11. ஸூரத்து ஹூது

மக்கீ, வசனங்கள்: 123

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
الٓرٰ ۫ كِتٰبٌ اُحْكِمَتْ اٰیٰتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِیْمٍ خَبِیْرٍ ۟ۙ
الٓرٰ‌அலிஃப்; லாம்; றா.كِتٰبٌஒரு வேத நூல்اُحْكِمَتْஉறுதியாக்கப்பட்டனاٰيٰـتُهٗஇதன் வசனங்கள்ثُمَّபிறகுفُصِّلَتْதெளிவாக்கப்பட்டனمِنْஇருந்துلَّدُنْஇடம், புறம்حَكِيْمٍமகா ஞானவான்خَبِيْرٍۙ‏ஆழ்ந்தறிபவன்
அலிFப்-லாம்-ரா; கிதாBபுன் உஹ்கிமத் ஆயாதுஹூ தும்ம Fபுஸ்ஸிலத் மில் லதுன் ஹகீமின் கBபீர்
முஹம்மது ஜான்
அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
அலிஃப் லாம் றா. (இது) வேத நூல். அனைத்தையும் நன்கறிந்த ஞானவானால் இதன் வசனங்கள் (பல அத்தாட்சிகளைக் கொண்டு) உறுதி செய்யப்பட்ட பின்னர் (தெளிவாக) விவரிக்கப்பட்டுள்ளன.
IFT
அலிஃப், லாம், றா. வேதக் கட்டளையாகும் இது. அனைத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இதனுடைய வசனங்கள் உறுதியான முறையிலும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அலிஃப் லாம் றா. (இது அல்லாஹ்வின்) வேதம், இதன் வசனங்கள் உறுதியாக்கப்பட்டு, அதன்பின்னர் அவை தீர்க்கமான அறிவுடையவன், நன்கறிந்தவனிடமிருந்து தெளிவு செய்யப்பட்டுள்ளன.
Saheeh International
Alif, Lam, Ra. [This is] a Book whose verses are perfected and then presented in detail from [one who is] Wise and Aware
اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنَّنِیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ وَّبَشِیْرٌ ۟ۙ
اَلَّا تَعْبُدُوْۤاவணங்காதீர்கள் என்றுاِلَّا اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைத் தவிரاِنَّنِىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குمِّنْهُஅவனிடமிருந்துنَذِيْرٌஎச்சரிப்பாளன்وَّبَشِيْرٌ ۙ‏இன்னும் நற்செய்தியாளன்
அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ்; இன்னனீ லகும் மின்ஹு னதீரு(ன்)வ் வ Bபஷீர்
முஹம்மது ஜான்
நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். “நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்” (என்றும்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மனிதர்களை நோக்கி கூறுவீராக:) “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு (அனுப்பப்பட்ட தூதரும்,) அச்சமூட்டி எச்சரிப்பவனும் நற்செய்தி கூறுபவனும் ஆவேன்.
IFT
(அந்தக் கட்டளை இதுதான்:) ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியாதீர்கள்!’ திண்ணமாக, நான் அவன் சார்பில் உங்களை எச்சரிக்கை செய்பவனாகவும் உங்களுக்கு நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு யாரையும்) வணங்காதீர்கள், அவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கிறேன் (என்றும்),
Saheeh International
[Through a messenger, saying], "Do not worship except Allah. Indeed, I am to you from Him a warner and a bringer of good tidings,"
وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّیُؤْتِ كُلَّ ذِیْ فَضْلٍ فَضْلَهٗ ؕ وَاِنْ تَوَلَّوْا فَاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ كَبِیْرٍ ۟
وَّاَنِ اسْتَغْفِرُوْاஇன்னும் பாவமன்னிப்புக் கோருங்கள் என்றுرَبَّكُمْஉங்கள் இறைவனிடம்ثُمَّபிறகுتُوْبُوْۤاதிரும்புங்கள்اِلَيْهِஅவன் பக்கம்يُمَتِّعْكُمْசுகமளிப்பான்/உங்களைمَّتَاعًاஒரு சுகம்حَسَنًاஅழகியதுاِلٰٓىவரைاَجَلٍஒரு காலம்مُّسَمًّىகுறிப்பிடப்பட்டதுوَ يُؤْتِஇன்னும் கொடுப்பான்كُلَّஒவ்வொருذِىْ فَضْلٍஅதிகமுடையவருக்குفَضْلَهٗஅவருடைய அதிகத்தைوَاِنْ تَوَلَّوْاநீங்கள் புறக்கணித்தால்فَاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍஒரு நாளின்كَبِيْرٍ‏மாபெரும்
வ அனிஸ் தக்Fபிரூ ரBப்Bபகும் தும்ம தூBபூ இலய்ஹி யுமத்திஃகும் மதா'அன் ஹஸனன் இலா அஜலிம் முஸம்ம(ன்)வ் வ யு'தி குல்ல தீ Fபள்லின் Fபள்லஹூ வ இன் தவல்லவ் Fப இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் கBபீர்
முஹம்மது ஜான்
“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்; ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன்” (என்றும்).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் உங்கள் இறைவனிடத்தில் பாவமன்னிப்பைக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்) ஒரு குறிப்பிட்ட (நீண்ட) காலம் வரை உங்களை இன்பமடையச் செய்வான். (தன் கடமைக்கு) அதிகமாக நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) அதிகமாகவே கொடுப்பான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் மாபெரும் நாளின் வேதனை நிச்சயமாக உங்களை அணுகுமென்று நான் பயப்படுகிறேன்.
IFT
மேலும், நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்புக்கோரி, அவன் பக்கம் திரும்புங்கள்! அப்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அழகான வாழ்வாதாரங்களை வழங்கி இன்புறச் செய்வான். மேலும், சிறப்புக்குரியவர் ஒவ்வொருவருக்கும் அவருடைய சிறப்புக்கேற்ப தன் அருளை வழங்குவான். நீங்கள் புறக்கணிப்பீர்களேயானால், திகிலூட்டக்கூடிய ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நீங்கள் உங்கள் இரட்சகனிடத்தில் பாவ மன்னிப்பைத் தேடுங்கள், அதன் பின்னர் (பாவங்களை விட்டு தவ்பாச்செய்து) அவன் பக்கம் திரும்புங்கள், (அவ்வாறு செய்தால்) அவன் குறிப்பிட்ட ஒரு காலம் வரையில் உங்களை அழகாக சுகமாக சுகமடையச் செய்வான், இன்னும், சிறப்பிற்குரியவர் ஒவ்வொருவருக்கும் அவரது சிறப்பை அவன் கொடுப்பான், நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் (மா)பெரும் நாளின் வேதனையை நிச்சயமாக உங்கள் மீது நான் பயப்படுகின்றேன்” (என்றும்),
Saheeh International
And [saying], "Seek forgiveness of your Lord and repent to Him, [and] He will let you enjoy a good provision for a specified term and give every doer of favor his favor [i.e., reward]. But if you turn away, then indeed, I fear for you the punishment of a great Day.
اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ ۚ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اِلَىபக்கமேاللّٰهِஅல்லாஹ்வின்مَرْجِعُكُمْ‌ۚஉங்கள் மீளுமிடம்وَهُوَஅவன்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
இலல் லாஹி மர்ஜி'உகும் வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்விடமே நீங்கள் மீண்டு வர வேண்டியுள்ளது; அவன் எல்லாப்பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அல்லாஹ்விடமே வரவேண்டியதிருக்கிறது. அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் ஆவான்.''
IFT
அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பிவரவேண்டியுள்ளது. மேலும், அவன் அனைத்தையும் செய்வதற்கு ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது, அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக.)
Saheeh International
To Allah is your return, and He is over all things competent."
اَلَاۤ اِنَّهُمْ یَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِیَسْتَخْفُوْا مِنْهُ ؕ اَلَا حِیْنَ یَسْتَغْشُوْنَ ثِیَابَهُمْ ۙ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۚ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اَلَاۤஅறிவீராகاِنَّهُمْநிச்சயமாக இவர்கள்يَثْنُوْنَதிருப்புகின்றனர்صُدُوْرَهُمْநெஞ்சங்களை/தங்கள்لِيَسْتَخْفُوْاஅவர்கள் மறைப்பதற்காகمِنْهُ‌ؕஅவனிடமிருந்துاَلَاஅறிவீராகحِيْنَநேரம், சமயம்يَسْتَغْشُوْنَமறைத்துக் கொள்கிறார்கள்ثِيَابَهُمْۙதங்கள் ஆடைகளால்يَعْلَمُஅறிகின்றான்مَاஎதைيُسِرُّوْنَமறைக்கிறார்கள்وَمَاஇன்னும் எதைيُعْلِنُوْنَ‌ۚபகிரங்கப்படுத்துகிறார்கள்اِنَّهٗநிச்சயமாக அவன்عَلِيْمٌۢநன்கறிபவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளவற்றை
அலா இன்னஹும் யத்னூன ஸுதூரஹும் லியஸ்தக்Fபூ மின்ஹ்; அலா ஹீன யஸ்தக்ஷூன தியாBபஹும் யஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்; இன்னஹூ 'அலீமுன் Bபிதாதிஸ் ஸுதூர்
முஹம்மது ஜான்
“அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து) மறைத்துக் கொள்வதற்காகத் தங்கள் இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின் (இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்” (என்பதை அறிந்து கொள்வீர்களாக)!
அப்துல் ஹமீது பாகவி
(இந்தப் பாவிகள் தங்கள் தீய எண்ணங்களை) அல்லாஹ்வுக்கு மறைப்பதற்காக (அவற்றைத்) தங்கள் உள்ளங்களில் (வைத்து) மடித்து மறைக்கக் கருதுகின்றனர் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக. (நித்திரைக்குச் செல்லும்போது) அவர்கள் தங்கள் போர்வையைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ளும் சமயத்தில் (தங்கள் உள்ளங்களில்) அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் அவன் அறிகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ள (ரகசியங்கள்) அனைத்தையும் நன்கறிந்தவன்.
IFT
பாருங்கள்! அவருடைய பார்வையை விட்டு மறைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மக்கள் தங்களுடைய நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கின்றார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! இவர்கள் ஆடைகளால் தங்களை மூடி மறைத்துக்கொண்ட போதிலும் அவர்களின் இரகசியங்களையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கறிகின்றான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களையும் நன்கறியக்கூடியவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்கள்) தங்களை (அல்லாஹ்வாகிய) அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக, தங்கள் நெஞ்சங்களைச் சுற்றி (மறைத்து)க் கொள்கின்றனர் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக! (நித்திரைக்குச் செல்லும்போது) அவர்கள் தங்கள் ஆடைகளால், தங்களை மூடிக் கொள்ளும் சமயத்தில் (தங்கள் நெஞ்சங்களில்) அவர்கள் இரகசியமாக்குவதையும், (அதற்கு மாறாக) அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் (நன்கு) அறிகிறவன் என்பதை (நீர்) அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிகிறவன்.
Saheeh International
Unquestionably, they [i.e., the disbelievers] turn away their breasts to hide themselves from him. Unquestionably, [even] when they cover themselves in their clothing, He [i.e., Allah] knows what they conceal and what they declare. Indeed, He is Knowing of that within the breasts.
وَمَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزْقُهَا وَیَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ؕ كُلٌّ فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
وَمَاஇல்லைمِنْ دَآ بَّةٍஎந்த/ஓர் உயிரினம்فِى الْاَرْضِபூமியில்اِلَّاதவிரعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்வின்رِزْقُهَاஅதற்கு உணவளிப்பதுوَ يَعْلَمُஇன்னும் அறிகின்றான்مُسْتَقَرَّهَاஅவற்றின் தங்குமிடத்தைوَمُسْتَوْدَعَهَا‌ؕஇன்னும் அவற்றின் அடங்குமிடத்தைكُلٌّஎல்லாம்فِىْ كِتٰبٍபதிவேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான(து)
வமா மின் தாBப்Bபதின் Fபில் அர்ளி இல்லா 'அலல் லாஹி ரிZஜ்குஹா வ யஃலமு முஸ்தகர்ரஹா வ முஸ்தவ்த'அஹா; குல்லுன் Fபீ கிதாBபிம் முBபீன்
முஹம்மது ஜான்
இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத உயிரினம் ஒன்றுமே பூமியில் இல்லை. அவை (உயிருடன்) வாழுகின்ற இடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன.
IFT
உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்தையும், சென்று சேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு, அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தே தவிர இல்லை, அவை தங்குமிடத்தையும், அவை ஒப்படைக்கப்ப(ட்)டு (சேரு)மிடத்தையும் அவன் (நன்கு) அறிகிறவன் (இவை யாவும் (லவ்ஹூல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன.
Saheeh International
And there is no creature on earth but that upon Allah is its provision, and He knows its place of dwelling and place of storage. All is in a clear register.
وَهُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَی الْمَآءِ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَلَىِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَیَقُوْلَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
وَ هُوَஅவன்الَّذِىْஎத்தகையவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَஇன்னும் பூமியைفِىْஇல்سِتَّةِஆறுاَ يَّامٍநாள்கள்وَّكَانَஇன்னும் இருந்ததுعَرْشُهٗஅவனுடைய அர்ஷுعَلَىமீதுالْمَآءِநீர்لِيَبْلُوَكُمْஅவன் உங்களை சோதிப்பதற்காகاَيُّكُمْஉங்களில் யார்اَحْسَنُமிக அழகியவர்عَمَلًا ؕசெயலால்وَلَٮِٕنْ قُلْتَநீர் கூறினால்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مَّبْعُوْثُوْنَஎழுப்பப்படுவீர்கள்مِنْۢ بَعْدِபின்னர்الْمَوْتِஇறப்புلَيَـقُوْلَنَّநிச்சயம் கூறுவார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியமேمُّبِيْنٌ‏பகிரங்கமான(து)
வ ஹுவல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமி(ன்)வ் வ கான 'அர்ஷுஹூ அலல் மா'இ லியBப்லுவகும் அய்யுகும் அஹ்ஸனு 'அமலா; வ ல'இன் குல்த இன்னகும் மBப்'ஊதூன மின் Bபஃதில் மவ்தி ல யகூலன்னல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
முஹம்மது ஜான்
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய ‘அர்ஷு' நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே! நீர் மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் ‘‘இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்.
IFT
அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ்* நீரின் மீது இருந்தது எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக! இப்போது நபியே! நீர் மக்களிடம் “நீங்கள் மரணமடைந்த பின் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள்!” என்று கூறினால் இறைநிராகரிப்பாளர்கள் உடனே கூறுவார்கள்: “இது வெளிப்படையான சூனியமே அன்றி வேறில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையோனென்றால், வானங்கள், மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தான்-(அச்சமயம்) அவனுடைய ‘அர்ஷு’ தண்ணீரின் மீதிருந்தது, உங்களில் நற்கருமங்களை நன்றாகச் செய்வோர் யார் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக (அவன் படைத்தான்.) மேலும், “இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) நீங்கள் எழுப்பப்படுபவர்கள்” என்று அவர்களிடம் நீர் கூறினால் அதற்கு “இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை” என்று நிச்சயமாக நிராகரித்துக் கொண்டிருப்போர் கூறுகின்றனர்.
Saheeh International
And it is He who created the heavens and the earth in six days - and His Throne had been upon water - that He might test you as to which of you is best in deed. But if you say, "Indeed, you are resurrected after death," those who disbelieve will surely say, "This is not but obvious magic."
وَلَىِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰۤی اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّیَقُوْلُنَّ مَا یَحْبِسُهٗ ؕ اَلَا یَوْمَ یَاْتِیْهِمْ لَیْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
وَلَٮِٕنْ اَخَّرْنَاநாம் பிற்படுத்தினால்عَنْهُمُஅவர்களை விட்டுالْعَذَابَவேதனையைاِلٰٓىவரைاُمَّةٍஒரு காலம்مَّعْدُوْدَةٍஎண்ணப்பட்டதுلَّيَـقُوْلُنَّநிச்சயம் கூறுவார்கள்مَاஎது?يَحْبِسُهٗؕதடுக்கின்றது/அதைاَلَاஅறிந்துகொள்ளுங்கள்!يَوْمَநாளில்يَاْتِيْهِمْஅது வரும்/அவர்களிடம்لَـيْسَ مَصْرُوْفًاஅறவே திருப்பப்படாதுعَنْهُمْஅவர்களை விட்டுوَحَاقَஇன்னும் சூழும்بِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஇருந்தனர்بِهٖஅதைيَسْتَهْزِءُوْنَ‏பரிகாசம்செய்கின்றனர்
வல'இன் அகர்னா 'அன்ஹுமுல் 'அதாBப இலா உம்மதிம் மஃதூததில் ல யகூலுன்ன மா யஹ்Bபிஸுஹ்; அலா யவ்ம ய'தீஹிம் லய்ஸ மஸ்ரூFபன் 'அன்ஹும் வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
முஹம்மது ஜான்
(குஃப்ரின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதைத் தடுத்தது யாது?” என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள்; அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
(நிராகரிப்பின் காரணமாக) அவர்களுக்கு (வரவேண்டிய) வேதனையை ஒரு சொற்ப காலம் நாம் பிற்படுத்தியபோதிலும் ‘‘அதைத் தடுத்துக்கொண்டது எது?'' எனப் பரிகாசமாகக் கேட்கிறார்கள். அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அதைத் தடுத்துவிட முடியாது என்பதையும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
IFT
ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் அவர்களுடைய தண்டனையை தாமதப்படுத்தினால் அதனைத் தடுத்து வைத்திருப்பது எது? என்று கேட்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அத்தண்டனை அவர்களிடம் வந்துவிடும் நாளில் அவர்களை விட்டு அதனை யாராலும் தடுத்துவிட முடியாது! மேலும், எதனை அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு வேதனையை ஒரு குறிப்பிட்ட காலம் நாம் பிற்படுத்தினால், “அதனைத் தடுத்துக் கொண்டது எது?” என(த்திட்டமாக) அவர்கள் கேட்கின்றார்கள், அறிந்து கொள்ளுங்கள்! அவர்களிடம் அது வரும் நாளில், அவர்களை விட்டு அது தடுக்கப்படுவதாக இல்லை, இன்னும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
Saheeh International
And if We hold back from them the punishment for a limited time, they will surely say, "What detains it?" Unquestionably, on the Day it comes to them, it will not be averted from them, and they will be enveloped by what they used to ridicule.
وَلَىِٕنْ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنٰهَا مِنْهُ ۚ اِنَّهٗ لَیَـُٔوْسٌ كَفُوْرٌ ۟
وَلَٮِٕنْ اَذَقْنَاநாம் சுவைக்க வைத்தால்الْاِنْسَانَமனிதனுக்குمِنَّاநம்மிடமிருந்துرَحْمَةًஓர் அருளைثُمَّபிறகுنَزَعْنٰهَاநீக்கினோம்/அதைمِنْهُ‌ۚஅவனிடமிருந்துاِنَّهٗநிச்சயமாக அவன்لَيَــــٴُـوْسٌநிராசையாளனாகكَفُوْرٌ‏நன்றி கெட்டவனாக
வ ல'இன் அதக்னல் இன்ஸான மின்னா ரஹ்மதன் தும்ம னZஜ'னாஹா மின்ஹு, இன்னஹூ லய'ஊஸுன் கFபூர்
முஹம்மது ஜான்
நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம் அருளை மனிதன் அனுபவிக்கும்படி நாம் செய்து, பின்னர் அதை அவனிடமிருந்து நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கை இழந்து பெரும் நன்றி கெட்டவனாகிவிடுகிறான்.
IFT
மேலும், மனிதனுக்கு எப்போதேனும் நாம் நமது அருட்கொடையை வழங்கிய பிறகு அதனை அவனிடமிருந்து பறித்துக் கொண்டால், திண்ணமாக அவன் நிராசையடைந்து விடுகின்றான். மேலும், நன்றி கெட்டவன் ஆகிவிடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் மனிதனுக்கு நம்மிடமிருந்து அருளை சுவைக்கும்படிச் செய்து பின்னர் அதனை அவனிடமிருந்து நாம் பிடுங்கிக் கொண்டால், நிச்சயமாக அவன் நம்பிக்கையிழந்தவன், பெரும் நன்றி கெட்டவன் (ஆக மாறி விடுகிறான்.)
Saheeh International
And if We give man a taste of mercy from Us and then We withdraw it from him, indeed, he is despairing and ungrateful.
وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ ذَهَبَ السَّیِّاٰتُ عَنِّیْ ؕ اِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌ ۟ۙ
وَلَٮِٕنْ اَذَقْنٰهُநாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்نَـعْمَآءَஇன்பத்தைبَعْدَபின்னர்ضَرَّآءَதுன்பம்مَسَّتْهُஅவனுக்கு ஏற்பட்ட(து)لَيَـقُوْلَنَّநிச்சயம் கூறுவான்ذَهَبَசென்றனالسَّيِّاٰتُதீமைகள்عَنِّىْ‌ ؕஎன்னை விட்டுاِنَّهٗநிச்சயமாக அவன்لَـفَرِحٌமகிழ்பவனாகفَخُوْرٌۙ‏தற்பெருமையாளனாக
வல'இன் அதக்னாஹு னஃமா'அ Bபஃத ளர்ரா'அ மஸ்ஸத் ஹு ல யகூலன்ன தஹBபஸ் ஸய்யிஆது 'அன்னீ; இன்னஹூ லFபரிஹுன் Fபகூர்
முஹம்மது ஜான்
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், “என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன” என்று நிச்சயமாகக் கூறுவான்; நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அவன் இன்பம் அனுபவிக்கும்படி நாம் செய்தால், அதற்கவன் ‘‘நிச்சயமாக என் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. (இனி திரும்ப வராது)'' என்று கூறுகிறான். ஏனென்றால், நிச்சயமாக மனிதன் (அதிவிரைவில்) மகிழ்ச்சியடையக் கூடியவனாக, பெருமையடிப்பவனாக ஆகிவிடுகிறான்.
IFT
மேலும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்துக்குப் பிறகு அவனுக்கு நாம் அருளை வழங்கி இன்புறச் செய்தால், ‘துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கிவிட்டன!’ என்று கூறுகின்றான். பிறகு பூரிப்பில் திளைத்தவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் ஆகிவிடுகின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின் அருட்கொடைகளை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்தால், அ(தற்க)வன், “என்னை விட்டும் துன்பங்கள் போய்விட்டன” என்று நிச்சயமாக கூறுகின்றான், நிச்சயமாக அவன் மகிழ்ச்சியடையக்கூடியவன், பெருமையடிப்பவன் (ஆக மாறி விடுகின்றான்.)
Saheeh International
But if We give him a taste of favor after hardship has touched him, he will surely say, "Bad times have left me." Indeed, he is exultant and boastful -
اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்صَبَرُوْاசகித்தார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِؕநன்மைகளைاُولٰٓٮِٕكَஅவர்கள்لَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّاَجْرٌஇன்னும் கூலிكَبِيْرٌ‏பெரிய(து)
இல்லல் லதீன ஸBபரூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உலா'இக லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
முஹம்மது ஜான்
ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், எவர்கள் (துன்பங்களைப்) பொறுத்து சகித்துக் கொண்டு நன்மையான காரியங்களைச் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.
IFT
ஆனால் பொறுமையை மேற்கொண்டு நற்செயல்கள் புரிபவர்கள்தாம் இத்தகைய குறைபாடு இல்லாதவர்கள். அவர்களுக்குத்தான் மன்னிப்பும் பெரும்கூலியும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(துன்பங்களைச் சகித்துப்) பொறுத்துக்கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்தும் வருகின்றார்களே அத்தகையவர்களைத் தவிர-அத்தகையோர்-அவர்களுக்கு மன்னிப்பும், மாபெரும் (நற்) கூலியும் உண்டு.
Saheeh International
Except for those who are patient and do righteous deeds; those will have forgiveness and great reward.
فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَضَآىِٕقٌ بِهٖ صَدْرُكَ اَنْ یَّقُوْلُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ كَنْزٌ اَوْ جَآءَ مَعَهٗ مَلَكٌ ؕ اِنَّمَاۤ اَنْتَ نَذِیْرٌ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟ؕ
فَلَعَلَّكَநீர் ஆகலாம்تَارِكٌۢவிட்டுவிடக்கூடிய வராகبَعْضَசிலவற்றைمَاஎவைيُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَيْكَஉமக்குوَضَآٮِٕقٌ ۢஇன்னும் நெருக்கடியாகبِهٖஅதன் மூலம்صَدْرُكَநெஞ்சம்/உம்اَنْ يَّقُوْلُوْاஅவர்கள் கூறுவதுلَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட வேண்டாமா?عَلَيْهِஅவருக்குكَنْزٌஒரு பொக்கிஷம்اَوْஅல்லதுجَآءَவரவேண்டாமாمَعَهٗஅவருடன்مَلَكٌ‌ ؕஒரு வானவர்اِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்نَذِيْرٌ‌ ؕஓர் எச்சரிப்பாளர்தான்وَاللّٰهُஅல்லாஹ்தான்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்وَّكِيْلٌ ؕ‏பொறுப்பாளன்
Fபல'அல்லக தாரிகும் Bபஃள மா யூஹா இலய்க வ ளா'இகும் Bபிஹீ ஸத்ருக அய் யகூலூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி கன்Zஜுன் அவ் ஜா'அ ம'அஹூ மலக்; இன்னமா அன்த னதீர்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இ(ன்)வ் வகீல்
முஹம்மது ஜான்
(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இவ்வேதத்தை அவர்கள் சரிவரக் கேட்பதில்லை என நீர் சடைந்து) உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டு விடுவீரோ? ‘‘உமக்கு ஒரு பொக்கிஷம் அருளப்பட வேண்டாமா? அல்லது உம்முடன் ஒரு வானவர் வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவது உமது உள்ளத்தில் வருத்தத்தை உண்டு பண்ணலாம். (அது பற்றி நீர் கவலைப்பட வேண்டாம்.) நிச்சயமாக நீர் (அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கின்ற ஒரு தூதர்தான். அல்லாஹ்தான் அனைத்தையும் நிர்வகிப்பவன்.
IFT
(நபியே!) வஹியின் மூலம் உமக்கு அறிவிக்கப்படுகின்றவற்றில் சிலவற்றை நீர் (எடுத்துரைக்காமல்) விட்டு விடுவது கூடாது! மேலும், ‘ஏதேனும் செல்வக் கருவூலம் இவருக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருடன் யாரேனும் வானவர் வந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம் இவர்கள் கூறுவதால் உமது நெஞ்சம் சஞ்சலமடைவதும் கூடாது. நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்! அதற்குப் பிறகு அனைத்திற்கும் பொறுப்பேற்பவனாக அல்லாஹ் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (நபியே!) “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டாமா,? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் (உம்மைப்பற்றி) கூறுவதற்காக, உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படுகின்றவற்றில் சிலதை (எத்தி வைக்காது) நீர் விட்டுவிடக்கூடும், உம்முடைய நெஞ்சம் (வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட) அதைக்கொண்டு இக்கட்டுக்குள்ளாகிவிடக்கூடும், நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் தான், அல்லாஹ்வோ ஒவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளனாவான்.
Saheeh International
Then would you possibly leave [out] some of what is revealed to you, or is your breast constrained by it because they say, "Why has there not been sent down to him a treasure or come with him an angel?" But you are only a warner. And Allah is Disposer of all things.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَیٰتٍ وَّادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَمْஅல்லதுيَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்கள்افْتَـرٰٮهُ‌அவர் புனைந்தார்/இதைقُلْகூறுவீராகفَاْتُوْاவாருங்கள்بِعَشْرِகொண்டு/பத்துسُوَرٍஅத்தியாயங்கள்مِّثْلِهٖஇது போன்றمُفْتَرَيٰتٍபுனையப்பட்டவைوَّ ادْعُوْاஇன்னும் நீங்கள் அழையுங்கள்مَنِஎவர்اسْتَطَعْتُمْசாத்தியப்பட்டீர்கள்مِّنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
அம் யகூலூனFப் தராஹு குல் Fபாதூ Bபி'அஷ்ரி ஸுவரிம் மித்லிஹீ முFப்தரயாதி(ன்)வ் வத்'ஊ மனிஸ் ததஃதும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நம் தூதர்) இதைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறாயின், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: இதைப் போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள், அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குச் சாத்தியமான அனைவரையும் இதற்காக அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள் - மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யவும்).
IFT
“இவர்தான் இவ்வேதத்தைப் புனைந்து கூறுகிறார்” என்று இவர்கள் வாதிடுகின்றார்களா? நீர் கூறும்: “அவ்வாறாயின் இதுபோன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் இயற்றிக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர யார் யார் (உங்கள் கடவுள்களாக) இருக்கின்றார்களோ அவர்களையும் (முடிந்தால்) உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள்; (அவர்களைக் கடவுள்களாகக் கருதுவதில்) நீங்கள் உண்மையானவர்களாயின்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (நமது தூதராகிய) “அவர் இதனைக் கற்பனை செய்துவிட்டார்” என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) “இதைப் போன்று கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை நீங்கள் கொண்டு வாருங்கள், (நீங்கள் உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்களையும் (இதுபோன்றதைக் கொண்டு வருவதற்காக) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறுவீராக!
Saheeh International
Or do they say, "He invented it"? Say, "Then bring ten sūrahs like it that have been invented and call upon [for assistance] whomever you can besides Allah, if you should be truthful."
فَاِلَّمْ یَسْتَجِیْبُوْا لَكُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
فَاِلَّمْ يَسْتَجِيْبُوْاஅவர்கள் பதில் அளிக்கவில்லையெனில்لَـكُمْஉங்களுக்குفَاعْلَمُوْۤاஅறியுங்கள்اَنَّمَاۤஎல்லாம்اُنْزِلَஇறக்கப்பட்டதுبِعِلْمِஅறிவைக் கொண்டேاللّٰهِஅல்லாஹ்வின்وَاَنْ لَّاۤஇன்னும் நிச்சயமாக இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ‌ۚஅவன்فَهَلْஆகவேاَنْتُمْ مُّسْلِمُوْنَ‏நீங்கள் முஸ்லிம்கள்
Fப இல் லம் யஸ்தஜீBபூ லகும் Fபஃலமூ அன்னமா உன்Zஜில்ல Bபி'இல்மில் லாஹி வ அல் லா இலாஹ இல்லா ஹுவ Fபஹல் அன்தும் முஸ்லிமூன்
முஹம்மது ஜான்
அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்: “அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?” (என்று கூறவும்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) இறக்கப்பட்டது தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் பணிந்து வழிபடுவீர்களா?
IFT
ஆனால், அவர்கள் உங்கள் உதவிக்கு வரவில்லையென்றால், இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே இறக்கியருளப்பட்டிருக்கிறது என்பதையும் மேலும், அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! இனியாவது நீங்கள் (இந்த சத்தியத்திற்கு) முற்றிலும் அடிபணிவீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கவில்லையானால், நிச்சயமாக அது இறக்கப்பட்டதெல்லாம் அல்லாஹ்வின் அறிவைக் கொண்டேதான், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், (இப்போதாவது) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக ஆகிவிடுகிறீர்களா? (என்று கேளுங்கள்.)
Saheeh International
And if they do not respond to you - then know that it [i.e., the Qur’an] was revealed with the knowledge of Allah and that there is no deity except Him. Then, would you [not] be Muslims?
مَنْ كَانَ یُرِیْدُ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا نُوَفِّ اِلَیْهِمْ اَعْمَالَهُمْ فِیْهَا وَهُمْ فِیْهَا لَا یُبْخَسُوْنَ ۟
مَنْஎவர்(கள்)كَانَஇருந்தார்(கள்)يُرِيْدُநாடுவார்(கள்)الْحَيٰوةَவாழ்க்கையைالدُّنْيَاஉலக(ம்)وَ زِيْنَتَهَاஇன்னும் அதன் அலங்காரத்தைنُوَفِّமுழுமையாக கூலி தருவோம்اِلَيْهِمْஅவர்களுக்குاَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைفِيْهَاஅதில்وَهُمْஅவர்கள்فِيْهَاஅதில்لَا يُبْخَسُوْنَ‏குறைக்கப்பட மாட்டார்கள்
மன் கான யுரீதுல் ஹயாதத் துன்யா வ Zஜீனதஹா னுவFப்Fபி இலய்ஹிம் அ'மா லஹும் Fபீஹா வ ஹும் Fபீஹா லா யுBப்கஸூன்
முஹம்மது ஜான்
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
IFT
எவர்கள் இவ்வுலக வாழ்வையும், அதன் அலங்காரத்தையும் நாடுகின்றார்களோ அவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கேற்ற கூலியை இங்கே நாம் அளித்து விடுகின்றோம்; அதில் அவர்களுக்கு எவ்விதக் குறைபாடும் செய்யப்பட மாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர்கள், இவ்வுலக வாழ்வையும், அதன் அலங்காரத்தையும் நாடுபவர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் செயல்க(ளுக்குரிய பலன்க)ளை, இவ்வுலகத்திலேயே நாம் பூரணமாக அவர்களுக்கு நிறைவு செய்வோம், அவர்களோ அதில் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
Saheeh International
Whoever desires the life of this world and its adornments - We fully repay them for their deeds therein, and they therein will not be deprived.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَیْسَ لَهُمْ فِی الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖؗ وَحَبِطَ مَا صَنَعُوْا فِیْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்لَـيْسَஇல்லைلَهُمْஅவர்களுக்குفِىْ الْاٰخِرَةِமறுமையில்اِلَّا النَّارُ‌ ‌ۖ தவிர/நெருப்புوَحَبِطَஇன்னும் அழிந்தனمَاஎவைصَنَعُوْاஅவர்கள் செய்தனர்فِيْهَاஅதில்وَبٰطِلٌஇன்னும் வீணானவையேمَّاஎவைكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‏செய்வார்கள்
உலா'இகல் லதீன லய்ஸ லஹும் Fபில் ஆகிரதி இல்லன் னாரு வ ஹBபித மா ஸன'ஊ Fபீஹா வ Bபாதிலும் மா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!
