கருணைமிக்க இறைவன் (பேரண்டத்தின்) ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அர்ரஹ்மான் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான்.
Saheeh International
The Most Merciful [who is] above the Throne established.
وَاِنْ تَجْهَرْநீர் பகிரங்கப்படுத்தினாலும்بِالْقَوْلِபேச்சைفَاِنَّهٗநிச்சயமாக அவன்يَعْلَمُநன்கறிவான்السِّرَّஇரகசியத்தைوَاَخْفٰىஇன்னும் மிக மறைந்ததை
வ இன் தஜ்ஹர் Bபில்கவ்லி Fப-இன்னஹூ யஃலமுஸ் ஸிர்ர வ அக்Fபா
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் (மெதுவாக அல்லது) சப்தமிட்டு கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அதைவிட மிக மறைவாக (மனதில்) இருப்பதையும் நன்கறிவான்.
IFT
நீர் உம்முடைய சொற்களை உரக்கக் கூறும்; ஆனால், இரகசியமாகப் பேசுவதையும் ஏன், அதைவிட மறைவானவற்றையும் திண்ணமாக அவன் அறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்) சொல்லை நீர் சப்தமாகக் கூறினாலும், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அதைவிட மறைவானதையும் அறிகிறான்.
Saheeh International
And if you speak aloud - then indeed, He knows the secret and what is [even] more hidden.
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ ؕஅவனைلَـهُஅவனுக்கு உண்டுالْاَسْمَآءُபெயர்கள்الْحُسْنٰىமிக அழகிய
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ லஹுல் அஸ்மா'உல் ஹுஸ்னா
முஹம்மது ஜான்
அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவற்றில் எதைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்.)
IFT
அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனுக்கு மிகவும் அழகிய பெயர்கள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்-அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு நாயன் இல்லை, அவனுக்கு அழகான (பல) பெயர்கள் இருக்கின்றன.
Saheeh International
Allah - there is no deity except Him. To Him belong the best names.
அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
(அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்லவேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) அவர் நெருப்பைக் கண்ட சமயத்தில் தன் குடும்பத்தாரை நோக்கி ‘‘நீங்கள் (இங்கு சிறிது) தாமதித்திருங்கள். மெய்யாகவே நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஓர் எரி கொள்ளியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வருகிறேன். அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் (நாம் செல்லவேண்டிய) வழியை அறிந்து கொள்வேன்'' என்றார்.
IFT
அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டு வரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக்கூடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தூர் என்னும் மலை மீது) நெருப்பை அவர் கண்டபோது, தன் குடும்பத்தினரிடம், “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள், நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன், அதிலிருந்து ஒரு தீப்பந்தத்தை உங்களுக்குக் கொண்டு வரவோ, அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் வழியை நான் பெறவோ செய்யலாம்” என்றார்.
Saheeh International
When he saw a fire and said to his family, "Stay here; indeed, I have perceived a fire; perhaps I can bring you a torch or find at the fire some guidance."
“நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. என்னையே வணங்குவீராக. என்னை தியானித்துக்கொண்டே இருக்கும்பொருட்டு தொழுகையைக் கடைப்பிடிப்பீராக.
IFT
திண்ணமாக, நான்தான் அல்லாஹ்; என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, எனக்கு அடிபணிவீராக! என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான்தான் அல்லாஹ், என்னைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு நாயன் இல்லை, ஆகவே, என்னையே நீர் வணங்குவீராக! என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையையும் நிறைவேற்றுவீராக”
Saheeh International
Indeed, I am Allah. There is no deity except Me, so worship Me and establish prayer for My remembrance.
“ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வோர் ஆத்மாவும் தன் செயலுக்குத் தக்க கூலியை அடையும் பொருட்டு அதை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க விரும்புகிறேன்.
IFT
மறுமைநாள் வருவது திண்ணம். அது வரும் நேரத்தை நான் மறைத்து வைக்க விரும்புகின்றேன்; ஒவ்வொரு ஆன்மாவும் அவரவரின் முயற்சிகளுக்கேற்ற கூலி பெற வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக மறுமை வரக்கூடியதாக இருக்கிறது ஒவ்வோர் ஆத்மாவும் அது முயற்சி செய்ததற்குத்தக்க கூலி வழங்கப்படுவதற்காக அதனை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க சமீபிக்கிறேன்” (முற்றிலும் மறைத்து வைத்துள்ளேன்).
Saheeh International
Indeed, the Hour is coming - I almost conceal it - so that every soul may be recompensed according to that for which it strives.
فَلَا يَصُدَّنَّكَஉம்மை திருப்பிவிட வேண்டாம்عَنْهَاஅதை விட்டுمَنْ لَّا يُؤْمِنُஎவன் நம்பிக்கை கொள்ளவில்லைبِهَاஅதைوَاتَّبَعَபின்பற்றியவன்هَوٰٮهُதனது மன இச்சையைفَتَرْدٰىநீர் அழிந்து விடுவீர்
Fபலா யஸுத்தன்னக 'அன்ஹா மல் லா யு'மினு Bபிஹா வத்தBப'அ ஹவாஹு Fபதர்தா
முஹம்மது ஜான்
“ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து விடுவீர்.''
IFT
எனவே, எவன் அந்த நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன் மன இச்சையைப் பின்பற்றுகின்றானோ அவன் அந்நாளைப் பற்றிய சிந்தனையிலிருந்து உம்மைத் தடுத்திட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிவிற்குள்ளாகி விடுவீர்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அதனை நம்பிக்கை கொள்ளாது, தன் (மன) இச்சையையும் பின்பற்றியவன் அதனைவிட்டும் திண்ணமாக உம்மைத் தடுத்துவிட வேண்டாம், அவ்வாறாயின் நீர் அழிந்துவிடுவீர்! (என்று கூறி)
Saheeh International
So do not let one avert you from it who does not believe in it and follows his desire, for you [then] would perish.
(அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘இது என் கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு (பல) பயன்களும் இருக்கின்றன'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸா பதிலளித்தார்: “இது என்னுடைய கைத்தடி; இதனை ஊன்றிக் கொண்டு நடப்பேன்; இதன் மூலம் என்னுடைய ஆடுகளுக்கு இலை தழைகளைப் பறித்துப் போடுவேன்; இன்னும் இதன் மூலம் என்னுடைய வேறு பல தேவைகளும் நிறைவேறுகின்றன.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “இது என்னுடைய கைத்தடி, இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன், இதைக்கொண்டு என்னுடைய ஆடுகளுக்கு(த்தழை குழைகளை) மரங்களிலிருந்து பறிப்பேன், இன்னும் இதில் எனக்கு வேறு பல தேவைகளும் இருக்கின்றன” என்று கூறினார்.
Saheeh International
He said, "It is my staff; I lean upon it, and I bring down leaves for my sheep and I have therein other uses."
அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உம்மைப் பற்றி உமது தாய் கவலை கொண்டாள். ஆகவே, உமது தாயை நோக்கி) ‘‘உம்மைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடு. அக்கடல் அதைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதை எடுத்துக்கொள்வான்'' (என்று உமது தாய்க்கு அறிவித்தோம்). நீர் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உம் மீது என் அன்பை சொரிந்(து உம்மைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம்.
IFT
“நீர் இக்குழந்தையைப் பெட்டகத்தினுள் வைத்து, பெட்டகத்தை ஆற்றில் விட்டு விடும். ஆறு, அதனைக் கரையில் ஒதுக்கிவிடும்; எனக்கும் அக்குழந்தைக்கும் பகைவனான ஒருவன் அதனை எடுத்துக்கொள்வான்.” “மேலும், என்னிடமிருந்து அன்பை உம்மீது பொழிந்திருக்கின்றேன். இன்னும் என் மேற்பார்வையில் உம்மை வளர்க்க ஏற்பாடு செய்தேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவரை பேழையில் வைத்து (நைல்) நதியில் அதனை எறிந்துவிடு, அந்நதி அவரைக் கரையில் சேர்த்து விடும், எனக்கு விரோதியும், அவருக்கு விரோதியாகவும் உள்ளவன் அவரை எடுத்துக் கொள்வான்” என்றும் (உம் தாய்க்கு அறிவித்தோம்) என்னிடமிருந்து அன்பையும் உம்மீது நான் பொழிந்தேன், இன்னும் என் கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக.
Saheeh International
[Saying], 'Cast him into the chest and cast it into the river, and the river will throw it onto the bank; there will take him an enemy to Me and an enemy to him.' And I bestowed upon you love from Me that you would be brought up under My eye [i.e., observation and care].
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.
அப்துல் ஹமீது பாகவி
உமது சகோதரி சென்று (உம்மை எடுத்தவர்களிடம்) ‘‘இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறும்படிச் செய்து, உமது தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உமது தாயிடமே உம்மைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீர் ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீர் கொண்ட கவலையில் இருந்து உம்மைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். பின்னர், மத்யன்வாசிகளிடமும் நீர் பல வருடங்கள் தங்கியிருந்தீர். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீர் (நமது தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்.
IFT
இதனையும் நினைத்துப் பாரும்: உம்முடைய சகோதரி நடந்து சென்று கொண்டிருந்தாள்; பிறகு, அங்குச் சென்று, “இக்குழந்தையை நல்லவிதமாக வளர்க் கக்கூடிய ஒருவரை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” என்று கேட்டாள். இவ்வாறு நாம் உம் தாயாரிடம் உம்மைக் கொண்டு வந்து சேர்த்தோம், அவர் கண்குளிரவும் கவலைப்படாமலும் இருப்பதற்காக! மேலும் (இதனையும் நினைத்துப்பாரும்:) நீர் ஒருவனைக் கொலை செய்துவிட்டிருந்தீர். அந்தச் சிக்கலில் இருந்தும் நாம் உம்மை விடுவித்தோம்! மேலும், நாம் உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். நீர் ‘மத்யன்’ வாசிகளிடம் பல ஆண்டுகள் தங்கியிருந்தீர். பின்னர் மூஸாவே, இப்போது நீர் சரியான நேரத்தில் வந்திருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உம் சகோதரி நடந்தபோது (அப்பேழையை எடுத்தவர்களிடம்) “அவருக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒருவரை (செவிலித்தாயை) உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கூறினாள், பின்னர், உமது தாயாரின்பால், அவரின் கண் குளிர்ந்திருப்பதற்காக இன்னும், அவர் கவலை கொள்ளாதிருப்பதற்காக உம்மை நாம் திருப்பிக் கொடுத்தோம், இன்னும் நீர் ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டீர், (அதன்) கவலையிலிருந்து உம்மை நாம் ஈடேற்றினோம், இன்னும், உம்மை சோதிப்பதற்காக (பல சோதனைகளைக் கொண்டு) சோதித்தோம், பின்னர் மத்யன்வாசிகளிடையே பல வருடங்கள் நீர் தங்கியிருந்தீர், அதன் பின்னர் (நாம் உம்மை முன்பு நம் தூதராக்க) நிர்ணயித்தபடி மூஸாவே நீர் வந்தீர்.
