(அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்து விட்டது. என் இறைவனே! (இதுவரை) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கிறாய்.)
IFT
அவர் பணிவுடன் வேண்டினார்: “என் அதிபதியே! என் எலும்புகளோ நலிவடைந்துவிட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுத்துவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய இரட்சகனே! நிச்சயமாக நான் - என் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன, என் தலையும் நரையால் இலங்குகிறது, என் இரட்சகனே! (இதுவரையில்) நான் உன்னிடம் பிரார்த்தனை செய்து (கேட்டதில்) பாக்கியம் இல்லாதவனாக நான் ஆகவில்லை” என்று கூறினார்.
Saheeh International
He said, "My Lord, indeed my bones have weakened, and my head has filled with white, and never have I been in my supplication to You, my Lord, unhappy [i.e., disappointed].
“இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கொரு பாதுகாவலனை (குழந்தையை) வழங்கு!
IFT
எனக்குப்பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக்கூடிய) தீயவழி பற்றி நான் அஞ்சுகிறேன். மேலும், என்னுடைய மனைவி மலடியாக இருக்கின்றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு ஒரு வாரிசை வழங்குவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் எனக்குப் பின் என் உறவினர்(களின் தீமைக)ளை பயப்படுகிறேன்; என்னுடைய மனைவியோ மலடாக ஆகிவிட்டாள்; ஆகவே உன்னிடத்திலிருந்து (எனக்குப்பின் என் காரியங்களை கவனிக்கும்) ஒரு வாரிசை நீ அளிப்பாயாக!”
Saheeh International
And indeed, I fear the successors after me, and my wife has been barren, so give me from Yourself an heir
யரிதுனீ வ யரிது மின் ஆலி யஃகூBப், வஜ்'அல்ஹு ரBப்Bபி ரளிய்யா
முஹம்மது ஜான்
“அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”
அப்துல் ஹமீது பாகவி
அவன் எனக்கும், யஅகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக் கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை'' என்று பிரார்த்தித்தார்.
IFT
அவர் எனக்கும் யஃகூபுடைய குடும்பத்தினருக்கும் வாரிசாகத் திகழட்டும். மேலும், என் இறைவா! அவரை விரும்பத்தக்க மனிதராய் ஆக்குவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர் எனக்கு (என் உடமையில்) வாரிஸாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததிகளிலிருந்து (நபித்துவத்திற்கு) வாரிஸாகவும் இருப்பார், என் இரட்சகனே! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் நீர் ஆக்கி வைப்பாயாக” (என்று பிரார்த்தித்துக் கூறினார்.)
Saheeh International
Who will inherit me and inherit from the family of Jacob. And make him, my Lord, pleasing [to You]."
“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன் அவரை நோக்கி) ‘‘ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ‘யஹ்யா' என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை'' (என்று கூறினான்.)
IFT
(பதிலளிக்கப்பட்டது:) “ஜகரிய்யாவே! உமக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கின்றோம்; அதன் பெயர் ‘யஹ்யா’ ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ் அவரிடம்) “ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ஒரு மகனை(த்தருவதாக) உமக்கு நன்மாராயங் கூறுகிறோம், அவர் பெயர் யஹ்யாவாகும், இதற்கு முன் அப்பெயரிடப்பட்ட ஒருவரையும் அதற்கு நாம் ஆக்கவில்லை” (என்று கூறினான்.)
Saheeh International
[He was told], "O Zechariah, indeed We give you good tidings of a boy whose name will be John. We have not assigned to any before [this] name."
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاَنّٰىஎப்படி?يَكُوْنُகிடைக்கும்لِىْஎனக்குغُلٰمٌகுழந்தைوَّكَانَتِஇருக்கிறாள்امْرَاَتِىْஎன் மனைவிعَاقِرًاமலடியாகوَّقَدْ بَلَـغْتُநானோ அடைந்து விட்டேன்مِنَ الْـكِبَرِமுதுமையின்عِتِيًّاஎல்லையை
கால ரBப்Bபி அன்னா யகூனு லீ குலாமு(ன்)வ் வகானத் இம்ர அதீ 'ஆகிர(ன்)வ் வ கத் Bபலக்து மினல் கிBபரி 'இதிய்யா
முஹம்மது ஜான்
(அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விட்டேன்'' என்று கூறினார்.
IFT
அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையினால் தளர்ந்து போய்விட்டேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “என் இரட்சகனே! என் மனைவியோ மலடியாக இருக்கிறாள், நானோ முதுமையின் முடிவை திட்டமாக அடைந்து விட்டேன், (இந்நிலையில்) எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாவான்?,” என்று கேட்டார்.
Saheeh International
He said, "My Lord, how will I have a boy when my wife has been barren and I have reached extreme old age?"
قَالَகூறினான்كَذٰلِكَۚஅப்படித்தான்قَالَகூறினான்رَبُّكَஉம் இறைவன்هُوَஅதுعَلَىَّஎனக்குهَيِّنٌமிக எளிதுوَّقَدْதிட்டமாகخَلَقْتُكَநான் உன்னைப் படைத்திருக்கிறேன்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்وَلَمْ تَكُநீர் இருக்காதபோதுشَيْـٴًـــاஒரு பொருளாக
கால கதாலிக கால ரBப்Bபுக ஹுவ 'அலய்ய ஹய்யினு(ன்)வ் வ கத் கலக்துக மின் கBப்லு வ லம் தகு ஷய்'ஆ
முஹம்மது ஜான்
“(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அ(வ்வாறு செய்வ)து எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாமல் இருந்த சமயத்தில் நானே உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவனே கூறுகிறான்'' என்றும் கூறினான்.
IFT
பதில் கிடைத்தது: “அவ்வாறே ஆகும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “இது என்னைப் பொறுத்து சுலபமானதாகும் இதற்கு முன், நீர் எப்பொருளாகவும் இல்லாதிருந்தபோது, நான் உம்மைப் படைத்திருக்கின்றேனே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அ(தற்க)வன், அவ்வாறே (நடைபெறும்) என்று கூறினான், இது எனக்கு மிக்க எளிதானது, இதற்கு முன்னர், நீர் ஒன்றுமில்லாமலிருந்த நிலையில் நானே உம்மைப் படைத்தேன்” என்று உமதிரட்சகன் கூறினான்.
Saheeh International
[An angel] said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, for I created you before, while you were nothing.'"
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவாاجْعَلْ لِّىْۤஎனக்கு ஏற்படுத்துاٰيَةً ؕஓர் அத்தாட்சியைقَالَஅவன் கூறினான்اٰيَتُكَஉமக்கு அத்தாட்சியாகும்اَلَّا تُكَلِّمَபேசாமல் இருப்பது தான்النَّاسَமக்களிடம்ثَلٰثَமூன்றுلَيَالٍஇரவுகள்سَوِيًّاநீர் சுகமாக இருக்க
கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயஹ்; கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாத லயாலின் ஸவிய்யா
முஹம்மது ஜான்
(அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான்.
IFT
அதற்கு ஜகரிய்யா, “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்வாயாக” என்றார். அதற்கு இறைவன், “உமக்கு அடையாளம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மக்களிடம் உம்மால் பேச இயலாமல் போவதாகும்” என்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அ(தற்க)வர், “என் இரட்சகனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சியை ஆக்குவாயாக! என (பிரார்த்தித்து)க் கேட்டார், அவன் “உமக்கு அத்தாட்சியாவது, நீர் சரீர சுகவாசியாக இருக்க மூன்று இரவுகள் (பகல்கள்) மனிதர்களுடன் பேச முடியாமல் இருப்பதாகும்” என்று கூறினான்.
