13. ஸூரத்துர் ரஃது (இடி)

மதனீ, வசனங்கள்: 43

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
الٓمّٓرٰ ۫ تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ ؕ وَالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
الٓـمّٓرٰஅலிஃப்;லாம்;மீம்;றாتِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْكِتٰبِ‌ؕவேதத்தின்وَالَّذِىْۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்الْحَـقُّஉண்மைதான்وَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அலிFப்-லாம்-மீம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBப்; வல்லதீ உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிகல் ஹக்கு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
முஹம்மது ஜான்
அலிஃப், லாம், மீம், றா. இவை வேதத்தின் வசனங்களாகும். மேலும் (நபியே!) உம் மீது, உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அலிஃப் லாம் மீம் றா. இவை இவ்வேதத்தின் (சில) வசனங்களாகும். (நபியே!) உமது இறைவனால் உமக்கு இறக்கப்படும் இது முற்றிலும் உண்மையானது. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) நம்புவதில்லை.
IFT
அலிஃப், லாம், மீம், றா. இவை இறைமறையின் வசனங்களாகும். மேலும், எது உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கிறதோ அது சத்தியமேயாகும். ஆயினும் (உமது சமுதாயத்தில்) பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளாதிருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அலிஃப் லாம் மீம் றா. இவை இவ்வேதத்தின் வசனங்களாகும், (நபியே!) உம்முடைய இரட்சகனிடமிருந்து உம்பால் இறக்கிவைக்கப்பட்ட இது (முற்றிலும்) உண்மையானதாகும், எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை.
Saheeh International
Alif, Lam, Meem, Ra. These are the verses of the Book; and what has been revealed to you from your Lord is the truth, but most of the people do not believe.
اَللّٰهُ الَّذِیْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَیْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ یُدَبِّرُ الْاَمْرَ یُفَصِّلُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ بِلِقَآءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்الَّذِىْஎத்தகையவன்رَفَعَஉயர்த்தினான்السَّمٰوٰتِவானங்களைبِغَيْرِஇன்றிعَمَدٍதூண்கள்تَرَوْنَهَا‌காண்கிறீர்கள்/அதைثُمَّபிறகுاسْتَوٰىஉயர்ந்து விட்டான்عَلَىமேல்الْعَرْشِ‌அர்ஷ்وَسَخَّرَஇன்னும் வசப்படுத்தினான்الشَّمْسَசூரியனைوَالْقَمَرَ‌ؕஇன்னும் சந்திரனைكُلٌّஎல்லாம்يَّجْرِىْஓடுகின்றனلِاَجَلٍஒரு தவணையின் பக்கம்مُّسَمًّى‌ؕகுறிப்பிடப்பட்டதுيُدَبِّرُதிட்டமிடுகிறான்الْاَمْرَகாரியத்தைيُفَصِّلُவிவரிக்கிறான்الْاٰيٰتِவசனங்களைلَعَلَّكُمْநீங்கள் வேண்டும்بِلِقَآءِசந்திப்பைرَبِّكُمْஉங்கள் இறைவன்تُوْقِنُوْنَ‏உறுதி கொள்கிறீர்கள்
அல்லாஹுல் லதீ ரFப்'அஸ் ஸமாவாதி Bபிகய்ரி 'அமதின் தரவ்னஹா தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி வ ஸக்கரஷ் ஷம்ஸ வல்கமர குல்லு(ன்)ய் யஜ்ரீ லி அஜலிம் முஸம்மா; யுதBப்Bபிருல் அம்ர யுFபஸ்ஸிலில் ஆயாதி ல'அல்லகும் Bபிலிகா'இ ரBப்Bபிகும் தூகினூன்
முஹம்மது ஜான்
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்குத்தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சகல காரியங்களையும் அவனே திட்டமிடுகிறான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான்.
IFT
உங்கள் பார்வைக்குப் படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான்; பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான். இந்த முழு அமைப்பிலுள்ள ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கும். அல்லாஹ்தான் இவ்வனைத்துக் காரியங்களையும் நிர்வகித்து வருகிறான். அவன் சான்றுகளை மிகத் தெளிவாக விளக்குகின்றான்; உங்கள் இறைவனைச் சந்திக்க இருப்பதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வேதத்தை உமக்கு இறக்கிவைத்த) அல்லாஹ் எத்தகையவனென்றால், வானங்களைத் தூணின்றி உயர்த்தியுள்ளான், அவற்றை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள், பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், அவனே சூரியனையும், சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் (வசப்படுத்தி) வைத்திருக்கிறான், (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிடப்பட்ட தவணையின்படி நடந்து வருகின்றன, (அவற்றில் நடைபெறும்) சகல காரியங்களையும் அவனே நிர்வகிக்கிறான், நீங்கள் (இறந்த பின்னர் உயிர் பெற்று) உங்கள் இரட்சகனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (த் தன்னுடைய) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரிக்கிறான்.
Saheeh International
It is Allah who erected the heavens without pillars that you [can] see; then He established Himself above the Throne and made subject the sun and the moon, each running [its course] for a specified term. He arranges [each] matter; He details the signs that you may, of the meeting with your Lord, be certain.
وَهُوَ الَّذِیْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ وَاَنْهٰرًا ؕ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِیْهَا زَوْجَیْنِ اثْنَیْنِ یُغْشِی الَّیْلَ النَّهَارَ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
وَهُوَஅவன்الَّذِىْஎத்தகையவன்مَدَّவிரித்தான்الْاَرْضَபூமியைوَجَعَلَஇன்னும் அமைத்தான்فِيْهَاஅதில்رَوَاسِىَமலைகளைوَاَنْهٰرًا‌ ؕஇன்னும் ஆறுகளைوَمِنْஇருந்துكُلِّஎல்லாம்الثَّمَرٰتِகனிகள்جَعَلَஆக்கினான்فِيْهَاஅவற்றில்زَوْجَيْنِஜோடிகளைاثْنَيْنِ‌இரண்டுيُغْشِىமூடுகின்றான்الَّيْلَஇரவால்النَّهَارَ‌ ؕபகலைاِنَّ فِىْ ذٰ لِكَநிச்சயமாக/இதில்لَاٰيٰتٍஅத்தாட்சிகள்لِّـقَوْمٍமக்களுக்குيَّتَفَكَّرُوْنَ‏சிந்திக்கின்றார்கள்
வ ஹுவல் லதீ மத்தல் அர்ள வ ஜ'அல Fபீஹா ரவாஸிய வ அன்ஹாரா; வ மின் குல்லிஸ் தமராதி ஜ'அல Fபீஹா Zஜவ்ஜய்னித் னய்னி யுக்ஷில் லய்லன் னஹார்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
முஹம்மது ஜான்
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிவர்க்கத்(தின் மரங்களையும் ஆண் பெண் கொண்ட ஜ)தை ஜதைகளாக்கினான். இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
அவன்தான் இந்த பூமியை விரித்து, அதில் மலைகளை நாட்டி ஆறுகளை ஓடச் செய்துள்ளான். மேலும், ஒவ்வொரு கனி வகை(தாவரங்)களின் ஜோடிகளையும் அதில் அவனே படைத்து உள்ளான். அவனே இரவை பகலின் மீது போர்த்துகிறான்! சிந்திக்கும் மக்களுக்கு இவை அனைத்திலும் பல சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் எத்தகையோனென்றால், பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும்,( நீண்ட) ஆறுகளையும் அவன் ஆக்கினான், ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் (இருவகை கொண்ட) ஜோடிகள் இரண்டை அவன் உண்டாக்கினான், இரவைப் பகலால் அவன் மூடுகிறான், சிந்திக்கக் கூடிய கூட்டத்தினருக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
And it is He who spread the earth and placed therein firmly set mountains and rivers; and from all of the fruits He made therein two mates; He causes the night to cover the day. Indeed in that are signs for a people who give thought.
وَفِی الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِیْلٌ صِنْوَانٌ وَّغَیْرُ صِنْوَانٍ یُّسْقٰی بِمَآءٍ وَّاحِدٍ ۫ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلٰی بَعْضٍ فِی الْاُكُلِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
وَ فِى الْاَرْضِபூமியில்قِطَعٌபகுதிகள்مُّتَجٰوِرٰتٌஒன்றுக்கொன்று நெருக்கமானوَّجَنّٰتٌஇன்னும் தோட்டங்கள்مِّنْ اَعْنَابٍதிராட்சைகளின்وَّزَرْعٌஇன்னும் விவசாயம்وَّنَخِيْلٌஇன்னும் பேரீச்ச மரங்கள்صِنْوَانٌகிளைகள் நிறைந்ததுوَّغَيْرُஅற்றதுصِنْوَانٍகிளைகள்يُّسْقٰىபுகட்டப்படுகிறதுبِمَآءٍநீரைக் கொண்டுوَّاحِدٍஒரேوَنُفَضِّلُஇன்னும் மேன்மையாக்கு கின்றோம்بَعْضَهَاஅவற்றில் சிலவற்றைعَلٰىவிடبَعْضٍசிலவற்றைفِى الْاُكُلِ‌ؕசுவையில்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّـقَوْمٍமக்களுக்குيَّعْقِلُوْنَ‏சிந்தித்து புரிவார்கள்
வ Fபில் அர்ளி கித'உம் முத ஜாவிராது(ன்)வ் வ ஜன்னாதும் மின் அஃனாBபி(ன்)வ் வ Zஜர்'உ(ன்)வ் வ னகீலுன் ஸின்வானு(ன்)வ் வ கய்ரு ஸின்வானி(ன்)ய் யுஸ்கா Bபிமா'இ(ன்)வ் வாஹித்; வ னுFபள்ளிலு Bபஃளஹா 'அலா Bபஃளின் Fபில்-உகுல்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
முஹம்மது ஜான்
இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
பூமியில் பல தொகுதிகளை சேர்ந்தாற்போல் அமைத்து (அதில்) திராட்சை, தானியப்பயிர் நிலங்களையும், பேரீச்சந்தோப்புகளையும் ஆக்கினான்; கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான மரங்களையும் (உற்பத்தி செய்கிறான். இவை அனைத்திற்கும்) ஒரேவித நீர் புகட்டப்பட்டபோதிலும், சிலவற்றைவிட சிலவற்றை சுவையில் நாம் மேன்மையாக்கி வைத்தோம். இதில், அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
மேலும், (பாருங்கள்:) அருகருகே அமைந்துள்ள (தனித்தனித் தன்மைகள் கொண்ட) பல பகுதிகள் பூமியில் உள்ளன; திராட்சைத் தோட்டங்களும் உள்ளன; வயல்களும் இருக்கின்றன; பேரீச்சை மரங்களும் இருக்கின்றன. அவற்றில் சில ஒற்றையாகவும் வேறு சில இரட்டையாகவும் முளைக்கின்றன. அனைத்திற்கும் ஒரே விதமான நீரே புகட்டப்படுகின்றது. ஆயினும் அவற்றில் சிலவற்றைச் சுவை மிகுந்ததாகவும் சிலவற்றை சுவை குறைந்ததாகவும் ஆக்குகின்றோம். திண்ணமாக, இவை அனைத்திலும் சிந்தித்துணரும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், பூமியில் அடுத்தடுத்த பலபகுதிகள் உண்டு, இன்னும், (அதில்) திராட்சைத் தோட்டங்களும், விவசாயப் பயிர் நிலங்களும், கிளைகள் உள்ளவையும், கிளைகள் இல்லாதவையுமான பேரீச்ச மரங்களும் உள்ளன, (அவைகளுக்கு) ஒரே வித நீர் புகட்டப்படுகிறது, (அவ்வாறிருக்க) சிலவற்றை, சிலவற்றைவிடச் சுவையில் நாம் மேன்மையாக்கியும் வைத்திருக்கிறோம், இதில், சிந்தித்து அறியும் மக்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
And within the land are neighboring plots and gardens of grapevines and crops and palm trees, [growing] several from a root or otherwise, watered with one water; but We make some of them exceed others in [quality of] fruit. Indeed in that are signs for a people who reason.
وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرٰبًا ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ ۚ وَاُولٰٓىِٕكَ الْاَغْلٰلُ فِیْۤ اَعْنَاقِهِمْ ۚ وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَ اِنْ تَعْجَبْநீர்ஆச்சரியப்பட்டால்فَعَجَبٌஆச்சரியமானதேقَوْلُهُمْஅவர்களுடைய கூற்றுءَاِذَا كُنَّاநாங்கள் ஆகிவிட்டால்?تُرٰبًاமண்ணாகءَاِنَّا?/நிச்சயமாக நாம்لَفِىْ خَلْقٍபடைப்பில்جَدِيْدٍ  ؕபுதியதுاُولٰۤٮِٕكَஇவர்கள்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بِرَبِّهِمْ‌ۚதங்கள் இறைவனைوَاُولٰۤٮِٕكَஇன்னும் இவர்கள்الْاَغْلٰلُஅரிகண்டங்கள்فِىْۤ اَعْنَاقِهِمْ‌ۚஇவர்களுடைய கழுத்துகளில்وَاُولٰۤٮِٕكَஇன்னும் இவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள்هُمْ فِيْهَاஅதில் இவர்கள்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வ இன் தஃஜBப் Fப'அஜBபுன் கவ்லுஹும் 'அ-இதா குன்ன துராBபன் 'அ-இன்ன லFபீ கல்கின் ஜதீத்; உலா 'இகல் லதீன கFபரூ Bபி ரBப்Bபிஹிம் வ உலா'இகல் அக்லாலு Fபீ அஃனாகிஹிம் வ உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
(அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், “நிச்சயமாக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?” என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உம்மைப் பொய்யாக்குவது பற்றி) நீர் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) ‘‘நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?'' என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்த இறைவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள்.
IFT
நீர் ஆச்சரியப்பட வேண்டுமாயின் மக்களின் இந்தக் கூற்றைக் குறித்துதான் ஆச்சரியப்பட வேண்டும்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும் புதிதாகப் படைக்கப்படுவோமா?” இவர்கள் தம் இறைவனை நிராகரித்தவர்கள் ஆவர். இவர்களின் கழுத்துகளில் விலங்குகள் மாட்டப்பட்டுள்ளன. மேலும், இவர்கள் நரகவாசிகள் ஆவர். அதில் இவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே! இந்நிராகரிப்போர் மறுமையைப் பொய்யாக்குவது பற்றி) நீர் ஆச்சரியப்படுவதாயின், நிச்சயமாக நாம் (இறந்து உக்கி) மண்ணாக ஆகி விட்டாலுமா? புதியதொரு படைப்பில் நிச்சயமாக நாம் இருப்போம்? என்று அவர்கள் கூறுவது (இதனை விட மிக்க) ஆச்சரியமானதே! அத்தகையோர்தான் - அவர்கள் தங்களின் இரட்சகனை நிராகரித்து விட்டவர்களாவர், மேலும் அத்தகையோர் - (மறுமையில்) விலங்குகள் அவர்களுடைய கழுத்துக்களில் இருக்கும், இன்னும், அவர்கள் நரகவாசிகளே! அதில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
And if you are astonished, [O Muhammad] - then astonishing is their saying, "When we are dust, will we indeed be [brought] into a new creation?" Those are the ones who have disbelieved in their Lord, and those will have shackles upon their necks, and those are the companions of the Fire; they will abide therein eternally.