Saheeh International
[And We favored you] when your sister went and said, 'Shall I direct you to someone who will be responsible for him?' So We restored you to your mother that she might be content and not grieve. And you killed someone, but We saved you from retaliation and tried you with a [severe] trial. And you remained [some] years among the people of Madyan. Then you came [here] at the decreed time, O Moses.
اِذْهَبْசெல்வீர்களாக!اَنْتَநீரும்وَاَخُوْكَஉனது சகோதரரும்بِاٰيٰتِىْஎன் அத்தாட்சிகளைக் கொண்டுوَلَا تَنِيَاஇன்னும் நீங்கள் இருவரும் சோர்வடையாதீர்கள்فِىْ ذِكْرِىۚஎன்னை நினைவு கூர்வதில்
“எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவ்விருவரும் ‘‘எங்கள் இறைவனே! அவன் எங்கள் மீது (வரம்பு) மீறி கொடுமை செய்வானோ அல்லது விஷமம் செய்வானோ என்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
இருவரும் பணிந்து கூறினர்: “எங்கள் இறைவனே! அவன் அநீதியாகவோ, அல்லது கொடூரமாகவோ எங்களுடன் நடந்து கொள்வான் என்று நாங்கள் அஞ்சுகின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “எங்கள் இரட்சகனே! அவன் எங்களுக்கு (தீங்கிழைக்க) அவசரப்படவோ, அல்லது வரம்பு மீறவோ செய்யலாம், என்று நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
Saheeh International
They said, "Our Lord, indeed we are afraid that he will hasten [punishment] against us or that he will transgress."
(அதற்கு அல்லாஹ்) “நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன்) கூறினான்: ‘‘நீங்கள் பயப்படவேண்டாம். நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பேன்.''
IFT
அதற்கு அல்லாஹ் கூறினான்: “அஞ்சாதீர்கள். நான் உங்களுடன் இருக்கின்றேன். அனைத்தையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் இருவரும் பயப்பட வேண்டாம், நிச்சயமாக நான் உங்களிருவருடன் (யாவையும்) கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருப்பேன் என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்”.
Saheeh International
[Allah] said, "Fear not. Indeed, I am with you both; I hear and I see.
“ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: “நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள்; பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு; மேலும் அவர்களை வேதனை படுத்தாதே; திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக” என்று சொல்லுங்கள்” (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் இருவரும் அவனிடத்தில் சென்று சொல்லுங்கள்: ‘‘நாங்கள் உன் இறைவனின் தூதர்கள். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனை செய்யாதே! மெய்யாகவே நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். நேரான வழியைப் பின்பற்றியவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.
IFT
அவனிடம் சென்று கூறுங்கள்: “நாங்கள் இருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்களாவோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களைத் துன்புறுத்தாதே! உன் இறைவனுடைய சான்றை உன்னிடம் நாம் கொண்டு வந்திருக்கின்றோம். மேலும், சாந்தி உண்டாகும் நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, நீங்களிருவரும் அவனிடம் வந்து பின்னர், “நாங்கள் இருவரும் உன் இரட்சகனின் தூதர்கள், இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவிடு, அவர்களை வேதனையும் செய்யாதே, திட்டமாக நாங்கள் உன் இரட்சகனிடமிருந்து அத்தாட்சியை உன்னிடம் கொண்டு வந்திருக்கின்றோம், நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தியும் உண்டாவதாக!” என்று நீங்களிருவரும் கூறுங்கள்.
Saheeh International
So go to him and say, 'Indeed, we are messengers of your Lord, so send with us the Children of Israel and do not torment them. We have come to you with a sign from your Lord. And peace will be upon he who follows the guidance.
“எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது” (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது'' (என்பதை தெரிவியுங்கள்).
IFT
வஹி மூலம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அளிக்கும் வேதனை திண்ணமாக இருக்கிறது பொய்யென்று தூற்றுபவர்க்கும், புறக்கணிப்பவர்க்கும்.”
கால ரBப்Bபுனல் லதீ அஃதா குல்ல ஷய்'இன் கல்கஹூ தும்ம ஹதா
முஹம்மது ஜான்
“ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு மூஸா ‘‘எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவற்றை பயன்படுத்தும்) வழியையும் (அவற்றுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்'' என்றார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய படைப்பமைப்பைக் கொடுத்து பின்னர் அதற்கு வழிகாட்டியவன் யாரோ அவன்தான் எங்கள் இறைவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை கொடுத்து பின்னர் வழியையும் காட்டியிருக்கிறானோ அவன்தான் எங்கள் இரட்சகன்” என்று அவர் கூறினார்.
Saheeh International
He said, "Our Lord is He who gave each thing its form and then guided [it]."
கால 'இல்முஹா 'இன்த ரBபீ Fபீ கிதாBப், லா யளில்லு ரBப்Bபீ வலா யன்ஸா
முஹம்மது ஜான்
“இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் கூறினார்: ‘‘அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடம் உள்ள பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் (அவர்கள் செய்து வந்ததில் எதையும்) தவறவிடவும் மாட்டான்; மறந்து விடவும் மாட்டான்.
IFT
மூஸா கூறினார்: “அதைப் பற்றிய விவரம் என் இறைவனிடம் ஒரு பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது. என்னுடைய இறைவன் தவறிழைப்பதுமில்லை. மறப்பதுமில்லை;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர், “அது பற்றிய அறிவு என் இரட்சகனிடம் (இருக்கும் பதிவுப்) புத்தகத்தில் இருக்கின்றது, என் இரட்சகன் (அதில் யாதொன்றைத்) தவறிழைத்து (விட்டு)விடவுமாட்டான், மறந்துவிடவும்மாட்டான்” என்று கூறினார்.
Saheeh International
[Moses] said, "The knowledge thereof is with my Lord in a record. My Lord neither errs nor forgets."
“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (பயணத்திற்கான) வழிகளையும் அதில் உங்களுக்கு ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்.'' (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) ‘‘நாம் இறக்கிவைக்கும் (ஒரே வித) மழை நீரைக்கொண்டு (குணத்திலும், ரசனையிலும் மாறுபட்ட) பல விதமான புற்பூண்டுகளில் (ஆண், பெண்) ஜோடிகளை வெளிப்படுத்துகிறோம்.
IFT
அவன்தான் உங்களுக்காக பூமியை விரிப்பாக அமைத்து, அதில் நீங்கள் நடப்பதற்கான வழிகளை ஏற்படுத்தினான். மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச்செய்து அதன் மூலம் பல்வேறு வகையான தாவரங்களை வெளிப்படுத்தினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(என்னுடைய இரட்சகன்) எத்தகையவனென்றால், அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாக அமைத்து, அதில் உங்களுக்காக பாதைகளையும் ஏற்படுத்தினான், மேலும், வானத்திலிருந்து (மழை) நீரை இறக்கினான், இதைக்கொண்டு நாம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகைகளை வெளிப்படுத்தி விட்டோம்” (என்று தன் இரட்சகனின் தகுதி பற்றி மூஸா கூறினார்).
Saheeh International
[It is He] who has made for you the earth as a bed [spread out] and inserted therein for you roadways and sent down from the sky, rain and produced thereby categories of various plants.
“(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.”
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, அவற்றை நீங்களும்) புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளை(யும்) மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
உண்ணுங்கள்; உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள். திண்ணமாக, இதில் அறிவுடையோர்க்கு நிறையச் சான்றுகள் உள்ளன.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(அவற்றை) நீங்களும் உண்ணுங்கள், உங்கள் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் மேயவிடுங்கள், அறிவுடையோருக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
Eat [therefrom] and pasture your livestock. Indeed in that are signs for those of intelligence.
இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
அப்துல் ஹமீது பாகவி
பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்து விடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.'' (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்.)
IFT
இதே பூமியிலிருந்துதான் நாம் உங்களைப் படைத்தோம். இதிலேயே நாம் உங்களைத் திருப்பிச் சேர்த்து விடுவோம். மேலும், இதிலிருந்தே உங்களை நாம் மறு தடவையும் வெளிக்கொணர்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பூமியாகிய) அதிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம், பின்னர், அதிலேயே நாம் உங்களை மீளவைப்போம், மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே நாம் உங்களை வெளிப்படுத்துவோம்” (என்று அவனுக்குக் கூறும்படிச் செய்தோம்).
Saheeh International
From it [i.e., the earth] We created you, and into it We will return you, and from it We will extract you another time.
وَلَـقَدْ اَرَيْنٰهُதிட்டமாக அவனுக்கு நாம் காண்பித்தோம்اٰيٰتِنَاநமது அத்தாட்சிகள்كُلَّهَاஅனைத்தும்فَكَذَّبَஎனினும் அவன் பொய்ப்பித்தான்وَاَبٰىஇன்னும் ஏற்க மறுத்தான்
வ லகத் அரய்னாஹு ஆயாதினா குல்லஹா Fபகத் தBப வ அBபா
முஹம்மது ஜான்
நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம்; ஆனால் அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
நம் அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை அனைத்தும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ளாது) விலகிக்கொண்டான்.
IFT
நாம் ஃபிர்அவ்னுக்கு நம் சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். ஆயினும், அவன் அவற்றைப் பொய்யென்று தூற்றிக்கொண்டே இருந்தான்; ஏற்க மறுத்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நம்முடைய அத்தாட்சிகளை-அவை யாவையும் நாம் அவனுக்குக் காண்பித்தோம், ஆனால் அவனோ (அவை யாவற்றையும்) பொய்ப்படுத்தி விட்டான், மேலும், (விசுவாசிக்காது) விலகிக் கொண்டான்.
Saheeh International
And We certainly showed him [i.e., Pharaoh] Our signs - all of them - but he denied and refused.
Fபலனாதியன்னக Bபிஸிஹ்ரிம் மித்லிஹீ Fபஜ்'அல் Bபய்னனா வ Bபய்னக மவ்'இதல் லா னுக்லிFபுஹூ னஹ்னு வ லா அன்த மகானன் ஸுவா
முஹம்மது ஜான்
“அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப் பாட்டை (எல்லோரும் வந்து காணக் கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்).
அப்துல் ஹமீது பாகவி
இதைப்போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குச் செய்து காண்பிப்போம். நாங்களோ அல்லது நீரோ தவறிவிடாதவாறு ஒரு சமமான பூமியில் (செய்து காண்பிக்க) எங்களுக்கும் உமக்குமிடையில் ஒரு தவணையைக் குறிப்பிடுவீராக!'' என்று கூறினான்.
IFT
நாமும் அதே போன்ற சூனியத்தை உனக்கு எதிராகக் கொண்டு வருவோம். எப்போது எங்கே போட்டி போடலாம் என்று முடிவு செய்துகொள்! அதிலிருந்து நாங்களும் பின்வாங்க மாட்டோம். நீயும் பின் வாங்கக் கூடாது. ஒரு திறந்தவெளியில் நேரில் வா!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறாயின் இதைப்போன்ற சூனியத்தை (எதிராக)க் கொண்டு நிச்சயமாக நாங்களும் உம்மிடம் வருவோம், ஆகவே, நாங்களோ அல்லது நீரோ, மாறுபடாது இருக்கக்கூடியவாறு மையமான இடத்தில் நமக்கும், உமக்குமிடையே ஒரு தவணையை(க்குறிப்பிட்டு) ஆக்குவீராக! என்று கூறினான்.