அப்துல் ஹமீது பாகவி
எனினும், மறுமையிலோ இவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்று மில்லை; அவர்கள் செய்தவை அனைத்தும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.
IFT
ஆனால், இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறொன்றும் இருக்காது. மேலும், அவர்கள் இவ்வுலகில் உருவாக்கியவை அனைத்தும் அடியோடு அழிந்து போய் விட்டன (என்பதும்) அவர்கள் செய்து வந்தவை யாவும் வீணானவை (என்பதும் அங்கு அவர்களுக்குப் புரிந்துவிடும்)!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இத்தகையோர் தாம்-அவர்களுக்கு மறுமையில் (நரக) நெருப்பைத்தவிர (வேறு ஒன்றும்) இல்லை, அவர்கள் அ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்தும் விட்டன, அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணானவையேயாகும்.
Saheeh International
Those are the ones for whom there is not in the Hereafter but the Fire. And lost is what they did therein, and worthless is what they used to do.
اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَیَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ یَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّنْهُ ۗ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
اَفَمَنْஎவர்(கள்)?كَانَஇருக்கின்றார்(கள்)عَلٰىமீதுبَيِّنَةٍதெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖதன் இறைவன்وَيَتْلُوْهُஇன்னும் ஓதுகிறார்/அதைشَاهِدٌசாட்சியாளர்مِّنْهُஅவன் புறத்திலிருந்துوَمِنْ قَبْلِهٖஇன்னும் அதற்கு முன்னர்كِتٰبُவேதம்مُوْسٰٓىமூஸாவின்اِمَامًاவழிகாட்டியாகوَّرَحْمَةً‌  ؕஇன்னும் அருளாகاُولٰٓٮِٕكَஅவர்கள்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்வார்கள்بِهٖ‌ ؕஇதைوَمَنْஎவர்يَّكْفُرْநிராகரிப்பார்بِهٖஇதைمِنَ الْاَحْزَابِகூட்டங்களில்فَالنَّارُநரகம்مَوْعِدُهٗ‌ ۚஅவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும்فَلَا تَكُஇருக்காதீர்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில்مِّنْهُ‌இதில்اِنَّهُநிச்சயமாக இதுالْحَـقُّஉண்மைதான்مِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَபலர்النَّاسِமக்களில்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அFபமன் கான 'அல Bபய்யினதிம் மிர் ரBப்Bபிஹீ வ யத்லூஹு ஷாஹிதும் மின்ஹு வ மின் கBப்லிஹீ கிதாBபு மூஸா இமாம(ன்)வ் வ ரஹ்மஹ்; உலா 'இக யு'மினூன Bபிஹ்; வ மய் யக்Fபுர் Bபிஹீ மினல் அஹ்ZஜாBபி Fபன் னாரு மவ்'இதுஹ்; Fபலா தகு Fபீ மிர்யதிம் மின்ஹ்; இன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிக வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
முஹம்மது ஜான்
எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தங்கள் இறைவனின் (திருக் குர்ஆனுடைய) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (‘ஈஸா'வுக்கு) அருளப்பட்டது (-இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக்கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சொர்க்கத்தில்தான்.) இந்த (மூன்று) வகுப்பாரில் எவர்கள் இதை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீர் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உமது இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதை) நம்புவதில்லை.
IFT
ஒருவர் தன் இறைவனிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றிருக்கும்போது, மேலும் அதன் பிறகு (அதற்கு வலுவூட்டும் வண்ணம்) வேறொரு சான்றும் தொடர்ந்து இறைவனிடமிருந்து வந்துள்ளபோது, அத்துடன் இதற்கு முன்பே மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் வந்திருக்கும்போது (பிற உலகாயதவாதிகளைப் போன்று இவரும் இதனை மறுக்க முடியுமா?) இத்தகையோர் இதன்மீது நம்பிக்கை கொள்ளத்தான் செய்வார்கள். மேலும், மனித சமூகங்களைச் சேர்ந்த எவரேனும் இதனை மறுத்தால் அவருக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகமாகும். எனவே, (நபியே!) நீர் இதைப்பற்றி எவ்வித ஐயமும் கொள்ள வேண்டாம். திண்ணமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தம் இரட்சகனிடமிருந்து வந்த தெளிவின் மீது இருப்பவர், (அதன் உண்மைக்குச் சான்றாக) அவனிடமிருந்து அவரை ஒரு சாட்சியும் அடுத்திருக்க இன்னும் அதற்கு முன்பு மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்க அ(த்தகைய)வரா? (நிராகரிப்போர் போன்று ஆவார்? ஆக மாட்டார்.) அத்தகைய (ஆதாரங்களைக் கொண்ட)வர்களே அவரை நம்பிக்கை கொள்வார்கள், மேலும், பல கூட்டத்தார்களிலிருந்து அவரை எவர் நிராகரிப்பாரோ, அப்பொழுது நரகமே அவருக்கு வாக்களிக்கப்பட்ட இடமாகும், ஆகவே, அ(வ்வேதத்)தைப் பற்றி நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம், நிச்சயமாக அது உம்முடைய இரட்கசனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாகும், எனினும், மனிதர்களில் அதிகமானோர் (அதனை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
So is one who [stands] upon a clear evidence from his Lord [like the aforementioned]? And a witness from Him follows it, and before it was the Scripture of Moses to lead and as mercy. Those [believers in the former revelations] believe in it [i.e., the Qur’an]. But whoever disbelieves in it from the [various] factions - the Fire is his promised destination. So be not in doubt about it. Indeed, it is the truth from your Lord, but most of the people do not believe.
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ؕ اُولٰٓىِٕكَ یُعْرَضُوْنَ عَلٰی رَبِّهِمْ وَیَقُوْلُ الْاَشْهَادُ هٰۤؤُلَآءِ الَّذِیْنَ كَذَبُوْا عَلٰی رَبِّهِمْ ۚ اَلَا لَعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ
وَمَنْயார்?اَظْلَمُமகா அநியாயக்காரன்مِمَّنِஎவரைவிடافْتَـرٰىபுனைந்தார்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًا‌ ؕபொய்யைاُولٰٓٮِٕكَஅவர்கள்يُعْرَضُوْنَஅவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள்عَلٰىமுன்رَبِّهِمْதங்கள் இறைவன்وَ يَقُوْلُகூறுவார்(கள்)الْاَشْهَادُசாட்சியாளர்கள்هٰٓؤُلَاۤءِஇவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَذَبُوْاபொய்யுரைத்தார்கள்عَلٰىமீதுرَبِّهِمْ‌ ۚதங்கள் இறைவன்اَلَاஅறிந்துகொள்ளுங்கள்!لَـعْنَةُசாபம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَىமீதுالظّٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்கள்
வ மன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபா; உலா'இக யுஃரளூன 'அலா ரBப்Bபிஹிம் வ யகூலுல் அஷ்ஹா துஹா'உலா'இல் லதீன கதBபூ 'அலா ரBப்Bபிஹிம்; அலா லஃனதுல் லாஹி அலள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்களை விட அநியாயக்காரர் யார்? அவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு ‘‘இவர்கள்தான் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்'' என்று சாட்சிகள் (சாட்சியம்) கூறுவார்கள். இந்த அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
IFT
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்களைவிட கொடிய அக்கிரமக்காரர்கள் யார்? இத்தகையோர் தம் இறைவனின் திருமுன் கொண்டு வரப்படுவார்கள். அப்போது சாட்சியாளர்கள் “இவர்கள்தாம் தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்” என்று கூறுவார்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனை செய்பவரைவிட மிகப் பெரிய அநியாயக்காரர் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இரட்சகன் முன் நிறுத்தப்படுவர், மேலும், “இவர்கள் தாம் தங்கள் இரட்சகன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று (மலக்குகளான) சாட்சிகள் கூறுவார்கள், அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டென்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக!
Saheeh International
And who is more unjust than he who invents a lie about Allah? Those will be presented before their Lord, and the witnesses will say, "These are the ones who lied against their Lord." Unquestionably, the curse of Allah is upon the wrongdoers.
الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يَصُدُّوْنَதடுப்பார்கள்عَنْவிட்டுسَبِيْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்وَيَبْغُوْنَهَاஇன்னும் தேடுவார்கள்/அதில்عِوَجًا ؕகோணலைوَهُمْஅவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைهُمْஅவர்கள்كٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
அல்லதீன யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வ யBப்கூனஹா 'இவஜ(ன்)வ் வ ஹும் Bபில் ஆகிரதிஹும் காFபிரூன்
முஹம்மது ஜான்
அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள் - இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வின் வழியைத் தடுத்து, அதில் கோணலை(யும் சந்தேகத்தையும்) உண்டு பண்ண விரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தான்.
IFT
இந்த அக்கிரமக்காரர்கள் அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மக்களைத் தடுக்கின்றார்கள்; அதனைக் கோணலாக்க விரும்புகின்றார்கள். மேலும், மறுமையை மறுக்கின்றார்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (அதில் செல்வோரைத்)தடுத்து அதைக் கோணலாக்கத் தேடுகிறார்கள், அவர்கள்தாம் மறுமையையும் நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
Saheeh International
Who averted [people] from the way of Allah and sought to make it [seem] deviant while they, concerning the Hereafter, were disbelievers.
اُولٰٓىِٕكَ لَمْ یَكُوْنُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِیَآءَ ۘ یُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ؕ مَا كَانُوْا یَسْتَطِیْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا یُبْصِرُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்لَمْ يَكُوْنُوْاஅவர்கள் இருக்கவில்லைمُعْجِزِيْنَபலவீனப்படுத்து பவர்களாகفِى الْاَرْضِபூமியில்وَمَا كَانَஇன்னும் இல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمِنْ اَوْلِيَآءَ‌ ۘஉதவியாளர்கள்எவரும்يُضٰعَفُபன்மடங்காக்கப்படும்لَهُمُஅவர்களுக்குالْعَذَابُ‌ ؕவேதனைمَا كَانُوْاஅவர்கள் இருக்கவில்லைيَسْتَطِيْعُوْنَசக்தி பெறுகிறார்கள்السَّمْعَசெவியேற்கوَمَا كَانُوْاஇன்னும் அவர்கள் இருக்கவில்லைيُبْصِرُوْنَ‏பார்ப்பவர்களாக
உலா'இக லம் யகூனூ முஃஜிZஜீன Fபில் அர்ளி வமா கான லஹும் மின் தூனில் லாஹி மின் அவ்லியா'; யுளா'அFபு லஹுமுல் 'அதாBப்; மா கானூ யஸ்ததீ'ஊனஸ் ஸம்'அ வமா கானூ யுBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்து விடமுடியாது, அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இழந்து விட்டார்கள் - இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் பூமியில் (ஓடி தப்பித்து அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை தவிர்த்து, இவர்களுக்கு உதவி செய்பவர்களும் இல்லை. (மறுமையிலோ) இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும். இவர்கள் (தங்கள் பொறாமையின் காரணமாக நல்ல வார்த்தைகளைச்) செவியுற சக்தியற்றவர்கள்; (நேரான வழியைக்) காணவும் மாட்டார்கள்.
IFT
இப்புவியில் அல்லாஹ்வை இயலாமையிலாக்கும் வலிமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், அல்லாஹ்வுக்கு எதிராக அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இருக்கவில்லை! இப்போது இவர்களுக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். இவர்களால் எதையும் செவியுறவும் முடியவில்லை; எதுவும் இவர்களுக்குப் புலப்படவும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர் - பூமியில் (அல்லாஹ்வை) இயலாமையில் ஆக்கக் கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை, மேலும், அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு பாதுகாவலர்களுமில்லை, (மறுமையிலோ) அவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும், (நல்லவற்றை) செவியேற்கச் சக்தியுடையோராக அவர்கள் இருக்கவில்லை, (நேர்வழியைப்) பார்ப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை.
Saheeh International
Those were not causing failure [to Allah] on earth, nor did they have besides Allah any protectors. For them the punishment will be multiplied. They were not able to hear, nor did they see.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்خَسِرُوْۤاநட்டமடைந்தார்கள்اَنْفُسَهُمْதமக்குத் தாமேوَضَلَّஇன்னும் மறைந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டுمَّاஎவைكَانُوْاஇருந்தனர்يَفْتَرُوْنَ‏அவர்கள் புனைவார்கள்
உலா'இகல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
முஹம்மது ஜான்
இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள்; இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) யாவும் (தீர்ப்பு நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள்தான் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்கொண்டவர்கள். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) அனைத்தும் (அந்நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.
IFT
இவர்கள் தமக்குத் தாமே இழப்பினை ஏற்படுத்திக் கொண்டவர்களாவர். மேலும், இவர்கள் தாமாக ஏற்படுத்திக் கொண்டிருந்த அனைத்தும் இவர்களை விட்டு மறைந்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர்தாம், தமக்குத்தாமே, நஷ்டத்தை விளைவித்துக் கொண்டவர்கள், அவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தவை (அந்நாளில்) அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
Saheeh International
Those are the ones who will have lost themselves, and lost from them is what they used to invent.
لَا جَرَمَ اَنَّهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟
لَا جَرَمَசந்தேகமின்றிاَ نَّهُمْநிச்சயமாக அவர்கள்فِى الْاٰخِرَةِமறுமையில்هُمُ الْاَخْسَرُوْنَ‏மகா நஷ்டவாளிகள்
லா ஜரம அன்னஹும் Fபில் ஆகிரதி ஹுமுல் அக்ஸரூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இவர்கள் மறுமையில் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் (சிறிதும்) சந்தேகமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மறுமையில் நிச்சயமாக இவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.
IFT
மறுமையில் இவர்கள்தாம் மற்றவர்களைவிட அதிக இழப்பிற்குரியவர்களாய் இருப்பர் என்பதில் ஐயமே இல்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்கள் - மறுமையில் அவர்களே முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
Saheeh International
Assuredly, it is they in the Hereafter who will be the greatest losers.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَتُوْۤا اِلٰی رَبِّهِمْ ۙ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநன்மைகளைوَاَخْبَـتُوْۤاஇன்னும் பயத்துடனும் மிக்க பணிவுடனும் திரும்பினார்கள்اِلٰىபக்கம்رَبِّهِمْۙதங்கள் இறைவனின்اُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَـنَّةِ‌ؕசொர்க்கவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ அக்Bபதூ இலா ரBப்Bபிஹிம் உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
IFT
திண்ணமாக, எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தம் இறைவனுக்கே உரித்தானவர்களாகி விடுகின்றார்களோ அவர்கள்தாம் சுவனவாசிகள்! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து தங்களுடைய இரட்சகன் பக்கம் அடிபணியவும் செய்கின்றார்களே அத்தைகையோர் - அவர்கள் சுவனத்திற்குரியவர்கள், அவர்கள், அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
Indeed, they who have believed and done righteous deeds and humbled themselves to their Lord - those are the companions of Paradise; they will abide eternally therein.
مَثَلُ الْفَرِیْقَیْنِ كَالْاَعْمٰی وَالْاَصَمِّ وَالْبَصِیْرِ وَالسَّمِیْعِ ؕ هَلْ یَسْتَوِیٰنِ مَثَلًا ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟۠
مَثَلُஉதாரணம்الْفَرِيْقَيْنِஇரு பிரிவினரின்كَالْاَعْمٰىகுருடனைப் போன்றுوَالْاَصَمِّஇன்னும் செவிடன்وَالْبَـصِيْرِஇன்னும் பார்ப்பவன்وَالسَّمِيْعِ‌ ؕஇன்னும் கேட்பவன்هَلْ يَسْتَوِيٰنِஇருவரும் சமமாவார்களா?مَثَلًا‌ ؕஉதாரணத்தால்اَفَلَا تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
மதலுல் Fபரீகய்னி கல் அஃமா வல் அஸம்மி வல்Bபஸீரி வஸ்ஸமீ'; ஹல் யஸ்தவியானி மதலா; அFபலா ததக்கரூன்
முஹம்மது ஜான்
இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
இவ்விரு (பிரிவினரில் ஒரு) பிரிவினர் குருடனையும், செவிடனையும் (போலிருக் கின்றனர். மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவனையும் கேட்கும் சக்தியுடையவனையும் ஒத்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? (இந்த உதாரணத்தைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா?
IFT
இவ்விரு வகையினரின் உவமை இரு மனிதர்களைப் போன்றுள்ளது: ஒருவன் குருடனாகவும் செவிடனாகவும் இருக்கின்றான். மற்றொருவன் பார்வையுடையவனாகவும் செவியுறுபவனாகவும் இருக்கின்றான். இவ்விருவரும் சமமானவராய் ஆக முடியுமா? (இவ்வுவமையின் மூலம்) நீங்கள் எந்த ஒரு படிப்பினையும் பெறுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்விரு பிரிவினருக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடரையும், செவிடரையும், (மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவரையும், நன்கு கேட்பவரையும் போலாவர், இவ்விரு பிரிவினரும் தன்மையால் சமமாவார்களா? (இதனைக் கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெற மாட்டீர்களா?
Saheeh International
The example of the two parties is like the blind and deaf, and the seeing and hearing. Are they equal in comparison? Then, will you not remember?
وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ ؗ اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًا اِلٰى قَوْمِهٖۤநூஹை/அவருடைய மக்களிடம்اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குنَذِيْرٌஓர் எச்சரிப்பாளன்مُّبِيْنٌۙ‏பகிரங்கமான
வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ இன்னீ லகும் னதீரும் முBபீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.”
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே நாம் ‘நூஹை' அவருடைய மக்களிடம் (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
IFT
திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் தூதராக அனுப்பினோம். (அப்போதும் மக்களின் நிலைமை இவ்வாறே இருந்தது. நூஹ் கூறினார்:) நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம், நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன்” (என்று அவர் கூறினார்)
Saheeh International
And We had certainly sent Noah to his people, [saying], "Indeed, I am to you a clear warner
اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ اَلِیْمٍ ۟
اَنْ لَّا تَعْبُدُوْۤاநீங்கள் வணங்காதீர்கள்اِلَّاதவிரاللّٰهَ‌ؕஅல்லாஹ்اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍநாளின்اَلِيْمٍ‏துன்புறுத்தக் கூடியது
அல் லா தஃBபுதூ இல்லல் லாஹ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் அலீம்
முஹம்மது ஜான்
“நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்” (என்று கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வைத் தவிர (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது. (வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனையை நிச்சயமாக நான் உங்களுக்கு அஞ்சுகிறேன்'' (என்று கூறினார்.)
IFT
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியாதீர்கள்! (இல்லையானால்) துன்புறுத்தும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வைத் தவிர (மற்றெதையும்) நீங்கள் வணங்காதீர்கள், (அவ்வாறு மற்றெதையும் நீங்கள் வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனையைப் பற்றி நிச்சயமாக உங்களின் மீது நான் பயப்படுகின்றேன்” (என்று கூறினார்).
Saheeh International
That you not worship except Allah. Indeed, I fear for you the punishment of a painful day."
فَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰىكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰىكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِیْنَ هُمْ اَرَاذِلُنَا بَادِیَ الرَّاْیِ ۚ وَمَا نَرٰی لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِیْنَ ۟
فَقَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்مَاநாம் பார்க்கவில்லைنَرٰٮكَஉம்மைاِلَّاதவிரبَشَرًاஒரு மனிதராகمِّثْلَنَاஎங்களைப் போன்றوَمَاநாம் பார்க்கவில்லைنَرٰٮكَஉம்மைاتَّبَعَكَபின்பற்றினார்/உம்மைاِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்اَرَاذِلُــنَاஎங்களில் மிக இழிவானவர்கள்بَادِىَ الرَّاْىِ‌ۚவெளிப் பார்வையில்وَمَا نَرٰىநாங்கள்பார்க்கவில்லைلَـكُمْஉங்களுக்குعَلَيْنَاஎங்களைவிடمِنْ فَضْلٍۢஎந்த ஒரு மேன்மையையும்بَلْ نَظُنُّكُمْமாறாக/கருதுகிறோம்/உங்களைكٰذِبِيْنَ‏பொய்யர்களாக
Fபகாலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ ம னராக இல்லா Bபஷரம் மித்லனா வமா னராகத் தBப'அக இல்லல் லதீன ஹும் அராதிலுனா Bபாதியர் ராயி வமா னரா லகும் 'அலய்னா மின் Fபள்லின் Bபல் னளுன்னுகும் காதிBபீன்
முஹம்மது ஜான்
அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), “நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை - மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘நாம் உம்மை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே தவிர (கண்ணியமானவர்கள்) உம்மைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் ஒரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. நீங்கள் (அனைவரும்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
(அவருடைய அறிவுரையை) ஏற்க மறுத்த அவருடைய சமுதாயத் தலைவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய பார்வையில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறல்லர்...! மேலும், எங்களிடையே யார் மிகவும் இழிவானவர்களோ அவர்கள் மட்டுமே சிந்திக்காமல் உம்மைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். ஆக, எங்களைவிட எவ்விதச் சிறப்பும் உமக்கு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையில் உங்களைப் பொய்யர்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தோரின் பிரதானிகள் (நூஹிடம்) உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே தவிர (வேறு விதமாக) நாங்கள் காணவில்லை, இன்னும் எங்களில் ஆழ்ந்து சிந்திக்காத இழிவானவர்களே தவிர (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாக நாங்கள் காணவில்லை, உங்களுக்கு எங்களை விட எந்தச்சிறப்பும் இருப்பதாக நாங்கள் காணவில்லை, மாறாக உங்களைப் பொய்யர்களெனவே நாங்கள் எண்ணுகின்றோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
So the eminent among those who disbelieved from his people said, "We do not see you but as a man like ourselves, and we do not see you followed except by those who are the lowest of us [and] at first suggestion. And we do not see in you over us any merit; rather, we think you are liars."
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّیَتْ عَلَیْكُمْ ؕ اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْتُمْ لَهَا كٰرِهُوْنَ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاَرَءَيْتُمْநீங்கள் கவனித்தீர்களா?اِنْ كُنْتُநான் இருந்துعَلٰىமீதுبَيِّنَةٍஒரு தெளிவான அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّىْஎன் இறைவன்وَاٰتٰٮنِىْஇன்னும் அளித்தான் எனக்குرَحْمَةًஅருளைمِّنْதன்னிடம்عِنْدِهٖஇருந்துفَعُمِّيَتْஅவை மறைக்கப்பட்டனعَلَيْكُمْؕஉங்களுக்குاَنُلْزِمُكُمُوْهَاநாம் நிர்ப்பந்திப்போமா?/உங்களை/அவற்றைوَاَنْـتُمْநீங்களும்لَـهَاஅவற்றைكٰرِهُوْنَ‏வெறுப்பவர்களாக
கால யா கவ்மி அர'அய்தும் இன் குன்து 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ ஆதானீ ரஹ்மதம் மின் 'இன்திஹீ Fப'உம் மியத் 'அலய்கும் அனுல்Zஜிமுகு மூஹா வ அன்தும் லஹா காரிஹூன்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர் (மக்களை நோக்கி) “என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு) அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: ‘‘என் மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனுடைய அத்தாட்சியின் மீது நான் நிலையாக இருந்தும் அவன் தன் அருளையும் (நபித்துவத்தையும்) எனக்கு அளித்திருந்தும், அது உங்கள் கண்களுக்குப் புலப்படாமல் அதை நீங்கள் வெறுத்து விட்டால், அதைப் பின்பற்றும்படி நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா?
IFT
அதற்கு நூஹ் கூறினார்: “என் சமுதாயத்தினரே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றுள்ளேன்; மேலும், அவன் தனது தனிப்பட்ட அருளையும் எனக்கு வழங்கியிருக்கின்றான். ஆனால் அது உங்கள் பார்வைக்குப் புலப்படுவதில்லை; நீங்கள் அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை எனில், நாம் அதனை வலிந்து உங்கள் மீது திணிக்க முடியுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? என் இரட்சகனுடைய ஆதாரத்தின் மீது நான் இருந்து, அவன் தன் புறத்திலிருந்து அருளை எனக்குக் கொடுத்திருந்தும் (அது உங்கள் கண்களுக்குப் புலப்படாமல்) உங்களுக்கு மறைக்கப்பட்டு விடுமானால், அதனை நீங்கள் வெறுத்தவர்களாக இருக்க, அதனைப் பின்பற்றும்படி நாம் உங்களை நிர்ப்பந்திப்போமா?
Saheeh International
He said, "O my people, have you considered: if I should be upon clear evidence from my Lord while He has given me mercy from Himself but it has been made unapparent to you, should we force it upon you while you are averse to it?
وَیٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مَالًا ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ وَمَاۤ اَنَا بِطَارِدِ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேلَاۤநான் கேட்கவில்லைاَسْــٴَــلُكُمْஉங்களிடம்عَلَيْهِஇதன் மீதுمَالًاஒரு செல்வத்தைؕاِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلَى اللّٰهِ‌அல்லாஹ் மீதுوَمَاۤஇல்லைاَنَاநான்بِطَارِدِவிரட்டுபவனாகالَّذِيْنَஎவர்களைاٰمَنُوْا‌ ؕநம்பிக்கை கொண்டார்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مُّلٰقُوْاசந்திப்பவர்கள்رَبِّهِمْதங்கள் இறைவனைوَلٰـكِنِّىْۤஎன்றாலும் நிச்சயமாக நான்اَرٰٮكُمْகாண்கிறேன்/ உங்களைقَوْمًاமக்களாகتَجْهَلُوْنَ‏நீங்கள் அறிய மாட்டீர்கள்
வ யா கவ்மி லா அஸ்'அலுகும் 'அலய்ஹி மாலன் இன் அஜ்ரிய இல்லா 'அலல் லாஹ்; வ மா அன Bபிதாரிதில் லதீன ஆமனூ; இன்னஹும் முலாகூ ரBப்Bபிஹிம் வ லாகின்னீ அராகும் கவ்மன் தஜ்ஹலூன்
முஹம்மது ஜான்
“அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே ஈமான் கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன்,
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் மக்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக நான் உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன்.
IFT
மேலும், என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பொருளும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. மேலும், எவர்கள் (எனது பேச்சை) ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நான் விரட்டுபவன் அல்லன். திண்ணமாக, அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திக்க இருக்கின்றார்கள்; ஆனால் நான் உங்களை அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் சமுதாயத்தினராய்ப் பார்க்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், “என்னுடைய சமூகத்தாரே! இதற்காக நான் உங்களிடம் எப்பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை, என்னுடைய கூலி அல்லாஹ்விடமே தவிர உங்களிடம் இல்லை, விசுவாசங்கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை, நிச்சயமாக அவர்கள் தங்கள் இரட்சகனை(க் கண்ணியத்ததுடன்) சந்திக்கிறவர்களாவர், எனினும் நிச்சயமாக உங்களை அறியாதவர்களான சமூகத்தவராகவே நான் காண்கின்றேன்.
Saheeh International
And O my people, I ask not of you for it any wealth. My reward is not but from Allah. And I am not one to drive away those who have believed. Indeed, they will meet their Lord, but I see that you are a people behaving ignorantly.
وَیٰقَوْمِ مَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேمَنْயார்?يَّـنْصُرُنِىْஉதவுவார்/எனக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடத்தில்اِنْ طَرَدْتُّهُمْ‌ؕநான் அவர்களை விரட்டினால்اَفَلَا تَذَكَّرُوْنَ‏நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
வ யா கவ்மி மய் யன்ஸுருனீ மினல் லாஹி இன் தரத்துஹும்; அFபலா ததக் கரூன்
முஹம்மது ஜான்
“என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால்; அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார்? (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
என் மக்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அச்சமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? இவ்வளவு கூட நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா?
IFT
மேலும், என் சமுதாயத்தினரே! நான் இவர்களை விரட்டிவிட்டால், அல்லாஹ்வின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? இதைக்கூட நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “என்னுடைய சமூகத்தாரே! (நிச்சயமாக விசுவாசங்கொண்டோரான அவர்களை நான் விரட்டிவிட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எனக்கு உதவி செய்கிறவர் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
Saheeh International
And O my people, who would protect me from Allah if I drove them away? Then will you not be reminded?
وَلَاۤ اَقُوْلُ لَكُمْ عِنْدِیْ خَزَآىِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَیْبَ وَلَاۤ اَقُوْلُ اِنِّیْ مَلَكٌ وَّلَاۤ اَقُوْلُ لِلَّذِیْنَ تَزْدَرِیْۤ اَعْیُنُكُمْ لَنْ یُّؤْتِیَهُمُ اللّٰهُ خَیْرًا ؕ اَللّٰهُ اَعْلَمُ بِمَا فِیْۤ اَنْفُسِهِمْ ۖۚ اِنِّیْۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟
وَلَاۤ اَقُوْلُநான் கூறமாட்டேன்لَـكُمْஉங்களுக்குعِنْدِىْஎன்னிடம்خَزَآٮِٕنُபொக்கிஷங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்وَلَاۤ اَعْلَمُஇன்னும் அறியமாட்டேன்الْغَيْبَமறைவைوَلَاۤ اَقُوْلُஇன்னும் கூறமாட்டேன்اِنِّىْநிச்சயமாக நான்مَلَكٌஒரு வானவர்وَّلَاۤ اَقُوْلُஇன்னும் கூறமாட்டேன்لِلَّذِيْنَஎங்களுக்குتَزْدَرِىْۤஇழிவாகக் காண்கிறதுاَعْيُنُكُمْகண்கள்/உங்கள்لَنْஅறவே கொடுக்கவே மாட்டான்يُّؤْتِيَهُمُஅவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்خَيْرًا‌ ؕஒரு நன்மைاَللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைفِىْۤஉள்ளங்களில்اَنْفُسِهِمْஅவர்கள்اِنِّىْۤநிச்சயமாக நான்اِذًاஅப்போதுلَّمِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்தான்
வ லா அகூலு லகும் 'இன்தீ கZஜா'இனுல் லாஹி வ லா அஃலமுல் கய்Bப வலா அகூலு இன்னீ மலகு(ன்)வ் வ லா அகூலு லில்லதீன தZஜ்தரீ அஃயுனுகும் லய் யு'தியஹுமுல் லாஹு கய்ரன் அல்லாஹு அஃலமு Bபிமா Fபீ அன்Fபுஸிஹிம் இன்னீ இதல் லமினள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் (அனைத்தும்) என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை; நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன்; நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை. எவர்களை உங்கள் கண்கள் இழிவாகக் காண்கின்றனவோ அவர்களுக்கு அல்லாஹ் ஒரு நன்மையும் அளிக்க மாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்கள் உள்ளத்தில் உள்ள (நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றை உங்களைவிட) அல்லாஹ்தான் மிகவும் அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்'' (என்றும் கூறினார்.)
IFT
மேலும், அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், நான் மறைவானவற்றை அறிபவன் என்றும் உங்களிடம் கூறவில்லை. நான் ஒரு வானவர் என்றும் வாதிடவில்லை. மேலும், எவர்களை உங்கள் கண்கள் இழிந்தவர்களாய்க் காண்கின்றனவோ அவர்களைக் குறித்து ‘அல்லாஹ் எந்த நன்மையையும் அவர்களுக்கு அளிக்கவில்லை’ என்றும் நான் கூற மாட்டேன். அவர்களின் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ்தான் நன்கறிகின்றான். (இதற்கு மாறாக நான் கூறினால்) திண்ணமாக நான் அக்கிரமக்காரனாகி விடுவேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றனவென்று நான் உங்களிடம் கூறவுமாட்டேன், நான் மறைவானவற்றை அறியவுமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்று கூறவுமாட்டேன், மேலும், உங்களுடைய கண்கள் இழிவாகக் காண்கின்றனவே அத்தகையவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையையும் அளிக்கவே மாட்டான் என்று நான் கூறவுமாட்டேன், அவர்களின் மனங்களிலுள்ளதை (உங்களைவிட) அல்லாஹ்(தான்) மிக அறிந்தவன், (இதற்கு மாறாக நான் எதையும் கூறினால்) நிச்சயமாக நான் அச்சமயமே அநியாயக்காரர்களில் உள்ளவன் (ஆகி விடுவேன்” என்றும் கூறினார்)
Saheeh International
And I do not tell you that I have the depositories [containing the provision] of Allah or that I know the unseen, nor do I tell you that I am an angel, nor do I say of those upon whom your eyes look down that Allah will never grant them any good. Allah is most knowing of what is within their souls. Indeed, I would then be among the wrongdoers [i.e., the unjust]."
