அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். வானவர்களைத் தன் தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் மேலும் அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
IFT
வானங்களையும் பூமியையும் படைத்தவனும், வானவர்களைத் தூது கொண்டு செல்பவர்களாக நியமித்தவனும் ஆகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! (அவ்வானவர்கள் எத்தகையோர் எனில்) அவர்களுக்கு இரண்டிரண்டு, மூன்று மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உள்ளன. அவன் தன்னுடைய படைப்புகளின் வடிவமைப்பில் தான் நாடுவதை அதிகப்படுத்துகின்றான். திண்ணமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும், அவன் வானங்களையும், பூமியையும் ஆரம்பமாகப் படைத்தவன். இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்நான்கும் இறக்கைகளுடைய மலக்குகளைத் தூதர்களாக ஆக்கியவன், அவன் நாடியதை(த்தன்) படைப்பில் (பின்னும்) அதிகப்படுத்துவான், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையோன்.
Saheeh International
[All] praise is [due] to Allah, Creator of the heavens and the earth, [who] made the angels messengers having wings, two or three or four. He increases in creation what He wills. Indeed, Allah is over all things competent.
மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதை அனுப்பக்கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ் எந்த ஓர் அருள்வாயிலை மக்களுக்காகத் திறந்துவிட்டாலும், அதனைத் தடுக்கக்கூடியவர் யாருமிலர். மேலும், அவன் அதனை அடைத்துவிட்டால், அதற்குப் பிறகு அதனைத் திறக்கக்கூடியவர் வேறு யாருமிலர். அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்(தன்) அருளிலிருந்து மனிதர்களுக்குத் திறந்து விட்டால், அதனைத் தடுத்துவிடக்கூடியவர் (ஒருவரும்) இல்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதன் பின் அதனை அனுப்பக் கூடிய (ஒரு)வரும் இல்லை, இன்னும், அவன் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
Whatever Allah grants to people of mercy - none can withhold it; and whatever He withholds - none can release it thereafter. And He is the Exalted in Might, the Wise.
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கிறானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகிறீர்கள்?
IFT
மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்துள்ள அருட்பேறுகளை நினைவில் வையுங்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்கின்றாரா? வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. பிறகு எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! “உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப்பாருங்கள், வானத்திலிருந்தும்; பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வையன்றி வேறொரு படைக்கிறவன் இருக்கிறானா? அவனைத் தவிர வேறொரு(வணக்கத்திற்குரிய) நாயன் இல்லை, ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?
Saheeh International
O mankind, remember the favor of Allah upon you. Is there any creator other than Allah who provides for you from the heaven and earth? There is no deity except Him, so how are you deluded?
இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்படாதீர்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும்.
IFT
(நபியே!) இப்பொழுது இவர்கள் உம்மைப் பொய்யர் என்று தூற்றுகின்றார்கள் (என்றால் இது புதிய விஷயமல்ல). உமக்கு முன்பும் தூதர்கள் பலர் பொய்யர்கள் என்று தூற்றப்பட்டிருக்கின்றார்கள். மேலும், அனைத்து விவகாரங்களும் இறுதியில் அல்லாஹ்விடம் தான் திரும்பக் கொண்டு வரப்பட இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்படுத்தி விடுவார்களானால் (பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! ஏனெனில்,) உமக்கு முன்னர் (வந்த) தூதர்களும் பொய்ப்படுத்தப் பட்டனர், அன்றியும் அல்லாஹ்விடமே சகல காரியங்களும் மீட்டுக் கொண்டு வரப்படும்.
Saheeh International
And if they deny you, [O Muhammad] - already were messengers denied before you. And to Allah are returned [all] matters.
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம்.
IFT
மனிதர்களே! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம். மேலும், அந்தப் பெரும் ஏமாற்றுக்காரனும் உங்களை அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாற்றிவிட வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும், ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களைத்திட்டமாக ஏமாற்றி விட வேண்டாம், (ஷைத்தானாகிய) ஏமாற்றுகிறவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களைத் திட்டமாக (மோசடியில் ஆக்கி) ஏமாற்றிவிட வேண்டாம்.
Saheeh International
O mankind, indeed the promise of Allah is truth, so let not the worldly life delude you and be not deceived about Allah by the Deceiver [i.e., Satan].
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கிறான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தன்னைப் பின் பற்றிய) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே.