وَیَسْتَعْجِلُوْنَكَ بِالسَّیِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُ ؕ وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلٰی ظُلْمِهِمْ ۚ وَاِنَّ رَبَّكَ لَشَدِیْدُ الْعِقَابِ ۟
وَيَسْتَعْجِلُوْنَكَஅவசரமாகத் தேடுகின்றனர்/உம்மிடம்بِالسَّيِّئَةِகெட்டதைقَبْلَமுன்னர்الْحَسَنَةِநல்லதிற்குوَقَدْ خَلَتْசென்றுள்ளனمِنْ قَبْلِهِمُஅவர்களுக்கு முன்னர்الْمَثُلٰتُ‌ؕதண்டனைகள்وَاِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்لَذُوْ مَغْفِرَةٍமன்னிப்பவன்لِّـلنَّاسِமக்களைعَلٰى ظُلْمِهِمْ‌ۚஅவர்கள் குற்றம் செய்திருந்தபோதும்وَاِنَّநிச்சயமாகرَبَّكَஉம் இறைவன்لَشَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‏தண்டனை
வ யஸ்தஃஜிலூனக Bபிஸ் ஸய்யி'அதி கBப்லல் ஹஸனதி வ கத் கலத் மின் கBப்லிஹிமுல் மதுலாத்; வ இன்ன ரBப்Bபக லதூ மக்Fபிரதில் லின்னாஸி 'அலா ளுல்மிஹிம் வ இன்ன ரBப்Bபக லஷதீதுல் 'இகாBப்
முஹம்மது ஜான்
(நபியே!) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன; நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக்கொள்ள இவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உமது இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்த போதிலும், நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவன் ஆவான்.
IFT
நன்மை வருவதற்கு முன் தீமையை விரைவாகக் கொண்டு வருமாறு இவர்கள் உம்மை வற்புறுத்துகின்றனர். ஆனாலும், இவர்களுக்கு முன்னர் (இதேபோன்ற போக்கினை மேற்கொண்டவர்மீது இறைவேதனை இறங்கியதற்கான) படிப்பினைமிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றனவே! மக்கள் அக்கிரமம் இழைத்தும்கூட உம் இறைவன் அவர்களை மன்னிப்பவனாக இருக்கின்றான் என்பதும் உண்மைதான்; மேலும், உம் இறைவன் கடுமையாகத் தண்டிக்கக்கூடியவன் என்பதும் உண்மைதான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நன்மைக்கு முன்னதாகவே தீமையைக் கொண்டு (வருமாறு) இவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர், இவர்களுக்கு முன்னர் நிச்சயமாக (தண்டனை கொடுக்கப்பட்ட) முன்மாதிரியானவைகள் நிகழ்ந்தும் இருக்கின்றன, மேலும், நிச்சயமாக உமதிரட்சகன், மனிதர்களுக்கு அவர்களின் அக்கிரமங்களுக்காக மன்னிப்பை உடையவன், (அவ்வாறே) நிச்சயமாக உமதிரட்சகன் தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்.
Saheeh International
They impatiently urge you to bring about evil before good, while there has already occurred before them similar punishments [to what they demand]. And indeed, your Lord is the possessor of forgiveness for the people despite their wrongdoing, and indeed, your Lord is severe in penalty.
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ۟۠
وَيَقُوْلُகூறுகிறார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தவர்கள்لَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட வேண்டாமா?عَلَيْهِஇவர் மீதுاٰيَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّهٖؕஇவருடையஇறைவன்اِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்مُنْذِرٌ‌ஓர் எச்சரிப்பாளர்وَّ لِكُلِّ قَوْمٍஎல்லா மக்களுக்கும்هَادٍ‏தலைவர்/வழிகாட்டி
வ யகூலுல் லதீன கFபரூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதும் மிர் ரBப்Bபிஹ்; இன்னமா அன்த முன்திரு(ன்)வ் வ லிகுல்லி கவ்மின் ஹாத்
முஹம்மது ஜான்
இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் “அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.  
அப்துல் ஹமீது பாகவி
‘‘(நபியே!) இந்நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) இவர் மீது இவருடைய இறைவனி டமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே தவிர வேறில்லை; (ஆகவே, அவர்கள் விரும்பியவாறெல்லாம் செய்ய வேண்டுவது உமது கடமை இல்லை. இவ்வாறே) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (ஒரு) வழிகாட்டி வந்திருக்கிறார்.
IFT
(உமது அழைப்பை) ஏற்க மறுத்துவிட்டவர்கள், “இம்மனிதர் மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்று ஏன் இறக்கி வைக்கப்படவில்லை?” என்று கேட்கின்றார்கள். ஆனால், நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர். மேலும், ஒவ்வொரு சமூகத்துக்கும் வழி காட்டும் ஒருவர் இருக்கின்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நிராகரிப்போர் (உம்மைப் பற்றி) “இவர் மீது இவருடைய இரட்சகனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகின்றனர், (நபியே)! நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே (ஆவீர்.,) மேலும், ஒவ்வொரு சமூகத்தவர்க்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.
Saheeh International
And those who disbelieved say, "Why has a sign not been sent down to him from his Lord?" You are only a warner, and for every people is a guide.
اَللّٰهُ یَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُ وَمَا تَغِیْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ؕ وَكُلُّ شَیْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ ۟
اَللّٰهُஅல்லாஹ்يَعْلَمُஅறிகின்றான்مَاஎதைتَحْمِلُசுமக்கிறாள்كُلُّஒவ்வொருاُنْثٰىபெண்وَمَا تَغِيْضُஇன்னும் குறைவதைالْاَرْحَامُகர்ப்பப்பைகள்وَمَا تَزْدَادُ ؕஇன்னும் அதிகமாவதைوَكُلُّ شَىْءٍஎல்லாம்عِنْدَهٗஅவனிடம்بِمِقْدَارٍ‏ஓர் அளவில்
அல்லாஹு யஃலமு மா தஹ்மிலு குல்லு உன்தா வமா தகீளுல் அர்ஹாமு வமா தZஜ்தாத், வ குல்லு ஷய்'இன் 'இன்தஹூ Bபிமிக்தார்
முஹம்மது ஜான்
ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும், (பிரசவிக்கும் பொழுது) அவை விரிவதையும் அவன் அறிகிறான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன.
IFT
ஒவ்வொரு கர்ப்பிணியின் கருப்பையில் உள்ளதையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான். மேலும், கருப்பைகளில் ஏற்படுகின்ற குறைவையும் கூடுதலையும் அவன் அறிகின்றான். அவன் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை நிர்ணயித்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு பெண்ணும் கர்ப்பம் தரிப்பதையும், கர்ப்பப் பைகள் (கர்ப்பம் தரித்த பின் சிசு ஒன்பது மாதம் நிறைவு பெற்று) அவை அதிகமாவதையும் அல்லாஹ் (நன்கு) அறிவான், ஒவ்வொரு பொருளும் அவனிடம் (அவன் ஏற்படுத்திய) அளவைக் கொண்டே இருக்கிறது.
Saheeh International
Allah knows what every female carries and what the wombs lose [prematurely] or exceed. And everything with Him is by due measure.
عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْكَبِیْرُ الْمُتَعَالِ ۟
عٰلِمُஅறிந்தவன்الْغَيْبِமறைவைوَالشَّهَادَةِஇன்னும் வெளிப்படையைالْكَبِيْرُமிகப் பெரியவன்الْمُتَعَالِ ‏மிக உயர்ந்தவன்
'ஆலிமுல் கய்Bபி வஷ் ஷஹாததில் காBபீருல் முத'ஆல்
முஹம்மது ஜான்
(எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
(இது மட்டுமா! எல்லா) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன்.
IFT
மறைவான, மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அவன் அறியக் கூடியவனாகவும், மிக உயர்ந்தவனாகவும், (எல்லா நிலையிலும்) மேலானவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இம்மட்டுமா!) மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் நன்கறிகிறவன் (எல்லோரையும் விட) அவன் மிகப் பெரியவன், மிக்க உயர்வுடையவன்.
Saheeh International
[He is] Knower of the unseen and the witnessed, the Grand, the Exalted.
سَوَآءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِالَّیْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ ۟
سَوَآءٌசமமேمِّنْكُمْஉங்களில்مَّنْஎவன்اَسَرَّரகசியப்படுத்தினான்الْقَوْلَ وَ مَنْபேச்சை/இன்னும் எவன்جَهَرَபகிரங்கப்படுத்தினான்بِهٖஅதைوَمَنْஇன்னும் எவன்هُوَஅவன்مُسْتَخْفٍۢமறைத்து செய்பவனாகبِالَّيْلِஇரவில்وَسَارِبٌۢஇன்னும் வெளிப்படுபவன்بِالنَّهَارِ‏பகலில்
ஸவா'உம் மின்கும் மன் அஸர்ரல் கவ்ல வ மன் ஜஹர Bபிஹீ வ மன் ஹுவ முஸ்தக்Fபிம் Bபில்லய்லி வ ஸாரிBபும் Bபின்னஹார்
முஹம்மது ஜான்
எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதை பகிரங்கமாகக் கூறினாலும் (அவனுக்கு இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அனைத்தும் அவனுக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.)
IFT
உங்களில் ஒருவர் மெதுவாகப் பேசினாலும் சரி, உரத்துப் பேசினாலும் சரி, மற்றும் இரவின் இருளில் ஒளிந்திருந்தாலும் சரி, பகலின் ஒளியில் நடந்து கொண்டிருந்தாலும் சரி இவை அனைத்தும் (அல்லாஹ்வைப் பொறுத்துச்) சமமானதே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களில், கூற்றை மெதுவாகக் கூறியவரும், அதை உரக்கக் கூறியவரும், எவர் இரவில் மறைந்து கொள்கிறாரோ அவரும், பகலில் வெளிப்படையாக நடப்பவரும் (இவர்கள் யாவரும் அல்லாஹ்விடம்) சமமே.
Saheeh International
It is the same [to Him] concerning you whether one conceals [his] speech or publicizes it and whether one is hidden by night or conspicuous [among others] by day.
لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ یَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُغَیِّرُ مَا بِقَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْٓءًا فَلَا مَرَدَّ لَهٗ ۚ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ ۟
لَهٗஅவனுக்குمُعَقِّبٰتٌபின் தொடரக் கூடியவர்கள்مِّنْۢ بَيْنِ يَدَيْهِஅவனுக்கு முன்وَمِنْ خَلْفِهٖஇன்னும் அவனுக்குப் பின்يَحْفَظُوْنَهٗபாதுகாக்கின்றனர்/அவனைمِنْஇருந்துاَمْرِகட்டளைاللّٰهِ‌ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُغَيِّرُமாற்றமாட்டான்مَا بِقَوْمٍஒரு சமுதாயத்திடம் உள்ளதைحَتّٰى يُغَيِّرُوْاஅவர்கள் மாற்றுகின்றவரைمَا بِاَنْفُسِهِمْ‌ؕதங்களிடமுள்ளதைوَاِذَاۤ اَرَادَநாடினால்اللّٰهُஅல்லாஹ்بِقَوْمٍஒரு சமுதாயத்திற்குسُوْۤءًاஅழிவைفَلَاஅறவே முடியாதுمَرَدَّதடுப்பதுلَهٗ‌ۚஅதைوَمَا لَهُمْஅவர்களுக்கு இல்லைمِّنْ دُوْنِهٖஅவனையன்றிمِنْ وَّالٍ‏உதவியாளர் எவரும்
லஹூ மு'அக்கிBபாதும் மிம் Bபய்னி யதய்ஹி வ மின் கல்Fபிஹீ யஹ்Fபளூனஹூ மின் அம்ரில் லாஹ்; இன்னல் லாஹ லா யுகய்யிரு மா Bபிகவ்மின் ஹத்தா யுகய்யிரூ மா Bபிஅன்Fபுஸிஹிம்; வ இதா அராதல் லாஹு Bபிகவ்மின் ஸூ'அன் Fபலா மரத்த லஹ்; வமா லஹும் மின் தூனிஹீமி(ன்)வ் வால்
முஹம்மது ஜான்
மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதன் எந்நிலைமையிலிருந்த போதிலும்) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (வானவர்கள்) பலர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவனை பாதுகாக்கிறார்கள். மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. அல்லாஹ் ஒரு வகுப்பாரை வேதனை செய்ய நாடினால், அதைத் தடுப்பவர்கள் ஒருவரும் இல்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை.
IFT
ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்கு முன்பும், பின்பும் கண்காணிப்பாளர்கள் (வானவர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் ஆணையின்படி அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக்கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை. மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்திற்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுத்து நிறுத்திட இயலாது. அல்லாஹ்வுக்கு எதிராக அத்தகைய சமூகத்தாருக்கு உதவி செய்வோரும் எவருமிலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களில் ஒவ்வொருவருக்கும்) அவருக்கு முன்னும், அவருக்கு பின்னும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) பலர் இருக்கின்றனர், அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டு அவரைப் பாதுகாக்கின்றார்கள், நிச்சயமாக அல்லாஹ் எந்த ஒரு சமுதாயத்திற்குரியதையும் அவர்கள் தங்களுக்குரிய (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல், அவனுக்குக் கீழ்படிந்து நடத்தல் போன்ற நிலைகளான)தை மாற்றிக் கொள்ளாத வரையில், நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றிவிடுவதில்லை, மேலும், அல்லாஹ் ஒரு சமூகத்தினருக்கு தீங்கிழைக்க நாடினால், அதனைத் தடுப்போர் ஒருவருமில்லை, அவர்களுக்கு அவனையன்றி உதவி செய்பவருமில்லை.
Saheeh International
For him [i.e., each one] are successive [angels] before and behind him who protect him by the decree of Allah. Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves. And when Allah intends for a people ill, there is no repelling it. And there is not for them besides Him any patron.
هُوَ الَّذِیْ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ ۟ۚ
هُوَஅவன்الَّذِىْஎத்தகையவன்يُرِيْكُمُகாட்டுகின்றான்/உங்களுக்குالْبَرْقَமின்னலைخَوْفًاபயமாகوَّطَمَعًاஇன்னும் ஆசையாகوَّيُنْشِئُஇன்னும் கிளப்புகின்றான்السَّحَابَமேகங்களைالثِّقَالَ‌ۚ‏கனமானவை
ஹுவல் லதீ யுரீகுமுல் Bபர்க கவ்Fப(ன்)வ் வ தம'அ(ன்)வ் வ யுன்ஷி'உஸ் ஸஹாBபஸ் திகால்
முஹம்மது ஜான்
அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(உங்களுக்கு) பயத்தையும் ஆதரவையும் தரக்கூடிய மின்னலை அவனே உங்கள் முன் பிரகாசிக்கச் செய்கிறான். (மழையைச் சுமந்த) பளுவான மேகங்களையும் அவனே கிளப்புகிறான்.
IFT
பளீரெனத் தோன்றும் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகின்றான். அதனைக் கண்டு உங்களுக்கு அச்சமும், ஆர்வமும் ஏற்படுகின்றன. மேலும், அவன்தான் (நீர் நிறைந்த) கனமான மேகத்தை எழுப்புகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையோனென்றால், (உங்களில் பிரயாணம் செய்பவருக்கு பயமாகவும், (ஊரில் தங்கியிருப்பவருக்கு) ஆதரவாகவும் மின்னலை உங்களுக்கு அவன் காட்டுகிறான், (மழையைச் சுமந்த) பளுவான மேகங்களையும் அவனே உருவாக்குகிறான்.
Saheeh International
It is He who shows you lightning, [causing] fear and aspiration, and generates the heavy clouds.
وَیُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰٓىِٕكَةُ مِنْ خِیْفَتِهٖ ۚ وَیُرْسِلُ الصَّوَاعِقَ فَیُصِیْبُ بِهَا مَنْ یَّشَآءُ وَهُمْ یُجَادِلُوْنَ فِی اللّٰهِ ۚ وَهُوَ شَدِیْدُ الْمِحَالِ ۟ؕ
وَيُسَبِّحُதுதிக்கின்றனர்الرَّعْدُஇடிبِحَمْدِهٖஅவனைப் புகழ்ந்துوَالْمَلٰۤـٮِٕكَةُஇன்னும் வானவர்கள்مِنْ خِيْفَتِهٖ ۚஅவனுடைய பயத்தால்وَيُرْسِلُஅனுப்புகிறான்الصَّوَاعِقَஅபாயங்களைفَيُصِيْبُவேறறுக்கிறான்بِهَاஅவற்றைக் கொண்டுمَنْஎவர்களைيَّشَآءُநாடுகிறான்وَهُمْஅவர்களோيُجَادِلُوْنَதர்க்கிக்கிறார்கள்فِى اللّٰه‌ۚஅல்லாஹ்வை பற்றிوَهُوَஅவன்شَدِيْدُகடுமையானவன்الْمِحَالِؕ‏பிடி
வ யுஸBப்Bபிஹுர் ரஃது Bபிஹம்திஹீ வல்மலா'இகது மின் கீFபதிஹீ வ யுர்ஸிலுஸ் ஸவா'இக Fப யுஸீBபு Bபிஹா மய் யஷா'உ வ ஹும் யுஜாதிலூன Fபில் லாஹி வ ஹுவ ஷதீதுல் மிஹால்
முஹம்மது ஜான்
மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
இடிகளும் மற்ற வானவர்களும் அவனுக்குப் பயந்து அவனைத் துதி செய்து புகழ்கின்றனர். அவனே இடிகளை விழச்செய்து, அதைக்கொண்டு அவன் நாடியவர்களைத் தாக்குகிறான். (இவ்வாறு இருந்தும்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி (உங்களிடம்) தர்க்கிக்கின்றனர். அவனோ (அவர்களைத் தண்டிக்கக் கருதினால் அவர்கள்) நழுவாது மிக்க பலமாகப் பிடித்துக் கொள்பவன்.
IFT
இடி முழக்கம் அவனைப் புகழ்வதோடு அவன் தூய்மையையும் பறைசாற்றுகின்றது. வானவர்களும் அவனுடைய பேரச்சத்தால் நடுங்கிய வண்ணம் அவனைப் புகழ்கின்றார்கள். மேலும், இடிகளை அவன் அனுப்புகின்றான்; தான் நாடுகின்றவர்கள் மீது அவர்கள், அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் (சில சமயம்) அவற்றை விழச் செய்கின்றான். உண்மையில் அவனுடைய சூழ்ச்சி மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இடியும் அவனது புகழைக்கொண்டு துதிக்கிறது (அவ்வாறே) அவனின் பயத்தால் மலக்குகளும்- (அவனைத் துதி செய்கின்றனர்.) அவனே இடிகளையும் அனுப்புகிறான், (பின்னர்) அவன் நாடியவர்களை அதைக் கொண்டு அவன் (தாக்கிப்) பிடிக்கச் செய்கிறான், அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி (உம்மிடம்) தர்க்கம் செய்கின்றனர், மேலும், (அவர்களை தண்டிக்க நாடினால், அவர்களை நழுவாது பிடிப்பதில்) அவன் பலமிக்கவன்.
Saheeh International
And the thunder exalts [Allah] with praise of Him - and the angels [as well] from fear of Him - and He sends thunderbolts and strikes therewith whom He wills while they dispute about Allah; and He is severe in assault.
لَهٗ دَعْوَةُ الْحَقِّ ؕ وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَجِیْبُوْنَ لَهُمْ بِشَیْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّیْهِ اِلَی الْمَآءِ لِیَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهٖ ؕ وَمَا دُعَآءُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟
لَهٗஅவனுக்கேدَعْوَةُபிரார்த்தனைالْحَـقِّ‌ؕஉண்மைوَالَّذِيْنَஎவர்கள்يَدْعُوْنَஅழைக்கிறார்கள்مِنْ دُوْنِهٖஅவனையன்றிلَا يَسْتَجِيْبُوْنَபதில் தர மாட்டார்கள்لَهُمْஅவர்களுக்குبِشَىْءٍஎதையும்اِلَّاதவிரكَبَاسِطِவிரிப்பவனைப் போன்றேكَفَّيْهِதன் இரு கைகளைاِلَىபக்கம்الْمَآءِதண்ணீர்لِيَبْلُغَஅது அடைவதற்காகفَاهُதன் வாயைوَمَاஇல்லைهُوَஅதுவோبِبَالِـغِهٖ‌ؕஅடையாது/அதைوَمَاஇல்லைدُعَآءُபிரார்த்தனைالْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களின்اِلَّا فِىْ ضَلٰلٍ‏வழிகேட்டில் தவிர
லஹூ தஃவதுல் ஹக்க்; வல்லதீன யத்'ஊன மின் தூனிஹீ லா யஸ்தஜீBபூன லஹும் Bபிஷய்'இன் இல்லா கBபாஸிதி கFப்Fபய்ஹி இலல் மா'இ லியBப்லுக Fபாஹு வமா ஹுவ BபிBபாலிகிஹ்; வமா து'ஆ'உல் காFபிரீன இல்லா Fபீ ளலால்
முஹம்மது ஜான்
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து) அழைக்கிறார்களோ அவர்களுக்கு, அவை எதையும் கொடுத்து விடாது. (அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை அழைப்பவர்களின் உதாரணம்:) தண்ணீர் (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதை அவன் தன் கையால் அள்ளிக் குடிக்கும் வரை அவனுடைய) வாயை அது அடைந்துவிடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது.
IFT
அவனை அழைப்பதுதான் சரியானதாகும். அவனைத் தவிர இவர்கள் அழைக்கக் கூடிய வேறு கடவுள்களால் இவர்களின் அழைப்புக்கு எவ்வித பதிலும் அளிக்க முடியாது. அவர்களை அழைப்பது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் தண்ணீரை நோக்கித் தன் இரு கைகளை நீட்டி, “தண்ணீரே, எனது வாயினுள் வந்து விடு!” என்று கோருவதைப் போன்று உள்ளது. உண்மையில் தண்ணீர் வாயினுள் தானாகவே செல்லக் கூடியதாய் இல்லை. இவ்வாறே இறைமறுப்பாளர்களின் இறைஞ்சுதல் இலக்கின்றி எறியப்படும் அம்பாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும், அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து அழைக்கிறார்களே அத்தகையவர்கள்-அவர்களுக்கு, யாதொரு விடையும் (அழைக்கப்பட்ட) அவர்கள் அளிக்கமாட்டார்கள், (அல்லாஹ்வையன்றி பிறவற்றை அழைப்போரின் உதாரணம்:,) தண்ணீரின்பால் அது (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு முன் கைகளையும் (நீட்டி அள்ளிக்குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப் போல் அல்லாமல் (வேறில்லை, அள்ளிக் குடிக்கும் வரையில், அவனுடைய) வாயை அது அடைந்தும் விடாது, மேலும் நிராகரிப்போர் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேட்டிலல்லாது இல்லை.
Saheeh International
To Him [alone] is the supplication of truth. And those they call upon besides Him do not respond to them with a thing, except as one who stretches his hands toward water [from afar, calling it] to reach his mouth, but it will not reach it [thus]. And the supplication of the disbelievers is not but in error [i.e., futility].
وَلِلّٰهِ یَسْجُدُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்குيَسْجُدُசிரம் பணிகின்றனர்مَنْ فِى السَّمٰوٰتِஎவர்/வானங்களில்وَالْاَرْضِஇன்னும் பூமியில்طَوْعًاஆசையாகوَّكَرْهًاஇன்னும் நிர்பந்தமாகوَّظِلٰلُهُمْஅவர்களின் நிழல்களும்بِالْغُدُوِّகாலையில்وَالْاٰصَالِ ۩‏இன்னும் மாலைகளில்
வ லில்லாஹி யஸ்ஜுது மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி தவ் 'அ(ன்)வ் வ கர்ஹ(ன்)வ் வ ளிலாலுஹும் Bபில்குதுவ்வி வல் ஆஸால்
முஹம்மது ஜான்
வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து வழிபட்டே தீரும். காலையிலும் மாலையிலும் அவற்றின் நிழல்களும் (அவனுடைய கட்டளைக்கு வழிப்பட்டே முன் பின் செல்கின்றன).
IFT
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வுக்கே தலைசாய்க்கின்றன. மேலும், அனைத்துப் பொருட்களின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் அவன் முன்னிலையில் பணிந்து கொண்டிருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களில் மற்றும் பூமியில் இருப்பவை (யாவும் அவன்) விருப்பத்துடனும் வெறுப்புடனும் அல்லாஹ்வுக்கே சிரம் பணிகின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவனுடைய கட்டளைக்குப் பணிந்து சாஷ்டாங்கம் செய்கின்றன).
Saheeh International
And to Allah prostrates whoever is within the heavens and the earth, willingly or by compulsion, and their shadows [as well] in the mornings and the afternoons.
قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قُلِ اللّٰهُ ؕ قُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ لَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّا ؕ قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬ اَمْ هَلْ تَسْتَوِی الظُّلُمٰتُ وَالنُّوْرُ ۚ۬ اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَیْهِمْ ؕ قُلِ اللّٰهُ خَالِقُ كُلِّ شَیْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ۟
قُلْகூறுவீராகمَنْயார்?رَّبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِؕஇன்னும் பூமிقُلِகூறுவீராகاللّٰهُ‌ؕஅல்லாஹ்قُلْகூறுவீராகاَفَاتَّخَذْتُمْநீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்?مِّنْ دُوْنِهٖۤஅவனையன்றிاَوْلِيَآءَபாதுகாவலர்களைلَا يَمْلِكُوْنَஉரிமை பெறமாட்டார்கள்لِاَنْفُسِهِمْதங்களுக்கேنَفْعًاநன்மை செய்வதற்குوَّلَا ضَرًّا‌ؕதீங்கு செய்வதற்குقُلْகூறுவீராகهَلْ يَسْتَوِىசமமாவார்களா?الْاَعْمٰىகுருடன்وَالْبَصِيْرُ ۙஇன்னும் பார்வையுடையவன்اَمْஅல்லதுهَلْ تَسْتَوِىசமமாகுமா?الظُّلُمٰتُஇருள்கள்وَالنُّوْرُ ۚஇன்னும் ஒளிاَمْஅல்லது?جَعَلُوْاஆக்கினார்கள்لِلّٰهِஅல்லாஹ்விற்குشُرَكَآءَஇணைகளைخَلَقُوْاபடைத்தார்கள்كَخَلْقِهٖஅவனுடைய படைப்பைப் போன்றுفَتَشَابَهَஅதனால் குழப்பமடைந்ததுالْخَـلْقُபடைப்பதுعَلَيْهِمْ‌ؕஇவர்கள் மீதுقُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்தான்خَالِـقُபடைப்பாளன்كُلِّ شَىْءٍஎல்லாவற்றின்وَّهُوَஅவன்الْوَاحِدُஒருவன்الْقَهَّارُ‏அடக்கி ஆளுபவன்
குல் மர் ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ள்; குலில்லாஹ்; குல் அFபத்தகத்தும் மின் தூனிஹீ அவ்லியா'அ லா யம்லிகூன லி அன்Fபுஸிஹிம் னFப்'அ(ன்)வ் வலா ளர்ரா; குல் ஹல் யஸ்தவில் அஃமா வல் Bபஸீரு அம் ஹல் தஸ்தவிள் ளுலுமாது வன்னூர்; அம் ஜ'அலூ லில்லாஹி ஷுரகா'அ கலகூ ககல்கிஹீ Fபதஷா Bபஹல் கல்கு 'அலய்ஹிம்; குலில் லாஹு காலிகு குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுவல் வாஹிதுல் கஹ்ஹர்
முஹம்மது ஜான்
(நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்: “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும், பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன!) நீரே (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவீராக. அவ்வாறிருக்க ‘‘அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா? அவை தங்களுக்கே ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகளாய் இருக்கின்றன'' என்றும் கூறுவீராக. (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘குருடரும், பார்வை உடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா?'' என்று கேட்பீராக. அல்லது ‘‘அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்கிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா?'' (என்றும் கேட்பீராக.) அவ்வாறாயின் (இந்த உலகைப்) படைத்தவன் (யாரென்பதில்) அவர்களுக்குள் சந்தேகமே ஏற்பட்டிருக்கலாம். (அவ்வாறும் இல்லையே! ஆகவே, அவர்களை நோக்கி) கூறுவீராக: (இவ்வுலகிலுள்ள) ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! (அவனுக்கு இணை துணையில்லை.) அவனே (உலகிலுள்ள அனைத்தையும்) அடக்கி ஆளுகிறான்.
IFT
வானங்கள் மற்றும், பூமியின் அதிபதி யார் என்று அவர்களிடம் கேளும். “அல்லாஹ்” என்று (அதற்கு நீரே பதில்) கூறும். “உண்மை இவ்வாறிருக்க, அவனை விடுத்து, தமக்கே நன்மையும், தீமையும் அளிக்க சக்தியற்ற கடவுள்களையா நீங்கள் உங்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டீர்கள்?” என்று அவர்களிடம் கேளும். “பார்வையற்றவனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருளும் ஒளியும் சமமாகுமா?” என்றும் கேளும். இல்லையெனில், அல்லாஹ்வுக்கு இணையாக இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட கடவுள்களும் அவன் படைத்திருப்பதைப் போல் (எதனையும்) படைத்திருந்து, அதன் காரணமாக இது யாருடைய படைப்போ என்று இவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதோ? நீர் கூறும்: “ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அல்லாஹ்வே! அவன் தனித்தவனும் அனைத்தையும் அடக்கியாள்பவனுமாவான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அவர்களிடம்,) “வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகன் (ரப்பு) யார்?” என்று நீர் கேட்பீராக! (அவர்களிடம்) “அல்லாஹ்தான்” என்று நீர் கூறுவீராக! (அவ்வாறிருக்க) அவனையன்றி பாதுகாவலர்களாக பொய்யான தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொண்டுவிட்டீர்களா? (அவர்களோ) தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்யச் சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்” என்று கூறுவீராக! (பின்னும் அவர்களிடம்) “குருடரும், பார்வையுடையவரும் சமமாவாரா? அல்லது இருள்களும், பிரகாசமும் சமமாகுமா?” என்று கேட்பீராக! அல்லது அவர்கள் அல்லாஹ்வுககு இணையாளர்களை ஆக்கியிருக்கின்றனரே அவர்கள் அவன் படைத்திருப்பதைப் போன்று (எதனையும்) படைத்திருக்கின்றனரா?” அவ்வாறாயின் அப்படைப்பு இவர்களுக்கு (அல்லாஹ் படைத்ததற்கு) ஒப்பாகி விட்டதா) அவ்வாறுமில்லையே! ஆகவே, அவர்களிடம் அல்லாஹ்தான்” ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன், மேலும், அவன் ஒருவன், (அவனே யாவற்றையும்) அடக்கி ஆளுபவனாவான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "Who is Lord of the heavens and earth?" Say, "Allah." Say, "Have you then taken besides Him allies not possessing [even] for themselves any benefit or any harm?" Say, "Is the blind equivalent to the seeing? Or is darkness equivalent to light? Or have they attributed to Allah partners who created like His creation so that the creation [of each] seemed similar to them?" Say, "Allah is the Creator of all things, and He is the One, the Prevailing."
اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِیَةٌ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّیْلُ زَبَدًا رَّابِیًا ؕ وَمِمَّا یُوْقِدُوْنَ عَلَیْهِ فِی النَّارِ ابْتِغَآءَ حِلْیَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْحَقَّ وَالْبَاطِلَ ؕ۬ فَاَمَّا الزَّبَدُ فَیَذْهَبُ جُفَآءً ۚ وَاَمَّا مَا یَنْفَعُ النَّاسَ فَیَمْكُثُ فِی الْاَرْضِ ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ ۟ؕ
اَنْزَلَஅவன் இறக்கினான்مِنَஇருந்துالسَّمَآءِமேகம்مَآءًமழையைفَسَالَتْஓடினاَوْدِيَةٌۢஓடைகள்بِقَدَرِهَاஅவற்றின் அளவிற்குفَاحْتَمَلَசுமந்ததுالسَّيْلُவெள்ளம்زَبَدًاநுரைகளைرَّابِيًا‌ ؕமிதக்கக்கூடிய(து)وَمِمَّاஇன்னும் எதிலிருந்துيُوْقِدُوْنَபழுக்கவைக்கிறார்கள்عَلَيْهِஅதன் மீதுفِى النَّارِநெருப்பில்ابْتِغَآءَநாடிحِلْيَةٍஓர் ஆபரணத்தைاَوْஅல்லதுمَتَاعٍஒரு பொருளைزَبَدٌநுரைمِّثْلُهٗ‌ ؕஅது போன்றكَذٰلِكَஇப்படித்தான்يَضْرِبُவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்الْحَـقَّசத்தியத்தைوَالْبَاطِلَ ؕஇன்னும் அசத்தியத்தைفَاَمَّاஆகவேالزَّبَدُநுரைفَيَذْهَبُசெல்கிறதுجُفَآءً‌ ۚவீணானதாகوَاَمَّاஆகவேمَاஎதுيَنْفَعُபலனளிக்கிறதுالنَّاسَமக்களுக்குفَيَمْكُثُதங்குகிறதுفِى الْاَرْضِ‌ؕபூமியில்كَذٰلِكَஇவ்வாறேيَضْرِبُவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்الْاَمْثَالَؕ‏உவமைகளை
அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fபஸாலத் அவ்தியதும் Bபிகதரிஹா Fபஹ்தமலஸ் ஸய்லு ZஜBபதர் ராBபியா; வ மிம்ம்மா யூகிதூன 'அலய்ஹி Fபின் னாரிBப் திகா'அ ஹில்யதின் அவ் மதா'இன் ZஜBபதும் மித்லுஹ்; கதாலிக யள்ரிBபுல் லாஹுல் ஹக்க வல் Bபாதில்; Fப அம்மZஜ் ZஜBபது Fப யத்ஹBபு ஜுFபா'ஆ; வ அம்மா மா யன்Fப'உன் னாஸ Fப யம்குது Fபில் அர்ள்; கதாலிக யள்ரிBபுல் லாஹுல் அம்தால்
முஹம்மது ஜான்
அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அவன்தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவிக்கிறான். (அது பொழிகின்ற) நீருக்குத் தக்கவாறு (சிறிய பெரிய) ஓடைகளாக ஓடுகிறது. (அவ்வோடைகளில்) வெள்ளம் நுரைகளை மேல் சுமந்து செல்கிறது. இவ்வாறே ஆபரணங்களுக்காகவோ அல்லது மற்ற சாமான்களுக்காகவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் பொழுதும் அதைப் போன்ற (அழுக்கு) நுரை மிதக்கிறது. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் இதை உதாரணமாகக் கூறுகிறான். ஏனெனில், (அழுக்கு) நுரையோ பயனற்றதாக (இருப்பதால்) அழிந்து (மறைந்து) விடுகிறது. மனிதனுக்குப் பயனளிக்கக்கூடியவையோ பூமியில் (சேர்த்து வைக்கப்பட்டு) நிலையாக இருக்கின்றன. இவ்வாறே (நம்பிக்கை அற்றவர்களை அழுக்கு நுரைக்கும், நம்பிக்கையாளர்களை பூமியில் சேர்த்து வைக்கப்படும் பயன்தரும் பொருள்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் (பல) உதாரணங்களை கூறுகிறான்.
IFT
அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான். ஒவ்வொரு நதியும் ஓடையும் தம் கொள்ளளவிற்கு ஏற்ப நீரால் நிரம்பி ஓடியது. பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அதன் மேற்பாகத்தில் பொங்கும் நுரையைச் சுமந்து செல்கிறது. நகைகள், பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்காக மக்கள் உலோகங்களை நெருப்பில் உருக்கும்போதும் இதே போன்ற நுரை ஏற்படுகிறது. அல்லாஹ் இவற்றையே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் உவமையாகக் கூறுகின்றான். (பலன் தராத) நுரை ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றது; எது மக்களுக்குப் பலன் அளிக்கின்றதோ அது பூமியில் தங்கிவிடுகின்றது! இவ்வாறு அல்லாஹ் உவமானங்கள் மூலம் தன் செய்திகளை விளக்குகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வானத்திலிருந்து நீரை அவன் இறக்கினான், பின், ஓடைகள் தம் அளவுக்குத் தக்கவாறு (நீரைக் கொண்டு) ஓடின, பிறகு, வெள்ளம் (நீருக்கு மேல் மிதக்கும்) நுரையை மேலே சுமந்து சென்றது, (இது போன்றே) ஆபரணங்களையோ அல்லது (வேறு) சாமான்களையோ செய்வதற்காக நெருப்பில் அவர்கள் (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும், அது போன்ற நுரை உண்டாகின்றது, இவ்வாறே சத்தியத்தையும், அசத்தியத்தையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான், எனவே, (அழுக்கு) நுரையோ வீணாகிப் போய்விடுகிறது, (ஆனால்,) மனிதர்களுக்குப் பலன் அளிக்கக்கூடியதோ பூமியில் தங்கி விடுகிறது” இவ்வாறே நிராகரிப்போரை அழுக்கு நுரைக்கும், விசுவாசிகளைப் பூமியில் பயன்தரும் பொருட்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உவமைகளை விவரிக்கின்றான்.
Saheeh International
He sends down from the sky, rain, and valleys flow according to their capacity, and the torrent carries a rising foam. And from that [ore] which they heat in the fire, desiring adornments and utensils, is a foam like it. Thus Allah presents [the example of] truth and falsehood. As for the foam, it vanishes, [being] cast off; but as for that which benefits the people, it remains on the earth. Thus does Allah present examples.
لِلَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰی ؔؕ وَالَّذِیْنَ لَمْ یَسْتَجِیْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ سُوْٓءُ الْحِسَابِ ۙ۬ وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمِهَادُ ۟۠
لِلَّذِيْنَஎவர்களுக்குاسْتَجَابُوْاபதிலளித்தார்கள்لِرَبِّهِمُதங்கள் இறைவனுக்குالْحُسْنٰىؔ‌ؕமிக அழகிய நன்மைوَالَّذِيْنَஎவர்கள்لَمْ يَسْتَجِيْبُوْاஅவர்கள் பதிலளிக்கவில்லைلَهٗஅவனுக்குلَوْ اَنَّநிச்சயமாகஇருந்திருந்தால்لَهُمْஅவர்களுக்குمَّا فِى الْاَرْضِபூமியிலுள்ளவைجَمِيْعًاஅனைத்தும்وَّمِثْلَهٗஇன்னும் அதுபோன்றதுمَعَهٗஅதனுடன்لَافْتَدَوْا بِهٖؕஅதை பிணை கொடுத்திருப்பார்கள்اُولٰۤٮِٕكَஅவர்கள்لَهُمْஅவர்களுக்குسُوْۤءُகடினமானதுالْحِسَابِ ۙவிசாரணைوَمَاْوٰஇன்னும் தங்குமிடம்ٮهُمْஅவர்களுடையجَهَـنَّمُ‌ؕநரகம்தான்وَبِئْسَமிகக் கெட்டுவிட்டதுالْمِهَادُ‏தங்குமிடத்தால்
லில்லதீனஸ் தஜாBபூ லிரBப்Bபிஹிமுல் ஹுஸ்னா; வல்லதீன லம் யஸ்தஜீBபூ லஹூ லவ் அன்ன லஹும் மா Fபில் அர்ளி ஜமீ'அ(ன்)வ் வ மித்லஹூ ம'அஹூ லFப்ததவ் Bபிஹ்; உலா'இக லஹும் ஸூ'உல் ஹிஸாBப்; வ ம'வாஹும் ஜஹன்னமு வ Bபி'ஸல் மிஹாத்
முஹம்மது ஜான்
எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.  
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (அது) முற்றிலும் நன்மையாகும். எவர்கள் அவன் அழைப்புக்குப் பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு(க் கேடாகும். ஏனென்றால்) பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால் (மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய) வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவை அனைத்தையும் தங்களுக்குப் பிரதியாகக் கொடுத்து விடவே விரும்புவார்கள். (எனினும், அது ஆகாத காரியம்!) மேலும், அவர்களிடம் மிகக் கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்கப்படும். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது.
IFT
எவர்கள் தம் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு மிகச் சிறந்த நன்மைகள் இருக்கின்றன. எவர்கள் அந்த அழைப்பை ஏற்கவில்லையோ, அவர்கள் உலகத்திலுள்ள அனைத்துச் செல்வத்திற்கும் உரிமையாளர்களாய் இருந்தாலும், மேலும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கை அவர்கள் பெற்றிருந்தாலும் (அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக) அவை முழுவதையும் ஈடாகத் தந்துவிடத் தயாராகி விடுவார்கள்! அத்தகையவர்களிடம் கடுமையான முறையில் கணக்கு வாங்கப்படும். மேலும், அவர்கள் தங்குமிடம் நரகமாகும். அது மிகவும் கொடிய இருப்பிடமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் இரட்சகனுக்கு (அவனுடைய கட்டளைகளை ஏற்று) பதில் கூறினார்களே, அத்தகையவர்களுக்கு (மறுமையில் அழகான நற்கூலிகள் எனும்) நன்மையுண்டு; இன்னும், அவனுக்கு (அவன் கட்டளையை ஏற்று) பதில் கூறவில்லையே அத்தகையவர்கள் - நிச்சயமாக அவர்களுக்கு பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அது போன்றதும் இருந்தால் (அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வேதனையிலிருந்து விடுவித்துக் கொள்ள) அவற்றை ஈடாகக் கொடுத்து விடுவார்கள், (எனினும், அது ஆகாத காரியம்! அன்றியும்) அத்தகையோர்-அவர்களுக்கு (மிக்க) கொடிய (கேள்வி)கணக்குண்டு, இன்னும், அவர்கள் தங்குமிடம் நரகமாகும், தங்குமிடத்திலும்(அது) மிகக் கெட்டது.
Saheeh International
For those who have responded to their Lord is the best [reward], but those who did not respond to Him - if they had all that is in the earth entirely and the like of it with it, they would [attempt to] ransom themselves thereby. Those will have the worst account, and their refuge is Hell, and wretched is the resting place.
اَفَمَنْ یَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ اَعْمٰی ؕ اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟ۙ
اَفَمَنْஎவர்?يَّعْلَمُஅறிகின்றார்اَنَّمَاۤஎல்லாம்اُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குمِنْ رَّبِّكَஉம் இறைவனால்الْحَـقُّஉண்மைதான்كَمَنْபோன்று/எவர்هُوَஅவர்اَعْمٰىؕகுருடர்اِنَّمَا يَتَذَكَّرُநல்லுபதேசம் பெறுவதெல்லாம்اُولُوا الْاَلْبَابِۙ‏அறிவுடையவர்கள்தான்
அFபமய் யஃலமு அன்னமா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிகல் ஹக்கு கமன் ஹுவ அஃமா; இன்னமா யததக்கரு உலுல் அல்BபாBப்
முஹம்மது ஜான்
உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவனால் உமக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை (அது) உண்மைதான் என்று உறுதியாக நம்பக்கூடியவன் (பார்வையிழந்த) குருடனுக்கு ஒப்பானவனா? (ஆகமாட்டான்.) நிச்சயமாக (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவரெல்லாம் அறிவுடையவர்கள்தான்.
IFT
உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதம் உண்மையானதுதான் என்று அறிபவனும், இந்த உண்மையை அறியாமல் குருடனாக இருப்பவனும் சமம் ஆவார்களா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்றுக்கொள்பவராய் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகனால் உமக்கு இறக்கி வைக்கப்பட்டதெல்லாம் உண்மைதான் என்று உறுதியாக (நம்பி) அறிகின்றவர், யார் குருடராக இருக்கின்றாரோ அவர் போன்று ஆவாரா? (ஆகமாட்டார்) நிச்சயமாக (இதனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவரெல்லாம் அறிவுடையோர்தாம்.
Saheeh International
Then is he who knows that what has been revealed to you from your Lord is the truth like one who is blind? They will only be reminded who are people of understanding -
الَّذِیْنَ یُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا یَنْقُضُوْنَ الْمِیْثَاقَ ۟ۙ
الَّذِيْنَஎவர்கள்يُوْفُوْنَநிறைவேற்றுகிறார்கள்بِعَهْدِஒப்பந்தத்தைاللّٰهِஅல்லாஹ்வின்وَلَا يَنْقُضُوْنَஇன்னும் முறிக்க மாட்டார்கள்الْمِيْثَاقَۙ‏உடன்படிக்கையை
அல்லதீன யூFபூன Bபி'அஹ்தில் லாஹி வலா யன்கு ளூனல் மீதாக்
முஹம்மது ஜான்
அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள். இன்னும் (தாங்கள்) செய்த உடன்படிக்கையை முறித்துவிட மாட்டார்கள்.
IFT
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை நிறை வேற்றுவார்கள். உறுதிப்படுத்திய பிறகு அவ்வுடன்படிக்கைகளை முறிக்க மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியைப் பூரணமாக) நிறைவேற்றுவார்கள், (தாங்கள் செய்த உடன்படிக்கையை முறித்துவிடவுமாட்டார்கள்.
Saheeh International
Those who fulfill the covenant of Allah and do not break the contract,
وَالَّذِیْنَ یَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیَخْشَوْنَ رَبَّهُمْ وَیَخَافُوْنَ سُوْٓءَ الْحِسَابِ ۟ؕ
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்يَصِلُوْنَசேர்ப்பார்கள்مَاۤஎதைاَمَرَஏவினான்اللّٰهُஅல்லாஹ்بِهٖۤ اَنْ يُّوْصَلَஅதை/சேர்க்கப்பட வேண்டும்وَيَخْشَوْنَஇன்னும் அச்சம் கொள்வார்கள்رَبَّهُمْதங்கள் இறைவனைوَ يَخَافُوْنَஇன்னும் பயப்படுவார்கள்سُوْۤءَகடினமானالْحِسَابِؕ‏விசாரணையை
வல்லதீன யஸிலூன மா அமரல் லாஹு Bபிஹீ அய் யூஸல வ யக்-ஷவ்ன ரBப்Bபஹும் வ யகாFபூன ஸூ'அல் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி கட்டளையிட்டதைச் சேர்த்தும் வைப்பார்கள்; தங்கள் இறைவனுக்கு பயந்தும் நடப்பார்கள்; (மறுமையில்) கேட்கப்படும் கொடிய கேள்விகளைப் பற்றி (எந்நேரமும்) பயந்துகொண்டும் இருப்பார்கள்.
IFT
மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் எத்தகையோரென்றால், எதை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ அ(ந்த இரத்த சொந்தத்)தையும் சேர்த்துக் கொள்வார்கள், (அதைத் துண்டித்து விடும் விஷயத்தில்) தங்கள் இரட்சகனுக்குப் பயந்தும் நடப்பார்கள், கேள்வி கணக்கின் கடுமையையும் பயந்து கொண்டிருப்பார்கள்.
