தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.
அப்துல் ஹமீது பாகவி
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை.
IFT
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே தன்னுடைய அடியார் மீது இந்த வேதத்தை இறக்கியருளினான். இதில் எவ்விதக் கோணலையும் வைத்திடவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் அடியார் மீது (இவ்)வேதத்தை இறக்கி வைத்தானே, அத்தகைய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரியதாகும், அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் ஆக்கவில்லை.
Saheeh International
[All] praise is [due] to Allah, who has sent down upon His Servant [Muhammad (ﷺ] the Book and has not made therein any deviance.
அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).
அப்துல் ஹமீது பாகவி
இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ்வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சொர்க்கம்) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதை இறக்கிவைத்தான்).
IFT
இது முற்றிலும் சரியான விஷயத்தைக் கூறுகின்ற வேதமாகும். அல்லாஹ்வின் கடுமையான வேதனையைக் குறித்து (மக்களை) அவர் எச்சரிப்பதற்காகவும், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர்க்குத் திண்ணமாக நற்கூலி இருக்கின்றது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது (மாற்ற முடியாத) மிக்க உறுதியானது, அவனிடமிருந்து கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்போருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நற்கருமங்கள் செய்கிறார்களே, அத்தகைய விசுவாசிகளுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய கூலி உண்டு என நற்செய்தி கூறுவதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்.)
Saheeh International
[He has made it] straight, to warn of severe punishment from Him and to give good tidings to the believers who do righteous deeds that they will have a good reward [i.e., Paradise].
மா லஹும் Bபிஹீ மின் 'இல்மி(ன்)வ் வலா லி ஆBபா'இஹிம்; கBபுரத் கலிமதன் தக்ருஜு மின் அFப்வாஹிஹிம்; இ(ன்)ய் யகூலூன இல்லா கதிBபா
முஹம்மது ஜான்
அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை; அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையே தவிர (இவ்வாறு) இவர்கள் (உண்மை) கூறவில்லை.
IFT
அதைப் பற்றிய எவ்வித ஞானமும் அவர்களிடம் இல்லை; அவர்களுடைய மூதாதையரிடமும் இருக்கவில்லை. அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பேச்சு எத்துணை மோசமானது! அவர்கள் வெறும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கோ, அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப்பற்றிய அறிவாதாரம் (ஒரு சிறிதும்) இல்லை, இவர்கள் வாயிலிருந்து வெளியாகும் வார்த்தையால் இது பெரிதாகிவிட்டது, பொய்யையன்றி (வேறெதையும்) அவர்கள் கூறவில்லை.
Saheeh International
They have no knowledge of it, nor had their fathers. Grave is the word that comes out of their mouths; they speak not except a lie.
(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் அதற்காக நீர் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உமது உயிரை அழித்துக் கொள்வீரோ! (ஆகவே, அதற்காக நீர் கவலைப்படாதீர்.)
IFT
(நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் விசுவாசங்கொள்ளாவிட்டால், (புறக்கணித்து விட்ட) அவர்களின் அடிச்சுவடுகள் மீது நீர் (அதே)துக்கத்தால் உம்மையே அழித்துக் கொள்ளக் கூடியவராக இருக்கிறீர், (அதற்காக நீர் கவலைப்பட்டு அவ்வாறு செய்ய வேண்டாம்.)
Saheeh International
Then perhaps you would kill yourself through grief over them, [O Muhammad], if they do not believe in this message, [and] out of sorrow.
(மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகத்தான்.
IFT
திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களில் யார் செயலால் அழகானவர்(கள்) என்று அவர்களை நாம் சோதிப்பதற்காக, பூமியின் மீதிருப்பவற்றை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கினோம்.
Saheeh International
Indeed, We have made that which is on the earth adornment for it that We may test them [as to] which of them is best in deed.
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ‘அஸ்ஹாபுல் கஹ்ஃப்' என்னும் குகையுடையவர்களைப் பற்றி யூதர்கள் உம்மிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம் அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீரா! (அவர்களின் சரித்திரத்தை உமக்கு நாம் கூறுகிறோம்.)
IFT
குகை மற்றும் கல்வெட்டுக்காரர்கள் நம்முடைய வியக்கத்தக்க மாபெரும் சான்றாய்த் திகழ்ந்தனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! “அஸ்ஹாபுல் கஹ்ஃபு” என்னும் குகையுடையவர்களைப் பற்றி யூதர்கள் உம்மிடம் கேட்கின்றனர்) அந்தக் குகையுடையவர்களும், சாஸனத்தையுடையவர்களும், நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமா(னவர்களா)க இருந்தனர் என்று எண்ணிக் கொண்டீரா? (அவர்களின் சம்பவத்தைக் கூறுகிறோம்,)
Saheeh International
Or have you thought that the companions of the cave and the inscription were, among Our signs, a wonder?
இத் அவல் Fபித்யது இலல் கஹ்Fபி Fபகாலூ ரBப்Bபனா ஆதினா மில் லதுன்க ரஹ்மத(ன்)வ் வ ஹய்யி' லனா மின் அம்ரினா ரஷதா
முஹம்மது ஜான்
அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள், அவர்கள் குகையினுள் சென்றபொழுது ‘‘எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.
IFT
இளைஞர்கள் சிலர் குகையில் தஞ்சம் புகுந்தபோது இறைஞ்சினார்கள்: “எங்கள் இறைவனே! உன்னுடைய தனிப்பட்ட அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தித் தருவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரு சில இளைஞர்கள் (ஒரு) குகையினுள் (அபயத்தை நாடி) ஒதுங்கியபோது அவர்கள் “எங்கள் இரட்சகனே! உன்னிடமிருந்து அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்காக எங்கள் காரியத்தில் நேர்வழியை (எங்களுக்கு இலகுவாக்கி) அமைத்துத் தருவாயாக!” என்று (பிரார்த்தனை செய்து) கூறினார்கள்.
Saheeh International
[Mention] when the youths retreated to the cave and said, "Our Lord, grant us from Yourself mercy and prepare for us from our affair right guidance."
பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அக்குகையில் இருந்த காலத்தை (அவர்களில் உள்ள) இரு வகுப்பாரில் எவர்கள் நன்கறிகிறார்கள் என்பதை நாம் (மனிதர்களுக்கு) அறிவிக்கும் பொருட்டு (நித்திரையிலிருந்து) அவர்களை எழுப்பினோம்.
IFT
பிறகு, அவர்களை எழச் செய்தோம்; அவர்கள் இரு பிரிவினரில் யார் தாங்கள் தங்கியிருந்த காலத்தை மிகச்சரியாக கணக்கிடுகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்பு அவர்கள் (அக்குகையில்) தங்கி இருந்த காலத்தை (ப்பற்றி கருத்துவேறுபாடு அவர்களில் இருந்த) இரு வகுப்பாரில் எவர்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதை நாம் அறி(வித்து விடு)வதற்காக (நித்திரையிலிருந்து) அவர்களை எழுப்பினோம்.
Saheeh International
Then We awakened them that We might show which of the two factions was most precise in calculating what [extent] they had remained in time.
(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கைகொண்ட வாலிபர்களாவர். (ஆகவே,) மேலும், நேரான வழியில் நாம் அவர்களை செலுத்தினோம்.
IFT
அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண்ணமாக, அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் மேலும் முன்னேறச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நாம் அவர்களுடைய செய்தியை உண்மையைக் கொண்டு உமக்குக் கூறுகிறோம், நிச்சயமாக அவர்கள் சில இளைஞர்கள், அவர்கள் தங்கள் இரட்சகனை விசுவாசித்தார்கள், இன்னும் நேர் வழியை அவர்களுக்கு நாம் அதிகப்படுத்தினோம்.
Saheeh International
It is We who relate to you, [O Muhammad], their story in truth. Indeed, they were youths who believed in their Lord, and We increased them in guidance.
وَّرَبَطْنَاஇன்னும் உறுதிபடுத்தினோம்عَلٰى قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்களைاِذْபோதுقَامُوْاநின்றனர்فَقَالُوْاஇன்னும் கூறினர்رَبُّنَاஎங்கள் இறைவன்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِஇன்னும் பூமிلَنْ نَّدْعُوَا۟அழைக்கவே மாட்டோம்مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاِلٰهًـا(வேறு) ஒரு கடவுளைلَّـقَدْ قُلْنَاۤதிட்டமாக கூறி விடுவோம்اِذًاஅப்போதுشَطَطًاஎல்லை மீறிய பொய்யை
வ ரBபத்னா 'அலா குலூ Bபிஹிம் இத் காமூ Fபகாலூ ரBப்Bபுனா ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி லன் னத்'உவ மின் தூனிஹீ இலாஹல் லகத் குல்னா இதன் ஷததா
முஹம்மது ஜான்
அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று ‘‘வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத் தவிர (வேறொருவரையும் வணக்கத்திற்குரிய) இறைவனாக நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அப்படி அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்றார்கள்.
IFT
அவர்கள் எழுந்து, “யார் வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியாக இருக்கின்றானோ அவனே எங்களுக்கும் அதிபதியாவான். அவனை விடுத்து வேறெந்தக் கடவுளையும் நாங்கள் அழைக்கமாட்டோம். அவ்வாறு அழைத்தால் திண்ணமாக நாங்கள் முறையற்ற பேச்சை பேசியவர்களாவோம்” என்று துணிந்து பிரகடனம் செய்தபோது அவர்களின் உள்ளங்களை நாம் திடப்படுத்தினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அக்காலத்திய அரசன் முன்னிலையில்) அவர்கள் எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இரட்சகன்தான் எங்கள் இரட்சகன், அவனையன்றி வணக்கத்திற்குரிய (வேறு) நாயனை நாங்கள் அழைக்கவே மாட்டோம், (அவ்வாறு அழைத்தால்,) அப்போது திட்டமாக நாம் வரம்பு மீறிய வார்த்தையைக் கூறிவிட்டோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறியபோது, அவர்களுடைய உள்ளங்களை (நேரான வழியில்) நாம் உறுதிப்படுத்தி விட்டோம்.
Saheeh International
And We bound [i.e., made firm] their hearts when they stood up and said, "Our Lord is the Lord of the heavens and the earth. Never will we invoke besides Him any deity. We would have certainly spoken, then, an excessive transgression.
ஹா'உலா'இ கவ்முனத் தகதூ மின் தூனிஹீ ஆலிஹதல் லவ் லா யாதூன 'அலய்ஹிம் Bபிஸுல்தானிம் Bபய்யின்; Fபமன் அள்லமு மிம்மனிFப்தரா 'அலல் லாஹி கதிBபா
முஹம்மது ஜான்
எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நமது இந்த மக்கள் அவனைத் தவிர்த்து வேறு இறைவனை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குத் தெளிவான அத்தாட்சியை இவர்கள் கொண்டு வரவேண்டாமா? அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனை விட மகா அநியாயக்காரன் யார்?'' (என்றார்கள்.)
IFT
(பிறகு, அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்:) “இந்த நம்முடைய சமுதாயத்தினர் பேரண்டத்தின் அதிபதியை விடுத்து பிறவற்றைத் தெய்வங்களாக்கி உள்ளார்கள். அவை தெய்வங்கள்தாம் என்பதற்கு ஏதேனும் தெளிவான சான்றினை இவர்கள் ஏன் கொண்டு வருவதில்லை? அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனை விட பெரும் கொடுமைக்காரன் வேறு யார்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் சமுதாயத்தவராகிய இவர்கள் அவனையன்றி வணக்கத்திற்குரிய (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களி(ன் வணக்கத்தி)ன் மீது தெளிவான அத்தாட்சியை அவர்கள் கொண்டு வர வேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட அநியாயக்காரன் யார்?” (என்றார்கள்.)
Saheeh International
These, our people, have taken besides Him deities. Why do they not bring for [worship of] them a clear evidence? And who is more unjust than one who invents about Allah a lie?"
அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிலிருந்தும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றிலிருந்தும் நீங்கள் விலகிக்கொண்ட பின்னர் நீங்கள் (அவர்களை விட்டுத் தப்ப) இக்குகைக்குள் சென்றுவிடுங்கள். உங்கள் இறைவன் உங்கள் மீது தன் அருளைச் சொரிந்து, (வாழ்வதற்குரிய) உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்து விடுவான் (என்றும் தங்களுக்குள் கூறிக்கொண்டனர்).
IFT
நீங்கள் இவர்களை விட்டும், அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் அழைத்து வருகின்ற பிற தெய்வங்களை விட்டும் விலகிக் கொண்டீர்கள் என்றால், இன்ன குகைக்குள் சென்று அபயம் தேடுங்கள்! உங்கள் இறைவன் தன் கருணையை உங்கள் மீது இன்னும் விரிவாக்குவான். மேலும், உங்கள் பணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதி வாய்ப்புகளையும் உங்களுக்கு உருவாக்கித் தருவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்குபவற்றையும் விட்டு நீங்கள் விலகிவிட்டால், இக்குகையின்பால் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்கள் இறைவன் உங்கள்மீது தன் அருளை விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியங்களை எளிதாகவும் உங்களுக்கு அமைத்துத் தருவான்” (என்றும் தங்களுக்குள் கூறிக் கொண்டனர்.)
Saheeh International
[The youths said to one another], "And when you have withdrawn from them and that which they worship other than Allah, retreat to the cave. Your Lord will spread out for you of His mercy and will prepare for you from your affair facility."
சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அங்கு சென்று பார்ப்பீரானால்) சூரியன் உதிக்கும்போது அவர்கள் (இருக்கும் அக்)குகையின் வலது பக்கத்தில் சாய்வதையும், அது மறையும்போது, அவர்களின் இடது பக்கத்தை கடந்து செல்வதையும் நீர் காண்பீர்! அவர்கள் அதன் விசாலமான இடத்தில் (நிழலில் நித்திரை செய்து கொண்டு) இருக்கின்றனர். இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவன்தான் நேரான வழியில் செல்வான். எவனை அவன் அவனுடைய (பாவத்தின் காரணமாக) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவனுக்கு உதவி செய்பவர்களையும், நேரான வழியை அறிவிப்பவர்களையும் நீர் காணமாட்டீர்.
IFT
(நீர் குகையில் அவர்களைப் பார்த்தால்) சூரியன் உதயமாகும்போது அவர்களின் குகையைவிட்டு விலகி வலப்பக்கமாக உயர்வதையும் அது மறையும்போது அவர்களை விட்டுக் கடந்து இடப்பக்கமாகத் தாழ்வதையும் காண்பீர்; ஆனால், அவர்களோ குகையினுள் ஒரு விசாலமான இடத்தில் இருப்பார்கள். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும், யாரை அல்லாஹ் நெறிபிறழச் செய்கின்றானோ அவருக்கு உதவி புரிந்து வழிகாட்டுபவரை ஒருபோதும் நீர் காணமாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், சூரியனை – அது உதிக்கும்போது அவர்கள் (இருக்கும் அக்) குகையின் வலப்பக்கத்தில் அது சாய்வதையும் அது மறையும்போது அவர்களின் இடப்பக்கத்தை அது கடந்து செல்வதையும் நீர் காண்பீர்! அவர்களோ, அதில் (நடுமையமான) விசாலமான இடத்தில் இருக்கினறனர், இது அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ அவர் நேர் வழியை அடைந்தவராவார், எவரை அவன் தவறான வழியில் விட்டும் விடுகிறானோ அவருக்கு நேரான வழியை அறிவிக்கக்கூடிய எந்த உதவியாளரையும் நீர் காணவே மாட்டீர்.
