ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்.
IFT
தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர! அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்பிற்குரியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்,) தங்கள் மனைவியரிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்(களான அடிமைப்பெண்)களிடமோ தவிர (இவர்களோடுள்ள உறவில்) நிச்சயமாக அவர்கள் நிந்திக்கப்படுபவர்களல்லர்.
Saheeh International
Except from their wives or those their right hands possess, for indeed, they will not be blamed -
பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதை வேறு ஒரு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்.
IFT
பிறகு அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ், படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம், பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம், பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர், நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம், ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும்பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன்
Saheeh International
Then We made the sperm-drop into a clinging clot, and We made the clot into a lump [of flesh], and We made [from] the lump, bones, and We covered the bones with flesh; then We developed him into another creation. So blessed is Allah, the best of creators.
அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவற்றைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவற்றுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்.)
IFT
திண்ணமாக, நாம் உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்திருக்கின்றோம். மேலும், படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவராக இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு பாதைகளை (வானங்களை)யும் நாமே படைத்திருக்கிறோம், இப்படைப்புகளைப்பற்றி ஒருபோதும் நாம் பராமுகமானவர்களாகவும் இருக்கவில்லை.
Saheeh International
And We have created above you seven layered heavens, and never have We been of [Our] creation unaware.
மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
அப்துல் ஹமீது பாகவி
மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதைப் பூமியில் தங்கும் படியும் செய்கிறோம். அதைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நிச்சயமாக நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.
IFT
இன்னும், வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். நாம் (விரும்புகின்றபடி) அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றலுடையோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைக்கிறோம், (அதன் பின்னர்) அதனைப் பூமியில் தங்குமாறு செய்கின்றோம், நிச்சயமாக அதனைப் (பூமிக்குள் இழுக்கப்பட்டு) போக்கிவைக்கவும் நாம் ஆற்றலுடையோர் (ஆவோம்.)
Saheeh International
And We have sent down rain from the sky in a measured amount and settled it in the earth. And indeed, We are Able to take it away.
அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய பல கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள்.
IFT
மேலும், அதன் மூலம் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உங்களுக்காக நாம் உருவாக்கினோம். இத்தோட்டங்களில் (சுவை மிகுந்த) ஏராளமான கனிகள் உங்களுக்கு இருக்கின்றன. இன்னும் அவற்றிலிருந்து நீங்கள் உணவைப் பெற்றுக் கொள்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அதனைக்கொண்டு பேரீச்சை, திராட்சைகள் (முதலிய) தோட்டங்களை உங்களுக்காக நாம் உற்பத்தி செய்திருக்கின்றோம், அவைகளில் உங்களுக்கு அநேகக் கனிகள் இருக்கின்றன, இன்னும் அவற்றிலிருந்தும் நீங்கள் உண்ணுகின்றீர்கள்.
Saheeh International
And We brought forth for you thereby gardens of palm trees and grapevines in which for you are abundant fruits and from which you eat.
இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).
அப்துல் ஹமீது பாகவி
‘தூர்ஸீனாய்' மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கிறோம்). அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பையும்) தருகிறது.
IFT
மேலும், ‘தூர் ஸைனா’ வளர்கின்ற மரத்தையும் நாம் படைத்தோம். எண்ணெய்யுடனும் உண்ணுகின்றவர்களுக்குக் குழம்புடனும் அது முளைக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தூர் ஸைனாவிலிருந்து (முளைத்து) வெளிப்படும் ஒரு மரத்தையும் (நாம் படைத்தோம்.) அது எண்ணையையும், புசிப்போருக்கு (சுவைமிக்க) குழம்பையும் கொண்டு முளைக்கிறது.
Saheeh International
And [We brought forth] a tree issuing from Mount Sinai which produces oil and food [i.e., olives] for those who eat.
நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும், உங்களுக்கு அவற்றில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்.
IFT
திண்ணமாக, கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றுக்குள் இருப்பவற்றிலிருந்து ஒரு பொருளை (பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம். மேலும், அவற்றில் ஏராளமான பயன்களும் உங்களுக்கு இருக்கின்றன. நீங்கள் அவற்றை உண்ணவும் செய்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் உங்களுக்கொரு படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிறுகளில் உள்ளவற்றிலிருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம், அவைகளில் உங்களுக்கு அநேகப் பயன்களும் இருக்கின்றன, மேலும் அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
Saheeh International
And indeed, for you in livestock is a lesson. We give you drink from that which is in their bellies, and for you in them are numerous benefits, and from them you eat.
இன்னும்: நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடத்தில் அனுப்பினோம்; அப்போது அவர் (தம் சமூகத்தாரிடம்) “என் சமூகத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் - அவனன்றி உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை, நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் ‘‘நூஹ்' (நபியை) நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்.
IFT
திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாய மக்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. நீங்கள் அஞ்சமாட்டீர்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நாம் “நூஹை” நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தாரின்பால் அனுப்பிவைத்தோம், அவர் (அவர்களிடம்) “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு நாயன் உங்களுக்கு இல்லை, (அவனுக்கு) நீங்கள் பயப்பட மாட்டீர்களா?” என்று கூறினார்.
Saheeh International
And We had certainly sent Noah to his people, and he said, "O my people, worship Allah; you have no deity other than Him; then will you not fear Him?"
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தமது மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் வானவர்களையே அனுப்பிவைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும்,
IFT
அவருடைய சமுதாயத்தில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர்கள் கூறலானார்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களைவிட உயர்வடைய வேண்டும் என நினைக்கின்றார்! அல்லாஹ் யாரையேனும் தூதராக அனுப்ப நாடியிருந்தால் வானவர்களை அனுப்பி வைத்திருப்பான். (மனிதர் இறைத்தூதராய் வருவார் எனும்) இச்செய்தியை எங்கள் மூதாதையரிடமிருந்து நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லையே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது (அவரை) நிராகரித்துவிட்ட அவருடைய சமூகத்தாரில் உள்ள தலைவர்கள் “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை, (எனினும்) இவர், உங்கள் மீது சிறப்புப்பெற நாடுகிறார், மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் மலக்குகளைத் திட்டமாக இறக்கி வைத்திருப்பான், முன்னுள்ள நம் மூதாதையர்களிடம், இதனைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.
Saheeh International
But the eminent among those who disbelieved from his people said, "This is not but a man like yourselves who wishes to take precedence over you; and if Allah had willed [to send a messenger], He would have sent down angels. We have not heard of this among our forefathers.
اِنْ هُوَஅவர் இல்லைاِلَّاதவிரرَجُلٌۢஓர் ஆடவரேبِهٖஅவருக்குجِنَّةٌபைத்தியம் (ஏற்பட்டிருக்கிறது)فَتَرَبَّصُوْاஎதிர் பார்த்திருங்கள்بِهٖஅவருக்குحَتّٰىவரைحِيْنٍஒரு காலம்
இன் ஹுவ இல்லா ரஜுலும் Bபிஹீ ஜின்னதுன் FபதரBப்Bபஸூ Bபிஹீ ஹத்தா ஹீன்
முஹம்மது ஜான்
“இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை; எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்” (எனவும் கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘ இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, இவர் விஷயத்தில் (இவர் கூறுவது நிகழும் வரை) சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றும் கூறினார்கள்.