IFT
உண்மையாக ஷைத்தான் உங்களின் பகைவனாவான். ஆகையால், நீங்களும் அவனை உங்களின் பகைவனாகவே கருதுங்கள். அவன் தன்னைப் பின் பற்றுபவர்களைத் தனது வழியில் அழைத்துக் கொண்டிருப்பது, அவர்கள் நரகவாசிகளுடன் இணைந்துவிட வேண்டுமென்பதற்காகத்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாக இருக்கின்றான், ஆகவே, அவனை நீங்களும் விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள், அவன் (தனக்கு வழிபட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரகவாசிகளில் ஆகிவிடுவதற்காகவேதான்.
Saheeh International
Indeed, Satan is an enemy to you; so take him as an enemy. He only invites his party to be among the companions of the Blaze.
எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு.
IFT
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கின்றது. மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரும் கூலியும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஷைத்தானைப் பின்பற்றி உண்மையை) நிராகரிக்கின்றார்களே அத்ததகையோர்_அவர்களுக்கு கடினமான வேதனையுண்டு. மேலும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு மன்னிப்பும், (மிகப்) பெரிய (நற்)கூலியும் உண்டு.
Saheeh International
Those who disbelieve will have a severe punishment, and those who believe and do righteous deeds will have forgiveness and great reward.
எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதை அழகாகக் காண்கிறானோ அவனா (தீயதை தீயதாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறவனைப் போன்று ஆவான்)? (ஒரு போதும் ஆக மாட்டான்.) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உமது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீர் கவலைப்படாதீர். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.
IFT
எந்த மனிதனுக்கு அவனுடைய தீயசெயல் அலங்காரமாக் கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக் கொண்டிருக்கின்றானோ (அந்த மனிதனின் வழிகேட்டிற்கு எல்லையேதும் உண்டா என்ன?) திண்ணமாக, அல்லாஹ் தான் நாடுவோரை நெறிபிறழச் செய்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். எனவே (நபியே!) இவர்களுக்காகத் துக்கமும் வேதனையும் அடைந்தே உமது உயிர் உருகிப்போய்விட வேண்டாம். இவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாகக் காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாகக் காண்கின்றாரோ அவரா? (அதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?) ஆகவே, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான்; தான் நாடியவர்களை நேரான வழியிலும் செலுத்துகிறான்; ஆகவே, (நபியே!) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய் விடவேண்டாம்; நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்.
Saheeh International
Then is one to whom the evil of his deed has been made attractive so he considers it good [like one rightly guided]? For indeed, Allah sends astray whom He wills and guides whom He wills. So do not let yourself perish over them in regret. Indeed, Allah is Knowing of what they do.
மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகிறது. பின்னர், அவற்றை இறந்து (பட்டுப்)போன பூமியின் பக்கம் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கிறான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே.
IFT
மேலும், காற்றுகளை அனுப்புகின்றவன் அல்லாஹ்தான்! பின்னர் அவை மேகங்களை உயரே கிளப்புகின்றன. பிறகு அதனை வறண்ட பகுதிக்கு நாம் கொண்டு செல்கின்றோம். மேலும், இறந்து கிடக்கும் பூமியை அதன் மூலம் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்துபோன மனிதர்களை) மீண்டும் உயிரோடெழுப்புவதும் இவ்வாறுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் எத்தகையவனென்றால், காற்றுகளை அவன் அனுப்புகிறான், அவை மேகங்களைக் கிளறுகின்றன, பின்னர், நாம் அவைகளை இறந்து போன ஊருக்கு (மழையாகப் பொழிவிக்க) இழுத்துச் செல்கிறோம், அப்போது அதனைக் கொண்டு பூமியை அது (வறண்டு) இறந்துபோன பின் உயிர்ப்பிக்கின்றோம். (மரணித்தோர் மறுமையில்) உயிர் பெற்றெழுவதும் இவ்வாறுதான்.
Saheeh International
And it is Allah who sends the winds, and they stir the clouds, and We drive them to a dead land and give life thereby to the earth after its lifelessness. Thus is the resurrection.
எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; இன்னும், இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகிறானோ, (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் பக்கமே உயருகின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்துகிறான். (நபியே!) எவர்கள் (உமக்குத்) தீங்கிழைக்க சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும்.