Saheeh International
And [had you been present], you would see the sun when it rose, inclining away from their cave on the right, and when it set, passing away from them on the left, while they were [lying] within an open space thereof. That was from the signs of Allah. He whom Allah guides is the [rightly] guided, but he whom He sends astray - never will you find for him a protecting guide.
மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்த போதிலும் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே நீர் எண்ணுவீர். அவர்களை வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் திருப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறது (என்பதையும் நீர் காண்பீர்). அவர்களை நீர் எட்டிப் பார்த்தால் அவர்களைவிட்டு வெருண்டோடுவீர்; திடுக்கமும் (நடுக்கமும்) உம்மைச் சூழ்ந்துகொள்ளும்.
IFT
நீர் (அவர்களைப் பார்த்தால்) அவர்கள் விழித்திருக்கிறார்கள் என்று கருதுவீர். உண்மையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நாம் அவர்களை வலப்புறமும் இடப்புறமுமாகப் புரட்டிக் கொண்டேயிருந்தோம். மேலும், அவர்களின் நாய் குகைவாசலில் தன்னுடைய முன்னங்கால்களை விரித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. நீர் அவர்களைச் சற்று எட்டிப் பார்த்தால் உடனே விரண்டோடியிருப்பீர்; மேலும், அவர்களைப் பார்த்ததினால் திகிலடைந்து போயிருப்பீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அக்குகையிலுள்ள) அவர்கள் நித்திரை செய்து கொண்டிருக்க அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே நீர் எண்ணுவீர், அவர்களை வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் (மாற்றி மாற்றி) நாம் புரட்டுகிறோம், அவர்களுடைய நாயோ, தன் இரு முன்னங்கால்களையும் விரித்துக் கொண்டு வாசலில் (உட்கார்ந்து) இருக்கிறது (என்பதை நீர் காண்பீர்.,) அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டு வெருண்டோடிப் பின் வாங்குவீர், அவர்களிலிருந்து (ஏற்பட்டிருக்கும் பயங்கர நிலையைக் கண்டு உம் மனதில்) நீர் திடுக்கத்தால் நிரப்பப்பட்டுவிடுவீர்.
Saheeh International
And you would think them awake, while they were asleep. And We turned them to the right and to the left, while their dog stretched his forelegs at the entrance. If you had looked at them, you would have turned from them in flight and been filled by them with terror.
இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்குள் கேட்டறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (நித்திரை செய்யும்) அவர்களை நாம் எழுப்பினோம். அவர்களில் ஒருவர் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்களில் சிலர் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் (இருந்திருப்போம்)'' என்று கூறினர். (மற்றவர்கள்) ‘‘நீங்கள் நித்திரையிலிருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறி ‘‘உங்களில் ஒருவரிடம் இந்த (வெள்ளி) நாணயத்தைக் கொடுத்து அவரைப் பட்டிணத்திற்கு அனுப்பிவையுங்கள். அவர் (அங்கு சென்று) நல்ல உணவுப் பொருள் எது (எங்கிருக்கிறது) என்பதைத் தேடிப்பார்த்து அதில் சிறிது வாங்கி வரவும். எனினும், உங்களை(ப் பட்டிணத்திலிருப்பவர்களில்) ஒருவரும் அறிந்து கொள்ளாதவாறு மிக்க எச்சரிக்கையாகவே அவர் நடந்து கொள்ளவும்.
IFT
மேலும், இவ்வாறே வியக்கத்தக்க முறையில் அவர்களை நாம் விழித்தெழச் செய்தோம், அவர்கள் தங்களுக்கிடையில் விசாரித்துக் கொள்வதற்காக! அவர்களில் ஒருவர் கேட்டார், “நீங்கள் எவ்வளவு காலம் இந்நிலையில் இருந்தீர்கள்?” என்று! அதற்கு மற்றவர்கள் கூறினார்கள்: “ஒருநாள் முழுவதும் அல்லது அதைவிடச் சற்றுக் குறைவாக இருந்திருப்போம்.” பிறகு, அவர்கள் கூறினார்கள்: “நாம் எவ்வளவு காலம் இவ்வாறு இருந்தோம் என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். இனி நம்மில் யாரேனும் ஒருவர் இந்த வெள்ளி நாணயத்துடன் நகருக்குள் செல்லட்டும். மிகவும் நல்ல உணவு எங்கு கிடைக்கும் என்று அவர் பார்க்கட்டும். அங்கிருந்து சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வரட்டும். அவர் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளட்டும். நாம் இங்கு இருப்பதை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்கிடையே கேட்டு (அறிந்து)க் கொள்ளும் பொருட்டு (நித்திரை செய்யும்) அவர்களை இவ்வாறே நாம் எழுப்பினோம், அவர்களிலிருந்து கேட்பவர் ஒருவர், “நீங்கள் எவ்வளவு (நேரம் நித்திரையில்) தங்கி இருந்தீர்கள்?” என்று கேட்டார், (அதற்கு) அவர்களில் சிலர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது தங்கி இருந்திருப்போம்” என்று கூறினார்கள்; (மற்ற சிலர்) நீங்கள் (நித்திரையில்) தங்கி இருந்த (காலத்)தை உங்கள் இரட்சகன் தான் நன்கு அறிந்தவன்; ஆகவே உங்களில் ஒருவரை உங்களுடைய இந்த வெள்ளி நாணயத்தைக் கொண்டு, பட்டணத்திற்கு அனுப்பி வையுங்கள்; அவர் (அங்கு சென்று) எது மிகச் சுத்தமான உணவு என்பதை(த் தேடிப்)பார்த்து அதிலிருந்து உணவை உங்களுக்காகக் கொண்டு வரட்டும், இன்னும் அவர் (ஊர் மக்களிடம்) இனிதாக நடந்து கொள்ளவும்; உங்களைப் பற்றி (மனிதர்களில்) எவருக்கும் நிச்சயமாக அவர் அறிவித்துவிடவும் வேண்டாம்” என்று கூறினார்கள்.
Saheeh International
And similarly, We awakened them that they might question one another. Said a speaker from among them, "How long have you remained [here]?" They said, "We have remained a day or part of a day." They said, "Your Lord is most knowing of how long you remained. So send one of you with this silver coin of yours to the city and let him look to which is the best of food and bring you provision from it and let him be cautious. And let no one be aware of you.
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி
ஏனென்றால், (ஊர் மக்கள்) உங்களை (இன்னாரென) அறிந்து கொண்டால் நிச்சயமாக அவர்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவார்கள்; அல்லது உங்களை தங்கள் மார்க்கத்தில் சேர்த்து விடுவார்கள். (அப்படி நீங்கள் சேர்ந்தாலோ) ஒரு காலத்திலும் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள்'' (என்றார்கள்).
IFT
அவர்கள் நம்மைப் பிடித்துவிட்டால், திண்ணமாய் நம்மைக் கல்லால் அடிப்பார்கள்; அல்லது அவர்களுடைய மார்க்கத்திற்கு நம்மைப் பலவந்தமாகக் கொண்டு சென்று விடுவார்கள். அப்படி நடந்துவிட்டால் ஒருபோதும் நம்மால் வெற்றி பெற முடியாது”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக (அவ்வூர்வாசிகளான) அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், அவர்கள் உங்களைக் கல்லால் எறிந்து (கொன்று) விடுவார்கள், அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களைத் திருப்பி விடுவார்கள், அப்பொழுது ஒருபோதும் நீங்கள் வெற்றி பெறவே மாட்டீர்கள்” (என்று கூறினார்கள்.)
Saheeh International
Indeed, if they come to know of you, they will stone you or return you to their religion. And never would you succeed, then - ever."
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் ஒரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டிணவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) ‘‘இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இவர்களுடைய இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்'' என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் ‘‘இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு மஸ்ஜிதை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்'' என்றார்கள்.
IFT
இவ்வாறு அவர்களின் நிலைமையை ஊர் மக்களுக்கு நாம் அறிவித்தோம். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதையும், மறுமைக்குரிய வேளை நிச்சயமாக வந்தே தீரும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக! (ஆனால், சற்று கவனியுங்கள்: சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம் இதுவாக இருக்க) அந்நேரத்தில் (குகைவாசிகளான) இவர்கள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மக்கள் தங்களிடையே தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர், “இவர்கள் மீது ஒரு சுவரை எழுப்புங்கள். இவர்களின் இறைவன்தான் இவர்களைக் குறித்து நன்கறிவான்” என்று கூறினார்கள். ஆயினும், இவர்கள் விஷயத்தில் அதிகாரம் பெற்றிருந்தவர்கள் கூறினார்கள்: “நாங்கள் இவர்கள் மீது ஒரு வணக்கத்தலத்தை அமைப்போம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வுடைய வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது என்றும், நிச்சயமாக மறுமை வருவதில் யாதொரு சந்தேகமில்லை என்றும் அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டே இவ்வாறு (உணவு தேடி அப்பட்டணத்திற்குச் செல்லுமாறு நாம் செய்து,) அவர்களுக்கு இவர்களைப் பற்றிய(விஷயத்)தை வெளிப்படுத்தினோம், (அந்நகரவாசிகள்) இவர்கள் யார் என்பதைப் பற்றி தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டிடத்தைக் கட்டுங்கள், இவர்களை(ப் பற்றி) இவர்களின் இரட்சகனே நன்கறிந்தவன் என்றும் கூறினார்கள், தம் காரியத்தில் (விவாதித்து அதில்) வெற்றி பெற்றார்களே அவர்கள், “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு பள்ளியை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்.” என்று கூறினார்கள்.
Saheeh International
And similarly, We caused them to be found that they [who found them] would know that the promise of Allah is truth and that of the Hour there is no doubt. [That was] when they disputed among themselves about their affair and [then] said, "Construct over them a structure. Their Lord is most knowing about them." Said those who prevailed in the matter, "We will surely take [for ourselves] over them a masjid."
(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
(குகையிலிருந்த அவர்கள்) மூன்று பேர்தான்; நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலரு)ம்; (அவர்கள்) ஐந்து பேர், அவர்களுடைய நாய் ஆறாவதாகும் என்று (வேறு சிலரு)ம்; மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டவர்களைப் போல் (மிக்க உறுதியாகக்) கூறுகின்றனர். மற்றும் சிலரோ அவர்கள் ஏழு பேர், எட்டாவது அவர்களுடைய நாய் என்றும் கூறுகின்றனர். எனினும் (நபியே!) ‘‘அவர்களுடைய எண்ணிக்கையை சிலரைத் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களுடைய எண்ணிக்கையை என் இறைவன்தான் நன்கறிவான்'' என்று கூறுவீராக. இன்னும், அவர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகவே தவிர தர்க்கிக்காதீர். அவர்களைப் பற்றி இவர்களில் ஒருவனிடமும் (ஒன்றுமே) கேட்காதீர்.''
IFT
“அவர்கள் மூன்று பேர்; நான்காவது அவர்களின் நாய்” என மக்களில் சிலர் கூறுவர். வேறு சிலர், “அவர்கள் ஐந்து பேர், ஆறாவது அவர்களின் நாய்” என்று கூறுவர். இவர்கள் அனைவரும் குருட்டுத்தனமாக உளறுகிறார்கள். இன்னும் சிலர், “அவர்கள் ஏழுபேர்; எட்டாவது அவர்களின் நாய்” எனக் கூறுவர். நீர் கூறுவீராக: “அவர்கள் எத்தனை பேர் என்பதை என்னுடைய இறைவனே நன்கறிவான்.” அவர்களின் சரியான எண்ணிக்கையை வெகுசிலரே அறிவர். எனவே, அவர்களின் எண்ணிக்கை விஷயத்தில் மேலோட்டமான முறையிலே அன்றி (மக்களிடம்) அதிகமாக தர்க்கம் செய்யாதீர். அவர்களைப் பற்றி யாரிடத்திலும் எதுவும் கேட்காதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குகையிலிருந்தவர்கள்) மூவர், அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர் கூறுகின்றனர். (வேறு சிலர், அவர்கள்) ஐவர்; அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய் என்றும், மறைவானதை யூகம் செய்து கூறுகின்றனர், இன்னும் (சிலரோ, அவர்கள்) எழுவர், அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய் என்று கூறுகின்றனர். (நபியே!) “அவர்களுடைய தொகையை என் இரட்சகன் தான் மிக அறிந்தவன், அவர்களை(ப் பற்றிய உண்மையை) குறைவானவர்களே தவிர அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! தவிரவும் அவர்களைப் பற்றி வெளிப்படையான தர்க்கத்தைத்தவிர நீர் தர்க்கம் செய்யாதீர்; அவர்களைப் பற்றி இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.
Saheeh International
They [i.e., people] will say there were three, the fourth of them being their dog; and they will say there were five, the sixth of them being their dog - guessing at the unseen; and they will say there were seven, and the eighth of them was their dog. Say, [O Muhammad], "My Lord is most knowing of their number. None knows them except a few. So do not argue about them except with an obvious argument and do not inquire about them among [the speculators] from anyone."
“இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக; இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுவீராக. நீர் இதை மறந்து விட்டால் (ஞாபகம் வந்ததும் இவ்வாறு) உமது இறைவனின் பெயரைக் கூறுவீராக. தவிர, (நன்மைக்கு) இதைவிட இன்னும் நெருங்கிய பல விஷயங்களையும் என் இறைவன் எனக்கு அறிவிக்கக் கூடும்'' என்றும் கூறுவீராக.
IFT
(உம்மால் எதுவும் செய்திட முடியாது) அல்லாஹ் நாடினால் அன்றி! ஆனால், மறந்து அவ்வாறு கூறிவிடுவீராயின், உடனே தம் இறைவனை நினைவுகூர்ந்து ‘இவ்விஷயத்தில் இதைவிட நேர்மைக்கு நெருக்கமானவற்றின் பக்கம் என் இறைவன் எனக்கு வழிகாட்டக் கூடும் என நான் நினைக்கிறேன்’ என்று கூறும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ் நாடினாலே தவிர – (இன்ஷா அல்லாஹ் என்று இணைத்துக் கூறுவீராக!) நீர் (இதனை) மறந்துவிட்டால் (நினைவு வந்ததும்) உம் இரட்சகனை நினைவு கூர்வீராக! நல்வழியில் இன்னும் இதைவிட மிக நெருக்கமானவற்றின்பால் எனக்கு நேர்வழி காட்ட என் இரட்சகன் எனக்குப் போதுமானவன்,” என்றும் கூறுவீராக!”
Saheeh International
Except [when adding], "If Allah wills." And remember your Lord when you forget [it] and say, "Perhaps my Lord will guide me to what is nearer than this to right conduct."
அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் குகையில் (சூரிய கணக்கின்படி) முன்னூறு ஆண்டுகள் தங்கி இருந்தனர், (சந்திர கணக்கின்படி 309 ஆண்டுகள் தங்கி இருந்தனர்.) மேலும் (சிலர்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தினர்.
IFT
அவர்கள் தங்களுடைய குகையில் முந்நூறு ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். சிலர் (காலத்தைக் கணிப்பதில்) ஒன்பது ஆண்டுகளை அதிகமாக்கினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் குகையில் முன்னூறு வருடங்கள் தங்கியிருந்தனர் (என்றும்) இன்னும் (அதற்கு மேல்) ஒன்பதை அதிகப்படுத்தி(த் தங்கி)னார்கள் (என்றும் சிலர் கூறுகின்றனர்).
Saheeh International
And they remained in their cave for three hundred years and exceeded by nine.
“அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: அவர்கள் அதில் இருந்த காலத்தை அல்லாஹ் தான் நன்கறிவான். வானங்களிலும், பூமியிலும் மறைவாயிருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! இவற்றை அவன் எவ்வளவோ நன்றாகப் பார்ப்பவன்; எவ்வளவோ நன்றாகக் கேட்பவன். அவனைத் தவிர இவற்றை நிர்வகிப்பவன் யாருமில்லை. அவன் தன் அதிகாரத்தில் ஒருவரையும் துணையாக ஆக்கிக் கொள்ளவில்லை.
IFT
நீர் கூறுவீராக: “அவர்கள் தங்கியிருந்த காலத்தை அல்லாஹ்தான் நன்கறிவான்.” வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்கள் யாவும் அவனுக்கே தெரியும்! அவன் அனைத்தையும் எத்துணை நன்றாய்ப் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கின்றான்! (பூமியிலும், வானத்திலும் உள்ள) படைப்புகளுக்கு அவனைத் தவிர வேறு பாதுகாவலர் யாரும் இல்லை! அவன் தனது ஆட்சியதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டு சேர்த்துக் கொள்வதில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! “அவர்கள் (அதில்) தங்கி இருந்த (காலத்)தை அல்லாஹ்தான் மிக்க அறிந்தவன், வானங்கள், இன்னும் பூமியில் மறைவானது, அவனுக்கே உரியதாகும், அவனைப்பார்க்கச் செய்ததும், கேட்கச் செய்ததும் எது? அவனைத் தவிர (காரியங்களை) நிர்வகிப்பவன் அவர்களுக்கு வேறு எவருமில்லை, அவன் தன்னுடைய தீர்ப்பில் ஒருவரையும் கூட்டாக்கிக் கொள்ளவுமாட்டான்”
Saheeh International
Say, "Allah is most knowing of how long they remained. He has [knowledge of] the unseen [aspects] of the heavens and the earth. How Seeing is He and how Hearing! They have not besides Him any protector, and He shares not His legislation with anyone."
வத்லு மா ஊஹிய இலய்க மின் கிதாBபி ரBப்Bபிக லா முBபத்தில லி கலிமாதிஹீ வ லன் தஜித மின் தூனிஹீ முல்தஹதா
முஹம்மது ஜான்
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட உமது இறைவனின் வேதத்தை நீர் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருப்பீராக! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனைத் தவிர உமக்கு பாதுகாக்கும் எந்த ஓர் இடத்தையும் காணமாட்டீர்.
IFT
(நபியே!) உம் இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை (உள்ளது உள்ளபடி) எடுத்துச் சொல் வீராக! அவனுடைய வசனங்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை. மேலும், (யாருக்கு வேண்டியாவது அவற்றை நீர் மாற்றினால்) அல்லாஹ்விடமிருந்து தப்பியோடுவதற்கு எந்தப் புகலிடமும் உமக்குக் கிடைக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) உம்முடைய இரட்சகனின் வேதத்திலிருந்து உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்பட்டதை நீர் ஓதி (உபதேசித்து) வருவீராக! அவனுடைய வார்த்தை (கட்டளை)களை மாற்றுபவர் இல்லை, அவனையன்றி (உமக்கு) எந்தப் புகலிடத்தையும் நீர் காணவே மாட்டீர்.
Saheeh International
And recite, [O Muhammad], what has been revealed to you of the Book of your Lord. There is no changer of His words, and never will you find in other than Him a refuge.
(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்கள் சிரமங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திரு முகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்வீராக. இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உமது கண்களைத் திருப்பி விடாதீர். தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது.
IFT
எவர்கள் தம்முடைய இறைவனின் திருப்தியை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைக்கிறார்களோ, அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் உமது மனத்தைத் திருப்தி கொள்ளச் செய்வீராக! ஒருபோதும் உமது பார்வையை அவர்களைவிட்டுத் திருப்ப வேண்டாம். உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்புகிறீரா என்ன? நம்மை நினைவுகூர்வதை விட்டும் எவனது இதயத்தை நாம் அலட்சியம் கொள்ளச் செய்துள்ளோமோ எவன் தன் இச்சைப்படி வாழும் நடத்தையை மேற்கொண்டிருக்கிறானோ எவன் தன் செயல்முறைகளில் வரம்பு மீறிச் சென்று கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) தங்கள் இரட்சகனைக் காலையிலும், மாலையிலும் அழைத்துக் கொண்டு அவனுடைய (மேன்மையான) முகத்தையும் நாடுகின்றார்களே அத்தகையோருடன் உம்மை நீரும் (ஆக்கிக்) கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நீர் நாடி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உம் கண்களை திருப்பியும் விடாதீர், மேலும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் மறக்கச் செய்து அவன் தன் மனோ இச்சையைப் பின்பற்றி விட்டானோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர், அவனுடைய காரியமும் எல்லை கடந்ததாகிவிட்டது.
Saheeh International
And keep yourself patient [by being] with those who call upon their Lord in the morning and the evening, seeking His face [i.e., acceptance]. And let not your eyes pass beyond them, desiring adornments of the worldly life, and do not obey one whose heart We have made heedless of Our remembrance and who follows his desire and whose affair is ever [in] neglect.
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவனால் அருளப்பட்ட (இவ்வேதமான)து முற்றிலும் உண்மையானது. விரும்பியவர் (இதை) நம்பிக்கை கொள்ளலாம்; விரும்பியவர் (இதை) நிராகரித்துவிடலாம். (அதனால் நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத்தான் தயார்படுத்தி உள்ளோம். அந்நரகத்தின் ஜூவாலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகத்தைச் சுட்டுக் கருக்கிவிடும். அன்றி அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடமும் மிகக் கெட்டதாகும்.
IFT
தெளிவாகக் கூறிவிடும்: இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய) கொடுமையாளர்களுக்குத் திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகிவிட்டன. அங்கு அவர்கள் தண்ணீர் கேட்பார்களாயின், உருக்கிய உலோகம் போன்ற நீர் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அது அவர்களின் முகங்களைக் கரித்துவிடும். அது மிகவும் கேடு கெட்ட பானம் ஆகும். மேலும், அவர்களின் ஓய்விடம் தீயதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! “உங்கள் இரட்சகனிடமிருந்து (நான் கொண்டு வந்திருக்கும்) இ(வ்வேதமான)து சத்தியமானதாகும்; ஆகவே, எவர் நாடுகிறாரோ அவர் (இதை) விசுவாசித்துக் கொள்ளட்டும், இன்னும் எவர் நாடுகிறாரோ அவர் (இதை) நிராகரித்து விடட்டும், “(ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தை தயார்ப்படுத்தி உள்ளோம்; அந்நரகத்தின் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டது, அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் சூட்டின் உச்சத்தை அடைந்த-பழுக்கக் காய்ச்சப்பட்டதைப் போன்ற தண்ணீரைக் கொண்டே அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்; அது அவர்களுடைய முகங்களைச் சுட்டுக் கருக்கிவிடும், (அன்றி) அது மிக்க கெட்ட பானமாகும்; அவர்கள் இளைப்பாற இறங்குமிடத்தாலும் அது மிகக்கெட்டதாகும்.
Saheeh International
And say, "The truth is from your Lord, so whoever wills - let him believe; and whoever wills - let him disbelieve." Indeed, We have prepared for the wrongdoers a fire whose walls will surround them. And if they call for relief, they will be relieved with water like murky oil, which scalds [their] faces. Wretched is the drink, and evil is the resting place.
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை.
IFT
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றார்களோ அத்தகைய அழகிய செயல் புரிவோரின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோர்,-நிச்சயமாக நாம் (அத்தகைய) அழகிய செயல்புரிந்தோரின் கூலியை வீணாக்கமாட்டோம்.
Saheeh International
Indeed, those who have believed and done righteous deeds - indeed, We will not allow to be lost the reward of any who did well in deeds.
உலா'இக லஹும் ஜன்னாது 'அத்னின் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ யல்Bபஸூன தியாBபன் குள்ரம் மின் ஸுன்துஸி(ன்)வ் வ இஸ்தBப்ரகிம் முத்தகி'ஈன Fபீஹா 'அலல் அரா'இக்; னிஃமத் தவாBப்; வ ஹஸுனத் முர்தFபகா
முஹம்மது ஜான்
அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப் படும், ஸுன்துஸ், இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் மீது சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று; (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாயிற்று.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு நிலையான சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவர்களுக்குப் (பரிசாகப்) பொற்கடகம் அணிவிக்கப்படும். மெல்லியதாகவோ அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளை அணிவார்கள். இருக்கைகளிலுள்ள தலையணைகள் மீது சாய்ந்து (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள். இவர்களுடைய கூலி மிக்க நன்றே! இவர்கள் இன்பம் அனுபவிக்கின்ற இடமும் மிக்க அழகானது.
IFT
அவர்களுக்கு நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்களுக்குத் தங்கக் காப்புகள் அணிவிக்கப்படும். மேலும், மெல்லிய மற்றும் அழுத்தமான பச்சை நிறப் பட்டாடைகளையும் அணிவார்கள். மேலும், உயர்ந்த மஞ்சங்கள் மீது சாய்ந்திருப்பார்கள். இது மிகச்சிறந்த நற்கூலியும், மிக உயர்ந்த தங்குமிடமுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர் - அவர்களுக்கு நிலையான சுவனபதிகள் உண்டு, அவர்களுக்கு கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் (அவர்களுக்குப் பரிசாக) பொன்னால் (ஆன) கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள், மெல்லியதாகவோ, அழுத்தமானதாகவோ (அவர்கள் விரும்பிய) பசுமையான பட்டாடைகளையும் அணிவார்கள், அவற்றில் (உள்ள) ஆசனங்களின் மீது சாய்ந்தவர்களாக (மிக்க உல்லாசமாக) இருப்பார்கள், (இவர்களுடைய) கூலி அது நல்லதாகிவிட்டது, இளைப்பாறுமிடத்தாலும் அது நல்லதாகிவிட்டது.
Saheeh International
Those will have gardens of perpetual residence; beneath them rivers will flow. They will be adorned therein with bracelets of gold and will wear green garments of fine silk and brocade, reclining therein on adorned couches. Excellent is the reward, and good is the resting place.
(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக: அவர்களில் ஒருவனுக்கு இரு திராட்சைத் தோட்டங்களைக் கொடுத்தோம். அவ்விரண்டைச் சூழவும் பேரீச்ச மரங்களை ஆக்கினோம். இவ்விரண்டிற்கும் மத்தியில் தானிய வயல்களை அமைத்தோம்.
IFT
(நபியே!) அவர்களிடம் ஓர் உதாரணத்தை எடுத் துரைப்பீராக இரண்டு மனிதர்கள்; அவர்களில் ஒருவருக்கு நாம் இரு திராட்சைத் தோட்டங்களை வழங்கினோம். அவற்றைச் சுற்றிலும் பேரீச்சை மரங்களை அமைத்தோம். அத்தோட்டங்களுக்கு இடையே பயிர் நிலத்தையும் உருவாக்கியிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவர்களில் ஒருவனுக்கு திராட்சைகளின் இரு தோட்டங்களை நாம் ஆக்கியிருந்தோம், பேரீச்ச மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழச்செய்திருந்தோம், அவ்விரண்டிற்கும் மத்தியில் விவசாயத்தையும் அமைத்தோம்.
Saheeh International
And present to them an example of two men: We granted to one of them two gardens of grapevines, and We bordered them with palm trees and placed between them [fields of] crops.
அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்விரு தோட்டங்களிலுமே அதன் பலனை ஒரு குறைவுமின்றி கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு நதியையும் ஓடச்செய்தோம்.
IFT
அவ்விரு தோட்டங்களும் நல்ல விளைச்சலைக் கொடுத்தன. அதில் அவை சிறிதளவும் குறை வைத்திடவில்லை! அத்தோட்டங்களின் நடுவே ஓர் ஆறு ஓடச்செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்விரு தோட்டங்களில் ஒவ்வொன்றும் அதனதன் பலனை யாதொரு குறைவுமின்றிக் கொடுத்துக் கொண்டிருந்தது, அவ்விரண்டிற்கும் மத்தியில் ஒரு ஆறையும் பீறிட்டு ஓடச் செய்தோம்.
Saheeh International
Each of the two gardens produced its fruit and did not fall short thereof in anything. And We caused to gush forth within them a river.
இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனிடத்தில் இன்னும் (பல) கனி (தரும் மரங்)களும் இருந்தன. (இத்தகைய நிலைமையில் ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் நண்பனை நோக்கி ‘‘நான் உன்னைவிட அதிகப் பொருளுடையவன், மக்கள் தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்'' என்று (கர்வத்துடன்) கூறினான்.
IFT
அவனுக்கு நல்ல பலன் கிடைத்தது. (இவற்றையெல்லாம் பெற்றிருந்த) அவன் ஒருநாள் தன் நண்பனிடம் உரையாடிக்கொண்டிருக்கும்போது கூறினான்: “நான் உன்னைவிட அதிக செல்வமுடையவன்; உன்னைவிட அதிக ஆள் பலமும் கொண்டவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுக்கு (இவைகளன்றி) வேறு பல கனி(கொடுக்கும் மரங்)களும் இருந்தன, அப்பொழுது, (ஒரு நாள்) அவன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த தன் தோழனிடம், “நான் உன்னைவிட பொருளால் மிக அதிகமானவன், ஜனத்தொகையிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று (கர்வத்துடன்) கூறினான்.
Saheeh International
And he had fruit, so he said to his companion while he was conversing with him, "I am greater than you in wealth and mightier in [numbers of] men."
(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவன் தன் தோப்புக்குள் நுழைந்து (அளவு மீறிய மகிழ்ச்சியின் காரணமாக) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக ‘‘இவை ஒரு காலத்திலும் அழிந்துவிடுமென நான் நினைக்கவில்லை'' (என்றும்)
IFT
பிறகு அவன் தனது தோட்டத்தினுள் நுழைந்தான்; அப்பொழுது தன்னுடைய ஆன்மாவுக்கே கொடுமை இழைப்பவனாய்க் கூறலானான்: “இந்தச் செல்வம் என்றைக்காவது அழிந்துவிடும் என்று நான் கருதவில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் தனக்குத் தானே அநியாயம் இழைத்துக் கொண்டவனாக தன் தோப்புக்குள் நுழைந்து “இவை ஒரு காலத்திலும் அழிந்து விடுமென நான் எண்ணவில்லை” என்று கூறினான்.
Saheeh International
And he entered his garden while he was unjust to himself. He said, "I do not think that this will perish - ever.
(நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘மறுமை நிகழும் என்றும் நான் நம்பவேயில்லை. ஒருகால் (மறுமை நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் கொண்டு போகப்பட்டாலும் இங்கிருப்பதைவிட அங்கு நான் மேலானவனாக இருப்பதையே காண்பேன்'' என்றும் கூறினான்.
IFT
மறுமை எப்பொழுதேனும் வரும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப்பட்டால்கூட திண்ணமாக இதைவிட மகத்தான இடத்தையே நான் பெறுவேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “மறுமை நாள் நிலைபெறக்கூடியது என்றும் நான் எண்ணவில்லை, (அப்படியே) நான் என் இரட்சகனிடம் மீண்டும் கொண்டு செல்லப்பட்டாலும் திரும்புமிடத்தால் இங்கிருப்பதை விட மிக மேலானதையே நிச்சயமாக நான் பெறுவேன்” (என்றும் கூறினான்.)
Saheeh International
And I do not think the Hour will occur. And even if I should be brought back to my Lord, I will surely find better than this as a return."
