26. ஸூரத்துஷ்ஷுஃரா(கவிஞர்கள்)

மக்கீ, வசனங்கள்: 227

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
طٰسٓمّٓ ۟
طٰسٓمّٓ‏தா சீம் மீம்
தா-ஸீன்-மீம்
முஹம்மது ஜான்
தா, ஸீம், மீம்.
அப்துல் ஹமீது பாகவி
தா ஸீம் மீம்.
IFT
தாஸீம்மீம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தா ஸீம் மீம்.
Saheeh International
Ṭa, Seen, Meem.
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟
تِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்الْكِتٰبِவேதத்தின்الْمُبِيْنِ‏தெளிவான
தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
முஹம்மது ஜான்
இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
IFT
இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Saheeh International
These are the verses of the clear Book.
لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ اَلَّا یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟
لَعَلَّكَ بَاخِعٌநீர் அழித்துக் கொள்வீரோ!نَّـفْسَكَஉம்மையேاَلَّا يَكُوْنُوْاஅவர்கள் மாறாததால்مُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொள்பவர்களாக
ல'அல்லக Bபாகி'உன் னFப்ஸக அல்லா யகூனூ மு'மினீன்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்கள் (அல்லாஹ்வை) விசுவாசம் கொள்பவர்களாக இல்லாததின் காரணமாக (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர் போலும்!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் (உம்மை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர் போலும்!
IFT
(நபியே!) இவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை என்பதற்காக(க் கவலைப்பட்டு) உம்மையே நீர் மாய்த்துக் கொள்வீர் போன்றிருக்கின்றதே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்மை) விசுவாசங்கொள்பவர்களாக அவர்கள் இல்லாததன் காரணமாக(த் துக்கத்தால்) உம்மை நீரே மாய்த்துக் கொள்வீர் போலும்!
Saheeh International
Perhaps, [O Muhammad], you would kill yourself with grief that they will not be believers.
اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَیْهِمْ مِّنَ السَّمَآءِ اٰیَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِیْنَ ۟
اِنْ نَّشَاْநாம் நாடினால்نُنَزِّلْநாம் இறக்குவோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துاٰيَةًஒரு அத்தாட்சியைفَظَلَّتْஆகிவிடும்اَعْنَاقُهُمْஅவர்களது கழுத்துகள்لَهَاஅதற்குخٰضِعِيْنَ‏பணிந்தவையாக
இன் னஷா னுனZஜ்Zஜில் 'அலய்ஹிம் மினஸ் ஸமா'இ ஆயதன் Fபளல்லத் அஃனாகுஹும் லஹா காளி'ஈன்
முஹம்மது ஜான்
நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
IFT
நாம் நாடினால் விண்ணிலிருந்து ஒரு சான்றினை இவர்கள் மீது இறக்கி வைத்திருக்க முடியும். அதன் முன்னே இவர்களின் பிடரி பணிந்து விடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் நாடினால் வானத்திலிருந்து ஓர் அத்தாட்சியை அவர்கள்மீது இறக்கியிருப்போம், (அப்போது) அவர்களுடைய கழுத்துகள் அதற்கு(க்குனிந்து) பணிந்தவையாக ஆகிவிடும்.
Saheeh International
If We willed, We could send down to them from the sky a sign for which their necks would remain humbled.
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِیْنَ ۟
وَمَا يَاْتِيْهِمْஅவர்களிடம் வருவதில்லைمِّنْ ذِكْرٍஅறிவுரை எதுவும்مِّنَ الرَّحْمٰنِரஹ்மானிடமிருந்துمُحْدَثٍபுதிதாகاِلَّا كَانُوْاஅவர்கள் இருந்தே தவிரعَنْهُஅதைمُعْرِضِيْنَ‏புறக்கணிப்பவர்களாக
வமா யாதீஹிம் மின் திக்ரிம் மினர் ரஹ்மானி முஹ்ததின் இல்லா கானூ 'அன்ஹு முஃரிளீன்
முஹம்மது ஜான்
இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ரஹ்மானிடமிருந்து புதிதான ஒரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
IFT
கருணைமிக்க இறைவனிடமிருந்து புதிதாக எந்த ஓர் அறிவுரை இவர்களிடம் வந்தாலும் இவர்கள் அதனைப் புறக்கணித்துவிடுகின்றார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அர்ரஹ்மானிடமிருந்து புதிதான யாதொரு (நல்) உபதேசமும் – அதனை அவர்கள் (நிராகரித்துப்) புறக்கணிக்கிறவர்களாக இருந்தே தவிர-அவர்களிடம் வருவதில்லை.
Saheeh International
And no mention [i.e., revelation] comes to them anew from the Most Merciful except that they turn away from it.
فَقَدْ كَذَّبُوْا فَسَیَاْتِیْهِمْ اَنْۢبٰٓؤُا مَا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
فَقَدْதிட்டமாகكَذَّبُوْاஇவர்கள் பொய்ப்பித்தனர்فَسَيَاْتِيْهِمْஆகவே, அவர்களிடம் விரைவில் வரும்اَنْۢـبٰٓــؤُاசெய்திகள்مَاஎதுكَانُوْاஇருந்தனர்بِهٖஅதைيَسْتَهْزِءُوْنَ‏பரிகாசம் செய்பவர்களாக
Fபகத் கத்தBபூ Fபஸ யாதீஹிம் அம்Bபா'உ மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
முஹம்மது ஜான்
திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்.
IFT
இதோ இப்போதும் இவர்கள் பொய்யெனத் தூற்றிவிட்டிருக்கின்றார்கள். ஆனால், எதனை இவர்கள் கேலி செய்துகொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய உண்மைச் செய்திகள் விரைவில் இவர்களுக்கு(ப் பல்வேறு வழிகளின் மூலம்) தெரிந்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, வேதமாகிய இதனையும்) அவர்கள் திட்டமாகப் பொய்யாக்கினார்கள்; ஆகவே, அவர்கள் எதனைப் பரிகசித்துக் கொண்டிருந்தார்களோ அதன் (உண்மைச்) செய்திகள் அவர்களிடம் வந்துவிடும்.
Saheeh International
For they have already denied, but there will come to them the news of that which they used to ridicule.
اَوَلَمْ یَرَوْا اِلَی الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِیْمٍ ۟
اَوَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்க வேண்டாமா?اِلَىபக்கம்الْاَرْضِபூமியின்كَمْஎத்தனைاَنْۢبَتْنَاநாம் முளைக்க வைத்தோம்فِيْهَاஅதில்مِنْ كُلِّஎல்லாவற்றிலிருந்தும்زَوْجٍஜோடிகள்كَرِيْمٍ‏அழகிய
அவ லம் யரவ் இலல் அர்ளி கம் அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி Zஜவ்ஜின் கரீம்
முஹம்மது ஜான்
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? - அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கிறோம்.
IFT
இவர்கள் பூமியின் மீது பார்வை செலுத்தவில்லையா என்ன? எத்துணை அதிக அளவில் எல்லாவிதமான உயர்தர தாவரங்களை நாம் அதில் முளைக்கச் செய்திருக்கின்றோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியின்பால் அவர்கள் பார்க்கவில்லையா? (அதில்) மேலான ஒவ்வொரு வகையிலிருந்தும் (பயன்தரக்கூடிய) எவ்வளவோ (புற்பூண்டுகளை ஜதை ஜதையாகவே) நாம் முளைப்பித்திருக்கின்றோம்.
Saheeh International
Did they not look at the earth - how much We have produced therein from every noble kind?
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاٰيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَّمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
IFT
திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கிறது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கின்றது, (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை.
Saheeh International
Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
முஹம்மது ஜான்
அன்றியும் (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் மிகைத்தவன்; மிக்க கிருபை உடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவன்,மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும், பெருங்கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உம்முடைய இரட்சகன் - அவனே நிச்சயமாக (யாவரையும்) மிகைத்தோன், மிக்க கிருபையுடையோன்.
Saheeh International
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
وَاِذْ نَادٰی رَبُّكَ مُوْسٰۤی اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۙ
وَاِذْ نَادٰىஅந்நேரத்தை நினைவு கூருங்கள்! / அழைத்தான்رَبُّكَஉமது இறைவன்مُوْسٰۤىமூசாவைاَنِ ائْتِநீர் வருவீராக!الْقَوْمَமக்களிடம்الظّٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்கள்
வ இத் னாதா ரBப்Bபுக மூஸா அனி'-தில் கவ்மள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
உம் இறைவன் மூஸாவிடம் “அநியாயக்கார சமூகத்திடம் செல்க” என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக.)
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவன் மூஸாவை அழைத்து ‘‘ நீர் அநியாயக்காரர்களான ஃபிர்அவ்னுடைய மக்களிடம் செல்வீராக'' எனக் கூறியதை நீர் கவனித்துப் பார்ப்பீராக.
IFT
அந்த நிகழ்ச்சியை இவர்களுக்கு நீர் கூறும்: “உம்முடைய இறைவன் மூஸாவை அழைத்துக் கூறினான். அக்கிரமம் புரிந்த சமூகத்தாரிடம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) உம்முடைய இரட்சகன் “நீர் அநியாயக்கார சமூகத்தாரிடம் செல்வீராக! “என(க் கட்டளையிட்டு) மூஸாவை அழைத்ததை (நீர் நினைவு கூர்வீராக)
Saheeh International
And [mention] when your Lord called Moses, [saying], "Go to the wrongdoing people -
قَوْمَ فِرْعَوْنَ ؕ اَلَا یَتَّقُوْنَ ۟
قَوْمَமக்களிடம்فِرْعَوْنَ‌ؕஃபிர்அவ்னின்اَلَا يَتَّقُوْنَ‌‏அவர்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா!
கவ்ம Fபிர்'அவ்ன்; அலா யத்தகூன்
முஹம்மது ஜான்
“ஃபிர்அவ்னின் சமூகத்தாரிடம்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டார்களா?
அப்துல் ஹமீது பாகவி
‘‘ அவர்கள் (எனக்குப்) பயப்பட மாட்டார்களா?'' (என்று உமது இறைவன் கேட்டான்.)
IFT
ஃபிர்அவ்னுடைய சமூகத்தாரிடம் நீர் செல்லும். அவர்கள் அஞ்சுவதில்லையா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஃபிர் அவ்னுடைய சமூகத்தாரிடம் (செல்வீராக!) அவர்கள் (அல்லாஹ்வுக்கு) பயப்பட மாட்டார்களா?
Saheeh International
The people of Pharaoh. Will they not fear Allah?"
قَالَ رَبِّ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟ؕ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اَنْ يُّكَذِّبُوْنِؕ‏அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று
கால ரBப்Bபி இன்னீ அகாFபு அய் யுகத்திBபூன்
முஹம்மது ஜான்
(இதற்கு அவர்) “என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவர் ‘‘ என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' என்றார்.
IFT
அதற்கு அவர் பணிந்து கூறினார்: “என் இறைவனே! என்னை அவர்கள் பொய்யன் என்று தூற்றிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்” என் இரட்சகனே! அவர்கள் என்னைப் பொய்ப்படுத்தி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "My Lord, indeed I fear that they will deny me
وَیَضِیْقُ صَدْرِیْ وَلَا یَنْطَلِقُ لِسَانِیْ فَاَرْسِلْ اِلٰی هٰرُوْنَ ۟
وَيَضِيْقُஇன்னும் நெருக்கடிக்குள்ளாகிவிடும்صَدْرِىْஎன் நெஞ்சம்وَلَا يَنْطَلِقُஇன்னும் பேசாதுلِسَانِىْஎன் நாவுفَاَرْسِلْஆகவே, நீ அனுப்புاِلٰى هٰرُوْنَ‏ஹாரூனுக்கு
வ யளீகு ஸத்ரீ வலா யன்தலிகு லிஸானீ Fப அர்ஸில் இலா ஹாரூன்
முஹம்மது ஜான்
“என் நெஞ்சு நெருக்கடிக்குள்ளாகிவிடும். (தெளிவாய் பேசமுடியும் படி) என் நாவும் அசையாது; ஆகவே (என்னுடன்) ஹாரூனையும் அனுப்புவாயாக!
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக!
IFT
என் நெஞ்சம் இடுங்கிவிடுகின்றது; என் நாவுக்கு சரளமாகப் பேச வருவதில்லை. எனவே, நீ ஹாரூனுக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு பொய்ப்படுத்தினால்) என் மனம் நெருக்கடிக்குள்ளாகியும் விடும்; என் நாவும் (சரியாக) பேசாது; ஆதலால் (எனக்கு வஹீ அனுப்பியது போன்று) ஹாரூனுக்கு (வஹீ) அனுப்புவாயாக!
Saheeh International
And that my breast will tighten and my tongue will not be fluent, so send for Aaron.
وَلَهُمْ عَلَیَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ یَّقْتُلُوْنِ ۟ۚۖ
وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَلَىَّஎன் மீதுذَنْۢبٌஒருகுற்றம்இருக்கிறதுفَاَخَافُஆகவே, நான் பயப்படுகிறேன்اَنْ يَّقْتُلُوْنِ‌ۚ‏அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று
வ லஹும் 'அலய்ய தம்Bபுன் Fப அகாFபு அய் யக்துலூன்
முஹம்மது ஜான்
“மேலும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது; எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று பயப்படுகிறேன்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
மேலும், என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' (என்றும் கூறினார்).
IFT
மேலும், என்னைப் பற்றி அவர்களிடம் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், அவர்களுக்கு என்மீது ஒரு (கொலைக்) குற்றச்சாட்டுதலும் உண்டு; அதற்காக அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்றும் நான் பயப்படுகிறேன்” (என்று கூறினார்).
Saheeh International
And they have upon me a [claim due to] sin, so I fear that they will kill me."
قَالَ كَلَّا ۚ فَاذْهَبَا بِاٰیٰتِنَاۤ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்كَلَّا‌ ۚஅவ்வாறல்ல!فَاذْهَبَاநீங்கள் இருவரும் செல்லுங்கள்بِاٰيٰتِنَآ‌எனது அத்தாட்சிகளை கொண்டுاِنَّا مَعَكُمْநிச்சயமாக நாம் உங்களுடன்مُّسْتَمِعُوْنَ‏செவியேற்பவர்களாக
கால கல்லா Fபத்ஹBபா Bபி ஆயாதினா இன்னா ம'அகும் முஸ்தமி'ஊன்
முஹம்மது ஜான்
(அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்” எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்.
IFT
இறைவன் கூறினான்: “அப்படியல்ல! நீங்கள் இருவரும் என்னுடைய சான்றுகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நாம் உங்களுடன் அனைத்தையும் செவியுற்றுக் கொண்டிருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “அவ்வாறன்று நீங்களிருவரும் நம்முடைய அத்தாட்சிகளை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்; நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்கக் கூடியவர்களாக இருப்போம்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Allah] said, "No. Go both of you with Our signs; indeed, We are with you, listening.
فَاْتِیَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
فَاْتِيَاஆகவே, நீங்கள் இருவரும் வாருங்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்فَقُوْلَاۤநீங்கள் இருவரும் கூறுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்رَسُوْلُதூதராக இருக்கிறோம்رَبِّஇறைவனுடையالْعٰلَمِيْنَۙ‏அகிலங்களின்
Fபாதியா Fபிர்'அவ்ன Fபகூலா இன்னா ரஸூலு ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: “நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘‘ நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனின் தூதர்களாவோம்.''
IFT
இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். மேலும், அவனிடம் கூறுங்கள்: அகிலங்களின் இறைவன் எங்களை அனுப்பியிருக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே நீங்களிருவரும் ஃபிர் அவ்னிடம் சென்று நிச்சயமாக நாங்கள் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வின் தூதராவோம் என்று நீங்களிருவரும் கூறுங்கள்.” (அதன் காரணமாக)
Saheeh International
Go to Pharaoh and say, 'We are the messengers of the Lord of the worlds,
اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اَنْ اَرْسِلْநிச்சயமாக அனுப்பிவிடுمَعَنَاஎங்களுடன்بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏இஸ்ரவேலர்களை
அன் அர்ஸில் ம'அனா Bபனீ இஸ்ரா'ஈல்
முஹம்மது ஜான்
“எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு!” (எனவும் கூறுங்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்.)
IFT
இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நீ எங்களுடன் அனுப்பிவிட வேண்டுமென்பதற்காக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இஸ்ராயீலின் மக்களை நீ எங்களுடன் அனுப்பிவிடு” (என்றும் கூறுங்கள்).
Saheeh International
[Commanded to say], "Send with us the Children of Israel."'"
قَالَ اَلَمْ نُرَبِّكَ فِیْنَا وَلِیْدًا وَّلَبِثْتَ فِیْنَا مِنْ عُمُرِكَ سِنِیْنَ ۟ۙ
قَالَஅவன் கூறினான்اَلَمْ نُرَبِّكَநாம் உம்மை வளர்க்கவில்லையா?فِيْنَاஎங்களில்وَلِيْدًاகுழந்தையாகوَّلَبِثْتَஇன்னும் தங்கியிருந்தாய்فِيْنَاஎங்களுடன்مِنْ عُمُرِكَஉமது வாழ்க்கையில்سِنِيْنَۙ‏ஆண்டுகள்
கால அலம் னுரBப்Bபிக Fபீனா வலீத(ன்)வ் வ லBபித்த Fபீனா மின் 'உமுரிக ஸினீன்
முஹம்மது ஜான்
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்.
IFT
அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீ குழந்தையாய் இருந்தபோது உன்னை நாம் எம்மிடத்திலே வைத்து வளர்க்கவில்லையா? மேலும், உன் வாழ்நாளில் பல ஆண்டுகள் நீ எம்மிடம் கழித்திருக்கின்றாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறே ஃபிர் அவ்னிடம் சென்று அவ்விருவரும் கூறவே,) அதற்கவன் (மூஸாவிடம்), குழந்தையாக உம்மை (எடுத்து) எங்களுக்கு மத்தியில் நாங்கள் வளர்க்கவில்லையா? நீர் உம் வயதில் அநேக ஆண்டுகள் நம்மிடத்தில் தங்கியும் இருந்தீர்” என்று அவன் கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "Did we not raise you among us as a child, and you remained among us for years of your life?
وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِیْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
وَفَعَلْتَஇன்னும் நீ செய்துவிட்டாய்فَعْلَتَكَஉனது செயலைالَّتِىْஎதுفَعَلْتَசெய்தாய்وَاَنْتَநீயோ இருக்கிறாய்مِنَ الْكٰفِرِيْنَ‏நன்றியறியாதவர்களில்
வ Fப'அல்த Fபஃலதகல் லதீ Fப'அல்த வ அன்த மினல் காFபிரீன்
முஹம்மது ஜான்
“ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்).
அப்துல் ஹமீது பாகவி
நீர் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்! (அதை மன்னித்திருந்தும்) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்'' என்றான்.
IFT
அதன் பின்னர் நீ செய்துவிட்ட அந்தச் செயலையும் செய்துள்ளாய். நீ பெரிதும் நன்றிகெட்ட மனிதன்தான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீர் செய்த (கொலைச்) செயலையும் செய்தீர்! மேலும், நீர் நன்றி மறந்தவர்களில் உள்ளவராகவும் இருக்கின்றீர்” (என்றும் ஃபிர் அவன் கூறினான்).
Saheeh International
And [then] you did your deed which you did, and you were of the ungrateful."
قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّیْنَ ۟ؕ
قَالَஅவர் கூறினார்فَعَلْتُهَاۤஅதை நான் செய்தேன்اِذًاஅப்போதுوَّاَنَاநானோمِنَ الضَّآلِّيْنَؕ‏அறியாதவர்களில்
கால Fப'அல்துஹா இத(ன்)வ் வ அன மினள் ளாலீன்
முஹம்மது ஜான்
(மூஸா) கூறினார்: “நான் தவறியவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு மூஸா கூறினார்: ‘‘ நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதை நான் செய்தேன்.
IFT
மூஸா பதில் கூறினார்: “அப்போது நான் அறியாமையினால் அக்காரியத்தைச் செய்துவிட்டேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு “நான் அந்நேரத்தில் அறியாதவர்களில் (ஒருவனாக) இருந்த நிலையில் அதனை நான் செய்தேன்” என்று (மூஸாவாகிய) அவர் கூறினார்.
Saheeh International
[Moses] said, "I did it, then, while I was of those astray [i.e., ignorant].
فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِیْ رَبِّیْ حُكْمًا وَّجَعَلَنِیْ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
فَفَرَرْتُநான் ஓடிவிட்டேன்مِنْكُمْஉங்களை விட்டுلَمَّا خِفْتُكُمْஉங்களை நான் பயந்தபோதுفَوَهَبَஆகவே,வழங்கினான்لِىْஎனக்குرَبِّىْஎன் இறைவன்حُكْمًاதூதுவத்தைوَّجَعَلَنِىْஇன்னும் என்னை ஆக்கினான்مِنَ الْمُرْسَلِيْنَ‏தூதர்களில் ஒருவராக
FபFபரர்து மின்கும் லம் மா கிFப்துகும் FபவஹBப லீ ரBப்Bபீ ஹுக்ம(ன்)வ் வ ஜ'அலனீ மினல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
“ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன் தூதராகவும் என்னை ஆக்கினான்.
IFT
பின்னர், நான் உங்களுக்கு அஞ்சி உங்களிடமிருந்து ஓடிவிட்டேன். பின் என் இறைவன் எனக்கு நுண்ணறிவுத் திறனை வழங்கினான்; என்னைத் தூதர்களில் ஒருவனாகவுமாக்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆதலால் நான் உங்களுக்கு பயந்தபொழுது உங்களை விட்டு வெருண்டோடி விட்டேன், பிறகு என்னுடைய இரட்சகன் எனக்கு அறிவையும் கொடுத்துத் (தன்னுடைய) தூதர்களில் உள்ளவனாகவும் என்னை ஆக்கினான்”
Saheeh International
So I fled from you when I feared you. Then my Lord granted me judgement [i.e., wisdom and prophet hood] and appointed me [as one] of the messengers.
وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَیَّ اَنْ عَبَّدْتَّ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
وَتِلْكَஅதுنِعْمَةٌஓர் உபகாரம்தான்تَمُنُّهَاநீ சொல்லிக் காட்டுகின்றாய்/அதைعَلَىَّஎன் மீதுاَنْ عَبَّدْتَّஅடிமையாக்கி வைத்திருக்கிறாய்بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏இஸ்ரவேலர்களை
வ தில்க னிஃமதுன் தமுன் னுஹா 'அலய்ய அன் 'அBப்Bபத்த Bபனீ இஸ்ரா'ஈல்
முஹம்மது ஜான்
“பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?”
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?'' (இவ்வாறு மூஸா கூறினார்.)