IFT
எவரேனும் கண்ணியத்தை விரும்பினால் கண்ணியம் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்). அவனை நோக்கி உயர்ந்து செல்வது தூய்மையான சொல் மட்டுமே! இன்னும் நற்செயல் அதனை மேலே உயர்த்துகின்றது. மேலும், எவர்கள் தீயசூழ்ச்சிகள் செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கிறது. மேலும், அவர்களுடைய சூழ்ச்சிகள் தானாகவே அழியக்கூடியவையாக இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும், தூய வாக்கியங்கள் அவனளவில் மேலேறிச் செல்கின்றன, நல்ல செயலும் அதை (அல்லாஹ்வின் பால்) உயர்த்துகிறது, மேலும், (நபியே!) தீமைகளுக்குச் சதி செய்கின்றார்களே அத்தகையோர்_ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு, இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அது அழிந்தே போகும்.
Saheeh International
Whoever desires honor [through power] - then to Allah belongs all honor. To Him ascends good speech, and righteous work raises it. But they who plot evil deeds will have a severe punishment, and the plotting of those - it will perish.
வல்லாஹு கலககும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம ஜ'அலகும் அZஜ்வாஜா; வமா தஹ்மிலு மின் உன்தா வலா தள'உ இல்லா Bபி'இல்மிஹ்; வமா யு'அம்மரு மிம் மு'அம்மரி(ன்)வ் வலா யுன்கஸு மின் 'உமுரிஹீ இல்லா Fபீ கிதாBப்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
முஹம்மது ஜான்
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர், ஒரு துளி இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' இல்லாமல் எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!
IFT
அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பிறகு, இந்திரியத்திலிருந்து (படைத்தான்). பின்னர், உங்களை (ஆண், பெண்) ஜோடிகளாய் ஆக்கினான். அல்லாஹ் அறியாமல் எந்த ஒரு பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; குழந்தையைப் பெறுவதுமில்லை! இவ்வாறே நீண்ட ஆயுள் உடையவர் அதிக வயதைப் பெறுவதுமில்லை, எவருடைய வயதும் குறைக்கப்படுவதுமில்லை; இவையெல்லாம் அந்த ஏட்டில் பதியப்படாமல்! திண்ணமாக, அல்லாஹ்வுக்கு இது மிக எளிய செயலாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் அல்லாஹ் உங்களை (துவக்கத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து _பின்னர் (ஆண்_பெண் கொண்ட) ஜோடிகளாக ஆக்கினான், அவன் அறிவைக்கொண்டே தவிர எந்தப் பெண்ணும் கர்ப்பமாவதும் இல்லை, அவள் பிரசவிப்பதும் இல்லை, வயதானவரின் வயது அதிகப்படுத்தப்படுவதும், அவரின் வயதிலிருந்து குறைக்கப்படுவதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும் பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை, நிச்சயமாக இ(வை யாவற்றையும் செய்வ)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!
Saheeh International
And Allah created you from dust, then from a sperm-drop; then He made you mates. And no female conceives nor does she give birth except with His knowledge. And no aged person is granted [additional] life nor is his lifespan lessened but that it is in a register. Indeed, that for Allah is easy.
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
அப்துல் ஹமீது பாகவி
இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்தபோதிலும்), இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கிறீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய (முத்து, பவளம் போன்ற)வற்றையும் அவற்றிலிருந்து வெளியே எடுக்கிறீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
IFT
இரண்டு நீர்ப் பரப்புகள் சமமாகமாட்டா! ஒன்று சுவையானதாகவும், தாகம் தணிக்கக்கூடியதாகவும் குடிப்பதற்கு இன்பமாயும் இருக்கின்றது. மற்றொன்று, தொண்டையை கரகரக்கச் செய்யும் அளவு கடும் உவர்ப்பானதாய் இருக்கின்றது. ஆயினும், இரண்டிலிருந்தும் நீங்கள் புத்தம் புதிய இறைச்சியைப் பெற்றுக் கொள்ளுகின்றீர்கள். அணிவதற்கான அழகு சாதனங்களை வெளிக்கொணர்கிறீர்கள். மேலும் இந்த நீரில் (நீங்கள் பார்க்கின்றீர்கள்) அதன் மார்பைப் பிளந்துகொண்டு கப்பல்கள் செல்வதை நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேட வேண்டும்; அவனுக்கு நன்றி செலுத்துவோராய்த் திகழ வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், இரு கடல்களும் சமமாகிவிடாது (இரண்டில்) இது மிக்க மதுரமான (தாகம் தீர்க்கக்கூடியதான,) அதை அருந்துவதற்கு இலேசானது, இதுவோ, உப்பும் மிக்க கசப்பும் (உடைய நீர்) ஆகும். (இரு வகையாகிய) ஒவ்வொன்றிலிருந்தும் புதிய (சுவையான மீன்) இறைச்சியை உண்ணுகின்றீர்கள், எதை நீங்கள் அணிகின்றீர்களோ அத்தகைய ஆபரணங்களையும் (அவற்றிலிருந்து) வெளியாக்குகிறீர்கள், (யாத்திரையின் மூலம்) அவனது பேரருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், (அவற்றுக்காக) நீங்கள் நன்றி செய்வதற்காகவும் அதில் கப்பல்களை நீரைப் பிளந்து செல்பவையாக நீர் காண்கிறீர்.