Saheeh International
Then we will surely bring you magic like it, so make between us and you an appointment, which we will not fail to keep and neither will you, in a place assigned."
அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான) சூழ்ச்சிக்காரர்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீண்டும் வந்தான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தனது எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு, (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான்.
IFT
ஃபிர்அவ்ன் திரும்பி வந்து தன்னுடைய (மந்திரச்) சூழ்ச்சிகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு (போட்டிக்கு) வந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், ஃபிர்அவன் (அங்கிருந்து) திரும்பிச்சென்று, (சூனியத்திற்குரிய) தன்னுடைய (சகல) சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்னர் (குறித்த இடத்திற்கு) வந்தான்.
Saheeh International
So Pharaoh went away, put together his plan, and then came [to Moses].
கால லஹும் மூஸா வய்லகும் லா தFப்தரூ 'அலல் லாஹி கதிBபன் Fப யுஸ் ஹிதகும் Bபி 'அதாBப், வ கத் காBப மனிFப் தரா
முஹம்மது ஜான்
(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) ‘‘உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை செய்து கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) அவன் (தன்) வேதனையைக்கொண்டு உங்களை அழித்துவிடுவான். பொய் சொன்னவர்களெல்லாம் அழிந்தே போனார்கள்'' என்று கூறினார்.
IFT
மூஸா (உரிய நேரத்தில் எதிர்த்தரப்பினரை நோக்கி) கூறினார்: “துர்ப்பாக்கியவான்களே! அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்காதீர்கள். அவ்வாறு செய்வீர்களாயின் ஒரு கடுமையான வேதனையின் மூலம் உங்களை அவன் அழித்து நாசமாக்கிவிடுவான். பொய்யை எவர்கள் புனைந்துரைத்தார்களோ அவர்கள் நிச்சயம் தோல்வியைத்தான் அடைந்தார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூஸா, அ(ங்கு கூடியிருந்த)வர்களிடம், “உங்களுக்குக் கேடுதான், அல்லாஹ்வின்மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் (தன்)வேதனையைக் கொண்டு உங்களை அழித்து விடுவான், இன்னும், எவன் (பொய்யை) இட்டுக்கட்டுகிறானோ திட்டமாக அவன் நஷ்டப்பட்டுவிட்டான்” என்று கூறினார்.
Saheeh International
Moses said to them [i.e., the magicians summoned by Pharaoh], "Woe to you! Do not invent a lie against Allah or He will exterminate you with a punishment; and he has failed who invents [such falsehood]."
காலூ இன் ஹாதானி லஸாஹிரானி யுரீதானி அய் யுக்ரிஜாகும் மின் அர்ளிகும் Bபிஸிஹ்ரிஹிமா வ யத்ஹBபா Bபிதரீகதிகுமுல் முத்லா
முஹம்மது ஜான்
(சூனியக்காரர்கள் மக்களை நோக்கி:) “நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (மக்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்கள் சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றி விடவும், உங்கள் மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள்.
IFT
இறுதியில், சிலர் கூறினர்: “இவர்கள் இருவரும் சூனியக்காரர்களே ஆவர். தம் சூனிய வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்றும் உங்களின் முன்மாதிரியான வாழ்க்கை முறையை ஒழித்துவிட வேண்டும் என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள், “நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்களுடைய சூனியத்தினால் உங்களை, உங்களுடைய பூமியை விட்டும் உங்களை வெளியேற்றி விடவும், உங்களுடைய மேலான (மார்க்கப்)பாதையை இருவரும் போக்கிவிடவும் இவ்விருவரும் நாடுகிறார்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Indeed, these are two magicians who want to drive you out of your land with their magic and do away with your most exemplary way [i.e., religion or tradition].
“ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள்; இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர்தாம் வெற்றியடைவார்” (என்றுங் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய காரியம் மேலோங்கியதோ அவரே நிச்சயமாக வெற்றி பெறுவார்'' என்று கூறினார்கள்.
IFT
எனவே (இன்று) உங்களின் அனைத்து சூழ்ச்சிகளையும் ஒன்றுதிரட்டி ஒருசேர (களத்திற்கு) வாருங்கள். இன்று எவருடைய கை மேலோங்குகிறதோ அவர்தான் வெற்றியடைந்தவராவார் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.)”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆதலால் உங்கள் சூழ்ச்சித் திட்டத்தில் நீங்கள் உறுதிகொண்டு அதன் பின்னர் அணியாக வாருங்கள், (இன்றையத்தினம்) மற்றவரை மிகைத்துவிட்டவர் திட்டமாக வெற்றி பெறுவார்” என்று கூறினார்கள்.
Saheeh International
So resolve upon your plan and then come [forward] in line. And he has succeeded today who overcomes."
கால Bபல் அல்கூ Fப இதா ஹிBபாலுஹும் வ 'இஸிய்யுஹும் யுகய்யலு இலய்ஹி மின் ஸிஹ்ரிஹிம் அன்னஹா தஸ்'ஆ
முஹம்மது ஜான்
அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், ‘‘இல்லை! நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்'' என்று கூறினார். (அவர்கள் எறியவே, எறியப்பட்ட) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவதுபோல் இவருக்குத் தோன்றின.
IFT
(அதற்கு மூஸா கூறினார்:) “இல்லை, நீங்களே எறியுங்கள்.” உடனே அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூனிய வலிமையால் ஓடுவதுபோல் மூஸாவிற்குத் தென்படலாயின.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்)கவர் “அவ்வாறன்று, நீங்கள் (முதலில்) போடுங்கள்” என்று கூறினார், (அவர்கள் போடவே, போடப்பட்ட) அந்நேரத்தில் அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும், அவர்களின் சூனியத்தின் காரணமாக, நிச்சயமாகவே அவை (பாம்புகளாக) விரைந்து ஓடுவதுபோல் இவருக்குத் தோன்றியது.
Saheeh International
He said, "Rather, you throw." And suddenly their ropes and staffs seemed to him from their magic that they were moving [like snakes].
“இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் உமது வலது கையில் இருப்பதை நீர் எறிவீராக! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே (தவிர உண்மையல்ல). சூனியக்காரன் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டான்'' (என்றும் கூறினோம்).
IFT
உம்முடைய கையில் உள்ளதை எறியும்! அவர்கள் உருவாக்கியவை அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் போலியாக உருவாக்கிக் கொண்டு வந்திருப்பவை சூனியக்காரர்களின் சூழ்ச்சியே ஆகும். சூனியக்காரன் ஒருபோதும் வெற்றியடைவதில்லை. அவன் எத்தனை ஆரவாரத்தோடு வந்தாலும் சரியே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “உமது வலக்கையில் இருப்பதை நீர் போடுவீராக, அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும், அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரரின் சூழ்ச்சியே ஆகும், சூனியக்காரன் எங்கு வந்தபோதிலும் வெற்றி பெறமாட்டான்? “ (என்றும் கூறினோம்).
Saheeh International
And throw what is in your right hand; it will swallow up what they have crafted. What they have crafted is but the trick of a magician, and the magician will not succeed wherever he is."
(மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு ‘‘மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.
IFT
இறுதியில் சூனியக்காரர்கள் அனைவரும் ஸஜ்தாவிற்குத் தள்ளப்பட்டார்கள். மேலும், “நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை ஏற்றுக் கொண்டோம்” என்று உரக்கக் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மூஸா மேலோங்கிய பொழுது) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (ஸஜ்தாவில்) வீழ்த்தப்பட்டு, நாங்கள் ஹாரூன், மூஸா ஆகிய இவ்விருவருடைய இரட்சகனை(க் கொண்டு) விசுவாசித்து விட்டோம்”, என்று கூறினார்கள்.
Saheeh International
So the magicians fell down in prostration. They said, "We have believed in the Lord of Aaron and Moses."
“நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கண்ட ஃபிர்அவ்ன்) ‘‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கைகொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்கள் தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களை மாறுகை, மாறுகால் வெட்டிப் பேரீச்ச மரத்தின் கிளைகளில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையான வரும் நிலையானவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்'' என்று கூறினான்.
IFT
அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர்தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் குரு என்பது தெரிந்துவிட்டது. இப்பொழுது நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்துவிடுவேன்; மேலும் பேரீச்ச மரத்தின் கம்பங்களில் உங்களை அறைந்து கொல்லப்போகின்றேன். அப்போது, எங்களில் யாருடைய வேதனை மிகக்கடுமையானது; நீடித்து நிற்கக்கூடியது (அதாவது, என்னால் உங்களுக்கு அதிக தண்டனை கொடுக்க முடியுமா? அல்லது மூஸாவினாலா) என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதனைக் கண்ட ஃபிர் அவ்ன்) “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவருக்கு நீங்கள் விசுவாசங்கொண்டு விட்டீர்கள், உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தாரே அத்தகைய உங்களின் பெரியவர் நிச்சயமாக அவர்தான், ஆகவே, நிச்சயமாக நான் உங்களது கைகளையும், உங்களது கால்களையும், மாறாக (ஒரு பக்கத்துக் காலையும் மறு பக்கத்துக் கையையும்) துண்டிப்பேன், இன்னும் பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களில் உங்களை நிச்சயமாக நான் கழுவேற்றுவேன், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவரும், (அவ்வேதனையில்) மிக நிலையானவரும் நம்மில் யார் என நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "You believed him [i.e., Moses] before I gave you permission. Indeed, he is your leader who has taught you magic. So I will surely cut off your hands and your feet on opposite sides, and I will crucify you on the trunks of palm trees, and you will surely know which of us is more severe in [giving] punishment and more enduring."
(மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்.
IFT
அதற்கு சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரே வந்த பின்னரும் நாங்கள் (சத்தியத்தை விட) உனக்கு ஒருபோதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்துகொள். (அதிகபட்சம்) இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கவர்கள் ஃபிர் அவ்னிடம்) “எங்களுக்கு வந்துவிட்ட தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தானே அவனைவிடவும், உன்னை நாங்கள் (பெரிதாகக் கருதி) தேர்வு செய்யமாட்டோம், ஆகவே எதை நீ தீர்ப்புக் கூற இருக்கிறாயோ (அதை) நீ தீர்ப்புக் கூறிவிடு, நீ தீர்ப்புக் கூறுவதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்” என்று கூறினர்.
Saheeh International
They said, "Never will we prefer you over what has come to us of clear proofs and [over] He who created us. So decree whatever you are to decree. You can only decree for this worldly life.
“எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தியதினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும், அல்லாஹ் தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்கள் குற்றங்களையும் உன் நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலையானவனும் ஆவான்'' என்று கூறினார்கள்.