கால லஹூ ஸாஹிBபுஹூ வ ஹுவ யுஹாவிருஹூ அகFபர்த Bபில்லதீ கலகக மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம ஸவ்வாக ரஜுலா
முஹம்மது ஜான்
அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவனுடன் பேசிக் கொண்டிருந்த அவனுடைய நண்பன் அவனை நோக்கி ‘‘உன்னைப் படைத்தவனையே நீ நிராகரிக்கிறாயா? மண்ணிலிருந்து பின்னர் இந்திரியத்தின் ஒரு துளியிலிருந்து உன்னைப் படைத்த அவன், பின்னர் ஒரு முழு மனிதனாகவும் உன்னை அமைத்தான்.
IFT
அதற்கு அவனுடைய நண்பன் அவனிடம் உரையாடிக் கொண்டே கூறினான்: “அந்த மாபெரும் ஆற்றலுடையவனையா நிராகரிக்கிறாய்? அவனோ உன்னை மண்ணிலிருந்தும் பிறகு விந்திலிருந்தும் படைத்தான். பின்னர் உன்னை ஒரு முழு மனிதனாய் ஆக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) அவனுடைய தோழன் அவனுடன் இதுபற்றி தர்க்கித்தவனாக “உன்னை மண்ணிலிருந்தும், பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து பின்னர் உன்னை சரியான மனிதனாக ஆக்கி விட்டானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.
Saheeh International
His companion said to him while he was conversing with him, "Have you disbelieved in He who created you from dust and then from a sperm-drop and then proportioned you [as] a man?
وَلَوْلَاۤவேண்டாமா?اِذْ دَخَلْتَநீ நுழைந்த போதுجَنَّتَكَஉன் தோட்டத்தில்قُلْتَநீ கூறியிருக்கمَاஎதுشَآءَநாடினான்اللّٰهُ ۙஅல்லாஹ்لَا قُوَّةَஅறவே ஆற்றல் இல்லைاِلَّا بِاللّٰهِ ۚதவிர/அல்லாஹ்வைக் கொண்டேاِنْ تَرَنِஎன்னை நீ பார்த்தால்اَنَاநான்اَقَلَّகுறைவானவனாகمِنْكَஉன்னைவிடمَالًاசெல்வத்திலும்وَّوَلَدًا ۚசந்ததியிலும்
வ லவ் லா இத் தகல்த ஜன்னதக குல்த மா ஷா'அல்லாஹு லா குவ்வத இல்லா Bபில்லாஹ்; இன் தரனி அன அகல்ல மின்க மால(ன்)வ் வ வலதா
முஹம்மது ஜான்
“மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -
அப்துல் ஹமீது பாகவி
நீ உன் தோட்டத்தில் நுழைந்தபொழுது (இவை அனைத்தும்) அல்லாஹ் (தன் அருளால்) எனக்குத் தந்தவையே! அல்லாஹ்வின் உதவியின்றி (நாம்) ஒன்றும் செய்து விட அறவே (நமக்கு) சக்தி இல்லை? என்று நீ கூறியிருக்க வேண்டாமா? பொருளிலும் சந்ததியிலும் நான் உன்னைவிட குறைவாக இருப்பதை நீ கண்டபோதிலும்,
IFT
நீ உன்னுடைய தோட்டத்தில் நுழைந்தபோது உன் நாவிலிருந்து ‘மாஷா அல்லாஹ், லா குவ்வத இல்லா பில்லாஹ்’* எனும் வார்த்தைகள் ஏன் வெளிப்படவில்லை? நான் பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் உன்னை விடக் குறைந்தவனாக இருக்கின்றேன் என்று நீ கருதினால்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உன் தோட்டத்தில் நீ நுழைந்தபொழுது அல்லாஹ் நாடியதே நடக்கும்; சக்தி அனைத்தும் அல்லாஹ்வைக் கொண்டல்லாது இல்லை என்று நீ கூறி இருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைவாக இருப்பதாக நீ கண்டபோதிலும் -
Saheeh International
And why did you, when you entered your garden, not say, 'What Allah willed [has occurred]; there is no power except in Allah'? Although you see me less than you in wealth and children,
“உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.
அப்துல் ஹமீது பாகவி
உன் தோட்டத்தைவிட மிக்க மேலானதை என் இறைவன் எனக்குக் கொடுக்கவும் (உன் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக) உன் தோப்பின் மீது ஓர் ஆபத்தை வானத்தில் இருந்து இறக்கி (அதிலுள்ள மரம், செடிகளையெல்லாம் அழித்து) அதை வெட்டவெளியாக (என் இறைவன்) செய்து விடவும் கூடும்.
IFT
என்னுடைய இறைவன் உன் தோட்டத்தைவிடச் சிறந்ததை எனக்கு அளித்துவிடக்கூடும். உன்னுடைய தோட்டத்தின் மீது வானத்திலிருந்து ஏதேனுமொரு ஆபத்தை அனுப்பிவிடக்கூடும். அதனால், அத்தோட்டம் வெறும் வெட்ட வெளியாக மாறிவிடக் கூடும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உன்னுடைய தோட்டத்தைவிட, மிக்க மேலானதை என் இரட்சகன் எனக்குக் கொடுக்கவும், மேலும் (உன் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக) அதன் மீது வானத்திலிருந்து வேதனையை (-பேரிடியைக் கொண்ட மழையை) அனுப்பி வைக்கவும் போதுமானவன், அப்பொழுது அது வழுக்கக்கூடிய வெட்ட வெளியாக ஆகிவிடும்.
Saheeh International
It may be that my Lord will give me [something] better than your garden and will send upon it a [disastrous] penalty from the sky, and it will become a smooth, dusty ground,
அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளை பொருள் (செல்வம்)அனைத்தும் அழிந்தன. அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்து விட்டன. ஆகவே, அவற்றில் அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்து கொண்டான். (மறுமையில் இறைவன் முன் அவன் கொண்டுவரப்படும்போது) ‘‘என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?'' என்று (கைசேதப்பட்டு) கூறுவான்.
IFT
இறுதியில், அவனுடைய விளைபொருள்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. அவனுடைய திராட்சைத் தோட்டம் அதன் பந்தலில் குப்புற விழுந்து விட்டதைக் கண்டு, தான் அதில் முதலீடு செய்ததெல்லாம் வீணாகிவிட்டதே என்ற வருத்தத்துடன் தன் கைகளைப் பிசைந்து கொண்டு கூறலானான்: “அந்தோ! நான் என் இறைவனுடன் எவரையும் இணை வைக்காமல் இருந்திருக்கக் கூடாதா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் கூறியவாறே) அவனுடைய விளைபொருள் யாவும் (அழிவினால்) சூழப்பட்டது, அவை அவற்றின் முகடுகளின் மீது வீழ்ந்து கிடந்த நிலையில் அதற்காக அவன் செலவு செய்ததைப பற்றி வருந்தி தன் இருகைகளையும் பிசைந்து கொண்டிருந்தான், (இந்நிலைக்கு ஆளாகிய பின்) “என் இரட்சகனுக்கு நான் எவரையும் இணைவைக்காமல் இருந்திருக்க வேண்டுமே” என்று கூறினான்.
Saheeh International
And his fruits were encompassed [by ruin], so he began to turn his hands about [in dismay] over what he had spent on it, while it had collapsed upon its trellises, and said, "Oh, I wish I had not associated with my Lord anyone."
மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை; ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
அச்சமயம் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கூட்டமும் (படையும்) அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று.
IFT
அல்லாஹ்வை விடுத்து, அவனுக்கு உதவிபுரிவதற்கு எந்தக் கூட்டத்தாரும் இருக்கவில்லை. தானாகவே அந்த ஆபத்தைச் சமாளிப்பதற்கும் அவனால் இயலவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்காக இருக்கவுமில்லை, மேலும் (அல்லாஹ்விடம்) பழிவாங்குகிற (சக்தியுடையவனாகவும்) அவன் இருக்கவில்லை.
Saheeh International
And there was for him no company to aid him other than Allah, nor could he defend himself.
அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.
அப்துல் ஹமீது பாகவி
அங்கு எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியன. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன். (இதையும் அவன் அங்கு அறிந்து கொள்வான்).
IFT
காரியங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் அதிகாரம் உண்மையானவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானது என்று அப்போது தெரிந்து விட்டது. மேலும், அவன் அருள்வதே சிறப்பான வெகுமதியாகும். இன்னும் அவன் காண்பிக்கின்ற முடிவே மகத்தான முடிவாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்த இடத்தில் உதவி செய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியதாகும், அவனே (தன் அடியார்களுக்கு) கூலி கொடுப்பதால் மிக்க மேலானவன், (தன் அடியார்களின் செயல்களுக்கு நற்கூலி வழங்க) முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன் (என்பதையும் அவன் அறிந்து கொண்டான்.)
Saheeh International
There the authority is [completely] for Allah, the Truth. He is best in reward and best in outcome.
மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன; ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கின்ற (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) பின்னர் காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகி விட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
IFT
(நபியே!) இவர்களுக்கு இம்மை வாழ்வின் உண்மைநிலையை இந்த உதாரணத்தைக் கொண்டு விளக்குவீராக: நாம் (இன்று) வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றோம். பிறகு, அதன் மூலம் பூமியில் செடிகொடிகள் நன்கு அடர்ந்து வளர்ந்தன. (நாளை) அதே கொடிகள் காற்றடித்துச் செல்லும் காய்ந்த பதராகிவிடுகின்றன. அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக! (அது) வானத்திலிருந்து நாம் இறக்கிவைத்த நீரைப்போல் இருக்கிறது; பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதனைக் குடித்து) அதனுடன் கலந்தன; (அதனால் பயிர்கள் செழித்தன, இந்நிலைக்குப்பின்) அது காய்ந்த சருகாகி அவற்றைக் காற்றுகள் (அடித்துச் சென்று) பரத்தி விடுகிறது; (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் ஆற்றலுடையோனாக இருக்கிறான்.
Saheeh International
And present to them the example of the life of this world, [its being] like rain which We send down from the sky, and the vegetation of the earth mingles with it and [then] it becomes dry remnants, scattered by the winds. And Allah is ever, over all things, Perfect in Ability.
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) செல்வமும் ஆண் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (தவிர நிலையானவையல்ல). என்றுமே நிலையான நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்லாதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும்.
IFT
இந்தப் பொருள்களும் இந்தப் பிள்ளைகளும் உலகவாழ்க்கையின் நிலையற்ற அலங்காரமே. உண்மையில், நிலைத்திருக்கக்கூடிய நற்செயல்கள் தாம், பலனைப் பொறுத்து உம் இறைவனிடம் சிறந்தவையாகும். மேலும், அவற்றின் மீதுதான் நல்ல எதிர்பார்ப்புகள் கொள்ள முடியும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே) செல்வமும், ஆண்மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரமாகும், மேலும், என்றுமே நிலையான நற்கருமங்களை தாம், உம் இரட்சகனிடத்தில் நற்கூலியால் மிகச் சிறந்ததாகும், (மறுமையை) ஆதரவு கொள்வதற்கும் மிகச் சிறந்ததாகும்.
Saheeh International
Wealth and children are [but] adornment of the worldly life. But the enduring good deeds are better to your Lord for reward and better for [one's] hope.
(நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடுகின்ற நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம்.
IFT
அந்த நாளைக் குறித்து கவலை கொள்ள வேண்டும். அன்று நாம் மலைகளைப் பெயர்த்துவிடும்போது பூமி முற்றிலும் வெட்ட வெளியாக இருப்பதை நீர் காண்பீர். மேலும், மனிதர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்ப்போம். (முற்காலத்து மற்றும் பிற்காலத்து மக்களில்) எவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நாம் மலைகளை (அவற்றின் இடங்களிலிருந்து பெயர்ந்து) நடத்தாட்டி விடும் நாளை நினைவு கூர்வீராக! அந்நாளில் பூமியைச் சமமாக வெட்ட வெளியாகவும் நீர் காண்பீர்; (அந்நாளில்) அவர்களையும் நாம் ஒன்று திரட்டுவோம்; பின்னர், அவர்களில் ஒருவரையும் நாம் விட்டு வைக்க மாட்டோம்.
Saheeh International
And [warn of] the Day when We will remove the mountains and you will see the earth exposed, and We will gather them and not leave behind from them anyone.
அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவன் முன் அவர்கள் கொண்டுவரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்படுவார்கள். ‘‘நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். எனினும், (விசாரணைக்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நாளை) உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று அவர்களிடம் கூறப்படும்).
IFT
மேலும், எல்லோரும் உம் அதிபதியின் முன்னிலையில் கொண்டு வந்து அணியணியாய் நிறுத்தப்படுவார்கள் “(பார்த்துக் கொள்ளுங்கள்!) வந்து விட்டீர்கள் அல்லவா, நீங்கள் எம்மிடம்? நாம் உங்களை முதல் தடவை எவ்வாறு படைத்திருந்தோமோ அவ்வாறு! உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட எந்த ஒரு நேரத்தையும் நாம் நிர்ணயிக்கவில்லை என்றுதானே நீங்கள் கருதியிருந்தீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் உமதிரட்சகன் முன் அவர்கள் யாவரும் அணியணியாகக் கொண்டு வரப்படுவார்கள், “நாம் உங்களை முதல் தடவை படைத்தது போன்றே, (இப்பொழுதும் உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் திட்டமாக வந்து விட்டீர்கள், மாறாக (நம்) வாக்கை நிறைவேற்றுமிடத்தை (இந்நாளை) உங்களுக்கு நாம் ஆக்கவே மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள், (இவ்வாறு நடந்தேறுமென நீங்கள் எண்ணிப்பார்க்கவே இல்லை).
Saheeh International
And they will be presented before your Lord in rows, [and He will say], "You have certainly come to Us just as We created you the first time. But you claimed that We would never make for you an appointment."
இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான்.
IFT
மேலும், வினைப்பட்டியல் முன்னால் வைக்கப்பட்டுவிடும். நீர் பார்ப்பீர்: அவ்வேளை குற்றம் புரிந்தோர், தமது வாழ்க்கைப் புத்தகத்தில் உள்ளவற்றைக் கண்டு அஞ்சிக்கொண்டிருப்பார்கள்; மேலும் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்: “அந்தோ...! எங்கள் துர்பாக்கியமே! இது என்ன பதிவேடு! எங்கள் செயல்களில் சிறிதோ பெரிதோ எதையும் பதிக்காமல் இது விட்டு வைக்கவில்லையே!” தாங்கள் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். மேலும், உம் அதிபதி எவருக்கும் சிறிதும் அநீதி இழைக்கமாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(செயல்கள் பதியப்பட்ட) புத்தகமும் (அவர்கள் முன்) வைக்கப்படும், அப்போது அதில் இருப்பதைக் கண்டு பயந்தவர்களாக குற்றவாளிகளை நீர் காண்பீர், மேலும், அவர்கள் எங்களுடைய கேடே “இந்தப் புத்தகத்திற்கு என்ன நேர்ந்தது?” (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ, பெரிதோ அதைக் கணக்கெடுத்(துபதிந்)தே தவிர, அது விட்டுவைக்கவில்லை, எனக் கூறுவார்கள், அவர்கள் செய்தவற்றை (எதிரில்) முன் வைக்கப்பட்டதாகவும் பெறுவார்கள், இன்னும், உமதிரட்சகன் எவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான்.
Saheeh International
And the record [of deeds] will be placed [open], and you will see the criminals fearful of that within it, and they will say, "Oh, woe to us! What is this book that leaves nothing small or great except that it has enumerated it?" And they will find what they did present [before them]. And your Lord does injustice to no one.
அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக; அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
வானவர்களை நோக்கி ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் என்னைத் தவிர்த்து அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது.
IFT
நாம் வானவர்களிடம் ‘ஆதத்திற்குச் சிரம் பணியுங்கள்’ என்று கூறியதை நினைவுகூருங்கள். அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால், இப்லீஸ் சிரம் பணியவில்லை. அவன் ஜின்களைச் சார்ந்தவனாக இருந்தான். ஆகையால், அவன் தன் அதிபதியின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தான். (இப்போது) என்னை விடுத்து நீங்கள் அவனையும், அவனுடைய சந்ததிகளையும் உங்களுடைய பாதுகாவலர்களாய் ஆக்கிக் கொள்கிறீர்களா, என்ன? அவர்களோ உங்களின் பகைவர்களாவர். எத்தனை மோசமான மாற்றை இந்தக் கொடுமையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், மலக்குகளிடம், “ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்” என்று நாம் கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக)! அப்போது இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) சிரம் பணிந்தார்கள், அவன் ஜின் இனத்திலுள்ளவனாக இருந்தான், ஆகவே, அவன் தன் இரட்சகனுடைய கட்டளைக்கு மாறு செய்து விட்டான், எனவே (மனிதர்களே!) நீங்கள் என்னையன்றி (அவனையும், அவனுடைய சந்ததிகளையும் உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய விரோதிகள், அநியாயக்காரர்களுக்கு (அவர்கள் என்னை விட்டுவிட்டு அவர்களைத் தங்களுக்கு உற்ற நண்பர்களாக) மாற்றிக் கொண்டது மிகக்கெட்டது.
Saheeh International
And [mention] when We said to the angels, "Prostrate to Adam," and they prostrated, except for Iblees. He was of the jinn and departed from [i.e., disobeyed] the command of his Lord. Then will you take him and his descendants as allies other than Me while they are enemies to you? Wretched it is for the wrongdoers as an exchange.
வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபொழுதும், அந்த ஷைத்தான்களை (நாம்) படைத்தபொழுதும் நாம் அவர்களை (உதவிக்கு) அழைக்கவில்லை. வழி கெடுக்கின்ற ஷைத்தான்களை (எவ்விஷயத்திலும்) நாம் நம் சகாக்களாக (-உதவியாளர்களாக) ஆக்கிக் கொள்ளவில்லை.
IFT
நாம் வானங்களையும் பூமியையும் படைத்தபோது அவர்களை அழைக்கவில்லை. ஏன், அவர்களைப் படைக்கும்போதுகூட அவர்களை கூட்டுச் சேர்க்கவில்லை. வழி கெடுப்பவர்களை உதவியாளர்களாய் ஆக்கிக்கொள்வது என் நியதியல்ல.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும், பூமியையும் சிருஷ்டிப்பதற்கும், மேலும் அவர்களையே சிருஷ்டிப்பதற்கும், அவர்களை நான் (உதவிக்காக) முன்னிலையாக்கிக் கொள்ளவில்லை, வழிகெடுப்பவர்(களான இவர்)களை (எவ்விஷயத்திலும்) நான் என்னுடைய உதவியாளர்களாக ஆக்கிக் கொள்பவனாகவும் இல்லை.
Saheeh International
I did not make them witness to the creation of the heavens and the earth or to the creation of themselves, and I would not have taken the misguiders as assistants.
“எனக்கு இணையானவர்களென எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.”
அப்துல் ஹமீது பாகவி
(இறைவன், இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்குத் துணையானவை என எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவற்றை நீங்கள் அழையுங்கள்'' என்று கூறுகின்ற ஒரு நாளை (நபியே! அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஆகவே, அவர்கள் அவற்றை அழைப்பார்கள். எனினும், அவை அவர்களுக்குப் பதில் கொடுக்கா. மேலும், நாம் (அவற்றுக்கும்) அவர்களுக்கும் இடையில் (சந்திக்க முடியாத) ஒரு தடையை ஏற்படுத்தி விடுவோம்.
IFT
“என்னுடன் இணையானவர்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்தவர்களை இப்போது அழையுங்கள்!” என்று இவர்களின் இறைவன் இவர்களிடம் கூறும் நாளில் (இவர்கள் என்ன செய்வார்கள்?) இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆயினும், அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்ய வரமாட்டார்கள். மேலும், நாம் அவர்களுக்கிடையே ஓர் அழிவுப்படுகுழியை அமைத்துவிடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இரட்சகன், இணைவைத்து வணங்குவோரிடம்,) “நீங்கள் எனக்கு இணையானவர்களென எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவர்களை நீங்கள் அழையுங்கள்! என்று கூறும் நாளில் அவர்கள் அவர்களை அழைப்பார்கள்; (எனினும்) அவர்கள் அவர்களுக்குப் பதில் கொடுக்க மாட்டார்கள்; அன்றியும், நாம் அவர்களுக்கிடையில் நரகக் கிடங்கை ஏற்படுத்தி விடுவோம்”.
Saheeh International
And [warn of] the Day when He will say, "Call My 'partners' whom you claimed," and they will invoke them, but they will not respond to them. And We will put between them [a valley of] destruction.
இன்னும், குற்றவாளிகள்: (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்கள் என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
குற்றவாளிகள் நரகத்தைக் காணும் சமயத்தில் ‘‘நிச்சயமாக அதில் விழுந்து விடுவோம்'' என்று உறுதியாக எண்ணுவார்கள். அவர்கள் அதில் இருந்து தப்ப எந்த ஒரு வழியையும் காணமாட்டார்கள்.
IFT
குற்றவாளிகள் அனைவரும் அந்நாளில் நரகநெருப்பைக் காண்பார்கள்; தாம் அதில் விழவிருக்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள். அதிலிருந்து தப்புவதற்கான எந்தப் புகலிடத்தையும் அவர்கள் காணமாட்டார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், குற்றவாளிகள் (அந்நாளில் நரக) நெருப்பைப் பார்த்து விடுவார்கள், அப்போது நிச்சயமாக அதில் தாங்கள் விழக்கூடியவர்கள் என்பதை அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வார்கள், மேலும் அவர்கள் அதிலிருந்து (தப்ப வேறு) திரும்பும் இடத்தைக் காண மாட்டார்கள்.
Saheeh International
And the criminals will see the Fire and will be certain that they are to fall therein. And they will not find from it a way elsewhere.
இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களுக்கு இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் விவரித்திருக்கிறோம். எனினும், மனிதன்தான் அதிகமாக (வீண்) தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.
IFT
நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு பற்பல உதாரணங்களைக் கூறி விதவிதமாக விளக்கியுள்ளோம். ஆயினும், மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் மனிதர்களுக்கு இந்தக்குர் ஆனில், ஒவ்வோர் உதாரணத்தையும் திட்டமாக விவரித்திருக்கிறோம், (எனினும்) மனிதன் (வீண்) தர்க்கம் செய்வதால் மிக அதிகமானவனாக இருக்கிறான்.
Saheeh International
And We have certainly diversified in this Qur’an for the people from every [kind of] example; but man has ever been, most of anything, [prone to] dispute.
மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவதையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் அவர்கள் அதை நம்பிக்கை கொண்டு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருவதைத் தடை செய்வதெல்லாம் முன்சென்றவர்களுக்கு நிகழ்ந்த(தைப் போன்ற அபாயகரமான) சம்பவம் இவர்களுக்கு நிகழவேண்டும் என்பதற்காக அல்லது இவர்கள் (கண்) முன் நம் வேதனை வரவேண்டும் என்பதற்காகத்தான்.
IFT
மனிதர்களிடம் வழிகாட்டுதல் வந்தபோது அதனை ஏற்றுக்கொள்வதிலிருந்தும், தம்முடைய இறைவனிடம் பாவமன்னிப்பு கோருவதிலிருந்தும் அவர்களைத் தடுத்தது எது...? முந்தைய சமூகங்களுக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கும் ஏற்படுவதை அல்லது இறைத்தண்டனை தங்கள் கண்முன் வருவதை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களை – அவர்களிடம் நேர்வழி வந்தபோது (அதை) அவர்கள் ஈமான் கொள்வதிலிருந்தும், அவர்களுடைய இரட்சகனிடம் அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்பதிலிருந்தும், முன் சென்றவர்களுக்குரிய அல்லாஹ்வின் வழி முறை(யான தண்டனை) அவர்களுக்கு வருவதையும், அல்லது (கண்)முன் வேதனை அவர்களுக்கு வருவதையும் தவிர வேறெதுவும் தடுக்கவில்லை.
Saheeh International
And nothing has prevented the people from believing when guidance came to them and from asking forgiveness of their Lord except that there [must] befall them the [accustomed] precedent of the former peoples or that the punishment should come [directly] before them.
இன்னும், நாம் தூதர்களை நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை; எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நற்செய்தி கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே நாம் நம் தூதர்களை அனுப்பி வைத்திருக்கிறோம். எனினும், நிராகரிப்பவர்களோ (நம் தூதர்கள் கொண்டு வந்த) சத்தியத்தை அழித்துவிடக் கருதி வீணான தர்க்கங்கள் செய்ய ஆரம்பித்து நம் வசனங்களையும் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (தண்டனை வருவ)தையும் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
IFT
நற்செய்தி அறிவிப்பதற்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமே அன்றி வேறு எந்த நோக்கத்திற்காகவும் நாம் தூதர்களை அனுப்புவது இல்லை. ஆயினும் இறைநிராகரிப்பாளர்கள், அசத்தியத்தின் ஆயுதங்கள் கொண்டு சத்தியத்தை வீழ்த்த முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் என்னுடைய வசனங்களையும், தங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் பரிகாசமாக்கினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் தூதர்களை நாம் அனுப்பவில்லை, நிராகரிப்போரோ பொய்யைக் கொண்டு தர்க்கம் செய்கிறார்கள், காரணம், அதைக்கொண்டு சத்தியத்தை அவர்கள் அழித்து விடுவதற்காக; மேலும், என்னுடைய வசனங்களையும அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட வேதனை வருவதையும் பரிகாசமாக அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Saheeh International
And We send not the messengers except as bringers of good tidings and warners. And those who disbelieve dispute by [using] falsehood to [attempt to] invalidate thereby the truth and have taken My verses, and that of which they are warned, in ridicule.
எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் தன் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்ட சமயத்தில் அவற்றைப் புறக்கணித்து, தன் கைகளால் செய்த குற்றங்களை (முற்றிலும்) மறந்து விடுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இந்த அநியாயக்காரர்கள்) எதையும் அறிந்து கொள்ளாதவாறு நாம் அவர்களுடைய உள்ளங்களில் திரையையும், அவர்களுடைய காதுகளில் மந்தத்தையும் நிச்சயமாக ஆக்கிவிட்டோம். ஆதலால், (நபியே!) நீர் அவர்களை நேரான வழியில் (எவ்வளவுதான் வருந்தி) அழைத்தபோதிலும் ஒரு காலத்திலும் அவர்கள் நேரான வழிக்கு வரவே மாட்டார்கள்.
IFT
தன்னுடைய இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டு, அறிவுரை கூறப்பட்டபோது அவற்றைப் புறக்கணித்து தன் கைகளே செய்த தீவினைகளின் கதியை மறந்து விட்டவனைவிட பெரும் கொடுமைக்காரன் வேறு யார்? (எவர்கள் இத்தகைய நடத்தையை மேற்கொண்டார்களோ) அவர்கள் குர்ஆனை உணர்ந்து கொள்ளாதவாறு அவர்களின் இதயங்களின் மீது நாம் திரையிட்டு வைத்திருக்கின்றோம். மேலும், அவர்களின் செவிகளில் மந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றோம். நேர்வழியின் பக்கம் அவர்களை நீர் எவ்வளவுதான் அழைத்தாலும், இந்நிலையில் அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெறமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்டு பின்னர் அவற்றைப் புறக்கணித்து தன் கைகள் முற்படுத்தியவற்றை மறந்தும் விட்டவனைவிட மிக அநியாயக்காரன் யார்? (குர் ஆனாகிய) இதனை அவர்கள் விளங்கிக் கொள்ளாதவாறு அவர்களுடைய இதயங்களின் மீது திரைகளையும் அவர்களுடைய காதுகளில் அடைப்பையும், நிச்சயமாக நாம் ஆக்கிவிட்டோம், (ஆதலால், நபியே!) நீர் அவர்களை நேர் வழியின்பால் (எவ்வாறு வருந்தி) அழைத்த போதிலும், அப்போது அவர்கள் ஒருபோதும் நேர் வழியை அடையவே மாட்டார்கள்.
Saheeh International
And who is more unjust than one who is reminded of the verses of his Lord but turns away from them and forgets what his hands have put forth? Indeed, We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And if you invite them to guidance - they will never be guided, then - ever.
(நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு; அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், (நபியே!) உமது இறைவன் மிக்க மன்னிப்பவனும், கருணையுடையவனும் ஆவான். அவர்கள் செய்யும் (தீய) செயலின் காரணமாக அவன் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்பதாக இருந்தால் இதுவரை அவர்களை வேதனை செய்தேயிருப்பான். எனினும், (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்கு ஒரு தவணை உண்டு. அதற்குப் பின்னர் அவர்கள் தப்ப வழி காணமாட்டார்கள்.
IFT
உம் இறைவன் பெரும் மன்னிப்பாளனும் கருணையுடையோனுமாய் இருக்கின்றான். இவர்கள் சம்பாதித்த தீவினைகளுக்காக இவர்களை அவன் தண்டிக்க நாடியிருந்தால் வேதனையை விரைவில் இவர்களுக்கு அனுப்பிவைத்திருப்பான்! ஆனால் இவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதை விட்டுத் தப்பி ஓடுவதற்கு எந்த வழியையும் இவர்கள் காண மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) உமதிரட்சகன் மிக்க பிழை பொறுப்பவன், மிக்க கிருபையுடையவன், அவர்கள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாக அவன் (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாயிருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை துரிதமாக்கியிருப்பான், எனினும், (அவர்களை பிடிக்க) அவர்களுக்கு ஒரு வாக்களிக்கப்பட்ட தவணையுண்டு, அவனையன்றி அவர்கள் (தப்பி) ஒதுங்குமிடத்தைப் பெறவே மாட்டார்கள்.
Saheeh International
And your Lord is the Forgiving, the possessor of mercy. If He were to impose blame upon them for what they earned, He would have hastened for them the punishment. Rather, for them is an appointment from which they will never find an escape.
மேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
பாவம் செய்துகொண்டிருந்த இவ் ஊர்வாசிகள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். எனினும், அவர்களை அழிப்பதற்கும் நாம் ஒரு தவணையை ஏற்படுத்தி இருந்தோம். (அத்தவணை வந்த பின்னரே நாம் அவர்களை அழித்தோம்.)
IFT
அழிவுக்குள்ளான இந்த ஊர்கள் உங்கள் முன் இருக்கின்றன. அவர்கள் கொடுமை செய்தபோது, அவர்களை நாம் அழித்துவிட்டோம். அவை ஒவ்வொன்றின் அழிவிற்கும் குறிப்பிட்ட தொரு காலத்தை நிர்ணயித்து இருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இத்தகைய ஊர்வாசிகள் -அவர்கள் பாவம் செய்தபோது அவர்களை நாம் அழித்துவிட்டோம், அவர்களை அழிப்பதற்கு ஒரு தவணையையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம், (அத்தவணையில் நாம் அவர்களை அழித்தோம்)
Saheeh International
And those cities - We destroyed them when they wronged, and We made for their destruction an appointed time.