IFT
எனக்குச் செய்ததாக நீ சொல்லிக் காட்டும் அந்த உபகாரத்தின் உண்மைநிலை யாதெனில், நீ இஸ்ராயீல் வழித்தோன்றல்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததேயாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், (குழந்தைப்பருவத்தில் என்னை நீ வளர்த்துப் பரிபாலித்த) அது, (என் இனத்தாராகிய) இஸ்ராயீலின் மக்களை நீ அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில் (என்னையும் அடிமையாக்காது) நீ எனக்கு சொல்லிக் காண்பிக்கக்கூடிய ஓர் அருட்கொடையே ஆகும்” (என்று கூறினார்).
Saheeh International
And is this a favor of which you remind me - that you have enslaved the Children of Israel?"
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِیْنَ ۟ؕ
قَالَகூறினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்وَمَا رَبُّஇறைவன் யார்?الْعٰلَمِيْنَؕ‏அகிலங்களின்
கால Fபிர்'அவ்னு வமா ரBப்Bபுல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ உலகத்தாரின் இறைவன் யார்?'' என ஃபிர்அவ்ன் கேட்டான்.
IFT
ஃபிர்அவ்ன் கேட்டான்: “மேலும், இந்த அகிலங்களின் இறைவன் என்பது என்ன?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) ஃபிர் அவ்ன் “அகிலத்தாரின் இரட்சன்” என்றால் என்ன?” என்று கேட்டான்.
Saheeh International
Said Pharaoh, "And what is the Lord of the worlds?"
قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
قَالَகூறினார்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّوْقِنِيْنَ‏உறுதிகொள்பவர்களாக
கால ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா இன் குன்தும் மூகினீன்
முஹம்மது ஜான்
அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸா பதிலளித்தார்: “அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கு இடையிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதிபதி ஆவான் நீங்கள் உறுதியான நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “நீங்கள் உறுதிகொண்டவர்களாக இருப்பின் வானங்கள் மற்றும் பூமி அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவை ஆகியவற்றின் இரட்சகன்” என்று (மூஸா கூறினார்),.
Saheeh International
[Moses] said, "The Lord of the heavens and earth and that between them, if you should be convinced."
قَالَ لِمَنْ حَوْلَهٗۤ اَلَا تَسْتَمِعُوْنَ ۟
قَالَஅவன் கூறினான்لِمَنْ حَوْلَهٗۤதன்னை சுற்றி உள்ளவர்களிடம்اَلَا تَسْتَمِعُوْنَ‏நீங்கள் செவிமடுக்கிறீர்களா?
கால லிமன் ஹவ்லஹூ அலா தஸ்தமி'ஊன்
முஹம்மது ஜான்
தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி: “நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?” என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இதைச் செவியுற வில்லையா?'' என்று கூறினான்.
IFT
ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கூறினான்: “கேட்கிறீர்களல்லவா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன் “தன்னைச் சூழ இருந்தவர்களிடம், நீங்கள் (இவர் கூற்றைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா,” என்று கேட்டான்.
Saheeh International
[Pharaoh] said to those around him, "Do you not hear?"
قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبُّكُمْஉங்கள் இறைவன்وَرَبُّஇன்னும் இறைவன்اٰبَآٮِٕكُمُஉங்கள் மூதாதைகளின்الْاَوَّلِيْنَ‏முன்னோர்களான
கால ரBப்Bபுகும் வ ரBப்Bபு ஆBபா'இகுமுல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
(அப்பொழுது மூஸா) “உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘ (அவன்தான்) உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “அவன் உங்களுடைய இறைவனும், முன்னோர்களான உங்கள் மூதாதையருடைய இறைவனுமாவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு மூஸாவாகிய) அவர் “உங்களின் இரட்சகனும், முன் சென்று போன உங்கள் மூதாதையர்களின் இரட்சகனுமாவான்”, என்று கூறினார்.
Saheeh International
[Moses] said, "Your Lord and the Lord of your first forefathers."
قَالَ اِنَّ رَسُوْلَكُمُ الَّذِیْۤ اُرْسِلَ اِلَیْكُمْ لَمَجْنُوْنٌ ۟
قَالَஅவன் கூறினான்اِنَّநிச்சயமாகرَسُوْلَـكُمُஉங்கள் தூதர்الَّذِىْۤஎவர்اُرْسِلَஅனுப்பப்பட்டاِلَيْكُمْஉங்களிடம்لَمَجْنُوْنٌ‏கண்டிப்பாக ஒரு பைத்தியக்காரர்
கால இன்ன ரஸூலகுமுல் லதீ உர்ஸில இலய்கும் லமஜ்னூன்
முஹம்மது ஜான்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்” எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்'' என்று சொன்னான்.
IFT
அதற்கு ஃபிர்அவ்ன் (அவையோரை நோக்கி) கூறினான்: “உங்களிடம் அனுப்பப்பட்ட இந்தத் தூதர் சரியான பைத்தியக்காரராய்த் தெரிகின்றார்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் - (அவர்) திட்டமாக ஒரு பைத்தியக்காரர்தாம்” என்று (ஃபிர் அவ்னாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "Indeed, your 'messenger' who has been sent to you is mad."
قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبُّஇறைவன்الْمَشْرِقِகிழக்கு திசைوَالْمَغْرِبِஇன்னும் மேற்கு திசைوَمَا بَيْنَهُمَا ؕஇன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْقِلُوْنَ‏சிந்தித்துபுரிபவர்களாக
கால ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிBபி வமா Bபய்ன ஹுமா இன் குன்தும் தஃகிலூன்
முஹம்மது ஜான்
(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (மூஸா) ‘‘ கீழ் நாடு மேல் நாடு இன்னும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களின் இறைவனும் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)'' என்று கூறினார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்திற்கும் அவன் அதிபதியாவான் நீங்கள் சற்றேனும் அறிவுடையோராக இருந்தால்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு மூஸா “அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இரட்சகன், (இதனை) நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருப்பின் (அவனை விசுவாசங்கொள்ளுங்கள்)” என்று கூறினார்.
Saheeh International
[Moses] said, "Lord of the east and the west and that between them, if you were to reason."
قَالَ لَىِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَیْرِیْ لَاَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُوْنِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்لَٮِٕنِ اتَّخَذْتَநீர் எடுத்துக் கொண்டால்اِلٰهًاஒரு கடவுளைغَيْرِىْஎன்னைஅன்றிவேறுلَاَجْعَلَـنَّكَஉம்மையும் ஆக்கி விடுவேன்مِنَ الْمَسْجُوْنِيْنَ‏சிறைப்படுத்தப்பட்டவர்களில்
கால ல'இனித் தகத்த இலாஹன் கய்ரீ ல அஜ்'அலன்னக மினல் மஸ்ஜூனீன்
முஹம்மது ஜான்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்'' என்று கூறினான்.
IFT
அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீர் என்னைத் தவிர வேறு எவரையேனும் வணக்கத்திற்குரியவராய் ஏற்றுக் கொண்டால், சிறையில் வாடி வதங்கிக் கிடப்பவர்களுடன் உம்மையும் நான் சேர்த்து விடுவேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “என்னை அன்றி (மற்றெதனையும் வணக்கத்திற்குரிய) நாயனாக நீர் எடுத்துக்கொண்டால், நிச்சயமாக நான் உம்மைச் சிறையிடப்பட்டோரில் (ஒருவராக) ஆக்கிவிடுவேன்” என்று கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "If you take a god other than me, I will surely place you among those imprisoned."
قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَیْءٍ مُّبِیْنٍ ۟ۚ
قَالَஅவர் கூறினார்اَوَلَوْ جِئْتُكَநான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா?بِشَىْءٍ مُّبِيْنٍ‌ۚ‏தெளிவான ஒன்றை
கால அவலவ் ஜி'துக Bபிஷய்'இம் முBபீன்
முஹம்மது ஜான்
(அதற்கு அவர்) “நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?” எனக் கேட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘ தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்த போதிலுமா?'' என்று கேட்டார்.
IFT
மூஸா கேட்டார்: “தெளிவான ஒரு சான்றை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “தெளிவான (அத்தாட்சியாக) ஒரு பொருள் நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?” என்று கேட்டார்.
Saheeh International
[Moses] said, "Even if I brought you something [i.e., proof] manifest?"
قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்فَاْتِ بِهٖۤஅதைக் கொண்டுவாரீர்اِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
கால Fபாதி Bபிஹீ இன் குன்த மினஸ் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
“நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்” என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘ நீர் சொல்வது உண்மையானால், அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்.
IFT
அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “அதனைக் கொண்டுவாரும்; நீர் உண்மையாளராயின்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வன், “நீர் உண்மையாளர்களில் இருப்பின், அதனைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "Then bring it, if you should be of the truthful."
فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ
فَاَ لْقٰىஆகவே அவர் எறிந்தார்عَصَاهُதனது கைத்தடியைفَاِذَاஉடனேهِىَஅதுثُعْبَانٌமலைப் பாம்பாகمُّبِيْنٌ‌ ۖ ۚ‏தெளிவான
Fப அல்கா 'அஸாஹு Fப இதா ஹிய துஃBபானும் முBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது.
IFT
(அவன் இவ்வாறு கூறியதும்) மூஸா தன் கைத்தடியைப் போட்டார். உடனே அது சந்தேகமின்றி ஒரு பாம்பாயிற்று.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (மூஸாவாகிய) அவர் தன் தடியைப் போட்டார், உடனே அது தெளிவானதொரு (மலைப்)பாம்பாகிவிட்டது.
Saheeh International
So [Moses] threw his staff, and suddenly it was a serpent manifest.
وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠
وَّنَزَعَஅவர் வெளியே எடுத்தார்يَدَهٗதனது கையைفَاِذَاஉடனேهِىَஅது ஆகிவிட்டதுبَيْضَآءُவெண்மையாகلِلنّٰظِرِيْنَ‏பார்ப்பவர்களுக்கு
வ னZஜ'அ யதஹூ Fப-இதா ஹிய Bபய்ளா'உ லின்னா ளிரீன்
முஹம்மது ஜான்
இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது.
IFT
பிறகு, அவர் தம் கையை (அக்குளிலிருந்து) வெளியே எடுத்தார். உடனே அது பார்ப்போர் அனைவரின் முன்னிலையிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர் தன்னுடைய கையை(ச் சட்டைக்குள்ளிருந்து) வெளியில் எடுத்தார், அப்போது அது பார்ப்போருக்கு (ஒளிமயமான) வெண்மையாக இருந்தது.
Saheeh International
And he drew out his hand; thereupon it was white for the observers.
قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ
قَالَஅவன் கூறினான்لِلْمَلَاِபிரமுகர்களிடம்حَوْلَهٗۤதன்னை சுற்றியுள்ளاِنَّநிச்சயமாகهٰذَاஇவர்لَسٰحِرٌஒரு சூனியக்காரர்தான்عَلِيْمٌۙ‏நன்கறிந்த
கால லில்மல-இ ஹவ்லஹூ இன்ன ஹாதா லஸாஹிருன் 'அலீம்
முஹம்மது ஜான்
(ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி “இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்த பிரதானிகளை நோக்கி, ‘‘நிச்சயமாக இவர் தேர்ச்சிபெற்ற சூனியக்காரராக இருக்கிறார்.
IFT
ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றிலுமிருந்த தலைவர்களிடம் கூறினான்: “இவர் உண்மையில் ஒரு கைதேர்ந்த சூனியக்காரர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன்னைச் சூழ இருந்த பிரதானிகளிடம் “நிச்சயமாக இவர் (மிகவும்) நன்கறிந்த சூனியக்காரர்” என்று (ஃபிர்அவ்னாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Pharaoh] said to the eminent ones around him, "Indeed, this is a learned magician.
یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ ۖۗ فَمَاذَا تَاْمُرُوْنَ ۟
يُّرِيْدُஅவர் நாடுகிறார்اَنْ يُّخْرِجَكُمْஉங்களை வெளியேற்றمِّنْ اَرْضِكُمْஉங்கள் பூமியிலிருந்துبِسِحْرِهٖதனது சூனியத்தால்ۖ  فَمَاذَاஆகவே, என்ன?تَاْمُرُوْنَ‌‏நீங்கள் கருதுகிறீர்கள்
யுரீது அய் யுக்ரிஜகும் மின் அர்ளிகும் Bபிஸிஹ்ரிஹீ Fபமாதா தாமுரூன்
முஹம்மது ஜான்
“இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?” (என்று கேட்டான்.)
அப்துல் ஹமீது பாகவி
இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டான்.
IFT
தன்னுடைய சூனியத்தின் வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார். இப்போது கூறுங்கள், நீங்கள் என்ன கட்டளை இடப்போகின்றீர்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இவர் தன் சூனியத்தைக் கொண்டு உங்கள் (ஊரான இப்) பூமியைவிட்டும் உங்களை வெளியேற்றிவிட நாடுகிறார், ஆகவே (இதைப்பற்றி) நீங்கள் (எனக்கு) எதை(ச்செய்ய) ஏவுகிறீர்கள்”? (என்று ஃபிர் அவன் கேட்டான்).
Saheeh International
He wants to drive you out of your land by his magic, so what do you advise?"
قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اَرْجِهْஅவருக்கும் அவகாசம் அளி!وَاَخَاهُஅவரது சகோதரருக்கும்وَابْعَثْஇன்னும் அனுப்புفِى الْمَدَآٮِٕنِநகரங்களில்حٰشِرِيْنَۙ‏அழைத்து வருபவர்கள்
காலூ அர்ஜிஹ் வ அகாஹு வBப்'அத் Fபில்மதா'இனி ஹாஷிரீன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘ அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை.
IFT
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இவரையும், இவருடைய சகோதரரையும் தடுத்து வையுங்கள். முரசறைவோரை நகரங்களுக்கு அனுப்புங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் தவணை கொடுத்துவிடு, மேலும், (சூனியக்காரர்களை) திரட்டிக்கொண்டு வருவோரைப் பல நகரங்களுக்கும் அனுப்பி வை” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers
یَاْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِیْمٍ ۟
يَاْتُوْكَஅவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள்بِكُلِّஎல்லோரையும்سَحَّارٍபெரிய சூனியக்காரர்கள்عَلِيْمٍ‏கற்றறிந்தவர்(கள்)
யாதூக Bபிகுல்லி ஸஹ் ஹாரின் 'அலீம்
முஹம்மது ஜான்
(அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தேர்ச்சிபெற்ற சூனியக்காரர்கள் அனைவரையும் அவர்கள் (தேடிப் பிடித்து) உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்.
IFT
திறமை வாய்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் தங்களிடம் அவர்கள் அழைத்துக் கொண்டு வரட்டும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்கள் கற்றறிந்த ஒவ்வொரு சூனியக்காரனையும் உம்மிடம் (அழைத்துக்) கொண்டு வருவார்கள்” (என்று கூறினார்கள்.)
Saheeh International
Who will bring you every learned, skilled magician."
فَجُمِعَ السَّحَرَةُ لِمِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۙ
فَجُمِعَஆகவே, ஒன்று சேர்க்கப்பட்டனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்لِمِيْقَاتِகுறிப்பிட்ட தவணையில்يَوْمٍஒரு நாளின்مَّعْلُوْمٍۙ‏அறியப்பட்ட
Fப ஜுமி'அஸ் ஸஹரது லிமீகாதி யவ்மிம் மஃலூம்
முஹம்மது ஜான்
சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
IFT
அவ்வாறு ஒருநாள் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (பல நகரங்களுக்கும் திரட்டுவோர் அனுப்பி வைக்கப்பட்டு குறிப்பிட்ட நாளின் குறித்த நேரத்திற்குச் சூனியக்காரர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
Saheeh International
So the magicians were assembled for the appointment of a well-known day.
وَّقِیْلَ لِلنَّاسِ هَلْ اَنْتُمْ مُّجْتَمِعُوْنَ ۟ۙ
وَّقِيْلَகூறப்பட்டதுلِلنَّاسِமக்களுக்குهَلْ اَنْـتُمْ مُّجْتَمِعُوْنَۙ‏நீங்கள் ஒன்று சேருவீர்களா?
வ கீல லின்னாஸி ஹல் அன்தும் முஜ்தமி'ஊன்
முஹம்மது ஜான்
இன்னும் மக்களிடம் “(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?” என்று கேட்கப்பட்டது.
அப்துல் ஹமீது பாகவி
எல்லா மனிதர்களுக்கும், ‘‘ (குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?'' என்று பறைசாற்றப்பட்டது.
IFT
மக்களிடம் கோரப்பட்டது: “நீங்கள் கூட்டத்திற்கு வருவீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(சகல) மனிதர்களிடமும், (குறித்த நேரத்தில்) நீங்கள் (வந்து) ஒன்று சேருவீர்களா? என்றும் கேட்கப்பட்டது.
Saheeh International
And it was said to the people, "Will you congregate.
لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟
لَعَلَّنَا نَـتَّبِعُநாம் பின்பற்றலாம்السَّحَرَةَசூனியக்காரர்களைاِنْ كَانُوْا هُمُஅவர்கள் ஆகிவிட்டால்الْغٰلِبِيْنَ‏வெற்றியாளர்களாக
ல'அல்லனா னத்தBபி'உஸ் ஸஹரத இன் கானூ ஹுமுல் காலிBபீன்
முஹம்மது ஜான்
ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக் கூடும் (என்றுங் கூறப்பட்டது).
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாம் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது).
IFT
நாம் சூனியக்காரர்களின் மார்க்கத்திலேயே இருந்து விடலாம்; அவர்கள் வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தால்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சூனியக்காரர்களை – அவர்கள் வெற்றி பெற்றவர்களாக ஆகிவிட்டால் - நாம் பின்பற்றக்கூடும் (என்று கூறப்பட்டது).
Saheeh International
That we might follow the magicians if they are the predominant?"
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
فَلَمَّا جَآءَவந்த போதுالسَّحَرَةُசூனியக்காரர்கள்قَالُوْاகூறினர்لِفِرْعَوْنَஃபிர்அவ்னிடம்اَٮِٕنَّ لَـنَاஎங்களுக்கு உண்டாلَاَجْرًاதிட்டமாக கூலிاِنْ كُنَّاநாங்கள் ஆகிவிட்டால்نَحْنُநாங்கள்الْغٰلِبِيْنَ‏வெற்றியாளர்களாக
Fபலம்மா ஜா'அஸ் ஸஹரது காலூ லி Fபிர்'அவ்ன அ'இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?'' என்று கேட்டார்கள்.
IFT
சூனியக்காரர்கள் (களத்திற்கு) வந்தபோது, ஃபிர்அவ்னிடம் கேட்டார்கள்: “நாங்கள் வெற்றியடைந்துவிட்டால், திண்ணமாக எங்களுக்கு வெகுமதி கிடைக்குமல்லவா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, சூனியக்காரர்கள் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னிடம், “நாங்களே மிகைத்தவர்களாகி (வென்று) விட்டால், (அதற்குரிய) கூலி (வெகுமதி) நிச்சயமாக எங்களுக்கு உண்டா?” என்று கேட்டார்கள்.
Saheeh International
And when the magicians arrived, they said to Pharaoh, "Is there indeed for us a reward if we are the predominant?"
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِیْنَ ۟
قَالَஅவன் கூறினான்نَعَمْஆம்وَاِنَّكُمْஇன்னும் நிச்சயமாக நீங்கள்اِذًاஅப்போதுلَّمِنَ الْمُقَرَّبِيْنَ‏நெருக்கமானவர்களில்
கால ன'அம் வ இன்னகும் இதல் லமினல் முகர்ரBபீன்
முஹம்மது ஜான்
“ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்) இன்னும் நிச்சயமாக நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்” என்று அவன் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்'' என்று கூறினான்.
IFT
அதற்கு அவன், “ஆம்! மேலும், நீங்கள் அப்போது எனக்கு நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “ஆம்! உண்டு அந்நேரத்தில், நிச்சயமாக நீங்கள் (நம்முடைய சபையிலும்) நமக்கு நெருக்கமாக்கப்பட்டவர்களில் உள்ளவராவீர்கள்” என்று கூறினான்.
Saheeh International
He said, "Yes, and indeed, you will then be of those near [to me]."
قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
قَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குمُّوْسٰۤىமூசாاَلْقُوْاஎறியுங்கள்مَاۤஎதைاَنْتُمْநீங்கள்مُّلْقُوْنَ‏எறியப் போகிறீர்களோ
கால லஹும் மூஸா அல்கூ மா அன்தும் முல்கூன்
முஹம்மது ஜான்
மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை நோக்கி மூஸா ‘‘ நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்'' எனக் கூறினார்.
IFT
மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் எறிய இருப்பதை எறியுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் (சூனியம் செய்ய) எதைப்போடக் கூடியவர்களோ போடுங்கள்” என மூஸா அவர்களிடம் கூறினார்.
Saheeh International
Moses said to them, "Throw whatever you will throw."
فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِیَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَنَحْنُ الْغٰلِبُوْنَ ۟
فَاَلْقَوْاஆகவே, அவர்கள் எறிந்தனர்حِبَالَهُمْதங்கள் கயிறுகளைوَعِصِيَّهُمْஇன்னும் தங்கள் தடிகளைوَقَالُوْاஇன்னும் அவர்கள் கூறினர்بِعِزَّةِகௌரவத்தின் மீது சத்தியமாக!فِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِنَّا لَـنَحْنُநாங்கள்தான் நிச்சயமாகالْغٰلِبُوْنَ‏வெற்றியாளர்கள்
Fப அல்கவ் ஹிBபாலஹும் வ 'இஸிய்யஹும் வ காலூ Bபி'இZஜ்Zஜதி Fபிர்'அவ்ன இன்னா லனஹ்னுல் காலிBபூன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் வென்றுவிட்டோம்'' என்று கூறினார்கள்.
IFT
உடனே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தனர்; மேலும், கூறினர்: “ஃபிர்அவ்னின் மகிமை கொண்டு நாங்களே வெற்றியாளர்களாய்த் திகழ்வோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, தங்களுடைய கயிறுகளையும், தங்களுடைய தடிகளையும் அவர்கள் போட்டார்கள், ஃபிர் அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நாமே வெற்றியாளர்கள்” என்றும் கூறினார்கள்.
Saheeh International
So they threw their ropes and their staffs and said, "By the might of Pharaoh, indeed it is we who are predominant."
فَاَلْقٰی مُوْسٰی عَصَاهُ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚۖ
فَاَ لْقٰىஆகவே அவர் எறிந்தார்مُوْسٰىமூசாعَصَاهُதனது தடியைفَاِذَاஆகவே, உடனேهِىَஅதுتَلْقَفُவிழுங்கியதுمَا يَاْفِكُوْنَ‌ ۖ ۚ‏அவர்கள் வித்தைகாட்டிய அனைத்தையும்
Fப அல்கா மூஸா 'அஸாஹு Fப இதா ஹிய தல்கFபு மா யாFபிகூன்
முஹம்மது ஜான்
பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்து விட்டது.
IFT
பிறகு, மூஸா தமது கைத்தடியை எறிந்தார். உடனே அது அவர்களின் பொய் வித்தைகளை விழுங்கிக் கொண்டே சென்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பிறகு,) மூஸா தன் தடியைப் போட்டார், அப்பெழுது அது அவர்கள் பொய்யாகச் செய்திருந்தவற்றை விழுங்கியது.