IFT
திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன்மீது நம்பிக்கை கொண்டுவிட்டோம், எங்களின் குற்றங்களையும் எந்த சூனியத்தைக் கையாளுமாறு எங்களை நீ நிர்பந்தித்தாயோ அந்த சூனியச் செயலையும் அவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக! அல்லாஹ்தான் சிறந்தவனும் நிலைத்திருப்பவனுமாவான்”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நாங்கள், (மெய்யான) எங்கள் இரட்சகனையே விசுவாசித்திருந்தோம், எங்களுடைய குற்றங்களையும், உன்னுடைய நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்துவிடுவான், அல்லாஹ் மிக்க மேலானவனும், நிலைத்திருப்பவனும் ஆவான்” என்று கூறினார்கள்.
Saheeh International
Indeed, we have believed in our Lord that He may forgive us our sins and what you compelled us [to do] of magic. And Allah is better and more enduring."
நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது; அதில் அவன் மரணிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் (கூலியாகும்). அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக்கொண்டு வாழவும் சாகவும் வழியில்லாமல் தவிப்பான்.)
IFT
எவன் குற்றம் புரிந்தவனாய் தன் இறைவனிடம் வருவானோ அவனுக்குத் திண்ணமாக நரகம் உண்டு. அதில் அவன் வாழவும் மாட்டான். சாகவும் மாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக எவன் தன் இரட்சகனிடம் குற்றவாளியாக வருகின்றானோ, அவனுக்கு நிச்சயமாக நரகம் இருக்கிறது, அதில் அவன் சாகவும் மாட்டான், (சுகத்துடன்) வாழவும் மாட்டான், (வேதனையை அனுபவித்துக் கொண்டேயிருப்பான்).
Saheeh International
Indeed, whoever comes to his Lord as a criminal - indeed, for him is Hell; he will neither die therein nor live.
ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகிறாரோ அவர்களுக்கு மேலான பதவிகள் இருக்கின்றன.
IFT
மேலும், எவர்கள் நம்பிக்கையாளராய் நற்செயல்கள் புரிந்த வண்ணம் அவன் திருமுன் வருகின்றார்களோ அத்தகைய அனைவருக்கும் உயர்பதவிகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எவர் விசுவாசங்கொண்டவராக, திட்டமாக நற்கருமங்களைச் செய்த நிலையில் (அல்லாஹ்வாகிய) அவனிடத்தில் வருகின்றாரோ – அத்தகையோர்களுக்கு உயர் பதவிகள் இருக்கின்றன.
Saheeh International
But whoever comes to Him as a believer having done righteous deeds - for those will be the highest degrees [in position]:
(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர்; இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(மறுமையிலோ அவர்களுக்கு) ‘அத்ன்' என்ற நிலையான சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும்.
IFT
நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள். நற்கூலியாகும் இது, தூய வாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அத்தகையோருக்கு) நிலையான சொர்க்கங்கள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள், மேலும், அது பரிசுத்தமானவருடைய கூலியாகும்.
Saheeh International
Gardens of perpetual residence beneath which rivers flow, wherein they abide eternally. And that is the reward of one who purifies himself.
இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். ‘நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுவீராக. (வழியில் குறுக்கிடும்) கடலில் (உமது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துவீராக. (உம்மை எதிரிகள்) அடைந்து விடுவார்கள் என்று நீர் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உமது மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீர் அஞ்சாதீர்'' (என்றும் அறிவித்தோம்).
IFT
நாம் மூஸாவிற்கு வஹி அனுப்பினோம்: “நீர் இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துக் கொண்டு செல்வீராக! மேலும், கடலில் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின் தொடர்வார்களோ என சற்றும் நீர் அஞ்சத் தேவையில்லை: (கடலைக் கடந்து செல்லும் போது) உமக்கு பயமும் ஏற்பட வேண்டியதில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு “நீர் என்னுடைய அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவில் சென்றுவிடுவீராக! (வழியில்) கடலில் (உமது தடியால்) அடித்து உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துவீராக! (உம்மை ஃபிர் அவ்ன்) அடைத்து விடுவானென்று நீர் பயப்படவேண்டாம், (கடலில் மூழ்கிவிடுவோம் என) நீர் அஞ்சவும் வேண்டாம் என்றும் அறிவித்தோம்.
Saheeh International
And We had inspired to Moses, "Travel by night with My servants and strike for them a dry path through the sea; you will not fear being overtaken [by Pharaoh] nor be afraid [of drowning]."
“இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் “மன்னு ஸல்வாவை” (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி ‘தூர்' என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு ‘மன்னு சல்வா'வையும் இறக்கிவைத்தோம்.
IFT
இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! “நாம் உங்கள் பகைவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். மேலும், ‘தூர்’ மலையின் வலப் பக்கத்தில் நீங்கள் வருவதற்கென நேரம் நிர்ணயித்தோம். ‘மன்னு’ மற்றும் ‘ஸல்வா’வை* உங்களுக்கு இறக்கி அருளினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நாம் உங்களை, உங்களுடைய பகைவனிடமிருந்து ஈடேற்றிக் கொண்டோம், (ஸினாய் மலையான) ‘தூரின்’ வலப்பாகத்தை உங்களுக்கு நாம் வாக்களித்தோம், உணவாக உங்களுக்கு ‘மன்னு ஸல்வா’வையும் இறக்கி வைத்தோம்.
Saheeh International
O Children of Israel, We delivered you from your enemy, and We made an appointment with you at the right side of the mount, and We sent down to you manna and quails,
“நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான்.
IFT
புசியுங்கள் நாம் உங்களுக்கு வழங்கியுள்ள தூய்மையான உண் பொருள்களை! அவற்றைப் புசித்துவிட்டு வரம்பு மீறிச் செயல்படாதீர்கள். அப்படிச் செய்தால் எனது கோபம் உங்கள் மீது இறங்கும்! எவன்மீது எனது கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக வீழ்ச்சி அடைந்தே தீருவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், அதில் நீங்கள் வரம்பு மீறியும் விடாதீர்கள், (மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும், எவரின் மீது என்னுடைய கோபம் இறங்குகிறதோ அவர், நிச்சயமாக (ஹாவியா எனும் நரகத்தில்) வீழ்ந்து விட்டார்.
Saheeh International
[Saying], "Eat from the good things with which We have provided you and do not transgress [or oppress others] therein, lest My anger should descend upon you. And he upon whom My anger descends has certainly fallen [i.e., perished]."
“எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்” (என்று கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
எவர் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து நேரான வழியில் நிலைத்திருக்கிறாரோ அவரை நிச்சயமாக நான் மிக மன்னிப்பவன் ஆவேன்.
IFT
ஆயினும், எவன் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பிறகு நேர்மையாகவும் வாழ்கின்றானோ, அவனைத் திண்ணமாக, நான் பெரிதும் மன்னிக்கக்கூடியவனாய் இருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும், எவர் பச்சாதாபப்பட்டு (பாவத்திலிருந்து தவ்பாச்செய்து), விசுவாசமும் கொண்டு நற்கருமங்களையும் செய்து அதன் பின்னர் நேர் வழியில் நிலைத்திருக்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நான் மிக மன்னிக்கிறவன்.
Saheeh International
But indeed, I am the Perpetual Forgiver of whoever repents and believes and does righteousness and then continues in guidance.
“மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)
அப்துல் ஹமீது பாகவி
(மூஸா தூர் ஸீனாய் மலைக்கு விரைந்து வந்த சமயத்தில், அவரிடம்) ‘‘மூஸாவே! நீர் உமது மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்?'' (என்று இறைவன் கேட்டான்).
IFT
மேலும், “மூஸாவே! உம்மை உமது சமூகத்தாரை விட முதலில் வரச்செய்தது எது?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அவரிடம்) மூஸாவே நீர் உம்முடைய சமூகத்தாரைவிட்டு (விட்டு நீர் மட்டும் வர) உம்மை அவசரப்படுத்தியது எது? (என்று அல்லாஹ்வாகிய அவன் கூறினான்.
Saheeh International
[Allah said], "And what made you hasten from your people, O Moses?"
கால ஹும் உலா'இ 'அலா அதரீ வ 'அஜில்து இலய்க ரBப்Bபி லிதர்ளா
முஹம்மது ஜான்
(அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! நீ திருப்திபடுவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்'' என்று கூறினார்.
IFT
அதற்கு அவர் கூறினார்: “இதோ! அவர்கள் எனக்குப் பின்னால் வந்து கொண்டே இருக்கிறார்கள். என் இறைவனே! நான் அவசரமாக உன் திருச்சமூகம் வந்து விட்டிருப்பது நீ என்மீது திருப்திகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “அவர்கள் என் அடிச்சுவட்டின் மீது வருகின்றனர், என் இரட்சகனே! நீ (என் மீது) திருப்திப்படுவதற்காக துரிதமாக உன்னிடம் (முன்னதாகவே) வந்துவிட்டேன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "They are close upon my tracks, and I hastened to You, my Lord, that You be pleased."
“நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இறைவன்) ‘‘நீர் வந்த பின்னர் நாம் உமது மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். ‘ஸாமிரீ' (என்பவன்) அவர்களை வழிகெடுத்து விட்டான்'' என்று கூறினான்.
IFT
அவன் (இறைவன்) கூறினான்: “கேளும்! நீர் வந்த பிறகு நாம் உம்முடைய சமுதாயத்தினரைத் திண்ணமாக சோதனைக்குள்ளாக்கியிருக்கிறோம். அவர்களை ஸாமிரி வழிகெடுத்துவிட்டான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு, “நீர் வந்த பின்னர் நிச்சயமாக நாம் உம்முடைய சமூகத்தாரை ஒரு சோதனைக்குள்ளாக்கினோம், சாமிரீ என்பவன் அவர்களை வழி கெடுத்துவிட்டான்” என்று (அவர் ஸினாய் மலைக்கு வந்த சமயம் அல்லாஹ்வாகிய அவன்) கூறினான்.
Saheeh International
[Allah] said, "But indeed, We have tried your people after you [departed], and the Samirī has led them astray."
ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).
அப்துல் ஹமீது பாகவி
(உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன் மக்களிடம் திரும்பி வந்து ‘‘என் மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்கவில்லையா? அவன் வாக்குறுதி அளித்து உங்களுக்கு அதிக நாட்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?'' என்று கேட்டார்.
IFT
மூஸா கடுஞ்சினத்துடனும், மனவேதனையுடனும் தம் சமூகத்தாரிடம் திரும்பிவந்து கூறினார்: “என் சமூகத்தாரே! உங்கள் இறைவன் உங்களிடம் அழகிய வாக்குறுதி அளிக்கவில்லையா? அவ்வாறு வாக்குறுதி அளித்து நீண்டகாலம் ஓடிவிட்டதா என்ன? அல்லது உங்கள் இறைவனின் சினம் உங்கள் மீது இறங்க வேண்டும் என்று கருதி என்னிடம் வாக்குறுதிக்கு மாற்றமாய் நடந்து கொண்டீர்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உடனே) மூஸா கோபங்கொண்டவராக-பெரும் வருத்தம் நிறைந்தவராகத் தன்னுடைய சமூகத்தாரிடம் திரும்பி வந்து “என்னுடைய சமூகத்தார்களே! உங்கள் இரட்சகன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அவன் வாக்களிக்கவில்லையா? எனவே அவ்வாக்குறுதி(யின் காலம்) உங்களுக்கு நீண்டுவிட்டதா? அல்லது உங்கள்மீது, உங்கள் இரட்சகனின் கோபம் இறங்கவேண்டுமென்று நீங்கள் விரும்பியே எனக்கு நீங்கள் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா? என்று அவர் கேட்டார்.
