3. ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)

மதனீ, வசனங்கள்: 200

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
الٓمَّٓ ۟ۙ
الٓمّٓ ۚۙ‏அலிஃப், லாம், மீம்
அலிFப்-லாம்-மீம்
முஹம்மது ஜான்
அலிஃப், லாம், மீம்.
அப்துல் ஹமீது பாகவி
அலிஃப் லாம் மீம்.
IFT
அலிஃப், லாம், மீம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அலிப் லாம் மீம்.
Saheeh International
Alif, Lam, Meem.
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَیُّ الْقَیُّوْمُ ۟ؕ
اللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரهُوَۙஅவன்الْحَىُّஎன்றும் உயிருள்ளவன்الْقَيُّوْمُؕ‏நிலையானவன்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்
முஹம்மது ஜான்
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன்.
IFT
அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் (அவன் எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன். (என்றும்) நிலையானவன்.
Saheeh International
Allah - there is no deity except Him, the Ever-Living, the Self-Sustaining.
نَزَّلَ عَلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَاَنْزَلَ التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۙ
نَزَّلَஇறக்கினான்عَلَيْكَஉம்மீதுالْـكِتٰبَவேதத்தைبِالْحَقِّசத்தியத்துடன்مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதாகلِّمَا بَيْنَ يَدَيْهِதனக்கு முன்னுள்ளதைوَاَنْزَلَஇன்னும் இறக்கினான்التَّوْرٰٮةَதவ்றாத்தைوَالْاِنْجِيْلَۙ‏இன்னும் இன்ஜீலை
னZஜ்Zஜல 'அலய்கல் கிதாBப Bபில்ஹக்கி முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி வ அன்Zஜலத் தவ்ராத வல் இன்ஜீல்
முஹம்மது ஜான்
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உம்மீது இறக்கிவைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கிவைத்தான்.
IFT
(நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை-இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்படுத்தக்கூடியதாக (இது) இருக்க, உம்மீது அ(த்தகயை)வன்தான் இறக்கி வைத்தான், தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
Saheeh International
He has sent down upon you, [O Muhammad], the Book in truth, confirming what was before it. And He revealed the Torah and the Gospel
مِنْ قَبْلُ هُدًی لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ ؕ۬ اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ 
مِنْ قَبْلُ(இதற்கு) முன்னர்هُدًىநேர்வழியாகلِّلنَّاسِமக்களுக்குوَاَنْزَلَஇன்னும் இறக்கினான்الْفُرْقَانَ  ؕபிறித்தறிவிக்கக் கூடியதைاِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِيْدٌ  ؕகடினமானதுوَاللّٰهُஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்ذُو انْتِقَامٍؕ‏தண்டிப்பவன்
மின் கBப்லு ஹுதல் லின்னாஸி வ அன்Zஜலல் Fபுர்கான்; இன்னல்லதீன கFபரூ Bபி ஆயாதில் லாஹி லஹும் 'அதாBபுன் ஷதீத்; வல்லாஹு 'அZஜீZஜுன் துன் திகாம்
முஹம்மது ஜான்
மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன்னரும் (வேதங்களை இறக்கினான்); (நன்மை, தீமைகளைப்) பிரித்துக் காட்டுகிறதையும் இறக்கிவைத்தான்; ஆகவே. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், தண்டிப்போனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக்கூடிய (மற்ற)வற்றையும் அருள் புரிந்திருக்கிறான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (தீயவர்களைத்) தண்டிப்பவன்.
IFT
இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் இறக்கியுள்ளான். (இனி) எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்க மறுக்கின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாய்க் கடுமையான தண்டனை உண்டு. மேலும், அல்லாஹ் வல்லமை மிக்கவனும் தீய செயல்களுக்கு பழிவாங்குபவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முன்னர் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (வேதங்களை அவனே இறக்கிவைத்தான்.) மேலும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக் கூடிய புர்க்கா(ன் எனும் குர்ஆ)னையும் அவனே இறக்கிவைத்தான். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்-அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. இன்னும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், (தீயவர்களை) தண்டித்தலையுடையவன்.
Saheeh International
Before, as guidance for the people. And He revealed the Criterion [i.e., the Qur’an]. Indeed, those who disbelieve in the verses of Allah will have a severe punishment, and Allah is Exalted in Might, the Owner of Retribution.
اِنَّ اللّٰهَ لَا یَخْفٰی عَلَیْهِ شَیْءٌ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ۟ؕ
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَخْفٰىமறையாதுعَلَيْهِஅவனுக்குشَىْءٌஎதுவும்فِى الْاَرْضِபூமியில்وَلَا فِى السَّمَآءِ ؕ‏இன்னும் வானத்தில்
இன்னல் லாஹ லா யக்Fபா 'அலய்ஹி ஷய்'உன் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'
முஹம்மது ஜான்
வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக பூமியிலோ, வானத்திலோ (உள்ள) எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல.
IFT
திண்ணமாக வானத்திலும் பூமியிலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்-அவனுக்கு பூமியில் மற்றும் வானத்தில் (உள்ள) எப்பொருளும் மறைந்ததன்று.
Saheeh International
Indeed, from Allah nothing is hidden in the earth nor in the heaven.
هُوَ الَّذِیْ یُصَوِّرُكُمْ فِی الْاَرْحَامِ كَیْفَ یَشَآءُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
هُوَஅவன்الَّذِىْஎவன்يُصَوِّرُكُمْஉங்களை உருவமைக்கிறான்فِى الْاَرْحَامِகர்ப்பப் பைகளில்كَيْفَஎவ்வாறுيَشَآءُ ؕநாடுகிறான்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவன்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏ஞானவான்
ஹுவல் லதீ யுஸவ்விருகும் Fபில் அர்ஹாமி கய்Fப யஷா'; லா இலாஹ இல்லா ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
முஹம்மது ஜான்
அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் கர்ப்பப்பைகளில் தான் விரும்பியவாறு உங்களை (ஆணாக, பெண்ணாகவோ) உருவம் அமைக்கிறான். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை.
IFT
அவனே (உங்கள் அன்னை யரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், கர்ப்பப்பைகளில் தான் எவ்வாறு நாடுகிறானோ, அவ்வாறு உங்களை அவன் வடிவமைக்கிறான். அவனையன்றி (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன், (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
Saheeh International
It is He who forms you in the wombs however He wills. There is no deity except Him, the Exalted in Might, the Wise.
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ عَلَیْكَ الْكِتٰبَ مِنْهُ اٰیٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ ؕ فَاَمَّا الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ زَیْغٌ فَیَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِیْلِهٖ ؔۚ وَمَا یَعْلَمُ تَاْوِیْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔۘ وَالرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ یَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖ ۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ۚ وَمَا یَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ ۟
هُوَஅவன்الَّذِىْۤஎப்படிப்பட்டاَنْزَلَஇறக்கினான்عَلَيْكَஉம்மீதுالْكِتٰبَவேதத்தைمِنْهُஅதில்اٰيٰتٌவசனங்கள்مُّحْكَمٰتٌபொருள் தெளிவானவைهُنَّஅவைاُمُّஅடிப்படைالْكِتٰبِவேதம்وَاُخَرُஇன்னும் வேறுمُتَشٰبِهٰتٌ‌ؕபொருள் தெரியாதவைفَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்فِىْ قُلُوْبِهِمْதங்கள் உள்ளங்களில்زَيْغٌகோணல்فَيَتَّبِعُوْنَபின்பற்றுகிறார்கள்مَاஎதைتَشَابَهَபொருள் தெரிய முடி யாமல்ஆகிவிட்டதுمِنْهُஅதில்ابْتِغَآءَதேடிالْفِتْنَةِகுழப்பத்தைوَابْتِغَآءَஇன்னும் தேடிتَاْوِيْلِهٖۚؔஅதன் விளக்கத்தைوَمَا يَعْلَمُஇன்னும் அறியமாட்டார்تَاْوِيْلَهٗۤஅதன் விளக்கத்தைاِلَّاதவிரاللّٰهُ ؔ‌ۘஅல்லாஹ்وَ الرّٰسِخُوْنَதேர்ச்சி அடைந்தவர்கள்فِى الْعِلْمِகல்வியில்يَقُوْلُوْنَகூறுவார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِهٖۙஅதைكُلٌّஎல்லாம்مِّنْஇருந்துعِنْدِஇடம்رَبِّنَا ۚஎங்கள் இறைவன்وَمَا يَذَّكَّرُஇன்னும் நல்லறிவுபெறமாட்டார்اِلَّاۤதவிரاُولُوا الْاَلْبَابِ‏அறிவுள்ளவர்கள்
ஹுவல் லதீ அன்Zஜல 'அலய்கல் கிதாBப மின்ஹு ஆயாதும் முஹ் கமாதுன் ஹுன்ன உம்முல் கிதாBபி வ உகரு முதஷாBபிஹாதுன் Fப'அம்மல் லதீன Fபீ குலூBபிஹிம் Zஜய்ய்குன் Fப யத்தBபி'ஊன ம தஷாBபஹ மின்ஹுBப்திகா 'அல்Fபித்னதி வBப்திகா'அ தாவீலிஹ்; வமா யஃலமு தாவீலஹூ இல்லல் லாஹ்; வர்ராஸிகூன Fபில் 'இல்மி யகூலூன ஆமன்னா Bபிஹீ குல்லும் மின் 'இன்தி ரBப்Bபினா; வமா யத்தக்கரு இல்லா உலுல் அல்BபாBப்
முஹம்மது ஜான்
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவனே இவ்வேதத்தை(யும்) உம் மீது இறக்கிவைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரியமுடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திற்கேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வைத் தவிர ஒருவரும் அறிய மாட்டார். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களைத் தவிர மற்ற எவரும் (இவற்றைக் கொண்டு) நல்லுபதேசம் அடையமாட்டார்கள்.
IFT
(நபியே!) அ(ந்த இறை)வனே இவ்வேத நூலை உம்மீது இறக்கியருளினான். இதில் இருவிதமான வசனங்கள் உள்ளன. ஒன்று: “முஹ்கமாத்”* எனும் வசனங்களாகும். அவைதாம் வேதத்தின் அடிப்படை. இரண்டாவது: “முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். எவர்களுடைய இதயங்களில் கோளாறு உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்யும் நோக்கில் முதஷாபிஹான வசனங்களைத் தேடித்திரிந்து கொண்டும், அவற்றின் கருத்தைத் திரித்துக் கூற முயற்சி செய்து கொண்டுமிருப்பார்கள். எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் (எதிலும்) சரியான படிப்பினை பெறுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், இவ்வேதத்தை உம்மீது அவன் இறக்கி வைத்தான். இதில் தெளிவான கருத்துக்களுடைய வசனங்களும் இருக்கின்றன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை, பலபொருள்களைக் கொண்டவையாகும். ஆகவே, எவர்களுடைய இதயங்களில் சறுகுதல் இருக்கிறதோ அத்தகையோர் அதில் குழப்பத்தை உண்டு பண்ணக்கருதி அதில் பல பொருள்கள் கொண்டவைகளையே தேடிப் பின்பற்றுவார்கள். மேலும், இதன் உண்மைக்கருத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியமாட்டார்கள். கல்வியறிவில் நிலை பெற்றவர்களோ (அதன் கருத்து தங்களுக்குப் பூரணமாக விளங்காவிடினும்) இதனையும் நாங்கள் விசுவாசித்திருக்கிறோம். (இவ்விருவகை வசனங்கள்) ஒவ்வொன்றும் எங்கள் இரட்சகனிடமிருந்து உள்ளவைதாம்” என்று கூறுவார்கள். அறிவுடையோர்களையன்றி மற்றெவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசமடையமாட்டார்கள்.
Saheeh International
It is He who has sent down to you, [O Muhammad], the Book; in it are verses [that are] precise - they are the foundation of the Book - and others unspecific. As for those in whose hearts is deviation [from truth], they will follow that of it which is unspecific, seeking discord and seeking an interpretation [suitable to them]. And no one knows its [true] interpretation except Allah. But those firm in knowledge say, "We believe in it. All [of it] is from our Lord." And no one will be reminded except those of understanding.
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَیْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ ۟
رَبَّنَاஎங்கள் இறைவாلَا تُزِغْகோணலாக்கி விடாதேقُلُوْبَنَاஎங்கள் உள்ளங்களைبَعْدَபின்னர்اِذْ هَدَيْتَنَاஎங்களை நேர்வழியில் செலுத்தினாய்وَهَبْஇன்னும் வழங்குلَنَاஎங்களுக்குمِنْ لَّدُنْكَஉன்னிடமிருந்துرَحْمَةً  ۚகருணையைاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْوَهَّابُ‏வாரி வழங்குபவன்
ரBப்Bபனா லா துZஜிக் குலூBபனா Bபஃத இத் ஹதய்தனா வ ஹBப் லனா மில் லதுன்க ரஹ்மஹ்; இன்னக அன்தல் வஹ்ஹாBப்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்கள் உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!''
IFT
அவர்கள் இவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சிய வண்ணம் இருக்கிறார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அறிவுடைய அவர்கள்) “எங்கள் இரட்சகனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டிய பின்னர், எங்களுடைய இதயங்களை (அதிலிருந்து) சறுகிவிடுமாறு செய்து விடாதிருப்பாயாக! மேலும், உன் புறத்திலிருந்து அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாவாய் (என்றும்),
Saheeh International
[Who say], "Our Lord, let not our hearts deviate after You have guided us and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower.
رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ؕ اِنَّ اللّٰهَ لَا یُخْلِفُ الْمِیْعَادَ ۟۠
رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீجَامِعُஒன்று சேர்ப்பவன்النَّاسِமக்களைلِيَوْمٍஒரு நாளில்لَّاஅறவே இல்லைرَيْبَசந்தேகம்فِيْهِ‌ؕஅதில்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُخْلِفُமாற்ற மாட்டான்الْمِيْعَادَ‏வாக்கை
ரBப்Bபனா இன்னக ஜாமி 'உன்-னாஸி லி யவ்மின் லா ரய்Bப Fபீஹ்; இன்னல் லாஹ லா யுக்லிFபுல் மீ'ஆத்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல'' (என்று கூறுவார்கள்.)
IFT
எங்கள் இறைவனே! திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒருநாளில் ஒன்று திரட்டக்கூடியவனாய் இருக்கின்றாய்; அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவன் அல்லன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ ஒரு நாளைக்காக மனிதர்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். அ(ந் நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்,) நிச்சயமாக, அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறு செய்யமாட்டான்” (என்றும் பிரார்த்திப்பார்கள்).
Saheeh International
Our Lord, surely You will gather the people for a Day about which there is no doubt. Indeed, Allah does not fail in His promise."
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاُولٰٓىِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்لَنْ تُغْنِىَஅறவே தடுக்காதுعَنْهُمْஅவர்களை விட்டும்اَمْوَالُهُمْஅவர்களுடைய செல்வங்கள்وَلَاۤ اَوْلَادُهُمْஇன்னும் அவர்களுடைய சந்ததிகள்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடம்شَيْئًا‌ ؕஎதையும்وَاُولٰٓٮِٕكَ هُمْஇன்னும் அவர்கள்தான்وَقُوْدُஎரிபொருள்கள்النَّارِۙ‏நரகத்தின்
இன்னல் லதீன கFபரூ லன் துக்னிய 'அன்ஹும் அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும் மினல் லாஹி ஷய்'அ(ன்)வ் வ உலா'இக ஹும் வகூதுன் னார்
முஹம்மது ஜான்
நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து எதையும் அறவே தவிர்த்துவிட முடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டைகள்.
IFT
நிச்சயமாக, இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டவர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலன் அளித்திட மாட்டா. அவர்கள் நரகின் எரிபொருளாய்த்தான் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (அந்நாளை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_(அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து யாதொன்றையும் அவர்களைவிட்டும் ஒரு போதும் தேவையறச் செய்து விடாது. இன்னும் இவர்கள்தாம் (உண்மையாகவே நரக) நெருப்பின் எரிபொருட்கள் ஆவர்.
Saheeh International
Indeed, those who disbelieve - never will their wealth or their children avail them against Allah at all. And it is they who are fuel for the Fire.
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟
كَدَاْبِதன்மையைப் போன்றுاٰلِகூட்டத்தாரின்فِرْعَوْنَۙஃபிர்அவ்னுடையوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مِنْ قَبْلِهِمْ‌ؕஅவர்களுக்கு முன்னர்كَذَّبُوْاபொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِنَا ۚநம் வசனங்களைفَاَخَذَهُمُஎனவே அவர்களைப் பிடித்தான்اللّٰهُஅல்லாஹ்بِذُنُوْبِهِمْ‌ؕஅவர்களுடைய பாவங்களின் காரணமாகوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‏தண்டிப்பதில்
கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல்லதீன மின் கBப்லிஹிம்; கத்தBபூ Bபி ஆயாதினா Fப அகதஹுமுல் லாஹு Bபிதுனூ Bபிஹிம்; வல்லாஹு ஷதீதுல் 'இகாBப்
முஹம்மது ஜான்
(இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது; அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்; ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களின் நிலை) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் நிலை போன்று உள்ளது. அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களின் (இப்)பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
IFT
ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களுக்கு முன் (இறைவனுக்கு அடிபணியாமல்) வாழ்ந்தவர்களுக்கும் நேர்ந்த கதியைப் போல்தான் (இவர்களுக்கும்) நேரும்! அவர்கள் நம் வசனங்களைப் பொய்யென்று கூறினார்கள். எனவே அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். (உண்மையில்) அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்களின் நிலை செயல் யாவும்) ஃபிர் அவ்னைச் சார்ந்தவர்கள். இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் நிலை போன்று இருக்கின்றது. அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள்; ஆதலால், அல்லாஹ் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடித்துக் கொண்டான். இன்னும் அல்லாஹ் தண்டிப்பதில் மிகக்கடுமையானவன்.
Saheeh International
[Theirs is] like the custom of the people of Pharaoh and those before them. They denied Our signs, so Allah seized them for their sins. And Allah is severe in penalty.
قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰی جَهَنَّمَ ؕ وَبِئْسَ الْمِهَادُ ۟
قُلْகூறுவீராகلِّلَّذِيْنَஎவர்களுக்குكَفَرُوْاநிராகரித்தார்கள்سَتُغْلَبُوْنَவெற்றி கொள்ளப்படுவீர்கள்وَتُحْشَرُوْنَஇன்னும் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்اِلٰى جَهَنَّمَ‌ؕநரகத்தின் பக்கம்وَبِئْسَஇன்னும் கெட்டு விட்டதுالْمِهَادُ‏தங்குமிடம்
குல் லில்லதீன கFபரூஸதுக்லBபூன வ துஹ்ஷரூன இலா ஜஹன்னம்; வ Bபி'ஸல் மிஹாத்
முஹம்மது ஜான்
நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள். மேலும், (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடமாகும்.''
IFT
எனவே (நபியே!) உமது அழைப்பை ஏற்க மறுத்தவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் வெகு விரைவில் கீழடக்கப்படுவீர்கள். மேலும், நீங்கள் நரகத்தை நோக்கி கூட்டமாக விரட்டிச் செல்லப்படுவீர்கள்; அதுவோ மிகக் கெட்ட தங்குமிடமாகும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோருக்கு (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் (விசுவாசிகளால்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். (மறுமையில்) நரகத்தின் பாலும் நீங்கள் (எழுப்பி) ஒன்று திரட்டப்படுவீர்கள். இன்னும், தங்குமிடமான (அ)து மிகக்கெட்டதாகும்.
Saheeh International
Say to those who disbelieve, "You will be overcome and gathered together to Hell, and wretched is the resting place."
قَدْ كَانَ لَكُمْ اٰیَةٌ فِیْ فِئَتَیْنِ الْتَقَتَا ؕ فِئَةٌ تُقَاتِلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاُخْرٰی كَافِرَةٌ یَّرَوْنَهُمْ مِّثْلَیْهِمْ رَاْیَ الْعَیْنِ ؕ وَاللّٰهُ یُؤَیِّدُ بِنَصْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟
قَدْ كَانَதிட்டமாக இருந்ததுلَـكُمْஉங்களுக்குاٰيَةٌஓர் அத்தாட்சிفِىْ فِئَتَيْنِஇரு கூட்டங்களில்الْتَقَتَا ؕசந்தித்தனفِئَةٌஒரு கூட்டம்تُقَاتِلُபோர் புரிகிறதுفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வுடையوَاُخْرٰىஇன்னும் மற்றொன்றுكَافِرَةٌநிராகரிக்கக் கூடியதுيَّرَوْنَهُمْஇவர்களை காண்கின்றனர்مِّثْلَيْهِمْதங்களைப் போன்று இரு மடங்குகளாகرَاْىَபார்ப்பதுالْعَيْنِ‌ؕகண்وَاللّٰهُஅல்லாஹ்يُؤَيِّدُபலப்படுத்துகிறான்بِنَصْرِهٖதன் உதவியால்مَنْஎவர்களைيَّشَآءُ  ؕநாடுகிறான்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில்لَعِبْرَةًதிட்டமாக ஒரு படிப்பினைلِّاُولِى الْاَبْصَارِ‏பார்வை உடையோருக்கு
கத் கான லகும் ஆயதுன் Fபீ Fபி'அதய்னில் தகதா Fபி'அதுன் துகாதிலு Fபீ ஸBபீலில் லாஹி வ உக்ரா காFபிரது(ன்)ய் யரவ்னஹும் மித்லய்ஹிம் ர' யல் 'அய்ன்; வல்லாஹு யு'அய்யிது Bபி னஸ்ரிஹீ மய் யஷா'; இன்னா Fபீ தாலிக ல 'இBப்ரதல் லி உலில் அBப்ஸார்
முஹம்மது ஜான்
(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது.
IFT
(பத்ரில்) மோதிக் கொண்ட இரு பிரிவினரிடம் திண்ணமாக உங்களுக்குப் படிப்பினை தரும் சான்று இருக்கிறது. ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய வழியில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பிரிவினர் (அவனை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். நம்பிக்கையாளர்களைவிட நிராகரிப்பாளர்கள் இரு மடங்கு அதிகமாய் இருந்ததை பார்ப்பவர்கள் தம் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு உதவி செய்து வலுவூட்டுகின்றான் (என்பதைப் போரின் முடிவு நிரூபித்து விட்டது). திண்ணமாக அகப்பார்வை உடையோருக்கு இதில் மாபெரும் படிப்பினை (பொதிந்து) இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பத்ரு யுத்த களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் திட்டமாக உங்களுக்கோர் அத்தாட்சி இருந்தது. (அதில் ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் சேனையுமாகும், மற்றொன்று (அல்லாஹ்வை) நிராகரிக்கக் கூடியது(மான சேனையு)மாகும். (நிராகரிப்போர்) தம்மை விட (முஸ்லீம்களான) அவர்களை இரு மடங்காகத் தங்கள் கண்களால் (நேரடியாகக்) கண்டனர். அல்லாஹ்வோ, தான் நாடியவர்களை தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; பார்வைகள் உடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.
Saheeh International
Already there has been for you a sign in the two armies which met [in combat at Badr] - one fighting in the cause of Allah and another of disbelievers. They saw them [to be] twice their [own] number by [their] eyesight. But Allah supports with His victory whom He wills. Indeed in that is a lesson for those of vision.
زُیِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَنِیْنَ وَالْقَنَاطِیْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَیْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ؕ ذٰلِكَ مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ ۟
زُيِّنَஅலங்கரிக்கப்பட்டுள்ளதுلِلنَّاسِமக்களுக்குحُبُّநேசிப்பதுالشَّهَوٰتِவிருப்பங்கள்مِنَஇருந்துالنِّسَآءِபெண்கள்وَالْبَـنِيْنَஇன்னும் ஆண் பிள்ளைகள்وَالْقَنَاطِيْرِஇன்னும் குவியல்கள்الْمُقَنْطَرَةِகுவிக்கப்பட்டவைمِنَஇருந்துالذَّهَبِதங்கம்وَالْفِضَّةِஇன்னும் வெள்ளிوَالْخَـيْلِஇன்னும் குதிரைகள்الْمُسَوَّمَةِஅடையாளமிடப் பட்டவைوَالْاَنْعَامِஇன்னும் கால்நடைகள்وَالْحَـرْثِ‌ؕஇன்னும் விளை நிலம்ذٰ لِكَஇவைمَتَاعُஇன்பம்الْحَيٰوةِவாழ்வின்الدُّنْيَا ۚஉலகம்وَاللّٰهُஅல்லாஹ்عِنْدَهٗஅவனிடம்தான்حُسْنُஅழகியالْمَاٰبِ‏தங்குமிடம்
Zஜுய்யின லின்னாஸி ஹுBப்Bபுஷ் ஷஹவாதி மினன்னிஸா'இ வல் Bபனீன வல்கனாதீரில் முகன்தரதி மினத் தஹBபி வல்Fபிள்ளதி வல்கய்லில் முஸவ்வமதி வல் அன்'ஆமி வல்ஹர்த்; தாலிக மதா'உல் ஹயாதித் துன்யா வல்லாஹு 'இன்தஹூ ஹுஸ்னுல் மஆBப்
முஹம்மது ஜான்
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.
IFT
பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர்ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பெண்கள், ஆண்மக்கள், பொன் வெள்ளிகளினால் சேர்த்து வைக்கப்பட்ட பெருங்குவியல்கள் அடையாளமிடப்பட்ட குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால் நடைகள், வேளாண்மை ஆகிய (மனதுக்கு) ஆசையூட்டப்பட்டவற்றை நேசிப்பது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை(யாவும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே. அல்லாஹ்வோ-அவனிடத்தில் (நிலையான) அழகிய திரும்பிச் செல்லுமிடம் உண்டு.
Saheeh International
Beautified for people is the love of that which they desire - of women and sons, heaped-up sums of gold and silver, fine branded horses, and cattle and tilled land. That is the enjoyment of worldly life, but Allah has with Him the best return [i.e., Paradise].
قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَیْرٍ مِّنْ ذٰلِكُمْ ؕ لِلَّذِیْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟ۚ
قُلْகூறுவீராகاَؤُنَبِّئُكُمْஉங்களுக்கு நான் அறிவிக்கவா?بِخَيْرٍசிறந்ததைمِّنْ ذٰ لِكُمْ‌ؕஇவற்றைவிடلِلَّذِيْنَ اتَّقَوْاஅல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்குعِنْدَஇடம்رَبِّهِمْதங்கள் இறைவன்جَنّٰتٌசொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُஆறுகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاஅவற்றில்وَاَزْوَاجٌஇன்னும் மனைவிகள்مُّطَهَّرَةٌபரிசுத்தமானவள்وَّرِضْوَانٌஇன்னும் பொருத்தம்مِّنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَاللّٰهُஅல்லாஹ்بَصِيْرٌۢஉற்று நோக்குபவன்بِالْعِبَادِ‌ۚ‏அடியார்களை
குல் அ'உனBப்Bபி 'உகும் Bபிகய்ரிம் மின் தாலிகும்; லில்லதீனத் தகவ் 'இன்த ரBப்Bபிஹிம் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா வ அZஜ்வாஜும் முதஹ்ஹரது(ன்)வ் வ ரிள்வானும் மினல் லாஹ்; வல்லாஹு Bபஸீரும் Bபில்'இBபாத்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கிறவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. இன்னும், அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
(நபியே!) நீர் கூறும்: “இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள்.” அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக! (இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கின்றார்களே அத்தகையவர்களுக்கு அவர்களின் இரட்சகனிடத்தில் சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவியரும் (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்விடமிருந்து பொருத்தமும் உண்டு. மேலும் அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்
Saheeh International
Say, "Shall I inform you of [something] better than that? For those who fear Allah will be gardens in the presence of their Lord beneath which rivers flow, wherein they abide eternally, and purified spouses and approval from Allah. And Allah is Seeing [i.e., aware] of [His] servants -
اَلَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ۟ۚ
اَلَّذِيْنَஎவர்கள்يَقُوْلُوْنَகூறுவார்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّنَاۤநிச்சயமாக நாங்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்فَاغْفِرْஎனவே மன்னிلَنَاஎங்களுக்குذُنُوْبَنَاஎங்கள் பாவங்களைوَقِنَاஇன்னும் எங்களை காப்பாற்றுعَذَابَவேதனையிலிருந்துالنَّارِ‌ۚ‏நரக நெருப்பின்
அல்லதீன யகூலூன ரBப்Bபனா இன்னனா ஆமன்னா Fபக்Fபிர் லனா துனூBபனா வ கினா 'அதாBபன் னார்
முஹம்மது ஜான்
இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் (தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். ஆதலால், நீ எங்கள் பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!'' என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.
IFT
இவர்கள் பிரார்த்தனை புரிந்தவண்ணம் இருப்பார்கள்: “எங்களுடைய இறைவனே! திண்ணமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களுடைய பாவங்களை நீ மன்னித்தருள்; இன்னும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இத்தகையோர் “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக்கின்றோம். ஆதலால், நீ எங்களுக்கு எங்களுடைய பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் நீ எங்களை (ஈடேற்றம் பெற)க்காத்தருள்வாயாக” என்றும்(பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
Saheeh International
Those who say, "Our Lord, indeed we have believed, so forgive us our sins and protect us from the punishment of the Fire,"
اَلصّٰبِرِیْنَ وَالصّٰدِقِیْنَ وَالْقٰنِتِیْنَ وَالْمُنْفِقِیْنَ وَالْمُسْتَغْفِرِیْنَ بِالْاَسْحَارِ ۟
اَلصّٰــبِرِيْنَபொறுமையாளர்கள்وَالصّٰدِقِــيْنَஇன்னும் உண்மையாளர்கள்وَالْقٰنِتِــيْنَஇன்னும் பணிந்தவர்கள்وَالْمُنْفِقِيْنَஇன்னும் தர்மம்புரிபவர்கள்وَالْمُسْتَغْفِرِيْنَஇன்னும் மன்னிப்புக் கோருபவர்கள்بِالْاَسْحَارِ‏இரவின்இறுதிகளில்
அஸ்ஸாBபிரீன வஸ்ஸா திகீன வல்கானிதீன வல்முன்Fபிகீன வல்முஸ் தக்Fபிரீன Bபில் அஸ்-ஹார்
முஹம்மது ஜான்
(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுகிறவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கிறவர்களாகவும், ‘ஸஹர்' நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகிறவர்களாகவும் இருக்கின்றனர்.
IFT
இவர்கள் பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும் மற்றும் (இறைவழியில் தாராளமாகச்) செலவழிப்பவர்களாகவும் இருப்பதுடன் பின்னிரவு நேரங்களில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இன்னும், அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தர்மம் செய்கின்றவர்களாகவும், “ஸஹர்” நேரங்களில் (அல்லாஹ்விடம் பாவ) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருப்பர்.
Saheeh International
The patient, the true, the obedient, those who spend [in the way of Allah], and those who seek forgiveness before dawn.
شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۙ وَالْمَلٰٓىِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآىِٕمًا بِالْقِسْطِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ؕ
شَهِدَசாட்சி கூறினான்اللّٰهُஅல்லாஹ்اَنَّهٗநிச்சயமாக அவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَۙஅவன்وَالْمَلٰٓٮِٕكَةُஇன்னும் வானவர்கள்وَاُولُوا الْعِلْمِஇன்னும் கல்விமான்கள்قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِ‌ؕநீதத்தை நிலை நிறுத்துபவன்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّا هُوَஅவனைத் தவிரالْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُؕ‏ஞானவான்
ஷஹிதல் லாஹு அன்னஹூ லா இலாஹ இல்லா ஹுவ வல்மலா'இகது வ உலுல் 'இல்மி கா'இமம் Bபில்கிஸ்த்; லா இலாஹ இல்லா ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
முஹம்மது ஜான்
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் (இல்லவே) இல்லை.'' அப்படியே வானவர்களும் (வேதத்தை கற்றுத் தேர்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை.
IFT
வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதற்கு அல்லாஹ்வே சான்று பகர்கின்றான். மேலும், அந்த வல்லமைமிக்க நுண்ணறிவாளனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு வானவர்களும், அறிவுடையோரும் நேர்மையிலும் நீதியிலும் நிலைத்தவண்ணம் சான்று பகர்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான், “நிச்சயமாக அவன்-அவனைத்தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை” (அவ்வாறே) மலக்குகளும், (வேத ஞானம் பெற்ற) கல்விமான்களும் (சாட்சி கூறுகின்றனர்.) நீதத்தை நிலை நிறுத்தியவனாக (அல்லாஹ் சாட்சி கூறுகிறான்) “அவனைத் தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை, (அவனே யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.”
Saheeh International
Allah witnesses that there is no deity except Him, and [so do] the angels and those of knowledge - [that He is] maintaining [creation] in justice. There is no deity except Him, the Exalted in Might, the Wise.
اِنَّ الدِّیْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ ۫ وَمَا اخْتَلَفَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْیًا بَیْنَهُمْ ؕ وَمَنْ یَّكْفُرْ بِاٰیٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
اِنَّநிச்சயமாகالدِّيْنَமார்க்கம்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்الْاِسْلَامُஇஸ்லாம்وَمَا اخْتَلَفَமாறுபடவில்லைالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்اِلَّاதவிரمِنْۢ بَعْدِபின்னர்مَا جَآءَهُمُஅவர்களுக்கு வந்தالْعِلْمُஅறிவுبَغْيًا ۢபொறாமையினால்بَيْنَهُمْ‌ؕதங்களுக்கு மத்தியில்وَمَنْஇன்னும் எவர்يَّكْفُرْநிராகரிப்பார்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِيْعُவிரைவானவன்الْحِسَابِ‏கணக்கெடுப்பதில்
இன்னத் தீன 'இன்தல் லாஹில் இஸ்லாம்; வ மக்தலFபல் லதீன ஊதுல் கிதாBப இல்லா மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் 'இல்மு Bபக்யம் Bபய்னஹும்; வ மய் யக்Fபுர் Bபி ஆயாதில் லாஹி Fப இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.
IFT
திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி (தீன்) ஆகும். வேதம் அருளப்பட்டவர்கள் இந்த இஸ்லாமிய வாழ்க்கை நெறியிலிருந்து பிறழ்ந்து பல்வேறு வழிகளை மேற்கொண்டது, அவர்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவுபடுத்தப்படாததனால் அல்ல. மாறாக, தம்மிடம் மெய்யறிவு வந்த பிறகுதான் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள்; தங்களுக்கிடையே அநீதி இழைப்பதற்காக! மேலும் யாரேனும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர்களிடம் கணக்கு வாங்குவதில் திண்ணமாக அல்லாஹ் விரைவானவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும். மேலும், வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கிடையே உள்ள (பிடிவாதம்) பொறாமையால் (இதுதான் உண்மையான மார்க்கம் என்ற) அறிவு அவர்களுக்கு வந்ததன் பின்னரே தவிர மாறுபடவில்லை. இன்னும், எவர் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றாரோ-(அவரைப் பற்றி) நிச்சயமாக, அல்லாஹ் கணக்கெடுப்பதில் துரிதமானவன்.
Saheeh International
Indeed, the religion in the sight of Allah is Islam. And those who were given the Scripture did not differ except after knowledge had come to them - out of jealous animosity between themselves. And whoever disbelieves in the verses of Allah, then indeed, Allah is swift in [taking] account.
فَاِنْ حَآجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِیَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ ؕ وَقُلْ لِّلَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّیّٖنَ ءَاَسْلَمْتُمْ ؕ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟۠
فَاِنْ حَآجُّوْكَஅவர்கள் உம்முடன் தர்க்கித்தால்فَقُلْகூறுவீராகاَسْلَمْتُபணியவைத்தேன்وَجْهِىَஎன் முகத்தைلِلّٰهِஅல்லாஹ்வுக்குوَمَنِ اتَّبَعَنِ‌ؕஇன்னும் என்னைப் பின்பற்றியவர்கள்وَقُلْஇன்னும் கூறுவீராகلِّلَّذِيْنَஎவர்களுக்குاُوْتُوا الْكِتٰبَவேதம் கொடுக்கப் பட்டார்கள்وَالْاُمِّيّٖنَஇன்னும் பாமரர்கள்ءَاَسْلَمْتُمْ‌ؕபணிய வைக்கிறீர்களா?فَاِنْ اَسْلَمُوْاஅவர்கள் பணியவைத்தால்فَقَدِ اهْتَدَوْا ۚதிட்டமாக நேர்வழி அடைவார்கள்وَاِنْ تَوَلَّوْاஅவர்கள் திரும்பினால்فَاِنَّمَا عَلَيْكَஉம்மீது எல்லாம்الْبَلٰغُ  ؕதெரிவிப்பதுதான்وَاللّٰهُஅல்லாஹ்بَصِيْرٌۢஉற்று நோக்குபவன்بِالْعِبَادِ‏அடியார்களை
Fப இன் ஹாஜ்ஜூக Fபகுல் அஸ்லம்து வஜ்ஹிய லில்லாஹி வ மனித் தBப'அன்; வ குல் லில்லதீன ஊதுல் கிதாBப வல் உம்மிய்யீன 'அ-அஸ்லம்தும்; Fப இன் அஸ்லமூ Fபகதிஹ் ததவ் வ இன் தவல்லவ் Fப இன்னமா 'அலய்கல் Bபலாக்; வல்லாஹு Bபஸீரும் Bபில் 'இBபாத்
முஹம்மது ஜான்
(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்: “நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?” என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர்களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி ‘‘நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கிறீர்களா?'' என்று கேட்பீராக. (அவ்வாறே) அவர்களும் தலைசாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் (அதற்காக நீர் கவலைப்படாதீர். நம் தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உம் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹ் (தன்) அடியார்களை உற்று நோக்குகிறான்.
IFT
(நபியே! இனி) அவர்கள் உம்மோடு தர்க்கம் புரிந்தால் அவர்களிடம், “நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் முன் அடிபணிந்து விட்டோம்” என்று கூறுவீராக! இன்னும் வேதம் அருளப்பட்டவர்களையும் வேதம் அருளப்படாதவர்களையும் நோக்கி, “நீங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ்வதை ஏற்றுக்கொண்டீர்களா?” என்று கேளுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால் திண்ணமாக நேர்வழி அடைந்தவர்களாவர். அவர்கள் புறக்கணித்தாலோ (இறைத்தூதை அவர்களிடம்) எடுத் துரைப்பது மட்டுமே உம்மீது கடமையாகும். அல்லாஹ் தன் அடிமைகளின் செயற்பாடுகளை நன்கு பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (நபியே! இதற்குப்)பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் அப்போது (அவர்களிடம்) நான் என் முகத்தைத்திருப்பி அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் பணிந்து விட்டேன். (அவ்வாறே) என்னைப் பின்பற்றியவர்களும் (பணிந்து விட்டனர்) என்று கூறுவீராக! மேலும், வேதமளிக்கப்பட்டவர்களிடமும், பாமரர்களிடமும் “நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்துவிட்டீர்களா” என்று கேட்பீராக; (அவ்வாறே) அவர்கள் பணிந்து விட்டால், திட்டமாக அவர்கள் நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அன்றியும் அவர்கள் புறக்கணித்துவிட்டால்-அதற்காக நீர் கவலைப்படாதீர்). உம்மீதுள்ள கடமையெல்லாம் (நம்முடைய தூதை) எத்திவைப்பதுதான். மேலும், அல்லாஹ் தன், அடியார்களைப் பார்க்கிறவன்.
Saheeh International
So if they argue with you, say, "I have submitted myself to Allah [in Islam], and [so have] those who follow me." And say to those who were given the Scripture and [to] the unlearned, "Have you submitted yourselves?" And if they submit [in Islam], they are rightly guided; but if they turn away - then upon you is only the [duty of] notification. And Allah is Seeing of [His] servants.
اِنَّ الَّذِیْنَ یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ النَّبِیّٖنَ بِغَیْرِ حَقٍّ ۙ وَّیَقْتُلُوْنَ الَّذِیْنَ یَاْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ ۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَكْفُرُوْنَநிராகரிக்கிறார்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَيَقْتُلُوْنَஇன்னும் கொலை செய்கிறார்கள்النَّبِيّٖنَநபிமார்களைبِغَيْرِ حَقٍّۙநியாயமின்றிوَّيَقْتُلُوْنَஇன்னும் கொலை செய்கிறார்கள்الَّذِيْنَஎவர்கள்يَاْمُرُوْنَஏவுகிறார்கள்بِالْقِسْطِநீதத்தைمِنَ النَّاسِۙமக்களில்فَبَشِّرْهُمْஅவர்களுக்கு நற்செய்தி கூறுவீராகبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَ لِيْمٍ‏துன்புறுத்தக்கூடியது
இன்னல் லதீன யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனன் னBபிய்யீன Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ யக்துலூனல் லதீன ய'முரூன Bபில்கிஸ்தி மினன்னாஸி FபBபஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக்கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.
IFT
நிச்சயமாக யார் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும் நல்லொழுக்க அறிவுரைகளையும் ஏற்க மறுத்து, இறைத்தூதர்களை அநியாயமாகக் கொலை புரிகிறார்களோ, இன்னும் மனிதர்களில் நீதியைக் கைக்கொள்ளுமாறு ஏவியவர்களை கொலை செய்கின்றார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு எனும் “நற்செய்தி” சொல்வீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, உரிமையின்றி நபிமார்களையும் கொலை செய்து, மனிதர்களில் நீதத்தைக் கொண்டு ஏவுகின்றோர்களையும் கொலை செய்கிறார்களே அத்தகையோர்-அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயங்கூறுவீராக!
Saheeh International
Those who disbelieve in the signs of Allah and kill the prophets without right and kill those who order justice from among the people - give them tidings of a painful punishment.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்الَّذِيْنَஎவர்கள்حَبِطَتْஅழிந்தனاَعْمَالُهُمْஇவர்களுடைய செயல்கள்فِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِஇன்னும் மறுமையில்وَمَاஇன்னும் இல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْ نّٰصِرِيْنَ‏உதவியாளர்களில் ஒருவரும்
உலா'இகல் லதீன ஹBபிதத் அஃமாலுஹும் Fபித் துன்யா வல் ஆகிரதி வமா லஹும் மின் னாஸிரீன்
முஹம்மது ஜான்
அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன; இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
IFT
இவர்களின் செயல்கள் இம்மை, மறுமை இரண்டிலும் வீணாகி விட்டன. மேலும் இவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுடைய செயல்கள் (யாவும்) இம்மையிலும், மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமில்லை.
Saheeh International
They are the ones whose deeds have become worthless in this world and the Hereafter, and for them there will be no helpers.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُدْعَوْنَ اِلٰی كِتٰبِ اللّٰهِ لِیَحْكُمَ بَیْنَهُمْ ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَى الَّذِيْنَ اُوْتُوْاகொடுக்கப் பட்டவர்களைنَصِيْبًاஒரு பகுதிمِّنَ الْكِتٰبِவேதத்தில்يُدْعَوْنَஅழைக்கப் படுகிறார்கள்اِلٰىபக்கம்كِتٰبِவேதம்اللّٰهِஅல்லாஹ்வின்لِيَحْكُمَஅது தீர்ப்பளிப்பதற்குبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்ثُمَّபிறகுيَتَوَلّٰىவிலகிவிடுகிறார்(கள்)فَرِيْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்وَهُمْஇன்னும் அவர்கள்مُّعْرِضُوْنَ‏புறக்கணிப்பவர்கள்
அலம் தர இலல் லதீன ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யுத்'அவ்ன இலா கிதாBபில் லாஹி லியஹ்கும Bபய்னஹும் தும்ம யதவல்லா Fபரீகும் மின்ஹும் வ ஹும் முஃரிளூன்
முஹம்மது ஜான்
வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்து வைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள்.
IFT
வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு கொடுக்கப்பட்டோரின் நிலை என்னவென்று நீர் கவனிக்கவில்லையா? அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் (வாருங்கள் என) அவர்கள் அழைக்கப்படும் போது, அவர்களில் ஒரு பிரிவினர் அதனைப் புறக்கணித்துத் திரும்பிச் செல்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்க அல்லாஹ்வின் வேதத்தின்பால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் (இதனைப் புறக்கணித்தவர்களாக திரும்பிச்செல்கின்றனர்.
Saheeh International
Do you not consider, [O Muhammad], those who were given a portion of the Scripture? They are invited to the Scripture of Allah that it should arbitrate between them; then a party of them turns away, and they are refusing.
ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعْدُوْدٰتٍ ۪ وَغَرَّهُمْ فِیْ دِیْنِهِمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
ذٰ لِكَஇதுبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்قَالُوْاகூறினார்கள்لَنْ تَمَسَّنَاஎங்களை அறவே தீண்டாதுالنَّارُநரக நெருப்புاِلَّاۤதவிரاَيَّامًاநாட்கள்مَّعْدُوْدٰتٍ‌எண்ணப்பட்டவைوَغَرّஇன்னும் ஏமாற்றிவிட்டதுهُمْஅவர்களைفِىْ دِيْنِهِمْஅவர்களுடைய மார்க்கத்தில்مَّاஎதுكَانُوْاஇருந்தார்கள்يَفْتَرُوْنَ‏பொய் கூறுவார்கள்
தாலிக Bபி அன்னஹும் காலூ லன் தமஸ்ஸனன் னாரு இல்லா அய்யாமம் மஃதூதாத் வ கர்ரஹும் Fபீ தீனிஹிம் மா கானூ யFப்தரூன்
முஹம்மது ஜான்
இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
இதன் காரணம்: ‘‘சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது'' என்று அவர்கள் கூறிக்கொண்டிருப்பதுதான். மேலும், தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது.
IFT
அவர்களின் இந்நடத்தைக்குக் காரணம், “சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர நரக நெருப்பு எங்களைத் திண்ணமாகத் தீண்டாது” என்று அவர்கள் கூறி வந்ததேயாகும். தாமே இயற்றிக் கொண்ட கோட்பாடுகள்தாம் அவர்களின் சமய விவகாரங்களில் அவர்களைப் பல தவறான கருத்துகளில் உழல வைத்திருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது “எண்ணிக் கணக்கிடப்பட்ட சில நாட்களைத் தவிர, (நரகத்தின்) நெருப்பு நிச்சயமாக ஒருபோதும் எங்களைத் தீண்டாது” என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்த காரணத்தினாலாகும். தங்கள் மார்க்க (விஷயத்தில், அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து (கூறி) வந்ததும் அவர்களை ஏமாற்றிவிட்டது.
Saheeh International
That is because they say, "Never will the Fire touch us except for [a few] numbered days," and [because] they were deluded in their religion by what they were inventing.
فَكَیْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِیَوْمٍ لَّا رَیْبَ فِیْهِ ۫ وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
فَكَيْفَஎப்படி?اِذَا جَمَعْنٰهُمْநாம் அவர்களை ஒன்றுசேர்த்தால்لِيَوْمٍஒரு நாளில்لَّاஅறவே இல்லைرَيْبَசந்தேகம்فِيْهِஅதில்وَوُفِّيَتْஇன்னும் முழுமையாக அளிக்கப்பட்டால்كُلُّ نَفْسٍஎல்லா ஆத்மாمَّاஎதுكَسَبَتْஅது செய்ததுوَهُمْஇன்னும் அவர்கள்لَا يُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
Fபகய்Fப இதா ஜமஃனாஹும் லி யவ்மில் லா ரய்Bப Fபீ வ வுFப்Fபியத் குல்லு னFப்ஸிம் மா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
முஹம்மது ஜான்
சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
IFT
ஆனால் ஐயமின்றி வரவிருக்கின்ற ஒருநாளில் நாம் அவர்களை ஒன்று திரட்டும்போது அவர்களின் நிலை என்னவாகும்? அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்ததற்குரிய கூலி முழுமையாய் வழங்கப்படும். மேலும் யார் மீதும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) எது நடந்தேறுமென்ப)தில் சந்தேகமில்லையோ, அந்நாளைக்காக நாம் அவர்களை ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவும் அது சம்பாதித்தவற்றை (அதன் பலனை)ப்பூரணமாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறிருக்கும்? அவர்களும் (தங்கள் பிரதிபலனை அடைவதில் சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
Saheeh International
So how will it be when We assemble them for a Day about which there is no doubt? And each soul will be compensated [in full for] what it earned, and they will not be wronged.
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ ؗ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِیَدِكَ الْخَیْرُ ؕ اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
قُلِகூறுவீராகاللّٰهُمَّஅல்லாஹ்வேمٰلِكَஉரிமையாளனேالْمُلْكِஆட்சிகளுக்கெல்லாம்تُؤْتِىகொடுக்கிறாய்الْمُلْكَஆட்சியைمَنْஎவர்تَشَآءُநாடுகிறாய்وَتَنْزِعُஇன்னும் பறிக்கிறாய்الْمُلْكَஆட்சியைمِمَّنْஎவரிடமிருந்துتَشَآءُநாடுகிறாய்وَتُعِزُّஇன்னும் கண்ணியப் படுத்துகிறாய்مَنْஎவர்تَشَآءُநாடுகிறாய்وَتُذِلُّஇன்னும் இழிவுபடுத்துகிறாய்مَنْஎவர்تَشَآءُ‌ ؕநாடுகிறாய்بِيَدِكَஉன் கையில்தான்الْخَيْرُ‌ؕநன்மைاِنَّكَநிச்சயமாக நீعَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
குலில் லாஹும்ம மாலிகல் முல்கி து'தில் முல்க மன் தஷா'உ வ தன்Zஜி'உல் முல்க மிம்மன் தஷ்ஹா'உ வ து'இZஜ்Zஜு மன் தஷா'உ வ துதில்லு மன் தஷா'உ Bபியதிகல் கய்ரு இன்னக 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய்.
IFT
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே (இம்மை மறுமையின் சகல) ஆட்சிக்கும் அதிபதியே” நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய். மேலும், நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய், இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய் நன்மை(யாவும்) உன் கைவசமே (இருக்கின்றது). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
Say, "O Allah, Owner of Sovereignty, You give sovereignty to whom You will and You take sovereignty away from whom You will. You honor whom You will and You humble whom You will. In Your hand is [all] good. Indeed, You are over all things competent.
تُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؗ وَتُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَتُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ ؗ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
تُوْلِجُநுழைக்கிறாய்الَّيْلَஇரவைفِى النَّهَارِபகலில்وَتُوْلِجُஇன்னும் நுழைக்கிறாய்النَّهَارَபகலைفِى الَّيْلِ‌இரவில்وَتُخْرِجُஇன்னும் வெளியாக்குகிறாய்الْحَـىَّஉயிருள்ளதைمِنَ الْمَيِّتِஇறந்ததிலிருந்துوَتُخْرِجُஇன்னும் வெளியாக்குகிறாய்الْمَيِّتَஇறந்ததைمِنَ الْحَـىِّ‌உயிருள்ளதிலிருந்துوَتَرْزُقُஇன்னும் வழங்குகிறாய்مَنْ تَشَآءُநீ நாடியவருக்குبِغَيْرِ حِسَابٍ‏கணக்கின்றி
தூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ தூலிஜுன் னஹார Fபில் லய்லி வ துக்ரிஜுல் ஹய்ய மினல்மய்யிதி வ துக்ரிஜுல் மய்யித மினல் ஹய்யி வ தர்Zஜுகு மன் தஷா'உ Bபிகரி ஹிஸாBப்
முஹம்மது ஜான்
(நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
அப்துல் ஹமீது பாகவி
நீதான் இரவைப் பகலில் நுழையவைக்கிறாய். நீதான் பகலை இரவில் நுழையவைக்கிறாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கிறாய்.''
IFT
நீயே இரவைப் பகலில் கோக்கச் செய்கின்றாய்; மேலும் பகலை இரவிலும் கோக்கச் செய்கின்றாய்; இன்னும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளியாக்குகின்றாய். மேலும் நீ நாடுபவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீ இரவைப் பகலில் நுழையச் செய்கின்றாய், இன்னும் நீ பகலை இரவில் நுழையச் செய்கின்றாய், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும் நீயே வெளியாக்குகின்றாய், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் நீயே வெளியாக்குகின்றாய், மேலும் நீ நாடியவர்களுக்குக் கணக்கின்றியே அளிக்கின்றாய்.”
Saheeh International
You cause the night to enter the day, and You cause the day to enter the night; and You bring the living out of the dead, and You bring the dead out of the living. And You give provision to whom You will without account [i.e., limit or measure]."
لَا یَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ۚ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ فَلَیْسَ مِنَ اللّٰهِ فِیْ شَیْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ؕ وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
لَا يَتَّخِذِஎடுத்துக் கொள்ள வேண்டாம்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களைاَوْلِيَآءَபாதுகாவலர்களாகمِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ۚநம்பிக்கையாளர்களைத் தவிரوَمَنْஇன்னும் எவர்يَّفْعَلْ ذٰ لِكَஇதை செய்வார்فَلَيْسَஅவர் இல்லைمِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்فِىْ شَىْءٍஎதிலும்اِلَّاۤதவிரاَنْ تَتَّقُوْاநீங்கள் அஞ்சுவதுمِنْهُمْஅவர்களைتُقٰٮةً  ؕஅஞ்சுதல்(கடுமையாக)وَيُحَذِّرُكُمُஇன்னும் எச்சரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்نَفْسَهٗ‌தன்னைؕوَاِلَى اللّٰهِஇன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான்الْمَصِيْرُ‏மீளுமிடம்
லா யத்தகிதில் மு'மினூனல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன வ மய் யFப்'அல் தாலிக Fபலய்ஸ மினல் லாஹி Fபீ ஷய்'இன் இல்லா அன் தத்தகூ மின்ஹும் துகாஹ்; வ யுஹத்திருகுமுல் லாஹு னFப்ஸஹ்; வ இலல் லாஹில் மஸீர்
முஹம்மது ஜான்
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தவிர எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (நீங்கள்) அல்லாஹ்விடம்தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கிறது.
IFT
இறைநம்பிக்கையாளர்கள், (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய், ஆதரவாளர்களாய் ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களுடைய கொடுமைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி! உங்களில் எவரேனும் அவ்வாறு நட்புகொண்டால், அவர்களுக்கு அல்லாஹ்வுடன் எத்தகைய தொடர்பும் இல்லை. மேலும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். இன்னும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகள் (தங்களைப்போன்ற) விவசுவாசிகளையன்றி, நிராகரிப்போரை(த் தங்களுக்கு)ப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து (தங்களைக்) காப்பாற்றிக் கொள்வதை நீங்கள் பயந்தாலன்றி, எவரேனும் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை; மேலும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான்; அல்லாஹ்விடமே மீளுதலும் இருக்கின்றது.
Saheeh International
Let not believers take disbelievers as allies [i.e., supporters or protectors] rather than believers. And whoever [of you] does that has nothing [i.e., no association] with Allah, except when taking precaution against them in prudence. And Allah warns you of Himself, and to Allah is the [final] destination.
قُلْ اِنْ تُخْفُوْا مَا فِیْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ یَعْلَمْهُ اللّٰهُ ؕ وَیَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
قُلْகூறுவீராகاِنْ تُخْفُوْاநீங்கள் மறைத்தாலும்مَاஎதைفِىْ صُدُوْرِكُمْஉங்கள் நெஞ்சங்களில்اَوْஅல்லதுتُبْدُوْهُஅதை வெளிப்படுத்தினாலும்يَعْلَمْهُஅதைஅறிவான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்وَيَعْلَمُஇன்னும் அறிவான்مَاஎதைفِى السَّمٰوٰتِவானங்களில்وَمَا فِى الْاَرْضِؕ‌இன்னும் பூமியில் உள்ளதுوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
குல் இன் துக்Fபூ மா Fபீ ஸுதூரிகும் அவ் துBப்தூஹு யஃலம்ஹுல் லாஹ்; வ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: உங்கள் மனங்களில் நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
IFT
நபியே! (மக்களை) எச்சரிப்பீராக: “உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அவற்றை நன்கறிகின்றான்.” மேலும், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றை அவன் அறிகின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்கள் நெஞ்சங்களில் இருப்பதை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை அறிவான்; (என்றும்) வானங்களில் மற்றும், பூமியில் உள்ளவற்றை அவன் அறிவான்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக! மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
Say, "Whether you conceal what is in your breasts or reveal it, Allah knows it. And He knows that which is in the heavens and that which is on the earth. And Allah is over all things competent.
یَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَیْرٍ مُّحْضَرًا ۛۖۚ وَّمَا عَمِلَتْ مِنْ سُوْٓءٍ ۛۚ تَوَدُّ لَوْ اَنَّ بَیْنَهَا وَبَیْنَهٗۤ اَمَدًاۢ بَعِیْدًا ؕ وَیُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ؕ وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟۠
يَوْمَநாள்تَجِدُபெற்றுக்கொள்ளும்كُلُّஒவ்வொருنَفْسٍஆத்மாمَّاஎதைعَمِلَتْ(அது) செய்ததுمِنْ خَيْرٍநன்மையில்مُّحْضَرًا ۖۚ ۛசமர்ப்பிக்கப்பட்டதாகوَّمَاஇன்னும் எதுعَمِلَتْசெய்ததுمِنْ سُوْٓءٍ ۚۛதீமையில்تَوَدُّவிரும்பும்لَوْஇருக்க வேண்டுமே!اَنَّநிச்சயமாகبَيْنَهَاஅதற்கு மத்தியில்وَبَيْنَهٗۤஇன்னும் அதற்கு மத்தியில்اَمَدًاۢதூரம்بَعِيْدًا ‌ؕநீண்டوَيُحَذِّرُكُمُஇன்னும் உங்களை எச்சரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்نَفْسَهٗ‌ؕதன்னைوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்رَءُوْفٌۢமிக இரக்கமுடையவன்بِالْعِبَادِ ‏அடியார்களிடம்
யவ்ம தஜிது குல்லு னFப்ஸிம் மா'அமிலத் மின் கய்ரிம் முஹ்ளர(ன்)வ் வமா 'அமிலத் மின் ஸூ'இன் தவத்து லவ் அன்ன Bபய்னஹா வ Bபய்னஹூ அமதம் Bப'ஈதா; வ யுஹத்திருகுமுல் லாஹு னFப்ஸஹ்; வல்லாஹு ர'ஊFபும் Bபில்'இBபாத்
முஹம்மது ஜான்
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (ஏனென்றால்,) அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிக்க இரக்கமுடையவன் ஆவான்.
IFT
ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மைகளும், தான் செய்த தீமைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதைக் காணும் நாள் வந்தே தீரும். அப்போது, “அந்தோ! தனக்கும் அந்நாளுக்குமிடையே மிக தூரமான இடைவெளி இருந்திருக்கக் கூடாதா!” என மனிதன் ஆவலுறுவான். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும் அல்லாஹ் தன் அடிமைகள் மீது மிகவும் இரக்கமுள்ளவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்தவற்றையும், தீமையில் தான் செய்தவற்றையும் தன் முன் ஆஜராக்கப்பட்டதாகப் பெறும் (அந்)நாளில், அது தான் செய்தவைகளுக்கும் தனக்கும் மத்தியில் வெகுதூரம் இருந்திருக்க வேண்டுமே என விரும்பும். அன்றியும், அல்லாஹ் தன்னைப் பற்றி (அவனது தண்டனையை நினைவு கூருமாறு) உங்களை எச்சரிக்கை செய்கிறான். இன்னும், அல்லாஹ் (தன்) அடியார்கள் மீது மிக்க இரக்கமுடையவன்.
Saheeh International
The Day every soul will find what it has done of good present [before it] and what it has done of evil, it will wish that between itself and that [evil] was a great distance. And Allah warns you of Himself, and Allah is Kind to [His] servants."
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِیْ یُحْبِبْكُمُ اللّٰهُ وَیَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
قُلْகூறுவீராகاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تُحِبُّوْنَநேசிப்பீர்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَاتَّبِعُوْنِىْஎன்னைப் பின்பற்றுங்கள்يُحْبِبْكُمُஉங்களைநேசிப்பான்اللّٰهُஅல்லாஹ்وَيَغْفِرْஇன்னும் மன்னிப்பான்لَـكُمْஉங்களுக்குذُنُوْبَكُمْؕ‌உங்கள் பாவங்களைوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
குல் இன் குன்தும் துஹிBப்Bபூனல் லாஹ Fபத்தBபி' ஊனீ யுஹ்BபிBப்குமுல் லாஹு வ யக்Fபிர் லகும் துனூBபகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவன், பெரும் கருணையாளன் ஆவான்.''
IFT
(நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! மனிதர்களிடம்,) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்துவிடுவான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
Saheeh International
Say, [O Muhammad], "If you should love Allah, then follow me, [so] Allah will love you and forgive you your sins. And Allah is Forgiving and Merciful."
قُلْ اَطِیْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْكٰفِرِیْنَ ۟
قُلْகூறுவீராகاَطِيْعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்விற்குوَالرَّسُوْلَ‌ ۚஇன்னும் தூதருக்குفَاِنْ تَوَلَّوْا(நீங்கள்) திரும்பினால்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களை
குல் அதீ'உல் லாஹ வர் ரஸூல Fப இன் தவல்லவ் Fப இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் காFபிரீன்
முஹம்மது ஜான்
(நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை''.
IFT
(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.” பிறகு அவர்கள் (உம்முடைய இந்த அழைப்பை) புறக்கணிப்பார்களாயின் திண்ணமாக அல்லாஹ் (தனக்கும் தன் தூதருக்கும் கீழ்ப்படிய) மறுப்பவர்களை நேசிக்க மாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள். பின்னர் அவர்கள் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை நேசிக்கமாட்டான்.
Saheeh International
Say, "Obey Allah and the Messenger. But if you turn away - then indeed, Allah does not like the disbelievers."
اِنَّ اللّٰهَ اصْطَفٰۤی اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِیْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اصْطَفٰۤىதேர்ந்தெடுத்தான்اٰدَمَஆதமைوَنُوْحًاஇன்னும் நூஹைوَّاٰلَஇன்னும் குடும்பத்தைاِبْرٰهِيْمَஇப்றாஹீமின்وَاٰلَ عِمْرٰنَஇன்னும் இம்ரானின் குடும்பத்தைعَلَى الْعٰلَمِيْنَۙ‏அகிலத்தாரை விட
இன்னல் லாஹஸ் தFபா ஆதம வ னூஹ(ன்)வ் வ ஆல இBப்ராஹீம வ ஆல இம்ரான 'அலல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலத்தாரைவிட மேலாக (உயர்வாக) தேர்ந்தெடுத்தான்.
IFT
திண்ணமாக அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் வழித்தோன்றல்களையும், இம்ரானின் வழித்தோன்றல்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்ராஹீமுடைய குடும்பத்தினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும் அகிலத்தாரைவிட மேலாகத் தேர்ந்தெடுத்தான்.
Saheeh International
Indeed, Allah chose Adam and Noah and the family of Abraham and the family of ʿImran over the worlds -
ذُرِّیَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۚ
ذُرِّيَّةًۢஒரு சந்ததிبَعْضُهَاஅதில் சிலர்مِنْۢ بَعْضٍ‌ؕசிலரைச் சேர்ந்தவர்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‌ۚ‏நன்கறிந்தவன்
துர்ரிய்யதம் Bபஃளுஹா மிம் Bபஃள்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
முஹம்மது ஜான்
(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் மற்றவருடைய சந்ததிதான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்.
IFT
இவர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய வழித்தோன்றல்களாவர். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும், நன்கறிபவனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவற்றில் சில, சிலரிலுள்ள சந்ததிதான். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
Saheeh International
Descendants, some of them from others. And Allah is Hearing and Knowing.
اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّیْ نَذَرْتُ لَكَ مَا فِیْ بَطْنِیْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّیْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
اِذْ قَالَتِகூறியசமயம்امْرَاَتُமனைவிعِمْرٰنَஇம்ரானுடையرَبِّஎன் இறைவாاِنِّىْநிச்சயமாக நான்نَذَرْتُநேர்ச்சை செய்தேன்لَـكَஉனக்குمَاஎதுفِىْ بَطْنِىْஎன் வயிற்றில்مُحَرَّرًاஅர்ப்பணிக்கப்பட்டதாகفَتَقَبَّلْஆகவே ஏற்றுக்கொள்مِنِّىْ ۚஎன்னிடமிருந்துاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‌‏மிக அறிந்தவன்
இத் காலதிம் ர அது 'இம்ரான ரBப்Bபி இன்னீ னதர்து லக மா Fபீ Bபத்னீ முஹர்ரரன் FபதகBப்Bபல் மின்னீ இன்னக அன்தஸ் ஸமீ'உல் 'அலீம்
முஹம்மது ஜான்
இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-
அப்துல் ஹமீது பாகவி
இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறியபின்,
IFT
இம்ரானைச் சார்ந்த பெண் “என் இறைவனே! நான் எனது வயிற்றில் இருக்கும் குழந்தையை உனது திருப்பணிக்காக அர்ப்பணிக்க நேர்ச்சை செய்துள்ளேன். எனவே இதனை (காணிக்கையை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! திண்ணமாக நீ நன்கு செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று இறைஞ்சிக் கொண்டிருந்ததையும் அல்லாஹ் செவியுற்றவனாகவே இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண்குழந்தை பெற விரும்பி இரட்சகனிடம்,) “என் இரட்சகனே! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ளதை உனக்காக உரிமை விடப்பட்டதாக நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால் (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (பிரார்த்தனைகளைச்) செவியுறுகிறவன், (மனத்திலுள்ளவற்றை) நன்கறிகிறவன்” என்று) பிரார்த்தித்துக் கூறியதை (நினைவு கூர்வீராக!)
Saheeh International
[Mention, O Muhammad], when the wife of ʿImran said, "My Lord, indeed I have pledged to You what is in my womb, consecrated [for Your service], so accept this from me. Indeed, You are the Hearing, the Knowing."
فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّیْ وَضَعْتُهَاۤ اُ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْ ؕ وَلَیْسَ الذَّكَرُ كَالْاُ ۚ وَاِنِّیْ سَمَّیْتُهَا مَرْیَمَ وَاِنِّیْۤ اُعِیْذُهَا بِكَ وَذُرِّیَّتَهَا مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ۟
فَلَمَّاபோதுوَضَعَتْهَاஅவளைப் பெற்றெடுத்தாள்قَالَتْகூறினாள்رَبِّஎன் இறைவாاِنِّىْநிச்சயமாக நான்وَضَعْتُهَاۤஅவளைப் பெற்றெடுத்தேன்اُنْثٰىؕஒரு பெண்ணாகوَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَا وَضَعَتْؕஅவள் பெற்றெடுத்ததைوَ لَيْسَஇன்னும் இல்லைالذَّكَرُஆண்كَالْاُنْثٰى‌ۚபெண்ணைப்போன்றுوَاِنِّىْஇன்னும் நிச்சயமாக நான்سَمَّيْتُهَاஅவளுக்குப் பெயரிட்டேன்مَرْيَمَமர்யம்وَاِنِّىْۤஇன்னும் நிச்சயமாக நான்اُعِيْذُهَاஅவளை பாதுகாக்கிறேன்بِكَஉன்னைக்கொண்டுوَذُرِّيَّتَهَاஇன்னும் அவளுடைய சந்ததியைمِنَஇருந்துالشَّيْطٰنِஷைத்தான்الرَّجِيْمِ‏விரட்டப்பட்டவன்
Fபலம்மா வள'அத் ஹா காலத் ரBப்Bபி இன்னீ வளஃதுஹா உன்தா வல்லாஹு அஃலமு Bபிமா வள'அத் வ லய்ஸத் தகரு கலுன்தா வ இன்னீ ஸம்மய்துஹா மர்யம வ இன்னீ உ'ஈதுஹா Bபிக வ துர்ரிய்யதஹா மினஷ் ஷய்தானிர் ரஜீம்
முஹம்மது ஜான்
(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்'' என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ்(தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்' எனப் பெயரிட்டேன். அதையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!'' (என்றார்.)
IFT
பிறகு அவள் அதைப் (பெண் குழந்தையாகப்) பெற்றெடுத்தபோது கூறினாள்: “என் இறைவா! நான் அதைப் பெண் குழந்தையாய்ப் பெற்றுவிட்டேனே!” ஆயினும் அவள் எதைப் பெற்றெடுத்தாளோ அதைப் பற்றி அல்லாஹ் மிகவும் அறிந்தவன் “மேலும் ஆண் குழந்தை, பெண் குழந்தையைப் போலன்று; நான் அக்குழந்தைக்கு ‘மர்யம்’ எனப் பெயர் சூட்டியுள்ளேன். மேலும் நான் அக்குழந்தைக்காகவும் அதன் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தா(னின் தீங்கி)னை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அதனை அவள் (தன் விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண்குழந்தையாகப்) பெற்றபோது, “என் இரட்சகனே! நிச்சயமாகவே நான் (என் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண்ணையே பெற்றுள்ளேன்” என்று கூறினாள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். ஆயினும், ஆண் (இந்தப்) பெண்ணைப் போன்றதல்ல, (பிறகு இம்ரானின் மனைவி) “நிச்சயமாக நான் அதற்கு மர்யம் எனப் பெயரிட்டுள்ளேன். அதனையும் அதன் சந்ததியையும், வெருட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து உன்னிடம் நிச்சயமாக நான் காக்கத் தேடுகிறேன்!” என்றாள்.
Saheeh International
But when she delivered her, she said, "My Lord, I have delivered a female." And Allah was most knowing of what she delivered, and the male is not like the female. "And I have named her Mary, and I seek refuge for her in You and [for] her descendants from Satan, the expelled [from the mercy of Allah]."
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِیَّا ؕۚ كُلَّمَا دَخَلَ عَلَیْهَا زَكَرِیَّا الْمِحْرَابَ ۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ۚ قَالَ یٰمَرْیَمُ اَنّٰی لَكِ هٰذَا ؕ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
فَتَقَبَّلَهَاஆகவே அவளை ஏற்றான்رَبُّهَاஅவளுடைய இறைவன்بِقَبُوْلٍஏற்பாகحَسَنٍஅழகியதுوَّاَنْۢبَتَهَاஇன்னும் அவளை வளர்த்தான்نَبَاتًاவளர்ப்பாகحَسَنًا ۙஅழகியதுوَّكَفَّلَهَاஇன்னும் அவளுக்கு பொறுப்பாளராக்கினான்زَكَرِيَّا ؕஸகரிய்யாவைكُلَّمَا دَخَلَநுழையும் போதெல்லாம்عَلَيْهَاஅவளிடம்زَكَرِيَّاஸகரிய்யாالْمِحْرَابَۙமாடத்தில்وَجَدَபெற்றார்عِنْدَهَاஅவளிடம்رِزْقًا ۚ‌ஓர் உணவைقَالَகூறினார்يٰمَرْيَمُமர்யமே!اَنّٰىஎங்கிருந்து?لَـكِஉனக்குهٰذَا ؕ‌இதுقَالَتْகூறினாள்هُوَஇதுمِنْ عِنْدِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்விடமிருந்துاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَرْزُقُவழங்குவான்مَنْஎவர்يَّشَآءُநாடுகிறான்بِغَيْرِ حِسَابٍ‏கணக்கின்றி
FபதகBப்Bப லஹா ரBப்Bபுஹா BபிகBபூலின் ஹஸனி(ன்)வ் வ அம்Bபதஹா னBபாதன் ஹஸன(ன்)வ் வ கFப்Fபலஹா Zஜகரிய்யா குல்லமா தகல 'அலய்ஹா Zஜகரிய்யல் மிஹ்ராBப வஜத 'இன்தஹா ரிZஜ்கன் கால யா மர்யமு அன்னா லகி ஹாதா காலத் ஹுவ மின் 'இன்தில் லாஹி இன்னல் லாஹ யர்Zஜுகு மய் யஷா'உ Bபிகய்ரி ஹிஸாBப்
முஹம்மது ஜான்
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவருடைய இறைவன் அதை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதை வளரச் செய்து அதை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும் போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு ‘‘மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)'' என்று கேட்பார். அதற்கவள் ‘‘இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகிறது). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கிறான்'' என்று கூறுவாள்.
IFT
ஆகவே அவளுடைய இறைவன் அ(ந்தப் பெண் குழந்தை)தனை அன்போடு ஏற்றுக்கொண்டான். மேலும் அதைச் சிறப்புடன் வளர்த்தான். ஜகரிய்யாவை அக்குழந்தைக்குப் பாதுகாவலராகவும் ஆக்கினான். மர்யம் இருந்த மாடத்தினுள் ஜகரிய்யா செல்லும் போதெல்லாம், ஏதேனும் உணவுப் பொருள் அவளிடத்தில் இருப்பதைக் காண்பார். “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” எனக் கேட்பார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. தான் நாடியவர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் கணக்கின்றி வழங்குகின்றான்” என்று மர்யம் பதிலுரைப்பார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவளுடைய இரட்சகன் அவளை அழகான முறையில் அங்கீகரித்து (பரிசுத்தமாகவும்) அழகான வளர்ச்சியாகவும் அவளை வளரச்செய்தான். மேலும், அவளுக்கு (பாதுகாவலராக) ஜகரிய்யாவைப் பொறுப்பேற்கச் செய்தான். ஜகரிய்யா அவளிடம் மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம் அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப்பொருள் இருப்பதைக் கண்டு “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார் அ(தற்க)வள் “இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகின்றது ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்” என்று கூறினாள்.
Saheeh International
So her Lord accepted her with good acceptance and caused her to grow in a good manner and put her in the care of Zechariah. Every time Zechariah entered upon her in the prayer chamber, he found with her provision. He said, "O Mary, from where is this [coming] to you?" She said, "It is from Allah. Indeed, Allah provides for whom He wills without account."
هُنَالِكَ دَعَا زَكَرِیَّا رَبَّهٗ ۚ قَالَ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ ۟
هُنَالِكَஅவ்விடத்தில்دَعَاபிரார்த்தித்தார்زَكَرِيَّاஸகரிய்யாرَبَّهٗ‌ ۚஅவரின் இறைவனைقَالَகூறினார்رَبِّஎன் இறைவாهَبْ لِىْஎனக்கு தா!مِنْ لَّدُنْكَஉன் புறத்திலிருந்துذُرِّيَّةًஒரு சந்ததியைطَيِّبَةً‌  ۚ اِنَّكَநல்லது/நிச்சயமாக நீسَمِيْعُநன்கு செவியுறுபவன்الدُّعَآءِ‏பிரார்த்தனை
ஹுனாலிக த'ஆ Zஜகரிய்யா ரBப்Bபஹூ கால ரBப்Bபி ஹBப் லீ மில் லதுன்க துர்ரிய்யதன் தய்யிBபதன் இன்னக ஸமீ'உத் து'ஆ'
முஹம்மது ஜான்
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
அப்துல் ஹமீது பாகவி
(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து ‘‘என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவன்'' என்று கூறினார்.
IFT
அங்கு இந்நிலையைக் கண்ட ஜகரிய்யா தம் இறைவனிடம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்குத் தூய ஒரு வழித் தோன்றலை உனது ஆற்றலால் வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பிரார்த்தனையைச் செவியேற்பவன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்த இடத்திலேயே ஜகரிய்யா, தன் இரட்சகனை (பிரார்த்தித்து) அழைத்தார். “என் இரட்சகனே! உன்பாலிருந்து எனக்கொரு பரிசுத்தமான சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியுறுகிறவன்” என்று கூறினார்.
Saheeh International
At that, Zechariah called upon his Lord, saying, "My Lord, grant me from Yourself a good offspring. Indeed, You are the Hearer of supplication."
فَنَادَتْهُ الْمَلٰٓىِٕكَةُ وَهُوَ قَآىِٕمٌ یُّصَلِّیْ فِی الْمِحْرَابِ ۙ اَنَّ اللّٰهَ یُبَشِّرُكَ بِیَحْیٰی مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَیِّدًا وَّحَصُوْرًا وَّنَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
فَنَادَتْهُஆகவேஅழைத்தா(ர்க)ள்الْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்وَهُوَ قَآٮِٕمٌஅவர் நின்று தொழுதுகொண்டிருக்கيُّصَلِّىْதொழுகிறார்فِى الْمِحْرَابِۙமாடத்தில்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُبَشِّرُكَஉமக்கு நற்செய்தி கூறுகிறான்بِيَحْيٰىயஹ்யாவைக் கொண்டுمُصَدِّقًۢاஉண்மைப்படுத்துபவராகبِكَلِمَةٍஒரு வாக்கியத்தைمِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَسَيِّدًاஇன்னும் தலைவராகوَّحَصُوْرًاஇன்னும் இன்பத்தைத் துறந்தவராகوَّنَبِيًّاஇன்னும் நபியாகمِّنَ الصّٰلِحِيْنَ‏நல்லோரைச்சேர்ந்தவர்
Fபனாதத் ஹுல் மலா'இகது வ ஹுவ கா'இமு(ன்)ய் யுஸல்லீ Fபில் மிஹ்ராBபி அன்னல் லாஹ யுBபஷ்ஷிருக Bபி யஹ்யா முஸத்திகம் Bபி கலிமதிம் மினல் லாஹி வ ஸய்யித(ன்)வ் வ ஹஸூர(ன்)வ் வ னBபிய்யம் மினஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர் மாடத்தி(‘மிஹ்ராப்')ல் நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) வானவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் ‘யஹ்யா' (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்திவைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.
IFT
அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: “அல்லாஹ் உமக்கு யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய் விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் மற்றும் மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் மாடத்தில் நின்று அவர் தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரிடம்) மலக்குகள், (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ், யஹ்யா (என்ற ஒரு மக)வை உமக்கு (அளிப்பதாக) நன்மாராயங் கூறுகின்றான். அவர்(தகப்பனின்றி) அல்லாஹ்விடமிருந்து(ள்ள) ஒரு வார்த்தையை(க் கொண்டு உண்டாகக் கூடிய ஈஸா நபியை_முன்னறிக்கையாக) உண்மைப் படுத்தக் கூடியவராகவும், (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண் இன்பத்தைத்)துறந்தவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” என்று (கூறி) அவரை சப்தமிட்டு அழைத்தனர்.
Saheeh International
So the angels called him while he was standing in prayer in the chamber, "Indeed, Allah gives you good tidings of John, confirming a word from Allah and [who will be] honorable, abstaining [from women], and a prophet from among the righteous."
قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِیَ الْكِبَرُ وَامْرَاَتِیْ عَاقِرٌ ؕ قَالَ كَذٰلِكَ اللّٰهُ یَفْعَلُ مَا یَشَآءُ ۟
قَالَகூறினார்رَبِّஎன் இறைவா!اَنّٰىஎவ்வாறுيَكُوْنُஉண்டாகும்لِىْஎனக்குغُلٰمٌஒரு குழந்தைوَّقَدْ بَلَغَنِىَஎன்னையோ அடைந்து விட்டிருக்கالْكِبَرُமுதுமைوَامْرَاَتِىْஇன்னும் என்மனைவியோعَاقِرٌ‌ؕமலடிقَالَகூறினான்كَذٰلِكَஇவ்வாறுاللّٰهُஅல்லாஹ்يَفْعَلُசெய்வான்مَاஎதைيَشَآءُ‏நாடுகிறான்
கால ரBப்Bபி அன்னா யகூனு லீ குலாமு(ன்)வ் வ கத் Bபலகனியல் கிBபரு வம்ராதீ 'ஆகிருன் கால கதாலிகல் லாஹு யFப்'அலு மா யஷா'
முஹம்மது ஜான்
அவர் கூறினார்: “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) ‘‘என் இறைவனே! எனக்கு எப்படி சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்துவிட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கிறாள்'' என்று கூறினார். (அதற்கு இறைவன்) ‘‘இப்படியே (நடைபெறும்). அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்'' என்று கூறினான்.
IFT
ஜகரிய்யா வினவினார்: “என் இறைவா! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்? நானோ முதுமையடைந்து விட்டேன்; என் மனைவியோ மலடியாய் இருக்கின்றாள்.” அதற்கு இறைவன் “இவ்வாறே நடைபெறும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைச் செய்(தே தீரு)வான்” என்று பதிலளித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு ஜகரிய்யாவாகிய) அவர் (அல்லாஹ்விடம்,) என் இரட்சகனே! எனக்கு எவ்வாறு மகன் உண்டாக முடியும்? நிச்சயமாக முதுமையும் என்னை அடைந்துவிட்டது. என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்!” என்று கூறினார். “அவ்வாறே (நடைபெறும்), அல்லாஹ் தான் நாடியதை (அவசியம்) செய்(தே தீரு)வான் என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
Saheeh International
He said, "My Lord, how will I have a boy when I have reached old age and my wife is barren?" He [the angel] said, "Such is Allah; He does what He wills."
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَیَّامٍ اِلَّا رَمْزًا ؕ وَاذْكُرْ رَّبَّكَ كَثِیْرًا وَّسَبِّحْ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟۠
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاجْعَلْஆக்குلِّىْۤஎனக்குاٰيَةً ؕஓர் அத்தாட்சியைقَالَகூறினான்اٰيَتُكَஉம் அத்தாட்சிاَلَّا تُكَلِّمَநீர் பேசமால் இருப்பதுالنَّاسَமக்களிடம்ثَلٰثَةَ اَيَّامٍமூன்று நாட்கள்اِلَّاதவிரرَمْزًا ؕ‌சாடையாகوَاذْكُرْஇன்னும் நினைவு கூறுவீராகرَّبَّكَஉம் இறைவனைكَثِيْرًاஅதிகம்وَّسَبِّحْஇன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராகبِالْعَشِىِّமாலையில்وَالْاِبْكَارِ‏இன்னும் காலையில்
கால ரBப்Bபிஜ் 'அல் லீ ஆயதன் கால ஆயதுக அல்லா துகல்லிமன் னாஸ தலாதத அய்யாமின் இல்லா ரம்Zஜா; வத்குர் ரBப்Bபக கதீர(ன்)வ் வ ஸBப்Bபிஹ் Bபில்'அஷிய்யி வல் இBப்கார்
முஹம்மது ஜான்
“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு) ஜகரிய்யா ‘‘என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக'' என்று கேட்டார். அதற்கு (இறைவன்) ‘‘உமக்கு அளிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரை ஜாடையாகவே தவிர நீர் மனிதர்களுடன் பேசமாட்டீர். (அந்நாள்களில்) நீர் உமது இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருப்பீராக'' என்று கூறினான்.
IFT
அதற்கு அவர், “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்!” என்று (பணிந்து) கேட்டார். அதற்கு, “நீர் மூன்று நாட்கள் வரை சைகையினாலே அன்றி மக்களிடம் பேச மாட்டீர் (பேச இயலாது) என்பதே அடையாளமாகும். இக்கால கட்டத்தில் உம் இறைவனை அதிகமாய் நினைவுகூருவீராக! மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பீராக!” எனக் கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர், “என் இரட்சகனே! (இதற்கு) எனக்கோர் அடையாளத்தை ஆக்குவாயாக!” என்று கேட்டார். (அதற்கு) அவன் “உமக்கு (அளிக்கப்படும்) அடையாளமாவது, மூன்று நாட்கள் வரையில் சைகை மூலமன்றி நீர் மனிதர்களுடன் பேசாமல் இருப்பதாகும். (அந்நாட்களில்) நீர் உமதிரட்சகனை அதிகமாக நினைவுகூர்வீராக! காலையிலும், மாலையிலும் (அவனைப்போற்றி) துதி செய்து கொண்டுமிருப்பீராக!” என்று கூறினான்.
Saheeh International
He said, "My Lord, make for me a sign." He said, "Your sign is that you will not [be able to] speak to the people for three days except by gesture. And remember your Lord much and exalt [Him with praise] in the evening and the morning."
وَاِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰی نِسَآءِ الْعٰلَمِیْنَ ۟
وَاِذْசமயம்قَالَتِகூறினா(ர்க)ள்الْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்يٰمَرْيَمُமர்யமே!اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اصْطَفٰٮكِஉம்மைத் தேர்ந்தெடுத்தான்وَطَهَّرَكِஇன்னும் உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்وَاصْطَفٰٮكِஇன்னும் உம்மைத் தேர்ந்தெடுத்தான்عَلٰى نِسَآءِபெண்களைவிடالْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களின்
வ இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹஸ் தFபாகி வ தஹ்ஹரகி வஸ்தFபாகி 'அலா னிஸா'இல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மர்யமை நோக்கி) வானவர்கள் கூறிய சமயத்தில் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மை தேர்ந்தெடுத்திருக்கிறான். உம்மை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கிறான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உம்மை மேன்மையாக்கியும் வைத்திருக்கிறான், (என்றும்)
IFT
மேலும், அந்நேரம் வந்தபோது வானவர்கள் கூறினார்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்துத் தூய்மையாக்கினான். மேலும் அகிலத்துப் பெண்கள் அனைவரினும் (உனக்கு முதலிடம் அளித்து, தனது திருப்பணிக்காக) உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், மலக்குகள் (மர்யமிடம்) “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான், உன்னைப் பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான், அகிலத்தாரிலுள்ள பெண்களை விட உன்னைத் தேர்ந்தெடுத்துமிருக்கின்றான்” என்று கூறிய சமயத்தில் (நடந்தவற்றை நபியே! நினைவு கூர்வீராக! அப்போது)
Saheeh International
And [mention] when the angels said, "O Mary, indeed Allah has chosen you and purified you and chosen you above the women of the worlds.
یٰمَرْیَمُ اقْنُتِیْ لِرَبِّكِ وَاسْجُدِیْ وَارْكَعِیْ مَعَ الرّٰكِعِیْنَ ۟
يٰمَرْيَمُமர்யமே!اقْنُتِىْபணிவீராகلِرَبِّكِஉம் இறைவனுக்குوَاسْجُدِىْஇன்னும் சிரம் தாழ்த்துவீராகوَارْكَعِىْஇன்னும் குனிவீராகمَعَஉடன்الرّٰكِعِيْنَ‏குனிபவர்களுடன்
யா மர்யமு உக்னுதீ லி ரBப்Bபிகி வஸ்ஜுதீ வர்க'ஈ ம'அர் ராகி'ஈன்
முஹம்மது ஜான்
“மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) மர்யமே! நீர் உமது இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீரும் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குவீராக!'' (என்று கூறினார்கள்.)
IFT
மர்யமே! உன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடப்பாயாக! மேலும் ஸஜ்தா செய்வாயாக! (அவனது திருமுன்) பணிபவர்களுடன் சேர்ந்து நீயும் பணிவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மர்யமே! நீர் உன்னுடைய இரட்சகனுக்கு வழிபாடு செய்வீராக! சாஷ்டாங்கமும் செய்வீராக! குனிந்து (சிரம்பணிந்து) வணங்குபவர்களுடன் நீரும் குனிந்து (சிரம்பணிந்து) வணங்குவீராக!” (என்றும் கூறினார்கள்.)
Saheeh International
O Mary, be devoutly obedient to your Lord and prostrate and bow with those who bow [in prayer]."
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ؕ وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَیُّهُمْ یَكْفُلُ مَرْیَمَ ۪ وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یَخْتَصِمُوْنَ ۟
ذٰ لِكَஇவைمِنْஇருந்துاَنْۢـبَآءِசெய்திகள்الْغَيْبِமறைவானவைنُوْحِيْهِஇவற்றை வஹீ அறிவிக்கிறோம்اِلَيْكَ‌ؕஉமக்குوَمَا كُنْتَநீர் இருக்கவில்லைلَدَيْهِمْஅவர்களிடம்اِذْபோதுيُلْقُوْنَஎறிகிறார்கள்اَقْلَامَهُمْதங்கள் எழுது கோல்களைاَيُّهُمْஅவர்களில் யார்يَكْفُلُபொறுப்பேற்பார்مَرْيَمَமர்யமைوَمَا كُنْتَநீர் இருக்கவில்லைلَدَيْهِمْஅவர்களிடம்اِذْபோதுيَخْتَصِمُوْنَ‏தர்க்கிக்கிறார்கள்
தாலிக மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹி இலய்க்; வமா குன்த லதய்ஹிம் இத் யுல்கூன அக்லாமஹும் அய்யுஹும் யக்Fபுலு மர்யம வமா குன்த லதய்ஹிம் இத் யக்தஸிமூன்
முஹம்மது ஜான்
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவை (அனைத்தும் நீர் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கிறோம். மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுது கோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
IFT
(நபியே!) இவை யாவும் மறைவான செய்திகள். இவற்றை உமக்கு, வஹி மூலம் நாம் அறிவிக்கின்றோம். (வழிபாட்டில்லத்தின் பணியாளர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யத்திற்குப் பொறுப்பு ஏற்பவர் என்று முடிவு செய்ய, தத்தமது எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்தபோது அவர்களிடையே நீர் இருக்கவில்லை. மேலும் அவர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்திலும் அவர்களிடையே நீர் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவைகளை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். இன்னும், மர்யமுக்கு (அவரை வளர்க்க) அவர்களில் எவர் பொறுப்பேற்றுக் கொள்வதென்று (முடிவுசெய்ய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும்) நீர் அவர்களிடத்தில் இருக்கவில்லை, (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்துக் கொண்டபோதும் அவர்களிடத்தில் நீர் இருக்கவில்லை.
Saheeh International
That is from the news of the unseen which We reveal to you, [O Muhammad]. And you were not with them when they cast their pens as to which of them should be responsible for Mary. Nor were you with them when they disputed.
اِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ یُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖۗ اسْمُهُ الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ وَجِیْهًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
اِذْ قَالَتِகூறியசமயம்الْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்يٰمَرْيَمُமர்யமே!اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُبَشِّرُكِஉமக்கு நற்செய்தி கூறுகிறான்بِكَلِمَةٍஒரு வார்த்தையைக் கொண்டுمِّنْهُ ۖஅவனிடமிருந்துاسْمُهُஅதன் பெயர்الْمَسِيْحُஅல் மஸீஹ்عِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்وَجِيْهًاகம்பீரமானவராகفِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِஇன்னும் மறுமைوَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏நெருக்கமானவர்களில்
இத் காலதில் மலா'இகது யா மர்யமு இன்னல் லாஹ யுBபஷ்ஷிருகி Bபி கலிமதிம் மின்ஹுஸ் முஹுல் மஸீஹு 'ஈஸBப் னு மர்யம வஜீஹன் Fபித் துன்யா வல் ஆகிரதி வ மினல் முகர்ரBபீன்
முஹம்மது ஜான்
மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், மர்யமை நோக்கி) வானவர்கள் ‘‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன் (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான்'' என்றும் ‘‘அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்'' என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' என்றும் கூறினார்கள்.
IFT
வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா ‘அல் மஸீஹ்’ என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேலும், மர்யமிடம்) மலக்குகள் “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக!என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாராயங் கூறுகின்றான். அவரின் பெயர் மஸீஹ்_ மர்யமுடைய மகன் ‘ஈஸா’ என்பதாகும், அவர் இம்மையிலும், மறுமையிலும் மிக்க அந்தஸ்தையுடையவராகவும் (இரட்சகனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கூறியபோது.
Saheeh International
[And mention] when the angels said, "O Mary, indeed Allah gives you good tidings of a word from Him, whose name will be the Messiah, Jesus, the son of Mary - distinguished in this world and the Hereafter and among those brought near [to Allah].
وَیُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَيُكَلِّمُஇன்னும் பேசுவார்النَّاسَ فِى الْمَهْدِமக்களிடம்தொட்டிலில்وَكَهْلًاஇன்னும் வாலிபராகوَّمِنَ الصّٰلِحِيْنَ‏இன்னும் நல்லோரில்
வ யுகல்லிமுன் னாஸ Fபில்மஹ்தி வ கஹ்ல(ன்)வ் வ மினஸ்ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
“மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர, நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினார்கள்.)
IFT
மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராயும் திகழ்வார்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்பொழுது (தன் தாயின் பரிசுத்த தன்மையைப்பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப்பற்றி) பருவ வயதிலும் மனிதர்களுடன் பேசுவார். இன்னும், நல்லொழுக்கமுடையோரில் உள்ளவராகவுமிருப்பார்” (என்றும் கூறினார்கள்).
Saheeh International
He will speak to the people in the cradle and in maturity and will be of the righteous."
قَالَتْ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ وَلَدٌ وَّلَمْ یَمْسَسْنِیْ بَشَرٌ ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ اِذَا قَضٰۤی اَمْرًا فَاِنَّمَا یَقُوْلُ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
قَالَتْகூறினாள்رَبِّஎன் இறைவாاَنّٰىஎவ்வாறுيَكُوْنُஏற்படும்لِىْஎனக்குوَلَدٌகுழந்தைوَّلَمْ يَمْسَسْنِىْஎன்னைத் தொடாமல் இருக்கبَشَرٌ ؕஓர் ஆடவர்قَالَகூறினான்كَذٰلِكِஇவ்வாறுاللّٰهُஅல்லாஹ்يَخْلُقُபடைக்கிறான்مَاஎதைيَشَآءُ‌ ؕநாடுகிறான்اِذَا قَضٰٓى(அவன்) முடிவு செய்தால்اَمْرًاஒரு காரியத்தைفَاِنَّمَا يَقُوْلُஅவன் கூறுவதெல்லாம்لَهٗஅதற்குكُنْஆகுகفَيَكُوْنُ‏உடனே ஆகிவிடும்
காலத் ரBப்Bபி அன்னா யகூனு லீ வலது(ன்)வ் வ லம் யம்ஸஸ்னீ Bபஷருன் கால கதாலிகில் லாஹு யக்லுகு மா யஷா'; இதா களா அம்ரன் Fப இன்னமா யகூலு லஹூ குன் Fபயகூன்
முஹம்மது ஜான்
(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு மர்யம், தன் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (மனிதர்களில்) ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டு விடும்?'' என்று கூறினார். (அதற்கு) ‘‘இப்படித்தான், அல்லாஹ் தான் நாடியதை படைக்கிறான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதை ‘ஆகுக' என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்'' என்று கூறினான்.
IFT
(இதனைக் கேட்ட) மர்யம், “என் இறைவனே! என்னை எந்த மனிதனும் தீண்டாமலிருக்க, எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என்று வினவினார். அல்லாஹ் கூறினான்: “அவ்வாறுதான் நடக்கும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். அவன் எதையேனும் (செய்யத்) தீர்மானித்தால் ‘ஆகுக’ என்றுதான் அதற்குக் கட்டளை இடுவான். உடனே அது ஆகிவிடுகின்றது.” (பிறகு வானவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்:)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு மர்யம்) “என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? என்று கூறினாள். (அதற்கு) “அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான், அது ஆகிவிடும்” என்று கூறினான்.
Saheeh International
She said, "My Lord, how will I have a child when no man has touched me?" [The angel] said, "Such is Allah; He creates what He wills. When He decrees a matter, He only says to it, 'Be,' and it is.
وَیُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۟ۚ
وَيُعَلِّمُهُஇன்னும் அவருக்கு கற்பிப்பான்الْكِتٰبَவேதத்தைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَالتَّوْرٰٮةَஇன்னும் தவ்றாத்وَالْاِنْجِيْلَ‌ۚ‏இன்ஜீல்
வ யு'அல்லிமுஹுல் கிதாBப வல் ஹிக்மத வத் தவ்ராத வல் இன்ஜீல்
முஹம்மது ஜான்
இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான்.
IFT
“இன்னும் அல்லாஹ் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிப்பான். தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுத்தருவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் கற்பிப்பான்.
Saheeh International
And He will teach him writing and wisdom and the Torah and the Gospel
وَرَسُوْلًا اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۙ۬ اَنِّیْ قَدْ جِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّیْۤ اَخْلُقُ لَكُمْ مِّنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ فَاَنْفُخُ فِیْهِ فَیَكُوْنُ طَیْرًا بِاِذْنِ اللّٰهِ ۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْیِ الْمَوْتٰی بِاِذْنِ اللّٰهِ ۚ وَاُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَ ۙ فِیْ بُیُوْتِكُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
وَرَسُوْلًاஇன்னும் தூதராகاِلٰىபக்கம்بَنِىْۤ اِسْرٰٓءِيْلَஇஸ்ரவேலர்கள்ۙ اَنِّىْநிச்சயமாக நான்قَدْ جِئْتُكُمْஉங்களிடம் வந்திருக்கின்றேன்بِاٰيَةٍஓர் அத்தாட்சியைக் கொண்டுمِّنْ رَّبِّكُمْ ۙۚஉங்கள் இறைவனிடமிருந்துاَنِّىْۤநிச்சயமாக நான்اَخْلُقُபடைப்பேன்لَـكُمْஉங்களுக்குمِّنَ الطِّيْنِகளிமண்ணிலிருந்துكَهَیْــٴَــةِஅமைப்பைப் போல்الطَّيْرِபறவையின்فَاَنْفُخُஇன்னும் ஊதுவேன்فِيْهِஅதில்فَيَكُوْنُ(அது) ஆகிவிடும்طَيْرًاۢபறவையாகبِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ‌ۚஅல்லாஹ்வின்وَاُبْرِئُஇன்னும் குணப்படுத்துவேன்الْاَكْمَهَபிறவிக் குருடரைوَالْاَبْرَصَஇன்னும் வெண்குஷ்டரைوَاُحْىِஇன்னும் உயிர்ப்பிப்பேன்الْمَوْتٰىமரணித்தோரைبِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ‌ۚஅல்லாஹ்வின்وَ اُنَبِّئُكُمْஇன்னும் உங்களுக்கு அறிவிப்பேன்بِمَاஎதைتَاْكُلُوْنَபுசிக்கிறீர்கள்وَمَاஇன்னும் எதுتَدَّخِرُوْنَۙசேமிக்கிறீர்கள்فِىْ بُيُوْتِكُمْ‌ؕஉங்கள் வீடுகளில்اِنَّ فِىْ ذٰ لِكَநிச்சயமாக/இதில்لَاٰيَةًதிட்டமாக ஓர் அத்தாட்சிلَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَۚ‏நம்பிக்கையாளர்களாக
வ ரஸூலன் இலா Bபனீ இஸ்ரா'ஈல அன்னீ கத் ஜி'துகும் Bபி ஆயதிம் மிர் ரBப்Bபிகும் அன்னீ அக்லுகு லகும் மினத்தீனி கஹய் 'அதித்தய்ரி Fப அன்Fபுகு Fபீஹி Fபயகூனு தய்ரம் Bபி இத்னில் லாஹி வ உBப்ரி'உல் அக்மஹ வல் அBப்ரஸ வ உஹ்யில் மவ்தா Bபி இத்னில் லாஹி வ உனBப்Bபி'உகும் Bபிமா தாகுலூன வமா தத்தகிரூன Fபீ Bபுயூதிகும்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லகும் இன் குன்தும் மு'மினீன்
முஹம்மது ஜான்
இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான். பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) ‘‘நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஓர் அத்தாட்சி இருக்கிறது (என்றும்,)
IFT
மேலும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவரைத் தன் தூதராகவும் நியமிப்பான்.” (இறைத்தூதர் எனும் அந்தஸ்தில் அவர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் வந்தபோது கூறினார்:) “திண்ணமாக நான் உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று கொண்டு வந்துள்ளேன். நான் உங்கள் முன் களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் கட்டளையினால் பறவையாகி விடும். மேலும் நான் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டமுடையவனையும் குணமாக்குவேன். இன்னும் இறந்தவர்களை அவனது அனுமதி கொண்டு உயிர்பெற்றெழச் செய்வேன். அதுமட்டுமன்று! நீங்கள் உண்பவற்றையும் உங்கள் இல்லங்களில் சேமித்து வைப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின் இவற்றிலெல்லாம் உங்களுக்குப் போதிய சான்று உண்டு.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இஸ்ராயீலின் மக்களுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் அல்லாஹ் கூறினான். பின்னர் ஈஸா பிறந்து தன் வாலிபத்தையடைந்து, இஸ்ராயீலின் மக்களிடம் சென்றபொழுது அவர்களிடம் கூறியதாவது) “திட்டமாக நான் உங்கள் இரட்சகனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதன் என்பதற்குரிய!) ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் கோலத்தைப்போல் செய்து பின்னர் அதில் நான் ஊதுவேன், அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (உயிருள்ள) பறவையாகிவிடும், பிறவிக்குருடனையும், வெண்குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன்; மேலும், அல்லாஹ்வின் அனுமதிகொண்டு இறந்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன்; மேலும், நீங்கள் சேகரித்து வைத்திருப்பவைகளையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்; மெய்யாகவே நீங்கள் விசுவாசங்கொள்பவர்களாக இருந்தால் நிச்சயமாக இதில் உங்களுக்கு(த் திருப்தி அளிக்கக்கூடிய) ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
Saheeh International
And [make him] a messenger to the Children of Israel, [who will say], 'Indeed I have come to you with a sign from your Lord in that I design for you from clay [that which is] like the form of a bird, then I breathe into it and it becomes a bird by permission of Allah. And I cure the blind [from birth] and the leper, and I give life to the dead - by permission of Allah. And I inform you of what you eat and what you store in your houses. Indeed in that is a sign for you, if you are believers.
وَمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیَّ مِنَ التَّوْرٰىةِ وَلِاُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِیْ حُرِّمَ عَلَیْكُمْ وَجِئْتُكُمْ بِاٰیَةٍ مِّنْ رَّبِّكُمْ ۫ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟
وَمُصَدِّقًاஇன்னும் உண்மைப்படுத்துபவராகلِّمَا بَيْنَ يَدَىَّஎனக்கு முன்னுள்ளதைمِنَ التَّوْرٰٮةِதவ்றாத்திலிருந்துوَلِاُحِلَّஇன்னும் நான் ஆகுமாக்குவதற்காகلَـكُمْஉங்களுக்குبَعْضَசிலவற்றைالَّذِىْஎதுحُرِّمَதடுக்கப்பட்டதுعَلَيْكُمْஉங்கள் மீதுوَجِئْتُكُمْஇன்னும் உங்களிடம் வந்திருக்கிறேன்بِاٰيَةٍஓர் அத்தாட்சியைக் கொண்டுمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துفَاتَّقُوْاஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَطِيْعُوْنِ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்
வ முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ய மினத் தவ்ராதி வ லிஉஹில்ல லகும் Bபஃளல் லதீ ஹுர்ரிம 'அலய்கும்; வ ஜி'துகும் Bபி ஆயதிம் மிர் ரBப்Bபிகும் Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
“எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற் காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னைப் பின்பற்றுங்கள்.
IFT
மேலும் தற்பொழுது தவ்ராத்தின் அறிவுரைகளிலிருந்து எவை என் முன் உள்ளனவோ அவற்றை மெய்ப்படுத்திடவும், உங்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கும் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக்கி வைத்திடவும் நான் வந்துள்ளேன். நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்றினைக் கொண்டு வந்துள்ளேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “என் முன் இருக்கும் தவ்றாத்தையும் நான்) உண்மையாக்கி வைக்கிறவனாகவும், (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவைகளில் சிலவற்றை உங்களுக்கு நான் ஆகுமாக்கி வைப்பதற்காகவும், மேலும் உங்கள் இரட்சகனிடமிருந்து (இத்தகைய) ஓர் அத்தாட்சியைக்கொண்டு உங்களிடம் நான் வந்திருக்கின்றேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுககுப் பயந்து எனக்கும் கீழ்ப்படியுங்கள்” (என்றும்,)
Saheeh International
And [I have come] confirming what was before me of the Torah and to make lawful for you some of what was forbidden to you. And I have come to you with a sign from your Lord, so fear Allah and obey me.
اِنَّ اللّٰهَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்رَبِّىْஎன் இறைவன்وَرَبُّكُمْஇன்னும் உங்கள் இறைவன்فَاعْبُدُوْهُ‌ ؕஆகவே அவனை வணங்குங்கள்هٰذَاஇதுصِرَاطٌஒரு வழிمُّسْتَقِيْمٌ‏நேர்
இன்னல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாதா ஸிராதும் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்றும் கூறினார்.)
IFT
உறுதியாக அல்லாஹ்தான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாவான்! எனவே நீங்கள் அவனுக்கே பணிந்து வாழுங்கள்! இதுதான் நேரான வழியாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அல்லாஹ்தான் என் இரட்சகனும், உங்கள் இரட்சகனும் ஆவான். ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி” (என்றும் கூறினார்).
Saheeh International
Indeed, Allah is my Lord and your Lord, so worship Him. That is the straight path.'"
فَلَمَّاۤ اَحَسَّ عِیْسٰی مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِیْۤ اِلَی اللّٰهِ ؕ قَالَ الْحَوَارِیُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ ۚ اٰمَنَّا بِاللّٰهِ ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ ۟
فَلَمَّاۤபோதுاَحَسَّஉணர்ந்தார்عِيْسٰىஈஸாمِنْهُمُஅவர்களில்الْكُفْرَநிராகரிப்பைقَالَகூறினார்مَنْயார்اَنْصَارِىْۤஎன் உதவியாளர்கள்اِلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ்விற்காகقَالَகூறினார்الْحَـوَارِيُّوْنَதோழர்கள்نَحْنُநாங்கள்اَنْصَارُஉதவியாளர்கள்اللّٰهِ‌ۚஅல்லாஹ்வின்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِ‌ۚஅல்லாஹ்வைوَاشْهَدْசாட்சி அளிப்பீராகبِاَنَّاநிச்சயமாக நாங்கள்مُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
Fபலம்மா அஹஸ்ஸ 'ஈஸா மின்ஹுமுல் குFப்ர கால மன் அன்ஸாரீ இலல் லாஹி காலல் ஹவாரிய்யூன னஹ்னு அன்ஸாருல் லாஹி ஆமன்னா Bபில்லாஹி வஷ்ஹத் Bபி அன்னா முஸ்லிமூன்
முஹம்மது ஜான்
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் பலர் (தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த பொழுது (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?'' எனக் கேட்டார். (அதற்கு) அவருடைய தோழர்கள் ‘‘நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்களுக்கு) உதவி செய்கிறோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். (ஆதலால்,) நிச்சயமாக நாங்கள் (முஸ்லிம்கள்) முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டோம் என்பதாக நீர் சாட்சி கூறுவீராக' என்று கூறினார்கள்.
IFT
இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் நிராகரிக்க முனைந்து விட்டதை ஈஸா உணர்ந்து கொண்டபோது, “அல்லாஹ்வின் வழியில் எனக்கு உதவி புரிவோர் யார்?” என வினவினார். ‘ஹவாரிகள்’* பதிலளித்தார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாய் இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். திண்ணமாக நாங்கள் இறை ஆணைக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்பதற்கு நீரே சாட்சியாக இரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிலிருந்து (ஒரு சிலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்தபொழுது (அவர்களை நோக்கி,) “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர்கள் யார்? எனக் கேட்டார். (அதற்கு அவருடைய) சீடர்கள் “நாங்கள் அல்லாஹ்வுடைய உதவியாளர்கள்; அல்லாஹ்வை நாங்கள் விசுவாசிக்கின்றோம். நிச்சயமாக நாங்கள் (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்கள் என்பதாகவும் நீர் சாட்சி கூறுவீராக” என்று கூறினார்கள்.
Saheeh International
But when Jesus felt [persistence in] disbelief from them, he said, "Who are my supporters for [the cause of] Allah?" The disciples said, "We are supporters for Allah. We have believed in Allah and testify that we are Muslims [submitting to Him].
رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟
رَبَّنَاۤஎங்கள் இறைவாاٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِمَاۤஎதைاَنْزَلْتَநீ இறக்கினாய்وَاتَّبَعْنَاஇன்னும் பின்பற்றினோம்الرَّسُوْلَதூதர்فَاكْتُبْنَاஆகவே எங்களை பதிவு செய்مَعَ الشّٰهِدِيْنَ‏சாட்சியாளர்களுடன்
ரBப்Bபனா ஆமன்னா Bபிமா அன்Zஜல்த வத்தBபஃனர் ரஸூல Fபக்துBப்னா ம'அஷ் ஷாஹிதீன்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம். (உன்) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கிறோம். ஆதலால், (அவரை) உண்மைப்படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்.)
IFT
எங்கள் இறைவனே! நீ இறக்கியருளிய கட்டளைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; தூதரையும் பின்பற்றுகின்றோம். எனவே நீ எங்கள் பெயர்களை சத்தியத்திற்குச் சான்று வழங்குவோருடன் சேர்த்து எழுதுவாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் இரட்சகனே! நீ (இவருக்கு) இறக்கிவைத்த(வேதத்)தை நாங்கள் விசுவாசிக்கின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால், (சத்தியத்திற்காக) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக” (என்றும் சீடர்கள் பிரார்த்தித்தனர்.)
Saheeh International
Our Lord, we have believed in what You revealed and have followed the messenger [i.e., Jesus], so register us among the witnesses [to truth]."
وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ؕ وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟۠
وَمَكَرُوْاசதி செய்தார்கள்وَمَكَرஇன்னும் சதி செய்தான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்خَيْرُமிக மேலானவன்الْمَاكِرِيْنَ‏சதி செய்பவர்களில்
வ மகரூ வ மகரல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
முஹம்மது ஜான்
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்து விட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன்.
IFT
பிறகு இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் (ஈஸாவிற்கெதிராக) சதித் திட்டங்கள் தீட்டினார்கள். (அதற்குப் பதிலாக) அல்லாஹ்வும் தகுந்த திட்டங்களைத் தீட்டினான். மேலும் இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரினும் வல்லவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (ஈஸாவை நிராகரித்த) அவர்கள், (அவரைக் கொலை செய்யச்) சதிசெய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரை இரட்சித்துக்கொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்துவிடும்படி) அல்லாஹ்வும், (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களின் சதியை முறியடித்துக் கூலி கொடுப்பவர்களில் மிகச்சிறந்தவன்.
Saheeh International
And they [i.e., the disbelievers] planned, but Allah planned. And Allah is the best of planners.
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
اِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسٰۤىஈஸாவேاِنِّىْநிச்சயமாக நான்مُتَوَفِّيْكَஉம்மை கைப்பற்றுவேன்وَرَافِعُكَஇன்னும் உம்மை உயர்த்துவேன்اِلَىَّஎன் பக்கம்وَمُطَهِّرُكَஇன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَجَاعِلُஇன்னும் ஆக்குவேன்الَّذِيْنَஎவர்களைاتَّبَعُوْكَஉம்மைப் பின்பற்றினார்கள்فَوْقَமேல்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِ ۚமறுமை நாள்ثُمَّபிறகுاِلَىَّஎன் பக்கம்مَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்فَاَحْكُمُஇன்னும் தீர்ப்பளிப்பேன்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்فِيْمَاஎதில்كُنْتُمْஇருந்தீர்கள்فِيْهِஅதில்تَخْتَلِفُوْنَ‏தர்க்கம் செய்கிறீர்கள்
இத் காலல் லாஹு யா 'ஈஸா இன்னீ முதவFப்Fபீக வ ராFபி'உக இலய்ய வ முதஹ் ஹிருக மினல் லதீன கFபரூ வ ஜா'இலுல் லதீனத்தBப ஊக Fபவ்கல் லதீன கFபரூ இலா யவ்மில் கியாமதி தும்ம இலய்ய மர்ஜி'உகும் Fப அஹ்குமு Bபய்னகும் Fபீமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
முஹம்மது ஜான்
“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
அப்துல் ஹமீது பாகவி
(ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக!: ‘‘ஈஸாவே நிச்சயமாக நான் உமக்கு (உமது) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை நம்மளவில் உயர்த்திக்கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கிவைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதி நாள்வரை மேலாக்கியும் வைப்பேன்'' (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் மீண்டும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்'' (என்றும் கூறினான்.)
IFT
(அத்தகையதோர் திட்டத்தை நிறைவேற்றவே) அவன் கூறினான்: “ஈஸாவே! நிச்சயமாக நான் இப்போது உம்மைத் திரும்ப அழைத்துக் கொள்வேன். மேலும் உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்வேன்; உம்மை நிராகரித்தவர்களிடமிருந்து (அதாவது அவர்களுடைய தொடர்பிலிருந்தும், அவர்களுடைய தூய்மையற்ற சூழ்நிலையில் நீர் வாழ்வதிலிருந்தும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; இறுதித் தீர்ப்புநாள்வரை உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களைவிட உயர்த்தியே வைப்பேன். இறுதியில் என்னிடம் நீங்கள் அனைவரும் வந்தேயாக வேண்டும். அப்போது நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்தவற்றில் நான் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஈஸாவை நோக்கி) ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்பவனாகவும் இருக்கிறேன். மேலும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மையும் பரிசுத்தப்படுத்துகிறவனாகவும், மேலும் உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்போரை விட மறுமை நாள்வரை மேலாக்கி வைப்பவனாகவும் இருக்கிறேன் – பின்னர், உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. அப்போது எதில் நீங்கள் மாறுபட்டவர்களாக இருந்தீர்களோ அதில் நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்” என்று கூறியதை (நினைவு கூர்வீராக!)
Saheeh International
[Mention] when Allah said, "O Jesus, indeed I will take you and raise you to Myself and purify [i.e., free] you from those who disbelieve and make those who follow you [in submission to Allah alone] superior to those who disbelieve until the Day of Resurrection. Then to Me is your return, and I will judge between you concerning that in which you used to differ.
فَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
فَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்فَاُعَذِّبُهُمْஅவர்களை வேதனை செய்வேன்عَذَابًاவேதனையால்شَدِيْدًاகடினமானதுفِى الدُّنْيَاஇம்மையில்وَالْاٰخِرَةِஇன்னும் மறுமையில்وَمَاஇன்னும் இல்லைلَهُمْஅவர்களுக்குمِّنْ نّٰصِرِيْنَ‏உதவியாளர்களில் எவரும்
Fப அம்மல் லதீன கFபரூ Fப உ'அத் திBபுஹும் 'அதாBபன் ஷதீதன் Fபித்துன்யா வல் ஆகிரதி வமா லஹும் மின் னாஸிரீன்
முஹம்மது ஜான்
எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்; அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உம்மை) நிராகரிக்கிறார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
IFT
ஆகவே அவர்களில் எவர் நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இம்மை, மறுமை இரண்டிலும் கடுமையான தண்டனை அளிப்பேன். மேலும், அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (உம்மை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_அவர்களை நான் இம்மையிலும், மறுமையிலும் கடினமான வேதனையாக வேதனை செய்வேன். அன்றியும், அவர்களுக்கு உதவி செய்வோர் (எவரும்) இல்லை.
Saheeh International
And as for those who disbelieved, I will punish them with a severe punishment in this world and the Hereafter, and they will have no helpers."
وَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟
وَاَمَّاஆகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைفَيُوَفِّيْهِمْமுழுமையாக வழங்குவான்/அவர்களுக்குاُجُوْرகூலிகளைهُمْ‌ؕஅவர்களின்وَ اللّٰهُஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
வ அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fப யுவFப்Fபீஹிம் உஜூரஹும்; வல்லாஹு லா யுஹிBப்Bபுள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை.
IFT
ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய கூலி முழுமையாக வழங்கப்படும். மேலும் (நன்கு அறிந்து கொள்ளுங்கள்:) அநீதி இழைப்போரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசித்து நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்- அவர்களின் (நற்)கூலியை அவர்களுக்குப் பூரணமாக (அல்லாஹ்) அளிப்பான். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்.
Saheeh International
But as for those who believed and did righteous deeds, He will give them in full their rewards, and Allah does not like the wrongdoers.
ذٰلِكَ نَتْلُوْهُ عَلَیْكَ مِنَ الْاٰیٰتِ وَالذِّكْرِ الْحَكِیْمِ ۟
ذٰ لِكَஇதுنَـتْلُوْهُஇதை ஓதுகிறோம்عَلَيْكَஉம்மீதுمِنَஇருந்துالْاٰيٰتِவசனங்கள்وَ الذِّكْرِஇன்னும் உபதேசம்الْحَكِيْمِ‏ஞானமிகுந்தது
தாலிக னத்லூஹு 'அலய்க மினல் ஆயாதி வ திக்ரில் ஹகீம்
முஹம்மது ஜான்
(நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்; ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாம் உம் மீது ஓதிய இவை (இறைவனுடைய) வசனங்களாகவும், ஞான(ம் நிறைந்த) உபதேசங்களாகவும் இருக்கின்றன.
IFT
(நபியே!) நாம் எடுத்துரைக்கும் இவை, சான்றுகளும் ஞானமும் நிறைந்த அறிவுரைகளாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! மேற்கூறப்பட்ட) அது (என்னுடைய) வசனங்களிலிருந்தும், தீர்க்கமான அறிவுகள் நிறைந்த உபதேசத்திலிருந்தும் (உள்ளவையாகும்) அதை நாம் உம்மீது ஓதிக்காட்டுகிறோம்.
Saheeh International
This is what We recite to you, [O Muhammad], of [Our] verses and the precise [and wise] message [i.e., the Qur’an].
اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
اِنَّநிச்சயமாகمَثَلَஉதாரணம்عِيْسٰىஈஸாவின்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்كَمَثَلِஉதாரணத்தைப் போன்றுاٰدَمَ‌ؕஆதம்خَلَقَهٗஅவரைப் படைத்தான்مِنْஇருந்துتُرَابٍமண்ثُمَّபிறகுقَالَகூறினான்لَهٗஅவருக்குكُنْஆகுفَيَكُوْنُ‏ஆகிவிட்டார்
இன்ன மதல 'ஈஸா 'இன்தல் லாஹி கமதலி ஆதம கலகஹூ மின் துராBபின் தும்ம கால லஹூ குன் Fபயகூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்தி செய்து (மனிதனாக) ‘ஆகு' என்று கூறினான். உடனே (அப்படி) ஆகிவிட்டது.
IFT
திண்ணமாக, அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உவமை ஆதமின் உதாரணம் போன்றதாகும். அல்லாஹ் அவரை மண்ணினால் படைத்தான். பிறகு ‘ஆகுக’ என்று கட்டளையிட்டான். உடனே அவர் ஆகிவிட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம்: ஆதமுடைய உதாரணத்தைப்போன்றதே! அவன், அவரை மண்ணால் படைத்துப் பின் அதற்கு (மனிதனாக!) “ஆகுக” என்று கூறினான், அவர்(அவ்வாறு) ஆகிவிட்டார்.
Saheeh International
Indeed, the example of Jesus to Allah is like that of Adam. He created him from dust; then He said to him, "Be," and he was.
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِیْنَ ۟
اَلْحَـقُّஉண்மைمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்فَلَا تَكُنْஆகவே ஆகிவிடாதீர்مِّنَ الْمُمْتَرِيْنَ‏சந்தேகிப்பவர்களில்
அல்ஹக்கு மிர் ரBப்Bபிக Fபலா தகும் மினல் மும்தரீன்
முஹம்மது ஜான்
(நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ஈஸாவைப் பற்றி) உமது இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள் தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.
IFT
இந்த உண்மைகள் உம்முடைய இறைவனிடமிருந்து எடுத்துரைக்கப்படுகின்றன. எனவே ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிடாதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! ஈஸாவைப் பற்றிய இந்த) உண்மை உமதிரட்சகனிடமிருந்துள்ளதாகும். ஆகவே, (இதைப் பற்றிச்) சந்தேகப்படுவோரில் உள்ளவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
Saheeh International
The truth is from your Lord, so do not be among the doubters.
فَمَنْ حَآجَّكَ فِیْهِ مِنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ۫ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَّعْنَتَ اللّٰهِ عَلَی الْكٰذِبِیْنَ ۟
فَمَنْஆகவே யாராவதுحَآجَّكَஉம்மிடம்தர்க்கித்தால்فِيْهِஇதில்مِنْۢ بَعْدِபின்னர்مَا جَآءَكَஉமக்கு வந்ததுمِنَ الْعِلْمِகல்விفَقُلْகூறுவீராகتَعَالَوْاவாருங்கள்نَدْعُஅழைப்போம்اَبْنَآءَنَاஎங்கள் பிள்ளைகளைوَاَبْنَآءَكُمْஇன்னும் உங்கள் பிள்ளைகளைوَنِسَآءَنَاஇன்னும் எங்கள்பெண்களைوَنِسَآءَكُمْஇன்னும் உங்கள்பெண்களைوَاَنْفُسَنَاஇன்னும் எங்களைوَاَنْفُسَكُمْஇன்னும் உங்களைثُمَّபிறகுنَبْتَهِلْபிரார்த்திப்போம்فَنَجْعَلஆக்குவோம்لَّعْنَتَ اللّٰهِஅல்லாஹ்வின் சாபத்தைعَلَى الْكٰذِبِيْنَ‏பொய்யர்கள் மீது
Fபமன் ஹாஜ்ஜக Fபீஹி மிம் Bபஃதி மா ஜா'அக மினல் 'இல்மி Fபகுல் த'ஆலவ் னத்'உ அBப்னா'அனா வ அBப்னா'அகும் வ னிஸா'அனா வ னிஸா'அகும் வ அன்Fபுஸனா வ அன்Fபுஸகும் தும்ம னBப்தஹில் Fபனஜ்'அல் லஃனதல் லாஹி 'அலல் காதிBபீன்
முஹம்மது ஜான்
(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இதைப் பற்றி உமக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உம்மிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) கூறுவீராக: ‘‘வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக் கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்'' (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இப்படி சத்தியம் செய்ய முன்வரவில்லை.)
IFT
இந்த அறிவு உம்மிடம் வந்த பின்பு யாரேனும் உம்மிடம் இவ்விவகாரத்தில் தர்க்கம் செய்தால் (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “வாருங்கள்! உங்கள் மக்களையும் எங்கள் மக்களையும், உங்கள் பெண்களையும், எங்கள் பெண்களையும், நாங்களும் நீங்களும் அழைத்துக் கொண்டு ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று பணிந்து இறைஞ்சுவோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இதுபற்றி) உண்மையான அறிவு உமக்கு வந்த பின் இதைப் பற்றி உம்மிடம் எவரும் தர்க்கித்தால் நீர் கூறுவீராக! “வாருங்கள்; நாம் எங்களுடைய புதல்வர்களையும், உங்களுடைய புதல்வர்களையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும் எங்களையும், உங்களையும் அழைத்து, பிறகு நாம் பிரார்த்திப்போம். பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபத்தை நாம் ஆக்குவோம்” (என்று கூறும்படிக்கு கட்டளையிட்டான்).
Saheeh International
Then whoever argues with you about it after [this] knowledge has come to you - say, "Come, let us call our sons and your sons, our women and your women, ourselves and yourselves, then supplicate earnestly [together] and invoke the curse of Allah upon the liars [among us]."
اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
اِنَّநிச்சயமாகهٰذَا لَهُوَஇதுதான்الْقَصَصُவரலாறுالْحَـقُّ ‌‌ۚஉண்மையானதுوَمَاஇல்லைمِنْஅறவேاِلٰهٍவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரاللّٰهُ‌ؕஅல்லாஹ்وَاِنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏ஞானவான்
இன்னா ஹாதா லஹுவல் கஸஸுல் ஹக்க்; வமா மின் இலாஹின் இல்லல் லாஹ்; வ இன்னல் லாஹா ல ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு; அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை; நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
இவை யாவும் முற்றிலும் சரியான நிகழ்ச்சிகளாகும். மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. உண்மை யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வுடைய வலிமையே அனைத்தையும்விட மேலோங்கியிருக்கிறது. மேலும், அவனுடைய நுண்ணறிவே இப்பேரண்டத்தின் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதுவேதான் உண்மையான சரித்திரம். அல்லாஹ்வைத்தவிர வேறு எந்த வணக்கத்துக்குரியவனுமில்லை. மேலும், நிச்சயமாக அல்லாஹ் – அவனே (யாவற்றையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
Saheeh International
Indeed, this is the true narration. And there is no deity except Allah. And indeed, Allah is the Exalted in Might, the Wise.
فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِالْمُفْسِدِیْنَ ۟۠
فَاِنْ تَوَلَّوْاஅவர்கள் விலகினால்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلِيْمٌۢமிக அறிந்தவன்بِالْمُفْسِدِيْنَ‏விஷமிகளை
Fப இன் தவல்லவ் Fப இன்னல் லாஹ'அலீமுன் Bபில் முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இதற்குப் பின்னரும் உம்மை நம்பிக்கை கொள்ளாமல்) அவர்கள் புறக்கணிப்பார்களேயானால், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) விஷமிகளை நன்கறிவான்.
IFT
எனவே அவர்கள் (மேற்கூறப்பட்ட நிபந்தனையின்படி தர்க்கம் புரிய) முன் வராமல் புறக்கணித்து விட்டால் (அவர்கள் குழப்ப வாதிகள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.) குழப்ப வாதிகளை அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இதற்குப் பின்னரும் உம்மை விசுவாசிக்காது) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், நிச்சயமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்பவர்களை மிக்க அறிந்தவன்.
Saheeh International
But if they turn away, then indeed - Allah is Knowing of the corrupters.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰی كَلِمَةٍ سَوَآءٍۭ بَیْنَنَا وَبَیْنَكُمْ اَلَّا نَعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَیْـًٔا وَّلَا یَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ ؕ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகيٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேتَعَالَوْاவாருங்கள்اِلٰىபக்கம்كَلِمَةٍஒரு விஷயம்سَوَآءٍۢசமமானதுبَيْنَـنَاஎங்கள் மத்தியில்وَبَيْنَكُمْஇன்னும் உங்கள் மத்தியில்اَلَّا نَـعْبُدَவணங்க மாட்டோம்اِلَّاதவிரاللّٰهَஅல்லாஹ்வைوَلَا نُشْرِكَஇன்னும் இணையாக்க மாட்டோம்بِهٖஅவனுக்குشَيْئًاஎதையும்وَّلَا يَتَّخِذَஇன்னும் எடுத்துக் கொள்ள மாட்டார்(கள்)بَعْضُنَاநம்மில் சிலர்بَعْضًاசிலரைاَرْبَابًاகடவுள்களாகمِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வைத் தவிரفَاِنْ تَوَلَّوْا(அவர்கள்) விலகினால்فَقُوْلُواகூறுங்கள்اشْهَدُوْاசாட்சியாக இருங்கள்بِاَنَّاநிச்சயமாக நாம்مُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
குல் யா அஹ்லல் கிதாBபி த'ஆலவ் இலா கலிமதின் ஸவா'இம் Bபய்னனா வ Bபய்னகும் அல்லா னஃBபுத இல்லல் லாஹ வலா னுஷ்ரிக Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வலா யத்தகித Bபஃளுனா Bபஃளன் அர்BபாBபம் மின் தூனில் லாஹ்; Fப இன் தவல்லவ் Fபகூலுஷ் ஹதூ Bபி அன்னா முஸ்லிமூன்
முஹம்மது ஜான்
(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கமாட்டோம். நாம் அவனுக்கு எதையும் இணையாக்கமாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வைத் தவிர எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ளமாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதையும்) அவர்கள் புறக்கணித்தால் ‘‘நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அவன் ஒருவனுக்கே வழிப்பட்டவர்கள்) என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
IFT
(நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்: ‘அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாம் அடிபணிய மாட்டோம். அவனோடு எதனையும் எவரையும் நாம் இணைவைக்க மாட்டோம். மேலும் நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவனாய் ஆக்கிக் கொள்ளக்கூடாது.’ அவர்கள் (இந்த அழைப்பினை) ஏற்க மறுப்பார்களேயானால், திண்ணமாக நாங்கள் முஸ்லிம்கள் (அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிகின்றவர்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (தெளிவாகக்) கூறி விடுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! பின்னும் அவர்களிடம்) நீர் கூறுவீராக: “வேதத்தையுடையவர்களே! எங்களுக்கும், இன்னும் உங்களுக்குமிடையே, நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்ககூடாது; நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கவும் கூடாது; நம்மில் சிலர், சிலரை அல்லாஹ்வையன்றி தெய்வங்களாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்ற சமமானதொரு வார்த்தையின் பால் வாருங்கள்; (இதை ஏற்காது) அவர்கள் புறக்கணித்தால், (அவர்களிடம்,) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்கள் என நீங்கள் சாட்சியம் கூறுவீர்களாக!” என்று நீங்கள் கூறி(விட்டு) விடுங்கள்.
Saheeh International
Say, "O People of the Scripture, come to a word that is equitable between us and you - that we will not worship except Allah and not associate anything with Him and not take one another as lords instead of Allah." But if they turn away, then say, "Bear witness that we are Muslims [submitting to Him]."
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِیْۤ اِبْرٰهِیْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰىةُ وَالْاِنْجِیْلُ اِلَّا مِنْ بَعْدِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلِمَஏன்تُحَآجُّوْنَதர்க்கம்செய்கிறீர்கள்فِىْۤ اِبْرٰهِيْمَஇப்றாஹீம் விஷயத்தில்وَمَاۤ اُنْزِلَتِஇறக்கப்படவில்லைالتَّوْرٰٮةُதவ்றாத்துوَالْاِنْجِيْلُஇன்னும் இன்ஜீல்اِلَّاதவிரمِنْۢ بَعْدِهٖؕஅவருக்கு பின்னரேاَفَلَا تَعْقِلُوْنَ‏நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
யா அஹ்லல் கிதாBபி லிமா துஹாஜ்ஜூன Fபீ இBப்ராஹீம வ மா உன்Zஜிலதித் தவ்ராது வல் இன்ஜீலு இல்லா மிம் Bபஃதிஹ்; அFபல தஃகிலூன்
முஹம்மது ஜான்
வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தார் என்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கிறீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
வேதம் அருளப்பட்டவர்களே! இப்ராஹீம் (உடைய தீனைப்) பற்றி ஏன் தர்க்கம் புரிகின்றீர்கள்? அவருக்குப் பின்னர் தாம் தவ்ராத்தும் இன்ஜீலும் இறக்கியருளப்பட்டன. (இதனைக் கூட) நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமுடைய விஷயத்தில் (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்துவராகவோ தான் இருந்தாரென்று) ஏன் வீணே தர்க்கம் செய்துகொள்கின்றீர்கள் ? (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகுகாலத்திற்கு)ப் பின்னரேயன்றி இறக்கிவைக்கப்படவில்லை; (இவ்வளவு கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
Saheeh International
O People of the Scripture, why do you argue about Abraham while the Torah and the Gospel were not revealed until after him? Then will you not reason?
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ حَاجَجْتُمْ فِیْمَا لَكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِیْمَا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
هٰۤاَنْـتُمْநீங்களோهٰٓؤُلَآءِஇவர்கள்حٰجَجْتُمْதர்க்கம் செய்தீர்கள்فِيْمَاஎதில்لَـكُمْஉங்களுக்குبِهٖஅதில்عِلْمٌஅறிவுفَلِمَஆகவே ஏன்تُحَآجُّوْنَதர்க்கம்செய்கிறீர்கள்فِيْمَاஎதில்لَـيْسَஇல்லைلَـكُمْஉங்களுக்குبِهٖஅதில்عِلْمٌ‌ؕஅறிவுوَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُஅறிவான்وَاَنْـتُمْநீங்கள்لَا تَعْلَمُوْنَ‏அறியமாட்டீர்கள்
ஹா அன்தும் ஹா'உலா'இ ஹாஜஜ்தும் Fபீமா லகும் Bபிஹீ 'இல்முன் Fபலிம துஹாஜ்ஜூனா Fபீமா லய்ஸ லகும் Bபிஹீ 'இல்ம்; வல்லாஹு யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
முஹம்மது ஜான்
உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் கொஞ்சம் அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரை தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன்வந்துவிட்டீர்கள். அல்லாஹ்தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
IFT
நீங்கள் எவற்றை அறிந்து வைத்திருக்கின்றீர்களோ, அவற்றில் நன்கு தர்க்கம் புரிந்துவிட்டீர்கள். (இப்போது) நீங்கள் முற்றிலும் அறியாதவற்றில் தர்க்கம் புரிய ஏன் முற்படுகின்றீர்கள்? அல்லாஹ் நன்கறிகின்றான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள்தான் அவர்கள்_ உங்களுக்கு எதில் அறிவு இருக்கிறதோ அதில் நீங்கள் தர்க்கித்துக்கொண்டிருந்தீர்கள்; இப்போது எதில் உங்களுக்கு அறிவு இல்லையோ அதில் நீங்கள் ஏன் தர்க்கிக்கிறீர்கள்? மேலும், அல்லாஹ்தான் (இவை யாவற்றையும்) நன்கறிந்தவன்; நீங்களோ அறியமாட்டீர்கள்.
Saheeh International
Here you are - those who have argued about that of which you have [some] knowledge, but why do you argue about that of which you have no knowledge? And Allah knows, while you know not.
مَا كَانَ اِبْرٰهِیْمُ یَهُوْدِیًّا وَّلَا نَصْرَانِیًّا وَّلٰكِنْ كَانَ حَنِیْفًا مُّسْلِمًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
مَا كَانَஇருக்கவில்லைاِبْرٰهِيْمُஇப்றாஹீம்يَهُوْدِيًّاயூதராகوَّلَاஇன்னும் இல்லைنَصْرَانِيًّاகிறித்தவராகوَّ لٰكِنْ كَانَஎனினும் இருந்தார்حَنِيْفًاஅல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராகمُّسْلِمًا ؕமுஸ்லிமாகوَمَا كَانَஅவர்இருக்கவில்லைمِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
மா கான இBப்ராஹீமு யஹூதிய்ய(ன்)வ் வலா னஸ்ரா னிய்ய(ன்)வ் வ லாகின் கான ஹனீFபம் முஸ்லிம(ன்)வ் வமா கான மினல் முஷ்ரிகீன்
முஹம்மது ஜான்
இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இப்றாஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான கொள்கையுடைய முஸ்லிமாகவே இருந்தார். மேலும், அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை.
IFT
இப்ராஹீம் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் ஒருமனப்பட்ட முஸ்லிமாக இருந்தார். மேலும் அவர் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் எப்போதும் இருந்ததில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இப்ராஹீம் யூதராக இருக்கவில்லை; அல்லது கிறிஸ்துவராகவும் இல்லை. எனினும், அவர் ஹனீஃபாக (அசத்திய மார்கங்கள் அனைத்தையும் விட்டும் நீங்கி சத்திய மார்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் (உள்ளவராகவும்) இருக்கவில்லை.
Saheeh International
Abraham was neither a Jew nor a Christian, but he was one inclining toward truth, a Muslim [submitting to Allah]. And he was not of the polytheists.
اِنَّ اَوْلَی النَّاسِ بِاِبْرٰهِیْمَ لَلَّذِیْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِیُّ وَالَّذِیْنَ اٰمَنُوْا ؕ وَاللّٰهُ وَلِیُّ الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّநிச்சயமாகاَوْلَىமிக நெருங்கியவர்النَّاسِமக்களில்بِاِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குلَـلَّذِيْنَஉறுதியாக எவர்கள்اتَّبَعُوْهُஅவரைப் பின்பற்றினார்கள்وَهٰذَا النَّبِىُّஇன்னும் இந்த நபிوَالَّذِيْنَ اٰمَنُوْا ؕஇன்னும் நம்பிக்கையாளர்கள்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்وَلِىُّபாதுகாவலன்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களின்
இன்னா அவ்லன் னாஸி Bபி இBப்ராஹீம லல்லதீனத் தBப 'ஊஹு வ ஹாதன் னBபிய்யு வல்லதீன ஆமனூ; வல்லாஹு வலிய்யுல் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பான்.
IFT
இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலே மிகவும் அருகதையானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர். அல்லாஹ், நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிக்க நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (இவரை) விசுவாசங் கொண்டார்களே அவர்களும் ஆவர்; இன்னும் அல்லாஹ் விசுவாசிகளின் பாதுகாவலன்.
Saheeh International
Indeed, the most worthy of Abraham among the people are those who followed him [in submission to Allah] and this prophet [i.e., Muhammad (ﷺ] and those who believe [in his message]. And Allah is the Ally of the believers.
وَدَّتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ یُضِلُّوْنَكُمْ ؕ وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَشْعُرُوْنَ ۟
وَدَّتْவிரும்பியதுطَّآٮِٕفَةٌஒரு கூட்டம்مِّنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில்لَوْ يُضِلُّوْنَكُمْؕஅவர்கள் உங்களை வழிகெடுக்க வேண்டும்وَمَا يُضِلُّوْنَவழிகெடுக்க மாட்டார்கள்اِلَّاۤதவிரاَنْفُسَهُمْதங்களைوَمَا يَشْعُرُوْنَ‏இன்னும் உணரமாட்டார்கள்
வத்தத் தா'இFபதும் மின் அஹ்லில் கிதாBபி லவ் யுளில் லூனகும் வமா யுளில்லூன இல்லா அன்Fபுஸஹும் வமா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகிறார்கள். அவர்கள் தங்களையே தவிர (உங்களை) வழி கெடுத்து விட முடியாது. (இதை) அவர்கள் உணர்வதில்லை.
IFT
(இறைநம்பிக்கை கொண்டோரே!) வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் உங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்திட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆயினும், அவர்கள் தங்களைத் தாங்களே வழிகேட்டிலாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் இதனை அவர்கள் உணர்வதில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதத்தையுடையோர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்துவிடவேண்டுமே என்று விரும்புகின்றார்கள்; அவர்கள் தங்களையே தவிர (உங்களை) வழி கெடுத்துவிடவும் முடியாது; (இதனை) அவர்கள் உணர்ந்துகொள்வதுமில்லை.
Saheeh International
A faction of the People of the Scripture wish they could mislead you. But they do not mislead except themselves, and they perceive [it] not.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلِمَஏன்تَكْفُرُوْنَநிராகரிக்கிறீர்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَاَنْـتُمْநீங்களேتَشْهَدُوْنَ‏சாட்சியளிக்கிறீர்கள்
யா அஹ்லல் கிதாBபி லிம தக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ அன்தும் தஷ் ஹதூன்
முஹம்மது ஜான்
வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடையவர்களே! நீங்கள் (பல அத்தாட்சிகளைக்) கண்டதன் பின்னரும், அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்?
IFT
வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டே அல்லாஹ்வின் சான்றுகளை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வேதத்தையுடையோர்களே! (பல அத்தாட்சிகளைக்) கண்கூடாகக் கண்டவர்களாக நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?”
Saheeh International
O People of the Scripture, why do you disbelieve in the verses of Allah while you witness [to their truth]?
یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟۠
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلِمَ تَلْبِسُوْنَஏன் கலக்கிறீர்கள்الْحَـقَّஉண்மையைبِالْبَاطِلِபொய்யுடன்وَتَكْتُمُوْنَஇன்னும் மறைக்கிறீர்கள்الْحَـقَّஉண்மையைوَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏நீங்கள் அறிந்து கொண்டே
யா அஹலல் கிதாBபி லிம தல்Bபிஸூனல் ஹக்க Bபில்Bபாதிலி வ தக்துமூனல் ஹக்க வ அன்தும் தஃலமூன்
முஹம்மது ஜான்
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கிறீர்கள். நீங்கள் நன்கறிந்துகொண்டே உண்மையை ஏன் மறைக்கிறீர்கள்.
IFT
வேதம் அருளப்பட்டவர்களே! சத்தியத்தை அசத்தியத்தோடு கலந்து ஏன் அதனைச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்குகின்றீர்கள்? நீங்கள் நன்கு அறிந்துகொண்டே சத்தியத்தை ஏன் மறைக்கின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வேதத்தையுடையோர்களே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் கலந்துவிடுகிறீர்கள்?” இன்னும், நீங்கள் (நன்கு) அறிந்து கொண்டே மெய்யை (ஏன்) மறைக்கின்றீர்கள்?
Saheeh International
O People of the Scripture, why do you mix [i.e., confuse] the truth with falsehood and conceal the truth while you know [it]?
وَقَالَتْ طَّآىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِیْۤ اُنْزِلَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْۤا اٰخِرَهٗ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟ۚۖ
وَقَالَتْகூறினர்طَّآٮِٕفَةٌஒரு கூட்டத்தினர்مِّنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில்اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِالَّذِىْۤஎதைاُنْزِلَஇறக்கப்பட்டதுعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَجْهَ النَّهَارِபகலின் ஆரம்பம்وَاكْفُرُوْۤاஇன்னும் நிராகரியுங்கள்اٰخِرَهٗஅதன் இறுதியில்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‌ۚ‌ ۖ‏அவர்கள் திரும்புவதற்காக
வ காலத் தா'இFபதும் மின் அஹ்லில் கிதாBபி ஆமினூ Bபில்லதீ உன்Zஜில 'அலல் லதீன ஆமனூ வஜ்ஹன் னஹாரி வக்Fபுரூ ஆகிரஹூ ல'அல்ல ஹும் யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்): “ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்; இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்” என்று கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: ‘‘நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ் வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கைகொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்'' (என்றும்)
IFT
வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் (தங்களுக்கிடையே) கூறிக் கொள்கிறார்கள்: “(இந்த நபியை) நம்பியவர்கள் மீது இறக்கியருளப்பட்டவற்றை முற்பகலில் நம்பி, பிற்பகலில் நிராகரித்து விடுங்கள்! (இப்படிச் செய்வதால்) நம்பிக்கையாளர்கள் (தம் நம்பிக்கையை விட்டு) திரும்பிவிடக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கி) “நீங்கள் விசுவாசங் கொண்டவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்)தை பகலின் துவக்கத்தில் (காலையில்) விசுவாசித்து, அதன் முடிவில் (மாலையில் அதனை) நிராகரித்து விடுங்கள்; (இதனால் விசுவாசங் கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் விசுவாசத்திலிருந்து) திரும்பிவிடக் கூடும்” எனவும் கூறுகின்றனர்.
Saheeh International
And a faction of the People of the Scripture say [to each other], "Believe in that which was revealed to the believers at the beginning of the day and reject it at its end that perhaps they will return [i.e., abandon their religion],
وَلَا تُؤْمِنُوْۤا اِلَّا لِمَنْ تَبِعَ دِیْنَكُمْ ؕ قُلْ اِنَّ الْهُدٰی هُدَی اللّٰهِ ۙ اَنْ یُّؤْتٰۤی اَحَدٌ مِّثْلَ مَاۤ اُوْتِیْتُمْ اَوْ یُحَآجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ ؕ قُلْ اِنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ ۚ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟ۚۙ
وَلَا تُؤْمِنُوْۤاஇன்னும் நம்பாதீர்கள்اِلَّاதவிரلِمَنْஎவரைتَبِعَபின்பற்றினார்دِيْنَكُمْؕஉங்கள் மார்க்கத்தைقُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالْهُدٰىநேர்வழிهُدَىநேர்வழிاللّٰهِۙஅல்லாஹ்வின்اَنْ يُّؤْتٰٓىகொடுக்கப்படுவார்اَحَدٌஒருவர்مِّثْلَபோன்றுمَاۤஎதுاُوْتِيْتُمْகொடுக்கப்பட்டீர்கள்اَوْஅல்லதுيُحَآجُّوْكُمْஉங்களோடு தர்க்கிப்பார்கள்عِنْدَஇடம்رَبِّكُمْ‌ؕஉங்கள் இறைவன்قُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالْفَضْلَஅருள்بِيَدِகையில்اللّٰهِۚஅல்லாஹ்வின்يُؤْتِيْهِஅதை கொடுக்கின்றான்مَنْஎவருக்குيَّشَآءُ ؕநாடுகிறான்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌ ۚۙ‏மிக அறிந்தவன்
வ லா து'மினூ இல்லா லிமன் தBபி'அ தீனகும் குல் இன்னல் ஹுதா ஹுதல் லாஹி அய் யு'தா அஹதும் மித்ல மா ஊதீதும் அவ் யுஹாஜ்ஜூகும் 'இன்த ரBப்Bபிகும், குல் இன்னல் Fபள்ல Bபியதில் லாஹ்; யு'தீஹி மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
முஹம்மது ஜான்
“உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்” (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?” (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்'' (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்.'' (மேலும், அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) ‘‘உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றி கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!'' (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவன் ஆவான்.
IFT
மேலும் உங்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள்!” (நபியே!) நீர் கூறும்: “திண்ணமாக, அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல்தான் உண்மையான வழிகாட்டுதலாகும். மேலும் உங்களுக்குக் கிடைத்திருப்பது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்றால் அல்லது உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக சமர்ப்பிப்பதற்காக வலுவான வாதங்கள் மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அது இறைவன் வழங்கியதேயாகும்.” (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “திண்ணமாக, சிறப்பனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. தான் நாடுபவர்களுக்கே அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த நோக்குடையவனும் யாவற்றையும் நன்கு அறிபவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்), நீங்கள் நம்பாதீர்கள்” (என்றும்) கூறுகின்றனர். இதற்கு நபியே! நீர் கூறுவீராக: நிச்சயமாக நேர்வழி(யானது) அல்லாஹ்வின் நேர்வழி(யே)யாகும். (அன்றி அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி,) நீங்கள் கொடுக்கப்பட்ட (வேதத்தைப் போன்று வேறொருவரும் கொடுக்கப்படுவார் என்பதையோ அல்லது அவர்கள் உங்கள் இரட்சகன் முன்பாக வாதிப்பார்கள் (அல்லது உங்களை வெற்றி கொள்வார்கள்) என்பதையோ (நம்பாதீர்கள்!”) என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: (பெரும் பாக்கியமெனும்) பேரருள் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றது. அதனை அவன் நாடியவர்களுக்கே கொடுக்கின்றான். இன்னும், அல்லாஹ் விசாலமானவன், யாவற்றையும் நன்கறிகிறவன்.
Saheeh International
And do not trust except those who follow your religion." Say, "Indeed, the [true] guidance is the guidance of Allah. [Do you fear] lest someone be given [knowledge] like you were given or that they would [thereby] argue with you before your Lord?" Say, "Indeed, [all] bounty is in the hand of Allah - He grants it to whom He wills. And Allah is all-Encompassing and Wise."
یَّخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
يَّخْتَصُّசொந்தமாக்குகிறான்بِرَحْمَتِهٖதனது அருளுக்குمَنْஎவரைيَّشَآءُ ؕநாடுகிறான்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்ذُو الْفَضْلِஅருளுடையவன்الْعَظِيْمِ‏மகத்தானது
யக்தஸ்ஸு Bபிரஹ்மதிஹீ மய் யஷா'; வல்லாஹு துல்Fபள்லில் 'அளீம்
முஹம்மது ஜான்
அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்; இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் தான் விரும்பியவர்களை தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவன் மகத்தான கொடையுடையவன் ஆவான்.
IFT
தான் நாடுபவர்களைத் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக்குகின்றான். மேலும் அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வாகிய) அவன், தான் நாடியவர்களைத் தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். இன்னும், அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன்.
Saheeh International
He selects for His mercy whom He wills. And Allah is the possessor of great bounty.
وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ یُّؤَدِّهٖۤ اِلَیْكَ ۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِیْنَارٍ لَّا یُؤَدِّهٖۤ اِلَیْكَ اِلَّا مَا دُمْتَ عَلَیْهِ قَآىِٕمًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَیْسَ عَلَیْنَا فِی الْاُمِّیّٖنَ سَبِیْلٌ ۚ وَیَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
وَمِنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில்مَنْஎவர்اِنْ تَاْمَنْهُநீர் அவரை நம்பினால்بِقِنْطَارٍஒரு பொற்குவியலில்يُّؤَدِّهٖۤஅதை நிறைவேற்றுவார்اِلَيْكَ‌ۚஉமக்குوَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்اِنْ تَاْمَنْهُ(நீர்) அவரை நம்பினால்بِدِيْنَارٍஒரு நாணயத்தால்لَّا يُؤَدِّهٖۤஅதை நிறைவேற்ற மாட்டார்اِلَيْكَஉமக்குاِلَّاதவிரمَا دُمْتَ(நீர்) தொடர்ந்தால்عَلَيْهِஅவரிடம்قَآٮِٕمًا ؕநிற்பவராகذٰ لِكَஇதுبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்قَالُوْاகூறினார்கள்لَيْسَஇல்லைعَلَيْنَاநம்மீதுفِىْ الْاُمِّيّٖنَபாமரர்கள்விஷயத்தில்سَبِيْلٌۚகுற்றம்وَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுالْكَذِبَபொய்யைوَ هُمْ يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்து கொண்டே
வ மின் அஹ்லில் கிதாBபி மன் இன் த'மன்ஹு Bபிகின்தாரி(ன்)ய் யு'அத்திஹீ இலய்க வ மின்ஹும் மன் இன் த'மன்ஹு Bபி தீனாரின் லா யு'அத்திஹீ இலய்க இல்லா மா தும்த 'அலய்ஹி கா' இமா; தாலிக Bபிஅன்னஹும் காலூ லய்ஸ 'அலய்னா Fபில் உம்மிய்யீன ஸBபீலு(ன்)வ் வ யகூலூன 'அலல் லாஹில் கதிBப வ ஹும் யஃலமூன்
முஹம்மது ஜான்
(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், “பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை” என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (ஒரு குறைவுமின்றி) உம்மிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீர் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரை அதைத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். இதன் காரணம்: (தங்கள் இனம் அல்லாத மற்ற) ‘‘பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை'' என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (அல்லாஹ் தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
IFT
வேதம் அருளப்பட்டவர்களில் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி நீர் ஒரு செல்வக் குவியலை அவர்களிடம் ஒப்படைத்தாலும், உம்மிடம் அதனைத் திருப்பித் தந்துவிடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி ஒரு காசைக் கொடுத்தாலும்கூட நீர் அதற்காக விடாப்பிடியாய் நின்றாலேயொழிய அதனை உம்மிடம் திருப்பித் தரமாட்டார்கள். இதற்கு (அவர்களின் இந்த நாணயமின்மைக்குக்) காரணம் அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்ததுதான்: “உம்மிகள் (யூதர் அல்லாதவர்) விஷயத்தில் நாங்கள் அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட மாட்டோம்!” இவ்வாறு அல்லாஹ்வின் மீது அவர்கள் அப்பட்டமான பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். ஆனால் (உண்மையில் அல்லாஹ் இதுபோன்ற எதையும் சொல்லவில்லை என்பதை) அவர்கள் நன்கு அறிந்தே இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள். நீர் அவரிடம் ஒரு (பொற்)குவியலையே நம்பி ஒப்படைத்த போதிலும், (யாதொரு குறைவுமின்றி) அதை உம்மிடம் திரும்பச் செலுத்தி விடுவார். இன்னும் அவர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவரிடம் ஒரு தங்க நாணயத்தை நம்பி ஒப்படைத்த போதிலும் நீர் அவரிடம் (வம்புசெய்து) தொடர்ந்து நின்றிருந்தாலே தவிர, அதை உமக்குத் திரும்பச் செலுத்த மாட்டார். இது பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன செய்தபோதிலும் அதற்காக) நம்மை(க் குற்றம்) பிடிக்க வழியில்லை” என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுகின்ற காரணத்தினாலாகும். அவர்கள் அறிந்துகொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய்யையும் கூறுகின்றனர்.
Saheeh International
And among the People of the Scripture is he who, if you entrust him with a great amount [of wealth], he will return it to you. And among them is he who, if you entrust him with a [single] coin, he will not return it to you unless you are constantly standing over him [demanding it]. That is because they say, "There is no blame upon us concerning the unlearned." And they speak untruth about Allah while they know [it].