قَالُوْا یٰنُوْحُ قَدْ جٰدَلْتَنَا فَاَكْثَرْتَ جِدَالَنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்يٰـنُوْحُநூஹே!قَدْநீர் தர்க்கித்து விட்டீர்جَادَلْتَـنَاஎங்களுடன்فَاَكْثَرْتَஅதிகப்படுத்தினீர்جِدَالَـنَاதர்க்கத்தை/ எங்களுடன்فَاْتِنَاஆகவே வருவீராக/எங்களிடம்بِمَا تَعِدُنَاۤஎதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்குاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏ ‏உண்மையாளர்களில்
காலூ யா னூஹு கத் ஜாதல்தனா Fப அக்தர்த ஜிதாலனா Fபாதினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கித்தீர்; (அதுவும்) அதிகமாகவே தர்க்கித்து விட்டீர். (ஆகவே, இனி தர்க்கத்தை விட்டொழித்து, வேதனை வரும் என்று கூறுவதில்) நீர் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீர் அச்சுறுத்தும் அதை நம்மிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.
IFT
இறுதியில் அவர்கள் “நூஹே! நீர் எங்களிடம் தர்க்கம் புரிந்துவிட்டீர்! அதுவும் அளவுக்கதிகமாக தர்க்கம் செய்துவிட்டீர்! நீர் உண்மையாளராயின் எந்த வேதனையைப் பற்றி எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கித்து விட்டீர், பின்னும், எங்களுடன் தர்க்கிப்பதை அதிகமாக்கி விட்டீர், ஆகவே, நீர் உண்மையாளர்களில் (உள்ளவராக) இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களித்ததை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "O Noah, you have disputed [i.e., opposed] us and been frequent in dispute of us. So bring us what you threaten us, if you should be of the truthful."
قَالَ اِنَّمَا یَاْتِیْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَآءَ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟
قَالَகூறினார்اِنَّمَاஎல்லாம்يَاْتِيْكُمْஅதைக் கொண்டு வருவான்بِهِஉங்களிடம்اللّٰهُஅல்லாஹ்தான்اِنْ شَآءَஅவன் நாடினால்وَمَاۤ اَنْتُمْநீங்கள் இல்லைبِمُعْجِزِيْنَ‏பலவீனப்படுத்துபவர்களாக
கால இன்னமா யாதீகும் Bபிஹில் லாஹு இன் ஷா'அ வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர், “நிச்சயமாக அல்லாஹ் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக்கூடியவர்களும் அல்லர்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவர் ‘‘(வேதனையை கொண்டு வருபவன் நான் அல்லன்;) அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதிசீக்கிரத்தில்) அதை உங்களுக்கு நிச்சயமாகக் கொண்டு வருவான். அதைத் தடுத்துவிட உங்களால் முடியாது'' என்று கூறினார்.
IFT
அதற்கு மறுமொழியாக நூஹ் கூறினார்: “அல்லாஹ் நாடினால் அவனே அதனை உங்களிடம் கொண்டு வருவான். (அது வந்துவிட்டால்) அதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு நீங்கள் வலிமையுடையவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “அ(வ்வேதனையான)தை உங்களிடம் கொண்டு வருபவன் அல்லாஹ்தான், (அதுவும்) அவன் நாடினால், (அதனைக் கொண்டு வந்து விடுவான்.) அவனை நீங்கள் இயலாமலாக்கிவிடுகிறவர்களும் அல்லர்” என்று கூறினார்.
Saheeh International
He said, "Allah will only bring it to you if He wills, and you will not cause [Him] failure.
وَلَا یَنْفَعُكُمْ نُصْحِیْۤ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ یُرِیْدُ اَنْ یُّغْوِیَكُمْ ؕ هُوَ رَبُّكُمْ ۫ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟ؕ
وَلَا يَنْفَعُكُمْஉங்களுக்கு பலனலிக்காதுنُصْحِىْۤஎன் நல்லுபதேசம்اِنْ اَرَدْتُّநான் நாடினால்اَنْ اَنْصَحَநான் நல்லுபதேசம்புரியلَكُمْஉங்களுக்குاِنْ كَانَ اللّٰهُஇருந்தால்/அல்லாஹ்يُرِيْدُநாடுகிறான்اَنْ يُّغْوِيَكُمْ‌ؕஉங்களை அவன் வழிகெடுக்கهُوَஅவன்رَبُّكُمْஉங்கள் இறைவன்وَاِلَيْهِஅவனிடமேتُرْجَعُوْنَؕ‏நீங்கள் திருப்பப்படுவீர்கள்
வ லா யன்Fப'உகும் னுஸ்ஹீ இன் அரத்து அன் அன்ஸஹ லகும் இன் கானல் லாஹு யுரீது அய் யுக்வி யகும்; ஹுவ ரBப்Bபுகும் வ இலய்ஹி துர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
“நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என் நல்லுபதேசம் உங்களுக்கு ஒரு பயனுமளிக்காது. அவன்தான் உங்கள் இறைவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' (என்றும் கூறினார்).
IFT
உங்களை வழிகேட்டிலாழ்த்திட வேண்டுமென்று அல்லாஹ் நாடியிருந்தால், உங்களின் நன்மைக்காக நான் எது கூறினாலும் அது உங்களுக்கு எவ்விதப் பலனையும் அளித்திடாது. அவன்தான் உங்கள் இறைவன்; அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்ய நாடினாலும், அல்லாஹ் உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டுமென்று அவன் நாடியிருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனையும் அளிக்காது, அவன்தான் உங்களுடைய இரட்சகன், (மறுமையில்) அவன் பக்கமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்.)
Saheeh International
And my advice will not benefit you - although I wished to advise you - if Allah should intend to put you in error. He is your Lord, and to Him you will be returned."
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَعَلَیَّ اِجْرَامِیْ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تُجْرِمُوْنَ ۟۠
اَمْஅல்லதுيَقُوْلُوْنَகூறுகிறார்கள்افْتَـرٰٮهُ‌அவர் புனைந்தார்قُلْகூறுவீராகاِنِநான் புனைந்திருந்தால்افْتَرَيْتُهٗஅதைفَعَلَىَّஎன் மீதேاِجْرَامِىْஎன் குற்றம்وَاَنَاஇன்னும் நான்بَرِىْٓءٌவிலகியவன்مِّمَّا تُجْرِمُوْنَ‏விட்டு/எவை/நீங்கள் குற்றம் புரிகிறீர்கள்
அம் யகூலூனFப் தராஹு குல் இனிFப் தரய்துஹூ Fப'அலய்ய இஜ்ராமீ வ அன Bபரீ'உம் மிம்மா துஜ்ரிமூன்
முஹம்மது ஜான்
(நபியே! நீர் இதைக் கூறும் போது:) “இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்” என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: “நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) ‘‘நீர் இதைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்'' என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீர் கூறுவீராக: ‘‘நான் அதைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல.
IFT
“இதனை இவரே சுயமாகப் புனைந்துள்ளார்” என்று (நபியே) இவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறும்: “நானே இதனைச் சுயமாகப் புனைந்திருந்தால் அந்தக் குற்றத்திற்கு நானே பொறுப்பாளி ஆவேன். ஆனால் நீங்கள் செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளி அல்லன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது “அவர் இதனைக் கற்பனை செய்துவிட்டார்” என்று அவர்கள் கூறுகின்றனரா? “நான் அதனைக் கற்பனை செய்திருந்தால், குற்றம் என் மீதே சாரும், நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவனாவேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Or do they say [about Prophet Muhammad (ﷺ], "He invented it"? Say, "If I have invented it, then upon me is [the consequence of] my crime; but I am innocent of what [crimes] you commit."
وَاُوْحِیَ اِلٰی نُوْحٍ اَنَّهٗ لَنْ یُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟ۚۖ
وَاُوْحِىَஇன்னும் வஹீ அறிவிக்கப்பட்டதுاِلٰى نُوْحٍநூஹுக்குاَنَّهٗநிச்சயமாக செய்திلَنْ يُّؤْمِنَஅறவே நம்பிக்கை கொள்ள மாட்டார்مِنْ قَوْمِكَஉமது மக்களில்اِلَّاதவிரمَنْ قَدْ اٰمَنَஎவர்/நம்பிக்கை கொண்டு விட்டார்فَلَا تَبْتَٮِٕسْஆகவே நீர் கவலைப்படாதீர்بِمَاகாரணமாக/எவைكَانُوْاஇருந்தனர்يَفْعَلُوْنَ‌ ۖ ۚ‏அவர்கள் செய்வார்கள்
வ ஊஹிய இலா னூஹின் அன்னஹூ ல(ன்)ய்-யு'மின மின் கவ்மிக இல்லா மன் கத் ஆமன Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யFப்'அலூன்
முஹம்மது ஜான்
மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபி) நூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: ‘‘முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, இனி உமது மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால், அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.
IFT
மேலும், நூஹுக்கு இவ்வாறு வஹி அனுப்பப்பட்டது: “உம்முடைய சமுதாயத்தினரில் எவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர இனி வேறெவரும் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே, அவர்களின் தவறான செயல்களுக்காக நீர் துயரப்பட வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக அது (முன்னர்) விசுவாசம் கொண்டவர்களைத் தவிர (இனி) உம்முடைய சமூகத்தாரில் ஒருவரும் நிச்சயமாக விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள், ஆதலால் அவர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி நீர் கவலைப்படாதீர், என்று (நபி நூஹ்வுக்கு) வஹீ அறிவிக்கப்பட்டது.
Saheeh International
And it was revealed to Noah that, "No one will believe from your people except those who have already believed, so do not be distressed by what they have been doing.
وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْیُنِنَا وَوَحْیِنَا وَلَا تُخَاطِبْنِیْ فِی الَّذِیْنَ ظَلَمُوْا ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ ۟
وَاصْنَعِஇன்னும் செய்வீராகالْفُلْكَகப்பலைبِاَعْيُنِنَاநம் கண்கள் முன்பாகوَوَحْيِنَاஇன்னும் நம்அறிவிப்புப்படிوَلَا تُخَاطِبْنِىْஎன்னிடம் பேசாதீர்فِى الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْا‌ ۚஅநியாயம் செய்தார்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مُّغْرَقُوْنَ‏மூழ்கடிக்கப்படுபவர்கள்
வஸ்ன'இல் Fபுல்க Bபி-அஃயுனினா வ வஹ்யினா வலா துகா திBப்னீ Fபில் லதீன ளலமூ; இன்னஹும் முக்ரகூன்
முஹம்மது ஜான்
“நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
நாம் அறிவிக்குமாறு நம் கண் முன்பாகவே ஒரு கப்பலை நீர் செய்வீராக. அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீர் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ள பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்'' (என்றும் அறிவிக்கப்பட்டது.)
IFT
மேலும், நமது கண்காணிப்பில் நம் கட்டளைக்கேற்ப ஒரு கப்பலைக் கட்டத் தொடங்குவீராக! மேலும், அநீதி இழைத்தவர்களுக்காக என்னிடம் பரிந்துரை செய்யாதீர்! அவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்படுபவர்களேயாவர்”.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் “நம்முடைய கண்கள் முன்பாகவே, நம்முடைய அறிவிப்பின் படி ஒரு கப்பலை நீர் செய்யும், அக்கிரமம் செய்தவர்களைப் பற்றி (இனி நீர் என்னுடன் பரிந்து) பேசாதீர், நிச்சயமாக அவர்கள் (பெரு வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்படுகிறவர்கள்” (என்றும் அறிவிக்கப்பட்டது).
Saheeh International
And construct the ship under Our observation and Our inspiration and do not address Me concerning those who have wronged; indeed, they are [to be] drowned."
وَیَصْنَعُ الْفُلْكَ ۫ وَكُلَّمَا مَرَّ عَلَیْهِ مَلَاٌ مِّنْ قَوْمِهٖ سَخِرُوْا مِنْهُ ؕ قَالَ اِنْ تَسْخَرُوْا مِنَّا فَاِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُوْنَ ۟ؕ
وَيَصْنَعُஅவர் செய்கிறார்الْفُلْكَகப்பலைوَكُلَّمَا مَرَّகடந்தபோதெல்லாம்عَلَيْهِஅவருக்கு அருகில்مَلَاٌமுக்கிய பிரமுகர்கள்مِّنْஇருந்துقَوْمِهٖஅவருடைய மக்கள்سَخِرُوْاபரிகசித்தனர்مِنْهُ‌ؕஅவரைقَالَகூறினார்اِنْ تَسْخَرُوْاநீங்கள் பரிகசித்தால்مِنَّاஎங்களைفَاِنَّاநிச்சயமாக நாங்கள்نَسْخَرُபரிகசிப்போம்مِنْكُمْஉங்களைكَمَا تَسْخَرُوْنَؕ‏நீங்கள் பரிகசிப்பது போன்று
வ யஸ்ன'உல் Fபுல்க வ குல்லமா மர்ர 'அலய்ஹி மல'உம் மின் கவ்மிஹீ ஸகிரூ மின்ஹ்; கால இன் தஸ்கரூ மின்னா Fப இன்னா னஸ்கரு மின்கும் கமா தஸ்கரூன்
முஹம்மது ஜான்
அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், அதன் சமீபமாகச் சென்ற அவருடைய மக்களின் தலைவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் ‘‘நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசிக்கும் இவ்வாறே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்'' என்று கூறினார்.
IFT
நூஹ் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய சமுதாயத் தலைவர்களில் எவரேனும் அவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அவரை ஏளனம் செய்தனர். அதற்கு அவர் கூறினார்: “நீங்கள் எங்களைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கின்றீர்கள் எனில், நீங்கள் சிரிப்பது போன்று நாங்களும் உங்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்தார், (அப்போது) அவருடைய சமூகத்தாரின் பிராதானிகள் அதன் சமீபமாகச் சென்ற போதெல்லாம் அவரைப் பரிகசித்தனர், அதற்கவர்., “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால் (இப்போது எங்களை) நீங்கள் பரிகசிப்பதுபோல் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.
Saheeh International
And he constructed the ship, and whenever an assembly of the eminent of his people passed by him, they ridiculed him. He said, "If you ridicule us, then we will ridicule you just as you ridicule.
فَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَیَحِلُّ عَلَیْهِ عَذَابٌ مُّقِیْمٌ ۟
فَسَوْفَ تَعْلَمُوْنَۙநீங்கள் அறிவீர்கள்مَنْஎவர்يَّاْتِيْهِஅவருக்கு வரும்عَذَابٌஒரு வேதனைيُّخْزِيْهِஇழிவுபடுத்தும்/அவரைوَيَحِلُّஇன்னும் இறங்கும்عَلَيْهِஅவர் மீதுعَذَابٌஒரு வேதனைمُّقِيْمٌ‏நிலையானது
Fபஸவ்Fப தஃலமூன மய் ய'தீஹி 'அதாBபு(ன்)ய் யுக்Zஜீஹி வ யஹில்லு 'அலய்ஹி 'அதாBபுன் முகீம்
முஹம்மது ஜான்
“அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது, நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது என்பதையும் அதி சீக்கிரத்தில் நீங்கள் (சந்தேகமற) தெரிந்து கொள்வீர்கள்'' (என்று கூறினார்.)
IFT
இழிவுபடுத்தக்கூடிய வேதனைக்கு யார் ஆளாகப் போகின்றார் என்பதையும், தடுத்து நிறுத்த முடியாத வேதனை யார் மீது இறங்கப் போகின்றது என்பதையும் வெகு விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
”யாருக்கு-அவரை இழிவுபடுத்தும் வேதனை வருமென்பதையும் எவர்மீது நிலையான வேதனை இறங்குமென்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்.)
Saheeh International
And you are going to know who will get a punishment that will disgrace him [on earth] and upon whom will descend an enduring punishment [in the Hereafter]."
حَتّٰۤی اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُ ۙ قُلْنَا احْمِلْ فِیْهَا مِنْ كُلٍّ زَوْجَیْنِ اثْنَیْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَیْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ ؕ وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِیْلٌ ۟
حَتّٰۤىஇறுதியாகاِذَاபோதுجَآءَவந்ததுاَمْرُنَاநம் கட்டளைوَفَارَஇன்னும் பொங்கியதுالتَّنُّوْرُۙஅடுப்புقُلْنَاகூறினோம்احْمِلْஏற்றுவீராகفِيْهَاஅதில்مِنْஇருந்துكُلٍّஎல்லாம்زَوْجَيْنِஇரு ஜோடியைاثْنَيْنِஇரண்டுوَاَهْلَكَஇன்னும் உமது குடும்பத்தைاِلَّاதவிரمَنْஎவர்سَبَقَமுந்தி விட்டதுعَلَيْهِஅவர் மீதுالْقَوْلُவாக்குوَمَنْஇன்னும் எவர்اٰمَنَ‌ؕநம்பிக்கை கொண்டார்وَمَاۤ اٰمَنَநம்பிக்கை கொள்ளவில்லைمَعَهٗۤஅவருடன்اِلَّاதவிரقَلِيْلٌ‏குறைவானவர்கள்
ஹத்தா இதா ஜா'அ அம்ருனா வ Fபாரத் தன்னூரு குல்னஹ் மில் Fபீஹா மின் குல்லின் Zஜவ்ஜய்னித் னய்னி வ அஹ்லக இல்லா மன் ஸBபக 'அலய்ஹில் கவ்லு வ மன் ஆமன்; வ மா ஆமன ம'அஹூ இல்லா கலீல்
முஹம்மது ஜான்
இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி ‘‘ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக் கொள்வீராக. (அழிந்துவிடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்கள் மகன் ஆகிய)வர்களைத் தவிர, உமது குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர்களையும் அதில் ஏற்றிக்கொள்வீராக'' என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை.
IFT
இறுதியில் நம்முடைய கட்டளை வந்துவிட்டது; மேலும் அந்த உலை அடுப்பு பொங்கியது. அப்போது நாம் கூறினோம்: “எல்லா வகையான பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியை இக்கப்பலில் ஏற்றிக்கொள்வீராக! உம்முடைய குடும்பத்தினரையும் யாரைக் குறித்து முன்னரே கூறப்பட்டு விட்டதோ அவர்களைத் தவிர அதில் ஏற்றிக் கொள்வீராக! மேலும், யார்யாரெல்லாம் இறைநம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்களையும் (ஏற்றிக் கொள்வீராக!)” மேலும், நூஹுடன் இறைநம்பிக்கை கொண்டிருந்தவர்கள் குறைவாகவே இருந்தார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இறுதியாக நம்முடைய கட்டளை வந்து அடுப்பும் பொங்கியபோது (நூஹே) ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண், பெண் ஆகிய) இரண்டு கொண்ட ஜோடியை அதில் நீர் ஏற்றிக் கொள்வீராக! (அழிந்து விடுவார் என) எவரின் மீது நம் வாக்கு முந்தி விட்டதோ, அவரைத்தவிர உம்முடைய குடும்பத்தவரையும் (மற்ற) விசுவாசிகளையும் அதில் ஏற்றிக் கொள்வீராக” என்று நாம் கூறினோம், வெகு சொற்பமானவர்களைத் தவிர (மற்றவர்) அவருடன் விசுவாசம் கொள்ளவில்லை.
Saheeh International
[So it was], until when Our command came and the oven overflowed, We said, "Load upon it [i.e., the ship] of each [creature] two mates and your family, except those about whom the word [i.e., decree] has preceded, and [include] whoever has believed." But none had believed with him, except a few.
وَقَالَ ارْكَبُوْا فِیْهَا بِسْمِ اللّٰهِ مَؔجْرٖىهَا وَمُرْسٰىهَا ؕ اِنَّ رَبِّیْ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَقَالَகூறினார்ارْكَبُوْاபயணியுங்கள்فِيْهَاஇதில்بِسْمِபெயர் கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்مَجْرٖؔٮھَاஅது ஓடும் போதுوَمُرْسٰٮهَا ؕநிறுத்தப்படும் போதுاِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்لَـغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ ‏பெரும் கருணையாளன்
வ காலர் கBபூ Fபீஹா Bபிஸ்மில் லாஹி மஜ்ரய்ஹா வ முர்ஸாஹா; இன்ன ரBப்Bபீ ல கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் (தன்னைச் சார்ந்தவர்களை நோக்கி,) ‘‘இதைச் செலுத்தவும் நிறுத்தவும் ஆற்றலுடையவனாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி இதில் நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள். நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்'' என்று கூறினார்.
IFT
மேலும், நூஹ் கூறினார்: “இதில் ஏறிக் கொள்ளுங்கள்! இது செல்வதும் நிலை கொள்வதும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டே ஆகும். திண்ணமாக, என் அதிபதி பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “இ(க்கப்பலான)து செல்வதும் இது நிற்பதும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டாகும், (எனக்கூறி) இதில் ஏறுங்கள், நிச்சயமாக என் இரட்சகன் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்” என்றும் கூறினார்.
Saheeh International
And [Noah] said, "Embark therein; in the name of Allah [are] its course and its anchorage. Indeed, my Lord is Forgiving and Merciful."
وَهِیَ تَجْرِیْ بِهِمْ فِیْ مَوْجٍ كَالْجِبَالِ ۫ وَنَادٰی نُوْحُ بْنَهٗ وَكَانَ فِیْ مَعْزِلٍ یّٰبُنَیَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِیْنَ ۟
وَهِىَஅது (கப்பல்)تَجْرِىْசெல்கிறதுبِهِمْஅவர்களைக்கொண்டுفِىْ مَوْجٍஅலையில்كَالْجِبَالِமலைகளைப் போன்றுوَنَادٰىஇன்னும் சப்தமிட்டு அழைத்தார்نُوْحُநூஹ்اۨبْنَهٗதன் மகனைوَكَانَஇருந்தான்فِىْ مَعْزِلٍஒரு விலகுமிடத்தில்يّٰبُنَىَّஎன் மகனே!ارْكَبْபயணிمَّعَنَاஎங்களுடன்وَلَا تَكُنْஆகிவிடாதேمَّعَஉடன்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
வ ஹிய தஜ்ரீ Bபிஹிம் Fபீ மவ்ஜின் கல்ஜிBபாலி வ னாதா னூஹுனிBப் னஹூ வ கான Fபீ மஃZஜிலி(ன்)ய் யா Bபுனய் யர்கம் ம'அனா வலா தகும் ம'அல் காFபிரீன்
முஹம்மது ஜான்
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னை விட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி ‘‘என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)'' என்று (சப்தமிட்டு) அழைத்தார்.
IFT
அக்கப்பல் அவர்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தது. அலைகள் ஒவ்வொன்றும் மலைபோல் உயர்ந்து கொண்டிருந்தது. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்துக் கூறினார்: “என் அன்பு மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(க்கப்பலான)து மலைகளைப் போன்ற அலைகளில் அவர்களைக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது, நூஹ் தன் மகனை அழைத்தார், அவனோ ஒதுங்கிய இடத்திலிருந்தான், “என் மகனே! எங்களுடன் (விசுவாசித்து) நீயும் (இதில்) ஏறிக்கொள், (விசுவாசிக்காது) நிராகரிப்பவர்களுடன் நீ ஆகிவிடவும் வேண்டாம்” (என்று கூறினார்)
Saheeh International
And it sailed with them through waves like mountains, and Noah called to his son who was apart [from them], "O my son, come aboard with us and be not with the disbelievers."
قَالَ سَاٰوِیْۤ اِلٰی جَبَلٍ یَّعْصِمُنِیْ مِنَ الْمَآءِ ؕ قَالَ لَا عَاصِمَ الْیَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ ۚ وَحَالَ بَیْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِیْنَ ۟
قَالَகூறினான்سَاٰوِىْۤஒதுங்குவேன்اِلٰىமேல்جَبَلٍஒரு மலைيَّعْصِمُنِىْகாக்கும்/என்னைمِنَஇருந்துالْمَآءِ‌ؕநீர்قَالَகூறினார்لَاஅறவே இல்லைعَاصِمَபாதுகாப்பவர்الْيَوْمَஇன்றுمِنْஇருந்துاَمْرِகட்டளைاللّٰهِஅல்லாஹ்வின்اِلَّاதவிரمَنْஎவர்رَّحِمَ‌ۚகருணை காட்டினான்وَحَالَஇன்னும் தடையானதுبَيْنَهُمَاஅவ்விருவருக்கும் இடையில்الْمَوْجُஅலைفَكَانَஆகவே ஆகினான்مِنَ الْمُغْرَقِيْنَ‏மூழ்கடிக்கப்பட்டவர்களில்
கால ஸ ஆவீ இலா ஜBபலி(ன்)ய் யஃஸிமுனீ மினல் மா'; கால லா 'ஆஸிமல் யவ்ம மின் அம்ரில் லாஹி இல்லா மர் ரஹிம்; வ ஹால Bபய்னஹுமல் மவ்ஜு Fபகான மினல் முக்ரகீன்
முஹம்மது ஜான்
அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக்கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்'' என்று கூறினான். அதற்கவர் ‘‘அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது'' என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கிவிட்டான்.
IFT
அதற்கு அவன் பதிலளித்தான்: “நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக்கொள்கின்றேன்; அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்.” அதற்கு அவர் கூறினார்: “இன்று அல்லாஹ்வின் தீர்ப்பிலிருந்து காப்பாற்றக் கூடியது எதுவும் இல்லை; ஆனால், அல்லாஹ் யாருக்குக் கருணை புரிந்தானோ அவர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள்.” இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டுவிட்டது. மேலும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்து விட்டான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “தண்ணீரில் மூழ்குவதிலிருந்து என்னைப் பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின்பால் நான் ஒதுங்கிக் கொள்வேன்” என்று கூறினான், அ(தற்க)வர் இன்றைய தினம் அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து யாருக்கு அவன் அருள் புரிந்திருக்கின்றானோ அவரைத்தவிர காப்பாற்றுகிறவர் எவருமில்லை” என்று கூறினார், (அச்சமயம்) அவ்விருவருக்கிடையிலும் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது, அப்போது மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் ஆகிவிட்டான்.
Saheeh International
[But] he said, "I will take refuge on a mountain to protect me from the water." [Noah] said, "There is no protector today from the decree of Allah, except for whom He gives mercy." And the waves came between them, and he was among the drowned.
وَقِیْلَ یٰۤاَرْضُ ابْلَعِیْ مَآءَكِ وَیٰسَمَآءُ اَقْلِعِیْ وَغِیْضَ الْمَآءُ وَقُضِیَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَی الْجُوْدِیِّ وَقِیْلَ بُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟
وَقِيْلَகூறப்பட்டதுيٰۤاَرْضُபூமியேابْلَعِىْவிழுங்குمَآءَكِதண்ணீரை/உன்وَيٰسَمَآءُஇன்னும் வானமேاَقْلِعِىْநிறுத்துوَغِيْضَஇன்னும் வற்றியதுالْمَآءُதண்ணீர்وَقُضِىَஇன்னும் முடிக்கப்பட்டதுالْاَمْرُகாரியம்وَاسْتَوَتْஇன்னும் தங்கியதுعَلَى الْجُوْدِىِّ‌ஜூதி மலையில்وَقِيْلَஇன்னும் கூறப்பட்டதுبُعْدًاஅழிவுதான்لِّـلْقَوْمِமக்களுக்குالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
வ கீல யா அர்ளுBப்ல'ஈ மா'அகி வ யா ஸமா'உ அக்லி'ஈ வ கீளல் மா'உ வ குளியல் அம்ரு வஸ்தவத் 'அலல் ஜூதிய்யி வ கீல Bபுஃதல் லில்கவ்மிள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் ‘‘பூமியே! நீ உன் தண்ணீரை விழுங்கி விடு; வானமே! (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்'' என்று கட்டளைப் பிறப்பிக்கப்படவே தண்ணீர் வற்றி (விட்டது. இதற்குள் அவர்கள் அழிந்து அவர்களுடைய) காரியம் முடிந்துவிட்டது. (அக்கப்பலும்) ‘ஜூதி' (என்னும்) மலையில் தங்கியது; அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான்'' என்று (உலகெங்கும்) பறை சாற்றப்பட்டது.
IFT
பின்னர், “பூமியே! உனது நீர் முழுவதையும் விழுங்கிவிடு; வானமே, நிறுத்திக்கொள்!” என்று கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நீர் வற்றிவிட்டது. கட்டளை நிறைவேற்றப்பட்டுவிட்டது. மேலும் கப்பல், ஜூதி எனும் மலையில் நிலை கொண்டது; பிறகு கூறப்பட்டது: “ஒழிந்து விட்டார்கள், அக்கிரமம் புரிந்த மக்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர்) “பூமியே நீ உன் நீரை விழுங்கிவிடு, வானமே (மழை பொழிவதை) நிறுத்திக்கொள்” என்றும் கூறப்பட்டது, நீர் (குறைக்கப்பட்டு பூமியினுள்) வற்றவைக்கப்பட்டது, (அவர்கள் அழிக்கப்பட்டு அவர்களுடைய) காரியமும் முடிக்கப்பட்டுவிட்டது, (அக்கப்பலும்) ஜூதி (என்னும், மலை)யின் மீது நிலைபெற்றும் விட்டது, ‘அநியாயக்காரர்களான சமூகத்தார்க்கு (இத்தகைய) அழிவுதான்’ என்றும் கூறப்பட்டது.
Saheeh International
And it was said, "O earth, swallow your water, and O sky, withhold [your rain]." And the water subsided, and the matter was accomplished, and it [i.e., the ship] came to rest on the [mountain of] Jūdiyy. And it was said, "Away with the wrongdoing people."
وَنَادٰی نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِیْ مِنْ اَهْلِیْ وَاِنَّ وَعْدَكَ الْحَقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِیْنَ ۟
وَنَادٰىஅழைத்தார்نُوْحٌநூஹ்رَّبَّهٗதன் இறைவனைفَقَالَகூறினார்رَبِّஎன் இறைவாاِنَّநிச்சயமாகابْنِىْஎன் மகன்مِنْ اَهْلِىْஎன் குடும்பத்திலுள்ளவன்وَاِنَّநிச்சயமாகوَعْدَكَஉன் வாக்குالْحَـقُّஉண்மையானதுوَاَنْتَநீاَحْكَمُமகா தீர்ப்பாளன்الْحٰكِمِيْنَ‏தீர்ப்பளிப்பவர்களில்
வ னாதா னூஹுர் ரBப்Bபஹூ Fபகால ரBப்Bபி இன்னBப்னீ மின் அஹ்லீ வ இன்ன வஃதகல் ஹக்கு வ அன்த அஹ்கமுல் ஹாகிமீன்
முஹம்மது ஜான்
நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(நூஹ் நபியினுடைய மகன் அவரை விட்டு விலகி நிராகரிப்பவர்களுடன் சென்றுவிடவே, அவனும் அழிந்து விடுவானென அஞ்சி) நூஹ் (தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! என் மகன் என் குடும்பத்திலுள்ளவனே! (நீயோ என் குடும்பத்தவரை பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறாய்.) நிச்சயமாக உன் வாக்குறுதி உண்மையானது. தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் நீ மிகவும் மேலான நீதிபதி'' என்று சப்தமிட்டுக் கூறினார்.
IFT
நூஹ் தன் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய மகன் எனது குடும்பத்தைச் சேர்ந்தவன்; மேலும், திண்ணமாக உனது வாக்குறுதி உண்மையானதாகும். மேலும், தீர்ப்பளிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவனும் உயர்ந்தவனுமாவாய்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நூஹ் தன் இரட்சகனை அழைத்தார், அப்பொழுது அவர், “என் இரட்சகனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்திலுள்ளவன், நிச்சயமாக (நீ என் குடும்பத்தினரைக் காப்பாற்றுவதாக வாக்களித்த) உன்னுடைய வாக்குறுதியும் உண்மையானது, மேலும், தீர்ப்பளிப்போரில் நீ மிக மேலாகத் தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார்.
Saheeh International
And Noah called to his Lord and said, "My Lord, indeed my son is of my family; and indeed, Your promise is true; and You are the most just of judges!"
قَالَ یٰنُوْحُ اِنَّهٗ لَیْسَ مِنْ اَهْلِكَ ۚ اِنَّهٗ عَمَلٌ غَیْرُ صَالِحٍ ۖؗۗ فَلَا تَسْـَٔلْنِ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ اِنِّیْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟
قَالَகூறினான்يٰـنُوْحُநூஹே!اِنَّهٗஅவன்لَـيْسَஇல்லைمِنْ اَهْلِكَஉங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன்ۚاِنَّهٗநிச்சயமாக இதுعَمَلٌசெயல்غَيْرُஅல்லصَالِحٍ ۖநல்ல(து)فَلَا تَسْـــٴَـــلْنِஎன்னிடம் கேட்காதேمَاஎதைلَـيْسَஇல்லைلَـكَஉமக்குبِهٖஅதில்عِلْمٌ‌ ؕஞானம்اِنِّىْۤநிச்சயமாக நான்اَعِظُكَஉபதேசிக்கிறேன்/உமக்குاَنْ تَكُوْنَநீர் ஆகுவதைمِنَ الْجٰهِلِيْنَ‏அறியாதவர்களில்
கால யா னூஹு இன்னஹூ லய்ஸ மின் அஹ்லிக இன்னஹூ 'அமலுன் கய்ரு ஸாலிஹின் Fபலா தஸ்'அல்னி மா லய்ஸ லக Bபிஹீ 'இல்முன் இன்னீ அ'இளுக அன் தகூன மினல் ஜாஹிலீன்
முஹம்மது ஜான்
அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன், ‘‘நூஹே! நிச்சயமாக அவன் உமது குடும்பத்தில் உள்ளவனல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீனமான காரியங்களையே செய்து கொண்டிருந்தான். (ஒழுங்கீனமாக நடப்பவன் உமது குடும்பத்தைச் சார்ந்தவனல்ல.) ஆதலால், நீர் உமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி என்னிடம் (தர்க்கித்துக்) கேட்க வேண்டாம்; அறியாதவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நிச்சயமாக நான் உமக்கு நல்லுபதேசம் செய்கிறேன்'' என்று கூறினான்.