IFT
இந்த மனிதருக்குக் கொஞ்சம் பைத்தியம் பிடித்திருக்கின்றது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இவருடைய விஷயத்தில் இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள். (இவருடைய பைத்தியம் தெளியக்கூடும்!)”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இவர் ஒரு பைத்தியக்கார மனிதரே தவிர வேறில்லை, ஆகவே சிறிது காலம்வரை இவரை எதிர்பார்த்திருங்கள் (என்றும் கூறினார்கள்.)
Saheeh International
He is not but a man possessed with madness, so wait concerning him for a time."
அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்: அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு நாம் அவரை நோக்கி நீர் ‘‘நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்வீராக. நம் உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வோர் உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உமது குடும்பத்தினரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக. ஆயினும், எவன் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்கள் குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீர் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்'' என்று வஹ்யி அறிவித்தோம்.
IFT
நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். நாம் அறிவிக்கின்றபடியும், நமது கண்காணிப்பிலும் ஒரு கப்பலைத் தயார் செய்யும்! பின்னர், நம் கட்டளை வந்ததும் உலையிலிருந்து தண்ணீர் பொங்கி எழ ஆரம்பித்தால், எல்லா வகைப் பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியையும், உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்ளும்; அவர்களில் யாருக்கு எதிராக முன்னரே தீர்ப்பாகி விட்டதோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமைக்காரர்களைப் பற்றி நீர் எம்மிடம் எதுவும் பேசாதீர். இதோ! இவர்கள் மூழ்கடிக்கப்படவிருக்கின்றார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “நீர் நம் கண்களின் முன்பாகவும் நாம் அறிவிக்கின்ற பிரகாரமும் ஒரு கப்பலைச் செய்வீராக! நம்முடைய உத்தரவு வந்து அடுப்புக்கொதிக்க ஆரம்பித்தால், (ஒவ்வொரு ஜீவராசிகளிலும்) ஆண், பெண், இரண்டிரண்டு சேர்ந்த ஜோடிகளையும் உம்முடைய குடும்பத்தினரில், எவர் மீது நம்முடைய (தண்டனை பற்றிய) வாக்கு முந்திவிட்டதோ அவரைத் தவிர, மற்ற (உம்முடைய குடும்பத்த)வரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநியாயம் செய்து விட்டார்களே அவர்களைப் பற்றி, நீர் என்னிடம் பேசாதீர், நிச்சயமாக அவர்கள் (பெரு வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுபவர்கள்” என்று அவருக்கு நாம் வஹீ அறிவித்தோம்.
Saheeh International
So We inspired to him, "Construct the ship under Our observation and Our inspiration, and when Our command comes and the oven overflows, put into it [i.e., the ship] from each [creature] two mates and your family, except him for whom the decree [of destruction] has proceeded. And do not address Me concerning those who have wronged; indeed, they are to be drowned.
“நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்: “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
நீரும் உம்முடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் ‘‘ அநியாயக்கார இந்த மக்களில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' என்று கூறுவீராக.
IFT
நீரும் உம்முடனிருப்பவர்களும் கப்பலில் ஏறிக் கொண்டதும் கூறுவீர்களாக: “கொடுமைபுரியும் மக்களிடமிருந்து எங்களை விடுவித்த அல்லாஹ்வுக்கே அனைத்து நன்றியும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீரும், உம்முடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்துவிட்டால் அப்போது “அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்து எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக! (என்றும்)
Saheeh International
And when you have boarded the ship, you and those with you, then say, 'Praise to Allah who has saved us from the wrongdoing people.'
மேலும் “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ள(வனாக பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலில் இருந்து) இறக்கிவைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்திப்பீராக'' (என்றும் கூறினோம்.)
IFT
மேலும், கூறுவீராக: “என் இறைவனே! அருள் வளம் கொண்டதோர் இடத்தில் என்னை இறக்குவாயாக! நீ மிகச் சிறந்த இடத்தை நல்கக் கூடியவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், என் இரட்சகனே! நீ என்னை மிக்க பாக்கியம் செய்யப்பட்ட இறங்கும் இடத்தில் இறக்கி வைப்பாயாக! நீயே இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன் என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவீராக!” (என்றும் கூறினோம்.)
Saheeh International
And say, 'My Lord, let me land at a blessed landing place, and You are the best to accommodate [us].'"
அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். “அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” (என்றும் அவர் கூறினார்.)
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் உள்ள (‘ஹூது' என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம் தூதராக நாம் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' (என்று கூறினார்.)
IFT
பிறகு, அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம். (அவர் அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தார்:) “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை; நீங்கள் அஞ்சுவதில்லையா என்ன?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிலே நாம் அனுப்பி வைத்தோம், அவர் (அவர்களிடம்,) “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள், அவனைத்தவிர உங்களுக்கு (வணக்கத்திற்குரிய) வேறு நாயன் இல்லை, (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா?” (என்று கூறினார்.)
Saheeh International
And We sent among them a messenger from themselves, [saying], "Worship Allah; you have no deity other than Him; then will you not fear Him?"
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும், இறுதித் தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
அப்துல் ஹமீது பாகவி
(ஹூது நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவற்றையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி (‘ஹூது' நபியை சுட்டிக் காண்பித்து) ‘‘ இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனே தவிர வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
IFT
மேலும் அவருடைய சமூகத்தில் எந்தத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ இன்னும் இறுதிநாளின் சந்திப்பை, பொய்யென்று வாதாடினார்களோ மேலும், இவ்வுலகில் ஆடம்பரமான வாழ்க்கையை எவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோமோ அந்தத் தலைவர்கள் கூறலானார்கள்; “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்ணுகின்றவற்றையே இவரும் உண்ணுகின்றார். மேலும், நீங்கள் பருகுகின்றவற்றையே இவரும் பருகுகின்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு அவருடைய சமூகத்தாரிலிருந்து (அவரை) நிராகரித்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யாக்கி இவ்வுலக வாழ்க்கையில் சுகபோகங்களை நாம் யாருக்குக் கொடுத்திருந்தோமோ அத்தகைய தலைவர்கள் (இந் நபியைக் காண்பித்து) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை, நீங்கள் எதிலிருந்து உண்ணுகிறீர்களோ அதையே அவரும் உண்கிறார், நீங்கள் குடிப்பதிலிருந்து அவரும் குடிக்கிறார்” என்று கூறினார்கள்.
Saheeh International
And the eminent among his people who disbelieved and denied the meeting of the Hereafter while We had given them luxury in the worldly life said, "This is not but a man like yourselves. He eats of that from which you eat and drinks of what you drink.
“நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் இறந்து எலும்பாகவும், மண்ணாகவும் ஆனதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் (உயிருடன்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களை பயமுறுத்துகிறாரா?
IFT
நீங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பிறகு நீங்கள் (மண்ணறைகளிலிருந்து) வெளியாக்கப்படுவீர்கள் என்று இவர் உங்களிடம் எச்சரிக்கின்றாரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நீங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து) வெளிப்படுத்தப்படுபவர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?” என்றும்)-
Saheeh International
Does he promise you that when you have died and become dust and bones that you will be brought forth [once more]?