Saheeh International
And not alike are the two seas [i.e., bodies of water]. One is fresh and sweet, palatable for drinking, and one is salty and bitter. And from each you eat tender meat and extract ornaments which you wear, and you see the ships plowing through [them] that you might seek of His bounty; and perhaps you will be grateful.
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவற்றுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவற்றை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கிறீர்களோ அவற்றுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை.
IFT
அவன் பகலினுள் இரவையும், இரவினுள் பகலையும் கோத்துக் கொண்டு வருகின்றான். மேலும், சூரியனையும் சந்திரனையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும். (இந்தப் பணிகள் அனைத்தையும் செய்து கொண்டிருக்கும்) அந்த அல்லாஹ்தான் உங்கள் அதிபதி. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும், அவனை விடுத்து நீங்கள் யார் யாரை அழைக்கின்றீர்களோ, அவர்கள் ஓர் இம்மியளவுப் பொருளுக்கும் உரிமையாளர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனே இரவைப் பகலில் நுழையச் செய்கிறான், இன்னும், பகலை இரவில் நுழையச் செய்கிறான், சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருக்கிறான், (இவை) ஒவ்வொன்றும் (அதற்குக்) குறிப்பிடப்பட்ட தவணைப்படியே செல்கின்றன, (இத்தகைய தகுதிகளுக்குரிய) அவன்தான் உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்; அரசாட்சி அவனுடயதே! இன்னும், அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள், ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
Saheeh International
He causes the night to enter the day, and He causes the day to enter the night and has subjected the sun and the moon - each running [its course] for a specified term. That is Allah, your Lord; to Him belongs sovereignty. And those whom you invoke other than Him do not possess [as much as] the membrane of a date seed.
இன் தத்'ஊஹும் லா யஸ்ம'ஊ து'ஆ'அகும் வ லவ் ஸமி'ஊ மஸ் தஜாBபூ லகும்; வ யவ்மல் கியாமதி யக்Fபுரூன Bபிஷிர்கிகும்; வலா யுனBப்Bபி'உக மித்லு கBபீர்
முஹம்மது ஜான்
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவற்றை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவற்றின் செயலற்ற தன்மைகள்) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உமக்கு (இவ்வளவு தெளிவாக) அறிவிக்கமாட்டார்.
IFT
நீங்கள் அவர்களை அழைத்தால் அவ்வழைப்பினை அவர்களால் செவியேற்க முடிவதில்லை. மேலும், செவியேற்றாலும் அவர்களால் உங்களுக்கு எந்தப் பதிலையும் அளிக்க முடிவதில்லை. மேலும், மறுமை நாளில் உங்களுடைய இணைவைப்புச் செயலை அவர்கள் ஏற்க மறுத்துவிடுவார்கள். (எதார்த்த நிலை பற்றி இத்தகைய துல்லியமான தகவலை) யாவும் தெரிந்த ஒருவனைத் தவிர யாராலும் உங்களுக்கு அறிவித்துத் தர முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களை நீங்கள் அழைத்தபோதிலும், உங்களுடைய அழைப்பை அவர்கள் செவியுறமாட்டர்கள், அவர்கள் செவியேற்ற போதிலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள், மறுமை நாளிலோ நீங்கள் (அவர்களை) இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள். (விஷயங்களை) அறிந்தவனைப் போல் (மற்றெவரும்) உமக்கு(ச் செய்திகளை) அறிவிக்கமாட்டார்.
Saheeh International
If you invoke them, they do not hear your supplication; and if they heard, they would not respond to you. And on the Day of Resurrection they will deny your association. And none can inform you like [one] Aware [of all matters].
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்.
IFT
மனிதர்களே! நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடை யவர்களாய் இருக்கின்றீர்கள்; ஆனால், அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் தேவையுடையவர்கள், அல்லாஹ்_ அவன்தான் (பிறர்) தேவையற்றவன், (சீமான்,) புகழுக்குரியவன்.