Saheeh International
[Zechariah] said, "My Lord, make for me a sign." He said, "Your sign is that you will not speak to the people for three nights, [being] sound."
فَخَرَجَஅவர் வெளியேறி வந்தார்عَلٰى قَوْمِهٖதனது மக்களுக்கு முன்مِنَஇருந்துالْمِحْرَابِதொழுமிடம்فَاَوْحٰٓىஜாடை காண்பித்தார்اِلَيْهِمْஅவர்களை நோக்கிاَنْ سَبِّحُوْاதுதியுங்கள் என்றுبُكْرَةًகாலையிலும்وَّعَشِيًّاமாலையிலும்
ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார்.
IFT
பிறகு, அவர் மாடத்திலிருந்து வெளியேறி தம் சமுதாயத்தாரிடம் வந்து, “நீங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதியுங்கள்” என்று சாடையாய் உணர்த்தினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர் தொழுமிடத்திலிருந்து தன் சமூகத்தினர்பால் வெளியேறி (முன் வந்து) காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வைப் புகழ்ந்து) துதிசெய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு சாடையாகக் காண்பித்தார்.
Saheeh International
So he came out to his people from the prayer chamber and signaled to them to exalt [Allah] in the morning and afternoon.
(அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) ‘‘யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக'' என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.
IFT
“யஹ்யாவே, நீர் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும்.” குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு நாம் ஹுக்மை* வழங்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நாம் வாக்களித்தவாறே யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரிடம்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தை பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்.) அவர் குழந்தையாக இருந்தபோதே அவருக்கு (சட்ட) ஞானத்தையும் நாம் அளித்தோம்.
Saheeh International
[Allah said], "O John, take the Scripture [i.e., adhere to it] with determination." And We gave him judgement [while yet] a boy
وَاذْكُرْஇன்னும் நினைவு கூறுவீராகفِى الْـكِتٰبِஇவ்வேதத்தில்مَرْيَمَۘமர்யமைاِذِ انْتَبَذَتْஒதுங்கியபோதுمِنْ اَهْلِهَاதன் குடும்பத்தினரை விட்டுمَكَانًاஇடத்திற்குشَرْقِيًّا ۙகிழக்கில்
வத்குர் Fபில் கிதாBபி மர்யம; இதின் தBபதத் மின் அஹ்லிஹா மகானன் ஷர்கிய்யா
முஹம்மது ஜான்
(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்) அறைக்குச் சென்று,
IFT
மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவ்வேதத்தில், மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! அவர் தன் குடும்பத்தினரை விட்டு கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் தனித்தபோது
Saheeh International
And mention, [O Muhammad], in the Book [the story of] Mary, when she withdrew from her family to a place toward the east.
அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
அப்துல் ஹமீது பாகவி
(குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரயீல் என்னும்) நம் தூதரை அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.
IFT
அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை ஆக்கிக் கொண்டார், அப்பொழுது (ஜிப்ரீல் என்னும்) நம்முடைய ரூஹை அவரிடம் நாம் அனுப்பி வைத்தோம், அவர் சரியான ஒரு மனிதருடைய உருவத்தில் அவருக்கு முன் தோற்றமளித்தார்.
Saheeh International
And she took, in seclusion from them, a screen. Then We sent to her Our Angel [i.e., Gabriel], and he represented himself to her as a well-proportioned man.
காலத் இன்னீ அ'ஊது Bபிர் ரஹ்மானி மின்க இன் குன்த தகிய்யா
முஹம்மது ஜான்
(அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.
அப்துல் ஹமீது பாகவி
(அவரைக் கண்டதும்) ‘‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுவீராக)'' என்றார்.
IFT
உடனே மர்யம் கூறினார்: “உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மர்யம் ஜிப்ரீலைக் கண்டதும்,) “நிச்சயமாக நான் உம்மைவிட்டும் (காக்குமாறு) ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (என்னிடம் நெருங்காதீர்)” என்று கூறினார்.
Saheeh International
She said, "Indeed, I seek refuge in the Most Merciful from you, [so leave me], if you should be fearing of Allah."
கால இன்னமா அன ரஸூலு ரBப்Bபிகி லி அஹBப லகி குலாமன் Zஜகிய்யா
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை ‘‘உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்ப தற்காக உமது இறைவனால் அனுப்பப்பட்ட (வானவ) தூதர்தான் நான்'' என்றார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “நான் உம் இறைவனின் தூதராவேன்; தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “பரிசுத்தமான ஒரு மகனை (அல்லாஹ்விடமிருந்து) உமக்கு நான் நன்கொடையளிப்பதற்காக நிச்சயமாக நான் உமதிரட்சகனின் (மலக்காகிய) ஒரு தூதன்தான்” என்று கூறினார்.
Saheeh International
He said, "I am only the messenger of your Lord to give you [news of] a pure boy [i.e., son]."
அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘எனக்கு எப்படி சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே'' என்று கூறினார்.
IFT
மர்யம் கூறினார்: “எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்? (விவாகத்தின் மூலம்) எந்த ஆடவரும் என்னைத் தீண்டியதில்லையே! நான் கெட்ட நடத்தையுள்ளவளுமல்லவே” என்று கூறினார்.
Saheeh International
She said, "How can I have a boy while no man has touched me and I have not been unchaste?"
கால கதாலிகி கால ரBப்Bபுகி ஹுவ 'அலய்ய ஹய்யிமு(ன்)வ் வ லினஜ் 'அலஹூ ஆயதல் லின்னாஸி வ ரஹ்மதம் மின்னா; வ கான அம்ரம் மக்ளிய்யா
முஹம்மது ஜான்
“அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘அவ்வாறே (நடைபெறும் என்று) உமது இறைவன் கூறுகிறான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம் அருளாகவும் நாம் ஆக்குவோம் (என்றும்) இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது'' என்றும் கூறுகிறான்.
IFT
அதற்கு வானவர் கூறினார்: “அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது;மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும், அது நடந்தே தீரும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், அவ்வாறே! “அது எனக்கு எளிது அவரை மனிதர்களுக்கு, ஒரு அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக (நாம் அவரை உண்டாக்கினோம்) என்றும், இது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயம் என்றும் உமதிரட்சகனே கூறுகிறான்” என்று கூறினார்.
Saheeh International
He said, "Thus [it will be]; your Lord says, 'It is easy for Me, and We will make him a sign to the people and a mercy from Us. And it is a matter [already] decreed.'"
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என் எண்ணமே (ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு) முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே'' என்று (வேதனையுடன்) கூறினார்.
IFT
பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருந்திருக்கக் கூடாதா?” என்று கூறலானார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை, ஒரு பேரீச்ச மரத்தின் (காய்ந்த அடிபாகத்தின்பால் அவரைக் கொண்டுவந்து சேர்த்தது, “இதற்கு முன்னதாகவே நான் இறந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டவளாக நான் ஆகியிருக்க வேண்டுமே” என்று (மர்யம்) கூறினார்.