Saheeh International
So Moses returned to his people, angry and grieved. He said, "O my people, did your Lord not make you a good promise? Then, was the time [of its fulfillment] too long for you, or did you wish that wrath from your Lord descend upon you, so you broke your promise [of obedience] to me?"
“உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘நாங்கள் உமக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறுசெய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவற்றை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான்.
IFT
அதற்கு அவர்கள் கூறினர்: “நாங்கள் எங்களின் சுய நாட்டப்படி உம்மிடம் வாக்குறுதிக்கு மாற்றமாய் நடந்து கொள்ளவில்லை; நடந்தது என்னவெனில், மக்களுடைய நகைகளின் பெருஞ்சுமை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அவற்றை எறிந்து விட்டோம். பிறகு இதே போன்று ஸாமிரியும் கொஞ்சம் எறிந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் நாங்கள் உமக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தி கொண்டு (சுயமாக) மாறு செய்யவில்லை, என்றாலும், நாங்கள் (ஃபிர் அவ்னுடைய) சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங்களிலிருந்து கனமான சுமைகளைச் சுமத்தப்பட்டோம், ஆகவே, அவற்றை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம், அவ்வாறே சாமிரீயும் (தன்னிடமிருந்தவற்றை) எறிந்தான்.
Saheeh International
They said, "We did not break our promise to you by our will, but we were made to carry burdens from the ornaments of the people [of Pharaoh], so we threw them [into the fire], and thus did the Samirī throw."
பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். ஆனால் அவர் (இதை) மறந்து (விட்டு மலைக்குச் சென்று)விட்டார்'' என்று கூறினார்கள்.
IFT
மேலும், அவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றின் உருவச் சிலையைச் செய்து கொடுத்தான். அதிலிருந்து காளை மாட்டின் குரலைப் போன்று ஓசை வெளியாகிக்கொண்டிருந்தது. உடனே, மக்கள் உரக்கக் கூறினார்கள்: “உங்கள் இறைவனும் மூஸாவின் இறைவனும் இதுதான். ஆனால் மூஸா இதனை மறந்து விட்டார்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னர், அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை-(உருவாக்கி) உடலாக வெளியாக்கினான், அதற்கு (அர்த்தமற்ற) சப்தமுமிருந்தது, (இதைக்கேட்ட) சிலர் (இதுதான் உங்களுடைய வணக்கத்திற்குரிய) இரட்சகனும், மூஸாவினுடைய (வணக்கத்திற்குரிய) இரட்சகனுமாகும், (இதனை) அவர் (மூஸா) மறந்து (மலைக்குச் சென்று) விட்டார்” என்று கூறினார்கள்.
Saheeh International
And he extracted for them [the statue of] a calf which had a lowing sound, and they said, "This is your god and the god of Moses, but he forgot."
அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை ஒரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (எதையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா?
IFT
‘அது, அவர்களின் கூற்றுக்கு மறுமொழி அளிக்காது என்பதையும், அவர்களுக்கு இலாபமோ, நட்டமோ அளிக்கும் யாதொரு ஆற்றலையும் அது பெற்றிருக்கவில்லை என்பதையும் இவர்கள் பார்க்கவில்லையா?’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக-அவர்களுடைய எந்தப்பேச்சுக்கும் அவர்களின்பால் அ(க்காளை மாடான)து (பதில் கூற) திரும்பாமல் இருப்பதையும், அவர்களுக்கு தீமையோ, நன்மையோ செய்யச் சக்தி பெறாமல் இருப்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?
Saheeh International
Did they not see that it could not return to them any speech [i.e., response] and that it did not possess for them any harm or benefit?
வ லகத் கால லஹும் ஹாரூனு மின் கBப்லு யா கவ்மி இன்னமா Fபுதின்தும் Bபிஹீ வ இன்ன ரBப்Bபகுமுர் ரஹ்மானு Fபத்தBபி'ஊனீ வ அதீ'ஊ அம்ரீ
முஹம்மது ஜான்
இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி ‘‘என் மக்களே! (இச்சிலையை வணங்கி) இதன் மூலம் நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலை அல்ல!) என்னைப் பின்பற்றுங்கள்; என் கட்டளைக்கு கட்டுப்படுங்கள்'' என்று கூறினார்.
IFT
(மூஸா வருவதற்கு) முன்னரே அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்: “என் சமூகத்தினரே! இக்காளைக் கன்றின் காரணமாக நீங்கள் குழப்பத்தில் வீழ்ந்துவிட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக ரஹ்மான் கருணை மிக்க இறைவன்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் சொல்வதை நம்புங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (இதற்கு) முன்னதாகவே ஹாரூன் அவர்களிடம், “என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் சோதனைக்குள்ளாக்கப் பட்டதெல்லாம் இதைக் கொண்டுதான், நிச்சயமாக உங்கள் இரட்சகன் அர்ரஹ்மான்தான் (இதுவல்ல) ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள், என்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள் என திட்டமாகக் கூறியிருந்தார்.
Saheeh International
And Aaron had already told them before [the return of Moses], "O my people, you are only being tested by it, and indeed, your Lord is the Most Merciful, so follow me and obey my order."
(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(மூஸா அவர்களிடம் வந்தபின், ஹாரூனை நோக்கி) ‘‘ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் (என்னை நீர் பின்பற்றி நடக்க) உம்மைத் தடை செய்தது எது?
IFT
மூஸா (தம் சமூகத்தினரைக் கண்டித்துவிட்டு ஹாரூனை நோக்கி) “ஹாரூனே! அவர்கள் வழிதவறிச் சென்று கொண்டிருந்ததை நீர் பார்த்தபோது, என் வழிமுறைப்படி செயல் படுவதிலிருந்து உம்மைத் தடுத்தது எது?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மூஸா, ஹாரூனிடம்) “ஹாரூனே! இவர்கள் வழிகெட்டு விட்டார்கள் என்பதை நீர் கண்டபோது (அதை மறுக்காமலிருக்க) எது உம்மைத் தடுத்தது? எனக் கேட்டார்.
Saheeh International
[Moses] said, "O Aaron, what prevented you, when you saw them going astray,
اَلَّا تَتَّبِعَنِؕநீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமாاَفَعَصَيْتَமாறு செய்துவிட்டீராاَمْرِىْஎனது கட்டளைக்கு
அல்லா தத்தBபி'அனி அFப'அஸய்த அம்ரீ
முஹம்மது ஜான்
“நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”
அப்துல் ஹமீது பாகவி
நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீர் என் கட்டளைக்குமாறு செய்ய கருதினீரா?'' (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்.)
IFT
நீர் என் கட்டளைக்கு ஏன் மாறு செய்துவிட்டீர்?” என்று கேட்டார்.
(இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘என் தாய் மகனே! என் தலையையும் என் தாடியையும் பிடி(த்திழு)க்காதீர். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீ பிரிவினையை ஏற்படுத்தி விட்டாய். என் வார்த்தைகளை நீ கவனிக்கவில்லை என்று என்னை நீர் கடுகடுப்பீர் என நிச்சயமாக நான் பயந்(துதான் அவர்களுடன் இருந்)தேன்'' எனக் கூறினார்.
IFT
அதற்கு ஹாரூன் பதிலளித்தார்: “என் தாயின் மகனே! என் தாடியைப் பிடிக்காதீர்; என் தலைமுடியை இழுக்காதீர்; ‘இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடையே நீ பிரிவினை ஏற்படுத்திவிட்டாய்; மேலும், என்னுடைய சொல்லுக்காக காத்திருக்கவும் இல்லை’ என்று நீர் கூறிவிடுவீரோ என நான் அஞ்சினேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “என் தாயின் மகனே! என்னுடைய தாடியையும், என்னுடைய தலையையும் பிடி(த்திழு)க்காதீர், இஸ்ராயீலின் மக்களுக்கிடையில், நீர் பிரிவினையை உண்டுபண்ணிவிட்டீர், என்னுடைய வார்த்தைக்காக நீர் காத்திருக்கவில்லை என்று நீர் கூறுவீர் என்பதை நிச்சயமாக நான் பயந்தேன்” என்று கூறினார்.
Saheeh International
[Aaron] said, "O son of my mother, do not seize [me] by my beard or by my head. Indeed, I feared that you would say, 'You caused division among the Children of Israel, and you did not observe [or await] my word.'"
قَالَஅவன் கூறினான்بَصُرْتُநான் பார்த்தேன்بِمَا لَمْ يَـبْصُرُوْاஎதை/அவர்கள் பார்க்கவில்லைبِهٖஅதைفَقَبَـضْتُஆகவே, எடுத்தேன்قَبْضَةًஒரு பிடிمِّنْ اَثَرِகாலடி சுவடிலிருந்துالرَّسُوْلِதூதரின்فَنَبَذْتُهَاஇன்னும் அதை எறிந்தேன்وَكَذٰلِكَஇப்படித்தான்سَوَّلَتْஅலங்கரித்ததுلِىْஎனக்குنَفْسِىஎன் மனம்
கால Bபஸுர்து Bபிமா லம் யBப்ஸுரூ Bபிஹீ FபகBபள்து கBப்ளதம் மின் அதரிர் ரஸூலி FபனBபத்துஹா வ கதாலிக ஸவ்வலத் லீ னFப்ஸீ
முஹம்மது ஜான்
“அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன். (வானவத்) தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது.) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது'' என்று கூறினான்.
IFT
அதற்கு அவன், “இவர்களுக்குத் தென்படாத ஒன்றை நான் கண்டேன்; தூதரின் காலடியிலிருந்து நான் ஒரு பிடி மண்ணை எடுத்து அதனை எறிந்தேன்; இவ்வாறு செய்யும்படியே என் மனம் என்னைத் தூண்டியது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “அவர்கள் பார்க்காத (வியப்பான) ஒன்றை நான் பார்த்தேன், தூதருடைய (அடிச்) சுவட்டிலிருந்து ஒரு பிடி (மண்) பிடித்து அதில் எறிந்தேன் இவ்வாறு (செய்யுமாறு) என் மனம் என்னைத் தூண்டிற்று” என்று கூறினான்.
Saheeh International
He said, "I saw what they did not see, so I took a handful [of dust] from the track of the messenger and threw it, and thus did my soul entice me."