IFT
அதற்கு அல்லாஹ் பதிலளித்தான்: “நூஹே! திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் ஒரு வீணான ‘செயல்’ ஆவான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்! அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “நூஹே! நிச்சயமாக அவன் உம் குடும்பத்தினரில் உள்ளவனல்லன், நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லா செயலுடையவன், ஆதலால், எதில் உமக்கு (உறுதியான) அறிவு இல்லையோ அதைப்பற்றி நீர் என்னிடம் கேட்க வேண்டாம், அறியாதோரில் உள்ளவராக நீர் ஆவதை விட்டும் நிச்சயமாக நான் உமக்கு நல்லுபதேசம் செய்கிறேன்” என்று கூறினான்.
Saheeh International
He said, "O Noah, indeed he is not of your family; indeed, he is [one whose] work was other than righteous, so ask Me not for that about which you have no knowledge. Indeed, I advise you, lest you be among the ignorant."
قَالَ رَبِّ اِنِّیْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْـَٔلَكَ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؕ وَاِلَّا تَغْفِرْ لِیْ وَتَرْحَمْنِیْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاِنِّىْۤநிச்சயமாக நான்اَعُوْذُபாதுகாப்புக் கோருகிறேன்بِكَஉன்னிடம்اَنْ اَسْــٴَــلَكَநான்கேட்பதைவிட்டுمَاஎதைلَـيْسَஇல்லைلِىْஎனக்குبِهٖஅதில்عِلْمٌ‌ؕஞானம்وَاِلَّا تَغْفِرْநீ மன்னிக்க வில்லையெனில்لِىْஎன்னைوَتَرْحَمْنِىْۤகருணை காட்டவில்லையெனில்/எனக்குاَكُنْஆகிவிடுவேன்مِّنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
கால ரBப்Bபி இன்னீ அ'ஊது Bபிக அன் அஸ்'அலக மா லய்ஸ லீ Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ இல்லா தக்Fபிர் லீ வ தர்ஹம்னீ அகும் மினல் காஸிரீன்
முஹம்மது ஜான்
“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (நூஹ் நபி) ‘‘என் இறைவனே! நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு உன்னிடம் நிச்சயமாக நான் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஆகி விடுவேன்'' என்று கூறினார்.
IFT
உடனே, நூஹ் பணிந்து கூறினார்: “என் இறைவனே! எதைப் பற்றி எனக்கு அறிவு இல்லையோ அதைப்பற்றி உன்னிடம் கேட்பதைவிட்டு உன்னிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ என்னை மன்னிக்காவிட்டால் மேலும், அருள் புரியாவிட்டால் நான் அழிந்து போய்விடுவேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “என் இரட்சகனே! (எதில் எனக்கு உறுதியான) அறிவு இல்லையோ அது பற்றி (இனி) உன்னிடம் கேட்பதை விட்டும், உன்னைக் கொண்டே நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன், மேலும், நீ என்னை மன்னித்து, எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நான் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
Saheeh International
[Noah] said, "My Lord, I seek refuge in You from asking that of which I have no knowledge. And unless You forgive me and have mercy upon me, I will be among the losers."
قِیْلَ یٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَیْكَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ؕ وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ یَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟
قِيْلَகூறப்பட்டதுيٰـنُوْحُநூஹே!اهْبِطْநீர் இறங்குவீராகبِسَلٰمٍபாதுகாப்புடன்مِّنَّاநமதுوَبَرَكٰتٍஇன்னும் அருள்வளங்கள்عَلَيْكَஉம்மீதுوَعَلٰٓىஇன்னும் மீதுاُمَمٍஉயிரினங்கள்مِّمَّنْ مَّعَكَ‌ؕஉம்முடன் இருக்கின்றவர்கள்وَاُمَمٌஇன்னும் சமுதாயங்கள்سَنُمَتِّعُهُمْசுகமளிப்போம்/அவர்களுக்குثُمَّபிறகுيَمَسُّهُمْஅடையும்/அவர்களைمِّنَّاநம்மிடமிருந்துعَذَابٌஒரு வேதனைاَلِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
கீல யா னூஹுஹ் Bபித் Bபிஸலாமிம் மின்னா வ Bபரகாதின் 'அலய்க வ 'அலா உமமிம் மிம்மம் ம'அக்; வ உமமுன் ஸனுமத்தி'உஹும் தும்ம யமஸ்ஸுஹும் மின்ன 'அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
“நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக; இன்னும் சில மக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்” என்று கூறப்பட்டது.
அப்துல் ஹமீது பாகவி
(வெள்ளப் பிரளயத்தால் ஏற்பட்ட தண்ணீர் வற்றி, நூஹ் நபியின் கப்பல் ‘ஜூதி' என்னும் மலைமீது தங்கிவிடவே, நாம் நூஹை நோக்கி) ‘‘நூஹே! நம் சாந்தியுடனும் நற் பாக்கியங்களுடனும் (கப்பலில் இருந்து) நீர் இறங்கிவிடுவீராக. உங்களுக்கும் உம்முடனுள்ள மற்ற மக்களுக்கும் பெரும் பாக்கியங்கள் உண்டாவதாகுக! (பிற்காலத்தில் உங்கள்) சந்ததிகள் (பெருகுவர். இவ்வுலகில்) நாம் அவர்களை நிச்சயமாக சுகம் அனுபவிக்க விடுவோம். பின்னர் (அவர்களில் பலர் பாவமான காரியங்களில் ஈடுபடுவார்கள். அதனால்) அவர்களை நம் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்'' என்று கூறப்பட்டது.
IFT
கட்டளை அருளப்பட்டது: “நூஹே! இறங்குவீராக; உம்மீதும், உம்முடன் இருக்கும் சமூகத்தின் மீதும் நம்முடைய சாந்தியும் அருள்வளங்களும் உண்டாகட்டும்! மேலும், உங்களில் வேறு சில சமூகங்களும் (தோன்ற) உள்ளன. அவர்களுக்கு சொற்ப காலத்திற்கான வாழ்க்கை வசதிகளை வழங்குவோம். பிறகு, நம்மிடமிருந்து துன்புறுத்தும் வேதனை வந்து அவர்களைப் பிடித்துக் கொள்ளும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நூஹே! உம் மீதும் உம்முடனிருப்பவர்களிலிருந்துள்ள சமூகத்தவர்கள் மீதும் நம்முடைய சாந்தியுடனும், அபிவிருத்தி (பரக்கத்)களுடனும் நீர் இறங்குவீராக! (பிற் காலத்தில்) இன்னும் சில சமூகத்தவர்கள் - (இவ்வுலகில்) அவர்களை நிச்சயமாக நாம் சுகமனுபவிக்கச் செய்வோம், பின்னர், நம்மிலிருந்து துன்புறுத்தும் வேதனை அவர்களை வந்தடையும்” என்று கூறப்பட்டது.
Saheeh International
It was said, "O Noah, disembark in security from Us and blessings upon you and upon nations [descending] from those with you. But other nations [of them] We will grant enjoyment; then there will touch them from Us a painful punishment."
تِلْكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهَاۤ اِلَیْكَ ۚ مَا كُنْتَ تَعْلَمُهَاۤ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَا ۛؕ فَاصْبِرْ ۛؕ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِیْنَ ۟۠
تِلْكَ مِنْ اَنْۢبَآءِஇவை/சரித்திரங்களில்الْغَيْبِமறைவான(து)نُوْحِيْهَاۤவஹீ அறிவிக்கிறோம்/இவற்றைاِلَيْكَ‌ۚஉமக்குمَا كُنْتَநீர் இருக்கவில்லைتَعْلَمُهَاۤஅறிவீர்/இவற்றைاَنْتَநீரோوَلَاஇன்னும் இல்லைقَوْمُكَஉமது மக்களோمِنْ قَبْلِமுன்னர்هٰذَا‌ ۛؕஇதற்குفَاصْبِرْ‌ ۛؕஆகவே பொறுப்பீராகاِنَّ الْعَاقِبَةَநிச்சயமாக முடிவுلِلْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
தில்க மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹா இலய்க மா குன்த தஃலமுஹா அன்த வலா கவ்முக மின் கBப்லி ஹாதா Fபஸ்Bபிர் இன்னல் 'ஆகிBபத லில்முத்தகீன்
முஹம்மது ஜான்
(நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இது (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளதாகும். வஹ்யி மூலமாகவே நாம் இதை உமக்கு அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இதை அறிந்திருக்கவில்லை. ஆகவே, (நபியே! நூஹைப்போல் நீரும் சிரமங்களைச்) சகித்துப் பொறுத்திருப்பீராக. நிச்சயமாக முடிவான வெற்றி இறையச்சம் உடையவர்களுக்குத்தான்.
IFT
(நபியே!) இவை மறைவான செய்திகளாகும். இவற்றை நாம் உமக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீரும் இவற்றை அறிந்திருக்கவில்லை; உம்முடைய சமுதாயத்தினரும் இவற்றை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையை மேற்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் நல்ல முடிவு இறையச்சம் உள்ளவர்களுக்கே உரியதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவை (உமக்கு) மறைவான செய்திகளில் உள்ளவையாகும், நாம் இதனை உமக்கு அறிவிக்கின்றோம், இதற்கு முன்னர் நீரோ, அல்லது உம்முடைய சமூகத்தாரோ இவற்றை அறிந்திருக்கவில்லை, ஆகவே, (நபியே! கஷ்டங்களைச் சகித்துப்) பொறுமையுடனிருப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு பயபக்தியுடையவர்களுக்காகும்.
Saheeh International
That is from the news of the unseen which We reveal to you, [O Muhammad]. You knew it not, neither you nor your people, before this. So be patient; indeed, the [best] outcome is for the righteous.
وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ ۟
وَاِلٰىஇடம்عَادٍஆதுاَخَاசகோதரர்هُمْஅவர்களுடையهُوْدًا‌ ؕஹூதைقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْஅறவேاِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிاِنْ اَنْتُمْநீங்கள் இல்லைاِلَّاதவிரمُفْتَرُوْنَ‏புனைபவர்களாகவே
வ இலா 'ஆதின் அகாஹும் ஹூதா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ இன் அன்தும் இல்லா முFப்தரூன்
முஹம்மது ஜான்
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘ஆது' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஹூதை' (நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்.அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. (வேறு இறைவன் உண்டென்று கூறும்) நீங்கள் கற்பனையாகப் பொய் கூறுபவர்களே.
IFT
மேலும், ஆத் சமுதாயத்தினரிடம் அவர்களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத் தவரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. நீங்கள் பொய்யானவற்றைத்தான் (கடவுள்களாக) ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஆது (சமூகத்தாரின்)பால் அவர்களுடைய சகோதரர் ஹூதையும் (நம் தூதராக அனுப்பி வைத்தோம்) -அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு (நாயன் உங்களுக்கு இல்லை, (வேறு நாயன் உண்டென்று கூறினால்) நீங்கள் (பொய்க்) கற்பனை செய்பவர்களே தவிர வேறு இல்லை”.
Saheeh International
And to ʿAad [We sent] their brother Hūd. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. You are not but inventors [of falsehood].
یٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی الَّذِیْ فَطَرَنِیْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
يٰقَوْمِஎன் மக்களேلَاۤநான் கேட்கவில்லைاَسْــٴَــلُكُمْஉங்களிடம்عَلَيْهِஅதற்காகاَجْرًا‌ ؕஒரு கூலியைاِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلَىமீதுالَّذِىْஎத்தகையவன்فَطَرَنِىْபடைத்தான்اَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
யா கவ்மி லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இன் அஜ்ரிய இல்லா 'அலல் லதீ Fபதரனீ; அFபலா தஃகிலூன்
முஹம்மது ஜான்
“என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)
அப்துல் ஹமீது பாகவி
என் மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனிடமே தவிர (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. என்னுடைய கூலி என்னைப் படைத்தவன் பொறுப்பில் உள்ளது. நீங்கள் சிந்தித்துணர்வதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய சமூகத்தாரே! இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை, என்னுடைய கூலி என்னைப் படைத்தானே அத்தகையவனிடமே தவிர (வேறு யாரிடமும்) இல்லை, (இதை) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?
Saheeh International
O my people, I do not ask you for it [i.e., my advice] any reward. My reward is only from the one who created me. Then will you not reason?
وَیٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا وَّیَزِدْكُمْ قُوَّةً اِلٰی قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِیْنَ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேاسْتَغْفِرُوْاமன்னிப்புக் கோருங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனிடம்ثُمَّபிறகுتُوْبُوْۤاதிருந்தி திரும்புங்கள்اِلَيْهِஅவன் பக்கம்يُرْسِلِஅனுப்புவான்السَّمَآءَமழையைعَلَيْكُمْஉங்களுக்குمِّدْرَارًاதாரை தாரையாகوَّيَزِدْكُمْஇன்னும் அதிகப்படுத்துவான்/உங்களுக்குقُوَّةًபலத்தைاِلٰى قُوَّتِكُمْஉங்கள் பலத்துடன்وَلَا تَتَوَلَّوْاதிரும்பி விடாதீர்கள்مُجْرِمِيْنَ‏குற்றவாளிகளாக
வ யா கவ்மிஸ் தக்Fபிரூ ரBப்Bபகும் தும்ம தூBபூ இலய்ஹி யுர்ஸிலிஸ் ஸமா'அ 'அலய்கும் மித்ரார(ன்)வ் வ யZஜித்கும் குவ்வதன் இலா குவ்வதிகும் வலா ததவல்லவ் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
என் மக்களே! நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரி (மனம்வருந்தி) அவன் பக்கமே திரும்புங்கள். (அவன் தடுத்திருக்கும்) மழையை உங்கள் மீது ஏராளமாகப் பொழியச் செய்வான். உங்கள் பலத்தை மேலும், (மேலும்,) அதிகரிக்கச் செய்வான். ஆகவே, நீங்கள் அவனைப் புறக்கணித்துக் குற்றமிழைத்து விடாதீர்கள்'' (என்று கூறினார்.)
IFT
மேலும், என் சமுதாயத்தினரே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பின்னர் அவன் பக்கம் திரும்புங்கள்; உங்கள் மீது மழையை அதிகமாகப் பொழியும்படிச் செய்வான். மேலும், உங்களுக்கு வலிமைக்கு மேல் வலிமையை வழங்குவான். எனவே நீங்கள் பாவம் புரிபவர்களாகி (இறைவனுக்கு அடிபணிவதிலிருந்து) முகம் திருப்பிக் கொள்ளாதீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய சமூகத்தாரே நீங்கள் உங்கள் இரட்சகனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள், அப்பால் (தவ்பாச் செய்து) அவன் பக்கமே திரும்புங்கள், (அவ்வாறு செய்வீர்களாயின்) மழையை உங்கள் மீது தொடர்ச்சியாக பொழியச் செய்வான், உங்களுடைய பலத்திற்கு மேல் பலத்தையும் உங்களுக்கு அதிகரிக்கச் செய்வான், மேலும் குற்றவாளிகளாக நீங்கள் அவனை புறக்கணித்து விடாதீர்கள்” (என்றும் கூறினார்.)
Saheeh International
And O my people, ask forgiveness of your Lord and then repent to Him. He will send [rain from] the sky upon you in showers and increase you in strength [added] to your strength. And do not turn away, [being] criminals."
قَالُوْا یٰهُوْدُ مَا جِئْتَنَا بِبَیِّنَةٍ وَّمَا نَحْنُ بِتَارِكِیْۤ اٰلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟
قَالُوْاகூறினர்يٰهُوْدُஹூதே!مَا جِئْتَـنَاநம்மிடம் நீ வரவில்லைبِبَيِّنَةٍஓர் அத்தாட்சியைக் கொண்டுوَّمَاஇன்னும் இல்லைنَحْنُநாங்கள்بِتٰـرِكِىْۤவிடுபவர்களாகاٰلِهَـتِنَاதெய்வங்களை/எங்கள்عَنْ قَوْلِكَஉம் சொல்லுக்காகوَمَاஇன்னும் இல்லைنَحْنُநாங்கள்لَـكَஉம்மைبِمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொண்டவர்களாக
காலூ யா ஹூது மா ஜி'தனா BபிBபய்யினதி(ன்)வ் வமா னஹ்னு Bபிதாரிகீ ஆலிஹதினா 'அன் கவ்லிக வமா னஹ்னு லக Bபிமு'மினீன்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘ஹூதே! நீர் (நாம் விரும்பியவாறு) அத்தாட்சி எதையும் நம்மிடம் கொண்டு வரவில்லை. உமது சொல்லுக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களை விட்டு விட மாட்டோம். உம்மை நாங்கள் நம்பவும் மாட்டோம்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் பதில் கூறினார்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் தெளிவான சான்று எதனையும் கொண்டுவரவில்லை. மேலும், நீர் கூறுவதால் நாங்கள் எங்களுடைய கடவுள்களை விட்டுவிடக் கூடியவர்களல்லர். மேலும், உம்மீது நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களாகவும் இல்லை;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “ஹூதே! (நாம் கேட்டவாறு) எந்த ஒரு தெளிவான ஆதாரத்தையும் நீர் நம்மிடம் கொண்டு வரவில்லை, உம்முடைய சொல்லுக்காக நாங்கள் எங்களுடைய தெய்வங்களை விட்டு விடுகிறவர்களுமல்லர், உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடியவர்களுமல்லர்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "O Hūd, you have not brought us clear evidence, and we are not ones to leave our gods on your say-so. Nor are we believers in you.
اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَرٰىكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْٓءٍ ؕ قَالَ اِنِّیْۤ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْۤا اَنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟ۙ
اِنْ نَّقُوْلُகூறமாட்டோம்اِلَّاதவிரاعْتَـرٰٮكَ بَعْضُதீண்டி விட்டன/உம்மை/சிலاٰلِهَتِنَاஎங்கள் தெய்வங்களில்بِسُوْٓءٍ‌ ؕஒரு தீமையைக் கொண்டுقَالَகூறினார்اِنِّىْۤநிச்சயமாக நான்اُشْهِدُசாட்சியாக்குகிறேன்اللّٰهَஅல்லாஹ்வைوَاشْهَدُوْۤاநீங்கள் சாட்சி கூறுங்கள்اَنِّىْநிச்சயமாக நான்بَرِىْٓءٌவிலகியவன்مِّمَّا تُشْرِكُوْنَ ۙ‏நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து
இன் னகூலு இல்லஃ தராக Bபஃளு ஆலிஹதினா Bபிஸூ'; கால இன்னீ உஷ்ஹிதுல் லாஹ வஷ் ஹதூ அன்னீ Bபரீ'உம் மிம்மா துஷ்ரிகூன்
முஹம்மது ஜான்
“எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை” (என்றும் கூறினார்கள்: அதற்கு) அவர், “நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்களது சில தெய்வங்கள் உமக்குக் கேடு உண்டுபண்ணிவிட்டன. (ஆதலால், நீர் மதியிழந்து விட்டீர்! என்றும் கூறினார்கள்). அதற்கவர், ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நான் அவனையன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகிக்கொண்டேன். (இதற்கு) நீங்களும் சாட்சியாக இருங்கள்'' என்று கூறினார்.
IFT
எங்கள் கடவுள்களில் ஏதோ ஒரு கடவுள் உம்மைத் தாக்கியிருக்கிறது என்றே நாங்கள் கருதுகின்றோம்.” அதற்கு ஹூத் கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அவனுடைய இறைமையில் நீங்கள் இணையாக்குகின்றீர்கள். அவற்றுக்கும் எனக்கும் திண்ணமாக எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகின்றேன்; நீங்களும் சாட்சிகளாய் இருங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி) “எங்களுடைய தெய்வங்களிற் சில, கெட்டதைக்கொண்டு உம்மை பிடித்துக்கொண்டு விட்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதையும்) கூறுவதற்கில்லை” (என்றார்கள்.) அ(தற்க)வர், “நிச்சயமாக நான் (அவனையன்றி) நீங்கள் இணைவைப்பவைகளிலிருந்து விலகிக் கொண்டவன் என்பதற்கு நீங்களும் சாட்சியாயிருங்கள்”, என்றும் கூறினார்.
Saheeh International
We only say that some of our gods have possessed you with evil [i.e., insanity]." He said, "Indeed, I call Allah to witness, and witness [yourselves] that I am free from whatever you associate with Allah
مِنْ دُوْنِهٖ فَكِیْدُوْنِیْ جَمِیْعًا ثُمَّ لَا تُنْظِرُوْنِ ۟
مِنْ دُوْنِهٖ‌அவனையன்றிفَكِيْدُوْஆகவே, சூழ்ச்சி செய்யுங்கள்نِىْஎனக்குجَمِيْعًاஅனைவரும்ثُمَّபிறகுلَاஅவகாசமளிக்காதீர்கள்تُنْظِرُوْنِ‏எனக்கு
மின் தூனிஹீ Fபகீதூனீ ஜமீ'அன் தும்ம லா துன்ளிரூன்
முஹம்மது ஜான்
“(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஆகவே, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கு(ச் செய்யக் கூடிய) சூழ்ச்சியைச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் எனக்குச் சிறிதும் அவகாசம் அளிக்க வேண்டாம்'' (என்றும்,)
IFT
நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் எந்தக் குறையும் வைக்காதீர்கள்! பிறகு சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவனையன்றி (நீங்கள் இணைவைப்பவைகளிலிருந்து நான் நீங்கிக் கொண்டேன், ஆகவே. நீங்கள் அனைவரும் எனக்கு(ச் செய்யக்கூடிய) சூழ்ச்சியைச் செய்துவிடுங்கள், பின்னர், நீங்கள் எனக்கு அவகாசம் (ஏதும்) அளிக்க வேண்டாம்” என்றும் கூறினார்.
Saheeh International
Other than Him. So plot against me all together; then do not give me respite.
اِنِّیْ تَوَكَّلْتُ عَلَی اللّٰهِ رَبِّیْ وَرَبِّكُمْ ؕ مَا مِنْ دَآبَّةٍ اِلَّا هُوَ اٰخِذٌ بِنَاصِیَتِهَا ؕ اِنَّ رَبِّیْ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
اِنِّىْநிச்சயமாக நான்تَوَكَّلْتُநம்பிக்கை வைத்து விட்டேன்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுرَبِّىْஎன் இறைவன்وَرَبِّكُمْ ؕஇன்னும் உங்கள் இறைவன்مَاஇல்லைمِنْஎதுவும்دَآبَّةٍஉயிரினம்اِلَّاதவிரهُوَஅவன்اٰخِذٌ ۢபிடித்தேبِنَاصِيَتِهَا ؕஅதன் உச்சி முடியைاِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்عَلٰى صِرَاطٍவழியில்مُّسْتَقِيْمٍ‏நேரானது
இன்னீ தவக்கல்து 'அலல்லாஹி ரBப்Bபீ வ ரBப்Bபிகும்; மா மின் தாBப்Bபதின் இல்லா ஹுவ ஆகிதும் Bபினாஸியதிஹா; இன்ன ரBப்Bபீ 'அலா ஸிராதிம் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
“நிச்சயமாக நான் என் காரியங்கள் அனைத்தையும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன். ஒவ்வொரு உயிருள்ளவற்றின் உச்சிக் குடுமியையும் அவனே பிடித்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக என் இறைவன் (நீதியின்) நேரான வழியில் இருக்கிறான் (என்றும்,)
IFT
திண்ணமாக நான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாகிய அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருக்கின்றேன். எந்த உயிரினமானாலும் அதன் குடுமி அவனுடைய பிடியிலேயே உள்ளது! நிச்சயமாக என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக (எனனுடைய காரியங்கள் யாவற்றையும் ஒப்படைத்து முழுமையாக) என்னுடைய இரட்சகனும், உங்களுடைய இரட்சகனுமாகிய அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை வைத்துவிட்டேன், (பூமியின் மீது) ஊர்ந்து திரியும் எந்த ஜீவராசியாயினும்- அதன் முன் நெற்றி உரோமத்ததை அவன் பிடித்துக்கொண்டே தவிர இல்லை, நிச்சயமாக என் இரட்சகன் நேரான வழியின் மீதிருக்கின்றான்” (என்றும்),
Saheeh International
Indeed, I have relied upon Allah, my Lord and your Lord. There is no creature but that He holds it by its forelock [i.e., controls it]. Indeed, my Lord is on a path [that is] straight.
فَاِنْ تَوَلَّوْا فَقَدْ اَبْلَغْتُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖۤ اِلَیْكُمْ ؕ وَیَسْتَخْلِفُ رَبِّیْ قَوْمًا غَیْرَكُمْ ۚ وَلَا تَضُرُّوْنَهٗ شَیْـًٔا ؕ اِنَّ رَبِّیْ عَلٰی كُلِّ شَیْءٍ حَفِیْظٌ ۟
فَاِنْ تَوَلَّوْاநீங்கள் விலகினால்فَقَدْதிட்டமாகاَبْلَغْتُكُمْஎடுத்துரைத்து விட்டேன்/உங்களுக்குمَّاۤஎதைاُرْسِلْتُஅனுப்பப்பட்டேன்بِهٖۤஅதைக் கொண்டுاِلَيْكُمْ‌ ؕஉங்களிடம்وَيَسْتَخْلِفُஇன்னும் தோன்றச் செய்வான்رَبِّىْஎன் இறைவன்قَوْمًاமக்களைغَيْرَஅல்லாத(வர்கள்)كُمْۚநீங்கள்وَلَاநீங்கள் தீங்கிழைக்க முடியாதுتَضُرُّوْنَهٗஅவனுக்குشَيْئًا‌ ؕஎதையும்اِنَّ رَبِّىْநிச்சயமாக என் இறைவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதுحَفِيْظٌ‏பாதுகாவலன்
Fப இன் தவல்லவ் Fபகத் அBப்லக்துகும் மா உர்ஸில்து Bபிஹீ இலய்கும்; வ யஸ்தக்லிFபு ரBப்Bபீ கவ்மன் கய்ரகும் வலா தளுர் ரூனஹூ ஷய்'ஆ; இன்ன ரBப்Bபீ 'அலா குல்லி ஷய்'இன் ஹFபீள்
முஹம்மது ஜான்
“நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடம் எதற்காக அனுப்பப்பட்டேனோ அதை நிச்சயமாக நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (இதற்காக) நீங்கள் அவனுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் அனைத்தையும் பாதுகாப்பவன். (ஆகவே, அவன் என்னையும் பாதுகாத்துக் கொள்வான்'' என்றும் கூறினார்.)
IFT
நீங்கள் புறக்கணித்தால் (புறக்கணித்துக் கொள்ளுங்கள்!) எந்தத் தூதுச் செய்தியுடன் நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். இனி என் இறைவன் உங்களுக்குப் பகரமாக வேறொரு சமுதாயத்தினரைக் கொண்டு வருவான். நீங்கள் யாதொரு தீங்கும் அவனுக்கு இழைத்திட முடியாது. உறுதியாக என் இறைவன் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் (என்னைப்) புறக்கணிப்பீர்களாயின், நான் உங்களிடம் எதனைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்து வைத்து விட்டேன், (உங்களை அழித்து) உங்களை அல்லாத வேறு சமூகத்தை என் இரட்சகன் (உங்கள் இடத்தில்) பகரமாக்கிவிடுவான், (இதற்காக) நீங்கள் அவனுக்கு எப்பொருளாலும் (யாதொரு) தீங்கும் செய்துவிட முடியாது, நிச்சயமாக என் இரட்சகன் யாவற்றையும் பாதுகாப்பவன்” (என்றும் கூறினார்.
Saheeh International
But if you turn away, then I have already conveyed that with which I was sent to you. My Lord will give succession to a people other than you, and you will not harm Him at all. Indeed my Lord is, over all things, Guardian."
وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا هُوْدًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَنَجَّیْنٰهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟
وَ لَمَّا جَآءَவந்த போதுاَمْرُنَاநம் உத்தரவுنَجَّيْنَاபாதுகாத்தோம்هُوْدًاஹூதைوَّالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍ مِّنَّا ۚநமது அருளால்وَஇன்னும் பாதுகாத்தோம்نَجَّيْنٰهُمْஅவர்களைمِّنْ عَذَابٍவேதனையிலிருந்துغَلِيْظٍ‏கடுமையானது
வ லம்மா ஜா'அ அம்ருனா னஜய்னா ஹூத(ன்)வ் வல்லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ னஜய்னாஹும் மின் 'அதாBபின் கலீள்
முஹம்மது ஜான்
நம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்தபோது, ஹூதையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நம் ரஹ்மத்தை (கிருபையைக்) கொண்டு காப்பாற்றினோம் - இன்னும் கடுமையான வேதனையை விட்டும் அவர்களை ஈடேற்றினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இதன் பின்னும் அவர்கள் அவரை நிராகரித்து விட்டனர். ஆகவே,) நம் (வேதனையின்) உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால்பாதுகாத்துக் கொண்டு, கடுமையான வேதனையில் இருந்து நாம் அவர்களைத் தப்பவைத்தோம்.
IFT
பிறகு நம்முடைய கட்டளை வந்தபோது, நாம் நமது அருளால் ஹூதுக்கும் அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கும் ஈடேற்றம் அளித்தோம்; மேலும் கடுமையான வேதனை யிலிருந்து அவர்களைக் காப்பாற்றினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அவர்களுக்கு தண்டனைக்குரிய) நம்முடைய உத்தரவு வந்தபொழுது ஹூதையும், அவருடன் விசுவாசங்கொண்டவர்களையும் நம்மிடமிருந்துள்ள அருளால் நாம் காப்பாற்றி விட்டோம், கடுமையான வேதனையிலிருந்தும் நாம் அவர்களைக் காப்பாற்றிவிட்டோம்.
Saheeh International
And when Our command came, We saved Hūd and those who believed with him, by mercy from Us; and We saved them from a harsh punishment.
وَتِلْكَ عَادٌ ۙ۫ جَحَدُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهٗ وَاتَّبَعُوْۤا اَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِیْدٍ ۟
وَتِلْكَஇவர்கள்عَادٌ‌ஆதுجَحَدُوْاமறுத்தனர்بِاٰيٰتِஅத்தாட்சிகளைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَعَصَوْاஇன்னும் மாறு செய்தனர்رُسُلَهٗதூதர்களுக்கு/அவனுடையوَاتَّبَعُوْۤاஇன்னும் பின்பற்றினர்اَمْرَகட்டளைكُلِّஎல்லோருடையجَبَّارٍபிடிவாதக்காரர்கள்عَنِيْدٍ‏முரடர்கள்
வ தில்க 'ஆத், ஜஹதூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் வ 'அஸவ் ருஸுலஹூ வத்தBப'ஊ அம்ர குல்லி ஜBப்Bபாரின் 'அனீத்
முஹம்மது ஜான்
(நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இது ‘ஆது' மக்களின் (சரித்திரமாகும்). அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை நிராகரித்து அவனின் தூதர்களுக்கு மாறு செய்தார்கள். மேலும், பிடிவாதக்கார முரடர்கள் அனைவருடைய தீய வழிகாட்டல்களையும் அவர்கள் பின் பற்றினார்கள்.
IFT
இவர்கள்தாம் ஆத் இனத்தவர்! இவர்கள் தம் இறைவனின் சான்றுகளை மறுத்தார்கள். அவனுடைய தூதர்களின் அழைப்பையும் ஏற்கவில்லை. மேலும், சத்தியத்துக்கு எதிரியான கொடுங்கோலர்கள் ஒவ்வொருவரின் கட்டளையையும் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அது(தான்) ஆது (கூட்டத்தினர் சரித்திரமாகும்,) அவர்கள் தங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளை மறுத்து அவனுடைய தூதர்களுக்கு மாறுபாடும் செய்தார்கள், பிடிவாதக்காரனான ஒவ்வொரு வம்பனின் கட்டளையையும் அவர்கள் பின்பற்றவும் செய்தார்கள்.
Saheeh International
And that was ʿAad, who rejected the signs of their Lord and disobeyed His messengers and followed the order of every obstinate tyrant.
وَاُتْبِعُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا لَعْنَةً وَّیَوْمَ الْقِیٰمَةِ ؕ اَلَاۤ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْ ؕ اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ ۟۠
وَاُتْبِعُوْاஇன்னும் சேர்ப்பிக்கப் பட்டார்கள்فِىْ هٰذِهِ الدُّنْيَاஇந்த உலகத்தில்لَعْنَةًசாபத்தைوَّيَوْمَ الْقِيٰمَةِ‌ؕஇன்னும் மறுமையில்اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّநிச்சயமாகعَادًاஆதுكَفَرُوْاநிராகரித்தனர்رَبَّهُمْ‌ؕதங்கள் இறைவனுக்குاَلَاஅறிந்துகொள்ளுங்கள்!بُعْدًاகேடுதான்لِّعَادٍஆதுக்குقَوْمِமக்கள்هُوْدٍ‏ஹூதுடைய
வ உத்Bபி'ஊ Fபீ ஹாதிஹித் துன்யா லஃனத(ன்)வ் வ யவ்மல் கியாமஹ்; அலா இன்ன 'ஆதன் கFபரூ ரBப்Bபஹும்; அலா Bபுஃதல் லி 'ஆதின் கவ்மின் ஹூத்
முஹம்மது ஜான்
எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக “ஆது” கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான “ஆது” கூட்டத்தாருக்கு கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வுலகில் (அல்லாஹ்வுடைய) சாபம் அவர்களைத் தொடர்ந்தது, மறுமை நாளிலும் (அவ்வாறே!) தொடரும். நிச்சயமாக ‘ஆது' மக்கள் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதையும் (நபி) ஹூதுடைய ‘ஆது' சமுதாயத்தவர்களுக்குக் கேடுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
IFT
இறுதியில், இவ்வுலகிலும் அல்லாஹ்வின் சாபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். மறுமைநாளிலும் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகுவார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! ஆத் இனத்தவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்தார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! தூக்கி எறியப்பட்டார்கள், ஹூதுடைய சமுதாயத்தினரான ஆத் மக்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவ்வுலகிலும், மறுமை நாளிலும் (அல்லாஹ்வுடைய) சாபத்தால் அவர்கள் தொடரப்பட்டார்கள், அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக ஆது (கூட்டத்தினர்,) தங்கள் இரட்சகனை நிராகரித்தார்கள், ஹூதுடைய சமூகத்தாராகிய ஆதுக்குக் கேடுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
And they were [therefore] followed in this world with a curse and [as well] on the Day of Resurrection. Unquestionably, ʿAad denied their Lord; then away with ʿAad, the people of Hūd.