اِنْ هِىَஇதுاِلَّاதவிரحَيَاتُنَاநமது வாழ்க்கைالدُّنْيَاஉலகنَمُوْتُநாம் இறந்து விடுகிறோம்وَنَحْيَاஇன்னும் நாம் வாழ்கிறோம்وَمَاஇன்னும் அல்லர்نَحْنُநாம்بِمَبْعُوْثِيْنَ ۙஎழுப்பப்படுபவர்கள்
“நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்ல.
அப்துல் ஹமீது பாகவி
நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்துவிடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை.
IFT
நம்முடைய இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு ஒரு வாழ்க்கை இல்லை; நாம் இறக்கப்போவதும் உயிர் வாழ்வதும் இங்குதான்! நாம் ஒருபோதும் எழுப்பப்படமாட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது நம்முடைய இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை, (இதிலேயே) நாம் இறந்துவிடுவோம், “(இப்போது) நாம் உயிரோடும் உள்ளோம், (ஆனால், நாம் இறந்தபின்னர்) நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படப்போகிறவர்களும் அல்லர்” (என்றும்)-
Saheeh International
It [i.e., life] is not but our worldly life - we die and live, but we will not be resurrected.
அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது; நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலே ஆகிவிட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது.
IFT
இறுதியில் முற்றிலும் நியாயத்திற்கேற்பவே ஓர் உரத்த ஓசை அவர்களைப் பிடித்துக்கொண்டது. அவர்களை நாம் குப்பைக் கூளங்களாக்கி எறிந்துவிட்டோம். தொலைந்து போகட்டும் கொடுமை புரிந்த சமூகத்தார்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, ஒரு பெரும சப்தம் உண்மையாக அவர்களைப் பிடித்துக் கொண்டது, அவர்களை (வெள்ளத்தில் மிதக்கும்) குப்பை கூளங்களாய் நாம் ஆக்கிவிட்டோம், ஆகவே, அநியாயக்கார சமூகத்தார்க்கு அல்லாஹ்வின் அருள் தூரமாகிவிட்டது.
Saheeh International
So the shriek seized them in truth, and We made them as [plant] stubble. Then away with the wrongdoing people.
مَا تَسْبِقُமுந்தவும் மாட்டார்கள்مِنْ اُمَّةٍஎந்த ஒரு சமுதாயம்اَجَلَهَاதனது தவணையைوَمَا يَسْتَـاْخِرُوْنَؕஇன்னும் பிந்தவும் மாட்டார்கள்
மா தஸ்Bபிகு மின் உம்மதின் அஜலஹா வமா யஸ்தாகிரூன்
முஹம்மது ஜான்
எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களில் எனக்கு மாறுசெய்த) ஒவ்வொரு வகுப்பாரும் (அவர்கள் அழிந்துபோக நாம் ஏற்படுத்திய) அவர்களது தவணையை முந்தவுமில்லை; பிந்தவுமில்லை. (சரியாக அத்தவணையில் அழிந்து விட்டனர்.)
IFT
எந்தச் சமூகமும் தன்னுடைய தவணை வருமுன் அழிந்து போவதுமில்லை; அதற்குப்பிறகு வாழ்வதும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்த ஒரு சமுதாயமும் அதனுடைய தவணையை முந்தவும் மாட்டாது அவர்கள் பிந்தவுமாட்டார்கள்.
Saheeh International
No nation will precede its time [of termination], nor will they remain [thereafter].
ثُمَّபிறகுاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்رُسُلَنَاநமது தூதர்களைتَتْـرَا ؕதொடர்ச்சியாகكُلَّ مَا جَآءَவந்தபோதெல்லாம்اُمَّةًஒரு சமுதாயத்திற்குرَّسُوْلُهَاஅதன் தூதர்كَذَّبُوْهُஅவர்கள் அவரை பொய்ப்பித்தனர்فَاَتْبَـعْنَاஆகவே, பின்னர் கொண்டு வந்தோம்بَعْـضَهُمْஅவர்களில் சிலரைبَعْـضًاசிலரைوَّجَعَلْنٰهُمْஅவர்களை நாம் ஆக்கிவிட்டோம்اَحَادِيْثَ ۚபடிப்பினை நிறைந்த நிகழ்வுகளாகفَبُـعْدًاதொலைந்து போகட்டும்لِّـقَوْمٍமக்கள்لَّا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னரும் நம் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக நாம் அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஒரு வகுப்பாரிடம் அவர்களுடைய தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான்.
IFT
பிறகு, நாம் தொடர்ந்து நம் தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். எந்த ஒரு சமூகத்திலும் அதனுடைய தூதர் அதனிடம் வந்தபோது அந்தச் சமூகத்தினர் அவரைப் பொய்யரென்றே தூற்றினர். நாமும் அந்தச் சமூகங்களை ஒன்றன் பின் ஒன்றாக அழித்துக் கொண்டே வந்தோம். இறுதியில் அவர்களை நாம் வெறும் கதைகளாய் ஆக்கிவிட்டோம். சாபம் உண்டாகட்டும், நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நாம் நம்முடைய தூதர்களை தொடர்ச்சியாக (ஒருவர் பின் ஒருவராக) அனுப்பிவைத்தோம், ஏதேனும் ஒரு சமுதாயத்திற்கு அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள், ஆகவே, அவர்களில் சிலரை சிலருக்குப் பின் (அழிப்பதில்) நாம் தொடரச்செய்தோம், அவர்களை (பின் வந்தோர் பேசும்) கதைகளாக்கி விட்டோம், ஆகவே, விசுவாசங்கொள்ளாத (இத்தைகய) சமூகத்தவர்க்கு (அல்லாஹ்வின் அருள்) வெகுதூரமாகிவிட்டது.
Saheeh International
Then We sent Our messengers in succession. Every time there came to a nation its messenger, they denied him, so We made them follow one another [to destruction], and We made them narrations. So away with a people who do not believe.
ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் (அனுப்பிவைத்தோம்). அவர்களோ கர்வம் கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்.
IFT
ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அரசவைப் பிரமுகர்களிடமும் அனுப்பினோம். ஆனால், அவர்கள் பெரும் செருக்குடன் நடந்து கொண்டனர். மேலும், ஆணவம் கொண்ட மக்களாகவும் இருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஃபிர் அவ்னிடமும், அவனுடைய பிரதானிகளிடமும் (அனுப்பினோம்.) அவர்கள் கர்வங்கொண்டு (தங்களை) உயர்வாகக் கருதும் சமூகத்தவராக இருந்தார்கள்.
Saheeh International
To Pharaoh and his establishment, but they were arrogant and were a haughty people.
எனவே: “நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!” எனக் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
நம்மைப் போன்ற மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர்.
IFT
“எங்களைப் போன்ற இரு மனிதர்கள் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா? அவர்களின் சமூகத்தினர் எங்களுக்கு அடிமைகளாயிற்றே!” என்று கூறலானார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, “நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் விசுவாசிப்போமா? அவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு (ஊழியம் செய்து) அடிமைகளாக இருக்கும் நிலையில்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Should we believe two men like ourselves while their people are for us in servitude?"
மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்; அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம்.
