னஹ்னு னகுஸ்ஸு 'அலய்க அஹ்ஸனல் கஸஸி Bபிமா அவ்ஹய்னா இலய்க ஹாதல் குர்'ஆன வ இன் குன்த மின் கBப்லிஹீ லமினல் காFபிலீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வஹ்யி மூலம் நாம் உமக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உமக்கு நாம் விவரிக்கிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் இதை அறியாதவராகவே இருந்தீர்.
IFT
(நபியே!) நாம் இந்தக் குர்ஆனை உமக்கு வஹி மூலம் அருளி, சம்பவங்களையும் உண்மை நிலைகளையும் மிக அழகிய முறையில் உமக்கு எடுத்துரைக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர் (இவற்றைப் பற்றி) எதுவும் அறியாதிருந்தீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இந்தக் குர் ஆனை நாம் உமக்கு அறிவித்திருப்பதின் மூலம் மிக்க அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகிறோம், இதற்கு முன்னர் நிச்சயமாக (இதனைப்பற்றி) அறியாதவர்களில் (ஒருவராக) நீர் இருந்தீர்.
Saheeh International
We relate to you, [O Muhammad], the best of stories in what We have revealed to you of this Qur’an although you were, before it, among the unaware.
இத் கால யூஸுFபு லி அBபீஹி யா அBபதி இன்னீ ர அய்து அஹத 'அஷர கவ்கBப(ன்)வ் வஷ் ஷம்ஸ வல்கமர ர அய்துஹும் லீ ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.
அப்துல் ஹமீது பாகவி
யூஸுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறிய சமயத்தில்,
IFT
இதனை நினைவுகூர்வீராக: யூஸுஃப் தன் தந்தையிடம், “என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் சந்திரனையும் நான் கனவில் கண்டேன்; அக்கனவில் அவை என் முன் தாழ்ந்து பணிந்து கொண்டிருப்பதாகவும் கண்டேன்!” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
யூஸுஃப் தன் தந்தையிடம் “என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களையும் சூரியனையும், சந்திரனையும் நிச்சயமாக நான் (கனவில்) கண்டேன், எனக்குச் சிரம் பணிபவையாக அவற்றை நான் கண்டேன்” என்று கூறிய சமயத்தில்,
Saheeh International
[Of these stories mention] when Joseph said to his father, "O my father, indeed I have seen [in a dream] eleven stars and the sun and the moon; I saw them prostrating to me."
கால யா Bபுனய்ய லா தக்ஸுஸ் ரு'யாக 'அலா இக்வதிக Fபயகீதூ லக கய்தா; இன்னஷ் ஷய்தான லில் இன்ஸானி 'அதுவ்வும் முBபீன்
முஹம்மது ஜான்
“என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(யஅகூப் நபி யூஸுஃபை நோக்கி) ‘‘என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக் கூடும்)'' என்று கூறினார்.
IFT
அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறிவிடாதே! அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு எதிராக சதி செய்ய முற்படுவார்கள். திண்ணமாக, ஷைத்தான் மனிதனின் வெளிப்படையான பகைவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் அருமை மகனே! நீர் கண்ட கனவை உம் சகோதரர்களிடம் சொல்லிக்காட்ட வேண்டாம், (அவ்வாறு செய்தால்) அவர்கள் உமக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். (ஏனெனில்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கிறான்” என்று (யஃகூப் நபியாகிய) அவர் கூறினார்.
Saheeh International
He said, "O my son, do not relate your vision to your brothers or they will contrive against you a plan. Indeed Satan, to man, is a manifest enemy.
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஅகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்றாஹீம், இஸ்ஹாக் ஆகிய உன் இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' (என்றும் கூறினார்).
IFT
மேலும், இ(க்கனவில் நீ கண்ட)து போன்றே நடைபெறும். உன் அதிபதி உன்னைத் (தனது பணிக்காக) தேர்ந்தெடுப்பான். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்துகொள்ளும் முறையை உனக்குக் கற்றுத் தருவான். இதற்கு முன்னர் உன் மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உன் மீதும், யஃகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவு செய்வான். திண்ணமாக, உன் இறைவன் நன்கறிந்தவனும், நுண்ணறிவாளனும் ஆவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “(நீர் கனவில் கண்ட) அவ்வாறே உமதிரட்சகன் உம்மைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கங்களையும் உமக்குக் கற்றுக் கொடுத்து இதற்கு முன்னர் இப்றாஹீம், இஷ்ஹாக் (ஆகிய உம்முடைய இரு மூதாதையர் மீதும் (தம் அருளாகிய) அதனைப் பூர்த்தியாக்கி வைத்தவாரே உம் மீதும், யஃகூபின் (மற்ற) குடும்பத்தினர் மீதும் அவன் தன் அருளைப் பூர்த்தியாக்கி வைப்பான், நிச்சயமாக உமதிரட்சகன் (யாவற்றையும்) நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்” (என்றும் கூறினார்.)
Saheeh International
And thus will your Lord choose you and teach you the interpretation of narratives [i.e., events or dreams] and complete His favor upon you and upon the family of Jacob, as He completed it upon your fathers before, Abraham and Isaac. Indeed, your Lord is Knowing and Wise."
لَقَدْதிட்டவட்டமாகكَانَஇருக்கின்றனفِىْ يُوْسُفَயூஸுஃபில்وَاِخْوَتِهٖۤஇன்னும் அவரது சகோதரர்கள்اٰيٰتٌஅத்தாட்சிகள்لِّـلسَّآٮِٕلِيْنَவினவுகின்றவர்களுக்கு
(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
அப்துல் ஹமீது பாகவி
(யஅகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்'' என்றும்,
IFT
(இந்த வரலாறு இப்படித் தொடங்குகின்றது:) அவருடைய சகோதரர்கள் தமக்கிடையே கூறினார்கள்: “யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம்மைவிட நம் தந்தைக்கு மிகப் பிரியமானவர்களாய் இருக்கின்றனர். ஆயினும், நாம்தாமே அதிக எண்ணிக்கையுள்ள ஒரு குழுவாக இருக்கின்றோம். திண்ணமாக, நம் தந்தை பெருந் தவறில் இருக்கின்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாம் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், நிச்சயமாக யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாயிருக்கின்றனர், (இதில்) நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவற்றில் இருக்கிறார்” என்று அவர்கள் கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக!)
Saheeh International
When they said, "Joseph and his brother are more beloved to our father than we, while we are a clan. Indeed, our father is in clear error.
“யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘‘யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்தி விடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மக்களாகி விடுங்கள்'' என்றும் கூறினார்கள்.
IFT
எனவே, யூஸுஃபைக் கொன்று விடுங்கள்; அல்லது அவரை எங்காவது கொண்டுபோய் வீசி விடுங்கள்! இவ்வாறு செய்தால்தான் உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கம் மட்டும் திரும்பும். மேலும், இதன் பின்னர் நீங்கள் நல்ல மனிதர்களாகிவிடுவீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(ஆகவே) யூஸுஃபைக் கொலை செய்துவிடுங்கள், அல்லது பூமியில் எங்கேனும் எறிந்து விடுங்கள், உங்கள் தந்தையின் முகம் (கவனம்) முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும், இதன் பின்னர், நீங்கள் (அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்லவர்களான கூட்டத்தினராகிவிடுவீர்கள்” (என்று கூறினார்கள்.)
Saheeh International
Kill Joseph or cast him out to [another] land; the countenance [i.e., attention] of your father will [then] be only for you, and you will be after that a righteous people."
قَالَகூறினார்قَآٮِٕلٌகூறுபவர்مِّنْهُمْஅவர்களில்لَا تَقْتُلُوْاகொல்லாதீர்கள்يُوْسُفَயூஸுஃபைوَاَلْقُوْபோடுங்கள்هُஅவரைفِىْ غَيٰبَتِஆழத்தில்الْجُـبِّகிணற்றின்يَلْتَقِطْهُஎடுத்துக் கொள்வார்(கள்)/அவரைبَعْضُசிலர்السَّيَّارَةِவழிப்போக்கர்களில்اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَநீங்கள் செய்பவர்களாக இருந்தால்
காலா கா'இலும் மின்ஹும் லா தக்துலூ யூஸுFப வ அல்கூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bபி யல்தகித்ஹு Bபஃளுஸ் ஸய் யாரதி இன் குன்தும் Fபா 'இலீன்
முஹம்மது ஜான்
அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு) அவர்களில் ஒருவர், ‘‘யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்து விடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்'' என்று கூறினார்.
IFT
அவர்களில் ஒருவர் கூறினார்: “யூஸுஃபைக் கொன்றுவிடாதீர்கள்! நீங்கள் ஏதேனும் செய்துதான் ஆகவேண்டும் என்று இருந்தால், அவரை ஆழமானதொரு கிணற்றில் போட்டுவிடுங்கள்! அவ்வழியே வந்து போகும் பயணிகளில் எவரேனும் அவரை வெளியே எடுத்துக் கொண்டு போகக்கூடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) அவர்களில் (நற்போதனை) கூறக்கூடிய ஒருவர், “யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள; இன்னும், நீங்கள் (அவருக்கு ஏதும் தீமை) செய்பவர்களாக இருந்தால், ஆழமான ஒரு பாழ் கிணற்றில் அவரை போட்டு விடுங்கள்; பிரயாணிகளில் சிலர் அவரை(க் கிணற்றிலிருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
Saheeh International
Said a speaker among them, "Do not kill Joseph but throw him into the bottom of the well; some travelers will pick him up - if you would do [something]."
(பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) ‘‘எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்கள் ஆவோம்'' என்றும்,
IFT
(இந்தத் திட்டத்தின்படித் தம் தந்தையிடம் சென்று) அவர்கள் கேட்டார்கள்: “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கும் நிலையில், அவர் விஷயத்தில் நீங்கள் எங்களை நம்பாமலிருக்கக் காரணம் என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து) “எங்கள் தந்தையே! யூஸுஃபை ப்பற்றி (அவர் விஷயத்தில்) நீங்கள் எங்களை நம்பாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நாங்களோ, நிச்சயமாக அவருக்கு நன்மையை நாடுபவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "O our father, why do you not entrust us with Joseph while indeed, we are to him sincere counselors?
“நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்'' என்றும் கூறினார்கள்.
IFT
நாளை எங்களுடன் அவரை அனுப்பி வையுங்கள்; அவர் உண்டு மகிழ்ந்து விளையாடட்டும்! அவரைப் பாதுகாத்திட நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள், அவர் (காட்டிலுள்ள கனிகளை) நன்கு புசித்துக் கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார், நிச்சயமாக, நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
Send him with us tomorrow that he may eat well and play. And indeed, we will be his guardians."
(அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கவர்) ‘‘நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
IFT
தந்தை கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது என்னைக் கவலையில் ஆழ்த்துகிறது. மேலும், நீங்கள் அவர் விஷயத்தில் கவனக் குறைவாக இருக்கும்போது அவரை ஓநாய் அடித்துத் தின்றுவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “நீங்கள் அவரை (அழைத்து)க் கொண்டு செல்வது நிச்சயமாக என்னைக் கவலையடையச் செய்கிறது, நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை விட்டும் பாராமுகமானவர்களாகயிருக்கும் நிலையில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்று விடும் என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
Saheeh International
[Jacob] said, "Indeed, it saddens me that you should take him, and I fear that a wolf would eat him while you are of him unaware."
காலூ ல இன் அகலஹுத்தி'Bபு வ னஹ்னு 'உஸ்Bபதுன் இன்னா இதல் லகாஸிரூன்
முஹம்மது ஜான்
(அதற்கு) அவர்கள் “நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்“ என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் அப்போது நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்'' என்று கூறி (தங்கள் தந்தையை சம்மதிக்கச் செய்த)னர்.
IFT
அதற்கு அவர்கள், “நாங்கள் ஒரு குழுவாக இருக்கும்போது அவரை ஓநாய் தின்று விடுமானால், திண்ணமாக, நாங்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாய் அல்லவா ஆகி விடுவோம்!” என்று பதில் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “(ஆற்றல் மிக்க) ஒரு கூட்டத்தினராக நாங்கள் இருந்தும் அவரை ஓர் ஓநாய் தின்றுவிடுமானால், நிச்சயமாக நாங்கள் அப்போது நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினர்.
Saheeh International
They said, "If a wolf should eat him while we are a [strong] clan, indeed, we would then be losers."
فَلَمَّاஅவர்கள் சென்றனர்ذَهَبُوْاபோதுبِهٖஅவரைக் கொண்டுوَاَجْمَعُوْۤاஒன்று சேர்ந்து முடிவு செய்தனர்اَنْ يَّجْعَلُوْهُஅவரை அவர்கள் ஆக்கிவிடவேண்டாம்فِىْ غَيٰبَتِஆழத்தில்الْجُبِّۚகிணற்றின்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلَيْهِஅவருக்குلَـتُنَـبِّئَـنَّهُمْநிச்சயமாக அறிவிப்பீர்/அவர்களுக்குبِاَمْرِகாரியத்தைهِمْஅவர்களுடையهٰذَاஇந்தوَهُمْஅவர்கள்لَا يَشْعُرُوْنَஉணரமாட்டார்கள்
(இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்ந்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். ‘‘அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்'' என்று நாம் யூஸுஃபுக்கு வஹ்யி அறிவித்தோம்.
IFT
(இவ்வாறு வற்புறுத்தி) அவரை அழைத்துச் சென்று, ஓர் ஆழமான கிணற்றில் போட்டுவிட வேண்டுமென அவர்கள் முடிவு செய்தார்கள். அப்போது நாம் யூஸுஃபுக்கு அறிவித்தோம்: “ஒரு காலம் வரும்; அப்போது அவர்கள் தங்களுடைய இந்தச் செயல்களின் விளைவுகளை அறியாதிருக்கும் நிலையில் நீர் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பீர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (யூஸுஃபாகிய) அவரை (அழைத்து)க் கொண்டு சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் ஆக்கிவிட வேண்டுமென்றே அவர்கள் ஒருமித்து முடிவு செய்தபோது, “அவர்களோ (உம்மை) அறியாதவர்களாக இருக்க அவர்களுடைய இக்காரியத்தைப்பற்றி (ஒரு காலத்தில்) நீர் அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிவிப்பீர்” என்று (யூஸுஃபாகிய) அவருக்கு நாம் வஹீ அறிவித்தோம்.
Saheeh International
So when they took him [out] and agreed to put him into the bottom of the well... But We inspired to him, "You will surely inform them [someday] about this affair of theirs while they do not perceive [your identity]."
“எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.
IFT
“எங்கள் தந்தையே! நாங்கள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தோம். யூஸுஃபை எங்கள் பொருட்களின் அருகில் விட்டிருந்தோம். திடீரென்று ஓநாய் வந்து அவரைத் தின்றுவிட்டது; (இப்போது) நாங்கள் உண்மை சொல்பவர்களாய் இருந்தாலும் எங்களை நீங்கள் நம்பமாட்டீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எஙகள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் ஒருவரை ஒருவர்) முந்திக் கொண்டு சென்று விட்டோம், யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் நாங்கள் விட்டுவிட்டோம், அப்போது அவரை ஓநாய் (அடித்துத்) தின்று விட்டது, நாங்கள் (எவ்வளவு) உண்மையாளர்களாக இருப்பினும் நீர் எங்களை நம்பக் கூடியவர் அல்லர்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "O our father, indeed we went racing each other and left Joseph with our possessions, and a wolf ate him. But you would not believe us, even if we were truthful."
(மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு ‘‘அவரை ஓநாய் அடித்துத் தின்னவே) இல்லை'' உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன்'' என்று கூறினார்கள்.