Saheeh International
O mankind, you are those in need of Allah, while Allah is the Free of need, the Praiseworthy.
(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
(மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அவர்களைத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர் தன் நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கிறார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கிறது.
IFT
சுமை சுமக்கும் எவரும் மற்றொருவருடைய சுமையைச் சுமக்க மாட்டார். மேலும், சுமை ஏற்றப்பட்ட ஒருவர் தன்னுடைய சுமையைச் சுமக்கும்படி கெஞ்சினாலும், அவருடைய சுமையின் ஒரு சிறு பாகத்தைக்கூட ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரமாட்டார். அவர்மிக நெருங்கிய உறவினரானாலும் சரியே! (நபியே!) நேரில் காணாமலேயே தங்களுடைய இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் எச்சரிக்கை செய்ய முடியும். எவர் தூய்மையை மேற்கொண்டாலும் அவர் தனது நலனுக்காகவே அதனை மேற்கொள்கின்றார். மேலும், அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பாவம் செய்த எந்த ஆத்மாவும் மற்றொரு பாவம் செய்த ஆத்மாவின் பாவத்தை (மறுமையில்) சுமக்காது; பாவச்சுமை கனத்துவிட்ட எந்த ஆத்மாவும், அதைச் சுமக்க (யாரையேனும் அது) அழைத்தாலும் (அழைக்கப் பட்டவன்) சுற்றத்தாராக இருப்பினும், அதிலிருந்து சிறிதளவேனும் (மற்றவர் மீது) சுமத்தப்படமாட்டாது; (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், (தங்கள் கண்களால் காணாமலிருந்தும்) மறைவிலும் தங்கள் இரட்சகனை பயந்து, தொழுகையையும் நிறைவேற்றிவருகின்றார்களே அத்தகையோரைத் தான்; எவர் பரிசுத்தமடைகின்றாரோ, அவர் பரிசுத்தமடைவதெல்லாம் (அதன் பலனெல்லாம்) தமக்காகத்தான். அல்லாஹ்விடமே (யாவும்) மீண்டு செல்ல வேண்டியதிருக்கின்றது.
Saheeh International
And no bearer of burdens will bear the burden of another. And if a heavily laden soul calls [another] to [carry some of] its load, nothing of it will be carried, even if he should be a close relative. You can only warn those who fear their Lord unseen and have established prayer. And whoever purifies himself only purifies himself for [the benefit of] his soul. And to Allah is the [final] destination.
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கிறான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உம்மால் முடியாது.
IFT
மேலும், உயிருள்ளவர்களும், உயிரற்றவர்களும் சமமானவர்களல்லர். அல்லாஹ், தான் நாடுவோரைச் செவியேற்கச் செய்கின்றான். ஆயினும், (நபியே!) மண்ணறைகளில் அடக்கப்பட்டிருப்பவர்களைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைச் செவியேற்குமாறு செய்கின்றான், (நபியே!) “கப்ரு” (சமாதி)களில் உள்ளவர்களைச் செவியேற்கச் செய்பவராகவும் நீர் இல்லை.
Saheeh International
And not equal are the living and the dead. Indeed, Allah causes to hear whom He wills, but you cannot make hear those in the graves.
இன்னா அர்ஸல்னாக Bபில் ஹக்கி Bபஷீர(ன்)வ் வ னதீரா; வ இம் மின் உம்மதின் இல்லா கலா Fபீஹா னதீர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் (மட்டுமே) அனுப்பி இருக்கிறோம். அச்சமூட்டி எச்சரிக்கின்ற (நம்) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை.
IFT
நாமே உம்மை நற்செய்தி சொல்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் நியமித்து, சத்தியத்துடன் அனுப்பியுள்ளோம். மேலும், எச்சரிக்கை செய்பவர் எவரும் வருகை தராமல் எந்தச் சமுதாயமும் இருந்ததில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை சத்தியத்தைக் கொண்டு நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினோம்; மேலும் எந்த சமுதாயத்தவரும் அ(ச்சமுதாயத்)தில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் சென்றே தவிர இப்புவியில் இல்லை.
Saheeh International
Indeed, We have sent you with the truth as a bringer of good tidings and a warner. And there was no nation but that there had passed within it a warner.
இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களை) பொய்யாக்கினார்கள். அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் ‘ஸுஹுஃபு'களையும், பிரகாசமான வேதங்களையும் அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்.