وَاِذْசமயம்قَالَகூறினார்مُوْسٰىமூஸாلِفَتٰٮهُதன் வாலிபரை நோக்கிلَاۤ اَبْرَحُசென்று கொண்டே இருப்பேன்حَتّٰۤىவரைاَبْلُغَஅடைவேன்مَجْمَعَஇணைகின்ற இடத்தைالْبَحْرَيْنِஇரு கடல்களும்اَوْஅல்லதுاَمْضِىَநடந்து கொண்டே இருப்பேன்حُقُبًاநீண்டதொரு காலம்
வ இத் காலா மூஸா லிFபதாஹு லா அBப்ரஹு ஹத்தா அBப்லுக மஜ்ம'அல் Bபஹ்ரய்னி அவ் அம்ளிய ஹுகுBபா
முஹம்மது ஜான்
இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
அப்துல் ஹமீது பாகவி
மூஸா தன்னுடன் இருந்த வாலிபனை நோக்கி ‘‘இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை நான் அடையும் வரை செல்வேன் அல்லது வருடக்கணக்கில் (இப்படியே) நான் நடந்துகொண்டே இருப்பேன்'' என்று கூறியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
IFT
(மூஸாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை இவர்களுக்கு எடுத்துரையுங்கள்!) ஒருபோது மூஸா தம் பணி யாளரிடம் கூறினார்: “நான் இரு நதிகள் சங்கமம் ஆகுமிடத்தை அடையும்வரை என்னுடைய பயணத்தை முடித்துக் கொள்ள மாட்டேன்; இல்லையெனில் நெடுங்காலம் வரை நடந்து கொண்டே இருப்பேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூஸா தன்னுடனிருந்த இளைஞனிடம், “இரு கடல்களும் சந்திக்குமிடத்தை நான் அடையும் வரையில் நான் சென்று (பிரயாணித்துக்) கொண்டேயிருப்பேன், அல்லது நீண்ட காலம் (பிரயாணிக்க நேர்ந்தாலும்) நான் சென்று கொண்டிருப்பேன்” என்று கூறியதை (நபியே!) அவர்களுக்கு நீர் நினைவு படுத்துவீராக!
Saheeh International
And [mention] when Moses said to his boy [i.e., servant], "I will not cease [traveling] until I reach the junction of the two seas or continue for a long period."
அவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் இருவரும் இரு கடல்களும் சந்திக்கின்ற இடத்தை அடைந்த பொழுது தங்கள் மீனை அவர்கள் மறந்துவிட்டனர். அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் அமைத்துக் கொண்டு (சென்று) விட்டது.
IFT
பிறகு அவை சங்கமமாகும் இடத்தை அவர்கள் அடைந்தபோது, தங்களுடைய மீனை மறந்துவிட்டார்கள். அது நதியில் சுரங்கம் போல் வழியமைத்துக் கொண்டு சென்றுவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் இருவரும் அவ்விரண்டு கடல்களுக்குமிடையே சந்திக்குமிடத்தை அடைந்தபொழுது தங்களுடைய மீனை அவர்களிருவரும் மறந்து விட்டனர், அப்போது அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கமாக அமைத்துக் கொண்டு (சென்று) விட்டது.
Saheeh International
But when they reached the junction between them, they forgot their fish, and it took its course into the sea, slipping away.
Fபலம்மா ஜாவZஜா கால லிFபதாஹு ஆதினா கதா'அனா லகத் லகீன மின் ஸFபரினா ஹாதா னஸBபா
முஹம்மது ஜான்
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(தாங்கள் விரும்பிச் சென்ற அவ்விடத்தை அறியாது) அவ்விருவரும் அதைக் கடந்த பின், மூஸா தன் வாலிபனை நோக்கி ‘‘நம் காலை உணவை நீர் கொண்டு வா. நிச்சயமாக நாம் இந்த பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்று கூறினார்.
IFT
அவ்விருவரும் சற்று முன்னேறிச் சென்றபோது மூஸா தம் பணியாளரிடம் கூறினார்: “நமது சிற்றுண்டியைக் கொண்டு வாரும். இன்றைய பயணத்தில் நாம் மிகவும் களைப்படைந்து விட்டோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தாங்கள் செல்லுமிடம் அதுதான் என அறியாது) அவ்விருவரும் (அதைக்) கடந்துவிட்டபோது மூஸா) தன் இளைஞனிடம் “நம்முடைய (காலை) உணவை நீர் நமக்குக் கொண்டு வாரும், நிச்சயமாக நாம் நம்முடைய இந்த யாத்திரையில் களைப்பைச் சந்தித்து விட்டோம்” என்று கூறினார்.
Saheeh International
So when they had passed beyond it, [Moses] said to his boy, "Bring us our morning meal. We have certainly suffered in this, our journey, [much] fatigue."
அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (அந்த வாலிபன் மூஸாவை நோக்கி) ‘‘அந்த கற்பாறை அருகில் நாம் தங்கிய சமயத்தில் (நிகழ்ந்த ஆச்சரியத்தை) பார்த்தீரா? நிச்சயமாக நான் (நம்முடன் கொண்டு வந்த) மீனை மறந்துவிட்டேன். அதை நான் (உமக்குக்) கூறுவதை ஷைத்தானைத் தவிர (வேறொருவரும்) எனக்கு மறக்கடிக்கவில்லை. (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தனக்கொரு வழியை ஏற்படுத்திக்கொண்டது'' என்று கூறினார்.
IFT
அதற்குப் பணியாளர் கூறினார்: “பார்த்தீர்களா, என்ன நடந்துவிட்டது என்று? நாம் அந்தப் பாறையின் அருகில் தங்கியிருந்தபோது எனக்கு மீனைப் பற்றி நினைவில்லாமல் போய்விட்டது. ஷைத்தான் என்னைக் கவனக்குறைவில் ஆழ்த்திவிட்டான். எனவே (தங்களிடம்) அதனைப் பற்றிக் கூற நான் மறந்துவிட்டேன். ஆனால், அதிசயமான முறையில் மீன் நதியினுள் சென்று விட்டது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “அக்கற்பாறையில் நாம் ஒதுங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? அப்போது நிச்சயமாக நான் மீனை (ப்பற்றிக்கூற) மறந்துவிட்டேன், அதனை நான் கூறுவதை ஷைத்தானையன்றி (மற்றெவரும்) எனக்கு மறக்கச் செய்யவில்லை, (அங்கு அது) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் தன் வழியை எடுத்துக் கொண்டது” என்று கூறினார்.
Saheeh International
He said, "Did you see when we retired to the rock? Indeed, I forgot [there] the fish. And none made me forget it except Satan - that I should mention it. And it took its course into the sea amazingly."
(அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு மூஸா ‘‘நாம் தேடிவந்த இடம் அது தான்'' என்று கூறி அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடி) தங்கள் காலடிகளைப் பின்பற்றி வந்த வழியே சென்றார்கள்.
IFT
மூஸா கூறினார்: “அந்த இடத்தைத்தானே நாம் தேடிக்கொண்டிருந்தோம்?” பிறகு அவர்கள் இருவரும் வந்தவழியே திரும்பிச் சென்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு மூஸாவாகிய) அவர் “அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த (இடமான)தாகும்” என்று கூறினார். பின்னர் அவ்விருவரும் (அவ்விடத்தைத் தேடித்) தங்கள் அடிச்சுவடுகளின் மீதே பின்பற்றி (வந்த வழியே) இருவரும் திரும்பிச் சென்றார்கள்.
Saheeh International
[Moses] said, "That is what we were seeking." So they returned, following their footprints.
Fப வஜதா 'அBப்தம் மின் 'இBபாதினா ஆதய்னாஹு ரஹ்மதம் மின் 'இன்தினா வ 'அல்லம்னாஹு மில் லதுன்னா 'இல்மா
முஹம்மது ஜான்
(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்விருவரும் அங்கு வந்தபோது (அவ்விடத்தில்) நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவர் மீது நாம் அருள்புரிந்து நம் புறத்திலிருந்து (சிறப்பான) ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்.
IFT
மேலும், அங்கு அவர்கள் நம்முடைய அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள். அவருக்கோ நம்முடைய அருளை நாம் வழங்கியிருந்தோம். மேலும், நம் சார்பிலிருந்து சிறப்பான ஞானத்தையும் வழங்கியிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவ்விருவரும் (அங்கு) நம் அடியார்களில் ஒரு அடியாரைக் கண்டார்கள், அவருக்கு நம்மிடமிருந்து அருளை அளித்திருந்தோம், இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து அறிவையும் கற்பித்திருந்தோம்.
Saheeh International
And they found a servant from among Our servants [i.e., al-Khiḍr] to whom We had given mercy from Us and had taught him from Us a [certain] knowledge.
“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸா அவரை நோக்கி ‘‘உமக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக்கூடியதை நீர் எனக்குக் கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா?'' என்று கேட்டார்.
IFT
மூஸா, அவரிடம் கேட்டார்: “தங்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கும் நல்லறிவை நீங்கள் எனக்குக் கற்றுத் தரும் பொருட்டு நான் உங்களுடன் இருக்கலாமா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூஸா அவரிடம் “உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நான் உங்களைப் பின் தொடரட்டுமா? என்று கேட்டார்.
Saheeh International
Moses said to him, "May I follow you on [the condition] that you teach me from what you have been taught of sound judgement?"
قَالَகூறினார்سَتَجِدُنِىْۤகாண்பீர்/என்னைاِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்صَابِرًاபொறுமையாளனாகوَّلَاۤ اَعْصِىْஇன்னும் மாறுசெய்யமாட்டேன்لَكَஉமக்குاَمْرًاஎந்த ஒரு காரியத்திலும்
கால ஸதஜிதுனீ இன் ஷா 'அல் லாஹு ஸாBபிர(ன்)வ் வ லா அஃஸீ லக அம்ரா
முஹம்மது ஜான்
(அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு மூஸா ‘‘இறைவன் அருளால் (எந்த விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீர் என்னைக் காண்பீர். எந்த விஷயத்திலும் நான் உமக்கு மாறுசெய்ய மாட்டேன்'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு மூஸாவாகிய) அவர் “அல்லாஹ் நாடினால் (எவ்விஷயத்திலும்) பொறுமையாளனாகவும், எக்காரியத்திலும் நான் உமக்கு மாறு செய்யாதவனாகவும் என்னை நீர் காண்பீர்” என்று கூறினார்.
Saheeh International
[Moses] said, "You will find me, if Allah wills, patient, and I will not disobey you in [any] order."
(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவர் ‘‘நீர் என்னைப் பின்பற்றுவதாயின் (நான் செய்யும்) எவ்விஷயத்தைப் பற்றியும் நானாகவே உமக்கு அறிவிக்கும் வரை நீர் என்னிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்'' என்று சொன்னார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “சரி, நீர் என்னுடன் வருகிறீர் என்றால், நானே உம்மிடம் கூறும்வரை எதைப்பற்றியும் நீர் என்னிடம் கேட்கக்கூடாது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “நீர் என்னைப் பின்பற்றுவதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும், நானாகவே அதனைப்பற்றி உமக்கு செய்தி விளக்கும் வரையில் நீர் என்னிடம் கேட்காதீர்” என்று கூறினார்.
Saheeh International
He said, "Then if you follow me, do not ask me about anything until I make to you about it mention [i.e., explanation]."
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு முடிவு செய்துகொண்டு) அவ்விருவரும் சென்றவழியில் குறுக்கிட்ட ஒரு கடலைக் கடக்க கப்பலில் ஏறியபோது, அவர் அதன் (ஒரு) பலகையைப் பெயர்த்து அதை ஓட்டையாக்கி விட்டார். அதற்கு மூஸா ‘‘இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீர் துவாரமிட்டீர்? நிச்சயமாக நீர் மிக்க அபாயகரமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டீர்'' என்று கூறினார்.
IFT
பிறகு அவர்கள் இருவரும் பயணம் மேற்கொண்டு ஒரு கப்பலில் ஏறியபோது, அவர் அதில் ஒரு துளையிட்டார்! அப்போது மூஸா கேட்டார்: “கப்பலில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் அதில் துளையிட்டீர்கள்...? ஒரு கொடுமையான செயலைச் செய்து விட்டீர்களே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு முடிவெடுத்துக் கொண்டு) பின்னர், அவ்விருவரும் ஒரு கப்பலில் ஏறும் வரையில் சென்றார்கள், (கப்பலில் ஏறிய பின்னர்) அவர் (அதன் ஒரு பலகையைப் பெயர்த்து) அதனை ஓட்டையாக்கிவிட்டார், (அதற்கு மூஸாவாகிய அவர் “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீர் ஓட்டையாக்கினீர், நிச்சயமாக நீர் மிகப் பெரும் காரியத்தை செய்துவிட்டீரே” என்று கூறினார்.
Saheeh International
So they set out, until when they had embarked on the ship, he [i.e., al-Khiḍr] tore it open. [Moses] said, "Have you torn it open to drown its people? You have certainly done a grave thing."
கால லா து'ஆகித்னீ Bபிமா னஸீது வலா துர்ஹிக்னீ மின் அம்ரீ 'உஸ்ரா
முஹம்மது ஜான்
“நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு) மூஸா, ‘‘நான் மறந்துவிட்டதைப் பற்றி என்னைக் குற்றம் பிடிக்காதீர். என் விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பும் செய்யாதீர்'' என்று கேட்டுக் கொண்டார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “நான் மறந்து போனதற்காக என்னைக் கண்டிக்காதீர்கள்! என் விஷயத்தில் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்கவர் “நான் மறந்துவிட்டதைப்பற்றி நீர் என்னை குற்றம் பிடிக்க வேண்டாம் என் விஷயத்தில் எனக்கு சிரமத்தையும் ஏற்படுத்தி (என்னை நெருக்கடியிலும் ஆக்கி)விட வேண்டாம்” என்று கூறினார்.
Saheeh International
[Moses] said, "Do not blame me for what I forgot and do not overwhelm me in my matter with difficulty."
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் இருவரும் நடந்தனர். (வழியில் விளையாடிக் கொண்டிருந்த) ஒரு சிறுவனைச் சந்தித்தபோது அவர் அவனைக் கொலை செய்து விட்டார். அதற்கு மூஸா, ‘‘கொலை குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை கொலை செய்து விட்டீர்! நிச்சயமாக ஒரு தகாத காரியத்தையே நீர் செய்து விட்டீர்'' என்று கூறினார்.
IFT
பிறகு இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கையில், ஒரு சிறுவனைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் அவனைக் கொன்றுவிட்டார். மூஸா கூறினார்: “ஒரு நிரபராதியின் உயிரைக் கொன்று விட்டீர்களே! அவன் யாரையும் கொலை செய்யவில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் இருவரும் கப்பலிலிருந்து இறங்கி நடந்தனர், முடிவாக வழியில் ஒரு சிறுவனை அவ்விருவரும் சந்திக்கவே, அவர் அச்சிறுவனை கொன்று விட்டார், கொலைக் குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆத்மாவை நீர் கொலை செய்து விட்டீரே” நிச்சயமாக நீர் மறுக்கப்பட வேண்டிய ஒரு தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்” என்று (மூஸாவாகிய) அவர் கூறினார்.
Saheeh International
So they set out, until when they met a boy, he [i.e., al-Khiḍr] killed him. [Moses] said, "Have you killed a pure soul for other than [having killed] a soul? You have certainly done a deplorable thing."
