஅவர்கள் கேட்கின்றனர்مَتٰىஎப்போதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
“நீங்கள் உண்மையாளராக இருந்தால் (அச்ச மூட்டப்படும் வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்போது (அமலுக்கு வரும்)” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (நீங்கள் பயமுறுத்தும்) வேதனை எப்பொழுது (வரும்)?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
IFT
மேலும், “உங்களுடைய இந்த எச்சரிக்கை உண்மையாக இருந்தால் அது எப்போது நிறைவேறும்?” என்று அவர்கள் வினவுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் (மறுமை நாள் பற்றிக் கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்பொழுது (நடந்தேறும்?” என்று நிராகரிப்போராகிய) அவர்கள் கேட்கின்றனர்.
Saheeh International
And they say, "When is [the fulfillment of] this promise, if you should be truthful?"
قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِیْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ؕ اِذَا جَآءَ اَجَلُهُمْ فَلَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
قُلْகூறுவீராகلَّاۤ اَمْلِكُஉரிமை பெறமாட்டேன்لِنَفْسِىْஎனக்குضَرًّاதீமைக்கோوَّلَا نَفْعًاஇன்னும் நன்மைக்கோاِلَّاதவிரمَاஎதைشَآءَநாடினான்اللّٰهُؕஅல்லாஹ்لِكُلِّஒவ்வொருاُمَّةٍவகுப்பார்اَجَلٌ‌ؕதவணைاِذَا جَآءَவந்தால்اَجَلُهُمْதவணை/அவர்களுடையفَلَا يَسْتَـاخِرُوْنَபிந்தமாட்டார்கள்سَاعَةً‌ஒரு சிறிது நேரம்وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏இன்னும் முந்த மாட்டார்கள்
குல் லா அம்லிகு லினFப்ஸீ ளர்ர(ன்)வ் வலா னFப்'அன் இல்லா மா ஷா'அல் லாஹ்; லிகுல்லி உம்மதின் அஜலுன் இதா ஜா'அ அஜலுஹும் Fப லா யஸ்த'கிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடியதைத் தவிர ஒரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகை கூட பிந்த மாட்டார்கள்; முந்தக்கூட மாட்டார்கள்.'' (அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும்).
IFT
(நபியே!) நீர் கூறும்: “எனக்கு நானே பலனளித்துக் கொள்ளவும், நஷ்டம் விளைவித்துக் கொள்ளவும்கூட எனக்கு அதிகாரமில்லை. ஆனால், அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தவணை உண்டு. அவர்களுடைய இத்தவணை நிறைவடைந்து விட்டால் அவர்கள் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! “ அல்லாஹ் நாடியதையன்றி எனக்கு யாதொரு இடரை நீக்கிக் கொள்வதையும், யாதொரு பலனை (காத்துக் கொள்வதையும் நான் சக்தி பெறமாட்டேன், ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணையுண்டு, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் ஒருநாழிகை பிந்தவுமாட்டார்கள், முந்தவுமாட்டார்கள்.
Saheeh International
Say, "I possess not for myself any harm or benefit except what Allah should will. For every nation is a [specified] term. When their time has come, then they will not remain behind an hour, nor will they precede [it]."
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُهٗ بَیَاتًا اَوْ نَهَارًا مَّاذَا یَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَيْتُمْஅறிவிப்பீர்களாகاِنْ اَتٰٮكُمْஉங்களுக்கு வந்தால்عَذَابُهٗவேதனை/ அவனுடையبَيَاتًاஇரவில்اَوْஅல்லதுنَهَارًاபகலில்مَّاذَاஎதைيَسْتَعْجِلُஅவசரமாக தேடுகின்றனர்مِنْهُஅதிலிருந்துالْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகள்
குல் 'அ ர'அய்தும் இன் அதாகும் 'அதாBபுஹூ Bபயாதன் அவ் னஹாரன் மாதா யஸ்தஃஜிலு மின்ஹுல் முஜ்ரிமூன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: “அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் - (அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே) கூறுவீராக: ‘‘அவனுடைய வேதனை இரவிலோ பகலிலோ (எந்நேரத்திலாயினும்) உங்களிடம் வந்தால் (அதை நீங்கள் தடுத்துவிட முடியுமா என்பதைக்) கவனித்தீர்களா? (நபியே!) எதற்காக இக்குற்றவாளிகள் (வேதனை எப்பொழுது வரும்... எப்பொழுது வரும்... என்று கேட்டு) அவசரப்படுகின்றனர்?''
IFT
(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் என்றாவது சிந்தித்திருக்கின்றீர்களா? அல்லாஹ்வின் வேதனை இரவிலோ பகலிலோ (திடீரென்று) உங்களிடம் வந்துவிட்டால் (அப்போது உங்களால் என்ன செய்ய இயலும்?) இக்குற்றவாளிகள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீர் கூறுவீராக! “அவனுடைய வேதனை இரவிலோ அல்லது பகலிலோ உங்களிடம் வந்தடைந்து விடுமானால் (நீங்கள் அதனை தடுத்துவிட முடியுமா? என்பதை) எனக்குக் கூறுங்கள்” (நபியே!) இக் குற்றவாளிகள் (எப்பொழுது வரும் என்று கேட்டு) அவனிடமிருந்து எதை அவசரப்படுகின்றனர்?”
Saheeh International
Say, "Have you considered: if His punishment should come to you by night or by day - for which [aspect] of it would the criminals be impatient?"
اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖ ؕ آٰلْـٰٔنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
اَثُمَّஅங்கே ?اِذَا مَا وَقَعَநிகழ்ந்தால்اٰمَنْتُمْநம்பிக்கை கொள்வீர்கள்بِهٖؕஅதைக் கொண்டுاٰۤلْــٴٰـنَஇப்போதுதானா?وَقَدْ كُنْتُمْதிட்டமாக நீங்கள் இருந்தீர்கள்بِهٖஅதைتَسْتَعْجِلُوْنَ‏அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்!
அ தும்ம இதா மா வக'அ ஆமன்தும் Bபிஹ்; ஆல் 'ஆன வ கத் குன்தும் Bபிஹீ தஸ்தஃஜிலூன்
முஹம்மது ஜான்
“அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது” (என்று தான் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘(இப்பொழுது நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கும்) அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அச்சமயம் நீங்கள் அதை நம்புவதில் பயன் ஒன்றும் இல்லை.) நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தது இதோ வந்துவிட்டது!'' (என்றுதான் அந்நேரத்தில் கூறப்படும்.)
IFT
அது உங்களை வந்து தாக்கும்போதுதான் அதனை நம்புவீர்களா? இப்போது தப்பிக்கப் பார்க்கின்றீர்களா? அது வரவேண்டுமென்று நீங்கள்தானே அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(அவசரப்பட்டுக் கொண்டிருக்கும்) அது நிகழ்ந்து விட்டதன் பின்னரா அதனை நீங்கள் நம்புவீர்கள்” நீங்கள் அவசரப்பட்டு கொண்டிருந்த நிலையில் (நிகழ்ந்துவிட்ட அதனை) இப்போது தானா நம்பிக்கை கொள்கிறீர்கள்?” என்று அப்போது கூறப்படும்.
Saheeh International
Then is it that when it has [actually] occurred you will believe in it? Now? And you were [once] for it impatient.
ثُمَّ قِیْلَ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ ۚ هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟
ثُمَّபிறகுقِيْلَகூறப்பட்டதுلِلَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயம் செய்தவர்களை நோக்கிذُوْقُوْاசுவையுங்கள்عَذَابَ الْخُـلْدِ‌ۚநிலையான வேதனைهَلْ تُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா?اِلَّاதவிரبِمَاஎதற்குكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்تَكْسِبُوْنَ‏செய்கிறீர்கள்
தும்ம கீல லில் லதீன ளலமூ தூகூ 'அதாBபல் குல்தி ஹல் துஜ்Zஜவ்ன இல்லா Bபிமா குன்தும் தக்ஸிBபூன்
முஹம்மது ஜான்
அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; “என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?” என்று கூறப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, இந்த அநியாயக்காரர்களை நோக்கி ‘‘நிலையான இந்த வேதனையை சுவைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலுக்குத் தகுதியான கூலியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டது'' என்றும் கூறப்படும்.
IFT
பிறகு அந்த அக்கிரமக்காரர்களிடம் கூறப்படும்: “இதோ! நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்! எதனை நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களோ அதற்குரிய தண்டனையைத் தவிர வேறு என்ன கூலிதான் உங்களுக்கு அளிக்கப்படும்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களிடம் “நிலையான (இவ்)வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள், நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததைத் தவிர (வேறு எதற்கும்) நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா? “ என்றும் கேட்கப்படும்.
Saheeh International
Then it will be said to those who had wronged, "Taste the punishment of eternity; are you being recompensed except for what you used to earn?"
وَیَسْتَنْۢبِـُٔوْنَكَ اَحَقٌّ هُوَ ؔؕ قُلْ اِیْ وَرَبِّیْۤ اِنَّهٗ لَحَقٌّ ؔؕۚ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟۠
وَيَسْتَنْۢبِــٴُـوْنَكَஅவர்கள் செய்தி கேட்கின்றனர்/உம்மிடம்اَحَقٌّஉண்மைதானா?هُوَ‌ ؕؔஅதுقُلْகூறுவீராகاِىْஆம்وَرَبِّىْۤஎன் இறைவன் மீது சத்தியமாகاِنَّهٗநிச்சயமாக அதுلَحَقٌّ ؔ‌ؕஉண்மைதான்وَمَاۤ اَنْتُمْநீங்கள் அல்லர்بِمُعْجِزِيْنَ‏பலவீனப்படுத்துபவர்கள்
வ யஸ்தன்Bபி'ஊனக 'அ ஹக்குன் ஹுவ குல் ஈ வ ரBப்Bபீ இன்னஹூ லஹக்க்; வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன்
முஹம்மது ஜான்
மேலும் “அது உண்மை தானா?” என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; “ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது” என்று கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘‘அது உண்மைதானா?'' என்று அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அதற்கு நீர் கூறுவீராக: ‘‘மெய்தான்! என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உண்மைதான். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது.''
IFT
மேலும், “நீர் கூறுவது உண்மைதானா?” என்று உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “என் இறைவன் மீது ஆணையாக! அது முற்றிலும் உண்மையானதே! மேலும், அதனைத் தடுத்து நிறுத்தும் வலிமையை நீங்கள் பெற்றிருக்கவில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அது உண்மைதானா? என்று தெரிவிக்குமாறு அவர்கள் உம்மிடம் செய்தி கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறுவீராக “ஆம்! என் இரட்சகன் மீது சத்தியமாக நிச்சயமாக அது உண்மைதான், (மண்ணோடு மண்ணாக ஆகிய பின் மீண்டும் உங்களைத் திருப்பிக் கொண்டு வருவதிலிருந்து அல்லாஹ்வை) நீங்கள் இயலாதவனாக ஆக்கிவிடக் கூடியவர்களுமல்ல.
Saheeh International
And they ask information of you, [O Muhammad], "Is it true?" Say, "Yes, by my Lord. Indeed, it is truth; and you will not cause failure [to Allah]."
وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِی الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ۚ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَلَوْ اَنَّஇருந்தால்لِكُلِّ نَفْسٍஒவ்வோர் ஆன்மாவிற்கும்ظَلَمَتْஅநியாயம் செய்ததுمَا فِى الْاَرْضِஎவை/பூமியில்لَافْتَدَتْபரிகாரமாகக் கொடுத்துவிடும்بِهٖ‌ؕஅவற்றைوَاَسَرُّواஇன்னும் மறைத்துக் கொள்வார்கள்النَّدَامَةَதுக்கத்தைلَمَّاபோதுرَاَوُاஅவர்கள் கண்டனர்الْعَذَابَ‌ۚவேதனையைوَقُضِىَஇன்னும் தீர்ப்பளிக்கப்பட்டதுبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِالْقِسْطِ‌நீதமாகوَهُمْஅவர்கள்لَا يُظْلَمُوْنَ‏அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
வ லவ் அன்ன லிகுல்லி னFப்ஸின் ளலமத் மா Fபில் அர்ளி லFப்ததத் Bபிஹ்; வ அஸர்ருன் னதாமத லம்மா ர அவுல் 'அதாBப், வ குளிய Bபய்னஹும் Bபில்கிஸ்த்; வ ஹும் லா யுள்லமூன்
முஹம்மது ஜான்
(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.
அப்துல் ஹமீது பாகவி
அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்கள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிடக் கருதும்! மேலும், வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் (மக்கள்) துக்கத்தை மறைத்துக் கொள்(ள கருது)வார்கள் (அந்நாளில்) அவர்களுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
IFT
அக்கிரமம் செய்த ஒவ்வொருவனும் தன்னிடம் இந்த பூமியில் உள்ள செல்வம் அனைத்தும் இருந்தாலும், அந்த வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனை (முழுவதும்) ஈடாக அளிப்பதற்குத் தயாராகி விடுவான். மேலும், இவர்கள் அவ்வேதனையைக் காணும்போது, உள்ளூரப் பெரிதும் வருந்துவார்கள். ஆயினும், அவர்களிடையே முற்றிலும் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கப்படும்; அவர்கள் (எவ்வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்) யாவும் இருந்த போதிலும் அவை யாவையுமே (அல்லாஹ்வின்) தண்டனையிலிருந்து தன்னை நீக்கிக் கொள்ள) ஈடாகக் கொடுத்துவிடும், மேலும், அவர்கள் தண்டனையைக் கண்கூடாகப் பார்க்கின்றபொழுது கைசேதத்தை (உள்ளூர) அவர்கள் மறைத்துக்கொள்வர், (அந்நாளில்) அவர்களிடையே நீதியாகவே தீர்ப்பளிக்கப்படும், அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
Saheeh International
And if each soul that wronged had everything on earth, it would offer it in ransom. And they will confide regret when they see the punishment; and they will be judged in justice, and they will not be wronged.
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اَلَاۤ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்விற்குمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَالْاَرْضِؕஇன்னும் பூமியில்اَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வுடையحَقٌّஉண்மையானதுوَّلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)هُمْஅவர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
அலா இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; அலா இன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
முஹம்மது ஜான்
வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எனினும் (மனிதர்களில்) பலர் இதை நம்புவதில்லை.
IFT
தெரிந்து கொள்ளுங்கள்! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது! ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியாமலிருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே) வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், எனினும் அவர்களில் அதிகமானோர் (இதனை) அறியமாட்டார்கள்.
Saheeh International
Unquestionably, to Allah belongs whatever is in the heavens and the earth. Unquestionably, the promise of Allah is truth, but most of them do not know.