IFT
மேலும், நாம் மர்யத்தின் குமாரரையும், அவருடைய அன்னையையும் ஒரு சான்றாக ஆக்கினோம். அமைதியான நீரூற்று ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஓர் உயரமான இடத்தில் அவ்விருவருக்கும் நாம் தஞ்சம் அளித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மர்யமுடையமகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம், தங்கும் வசதியும், நீர்வளமும் பொருந்திய (தகுதியான) உயர்ந்த இடத்தில் அவ்விருவரையும் நாம் தங்கவும் வைத்தோம்.
Saheeh International
And We made the son of Mary and his mother a sign and sheltered them within a high ground having level [areas] and flowing water.
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
அப்துல் ஹமீது பாகவி
(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) “என் தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை நன்கறிவேன்.
IFT
தூதர்களே! உண்ணுங்கள் தூய்மையானவற்றை! செய்யுங்கள் நன்மைகளை! நீங்கள் செய்யும் அனைத்தையும் நான் நன்கு அறியக்கூடியவனாக இருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள், நல்ல காரியத்தையும் செய்யுங்கள், நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன் (என்றும்)
Saheeh International
[Allah said], "O messengers, eat from the good foods and work righteousness. Indeed I, of what you do, am Knowing.
“இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உங்கள் இந்த மார்க்கம் ஒரே ஒரு வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்'' (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்.)
IFT
மேலும், உங்களுடைய இந்தச் சமுதாயம் திண்ணமாக ஒரே சமுதாயமாகும். மேலும், நான் உங்கள் அதிபதி ஆவேன்; எனவே, எனக்கே அஞ்சுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக (உங்களுக்குத் தெளிவு செய்யப்பட்ட) இது ஒரே மார்க்கமான உங்களுடைய மார்க்கமாகும், “இன்னும் நான் (தான்) உங்கள் இரட்சகன், ஆகவே, என்னையே நீங்கள் பயப்படுங்கள்” (என்றும் கூறினோம்.)
Saheeh International
And indeed this, your religion, is one religion, and I am your Lord, so fear Me."
ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (யூதர்களும், கிறித்தவர்களும்) தங்கள் வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு (அவர்களில்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றனர்.
IFT
ஆயினும், (பிற்காலத்தில்) மக்கள் தங்களுடைய தீனைநெறியை தங்களுக்கிடையே துண்டு துண்டாக்கிக் கொண்டார்கள். ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் எது இருக்கின்றதோ அதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றார்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு (அச்சமூகத்தவர்களான) அவர்கள் தங்கள் (மார்க்கக்)காரியத்தைத் தங்களிடையே பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனர், ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைபவர்களாக உள்ளனர்.
Saheeh International
But they [i.e., the people] divided their religion among them into portions [i.e., sects] - each faction, in what it has, rejoicing.
نُسَارِعُநாம் விரைகிறோம்لَهُمْஅவர்களுக்குفِى الْخَيْـرٰتِ ؕநன்மைகளில்بَلْமாறாகلَّا يَشْعُرُوْنَஅவர்கள் உணர மாட்டார்கள்
னுஸாரி'உ லஹும் Fபில் கய்ராத்; Bபல் லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறல்ல! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
IFT
நாம் அவர்களுக்கு நன்மைகளை வழங்குவதில் அதிவேகமாய் இருக்கின்றோம் என்று அவர்கள் கருதுகின்றார்களா? (இல்லை, உண்மை நிலவரத்தை) அவர்கள் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு நாம் செய்வதால்) அவர்களுக்கு நன்மையானவற்றை விரைந்து வழங்குகின்றோம், (என எண்ணிக் கொண்டார்களா?) அவ்வாறல்ல, (அது ஏன் என) அவர்கள் உணரமாட்டார்கள்.
Saheeh International
Is [because] We hasten for them good things? Rather, they do not perceive.
இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும்,
IFT
எவர்கள் தானதர்மங்கள் வழங்கிக் கொண்டு இருக்கின்றார்களோ, மேலும், தம் இறைவனிடம் திரும்பிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கின்றோம் எனும் எண்ணத்தில் இதயம் நடுங்கியவாறு இருக்கின்றார்களோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், தம் இரட்சகனின்பால் தாங்கள் திரும்பக்கூடியவர்கள் என்று அவர்களுடைய இதயங்கள் அஞ்சக்கூடியதாகியிருக்க (தான தர்மங்களாக) அவர்கள் கொடுத்தவற்றை (அல்லாஹ்விற்காக) கொடுக்கிறார்களே அத்தகையோரும்-
Saheeh International
And they who give what they give while their hearts are fearful because they will be returning to their Lord -
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
அப்துல் ஹமீது பாகவி
எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நாம் நிர்ப்பந்திப்பதில்லை. (ஒவ்வொருவரின்) உண்மையை உரைக்கும் தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கிறது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
IFT
நாம் எந்த மனிதனுக்கும் அவனது சக்திக்கு அதிகமாக சிரமம் அளிப்பதில்லை. (ஒவ்வொருவரின் நிலையையும்) மிகச்சரியாக எடுத்துரைக்கக்கூடிய ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது. ஆகையால் மக்கள் அநீதியிழைக்கப்படமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் எந்த ஆத்மாவையும், அதனுடைய சக்திக்குத் தக்கவாறல்லாது (அதிகமாக) சிரமப்படுத்தமாட்டோம், மேலும், (அவர்களின் செயல்கள் பற்றிய) உண்மை பேசும் புத்தகம் நம்மிடம் இருக்கிறது, (சிறிதளவேனும்) அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
Saheeh International
And We charge no soul except [with that within] its capacity, and with Us is a record which speaks with truth; and they will not be wronged.
Bபல் குலூBபுஹும் Fபீ கம்ரதிம் மின் ஹாதா வ லஹும் அஃமாலும் மின் தூனி தாலிக ஹும் லஹா 'ஆமிலூன்
முஹம்மது ஜான்
ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன; இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய)காரியங்களும் இருக்கின்றன.
IFT
ஆயினும், இம்மக்கள் இதனைப் பற்றி அறியாமலிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய செயல்களும் (மேலே கூறப்பட்ட) அந்த வழி முறைக்கு மாறுபட்டிருக்கின்றன. அவர்கள் இத்தகைய செயல்களைச் செய்து கொண்டேயிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும் அவர்களுடைய இதயங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி மறதியில் ஆழ்ந்து கிடக்கின்றன, இன்னும், இதுவன்றி அவர்களுக்கு வேறு (தீய) காரியங்களும் உண்டு, அவற்றை அவர்கள் செய்யக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
Saheeh International
But their hearts are covered with confusion over this, and they have [evil] deeds besides that [i.e., disbelief] which they are doing,
(இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) பயந்து சப்தமிடுகின்றனர்.
IFT
இறுதியில், அவர்களில் சுகபோகங்களிலேயே மூழ்கிக்கிடப்பவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்ளும்போது அவர்கள் ஓலமிட்டு அலறத் தொடங்குவார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முடிவாக அவர்களில் சுகபோக வாழ்க்கைக் கொடுக்கப்பட்டவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டால், அப்போது அவர்கள் அபயம் தேடி சப்தமிடுவார்கள்.
Saheeh International
Until when We seize their affluent ones with punishment, at once they are crying [to Allah] for help.