IFT
மேலும், அவர்கள் யூஸுஃபின் சட்டையில் போலி இரத்தத்தைத் தேய்த்துக் கொண்டு வந்திருந்தார்கள். இதனைக் கேட்ட அவர்களுடைய தந்தை கூறினார்: “அவ்வாறில்லை, உங்கள் மனம் ஒரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கிவிட்டது. சரி, மிக அழகிய முறையில் நான் பொறுமையை மேற்கொள்வேன். நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் (தங்கள் கூற்றைப் பலப்படுத்த) அவருடைய சட்டையில் (ஆட்டின் பொய்யான இரத்தத்தை(த் தோய்த்து)க் கொண்டு வந்(து காண்பித்)தார்கள், (இரத்தம் தோய்ந்த அச்சட்டை கிழியாதிருப்பதைக் கண்ட யாஃகூப் நபி) “இல்லை, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டன, ஆகவே, அழகான பொறுமை(யைக்கடைப் பிடிப்பது)தான் நன்று, மேலும், நீங்கள் வர்ணிக்கின்றவற்றிலிருந்து (யூஸுஃபை இரட்சிக்க) அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன், (அவனிடமே உதவி தேடுகிறேன்)”, என்று கூறினார்.
Saheeh International
And they brought upon his shirt false blood. [Jacob] said, "Rather, your souls have enticed you to something, so patience is most fitting. And Allah is the one sought for help against that which you describe."
وَجَآءَتْவந்ததுسَيَّارَةٌஒரு பயணக் கூட்டம்فَاَرْسَلُوْاஅனுப்பினார்கள்وَارِدَهُمْதங்களில் நீர் கொண்டு வருபவரைفَاَدْلٰىஇறக்கினார்دَلْوَهٗ ؕஅவர் வாளியைقَالَகூறினார்يٰبُشْرٰىஆ... நற்செய்தி!هٰذَاஇதோغُلٰمٌ ؕஒரு சிறுவர்وَاَسَرُّوْهُமறைத்தார்கள்/அவரைبِضَاعَةً ؕவர்த்தகப் பொருளாகوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிபவன்بِمَا يَعْمَلُوْنَஅவர்கள் செய்வதை
பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்கள் பணியாளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பினார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு ‘‘உங்களுக்கு) நற்செய்தி! இதோ (அழகிய) சிறுவர் ஒருவர்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
(அங்கு) பயணக் கூட்டமொன்று வந்தது. அவர்கள் தங்களுக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்தவரை அனுப்பி வைத்தார்கள். அவர் (கிணற்றினுள்) தம்முடைய வாளியை விட்டதும் யூஸுஃபைக் கண்டார். உடனே, “இதோ ஒரு நற்செய்தி! இங்கு ஒரு சிறுவன் இருக்கின்றான்!” என்று (உரக்கக்) கூறினார். அவர்கள் அச்சிறுவனை வணிகப் பொருளாகக் கருதி மறைத்துக் கொண்டனர். ஆயினும், அவர்கள் செய்து வந்தவற்றை அல்லாஹ் நன்கறிந்திருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர், அக்கிணற்றின் சமீபமாக) ஒரு பிரயாணக் கூட்டமும் வந்தது, தங்களது தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக) அவர்கள் அனுப்பினார்கள், அவர் தன் வாளியை (அக் கிணற்றில்) விட்டார், (யூஸுஃப் அதில் உட்கார்ந்து கொண்டார், அதைக் கண்டு “உங்களுக்கு ஓ நன்மாராயமே! இதோ ஓர் (அழகிய) சிறுவன்” என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினார், (அவரைக் கண்ணுற்ற அவர்கள், தங்கள்) வர்த்தகப் பொருளாக அவரை (ஆக்கிக் கொள்ளக் கருதி) மறைத்துக் கொண்டார்கள், மேலும், அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன்.
Saheeh International
And there came a company of travelers; then they sent their water drawer, and he let down his bucket. He said, "Good news! Here is a boy." And they concealed him, [taking him] as merchandise; and Allah was Knowing of what they did.
(இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து ‘‘இவன் தப்பி ஓடி வந்து விட்ட எங்கள் அடிமை'' எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்தவர்களாகவே இருந்தனர்.
IFT
இறுதியாக அவர்கள் அவரை மிக அற்ப விலைக்கு ஒரு சில வெள்ளி நாணயங்களுக்கு விற்று விட்டார்கள்! அவருக்கு விலை நிர்ணயிப்பதில் அவர்கள் அதிகம் எதிர்பார்க்காதவர்களாய் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவரை அவர்கள் அற்பக் கிரயத்திற்கு-(விரல் விட்டு எண்ணப்படுகின்ற (சொற்ப) வெள்ளிக் காசுகளுக்கு விற்று விட்டார்கள், மேலும், அவர்கள் அதில் பற்றற்றவர்களாக இருந்தனர்.
Saheeh International
And they sold him for a reduced price - a few dirhams - and they were, concerning him, of those content with little.
(யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவரை வாங்கியவர்கள், அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து அந்நாட்டு அதிபதியிடம் விற்று விட்டனர்.) எகிப்தில் அவரை வாங்கியவர், தன் மனைவியை நோக்கி ‘‘நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள்; அவரால் நாம் நன்மை அடையலாம்; அல்லது அவரை நாம் நம் (வளர்ப்பு) மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார். யூஸுஃப் அவ்வூரில் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் (முன்னர் அவர் கண்டது போன்ற) கனவுகளின் வியாக்கியானங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் இவ்வாறு நாம் அவருக்கு வசதி செய்தோம். அல்லாஹ், தன் காரியத்தை நிறைவேற்றுவதில் (அனைவரையும்) மிகைத்தவன் ஆவான். ஆனால், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
IFT
அவரை விலை கொடுத்து வாங்கிய எகிப்தியர் தன் மனைவியிடம் கூறினார்: “இவரைக் கண்ணியமான முறையில் கவனித்துக்கொள்; இவர் நமக்குப் பயன்படலாம் அல்லது இவரை நாம் மகனாக ஆக்கிக் கொள்ளலாம்.” இவ்வாறு, அந்த பூமியில் காலூன்றுவதற்கான சூழ்நிலையை யூஸுஃபுக்கு நாம் ஏற்படுத்தினோம். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையை நாம் அவருக்குக் கற்றுக் கொடுப்பதற்கும் தக்க ஏற்பாடு செய்தோம். அல்லாஹ் தன் பணிகளை நிறைவேற்றியே தீருவான்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யூஸுஃபை வாங்கியவர் அவரை எகிப்துக்குக் கொண்டு வந்து விற்று விட்டார்.) எகிப்தில் அவரை வாங்கியவர் தன் மனைவியிடம், “நீ அவர் தங்குமிடத்தை கண்ணியமாக வைத்துக் கொள், அவர் நமக்குப்பயன் தரலாம், அல்லது அவரை நாம் (சுவீகாரப்) புத்திரனாக எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார், அவ்வாறே அந்த (எகிப்து) பூமியில் யூஸுஃபுக்கு நாம் இடமளித்தோம், கனவுகளின் விளக்கங்களை அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (நாம் அவருக்கு இடமளித்தோம்.) அல்லாஹ், தன் காரியத்தில் (யாவரையும்) மிகைத்தவன் எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
And the one from Egypt who bought him said to his wife, "Make his residence comfortable. Perhaps he will benefit us, or we will adopt him as a son." And thus, We established Joseph in the land that We might teach him the interpretation of events [i.e., dreams]. And Allah is predominant over His affair, but most of the people do not know.
அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் தன் வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். நல்லொழுக்கமுடையவர்களுக்கு இவ்வாறு தான் நாம் கூலி தருகிறோம்.
IFT
அவர் முழுமையான வாலிபத்தை அடைந்ததும், நாம் அவருக்குத் தீர்மானிக்கும் ஆற்றலையும் ஞானத்தையும் வழங்கினோம். இவ்வாறே நாம் நல்லவர்களுக்குக் கூலி வழங்குகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர் தன் வாலிபத்தை அடைந்தபொழுது நாம் அவருக்கு சட்ட நுணுக்கத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி தருகிறோம்.
Saheeh International
And when he [i.e., Joseph] reached maturity, We gave him judgement and knowledge. And thus We reward the doers of good.
அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் இருந்த வீட்டின் எஜமானி (அவரைக் காதலித்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு) எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரை ‘வாரும்' என்றழைத்தாள். அதற்கவர், ‘‘(என்னை)அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வானாக! நிச்சயமாக என் எஜமானாகிய (உன் கண)வர் என்னை மிக்க (அன்பாகவும்) கண்ணியமாகவும் வைத்திருக்கிறார். (இத்தகைய நன்மை செய்பவர்களுக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் நலம்பெற மாட்டார்கள்'' என்று கூறினார்.
IFT
அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் அவரை அடைய வலை விரித்தாள்! (ஒரு நாள்) வாயில்களை எல்லாம் அடைத்துத் தாழிட்டு விட்டு “வாரும்!” என்று அழைத்தாள். அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்! திண்ணமாக என் ரப் அதிபதி எனக்கு நல்ல கண்ணியத்தை வழங்கியுள்ளான். (அப்படியிருக்க இத்தகைய இழிசெயலை நான் செய்வேனா? இத்தகைய) அக்கிரமக்காரர்கள் ஒருபோதும் வெற்றி அடைவதில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர் எவளுடைய வீட்டில் இருந்தாரோ, அவள், அவர் மீது காதல் கொண்டு, தன் விருப்பத்திற்கிணங்குமாறு எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, அவரை “வாரும்” என்றழைத்தாள், அ(தற்க)வர் “அல்லாஹ் (இத் தீய செயலிலிருந்து) காத்தருள்வானாகவும் நிச்சயமாக, என் எஜமானனாகிய(உன் கண)வர் என் தங்குமிடத்தை அழகாக்கி வைத்திருக்கிறார், நிச்சயமாக (இத்தகைய நன்மை செய்வோருக்குத் துரோகம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார்.
Saheeh International
And she, in whose house he was, sought to seduce him. She closed the doors and said, "Come, you." He said, "[I seek] the refuge of Allah. Indeed, he is my master, who has made good my residence. Indeed, wrongdoers will not succeed."
வ லகத் ஹம்மத் Bபிஹீ வ ஹம்ம Bபிஹா லவ் லா அர் ரஆ Bபுர்ஹான ரBப்Bபிஹ்; கதாலிக லினஸ்ரிFப 'அன்ஹு ஸூ'அ வல்Fபஹ்ஷா'; இன்னஹூ மின் 'இBபாதி னல் முக்லஸீன்
முஹம்மது ஜான்
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
அவள் அவரை நடினாள்; அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய எச்சரிப்பைக் கண்டிராவிடில் (அவர் தவறு செய்திருப்பார்). எனினும், கெட்ட செயல்களிலிருந்தும் மானக் கேடான செயல்களிலிருந்தும் அவரைத் திருப்பி விடுவதற்காக நாம் அவருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தோம். நிச்சயமாக, அவர் நம் (உண்மையான) பரிசுத்தமான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
IFT
அவள் அவரை அடைய முனைந்து விட்டாள். தன் அதிபதியின் தெளிவான சான்றினை உணராதிருந்தால் அவரும் அவளை அடைய முனைந்திருப்பார்! தீமையையும் மானக்கேடானவற்றையும் அவரை விட்டு விலக்கிவிட வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தோம். உண்மையிலேயே அவர் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லடியார்களுள் ஒருவராவார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவள் அவரை (அடைய) திடமாக ஆசை கொண்டு விட்டாள், அவர் தன் இரட்சகனுடைய சான்றைக் கண்டிராவிடில், அவரும் அவள்மீது ஆசை கொண்டே இருப்பார், தீமையையும் மானக்கேடான செயல்களையும் அவரைவிட்டும் நாம் திருப்பிவிடுவதற்காக (அவருக்கு) இவ்வாறு (எச்சரிக்கை செய்தோம்.) நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அடியார்களில் உள்ளவராவார்.
Saheeh International
And she certainly determined [to seduce] him, and he would have inclined to her had he not seen the proof [i.e., sign] of his Lord. And thus [it was] that We should avert from him evil and immorality. Indeed, he was of Our chosen servants.
(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
அப்துல் ஹமீது பாகவி
(யூஸுஃப் அவளை விட்டுத் தப்பித்துக்கொள்ளக் கருதி வெளியில் செல்ல ஓடினார். அவள் அவரைப் பிடித்துக்கொள்ளக் கருதி அவர் பின் ஓடினாள்.) இருவரும், ஒருவர் ஒருவரை முந்திக் கொள்ள கதவின் பக்கம் விரைந்து ஓடினார்கள். (யூஸுஃப் முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையைப் பிடித்திழுத்தாள்.) ஆகவே, அவருடைய சட்டையின் பின்புறத்தை கிழித்துவிட்டாள். அச்சமயம், வாசற்படியில் அவளுடைய கணவர் இருப்பதை இருவரும் கண்டனர். (ஆகவே, அவள் பயந்து, தான் தப்பித்துக் கொள்ளக் கருதி) அவரை நோக்கி ‘‘உமது மனைவிக்குத் தீங்கிழைக்கக் கருதியவனுக்குச் சிறையில் இடுவதோ அல்லது துன்புறுத்துகின்ற வேதனையைத் தருவதோ தவிர வேறு தண்டனை உண்டா?'' என்று கேட்டாள்.
IFT
இறுதியில் யூஸுஃபும், அவளும் (முன்னும் பின்னுமாக) வாயிலை நோக்கி ஓடினார்கள். அவள் பின்புறத்திலிருந்து அவருடைய சட்டையை (இழுத்து)க் கிழித்தாள்! அவ்வேளை வாயிலில், அவளுடைய கணவர் நிற்பதை இருவரும் கண்டார்கள். (அவரைப் பார்த்ததும்) அவள் கூறலானாள்: “உம்முடைய மனைவியிடம் தீய நோக்கத்துடன் நடந்துகொள்ள முயன்றவனுக்குத் தண்டனை என்ன? சிறையில் அடைப்பதையோ, கடும் வேதனையில் ஆழ்த்துவதையோ தவிர வேறு என்னதான் தண்டனை இருக்க முடியும்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யூஸுஃப் அவளை விட்டுத் தப்பிக்க வெளியில் செல்ல ஓடினார், அவள் அவரைப் பிடிக்க இவ்வாறாக) இருவரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசல் பக்கம் ஓடினார்கள், (யூஸுஃப், முந்திக் கொள்ளவே அவருடைய சட்டையை அவள் பிடித்திழுத்தாள்.) ஆகவே அவருடைய சட்டையைப் பின்புறமாக அவள் கிழித்துவிட்டாள்; (அச்சமயம்) வாசலில் அவளுடைய கணவரை இருவரும் காணப்பெற்றனர், (ஆகவே, அவள் தான் தப்பிக்க அவரிடம்) “உம்முடைய மனைவிக்குத் தீங்கை நாடியவனுக்கு அவன் சிறையிலிடப்படுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனையையோ தவிர (வேறு) என்ன தண்டனை (இருக்கக்கூடும்?) என்று கூறினாள்.
Saheeh International
And they both raced to the door, and she tore his shirt from the back, and they found her husband at the door. She said, "What is the recompense of one who intended evil for your wife but that he be imprisoned or a painful punishment?"