“நீ இங்கிருந்து போய் விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு; அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு மூஸா (அவனை நோக்கி ‘‘இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) ‘‘என்னைத் தீண்டாதீர்கள்'' என்று கூறித்திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதை உருக்கி(ப் பஸ்பமாக்கி) கடலில் தூற்றி விடுவேன்'' என்றும் கூறினார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “சரி, நீ போய்விடு, வாழ்நாள் முழுவதும் ‘என்னைத் தொடவேண்டாம்’ என்றே நீ கூறிக்கொண்டிருப்பாய். மேலும், உனக்காக விசாரணை நேரம் ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது உன்னைவிட்டு ஒருபோதும் நீங்கிவிடாது. இன்னும் நீ ஆர்வத்துடன் வழிபட்டு வந்த உனது தெய்வத்தைப் பார். இப்போது நாம் அதனை எரித்து விடுவோம். பிறகு, அதனைச் சாம்பலாக்கிக் கடலில் வீசி விடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) மூஸா (“இங்கிருந்து) நீ சென்று விடு, நிச்சயமாக நீ (யாரைப்பார்த்தாலும்) என்னைத் தீண்டாதீர் என்று கூறுவதுதான், இவ்வுலக வாழ்க்கையில் உனக்குரியது, (மறுமையிலோ,) நிச்சயமாக உனக்கு ஒரு தவணையும் உண்டு, அதில் நீ மாற்றம் செய்யப்பட மாட்டாய்,” (அதிலிருந்து நீ தப்பிவிட மாட்டாய்.) மேலும், (வணக்கம் செலுத்துவது கொண்டு) எதன் மீது நீ நிலையானவனாக இருந்தாயோ அத்தகைய உனது (வணக்கத்திற்குரிய) தெய்வத்தைப்பார், நிச்சயமாக நாம் அதனை நெருப்பிலிட்டு எரிப்போம், பின்னர், திண்ணமாகக் கடலில் அதை முற்றிலுமாகத் தூவி விடுவோம்” என்று கூறினார்.
Saheeh International
[Moses] said, "Then go. And indeed, it is [decreed] for you in [this] life to say, 'No contact.' And indeed, you have an appointment [in the Hereafter] you will not fail to keep. And look at your 'god' to which you remained devoted. We will surely burn it and blow it [i.e., its ashes] into the sea with a blast.
“உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறொருவன் இல்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடிய விசாலமான கல்வி ஞானமுடையவன்'' (என்றும் கூறினார்).
IFT
(மக்களே!) உங்கள் இறைவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனுடைய அறிவு அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்கள் (வணக்கத்திற்குரிய) நாயன் அல்லாஹ் (ஒருவன்) தான், அவன் எத்தகையவனென்றால் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு எவரும்) இல்லை, அவன் ஒவ்வொரு பொருளையும் (தன்) அறிவால் விசாலமாக (அறிந்து) வைத்துள்ளான்” (என்றும் மூஸா) கூறினார்.
Saheeh International
Your god is only Allah, except for whom there is no deity. He has encompassed all things in knowledge."
(நபியே!) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக் குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் சென்றுபோனவர்களின் சரித்திரத்தை (மேலும்) நாம் உமக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை(உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உமக்கு அளித்தோம்.
IFT
(நபியே!) இவ்வாறே கடந்தகால நிகழ்ச்சிகளை நாம் உமக்கு எடுத்துச் சொல்கின்றோம். மேலும் நம் சார்பிலிருந்து தனிப்பட்ட ஒரு ஞானத்தை உமக்கு நாம் வழங்கியுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவ்வாறே (உமக்கு) முன்னர் சென்று போனவர்களின் செய்திகளை நாம் உமக்குக் கூறுவோம், நம்மிடமிருந்து (இவ்வேதமாகிய) நல்லுபதேசத்தை நிச்சயமாக நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.
Saheeh International
Thus, [O Muhammad], We relate to you from the news of what has preceded. And We have certainly given you from Us a message [i.e., the Qur’an].
خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்فِيْهِ ؕஅதில்وَسَآءَமிகக் கெட்டதுلَهُمْஅவர்களுக்குيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்حِمْلًاۙசுமையால்
காலிதீன Fபீஹி வ ஸா'அ லஹும் யவ்மல் கியாமதி ஹிம்லா
முஹம்மது ஜான்
அ(ப்படிச் சுமப்ப)வர்கள் அதில் எந்நாளும் (அதைச் சுமந்தவாறே) இருப்பார்கள்; கியாம நாளில் இச்சுமை அவர்களுக்கு மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவன் எந்நாளும் (அதைச் சுமந்து கொண்டே) இருப்பான். மறுமை நாளில் அவர்கள் சுமக்கும் இச்சுமை மிகக் கெட்டது.
IFT
இத்தகையோர் அனைவரும் அந்தத் துன்பத்தில் என்றென்றும் கிடப்பார்கள்; மறுமைநாளில் இந்த(க் குற்றத்திற்குப் பொறுப்பேற்கும்) சுமை அவர்களுக்கு மிகக் கடுமையான சுமையாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ந்நரகத்)தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பவர்கள், மறுமைநாளில் சுமையால் அவர்களுக்கு அது மிகக் கெட்டது.
Saheeh International
[Abiding] eternally therein, and evil it is for them on the Day of Resurrection as a load -
“ஒரு நாளேயன்றி (அதிகமாக) நீங்கள் தங்கவில்லை” என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறுவதையும் நாம் நன்கறிவோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளவன் (என்று கருதப்படுபவன் அவர்களை நோக்கி) ‘‘ஒரு நாளே தவிர நீங்கள் (அதிகம்) தங்கவில்லை'' என்று கூறுவான்.
IFT
அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவ்வேளை அவர்களில் மிகமிகக் கவனமாக மதிப்பிடக்கூடியவர், “ஒரே நாள்தான் நீங்கள் (உலகில்) வாழ்ந்துள்ளீர்கள்” என்று கூறுவார் (என்பதையும் நாம் நன்கறிவோம்)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களில் நிறையறிவுடையவர்கள் (அவர்களிடம்) “ஒரு நாளேயன்றி நீங்கள் தங்கியிருக்கவில்லை” என்று கூறும் சமயத்தில், அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம்.
Saheeh International
We are most knowing of what they say when the best of them in manner [i.e., wisdom or speech] will say, "You remained not but one day."
(நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப்பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி)விடுவான்” என்று நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உம்மிடம் அவர்கள் மலைகளைப் பற்றி (அதன் கதி உலக முடிவின்போது என்னவாகும் என)க் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்கி(ப் பரப்பி) விடுவான்.
IFT
மலைகள் (அன்றைய நாளில் எங்குச் சென்றுவிடும் என்பது) பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறுவீராக: “என் இறைவன் அவற்றைத் தூள்தூளாக்கிப் பறக்க விட்டுவிடுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நபியே!) உம்மிடம் அவர்கள் மலைகளைப் பற்றிக் கேட்கிறார்கள், (அதற்கு) நீர் கூறும், என் இரட்சகன் அவைகளைத் தூள் தூளாக்கிவிடுவான்.
Saheeh International
And they ask you about the mountains, so say, "My Lord will blow them away with a blast.
அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் (அனைவரும் எக்காளத்தின் மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) நீர் கேட்கமாட்டீர்.
IFT
அந்நாளில் மக்கள் அனைவரும் அழைப்பாளரின் அழைப்பைக் கேட்டு நேராக நடந்து வருவார்கள். யாரும் சிறிதளவும் முரண்டு பிடிக்க முடியாது. மேலும், கருணைமிக்க இறைவனின் முன்னிலையில் குரல்களெல்லாம் அடங்கி ஒடுங்கி விடும். இலேசான முணுமுணுப்பைத் தவிர வேறு எதையும் நீர் கேட்கமாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் (ஸூர் ஊதுகின்ற) அழைப்பாளரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எவ்விதக் கோணலும் (மறுப்பும்) இருக்காது; சப்தங்கள் (அனைத்தும்) அர்ரஹ்மானுக்குப் பணிந்து (அடங்கி)விடும்; ஆகவே, (மெதுவான) காலடிச் சப்தத்தைத் தவிர (வேறெதனையும்) நீர் கேட்கமாட்டீர்.
Saheeh International
That Day, they [i.e., everyone] will follow [the call of] the Caller [with] no deviation therefrom, and [all] voices will be stilled before the Most Merciful, so you will not hear except a whisper [of footsteps].
يَوْمَٮِٕذٍஅந்நாளில்لَّا تَنْفَعُபலனளிக்காதுالشَّفَاعَةُபரிந்துரைاِلَّاதவிரمَنْஎவர்اَذِنَஅனுமதித்தான்لَـهُஎவருக்குالرَّحْمٰنُபேரருளாளன்وَرَضِىَஇன்னும் அவன் விரும்பினான்لَـهٗஅவருடையقَوْلًاபேச்சை
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
IFT
அவன், மக்களின் முந்தைய பிந்தைய நிலைமைகள் அனைத்தையும் நன்கறிகின்றான். ஆனால், மற்றவர்களுக்கோ அவனைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்னுள்ளதையும், அவர்களுக்குப் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான், அவர்கள் அவனை(த் தங்கள்) கல்வியால் தீர அறிந்து கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
He [i.e., Allah] knows what is [presently] before them and what will be after them, but they do not encompass it [i.e., what He knows] in knowledge.
இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில்) நிரந்தரமானவன், நிலையானவன் (அல்லாஹ்வின்) முன், அனைவருடைய (தலைகளும்) முகங்களும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான்.
IFT
நித்திய ஜீவனும் (பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவனுமாகிய இறைவன் முன்னிலையில் மக்களின் தலைகள் பணிந்துவிடும். (அன்று) அக்கிரமத்தின் பாவச் சுமையைச் சுமந்து கொண்டவன் தோல்வி அடைந்தவன் ஆவான்.
எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் நம்பிக்கை கொண்டவராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர், (தன் நற்கூலி) அழிந்து விடுமென்றோ குறைந்து விடுமென்றோ பயப்படமாட்டார்.
IFT
ஆனால், எவர் நம்பிக்கையாளராயிருந்து நற்செயல்கள் புரிகின்றாரோ (அவருக்கு அநீதி மற்றும் உரிமைப் பறிப்பு பற்றிய எந்த அச்சமும் இருக்காது.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் விசுவாசங்கொண்ட நிலையில், நற்கருமங்களையும் செய்கிறாரோ அவர், (தனக்கு) அநீதத்தையோ, (தன் செயல்களுக்குரிய நற்கூலியில்) குறைவையோ பயப்படமாட்டார்.
Saheeh International
But he who does of righteous deeds while he is a believer - he will neither fear injustice nor deprivation.
மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். இது அவர்களுக்கு நல்லுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காகவும் இதில் (நாம் நம் வேதனையைப் பற்றி) எச்சரிக்கைகளை விவரித்தோம்.
IFT
(நபியே!) இது போன்றே நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக இறக்கியருளியுள்ளோம். மேலும், இதில் விதவிதமான எச்சரிக்கைகளும் கொடுத்துள்ளோம். இதன் மூலம் இவர்கள் (தவறான நடத்தையை) தவிர்த்துக் கொள்ளக்கூடும் அல்லது இது இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே, இதனை அரபி மொழியிலான குர் ஆனாக நாம் இறக்கி வைத்தோம், அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆவதற்காக, அல்லது இது அவர்களுக்கு நல்லுபதேசத்தை உண்டாக்குவதற்காக இதில் நாம் (நம்முடைய வேதனையைப் பற்றி) அவர்களுக்கு எச்சரிக்கையை (பலவாறாக) திரும்பத்திரும்ப விவரித்திருக்கிறோம்.