بَلٰی مَنْ اَوْفٰی بِعَهْدِهٖ وَاتَّقٰی فَاِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَّقِیْنَ ۟
بَلٰىஏனில்லைمَنْஎவர்اَوْفٰىநிறைவேற்றினார்بِعَهْدِهٖதன் வாக்குறுதியைوَاتَّقٰىஇன்னும் அல்லாஹ்வை அஞ்சினார்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُتَّقِيْنَ‏அஞ்சுபவர்களை
Bபலா மன் அவ்Fபா Bபி'அஹ்திஹீ வத்தகா Fப இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முத்தகீன்
முஹம்மது ஜான்
அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(உண்மை) அவ்வாறல்ல. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறை வேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கிறார்களோ (அவர்கள்தான் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறையச்சம் உடையவர்களை நேசிக்கிறான்.
IFT
அவ்வாறல்ல, (அவர்கள் ஏன் விசாரிக்கப்படக் கூடாது?) எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக்கொள்கின்றாரோ அவரே, அல்லாஹ்வின் நேசத்திற்குரியவராவார். ஏனெனில், தீவினையிலிருந்து விலகிக் கொள்பவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏன் இல்லை? எவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றி (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் நடக்கிறாரோ அப்போது (அவர் தான் குற்றம் பிடிக்கப்படமாட்டார்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பயபக்தியுடையவர்களை நேசிக்கின்றான்.
Saheeh International
But yes, whoever fulfills his commitment and fears Allah - then indeed, Allah loves those who fear Him.
اِنَّ الَّذِیْنَ یَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَیْمَانِهِمْ ثَمَنًا قَلِیْلًا اُولٰٓىِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِی الْاٰخِرَةِ وَلَا یُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا یَنْظُرُ اِلَیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ وَلَا یُزَكِّیْهِمْ ۪ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَشْتَرُوْنَவாங்குகிறார்கள்بِعَهْدِவாக்குறுதிக்குபகரமாகاللّٰهِஅல்லாஹ்வின்وَاَيْمَانِهِمْஇன்னும் அவர்களுடைய சத்தியங்கள்ثَمَنًاவிலையைقَلِيْلًاசொற்பமானதுاُولٰٓٮِٕكَஅவர்கள்لَا خَلَاقَஅறவே (நற்)பாக்கியமில்லைلَهُمْஅவர்களுக்குفِى الْاٰخِرَةِமறுமையில்وَلَا يُكَلِّمُهُمُஇன்னும் அவர்களுடன் பேசமாட்டான்اللّٰهُஅல்லாஹ்وَلَا يَنْظُرُஇன்னும் பார்க்கமாட்டான்اِلَيْهِمْஅவர்கள் பக்கம்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்وَلَا يُزَكِّيْهِمْஇன்னும் அவர்களைத் தூய்மைப்படுத்தமாட்டான்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக்கூடியது
இன்னல் லதீன யஷ்தரூன Bபி'அஹ்தில் லாஹி வ அய்மானிஹிம் தமனன் கலீலன் உலா'இக லா கலாக லஹும் Fபில் ஆகிரதி வலா யுகல்லிமுஹுமுல் லாஹு வலா யன்ளுரு இலய்ஹிம் யவ்மல் கியாமதி வலா யுZஜக்கீஹிம் வ லஹும் 'அதBபுன் 'அலீம்
முஹம்மது ஜான்
யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்கள் சத்தியங்களையும் சொற்பவிலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக ஒரு (நற்)பாக்கியமுமில்லை. மேலும், அல்லாஹ் (மறுமையில்) அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான்; (அன்புடன்) அவர்களை இறுதி நாளில் திரும்பிப்பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
IFT
எவர்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதிக்கும், தங்கள் சத்தியங்களுக்கும் பகரமாக சொற்பக் கிரயத்தை வாங்குகின்றார்களே அத்தகையோர்-அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்)பாக்கியமுமில்லை. அல்லாஹ் (மறுமை நாளில்) அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான், (அன்புடன்) அவர்களை மறுமை நாளில் பார்க்கவுமாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான் மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
Saheeh International
Indeed, those who exchange the covenant of Allah and their [own] oaths for a small price will have no share in the Hereafter, and Allah will not speak to them or look at them on the Day of Resurrection, nor will He purify them; and they will have a painful punishment.
وَاِنَّ مِنْهُمْ لَفَرِیْقًا یَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِ ۚ وَیَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَیَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
وَاِنَّநிச்சயமாகمِنْهُمْஅவர்களில்لَـفَرِيْقًاஉறுதியாக ஒரு பிரிவினர்يَّلْوٗنَகோணுகின்றனர்اَلْسِنَتَهُمْதங்கள் நாவைبِالْكِتٰبِவேதத்தில்لِتَحْسَبُوْهُ(நீங்கள்) அதை எண்ணுவதற்காகمِنَ الْكِتٰبِ‌வேதத்தில்وَمَاஇன்னும் இல்லைهُوَ مِنَ الْكِتٰبِۚஅது/வேதத்தில்وَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்هُوَஅதுمِنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَمَاஇல்லைهُوَஅதுمِنْஇருந்துعِنْدِ اللّٰهِ‌ۚஅல்லாஹ்விடம்وَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்عَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்الْكَذِبَபொய்وَ هُمْ يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்து கொண்டே
வ இன்ன மின்ஹும் லFபரீ க(ன்)ய் யல்வூன அல்ஸினதஹும் Bபில் கிதாBபி லிதஹ்ஸBபூஹு மினல் கிதாBப், வமா ஹுவ மினல் கிதாBபி வ யகூலூன ஹுவ மின் 'இன்தில்லாஹி வமா ஹுவ மின் 'இன்தில்லாஹி வ யகூலூன 'அலல் லாஹில் கதிBப வ ஹும் யஃலமூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக; ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல; “அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்)வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. இன்னும், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது இப்படி பொய் கூறுகின்றனர்.
IFT
அவர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள்; வேதத்தைப் படிக்கும்போது தம் நாவுகளை அவர்கள் சுழற்றுகின்றார்கள்; அவர்கள் படிக்கின்ற யாவும் வேதத்தில் உள்ளவையே என்று நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் என்பதற்காக! உண்மை யாதெனில், அவர்கள் படிப்பவை வேதத்திலுள்ளவையல்ல. (நாங்கள் படிக்கின்ற) “இவை யாவும் இறைவனிட மிருந்து வந்தவை” என்று அவர்கள் கூறுகின்றார்கள்; ஆனால் அவை உண்மையில் இறைவனிடமிருந்து வந்தவையல்ல! அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர்-அவர்கள் வேதத்தைக்கொண்டு-(ஓதும்போது அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து) அதுவும் வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக் கொள்ளும் பொருட்டு தங்கள் நாவுகளைச் சாய்த்துக் கொள்கின்றனர். அது வேதத்தில் உள்ளதும் அல்ல, அன்றியும் அவர்கள் அது அல்லாஹ்விடமிருந்துள்ளது” என்றும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்துள்ளதும் அல்ல, இன்னும் அவர்கள் நன்கறிந்தவர்களாக, அல்லாஹ்வின்மீது (இவ்வாறு) பொய்யைக் கூறுகின்றனர்.
Saheeh International
And indeed, there is among them a party who alter the Scripture with their tongues so you may think it is from the Scripture, but it is not from the Scripture. And they say, "This is from Allah," but it is not from Allah. And they speak untruth about Allah while they know.
مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّؤْتِیَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ یَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّیْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ كُوْنُوْا رَبّٰنِیّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَ ۟ۙ
مَا كَانَஉசிதமில்லைلِبَشَرٍஒரு மனிதருக்குاَنْ يُّؤْتِيَهُஅவருக்கு கொடுக்கاللّٰهُஅல்லாஹ்الْكِتٰبَவேதத்தைوَالْحُكْمَஇன்னும் ஞானம்وَالنُّبُوَّةَஇன்னும் நபித்துவம்ثُمَّபிறகுيَقُوْلَகூறுவார்لِلنَّاسِமக்களுக்குكُوْنُوْاஆகிவிடுங்கள்عِبَادًاஅடியார்களாகلِّىْஎன்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வைத் தவிர்த்துوَلٰـكِنْஎன்றாலும்كُوْنُوْاஆகிவிடுங்கள்رَبَّانِيّٖنَசீர்திருத்தம் செய்யும் இறையச்சமுள்ள நிர்வாகிகளாகبِمَا كُنْتُمْநீங்கள் இருப்பதால்تُعَلِّمُوْنَகற்பிக்கிறீர்கள்الْكِتٰبَவேதத்தைوَبِمَا كُنْتُمْஇன்னும் நீங்கள் இருப்பதால்تَدْرُسُوْنَۙ‏கற்றுக் கொள்கிறீர்கள்
மா கான லிBபஷரின் அய் யு'தியஹுல் லாஹுல் கிதாBப வல்ஹுக்ம வன் னுBபுவ்வத தும்ம யகூல லின்னாஸி கூனூ 'இBபாதல் லீ மின் தூனில் லாஹி வ லாகின் கூனூ ரBப்Bபானிய் யீன Bபிமா குன்தும் து'அல்லிமூனல் கிதாBப வ Bபிமா குன்தும் தத்ருஸூன்
முஹம்மது ஜான்
ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் “அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்” என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்” (என்று தான் சொல்லுவார்).
அப்துல் ஹமீது பாகவி
ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்'' என்று கூறமாட்டார். ஆயினும் (மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் இறையச்சமுடைய நல்லவர்களாக ஆகிவிடுங்கள்'' என்றுதான் கூறுவார்.
IFT
ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும், இறைத்தூதுத் துவத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்க அதனைப் பெற்ற பின்னர், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாகி விடுங்கள்!” என்று மக்களிடம் கூறுவது அவருக்கு அனுமதிக்கப்பட்டதன்று. மாறாக, “நீங்கள் ஓதிக்கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கும் வேத அறிவுரைகளின் தேட்டப்படி ரப்பானீகளாய்த் திகழுங்கள்!” என்றே அவர் கூறுவார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்த ஒரு மனிதருக்கும், வேதத்தையும் ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருக்க, பின்னர் அவர், மனிதர்களிடம், “அல்லாஹ்வையன்றி எனக்கே அடியார்களாகி (என்னையே வணங்கி) விடுங்கள்” என்று கூற இயலாது. எனினும், (மனிதர்களிடம்) “நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்கு)க் கற்றுக்கொடுத்துக்கொண்டும், கற்றுக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதிலுள்ளவாறு) இரட்சக(ன் ஒருவனையே வணங்கி அவ)னைச் சார்ந்த அடியார்களாக ஆகிவிடுங்கள்” (என்றுதான் கூறுவார்கள்.)
Saheeh International
It is not for a human [prophet] that Allah should give him the Scripture and authority and prophethood and then he would say to the people, "Be servants to me rather than Allah," but [instead, he would say], "Be pious scholars of the Lord because of what you have taught of the Scripture and because of what you have studied."
وَلَا یَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰٓىِٕكَةَ وَالنَّبِیّٖنَ اَرْبَابًا ؕ اَیَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟۠
وَلَا يَاْمُرஅவர் ஏவுவது இல்லைكُمْஉங்களைاَنْ تَتَّخِذُواநீங்கள்எடுத்துக்கொள்வதுالْمَلٰٓٮِٕكَةَவானவர்களைوَالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களைاَرْبَابًا‌ ؕகடவுள்களாகاَيَاْمُرُكُمْஉங்களை ஏவுவாரா?بِالْكُفْرِநிராகரிக்கும்படிبَعْدَபின்னர்اِذْ اَنْـتُمْநீங்கள் ஆகியمُّسْلِمُوْنَ‏முஸ்லிம்களாக
வ லா ய'முரகும் அன் தத்தகிதுல் மலா 'இகத வன் னBபிய்யீன அர்BபாBபா; அ யாமுருகும் Bபில்குFப்ரி Bபஃத இத் அன்தும் முஸ்லிமூன்
முஹம்மது ஜான்
மேலும் அவர், “மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
அப்துல் ஹமீது பாகவி
தவிர ‘‘வானவர்களையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?
IFT
வானவர்களையோ இறைத்தூதர்களையோ உங்கள் கடவுளர்களாய் ஆக்கிக்கொள்ளும்படி உங்களுக்கு ஒருபோதும் அவர் கட்டளையிடமாட்டார். நீங்கள் முற்றிலும் இறைவனுக்குப் பணிந்துவிட்ட பிறகு (முஸ்லிம்களாய்த் திகழும்போது) நிராகரிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி ஒரு நபி உங்களுக்குக் கட்டளையிடுவாரா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா?
Saheeh International
Nor could he order you to take the angels and prophets as lords. Would he order you to disbelief after you had been Muslims?
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ النَّبِیّٖنَ لَمَاۤ اٰتَیْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰی ذٰلِكُمْ اِصْرِیْ ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
وَاِذْ اَخَذَவாங்கிய சமயம்اللّٰهُஅல்லாஹ்مِيْثَاقَவாக்குறுதியைالنَّبِيّٖنَநபிமார்களின்لَمَاۤ اٰتَيْتُكُمْஉங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம்مِّنْ كِتٰبٍவேதத்தைوَّحِكْمَةٍஇன்னும் ஞானம்ثُمَّபிறகுجَآءَكُمْஉங்களிடம் வந்தார்رَسُوْلٌஒரு தூதர்مُّصَدِّقٌஉண்மைப்படுத்துபவர்لِّمَا مَعَكُمْஉங்களுடனுள்ளதைلَـتُؤْمِنُنَّ بِهٖநிச்சயமாகஅவரை நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்وَلَـتَـنْصُرُنَّهٗ ؕஇன்னும் நிச்சயமாக நீங்கள் அவருக்கு உதவவேண்டும்قَالَகூறினான்ءَاَقْرَرْتُمْஏற்றீர்களா?وَاَخَذْتُمْஇன்னும் ஏற்றீர்களா?عَلٰى ذٰ لِكُمْமீது/இதுاِصْرِىْ‌ؕஎன்உடன்படிக்கையைقَالُوْۤاகூறினார்கள்اَقْرَرْنَا ؕஒப்புக்கொண்டோம்قَالَகூறினான்فَاشْهَدُوْاசாட்சி பகருங்கள்وَاَنَاஇன்னும் நான்مَعَكُمْஉங்களுடன்مِّنَ الشّٰهِدِيْنَ‏சாட்சியாளர்களில்
வ இத் அகதல் லாஹு மீதாகன் னBபிய்யீன லமா ஆதய்துகும் மின் கிதாBபி(ன்)வ் வ ஹிக்மதின் தும்ம ஜா'அகும் ரஸூலும் முஸத்திகுல் லிமா ம'அகும் லது'மினுன்ன Bபிஹீ வ லதன்ஸுருன்னஹ்; கால அ'அக்ரர்தும் வ அகத்தும் அலா தாலிகும் இஸ்-ரீ காலூ அக்ரர்னா; கால Fபஷ்ஹதூ வ அன ம'அகும் மினஷ் ஷாஹிதீன்
முஹம்மது ஜான்
(நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்யவேண்டும்'' (என்று கூறி) ‘‘இதை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என் இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?'' என்று கேட்டதற்கு, அவர்கள் ‘‘நாங்கள் (அதை) அங்கீகரித்துக் கொண்டோம்'' என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் ‘‘இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்'' என்று கூறினான்.
IFT
அல்லாஹ் நபிமார்களிடம் இவ்வாறு உறுதிமொழி வாங்கிய நேரத்தை நினைவுகூருங்கள்: “நான் (இப்போது) உங்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் வழங்கியிருக்கின்றேன். இனி ஏற்கனவே உங்களிடமுள்ள அறிவுரைகளை மெய்ப்படுத்தக்கூடிய வேறோர் இறைத்தூதர் உங்களிடம் வந்தால் கண்டிப்பாக அவர் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் அவருக்கு உதவி புரிந்திடவும் வேண்டும்” (இவ்வாறு கூறிவிட்டு) அல்லாஹ் வினவினான்: “இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? மேலும், இதற்காக என்னுடன் நீங்கள் செய்துகொண்ட பெரும் ஒப்பந்தத்தை (அதனால் ஏற்படும் மாபெரும் பொறுப்புகளை) ஏற்றுக் கொள்கிறீர்களா?” அவர்கள், “(ஆம்!) நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “அப்படியானால் நீங்கள் (இதற்கு) சாட்சியாக இருங்கள். நானும் உங்களோடு சாட்சியாக இருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் நபிமார்களிடம்: வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களிடம்,) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்து, (இதற்குப்) பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி, “இதனை) நீங்களும் உறுதிப்படுத்தினீர்களா?” இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) உறுதிப்படுத்துகிறோம்” என்றே கூறினார்கள். (“இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
Saheeh International
And [recall, O People of the Scripture], when Allah took the covenant of the prophets, [saying], "Whatever I give you of the Scripture and wisdom and then there comes to you a messenger confirming what is with you, you [must] believe in him and support him." [Allah] said, "Have you acknowledged and taken upon that My commitment?" They said, "We have acknowledged it." He said, "Then bear witness, and I am with you among the witnesses."
فَمَنْ تَوَلّٰی بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
فَمَنْஎவர்تَوَلّٰىவிலகினார்بَعْدَபின்னர்ذٰ لِكَஇதுفَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْفٰسِقُوْنَ‏பாவிகள்
Fபமன் தவல்லா Bபஃத தாலிக Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
முஹம்மது ஜான்
எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் அவர்கள்தான் பெரும் பாவிகள் ஆவர்.
IFT
இதன் பிறகு (அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையிலிருந்து) யார் பின்வாங்கிச் செல்கின்றார்களோ அவர்களே பாவிகளாவர்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, இதற்குப் பின்னர் எவரேனும் புறக்கணித்தால், நிச்சயமாக அவர்கள்தாம் பாவிகள்.
Saheeh International
And whoever turned away after that - they were the defiantly disobedient.
اَفَغَیْرَ دِیْنِ اللّٰهِ یَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَیْهِ یُرْجَعُوْنَ ۟
اَفَغَيْرَஅல்லாததையா?دِيْنِமார்க்கம்اللّٰهِஅல்லாஹ்வின்يَبْغُوْنَவிரும்புகிறார்கள்وَلَهٗۤஅவனுக்கேاَسْلَمَபணிந்தார்(கள்)مَنْஎவர்கள்فِى السَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِஇன்னும் பூமியில்طَوْعًاவிரும்பிوَّكَرْهًاஇன்னும் நிர்பந்தம்وَّاِلَيْهِஇன்னும் அவன் பக்கமேيُرْجَعُوْنَ‏திருப்பப்படுவார்கள்
அFபகய்ர தீனில் லாஹி யBப்கூன வ லஹூ அஸ்லம மன் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி தவ்'அ(ன்)வ் வ கர்ஹ(ன்)வ் வ இலய்ஹி யுர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. மேலும், (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்.
IFT
இனி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தீனை (வாழ்க்கை நெறியை) விட்டு வேறொரு வாழ்க்கை நெறியையா இவர்கள் விரும்புகின்றார்கள்? உண்மை என்னவெனில், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே கீழ்ப்படிந்து (முஸ்லிமாக) இருக்கின்றன; மேலும் அவனிடமே அவர்கள் அனைவரும் திரும்ப வேண்டியவராய் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுடைய மார்க்கமல்லாத (வேறு மார்க்கத்)தையா அவர்கள் தேடுகின்றார்கள்? வானங்கள், மற்றும் பூமியில் உள்ளவை, (அவை) விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாகக் கீழ்ப்படிந்து (தங்களை ஒப்படைத்து) விட்டன. மேலும், அவனளவிலேயே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
Saheeh International
So is it other than the religion of Allah they desire, while to Him have submitted [all] those within the heavens and earth, willingly or by compulsion, and to Him they will be returned?
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைعَلَيْنَاஎங்கள் மீதுوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைعَلٰٓىமீதுاِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَ اِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَمَاۤஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்مُوْسٰى وَ عِيْسٰىமூஸா/இன்னும் ஈஸாوَالنَّبِيُّوْنَஇன்னும் நபிமார்கள்مِنْ رَّبِّهِمْதங்கள் இறைவனிடமிருந்துلَا نُفَرِّقُபிரிக்க மாட்டோம்بَيْنَ اَحَدٍஒருவருக்கு மத்தியில்مِّنْهُمْஇவர்களில்وَنَحْنُஇன்னும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَ‏முற்றிலும் பணிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவற்றையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம்.''
IFT
நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கியருளப்பட்டிருக்கும் அறிவுரைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்கள் ஆகியோர் மீது இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்னும் மூஸா, ஈஸா மற்றுமுள்ள நபிமார்களுக்கு அவர்களுடைய அதிபதியிடமிருந்து இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இவர்களுக்கிடையே நாங்கள் எவ்வித வேற்றுமையும் காட்டுவதில்லை. மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வையும், நம்மீது இறக்கி வைக்கப் பட்டதையும், இன்னும், இப்ராஹீம், இஸ்மாயீல் இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள்மீதும், இறக்கி வைக்கப்பட்டவைகளையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும், நபிமார்களுக்கும் அவர்கள் இரட்சகனால் கொடுக்கப் பட்டவைகளையும் நாம் விசுவாசிக்கிறோம். அவர்களில் எவருக்குமிடையில் நாம் (பிரித்து) வேற்றுமை பாராட்ட மாட்டோம். அ(ல்லாஹ் ஒரு)வனுக்கே நாங்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லீம்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "We have believed in Allah and in what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob, and the Descendants [al-Asbaṭ], and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them, and we are Muslims [submitting] to Him."
وَمَنْ یَّبْتَغِ غَیْرَ الْاِسْلَامِ دِیْنًا فَلَنْ یُّقْبَلَ مِنْهُ ۚ وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟
وَمَنْஎவர்يَّبْتَغِவிரும்புவார்غَيْرَ الْاِسْلَامِஇஸ்லாமல்லாததைدِيْنًاமார்க்கமாகفَلَنْ يُّقْبَلَஅறவே அங்கீகரிக்கப்படாதுمِنْهُ‌ ۚஅவரிடமிருந்துوَهُوَஇன்னும் அவர்فِى الْاٰخِرَةِமறுமையில்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
வ மய் யBப்தகி கய்ரல் இஸ்லாமி தீனன் Fபல(ன்)ய் யுக்Bபல மின்ஹு வ ஹுவ Fபில் ஆகிரதி மினல் காஸிரீன்
முஹம்மது ஜான்
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார்.
IFT
இவ்வாறு அவனுக்குப் பணிந்து வாழும் நடத்தையை (இஸ்லாத்தை) விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒருபோதும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும், மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்”
Saheeh International
And whoever desires other than Islam as religion - never will it be accepted from him, and he, in the Hereafter, will be among the losers.
كَیْفَ یَهْدِی اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَیِّنٰتُ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
كَيْفَஎவ்வாறுيَهْدِىநேர்வழி செலுத்துவான்اللّٰهُஅல்லாஹ்قَوْمًاஒரு கூட்டத்தைكَفَرُوْاநிராகரித்தார்கள்بَعْدَபின்னர்اِيْمَانِهِمْதாங்கள் நம்பிக்கை கொண்டதற்குوَشَهِدُوْۤاஇன்னும் சாட்சி கூறினர்اَنَّ الرَّسُوْلَநிச்சயமாக தூதர்حَقٌّஉண்மையானவர்وَّجَآءَهُمُஇன்னும் அவர்களிடம் வந்ததுالْبَيِّنٰتُ‌ؕதெளிவான சான்றுகள்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
கய்Fப யஹ்தில் லாஹு கவ்மன் கFபரூ Bபஃத ஈமானிஹிம் வ ஷஹிதூ அன்னர் ரஸூல ஹக்கு(ன்)வ் வ ஜா'அஹுமுல் Bபய்யினாத்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் எப்படி ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை.
IFT
இறைநம்பிக்கை கொண்ட பிறகு நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்ட மக்களுக்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அவர்களோ இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சியம் அளித்திருந்தார்கள். மேலும் தெளிவான சான்றுகளும் அவர்களிடம் வந்திருந்தன. இவ்வாறு கொடுமை புரியும் சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களுடைய விசுவாசத்திற்குப் பின்னர் நிராகரித்து விட்ட ஒரு சமூகத்தினருக்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழிகாட்டுவான்? நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என்றும் அவர்கள் சாட்சியமும் கூறினர். அவர்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளும் வந்திருந்தன. அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தாரை நேரான வழியில் செலுத்த மாட்டான்.
Saheeh International
How shall Allah guide a people who disbelieved after their belief and had witnessed that the Messenger is true and clear signs had come to them? And Allah does not guide the wrongdoing people.
اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَیْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ
اُولٰٓٮِٕكَஇவர்கள்جَزَآؤُهُمْஇவர்களுடைய கூலிاَنَّநிச்சயமாகعَلَيْهِمْஇவர்கள் மீதுلَعْنَةَ اللّٰهِஅல்லாஹ்வின் சாபம்وَالْمَلٰٓٮِٕكَةِஇன்னும் வானவர்கள்وَالنَّاسِஇன்னும் மக்கள்اَجْمَعِيْنَۙ‏அனைவர்
உலா'இக ஜZஜா'உஹும் அன்ன 'அலய்ஹிம் லஃனதல் லாஹி வல்மலா'இகதி வன்னாஸி அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு (அவர்கள் செயலுக்குத் தக்க) பிரதிபலனாவது: இவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவருடைய சாபம் உண்டாகுவதுதான்.
IFT
(அவர்கள் புரிந்த கொடுமைக்காக) அல்லாஹ்வும் வானவர்களும், மக்கள் அனைவரும் அவர்கள் மீது இடுகின்ற சாபம்தான் அவர்களுக்குரிய சரியான கூலியாகும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர் - அவர்களுக்குரிய கூலி, நிச்சயமாக அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் (ஆகிய!) யாவருடைய சாபம் அவர்கள் மீது உண்டு என்பதுதான்.
Saheeh International
Those - their recompense will be that upon them is the curse of Allah and the angels and the people, all together,
خٰلِدِیْنَ فِیْهَا ۚ لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟ۙ
خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَا ۚஅதில்لَا يُخَفَّفُஇலேசாக்கப்படாதுعَنْهُمُஅவர்களை விட்டுالْعَذَابُவேதனைوَلَا هُمْ يُنْظَرُوْنَۙ‏இன்னும் அவர்கள் தவனை அளிக்கப்படமாட்டார்கள்
காலிதீன Fபீஹா லா யுகFப்FபFபு 'அன்ஹுமுல் 'அதாBபு வலா ஹும் யுன்ளரூன்
முஹம்மது ஜான்
இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.
அப்துல் ஹமீது பாகவி
இ(ச்சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் மாட்டாது.
IFT
சாபக்கேடான நிலையிலேயே அவர்கள் என்றென்றும் மூழ்கிக் கிடப்பார்கள்; தண்டனை அவர்களுக்குக் குறைக்கப்படவும் மாட்டாது. மேலும் அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படமாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இ(ச்சாபத்)திலேயே அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள், அவர்களை விட்டும் வேதனை இலேசாக்கப்படவுமாட்டாது. (வேதனை செய்யப்படுவதிலிருந்து) அவர்கள் கால அவகாசம் கொடுக்கப்படவுமாட்டார்கள்.
Saheeh International
Abiding eternally therein. The punishment will not be lightened for them, nor will they be reprieved,
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۫ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்تَابُوْاதிரும்பினார்கள்; மன்னிப்புக் கோரினார்கள்مِنْۢ بَعْدِ ذٰ لِكَஅதற்கு பின்னர்وَاَصْلَحُوْاஇன்னும் சீர்திருத்தினார்கள் فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
இல்லல் லதீன தாBபூ மிம் Bபஃதி தாலிக வ அஸ்லஹூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
ஆயினும் அதற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரி, தமது நடத்தையைத் திருத்திக் கொண்டவர்களைத் தவிர! (அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.) ஏனெனில் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், கருணை பொழிபவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன்பின்னர் பச்சாதாபப்பட்டு, (பாவங்களிலிருந்து விலகி) தங்களை சீர்திருத்திக் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர-(அல்லாஹ் அவர்களை மன்னித்துவிடுவான். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கின்றவன், மிக்க கிருபையுடையவன்.
Saheeh International
Except for those who repent after that and correct themselves. For indeed, Allah is Forgiving and Merciful.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الضَّآلُّوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்بَعْدَபின்னர்اِيْمَانِهِمْதாங்கள் நம்பிக்கை கொண்டதற்குثُمَّபிறகுازْدَادُوْاஅதிகப்படுத்தினார்கள்كُفْرًاநிராகரிப்பைلَّنْ تُقْبَلَஅறவே அங்கீகரிக்கப்படாதுتَوْبَتُهُمْ‌ۚஅவர்களுடைய மன்னிப்புக் கோருதல்وَاُولٰٓٮِٕكَ هُمُஇன்னும் அவர்கள்தான்الضَّآ لُّوْنَ‏வழிகெட்டவர்கள்
இன்னல் லதீன கFபரூ Bபஃத ஈமானிஹிம் தும்மZஜ் தாதூ குFப்ரல் லன் துக்Bபல தவ்Bபதுஹும் வ உலா'இக ஹுமுள் ளால்லூன்
முஹம்மது ஜான்
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும், அந்நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்.
IFT
ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டனரோ, மேலும் நிராகரிப்பிலேயே மூழ்கிக் கொண்டு போகின்றனரோ அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அவர்கள்தான் (முதிர்ந்த) வழிகேடர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, தங்களுடைய விசுவாசத்திற்கு பின்னர் நிராகரித்து, மேலும் நிராகரிப்பை அதிகமாக்கிக் கொண்டார்களே அத்தகையோர்-அவர்களுடைய தவ்பா(மன்னிப்புக்கோருதல்) அங்கீகரிக்கப்படவேமாட்டாது. மேலும், அவர்கள் தாம் (முற்றிலும்)வழி கெட்டவர்கள்.
Saheeh International
Indeed, those who disbelieve [i.e., reject the message] after their belief and then increase in disbelief - never will their [claimed] repentance be accepted, and they are the ones astray.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰی بِهٖ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ وَّمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَمَاتُوْاஇன்னும் இறந்தார்கள்وَهُمْ كُفَّارٌஅவர்கள் நிராகரிப்பாளர்களாகவேفَلَنْ يُّقْبَلَஅறவே அங்கீகரிக்கப்படாதுمِنْஇருந்துاَحَدِهِمْஅவர்களில் ஒருவர்مِّلْءُ الْاَرْضِபூமி நிறையذَهَبًاதங்கத்தைوَّلَوِ افْتَدٰى بِهٖ ؕஅதை ஈடாக கொடுத்தாலும் சரியேاُولٰٓٮِٕكَஇவர்கள்لَـهُمْஇவர்களுக்குعَذَابٌவேதனைاَلِيْمٌۙதுன்புறுத்தக் கூடியதுوَّمَاஇன்னும் இல்லைلَـهُمْஅவர்களுக்குمِّــنْ نّٰصِــرِيْنَ‏உதவியாளர்களில் ஒருவரும்
இன்னல் லதீன கFபரூ வ மாதூ வ ஹும் குFப்Fபாருன் Fபல(ன்)ய் யுக்Bபல மின் அஹதிஹிம் மில்'உல் அர்ளி தஹBப(ன்)வ் வ லவிFப்ததா Bபிஹ்; உலா 'இக லஹும் 'அதாBபுன் அலீமு(ன்)வ் வமா லஹும் மின் னாஸிரீன்
முஹம்மது ஜான்
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு; இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்!
IFT
திண்ணமாக, எவர்கள் நிராகரிப்பை மேற்கொண்டு அதே நிலையில் மரணமடைந்து விடுகின்றார்களோ அவர்கள் தம்மைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பூமி நிரம்பப் பொன்னை ஈட்டுத் தொகையாகத் தந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்தவர்களாகவே இறந்தும் விடுகின்றனரே, அத்தகையோர்-பொன்னால் இப்பூமி நிறைய உள்ளதை-அதனை(த்தன் குற்றம் மன்னிக்கப்படுவதற்கு) ஈடாக அவர் கொடுத்த போதிலும், (அது) அவர்களில் எவரிடமிருந்தும் அங்கீகரிக்கப்படவேமாட்டாது. அத்தகையோருக்கே துன்புறுத்தும் வேதனையுமுண்டு. அவர்களுக்கு உதவிசெய்வோரும் எவரும் இல்லை.
Saheeh International
Indeed, those who disbelieve and die while they are disbelievers - never would the [whole] capacity of the earth in gold be accepted from one of them if he would [seek to] ransom himself with it. For those there will be a painful punishment, and they will have no helpers.
لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰی تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ؕ۬ وَمَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِیْمٌ ۟
لَنْ تَنَالُواஅறவே அடைய மாட்டீர்கள்الْبِرَّநன்மையைحَتّٰىவரைتُنْفِقُوْاதர்மம் செய்கிறீர்கள்مِمَّاஎதிலிருந்துتُحِبُّوْنَ ؕ நேசிக்கிறீர்கள்وَمَا تُنْفِقُوْاஎதை (நீங்கள்) தர்மம் செய்தாலும்مِنْஒரு பொருள்شَىْءٍஇல்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بِهٖஅதைعَلِيْمٌ‏மிக நன்கறிந்தவன்
லன் தனாலுல் Bபிர்ர ஹத்தா துன்Fபிகூ மிம்மா துஹிBப்Bபூன்; வமா துன்Fபிகூ மின் ஷய்'இன் Fப இன்னல் லாஹ Bபிஹீ 'அலீம்
முஹம்மது ஜான்
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள். நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான்.
IFT
உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தர்மம் செய்தால்) நீங்கள் விரும்புகின்றனவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யாதவரையில், நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள். நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் நிச்சயமாக, அல்லாஹ் அதனை நன்கறிந்தவன்.
Saheeh International
Never will you attain the good [reward] until you spend [in the way of Allah] from that which you love. And whatever you spend - indeed, Allah is Knowing of it.
كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِیْلُ عَلٰی نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰىةُ ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰىةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
كُلُّஎல்லா(ம்)الطَّعَامِஉணவு(ம்)كَانَஇருந்ததுحِلًّاஆகுமானதாகلِّبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களுக்குاِلَّاதவிரمَاஎவைحَرَّمَவிலக்கினார்اِسْرَآءِيْلُஇஸ்ராயீல்عَلٰى نَفْسِهٖதன் மீதுمِنْ قَبْلِமுன்னர்اَنْ تُنَزَّلَஇறக்கப்படுவதற்குالتَّوْرٰٮةُ ؕதவ்றாத்قُلْகூறுவீராகفَاْتُوْاவாருங்கள்بِالتَّوْرٰٮةِதவ்றாத்தைக்கொண்டுفَاتْلُوْهَاۤஇன்னும் ஓதுங்கள்/அதைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
குல்லுத் த'ஆமி கான ஹில்லல் லி Bபனீ இஸ்ரா'ஈல இல்லா மா ஹர்ரம இஸ்ரா'ஈலு 'அலா னFப்ஸிஹீ மின் கBப்லி அன் துனZஜ்Zஜலத் தவ்ராஹ்; குல் Fப'தூ Bபித் தவ்ராதி Fபத்லூஹா இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.
அப்துல் ஹமீது பாகவி
இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே, இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டு வந்து ஓதிக் காண்பியுங்கள்.''
IFT
(முஹம்மத் நபியுடைய ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும்) உண்பொருள்கள் அனைத்தும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தவ்ராத் அருளப்படுவதற்கு முன் சில பொருட்களை இஸ்ராயீல் (அதாவது யஃகூப்) தாமாகவே தமக்கு தடுக்கப்பட்டனவாய் (ஹராமாய்) ஆக்கிக் கொண்டிருந்தார். எனவே நபியே! அவர்களிடம் நீர் கூறும்: (“உங்கள் ஆட்சேபணையில்) நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், தவ்ராத்தைக் கொண்டுவந்து அதிலிருந்து ஒரு வாசகத்தையேனும் படித்துக் காட்டுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தவ்றாத் இறக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ராயீல் (எனும் யாஃகூப்) தன் மீது விலக்கிக் கொண்டதைத் தவிர, எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக இருந்தது. (ஆகவே, இதற்கு மாறாகக் கூறும் யூதர்களிடம், நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், தவ்றாத்தைக் கொண்டு வந்து அதனை ஓதுங்கள்” (அதன் மூலம் உண்மை தெளிவாகும்.)
Saheeh International
All food was lawful to the Children of Israel except what Israel [i.e., Jacob] had made unlawful to himself before the Torah was revealed. Say, [O Muhammad], "So bring the Torah and recite it, if you should be truthful."
فَمَنِ افْتَرٰی عَلَی اللّٰهِ الْكَذِبَ مِنْ بَعْدِ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟ؔ
فَمَنِஎவர்(கள்)افْتَرٰىகற்பனை செய்கிறார்(கள்)عَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்الْكَذِبَபொய்யைمِنْۢ بَعْدِ ذٰ لِكَஇதற்குப் பின்னர்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الظّٰلِمُوْنَؔ‏அநியாயக்காரர்கள்
FபமனிFப் தரா 'அலல் லாஹில்கதிBப மிம் Bபஃதி தாலிக Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
முஹம்மது ஜான்
இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறினால் அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவர்.
IFT
எனவே அதற்குப் பின்னரும் யார் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைத்தவாறு இருக்கின்றார்களோ, அவர்கள்தாம் உண்மையில் கொடுமையாளர்கள் ஆவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனை செய்தால் அவர்கள் தாம் அநியாயக்காரர்களாவார்கள்.
Saheeh International
And whoever invents about Allah untruth after that - then those are [truly] the wrongdoers.
قُلْ صَدَقَ اللّٰهُ ۫ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராகصَدَقَஉண்மை கூறி விட்டான்اللّٰهُ‌அல்லாஹ்فَاتَّبِعُوْاஆகவே பின்பற்றுங்கள்مِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِيْمَஇப்றாஹீமின்حَنِيْفًا ؕஇஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர்وَمَا كَانَஇன்னும் அவர் இருக்கவில்லை.مِنَ الْمُشْرِكِيْنَ‏இணைவைப்பவர்களில்
குல் ஸதகல் லாஹ்; Fபத்தBபி'ஊ மில்லத இBப்ராஹீம ஹனீFப(ன்)வ் வமா கான மினல் முஷ் ரிகீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘(இவற்றைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இவர்களைப் புறக்கணித்துவிட்டு) நேரான வழியில் சென்ற இப்ராஹீமுடைய மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணைவைத்து வணங்குபவராக இருக்கவில்லை.
IFT
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உண்மையே உரைக்கின்றான். நீங்கள் ஒருமனப்பட்ட இப்ராஹீமின் வழிமுறையைப் பின்பற்றுங்கள்! மேலும் இப்ராஹீம் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் இருந்ததில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! (இவைகளைப் பற்றி) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான். ஆகவே (விசுவாசிகளே! இவர்களைப் புறக்கணித்து விட்டு) சத்தியவழியைச் சார்ந்தவரான இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணைவைத்துக் கொண்டிருப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை.
Saheeh International
Say, "Allah has told the truth. So follow the religion of Abraham, inclining toward truth; and he was not of the polytheists."
اِنَّ اَوَّلَ بَیْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَلَّذِیْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًی لِّلْعٰلَمِیْنَ ۟ۚ
اِنَّநிச்சயமாகاَوَّلَமுதல்بَيْتٍஇல்லம்وُّضِعَஅமைக்கப்பட்டதுلِلنَّاسِமக்களுக்குلَـلَّذِىْஎதுதான்بِبَكَّةَபக்கா வில்مُبٰرَكًاஅருள்செய்யப்பட்டதுوَّهُدًىஇன்னும் நேர்வழிلِّلْعٰلَمِيْنَ‌ۚ‏அகிலத்தார்களுக்கு
இன்ன அவ்வல Bபய்தி(ன்)வ் வுளி'அ லின்னாஸி லல்லதீ Bபி Bபக்கத முBபாரக(ன்)வ் வ ஹுதல் லில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக ‘பக்கா' (மக்கா)வில் இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
IFT
திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா (மக்கா)வில் இருப்பது தான். பரக்கத்துச் செய்யப்பட்டதாக (அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும், அகிலத்தார்க்கு நேர்வழியாகவும் இருக்கின்றது.
Saheeh International
Indeed, the first House [of worship] established for mankind was that at Bakkah [i.e., Makkah] - blessed and a guidance for the worlds.
فِیْهِ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِیْمَ ۚ۬ وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ؕ وَلِلّٰهِ عَلَی النَّاسِ حِجُّ الْبَیْتِ مَنِ اسْتَطَاعَ اِلَیْهِ سَبِیْلًا ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟
فِيْهِஅதில்اٰيٰتٌ ۢஅத்தாட்சிகள்بَيِّنٰتٌதெளிவானவைمَّقَامُநின்ற இடம்اِبْرٰهِيْمَۚஇப்றாஹீம்وَمَنْஇன்னும் எவர்دَخَلَهٗநுழைகிறார்/அதில்كَانَஆகி விட்டார்اٰمِنًا ؕஅச்சமற்றவராகوَلِلّٰهِஅல்லாஹ்வுக்காகعَلَىமீதுالنَّاسِமக்கள்حِجُّஹஜ் செய்வதுالْبَيْتِஇல்லத்தைمَنِஎவர்اسْتَطَاعَசக்தி பெற்றார்اِلَيْهِஅதன் பக்கம்سَبِيْلًا ؕபாதையால்وَمَنْஇன்னும் எவர்كَفَرَநிராகரித்தார்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்غَنِىٌّதேவையற்றவன்عَنِவிட்டுالْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களை
Fபீஹி ஆயாதும் Bபய்யினாதும் மகாமு இBப்ராஹீம வ மன் தகலஹூ கான ஆமினா; வ லில்லாஹி 'அலன் னாஸி ஹிஜ்ஜுல் Bபய்தி மனிஸ் ததா'அ இலய்ஹி ஸBபீலா; வ மன் கFபர Fப இன்னல் லாஹ கனிய்யுன் 'அனில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (பாதுகாப்புப் பெற்று) அச்சமற்றவராகி விடுகிறார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவன் ஆவான்.
IFT
அங்குத் தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் தெளிவான அத்தாட்சிகளும், இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இட(மான ‘மகாம் இப்ராஹீ’)மும் இருக்கின்றது, மேலும் எவர் அதில் நுழைகின்றாரோ அவர், (அபயம் பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். (ஆகவே) எவர்கள் அங்கு யாத்திரை செல்லச் சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்)வீட்டை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் அனைவரை விட்டும் தேவையற்றவன்.
Saheeh International
In it are clear signs [such as] the standing place of Abraham. And whoever enters it [i.e., the haram] shall be safe. And [due] to Allah from the people is a pilgrimage to the House - for whoever is able to find thereto a way. But whoever disbelieves [i.e., refuses] - then indeed, Allah is free from need of the worlds.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ۖۗ وَاللّٰهُ شَهِیْدٌ عَلٰی مَا تَعْمَلُوْنَ ۟
قُلْகூறுவீராகيٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلِمَஏன்تَكْفُرُوْنَநிராகரிக்கிறீர்கள்بِاٰيٰتِ اللّٰهِ ۖவசனங்களை/ அல்லாஹ்வின்وَاللّٰهُஅல்லாஹ்شَهِيْدٌசாட்சியாளன்عَلٰى مَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்வதற்கு
குல் யா அஹ்லல் கிதாBபி லிம தக்Fபுரூன Bபி ஆயாதில்லாஹி வல்லாஹு ஷஹீதுன் 'அலா மா தஃமலூன்
முஹம்மது ஜான்
“வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘வேதத்தை உடையவர்களே! அல்லாஹ்வின் வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கிறீர்கள். அல்லாஹ்வோ நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சாட்சியாவான்.''
IFT
(நபியே!) நீர் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! “வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின், வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றிற்கு சாட்சியாக (நேருக்குநேர் பார்ப்பவனாக) இருக்கின்றான்.
Saheeh International
Say, "O People of the Scripture, why do you disbelieve in the verses of Allah while Allah is Witness over what you do?"
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
قُلْகூறுவீராகيٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلِمَஏன்تَصُدُّوْنَதடுக்கிறீர்கள்عَنْவிட்டும்سَبِيْلِபாதைاللّٰهِஅல்லாஹ்வின்مَنْஎவரைاٰمَنَநம்பிக்கை கொண்டார்تَبْغُوْنَهَاஅதில் தேடுகிறீர்கள்عِوَجًاகோணலைوَّاَنْتُمْநீங்களேشُهَدَآءُ ؕசாட்சிகள்وَمَاஇல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍகவனமற்றவனாகعَمَّا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்வதைப் பற்றி
குல் யா அஹ்லல் கிதாBபி லிம தஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி மன் ஆமன தBப்கூனஹா 'இவஜ(ன்)வ் வ அன்தும் ஷுஹதா'; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
முஹம்மது ஜான்
“வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்,) கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையை விட்டும் நம்பிக்கையாளர்களை ஏன் தடுக்கிறீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சி கூறிக்கொண்டே அதைக் கோணலாக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை.
IFT
(நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டவரை அல்லாஹ்வுடைய வழியில் செல்லவிடாமல் ஏன் தடுக்கின்றீர்கள்? (அவர்கள் நேரான வழியில்தான் செல்கின்றார்கள் என்பதற்கு) நீங்களே சான்று வழங்குவோராயிருந்தும், அவர்கள் கோணலான வழியில் செல்ல வேண்டுமென ஏன் விரும்புகின்றீர்கள்? உங்கள் செயல்களைக் குறித்து அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக: “வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையிலிருந்து விசுவாசிகளை ஏன் தடை செய்கின்றீர்கள்? (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சியம் கூறிக்கொண்டே, அதனைக் கோணலாக்கத் தேடுகின்றீர்கள். இன்னும் நீங்கள் செய்பவைகளைப் பற்றி அல்லாஹ் பாராமுகமானவனல்லன்.
Saheeh International
Say, "O People of the Scripture, why do you avert from the way of Allah those who believe, seeking to make it [seem] deviant, while you are witnesses [to the truth]? And Allah is not unaware of what you do."
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِیْعُوْا فَرِیْقًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ یَرُدُّوْكُمْ بَعْدَ اِیْمَانِكُمْ كٰفِرِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِنْ تُطِيْعُوْاநீங்கள் கீழ்ப்படிந்தால்فَرِيْقًاஒரு பிரிவினருக்குمِّنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்يَرُدُّوْكُمْமாற்றிடுவார்கள்/ உங்களைبَعْدَபின்னர்اِيْمَانِكُمْநீங்கள் நம்பிக்கை கொண்டதற்குكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் துதீ'ஊ Fபரீகம் மினல் லதீன ஊதுல் கிதாBப யருத்தூகும் Bபஃத ஈமானிகும் காFபிரீன்
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! வேதத்தையுடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டதற்கு பின் உங்களை அவர்கள் நிராகரிப்பவர்களாக மாற்றிவிடுவார்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினரின் கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் உங்களுடைய நம்பிக்கையிலிருந்து உங்களைப் பிறழச் செய்து இறைமறுப்பின்பால் உங்களைக் கொண்டுபோய் விடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங் கொண்டோரே! வேதங்கொடுக்கப்பட்டோரில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்படிந்து நடந்தால், உங்களுடைய விசுவாசத்திற்குப் பின்னரும் நிராகரிப்போராக உங்களை அவர்கள் திருப்பிவிடுவார்கள்.
Saheeh International
O you who have believed, if you obey a party of those who were given the Scripture, they would turn you back, after your belief, [to being] unbelievers.
وَكَیْفَ تَكْفُرُوْنَ وَاَنْتُمْ تُتْلٰی عَلَیْكُمْ اٰیٰتُ اللّٰهِ وَفِیْكُمْ رَسُوْلُهٗ ؕ وَمَنْ یَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِیَ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟۠
وَكَيْفَஎவ்வாறுتَكْفُرُوْنَநிராகரிப்பீர்கள்وَاَنْـتُمْநீங்களோتُتْلٰىஓதப்படعَلَيْكُمْஉங்கள் மீதுاٰيٰتُவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்وَفِيْكُمْஉங்களுடன் இருக்கرَسُوْلُهٗ ؕஅவனுடைய தூதர்وَمَنْஎவர்يَّعْتَصِمْபலமாகப் பற்றிக் கொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வைفَقَدْ هُدِىَதிட்டமாக நேர்வழி காட்டப்படுவார்اِلٰىபக்கம்صِرَاطٍஒரு பாதைمُّسْتَقِيْمٍ‏நேரானது
வ கய்Fப தக்Fபுரூன வ அன்தும் துத்லா 'அலய்கும் ஆயாதுல் லாஹி வ Fபீகும் ரஸூலுஹ்; வ மய் யஃதஸிம் Bபில்லாஹி Fபகத் ஹுதிய இலா ஸிராதிம் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் எப்படி (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிட முடியும்? உங்கள் மத்தியில் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். அவனுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டுவிட்டார்.
IFT
உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. மேலும் அவனுடைய தூதரும் உங்களிடையே இருக்கின்றார். அவ்வாறிருக்க, இறைமறுப்பின்பால் செல்ல உங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? யார் அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்கின்றாரோ, அவர் நேரான வழியினை நிச்சயம் பெற்றுக் கொள்வார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டிருக்க, உங்களுக்கு மத்தியில் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? இன்னும், எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தைப்) பலமாகப் பற்றிக் கொள்கின்றாரோ அப்போது அவர் திட்டமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டு விட்டார்.
Saheeh International
And how could you disbelieve while to you are being recited the verses of Allah and among you is His Messenger? And whoever holds firmly to Allah has [indeed] been guided to a straight path.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைحَقَّஉண்மையான முறைتُقٰتِهٖஅவனைஅஞ்சுதல்وَلَا تَمُوْتُنَّஇன்னும் இறந்துவிடாதீர்கள்اِلَّا وَاَنْـتُمْநீங்கள் இருந்தே தவிரمُّسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ ஹக்க துகாதிஹீ வலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை-அவனைப் பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள், மேலும், நிச்சயமாக (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம்.
Saheeh International
O you who have believed, fear Allah as He should be feared and do not die except as Muslims [in submission to Him].
وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِیْعًا وَّلَا تَفَرَّقُوْا ۪ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَلَّفَ بَیْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰی شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟
وَاعْتَصِمُوْاஇன்னும் பற்றிப்பிடியுங்கள்بِحَبْلِகயிற்றைاللّٰهِஅல்லாஹ்வின்جَمِيْعًاஅனைவரும்وَّلَا تَفَرَّقُوْا‌இன்னும் பிரிந்து விடாதீர்கள்وَاذْكُرُوْاஇன்னும் நினைவு கூருங்கள்نِعْمَتَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுاِذْபோதுكُنْتُمْஇருந்தீர்கள்اَعْدَآءًஎதிரிகளாகفَاَ لَّفَஇணக்கத்தை ஏற்படுத்தினான்بَيْنَமத்தியில்قُلُوْبِكُمْஉள்ளங்கள்/உங்கள்فَاَصْبَحْتُمْஆகவே ஆகிவிட்டீர்கள்بِنِعْمَتِهٖۤஅவனுடைய அருட் கொடையால்اِخْوَانًا ۚசகோதரர்களாகوَكُنْتُمْஇன்னும் இருந்தீர்கள்عَلٰى شَفَاஓரத்தில்حُفْرَةٍஒரு குழியின்مِّنَ النَّارِநரகத்தின்فَاَنْقَذَகாப்பாற்றினான்كُمْஉங்களைمِّنْهَا ؕஅதிலிருந்துكَذٰلِكَஇவ்வாறுيُبَيِّنُதெளிவுப்படுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குاٰيٰتِهٖதன் வசனங்களைلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
வஃதஸிமூ Bபி ஹBப்லில் லாஹி ஜமீ'அ(ன்)வ் வலா தFபர்ரகூ; வத்குரூ னிஃமதல் லாஹி அலய்கும் இத் குன்தும் அஃதா'அன் Fப அல்லFப Bபய்ன குலூBபிகும் Fப அஸ்Bபஹ் தும் Bபினிஃமதிஹீ இக்வான(ன்)வ் வ குன்தும் 'அலா ஷFபா ஹுFப்ரதிம் மினன் னாரி Fப அன்கதகும் மின்ஹா; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஹ்ததூன்
முஹம்மது ஜான்
இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இப்படி தெளிவுபடுத்திக் காண்பிக்கிறான்.
IFT
நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும், அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களை அதிலிருந்து காப்பாற்றி விட்டான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம், மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் (ஒருவர் மற்றவருக்கு) விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான், ஆகவே., அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள், (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள், அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான், நீங்கள் நேர்வழிப் பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்.
Saheeh International
And hold firmly to the rope of Allah all together and do not become divided. And remember the favor of Allah upon you - when you were enemies and He brought your hearts together and you became, by His favor, brothers. And you were on the edge of a pit of the Fire, and He saved you from it. Thus does Allah make clear to you His verses that you may be guided.
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ یَّدْعُوْنَ اِلَی الْخَیْرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
وَلْتَكُنْஇருக்கட்டும்مِّنْكُمْஉங்களில்اُمَّةٌஒரு குழுيَّدْعُوْنَஅழைக்கிறார்கள்اِلَىபக்கம்الْخَيْرِசிறந்ததுوَيَاْمُرُوْنَஇன்னும் ஏவுகிறார்கள்بِالْمَعْرُوْفِநன்மையைوَيَنْهَوْنَஇன்னும் தடுக்கிறார்கள்عَنِ الْمُنْكَرِ‌ؕபாவத்திலிருந்துوَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
வல்தகும் மின்கும் உம்மது(ன்)ய் யத்'ஊன இலல் கய்ரி வ ய'முரூன Bபில் மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கர்; வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
முஹம்மது ஜான்
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
IFT
நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (விசுவாசங்கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்-அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும், அவர்களே தாம் வெற்றி பெற்றோர்.
Saheeh International
And let there be [arising] from you a nation inviting to [all that is] good, enjoining what is right and forbidding what is wrong, and those will be the successful.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَیِّنٰتُ ؕ وَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
وَلَا تَكُوْنُوْاஆகிவிடாதீர்கள்كَالَّذِيْنَஎவர்கள் போல்تَفَرَّقُوْاபிரிந்தார்கள்وَاخْتَلَفُوْاஇன்னும் முரண்பட்டார்கள்مِنْۢ بَعْدِ مَا جَآءவந்த பின்னர்هُمُதங்களிடம்الْبَيِّنٰتُ‌ؕதெளிவான அத்தாட்சிகள்وَاُولٰٓٮِٕكَஇன்னும் அவர்கள்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைعَظِيْمٌۙ‏பெரியது
வ லா தகூனூ கல்லதீன தFபர்ரகூ வக்தலFபூ மிம் Bபஃதி மா ஜா'அஹுமுல் Bபய்யினாத்; வ உலா'இக லஹும் 'அதாBபுன் 'அளீம்
முஹம்மது ஜான்
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு.
IFT
எவர்கள் தம்மிடம் தெளிவான அறிவுரைகள் வந்த பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பற்பல பிரிவினராய்ச் சிதறுண்டு விட்டார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். (யார் இத்தகைய நடத்தையை மேற்கொள்கிறார்களோ) அவர்களுக்கு மறுமைநாளில் மாபெரும் தண்டனை உண்டு.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்ததன் பின்னரும் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக்கொண்டு, (கருத்து) வேறுபட்டுப் போனார்களே, அத்தகையோரைப்போல நீங்களும் ஆகிவிட வேண்டாம், அத்தகையோருக்குத்தான் மறுமையில் மகத்தான வேதனையுமுண்டு
Saheeh International
And do not be like the ones who became divided and differed after the clear proofs had come to them. And those will have a great punishment
یَّوْمَ تَبْیَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ ۚ فَاَمَّا الَّذِیْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ ۫ اَكَفَرْتُمْ بَعْدَ اِیْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
يَّوْمَநாள்تَبْيَضُّவெண்மையாகும்وُجُوْهٌ(சில) முகங்கள்وَّتَسْوَدُّஇன்னும் கறுக்கும்وُجُوْهٌ  ؕ(சில) முகங்கள்فَاَمَّاஆகالَّذِيْنَஎவர்கள்اسْوَدَّتْகறுத்தனوُجُوْهُهُمْஅவர்களுடைய முகங்கள்اَكَفَرْتُمْநிராகரித்தீர்களா?بَعْدَபின்னர்اِيْمَانِكُمْநீங்கள் நம்பிக்கை கொள்ளுதல்فَذُوْقُواஆகவே சுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَا كُنْتُمْநீங்கள் இருந்த காரணத்தால்تَكْفُرُوْنَ‏நிராகரிக்கிறீர்கள்
யவ்ம தBப் யள்ளு வுஜூஹு(ன்)வ் வ தஸ்வத்து வுஜூஹ்; Fப-அம்மல் லதீனஸ் வத்தத் வுஜூ ஹும் அகFபர்தும் Bபஃத ஈமானிகும் Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
முஹம்மது ஜான்
அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்து (வாடியு)மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து (வாடி) இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நம்பிக்கை கொண்டபின் (அதை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்'' (என்று கூறப்படும்.)
IFT
அந்நாளில் சிலரின் முகங்கள் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருக்கும். மற்றும் சிலரின் முகங்களோ துயரத்தால் கறுத்துப் போயிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்திருக்குமோ அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை எனும் அருட்கொடையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நன்றி கொல்லும் போக்கினை மேற்கொண்டீர்களல்லவா? இவ்வாறு நீங்கள் நன்றி மறந்து வாழும் போக்கினை மேற்கொண்டதால் இப்போது நரக வேதனையைச் சுவையுங்கள்!” என்று சொல்லப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சில முகங்கள் (மலர்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்), கறுத்து (வாடியு)மிருக்கும் நாளில் அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு, ஆகவே, எவர்களுடைய முகங்கள் கறுத்து(வாடி) இருக்கின்றனவோ, (அவர்களிடம்,) “நீங்கள் விசுவாசங் கொண்டபின் (அதனை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்ததன் காரணமாக (நரக) வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.
Saheeh International
On the Day [some] faces will turn white and [some] faces will turn black. As for those whose faces turn black, [to them it will be said], "Did you disbelieve [i.e., reject faith] after your belief? Then taste the punishment for what you used to reject."
وَاَمَّا الَّذِیْنَ ابْیَضَّتْ وُجُوْهُهُمْ فَفِیْ رَحْمَةِ اللّٰهِ ؕ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
وَاَمَّا الَّذِيْنَஆக, எவர்கள்ابْيَـضَّتْவெண்மையாகினوُجُوْهُهُمْஅவர்களுடைய முகங்கள்فَفِىْ رَحْمَةِஅருளில்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
வ அம்மல் லதீன Bபி யள்ளத் வுஜூஹுஹும் FபFபீ ரஹ்மதில் லாஹி ஹும் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக் கின்றனவோ (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கிவிடுங்கள்'' (என்று கூறப்படும்.) அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
IFT
எவருடைய முகங்கள் மின்னிக் கொண்டிருக்குமோ, அவர்கள் அல்லாஹ்வுடைய அருளில் இருப்பார்கள். மேலும் அதிலே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர்களுடைய முகங்கள் (மலர்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Saheeh International
But as for those whose faces turn white, [they will be] within the mercy of Allah. They will abide therein eternally.
تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ؕ وَمَا اللّٰهُ یُرِیْدُ ظُلْمًا لِّلْعٰلَمِیْنَ ۟
تِلْكَஇவைاٰيٰتُவசனங்கள்اللّٰهِஅல்லாஹ்வின்نَـتْلُوஓதுகிறோம்هَاஅவற்றைعَلَيْكَஉம்மீதுبِالْحَـقِّ‌ؕஉண்மையாகவேوَمَاஇல்லைاللّٰهُஅல்லாஹ்يُرِيْدُநாடுகிறான்ظُلْمًاஅநியாயத்தைلِّلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
தில்க ஆயாதுல் லாஹி னத்லூஹா 'அலய்க Bபில்ஹக்க்; வ மல் லாஹு யுரீது ளுல்மல்லில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
(நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்; மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவற்றை உண்மையாகவே நாம் உமக்கு ஓதிக் காண்பிக்கிறோம். மேலும், அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாடமாட்டான்.
IFT
இவை அல்லாஹ்வின் அருளுரைகள்! இவற்றை மிகச் சரியாக உமக்கு நாம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், அல்லாஹ் அகிலத்தாருக்குக் கொடுமைபுரிய நாடுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும், உண்மையைக் கொண்டுள்ள அவற்றை நாம் உமக்கு ஓதிக்காண்பிக்கின்றோம், மேலும் அல்லாஹ் அகிலத்தார்க்கு அநீதியை (ச்செய்ய) நாட மாட்டான்.
Saheeh International
These are the verses of Allah. We recite them to you, [O Muhammad], in truth; and Allah wants no injustice to the worlds [i.e., His creatures].
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
وَلِلّٰهِஅல்லாஹ்விற்குمَاஎவைفِى السَّمٰوٰتِவானங்களில்وَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் எவை/பூமியில்وَاِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்تُرْجَعُதிருப்பப்படும்الْاُمُوْرُ‏காரியங்கள்
வ லில்லாஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
முஹம்மது ஜான்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.
IFT
வானங்கள், பூமி இவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் உரிமையாளன் அல்லாஹ்வே ஆவான். மேலும் எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்கே உரியன, (இவை சம்பந்தமான) சகல காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
Saheeh International
To Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And to Allah will [all] matters be returned.
كُنْتُمْ خَیْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَكَانَ خَیْرًا لَّهُمْ ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ ۟
كُنْتُمْஇருக்கிறீர்கள்خَيْرَசிறந்த(வர்கள்)اُمَّةٍசமுதாயம்اُخْرِجَتْவெளியாக்கப்பட்டதுلِلنَّاسِமக்களுக்காகتَاْمُرُوْنَஏவுகிறீர்கள்بِالْمَعْرُوْفِநன்மையைக்கொண்டுوَتَنْهَوْنَஇன்னும் தடுக்கிறீர்கள்عَنِ الْمُنْكَرِதீமையை விட்டும்وَتُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்بِاللّٰهِ‌ؕஅல்லாஹ்வைوَلَوْ اٰمَنَநம்பிக்கைகொண்டால்اَهْلُ الْكِتٰبِவேதக்காரர்கள்لَڪَانَஉறுதி ஆகிவிட்டதுخَيْرًاசிறந்ததாகلَّهُمْ‌ؕஅவர்களுக்குمِنْهُمُஅவர்களில்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்وَاَكْثَرஇன்னும் அதிகமானவர்கள்هُمُஅவர்களில்الْفٰسِقُوْنَ‏பாவிகள்
குன்தும் கய்ர உம்மதின் உக்ரிஜத் லின்னாஸி த'முரூன Bபில்மஃரூFபி வ தன்ஹவ்ன 'அனில் முன்கரி வ து'மினூன Bபில்லாஹ்; வ லவ் ஆமன அஹ்லுல் கிதாBபி லகான கய்ரல் லஹும் மின்ஹுமுல் மு'மினூன வ அக்தருஹுமுல் Fபாஸிகூன்
முஹம்மது ஜான்
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கிறீர்கள். வேதத்தையுடையவர்களும் (இவ்வாறே) நம்பிக்கைகொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்டவர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகள்தான்.
IFT
இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள், மேலும், (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் விசுவாசித்து நடந்தால் அது அவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும், விசுவாசிப்போரும் அவர்களில் (சிலா்) இருக்கின்றனர்; இன்னும், அவர்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்வின் கட்டளையை மீறும்) பாவிகளாவர்.
Saheeh International
You are the best nation produced [as an example] for mankind. You enjoin what is right and forbid what is wrong and believe in Allah. If only the People of the Scripture had believed, it would have been better for them. Among them are believers, but most of them are defiantly disobedient.
لَنْ یَّضُرُّوْكُمْ اِلَّاۤ اَذًی ؕ وَاِنْ یُّقَاتِلُوْكُمْ یُوَلُّوْكُمُ الْاَدْبَارَ ۫ ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟
لَنْஅறவே அவர்கள் தீங்கு செய்யமுடியாதுيَّضُرُّوْكُمْஉங்களுக்குاِلَّاۤதவிரاَذًى‌ؕசிரமம்وَاِنْஇன்னும் அவர்கள் உங்களிடம் போரிட்டால்يُّقَاتِلُوْكُمْதிருப்புவார்கள்يُوَلُّوْكُمُஉங்களுக்குالْاَدْبَارَபின்புறங்களைثُمَّபிறகுلَا يُنْصَرُوْنَ‏உதவி செய்யப்பட மாட்டார்கள்
லய் யளுர்ரூகும் 'இல்லா அத(ன்)வ் வ இய் யுகாதிலூகும் யுவல்லூகுமுல் அத்Bபார தும்ம லா யுன்ஸரூன்
முஹம்மது ஜான்
இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்; இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) இவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர்புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெறமாட்டார்கள்.
IFT
அவர்களால் உங்களுக்குத் தீங்கு எதையும் இழைத்துவிட முடியாது; சிறுசிறு தொல்லைகள் தருவதைத் தவிர! ஆயினும் உங்களோடு போரிட்டால் அவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள். பிறகு எங்கிருந்தும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! இத்தகையோர்) உங்களுக்குச் சிறிது தொல்லையிழைப்பதைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்துவிடவே முடியாது, மேலும், உங்களுடன் அவர்கள் யுத்தம் புரிய முற்பட்டாலோ, அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டியே ஓடுவார்கள், பின்னர் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படமாட்டார்கள்.
Saheeh International
They will not harm you except for [some] annoyance. And if they fight you, they will show you their backs [i.e., retreat]; then they will not be aided.
ضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ اَیْنَ مَا ثُقِفُوْۤا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَیْهِمُ الْمَسْكَنَةُ ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟ۗ
ضُرِبَتْவிதிக்கப்பட்டதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالذِّلَّةُஇழிவுاَيْنَ مَاஎங்கெல்லாம்ثُقِفُوْۤاபெற்றுக் கொள்ளப்பட்டார்கள்اِلَّاதவிரبِحَبْلٍகயிற்றைக் கொண்டுمِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَحَبْلٍஇன்னும் கயிறுمِّنَ النَّاسِமக்களின்وَبَآءُوْஇன்னும் திரும்பி விட்டார்கள்بِغَضَبٍகோபத்தில்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَضُرِبَتْஇன்னும் விதிக்கப்பட்டதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالْمَسْكَنَةُ  ؕஏழ்மைذٰ لِكَஅதுبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்يَكْفُرُوْنَநிராகரிக்கிறார்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَيَقْتُلُوْنَஇன்னும் கொலை செய்கிறார்கள்الْاَنْۢبِيَآءَநபிமார்களைبِغَيْرِ حَقٍّ‌ؕநியாயம் இன்றிذٰ لِكَஅதுبِمَا عَصَوْاஅவர்கள் மாறு செய்த காரணத்தால்وَّكَانُوْاஇன்னும் இருந்தார்கள்يَعْتَدُوْنَ‏வரம்பு மீறுகிறார்கள்
ளுரிBபத் 'அலய்ஹிமுத் தில்லது அய்ன மா துகிFபூ இல்லா BபிஹBப்லிம் மினல் லாஹி வ ஹBப்லிம் மினன் னாஸி வ Bபா'ஊ BபிகளBபிம் மினல்லாஹி வ ளுரிBபத் 'அலய்ஹிமுல் மஸ்கனஹ்; தாலிக Bபி-அன்னஹும் கானூ யக்Fபுரூன Bபி ஆயாதில் லாஹி வ யக்துலூனல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்க்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
முஹம்மது ஜான்
அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே தவிர (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது). அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்து கொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்து கொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும்.
IFT
அவர்கள் எங்கு காணப்படினும், அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் பொறுப்பில் அல்லது மனிதர்களின் பொறுப்பில் எங்கேனும் அவர்களுக்கு பாதுகாப்புக் கிட்டினாலே தவிர! மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டனர். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டன. இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து வந்ததும் அவனுடைய தூதர்களை நியாயமின்றிக் கொலை செய்ததும்தான்; அவர்கள் (இறைவனுக்கு) மாறு செய்ததாலும் வரம்பு மீறிச் செயல்பட்டதாலும் ஏற்பட்ட விளைவுகளாகும் இவை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எங்கு காணப்பட்டபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது, (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் உடன்படிக்கையைக் கொண்டும் (விசுவாசங் கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) உடன்படிக்கையைக் கொண்டுமேயன்றி (அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.) மேலும், அல்லாஹ்விடமிருந்துள்ள கோபத்தைக்கொண்டு அவர்கள் திரும்பிவிட்டார்கள், ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டது, இது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக்கொண்டும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததின் காரணத்தினாலாகும், (மேலும்) அது அவர்கள் மாறு செய்துகொண்டும் வரம்பு மீறிக்கொண்டும் இருந்த காரணத்தினாலாகும்.
Saheeh International
They have been put under humiliation [by Allah] wherever they are overtaken, except for a rope [i.e., covenant] from Allah and a rope [i.e., treaty] from the people [i.e., the Muslims]. And they have drawn upon themselves anger from Allah and have been put under destitution. That is because they disbelieved in [i.e., rejected] the verses of Allah and killed the prophets without right. That is because they disobeyed and [habitually] transgressed.
لَیْسُوْا سَوَآءً ؕ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآىِٕمَةٌ یَّتْلُوْنَ اٰیٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّیْلِ وَهُمْ یَسْجُدُوْنَ ۟
لَـيْسُوْاஅவர்கள் இல்லைسَوَآءً ؕசமமானவர்களாகمِنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில்اُمَّةٌஒரு கூட்டத்தினர்قَآٮِٕمَةٌகாயிமா (நீதமானவர்கள்)يَّتْلُوْنَஓதுகிறார்கள்اٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்اٰنَآءَநேரங்கள்الَّيْلِஇரவின்وَ هُمْஇன்னும் அவர்கள்يَسْجُدُوْنَ‏சிரம் பணிகிறார்கள்
லய்ஸூ ஸவா'அ; மின் அஹ்லில் கிதாBபி உம்மதுன் கா'இமது(ன்)ய் யத்லூன ஆயாதில் லாஹி ஆனா'அல் லய்லி வ ஹும் யஸ்ஜுதூன்
முஹம்மது ஜான்
(எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்; வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்; இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் நல்லோரான ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம்பணிந்து வணங்குகின்றனர்.
IFT
ஆனால், வேதம் அருளப்பட்டோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்களாய் இல்லை. அவர்களில் நேரிய வழியில் நிலைத்து நிற்கும் ஒரு குழுவினரும் இருக்கின்றனர்; அவர்கள் இராக்காலங்களில் இறைவசனங்களை ஓதுகின்றனர். (அல்லாஹ்வின் முன்னிலையில்) ஸுஜூது சிரம்தாழ்த்திப் பணிகின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (அனைவரும்) சமமானவர்களல்லர், வேதத்தையுடையவர்களில் (நேர்வழியில்) நிற்கும் ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர், அவர்கள் இரவுக்காலங்களில் சிரம் பணிந்தவர்களாக (தொழுபவர்களாக) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதுகின்றனர்.
Saheeh International
They are not [all] the same; among the People of the Scripture is a community standing [in obedience], reciting the verses of Allah during periods of the night and prostrating [in prayer].
یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُسَارِعُوْنَ فِی الْخَیْرٰتِ ؕ وَاُولٰٓىِٕكَ مِنَ الصّٰلِحِیْنَ ۟
يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளைوَ يَاْمُرُوْنَஇன்னும் ஏவுகிறார்கள்بِالْمَعْرُوْفِநன்மையைக்கொண்டுوَيَنْهَوْنَஇன்னும் தடுக்கிறார்கள்عَنِ الْمُنْكَرِதீமையை விட்டும்وَيُسَارِعُوْنَஇன்னும் விரைகிறார்கள்فِىْ الْخَيْرٰتِ ؕநன்மைகளில்وَاُولٰٓٮِٕكَஇன்னும் இவர்கள்தான்مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லோரில்
யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ ய'முரூன Bபில்மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கரி வ யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ உலா'இக மினஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இவர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே.
IFT
இன்னும் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்புகின்றனர். நல்லவை புரியுமாறு ஏவி, தீயவற்றிலிருந்து தடுக்கின்றனர். மேலும், நற்பணிகளில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர். இவர்கள்தாம் நன் மக்களில் உள்ளவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் விசுவாசிக்கின்றனர், இன்னும், நன்மையைக் கொண்டும் (மனிதர்களை) ஏவுகின்றனர், தீமையை (விட்டும்) தடுக்கின்றனர், இன்னும், நன்மையானவற்றில் விரைந்தும் செல்கின்றனர், மேலும், இவர்கள் நல்லோர்களில் உள்ளோராவர்.
Saheeh International
They believe in Allah and the Last Day, and they enjoin what is right and forbid what is wrong and hasten to good deeds. And those are among the righteous.
وَمَا یَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَلَنْ یُّكْفَرُوْهُ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالْمُتَّقِیْنَ ۟
وَمَا يَفْعَلُوْاஅவர்கள் எதைச் செய்தாலும்مِنْ خَيْرٍநன்மையில்فَلَنْ يُّكْفَرُوْهُ ؕஅதை அறவே நிராகரிக்கப்பட மாட்டார்கள்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِالْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களை
வமா யFப்'அலூ மின் கய்ரின் Fபலய் யுக்Fபரூஹ்; வல்லாஹு 'அலீமுன் Bபில்முத்தகீன்
முஹம்மது ஜான்
இவர்கள் செய்யும் எந்த நன்மையும் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது; அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான்.
IFT
மேலும், இவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது புறக்கணிக்கப்படமாட்டாது. இறையச்சமுள்ளவர்களை அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அதற்காக நற்கூலி பெறுவதை மறுக்கப்படமாட்டார்கள், இத்தகைய பயபக்தியுடையோரை அல்லாஹ் நன்கறிகிறவன்.
Saheeh International
And whatever good they do - never will it be denied them. And Allah is Knowing of the righteous.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்لَنْ تُغْنِىَதடுக்காதுعَنْهُمْஅவர்களை விட்டுاَمْوَالُهُمْஅவர்களின் செல்வங்கள்وَلَاۤ اَوْلَادُهُمْஇன்னும் அவர்களின்சந்ததிகள்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துشَيْئًا  ؕஎதையும்وَاُولٰٓٮِٕكَஇன்னும் அவர்கள்اَصْحٰبُ النَّارِ‌ۚநரகவாசிகள்هُمْஅவர்கள்فِيْهَاஅதில்خٰلِدُوْنَ‏நிரந்தரமானவர்கள்
இன்னல் லதீன கFபரூ லன் துக்னிய 'அன்ஹும் அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும் மினல் லாஹி ஷய்'அ(ன்)வ் வ உலா'இக அஸ்-ஹாBபுன் னார்; ஹும் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கிறார் களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றி விடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கி விடுவார்கள்.
IFT
எவர்கள் நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களும் சரி, பிள்ளைகளும் சரி அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலனளிக்கமாட்டா! அவர்கள்தாம் நரகவாசிகள்! மேலும் அதிலேயே அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்களும். அல்லாஹ்வினுடைய வேதனையிலிருந்து அவர்களை விட்டு எந்த ஒன்றையும் தேவையுறச் செய்யாது, மேலும், அவர்கள் நரகவாசிகள்தாம், அதில் நிரந்தரமாக அவர்கள் (தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
Indeed, those who disbelieve - never will their wealth or their children avail them against Allah at all, and those are the companions of the Fire; they will abide therein eternally.
مَثَلُ مَا یُنْفِقُوْنَ فِیْ هٰذِهِ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَثَلِ رِیْحٍ فِیْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
مَثَلُஉதாரணம்مَاஎதுيُنْفِقُوْنَதர்மம் செய்கிறார்கள்فِىْ هٰذِهِஇதில்الْحَيٰوةِவாழ்வுالدُّنْيَاஉலகம்كَمَثَلِஉதாரணத்தைப் போல்رِيْحٍகாற்றுفِيْهَاஅதில்صِرٌّகடுமையான குளிர்اَصَابَتْஅடைந்ததுحَرْثَவிளை நிலத்தைقَوْمٍஒரு கூட்டத்தாரின்ظَلَمُوْۤاஅநீதியிழைத்தனர்اَنْفُسَهُمْதங்களுக்குத்தாமேفَاَهْلَكَتْهُ ؕஅதை அழித்ததுوَمَاஇல்லைظَلَمَهُمُஅவர்களுக்கு அநீதியிழைக்கاللّٰهُஅல்லாஹ்وَلٰـكِنْஎனினும்اَنْفُسَهُمْதங்களுக்கேيَظْلِمُوْنَ‏அநீதியிழைக்கின்றனர்
மதலு மா யுன்Fபிகூன Fபீ ஹாதிஹில் ஹயாதித் துன்யா கமதலி ரீஹின் Fபீஹா ஸிர்ருன் அஸாBபத் ஹர்த கவ்மின் ளலமூ அன்Fபுஸஹும் Fப அஹ்லகத்; வமா ளலமஹுமுல் லாஹு வ லாகின் அன்Fபுஸஹும் யள்லிமூன்
முஹம்மது ஜான்
இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்; அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை; அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கிறது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதை அழித்து விட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
IFT
இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பதற்கான உவமை கடும் பனிப்புயல் போன்றதாகும். அதுவோ தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் வேளாண்மை நிலத்தைத் தாக்கி நாசப்படுத்துகிறது. அல்லாஹ் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை; உண்மையில் அவர்கள் தமக்குத்தாமே கொடுமை இழைத்துக் கொள்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாத்திற்கு விரோதமாக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம்: ஒரு காற்றைப் போல் இருக்கின்றது, அதில் கடுமையான குளிர் இருக்கிறது, தமககுத் தாமே அநியாயமிழைத்துக்கொண்ட ஒரு கூட்டத்தாரின் பயிரில் பட்டு அப்போது அதனை அது அழித்துவிடுகிறது, அல்லாஹ்வோ அவர்களுக்கு அநியாயமிழைத்து விடவில்லை, எனினும் இவர்கள் தமக்குத்தாமே அநியாயமிழைத்துக் கொள்கின்றனர்.
Saheeh International
The example of what they spend in this worldly life is like that of a wind containing frost which strikes the harvest of a people who have wronged themselves [i.e., sinned] and destroys it. And Allah has not wronged them, but they wrong themselves.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا یَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ ۖۚ وَمَا تُخْفِیْ صُدُوْرُهُمْ اَكْبَرُ ؕ قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَتَّخِذُوْاஆக்காதீர்கள்بِطَانَةًஉற்ற நண்பர்களைمِّنْஇருந்துدُوْنِكُمْஉங்கள்அல்லாதவர்கள்لَاமாட்டார்கள்يَاْلُوْنَكُمْஉங்களுக்கு குறைக்கخَبَالًا ؕதீங்கிழைப்பதைوَدُّوْاவிரும்பினார்கள்مَا عَنِتُّمْ‌ۚநீங்கள் துன்பப்படுவதைقَدْ بَدَتِவெளிப்பட்டுவிட்டதுالْبَغْضَآءُபகைமைمِنْஇருந்துاَفْوَاهِهِمْ  ۖۚஅவர்கள் வாய்கள்وَمَاஇன்னும் எதுتُخْفِىْமறைக்கிறதுصُدُوْرُهُمْநெஞ்சங்கள்/அவர்கள்اَكْبَرُ‌ؕமிகப் பெரியதுقَدْ بَيَّنَّاதிட்டமாக விவரித்தோம்لَـكُمُஉங்களுக்குالْاٰيٰتِ‌அத்தாட்சிகளைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْقِلُوْنَ‏புரிகிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதூ Bபிதானதம் மின் தூனிகும் லா ய'லூனகும் கBபால(ன்)வ் வத்தூ மா 'அனித்தும் கத் Bபததில் Bபக்ளா'உ மின் அFப்வாஹிஹிம்; வமா துக்Fபீ ஸுதூருஹும் அக்Bபர்; கத் Bபய்யன்னா லகுமுல் ஆயாதி இன் குன்தும் தஃகிலூன்
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்)களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்கள் மறைத்திருப்பவையோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்துவிட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.).
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்கள் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்தக்கூடியது அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களுடைய வாய் மூலமாகவே அவர்களுடைய காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றைவிட) அதிகக் கொடியனவாக இருக்கின்றன. நிச்சயமாக நாம் தெளிவான அறிவுரைகளை உங்களுக்கு அளித்திருக்கின்றோம். நீங்கள் அறிவுடையோராயின் (அவர்களோடு தொடர்பு கொள்வதில் விழிப்புடன் இருங்கள்!)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்கள் இனத்தவர்களையன்றி (மற்றவர்களை) உங்களுடைய அந்தரங்கச்செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள், (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறை செய்வதில்லை, மேலும், நீங்கள் துன்புறுவதை அவர்கள் விரும்புகிறார்கள், அவர்களுடைய வாய்ச் சொற்களிலிருந்தே (அவர்களுடைய) வெறுப்பு திட்டமாக வெளிப்பட்டுவிட்டது, (உங்களைப்பற்றி) அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவையோ மிகப்பெரிதாகும், நீங்கள் விளங்கிக்கொள்பவர்களாக இருந்தால், நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்குத் தெளிவாக்கி விட்டோம்.
Saheeh International
O you who have believed, do not take as intimates those other than yourselves [i.e., believers], for they will not spare you [any] ruin. They wish you would have hardship. Hatred has already appeared from their mouths, and what their breasts conceal is greater. We have certainly made clear to you the signs, if you will use reason.
هٰۤاَنْتُمْ اُولَآءِ تُحِبُّوْنَهُمْ وَلَا یُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا ۖۗۚ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَیْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَیْظِ ؕ قُلْ مُوْتُوْا بِغَیْظِكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
هٰۤاَنْتُمْநீங்கள்اُولَاۤءِஎப்படிப்பட்டவர்கள்تُحِبُّوْنَهُمْநேசிக்கிறீர்கள்/ இவர்களைوَلَاஆனால் இல்லைيُحِبُّوْنَكُمْஅவர்கள் உங்களை நேசிப்பதுوَتُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கை கொள்கிறீர்கள்بِالْكِتٰبِவேதத்தைكُلِّهٖ ۚஅவை எல்லாம்وَاِذَا لَقُوஇன்னும் அவர்கள் சந்தித்தால்كُمْஉங்களைقَالُوْۤاகூறுகின்றனர்اٰمَنَّا  ۖۚநம்பிக்கை கொண்டோம்وَاِذَا خَلَوْاஇன்னும் அவர்கள் தனித்தால்عَضُّوْاகடித்தனர்عَلَيْكُمُஉங்கள் மீதுالْاَنَامِلَவிரல் நுனிகளைمِنَ الْغَيْظِ‌ؕகோபத்தினால்قُلْகூறுவீராகمُوْتُوْاசாவுங்கள்بِغَيْظِكُمْؕ‌உங்கள்கோபத்தினால்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِيْمٌ ۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளவற்றைالصُّدُوْرِ‏நெஞ்சங்களில்
ஹா அன்தும் உலா'இ துஹிBப்Bபூனஹும் வலா யுஹிBப்Bபூனகும் வ து'மினூன Bபில் கிதாBபி குல்லிஹீ வ இதா லகூகும் காலூ ஆமன்னா வ இதா கலவ் 'அள்ளூ 'அலய்குமுல் அனாமில மினல் கய்ள்; குல் மூதூ Bபிகய் ளிகும்; இன்னல் லாஹ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது: “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கிறீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், ‘‘(உங்கள் வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்'' என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிவான்.''
IFT
அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள்; ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. நீங்களோ எல்லா இறைவேதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்! அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது, “நாங்களும் (உங்களுடைய தூதரையும், வேதத்தையும்) நம்புகின்றோம்” எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே, உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கின்றார்கள். அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் எரிச்சலிலேயே மூழ்கிச் சாகுங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே! தெரிந்து கொள்ளுங்கள்) நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள், அவர்களோ, உங்களை நேசிப்பதில்லை, நீங்கள் வேதங்கள் யாவற்றையும் விசுவாசிக்கிறீர்கள். இன்னும், அவர்கள் உங்களைச் சந்தித்தால், “நாங்கள் விசுவாசிக்கிறோம்”, என்று கூறுகின்றனர், இன்னும் (உங்களிலிருந்து விலகி) அவர்கள் தனித்துவிட்டாலோ (உங்கள் மீதுள்ள) ஆத்திரத்தினால் (தங்கள் கை) விரல்களின் நுனிகளை கடித்துக் கொள்கின்றனர், ஆகவே, (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! “உங்கள் ஆத்திரத்திலேயே நீங்கள் இறந்து விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிகிறவன்”
Saheeh International
Here you are loving them but they are not loving you, while you believe in the Scripture - all of it. And when they meet you, they say, "We believe." But when they are alone, they bite their fingertips at you in rage. Say, "Die in your rage. Indeed, Allah is Knowing of that within the breasts."
اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ ؗ وَاِنْ تُصِبْكُمْ سَیِّئَةٌ یَّفْرَحُوْا بِهَا ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا یَضُرُّكُمْ كَیْدُهُمْ شَیْـًٔا ؕ اِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟۠
اِنْ تَمْسَسْكُمْஉங்களைஅடைந்தால்حَسَنَةٌஒரு நல்லதுتَسُؤْهُمْவருத்தம் தருகிறது/ அவர்களுக்குاِنْ تَمْسَسْكُمْஉங்களுக்கு நேர்ந்தால்سَيِّئَةٌஒரு தீங்குيَّفْرَحُوْاமகிழ்ச்சி அடைகிறார்கள்بِهَا ۚஅதன் மூலம்وَاِنْ تَصْبِرُوْاநீங்கள் பொறுத்தால்وَتَتَّقُوْاஇன்னும் நீங்கள் அஞ்சினால்لَا يَضُرّதீங்கிழைக்காதுكُمْஉங்களுக்குكَيْدُهُمْஅவர்களின் சூழ்ச்சிشَيْئًا ؕசிறிதளவும்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்بِمَا يَعْمَلُوْنَஅவர்கள் செய்வதைمُحِيْطٌ‏சூழ்ந்துள்ளான்
இன் தம்ஸஸ்கும் ஹஸனதுன் தஸு'ஹும் வ இன் துஸிBப்கும் ஸய்யி'அது(ன்)ய் யFப்ரஹூ Bபிஹா வ இன் தஸ்Bபிரூ வ தத்தகூ லா யள் உர்ருகும் கய்துஹும் ஷய்'ஆ; இன்னல் லாஹ Bபிமா யஃமலூன முஹீத்
முஹம்மது ஜான்
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கிறது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயல்களை நன்கு சூழ்ந்து கொள்வான்.
IFT
உங்களுக்கு நன்மை ஏதும் கிட்டிவிட்டால் அது அவர்களை வருந்தச் செய்கின்றது. மேலும், உங்களுக்குத் துன்பம் நேர்ந்து விட்டாலோ அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது. ஆனால் நீங்கள் நிலைகுலையாமலும், அல்லாஹ்வுக்கு அஞ்சியும் வாழ்ந்தால் (உங்களுக்கெதிராக) அவர்கள் கையாளுகின்ற சூழ்ச்சி எந்தப் பலனையும் தரப்போவதில்லை. திண்ணமாக, அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு யாதொரு நன்மை ஏற்படின் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டாலோ, அதற்காக அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர், ஆகவே, நீங்கள் பொறுமையுடனிருந்து (அல்லாஹ்வை) பயந்தும் கொள்வீர்களாயின் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு யாதொரு தீங்கையும் விளைவித்து விடாது, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றைச் சூழ்ந்து அறிகிறவன்.
Saheeh International
If good touches you, it distresses them; but if harm strikes you, they rejoice at it. And if you are patient and fear Allah, their plot will not harm you at all. Indeed, Allah is encompassing of what they do.
وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِیْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
وَاِذْ غَدَوْتَநீர் காலையில் புறப்பட்ட சமயத்தைمِنْஇருந்துاَهْلِكَஉம் குடும்பம்تُبَوِّئُதங்கவைக்கிறீர்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களைمَقَاعِدَஇடங்களில்لِلْقِتَالِ‌ؕபோருக்காகوَاللّٰهُஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌۙ‏நன்கறிந்தவன்
வ இத் கதவ்த மின் அஹ்லிக துBபவ்வி'உல் மு'மினீன மகா'இத லில்கிதால்; வல்லாஹு ஸமீ'உன் 'அலீம்
முஹம்மது ஜான்
(நபியே!) நினைவு கூர்வீராக:) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் உமது குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு(ச் சென்று) நம்பிக்கை கொண்டவர்களை போர்க்களத்தில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!. (அனைத்தையும்) அல்லாஹ் செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
IFT
(நபியே!) நீர் அதிகாலையில் உமது வீட்டை விட்டுப் புறப்பட்டு முஸ்லிம்களை (உஹதுப் போர்க்களத்தில் அவரவருக்குரிய அணிவகுப்பு) இடங்களில் போருக்காக நிறுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை (முஸ்லிம்களுக்கு) நினைவூட்டுவீராக! அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! நீர் உம் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டுச் சென்று) விசுவாசங் கொண்டவர்களை (உஹத் யுத்த களத்தில்) போருக்காக (அவரவருக்குரிய) இடங்களில் அமர்த்தி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்ததை (நினைத்துப் பார்ப்பீராக! யாவற்றையும்) அல்லாஹ் செவியுறுகிறவன், உங்கள் இதயங்களில் இருப்பதை நன்கறிகிறவன்.
Saheeh International
And [remember] when you, [O Muhammad], left your family in the morning to post the believers at their stations for the battle [of Uhud] - and Allah is Hearing and Knowing -
اِذْ هَمَّتْ طَّآىِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَا ۙ وَاللّٰهُ وَلِیُّهُمَا ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
اِذْ هَمَّتْநாடிய சமயம்طَّآٮِٕفَتٰنِஇரு பிரிவினர்مِنْكُمْஉங்களில்اَنْ تَفْشَلَا ۙஅவர்கள் கோழையாகி பின்னடைவதற்குوَاللّٰهُஅல்லாஹ்وَلِيُّهُمَا‌ ؕஅவ்விருவரின் பொறுப்பாளன்وَعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்فَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைப்பார்களாகالْمُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
இத் ஹம்மத் தா'இFபதானி மின்கும் அன் தFப்ஷலா வல்லாஹு வலிய்யுஹுமா; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
முஹம்மது ஜான்
(அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்; ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து (‘உஹுத்' என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்தனர். அல்லாஹ் அவர்களின் உதவியாளன் (பாதுகாவலன்). (ஆகவே,) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக!
IFT
உங்களில் இரு பிரிவினர் கோழைத்தனம் காட்ட முனைந்த நேரத்தை நினைவுகூரும். அல்லாஹ்வோ அவர்களுக்கு உதவி செய்ய இருந்தான். எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பவர்களாய்த் திகழ வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்த யுத்தத்தில்) உங்களிலிருந்து இரு பிரிவினர் தைரியம் இழந்து (“உஹத்” என்னும் யுத்த களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று நாடிய சமயத்தில்) போர்க்களத்தில் அவர்களை அமர்த்திக் கொண்டிருந்தீர், மேலும் அல்லாஹ் அவ்விருசாராருக்கும் உதவியாளன், இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.
Saheeh International
When two parties among you were about to lose courage, but Allah was their ally; and upon Allah the believers should rely.
وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْتُمْ اَذِلَّةٌ ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَلَقَدْஇன்னும் திட்டவட்டமாகنَصَرَكُمُஉதவினான்/ உங்களுக்குاللّٰهُஅல்லாஹ்بِبَدْرٍபத்ரில்وَّاَنْـتُمْஇன்னும் நீங்கள் இருக்கاَذِلَّةٌ  ۚகுறைந்தவர்களாகفَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
வ லகத் னஸரகுமுல் லாஹு Bபி-Bபத்ரி(ன்)வ் வ அன்தும் அதில்லதுன் Fபத்தகுல் லாஹ ல'அல்லகும் தஷ்குரூன்
முஹம்மது ஜான்
“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்.
IFT
(இதற்கு முன்) பத்ரு போரிலே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். அப்போது நீங்கள் மிகவும் வலுவற்றவர்களாய் இருந்தீர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி கொல்வதிலிருந்து விலகி வாழுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாகயிருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான், ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.
Saheeh International
And already had Allah given you victory at [the battle of] Badr while you were weak [i.e., few in number]. Then fear Allah; perhaps you will be grateful.
اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِیْنَ اَلَنْ یَّكْفِیَكُمْ اَنْ یُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُنْزَلِیْنَ ۟ؕ
اِذْ تَقُوْلُநீர் கூறியபோதுلِلْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குاَلَنْ يَّكْفِيَكُمْஉங்களுக்குப்போதாதா?اَنْ يُّمِدَّكُمْஉங்களுக்கு உதவுவதுرَبُّكُمْஉங்கள் இறைவன்بِثَلٰثَةِ اٰلَافٍமூவாயிரத்தைக் கொண்டுمِّنَ الْمَلٰٓٮِٕكَةِவானவர்களிலிருந்துمُنْزَلِيْنَؕ‏இறக்கப்படுபவர்கள்
இத் தகூலு லில்மு'மினீன அலய் யக்Fபியகும் அய்-யுமித்தகும் ரBப்Bபுகும் Bபிதலாததி ஆலாFபிம் மினல் மலா'இகதி முன்Zஜலீன்
முஹம்மது ஜான்
(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அப்பொழுது) நீர் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?'' என்று கூறியதையும் நினைவு கூருவீராக!
IFT
“உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்திருந்தது போதுமானதில்லையா?” என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) விசுவாசங்கொண்டோரிடம், “(வானத்திலிருந்து) இறக்கி வைக்கப்பட்ட மூவாயிரம் மலக்குகளைக் கொண்டு, உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று நீர் கூறியதையும் நினைவுகூர்வீராக!
Saheeh International
[Remember] when you said to the believers, "Is it not sufficient for you that your Lord should reinforce you with three thousand angels sent down?
بَلٰۤی ۙ اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَیَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا یُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُسَوِّمِیْنَ ۟
بَلٰٓى ۙஆம்اِنْ تَصْبِرُوْاநீங்கள் பொறுத்தால்وَتَتَّقُوْاஇன்னும் நீங்கள் அஞ்சினால்وَيَاْتُوْكُمْஇன்னும் அவர்கள் வந்தால் /உங்களிடம்مِّنْ فَوْرِهِمْ هٰذَاஅவர்களுடைய இதே அவசரத்தில்يُمْدِدْكُمْஉங்களுக்குஉதவுவான்رَبُّكُمْஉங்கள் இறைவன்بِخَمْسَةِ اٰلَافٍஐந்தாயிரங்களைக் கொண்டுمِّنَ الْمَلٰٓٮِٕكَةِவானவர்களிலிருந்துمُسَوِّمِيْنَ‏அடையாளமிடக் கூடியவர்கள்
Bபலா; இன் தஸ்Bபிரூ வ தத்தகூ வ ய'தூகும் மின் Fபவ்ரிஹிம் ஹாதா யும்தித்கும் ரBப்Bபுகும் Bபிகம்ஸதி ஆலாFபிம் மினல் மலா'இகதி முஸவ்விமீன்
முஹம்மது ஜான்
ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறிய போதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவிசெய்வான்.
IFT
ஆம். நீங்கள் நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சிப் பணியாற்றினால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள் மீது படையெடுத்து வருகின்றார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆம், நீங்கள் பொறுமையுடனிருந்து (அல்லாஹ்வுக்கு) பயந்தும் கொள்வீர்களானால், அந்நேரத்திலேயே உங்களிடம் (உங்களைத்தாக்க) அவர்கள் வந்தபோதிலும், (மூவாயிரமென்ன?) போர்க்குறிகள் கொண்டவர்களான மலக்குகளில் ஐயாயிரத்தைக் கொண்டு உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவி செய்வான்”
Saheeh International
Yes, if you remain patient and conscious of Allah and they [i.e., the enemy] come upon you [attacking] in rage, your Lord will reinforce you with five thousand angels having marks [of distinction]."
وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی لَكُمْ وَلِتَطْمَىِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ ؕ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟ۙ
وَمَا جَعَلَهُஇன்னும் ஆக்கவில்லை / அதைاللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரبُشْرٰىநற்செய்தியாகلَـكُمْஉங்களுக்குوَلِتَطْمَٮِٕنَّஇன்னும் நிம்மதி அடைவதற்காகقُلُوْبُكُمْஉங்கள் உள்ளங்கள்بِهٖ‌ؕஅதன் மூலம்وَمَا النَّصْرُஇன்னும் உதவி இல்லைاِلَّاதவிரمِنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துالْعَزِيْزِமிகைத்தவன்الْحَكِيْمِۙ‏ஞானவான்
வமா ஜ'அலஹுல் லாஹு இல்லா Bபுஷ்ரா லகும் வ லிதத்ம'இன்ன குலூBபுகும் Bபிஹ்' வ மன்-னஸ்ரு இல்லா மின் 'இன்தில்ல்லாஹில் 'அZஜீZஜில் ஹகீம்
முஹம்மது ஜான்
உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியைப் புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர (வேறுயாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது.)
IFT
அல்லாஹ் இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவித்தது, நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும், உங்கள் இதயங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காகவுமே! வெற்றி என்பது மிக்க வலிமையுடையவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு ஒரு நன்மாராயமாகவும், இதைக் கொண்டு உங்களுடைய இதயங்கள் திருப்தியடைவதற்காகவுமே, தவிர அல்லாஹ் இதை ஆக்கவில்லை, இன்னும் மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன், ஆகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி (உங்களுக்கு) இல்லை.
Saheeh International
And Allah made it not except as [a sign of] good tidings for you and to reassure your hearts thereby. And victory is not except from Allah, the Exalted in Might, the Wise -
لِیَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَوْ یَكْبِتَهُمْ فَیَنْقَلِبُوْا خَآىِٕبِیْنَ ۟
لِيَقْطَعَஅழிப்பதற்காகطَرَفًاஒரு பகுதியைمِّنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اَوْஅல்லதுيَكْبِتَهُمْஅவர்களை கேவலப்படுதுவதர்க்காகفَيَنْقَلِبُوْاதிரும்புவார்கள்خَآٮِٕبِيْنَ‏ஆசை நிறைவேறாதவர்களாக
லியக்த'அ தரFபம் மினல் லதீன கFபரூ அவ் யக்Bபிதஹும் Fபயன்கலிBபூ கா'இBபீன்
முஹம்மது ஜான்
(அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான்.
IFT
அல்லாஹ் இத்தகைய உதவியை உங்களுக்குச் செய்வதெல்லாம், நிராகரித்தவர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக அல்லது அவர்களைப் படுதோல்வியில் ஆழ்த்தி அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாய் திரும்பிச் செல்வதற்காகத்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததன் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழித்துவிடுவதற்காக, அல்லது அவர்களைச் சிறுமைபடுத்துவதற்காகவேயாகும், அப்போது அவர்கள் நஷ்டமடைந்தவர்களாக (ஏமாந்து) திரும்பிச் சென்று விடுவர்.
Saheeh International
That He might cut down a section of the disbelievers or suppress them so that they turn back disappointed.
لَیْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَیْءٌ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ اَوْ یُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ ۟
لَيْسَஇல்லைلَكَஉமக்குمِنَஇருந்துالْاَمْرِஅதிகாரம்شَىْءٌஎதுவும்اَوْ يَتُوْبَஅல்லது மன்னிப்பதற்காகعَلَيْهِمْஅவர்களைاَوْஅல்லதுيُعَذِّبَهُمْஅவர்களை வேதனை செய்வதற்காகفَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்ظٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
லய்ஸ லக மினல் அம்ரிஷய்'உன் அவ் யதூBப 'அலய்ஹிம் அவ் யு'அத் தி Bபஹும் Fப இன்னஹும் ளாலிமூன்
முஹம்மது ஜான்
(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவ்விஷயத்தில் உமக்கு ஓர் அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர் களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம்.
IFT
(நபியே! தீர்ப்பு வழங்குவதற்கான) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்குமில்லை; அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோ அல்லது அக்கிரமக்காரர்களாய் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை அளிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இக்காரியத்தில் (நாம் கட்டளையிட்டதைத் தவிர) உமக்கு யாதோர் அதிகாரமுமில்லை, ஒன்று அவன் அவர்களின் தவ்பாவை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது அவர்களை வேதனையும் செய்யலாம், அதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களாவர்.