கால ஹிய ராவதத்னீ 'அன் னFப்ஸீ வ ஷஹித ஷாஹிதும் மின் அஹ்லிஹா இன் கான கமீஸுஹூ குத்த மின் குBபுலின் Fபஸதகத் வ ஹுவ மினல் காதிBபீன்
முஹம்மது ஜான்
(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
அப்துல் ஹமீது பாகவி
(யூஸுஃப் அதை மறுத்து) ‘‘அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்'' என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: ‘‘அவருடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் இவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (ஆனால்,)
IFT
அதற்கு யூஸுஃப், “இவள்தான் தவறான வழிக்கு என்னை அழைத்தாள்!” என்று கூறினார். அவளுடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் (சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு) சாட்சியம் கூறினார்: “யூஸுஃபுடைய சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் சொல்வதுதான் உண்மை; அவர் பொய்யராவார்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யூஸுஃப் அதனை மறுத்து) “அவள்தான் தன் விருப்பத்திற்கிணங்குமாறு என்னை அழைத்தாள்” என்று கூறினார், (அது சமயம்) அவளுடைய குடும்பத்திலிருந்த சாட்சியாளர் ஒருவர் (பின் வருமாறு) சாட்சி கூறினார், “அவருடைய சட்டை முன்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை சொல்கிறாள், அவரோ பொய்யர்களில் உள்ளவராவார்.
Saheeh International
[Joseph] said, "It was she who sought to seduce me." And a witness from her family testified, "If his shirt is torn from the front, then she has told the truth, and he is of the liars.
Fபலம்மா ரஆ கமீ ஸஹூ குத்த மின் துBபுரின் கால இன்னஹூ மின் கய்திகுன்ன இன்ன கய்தகுன்ன 'அளீம்
முஹம்மது ஜான்
(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) ‘‘நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியே; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது'' என்று கூறி,
IFT
அவளுடைய கணவர், யூஸுஃபுடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோது கூறினார்: “திண்ணமாக, இது பெண்களாகிய உங்களுடைய சூழ்ச்சிதான். உண்மை யாதெனில், உங்கள் சூழ்ச்சி மிகவும் அபாயகரமானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (யூஸுஃபாகிய) அவருடைய சட்டையை – அது பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்தபோது (தன் மனைவியிடம்) “நிச்சயமாக இது பெண்களாகிய) உங்களுடைய சதியிலுள்ளதே! நிச்சயமாக உஙகளின் சதி மகத்தானது” என்று கூறினார்.
Saheeh International
So when he [i.e., her husband] saw his shirt torn from the back, he said, "Indeed, it is of your [i.e., women's] plan. Indeed, your plan is great [i.e., vehement].
(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(யூஸுஃபை நோக்கி) ‘‘யூஸுஃபே! நீர் இதை இத்துடன் விட்டுவிடுவீராக. (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்'' என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) ‘‘நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்'' (என்று கூறினார்.)
IFT
யூஸுஃபே! இதனைப் பொருட்படுத்தாதீர்!” பிறகு (தன் மனைவியை நோக்கி), “உனது குற்றத்திற்காக நீ மன்னிப்புத் தேடிக்கொள்! ஏனெனில் நீதான் உண்மையில் தவறிழைத்திருக்கின்றாய்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யூஸுஃபிடம்,) ”யூஸுஃபே! நீர் இதனை விட்டும் புறக்கணித்து விடும் (என்று கூறி மீண்டும் அவளிடம்,) நீ உன் பாவத்திற்கு மன்னிப்புத் தேடிக்கொள், நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் இருக்கிறாய்” என்று (அவளது கணவராகிய) அவர் கூறினார் .
Saheeh International
Joseph, ignore this. And, [my wife], ask forgiveness for your sin. Indeed, you were of the sinful."
அப்பட்டிணத்தில் சில பெண்கள்; “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்” என்று பேசிக் கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டிணத்திலுள்ள பெண்கள் பலரும் (இதை இழிவாகக் கருதி) ‘‘அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள ஒரு (அடிமையான) ஒரு வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்'' என்று (இழிவாகப்) பேசலானார்கள்.
IFT
நகரத்திலுள்ள பெண்கள், தமக்கிடையே பேசிக் கொள்ளலாயினர்: “அஜீஸுடைய மனைவி தன்(னிடம் அடிமையாய் உள்ள) இளைஞரிடம் தகாத முறையில் நடந்திட முயன்றிருக்கின்றாள். அவர் மீதுள்ள காதல் அவளை நிதானமிழக்கச் செய்து விட்டது! உண்மையில் ஒரு வெளிப்படையான தவறை அவள் செய்து கொண்டிருக்கிறாள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்பட்டணத்திலுள்ள பெண்கள், பலரும் “(எகிப்திய அரசின்) அமைச்சருடைய மனைவி தன்னுடைய (அடிமை) வாலிபனை தன் விருப்பத்திற்கிணங்குமாறு அழைக்கிறாள், காதலால் அவர் அவளை மிகைந்து விட்டார், நிச்சயமாக, அவளை பகிரங்கமான வழிகேட்டிலேயே நாம் காண்கின்றோம்” என்று (இழிவாகக்) கூறினர்.
Saheeh International
And women in the city said, "The wife of al-ʿAzeez is seeking to seduce her slave boy; he has impassioned her with love. Indeed, we see her [to be] in clear error."
அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து வந்து ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியையும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தியையும் கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய் மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.
IFT
இவ்வாறு அப்பெண்கள் இழிவாகப் பேசிக் கொள்வதை அவள் கேள்விப்பட்டபோது, அவர்களுக்கு அழைப்பு அனுப் பினாள். அவர்களுக்காக சாய்விருக்கைகளைக் கொண்ட மண்டபத்தைத் தயாராக்கினாள். மேலும் (விருந்துண்ணும்போது) அப்பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். (அவர்கள் பழத்தை அறுத்துத் தின்னும் சந்தர்ப்பத்தில், யூஸுஃபை நோக்கி) அவர்களின் முன்னே செல்லும் என சாடை காட்டினாள். அப்பெண்கள் அவரைப் பார்த்ததும் பிரமித்துப் போய் தம் கைகளை அறுத்துக் கொண்டார்கள். “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் மிகத் தூய்மையானவன்) இவர் ஒரு மனிதரே அல்லர்; இவர் சிறப்புக்குரிய ஒரு வானவரே ஆவார்!” என்று (தங்களையும் மறந்து) கூறினர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களின் சூழ்ச்சியை (-எகிப்திய அரசின் அமைச்சருடைய மனைவியாகிய அவள் செவியுற்றபோது (அழைத்து வருபவரை அப்பெண்களாகிய)வர்கள்பால் அனுப்பினாள், அவர்களுக்காக ஒரு விருந்து சபையை ஏற்பாடும் செய்தாள், அ(ங்கு வந்திருந்த)வர்களில் ஒவ்வொருத்திக்கும் (ஒரு பழமும்) ஒரு கத்தியும் கொடுத்தாள், இன்னும் (யூஸுஃபாகிய) அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வெளிப்படுவீராக” என்று கூறினாள், (அப்பெண்களாகிய) அவர்கள் அவரைப் பார்த்த பொழுது (அவருடைய அழகில் மயங்கி) அவரை மிக்க மேன்மையாகக் கண்டு, தங்கள் கை (விரல்)களை அறுத்துக் கொண்டனர், மேலும் “அல்லாஹ் பரிசுத்தமானவன், இவர் மனிதரல்ல!! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கே தவிர (வேறு) இல்லை” என்று கூறினார்கள்.
Saheeh International
So when she heard of their scheming, she sent for them and prepared for them a banquet and gave each one of them a knife and said [to Joseph], "Come out before them." And when they saw him, they greatly admired him and cut their hands and said, "Perfect is Allah! This is not a man; this is none but a noble angel."
அதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவள் ‘‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர்தான் இவர். நிச்சயமாக நான் இவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், இவர் தப்பித்துக்கொண்டார். இனியும் இவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக இவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப் படுவார்''என்று கூறினாள்.
IFT
மன்னரின் மனைவி கூறினாள்: “(பார்த்தீர்களா!) எவர் விஷயத்தில் என்னை நீங்கள் பழித்தீர்களோ அவர் இவர்தான்; சந்தேகமில்லாமல், நான்தான் இவரை என் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினேன். ஆனால் இவர் தப்பிவிட்டார்; நான் சொல்வதை இவர் கேட்டு நடக்காவிட்டால் திண்ணமாக சிறையிலடைக்கப்பட்டு, சிறுமைக்குள்ளாவார்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வள், ‘நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான், நிச்சயமாக நான்தான் என் விருப்பத்திற்கிணங்குமாறு அவரை நான் அழைத்தேன், எனினும், அவர் மன உறுதியுடன் தப்பித்து(விலகி)க் கொண்டார், இனியும் நான் கட்டளையிடுகிறபடி அவர் செய்யாவிடில், நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், மேலும் அவர் சிறுமைப்பட்டவர்களில் உள்ளவராக நிச்சயமாக ஆகிவிடுவார்” என்று கூறினாள்.
Saheeh International
She said, "That is the one about whom you blamed me. And I certainly sought to seduce him, but he firmly refused; and if he will not do what I order him, he will surely be imprisoned and will be of those debased."
(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், ‘‘என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தை விட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளா விட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகிவிடுவேன்'' என்று பிரார்த்தித்தார்.
IFT
யூஸுஃப் கூறினார்: “என் இறைவனே! எந்தச் செயலைச் செய்ய வேண்டுமென என்னை இவர்கள் அழைக்கின்றார்களோ அந்தச் செயலைவிட சிறையே எனக்கு மிகவும் உவப்பானது! மேலும், அவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து என்னை நீ காப்பாற்றாவிட்டால், நான் அவர்களுடைய வலையில் சிக்கியிருப்பேன். மேலும், அறியாதவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேன்”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “என் இரட்சகனே! அவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ அ(த் தீய காரியத்)தை விட சிறைக்கூடமே எனக்கு மிக விருப்பமானதாகும், ஆகவே, (இப்பெண்களாகிய) அவர்களுடைய சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் திருப்பாவிட்டால் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன், மேலும் (பாவம் செய்யும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
Saheeh International
He said, "My Lord, prison is more to my liking than that to which they invite me. And if You do not avert from me their plan, I might incline toward them and [thus] be of the ignorant."
எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
IFT
அவருடைய இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, அப்பெண்களின் சூழ்ச்சிகளிலிருந்து அவரைக் காப்பாற்றினான். திண்ணமாக, அவனே அனைத்தையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே அவரது பிரார்த்தனையை அவருடைய இரட்சகன் அங்கீகரித்தான், பின்னர், (அப்பெண்களாகிய) அவர்களின் சூழச்சியை அவரைவிட்டும் திருப்பிவிட்டான், நிச்சயமாக அவனே செவியுறுகிறவன், யாவையும் நன்கறிகிறவன்.
Saheeh International
So his Lord responded to him and averted from him their plan. Indeed, He is the Hearing, the Knowing.
ثُمَّபிறகுبَدَاதோன்றியதுلَهُمْஅவர்களுக்குمِّنْۢ بَعْدِபின்னரும்مَا رَاَوُاஅவர்கள் பார்த்தالْاٰيٰتِஅத்தாட்சிகளைلَيَسْجُنُـنَّهٗநிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரைحَتّٰىவரைحِيْنٍஒரு காலம்
(யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
அப்துல் ஹமீது பாகவி
(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.)
IFT
பிறகு, (யூஸுஃபுடைய ஒழுக்கத் தூய்மைக்கும், தம் பெண்கள்தாம் தவறிழைத்தவர்கள் என்பதற்கும்) தெளிவான சான்றுகளை அவர்கள் கண்ட பின்பும், சிறிதுகாலம் அவரைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குத் தோன்றியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (யூஸுஃப் தூயவர் என்பதற்குரிய) அத்தாட்சிகளை அவர்கள் கண்டதன் பிறகு, சிறிது காலம் வரை (யூஸுஃபாகிய) அவரை, நிச்சயமாக சிறையிலிட வேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரைச் சிறையிலிட்டனர்).
Saheeh International
Then it appeared to them after they had seen the signs that he [i.e., al-ʿAzeez] should surely imprison him for a time.
அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) ‘‘நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறினான். மற்றவன் ‘‘நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்'' என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீர் எங்களுக்கு அறிவிப்பீராக!'' (என்று கூறினான்).
IFT
அவருடன், இரு இளைஞர்களும் சிறை புகுந்தார்கள். (ஒருநாள்) அவ்விருவரில் ஒருவர், “நான் திராட்சைச் சாறு பிழிந்து கொண்டிருப்பதாகக் கனவு கண்டேன்” என்று கூறினார். மற்றொருவர் கூறினார்: “நான் என் தலை மீது ரொட்டிகளைச் சுமந்திருப்பதாகவும் அவற்றைப் பறவைகள் தின்று கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.” (அவ்விருவரும் யூஸுஃபிடம் கூறினர்:) “நீர் இதன் விளக்கத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உம்மை ஒரு நல்ல மனிதராக நாங்கள் காண்கிறோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மற்ற குற்றங்களுக்காக வேறு) இரு வாலிபர்கள் அவருடன் சிறையில் நுழைந்தனர், அவ்விவருவரில் ஒருவன், நான் (திராட்சையைப் பிழிந்து) மதுரஸம் தயார் செய்து கொண்டிருப்பதாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்” என்று கூறினான், மற்றவன், “என் தலையின் மீது ரொட்டியை சுமந்து கொண்டிருக்க அதிலிருந்து பட்சிகள் (கொத்திப்) புசிப்பதாக நிச்சயமாக என்னை நான் (கனவில்) கண்டேன்,” என்று கூறி, “இவற்றின் விளக்கத்தை எங்களுக்கு நீர் தெரிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை மிக்க (ஞானமுடைய) நல்லவர்களில் (ஒருவராகக்) காண்கிறோம்” (என்று யூஸுஃபிடம் கூறினார்கள்.)
Saheeh International
And there entered the prison with him two young men. One of them said, "Indeed, I have seen myself [in a dream] pressing [grapes for] wine." The other said, "Indeed, I have seen myself carrying upon my head [some] bread, from which the birds were eating. Inform us of its interpretation; indeed, we see you to be of those who do good."
கால லா ய'தீகுமா த'ஆமுன் துர்Zஜகானிஹீ இல்லா னBப்Bப'துகுமா Bபி த'வீலிஹீ; கBப்ல அ(ன்)ய் ய'தி யகுமா; தாலிகுமா மிம்மா 'அல்லமனீ ரBப்Bபீ; இன்னீ தரக்து மில்லத கவ்மில் லா யு'மினூன Bபில்லாஹி வஹும் Bபில் ஆகிரதி ஹும் காFபிரூன்
முஹம்மது ஜான்
அதற்கு அவர் கூறினார்: “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் புசிக்கக்கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவே அதன் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமையை நிராகரிக்கின்ற மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “இங்கு உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வருவதற்கு முன்பே இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்து விடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமலும், மறுமையை ஏற்காமலும் வாழ்கின்ற சமூகத்தாரின் வழிமுறையைத் திண்ணமாக நான் விட்டுவிட்டேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு யூஸுஃப்,) நீங்களிருவரும் எதை உணவாக வழங்கப்படுகிறீர்களோ அது உங்களிருவருக்கும் வந்து சேரும் முன் அதன் விளக்கத்தை உங்களிருவருக்கும் நான் அறிவித்தே அல்லாது (அந்த) உணவு உங்களிருவருக்கும் வருவதில்லை, இவ்விரண்டு(க்குரிய விளக்கமும்) என் இரட்சகன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றில் உள்ளவையாகும், அல்லாஹ்வை விசுவாசிக்காத சமூகத்தாரின் மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன், இன்னும் அவர்கள்-அவர்களே மறுமையை நிராகரிக்கக் கூடியவர்கள்.
Saheeh International
He said, "You will not receive food that is provided to you except that I will inform you of its interpretation before it comes to you. That is from what my Lord has taught me. Indeed, I have left the religion of a people who do not believe in Allah, and they, in the Hereafter, are disbelievers.
“நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
IFT
என் மூதாதையரான இப்ராஹீம், இஸ்ஹாக் மற்றும் யஃகூப் ஆகியோரின் வழிமுறையைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுடன் எதனையும் இணையாக்குவது எங்களுடைய பணி அல்ல. உண்மையிலேயே, (அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் நாம் அடிமைகளல்லர் எனும்) இந்நிலை, நம்மீதும் மனித குலம் அனைத்தின் மீதும் அல்லாஹ் பொழிந்துள்ள ஓர் அருட்பேறாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதற்கு நன்றி செலுத்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், என்னுடைய மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தையே நான் பின்பற்றி விட்டேன், (ஆதலால்,) அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல, இ(க் கொள்கை மீது இருப்ப)து, எங்கள்மீதும், (மற்ற) மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த பேரருளாகும், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்,
Saheeh International
And I have followed the religion of my fathers, Abraham, Isaac and Jacob. And it was not for us to associate anything with Allah. That is from the favor of Allah upon us and upon the people, but most of the people are not grateful.
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா?
அப்துல் ஹமீது பாகவி
சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (ஒரு சக்தியுமற்ற) மாறுபட்ட பல்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா?
IFT
என்னுடைய சிறைத் தோழர்களே! (நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!) பல்வேறுபட்ட கடவுளர்கள் சிறந்தவர்களா? அல்லது யாவற்றையும் அடக்கியாளுகின்ற ஏக இறைவனாகிய அல்லாஹ் சிறந்தவனா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சிறைச்சாலையின் என்னிரு தோழர்களே! (யாதொரு சக்தியுமற்ற) பல்வேறு தெய்வங்கள் மேலா? அல்லது (யாவற்றையும்) அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா?
Saheeh International
O [my] two companions of prison, are separate lords better or Allah, the One, the Prevailing?
“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,)
IFT
அவனை விடுத்து எவற்றுக்கு நீங்கள் அடிபணிந்து வருகின்றீர்களோ அவை யாவும் நீங்களும், உங்கள் மூதாதையர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களே(தவிர வேறொன்றுமில்லை)! அவற்றை வணங்குவதற்கு எத்தகைய ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கி வைக்கவில்லை. ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியக் கூடாதென்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறியாகும்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாதிருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனையன்றி நீங்கள் வணங்குபவை வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (வேறொன்றும்) இல்லை, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அவற்றைப் பெயர்களாக வைத்துக் கொண்டீர்கள்; அல்லாஹ் இதற்கு யாதோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (மற்றெவருக்கும்) அதிகாரம் இல்லை; அவனைத் தவிர மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளையிட்டிருக்கின்றான்; இதுதான் நிலையான மார்க்கமாகும், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள், (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்தபின்),
Saheeh International
You worship not besides Him except [mere] names you have named them, you and your fathers, for which Allah has sent down no evidence. Legislation is not but for Allah. He has commanded that you worship not except Him. That is the correct religion, but most of the people do not know.
“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன், முன்செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன்பு போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானம் கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்'' என்று கூறினார்.)
IFT
என்னுடைய சிறைத் தோழர்களே! (உங்கள் கனவுகளுக்கான விளக்கம் இதுதான்:) உங்களில் ஒருவர் தம் எஜமான(னாகிய எகிப்து அரச)னுக்கு மது புகட்டுவார். மற்றொருவர் கழுவிலேற்றப்படுவார்; பறவைகள் அவருடைய தலையைக் கொத்தித் தின்னும்! நீங்கள் எந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டீர்களோ அந்த விஷயம் தீர்மானிக்கப்பட்டு விட்டது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களிடம்,) “சிறைச்சாலையின் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் விளக்கம் உங்களில் ஒருவன் (முன்போலவே) தன் எஜமானனுக்கு மது ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான், மற்றொருவனோ சிலுவையில் அறையப்பட்டு அவன் தலையிலிருந்து பட்சிகள் (கொத்தித்) தின்னும், எதில் நீங்கள் இருவரும் விளக்கம் தேடினீர்களோ அக்காரியம் விதிக்கப்பட்டுவிட்டது, (அவ்வாறு நடந்தே தீரும்)” என்று கூறினார்.
Saheeh International
O two companions of prison, as for one of you, he will give drink to his master of wine; but as for the other, he will be crucified, and the birds will eat from his head. The matter has been decreed about which you both inquire."
அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!” என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னார். எனினும் (சிறைக் கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான், அவனுக்கு மறக்கடித்துவிட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (இன்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார்.
IFT
பிறகு, அவ்விருவரில் எவரைக் குறித்து திண்ணமாக அவர் விடுதலையாகி விடுவார் என்று யூஸுஃப் கருதினாரோ அவரிடம் “உன்னுடைய எஜமான(னாகிய எகிப்தின் அரச)னிடம் என்னைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்” என்றார். ஆனால், தன் எஜமானனிடம் (யூஸுஃபை) நினைவுபடுத்தவிடாமல் அவரை ஷைத்தான் மறதியிலாழ்த்தி விட்டான். யூஸுஃப் மேலும் சில ஆண்டுகள் சிறையிலே கிடந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்விருவரில் எவர் நிச்சயமாக விடுதலை பெறுவார் என அவர் எண்ணினாரோ அத்தகையவரிடம், “நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றிக் கூறுவாயாக” என்று (யூஸீஃபாகிய) அவர் கூறினார், ஆனால் (சிறைக் கூடத்திலிருந்து வெளியேறிய அவர் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான் அவருக்கு மறக்கடித்துவிட்டான், ஆதலால் அவர் சிறைக் கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் தங்கிவிட்டார்.
Saheeh International
And he said to the one whom he knew would go free, "Mention me before your master." But Satan made him forget the mention [to] his master, and he [i.e., Joseph] remained in prison several years.
நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் இக்கனவின் பலனை அறிவியுங்கள்'' என்று கூறினார்.
IFT
(ஒருநாள்) அரசன் கூறினான்: “நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருக்கின்றன; மேலும் பசுமையான ஏழு தானியக் கதிர்களையும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன். எனவே, அவையோரே! கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாயிருந்தால் எனது கனவுக்குரிய விளக்கத்தைக் கூறுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (எகிப்தின்) அரசர், (தம் பிரதானிகளிடம்,) “கொழுத்துப் பருத்த ஏழு பசுக்கள் - அவற்றை இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு (ஏழு) கதிர்களையும் நிச்சயமாக நான் (கனவில்) கண்டேன், என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என்னுடைய கனவுக்கு விளக்கம் கூறுங்கள்” என்று கூறினார்.
Saheeh International
And [subsequently] the king said, "Indeed, I have seen [in a dream] seven fat cows being eaten by seven [that were] lean, and seven green spikes [of grain] and others [that were] dry. O eminent ones, explain to me my vision, if you should interpret visions."
அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
அப்துல் ஹமீது பாகவி
(யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக் கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) ‘‘அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பிவையுங்கள்'' என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பிவைத்தார்.)
IFT
அவ்விரு கைதிகளில் விடுதலையடைந்தவர், வெகு காலத்திற்குப் பிறகு (யூஸுஃப் பற்றி) நினைவு வந்தபோது கூறினார்: “நான் இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னை(ச்சிறையில் உள்ள யூஸுஃபிடம்) அனுப்புங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் அவ்விருவரில், விடுதலையடைந்தவர், இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃபை) நினைவுபடுத்திக் கொண்டவராகிய அவர், “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், ஆகவே, என்னை (சிறைக்கூடத்திற்கு) அனுப்பி வையுங்கள்” என்று கூறினான்.
Saheeh International
But the one who was freed and remembered after a time said, "I will inform you of its interpretation, so send me forth."
(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
(அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி “கனவுகளுக்கு) உண்மை(யான வியாக்கியானம்) கூறுபவரே! யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதை) நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! (என்னை அனுப்பிய) மக்கள் (இதைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கிறது'' என்று கூறினான்.
IFT
(அவர் அங்கு சென்று கூறினார்:) “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருப்பதாகவும், மேலும் பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து போன ஏழு கதிர்களையும் கனவில் கண்டால் அதன் விளக்கம் என்ன என்பதை எங்களுக்குக் கூறுவீராக! நான் இம்மக்களிடம் திரும்பச் செல்ல வேண்டும்; அவர்கள் அறிந்து கொள்ளக்கூடும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(சிறைக்கூடம் சென்று அவன்,) “யூஸுஃபே! உண்மையாளரே கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை – அவற்றை இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் பற்றியும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்து உலர்ந்த மற்ற (ஏழு) கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பொருள் என்ன? என்பதைப்) பற்றி நீர் எங்களுக்கு அறிவிப்பீராக! என்னை (அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கின்றது” (என்று கேட்டார்.)
Saheeh International
[He said], "Joseph, O man of truth, explain to us about seven fat cows eaten by seven [that were] lean, and seven green spikes [of grain] and others [that were] dry - that I may return to the people [i.e., the king and his court]; perhaps they will know [about you]."
கால தZஜ்ர'ஊன ஸBப்'அ ஸினீன த அBபன் Fபமா ஹஸத்தும் Fபதரூஹு Fபீ ஸும்Bபு லிஹீ இல்லா கலீலம் மிம்மா த'குலூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் கூறியதாவது: ‘‘தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
IFT
யூஸுஃப் கூறினார்: “ஏழாண்டுகள் வரை தொடர்ந்து நீங்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பீர்கள். (அந்த ஏழாண்டுகளில்) நீங்கள் அறுவடை செய்வதில் உங்கள் உணவுக்குப் பயன்படும் ஒரு சிறு பாகத்தைத் தவிர, மற்றவற்றை அவற்றின் கதிர்களிலேயே விட்டு வையுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “தொடர்ந்து வழக்கப்படி (நல்ல விதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள், நீங்கள் அறுவடை செய்வதை – நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத் தவிர – (மற்ற யாவற்றையும்) அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள் என்று கூறினார்.
Saheeh International
[Joseph] said, "You will plant for seven years consecutively; and what you harvest leave in its spikes, except a little from which you will eat.
“பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தவற்றில் (விதைப்பதற்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும்.
IFT
அதன் பின்னர் மிகக் கடினமான ஏழாண்டுகள் வரும். அப்போது அந்நேரத்திற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டு விடும்! அவற்றிலிருந்து நீங்கள் தனியே பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னர், அதற்கப்பால், கடினமான (பஞ்சத்தைக் கொண்ட) ஏழு (ஆண்டுகள்) வரும், நீங்கள் சேமித்து வைத்திருப்பவற்றிலிருந்து, (பஞ்சமான வருடங்களாகிய) இவைகளுக்காக நீங்கள் (கதிர்களில்) முற்படுத்தி வைத்தவற்றில் குறைவானவற்றைத் தவிர (மற்றதை) அவை தின்றுவிடும்.
Saheeh International
Then will come after that seven difficult [years] which will consume what you advanced [i.e., saved] for them, except a little from which you will store.
பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிவார்கள்'' (என்றும் கூறினார்).
IFT
பின்னர் மீண்டும் ஓர் ஆண்டு வரும். அப்பொழுது அருள் மாரி பொழியப்பட்டு மக்களின் துயரங்கள் களையப்படும். அன்று அவர்கள் பழரசங்கள் பிழிவார்கள் (செழிப்பாக வாழ்வார்கள்)!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், “அதற்கப்பால் ஒரு வருடம் வரும், அதில் மனிதர்கள் ஏராளமாக மழை பொழிவிக்கப்படுவர், (கனி வர்க்கங்களிளிருந்து அவற்றின் ரஸத்தைப்) பிழிந்து கொண்டுமிருப்பார்கள்” (என்றும் கூறினார்.)
Saheeh International
Then will come after that a year in which the people will be given rain and in which they will press [olives and grapes]."
(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) ‘‘நீர் உமது எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேட்பீராக. நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறினார்.
IFT
அரசர், “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்றார். (அரசரின்) தூதுவர் வந்தபோது, யூஸுஃப் அவரிடம் கூறினார்: “நீர் உம் எஜமானனிடம் திரும்பிச் சென்று, ‘தம் கைகளை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று?’ என்று கேட்டுவாரும். திண்ணமாக, என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை நன்கு அறிந்தவனாவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (கனவுகளின் விளக்கம் பற்றி அவன் கேட்டு வந்ததை அரசருக்கு அவன் அறிவிக்கவே) அதற்கு அரசர், (இவ்விளக்கங் கூறிய) “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக்(கட்டளையிட்டுக்) கூறினார், அவருடைய தூதர் யூஸுஃபிடம் (இது பற்றிச் சொல்ல) வரவே, (அவரிடம்) “நீர் உம் எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கைகளை வெட்டிக் கொண்டவர்களான பெண்களின் நிலை என்ன?” என்று அவரைக்கேளும், நிச்சயமாக அவர்களின் சூழ்ச்சியை என் இரட்சகன் நன்கறிந்தவன்” என்று கூறினார்.
Saheeh International
And the king said, "Bring him to me." But when the messenger came to him, [Joseph] said, "Return to your master and ask him what is the case of the women who cut their hands. Indeed, my Lord is Knowing of their plan."
(இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) ‘‘நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?'' என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் ‘‘அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை'' என்று கூறிவிட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்'' என்று கூறினாள்.
IFT
பிறகு அரசன் அப்பெண்களிடம் வினவினான்: “நீங்கள் யூஸுஃபை உங்கள் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?” அதற்கு அப்பெண்கள், “ஹாஷலில்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்!) நாங்கள் அவரிடம் எத்தகைய தீய அம்சத்தையும் காணவில்லை” என ஒருமித்த குரலில் கூறினர். அஜீஸின் மனைவி கூறினாள்: “இப்பொழுது உண்மை வெளிப்பட்டுவிட்டது. நானே அவரை என் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சி செய்தேன். திண்ணமாக, அவர் முற்றிலும் வாய்மையுடையவரே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கரசர், அப்பெண்களை அழைத்து,) “நீங்கள் யூஸுஃபை (கண்டு) விரும்பியபோது, உங்களுக்கு நேர்ந்ததென்ன?” என்று கேட்டார், அ(தற்க)வர்கள், “அல்லாஹ் தூய்மையானவன் நாங்கள் அவரிடத்தில் யாதொரு தீங்கையும் அறியவில்லை” என்று கூறிவிட்டார்கள், (எகிப்திய அரசின்) அமைச்சருடைய மனைவி, “உண்மை இப்போது வெளிப்பட்டுவிட்டது, நான்தான் என் விருப்பத்திற்கிணங்குமாறு அவரை அழைத்தேன், (யூஸுஃப் அழைக்கவில்லை) நிச்சயமாக, அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்-
Saheeh International
Said [the king to the women], "What was your condition when you sought to seduce Joseph?" They said, "Perfect is Allah! We know about him no evil." The wife of al-ʿAzeez said, "Now the truth has become evident. It was I who sought to seduce him, and indeed, he is of the truthful.
இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; “நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கேள்வியுற்ற யூஸுஃப் ‘‘முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணை செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என்(பதை அறிவிப்)பதற்காகவுமே'' (என்று கூறினார்).
IFT
(யூஸுஃப் கூறினார்): “இதில் எனது நோக்கம் என்ன வெனில், திரை மறைவில் அஜீஸுக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்யவில்லை என்பதையும், நம்பிக்கைத் துரோகம் செய்வோரின் சூழ்ச்சிகளை அல்லாஹ் ஒருபோதும் வெற்றியடையச் செய்வதில்லை என்பதையும் அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதன் காரணம்: “நிச்சயமாக (என்னைவிட்டு அவரும், அவரை விட்டு நானும் மறைவாக இருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சிக்கு வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிந்து கொள்வதற்காகவேதான்” (என்றும்),
Saheeh International
That is so he [i.e., al-ʿAzeez] will know that I did not betray him in [his] absence and that Allah does not guide the plan of betrayers.
“அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்'' என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்'' (என்றார்.)
