114. ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)

மக்கீ, வசனங்கள்: 6

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ ۟ۙ
قُلْகூறுவீராகاَعُوْذُபாதுகாப்புத் தேடுகிறேன்بِرَبِّஇறைவனிடம்النَّاسِۙ‏மக்களின்
குல் அ'ஊது BபிரBப்Bபின் னாஸ்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
IFT
கூறுவீராக! மக்களின் அதிபதியிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
Saheeh International
Say, "I seek refuge in the Lord of mankind,
مَلِكِ النَّاسِ ۟ۙ
مَلِكِஅரசன்النَّاسِۙ‏மக்களின்
மலிகின் னாஸ்
முஹம்மது ஜான்
(அவனே) மனிதர்களின் அரசன்;
அப்துல் ஹமீது பாகவி
(அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.
IFT
மக்களின் மன்னனிடம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன்தான்) மனிதர்களின் அரசன்.
Saheeh International
The Sovereign of mankind,
اِلٰهِ النَّاسِ ۟ۙ
اِلٰهِவணக்கத்திற்குரியவன்النَّاسِۙ‏மக்களின்
இலாஹின் னாஸ்
முஹம்மது ஜான்
(அவனே) மனிதர்களின் நாயன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.
IFT
மக்களின் உண்மையான இறைவனிடம் (நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன்.
Saheeh International
The God of mankind,
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ۬ الْخَنَّاسِ ۟
مِنْ شَرِّதீங்கைவிட்டும்الْوَسْوَاسِ  ۙவீண் எண்ணங்களை ஏற்படுத்துபவன்الْخَـنَّاسِ ۙ‏மறைந்து கொள்பவன்
மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்
முஹம்மது ஜான்
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
IFT
திரும்பத் திரும்ப வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னால் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பக் கூடியவ(னான ஷைத்தா)னின் தீங்கைவிட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்)
Saheeh International
From the evil of the retreating whisperer -
الَّذِیْ یُوَسْوِسُ فِیْ صُدُوْرِ النَّاسِ ۟ۙ
الَّذِىْ يُوَسْوِسُவீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான்فِىْ صُدُوْرِஉள்ளங்களில்النَّاسِۙ‏மக்களுடைய
அல்லதீ யுவஸ்விஸு Fபீ ஸுதூரின் னாஸ்
முஹம்மது ஜான்
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
IFT
அவன் எத்தகையவன் எனில், மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகிறான்.
Saheeh International
Who whispers [evil] into the breasts of mankind -
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ۟۠
مِنَ الْجِنَّةِஜின்களிலிருந்தும்وَالنَّاسِ‏இன்னும் மனிதர்கள்
மினல் ஜின்னதி வன்னாஸ்
முஹம்மது ஜான்
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.
IFT
அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயினும் மனித இனத்தைச் சேர்ந்தவனாயினும் சரியே.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர்.
Saheeh International
From among the jinn and mankind".