IFT
(இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் என்று தூற்றுகின்றார்கள் எனில், இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களும் பொய்யர் என்று தூற்றியிருக்கின்றார்கள். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் வெளிப்படையான சான்றுகளையும், ஆகமங்களையும், தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் வேதத்தையும் கொண்டு வந்திருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இன்னும், அவர்கள் உம்மைப் பொய்ப்படுத்துவார்களானால் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் (அத்தாட்சிகளில்) தெளிவானவைகளையும், (“ஜூபுரு” எனும்) ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்திருந்தனர்.
Saheeh International
And if they deny you - then already have those before them denied. Their messengers came to them with clear proofs and written ordinances and with the enlightening Scripture.
ثُمَّபிறகுاَخَذْتُநான் தண்டித்தேன்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களைفَكَيْفَஎப்படி?كَانَஇருந்ததுنَـكِيْرِஎனது மாற்றம்
தும்ம அகத்துல் லதீன கFபரூ Fபகய்Fப கான னகீர்
முஹம்மது ஜான்
பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். எனது தண்டனை எவ்வாறாயிற்று (என்பதை நீர் கவனித்தீரா)? (அவ்வாறே, உம்மை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்.)
IFT
பின்னர், எவர்கள் ஏற்கவில்லையோ, அவர்களை நான் பிடித்துக்கொண்டேன். மேலும், பார்த்துக் கொள்ளுங்கள் என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையாக இருந்தது என்பதை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிராகரித்துக் கொண்டிருந்தோரை நான் பிடித்துக் கொண்டேன், ஆகவே, (அவர்களை அழிப்பதன் மூலம் என்னுடைய) மறுப்பு எப்படி இருந்தது? (என்பதை நீர் கவனித்தீரா?)
Saheeh International
Then I seized the ones who disbelieved, and how [terrible] was My reproach.
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? நாம் அதைக் கொண்டு பலவிதமான (ருசிகளையும்) நிறங்களையு(மு)டைய காய்கனிகளை வெளியாக்குகிறோம். இன்னும் மலைகளில் வெள்ளை, சிகப்பு முதலிய பல நிறங்கள் உள்ளவையும், சுத்தக்கருப்பு நிறம் உள்ளவையும் இருக்கின்றன.
IFT
நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து மழை பொழியச் செய்கின்றான்; பிறகு, அதன் மூலம் பல நிறங்கள் கொண்ட விதவிதமான கனிகளை நாம் வெளிக் கொணர்கின்றோம். மலைகளிலும்கூட வெண்மை, சிவப்பு, அடர்ந்த கறுப்பு ஆகிய நிறக்கோடுகள் காணப்படுகின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? பின்னர், நாம்தாம் அதனைக்கொண்டு, அவற்றின் நிறங்களை மாறுபட்டவையான கனிகளை வெளியாக்கினோம், இன்னும், மலைகளிலிருந்து, அதன் நிறங்கள் மாறுபட்டவையான வெள்ளையும், சிவப்புமான பாதைகளும், சுத்தக்கறுப்பு நிறமுடையதும் உள்ளன.
Saheeh International
Do you not see that Allah sends down rain from the sky, and We produce thereby fruits of varying colors? And in the mountains are tracts, white and red of varying shades and [some] extremely black.
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களிலும், உயிருள்ளவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனும் ஆவான்.
IFT
மேலும், இவ்வாறே மனிதர்கள், விலங்குகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றின் நிறங்களும் பலவிதமாய் உள்ளன. உண்மையில் அல்லாஹ்வின் அடிமைகளில் ஞானமுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகின்றார்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவ்வாறே மனிதர்களிலும், பூமியிலும் ஊர்ந்து திரிபவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால் நடைகளிலும் அதனுடைய நிறங்கள் மாறுபட்டிருக்கின்றன, நிச்சயமாக அல்லாஹ்வை_அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப்பற்றி அறிந்த) கல்விமான்கள் தாம், நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்புடையவன்.
Saheeh International
And among people and moving creatures and grazing livestock are various colors similarly. Only those fear Allah, from among His servants, who have knowledge. Indeed, Allah is Exalted in Might and Forgiving.
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கிறார்கள்.
IFT
எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும், தொழுகையை நிலை நாட்டுகின்றார்களோ, மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து மறைவாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக, என்றைக்கும் நஷ்டமடையாத ஒரு வணிகத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகையையும் நிறைவேற்றி, நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (தர்மமாக) செலவு செய்கிறார்களே நிச்சயமாக அத்தகையோர்_என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை அவர்கள் ஆதரவு வைக்கிறார்கள்.