IFT
மேலும், நான் என்னைத் தூய்மையானவன் எனக் கூறிக் கொள்ளவில்லை. ஏனெனில், திண்ணமாக மனித மனம், தீயவற்றை அதிகமாக தூண்டிவிடக்கூடியதாகும்; ஆனால் எவருக்கு இறைவன் கருணை புரிந்தானோ அவருடைய மனத்தைத் தவிர! திண்ணமாக, என் இறைவன் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெரும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், நான் (யூஸுஃபின் மீது மோகங்கொள்ளவில்லை என்று கூறி என் மனதை நான் தூய்மைப்படுத்தவில்லை; (ஏனென்றால்) நிச்சயமாக என் இரட்சகன் அருள் புரிந்தவரையன்றி (மனிதனுடைய) மனம் பாவம் செய்யும்படி அதிகம் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது, நிச்சயமாக என் இரட்சகன் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்” (என்று எகிப்திய அரசரின் அமைச்சருடைய மனைவி கூறனாள்.)
Saheeh International
And I do not acquit myself. Indeed, the soul is a persistent enjoiner of evil, except those upon which my Lord has mercy. Indeed, my Lord is Forgiving and Merciful."
இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) ‘‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்'' என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) ‘‘நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்'' என்றார்.
IFT
அரசர் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கே உரியவராய் வைத்துக் கொள்கின்றேன்” என்றார். யூஸுஃப் அவரிடம் உரையாடினார். அப்போது அரசர் கூறினார்: “இப்போது நீர் திண்ணமாக நம்மிடம் மதிப்பிற்குரியவராகவும் முழுநம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(சிறைச்சாலையிலிருக்கும் யூஸுஃபின் ஞானத்தை அறிந்த) அரசர் “அவரை என்னிடம் (அழைத்துக்) கொணடு வாருங்கள் எனக்கு மட்டும் பிரத்தியேகமானவராக அவரை நான் அமர்த்திக் கொள்வேன்” என்று கூறினார், (ஆகவே சிறையிலிருந்து வெளியாகிய) அவருடன் பேசியபொழுது, நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்றவராக இருக்கிறீர்” என்று கூறினார்.
Saheeh International
And the king said, "Bring him to me; I will appoint him exclusively for myself." And when he spoke to him, he said, "Indeed, you are today established [in position] and trusted."
(யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கவர்) ‘‘தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுவீராக. நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்'' என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்.)
IFT
அதற்கு யூஸுஃப் “நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “இந்தப் பூமியின் களஞ்சியங்களின் மீது (நிர்வாகியாக) என்னை ஆக்கிவிடும், நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்கக் கூடியவன், நன்கறிந்தவன்” என்று சொன்னார் (அரசரும் அவ்வாறே செய்தார்.)
Saheeh International
[Joseph] said, "Appoint me over the storehouses of the land. Indeed, I will be a knowing guardian."
யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை.
IFT
மேலும், இவ்வாறு நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார். நாம் விரும்புகின்றவர்கள் மீது நமது கருணையைப் பொழிகின்றோம். நல்லவர்களின் கூலியை நாம் வீணாக்கிட மாட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே யூஸுஃபுக்கு பூமியில் அவர் விரும்பியவாறு வசித்துக் கொள்ள நாம் அவருக்கு வசதியளித்தோம், நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) நம் அருளை கிடைக்கும்படிச் செய்கிறோம், நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்கிவிடவுமாட்டோம்.
Saheeh International
And thus We established Joseph in the land to settle therein wherever he willed. We touch with Our mercy whom We will, and We do not allow to be lost the reward of those who do good.
மேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கையாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப்படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.)
IFT
மேலும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறப்புடையதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசங்கொண்டு, பயபக்தியுடையவர்களாகவும் இருந்தார்களே அவர்களுக்கு மறுமையின் கூலியானது மிக மேலானதாக இருக்கும்.
Saheeh International
And the reward of the Hereafter is better for those who believed and were fearing Allah.
(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தான் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை.
IFT
பிறகு யூஸுஃபின் சகோதரர்கள் எகிப்துக்கு வந்து அவருடைய அவைக்குச் சென்றார்கள். அப்போது அவர் அவர்களை அறிந்து கொண்டார். ஆனால் அவர்கள் அவரை அறியவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், யூஸுஃபுடைய சகோதரர்கள் (கன் ஆனிலிருந்து) வந்து, அவரிடம் நுழைந்தபொழுது அவர்களோ அவரை (யூஸுஃபை) அறியாதவர்களாக இருந்த நிலையில் அவர்களை (தன் சகோதரர்கள் என யூஸுஃபாகிய) அவர் அறிந்துகொண்டார்.
Saheeh International
And the brothers of Joseph came [seeking food], and they entered upon him; and he recognized them, but he was to them unknown.
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு ‘‘மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் என்னிடம் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்த போதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா?
IFT
யூஸுஃப், அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கிட ஏற்பாடு செய்துவிட்டு (அவர்கள் புறப்படும் நேரத்தில்) கூறினார்: “உங்கள் தந்தைவழிச் சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் எவ்வளவு நிறைவாக அளந்து தருகின்றேன்; எப்படிச் சிறந்த முறையில் விருந்துபசாரம் செய்பவனாக இருக்கின்றேன் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (யூஸுஃபாகிய) அவர் அவர்களுக்கு (வேண்டிய) தானியங்களைத் தயார்படுத்திக் கொடுத்தபோது (மறுமுறை நீங்கள் வந்தால்) “உங்களுடைய தந்தையிலிருந்துள்ள உங்களுக்குரிய சகோதர(ன் புன்யாமீ)னையும் என்னிடம் (அழைத்துக்) கொண்டு வாருங்கள், நான் நிச்சயமாக (உங்களுக்கு தானியங்களைப்) பூர்த்தியாக்குபவன் என்பதையும், விருந்துபசாரம் செய்பவர்களில் நான் மிகச் சிறந்தவன் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறினார்.
Saheeh International
And when he had furnished them with their supplies, he said, "Bring me a brother of yours from your father. Do you not see that I give full measure and that I am the best of accommodators?
“ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை; நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிட்டால் என்னிடமுள்ள (தானியத்)தை உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது'' என்று கூறினார்.
IFT
நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிடில், இனி என்னிடத்திலிருந்து உங்களுக்கு எந்த தானியமும் கிடைக்காது. ஏன், என் அருகிலும்கூட நீங்கள் வரக்கூடாது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிடில், என்னிடம் உங்களுக்கு (தானியத்தை) அளப்பது இல்லை, நீங்கள் என்னை நெருங்கவும் வேண்டாம்” (என்று கூறினார்).
Saheeh International
But if you do not bring him to me, no measure will there be [hereafter] for you from me, nor will you approach me."
“அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “அவரை எங்களுடன் அனுப்புவதற்காக அவருடைய தந்தையின் சம்மதத்தைப் பெற முயல்வோம். கண்டிப்பாக நாங்கள் இதனைச் செய்வோம்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நாங்கள் அவருடைய தந்தையிடம் (உங்களிடம் அவரைக் கொண்டுவர) அவரைப் பற்றி (சாத்தியமான எல்லா) முயற்சிகளையும் மேற்கொள்வோம், நிச்சயமாக நாங்கள் (அதைச்) செய்பவர்களாகவும் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We will attempt to dissuade his father from [keeping] him, and indeed, we will do [it]."
வ கால லிFபித்யானிஹிஜ் 'அலூ Bபிளா'அதஹும் Fபீ ரிஹாலிஹிம் ல'அல்லஹும் யஃரிFபூனஹா இதன் கலBபூ இலா அஹ்லிஹிம் ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் யூஸுஃப்) தன் (பணி) ஆட்களை நோக்கி ‘‘அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதை அறிந்துகொண்டு (அதை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்'' என்று கூறினார்.
IFT
யூஸுஃப், தம் பணியாட்களிடம் “தானியத்துக்காக அவர்கள் கொடுத்த சரக்குகளை அவர்களுடைய பொதிகளிலேயே (மறைத்து) வைத்து விடுங்கள்!” என்று கூறினார். அவர்கள் ஊருக்குத் திரும்பிச் சென்றதும் (மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்ட) பொருட்களை அறிந்து கொள்ளக்கூடும். (மேலும், இந்தப் பேருதவிக்கு நன்றியுள்ளவர்களாகக் கூடும்) மேலும், அவர்கள் திரும்பி வரவும் கூடும் (எனும் நம்பிக்கையில் யூஸுஃப் இவ்வாறு செய்தார்.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர் யூஸுஃப்) தன் பிணையாட்களிடம் “(கிரயமாகக் கொடுத்த அவர்களின் பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் ஆக்கி (மறைத்து வைத்து) விடுங்கள், அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றடைந்தால், (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதனை அவர்கள் அறிந்துகொண்டு, (அதனை நம்மிடம் செலுத்த) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
Saheeh International
And [Joseph] said to his servants, "Put their merchandise into their saddlebags so they might recognize it when they have gone back to their people that perhaps they will [again] return."
அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி: “எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்” என்று சொன்னார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்த பொழுது ‘‘எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவைப்பீராக. நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வரும்போது, “எங்கள் தந்தையே! (இனிமேல்) நமக்குத் தானியம் வழங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களுடன் எங்கள் சகோதரரையும் அனுப்பி வையுங்கள், நாங்கள் தானியம் வாங்கி வருகின்றோம். மேலும், அவரைப் பாதுகாக்க நாங்கள் பொறுப்பேற்கிறோம்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்தபொழுது, “எங்கள் தந்தையே! எங்களுக்கு (த்தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிட்டது, ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவையுங்கள், நாங்கள் தானியம் அளந்து வாங்கிக் கொண்டு, நிச்சயமாக அவரையும் பாதுகாப்பவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
So when they returned to their father, they said, "O our father, [further] measure has been denied to us, so send with us our brother [that] we will be given measure. And indeed, we will be his guardians."
قَالَகூறினார்هَلْ اٰمَنُكُمْஉங்களை நான் நம்புவதா?عَلَيْهِஇவர் விசயத்தில்اِلَّاதவிரكَمَاۤபோல்اَمِنْتُكُمْநம்பினேன்/உங்களைعَلٰٓى اَخِيْهِஇவருடைய சகோதரர் விஷயத்தில்مِنْ قَبْلُؕமுன்னர்فَاللّٰهُஅல்லாஹ்خَيْرٌமிக மேலானவன்حٰفِظًاபாதுகாவலன்وَّهُوَஅவன்اَرْحَمُமகா கருணையாளன்الرّٰحِمِيْنَஅருள் புரிபவர்களில்
கால ஹல் ஆமனுகும் 'அலய்ஹி இல்லா கமா அமின்துகும் 'அலா அகீஹி மின் கBப்ல்; Fபல் லாஹு கய்ருன் ஹாFபிள(ன்)வ் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
முஹம்மது ஜான்
அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு யஅகூப்) ‘‘இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்'' என்று கூறிவிட்டார்.
IFT
அதற்கு யஃகூப், “இதற்கு முன் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் உங்களை நான் நம்பியது போன்று இவர் விஷயத்தில் இப்பொழுது உங்களை நான் நம்புவேனா? அல்லாஹ்தான் மிகச் சிறந்த பாதுகாவலன்; அவன் கருணையாளர்களிலேயே மிகவும் கருணையாளன்” என்று பதில் கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு (யாஃகூபாகிய) அவர், “இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் அல்லாது இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவேனா? (முடியாது) ஆகவே, பாதுகாப்பவனில் அல்லாஹ் மிக்க மேலானவன், மேலும், அவனே அருள் புரிவோரிலெல்லாம் மிக்க அருளாளன்” என்று கூறிவிட்டார்.
Saheeh International
He said, "Should I entrust you with him except [under coercion] as I entrusted you with his brother before? But Allah is the best guardian, and He is the most merciful of the merciful."
அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு ‘‘எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டு விட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்'' என்று கூறினார்கள்.
IFT
பின்னர் அவர்கள் தம் பொதிகளை அவிழ்த்தபோது அவர்களின் சரக்குகள் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டு “எங்கள் தந்தையே! இனி நமக்கு என்ன வேண்டும்? இதோ (பாருங்கள்!) நம்முடைய சரக்குகள் நம்மிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளன. (நாங்கள் சென்று) நமது குடும்பத்துக்கு வேண்டிய உணவுப் பொருட்களை வாங்கி வருவோம்; மேலும், எங்கள் சகோதரரைப் பாதுகாத்துக் கொள்வோம்; மேலும், ஓர் ஒட்டகச் சுமையளவு தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம். இந்த அளவு அதிக தானியம் எளிதில் கிடைத்துவிடும்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் தங்கள் சாமான் (மூட்டை)களை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருளை அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு, “எங்கள் தந்தையே! (இன்னும்,) நாங்கள் எதைத் தேடுவோம்? இதோ, நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டது; (ஆகவே, புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களையும் நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரனையும், பாதுகாத்து வருவோம்; (அவருக்காகவும்) ஓர் ஒட்டகச் சுமை தானியத்தை அதிகமாகவும் கொண்டு வருவோம்; இ(வ்வாறு அவர்கள் அதிகமாகக் கொடுப்ப)து, எளிதான (தானிய) அளவைதான்” என்று கூறினார்கள்.
Saheeh International
And when they opened their baggage, they found their merchandise returned to them. They said, "O our father, what [more] could we desire? This is our merchandise returned to us. And we will obtain supplies [i.e., food] for our family and protect our brother and obtain an increase of a camel's load; that is an easy measurement."
அதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு அவர்களின் தந்தை) ‘‘உங்கள் அனைவரையுமே (ஒரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலே தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுக்கின்ற வரை நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்'' என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே, அதற்கு அவர் ‘‘நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்'' என்று கூறினார். (பிறகு, புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்.)
IFT
அதற்குத் தந்தை கூறினார்: “நீங்கள் கண்டிப்பாக அவரை என்னிடம் (திரும்ப) அழைத்து வந்து விடுவீர்கள் என்று அல்லாஹ்வின் பெயரால் எனக்கு உறுதிமொழி தராதவரை ஒருபோதும் அவரை நான் உங்களுடன் அனுப்ப மாட்டேன்; ஆனால் ஏதேனும் ஆபத்து உங்களைச் சூழ்ந்து கொண்டாலே தவிர!” அவர்கள் அவ்வாறு அவரிடம் உறுதிமொழி அளித்தபோது, அவர் கூறினார்: “நாம் இவ்வாறு பேசிக் கொள்வதை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கின்றான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “உங்கள் யாவரையும் (ஏதேனும் ஆபத்து) சூழ்ந்து கொண்டாலன்றி நிச்சயமாக அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (யாவரும்) எனக்கு உறுதிமொழி கொடுக்கும்வரை, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று (யாஃகூப் நபியாகிய) அவர் கூறினார்; ஆகவே, அவர்கள் (அவ்வாறு) அவருக்கு உறுதிமொழி கொடுக்கவே, (அதற்கு) அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே கண்காணிப்பவனாக இருக்கிறான்” என்று கூறினார்.
Saheeh International
[Jacob] said, "Never will I send him with you until you give me a promise [i.e., oath] by Allah that you will bring him [back] to me, unless you should be surrounded [i.e., overcome by enemies]." And when they had given their promise, he said, "Allah, over what we say, is Entrusted."