கால இன் ஸ அல்துக 'அன் ஷய்'இம் Bபஃதஹா Fபலா துஸாஹிBப்னீ கத் Bபலக்த மில் லதுன்னீ 'உத்ரா
முஹம்மது ஜான்
இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (மூஸா) ‘‘இதன் பின்னர் நான் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்பேனாயின் நீர் என்னை உம்முடன் வைத்திருக்க வேண்டாம். என்னை மன்னிக்கும் எல்லையை நிச்சயமாக நீர் கடந்து விட்டீர்'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “இதற்குப் பின்னர் எதையேனும் உங்களிடம் நான் கேட்டால், என்னை உங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்து விட்டது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு மூஸா) “இதன் பின்னர், எவ்விஷயத்தைப் பற்றியும் உம்மிடம் நான் கேட்பேனாயின், நீர் என்னை உம்முடன் வைத்துக் கொள்ள வேண்டாம், என்னிடமிருந்து மன்னிக்கும் எல்லையை நிச்சயமாக நீர் அடைந்து விட்டீர்” என்று கூறினார்.
Saheeh International
[Moses] said, "If I should ask you about anything after this, then do not keep me as a companion. You have obtained from me an excuse."
பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் இருவரும் நடந்தனர். அவர்கள் ஓர் ஊராரிடம் வரவே தங்கள் இருவருக்கும் உணவளிக்கும்படி அவ்வூராரை வேண்டினார்கள். ஆனால், அவர்கள் இவ்விருவருக்கும் விருந்தளிக்காது விலகிக்கொண்டனர். பிறகு, இருவரும் அங்கு விழுந்து விடக்கூடிய நிலையில் இருந்த ஒரு சுவற்றைக் கண்டனர். ஆகவே, அவர் (அதற்கு மண் அப்பி செப்பனிட்டு) அதை (விழாது) நிறுத்திவைத்தார். (அதற்கு மூஸா அவரை நோக்கி) ‘‘நீர் விரும்பி (கேட்டு) இருந்தால் (இவ்வூராரிடம்) இதற்குரிய கூலியை நீர் வாங்கியிருக்கலாமே'' என்று கூறினார்.
IFT
மேலும் அவர்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கையில், ஓர் ஊரை அடைந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அங்கே அவர்கள் ஒரு சுவரைக் கண்டார்கள். அது கீழே விழ இருந்தது. அவர் அந்தச் சுவரைச் சரிப்படுத்தி நிறுத்தினார். மூஸா கூறினார்: “நீர் விரும்பியிருந்தால், இப்பணிக்காகக் கூலி வாங்கியிருக்கலாமே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவ்விருவம் ஓர் ஊர்வாசிகளிடம் வந்து சேரும்வரை நடந்தனர், (அங்கு வந்துசேர்ந்தபின்) தங்கிளிருவருக்கும் உணவளிக்குமாறு அவ்வூராரைக் கேட்டார்கள், ஆனால், அவர்கள் இவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்து விட்டனர், பிறகு அதில் ஒரு சுவரை – அது துரிதமாக இடிந்து விழுந்துவிடக் கூடியதாக – அவ்விருவரும் கண்டனர், ஆகவே, அவர் அதனை விழாது நிறுத்தி வைத்தார், (அதற்கு மூஸா அவரிடம்,) “நீர் நாடியிருந்தால் (இவ்வூராரிடம்) இதற்குரிய கூலியை எடுத்திருக்கலாமே” என்று கூறினார்.
Saheeh International
So they set out, until when they came to the people of a town, they asked its people for food, but they refused to offer them hospitality. And they found therein a wall about to collapse, so he [i.e., al-Khiḍr] restored it. [Moses] said, "If you wished, you could have taken for it a payment."
“இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், ‘‘எனக்கும் உமக்கும் இடையில் இதுவே பிரிவினை(க்குரிய நேரம்) ஆகும். நீர் பொறுத்துக்கொள்ள முடியாமல்போன விஷயங்களின் விளக்கத்தை (இதோ) நான் உமக்கு அறிவிக்கிறேன் என்று கூறினார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “நானும் நீரும் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது! உம்மால் பொறுமையாய் இருக்க முடியாத விஷயங்களின் உண்மை நிலையை இனி நான் உமக்கு அறிவித்துவிடுகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “எனக்கும், உமக்குமிடையில் இதுதான் பிரிவாகும், எதன்மீது பொறுமையாய் இருக்க நீர் சக்தி பெறவில்லையோ அதன் விளக்கத்தை நான் உமக்கு அறிவிக்கிறேன்” என்று கூறினார்.
Saheeh International
[Al-Khiḍr] said, "This is parting between me and you. I will inform you of the interpretation of that about which you could not have patience.
“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர் கூறினார்) ‘‘அக்கப்பல் கடலில் (கூலி) வேலை செய்து கொண்டிருந்த (சில) ஏழைகளுக்குரியது. அதைக் குறைபடுத்தவே நான் கருதினேன். (ஏனென்றால், அது செல்லும் வழியில்) இவர்களுக்கு முன் ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கிறான். அவன் (நல்ல) கப்பல்கள் அனைத்தையும் அநியாயமாக அபகரித்துக் கொள்கிறான். (அவனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அதைக் குறைப்படுத்தினேன்.)
IFT
அந்தக் கப்பலைப் பற்றிய விஷயம் என்னவெனில், அது கடலில் கூலி வேலை செய்துகொண்டிருந்த சில ஏழைகளுக்குரியது. நான் அதைப் பழுதாக்கிட நாடினேன். ஏனெனில் அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது! அவன் ஒவ்வொரு கப்பலையும் நிர்ப்பந்தமாகப் பறித்துக் கொண்டிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அக்கப்பல் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்கு உரியதாக இருந்தது, ஆகவே, அதனைப் பழுதாக்க நான் நாடினேன், மேலும் இது செல்லும் வழியில் அவர்களுக்கு (முன்) அப்பால் ஓர் அரசன் இருக்கிறான், அவன் (பழுதற்ற) கப்பல் ஒவ்வொன்றையும் அபகரித்து எடுத்துக் கொள்கிறான்.
Saheeh International
As for the ship, it belonged to poor people working at sea. So I intended to cause defect in it as there was after them a king who seized every [good] ship by force.
“(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(கொல்லப்பட்ட) அந்தச் சிறுவனோ அவனுடைய தாயும் தந்தையும் நல்ல நம்பிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அநியாயம் செய்யும்படியும், (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்து விடுவானோ என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்.
IFT
மேலும், அந்தச் சிறுவனைப் பற்றிய விஷயம் என்னவெனில், அவனுடைய தாய்தந்தையர் இறைநம்பிக்கையாளர்களாய்த் திகழ்ந்தனர். அவன் தன்னுடைய வரம்புமீறிய போக்கினாலும், நிராகரிப்பினாலும் அவர்களுக்குச் சிரமம் கொடுப்பானோ என்று நாம் அஞ்சினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “(கொல்லப்பட்ட) அந்தச் சிறுவன் - அவனுடைய பெற்றோர் இருவரும் விசுவாசிகளாக இருக்கிறார்கள்; அவன் (வளர்ந்து) அவ்விருவரையும் அக்கிரமம் செய்யுமாறும், (அல்லாஹ்வை) நிராகரிக்குமாறும் சிரமப்படுத்தி விடுவான் என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம்.
Saheeh International
And as for the boy, his parents were believers, and we feared that he would overburden them by transgression and disbelief.
“இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவனுடைய தாய் தந்தைக்கு இறைவன் இவனைவிட மேலான, பரிசுத்தமானவனையும் (தாய் தந்தை மீது) அதிகம் அன்பு கொள்ளக் கூடியவனையும் மாற்றிக் கொடுப்பதை நாம் விரும்பினோம்.
IFT
ஆகையால் அவர்களுடைய இறைவன் அச்சிறுவனுக்குப் பதிலாக, அவனைவிடச் சிறந்த ஒழுக்கமுள்ள, குடும்ப உறவுகளைப் பெரிதும் பேணக்கூடிய பிள்ளைகளை அவர்களுக்கு வழங்கிட வேண்டுமென நாம் விரும்பினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவ்விருவருக்கும் (கொல்லப்பட்ட) இவனைவிட பரிசுத்தத்தால் மிகச் சிறந்தவனையும் (பெற்றோர் மீது) அன்பு செலுத்துவதில் (நன்றியுள்ள) மிக நெருக்கமுடையவனையும் அவ்விருவரின் இரட்சகன் மாற்றிக் கொடுப்பதை நாம் நாடினோம்.
Saheeh International
So we intended that their Lord should substitute for them one better than him in purity and nearer to mercy.
“இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அந்தச் சுவரோ அப்பட்டிணத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியது. அதற்குக் கீழ் அவர்களுக்குச் சொந்தமான புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை மிக்க நல்ல மனிதராக இருந்தார். ஆகவே, உமது இறைவன் அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்த பின்னர் தங்கள் புதையலை எடுத்துக் கொள்ளும்படிச் செய்ய நாடினான். (எனவே, அதுவரை அச்சுவர் விழுந்து விடாதிருக்கும்படி அதைச் செப்பனிட்டேன். இது) உமது இறைவனின் அருள்தான். (இம்மூன்றில்) எதையும் நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. நீர் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன (என்) செய்கைகளின் விளக்கம் இதுதான்'' (என்று கூறி முடித்தார்).
IFT
மேலும், அந்தச் சுவரைப் பற்றிய விஷயம் என்னவெனில், அது அவ்வூரிலிருந்த இரு அநாதைச் சிறுவர்களுக்குரியது. அதன் அடியில் அவர்களுக்குரிய புதையல் ஒன்று இருந்தது. மேலும், அவர்களின் தந்தை நல்ல மனிதராக இருந்தார். ஆகையால், அவர்கள் இருவரும் பருவ வயதை அடையவேண்டும் என்றும், அவர்களுக்குரிய புதையலை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உம் இறைவன் கருதினான். இவையெல்லாம் உம் இறைவனுடைய கருணையினால் நிகழ்ந்தவையாகும். இவற்றில் எதையுமே நான் என் விருப்பப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமை கொள்ள முடியாதிருந்த விஷயங்களின் உண்மைநிலை இதுதான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அந்தச் சுவர் அப்பட்டணத்திலுள்ள அனாதைச் சிறுவர் இருவருக்குரியதாக இருந்தது; அதற்குக் கீழ் அவ்விருவருக்குச் சொந்தமான புதையல் ஒன்றும் இருந்தது; அவ்விருவரின் தந்தை மிக்க நல்லவராக இருந்தார்; ஆகவே, உமதிரட்சகனிடமிருந்துள்ள அருளாக, உமதிரட்சகன், அவ்விருவரும் அவ்விருவரின் வாலிபத்தையடைந்து, தங்களிருவருடைய புதையலை வெளியிலெடுத்துக் கொள்ளுமாறு செய்ய நாடினான். இதனை நான் என் இஷ்டப்படி செய்துவிடவில்லை. இதுதான் எதன்மீது பொறுமையாகயிருக்க நீர், சக்தி பெறவில்லையோ அதனுடைய விளக்கமாகும்” (என்று கூறினார்.
Saheeh International
And as for the wall, it belonged to two orphan boys in the city, and there was beneath it a treasure for them, and their father had been righteous. So your Lord intended that they reach maturity and extract their treasure, as a mercy from your Lord. And I did it not of my own accord. That is the interpretation of that about which you could not have patience."
(நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘‘அவருடைய சரித்திரத்தில் (இருந்து) உங்களுக்கு (பயனளிக்கும்) அறிவுரையை ஓதிக் காண்பிக்கிறேன்'' என்று கூறுவீராக.
IFT
மேலும் (நபியே,) இவர்கள் உம்மிடம் துல்கர்னைன் பற்றிக் கேட்கிறார்கள். நீர் இவர்களிடம் கூறும்: “நான் அவரைப் பற்றிய சில விவரங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) துல்கர்னைனைப் பற்றியும் (யூதர்கள்) உம்மிடம் கேட்கின்றனர். “அவருடைய செய்தியை) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக!
Saheeh International
And they ask you, [O Muhammad], about Dhul-Qarnayn. Say, "I will recite to you about him a report."
நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது இஷ்டப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம்.
IFT
திண்ணமாக நாம் அவருக்கு பூமியில் ஆட்சியதிகாரத்தை அளித்திருந்தோம். மேலும், அவருக்கு எல்லாவிதமான சாதனங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் (அவருடைய ஆட்சியை நிறுவ) வசதியளித்தோம், ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பயனடையும்) வழியை அவருக்கு நாம் கொடுத்தோம்.
Saheeh International
Indeed, We established him upon the earth, and We gave him from everything a way [i.e., means].
சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.
அப்துல் ஹமீது பாகவி
சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்த பொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) ‘‘துல்கர்னைனே! நீர் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்யவும், அல்லது அவர்களுக்கு நன்மை செய்யவும் (இரண்டுக்கும் முழு சுதந்திரம் உமக்கு அளித்திருக்கிறோம்)'' என்று கூறினோம்.
IFT
சூரியன் மறையும் எல்லையை அவர் அடைந்தபோது கறுப்பு நீரில் அது மறைவதைக் கண்டார். அங்கு அவர், ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார். அப்போது நாம் கூறினோம்: “துல்கர்னைனே! அவர்களைத் தண்டிக்கவும் உமக்கு ஆற்றல் இருக்கிறது. அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவும் உம்மால் முடியும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முடிவாக, சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்தபொழுது சேற்றுக் கடலில் அது மறைவதைக் கண்டார்; அவ்விடத்தில் ஒரு சமூகத்தாரையும் கண்டார், (நாம் அவரிடம்) “துல்கர்னைனே! ஒன்று நீர் (இவர்களை) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகிய நன்மையை நீர் உண்டாக்கலாம்” என்று கூறினோம்.
Saheeh International
Until, when he reached the setting of the sun [i.e., the west], he found it [as if] setting in a body of dark water, and he found near it a people. We [i.e., Allah] said, "O Dhul-Qarnayn, either you punish [them] or else adopt among them [a way of] goodness."
(ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: “எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்களில்) எவன் (என் கட்டளையை மீறி) அநியாயம் செய்கிறானோ அவனை நாம் (தண்டித்து) வேதனை செய்வோம். பின்னர், அவன் தன் இறைவனிடம் கொண்டு போகப்பட்டு அவனும் அவனை மிக்க கடினமாக வேதனை செய்வான்'' என்றார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “யாரேனும் கொடுமை புரிந்தால் அவரைத் தண்டிப்போம். பிறகு அவர் தன்னுடைய இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்படுவார். அவன் அவருக்கு இன்னும் கடுமையாகத் தண்டனை அளிப்பான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர் (அவர்களிடம்) “எவர், அநியாயம் செய்கிறாரோ, அவரை, நாம் வேதனை செய்வோம்; பின்னர், அவர் தன் இரட்சகனிடம் திருப்பப்படுவார்; அப்போது அவரை அவன் மிகக் கடினமான வேதனையாக வேதனை செய்வான்” என்று கூறினார்.
Saheeh International
He said, "As for one who wrongs, we will punish him. Then he will be returned to his Lord, and He will punish him with a terrible punishment [i.e., Hellfire].
ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நல்லதை செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம் வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம்.
IFT
ஆனால், அவர்களில் எவர் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயலும் புரிகின்றாரோ அவருக்கு நற்கூலி இருக்கிறது. மேலும், நாம் அவருக்கு எளிதான கட்டளைகளையே வழங்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், “எவர் விசுவாசங்கொண்டு (அதனடிப்படையில்) நற்கருமமும் செய்கிறாரோ அவருக்கு (இரட்சகனிடத்திலும்) அழகான (நற்கூலி இருக்கிறது, நாமும் நம்முடைய காரியத்திலிருந்து சுலபமானதை அவருக்குக் கூறுவோம்” (என்றும் கூறினார்.)