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِیْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ اِنَّ رَبِّیْ قَرِیْبٌ مُّجِیْبٌ ۟
وَاِلٰىஇன்னும் இடம்ثَمُوْدَஸமூதுاَخَاهُمْசகோதரர்/அவர்களுடையصٰلِحًا‌ۘஸாலிஹைقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்مَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْஅறவேاِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிهُوَஅவனேاَنْشَاَஉருவாக்கினான்كُمْஉங்களைمِّنَ الْاَرْضِபூமியிலிருந்துوَاسْتَعْمَرவசிக்க வைத்தான்َكُمْஉங்களைفِيْهَاஅதில்فَاسْتَغْفِرُوْஆகவே, மன்னிப்புக் கோருங்கள்هُஅவனிடம்ثُمَّபிறகுتُوْبُوْۤاதிருந்தி திரும்புங்கள்اِلَيْهِ‌ ؕஅவன் பக்கம்اِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்قَرِيْبٌமிகச் சமீபமானவன்مُّجِيْبٌ‏பதிலளிப்பவன்
வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹிம் கய்ருஹூ ஹுவ அன்ஷ அகும் மினல் அர்ளி வஸ்தஃ மரகும் Fபீஹா Fபஸ்தக்Fபிரூஹு தும்ம தூBபூ இலய்ஹ்; இன்ன ரBப்Bபீ கரீBபும் முஜீBப்
முஹம்மது ஜான்
இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
அப்துல் ஹமீது பாகவி
‘ஸமூது' (என்னும் மக்)களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; உங்களுக்கு அவனைத் தவிர, வேறு இறைவன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதிலேயே அவன் உங்களை வசிக்கவும் செய்தான். ஆதலால், நீங்கள் அவனிடமே மன்னிப்பைக் கோரி பிறகு, அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவன், (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவன் என்று கூறினார்.
IFT
ஸமூத் இனத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. அவன்தான் உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். மேலும், அதில் உங்களை வாழச் செய்துள்ளான். எனவே, அவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; பின்னர் அவன் பக்கம் நீங்கள் மீளுங்கள்! திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கின்றான். (பிரார்த்தனைகளுக்குப்) பதிலளிப்பவனாக இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஸமூது (கூட்டத்தினர்)பால் அவர்களுடைய சகோதரர் ஷாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்)-அவர், “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வை (அவன் ஒருவனை)யே நீங்கள் வணங்குங்கள், உங்களுக்கு அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கினான், அதிலேயே அவன் உங்களை வசிக்கச் செய்தான், ஆதலால், நீங்கள் அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள், பின்னர் தவ்பாச் செய்து அவன் பக்கமே திரும்புங்கள், நிச்சயமாக என்னுடைய இரட்சகன் (உங்களுக்கு) மிகச் சமீபமானவன், (பிரார்த்தனைகளை) அங்கீகரிப்பவன்” என்றும் கூறினார்.
Saheeh International
And to Thamūd [We sent] their brother Ṣalih. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. He has produced you from the earth and settled you in it, so ask forgiveness of Him and then repent to Him. Indeed, my Lord is near and responsive."
قَالُوْا یٰصٰلِحُ قَدْ كُنْتَ فِیْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَاۤ اَتَنْهٰىنَاۤ اَنْ نَّعْبُدَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟
قَالُوْاகூறினர்يٰصٰلِحُஸாலிஹேقَدْ كُنْتَதிட்டமாகநீர்இருந்தீர்فِيْنَاஎங்களில்مَرْجُوًّاஆதரவுக்குரியவராகقَبْلَமுன்புهٰذَآ‌ اَتَـنْهٰٮنَاۤஇது/நீர் தடுக்கிறீரா?/எங்களைاَنْ نَّـعْبُدَநாங்கள் வணங்குவதை விட்டுمَا يَعْبُدُஎதை வணங்குவார்اٰبَآؤُنَاமூதாதைகள்/எங்கள்وَاِنَّنَاநிச்சயமாக நாங்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்مِّمَّاஇருந்து/எவைتَدْعُوْஅழைக்கிறீர்نَاۤஎங்களைاِلَيْهِஎதன் பக்கம்مُرِيْبٍ‏மிக ஆழமான சந்தேகம்
காலூ யா ஸாலிஹு கத் குன்த Fபீனா மர்ஜுவ்வன் கBப்ல ஹாதா அதன்ஹானா அன் னஃBபு த மா யஃBபுது ஆBபா'உனா வ இன்னனா லFபீ ஷக்கிம் மிம்மா தத்'ஊனா இலய்ஹி முரீBப்
முஹம்மது ஜான்
அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) ‘‘ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம், நீர் எங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவராக இருந்தீர். எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை நாங்கள் வணங்கக் கூடாதென்று நீர் எங்களைத் தடை செய்கிறீரா? நீர் எங்களை எதனளவில் அழைக்கிறீரோ அதைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினர்.
IFT
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! இதற்கு முன்போ எங்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்குரியவராய் எங்கள் மத்தியில் இருந்தீர்! இப்பொழுதோ எங்கள் மூதாதையர் வணங்கிக் கொண்டிருந்த கடவுள்களை நாங்கள் வணங்குவதை விட்டு எங்களைத் தடுக்கின்றீரே? மேலும், நீர் எந்த நெறியின் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதுபற்றிக் கடும் சந்தேகத்திலேயே நாங்கள் இருக்கின்றோம். அது எங்களைப் பெரும் மனக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்பெல்லாம் நீர் எங்களுடைய விருப்பத்திற்குரியவராக இருந்தீர், எங்கள் மூதாதையர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை நாங்கள் வணங்குவதை விட்டும், நீர் எங்களைத் தடை செய்கிறீரா? மேலும், நீர் நம்மை எதனளவில் அழைக்கிறீரோ அதனைப்பற்றி நிச்சயமாக நாம் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திலிருக்கிறோம்” என்றும் கூறினார்கள்.
Saheeh International
They said, "O Ṣalih, you were among us a man of promise before this. Do you forbid us to worship what our fathers worshipped? And indeed we are, about that to which you invite us, in disquieting doubt."
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ مِنْهُ رَحْمَةً فَمَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ عَصَیْتُهٗ ۫ فَمَا تَزِیْدُوْنَنِیْ غَیْرَ تَخْسِیْرٍ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ كُنْتُநான் இருந்தால்عَلٰى بَيِّنَةٍஒரு தெளிவான அத்தாட்சியில்مِّنْஇருந்துرَّبِّىْஎன் இறைவன்وَاٰتٰٮنِىْஇன்னும் தந்தான்/எனக்குمِنْهُதன்னிடமிருந்துرَحْمَةًஅருளைفَمَنْயார்?يَّـنْصُرُنِىْஉதவுவார்/எனக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடத்தில்اِنْ عَصَيْتُهٗ‌அவனுக்கு நான் மாறு செய்தால்فَمَاஅதிகமாக்க மாட்டீர்கள்تَزِيْدُوْنَنِىْஎனக்குغَيْرَஅன்றிتَخْسِيْرٍ‏நஷ்டம் ஏற்படுத்துவது
கால யா கவ்மி அர'அய்தும் இன் குன்து 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ ஆதானீ மின்ஹு ரஹ்மதன் Fபமய் யன்ஸுருனீ மினல் லாஹி இன் 'அஸய்துஹூ Fபமா தZஜீதூனனீ கய்ர தக்ஸீர்
முஹம்மது ஜான்
“என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விடமாட்டீர்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘என் மக்களே! நான் என் இறைவனின் நேரான வழியில் இருக்க, அவன் என் மீது (மகத்தான) அருள் புரிந்திருக்க, நான் அவனுக்கு மாறு செய்தால் (அவன் என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா? நீங்களோ எனக்கு நஷ்டத்தைத் தவிர (எதையும்) அதிகமாக்கி விட மாட்டீர்கள்'' என்று கூறினார்.
IFT
அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! இதனையும் கொஞ்சம் சிந்தித்தீர்களா? நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான ஒரு சான்றினைப் பெற்று, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருக்கும் நிலையில் நான் அவனுக்கு மாறு செய்தால் அல்லாஹ்வின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? எனக்கு மேலும் இழப்பை ஏற்படுத்துவதைத் தவிர வேறு என்னதான் உங்களால் செய்ய இயலும்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “என்னுடைய சமூகத்தாரே! “நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இரட்சகனின் தெளிவான அத்தாட்சியின் மீதிருக்க, அவன் தன் புறத்திலிருந்து அருளையும் எனக்குக் கொடுத்திருக்க, நான் அவனுக்கு மாறு செய்தால், (அதற்காக அவன் என்னைத் தண்டித்துவிட்டால் அந்நேரத்தில்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகமாக்கி விடமாட்டீர்கள்” என்று கூறினார்.
Saheeh International
He said, "O my people, have you considered: if I should be upon clear evidence from my Lord and He has given me mercy from Himself, who would protect me from Allah if I disobeyed Him? So you would not increase me except in loss.
وَیٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ قَرِیْبٌ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேهٰذِهٖஇதுنَاقَةُபெண் ஒட்டகம்اللّٰهِஅல்லாஹ்வின்لَـكُمْஉங்களுக்குاٰيَةًஅத்தாட்சியானفَذَرُوْهَاஆகவே, விட்டு விடுங்கள்/அதைتَاْكُلْஅது சாப்பி(டட்)டும்فِىْۤ اَرْضِபூமியில்اللّٰهِஅல்லாஹ்வின்وَلَا تَمَسُّوْهَاஅதற்கு செய்யாதீர்கள்بِسُوْٓءٍஒரு கெடுதியையும்فَيَاْخُذَكُمْபிடிக்கும்/உங்களைعَذَابٌஒரு வேதனைقَرِيْبٌ‏அதிசீக்கிரமானது
வ யா கவ்மி ஹாதிஹீ னாகதுல் லாஹி லகும் ஆயதன் Fபதரூஹா தாகுல் Fபீ அர்ளில் லாஹி வலா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் அதாBபுன் கரீBப்
முஹம்மது ஜான்
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் மக்களே! இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகமாகும். உங்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வினுடைய பூமியில் (அது விரும்பிய இடத்தில்) மேய அதை விட்டுவிடுங்கள்; அதற்கு ஒரு கெடுதலும் செய்ய(க் கருதி) அதைத் தொடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதிசீக்கிரத்தில் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' (என்று சொன்னார்.)
IFT
மேலும் என் சமுதாயத்தினரே! (பாருங்கள்) இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம்! உங்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்கின்றது. எனவே இதனை அல்லாஹ்வின் பூமியில் (சுதந்திரமாய்) மேய்வதற்கு விட்டுவிடுங்கள்; இதற்கு யாதொரு தீங்கும் இழைக்காதீர்கள்! அவ்வாறு தீங்கிழைத்தால், இறைவனின் வேதனை உங்களைப் பீடிப்பதற்கு வெகுநேரம் ஆகாது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும் என்னுடைய சமூகத்தாரே! “உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகமாகும், ஆகவே, அதனை விட்டுவிடுங்கள், அல்லாஹ்வுடைய பூமியில் மேய்ந்து கொள்ளும், அதற்கு யாதொரு தீமையும் செய்ய(க் கருதி) அதனைத் தொடாதீர்கள், (அவ்வாறு செய்தால்) மிகவும் சமீபித்த வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” (என்றும் கூறினார்).
Saheeh International
And O my people, this is the she-camel of Allah - [she is] to you a sign. So let her feed upon Allah's earth and do not touch her with harm, or you will be taken by an impending punishment."
فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِیْ دَارِكُمْ ثَلٰثَةَ اَیَّامٍ ؕ ذٰلِكَ وَعْدٌ غَیْرُ مَكْذُوْبٍ ۟
فَعَقَرُوْவெட்டினார்கள்هَاஅதைفَقَالَஆகவே, கூறினார்تَمَتَّعُوْاசுகமாக இருங்கள்فِىْ دَارِஇல்லத்தில்كُمْஉங்கள்ثَلٰثَةَமூன்றுاَ يَّامٍநாள்கள்ؕذٰ لِكَஇதுوَعْدٌஒரு வாக்குغَيْرُ مَكْذُوْبٍ‏பொய்ப்பிக்கபடாத
Fப 'அகரூஹா Fபகால தமத்த'ஊ Fபீ தாரிகும் தலாதத அய்யாமின் தாலிக வஃதுன் கய்ரு மக்தூBப்
முஹம்மது ஜான்
ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் (அவருடைய கட்டளைக்கு மாறு செய்து) அதை வெட்டி விட்டார்கள். ஆகவே, அவர் (அவர்களை நோக்கி, ‘‘இனி) மூன்று நாள்கள்வரை உங்கள் வீடுகளில் (இருந்து கொண்டு) நீங்கள் சுகமடையலாம். (அதற்குப் பின்னர் அல்லாஹ்வுடைய வேதனை உங்களை வந்தடையும்) இது தவறாத வாக்காகும்'' என்று கூறினார்.
IFT
ஆயினும், அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள்! அப்போது ஸாலிஹ் (அம்மக்களுக்கு) எச்சரிக்கை செய்தார்: “மூன்று நாட்கள் உங்கள் வீடுகளில் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலத் தவணை பொய்யானதல்ல!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே. அவர்கள் (அதன் கால் நரம்பினை துண்டித்து) அதை அறுத்துவிட்டார்கள், அப்பொழுது அவர் மூன்று நாட்கள் வரையில் உங்கள் வீடுகளில் நீங்கள் சுகமடையுங்கள், இது பொய்ப்பிக்கப்படாத வாக்காகும்” என்று கூறினார்.
Saheeh International
But they hamstrung her, so he said, "Enjoy yourselves in your homes for three days. That is a promise not to be denied [i.e., unfailing]."
فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا صٰلِحًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْیِ یَوْمِىِٕذٍ ؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟
فَلَمَّاபோதுجَآءَவந்ததுاَمْرُنَاநம் கட்டளைنَجَّيْنَاபாதுகாத்தோம்صٰلِحًـاஸாலிஹைوَّالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍ مِّنَّاநமது அருளைக் கொண்டுوَمِنْஇன்னும் இருந்துخِزْىِஇழிவுيَوْمِٮِٕذٍ‌ؕஅந்நாளின்اِنَّநிச்சயமாகرَبَّكَ هُوَஉம் இறைவன்தான்الْقَوِىُّபலமிக்கவன்الْعَزِيْزُ‏மிகைத்தவன்
Fபலம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஸாலிஹ(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ மின் கிZஜ்யி யவ்மி'இத் இன்ன ரBப்Bபக ஹுவல் கவிய்யுல் 'அZஜீZஜ்
முஹம்மது ஜான்
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
(வேதனையைப் பற்றிய) நம் கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் தான் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஆவான்.
IFT
இறுதியில், நம் தீர்ப்பு(க்கான வேளை) வந்துவிட்டது. இப்போது, நமது அருளால் ஸாலிஹையும் அவரோடு நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் காப்பாற்றினோம்; மேலும், அந்நாளின் இழிவிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தோம். திண்ணமாக, உம் இறைவன் மாபெரும் வலிமையுடையவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய கட்டளை(க்கொப்ப வேதனை அவர்களுக்கு) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் விசுவாசம் கொண்டோரையும் நம்மிடமிருந்துள்ள அருளைக் கொண்டு அந்நாளின் இழிவை விட்டும் நாம் காப்பாற்றினோம், (நபியே!) நிச்சயமாக உம்முடைய இரட்சகன் - அவனே பலமிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.
Saheeh International
So when Our command came, We saved Ṣalih and those who believed with him, by mercy from Us, and [saved them] from the disgrace of that day. Indeed, it is your Lord who is the Powerful, the Exalted in Might.
وَاَخَذَ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ
وَاَخَذَஇன்னும் பிடித்ததுالَّذِيْنَஎவர்கள்ظَلَمُواஅநீதியிழைத்தனர்الصَّيْحَةُஇடி முழக்கம்فَاَصْبَحُوْاஆகவே, காலையில் ஆகிவிட்டனர்فِىْ دِيَارِهِمْதங்கள் இல்லங்களில்جٰثِمِيْنَۙ‏இறந்தவர்களாக
வ அகதல் லதீன ளலமுஸ் ஸய்ஹது Fப அஸ்Bபஹூ Fபீ தியாரிஹிம் ஜாதிமீனா
முஹம்மது ஜான்
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, வரம்பு மீறியவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து விட்டனர்.
IFT
அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கர ஓசை தாக்கியது! அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்துவிட்டனர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அநியாயம் செய்தோரை பயங்கரமான இடி முழக்கம் பிடித்துக் கொண்டது, ஆகவே, அவர்கள் தங்கள் வீடுகளில் காலைப்பொழுதை குப்புற விழுந்த நிலையில் (இறந்து) கிடக்க, அடைந்தனர்.
Saheeh International
And the shriek seized those who had wronged, and they became within their homes [corpses] fallen prone
كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ؕ اَلَاۤ اِنَّ ثَمُوْدَاۡ كَفَرُوْا رَبَّهُمْ ؕ اَلَا بُعْدًا لِّثَمُوْدَ ۟۠
كَاَنْ لَّمْ يَغْنَوْاபோன்று அவர்கள் வசிக்கவில்லைفِيْهَا‌ ؕ اَلَاۤஅவற்றில்/அறிந்து கொள்ளுங்கள்اِنَّநிச்சயமாகثَمُوْدَا۟ஸமூதுكَفَرُوْاநிராகரித்தனர்رَبَّهُمْ‌ؕதங்கள் இறைவனைاَلَاஅறிந்து கொள்ளுங்கள்بُعْدًاசாபம் உண்டாகட்டும்لِّـثَمُوْدَ‏ஸமூதுக்கு
க அல் லம் யக்னவ் Fபீஹா; அலா இன்ன தமூத கFபரூ ரBப்Bபஹும்; அலா Bபுஃதல் லி தமூத்.
முஹம்மது ஜான்
(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! “ஸமூது” (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு முன்னர்) அங்கு அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காததைப் போல் (அடையாளம் எதுவுமின்றி அழிந்து விட்டனர்). அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக ‘ஸமூது' மக்கள் தங்கள் இறைவனை நிராகரித்து விட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: ‘ஸமூது' மக்கள் மீது சாபம் ஏற்பட்டு விட்டது.
IFT
அங்கு அவர்கள் வாழவே இல்லை என்பதுபோல! தெரிந்து கொள்ளுங்கள்! ஸமூத் இனத்தார் தம் இறைவனை நிராகரித்தார்கள்; தெரிந்து கொள்ளுங்கள்! இறையருளிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள், ஸமூத் இனத்தார்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப்போல் (அழிந்துவிட்டனர்.) நிச்சயமாக ஸமூது (கூட்டத்தினர்) தங்கள் இரட்சகனை நிராகரித்து விட்டார்கள், என்பதை அறிந்து கொள்ளுங்கள், அந்த ஸமூது` (கூட்டத்தினர்)க்கு நாசம் ஏற்பட்டுவிட்டது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
As if they had never prospered therein. Unquestionably, Thamūd denied their Lord; then, away with Thamūd.
وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی قَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِیْذٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகجَآءَتْவந்தனர்رُسُلُنَاۤநம் தூதர்கள்اِبْرٰهِيْمَஇப்றாஹீமிடம்بِالْبُشْرٰىநற்செய்தியைக் கொண்டுقَالُوْاகூறினர்سَلٰمًا‌ ؕஈடேற்றம் உண்டாகுகقَالَகூறினார்سَلٰمٌ‌ஈடேற்றம் உண்டாகுகفَمَا لَبِثَஅவர் தாமதிக்கவில்லைاَنْ جَآءَவருவதற்குبِعِجْلٍஒரு கன்றுக் குட்டியைக் கொண்டுحَنِيْذٍ‏சுடப்பட்டது
வ லகத் ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில்Bபுஷ்ரா காலூ ஸலாமன் கால ஸலாமுன் Fபமா லBபித அன் ஜா'அ Bபி'இஜ்லின் ஹனீத்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (வானவர்களிலுள்ள) நம் தூதர்கள் இப்றாஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து “ஸலாம்'' கூறினர். (இப்றாஹீம் அதற்குப் பிரதியாக “உங்களுக்கும்) ஸலாம்'' கூறி சிறிதும் தாமதிக்காது (அறுத்துச்) சுட்டதொரு கன்றுக்குட்டியைக் கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்கள்.
IFT
மேலும் (பாருங்கள்!) நம்முடைய வானவர்கள் இப்ராஹீமிடம் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தார்கள்; “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்!” என்றார்கள். அதற்கு, “உங்கள் மீதும் சாந்தி நிலவுக!” என்று இப்ராஹீம் பதிலளித்தார். பிறகு சிறிது நேரத்திற்குள் (அவர்களுக்கு விருந்தளிப்பதற்காக) வறுத்த கன்றின் மாமிசத்தைக் கொண்டு வந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக, (மலக்குகளான) நம்முடைய தூதர்கள் இப்றாஹீமுக்கு நன்மாராயம் கொண்டு வந்து “(உமக்குச்) சாந்தி உண்டாவதாக, என்று கூறினர், (அதற்கு “உங்களுக்கும்) சாந்தி உண்டாவதாக! என்று கூறி (விருந்தளிக்க அறுத்துப்) பொரித்ததொரு கன்றை (அதன் மாமிசத்தை)க் கொண்டு வருவதில் அவர் தாமதிக்கவில்லை.
Saheeh International
And certainly did Our messengers [i.e., angels] come to Abraham with good tidings; they said, "Peace." He said, "Peace," and did not delay in bringing [them] a roasted calf.
فَلَمَّا رَاٰۤ اَیْدِیَهُمْ لَا تَصِلُ اِلَیْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّا رَاٰۤஅவர் பார்த்தபோதுاَيْدِيَهُمْஅவர்களுடைய கரங்களைلَا تَصِلُசேராதுاِلَيْهِஅதன் பக்கம்نَـكِرَசந்தேகித்தார்هُمْஅவர்களைப் பற்றிوَاَوْجَسَஇன்னும் அவர் மறைத்தார்مِنْهُمْஅவர்களைப் பற்றிخِيْفَةً‌  ؕபயத்தைقَالُوْاகூறினார்கள்لَا تَخَفْபயப்படாதீர்اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اُرْسِلْنَاۤஅனுப்பப்பட்டோம்اِلٰى قَوْمِமக்களின் பக்கம்لُوْطٍ ؕ‏லூத்துடைய
Fபலம்மா ர ஆ அய்தியஹும் லா தஸிலு இலய்ஹி னகிரஹும் வ அவ்ஜஸ மின்ஹும் கீFபஹ்; காலூ லா தகFப் இன்னா உர்ஸில்னா இலா கவ்மி லூத்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்றாஹீமை நோக்கி) ‘‘நீர் பயப்படாதீர். நிச்சயமாக நாங்கள் ‘லூத்'துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறினார்கள்.
IFT
ஆனால், அவர்களின் கைகள் உணவைத் தொடவே இல்லை என்பதை இப்ராஹீம் பார்த்தபோது அவர்களைப் பற்றி அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அவர்களைக் கண்டு அவர் அஞ்சினார். அதற்கு அவ்வானவர்கள், “நீர் அஞ்ச வேண்டாம்; திண்ணமாக நாங்கள் லூத் சமூகத்தாரின்பால் அனுப்பப்பட்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால், அவர்களுடைய கைகள் அதன்பால் செல்லாததை அவர் கண்டபோது. அவர்களைப்பற்றி அவர் சந்தேகித்தார், அவர்களைப் பற்றிய பயத்தையும் அவர் (தன்) மனதில் உணர்ந்தார், (அப்பொழுது) அவர்கள் “நீர் பயப்படாதீர், நிச்சயமாக நாங்கள் “லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப் பட்டுள்ளோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
But when he saw their hands not reaching for it, he distrusted them and felt from them apprehension. They said, "Fear not. We have been sent to the people of Lot."
وَامْرَاَتُهٗ قَآىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ یَعْقُوْبَ ۟
وَامْرَاَ تُهٗஅவருடைய மனைவிقَآٮِٕمَةٌநின்று கொண்டிருந்தாள்فَضَحِكَتْசிரித்தாள்فَبَشَّرْنٰهَاநற்செய்தி கூறினோம்/அவளுக்குبِاِسْحٰقَ ۙஇஸ்ஹாக்கைக் கொண்டுوَمِنْ وَّرَآءِஇன்னும் பின்னால்اِسْحٰقَஇஸ்ஹாக்கிற்குيَعْقُوْبَ‏யஃகூப்
வம்ர அதுஹூ கா'இமதுன் Fபளஹிகத் FபBபஷ்ஷர்னாஹா Bபி இஷ்ஹாக வ மி(ன்)வ் வரா'இ இஷ்ஹாக யஃகூBப்
முஹம்மது ஜான்
அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அச்சமயம் அங்கு) நின்று கொண்டிருந்த அவருடைய (கிழ) மனைவி (லூத் நபியின் மக்கள் செய்யும் தீய காரியங்களைச் செவியுற்று) சிரித்தாள்; ஆனால், அதே சமயத்தில் அவளுக்கு ‘இஸ்ஹாக்' (என்னும் மகனைப்) பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர் ‘யஅகூப்' (என்னும் பேரன் பிறக்கப் போவதைப்) பற்றியும் நற்செய்தி கூறினோம்.
IFT
அப்போது இப்ராஹீமுடைய மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் (இதனைக் கேட்டதும்) சிரித்தார். நாம் அவருக்கு இஸ்ஹாக் (பிறக்கப்போவது) பற்றியும் இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி அறிவித்தோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவருடைய (வயதான) மனைவியும் (மறைவில் அங்கு) நின்று கொண்டிருந்தார், அப்போது அவர் சிரித்தார், பின்னர், அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின்னர், யஃகூபு பற்றியும் நாம் நன்மாராயங் கூறினோம்.
Saheeh International
And his wife was standing, and she smiled. Then We gave her good tidings of Isaac and after Isaac, Jacob.
قَالَتْ یٰوَیْلَتٰۤی ءَاَلِدُ وَاَنَا عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِیْ شَیْخًا ؕ اِنَّ هٰذَا لَشَیْءٌ عَجِیْبٌ ۟
قَالَتْகூறினாள்يٰوَيْلَتٰٓىஎன் துக்கமேءَاَلِدُபிள்ளைபெறுவேனாوَاَنَاநானுமோعَجُوْزٌகிழவியாகوَّهٰذَاஇவரோبَعْلِىْஎன் கணவராகியشَيْخًا ؕவயோதிகராகاِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَشَىْءٌவிஷயம்தான்عَجِيْبٌ‏வியப்பான(து)
காலத் யா வய்லதா 'ஆலிது வ அன 'அஜூZஜு(ன்)வ் வ ஹாத Bபஃலீ ஷய்கன் இன்ன ஹாதா லஷய்'உன் 'அஜீBப்
முஹம்மது ஜான்
அதற்கு அவர் கூறினார்: “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவள், ‘‘என் துக்கமே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என் இக்கணவர் ஒரு வயோதிகராகவும் ஆனதன் பின்னர் நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!'' என்றாள்.
IFT
அதற்கு அவர் “அந்தோ! என் துர்பாக்கியமே! நானும் முதியவளாகி விட்டேன். என்னுடைய கணவராகிய இவரும் முதுமை அடைந்து விட்டார். இந்நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? திண்ணமாக, இது ஒரு வியப்புக்குரிய செய்தியாய் இருக்கின்றது!” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய கேடே! (மாதவிடாய் நின்று) நான் கிழவியாகவும், என்னுடைய இக்கணவர் ஒரு வயோதிகராகவும் இருக்க, நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்!” என்று அவருடைய (மனைவியாகிய) அவர் கூறினார்.
Saheeh International
She said, "Woe to me! Shall I give birth while I am an old woman and this, my husband, is an old man? Indeed, this is an amazing thing!"
قَالُوْۤا اَتَعْجَبِیْنَ مِنْ اَمْرِ اللّٰهِ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَیْكُمْ اَهْلَ الْبَیْتِ ؕ اِنَّهٗ حَمِیْدٌ مَّجِیْدٌ ۟
قَالُوْۤاகூறினார்கள்اَتَعْجَبِيْنَவியப்படைகிறீரா?مِنْ اَمْرِகட்டளையில்اللّٰهِ‌அல்லாஹ்வுடையرَحْمَتُகருணைاللّٰهِஅல்லாஹ்வின்وَبَرَكٰتُهٗஇன்னும் அவனுடைய அருள்கள்عَلَيْكُمْஉங்கள் மீதுاَهْلَ الْبَيْتِ‌ؕவீட்டாரேاِنَّهٗநிச்சயமாக அவன்حَمِيْدٌமகா புகழாளன்مَّجِيْدٌ‏மகா கீர்த்தியாளன்
காலூ அதஃஜBபீன மின் அம்ரில் லாஹி ரஹ்மதுல் லாஹி வ Bபரகாதுஹூ 'அலய்கும் அஹ்லல் Bபய்த்; இன்னஹூ ஹமீதுன் மஜீத்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வுடைய சக்தியைப் பற்றி நீ ஆச்சரியம் அடைகிறாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய நற்பாக்கியங்களும் (இப்றாஹீமுடைய) வீட்டிலுள்ள உங்கள் மீது நிலவுக. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவன், மகிமை உடையவன்'' என்று கூறினார்கள்.
IFT
வானவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் கட்டளை குறித்து வியப்புறுகின்றீரா? இப்ராஹீமின் குடும்பத்தாரே! உங்கள்மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய வாழ்த்துக்களும் பொழிந்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் பெரும் புகழுக்குரியவனாகவும், பெரும் மாட்சிமை உடையவனாகவும் இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், அல்லாஹ்வுடைய கட்டளையைப் பற்றி நீ ஆச்சரியமடைகின்றாயா? அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய பாக்கியங்களும், இவ்வீட்டிலுள்ள உங்கள் மீதுள்ளன, நிச்சயமாக அவன் புகழப்படுபவன், மாட்சிமையுடையவன்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Are you amazed at the decree of Allah? May the mercy of Allah and His blessings be upon you, people of the house. Indeed, He is Praiseworthy and Honorable."
فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ ۟ؕ
فَلَمَّا ذَهَبَசென்றபோதுعَنْ اِبْرٰهِيْمَஇப்றாஹீமை விட்டுالرَّوْعُதிடுக்கம்وَجَآءَتْهُஇன்னும் வந்தது/அவருக்குالْبُشْرٰىநற்செய்திيُجَادِلُــنَاதர்க்கித்தார்/நம்மிடம்فِىْ قَوْمِமக்கள் விஷயத்தில்لُوْطٍؕ‏லூத்துடைய
Fபலம்மா தஹBப அன் இBப்ராஹீமர் ரவ்'உ வ ஜா'அத் ஹுல் Bபுஷ்ரா யுஜாதிலுனா Fபீ கவ்மி லூத்
முஹம்மது ஜான்
(இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
அப்துல் ஹமீது பாகவி
இப்றாஹீமுடைய திடுக்கம் நீங்கி அவருக்கு நற்செய்தி கிடைத்த பின்னர் ‘லூத்' தின் மக்களை (அழித்து விடுவதை)ப் பற்றி அவர் நம்மு(டைய வானவர்களு)டன் தர்க்கம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
IFT
இப்ராஹீம் அச்சம் அகன்று (குழந்தைப் பேறு பற்றிய நற்செய்தியால்) அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டபோது, லூத் இனத்தாரைப் பற்றி அவர் நம்மிடம் தர்க்கம் செய்யத் தொடங்கிவிட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இப்றாஹீமை விட்டு திடுக்கம் நீங்கி அவருக்கு நன்மாராயமும் வந்தபோது, லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி அவர் நம்மு(டைய மலக்குகளு)டன் தர்க்கம், செய்ய ஆரம்பித்துவிட்டார்.
Saheeh International
And when the fright had left Abraham and the good tidings had reached him, he began to argue [i.e., plead] with Us concerning the people of Lot.
اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ ۟
اِنَّ اِبْرٰهِيْمَநிச்சயமாக இப்றாஹீம்لَحَـلِيْمٌசகிப்பாளர்اَوَّاهٌஅதிகம் பிரார்த்திப்பவர்مُّنِيْبٌ‏திரும்பக்கூடியவர்
இன்ன இBப்ராஹீம ல ஹலீமுன் அவ்வாஹுன் முனீBப்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இப்றாஹீம் மிக்க சகிப்புடையவர், அதிகம் பிரார்த்திப்பவர் (எதற்கும்) நம்மையே முன்நோக்குபவர் ஆவார்.