هُوَ یُحْیٖ وَیُمِیْتُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
هُوَஅவன்தான்يُحْىٖஉயிர்ப்பிக்கிறான்وَيُمِيْتُஇன்னும் மரணிக்கச் செய்கிறான்وَاِلَيْهِஇன்னும் அவனிடமேتُرْجَعُوْنَ‏நீங்கள் திருப்பப்படுவீர்கள்
ஹுவ யுஹ்யீ வ யுமீது வ இலய்ஹி துர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரணிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே (உங்களை) உயிர்ப்பித்தான்; அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனிடமே (மறுமையில்) நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
IFT
அவனே வாழ்வை அளிக்கின்றான். மேலும், மரணம் அளிப்பவனும் அவனே! மேலும் நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனே (உங்களுக்கு) உயிர் கொடுக்கிறான், அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான், (பின்னர், அவனிடமே (மறுமையில்) நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
Saheeh International
He gives life and causes death, and to Him you will be returned.
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِ ۙ۬ وَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟
يٰۤاَيُّهَا النَّاسُமனிதர்களேقَدْதிட்டமாகجَآءَتْكُمْவந்தது/உங்களுக்குمَّوْعِظَةٌநல்லுபதேசம்مِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَشِفَآءٌஇன்னும் மருந்துلِّمَاஉள்ளவற்றிற்குفِى الصُّدُوْرِۙ நெஞ்சங்களில்وَهُدًىஇன்னும் நேர்வழிوَّرَحْمَةٌஇன்னும் அருள்لِّـلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அத்கும் மவ்'இளதுன் மிர் ரBப்Bபிகும் வ ஷிFபா'உல் லிமா Fபிஸ் ஸுதூரி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில் மு'மினீன்
முஹம்மது ஜான்
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து நல்லுபதேசமும் உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதும், (அது) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியும், இறை அருளும் வந்துள்ளன.
IFT
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடிய தாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து திட்டமாக ஒரு நல்லுபதேசமும் (உங்கள்) இதயங்களிலுள்ளவற்றைக் குணப்படுத்துவதும்) உங்களுக்கு வந்துவிட்டது, மேலும், (அது) விசுவாசங் கொண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், அருளாகவும் இருக்கிறது.
Saheeh International
O mankind, there has come to you instruction from your Lord and healing for what is in the breasts and guidance and mercy for the believers.
قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْیَفْرَحُوْا ؕ هُوَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
قُلْகூறுவீராகبِفَضْلِஅருளைக் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்وَبِرَحْمَتِهٖஇன்னும் அவனது கருணையைக் கொண்டுفَبِذٰلِكَஇதைக் கொண்டேفَلْيَـفْرَحُوْا ؕஅவர்கள் மகிழ்ச்சியடையட்டும்هُوَஇதுخَيْرٌமிக மேலானதுمِّمَّاஎவை/விடيَجْمَعُوْنَ‏சேகரிக்கிறார்கள்
குல் Bபி Fபள்லில் லாஹி வ Bபி ரஹ்மதிஹீ Fப Bபி தாலிக Fபல் யFப்ரஹூ ஹுவ கய்ருன் மிம்மா யஜ்ம'ஊன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(இதை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது'' என்றும் (நபியே!) கூறுவீராக.
IFT
(நபியே) நீர் கூறும்: “அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும் அருளைக் கொண்டும் இதனை இறக்கியுள்ளான். இதனைக் குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும்விட இது சிறந்ததாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது) அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும், அவனுடைய அருளைக் கொண்டுமுள்ளதாகும், ஆகவே, அதைக்கொண்டு அவர்கள் சந்தோஷமடையட்டும், இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றைவிட மிகச் சிறந்தது” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "In the bounty of Allah and in His mercy - in that let them rejoice; it is better than what they accumulate."
قُلْ اَرَءَیْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلْ آٰللّٰهُ اَذِنَ لَكُمْ اَمْ عَلَی اللّٰهِ تَفْتَرُوْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَيْتُمْஅறிவிப்பீர்களாகمَّاۤஎதைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்காகمِّنْ رِّزْقٍஉணவில்فَجَعَلْتُمْநீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களாمِّنْهُஅதில்حَرَامًاஆகாதவைوَّحَلٰلًا ؕஇன்னும் ஆகுமானவைقُلْகூறுவீராகآٰللّٰهُஅல்லாஹ்اَذِنَஅனுமதியளித்தான்لَـكُمْ‌உங்களுக்குاَمْஅல்லதுعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்வின்تَفْتَرُوْنَ‏இட்டுக்கட்டுகிறீர்கள்
குல் அர'அய்தும் மா அன்Zஜலல் லாஹு லகும் மிர் ரிZஜ்கின் Fபஜ'அல்தும் மின்ஹு ஹராம(ன்)வ் வ ஹலாலன் குல் ஆல்லாஹு அதின லகும்; அம் 'அலல் லாஹி தFப்தரூன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவுகள் - அவற்றில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே அதைப்பற்றி கூறுங்கள்!'' (‘‘இப்படி உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?'' என்று (அவர்களைக்) கேட்பீராக!
IFT
(நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஜ்கில் (அருட்பேற்றில்) சிலவற்றைத் தடுக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே!” (நபியே! இவர்களிடம்) கேளுங்கள்: “இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கின்றீர்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! “உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவு வகைகளை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஆகாதவையென்றும் சிலவற்றை ஆகுமானவையென்றும் நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள்” (இவ்வாறு செய்ய) “அல்லாஹ்தான் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றானா, அல்லது அல்லாஹ்வின்மீது (பொய்யைக்) கற்பனை செய்கிறீர்களா?” என்று நீர் கேட்பீராக!
Saheeh International
Say, "Have you seen what Allah has sent down to you of provision of which you have made [some] lawful and [some] unlawful?" Say, "Has Allah permitted you [to do so], or do you invent [something] about Allah?"
وَمَا ظَنُّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟۠
وَمَا ظَنُّஎண்ணம் என்ன?الَّذِيْنَஎவர்கள்يَفْتَرُوْنَஇட்டுக்கட்டுகிறார்கள்عَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்الْكَذِبَபொய்யைيَوْمَ الْقِيٰمَةِ‌ؕமறுமை நாள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَذُوْ فَضْلٍஅருளுடையவன்عَلَىமீதுالنَّاسِமனிதர்கள்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)هُمْஅவர்களில்لَا يَشْكُرُوْنَ‏நன்றி செலுத்தமாட்டார்கள்
வமா ளன்னுல் லதீன யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ லதூ Fபள்லின் 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரஹும் லா யஷ்குரூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கிருபையுடையவன். (அவ்வாறு இல்லையெனில் அவர்களை உடனுக்குடன் தண்டித்திருப்பான்.) இவ்வாறிருந்தும் அவர்களில் பலர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.
IFT
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு ஏற்படும் நிலையைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? திண்ணமாக, அல்லாஹ் மக்கள் மீது கருணையுடையவனாக இருக்கின்றான். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கின்றார்களே அவர்களின் எண்ணம் மறுமை நாளைப்பற்றி என்ன? (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்களென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ், மனிதர்கள் மீது பேரருளுடையோனாக இருக்கிறான், எனினும், அவர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.
Saheeh International
And what will be the supposition of those who invent falsehood about Allah on the Day of Resurrection? Indeed, Allah is the possessor of bounty for the people, but most of them are not grateful.
وَمَا تَكُوْنُ فِیْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَیْكُمْ شُهُوْدًا اِذْ تُفِیْضُوْنَ فِیْهِ ؕ وَمَا یَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
وَمَا تَكُوْنُஇருக்கமாட்டீர்فِىْ شَاْنٍஎந்த செயலிலும்وَّمَا تَتْلُوْاஇன்னும் நீர் ஓத மாட்டீர்مِنْهُஅதிலிருந்துمِنْ قُرْاٰنٍகுர்ஆனிலிருந்துوَّلَا تَعْمَلُوْنَஇன்னும் செய்யமாட்டீர்கள்مِنْ عَمَلٍஎந்த செயலையும்اِلَّاதவிரكُنَّاநாம் இருந்தோம்عَلَيْكُمْஉங்கள் மீதுشُهُوْدًاசாட்சிகளாகاِذْபோதுتُفِيْضُوْنَஈடுபடுகிறீர்கள்فِيْهِ‌ؕஅவற்றில்وَمَا يَعْزُبُஇன்னும் மறையாதுعَنْ رَّبِّكَஉம் இறைவனை விட்டுمِنْ مِّثْقَالِஅளவுذَرَّةٍஓர் அணுفِى الْاَرْضِபூமியில்وَلَا فِى السَّمَآءِஇன்னும் வானத்தில்وَلَاۤ اَصْغَرَசிறிதும் இல்லைمِنْ ذٰ لِكَஇதை விடوَلَاۤ اَكْبَرَஇன்னும் பெரிதும் இல்லைاِلَّاதவிரفِىْ كِتٰبٍபதிவேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
வமா தகூனு Fபீ ஷ'னி(ன்)வ் வமா தத்லூ மின்ஹு மின் குர்'ஆனி(ன்)வ் வலா தஃமலூன மின் 'அமலின் இல்லா குன்னா 'அலய்கும் ஷுஹூதன் இத் துFபீளூன Fபீஹ்; வமா யஃZஜுBபு 'அர் ரBப்Bபிக மின் மித்காலி தர்ரதின் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'இ வ லா அஸ்கர மின் தாலிக வ லா அக்Bபர இல்லா Fபீ கிதாBபின் முBபீன்
முஹம்மது ஜான்
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதிய போதிலும், (உங்கள் காரியங்களில்) நீங்கள் எதைச் செய்த போதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உமது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை.
IFT
(நபியே!) நீர் எந்த நிலைமையிலிருந்தாலும், குர்ஆனிலிருந்து எதை நீர் ஓதிக் காண்பித்தாலும், (மக்களே) நீங்களும் எந்தச் செயலைச் செய்து கொண்டிருந்தாலும், அதை நீங்கள் செய்து கொண்டிருக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆக, வானம் மற்றும் பூமியில் உள்ள பொருள்களில் அணுவளவும் உம் இறைவனின் பார்வையை விட்டு மறைவானதல்ல! அதைவிடச் சிறியதோ, பெரியதோ அனைத்தும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எக்காரியத்திலும் நீர் இருப்பதில்லை, இந்தக் குர் ஆனிலிருந்து நீங்கள் ஓதுவதுமில்லை, செயல் எதையும் நீங்கள் செய்வதுமில்லை, நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும்பொழுது உங்கள் மீது நாம் பிரசன்னமானவர்களாக இருந்தே தவிர இன்னும், பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே) உமதிரட்சகனுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதில்லை, இன்னும், இவற்றைவிடச் சிறிதோ, பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய தெளிவான (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பதிவுப் புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருந்தேயல்லாமல் இல்லை.
Saheeh International
And, [O Muhammad], you are not [engaged] in any matter and do not recite any of the Qur’an and you [people] do not do any deed except that We are witness over you when you are involved in it. And not absent from your Lord is any [part] of an atom's weight within the earth or within the heaven or [anything] smaller than that or greater but that it is in a clear register.
اَلَاۤ اِنَّ اَوْلِیَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚۖ
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகاَوْلِيَآءَநண்பர்கள்اللّٰهِஅல்லாஹ்வின்لَا خَوْفٌஒரு பயமுமில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ‏இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
அலா இன்னா அவ்லியா'அல் லாஹி லா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) ‘‘அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் நேசர்க(ளான நல்லடியார்)களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள்''.
IFT
தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் நேசர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள்- அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்.
Saheeh International
Unquestionably, [for] the allies of Allah there will be no fear concerning them, nor will they grieve -
الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟ؕ
الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَكَانُوْاஇருந்தார்கள்يَتَّقُوْنَؕ‏அவர்கள் அஞ்சுபவர்களாக
அல்லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
முஹம்மது ஜான்
அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து நடக்கின்றனர்.
IFT
அவர்களோ நம்பிக்கை கொண்டு இறையச்சமுள்ள போக்கினை மேற் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்வை உண்மையாகவே விசுவாசித்து (அவனைப்) பயந்தவர்களாகவும் இருப்பார்கள்.
Saheeh International
Those who believed and were fearing Allah.
لَهُمُ الْبُشْرٰی فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ؕ لَا تَبْدِیْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ؕ
لَهُمُஅவர்களுக்கேالْبُشْرٰىநற்செய்திفِى الْحَيٰوةِவாழ்வில்الدُّنْيَاஉலகம்وَفِى الْاٰخِرَةِ‌ؕமறுமையில்لَاஅறவே இல்லைتَبْدِيْلَமாற்றம்لِـكَلِمٰتِவாக்குகளில்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையذٰلِكَ هُوَஇதுதான்الْفَوْزُவெற்றிالْعَظِيْمُؕ‏மகத்தானது
லஹுமுல் Bபுஷ்ரா Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரஹ்; லா தBப்தீல லி கலிமாதில் லாஹ்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
IFT
இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்திகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் வாக்குகள் மாறக்கூடியவையல்ல! இதுதான் மாபெரும் வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் நன்மாராயமுண்டு, (உயர், பதவிகளை அவர்களுக்கு வழங்குவதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாற்றமுமில்லை, இதுவே மகத்தான வெற்றியாகும்.
Saheeh International
For them are good tidings in the worldly life and in the Hereafter. No change is there in the words [i.e., decrees] of Allah. That is what is the great attainment.
وَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ؕ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَلَاகவலைக்குள்ளாக்க வேண்டாம்يَحْزُنْكَஉம்மைقَوْلُهُمْ‌ۘசொல்/அவர்களுடையاِنَّநிச்சயமாகالْعِزَّةَகண்ணியம்لِلّٰهِஅல்லாஹ்வுக்குجَمِيْعًا‌ ؕஅனைத்துهُوَஅவன்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
வ லா யஹ்Zஜுன்க கவ்லுஹும்; இன்னல் 'இZஜ்Zஜத லில்லாஹி ஜமீ'ஆ; ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மை அவமதித்துக் கூறுகின்ற) அவர்களுடைய வார்த்தைகள் உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
IFT
(நபியே!) அவர்களுடைய (அவதூறான) பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம்! கண்ணியம் முழுவதும் திண்ணமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. அவன் அனைத்தையும் கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (நபியே! உம்மை இழிவாகக் கூறும்) அவர்களுடைய கூற்று(கள்) உம்மைக் கவலைப்படுத்த வேண்டாம், நிச்சயமாக கண்ணியம் (அது) அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே செவியேற்கிறவன், (யாவையும்) நன்கறிகிறவன்.
Saheeh International
And let not their speech grieve you. Indeed, honor [due to power] belongs to Allah entirely. He is the Hearing, the Knowing.
