113. ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ۟ۙ
قُلْகூறுவீராகاَعُوْذُபாதுகாப்புத் தேடுகிறேன்بِرَبِّஇறைவனிடம்الْفَلَقِۙ‏அதிகாலையின்
குல் அ'ஊது Bபி ரBப்Bபில்-Fபலக்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
IFT
கூறுவீராக! வைகறையின் அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! நீர் கூறுவீராக! வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
Saheeh International
Say, "I seek refuge in the Lord of daybreak
مِنْ شَرِّ مَا خَلَقَ ۟ۙ
مِنْ شَرِّதீங்கைவிட்டும்مَاஎவற்றைخَلَقَۙ‏படைத்தான்
மின் ஷர்ரி மா கலக்
முஹம்மது ஜான்
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
அப்துல் ஹமீது பாகவி
அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,
IFT
அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்,
Saheeh International
From the evil of that which He created
وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۟ۙ
وَمِنْ شَرِّஇன்னும் தீங்கைவிட்டும்غَاسِقٍஇரவின்اِذَا وَقَبَۙ‏காரிருள் படரும் போது
வ மின் ஷர்ரி காஸிகின் இதா வகBப்
முஹம்மது ஜான்
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
அப்துல் ஹமீது பாகவி
(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
IFT
இரவுடைய இருளின் தீங்கிலிருந்தும்! அந்த இருள் படரும்போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இரவினுடைய) இருளின் தீங்கைவிட்டும் – அது பரவிவிடும்போது,
Saheeh International
And from the evil of darkness when it settles
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِ ۟ۙ
وَمِنْ شَرِّஇன்னும் தீங்கைவிட்டும்النَّفّٰثٰتِஊதுகிற சூனியக்காரிகளின்فِى الْعُقَدِۙ‏முடிச்சுகளில்
வ மின் ஷர்ரின்-னFப்Fபா-தாதி Fபில் 'உகத்
முஹம்மது ஜான்
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
அப்துல் ஹமீது பாகவி
முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
IFT
முடிச்சுகளில் ஊதுகின்ற (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும்,
Saheeh International
And from the evil of the blowers in knots
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ۟۠
وَمِنْ شَرِّஇன்னும் தீங்கைவிட்டும்حَاسِدٍபொறாமைக்காரன்اِذَا حَسَدَ‏பொறாமைப்படும்போது
வ மின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்
முஹம்மது ஜான்
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).  
அப்துல் ஹமீது பாகவி
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
IFT
மேலும், பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும், அவர்கள் பொறாமை கொள்ளும்போது (பாதுகாப்புத் தேடுகின்றேன்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பொறாமைக்காரனின் தீங்கைவிட்டும் -அவன் பொறாமை கொள்ளும்போது (நான் காவல் தேடுகிறேன்).
Saheeh International
And from the evil of an envier when he envies."