Saheeh International
Then Moses threw his staff, and at once it devoured what they falsified.
فَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۙ
فَاُلْقِىَஉடனே, விழுந்தனர்السَّحَرَةُசூனியக்காரர்கள்سٰجِدِيْنَۙ‏சிரம் பணிந்தவர்களாக
Fப உல்கியஸ் ஸஹரது ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
(இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
இதைக் கண்ணுற்ற சூனியக்காரர்கள் அனைவரும் விழுந்து சிரம் பணிந்து,
IFT
இதனைக் கண்ட சூனியக்காரர்கள் அனைவரும் தம்மையுமறியாமல் ஸஜ்தாவில் வீழ்ந்துவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்பொழுது (இதனைக் கண்ட) சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக (கீழே) வீழ்த்தபட்டனர்_
Saheeh International
So the magicians fell down in prostration [to Allah].
قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டோம்بِرَبِّஇறைவனைالْعٰلَمِيْنَۙ‏அகிலங்களின்
காலூ ஆமன்னா Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ உலகத்தார் அனைவரின் இறைவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.
IFT
பிறகு, அவர்கள் உரக்கக் கூறினார்கள்: “ஏற்றுக்கொண்டு விட்டோம் அகிலங்களின் அதிபதியை,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அகிலத்தாரின் இரட்சகனையே நாங்கள் விசுவாசங்கொண்டோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We have believed in the Lord of the worlds,
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
رَبِّஇறைவனைمُوْسٰىமூஸாوَهٰرُوْنَ‏இன்னும் ஹாரூனுடைய
ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
முஹம்மது ஜான்
“அவனே, மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்.” என்று கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்'' என்று கூறினார்கள்.
IFT
மூஸா மற்றும் ஹாரூனுடைய அதிபதியை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(அவன்தான்!) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் இரட்சகன்” (என்று கூறினார்கள்).
Saheeh International
The Lord of Moses and Aaron."
قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ اِنَّهٗ لَكَبِیْرُكُمُ الَّذِیْ عَلَّمَكُمُ السِّحْرَ ۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ؕ۬ لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُوصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟ۚ
قَالَஅவன் கூறினான்اٰمَنْتُمْநீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா?لَهٗஅவரைقَبْلَமுன்اَنْ اٰذَنَநான் அனுமதியளிப்பதற்குلَـكُمْ‌ۚஉங்களுக்குاِنَّهٗநிச்சயமாக அவர்لَـكَبِيْرُமூத்தவர்كُمُஉங்கள்الَّذِىْஎவர்عَلَّمَكُمُஉங்களுக்கு கற்பித்தார்السِّحْرَ‌ۚசூனியத்தைفَلَسَوْفَ تَعْلَمُوْنَ ۙஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்لَاُقَطِّعَنَّதிட்டமாக நான் வெட்டுவேன்اَيْدِيَكُمْஉங்கள் கைகளைوَاَرْجُلَـكُمْஉங்கள் கால்களைمِّنْ خِلَافٍமாறுகை மாறுகால்وَّلَاُصَلِّبَنَّكُمْஇன்னும் உங்களை கழுவேற்றுவேன்اَجْمَعِيْنَ‌ۚ‏அனைவரையும்
கால ஆமன்தும் லஹூ கBப்ல அன் ஆதன லகும் இன்னஹூ லகBபீருகுமுல் லதீ 'அல்ல மகுமுஸ் ஸிஹ்ர Fபலஸவ்Fப தஃலமூன்; ல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபி(ன்)வ் வ ல உஸல்லிBபன்ன கும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
IFT
ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸா கூறியதை ஏற்றுக்கொண்டு விட்டீர்களே நான் அனுமதி அளிப்பதற்கு முன்பே! திண்ணமாக, உங்களுக்கு சூனியத்தைக் கற்றுத்தந்த உங்களின் பெரிய குருவாக இருக்கின்றார் இவர்! சரி, இப்பொழுது உங்களுக்குத் தெரிந்துவிடும். நிச்சயமாக, நான் உங்கள் மாறு கை, மாறு கால்களைத் துண்டித்துவிடுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு, பிர் அவ்னாகிய,) அவன் “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை விசுவாசித்து விட்டீர்களா? நிச்சயமாக உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களின் பெரியவர் அவர்தான், அதிசீக்கிரத்தில் (அதன் முடிவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள், திண்ணமாக உங்களுடைய கைகளையும், உங்களுடைய கால்களையும் மாறாக (ஒரு பக்கத்துக் கையையும், மறுபக்கத்துக் காலையும்) நான் துண்டித்து உங்கள் அனைவரையும் நிச்சயமாக நான் கழுவேற்றிவிடுவேன்” என்று கூறினான்.
Saheeh International
[Pharaoh] said, "You believed him [i.e., Moses] before I gave you permission. Indeed, he is your leader who has taught you magic, but you are going to know. I will surely cut off your hands and your feet on opposite sides, and I will surely crucify you all."
قَالُوْا لَا ضَیْرَ ؗ اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ
قَالُوْاஅவர்கள் கூறினர்لَا ضَيْرَ‌பிரச்சனை இல்லைاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰى رَبِّنَاஎங்கள் இறைவனிடம்مُنْقَلِبُوْنَ‌ۚ‏திரும்பக்கூடியவர்கள் ஆவோம்
காலூ ல ளய்ர இன்னா இலா ரBப்Bபினா முன்கல்லிBபூன்
முஹம்மது ஜான்
“(அவ்வாறாயின் அதனால் எங்களுக்கு) எந்தக் கெடுதியுமில்லை; நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தாம் திரும்பிச் செல்வோம்” எனக் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்.
IFT
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “பரவாயில்லை! நாங்கள் எங்கள் இறைவனின் திருமுன் சென்று விடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “(அவ்வாறு செய்வதால்) எங்களுக்கு யாதொரு கெடுதியுமில்லை, (ஏனென்றால்), நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகன் பக்கமே திரும்பச் செல்லக்கூடியவர்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "No harm. Indeed, to our Lord we will return.
اِنَّا نَطْمَعُ اَنْ یَّغْفِرَ لَنَا رَبُّنَا خَطٰیٰنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِیْنَ ۟ؕ۠
اِنَّاநிச்சயமாக நாங்கள்نَطْمَعُஆசிக்கிறோம்اَنْ يَّغْفِرَமன்னிப்பதைلَـنَاஎங்களுக்குرَبُّنَاஎங்கள் இறைவன்خَطٰيٰـنَاۤஎங்கள் குற்றங்களைاَنْ كُنَّاۤநாங்கள் இருந்ததால்اَوَّلَமுதலாமவர்களாகالْمُؤْمِنِيْنَؕ‏நம்பிக்கை கொள்பவர்களில்
இன்னா னத்ம'உ அய் யக்Fபிர லனா ரBப்Bபுனா கதா யானா அன் குன்னா அவ்வலல் மு'மினீன்
முஹம்மது ஜான்
“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றுங் கூறினார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.''
IFT
எங்கள் இறைவன் எங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில், அனைவர்க்கும் முன்னதாக நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகி விட்டோமே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக (மூஸாவை) விசுவாசங்கொண்டவர்களில் முதலாமவர்களாக நாங்கள் இருப்பதினால், எங்கள் இரட்சகன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் ஆதரவு வைக்கிறோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
Indeed, we aspire that our Lord will forgive us our sins because we were the first of the believers."
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَسْرِ بِعِبَادِیْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟
وَاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاَنْ اَسْرِஇரவில் அழைத்துச் செல்லுங்கள்بِعِبَادِىْۤஎனது அடியார்களைاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّتَّبَعُوْنَ‏பின்தொடரப்படுவீர்கள்
வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அஸ்ரி Bபி'இBபாதீ இன்னகும் முத்தBப'ஊன்
முஹம்மது ஜான்
மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்).
IFT
மேலும், நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம்: “என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்படுவீராக! நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மூஸாவுக்கு நாம் வஹீ அறிவித்தோம் “(இஸ்ராயீலின் மக்களாகிய) என்னுடைய அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நிச்சயமாக நீங்கள் பின்தொடரப்படுவோராய் உள்ளீர்கள்.”
Saheeh International
And We inspired to Moses, "Travel by night with My servants; indeed, you will be pursued."
فَاَرْسَلَ فِرْعَوْنُ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۚ
فَاَرْسَلَஆகவே அனுப்பினான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்فِى الْمَدَآٮِٕنِநகரங்களில்حٰشِرِيْنَ‌ۚ‏ஒன்று திரட்டுபவர்களை
Fப அர்ஸல Fபிர்'அவ்னு Fபில்மதா'இனி ஹாஷிரீன்
முஹம்மது ஜான்
(அவ்வாறு அவர்கள் சென்றதும்) ஃபிர்அவ்ன் (ஆட்களைத்) திரட்டுபவர்களைப் பட்டணங்களுக்கு அனுப்பி வைத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறைசாற்றுபவர்களை அனுப்பிவைத்து,
IFT
இதன்படி ஃபிர்அவ்ன் (படைகளைத் திரட்டுவதற்காக) நகரங்களுக்கு ஊழியர்களை அனுப்பினான். (மேலும், சொல்லியனுப்பினான்:)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், ஃபிர் அவ்ன் பல நகரங்களுக்கும் (ஜனங்களைத் திரட்டுவதற்காக) திரட்டுவோரை அனுப்பிவைத்தான்.
Saheeh International
Then Pharaoh sent among the cities gatherers
اِنَّ هٰۤؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِیْلُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰٓؤُلَاۤءِஇவர்கள்لَشِرْذِمَةٌகூட்டம்தான்قَلِيْلُوْنَۙ‏குறைவான
இன்ன ஹா'உலா'இ லஷிர் திமதுன் கலீலூன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக இவர்கள் மிகவும் சொற்பத் தொகையினர் தான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்)
IFT
“இவர்கள் மிகச் சிறிய ஒரு கூட்டத்தினர்தாம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக (இஸ்ராயீலின் மக்களாகிய) இவர்கள் வெகு சொற்பத் தொகையினர்களான ஒரு கூட்டம்.
Saheeh International
[And said], "Indeed, those are but a small band,
وَاِنَّهُمْ لَنَا لَغَآىِٕظُوْنَ ۟ۙ
وَاِنَّهُمْஇன்னும் , நிச்சயமாக இவர்கள்لَـنَاநமக்குلَـغَآٮِٕظُوْنَۙ‏ஆத்திரமூட்டுகின்றனர்
வ இன்னஹும் லனா லகா'இளூன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக இவர்கள் நம்மை(ப் பெருங்) கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர்கள் நம்மை கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
IFT
மேலும், இவர்கள் நம்மை மிகுந்த கோபமடையச் செய்துவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிச்சயமாக அவர்கள் நமக்குக் கோபமூட்டுகிறவர்கள்.
Saheeh International
And indeed, they are enraging us,
وَاِنَّا لَجَمِیْعٌ حٰذِرُوْنَ ۟ؕ
وَاِنَّاஇன்னும் நிச்சயமாக நாம்لَجَمِيْعٌஅனைவரும்حٰذِرُوْنَؕ‏தயாரிப்புடன் இருப்பவர்கள்தான்
வ இன்னா லஜமீ'உன் ஹாதிரூன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனே இருக்கிறோம்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்'' (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.)
IFT
நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் அல்லவா!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நிச்சயமாக நாம் அனைவரும் எச்சரிக்கையுடனிருக்கின்றவர்கள்” (என்று கூறினான்.)
Saheeh International
And indeed, we are a cautious society..."
فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
فَاَخْرَجْنٰهُمْஆகவே அவர்களை நாம் வெளியேற்றினோம்مِّنْ جَنّٰتٍதோட்டங்களிலிருந்தும்وَّعُيُوْنٍۙ‏ஊற்றுகளிலிருந்தும்
Fப அக்ரஜ்னாஹும் மின் ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
முஹம்மது ஜான்
அப்போது நாம், அவர்களைத் தோட்டங்களை விட்டும், நீரூற்றுக்களை விட்டும் வெளியேற்றி விட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம்.
IFT
இவ்வாறு நாம் அவர்களை அவர்களுடைய தோப்புகள், நீருற்றுகள்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் (அவர்களுடைய) தோட்டங்களிலிருந்தும், நீரூற்றுக்களிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றிவிட்டோம்.
Saheeh International
So We removed them from gardens and springs
وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
وَّكُنُوْزٍஇன்னும் பொக்கிஷங்களிலிருந்தும்وَّمَقَامٍஇடத்திலிருந்தும்كَرِيْمٍۙ‏கண்ணியமான
வ குனூZஜி(ன்)வ் வ ம காமின் கரீம்
முஹம்மது ஜான்
இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களை விட்டும், கண்ணியமான வீடுகளை விட்டும் (அவர்களை வெளியேற்றினோம்).
அப்துல் ஹமீது பாகவி
(இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்).
IFT
செல்வக் களஞ்சியங்கள் மற்றும் சிறந்த இருப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும், மிகச் சிறந்த தங்குமிடத்திலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்.)
Saheeh International
And treasures and honorable station -
كَذٰلِكَ ؕ وَاَوْرَثْنٰهَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
كَذٰلِكَؕஇப்படித்தான்وَاَوْرَثْنٰهَاஇன்னும் அவற்றை சொந்தமாக்கினோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏இஸ்ரவேலர்களுக்கு
கதாலிக வ அவ்ரத்னாஹா Bபனீ இஸ்ரா'ஈல்
முஹம்மது ஜான்
அவ்வாறு தான் (அவர்களை நடத்தினோம்); அத்துடன் பனூ இஸ்ராயீல்களை அவற்றுக்கு வாரிசுகளாகவும் நாம் ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவற்றுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கிவிட்டோம்.
IFT
அவர்களுக்கு நேர்ந்தது இதுதான். (மற்றொருபுறம்) நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை இவை அனைத்திற்கும் வாரிசுகளாக்கிவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறு (வெளியேற்றிவிட்டு) இஸ்ராயீலின் மக்களை அவைகளுக்கு வாரிசாகவும் ஆக்கிவிட்டோம்.
Saheeh International
Thus. And We caused to inherit it the Children of Israel.
فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِیْنَ ۟
فَاَ تْبَعُوْஅவர்கள் பின்தொடர்ந்தனர்هُمْஅவர்களைمُّشْرِقِيْنَ‏காலைப் பொழுதில்
Fப அத்Bப'ஊஹும் முஷ்ரிகீன்
முஹம்மது ஜான்
பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
IFT
பொழுது விடிந்ததும் இவர்கள் அம்மக்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர் அவ்னின் கூட்டத்தாராகிய) அவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
Saheeh International
So they pursued them at sunrise.
فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰۤی اِنَّا لَمُدْرَكُوْنَ ۟ۚ
فَلَمَّا تَرَآءَஒருவரை ஒருவர் பார்த்தபோதுالْجَمْعٰنِஇரண்டு படைகளும்قَالَகூறினர்اَصْحٰبُதோழர்கள்مُوْسٰٓىமூஸாவின்اِنَّاநிச்சயமாக நாங்கள்لَمُدْرَكُوْنَ‌ۚ‏பிடிக்கப்பட்டோம்
Fபலம்மா தரா'அல் ஜம்'ஆனி கால அஸ் ஹாBபு மூஸா இன்னா லமுத்ரகூன்
முஹம்மது ஜான்
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது ‘‘ நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்'' என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள்.
IFT
இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டபோது மூஸாவின் தோழர்கள், “திண்ணமாக, நாம் பிடிபட்டுவிடுவோம்!” என்று கூக்குரலிட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது “நிச்சயமாக நாம் (அவர்களால்) பிடிபட்டுவிடுபவர்கள்தாம்” என்று மூஸாவுடைய தோழர்கள் கூறினார்கள்.
Saheeh International
And when the two companies saw one another, the companions of Moses said, "Indeed, we are to be overtaken!"
قَالَ كَلَّا ۚ اِنَّ مَعِیَ رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
قَالَஅவர் கூறினார்كَلَّا‌ ۚஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகمَعِىَஎன்னுடன் இருக்கின்றான்رَبِّىْஎன் இறைவன்سَيَهْدِيْنِ‏அவன் எனக்கு விரைவில் வழிகாட்டுவான்
கால கல்லா இன்ன ம'இய ரBப்Bபீ ஸ யஹ்தீன்
முஹம்மது ஜான்
அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (மூஸா) ‘‘ அவ்வாறல்ல. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் எனக்கு அறிவிப்பான்'' என்றார்.
IFT
அதற்கு மூஸா கூறினார்: “ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக, எனக்கு வழிகாட்டுவான்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “ஒருபோதும் இல்லை! நிச்சயமாக என்னுடன், என்னுடைய இரட்சகன் இருக்கின்றான், (இதிலிருந்து ஈடேறும்) வழியை நிச்சயமாக எனக்கு அவன் காட்டுவான்” என்று (மூஸாவாகிய) அவர் கூறினார்.
Saheeh International
[Moses] said, "No! Indeed, with me is my Lord; He will guide me."
فَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِیْمِ ۟ۚ
فَاَوْحَيْنَاۤநாம் வஹீ அறிவித்தோம்اِلٰى مُوْسٰٓىமூஸாவிற்குاَنِ اضْرِبْஅடிப்பீராக! என்றுبِّعَصَاكَஉமது தடியைக் கொண்டுالْبَحْرَ‌ؕகடலைفَانْفَلَقَஆக, அது பிளந்ததுفَكَانَஇருந்ததுكُلُّஒவ்வொருفِرْقٍபிளவும்كَالطَّوْدِமலைப் போன்றுالْعَظِيْمِ‌ۚ‏பெரிய
Fப அவ்ஹய்னா இலா மூஸா அனிள்ரிBப் Bபி'அஸாகல் Bபஹ்ர Fபன்Fபலக Fபகான குல்லு Fபிர்கின் கத்தவ்தில் 'அளீம்
முஹம்மது ஜான்
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது.
IFT
மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம்: “உமது கைத்தடியினால் கடலை அடியும்!” உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகிவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அப்போது) “நீர் உம்முடைய (கைத்) தடியினால் கடலை அடிப்பீராக” என மூஸாவின்பால் வஹீ அறிவித்தோம், (அவர் அடிக்கவே) அது பிளந்துவிட்டது, ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
Saheeh International
Then We inspired to Moses, "Strike with your staff the sea," and it parted, and each portion was like a great towering mountain.
وَاَزْلَفْنَا ثَمَّ الْاٰخَرِیْنَ ۟ۚ
وَاَزْلَـفْنَاநாம் நெருக்க மாக்கினோம்ثَمَّபின்الْاٰخَرِيْنَ‌ۚ‏மற்றவர்களை
வ அZஜ்லFப்னா தம்மல் ஆகரீன்
முஹம்மது ஜான்
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(பின் சென்ற) மற்ற மக்களையும் அதை நெருங்கச் செய்தோம்.
IFT
அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும் நாம் நெருங்கிவரச்செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின் தொடாந்த) மற்றவர்களையும் அந்த இடத்தை நெருங்கச் செய்தோம்.
Saheeh International
And We advanced thereto the others [i.e., the pursuers].
وَاَنْجَیْنَا مُوْسٰی وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۚ
وَاَنْجَيْنَاநாம் பாதுகாத்தோம்مُوْسٰىமூசாவையும்وَمَنْ مَّعَهٗۤஇன்னும் , அவருடன் இருந்தவர்களைاَجْمَعِيْنَ‌ۚ‏அனைவரையும்
வ அன்ஜய்னா மூஸா வ மம் ம'அஹூ அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூஸாவையும், அவருடனிருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
Saheeh International
And We saved Moses and those with him, all together.
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟ؕ
ثُمَّபிறகுاَغْرَقْنَاமூழ்கடித்தோம்الْاٰخَرِيْنَ‌ؕ‏மற்றவர்களை
தும்ம அக்ரக்னல் ஆகரீன்
முஹம்மது ஜான்
பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் (அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற) மற்ற அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்.
IFT
பிறகு, மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (அவர்களைப் பின்தொடர்ந்த) மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்
Saheeh International
Then We drowned the others.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً  ؕஓர் அத்தாட்சிوَمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயாஹ்; வமா கான அக்தரு ஹு மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இ(ச்சம்பவத்)தில் ஒரு பெரும் படிப்பினை இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்பவில்லை.
IFT
திண்ணமாக, இந்நிகழ்ச்சியில் ஒரு சான்று இருக்கிறது. எனினும் இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது, (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை.
Saheeh International
Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
முஹம்மது ஜான்
(நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.
IFT
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன் அவனேதான் (யாவரையும்) மிகைத்தோன், மிகக்கிருபையுடையோன்.
Saheeh International
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ اِبْرٰهِیْمَ ۟ۘ
وَاتْلُஓதுவீராக!عَلَيْهِمْஅவர்கள் மீதுنَبَاَசெய்தியைاِبْرٰهِيْمَ‌ۘ‏இப்ராஹீமுடைய
வத்லு 'அலய்ஹிம் னBப-அ இBப்ராஹீம்
முஹம்மது ஜான்
இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களுக்கு இப்றாஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பிப்பீராக.
IFT
மேலும், இப்ராஹீமின் சரிதையை இவர்களுக்கு எடுத்துரையுங்கள்:
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்களுக்கு இப்றாஹீமுடைய செய்தியையும் ஓதிக் காண்பிப்பீராக!
Saheeh International
And recite to them the news of Abraham,
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ ۟
اِذْ قَالَகூறிய சமயத்தைلِاَبِيْهِதனது தந்தைக்கும்وَقَوْمِهٖதனது மக்களுக்கும்مَا تَعْبُدُوْنَ‏நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்?
இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மா தஃBபுதூன்
முஹம்மது ஜான்
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,
அப்துல் ஹமீது பாகவி
அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி ‘‘ நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு,
IFT
ஒருபோது அவர்தம் தந்தையிடமும், சமூகத்தாரிடமும், “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” எனக் கேட்டபோது,
Saheeh International
When he said to his father and his people, "What do you worship?"
قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்نَـعْبُدُநாங்கள் வணங்குகின்றோம்اَصْنَامًاசிலைகளைفَنَظَلُّநாங்கள் இருப்போம்لَهَاஅதற்குعٰكِفِيْنَ‏பூஜை செய்பவர்களாகவே
காலூ னஃBபுது அஸ்னாமன் Fபனளல்லு லஹா 'ஆகிFபீன்
முஹம்மது ஜான்
அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் ‘‘ நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்கள்.
IFT
அதற்கு அவர்கள் “சிலைகளை நாங்கள் பூஜிக்கின்றோம்; மேலும், அவற்றிற்கு சேவை செய்வதில் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள், “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம், நாங்கள் அவற்றின் வணக்கத்திற்காக நிலை கொண்டுள்ளோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We worship idols and remain to them devoted."
