الَّذِىْۤஎவன்اَطْعَمَهُمْஅவர்களுக்கு உணவளித்தான்مِّنْ جُوْعٍபசிக்கு ۙ وَّاٰمَنَهُمْஇன்னும் அவர்களுக்கு அபயமளித்தான்مِّنْ خَوْفٍபயத்திலிருந்து
அல்லதீ அத்'அமஹும் மின் ஜூ'இ(ன்)வ்-வஆமனஹும் மின் கவ்Fப்
முஹம்மது ஜான்
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் (அவர்கள் உழவடித்துப் பயிரிடாமலே இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) அவர்களுடைய பசிக்கு உணவளித்து வருகிறான். (கொலை, களவு முதலிய கொடிய) பயத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்.
IFT
அவனோ அவர்களைப் பசியிலிருந்து காப்பாற்றி உண்ணக் கொடுத்தான். மேலும், அச்சத்திலிருந்து அவர்களை மீட்டு அமைதியை வழங்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், (இந்த வர்த்தக பிரயாணத்தின் மூலம்) பசிக்கு அவர்களுக்கு உணவளித்தான், மேலும், அவர்களுக்கு (பிறரால் ஏற்பட்டுக்கொண்டிருந்த) பயத்திலிருந்து அவன் அபயமளித்தான்.
Saheeh International
Who has fed them, [saving them] from hunger and made them safe, [saving them] from fear.