100. ஸூரத்துல் ஆதியாத்தி(வேகமாகச் செல்லுபவை)

மக்கீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالْعٰدِیٰتِ ضَبْحًا ۟ۙ
وَالْعٰدِيٰتِஅதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாகضَبْحًا ۙ‏மூச்சிரைக்க
வல்'ஆதி யாதி ளBப்ஹா
முஹம்மது ஜான்
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
IFT
மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூச்சிரைக்கும் சப்தத்தோடு (போர்க்களத்தில் எதிரிகளைத்தாக்க) அதிவேகமாக ஓடுகின்றவற்றின் (குதிரைகளின்) மீது சத்தியமாக!
Saheeh International
By the racers, panting,
فَالْمُوْرِیٰتِ قَدْحًا ۟ۙ
فَالْمُوْرِيٰتِஇன்னும் (தீ) மூட்டுகின்ற குதிரைகள்قَدْحًا ۙ‏தீப்பொறிகளை
Fபல் மூரி யாதி கத்ஹா
முஹம்மது ஜான்
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
அப்துல் ஹமீது பாகவி
(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.
IFT
பின்னர், குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்புகின்ற
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (செல்லும் வேகத்தில் அவற்றின் குளம்புகள் கற்களில் மோத) தீப்பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும் சத்தியமாக!
Saheeh International
And the producers of sparks [when] striking
فَالْمُغِیْرٰتِ صُبْحًا ۟ۙ
فَالْمُغِيْرٰتِஇன்னும் பாய்கின்ற குதிரைகள்صُبْحًا ۙ‏அதிகாலையில்
Fபல் முகீராதி ஸுBப்ஹா
முஹம்மது ஜான்
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
IFT
மேலும், அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு, அதிகாலையில் வேகமாக (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக!
Saheeh International
And the chargers at dawn,
فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۟ۙ
فَاَثَرْنَஇன்னும் கிளப்பினبِهٖஅதில்نَقْعًا ۙ‏புழுதியை
Fப அதர்ன Bபிஹீ னக்'ஆ
முஹம்மது ஜான்
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.
IFT
அதனால் புழுதியினைக் கிளப்பி
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதிகாலையில் அவ்வாறு அதி வேகமாகச் செல்லும்போது) அதனால் புழுதியை கிளப்புகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
Saheeh International
Stirring up thereby [clouds of] dust,
فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۟ۙ
فَوَسَطْنَஇன்னும் நடுவில் நுழைந்தனبِهٖஅதில்جَمْعًا ۙ‏கூட்டத்திற்கு
Fபவ ஸத்ன Bபிஹீ ஜம்'ஆ
முஹம்மது ஜான்
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.
IFT
மேலும், ஏதேனும் கூட்டத்தின் நடுவில் நுழைந்துவிடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் (எதிரிகளின்) படைகளுக்கு மத்தியில் செல்கின்றவற்றின் மீதும் சத்தியமாக!
Saheeh International
Arriving thereby in the center collectively,
اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ ۟ۚ
اِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لِرَبِّهٖதன் இறைவனுக்குلَـكَنُوْدٌ ۚ‏நன்றி கெட்டவன்
இன்னல்-இன்ஸான லிரBப்Bபிஹீ லகனூத்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான்.
IFT
உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக மனிதன் தன் இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.
Saheeh International
Indeed mankind, to his Lord, is ungrateful.
وَاِنَّهٗ عَلٰی ذٰلِكَ لَشَهِیْدٌ ۟ۚ
وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்عَلٰى ذٰلِكَஅதற்குلَشَهِيْدٌ ۚ‏சாட்சி
வ இன்னஹு 'அலா தாலிக ல ஷஹீத்
முஹம்மது ஜான்
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.
IFT
அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக அவனே இதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான்.
Saheeh International
And indeed, he is to that a witness.
وَاِنَّهٗ لِحُبِّ الْخَیْرِ لَشَدِیْدٌ ۟ؕ
وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவன்لِحُبِّநேசிப்பதில்الْخَيْرِசெல்வத்தைلَشَدِيْدٌ ؕ‏உறுதியாக கடினமானவன்
வ இன்னஹு லிஹுBப்Bபில் கய்ரி ல ஷதீத்
முஹம்மது ஜான்
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.
IFT
மேலும், அவன் செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிச்சயமாக (மனிதனாகிய) அவன், செல்வத்தை விரும்புவதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான்.
Saheeh International
And indeed he is, in love of wealth, intense.
اَفَلَا یَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِی الْقُبُوْرِ ۟ۙ
اَفَلَا يَعْلَمُஅவன் அறியவேண்டாமா?اِذَا بُعْثِرَஎழுப்பப்படும்போதுمَا فِى الْقُبُوْرِۙ‏புதை குழிகளில் உள்ளவர்கள்
அFபல யஃலமு இத Bபுஃதிர ம Fபில்குBபூர்
முஹம்மது ஜான்
அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
IFT
மண்ணறைகளில் (அடக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிக்கொணரப்படும் நேரத்தையும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் அறிந்துகொள்ள வேண்டாமா? மண்ணறைகளிலுள்ளவை (எழுப்பப்பட்டு) வெளியேற்றப்பட்டுவிடும்போது-
Saheeh International
But does he not know that when the contents of the graves are scattered
وَحُصِّلَ مَا فِی الصُّدُوْرِ ۟ۙ
وَحُصِّلَஇன்னும் பிரித்தறியப்படும்مَا فِى الصُّدُوْرِۙ‏நெஞ்சங்களில் உள்ளவை
வ ஹுஸ்ஸில மா Fபிஸ் ஸுதூர்
முஹம்மது ஜான்
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
IFT
மேலும், நெஞ்சங்களில் (மறைக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும் நேரத்தையும் அவன் அறியமாட்டானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதயங்களிலுள்ளவையும் வெளியாக்கப்பட்டுவிடும்போது,
Saheeh International
And that within the breasts is obtained,
اِنَّ رَبَّهُمْ بِهِمْ یَوْمَىِٕذٍ لَّخَبِیْرٌ ۟۠
اِنَّநிச்சயமாகرَبَّهُمْஅவர்களுடைய இறைவன்بِهِمْஅவர்களைيَوْمَٮِٕذٍஅந்நாளில்لَّخَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
இன்ன ரBப்Bபஹும் Bபிஹிம் யவ்ம 'இதின் லகBபீர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்.
IFT
திண்ணமாக, அந்நாளில் அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி நன்கறிந்தவனாக இருப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்களின் இரட்சகன், அவர்களைப்பற்றி அந்நாளில் நன்கு உணர்பவன் (ஆகவே, நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் வழங்குவான்).
Saheeh International
Indeed, their Lord with them, that Day, is [fully] Aware.