قَالَ هَلْ یَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۟ۙ
قَالَஅவர் கூறினார்هَلْ يَسْمَعُوْنَكُمْஅவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?اِذْ تَدْعُوْنَۙ‏நீங்கள் அழைக்கும்போது
கால ஹல் யஸ்ம'ஊன கும் இத் தத்'ஊன்
முஹம்மது ஜான்
(அதற்கு இப்ராஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ அவற்றை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா?
IFT
அதற்கு அவர் கேட்டார்: “நீங்கள் அழைக்கும்போது உங்கள் அழைப்பை இவை கேட்கின்றனவா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவைகளை நீங்கள் அழைக்கின்ற சமயத்தில் உங்களுக்கு அவை (காது கொடுத்து) செவிசாய்க்கின்றனவா” என்று இப்றாஹீம் அவர்களிடம் கேட்டார்.
Saheeh International
He said, "Do they hear you when you supplicate?
اَوْ یَنْفَعُوْنَكُمْ اَوْ یَضُرُّوْنَ ۟
اَوْஅல்லதுيَنْفَعُوْنَكُمْநன்மை தருகின்றனவா?اَوْஅல்லதுيَضُرُّوْنَ‏தீங்கு தருகின்றவர்
அவ் யன்Fப'ஊனகும் அவ் யளுர்ரூன்
முஹம்மது ஜான்
“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)
அப்துல் ஹமீது பாகவி
அல்லது (அவற்றை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?'' எனக் கேட்டார்.
IFT
அல்லது இவை உங்களுக்கு ஏதேனும் இலாபமோ, நஷ்டமோ அளிக்கின்றனவா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லது (அவைகளை நீங்கள் வணங்கினால்) உங்களுக்கு பலன் தருகின்றனவா? அல்லது (வணங்காவிட்டால்) அவை இடையூறு செய்கின்றனவா?” என்று கேட்டார்.
Saheeh International
Or do they benefit you, or do they harm?"
قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்بَلْஅவ்வாறல்லوَجَدْنَاۤநாங்கள் கண்டோம்اٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைكَذٰلِكَஅப்படியேيَفْعَلُوْنَ‏செய்பவர்களாக
காலூ Bபல் வஜத்னா ஆBபா 'அனா கதாலிக யFப்'அலூன்
முஹம்மது ஜான்
(அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவற்றை ஆராதனை செய்கிறோம்)'' என்றார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “இல்லை. ஆயினும், எங்கள் முன்னோர் இவ்வாறே செய்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இல்லை எங்கள் மூதாதையர்களை இவ்வாறே செய்பவர்களாக நாங்கள் கண்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
Saheeh International
They said, "But we found our fathers doing thus."
قَالَ اَفَرَءَیْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ
قَالَஅவர் கூறினார்اَفَرَءَيْتُمْநீங்கள் சொல்லுங்கள்مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏நீங்கள் வணங்கிக் கொண்டு இருப்பவற்றை
கால அFபர 'அய்தும் மா குன்தும் தஃBபுதூன்
முஹம்மது ஜான்
அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என (இப்றாஹீம்) கேட்டார்.
IFT
அதற்கு இப்ராஹீம் கூறினார்: “எவற்றை நீங்களும், உங்களுடைய முற்காலத்து மூதாதையர்களும் வணங்கிவந்தீர்களோ ,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? (அதுபற்றிச்), சொல்லுங்கள்”, என்று இப்றாஹீமாகிய) அவர் கேட்டார்.
Saheeh International
He said, "Then do you see what you have been worshipping,
اَنْتُمْ وَاٰبَآؤُكُمُ الْاَقْدَمُوْنَ ۟ؗۖ
اَنْـتُمْநீங்களும்وَاٰبَآؤُكُمُஉங்கள் மூதாதைகளும்الْاَقْدَمُوْنَ ۖ ‏முந்தி(யவர்கள்)
அன்தும் வ ஆBபா'உகுமுல் அக்தமூன்
முஹம்மது ஜான்
“நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”
அப்துல் ஹமீது பாகவி
நீங்களும் உங்கள் முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்).
IFT
அவற்றை நீங்கள் என்றாவது (கண்திறந்து) பார்த்திருக்கின்றீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்களும், உங்களுடைய முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கி வந்தீர்கள் என்பதைப் பாருங்கள்)
Saheeh International
You and your ancient forefathers?
فَاِنَّهُمْ عَدُوٌّ لِّیْۤ اِلَّا رَبَّ الْعٰلَمِیْنَ ۟ۙ
فَاِنَّهُمْஏனெனில், நிச்சயமாகعَدُوٌّஎதிரிகள்لِّىْۤஎனக்குاِلَّاஆனால், தவிரرَبَّஇறைவனைالْعٰلَمِيْنَۙ‏அகிலங்களின்
Fப இன்னஹும் 'அதுவ்வ்வுல் லீ இல்லா ரBப்Bபல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! எனினும், உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன்.
IFT
என்னைப் பொறுத்தவரை திண்ணமாக, இவை அனைத்தும் விரோதிகளாகும்; ஆனால், அகிலங்களின் அதிபதியைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நிச்சயமாக அவைகள் எனக்கு விரோதிகளே! அகிலத்ததாரின் இரட்சகனைத்தவிர,
Saheeh International
Indeed, they are enemies to me, except the Lord of the worlds,
الَّذِیْ خَلَقَنِیْ فَهُوَ یَهْدِیْنِ ۟ۙ
الَّذِىْஎவன்خَلَقَنِىْஎன்னைப்படைத்தான்فَهُوَஆகவே, அவன்يَهْدِيْنِۙ‏எனக்கு நேர்வழி காட்டுவான்
அல்லதீ கலகனீ Fப ஹுவ யஹ்தீன்
முஹம்மது ஜான்
“அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்.
IFT
அவன் எத்தகையவனெனில், அவன்தான் என்னைப் படைத்தான்; மேலும், அவனே எனக்கு பின்னர் வழிகாட்டுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவன் எத்தகையவனென்றால், என்னைப்படைத்தான், பின்னர் எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்”
Saheeh International
Who created me, and He [it is who] guides me.
وَالَّذِیْ هُوَ یُطْعِمُنِیْ وَیَسْقِیْنِ ۟ۙ
وَ الَّذِىْ هُوَஎவன்/அவன்يُطْعِمُنِىْஎனக்கு உணவளிக்கிறான்وَيَسْقِيْنِۙ‏இன்னும் , எனக்கு நீர் புகட்டுகிறான்
வல்லதீ ஹுவ யுத்'இமுனீ வ யஸ்கீன்
முஹம்மது ஜான்
“அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”
அப்துல் ஹமீது பாகவி
அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான்.
IFT
எனக்கு உண்ணவும் அருந்தவும் தருகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவன் எத்தகையவனென்றால், “அவனே எனக்கு உணவளிக்கிறான், அவனே (எனக்கு) குடிக்கவும் தருகிறான்.”
Saheeh International
And it is He who feeds me and gives me drink.
وَاِذَا مَرِضْتُ فَهُوَ یَشْفِیْنِ ۟
وَاِذَا مَرِضْتُநான் நோயுற்றால்فَهُوَஅவன்தான்يَشْفِيْنِ ۙ‏எனக்கு சுகமளிக்கிறான்
வ இதா மரிள்து Fபஹுவ யஷ்Fபீன்
முஹம்மது ஜான்
“நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான்.
IFT
மேலும், நான் நோயுற்றால் அவனே எனக்கு குணமளிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் “நான் நோயுற்று விட்டால், அவனே என்னைக் குணப்படுத்துகின்றான்.”
Saheeh International
And when I am ill, it is He who cures me
وَالَّذِیْ یُمِیْتُنِیْ ثُمَّ یُحْیِیْنِ ۟ۙ
وَالَّذِىْ يُمِيْتُنِىْஅவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான்ثُمَّ يُحْيِيْنِۙ‏பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்
வல்லதீ யுமீதுனீ தும்ம யுஹ்யீன்
முஹம்மது ஜான்
“மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
அப்துல் ஹமீது பாகவி
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்.
IFT
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் மீண்டும் எனக்கு வாழ்வளிப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் எத்தகையவனென்றால்” என்னை இறப்பெய்தச் செய்வான், பின்னர் என்னை (மறுமையில்) அவன் உயிர்ப்பிப்பான்.”
Saheeh International
And who will cause me to die and then bring me to life
وَالَّذِیْۤ اَطْمَعُ اَنْ یَّغْفِرَ لِیْ خَطِیْٓـَٔتِیْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ
وَالَّذِىْۤஇன்னும் , எவன்اَطْمَعُநான் ஆசிக்கிறேன்اَنْ يَّغْفِرَஅவன் மன்னிக்க வேண்டும் என்றுلِىْஎனக்குخَطِیْٓــٴَــتِىْஎன் பாவங்களைيَوْمَநாளில்الدِّيْنِ ؕ‏விசாரணை
வல்லதீ அத்ம'உ அய் யக்Fபிர லீ கதீ' அதீ யவ்மத் தீன்
முஹம்மது ஜான்
“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என் குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.
IFT
மேலும், கூலி கொடுக்கப்படும் நாளில் அவன் என் பாவங்களை மன்னித்தருள்வான் என்று நான் அவனிடமே நம்பிக்கை கொண்டுள்ளேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் எத்தகையவனென்றால், “கூலி கொடுக்கும் (மறுமை) நாளில், என்னுடைய குற்றங்களை மன்னிக்க அவனையே நான் ஆதரவு வைக்கிறேன்”
Saheeh International
And who I aspire that He will forgive me my sin on the Day of Recompense."
رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟ۙ
رَبِّஎன் இறைவா!هَبْவழங்கு!لِىْஎனக்குحُكْمًاதூதுத்துவத்தைوَّاَلْحِقْنِىْஇன்னும் என்னை சேர்ப்பாயாக!بِالصّٰلِحِيْنَۙ‏நல்லவர்களுடன்
ரBப்Bபி ஹBப் லீ ஹுக்ம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
அப்துல் ஹமீது பாகவி
என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக!
IFT
(இதன் பின்னர்) இப்ராஹீம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக! மேலும், என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என் இரட்சகனே! நீ எனக்கு அறிவை அளிப்பாயாக! மேலும், நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக”
Saheeh International
[And he said], "My Lord, grant me authority and join me with the righteous.
وَاجْعَلْ لِّیْ لِسَانَ صِدْقٍ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
وَاجْعَلْஎற்படுத்து!لِّىْஎனக்குلِسَانَ صِدْقٍநற்பெயரைفِى الْاٰخِرِيْنَۙ‏பின்னோர்களில்
வஜ்'அல் லீ லிஸான ஸித்கின் Fபில் ஆகிரீன்
முஹம்மது ஜான்
“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”
அப்துல் ஹமீது பாகவி
பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரை அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது சாந்தி நிலவுக! என்று பிரார்த்திக்கக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக!
IFT
மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்வருபவர்களில் (அவர்கள் என் விஷயத்தில் என்னைப்பற்றி அழகானவற்றைக் கூற) எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக”
Saheeh International
And grant me a mention [i.e., reputation] of honor among later generations.
وَاجْعَلْنِیْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِیْمِ ۟ۙ
وَاجْعَلْنِىْஎன்னை ஆக்கிவிடு!مِنْ وَّرَثَةِவாரிசுகளில்جَنَّةِசொர்க்கத்தின்النَّعِيْمِۙ‏இன்பமிகு
வஜ்'அல்னீ மி(ன்)வ் வரததி ஜன்ன்னதின் ன'ஈம்
முஹம்மது ஜான்
“இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”
அப்துல் ஹமீது பாகவி
இன்ப சுகத்தையுடைய சொர்க்கத்தின் வாரிசுகளிலும் என்னை நீ ஆக்கிவைப்பாயாக!
IFT
மேலும், அருட்கொடைகள் நிரம்பிய சுவனத்தின் வாரிசுகளுள் என்னையும் ஒருவனாக ஆக்குவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“கொடைகளுடைய சுவனபதிக்கு வாரிசானவர்களிலும் என்னை நீ ஆக்கி வைப்பாயாக!”
Saheeh International
And place me among the inheritors of the Garden of Pleasure.
وَاغْفِرْ لِاَبِیْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّیْنَ ۟ۙ
وَاغْفِرْமன்னிப்பளி!لِاَبِىْۤஎன் தந்தைக்குاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்مِنَ الضَّآلِّيْنَۙ‏வழி தவறியவர்களில்
வக்Fபிர் லி அBபீ இன்னஹூ கான மின ளால்லீன்
முஹம்மது ஜான்
“என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”
அப்துல் ஹமீது பாகவி
என் தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார்.
IFT
மேலும், என் தந்தையை மன்னிப்பாயாக! திண்ணமாக, அவர் வழிகெட்டுப் போனவர்களில் ஒருவராய் இருக்கின்றார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய தந்தையையும் நீ மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”
Saheeh International
And forgive my father. Indeed, he has been of those astray.
وَلَا تُخْزِنِیْ یَوْمَ یُبْعَثُوْنَ ۟ۙ
وَلَا تُخْزِஇழிவுபடுத்திவிடாதே!نِىْஎன்னைيَوْمَநாளில்يُبْعَثُوْنَۙ‏அவர்கள் எழுப்பப்படும்
வ லா துக்Zஜினீ யவ்ம யுBப்'அதூன்
முஹம்மது ஜான்
“இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”
அப்துல் ஹமீது பாகவி
(உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே!
IFT
மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “(படைப்பினங்கள் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவு படுத்தாதிருப்பாயாக!”
Saheeh International
And do not disgrace me on the Day they are [all] resurrected -
یَوْمَ لَا یَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ ۟ۙ
يَوْمَநாளில்...لَا يَنْفَعُபலனளிக்காதمَالٌசெல்வமும்وَّلَا بَنُوْنَۙ‏ஆண் பிள்ளைகளும்
யவ்ம லா யன்Fப'உ மாலு(ன்)வ் வலா Bபனூன்
முஹம்மது ஜான்
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா.
IFT
அந்நாளில், செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திடமாட்டா.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
செல்வமும், குமாரர்களும் (யாதொரு) பயனளிக்காத (அந்த) நாளில்,
Saheeh International
The Day when there will not benefit [anyone] wealth or children
اِلَّا مَنْ اَتَی اللّٰهَ بِقَلْبٍ سَلِیْمٍ ۟ؕ
اِلَّاஎனினும்مَنْயார்اَتَىவந்தாரோاللّٰهَஅல்லாஹ்விடம்بِقَلْبٍஉள்ளத்தோடுسَلِيْمٍؕ‏சந்தேகப்படாத
இல்லா மன் அதல் லாஹ Bபிகல்Bபின் ஸலீம்
முஹம்மது ஜான்
“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).
IFT
ஆனால், எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆயினும், இணைவைப்பதிலிருந்து நீக்கம் பெற்ற) பரிசுத்தமான இதயத்துடன் தன் இரட்சகனாகிய) அல்லாஹ்விடம் யார் வந்தாரோ அவர் தவிர (மற்றெவருக்கும் பயனளிக்காத நாள்.)
Saheeh International
But only one who comes to Allah with a sound heart."
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ ۟ۙ
وَاُزْلِفَتِசமீபமாக்கப்படும்الْجَـنَّةُசொர்க்கம்لِلْمُتَّقِيْنَۙ‏இறையச்சமுள்ளவர்களுக்கு
வ உZஜ்லிFபதில் ஜன்னது லில்முத்தகீன்
முஹம்மது ஜான்
“பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்.”
அப்துல் ஹமீது பாகவி
இறையச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.
IFT
(அந்நாளில்) சுவனம் இறையச்சமுடையவர்களின் அருகில் கொண்டுவரப்படும்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், பயபக்தியுடையவர்களுக்கு சொர்க்கம் (மிக) நெருக்கி வைக்கப்படும்.
Saheeh International
And Paradise will be brought near [that Day] to the righteous.
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِلْغٰوِیْنَ ۟ۙ
وَبُرِّزَتِவெளிப்படுத்தப்படும்الْجَحِيْمُநரகம்لِلْغٰوِيْنَۙ‏வழிகேடர்களுக்கு
வ Bபுர்ரிZஜதில் ஜஹீமு லில்காவீன்
முஹம்மது ஜான்
“வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.”
அப்துல் ஹமீது பாகவி
வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் வெளிப்படுத்தப்படும்.
IFT
வழிகெட்டுப் போனவர்களின் முன்னிலையில் நரகம் திறந்து வைக்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வழிகெட்டோருக்கு (அவர்களுக்கெதிரில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
Saheeh International
And Hellfire will be brought forth for the deviators,
وَقِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ
وَقِيْلَஇன்னும் கேட்கப்படும்لَهُمْஅவர்களிடம்اَيْنَمَاஎங்கே?كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏நீங்கள்வணங்கிக் கொண்டிருந்தவை
வ கீல லஹும் அய்ன மா குன்தும் தஃBபுதூன்
முஹம்மது ஜான்
“இன்னும், அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?” என்று.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை நோக்கி ‘‘ அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே?
IFT
மேலும், அவர்களிடம் வினவப்படும்: நீங்கள் வணங்கி வந்த தெய்வங்கள் எங்கே?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிடம் நீங்கள் வணங்கிக்கொண்டிருந்தவை எங்கே?” எனக் கேட்கப்படும்.
Saheeh International
And it will be said to them, "Where are those you used to worship
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ هَلْ یَنْصُرُوْنَكُمْ اَوْ یَنْتَصِرُوْنَ ۟ؕ
مِنْ دُوْنِஅன்றிاللّٰهِؕஅல்லாஹ்வைهَلْ يَنْصُرُوْنَكُمْஅவை உங்களுக்கு உதவுமா?اَوْஅல்லதுيَنْتَصِرُوْنَؕ‏தமக்குத் தாமே உதவிக் கொள்ளுமா?
மின் தூனில் லாஹி ஹல் யன்ஸுரூனகும் அவ் யன்தஸிரூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”
அப்துல் ஹமீது பாகவி
(இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?'' என்று கேட்கப்படும்.
IFT
“நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வணங்கி வந்தீர்களே அந்தத் தெய்வங்கள் எங்கே? அவை உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து கொண்டிருக்கின்றனவா? அல்லது அவற்றால் தம்மையேனும் காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வையன்றி – (நீங்கள் வணங்கிவந்த) அவை (இப்போது) உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களே உதவி செய்து (தங்களைக் காப்பாற்றிக்) கொள்ளுமா? (என்று கேட்கப்படும்)
Saheeh International
Other than Allah? Can they help you or help themselves?"
فَكُبْكِبُوْا فِیْهَا هُمْ وَالْغَاوٗنَ ۟ۙ
فَكُبْكِبُوْاஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர்فِيْهَاஅதில்هُمْஅவையும்وَالْغَاوٗنَۙ‏வழிகேடர்களும்
FபகுBப்கிBபூ Fபீஹா ஹும் வல்காவூன்
முஹம்மது ஜான்
பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
IFT
பின்னர் அந்த தெய்வங்களும், வழிகெட்டுப் போனவர்களும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, அவைகளும் (அவைகளால்) வழி தவறியவர்களும், முகங்குப்புற (நரகமாகிய) அதில் தள்ளப்படுவார்கள்.
Saheeh International
So they will be overturned into it [i.e., Hellfire], they and the deviators
وَجُنُوْدُ اِبْلِیْسَ اَجْمَعُوْنَ ۟ؕ
وَجُنُوْدُஇன்னும் , ராணுவம்اِبْلِيْسَஇப்லீஸின்اَجْمَعُوْنَؕ‏அனைவரும்
வ ஜுனூது இBப்லீஸ அஜ்ம'ஊன்
முஹம்மது ஜான்
“இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
IFT
இப்லீசின் சேனைகளும் அனைவரும் நரகில் தலைகீழாக எறியப்படுவார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இப்லீஸின் சேனைகள் அனைவரும் (அவ்வாறே நரகில் தள்ளப்படுவார்கள்.)
Saheeh International
And the soldiers of Iblees, all together.
قَالُوْا وَهُمْ فِیْهَا یَخْتَصِمُوْنَ ۟ۙ
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்وَهُمْஅவர்கள்فِيْهَاஅதில்يَخْتَصِمُوْنَۙ‏அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க
காலூ வ ஹும் Fபீஹா யக்க்தஸிமூன்
முஹம்மது ஜான்
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
IFT
அங்கு இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டையிட்டுக் கொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களோ (தங்களுக்குள்) அதில் தர்க்கித்துக் கொண்டவர்களாகக் கூறுவார்கள்.
Saheeh International
They will say while they dispute therein,
تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنْ كُنَّاநிச்சயமாக நாம்لَفِىْ ضَلٰلٍவழிகேட்டில்தான் இருந்தோம்مُّبِيْنٍۙ‏தெளிவான
தல்லாஹி இன் குன்னா லFபீ ளலாலிம் முBபீன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,)
IFT
வழி தவறியவர்கள் (தங்கள் தெய்வங்களிடம்) கூறுவார்கள்: “இறைவன் மீது ஆணையாக! நாங்கள் வெளிப்படையான வழிகேட்டிலிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் பகிரங்கமான வழிகேட்டிலிருந்தோம்-
Saheeh International
"By Allah, we were indeed in manifest error
اِذْ نُسَوِّیْكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
اِذْ نُسَوِّيْكُمْஉங்களை சமமாக ஆக்கியபோதுبِرَبِّஇறைவனுக்குالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
இத் னுஸவ்வீகும் Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது);
அப்துல் ஹமீது பாகவி
(தங்கள் தெய்வங்களை நோக்கி) ‘‘ உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்!
IFT
அகிலங்களின் அதிபதியுடன் உங்களுக்கு சரி சமமான தகுதியை நாங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அகிலத்தாரின் இரட்சகனாக இருப்பவனுக்கு (இணையாக்கப்பட்ட) உங்களை நாங்கள் சமமாக ஆக்கிவைத்தபோது – (பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தோம்)
Saheeh International
When we equated you with the Lord of the worlds.
وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الْمُجْرِمُوْنَ ۟
وَمَاۤ اَضَلَّنَاۤஎங்களை வழி கெடுக்கவில்லைاِلَّاதவிரالْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகளை
வ மா அளல்லனா இல்லல் முஜ்ரிமூன்
முஹம்மது ஜான்
இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(பூசாரிகளை சுட்டிக் காண்பித்து இந்தக்) குற்றவாளிகளே தவிர (வேறு எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை.
IFT
குற்றவாளிகள் தாம் எங்களை இந்த வழிகேட்டில் தள்ளி விட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(இக்) குற்றவாளிகளேயன்றி (வேறு எவரும்) எங்களை வழிகெடுக்கவுமில்லை.
Saheeh International
And no one misguided us except the criminals.
فَمَا لَنَا مِنْ شَافِعِیْنَ ۟ۙ
فَمَا لَـنَاஆகவே, யாரும் எங்களுக்கு இல்லைمِنْ شٰفِعِيْنَۙ‏பரிந்துரையாளர்களில்
Fபமா லனா மின் ஷா Fபி'ஈன்
முஹம்மது ஜான்
ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே!