وَقَالَஇன்னும் கூறினார்يٰبَنِىَّஎன் பிள்ளைகளேلَا تَدْخُلُوْاநுழையாதீர்கள்مِنْۢ بَابٍஒரு வாசல் வழியாகوَّاحِدٍஒரேوَّادْخُلُوْاஇன்னும் நுழையுங்கள்مِنْ اَبْوَابٍவாசல்கள் வழியாகمُّتَفَرِّقَةٍؕபல்வேறுوَمَاۤ اُغْنِىْநான் தடுக்க முடியாதுعَنْكُمْஉங்களை விட்டும்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْ شَىْءٍؕஎதையும்اِنِஇல்லைالْحُكْمُஅதிகாரம்اِلَّاதவிரلِلّٰهِؕஅல்லாஹ்வுக்கேعَلَيْهِஅவன் மீதேتَوَكَّلْتُۚநான் நம்பிக்கை வைத்து விட்டேன்وَعَلَيْهِஅவன் மீதேفَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைக்கவும்الْمُتَوَكِّلُوْنَநம்பிக்கை வைப்பவர்கள்
வ கால யா Bபனிய்ய லா தத்குலூ மிம் BபாBபி(ன்)வ் வா ஹிதி(ன்)வ் வத்குலூ மின் அBப்வாBபிம் முதFபர்ரிகஹ்; வ மா உக்னீ 'அன்கும் மினல் லாஹி மின் ஷய்'இன்; இனில் ஹுக்மு இல்லா லில்லாஹி 'அலய்ஹி தவக்கல்து வ 'அலய்ஹி Fபல் யதவக்கலில் முதவக்கிலூன்
முஹம்மது ஜான்
(பின்னும்) அவர், “என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது; (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னும் (அவர்களை நோக்கி) ‘‘என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் எதையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்புபவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்'' என்றார்.
IFT
பிறகு யஃகூப் கூறினார்: “என்னுடைய மக்களே! (எகிப்தின் தலைநகரினுள்) நீங்கள் எல்லோரும் ஒரே வாயில் வழியாக நுழையாதீர்கள்! மாறாக பல்வேறு வாயில்கள் வழியாக நுழையுங்கள். ஆயினும், அல்லாஹ்வின் நாட்டத்திலிருந்து உங்களை என்னால் சிறிதும் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே அன்றி வேறெவருக்கும் இல்லை. நான் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். சார்ந்திருப்பவர்கள் அனைவரும் முழுமையாக அவனைச் சார்ந்திருக்கட்டும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (அவர்களிடம்,) “என் (அருமை) மக்களே! (எகிப்தினுள்) ஒரே வாசலில் நுழையாதீர்கள், வெவ்வேறு வாசல்களில் நுழையுங்கள், அல்லாஹ்விடமிருந்து (ஏற்படவிருக்கும்) எந்த ஒன்றை விட்டும் உங்களை நான் தடுத்துவிடவும் முடியாது, (ஏனென்றால், சகல) அதிகாரம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை, (உங்கள் யாவரையும் அவனிடமே ஒப்படைத்து முழுமையாக) அவன் மீது நம்பிக்கை வைத்துவிட்டேன், ஆகவே, முழுமையாக நம்பிக்கை வைக்கிறவர்கள் (இவ்வாறே) அவன் மிதே (முழுமையாக நம்பிக்கை வைக்கவும்” என்றார்.
Saheeh International
And he said, "O my sons, do not enter from one gate but enter from different gates; and I cannot avail you against [the decree of] Allah at all. The decision is only for Allah; upon Him I have relied, and upon Him let those who would rely [indeed] rely."
(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஅகூபினுடைய மனதிலிருந்த (ஓர்) எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய (விதியில் உள்ள எந்த) ஒரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. (ஏனென்றால், இறுதியாக புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதை) அறிந்தவராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதை) அறியாதவர்களாகவே இருந்தனர்.
IFT
ஆனால் (நடந்தது இது தான்:) அவர்கள் தம் தந்தை கட்டளையிட்டபடி நகரினுள் (பல்வேறு வாயில்கள் வழியாக) நுழைந்தபோது அவர்களின் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக எவ்விதப் பலனையும் அவர்களுக்கு அளித்திடவில்லை. ஆனால் யஃகூபின் மனத்திற்குள் ஒரு சஞ்சலம் இருந்தது. அதனை நீக்குவதற்கு அவராக ஒரு முயற்சி செய்து கொண்டார். மேலும், அவருக்கு நாம் கற்றுத் தந்தவற்றைக் கொண்டு அவர் அறிவுடையவராகவே திகழ்ந்தார். ஆனால், மக்களில் பெரும்பாலோர் (இந்த விஷயத்தின் எதார்த்தத்தை) அறிந்து கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களின் தந்தை அவர்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்கள் (எகிப்தில்) நுழைந்தபோது யாஃகூபினுடைய மனதிலிருந்த ஒரு தேவையை-அதை அவர் நிறைவேற்றி விட்டார் என்பதைத் தவிர, அல்லாஹ்விடமிருந்து (ஏற்படயிருந்த) எந்த ஒன்றையும் அவர்களைவிட்டு அவர் தடுத்துவிடுபவராக இருக்கவில்லை, மேலும், நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவுடையவராக இருந்தார், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டார்கள்.
Saheeh International
And when they entered from where their father had ordered them, it did not avail them against Allah at all except [it was] a need [i.e., concern] within the soul of Jacob, which he satisfied. And indeed, he was a possessor of knowledge because of what We had taught him, but most of the people do not know.
(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உமது சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்'' என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உம்மை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.)
IFT
அவர்கள் யூஸுஃபின் அவைக்கு வந்தபோது அவர் தம் சகோதரரை மட்டுமே தம்மருகே அமர்த்திக் கொண்டார். பிறகு, “நான்தான் (காணாமல் போன) உன்னுடைய சகோதரன்; எனவே, இவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக நீ வருந்தாதே!” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், யூஸுஃபிடம் அவர்கள் நுழைந்தபொழுது, அவர்கள் சகோதர(ன் புன்யாமீ)னைத் (தனியாக அழைத்து) தன்பால் ஒதுக்கிக் கொண்டு “நிச்சயமாக நான்தான் உம்முடைய சகோதரன் (யூஸுஃப்) ஆகவே, (எனக்கு இவர்கள்) செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்” எனறு (இரகசியமாகக்) கூறினார்.
Saheeh International
And when they entered upon Joseph, he took his brother to himself; he said, "Indeed, I am your brother, so do not despair over what they used to do [to me]."
பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன் சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்து விட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) ‘‘ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்'' என்று சப்தமிட்டான்.
IFT
யூஸுஃப் (தம் சகோதரர்களாகிய) அவர்களுக்கு வேண்டிய பொருள்களை வழங்கிட ஏற்பாடு செய்தபின் தம் சகோதரரின் பொதியுனுள் தமது கோப்பையை வைத்துவிட்டார். பிறகு அறிவிப்பாளர் ஒருவர், “பயணக்கூட்டத்தினரே! நீங்களெல்லோரும் திருடர்கள்!” என உரக்கக் கூவினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார் செய்தபொழுது தன்னுடைய சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்) குவளையை ஆக்கி விட்டார், பின்னர், (அவர்கள் சிறிது தூரம் செல்லவே) “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே” என்று ஓர் அறிவிப்பாளர் அறிவித்தார்.
Saheeh International
So when he had furnished them with their supplies, he put the [gold measuring] bowl into the bag of his brother. Then an announcer called out, "O caravan, indeed you are thieves."
“நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதை எவர் (தேடிக்) கொடுத்த போதிலும் அவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி'' என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்.
IFT
அதற்கு (அரசு ஊழியர்களாகிய) அவர்கள், “அரசரின் அளவுக் கோப்பையைக் காணவில்லை” என்று கூறினார்கள். மேலும் (அந்த ஊழியர்களின் தலைவர் கூறினார்:) “யார் அதனைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை அளவு வெகுமதி உண்டு; அதனை வாங்கித்தர நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “அரசருடைய (ஒரு பொற்) குவளையை நாங்கள் இழந்துவிட்டோம், மேலும், அதனை எவர் (தேடிக்) கொண்டுவந்தபோதிலும் அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை(தானியம் வெகுமதி) உண்டு, இதற்கு நானே பொறுப்பாளியாவேன்” என்று (அவர்களில் ஒருவன்) கூறினான்.
Saheeh International
They said, "We are missing the measure of the king. And for he who produces it is [the reward of] a camel's load, and I am responsible for it."
(அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்” என்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு இவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். மேலும், நாங்கள் திருடுபவர்களும் அல்ல'' என்று கூறினார்கள்.
IFT
அச்சகோதரர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை என்பதையும், நாங்கள் திருடர்கள் அல்லர் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “அல்லாஹ்வின்மீது சத்தியமாக நாங்கள் (இப்)பூமியில் குழப்பம் செய்வதற்காக வரவில்லை என்பதைத் திட்டமாக நீங்களும், நன்கறிந்திருக்கிறீர்கள், அன்றியும், நாங்கள் திருடர்களாக இருந்ததுமில்லை” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "By Allah, you have certainly known that we did not come to cause corruption in the land, and we have not been thieves."
அதற்குரிய தண்டனையாவது, “எவருடைய சுமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்” என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கவர்கள் “அவருக்குரிய தண்டனை...? எவருடைய மூட்டையில் அந்தப் பொருள் காணப்படுகின்றதோ அவரைப் பிடித்து வைத்துக்கொள்வதே அவருக்குரிய தண்டனையாகும். இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு இம்முறையில்தான் நாங்கள் தண்டனை வழங்குவோம்” என்று மறுமொழி கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இதற்குரிய தண்டனையானது, எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அப்போது அவனே அதற்குரிய தண்டனையாகும், அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்? என்று அவர்கள் கூறினார்கள்.
Saheeh International
[The brothers] said, "Its recompense is that he in whose bag it is found - he [himself] will be its recompense. Thus do we recompense the wrongdoers."
ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய பொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம் (சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலே தவிர அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும்விட மேலான கல்விமான்.)
IFT
(அப்போது யூஸுஃப்) தம் சகோதரரின் மூட்டையைச் சோதனையிடுவதற்கு முன் அவர்களின் மூட்டைகளைச் சோதனையிடத் தொடங்கினார். பின்னர் தம் சகோதரரின் மூட்டையிலிருந்து காணாமல் போன பொருளைக் கண்டெடுத்தார். இவ்வாறு (நமது உபாயத்தின் மூலம்) யூஸுஃபுக்கு நாம் உதவினோம். மன்னனின் தீனின்படி (அதாவது, எகிப்து நாட்டு அரசுச் சட்டப்படி) தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொள்வது அவருக்கு ஏற்புடையதாய் இருக்கவில்லை; ஆனால் அல்லாஹ் அதனை நாடினாலே தவிர! நாம் நாடுபவர்களின் தகுதிகளை உயர்த்தி விடுகின்றோம். மேலும், அனைத்து அறிவாளிகளுக்கும் மேலாக ஓர் அறிவாளி இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, தன் சகோதர(ன் புன்யாமீனி)ன் பொதிக்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார், பின்னர் தன் சகோதரனின் பொதியிலிருந்து அதனை வெளிப்படுத்தினார், யூஸுஃபுக்கு இவ்வுபாயத்தை நாம் ஏற்படுத்திக்கொடுத்தோம், அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தன் சகோதரனை எடுத்துக் கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தார், நாம் நாடியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம், அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலாக (அவரைவிட) மிக அறிந்தவர் இருக்கிறார்.
Saheeh International
So he began [the search] with their bags before the bag of his brother; then he extracted it from the bag of his brother. Thus did We plan for Joseph. He could not have taken his brother within the religion [i.e., law] of the king except that Allah willed. We raise in degrees whom We will, but over every possessor of knowledge is one [more] knowing.
(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக் கொண்டு ‘‘நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதை அல்லாஹ் நன்கறிவான்'' என்று கூறிவிட்டார்.
IFT
அச்சகோதரர்கள் கூறலானார்கள்: “இவர் திருடினார் என்றால் ஆச்சரியம் எதுவுமில்லை; ஏனெனில் இதற்கு முன்பு (யூஸுஃப் எனும்) இவருடைய சகோதரரும் திருடியிருக்கின்றார்.” அவர்களின் இந்தப் பேச்சை யூஸுஃப் தம் மனத்திற்குள் வைத்துக் கொண்டார். உண்மை நிலையை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. “நீங்கள் மிகவும் கெட்டவர்கள்; மேலும், (என் முன்னிலையில் என்மீது) நீங்கள் எந்தக் குற்றச்சாட்டை சுமத்துகின்றீர்களோ, அதன் உண்மை நிலையை அல்லாஹ் நன்கறிவான்!” என்று (மெதுவாகக்) கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்,)” அவன் (அதனைத் திருடியிருந்தால், அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாக திருடியே இருப்பான்” என்று கூறிக் கொண்டனர், யூஸுஃப் அவர்களுக்கு வெளியாக்காது அவர் அதைத் தன்மனதுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு “நீங்கள் இடத்தால் தீயவர்கள், (இவர் சகோதரரும் திருடியதாக) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதனை அல்லாஹ் மிக்க அறிந்தவன்” என்று (மனதில்) கூறிக் கொண்டார்.
Saheeh International
They said, "If he steals - a brother of his has stolen before." But Joseph kept it within himself and did not reveal it to them. He said, "You are worse in position, and Allah is most knowing of what you describe."
அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) ‘‘அஜீஸே! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீர் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீர் எடுத்துக்கொள்வீராக. நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் கூறினார்கள்: “அரசாதிபதியே! (அஜீஸே!) இவருடைய தந்தை மிகவும் வயது முதிர்ந்தவராய் இருக்கின்றார். எனவே இவருக்குப் பதிலாக எங்களில் எவரையேனும் நீங்கள் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்! திண்ணமாக, உங்களை மிகவும் நல்லவராக நாங்கள் காண்கிறோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் (யூஸுஃபிடம், எகிப்திய அரசின்) “அமைச்சரே! நிச்சயமாக முதிர்ச்சியடைந்த வயோதிகரான தந்தை அவருக்கு இருக்கிறார், ஆகவே அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்வீராக! நிச்சயமாக நாம் உம்மை உபகாரம் செய்பவர்களில் (ஒருவராகக்)காண்கிறோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "O ʿAzeez, indeed he has a father [who is] an old man, so take one of us in place of him. Indeed, we see you as a doer of good."
அதற்கவர், “எங்கள் பொருளை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், எவரிடம் நம் பொருள் காணப்பட்டதோ அவரைத் தவிர (மற்றெவரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டு அல்லாஹ் எங்களைக் காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நாம் பெரும் அநியாயக்காரர்கள் ஆகிவிடுவோம்'' என்று கூறிவிட்டார்.
IFT
அதற்கு யூஸுஃப் கூறினார்: “அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! எவரிடத்தில் எங்கள் பொருள் இருப்பதைக் கண்டோமோ, அவரைத் தவிர வேறொருவரை எவ்வாறு நாங்கள் பிடித்து வைத்துக் கொள்ள இயலும்? அவ்வாறு செய்தால் திண்ணமாக நாங்கள் அக்கிரமக்காரர்களாகி விடுவோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “எம்முடைய பொருளை எவரிடம் நாங்கள் பெற்றுக் கொண்டோமோ அவரைத் தவிர, (மற்றெவரையும்) பிடித்துக் கொள்ளாது (எங்களை) அல்லாஹ் காப்பாற்றுவானாக! (மற்றெவரையும் பிடித்துக் கொண்டால்) அச்சமயத்தில் நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறி விட்டார்.
Saheeh International
He said, "[I seek] the refuge of Allah [to prevent] that we take except him with whom we found our possession. Indeed, we would then be unjust."
Fபலம்மஸ் தய்'அஸூ மின்ஹு கலஸூ னஜிய்யன் கால கBபீருஹும் அலம் தஃலமூன் அன்ன அBபாகும் கத் அகத 'அலய்கும் மவ்திகம் மினல் லாஹி வ மின் கBப்லு மா Fபர்ரத்தும் Fபீ யூஸுFப Fபலன் அBப்ரஹல் அர்ள ஹத்தா யாதன லீ அBபீ அவ் யஹ்குமல் லாஹு லீ வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
முஹம்மது ஜான்
எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரை அல்லது அல்லாஹ் எனக்கு ஒரு தீர்ப்பளிக்கும் வரை இங்கிருந்து நான் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்'' என்று கூறினார்.