Saheeh International
And the pains of childbirth drove her to the trunk of a palm tree. She said, "Oh, I wish I had died before this and was in oblivion, forgotten."
Fபனாதாஹா மின் தஹ்திஹா அல்லா தஹ்Zஜனீ கத் ஜ'அல ரBப்Bபுகி தஹ்தகி ஸரிய்யா
முஹம்மது ஜான்
(அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரயீல்) சப்தமிட்டு ‘‘(மர்யமே!) கவலைப்படாதீர்! உமக்குச் சமீபமாக உமது இறைவன் ஓர் ஊற்றை (உதித்து) ஓடச் செய்திருக்கிறான்.
IFT
அப்பொழுது கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்: “நீர் கவலைப்படாதீர்; உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவருக்குக் கீழ் புறமிருந்து (ஜிப்ரீயீலாகிய) அவர் சப்தமிட்டு அவரை அழைத்து “(மர்யமே!) நீர் கவலைப்படாதீர்” உம(து பாதத்து)க்கு கீழாக உமதிரட்சகன் ஓர் ஊற்றை திட்டமாக ஆக்கியிருக்கின்றான்” (என்றும்),
Saheeh International
But he called her from below her, "Do not grieve; your Lord has provided beneath you a stream.
“ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அப்பழங்களை) நீர் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) கண் குளிர்ந்திருப்பீராக! மனிதரில் எவரைக் கண்ட போதிலும் ‘‘நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்க முடிவு செய்துள்ளேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடுவீராக'' என்றும் கூறினார்.
IFT
ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் (அவரிடம்) கூறிவிடும்: “கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கின்றேன். ஆதலால், இன்று நான் எவரிடமும் பேசமாட்டேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அப்போது, (அப்பழங்களை) நீர் உண்பீராக! இன்னும், (ஊற்றின் நீரைக்) குடித்துக் கொள்வீராக! (இக்குழந்தையினால் உம்) கண் குளிர்ந்துமிருப்பீராக! பின்னர், மனிதர்களில் எவரையேனும் நிச்சயமாக நீர் கண்டால், நான் அர்ரஹ்மானுக்கு நோன்பை நேர்ச்சை செய்திருக்கின்றேன்; ஆகவே, இன்றையத்தினம் எந்த மனிதருடனும் நான் பேசவே மாட்டேன் என்று (சைகை மூலம்) கூறிவிடுவீராக” (என்றும் கூறினார்)
Saheeh International
So eat and drink and be contented. And if you see from among humanity anyone, say, 'Indeed, I have vowed to the Most Merciful abstention, so I will not speak today to [any] man.'"
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (மர்யம் தான் பெற்ற) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) ‘‘மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய்.
IFT
பிறகு, அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர்: “மர்யமே! நீ ஒரு பெரும் பாவச்செயலைச் செய்து விட்டாயே...!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அக்குழந்தையைப் பிரசவித்த) பின்னர், அவர் (மர்யம்) அதைச் சுமந்து கொண்டு தன் சமூகத்தாரிடம் வந்தார், அவர்கள் (இவரை நோக்கி) “மர்யமே! நிச்சயமாக மறுக்கப்பட்ட (இழிவான ஒரு பெருங்)காரியத்தை நீர் கொண்டு வந்து விட்டீர்” என்று கூறினார்கள்.
Saheeh International
Then she brought him to her people, carrying him. They said, "O Mary, you have certainly done a thing unprecedented.
(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் ‘‘மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எப்படி பேசுவோம்'' என்று கூறினார்கள்.
IFT
அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதைப்பற்றித் தன் குழந்தையிடமே கேட்குமாறு மர்யமாகிய) அவர் அதன் பக்கம் சுட்டிக் காண்பித்தார், அ(தற்க)வர்கள், “மடியில் குழந்தையாக இருப்பவரிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்? என்று கூறினார்கள்.
Saheeh International
So she pointed to him. They said, "How can we speak to one who is in the cradle a child?"
கால இன்னீ 'அBப்துல்லாஹி ஆதானியல் கிதாBப வ ஜ'அலனீ னBபிய்யா
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான்.
IFT
உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அப்பொழுது அவர்களிடம்) “நிச்சயமாக நான், அல்லாஹ்வுடைய அடியான், அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை அவன் ஆக்கி இருக்கிறான்” என்று (அக்குழந்தை) கூறியது.
Saheeh International
[Jesus] said, "Indeed, I am the servant of Allah. He has given me the Scripture and made me a prophet.
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.
IFT
பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் எங்கிருந்த போதிலும், அவன் என்னை (மிக்க) பரக்கத்துச் செய்யப்பட்டவனாகவும் ஆக்கியிருக்கிறான், நான் ஜீவித்திருக்கும் காலமெல்லாம் தொழுகையை (நிறைவேற்றுவது)க் கொண்டும், ‘ஜகாத்தைக் (கொடுத்து வருவது) கொண்டும் அவன் எனக்கு உபதேசம் செய்திருக்கிறான்.
Saheeh International
And He has made me blessed wherever I am and has enjoined upon me prayer and zakah as long as I remain alive
“இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
அப்துல் ஹமீது பாகவி
நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது).
IFT
என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், (மறுமையில்) நான் உயிர்பெற்றவனாக எழுப்பப்படும் நாளிலும், (அல்லாஹ்வின்) சாந்தி என் மீது உண்டாவதாக” (என்றும் கூறியது.)
Saheeh International
And peace is on me the day I was born and the day I will die and the day I am raised alive."
مَا كَانَதகுந்ததல்லلِلّٰهِஅல்லாஹ்விற்குاَنْ يَّتَّخِذَஅவன் எடுத்துக் கொள்வதுمِنْ وَّلَدٍۙகுழந்தையைسُبْحٰنَهٗؕஅவன் மகா பரிசுத்தமானவன்اِذَا قَضٰٓىஅவன் முடிவு செய்தால்اَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَا يَقُوْلُஅவன் கூறுவதெல்லாம்لَهٗஅதற்குكُنْஆகுفَيَكُوْنُؕஅது ஆகிவிடும்
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘‘(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும்) தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். எதையும் படைக்கக் கருதினால் அதை ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்.
IFT
எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வின் நியதியல்ல! அவன் புனிதமானவன்; அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் “ஆகிவிடு” என்றுதான் ஆணையிடுகின்றான்; உடனே அது ஆகிவிடுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்விற்கு – எந்த ஒரு புதல்வனையும் - அவன் எடுத்துக் கொள்ள வேண்டியது (அவசியம்) இல்லை, அவன் மிகப் பரிசுத்தமானவன், அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால், அவன் அதற்குச் சொல்லுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான் (உடனே) அது ஆகிவிடும்.
Saheeh International
It is not [befitting] for Allah to take a son; exalted is He! When He decrees an affair, He only says to it, "Be," and it is.
“நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்” (என்று நபியே! நீர் கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக.)
IFT
மேலும் (ஈஸா கூறியிருந்தார்:) “திண்ணமாக, என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ்தான்! எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். இதுதான் நேரான வழியாகும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) “நிச்சயமாக அல்லாஹ்தான் என்னுடைய இரட்சகனும், உங்களின் இரட்சகனுமாவான், (ஈஸாவாகிய நானல்ல.) ஆகவே, அ(வன் ஒரு)வனையே நீங்கள் வணங்குங்கள், இதுதான் நேரான வழி (என்று ஈஸா கூறினார்.)