Saheeh International
Not for you, [O Muhammad, but for Allah], is the decision whether He should [cut them down] or forgive them or punish them, for indeed, they are wrongdoers.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
وَلِلّٰهِஅல்லாஹ்விற்கேمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியிலுள்ளவைيَغْفِرُமன்னிப்பான்لِمَنْஎவருக்குيَّشَآءُநாடுகிறான்وَ يُعَذِّبُஇன்னும் வேதனைசெய்வான்مَنْஎவர்يَّشَآءُ‌ ؕநாடுகிறான்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
வ லில்லஹி மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில்-அர்ள்; யக்Fபிரு லிமய்-யஷா'உ வ யு'அத்திBபு மய்-யஷா'; வல்லாஹு கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
அப்துல் ஹமீது பாகவி
(ஏனென்றால்) வானங்களில் உள்ளவை அனைத்தும், பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களைத் தண்டிப்பான். ஆனால், அல்லாஹ் மிக மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்.
IFT
வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பை அருள்வான்; மேலும் தான் நாடுகின்றவர்களுக்கு வேதனையை அளிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலுள்ளவை, மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியவை, அவன் நாடியவருக்கு மன்னிப்பளிப்பான்; இன்னும் அவன் நாடியவரை வேதனை செய்வான், அல்லாஹ்வோ மிக்க மன்னிப்பவன். மிக கிருபையுடையவன்.
Saheeh International
And to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. He forgives whom He wills and punishes whom He wills. And Allah is Forgiving and Merciful.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰۤوا اَضْعَافًا مُّضٰعَفَةً ۪ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَاْكُلُواதின்னாதீர்கள்الرِّبٰٓواவட்டியைاَضْعَافًاபன்மடங்குمُّضٰعَفَةًஇரட்டிப்பாக்கப்பட்டது وَاتَّقُوا اللّٰهَஅல்லாஹ்வை அஞ்சுங்கள்لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ ல தகுலு ரிBபா அள்'ஆFபம் முளா'அFபத(ன்)வ் வத்தகுல் லாஹ ல'அல்லகும் துFப்லிஹூன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டியாகவும் இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணாதீர்கள், இன்னும் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், (இதனைத் தவிர்த்துக்கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
Saheeh International
O you who have believed, do not consume usury, doubled and multiplied, but fear Allah that you may be successful.
وَاتَّقُوا النَّارَ الَّتِیْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟ۚ
وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்النَّارَநெருப்பைالَّتِىْۤஎதுاُعِدَّتْதயார்படுத்தப்பட்டதுلِلْكٰفِرِيْنَ‌ۚ‏நிராகரிப்பாளர் களுக்காக
வத்தகுன் னாரல் லதீ உ'இத்தத் லில்காFபிரீன்
முஹம்மது ஜான்
தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
(நரக) நெருப்பிற்குப் பயந்துகொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.
IFT
இன்னும் இறை மறுப்பாளர்களுக்குத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்புக்கு அஞ்சுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (நரக நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள்.) அது எத்தகையதென்றால் நிராகரிப்போருக்காகத் தயார் படுத்தப்பட்டுள்ளது.
Saheeh International
And fear the Fire, which has been prepared for the disbelievers.
وَاَطِیْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟ۚ
وَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَالرَّسُوْلَஇன்னும் தூதருக்குلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‌ۚ‏நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
வ அதீ'உல் லாஹ வர் ரஸூல ல'அல்லகும் துர்ஹமூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம்.
IFT
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (அதனால்) நீங்கள் (அல்லாஹ்வின்) கிருபைக்குள்ளாக்கப்படுவீர்கள்.
Saheeh International
And obey Allah and the Messenger that you may obtain mercy.
وَسَارِعُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُ ۙ اُعِدَّتْ لِلْمُتَّقِیْنَ ۟ۙ
وَسَارِعُوْۤاஇன்னும் விரையுங்கள்اِلٰىபக்கம்مَغْفِرَةٍமன்னிப்புمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனின்وَجَنَّةٍஇன்னும் சொர்க்கம்عَرْضُهَاஅதன் அகலம்السَّمٰوٰتُவானங்கள்وَالْاَرْضُۙஇன்னும் பூமிاُعِدَّتْதயார்படுத்தப்பட்டுள்ளதுلِلْمُتَّقِيْنَۙ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
வ ஸாரி'ஊ இலா மக்Fபிரதிம் மிர் ரBப்Bபிகும் வ ஜன்னதின் அர்ளுஹஸ்ஸமாவாது வல் அர்ளு உ'இத்தத் லில்முத்தகீன்
முஹம்மது ஜான்
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சொர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறையச்சம் உடையவர்களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.
IFT
இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் (செல்லும் பாதையில்) விரைந்து செல்லுங்கள்! அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறையச்சமுடையோர்க்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்கள் இரட்சகனின் மன்னிப்பின்பாலும், சுவனபதியின்பாலும் விரைந்து கொள்ளுங்கள், அதன் அகலமாகிறது வானங்களும், பூமியுமாகும், அது பயபக்தியுடையவர்களுக்காக(வே) தயார் செய்யப்பட்டுள்ளது.
Saheeh International
And hasten to forgiveness from your Lord and a garden [i.e., Paradise] as wide as the heavens and earth, prepared for the righteous
الَّذِیْنَ یُنْفِقُوْنَ فِی السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِیْنَ الْغَیْظَ وَالْعَافِیْنَ عَنِ النَّاسِ ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟ۚ
الَّذِيْنَஎவர்கள்يُنْفِقُوْنَதர்மம் புரிவார்கள்فِى السَّرَّآءِசெல்வத்தில்وَالضَّرَّآءِஇன்னும் வறுமையில்وَالْكٰظِمِيْنَஇன்னும் மென்றுவிடுபவர்கள்الْغَيْظَகோபத்தைوَالْعَافِيْنَஇன்னும் மன்னித்து விடுபவர்கள்عَنِ النَّاسِ‌ؕமக்களைوَاللّٰهُஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِيْنَ‌ۚ‏நல்லறம் புரிவோரை
அல்லதீன யுன்Fபிகூன Fபிஸ்ஸர்ரா'இ வள்ளர்ரா'இ வல் காளிமீனல் கய்ள வல் ஆFபீன 'அனின்-னாஸ்; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (எவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்துவிடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கிறான்.
IFT
அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். மேலும் அவர்கள் சினத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்(களின் தவறு)களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை (முஹ்ஸின்களை) அல்லாஹ் நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள், கோபத்தையும் அடக்கிக்கொள்ளக் கூடியவர்கள், மனிதர்(களின் குற்றங்)களையும் மன்னித்து விடக்கூடியவர்கள், அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.
Saheeh International
Who spend [in the cause of Allah] during ease and hardship and who restrain anger and who pardon the people - and Allah loves the doers of good;
وَالَّذِیْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ ۪ وَمَنْ یَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۪۫ وَلَمْ یُصِرُّوْا عَلٰی مَا فَعَلُوْا وَهُمْ یَعْلَمُوْنَ ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اِذَا فَعَلُوْاசெய்தால்فَاحِشَةًஒரு மானக்கேடானதைاَوْஅல்லதுظَلَمُوْۤاஅநீதியிழைத்தால்اَنْفُسَهُمْதங்களுக்குذَكَرُواநினைவுகூர்வார்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَاسْتَغْفَرُوْاஇன்னும் மன்னிப்புத் தேடுவார்கள்لِذُنُوْبِهِمْதங்கள் பாவங்களுக்குوَمَنْயார்?يَّغْفِرُமன்னிப்பார்الذُّنُوْبَபாவங்களைاِلَّاதவிரاللّٰهُஅல்லாஹ் وَلَمْ يُصِرُّوْاஇன்னும் நிலைத்திருக்க மாட்டார்கள்عَلٰىமீதுمَاஎதுفَعَلُوْاசெய்தார்கள்وَهُمْஅவர்களுமோيَعْلَمُوْنَ‏அறிந்து கொண்டு
வல்லதீன இதா Fப'அலூ Fபாஹிஷதன் அவ் ளலமூ அன்Fபுஸஹும் தகருல் லாஹ Fபஸ்தக்Fபரூ லிதுனூBபிஹிம்; வ மய் யக்Fபிருத் துனூBப இல்லல் லாஹு வ லம் யுஸிர்ரூ 'அலா மா Fப'அலூ வ ஹும் யஃலமூன்
முஹம்மது ஜான்
தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.)
IFT
மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்து விட்டால், அல்லது (ஏதும் பாவமிழைத்துத்) தங்களுக்குத் தாங்களே அநீதமிழைத்துக் கொண்டால், (உடனே) அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள், இன்னும் (அவனிடமே) தங்களுடைய பாவங்களுக்காக மன்னிக்கத்தேடுவார்கள், (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்) அல்லாஹ்வைத் தவிர, (இத்தகையோரின்) குற்றங்களை மன்னிப்பவனும் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை(த்தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டே, (அதில்) நிலைத்திருக்கவுமாட்டார்கள். (உடனே அதிலிருந்து விலகி விடுவார்கள்).
Saheeh International
And those who, when they commit an immorality or wrong themselves [by transgression], remember Allah and seek forgiveness for their sins - and who can forgive sins except Allah? - and [who] do not persist in what they have done while they know.
اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَجَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ؕ
اُولٰٓٮِٕكَஅவர்கள்جَزَآؤُهُمْஅவர்களின் கூலிمَّغْفِرَةٌமன்னிப்புمِّنْ رَّبِّهِمْஅவர்களுடைய இறைவனிடமிருந்துوَ جَنّٰتٌஇன்னும் சொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின்கீழிருந்துالْاَنْهٰرُஆறுகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَا‌ ؕஅதில்وَنِعْمَஇன்னும் சிறந்ததாகிவிட்டதுاَجْرُகூலிالْعٰمِلِيْنَؕ‏நன்மைபுரிவோர்
உலா'இக ஜZஜா'உஹும் மக்Fபிரதும் மிர் ரBப்Bபிஹிம் வ ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ னிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
முஹம்மது ஜான்
அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்குப் பிரதிபலன், அவர்களின் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே!
IFT
இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிட மிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர் - அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடமிருந்து மன்னிப்பு, மற்றும் சுவனபதிகாளாகும், இவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவர்கள் அவற்றில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள், (இத்தகு) காரியங்கள் செய்தோரின் கூலி அது மிக நல்லது.
Saheeh International
Those - their reward is forgiveness from their Lord and gardens beneath which rivers flow [in Paradise], wherein they will abide eternally; and excellent is the reward of the [righteous] workers.
قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ فَسِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟
قَدْ خَلَتْசென்றுவிட்டனمِنْ قَبْلِكُمْஉங்களுக்குமுன்னர்سُنَنٌ ۙவரலாறுகள்فَسِيْرُوْاஆகவே சுற்றுங்கள்فِى الْاَرْضِ فَانْظُرُوْاபூமியில்/இன்னும் பாருங்கள்كَيْفَ كَانَஎப்படி இருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பிப்பவர்களின்
கத் கலத் மின் கBப்லிகும் ஸுனனும் Fபஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBப துல் முகத்திBபீன்
முஹம்மது ஜான்
உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு முன்னரும் (இப்படி) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே,) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி ஆனது என்பதைப் பாருங்கள்.
IFT
உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றிருக்கின்றன. பூமியில் சுற்றித் திரிந்து (அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும், அறிவுரைகளையும்) பொய் என்று கூறியவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக உங்களுக்கு முன்னரும் (இத்தகைய) பலவழிமுறைகள் சென்றிருக்கின்றன, ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (அல்லாஹ்வுடைய வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்.
Saheeh International
Similar situations [as yours] have passed on before you, so proceed throughout the earth and observe how was the end of those who denied.
هٰذَا بَیَانٌ لِّلنَّاسِ وَهُدًی وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟
هٰذَاஇதுبَيَانٌதெளிவுரையாகும்لِّلنَّاسِமக்களுக்குوَهُدًىஇன்னும் நேர்வழிوَّمَوْعِظَةٌஇன்னும் நல்லுபதேசம்لِّلْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
ஹாதா Bபயானுல் லின்னாஸி வ ஹுத(ன்)வ் வ மவ்'இளதுல் லில்முத்தகீன்
முஹம்மது ஜான்
இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.
அப்துல் ஹமீது பாகவி
இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதும், (சிறப்பாக) இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டியும், நல்லுபதேசமும் ஆகும்.
IFT
இது மக்களுக்குரிய தெளிவான விளக்கமாகும். மேலும், இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும், அறவுரையுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது, (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மை) விளக்கமாகவும், (குறிப்பாக) பயபக்தியுடையோர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும், நல்லுபதேசமாகவும் இருக்கிறது.
Saheeh International
This [Qur’an] is a clear statement to [all] the people and a guidance and instruction for those conscious of Allah.
وَلَا تَهِنُوْا وَلَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
وَلَا تَهِنُوْاதுணிவிழக்காதீர்கள்وَ لَا تَحْزَنُوْاஇன்னும் கவலைப்படாதீர்கள்وَاَنْتُمُநீங்கள்الْاَعْلَوْنَஉயர்ந்தவர்கள்தான்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ லா தஹினூ வலா தஹ்Zஜனூ வ அன்துமுல் அஃலவ்ன இன் குன்தும் மு'மினீன்
முஹம்மது ஜான்
எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.
IFT
நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம், கவலையும் பட வேண்டாம், (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள்.
Saheeh International
So do not weaken and do not grieve, and you will be superior if you are [true] believers.
اِنْ یَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ؕ وَتِلْكَ الْاَیَّامُ نُدَاوِلُهَا بَیْنَ النَّاسِ ۚ وَلِیَعْلَمَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟ۙ
اِنْ يَّمْسَسْكُمْஉங்களைஅடைந்தால்قَرْحٌகாயம்فَقَدْ مَسَّஅடைந்துள்ளதுالْقَوْمَ(அக்)கூட்டத்திற்குقَرْحٌகாயம்مِّثْلُهٗ ؕஅது போன்றوَتِلْكَஅந்தالْاَيَّامُநாள்கள்نُدَاوِلُهَاஅவற்றை சுழற்றுகிறோம்بَيْنَமத்தியில்النَّاسِۚமக்கள்وَلِيَـعْلَمَஇன்னும் அறிவதற்காகاللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَيَتَّخِذَஇன்னும் எடுப்பதற்காகمِنْكُمْஉங்களில்شُهَدَآءَ‌ؕதியாகிகளைوَاللّٰهُஇன்னும் அல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الظّٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்களை
இ(ன்)ய்-யம்ஸஸ்கும் கர்ஹும் Fபகத் மஸ்ஸல் கவ்ம கர்ஹும் மித்லுஹ்; வ தில்கல் அய்யாமு னுதாவிலுஹா Bபய்னன் னாஸி வ லியஃலமல் லாஹுல் லதீன ஆமனூ வ யத்தகித மின்கும் ஷுஹதா'; வல்லாஹு லா யுஹ் இBப்Bபுள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறிமாறி வரும்படி நாம்தான் செய்கிறோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்த(றிவிப்ப)தற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
IFT
(இப்பொழுது) உங்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்றால், இதற்கு முன்னர் (உங்கள்) எதிரணியினருக்கும் இதேபோன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம். (உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்று பகர்கின்றவர்களை (ஷுஹதா) உங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகத் தான்! ஏனெனில் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு (உஹதுப்போரில் தோல்வியுற்றுக்) காயம் ஏற்பட்டதென்றால் (அதைப் பற்றி அதைரியமடையாதீர்கள், ஏனென்றால்,) அந்த ஜனங்களுக்கும், இதைப் போன்றே (பத்ரில் தோல்வியுற்றுக்) காயம் ஏற்பட்டுள்ளது, அந்த (சோதனையான) நாட்களை மனிதர்களுக்கிடையில் மாறி மாறி வரும்படி நாம் செய்கின்றோம், ஏனென்றால், (உங்களில்) உண்மையாகவே விசுவாசங் கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறிவித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரைத் தத்தம் செய்யும் மாபெரும்) தியாகிகளை அவன் எடு(த்தறிவி)ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கின்றான்). இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
Saheeh International
If a wound should touch you - there has already touched the [opposing] people a wound similar to it. And these days [of varying conditions] We alternate among the people so that Allah may make evident those who believe and [may] take to Himself from among you martyrs - and Allah does not like the wrongdoers -
وَلِیُمَحِّصَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَمْحَقَ الْكٰفِرِیْنَ ۟
وَلِيُمَحِّصَஇன்னும் சோதிப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَஎவர்களைاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَيَمْحَقَஇன்னும் அழிப்பதற்காகالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களை
வ லியுமஹ்ஹிஸல் லாஹுல் லதீன ஆமனூ வ யம்ஹகல் காFபிரீன்
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் நிராகரிப்பவர்களை அழித்து உண்மை நம்பிக்கையாளர்களை வடிகட்டி எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்).
IFT
(இவ்வாறெல்லாம் சோதனை செய்வதன் மூலம்) நம்பிக்கையாளர்களைப் பிரித்துத் தேர்ந்தெடுக்கவும், நிராகரிப்போரை நசுக்கவும் அல்லாஹ் நாடியிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டிருந்தார்களே, அவர்களை அல்லாஹ் பரிசுத்தமாக்குவதற்காகவும், நிராகரிப்போர்களை அழிப்பதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்).
Saheeh International
And that Allah may purify the believers [through trials] and destroy the disbelievers.
اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا یَعْلَمِ اللّٰهُ الَّذِیْنَ جٰهَدُوْا مِنْكُمْ وَیَعْلَمَ الصّٰبِرِیْنَ ۟
اَمْ حَسِبْتُمْநினைத்தீர்களா?اَنْ تَدْخُلُواநீங்கள் நுழையالْجَـنَّةَசொர்க்கத்தில்وَلَمَّا يَعْلَمِ اللّٰهُஅல்லாஹ் அறியாமல்الَّذِيْنَ جَاهَدُوْاபோர் புரிந்தவர்களைمِنْكُمْஉங்களில்وَيَعْلَمَ(அவன்) அறிவதுடன்الصّٰبِرِيْنَ‏பொறுமையாளர்களை
அம் ஹஸிBப்தும் அன் தத்குலுல் ஜன்ன்னத வ லம்மா யஃலமில் லாஹுல் லதீன ஜாஹதூ மின்கும் வ யஃலமஸ் ஸாBபிரீன்
முஹம்மது ஜான்
உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (சிரமங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சொர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா?
IFT
உங்களில் யார் அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில் நிலைகுலையாமல் நிற்பவர்கள் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் (எளிதில்) சுவனம் புகுந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) யுத்தம் செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் பரிசோதித்து அறியாமலும் இன்னும் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார், என்பதை அவன் அறியாமலும் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா?
Saheeh International
Or do you think that you will enter Paradise while Allah has not yet made evident those of you who fight in His cause and made evident those who are steadfast?
وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُ ۪ فَقَدْ رَاَیْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟۠
وَلَقَدْ كُنْتُمْஇன்னும் திட்டமாக இருந்தீர்கள்تَمَنَّوْنَஆசைவைக்கிறீர்கள்الْمَوْتَமரணத்தைمِنْ قَبْلِமுன்னர்اَنْ تَلْقَوْهُஅதைச் சந்திப்பதற்குفَقَدْ رَاَيْتُمُوْهُஅதைப் பார்த்தும் விட்டீர்கள்وَاَنْتُمْநீங்களோتَنْظُرُوْنَ‏காண்கிறீர்கள்
வ லகத் குன்தும் தமன்ன்னவ்னல் மவ்த மின் கBப்லி அன் தல்கவ்ஹு Fபகத் ர அய்துமூஹு வ அன்தும் தன்ளுரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்களே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்துவிட்டீர்கள். (ஆகவே, இந்த போரில் ஏன் தயங்குகிறீர்கள்?)
IFT
மரணம் உங்கள் எதிரில் வருவதற்கு முன்பு நீங்கள் நிச்சயமாக அதனை விரும்பிக் கொண்டிருந்தீர்கள். இதோ, இப்பொழுது அது உங்கள் முன் வந்துவிட்டது! அதனை நீங்கள் கண்கூடாய்ப் பார்த்துவிட்டீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நீங்கள் மரணத்தை – அதை நீங்கள் சந்திப்பதற்கு முன்னதாக திட்டமாக ஆசிக்கக் கூடியவர்களாக இருந்தீர்கள், ஆகவே (கண்ணுக்கெதிரில்) நீங்கள் கண்டவர்களாக இருக்க, அதை திட்டமாக நீங்கள் பார்த்து விட்டீர்கள், (எனவே, இந்த யுத்தத்தில் ஏன் தயங்குகின்றீர்கள்?)
Saheeh International
And you had certainly wished for death [i.e., martyrdom] before you encountered it, and you have [now] seen it [before you] while you were looking on.
وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ اَفَاۡىِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ ؕ وَمَنْ یَّنْقَلِبْ عَلٰی عَقِبَیْهِ فَلَنْ یَّضُرَّ اللّٰهَ شَیْـًٔا ؕ وَسَیَجْزِی اللّٰهُ الشّٰكِرِیْنَ ۟
وَمَاஇல்லைمُحَمَّدٌமுஹம்மதுاِلَّاதவிரرَسُوْلٌ  ۚஒரு தூதரேقَدْ خَلَتْசென்று விட்டனர்مِنْ قَبْلِهِஅவருக்கு முன்னர்الرُّسُلُ‌ؕதூதர்கள்افَا۟ٮِٕنْ مَّاتَஅவர் இறந்தால்اَوْஅல்லதுقُتِلَகொல்லப்பட்டால்انْقَلَبْتُمْபுரண்டு விடுவீர்கள்عَلٰٓىமீதுاَعْقَابِكُمْ‌ؕஉங்கள் குதிங்கால்கள்وَمَنْஇன்னும் எவர்يَّنْقَلِبْபுரண்டு விடுவாரோعَلٰىமீதுعَقِبَيْهِதன் குதிங்கால்கள்فَلَنْ يَّضُرَّஅறவே தீங்கு செய்யமுடியாதுاللّٰهَஅல்லாஹ்விற்குشَيْئًا‌ ؕஎதையும்وَسَيَجْزِىகூலி வழங்குவான்اللّٰهُஅல்லாஹ்الشّٰكِرِيْنَ‏நன்றி செலுத்துபவர்களுக்கு
வமா முஹம்மதுன் இல்லா ரஸூலுன் கத் கலத் மின் கBப்லிஹிர் ருஸுல்; அFப'இம் மாத அவ் குதிலன் கலBப்தும் 'அலா அஃகாBபிகும்; வ மய் யன்கலிBப் 'அலா அகிBபய்ஹி Fபலய் யளுர்ரல் லாஹ ஷய்'ஆ; வ ஸயஜ்Zஜில் லாஹுஷ் ஷாகிரீன்
முஹம்மது ஜான்
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
அப்துல் ஹமீது பாகவி
முஹம்மது (நபி) ஒரு தூதரே தவிர வேறில்லை. (ஆகவே, அவர் மரணமற்ற இறைவன் இல்லை.) அவருக்கு முன்னரும் (இவ்வாறே) (பல) தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டுவிட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கிவிட மாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்.
IFT
முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறல்லர். திண்ணமாக, அவருக்கு முன்பும் தூதர்கள் பலர் சென்றுள்ளனர். எனவே அவர் மரணமெய்திவிட்டால், அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் முந்திய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்று விடுவீர்களா? நினைவிருக்கட்டும்! எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ, அவனால் அல்லாஹ்விற்கு எத்தகையத் தீங்கும் செய்துவிட முடியாது. ஆயினும், நன்றி செலுத்தி வாழ்பவர்க்கு அல்லாஹ் மிக விரைவில் அதற்குரிய கூலியை வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், முஹம்மது ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக்கூடியவர்) இல்லை, அவருக்கு முன்னரும், (இவ்வாறே) தூதர்கள் பலர் திட்டமாகச் சென்றிருக்கின்றனர், அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் உங்கள் குதிங்கால்களின் மேல் (புறங்காட்டித்)திரும்பிச் சென்று) விடுவீர்களா? (அவ்வாறு) எவரேனும் தனது இரு குதிங்கால்களின் மீது (புறங்காட்டித்)திரும்பிச் சென்று) விட்டால், அதனால் அவர் அல்லாஹ்வுக்கு எந்த இடையூரும் செய்யவேமாட்டார், மேலும், நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் (நற்)கூலியைத் தருவான்.
Saheeh International
Muhammad is not but a messenger. [Other] messengers have passed on before him. So if he was to die or be killed, would you turn back on your heels [to unbelief]? And he who turns back on his heels will never harm Allah at all; but Allah will reward the grateful.
وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَمَنْ یُّرِدْ ثَوَابَ الدُّنْیَا نُؤْتِهٖ مِنْهَا ۚ وَمَنْ یُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ؕ وَسَنَجْزِی الشّٰكِرِیْنَ ۟
وَمَا كَانَ(சாத்தியம்) இல்லைلِنَفْسٍஓர் ஆத்மாவிற்குاَنْ تَمُوْتَமரணிப்பதுاِلَّاதவிரبِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِஅல்லாஹ்வின்كِتٰبًاவிதிக்கு ஏற்பمُّؤَجَّلًا ؕகாலம் குறிக்கப்பட்டوَ مَنْ يُّرِدْஇன்னும் எவர்/நாடுவாரோثَوَابَநன்மையைالدُّنْيَاஉலகத்தின்نُؤْتِهٖஅவருக்கு கொடுப்போம்مِنْهَا ۚஅதிலிருந்துوَمَنْஇன்னும் எவர்يُّرِدْநாடுவாரோثَوَابَநன்மையைالْاٰخِرَةِமறுமையின்نُؤْتِهٖஅவருக்கு கொடுப்போம்مِنْهَا ؕஅதிலிருந்துوَسَنَجْزِىகூலி வழங்குவோம்الشّٰكِرِيْنَ‏நன்றி செலுத்துபவர்கள்
வமா கான லினFப்ஸின் அன் தமூத இல்லா Bபி இத்னில்லாஹி கிதாBபம் மு'அஜ்ஜலா; வ மய் யுரித் தவாBபத் துன்யா னு'திஹீ மின்ஹா வ மய் யுரித் தவாBபல் ஆகிரதி னு'திஹீ மின்ஹா; வ ஸனஜ்Zஜிஷ் ஷாகிரீன்
முஹம்மது ஜான்
மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஓர் ஆத்மா அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம்.
IFT
எந்த உயிரினமும் அல்லாஹ்வுடைய உத்தரவின்றி இறக்க முடியாது. மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. எவர் உலகாயத லாபங்களைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். எவர் மறுமைப் பேற்றைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துவோர்க்கு அதிவிரைவில் நாம் கூலி வழங்கிடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எந்த ஆன்மாவுக்கும் ஏற்கனவே (அதற்கு) நேரம் குறிக்கப்பட்ட (அல்லாஹ்வின்) எழுத்துப்படி, அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டே தவிர, அது மரணிப்பதற்கில்லை, மேலும், எவர் (தன் செயலுக்கு) இவ்வுலகத்தின் நன்மையை நாடுகிறாரோ) அவருக்கு, அதிலிருந்தே வழங்குவோம், இன்னும் எவர் மறுமையின் நன்மையை நாடுகிறாரோ அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம், நன்றி செலுத்துவோருக்கு நாம் நற்கூலியும் அளிப்போம்.
Saheeh International
And it is not [possible] for one to die except by permission of Allah at a decree determined. And whoever desires the reward of this world - We will give him thereof; and whoever desires the reward of the Hereafter - We will give him thereof. And We will reward the grateful.
وَكَاَیِّنْ مِّنْ نَّبِیٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّیُّوْنَ كَثِیْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الصّٰبِرِیْنَ ۟
وَكَاَيِّنْஎத்தனையோمِّنْஇருந்துنَّبِىٍّநபிقٰتَلَ ۙபோர் புரிந்தார்مَعَهٗஅவருடன்رِبِّيُّوْنَநல்லடியார்கள்كَثِيْرٌ ۚஅதிகமானفَمَا وَهَنُوْاஅவர்கள் துணிவிழக்கவில்லைلِمَاۤ اَصَابَهُمْஅவர்களுக்கு ஏற்பட்டதின் காரணமாகفِىْ سَبِيْلِ اللّٰهِஅல்லாஹ்வின் பாதையில்وَمَا ضَعُفُوْاஇன்னும் அவர்கள் பலவீனமடையவில்லைوَمَا اسْتَكَانُوْا ؕஇன்னும் அவர்கள் பணியவில்லைوَاللّٰهُஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الصّٰبِرِيْنَ‏பொறுமையாளர்களை
வ க அய்யிம் மின் னBபிய்யின் காதல ம'அஹூ ரிBப்Bபிய்யூன கதீருன் Fபமா வஹனூ லிமா அஸாBபஹும் Fபீ ஸBபீலில் லாஹி வமா ள'உFபூ வ மஸ் தகானூ; வல்லாஹு யுஹிBப்Bபுஸ் ஸாBபிரீன்
முஹம்மது ஜான்
மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்துவிடவுமில்லை. (இவ்வாறு சிரமங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கிறான்.
IFT
(இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்(களும் அவர்)களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ளார்கள். அல்லாஹ்வின் வழியில், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவுமில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் கொண்ட அநேகம்பேர் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) யுத்தம் செய்திருக்கின்றனர், ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்ததனால்) தங்களுக்கு (துன்பங்கள்) ஏற்பட்டவற்றின் காரணமாக அவர்கள் தைரியமிழந்துவிடவில்லை, பலவீவனமடைந்துவிடவுமில்லை, (எதிரிகளுக்கு) ஐக்கியப்பட்டுவிடவுமில்லை, மேலும், (இவ்வாறு துன்பங்களைச் சகித்துக் கொள்ளும்) பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
Saheeh International
And how many a prophet [fought in battle and] with him fought many religious scholars. But they never lost assurance due to what afflicted them in the cause of Allah, nor did they weaken or submit. And Allah loves the steadfast.
وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِیْۤ اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைقَوْلَهُمْஅவர்களுடைய கூற்றாகاِلَّاۤதவிரاَنْ قَالُوْاஅவர்கள் கூறியதுرَبَّنَاஎங்கள் இறைவாاغْفِرْ لَنَاஎங்களுக்கு மன்னிذُنُوْبَنَاஎங்கள் பாவங்களைوَاِسْرَافَنَاஇன்னும் எங்கள்வரம்பு மீறலைفِىْۤ اَمْرِنَاஎங்கள் காரியத்தில்وَ ثَبِّتْஇன்னும் உறுதிப்படுத்துاَقْدَامَنَاஎங்கள் பாதங்களைوَانْصُرْنَاஇன்னும் எங்களுக்கு உதவுعَلَىஎதிராகالْقَوْمِமக்களுக்குالْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
வமா கான கவ்லஹும் இல்லா அன் காலூ ரBப்Bபனக் Fபிர் லனா துனூBபனா வ இஸ்ராFபனா Fபீ அம்ரினா வ தBப்Bபித் அக்தாமனா வன்ஸுர்னா 'அலல் கவ்மில் காFபிரீன்
முஹம்மது ஜான்
மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக” என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றிபெற நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!'' என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை.
IFT
அவர்களுடைய பிரார்த்தனை இதுவாகத்தான் இருந்தது: “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இத்தகைய சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் இரட்சகனிடம்,) “எங்கள் இரட்சகனே! எங்கள் பாவங்களையும், எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் நீ எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (யுத்தத்தில் நழுவாது) நீ உறுதிப்படுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் சமுதாயத்தினர்க்கு எதிராக (வெற்றி கொள்ள) நீ எங்களுக்கு உதவியும் புரிவாயாக” என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவர்களின் கூற்றாக இருக்கவில்லை.
Saheeh International
And their words were not but that they said, "Our Lord, forgive us our sins and the excess [committed] in our affairs and plant firmly our feet and give us victory over the disbelieving people."
فَاٰتٰىهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْیَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠
فَاٰتٰٮهُمُஆகவே அவர்களுக்கு கொடுத்தான்اللّٰهُஅல்லாஹ்ثَوَابَநன்மையைالدُّنْيَاஉலகத்தின்وَحُسْنَஇன்னும் அழகானثَوَابِநன்மை(யை)الْاٰخِرَةِ‌ ؕமறுமையின்وَاللّٰهُஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِيْنَ‏நல்லறம் புரிவோரை
Fப ஆதாஹுமுல் லாஹு தவாBபத் துன்யா வ ஹுஸ்ன தவாBபில் ஆகிரஹ்; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்.
IFT
இறுதியில் இவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலக நன்மைகளையும் அளித்தான்; அதைவிட உன்னதமான மறுமைப் பேறுகளையும் வழங்கினான். இத்தகைய நற்செயல்கள் புரியும் முஹ்ஸின்கள் தாம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரியவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும் மறுமையின் நன்மையில் அழகானதையும் கொடுத்தான், இன்னும் அல்லாஹ் (இத்தகைய) நற்கருமங்கள் செய்வோரை நேசிக்கின்றான்.
Saheeh International
So Allah gave them the reward of this world and the good reward of the Hereafter. And Allah loves the doers of good.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِیْعُوا الَّذِیْنَ كَفَرُوْا یَرُدُّوْكُمْ عَلٰۤی اَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِنْ تُطِيْعُواநீங்கள் கீழ்ப்படிந்தால்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்களுக்குيَرُدُّوْكُمْதிருப்பி விடுவார்கள்/ உங்களைعَلٰٓىமீதுاَعْقَابِكُمْஉங்கள் குதிங்கால்கள்فَتَـنْقَلِبُوْاதிரும்பி விடுவீர்கள்خٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளாக
யா 'அய்யுஹல் லதீன ஆமனூ இன் துதீ'உல்லதீன கFபரூ யருத்தூகும் 'அலா அஃகாBபிகும் Fபதன்கலிBபூ காஸிரீன்
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையிலிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பிவிடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டவர்களின் கூற்றுகளை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை முந்திய வாழ்க்கைக்குத் திருப்பி விடுவார்கள். மேலும் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள். (அவர்களுடைய கூற்று தவறானவையே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! (அல்லாஹ்வை) நிராகரிப்போருக்கு நீங்கள் கீழ்படிந்து நடந்தால் அவர்கள் உங்களை (உங்கள் விசுவாசத்திலிருந்து நீங்கள் விலகி) குதிங்கால்களின் மீது (பின் செல்லும்படி) திருப்பிவிடுவார்கள், அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகத் திரும்பிவிடுவீர்கள்.
Saheeh International
O you who have believed, if you obey those who disbelieve, they will turn you back on your heels, and you will [then] become losers.
بَلِ اللّٰهُ مَوْلٰىكُمْ ۚ وَهُوَ خَیْرُ النّٰصِرِیْنَ ۟
بَلِமாறாகاللّٰهُஅல்லாஹ்مَوْلٰٮكُمْ‌ۚஉங்கள் எஜமான்وَهُوَஅவன்خَيْرُசிறந்தவன்النّٰصِرِيْنَ‏உதவியாளர்களில்
Bபலில் லாஹு மவ்லாகும் வ ஹுவ கய்ருன் னாஸிரீன்
முஹம்மது ஜான்
(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்கள்) அல்ல, அல்லாஹ்தான் உங்கள் பாதுகாவலன். அவன் உதவி செய்பவர்களில் மிகச் சிறந்தவன்.
IFT
உண்மை என்னவெனில்) அல்லாஹ்தான் உங்களின் பாதுகாவலன். மேலும் அவன் உதவி செய்வோரில் மிகச் சிறந்தவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவர்கள் அல்ல, அல்லாஹ்தான்) உங்கள் பாதுகாவலன், இன்னும், அவனே உதவிசெய்வோரில் மிகச்சிறந்தவன்.
Saheeh International
But Allah is your protector, and He is the best of helpers.
سَنُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَاۤ اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ۚ وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ وَبِئْسَ مَثْوَی الظّٰلِمِیْنَ ۟
سَنُلْقِىْபோடுவோம்فِىْ قُلُوْبِஉள்ளங்களில்الَّذِيْنَஎவர்கள்كَفَرُواநிராகரித்தார்கள்الرُّعْبَதிகிலைبِمَاۤ اَشْرَكُوْاஅவர்கள் இணைவைத்த காரணத்தால்بِاللّٰهِஅல்லாஹ்விற்குمَا لَمْ يُنَزِّلْஎது/இறக்கவில்லைبِهٖஅதற்குسُلْطٰنًا ۚஓர் ஆதாரத்தைوَمَاْوٰٮهُمُஇன்னும் அவர்களுடைய தங்குமிடம்النَّارُ‌ؕநரகம்தான்وَ بِئْسَகெட்டுவிட்டதுمَثْوَىதங்குமிடம்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களின்
ஸனுல்கீ Fபீ குலூBபில் லதீன கFபருர் ருஃBப Bபிமா அஷ்ரகூ Bபில்லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான வ ம'வஹுமுன் னார்; வ Bபி'ஸ மத்வள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்; ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்; அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணைவைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள். இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
IFT
(சத்தியத்தை) நிராகரிப்போரின் உள்ளங்களில் வெகுவிரைவில் நாம் பேரச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அவனுடன் இணையாக்கிவிட்டார்கள். இவர்கள் இறுதியாகப் போய்ச் சேருமிடம் நரகமே! அக்கிரமக்காரர்கள் சேர இருக்கும் இந்த இடம் எத்துணைக் கெட்டது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எதற்கு அவன் சான்றை இறக்கி வைக்கவில்லையோ, அதை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக நிராகரித்து விட்டார்களே, அவர்களுடைய இதயங்களில், நாம் திகிலைப் போடுவோம், அன்றியும் அவர்கள் தங்குமிடம் நரகந்தான், மேலும், இந்த அநியாயக்காரர்களின் தங்குமிடம் (அது) மிகக் கெட்டது.
Saheeh International
We will cast terror into the hearts of those who disbelieve for what they have associated with Allah of which He had not sent down [any] authority. And their refuge will be the Fire, and wretched is the residence of the wrongdoers.
وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَعَصَیْتُمْ مِّنْ بَعْدِ مَاۤ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ؕ مِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الدُّنْیَا وَمِنْكُمْ مَّنْ یُّرِیْدُ الْاٰخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِیَبْتَلِیَكُمْ ۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْ ؕ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகصَدَقَكُمُஉங்களுக்கு உண்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்وَعْدَهٗۤதன் வாக்குறுதியைاِذْபோதுتَحُسُّوْنَهُمْஅவர்களை வெட்டி வீழ்த்துகிறீர்கள்بِاِذْنِهٖ‌ۚஅவனுடைய அனுமதியுடன்حَتّٰۤیவரைاِذَاபோதுفَشِلْتُمْகோழையாகி விட்டீர்கள்وَتَـنَازَعْتُمْஇன்னும் தர்க்கித்தீர்கள்فِى الْاَمْرِகட்டளையில்وَعَصَيْتُمْஇன்னும் மாறு செய்தீர்கள்مِّنْۢ بَعْدِபின்னர்مَاۤ اَرٰٮكُمْஅவன் உங்களுக்குக் காண்பித்ததற்குمَّاஎதைتُحِبُّوْنَ‌ؕவிரும்புகிறீர்கள்مِنْكُمْஉங்களில்مَّنْஎவர்يُّرِيْدُநாடுகிறார்الدُّنْيَاஉலகத்தைوَمِنْكُمْஇன்னும் உங்களில்مَّنْஎவர்يُّرِيْدُநாடுகிறார்الْاٰخِرَةَ  ۚமறுமையைثُمَّ صَرَفَكُمْபிறகு/திருப்பினான்/உங்களைعَنْهُمْஅவர்களை விட்டும்لِيَبْتَلِيَكُمْ‌ۚஅவன் சோதிப்பதற்காக/உங்களைوَلَقَدْ عَفَاதிட்டமாக மன்னித்தான்عَنْكُمْ‌ؕஉங்களைوَ اللّٰهُஅல்லாஹ்ذُوْ فَضْلٍ عَلَىஅருளுடையவன்/மீதுالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்கள்
வ லகத் ஸதககுமுல் லாஹு வஃதஹூ இத் தஹுஸ்ஸூ னஹும் Bபி இத்னிஹீ ஹத்தா இதா Fபஷில்தும் வ தனாZஜஃதும் Fபில் அம்ரி வ 'அஸய்தும் மிம் Bபஃதி மா அராகும் மா துஹிBப்Bபூன்; மின்கும் மய் யுரீதுத் துன்யா வ மின்கும் மய் யுரீதுல் ஆகிரஹ்; தும்ம ஸரFபகும் 'அன்ஹும் லியBப்தலியகும் வ லகத் 'அFபா 'அன்கும்; வல்லாஹு தூ Fபள்லின் 'அலல் மு'மினீன்
முஹம்மது ஜான்
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன் வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறுசெய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்திவைத்திருந்த மலையிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உள்ளனர். உங்களில் மறுமையை விரும்புகிறவர்களும் உள்ளனர். ஆகவே, உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களை மன்னித்துவிட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருளுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ் உங்களுக்கு (உதவி செய்வதாகக் கூறிய) தனது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான். துவக்கத்தில் அவனது அனுமதியின்படி அவர்களை நீங்கள்தாம் (போரில்) வெட்டி வீழ்த்தினீர்கள்! ஆனால் இறுதியில் நீங்கள் ஊக்கமிழந்து உங்களுடைய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள்; மேலும் நீங்கள் மோகம் கொண்டிருந்தவற்றை (போர்ப் பொருட்களை) அல்லாஹ் உங்கள் கண்ணெதிரே காட்டிய உடனேயே (உங்கள் தலைவரின் கட்டளைக்கு) நீங்கள் மாறு செய்தீர்கள். ஏனெனில் உங்களில் சிலர் இம்மையை விரும்புவோராய் இருந்தனர்; வேறு சிலர் மறுமையை விரும்புவோராய் இருந்தனர். பிறகு அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு இறைமறுப்பாளர்களை எதிர்த்து நிற்க முடியாத வண்ணம் உங்களை திசை திருப்பிவிட்டான். இதன் பிறகும் அவன் உங்களை மன்னித்தருளினான். ஏனெனில், அல்லாஹ் இறைநம்பிக்கையுடையோர் மீது பெரிதும் கருணை பொழிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் அனுமதிகொண்டு (எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொன்றழித்த சமயத்தில் அல்லாஹ் திட்டமாக தனது வாக்குறுதியை உங்களுக்கு உண்மையாக்கி வைத்தான், முடிவாக நீங்கள் கோழைகளாகி உங்களுக்கிடப்பட்ட கட்டளையில் தர்க்கித்துக் கொண்டுமிருந்தீர்கள், நீங்கள் எதை விரும்பினீர்களோ அதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் மாறு செய்யலானீர்கள், உங்களில் இம்மையை விரும்புவோரும் உண்டு, உங்களில் மறுமையை விரும்புவோரும் உண்டு, பின்னர் உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளை விட்டும் உங்களைத் திருப்பினான், மேலும், திட்டமாக அவன் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிட்டான். அல்லாஹ்வே விசுவாசிகள் மீது பேரருளுடையவன்.
Saheeh International
And Allah had certainly fulfilled His promise to you when you were killing them [i.e., the enemy] by His permission until [the time] when you lost courage and fell to disputing about the order [given by the Prophet (ﷺ] and disobeyed after He had shown you that which you love. Among you are some who desire this world, and among you are some who desire the Hereafter. Then He turned you back from them [defeated] that He might test you. And He has already forgiven you, and Allah is the possessor of bounty for the believers.
اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰۤی اَحَدٍ وَّالرَّسُوْلُ یَدْعُوْكُمْ فِیْۤ اُخْرٰىكُمْ فَاَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِّكَیْلَا تَحْزَنُوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ ؕ وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
اِذْசமயம்تُصْعِدُوْنَவேகமாக ஓடுகிறீர்கள்وَلَا تَلْوٗنَநீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்عَلٰٓى اَحَدٍஒருவரையும்وَّالرَّسُوْلُதூதர்يَدْعُوْكُمْஉங்களை அழைக்கிறார்فِىْۤ اُخْرٰٮكُمْஉங்களுக்குஇறுதியில்فَاَثَابَكُمْஉங்களுக்கு கூலியாக்கினான்غَمًّا ۢதுயரத்தைبِغَمٍّதுயரத்தின்காரணமாகلِّـكَيْلَا تَحْزَنُوْاநீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவேعَلٰىமீதுمَاஎதுفَاتَكُمْஉங்களுக்கு தவறியதுوَلَا مَاۤ اَصَابَكُمْ‌ؕஇன்னும் உங்களுக்கு ஏற்பட்டதுوَاللّٰهُஅல்லாஹ்خَبِيْرٌۢஆழ்ந்தறிந்தவன்بِمَا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்பவற்றை
இத் துஸ்'இதூன வலா தல்வூன 'அலா அஹதி(ன்)வ் வர் ரஸூலு யத்'ஊகும் Fபீ உக்ராகும் Fப அதாBபகும் கம்மம் Bபிகம்மில் லிகய்லா தஹ்Zஜனூ 'அலா மா Fபாதகும் வலா மா அஸாBபகும்; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
முஹம்மது ஜான்
(நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு ‘‘(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்'' என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டு பண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (ஒரு பொருள்) தவறி விட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத்தன்மையை உங்களுக்கு உண்டு பண்ணுவதற்)காகவே (இத்தகைய சிரமத்தை உங்களுக்குக் கொடுத்தான்). நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.
IFT
இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காதவாறு ஓடிக் கொண்டிருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். இதன் விளைவாக அல்லாஹ் உங்களுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பத்தைக் கொடுத்தான். ஏனெனில், உங்களை விட்டு நழுவிப் போனவை பற்றியும், உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டது பற்றியும், (இனிமேல்) நீங்கள் வருந்தக் கூடாது எனும் படிப்பினையை இதிலிருந்து பெறவேண்டும் என்பதற்காக! அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உஹத் யுத்தத்தில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்கள் பின்னிருந்துக்கொண்டு (“என்னிடம் வாருங்கள்” என்று) உங்களை அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) நீங்கள் ஒருவரையுமே திரும்பிப் பாராது (வெருண்டோடி மலையில்) ஏறிக்கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள், அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் உண்டு பண்ணிய இத்) துக்கத்தின் காரணமாக, உங்களுக்கும் (தோல்வியின்) துக்கத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான், ஏனென்றால் (இனி) உங்களுக்கு எது தவறிவிட்டதோ, அதன் மீதும், உங்களுக்கு எது ஏற்பட்டுவிட்டதோ, அதன் மீதும் நீங்கள் கவலை கொள்ளாதிருப்பதற்காகவேயாகும், மேலும், நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு உணர்பவன்.
Saheeh International
[Remember] when you [fled and] climbed [the mountain] without looking aside at anyone while the Messenger was calling you from behind. So Allah repaid you with distress upon distress so you would not grieve for that which had escaped you [of victory and spoils of war] or [for] that which had befallen you [of injury and death]. And Allah is [fully] Aware of what you do.
ثُمَّ اَنْزَلَ عَلَیْكُمْ مِّنْ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا یَّغْشٰی طَآىِٕفَةً مِّنْكُمْ ۙ وَطَآىِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ یَظُنُّوْنَ بِاللّٰهِ غَیْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِیَّةِ ؕ یَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَیْءٍ ؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ ؕ یُخْفُوْنَ فِیْۤ اَنْفُسِهِمْ مَّا لَا یُبْدُوْنَ لَكَ ؕ یَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَیْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِیْ بُیُوْتِكُمْ لَبَرَزَ الَّذِیْنَ كُتِبَ عَلَیْهِمُ الْقَتْلُ اِلٰی مَضَاجِعِهِمْ ۚ وَلِیَبْتَلِیَ اللّٰهُ مَا فِیْ صُدُوْرِكُمْ وَلِیُمَحِّصَ مَا فِیْ قُلُوْبِكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
ثُمَّபிறகுاَنْزَلَஇறக்கினான்عَلَيْكُمْஉங்கள் மீதுمِّنْۢ بَعْدِபின்னர்الْغَمِّதுயரம்اَمَنَةًமன நிம்மதிக்காகنُّعَاسًاசிறு நித்திரையைيَّغْشٰىஅது சூழ்ந்ததுطَآٮِٕفَةًஒரு வகுப்பாரைمِّنْكُمْ‌ۙஉங்களில்وَطَآٮِٕفَةٌஇன்னும் ஒரு வகுப்பார்قَدْதிட்டமாகاَهَمَّتْهُمْஅவர்களுக்கு கவலையைத் தந்தனاَنْفُسُهُمْஆன்மாக்கள்/தங்கள்يَظُنُّوْنَஎண்ணுகின்றனர்بِاللّٰهِஅல்லாஹ்வைغَيْرَஅல்லாதالْحَـقِّஉண்மைظَنَّஎண்ணத்தைப் போன்றுالْجَـاهِلِيَّةِ‌ؕமடத்தனம்يَقُوْلُوْنَகூறுகின்றனர்هَلْ لَّنَاநமக்கு உண்டா ?مِنَஇருந்துالْاَمْرِஅதிகாரத்தில்مِنْ شَىْءٍ‌ؕஏதும்قُلْகூறுவீராகاِنَّநிச்சயமாகالْاَمْرَஅதிகாரம்كُلَّهٗஅது எல்லாம்لِلّٰهِ‌ؕஅல்லாஹ்வுக்குரியதேيُخْفُوْنَமறைக்கின்றனர்فِىْۤ اَنْفُسِهِمْதங்களுக்குள்مَّا لَا يُبْدُوْنَஎதை/வெளிப்படுத்த மாட்டார்கள்لَكَ‌ؕஉமக்குيَقُوْلُوْنَகூறுகின்றனர்لَوْ كَانَ لَنَاஇருந்திருந்தால்/நமக்குمِنَ الْاَمْرِஅதிகாரத்தி லிருந்துشَىْءٌஏதும்مَّاஎதுவும்قُتِلْنَاகொல்லப் பட்டிருக்க மாட்டோம்هٰهُنَا ؕஇங்குقُلْகூறுவீராகلَّوْ كُنْتُمْநீங்கள் இருந்தாலும்فِىْ بُيُوْتِكُمْஉங்கள் வீடுகளில்لَبَرَزَவெளியாகியே தீருவார்الَّذِيْنَஎவர்கள்كُتِبَவிதிக்கப்பட்டதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالْقَتْلُகொலைاِلٰىபக்கம்مَضَاجِعِهِمْ‌ۚதாங்கள் கொல்லப்படும் இடங்கள்وَلِيَبْتَلِىَஇன்னும் பரிசோதிப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்مَاஎவைفِىْ صُدُوْرِநெஞ்சங்களில்كُمْஉங்கள்وَلِيُمَحِّصَஇன்னும் பரிசுத்தமாக்கمَا فِىْ قُلُوْبِكُمْ‌ؕஎவை/இல்/உள்ளங்கள்/உங்கள்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢமிக அறிபவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளதை
தும்ம அன்Zஜல 'அலய்கும் மிம் Bபஃதில் கம்மி அமனதன் னு'ஆஸய் யக்'ஷா தா' இFபதம் மின்கும் வ தா'இFபதுன் கத் அஹம்மத்-ஹும் அன்Fபுஸுஹும் யளுன்னூன Bபில்லாஹி கய்ரல் ஹக்கி ளன்னல் ஜாஹிலிய்யதி யகூலூன ஹல் லனா மினல் அம்ரி மின் ஷய்'; குல் இன்னல் அம்ர குல்லஹூ லில்லாஹ்; யுக்Fபூன Fபீ அன்Fபுஸிஹிம் மா லா யுBப்தூன லக யகூலூன லவ் கான லனா மினல் அம்ரி ஷய்'உம்மா குதில்னா ஹாஹுனா; குல் லவ் குன்தும் Fபீ Bபுயூதிகும் லBபரZஜல் லதீன குதிBப 'அலய்ஹிமுல் கத்லு இலா மளாஜி'இஹிம் வ லியBப்தலியல் லாஹு மா Fபீ ஸுதூரிகும் வ லியுமஹ் ஹிஸ மா Fபீ குலூBபிகும்; வல்லாஹு 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
முஹம்மது ஜான்
பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்; உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது; மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்: “இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?” (என்று, அதற்கு) “நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்; அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்: “இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;” “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) இத் துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கிவைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவற்றை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து ‘‘நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?'' என்று கேட்டனர். (இதற்கு,) ‘‘எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!'' என்று (நபியே! பதில்) கூறுவீராக. (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு ‘‘நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்படவேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்'' என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுவீராக. உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்.
