104. ஸூரத்துல் ஹுமஜா(புறங்கூறல்)

மக்கீ, வசனங்கள்: 9

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَیْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۟ۙ
وَيْلٌகேடுதான்لِّـكُلِّஎல்லோருக்கும்هُمَزَةٍபுறம் பேசுபவர்لُّمَزَةِ ۙ‏குறை கூறுபவர்
வய்லுல்-லிகுல்லி ஹு மZஜதில்-லுமZஜஹ்
முஹம்மது ஜான்
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
IFT
(மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும், (முதுகுக்குப் பின்) குறை கூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பிறரைக்) குறைகூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்.
Saheeh International
Woe to every scorner and mocker
لَّذِیْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۟ۙ
اۨلَّذِىْஎவன்جَمَعَசேகரித்தான்مَالًاசெல்வத்தைوَّعَدَّدَهٗ ۙ‏இன்னும் அதை எண்ணி எண்ணிப் பார்த்தான்
அல்லதீ ஜம'அ மால(ன்)வ் வ 'அத்ததஹ்
முஹம்மது ஜான்
(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
IFT
அவன் பொருளைச் சேகரிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இத்தகையவன் பொருளைச் சேகரித்து அதனை எண்ணி வைத்துக்கொண்டும் இருந்தான்.
Saheeh International
Who collects wealth and [continuously] counts it.
یَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ ۟ۚ
يَحْسَبُகருதுகிறான்اَنَّ مَالَهٗۤநிச்சயமாக தன் செல்வம்اَخْلَدَهٗ‌ ۚ‏தன்னை நிரந்தரமாக்கும்
யஹ்ஸBபு அன்ன மாலஹூ அக்லதஹ்
முஹம்மது ஜான்
நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.
IFT
மேலும் அதனை எண்ணி எண்ணி வைக்கின்றான். அவன் கருதுகின்றான், தன்னுடைய பொருள் தன்னிடம் என்றென்றும் நிலைத்து இருக்கும் என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, தன் பொருள் தன்னை (என்றென்னும் உலகில்) நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணுகிறான்.
Saheeh International
He thinks that his wealth will make him immortal.
كَلَّا لَیُنْۢبَذَنَّ فِی الْحُطَمَةِ ۟ؗۖ
كَلَّا‌அவ்வாறல்லلَيُنْۢبَذَنَّநிச்சயமாக எறியப்படுவான்فِى ‏الْحُطَمَةِؗۖஹூதமாவில்
கல்லா; லயும்Bபதன்ன Fபில் ஹுதமஹ்
முஹம்மது ஜான்
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.
IFT
அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாபின்னமாக்குகின்ற ஓரிடத்தில் அவன் வீசியெறியப்படுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பொருளைச் சேகரித்து வைத்துக்கொண்டு உலகில் அவனை நிலைத்திருக்கச் செய்யுமென்று எண்ணியிருந்தானே) அவ்வாறன்று! (அல்லாஹ்வின் மீது சத்தியமாக) ஹூதமாவில் அவன் எறியப்படுவான்.
Saheeh International
No! He will surely be thrown into the Crusher.
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ۟ؕ
وَمَاۤஎதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுالْحُطَمَةُ ؕ‏ஹூதமா
வமா அத்ராக மல்-ஹுதமஹ்
முஹம்மது ஜான்
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா?
IFT
மேலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) “ஹூதமா” என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Saheeh International
And what can make you know what is the Crusher?
نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۟ۙ
نَارُநெருப்புاللّٰهِஅல்லாஹ்வுடையالْمُوْقَدَةُ ۙ‏எரிக்கப்பட்ட
னாருல் லாஹில்-மூகதா
முஹம்மது ஜான்
அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.
IFT
அது அல்லாஹ்வின் நெருப்பு; அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் (நரக) நெருப்பு.
Saheeh International
It is the fire of Allah, [eternally] fueled,
الَّتِیْ تَطَّلِعُ عَلَی الْاَفْـِٕدَةِ ۟ؕ
الَّتِىْஅதுتَطَّلِعُஎட்டிப் பார்க்கும்عَلَى الْاَفْـــِٕدَةِ ؕ‏உள்ளங்களில்
அல்லதீ தத்தலி'உ 'அலல் அFப்'இதஹ்
முஹம்மது ஜான்
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
அப்துல் ஹமீது பாகவி
(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
IFT
இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது எத்தகையதென்றால், (தேகத்தில் பட்டவுடன்) இதயங்கள் மீது சென்றடையும், (காரணம் இதயங்கள் தான் தீய கொள்கைகளுக்கு இருப்பிடமாக இருந்தது)
Saheeh International
Which mounts directed at the hearts.
اِنَّهَا عَلَیْهِمْ مُّؤْصَدَةٌ ۟ۙ
اِنَّهَاநிச்சயமாக அதுعَلَيْهِمْஅவர்கள் மீதுمُّؤْصَدَةٌ ۙ‏மூடப்படும்
இன்னஹா 'அலய்ஹிம் மு'ஸதா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
IFT
நிச்சயமாக அதனால் அவர்கள் சூழப்பட்டு மூடப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அது அவர்களின் மீது (சூழ்ந்து) மூடப்பட்டதாய் இருக்கும்.
Saheeh International
Indeed, it [i.e., Hellfire] will be closed down upon them
فِیْ عَمَدٍ مُّمَدَّدَةٍ ۟۠
فِىْ عَمَدٍதூண்களில்مُّمَدَّدَةٍ‏உயரமான
Fபீ 'அமதிம் முமத்ததஹ்
முஹம்மது ஜான்
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).
அப்துல் ஹமீது பாகவி
(நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
IFT
உயர உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்பட்ட நிலையில்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டிருப்பார்கள்).
Saheeh International
In extended columns.