Saheeh International
[Jesus said], "And indeed, Allah is my Lord and your Lord, so worship Him. That is a straight path."
Fபக்தலFபல் அஹ்ZஜாBபு மின் Bபய்னிஹிம் Fபவய்லுல் லில்லதீன கFபரூ மின் மஷ்ஹதி யவ்மின் 'அளீம்
முஹம்மது ஜான்
ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்!
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதை நிராகரிப்பவர்களுக்கு, அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் கேடுதான்.
IFT
ஆயினும், அவர்களில் பல்வேறு பிரிவினர் தமக்குள் கருத்து மாறுபாடு கொள்ளலாயினர். எனவே, அந்த மாபெரும் மறுமை நாளினை அவர்கள் பார்க்கும்போது இறைவனை நிராகரித்தவர்களுக்கு பெரும் கேடுதான் விளையும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால், அவர்களிலுள்ள (பல்வேறு கருத்துக் கொண்ட) கூட்டத்தார்கள் (இதைப்பற்றி) தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டனர், ஆகவே (நாம் கூறிய இதனை) நிராகரிப்போருக்கு மகத்தான (மறுமை) நாளின் (பெரும்) காட்சியை காணுமிடத்தில் கேடுதான் (உண்டு),
Saheeh International
Then the factions differed [concerning Jesus] from among them, so woe to those who disbelieved - from the scene of a tremendous Day.
அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவிசாய்ப்பார்கள். (நம் வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
IFT
அவர்கள் நம்மிடம் வரும் நாளில் அவர்களுடைய காதுகள் நன்கு கேட்டுக்கொண்டிருக்கும்; கண்கள் நன்கு பார்த்துக் கொண்டிருக்கும். ஆயினும், இந்தக் கொடுமையாளர்கள் இன்று வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்மிடம் அவர்கள் வரும் (மறுமை) நாளில் அவர்களைக் கேட்கச் செய்ததும், பார்க்கச் செய்ததும் எது? (நன்றாகக் கேட்கவும், பார்க்கவும் செய்வார்கள்) எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றையத்தினம் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்
Saheeh International
How [clearly] they will hear and see the Day they come to Us, but the wrongdoers today are in clear error.
وَاَنْذِرْهُمْஅவர்களை எச்சரிப்பீராகيَوْمَநாளை(ப் பற்றி)الْحَسْرَةِதுயரமானاِذْ قُضِىَ الْاَمْرُۘதீர்ப்பு முடிவு செய்யப்படும்போதுوَهُمْஅவர்கள் இருக்கின்றனர்فِىْ غَفْلَةٍஅறியாமையில்وَّهُمْஅவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
வ அன்திர்ஹும் யவ்மல் ஹஸ்ரதி இத் குளியல் அம்ர்; வ ஹும் Fபீ கFப்லதி(ன்)வ் வ ஹும் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
(நபியே!) இம்மக்கள் கவனமின்றியும், நம்பிக்கை கொள்ளாதவர்களாயும் உள்ள இந்நிலையில், அந்த மறுமைநாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அந்நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்போது வருந்துவதைத்தவிர வேறு வழியேதும் இராது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே! நியாயத் தீர்ப்பளிக்கப்பட்டு) காரியம் முடிக்கப் பட்டுவிடும்போது, மிக்க கைசேதமான (அந்த) நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! இன்னும், (இன்றையத் தினம்) அவர்கள் (அதுபற்றி) மறதியில் இருக்கிறார்கள், அவர்களோ விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
And warn them, [O Muhammad], of the Day of Regret, when the matter will be concluded; and [yet], they are in [a state of] heedlessness, and they do not believe.
நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவர்களுக்கும் சொந்தம் கொள்வோம். அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
IFT
இறுதியில், இப்பூமிக்கும் இதன் மீதுள்ள பொருள்கள் அனைத்திற்கும் நாமே வாரிசாகிவிடுவோம். மேலும், எல்லாரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாமே பூமியையும், அதன் மீதிருப்பவர்களையும் வாரிசாக்கிக் (அனந்தரமாக்கி)க் கொள்வோம், அவர்கள் (யாவரும்) நம்மிடமே மீட்கப்பட்டுக் கொண்டு வரப்படுவார்கள்.
Saheeh International
Indeed, it is We who will inherit the earth and whoever is on it, and to Us they will be returned.
இத் கால லி அBபீஹி யா அBபதி லிம தஃBபுது மா லா யஸ்ம'உ வலா யுBப்ஸிரு வலா யுக்னீ 'அன்க ஷய்'ஆ
முஹம்மது ஜான்
“என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை விட்டு தடைசெய்யாதவற்றை ஏன் வணங்குகிறீர்?'' என்று கேட்டார்.
IFT
(சற்று அவர்களுக்குப் பின்வரும் சந்தர்ப்பத்தை நினைவூட்டும்:) அப்போது அவர் தம் தந்தையிடம் கூறினார்: “என் அன்புத் தந்தையே! கேட்கவோ, பார்க்கவோ முடியாத, உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவோ இயலாதவற்றை நீங்கள் ஏன் வணங்குகின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தன் தந்தையிடம், “என் தந்தையே! எதையும் செவியேற்காத மற்றும் (எதையும்) பார்க்காத (நன்மையை ஈர்த்தும், தீமையைத் தடுத்தும்) உம்மைவிட்டும் எதையும் தடுக்காததை நீர் ஏன் வணங்குகிறீர்? என்று கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக” அப்போது)
Saheeh International
[Mention] when he said to his father, "O my father, why do you worship that which does not hear and does not see and will not benefit you at all?
“என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘‘என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி ஞானம் (என் இறைவன் அருளால்) எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பின்பற்றுவீராக. நான் உம்மை நேரான வழியில் நடத்துவேன்.
IFT
என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத ஒரு ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பின்பற்றுவீர்களாக! நான் உங்களுக்கு நேரிய வழியைக் காண்பிப்பேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் தந்தையே! நிச்சயமாக நான் - என்னிடம் அறிவிலிருந்து உமக்கு வந்திராதது திட்டமாக வந்திருக்கிறது, ஆகவே நீர் என்னைப் பின்பற்றுவீராக! (அப்பொழுது) நான் உமக்கு செவ்வையான வழியைக் காட்டுவேன் (என்றும்),
Saheeh International
O my father, indeed there has come to me of knowledge that which has not come to you, so follow me; I will guide you to an even path.
“என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்).
அப்துல் ஹமீது பாகவி
என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உம்மை பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கு நண்பனாகிவிடுவீர்'' (என்று கூறினார்).
IFT
என் தந்தையே! கருணைமிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் இலக்காகி விடுவீர்களோ; மேலும் ஷைத்தானின் தோழனாகி விடுவீர்களோ என்று நான் அஞ்சுகின்றேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் தந்தையே! மிகக் கிருபையுடையவனிலிருந்து வேதனை உம்மைப் பிடித்து (அதனால்) ஷைத்தானுக்கு நீர் சினேகிதராகிவிடுவதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” (என்றும் கூறியபோது)
Saheeh International
O my father, indeed I fear that there will touch you a punishment from the Most Merciful so you would be to Satan a companion [in Hellfire]."