IFT
பின்னர் இத் துன்பத்திற்குப் பிறகு மன ஆறுதலை அளிக்கக்கூடிய சிற்றுறக்கத்தை அல்லாஹ் உங்களுக்கு அருளினான். உங்களில் ஒரு குழுவினரை அது ஆட்கொண்டது. ஆனால் மற்றும் சிலரோ தமது நலன்களையே முக்கியமாகக் கருதி உண்மைக்குப் புறம்பாக, அல்லாஹ்வைப் பற்றி அறியாமை மிக்க பல யூகங்களைக் கொண்டிருந்தனர். “இந்த விவகாரங்களில் எங்களுக்கும் ஏதாவது பங்குண்டா?” என்று அவர்கள் வினவுகின்றனர். நீர் கூறும்: “(யாருக்கும் எத்தகையப் பங்குமில்லை.) இவற்றின் அனைத்து அதிகாரங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் கைவசமே உள்ளன.” உண்மையில் அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை உம்மிடம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் கேட்டதன் பொருள் இதுதான்: “தலைமையதிகாரங்களில் எங்களுக்கும் சிறிது பங்கு இருந்திருந்தால், நாங்கள் இங்குக் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” என்று அவர்கள் சொல்கின்றார்கள். அதற்கு நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!” மேலும் அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றைச் சோதிக்கவும் உங்கள் இதயங்களில் படிந்திருக்கும் மாசுகளை அகற்றவுமே இவ்வாறெல்லாம் நிகழும்படிச் செய்தான். அல்லாஹ் உங்கள் உள்ளங்களின் நிலையை நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு, விசுவாசங்கொண்டோரே! இத்துக்கத்திற்குப் பின்னர், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு அமைதியை அளிக்கக் கூடிய சிறு தூக்கத்தை இறக்கி வைத்தான், உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது, மற்றதொரு கூட்டத்தினரோ, திட்டமாக அவர்களுடைய மனங்கள் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி விட்டன, அறியாமைக் காலத்தின் எண்ணம் போல, அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை (தவறாக) எண்ண ஆரம்பித்து “காரியத்தில் நமக்கேதும் உண்டா?” என்று அவர்கள் கூறினர், (அதற்கு) “நிச்சயமாக காரியம்-அது அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (இவையன்றி) அவர்கள் உமக்கு வெளியிடாததை தங்கள் மனங்களில் மறைத்திருக்கின்றனர், நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால் இங்கு வந்து (இவ்வாறு) நாம் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” எனக் கூறுகின்றனர், (இதற்கு நபியே! அந்த முனாஃபிக்குகளிடம்) நீர் கூறுவீராக! “நீங்கள் உங்கள் வீடுகளில் (தங்கி) இருந்திருந்த போதிலும் கொல்லப்பட்டே இறக்க வேண்டுமென்று எவர்கள்மீது விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள், தாங்கள் (கொல்லப்பட்டு) விழ வேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே இருப்பார்கள்” உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் பரிசோதனை செய்வதற்காகவும், உங்கள் இதயங்களில் உள்ளவற்றைச் சுத்தப்படுத்தி விடுவதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படி செய்தான்), மேலும், (உங்கள்) நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன்.
Saheeh International
Then after distress, He sent down upon you security [in the form of] drowsiness, overcoming a faction of you, while another faction worried about themselves, thinking of Allah other than the truth - the thought of ignorance, saying, "Is there anything for us [to have done] in this matter?" Say, "Indeed, the matter belongs completely to Allah." They conceal within themselves what they will not reveal to you. They say, "If there was anything we could have done in the matter, we [i.e., some of us] would not have been killed right here." Say, "Even if you had been inside your houses, those decreed to be killed would have come out to their death beds." [It was] so that Allah might test what is in your breasts and purify what is in your hearts. And Allah is Knowing of that within the breasts.
اِنَّ الَّذِیْنَ تَوَلَّوْا مِنْكُمْ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ۙ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّیْطٰنُ بِبَعْضِ مَا كَسَبُوْا ۚ وَلَقَدْ عَفَا اللّٰهُ عَنْهُمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்تَوَلَّوْاதிரும்பினார்கள்مِنْكُمْஉங்களில்يَوْمَநாள்الْتَقَىசந்தித்தார்(கள்)الْجَمْعٰنِۙஇரு கூட்டங்கள்اِنَّمَاசறுகச் செய்ததெல்லாம்اسْتَزَلَّهُمُஅவர்களைالشَّيْطٰنُஷைத்தான்بِبَعْضِசிலதின் காரணமாகمَاஎவைكَسَبُوْا ۚசெய்தார்கள்وَلَقَدْ عَفَاதிட்டமாக மன்னித்தான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْ‌ؕஅவர்களைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்حَلِيْمٌ‏மகா சகிப்பாளன்
இன்னல் லதீன தவல்லவ் மின்கும் யவ்மல் தகல் ஜம்'ஆனி இன்னமஸ் தZஜல்லஹுமுஷ் ஷய்தானு BபிBபஃளி மா கஸBபூ வ லகத் 'அFபல் லாஹு 'அன்ஹும்; இன்ன்னல் லாஹ கFபூருன் ஹலீம்
முஹம்மது ஜான்
இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க பொறுமையுடையவன் ஆவான்.
IFT
இரு கூட்டத்தாரும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத்தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். எனினும் அல்லாஹ் அவர்களைப் பொறுத்தருளினான். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் சகிப்புத்தன்மையுடையவனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே!) இரு கூட்டத்தாரும் (போர்முனையில்) சந்தித்த நாளில் உங்களில் (அதிலிருந்து) திரும்பிவிட்டார்களே அவர்கள்- அவர்கள் சம்பாதித்துக்கொண்ட (தீவினைகள்) சிலவற்றின் காரணமாக - அவர்களை (அதிலிருந்து திரும்பி)ச் சறுகுமாறு செய்ததெல்லாம் ஷைத்தானே. திட்டமாக அல்லாஹ் அவர்(களின் குற்றங்)களை மன்னித்தும் விட்டான், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், சகிப்புத் தன்மையுடையவன்.
Saheeh International
Indeed, those of you who turned back on the day the two armies met [at Uhud] - it was Satan who caused them to slip because of some [blame] they had earned. But Allah has already forgiven them. Indeed, Allah is Forgiving and Forbearing.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِی الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّی لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْا ۚ لِیَجْعَلَ اللّٰهُ ذٰلِكَ حَسْرَةً فِیْ قُلُوْبِهِمْ ؕ وَاللّٰهُ یُحْیٖ وَیُمِیْتُ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَكُوْنُوْاஆகாதீர்கள்كَالَّذِيْنَபோன்று/எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்لِاِخْوَانِهِمْசகோதரர்களுக்கு/ அவர்களுடையاِذَا ضَرَبُوْاஅவர்கள் பயணித்தால்فِى الْاَرْضِபூமியில்اَوْஅல்லதுكَانُوْاஇருந்தார்கள்غُزًّىபோர் புரிபவர்களாகلَّوْ كَانُوْاஅவர்கள் இருந்திருந்தால்عِنْدَنَاநம்மிடமேمَا مَاتُوْاஅவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள்وَمَا قُتِلُوْا ۚஇன்னும் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்لِيَجْعَلَஆக்குவதற்காகاللّٰهُஅல்லாஹ்ذٰ لِكَஅதைحَسْرَةًகைசேதமாகفِىْ قُلُوْبِهِمْ‌ؕஅவர்களுடைய உள்ளங்களில்وَاللّٰهُஅல்லாஹ்يُحْىٖவாழவைக்கிறான்وَيُمِيْتُ‌ؕஇன்னும் மரணிக்க வைக்கிறான்وَ اللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
யா அய்யுஹுல் லதீன ஆமனூ லா தகூனூ கல்லதீன கFபரூ வ காலூ லி இக்வானிஹிம் இதா ளரBபூ Fபில் அர்ளி அவ் கானூ குZஜ்Zஜல் லவ் கானூ 'இன்தனா மா மாதூ வமா குதிலூ லியஜ்'அலல் லாஹு தாலிக ஹஸ்ரதன் Fபீ குலூBபிஹிம்; வல்லாஹு யுஹ்யீ வ யுமீத்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
முஹம்மது ஜான்
முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று (அந்நிராகரிப்பாளர்கள்) கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் தருகிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் வைப்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்குகிறான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிப்போரைப் போன்று பேசாதீர்கள்! அவர்கள், தங்களுடைய உற்றார் உறவினர் எப்போதேனும் பயணம் சென்றால், அல்லது போரில் கலந்து (ஏதேனும் துன்பத்திற்குள்ளாகி) விட்டால், “இவர்கள் எங்களுடன் இருந்திருந்தால் மரணமடைந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய இப்படிப்பட்ட பேச்சுகளின் காரணமாக, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் கடுந்துயரத்தை ஏற்படுத்துகிறான். உண்மையில் உயிரைக் கொடுப்பவனும், உயிரைப் பறிப்பவனும் அல்லாஹ்வே ஆவான்; மேலும், நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நிராகரித்துக்கொண்டிருப்போரைப் போல் நீங்கள் ஆகிவிட வேண்டாம், அவர்கள், பூமியில் பிரயாணம் செய்தோ, அல்லது யுத்தம் செய்வோராகவோ இருந்து (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி “அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால், அவர்கள் இறந்திருக்கவுமாட்டார்கள், கொல்லப்படடிருக்கவுமாட்டார்கள்” என்று கூறுகின்றனர், அவர்களுடைய இதயங்களில், (என்றென்றுமே) இதை ஒரு (கடும்) துக்கமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் செய்கின்றான், அல்லாஹ்வே உயிர் கொடுக்கின்றான், அவனே மரணிக்கச் செய்கின்றான், மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்க்கிறவன்.
Saheeh International
O you who have believed, do not be like those who disbelieved and said about their brothers when they traveled through the land or went out to fight, "If they had been with us, they would not have died or have been killed," so Allah makes that [misconception] a regret within their hearts. And it is Allah who gives life and causes death, and Allah is Seeing of what you do.
وَلَىِٕنْ قُتِلْتُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
وَلَٮِٕنْ قُتِلْتُمْநீங்கள் கொல்லப்பட்டால்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்اَوْஅல்லதுمُتُّمْநீங்கள் இறந்தாலும்لَمَغْفِرَةٌதிட்டமாக மன்னிப்புمِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்وَرَحْمَةٌஇன்னும் கருணைخَيْرٌமிகச் சிறந்ததுمِّمَّاஎதைவிடيَجْمَعُوْنَ‏சேகரிக்கிறார்கள்
வ ல'இன் குதில்தும் Fபீ ஸBபீலில் லாஹி அவ் முத்தும் லமக்Fபிரதும் மினல் லாஹி வ ரஹ்மதுன் கய்ரும் மிம்மா யஜ்ம'ஊன்
முஹம்மது ஜான்
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும் (அதற்காக உங்களுக்கு) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும் அவர்கள் சேகரித்து(க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட மிக மேலானதாகும்.
IFT
நீங்கள் அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டாலோ அல்லது மரணமடைந்தாலோ, அப்போது உங்களுக்கு வழங்கப்படவிருக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் கருணையும் இ(ந்நிராகரிப்ப)வர்கள் திரட்டி வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும்விட மிகச் சிறந்தவையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும், அல்லது இறந்துவிட்டாலும் (அதற்காக) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும் (அவனுடைய) அருளும், அவர்கள் சேகரித்து வைத்திருப்பவைகளைவிட மிக மேலானதாகும்.
Saheeh International
And if you are killed in the cause of Allah or die - then forgiveness from Allah and mercy are better than whatever they accumulate [in this world].
وَلَىِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَاۡاِلَی اللّٰهِ تُحْشَرُوْنَ ۟
وَلَٮِٕنْ مُّتُّمْநீங்கள் இறந்தால்اَوْஅல்லதுقُتِلْتُمْகொல்லப்பட்டீர்கள்لَا۟திட்டமாகاِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்تُحْشَرُوْنَ‏ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
வ ல'இம் முத்தும் 'அவ் குதில்தும் ல இலல்லாஹி துஹ்ஷரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனெனில், கருணைமிக்க) அல்லாஹ்விடம்தான் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்.
IFT
நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்து விட்டாலும் அல்லது கொல்லப் பட்டாலும் (கூட) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.
Saheeh International
And whether you die or are killed, unto Allah you will be gathered.
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِیْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۪ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِی الْاَمْرِ ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَوَكِّلِیْنَ ۟
فَبِمَا رَحْمَةٍகருணையினால்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்لِنْتَமென்மையானீர்لَهُمْ‌ۚஅவர்களுக்குوَلَوْ كُنْتَநீர் இருந்திருந்தால்فَظًّاகடுகடுப்பானவராகغَلِيْظَகடுமையானவராகالْقَلْبِஉள்ளம்لَانْفَضُّوْاபிரிந்திருப்பார்கள்مِنْஇருந்துحَوْلِكَ‌உம் சுற்றுப் புறம்فَاعْفُஆகவே மன்னிப்பீராகعَنْهُمْஅவர்களைوَاسْتَغْفِرْஇன்னும் மன்னிப்புத் தேடுவீராகلَهُمْஅவர்களுக்காகوَشَاوِرْهُمْஇன்னும் ஆலோசிப்பீராக / அவர்களுடன்فِى الْاَمْرِ‌ۚகாரியத்தில்فَاِذَا عَزَمْتَ(நீர்) உறுதிசெய்தால்فَتَوَكَّلْநம்பிக்கை வைப்பீராகعَلَى اللّٰهِ‌ؕஅல்லாஹ் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُتَوَكِّلِيْنَ‏நம்பிக்கை வைப்பவர்களை
FபBபிமா ரஹ்மதிம் மினல் லாஹி லின்த லஹும் வ லவ் குன்த Fபள்ளன் கலீளல் கல்Bபி லன்Fபள்ளூ மின் ஹவ்லிக FபஃFபு 'அன்ஹும் வஸ்தக்Fபிர் லஹும் வ ஷாவிர்ஹும் Fபில் அம்ரி Fப இதா 'அZஜம்த Fபதவக்கல் 'அலல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுல் முதவக் கிலீன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீர் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! மேலும், (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வருவீராக! (ஒரு விஷயத்தை செய்ய) நீர் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கிறான்.
IFT
(நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்(களின் தவறு)களைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும் இவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும் தீனுடைய பணிகளில் இவர்களையும் கலந்தாலோசிப்பீராக! (ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர், மேலும், சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால், உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள், ஆகவே, அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து, (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்க கோருவீராக! மேலும் (யுத்தம், சமாதானம் முதலிய மற்ற) காரியத்தில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! (யாதொரு காரியத்தை) நீர் முடிவு செய்தால், அல்லாஹ்வின் மீது நீர் (உம்முடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பீராக! (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தம் காரியங்களை அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.
Saheeh International
So by mercy from Allah, [O Muhammad], you were lenient with them. And if you had been rude [in speech] and harsh in heart, they would have disbanded from about you. So pardon them and ask forgiveness for them and consult them in the matter. And when you have decided, then rely upon Allah. Indeed, Allah loves those who rely [upon Him].
اِنْ یَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمْ ۚ وَاِنْ یَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِیْ یَنْصُرُكُمْ مِّنْ بَعْدِهٖ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
اِنْ يَّنْصُرْஉதவினால்كُمُஉங்களுக்குاللّٰهُஅல்லாஹ்فَلَاஅறவே இல்லைغَالِبَமிகைப்பவர்لَـكُمْ‌ۚஉங்களைوَاِنْ يَّخْذُلْكُمْஅவன் உங்களை கைவிட்டால்فَمَنْ ذَاயார் / அவர்الَّذِىْஎவர்يَنْصُرُكُمْஉங்களுக்கு உதவுவார்مِّنْۢ بَعْدِهٖ ؕஅதற்குப் பின்னர்وَعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்فَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைக்கவும்الْمُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
இ(ன்)ய்-யன்ஸுர்குமுல் லாஹு Fபலா காலிBப லகும் வ இ(ன்)ய்-யக்துல்கும் Fபமன் தல் லதீ யன்ஸுருகும் மின் Bபஃதிஹ்; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும்.
IFT
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாகில், பிறகு எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது! மேலும் உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்தால், உங்களை மிகைப்பவர் எவருமில்லை; உங்களுக்கு அவன் (உதவிசெய்யாது) விட்டுவிட்டாலோ, அதற்குப் பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் யார்? இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.
Saheeh International
If Allah should aid you, no one can overcome you; but if He should forsake you, who is there that can aid you after Him? And upon Allah let the believers rely.
وَمَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّغُلَّ ؕ وَمَنْ یَّغْلُلْ یَاْتِ بِمَا غَلَّ یَوْمَ الْقِیٰمَةِ ۚ ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَمَا كَانَதகுதி இல்லைلِنَبِىٍّஒரு நபிக்குاَنْ يَّغُلَّ‌ؕமோசம் செய்வதுوَمَنْஎவர்يَّغْلُلْமோசம் செய்வாரோيَاْتِவருவார்بِمَاஎதைக் கொண்டுغَلَّமோசம் செய்தார்يَوْمَ الْقِيٰمَةِ‌ ۚமறுமை நாளில்ثُمَّபிறகுتُوَفّٰىகொடுக்கப்படும்كُلُّஒவ்வொருنَفْسٍஆன்மாمَّاஎதைكَسَبَتْசெய்ததுوَهُمْஇன்னும் அவர்கள்لَا يُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
வமா கான லி னBபிய்யின் அய் யகுல்ல்; வ மய் யக்லுல் ய'திBபிமா கல்ல யவ்மல் கியாமஹ்; தும்ம துவFப்Fபா குல்லு னFப்ஸிம் மா கஸBபத் வ ஹும் லா யுள்லமூன்
முஹம்மது ஜான்
எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டுவர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது.
IFT
வஞ்சனை செய்தல் எந்த ஒரு நபிக்குரிய செயலாகவும் இருக்க முடியாது. எனவே எவர் வஞ்சனை செய்கின்றாரோ அவர் மறுமைநாளில் தான் செய்த வஞ்சனையுடன்தான் வருவார். பின்னர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்களில் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (போரில் கிடைத்த பொருட்களில்) மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுமானதன்று; எவரேனும் மோசம் செய்தால் அவர், அந்த மோசம் செய்ததுடன் மறுமை நாளில் வருவார்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்த வினைக்கு(ரிய பயனை)ப் பூரணமாக அளிக்கப்படும். (அவை செய்த நன்மையைக் குறைத்தோ, தீமையை அதிகரித்தோ எவ்வகையிலும்) அவர்கள் அநீதி செய்யப்படவுமாட்டார்கள்.
Saheeh International
It is not [attributable] to any prophet that he would act unfaithfully [in regard to war booty]. And whoever betrays, [taking unlawfully], will come with what he took on the Day of Resurrection. Then will every soul be [fully] compensated for what it earned, and they will not be wronged.
اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
اَفَمَنِ اتَّبَعَபின்பற்றியவர்رِضْوَانَவிருப்பத்தைاللّٰهِஅல்லாஹ்வின்كَمَنْۢ بَآءَதிரும்பியவனைப் போல்بِسَخَطٍகோபத்துடன்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَمَاْوٰٮهُஇன்னும் தங்குமிடம்/ அவனுடையجَهَنَّمُ‌ؕநரகம்وَ بِئْسَஇன்னும் கெட்டுவிட்டதுالْمَصِيْرُ‏மீளுமிடம்
அFபமனித் தBப'அ ரிள்வானல் லாஹி கமம் Bபா'அ Bபிஸகதிம் மினல் லாஹி வ ம'வாஹு ஜஹன்னம்; வ Bபி'ஸல் மஸீர்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவனின் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
IFT
எப்பொழுதுமே அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றி நடக்கும் ஒருவர் அல்லாஹ்வின் சினத்துக்கு ஆளானவரைப் போலவும், மிகவும் கெட்ட இருப்பிடமான நரகத்தைப் புகலிடமாகப் பெற்றிருப்பவரைப் போலவும் செயல்படுவாரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றியவர் அல்லாஹ்வின் கோபத்தைக் கொண்டு மீண்டவரைப் போன்றவரா? (அன்று! கோபத்தில் சிக்கிய) அவருடைய ஒதுங்குமிடமோ நரகமாகும், மேலும், சேருமிடத்தில் (அது) மிகக் கெட்டது.
Saheeh International
So is one who pursues the pleasure of Allah like one who brings upon himself the anger of Allah and whose refuge is Hell? And wretched is the destination.
هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟
هُمْஅவர்கள்دَرَجٰتٌ(பல) தரங்கள்عِنْدَஇடம்اللّٰهِ ؕஅல்லாஹ்وَاللّٰهُஅல்லாஹ்بَصِيْرٌۢஉற்று நோக்குபவன்بِمَاஎதைيَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
ஹும் தரஜாதுன் 'இன்தல் லாஹ்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்குகிறான்.
IFT
அல்லாஹ்விடம் இவ்விரு வகை மனிதர்களுக்கும் இடையில் வேறுபட்ட படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் இவர்கள் அனைவரின் செயல்களையும் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வின் பொருத்தத்தைப்பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல படித்தரங்களில் உள்ளனர், இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்க்கிறவன்.
Saheeh International
They are [varying] degrees in the sight of Allah, and Allah is Seeing of whatever they do.
لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ اِذْ بَعَثَ فِیْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
لَقَدْ مَنَّதிட்டமாக அருள்புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَىமீதுالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்اِذْ بَعَثَ(ஏ) அனுப்பினான்فِيْهِمْஅவர்களுக்கு மத்தியில்رَسُوْلًاஒரு தூதரைمِّنْ اَنْفُسِهِمْஅவர்களில் இருந்தேيَتْلُوْاஓதுகிறார்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتِهٖவசனங்களை/ அவனுடையوَيُزَكِّيْهِمْஇன்னும் பரிசுத்தப்படுத்து கிறார்/அவர்களைوَيُعَلِّمُهُمُஇன்னும் கற்பிக்கிறார் / அவர்களுக்குالْكِتٰبَவேதத்தைوَالْحِكْمَةَ  ۚஇன்னும் ஞானம்وَاِنْநிச்சயமாகكَانُوْاஇருந்தனர்مِنْ قَبْلُ(இதற்கு) முன்னர்لَفِىْ ضَلٰلٍவழிகேட்டில்தான்مُّبِيْنٍ‏பகிரங்கமானது
லகத் மன்னல் லாஹு 'அலல் மு'மினீன இத் Bப'அத Fபீஹிம் ரஸூலம் மின் அன்Fபுஸிஹிம் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிஹீ வ யுZஜக்கீஹிம் வ யு'அல்லிமு ஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ இன் கானூ மின் கBப்லு லFபீ ளலாலிம் முBபீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கிறான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கிறார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.
IFT
திண்ணமாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருதவி புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் கற்றுக்கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில்தான் இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் விசுவாசிகள் மீது – அவர்களில் ஒரு தூதரை, (அதுவும்) அவர்களிலிருந்தே அவன் அனுப்பிவைத்த சமயத்தில் திட்டமாக பேரருள் செய்துவிட்டான். அவர், அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களைப் (பாவத்திலிருந்து) பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார், அவர்களுக்கு வேதத்தையும், (குர் ஆனையும்) ஞானத்தையும், (ஸுன்னத்தையும்) கற்றுக் கொடுக்கின்றார், நிச்சயமாக அவர்கள் இதற்குமுன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
Saheeh International
Certainly did Allah confer [great] favor upon the believers when He sent among them a Messenger from themselves, reciting to them His verses and purifying them and teaching them the Book [i.e., the Qur’an] and wisdom, although they had been before in manifest error.
اَوَلَمَّاۤ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَیْهَا ۙ قُلْتُمْ اَنّٰی هٰذَا ؕ قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَوَلَمَّاۤஇன்னும் / போதுاَصَابَتْكُمْஏற்பட்டது/உங்களுக்குمُّصِيْبَةٌஒரு சோதனைقَدْ اَصَبْتُمْதிட்டமாக அடைந்தீர்கள்مِّثْلَيْهَا ۙஅது போன்று இரு மடங்கைقُلْتُمْகூறினீர்கள்اَنّٰىஎங்கிருந்துهٰذَا‌ؕஇதுقُلْகூறுவீராகهُوَஅதுمِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ؕஉங்களிடமிருந்துதான்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَلٰىமீதுكُلِّஎல்லாம்شَىْءٍபொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
அவ லம்மா அஸாBபத்கும் முஸீBபதுன் கத் அஸBப்தும் மித்லய்ஹா குல்தும் அன்னா ஹாதா குல் ஹுவ மின் 'இன்தி அன்Fபுஸிகும்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
முஹம்மது ஜான்
இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், “இது எப்படி வந்தது?” என்று கூறுகிறிர்கள்; (நபியே!) நீர் கூறும்: இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,”
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! ‘‘பத்ரு' போரில்) இதைவிட இருமடங்கு சிரமத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்த சிரமம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எப்படி (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்றும் (நபியே!) கூறுவீராக.
IFT
(என்னே உங்கள் நிலை!) உங்களுக்கு ஏதேனும் துன்பம் வரும்போது, “அது எங்கிருந்து வந்தது?” என்று கேட்கிறீர்கள். (ஆனால் பத்ருப் போரில்) இது போன்ற இரு மடங்கு துன்பம் உங்கள் கைகளால் எதிரிகளுக்கு ஏற்பட்டிருந்ததே! (நபியே!) நீர் அவர்களுக்குக் கூறும்: “இத்துன்பம் உங்களால்தான் வந்தது. திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உங்களுக்கு (உஹதுப் போரில்) ஒரு துன்பம் ஏற்பட்டபோது நிச்சயமாக நீங்கள் (பத்ருப்போரில்) இதுபோன்று இருமடங்குத் துன்பத்தை ஏற்படுத்தி விட்டிருந்தீர்கள், (இவ்வாறு செய்துவிட்டு) இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது?” என நீங்கள் கேட்கிறீர்களா? “நீங்கள் நம் தூதருக்கு மாறு செய்ததால்) உங்களிடமிருந்தேதான் இது ஏற்பட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
Why [is it that] when a [single] disaster struck you [on the day of Uhud], although you had struck [the enemy in the battle of Badr] with one twice as great, you said, "From where is this?" Say, "It is from yourselves [i.e., due to your sin]." Indeed, Allah is over all things competent.
وَمَاۤ اَصَابَكُمْ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِیَعْلَمَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ
وَمَاۤஎதுاَصَابَكُمْஏற்பட்டது/உங்களுக்குيَوْمَநாளில்الْتَقَىசந்தித்தார்(கள்)الْجَمْعٰنِஇரு கூட்டங்கள்فَبِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِஅல்லாஹ்வின்وَلِيَعْلَمَஇன்னும் அறிவதற்காகالْمُؤْمِنِيْنَۙ‏நம்பிக்கையாளர்களை
வமா அஸாBபகும் யவ்மல் தகல் ஜம்'ஆனி FபBபி இத்னில் லாஹி வ லியஃலமல் மு'மினீன்
முஹம்மது ஜான்
மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன; இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.
அப்துல் ஹமீது பாகவி
இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது). உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்).
IFT
இரு சாராரும் மோதிக் கொண்ட நாளில் உங்களுக்கு வந்த துன்பங்கள் அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் ஏற்பட்டன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் இரு படைகளும் சந்தித்த நாளன்று, உங்களுக்கு ஏற்பட்டவை(களான துன்பங்)கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது) இன்னும், உண்மை விசுவாசிகளை(ப் பிரித்து) அறிவித்து விடு)வதற்காகவே (இவ்வாறு செய்)தான்.
Saheeh International
And what struck you on the day the two armies met [at Uhud] was by permission of Allah that He might make evident the [true] believers
وَلِیَعْلَمَ الَّذِیْنَ نَافَقُوْا ۖۚ وَقِیْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ؕ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنٰكُمْ ؕ هُمْ لِلْكُفْرِ یَوْمَىِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِیْمَانِ ۚ یَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یَكْتُمُوْنَ ۟ۚ
وَلِيَعْلَمَஇன்னும் அறிவதற்காகالَّذِيْنَஎவர்கள்نَافَقُوْا  ۖۚநயவஞ்சகம்செய்தனர்وَقِيْلَஇன்னும் கூறப்பட்டதுلَهُمْஅவர்களுக்குتَعَالَوْاவாருங்கள்قَاتِلُوْاபோர் புரியுங்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்اَوِ ادْفَعُوْا ۚஅவர்கள் தடுங்கள்قَالُوْاகூறினார்கள்لَوْ نَعْلَمُநாங்கள் அறிந்திருந்தால்قِتَالًاபோரைلَّا تَّبَعْنٰكُمْ‌ؕதிட்டமாக பின்பற்றி இருப்போம் / உங்களைهُمْஅவர்கள்لِلْكُفْرِநிராகரிப்புக்குيَوْمَٮِٕذٍஅன்றைய தினம்اَقْرَبُநெருக்கமானவர்(கள்)مِنْهُمْஅவர்களில்لِلْاِيْمَانِ‌ۚநம்பிக்கைக்குيَقُوْلُوْنَகூறுகிறார்கள்بِاَفْوَاهِهِمْவாய்களால்/தங்கள்مَّاஎதுلَيْسَஇல்லைفِىْ قُلُوْبِهِمْ‌ؕதங்கள் உள்ளங்களில்وَاللّٰهُஇன்னும் அல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைيَكْتُمُوْنَ‌ۚ‏மறைக்கின்றனர்
வ லியஃலமல் லதீன னாFபகூ; வ கீல லஹும் த'ஆலவ் காதிலூ Fபீ ஸBபீலில் லாஹி அவித் Fப'ஊ காலூ லவ் னஃலமு கிதாலல்லத் தBபஃனாகும்; ஹும் லில்குFப்ரி யவ்ம'இதின் அக்ரBபு மின்ஹும் லில் ஈமான்; யகூலூன Bபி அFப்வாஹிஹிம் மா லய்ஸ Fபீ குலூBபிஹிம்; வல்லாஹு அஃலமு Bபிமா யக்துமூன்
முஹம்மது ஜான்
இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது: “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்,” (அப்போது) அவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.” அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்; அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர்புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு ‘‘(இதை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்'' என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவற்றையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான்.
IFT
மேலும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்று அல்லாஹ் இனங்கண்டு கொள்வதற்காகவும்தான் (ஏற்பட்டன). “வாருங்கள், இறைவழியில் போர்புரியுங்கள்; அல்லது குறைந்த பட்சம் (உங்களின் நகரத்தையாவது) தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று இந்த நயவஞ்சகர்களிடம் கூறப்பட்டது. அதற்கு, “இன்று போர் நடைபெறும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாங்களும் உங்களை நிச்சயம் பின்தொடர்ந்து வந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நேரத்தில் இறைநம்பிக்கையைவிட நிராகரிப்புடன் (குஃப்ருடன்) அவர்கள் மிக நெருக்கமாய் இருந்தார்கள். தம் உள்ளங்களில் இல்லாதவற்றை நாவினால் கூறுகின்றார்கள்; மேலும், அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் முனாஃபிக்குகளாக (வேஷதாரிகளாக) ஆகி விட்டார்களே அவர்களையும் (பிரித்து) அறி(வித்துவிடு)வதற்காகத்தான் (இவ்வாறு செய்தான். விசுவாசிகளே! அந்த முனாஃபிக்குகளிடம், நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிய வாருங்கள், அல்லது (அந்த நிராகரிப்பவர்களை) நீங்கள் தடுத்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டதற்கு, “யுத்தம் பற்றியதுதான் என்று இதனை) நாங்கள் அறிந்திருந்தால் உங்களைத் தொடர்ந்தே வந்திருப்போம், என்று அவர்கள் கூறினார்கள், அன்றையத்தினம் அவர்கள், விசுவாசத்தைவிட, நிராகரிப்புக்கே மிகவும் சமீபத்திலிருந்தார்கள், தங்கள் இதயங்களில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாய்களால் கூறுகிறார்கள், மேலும், அவர்கள் (தங்கள் இதயங்களில்) மறைத்துக்கொண்டிருப்பதை அல்லாஹ் மிக அறிபவன்.
Saheeh International
And that He might make evident those who are hypocrites. For it was said to them, "Come, fight in the way of Allah or [at least] defend." They said, "If we had known [there would be] battle, we would have followed you." They were nearer to disbelief that day than to faith, saying with their mouths what was not in their hearts. And Allah is most knowing of what they conceal -
اَلَّذِیْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ؕ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَلَّذِيْنَஎவர்கள்قَالُوْاகூறினார்கள்لِاِخْوَانِهِمْதங்கள் சகோதரர்களுக்குوَقَعَدُوْاஇன்னும் உட்கார்ந்தார்கள்لَوْஆல்اَطَاعُوْنَاஅவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்துمَا قُتِلُوْا ؕஅவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்قُلْகூறுவீராகفَادْرَءُوْاதடுங்கள்عَنْவிட்டுاَنْفُسِكُمُஉங்களைالْمَوْتَமரணத்தைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
அல்லதீன காலூ லி இக்வானிஹிம் வ க'அதூ லவ் அதா'ஊனா மா குதிலூ; குல் Fபத்ர'ஊ'அன் அன்Fபுஸிகுமுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி: “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இப்படி) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள். (ஆகவே, நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன, முதலில்!) நீங்கள் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!''
IFT
இவர்கள் எத்தகையவர்களென்றால், தாம் போரில் கலந்து கொள்ளாததுடன் (அதில் பங்கு பெற்று கொல்லப்பட்ட தம் சகோதரர்களைப் பற்றி) “அவர்கள் எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (நபியே!) நீர் அவர்களிடம் கூறும்: “நீங்கள் வாய்மையுடையோராயின், மரணம் வரும்போது உங்களை விட்டு அதனைத் தடுத்து விடுங்கள் பார்ப்போம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர், (யுத்தத்திற்குச் செல்லாமல் தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (யுத்தத்தில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி “அவர்களும் எங்களுக்கு கீழப்படிந்திருந்தால் (யுத்தத்திற்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (ஆகவே) “நீங்கள் உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாகயிருந்தால், (அவர்களிடம்) நீங்கள் உங்களுக்கே மரணம் அணுகாதவாறு தடுத்துவிடுங்கள் (பார்ப்போம்) என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Those who said about their brothers while sitting [at home], "If they had obeyed us, they would not have been killed." Say, "Then prevent death from yourselves, if you should be truthful."
وَلَا تَحْسَبَنَّ الَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ بَلْ اَحْیَآءٌ عِنْدَ رَبِّهِمْ یُرْزَقُوْنَ ۟ۙ
وَلَا تَحْسَبَنَّஎண்ணாதீர்الَّذِيْنَஎவர்கள்قُتِلُوْاகொல்லப்பட்டார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்اَمْوَاتًا ؕஇறந்தவர்களாகبَلْமாறாகاَحْيَآءٌஉயிருள்ளவர்கள்عِنْدَஇடம்رَبِّهِمْஇறைவன்/தங்கள்يُرْزَقُوْنَۙ‏உணவளிக்கப்படுகிறார்கள்
வ லா தஹ்ஸBபன்னல் லதீன குதிலூ Fபீ ஸBபீலில்லாஹி அம்வாத; Bபல் அஹ்யா'உன் 'இன்த ரBப்Bபிஹிம் யுர்Zஜகூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வின் பாதையில் (போர்செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என நீர் ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். (மேலும்,) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.
IFT
இறைவழியில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக ஒருபோதும் கருதாதீர்! உண்மையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்கள் தம் இறைவனிடமிருந்து தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே!) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் நிச்சயமாக எண்ண வேண்டாம், மாறாக அவர்கள் தங்களின் இரட்சகனிடத்தில் உயிருள்ளோராக இருக்கிறார்கள், அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
Saheeh International
And never think of those who have been killed in the cause of Allah as dead. Rather, they are alive with their Lord, receiving provision,
فَرِحِیْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ وَیَسْتَبْشِرُوْنَ بِالَّذِیْنَ لَمْ یَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْ ۙ اَلَّا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۘ
فَرِحِيْنَமகிழ்ச்சியடைந்தவர்கள்بِمَاۤஎதைக் கொண்டுاٰتٰٮهُمُகொடுத்தான்/அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖ ۙதன் அருளால்وَيَسْتَبْشِرُوْنَஇன்னும் மகிழ்ச்சியடைவார்கள்بِالَّذِيْنَஎவர்களைக் கொண்டுلَمْ يَلْحَقُوْاஅவர்கள் வந்துசேரவில்லைبِهِمْஅவர்களுடன்مِّنْ خَلْفِهِمْۙஅவர்களுக்குப் பின்னால்اَ لَّا خَوْفٌஒரு பயமும் இல்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۘ‏இன்னும் அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்
Fபரிஹீன Bபிமா ஆதா ஹுமுல் லாஹு மின் Fபள்லிஹீ வ யஸ்தBப்ஷிரூன Bபில்லதீன லம் யல்ஹகூ Bபிஹிம் மின் கல்Fபிஹிம் அல்லா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
முஹம்மது ஜான்
தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்; மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி “அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைகிறார்கள். இன்னும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி ‘‘அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று மகிழ்ச்சியடைகின்றனர்.
IFT
அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்கள். தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்து வருகின்ற இன்னும் தங்களுடன் வந்து சேராமல் இருக்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் குறித்து, அவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மனநிறைவு பெறுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் தன் பேரருளால் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்தவர்களாக இருக்கின்றார்கள், (மேலும், யுத்தத்தில் இறக்காது) தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி, “அவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை, அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்” என்றும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள்.
Saheeh International
Rejoicing in what Allah has bestowed upon them of His bounty, and they receive good tidings about those [to be martyred] after them who have not yet joined them - that there will be no fear concerning them, nor will they grieve.
یَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ ۙ وَّاَنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُؤْمِنِیْنَ ۟
يَسْتَبْشِرُوْنَமகிழ்ச்சியடைவார்கள்بِنِعْمَةٍஅருட்கொடையைக் கொண்டுمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துوَفَضْلٍۙஇன்னும் அருள்وَّاَنَّ اللّٰهَஇன்னும் நிச்சயமாக அல்லாஹ்لَا يُضِيْعُவீணாக்க மாட்டான்اَجْرَகூலியைالْمُؤْمِنِيْنَ  ۛۚ‏நம்பிக்கையாளர்களின்
யஸ்தBப்ஷிரூன Bபினிஃமதிம் மினல் லாஹி வ Fபள் லி(ன்)வ் வ அன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் மு'மினீன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் ‘‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடவில்லை'' என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.
IFT
அல்லாஹ் அளித்த கொடையினாலும், அருளினாலும் அவர்கள் அகமகிழ்வுடன் இருக்கின்றார்கள். இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகி விடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்விடமிருந்துள்ள அருட்கொடையைக் கொண்டும், பேரருளைக் கொண்டும்; நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளின் (நற்) கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கமாட்டான் என்பதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள்.
Saheeh International
They receive good tidings of favor from Allah and bounty and [of the fact] that Allah does not allow the reward of believers to be lost -
اَلَّذِیْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ ۛؕ لِلَّذِیْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِیْمٌ ۟ۚ
اَلَّذِيْنَஎவர்கள்اسْتَجَابُوْاபதிலளித்தார்கள்لِلّٰهِஅல்லாஹ்விற்குوَالرَّسُوْلِஇன்னும் தூதர்مِنْۢஇருந்துبَعْدِபின்னர்مَاۤ اَصَابَهُمُஅவர்களுக்கு ஏற்பட்டதுالْقَرْحُ  ۛؕகாயம்لِلَّذِيْنَஎவர்களுக்குاَحْسَنُوْاநல்லறம் புரிந்தார்கள்مِنْهُمْஅவர்களில்وَاتَّقَوْاஇன்னும் அஞ்சினார்கள்اَجْرٌகூலிعَظِيْمٌ‌ۚ‏மகத்தானது
அல்லதீனஸ் தஜாBபூ லில் லாஹி வர் ரஸூலி மிம் Bபஃதி மா அஸாBபஹுமுல்கர்ஹ்; லில்லதீன அஹ்ஸனூ மின்ஹும் வத்தகவ் அஜ்ருன் 'அளீம்
முஹம்மது ஜான்
அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்;அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.
IFT
(அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால்) அவர்கள் (போரில்) தமக்குக் காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வு(டைய அழைப்பு)க்கும் தூதரு(டைய அழைப்பு)க்கும் மறுமொழியளித்தார்கள். அவர்களில் யார் நற்செயல் புரிந்து பாவங்களிலிருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு மாபெரும் கூலியுண்டு.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்குக் காயம் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடைய மற்றும் தூதருடைய அழைப்பை ஏற்றனர், (ஆகவே யுத்தத்திற்குச் சென்றனர்) இவர்களில் யார் அழகானவற்றைச் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து தங்களைக் காத்துக்) கொண்டார்களோ அத்தகையவர்களுக்கு மகத்தான (நற்) கூலியுண்டு.
Saheeh International
Those [believers] who responded to Allah and the Messenger after injury had struck them. For those who did good among them and feared Allah is a great reward -
اَلَّذِیْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِیْمَانًا ۖۗ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِیْلُ ۟
اَلَّذِيْنَஎவர்கள்قَالَகூறினார்(கள்)لَهُمُஅவர்களுக்குالنَّاسُமக்கள்اِنَّநிச்சயமாகالنَّاسَமக்கள்قَدْ جَمَعُوْاஉறுதியாக ஒன்று சேர்த்துள்ளனர்لَـكُمْஉங்களுக்குفَاخْشَوْهُمْஆகவே பயப்படுங்கள்/ அவர்களைப்فَزَادَهُمْஅதிகப்படுத்தியது/ அவர்களுக்குاِيْمَانًا  ۖநம்பிக்கையைوَّقَالُوْاஇன்னும் கூறினார்கள்حَسْبُنَاபோதுமானவன்/ எங்களுக்குاللّٰهُஅல்லாஹ்وَنِعْمَஇன்னும் சிறந்து விட்டான்الْوَكِيْلُ‏பொறுப்பாளன்
அல்லதீன கால லஹுமுன் னாஸு இன்னன் னாஸ கத் ஜம'ஊ லகும் Fபக்-ஷவ்ஹும் FபZஜாதஹும் இமான(ன்)வ் வ காலூ ஹஸ்Bபுனல் லாஹு வ னிஃமல்வகீல்
முஹம்மது ஜான்
மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் (ஆதலால்,) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. மேலும், ‘‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவன் (பாதுகாவலன்)'' என்றும் கூறினார்கள்.
IFT
“உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் (பெரும்படையாகத்) திரண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சுங்கள்!” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறைநம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால்,(ஒருசில) மனிதர்கள் அவர்களிடம் (வந்து) உங்களுக்கு விரோதமாக (யுத்தம் புரிய) நிச்சயமாக மனிதர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர்; ஆதலால், அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறினர். அப்போது இ(க்)கூற்றானது அவர்களுக்கு(ப் பயம் ஏற்படுத்துவதற்கு பதிலாக) விசுவாசத்தை (-ஈமானை) அதிகப்படுத்தியது. மேலும், "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், பாதுகாவலரில் அவன் மிக்க நல்லவன்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
Saheeh International
Those to whom people [i.e., hypocrites] said, "Indeed, the people have gathered against you, so fear them." But it [merely] increased them in faith, and they said, "Sufficient for us is Allah, and [He is] the best Disposer of affairs."
فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ یَمْسَسْهُمْ سُوْٓءٌ ۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ؕ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِیْمٍ ۟
فَانْقَلَبُوْاதிரும்பினார்கள்بِنِعْمَةٍஅருட்கொடையுடன்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَفَضْلٍஇன்னும் அருள்لَّمْ يَمْسَسْهُمْஅணுகவில்லை / அவர்களைسُوْٓءٌ ۙஒரு தீங்குوَّاتَّبَعُوْاஇன்னும் பின்பற்றினார்கள்رِضْوَانَவிருப்பத்தைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَاللّٰهُஅல்லாஹ்ذُوْ فَضْلٍஅருளுடையவன்عَظِيْمٍ‏மகத்தானது
Fபன்கலBபூ Bபினிஃமதிம் மினல் லாஹி வ Fபள்லில் லம் யம்ஸஸ்ஹும் ஸூ'உ(ன்)வ் வத்தBப'ஊ ரிள்வானல் லாஹ்; வல்லாஹு தூ Fபள்லின் 'அளீம்
முஹம்மது ஜான்
இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவன். (ஆகவே, பொருளையும் அவர்களுக்கு அளித்தான்.)
IFT
இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. இன்னும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின்படி நடந்தார்கள் (எனும் சிறப்பும் அவர்களுக்குக் கிடைத்தது). மேலும், அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பேரருளையும் பெற்றுத்திரும்பினார்கள், அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை, இன்னும் அவர்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றிச் சென்றார்கள், அல்லாஹ்வோ மகத்தான பேரருளுடையோன்.
Saheeh International
So they returned with favor from Allah and bounty, no harm having touched them. And they pursued the pleasure of Allah, and Allah is the possessor of great bounty.
اِنَّمَا ذٰلِكُمُ الشَّیْطٰنُ یُخَوِّفُ اَوْلِیَآءَهٗ ۪ فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِنَّمَا ذٰلِكُمُஅவனெல்லாம்الشَّيْطٰنُஷைத்தான் தான்يُخَوِّفُபயமுறுத்துகிறான்اَوْلِيَآءَهٗதன் நண்பர்களைفَلَا تَخَافُوْهُمْஆகவே பயப்படாதீர்கள் / அவர்களைوَخَافُوْنِபயப்படுங்கள்/ என்னைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இன்னமா தாலிகுமுஷ் ஷய்தானு யுகவ்விFபு அவ்லியா'அஹூ Fபலா தகாFபூஹும் வ காFபூனி இன் குன்தும் மு'மினீன்
முஹம்மது ஜான்
ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான் தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்.
IFT
தன் நண்பர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஷைத்தானே அவ்வாறு கூறியவன் (என்பது இப்போது உங்களுக்குப் புரிந்துவிட்டது). எனவே நீங்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கையுடையோராயின் (இனி) அம்மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது ஒரு ஷைத்தான்தான், அவன் தன் நண்பர்களைப்பற்றி (அவர்கள் பலசாலிகள், கடுமையானவர்கள் என உங்களைப்) பயமுறுத்துகிறான், ஆகவே, நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால், அவர்களுக்குப் பயப்பட வேண்டாம் எனக்கே பயப்படுங்கள்.
Saheeh International
That is only Satan who frightens [you] of his supporters. So fear them not, but fear Me, if you are [indeed] believers.
وَلَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ ۚ اِنَّهُمْ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ یُرِیْدُ اللّٰهُ اَلَّا یَجْعَلَ لَهُمْ حَظًّا فِی الْاٰخِرَةِ ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
وَلَاவேண்டாம்يَحْزُنْكَஉம்மை கவலைப்படுத்தالَّذِيْنَஎவர்கள்يُسَارِعُوْنَவிரைகிறார்கள்فِى الْكُفْرِ‌ۚநிராகரிப்பில்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَنْ يَّضُرُّواஅறவே தீங்கிழைக்க மாட்டார்கள்اللّٰهَஅல்லாஹ்விற்குشَيْئًا ؕஎதையும்يُرِيْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَلَّا يَجْعَلَஏற்படுத்தாமல் இருக்கلَهُمْஅவர்களுக்குحَظًّاநற்பாக்கியத்தைفِى الْاٰخِرَةِமறுமையில்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைعَظِيْمٌ‏மகத்தானது
வ லா யஹ்Zஜுன்கல் லதீன யுஸாரி'ஊன Fபில் குFப்ர்; இன்னஹும் லய் யளுர்ருல் லாஹ ஷய்'ஆ; யுரீதுல் லாஹு அல்லா யஜ்'அல லஹும் ஹள்ளன் Fபில் ஆகிரதி வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
முஹம்மது ஜான்
“குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச்செய்ய அல்லாஹ் விரும்புகிறான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அவர்களுக்கு பெரிய வேதனையும் உண்டு.
IFT
(நபியே! இன்று) இறைநிராகரிப்பின் வழியில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்(களின் நடவடிக்கை)கள் உம்மைத் துயரத்தில் ஆழ்த்திட வேண்டாம். நிச்சயமாக அவர்களால் அல்லாஹ்வுக்குச் சிறிதும் தீங்கு விளைவித்திட முடியாது. அவர்களுக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் கிடைக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். இறுதியில் அவர்களுக்கு மிகப்பெரும் தண்டனையும் கிடைக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்கிறார்களே அத்தகையோர் உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம், (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு இடரும் செய்து விடவே முடியாது, மறுமையில், அவர்களுக்கு எத்தகைய பாக்கியத்தையும் ஆக்காதிருப்பதை அல்லாஹ் நாடுகின்றான், அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு.