Saheeh International
And thus We have sent it down as an Arabic Qur’an and have diversified therein the warnings that perhaps they will avoid [sin] or it would cause them remembrance.
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
அப்துல் ஹமீது பாகவி
உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உமக்கு வஹ்யி அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதை ஓத) நீர் அவசரப்படாதீர். ‘‘என் இறைவனே! என் கல்வி ஞானத்தை மேலும் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக.
IFT
அல்லாஹ் மிக உயர்ந்தவன் உண்மையான அரசன். மேலும் (பாரும்) குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; அதனுடைய வஹி முழுமையாக உமக்கு நிறைவு பெறுவதற்கு முன்பே! “என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக!” என்றும் இறைஞ்சுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே உண்மையான அரசனாகிய அல்லாஹ் (இணை வைப்பவர்களின் இணைவைப்பிபிலிருந்து) உயர்ந்துவிட்டான், (நபியே!) குர் ஆனைக்கொண்டு – அதனுடைய அறிவிப்பு உம்மளவில் முடிக்கப்படுவதற்கு முன்னதாக (அதனை ஓத) நீர் அவசரப்படவேண்டாம், “இன்னும், என் இரட்சகனே! எனக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக” என்று நீர் (பிரார்த்தனை செய்து) கூறுவீராக!
Saheeh International
So high [above all] is Allah, the Sovereign, the Truth. And, [O Muhammad], do not hasten with [recitation of] the Qur’an before its revelation is completed to you, and say, "My Lord, increase me in knowledge."
முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக அதற்கு மாறு செய்யும்) உறுதியான எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை.
IFT
நாம் முன்னர் ஆதத்துக்கு ஒரு கட்டளை பிறப்பித்திருந்தோம். ஆயினும் அவர் அதனை மறந்துவிட்டார். மேலும், நாம் அவரிடத்தில் மன உறுதியைக் காணவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இதற்கு முன்னர், ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம், பின்னர், (அதனை) அவர் மறந்து விட்டார், மேலும், (அதன்படி நடக்கும்) உறுதியை நாம் அவரிடம் காணவில்லை.
Saheeh International
And We had already taken a promise from Adam before, but he forgot; and We found not in him determination.
“நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
வானவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (அவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான்.
IFT
‘ஆதத்துக்குச் சிரம்பணியுங்கள்’ என்று வானவர்களுக்கு நாம் கூறியதை நினைவுகூருங்கள். அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர! அவன் மட்டும் மறுத்துவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மலக்குகளிடம் நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள் என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் சிரம் பணிந்தார்கள், அவன் விலகிக் கொண்டான் (என்பதை நபியே! நீர் நினைவு கூர்வீராக)
Saheeh International
And [mention] when We said to the angels, "Prostrate to Adam," and they prostrated, except Iblees; he refused.
فَقُلْنَاஆகவே நாம் கூறினோம்يٰۤاٰدَمُஆதமேاِنَّநிச்சயமாகهٰذَاஇவன்عَدُوٌّஎதிரிلَّكَஉமக்குوَلِزَوْجِكَஇன்னும் உமது மனைவிக்குفَلَا يُخْرِجَنَّكُمَاஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம்مِنَ الْجَـنَّةِசொர்க்கத்திலிருந்துفَتَشْقٰىநீர்சிரமப்பட்டுவிடுவீர்
அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், (நாம் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப்படுத்தி விடவேண்டாம். (எச்சரிக்கையாக இருப்பீராக!) இன்றேல் நீர் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்'' என்று கூறினோம்.
IFT
அப்போது நாம் கூறினோம்: “ஆதமே! (பாருங்கள்) இவன் உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான். இவன் உங்களிருவரையும் சுவனத்திலிருந்து வெளியேற்றிவிடக்கூடாது. மேலும், நீங்கள் துன்பத்தில் விழுந்து விடவும் கூடாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால் (நாம் ஆதமிடம்) “ஆதமே! நிச்சயமாக இவன் உனக்கும் உம்முடைய மனைவிக்கும் விரோதியாவான், எனவே உங்களிருவரையும் இச்சுவனத்திலிருந்து (தன் சூழ்ச்சியால்) அவன் நிச்சயமாக வெளியேற்றிவிட வேண்டாம், அவ்வாறெனில், நீர் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்” என்று கூறினோம்.
Saheeh International
So We said, "O Adam, indeed this is an enemy to you and to your wife. Then let him not remove you from Paradise so you would suffer.
Fப வஸ்வஸ இலய்ஹிஷ் ஷய்தானு கால யா ஆதமு ஹல் அதுல்லுக 'அலா ஷஜரதில் குல்தி வ முல்கில் லா யBப்லா
முஹம்மது ஜான்
ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி ‘‘ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உமக்கு அறிவிக்கவா?'' என்று கூறினான்.
IFT
ஆயினும் ஷைத்தான் அவரைக் குழப்பினான். “ஆதமே! உமக்கு நிலையான வாழ்வையும் அழியாத அதிகாரத்தையும் தரக்கூடிய ஒரு மரத்தைக் காண்பிக்கவா?” என்று கேட்டான்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால் ஷைத்தான் அவருக்கு (அவர் மனதில்) ஊசாட்டத்தை உண்டாக்கி விட்டான், நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், முடிவில்லா அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? என்று கேட்டான்.
Saheeh International
Then Satan whispered to him; he said, "O Adam, shall I direct you to the tree of eternity and possession that will not deteriorate?"
பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானம் அவ்விருவருக்கும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறுசெய்து வழி தவறிவிட்டார்.
IFT
இறுதியில் (கணவன்மனைவியாகிய) அவ்விருவரும் அம்மரத்தின் பழத்தைப் புசித்துவிட்டார்கள். உடனே, அவ்விருவரின் மர்மஸ்தலங்கள் பரஸ்பரம் வெளிப்பட்டு விட்டன. மேலும், இருவரும் சுவனத்தின் இலைகளால் தங்களை மறைத்துக் கொள்ளலாயினர். ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்தார். நேர்வழி தவறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(முடிவாக) அவ்விருவரும் அ(ம்மரத்)திலிருந்து புசித்து விட்டார்கள், உடனே (அவ்விருவரின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருந்த) அவ்விருவரின் மர்மஸ்தானங்களும் அவ்விருவருக்கும் வெளியாயின, அச்சுவனத்தின் இலைகளைக் கொண்டு, தங்களை மறைத்துக்கொள்ள அவ்விருவரும் முற்பட்டனர், ஆகவே, ஆதம் தன் இரட்சகனுக்கு மாறு செய்து விட்டார், எனவே, அவர் வழிதவறிவிட்டார்.
Saheeh International
And they [i.e., Adam and his wife] ate of it, and their private parts became apparent to them, and they began to fasten over themselves from the leaves of Paradise. And Adam disobeyed his Lord and erred.
“இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே யிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான்.
IFT
மேலும், கூறினான்: நீங்கள் இருவரும் (மனிதனும், ஷைத்தானும்) இங்கிருந்து வெளியேறிவிடுங்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாயிருப்பீர்கள்; இனி, என்னிடமிருந்து ஏதேனும் வழிகாட்டல் உங்களுக்குக் கிடைத்தால், யார் என் வழிகாட்டலைப் பின்பற்றினாரோ அவர் வழிதவற மாட்டார்; துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகவும் மாட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி, அவ்விருவரிடம்) ”நீங்கள் இருவரும் இதிலிருந்து சேகரமாக இறங்கிவிடுங்கள், உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு விரோதிகளாவார்கள், நிச்சயமாக என்னிடமிருந்து நேர்வழி உங்களுக்கு வரும், ஆகவே, என்னுடைய நேர்வழியை எவர் பின்பற்றுகிறாரோ, அவர் வழி தவறமாட்டார், துர்பாக்கியவானாக ஆகவுமாட்டார்” என்று கூறினான்.
Saheeh International
[Allah] said, "Descend from it [i.e., Paradise] - all, [your descendants] being enemies to one another. And if there should come to you guidance from Me - then whoever follows My guidance will neither go astray [in the world] nor suffer [in the Hereafter].
وَمَنْஎவன்اَعْرَضَபுறக்கணிப்பானோعَنْ ذِكْرِىْஎன் அறிவுரையை விட்டுفَاِنَّநிச்சயமாகلَـهٗஅவனுக்குمَعِيْشَةًவாழ்க்கைதான்ضَنْكًاநெருக்கடியானوَّنَحْشُرُهٗஇன்னும் அவனை நாம் எழுப்புவோம்يَوْمَ الْقِيٰمَةِமறுமையில்اَعْمٰىகுருடனாக
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.
IFT
எவன் என்னுடைய ‘திக்ரை’ (நல்லுரையைப்) புறக்கணிக்கின்றானோ அவனுக்கு (இவ்வுலகில்) கடினமான வாழ்க்கை இருக்கிறது. மேலும், மறுமை நாளில் அவனை நாம் குருடனாக எழுப்புவோம்”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “எவர் என்னுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது, மேலும், மறுமைநாளில் நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.
Saheeh International
And whoever turns away from My remembrance - indeed, he will have a depressed [i.e., difficult] life, and We will gather [i.e., raise] him on the Day of Resurrection blind."
قَالَஅவன் கூறுவான்كَذٰلِكَஅவ்வாறுதான்اَتَـتْكَஉன்னிடம் வந்தனاٰيٰتُنَاஎனது வசனங்கள்فَنَسِيْتَهَاۚஆனால், நீ அவற்றை மறந்தாய்وَكَذٰلِكَஅவ்வாறேالْيَوْمَஇன்றுتُنْسٰىநீ மறக்கப்படுவாய்
கால கதாலிக அதத்க ஆயாதுனா Fபனஸீதஹா வ கதாலிகல் யவ்ம துன்ஸா
முஹம்மது ஜான்
(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இறைவன்) ‘‘இவ்வாறே (குருடனைப்போன்றே உன் காரியங்கள் இருந்தன) நம்வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்'' என்று கூறுவான்.
IFT
அதற்கு அல்லாஹ், “ஆம்; இவ்வாறே நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்திருந்தபோது நீ அவற்றை மறந்து விட்டிருந்தாய்; அவ்வாறே இன்று நீயும் மறக்கடிக்கப்படுகின்றாய்” என்று கூறுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “அவ்வாறே! நம் வசனங்கள் உன்னிடம் வந்தன, நீ அவைகளை மறந்து விட்டாய், (நீ மறந்த) அவ்வாறே இன்றையத்தினம் நீயும் (நம் அருளிலிருந்து) மறக்கப்படுகிறாய்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
Saheeh International
[Allah] will say, "Thus did Our signs come to you, and you forgot [i.e., disregarded] them; and thus will you this Day be forgotten."
ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் வரம்பு மீறி, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும்.
IFT
இவ்விதமே, வரம்பு மீறிச் செல்வோருக்கும் தம்முடைய இறைவனின் வசனங்களை ஏற்காதோருக்கும் நாம் (இவ்வுலகில்) கூலி வழங்குகின்றோம். மேலும், மறுமையின் வேதனை மிகக் கடினமானதும் நீடித்து நிற்கக்கூடியதாகவும் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, தன் இரட்சகனின் வசனங்களை விசுவாசிக்காது வரம்பு மீறி நடக்கின்றவருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம், (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மிகக் கடினமானதும், நிலையானதுமாகும்.