مُسْتَكْبِرِيْنَபெருமை அடித்தவர்களாகۖ بِهٖஅதைக் கொண்டுسٰمِرًاஇரவில் நிம்மதியாக இதைப் பேசியவர்களாகتَهْجُرُوْنَவீணானதைக் கூறுகின்றனர்
முஸ்தக்Bபிரீன Bபிஹீ ஸாமிரன் தஹ்ஜுரூன்
முஹம்மது ஜான்
ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று கூறப்படும்).
IFT
இறுமாப்புக் கொண்டவர்களாய் அவரை அலட்சியம் செய்து கொண்டும், தங்கள் அவைகளில் அவரைப் பழித்துரைத்துக் கொண்டும், பொல்லாங்கு கூறிக்கொண்டும் இருந்தீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் கர்வங்கொண்டவர்களாக இராக்காலத்தில் (கூடி, குர் ஆனாகிய) அதனைப்பற்றி குறைகளைக் கூறி வந்தீர்கள்” (என்றும் அவர்களிடம் கூறப்படும்.)
Saheeh International
In arrogance regarding it, conversing by night, speaking evil.
(குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?
அப்துல் ஹமீது பாகவி
(நம்) வாக்கியத்தை அவர்கள் கவனிக்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்திய மூதாதைகளுக்கு வராதது ஏதும் இவர்களுக்கு வந்துவிட்டதா?
IFT
என்ன, இவர்கள் இந்த (இறை)வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது இவர்களின் பண்டைக்கால மூதாதையர்களிடம் ஒருபோதும் வந்திராத ஏதேனும் கருத்தையா இவர்களிடம் இது சமர்ப்பிக்கின்றது?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(குர் ஆனின்) வாக்கியத்தைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்தையவர்களான மூதாதையருக்கு வராதது ஏதும் அவர்களுக்கு வந்துவிட்டதா?
Saheeh International
Then have they not reflected over the word [i.e., the Qur’an], or has there come to them that which had not come to their forefathers?
அல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை; அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது ‘‘ அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது'' என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம் தூதர்) அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த சத்தியத்தையே வெறுக்கின்றனர்.
IFT
அல்லது ‘அவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது’ என்று கூறுகின்றார்களா? இல்லை, மாறாக அவர்களிடம் அவர் சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். சத்தியத்தை விரும்பாதவர்களாகவே அவர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது “அவருக்குப் பைத்தியமிருக்கின்றது” என்று அவர்கள் கூறுகின்றனரா? இல்லை (நம் தூதராகிய) அவர் அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார், இன்னும், அவர்களில் பெரும்பாலோர் அந்தச் சத்தியத்தை வெறுக்கின்றவர்கள்.
Saheeh International
Or do they say, "In him is madness"? Rather, he brought them the truth, but most of them, to the truth, are averse.
இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை - குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை - குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர்.
IFT
மேலும், சத்தியம் அவர்களின் மன இச்சைகளைப் பின்பற்றிச் செல்லுமாயின் வானங்கள், பூமி மற்றும் அவற்றில் வாழும் அனைத்தின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும் இல்லை, மாறாக அவர்களுக்கே உரிய நல்லுரையை அவர்களிடம் நாம் கொண்டு வந்திருக்கின்றோம்; அவர்களோ தங்களுக்கே உரிய நல்லுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (இச்) சத்தியம் அவர்களுடைய அனேக இச்சைகளைப் பின்பற்றுவதென்றால், வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர் கெட்டுவிடும், மாறாக அவர்களுடைய நல்லுபதேசத்தை (குர் ஆனை) அவர்களுக்கு நாம் கொடுத்தோம், ஆனாலும் அவர்கள், தங்களுடைய நல்லுபதேசத்தை (குர் ஆனை)ப் புறக்கணிக்கக் கூடியவர்கள் (ஆக இருக்கின்றனர்.)
Saheeh International
But if the Truth [i.e., Allah] had followed their inclinations, the heavens and the earth and whoever is in them would have been ruined. Rather, We have brought them their message, but they, from their message, are turning away.
அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது - இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது, நீர் அவர்களிடம் ஒரு கூலியை கேட்கிறீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உமது இறைவன் (உமக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாகும். அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன் ஆவான்.
IFT
அல்லது நீர் அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்கின்றீரா, என்ன? உமக்கு உம் இறைவன் வழங்கியதே மிகச் சிறந்ததாகும். மேலும், வாழ்வாதாரம் வழங்குபவர்களில் எல்லாம் அவன் மிகச் சிறந்தவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது அவர்களிடம் நீர் கூலியைக் கேட்கின்றீரா? (இல்லை, ஏனெனில்) உமதிரட்சகனின் கூலியே மிக்க மேலானது, அவனோ கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்.
Saheeh International
Or do you, [O Muhammad], ask them for payment? But the reward of your Lord is best, and He is the best of providers.
وَلَوْ رَحِمْنٰهُمْஅவர்கள் மீது நாம் கருணை புரிந்தால்وَكَشَفْنَاஇன்னும் நாம் நீக்கி விட்டால்مَا بِهِمْஅவர்களுக்குள்ளمِّنْ ضُرٍّதீங்கைلَّـلَجُّوْاபிடிவாதம் பிடித்திருப்பார்கள்فِىْ طُغْيَانِهِمْதங்களது வரம்பு மீறுவதில்தான்يَعْمَهُوْنَஅவர்கள் தடுமாறியவர்களாக
வ லவ் ரஹிம்னாஹும் வ கஷFப்னா மா Bபிஹிம் மின் ளுர்ரில் லலஜ்ஜூ Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
முஹம்மது ஜான்
ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே மூழ்கித் தட்டழிகின்றனர்.
IFT
இவர்களுக்கு நாம் கருணை புரிவோமாயின், மேலும் (இன்று) இவர்களுக்கு நேர்ந்துள்ள துன்பத்தை நாம் அகற்றி விடுவோமாயின், அவர்கள் தங்களுடைய வரம்பு மீறிய நடத்தையில், முற்றிலும் மூழ்கிவிடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவர்கள் மீது அருளும் செய்து அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை நாம் நீக்கி விடுவோமானாலும், அவர்கள் தங்களுடைய அழிச்சாட்டியத்திலேயே தட்டழிகிறவர்களாக நிலைத்து விடுகின்றனர்.
Saheeh International
And even if We gave them mercy and removed what was upon them of affliction, they would persist in their transgression, wandering blindly.
وَلَقَدْதிட்டவட்டமாகاَخَذْنٰهُمْஅவர்களை நாம் பிடித்தோம்بِالْعَذَابِவேதனையைக் கொண்டுفَمَا اسْتَكَانُوْاஅவர்கள் பணியவில்லைلِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குوَمَا يَتَضَرَّعُوْنَஇன்னும் மன்றாடவும் இல்லை
திடனாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை; தாழ்ந்து பிரார்த்திக்கவுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை.