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ ؕ وَمَا یَتَّبِعُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَآءَ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்குمَنْஎவர்கள்فِى السَّمٰوٰتِவானங்களில்وَمَنْஇன்னும் எவர்கள்فِى الْاَرْضِ‌ؕபூமியில்وَمَاஇன்னும் எதை?يَتَّبِعُபின்பற்றுகின்றனர்الَّذِيْنَஎவர்கள்يَدْعُوْنَஅழைக்கிறார்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிشُرَكَآءَ‌ ؕஇணை(தெய்வங்)களைاِنْ يَّتَّبِعُوْنَஅவர்கள் பின்பற்றுவதில்லைاِلَّاதவிரالظَّنَّசந்தேகத்தைوَاِنْஇல்லைهُمْஅவர்கள்اِلَّاதவிரيَخْرُصُوْنَ‏கற்பனை செய்பவர்களாக
அலா இன்ன லில்லாஹி மன் Fபிஸ் ஸமாவாதி வ மன் Fபில் அர்ள்; வமா யத்தBபி'உல் லதீன யத்'ஊன மின் தூனில் லாஹி ஷுரகா'; இ(ன்)ய் யத்தBபி'ஊன இல்லள் ளன்ன வ இன் ஹும் இல்லா யக்ருஸூன்
முஹம்மது ஜான்
அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே என்பதை அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாறிருக்க,) அல்லாஹ்வையன்றி மற்றவற்றையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்? வீண் சந்தேகத்தைதவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை; அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே!
IFT
அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்கள், பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அல்லாஹ்விற்குரியவர்களாவர். எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு (தாம் உருவாக்கிக் கொண்ட) தெய்வங்களை அழைக்கின்றார்களோ அவர்கள் வெறும் யூகங்களைத்தான் பின்பற்றுகின்றார்கள். மேலும், வெறும் கற்பனைகளில்தான் மூழ்கியிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களில் இருப்பவை மற்றும் பூமியில் இருப்பவை நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன! என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், (இவ்வாறிருக்க) அல்லாஹ்வையன்றி இணையாளர்களை (தெய்வங்கள் என அழைப்போர் எதைப் பின்பற்றுகின்றனர்? (வீண்) யூகத்தையன்றி வேறெதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை, அன்றியும் அவர்கள் வெறும் அனுமானங்கள் செய்பவர்களே அன்றி இல்லை.
Saheeh International
Unquestionably, to Allah belongs whoever is in the heavens and whoever is on the earth. And those who invoke other than Allah do not [actually] follow [His] "partners." They follow not except assumption, and they are not but misjudging.
هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟
هُوَஅவன்الَّذِىْஎத்தகையவன்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்காகالَّيْلَஇரவைلِتَسْكُنُوْاநீங்கள் சுகம்பெறுவதற்காகفِيْهِஅதில்وَالنَّهَارَஇன்னும் பகலைمُبْصِرًا‌ ؕபார்க்கக் கூடியதாகاِنَّ فِىْ ذٰ لِكَநிச்சயமாக/இதில்لَاٰيٰتٍஅத்தாட்சிகள்لِّـقَوْمٍமக்களுக்குيَّسْمَعُوْنَ‏செவிசாய்க்கின்றார்கள்
ஹுவல் லதீ ஜ'அல லகுமுல் லய்ல லிதஸ்குனூ Fபீஹி வன்னஹார முBப்ஸிரா; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லி கவ்மி(ன்)ய் யஸ்ம'ஊன்
முஹம்மது ஜான்
நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காக இரவையும், (பொருட்களைப்) பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான்; நிச்சயமாக இதில் (அவன் வசனங்களைச்) செவிசாய்த்துக் (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் (அனைத்தையும் தெளிவாகப்) பார்ப்பதற்காகப் பகலையும் உங்களுக்கு அவனே உருவாக்கினான். (அவனுடைய வசனங்களுக்குச்) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
அல்லாஹ்தான் உங்களுக்காக இரவை அமைத்தான்; அதில் நீங்கள் நிம்மதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், பகலை ஒளிமிக்கதாக அமைத்தான்! திண்ணமாக (திறந்த மனத்துடன் இறைத்தூதரின் அழைப்பைச்) செவிமடுக்கும் மக்களுக்கு இதில் பல சான்றுகள் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையோனென்றால் இரவை உங்களுக்காக-அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை பார்வைக்குரிய (பிரகாசமான)தாகவும் ஆக்கினான், (அவனுடைய வசனங்களுக்குச்) செவிசாய்க்கும் சமுதாயத்தவர்க்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
It is He who made for you the night to rest therein and the day, giving sight. Indeed in that are signs for a people who listen.
قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ هُوَ الْغَنِیُّ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
قَالُوْاகூறுகின்றனர்اتَّخَذَஆக்கிக் கொண்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَدًا‌ஒரு சந்ததியைسُبْحٰنَهٗ‌ ؕஅவன் மிகப் பரிசுத்தமானவன்هُوَஅவன்الْـغَنِىُّ‌ ؕதேவையற்றவன்لَهٗஅவனுக்கேمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ ؕஇன்னும் பூமியிலுள்ளவைاِنْஇல்லைعِنْدَكُمْஉங்களிடம்مِّنْ سُلْطٰنٍۢஎந்த ஓர் ஆதாரம்بِهٰذَا ؕஇதற்குاَتَقُوْلُوْنَகூறுகிறீர்களா?عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுمَا لَا تَعْلَمُوْنَ‏எதை/ அறியமாட்டீர்கள்
காலுத் தகதல் லாஹு வலதன் ஸுBப்ஹானஹூ ஹுவல் கனிய்யு லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; இன் 'இன்தகும் மின் ஸுல்தானின் Bபிஹாதா; அ' தகூலூன 'அல் அல்லாஹி மா லா தஃலமூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறுகின்ற) உங்களிடத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இப்படி பொய்) கூறுகிறீர்களா?
IFT
‘அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான்’ என மக்கள் கூறிவிட்டார்கள். (ஸுப்ஹானல்லாஹ்) அல்லாஹ் புனிதமானவன்! அவன் தேவைகள் இல்லாதவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். இந்நிலையில் இக்கூற்றுக்கு உங்களிடம் என்னதான் ஆதாரம் இருக்கிறது? நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் குமாரனை எடுத்துக் கொண்டான் என அவர்கள் கூறுகின்றனர், அவனோ (இக் கூற்றிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன், அவன் தேவையற்றவன், வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, (அவனுக்கு மக்கள் உண்டென்று கூறும்) இதற்கு உங்களிடத்தில் எத்தகைய சான்றும் இல்லை, நீங்கள் அறிந்துகொள்ளாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?
Saheeh International
They have said, "Allah has taken a son." Exalted is He; He is the [one] Free of need. To Him belongs whatever is in the heavens and whatever is in the earth. You have no authority for this [claim]. Do you say about Allah that which you do not know?
قُلْ اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ
قُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَفْتَرُوْنَஇட்டுக்கட்டுகிறார்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ் மீதுالْـكَذِبَபொய்யைلَا يُفْلِحُوْنَؕ‏வெற்றி பெறமாட்டார்கள்
குல் இன்னல் லதீன யFப்தரூன 'அல் அல்லாஹில் கதிBப லா யுFப்லிஹூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எவர்கள் அல்லாஹ்வின் மீது (இப்படி) கற்பனையாகப் பொய் கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையமாட்டார்கள்'' என்று (நபியே!) கூறிவிடுவீராக.
IFT
(நபியே!) நீர் கூறும்: “எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் வெற்றியடைவதில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அல்லாஹ்வின்மீது (இவ்வாறு)பொய்யைக் கற்பனை செய்கின்றனரே, அத்தகையோர்-அவர்கள் வெற்றியடையமாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Saheeh International
Say, "Indeed, those who invent falsehood about Allah will not succeed."
مَتَاعٌ فِی الدُّنْیَا ثُمَّ اِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِیْقُهُمُ الْعَذَابَ الشَّدِیْدَ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠
مَتَاعٌஒரு சுகம்فِى الدُّنْيَاஉலகில்ثُمَّபிறகுاِلَيْنَاநம்மிடமேمَرْجِعُهُمْ ثُمَّமீளுமிடம்/அவர்களுடைய/பிறகுنُذِيْقُهُمُசுவைக்க வைப்போம் அவர்களுக்குالْعَذَابَவேதனைالشَّدِيْدَகடினமானبِمَاஎதன் காரணமாகكَانُوْاஇருந்தனர்يَكْفُرُوْنَ‏அவர்கள் நிராகரிக்கிறார்கள்
மதா'உன் Fபித்துன்யா தும்ம இலய்னா மர்ஜி'உஹும் தும்ம னுதீகுஹுமுல் 'அதாBபஷ் ஷதீத Bபிமா கானூ யக்Fபுரூன்
முஹம்மது ஜான்
உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்கள்) இவ்வுலகில் சிறிது சுகமனுபவிக்கலாம். பின்னர் (மறுமையிலோ) நம்மிடம்தான் அவர்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. பின்னர், (உண்மையை) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடினமான வேதனையை சுவைக்க வைப்போம்.
IFT
உலகில் (அவர்கள் அனுபவிப்பது) கொஞ்ச நாள் வாழ்க்கைதான்! பிறகு நம்மிடமே அவர்கள் திரும்ப வரவேண்டியுள்ளது. பின்னர் அவர்கள் மேற்கொண்டிருந்த நிராகரிப்புப் போக்கிற்குப் பகரமாக கடுமையான வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இத்தகையோருக்கு) இவ்வுலகில் (சிறிது) சுகமனுபவித்தல் உண்டு, பின்னர் (மறுமையில்) நம்மிடமே அவர்களின் திரும்புதல் இருக்கிறது, பின்னர் (உண்மையை) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு நாம் கடினமான வேதனையை சுவைக்கச் செய்வோம்.
Saheeh International
[For them is brief] enjoyment in this world; then to Us is their return; then We will make them taste the severe punishment because they used to disbelieve.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ نُوْحٍ ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَیْكُمْ مَّقَامِیْ وَتَذْكِیْرِیْ بِاٰیٰتِ اللّٰهِ فَعَلَی اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا یَكُنْ اَمْرُكُمْ عَلَیْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَیَّ وَلَا تُنْظِرُوْنِ ۟
وَاتْلُஓதுவீராகعَلَيْهِمْஅவர்களுக்குنَبَاَசரித்திரத்தைنُوْحٍ‌ۘநூஹூடையاِذْசமயத்தைقَالَஅவர்கள் கூறினார்لِقَوْمِهٖதன் சமுதாயத்தை நோக்கிيٰقَوْمِஎன் சமுதாயமேاِنْ كَانَஇருந்தால்كَبُرَபாரமாகعَلَيْكُمْஉங்கள் மீதுمَّقَامِىْநான் தங்குவதுوَتَذْكِيْرِىْஇன்னும் நான்உபதேசிப்பதுبِاٰيٰتِவசனங்களைக் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்فَعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்تَوَكَّلْتُநான் நம்பிக்கை வைத்தேன்فَاَجْمِعُوْۤاஆகவேமுடிவுசெய்யுங்கள்اَمْرَகாரியத்தைكُمْஉங்கள்وَشُرَكَآءَஇன்னும் இணை தெய்வங்களைكُمْஉங்கள்ثُمَّபிறகுلَا يَكُنْஆகிவிடவேண்டாம்اَمْرُகாரியம்كُمْஉங்கள்عَلَيْكُمْஉங்கள் மீதுغُمَّةًகுழப்பமானதாகثُمَّபிறகுاقْضُوْۤاநிறைவேற்றுங்கள்اِلَىَّஎன் பக்கம்وَ لَا تُنْظِرُوْنِ‏நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
வத்லு 'அலய்ஹிம் னBப-அ-னூஹின் இத் கால லிகவ்மிஹீ யா கவ்மி இன் கான கBபுர 'அலய்கும் மகாமீ வ தத்கீரீ Bபி ஆயாதில் லாஹி Fப'அலல் லாஹி தவக்கல்து Fப அஜ்மி'ஊ அம்ரகும் வ ஷுரகா'அகும் தும்ம லா யகுன் அம்ருகும் 'அலய்கும் கும்மதன் தும்மக் ளூ இலய்ய வலா துன்ளிரூன்
முஹம்மது ஜான்
மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதி)னால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின் படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசமளிக்க வேண்டாம்'' என்று கூறினார்.
IFT
மேலும், (நபியே!) இவர்களுக்கு நூஹுடைய செய்தியை எடுத்துரைப்பீராக! அவர் தன்னுடைய சமுதாயத்தினரை நோக்கி கூறினார்: “என் சமுதாயத்தினரே! நான் உங்களிடையே வாழ்வதையும் அல்லாஹ்வின் வசனங்களை (அவ்வப்போது) நான் எடுத்துரைத்து நினைவூட்டிக் கொண்டிருப்பதையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றேன். நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களின் உதவியைப் பெற்று உங்களுக்கிடையே ஒருமித்த தீர்மானத்திற்கு வாருங்கள்! பிறகு அந்தத் தீர்மானத்தின் எந்த அம்சமும் உங்கள் பார்வையிலிருந்து மறைந்துவிடாவண்ணம் அதனைப் பற்றி நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள்; பிறகு (அதனை) எனக்கெதிராகச் செயல்படுத்துங்கள்; மேலும், எனக்குச் சற்றும் அவகாசம் அளிக்காதீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நூஹ்வுடைய சம்பவத்தை நீர் அவர்களுக்கு ஒதிக் காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரிடம், “என்னுடைய சமூகத்தினரே! நான் (உங்களுக்கு மத்தியில்) இருப்பதும், நான் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து (உபதேசித்து) நினைவு படுத்துவதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (எனக்கு தீங்கு செய்யவேண்டுமா)னால், நான் அல்லாஹ்வின் மீதே (என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளேன், (நீங்கள் முடிவெடுத்த) உங்களுடைய காரியத்தையும், உங்களுடைய இணையாளர்களையும் ஒன்றுகூட்டி முடிவு செய்யுங்கள், பின்னர் உங்களுடைய அக்காரியம் உங்களிடம் மறைமுகமாகவும் இருக்க வேண்டாம், பின்னர் (அம்முடிவை) என்னில் நிறைவேற்றி விடுங்கள், (இதில்) எனக்கு நீங்கள் காலதாமதம் கொடுக்க வேண்டாம்” என்று கூறியதை நினைவு கூர்வீராக!
Saheeh International
And recite to them the news of Noah, when he said to his people, "O my people, if my residence and my reminding of the signs of Allah has become burdensome upon you - then I have relied upon Allah. So resolve upon your plan and [call upon] your associates. Then let not your plan be obscure to you. Then carry it out upon me and do not give me respite.