IFT
இப்போது, எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் யாரும் இல்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே “எங்களுக்குப் பரிந்துரையாளர்களிலிருந்து எவரும் இல்லை.
Saheeh International
So now we have no intercessors
وَلَا صَدِیْقٍ حَمِیْمٍ ۟
وَلَا صَدِيْقٍஇன்னும் நண்பர்களில் யாரும் இல்லைحَمِيْمٍ‏உற்ற
வ லா ஸதீகின் ஹமீம்
முஹம்மது ஜான்
அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(எங்கள் மீது அனுதாபமுள்ள) ஒரு உண்மையான நண்பனுமில்லையே!
IFT
உற்ற நண்பர் எவருமிலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நெருங்கிய எந்த சிநேகிதனும் இல்லை.
Saheeh International
And not a devoted friend.
فَلَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
فَلَوْ اَنَّஆகவே,முடியுமாயின்لَـنَاஎங்களுக்குكَرَّةًஒருமுறை திரும்பச்செல்வதுفَنَكُوْنَநாங்கள் ஆகிவிடுவோம்مِنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களில்
Fபலவ் அன்ன லனா கர்ரதன் Fபனகூன மினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகி விடுவோமே! (என்றுங் கூறுவார்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக்கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்'' என்று புலம்புவார்கள்.
IFT
அந்தோ! மீண்டும் ஒருமுறை எங்களுக்குத் திரும்பிச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாய்த் திகழ்வோமே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, நிச்சயமாக எங்களுக்கு (உலகிற்குத்) திரும்பிச் செல்லுதல் (என்பது) இருந்தால் விசுவாசங்கொண்டோர்களில் நாங்கள் ஆகிவிடுவோம்” (என்று பிதற்றுவார்கள்)
Saheeh International
Then if we only had a return [to the world] and could be of the believers..."
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاٰيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَّمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயத(ன்)வ் வமா கான அக்தருஹும் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்புவதில்லை.
IFT
திண்ணமாக, இதில் பெரியதொரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கின்றது, (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் (இதனை) விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை.
Saheeh International
Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
முஹம்மது ஜான்
மேலும், நிச்சயமாக உமது இறைவன் (யாவரையும்) மிகைத்தோனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவனே (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே! நிச்சயமாக உம்முடைய இரட்சகன் - அவனே திட்டமாக (யாவரையும்) மிகைத்தோன், மிகக் கிருபையுடையோன்.
Saheeh International
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَتْ قَوْمُ نُوْحِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்கள்نُوْحِநூஹூடையۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏தூதர்களை
கத்தBபத் கவ்மு னூஹினில் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
நூஹுடைய சமூகத்தாரும், (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
IFT
நூஹுடைய சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நூஹ்வுடைய சமூகத்தார் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Saheeh International
The people of Noah denied the messengers
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَஅவர் கூறியபோதுلَهُمْஅவர்களுக்குاَخُوْசகோதரர்هُمْஅவர்களதுنُوْحٌநூஹ்اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
இத் கால லஹும் அகூஹும் னூஹுன் அலா தத்தகூன்
முஹம்மது ஜான்
அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் கூறியபோது: “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்ச மாட்டீர்களா?”
அப்துல் ஹமீது பாகவி
அவர்களின் சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறினார்: ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா?
IFT
அவர்களிடம் அவர்களின் சகோதரர் நூஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய சகோதரர் நூஹ் அவர்களிடம் “நீங்கள் (அல்லாஹ்வுக்கு) பயப்பட மாட்டீர்களா? எனக்கூறியபோது,
Saheeh International
When their brother Noah said to them, "Will you not fear Allah?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர் ஆவேன்اَمِيْنٌۙ‏ஒரு நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நான் உங்களுக்கு (இறைவனால்) அனுப்பப் பெற்ற நம்பிக்கைக்குரிய தூதன் ஆவேன்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன்.
IFT
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய தூதராவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் உங்களுக்கு (அல்லாஹ்வினால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கைக்குரிய ஒரு தூதனாவேன்.
Saheeh International
Indeed, I am to you a trustworthy messenger.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُوْاஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَ اَطِيْعُوْنِ‌ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல்லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.
IFT
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள்.
Saheeh International
So fear Allah and obey me.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۚ
وَمَاۤ اَسْــٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَ‌ۚ‏அகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
இதற்காக, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடம் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(இதற்காக) நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கின்றன.
IFT
நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதற்காக) “நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை, என்னுடைய கூலி அகிலத்தாரின் இரட்சகனின் மீதே தவிர (வேறு எவரிடமிருந்தும்) இல்லை”
Saheeh International
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ؕ
فَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ ؕ‏இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள் (என்று நூஹ் கூறியபோது),
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், நீங்கள் (அந்த) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்'' (என்று கூறினார்.)
IFT
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (தயக்கமின்றி) எனக்குக் கீழ்ப்படியுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்” (என்று கூறினார்).
Saheeh International
So fear Allah and obey me."
قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَ ۟ؕ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اَنُؤْمِنُநாம் நம்பிக்கை கொள்வோமாلَكَஉம்மைوَاتَّبَعَكَஉம்மை பின்பற்றி இருக்கالْاَرْذَلُوْنَؕ‏சாதாரணமானவர்கள்
காலூ அனு'மினு லக வத்தBப 'அகல் அர்தலூன்
முஹம்மது ஜான்
அவர்கள்: “தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, உம் மீது நாங்கள் ஈமான் கொள்வோமா,” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தான் உம்மைப் பின்பற்றியிருக்கின்றனர்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நாங்கள் உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மிகவும் கீழ்த்தரமான மக்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள்” (எங்களில் தரத்தால்) மிகத்தாழ்ந்தவர்கள் உம்மைப் பின்பற்றியிருக்கின்ற நிலையில், உம்மை நாங்கள் விசுவாசிப்போமா” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Should we believe you while you are followed by the lowest [class of people]?"
قَالَ وَمَا عِلْمِیْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ
قَالَஅவர் கூறினார்وَمَا عِلْمِىْஎனக்கு ஞானம் இல்லைبِمَاஎதைப் பற்றிكَانُوْاஇருந்தனர்يَعْمَلُوْنَ‌ۚ‏செய்கின்றனர்
கால வமா 'இல்மீ Bபிமா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
அவர் கூறினார்: அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் அறியமாட்டேன்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அவர், ‘‘ நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறியமாட்டேன். (அதை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும்,
IFT
அதற்கு நூஹ் கூறினார்: “அவர்களின் செயல் எப்படிப்பட்டதென்று எனக்கென்ன தெரியும்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) அவர் “அவர்கள் செய்து கொண்டிருப்பவைபற்றி எனக்கு என்ன தெரியும்?” என்று கூறினார்.
Saheeh International
He said, "And what is my knowledge of what they used to do?
اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰی رَبِّیْ لَوْ تَشْعُرُوْنَ ۟ۚ
اِنْ حِسَابُهُمْஅவர்களது விசாரணை இல்லைاِلَّاதவிரعَلٰىமீதேرَبِّىْ‌என் இறைவன்لَوْ تَشْعُرُوْنَ‌ۚ‏நீங்கள் உணரவேண்டுமே!
இன் ஹிஸாBபுஹும் இல்லா 'அலா ரBப்Bபீ லவ் தஷ்'உரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின், அவர்களுடைய கேள்வி கணக்கு (பற்றிய விசாரணை) என்னுடைய இறைவனிடம்தான் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(இவற்றைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
அவர்களுடைய கணக்கெல்லாம் என் அதிபதியின் பொறுப்பிலுள்ளது. நீங்கள் சற்று உணர்ந்து செயல்படக்கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(“அவைபற்றிய) அவர்களின் கணக்கு என் இரட்சகன் மீதே தவிர (என்மீது கடமை) இல்லை, (இது பற்றி நீங்கள் உணருபவர்களாக இருப்பின்” (அவர்களை இழித்துக் கூறி இருக்க மாட்டீர்கள்).
Saheeh International
Their account is only upon my Lord, if you [could] perceive.
وَمَاۤ اَنَا بِطَارِدِ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
وَمَاۤ اَنَاநான் இல்லைبِطَارِدِவிரட்டக்கூடியவன்الْمُؤْمِنِيْنَ‌ۚ‏நம்பிக்கையாளர்களை
வ மா அன Bபிதாரிதில் மு'மினீன்
முஹம்மது ஜான்
முஃமின்களை நான் விரட்டி விடுபவன் அல்லன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது.
IFT
நம்பிக்கை கொள்வோரை விரட்டிவிடுவது என் பணியன்று.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“விசுவாசங்கொண்டோரை நான் விரட்டிவிடுபவனுமல்லன்”.
Saheeh International
And I am not one to drive away the believers.
اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ؕ
اِنْ اَنَاநான் இல்லைاِلَّاதவிரنَذِيْرٌஎச்சரிப்பாளராகவேمُّبِيْنٌؕ‏தெளிவான
இன் அன இல்லா னதீரும் முBபீன்
முஹம்மது ஜான்
நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' என்று கூறினார்.
IFT
நானோ, தெளிவாக எச்சரிக்கை செய்பவனாயிருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர (வேறு) இல்லை: (என்றும் கூறினார்.)
Saheeh International
I am only a clear warner."
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِیْنَ ۟ؕ
قَالُوْاஅவர்கள் கூறினர்لَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்يٰـنُوْحُநூஹே!لَـتَكُوْنَنَّநிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்مِنَ الْمَرْجُوْمِيْنَؕ‏ஏசப்படுபவர்களில்
காலூ ல'இல் லம் தன்தஹி யா னூஹு லதகூனன்ன மினல் மர்ஜூமீன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ நூஹே! நீர் இதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் கல்லெறிந்து கொல்லப்படுவீர்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள், “நூஹே! நீர் இதனைத் தவிர்த்துக்கொள்ளாவிடில், கல்லடிபட்டு விரட்டப்படுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நூஹே! நீர் (இவ்வாறு கூறுவதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், (கல்லால்) எறியப்படுபவர்களில் (ஒருவராக) நிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "If you do not desist, O Noah, you will surely be of those who are stoned."
قَالَ رَبِّ اِنَّ قَوْمِیْ كَذَّبُوْنِ ۟ۚۖ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنَّநிச்சயமாகقَوْمِىْஎன் மக்கள்كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏என்னை பொய்ப்பித்து விட்டனர்
கால ரBப்Bபி இன்ன கவ்மீ கத்தBபூன்
முஹம்மது ஜான்
அவர் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய சமூகத்தார்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர், ‘‘ என் இறைவனே! என் (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.''
IFT
நூஹ் இறைஞ்சினார்: “என் இறைவனே! என் சமூகத்தார் என்னைப் பொய்யனென்று தூற்றிவிட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “என் இரட்சகனே! நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் என்னைப் பொய்யாக்கிவிட்டார்கள்” என்று கூறினார்.
Saheeh International
He said, "My Lord, indeed my people have denied me.
فَافْتَحْ بَیْنِیْ وَبَیْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِیْ وَمَنْ مَّعِیَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
فَافْتَحْஆகவே, நீ தீர்ப்பளி!بَيْنِىْஎனக்கும் இடையில்وَبَيْنَهُمْஇன்னும் அவர்களுக்கும் இடையில்فَتْحًاதெளிவானوَّنَجِّنِىْஎன்னை(யும்) பாதுகாத்துக்கொள்وَمَنْ مَّعِىَஎன்னுடன் உள்ளவர்களையும்مِنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களில்
FபFப்தBப் Bபய்னீ வ Bபய் னஹும் Fபத் ஹ(ன்)வ் வ னஜ்ஜினீ வ மம் ம'இய மினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
ஆகவே, நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!” (என்று பிரார்த்தித்தார்.)
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்.
IFT
இனி எனக்கும் அவர்களுக்குமிடையில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்குவாயாக! மேலும், என்னையும் என்னுடன் இருக்கும் இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆதலால், எனக்கிடையிலும், அவர்களுக்கிடையிலும் ஒரு தீர்ப்புச் செய்வாயாக! என்னையும், விசுவாசங்கொண்டவர்களில் என்னுடன் உள்ளவர்களையும் காப்பாற்றுவாயாக” (என்று பிரார்த்தித்தார்.)
Saheeh International
Then judge between me and them with decisive judgement and save me and those with me of the believers."
فَاَنْجَیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۚ
فَاَنْجَيْنٰهُஆகவே, அவரையும் பாதுகாத்தோம்وَمَنْ مَّعَهٗஅவருடன் உள்ளவர்களையும்فِى الْـفُلْكِகப்பலில்الْمَشْحُوْنِ‌ۚ‏நிரம்பிய
Fப அன்ஜய்னாஹு வ மம்ம'அஹூ Fபில் Fபுல்கில் மஷ்ஹூன்
முஹம்மது ஜான்
ஆகவே, நாம் அவரையும் அவருடனிருந்தவர்களையும் நிறைந்திருந்த கப்பலில் இரட்சித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
இறுதியில், நிரம்பிய ஒரு கப்பலில் அவரையும், அவருடனிருந்தவர்களையும் நாம் காப்பாற்றிக்கொண்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவரையும் (விசுவாசங்கொண்டவர்களாக) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற ஜீவராசிகளால்) நிறைக்கப்பட்டிருந்த கப்பலில் (ஏற்றி) நாம் காப்பாற்றினோம்.
Saheeh International
So We saved him and those with him in the laden ship.
ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِیْنَ ۟ؕ
ثُمَّபிறகுاَغْرَقْنَاநாம் அழித்தோம்بَعْدُபின்னர்الْبٰقِيْنَؕ‏மீதம் இருந்தவர்களை
தும்ம அக்ரக்னா Bபஃதுல் Bபாகீன்
முஹம்மது ஜான்
அதன் பிறகு, எஞ்சியிருந்தவர்களை நாம் மூழ்கடித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.
IFT
பின்னர், எஞ்சியிருந்த மனிதர்களை மூழ்கடித்துவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், எஞ்சியிருந்தவர்களை அப்பால் நாம் மூழ்கடித்துவிட்டோம்.
Saheeh International
Then We drowned thereafter the remaining ones.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَّمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயாஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் ஈமான் கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.
IFT
திண்ணமாக, இதில் ஒரு சான்று உள்ளது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்பவர்களாக இருக்கவுமில்லை.
Saheeh International
Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَ اِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன் மகா கருணையுடையவன்.
IFT
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக (நபியே) உமதிரட்சகன் (அவனை நிராகரித்தவரை தண்டனை செய்வதில் யாவரையும்) அவன்தான் மிகைத்தவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَتْ عَادُ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்عَادُஆது சமுதாய மக்கள்اۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏தூதர்களை
கத்தBபத் 'ஆதுனில் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ ஆது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
IFT
ஆத் சமூகத்தினர் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆது (கூட்டத்தார் நம்முடைய) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Saheeh International
ʿAad denied the messengers
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூருவீராக!لَهُمْஅவர்களுக்குاَخُوْசகோதரர்هُمْஅவர்களதுهُوْدٌஹூதுاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் பயந்துகொள்ள மாட்டீர்களா?
இத் கால லஹும் அகூஹும் ஹூதுன் அலா தத்தகூன்
முஹம்மது ஜான்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூத் : “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது:
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய சகோதரர் ‘ஹூது' அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?
IFT
அவர்களுடைய சகோதரர் ஹூத் அவர்களிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய சகோதரர் ஹூது அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படமாட்டீர்களா” என்ற கூறியபோது,
Saheeh International
When their brother Hūd said to them, "Will you not fear Allah?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌஒரு தூதர்اَمِيْنٌ‌ۙ‏நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்;
IFT
நான் உங்களுடைய நம்பிக்கைக்குரிய தூதரா வேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதனாவேன்,
Saheeh International
Indeed, I am to you a trustworthy messenger.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ ۚ‏எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல்லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
IFT
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்.”
Saheeh International
So fear Allah and obey me.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَمَاۤ اَسْــٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَ ؕ‏அகிலங்களின்
வமா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கிறது.
IFT
நான் இப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனக்குரிய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இதற்காக உங்களிடத்தில் யாதொரு கூலியையும் நான் கேட்கவில்லை, என்னுடைய கூலி (யாவும்) அகிலத்தாரின் இரட்சகனின் மீதே தவிர (வேறு எவரிடமிருந்தும்) இல்லை”.
Saheeh International
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
اَتَبْنُوْنَ بِكُلِّ رِیْعٍ اٰیَةً تَعْبَثُوْنَ ۟ۙ
اَتَبْنُوْنَகட்டிடத்தை கட்டுகிறீர்களா?بِكُلِّ رِيْعٍஒவ்வொருஇடத்திலும்اٰيَةًஒரு கட்டிடத்தைتَعْبَثُوْنَۙ‏விளையாடுகிறீர்கள்
அதBப்னூன Bபிகுல்லி ரீ'இன் ஆயதன் தஃBபதூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை நீங்கள் வீணாகக் கட்டுகிறீர்களே!
IFT
என்ன இது! உயரமான இடங்களிலெல்லாம் வீணாக நினைவுக் கட்டடங்களை நீங்கள் எழுப்புகின்றீர்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீண் வேலை செய்கிறவர்களாக அடையாளமிடப்பட்ட கட்டிடங்களைக் கட்டுகிறீர்களா?
Saheeh International
Do you construct on every elevation a sign, amusing yourselves,
وَتَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ ۟ۚ
وَ تَتَّخِذُوْنَஇன்னும் நீங்கள் எற்படுத்துகிறீர்கள்مَصَانِعَபெரியகோட்டைகளைلَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏நீங்கள் நிரந்தரமாக இருப்பதைப் போன்று
வ தத்தகிதூன மஸானி'அ ல'அல்லகும் தக்லுதூன்
முஹம்மது ஜான்
இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கிறீர்கள்.
IFT
பெரும் பெரும் மாளிகைகளை நிர்மாணிக்கின்றீர்கள் நீங்கள் என்றென்றும் வாழப் போவதைப்போல!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “நீங்கள் நிரந்தரமாக இருந்துவிடலாம் என்பதற்காக உயர்ந்த மாளிகைகளை ஆக்கிக் கொள்கிறீர்களா?”
Saheeh International
And take for yourselves constructions [i.e., palaces and fortresses] that you might abide eternally?
وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِیْنَ ۟ۚ
وَاِذَا بَطَشْتُمْநீங்கள் யாரையும் தாக்கினால்بَطَشْتُمْதாக்குகிறீர்கள்جَبَّارِيْنَ‌ۚ‏அநியாயக்காரர்களாக
வ இதா Bபதஷ்தும் Bபதஷ்தும் ஜBப்Bபாரீன்
முஹம்மது ஜான்
“இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகிறீர்கள்.
IFT
மேலும், நீங்கள் எவரையேனும் பிடித்தால் கொடூரமாகப் பிடிக்கிறீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “(எவரையேனும் ஏதுங்குற்றத்திற்காக) நீங்கள் பிடித்தால் (கொடூரமாக) மிக்க கொடுமையாளர்களின் பிடியாகப் பிடிக்கிறீர்கள்.”
Saheeh International
And when you strike, you strike as tyrants.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆக, அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
“எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
IFT
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, “நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், எனக்குக் கீழ்ப்படிந்தும் நடங்கள்”
Saheeh International
So fear Allah and obey me.
وَاتَّقُوا الَّذِیْۤ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ ۟ۚ
وَاتَّقُوْاஅஞ்சிக் கொள்ளுங்கள்!الَّذِىْۤ اَمَدَّஉதவியவனைكُمْஉங்களுக்குبِمَا تَعْلَمُوْنَ‌ۚ‏நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு
வத்தகுல் லதீ அமத் தகும் Bபிமா தஃலமூன்
முஹம்மது ஜான்
“மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்.
IFT
நீங்கள் அறிந்திருப்பவற்றையெல்லாம் எவன் உங்களுக்கு வழங்கினானோ, அவனுக்கு அஞ்சுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் அறிந்திருப்பவற்றைக் கொண்டு உங்களுக்கு(க்கொடுத்து) உதவி புரிந்திருக்கிறானே அத்தகையவனை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்”
Saheeh International
And fear He who provided you with that which you know,
اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِیْنَ ۟ۚۙ
اَمَدَّஉதவினான்كُمْஉங்களுக்குبِاَنْعَامٍகால்நடைகளைக் கொண்டுوَّبَنِيْنَ ۚۙ‏இன்னும் ஆண் பிள்ளைகளை
அமத்தகும் Bபி அன்'ஆ மி(ன்)வ் வ Bபனீன்
முஹம்மது ஜான்
“அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.
அப்துல் ஹமீது பாகவி
சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான்.
IFT
அவன் உங்களுக்குக் கால்நடைகளையும், பிள்ளைகளையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆடு, மாடு, ஒட்டகங்கள் போன்ற) கால் நடைகளையும், ஆண்மக்களையும் உங்களுக்கு)க் கொடுத்து) அவன் உதவி செய்திருக்கிறான்.
Saheeh International
Provided you with grazing livestock and children
وَجَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚ
وَجَنّٰتٍஇன்னும் தோட்டங்களைوَّعُيُوْنٍ‌ۚ‏இன்னும் ஊற்றுகளை
வ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
முஹம்மது ஜான்
“இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).
அப்துல் ஹமீது பாகவி
தோட்டங்களையும் நீர் ஊற்றுக்களையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்).
IFT
தோட்டங்களையும், நீரூற்றுகளையும் அருளினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுகளையும் கொண்டு (அவன் உதவியளித்துள்ளான்,)
Saheeh International
And gardens and springs.
اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟ؕ
اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்عَلَيْكُمْஉங்கள் மீதுعَذَابَதண்டனையைيَوْمٍநாளின்عَظِيْمٍؕ‏பெரிய
இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
(அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
IFT
நான் உங்கள் விஷயத்தில் ஒரு மாபெரும் நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனுக்கு நீங்கள் மாறு செய்தால்) “நிச்சயமாக நான் மகத்தானதொரு நாளின் வேதனையை (அது உங்களுக்கு வரும் என்பது பற்றி) பயப்படுகிறேன்” என்று கூறினார்.
Saheeh International
Indeed, I fear for you the punishment of a terrible day."
قَالُوْا سَوَآءٌ عَلَیْنَاۤ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوٰعِظِیْنَ ۟ۙ
قَالُوْاஅவர்கள் கூறினர்سَوَآءٌசமம்தான்عَلَيْنَاۤஎங்களுக்குاَوَعَظْتَநீர் உபதேசிப்பதும்اَمْஅல்லதுلَمْ تَكُنْஇல்லாததும்مِّنَ الْوٰعِظِيْنَۙ‏உபதேசிப்பவர்களில்
காலூ ஸவா'உன் 'அலய்னா அவ 'அள்த அம் லம் தகும் மினல் வா'இளீன்
முஹம்மது ஜான்
(இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே!
IFT
இதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் நல்லுரை கூறினாலும் கூறாவிட்டாலும் எல்லாம் எங்களுக்கு ஒன்றுதான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும், உபதேசம் செய்பவர்களில் நீர் இல்லாமலிருந்தாலும் சமம் தான் (நாங்கள் எங்கள் வழியிலிருந்து திரும்பப்போவதில்லை) என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "It is all the same to us whether you advise or are not of the advisors.
اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِیْنَ ۟ۙ
اِنْ هٰذَاۤஇது இல்லைاِلَّاதவிரخُلُقُவழக்கமேالْاَوَّلِيْنَۙ‏முன்னோரின்
இன் ஹாதா இல்லா குலுகுல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
“இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமே தவிரவேறில்லை.
IFT
இந்த விஷயங்கள் எல்லாம் தொன்றுதொட்டே கூறப்பட்டு வருபவைதாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது முன்னவர்களின் வழக்கமே தவிர (வேறு) இல்லை.
Saheeh International
This is not but the custom of the former peoples,
وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟ۚ
وَمَا نَحْنُநாங்கள் இல்லைبِمُعَذَّبِيْنَ‌ۚ‏தண்டிக்கப்படுபவர்களாக
வமா னஹ்னு Bபிமு 'அத்தBபீன்
முஹம்மது ஜான்
“மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”
அப்துல் ஹமீது பாகவி
(நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட மாட்டோம்'' (என்று கூறினார்கள்)
IFT
மேலும், நாங்கள் தண்டிக்கப்படக்கூடியவர்களல்லர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “நாங்கள் (உம் கூற்றுப்படி) வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” (என்றும் கூறினர்).
Saheeh International
And we are not to be punished."
فَكَذَّبُوْهُ فَاَهْلَكْنٰهُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
فَكَذَّبُوْهُஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்فَاَهْلَـكْنٰهُمْ‌ؕஆகவே, அவர்களை நாம் அழித்தோம்.اِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً‌ ؕஓர் அத்தாட்சிوَ مَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
Fபகத்தBபூஹு Fப அஹ்லக்னாஹும்; இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
முஹம்மது ஜான்
(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
IFT
இறுதியில் அவர்கள் அவரைப் பொய்யர் எனக் கூறிவிட்டார்கள். நாம் அவர்களை அழித்துவிட்டோம்.திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள், ஆகவே, நாம் அவர்களை அழித்துவிட்டோம், நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது, இன்னும், அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்பவர்களாக இருக்கவில்லை.
Saheeh International
And they denied him, so We destroyed them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
IFT
மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உமதிரட்சகன் - அவன்தான் (சகலரையும்) மிகைத்தவன், மிக்க கிருபையுடையவன்.
Saheeh International
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்ثَمُوْدُஸமூது மக்கள்الْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏தூதர்களை
கத்தBபத் தமூதுல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
ஸமூது (கூட்டத்தாரும் இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
‘ஸமூது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
IFT
ஸமூத் சமுதாயத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஸமூது (கூட்டத்தார் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டத்)தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Saheeh International
Thamūd denied the messengers
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூருங்கள்لَهُمْஅவர்களுக்குاَخُوْهُمْஅவர்களது சகோதரர்صٰلِحٌஸாலிஹ்اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா?
இத் கால லஹும் அகூஹும் ஸாலிஹுன் அலா தத்தகூன்
முஹம்மது ஜான்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்தை விட்டு விலகி) அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டாமா?''
IFT
அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய சகோதரர் (நபியாகிய) ஸாலிஹ் அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வை) பயந்து கொள்ளமாட்டீர்களா?” எனக்கூறியபோது (அவரை அவர்கள் பொய்யாக்கினார்கள்).
Saheeh International
When their brother Ṣalih said to them, "Will you not fear Allah?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌஒரு தூதர்اَمِيْنٌۙ‏நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன்.
IFT
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதனாவேன்.
Saheeh International
Indeed, I am to you a trustworthy messenger.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُوْاஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
IFT
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எனவே, நீங்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள், இன்னும், எனக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்”
Saheeh International
So fear Allah and obey me.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَمَاۤ اَسْــٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَؕ‏அகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை.''
IFT
இப்பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இதற்காக உங்களிடத்தில் யாதொரு கூலியையும் நான் கேட்கவில்லை, என்னுடைய கூலி(யாவும்) அகிலத்தாரின் இரட்சகனின் மீதே தவிர (வேறு எவரிடமிருந்தும்) இல்லை.
Saheeh International
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
اَتُتْرَكُوْنَ فِیْ مَا هٰهُنَاۤ اٰمِنِیْنَ ۟ۙ
اَتُتْرَكُوْنَநீங்கள் விடப்படுவீர்களா?فِىْ مَا هٰهُنَاۤஇங்கு இருப்பவற்றில்اٰمِنِيْنَۙ‏நிம்மதியானவர்களாக
அதுத்ரகூன Fபீ மா ஹாஹுனா ஆமினீன்
முஹம்மது ஜான்
“இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா?
IFT
நீங்கள் இங்குள்ள அனைத்துப் பொருள்களுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்வதற்கு விட்டு வைக்கப்படுவீர்களா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இங்குள்ள (சுகபோகங்களான)வற்றில் அச்சமற்றவர்களாக (இருக்க) நீங்கள் விட்டு வைக்கப்படுவீர்களா?
Saheeh International
Will you be left in what is here, secure [from death],
فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
فِىْ جَنّٰتٍதோட்டங்களிலும்وَّعُيُوْنٍۙ‏ஊற்றுகளிலும்
Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
முஹம்மது ஜான்
“தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-
அப்துல் ஹமீது பாகவி
(இங்குள்ள) தோட்டங்களிலும், நீர் ஊற்றுகளிலும்,
IFT
(அதாவது) இந்தத் தோட்டங்களிலும் நீரூற்றுகளிலும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“தோட்டங்களில் இன்னும் நீரூற்றுக்களில் -
Saheeh International
Within gardens and springs
وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِیْمٌ ۟ۚ
وَّزُرُوْعٍஇன்னும் விவசாய விளைச்சல்களிலும்وَّنَخْلٍபேரிச்ச மரங்களிலும்طَلْعُهَاஅதன் குலைகள்هَضِيْمٌ‌ۚ‏மென்மையாக
வ Zஜுரூ இ(ன்)வ் வ னக்லின் தல் 'உஹா ஹளீம்
முஹம்மது ஜான்
“வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,
அப்துல் ஹமீது பாகவி
குலை குலையாகத் தொங்கும் பேரீச்சந் தோப்புகளிலும், விவசாயப் பண்ணைகளிலும் (விட்டுவைக்கப்படுவீர்களா?)
IFT
பயிர்நிலங்களிலும் கனிந்த குலைகளையுடைய பேரீச்சந் தோப்புகளிலும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வேளாண்மைகளிலும் (மிருதுவான ஈரமுள்ள பழங்களைத் தாங்கியதாக) அவற்றின் குலைகள் இருக்கும், பேரீச்ச மரங்களிலும் (ஆகியவற்றிலெல்லாம் நீங்கள் அச்சமற்றிருக்க விட்டுவைக்கப்படுவீர்களா?)
Saheeh International
And fields of crops and palm trees with softened fruit?
وَتَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا فٰرِهِیْنَ ۟ۚ
وَتَـنْحِتُوْنَஇன்னும் குடைந்து கொள்கிறீர்கள்مِنَ الْجِبَالِமலைகளில்بُيُوْتًاவீடுகளைفٰرِهِيْنَ‌ۚ‏மதிநுட்ப மிக்கவர்களாக
வ தன்ஹிதூன மினல் ஜிBபாலி Bபுயூதன் Fபாரிஹீன்
முஹம்மது ஜான்
“மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?)
அப்துல் ஹமீது பாகவி
திறமைசாலிகளாக மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். (அதில் என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு வைக்கப்படுவீர்களா?)
IFT
மேலும், மலைகளைக் குடைந்து குடைந்து பெருமை கொண்டவர்களாய் நீங்கள் குடியிருப்புகள் அமைத்துக் கொள்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மிகத்திறமைசாலிகளாக (ஆணவம் கொண்டவர்களாக) மலைகளில் வீடுகளைக் குடைந்து (அமைத்துக்) கொள்கிறீர்கள்.
Saheeh International
And you carve out of the mountains, homes, with skill.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆக, அஞ்சிக் கொள்ளுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப் படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
IFT
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், இன்னும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
Saheeh International
So fear Allah and obey me.
وَلَا تُطِیْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِیْنَ ۟ۙ
وَلَا تُطِيْعُوْۤاகீழ்ப்படியாதீர்கள்اَمْرَகாரியத்திற்குالْمُسْرِفِيْنَۙ‏வரம்பு மீறிகளின்
வ லா துதீ'ஊ அம்ரல் முஸ்ரிFபீன்
முஹம்மது ஜான்
“இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்.
IFT
மேலும், வரம்பு மீறி வாழ்பவர்களுக்குக் கீழ்ப்படியாதீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும் வரம்பு மீறுவோரின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்:
Saheeh International
And do not obey the order of the transgressors,
الَّذِیْنَ یُفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟
الَّذِيْنَஎவர்கள்يُفْسِدُوْنَகுழப்பம்செய்கின்றனர்فِى الْاَرْضِபூமியில்وَ لَا يُصْلِحُوْنَ‏அவர்கள் சீர்திருத்துவதில்லை
அல்லதீன யுFப்ஸிதூன Fபில் அர்ளி வலா யுஸ்லிஹூன்
முஹம்மது ஜான்
“அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள், பூமியில் விஷமம் செய்வார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்.
IFT
அவர்களோ பூமியில் அராஜகம் விளைவிக்கின்றார்கள். இன்னும், எவ்விதச் சீர்திருத்தமும் செய்வதில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், பூமியில் குழப்பம் செய்வார்கள், இன்னும் சீர்திருத்தம் செய்யமாட்டார்கள் (என்றெல்லாம் ஸாலிஹ் நபி கூறியதற்கு),
Saheeh International
Who cause corruption in the land and do not amend."
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۚ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்مِنَ الْمُسَحَّرِيْنَ‌ۚ‏சூனியம் செய்யப்பட்ட ஒருவர்தான்
காலூ இன்னமா அன்த மினல் முஸஹ்ஹரீன்
முஹம்மது ஜான்
அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்” என்று சொன்னார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) கூறினர்: ‘‘ உம்மீது எவரோ சூனியம் செய்துவிட்டார்கள். (ஆதலால், உமது புத்தி தடுமாறிவிட்டது.)
IFT
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட மனிதராகவே இருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (ஸாலிஹே!) “நிச்சயமாக நீரோ சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "You are only of those affected by magic.
مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۖۚ فَاْتِ بِاٰیَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
مَاۤ اَنْتَநீர் இல்லைاِلَّاதவிரبَشَرٌமனிதராகவேمِّثْلُـنَا ۖۚஎங்களைப் போன்றفَاْتِஆகவே கொண்டு வாரீர்بِاٰيَةٍஅத்தாட்சியைاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَ‏உண்மையாளர்களில்
மா அன்த இல்லா Bபஷரும் மித்லுனா Fபா'தி Bபி ஆயதின் இன் குன்த மினஸ் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
“நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்).
அப்துல் ஹமீது பாகவி
நீர் நம்மைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவீராக'' (என்று கூறினார்கள்.)
IFT
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீர் உண்மையாளராயின் ஏதேனுமொரு சான்றினைக் கொண்டு வாரும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர, (வேறு) இல்லை, ஆகவே, உண்மையாளர்களில நீர் இருந்தால் (நாங்கள் வேண்டியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்று கூறினார்கள்)
Saheeh International
You are but a man like ourselves, so bring a sign, if you should be of the truthful."
قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَكُمْ شِرْبُ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۚ
قَالَஅவர் கூறினார்هٰذِهٖஇது ஒருنَاقَةٌபெண் ஒட்டகைلَّهَاஇதற்குشِرْبٌநீர் அருந்துவதற்குரிய ஒரு பங்குوَّلَـكُمْஇன்னும் உங்களுக்கும்شِرْبُநீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளதுيَوْمٍநாளில்مَّعْلُوْمٍ‌ۚ‏குறிப்பிட்ட
கால ஹாதிஹீ னாகதுல் லஹா ஷிர்Bபு(ன்)வ் வலகும் ஷிர்Bபு யவ்மிம் மஃலூம்
முஹம்மது ஜான்
அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘ (உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கிறது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகிறது.
IFT
அதற்கு ஸாலிஹ் கூறினார்: “இதோ! ஒரு பெண் ஒட்டகம்; (ஒரு நாள்) இது தண்ணீர் அருந்தட்டும். மற்றொரு நாள் நீங்களெல்லோரும் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் (அத்தாட்சியாக) “இதோ ஒரு பெண் ஒட்டகம் (குறிப்பிட்ட நாளில் கிணற்றிலிருந்து) இதற்கு தண்ணீர் அருந்தும் பங்கும், (அதுபோன்று) உங்களுக்கு குறிப்பிட்ட ஒருநாள் தண்ணீர் அருந்தும் பங்கும் உண்டு” என்று கூறினார்.
Saheeh International
He said, "This is a she-camel. For her is a [time of] drink, and for you is a [time of] drink, [each] on a known day.
وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابُ یَوْمٍ عَظِیْمٍ ۟
وَلَا تَمَسُّوْهَاஅதை தொட்டு விடாதீர்கள்!بِسُوْٓءٍதீங்கைக் கொண்டுفَيَاْخُذَபிடித்துக்கொள்ளும்كُمْஉங்களைعَذَابُதண்டனைيَوْمٍநாளின்عَظِيْمٍ‏பெரிய
வ லா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் 'அதாBபு யவ்மின் 'அளீம்
முஹம்மது ஜான்
“இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.”
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நீங்கள் அதற்கு ஒரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்.
IFT
இதற்கு எவ்விதத் தீங்கும் இழைக்காதீர்கள்; அப்படி தீங்கு இழைத்தீர்களானால் ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், “நீங்கள் எந்தத் தீங்கைக் கொண்டும் அதனைத் தீண்டாதீர்கள் (அவ்வாறு தீண்டினால்) மகத்தான நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்)
Saheeh International
And do not touch her with harm, lest you be seized by the punishment of a terrible day."
فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِیْنَ ۟ۙ
فَعَقَرُوْهَاஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள்فَاَصْبَحُوْاஆகவே ஆகிவிட்டனர்نٰدِمِيْنَۙ‏கைசேதப்பட்டவர்களாக
Fப'அகரூஹா Fப அஸ்Bபஹூ னாதிமீன்
முஹம்மது ஜான்
அவர்கள் அதன் கால் நரம்பைத் துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
IFT
ஆயினும், அவர்கள் அதன் கால் நரம்புகளை வெட்டி விட்டார்கள். பிறகு வருந்தக்கூடியவர்களாகி விட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் அதன் குதிகால் நரம்பினைத்தறித்து அவர்கள் அதை அறுத்துவிட்டார்கள், பின்னர் கைசேதப்பட்டோராய் ஆகிவிட்டனர்.
Saheeh International
But they hamstrung her and so became regretful.
فَاَخَذَهُمُ الْعَذَابُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
فَاَخَذَபிடித்ததுهُمُஅவர்களைالْعَذَابُ‌ؕதண்டனைاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاٰيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
Fப அகதஹுமுல் 'அதாBப்; இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
முஹம்மது ஜான்
ஆகவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது - நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது - எனினும், அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை.
IFT
அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது! நிச்சயமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது, நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங் கொள்பவர்களாக இருக்கவுமில்லை.
Saheeh International
And the punishment seized them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
முஹம்மது ஜான்
மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
IFT
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக (நபியே!) உமதிரட்சகன், அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன், மிகக்கிருபையுடையவன்.
Saheeh International
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَتْ قَوْمُ لُوْطِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَتْபொய்ப்பித்தனர்قَوْمُமக்கள்لُوْطٍலூத்துடையاۨلْمُرْسَلِيْنَ ۖ ۚ‏தூதர்களை
கத்தBபத் கவ்மு லூதினில் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
லூத்துடைய சமூகத்தாரும் (இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
லூத்துடைய மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
IFT
லூத்தின் சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யரெனத் தூற்றினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபி) லூத்துடைய சமூகத்தார் தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Saheeh International
The people of Lot denied the messengers
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தைلَهُمْஅவர்களுக்குاَخُوْசகோதரர்هُمْஅவர்களதுلُوْطٌலூத்துاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
இத் கால லஹும் அகூஹும் லூதுன் அலா தத்தகூன்
முஹம்மது ஜான்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டாமா?
IFT
அவர்களிடம் அவர்களின் சகோதரர் லூத் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களிடம் “நீங்கள் (அல்லாஹ்வை) பயந்து கொள்ளமாட்டீர்களா?” என்று கூறியபோது,
Saheeh International
When their brother Lot said to them, "Will you not fear Allah?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌஒரு தூதர்اَمِيْنٌۙ‏நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன்.
IFT
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதரா வேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் உஙகளுக்கு நம்பிக்கைக்குரிய தூதனாவேன்.
Saheeh International
Indeed, I am to you a trustworthy messenger.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ۚ‏இன்னும் , எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படியுங்கள்.
IFT
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்.
Saheeh International
So fear Allah and obey me.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَمَاۤ اَسْــٴَــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَ ؕ‏அகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை.
IFT
நான் இப்பணிக்காக உங்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை, என்னுடைய கூலி (யாவும்) அகிலத்தாரின் இரட்சகனின் மீதல்லாது (வேறு எவரின் மீதும்) இல்லை.
Saheeh International
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِیْنَ ۟ۙ
اَتَاْتُوْنَநீங்கள் வருகிறீர்களா?الذُّكْرَانَஆண்களிடம்مِنَ الْعٰلَمِيْنَۙ‏படைப்பினங்களில்
அதாதூனத் துக்ரான மினல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக் கொள்ள) உலகத்தார்களில் ஆண்களிடமே செல்கிறீர்கள்.
IFT
உலகப் படைப்பினங்களில் ஆண்களிடம் நீங்கள் செல்கின்றீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(தீய காரியத்திற்காக) அகிலத்தாரில் ஆடவர்களிடம் வருகின்றீர்களா?”
Saheeh International
Do you approach males among the worlds
وَتَذَرُوْنَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ عٰدُوْنَ ۟
وَ تَذَرُوْنَஇன்னும் விட்டு விடுகிறீர்கள்مَاஎதைخَلَقَபடைத்தான்لَـكُمْஉங்களுக்குرَبُّكُمْஉங்கள் இறைவன்مِّنْ اَزْوَاجِكُمْ‌ؕஉங்கள் மனைவிகளைبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்قَوْمٌமக்கள்عٰدُوْنَ‏வரம்பு மீறிய
வ ததரூன மா கலக லகும் ரBப்Bபுகும் மின் அZஜ்வாஜிகும்; Bபல் அன்தும் கவ்முன் 'ஆதூன்
முஹம்மது ஜான்
“இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இயற்கை முறையை) மீறிவிட்ட மக்கள் ஆவீர்கள்'' என்று கூறினார்.
IFT
மேலும், உங்கள் மனைவியரிடம் உங்களுக்காக உங்கள் இறைவன் படைத்திருப்பனவற்றை விட்டுவிடுகின்றீர்களா? உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் மக்களாவீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்கள் இரட்சகன் உங்களின் மனைவியரிலிருந்து உங்களுக்கெனப் படைத்ததையும் நீங்கள் விட்டுவிடுகிறீர்கள் இல்லை! நீங்கள் (அல்லாஹ்வின்) வரம்பைக் கடந்த சமூகத்தவர்கள்” (என்றும் கூறினார்).
Saheeh International
And leave what your Lord has created for you as mates? But you are a people transgressing."
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِیْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்لَٮِٕنْ لَّمْ تَنْتَهِநீர் விலகவில்லை என்றால்يٰلُوْطُலூத்தே!لَـتَكُوْنَنَّநிச்சயமாக நீர் ஆகிவிடுவீர்مِنَ الْمُخْرَجِيْنَ‏வெளியேற்றப்பட்டவர்களில்
கலூ ல'இல் லம் தன்தஹி யா லூது லதகூனன்ன மினல் முக்ரஜீன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘ லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் (நம் ஊரை விட்டுத்) துரத்தப்படுவீர்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “லூத்தே! நீர் இவ்வாறு கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளாவிடில், (எங்கள் ஊரிலிருந்து) வெளியேற்றப்படுகிறவர்களில் நீரும் சேர்க்கப்படுவீர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “லூத்தே! (இவ்வாறு உபதேசிப்பதிலிருந்து) நீர் விலகிக்கொள்ளாவிடில், நிச்சயமாக நீர் (ஊரிலிருந்து) வெளியேற்றப்பட்டவர்களில் ஆகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "If you do not desist, O Lot, you will surely be of those evicted."
قَالَ اِنِّیْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِیْنَ ۟ؕ
قَالَஅவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்لِعَمَلِكُمْஉங்கள் செயலைمِّنَ الْقَالِيْنَؕ‏வெறுப்பவர்களில்
கால இன்னீ லி'அமலிகும் மினல் காலீன்
முஹம்மது ஜான்
அவர் கூறினார்: “நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘ நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுக்கிறேன்'' என்று கூறி,
IFT
அவர் கூறினார்: “உங்கள் தீய செயல்களைக் கண்டு வெறுப்பவர்களில் நானும் ஒருவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர் “நிச்சயமாக நான் உங்களுடைய (இத்தீச்செயலை வெறுப்பவர்களில் உள்ளவனாவேன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "Indeed, I am, toward your deed, of those who detest [it].
رَبِّ نَجِّنِیْ وَاَهْلِیْ مِمَّا یَعْمَلُوْنَ ۟
رَبِّஎன் இறைவா!نَجِّنِىْஎன்னையும் பாதுகாத்துக்கொள்!وَاَهْلِىْஇன்னும் என் குடும்பத்தாரை(யும்)مِمَّا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்வதிலிருந்து
ரBப்Bபி னஜ்ஜ்ஜினீ வ அஹ்லீ மிம்ம்மா யஃமலூன்
முஹம்மது ஜான்
“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘ என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக'' (என்று பிரார்த்தித்தார்.)
IFT
என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருப்பவற்றிலிருந்து(ம் அதன் தண்டனையிலிருந்தும்) காப்பாற்றுவாயாக” (என்று பிரார்த்தித்தார்).
Saheeh International
My Lord, save me and my family from [the consequence of] what they do."
فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
فَنَجَّيْنٰهُஆக, அவரை(யும்) பாதுகாத்தோம்وَ اَهْلَهٗۤஇன்னும் அவருடைய குடும்பத்தாரை(யும்)اَجْمَعِيْنَۙ‏அனைவரையும்
Fபனஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
இறுதியில், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றிக் கொண்டோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றினோம்.
Saheeh International
So We saved him and his family, all,
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟ۚ
اِلَّاதவிரعَجُوْزًاஒரு மூதாட்டியைفِى الْغٰبِرِيْنَ‌ۚ‏மிஞ்சியவர்களில்
இல்லா 'அஜூZஜன் Fபில்காBபிரீன்
முஹம்மது ஜான்
(அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள்.