IFT
(இவர்களின் நிலைமை எப்படிப்பட்டதெனில்) நாம் இவர்களைத் துன்பத்திற் குள்ளாக்கினோம்; அவ்வாறிருந்தும் அவர்கள் தம் இறைவனின் திருமுன் சிரம் சாய்க்கவோ பணிவை மேற்கொள்ளவோ இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக, நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்தும் கொண்டோம்; ஆனால் (அதன் மூலம்) அவர்கள் தங்கள் இரட்சகனுக்கு அடிபணியவுமில்லை; அவர்கள் (அவனிடம்) தாழ்ந்து பிரார்த்தனை செய்யவுமில்லை.
Saheeh International
And We had gripped them with suffering [as a warning], but they did not yield to their Lord, nor did they humbly supplicate, [and will continue thus]
எதுவரையிலெனின், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விடுவோமானால், அவர்கள் அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மீது கடினமான வேதனையின் ஒரு வாயிலைத் திறந்து விட்டாலோ அவர்கள் திடுக்கிட்டுத் தங்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர்.
IFT
இறுதியில், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விட்டாலோ உடனே அவர்கள் எல்லாவித நன்மைகளை விட்டும் நிராசை அடைந்துவிடுவர் (என்பதை நீர் காண்பீர்!)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முடிவாக, அவர்கள் மீது கடினமான வேதனையுடைய ஒரு வாயிலை நாம் திறந்து விடுவோமானால், அப்போது அவர்கள் அதில் நிராசையானவர்களாக ஆகிவிடுகின்றனர்.
Saheeh International
Until when We have opened before them a door of severe punishment, immediately they will be therein in despair.
இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களுக்குச் செவி, பார்வை, உள்ளம் ஆகியவற்றைக் கொடுத்தவன். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
IFT
அந்த அல்லாஹ்தானே உங்களுக்கு கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வேண்டிய ஆற்றல்களையும், சிந்திப்பதற்கு இதயத்தையும் வழங்கியிருக்கின்றான். ஆயினும், மிகக் குறைவாகவே நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் எத்தகையவனென்றால் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் உண்டாக்கினான், (இவ்வாறிருந்தும் அவனுக்கு) நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
Saheeh International
And it is He who produced for you hearing and vision and hearts [i.e., intellect]; little are you grateful.
வ ஹுவல் லதீ தர அகும் Fபில் அர்ளி வ இலய்ஹி துஹ்ஷரூன்
முஹம்மது ஜான்
மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான்; இன்னும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசிக்க வைத்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
IFT
மேலும், அவன்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். மேலும், அவன் பக்கமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் எத்தகையவனென்றால், உங்களைப் பூமியில் (பல பகுதிகளிலும் பல்கிப் பெருக) பரவச் செய்திருக்கின்றான், மேலும் (மரணத்திற்குப் பிறகு) அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
Saheeh International
And it is He who has multiplied you throughout the earth, and to Him you will be gathered.
அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
அவனே வாழ்வளிக்கின்றான்; மரணமடையச் செய்கின்றான். மேலும், இரவுபகல் மாறி மாறி வருவது அவன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இவையெல்லாம் உங்கள் அறிவுக்குப் புலப்படவில்லையா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், அவனே உயிர் கொடுக்கின்றான், இன்னும் அவனே மரணிக்கச்செய்கின்றான், மற்றும் இரவு, பகல் மாறி மாறி வருவதும் அவனுக்கு உரியது, (இவற்றையெல்லாம் தொடக்கத்திலிருந்து செய்து வரும் அவனுக்கு உங்களை உயிர் கொடுத்து எழுப்புவது கடினம் அல்ல என்பதை) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?
Saheeh International
And it is He who gives life and causes death, and His is the alternation of the night and the day. Then will you not reason?
“நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அதாவது:) ‘‘ நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா?'' என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர்.
IFT
இவர்கள் சொல்கிறார்கள்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகவும் உக்கிய எலும்புகளாகவும் ஆன பின்னர் மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படுவோமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதாவது!) “நாம் இறந்து மண்ணாகவும், எலும்பாகவும் ஆகிவிட்டாலுமா நிச்சயமாக, நாங்கள் மீண்டும் எழுப்பப் படுபவர்கள்,?” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "When we have died and become dust and bones, are we indeed to be resurrected?
லகத் வு'இத்னா னஹ்னு வ ஆBபா'உனா ஹாதா மின் கBப்லு இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
“மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” (என்றும் கூறுகின்றனர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘ நிச்சயமாக நாமும் நம் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்.)
IFT
இத்தகைய எச்சரிக்கைகளை நாங்களும் நிறையக் கேள்விப்படுகின்றோம். இதற்கு முன்னர் எங்கள் முன்னோர்களும் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். இவை தொன்மையான கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி “நாமும் இதற்கு முன்னர் நம்முடைய மூதாதையர்களும் இதனையே திட்டமாக வாக்களிக்கப்பட்டிருக்கிறோம், (ஆனால்) இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகளேயன்றி (வேறு) இல்லை (என்றும் கூறுகின்றனர்.)
Saheeh International
We have been promised this, we and our forefathers, before; this is not but legends of the former peoples."
سَيَقُوْلُوْنَகூறுவார்கள்لِلّٰهِؕஅல்லாஹ்விற்கேقُلْகூறுவீராகاَفَلَا تَذَكَّرُوْنَநீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா
ஸ-யகூலூன லில்லாஹ்; குல் அFபலா ததக்க்கரூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் இதைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சிப் பெறமாட்டீர்களா? என்று கேட்பீராக.
IFT
திண்ணமாக, அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள், “அல்லாஹ்வுக்கு உரியவர்கள்” என்று! பிறகு, “நீங்கள் ஏன் உணர்ந்து கொள்வதில்லை” என்று கேளுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “அல்லாஹ்வுக்கே உரியன” என்று கூறுவார்கள், “(அவ்வாறாயின் அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்பதை) நீங்கள் நினைத்துப்பார்க்க மாட்டீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
They will say, "To Allah." Say, "Then will you not remember?"
سَيَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்لِلّٰهِؕஅல்லாஹ்விற்கேقُلْநீர் கூறுவீராகاَفَلَا تَتَّقُوْنَஆகவே நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
ஸ யகூலூன லில்லாஹ்; குல் அFபலா தத்தகூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக.
IFT
இவர்கள் திண்ணமாக பதில் கூறுவார்கள், “அல்லாஹ்தான்” என்று! கேளுங்கள்: “பிறகு ஏன் நீங்கள் அஞ்சுவதில்லை?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் (அவை யாவும்) “அல்லாஹ்வுக்கே உரியன” என்று கூறுவார்கள், “(அவ்வாறாயின்) நீங்கள் (அவனுடைய தண்டனையை) பயப்பட மாட்டீர்களா?” என்று நீர் கூறுவீராக.
Saheeh International
They will say, "[They belong] to Allah." Say, "Then will you not fear Him?"
“எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக் கூறுங்கள்)'' எனக் கேட்பீராக.
IFT
மேலும், அவர்களிடம் கேளுங்கள்: “உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். ஒவ்வொரு பொருளின்மீதுள்ள அதிகாரமும் யாருடைய கைவசம் இருக்கின்றது என்றும் மேலும், அனைவருக்கும் அபயம் அளிப்பவனும் எவராலும் அபயம் அளிக்கப்பட முடியாதவனும் யார் என்றும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு பொருளின் ஆட்சியும் எவன் கைவசம் இருக்கின்றது? அவன் பாதுகாக்கிறான், (அவனது தண்டனையிலிருந்து தப்ப) அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே – அவன் யார்? என நீஙகள் அறிந்தவர்களாக இருப்பின் (கூறுங்கள்) என்று கேட்பீராக!