Saheeh International
And those who join that which Allah has ordered to be joined and fear their Lord and are afraid of the evil of [their] account,
وَالَّذِیْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً وَّیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ اُولٰٓىِٕكَ لَهُمْ عُقْبَی الدَّارِ ۟ۙ
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்صَبَرُواபொறுத்தனர்ابْتِغَآءَநாடிوَجْهِமுகத்தைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَاَقَامُواஇன்னும் நிலைநிறுத்தினர்الصَّلٰوةَதொழுகையைوَاَنْفَقُوْاஇன்னும் தர்மம் புரிந்தனர்مِمَّا رَزَقْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்துسِرًّاஇரகசியமாகوَّعَلَانِيَةًஇன்னும் வெளிப்படையாகوَّيَدْرَءُوْنَஇன்னும் தடுப்பார்கள்بِالْحَسَنَةِநன்மையைக் கொண்டுالسَّيِّئَةَதீமையைاُولٰۤٮِٕكَஇவர்கள்لَهُمْஇவர்களுக்குத்தான்عُقْبَىமுடிவுالدَّارِۙ‏மறுமை
வல்லதீன ஸBபருBப் திகா'அ வஜ்ஹி ரBப்Bபிஹிம் வ அகாமுஸ் ஸலாத வ அன்Fபகூ மிம்மா ரZஜக்னாஹும் ஸிர்ர(ன்)வ் வ 'அலானியத(ன்)வ் வ யத்ர'ஊன Bபில்ஹஸனதிஸ் ஸய்யி'அத உலா'இக லஹும் 'உக்Bபத் தார்
முஹம்மது ஜான்
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் முகத்தை நாடி (எத்தகைய சிரமத்தையும்) பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்து விடுவார்கள். இவர்களுக்கு (மறுமையில்) நல்ல முடிவு உண்டு. (அதாவது நிலையான சொர்க்கம் கூலியாகக் கிடைக்கும்.)
IFT
மேலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில், தம் இறைவனின் உவப்பை நாடி பொறுமையைக் கைக்கொள்கிறார்கள்; தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்; அவர்களுக்கு நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்கள். மேலும், தீமையை நன்மையைக் கொண்டு களைகின்றார்கள். மறுமையின் நல்ல முடிவு இவர்களுக்கே உரித்தானது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் இரட்சகனின் திருமுகத்தைக் கருதி (எத்தகைய இன்னலையும் பொறுமையுடன்) சகித்துக் கொள்வார்கள்; தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவும் செய்வார்கள், நன்மையைக் கொண்டே தீமையைத் தட்(டிவி)டுவார்கள், இத்தகைய அவர்களுக்கு (இம்மையில் செய்த நன்மைகளின் நற்கூலியாக) மறுமையில் நல்ல இருப்பிட(மாகிய சுவர்க்க)ம் உண்டு.
Saheeh International
And those who are patient, seeking the face [i.e., acceptance] of their Lord, and establish prayer and spend from what We have provided for them secretly and publicly and prevent evil with good - those will have the good consequence of [this] home -
جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ وَالْمَلٰٓىِٕكَةُ یَدْخُلُوْنَ عَلَیْهِمْ مِّنْ كُلِّ بَابٍ ۟ۚ
جَنّٰتُசொர்க்கங்கள்عَدْنٍஅத்ன்يَّدْخُلُوْنَهَاநுழைவார்கள்/அதில்وَஇன்னும்مَنْஇன்னும் எவர்صَلَحَநல்லவரானார்مِنْ اٰبَآٮِٕهِمْஇவர்களுடைய மூதாதைகளில்وَاَزْوَاجِهِمْஇன்னும் இவர்களுடைய மனைவிகளில்وَذُرِّيّٰتِهِمْ‌இன்னும் இவர்களுடைய சந்ததிகளில்وَالْمَلٰٓٮِٕكَةُஇன்னும் வானவர்கள்يَدْخُلُوْنَநுழைவார்கள்عَلَيْهِمْஇவர்களிடம்مِّنْஇருந்துكُلِّஒவ்வொருبَابٍ‌ۚ‏வாசல்
ஜன்னாது 'அதி(ன்)ய் யத்கு லூனஹா வ மன் ஸலஹ மின் ஆBபா'இஹிம் வ அZஜ்வாஜிஹிம் வ துர்ரிய்யாதிஹிம் வல்மலா'இ கது யத்குலூன 'அலய்ஹிம் மின் குல்லி BபாBப்
முஹம்மது ஜான்
நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிலையான சொர்க்கங்களில் இவர்களும், நன்னடத்தையுடைய இவர்களுடைய தந்தைகளும், இவர்களுடைய மனைவிகளும், இவர்களின் சந்ததிகளும் நுழைந்து விடுவார்கள். ஒவ்வொரு வாசலிலிருந்தும் வானவர்கள் இவர்களிடம் வந்து,
IFT
அதாவது, நிலையான சுவனங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. அவற்றில் அவர்கள் நுழைவார்கள். (அவர்களுடன்) அவர்களின் மூதாதையர், மனைவியர், மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் ஆகியோரில் எவர்கள் நன்னடத்தை கொண்டவர்களோ அவர்களும் நுழைவார்கள். வானவர்கள் எல்லாப் புறங்களிலிருந்தும் அவர்களை வரவேற்க வருவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவை) நிலையான சுவனங்களாகும், அவற்றில் அவர்களும் பிரவேசிப்பார்கள், இன்னும், அவர்களின் தந்தையர்களில், அவர்களின் மனைவியரில், அவர்களுடைய சந்ததிகளில் (அல்லாஹ்வுடைய கட்டளைகளை ஏற்று) யார் நல்லவர்களாக இருந்தார்களோ அவர்களும் (அதில் பிரவேசிப்பா்); மலக்குகளும் ஒவ்வொரு வாசலிலிருந்தும் அவர்களிடம் பிரவேசிப்பார்கள்.
Saheeh International
Gardens of perpetual residence; they will enter them with whoever were righteous among their forefathers, their spouses and their descendants. And the angels will enter upon them from every gate, [saying],
سَلٰمٌ عَلَیْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَی الدَّارِ ۟ؕ
سَلٰمٌஈடேற்றம் உண்டாகுகعَلَيْكُمْஉங்களுக்குبِمَا صَبَرْتُمْ‌நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால்فَنِعْمَமிக்க நல்லதாயிற்றுعُقْبَىஇறுதிالدَّارِؕ‏வீடு
ஸலாமுன் 'அலய்கும் Bபிமா ஸBபர்தும்; Fபனிஃம 'உக்Bபத் தார்
முஹம்மது ஜான்
“நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் (ஸலாம்) உண்டாகட்டும்! (உங்கள் இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று'' (என்று கூறுவார்கள்.)
IFT
மேலும், அவர்களிடம் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; (உலகில்) நீங்கள் பொறுமையுடன் வாழ்ந்து வந்த காரணத்தால் இன்று இதற்குத் தகுதி பெற்றிருக்கிறீர்கள்.” மறுமையின் இல்லம் எத்துணை அருமையானது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களைப்) பொறுத்துக் கொண்டதன் காரணமாக, உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக! (உங்களுடைய இந்தக்) கடைசி வீடு மிக்க நல்லதாயிற்று” (என்று அவர்களிடம் கூறுவார்கள்.)
Saheeh International
"Peace [i.e., security] be upon you for what you patiently endured. And excellent is the final home."
وَالَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ۙ اُولٰٓىِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்يَنْقُضُوْنَமுறிக்கிறார்கள்عَهْدَவாக்குறுதியைاللّٰهِஅல்லாஹ்வின்مِنْۢ بَعْدِபின்னர்مِيْثَاقِهٖஅது உறுதியானوَيَقْطَعُوْنَஇன்னும் துண்டிக்கிறார்கள்مَاۤஎதைاَمَرَஏவினான்اللّٰهُஅல்லாஹ்بِهٖۤஅதைاَنْ يُّوْصَلَசேர்க்கப்படும்وَيُفْسِدُوْنَஇன்னும் விஷமம் செய்வார்கள்فِى الْاَرْضِ‌ۙபூமியில்اُولٰۤٮِٕكَஇவர்கள்لَهُمُஇவர்களுக்குاللَّعْنَةُசாபம்وَلَهُمْஇன்னும் இவர்களுக்குسُوْۤءُமிகக் கெட்டதுالدَّارِ‏வீடு
வல்லதீன யன்குளூன 'அஹ்தல் லாஹி மிம் Bபஃதி மீதாகிஹீ வ யக்த'ஊன மா அமரல் லாஹு Bபிஹீ அய் யூஸல வ யுFப்ஸிதூன Fபில் அர்ளி உலா'இக லஹுமுல் லஃனது வ லஹும் ஸூ'உத் தார்
முஹம்மது ஜான்
எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான்; அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை அதை உறுதிப்படுத்திய பின்னரும் முறித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் அல்லாஹ் சேர்த்து வைக்கும்படி ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டு அலைகிறார்களோ அவர்களுக்கும் (இறைவனுடைய) சாபம்தான் கிடைக்கும். அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் (தயார் படுத்தப்பட்டு) இருக்கிறது.
IFT
ஆனால் அல்லாஹ்வின் உடன்படிக்கைகளை உறுதிப்படுத்திய பின்னர் அவற்றை முறித்து விடுகின்றவர்களும், மேலும் எந்த உறவுமுறைகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கின்றானோ அந்த உறவுமுறைகளைத் துண்டித்து விடுகின்றவர்களும், மேலும் உலகில் குழப்பம் செய்கின்றவர்களும் சாபத்திற்கு உரியவர்களாவர். மேலும், அவர்களுக்கு மறுமையில் கொடிய தங்குமிடமே கிடைக்கும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வின் வாக்குறுதியை – அதனை உறுதிப்படுத்திய பின்னர்-முறித்து விடுகிறார்களே (அவர்களும்), இன்னும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்ட (இரத்த சொந்தத்)தை துண்டித்து பூமியில் குழப்பமும் செய்கிறார்களே அத்தகையோர்-அவர்களுக்கு (அல்லாஹ்வுடைய) சாபந்தான் உண்டு, அவர்களுக்கு (நரகமான) மிகக் கெட்ட வீடும் உண்டு.
Saheeh International
But those who break the covenant of Allah after contracting it and sever that which Allah has ordered to be joined and spread corruption on earth - for them is the curse, and they will have the worst home.
اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ وَفَرِحُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ ۟۠
اَللّٰهُஅல்லாஹ்يَبْسُطُவிரிவுபடுத்துகிறான்الرِّزْقَவாழ்க்கை வசதியைلِمَنْஎவருக்குيَّشَآءُநாடுகின்றான்وَيَقْدِرُ‌ؕஇன்னும் சுருக்குகிறான்وَفَرِحُوْاஇன்னும் மகிழ்கின்றனர்بِالْحَيٰوةِவாழ்வைக் கொண்டுالدُّنْيَا ؕ وَمَاஉலகம்/இல்லைالْحَيٰوةُ الدُّنْيَاஉலக வாழ்க்கைفِى الْاٰخِرَةِமறுமையில்اِلَّاதவிரمَتَاعٌ‏ஒரு சுகம்
அல்லாஹு யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; வ Fபரிஹூ Bபில்ஹயாதித் துன்யா வ மல் ஹயாதுத் துன்ய Fபில் ஆகிரதி இல்லா மதா'
முஹம்மது ஜான்
அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.  
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் கொடுக்கிறான். எனினும், (நிராகரிப்பவர்கள்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே மகிழ்ச்சியடைகின்றனர். இவ்வுலக வாழ்க்கையோ மறுமையுடன் (ஒப்பிட்டுப் பார்த்தால்) அற்ப சுகமே தவிர வேறில்லை.
IFT
அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு தாராளமாக உணவு வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு அவன் அளவோடு வழங்குகின்றான். எனினும் இவர்கள் உலக வாழ்க்கையில் மூழ்கி, அதைக் கொண்டே பெரிதும் மனநிறைவு அடைகின்றார்கள். ஆனால் மறுமைக்கு எதிரில் இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமேயன்றி வேறில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏராளமாகக் கொடுக்கிறான், (தான் விரும்பியவர்களுக்கு) அளவோடும் கொடுக்கிறான், இன்னும், (நிராகரிப்போர்) இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர், இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு (ஒப்பிட்டுப்பார்த்தால் அதன்) முன்னே மிக அற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
Saheeh International
Allah extends provision for whom He wills and restricts [it]. And they rejoice in the worldly life, while the worldly life is not, compared to the Hereafter, except [brief] enjoyment.
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ قُلْ اِنَّ اللّٰهَ یُضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ اَنَابَ ۟ۖۚ
وَيَقُوْلُகூறுகிறார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لَوْلَاۤ اُنْزِلَஇறக்கப்பட வேண்டாமா?عَلَيْهِஇவர் மீதுاٰيَةٌஓர் அத்தாட்சிمِّنْ رَّبِّهٖؕஇவருடைய இறைவனிடமிருந்துقُلْகூறுவீராகاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُضِلُّவழிகெடுக்கிறான்مَنْ يَّشَآءُதான் நாடுகின்றவர்களைوَيَهْدِىْۤஇன்னும் நேர்வழி செலுத்துகிறான்اِلَيْهِதன் பக்கம்مَنْ اَنَابَ ۖ ۚ‏எவர்/திரும்பினார்
வ யகூலுல் லதீன கFபரூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி ஆயதும் மிர் ரBப்Bபிஹ்; குல் இன்னல் லாஹ யுளில்லு மய் யஷா'உ வ யஹ்தீ இலய்ஹி மன் அனாBப்
முஹம்மது ஜான்
“இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா” என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இந்நிராகரிப்பவர்கள், (நம் தூதராகிய உம்மைக் குறிப்பிட்டு) “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பியவாறு) ஏதேனுமோர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். அதற்கு நீர் கூறுவீராக: நிச்சயமாக அல்லாஹ் (தண்டிக்க) நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். முற்றிலும் அவனையே நோக்கி நிற்பவர்களைத்தான் அவன் நேரான வழியில் செலுத்துகிறான்.
IFT
(முஹம்மதின் தூதுத்துவத்தை) நிராகரித்தவர்கள், “இவருக்கு, இவருடைய இறைவனிட மிருந்து ஏதேனும் ஒரு சான்று ஏன் இறக்கியருளப்படவில்லை?” என்று கேட்கிறார்கள். நீர் சொல்லும்: “தான் நாடுபவர்களை அல்லாஹ் வழி கேட்டில் ஆழ்த்துகின்றான். மேலும், தன் பக்கம் திரும்புகிறவர்களுக்குத் தன்னை நோக்கி வருவதற்கான வழியை அவன் காட்டுகின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “அவர் மீது, அவருடைய இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கிவைக்கப்பட வேண்டாமா?” என்று (உம்மைப் பற்றி) நிராகரித்து விட்டார்களே அவர்கள் கூறுகின்றனர், (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அவன் (தண்டிக்க) நாடியவரைத் தவறான வழியில் விட்டு விடுகிறான், மேலும், (தவ்பாச் செய்து) அவன்பால் திரும்பி வருபவரை, நேர்வழியில் செலுத்துகிறான்.
Saheeh International
And those who disbelieved say, "Why has a sign not been sent down to him from his Lord?" Say, [O Muhammad], "Indeed, Allah leaves astray whom He wills and guides to Himself whoever turns back [to Him] -
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَتَطْمَىِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ؕ اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ ۟ؕ
اَلَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَஇன்னும்تَطْمَٮِٕنُّநிம்மதியடைகின்றனقُلُوْبُهُمْஉள்ளங்கள்/அவர்களுடையبِذِكْرِநினைவால்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்اَلَاஅறிந்துகொள்ளுங்கள்!بِذِكْرِநினைவைக் கொண்டேاللّٰهِஅல்லாஹ்வின்تَطْمَٮِٕنُّநிம்மதியடைகின்றனالْقُلُوْبُ ؕ‏உள்ளங்கள்
அல்லதீன ஆமனூ வ தத்ம'இன்னு குலூBபுஹும் Bபிதிக்ரில் லாஹ்; அலா Bபிதிக்ரில் லாஹி தத்ம'இன்னுல் குலூBப்
முஹம்மது ஜான்
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே!) அறிந்துகொள்வீராக.
IFT
இவர்கள்தாம் (இந்த நபியின் அழைப்பை) ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இத்தகுதிக்குரியோர்) எத்தகையோரென்றால், அவர்கள் (மெய்யாகவே) விசுவாசங்கொண்டார்கள், இன்னும், அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன, (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கெர்ளவீர்களாக!