فَاِنْ تَوَلَّیْتُمْ فَمَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۙ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
فَاِنْ تَوَلَّـيْتُمْநீங்கள் திரும்பினால்فَمَاநான் கேட்கவில்லைسَاَلْـتُكُمْஉங்களிடம்مِّنْ اَجْرٍஎந்த கூலியையும்‌ؕاِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلَىமீதேاللّٰهِ‌ۙஅல்லாஹ்வின்وَاُمِرْتُஇன்னும் கட்டளையிடப் பட்டேன்اَنْ اَكُوْنَநான் ஆகவேண்டுமெனمِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில்
Fப இன் தவல்லய்தும் Fபமா ஸ அல்துகும் மின் அஜ்ரின்; இன் அஜ்ரிய இல்லா 'அல் அல்லாஹி வ உமிர்து அன் அகூன மினல் முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
“ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
பின்னும் நீங்கள் (என்னைப்) புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் எதிர்பார்க்கவில்லை; என் கூலி அல்லாஹ்விடமே தவிர (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கும்படியாகவே கட்டளையிடப் பட்டுள்ளேன்'' (என்று கூறினார்.)
IFT
நீங்கள் (என் நல்லுரையைப்) புறக்கணித்தால் எனக்கு ஒன்றும் இழப்பு ஏற்பட்டு விடாது. நான் உங்களிடம் கூலி எதனையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே உள்ளது. (எவர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும்) நான் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்பவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, நீங்கள் (என்னுடைய தூதைப்) புறக்கணித்தால், நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை, என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்வின் மீதே தவிர (மற்றெவரிடமும்) இல்லை, நான் (அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கும்) முஸ்லிம்களில் (உள்ளவனாக) இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).
Saheeh International
And if you turn away [from my advice] - then no payment have I asked of you. My reward is only from Allah, and I have been commanded to be of the Muslims [i.e., those who submit to Allah]."
فَكَذَّبُوْهُ فَنَجَّیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓىِٕفَ وَاَغْرَقْنَا الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟
فَكَذَّبُوْهُஅவர்கள் பொய்ப்பித்தனர்فَنَجَّيْنٰهُஅவரைوَمَنْஆகவே, பாதுகாத்தோம்/அவரைمَّعَهٗஇன்னும் அவருடன் இருந்தவர்களைفِى الْـفُلْكِகப்பலில்وَجَعَلْنٰهُمْஇன்னும் அவர்களை ஆக்கினோம்خَلٰٓٮِٕفَபிரதிநிதிகளாகوَاَغْرَقْنَاஇன்னும் மூழ்கடித்தோம்الَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِنَا‌ ۚநம் வசனங்களைفَانْظُرْஆகவே கவனிப்பீராகكَيْفَஎவ்வாறுكَانَஆகிவிட்டதுعَاقِبَةُமுடிவுالْمُنْذَرِيْنَ‏எச்சரிக்கப்பட்டவர்களின்
Fப கத்தBபூஹு Fப னஜ்ஜய்னாஹு வ மன் ம'அஹூ Fபில் Fபுல்கி வ ஜ'அல்னாஹும் கலா'இFப வ அக்ரக்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முன்தரீன்
முஹம்மது ஜான்
அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) அவர்களோ அவரைப் பொய்யரென்றே கூறினார்கள். ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். அவர்களுக்குப் பதிலாக (அவர்களுடைய பூமியில் நாம் பாதுகாத்துக் கொண்ட) இவர்களை அதிபதிகளாக ஆக்கினோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களுடைய முடிவு எப்படி ஆயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக.
IFT
அவர்கள் அவரைப் ‘பொய்யர்’ என்று கூறினார்கள். இதன் விளைவாக நாம் அவரையும் அவருடன் கப்பலிலிருந்த மக்களையும் காப்பாற்றினோம்; மேலும் அவர்களை (இப்பூமியில்) பிரதிநிதிகளாக்கினோம். மேலும், நம் வசனங்களைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த அனைவரையும் மூழ்கடித்தோம். பாருங்கள்! எச்சரிக்கப்பட்டிருந்(தும் ஏற்றுக் கொள்ளா)தவர்களின் கதி என்னவாயிற்று?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவர்கள், அவரைப் பொய்யாக்கிவிட்டனர், ஆகவே, நாம் அவரையும், அவரைச் சார்ந்தோரையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம், மேலும், அவர்களை (முன்னவர்களுக்குப்) பின் தோன்றல்களாகவும் நாம் ஆக்கினோம், (இன்னும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியோரை(ப் பெருவெள்ளத்தில்) மூழ்கடித்தோம், பின்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டவர்களுடைய முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக!
Saheeh International
And they denied him, so We saved him and those with him in the ship and made them successors, and We drowned those who denied Our signs. Then see how was the end of those who were warned.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهٖ رُسُلًا اِلٰی قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰی قُلُوْبِ الْمُعْتَدِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاஅனுப்பினோம்مِنْۢ بَعْدِهٖஅவருக்குப் பின்னர்رُسُلًاதூதர்களைاِلٰى قَوْمِهِمْஅவர்களுடைய சமுதாயத்திற்குفَجَآءُوْஅவர்கள் வந்தார்கள்هُمْஅவர்களிடம்بِالْبَيِّنٰتِஅத்தாட்சிகளைக் கொண்டுفَمَا كَانُوْاஅவர்கள் இருக்கவில்லைلِيُؤْمِنُوْاஅவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாகبِمَا كَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தவற்றைبِهٖஅதைمِنْ قَبْلُ‌ ؕமுன்னர்كَذٰلِكَஇவ்வாறேنَطْبَعُமுத்திரையிடுகிறோம்عَلٰىமீதுقُلُوْبِஉள்ளங்கள்الْمُعْتَدِيْنَ‏வரம்புமீறிகளின்
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹீ ருஸுலன் இலா கவ்மிஹிம் Fபஜா'ஊஹும் Bபில் Bபய்யினாதி Fபமா கானூ லியு'மினூ Bபிமா கத்தBபூ Bபிஹீ மின் கBப்ல்; கதாலிக னத்Bப'உ 'அலா குலூBபில் முஃததீன்
முஹம்மது ஜான்
அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்த உண்மைகளை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இல்லை. வரம்பு மீறுபவர்களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம்.
IFT
பின்னர், நாம் நூஹுக்குப் பிறகு தூதர்கள் பலரை அவரவர்களுடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். மேலும், அத்தூதர்கள் அவர்களிடம் மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆயினும், எவற்றை முன்னர் பொய்யெனக் கூறிவந்தார்களோ அவற்றை அவர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு அவருக்கு (நூஹுக்கு)ப் பின்னர், தூதர்களை அவர்களின் சமூகத்தவர்பால் நாம் அனுப்பி வைத்தோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தார்கள், .அப்பொழுது இவர்களுக்கு முன்னர் பொய்யாக்கிக் கொண்டிருந்தவைகளை, இவர்களும் விசுவாசிப்பவர்களாக இருக்கவில்லை, வரம்பு மீறியவர்களின் இதயங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுவோம்.
Saheeh International
Then We sent after him messengers to their peoples, and they came to them with clear proofs. But they were not to believe in that which they had denied before. Thus We seal over the hearts of the transgressors.
ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی وَهٰرُوْنَ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ بِاٰیٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِیْنَ ۟
ثُمَّபிறகுبَعَثْنَاஅனுப்பினோம்مِنْۢ بَعْدِபின்னர்هِمْஇவர்களுக்குمُّوْسٰமூஸாவைوَهٰرُوْنَஇன்னும் ஹாரூனைاِلٰபக்கம்فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَ مَلَا۟ىِٕهٖஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்بِاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளுடன்فَاسْتَكْبَرُوْاஅவர்கள் கர்வம் கொண்டனர்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்قَوْمًاசமுதாயமாகمُّجْرِمِيْنَ‏குற்றம் புரிகின்றவர்கள்
தும்ம Bப'அத்னா மின் Bபஃதிஹிம் மூஸா வ ஹாரூன இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Bபி ஆயாதினா Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மன் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம் அத்தாட்சிகளுடன் (நம் தூதர்களாக) ஃபிர்அவ்னிடமும், அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்கள் கர்வம் கொண்டு (சத்தியத்தை நிராகரித்து) குற்றம் செய்யும் மக்களாகவே ஆனார்கள்.
IFT
பின்னர், அவர்களுக்குப் பிறகு மூஸா மற்றும் ஹாரூனை, ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமூகப் பிரமுகர்களிடமும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் தற்பெருமை கொண்டதோடு குற்றம் புரியும் கூட்டத்தினராய் இருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்களுக்குப் பிறகு மூஸாவையும், ஹாரூனையும் நம்முடைய அத்தாட்சிகளுடன் (நம்முடைய தூதர்களாக) ஃபிர்அவ்னிடமும், அவனுடைய பிரதானிகளிடமும் அனுப்பி வைத்தோம், அப்பொழுது அவர்கள் கர்வங்கொண்டனர், (உண்மையை நிராகரித்த) குற்றவாளிகளான சமூகத்தாராகவும் அவர்கள் இருந்தனர்.
Saheeh International
Then We sent after them Moses and Aaron to Pharaoh and his establishment with Our signs, but they behaved arrogantly and were a criminal people.
فَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِیْنٌ ۟
فَلَمَّاபோதுجَآءَவந்ததுهُمُஅவர்களுக்குالْحَـقُّஉண்மைمِنْஇருந்துعِنْدِنَاநம்மிடம்قَالُوْۤاகூறினார்கள்اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَسِحْرٌசூனியம்தான்مُّبِيْنٌ‏தெளிவானது
Fபலம்மா ஜா'அஹுமுல் ஹக்கு மின் 'இன்தினா காலூ இன்ன ஹாதா ல ஸிஹ்ருன் முBபீன்
முஹம்மது ஜான்
நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, “நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடம் நம் உண்மை(யான அத்தாட்சி) வந்தபொழுது ‘‘நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்'' என்று கூறினார்கள்.
IFT
எனவே, நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்தபோது, “திண்ணமாக இது வெளிப்படையான சூனியம்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, நம்மிடமிருந்து அவர்களுக்கு சத்தியம் வந்தபொழுது “நிச்சயமாக இது தெளிவான சூனியமாகும்” என்று அவர்கள் கூறினார்கள்.
Saheeh International
So when there came to them the truth from Us, they said, "Indeed, this is obvious magic."
قَالَ مُوْسٰۤی اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ ؕ اَسِحْرٌ هٰذَا ؕ وَلَا یُفْلِحُ السّٰحِرُوْنَ ۟
قَالَகூறினார்مُوْسٰٓىமூஸாاَتَقُوْلُوْنَகூறுகிறீர்களா?لِلْحَقِّஉண்மையைلَمَّاபோதுجَآءَவந்தكُمْஉங்களிடம்اَسِحْرٌசூனியமா?هٰذَا ؕஇதுوَلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்கள்السَّاحِرُوْنَ‏சூனியக்காரர்கள்
காலா மூஸா 'அ தகூலூன லில் ஹக்கி லம்ம்மா ஜா'அ கும் 'அ ஸிஹ்ருன் ஹாதா வலா யுFப்லிஹுஸ் ஸாஹிரூன்
முஹம்மது ஜான்
அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு மூஸா (அவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த உண்மையை பார்த்தா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? சூனியமா இது? (அறவே இது சூனியம் இல்லை) சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “சத்தியம் உங்களிடம் வந்த பிறகு அதைப் பற்றியா இவ்வாறு கூறுகின்றீர்கள்? இது என்ன சூனியமா? உண்மையில் சூனியக்காரர்கள் வெற்றி பெறுவதில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) மூஸா, (அவர்களிடம்) “உண்மையைப்பற்றி, அது உங்களிடம் வந்தபொழுது இது சூனியமா? என்று நீங்கள் கூறுகிறீர்களா? சூனியக்காரர்களோ வெற்றி பெறமாட்டார்கள்” என்று கூறினார்.
Saheeh International
Moses said, "Do you say [thus] about the truth when it has come to you? Is this magic? But magicians will not succeed."
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَلْفِتَنَا عَمَّا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِیَآءُ فِی الْاَرْضِ ؕ وَمَا نَحْنُ لَكُمَا بِمُؤْمِنِیْنَ ۟
قَالُـوْۤاகூறினார்கள்اَجِئْتَـنَاநீர் எங்களிடம் வந்தீரா?لِتَلْفِتَـنَاநீர் திருப்புவதற்கு / எங்களைعَمَّاவிட்டு/எதைوَجَدْنَاநாங்கள் கண்டோம்عَلَيْهِஅதில்اٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைوَتَكُوْنَஇன்னும் ஆகிவிடுவதற்குلَكُمَاஉங்கள் இருவருக்கும்الْكِبْرِيَآءُமகத்துவம்فِى الْاَرْضِؕபூமியில்وَمَا نَحْنُநாங்கள் இல்லைلَـكُمَاஉங்கள் இருவரையும்بِمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொள்பவர்களாக
காலூ அஜி'தனா லிதல்Fபிதனா 'அம்மா வஜத்னா 'அலய்ஹி ஆBபா'அனா வ தகூன லகுமல் கிBப்ரியா'உ Fபில் அர்ளி வமா னஹ்னு லகுமா Bபி மு'மினீன்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள்: எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதையர்கள் எதில் இருக்க நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இப்புவியில் நீங்கள் இருவரும் பெரியவர்களாகி விடவுமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? உங்கள் இருவரையும் (இறைவனின் தூதர்கள் என்று) நாங்கள் நம்பவே மாட்டோம்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எங்கள் முன்னோர்கள் எந்த வழியில் வாழ்ந்திடக் கண்டோமோ அந்த வழியிலிருந்து எங்களைத் திருப்பிவிட வேண்டும்; மேலும், இப்புவியில் உங்களுடைய மேலாதிக்கம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? ஆகவே உங்களிருவரையும் நாங்கள் நம்பவே மாட்டோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “எங்கள் மூதாதையர்களை எதில் இருக்க நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இப்பூமியில் உங்களிருவருக்கும் பெருமை (தலைமைத்தனம்) ஆகிவிடவேண்டுமென்பதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? இன்னும், உங்களிருவரையும் (அல்லாஹ்வின் தூதர்களென்று) நாங்கள் விசுவாசங் கொள்ளக்கூடியவர்கள் அல்லர்” என்று கூறினர்.
Saheeh International
They said, "Have you come to us to turn us away from that upon which we found our fathers and so that you two may have grandeur in the land? And we are not believers in you."
وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِیْ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟
وَقَالَஇன்னும் கூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்ائْتُوْنِىْவாருங்கள்/என்னிடம்بِكُلِّஎல்லோரையும் கொண்டுسٰحِرٍசூனியக்காரர்عَلِيْمٍ‏நன்கறிந்த
வ கால Fபிர்'அவ்னு' தூனீ Bபிகுல்லி ஸாஹிரின் 'அலீம்
முஹம்மது ஜான்
ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) “தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி) ‘‘சூனியத்தில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று கட்டளையிட்டான்.