قَالَகூறினார்اَرَاغِبٌநீ வெறுக்கிறாயா?اَنْتَநீعَنْ اٰلِهَتِىْஎன் தெய்வங்களைيٰۤاِبْرٰهِيْمُۚஇப்றாஹீமேلَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்لَاَرْجُمَنَّكَநிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன்وَاهْجُرْنِىْஇன்னும் என்னை விட்டு விலகிவிடுمَلِيًّاபாதுகாப்புப் பெற்றவராக
(அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘இப்றாஹீமே! நீ என் தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீ எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்'' என்று கூறினார்.
IFT
அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களை நிராகரித்து விட்டாயா? இதனை நீ தவிர்த்துக் கொள்ளாவிடில் நிச்சயம் உன்னை நான் கல்லால் அடிப்பேன்; நீ என்றென்றும் என்னை விட்டுப் பிரிந்து போய்விடு!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) அவர் தந்தை, “இப்றாஹீமே! நீர் என்னுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களைப் புறக்கணிக்கின்றீரா? நீர் இவ்வெண்ணத்திலிருந்து விலகிக் கொள்ளாவிடில் உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன், (இனி) நீர் என்னை விட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்று கூறினார்.
Saheeh International
[His father] said, "Have you no desire for my gods, O Abraham? If you do not desist, I will surely stone you, so avoid me a prolonged time."
(அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இப்றாஹீம், இதோ நான் செல்கிறேன்) ‘‘உம்மீது ஸலாம் உண்டாவதாக! பின்னர் நான் உமக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கிறான்'' என்று கூறினார்.
IFT
அதற்கு இப்ராஹீம் கூறினார்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உங்களை மன்னித்தருளுமாறு என் இறைவனிடம் நான் இறைஞ்சுவேன். நிச்சயமாக, என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு (இப்றாஹீம்) “உம்மீது சாந்தி உண்டாவதாக! (பின்னர்) நான் உமக்காக என் இரட்சகனிடத்தில் பாவமன்னிப்புக் கோருவேன், நிச்சயமாக அவன் என்னுடன் இரக்கமுடையோனாக இருக்கிறான்” என்று கூறினார்.
Saheeh International
[Abraham] said, "Peace [i.e., safety] will be upon you. I will ask forgiveness for you of my Lord. Indeed, He is ever gracious to me.
நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்” (என்றார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்களை விட்டும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் (தெய்வமென) அழைப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்'' (என்றும் கூறினார்.)
IFT
மேலும், உங்களைவிட்டும், அல்லாஹ்வை அன்றி, நீங்கள் பிரார்த்தித்து வருகின்ற தெய்வங்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொள்கின்றேன்; நான் என் இறைவனையே பிரார்த்திக்கின்றேன். நான் என் இறைவனைப் பிரார்த்தித்து ஏமாந்து போகமாட்டேன் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வமென) அழைப்பவைகளையும் விட்டு நான் விலகிக் கொள்கிறேன்; என் இரட்சகனையே நான் பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்; என் இரட்சகனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியமுடையவனாக ஆகாமல் இருக்கப் போதும் (என்றும் கூறினார்.)
Saheeh International
And I will leave you and those you invoke other than Allah and will invoke my Lord. I expect that I will not be in invocation to my Lord unhappy [i.e., disappointed]."
فَلَمَّا اعْتَزَلَهُمْஅவர் அவர்களை விட்டு விலகியபோதுوَمَا يَعْبُدُوْنَஇன்னும் அவர்கள் வணங்கியதைمِنْ دُوْنِஅன்றிاللّٰهِ ۙஅல்லாஹ்வைوَهَبْنَاவழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ ؕஇன்னும் யஃகூபைوَكُلًّاஇன்னும் ஒவ்வொருவரையும்جَعَلْنَاஆக்கினோம்نَبِيًّاநபியாக
(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் வழங்கினோம். அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாகவும் ஆக்கினோம்.
IFT
பிறகு, அம்மக்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கி வருகின்ற பிற தெய்வங்களையும் விட்டு அவர் ஒதுங்கிக் கொண்டபோது, நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் மற்றும் யஃகூப் போன்ற மக்களையும் வழங்கினோம். மேலும், அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர், அவர்களையும், அல்லாஹ்வையுமன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் விட்டு விலகிக் கொண்டபோது இஸ்ஹாக்கையும் யஃகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் அன்பளிப்பாக அளித்தோம், அவர்கள் ஒவ்வொருவரையும், நபியாக நாம் ஆக்கினோம்.
Saheeh International
So when he had left them and those they worshipped other than Allah, We gave him Isaac and Jacob, and each [of them] We made a prophet.
மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் ‘அலைஹிஸ் ஸலாம்' (அவர்மீது சாந்தி நிலவுக!) என்று எந்நாளும் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.)
IFT
மேலும், அவர்களுக்கு நம்முடைய அருட்கொடையிலிருந்து வழங்கினோம். உயர்ந்த, உண்மையான புகழையும் அவர்களுக்கு அளித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுக்கு நம் அருளிலிருந்து அன்பளிப்பாகக் கொடுத்தோம், (எல்லாச் சமூகத்தாரிடத்தும்) உயர்வான நற்பெயரையும் நாம் அவர்களுக்கு ஆக்கினோம்.
Saheeh International
And We gave them of Our mercy, and We made for them a mention [i.e., reputation] of high honor.
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
IFT
மேலும், மூஸாவைப் பற்றி இவ்வேதத்தில் உள்ளதைக் கூறுவீராக. நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார்; தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவ்வேதத்தில் மூஸாவைப்பற்றி (நபியே) நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார், இன்னும், அவர் (நம்முடைய) தூதராக, நபியாக இருந்தார்,
Saheeh International
And mention in the Book, Moses. Indeed, he was chosen, and he was a messenger and a prophet.
وَنَادَيْنٰهُஇன்னும் அவரை அழைத்தோம்مِنْ جَانِبِபக்கத்தில்الطُّوْرِமலைالْاَيْمَنِவலதுوَقَرَّبْنٰهُஅவரை நாம் நெருக்கமாக்கினோம்نَجِيًّاஅவரை இரகசியம் பேசுகிறவராக
வ னாதய்னாஹு மின் ஜானிBபித் தூரில் அய்மனி வ கர்ரBப்னாஹு னஜிய்யா
முஹம்மது ஜான்
இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்.
IFT
மேலும், நாம் ‘தூர்’ மலையின் வலப்பக்கத்தில் இருந்து அவரை அழைத்தோம்; தனியே உரையாடுவதன் மூலம் நம்மிடம் நெருங்குவதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் தூர்(ஸினாய்) மலையின் வலப் பக்கத்திலிருந்து அவரை நாம் கூப்பிட்டோம், இரகசியம் பேசுகிறவராக அவரை நாம் (நமக்கு) நெருக்கமாக்கியும் வைத்தோம்.
Saheeh International
And We called him from the side of the mount at [his] right and brought him near, confiding [to him].
(நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
IFT
(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றி (நபியே!) நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையானவராக இருந்தார், இன்னும் அவர் (நம்முடைய) தூதராக நபியாக இருந்தார்.
Saheeh International
And mention in the Book, Ishmael. Indeed, he was true to his promise, and he was a messenger and a prophet.
அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார்.
