اَتٰۤىவந்தது (வந்தே தீரும்)اَمْرُகட்டளைاللّٰهِஅல்லாஹ்வுடையفَلَا تَسْتَعْجِلُوْهُ ؕஅவசரமாக தேடாதீர்கள்/அதைسُبْحٰنَهٗஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَتَعٰلٰىஇன்னும் முற்றிலும் உயர்ந்தவன்عَمَّا يُشْرِكُوْنَஅவர்கள் இணைவைப்பதை விட்டு
அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது; அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப்பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட மிக்க மேலானவன்.
IFT
வந்துவிட்டது, அல்லாஹ்வின் கட்டளை! எனவே, அதற்காக நீங்கள் அவசரப்படாதீர்கள்! இவர்களின் இணைவைப்புச் செயல்களை விட்டு அவன் தூய்மையானவனும், உயர்ந்தவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது, ஆகவே, அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள், அவன் மிகப் பரிசுத்தமானவன், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் (மிக்க) உயர்வானவன்.
Saheeh International
The command of Allah is coming, so be not impatient for it. Exalted is He and high above what they associate with Him.
யுனZஜ்Zஜிலுல் மலா 'இகத Bபிர்ரூஹி மின் அம்ரிஹீ 'அலா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ அன் அன்திரூ அன்னஹூ லா இலாஹ இல்லா அன Fபத்தகூன்
முஹம்மது ஜான்
அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை; ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் வானவர்களுக்கு வஹ்யி கொடுத்து, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் அனுப்பி வைத்து ‘‘வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்'' என்று எச்சரிக்கை செய்யுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
IFT
அவன் இந்த ரூஹை* வானவர்களின் மூலம், தனது கட்டளையினால் தான் விரும்பும் அடியார்கள் மீது இறக்கி வைக்கின்றான்; (இந்த ஏவுரையுடன் மக்களை) எச்சரிக்கை செய்யுங்கள்: ‘நிச்சயமாக, வணக்கத்திற்குரிய இறைவன் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே, எனக்கே அஞ்சுங்கள்!’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அது (காரியம் என்னவென்றால்) “வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர (வேறு எவரும்) இல்லை, (ஆகவே) என்னையே பயந்து கொள்ளுங்கள் என நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்” என்று தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் கட்டளையினால் வஹீயைக் கொண்டு அமரர்களை அவன் இறக்கி வைக்கிறான்.
Saheeh International
He sends down the angels, with the inspiration [i.e., revelation] of His command, upon whom He wills of His servants, [telling them], "Warn that there is no deity except Me; so fear Me."
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கிறான்; அவர்கள் இணைவைப்பவற்றைவிட அவன் மிக்க மேலானவன்.
IFT
அவன் வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் படைத்திருக்கின்றான். இவர்களின் இணைவைப்புச் செயல்களை விட்டு அவன் மிகவும் மேலானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும், பூமியையும் (வீண் விளையாட்டிற்காக இல்லாமல்) உண்மையைக் கொண்டு அவன் படைத்திருக்கிறான், அவர்கள் இணை வைப்பவைகளைவிட்டும் அவன் மிக்கப் பரிசுத்தமானவன்.
Saheeh International
He created the heavens and earth in truth. High is He above what they associate with Him.
கலகல் இன்ஸான மின் னுத்Fபதின் Fப இதா ஹுவ கஸீமும் முBபீன்
முஹம்மது ஜான்
அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைக்கிறான்; அவ்வாறிருந்தும் அவன் (இறைவனுடன்) பகிரங்கமான எதிரியாய் இருக்கிறான்.
IFT
அவன் மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான்! இப்போது அந்த மனிதன் இறைவனுக்கு எதிராக வெளிப்படையாகத் தர்க்கம் புரிபவனாகி விட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரு துளி இந்திரியத்திலிருந்து மனிதனை அவன் படைத்தான், (அவ்வாறு படைக்கப்பட்ட அவன் வளர்ந்து நிறைவுபெற்றுவிட்டு) இப்போது அவன் பகிரங்கமாகத் தர்க்கிக்கக் கூடியவன் (ஆக இருக்கிறான்,)
Saheeh International
He created man from a sperm-drop; then at once he is a clear adversary.
கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையனிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள்.
IFT
மேலும், அவன் கால்நடைகளையும் படைத்தான்! அவற்றில் உங்களுக்கு உடையும் இருக்கிறது; உணவும் இருக்கிறது; இன்னும் பல பயன்களும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மனிதர்களே!) கால்நடைகளை-அவற்றை (உங்களுக்காக) அவனே படைத்தான், அவற்றில் உங்களுக்காக (குளிரைத் தடுத்துக் கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு, இன்னும், (வேறு) பயன்களும் உங்களுக்குண்டு, மேலும். அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள
Saheeh International
And the grazing livestock He has created for you; in them is warmth and [numerous] benefits, and from them you eat.
அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும் பொழுதும் (மேய்ச்சலுக்குக்) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவை உங்களுக்கு அழகாய் இருக்கின்றன.
IFT
மேலும், மாலை நேரத்தில் அவற்றை நீங்கள் ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவற்றை நீங்கள் ஓட்டிச் செல்லும் போதும் அவை உங்களுக்கு அழகாகக் காட்சியளிக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும்பொழுதும், (மேய்ச்சலுக்காக) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவற்றில் உங்களுக்கு அழகுமிருக்கிறது.
Saheeh International
And for you in them is [the enjoyment of] beauty when you bring them in [for the evening] and when you send them out [to pasture].
மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
மிகச் சிரமத்துடனன்றி நீங்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு அவை (உங்களையும்) உங்கள் பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
IFT
மேலும், மிகவும் சிரமப்பட்டே தவிர உங்களால் அடைய இயலாத இடங்களுக்கெல்லாம் அவை உங்கள் சுமைகளைச் சுமந்து செல்கின்றன. திண்ணமாக, உங்கள் அதிபதி அளவிலாப் பரிவும் கருணையும் உடையவனாயிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மிக்க கஷ்டத்துடனின்றி சென்றடைய முடியாத அத்தகைய ஊர்களுக்கு அவை உங்களுடைய பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன, நிச்சயமாக உங்கள் இரட்சகன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுள்ளவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
And they carry your loads to a land you could not have reached except with difficulty to yourselves. Indeed, your Lord is Kind and Merciful.
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்). இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.
IFT
மேலும், குதிரைகள், கோவேறு கழுதைகள் மற்றும் கழுதைகள் ஆகியவற்றையும் அவன் படைத்தான்; அவற்றின் மீது நீங்கள் பயணம் செய்ய வேண்டும்; மேலும், அவை உங்கள் வாழ்க்கையின் அலங்காரமாக இருக்க வேண்டும் என்பதற்காக! இன்னும் நீங்கள் அறிந்தேயிராத பலவற்றை (உங்கள் நன்மைக்காக) அவன் படைக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும்-அவற்றில் நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவனே படைத்துள்ளான்) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கின்றான்.
Saheeh International
And [He created] the horses, mules and donkeys for you to ride and [as] adornment. And He creates that which you do not know.
இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது; (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன; மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று,) அல்லாஹ்வை நாடிச்செல்லக்கூடிய நேரானவழி; மற்றொன்று கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்திவிடுவான்.
IFT
மேலும், கோணலான பல வழிகள் இருக்கும் நிலையில், நேரிய வழியினைக் காண்பிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டியிருப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(கோணலில்லாத) நேரான வழியைத்தெளிவு செய்வது அல்லாஹ்வின் மீதே இருக்கிறது, அதில் கோணல் வழியும் உண்டு, இன்னும் அவன் நாடினால், உங்கள் அனைவரையும், நேர் வழியில் செலுத்திவிடுவான்.
Saheeh International
And upon Allah is the direction of the [right] way, and among them [i.e., the various paths] are those deviating. And if He willed, He could have guided you all.
அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக் கொண்டே புற்பூண்டுகளும் (வளர்ந்து) இருக்கின்றன. அதிலே நீங்கள் (உங்கள் கால்நடைகளை) மேய்க்கிறீர்கள்.
IFT
அவனே வானத்திலிருந்து உங்களுக்காக மழையை இறக்கினான். அதனை நீங்களும் நன்கு அருந்துகின்றீர்கள்; மேலும், அதிலிருந்து உங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக புற்பூண்டுகளும் முளைக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், வானத்திலிருந்து நீரை உங்களுக்கு இறக்கிவைத்தான், அதிலிருந்து குடிப்பும் உங்களுக்குண்டு, அதிலிருந்து (வளர்ந்த) மரங்களும் உங்களுக்குண்டு, அதில் (உங்கள் கால் நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்.
Saheeh International
It is He who sends down rain from the sky; from it is drink and from it is foliage in which you pasture [animals].
அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவம்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அதைக் கொண்டே விவசாயப் பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சை ஆகிய எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்கு உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
IFT
மேலும், அந்த நீரைக் கொண்டு பயிர்களை முளைக்கச் செய்கின்றான். மேலும், ஜைத்தூன் மற்றும் பேரீச்சை மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், விதவிதமான கனிகளையும் உற்பத்தி செய்கின்றான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இவற்றில் பெரும் சான்று உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனைக்கொண்டே (விவசாயப்) பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை திராட்சைகளையும், இன்னும், பலவகைக் கனிகளிலிருந்தும் அவன் உங்களுக்காக முளைப்பிக்கச் செய்கிறான், நிச்சயமாக இதில் சிந்திக்கக்கூடிய கூட்டத்தார்க்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
Saheeh International
He causes to grow for you thereby the crops, olives, palm trees, grapevines, and of all the fruits. Indeed in that is a sign for a people who give thought.
இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
மேலும், உங்கள் நலனுக்காக இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன. பகுத்தறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு இவற்றில் பல சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான், (அவ்வாறே) நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன, நிச்சயமாக இதிலும் நினைவு கூறக்கூடிய கூட்டத்தார்க்கு தகுந்த) அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
And He has subjected for you the night and day and the sun and moon, and the stars are subjected by His command. Indeed in that are signs for a people who reason.
வமா தர அ லகும் Fபில் அர்ளி முக்தலிFபன் அல்வானுஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ்மி(ன்)ய் யதக்கரூன்
முஹம்மது ஜான்
இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூறும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
பூமியில் உங்களுக்காக அவன் படைத்திருப்பவை விதவிதமான நிறங்களும் (வகைகளும்) உடையவையாக இருக்கின்றன. நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நிச்சயமாக இதிலும் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
IFT
மேலும், பூமியில் உங்களுக்காகப் பல்வேறுபட்ட நிறங்களும் நன்மைகளும் கொண்ட பொருள்களை அவன் படைத்திருக்கின்றான். இவை அனைத்திலும் திண்ணமாக, படிப்பினை பெறும் மக்களுக்கு அரிய சான்று உண்டு.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியில் உங்களுக்காக அவன் படைத்தவற்றையும், அதன் நிறங்கள் மாறுபட்டவைகளாக இருக்க (அவனே அவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்.) நிச்சயமாக அதில் படிப்பினை பெறும் சமூகத்தார்க்கு அத்தாட்சியிருக்கிறது.
Saheeh International
And [He has subjected] whatever He multiplied for you on the earth of varying colors. Indeed in that is a sign for a people who remember.
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் நீங்கள் சுவையான மீன் மாமிசங்களை (சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக் கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக!
IFT
அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். அதிலிருந்து நீங்கள் புத்தம் புதிய மாமிசத்தைப் புசிக்க வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக் கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்! மேலும், கப்பல் கடலைப் பிளந்து கொண்டு செல்வதையும் நீர் காண்கின்றீர். மேலும், உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்காகவுமே இவையெல்லாம் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் எத்தகையவனென்றால், கடலை – அதிலிருந்து நீங்கள் புதிய இறைச்சியை (மீன் போன்றவற்றை) உண்ணுவதற்காகவும், இன்னும், எதை நீங்கள் அணிகின்றீர்களோ அத்தகைய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்துவதற்காகவும் வசப்படுத்திக் கொடுத்துள்ளான், இன்னும், தண்ணீரைக் கிழித்துக் கொண்டு அதில் செல்பவைகளாக கப்பல்களை நீர் காண்பீர், மேலும், அவனது பேரருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு கடலை அவனே உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்.) இதிலும் நினைவு கூறக்கூடிய கூட்டத்தார்க்கு) தகுந்த அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
And it is He who subjected the sea for you to eat from it tender meat and to extract from it ornaments which you wear. And you see the ships plowing through it, and [He subjected it] that you may seek of His bounty; and perhaps you will be grateful.
وَاَلْقٰىஅவன் அமைத்தான்فِى الْاَرْضِபூமியில்رَوَاسِىَமலைகளைاَنْ تَمِيْدَஅசையாதிருப்பதற்காகبِكُمْஉங்களைக் கொண்டுوَاَنْهٰرًاஇன்னும் நதிகளைوَّسُبُلًاஇன்னும் பாதைகளைلَّعَلَّكُمْ تَهْتَدُوْنَۙநீங்கள் வழி பெறுவதற்காக
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).
அப்துல் ஹமீது பாகவி
உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். (உங்கள் போக்குவரத்துக்காக) ஆறுகளையும் நேரான வழிகளை அறிவதற்காகப் பல பாதைகளையும் அமைத்தான்.
IFT
மேலும், பூமியில் மலைகளை (முளைகளாக) அவன் ஊன்றினான்; உங்களோடு சேர்ந்து அது சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக! மேலும், அவனே ஆறுகளை ஓடச் செய்தான்; இயற்கைபூர்வமான பாதைகளையும் அமைத்துத் தந்தான்; நீங்கள் நேர்வழியினைப் பெற வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியின் மீது – அது உங்களைக்கொண்டு அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை உறுதியாக அவன் அமைத்தான்! (உங்கள் போக்குவரத்துக்கு சரியான வழியை) நீங்கள் அறிவதற்குப் (பல) பாதைகளையும் ஆறுகளையும் (அமைத்தான்.)
Saheeh International
And He has cast into the earth firmly set mountains, lest it shift with you, and [made] rivers and roads, that you may be guided,
(இணைவைத்து வணங்குபவர்களே! இவை அனைத்தையும்) படைத்த வல்லவன் (நீங்கள் வணங்குகின்ற) ஒன்றையுமே படைக்க முடியாதவற்றைப் போலாவானா? இவ்வளவுகூட நீங்கள் நல்லுனர்வு பெற வேண்டாமா?
IFT
ஆகவே, படைக்கின்றவனும் படைக்காதவனும் சமமா வார்களா? நீங்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா?
وَاِنْ تَعُدُّوْاநீங்கள் எண்ணினால்نِعْمَةَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்لَاநீங்கள் எண்ணி முடிக்கமாட்டீர்கள்تُحْصُوْهَاؕஅதைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَـغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌமகா கருணையாளன்
வ இன் த'உத்தூ னிஃமதல் லாஹி லா துஹ்ஸூஹா; இன்னல் லாஹ ல கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் அரு(ள்க)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை உங்களால் எண்ணிட முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணுவீர்களாயின் அதனை நீங்கள் கணக்கிட்டு எண்ணி வரையறுத்துவிட மாட்டீர்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையோன்.
Saheeh International
And if you should count the favors of Allah, you could not enumerate them. Indeed, Allah is Forgiving and Merciful.
வல்லதீன யத்'ஊன மின் தூனில் லாஹி லா யக்லுகூன ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் (தெய்வமென) அழைக்கிறார்களோ அவற்றால் எதையும் படைக்க முடியாது. அவை (அவனால்) படைக்கப்பட்டவையாகும்.
IFT
மேலும், அல்லாஹ்வை விட்டுவிட்டு எவர்களை(த் தெய்வங்களாக) மக்கள் அழைக்கின்றார்களோ, அவர்கள் எந்தப் பொருளுக்கும் படைப்பாளர்கள் அல்லர். மாறாக, அவர்களே படைக்கப்பட்டவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வையன்றி, அவர்கள் அழைக்கிறார்களே அத்தகையோர்-அவர்கள் எந்தப்பொருளையும் படைக்க மாட்டார்கள், அவர்களோ (அவனால்) படைக்கப்படுபவர்களாவர்.
Saheeh International
And those they invoke other than Allah create nothing, and they [themselves] are created.
அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அன்றி அவை) உயிருள்ளவைகளுமல்ல; உயிரற்றவைகளே. (இறந்தவர்கள்) எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவை அறியா. (ஆகவே, அவை இவர்களுக்கு என்ன பலனளித்துவிடும்?)
IFT
அவர்கள் இறந்து போனவர்களே தவிர உயிருள்ளவர்கள் அல்லர். அவர்கள் எப்போது (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அறிய மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி அவர்கள்) இறந்தவர்களே – உயிருள்ளவர்களல்லர், அவர்கள் எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டர்கள்.
Saheeh International
They are [in fact] dead, not alive, and they do not perceive when they will be resurrected.
اِلٰهُكُمْ(வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன்اِلٰهٌஇறைவன்وَّاحِدٌ ۚஒரே ஒருவன்فَالَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِالْاٰخِرَةِமறுமையைقُلُوْبُهُمْஉள்ளங்கள்/அவர்களுடையمُّنْكِرَةٌநிராகரிக்கின்றனوَّهُمْஇன்னும் அவர்கள்مُّسْتَكْبِرُوْنَபெருமையடிக்கிறார்கள்
உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆகவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (எதைக் கூறியபோதிலும்) நிராகரிப்பவைகளாகவே இருக்கின்றன. மேலும், அவர்கள் மிகக் கர்வம்கொண்டு பெருமையடிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
IFT
உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; ஆயினும், மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் நிராகரிப்பின் உறை விடமாய் உள்ளன. மேலும், அவர்கள் தற்பெருமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே நாயன்தான், ஆகவே மறுமையை நம்பவில்லையே அத்தகையோர்-அவர்களுடைய இதயங்கள் (எதைக்கேட்டபோதிலும்) மறுப்பவைகளாகவே இருக்கின்றன, அவர்கள் பெருமையடித்துக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.