IFT
மேலும், ஃபிர்அவ்ன், “கைதேர்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று தன்னைச் சேர்ந்தவர்களிடம் கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஃபிர்அவ்ன், (தன் கூட்டத்தாரிடம்) “கற்றறிந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் என்னிடம் அழைத்துக்) கொண்டு வாருங்கள்” என்றும் கூறினான்.
Saheeh International
And Pharaoh said, "Bring to me every learned magician."
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
فَلَمَّا جَآءَவந்த போதுالسَّحَرَةُசூனியக்காரர்கள்قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰۤىமூஸாاَلْقُوْاஎறியுங்கள்مَاۤஎதைاَنْتُمْநீங்கள்مُّلْقُوْنَ‏எறியக்கூடியவர்கள்
Fபலம்மா ஜா'அஸ்ஸ ஹரது கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
முஹம்மது ஜான்
அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே, மூஸா அவர்களை நோக்கி ‘‘நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறி(ந்து உங்கள் சூனியத்தைச் செய்)யுங்கள்'' என்று கூறினார்.
IFT
சூனியக்காரர்கள் வந்தபோது மூஸா, அவர்களை நோக்கி, “நீங்கள் எறிய இருப்பவற்றை எறியுங்கள்!” என்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பல பகுதிகளிலும் இருந்த சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்திற்கு) வந்தபோது, மூஸா (அவர்களிடம்) நீங்கள் (சூனியம் செய்ய) போடக் கூடியதைப் போடுங்கள்” என்று கூறினார்.
Saheeh International
So when the magicians came, Moses said to them, "Throw down whatever you will throw."
فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰی مَا جِئْتُمْ بِهِ ۙ السِّحْرُ ؕ اِنَّ اللّٰهَ سَیُبْطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا یُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِیْنَ ۟
فَلَمَّاۤ اَلْقَوْاஆகவே அவர்கள் எறிந்தபோதுقَالَகூறினார்مُوْسٰىமூஸாمَا جِئْتُمْ بِهِۙநீங்கள் செய்தவைالسِّحْرُ‌ؕசூனியம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்سَيُبْطِلُهٗஅழிப்பான்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُصْلِحُசீர்படுத்த மாட்டான்عَمَلَசெயலைالْمُفْسِدِيْنَ‏விஷமிகளின்
Fபலம்மா அல்கவ் கால மூஸா மா ஜி'தும் Bபிஹிஸ் ஸிஹ்ர்; இன்னல் லாஹ ஸ யுBப்திலுஹூ; இன்னல் லாஹ லா யுஸ்லிஹு 'அமலல் முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான். அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவற்றை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை.
IFT
அவர்கள் எறிந்தபோது, மூஸா கூறினார்: “நீங்கள் நிகழ்த்திக்காட்டியது சூனியமேயாகும். திண்ணமாக, அல்லாஹ் அதனை இப்பொழுதே தகர்த்து விடுவான். ஏனெனில், அல்லாஹ் குழப்பம் புரிவோரின் செயலைச் சீர்படுத்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு) அவர்கள் போட்டபொழுது, மூஸா (அவர்களிடம்) “நீங்கள் எதைக் கொண்டு வந்தீர்களோ அது (வெறும்) சூனியமே, நிச்சயமாக அல்லாஹ், இவைகளை அழித்துவிடுவான், நிச்சயமாக அல்லாஹ், குழப்பம் செய்வோரின் செயலைச் சீர்படுத்தமாட்டான்”என்று கூறினார்.
Saheeh International
And when they had thrown, Moses said, "What you have brought is [only] magic. Indeed, Allah will expose its worthlessness. Indeed, Allah does not amend the work of corrupters.
وَیُحِقُّ اللّٰهُ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟۠
وَيُحِقُّஇன்னும் நிரூபிப்பான்اللّٰهُஅல்லாஹ்الْحَـقَّஉண்மையைبِكَلِمٰتِهٖதன் கட்டளைகளைக் கொண்டுوَلَوْ كَرِهَவெறுத்தாலும் சரியேالْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகள்
வ யுஹிக்குல் லாஹுல் ஹக்க Bபி கலிமாதிஹீ வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
முஹம்மது ஜான்
இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக, அல்லாஹ் தன் அத்தாட்சிகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான். (அதைக்) குற்றவாளிகள் வெறுத்தபோதிலும் சரியே'' என்று கூறினார். (அவர் கூறியவாறே அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான்.)
IFT
அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு சத்தியத்தை சத்தியம்தான் என்று நிரூபித்து விடுகின்றான். குற்றவாளிகளுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நிச்சயமாக அல்லாஹ், தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை- (அதனைக்) குற்றவாளிகள் வெறுத்த போதிலும் சரியே உண்மையாக்கியும் வைக்கிறான்” என்றும் கூறினார்.
Saheeh International
And Allah will establish the truth by His words, even if the criminals dislike it."
فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰۤی اِلَّا ذُرِّیَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰی خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهِمْ اَنْ یَّفْتِنَهُمْ ؕ وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِی الْاَرْضِ ۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِیْنَ ۟
فَمَاۤ اٰمَنَநம்பிக்கை கொள்ளவில்லைلِمُوْسٰٓىமூஸாவைاِلَّاதவிரذُرِّيَّةٌஒரு சந்ததியினர்مِّنْ قَوْمِهٖஅவரின்சமுதாயத்தில்عَلٰى خَوْفٍபயந்துمِّنْ فِرْعَوْنَஃபிர்அவ்ன்وَمَلَا۟ ٮِٕهِمْஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்اَنْ يَّفْتِنَهُمْ‌ ؕஅவன் துன்புறுத்துவதை/தங்களைوَاِنَّநிச்சயமாகفِرْعَوْنَஃபிர்அவ்ன்لَعَالٍசர்வாதிகாரிفِى الْاَرْضِ‌ ۚபூமியில்وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்لَمِنَ الْمُسْرِفِيْنَ‏வரம்பு மீறக்கூடியவர்களில்
Fபமா ஆமன லி-மூஸா இல்லா துர்ரிய்யதுன் மின் கவ்மிஹீ 'அலா கவ்Fபின் மின் Fபிர்'அவ்ன வ மல'இஹிம் 'அ(ன்)ய் யFப்தினஹும்; வ இன்ன Fபிர்'அவ்ன ல'ஆலின் Fபில் அர்ளி வ இன்னஹூ லமினல் முஸ்ரிFபீன்
முஹம்மது ஜான்
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தான் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய இனத்தவர்களும் துன்புறுத்துவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தனர். ஏனென்றால், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் மிகச் சக்தி வாய்ந்தவனாக இருந்தான். நிச்சயமாக அவன் வரம்பு மீறி(க் கொடுமை செய்பவர்)களில் இருந்தான்.
IFT
(பாருங்கள்!) ஃபிர்அவ்னுக்கு அஞ்சியும், அவன் வேதனையில் ஆழ்த்திவிடுவானோ என்று பயந்த சமூகப் பிரமுகர்களுக்கு அஞ்சியும் மூஸாவை அவருடைய சமூகத்தாரில் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை சில இளைஞர்களைத் தவிர! உண்மை யாதெனில், ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெரும் வல்லமை கொண்டவனாக இருந்தான். திண்ணமாக, அவன் எந்த எல்லையை மீறுவதற்கும் தயங்காதவர்களில் ஒருவனாக இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதன் பின்னர்,) ஃபிர் அவ்னும், அவர்களின் பிரதானிகளும் தங்களைத் துன்புறுத்துவார்கள் என்ற பயத்தின் மீது அவருடைய சமூகத்தாரிலிருந்து ஒரு கிளையினரைத் தவிர (வேறு எவரும்) மூஸாவை ஈமான் கொள்ளவில்லை, மேலும், நிச்சயமாக ஃபிர் அவ்ன், (அப்)பூமியில் மிக்க சக்திவாய்ந்தவன், (கொடுமை செய்வதில்) நிச்சயமாக அவன் வரம்பு மீறியவர்களிலும் உள்ளவனாவான்.
Saheeh International
But no one believed Moses, except [some] offspring [i.e., youths] among his people, for fear of Pharaoh and his establishment that they would persecute them. And indeed, Pharaoh was haughty within the land, and indeed, he was of the transgressors.
وَقَالَ مُوْسٰی یٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَیْهِ تَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّسْلِمِیْنَ ۟
وَقَالَகூறினார்مُوْسٰىமூஸாيٰقَوْمِஎன் சமுதாயமேاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைفَعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلُوْاۤநம்பிக்கை வையுங்கள்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
வ கால மூஸா யா கவ்மி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி Fப'அலய்ஹி தவக்கலூ இன் குன்தும் முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
மூஸா (தம் சமூகத்தவரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்படுகிறவர்களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்'' என்று கூறினார்.
IFT
மூஸா (தன் சமூகத்தாரை நோக்கிக்) கூறினார்: “என் சமூகத்தவரே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவனையே முற்றிலும் சார்ந்து வாழுங்கள் நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூஸா (தன் சமூகத்தாரிடம்) “என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை விசுவாசித்து, நீங்கள் அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிகிறவர்களாகவும் இருந்தால், (அவனிடமே உங்கள் காரியங்கள் யாவையும் ஒப்படைத்து முழுமையாக) அவனின் மீதே நம்பிக்கை வையுங்கள்”, என்று கூறினார்.
Saheeh International
And Moses said, "O my people, if you have believed in Allah, then rely upon Him, if you should be Muslims [i.e., submitting to Him]."
فَقَالُوْا عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟ۙ
فَقَالُوْاகூறினார்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதேتَوَكَّلْنَا‌ ۚநம்பிக்கைவைத்தோம்رَبَّنَاஎங்கள் இறைவாلَا تَجْعَلْنَاஎங்களை ஆக்கிவிடாதேفِتْنَةًசோதனையாகلِّـلْقَوْمِசமுதாயத்திற்குالظّٰلِمِيْنَۙ‏அநியாயம் புரிகின்றனர்
Fபகாலூ 'அலல் லாஹி தவக்கல்னா ரBப்Bபனா லா தஜ்'அல்னா Fபித்னதல் லில்கவ்மிள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘(அவ்வாறே) அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே!'' என்று பிரார்த்தித்தார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதில் அளித்தார்கள். “நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவனே! அக்கிரமம் புரியும் கூட்டத்தாருக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்கவர்கள், “(அவ்வாறே) அல்லாஹ்வின் மீதே (எங்கள் காரியங்கள் யாவையும் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துவிட்டோம், எங்கள் இரட்சகனே! அநியாயக்காரர்களான சமூகத்தாரின் சோதனைக்கு நீ எங்களை ஆக்கிவிடாதே! என்று பிரார்த்தித்துக் கூறினார்கள்.
Saheeh International
So they said, "Upon Allah do we rely. Our Lord, make us not [objects of] trial for the wrongdoing people
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟
وَنَجِّنَاபாதுகாத்துக் கொள்/எங்களைبِرَحْمَتِكَஉன் அருளால்مِنَஇருந்துالْقَوْمِசமுதாயம்الْكٰفِرِيْنَ‏நிராகரிக்கின்றவர்கள்
வ னஜ்ஜினா Bபிரஹ்மதிக மினல் கவ்மில் காFபிரீன்
முஹம்மது ஜான்
“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
(எங்கள் இறைவனே!) ‘‘நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!'' (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
IFT
மேலும், நிராகரிக்கும் கூட்டத்தாரிடமிருந்து உனது கருணையினால் எங்களைக் காப்பாற்றுவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “(எங்கள் இரட்சகனே!) நிராகரிக்கும் சமூகத்தாரிடமிருந்து உன் அருளைக் கொண்டு எங்களை நீ காப்பாற்றுவாயாக” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
Saheeh International
And save us by Your mercy from the disbelieving people."
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰی وَاَخِیْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُیُوْتًا وَّاجْعَلُوْا بُیُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِیْمُوا الصَّلٰوةَ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟
وَاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَىٰ مُوْسٰىமூஸாவுக்குوَاَخِيْهِஇன்னும் அவரது சகோதரரைاَنْ تَبَوَّاٰநீங்கள் இருவரும் அமையுங்கள்لِقَوْمِكُمَاஉங்கள் சமுதாயத்திற்காகبِمِصْرَமிஸ்ரில்بُيُوْتًاவீடுகளைوَّاجْعَلُوْاஇன்னும் ஆக்குங்கள்بُيُوْتَكُمْஉங்கள் வீடுகளைقِبْلَةًதொழுமிடங்களாகوَّاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَ‌ ؕதொழுகையைوَبَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ அவ்ஹய்னா இலா மூஸா வ அகீஹி அன் தBபவ் வ ஆலி கவ்மிகும Bபி மிஸ்ர Bபுயூத(ன்)வ் வஜ்'அலூ Bபுயூதகும் கிBப்லத(ன்)வ் வ அகீமுஸ் ஸலாஹ்; வ Bபஷ்ஷிரில் மு'மினீன்
முஹம்மது ஜான்
ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம்: ‘‘நீங்கள் இருவரும் உங்கள் மக்களுக்காக ‘மிஸ்ரில்' பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்கள் அவ்வீடுகளையே மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள்.'' (‘‘மேலும், நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள்'' என்று) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (மூஸாவே) நற்செய்தி கூறுவீராக.
IFT
மேலும், நாம் மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும் வஹி அறிவித்தோம்: “உங்களுடைய சமுதாயத்தாருக்காக எகிப்தில் சில இல்லங்களை அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், உங்களுடைய அந்த இல்லங்களை கிப்லா ஆக்கிக் கொண்டு தொழுகையை நிலைநாட்டுங்கள்! மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவியுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும் “நீங்கள் இருவரும் உங்களுடைய சமூகத்தாருக்காக “மிஸ்ரில்” பல வீடுகளை அமைத்துக் கொடுங்கள், உங்களுடைய (அவ்) வீடுகளை கிப்லாவாக (-பள்ளிகளாக)வும் ஆக்குங்கள், (அவற்றில் தவறாது) தொழுகையையும், நிறைவேற்றுங்கள், (அப்போது நீங்கள் வெற்றியடைந்து விடுவீர்கள், என்று) விசுவாசங் கொண்டோர்க்கு நீர் நன்மாராயமும் கூறுவீராக” என்று நாம் வஹீ அறிவித்தோம்.
Saheeh International
And We inspired to Moses and his brother, "Settle your people in Egypt in houses and make your houses [facing the] qiblah and establish prayer and give good tidings to the believers."