Saheeh International
And do not be grieved, [O Muhammad], by those who hasten into disbelief. Indeed, they will never harm Allah at all. Allah intends that He should give them no share in the Hereafter, and for them is a great punishment.
اِنَّ الَّذِیْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِیْمَانِ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اشْتَرَوُاவாங்கினார்கள்الْكُفْرَநிராகரிப்பைبِالْاِيْمَانِநம்பிக்கைக்குப் பகரமாகلَنْ يَّضُرُّواஅறவே தீங்கிழைக்க மாட்டார்கள்اللّٰهَஅல்லாஹ்விற்குشَيْئًا ۚஎதையும்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக்கூடியது
இன்னல் லதீனஷ் தரவுல் குFப்ர Bபில் ஈமானி லய் யளுர்ருல் லாஹ ஷய்'அ(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு அற்ப அளவும் தீங்கிழைத்துவிட முடியாது. தவிர, அவர்களுக்குத்தான் துன்புறுத்தும் வேதனை உண்டு.
IFT
எவர்கள் இறைநம்பிக்கைக்குப் பதிலாக நிராகரிப்பை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ அவர்களால் அல்லாஹ்வுக்கு எத்தகைய தீங்கினையும் திண்ணமாக ஏற்படுத்திட முடியாது. துன்புறுத்தும் வேதனைதான் அவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தங்கள்) விசுவாசத்திற்கு பதிலாக நிராகரிப்பை நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டார்களே அத்தகையோர் - அவர்கள் அல்லாஹ்வுக்கு ஓர் அணுவளவும் தீங்கிழைத்துவிடவே முடியாது, அவர்களுக்கு (அதனால்) துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
Saheeh International
Indeed, those who purchase disbelief [in exchange] for faith - never will they harm Allah at all, and for them is a painful punishment.
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِیْ لَهُمْ خَیْرٌ لِّاَنْفُسِهِمْ ؕ اِنَّمَا نُمْلِیْ لَهُمْ لِیَزْدَادُوْۤا اِثْمًا ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟
وَلَا يَحْسَبَنَّநிச்சயமாக எண்ணவேண்டாம்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اَنَّمَا نُمْلِىْநாம் அவகாசமளிப்ப தெல்லாம்لَهُمْஅவர்களுக்குخَيْرٌநல்லதுلِّاَنْفُسِهِمْ‌ؕதங்களுக்குاِنَّمَا نُمْلِىْநாம் அவகாசமளிப்ப தெல்லாம்لَهُمْஅவர்களுக்குلِيَزْدَادُوْۤاஅவர்கள் அதிகரிப்பதற்காகاِثْمًا‌ ۚபாவத்தால்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைمُّهِيْنٌ‏இழிவூட்டக்கூடியது
வ லா யஹ்ஸBபன்னல் லதீன கFபரூ அன்னமா னும்லீ லஹும் கய்ருல்லி அன்Fபுஸிஹிம்; இன்னமா னும்லீ லஹும் லியZஜ்தாதூ இத்மா வ லஹும் 'அதாBபும் முஹீன்
முஹம்மது ஜான்
இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப்படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மேன்மேலும்,) அதிகரிப்பதற்காகவேதான். மேலும், (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
IFT
இவ்வாறு அவர்களை நாம் (உடனடியாகத் தண்டிக்காமல்) விட்டு வைப்பது தங்களுக்கு நன்மையாகும் என நிராகரிப்பவர்கள் எண்ணிவிட வேண்டாம்! அவர்களை நாம் விட்டு வைப்பதெல்லாம் பாவச் சுமையை அவர்கள் அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான்! பின்னர் அவர்களுக்கு இழிவு மிக்க வேதனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்-அவர்களை தாமதப்படுத்துவதெல்லாம் தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம், நாம் அவர்களுக்கு வேதனையைத் தாமதப்படுத்துவதெல்லாம், பாவத்தை (பின்னும்) அவர்கள் அதிகப்படுத்துவதற்காகவேதான், (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு.
Saheeh International
And let not those who disbelieve ever think that [because] We extend their time [of enjoyment] it is better for them. We only extend it for them so that they may increase in sin, and for them is a humiliating punishment.
مَا كَانَ اللّٰهُ لِیَذَرَ الْمُؤْمِنِیْنَ عَلٰی مَاۤ اَنْتُمْ عَلَیْهِ حَتّٰی یَمِیْزَ الْخَبِیْثَ مِنَ الطَّیِّبِ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِیُطْلِعَكُمْ عَلَی الْغَیْبِ وَلٰكِنَّ اللّٰهَ یَجْتَبِیْ مِنْ رُّسُلِهٖ مَنْ یَّشَآءُ ۪ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَكُمْ اَجْرٌ عَظِیْمٌ ۟
مَا كَانَஇல்லைاللّٰهُஅல்லாஹ்لِيَذَرَவிட்டுவிடுபவனாகالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களைعَلٰىமீதுمَاۤஎதுاَنْـتُمْநீங்கள்عَلَيْهِஅதன் மீதுحَتّٰىஇறுதியாகيَمِيْزَபிரிப்பான்الْخَبِيْثَதீயவர்(களை)مِنَஇருந்துالطَّيِّبِ‌ؕநல்லவர்(கள்)وَمَا كَانَஇன்னும் இல்லைاللّٰهُஅல்லாஹ்لِيُطْلِعَكُمْஅறிவிப்பவனாக/உங்களுக்குعَلَى الْغَيْبِமறைவானவற்றைوَ لٰكِنَّஎனினும்اللّٰهَஅல்லாஹ்يَجْتَبِىْதேர்ந்தெடுக்கிறான்مِنْ رُّسُلِهٖதன் தூதர்களில்مَنْஎவரைيَّشَآءُ‌நாடுகிறான்فَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرُسُلِهٖ‌ۚஇன்னும் அவனுடைய தூதர்களைوَاِنْ تُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொண்டால்وَتَتَّقُوْاஇன்னும் அஞ்சினால்فَلَـكُمْஉங்களுக்குاَجْرٌகூலிعَظِيْمٌ‏மகத்தானது
மா கானல் லாஹு லியதரல் மு'மினீன 'அலா மா அன்தும் 'அலய்ஹி ஹத்தா யமீZஜல் கBபீத மினத் தய்யிBப்; வமா கானல் லாஹு லியுத்லி'அகும் 'அலல் கய்Bபி வ லாகின்னல் லாஹ யஜ்தBபீ மிர் ருஸுலிஹீ மய் யஷா'; Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹ்; வ இன் து 'மினூ வ தத்தகூ Fபலகும் அஜ்ருன் 'அளீம்
முஹம்மது ஜான்
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரை (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். மறைவானவற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்கமாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து)கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.
IFT
இப்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ, அதே நிலையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டான். தூய்மையானவர்களை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியே தீருவான். மேலும், மறைவானவற்றை உங்களுக்கு அறிவிப்பது அல்லாஹ்வின் நியதியல்ல. எனினும் (அவற்றை அறிவித்துக் கொடுப்பதற்காக) தன்னுடைய தூதர்களில் தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். எனவே (மறைவானவற்றில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தோடும் வாழ்வீர்களாயின் உங்களுக்கு மகத்தான கூலி இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நயவஞ்சகர்களே!) நல்லோரிலிருந்து தீயோரை பிரித்தறிவிக்கும்வரை நீங்கள் எதன் மீதிருக்கிறீர்களோ அதன்மீது, விசுவாசிகளை விட்டு வைப்பவனாக இல்லை, மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை, எனினும், தன் தூதர்களில் தான் நாடியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான், ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசியுங்கள், நீங்கள் (உண்மையாகவே) விசுவாசித்தும், (அவனுக்குப்) பயந்தும் (நடந்து) கொணடால் உங்களுக்கு மகத்தான (நற்) கூலியுண்டு.
Saheeh International
Allah would not leave the believers in that [state] you are in [presently] until He separates the evil from the good. Nor would Allah reveal to you the unseen. But [instead], Allah chooses of His messengers whom He wills, so believe in Allah and His messengers. And if you believe and fear Him, then for you is a great reward.
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ یَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَیْرًا لَّهُمْ ؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ؕ سَیُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠
وَلَا يَحْسَبَنَّஎண்ண வேண்டாம்الَّذِيْنَஎவர்கள்يَبْخَلُوْنَகஞ்சத்தனம் செய்கிறார்கள்بِمَاۤஎதில்اٰتٰٮهُمُகொடுத்தான்/அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்مِنْஇருந்துفَضْلِهٖதன் அருள்هُوَஅதுخَيْـرًاநல்லதுلَّهُمْ‌ؕஅவர்களுக்குبَلْமாறாகهُوَஅதுشَرٌّதீமைلَّهُمْ‌ؕஅவர்களுக்குسَيُطَوَّقُوْنَஅரிகண்டமாக மாட்டப்படுவார்கள்مَاஎதைبَخِلُوْاகஞ்சத்தனம் செய்தார்கள்بِهٖஅதைيَوْمَ الْقِيٰمَةِ ؕமறுமை நாளில்وَ لِلّٰهِஅல்லாஹ்விற்குمِيْرَاثُவாரிசுரிமைالسَّمٰوٰتِவானங்களில்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிوَاللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்خَبِيْرٌ‏ஆழ்ந்தறிபவன்
வ லா யஹ்ஸBபன்னல் லதீன யBப்கலூன Bபிமா ஆதாஹுமுல் லாஹு மின் Fபளில்ஹீ ஹுவ கய்ரல் லஹும் Bபல் ஹுவ ஷர்ருல் லஹும் ஸயுதவ் வகூன மா Bபகிலூ Bபிஹீ யவ்மல் கியாமஹ்; வ லில்லாஹி மீராதுஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
முஹம்மது ஜான்
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவன் ஆவான்.
IFT
அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும். வானங்களும், பூமியும் அல்லாஹ்வுக்கே உரித்தானவையாய் இருக்கின்றன. மேலும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தன் பேரருளால் அவர்களுக்குக் கொடுத்தவைகளில் உலோபித்தனம் செய்கின்றார்களே அத்தகையவர்கள், அது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்காகும், எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள், இன்னும் வானங்கள், மற்றும் பூமியின் அனந்தர உரிமை அல்லாஹ்வுக்கே உரியது, மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்கிறவன்.
Saheeh International
And let not those who [greedily] withhold what Allah has given them of His bounty ever think that it is better for them. Rather, it is worse for them. Their necks will be encircled by what they withheld on the Day of Resurrection. And to Allah belongs the heritage of the heavens and the earth. And Allah, of what you do, is [fully] Aware.
لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِیْرٌ وَّنَحْنُ اَغْنِیَآءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ۙ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟
لَقَدْ سَمِعَதிட்டமாக கேட்டான்اللّٰهُஅல்லாஹ்قَوْلَகூற்றைالَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்فَقِيْرٌஏழைوَّنَحْنُஇன்னும் நாங்கள்اَغْنِيَآءُ ۘசீமான்கள்سَنَكْتُبُபதிவு செய்வோம்مَاஎதைقَالُوْاகூறினார்கள்وَقَتْلَهُمُஇன்னும் கொலை செய்ததை/அவர்கள்الْاَنْۢبِيَآءَநபிமார்களைبِغَيْرِ حَقٍّ ۙۚநியாயமின்றிوَّنَقُوْلُஇன்னும் கூறுவோம்ذُوْقُوْاசுவையுங்கள்عَذَابَவேதனையைالْحَرِيْقِ‏எரிக்கக் கூடியது
லகத் ஸமி'அல் லாஹு கவ்லல் லதீன காலூ இன்னல் லாஹ Fபகீரு(ன்)வ் வ னஹ்னு அக்னியா'; ஸனக்துBபு மா காலூ வ கத்லஹுமுல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ னகூலு தூகூ 'அதாBபல் ஹரீக்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தாம் சீமான்கள்” என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்; (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும் அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், “சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்” என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் ‘‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்'' என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை திட்டமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இப்படி) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்கிறோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப்பாருங்கள்'' என நாம் கூறுவோம்.
IFT
“அல்லாஹ் வறியவன்; நாங்கள் செல்வந்தர்கள்!” என்று கூறியவர்களின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். இவ்வாறு அவர்கள் கூறியதை நாம் பதிவு செய்கின்றோம். (இதற்கு முன்) தூதர்களை நியாயமின்றி அவர்கள் கொலை செய்து வந்ததும் செயலேட்டில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், (தீர்ப்புக் கூறும் நேரம் வரும்போது) நாம் அவர்களிடம் கூறுவோம்: “இதோ, சுட்டுப் பொசுக்கும் நரக வேதனையை இப்பொழுது சுவையுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தான் சீமான்கள்” என்று கூறினார்களே, அத்தகையவர்களுடைய சொல்லைத் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுவிட்டான், (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம், மேலும், (மறுமையில் அவர்களிடம்) “எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்” என நாம் கூறுவோம்.
Saheeh International
Allah has certainly heard the statement of those [Jews] who said, "Indeed, Allah is poor, while we are rich." We will record what they said and their killing of the prophets without right and will say, "Taste the punishment of the Burning Fire.
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۚ
ذٰ لِكَஅதுبِمَاஎதன் காரணத்தால்قَدَّمَتْமுற்படுத்தியதுاَيْدِيْكُمْஉங்கள் கரங்கள்وَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَيْسَஇல்லைبِظَلَّامٍஅநீதியிழைப்பவன்لِّلْعَبِيْدِ‌ۚ‏அடியார்களுக்கு
தாலிக Bபிமா கத்தமத் அய்தீகும் வ அன்னல் லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில்'அBபீத்
முஹம்மது ஜான்
இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்; நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் உங்கள் கைகளால் தேடிக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை'' (என்றும் கூறுவோம்).
IFT
இது உங்கள் கைகள் சம்பாதித்ததுதான்! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகள்மீது கொடுமை புரிபவன் அல்லன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது “உங்கள் கைகள் முற்படுத்தி வைத்த (செய்கைகளின்) காரணத்தினாலாகும், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநியாயமும் செய்பவனல்ல”
Saheeh International
That is for what your hands have put forth and because Allah is not ever unjust to [His] servants."
اَلَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَیْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰی یَاْتِیَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ ؕ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِیْ بِالْبَیِّنٰتِ وَبِالَّذِیْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
اَلَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَهِدَஉறுதிமொழி வாங்கினான்اِلَيْنَاۤஎங்களிடம்اَلَّا نُؤْمِنَநாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்றுلِرَسُوْلٍஒரு தூதருக்குحَتّٰىவரைيَاْتِيَنَاவருவார்/எங்களிடம்بِقُرْبَانٍஒரு பலியைக்கொண்டுتَاْكُلُهُசாப்பிடும்/அதைالنَّارُ‌ؕநெருப்புقُلْகூறுவீராகقَدْதிட்டமாகجَآءَவந்தார்(கள்)كُمْஉங்களிடம்رُسُلٌபல தூதர்கள்مِّنْ قَبْلِىْஎனக்கு முன்னர்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுوَبِالَّذِىْஇன்னும் எதைக்கொண்டுقُلْتُمْகூறினீர்கள்فَلِمَ قَتَلْتُمُوْهُمْஆகவே ஏன்?/கொலை செய்தீர்கள்/அவர்களைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
அல்லதீன காலூ இன்னல் லாஹ 'அஹித இலய்னா அல்லா னு'மின லிரஸூலின் ஹத்தா ய'தியனா Bபிகுர்Bபானின் த குலுஹுன் னார்; குல் கத் ஜா'அகும் ருஸுலும் மின் கBப்லீ Bபில்Bபய்யினாதி வ Bபில்லதீ குல்தும் Fபலிம கதல்துமூஹும் இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் ‘‘எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும்வரை அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாது என்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக்கிறான்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். (அப்படி இருக்க, உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?''
IFT
“(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் வரை எந்த ஒருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று திண்ணமாக அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னவர்களிடம் (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக எனக்கு முன்பு உங்களிடையே தூதர்கள் பலர் தெளிவான பல சான்றுகளுடன் வந்திருந்தனர். (ஏன்) நீங்கள் இப்பொழுது குறிப்பிடுகின்ற சான்றினையும் கூட அவர்கள் கொண்டு வந்தனர். (இறைநம்பிக்கை கொள்வதற்கு இதனை ஒரு நிபந்தனையாய்க் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், பிறகு அத்தகைய தூதர்களை ஏன் கொலை செய்தீர்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யூதர்களாகிய) அத்தகையோர் “எத்தூதராயினும் நம்மிடம் அவர் ஒரு “குர்பானி”யைக் கொண்டுவந்து அதை நெருப்பு உண்ணும்வரை நாங்கள் விசுவாசம் (ஈமான்) கொள்ள வேண்டாம் என, நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி எடுத்துள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள், (நபியே!) நீர் “எனக்கு முன்னர் வந்த தூதர்கள், தெளிவான அத்தாட்சிகளையும் இன்னும் நீங்கள் கேட்டதையும் உங்களுக்குத் திட்டமாகக் கொண்டு வந்தார்கள், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை ஏன் கொலை செய்தீர்கள்?” என்று கேட்பீராக.
Saheeh International
[They are] those who said, "Indeed, Allah has taken our promise not to believe any messenger until he brings us an offering which fire [from heaven] will consume." Say, "There have already come to you messengers before me with clear proofs and [even] that of which you speak. So why did you kill them, if you should be truthful?"
فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَآءُوْ بِالْبَیِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِیْرِ ۟
فَاِنْ كَذَّبُوْكَஆகவே அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்فَقَدْ كُذِّبَதிட்டமாகபொய்பிக்கப் பட்டார்(கள்)رُسُلٌதூதர்கள்مِّنْ قَبْلِكَஉமக்கு முன்னர்جَآءُوْவந்தார்கள்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுوَالزُّبُرِஇன்னும் வேத நூல்கள்وَالْكِتٰبِஇன்னும் வேதம்الْمُنِيْرِ‏ஒளி வீசக்கூடியது
Fப இன் கத் தBபூக Fபகத் குத் திBப ருஸுலும் மின் கBப்லிக ஜா'ஊ Bபில்Bபய்யினாதி வZஜ் ZஜுBபுரி வல் கிதாBபில் முனீர்
முஹம்மது ஜான்
எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உமக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்தே இருந்தனர்.
IFT
(முஹம்மதே! இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் எனக் கூறுகின்றார்கள். ஆனால், உமக்கு முன் தெள்ளத் தெளிவான சான்றுகளையும் ஆகமங்களையும், ஒளியூட்டும் வேதங்களையும் கொணர்ந்த தூதர்களில் பலரும் பொய்யர்கள் எனக் கூறப்பட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக கவலைப்பட வேண்டாம், ஏனென்றால்) உமக்கு முன்னர் தெளிவான அத்தாட்சிகளையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டுவந்த தூதர்கள் பலரும் (அவர்கள் கூட்டத்தினரால் இவ்வாறே) பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றனர்.
Saheeh International
Then if they deny you, [O Muhammad] - so were messengers denied before you, who brought clear proofs and written ordinances and the enlightening Scripture.
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ؕ وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟
كُلُّஒவ்வொருنَفْسٍஆன்மாذَآٮِٕقَةُசுவைக்கக் கூடியதுالْمَوْتِ‌ؕமரணத்தைوَاِنَّمَاஎல்லாம்تُوَفَّوْنَமுழுமையாக நிறைவேற்றப்படுவீர்கள்اُجُوْرَكُمْஉங்கள் கூலிகளைيَوْمَ الْقِيٰمَةِ‌ؕமறுமை நாளில்فَمَنْஆகவே, எவர்زُحْزِحَதூரமாக்கப்பட்டார்عَنِ النَّارِநெருப்பி லிருந்துوَاُدْخِلَஇன்னும் நுழைக்கப்பட்டார்الْجَـنَّةَசொர்க்கத்தில்فَقَدْ فَازَ ؕதிட்டமாக வெற்றிபெற்றார்وَمَاஇன்னும் இல்லைالْحَيٰوةُவாழ்க்கைالدُّنْيَاۤஇவ்வுலகம்اِلَّاதவிரمَتَاعُஇன்பம்الْغُرُوْرِ‏மயக்கக் கூடியது
குல்லு னFப்ஸின் தா'இகதுல் மவ்த்; வ இன்னமா துவFப்Fபவ்ன உஜூரகும் யவ்மல் கியாமதி Fபமன் Zஜுஹ்Zஜிஹ 'அனின் னாரி வ உத்கிலல் ஜன்னத Fபகத் FபாZஜ்; வ மல் ஹயாதுத் துன்யா இல்லா மதா'உல் குரூர்
முஹம்மது ஜான்
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.
IFT
ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். நீங்கள் அனைவரும் உங்களுடைய கூலியை மறுமைநாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள். (அங்கு) எவன் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப் படுகின்றானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான்! இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகும், இன்னும், உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் பூரணமாக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான், ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யப்படுகிறாரோ அவர், திட்டமாக வெற்றியடைந்து விட்டார், மேலும், இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத்தவிர வேறில்லை.
Saheeh International
Every soul will taste death, and you will only be given your [full] compensation on the Day of Resurrection. So he who is drawn away from the Fire and admitted to Paradise has attained [his desire]. And what is the life of this world except the enjoyment of delusion.
لَتُبْلَوُنَّ فِیْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ ۫ وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْۤا اَذًی كَثِیْرًا ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟
لَـتُبْلَوُنَّநிச்சயம் சோதிக்கப்படுவீர்கள்فِىْۤ اَمْوَالِكُمْசெல்வங்களில் / உங்கள்وَاَنْفُسِكُمْஇன்னும் ஆன்மாக்கள்/ உங்கள்وَلَـتَسْمَعُنَّஇன்னும் நிச்சயமாகசெவியுறுவீர்கள்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்مِنْ قَبْلِكُمْமுன்னர் / உங்களுக்குوَمِنَஇன்னும் இருந்துالَّذِيْنَஎவர்கள்اَشْرَكُوْۤاஇணைவைத்தார்கள்اَذًىவசை மொழியைكَثِيْـرًا‌ؕஅதிகமானதுوَاِنْ تَصْبِرُوْاநீங்கள் பொறுத்தால்وَتَتَّقُوْاஇன்னும் நீங்கள்அஞ்சினால்فَاِنَّ ذٰلِكَநிச்சயமாக அதுதான்مِنْஇல்عَزْمِஉறுதிமிக்கالْاُمُوْرِ‏காரியங்கள்
லதுBப்லவுன்ன Fபீ அம்வாலிகும் வ அன்Fபுஸிகும் வ லதஸ்ம'உன்ன மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வ மினல் லதீன அஷ்ரகூ அதன் கதீரா; வ இன் தஸ்Bபிரூ வ தத்தகூ Fப இன்ன தாலிக மின் 'அZஜ்மில் உமூர்
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசை மொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (ஆகவே, இத்தகைய சிரமங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்தவர்களாகவும், அல்லாஹ்வை பயந்தவர்களாகவும் வாழ்ந்துவந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்)... நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.
IFT
(முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும் உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள் பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைப்பிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்டடவர்களாலும், இணைவைப்பவர்களாலும் (வசைமொழி நிந்தனைகளான) அதிகமான நோவினையை நிச்சயமாக நீங்கள் செவியேற்பீர்கள், மேலும், (இத்தகைய கஷ்டங்களில்) நீங்கள் பொறுமையை மேற்கொண்டு பயபக்தியோடும் இருந்தீர்களானால், நிச்சயமாக அதுதான் அனைத்துக் காரியங்களிலும் ஆக்கமான செயலாகும்.
Saheeh International
You will surely be tested in your possessions and in yourselves. And you will surely hear from those who were given the Scripture before you and from those who associate others with Allah much abuse. But if you are patient and fear Allah - indeed, that is of the matters [worthy] of resolve.
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ لَتُبَیِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ ؗ فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَاشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِیْلًا ؕ فَبِئْسَ مَا یَشْتَرُوْنَ ۟
وَاِذْசமயம்اَخَذَவாங்கினான்اللّٰهُஅல்லாஹ்مِيْثَاقَஉறுதிமொழியைالَّذِيْنَஎவர்கள்اُوْتُوْاகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்لَتُبَيِّنُنَّهٗநிச்சயமாக நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்/அதைلِلنَّاسِமக்களுக்குوَلَاஇன்னும் கூடாதுتَكْتُمُوْنَهٗநீங்கள் அதை மறைக்கفَنَبَذُوْهُஎறிந்தனர்/அதைوَرَآءَபின்னால்ظُهُوْرِமுதுகுகள்هِمْஅவர்களுடையوَ اشْتَرَوْاஇன்னும் வாங்கினர்بِهٖஅதற்குப் பகரமாகثَمَنًاகிரயத்தைقَلِيْلًاؕசொற்பம்فَبِئْسَமிகக் கெட்டதுمَاஎதுيَشْتَرُوْنَ‏வாங்குகிறார்கள்
வ இத் அகதல் லாஹு மீதாகல் லதீன ஊதுல் கிதாBப லதுBபய்யினுன்னஹூ லின்னாஸி வலா தக்துமூன ஹூ FபனBபதூஹு வரா'அ ளுஹூரிஹிம் வஷ்தரவ் Bபிஹீ தமனன் கலீலன் FபBபி'ஸ மா யஷ்தரூன்
முஹம்மது ஜான்
தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் ‘‘(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் பெற்றுக்கொண்டது மகா கெட்டதாகும்.
IFT
வேதம் அருளப்பட்டவர்களிடம், “வேதக் கருத்துகளை மக்களிடையே நீங்கள் பரப்பிட வேண்டும்; அவற்றை மறைத்து வைக்கக் கூடாது” என்று அல்லாஹ் வாக்குறுதி வாங்கியதை நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! எனினும் அவர்கள் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னே எறிந்து விட்டார்கள்! மேலும் அதனை அற்ப ஆதாயத்திற்காக விற்று விட்டார்கள். அவர்களுடைய கொடுக்கல் வாங்கல் எத்துணைத் தரங்கெட்டது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம், “(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மறைத்துவிடாது ஜனங்களுக்குத் தெளிவாக நீங்கள் எடுத்துரைக்க வேண்டும்” என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக!) பின்னர் அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுகளுக்கு அப்பால் எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்பக் கிரயத்தை வாங்கிக் கொண்டார்கள், அவர்கள் இவ்வாறு வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
Saheeh International
And [mention, O Muhammad], when Allah took a covenant from those who were given the Scripture, [saying], "You must make it clear [i.e., explain it] to the people and not conceal it." But they threw it away behind their backs and exchanged it for a small price. And wretched is that which they purchased.
لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ یَفْرَحُوْنَ بِمَاۤ اَتَوْا وَّیُحِبُّوْنَ اَنْ یُّحْمَدُوْا بِمَا لَمْ یَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
لَا تَحْسَبَنَّநிச்சயம் எண்ணாதீர்الَّذِيْنَஎவர்கள்يَفْرَحُوْنَமகிழ்ச்சி அடைகிறார்கள்بِمَاۤ اَتَوْاஎதை செய்தார்கள்وَّيُحِبُّوْنَஇன்னும் விரும்புகிறார்கள்اَنْ يُّحْمَدُوْاஅவர்கள் புகழப்படுவதைبِمَا لَمْ يَفْعَلُوْاஎதன் மூலம்/அவர்கள் செய்யவில்லைفَلَا تَحْسَبَنَّهُمْஆகவே நிச்சயமாக எண்ணாதீர் / அவர்களைبِمَفَازَةٍபாதுகாப்பில்مِّنَஇருந்துالْعَذَابِ‌ۚவேதனைوَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக்கூடியது
லா தஹ்ஸBபன்னல் லதீன யFப்ரஹூன Bபிமா அதவ் வ யுஹிBப்Bபூன அய் யுஹ்மதூ Bபிமா லம் யFப்'அலூ Fபலா தஹ்ஸBபுன்னஹும் BபிமFபாZஜதிம் மினல் 'அதாBபி வ லஹும் 'அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்கள் தாங்கள் செய்த (அற்ப) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாத (நன்மையான) காரியங்களைப் பற்றியும், (தாம் செய்ததாக மக்கள்) தம்மைப் புகழ்வதை விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக (ஒரு காலமும்) நீர் எண்ண வேண்டாம். கண்டிப்பாக அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
IFT
தாம் செய்கின்ற இழிசெயல்களைக் குறித்து மகிழ்ந்திருப்பவர்கள் செய்யாத செயல்களுக்காகத் தாம் பாராட்டப்பட வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று ஒருபோதும் நீர் கருதிவிட வேண்டாம். (உண்மையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) தாங்கள் செய்த (அற்பக்) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்களே அவர்களையும், தாம் செய்யாத (நன்மையான) காரியங்களைப் பற்றி புகழப்படுவதை விரும்புகின்றவர்களையும் பற்றி நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம், (அல்லாஹ்வின்) தண்டனையை விட்டும் (தப்பித்து-) வெற்றியில் இருக்கிறார்கள் என்று அவர்களை நீர் திண்ணமாக எண்ண வேண்டாம், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
Saheeh International
And never think that those who rejoice in what they have perpetrated and like to be praised for what they did not do - never think them [to be] in safety from the punishment, and for them is a painful punishment.
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
وَلِلّٰهِஅல்லாஹ்விற்குمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிوَاللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லா பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
முஹம்மது ஜான்
வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அனைத்தின் மீதும் அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான்.
IFT
வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனுடைய பேராற்றல் யாவற்றையும் உள்ளடக்கியுள்ளது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
And to Allah belongs the dominion of the heavens and the earth, and Allah is over all things competent.
اِنَّ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ لَاٰیٰتٍ لِّاُولِی الْاَلْبَابِ ۟ۚۙ
اِنَّநிச்சயமாகفِىْ خَلْقِபடைத்திருப்பதில்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضِஇன்னும் பூமிوَاخْتِلَافِஇன்னும் மாறுவதுالَّيْلِஇரவுوَالنَّهَارِஇன்னும் பகல்لَاٰيٰتٍதிட்டமாக அத்தாட்சிகள்لِّاُولِى الْاَلْبَابِ ۚۖ‏அறிவுடையவர்களுக்கு
இன்ன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி வக்திலாFபில் லய்லி வன்னஹாரி ல ஆயாதில் லிஉலில் அல்BபாBப்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவுபகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, வானங்கள், மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி, மாறி வருவதிலும், அறிவுடையோர்க்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
Indeed, in the creation of the heavens and the earth and the alternation of the night and the day are signs for those of understanding -
الَّذِیْنَ یَذْكُرُوْنَ اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِهِمْ وَیَتَفَكَّرُوْنَ فِیْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ۟
الَّذِيْنَஎவர்கள்يَذْكُرُوْنَநினைவுகூர்வார்கள்اللّٰهَஅல்லாஹ்வைقِيَامًاநின்றவர்களாகوَّقُعُوْدًاஇன்னும் உட்கார்ந்தவர்களாகوَّعَلٰىஇன்னும் மீதுجُنُوْبِهِمْவிலாக்கள்/ அவர்களுடையوَيَتَفَكَّرُوْنَஇன்னும் சிந்திப்பார்கள்فِىْ خَلْقِபடைக்கப் பட்டிருப்பதில்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ۚஇன்னும் பூமிرَبَّنَاஎங்கள் இறைவாمَا خَلَقْتَநீ படைக்கவில்லைهٰذَا بَاطِلًا ۚஇதை/வீணாகسُبْحٰنَكَதூய்மைப்படுத்துகிறோம்/உன்னைفَقِنَاஆகவே காப்பாற்று/எங்களைعَذَابَவேதனையிலிருந்துالنَّارِ‏(நரக) நெருப்பின்
அல்லதீன யத்குரூனல் லாஹ கியாம(ன்)வ்-வ கு'ஊத(ன்)வ்-வ 'அலா ஜுனூ Bபிஹிம் வ யதFபக்கரூன Fபீ கல்கிஸ் ஸமாவாதி வல் அர்ளி ரBப்Bபனா மா கலக்த ஹாத Bபாதிலன் ஸுBப்ஹானக Fபகினா 'அதாBபன் னார்
முஹம்மது ஜான்
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், ‘‘எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!
IFT
அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும்போதும் ஆக எல்லா நிலைகளிலும், அல்லாஹ்வை நினைக்கின்றார்கள்; மேலும், வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (பிறகு அவர்கள் உணர்ச்சி பொங்க இப்படிப் பிரார்த்திக்கின்றார்கள்:) “எங்கள் இறைவனே! இவையனைத்தையும் நீ வீணாக (யாதொரு நோக்கமுமின்றிப்) படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே, நரக வேதனையிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அறிவுடைய) அத்தகையோர், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களின் மீது (சாய்ந்து)ம் அல்லாஹ்வையே நினைத்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை, நீ மிகத் தூயவன், (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக” (என்றும்),
Saheeh International
Who remember Allah while standing or sitting or [lying] on their sides and give thought to the creation of the heavens and the earth, [saying], "Our Lord, You did not create this aimlessly; exalted are You [above such a thing]; then protect us from the punishment of the Fire.
رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَیْتَهٗ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
رَبَّنَاۤஎங்கள்இறைவாاِنَّكَநிச்சயமாக நீمَنْஎவரைتُدْخِلِநுழைக்கிறாய்النَّارَநரக நெருப்பில்فَقَدْதிட்டமாகاَخْزَيْتَهٗ ؕஇழிவு படுத்தினாய்/அவரைوَمَاஇன்னும் இல்லைلِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குمِنْ اَنْصَارٍ‏உதவியாளர்களில்
ரBப்Bபனா இன்னக மன் துத்கிலின் னார Fபகத் அக்Zஜய் தஹூ வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” (என்றும்;)
அப்துல் ஹமீது பாகவி
எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை.
IFT
எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ, அவனை நீ உண்மையில் மிகக் கேவலப்படுத்திவிட்டாய். மேலும் இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் இரட்சகனே!! நிச்சயமாக நீ எவரை (நரக) நெருப்பில் புகுத்தினாயோ, அவரை நிச்சயமாக நீ இழிவு படுத்திவிட்டாய், இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் (ஒருவரும்) இல்லை” (என்றும்),
Saheeh International
Our Lord, indeed whoever You admit to the Fire - You have disgraced him, and for the wrongdoers there are no helpers.
رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِیًا یُّنَادِیْ لِلْاِیْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۖۗ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَیِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ ۟ۚ
رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّنَاநிச்சயமாக நாங்கள்سَمِعْنَاசெவிமடுத்தோம்مُنَادِيًاஓர் அழைப்பாளரைيُّنَادِىْஅழைக்கிறார்لِلْاِيْمَانِநம்பிக்கையின் பக்கம்اَنْ اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள் என்றுبِرَبِّكُمْஉங்கள் இறைவனைفَاٰمَنَّا  ۖஆகவே நம்பிக்கை கொண்டோம்رَبَّنَاஎங்கள் இறைவாفَاغْفِرْஆகவே மன்னிلَنَاஎங்களுக்குذُنُوْبَنَاஎங்கள் பாவங்களைوَكَفِّرْஇன்னும் அகற்றிடுعَنَّاஎங்களை விட்டுسَيِّاٰتِنَاதீமைகளை/எங்கள்وَتَوَفَّنَاஇன்னும் மரணத்தைத் தா/எங்களுக்குمَعَஉடன்الْاَبْرَارِ‌ۚ‏நல்லோர்
ரBப்Bபனா இன்னனா ஸமிஃனா முனாதியய் யுனாதீ லில் ஈமானி அன் ஆமினூ Bபி ரBப்Bபிகும் Fப ஆமன்னா; ரBப்Bபனா Fபக்Fபிர் லனா துனூBபனா வ கFப்Fபிர் 'அன்னா ஸய்யி ஆதின வ தவFப்Fபனா ம'அல் அBப்ரார்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” (என்றும்;)
அப்துல் ஹமீது பாகவி
எங்கள் இறைவனே! (உன்) தூதரின் அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின்பக்கம் அழைத்து ‘‘உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால், எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லவர்களுடன் எங்கள் உயிரை கைப்பற்றுவாயாக!
IFT
எங்கள் அதிபதியே! இறைநம்பிக்கையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்றோம். ‘உங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறினார். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனவே, “எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் இரட்சகனே! ‘உங்கள் இரட்சகனை விசுவாசியுங்கள்!’ என்று (எங்களை) விசுவாசத்தின்பால் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியேற்று நாங்களும் (அவ்வாறே) விசுவாசங் கொண்டோம், எங்கள் இரட்சகனே! ஆதலால், நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்களுடைய தீமைகளை எங்களை விட்டு நீக்கியும் விடுவாயாக! மேலும், (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக” (என்றும்),
Saheeh International
Our Lord, indeed we have heard a caller [i.e., Prophet Muhammad (ﷺ] calling to faith, [saying], 'Believe in your Lord,' and we have believed. Our Lord, so forgive us our sins and remove from us our misdeeds and cause us to die among the righteous.
رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰی رُسُلِكَ وَلَا تُخْزِنَا یَوْمَ الْقِیٰمَةِ ؕ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِیْعَادَ ۟
رَبَّنَاஎங்கள் இறைவாوَاٰتِنَاஇன்னும் தா/எங்களுக்குمَا وَعَدتَّنَاஎதை/நீ வாக்களித்தாய்/எங்களுக்குعَلٰىமூலம்رُسُلِكَஉன் தூதர்கள்وَلَا تُخْزِஇழிவுபடுத்தாதேنَاஎங்களைيَوْمَ الْقِيٰمَةِ ؕமறுமை நாளில்اِنَّكَநிச்சயமாக நீلَا تُخْلِفُமாற்றமாட்டாய்الْمِيْعَادَ‏வாக்குறுதியை
ரBப்Bபனா வ ஆதினா மா வ'அத்தனா 'அலா ருஸுலிக வலா துக்Zஜினா யவ்மல் கியாமஹ்; இன்னக லா துக்லிFபுல் மீ'ஆத்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள் புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்தி விடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல'' (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.)
IFT
எங்கள் இறைவா! மேலும், தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித் தந்தருள்வாயாக! மேலும், மறுமைநாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே! திண்ணமாக, நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் இரட்சகனே! இன்னும் உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள் புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்தாதிருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதியில் மாறு செய்யமாட்டாய்” (என்றும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்)
Saheeh International
Our Lord, and grant us what You promised us through Your messengers and do not disgrace us on the Day of Resurrection. Indeed, You do not fail in [Your] promise."
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّیْ لَاۤ اُضِیْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُ ۚ بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ فَالَّذِیْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاُوْذُوْا فِیْ سَبِیْلِیْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ ۟
فَاسْتَجَابَபதிலளித்தான்لَهُمْஅவர்களுக்குرَبُّهُمْஅவர்களுடைய இறைவன்اَنِّىْநிச்சயமாக நான்لَاۤ اُضِيْعُவீணாக்கமாட்டேன்عَمَلَ(நற்)செயலைعَامِلٍ(நற்)செயல்புரிபவரின்مِّنْكُمْஉங்களில்مِّنْஇருந்துذَكَرٍஆண்اَوْஅல்லதுاُنْثٰى‌ۚபெண்கள்بَعْضُكُمْஉங்களில் சிலர்مِّنْۢஇருந்துبَعْضٍ‌ۚசிலர்فَالَّذِيْنَஎவர்கள்هَاجَرُوْاஹிஜ்ரா சென்றார்கள்وَاُخْرِجُوْاஇன்னும் வெளியேற்றப்பட்டார்கள்مِنْஇருந்துدِيَارِهِمْஊர்கள்/தங்கள்وَاُوْذُوْاஇன்னும் துன்புறுத்தப் பட்டார்கள்فِىْ سَبِيْلِىْஎனது பாதையில்وَقٰتَلُوْاஇன்னும் போர்செய்தார்கள்وَقُتِلُوْاஇன்னும் கொல்லப்பட்டார்கள்لَاُكَفِّرَنَّநிச்சயமாக அகற்றிடுவேன்عَنْهُمْஅவர்களை விட்டுسَيِّاٰتِهِمْதீமைகளை/ அவர்களுடையوَلَاُدْخِلَنَّهُمْஇன்னும் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்جَنّٰتٍசொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ‌ۚநதிகள்ثَوَابًاநன்மைمِّنْஇருந்துعِنْدِ اللّٰهِ ؕஅல்லாஹ்விடம்وَ اللّٰهُஅல்லாஹ்عِنْدَهٗஅவனிடத்தில்தான்حُسْنُஅழகியالثَّوَابِ‏நற்கூலி
Fபஸ்தஜாBப லஹும் ரBப்Bபுஹும் அன்னீ லா உளீ'உ 'அமல 'ஆமிலிம் மின்கும் மின் தகரின் அவ் உன்தா Bபஃளுகும் மின் Bபஃளின் Fபல் லதீன ஹாஜரூ வ உக்ரிஜூ மின் தியாரிஹிம் வ ஊதூ Fபீ ஸBபீலீ வ காதலூ வ குதிலூ ல உகFப்Fபிரன்ன 'அன்ஹும் ஸய்யி ஆதிஹிம் வ ல உத்கிலன்ன ஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு தவாBபம் மின் 'இன்தில் லாஹ்; வல்லாஹு 'இன்தஹூ ஹுஸ்னுஸ் தவாBப்
முஹம்மது ஜான்
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் ‘‘உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிடமாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என் பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டு நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழையவைப்போம்'' (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கிறது.
IFT
அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான்: “உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே! எனவே (எனக்காக) நாட்டைத் துறந்தவர்கள், மேலும் என் வழியில் தம் இல்லங்களை விட்டு வெளியேற்றப்பட்டு துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள், இன்னும் (எனக்காக) போர் புரிந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் குற்றங்குறைகளையும் நான் மன்னிப்பேன். இன்னும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அவர்களை நுழைவிப்பேன். இது, அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலியாகும். மேலும் அழகிய நற்கூலி அல்லாஹ்விடமேயுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், அவர்களுடைய இரட்சகன், அவர்களுடைய (இந்தப்) பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டான், (காரணம்) “உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர் நன்மை செய்தபோதிலும், நிச்சயமாக நான் அதை வீணாக்கி விட மாட்டேன், (ஏனென்றால்) உங்களில் (ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தபோதிலும்) சிலர் மற்ற சிலரில் உள்ளவர்தான், (ஆகவே கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை, உங்களில்) (ஹிஜ்ரத்துச் செய்து) தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியும் (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என்னுடைய பாதையில் துன்புறுத்தப்பட்டும், யுத்தம் செய்தும், (அதில்) கொல்லப்பட்டும் விட்டனரே அத்தகையோர், அவர்களுடைய (பாவங்களான) தீயவைகளை நிச்சயமாக நான் அவர்களை விட்டும் நீக்கிவிடுவேன், நிச்சயமாக அவர்களை நான் சுவனபதிகளிலும் பிரவேசிக்கச் செய்வேன், அவற்றின்மீது ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், (என்று கூறுவான். இது) அல்லாஹ்விடமிருந்துள்ள நற்கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும்) அல்லாஹ்விடத்தில் இன்னும் (இதனைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கின்றது.
Saheeh International
And their Lord responded to them, "Never will I allow to be lost the work of [any] worker among you, whether male or female; you are of one another. So those who emigrated or were evicted from their homes or were harmed in My cause or fought or were killed - I will surely remove from them their misdeeds, and I will surely admit them to gardens beneath which rivers flow as reward from Allah, and Allah has with Him the best reward."
لَا یَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِیْنَ كَفَرُوْا فِی الْبِلَادِ ۟ؕ
لَاவேண்டாம்يَغُرَّنَّكَஉம்மை நிச்சயம் மயக்கிடتَقَلُّبُசுற்றித்திரிவதுالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்فِى الْبِلَادِؕ‏நகரங்களில்
லா யகுர்ரன்னக தகல் லுBபுல் லதீன கFபரூ Fபில் Bபிலாத்
முஹம்மது ஜான்
காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம்.
IFT
உலகின் பல பகுதிகளில் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவர்களின் நடமாட்டம் உம்மை ஒருபோதும் ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிராகரிப்போர், (பெரும் வர்த்தகர்களாகவும், தனவந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் திரிந்து கொண்டிருப்பது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம்.
Saheeh International
Be not deceived by the [uninhibited] movement of the disbelievers throughout the land.
مَتَاعٌ قَلِیْلٌ ۫ ثُمَّ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمِهَادُ ۟
مَتَاعٌஓர் இன்பம்قَلِيْلٌஅற்பம்ثُمَّபிறகுمَاْوٰதங்குமிடம்ٮهُمْஅவர்களுடையجَهَنَّمُ‌ؕநரகம்وَ بِئْسَஇன்னும் கெட்டதுالْمِهَادُ‏தங்குமிடம்
மதா'உன் கலீலுன் தும்ம ம'வாஹும் ஜஹன்னம்; வ Bபி'ஸல் மிஹாத்
முஹம்மது ஜான்
(அது) மிகவும் அற்ப சுகம்; பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.
அப்துல் ஹமீது பாகவி
(இது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது.
IFT
இது (சில நாள் வாழ்க்கையின்) அற்ப இன்பம்தான். பிறகு அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். எத்துணை இழிவான தங்குமிடம் அது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது) குறைந்த சுகமாகும், பின்னர், அவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடத்தில் மிகக் கெட்டது.
Saheeh International
[It is but] a small enjoyment; then their [final] refuge is Hell, and wretched is the resting place.
لٰكِنِ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ لِّلْاَبْرَارِ ۟
لٰكِنِஎனினும்الَّذِيْنَஎவர்கள்اتَّقَوْاஅஞ்சினர்رَبَّهُمْதங்கள் இறைவனைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاஅதில்نُزُلًاவிருந்தோம்பலாகمِّنْஇருந்துعِنْدِஇடம்اللّٰهِ‌ؕஅல்லாஹ்وَمَاஇன்னும் எதுعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்خَيْرٌசிறந்ததுلِّلْاَبْرَارِ‏நல்லோருக்கு
லாகினில் லதீனத் தகவ் ரBப்Bபஹும் லஹும் ஜன்ன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா னுZஜுலம்மின் 'இன்தில் லாஹ்; வமா 'இன்தல் லாஹி கய்ருல் லில் அBப்ரார்
முஹம்மது ஜான்
ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கிறார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்.
IFT
இதற்கு மாறாக எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வருகின்றார்களோ அவர்களுக்கு, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்படும் மிகச் சிறந்த உபசரிப்பாகும். மேலும், நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம் இருப்பவையே மிகவும் சிறந்தவையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆயினும், தங்கள் இரட்சகனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கின்றார்களே அத்தகையோர் - அவர்களுக்கு சுவனபதிகளுண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள், (இது) அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் விருந்தாகும், இன்னும் அல்லாஹ்விடம் இருப்பது நல்லோர்க்கு மிகச் சிறந்ததாகும்.
Saheeh International
But those who feared their Lord will have gardens beneath which rivers flow, abiding eternally therein, as accommodation from Allah. And that which is with Allah is best for the righteous.
وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ یُّؤْمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ خٰشِعِیْنَ لِلّٰهِ ۙ لَا یَشْتَرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
وَاِنَّநிச்சயமாகمِنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில்لَمَنْதிட்டமாக எவர்يُّؤْمِنُநம்பிக்கைகொள்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاۤஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكُمْஉங்களுக்குوَمَاۤஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْهِمْஅவர்களுக்குخٰشِعِيْنَபணிந்தவர்களாகلِلّٰهِ ۙஅல்லாஹ்விற்குلَا يَشْتَرُوْنَவாங்க மாட்டார்கள்بِاٰيٰتِவசனங்களுக்கு பகரமாகاللّٰهِஅல்லாஹ்வின்ثَمَنًاகிரயத்தைقَلِيْلًا ؕசொற்பம்اُولٰٓٮِٕكَஅவர்கள்لَهُمْஅவர்களுக்குاَجْرُهُمْகூலி/அவர்களுடையعِنْدَ رَبِّهِمْ‌ؕஅவர்களின் இறைவனிடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِيْعُமிக விரைவானவன்الْحِسَابِ‏கணக்கெடுப்பதில்
வ இன்ன மின் அஹ்லில் கிதாBபி லமய் யு'மினு Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்கும் வ மா உன்Zஜில இலய்ஹிம் காஷி 'ஈன லில்லாஹி லா யஷ்தரூன Bபி ஆயாதில் லாஹி தமனன் கலீலா; உலா'இக லஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இப்படியும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வற்றையும் நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இவர்களுக்கு இவர்களுடைய கூலி இவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத்தீவிரமானவன்.
IFT
திண்ணமாக, வேதம் அருளப்பட்டவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வையும், உம்மீது இறக்கியருளப்பட்டதையும், (முன்னர்) தங்கள் மீது இறக்கியருளப்பட்டதையும் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் திருமுன் பணிந்த வண்ணமிருக்கின்றார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்பதில்லை. அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங்கொண்டோரே!) நிச்சயமாக வேதத்தையுடையோரில் அல்லாஹ்வையும், உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (மற்ற)வைகளையும் அல்லாஹ்வுக்கு பயந்தவர்களாக விசுவாசம் கொள்கின்றவரும் இருக்கின்றனர், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்பக் கிரயத்திற்கு விற்றுவிட மாட்டார்கள், இத்தகையோருக்கு அவர்களுடைய கூலி அவர்கள் இரட்சகனிடத்தில் (மகத்தானதாக) இருக்கின்றது, நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
Saheeh International
And indeed, among the People of the Scripture are those who believe in Allah and what was revealed to you and what was revealed to them, [being] humbly submissive to Allah. They do not exchange the verses of Allah for a small price. Those will have their reward with their Lord. Indeed, Allah is swift in account.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا ۫ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களேاصْبِرُوْاபொறுங்கள்وَصَابِرُوْاஇன்னும் அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள்وَرَابِطُوْاஇன்னும் போருக்குத் தயாராகுங்கள்وَاتَّقُوا اللّٰهَஇன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் Bபிரூ வ ஸாBபிரூ வ ராBபிதூ வத்தகுல் லாஹ ல'அல்லகும் துFப்லிஹூன்
முஹம்மது ஜான்
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். (எதிரிகளை விட) நீங்கள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்!
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை கைக்கொள்வீர்களாக! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழ்வீர்களாக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் பொறுமையைக் கடைப் பிடியுங்கள், மேலும் (எதிரியை சந்திக்கும் போது) ஒருவருக்கொருவர் உறுதியாக இருந்து கொள்ளுங்கள், மேலும் (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் சித்தமாயிருங்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தும் கொள்ளுங்கள், நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்.
Saheeh International
O you who have believed, persevere and endure and remain stationed and fear Allah that you may be successful.