Saheeh International
Your god is one God. But those who do not believe in the Hereafter - their hearts are disapproving, and they are arrogant.
லா ஜரம அன்னல் லாஹ யஃலமு மா யுஸிர்ரூன வ ம யுஃலினூன்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்தக்Bபிரீன்
முஹம்மது ஜான்
சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. நிச்சயமாக அவன் கர்வம் கொண்ட (இ)வர்களை விரும்புவதில்லை.
IFT
இவர்கள் மறைமுகமாகவும், வெளிப் படையாகவும் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான். அகந்தை கொள்வோரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நன்கு அறிவான் என்பதில் சந்தேகமில்லை, நிச்சயமாக அவன் பெருமையடித்துக்கொண்ட (இ)வர்களை நேசிப்பதில்லை.
Saheeh International
Assuredly, Allah knows what they conceal and what they declare. Indeed, He does not like the arrogant.
“உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், “முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இந்தக் குர்ஆனைக் குறிப்பிட்டு அதில்) ‘‘உங்கள் இறைவன் என்ன இறக்கினான்'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டால் ‘‘(இது,) முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள்தான்'' என்று கூறுகின்றனர்.
IFT
“உங்கள் இறைவன் எதை இறக்கியருளியுள்ளான்?” என்று எவரேனும் அவர்களிடம் கேட்டால், “இவையெல்லாம் முற்காலத்தவர்களின் கட்டுக்கதைகள்” என்றே அவர்கள் கூறுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (குர்ஆனைக் குறிப்பிட்டு அதில்) “உங்களுடைய இரட்சகன் எதை இறக்கி வைத்தான்” என்று அவர்களிடம் கேட்கப்பட்டால், “(இது) முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் (பதில்) கூறுகின்றனர்.
Saheeh International
And when it is said to them, "What has your Lord sent down?" they say, "Legends of the former peoples,"
கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.
அப்துல் ஹமீது பாகவி
மறுமை நாளில் தங்கள் பாவச்சுமைகளை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமைகளையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?
IFT
இவ்வாறு அவர்கள் கூறுவதன் விளைவாக, மறுமைநாளில் தங்களுடைய பாவங்களை முழுமையாகச் சுமப்பதுடன், அறியாமையினால் யார் யாரை இவர்கள் வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பாவங்களையும் சுமப்பார்கள். பாருங்கள்! எப்படிப்பட்ட மோசமான சுமையை இவர்கள் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மறுமை நாளில் தங்கள் பாவச் சுமைகளை இவர்கள் பூரணமாகச் சுமப்பதற்காக மற்றும் அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமைகளை இவர்களே சுமப்பதற்காக வேண்டி (இவ்வாறு கூறுகிறார்கள். இருவரின் பாவச்சுமைகளை) அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
That they may bear their own burdens [i.e., sins] in full on the Day of Resurrection and some of the burdens of those whom they misguide without [i.e., by lack of] knowledge. Unquestionably, evil is that which they bear.
கத் மகரல் லதீன மின் கBப்லிஹிம் Fப அதல் லாஹு Bபுன்யா னஹும் மினல் கவா'இதி Fபகர்ர 'அலய்ஹிமுஸ் ஸக்Fபு மின் Fபவ்கிஹிம் வ அதாஹுமுல் 'அதாBபு மின் ஹய்து லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடியோடு பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது; அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) நிச்சயமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டடத்தை அடியோடு பெயர்த்து அவர்கள் (தலை) மீதே அதன் முகடு விழும்படி செய்தான். அவர்கள் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் வேதனையும் அவர்களை வந்தடைந்தது.
IFT
இவர்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களில் பலரும் (சத்தியத்தை வீழ்த்துவதற்காக இவ்வாறே) சூழ்ச்சிகளைச் செய்திருக்கின்றார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சிக் கட்டடத்தை அடியோடு பெயர்த்துவிட்டான்! மேலிருந்து அதனுடைய முகடு, அவர்களின் தலைமீது விழுந்தது. மேலும், அவர்கள் சற்றும் எண்ணிப்பாராத திசையிலிருந்து வேதனை அவர்களை வந்தடைந்தது. பிறகு மறுமைநாளில் அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்துவான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களும் நிச்சயமாகச் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள், ஆகவே, அல்லாஹ் அவர்களின் கட்டடத்தை அடித்தளங்களிலிருந்து அடியோடு பெயர்த்தெடுத்து விட்டான், (எனவே அக்கட்டடத்தின்) முகடு அவர்களுக்கு மேலிருந்து அவர்களின் மீது விழுந்துவிட்டது, இன்னும், அவர்கள் உணர்ந்து கொள்ளமுடியாத விதத்தில் வேதனை அவர்களை வந்தடைந்தது.
Saheeh International
Those before them had already plotted, but Allah came at [i.e., uprooted] their building from the foundations, so the roof fell upon them from above them, and the punishment came to them from where they did not perceive.
பின்னர், கியாம நாளில் அவன் அவர்களை இழிவு படுத்துவான்; “எவர்களை நீங்கள் எனக்கு இணையா(ன தெய்வங்களா)க்கி, அவர்களைப்பற்றி (முஃமின்களிடம்) பிணங்கிக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” என (அவர்களிடம்) கேட்பான்; எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டதோ அவர்கள்: “நிச்சயமாக இன்று இழிவும் வேதனையும் காஃபிர்கள் மீது தான்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், மறுமை நாளிலோ அவன் அவர்களை இழிவுபடுத்தி ‘‘நீங்கள் (உங்கள் தெய்வங்களை) எனக்கு இணையானவை என(க் கூறி நம்பிக்கையாளர்களுடன்) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?'' என்று கேட்பான். அச்சமயம் (இதை) அறிந்திருந்த (நம்பிக்கை கொண்ட)வர்கள் ‘‘இன்றைய தினம் இழிவும், வேதனையும் நிச்சயமாக நிராகரித்தவர்கள்மீதுதான்'' என்று கூறுவார்கள்.
IFT
மேலும், அவர்களிடம் கேட்பான்: “இப்பொழுது எனக்கு இணையாக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்களுக்காகத்தானே நீங்கள் சத்திய சீலர்களுடன் மோதிக் கொண்டிருந்தீர்கள்?” அறிவு வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: “இன்று இழிவும், துர்பாக்கியமும் நிராகரிப்பாளர்களுக்கே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், மறுமைநாளில் அவன் அவர்களை இழிவுபடுத்துவான், மேலும் “(விசுவாசிகளுடன்) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே அத்தகைய என்னுடைய இணையாளர்கள் எங்கே? என்றும் கேட்பான், (அச்சமயம்)அறிவு கொடுக்கப்பட்டார்களே அத்தகையோர் “இன்றையத்தினம் இழிவும் வேதனையும் நிச்சயமாக நிராகரிப்போரின் மீதுதான்” என்று கூறுவார்கள்.
Saheeh International
Then on the Day of Resurrection He will disgrace them and say, "Where are My 'partners' for whom you used to oppose [the believers]?" Those who were given knowledge will say, "Indeed disgrace, this Day, and evil are upon the disbelievers" -
அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், “நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!” என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; “அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட இவர்களுடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் பொழுது (அவர்கள்) ‘‘நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை'' என்று (கூறித் தங்களைத் துன்புறுத்த வேண்டாமென வானவர்களிடம்) சமாதானத்தைக் கோருவார்கள். (அதற்கு வானவர்கள்) ‘‘மாறாக! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிவான்'' (என்று பதிலளிப்பார்கள்).
IFT
அவர்கள் எத்தகையவர்களென்றால், தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (வரம்பு மீறும் போக்கை விட்டுவிட்டு) சரணடைந்து “நாங்கள் எந்தக் குற்றமும் செய்து கொண்டிருக்கவில்லையே?” என்று கூறுவார்கள். அதற்கு (வானவர்கள்) பதில் கூறுவார்கள்: “செய்து கொண்டிருக்கவில்லையா...? அல்லாஹ் உங்களுடைய இழிசெயல்களை நன்கறிந்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், தமக்குத் தாமே அநியாயம் செய்துகொண்டவர்களாக இருக்கும் நிலையில் அவர்(களின் உயிர்)களை மலக்குகள் கைப்பற்றுவார்கள், அவர்கள் “நாங்கள் எவ்விதக் குற்றமும் செய்யவில்லை” என்று கூறி மலக்குகளிடம் சமாதானத்தைக் கோருவார்கள், “அல்ல! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்” (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.)
Saheeh International
The ones whom the angels take in death [while] wronging themselves, and [who] then offer submission, [saying], "We were not doing any evil." But, yes! Indeed, Allah is Knowing of what you used to do.
“ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்” (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து என்றென்றுமே அதில் தங்கி விடுங்கள்'' (என்று கூறுவார்கள்). பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது.
IFT
இப்பொழுது நரக வாயில்களிலே நுழையுங்கள்! அங்கே நீங்கள் என்றென்றும் வீழ்ந்துகிடக்க வேண்டும்.” உண்மையில் ஆணவம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, “நரகத்தின்வாயில்களில்- அதில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்களாக நீங்கள் புகுந்துவிடுங்கள்” (என்று கூறுவார்கள்.) ஆகவே பெருமையடித்துக் கொண்டிருந்த (இ)வர்களின் ஒதுங்குமிடம் மகா கெட்டது.
Saheeh International
So enter the gates of Hell to abide eternally therein, and how wretched is the residence of the arrogant.
பயபக்தியுள்ளவர்களிடம், “உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “நன்மையையே (அருளினான்)” என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு; இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும், பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது!
அப்துல் ஹமீது பாகவி
இறையச்சமுடையவர்களை நோக்கி (இக்குர்ஆனைப் பற்றி) ‘‘உங்கள் இறைவன் என்ன இறக்கி வைத்தான்'' என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள், ‘‘நன்மையையே (இறக்கி வைத்தான்)'' என்று கூறுவார்கள். (ஏனென்றால்) நன்மை செய்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மைதான். (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானது. இறையச்சமுடையவர்களின் வீடு எவ்வளவு நேர்த்தியானது!
IFT
(மற்றொரு புறம்) இறையச்சமுடையோரை நோக்கி வினவப்படும்: “உங்கள் இறைவன் இறக்கியருளியது என்ன?” அதற்கு அவர்கள், “மிகச் சிறந்ததை (இறக்கியருளினான்)” என்று மறுமொழி கூறுவார்கள். இவ்வாறு நற்செயல் புரிந்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மை இருக்கிறது. மறு உலகமோ திண்ணமாக அவர்களுக்கு மிகச் சிறப்புடையதாகவே இருக்கும். மேலும், இறையச்சமுடையவர்களின் இல்லம் மிகவும் சிறப்புடையதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், பயபக்தியுடையவர்களிடம், உங்கள் இரட்சகன் எதை இறக்கி வைத்தான் என்று கேட்கப்பட்டது, (அப்போது) அவர்கள், “நன்மையையே (இறக்கி வைத்தான்)என்று கூறுவார்கள், இவ்வுலகில் அழகானவற்றைச் செய்தார்களே அத்தகையோருக்கு (இவ்வுலகிலும் அழகான) நன்மையுண்டு, (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானதாக இருக்கும், இன்னும், பயபக்தியுடைவர்களின் வீடு திட்டமாக நல்லதாகிவிட்டது.
Saheeh International
And it will be said to those who feared Allah, "What did your Lord send down?" They will say, "[That which is] good." For those who do good in this world is good; and the home of the Hereafter is better. And how excellent is the home of the righteous -
என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வீடு) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சொர்க்கங்களாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்கள் விரும்பியதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு இவ்வாறே அல்லாஹ் கூலி கொடுக்கிறான்.
IFT
அது நிலைத்திருக்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறே கூலி வழங்குகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிலைத்திருக்கக்கூடிய சுவனபதிகளாகும், அவற்றில் அவர்கள் பிரவேசிப்பார்கள், அவற்றின்கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவர்கள் விரும்பியவை அவற்றில் அவர்களுக்குண்டு, பயபக்தியுடையோருக்கு இவ்வாறே அல்லாஹ் நற்கூலி கொடுக்கின்றான்.
Saheeh International
Gardens of perpetual residence, which they will enter, beneath which rivers flow. They will have therein whatever they wish. Thus does Allah reward the righteous -
(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களின் உயிரை வானவர்கள், அவர்கள் நல்லவர்களாக இருக்கும் நிலைமையில் கைப்பற்றுகின்றனர். (அப்பொழுது அவர்களை நோக்கி) ‘‘ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாவதாக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்திற்குச் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
அவர்கள் எத்தகையவர்களென்றால், தூய்மையான நிலையில், அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள். அப்போது வானவர்கள் கூறுவார்கள்: “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்; நீங்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் பலனாக சுவனத்தில் நுழையுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோறென்றால், (ஈமானுடன்) நல்லவர்களாக இருக்கும் நிலைமையில் மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள், அவர்களிடம் “ஸலாமுன் அலைக்கும், உங்களுக்கு சாந்தி உண்டாவதாக! நீங்கள் செய்து கொண்டிருந்ததின் காரணமாக சுவனபதியில் பிரவேசியுங்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.
Saheeh International
The ones whom the angels take in death, [being] good and pure; [the angels] will say, "Peace be upon you. Enter Paradise for what you used to do."
(ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் வானவர்கள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
IFT
(நபியே!) இப்போது இவர்களிடம் வானவர்கள் வருவதைத் தவிர அல்லது உம் அதிபதியின் தீர்ப்பு வருவதைத் தவிர வேறு எதையேனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா? இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் இவ்வாறே (ஆணவப் போக்கினை) மேற்கொண்டு வந்தார்கள். பிறகு அல்லாஹ் அவர்களுக்கு யாதொரு அநீதியும் இழைக்கவில்லை; ஆனால், அவர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நிராகரிப்போர்களோ! தங்கள் உயிரைக், கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் மலக்குகள் வருவதையோ அல்லது உமதிரட்சகனின் கட்டளை வருவதையோ தவிர, (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே செய்து கொண்டிருந்தனர், அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் (எதுவும்) செய்யவில்லை, எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்பவர்களாக இருந்தார்கள்.
Saheeh International
Do they [i.e., the disbelievers] await except that the angels should come to them or there comes the command of your Lord? Thus did those do before them. And Allah wronged them not, but they had been wronging themselves.
எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன; அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன. இன்னும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததும் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
IFT
எனவே, அவர்களுடைய இழிசெயல்களின் கேடுகள் அவர்களையே பற்றிக்கொண்டன. மேலும், அவர்கள் எதனைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகள் அவர்களை வந்தடைந்தன, மேலும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
Saheeh International
So they were struck by the evil consequences of what they did and were enveloped by what they used to ridicule.
வ காலல் லதீன அஷ்ரகூ லவ் ஷா'அல் லாஹு ம 'அBபத்னா மின் தூனிஹீ மின் ஷய்'இன் னஹ்னு வ லா ஆBபா'உனா வலா ஹர்ரம்னா மின் தூனிஹீ மின் ஷய்'; கதாலிக Fப'அலல் லதீன மின் கBப்லிஹிம் Fபஹல் 'அலர் ருஸுலி இல்லல் Bபலாகுல் முBபீன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).
அப்துல் ஹமீது பாகவி
இணைவைத்து வணங்குபவர்கள் கூறுகின்றனர்: ‘‘அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனைத் தவிர மற்றெதையும் வணங்கியே இருக்கமாட்டோம்; அவனுடைய கட்டளையின்றி எதையும் (ஆகாததெனத்) தடுத்திருக்கவும் மாட்டோம்.'' இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வீண் விதண்டாவாதம்) செய்து கொண்டிருந்தனர். நம் தூதர்கள்மீது (அவர்களுக்கிடப்பட்ட கட்டளையை) தெளிவாக அறிவிப்பதைத் தவிர (வேறெதுவும்) பொறுப்புண்டா? (கிடையாது.)
IFT
இந்த இணைவைப்பாளர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதையர்களும் அவனை விடுத்து வேறு எதையும் வணங்கியிருக்க மாட்டோம். அவனது கட்டளையின்றி எதனையும் விலக்கப்பட்டதாய் ஆக்கியிருக்கமாட்டோம்.” இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் இத்தகைய சாக்குபோக்குகளைத்தான் கூறிக்கொண்டிருந்தார்கள். தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர வேறு ஏதேனும் பொறுப்பு தூதர்கள் மீது உண்டா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும், எங்கள் மூதாதையர்களும் அவனையன்றி மற்றெதையும் வணங்கி இருக்கவும் மாட்டோம், அவனுடைய கட்டளையின்றி எதனையும் (ஆகாதவையெனத்) தடுத்திருக்கவும் மாட்டோம்” என்று இணைவைத்துக் கொண்டிருந்தோர் கூறுகின்றனர், இவ்வாறே இவர்களுக்கு முன் இருந்தவர்களும் செய்தார்கள், (நம் தூதைத்) தெளிவாக எத்திவைப்பதைத்தவிர வேறு எதுவும் நம் தூதர்களின் மீது உண்டா?
Saheeh International
And those who associate others with Allah say, "If Allah had willed, we would not have worshipped anything other than Him, neither we nor our fathers, nor would we have forbidden anything through other than Him." Thus did those do before them. So is there upon the messengers except [the duty of] clear notification?
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலை பெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்.
IFT
மேலும், நாம் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு தூதரை அனுப்பினோம். மேலும், “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; தாஃகூத்துக்கு அடிபணிவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!” என்று (அவரின் வாயிலாக அனைவரையும்) எச்சரித்தோம். அதன் பின்னர் அவர்களில் சிலருக்கு அல்லாஹ் நேர்வழியை அளித்தான். வேறு சிலர் மீது வழிகேடு விதிக்கப்பட்டுவிட்டது. எனவே, பூமியில் சுற்றித்திரிந்து பாருங்கள் பொய்யாக்கியவர்களின் கதி என்னவாயிற்று என்பதை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவரிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள், (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் அனைத்து ஷைத்தான்களாகிய) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.) ஆகவே, அவர்களில் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியவர்களும் இருக்கிறார்கள், இன்னும் எவர்மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் இருக்கிறார்கள், ஆகவே நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (அத்தூதர்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை) கவனித்து)ப் பாருங்கள்.