Saheeh International
Those who have believed and whose hearts are assured by the remembrance of Allah. Unquestionably, by the remembrance of Allah hearts are assured."
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ طُوْبٰی لَهُمْ وَحُسْنُ مَاٰبٍ ۟
اَلَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டுوَعَمِلُواசெய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைطُوْبٰىநற்பாக்கியம்لَهُمْஅவர்களுக்குوَحُسْنُஅழகியمَاٰبٍ‏மீளுமிடம்
அல்லதீன ஆமனூ வ அ'அமிலுஸ் ஸாலிஹாதி தூBபா லஹும் வ ஹுஸ்னு ம ஆBப்
முஹம்மது ஜான்
எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதுடன், நற்காரியங்களையும் செய்து வருகிறார்களோ அவர்களுக்கே நற்பாக்கியமும், நல்ல இருப்பிடமும் உண்டு.
IFT
பிறகு, எவர்கள் (சத்திய அழைப்பை) ஏற்றுக்கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மகிழ்வும் நல்ல முடிவும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு நற்காரியங்களையும் செய்து வருகிறார்களே, அத்தகையோர், அவர்களுக்கு நல்வாழ்க்கையுண்டு, மேலும், நல்ல இருப்பிடமும் உண்டு.
Saheeh International
Those who have believed and done righteous deeds - a good state is theirs and a good return.
كَذٰلِكَ اَرْسَلْنٰكَ فِیْۤ اُمَّةٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهَاۤ اُمَمٌ لِّتَتْلُوَاۡ عَلَیْهِمُ الَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَهُمْ یَكْفُرُوْنَ بِالرَّحْمٰنِ ؕ قُلْ هُوَ رَبِّیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ مَتَابِ ۟
كَذٰلِكَஇவ்வாறேاَرْسَلْنٰكَஅனுப்பினோம்/உம்மைفِىْۤ اُمَّةٍஒரு சமுதாயத்திடம்قَدْ خَلَتْசென்றிருக்கின்றனمِنْ قَبْلِهَاۤஇவர்களுக்கு முன்னரும்اُمَمٌபல சமுதாயங்கள்لِّـتَتْلُوَا۟நீர் ஓதுவதற்காகعَلَيْهِمُஇவர்கள் முன்الَّذِىْۤஎதுاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குوَ هُمْஇவர்களோيَكْفُرُوْنَநிராகரிக்கின்றனர்بِالرَّحْمٰنِ‌ؕரஹ்மானைقُلْகூறுவீராகهُوَஅவன்தான்رَبِّىْஎன் இறைவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَۚஅவனைعَلَيْهِஅவன் மீதுتَوَكَّلْتُநம்பிக்கை வைத்தேன்وَاِلَيْهِஇன்னும் அவனிடமேمَتَابِ‏என் பாவ மீட்சி
கதாலிக அர்ஸல்னாக Fபீ உம்மதின் கத் கலத் மின் கBப்லிஹா உமமுல் லிதத்லுவ 'அலய்ஹிமுல் லதீ அவ்ஹய்னா இலய்க வ ஹும் யக்Fபுரூன Bபிர் ரஹ்மான்; குல் ஹுவ ரBப்Bபீ லா இலாஹ இல்லா ஹுவ 'அலய்ஹி தவக்கல்து வ இலய்ஹி மதாBப்
முஹம்மது ஜான்
(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது” என்று நீர் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இதற்கு முன்னர் நாம் தூதர்கள் பலரை அனுப்பிய) இவ்வாறே உம்மையும் நாம் (நம் தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தோம். இவர்களுக்கு முன்னரும் (இவர்களில்) பல வகுப்பினர் சென்றிருக்கின்றனர். (நீண்ட காலமாக அவர்களிடம் ஒரு தூதரும் வரவில்லை.) ஆகவே, நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவிப்பவற்றை இவர்களுக்கு நீர் ஓதிக் காண்பித்து வருவீராக. எனினும், இவர்களோ (உங்களை நிராகரிப்பது மட்டுமல்ல; தங்கள் மீது பல அருள்கள் புரிந்திருக்கும் அளவற்ற அருளாளனாகிய) ரஹ்மானையுமே நிராகரிக்கின்றனர். (நபியே! அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ‘‘அவன்தான் என் இறைவன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவருமில்லை. அவனையே நான் நம்புகிறேன்; அவனிடமே நான் மீளுவேன்.''
IFT
(நபியே!) இவ்வாறே உம்மை நாம் ஒரு சமூக மக்களுக்கு நபியாக அனுப்பியிருக்கின்றோம்; அவர்களுக்கு முன்னால் பல சமுதாயங்கள் வாழ்ந்து மறைந்து விட்டிருக்கின்றன. உம்மை எதற்காக அனுப்பியிருக்கிறோம் எனில், கருணை மிக்க இறைவனை அவர்கள் மறுப்பவர்களாய் இருக்கும் நிலையில், உமக்கு வஹி மூலம் நாம் அறிவித்த செய்தியை அவர்களுக்கு நீர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! (இவர்களிடம்) நீர் கூறுவீராக: “அவனே என் இறைவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. அவனையே முற்றிலும் நான் சார்ந்திருக்கின்றேன். அவனே என்னுடைய புகலிடம் ஆவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) தூதர்கள் பலரை அனுப்பிய) அவ்வாறே உம்மையும் நாம் (நம் தூதராக) ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம், இதற்கு முன்னரும் (இவர்களில்) பல சமுதாயங்கள திட்டமாக சென்றிருக்கின்றன, ஆகவே, நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பவற்றை அவர்களுக்கு நீர் ஓதிக் காண்பிப்பதற்காகவே (உம்மை அனுப்பினோம், ஆனால்) இவர்களோ (அளவற்ற அருளாளனாகிய) அர்ரஹ்மானையே நிராகரிக்கின்றனர், நீர் (அவர்களிடம்) கூறுவீராக! “அவன்தான் என்னுடைய இரட்சகன் அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) ஒருவனுமில்லை, (என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அவன் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன், அவன்பாலே (என்) மீட்சியும் இருக்கிறது.
Saheeh International
Thus have We sent you to a community before which [other] communities have passed on so you might recite to them that which We revealed to you, while they disbelieve in the Most Merciful. Say, "He is my Lord; there is no deity except Him. Upon Him I rely, and to Him is my return."
وَلَوْ اَنَّ قُرْاٰنًا سُیِّرَتْ بِهِ الْجِبَالُ اَوْ قُطِّعَتْ بِهِ الْاَرْضُ اَوْ كُلِّمَ بِهِ الْمَوْتٰی ؕ بَلْ لِّلّٰهِ الْاَمْرُ جَمِیْعًا ؕ اَفَلَمْ یَایْـَٔسِ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ لَّوْ یَشَآءُ اللّٰهُ لَهَدَی النَّاسَ جَمِیْعًا ؕ وَلَا یَزَالُ الَّذِیْنَ كَفَرُوْا تُصِیْبُهُمْ بِمَا صَنَعُوْا قَارِعَةٌ اَوْ تَحُلُّ قَرِیْبًا مِّنْ دَارِهِمْ حَتّٰی یَاْتِیَ وَعْدُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠
وَلَوْ اَنَّ قُرْاٰنًاவேதம்/இருந்தால்سُيِّرَتْநகர்த்தப்பட்டதுبِهِஅதைக் கொண்டுالْجِبَالُமலைகள்اَوْஅல்லதுقُطِّعَتْதுண்டு துண்டாக்கப்பட்டிருந்தால்بِهِஅதைக் கொண்டுالْاَرْضُபூமிاَوْஅல்லதுكُلِّمَபேச வைக்கப்பட்டிருந்தால்...بِهِஅதைக் கொண்டுالْمَوْتٰى‌ ؕமரணித்தவர்கள்بَلْமாறாகلِّلّٰهِஅல்லாஹ்வுக்குரியனவேالْاَمْرُஅதிகாரம்جَمِيْعًا ؕஅனைத்தும்اَفَلَمْ يَايْــٴَــسِஅறியவில்லையா?الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْۤاநம்பிக்கை கொண்டனர்اَنْ لَّوْ يَشَآءُநாடினால்اللّٰهُஅல்லாஹ்لَهَدَىநேர்வழி படுத்தியிருப்பான்النَّاسَமக்களைجَمِيْعًا ؕஅனைவரைوَلَا يَزَالُதொடர்ந்து இருக்கும்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்تُصِيْبُهُمْஅடையும்/அவர்களைبِمَاகாரணமாகصَنَعُوْاசெய்தனர்قَارِعَةٌஒரு திடுக்கம்اَوْஅல்லதுتَحُلُّநீர் இறங்குவீர்قَرِيْبًاஅருகாமையில்مِّنْ دَارِهِمْஅவர்களின் ஊருக்குحَتّٰىஇறுதியாகيَاْتِىَவரும்وَعْدُவாக்குறுதிاللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُخْلِفُமாற்ற மாட்டான்الْمِيْعَادَ‏வாக்குறுதியை
வ லவ் அன்ன குர்'ஆனன் ஸுய்யிரத் Bபிஹில் ஜிBபாலு அவ் குத்தி'அத் Bபிஹில் அர்ளு அவ் குல்லிம Bபிஹில் மவ்தா; Bபல் லில்லாஹில் அம்ரு ஜமீ'ஆ; அFபலம் யய்'அஸில் லதீன ஆமனூ அல் லவ் யஷா 'உல்லாஹு லஹதன் னாஸ ஜமீ'ஆ; வலா யZஜாலுல் லதீன கFபரூ துஸீBபுஹும் Bபிமா ஸன'ஊ காரி'அதுன் அவ் தஹுல்லு கரீBபம் மின் தாரிஹிம் ஹத்தா ய'திய வஃதுல் லாஹ்; இன்னல் லாஹ லா யுக்லிFபுல் மீ'ஆத்
முஹம்மது ஜான்
நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசும்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன; ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள் வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நாம் இவர்களுக்கு இதைத் தவிர வேறு) ஒரு குர்ஆனை அருள் செய்து, அதைக்கொண்டு மலைகள் நகரும்படியாகவோ அல்லது பூமியைத் துண்டு துண்டாகவோ அல்லது மரணித்தவர்களைப் பேசும் படியாகவோ செய்தபோதிலும், (நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்). எனினும், எல்லா காரியங்களும் அல்லாஹ்வுக்குரியனவே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மனிதர்கள் அனைவரையுமே நேரான வழியில் நடத்திவிடுவான் என்பதைப் பற்றி நம்பிக்கையாளர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையா? நிராகரிப்பவர்களை அவர்களுடைய (தீய) செயலின் காரணமாக (அவர்கள் திடுக்கிடக்கூடிய) சம்பவம் ஒன்று அவர்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும். அல்லது அவர்களின் வீட்டிற்குச் சமீபத்திலேயே (அத்தகைய சம்பவங்கள்) சம்பவித்துக் கொண்டே இருந்து, (‘‘முஸ்லீம்களாகிய நீங்கள் வெற்றி கொள்வீர்கள்' என்று உங்களுக்குக் கூறப்பட்ட) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்.
IFT
வேறொரு குர்ஆன் (இறக்கியருளப்பட்டு அதன்) மூலம் மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது பூமியை பிளக்கச் செய்தாலும், அல்லது இறந்தவர்களை எழுப்பிப் பேசச் செய்தாலும் என்ன நேர்ந்திடப்போகிறது? (இதுபோன்ற சான்றுகளைக் காண்பிப்பது சிரமமான செயலே அல்ல) உண்மையில் அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. பிறகு என்ன, இறை நம்பிக்கையாளர்கள் (நிராகரிப்பாளர்களின் கோரிக்கையின் பேரில் ஏதேனும் அற்புதம் வெளிப்பட வேண்டும் என்று இன்னும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா?) மேலும், அல்லாஹ் நாடினால் எல்லா மனிதர்களையும் நேர்வழியில் செலுத்தியிருப்பான் என்பதை (அறிந்து) அவர்கள் அந்த ஆசையைக் கைவிட்டிருக்க வேண்டாமா? எவர்கள் இறைவனை நிராகரிக்கும் போக்கை மேற்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்த தீயசெயல்களின் காரணத்தால் ஏதேனும் ஒரு துன்பம் வந்துகொண்டே இருக்கும்; அல்லது அத்துன்பம் அவர்கள் வீட்டின் அருகில் இறங்கிக்கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் வாக்குறுதி (மறுமை) வரும்வரை, இப்படலம் நீடிக்கும். திண்ணமாக, அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்வதே இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக குர் ஆன் - அதைக்கொண்டு மலைகள் நகர்த்தப் பட்டாலும், அல்லது அதைக்கொண்டு பூமியைத் துண்டு துண்டாக ஆக்கப்பட்டாலும், அல்லது அதைக்கொண்டு இறந்தவர்களைப் பேசும்படியாகச் செய்யப்பட்டாலும் (அவர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்) மாறாக காரியங்கள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும், ஆகவே, நிச்சயமாக அல்லாஹ் நாடியிருந்தால், மனிதர்கள் அனைவரையும் நேர் வழியில் நடத்தியிருப்பான் என்பது (பற்றி) விசுவாசிகளுக்கு தெளிவாகவில்லையா? நிராகரிப்போரை அவர்கள் செய்திட்ட (தீய)வற்றின் காரணமாக (அவர்கள் திடுக்கிடக் கூடிய) யாதேனுமொரு சம்பவம் அவர்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்கள் வீட்டிற்குச் சமீபமாகவேனும், (அதுபோன்று சம்பவங்கள்) அல்லாஹ்வின் வாக்குறுதி (அவர்களுக்கு மரணம்) வரும்வரை அது இறங்கி (சம்பவித்து)க் கொண்டேயிருக்கும், நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியில் மாறு செய்யமாட்டான்.
Saheeh International
And if there was any Qur’an [i.e., recitation] by which the mountains would be removed or the earth would be broken apart or the dead would be made to speak, [it would be this Qur’an], but to Allah belongs the affair entirely. Then have those who believed not accepted that had Allah willed, He would have guided the people, all of them? And those who disbelieve do not cease to be struck, for what they have done, by calamity - or it will descend near their home - until there comes the promise of Allah. Indeed, Allah does not fail in [His] promise.
وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَاَمْلَیْتُ لِلَّذِیْنَ كَفَرُوْا ثُمَّ اَخَذْتُهُمْ ۫ فَكَیْفَ كَانَ عِقَابِ ۟
وَلَـقَدِ اسْتُهْزِئَதிட்டமாக பரிகசிக்கப்பட்டனர்بِرُسُلٍதூதர்கள்مِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்فَاَمْلَيْتُநீட்டினேன்لِلَّذِيْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தனர்ثُمَّபிறகுاَخَذْتُهُمْ‌பிடித்தேன்/அவர்களைفَكَيْفَஎப்படி?كَانَஇருந்ததுعِقَابِ‏என் தண்டனை
வ லகதிஸ் துஹ்Zஜி'அ Bபி ருஸுலிம் மின் கBப்லிக Fப அம்லய்து லில்லதீன கFபரூ தும்ம அகத்துஹும் Fபகய்Fப கான 'இகாBப்
முஹம்மது ஜான்
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு முன்னர் (வந்த நம்) தூதர் பலரும் (இவ்வாறே) நிச்சயமாகப் பரிகசிக்கப் பட்டனர். (அவர்களை) நிராகரித்தவர்களையும் (உடனே தண்டிக்காது) நாம் தவணையளித்து விட்டு வைத்தோம். ஆயினும், பின்னர் நாம் அவர்களை (தண்டனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். என் தண்டனை எப்படி இருந்தது? (என்பதைச் சிந்திப்பீராக!)