IFT
மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்; மேலும், தம் இறைவனிடம் விரும்பத்தக்க மனிதராகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர் தன் குடும்பத்தினரை, தொழுகையை (நிறைவேற்றுவது)க் கொண்டும், ஜகாத்தைக்(கொடுத்து வருவது) கொண்டும் ஏவுகிறவராக இருந்தார், அவர் தன் இரட்சகனிடத்தில் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.
Saheeh International
And he used to enjoin on his people prayer and zakah and was to his Lord pleasing [i.e., accepted by Him].
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஅகூப்)உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்.
IFT
இவர்களோ, அல்லாஹ் தன் அருட்பேறுகளை வழங்கியுள்ள நபிமார்கள் ஆவர். இவர்கள் ஆதத்தின் வழித்தோன்றல்களிலிருந்தும், நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்களிலிருந்தும் இப்ராஹீம் மற்றும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்தும் தோன்றியவர்களாவர். மேலும், நாம் நேர்வழி காட்டி, தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களைச் சார்ந்தவர்களுமாவர். இவர்களின் நிலைமை எவ்வாறிருந்த தெனில் கருணைமிக்க இறைவனின் வசனங்கள் இவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால், அழுதுகொண்டே ஸுஜூதில்* விழுந்துவிடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேற் கூறப்பட்ட) அவர்கள் எத்தகையோரென்றால், ஆதமுடைய சந்ததியிலுள்ள நபிமார்களிலிருந்தும், (நபி) நூஹ்வுடன் கப்பலில் நாம் ஏற்றிக் கொண்டவர்களின் சந்ததிகளிலிருந்தும், இப்றாஹீம் இஸ்ராயீலின் சந்ததியிலிருந்தும் நாம் நேர் வழியில் செலுத்தி நாம் தேர்ந்தெடுத்தவர்களிலுமிருந்து(ம் உள்ளோராவர்). அவர்களின் மீது அல்லாஹ் அருள் செய்து விட்டான், அவர்கள் மீது அர்ரஹ்மானுடைய வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் (சிரம் பணிந்து) ஸுஜூது செய்தவர்களாக மற்றும் அழுதவர்களாக விழுந்து விடுவார்கள்.
Saheeh International
Those were the ones upon whom Allah bestowed favor from among the prophets of the descendants of Adam and of those We carried [in the ship] with Noah, and of the descendants of Abraham and Israel [i.e., Jacob], and of those whom We guided and chose. When the verses of the Most Merciful were recited to them, they fell in prostration and weeping.
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள்.
IFT
அவர்களுக்குப் பிறகு, சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய பிற்சந்ததிகளாகத் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் தங்கள் வழிகேட்டின் தீயவிளைவை விரைவில் சந்திப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்குப் பின்னர், (வழிகெட்ட) தீய பின்தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை (த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே, அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள்.
Saheeh International
But there came after them successors [i.e., later generations] who neglected prayer and pursued desires; so they are going to meet evil -
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
IFT
ஆயினும், எவர்கள் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆயினும்,) அவர்களில் எவர் (பச்சாதாபப்பட்டு) தவ்பாச் செய்து விசுவாசமுங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களோ அவர்களைத்தவிர, அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள், இன்னும் அவர்கள் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
Saheeh International
Except those who repent, believe and do righteousness; for those will enter Paradise and will not be wronged at all.
அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
அப்துல் ஹமீது பாகவி
அது ‘அத்ன்' என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். (அவை தற்சமயம்) மறைவாக இருந்தபோதிலும், அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும்.
IFT
கருணைமிக்க இறைவன் தன்னுடைய அடியார்களுக்கு அவர்கள் காணாத நிலையில், அளித்துள்ள வாக்குறுதியான நிலையான சுவனபதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அத்னு” என்ற நிலையான சொர்க்கங்கள் (அவர்களுக்கு கூலியாகும்.) – அவை எத்தகையவையென்றால், ரஹ்மான் தன் (நல்) அடியார்களுக்கு (அவை) மறைவாக இருக்கும் நிலையில் வாக்களித்துள்ளான், நிச்சயமாக அவனுடைய வாக்கு வரக்கூடியதாகவே உள்ளது.
Saheeh International
[Therein are] gardens of perpetual residence which the Most Merciful has promised His servants in the unseen. Indeed, His promise has ever been eminent.
ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(அவற்றில்) ஸலாம் (என்ற முகமனைத்) தவிர வீணான வார்த்தைகளைச் செவியுற மாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும்.
IFT
அங்கு அவர்கள் எவ்வித வீணான விஷயத்தையும் செவியுறமாட்டார்கள். எதைச் செவியுற்றாலும் சரியானவற்றையே செவியுறுவார்கள். மேலும், அங்கு அவர்களுக்குரிய உணவு காலையிலும், மாலையிலும் (தொடர்ந்து) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவற்றில் அவர்கள் ஸலாம் (எனும் சாந்தி) என்பதைத் தவிர (வார்த்தைகளால் வேறு) வீணானதைச் செவியேற்க மாட்டார்கள், அவற்றில் அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவும் உண்டு.
Saheeh International
They will not hear therein any ill speech - only [greetings of] peace - and they will have their provision therein, morning and afternoon.
(மலக்குகள் கூறுகிறார்கள்: நபியே!) “உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பதும் அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன; உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.”
அப்துல் ஹமீது பாகவி
(வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உமது இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. இதில் (எதையும்) உமது இறைவன் மறப்பவனல்ல.
IFT
(நபியே!) “நாங்கள் உம் இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை; எங்களுக்கு முன்னால் இருப்பவை, பின்னால் இருப்பவை மற்றும் இவற்றிற்கிடையேயுள்ளவை ஆகிய ஒவ்வொன்றுக்கும் அவனே உரிமையாளன் ஆவான். மேலும், உம் இறைவன் மறக்கக் கூடியவனல்லன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (ஜிப்ரீலானவர், நபியிடம்) உமதிரட்சகனின் கட்டளையைக் கொண்டல்லாது நாம் இறங்குவதில்லை, எங்களுக்கு முன்னிருப்பவைகளும், பின்னிருப்பவைகளும், இவ்விரண்டிற்கும் மத்தியிலிருப்பவைகளும், அவனுக்குச் சொந்தமானவைகளாக இருக்கின்றன.
Saheeh International
[Gabriel said], "And we [angels] descend not except by the order of your Lord. To Him belongs that before us and that behind us and what is in between. And never is your Lord forgetful -
“(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே).
IFT
வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்குமிடையே உள்ள அனைத்திற்கும் அவன் அதிபதி ஆவான். எனவே, அவனுக்கு நீர் அடிபணிவீராக! மேலும், அவனுக்கு அடிபணிவதிலேயே நிலைத்திருப்பீராக! அவனுக்கு சமமானவர் எவரையேனும் நீர் அறிவீரா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களுக்கும், பூமிக்கும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளுக்கும் (அவனே) இரட்சகனாவான், ஆதலால், அ(வன் ஒரு)வனையே நீர் வணங்குவீராக! அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் கஷ்டங்களையும்) நீர் பொறுத்துக் கொள்வீராக! (பெயரில், வல்லமையில் மற்றும் அனைத்துப் பண்புகளில்) அவனுக்கு ஒப்பானவனை நீர் அறிவீரா? (இவற்றில் ஒப்பானவர் அவனுக்கு நிகராக எவருமே இல்லை)
Saheeh International
Lord of the heavens and the earth and whatever is between them - so worship Him and have patience for His worship. Do you know of any similarity to Him?"