وَقَالَ مُوْسٰی رَبَّنَاۤ اِنَّكَ اٰتَیْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِیْنَةً وَّاَمْوَالًا فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ رَبَّنَا لِیُضِلُّوْا عَنْ سَبِیْلِكَ ۚ رَبَّنَا اطْمِسْ عَلٰۤی اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰی قُلُوْبِهِمْ فَلَا یُؤْمِنُوْا حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
وَقَالَ مُوْسٰىமூஸா கூறினார்رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீاٰتَيْتَகொடுத்தாய்فِرْعَوْنَஃபிர்அவ்னுக்குوَمَلَاَهٗஇன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்குزِيْنَةًஅலங்காரத்தைوَّاَمْوَالًاஇன்னும் செல்வங்கள்فِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَا ۙஇவ்வுலகம்رَبَّنَاஎங்கள் இறைவாلِيُضِلُّوْاஅவர்கள் வழிகெடுப்பதற்குعَنْ سَبِيْلِكَ‌ۚஉன் பாதையிலிருந்துرَبَّنَاஎங்கள் இறைவாاطْمِسْநாசமாக்குعَلٰٓى اَمْوَالِهِمْஅவர்களின் பொருள்களைوَاشْدُدْஇன்னும் இறுக்கிவிடுعَلٰى قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்களைفَلَا يُؤْمِنُوْاநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்حَتّٰىவரைيَرَوُاஅவர்கள் காண்பர்الْعَذَابَவேதனையைالْاَ لِيْمَ‏துன்புறுத்தக்கூடியது
வ கால மூஸா ரBப்Bபனா இன்னக ஆதய்த Fபிர்'அவ்ன வ மல அஹூ Zஜீனத(ன்)வ் வ அம்வாலன் Fபில் ஹயாதித் துன்யா ரBப்Bபனா லியுளில்லூ 'அன்ஸBபீலிக ரBப்Bபனத் மிஸ் 'அலா அம்வாலிஹிம் வஷ்துத் 'அலா குலூBபிஹிம் Fபலா யு'மினூ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
முஹம்மது ஜான்
இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸா (தன் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன் வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று பிரார்த்தித்தார்.
IFT
மூஸா இவ்வாறு இறைஞ்சினார்: “எங்கள் இறைவனே! நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் வழங்கியுள்ளாய்; எங்கள் இறைவனே! உன் வழியில் செல்லவிடாமல் (மக்களை) அவர்கள் திசை திருப்புவதற்காகவா (அவற்றை நீ அளித்திருக்கின்றாய்)? எங்கள் இறைவனே! அவர்களின் செல்வங்களை அழித்து விடுவாயாக! மேலும், துன்புறுத்தும் வேதனையைக் கண்ணால் காணும்வரை அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவாறு அவர்களுடைய இதயங்களை இறுகச்செய்வாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எங்கள் இரட்சகனே” நிச்சயமாக நீ ஃபிர் அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய், ஆகவே, எங்கள் இரட்சகனே! அவர்கள் உன்னுடைய பாதையிலிருந்து மற்றவர்களை வழி கெடுத்து விடுவதற்காக (சோதனையாக நீ கொடுத்திருக்கிறாய்!) எங்கள் இரட்சகனே! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களுடைய இதயங்களையும் கடினமாக்கி விடுவாயாக! ஆகவே, துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்கள் விசுவாசங் கொள்ள மாட்டார்கள்” என்று மூஸா பிரார்த்தித்துக் கூறினார்.
Saheeh International
And Moses said, "Our Lord, indeed You have given Pharaoh and his establishment splendor and wealth in the worldly life, our Lord, that they may lead [men] astray from Your way. Our Lord, obliterate their wealth and harden their hearts so that they will not believe until they see the painful punishment."
قَالَ قَدْ اُجِیْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِیْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِیْلَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
قَالَகூறினான்قَدْ اُجِيْبَتْஏற்கப்பட்டு விட்டதுدَّعْوَتُكُمَاபிரார்த்தனை / உங்கள் இருவரின்فَاسْتَقِيْمَاநீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்وَلَا تَتَّبِعٰٓنِّஇன்னும் நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்سَبِيْلَபாதையைالَّذِيْنَஎவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
கால கத் உஜீBபத் தஃவதுகுமா Fபஸ்தகீமா வலா தத்தBபி'ஆன்னி ஸBபீலல் லதீன லா யஃலமூன்
முஹம்மது ஜான்
இறைவன் கூறினான்: “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இறைவன், ‘‘மூஸாவே ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆகவே, நீங்கள் (மார்க்கத்தில்) உறுதியாக இருங்கள்; அறிவில்லாத மக்களின் வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்'' என்று கூறினான்.
IFT
அதற்கு அல்லாஹ் பதில் கூறினான்: “உங்கள் இருவருடைய இறைஞ்சுதலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே நீங்கள் நிலைகுலையாமல் இருங்கள்! அறியாதவர்களின் வழிமுறையை ஒருபோதும் நீங்கள் பின்பற்றாதீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(மூஸா, ஹாரூனே!) உங்களிருவரின் பிரார்த்தனை திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது, ஆகவே, நீங்களிருவரும் உறுதியாக இருங்கள், அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நிச்சயமாக நீங்களிருவரும் பின்பற்றிவிடாதீர்கள்” என்று அவன் (அல்லாஹ்), கூறினான்.
Saheeh International
[Allah] said, "Your supplication has been answered." So remain on a right course and follow not the way of those who do not know."
وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْیًا وَّعَدْوًا ؕ حَتّٰۤی اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ ۙ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِیْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِیْلَ وَاَنَا مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَجَاوَزْنَاஇன்னும் கடக்க வைத்தோம்بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَஇஸ்ராயீலின் சந்ததிகளை/கடலைفَاَتْبـَعَهُمْபின் தொடர்ந்தனர்/ அவர்களைفِرْعَوْنُஃபிர்அவ்ன்وَجُنُوْدُهٗஇன்னும் அவனுடைய ராணுவங்கள்بَغْيًاஅழிச்சாட்டியம்وَّعَدْوًا‌ ؕஇன்னும் வரம்பு மீறிحَتّٰۤىஇறுதியாகاِذَاۤபோதுاَدْرَكَهُபிடித்தது/அவனைالْغَرَقُமூழ்குதல்قَالَகூறினான்اٰمَنْتُநம்பிக்கை கொண்டேன்اَنَّهٗநிச்சயமாக செய்திلَاۤஅறவே இல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரالَّذِىْۤஎத்தகையவன்اٰمَنَتْநம்பிக்கை கொண்டா(ர்க)ள்بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَஅவனை / இஸ்ராயீலின் சந்ததிகள்وَ اَنَاஇன்னும் நான்مِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில்
வ ஜாவZஜ்னா Bபி Bபனீ இஸ்ரா'ஈலல் Bபஹ்ர Fப அத்Bப'அஹும் Fபிர்'அவ்னு வ ஜுனூதுஹூ Bபக்ய(ன்)வ் வ 'அத்வா; ஹத்தா இதா அத்ரகஹுல் கரகு கால ஆமன்து அன்னஹூ லா இலாஹ இல்லல் லதீ ஆமனத் Bபிஹீ Bபனூ இஸ்ரா'ஈல வ அன மினல் முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, ‘‘இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபடுகிறேன்'' என்று (அபயமிட்டு) அலறினான்.
IFT
மேலும், நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும் அநீதியும், அக்கிரமமும் இழைப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கியபோது அலறினான்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும் (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இஸ்ராயீலின் மக்களை கடலைக் கடக்குமாறு நாம் செய்தோம், அப்போது ஃபிர்அவ்னும், அவனுடைய படையினரும் (அளவு கடந்த) அநியாயமும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்; முடிவாக (ஃபிர் அவ்னாகிய) அவனை மூழ்குதல் வந்தடைந்தபோது. “இஸ்ராயீலின் மக்கள் யாரை விசுவாசங்கொண்டுள்ளார்களோ, அத்தகையவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை என நான் விசுவாசம் கொண்டு விட்டேன்; இன்னும், நான் அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தோரில் (முஸ்லிம்களில் ஒருவனாக) இருக்கிறேன்” என்றும் கூறினான்.
Saheeh International
And We took the Children of Israel across the sea, and Pharaoh and his soldiers pursued them in tyranny and enmity until, when drowning overtook him, he said, "I believe that there is no deity except that in whom the Children of Israel believe, and I am of the Muslims."
آٰلْـٰٔنَ وَقَدْ عَصَیْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟
آٰلْــٰٔنَஇப்போதுதானா?وَقَدْ عَصَيْتَமாறு செய்துவிட்டாய்قَبْلُமுன்னரோوَكُنْتَநீ இருந்தாய்مِنَ الْمُفْسِدِيْنَ‏விஷமிகளில்
ஆல் 'ஆன வ கத் 'அஸய்த கBப்லு வ குன்த மினல் முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கும் நாம் அவனை நோக்கி,) ‘‘இச்சமயம்தான் (நீ நம்பிக்கை கொள்கிறாய்!) சற்று முன் வரை நீ மாறு செய்துகொண்டு, விஷமிகளில் ஒருவனாகவே இருந்தாய்.
IFT
(பதில் கூறப்பட்டது:) “இப்போதா நம்பிக்கை கொள்கிறாய்? இதற்குச் சற்று முன்வரை நீ மாறுசெய்து கொண்டிருந்தாய். குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாயும் இருந்தாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு நாம் அவனிடம்) “இப்பொழுதா? (நீ விசுவாசங்கொள்கிறாய்? சற்று) முன்னர் நீ திட்டமாக மாறு செய்து கொண்டிருந்தாய், குழப்பவாதிகளில் ஒருவனாகவும் இருந்தாய்”
Saheeh International
Now? And you had disobeyed [Him] before and were of the corrupters?
فَالْیَوْمَ نُنَجِّیْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰیَةً ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰیٰتِنَا لَغٰفِلُوْنَ ۟۠
فَالْيَوْمَ نُـنَجِّيْكَஇன்று/ நாம் உயரத்தில் வைப்போம் / உன்னைبِبَدَنِكَஉன் உடலைلِتَكُوْنَநீ ஆகுவதற்காகلِمَنْஎவருக்குخَلْفَكَபின்னால்/உனக்குاٰيَةً  ؕஓர் அத்தாட்சியாகوَاِنَّநிச்சயமாகكَثِيْرًاஅதிகமானவர்مِّنَ النَّاسِ عَنْமக்களில்/விட்டுاٰيٰتِنَاநம் அத்தாட்சிகளைلَغٰفِلُوْنَ‏அலட்சியம் செய்பவர்கள்தான்
Fபல்யவ்ம னுனஜ்ஜீக BபிBபதனிக லிதகூன லிமன் கல்Fபக ஆயஹ்; வ இன்ன கதீரன் மினன் னாஸி 'அன் ஆயாதினா லகாFபிலூன்
முஹம்மது ஜான்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).
அப்துல் ஹமீது பாகவி
எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாவதற்காக உன் உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்'' (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம் அத்தாட்சிகளைப் பற்றி பராமுகமாயிருக்கின்றனர்.
IFT
இன்று உன் உடலை மட்டும் நாம் காப்பாற்றுவோம்; உனக்குப் பின்னால் வரக்கூடிய மக்களுக்குப் படிப்பினை தரும் சான்றாக விளங்கும் பொருட்டு! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நம் சான்றுகளை அலட்சியப்படுத்துபவர்களாய் இருக்கின்றனர்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, “உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு, நீ ஓர் அத்தாட்சியாக ஆவதற்காக இன்றையத்தினம் உன்னை (உயிரற்ற) உன்னுடைய தேகத்தோடு நாம் காப்பாற்றுவோம்” (என்று கூறினோம்.) “இன்னும், நிச்சயமாக மனிதர்களில் அநேகர் நம்முடைய சான்றுகளை விட்டும் பாராமுகமானவர்கள்” (என்றும் அவனுக்குக் கூறப்பட்டது.)
Saheeh International
So today We will save you in body that you may be to those who succeed you a sign. And indeed, many among the people, of Our signs, are heedless.
وَلَقَدْ بَوَّاْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ ۚ فَمَا اخْتَلَفُوْا حَتّٰی جَآءَهُمُ الْعِلْمُ ؕ اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகبَوَّاْنَاஅமைத்தோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ராயீலின் சந்ததிகளுக்குمُبَوَّاَஇடத்தைصِدْقٍமிக நல்லوَّرَزَقْنٰهُمْஇன்னும் வழங்கினோம்/அவர்களுக்குمِّنَ الطَّيِّبٰتِ‌ۚநல்லவற்றிலிருந்துفَمَا اخْتَلَفُوْاஅவர்கள் மாறுபடவில்லைحَتّٰىவரைجَآءَவந்ததுهُمُஅவர்களிடம்الْعِلْمُ‌ؕஞானம்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்يَقْضِىْதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فِيْمَاஎதில்كَانُوْاஇருந்தனர்فِيْهِஅதில்يَخْتَلِفُوْنَ‏மாறுபடுகின்றனர்
வ லகத் Bபவ்வ'னா Bபனீ இஸ்ரா'ஈல முBபவ்வ 'அ ஸித்கி(ன்)வ் வ ரZஜக்னாஹும் மினத் தய்யிBபாதி Fப மக்தலFபூ ஹத்தா ஜா'அஹ்முல் 'இல்ம்; இன்ன ரBப்Bபக யக்ளீ Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எது பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். ஆகவே, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரை இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதில் அவர்கள் மாறு செய்கின்றனரோ அதைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உமது இறைவன் தீர்ப்பளிப்பான்.
IFT
நாம் இஸ்ராயீயிலின் வழித்தோன்றல்களை மிகச் சிறந்த இடத்தில் வசிக்கச் செய்தோம். மேலும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை வசதிகளையும் வழங்கினோம். உண்மையான அறிவு அவர்களிடம் வந்த பின்னரேயன்றி, அவர்கள் பிளவுபடவில்லை. அவர்கள் எதில் பிளவுபட்டிருந்தார்களோ அதைக் குறித்து மறுமைநாளில் அவர்களுக்கு இடையே திண்ணமாக உம்முடைய இறைவன் தீர்ப்பு வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு மிக்க விருப்பமான இடத்தில் குடியேறச் செய்து நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு உணவளித்தும் வந்தோம், எனவே, (வேதமாகிய உண்மையான) அறிவு அவர்களிடம் வரும் வரையில், அவர்கள் மாறுபடவில்லை, எது விஷயத்தில் அவர்கள் மாறுபட்டிருந்தார்களோ, அதில் அவர்களுக்கிடையே நிச்சயமாக உமதிரட்சகன் மறுமைநாளில் தீர்ப்பு வழங்குவான்.
Saheeh International
And We had certainly settled the Children of Israel in an agreeable settlement and provided them with good things. And they did not differ until [after] knowledge had come to them. Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ.