IFT
பின்னால் தங்கிவிட்டவர்களோடு இருந்த ஒரு கிழவியைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தண்டிக்கப்படுபவர்களோடு) எஞ்சியிருப்போரில் ஆகிவிட்ட ஒரு கிழவியான அவர் மனைவியைத்தவிர,
Saheeh International
Except an old woman among those who remained behind.
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟ۚ
ثُمَّபிறகுدَمَّرْنَاநாம் அழித்தோம்الْاٰخَرِيْنَ‌ۚ‏மற்றவர்களை
தும்ம தம்மர்னல் ஆ கரீன்
முஹம்மது ஜான்
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்து விட்டோம்.
IFT
பிறகு, மற்றவர்களை அழித்து விட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், மற்றவர்களை (அடியோடு) நாம் அழித்துவிட்டோம்.
Saheeh International
Then We destroyed the others.
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟
وَاَمْطَرْنَاஇன்னும் பொழிவித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمَّطَرًا‌ۚஒரு மழையைفَسَآءَ مَطَرُஅது மிக கெட்ட மழையாகும்الْمُنْذَرِيْنَ‏எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழைகளில்
வ அம்தர்னா 'அலய்ஹிம் மதரன் Fபஸா'அ மதருல் முன்தரீன்
முஹம்மது ஜான்
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட(அ)வர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது.
IFT
இன்னும் அவர்கள் மீது பொழிய வைத்தோம், ஒரு மழையை! அது மிக மோசமான மழையாக இருந்தது. அதுவோ எச்சரிக்கப்பட்டவர்கள் மீது இறங்கியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் மீது நாம் (கல்)மாரியை பொழியச் செய்தோம், ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட (அவர்களின்) மீது பொழியச்செய்த கல்மாரி கெட்டதாகிவிட்டது.
Saheeh International
And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً‌  ؕஓர் அத்தாட்சிوَمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலான வர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
IFT
திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்பவர்களாக இருக்கவுமில்லை.
Saheeh International
Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّ رَبَّكَ لَهُوَநிச்சயமாக உமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
முஹம்மது ஜான்
மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
IFT
மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இன்னும், நிச்சயமாக உமதிரட்சகன் - அவனே (யாவரையும்) மிகைத்தவன், பெருங்கிருபையுடையவன்.
Saheeh International
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
كَذَّبَ اَصْحٰبُ لْـَٔیْكَةِ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
كَذَّبَபொய்ப்பித்தனர்اَصْحٰبُ لْئَيْكَةِதோட்டக்காரர்கள்الْمُرْسَلِيْنَ ۖ‌ۚ‏தூதர்களை
கத்தBப அஸ் ஹாBபுல் அய்கதில் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(‘மத்யன்' என்னும் ஊரில்) சோலையில் வசித்திருந்தவர்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
IFT
அய்க்காவாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மரங்கள் அடர்ந்த பகுதியில் மத்யன் என்னும் ஊரில் வாழ்ந்த) தோப்புவாசிகளுக்கு தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Saheeh International
The companions of the thicket [i.e., the people of Madyan] denied the messengers
اِذْ قَالَ لَهُمْ شُعَیْبٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூருங்கள்لَهُمْஅவர்களுக்குشُعَيْبٌஷுஐபுاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்ச வேண்டாமா?
இத் கால லஹும் ஷு'அய்Bபுன் அலா தத்தகூன்
முஹம்மது ஜான்
ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது:
அப்துல் ஹமீது பாகவி
ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா?
IFT
அவர்களிடம் ஷுஐப் கூறியதை நினைவு கூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியாகிய) ஷூஜப் அவர்களிடம்) “நீங்கள் அல்லாஹ்வை) பயப்பட மாட்டீர்களா?” என்று கூறியயோது – (அவரை அவர்கள் பொய்யாக்கினார்கள்)
Saheeh International
When Shuʿayb said to them, "Will you not fear Allah?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர் ஆவேன்اَمِيْنٌۙ‏நம்பிக்கையான
இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையுள்ள ஒரு தூதனாக இருக்கிறேன்.
IFT
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்”
Saheeh International
Indeed, I am to you a trustworthy messenger.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
فَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‌ۚ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
“ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படியுங்கள்.
IFT
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், இன்னும், எனக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்.”
Saheeh International
So fear Allah and obey me.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَمَاۤ اَسْــٴَــــلُكُمْநான் உங்களிடம் கேட்கவில்லைعَلَيْهِஇதற்காகمِنْ اَجْرٍ‌ۚஎவ்வித கூலியையும்اِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلٰى رَبِّஇறைவனிடமேالْعٰلَمِيْنَ ؕ‏அகிலங்களின்
வ மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரின் இன் அஜ்ரிய இல்லா 'அலா ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தார்களின் இறைவனிடமே தவிர (வேறெவரிடமும்) இல்லை.”
IFT
நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கோரவில்லை. எனது கூலியோ அனைத்துலகங்களின் அதிபதியிடமே உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை, என்னுடைய கூலி(யாவும்) அகிலத்தாரின் இரட்சகன் மீதே தவிர வேறு எவரின் மீதும் இல்லை.”
Saheeh International
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
اَوْفُوا الْكَیْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِیْنَ ۟ۚ
اَوْفُواமுழுமைப்படுத்துங்கள்الْـكَيْلَஅளவையைوَلَا تَكُوْنُوْاஆகிவிடாதீர்கள்مِنَ الْمُخْسِرِيْنَ‌ۚ‏நஷ்டம் ஏற்படுத்துபவர்களில்
அவ்Fபுல் கய்ல வலா தகூனூ மினல் முக்ஸிரீன்
முஹம்மது ஜான்
“அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அளவையை முழுமையாக அளந்து கொடுங்கள். நீங்கள் (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம்.
IFT
நிறைவாக அளந்து கொடுங்கள்; யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அளவையைப் பூரணமாக்குங்கள், (அளவைக் குறைத்து ஜனங்களுக்கு) நஷ்டமிழைப்போராகவும் நீங்கள் ஆகிவிடாதீர்கள்.”
Saheeh International
Give full measure and do not be of those who cause loss.
وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِیْمِ ۟ۚ
وَزِنُوْاநிறுங்கள்!بِالْقِسْطَاسِதராசைக் கொண்டுالْمُسْتَقِيْمِ‌ۚ‏நேரான
வ Zஜினூ Bபில்கிஸ்தாஸில் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
“நேரான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
சரியான தராசில் நிறுத்துக் கொடுங்கள்.
IFT
மேலும், சரியான தராசு கொண்டு எடை போடுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், சரியான தராசு கொண்டு நிறுத்துங்கள்”
Saheeh International
And weigh with an even [i.e., honest] balance.
وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟ۚ
وَلَا تَبْخَسُواகுறைக்காதீர்கள்النَّاسَமக்களுக்குاَشْيَآءَபொருள்களைهُمْஅவர்களுடையوَلَا تَعْثَوْاஇன்னும் கடும் குழப்பம் செய்யாதீர்கள்!فِى الْاَرْضِபூமியில்مُفْسِدِيْنَ‌ۚ‏கலகம்செய்தவர்களாக
வ லா தBப்கஸுன் னாஸ அஷ்யா 'அஹும் வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
“மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய அவர்களுடைய பொருள்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் கடுமையாக விஷமம் (-கலகம்) செய்து கொண்டு அலையாதீர்கள்.
IFT
மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள். பூமியில் அராஜகம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மனிதர்களுக்கு அவர்களின் பொருள்களை நீங்கள் குறைத்தும் விடாதீர்கள், நீங்கள் பூமியில் குழப்பம் செய்கிறவர்களாகவும் அலையாதீர்கள்.”
Saheeh International
And do not deprive people of their due and do not commit abuse on earth, spreading corruption.
وَاتَّقُوا الَّذِیْ خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْاَوَّلِیْنَ ۟ؕ
وَاتَّقُواஅஞ்சிக் கொள்ளுங்கள்!الَّذِىْ خَلَقَكُمْஉங்களைப் படைத்தவனைوَالْجِـبِلَّةَபடைப்பினங்களையும்الْاَوَّلِيْنَؕ‏முன்னோர்களான
வத்தகுல் லதீ கலககும் வல்ஜிBபில்லதல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
“அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சுங்கள்” (எனக் கூறினார்.)
அப்துல் ஹமீது பாகவி
உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்'' என்றும் கூறினார்.
IFT
மேலும், எவன் உங்களையும் உங்களுக்கு முந்தைய சமுதாயத்தாரையும் படைத்தானோ அவனுக்கு அஞ்சுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “உங்களையும், (உங்களுக்கு) முன்னவர்களான படைப்பினரையும் எவன் படைத்தானோ அத்தகையவனை நீங்கள் பயப்படுங்கள்” (என்று கூறினார்.)
Saheeh International
And fear He who created you and the former creation."
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۙ
قَالُوْۤاஅவர்கள் கூறினர்اِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்مِنَ الْمُسَحَّرِيْنَۙ‏சூனியம் செய்யப்பட்ட படைப்புகளில் ஒருவர்தான்
காலூ இன்னமா அன்த மினல் முஸஹ்ஹரீன்
முஹம்மது ஜான்
அவர்கள் சொன்னார்கள்: “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் கூறினர்: ‘‘ நீர் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர்.
IFT
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரே ஆவீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நீரோ சூனியம் செய்யப்பட்டவர்களில் உள்ளவர்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "You are only of those affected by magic.
وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَاِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۚ
وَمَاۤ اَنْتَநீர் இல்லைاِلَّاதவிரبَشَرٌமனிதராகவேمِّثْلُـنَاஎங்களைப் போன்றوَ اِنْ نَّظُنُّكَநிச்சயமாக உம்மை நாங்கள் கருதுகிறோம்لَمِنَ الْكٰذِبِيْنَ‌ۚ‏பொய்யர்களை சேர்ந்தவராகவே
வ மா அன்த இல்லா Bபஷரும் மித்லுனா வ இன்னளுன்னுக லமினல் காதிBபீன்
முஹம்மது ஜான்
“நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை; உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நீர் நம்மைப்போன்ற மனிதரே தவிர வேறில்லை. நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கிறோம்.
IFT
மேலும், நீர் எங்களைப் போன்று ஒரு மனிதரேயன்றி வேறல்லர் மேலும், நாங்கள் உம்மை முற்றிலும் பொய்யரென்றே கருதுகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறு இல்லை, இன்னும், நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் உள்ளவராக எண்ணுகிறோம்.
Saheeh International
You are but a man like ourselves, and indeed, we think you are among the liars.
فَاَسْقِطْ عَلَیْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟ؕ
فَاَسْقِطْவிழ வைப்பீராகعَلَيْنَاஎங்கள் மீதுكِسَفًاசில துண்டுகளைمِّنَஇருந்துالسَّمَآءِவானத்தில்اِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الصّٰدِقِيْنَؕ‏உண்மையாளர்களில்
Fப அஸ்கித் 'அலய்னா கிஸFபம் மினஸ் ஸமா'இ இன் குன்த மினஸ் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
“எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்.”
அப்துல் ஹமீது பாகவி
நீர் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து சில துண்டுகளை நம்மீது விழவையுங்கள்'' (என்று கூறினார்கள்.)
IFT
நீர் உண்மையாளராயின் வானத்தின் சில பகுதிகளை எங்கள்மீது விழச்செய்வீராக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எனவே, நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் வானத்திலிருந்து பல துண்டுகளை எங்களின் மீது விழச்செய்வீராக” (என்று கூறினார்கள்)
Saheeh International
So cause to fall upon us fragments of the sky, if you should be of the truthful."
قَالَ رَبِّیْۤ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்رَبِّىْۤஎன் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்வதை
கால ரBப்Bபீ அஃலமு Bபிமா தஃமலூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான்” என்று அவர் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர் ‘‘ நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோசமான) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)'' என்று கூறினார்.
IFT
அதற்கு ஷுஐப் கூறினார்: “நீங்கள் செய்துகொண்டிருப்பவை பற்றி என் இறைவன் நன்கறிகின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றை என் இரட்சகன் மிக்க அறிந்தவன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "My Lord is most knowing of what you do."
فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ یَوْمِ الظُّلَّةِ ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
فَكَذَّبُوْهُஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்فَاَخَذَஆகவே, பிடித்ததுهُمْஅவர்களைعَذَابُதண்டனைيَوْمِநாளின்الظُّلَّةِ‌ؕமேகம்اِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருக்கிறதுعَذَابَதண்டனையாகيَوْمٍஒரு நாளின்عَظِيْمٍ‏பெரிய
Fபகத்தBபூஹு Fப அகதஹும் 'அதாBபு யவ்மிள் ளுல்லஹ்; இன்னஹூ கான 'அதாBப யவ்மின் 'அளீம்
முஹம்மது ஜான்
பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.
IFT
அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினர். இறுதியில் குடை நாளின் வேதனை அவர்களைப் பீடித்துக்கொண்டது. திண்ணமாக, அது பயங்கரமான ஒரு நாளின் வேதனையாய் இருந்தது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னரும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள், ஆகவே, (அடர்ந்திருண்ட மேகங்களின்) நிழலுடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக்கொண்டது, நிச்சயமாக அது மகத்தான (கடினமான) நாளின் வேதனையாக இருந்தது.
Saheeh International
And they denied him, so the punishment of the day of the black cloud seized them. Indeed, it was the punishment of a terrible day.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கிறதுلَاَيَةً  ؕஓர் அத்தாட்சிوَمَا كَانَஇல்லைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்ன Fபீ தாலிக ல ஆயஹ்; வமா கான அக்தருஹும் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
IFT
திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருக்கிறது, அவர்களில் பெரும்பாலோர் விசுவாசங்கொள்வோராக இருக்கவுமில்லை.
Saheeh International
Indeed in that is a sign, but most of them were not to be believers.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
وَاِنَّநிச்சயமாகرَبَّكَ لَهُوَஉமது இறைவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏பெரும் கருணையாளன்
வ இன்ன ரBப்Bபக ல ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
முஹம்மது ஜான்
மேலும், நிச்சயமாக உம் இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
IFT
மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக (நபியே!) உமதிரட்சகன் - அவன்தான் (யாவரையும்) மிகைத்தவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
وَاِنَّهٗ لَتَنْزِیْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக இதுلَـتَنْزِيْلُஇறக்கப்பட்டرَبِّஇறைவனால்الْعٰلَمِيْنَؕ‏அகிலங்களின்
வ இன்னஹூ லதன்Zஜீலு ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக (குர்ஆன் ஷரீஃப் என்னும்) இது அகிலத்தாரின் இறைவனால்தான் அருளப்பட்டது.
IFT
மேலும், திண்ணமாக, இது அகிலங்களின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நிச்சயமாக (குர் ஆனாகிய) இது அகிலத்தாரின் இரட்சகனால் இறக்கிவைக்கப்பட்டதாகும்.
Saheeh International
And indeed, it [i.e., the Qur’an] is the revelation of the Lord of the worlds.
نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِیْنُ ۟ۙ
نَزَلَ بِهِஇதை இறக்கினார்الرُّوْحُரூஹ்الْاَمِيْنُۙ‏நம்பிக்கைக்குரியவரான
னZஜல Bபிஹிர் ரூஹுல் அமீன்
முஹம்மது ஜான்
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
அப்துல் ஹமீது பாகவி
(இறை கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர் என்னும் ஜிப்ரயீல்) இதை உமது உள்ளத்தில் இறக்கிவைத்தார்.
IFT
நம்பிக்கைக்குரிய ரூஹ்* இதனை எடுத்துக் கொண்டு இறங்கியிருக்கின்றது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வின் கட்டளைப்படி) ரூஹூல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதனைக் கொண்டு இறங்கினார்.
Saheeh International
The Trustworthy Spirit [i.e., Gabriel] has brought it down
عَلٰی قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِیْنَ ۟ۙ
عَلٰى قَلْبِكَஉமது உள்ளத்தில்لِتَكُوْنَநீர் ஆகவேண்டும் என்பதற்காகمِنَ الْمُنْذِرِيْنَۙ‏எச்சரிப்பவர்களில்
'அலா கல்Bபிக லிதகூன மினல் முன்திரீன்
முஹம்மது ஜான்
(நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) -
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களுக்கு) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக,
IFT
உமது உள்ளத்தின் மீது! எதற்காகவெனில் (அல்லாஹ்வின் சார்பில் மனிதர்களை) எச்சரிக்கை செய்பவர்களுள் நீரும் ஒருவராய் ஆக வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களில் (ஒருவராக) நீர் ஆவதற்காக உமது இதயத்தின் மீது (கூடுதல் குறைவின்றி இதைக் கொண்டு இறங்கினார்.
Saheeh International
Upon your heart, [O Muhammad] - that you may be of the warners -
بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیْنٍ ۟ؕ
بِلِسَانٍமொழியில்عَرَبِىٍّஅரபிمُّبِيْنٍؕ‏தெளிவான
Bபிலிஸானின் 'அரBபிய்யிம் முBபீன்
முஹம்மது ஜான்
தெளிவான அரபி மொழியில்.
அப்துல் ஹமீது பாகவி
தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டுள்ளது).
IFT
தெள்ளத் தெளிந்த அரபி மொழியில்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தெளிவான அரபிமொழியைக் கொண்டு இறங்கினார்.
Saheeh International
In a clear Arabic language.
وَاِنَّهٗ لَفِیْ زُبُرِ الْاَوَّلِیْنَ ۟
وَاِنَّهٗநிச்சயமாக இதுلَفِىْ زُبُرِவேதங்களில் கூறப்பட்டுள்ளதுالْاَوَّلِيْنَ‏முன்னோர்களின்
வ இன்னஹூ லFபீ ZஜுBபுரில் அவ்வலீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதைப் பற்றிய முன்னறிவிப்பு முன்னுள்ள வேதங்களிலும் இருக்கிறது.
IFT
மேலும், முன்னோர்களின் வேதங்களிலும், திண்ணமாக இது உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (குர் ஆனாகிய) இது (பற்றிய அறிவிப்பு) மூத்தவர்களின் வேத நூல்களிலும் (கூறப்பட்டு) உள்ளது.
Saheeh International
And indeed, it is [mentioned] in the scriptures of former peoples.
اَوَلَمْ یَكُنْ لَّهُمْ اٰیَةً اَنْ یَّعْلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اَوَلَمْ يَكُنْஇல்லையா?لَّهُمْஇவர்களுக்குاٰيَةًஓர் அத்தாட்சியாகاَنْ يَّعْلَمَهٗஇதை அறிவதேعُلَمٰٓؤُاஅறிஞர்கள்بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏இஸ்ரவேலர்களின்
அவலம் யகுல் லஹும் ஆயதன் அய் யஃலமஹூ 'உலமா'உ Bபனீ இஸ்ரா'ஈல்
முஹம்மது ஜான்
பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?
அப்துல் ஹமீது பாகவி
இஸ்ராயீலின் சந்ததியிலுள்ள கல்விமான்கள் இதை அறிந்திருப்பதே அவர்களுக்குப் போதுமான அத்தாட்சியல்லவா?
IFT
இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலுள்ள அறிஞர்கள் இதனை அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது இந்த மக்(காவாசி)களுக்கு ஒரு சான்றாக இல்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இஸ்ராயீலின் மக்களிலுள்ள அறிஞர்கள் இதனை அறிந்திருப்பது அவர்களுக்கு(ப் போதுமான) அத்தாட்சியாக இருக்கவில்லையா?
Saheeh International
And has it not been a sign to them that it is recognized by the scholars of the Children of Israel?
وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰی بَعْضِ الْاَعْجَمِیْنَ ۟ۙ
وَلَوْ نَزَّلْنٰهُஇதை நாம் இறக்கி இருந்தால்عَلٰى بَعْضِசிலவற்றின் மீதுالْاَعْجَمِيْنَۙ‏வாயற்ற பிராணிகள்
வ லவ் னZஜ்Zஜல்னாஹு 'அலா Bபஃளில் அஃஜமீன்
முஹம்மது ஜான்
இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்;
அப்துல் ஹமீது பாகவி
(இவர்கள் விரும்புவதைப்போல அரபி அல்லாத) அஜமிகளில் ஒருவர்மீது (அவருடைய மொழியில்) இதை இறக்கிவைத்து,
IFT
(ஆயினும், இவர்களின் பிடிவாதமான நடத்தை எவ்வாறுள்ளது என்றால்) நாம் இதனை அரபியரல்லாத எவர் மீதாவது இறக்கி வைத்திருந்தால்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் (குர் ஆனாகிய) இதை அரபியல்லாத சிலரின் மீது இறக்கி வைத்திருப்போமாயின்,
Saheeh International
And even if We had revealed it to one among the foreigners
فَقَرَاَهٗ عَلَیْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِیْنَ ۟ؕ
فَقَرَاَهٗஅவர் அதை ஓதி இருந்தாலும்عَلَيْهِمْஇவர்கள் மீதுمَّا كَانُوْاஆகி இருக்க மாட்டார்கள்بِهٖஅதைمُؤْمِنِيْنَؕ‏நம்பிக்கை கொண்டவர்களாக
Fபகர அஹூ 'அலய்ஹிம் மா கானூ Bபிஹீ மு'மினீன்
முஹம்மது ஜான்
அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் இதை இவர்களுக்கு ஓதிக் காண்பித்தால் இதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
மேலும், அவர் (தெள்ளிய அரபி வேதமாகிய) இதை அவர்களுக்கு ஓதிக்காட்டினால் அப்போதும் இவர்கள் அதனை நம்பக்கூடியவர்களாய் இருக்கமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்(கள்,) இதை அவர்களுக்கு ஓதிக்காட்டினாலும், இதனை அவர்கள் விசுவாசம் கொள்கிறவர்களாக இல்லை.
Saheeh International
And he had recited it to them [perfectly], they would [still] not have been believers in it.
كَذٰلِكَ سَلَكْنٰهُ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ؕ
كَذٰلِكَஇவ்வாறுதான்سَلَكْنٰهُநாம் இதை நுழைத்தோம்فِىْ قُلُوْبِஉள்ளங்களில்الْمُجْرِمِيْنَؕ‏குற்றவாளிகளின்
கதாலிக ஸலக்னாஹு Fபீ குலூBபில் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
அத்தகைய (கொடிய) நிராகரிப்பையே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் புகுத்தியிருக்கிறோம்.
IFT
இதேபோன்று நாம் இ(ந்நல்லுரை)தனை குற்றம் புரிந்தோரின் இதயங்களில் செலுத்தி விடுகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே இதனை (இக்)குற்றவாளிகளின் இதயங்களில் நாம் புகுத்தி விட்டோம்.
Saheeh International
Thus have We inserted it [i.e., disbelief] into the hearts of the criminals.