Saheeh International
And We certainly sent into every nation a messenger, [saying], "Worship Allah and avoid ṭaghūt." And among them were those whom Allah guided, and among them were those upon whom error was [deservedly] decreed. So proceed [i.e., travel] through the earth and observe how was the end of the deniers.
اِنْ تَحْرِصْநீர் பேராசைப்பட்டால்عَلٰىமீதுهُدٰٮهُمْஅவர்கள் நேர்வழி காட்டப்படுவதுفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَهْدِىْநேர்வழி செலுத்த மாட்டான்مَنْஎவரைيُّضِلُّவழிகெடுப்பார்وَمَاஇல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْ نّٰصِرِيْنَஉதவியாளர்களில் எவரும்
இன் தஹ்ரிஸ் 'அலா ஹுதாஹும் Fப இன்னல் லாஹ லா யஹ்தீ மய் யுளில்லு வமா லஹும் மின் னாஸிரீன்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீங்கள் எவ்வளவு விரும்பிய போதிலும் (அவ்வழிக்கு அவர்கள் வரமாட்டார்கள். ஏனென்றால், மன முரண்டாக) எவர்கள் தவறான வழியில் செல்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை; அவர்களுக்கு உதவி செய்பவர்களும் ஒருவருமில்லை.
IFT
(நபியே!) அவர்கள் நேர்வழி அடைய வேண்டும் என்று நீர் எவ்வளவுதான் ஆர்வம் கொண்டாலும் சரியே, அல்லாஹ் எவரை வழிபிறழச் செய்கின்றானோ அவருக்குத் திண்ணமாக அவன் நேர்வழியைக் காட்டுவதில்லை. மேலும், இத்தகையோர்க்கு யாராலும் உதவி செய்ய இயலாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் நேர் வழிபெறுவதின் மீது நீர் (எவ்வளவுதான்) பேராசை கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அவன் வழிதவறச் செய்தவரை நேர் வழியில் செலுத்தமாட்டான், இன்னும், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் (எவரும்) இல்லை.
Saheeh International
[Even] if you should strive for their guidance, [O Muhammad], indeed, Allah does not guide those He sends astray, and they will have no helpers.
وَ اَقْسَمُوْاசத்தியம் செய்தனர்بِاللّٰهِஅல்லாஹ் மீதுجَهْدَ اَيْمَانِهِمْۙஅவர்கள் மிக உறுதியாக சத்தியமிடுதல்لَا يَبْعَثُஎழுப்ப மாட்டான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்يَّمُوْتُؕஇறக்கின்றார்بَلٰىஅவ்வாறன்றுوَعْدًاவாக்குعَلَيْهِஅவன் மீதுحَقًّاகடமையானதுوَّلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَۙஅறியமாட்டார்கள்
வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் லா யBப்'அதுல் லாஹு மய் யமூத்; Bபலா வஃதன் 'அலய்ஹி ஹக்க(ன்)வ் வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
முஹம்மது ஜான்
இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இறந்தவர்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்ப மாட்டான் என்று இந்நிராகரிப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே மிக்க உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். அப்படி இல்லை; (‘‘உங்களை உயிர்கொடுத்து எழுப்புவான்'' என்று) நான் கூறிய வாக்கு முற்றிலும் உண்மையானதே! எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.
IFT
இவர்கள், அல்லாஹ்வின் பெயரில் அழுத்தமான சத்தியங்கள் செய்து கூறுகின்றார்கள், “இறந்துவிடுகின்ற எவரையும் அல்லாஹ் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்யமாட்டான்” என்று! ஏன் எழுப்பமாட்டான்! இது ஒரு வாக்குறுதியாயிற்றே! இதனை நிறைவேற்றுவதை அல்லாஹ் தன் மீது கடமையாக்கியுள்ளான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்கொடுத்து) எழுப்ப மாட்டான் என்று அல்லாஹ்வின் மீது (நிராகரிப்போரான) அவர்கள் மிக்க உறுதியான சத்தியமாக சத்தியம் செய்கின்றனர், அவ்வாறன்று! இறந்தவர்களை உயிர்கொடுத்து எழுப்புவான் என்ற) அவனின் வாக்கு முற்றிலும் உண்மையானதே! எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.
Saheeh International
And they swear by Allah their strongest oaths [that] Allah will not resurrect one who dies. But yes - [it is] a true promise [binding] upon Him, but most of the people do not know.
(இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்).
அப்துல் ஹமீது பாகவி
(இம்மையில்) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்ததை அவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக அறிவிப்பதற்காகவும், நிராகரிப்பவர்கள் கூறிக் கொண்டிருந்த பொய்யை அவர்கள் நன்கறிந்து கொள்வதற்காகவும் (மறுமையில் அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அப்படி அவர்களை எழுப்புவது நமக்கு ஒரு பொருட்டல்ல.)
IFT
(இறந்தவர்களை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்வது) இவர்கள் எதனைப் பற்றி கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களோ அதனை அல்லாஹ் அவர்களுக்குத் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்பதற்காகவும் மேலும், சத்தியத்தை மறுப்பவர்கள் தாங்கள் பொய்யர்களாக இருந்ததை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவு மேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உலகில்) எ(வ்விஷய)த்தில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதனை அவர்களுக்கு அவன் தெளிவு செய்வதற்காகவும், நிராகரித்தோர் நிச்சயமாக அவர்கள் பொய்யர்களாகவே இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகவும் (அவர்களை அவன் உயிர்கொடுத்து எழுப்புவான்)
Saheeh International
[It is] so He will make clear to them [the truth of] that wherein they differ and so those who have disbelieved may know that they were liars.
கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது;
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரை விட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!
IFT
எவர்கள் கொடுமைக்கு ஆளான பிறகு அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்தார்களோ அவர்களுக்கு நாம் இவ்வுலகிலேயே நல்ல வசிப்பிடத்தை வழங்குவோம். மேலும், மறுமையின் கூலியோ அதைவிட மிகவும் மகத்தானதாகும். அவர்கள் (எத்தகைய நல்ல முடிவு தங்களுக்குக் காத்திருக்கின்றது என்பதை) அறிந்திட வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) விரோதிகளால் அநீதமிழைக்கப்பட்ட பின்னர், அல்லாஹ்வுக்காக (த் தங்கள் ஊரைத்துறந்து) ஹிஜ்ரத்துப் புறப்பட்டார்களே அத்தகையோர்-அவர்களை நிச்சயமாக நாம் இவ்வுலகில் அழகிய இடத்தில் குடியிருந்தாட்டுவோம், அவர்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால் மறுமையின் கூலியோ மிகப்பெரியதாகும்.
Saheeh International
And those who emigrated for [the cause of] Allah after they had been wronged - We will surely settle them in this world in a good place; but the reward of the Hereafter is greater, if only they could know.
வ மா அர்ஸல்னா மின் கBப்லிக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம்; Fபஸ்'அலூ அஹ்லத் திக்ரி இன் குன்தும் லா தஃலமூன்
முஹம்மது ஜான்
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு முன்னர் வஹ்யி அறிவித்து நாம் அவர்களிடம் அனுப்பிவைத்த தூதர்களெல்லாம் ஆடவர்கள்தான். ஆகவே, (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இதை) அறிந்து கொள்ளாமலிருந்தால் (முந்திய வேதங்களைக்) கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்'' (என்று கூறுவீராக.)
IFT
(நபியே!) நாம் உமக்கு முன்பும் மனிதர்களையே தூதர்களாக அனுப்பிவைத்தோம். அவர்களுக்கு நம்முடைய செய்திகளை (வஹியை) அறிவித்துக் கொண்டிருந்தோம். எனவே, நீங்கள் அறியாதவர்களாய் இருந்தால் வேத அறிவு வழங்கப்பட்டவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் (மனிதர்களில் தூதுவர்களாக) ஆடவர்களையே தவிர நாம் அனுப்பவில்லை, அவர்கள் பால் நாம் வஹீ அறிவித்தோம், ஆகவே, நீங்கள் (அதனைப் பற்றி) அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு(த் தெரிந்து)க் கொள்ளுங்கள்.
Saheeh International
And We sent not before you except men to whom We revealed [Our message]. So ask the people of the message [i.e., former scriptures] if you do not know.
بِالْبَيِّنٰتِஅத்தாட்சிகளைக் கொண்டுوَالزُّبُرِؕஇன்னும் வேதங்கள்وَاَنْزَلْنَاۤஇன்னும் இறக்கினோம்اِلَيْكَஉமக்குالذِّكْرَஞானத்தைلِتُبَيِّنَ(ஏ) தெளிவுபடுத்துவீர்لِلنَّاسِஅம்மக்களுக்காகمَاஎதுنُزِّلَஇறக்கப்பட்டதுاِلَيْهِمْஅவர்களுக்குوَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَஇன்னும் அவர்கள் சிந்திக்க வேண்டும்
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்). அப்படியே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உமக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உம்மீது) இறக்கப்பட்ட இதை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்பீராக. (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள்.
IFT
முன் சென்ற அத்தூதர்களுக்குத் தெளிவான சான்றுகள் மற்றும் வேதங்களை வழங்கி அவர்களை அனுப்பி வைத்திருந்தோம். மேலும், இப்பொழுது இந்நல்லுரையை உம்மீது நாம் இறக்கியருளியிருக்கின்றோம். எதற்காகவெனில் மக்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட அறிவுரையை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவும் மேலும், அவர்களும் (சுயமாக) சிந்தித்துணர வேண்டும் என்பதற்காகவும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (அத்தூதர்களுக்கு நாம் கொடுத்தனுப்பினோம்) மேலும், மனிதர்களுக்கு அவர்கள் பால் இறக்கி வைக்கப்பட்டதை நீர் அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காக மற்றும் அவர்கள் சிந்திப்பவர்களாக ஆகிவிடலாம் என்பதற்காகவும் உம்பால் இவ்வேதத்தை நாம் இறக்கி வைத்தோம்.
Saheeh International
[We sent them] with clear proofs and written ordinances. And We revealed to you the message [i.e., the Qur’an] that you may make clear to the people what was sent down to them and that they might give thought.
அFப அமினல் லதீன மகருஸ் ஸய்யி ஆதி அய் யக்ஸிFபல் லாஹு Bபிஹிமுல் அர்ள அவ் யா தியஹுமுல் 'அதாBபு மின் ஹய்து லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப் புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா?
அப்துல் ஹமீது பாகவி
தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்கின்ற இவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?
IFT
இனி எவர்கள் (தூதரின் அழைப்புக்கு எதிராக) தீய சூழ்ச்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ் தங்களை பூமி விழுங்கும்படிச் செய்திடுவான் அல்லது எங்கிருந்து வேதனை வரும் என்று அவர்கள் சற்றும் ஊகிக்கவில்லையோ அங்கிருந்து அல்லாஹ் தங்கள் மீது வேதனையைக் கொண்டு வந்து விடுவான்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தீமைகளைச் (செய்திட-) சூழ்ச்சி செய்வோர் - அல்லாஹ் அவர்களைக் கொண்டு பூமியை விழுங்குமாறு செய்வான் என்பதையோ, அல்லது அவர்கள் அறிந்து கொள்ளாத விதத்தில் அவர்களை வேதனை வந்தடையும் என்பதையோ அவர்கள் அச்சமற்றிருக்கிறார்களா?
Saheeh International
Then, do those who have planned evil deeds feel secure that Allah will not cause the earth to swallow them or that the punishment will not come upon them from where they do not perceive?
அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறுசெய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் அச்சமற்றிருக்கின்றனரா? (அவ்வாறு அவன் பிடிக்கக் கருதினால், அவனிடம் இருந்து) இவர்கள் (தப்பி ஓடி அவனைத்) தோற்கடித்துவிட மாட்டார்கள்.
IFT
அல்லது அவர்கள் நடந்து திரிந்து கொண்டிருக்கும்போதே திடீரென்று அவ்வேதனை தங்களைப் பிடித்துவிடும் அல்லது தங்களுக்கு வரக்கூடிய துன்பத்தைப் பற்றி அஞ்சிக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளை மும்முரமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும் (என்பன போன்ற பேரபாயங்கள் ஏற்படாது) என அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது அவர்கள் (காரியங்களில்) ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவன் பிடித்துவிடுவான், என்பதையும் (அச்சமற்றிருக்கிறார்களா?) அவர்கள் (நம்மை) இயலாமலாக்கக்கூடியவர்கள் அல்லர்.
Saheeh International
Or that He would not seize them during their [usual] activity, and they could not cause failure [i.e., escape from Him]?
அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது (இவர்களை அழித்துவிடக்கூடிய ஒரு ஆபத்து வருமென்ற) திகிலின் மீது திகிலைக் கொடுத்து இவர்களைப் பிடித்துக்கொள்ள மாட்டான் என்று அச்சமற்று இருக்கின்றனரா? (அவன், தான் விரும்பிய வேதனையை இவர்களுக்கு கொடுக்க ஆற்றலுடையவன்.) எனினும், நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடையவன் ஆவான். (ஆதலால்தான், இதுவரை அவர்களை வேதனை செய்யாது விட்டு வைத்திருக்கிறான்.)
IFT
(அவன் என்ன செய்ய நாடினாலும்) அவனை இயலாமைக்குள்ளாக்கும் வலிமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை. திண்ணமாக, உங்கள் அதிபதி அளவிலாப் பரிவும், பெரும் கிருபையும் கொண்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (யாதொர் ஆபத்து வருமென்ற) பயத்தின் மீது (இவர்கள் இருக்கும் நிலையில்) இவர்களை அவன் பிடித்துவிடுவான் என்பதையும் (அவர்கள் அச்சமற்றிருக்கிறார்களா?) ஆகவே, நிச்சயமாக உங்கள் இரட்சகன் மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Or that He would not seize them gradually [in a state of dread]? But indeed, your Lord is Kind and Merciful.
அல்லாஹ் படைத்திருக்கும் பொருட்களில் அவர்கள் எதையுமே (உற்றுப்) பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும், இடமுமாக (ஸுஜூது செய்தவையாகச்) சாய்கின்றன; மேலும் அவை பணிந்து (கீழ்படிதலுடன் இவ்வாறு) அல்லாஹ்வுக்கு வழிபடுகின்றன.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் படைத்திருப்பவற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்க வில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமுமாக சாய்வதெல்லாம் அல்லாஹ்வை மிக்க தாழ்மையாகச் சிரம் பணிந்து வணங்குவதுதான்.
IFT
அல்லாஹ் படைத்துள்ள பொருள்களுள் எதனையும் இவர்கள் பார்க்கவில்லையா அவற்றின் நிழல்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் அல்லாஹ்வின் திருமுன் எவ்வாறு பணிந்து விழுகின்றன என்பதை! இப்படி அனைத்தும் பணிவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் படைத்தவற்றில் உள்ள எப்பொருளும் அதனுடைய நிழல்கள் அவை தாழ்வானவையாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு சாஷ்டாங்கம் செய்தவையாக வலப்பக்கமும், இடப்பக்கங்களிலும் சாய்கின்றன என்பதை இவர்கள் பார்க்கவில்லையா?
Saheeh International
Have they not considered what things Allah has created? Their shadows incline to the right and to the left, prostrating to Allah, while they [i.e., those creations] are humble.
வ லில்லாஹி யஸ்ஜுது மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி மின் தாBப்Bபதி(ன்)வ் வல்ம லா'இகது வ ஹும் லா யஸ்தக்Bபிரூன்
முஹம்மது ஜான்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்வையே சிரம்பணிந்து வணங்குகின்றனர்.அவர்கள் (இப்லீஸைப் போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை.
IFT
வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும், அனைத்து வானவர்களும் அல்லாஹ்வின் திருமுன் சிரம்பணிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஆணவம் கொள்வதில்லை.
இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) அல்லாஹ் கூறுகிறான்: (ஒன்றுக்குப் பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (உங்கள்) வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒர் இறைவன்தான். ஆகவே, (அந்த ஒருவனாகிய) எனக்கு நீங்கள் பயப்படுங்கள். (மற்றெவருக்கும் பயப்பட வேண்டாம்.)
IFT
மேலும், அல்லாஹ் கட்டளையிடுகின்றான்: “இரண்டு கடவுளரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! இறைவன் ஒரே ஒருவன்தான்! எனவே, எனக்கு அஞ்சுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ் கூறுகிறான், (ஒன்றுக்குப் பதிலாக) “இரு தெய்வங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள், நிச்சயமாக அவன் (வணக்கத்திற்குரிய) ஒரே ஒரு நாயன்தான், ஆகவே (மனிதர்களே! அந்த ஒருவனாகிய) என்னையே நீங்கள் பயப்படுங்கள்”
Saheeh International
And Allah has said, "Do not take for yourselves two deities. He [i.e., Allah] is but one God, so fear only Me."
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை) அவனுக்கே (என்றென்றும்) வழிபாடு உரியதாக இருக்கிறது; (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுக்கு என்றென்றும் வழிபடுவது அவசியம். ஆகவே, அந்த அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் பயப்படுகிறீர்கள்?
IFT
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்கே உரியவையாகும். மேலும், அவனுடைய தீன் (நெறி) மட்டுமே (இந்தப் பேரண்டம் முழுவதிலும்) செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறிருக்க அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் அஞ்சுவீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, வணக்கமும் நிரந்தரமாக அவனுக்கே உரியதாகும், எனவே அல்லாஹ் அல்லாததையா நீங்கள் பயப்படுகிறீர்கள்?
Saheeh International
And to Him belongs whatever is in the heavens and the earth, and to Him is [due] worship constantly. Then is it other than Allah that you fear?
மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதான். உங்களை ஒரு தீங்கு அணுகும் போது அவனிடமே முறையிடுகிறீர்கள்.
IFT
மேலும், உங்களுக்குக் கிடைத்துள்ள அருட் கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதாம். பிறகு உங்களுக்கு ஏதேனும் கஷ்டகாலம் வந்துவிடுமாயின் நீங்களே உங்கள் முறையீடுகளை எடுத்துக்கொண்டு அவனிடமே ஓடுகின்றீர்கள்.
பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவன் உங்களை விட்டு அத்தீங்கை நீக்கினாலோ உடனே உங்களில் ஒரு பிரிவினர் (இத்தகைய) தங்கள் இறைவனுக்கே இணை வைத்து வணங்க ஆரம்பிக்கின்றனர்.
IFT
பிறகு அந்தக் கஷ்ட காலத்தை உங்களை விட்டு அல்லாஹ் நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் (அதை நீக்கியதற்காகச் செலுத்தும் நன்றியில்) தம் இறைவனுடன் மற்றவர்களையும் இணையாக்கத் தொடங்குகின்றனர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், உங்களைவிட்டும் அத்துன்பத்தை அவன் நீக்கிவிட்டால், அச்சமயத்தில் உங்களில் ஒரு பிரிவினர் (இத்தகைய) தங்கள் இரட்சகனுக்கே இணைவைக்கின்றனர்.
Saheeh International
Then when He removes the adversity from you, at once a party of you associates others with their Lord
நாம் அவர்களுக்கு அளித்துள்ளதை (நன்றியில்லாது) நிராகரிக்கும் வரையில் - ஆகவே (இம்மையில் சிலகாலம்) சுகித்திருங்கள் - பின்னர் (விரைவிலேயே உங்கள் தவற்றை) அறிந்து கொள்வீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களுக்குச் செய்த நன்றிகளையும் (நன்மைகளையும்) நிராகரித்து விடுகின்றனர். (ஆதலால், அவர்களை நோக்கி, ‘‘இவ்வுலகில்) சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். பின்னர் (மறுமையில்) நீங்கள் (உண்மையை) அறிந்து கொள்வீர்கள்'' (என்று நபியே! கூறுவீராக).
IFT
அல்லாஹ் அவர்களுக்குச் செய்த பேருதவிக்கு நன்றி கொல்வதற்காக! சரி, நன்கு அனுபவித்துக் கொள்ளுங்கள்! விரைவில் (அதன் விளைவை) தெரிந்து கொள்வீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றைக் கொண்டு அவர்கள் நிராகரித்து விடுவதற்காக (இணை வைக்கின்றனர்) ஆதலால் (இவ்வுலகில்) சிறிது சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள், பின்னர் (மறுமையில்) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
Saheeh International
So they will deny what We have given them. Then enjoy yourselves, for you are going to know.
இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதை அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கற்பனையாகக் கூறும் இப்பொய்(க் கூற்று)களைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.
IFT
நாம் இவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து ஒரு பங்கை எவற்றின் உண்மையான நிலையை இவர்கள் அறிந்திருக்கவில்லையோ அவற்றுக்கு ஒதுக்குகிறார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இல்லாத ஒன்றை எவ்வாறு நீங்கள் புனைந்தீர்கள் என்று உங்களிடம் நிச்சயம் விசாரணை செய்யப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு பாகத்தைத் தாங்கள் அறியாதவை(களான தெய்வங்)களுக்கென ஆக்குகின்றனர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இட்டுக்கட்டிக் கூறிக்கொண்டிருந்ததைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) கேட்கப்படுவீர்கள்.
Saheeh International
And they assign to what they do not know [i.e., false deities] a portion of that which We have provided them. By Allah, you will surely be questioned about what you used to invent.
وَيَجْعَلُوْنَஇன்னும் ஆக்குகின்றனர்لِلّٰهِஅல்லாஹ்வுக்குالْبَـنٰتِபெண் பிள்ளைகளைسُبْحٰنَهٗۙஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَلَهُمْதங்களுக்குمَّاஎதைيَشْتَهُوْنَவிரும்புகின்றனர்
மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகளையும்.தங்களுக்கு தாங்கள் விரும்புகின்றவர்களை (ஆண் பிள்ளைகளை) ஏற்படுத்திக் கொள்கின்றனர். அவனோ (இதைவிட்டு) மிக்க பரிசுத்தமானவன்.
IFT
இவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண்மக்கள் உண்டென ஏற்றிச் சொல்கின்றார்கள். அவனோ, தூய்மையானவனாக இருக்கின்றான் ஆனால், அவர்களுக்கோ அவர்கள் விரும்புகின்றவை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஆக்குகிறார்கள்; அவனோ (இதனை விட்டும்) மிகப் பரிசுத்தமானவன்; இன்னும், தங்களுக்காக அவர்கள் (தங்கள் மனம்) விரும்புவதை (-ஆண் மக்களை ஆக்குகின்றனர்.)
Saheeh International
And they attribute to Allah daughters - exalted is He - and for them is what they desire [i.e., sons].
அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான்.
IFT
இவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) பற்றி நற்செய்தி சொல்லப்பட்டால், அவரது முகத்தில் கருமை கவ்விக் கொள்கின்றது! துக்கத்தால் அவர் தொண்டை அடைத்துக் கொள்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயங் கூறப்பட்டால், கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்ததாக ஆகிவிடுகிறது.
Saheeh International
And when one of them is informed of [the birth of] a female, his face becomes dark, and he suppresses grief.
எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?
அப்துல் ஹமீது பாகவி
(பெண் குழந்தை பிறந்தது என) அவனுக்குக் கூறப்பட்ட இந்தக் கெட்ட நன்மாராயத்தைப் பற்றி (வெறுப்படைந்து) இழிவுடன் “அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைத்து விடுவதா?' என்று கவலைப்பட்டு மக்கள் முன் வராமல் மறைந்து கொண்டு அலைகிறான். (இவ்வாறு தங்களுக்கு ஆண் குழந்தையும் இறைவனுக்குப் பெண் குழந்தையுமாக) அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா?
IFT
இந்தக் ‘கேவலமான’ செய்தி கிடைத்துவிட்டதே என்பதற்காக இனி யார் முகத்திலும் விழிக்கக்கூடாது என்று மக்களைவிட்டு ஒதுங்கிச் செல்கின்றார். அவமானப்பட்டுக் கொண்டு அப்பெண் குழந்தையை வைத்திருப்பதா அல்லது அதனை மண்ணில் புதைத்து விடுவதா என்று சிந்திக்கின்றார் பாருங்கள்! இறைவனைப் பற்றி இவர்கள் எடுத்த முடிவு எத்துணைக் கெட்டது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எதனைக் கொண்டு நன்மாராயங்கூறப்பட்டானோ, அதன் தீமையினால் இழிவுடன் அதை வைத்துக்கொள்வதா? அல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று (கவலைப்பட்டு, மக்கள் முன் வராமல்) சமூகத்தாரை விட்டும் மறைந்து கொள்கிறான், அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
He hides himself from the people because of the ill of which he has been informed. Should he keep it in humiliation or bury it in the ground? Unquestionably, evil is what they decide.
எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது - அல்லாஹ்வுக்கோ மிக உயர்ந்த தன்மை இருக்கிறது; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
(இத்தகைய) கெட்ட உதாரணமெல்லாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே (தகும்). அல்லாஹ்வுக்கோ மிக்க மேலான வர்ணிப்புகள் உண்டு. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.
IFT
தீய தன்மைகளால் வர்ணிக்கப்பட வேண்டியவர்கள் மறுமையின்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் தாம்! ஆனால் அல்லாஹ்வுக்கோ அனைத்தையும்விட உயர்ந்த தன்மைகள் இருக்கின்றன. அவனோ யாவரையும் மிகைத்தவனாயும், விவேகத்தில் முழுமை பெற்றவனாயும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இத்தகைய) கெட்ட வர்ணனை மறுமையை விசுவாசிக்காதவர்களுக்குரியதாகும், அல்லாஹ்வுக்கோ, மிக்க மேலான வர்ணனை உண்டு, அவனே (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
Saheeh International
For those who do not believe in the Hereafter is the description [i.e., an attribute] of evil; and for Allah is the highest attribute. And He is Exalted in Might, the Wise.
வ லவ் யு'ஆகிதுல் லாஹுன் னாஸ Bபிளுல்மின்ஹிம் மா தரக 'அலய்ஹா மின் தாBப்Bபதி(ன்)வ் வ லாகி(ன்)ய் யு'அக்கிருஹும் இலா அஜலிம் முஸம்மன் Fப இதா ஜா'அ அஜலுஹும் லா யஸ்தாகிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
முஹம்மது ஜான்
மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்கள் செய்யும் குற்றங்குறைகளைப் பற்றி அவர்களை அல்லாஹ் (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் (பூமியில்) ஓர் உயிரினைத்தையுமே அவன் விட்டுவைக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை (பிடிக்காது) அவர்களைப் பிற்படுத்துகிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
IFT
மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர்களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மனிதர்களை-இவர்கள் செய்யும் அநியாயத்துக்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால், (பூமியில்) ஊர்ந்து திரிபவைகளில் எதையுமே அவன் விட்டுவைக்கமாட்டான், எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் அவர்களைப் பிற்படுத்துகிறான், ஆகவே அவர்களுடைய தவணை வந்துவிட்டால், ஒரு கனமேனும் அவர்கள் பிந்தவோ, முந்தவோ மாட்டார்கள்
Saheeh International
And if Allah were to impose blame on the people for their wrongdoing, He would not have left upon it [i.e., the earth] any creature, but He defers them for a specified term. And when their term has come, they will not remain behind an hour, nor will they precede [it].
(இன்னும்) தாங்கள் விரும்பாதவைகளை (பெண் மக்களை) அல்லாஹ்வுக்கு உண்டென்று (கற்பனையாக) ஏற்படுத்துகிறார்கள். நிச்சயமாகத் தங்களுக்கு (இதனால்) நன்மையே கிட்டுமென அவர்களுடைய நாவுகள் பொய்யுரைக்கின்றன; நிச்சயமாக அவர்களுக்கு (நரக) நெருப்புத் தான் இருக்கிறது; இன்னும், நிச்சயமாக அவர்கள் அதில் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
தாங்கள் விரும்பாதவை(களாகிய பெண் குழந்தை)களை அல்லாஹ்வுக்குக் கற்பிக்கும்இவர்கள் (மறுமையில்) நிச்சயமாக தங்களுக்கு நன்மைதான் கிடைக்குமென்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. நிச்சயமாக இவர்களுக்கு நரகம்தான் என்பதிலும் நரகத்திற்கு முதலாவதாக இவர்கள்தான் செல்வார்கள் என்பதிலும் சந்தேகமேயில்லை.
IFT
(இன்று) அவர்கள் தங்களுக்கே விருப்பம் இல்லாதவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கிறார்கள். அவர்களுக்கு நன்மையே உண்டு என அவர்களின் நாவு பொய்யுரைக்கின்றது. திண்ணமாக, அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு என்பதிலும், எல்லோருக்கும் முன்பாக அவர்கள் அதில் கொண்டு சேர்க்கப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தாங்கள் வெறுக்கின்ற (பெண் சந்ததியான)தை அல்லாஹ்வுக்கு அவர்கள் ஆக்குகின்றனர், இன்னும், (மறுமையில்) நிச்சயமாகத் தங்களுக்கு நன்மை உண்டு என்று இவர்களுடைய நாவுகள் பொய்யை) வர்ணிக்கின்றன; நிச்சயமாக இவர்களுக்கு நரக நெருப்புத்தான் உண்டு என்பதிலும், நிச்சயமாக முதலாவதாக (நரகத்திற்கு) இவர்கள் தாம் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
Saheeh International
And they attribute to Allah that which they dislike [i.e., daughters], and their tongues assert the lie that they will have the best [from Him]. Assuredly, they will have the Fire, and they will be [therein] neglected.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம் - ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் - ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் - இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னிருந்த பல வகுப்பார்களுக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பிவைத்தோம். எனினும், ஷைத்தான் அவர்களுக்கும் அவர்களுடைய (தீய) காரியங்களையே அழகாகக் காண்பித்தான். இன்றைய தினம் இவர்களுக்கும் அவனே நண்பனாவான். ஆகவே, இவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு.
IFT
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (நபியே!) உமக்கு முன்பும் பல்வேறு சமூகங்களில் நாம் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம். ஆனால் (அப்போதும் என்ன நடந்ததெனில்) ஷைத்தான் அவர்களின் தீயசெயல்களை அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டினான். (ஆகையால் தூதர்களின் நல்லுரைகளை அவர்கள் ஏற்றிடவில்லை.) அதே ஷைத்தான் இன்று இவர்களுக்கும் ஆதரவாளனாய் ஆகியிருக்கின்றான். எனவே, இவர்கள் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாகிக் கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் மீது சத்தியமாக உமக்கு முன்னிருந்த பல சமூகத்தார்பால் திட்டமாக நாம் (நம்) தூதர்களை அனுப்பி வைத்தோம், அப்போது ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) காரியங்களை அலங்கரித்துக் காண்பித்தான், ஆகவே இன்றையத்தினம் அவர்களுக்கு அவனே தோழனாக இருக்கிறான், (மறுமையில்) அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.
Saheeh International
By Allah, We did certainly send [messengers] to nations before you, but Satan made their deeds attractive to them. And he is their [i.e., the disbelievers] ally today [as well], and they will have a painful punishment.
(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ் விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம் மீது இவ்வேதத்தை இறக்கினோம்; இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ரஹ்மத்தாகவும் (அருளாகவும்) இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உம் மீது நாம் இறக்கி வைத்தோம். மேலும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.
IFT
இவர்கள் எவற்றில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றார்களோ அவற்றின் உண்மை நிலையை இவர்களுக்கு நீர் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கியருளியிருக்கிறோம். மேலும், இவ்வேதம் தன்னை ஏற்றுக்கொள்கின்ற மக்களுக்கு வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், (நபியே!) அவர்கள் எ(வ்விஷயத்)தில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதனை, நீர் தெளிவாக்குவதற்காகவும் விசுவாசமுடைய கூட்டத்தினருக்கு (இது) நேர் வழியாகவும் ஓர் அருளாகவும் இருப்பதற்கே தவிர இவ்வேதத்தை உம்மீது நாம் இறக்கி வைக்கவில்லை.
Saheeh International
And We have not revealed to you the Book, [O Muhammad], except for you to make clear to them that wherein they have differed and as guidance and mercy for a people who believe.
இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைத்து, அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான் - நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழைய பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
IFT
மேலும் (ஒவ்வொரு மழைக்காலத்திலும் நீங்கள் பார்க்கின்றீர்கள்:) அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான்; உடனே அதனைக் கொண்டு இறந்து போன பூமிக்கு உயிரூட்டினான். திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கிறது செவியேற்கும் மக்களுக்கு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கிவைத்து, அதைக் கொண்டு பூமியை-அது உயிரிழந்த பின் உயிர் பெறச் செய்கின்றான், செவியேற்கும் கூட்டத்தினர்க்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
Saheeh International
And Allah has sent down rain from the sky and given life thereby to the earth after its lifelessness. Indeed in that is a sign for a people who listen.
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற தூய பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்துபவர்களுக்கு மிக்க இன்பகரமானது.
IFT
மேலும், கால்நடைகளிலும் நிச்சயம் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. சாணம், இரத்தம் ஆகியவற்றிற்கிடையே, அவற்றின் வயிற்றிலிருந்து தூய்மையான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம்; அருந்துவோருக்கு அது இன்பமாய் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் உங்களுக்கு நிச்சயமாக ஒரு படிப்பினை உண்டு, சாணத்திற்கும், இரத்தத்திற்குமிடையே அதன் வயிறுகளிலிருந்து கலப்பற்ற பாலை (உற்பத்தி செய்து, அதை) அருந்துபவர்களுக்கு மிக்க இன்பகரமானதாக இருக்க, நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம்.
Saheeh International
And indeed, for you in grazing livestock is a lesson. We give you drink from what is in their bellies - between excretion and blood - pure milk, palatable to drinkers.
பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், நல்ல உணவுகளையும் நீங்கள் செய்கிறீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
IFT
(இதே போன்று) பேரீச்சை மற்றும் திராட்சைப் பழங்களிலிருந்தும் உங்களுக்குப் புகட்டுகின்றோம்; அதிலிருந்து நீங்கள் போதைப் பொருளையும் தயாரிக்கின்றீர்கள்; இன்னும் தூய உண்பொருளையும்! திண்ணமாக அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பேரீச்சை, திராட்சைகள் (ஆகிய) பழங்களிலிருந்து மதுவையும், அழகான உணவையும் நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள், நிச்சயமாக இதிலும் அறிகின்ற கூட்டத்தினர்க்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
Saheeh International
And from the fruits of the palm trees and grapevines you take intoxicant and good provision. Indeed in that is a sign for a people who reason.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவன் தேனீக்கு, ‘‘நீ மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்'' என அறிவூட்டினான்.
IFT
மேலும், (பாருங்கள்!) உம் இறைவன் தேனீக்கு இவ்வாறு வஹி அறிவித்தான்: “மலைகளிலும் மரங்களிலும் பந்தல்(களில் படரும் கொடி)களிலும் நீ கூடுகளைக் கட்டிக்கொள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “மலைகளிலும் மரங்களிலும், அவர்கள் கட்டுபவைகளிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்” என்று உமதிரட்சகன் தேனீக்கு உள்ளுணர்ச்சியை உண்டாக்கினான்.
Saheeh International
And your Lord inspired to the bee, "Take for yourself among the mountains, houses [i.e., hives], and among the trees and [in] that which they construct.
“பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் ‘‘நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளை இட்டான்). இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
IFT
மேலும், பலதரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள்! உன் இறைவன் சீராக அமைத்துத்தந்த வழியில் சென்று கொண்டிரு!” அந்தத் தேனீக்களின் உள்ளே இருந்து பலவிதமான நிறமுடைய ஒரு பானம் வெளிப்படுகின்றது. அதில் மக்களுக்கு நிவாரணம் இருக்கிறது. திண்ணமாக, சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னர், நீ எல்லா விதமான கனியின் மலர்)களிலிருந்தும் உணவருந்தி பின்னர், உனதிரட்சகனின் வழிகளில் (அவை உனக்கு) எளிதாக்கப்பட்டதாக இருக்கச் செல்” (எனவும் உணர்வை உமதிரட்சகன் உண்டாக்கினான்.) இதனால் அதன் வயிறுகளிலிருந்து (தேனாகிய) ஒரு பானம் வெளியாகின்றது, அதன் நிறங்கள் மாறுபட்டவையாகும், அதில் மனிதர்களுக்கு குணப்படுத்துதலுண்டு, நிச்சயமாக இதிலும் சிந்திக்கக் கூடிய கூட்டத்தினர்க்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
Saheeh International
Then eat from all the fruits and follow the ways of your Lord laid down [for you]." There emerges from their bellies a drink, varying in colors, in which there is healing for people. Indeed in that is a sign for a people who give thought.
இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான், பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனத்தை தருகின்ற முதுமை வரை வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டும் என்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவன் ஆவான்.
IFT
மேலும் (பாருங்கள்!) அல்லாஹ் உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களை மரணமடையச் செய்கின்றான். மேலும், உங்களில் சிலர் தள்ளாத முதுமை வயதுவரை கொண்டு செல்லப்படுகின்றார்கள் எல்லாவற்றையும் அறிந்த பிறகு எதையும் அறியாமல் போவதற்காக! உண்மை யாதெனில், அல்லாஹ்தான் அறிவிலும் பேராற்றலிலும் முழுமையானவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ் உங்களைப் படைத்தான், பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கின்றான், (கற்று) அறிந்தபின் அவர் ஒன்றுமே அறியாதவராக ஆவதற்காக தளர்ந்த வயது வரையில் (வாழ்வதற்கு) தள்ளப்படுபவர்களும் உங்களில் உண்டு, (உங்களில் யார் யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டுமென்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
And Allah created you; then He will take you in death. And among you is he who is reversed to the most decrepit [old] age so that he will not know, after [having had] knowledge, a thing. Indeed, Allah is Knowing and Competent.
அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் சிலரைவிட சிலரை செல்வத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அப்படி மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்ட (வேலைக்காரர், அடிமை ஆகிய)வர்கள் தங்கள் செல்வத்தில் (தங்களுக்கு) சமமானவர்களாக இருந்தும் (முறைப்படி) அதை அவர்களுக்கு கொடுப்பதில்லை. (இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு அளித்திருக்கின்ற) அல்லாஹ்வின் அருளை அவர்கள் நிராகரிக்கின்றனரா?
IFT
மேலும், (பாருங்கள்!) அல்லாஹ் உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட, வாழ்க்கை வசதியில் சிறப்பு அளித்துள்ளான். இத்தகைய சிறப்பு வழங்கப்பட்டவர்கள் தாமும் தம்முடைய அடிமைகளும் வாழ்க்கை வசதியில் சமபங்குடையவர்களாகும் வகையில் அதனை அவர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதில்லையே! எனவே, இவர்கள் அல்லாஹ்வின் பேருதவியை ஏற்க மறுக்கின்றனரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்களில் சிலரை(மற்ற) சிலரைவிடச் சம்பத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான், ஆகவே, அவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள் தங்கள் சம்பத்தை தங்களது வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்(களான அடிமை)களுக்கு அதில் அவர்கள் (அனைவரும்) சமமானவர்களாக இருக்க கொடுத்து விடுபவர்களாக இல்லை., ஆகவே. (அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அவனின் அடியார்களை அவனுக்குக் கூட்டாக்கி) அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் மறுக்கிறார்களா?
Saheeh International
And Allah has favored some of you over others in provision. But those who were favored [i.e., given more] would not hand over their provision to those whom their right hands possess [i.e., slaves] so they would be equal to them therein. Then is it the favor of Allah they reject?
இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா?
அப்துல் ஹமீது பாகவி
உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் படைக்கின்றான். உங்களுக்கு நல்ல உணவுகளை வழங்குகிறான். மேலும், (இப்படியிருக்க) அவர்கள் (தாங்களாகக் கற்பனை செய்து கொண்ட) பொய்யானவற்றை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிக்கின்றனரா?
IFT
மேலும், அல்லாஹ் உங்களினத்திலிருந்தே உங்களுக்குத் துணைவியரை அமைத்தான்; அத்துணைவியர் மூலம் உங்களுக்கு மகன்களையும் பேரன்களையும் வழங்கினான். மேலும், நல்ல நல்ல பொருள்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்தான். பிறகு என்ன, இவர்கள் (இவை அனைத்தையும் பார்த்து, புரிந்தும்கூட) அசத்தியத்தை மேற்கொள்கின்றார்களா? அல்லாஹ்வின் பேருதவிகளை நிராகரிக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவியரை அல்லாஹ் ஆக்கியுள்ளான், உங்கள் மனைவியரிலிருந்து ஆண் மக்களையும், பேரக்குழந்தைகளையும உங்களுக்கு அவன் ஆக்கியுள்ளான், இன்னும், நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்துள்ளான், அவர்கள், பொய்யானதை விசுவாசித்து அல்லாஹ்வின் அருட்கொடையையும் நிராகரிக்கின்றனரா?
Saheeh International
And Allah has made for you from yourselves mates and has made for you from your mates sons and grandchildren and has provided for you from the good things. Then in falsehood do they believe and in the favor of Allah they disbelieve?
وَيَعْبُدُوْنَஇன்னும் வணங்குகின்றனர்مِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்مَا لَا يَمْلِكُஎதை/உரிமை பெறாதுلَهُمْஇவர்களுக்குرِزْقًاஉணவளிப்பதுمِّنَஇருந்துالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிشَيْــٴًــاஒன்றைوَّلَا يَسْتَطِيْعُوْنَۚஇன்னும் ஆற்றல் பெற மாட்டார்கள்
வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யம்லிகு லஹும் ரிZஜ்கம் மினஸ் ஸமாவாதி வல் அர்ளி ஷய்'அ(ன்)வ் வலா யஸ்ததீ'ஊன்
முஹம்மது ஜான்
வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்திபெறாதவைகளையும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். (அவை) வானங்களிலோ பூமியிலோ உள்ள ஒரு பொருளையும் இவர்களுக்கு அளிக்க உரிமையும் அற்றவை; ஆற்றலும் அற்றவை.
IFT
மேலும், அல்லாஹ்வை விட்டு விட்டு, வானங்களிலிருந்தோ, பூமியிலிருந்தோ இவர்களுக்குச் சிறிதள வேனும் உணவு வழங்கும் சக்தி இல்லாத ஏன், வழங்க முயன்றாலும் முடியாதவற்றையா இவர்கள் வணங்குகின்றார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வையன்றி – வானங்கள் மற்றும் பூமியிலிருந்துள்ள எப்பொருளையும் இவர்களுக்கு உணவாக அளிக்கச் சொந்தமாக்கிக் கொள்ளாத இன்னும் (அதற்கு) சக்தி பெறாதவைகளை அவர்கள் வணங்குகிறார்கள்.
Saheeh International
And they worship besides Allah that which does not possess for them [the power of] provision from the heavens and the earth at all, and [in fact], they are unable.
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அவற்றை சர்வ வல்லமையுள்ள) அல்லாஹ்வுக்கு நீங்கள் உவமைகளாக ஆக்காதீர்கள். (அல்லாஹ்வுக்குரிய தன்மைகளை) நிச்சயமாக அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
IFT
ஆக, அல்லாஹ்வுக்கு உவமைகளைப் பொருத்தாதீர்கள்! திண்ணமாக, அல்லாஹ் நன்கறிகின்றான். ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் (சகலவற்றையும்) அறிவான், நீங்களோ அறிய மாட்டீர்கள்.
Saheeh International
So do not assert similarities to Allah. Indeed, Allah knows and you do not know.
அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் ஒரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற அடிமை; மற்றொருவனோ நாம் அவனுக்கு நல்ல பொருள்களை ஏராளமாகக் கொடுத்திருக்கிறோம். அவனும் அவற்றை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தானம் செய்து வருகிறான். இவ்விருவரும் சமமானவரா? (சமமாக மாட்டார்கள்.) எல்லா புகழ்களும் அல்லாஹ்வுக்குரியன. அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்வதில்லை.
IFT
அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் கூறுகின்றான்: பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார்; அவருக்கு நாம் நம்மிடத்திலிருந்து நல்ல வாழ்க்கை வசதிகளை வழங்கியிருக்கின்றோம். அவர், அதிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார். (கூறுங்கள்!) இவ்விருவரும் சமமாவார்களா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால் (இந்நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எதன் மீதும் ஆற்றல் பெறாத (பிறருக்குச்) சொந்தமாக்கப்பட்ட ஒரு அடிமையையும், நம்மிடமிருந்து அழகான சம்பத்தை நாம் அவருக்கு நல்கியவரையும் (ஆகிய இருவரை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான், (சம்பத்துக்கள் நல்கப்பட்ட) அவர் அவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (தர்மமாகச்) செலவு செய்து வருகிறார், இ(வ்விரு நிலையுடைய)வர்கள் சமமாவார்களா? (சமமாக மாட்டார்கள்.) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன, எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
Allah presents an example: a slave [who is] owned and unable to do a thing and he to whom We have provided from Us good provision, so he spends from it secretly and publicly. Can they be equal? Praise to Allah! But most of them do not know.
மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், இரு மனிதரை (மற்றொரு) உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்: அதிலொருவர் ஊமை(யான அடிமை); ஏதும் செய்ய சக்தியற்றவர். அவர் தன் எஜமானருக்குச் சுமையாக இருக்கிறார். அவரை எங்கு அனுப்பியபோதிலும் (தீங்கைத் தவிர) நன்மை எதையும் அவர் செய்வதில்லை. மற்றொருவரோ (நல்லதை அறிந்து) நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தையே ஏவுகிறார். இவருக்கு (ஊமையாகிய) அவர் சமமாவாரா?
IFT
அல்லாஹ் இன்னும் ஓர் உதாரணத்தைக் கூறுகின்றான். இரண்டு மனிதர்கள் இருக்கின்றனர். ஒருவர் ஊமை. எந்த வேலையும் செய்ய இயலாத அவர் தன் எஜமானருக்கு ஒரு சுமையாகவும் இருக்கின்றார். எஜமானர் அவரை எங்கு அனுப்பினாலும் எந்தப் பயனுள்ள வேலையையும் செய்யமாட்டார். மற்றொருவர் நேரான வழியில் இருக்கின்றார்; நீதியுடன் வாழுமாறு ஏவுகின்றார். (கூறுங்கள்) இவ்விருவரும் சமமாவார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இரு மனிதரை அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான், அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை) எதன் மீதும் சக்தி பெற மாட்டான், இன்னும் அவன் தன் எஜமானனுக்குச் சுமையாகவும் இருக்கிறான், (எஜமானாகிய) அவன், அவனை எங்கு அனுப்பிய போதிலும் யாதொரு நன்மையையும் அவன் கொண்டுவர மாட்டான். அவனும், நேரான வழியில் தானும் இருந்துகொண்டு (பிறருக்கு) நீதத்தையே ஏவிக் கொண்டுமிருப்பவனும் சமமாவானா?
Saheeh International
And Allah presents an example of two men, one of them dumb and unable to do a thing, while he is a burden to his guardian. Wherever he directs him, he brings no good. Is he equal to one who commands justice, while he is on a straight path?
மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேளையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலும் உள்ள ரகசியம் அல்லாஹ்வுக்கே சொந்தம். (அதை மற்றெவரும் அறிய மாட்டார்கள்.) ஆகவே உலக முடிவு, இமை மூடி விழிப்பதைப்போல் அல்லது அதைவிட விரைவாகவே முடிந்துவிடும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன் ஆவான்.
IFT
மேலும், வானங்கள் மற்றும் பூமியின் மறைவான உண்மைகளைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. மேலும், இறுதிநாள் நிகழ்வதற்கு அதிக நேரம் தேவையில்லை. கண் சிமிட்டும் நேரம், ஏன் அதைவிடவும் குறைந்த நேரம் போதுமானதாகும். உண்மை யாதெனில், அல்லாஹ் அனைத்தையும் செய்வதற்குப் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானங்கள் மற்றும் பூமியினுடைய மறைவானது அல்லாஹ்வுக்கே உரியதாகும், ஆகவே, மறுமையில் காரியம் இமை கொட்டி விழிப்பதைப்போல், அல்லது அதைவிட மிகச் சமீபமாகவே தவிர இல்லை, நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
And to Allah belongs the unseen [aspects] of the heavens and the earth. And the command for the Hour is not but as a glance of the eye or even nearer. Indeed, Allah is over all things competent.
உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். மேலும், உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், இதயங்களையும் (அறிவையும்) கொடுத்தவன் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
IFT
அல்லாஹ் உங்களை உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து வெளிக்கொணர்ந்தான் நீங்கள் ஏதும் அறியாத நிலையில்! மேலும், செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், சிந்திக்கும் இதயங்களையும் உங்களுக்கு வழங்கினான் நீங்கள் நன்றி செலுத்தக் கூடியவர்களாய்த் திகழ வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் தான் ஒன்றையுமே, நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்களுடைய தாய்மார்களின் வயிறுகளிலிருந்து உங்களை வெளிப்படுத்தினான், அன்றியும் உங்களுக்கு செவிப் புலனையும் பார்வைகளையும் இதயங்களையும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவதற்காக ஆக்கியுள்ளான்.
Saheeh International
And Allah has extracted you from the wombs of your mothers not knowing a thing, and He made for you hearing and vision and hearts [i.e., intellect] that perhaps you would be grateful.
வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
ஆகாயத்தில் (பறந்து) செல்லும் பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) மிதந்தவையாக நிற்க வைப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒருவருமில்லை. நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
இவர்கள் பறவைகளைக் கவனித்ததில்லையா? அவை விண் வெளியில் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன? அல்லாஹ்வைத் தவிர அவற்றைத் தாங்கிக் கொண்டிருப்பவன் வேறு யார்? நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு திண்ணமாக, இதில் பல சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானவெளியில், (அல்லாஹ்வின் கட்டளைக்குக்) கட்டுப் பட்டவையாக (பறந்து செல்லும்) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர (வேறொருவரும்) அவற்றை தடுத்து நிறுத்தவில்லை. நிச்சயமாக, விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்கு இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
Do they not see the birds controlled in the atmosphere of the sky? None holds them up except Allah. Indeed in that are signs for a people who believe.
அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்; உங்கள் பிரயாண நாட்களிலும் (ஊரில்) நீங்கள் தங்கும் நாட்களிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான். வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகையின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் அமைத்துத் தந்திருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான். கால்நடைகளின் தோல்களை நீங்கள் வீடுகளாக அமைக்க (வசதியான விதத்தில்) உங்களுக்காக அவன் படைத்திருக்கிறான். அது நீங்கள் பிரயாணம் போகும் சமயத்திலும், ஓர் இடத்தில் தங்குகின்ற சமயத்திலும் எளிதில் சுமந்து செல்லக்கூடியதாக இருக்கிறது. (ஆடைபோன்ற) பற்பல பொருள்களை தயாரிப்பதற்கு அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம் (வெள்ளாட்டின்) முடி ஆகியவற்றையும் (அவன் உங்களுக்காக படைத்திருக்கிறான். அந்த பொருள்கள்) ஒரு காலம்வரை உங்களுக்கு பயன்படுகின்றன.
IFT
மேலும், அல்லாஹ் உங்களுக்காக உங்கள் வீடுகளை அமைதியளிக்கும் இடங்களாக ஆக்கினான். மேலும், கால் நடைகளின் தோல்களின் மூலம் உங்களுக்கு எத்தகைய வீடுகளை உருவாக்கினானென்றால், நீங்கள் பயணம் செல்லும்போதும் அல்லது தங்கிவிடும் போதும் அவற்றை இலேசாகக் காண்கின்றீர்கள். மேலும், கால்நடைகளின் குறுமென் மயிர், முடி, ரோமம் ஆகியவற்றின் மூலம் (அணிவதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் உரிய) ஏராளமான பொருள்களை அவன் படைத்தான். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவை உங்களுக்குப் பயன்படுகின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் உங்கள் வீடுகளை உங்களுக்கு அமைதி தரும் இடமாக அமைத்துள்ளான், உங்கள் பிரயாண நாளிலும், உங்களுடைய (ஊரில் நீங்கள்) தங்கும் நாளிலும் எளிதாக அவற்றைப் பயன்படுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால் நடைகளின் தோல்களிலிருந்தும் உங்களுக்கு (கூடாரங்களாக உபயோகிக்கும்) வீடுகளையும் அவன் ஆக்கினான், அவற்றில் செம்மறியாட்டின் கதகதப்பான உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு ஆடைகளை (அதை விற்று அதன் மூலம் சாதனங்களை)யும் குறிப்பிட்ட காலம் வரை சுகத்தையும் (அவற்றில் அல்லாஹ் அமைத்துத் தந்திருக்கிறான்.)
Saheeh International
And Allah has made for you from your homes a place of rest and made for you from the hides of the animals tents which you find light on your day of travel and your day of encampment; and from their wool, fur and hair is furnishing and enjoyment [i.e., provision] for a time.
