105. ஸூரத்துல் ஃபீல் (யானை)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِیْلِ ۟ؕ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?كَيْفَஎப்படிفَعَلَசெய்தான்رَبُّكَஉம் இறைவன்بِاَصْحٰبِ الْفِيْلِؕ‏யானைப் படைகளை
அலம் தர கய்Fப Fப'அல ரBப்Bபுக Bபி அஸ்ஹாBபில் Fபீல்
முஹம்மது ஜான்
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா?
IFT
யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அப்ரஹாவின்) யானைக்காரர்களை உமதிரட்சகன் எவ்வாறு செய்தான் என்பதை நீர் தெரிந்திருக்கவில்லையா?
Saheeh International
Have you not considered, [O Muhammad], how your Lord dealt with the companions of the elephant?
اَلَمْ یَجْعَلْ كَیْدَهُمْ فِیْ تَضْلِیْلٍ ۟ۙ
اَلَمْ يَجْعَلْஅவன் ஆக்கவில்லையாكَيْدَசூழ்ச்சியைهُمْஅவர்களுடையفِىْ تَضْلِيْلٍۙ‏வீணாக
அலம் யஜ்'அல் கய்தஹும் Fபீ தள்லீல்
முஹம்மது ஜான்
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா?
IFT
அவர்களின் சதித்திட்டத்தை அவன் வீணடித்து விடவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா?
Saheeh International
Did He not make their plan into misguidance?
وَّاَرْسَلَ عَلَیْهِمْ طَیْرًا اَبَابِیْلَ ۟ۙ
وَّاَرْسَلَஇன்னும் அனுப்பினான்عَلَيْهِمْஅவர்கள் மீதுطَيْرًاபறவைகளைاَبَابِيْلَۙ‏பல கூட்டங்களாக
வ அர்ஸல 'அலய்ஹிம் தய்ரன் அBபாBபீல்
முஹம்மது ஜான்
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்.
IFT
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக தொடர்ந்தவையாக அவன் அனுப்பி வைத்தான்.
Saheeh International
And He sent against them birds in flocks,
تَرْمِیْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّیْلٍ ۟
تَرْمِيْهِمْஅவர்களை எறிந்தனبِحِجَارَةٍகல்லைக் கொண்டுمِّنْ سِجِّيْلٍۙ‏சுடப்பட்ட களிமண்ணின்
தர்மீஹிம் Bபிஹிஜாரதிம் மின் ஸிஜ்ஜீல்
முஹம்மது ஜான்
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
அப்துல் ஹமீது பாகவி
(கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.
IFT
அவை அவர்களின் மீது சுடப்பட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவர்கள்மீது அவை எறிந்தன.
Saheeh International
Striking them with stones of hard clay,
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ ۟۠
فَجَعَلَهُمْஆகவே அவர்களை ஆக்கினான்كَعَصْفٍவைக்கோலைப் போன்றுمَّاْكُوْلٍ‏திண்ணப்படும்
Fபஜ 'அலஹும் க'அஸ்Fபிம் ம்'அகூல்
முஹம்மது ஜான்
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்.
IFT
பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு (கால்நடைகளால்) தின்னப்பட்ட வைக்கோல்களைப் போல் அவர்களை அவன் ஆக்கி அழித்துவிட்டான்.
Saheeh International
And He made them like eaten straw.