Saheeh International
And thus do We recompense he who transgressed and did not believe in the signs of his Lord. And the punishment of the Hereafter is more severe and more enduring.
இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் செலுத்தவில்லையா? (அழிந்து போன) அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குச் சமீபமாகவே இவர்கள் செல்கின்றனர். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
பிறகு, இவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்திருக்கின்றோம். (இந்த வரலாற்றின் படிப்பினைகளிலிருந்து) இவர்களுக்கு நேர்வழி கிடைக்கவில்லையா என்ன? அவ்வாறு (அழிக்கப்பட்ட) அவர்களின் ஊர்களில் (இன்று) இவர்கள் நடமாடித் திரிகின்றார்கள். உண்மையில் இதில் நல்லறிவு உடையவர்களுக்கு சான்றுகள் நிறைய உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்து விட்டோம் என்பது இவர்களை நேர்வழியில் செலுத்தவில்லையா? (அழிக்கப்பட்ட) அவர்கள் குடியிருந்த இடங்களில் (சமீபமாகவே) இவர்கள் செல்கின்றனர், அறிவுடையோருக்கு, நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
Then, has it not become clear to them how many generations We destroyed before them as they walk among their dwellings? Indeed in that are signs for those of intelligence.
وَلَوْلَا كَلِمَةٌஒரு வாக்கு(ம்) இருக்கவில்லையெனில்سَبَقَتْமுந்திمِنْ رَّبِّكَஉமது இறைவனிடம்لَــكَانَ لِزَامًاகண்டிப்பாக மரணம் ஏற்பட்டே இருக்கும்وَّاَجَلٌதவணையும்مُّسَمًّىؕஒரு குறிப்பிட்ட
வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகான லிZஜாம(ன்)வ் வ 'அஜலுன் முஸம்மா
முஹம்மது ஜான்
உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கும் (தண்டனைக்கான) குறிப்பிடபட்ட ஒரு தவணையும் முந்திரா விட்டால் அது (வேதனை) ஏற்பட்டு இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களின் தண்டனைக்குரிய காலம் மறுமைதான் என்று) ஒரு தவணையைக் குறிப்பிட்டிருக்கும் உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிட்டால் (இச்சமயமே) வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்.
IFT
உம் இறைவனிடமிருந்து முன்னரே ஒரு விஷயம் முடிவாகாமலும், மேலும், குறிப்பிட்ட ஒரு காலத்தவணை நிர்ணயிக்கப்படாமலும் இருந்திருந்தால் இவர்களுடைய விஷயம் கண்டிப்பாக முன்பே தீர்க்கப்பட்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே! தீர்ப்பளிக்கப்படுவது மறுமையில்தான் என்ற) உம்முடைய இரட்சகனின் வாக்கு மற்றும் குறிப்பிடப்பட்ட தவணை முந்தியிராவிட்டால் அ(ழிவான)து கட்டாயமாகியிருக்கும்.
Saheeh International
And if not for a word that preceded from your Lord, it [i.e., punishment] would have been an obligation [due immediately], and [if not for] a specified term [decreed].
ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் (உம்மைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக. சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) பகலின் இருமுனைகளிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக. (இதனால்) நீர் திருப்தி அடையலாம்.
IFT
எனவே (நபியே!) இவர்கள் இட்டுக்கட்டிக்கூறும் விஷயத்தை நீர் பொறுத்துக் கொள்ளும். சூரியன் உதிப்பதற்கு முன்பும் அது மறைவதற்கு முன்பும் மேலும், இரவு நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! இதன் மூலம் நீர் மனத்திருப்தி அடையக் கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப்பற்றி நீர் பொறுத்துக் கொள்வீராக! மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உம்முடைய இரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக! இரவு நேரங்களிலும் (இவ்வாறே) பகலின் ஓரங்களிலும் (இரட்சகனைப் புகழ்ந்து) துதி செய்து கொண்டிருப்பீராக! இதனால் நீர் திருப்தியடையலாம்.
Saheeh International
So be patient over what they say and exalt [Allah] with praise of your Lord before the rising of the sun and before its setting; and during periods of the night [exalt Him] and at the ends of the day, that you may be satisfied.
இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்தவற்றின் பக்கம் நீர் உமது பார்வையைச் செலுத்தாதீர். இவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவற்றை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உமது இறைவன் உமக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
IFT
மேலும், நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுக போகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களை சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம். மேலும், உம் இறைவனால் வழங்கப்பட்டுள்ள (ஆகுமான) வாழ்வாதாரம்தான் சிறந்ததும் நிலையானதுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்களில் சில பிரிவாருக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக்கொண்டு சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ அதன் பக்கம் உம்முடைய இரு கண்களையும் நீர் திண்ணமாகச் செலுத்த வேண்டாம், (இவையாவும்) அதில் அவர்களை சோதிப்பதற்காகவே (நாம் கொடுத்திருக்கிறோம்.) ஆனால் உம் இரட்சகன் (உமக்கு மறுமையில்) கொடுக்கவிருப்பது மிகச் சிறந்ததும், மிக நிலையானதுமாகும்.
Saheeh International
And do not extend your eyes toward that by which We have given enjoyment to [some] categories of them, [its being but] the splendor of worldly life by which We test them. And the provision of your Lord is better and more enduring.
(நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (இதற்காக) நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை இறையச்சத்திற்குத்தான்.
IFT
மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தார்க்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பீராக. ஏதேனும் வாழ்வாதாரம் அளிக்குமாறு உம்மிடம் நாம் கோருவதில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், நல்ல முடிவு இறையச்சத்திற்கே இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) “நீர் உம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கொண்டு ஏவுவீராக! நீரும் அதன் மீது (பொறுமையுடன்) நிலைத்திருப்பீராக! நாம் உம்மிடம் உணவைக்கேட்கவில்லை, உமக்கு நாமே உணவளிக்கிறோம், மேலும் நல்ல முடிவு பயபக்தி (உடையவர்களு)க்கே உரியதாகும்.
Saheeh International
And enjoin prayer upon your family [and people] and be steadfast therein. We ask you not for provision; We provide for you, and the [best] outcome is for [those of] righteousness.
வ காலூ லவ் லா ய'தீனா Bபி ஆயதின் மிர் ரBப்Bபிஹ்; அவ லம் த'திஹிம் Bபய்யினது மா Fபிஸ் ஸுஹுFபில் ஊலா
முஹம்மது ஜான்
“தம் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை ஏன் அவர் நம்மிடம் கொண்டு வரவில்லை?” என்று (நிராகரிப்போர்) கேட்கின்றனர்; முந்தைய வேதங்களில் உள்ள தெளிவான அத்தாட்சிகள் அவர்களுக்கு வரவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(‘‘இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) நம்மிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான ஆதாரங்கள் அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது.)
IFT
“தம் இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்றை (முஃஜிஸாவை) இவர் ஏன் கொண்டுவரவில்லை” என்று அவர்கள் கேட்கின்றார்கள். முந்தைய வேதங்களில் உள்ள முழு அறிவுரைகளின் விளக்கம் அவர்களிடம் வரவில்லையா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“தன் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியை அவர் நம்மிடம் கொண்டு வர வேண்டாமா?” என்றும் அவர்கள் கூறுகின்றனர், முந்திய வேதங்களிலுள்ள தெளிவு, (அத்தாட்சி) அவர்களிடம் வரவில்லையா?
Saheeh International
And they say, "Why does he not bring us a sign from his Lord?" Has there not come to them evidence of what was in the former scriptures?
وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْஇவர்களை நாம் அழித்திருந்தால்بِعَذَابٍஒரு வேதனையைக் கொண்டுمِّنْ قَبْلِهٖஇதற்கு முன்னரேلَـقَالُوْاகூறுவார்கள்رَبَّنَاஎங்கள் இறைவாلَوْلَاۤ اَرْسَلْتَநீ அனுப்பி இருக்கக்கூடாதா?اِلَـيْنَاஎங்களுக்குرَسُوْلًاஒரு தூதரைفَنَتَّبِعَபின்பற்றி இருப்போமேاٰيٰتِكَஉனது வசனங்களைمِنْ قَبْلِமுன்னர்اَنْ نَّذِلَّஇழிவடைவதற்கும்وَنَخْزٰىகேவலப்படுவதற்கும்
வ லவ் அன்னா அஹ்லக்னாஹும் Bபி 'அதாBபின் மின் கBப்லிஹீ லகாலூ ரBப்Bபனா லவ் லா அர்ஸல்த இலய்னா ரஸூலன் Fபனத்தBபி'அ ஆயாதிக மின் கBப்லி அன் னதில்ல வ னக்Zஜா
முஹம்மது ஜான்
இன்னும் (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? அவ்வாறாயின் நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம் தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்) நாங்கள் இந்த இழிவுக்கும் நிந்தனைக்கும் உள்ளாவதற்கு முன்னதாகவே உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போம்'' என்று கூறுவார்கள்.
IFT
அவர் வருகைக்கு முன்பே ஏதேனும் ஒரு வேதனையை இறக்கி அவர்களை நாம் அழித்திருந்தால் அப்போது அவர்களே கூறுவர்: “எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? அவ்வாறு அனுப்பியிருந்தால் இழிவிற்கும் கேவலத்திற்கும் நாங்கள் ஆளாகும் முன்பே, உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நம் தூதராகிய) இவருக்கு முன்னதாகவே நிச்சயமாக நாம் இவர்களை வேதனையைக் கொண்டு அழித்திருந்தால், “எங்கள் இரட்சகனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறிருந்தால்) நாங்கள் இழிவுபடுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன்னதாகவே உன்னுடைய வசனங்களை நாங்கள் பின்பற்றியிருப்போமே” என்று கூறுவார்கள்.
Saheeh International
And if We had destroyed them with a punishment before him, they would have said, "Our Lord, why did You not send to us a messenger so we could have followed Your verses [i.e., teachings] before we were humiliated and disgraced?"
(நபியே! “இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார்? நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார்? என்பதையும் திடமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர்) கூறுவீராக: ‘‘ஒவ்வொருவரும் (தங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்ப்பீராக. நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்து விட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்.
IFT
(நபியே, அவர்களிடம்) நீர் கூறும்! “(தமது செயலின் விளைவை) ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தாம். எனவே நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். அதிவிரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும் நேர்வழியில் நடப்பவர் யார், மேலும், நேர்வழியைப் பெற்றவர்கள் யார் என்பது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொருவரும் (மறுமைநாளை) எதிர்பார்த்திருப்பவரே! ஆகவே, நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நேரான வழியை உடையவர்கள் யார்? என்பதையும், நேர்வழி பெற்றவர் யார்? என்பதையும் (பின்னர்) நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்.
Saheeh International
Say, "Each [of us] is waiting; so wait. For you will know who are the companions of the sound path and who is guided."