Saheeh International
Say, "In whose hand is the realm of all things - and He protects while none can protect against Him - if you should know?"
அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் (எல்லா அதிகாரங்களும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனதான்'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?'' என்று கேட்பீராக.
IFT
திண்ணமாக, அவர்கள் கூறுவார்கள்: “இவை அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” பிறகு, கேளுங்கள்: “எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “(சகல அதிகாரமும்) அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவார்கள்” (அவ்வாறாயின்) நீங்கள் எங்கிருந்து சூனியமாக்கப்படுகிறீர்கள் (எவ்வாறு மதிமயக்கப்படுகிறீர்கள்) என்று கேட்பீராக!
Saheeh International
They will say, "[All belongs] to Allah." Say, "Then how are you deluded?"
مَا اتَّخَذَஏற்படுத்திக் கொள்ளவில்லைاللّٰهُஅல்லாஹ்مِنْ وَّلَدٍஎந்த ஒரு குழந்தையையும்وَّمَا كَانَஇருக்கவில்லைمَعَهٗஅவனுடன்مِنْ اِلٰهٍஎந்தக் கடவுளும்اِذًاஅப்படி இருந்திருந்தால்لَّذَهَبَகொண்டு சென்று விடுவார்கள்كُلُّஒவ்வொருاِلٰهٍۢகடவுளும்بِمَا خَلَقَஇன்னும் அவர்களில் சிலர் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள்وَلَعَلَا بَعْضُهُمْதான் படைத்ததைعَلٰى بَعْضٍؕசிலர் மீதுسُبْحٰنَமகா பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّا يَصِفُوْنَۙஅவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு
அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
IFT
அல்லாஹ் யாரையும் தன் பிள்ளைகளாய் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளரும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும், ஒருவர் மற்றவரைவிட மேலோங்க முனைந்து கொண்டிருப்பர். மிகத்தூய்மையானவனாக இருக்கின்றான் அல்லாஹ், இவர்கள் புனைந்துரைக்கும் தன்மைகளைவிட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் எந்த ஒரு மகவையும் (தனக்குச் சந்ததியாக) எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடன் (வணக்கத்திற்குரிய வேறு எந்த) நாயனும் இல்லை; (அவர்களின் கற்பனையின்படி) அவ்வாறிருப்பின் ஒவொரு நாயனும் தான் படைத்ததைக் கொண்டு சென்றுவிடுவர்; இன்னும் நம்மில் சிலர் சிலரை (மிகைத்து) உயர்ந்தும் விடுவர். இந்நிராகரிப்பவர்கள் வர்ணிப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
Saheeh International
Allah has not taken any son, nor has there ever been with Him any deity. [If there had been], then each deity would have taken what it created, and some of them would have [sought to] overcome others. Exalted is Allah above what they describe [concerning Him].
قُلْகூறுவீராகرَّبِّஎன் இறைவாاِمَّا تُرِيَنِّىْநீ எனக்கு காண்பித்தால்مَا يُوْعَدُوْنَۙஅவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை
குர் ரBப்Bபி இம்ம்மா துரியன்னீ மா யூ'அதூன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்:
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின்,
IFT
(நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! என் இரட்சகனே! எதை அவர்கள் வாக்களிக்கப்பட்டார்களோ, அ(வ்வேதனையான)தை எனக்கு நீ காண்பிப்பதாயின்-
Saheeh International
Say, [O Muhammad], "My Lord, if You should show me that which they are promised,
“இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!
அப்துல் ஹமீது பாகவி
என் இறைவனே! ஷைத்தான்கள் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்'' என்று (நபியே!) பிரார்த்தித்துக் கொண்டிருப்பீராக.
IFT
மேலும், என் இறைவனே! அவர்கள் என்னருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகனே! இன்னும் அவை (என் காரியங்களில்) பிரசன்னமாகாதிருக்கவும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” (என்றும் நபியே! நீர் பிரார்த்தித்துக் கூறுவீராக!
Saheeh International
And I seek refuge in You, my Lord, lest they be present with me."
ஹத்தா இதா ஜா'அ அஹத ஹுமுல் மவ்து கால ரBப்Bபிர் ஜி'ஊன்
முஹம்மது ஜான்
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) ‘‘ என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு.
IFT
(இம்மக்கள் தம் செயல்களைவிட்டு விலகிக் கொள்ளவே மாட்டார்கள்;) இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்துவிடுமானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முடிவாக, அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால் (அவன் தன் இரட்சகனிடம்) “என் இரட்சகனே! என்னை (உலகத்திற்கு)த் திருப்பி அனுப்பிவிடுவாயாக” என்று கூறுவான்.
Saheeh International
[For such is the state of the disbelievers] until, when death comes to one of them, he says, "My Lord, send me back
“நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்'' என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (தவிர வேறில்லை). அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை அதில் தங்கிவிடுவார்கள்.
IFT
அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று கூறத் தொடங்குவான் அவ்வாறு ஒருபோதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள்தாம்! (இறந்து போகும்) இவர்கள் அனைவருக்கும் பின்னால், ‘பர்ஸக்’* திரையாக இருக்கின்றது; இவர்கள் மீண்டும் உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரையில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உலகில் நான் விட்டு வந்ததில், (இனி) நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்.) அவ்வாறன்று! நிச்சயமாக அது – அவன் அதைக் கூறக்கூடிய (வெறும்) ஒரு வார்த்தையாகும், இன்னும், அவர்கள் (மறுமைக்காக) எழுப்பப்படும் நாள்வரை அவர்கள் முன்னே தடுப்பு இருக்கிறது (அதனால் அவர்கள் உலகுக்குத் திரும்பிவர ஆற்றல் பெறமாட்டார்கள்).
Saheeh International
That I might do righteousness in that which I left behind." No! It is only a word he is saying; and behind them is a barrier until the Day they are resurrected.
சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்.)
IFT
பிறகு, சூர் (எக்காளம்) ஊதப்பட்டதும் அவர்களிடையே எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவும் மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே சூர் (குழல்), ஊதப்பட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்தங்கள் (பயனளிப்பது) இல்லை, ஒருவரின் செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார்கள், (ஒவ்வொருவருக்கும் அவரவர் கவலையே பெரிதாக இருக்கும்).
Saheeh International
So when the Horn is blown, no relationship will there be among them that Day, nor will they ask about one another.
ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
IFT
எவர்களுடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ அவர்கள் தங்களைத் தாங்களே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டவர்களாவர். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாயிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனம் குறைந்து இருக்கின்றனவோ, அவர்கள் தங்களுக்குத் தாங்களே நஷ்டத்தையுண்டு பண்ணிக் கொண்டவர்கள் (அவர்கள்) நரகத்தில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
But those whose scales are light - those are the ones who have lost their souls, [being] in Hell, abiding eternally.
“எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது; நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள்.