IFT
யூஸுஃபிடம் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, அவர்கள் எல்லோரும் தனியாகச் சென்று தங்களுக்கிடையே ஆலோசனை செய்தார்கள். அவர்களில் மூத்தவர் கூறினார்: “உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் வாக்குறுதி வாங்கியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியாதா? இதற்கு முன்னர் யூஸுஃபின் விவகாரத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, என் தந்தை எனக்கு அனுமதி தரும் வரையில் அல்லது அல்லாஹ் என் விஷயத்தில் ஏதாவது தீர்ப்பு வழங்கும் வரையில் நான் இங்கிருந்து வரவே மாட்டேன்! அவன் தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள், அவர்களில் பெரியவர், (மற்றவர்களிடம்), “உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் உறுதிமொழியை வாங்கியிருப்பதையும், இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த பெருங்குறையையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரையில், அல்லது அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கும் வரையில் (நான் இருக்கும்) இப்பூமியிலிருந்து நான் அகலவே மாட்டேன், தீர்ப்பளிப்போரில் அவன்தான் மிக்க மேலானவன்” என்று கூறினார்.
Saheeh International
So when they had despaired of him, they secluded themselves in private consultation. The eldest of them said, "Do you not know that your father has taken upon you an oath by Allah and [that] before you failed in [your duty to] Joseph? So I will never leave [this] land until my father permits me or Allah decides for me, and He is the best of judges.
ஆகவே, “நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, “எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை; மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்;
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே தவிர (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்;
IFT
நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று கூறுங்கள்: எங்கள் தந்தையே! திண்ணமாக உங்கள் மகன் திருடிவிட்டார். அவர் திருடியதை நாங்கள் பார்க்கவில்லை; ஆனால் எங்களுக்குத் தெரியவந்ததைச் சொல்கின்றோம். மேலும், மறைவில் நடைபெற்ற விஷயங்களை எங்களால் கண்காணிக்க இயலவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேலும், அவர்களிடம்) “நீங்கள் (யாவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யமீன்) நிச்சயமாகத் திருடி விட்டான், உண்மையாகவே நாங்கள் கண்டதையே அன்றி (வேறெதையும்) நாங்கள் கூறவில்லை, இன்னும், மறைவானவற்றின் பாதுகாவலர்களாகவும், நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுங்கள்.
Saheeh International
Return to your father and say, 'O our father, indeed your son has stolen, and we did not testify except to what we knew. And we were not witnesses of the unseen.
“நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).
அப்துல் ஹமீது பாகவி
(நாங்கள் சொல்வதை நீர் நம்பாவிட்டால்) நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீர் கேட்டறிந்து கொள்வீராக. நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்'' (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.)
IFT
நாங்கள் தங்கியிருந்த ஊர் மக்களிடமும் (கேட்டுப் பாருங்கள்!) எந்தப் பயணக் கூட்டத்துடன் நாங்கள் வந்தோமோ அந்தப் பயணக் கூட்டத்திட மும் விசாரித்துப் பாருங்கள்; திண்ணமாக நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(எங்கள் கூற்றை நீங்கள் நம்பாவிட்டால்,) நாங்கள் தங்கியிருந்த அவ்வூராரையும், எங்களுடன் வந்த ஒட்டகைக் கூட்டத்தினரையும் நீங்கள் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள், நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாவோம்” (என்று சொல்லுங்கள்), என்று கூறியனுப்பினார்.
Saheeh International
And ask the city in which we were and the caravan in which we came - and indeed, we are truthful.'"
(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) “இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதைத் தங்கள் தந்தை யஅகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் ‘‘நீங்கள் கூறுவது சரியல்ல!) மாறாக, உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்'' என்று கூறிவிட்டு,
IFT
(இதைக் கேட்ட) தந்தை கூறினார்: “உண்மை என்ன வெனில், உங்கள் மனம் இன்னொரு பெரும் செயலை உங்களுக்கு எளிதாக்கி விட்டது. இப்போது நான் அழகிய பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் கொண்டு வந்து சேர்த்திடக் கூடும்! திண்ணமாக, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், அனைத்துச் செயல்களையும் நுண்ணறிவோடு மேற்கொள்பவனும் ஆவான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஊர்) திரும்பியவர்கள் நடந்தவற்றைத் தங்கள் தந்தையிடம் கூறவே அதற்கவர், “நீங்கள் கூறுவது) சரியல்ல! உங்கள் மனங்கள் ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டன, ஆகவே, அழகான பொறுமையைக் கைக்கொள்வதே மிக்க நன்று, அல்லாஹ் அவர்கள் யாவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்த்து வைக்கப் போதுமானவன், நிச்சயமாக அவனே யாவற்றையும் அறிந்தோன், தீர்க்கமான அறிவுடையோன்” என்று கூறினார்.
Saheeh International
[Jacob] said, "Rather, your souls have enticed you to something, so patience is most fitting. Perhaps Allah will bring them to me all together. Indeed, it is He who is the Knowing, the Wise."
பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை விட்டுவிலகிச் சென்று, ‘‘யூஸுஃபைப் பற்றி என் துக்கமே!'' என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார்.
IFT
பிறகு அவர், அவர்களை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு, “ஐயகோ, யூஸுஃபே!” என்று புலம்பலானார். கவலையால் அவருடைய கண்கள் வெளுத்துப் போயிருந்தன. இந்தக் கடும் துன்பத்தை அவர் மனத்திற்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர்களை விட்டு அவர் விலகிச்சென்று “யூஸுஃபைப் பற்றி ஏற்பட்டிருக்கும் என்னுடைய துக்கமே!” என்று அவர் (வருத்தப்பட்டுக்)கூறினார், அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் போயின, பின்னர், அவர் (தன் துக்கத்தையும்) விழுங்கி (அடக்கி)க் கொள்பவராக இருந்தார்.
Saheeh International
And he turned away from them and said, "Oh, my sorrow over Joseph," and his eyes became white from grief, for he was [of that] a suppressor.
قَالُوْاகூறினர்تَاللّٰهِஅல்லாஹ் மீது சத்தியமாகتَفْتَؤُا تَذْكُرُநினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்يُوْسُفَயூஸுஃபைحَتّٰىவரைتَكُوْنَஆகுவீர்حَرَضًاஅழிவை நெருங்கியவராகاَوْஅல்லதுتَكُوْنَஆகுவீர்مِنَ الْهَالِكِيْنَஇறந்தவர்களில்
(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீர் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரை (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்'' என்று கடிந்து கூறினார்கள்.
IFT
அதற்கு அவருடைய புதல்வர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃப் பற்றி கவலைப்பட்டு அந்தக் கவலையிலேயே உருகிப் போய்விடும் அளவுக்கு அல்லது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அவரை நினைத்துக்கொண்டே இருக்கிறீர்களே!” என்று கூறினர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதனைக் கண்ட அவருடைய மக்கள் தந்தையே)” அல்லாஹ்வின் மீது சத்தியமாக (நீங்கள் யூஸுஃபை நினைத்து நினைத்து) இளைத்தவராக நீர் ஆகிவிடும்வரை அல்லது அழிந்துவிடுவோரில் நீர் ஆகிவிடும்வரை யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர்” என்று (கடிந்து) கூறினார்கள்.
Saheeh International
They said, "By Allah, you will not cease remembering Joseph until you become fatally ill or become of those who perish."
கால இன்னமா அஷ்கூ Bபத்தீ வ ஹுZஜ்னீ இலல் லாஹி வ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
முஹம்மது ஜான்
அதற்கவர், “என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாதவற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “என்னுடைய துக்கத்தையும் துயரத்தையும் நான் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகிறேன். அல்லாஹ்விடமிருந்து நான் பெற்றிருக்கும் அறிவை நீங்கள் பெற்றிருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “என்னுடைய துக்கத்தையும், கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடமேதான், நீங்கள் அறியாதவற்றையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் மிக்க அறிந்திருக்கிறேன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "I only complain of my suffering and my grief to Allah, and I know from Allah that which you do not know.
“என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப்பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்'' என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார்.
IFT
என் பிள்ளைகளே! நீங்கள் சென்று யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரைப் பற்றித் தீர விசாரியுங்கள்; அல்லாஹ்வின் கருணையைக் குறித்து நிராசை அடையாதீர்கள்! நிராகரிக்கும் மக்கள்தாம் அவனுடைய கருணையைக் குறித்து நிராசை அடைகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய மக்களே! நீங்கள் செல்லுங்கள், பின்னர், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் துருவித்தேடுங்கள்; அல்லாஹ்வின் அருளிலிருந்து நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! நிச்சயமாக (அல்லாஹ்வின் மீது நம்பிக்கையற்ற) நிராகரிப்போரைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்” (என்றும் கூறினார்.)
Saheeh International
O my sons, go and find out about Joseph and his brother and despair not of relief from Allah. Indeed, no one despairs of relief from Allah except the disbelieving people."
அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி (‘‘மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பான்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் (எகிப்து சென்று) யூஸுஃபின் அவைக்கு வந்தபோது கூறினார்கள்: “அரசாதிபதியே! எங்களையும், எங்கள் குடும்பத்தாரையும் கடுந்துன்பம் பீடித்துள்ளது. மேலும், நாங்கள் அற்பமான சில பொருள்கள் கொண்டு வந்திருக்கின்றோம்; (அவற்றுக்குப் பதிலாக) நீங்கள் எங்களுக்கு நிறைவாக தானியம் வழங்கி எங்களுக்கு நன்மை செய்யுங்கள்! இவ்வாறு நன்மை செய்வோருக்குத் திண்ணமாக அல்லாஹ் கூலி வழங்குகின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு, அவர்கள் (எகிப்துக்கு வந்து யூஸுஃபாகிய) அவர்பால் நுழைந்து அவரிடம் (எகிப்திய அரசின்) “அமைச்சரே” எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் (பஞ்சத்தின்) கொடுமை பீடித்துக் கொண்டது, (எங்களிடமிருந்த) அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம், ஆகவே, (அதனைப் பெற்றுக்கொண்டு) எங்களுக்கு வேண்டிய (தானியத்)தைப் பூரணமாக அளந்து கொடுத்து (மேற்கொண்டும்) எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்வோருக்கு நற்கூலி அளிப்பான்” என்று கூறினார்கள்.
Saheeh International
So when they entered upon him [i.e., Joseph], they said, "O ʿAzeez, adversity has touched us and our family, and we have come with goods poor in quality, but give us full measure and be charitable to us. Indeed, Allah rewards the charitable."
قَالَகூறினார்هَلْ عَلِمْتُمْநீங்கள்அறிந்தீர்களா?مَّا فَعَلْتُمْஎன்ன செய்தீர்கள்?بِيُوْسُفَயூஸுஃபுக்குوَاَخِيْهِஇன்னும் அவருடைய சகோதரருக்குاِذْஇருந்தபோதுاَنْتُمْநீங்கள்جٰهِلُوْنَஅறியாதவர்கள்
கால ஹல் 'அலிம்தும் மா Fப'அல்தும் Bபி யூஸுFப வ அகீஹி இத் அன்தும் ஜாஹிலூன்
முஹம்மது ஜான்
(அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்.
IFT
(இதைக் கேட்டதும் பொறுக்க முடியாமல்) யூஸுஃப் கூறினார்: “நீங்கள் அறிவற்றவர்களாய் இருந்தபோது, யூஸுஃப் மற்றும் அவருடைய சகோதரரிடம் எவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்பது நீங்கள் அறிந்த விஷயம்தானே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அச்சமயம் அவர்,) “நீங்கள் அறிவீனர்களாக இருந்தபோது, யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்.
Saheeh International
He said, "Do you know what you did with Joseph and his brother when you were ignorant?"
(அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் (திடுக்கிட்டு) ‘‘மெய்யாகவே நீர் யூஸுஃபாக இருப்பீரோ?'' என்று கேட்டார்கள். அதற்கவர் ‘‘நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, சிரமங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை'' என்று கூறினார்.
IFT
உடனே அவர்கள், “நீர்தானா யூஸுஃப்?” என்று (ஆச்சரியத்துடன் கேட்டனர்.) அதற்கவர், “(ஆம்!) நான்தான் யூஸுஃப். இவர் என் சகோதரர்! அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்துள்ளான். திண்ணமாக, எவர்கள் இறையச்சம் கொண்டு, நிலைகுலையாது இருக்கின்றார்களோ அத்தகைய நல்லவர்களின் கூலியை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விடுவதில்லை!” என்று கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் (திடுக்கிட்டு) “நிச்சயமாக நீர்தான், யூஸுஃபா,” என்று கேட்டார்கள், அ(தற்க)வர், “நான்தான் யூஸுஃப், இவர் என் சகோதரர், திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான், (ஏனென்றால்,) அது நிச்சயமாக எவர் பயபக்தியுடன் இருந்து (கஷ்டங்களையும் சகித்துப்) பொறுத்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தோரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்” என்று கூறினார்.
Saheeh International
They said, "Are you indeed Joseph?" He said, "I am Joseph, and this is my brother. Allah has certainly favored us. Indeed, he who fears Allah and is patient, then indeed, Allah does not allow to be lost the reward of those who do good."
قَالُوْاகூறினர்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகلَقَدْமேன்மைப் படுத்திவிட்டான்اٰثَرَكَஉம்மைاللّٰهُஅல்லாஹ்عَلَيْنَاஎங்களை விடوَاِنْ كُنَّاநிச்சயமாகஇருந்தோம்لَخٰـطِــِٕيْنَதவறிழைப்பவர் களாகத்தான்
காலூ தல்லாஹி லகத் ஆதரகல் லாஹு 'அலய்னா வ இன் குன்னா லகாதி'ஈன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உமக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உண்மையில் அல்லாஹ் எங்களைவிட உமக்குச் சிறப்பை வழங்கியுள்ளான். மேலும், திண்ணமாக நாங்கள் தவறிழைத்தவர்களாகவே இருந்தோம்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உமக்கு பெரும்) தவறிழைத்தவர்களாக இருப்பினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட(பெருங்கிருபை கொண்டு) உம்மை மேன்மையாக்கி வைத்திருக்கிறான்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "By Allah, certainly has Allah preferred you over us, and indeed, we have been sinners."
கால லா தத்ரீBப 'அலய்குமுல் யவ்ம யக்Fபிருல் லாஹு லகும் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
முஹம்மது ஜான்
அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘இன்றைய தினம் உங்கள் மீது ஒரு குற்றமும் இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று கூறினார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “இன்று உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னிப்பான். அவன் எல்லோரையும்விட அதிகம் கருணை புரிபவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “இன்றையத்தினம் உங்கள் மீது யாதொரு நிந்தனையும் இல்லை, அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மகாக்கிருபையாளன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "No blame will there be upon you today. May Allah forgive you; and He is the most merciful of the merciful.
“என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் என் இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்'' என்று கூறி (அனுப்பி)னார்.
IFT
எனது இந்த அங்கியைக் கொண்டு சென்று என் தந்தையின் முகத்தில் படச் செய்யுங்கள்; அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிடும். மேலும் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டுபோய் என் தந்தை முகத்தின் மீது போடுங்கள், (அதனால், உடனே) அவர் பார்வையுடையவராக(த்திரும்பி) வருவார், பின்னர், நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள யாவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்” என்று கூறி (அனுப்பி)னார்.
Saheeh International
Take this, my shirt, and cast it over the face of my father; he will become seeing. And bring me your family, all together."
வ லம்மா Fபஸலதில் 'ஈரு கால அBபூஹும் இன்னீ ல அஜிது ரீஹ யூஸுFப லவ் லா அன் துFபன்னிதூன்
முஹம்மது ஜான்
(அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (‘‘இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமலிருக்க வேண்டுமே!'' என்றார்.