فَاِنْ كُنْتَ فِیْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ فَسْـَٔلِ الَّذِیْنَ یَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟ۙ
فَاِنْ كُنْتَநீர் இருந்தால்فِىْ شَكٍّசந்தேகத்தில்مِّمَّاۤ اَنْزَلْنَاۤநாம் இறக்கியதில்اِلَيْكَஉமக்குفَسْــٴَــلِகேட்பீராகالَّذِيْنَஎவர்கள்يَقْرَءُوْنَபடிக்கின்றார்கள்الْكِتٰبَவேதத்தைمِنْ قَبْلِكَ‌ۚஉமக்கு முன்னர்لَقَدْ جَآءَவந்துவிட்டதுكَஉமக்குالْحَقُّஉண்மைمِنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துفَلَا تَكُوْنَنَّஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்مِنَ الْمُمْتَرِيْنَۙ‏சந்தேகப்படுபவர்களில்
Fப இன் குன்த Fபீ ஷக்கின் மிம்மா அன்Zஜல்னா இலய்க Fபஸ்'அலில் லதீன யக்ர'ஊனல் கிதாBப மின் கBப்லிக்; லகத் ஜா'அகல் ஹக்கு மிர் ரBப்Bபிக Fப லா தகூனன்ன மினல் மும்தரீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாம் உமக்கு இறக்கியிருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்.) நீர் சந்தேகித்தால் உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீர் கேட்டுப் பார்ப்பீராக. நிச்சயமாக உமது இறைவனிடமிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உம்மிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.
IFT
நாம் உம்மீது இறக்கியருளியவற்றில் உமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உமக்கு முன்பிருந்தே வேதத்தைப் படித்துக் கொண்டிருப்பவர்களிடம் நீர் கேளும். உண்மையில் உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்தியமே வந்துள்ளது. எனவே, சந்தேகம் கொள்வோருள் நீரும் ஒருவராகிவிடவேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நாம் உமக்கு இறக்கிவைத்துள்ளதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் வேதத்தை ஓதுவோரிடம் நீர் கேட்(டுப் பார்ப்)பீராக! நிச்சயமாக உமதிரட்சகனிடமிருந்தே (இவ்வேதமாகிய) உண்மை உம்மிடம் வந்துவிட்டது, ஆதலால், சந்தேகிக்கிறவர்களில் (உள்ளவராக) திண்ணமாக நீர் ஆகிவிட வேண்டாம்.
Saheeh International
So if you are in doubt, [O Muhammad], about that which We have revealed to you, then ask those who have been reading the Scripture before you. The truth has certainly come to you from your Lord, so never be among the doubters.
وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِیْنَ ۟
وَلَا تَكُوْنَنَّஅறவே நீர் ஆகிவிடாதீர்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَتَكُوْنَஆகிவிடுவீர்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
வ லா தகூனன்ன மினல் லதீன கத்தBபூ Bபி ஆயாதில் லாஹி Fபதகூன மினல் காஸிரீன்
முஹம்மது ஜான்
அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களுடன் நீர் சேர்ந்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நஷ்டமடைந்தவர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்.
IFT
மேலும், எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களுள் ஒருவராகவும் நீர் ஆகிவிடவேண்டாம். அவ்வாறாயின் இழப்புக்கு ஆளானோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கியோர்களில் (உள்ளவராக) நீர் நிச்சயமாக ஆகிவிட வேண்டாம், அவ்வாறாயின் நஷ்டமடைந்தோரில் நீர் ஆகிவிடுவீர்.
Saheeh International
And never be of those who deny the signs of Allah and [thus] be among the losers.
اِنَّ الَّذِیْنَ حَقَّتْ عَلَیْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்حَقَّتْஉறுதியாகி விட்டதுعَلَيْهِمْஅவர்கள் மீதுكَلِمَتُவாக்குرَبِّكَஉம் இறைவனின்لَا يُؤْمِنُوْنَۙ‏அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
இன்னல் லதீன ஹக்கத் 'அலய்ஹிம் கலிமது ரBப்Bபிக லா யு'மினூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகளென) உமது இறைவனுடைய தீர்ப்பு ஏற்பட்டு விட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
உண்மை யாதெனில், எவர்கள் மீது உம்முடைய இறைவனின் வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக எவர்களின் மீது உமதிரட்சகனுடைய வாக்கு நிரூபணமாகி (உரித்தாகி) விட்டதோ அத்தகையவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
Indeed, those upon whom the word [i.e., decree] of your Lord has come into effect will not believe,
وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰیَةٍ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟
وَلَوْவந்தால்جَآءَتْهُمْஅவர்களிடம்كُلُّஎல்லாம்اٰيَةٍஅத்தாட்சிحَتّٰىவரைيَرَوُاகாண்பார்கள்الْعَذَابَவேதனைالْاَ لِيْمَ‏துன்புறுத்தக்கூடியது
வ லவ் ஜா'அத் ஹும் குல்லு ஆயதின் ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
முஹம்மது ஜான்
நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.).
அப்துல் ஹமீது பாகவி
துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அத்தாட்சிகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும், (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.)
IFT
எத்தனை சான்றுகள் அவர்களிடம் வந்தாலும் சரியே! அவர்கள் துன்புறுத்தும் வேதனையைக் கண்டால் அன்றி; (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அனைத்து அத்தாட்சிகள் அவர்களுக்கு வந்தாலும் (அவர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்.)
Saheeh International
Even if every sign should come to them, until they see the painful punishment.
فَلَوْلَا كَانَتْ قَرْیَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِیْمَانُهَاۤ اِلَّا قَوْمَ یُوْنُسَ ؕ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟
فَلَوْلَا كَانَتْஇருக்கக்கூடாதா!قَرْيَةٌஓர் ஊர்اٰمَنَتْநம்பிக்கைகொண்டதுفَنَفَعَهَاۤபலனளித்தது/ தங்களுக்குاِيْمَانُهَاۤதங்கள் நம்பிக்கைاِلَّاஎனினும்قَوْمَசமுதாயம்يُوْنُسَ ۚؕயூனுஸ்لَمَّاۤபோதுاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்كَشَفْنَاநீக்கினோம்عَنْهُمْஅவர்களை விட்டுعَذَابَவேதனையைالْخِزْىِஇழிவுفِى الْحَيٰوةِவாழ்வில்الدُّنْيَاஉலகம்وَمَتَّعْنٰهُمْஇன்னும் சுகமளித்தோம்/அவர்களுக்குاِلٰىவரைحِيْنٍ‏ஒரு காலம்
Fபலவ் லா கானத் கர்யதுன் ஆமனத் Fப னFப'அஹா ஈமானுஹா இல்லா கவ்ம யூனுஸ லம்மா ஆமனூ கஷFப்னா 'அன்ஹும் 'அதாBபல் கிZஜ்யி Fபில் ஹயாதித் துன்யா வ மத்தஃனாஹும் இலா ஹீன்
முஹம்மது ஜான்
எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
தங்கள் நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனுஸ்' உடைய மக்களைப் போல மற்றோர் ஊரார் இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். மேலும், சிறிது காலம் சுகம் அனுபவிக்க அவர்களை நாம் விட்டு வைத்தோம்.
IFT
(இறைத்தண்டனையைக் கண்டபோது) நம்பிக்கை கொண்ட எந்த ஊர் மக்களுக்காவது அவர்களுடைய நம்பிக்கை பயன் அளித்திருப்பதாக எந்த ஓர் எடுத்துக்காட்டாவது இருக்கிறதா யூனுஸுடைய சமுதாயத்தைத் தவிர? (அத்தகைய எடுத்துக்காட்டு எதுவும் இல்லை) அந்தச் சமுதாயத்தினர் நம்பிக்கை கொண்டபோது உலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை நாம் அவர்களை விட்டு அகற்றி விட்டோம். மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவும் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (நாம் அழித்து விட்ட எத்தனையோ ஊர்களில் நம் வேதனை வரும் முன்) ஓர் ஊர் (மக்கள்) விசுவாசங் கொண்டு பின்னர், அதன் விசுவாசம் அதற்கு பயனளித்திருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை.) யூனுஸின் சமூகத்தாரைத்தவிர (அவர்கள் அல்லாஹ்வின் தண்டனை வரும்முன் விசுவாசங்கொண்டு- அதன் விசுவாசம் பயனளித்த ஊரைச் சார்ந்தவர்களாவா்) அவர்கள் விசுவாசங்கொண்டபோது இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றிவிட்டோம், சிறிது காலம்வரை அவர்களை சுகமனுபவிக்குமாறும் செய்தோம்.
Saheeh International
Then has there not been a [single] city that believed so its faith benefited it except the people of Jonah? When they believed, We removed from them the punishment of disgrace in worldly life and gave them enjoyment [i.e., provision] for a time.
وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِی الْاَرْضِ كُلُّهُمْ جَمِیْعًا ؕ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰی یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟
وَلَوْ شَآءَநாடினால்رَبُّكَஉம் இறைவன்لَاٰمَنَநம்பிக்கை கொண்டிருப்பார்(கள்)مَنْ فِى الْاَرْضِபூமியிலுள்ளவர்கள்كُلُّهُمْஅவர்கள் எல்லோரும்جَمِيْعًا‌ ؕஅனைவரும்اَفَاَنْتَநீர்?تُكْرِهُநிர்ப்பந்திப்பீர்النَّاسَமக்களைحَتّٰى يَكُوْنُوْاஅவர்கள் ஆகிவிடுவதற்குمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ லவ் ஷா'அ ரBப்Bபுக ல ஆமன மன் Fபில் அர்ளி குல்லுஹும் ஜமீ'ஆ; அFப அன்த துக்ரிஹுன் னாஸ ஹத்தா யகூனூ மு'மினீன்
முஹம்மது ஜான்
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாக ஆகிவிடுவார்கள். ஆகவே, மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் நிர்ப்பந்திக்க முடியுமா?
IFT
(உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது) உம் இறைவனின் நாட்டமாக இருந்தால், இப்பூமியிலுள்ள அனைவருமே இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையாளர்களாகி விடவேண்டுமென்று நீர் அவர்களை கட்டாயப்படுத்துவீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உமதிரட்சகன் நாடியிருந்தால், பூமியிலுள்ள அனைவருமே முற்றிலும் விசுவாசித்திருப்பார்கள், எனவே மனிதர்களை-அவர்கள் (அனைவருமே) விசுவாசிகளாகி விட வேண்டுமென்று நீர் நிர்ப்பந்திக்கிறீரா?
Saheeh International
And had your Lord willed, those on earth would have believed - all of them entirely. Then, [O Muhammad], would you compel the people in order that they become believers?
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَیَجْعَلُ الرِّجْسَ عَلَی الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟
وَمَا كَانَசாத்தியமாகாதுلِنَفْسٍஓர் ஆத்மாவிற்குاَنْ تُؤْمِنَஅது நம்பிக்கை கொள்வதுاِلَّاதவிரبِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَيَجْعَلُஇன்னும் ஆக்குகிறான்الرِّجْسَதண்டனையைعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்لَا يَعْقِلُوْنَ‏சிந்தித்து புரிய மாட்டார்கள்
வமா கான லினFப்ஸின் அன் து'மின இல்லா Bபி இத்னில் லாஹ்; வ யஜ்'அலுர் ரிஜ்ஸ 'அலல் லதீன லா யஃகிலூன்
முஹம்மது ஜான்
எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி நம்பிக்கைகொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை அவன்ஆக்கி விடுகிறான்.
IFT
எந்த மனிதனும் அல்லாஹ்வின் நாட்டமின்றி நம்பிக்கை கொள்ள முடியாது. மேலும், எவர்கள் சிந்தித்துணரவில்லையோ அவர்கள்மீது அவன் மாசுபடியச் செய்கின்றான். (இதுவே அவனது நியதியாகும்.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எந்த ஆத்மாவிற்கும், அல்லாஹ்வின் அனுமதியன்றி அது விசுவாசங்கொள்வதற்கில்லை, மேலும், (இதை) விளங்கிக் கொள்ளாதவர்களின் மீது தண்டனையை அவன் ஆக்குகிறான்.
Saheeh International
And it is not for a soul [i.e., anyone] to believe except by permission of Allah, and He will place defilement upon those who will not use reason.
قُلِ انْظُرُوْا مَاذَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَمَا تُغْنِی الْاٰیٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا یُؤْمِنُوْنَ ۟
قُلِகூறுவீராகانْظُرُوْاகவனியுங்கள்مَاذَاஎதைفِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِ ؕஇன்னும் பூமியில்وَمَا تُغْنِىபலனளிக்கமாட்டார்கள்الْاٰيٰتُவசனங்கள்وَالنُّذُرُஇன்னும் எச்சரிப்பவர்கள்عَنْ قَوْمٍசமுதாயத்திற்குلَّا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
குலின் ளுரூ மாதா Fபிஸ்ஸமாவாதி வல் அர்ள்; வமா துக்னில் ஆயாது வன்னுதுரு 'அன் கவ்மில் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
“வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை (சிறிது) கவனித்துப் பாருங்கள்'' எனக் கூறுவீராக. எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம் வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் ஒரு பயனுமளிக்காது.
IFT
(நபியே! இவர்களிடம்) நீர் கூறும்: “வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றைக் கூர்ந்து நோக்குங்கள்.” நம்பிக்கை கொள்ள விரும்பாத கூட்டத்தாருக்கு, சான்றுகளும் எச்சரிக்கைகளும் என்ன பலனை அளித்துவிடப் போகின்றன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்களிடம்,) “வானங்களிலும் பூமியிலும் என்ன இருக்கின்றன என்பதை கவனித்துப் பாருங்கள்” எனக் கூறுவீராக! எனினும், விசுவாசங்கொள்ளாதவர்களான சமூகத்தார்க்கு (நம்முடைய) அத்தாட்சிகளும் எச்சரிக்கைகளும் யாதொரு பயனுமளிக்கமாட்டா.
Saheeh International
Say, "Observe what is in the heavens and the earth." But of no avail will be signs or warners to a people who do not believe.
فَهَلْ یَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَیَّامِ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ ؕ قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
فَهَلْஆகவேيَنْتَظِرُوْنَஎதிர் பார்க்கின்றனர்اِلَّاதவிரمِثْلَபோன்றதைاَيَّامِநாள்கள்الَّذِيْنَஎவர்கள்خَلَوْاசென்றார்கள்مِنْ قَبْلِهِمْ‌ؕதங்களுக்கு முன்قُلْகூறுவீராகفَانْتَظِرُوْۤاநீங்கள் எதிர் பாருங்கள்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏எதிர்பார்ப்பவர்களில்
Fபஹல் யன்தளிரூன இல்லா மித்ல அய்யாமில் லதீன கலவ் மின் கBப்லிஹிம்; குல் Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
முஹம்மது ஜான்
தங்களுக்கு முன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போன்றதையேயன்றி, அவர்கள் (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (அப்படியானால் அந்த கஷ்டகாலத்தை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போன்றதேயன்றி (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? (எனவே, அவர்களை நோக்கி ‘‘அத்தகைய கஷ்டகாலம்தான் உங்களுக்கும் வர இருக்கிறது.) ஆகவே, (அதை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் (அது உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறுவீராக.