இன்னும் அல்லாஹ் தான் படைத்துள்ளவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களையும் ஏற்படுத்தினான்; மலைகளிலிருந்து உங்களுக்கு(த் தங்குமிடங்களாக) குகைகளையும் ஏற்படுத்தினான்; இன்னும் வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டைகளையும் உங்களுடைய போரில் உங்களை பாதுகாக்கக்கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான்; நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பதற்காக, இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் படைத்திருப்பவற்றில் நிழல் தரக்கூடியவற்றையும் உங்களுக்காக அமைத்திருக்கிறான். மலை(க் குகை)களில் உங்களுக்குத் தங்குமிடங்களையும் அமைத்தான். வெப்பத்தையும் (குளிரையும்) உங்களுக்குத் தடுக்கக்கூடிய சட்டைகளையும், (கத்தி, அம்பு போன்ற) ஆயுதங்களைத் தடுக்கக்கூடிய கேடயங்(கள் செய்யக்கூடிய பொருள்)களையும் அவனே உங்களுக்காக அமைத்தான். அவன் தன் அருளை இவ்வாறே உங்கள் மீது முழுமையாக்குகிறான். (இதற்காக) நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக!
IFT
மேலும், அல்லாஹ்தான் படைத்துள்ள பொருள்களின் மூலம் உங்களுக்காக நிழல்களை அமைத்துத் தந்தான். மலைகளில் உங்களுக்காகப் புகலிடங்களை அமைத்தான். வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ஆடைகளையும் (நீங்கள் போர் புரியும்போது) உங்களைப் பாதுகாக்கும் கவச ஆடைகளையும் உங்களுக்கு வழங்கினான். இவ்வாறு தன் அருட்கொடைகளை உங்கள் மீது நிறைவு செய்கின்றான். இதனால் நீங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாய் திகழக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் தான் படைத்திருப்பவைகளிலிருந்து உங்களுக்கு நிழல் (தரக்கூடியவை)களையும் ஆக்கியிருக்கிறான், மலைகளில் உங்களுக்கு (தங்குமிடங்களாக) குகைகளையும் அவன் ஆக்கியிருக்கிறான், வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கக்கூடிய சட்டைகளையும், உங்களுடைய போரில் உங்களைக் காக்கக்கூடிய (கவசங்களையும் உருக்குச்) சட்டைகளையும் உங்களுக்காக அவனே ஆக்கியிருக்கிறான், (நீங்கள் அவனுக்கு) முற்றிலும் கீழ்படிந்து நடப்பதற்காக இவ்வாறு அவன் தன் அருளை உங்கள் மீது பூர்த்தியாக்கி இருக்கிறான்.
Saheeh International
And Allah has made for you, from that which He has created, shadows [i.e., shade] and has made for you from the mountains, shelters and has made for you garments which protect you from the heat and garments [i.e., coats of mail] which protect you from your [enemy in] battle. Thus does He complete His favor upon you that you might submit [to Him].
Fப இன் தவல்லவ் Fப இன்னமா 'அலய்கல் Bபலாகுல் முBபீன்
முஹம்மது ஜான்
எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, நபியே!) அவர்கள் (உம்மைப்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால் நம்) தூதை (அவர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் உம்மீதும் கடமையாகும்.
IFT
இனி இவர்கள் புறக்கணித்தால் (நபியே! சத்தியத்தை) இவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர உம்மீது வேறெந்தப் பொறுப்பும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே! அவர்கள் (உம்மைப்) புறக்கணித்தால் (நீர் கவலைப்படாதீர், ஏனென்றால்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (தூதை) தெளிவாகச் சேர்ப்பிப்பது தான்.
Saheeh International
But if they turn away, [O Muhammad] - then only upon you is [responsibility for] clear notification.
அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நன்றாக அறிகிறார்கள்; பின்னர் அதனை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் (இத்தகைய) அருட்கொடையை அவர்கள் நன்கறிந்த பின்னரும் அதை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்.
IFT
இவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் புரிந்து கொள்கின்றார்கள். பிறகு அவற்றை மறுக்கின்றார்கள். மேலும், இவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை ஏற்கத் தயாராய் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் (இத்தகைய) அருட்கொடையை அவர்கள் நன்றாக அறிகின்றனர், பின்னர் அதனை அவர்கள் நிராகரிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் (நன்றி கெட்ட) காஃபிர்களாகவே இருக்கின்றனர்.
Saheeh International
They recognize the favor of Allah; then they deny it. And most of them are disbelievers.
وَيَوْمَநாளில்نَـبْعَثُஎழுப்புவோம்مِنْஇருந்துكُلِّஒவ்வொருاُمَّةٍசமுதாயம்شَهِيْدًاஒரு சாட்சியாளரைثُمَّபிறகுلَا يُؤْذَنُஅனுமதிக்கப்படாதுلِلَّذِيْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தனர்وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَஇன்னும் அவர்கள் காரணம் கேட்கப் பட மாட்டார்கள்
வ யவ்ம னBப்'அது மின் குல்லி உம்மதின் ஷஹீதன் தும்ம லா யு'தனு லில்லதீன கFபரூ வலா ஹும் யுஸ்தஃதBபூன்
முஹம்மது ஜான்
ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் (நாளை நினைவூட்டுவீராக; அந்)நாளில் நிராகரிப்பவர்களுக்கு(ப் புகல் கூறுவதற்கு) அனுமதி வழங்கப்படமாட்டாது; (அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதை செய்து, அவ்வேளை தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளவும்) இடங்கொடுக்கப்பட மாட்டாது.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு வகுப்பாரிடமும் (நாம் அனுப்பிய நம் தூதரை, அவர்களுக்குச்) சாட்சியாக நாம் அழைக்கின்ற (நாளை நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. அந்)நாளில் (அத்தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசுவதற்கு) அனுமதி கொடுக்கப்படமாட்டாது. அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லவும் வழியிராது.
IFT
(மறுமைநாளில் என்ன நடக்கும் என்பது பற்றி அவர்கள் சிந்தித்திருக்கின்றார்களா?) அந்நாளில் நாம் ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியாளரை எழுப்பிக் கொண்டு வருவோம். பிறகு (தம் வாதங்களைச் சமர்ப்பிக்க) நிராகரிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவும் மாட்டாது. (இறைவனிடம் மன்னிப்புக் கோரி) அவனிடம் மீளும்படி அவர்களிடம் கோரப்படவும் மாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் (அவர்களுக்கு) சாட்சியாளரை நாம் எழுப்பும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) பின்னர் நிராகரித்தோருக்கு (ஏதும் பேச) அனுமதியளிக்கப்பட மாட்டாது, (அவர்களின் இரட்சகனைத் திருப்திப் படுத்தும் எச்செயலையும் செய்ய) அவர்கள் சிரமப் படுத்தப்படவும் மாட்டார்கள்.
Saheeh International
And [mention] the Day when We will resurrect from every nation a witness [i.e., their prophet]. Then it will not be permitted to the disbelievers [to apologize or make excuses], nor will they be asked to appease [Allah].
அக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்கூடாகப்) பார்க்கும்போது, (தம் வேதனையைக் குறைக்குமாறு எவ்வளவு வேண்டினாலும்) அவர்களுக்கு (வேதனை) இலேசாக்கவும் பட மாட்டாது; அன்றியும் (அவ்வேதனை பெறுவதில்) அவர்கள் தாமதப் படுத்தபடவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்ணால்) கண்ட பிறகு (அவர்கள் என்ன புகல் கூறியபோதிலும்) அவர்களுக்கு (வேதனை) குறைக்கப்படமாட்டாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படவும் மாட்டாது.
IFT
அநீதி இழைத்தவர்கள் வேதனையைக் கண் கூடாகக் கண்டுகொண்ட பிறகு அவர்களை விட்டு வேதனை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது. (ஒரு விநாடிகூட) அவர்கள் தாமதப்படுத்தப்படவும் மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அநியாயம் செய்தார்களே அவர்கள் (மறுமையில்) வேதனையைக் கண்டுவிட்டால் அவர்களைவிட்டும் அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது, அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள், (துரிதமாக அவர்களை நரகில் சேர்க்கப்படும்).
Saheeh International
And when those who wronged see the punishment, it will not be lightened for them, nor will they be reprieved.
இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் “எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு (அந்தத் தெய்வங்கள், “நாங்கள் தெய்வங்களல்ல) நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களே” என்னும் சொல்லை அவர்கள் மீது வீசும்.
அப்துல் ஹமீது பாகவி
இணைவைத்து வணங்குகின்ற இவர்கள் தாங்கள் இணையாக்கிய (பொய்) தெய்வங்களை (மறுமையில்) கண்டால் (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! உன்னைத் தவிர தெய்வங்கள் என்று நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்'' என்று கூறுவார்கள். அதற்கு அவை இவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்; (நாங்கள் தெய்வங்களல்ல)'' என்று கூறும்.
IFT
மேலும் (உலகில்) இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்களுடைய போலிக்கடவுள்களைக் காணும்போது “எங்கள் இறைவனே! நாங்கள் உன்னைவிட்டு எவர்களை அழைத்து இறைஞ்சிக் கொண்டிருந்தோமோ அந்தக் கடவுள்கள் இவர்கள்தாம்!” என்று கூறுவார்கள். அதற்கு அக்கடவுள்கள், “நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள்!” என்று அவர்களிடம் தெளிவாகப் பதில் கூறும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இணைவைத்துக் கொண்டிருந்தோர் தாங்கள் இணையாக்கியவர்களை (மறுமையில்) கண்டால் (அல்லாஹ்விடம்) “எங்கள் இரட்சகனே! உன்னையன்றி (வணக்கத்திற்குரியவர்கள் என்று நாங்கள் அழைத்து (வணங்கி) வந்தோமே அத்தகைய எங்களுடைய இணையாளர்கள் இவர்கள்தான்” என்று கூறுவார்கள், அப்போது அவர்கள் நிச்சயமாக நீங்கள் பொய்யர்கள் (நாங்கள் வணக்கத்திற்குரியவர்களல்லர்) என்ற கூற்றை அவர்கள்பால் போடுவர்.
Saheeh International
And when those who associated others with Allah see their "partners," they will say, "Our Lord, these are our partners [to You] whom we used to invoke [in worship] besides You." But they will throw at them the statement, "Indeed, you are liars."
இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்கள்; பின்னர் இவர்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்தவையெல்லாம் இவர்களை(க் கை) விட்டும் மறைந்து விடும்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், இவர்கள் பொய்யாக (தெய்வங்கள் என்று) கூறிக் கொண்டு இருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து விடும். அந்நாளில் இவர்கள் அல்லாஹ்வை நோக்கி (உனக்கு) முற்றிலும் வழிப்படுவோம் என்று கூறுவார்கள்.
IFT
அவ்வேளை இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் திருமுன் சரணடைந்து விடுவார்கள். (உலகில்) இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்தவை யாவும் இவர்களை விட்டு அடியோடு காணாமல் போய் விடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (அந்நாளில்) இவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து விடுவதை எடுத்து வைப்பார்கள், பின்னர், இவர்கள் (பொய்யாகக்) கற்பனை செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும், விசுவாசங்கொண்ட சமூகத்தார்க்கு இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
And they will impart to Allah that Day [their] submission, and lost from them is what they used to invent.
எவர்கள் நிராகரித்துக் கொண்டும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும், மறுமையையும்) நிராகரித்து அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் தடுத்து (விஷமம் செய்து) கொண்டிருந்த இவர்களுக்கு, இவர்களுடைய விஷமத்தின் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக் கொண்டேயிருப்போம்.
IFT
எவர்கள் தாங்களும் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டு, மற்றவர்களையும் அல்லாஹ்வின் வழியில் செல்ல விடாமல் தடுக்கின்றார்களோ அவர்களுக்கு நாம் வேதனைக்கு மேல் வேதனையை அளிப் போம் உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த குழப்பங்களுக்குப் பகரமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரித்து அல்லாஹ்வுடைய பாதையை விட்டு தடுத்துக் கொண்டுமிருந்தார்களே! அத்தகையோர் - அவர்கள் குழப்பம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு நாம் அதிகப்படுத்துவோம்.
Saheeh International
Those who disbelieved and averted [others] from the way of Allah - We will increase them in punishment over [their] punishment for what corruption they were causing.
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவர்களில் இருந்தே (அவர்களிடம் வந்த நபியை) சாட்சியாக நாம் அழைக்கின்ற நாளில், உம்மை (உமக்கு முன் இருக்கும்) இவர்களுக்குச் சாட்சியாகக் கொண்டுவருவோம். (நபியே!) ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக விவரிக்கக்கூடிய இவ்வேதத்தை நாம்தான் உம்மீது இறக்கி இருக்கிறோம். இது நேரான வழியாகவும், அருளாகவும் இருப்பதுடன் (எனக்கு) முற்றிலும் பணிந்து கட்டுப்படுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது.
IFT
(நபியே! மறுமை நாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்து விடும்:) அந்நாளில் ஒவ்வொரு சமூகத்திலேயும் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடிய ஒருவரை அவர்களிலிருந்தே நாம் எழுப்புவோம். மேலும், இந்த மக்களைக் குறித்து சாட்சி வழங்க உம்மை நாம் கொண்டு வருவோம். (இவ்வாறு சாட்சி அளிப்பதற்கான முன்னேற்பாடாகத்தான்) உமக்கு இவ்வேதத்தை நாம் இறக்கியருளியுள்ளோம். அது, யாவற்றையும் மிகத் தெளிவாக விவரிக்கக்கூடியதாய் இருக்கிறது. முற்றிலும் (இறைவனுக்கு) கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு இது நேர்வழி காட்டக்கூடியதாகவும், அருளாகவும், ஒரு நற்செய்தியாகவும் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) ஒவ்வொரு சமூதாயத்தினரிலும் அவர்களின் மீது ஒரு சாட்சியாளரை அவர்களிலிருந்தே நாம் எழுப்பும்நாளில், உம்மையும் (உம் சமூகத்தாராகிய) இவர்கள் மீது சாட்சியாளராக நாம் கொண்டு வருவோம், (நபியே!) ஒவ்வொரு விஷயத்திற்கும் தெளிவாகவும் நேர்வழியாகவும், அருளாகவும், முற்றிலும் தங்களை இரட்சகனிடம் ஒப்படைத்து விட்டவர்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.
Saheeh International
And [mention] the Day when We will resurrect among every nation a witness over them from themselves [i.e., their prophet]. And We will bring you, [O Muhammad], as a witness over these [i.e., your nation]. And We have sent down to you the Book as clarification for all things and as guidance and mercy and good tidings for the Muslims.
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், பாவம், அநியாயம் ஆகியவற்றிலிருந்து (உங்களை) அவன் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவன் உங்களுக்கு (இப்படி) நல்லுபதேசம் செய்கிறான்.
IFT
திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளை யிடுகின்றான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, மற்றும் அக்கிரமமான செயல்களை விலக்குகின்றான். நீங்கள் படிப்பினை பெறும் பொருட்டு உங்களுக்கு அறிவுரை கூறுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே!) நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு (பொருளை)க் கொடுக்குமாறும் (உங்களை) ஏவுகிறான், மேலும், மானக்கேடான காரியங்கள் (மார்க்கத்தில்) மறுக்கப்பட்டவை வரம்பு மீறுதல் ஆகியவற்றை விட்டும், (உங்களை)அவன் விலக்குகிறான், (இவைகளை) நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்காக அவன் உங்களுக்கு உபதேசிக்கிறான்.
Saheeh International
Indeed, Allah orders justice and good conduct and giving [help] to relatives and forbids immorality and bad conduct and oppression. He admonishes you that perhaps you will be reminded.
இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதை உறுதிப்படுத்திய பின்னர், அந்தச் சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிவான்.
IFT
(அல்லாஹ்விடம்) நீங்கள் ஒப்பந்தம் ஏதும் செய்திருந்தால் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! உங்களுடைய சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர் முறிக்காதீர்கள்! ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வை உங்களுக்குச் சாட்சியாக்கியுள்ளீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நீங்கள் உங்களுக்கு மத்தியில் உடன்படிக்கை செய்து கொண்டால் அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள், சத்தியங்களை அவற்றை உறுதிப்படுத்திய பின்னர், உங்கள்மீது (அவற்றுக்கு) அல்லாஹ்வை பொறுப்பாகவும் நீங்கள் ஆக்கியிருக்க நீங்கள் துண்டித்தும் விடாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிவான்.
Saheeh International
And fulfill the covenant of Allah when you have taken it, [O believers], and do not break oaths after their confirmation while you have made Allah, over you, a security [i.e., witness]. Indeed, Allah knows what you do.
நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில் மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் - அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள்; ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான். இன்னும் நீங்கள் எ(வ் விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, (அதனை) அவன் உங்களுக்கு கியாமநாளில் நிச்சயமாகத் தெளிவாக்குவான்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே! உறுதிப்படுத்திய சத்தியத்தை முறித்து) நீங்கள் ஒரு பெண்ணுக்கு ஒப்பாகிவிட வேண்டாம். அவள் மிக சிரமப்பட்டு நூற்ற நூலை, தானே பிரித்து துண்டு துண்டாக்கி விடுகிறாள். மேலும், ஒரு வகுப்பாரைவிட மற்றொரு வகுப்பார் பலம் வாய்ந்தவர்களாக ஆகவும் உங்கள் சத்தியத்தைக் காரணமாக்கிக் கொள்ளாதீர்கள். இவ்விஷயத்தில் (நீங்கள் சரியாக நடக்கிறீர்களா இல்லையா? என்று) நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிக்கிறான். தவிர, நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றையும் மறுமை நாளில் அவன் உங்களுக்குத் தெளிவாக விவரித்துக் காண்பிப்பான்.