IFT
திண்ணமாக, இப்ராஹீம் இரக்கமுடையவராகவும் மென்மையான உள்ளமுடையவராகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இப்ரறாஹீம், மிக்க சகிப்புத் தன்மையுடையவர், இளகிய மனதுடையவர், (எதற்கும் அல்லாஹ்வின் பாலே) திரும்பக்கூடியவர்.
Saheeh International
Indeed, Abraham was forbearing, grieving and [frequently] returning [to Allah].
یٰۤاِبْرٰهِیْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚ اِنَّهٗ قَدْ جَآءَ اَمْرُ رَبِّكَ ۚ وَاِنَّهُمْ اٰتِیْهِمْ عَذَابٌ غَیْرُ مَرْدُوْدٍ ۟
يٰۤـاِبْرٰهِيْمُஇப்ராஹீமேاَعْرِضْபுறக்கணிப்பீராகعَنْ هٰذَا ۚஇதை விட்டுاِنَّهٗநிச்சயமாகقَدْதிட்டமாகجَآءَவந்ததுاَمْرُகட்டளைرَبِّكَ‌ ۚஉம் இறைவனின்وَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اٰتِيْهِمْவரும்/அவர்களுக்குعَذَابٌவேதனைغَيْرُ مَرْدُوْدٍ‏தடுக்கபடாதது
யா இBப்ராஹீமு அஃரிள் 'அன் ஹாதா இன்னஹூ கத் ஜா'அ அம்ரு ரBப்Bபிக வ இன்னஹும் ஆதீஹிம் 'அதாBபுன் கய்ருன் மர்தூத்
முஹம்மது ஜான்
“இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, அத்தூதர்கள் இப்றாஹீமை நோக்கி) இப்றாஹீமே! நீர் இதைப் (பற்றி தர்க்கம் செய்யாது) புறக்கணித்து விடுவீராக. நிச்சயமாக (அவர்களை அழிப்பதற்காக) உமது இறைவனுடைய கட்டளை பிறந்து விட்டது. மேலும், நிச்சயமாக அவர்களால் தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வந்தடையும் (என்று கூறினார்கள்).
IFT
மேலும், எந்நிலையிலும் (நம் பக்கம்) மீளக்கூடியவராகவும் இருந்தார்! (இறுதியில் நம் வானவர்கள் அவரிடம் கூறினார்கள்:) “இப்ராஹீமே, இவ்வாறு தர்க்கம் செய்வதை விட்டுவிடுவீராக! திண்ணமாக, உம் அதிபதியின் கட்டளை வந்தாகிவிட்டது. இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாத வேதனை அவர்களிடம் வந்தே தீரும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, அத்தூதர்கள்,) “இப்றாஹீமே! நீர் இதைப் புறக்கணித்து விடும், நிச்சயமாக உமதிரட்சகனுடைய கட்டளை வந்துவிட்டது, அன்றியும் நிச்சயமாக அவர்கள் - தட்ட முடியாத வேதனை அவர்களை வந்தடையும், (என்று கூறினார்கள்.)
Saheeh International
[The angels said], "O Abraham, give up this [plea]. Indeed, the command of your Lord has come, and indeed, there will reach them a punishment that cannot be repelled."
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا یَوْمٌ عَصِیْبٌ ۟
وَلَمَّا جَآءَتْவந்த போதுرُسُلُـنَاநம் தூதர்கள்لُوْطًاலூத்திடம்سِىْٓءَசிரமத்திற்குள்ளானார்بِهِمْஅவர்களால்وَضَاقَஇன்னும் சுருங்கினார்بِهِمْஅவர்களால்ذَرْعًاமனம்وَّقَالَஇன்னும் கூறினார்هٰذَاஇதுيَوْمٌநாள்عَصِيْبٌ‏மிகக் கடுமையான(து)
வ லம்மா ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ கால ஹாதா யவ்முன் 'அஸீBப்
முஹம்மது ஜான்
நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(இப்றாஹீமிடமிருந்து) நம் தூதர்கள் லூத்திடம் வந்தபொழுது, அவர் (அந்த வானவர்களைத் தம் மக்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்று) கவலைக்குள்ளாகி அவரது மனம் சுருங்கி ‘‘இது மிக நெருக்கடியான நாள்'' என்று கூறினார்.
IFT
மேலும், நம்முடைய வானவர்கள் லூத்திடம் வந்தபோது அவர் பீதியடைந்தார். மேலும், மனவேதனைக்குள்ளானார். மேலும், கூறலானார்: “இது துன்பமானதொரு நாளாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம் தூதர்கள் லூத்திடம் வந்தபொழுது, அவர்களால் அவர் கவலைக்குள்ளாக்கப்பட்டார், மேலும், (அவர்களைக் காப்பதற்கு சக்தியின்மையினால்) அவர்களால் மன சங்கடத்திற்குள்ளானார், (அப்போது) “இது மிகக் கடினமான நாள்” என்றும் கூறினார்.
Saheeh International
And when Our messengers, [the angels], came to Lot, he was anguished for them and felt for them great discomfort and said, "This is a trying day."
وَجَآءَهٗ قَوْمُهٗ یُهْرَعُوْنَ اِلَیْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ؕ قَالَ یٰقَوْمِ هٰۤؤُلَآءِ بَنَاتِیْ هُنَّ اَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِیْ ضَیْفِیْ ؕ اَلَیْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِیْدٌ ۟
وَجَآءَهٗவந்தார்(கள்)/அவரிடம்قَوْمُهٗஅவருடைய மக்கள்يُهْرَعُوْنَவிரைந்தவர்களாகاِلَيْهِ ؕஅவர் பக்கம்وَمِنْ قَبْلُஇன்னும் இதற்கு முன்னர்كَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَஅவர்கள் செய்பவர்களாகالسَّيِّاٰتِ ؕதீயவற்றைقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேهٰٓؤُلَاۤءِஇவர்களைبَنٰتِىْஎன் பெண் பிள்ளைகள்هُنَّஅவர்கள்اَطْهَرُமிக சுத்தமானவர்(கள்)لَـكُمْ‌ ۚஉங்களுக்குفَاتَّقُوْاஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَلَا تُخْزُوْنِஎன்னை அவமான படுத்தாதீர்கள்فِىْ ضَيْفِىْ ؕஎன் விருந்தினர் விஷயத்தில்اَلَيْسَஇல்லையா?مِنْكُمْஉங்களில்رَجُلٌஓர் ஆடவர்رَّشِيْدٌ‏நல்லறிவுள்ளவர்
வ ஜா'அஹூ கவ்முஹூ யுஹ்ர'ஊன இலய்ஹி வ மின் கBப்லு கானூ யஃமலூனஸ் ஸய்யிஆத்; கால யா கவ்மி ஹா'உலா'இ Bபனாதீ ஹுன்ன அத்ஹரு லகும் Fபத்தகுல் லாஹ வலா துக்Zஜூனி Fபீ ளய்Fபீ அலய்ஸ மின்கும் ரஜுலுர் ரஷீத்
முஹம்மது ஜான்
அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(இதற்குள்) அவருடைய மக்கள் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய காரியங்களையே செய்து கொண்டிருந்தனர். (இதை நாடியே அவரிடம் அவர்கள் வந்தனர்.) அதற்கு (‘லூத்' நபி அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! இதோ! என் பெண்மக்கள் இருக்கின்றனர். (அவர்களைத் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். (உங்களுக்கு நல்லுபதேசம் செய்யும்) நல்ல மனிதன் ஒருவன் கூட உங்களில் இல்லையா?'' என்று கேட்டார்.
IFT
(இந்த விருந்தாளிகளைக் கண்டதும்) அவருடைய சமுதாயத்தினர் அவரது வீட்டை நோக்கி விரைந்தோடி வந்தார்கள். அவர்கள் முன்பே தீய செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள். லூத் (அவர்களிடம்) கூறினார்: “என்னுடைய சமுதாயத்தினரே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர், அவர்கள் உங்களுக்கு மிகவும் தூய்மையானவர்களாவர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! என் விருந்தாளிகள் விஷயத்தில் என்னைக் கேவலப்படுத்தாதீர்கள்! நேர்மையான சிந்தனை கொண்டவர் உங்களில் யாரும் இல்லையா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவருடைய சமூகத்தார் அவரின்பால் விரைந்தவர்களாக அவரிடம் வந்தனர், முன்னரும் அவர்கள் தீயவற்றையே செய்து கொண்டிருந்தனர், அதற்கு, (லூத் நபி, அவர்களிடம்,) “என்னுடைய சமூகத்தாரே!” இவர்கள் என்னுடைய பெண்மக்கள், அவர்கள் உங்களுக்கு (த்,திருமணத்திற்கு) மிக்க பரிசுத்தமானவர்கள், ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள், என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப்படுத்தியும் விடாதீர்கள், (உங்களுக்கு உபதேசிக்க) நேர்மையான மனிதன் (ஒருவர் கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
Saheeh International
And his people came hastening to him, and before [this] they had been doing evil deeds. He said, "O my people, these are my daughters; they are purer for you. So fear Allah and do not disgrace me concerning my guests. Is there not among you a man of reason?"
قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِیْ بَنٰتِكَ مِنْ حَقٍّ ۚ وَاِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِیْدُ ۟
قَالُوْاகூறினார்கள்لَقَدْ عَلِمْتَஅறிந்து கொண்டீர்مَاஇல்லைلَـنَاஎங்களுக்குفِىْ بَنٰتِكَஇடம்/பெண் பிள்ளைகள்/உம்مِنْ حَقٍّ‌ ۚஒரு தேவைوَاِنَّكَநிச்சயமாக நீர்لَـتَعْلَمُஉறுதிபட அறிவீர்مَاஎதைنُرِيْدُ‏நாடுகிறோம்
காலூ லகத் 'அலிம்த மா லனா Fபீ Bபனாதிக மின் ஹக்க், வ இன்னக லதஃலமு மா னுரீத்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘உமது பெண்மக்களிடம் எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்'' என்றும் கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள் “உம்முடைய பெண்மக்கள் எங்களுக்குத் தேவையில்லை என்பதை நீர் நன்கு அறிவீர். மேலும், நாங்கள் எதை விரும்புகின்றோம் என்பதையும் திண்ணமாக நீர் அறிவீர்!” என்று பதிலளித்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “உம்முடைய பெண் மக்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் நன்கறிவீர், நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீர் அறிந்திருக்கிறீர்? என்றும் கூறினார்கள்.
Saheeh International
They said, "You have already known that we have not concerning your daughters [i.e., women] any claim [i.e., desire], and indeed, you know what we want."
قَالَ لَوْ اَنَّ لِیْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِیْۤ اِلٰی رُكْنٍ شَدِیْدٍ ۟
قَالَகூறினார்لَوْஇருக்க வேண்டுமே!اَنَّநிச்சயமாகلِىْஎனக்குبِكُمْஉங்களிடம்قُوَّةًபலம்اَوْஅல்லதுاٰوِىْۤஒதுங்குவேன்!اِلٰىபக்கம்رُكْنٍஆதரவாளர்شَدِيْدٍ‏வலிமையானவர்
கால லவ் அன்ன லீ Bபிகும் குவ்வதன் அவ் ஆவீ இலா ருக்னின் ஷதீத்
முஹம்மது ஜான்
அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டாமா? அல்லது (உங்களைத் தடுத்து விடக்கூடிய) பலமான ஆதரவை நான் அடைய வேண்டாமா?'' என்று (மிக துக்கத்துடன்) கூறினார்.
IFT
அதற்கு லூத், “அந்தோ! உங்களைத் திருத்துகின்ற அளவுக்கு என்னிடம் வலிமை இருந்திருக்கக் கூடாதா? அல்லது நான் புகலிடம் பெறும் அளவுக்கு ஒரு வலிமைமிக்க துணை எனக்கு இருந்திருக்கக் கூடாதா?” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “உங்களைத் தடுக்கப் போதுமான பலம் எனக்கு இருந்திருப்பின் அல்லது பலமான ஆதரவை நான் அடைந்திருப்பின் (உங்களை தண்டித்து எதையெல்லாம் செய்ய இயலுமோ அவையனைத்தையும் செய்திருப்பேன்) என்று கூறினார்.
Saheeh International
He said, "If only I had against you some power or could take refuge in a strong support."
قَالُوْا یٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ یَّصِلُوْۤا اِلَیْكَ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَ ؕ اِنَّهٗ مُصِیْبُهَا مَاۤ اَصَابَهُمْ ؕ اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ ؕ اَلَیْسَ الصُّبْحُ بِقَرِیْبٍ ۟
قَالُوْاகூறினர்يٰلُوْطُலூத்தே!اِنَّاநிச்சயமாக நாங்கள்رُسُلُதூதர்கள்رَبِّكَஉம் இறைவனின்لَنْ يَّصِلُوْۤاஅறவே சேர மாட்டார்கள்اِلَيْكَ‌உம் பக்கம்فَاَسْرِஆகவே, செல்வீராகبِاَهْلِكَஉம் குடும்பத்தைக் கொண்டுبِقِطْعٍஒரு பகுதியில்مِّنَ الَّيْلِஇரவின்وَلَا يَلْتَفِتْதிரும்பிப் பார்க்க வேண்டாம்مِنْكُمْஉங்களில்اَحَدٌஒருவரும்اِلَّاதவிரامْرَاَتَكَ‌ؕஉம் மனைவிاِنَّهٗநிச்சயமாக/செய்திمُصِيْبُهَاஅடையக்கூடியதே/அவளைمَاۤ اَصَابَهُمْ‌ؕஎது/அடைகின்ற(து)/அவர்களைاِنَّநிச்சயமாகمَوْعِدَهُمُவாக்களிக்கப்பட்ட நேரம்/இவர்களின்الصُّبْحُ‌ؕவிடியற்காலைاَلَيْسَஇல்லையா?الصُّبْحُவிடியற்காலைبِقَرِيْبٍ‏சமீபமாக
காலூ யா லூது இன்னா ருஸுலு ரBப்Bபிக லய் யஸிலூ இலய்க Fப அஸ்ரி Bபி அஹ்லிக Bபிகித் 'இம் மினல் லய்லி வலா யல்தFபித் மின்கும் அஹதுன் இல்லம் ர அதக இன்னஹூ முஸீBபுஹா மா அஸாBபஹும்; இன்ன மவ்'இ தஹுமுஸ் ஸுBப்ஹ்; அலய்ஸஸ் ஸுBப்ஹு BபிகரீBப்
முஹம்மது ஜான்
(விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?”
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு லூத்துடைய விருந்தாளிகள் அவரை நோக்கி) ‘‘லூத்தே! நிச்சயமாக நாங்கள் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்(களாகிய வானவர்)களாவோம். இவர்கள் நிச்சயமாக உம்மை வந்தடைய முடியாது. (இன்று) இரவில் ஒரு சிறு பகுதி இருக்கும்பொழுது நீர் உம் குடும்பத்துடன் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக; (உமது சொல் கேளாத) உமது மனைவியைத் தவிர, உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற வேதனை நிச்சயமாக அவளையும் அடையும். (வேதனை வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?'' என்று கூறினார்கள்.
IFT
அப்பொழுது வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “லூத்தே! திண்ணமாக நாங்கள் உம் இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம். இவர்கள் உமக்கு எவ்விதத் தீங்கும் அளித்திட முடியாது! எனவே, இரவின் ஒரு பகுதி இருக்கும்போது நீர் உம்முடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்றுவிடும். உங்களில் எவரும் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டாம்! ஆனால் உம்முடைய மனைவியை உம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாம்! ஏனெனில், எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனை திண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதைச் செவியுற்ற விருந்தினர்களான மலக்குகள்,) “லூத்தே! நிச்சயமாக நாங்கள் உமதிரட்சகனின் தூதுவர்களாவோம், (இவர்கள் நிச்சயமாக உம்மை வந்தடையவே முடியாது, இரவின் ஒருபகுதியில் நீர் உம் குடும்பத்துடன் செல்வீராக! உங்களில் ஒருவரும் (அவர்களைத்) திரும்பியும் பார்க்க வேண்டாம், (உமக்கு மாறு செய்த) உம்முடைய மனைவியைத் தவிர, அவர்களைப் பீடிக்கக்கூடிய (அழிவான)து நிச்சயமாக அவளையும் பீடிக்கும், (அழிவு வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும், விடியற்காலை மிகச் சமீபமாக இல்லையா?” என்று கூறினார்கள்.
Saheeh International
They [the angels] said, "O Lot, indeed we are messengers of your Lord; [therefore], they will never reach you. So set out with your family during a portion of the night and let not any among you look back - except your wife; indeed, she will be struck by that which strikes them. Indeed, their appointment is [for] the morning. Is not the morning near?"
فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهَا حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۙ۬ مَّنْضُوْدٍ ۟ۙ
فَلَمَّاபோதுجَآءَவந்ததுاَمْرُنَاநம் கட்டளைجَعَلْنَاஆக்கினோம்عَالِيَهَاஅதன் மேல்புறத்தைسَافِلَهَاஅதன் கீழ்ப்புறமாகوَاَمْطَرْنَاஇன்னும் மழையாக பொழிந்தோம்عَلَيْهَاஅதன் மீதுحِجَارَةًகற்களைمِّنْஇருந்துسِجِّيْلٍۙ இறுக்கமாக்கப்பட்டதுمَّنْضُوْدٍۙ‏சுடப்பட்ட களிமண்
Fபலம்மா ஜா'அ அம்ருனா ஜ'அல்னா 'ஆலியஹா ஸாFபிலஹா வ அம்தர்னா 'அலய்ஹா ஹிஜாரதம் மின் ஸிஜ்ஜீலிம் மன்ளூத்
முஹம்மது ஜான்
எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நம் கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை தலைக்கீழாக கவிழ்த்து விட்டோம். (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம்.
IFT
பிறகு நமது கட்டளை(க்குரிய நேரம்) வந்த போது, அந்த ஊரைத் தலைகீழாகப் புரட்டிவிட்டோம்! மேலும், அதன் மீது சுட்டகளிமண் கற்களைத் தொடர்ந்து பொழியச் செய்தோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய கட்டளை வந்ததும், அவர்களுடைய ஊரின் மேல்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக (தலை கீழாக) ஆக்கிவிட்டோம், அன்றியும், (அதற்கு முன்னர்) அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையாகப்) பொழியச் செய்தோம்.
Saheeh International
So when Our command came, We made the highest part [of the city] its lowest and rained upon them stones of layered hard clay, [which were]
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ ؕ وَمَا هِیَ مِنَ الظّٰلِمِیْنَ بِبَعِیْدٍ ۟۠
مُّسَوَّمَةًஅடையாளமிடப்பட்டிருந்ததுعِنْدَ رَبِّكَ‌ؕஉங்கள் இறைவனால்وَ مَاஇல்லைهِىَஅவைمِنَஇருந்துالظّٰلِمِيْنَஅக்கிரமக்காரர்கள்بِبَعِيْدٍ‏தூரமாக
முஸவ்வமதன் 'இன்த ரBப்Bபிக்; வமா ஹிய மினள் ளாலிமீன BபிBப'ஈத்
முஹம்மது ஜான்
அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப் பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.)
IFT
அக்கற்கள் ஒவ்வொன்றும் உம் இறைவனால் அடையாளம் இடப்பட்டிருந்தது! மேலும் அக்கிரமக்காரர்களுக்கு இது போன்ற தண்டனை தொலைவில் இல்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (பொழியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றும்) உம் இரட்சகனால் அடையாளமிடப் பட்டதாக இருந்தது, (புரட்டப்பட்ட) அ(வ்வூரான)து இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தூரமானதுமல்ல.
Saheeh International
Marked from your Lord. And it [i.e., Allah's punishment] is not from the wrongdoers [very] far.
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ وَلَا تَنْقُصُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ اِنِّیْۤ اَرٰىكُمْ بِخَیْرٍ وَّاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ مُّحِیْطٍ ۟
وَاِلٰى مَدْيَنَ‘மத்யன்’க்குاَخَاசகோதரர்هُمْஅவர்களுடையشُعَيْبًا‌ ؕஷுஐபைقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கு இல்லைمِّنْஅறவேاِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَيْرُهٗ ؕஅவனையன்றிوَلَا تَـنْقُصُواகுறைக்காதீர்கள்الْمِكْيَالَஅளவையில்وَالْمِيْزَانَ‌இன்னும் நிறுவையில்اِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰٮكُمْகாண்கிறேன்/ உங்களைبِخَيْرٍநல்லதொரு வசதியில்وَّاِنِّىْۤஇன்னும் நிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைيَوْمٍஒரு நாளின்مُّحِيْطٍ‏சூழக்கூடியது
வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ வலா தன்குஸுல் மிக்யால வல்மீZஜான்; இன்னீ அராகும் Bபிகய்ரி(ன்)வ் வ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மிம் முஹீத்
முஹம்மது ஜான்
மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘மத்யன்' (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையையும் நிறுவையையும் குறைத்து ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து அழித்துவிடக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
IFT
மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. மேலும் அளவையிலும், நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! (இன்று) உங்களை நல்ல நிலையில் நான் காண்கின்றேன். ஆனால் (விரைவில்) துன்பம் சூழும் ஒரு நாளின் வேதனை உங்களைப் பீடிக்குமோ என நான் அஞ்சுகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மத்யன்” (என்னும் ஊர்வாசிகள்)பாலும் அவர்களுடைய சகோதரர் ஷுஐபை-(நம் தூதராக அனுப்பி வைத்தோம்,) அவர், “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், உங்களுக்கு அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அளவையும், நிறுவையையும் நீங்கள் குறைக்காதீர்கள், நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன், (அவ்வாறிருக்க “ஏன் மோசம் செய்கிறீர்கள்? அவ்வாறு செய்தால்,) நிச்சயமாக (உங்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாளின் வேதனையை உங்கள் மீது நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
Saheeh International
And to Madyan [We sent] their brother Shuʿayb. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. And do not decrease from the measure and the scale. Indeed, I see you in prosperity, but indeed, I fear for you the punishment of an all-encompassing Day.
وَیٰقَوْمِ اَوْفُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேاَوْفُواமுழுமைப்படுத்துங்கள்الْمِكْيَالَஅளவையில்وَالْمِيْزَانَஇன்னும் நிறுவையில்بِالْقِسْطِ‌நீதமாகوَلَا تَبْخَسُواஇன்னும் குறைக்காதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْيَآءَபொருள்களைهُمْஅவர்களுடையوَلَا تَعْثَوْاகலகம் செய்யாதீர்கள்فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَ‏விஷமிகளாக
வ யா கவ்மி அவ்Fபுல் மிக்யால வல்மீZஜான Bபில்கிஸ்தி வலா தBப்கஸுன் னாஸ அஷ்யா'அஹும் வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
“(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
என் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைப்படுத்துங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்.
IFT
மேலும், என்னுடைய சமுதாயத்தினரே! நேர்மையான முறையில் முழுமையாய் அளந்து கொடுங்கள்; முழுமையாய் நிறுத்துக் கொடுங்கள்! மேலும் மக்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்துத் தராதீர்கள்! பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும் என்னுடைய சமூகத்தாரே! அளவையும், நிறுவையையும் நீதமாகவே நிறைவு செய்யுங்கள், மனிதர்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்தும் விடாதீர்கள், பூமியில் குழப்பம் செய்கிறவர்களாக வரம்பு மீறியும் அலையாதீர்கள்”
Saheeh International
And O my people, give full measure and weight in justice and do not deprive the people of their due and do not commit abuse on the earth, spreading corruption.
بَقِیَّتُ اللّٰهِ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۚ۬ وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِحَفِیْظٍ ۟
بَقِيَّتُமீதப்படுத்தியதுاللّٰهِஅல்லாஹ்خَيْرٌமிக மேலானதுلَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்டவர்களாகۚ وَمَاۤஇல்லைاَنَاநான்عَلَيْكُمْஉங்கள் மீதுبِحَفِيْظٍ‏கண்காணிப்பாளன்
Bபகிய்யதுல் லாஹி கய்ருல் லகும் இன் குன்தும் மு'மினீன்; வமா அன 'அலய்கும் BபிஹFபீள்
முஹம்மது ஜான்
“நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் இலாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ்தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)'' என்றும் கூறினார்.
IFT
அல்லாஹ்வினால் மீதப்படுத்தப்பட்ட லாபமே உங்களுக்குச் சிறந்ததாகும் நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின்! ஆயினும் நான் எந்நிலையிலும் உங்களைக் கண்காணிப்பவன் அல்லன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், (உங்கள் தொழிலில்) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும், (நீங்கள் நிறுக்கும் போதும், அளக்கும் போதும் குறைத்தால் அதன் தீய விளைவுகளிலிருந்து) நான் உங்களைப் பாதுகாப்பவனும் அல்ல” (என்றும் கூறினார்.)
Saheeh International
What remains [lawful] from Allah is best for you, if you would be believers. But I am not a guardian over you."
قَالُوْا یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا ؕ اِنَّكَ لَاَنْتَ الْحَلِیْمُ الرَّشِیْدُ ۟
قَالُوْاகூறினார்கள்يٰشُعَيْبُஷுஐபேاَصَلٰوتُكَஉம் தொழுகையா?تَاْمُرُكَதூண்டுகிறது/உம்மைاَنْ نَّتْرُكَநாங்கள் விடுவதற்குمَاஎவற்றைيَعْبُدُவணங்கினார்கள்اٰبَآؤُنَاۤமூதாதைகள்/எங்கள்اَوْஅல்லதுاَنْ نَّـفْعَلَநாங்கள் செய்வதைفِىْۤசெல்வங்களில்اَمْوَالِنَاஎங்கள்مَا نَشٰٓؤُا‌ ؕநாங்கள் நாடுகின்றபடிاِنَّكَ لَاَنْتَநிச்சயமாக நீர்தான்الْحَـلِيْمُமகா சகிப்பாளர்الرَّشِيْدُ‏நல்லறிவாளர்
காலூ யா ஷு'அய்Bபு 'அ ஸலாதுக த'முருக அன் னத்ருக மா யஃBபுது ஆBபா'உனா அவ் அன் னFப்'அல Fபீ அம்வாலினா மா னஷா'ஊ இன்னக ல அன்தல் ஹலீமுர் ரஷீத்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீர் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உமது தொழுகையா உம்மைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர்தான் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்'' என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “ஷுஐபே! எங்கள் மூதாதையர் வணங்கி வந்தவற்றை நாங்கள் விட்டுவிட வேண்டும் என்றா அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்றா உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகிறது? உண்மையில் நீர் பெருந்தன்மையும் நேர்மையும் கொண்டவர்தாம்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “ஷுஐபே! எங்கள் மூதாதையர் வணங்கியவற்றையும் அல்லது எங்களுடைய செல்வங்களில் நாங்கள் நாடியவாறு செய்வதையும் நாங்கள் விட்டுவிடுமாறும் (நீர் எங்களுக்குக் கட்டளையிடும்படி) உம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது? “ நிச்சயமாக நீர் தான் மிக்க சகிப்புத் தன்மையுடையவர், (இன்னும்) நேர்மையாளர்” என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.
Saheeh International
They said, "O Shuʿayb, does your prayer [i.e., religion] command you that we should leave what our fathers worship or not do with our wealth what we please? Indeed, you are the forbearing, the discerning!"
قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَرَزَقَنِیْ مِنْهُ رِزْقًا حَسَنًا ؕ وَمَاۤ اُرِیْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰی مَاۤ اَنْهٰىكُمْ عَنْهُ ؕ اِنْ اُرِیْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ؕ وَمَا تَوْفِیْقِیْۤ اِلَّا بِاللّٰهِ ؕ عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ اُنِیْبُ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاَرَءَيْتُمْஅறிவியுங்கள்اِنْ كُنْتُநான் இருப்பதால்عَلٰى بَيِّنَةٍதெளிவான அத்தாட்சியில்مِّنْ رَّبِّىْஎன் இறைவனின்وَرَزَقَنِىْஇன்னும் வழங்கினான்/ எனக்குمِنْهُதன்னிடமிருந்துرِزْقًاஉணவைحَسَنًا‌ ؕஅழகியது / நல்லதுوَمَاۤ اُرِيْدُநாடமாட்டேன்اَنْநான் முரண்படுவதற்குاُخَالِفَكُمْஉங்களுக்குاِلٰىஇல்مَاۤஎவைاَنْهٰٮكُمْதடுக்கிறேன்/உங்களைعَنْهُ‌ ؕஅவற்றை விட்டுاِنْ اُرِيْدُநாடமாட்டேன்اِلَّاதவிரالْاِصْلَاحَசீர்திருத்துவதைمَا اسْتَطَعْتُ‌ ؕநான் இயன்றவரைوَمَاஇல்லைتَوْفِيْقِىْۤஎன் நற்பாக்கியம்اِلَّاதவிரبِاللّٰهِ‌ ؕஅல்லாஹ்வைக் கொண்டேعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلْتُநம்பிக்கை வைத்தேன்وَاِلَيْهِஅவன் பக்கமேاُنِيْبُ‏திரும்புகிறேன்
கால யா கவ்மி அர'அய்தும் இன் குன்து 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ ரZஜகனீ மின்ஹு ரிZஜ்கன் ஹஸனா; வ மா உரீது அன் உகாலிFபகும் இலா மா அன்ஹாகும் 'அன்ஹ்; இன் உரீது இல்லல் இஸ்லாஹ மஸ்ததஃத்; வமா தவ்Fபீகீ இல்லா Bபில்லாஹ்; 'அலய்ஹி தவக்கல்து வ இலய்ஹி உனீBப்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘என் மக்களே! என் இறைவன் தெளிவான அத்தாட்சிகளை எனக்களித்திருப்பதையும், அவன் எனக்கு வேண்டிய உணவை நல்லவிதமாக அளித்து வருவதையும் நீங்கள் அறிவீர்களா? (இந்நிலைமையில் மக்களை நான் மோசம் செய்யவேண்டிய அவசியமில்லை; ஆகவே,) நான் (தீமையிலிருந்து) உங்களைத் தடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு மாறுசெய்ய விரும்பவில்லை. (நீங்கள் செய்யக்கூடாது என்று கூறும் காரியத்தை நானும் செய்யமாட்டேன்.) என்னால் இயன்றவரை (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறொன்றையும்) நான் விரும்பவில்லை. அல்லாஹ்வின் உதவியின்றி நான் (உங்களைச் சீர்திருத்தும் விஷயத்தில்) வெற்றியடைய முடியாது. அவனையே நான் நம்பியிருக்கிறேன்; அவனையே நான் நோக்கியும் நிற்கிறேன்.
IFT
அதற்கு ஷுஐப் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தினரே! நீங்களே சற்று சிந்தியுங்கள். நான் என் இறைவனிட மிருந்து தெளிவான சான்றினைப் பெற்றிருக்கிறேன். அத்துடன் அவன் தன் சார்பிலிருந்து தூய்மையான உணவையும் எனக்கு வழங்கி இருக்கின்றான். (அதற்குப் பிறகும் உங்களுடைய தவறான செயல்களிலும், தடுக்கப்பட்டவற்றை உண்பதிலும் உங்களோடு எவ்வாறு நான் கூட்டுச் சேர முடியும்?) மேலும், எவற்றைச் செய்ய வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கின்றேனோ அவற்றை நான் செய்வதற்கு ஒருபோதும் விரும்புவதில்லை. என்னால் முடிந்த வரை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகின்றேன். மேலும் (நான் ஆற்ற விரும்புகின்ற அனைத்தும்) அல்லாஹ்வின் பேருதவியைப் பொறுத்தே இருக்கின்றன. நான் அவனையே முழுமையாகச் சார்ந்துவிட்டேன்! மேலும், (ஒவ்வொரு விஷயத்திலும்) அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், என்னுடைய சமூகத்தாரே! என் இரட்சகனின் தெளிவான அத்தாட்சியின் மீது நான் இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான உணவை வழங்கி இருப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? (ஆகவே) நான் (தீமையிலிருந்து) எதைவிட்டும் உங்களைத் தடுக்கின்றேனோ அதன்படி (தீமையானவற்றைச் செய்துகொண்டு) உங்களுக்கு மாறு செய்வதையும் நான் நாடவில்லை, என்னால் இயன்ற மட்டும் (உங்களைச்) சீர்திருத்துவதைத் தவிர (வேறெதையும்) நான் நாடவில்லை, எனக்கு நல்லுதவி அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை, (என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அவன் மீதே நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன், அவன்பாலே நான் மீளுகிறேன் என்று கூறினார்.
Saheeh International
He said, "O my people, have you considered: if I am upon clear evidence from my Lord and He has provided me with a good provision from Him...? And I do not intend to differ from you in that which I have forbidden you; I only intend reform as much as I am able. And my success is not but through Allah. Upon Him I have relied, and to Him I return.
وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேلَا يَجْرِمَنَّكُمْநிச்சயம் உங்களை தூண்ட வேண்டாம்شِقَاقِىْۤஎன்மீதுள்ள விரோதம்اَنْ يُّصِيْبَكُمْஉங்களை அடைவதற்க்குمِّثْلُபோன்றمَاۤஎதுاَصَابَஅடைந்ததுقَوْمَமக்களைنُوْحٍநூஹூடையاَوْஅல்லதுقَوْمَமக்களைهُوْدٍஹூதுடையاَوْஅல்லதுقَوْمَமக்களைصٰلِحٍ‌ؕஸாலிஹ்வுடையوَمَاஇல்லைقَوْمُமக்கள்لُوْطٍலூத்துடையمِّنْكُمْஉங்களுக்குبِبَعِيْدٍ‏தூரமாக
வ யா கவ்மி லா யஜ்ரி மன்னகும் ஷிகாகீ அய் யுஸீBபகும் மித்லு மா அஸாBப கவ்ம னூஹின் அவ் கவ்ம ஹூதின் அவ் கவ்ம ஸாலிஹ்; வமா கவ்மு லூதிம் மின்கும் BபிBப'ஈத்
முஹம்மது ஜான்
“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் மக்களே! உங்களுக்கு என் மீதுள்ள விரோதம் ‘நூஹ்'வுடைய மக்களையும் ‘ஹூத்' உடைய மக்களையும், ‘ஸாலிஹ்' உடைய மக்களையும் பிடித்தது போன்ற வேதனை உங்களையும் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட வேண்டாம். ‘லூத்து'டைய மக்கள் (இருந்த இடமும் காலமும்) உங்களுக்குத் தூரமாக இல்லை.