IFT
அந்தப் பயணக் கூட்டம் (எகிப்தை விட்டு) புறப்பட்டபோது, அவர்களின் தந்தை (கன்ஆன் என்ற ஊரில்) கூறினார்: “திண்ணமாக நான் யூஸுஃபின் நறுமணத்தை உணர்கின்றேன்; முதுமையில் நான் ஏதோ, அறிவிழந்து போய் பேசுவதாக நீங்கள் நினைத்துவிடாதீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களுடைய) ஒட்டகக்கூட்டம் (எகிப்திலிருந்து) பிரிந்த சமயமே அவர்களின் தந்தை “(இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன், (முதுமையின் காரணமாக) அறிவு மங்கிப் பேசுவதாக என்னை நீங்கள் கூறாதிருக்க வேண்டுமே!” என்றார்.
Saheeh International
And when the caravan departed [from Egypt], their father said, "Indeed, I find the smell of Joseph [and would say that he was alive] if you did not think me weakened in mind."
Fபலம்மா அன் ஜா'அல்Bபஷீரு அல்காஹு 'அலா வஜ்ஹிஹீ Fபர்தத்த Bபஸீரன் கால அலம் அகுல் லகும் இன்னீ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
முஹம்மது ஜான்
பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,
அப்துல் ஹமீது பாகவி
அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன் கண்) பார்வையை அடைந்து ‘‘(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாத வற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?'' என்று கேட்டார்.
IFT
பிறகு நற்செய்தி அறிவிப்பவர் (யஃகூபிடம்) வந்தார்; யூஸுஃபின் அங்கியை அவருடைய முகத்தில் படச்செய்தார். உடனே அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துவிட்டது! (அப்போது) அவர் கூறினார்: “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என்று உங்களிடம் நான் முன்பே கூறவில்லையா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது (யூஸுஃபைப்பற்றி) நன்மாராயங்கூறுபவர் வந்து (யூஸுஃபுடைய சட்டையாகிய) அதனை அவர் (தந்தையின்) முகத்தின் மீது போடவே, அவர் (இழந்த தன்) பார்வையை அடைந்து, (யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிச்சயமாக நான் அறிவேன், என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கேட்டார்.
Saheeh International
And when the bearer of good tidings arrived, he cast it over his face, and he returned [once again] seeing. He said, "Did I not tell you that I know from Allah that which you do not know?"
(அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) ‘‘எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீர் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்'' என்று (அவர்களே) கூறினார்கள்.
IFT
பிறகு அவர்கள் எல்லோரும் “எங்கள் தந்தையே! நீங்கள் எங்கள் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள்; உண்மையிலேயே நாங்கள் தவறிழைத்தவர்கள்தாம்!” என்று வேண்டினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு நீங்கள் எங்களுக்காக மன்னிப்புத் தேடுவீர்களாக! நிச்சயமாகவே நாங்கள் குற்றவாளிகளாகவே இருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
Saheeh International
They said, "O our father, ask for us forgiveness of our sins; indeed, we have been sinners."
(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து) மிக மரியாதையுடன் வரவேற்று ‘‘(அல்லாஹ்வின் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்'' என்று கூறினார்.
IFT
பிறகு, அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரைத் தம்முடன் அமர்த்திக் கொண்டார். மேலும் (தம் குடும்பத்தார் அனைவரையும் நோக்கி,) “நகரத்தினுள் செல்லுங்கள்! அல்லாஹ் நாடினால் நிம்மதியுடனும் அமைதியுடனும் வாழ்வீர்கள்!” என்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர், குடும்பத்துடன் கன் ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்து நுழைந்தபொழுது, அவர் தன் தாய் தந்தையை (மிக்க மரியாதையுடன் வரவேற்று) தன் பக்கம் சேர்த்துக் கொண்டு, “அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்” என்றும் கூறினார்.
Saheeh International
And when they entered upon Joseph, he took his parents to himself [i.e., embraced them] and said, "Enter Egypt, Allah willing, safe [and secure]."
இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதை செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) ‘‘என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவன். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்'' என்றார்.
IFT
(நகரத்தில் நுழைந்த பின்னர்) அவர் தம்முடைய தாய் தந்தையரை (தம் அருகிலிருந்த அரியணையின் மீது) அமர வைத்தார். அனைவரும் (தம்மையும் அறியாமல்) அவர் முன் சிரம் பணிந்தார்கள். அப்பொழுது யூஸுஃப் கூறினார்: “என் தந்தையே! நான் முன்னர் கண்ட கனவிற்கு இதுதான் விளக்கமாகும். என் இறைவன் அக்கனவை நனவாக்கிவிட்டான். மேலும் எனக்கு அவன் பேருதவி செய்தான். அதாவது சிறையிலிருந்து எனக்கு விடுதலை அளித்தான். எனக்கும் என்னுடைய சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்திய பின்னரும் உங்களையெல்லாம் பாலைவனச் சிற்றூரில் இருந்து (என்னிடம்) கொண்டுவந்து சேர்த்தான். உண்மை யாதெனில், என் இறைவன் மிக நுட்பமான முறையில் தன் நாட்டங்களை நிறைவேற்றுகின்றான். திண்ணமாக, அவன் நன்கறிந்தோனும் நுண்ணறிவாளனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர் தன் பெற்றோரை சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (கண்ணியமாக அமரச்செய்யலா)னார், (எகிப்தின் அதிபதியாக இருந்த)அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தவர்களாகவும் விழுந்தார்கள், அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையிடம்) “என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் விளக்கம் இதுதான், என் இரட்சகன் அதனைத் திட்டமாக உண்மையாக்கிவிட்டான், (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை (அல்லாஹ்வாகிய) அவன் வெளியேற்றியபோது (அல்லாஹ்) எனக்குத் திட்டமாக பேருபகாரம் புரிந்துவிட்டான், எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும், உங்கள் யாவரையும் கிராமப்புறத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்துள்ளான், நிச்சயமாக என் இரட்சகன், தான் நாடியதை மிக நுட்பமாகச் செய்கின்றவன், நிச்சயமாக அவனே (யாவற்றையும்) நன்கறிந்தோன், தீர்க்கமான அறிவுடையோன்” என்றார்.
Saheeh International
And he raised his parents upon the throne, and they bowed to him in prostration. And he said, "O my father, this is the explanation of my vision of before. My Lord has made it reality. And He was certainly good to me when He took me out of prison and brought you [here] from bedouin life after Satan had induced [estrangement] between me and my brothers. Indeed, my Lord is Subtle in what He wills. Indeed, it is He who is the Knowing, the Wise.
“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!'' (என்று பிரார்த்தித்தார்.)
IFT
என் இறைவா! நீ எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய். மேலும், விஷயங்களின் உட்கருத்துகளைப் புரிந்து கொள்ளும் முறையைக் கற்றுத் தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்க சீலர்களுடன் சேர்ப்பாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி) “என் இரட்சகனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்(தருள் புரிந்)து கனவுகளின் விளக்கங்களையும் எனக்குக் கற்பித்தாய்! வானங்களை மற்றும் பூமியைப் படைத்தவனே! இம்மையிலும், மறுமையிலும் நீயே என் பாதுகாவலன், முற்றிலும் (உனக்கு) கீழ்ப்படிந்த (முஸ்லீமான)வனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லோர்களுடன் என்னையும் சேர்த்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்.)
Saheeh International
My Lord, You have given me [something] of sovereignty and taught me of the interpretation of dreams. Creator of the heavens and earth, You are my protector in this world and the Hereafter. Cause me to die a Muslim and join me with the righteous."
தாலிக மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹி இலய்க வமா குன்த லதய்ஹிம் இத் அஜ்ம'ஊ அம்ரஹும் வ ஹும் யம்குரூன்
முஹம்மது ஜான்
(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே) இது (நீர் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவற்றை நாம் உமக்கு வஹ்யி மூலமே அறிவித்தோம்.
IFT
(நபியே!) இவ்வரலாறு நீர் அறியாத செய்திகளைச் சேர்ந்ததாகும். அதனை நாம் உமக்கு வஹியின் மூலம் அறிவித்துக் கொண்டிருக்கின்றோம். யூஸுஃபின் சகோதரர்கள் சதித் திட்டம் தீட்டி, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று தங்களுக்குள் முடிவு செய்தபோது நீர் அவர்களிடையே இருக்கவில்லையே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும், இதை உமக்கு நாம் (வஹீ மூலமே) அறிவிக்கிறோம், இன்னும், அவர்கள் சூழ்ச்சி செய்கிறவர்களாக, (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்று) தங்கள் காரியத்தில் முடிவெடுக்க ஒருமித்தபோது நீர் அவர்களிடத்தில் இருக்கவுமில்லை.
Saheeh International
That is from the news of the unseen which We reveal, [O Muhammad], to you. And you were not with them when they put together their plan while they conspired.
வ க அய்யிம் மின் ஆயதின் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி யமுர்ரூன 'அலய்ஹா வ ஹும் 'அன்ஹா முஃரிளூன்
முஹம்மது ஜான்
இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர்.
IFT
வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. இவர்கள் அவற்றைக் கடந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள். ஆயினும் அவற்றைக் குறித்து சற்றும் கவனம் செலுத்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், வானங்களில், மற்றும் பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, (ஆனால்) அவற்றை(ச் சிந்திக்காது) புறக்கணித்தவர்களாகவே அவற்றின் பக்கம் அவர்கள் (அனுதினமும்) செல்கின்றனர்.
Saheeh International
And how many a sign within the heavens and earth do they pass over while they, therefrom, are turning away.
அFப அமினூ அன் தாதிய ஹும் காஷியதும் மின் 'அதாBபில் லாஹி அவ் தாதியஹுமுஸ் ஸா'அது Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
IFT
அல்லாஹ்வின் வேதனைகளிலிருந்து அவர்களைத் திணற அடிக்கக்கூடிய ஒரு வேதனை அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென்று இறுதிநாள் அவர்களிடம் வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றார்களா
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வந்து விடுவதைப் பற்றியும், அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய முடிவு காலமான) மறுமை அவர்களுக்கு வந்து விடுவதைப் பற்றியும் அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா?
Saheeh International
Then do they feel secure that there will not come to them an overwhelming [aspect] of the punishment of Allah or that the Hour will not come upon them suddenly while they do not perceive?
(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, நான் (அவனுக்கு) இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.''
IFT
நீர் அவர்களிடம் தெளிவாகக் கூறி விடும்: “இதுதான் என்னுடைய வழி; நான் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் முழுத் தெளிவுடன் (எங்கள் பாதை எது என்பதை அறிந்து) இருக்கின்றோம்; மேலும் அல்லாஹ் தூய்மையானவன். அவனுக்கு இணை கற்பிப்பவர்களுடன் எனக்கு எத்தகைய தொடர்பும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஆதாரத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன், நான் அவனுக்கு இணைவைப்போரில் உள்ளவனுமல்லன்.
Saheeh International
Say, "This is my way; I invite to Allah with insight, I and those who follow me. And exalted is Allah; and I am not of those who associate others with Him."
(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
உமக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த ஆடவர்களே தவிர வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம் கட்டளைகளை) வஹ்யி மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டு கொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறையச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவுகூட நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
IFT
(நபியே!) உமக்கு முன்னர் (பல்வேறு ஊர்களுக்கு) தூதர்களாக நாம் அனுப்பி வைத்திருந்த அனைவரும் மனிதர்களாகவும் அந்தந்த ஊர்களைச் சார்ந்தவர்களாகவும்தாம் இருந்தார்கள். அவர்களுக்கு நாம் வஹி அறிவித்துக் கொண்டிருந்தோம். பின்னர் இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் சென்றுபோனவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? எவர்கள் (இறைத்தூதர்களின் சொல்லை ஏற்று) இறையச்சத்துடன் வாழ்ந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மறுமை இல்லம் மிகவும் சிறந்ததாகும். (இனியும்) நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உமக்கு முன்னர் ஊர்வாசிகளிலுள்ள (மனித இனத்தவர்களில்) ஆடவர்களை அல்லாமல் (மலக்குகளை) நாம் (தூதர்களாக) அனுப்பவில்லை, அவர்களுக்கு (நம்முடைய கட்டளைகளை) வஹீமூலம் அறிவிக்கின்றோம், அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா?” (அவ்வாறு பிரயாணம் செய்தால்) அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி ஆயிற்று என்பதை அவர்கள் கண்டுகொள்வார்கள், மறுமையின் வீடோ பயபக்தியுடையோர்களுக்கு மிக்க மேலானது, நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?
Saheeh International
And We sent not before you [as messengers] except men to whom We revealed from among the people of cities. So have they not traveled through the earth and observed how was the end of those before them? And the home of the Hereafter is best for those who fear Allah; then will you not reason?
(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
அப்துல் ஹமீது பாகவி
நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நினைத்து, நம்பிக்கை இழந்து விடும்வரை (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம்.) பின்னர், நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களை விட்டு நம் வேதனை நீக்கப்படாது.
IFT
(முந்திய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்று வந்தார்கள். ஆனால் மக்கள் அதனைக் கேட்கவில்லை) எதுவரையெனில், மக்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும் தங்களிடம் பொய்தான் சொல்லப்பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி இறைத்தூதர்களுக்குக் கிடைத்துவிட்டது. (இவ்வாறான சந்தர்ப்பங்களில் நமது நியதி இதுதான்:) நாம் யாரை நாடுகின்றோமோ அவர்களைக் காப்பாற்றி விடுகின்றோம். மேலும் குற்றம் புரிந்த மக்களை விட்டு நமது தண்டனை அகற்றப்படுவதே இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! எந்த சமூகத்தார் மீதும் தண்டனையை நாம் துரிதப்படுத்தவில்லை) எதுவரையெனில், (தம் சமூகத்தவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள் என அத்)தூதர்கள் நிராசை அடைந்து, நிச்சயமாக நாம் (அவர்களால்) பொய்ப் படுத்தப்பட்டு விட்டோம் என அவர்கள் உறுதி கொண்டுவிட்டனர், (அப்போது) அவர்களுக்கு நம்முடைய உதவி வந்தது, (பின்னர்) நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர், குற்றவாளிகளான சமூகத்தாரை விட்டும், நம் தண்டனை நீக்கப்படவுமாட்டாது.
Saheeh International
[They continued] until, when the messengers despaired and were certain that they had been denied, there came to them Our victory, and whoever We willed was saved. And Our punishment cannot be repelled from the people who are criminals.
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அறிவுடையவர்களுக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையல்ல; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது.
IFT
முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் இவ்வரலாறுகளில் பகுத்தறிவுடையோருக்கு அரிய படிப்பினை உள்ளது. (குர்ஆனில் விவரித்துக் கூறப்படுகின்ற) இச்செய்திகள் புனைந்துரைக்கப்பட்டவை அல்ல. மாறாக, இந்தக் குர்ஆன் தனக்கு முன் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பிக்கக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் விவரிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது; மேலும், நம்பிக்கை கொள்ளும் சமூகத்தாருக்கு நேர்வழியாகவும் அருளாகவும் திகழ்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அறிவுடையோருக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய வரலாற்றில் நல்லதொரு படிப்பினை திட்டமாக இருக்கிறது, (இந்தக் குர் ஆன்) பொய்யாகக் கற்பனை செய்யப்படுகின்ற செய்தியாக இருந்ததில்லை, ஆயினும், இதற்கு முன் உள்ள (வேதத்)தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது, அன்றியும், விசுவாசங் கொண்டோருக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
Saheeh International
There was certainly in their stories a lesson for those of understanding. Never was it [i.e., the Qur’an] a narration invented, but a confirmation of what was before it and a detailed explanation of all things and guidance and mercy for a people who believe.