Saheeh International
But as for one who believes and does righteousness, he will have a reward of the best [i.e., Paradise], and we [i.e., Dhul-Qarnayn] will speak to him from our command with ease."
அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்த வில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக் கூடிய ஞானம் அவர்களிடம் இல்லை.)
IFT
சூரியன் உதயமாகும் எல்லையை அவர் அடைந்துவிட்டார். அப்போது அது ஒரு சமுதாயத்தார் மீது உதிப்பதைக் கண்டார். அதன் வெயிலிலிருந்து தப்பிப்பதற்கான எந்தத் தடுப்பையும் நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முடிவாக, அவர் சூரியன் உதயமாகுமிடத்தை அடைந்தபொழுது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி இருப்பதையும் கண்டார், அவர்களுக்கு அதைத் தவிர்த்து (அதன் வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள) எநதத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை.
Saheeh International
Until, when he came to the rising of the sun [i.e., the east], he found it rising on a people for whom We had not made against it any shield.
ஹத்தா இதா Bபலக Bபய்னஸ் ஸத்தய்னி வஜத மின் தூனிஹிமா கவ்மல் லா யகா தூன யFப்கஹூன கவ்லா
முஹம்மது ஜான்
இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;
அப்துல் ஹமீது பாகவி
(அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு முன்னால் மக்கள் சிலரைக் கண்டார். அவர்கள் பேச்சை (எளிதில்) புரியக்கூடியவர்களாக இருக்கவில்லை.
IFT
அவர் இரு மலைகளுக்கிடையே சென்றார். அப்போது அவற்றின் அருகில் எந்தப் பேச்சையும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு சமுதாயத்தார் வாழ்வதைக் கண்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முடிவாக, அவர் இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓர் இடத்தை) அடைந்தபொழுது அவ்விரண்டிற்கும் அப்பால் (இருந்த) ஒரு சமூகத்தாரைக் கண்டார், (அவர்களுடைய மொழியிலல்லாத அவரின்) கூற்றை விளங்கக் கூடியவர்களாக அவர்களிருக்கவில்லை.
Saheeh International
Until, when he reached [a pass] between two mountains, he found beside them a people who could hardly understand [his] speech.
அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) ‘‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் உமக்கு சேகரம் செய்யலாமா?'' என்று கேட்டார்கள்.
IFT
அம்மக்கள் கூறினார்கள்: “துல்கர்னைனே! யஃஜூஜ்மஃஜூஜ் கூட்டத்தார் இந்நாட்டில் பரவலாக அராஜகத்தை விளைவிக்கின்றார்கள். எனவே, நீர் எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பித் தருவதற்காக நாங்கள் உமக்கு ஏதேனும் கப்பம் செலுத்த வேண்டுமா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள், (இவரிடம் சாடை மூலம்) “துல்கர்னைனே! நிச்சயமாக யாஜூஜூம், மாஜூஜூம் (எங்கள்) பூமியில் (வந்து) பெரும் குழப்பவாதிகளாக இருக்கிறார்கள், எங்களுக்கும் அவர்களுக்குமிடையில் நீர் ஒரு தடையை (தடுப்புச்சுவற்றை) ஏற்படுத்துவதற்காக ஒரு தொகையை உமக்காக நாங்கள் ஆக்கித்தரலாமா?” என்று கேட்டார்கள்.
Saheeh International
They said, "O Dhul-Qarnayn, indeed Gog and Magog are [great] corrupters in the land. So may we assign for you an expenditure that you might make between us and them a barrier?"
قَالَகூறினார்مَاஎதுمَكَّنِّىْஎனக்கு ஆற்றல் அளித்துள்ளான்فِيْهِஅதில்رَبِّىْஎன் இறைவன்خَيْرٌமிக்க மேலானதுفَاَعِيْنُوْنِىْஆகவே எனக்கு உதவுங்கள்بِقُوَّةٍவலிமையைக்கொண்டுاَجْعَلْஏற்படுத்துவேன்بَيْنَكُمْஉங்களுக்கிடையில்وَبَيْنَهُمْஅவர்களுக்கிடையில்رَدْمًا ۙபலமான ஒரு தடுப்பை
அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், ‘‘என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது,) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக்கொண்டு எனக்கு உதவிசெய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு தடுப்பை (சுவரை) எழுப்பிவிடுகிறேன்'' என்றும்,
IFT
அதற்கு அவர் பதிலளித்தார்: “என்னுடைய இறைவன் எனக்குக் கொடுத்திருப்பவை ஏராளமானவை. எனவே, உங்கள் உழைப்பின் மூலம் எனக்கு உதவி செய்யுங்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவரை எழுப்பித் தருகிறேன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “என் இரட்சகன் எனக்கு எதில் வசதியளித்துள்ளானோ அது மிக்க மேலானது, (உங்கள்) பலம் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள், உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு தடுப்பை நான் அமைத்துவிடுகிறேன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "That in which my Lord has established me is better [than what you offer], but assist me with strength [i.e., manpower]; I will make between you and them a dam.
“நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்றும் கூறி, ‘‘(அவற்றைக் கொண்டுவந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரை அதை ஊதுங்கள்'' என்றார். (அதன் பின்னர்) ‘‘செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்'' என்றார்.
IFT
இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்.” இறுதியில் இரு மலைகளுக்கிடையிலான பகுதியை நிரப்பிவிட்டபோது அவர் (மக்களை நோக்கி) கூறினார்: “இப்பொழுது நெருப்பை மூட்டுங்கள்!” கடைசியில் அந்த இரும்புச் சுவர் முற்றிலும் நெருப்பாய்ப் பழுக்கக் காய்ந்தபோது அவர் கூறினார்: “கொண்டு வாருங்கள், இப்போது நான் உருக்கிய செம்புத்திரவத்தை! அதனைச் சுவற்றின் மேல் ஊற்றுவேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்” (அவைகளைக் கொண்டு இருமலைகளுக்கிடையிலுள்ள பள்ளத்தை நிரப்புங்கள்) முடிவாக இருமலைகளுக்கிடையில் (உச்சிக்கு) அவை சமமாகும்போது ஊதுங்கள்” என்றார், அதனை நெருப்பாக ஆக்கியதும் (உருக்கிய செம்பை) என்னிடம் கொண்டு வாருங்கள், (அந்த) உருக்கிய செம்பை நான் அதன்மேல் ஊற்றுவேன்” என்று கூறினார்.
Saheeh International
Bring me bars of iron" - until, when he had leveled [them] between the two mountain walls, he said, "Blow [with bellows]," until when he had made it [like] fire, he said, "Bring me, that I may pour over it molten copper."
“இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) ‘‘இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும்போது, இதை(யும்) தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது!'' என்று கூறினார்.
IFT
துல்கர்னைன் கூறினார்: “இது என்னுடைய இறைவனின் கருணையாகும். என் இறைவன் வாக்களித்த நேரம் வந்துவிட்டால், அவன் இதனைத் தூள்தூளாக்கி விடுவான். என்னுடைய இறைவனின் வாக்குறுதி உண்மையானதாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு தடுப்பை உண்டாக்கிய அவர்,) “இது என் இரட்சகனிடமிருந்துள்ள அருளாகும், என் இரட்சகனின் வாக்குறுதி(யாகிய மறுமை நாள்) வந்துவிட்டால், இதனை அவன் தூள் தூளாக்கி விடுவான், என் இரட்சகனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதாக இருக்கிறது” என்று கூறினார்.
Saheeh International
[Dhul-Qarnayn] said, "This is a mercy from my Lord; but when the promise of my Lord comes [i.e., approaches], He will make it level, and ever is the promise of my Lord true."
இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து விடுவோம்.
IFT
அந்நாளில் நாம் மக்களை (கடல் அலைகளைப்போன்று) சிலருடன் சிலர் மோதிக்கொள்ளும் நிலையில் விட்டுவிடுவோம். (சூர்)எக்காளம் ஊதப்படும். பிறகு மனிதர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் சிலரைச் சிலருடன் (சமுத்திர அலைகளைப்போல்) கலந்து (மோதி) விடுமாறும் நாம் விட்டுவிடுவோம், (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு யாவரும் அழிந்து விட்)டால், பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் யாவரையும் முற்றிலுமாக ஒன்று சேர்த்துவிடுவோம்.
Saheeh International
And We will leave them that day surging over each other, and [then] the Horn will be blown, and We will assemble them in [one] assembly.
அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன; இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) எனது நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டு விட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர்.
IFT
அந்நிராகரிப்பாளர்களோ, அவர்கள் எனது நல்லுரைகள் விஷயத்தில் குருடர்களாயும், அதனை செவியுறுவதற்கு முன்வராதவர்களாயும் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், என்னை நினைவுகூர்வதை விட்டும் அவர்களுடைய கண்கள் திரைக்குள் இருந்தன, இன்னும், அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியேற்கச் சக்தியற்றவர்களாக ஆகிவிட்டனர்.
Saheeh International
Those whose eyes had been within a cover [removed] from My remembrance, and they were not able to hear.
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்கள் நம்மை விட்டுவிட்டு நம் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு நரகத்தையே தங்குமிடமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
இறைவனை நிராகரிக்கும் இம்மக்கள் நினைத்திருக்கின்றார்களா, என்னை விடுத்து என்னுடைய அடிமைகளை (தங்களுடைய) காரியம் நிறைவேற்றுபவராய் ஆக்கிக் கொள்ளலாம் என்று? இத்தகைய நிராகரிப்பாளர்களை உபசரிப்பதற்காக நரகத்தை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போர், என்னை விட்டுவிட்டு, என் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? நிச்சயமாக நிராகரித்துக் கொண்டிருப்போருக்கு நரகத்தை தங்குமிடமாக நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.
Saheeh International
Then do those who disbelieve think that they can take My servants instead of Me as allies? Indeed, We have prepared Hell for the disbelievers as a lodging.
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (யாரென்றால்) இவ்வுலக வாழ்வில் தவறான வழியிலேயே முயற்சி செய்து கொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல செயல்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள்.
IFT
அவர்கள் யாரென்றால், உலக வாழ்க்கையில் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் நேர்வழியிலிருந்து பிறழ்ந்தே இருந்தன. ஆனால், அவர்களோ தாம் அனைத்தையும் சரியாகச் செய்திருக்கின்றோம் என்ற கருத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள்) எத்தகையோரென்றால், இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி பயனற்றுவிட்டது, நிச்சயமாக அவர்களோ, காரியங்களில் அழகானவற்றையே தாங்கள் செய்வதாக எண்ணிக் கொள்கின்றனர்.
Saheeh International
[They are] those whose effort is lost in worldly life, while they think that they are doing well in work."
அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள்தான் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்து விட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்த மாட்டோம்.
IFT
அவர்கள்தாம் தங்களுடைய இறைவனின் சான்றுகளை ஏற்க மறுத்துவிட்டவராவர். மேலும் அவனுடைய சந்திப்பினைக் குறித்து நம்பிக்கைகொள்ளாதவராவர். இதனால் அவர்களுடைய செயல்கள் அனைத்தும் வீணாகிவிட்டன. மேலும் மறுமையில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் நாம் அளிக்கமாட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இத்தகையோர்தாம் தங்கள் இரட்சகனின் வசனங்களையும் (மறுமையில்) அவனுடைய சந்திப்பையும் நிராகரித்துவிட்டவர்கள், ஆகவே, அவர்களுடைய (நற்) செயல்கள் யாவும் அழிந்துவிட்டன, (அவர்களின் செயல்கள் நிறுவையில் கனமானதாக இராது.) ஆகவே மறுமை நாளில் அவர்களின் செயல்களுக்காக எந்த எடையையும் (மதிப்பையும்) நாம் ஏற்படுத்தமாட்டோம்.
Saheeh International
Those are the ones who disbelieve in the verses of their Lord and in [their] meeting Him, so their deeds have become worthless; and We will not assign to them on the Day of Resurrection any weight [i.e., importance].
அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் நம் வசனங்களையும், நம் தூதர்களையும் நிராகரித்து பரிகாசமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக அவர்களுக்குக் கூலி நரகம்தான்.
IFT
அவர்களுக்குரிய கூலி நரகமேயாகும் அவர்கள் நிராகரித்ததன் காரணத்தாலும், என்னுடைய வசனங்களையும் என்னுடைய தூதர்களையும் பரிகசித்துக் கொண்டிருந்ததன் காரணத்தாலும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உண்மையை) அவர்கள் நிராகரித்து, என்னுடைய வசனங்களையும் என்னுடைய தூதர்களையும் பரிகாசமாக எடுத்துக்கொண்டதன் காரணமாக, அதுவே அவர்களின் கூலி நரகமாகும்.
Saheeh International
That is their recompense - Hell - for what they denied and [because] they took My signs and My messengers in ridicule.
குல் லவ் கானல் Bபஹ்ரு மிதாதல் லி கலிமாதி ரBப்Bபீ லனFபிதல் Bபஹ்ரு கBப்ல அன் தன்Fபத கலிமாது ரBப்Bபீ வ லவ் ஜி'னா Bபிமித்லிஹீ மததா
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: கடல் நீர் அனைத்தும் மையாக இருந்து என் இறைவனின் வாக்கியங்களை எழுத ஆரம்பித்தால், என் இறைவனின் வாக்கியங்கள் முடிவதற்கு முன்னதாகவே இந்தக் கடல் (மை) அனைத்தும் செலவாகிவிடும். அதைப் போல் இன்னொரு பங்கு (கடலைச்) சேர்த்துக் கொண்ட போதிலும்கூட!
IFT
(நபியே,) கூறும்: “என் இறைவனின் வாக்குகளை எழுதுவதற்குக் கடலே மையாகிவிட்டாலும், கடல்நீர் தீர்ந்து போய்விடுமே தவிர என் இறைவனின் வாக்குகள் தீர்ந்துபோய் விடாது. அதேபோல இன்னொரு மடங்கு மையை நாம் கொண்டு வந்தாலும் அதுவும் போதாது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! என் இரட்சகனின் வாக்கியங்களுக்கு (-அதை எழுதுவதற்கு) கடல் (நீர்) யாவும் மையாக இருந்தாலும் என் இரட்சகனின் வாக்கியங்கள் (எழுதி) முடிவதற்கு முன்னதாகவே, கடல் (நீர்) முடிந்து (செலவாகி)விடும்- அதுபோன்றதை (இன்னொரு கடலையும்) நாம் உதவிக்கு கொண்டு வந்தபோதிலும் சரியே.
Saheeh International
Say, "If the sea were ink for [writing] the words of my Lord, the sea would be exhausted before the words of my Lord were exhausted, even if We brought the like of it in [continual] supplement."
(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!''
IFT
(நபியே,) கூறும்: “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்! உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹி வருகிறது. எனவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும்; அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணையாக்காதிருக்கட்டும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக, “நிச்சயமாக, நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், நிச்சயமாக உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீமூலம் அறிவிக்கப்படுகிறது, ஆகவே, எவர் தன் இரட்சகனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ, அவர் நற்கருமங்களைச் செய்யவும், தன் இரட்சகனின் வணக்கத்தில், அவர் எவரையும் இணையாக்க வேண்டாம்.
Saheeh International
Say, "I am only a man like you, to whom has been revealed that your god is one God. So whoever would hope for the meeting with his Lord - let him do righteous work and not associate in the worship of his Lord anyone."