IFT
(சத்தியத்தை முறிப்பதன் மூலம்) உங்கள் நிலை, தானே சிரமப்பட்டு நூலை நூற்று பிறகு அதனைத் துண்டு துண்டாக்கி விட்டாளே, அத்தகைய பெண்ணின் நிலை போன்று ஆகிவிடக்கூடாது. (உங்களில்) ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை விட அதிக ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக, உங்கள் விவகாரங்களில் உங்கள் சத்தியங்களை ஏமாற்றும் ஆயுதமாக ஆக்கிக் கொள்கின்றீர்கள். உண்மையில் அல்லாஹ் இத்தகைய சத்தியங்களின் மூலம் உங்களைச் சோதிக்கின்றான். மேலும், நீங்கள் எவற்றில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ, அவற்றின் எதார்த்த நிலையை மறுமைநாளில் திண்ணமாக, உங்களுக்குத் தெளிவாக்கிவிடுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே! உறுதிப்படுத்திய உடன்படிக்கைகளையும் சத்தியங்களையும் துண்டிக்கும் விஷயத்தில்) தான் உறுதியாக நெய்தபின் அவன் நெய்ததை பல துண்டுகளாக்கி விட்டவனைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம், (அன்றி) ஒரு வகுப்பாரை விட மற்றொரு வகுப்பார் எண்ணிக்கையில் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால், உங்கள் சத்தியங்களை ஏமாற்றி மோசடியாக உங்களுக்கிடையில் எடுத்து (ஆக்கி)க் கொள்கிறீர்கள்; அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதைக் கொண்டுதான், இன்னும், எதில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதை மறுமைநாளில் நிச்சயமாக அவன் உங்களுக்குத் தெளிவாக்குவான்.
Saheeh International
And do not be like she who untwisted her spun thread after it was strong [by] taking your oaths as [means of] deceit between you because one community is more plentiful [in number or wealth] than another community. Allah only tries you thereby. And He will surely make clear to you on the Day of Resurrection that over which you used to differ.
மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் - இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பினராக ஆக்கியிருப்பான். எனினும், (இறைவன்) தான் நாடியவர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அவன் விட்டுவிடுகிறான். தான் நாடியவர்களை (அவர்களின் நற்செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்துகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்த செயல்களைப் பற்றி நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) கேள்வி கேட்கப்படுவீர்கள்.
IFT
(உங்களிடையே கருத்து வேறுபாடுகளே இருக்கக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே சமூகமாக ஆக்கியிருப்பான். ஆயினும், தான் நாடுவோரை அவன் வழிபிறழச் செய்கின்றான், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். மேலும், உங்களுடைய செயல்கள் குறித்து உங்களிடம் திண்ணமாக கேள்வி கணக்கு கேட்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே (மார்க்கத்தைக் கொண்ட) சமுதாயத்தினராக ஆக்கி இருப்பான், எனினும், தான் நாடியவர்களை தவறான வழியில் அவன் விட்டு விடுகிறான், இன்னும், தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான், மேலும், நீங்கள் செய்துகொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக நீங்கள் மறுமையில் கேட்கப்படுவீர்கள்.
Saheeh International
And if Allah had willed, He could have made you [of] one religion, but He sends astray whom He wills and guides whom He wills. And you will surely be questioned about what you used to do.
நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்குள் நீங்கள் (விஷமம் செய்வதற்காக) உங்கள் சத்தியத்தைக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் நிலைபெற்ற (உங்கள்) பாதம் பெயர்ந்து உறுதி குலைந்துவிடும். தவிர, (சத்தியத்தை முறிப்பதினால்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்துக் கொள்வதன் காரணமாக பல துன்பங்களையும் நீங்கள் அனுபவிக்கும்படி நேரிடும். கடுமையான வேதனையும் உங்களுக்குக் கிடைக்கும்.
IFT
(முஸ்லிம்களே!) உங்களுடைய சத்தியங்களை உங்களில் ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதற்குரிய கருவியாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அப்படி நீங்கள் செய்தால் உறுதியுடனிருக்கும் பாதம்கூட பிறகு சறுகிப்போய்விடும்; மேலும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து பிற மக்களை நீங்கள் தடுத்தீர்கள் என்பதால் தீயவிளைவைச் சுவைப்பீர்கள். கடுமையான தண்டனையும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் உங்களுடைய சத்தியங்களை உங்களுக்கிடையே மோசடியாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், (அவ்வாறு செய்தால் உங்களுடைய) பாதம் - அது நிலை பெற்றபின் சறுகிவிடும், அன்றியும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் (மக்களை) தடுத்ததன் காரணமாக (இம்மையில் பெரும்) துன்பத்தை நீங்கள் சுவைத்து விடுவீர்கள், (மறுமையில்) உங்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.
Saheeh International
And do not take your oaths as [means of] deceit between you, lest a foot slip after it was [once] firm, and you would taste evil [in this world] for what [people] you diverted from the way of Allah, and you would have [in the Hereafter] a great punishment.
வ லா தஷ்தரூ Bபி 'அஹ்தில் லாஹி தமனன் கலீலா; இன்னமா 'இன்தல் லாஹி ஹுவ கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
முஹம்மது ஜான்
இன்னும், அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை அற்ப விலைக்கு நீங்கள் விற்று விடாதீர்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை ஒரு சொற்ப விலைக்கு நீங்கள் விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும்.
IFT
நீங்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அற்ப ஆதாயங்களுக்காக விற்றுவிடாதீர்கள்! நீங்கள் அறிவுடையோராய் இருப்பின் அல்லாஹ்விடம் இருப்பவைதாம் உங்களுக்கு மிகச்சிறந்தவையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுடைய வாக்குறுதிக்குப் பகரமாக சொற்பக் கிரயத்தை நீங்கள் வாங்கிக்கொள்ளாதீர்கள், நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்விடம் இருப்பது – அதுதான் உங்களுக்கு மிகவும் நன்மையானதாக இருக்கும்.
Saheeh International
And do not exchange the covenant of Allah for a small price. Indeed, what is with Allah is best for you, if only you could know.
உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் - எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களிடமுள்ள (பொருள்கள்) அனைத்தும் செலவழிந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ (என்றென்றும்) நிலையாக இருக்கும். எவர்கள் (கஷ்டங்களை) உறுதியாகச் சகித்துக் கொண்டார்களோ அவர்கள் (செய்யும் பல நற்காரியங்களுக்கு அவர்கள்) செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.
IFT
உங்களிடம் இருப்பவையெல்லாம் செலவழிந்து போகக்கூடியவையே! அல்லாஹ்விடத்தில் உள்ளவைதாம் என்றைக்கும் நிலைத்திருப்பவை! மேலும், எவர்கள் பொறுமையைக் கைக்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்கின்ற உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களிடமுள்ளவை (யாவும்) தீர்ந்துவிடும், அல்லாஹ்விடம் உள்ளதோ நிலைத்திருக்கும், பொறுமையைக் கடைப்பிடித்தோர்க்கு – அவர்களுடைய கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகானதைக் கொண்டு திண்ணமாக நாம் வழங்குவோம்.
Saheeh International
Whatever you have will end, but what Allah has is lasting. And We will surely give those who were patient their reward according to the best of what they used to do.
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம். மேலும், (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.
IFT
ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) தூய வாழ்வு வாழச் செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோர்க்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆண் அல்லது பெண் - அவர் விசுவாசஙகொண்டவராக இருக்க யார் நற்செயலைச் செய்தாரோ, நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம், இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம்.
Saheeh International
Whoever does righteousness, whether male or female, while he is a believer - We will surely cause him to live a good life, and We will surely give them their reward [in the Hereafter] according to the best of what they used to do.
எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார்களோ அவர்களிடத்தில் நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு ஓர் அதிகாரமும் இல்லை.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்டு தம்முடைய இறைவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்களோ அவர்கள் மீது ஷைத்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் - விசுவாசங்கொண்டு (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) தங்கள் இரட்சகனின் மீது நம்பிக்கையும் வைத்திருக்கிறார்களே அத்தகையவர்களின் மீது (ஷைத்தானாகிய) அவனுக்கு எவ்வித அதிகாரமுமில்லை.
Saheeh International
Indeed, there is for him no authority over those who have believed and rely upon their Lord.
திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அல்லாஹ்வுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்).
அப்துல் ஹமீது பாகவி
அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் சம்பந்தம் வைப்பவர்களிடமும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களிடமுமே செல்லும்.
IFT
எவர்கள் அவனைத் தங்களுடைய ஆதரவாளனாக ஏற்றுக் கொண்டு மேலும் (அவனுடைய தூண்டுதலினால்) அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ, அவர்களிடமே அவனுடைய அதிகாரம் செல்லுபடியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுடைய அதிகாரமெல்லாம், அவனை நண்பராக எடுத்துக் கொள்கிறார்களே அத்தகையவர்கள் மீதும், அவனால் இணை வைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களே அத்தகையவர்களின் மீதும்தான்.
Saheeh International
His authority is only over those who take him as an ally and those who through him associate others with Allah.
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘நிச்சயமாக நீர் பொய்யர்'' என்று கூறுகின்றனர். எ(ந்த நேரத்தில் எந்தக் கட்டளையை, எந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள்.
IFT
ஒரு வசனத்திற்குப் பகரமாக வேறொரு வசனத்தை நாம் இறக்கியருளினால் எதை இறக்கியருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாவான். அப்போது இந்த மக்கள், “(இந்தக் குர்ஆனை) நீர்தான் புனைந்துரைக்கின்றீர்!” என்று கூறுகின்றார்கள். உண்மை யாதெனில், அவர்களில் பெரும் பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் நாம் மாற்றினால் - அல்லாஹ்வோ தான் இறக்கி வைப்பதை நன்கு அறிந்தவன் – (இந்நிலையில்) இவர்கள் “நிச்சயமாக இட்டுக்கட்டுபவர்தான்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகின்றனர், என்றாலும் இவர்களில் பெரும்பாலோர் (உண்மையை) அறியமாட்டார்கள்.
Saheeh International
And when We substitute a verse in place of a verse - and Allah is most knowing of what He sends down - they say, "You, [O Muhammad], are but an inventor [of lies]." But most of them do not know.
(நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே இதை உமது இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்' (என்னும் ஜிப்ரயீல்)தான் இறக்கி வைத்தார் என்று (நபியே!) கூறுவீராக!. (இந்த குர்ஆன் இறைவனுக்கு) நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களுக்கு நேரான வழியாகவும் நற்செய்தியாகவும் இருக்கிறது.
IFT
இவர்களிடம் கூறுவீராக: “என் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குத்ஸ்’* முற்றிலும் சரியாக இதனைச் சிறுகச் சிறுக இறக்கி வைத்தார்; இறைநம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது உறுதிப் படுத்த வேண்டும்; மேலும், இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்கு, அவர்களின் வாழ்க்கை விவகாரங்களில் நேர்வழி காட்டவும் வேண்டும்; மேலும், வெற்றி, நற்பேறு பற்றி நற்செய்தி அறிவிக்கவும் வேண்டும் என்பதற்காக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“விசுவாசங்கொண்டோரை உறுதிப் படுத்துவதற்காகவும், முற்றிலும் கீழ்ப்படிந்து நடப்போருக்கு நேர் வழியாகவும், நன்மாராயமாகவும், இருப்பதற்காக உண்மையைக் கொண்டு இதனை உமதிரட்சகனிடமிருந்து ‘ரூஹுல் குத்ஸ்’ (என்னும் ஜிப்ரீல்) இறக்கி வைத்தார்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, [O Muhammad], "The Pure Spirit [i.e., Gabriel] has brought it down from your Lord in truth to make firm those who believe and as guidance and good tidings to the Muslims."
“நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ‘‘இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உமக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்கவில்லை)'' என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவன் (உமக்குக்) கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. (ஆகவே, அவர்கள் கூறுவது சரியன்று.)
IFT
மேலும், “ஒரு மனிதரே இதனை அவருக்கு கற்றுக் கொடுக்கின்றார்” என்று இவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறு வதைத் திண்ணமாக நாம் அறிவோம். ஆனால் உண்மையில் இவர்கள் சுட்டிக் காட்டுகின்ற மனிதருடைய மொழி வேற்று மொழி; இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவருக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் ஒரு மனிதர்தான் என்று அவர்கள் கூறுவதையும் நிச்சயமாக நாம் அறிவோம், எவர்பால் (கற்றுத்தந்ததாக) இணைத்துக்கூறுகிறார்களோ அவருடைய மொழி அரபி அல்லாத மொழியாகும், ஆனால், இவ்வேதமோ மிகத் தெளிவான அரபிமொழியாகும்.
Saheeh International
And We certainly know that they say, "It is only a human being who teaches him [i.e., the Prophet (ﷺ]." The tongue of the one they refer to is foreign, and this [recitation, i.e., Qur’an] is [in] a clear Arabic language.
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِۙஅல்லாஹ்வுடையلَاநேர்வழி செலுத்த மாட்டான்يَهْدِيْهِمُஅவர்களைاللّٰهُஅல்லாஹ்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَلِيْمٌதுன்புறுத்தக் கூடியது
இன்னல் லதீன லா யு'மினூன Bபி ஆயாதில் லாஹி லா யஹ்தீஹிமுல் லாஹு வ லஹும் 'அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை (மனமுரண்டாக) நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைதான் உண்டு.
IFT
உண்மை யாதெனில், எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக்கொள்வதில்லையோ அவர்களுக்கு நேரிய வழியை அடையும் பேற்றினை அல்லாஹ் ஒருபோதும் வழங்குவதில்லை. மேலும், அத்தகையோருக்குத் துன்புறுத்தும் வேதனைதான் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்வுடைய வசனங்களை விசுவாசிக்கவில்லையே அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் நேர் வழியில் செலுத்த மாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
Saheeh International
Indeed, those who do not believe in the verses of Allah - Allah will not guide them, and for them is a painful punishment.
எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) எவரேனும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதன் பின்னர் அவனை நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும். அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தினால் அவன் (இப்படி) நிராகரித்தால் அவன் மீது ஒரு குற்றமுமில்லை. எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இப்படி செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
IFT
எவரேனும் இறைநம்பிக்கை கொண்ட பிறகு கட்டாயத்திற்குள்ளாகி அவருடைய உள்ளம் இறைவனை ஏற்றுக் கொள்வதில் நிம்மதியுடன் இருக்கும் நிலையில் நிராகரித்தாரானால் அவர் மீது குற்றமில்லை! ஆனால் எவர் மனநிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ, அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இத்தகையவர்களுக்கு மாபெரும் வேதனையும் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர், தாம் விசுவாசங்கொண்ட பின்னர் அல்லாஹ்வை நிராகரித்து விடுகிறாரோ, (அவரின்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டு, ஆயினும்), எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி பெற்றிருக்க (நிராகரிக்குமாறு) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவரைத் தவிர, (அவர்மீது குற்றமில்லை.) எனினும், எவர் நெஞ்சத்தை நிராகரிப்பைக் கொண்டு விரிவடையச் செய்து (அதை ஏற்றுக்) கொண்டாரோ - அவர்கள் மீது அல்லாஹ்விடமிருந்துள்ள கோபம் உண்டு, அவர்களுக்கு (மறுமையில்) மகத்தான வேதனையுமுண்டு.
Saheeh International
Whoever disbelieves in [i.e., denies] Allah after his belief... except for one who is forced [to renounce his religion] while his heart is secure in faith. But those who [willingly] open their breasts to disbelief, upon them is wrath from Allah, and for them is a great punishment;
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையின் மீதுதான் நேசம் கொண்டார்கள். நிச்சயமாக, நிராகரிக்கின்ற (இத்தகைய) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான்.
IFT
இதற்குக் காரணம், இவர்கள் மறுமையைவிட உலக வாழ்க்கையை அதிகம் நேசித்தார்கள் என்பதுதான். மேலும் (அல்லாஹ்வின் நியதி என்னவெனில்) நன்றி கொல்லும் மக்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது, நிச்சயமாக அவர்கள் மறுமையயைவிட இவ்வுலக வாழ்க்கையையே நேசிக்கிறார்கள் (என்பதாலும்,) மேலும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் இத்தகைய சமூகத்தாரை நேர் வழியில் செலுத்தமாட்டான் என்ற காரணத்தினாலுமாகும்.
Saheeh International
That is because they preferred the worldly life over the Hereafter and that Allah does not guide the disbelieving people.
அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தான் (தம் இறுதி பற்றி) பாராமுக அலட்சியமாகயிருப்பவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களின் இதயங்கள் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தான் (தங்கள் தீய முடிவை) உணர்ந்து கொள்ளாதவர்கள்.
IFT
இவர்கள் எத்தகையவர்கள் எனில், இவர்களின் இதயங்கள், செவிகள் மற்றும் கண்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். மேலும், இவர்கள் மெய்மறதியில் ஆழ்ந்திருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர்தான் - அவர்களுடைய இதயங்களின் மீதும், அவர்களின் செவிப்புலன் மீதும், அவர்களின் பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான், இன்னும், அவர்கள்தாம் மறந்தவர்களாவர்.
Saheeh International
Those are the ones over whose hearts and hearing and vision Allah has sealed, and it is those who are the heedless.
இன்னும் எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல சிரமங்களையும்) சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உமது இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவன் (அவர்கள் மீது) கருணையுடையவன் ஆவான்.