IFT
தமக்கு முன்னால் சென்று போன மக்கள் அனுபவித்ததைப் போன்ற வேதனை நிறைந்த நாட்களைத் தவிர வேறு எதனை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்? எனவே, இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! நானும் உங்களோடு எதிர்பார்ப்பவனாய் இருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட நாட்களைப் போன்றதேயன்றி (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? ஆகவே (அந்நாட்களை நீங்களும்) எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக (அந்நாட்கள் உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களில் நானும் இருக்கிறேன்” என்று கூறுவீராக!
Saheeh International
So do they wait except for like [what occurred in] the days of those who passed on before them? Say, "Then wait; indeed, I am with you among those who wait."
ثُمَّ نُنَجِّیْ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا كَذٰلِكَ ۚ حَقًّا عَلَیْنَا نُنْجِ الْمُؤْمِنِیْنَ ۟۠
ثُمَّபிறகுنُنَجِّىْபாதுகாப்போம்رُسُلَنَاதூதர்களை/நம்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْا‌நம்பிக்கை கொண்டார்கள்كَذٰلِكَ‌ۚஇவ்வாறேحَقًّاகடமையாகعَلَيْنَاநம்மீது கடமையாக உள்ளதுنُـنْجِநாம் பாதுகாப்பதுالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொண்டவர்களை
தும்ம னுனஜ்ஜீ ருஸுலன வல்லதீன ஆமனூ; கதாலிக ஹக்கன் 'அலய்னா னுன்ஜில் மு'மினீன்
முஹம்மது ஜான்
(அவ்வாறு வேதனை வருங்காலத்தில்) நம் தூதர்களையும், ஈமான் கொண்டவர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம் - (ஏனெனில்) ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு வேதனை வரும் காலத்தில்) நம் தூதர்களை பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். (ஏனென்றால்,) நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வது நம்மீது கடமையாகவே இருக்கிறது.
IFT
பிறகு (இவ்வாறான சந்தர்ப்பம் வரும்போது) நாம் நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றிவிடுகின்றோம். இதுவே நம்முடைய வழிமுறையாகும். நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவது நம் மீது கடமையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (அவ்வாறு தண்டனை வந்தால்) நம்முடைய தூதர்களையும் அவ்வாறே விசுவாசங்கொண்டவர்களையும் நாம் காப்பாற்றுவோம், விசுவாசங்கொண்டவர்களை நாம் காப்பாற்றுவது நம்மீது (கடமையாகவே) இருக்கிறது.
Saheeh International
Then We will save Our messengers and those who have believed. Thus, it is an obligation upon Us that We save the believers.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ شَكٍّ مِّنْ دِیْنِیْ فَلَاۤ اَعْبُدُ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِیْ یَتَوَفّٰىكُمْ ۖۚ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ
قُلْகூறுவீராகيٰۤاَيُّهَا النَّاسُமக்களேاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்فِىْ شَكٍّசந்தேகத்தில்مِّنْ دِيْنِىْஎன் மார்க்கத்தில்فَلَاۤ اَعْبُدُநான் வணங்கமாட்டேன்الَّذِيْنَஎவர்களைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிوَلٰـكِنْஎனினும்اَعْبُدُவணங்குவேன்اللّٰهَஅல்லாஹ்வைத்தான்الَّذِىْஎத்தகையவன்يَتَوَفّٰٮكُمْ‌உயிர் கைப்பற்றுகிறான்/உங்களைوَاُمِرْتُஇன்னும் கட்டளையிடப் பட்டேன்اَنْ اَكُوْنَநான் ஆகவேண்டுமென்றுمِنَ الْمُؤْمِنِيْنَۙ‏நம்பிக்கையாளர்களில்
குல் யா அய்யுஹன் னாஸு இன் குன்தும் Fபீ ஷக்க்-இன் மின் தீனீ Fப லா அஃBபுதுல் லதீன தஃBபுதூன மின் தூனில் லாஹி வ லாகின் அஃBபுதுல் லாஹல் லதீ யதவFப்Fபாகும் வ உமிர்து அன் அகூன மினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
“மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப்பட்டுள்ளேன்.
IFT
(நபியே!) நீர் கூறிவிடுவீராக: “மனிதர்களே, நீங்கள் (இப்பொழுதும்கூட) என்னுடைய தீனை (நெறியை)ப் பற்றி ஏதேனும் சந்தேகம் கொண்டிருந்தால் (தெரிந்து கொள்ளுங்கள்!) அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாருக்கெல்லாம் அடிபணிகின்றீர்களோ அவர்களுக்கு நான் அடிபணிவதில்லை. மாறாக, எந்த இறைவனின் பிடியில் உங்கள் மரணம் இருக்கிறதோ அந்த இறைவனுக்கு மட்டும் நான் அடிபணிகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அவர்களிடம்,) “மனிதர்களே! நீங்கள் என்னுடைய மார்க்கத்தில் சந்தேகத்திலிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன், எனினும், உங்க(ளுடைய உயிர்க)ளைக் கைப்பற்றுபவனான அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், மேலும், விசுவாசிகளில் (உள்ளவனாக) இருக்க வேண்டுமென்றே நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, [O Muhammad], "O people, if you are in doubt as to my religion - then I do not worship those which you worship besides Allah; but I worship Allah, who causes your death. And I have been commanded to be of the believers
وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ حَنِیْفًا ۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
وَاَنْ اَقِمْஇன்னும் நிலைநிறுத்துவீராகوَجْهَكَஉம் முகத்தைلِلدِّيْنِமார்க்கத்தின் மீதுحَنِيْفًا‌ ۚஉறுதியானவராகوَلَا تَكُوْنَنَّநிச்சயம் ஆகிவிடாதீர்مِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
வ அன் அகிம் வஜ்ஹக லித்தீனி ஹனீFப(ன்)வ் வலா தகூனன்ன மினல் முஷ்ரிகீன்
முஹம்மது ஜான்
நேர்மையான மார்க்கத்தின்பாலே உம் முகத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்; முஷ்ரிக்குகளில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உறுதியுடையவராக நேரான மார்க்கத்தின் பக்கமே உமது முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்.
IFT
மேலும், ‘ஒருமனப்பட்டு இந்த தீனில் (நெறியில்) உம்மை முற்றிலும் நிலைப்படுத்திக் கொள்வீராக! மேலும், எந்நிலையிலும் இணை வைப்பவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்’ என்றும் நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மேலும் (அசத்தியமான எல்லா மதங்களை விட்டும் நீங்கி) நேரான மார்க்கத்தின்பால் சார்ந்தவராக உம்முடைய முகத்தை நிலைபெறச் செய்வீராக! இணைவைக்கக் கூடியவர்களில் (உள்ளவராக) நிச்சயமாக நீரும் ஆகிவிட வேண்டாம்.
Saheeh International
And [commanded], 'Direct your face [i.e., self] toward the religion, inclining to truth, and never be of those who associate others with Allah;
وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكَ وَلَا یَضُرُّكَ ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِیْنَ ۟
وَلَا تَدْعُஅழைக்காதீர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمَاஎவைلَا يَنْفَعُكَஉமக்கு பயனளிக்காதுوَ لَا يَضُرُّكَ‌ۚஇன்னும் தீங்களிக்காது/ உமக்குفَاِنْ فَعَلْتَநீ செய்தால்فَاِنَّكَநிச்சயமாக நீர்اِذًاஅப்போதுمِّنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்
வ லா தத்'உ மின் தூனில் லாஹி மா லா யன்Fப'உக வலா யளுர்ருக்; Fப இன் Fப'அல்த Fப இன்னக இதம் மினள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, உமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்.
IFT
மேலும், அல்லாஹ்வை விட்டுவிட்டு உமக்குப் பலனளிக்கவும் கேடு விளைவிக்கவும் இயலாதவற்றிடம் நீர் பிரார்த்திக்காதீர். அவ்வாறு செய்வீராயின் அப்போது நீர் திண்ணமாக அக்கிரமம் செய்பவர்களுள் ஒருவராகி விடுவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம், அவ்வாறு செய்வீராயின், நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக ) நீர் ஆகிவிடுவீர்.
Saheeh International
And do not invoke besides Allah that which neither benefits you nor harms you, for if you did, then indeed you would be of the wrongdoers.'"
وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ۚ وَاِنْ یُّرِدْكَ بِخَیْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ ؕ یُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
وَاِنْ يَّمْسَسْكَஉமக்கு கொடுத்தால்اللّٰهُஅல்லாஹ்بِضُرٍّஒரு தீங்கைக் கொண்டுفَلَاஅறவே இல்லைكَاشِفَநீக்குபவர்لَهٗۤஅதைاِلَّا هُوَ ۚதவிர/அவன்وَاِنْ يُّرِدْكَஉமக்கு நாடினால்بِخَيْرٍஒரு நன்மையைفَلَاஅறவே இல்லைرَآدَّதடுப்பவர்لِفَضْلِهٖ‌ ؕஅவனுடையஅருளைيُصِيْبُ بِهٖஅதை அடையச் செய்கிறான்مَنْஎவர்يَّشَآءُநாடுகின்றான்مِنْ عِبَادِهٖ‌ ؕதன் அடியார்களில்وَهُوَஅவன்தான்الْغَفُوْرُமகா மன்னிப்பாளன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இ(ன்)ய் யம்ஸஸ்கல் லாஹு Bபிளுர்ரின் Fபலா காஷிFப லஹூ இல்லா ஹூ;வ இ(ன்)ய் யுரித்க Bபிகய்ரின் Fபலா ராத்த லிFபள்லிஹ்; யுஸீBபு Bபிஹீ ம(ன்)ய் யஷா'உ மின் 'இBபாதிஹ்; வ ஹுவல் கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
IFT
மேலும், ஏதேனும் துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால், அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடிமைகளில், தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர (வேறு) எவரும் இல்லை, மேலும், அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை, தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ளுமாறு செய்கின்றான், அவனோ மிக்க மன்னிப்போன், மிகக் கிருபையுடையோன்.
Saheeh International
And if Allah should touch you with adversity, there is no remover of it except Him; and if He intends for you good, then there is no repeller of His bounty. He causes it to reach whom He wills of His servants. And He is the Forgiving, the Merciful.
قُلْ یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚ فَمَنِ اهْتَدٰی فَاِنَّمَا یَهْتَدِیْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ۚ وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِوَكِیْلٍ ۟ؕ
قُلْகூறுவீராகيٰۤاَيُّهَا النَّاسُமக்களேقَدْ جَآءَவந்து விட்டதுكُمُஉங்களுக்குالْحَـقُّஉண்மைمِنْஇருந்துرَّبِّكُمْ‌ۚஉங்கள் இறைவன்فَمَنِஎவர்اهْتَدٰىநேர்வழி சென்றார்فَاِنَّمَا يَهْتَدِىْஅவர் நேர்வழி செல்வதெல்லாம்لِنَفْسِهٖ‌ۚதன் நன்மைக்காகவேوَمَنْஇன்னும் எவர்ضَلَّவழிகெட்டார்فَاِنَّمَا يَضِلُّஅவர் வழிகெடுவதெல்லாம்عَلَيْهَا‌ۚதனக்குக்கேடாகத்தான்وَمَاۤஇல்லைاَنَاநான்عَلَيْكُمْஉங்கள் மீதுبِوَكِيْلٍؕ‏பொறுப்பாளனாக
குல் யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகுமுல் ஹக்கு மிர் ரBப்Bபிகும்; Fபமனிஹ் ததா Fப இன்னமா யஹ்ததீ லி னFப்ஸிஹ்; வ மன் ளல்ல Fப இன்னமா யளில்லு 'அலய்ஹா; வ மா அன 'அலய்கும் Bபி வகீல்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை.
IFT
(நபியே!) நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்தியம் வந்துவிட்டது. ஆகவே, யாரேனும் நேரிய வழியை மேற்கொண்டால் அவருடைய நேர்வழி அவருக்கே நன்மை பயக்கும். யாரேனும் வழிகெட்டுப்போனால் அவனுடைய வழிகேடு அவனுக்கே தீங்கினை அளிக்கும்! மேலும், உங்களின் எந்த விஷயத்திற்கும் நான் பொறுப்பாளன் அல்லன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நபியே! நீர் கூறுவீராக! “மனிதர்களே! நிச்சயமாக உங்களுடைய இரட்சகனிடமிருந்து இந்தச் சத்திய (வேதம்) உங்களிடம் வந்திருக்கிறது, ஆகவே, எவர் நேர் வழியில் செல்கின்றாரோ, அவர் (அந்)நேர் வழியில் செல்வதெல்லாம் தன(து நன்மை)க்காகவேதான், மேலும், எவர் வழிதவறுகின்றாரோ, அவர் வழி தவறுவதெல்லாம் அவருக்கே (கேடாகத்)தான், அன்றியும், (நீங்கள் விசுவாசிகளாக ஆவதற்கு) உங்களுக்கு நான் பொறுப்புடையவனல்லன்.”
Saheeh International
Say, "O mankind, the truth has come to you from your Lord, so whoever is guided is only guided for [the benefit of] his soul, and whoever goes astray only goes astray [in violation] against it. And I am not over you a manager."
وَاتَّبِعْ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَاصْبِرْ حَتّٰی یَحْكُمَ اللّٰهُ ۖۚ وَهُوَ خَیْرُ الْحٰكِمِیْنَ ۟۠
وَاتَّبِعْபின்பற்றுவீராகمَاஎதுيُوْحٰۤىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَيْكَஉமக்குوَاصْبِرْஇன்னும் பொறுப்பீராகحَتّٰىவரைيَحْكُمَதீர்ப்பளிப்பான்اللّٰهُ‌ ۖۚஅல்லாஹ்وَهُوَஅவன்خَيْرُமிக மேலானவன்الْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
வத்தBபிஃ மா யூஹா இலய்க வஸ்Bபிர் ஹத்தா யஹ்குமல் லாஹ்; வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
முஹம்மது ஜான்
(நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக; அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றி வருவீராக. அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக்கொண்டிருப்பீராக. தீர்ப்பளிப்பவர்களில் அவன்தான் மிக்க மேலானவன்.
IFT
(நபியே!) வஹியின் வாயிலாக உமக்கு அனுப்பப்படுகின்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடப்பீராக! அல்லாஹ் தீர்ப்பு வழங்கும்வரை பொறுமையுடன் இருப்பீராக! மேலும், தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்படுகின்றவற்றையே நீர் பின்பற்றுவீராக! மேலும், அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரையில் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் சிறந்தவன்.
Saheeh International
And follow what is revealed to you, [O Muhammad], and be patient until Allah will judge. And He is the best of judges.