IFT
உமக்கு முன்னரும் இறைத்தூதர்கள் பலர் நிச்சயமாகப் பரிகாசம் செய்யப்பட்டனர். ஆனால், நான் நிராகரிப்பாளர்களுக்குத் தவணை அளித்தேன். இறுதியில் அவர்களைப் பிடித்துக் கொண்டேன். பாருங்கள், என்னுடைய தண்டனை எவ்வளவு கடினமாக இருந்தது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உமக்கு முன்னர் தூதர்கள் (பலரும் இவ்வாறே) நிச்சயமாகப் பரிகசிக்கப்பட்டனர், நிராகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நான் தவணையளித்து (விட்டு) வைத்தேன், பின்னர், நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன், ஆகவே (நம்முடைய) தண்டனை எப்படி இருந்தது? (என்பதைச் சிந்திப்பீராக!)
Saheeh International
And already were [other] messengers ridiculed before you, and I extended the time of those who disbelieved; then I seized them, and how [terrible] was My penalty.
اَفَمَنْ هُوَ قَآىِٕمٌ عَلٰی كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ ؕ قُلْ سَمُّوْهُمْ ؕ اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا یَعْلَمُ فِی الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ؕ بَلْ زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِیْلِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟
اَفَمَنْயார்?هُوَஅவன்قَآٮِٕمٌநிர்வகிப்பவன்عَلٰىமீதுكُلِّஒவ்வொருنَفْسٍۢஆன்மாبِمَا كَسَبَتْ‌ۚஅவை செய்தவற்றுக்குوَجَعَلُوْاஅவர்கள் ஏற்படுத்தினர்لِلّٰهِஅல்லாஹ்வுக்குشُرَكَآءَ ؕஇணைகளைقُلْகூறுவீராகسَمُّوْபெயரிடுங்கள்هُمْ‌ؕஅவற்றுக்குاَمْ تُنَـبِّـئُــوْنَهٗஅல்லது/அறிவிக்கிறீர்களா?/அவனுக்குبِمَا لَا يَعْلَمُஅவன் அறியாததைفِى الْاَرْضِபூமியில்اَمْஅல்லதுبِظَاهِرٍ مِّنَ الْقَوْلِؕபொய்யான சொல்லைبَلْமாறாகزُيِّنَஅலங்கரிக்கப்பட்டதுلِلَّذِيْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தனர்مَكْرُசூழ்ச்சிهُمْஅவர்களுடையوَصُدُّوْاஇன்னும் தடுக்கப்பட்டனர்عَنِ السَّبِيْلِ‌ؕபாதையிலிருந்துوَمَنْஎவரைيُّضْلِلِவழிகெடுப்பான்اللّٰهُஅல்லாஹ்فَمَا لَهٗஅவருக்கு இல்லைمِنْ هَادٍ‏நேர்வழிகாட்டுபவர் எவரும்
அFபமன் ஹுவ கா'இமுன் 'அலா குல்லி னFப்ஸிம் Bபிமா கஸBபத்; வ ஜ'அலூ லில்லாஹி ஷுரகா'அ குல் ஸமூஹும்; அம் துனBப்Bபி'ஊன ஹூ Bபிமா லா யஃலமு Fபில் அர்ளி; அம் Bபிளாஹிரிம் மினல் கவ்ல்; Bபல் Zஜுய்யின லில்லதீன கFபரூ மக்ருஹும் வ ஸுத்தூ 'அனிஸ் ஸBபீல்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்;
முஹம்மது ஜான்
ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்: “அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?” என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன; நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வோர் ஆத்மாவும் செய்பவற்றை நன்கறிந்தவன் எதற்கும் சக்தியற்ற பொய் தெய்வங்களுக்கு சமமாவானா? அவர்களோ பொய்யான தெய்வங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர்! (இத்தகைய குற்றவாளிகளைத் தண்டிக்காது விட்டு விடுவானா? நபியே! நீர் அவர்களை நோக்கி, ‘‘நீங்கள் கூறுகின்ற தெய்வங்கள் மெய்யாகவே அவனுக்கு இணையானவையாக இருந்தால்,) அவற்றின் பெயர்களை கூறுங்கள் அல்லது பூமியில் (அவனுக்கு இணையான ஒன்றிருந்து அதை) அவன் அறியாது போய் அதைப் பற்றி அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது, உண்மையில்லாத) வெறும் வார்த்தைகள்தானா?'' என்று கேட்பீராக. (இவற்றில் ஒன்றுமில்லை!) மாறாக, இந்நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகளே அழகாகக் காண்பிக்கப்பட்டு விட்டன. (ஆதலால்தான் அவர்கள்) நேரான வழியிலிருந்தும் தடுக்கப்பட்டு விட்டனர். எவர்களை (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் ஒருவருமில்லை.
IFT
பிறகு என்ன! ஒவ்வொரு ஆன்மாவின் சம்பாதனையையும் எந்த இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றானோ அந்த இறைவனுக்கா இவர்கள் (இவ்வளவு துணிச்சலாக) இணை வைக்கின்றார்கள்? (நபியே!) இவர்களிடம் கூறும்: “(உண்மையில் அவை இறைவனால் உருவாக்கப்பட்ட இணைகளாக இருந்தால்) சற்று அவற்றின் பெயர்களைச் சொல்லுங்களேன்!” பூமியில் அல்லாஹ்வுக்குத் தெரியாத (புதிய செய்தி) ஒன்றை அவனுக்கு நீங்கள் சொல்லித் தருகிறீர்களா? அல்லது உதட்டளவில் ஏதேனும் உளறிக் கொண்டிருக்கிறீர்களா? உண்மை என்னவெனில், எவர்கள் சத்திய அழைப்பினை ஏற்க மறுத்தார்களோ அவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார்கள். இனி, அல்லாஹ் யாரை வழிகேட்டில் ஆழ்த்தி விடுகின்றானோ அவருக்கு வழிகாட்டுபவர் எவருமிலர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவன் ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் அது சம்பாதித்தவற்றுக்கு பொறுப்பேற்று நிற்கிறானோ அவனா?” (அவர்களின் விக்கிரகங்களைப் போன்றாவான்?) அவர்களோ அல்லாஹ்விற்கு இணையாளர்களை ஆக்குகிறார்கள், (“நீங்கள் வணங்கும் தெய்வங்கள் அவனுக்கு இணையானவையாயிருந்தால்,) அவற்றின் பெயரை நீங்கள் கூறுங்கள், அல்லது பூமியில் (அவனுக்கு இணையான ஒன்று இருந்து அதனை) அவன் அறியாது போய் அதைப்பற்றி அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அல்லது, (நீங்கள் கூறுவது உண்மையல்லாத) வெளிப்படையான (வெறும்) வார்த்தைதாமா?” என்று கேட்பீராக! (இவைகளில் ஒன்றும்) இல்லை” நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சி அழகாகக் காண்பிக்கப்பட்டுவிட்டது, (ஆகவே, நேரான) வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர், இன்னும், எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அவரை நேர் வழியில் செலுத்தக்கூடியவர் ஒருவருமில்லை.
Saheeh International
Then is He who is a maintainer of every soul, [knowing] what it has earned, [like any other]? But to Allah they have attributed partners. Say, "Name them. Or do you inform Him of that which He knows not upon the earth or of what is apparent [i.e., alleged] of speech?" Rather, their [own] plan has been made attractive to those who disbelieve, and they have been averted from the way. And whomever Allah sends astray - there will be for him no guide.
لَهُمْ عَذَابٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَقُّ ۚ وَمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ ۟
لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைفِى الْحَيٰوةِவாழ்வில்الدُّنْيَا‌உலகம்وَلَعَذَابُவேதனைதான்الْاٰخِرَةِமறுமையின்اَشَقُّ‌ ۚமிக சிரமமானதுوَمَاஇல்லைلَهُمْஅவர்களைمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்مِنْ وَّاقٍ‏பாதுகாப்பவர் எவரும்
லஹும் 'அதாBபுன் Fபில் ஹயாதித் துன்யா வ ல'அதாBபுல் ஆகிரதி அஷக், வமா லஹும் மினல் லாஹி மின்-வாக்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு. (மறுமையிலும் வேதனை உண்டு. எனினும், அவர்களுக்கு) மறுமையில் கிடைக்கும் வேதனையோ மிகக் கொடியது. அல்லாஹ்விடத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவரும் இல்லை.
IFT
இத்தகையோருக்கு உலக வாழ்க்கையிலேயே வேதனையுண்டு. மேலும் மறுமையின் வேதனை இதைவிடக் கடுமையானதாகும். அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவருமிலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் வேதனையுண்டு, (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகக் கடுமையானது, அல்லாஹ்விடத்திலிருந்து அவர்களைக் காப்போர் எவருமில்லை.
Saheeh International
For them will be punishment in the life of [this] world, and the punishment of the Hereafter is more severe. And they will not have from Allah any protector.
مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ اُكُلُهَا دَآىِٕمٌ وَّظِلُّهَا ؕ تِلْكَ عُقْبَی الَّذِیْنَ اتَّقَوْا ۖۗ وَّعُقْبَی الْكٰفِرِیْنَ النَّارُ ۟
مَثَلُதன்மைالْجَـنَّةِசொர்க்கத்தின்الَّتِىْஎதுوُعِدَவாக்களிக்கப்பட்டார்(கள்)الْمُتَّقُوْنَ‌ ؕஅஞ்சியவர்கள்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ‌ ؕநதிகள்اُكُلُهَاஅதன் உணவுகள்دَآٮِٕمٌநிலையானவைوَّظِلُّهَا‌ ؕஇன்னும் அதன் நிழல்تِلْكَஇதுதான்عُقْبَىமுடிவுالَّذِيْنَஎவர்கள்اتَّقَوْا‌அஞ்சினர்ۖ  وَّعُقْبَىமுடிவோالْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களின்النَّارُ‏நரகம்தான்
மதலுல் ஜன்னதில் லதீ வு'இதல் முத்தகூன தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு உகுலுஹா தா'இமு(ன்)வ் வ ளில்லுஹா; தில்க உக்Bபல் லதீனத் தகவ் வ 'உக்Bபல் கFபிரீனன் னார்
முஹம்மது ஜான்
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கொண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை; இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையோ அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அங்கு (அவர்களுக்குக்) கிடைக்கும் உணவுகளும். அதன் நிழலும் என்றும் நிலையானவையாகும். இதுதான் இறை அச்சமுடையவர்களின் முடிவாகும். நிராகரிப்பவர்களின் முடிவோ நரகம்தான்!
IFT
இறையச்சம் உடையோருக்காக வாக்களிக்கப்பட்டுள்ள சுவனத்தின் தன்மை என்னவெனில், அதன் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதன் கனிகளும் நிலையானவை. அதன் நிழலும் நிலையானது. இறையச்சமுள்ளோருக்குக் கிடைக்கும் நல்ல முடிவாகும் இது. ஆனால், சத்தியத்தை நிராகரிப்போரின் முடிவோ நரக நெருப்பே ஆகும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியின் தன்மையாகிறது, நீரருவிகள் அதன் கீழ் ஓடிக்கொண்டிருக்கும், (கனி வகைகளால்) அதன் உணவும் நிலையானதாகும், அதன் நிழலும் (அவ்வாறே நிலையானதாகும்) இது பயபக்தியுடையோரின் முடிவாகும், இன்னும் நிராகரிப்போரின் முடிவு நரகமாகும்
Saheeh International
The example [i.e., description] of Paradise, which the righteous have been promised, is [that] beneath it rivers flow. Its fruit is lasting, and its shade. That is the consequence for the righteous, and the consequence for the disbelievers is the Fire.
وَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَفْرَحُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمِنَ الْاَحْزَابِ مَنْ یُّنْكِرُ بَعْضَهٗ ؕ قُلْ اِنَّمَاۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ وَلَاۤ اُشْرِكَ بِهٖ ؕ اِلَیْهِ اَدْعُوْا وَاِلَیْهِ مَاٰبِ ۟
وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُஎவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்குالْكِتٰبَவேதத்தைيَفْرَحُوْنَமகிழ்வார்கள்بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ‌இறக்கப்பட்டதைக் கொண்டு/உமக்குوَمِنَ الْاَحْزَابِஇன்னும் கூட்டங்களில்مَنْ يُّـنْكِرُஎவர் மறுப்பார்بَعْضَهٗ‌ؕஅதில் சிலவற்றைقُلْகூறுவீராகاِنَّمَاۤ اُمِرْتُநான் கட்டளையிடப்பட்டதெல்லாம்اَنْ اَعْبُدَநான் வணங்குவதற்குاللّٰهَஅல்லாஹ்வைوَلَاۤ اُشْرِكَ بِهٖؕநான் இணைவைக்காமல் இருக்க/அவனுக்குاِلَيْهِஅவன் பக்கமேاَدْعُوْاஅழைக்கிறேன்وَاِلَيْهِஇன்னும் அவன் பக்கமேمَاٰبِ‏என் திரும்புதல்
வல்லதீன ஆதய்னா ஹுமுல் கிதாBப யFப்ரஹூன Bபிமா உன்Zஜில இலய்க வ மினல் அஹ்ZஜாBபி மய் யுன்கிரு Bபஃளஹ்; குல் இன்னமா உமிர்து அன் அஃBபுதல் லாஹ வ லா உஷ்ரிக Bபிஹ்; இலய்ஹி அத்'ஊ வ இலய்ஹி மாBப்
முஹம்மது ஜான்
எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் இருக்கிறார்கள். (அவர்களை நோக்கி:)நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! முன்னர்) நாம் எவர்களுக்கு வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். எனினும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை நிராகரிப்பவர்களும் அவர்களில் உண்டு. ஆகவே, நீர் (அவர்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது, அவன் ஒருவனையே நான் வணங்கும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. (உங்களை) நான் அவனிடமே அழைக்கிறேன்; நானும் அவனிடமே திரும்பச் செல்வேன்'' என்று கூறுவீராக.
IFT
(நபியே!) முன்னர் எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள், உமக்கு இறக்கியருளப்பட்ட இவ்வேதத்தின் மூலம் மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால், பல்வேறு கூட்டங்களைச் சார்ந்த சிலர் இவ்வேதத்தில் சிலவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. (நபியே!) தெளிவாகக் கூறிவிடும்: “அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டுமென்றும், அவனுக்கு யாரையும் இணைவைக்கக்கூடாதென்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனவே, நான் அவன் பக்கமே அழைக்கின்றேன். மேலும், அவன் பக்கமே நான் திரும்ப வேண்டியுள்ளது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் எவர்களுக்கு வேதம் கொடுத்திருந்தோமோ அத்தகையவர்கள் உம்பால் இறக்கப்பட்டதைப்பற்றி மகிழ்ச்சியடைவார்கள், (அதில்) சிலவற்றை மறுப்பவர்களும் அக்கூட்டத்தார்களில் இருக்கிறார்கள், ஆகவே நீர், நான் ஏவப்பட்டிருப்பதெல்லாம் அல்லாஹ்வையே நான் வணங்க வேண்டும், அவனுக்கு யாதொன்றையும் நான் இணையாக்கக் கூடாது” என்றுதான், அவன் பக்கமே (உங்களை) நான் அழைக்கின்றேன், இன்னும் அவன் பக்கமே (என்) மீட்சியும் இருக்கின்றது” என்று அவர்களுக்குக்) கூறுவீராக!
Saheeh International
And [the believers among] those to whom We have given the [previous] Scripture rejoice at what has been revealed to you, [O Muhammad], but among the [opposing] factions are those who deny part of it [i.e., the Qur’an]. Say, "I have only been commanded to worship Allah and not associate [anything] with Him. To Him I invite, and to Him is my return."
وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ حُكْمًا عَرَبِیًّا ؕ وَلَىِٕنِ اتَّبَعْتَ اَهْوَآءَهُمْ بَعْدَ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا وَاقٍ ۟۠
وَكَذٰلِكَஇவ்வாறுதான்اَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்حُكْمًاசட்டமாகعَرَبِيًّا‌ ؕஅரபி மொழியில்وَلَٮِٕنِ اتَّبَعْتَநீங்கள் பின்பற்றினால்اَهْوَآءَவிருப்பங்களைهُمْஅவர்களுடையبَعْدَபின்னர்مَا جَآءَكَஉமக்கு வந்ததுمِنَ الْعِلْمِۙகல்விمَاஇல்லைلَـكَஉமக்குمِنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْ وَّلِىٍّஉதவியாளர் எவரும்وَّلَا وَاقٍ‏பாதுகாவலர் இல்லை
வ கதாலிக அன்Zஜல்னாஹு ஹுக்மன் 'அரBபிய்யா; வ ல'இனித் தBபஃத அஹ்வா 'அஹும் Bபஃத மா ஜா'அக மினல் 'இல்மி மா லக மினல் லாஹி மி(ன்)வ் வலியி(ன்)வ் வலா வாக்
முஹம்மது ஜான்
(நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார்.  
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர் நன்கறிந்து கொள்ளும் பொருட்டு) நாம் இதன் சட்ட திட்டங்களை அரபி (மொழி)யில் இவ்வாறு (விவரித்து) இறக்கிவைத்தோம். ஆகவே, (வஹ்யியின் மூலம்) உமக்கு (திருகுர்ஆனின்) ஞானம் கிடைத்ததற்குப் பின்னரும் நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடத்தில் (உம்மை) பாதுகாத்துக் கொள்ளவோ, உமக்கு உதவி செய்யவோ ஒருவருமிரார்!
IFT
இதே வழிகாட்டலுடன் அரபி மொழியிலான இக்கட்டளையை குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம். இந்த ஞானம் உம்மிடம் வந்த பின்னரும் அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் இணங்கிச் சென்றால், அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு உதவி புரிபவர் யாரும் இரார். மேலும், அவனுடைய பிடியிலிருந்து உம்மைக் காப்பாற்றுபவரும் எவரும் இரார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், இவ்வாறே அரபி மொழியில் சட்டதிட்டங்களைக் கொண்டதாக (குர் ஆனாகிய) இதனை நாம் இறக்கி வைத்திருக்கிறோம், ஆகவே, உமக்கு (குர் ஆனின்) ஞானம் வந்து விட்டதற்குப் பின்னரும், நீர் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவி செய்பவரும் காப்பவரும் (எவரும்) இல்லை.
Saheeh International
And thus We have revealed it as an Arabic legislation. And if you should follow their inclinations after what has come to you of knowledge, you would not have against Allah any ally or any protector.
وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ اَزْوَاجًا وَّذُرِّیَّةً ؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ یَّاْتِیَ بِاٰیَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ لِكُلِّ اَجَلٍ كِتَابٌ ۟
وَلَقَدْ اَرْسَلْنَاஅனுப்பி இருக்கிறோம்رُسُلًاதூதர்களைمِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்وَ جَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்لَهُمْஅவர்களுக்குاَزْوَاجًاமனைவிகளைوَّذُرِّيَّةً ؕஇன்னும் சந்ததியை(யும்)وَمَا كَانَமுடியாதுلِرَسُوْلٍ(எந்த) தூதருக்குاَنْ يَّاْتِىَஅவர் வருவதுبِاٰيَةٍஅத்தாட்சியைக் கொண்டுاِلَّاதவிரبِاِذْنِஅனுமதி கொண்டேاللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்لِكُلِّஒவ்வொருاَجَلٍதவணைக்கும்كِتَابٌ‏ஒரு விதி
வ லகத் அர்ஸல்னா ருஸுலம் மின் கBப்லிக வ ஜ'அல்னா லஹும் அZஜ்வாஜ(ன்)வ் வ துர்ரிய்யஹ்; வமா கான லிரஸூலின் அய் ய'திய Bபி ஆயதின் இல்லா Bபி இத்னில் லாஹ்; லிகுல்லி அஜலின் கிதாBப்
முஹம்மது ஜான்
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை; ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் தூதர்கள் பலரை அனுப்பி இருக்கிறோம். (உம்மைப் போலவே) அவர்களுக்கும் மனைவிகளையும், சந்ததிகளையும் கொடுத்திருந்தோம். (ஆகவே, உமக்கு மனைவி, மக்கள் இருப்பதைப் பற்றி இவர்கள் குறை கூறமுடியாது.) அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒரு தூதர் எத்தகைய அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கில்லை. (அவன் முடிவு செய்திருக்கும்) ஒவ்வொன்றுக்கும் தவணையும் (குறிப்பிட்டு) எழுதப்பட்டுள்ளது. (அது அத்தவணைக்கு முந்தியும் வராது; பிந்தியும் வராது.)
IFT
உமக்கு முன்பும் தூதர்கள் பலரை நாம் அனுப்பியுள்ளோம். மேலும், மனைவிமக்களையுடையவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருக்கின்றோம். மேலும், அல்லாஹ்வின் அனுமதியின்றி (சுயமாக) ஒரு சான்றைக் கொண்டுவரும் ஆற்றல் எந்தத் தூதருக்கும் இருக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு வேதம் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் தூதர்களை அனுப்பியிருக்கிறோம்; அவர்களுக்கு மனைவியரையும் சந்ததியினரையும் நாம் ஆக்கியிருந்தோம்; அன்றியும், அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தத் தூதரும் எத்தகைய அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கில்லை, ஒவ்வொரு தவணைக்கும் (பதிவு) ஏடு உள்ளது.
Saheeh International
And We have already sent messengers before you and assigned to them wives and descendants. And it was not for a messenger to come with a sign except by permission of Allah. For every term is a decree.
یَمْحُوا اللّٰهُ مَا یَشَآءُ وَیُثْبِتُ ۖۚ وَعِنْدَهٗۤ اُمُّ الْكِتٰبِ ۟
يَمْحُوْاஅழிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَا يَشَآءُஅவன் நாடியதைوَيُثْبِتُ ۖ ۚதரிபடுத்துகிறான்وَعِنْدَهٗۤஇன்னும் அவனிடம்தான்اُمُّதாய்الْكِتٰبِ‏புத்தகம்
யம்ஹுல் லாஹு மா யஷா'உ வ யுத்Bபிது வ 'இன்தஹூ உம்முல் கிதாBப்
முஹம்மது ஜான்
(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும், அதில்) அவன் நாடியதை அழித்து விடுவான்; (அவன் நாடியதை) உறுதியாக்கிவிடுவான். (அனைத்திற்கும்) அசல் பதிவு அவனிடத்தில் இருக்கிறது. (அதன்படி எல்லாக் காரியங்களும் தவறாது நடைபெறும்.)
IFT
தான் நாடுவதை அல்லாஹ் அழித்துவிடுகின்றான்; தான் நாடுவதை நிலைப்படுத்துகின்றான். உம்முல் கிதாப்* அவனிடமே உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அப்பதிவேட்டில்) அல்லாஹ் அவன் நாடியதை அழித்துவிடுவான், (அவன் நாடியதை) நிலைப்படுத்தியும் விடுவான், இன்னும், (அனைத்திற்கும்) மூலப்பதிவேடு அவனிடத்தில் உள்ளது.
Saheeh International
Allah eliminates what He wills or confirms, and with Him is the Mother of the Book.
وَاِنْ مَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ وَعَلَیْنَا الْحِسَابُ ۟
وَاِنْ مَّا نُرِيَـنَّكَநிச்சயமாக நாம் காண்பித்தால்/உமக்குبَعْضَசிலதைالَّذِىْஎதுنَعِدُநாம் வாக்களிக்கிறோம்هُمْஅவர்களுக்குاَوْ نَـتَوَفَّيَنَّكَஅல்லது/கைப்பற்றிக் கொள்வோம்/உம்மைفَاِنَّمَاஆகவே, எல்லாம்عَلَيْكَஉம்மீதுالْبَلٰغُஎடுத்துரைப்பதுதான்وَعَلَيْنَاநம்மீதுதான்الْحِسَابُ‏விசாரணை
வ இம் மா னுர்ரியன்னக Bபஃளல் லதீ ன'இதுஹும் அவ் னத வFப்Fபயன்னக Fப இன்னமா 'அலய்கல் Bபலாகு வ 'அலய்னல் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ் நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்); உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களுக்கு (வருமென) நாம் வாக்களித்த (தண்டனைகளில்) சிலவற்றை (நீர் உயிருடன் இருக்கும்போதே) உமது கண்ணால் காணும்படி செய்தாலும் அல்லது (அது வருவதற்கு முன்னர்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்!) உமது கடமையெல்லாம் தூதை சேர்ப்பிப்பதுதான்! (அவர்களிடம் அதன்) கணக்கை வாங்குவது நம் கடமையாகும்.
IFT
(நபியே!) அவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்ற தீய விளைவுகளில் ஒரு பகுதியை (நீர் உயிர் வாழும்போதே) நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது (அதற்கு முன்பே) உம்மை நாம் எடுத்துக் கொண்டாலும் (எந்நிலையிலும்) தூதை எடுத்துரைப்பது மட்டுமே உமது பணியாகும். கணக்கு வாங்குவது நமது பணியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்த (வேதனைகளில்) சிவவற்றை (நீர் உயிரோடிருக்கும்போதே உம்முடைய கண்ணால் நீர் காணும்படி) நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது (அது வருமுன்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (நீர் கவலைப்படாதீர்!,) உம்முடைய கடமையெல்லாம் தூதை எத்தி வைப்பதுதான், இன்னும், (அவர்களுடைய) கணக்கு நம் மீதாகும்.
Saheeh International
And whether We show you part of what We promise them or take you in death, upon you is only the [duty of] notification, and upon Us is the account.
اَوَلَمْ یَرَوْا اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ وَاللّٰهُ یَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖ ؕ وَهُوَ سَرِیْعُ الْحِسَابِ ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் காணவில்லையா?اَنَّاநிச்சயமாக நாம்نَاْتِىவருகிறோம்الْاَرْضَபூமியைنَـنْقُصُهَاகுறைக்கிறோம்/அதைمِنْஇருந்துاَطْرَافِهَا ؕஅதன் ஓரங்கள்وَاللّٰهُஅல்லாஹ்يَحْكُمُதீர்ப்பளிக்கிறான்لَاஅறவே இல்லைمُعَقِّبَதடுப்பவர்لِحُكْمِهٖ‌ؕஅவனுடைய தீர்ப்பைوَهُوَஅவன்سَرِيْعُமிகத் தீவிரமானவன்الْحِسَابِ‏விசாரிப்பதில்
அவலம் யரவ் அன்னா ன'தில் அர்ள னன்குஸுஹா மின் அத்ராFபிஹா; வல்லாஹு யஹ்குமு லா மு'அக்கிBப லிஹுக்மிஹ்; வ ஹுவ ஸரீ'உல் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்.
IFT
திண்ணமாக, நாம் இந்த பூமியில் வந்துகொண்டிருக்கிறோம் என்பதையும், அதன் சுற்றளவை நாற்புறங்களிலிருந்தும் குறைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் இவர்கள் கவனிக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றான். அவனுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கூடியவர் எவருமிலர். மேலும், அவன் கணக்கு வாங்குவதில் மிக விரைவானவன் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? மேலும் அல்லாஹ் தீர்ப்பளிப்பான், அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவர் எவருமில்லை, இன்னும், அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்.
Saheeh International
Have they not seen that We set upon the land, reducing it from its borders? And Allah decides; there is no adjuster of His decision. And He is swift in account.
وَقَدْ مَكَرَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِیْعًا ؕ یَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ؕ وَسَیَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَی الدَّارِ ۟
وَقَدْதிட்டமாகمَكَرَசூழ்ச்சி செய்தனர்الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னிருந்தவர்கள்فَلِلّٰهِஅல்லாஹ்விற்கேالْمَكْرُசூழ்ச்சிجَمِيْعًا‌ؕஅனைத்தும்يَعْلَمُஅறிவான்مَاஎதைتَكْسِبُசெய்கிறதுكُلُّஒவ்வொருنَفْسٍؕஆன்மாوَسَيَـعْلَمُஅறிவார்(கள்)الْـكُفّٰرُநிராகரிப்பவர்கள்لِمَنْஎவருக்குعُقْبَىமுடிவுالدَّارِ‏மறுமை
வ கத் மகரல் லதீன மின் கBப்லிஹிம் Fபலில்லாஹில் மக்ரு ஜமீ'ஆ; யஃலமு மா தக்ஸிBபு குல்லு னFப்ஸ்; வ ஸ யஃலமுல் குFப்Fபாரு லிமன் 'உக்Bபத் தார்
முஹம்மது ஜான்
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன; ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வோர் ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகிறான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதி சீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
IFT
இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் (பெரும் பெரும்) சூழ்ச்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் திட்டவட்டமான சூழ்ச்சி முழுவதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. ஒவ்வொரு மனிதனும் என்னென்ன சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை அவன் அறிவான். மேலும், இறுதி முடிவு யாருக்கு நல்லவிதமாக அமையும் என்பதை இந்நிராகரிப்பாளர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், திட்டமாகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர், ஆகவே, சூழ்ச்சிகள் (அதனுடைய தண்டனைகள்) யாவும் அல்லாஹ்விடமே (அவன் கைவசமே) உள்ளன, (ஏனென்றால்) ஒவ்வோர் ஆத்மாவும் சம்பாதிக்கின்றவற்றை அவன் (திட்டமாக) நன்கறிவான், ஆகவே, இறுதி வீடு யாருக்கு (நல்லதாக இருக்கும்) என்பதை நிராகரிப்போர் அறிந்து கொள்வார்கள்.
Saheeh International
And those before them had plotted, but to Allah belongs the plan entirely. He knows what every soul earns, and the disbelievers will know for whom is the final home.
وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا ؕ قُلْ كَفٰی بِاللّٰهِ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ ۟۠
وَيَقُوْلُகூறுகிறார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لَسْتَநீர் இல்லைمُرْسَلًا‌ ؕதூதராகقُلْகூறுவீராகكَفٰىபோதுமாகி விட்டான்بِاللّٰهِஅல்லாஹ்شَهِيْدًۢاசாட்சியால்بَيْنِىْஎனக்கு மத்தியில்وَبَيْنَكُمْۙஇன்னும் உங்களுக்கு மத்தியில்وَمَنْஇன்னும் எவர்عِنْدَهٗஅவரிடம்عِلْمُஞானம்الْكِتٰبِ‏வேதத்தின்
வ யகூலுல் லதீன கFபரூ லஸ்த முர்ஸலா; குல் கFபா Bபில்லாஹி ஷஹீதம் Bபய்னீ வ Bபய்னகும் வ மன் 'இன்தஹூ 'இல்முல் கிதாBப்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்” என்று நீர் கூறிவிடுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘‘நீர் (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர் அல்ல'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அதற்கு (அவர்களை நோக்கி, ‘‘இதைப் பற்றி) எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வும், வேத ஞானம் உடையவர்களும் போதுமான சாட்சிகளாவர்'' என்று கூறுவீராக.
IFT
“நீர் இறைவனால் அனுப்பப்பட்டவர் அல்லர்” என்று இந்த நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர். நீர் கூறும்: “எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வின் சாட்சியம் போதுமானது; மேலும், அவனுடைய வேதத்தின் அறிவைப் பெற்றிருப்பவர்களின் சாட்சியம் போதுமானது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நீர் (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் அல்ல” என்று நிராகரித்துக் கொண்டிருப்போர் கூறுகின்றனர், (“இதைப்பற்றி) எனக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ் மற்றும் வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்கள் சாட்சியால் போதுமானவர்கள்” என்று கூறுவீராக!
Saheeh International
And those who have disbelieved say, "You are not a messenger." Say, [O Muhammad], "Sufficient is Allah as Witness between me and you, and [the witness of] whoever has knowledge of the Scripture."