IFT
ஆனால், எவர்கள் (இறைநம்பிக்கை கொண்ட காரணத்தால்) துன்புறுத்தப்பட்டபோது வீடு வாசல்களைத் துறந்து, ஹிஜ்ரத் செய்தார்களோ மேலும் இறைவழியில் துன்பங்களைச் சகித்தார்களோ, மேலும், பொறுமையைக் கடைப்பிடித்தார்களோ அவர்களைத் திண்ணமாக, உம் இறைவன் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (நபியே! பகைவர்களால் துன்புறுத்தப்பட்டதால்) சோதனைகளுக்குள்ளாக்கப்பட்ட பின் (தங்கள் இல்லங்களைத் துறந்து) ஹிஜ்ரத்துச் செய்து (வெளியேறி) பின்னர் அறப்போர் செய்து (அதனால் ஏற்படும் துன்பங்களை) பொறுத்துக் கொண்டும் (உறுதியாக) இருந்தார்களே, அவர்களுக்(கருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உம்முடைய இரட்சகன் இருக்கிறான், நிச்சயமாக உம்முடைய இரட்சகன் அதற்குப் பின் (அவர்களை) மிக்க மன்னிக்கிறவன், (அவர்கள் மீது) மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Then, indeed your Lord, to those who emigrated after they had been compelled [to say words of disbelief] and thereafter fought [for the cause of Allah] and were patient - indeed, your Lord, after that, is Forgiving and Merciful
ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வோர் ஆத்மாவும் (எவரையும் கவனியாது) தன்னைப் பற்றி (மட்டும்) பேசுவதற்காக வருகின்ற (நாளை நபியே! அவர்களுக்கு ஞாபக மூட்டுவீராக. அந்)நாளில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். (அதைக் கூட்டியோ குறைத்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
IFT
(இவை அனைத்திற்கும் அந்த மறுமைநாளில் தீர்வு ஏற்படும்) அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாப்பதற்காக வாதாடிக் கொண்டு வருவான். மேலும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செயல்களுக்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். மேலும், அவர்களில் யாருக்கும் இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு ஆத்மாவும் தன்னைப்பற்றி அது வாதாட வரும்நாளை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்ததற்குரிய (கூலியான)து பூரணமாகக் கொடுக்கப்படும், அவர்களோ அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
Saheeh International
On the Day when every soul will come disputing [i.e., pleading] for itself, and every soul will be fully compensated for what it did, and they will not be wronged [i.e., treated unjustly].
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது; ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.
அப்துல் ஹமீது பாகவி
ஓர் ஊராரை அல்லாஹ் (அவர்களுக்கு) உதாரணமாகக் கூறுகிறான். அவ்வூர் (மிக்க செழிப்பாகவும், அதிலிருந்தவர்கள்) திருப்தியோடும் அச்சமற்றும் இருந்தனர். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு திசையிலிருந்தும் தடையின்றி வந்து கொண்டிருந்தன. இந்நிலைமையில் (அவ்வூர் வாசிகள் அல்லாஹ்வை நிராகரித்து) அல்லாஹ்வுடைய அருட்கொடைகளுக்கு(ம் நன்றி செலுத்தாமல்) மாறு செய்தனர். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு உடையாக அணிவித்து அவர்கள் அதைச் சுவைக்கும்படிச் செய்தான்.
IFT
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றான். அவ்வூர் மக்கள் அமைதியுடனும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் வாழ்க்கைச் சாதனங்கள் தாராளமாய்க் கிடைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில், அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி கொல்லலாயினர். அப்போது அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருந்த தீவினைகளின் விளைவை சுவைக்கச் செய்தான் பசி, அச்சம் எனும் துன்பங்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் ஓர் ஊரை உதாரணமாகக் கூறுகிறான், அது அச்சமற்றதாக அமைதியானதாக இருந்தது, அதற்குரிய உணவு (வகைகள்) ஒவ்வொரு திசையிலிருந்தும் அதற்கு தாராளமாக வந்து கொண்டுமிருந்தது, அல்லாஹ்வுடைய அருட்கொடைகளுக்கு (நன்றி செலுத்தாமல்) அ(வ்வூரான)து மாறு செய்தது, ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அல்லாஹ் பசி பயம் என்னும் ஆடையை அதற்கு (அணிவித்து அவ்வூரார்களை)ச் சுவைக்கச் செய்தான்.
Saheeh International
And Allah presents an example: a city [i.e., Makkah] which was safe and secure, its provision coming to it in abundance from every location, but it denied the favors of Allah. So Allah made it taste the envelopment of hunger and fear for what they had been doing.
وَلَـقَدْதிட்டவட்டமாகجَآءَவந்தார்هُمْஅவர்களிடம்رَسُوْلٌஒரு தூதர்مِّنْهُمْஅவர்களிலிருந்தேفَكَذَّبُوْهُஅவர்கள் பொய்ப்பித்தனர்/அவரைفَاَخَذَபிடித்ததுهُمُஅவர்களைالْعَذَابُவேதனைوَهُمْஅவர்கள் இருக்கின்ற நிலையில்ظٰلِمُوْنَஅநியாயக்காரர்களாக
இன்னும், நிச்சயமாக அவர்களிடத்தில் அவர்களிலிருந்தே (இறை) தூதர் வந்தார்; ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் அநியாயம் செய்தவர்களாக இருக்கிற நிலையில் அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களிலிருந்தே (நாம் அனுப்பிய நம்) தூதரும் அவர்களிடம் வந்தார். எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களை வேதனைப் பிடித்துக் கொண்டது.
IFT
அவர்களிடம் அவர்களுடைய சமுதாயத்திலிருந்து ஒரு தூதர் வந்தார். ஆனால், அவரை அவர்கள் பொய்யர் என்று கூறினார்கள். இறுதியில் அவர்கள் அக்கிரமம் செய்பவர்களாய் ஆகிவிட்டபோது வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களிலிருந்தே (நம்முடைய) ஒரு தூதர், நிச்சயமாக அவர்களிடம் வந்தார், பின்னர், அவர்கள் அவரைப் பொய்யாக்கிவிட்டனர், ஆகவே, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலையில், அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது.
Saheeh International
And there had certainly come to them a Messenger from among themselves, but they denied him; so punishment overtook them while they were wrongdoers.
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமான நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள்.
IFT
எனவே, (மக்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையான, அனுமதிக்கப்பட்ட உணவுகளைப் புசியுங்கள்! மேலும், அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்; நீங்கள் உண்மையில் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழ்பவர்களாய் இருந்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து ஆகுமான நல்லவைகளையே புசியுங்கள், நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றியும் செலுத்திக் கொண்டிருங்கள்.
Saheeh International
Then eat of what Allah has provided for you [which is] lawful and good. And be grateful for the favor of Allah, if it is [indeed] Him that you worship.
(நீங்கள் புசிக்கக் கூடாது என்று) உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும் - ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப்பட்டிருப்பவை எல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவையும் ஆகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவற்றைப் புசித்து)விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னித்து மிகக் கருணை காட்டுவான்.
IFT
செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி மற்றும் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆயினும், யாரேனும் இறைச்சட்டத்திற்கு மாறு செய்யும் நோக்கமில்லாமலும், தேவையான அளவை மீறாமலும் இப்பொருள்களில் ஏதேனும் ஒன்றைப் புசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானால் நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு அவன் (ஹராமாக்கி) விலக்கியிருப்பவையெல்லாம் செத்ததையும், இரத்தத்தையும், பன்றியின் மாமிசத்தையும், எதை அல்லாஹ் அல்லாதவருக்காக பெயர் கூறப்பட்(டுவிடப்பட்)டதோ அதையும்தான், ஆகவே, எவரொருவர் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் எண்ணமின்றியும், நிர்ப்பந்திக்கப்பட்டு (இவைகளைப் புசித்து) விட்டால், அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
He has only forbidden to you dead animals, blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allah. But whoever is forced [by necessity], neither desiring [it] nor transgressing [its limit] - then indeed, Allah is Forgiving and Merciful.
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்.
IFT
உங்கள் நாவுகள் இன்ன பொருள் ‘ஹலால்’ (அனுமதிக்கப்பட்டது) இன்ன பொருள் ‘ஹராம்’ (தடுக்கப்பட்டது) என்று பொய்(ச் சட்டங்)களைக் கூறுவது போன்று அல்லாஹ்வின்மீது பொய்களை ஏற்றிச் சொல்லாதீர்கள்! யார் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்களோ அவர்கள் ஒருபோதும் வெற்றி அடைவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை, (சில பிராணிகள் பற்றி) இது (ஹலால்) ஆகும், இது (ஹராம்) ஆகாது என்று கூறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கிறார்களே அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.
Saheeh International
And do not say about what your tongues assert of untruth, "This is lawful and this is unlawful," to invent falsehood about Allah. Indeed, those who invent falsehood about Allah will not succeed.
இன்னும் யூதர்களுக்கு, உமக்கு நாம் முன்னரே விளக்கியுள்ளவற்றைத் தடுத்து விட்டோம்; (எனினும்) நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உங்களுக்கு விவரித்தவற்றை யூதர்களுக்குத் தடுத்துவிட்டோம். (எனினும்) நாமாகவே (அதைத் தடுத்து) அவர்களுக்குத் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், அவர்கள் (தாமாகவே அவற்றைத் தடுத்துக்கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
IFT
இதற்கு முன்பு நாம் உம்மிடம் எடுத்துக்கூறிய சில பொருட்களை குறிப்பாக யூதர்களுக்குத் தடை விதித்திருந்தோம். இது அவர்களுக்கு நாம் இழைத்த அநீதியல்ல. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே இழைத்துக் கொண்ட அநீதியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) முன்னர் நாம் உமக்கு விவரித்தவைகளை, யூதர்களின் மீது நாம் தடுத்து விட்டோம், நாம் அவர்களுக்கு அநீதமிழைத்துவிடவுமில்லை, எனினும் அவர்கள் தமக்குத் தாமே அநீதமிழைப்பவர்களாக இருந்தனர்.
Saheeh International
And to those who are Jews We have prohibited that which We related to you before. And We did not wrong them [thereby], but they were wronging themselves.
பிறகு, நிச்சயமாக உம் இறைவன் - எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்); நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அறிந்த பின்னர் அதிலிருந்து விலகி நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை; (அவர்கள் பாவத்திலிருந்து விலகி நற்செயல்களைச் செய்த) பின்னர் நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னித்து, மிகக் கருணை காட்டுவான்.
IFT
ஆயினும், எவர்கள் அறியாமையின் காரணமாக தீயசெயல் புரிந்தார்களோ, பிறகு பாவமன்னிப்புக்கோரி தம் செயல்களை சீர்திருத்திக் கொண்டார்களோ, அவ்வாறு அவர்கள் பாவ மன்னிப்புக் கோரி சீர்திருந்திய பிறகு நிச்சயமாக உம் இறைவன் அவர்களை மன்னித்தருளக் கூடியவனாகவும் அவர்களுக்குக் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு, (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன், (எவர்கள் தங்கள்) அறியாமையினால் பாவத்தைச் செய்துவிட்டு, அதற்குப் பின்னர் (அதிலிருந்து விலகி) தவ்பாச் செய்து, (தங்களைச்) சீர்திருத்தியும் கொள்கிறார்களே, அத்தகையோருக்(கு மன்னிப்பதற்)காகவே இருக்கிறான், அதன்பின்னரும் நிச்சயமாக உமதிரட்சகன், மிக்க மன்னிப்பவன், (அவன்) மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Then, indeed your Lord, to those who have done wrong out of ignorance and then repent after that and correct themselves - indeed, your Lord, thereafter, is Forgiving and Merciful.
நிச்சயமாக இப்ராஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார்; மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் மிகுந்த மார்க்கப்பற்றுடைய வழிகாட்டியாக இருந்தார். மேலும், (இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களில் அவர் இருக்கவில்லை.
IFT
உண்மையில் இப்ராஹீம் ஒரு முழுச் சமுதாயமாய்த் திகழ்ந்தார். அல்லாஹ்வுக்கு அடிபணிபவராகவும் ஒருமனப்பட்டவராகவும் விளங்கினார். அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவைப்பவராய் இருந்ததில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இப்ராஹீம், பின்பற்றப்படும் ஒரு தலைவராகவும், அல்லாஹ்வுக்குப் பயந்து அடிபணிபவராகவும், (இணைவைத்தலை விட்டு முற்றிலும் நீங்கி) ஏகத்துவத்தின்பால் சார்ந்தவராகவும் இருந்தார், மேலும் இணைவைப்போரில் (ஒருவராக) அவர் இருக்கவில்லை.
Saheeh International
Indeed, Abraham was a [comprehensive] leader, devoutly obedient to Allah, inclining toward truth, and he was not of those who associate others with Allah.
(அன்றியும்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும் அவரை நேர் வழியில் செலுத்தினான்.
அப்துல் ஹமீது பாகவி
இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். ஆகவே, (இறைவனும்) அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியில் செலுத்தினான்.
IFT
தவிரவும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக்கூடியவராய் இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், நேரிய வழியினையும் அவருக்குக் காண்பித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வாகிய) அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக (இருந்தார்; அல்லாஹ்வாகிய) அவன், அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான், மேலும் அவரை நேரான பாதையில் செலுத்தினான்.
Saheeh International
[He was] grateful for His favors. He [i.e., Allah] chose him and guided him to a straight path.
(நபியே!) பின்னர் “நேர்மையாளரான இப்ராஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்” என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் மிக்க உறுதியோடு மேன்மையான (அந்த) இப்றாஹீமுடைய மார்க்கத்தை மிகுந்த பற்றுடையவராக பின்பற்றும்படி உமக்கு வஹ்யி அறிவித்தோம். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவேயில்லை.
IFT
பிறகு நாம் உமக்கு இவ்வாறு ‘வஹி’* அனுப்பினோம்: நீர் இப்ராஹீமின் மார்க்கத்தை ஒருமனப்பட்டவராய்ப் பின்பற்றுவீராக! அவர் ஒருபோதும் இறைவனுக்கு இணைவைப்பவராய் இருந்ததில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (இணை வைத்தலை விட்டு முற்றிலும் நீங்கி) ஏகத்துவத்தைச் சார்ந்தவரான இப்றாஹீமுடைய (நேரான) மார்க்கத்தை “நீர், பின்பற்றுவீராக” என்று (நபியே!) உமக்கு நாம் வஹீ அறிவித்தோம், மேலும், அவர் இணைவைத்துக் கொண்டிருப்போரில் உள்ளவராக இருக்கவேயில்லை.
Saheeh International
Then We revealed to you, [O Muhammad], to follow the religion of Abraham, inclining toward truth; and he was not of those who associate with Allah.
“சனிக்கிழமை (ஓய்வு நாள்)” என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.
அப்துல் ஹமீது பாகவி
சனிக்கிழமையை(க் கௌரவிக்கும்படி) செய்யப்பட்டதெல்லாம், அதைப் பற்றி (யூதர்களில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான். நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் (இம்மையில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றைப் பற்றித் தீர்ப்பளிப்பான்.
IFT
எவர்கள் ‘ஸப்த்’ சனிக்கிழமை வரையறை குறித்து கருத்து முரண்பாடு கொண்டிருந்தார்களோ, அவர்கள் மீதே அது விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் எந்த விஷயங்களிலெல்லாம் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களோ அவை அனைத்தையும் குறித்து இறுதித் தீர்ப்புநாளில் உம் அதிபதி நிச்சயம் தீர்ப்பு வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சனிக்கிழமை (ஒன்றுகூடும் நாளாக) ஆக்கப்பட்டதெல்லாம், அதைப்பற்றி கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களே அவர்களுக்குத்தான், நிச்சயமாக உமதிரட்சகன் அவர்களுக்கிடையில் எதில் அவர்கள் (இம்மையில்) கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதுபற்றி மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்.
Saheeh International
The sabbath was only appointed for those who differed over it. And indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்.
IFT
(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில் இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி நன்கறிவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் (மனிதர்களை) விவேகத்ததைக்கொண்டு, மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டு உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றியும் எது மிக அழகானதோ, அதைக்கொண்டு அவர்களுடன் நீர் விவாதம் செய்வீராக! நிச்சயமாக உமதிரட்சகன், அவனுடைய வழியிலிருந்து தவறியவரை மிக்க அறிந்தவன், இன்னும் நேர் வழி பெற்றவர்களையும் அவன் மிக்க அறிந்தவன்.
Saheeh International
Invite to the way of your Lord with wisdom and good instruction, and argue with them in a way that is best. Indeed, your Lord is most knowing of who has strayed from His way, and He is most knowing of who is [rightly] guided.
(முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! உங்களைத் தாக்கியவர்களை) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் தாக்கக் கருதினால் உங்களை அவர்கள் தாக்கிய அளவே அவர்களை நீங்கள் தாக்குங்கள். (அதற்கு அதிகமாக அல்ல. தவிர, உங்களைத் தாக்கியதை) நீங்கள் சகித்துக் கொண்டாலோ அது சகிப்பவர்களுக்கு மிக நன்றே!
IFT
மேலும், நீங்கள் பழிவாங்கக் கருதினால், உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குப் பழிவாங்குங்கள்! ஆயினும், நீங்கள் பொறுமையாக இருப்பீர்களாயின் திண்ணமாக இதுவே பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளே! (உங்களைத் துன்புறுத்தியவர்களை) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ, அதுபோன்ற அளவிற்கே தண்டியுங்கள், (தண்டிக்காது) பொறுத்துக் கொள்வீர்களானால், நிச்சயமாக அது பொறுமையாளர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
Saheeh International
And if you punish [an enemy, O believers], punish with an equivalent of that with which you were harmed. But if you are patient - it is better for those who are patient.
(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக; எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது - அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) சகித்துக்கொள்வீராக. எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக் கொள்ள உம்மால் முடியாது. அவர்களுக்காக (எதைப் பற்றியும்) கவலைப்படாதீர். அவர்கள் செய்கின்ற சூழ்ச்சிகளைப் பற்றி நெருக்கடியிலும் ஆகாதீர்.
IFT
(நபியே!) நீர் பொறுமையுடன் பணியாற்றிக் கொண்டிருப்பீராக! மேலும், உம்முடைய இந்தப் பொறுமை அல்லாஹ்வின் பேருதவியினால்தான் கிடைக்கின்றது. அவர்களின் செயல்கள் குறித்து நீர் வருந்த வேண்டாம். அவர்களின் சூழ்ச்சிகளைக் குறித்து நீர் மனம் நொந்து போகவும் வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், உம்முடைய பொறுமை அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை, அவர்களுக்காக நீர் கவலைப்படவும் வேண்டாம், அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப்பற்றி நீர் இக்கட்டிலும் ஆகிவிட வேண்டாம்.
Saheeh International
And be patient, [O Muhammad], and your patience is not but through Allah. And do not grieve over them and do not be in distress over what they conspire.