Saheeh International
Indeed, those who recite the Book of Allah and establish prayer and spend [in His cause] out of what We have provided them, secretly and publicly, [can] expect a transaction [i.e., profit] that will never perish -
لِيُوَفِّيَهُمْஅவன் அவர்களுக்கு முழுமையாக நிறைவேற்றுவதற்கு(ம்)اُجُوْرَகூலிகளைهُمْஅவர்களின்وَيَزِيْدَهُمْமேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்குمِّنْ فَضْلِهٖ ؕதனது அருளிலிருந்துاِنَّهٗநிச்சமாக அவன்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்شَكُوْرٌநன்றியுடையவன்
லியுவFப்Fபியஹும் உஜூரஹும் வ யZஜீதஹும் மின் Fபள்லிஹ்; இன்னஹூ கFபூருன் ஷகூர்
முஹம்மது ஜான்
அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து, தன் அருளை மேலும் அதிகமாகவும் அவர்களுக்கு கொடுப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்.
IFT
(இந்த வணிகத்தில் அவர்கள் தங்களிடமுள்ள அனைத்தையும் முதலீடு செய்வது) அவர்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகக் கொடுக்க வேண்டும்; மேலும், தன்னுடைய அருளிலிருந்து அதிகமாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக! திண்ணமாக, அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும், உரிய மதிப் பளிப்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
காரணம்: (அல்லாஹ்வாகிய) அவன், அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகக் கொடுப்பதற்காகவும், தன்னுடைய பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்காகவும்தான், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க நன்றி பாராட்டுபவன்.
Saheeh International
That He may give them in full their rewards and increase for them of His bounty. Indeed, He is Forgiving and Appreciative.
(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்பதும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாம் உமக்கு வஹ்யி மூலம் கொடுத்திருக்கும் வேதம் முற்றிலும் உண்மையானது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி வைப்பதாகவும் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்கறிந்தவன், உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
(நபியே!) வஹி*யின் மூலம் நாம் உமக்கு அருளிய வேதம்தான் உண்மையானதாகும். இது தனக்கு முன் வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாய் இருக்கிறது. திண்ணமாக, அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நிலைமைகளை நன்கு புரிந்தவனாகவும், அனைத்தையும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நாம் உமக்கு வேதத்தால் எதை (வஹீ மூலம்) அறிவித்திருக்கின்றோமோ அதுதான்_ (வேதங்களில்) தனக்கு முன்னிருந்ததை உண்மைப்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலையில் _ சத்தியமானதாக இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்கிறவன், பார்க்கிறவன்.
Saheeh International
And that which We have revealed to you, [O Muhammad], of the Book is the truth, confirming what was before it. Indeed Allah, of His servants, is Aware and Seeing.
பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்.
IFT
பிறகு, நாம் நம்முடைய அடிமைகளிலிருந்து (வேதத்தின் வாரிசுகளாக) எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை இவ்வேதத்துக்கு வாரிசுகளாக்கினோம். இப்போது அவர்களில் சிலர் தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாய் இருக்கின்றனர். மேலும் சிலர் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இன்னும் சிலர், அல்லாஹ்வின் கட்டளைப்படி நற்செயல்களில் முந்திச் செல்பவர்களாய் இருக்கின்றனர். இதுதான் மாபெரும் அருளாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நம்முடைய அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுத்தோமே அத்தகையோரை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக்கி வைத்தோம், ஆகவே, அவர்களில் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டவரும் உள்ளனர்; அவர்களில் நடு நிலையான வழியில் சென்றவர்களும் உள்ளனர்; அவர்களில், அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு நன்மையானவற்றில் முந்திக் கொண்டோரும் உள்ளனர்; இதுவே மிகப்பெரும் பேரருளாகும்.
Saheeh International
Then We caused to inherit the Book those We have chosen of Our servants; and among them is he who wrongs himself [i.e., sins], and among them is he who is moderate, and among them is he who is foremost in good deeds by permission of Allah. That [inheritance] is what is the great bounty.