IFT
அதற்கு அவர்கள் கூறுவர்: “எங்கள் இறைவனே! எங்களின் துர்ப்பாக்கியம் எங்களை அமுக்கிவிட்டிருந்தது. உண்மையிலேயே நாங்கள் வழிதவறிய மக்களாகவே இருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “எங்கள் இரட்சகனே! எங்களுடைய துர்பாக்கியம் எங்கள் மீது மிகைத்துவிட்டது, (ஆதலால்) நாங்கள் வழி தவறிவிட்ட சமூகத்தவராகவும் இருந்துவிட்டோம்” என்று கூறுவார்கள்.
Saheeh International
They will say, "Our Lord, our wretchedness overcame us, and we were a people astray.
ரBப்Bபனா அக்ரிஜ்னா மின்ஹா Fப இன் 'உத்னா Fப இன்னா ளாலிமூன்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக! திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. மீண்டும் நாங்கள் (பாவத்திற்கு) திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' (என்பார்கள்).
IFT
எங்கள் இறைவனே! (இப்பொழுது) எங்களை இதிலிருந்து வெளியேற்றி விடு; நாங்கள் மீண்டும் (இவ்வாறு) தவறு செய்தால் நிச்சயம் நாங்கள் கொடுமைக்காரர்களாவோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி) “எங்கள் இரட்சகனே! இந்த நரகத்)திலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! பின்னர் நாங்கள் (திரும்பவும் பாவம் செய்ய) மீண்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்” (என்பார்கள்.)
Saheeh International
Our Lord, remove us from it, and if we were to return [to evil], we would indeed be wrongdoers."
நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நம் அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிலெல்லாம் நீ மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
IFT
என் அடியார்களில் சிலர் “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; எனவே, எங்களை நீ மன்னித்து எங்களுக்கு கருணை புரிவாயாக! கருணை புரிவோரிலெல்லாம் நீயே சிறந்த கருணையாளன்” என்று இறைஞ்சிக்கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் “எங்கள் இரட்சகனே! நாங்கள் (உன்னை) விசுவாசம் கொண்டோம்; ஆகவே, நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவாயாக!; மேலும், எங்களுக்குக் கிருபை செய்வாயாக! கிருபை செய்வோரிலெல்லாம் நீயே மிக்க மேலானவன்” என்று பிரார்த்தித்துக் கூறுபவர்களாக இருந்தனர்.
Saheeh International
Indeed, there was a party of My servants who said, 'Our Lord, we have believed, so forgive us and have mercy upon us, and You are the best of the merciful.'
அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எது வரையெனின் என் நினைவே உங்களுக்கு மறக்கலாயிற்று; இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆனால் நீங்களோ என் நினைவை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.
IFT
அப்போது நீங்கள் அவர்களை ஏளனம் செய்து கொண்டிருந்தீர்கள். எதுவரையெனில், அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பகைமை, நான் ஒருவன் இருக்கின்றேன் என்பதையே உங்களை மறக்கச் செய்து விட்டது. மேலும், நீங்கள் அவர்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது என்னை நினைவு கூறுவதை விட்டும் உங்களை அவர்கள் மறக்கச் செய்யும் வரை, அவர்களை நீங்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள்; இன்னும், நீங்கள் அவர்கள் பற்றி சிரித்துக் கொண்டுமிருந்தீர்கள்.
Saheeh International
But you took them in mockery to the point that they made you forget My remembrance, and you used to laugh at them.
நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!”
அப்துல் ஹமீது பாகவி
(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.''
IFT
அவர்கள் சகித்துக் கொண்டதற்காக இன்று நான் இந்தக் கூலியை அளிக்கின்றேன். அதாவது, அவர்களே வெற்றி பெற்றவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(உங்கள் பரிகாசத்தைப் பற்றிக் கவலைகொள்ளாது) அவர்கள் பொறுமையாக இருந்ததன் காரணமாக, இன்றயைத்தினம் நிச்சயமாக நான் அவர்களுக்கு (நற்)கூலி கொடுத்துவிட்டேன், நிச்சயமாக அவர்கள்தாம் வெற்றி பெற்றோர்” (என்றும் அல்லாஹ் கூறுவான்.)
Saheeh International
Indeed, I have rewarded them this Day for their patient endurance - that they are the attainers [of success]."
اَفَحَسِبْتُمْஎண்ணிக் கொண்டீர்களாاَنَّمَا خَلَقْنٰكُمْநாம் உங்களைப் படைத்ததெல்லாம்عَبَثًاவீணாகத்தான்وَّاَنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِلَيْنَاநம்மிடம்لَا تُرْجَعُوْنَதிரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள்
அFபஹஸிBப்தும் அன்னமா கலக்னாகும் 'அBபத(ன்)வ் வ அன்னகும் இலய்னா லா துர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.)
அப்துல் ஹமீது பாகவி
(‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.)
IFT
நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா, என்ன?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் மீட்டப்படமாட்டீர்கள் என்றும் நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?” (என்று கூறுவான்.)
Saheeh International
Then did you think that We created you uselessly and that to Us you would not be returned?"
ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே!
IFT
மிக உயர்ந்தவனாவான், உண்மையான அரசனாகிய அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, சங்கைமிகு அர்ஷின் உரிமையாளன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை, (அவன்) கண்ணியத்திற்குரிய (அழகான தோற்றமுடைய) அர்ஷின் இரட்சகன்.
Saheeh International
So exalted is Allah, the Sovereign, the Truth; there is no deity except Him, Lord of the Noble Throne.
وَمَنْயார்يَّدْعُஅழைப்பாரோمَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًاஒரு கடவுளைاٰخَرَۙவேறுلَا بُرْهَانَஅறவே ஆதாரம் இல்லாமல் இருக்கلَهٗஅதற்குبِهٖۙஅவரிடம்فَاِنَّمَا حِسَابُهٗஅவருடைய விசாரணையெல்லாம்عِنْدَ رَبِّهٖؕஅவரது இறைவனிடம்தான்اِنَّهٗநிச்சயமாகلَا يُفْلِحُவெற்றி பெறமாட்டார்கள்الْـكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்
வ மய் யத்'உ ம'அல்லாஹி இலாஹன் ஆகர லா Bபுர்ஹான லஹூ Bபிஹீ Fப இன்ன மா ஹிஸாBபுஹூ 'இன்த ரBப்Bபிஹ்; இன்னஹூ லா யுFப்லிஹுல் காFபிரூன்
முஹம்மது ஜான்
மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை; அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது; நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு ஓர் இறைவனை அழைக்கிறானோ அவனிடத்தில் அதற்குரிய ஓர் அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிப்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
IFT
யாரேனும் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைத்தால் அது பற்றி அவனிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடமே உள்ளது! இத்தகைய நிராகரிப்பாளர்கள், ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் - (நபியே!) எவன் - அல்லாஹ்வுடன் வேறு நாயனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கிறானோ அவனிடத்தில் அதைப்பற்றி யாதொரு சான்றும் இல்லை. அவனுடைய கணக்கெல்லாம் அவனுடைய இரட்சகனிடத்தில்தான் உண்டு, நிச்சயமாக நிராகரிக்கக்கூடியவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.
Saheeh International
And whoever invokes besides Allah another deity for which he has no proof - then his account is only with his Lord. Indeed, the disbelievers will not succeed.