IFT
மேலும், என் சமூகத்தினரே! என்னோடு நீங்கள் கொண்டுள்ள பிணக்கும், பகைமையும் நூஹுடைய சமுதாயத்தினரை அல்லது ஹூத் மற்றும் ஸாலிஹ் உடைய சமுதாயத்தினரைப் பீடித்தது போன்ற வேதனையில் உங்களையும் கொண்டு போய்ச் சேர்த்துவிடக் கூடாது. மேலும், லூத் சமூகத்தினரோ உங்களிலிருந்து வெகு தூரத்தில் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய சமூகத்தாரே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ் உடைய சமூகத்தாரையும் அல்லது ஹுத் உடைய சமூகத்தாரையும் அல்லது ஸாலிஹ் உடைய சமூகத்தாரையும் பீடித்தது போன்ற (வேதனையான)து, உங்களையும் பீடித்துக் கொள்ளுமாறு உங்களைத் திண்ணமாக சுமத்தி விட வேண்டாம், இன்னும், லூத்துடைய சமூகத்தார் (வாழ்ந்த காலம்) உங்களுக்குத் தொலைவில் இல்லை.
Saheeh International
And O my people, let not [your] dissension from me cause you to be struck by that similar to what struck the people of Noah or the people of Hūd or the people of Ṣalih. And the people of Lot are not from you far away.
وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ اِنَّ رَبِّیْ رَحِیْمٌ وَّدُوْدٌ ۟
وَاسْتَغْفِرُوْاமன்னிப்புக் கோருங்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனிடம்ثُمَّபிறகுتُوْبُوْۤاதிருந்தி திரும்புங்கள்اِلَيْهِ‌ؕஅவன் பக்கமேاِنَّ رَبِّىْநிச்சயமாக என் இறைவன்رَحِيْمٌபெரும் கருணையாளன்وَّدُوْدٌ‏மகா நேசன்
வஸ்தக்Fபிரூ ரBப்Bபகும் தும்ம தூBபூ இலய்ஹ்; இன்ன ரBப்Bபீ ரஹீமு(ன்)வ் வதூத்
முஹம்மது ஜான்
“ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, உங்கள் இறைவனிடம் நீங்கள் மன்னிப்பைக் கோருங்கள். (உங்கள் பாவங்களை விட்டு மனம் வருந்தி) அவனிடமே நீங்கள் திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மகா கருணையுடையவன், மிக்க நேசிப்பவன் ஆவான் என்று கூறினார்.
IFT
எனவே, உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! பிறகு அவன் பக்கம் மீளுங்கள்! திண்ணமாக, என் இறைவன் கருணை பொழிபவனாகவும் (தன் படைப்பினங்கள் மீது) பேரன்பு கொண்டவனாகவும் இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், உங்கள் இரட்சகனிடம் நீங்கள் மன்னிப்புக் கோருங்கள், பின்னர் (மனம் வருந்தி) அவன் பக்கமே (தவ்பாச் செய்து) நீங்கள் மீளுங்கள், நிச்சயமாக என் இரட்சகன் மிகக் கிருபையுடையவன், மிக்க நேசிப்பவன்” (என்று கூறினார்.)
Saheeh International
And ask forgiveness of your Lord and then repent to Him. Indeed, my Lord is Merciful and Affectionate."
قَالُوْا یٰشُعَیْبُ مَا نَفْقَهُ كَثِیْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَنَرٰىكَ فِیْنَا ضَعِیْفًا ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ ؗ وَمَاۤ اَنْتَ عَلَیْنَا بِعَزِیْزٍ ۟
قَالُوْاகூறினார்கள்يٰشُعَيْبُஷுஐபேمَا نَفْقَهُநாம் விளங்கவில்லைكَثِيْرًاபலவற்றைمِّمَّا تَقُوْلُநீர் கூறுவதில்وَاِنَّاநிச்சயமாக நாம்لَـنَرٰٮكَஉம்மை காண்கிறோம்فِيْنَاஎங்களில்ضَعِيْفًا‌ ۚபலவீனராகوَلَوْلَاஇல்லாவிடில்رَهْطُكَஉம் இனத்தார்لَرَجَمْنٰكَ‌கல் எறிந்தே கொன்றிருப்போம்/உம்மைوَمَاۤஇல்லைاَنْتَநீர்عَلَيْنَاநம்மிடம்بِعَزِيْزٍ‏மதிப்புடையவராக
காலூ யா ஷு'அய்Bபு மா னFப்கஹு கதீரம் மிம்மா தகூலு வ இன்னா லனராக Fபீனா ள'ஈFப(ன்)வ் வ லவ் லா ரஹ்துக லரஜம்னாக வ மா அன்த 'அலய்னா Bபி'அZஜீZஜ்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ஷுஐபே! நீர் கூறுபவற்றில் பெரும்பாலானதை நாம் விளங்க (முடிய)வில்லை. நிச்சயமாக நாம் உம்மை எங்களில் பலவீனமானவராகவே காண்கிறோம். உமது இனத்தார் இல்லாவிடில் உம்மைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். நீர் நம்மிடம் மதிப்புடையவரல்ல'' என்றார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “ஷுஐபே! நீர் கூறுகின்ற பெரும்பாலான விஷயங்கள் எங்களுக்குப் புரிவதில்லை. மேலும், எங்களுக்கிடையே நீர் வலிமை குன்றியவராக இருப்பதைத்தான் நாங்கள் காண்கிறோம். உம்முடைய குடும்பத்தார் இல்லையென்றால், எப்பொழுதோ உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம்! மேலும் (நாங்கள் உம்மை மதிக்கும் அளவுக்கு) நீர் எங்களிடையே வலிமையுடையவர் அல்லர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “ஷுஐபே! நீர் கூறுபவற்றில் அநேகவற்றை நாம் விளங்கிக் கொள்ள (முடிய)வில்லை, நிச்சயமாக நாம் உம்மை எங்களில் மிக்க பலவீனமானவராகவே காண்கிறோம், மேலும், உம்முடைய குடும்பத்தார் இல்லாவிடில் உம்மைக் கல்லெறிந்து (கொன்று) இருப்போம், மேலும், நீர் நம்முடைய மதிப்பிற்குரியவரல்லர்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "O Shuʿayb, we do not understand much of what you say, and indeed, we consider you among us as weak. And if not for your family, we would have stoned you [to death]; and you are not to us one respected."
قَالَ یٰقَوْمِ اَرَهْطِیْۤ اَعَزُّ عَلَیْكُمْ مِّنَ اللّٰهِ ؕ وَاتَّخَذْتُمُوْهُ وَرَآءَكُمْ ظِهْرِیًّا ؕ اِنَّ رَبِّیْ بِمَا تَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟
قَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاَرَهْطِىْۤஎன் இனத்தாரா?اَعَزُّஅதிகம் மதிப்புடையவர்(கள்)عَلَيْكُمْஉங்களிடம்مِّنَ اللّٰهِ ؕஅல்லாஹ்வை விடوَ اتَّخَذْتُمُوْهُஅவனை நீங்கள் எடுத்து கொண்டீர்கள்وَرَآءَபின்னால்كُمْஉங்களுக்குظِهْرِيًّا‌ ؕஎறியப்பட்டவனாகاِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்مُحِيْطٌ‏சூழ்ந்திருப்பவன்
கால யா கவ்மி அரஹ்தீ அ'அZஜ்Zஜு 'அலய்கும் மினல் லாஹி வத்தகத்துமூஹு வரா'அகும் ளிஹ்ரிய்யன் இன்ன ரBப்Bபீ Bபிமா தஃமலூன முஹீத்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘என் மக்களே! அல்லாஹ்வைவிட என் இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் அவனை உங்கள் முதுகுப்புறம் தள்ளி விட்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்வதைச் சூழ்ந்துள்ளான்'' என்று கூறினார்.
IFT
ஷுஐப் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வைவிட என்னுடைய குடும்பத்தார்களையா அதிக வலிமையுள்ளவர்களாக நீங்கள் கருதுகிறீர்கள்? (என்னுடைய குடும்பத்தாருக்கு அஞ்சுகின்றீர்கள்; ஆனால்) அல்லாஹ்வை அலட்சியமாகப் புறக்கணித்து விட்டீர்கள்! திண்ணமாக, என்னுடைய அதிபதி நீங்கள் செய்கின்றவற்றைச் சூழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வைவிட என்னுடைய குடும்பத்தார் உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களா? நீங்களோ (அல்லாஹ்வாகிய) அவனை உங்களுடைய முதுகுக்குப் பின் தள்ளி(ப்புறக்கணித்து) விட்டீர்கள், நிச்சயமாக என் இரட்சகன் நீங்கள் செய்யக்கூடியவற்றை சூழ்ந்து அறிகிறவன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "O my people, is my family more respected for power by you than Allah? But you put Him behind your backs [in neglect]. Indeed, my Lord is encompassing of what you do.
وَیٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ؕ سَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَمَنْ هُوَ كَاذِبٌ ؕ وَارْتَقِبُوْۤا اِنِّیْ مَعَكُمْ رَقِیْبٌ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேاعْمَلُوْاநீங்கள் செயல்படுங்கள்عَلٰى مَكَانَتِكُمْஉங்கள் தகுதிக்கு ஏற்பاِنِّىْநிச்சயமாக நான்عَامِلٌ‌ ؕசெயல்படுகிறேன்سَوْفَ تَعْلَمُوْنَ ۙஅறிவீர்கள்مَنْயாருக்கு?يَّاْتِيْهِஅவருக்கு வரும்عَذَابٌஒரு வேதனைيُّخْزِيْهِஇழிவுபடுத்தும்/தன்னைوَمَنْஇன்னும் யார்?هُوَஅவர்كَاذِبٌ‌ ؕபொய்யர்وَارْتَقِبُوْۤاஎதிர் பார்த்திருங்கள்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்رَقِيْبٌ‏எதிர்பார்ப்பவன்
வ யா கவ்மிஃ மலூ 'அலா மகானதிகும் இன்னீ 'ஆமிலுன் ஸவ்Fப தஃலமூன ம(ன்)ய் ய'தீஹி 'அதாBபு(ன்)ய் யுக்Zஜீஹி வ மன் ஹுவ காதிBப்; வர்தகிBபூ இன்ன்னீ ம'அகும் ரகீBப்
முஹம்மது ஜான்
“என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் போக்கில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்? பொய் சொல்பவர் யார்? என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வீர்கள். (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் (அதை) எதிர்பார்த்திருக்கிறேன்'' (என்றும் கூறினார்).
IFT
என் சமுதாயத்தினரே! நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நான் (எனது வழியில்) செயல்பட்டுக் கொண்டு இருப்பேன். இழிவுறுத்தும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், யார் பொய் உரைக்கின்றார் என்பதையும் விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனவே, நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் உங்கள் வழியில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் வழியில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கின்றேன், எவருக்கு இழிவு படுத்தும் வேதனை அவரை வந்தடையும்? (என்றும்) இன்னும், பொய்யர் யார்? என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள், (அதனை) நீங்கள் எதிர்பார்த்தும் இருங்கள், நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்” (என்று ஷுஐப் கூறினார்.)
Saheeh International
And O my people, work according to your position; indeed, I am working. You are going to know to whom will come a punishment that will disgrace him and who is a liar. So watch; indeed, I am with you a watcher, [awaiting the outcome]."
وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا شُعَیْبًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَاَخَذَتِ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ
وَلَمَّا جَآءَவந்த போதுاَمْرُنَاநம் கட்டளைنَجَّيْنَاபாதுகாத்தோம்شُعَيْبًاஷுஐபைوَّالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍஅருளைக் கொண்டுمِّنَّا ۚநமதுوَاَخَذَتِஇன்னும் பிடித்ததுالَّذِيْنَஎவர்களைظَلَمُواஅநியாயம்செய்தார்கள்الصَّيْحَةُசப்தம்فَاَصْبَحُوْاகாலையில் ஆகிவிட்டனர்فِىْ دِيَارِهِمْதங்கள் இல்லங்களில்جٰثِمِيْنَۙ‏இறந்தவர்களாக
வ லம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஷு'அய்Bப(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ அகததில் லதீன ளலமுஸ் ஸய்ஹது Fப அஸ்Bபஹூ Fபீ தியாரிஹிம் ஜாதிமீன்
முஹம்மது ஜான்
(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் அவர்களிடம்) நம் வேதனை வந்தபொழுது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டோம். அநியாயம் செய்தவர்களை விடியற்காலை நேரத்தில் இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே (இறந்து) சடலமாக கிடந்தனர்.
IFT
இறுதியில், நமது கட்டளைக்குரிய நேரம் வந்து விட்டது. அப்போது நமது அருளால் நாம் ஷுஐபையும் அவருடைய நம்பிக்கை கொண்ட தோழர்களையும் காப்பாற்றினோம். மேலும், அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கரமான ஓசை தாக்கியது! அவர்கள் தம் ஊர்களில் தலைக்குப்புற வீழ்ந்து மடிந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அவர்களிடம்) நம்முடைய கட்டளை வந்தபொழுது ஷுஐபையும் அவருடன் விசுவாசங் கொண்டிருந்தோரையும் நம்மிடமிருந்துள்ள அருளைக் கொண்டு நாம் (இரட்சித்துக்) காப்பாற்றினோம், அநியாயம் செய்தவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது, அவர்கள் காலைப்பொழுதை தங்கள் வீடுகளில் முகம் குப்புற (இறந்து)கிடக்க அடைந்தனர்.
Saheeh International
And when Our command came, We saved Shuʿayb and those who believed with him, by mercy from Us. And the shriek seized those who had wronged, and they became within their homes [corpses] fallen prone
كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ؕ اَلَا بُعْدًا لِّمَدْیَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ ۟۠
كَاَنْ لَّمْ يَغْنَوْاஅவர்கள் வசிக்காததைப் போல்فِيْهَا‌ ؕஅதில்اَلَاஅறிந்துகொள்ளுங்கள்!بُعْدًاஅழிவுلِّمَدْيَنَமத்யனுக்குكَمَا بَعِدَتْஅழிந்தது போன்றுثَمُوْدُ‏ஸமூத்
க-அல்-லம் யக்னவ் Fபீஹா; அலா Bபுஃதல் லி மத்யன கமா Bப'இதத் தமூத்
முஹம்மது ஜான்
அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்!
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (ஓர் அடையாளமுமின்றி) அழிந்து விட்டனர். ‘ஸமூத்' (சமுதாயத்தின்) மீது சாபம் ஏற்பட்டபடியே இந்த ‘மத்யன்' (நகர சமுதாயத்தின்) மீதும் சாபம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
IFT
அங்கு அவர்கள் வாழவே இல்லை என்பது போல! தெரிந்து கொள்ளுங்கள்: இறையருளிலிருந்து மத்யன் வாசிகளும் தூக்கி எறியப்பட்டார்கள்; ஸமூத் இனத்தார் தூக்கி எறியப்பட்டது போன்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு முன்னர் அதில் அவர்கள் வசித்திருக்காதவர்களைப் போல் - (அழிந்துவிட்டனர்.) ஸமூது நாசமானது போன்றே இந்த மத்யன் சமூகத்தார்க்கும் நாசம் ஏற்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
As if they had never prospered therein. Then, away with Madyan as Thamūd was taken away.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰىமூஸாவைبِاٰيٰتِنَاநம் வசனங்களுடன்وَسُلْطٰنٍஇன்னும் அத்தாட்சிمُّبِيْنٍۙ‏தெளிவான(து)
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சியுடனும் மூஸாவை (நம் தூதராக) நிச்சயமாக நாம் அனுப்பிவைத்தோம்.
IFT
மேலும், மூஸாவை ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய அரசுப் பிரமுகர்களிடம் நம் சான்றுகளுடனும், (தூதுத்துவத்திற்கான) வெளிப்படையான அத்தாட்சியுடனும் நாம் அனுப்பி வைத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நம் வசனங்களுடனும், தெளிவான சான்றுடனும் மூஸாவை நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்-
Saheeh International
And We did certainly send Moses with Our signs and a clear authority
اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَاتَّبَعُوْۤا اَمْرَ فِرْعَوْنَ ۚ وَمَاۤ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِیْدٍ ۟
اِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَஇன்னும்مَلَا۟ ٮِٕهٖஅவனுடைய முக்கிய பிரமுகர்கள்فَاتَّبَعُوْۤاஅவர்கள் பின்பற்றினர்اَمْرَகட்டளையைفِرْعَوْنَ‌ۚஃபிர்அவ்னின்وَمَاۤஇல்லைاَمْرُகட்டளைفِرْعَوْنَஃபிர்அவ்னுடையبِرَشِيْدٍ‏நல்லறிவுடையதாக
இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபத்தBப'ஊ அம்ர Fபிர்'அவ்ன வ மா அம்ரு Fபிர்'அவ்ன Bபிரஷீத்
முஹம்மது ஜான்
(அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்). அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் (அனுப்பினோம்). ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய கூட்டத்தினர்) பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேரான வழியில் இருக்கவில்லை.
IFT
ஆயினும் அம்மக்கள் ஃபிர்அவ்னுடைய கட்டளையையே பின்பற்றினார்கள் அவனுடைய கட்டளை நேர்மையற்றதாக இருந்தபோதிலும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஃபிர் அவ்னிடமும், அவனுடைய பிரதானிகளிடமும் (அவர் சென்றார்) ஃபிர் அவ்னுடைய கட்டளையை அவர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர், ஃபிர் அவ்னுடைய கட்டளையோ நேர்மையுடையதாக இருக்கவில்லை,
Saheeh International
To Pharaoh and his establishment, but they followed the command of Pharaoh, and the command of Pharaoh was not [at all] discerning.
یَقْدُمُ قَوْمَهٗ یَوْمَ الْقِیٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ ؕ وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ ۟
يَقْدُمُமுன் செல்வான்قَوْمَهٗதன் மக்களுக்குيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்فَاَوْرَدَهُمُசேர்ப்பான்/அவர்களைالنَّارَ‌ؕநரகத்தில்وَبِئْسَஅது கெட்டதுالْوِرْدُசேருமிடம்الْمَوْرُوْدُ‏சேரப்படும்
யக்துமு கவ்மஹூ யவ்மல் கியாமதி Fப அவ்ரத ஹுமுன் னார வ Bபி'ஸல் விர்துல் மவ்ரூத்
முஹம்மது ஜான்
அவன் (ஃபிர்அவ்ன்) மறுமை நாளில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்) கொண்டு போய்ச் சேர்க்குமிடம் மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
மறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் செல்லுமிடம் மிகக் கெட்டது.
IFT
மறுமைநாளில் அவன் தன் சமுதாயத்தினர் அனைவரையும்விட முன்னணியில் இருப்பான். மேலும் தன் தலைமையில் அவர்களை நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். சேருமிடங்களில் எத்துணைக் கொடிய இடமாகும் அது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மறுமை நாளில், அவன் தன் சமூகத்தார்க்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை (நரக) நெருப்பில் சேர்ப்பான் , அவர்கள் சென்று போய்ச்சேருமிடம் மிகக்கெட்டது.
Saheeh International
He will precede his people on the Day of Resurrection and lead them into the Fire; and wretched is the place to which they are led.
وَاُتْبِعُوْا فِیْ هٰذِهٖ لَعْنَةً وَّیَوْمَ الْقِیٰمَةِ ؕ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ ۟
وَاُتْبِعُوْاஇன்னும் அவர்களை தொடர்ந்ததுفِىْ هٰذِهٖஇதில்لَـعْنَةًசாபம்وَّيَوْمَ الْقِيٰمَةِ‌ ؕஇன்னும் மறுமை நாளில்بِئْسَமிகக் கெட்டதுالرِّفْدُசன்மானம்الْمَرْفُوْدُ‏சன்மானம் கொடுக்கப்பட்டது
வ உத்Bபி'ஊ Fபீ ஹாதிஹீ லஃனத(ன்)வ் வ யவ்மல் கியாமஹ்; Bபி'ஸர் ரிFப்துல் மர்Fபூத்
முஹம்மது ஜான்
இ(வ்வுலகத்)திலும், கியாம நாளிலும் அவர்கள் சாபத்தால் பின்தொடரப்பட்டனர்; அவர்களுக்கு கிடைக்கும் (இந்த) சன்மானம் மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
இம்மையிலும் மறுமையிலும் சாபம் அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் மிகக் கெட்டது.
IFT
மேலும், அம்மக்கள் மீது இம்மையிலும் சாபம் ஏற்பட்டது. மறுமையிலும் ஏற்பட்டே தீரும்! வழங்கப்படும் வெகுமதிகளில் எத்துணை மோசமான வெகுமதி இது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உலகமாகிய) இதிலும், மறுமைநாளிலும் சாபத்தால் அவர்கள் தொடரப் பட்டுள்ளனர், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த சன்மானம் மிகக் கெட்டது.
Saheeh International
And they were followed in this [world] with a curse and on the Day of Resurrection. And wretched is the gift which is given.
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْقُرٰی نَقُصُّهٗ عَلَیْكَ مِنْهَا قَآىِٕمٌ وَّحَصِیْدٌ ۟
ذٰ لِكَஇவைمِنْ اَنْۢبَآءِசரித்திரங்களில்الْـقُرٰىஊர்கள்نَقُصُّهٗவிவரிக்கிறோம்/ இவற்றைعَلَيْكَ‌உம்மீதுمِنْهَاஇவற்றில்قَآٮِٕمٌநிற்கிறதுوَّحَصِيْدٌ‏இன்னும் அறுக்கப்பட்டது
தாலிக மின் அம்Bபா'இல் குரா னகுஸ்ஸுஹூ 'அலய்க மின்ஹா கா'இமு(ன்)வ் வ ஹஸீத்
முஹம்மது ஜான்
(நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊர்களின் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன; சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.
அப்துல் ஹமீது பாகவி
(மேலே கூறிய) இவை சில ஊர்(வாசி)களின் சரித்திரங்களாகும். இவற்றை நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் சில (இப்போதும்) இருக்கின்றன; சில அழிந்து விட்டன.
IFT
இவை சில ஊர்களைப் பற்றிய வரலாறுகளாகும்; அவற்றை நாம் உமக்கு எடுத்துச் சொல்கின்றோம். அவற்றில் சில இன்றும் இருக்கின்றன; சில முற்றிலும் அழிந்துவிட்டன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவை, சில ஊர்(வாசி)களின் சம்பவங்களாகும், இவற்றை நாம் உமக்கு அறிவித்தோம், இவற்றில் சில நிலைத்து இருக்கின்றன, சில அறுவடை செய்யப்பட்டு (வேரறுக்கப்பட்டு)ம் விட்டன.
Saheeh International
That is from the news of the cities, which We relate to you; of them, some are [still] standing and some are [as] a harvest [mowed down].
وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَمَاۤ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِیْ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَیْءٍ لَّمَّا جَآءَ اَمْرُ رَبِّكَ ؕ وَمَا زَادُوْهُمْ غَیْرَ تَتْبِیْبٍ ۟
وَمَاநாம் அநீதி இழைக்கவில்லைظَلَمْنٰهُمْஅவர்களுக்குوَلٰـكِنْஎனினும்ظَلَمُوْۤاஅநீதி இழைத்தனர்اَنْفُسَهُمْ‌தங்களுக்கேفَمَاۤ اَغْنَتْபலனளிக்கவில்லைعَنْهُஅவர்களுக்குاٰلِهَتُهُதெய்வங்கள்/ அவர்களுடையالَّتِىْஎவைيَدْعُوْنَஅழைக்கின்றார்கள்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمِنْ شَىْءٍசிறிதும்لَّمَّا جَآءَவந்த போதுاَمْرُகட்டளைرَبِّكَؕஉம் இறைவனின்وَمَا زَادُوْஅவை அதிகப்படுத்தவில்லைهُمْஅவர்களுக்குغَيْرَதவிரتَتْبِيْبٍ‏அழிவை
வமா ளலம்னாஹும் வ லாகின் ளலமூ அன்Fபுஸஹும் Fபமா அக்னத் 'அன்ஹும் ஆலிஹதுஹுமுல் லதீ யத்'ஊன மின் தூனில் லாஹி மின் ஷய்'இல் லம்மா ஜா'அ அம்ரு ரBப்Bபிக வமா Zஜாதூஹும் கய்ர தத்BபீBப்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களில் எவருக்குமே நாம் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்களே தங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டனர். உங்கள் இறைவனின் வேதனை வந்த சமயத்தில் அல்லாஹ்வை தவிர்த்து அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த தெய்வங்களில் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்கவில்லை; மேலும், நஷ்டத்தையே அவை அவர்களுக்கு அதிகப்படுத்தின!
IFT
நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். மேலும் உம் இறைவனின் கட்டளை வந்துவிட்டபோது, அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைத்தவண்ணம் இருந்த அவர்களுடைய கடவுள்கள் அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. நாசத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் அவை அவர்களுக்குத் தரவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை, எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டனர், எனவே, உமதிரட்சகனின் கட்டளை (அவர்களை அழித்துவிட) வந்த சமயத்தில், அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து (வணங்கி)க் கொண்டிருந்த அவர்களின் வணக்கத்திற்குறியவர்கள் அவர்களுக்கு எவ்விதப் பயனளிக்கவில்லை, அன்றியும், நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தவில்லை.
Saheeh International
And We did not wrong them, but they wronged themselves. And they were not availed at all by their gods which they invoked other than Allah when there came the command of your Lord. And they did not increase them in other than ruin.
وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَاۤ اَخَذَ الْقُرٰی وَهِیَ ظَالِمَةٌ ؕ اِنَّ اَخْذَهٗۤ اَلِیْمٌ شَدِیْدٌ ۟
وَكَذٰلِكَஇது போன்றுதான்اَخْذُபிடிرَبِّكَஉம் இறைவனின்اِذَاۤ اَخَذَஅவன் பிடித்தால்الْقُرٰىஊர்களைوَهِىَஅவையோظَالِمَةٌ‌ ؕஅநியாயம் புரிந்தவைاِنَّநிச்சயமாகاَخْذَهٗۤஅவனுடைய பிடிاَلِيْمٌதுன்புறுத்தக் கூடியதுشَدِيْدٌ‏மிகக் கடுமையானது
வ கதாலிக அக்து ரBப்Bபிக இதா அகதல் குரா வ ஹிய ளாலிமஹ்; இன்ன அக்தஹூ அலீமுன் ஷதீத்
முஹம்மது ஜான்
அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அநியாயம் செய்கின்ற ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதும் துன்புறுத்தக் கூடியதும் ஆகும்.
IFT
மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஊர்களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய தண்டனை இப்படித்தான் இருக்கும்! திண்ணமாக, அவனது தண்டனை வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஊர்களை-அவை அநியாயம் செய்து கொண்டிருக்க (வேதனையைக் கொண்டு) அவன் பிடித்தால் உம்முடைய இரட்சகனின் பிடி இப்படித்தான் இருக்கும், நிச்சயமாக அவனுடைய பிடியானது துன்புறுத்தக் கூடியது, மிக்க கடினமானது.
Saheeh International
And thus is the seizure of your Lord when He seizes the cities while they are committing wrong. Indeed, His seizure is painful and severe.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ؕ ذٰلِكَ یَوْمٌ مَّجْمُوْعٌ ۙ لَّهُ النَّاسُ وَذٰلِكَ یَوْمٌ مَّشْهُوْدٌ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيَةًஓர் அத்தாட்சிلِّمَنْஎவருக்குخَافَபயந்தார்عَذَابَவேதனைالْاٰخِرَةِ‌ ؕமறுமையின்ذٰ لِكَஅதுيَوْمٌநாள்مَّجْمُوْعٌ  ۙஒன்று சேர்க்கப்படும்لَّهُஅதில்النَّاسُமக்கள்وَذٰ لِكَஇன்னும் அதுيَوْمٌநாள்مَّشْهُوْدٌ‏சமர்ப்பிக்கப்படும்
இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிமன் காFப 'அதாBபல் ஆகிரஹ்; தாலிக யவ்மும் மஜ்மூ'உல் லஹுன் னாஸு வ தாலிக யவ்மும் மஷ்ஹூத்
முஹம்மது ஜான்
நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.
அப்துல் ஹமீது பாகவி
மறுமையின் வேதனையைப் பயப்படக்கூடியவருக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் அது. அவர்கள் அனைவரும் (இறைவனின் முன்னால்) கொண்டு வரப்படக்கூடிய நாளுமாகும் அது.
IFT
உண்மையில், மறுமைநாளின் வேதனை குறித்து அஞ்சும் ஒவ்வொருவருக்கும் இதில் ஒரு சான்று இருக்கிறது. அது மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும் நாளாகும். அன்று நடைபெறுகின்ற அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மறுமையின் வேதனையைப் பயப்படக் கூடியவருக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது, அ(ம்மறுமையான)து ஒருநாள் - அதற்காக மனிதர்கள் ஒன்று சேர்க்கப் படுவார்கள், இன்னும், அது (அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் சந்நிதியில்) முன்னிலைப்படுத்தப்படும் நாளாகும்.
Saheeh International
Indeed in that is a sign for those who fear the punishment of the Hereafter. That is a Day for which the people will be collected, and that is a Day [which will be] witnessed.
وَمَا نُؤَخِّرُهٗۤ اِلَّا لِاَجَلٍ مَّعْدُوْدٍ ۟ؕ
وَمَاநாம் பிற்படுத்த மாட்டோம்نُؤَخِّرُهٗۤஅதைاِلَّاதவிரلِاَجَلٍஒரு தவணைக்கேمَّعْدُوْدٍؕ‏எண்ணப்பட்டது
வமா னு'அக்கிருஹூ இல்லா லி அஜலிம் மஃதூத்
முஹம்மது ஜான்
குறிப்பிட்ட தவணைக்காகவே தவிர அதனை நாம் பிற்படுத்தவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஒரு சொற்ப தவணைக்கே தவிர அதை நாம் பிற்படுத்தி வைக்கவில்லை.
IFT
அந்நாளைக் கொண்டு வருவதில் நாம் அதிக தாமதம் செய்யப்போவதில்லை; நிர்ணயிக்கப்பட்ட சொற்ப காலத்தைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கென குறிப்பிடப்பட்ட தவணைக்காகவே தவிர, அதனை நாம் பிற்படுத்தி வைக்கவில்லை.
Saheeh International
And We do not delay it except for a limited term.
یَوْمَ یَاْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖ ۚ فَمِنْهُمْ شَقِیٌّ وَّسَعِیْدٌ ۟
يَوْمَநாளில்يَاْتِஅது வரும்لَا تَكَلَّمُபேசாதுنَفْسٌஎந்த ஓர் ஆன்மாاِلَّاதவிரبِاِذْنِهٖ‌ۚஅவனுடைய அனுமதி கொண்டேفَمِنْهُمْஅவர்களில்شَقِىٌّதுர்ப்பாக்கியவான்وَّسَعِيْدٌ‏இன்னும் நற்பாக்கியவான்
யவ்ம யாதி லா தகல்லமு னFப்ஸுன் இல்லா Bபி இத்னிஹ்; Fபமின்ஹும் ஷகிய்யு(ன்)வ் வ ஸ'ஈத்
முஹம்மது ஜான்
அந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களில் துர்பாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கிய சாலிகளும் இருப்பர்.
அப்துல் ஹமீது பாகவி
அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு மனிதனும் (அவனுடன்) பேசமுடியாது. அவர்களில் துர்ப்பாக்கியவான்களும் உள்ளனர்; நற்பாக்கியவான்களும் உள்ளனர்.
IFT
அந்நாள் வரும்போது இறைவனின் அனுமதி இன்றி எந்த மனிதனும் பேச முடியாது. பிறகு அவர்களில் சிலர் துர்பாக்கியவான்களாகவும் வேறு சிலர் நற்பேறுடையவர்களாகவும் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி, எந்த ஆத்மாவும் (அவனுடன்) பேச முடியாது, அவர்களில் துர்பாக்கியவானும், நற்பாக்கியவானுமிருப்பர்.
Saheeh International
The Day it comes no soul will speak except by His permission. And among them will be the wretched and the prosperous.
فَاَمَّا الَّذِیْنَ شَقُوْا فَفِی النَّارِ لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّشَهِیْقٌ ۟ۙ
فَاَمَّاஆகவேالَّذِيْنَ شَقُوْاதுர்ப்பாக்கியமடைந்தவர்கள்فَفِى النَّارِநரகில்لَهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில்زَفِيْرٌபெரும் கூச்சல்وَّشَهِيْقٌ ۙ‏இன்னும் இறைச்சல்
Fப அம்மல் லதீன ஷகூ FபFபின் னாரி லஹும் Fபீஹா ZஜFபீரு(ன்)வ் வ ஷஹீக்
முஹம்மது ஜான்
துர்பாக்கிய சாலிகள் (நரக) நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
துர்ப்பாக்கியவான்கள் நரகத்தில் வீழ்த்தப்படுவார்கள். (வேதனையைத் தாங்க முடியாமல்) அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டுக் கதறுவார்கள்.