فَوَرَبِّكَஉம் இறைவன் மீது சத்தியமாகلَـنَحْشُرَنَّهُمْநிச்சயமாக நாம் அவர்களை எழுப்புவோம்وَالشَّيٰطِيْنَஇன்னும் ஷைத்தான்களைثُمَّபிறகுلَــنُحْضِرَنَّهُمْஅவர்களைக் கொண்டு வருவோம்حَوْلَசுற்றிجَهَـنَّمَநரகத்தைجِثِيًّا ۚமுழந்தாளிட்டவர்களாக
ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக அவர்களை ஒன்று சேர்ப்போம்.
IFT
உம் இறைவன் மீது ஆணையாக! அவர்கள் அனைவரையும் (அவர்களோடு) ஷைத்தான்களையும் அவசியம் நாம் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, நரகத்தைச் சுற்றிலும் அவர்களைக் கொண்டுவந்து முழங்காலிட்டு நிறுத்துவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) உமதிரட்சகன் மீது சத்தியமாக! நாம் அவர்களையும் (அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) ஒன்று திரட்டுவோம், பின்னர் நரகத்தைச் சூழ முழந்தாளிட்டவர்களாக அவர்களை நாம் நிச்சயமாக முன்னிலைப் படுத்துவோம்.
Saheeh International
So by your Lord, We will surely gather them and the devils; then We will bring them to be present around Hell upon their knees.
وَاِنْ مِّنْکُمْஉங்களில் (ஒவ்வொருவரும்) இல்லைاِلَّا وَارِدُهَا ؕதவிர/அதில் நுழையக்கூடியவராகكَانَஇருக்கிறதுعَلٰى رَبِّكَஉமது இறைவன் மீதுحَتْمًاதீர்ப்பாகمَّقْضِيًّا ۚமுடிவு செய்யப்பட்ட
வ இன் மின்கும் இல்லா வாரிதுஹா; கான 'அலா ரBப்Bபிக ஹத்மம் மக்ளிய்யா
முஹம்மது ஜான்
மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அதைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.
IFT
உங்களில் எவரும் நரகத்தைக் கடந்து செல்லாதவராய் இருக்க முடியாது. இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாகும்; இதனை நிறைவேற்றுவது உம்முடைய இறைவனின் பொறுப்பாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உங்களில் எவரும் (ஸிராத் எனும் பாலமான) அதற்கு வரக்கூடியவராகவேயல்லாது இல்லை, உமது இரட்சகன்மீது இது கட்டாயமான முடிவு செய்யப்பட்டதாக ஆகிவிட்டது.
Saheeh International
And there is none of you except he will come to it. This is upon your Lord an inevitability decreed.
அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.
IFT
(உலக வாழ்வில்) இறையச்சம் கொண்டு வாழ்ந்தவர்களை நாம் காப்பாற்றுவோம். கொடுமையாளர்களை அதிலேயே வீழ்ந்து கிடக்குமாறு விட்டுவிடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு வந்ததன்) பின்னர் பயபக்தியுடையோராக இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம், அநியாயக்காரர்களை முழந்தாளிட்டவர்களாக அதில் விட்டும் விடுவோம்.
Saheeh International
Then We will save those who feared Allah and leave the wrongdoers within it, on their knees.
இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்: “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?'' என்று கேட்கின்றனர்.
IFT
இவர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்பட்டால், நிராகரிப்பவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம், “நம் இரு பிரிவினரில் யார் நல்ல நிலையில் உள்ளவர்கள், யாருடைய அவைகள் மிகக் கம்பீரமாக இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள்” என்று கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் மீது நம்முடைய வசனங்கள் தெளிவானவையாக ஓதப்பட்டால், விசுவாசிகளிடம் நிராகரிப்பவர்கள், நம் இரு வகுப்பாரில் தங்குமிடத்தால் மிகச் சிறந்தவர் யார், இன்னும் சபையால் மிக்க அழகானவர் யார்? என்று கூறுகின்றனர்.
Saheeh International
And when Our verses are recited to them as clear evidences, those who disbelieve say to those who believe, "Which of [our] two parties is best in position and best in association?"
இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களை விட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
IFT
உண்மையில், இவர்களுக்கு முன் இவர்களைவிட எவ்வளவோ அதிகச் சாதனங்களை வைத்திருந்தவர்களும் வெளிப்பகட்டில் இவர்களைவிட மிகைத்திருந்தவர்களுமான எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ கூட்டத்தாரை அழித்திருக்கின்றோம், அவர்கள் தளவாடங்களாலும், தோற்றத்தாலும் மிக அழகானவர்கள் (ஆவர்).
Saheeh International
And how many a generation have We destroyed before them who were better in possessions and [outward] appearance?
“யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரை ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும். அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் (மறுமையில்) அறிந்து கொள்வார்கள்.
IFT
இவர்களிடம் கூறுங்கள்: எவர்கள் வழிகேட்டிலே வீழ்ந்திருக்கின்றார்களோ அவர்களுக்கு கருணைமிக்க இறைவன் கால அவகாசம் அளிக்கின்றான். எதுவரையெனில், தங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்ததை அது அல்லாஹ் அளிக்கும் வேதனையாக இருந்தாலும் சரி, மறுமையாக இருந்தாலும் சரி, அதனை அவர்கள் காண்கிறார்கள்; அப்போது யாருடைய நிலைமை மோசமானது; யாருடைய கூட்டம் பலம் குன்றியது என்பது அவசியம் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எவர் வழிகேட்டிலிருக்கிறாரோ அவருக்கு அர்ரஹ்மான் கால அவகாசத்தை நீட்டி விடுகிறான், முடிவாக அவர்கள் வாக்களிக்கப்பட்டதை-(அதாவது) ஒன்று இம்மையில் வேதனையை, மற்றொன்று மறுமையை அவர்கள் கண்டுவிட்டால்-அப்போது இடத்தால் கெட்டவர் யார்? படையால் மிகவும் பலவீனமானவர் யார்? என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்” (என்று நபியே!) நீர் (அவர்களுக்குக்) கூறுவீராக!
Saheeh International
Say, "Whoever is in error - let the Most Merciful extend for him an extension [in wealth and time] until, when they see that which they were promised - either punishment [in this world] or the Hour [of resurrection] - they will come to know who is worst in position and weaker in soldiers."
“மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.”
அப்துல் ஹமீது பாகவி
நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன.
IFT
(இதற்கு மாறாக) எவர்கள் நேர்வழியை மேற்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியில் முன்னேற்றத்தை வழங்குகின்றான். மேலும், நிலைத்திருக்கும் நற்செயல்கள்தாம் உம் இறைவனிடத்தில் நற்கூலியையும் நல்ல முடிவையும் பொறுத்து மிகவும் சிறந்தவையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நேர் வழியில் செல்கிறார்களே அத்தகையோருக்கு அல்லாஹ் (மேலும்) நேர் வழியை அதிகப்படுத்துகிறான், நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள் தாம் உம்முடைய இரட்சகனிடத்தில் நற்கூலியால் மிகச் சிறந்ததாகும், திரும்பிச் செல்லும் இடத்தாலும் மிகச் சிறந்ததாகும்.
Saheeh International
And Allah increases those who were guided, in guidance, and the enduring good deeds are better to your Lord for reward and better for recourse.
“நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்” என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம் வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? ‘‘(மறுமையிலும்) நிச்சயமாக நான் ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்'' என்று கூறுகிறான்.
IFT
எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கின்றானோ மேலும், ‘பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்’ என்றும் கூறுகின்றானோ அவனை நீர் பார்த்தீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நம்முடைய வசனங்களை நிராகரித்தோனை நீர் பார்த்தீரா? அவன் (மறுமையிலும்) நான் நிச்சயமாக செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன் எனவும் கூறினான்.
Saheeh International
Then, have you seen he who disbelieved in Our verses and said, "I will surely be given wealth and children [in the next life]"?
(பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?
அப்துல் ஹமீது பாகவி
அவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்து கொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா?
IFT
அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்து வைத்திருக்கின்றானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமையில் அவன் கூறியது போன்றது உண்டா? (என்ற) மறைவானதை அவன் அறிந்திருக்கின்றானா? அல்லது அர்ரஹ்மானிடத்தில் அது பற்றியதொரு உறுதிமொழியைப் பெற்றிருக்கின்றானா?
Saheeh International
Has he looked into the unseen, or has he taken from the Most Merciful a promise?
அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்திவிடுவோம்.
IFT
அப்படி ஒன்றும் இல்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன் கூறுகிற அவ்வாறு) அன்று! அவன் கூறுகின்றவற்றை நாம் எழுதி வருவோம், (அதற்குத் தக்கவாறு) வேதனையிலிருந்து நாம் அவனுக்கு மிக மிக அதிகப்படுத்தியும் விடுவோம்.
Saheeh International
No! We will record what he says and extend [i.e., increase] for him from the punishment extensively.
இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்.
IFT
எந்தப் பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் பற்றி அவன் பெருமையடித்துக் கொள்கின்றானோ அவை அனைத்தும் இறுதியில் நமக்கே உரியனவாகிவிடும்; அவன் தனியாகவே நம்மிடம் வருவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் கூறுகின்றவற்றுக்கு நாமே அனந்தரங்கொண்டு விடுவோம், (இவைகளை இழந்துவிட்டு) தனியாகவே நம்மிடம் அவன் வருவான்.
Saheeh International
And We will inherit him [in] what he mentions, and he will come to Us alone.
وَاتَّخَذُوْاஇன்னும் ஏற்படுத்திக் கொண்டனர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاٰلِهَةًபல தெய்வங்களைلِّيَكُوْنُوْاஅவை இருக்கும் என்பதற்காகلَهُمْதங்களுக்குعِزًّا ۙபாதுகாப்பாக
வத்தகதூ மின் தூனில் லாஹி ஆலிஹதல் லியகூனூ லஹும் 'இZஜ்Zஜா
முஹம்மது ஜான்
(முஷ்ரிக்குகள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!
அப்துல் ஹமீது பாகவி
(இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர்.
IFT
அல்லாஹ்வை விடுத்து வேறு கடவுளரை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் இவர்களுக்கு உதவியாளராய் ஆக வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இணை வைத்துக்கொண்டிருந்த) இவர்கள், (அல்லாஹ்வின் வேதனையிலிருந்து காத்து) தங்களுக்கு உதவியாக அவர்கள் ஆவதற்காக அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Saheeh International
And they have taken besides Allah [false] deities that they would be for them [a source of] honor.
அலம் தர அன்னா அர்ஸல்னஷ் ஷயாதீன 'அலல் காFபிரீன த'உZஜ்Zஜுஹும் அZஜ்Zஜா
முஹம்மது ஜான்
காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பிவைக்கிறோம் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
IFT
நீர் கவனிக்கவில்லையா? சத்தியத்தை நிராகரிப்போர் மீது ஷைத்தான்களை நாம் ஏவி விட்டிருக்கின்றோம். அவர்கள் (சத்தியத்தை எதிர்க்குமாறு) இவர்களை அதிகம் அதிகம் தூண்டிக் கொண்டிருக்கின்றார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிராகரிப்போரை (தீயவைகளைச் செய்யுமாறு) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்கவில்லையா?
Saheeh International
Do you not see that We have sent the devils upon the disbelievers, inciting them [to evil] with [constant] incitement?
لَا يَمْلِكُوْنَஅவர்கள் உரிமை பெறமாட்டார்கள்الشَّفَاعَةَசிபாரிசுக்குاِلَّاதவிரمَنِ اتَّخَذَஏற்படுத்தியவரைعِنْدَ الرَّحْمٰنِரஹ்மானிடம்عَهْدًا ۘஓர் ஒப்பந்தத்தை
லா யம்லிகூனஷ் ஷFபா'அத இல்லா மனித்தகத 'இன்தர் ரஹ்மானி 'அஹ்தா
முஹம்மது ஜான்
அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்து கொண்டோரைத் தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு - மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச உரிமை பெறமாட்டார்.
IFT
அந்நாளில் எவராலும் எவ்விதப் பரிந்துரையும் சமர்ப்பிக்க இயலாது கருணை மிக்க இறைவனின் ஒப்புதல் பெற்றவர்களைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அர்ரஹ்மானிடம் உறுதிமொழி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) பரிந்துரை செய்ய அதிகாரம் பெறமாட்டார்கள்.
Saheeh International
None will have [power of] intercession except he who had taken from the Most Merciful a covenant.
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணை மிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு (விசுவாசிகளின் இதயங்களில்) நேசத்தையும் அர்ரஹ்மான் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுப்பான்.
Saheeh International
Indeed, those who have believed and done righteous deeds - the Most Merciful will appoint for them affection.
(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் இறையச்சமுடையவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு இதன் மூலம் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
IFT
எனவே (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் (இறக்கியருளி) எளிதாக்கி இருப்பது, இறையச்சம் கொண்டவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி அறிவிப்பதற்காகவும் மேலும், பிடிவாதத்தில் மூழ்கியிருக்கும் சமூகத்தை இதன் மூலம் எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உம்முடைய மொழியில் நாம் இதை (இறக்கி,) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதைக்கொண்டு நீர் பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறுவதற்காகவும், இன்னும், இதனைக் கொண்டு வீண்தர்க்கம் செய்யும் சமூகத்தார்க்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும்தான்.
Saheeh International
So, [O Muhammad], We have only made it [i.e., the Qur’an] easy in your tongue [i.e., the Arabic language] that you may give good tidings thereby to the righteous and warn thereby a hostile people.
வ கம் அஹ்லக்னா கBப்ல ஹும் மின் கர்னின் ஹல் துஹிஸ்ஸு மின்ஹும் மின் அஹதின் அவ் தஸ்ம'உ லஹும் ரிக்Zஜா
முஹம்மது ஜான்
அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்களில் ஒருவரையேனும் நீர் காண்கிறீரா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா?
IFT
இவர்களுக்கு முன்னால் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம்; (இன்று) அவர்களில் எவருடைய அடையாளத்தையேனும், நீர் எங்கேயாவது காண்கின்றீரா? அல்லது அவர்களுடைய எந்த அரவத்தையாவது எங்கேயாவது கேட்கின்றீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம், அவர்களில் எவரையேனும் நீர் காண்கின்றீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தையேனும் நீர் கேட்கின்றீரா?
Saheeh International
And how many have We destroyed before them of generations? Do you perceive of them anyone or hear from them a sound?