لَا یُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟ۙ
لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்بِهٖஇதைحَتّٰىவரைيَرَوُاஅவர்கள் பார்க்கின்றالْعَذَابَதண்டனையைالْاَلِيْمَۙ‏வலி தரும்
லா யு'மினூன Bபிஹீ ஹத்தா யரவுல் 'அதாBபல் அலீம்
முஹம்மது ஜான்
நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரை இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
துன்புறுத்தும் வேதனையை அவர்கள் கண்ணால் காணாத வரை அவர்கள், இதன் மீது நம்பிக்கை கொள்வதில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே! துன்புறுத்தும் வேதனையை) அவர்கள் (கண் கூடாகக்) காணும் வரை இதனைக் கொண்டு அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள்.
Saheeh International
They will not believe in it until they see the painful punishment.
فَیَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
فَيَاْتِيَهُمْஆக, அது அவர்களிடம் வரும்بَغْتَةًதிடீரெனوَّهُمْஅவர்களோلَا يَشْعُرُوْنَۙ‏உணராதவர்களாக இருக்க
Fபயாதியஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும்.
IFT
பிறகு, அவர்கள் உணராதிருக்கும் நிலையில் அது அவர்கள் மீது திடீரென வந்துவிழும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அ(த் தண்டனையான)து அவர்கள் உணர்ந்து கொள்ளாதிருக்கும் நிலையில் திடீரென அவர்களிடம் வரும்.
Saheeh International
And it will come to them suddenly while they perceive [it] not.
فَیَقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَ ۟ؕ
فَيَـقُوْلُوْاஅப்போது அவர்கள் கூறுவார்கள்هَلْ نَحْنُ مُنْظَرُوْنَؕ‏நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?
Fப யகூலூ ஹல் னஹ்னு முன்ளரூன்
முஹம்மது ஜான்
அப்பொழுது அவர்கள்: “எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?” என்று கேட்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அச்சமயம் அவர்கள் ‘‘ எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?
IFT
அப்போது அவர்கள் புலம்புவார்கள்: “எங்களுக்குச் சற்று அவகாசம் கிடைக்காதா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது சமயம் அவர்கள் “நாங்கள் (சிறிது) அவகாசம் கொடுக்கப்படுவோரா?” என்று கேட்பார்கள்.
Saheeh International
And they will say, "May we be reprieved?"
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
اَفَبِعَذَابِنَا?/ஆகவே, நமது தண்டனையைيَسْتَعْجِلُوْنَ‏அவர்கள் அவசரப்படுகிறார்கள்
அFபBபி 'அதாBபினா யஸ்தஃஜிலூன்
முஹம்மது ஜான்
நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
‘‘ எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?'' என்று கூறுவார்கள்.
IFT
இவர்கள் நம்முடைய வேதனை சீக்கிரம் வரவேண்டும் என்றா அவசரப்படுகின்றார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நம்முடைய வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்”
Saheeh International
So for Our punishment are they impatient?
اَفَرَءَیْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِیْنَ ۟ۙ
اَفَرَءَيْتَநீர் கவனித்தீரா!اِنْ مَّتَّعْنٰهُمْநாம் அவர்களுக்கு சுகமளித்தால்سِنِيْنَۙ‏பல ஆண்டுகள்
அFபர'அய்த இம் மத்தஃனாஹும் ஸினீன்
முஹம்மது ஜான்
நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும்,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் கவனித்தீரா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்க விட்டு வைத்திருந்தபோதிலும்,
IFT
நீர் கொஞ்சம் சிந்தித்தீரா? பல்லாண்டுகள்வரை சுகமாய் வாழ்ந்திட இவர்களுக்கு நாம் அவகாசம் அளித்துவிட்டிருந்தாலும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் பார்த்தீரா? நாம் இவர்களை (இவர்கள் இஷ்டப்பட்டவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்கச் செய்திருந்தால் -
Saheeh International
Then have you considered if We gave them enjoyment for years
ثُمَّ جَآءَهُمْ مَّا كَانُوْا یُوْعَدُوْنَ ۟ۙ
ثُمَّபிறகுجَآءَவந்தால்هُمْஅவர்களிடம்مَّاஎதைكَانُوْاஇருந்தனர்يُوْعَدُوْنَۙ‏எச்சரிக்கப்படுவார்கள்
தும்ம ஜா'அஹும் மா கானூ யூ'அதூன்
முஹம்மது ஜான்
பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவர்கள் பயமுறுத்தப்பட்டுவந்த வேதனை அவர்களை வந்தடைந்தால்,
IFT
பின்னர் எதனைக்கொண்டு இவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்களோ அது இவர்களிடம் வந்துவிடுமானால்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவர்கள் வாக்களிக்கப்படுபவர்களாக இருந்தார்களே அ(வ்வேதனையான)து அவர்களுக்கு வந்துவிட்டால் -
Saheeh International
And then there came to them that which they were promised?
مَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یُمَتَّعُوْنَ ۟ؕ
مَاۤ اَغْنٰىதடுக்காதுعَنْهُمْஅவர்களை விட்டும்مَّا كَانُوْا يُمَتَّعُوْنَؕ‏அவர்கள் சுகமளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது
மா அக்னா 'அன்ஹும் மா கானூ யுமத்த'ஊன்
முஹம்மது ஜான்
அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தராது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காதே!
IFT
அப்போதுஇவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அந்த வாழ்க்கைச் சாதனங்கள் இவர்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் சுகமனுபவிக்கச் செய்யப்பட்டிருந்தவை அவர்களுக்கு யாதொரு பயனும் தராது.
Saheeh International
They would not be availed by the enjoyment with which they were provided.
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ ۟
وَمَاۤ اَهْلَكْنَاநாம் அழிக்கவில்லைمِنْ قَرْيَةٍஎந்த ஊரையும்اِلَّاதவிரلَهَاஅதற்குمُنْذِرُوْنَ‌ ۛ ۖ ‏எச்சரிப்பாளர்கள்
வ மா அஹ்லக்னா மின் கர்யதின் இல்லா லஹா முன்திரூன்
முஹம்மது ஜான்
இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரை எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை.
IFT
(பாருங்கள்:) நாம் எந்த ஊரையும் அழித்ததில்லை எச்சரிக்கை செய்பவர்கள் அவர்களிடம் வந்து,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்த ஊ(ரா)ரையும் அதற்கு அச்சமூட்டி எச்சரிப்பவர்கள் இல்லாது நாம் அழித்துவிடவில்லை.
Saheeh International
And We did not destroy any city except that it had warners
ذِكْرٰی ۛ۫ وَمَا كُنَّا ظٰلِمِیْنَ ۟
ذِكْرٰى‌ۛஅறிவுரையாகும்وَمَا كُنَّاநாம் இல்லைظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
திக்ரா வமா குன்னா ளாலிமீன்
முஹம்மது ஜான்
ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்பவர்களாக இருக்கவில்லை.
IFT
நல்லுரை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றாத வரையில்! மேலும், நாம் கொடுமை புரிபவராயும் இருந்ததில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு நினைவூட்டவே (எச்சரிக்கையாளர்களை நாம் அனுப்பினோம்) இன்னும் (எவருக்கும்) அநியாயம் செய்பவர்களாகவும் நாம் இருக்கவில்லை.
Saheeh International
As a reminder; and never have We been unjust.
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّیٰطِیْنُ ۟
وَمَا تَنَزَّلَتْஇறக்கவில்லைبِهِஇதைالشَّيٰطِيْنُ‏ஷைத்தான்கள்
வமா தனZஜ்Zஜலத் Bபிஹிஷ் ஷயாதீன்
முஹம்மது ஜான்
இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்கள் கூறுகிறவாறு) இ(வ்வேதத்)தை ஷைத்தான்கள் இறக்கவில்லை.
IFT
இதனை (தெளிவான இந்த வேதத்தை) ஷைத்தான்கள் எடுத்துக் கொண்டு இறங்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (குர் ஆனாகிய) இ(வ்வேதத்)தைக் கொண்டு ஷைத்தான்கள் இறங்கவில்லை.
Saheeh International
And the devils have not brought it [i.e., the revelation] down.
وَمَا یَنْۢبَغِیْ لَهُمْ وَمَا یَسْتَطِیْعُوْنَ ۟ؕ
وَمَا يَنْۢبَغِىْதகுதியானதும்இல்லைلَهُمْஅவர்களுக்குوَمَا يَسْتَطِيْعُوْنَؕ‏அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்
வமா யம்Bபகீ லஹும் வமா யஸ்ததீ'ஊன்
முஹம்மது ஜான்
மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல; (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அது அவர்களுக்குத் தகுதியுமல்ல; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை.
IFT
அது அவர்களுக்குரிய பணியுமல்ல; அவ்வாறு செய்வதற்கும் அவர்களால் இயலாது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அது அவர்களுக்குத் தகுதியுமன்று.) அவர்கள் (அதற்கு) சக்தி பெறவுமாட்டார்கள்.
Saheeh International
It is not allowable for them, nor would they be able.
اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَ ۟ؕ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عَنِ السَّمْعِகேட்பதிலிருந்துلَمَعْزُوْلُوْنَؕ‏தூரமாக்கப்பட்டவர்கள்
இன்னஹும் 'அனிஸ் ஸம்'இ லமஃZஜூலூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர்கள் (இதை) காதால் கேட்பதிலிருந்தும் தடுக்கப் பட்டிருக்கின்றனர்.
IFT
திண்ணமாக, அவர்கள் இதனைச் செவியுறுவதிலிருந்தும்கூட விலக்கித் தூரமாக வைக்கப்பட்டுள்ளார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அவர்கள் செவியேற்பதிலிருந்தும் தடுக்கப்பட்டவர்களாவர்.
Saheeh International
Indeed they, from [its] hearing, are removed.
فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِیْنَ ۟ۚ
فَلَا تَدْعُஆக, அழைக்காதீர்مَعَ اللّٰهِஅல்லாஹ்வுடன்اِلٰهًاஒரு கடவுளைاٰخَرَவேறுفَتَكُوْنَநீர் ஆகிவிடுவீர்مِنَ الْمُعَذَّبِيْنَ‌ۚ‏தண்டிக்கப்படுபவர்களில்
Fபலா தத்'உ ம'அல் லாஹி இலாஹன் ஆகர Fபதகூன மினல் மு'அத்தBபீன்
முஹம்மது ஜான்
ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், (நபியே!) நீர் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்காதீர். (அழைத்தால்) அதனால் நீர் வேதனைக்குள்ளாவீர்.
IFT
ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்காதீர்கள். அவ்வாறாயின் தண்டனை பெறுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அல்லாஹ்வுடன் வேறோர் நாயனை நீர் அழைக்காதீர், (அவ்வாறு அழைத்தால்) அதனால் நீர் வேதனை செய்யப்படுபவர்களில் (உள்ளவராக) ஆகிவிடுவீர்.
Saheeh International
So do not invoke with Allah another deity and [thus] be among the punished.
وَاَنْذِرْ عَشِیْرَتَكَ الْاَقْرَبِیْنَ ۟ۙ
وَاَنْذِرْஎச்சரிப்பீராகعَشِيْرَتَكَஉமது உறவினர்களைالْاَقْرَبِيْنَۙ‏மிகநெருங்கிய(வர்கள்)
வ அன்திர் 'அஷீரதகல் அக்ரBபீன்
முஹம்மது ஜான்
இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
அப்துல் ஹமீது பாகவி
நீர் உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.
IFT
உம்முடைய மிக நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
Saheeh International
And warn, [O Muhammad], your closest kindred.
وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
وَاخْفِضْதாழ்த்துவீராக!جَنَاحَكَஉமது புஜத்தைلِمَنِ اتَّبَعَكَஉம்மை பின்பற்றியவர்களுக்குمِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏நம்பிக்கையாளர்களுக்கு
வக்Fபிள் ஜனாஹக லிமனித் தBப 'அக மினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
மேலும், உம்மைப் பின்பற்றி நடக்கும் முஃமின்களிடத்தில் தோள்தாழ்த்தி(க் கனிவுடன்) நடந்துகொள்வீராக!.
அப்துல் ஹமீது பாகவி
உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களிடம் புஜம் தாழ்த்தி(ப் பணிவாக நடந்து)க் கொள்வீராக.
IFT
மேலும், நம்பிக்கையாளர்களில் யார் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் பணிவாய் நடந்து கொள்ளும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் விசுவாசிகளில் உம்மைப் பின்பற்றியோருக்கு உம்முடைய (அன்பு காட்டுதல் எனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!
Saheeh International
And lower your wing [i.e., show kindness] to those who follow you of the believers.
فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟ۚ
فَاِنْ عَصَوْكَஅவர்கள் உமக்கு மாறு செய்தால்فَقُلْகூறுவீராகاِنِّىْநிச்சயமாக நான்بَرِىْٓءٌநீங்கியவன்مِّمَّا تَعْمَلُوْنَ‌ۚ‏நீங்கள் செய்வதிலிருந்து
Fப இன் அஸவ்க Fபகுல் இன்னீ Bபரீ'உம் மிம்ம்மா தஃமலூன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின்: “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறிவிடுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் ‘‘ நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றிலிருந்து விலகி விட்டேன்'' என்று கூறி,
IFT
அவர்கள் உமக்குக் கீழ்ப்படியாது மாறு செய்தால், “நீங்கள் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பாளியல்லன்!” என்று அவர்களிடம் கூறிவிடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, உமக்கு அவர்கள் மாறு செய்தால், “நிச்சயமாக நீங்கள் செய்வதைவிட்டும் நான் நீங்கியவன்” என்று கூறுவீராக!
Saheeh International
And if they disobey you, then say, "Indeed, I am disassociated from what you are doing."
وَتَوَكَّلْ عَلَی الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ
وَتَوَكَّلْநம்பிக்கை வைப்பீராகعَلَىமீதுالْعَزِيْزِமிகைத்தவனானالرَّحِيْمِۙ‏பெரும் கருணையாளன்
வ தவக்கல் அலல் 'அZஜீZஜிர் ரஹீம்
முஹம்மது ஜான்
இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
கருணையாளன், அனைவரையும் மிகைத்தவன் (அல்லாஹ்) மீது நம்பிக்கை வைப்பீராக.
IFT
மேலும், வல்லமை மிக்கவனும், பெரும் கிருபையாளனுமாகிய இறைவனையே முழுமையாகச் சார்ந்திரும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யாவரையும்) மிகைத்தவனாகிய, மிகக் கிருபையுடையவனின் மீது (சகலத்தையும் ஒப்படைத்து) முழுமையாக நம்பிக்கை வைப்பீராக!
Saheeh International
And rely upon the Exalted in Might, the Merciful,
الَّذِیْ یَرٰىكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ
الَّذِىْஅவன்தான்يَرٰٮكَஉம்மை பார்க்கிறான்حِيْنَபோதுتَقُوْمُۙ‏நீர் நிற்கின்ற
அல்லதீ யராக ஹீன தகூம்
முஹம்மது ஜான்
அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நீர் நின்று வணங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.
IFT
அவன் எத்தகையவன் எனில், நீர் எழும்போது உம்மைப் பார்க்கிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும் சமயத்தில் அவன் உம்மைப் பார்க்கிறான்.
Saheeh International
Who sees you when you arise
وَتَقَلُّبَكَ فِی السّٰجِدِیْنَ ۟
وَتَقَلُّبَكَபுரலுவதையும்فِى السّٰجِدِيْنَ‏இன்னும் , சிரம் பணிபவர்களுடன்
வ தகல்லுBபக Fபிஸ் ஸாஜிதீன்
முஹம்மது ஜான்
இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)
அப்துல் ஹமீது பாகவி
சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீர் அசைவதையும் அவன் பார்க்கிறான்.
IFT
மேலும், சிரம்பணிந்து வணங்குவோர்களிடையே உம் அசைவையும் பார்க்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சிரம் பணிவோரில் (ரூகூவு, ஸுஜுது செய்வது கொண்டு நீர் இருக்கின்றபோது) உம்முடைய இயங்குதலையும் (அவன் பார்க்கிறான்)
Saheeh International
And your movement among those who prostrate.
اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்السَّمِيْعُநன்கு செவி ஏற்பவன்الْعَلِيْمُ‏நன்கு அறிந்தவன்
இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; மிக அறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவன்தான் அனைத்தையும் நன்கு செவியுறுபவன், நன்கு அறிபவன்.
IFT
திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவன் -அவனே செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
Saheeh International
Indeed, He is the Hearing, the Knowing.
هَلْ اُنَبِّئُكُمْ عَلٰی مَنْ تَنَزَّلُ الشَّیٰطِیْنُ ۟ؕ
هَلْ اُنَبِّئُكُمْஉங்களுக்கு நான் அறிவிக்கவா?عَلٰىமீதுمَنْயார்تَنَزَّلُஇறங்குகிறார்கள்الشَّيٰـطِيْنُؕ‏ஷைத்தான்கள்
ஹல் உனBப்Bபி'உகும் 'அலா மன் தனZஜ்Zஜலுஷ் ஷயாதீன்
முஹம்மது ஜான்
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?
IFT
(மக்களே!) ஷைத்தான்கள் யார்மீது இறங்குகிறார்கள் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்கவா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) ஷைத்தான்கள் எவர்மீது இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
Saheeh International
Shall I inform you upon whom the devils descend?
تَنَزَّلُ عَلٰی كُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ
تَنَزَّلُஇறங்குகின்றனர்عَلٰى كُلِّஎல்லோர் மீதும்اَفَّاكٍபெரும் பொய்யர்கள்اَثِيْمٍۙ‏பெரும் பாவிகள்
தனZஜ்Zஜலு 'அலா குல்லி அFப்Fபாகின் அதீம்
முஹம்மது ஜான்
பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
IFT
பெரும் பொய்யனாகிய, பாவம் புரியக்கூடிய ஒவ்வொருவன் மீதும் அவர்கள் இறங்குகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(செயலால்) பாவியான, (செயலால்) அதிகமாகப் பொய்கூறும் ஒவ்வொருவரின் மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.
Saheeh International
They descend upon every sinful liar.
یُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَ ۟ؕ
يُّلْقُوْنَகூறுகின்றனர்السَّمْعَகேட்டதைوَاَكْثَرُهُمْஅவர்களில் அதிகமானவர்கள்كٰذِبُوْنَؕ‏பொய்யர்கள்
யுல்கூனஸ் ஸம்'அ வ அக்தருஹும் காதிBபூன்
முஹம்மது ஜான்
தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே.
அப்துல் ஹமீது பாகவி
தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே!
IFT
அவர்கள் கேள்விப்பட்டதை யெல்லாம் காதுகளில் ஊதி விடுகின்றார்கள். மேலும், அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தாங்கள் கேள்விப்பட்டதை (அப்பொய்யர்களின் காதுகளில்) போடுகிறார்கள், அவர்களில் பெரும்பாலோர் (பெரும்) பொய்யர்களே!
Saheeh International
They pass on what is heard, and most of them are liars.
وَالشُّعَرَآءُ یَتَّبِعُهُمُ الْغَاوٗنَ ۟ؕ
وَالشُّعَرَآءُகவிஞர்கள்يَتَّبِعُهُمُஅவர்களை பின்பற்றுவார்கள்الْغَاوٗنَؕ‏வழிகேடர்கள்தான்
வஷ்ஷு 'அரா'உ யத்தBபி 'உஹுமுல் காவூன்
முஹம்மது ஜான்
இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
கவிஞர்களை வழிகெட்டவர்கள்தான் பின்பற்றுகின்றனர்.
IFT
மேலும், கவிஞர்களையோ வழிகெட்டுப் போனவர்கள்தான் அவர்களைப் பின்பற்றுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் கவிஞர்கள் - அவர்களை வழிகெட்டவர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.
Saheeh International
And the poets - [only] the deviators follow them;
اَلَمْ تَرَ اَنَّهُمْ فِیْ كُلِّ وَادٍ یَّهِیْمُوْنَ ۟ۙ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்فِىْ كُلِّ وَادٍஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்يَّهِيْمُوْنَۙ‏அலைகின்றனர்
அலம் தர அன்னஹும் Fபீ குல்லி வாதி(ன்)ய் யஹீமூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
IFT
அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (தட்டழிந்து) திரிகிறார்கள் என்பதை நீர் காணவில்லையா?
Saheeh International
Do you not see that in every valley they roam
وَاَنَّهُمْ یَقُوْلُوْنَ مَا لَا یَفْعَلُوْنَ ۟ۙ
وَاَنَّهُمْஇன்னும் , நிச்சயமாக அவர்கள்يَقُوْلُوْنَகூறுகின்றனர்مَا لَا يَفْعَلُوْنَۙ‏தாங்கள் செய்யாததை
வ அன்னஹும் யகூலூன ம லா யFப்'அலூன்
முஹம்மது ஜான்
இன்னும் நிச்சயமாக, நாங்கள் செய்யாததைச் (செய்ததாக) அவர்கள் சொல்லுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர்கள், தாங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள்.
IFT
தாங்கள் செய்யாதவற்றைக் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நிச்சயமாக அவர்கள் தாங்கள் செய்யாதவைகளைச் செய்ததாகக் கூறுகிறார்கள்.
Saheeh International
And that they say what they do not do? -
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِیْرًا وَّانْتَصَرُوْا مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا ؕ وَسَیَعْلَمُ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَیَّ مُنْقَلَبٍ یَّنْقَلِبُوْنَ ۟۠
اِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُوا الصّٰلِحٰتِநன்மைகளை செய்தனர்وَذَكَرُواநினைவு கூர்ந்தனர்اللّٰهَஅல்லாஹ்வைكَثِيْرًاஅதிகம்وَّانْتَصَرُوْاஇன்னும் பழிவாங்கினார்கள்مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا‌ ؕதங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்وَسَيَـعْلَمُவிரைவில் அறிவார்கள்الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّஅநியாயம் செய்தவர்கள்/எந்தمُنْقَلَبٍதிரும்பும் இடத்திற்குيَّـنْقَلِبُوْنَ‏திரும்புவார்கள்
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தகருல் லாஹ கதீர(ன்)வ் வன்தஸரூ மின் Bபஃதி மா ளுலிமூ; வ ஸயஃலமுல் லதீன ளலமூ அய்ய முன்கலBபி(ன்)ய் யன்கலிBபூன்
முஹம்மது ஜான்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
IFT
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்தார்களோ, மேலும், அல்லாஹ்வை அதிகம் நினைத்தார்களோ, மேலும், தங்களுக்குக் கொடுமை இழைக்கப்பட்டபோது அதற்காக மட்டும் பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமை புரிகின்றவர்கள், அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்துகொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆயினும் அவர்களில்) விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவுகூர்ந்து, தாங்கள் அநியாயம் செய்யப்பட்ட பின் பழி தீர்த்துக்கொண்டார்களே அத்தகையோரைத் தவிர. மேலும், அநியாயம் செய்தோர், தாங்கள் எந்த மீளும் தலத்திற்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை (அதிசீக்கிரத்தில்) அறிந்து கொள்வார்கள்.
Saheeh International
Except those [poets] who believe and do righteous deeds and remember Allah often and defend [the Muslims] after they were wronged. And those who have wronged are going to know to what [kind of] return they will be returned.