IFT
எவர்கள் துர்பாக்கியவான்களோ அவர்கள் நரகம் செல்வார்கள்! அங்கு (வெப்பம் மற்றும் தாகத்தின் கடுமையால்) மூச்சிரைக்கக் கூச்சலிடுவார்கள்; கதறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, துர்ப்பாக்கியமடைந்து விட்டனரே அத்தகையோர் - நரகத்தில் (வீழ்த்தப்படுவார்கள், அப்பொழுது வேதனையத் தாங்க முடியாது) – அதில் அவர்களுக்கு (கழுதையின் சப்தத்தைப் போன்று தொடக்கத்தில்) பெரும் கூச்சலும் (இறதியில்) தேம்பியழுதலும் இருக்கும்.
Saheeh International
As for those who were [destined to be] wretched, they will be in the Fire. For them therein is [violent] exhaling and inhaling.
خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا یُرِیْدُ ۟
خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமானவர்கள்فِيْهَاஅதில்مَا دَامَتِநிலைத்திருக்கும்வரைالسَّمٰوٰتُவானங்கள்وَالْاَرْضُஇன்னும் பூமிاِلَّاதவிரمَا شَآءَநாடியதைرَبُّكَ‌ ؕஉம் இறைவன்اِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்فَعَّالٌசெய்பவன்لِّمَاநாடுவான்يُرِيْدُ‏எதை
காலிதீன Fபீஹா மா தாமதிஸ் ஸமாவாது வல் அர்ளு இல்லா மா ஷா'அ ரBப்Bபுக்; இன்ன ரBப்Bபக Fப' 'ஆலுல் லிமா யுரீத்
முஹம்மது ஜான்
உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை அதில் அவர்கள் தங்கியும் விடுவார்கள். நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவற்றை (தடையின்றி) செய்து முடிப்பவன்.
IFT
வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கு அவர்கள் அதே நிலையிலேயே கிடப்பார்கள்; ஆனால் (அந்நிலையை மாற்ற) உம் இறைவன் நாடினாலே தவிர! தான் நாடுவதைச் செய்வதற்கு முழு அதிகாரம் உள்ளவனாக அவன் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உமதிரட்சகன் நாடினாலன்றி, வானங்கள், மற்றும் பூமி நிலைத்திருக்குங் காலமெல்லாம் அதில் அவர்கள் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள், நிச்சயமாக உமதிரட்சகன் தான் நாடியதை(த் தடையின்றி)ச் செய்(து முடிப்)பவன்.
Saheeh International
[They will be] abiding therein as long as the heavens and the earth endure, except what your Lord should will. Indeed, your Lord is an effecter of what He intends.
وَاَمَّا الَّذِیْنَ سُعِدُوْا فَفِی الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ عَطَآءً غَیْرَ مَجْذُوْذٍ ۟
وَاَمَّاஆகவேالَّذِيْنَ سُعِدُوْاநற்பாக்கியமடைந்தவர்கள்فَفِى الْجَـنَّةِசொர்க்கத்தில்خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்فِيْهَاஅதில்مَا دَامَتِநிலைத்திருக்கும்வரைالسَّمٰوٰتُவானங்கள்وَالْاَرْضُஇன்னும் பூமிاِلَّا مَا شَآءَநாடியதைத் தவிரرَبُّكَ‌ ؕஉம் இறைவன்عَطَآءًஅருட்கொடையாகغَيْرَ مَجْذُوْذٍ‏முடிவுறாதது
வ அம்மல் லதீன ஸு'இதூ FபFபில் ஜன்னதி காலிதீன Fபீஹா மா தாமதிஸ் ஸமாவாது வல் அர்ளு இல்லா மா ஷா'அ ரBப்Bபுக்; அதா'அன் கய்ர மஜ்தூத்
முஹம்மது ஜான்
நற்பாக்கிய சாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நற்பாக்கியவான்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். உமது இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை அதில்தான் அவர்கள் தங்கி விடுவார்கள். (அது) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட்கொடையாகும்.
IFT
மேலும் எவர்கள் நற்பேறுடையவர்களோ அவர்கள் சுவனம் செல்வார்கள். வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்; ஆனால் (அந்நிலையை மாற்ற) உம் இறைவன் நாடினாலே தவிர! முடிவுறாத அருட்கொடைகள் (அங்கு) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நற்பாக்கியமடைந்து விட்டனரே! அத்தகையோர்-சுவனபதியில் (நுழைந்து விடுவார்கள்.) உமதிரட்சகன் நாடினாலன்றி, வானங்கள், மற்றும் பூமி நிலைத்திருக்குங் காலமெல்லாம் அதில்தான் அவர்கள், நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
And as for those who were [destined to be] prosperous, they will be in Paradise, abiding therein as long as the heavens and the earth endure, except what your Lord should will - a bestowal uninterrupted.
فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّمَّا یَعْبُدُ هٰۤؤُلَآءِ ؕ مَا یَعْبُدُوْنَ اِلَّا كَمَا یَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُ ؕ وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِیْبَهُمْ غَیْرَ مَنْقُوْصٍ ۟۠
فَلَا تَكُஆகிவிடாதீர்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில்مِّمَّا يَعْبُدُவணங்குபவற்றில்هٰٓؤُلَاۤءِ ؕஇவர்கள்مَا يَعْبُدُوْنَஇவர்கள் வணங்கவில்லைاِلَّاதவிரكَمَاபோன்றேيَعْبُدُவணங்கினார்(கள்)اٰبَآؤُமூதாதைகள்هُمْஇவர்களுடையمِّنْ قَبْلُ‌ؕமுன்னர்وَاِنَّاநிச்சயமாக நாம்لَمُوَفُّوْهُمْமுழுமையாகக் கொடுப்போம்/இவர்களுக்குنَصِيْبَهُمْபாகத்தை/ இவர்களுடையغَيْرَ مَنْقُوْصٍ‏குறைக்கப்படாமல்
Fபலா தகு Fபீ மிர்யதிம் மிம்ம்மா யஃBபுது ஹா'உலா'; மா யஃBபுதூன இல்லா கமா யஃBபுது ஆBபா'உஹும் மின் கBப்ல்; வ இன்னா லமுவFப் Fபூஹும் னஸீBபஹும் கய்ர மன்கூஸ்
முஹம்மது ஜான்
(நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களும் வணங்குகிறார்கள்; நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழுமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இணைவைத்து வணங்கும்) இவர்கள் வணங்குபவற்றைப் பற்றி (இவர்களிடம் ஏதும் ஆதாரம் இருக்குமோ என்று) நீர் சந்தேகப்பட வேண்டாம். (ஓர் ஆதாரமுமில்லை. எனினும்,) இதற்கு முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தது போன்றே இவர்களும் (ஆதாரம் எதுவுமின்றியே) வணங்குகின்றனர். இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை (இவர்களுடைய மூதாதைகளுக்குக் கொடுத்து இருந்தவாறே) இவர்களுக்கும் முழுமையாக ஒரு குறைவுமின்றி நிச்சயமாக நாம் கொடுப்போம்.
IFT
எனவே (நபியே!) இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கடவுள்கள் குறித்து நீர் சற்றும் சந்தேகம் கொள்ள வேண்டாம். இவர்களோ முன்பு தம் மூதாதையர் எவ்வாறு ஆராதனை செய்து வந்தார்களோ அவ்வாறே (கண்மூடித்தனமாக) ஆராதனை செய்து வருகிறார்கள். மேலும், திண்ணமாக நாம் இவர்களுக்குரிய பங்கினை யாதொரு குறைவுமின்றி நிறைவாகக் கொடுப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) இவர்கள் வணங்குபவைகளைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம், (இதற்கு) முன்னர் இவர்களுடைய மூதாதையர் (யாதொரு ஆதாரமுமின்றி) வணங்கிக் கொண்டிருந்ததைப் போன்றே தவிர இவர்களும் வணங்கவில்லை, இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை இவர்களுக்கும், குறைவின்றி நிச்சயமாக நாம் பூரணமாக கொடுக்கக் கூடியவர்கள்.
Saheeh International
So do not be in doubt, [O Muhammad], as to what these [polytheists] are worshipping. They worship not except as their fathers worshipped before. And indeed, We will give them their share undiminished.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاகொடுத்தோம்مُوْسَىமூஸாவுக்குالْكِتٰبَவேதத்தைفَاخْتُلِفَமாறுபாடு கொள்ளப்பட்டதுفِيْهِ‌ ؕஅதில்وَ لَوْلَاஇல்லையெனில்كَلِمَةٌஒரு வாக்குسَبَقَتْமுந்தியதுمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்لَـقُضِىَமுடிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُمْ‌ ؕஇவர்களுக்கிடையில்وَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مِّنْهُஅதில்مُرِيْبٍ‏மிக ஆழமான (சந்தேகம்)
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீஹ்; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட்ட வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (இந்தக் குர்ஆனில் இவர்கள் மாறுபடுகின்றவாறே) அதிலும் அவர்கள் மாறுபட்டார்கள். (அவர்கள் தண்டனை பெறுகின்ற காலம் மறுமைதான் என்று) உங்கள் இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில் (இம்மையிலேயே) இவர்களுடைய காரியம் முடிவு பெற்றிருக்கும். நிச்சயமாக (மக்காவாசிகளாகிய) இவர்களும் (இந்தக் குர்ஆனைப் பற்றிக் குழப்பமான) சந்தேகத்தில் இருக்கின்றனர்.
IFT
நாம் (இதற்கு முன்பு) மூஸாவுக்கும் வேதத்தை அருளியிருக்கின்றோம். அது குறித்தும் கருத்து முரண்பாடு கொள்ளப்பட்டது; (இன்று உமக்கு அருளப்பட்டிருக்கும் இந்த வேதத்தை ஏற்பதில் கருத்து முரண்பாடு கொள்ளப்படுவதைப் போன்று!) உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்படாதிருந்தால், கருத்து முரண்பாடு கொண்டவர்களுக் கிடையே எப்போதோ தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். உண்மை யாதெனில் இவர்கள் இதனைக் குறித்து கடும் சந்தேகத்தில் இருக்கிறார்கள். மேலும், மனக்கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒருவேதத்தைக் கொடுத்தோம், பின்னர், அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது, (அவர்களின் காலம் மறுமை தான் என்று) உமதிரட்சகனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில், இவர்களுக்கிடையில் (இம்மையிலேயே) தீர்ப்புச் செய்யப்பட்டிருக்கும், மேலும், நிச்சயமாக அவர்கள் குர்ஆனாகிய அதைப் பற்றி அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் இருக்கின்றனர்.
Saheeh International
And We had certainly given Moses the Scripture, but it came under disagreement. And if not for a word that preceded from your Lord, it would have been judged between them. And indeed they are, concerning it [i.e., the Qur’an], in disquieting doubt.
وَاِنَّ كُلًّا لَّمَّا لَیُوَفِّیَنَّهُمْ رَبُّكَ اَعْمَالَهُمْ ؕ اِنَّهٗ بِمَا یَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
وَاِنَّநிச்சயமாகكُلًّاஎல்லோருக்கும்لَّمَّاநிச்சயமாக முழுமையாகக் கொடுப்பான்لَيُوَفِّيَنَّهُمْஅவர்களுக்குرَبُّكَஉம் இறைவன்اَعْمَالَهُمْ‌ ؕஅவர்களுடைய செயல்களைاِنَّهٗநிச்சயமாக அவன்بِمَا يَعْمَلُوْنَஅவர்கள் செய்பவற்றைخَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
வ இன்ன குல்லல் லம்மா ல யுவFப்Fபியன்னஹும் ரBப்Bபுக அஃமாலஹும்; இன்னஹூ Bபிமா யஃமலூன கBபீர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழுமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமது இறைவன் (அவர்கள் ஒவ்வொருவருக்கும்) அவர்களுடைய செய்கைக்குரிய கூலியை முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
மேலும், உம் இறைவன் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்குரிய கூலியை நிறைவாகக் கொடுத்தே தீருவான்! திண்ணமாக, அவன் அவர்களின் செயல்கள் அனைத்தையும் நன் கறிந்தவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகன், அவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களுடைய செயல்(களுக்குரிய கூலி)களை திட்டமாக அவர்களுக்கு பூரணமாகக் கொடுப்பான், நிச்சயமாக அவன் அவர்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
Saheeh International
And indeed, each [of the believers and disbelievers] - your Lord will fully compensate them for their deeds. Indeed, He is Aware of what they do.
فَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا ؕ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
فَاسْتَقِمْநிலையாக இருங்கள்كَمَاۤபோன்றேاُمِرْتَநீர் ஏவப்பட்டீர்وَمَنْஇன்னும் எவர்(கள்)تَابَதிருந்தி திரும்பினார்(கள்)مَعَكَஉம்முடன்وَلَا تَطْغَوْا‌ ؕவரம்பு மீறாதீர்கள்اِنَّهٗநிச்சயமாக அவன்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
Fபஸ்தகிம் கமா உமிர்த வ மன் தாBப ம'அக வலா தத்கவ்; இன்னஹூ Bபிமா தஃமலூன Bபஸீர்
முஹம்மது ஜான்
நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக;வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்பட்டது போன்றே, நீரும் இணை வைத்து வணங்குவதிலிருந்து விலகி உம்முடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
எனவே, (நபியே!) நீரும் (நிராகரிப்பையும், கீழ்ப்படியாமையையும் கைவிட்டு, நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் பக்கம்) திரும்பிய உம்முடைய தோழர்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்டது போன்று நேரான வழியில் நிலைத்திருங்கள். மேலும், அடிபணிவதற்கான வரம்புகளை மீறிவிடாதீர்கள். நீங்கள் செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் திண்ணமாக உங்கள் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே) உமக்கேவப்பட்ட பிரகாரம் நீரும், உம்முடன் பச்சாதாபப் பட்டோரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள், (இதில்) நீங்கள் வரம்பு மீறியும் விடாதீர்கள், நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கிறவன்.
Saheeh International
So remain on a right course as you have been commanded, [you] and those who have turned back with you [to Allah], and do not transgress. Indeed, He is Seeing of what you do.
وَلَا تَرْكَنُوْۤا اِلَی الَّذِیْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُ ۙ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِیَآءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ۟
وَلَا تَرْكَنُوْۤاநீங்கள் சாய்ந்து விடாதீர்கள்اِلَىபக்கம்الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْاஅநீதி இழைத்தார்கள்فَتَمَسَّكُمُஉங்களை அடைந்து விடும்النَّارُۙநெருப்புوَمَاஇல்லைلَـكُمْஉங்களுக்குمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிمِنْ اَوْلِيَآءَபாதுகாப்பவர்கள் எவரும்ثُمَّ لَا تُنْصَرُوْنَ‏பிறகு/உதவி செய்யப்பட மாட்டீர்கள்
வ லா தர்கனூ இலல் லதீன ளலமூ Fபதமஸ்ஸ குமுன் னாரு வமா லகும் மின் தூனில் லாஹி மின் அவ்லியா'அ தும்ம லா துன்ஸரூன்
முஹம்மது ஜான்
இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) வரம்பு மீறுபவர்கள் பக்கம் நீங்கள் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்களைப் பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது.
IFT
இந்த அக்கிரமக்காரர்களின் பக்கம் சிறிதும் சாய்ந்துவிடாதீர்கள். அவ்வாறு சாய்ந்தால், நரக நெருப்பு உங்களைச் சூழ்ந்து கொள்ளும்! மேலும் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பிறகு (எங்கிருந்தும்) உங்களுக்கு உதவி கிடைக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) இன்னும், அநியாயம் செய்து கொண்டிருப்போரின் பால் (சிறிதும்) நீங்கள் சாய்ந்துவிடாதீர்கள், அவ்வாறாயின், நரக நெருப்பு உங்களைத் தீண்டிவிடும், அல்லாஹ்வையன்றி எந்த உற்ற நேசர்களும் உங்களுக்கு இல்லை, பின்னர், (எவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
Saheeh International
And do not incline toward those who do wrong, lest you be touched by the Fire, and you would not have other than Allah any protectors; then you would not be helped.
وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَیِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ الَّیْلِ ؕ اِنَّ الْحَسَنٰتِ یُذْهِبْنَ السَّیِّاٰتِ ؕ ذٰلِكَ ذِكْرٰی لِلذّٰكِرِیْنَ ۟ۚ
وَاَقِمِநிலை நிறுத்துவீராக!الصَّلٰوةَதொழுகையைطَرَفَىِஇரு முனைகளில்النَّهَارِபகலின்وَزُلَـفًاஇன்னும் ஒரு பகுதியில்مِّنَ الَّيْلِ‌ ؕஇரவில்اِنَّ الْحَسَنٰتِநிச்சயமாகநன்மைகள்يُذْهِبْنَபோக்கி விடுகின்றனالسَّيِّاٰتِ ؕபாவங்களைذٰ لِكَ ذِكْرٰىஇது/ஒருநல்லுபதேசம்لِلذّٰكِرِيْنَ ۚ‏நினைவு கூருபவர்களுக்கு
வ அகிமிஸ் ஸலாத தரFபயின் னஹாரி வ ZஜுலFபம் மினல் லய்ல்; இன்னல் ஹஸனாதி யுத்ஹிBப்னஸ் ஸய்யி ஆத்; தாலிக திக்ரா லித் தாகிரீன்
முஹம்மது ஜான்
பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
பகலில் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவில் ஒரு பாகத்திலும், நீர் (தவறாது) தொழுது வருவீராக. நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டுதலாகும்.
IFT
மேலும், பகலின் இரு ஓரங்களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், பகலின் இருமுனை(களாகிய காலை, மாலை)களிலும், இரவின் நேரங்களிலும் தொழுகையை நிறைவேற்றுவீராக! நிச்சயமாக நற்செயல்கள் தீய செயல்களைப் போக்கிவிடும், (அல்லாஹ்வை) நினைவு கூர்வோருக்கு இது ஒரு நல்லுபதேசமாகும்.
Saheeh International
And establish prayer at the two ends of the day and at the approach of the night. Indeed, good deeds do away with misdeeds. That is a reminder for those who remember.
وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
وَاصْبِرْபொறுப்பீராகفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُضِيْعُவீணாக்க மாட்டான்اَجْرَகூலியைالْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிபவர்களின்
வஸ்Bபிர் Fப இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்திருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்தவர்களின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்.
IFT
மேலும், பொறுமையைக் கைக்கொள்வீராக! நற்செயல்கள் புரிவோரின் கூலியை திண்ணமாக அல்லாஹ் வீணாக்குவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே) பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகானவற்றைச் செய்தோரின் கூலியை வீணாக்கிவிட மாட்டான்.
Saheeh International
And be patient, for indeed, Allah does not allow to be lost the reward of those who do good.
فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِیَّةٍ یَّنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِی الْاَرْضِ اِلَّا قَلِیْلًا مِّمَّنْ اَنْجَیْنَا مِنْهُمْ ۚ وَاتَّبَعَ الَّذِیْنَ ظَلَمُوْا مَاۤ اُتْرِفُوْا فِیْهِ وَكَانُوْا مُجْرِمِیْنَ ۟
فَلَوْ لَا كَانَஇருந்திருக்க வேண்டாமா?مِنَ الْقُرُوْنِதலை முறையினர்களில்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்اُولُوْا بَقِيَّةٍசிறந்தோர்يَّـنْهَوْنَதடுக்கின்றார்கள்عَنِ الْفَسَادِவிஷமத்தை விட்டுفِى الْاَرْضِபூமியில்اِلَّاஎனினும்قَلِيْلًاகுறைவானவர்(கள்)مِّمَّنْஇருந்து/எவர்கள்اَنْجَيْنَاநாம் பாதுகாத்தோம்مِنْهُمْ‌ ۚஅவர்களில்وَاتَّبَعَஇன்னும் பின்பற்றினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தனர்مَاۤஎதில்اُتْرِفُوْاஇன்பமளிக்கப்பட்டார்கள்فِيْهِஅதில்وَكَانُوْاஇன்னும் இருந்தனர்مُجْرِمِيْنَ‏குற்றவாளிகளாக
Fபலவ் லா கான மினல் குரூனி மின் கBப்லிகும் ஊலூ Bபகிய்யதி(ன்)ய் யன்ஹவ்ன 'அனில் Fபஸாதி Fபில் அர்ளி இல்லா கலீலம் மிம்மன் அன்ஜய்னா மின்ஹும்; வத்தBப'அல் லதீன ளலமூ மா உத்ரிFபூ Fபீஹி வ கானூ முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்வச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு முன்னிருந்த சந்ததிகளில் (தாங்களும் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்து மற்ற மனிதர்களும்) பூமியில் விஷமம் செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் (அதிகமாக) இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சொற்ப எண்ணிக்கையில்தான் இருந்தனர். நாம் அவர்களை பாதுகாத்துக் கொண்டோம். ஆனால், (பெரும்பாலான) அநியாயக்காரர்களோ தங்கள் ஆசாபாசங்களைப் பின்பற்றிக் குற்றம் செய்பவர்களாகவே இருந்தனர்.
IFT
பூமியில் குழப்பம் விளைவிப்பதைத் தடுக்கக்கூடிய நல்லவர்கள் உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமூகங்களில் இருந்திருக்க வேண்டாமா? அப்படிப்பட்டவர்கள் இருந்தாலும் மிகக் குறைவாக இருந்திருக்கிறார்கள். அவர்களை அம்மக்களிட மிருந்து நாம் காப்பாற்றினோம். ஆனால் அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சுகபோக வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தார்கள்; மேலும் குற்றவாளிகளாக இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு முன்னிருந்த சமூகத்தார்களில், பூமியில் குழப்பம் செய்யாது தடுத்து வரக்கூடிய அறிவாளிகள் இருந்திருக்கவேண்டாமா? அவர்களிலிருந்து நாம் யாரைக் காப்பாற்றினோமோ அந்த சொற்ப எண்ணிக்கையினர் தவிர (மற்ற அனைவரும் குழப்பவாதிகளாக இருந்தனர்.) ஆனால், அநியாயக்காரர்கள் எதில் சுகபோகமாக்கப் பட்டிருந்தார்களோ அதனையே பின்பற்றினார்கள், இன்னும் குற்றம் செய்பவர்களாகவும் இருந்தனர்.
Saheeh International
So why were there not among the generations before you those of enduring discrimination forbidding corruption on earth - except a few of those We saved from among them? But those who wronged pursued what luxury they were given therein, and they were criminals.
وَمَا كَانَ رَبُّكَ لِیُهْلِكَ الْقُرٰی بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ ۟
وَمَا كَانَஇருக்க வில்லைرَبُّكَஉம் இறைவன்لِيُهْلِكَஅழிப்பவனாகالْقُرٰىஊர்களைبِظُلْمٍஅநியாயமாகوَّاَهْلُهَاஅவற்றில் வசிப்போரோمُصْلِحُوْنَ‏சீர்திருத்துபவர்கள்
வமா கான ரBப்Bபுக லியுஹ்லிகல் குரா Bபிளுல்மி(ன்)வ் வ அஹ்லுஹா முஸ்லிஹூன்
முஹம்மது ஜான்
(நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரை (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உமது இறைவன் அழித்துவிட மாட்டான்.
IFT
மேலும், உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) ஊர்களை-அவ்வூரார் சீர்திருத்துபவர்களாக இருக்கும் நிலையில், அநியாயமாக உமதிரட்சகன் அழித்து விடுபவனாக இல்லை.
Saheeh International
And your Lord would not have destroyed the cities unjustly while their people were reformers.
وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً وَّلَا یَزَالُوْنَ مُخْتَلِفِیْنَ ۟ۙ
وَلَوْ شَآءَநாடியிருந்தால்رَبُّكَஉம் இறைவன்لَجَـعَلَஆக்கியிருப்பான்النَّاسَமக்களைاُمَّةً وَّاحِدَةً‌ஒரே வகுப்பினராகوَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ‏அவர்கள் மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்
வ லவ் ஷா'அ ரBப்Bபுக லஜ'அலன்ன்னாஸ உம்மத(ன்)வ் வா ஹிதத(ன்)வ் வலா யZஜாலூன முக்தலிFபீன்
முஹம்மது ஜான்
உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடவில்லை.) அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டேயிருப்பார்கள்.
IFT
உம் இறைவன் நாடினால், நிச்சயம் மனித இனம் முழுவதையும் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு இல்லை.) ஆதலால், இனி அவர்கள் மாறுபட்ட வழிமுறைகளில்தான் சென்று கொண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உமதிரட்சகன் நாடியிருந்தால் (அனைத்து) மனிதர்களை ஒரே சமூகத்தினராக ஆக்கியிருப்பான், இன்னும், அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக் கொண்டவர்களாவே இருப்பார்கள்-
Saheeh International
And if your Lord had willed, He could have made mankind one community; but they will not cease to differ,
اِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ ؕ وَلِذٰلِكَ خَلَقَهُمْ ؕ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟
اِلَّاதவிரمَنْஎவர்رَّحِمَஅருள் புரிந்தான்رَبُّكَ‌ ؕஉம் இறைவன்وَلِذٰلِكَஇதற்காகத்தான்خَلَقَهُمْ‌அவன் படைத்தான்وَتَمَّتْநிறைவேறியதுكَلِمَةُவாக்குرَبِّكَஉம் இறைவனின்لَاَمْلَـئَنَّநிச்சயமாக நான் நிரப்புவேன்جَهَـنَّمَநரகத்தைمِنَ الْجِنَّةِஜின்களில்وَالنَّاسِஇன்னும் மக்கள்اَجْمَعِيْنَ‏அனைவர்
இல்லா மர் ரஹிம ரBப்Bபுக்; வ லிதாலிக கலகஹும்; வ தம்மத் கலிமது ரBப்Bபிக ல அம்ல'அன்ன ஜஹன்னம மினல் ஜின்னதி வன்ன்னாஸி அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; “நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் மார்க்கத்தில் முரண்பட மாட்டார்கள்) இதற்காகவே அவர்களைப் படைத்தும் இருக்கிறான். (பாவம் செய்த) ‘‘ஜின்களைக் கொண்டும் மனிதர்களைக் கொண்டும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும்.
IFT
மேலும், உம் இறைவன் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்கள் மட்டுமே மாறுபட்ட வழியில் செல்வதிலிருந்து விலகியிருப்பார்கள். இதற்காகவே (தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கிச் சோதித்துப் பார்ப்பதற்காகவே) அவன் அவர்களைப் படைத்துள்ளான். மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரைக் கொண்டும் திண்ணமாக நான் நரகத்தை நிரப்புவேன் எனும் உம் இறைவனின் வாக்கு நிறைவேறிவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களில்) உமதிரட்சகன் அருள் புரிந்தவர்களைத் தவிர, இதற்காகவே (மாறுபடும்) அவர்களைப் படைத்துமிருக்கிறான், “(பாவம் செய்த) ஜின்கள், மற்றும் மனிதர்கள் ஆகிய அனைவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்ற உமதிரட்சகன் வாக்கும் பூர்த்தியாகிவிட்டது.
Saheeh International
Except whom your Lord has given mercy, and for that He created them. But the word of your Lord is to be fulfilled that, "I will surely fill Hell with jinn and men all together."
وَكُلًّا نَّقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ ۚ وَجَآءَكَ فِیْ هٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟
وَكُلًّاஎல்லாவற்றையும்نَّقُصُّவிவரிக்கிறோம்عَلَيْكَஉமக்குمِنْஇருந்துاَنْۢبَآءِசரித்திரங்கள்الرُّسُلِதூதர்களின்مَاஎதைنُثَبِّتُஉறுதிப்படுத்துவோம்بِهٖஅதைக் கொண்டுفُؤَادَكَ‌ ۚஉம் உள்ளத்தைوَجَآءَكَஇன்னும் வந்தன/உமக்குفِىْ هٰذِهِ الْحَـقُّஇவற்றில்/உண்மைوَمَوْعِظَةٌநல்லுபதேசம்وَّذِكْرٰىஅறிவுரைلِلْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களுக்கு
வ குல்லன் னகுஸ்ஸு 'அலய்க மின் அம்Bபா'இர் ருஸுலி மா னுதBப்Bபிது Bபிஹீ Fபு'ஆதக்; வ ஜா'அக Fபீ ஹாதிஹில் ஹக்கு வ மவ்'இளது(ன்)வ் வ திக்ரா லில்மு' மினீன்
முஹம்மது ஜான்
(நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
உமது உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உமக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரையும் இருக்கின்றன.
IFT
(நபியே!) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக் கூறும் இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால், அவற்றின் மூலம் நாம் உமது இதயத்தை உறுதிப்படுத்துகிறோம். மேலும், இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைத்தது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம் தூதர்களின் செய்திகளிலிருந்து உம் இதயத்தை எதைக்கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை ஒவ்வொன்றையும் நாம் உமக்குக் கூறினோம், உமக்கு இவற்றில் உண்மை(யானவை)யும் விசுவாசிகளுக்கு நல்லுபதேசமும் நினைவூட்டலும் வந்துவிட்டது.
Saheeh International
And each [story] We relate to you from the news of the messengers is that by which We make firm your heart. And there has come to you, in this, the truth and an instruction and a reminder for the believers.
وَقُلْ لِّلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ ؕ اِنَّا عٰمِلُوْنَ ۟ۙ
وَقُلْகூறுவீராகلِّـلَّذِيْنَஎவர்களுக்குلَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்اعْمَلُوْاநீங்கள் செய்யுங்கள்عَلٰى مَكَانَتِكُمْؕஉங்கள் போக்கில்اِنَّاநிச்சயமாக நாங்கள்عٰمِلُوْنَۙ‏செய்பவர்கள், செய்வோம்
வ குல் லில்லதீன லா யு'மினூ னஃமலூ 'அலா மகானதிகும் இன்னா 'ஆமிலூன்
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்.”
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி (நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செய்து கொண்டிருக்கிறோம்.
IFT
ஆனால், நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நாங்கள் எங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசங்கொள்ளாதவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் உங்கள் வழியில் (உங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருங்கள், நிச்சயமாக நாங்களும் (எங்கள் வழியில் எங்கள் காரியங்களைச்) செய்து கொண்டிருக்கிறோம்”
Saheeh International
And say to those who do not believe, "Work according to your position; indeed, we are working.
وَانْتَظِرُوْا ۚ اِنَّا مُنْتَظِرُوْنَ ۟
وَانْـتَظِرُوْا‌ ۚஎதிர்பாருங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்مُنْتَظِرُوْنَ‏எதிர்பார்ப்பவர்கள், எதிர்பார்க்கிறோம்
வன்தளிரூ இன்னா முன் தளிரூன்
முஹம்மது ஜான்
நீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நாங்களும் (அவ்வாறே) எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
அப்துல் ஹமீது பாகவி
நீங்களும் (இதன் முடிவை) எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அதை) எதிர் பார்த்திருக்கிறோம்.
IFT
விளைவை நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள், நிச்சயமாக நாங்களும் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்”
Saheeh International
And wait; indeed, we are waiting."
وَلِلّٰهِ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَیْهِ یُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَیْهِ ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்கேغَيْبُமறைவானவைالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَاِلَيْهِஅவனிடமேيُرْجَعُதிருப்பப்படும்الْاَمْرُகாரியங்கள்كُلُّهٗஅவை எல்லாம்فَاعْبُدْهُஆகவே, அவனை வணங்குவீராகوَتَوَكَّلْநம்பிக்கை வைப்பீராகعَلَيْهِ‌ؕஅவன் மீதேوَمَاஇல்லைرَبُّكَஉம் இறைவன்بِغَافِلٍகண்காணிக்காதவனாகعَمَّا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
வ லில்லாஹி கய்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வ இலய்ஹி யுர்ஜ'உல் அம்ரு குல்லுஹூ FபஃBபுத் ஹு வ தவக்கல் 'அலய்ஹ்; வமா ரBப்Bபுக BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
முஹம்மது ஜான்
வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவை அனைத்தும் (அவற்றின் ஞானமும்) அல்லாஹ்வுக்குரியனவே! எல்லா காரியங்களும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படும். ஆதலால், அவன் ஒருவனையே நீர் வணங்குவீராக; அவனையே நம்புவீராக. உமது இறைவன் நீங்கள் செய்பவற்றைப் பற்றி பராமுகமாயில்லை.''
IFT
வானங்கள், பூமி ஆகியவற்றில் மறைந்துள்ள அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டனவாகும். மேலும், அனைத்து விவகாரங்களும் அவனிடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன. எனவே, (நபியே!) நீர் அவனுக்கே அடிபணிவீராக! மேலும் அவனையே முழுவதும் சார்ந்திருப்பீராக! நீங்கள் செய்து கொண்டிருப்பவை அனைத்தையும் உம் இறைவன் கவனிக்காமல் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களில் மற்றும், பூமியில் மறைந்திருப்பவை (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன, சகல காரியமும் அவனிடமே மீட்டப்படும், ஆதலால், அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! (சகல காரியங்களையும் ஒப்படைத்து முழுமையாக) அவன் மீதே நம்பிக்கையும் வைப்பீராக! உமதிரட்சகன், நீங்கள் செய்வவைகளைப் பற்றி பாராமுகமானவனாகவுமில்லை.
Saheeh International
And to Allah belong the unseen [aspects] of the heavens and the earth and to Him will be returned the matter, all of it, so worship Him and rely upon Him. And your Lord is not unaware of that which you do.