جَنّٰتُசொர்க்கங்கள்عَدْنٍஅத்ன்يَّدْخُلُوْنَهَاஅவர்கள் அவற்றில் நுழைவார்கள்يُحَلَّوْنَஅவர்கள் அணிவிக்கப்படுவார்கள்فِيْهَاஅவற்றில்مِنْ اَسَاوِرَகை காப்புகளிலிருந்துمِنْ ذَهَبٍதங்கத்தினாலானوَّلُـؤْلُؤًا ۚமுத்தும்وَلِبَاسُهُمْஅவர்களின் ஆடைகள்فِيْهَاஅவற்றில்حَرِيْرٌபட்டுத்துணி
ஜன்னாது 'அத்னி(ன்)ய் யத் குலூனஹா யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ லு'லு'அ(ன்)வ் வ லிBபா ஸுஹும் Fபீஹா ஹரீர்
முஹம்மது ஜான்
அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைகள் பட்டா(லானவையா)க இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) நிலையான சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள். முத்துப் பதிந்த பொற்காப்புக்கள் அவர்களுக்கு (விருதாக) அணிவிக்கப்படும். அதில் அவர்களுடைய ஆடைகளெல்லாம் மிருதுவான பட்டுக்களாக இருக்கும்.
IFT
நீடித்த நிலையான சுவனங்களில் இவர்கள் நுழைவார்கள். அங்கே தங்கக் காப்புகளும், முத்துக்களும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கு அவர்களின் உடைகள் பட்டாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது) நிலையான சுவனபதிகள்_ அவற்றில் அவர்கள் நுழைவார்கள், அவற்றில் அவர்கள் பொன்னாலான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள், முத்துக்களையும் (அணிவிக்கப்படுவார்கள்) இன்னும் அவற்றில் அவர்களுடைய ஆடை பட்டாகும்.
Saheeh International
[For them are] gardens of perpetual residence which they will enter. They will be adorned therein with bracelets of gold and pearls, and their garments therein will be silk.
“எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், (அவர்கள்) ‘‘தங்களை விட்டு எல்லா கவலைகளையும் நீக்கிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரியன. நிச்சயமாக எங்கள் இறைவன் மிக்க மன்னிப்பவன், நன்றி அறிபவன்'' என்று புகழ்ந்து (துதி செய்து) கொண்டிருப்பார்கள்.
IFT
மேலும், அவர்கள் கூறுவார்கள்: “நம்மைவிட்டுக் கவலையை அகற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி! திண்ணமாக, நம்முடைய இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், உரிய மதிப்பை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் “எங்களை விட்டு கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும், நிச்சயமாக எங்கள் இரட்சகன் மிக்க மன்னிப்பவன், மிக்க நன்றி பாராட்டுபவன்” என்று (புகழ்ந்து) கூறுவார்கள்.
Saheeh International
And they will say, "Praise to Allah, who has removed from us [all] sorrow. Indeed, our Lord is Forgiving and Appreciative -
اۨلَّذِىْۤஎவன்اَحَلَّنَاஎங்களை தங்க வைத்தான்دَارَஇல்லத்தில்الْمُقَامَةِநிரந்தரمِنْ فَضْلِهٖۚதனது அருளினால்لَا يَمَسُّنَاஎங்களுக்கு ஏற்படாதுفِيْهَاஅதில்نَصَبٌசோர்வு(ம்)وَّلَا يَمَسُّنَاஎங்களுக்கு ஏற்படாதுفِيْهَاஅதில்لُـغُوْبٌகளைப்பும்
அல்லதீ அஹல்லனா தாரல் முகாமதி மின் Fபள்லிஹீ லா யமஸ்ஸுனா Fபீஹா னஸBபு(ன்)வ் வலா யமஸ்ஸுனா Fபீஹா லுகூBப்
முஹம்மது ஜான்
“அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை” (என்றும் கூறுவார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘அவனே தன் அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் ஒரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. ஒரு சடைவும் அதில் எங்களுக்கு ஏற்படுவதில்லை'' (என்றும் துதி செய்வார்கள்).
IFT
அவனே தன்னுடைய அருளால் நம்மை நிலையான இருப்பிடத்தில் தங்க வைத்துள்ளான். இங்கு எவ்விதச் சிரமமும் நமக்கு நேருவதில்லை. மேலும், எவ்விதச் சோர்வும் ஏற்படுவதில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய பேரருளால் என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இறக்கிவைத்தான், அதில் எவ்வித சிரமும் எங்களைத் தொடாது; யாதொரு சடைவும் எங்களை அதில் தொடாது (என்றும் கூறுவார்கள்).
Saheeh International
He who has settled us in the home of duration [i.e., Paradise] out of His bounty. There touches us not in it any fatigue, and there touches us not in it weariness [of mind]."
வல்லதீன கFபரூ லஹும் னாரு ஜஹன்னம லா யுக்ளா 'அலய்ஹிம் Fப யமூதூ வலா யுகFப்FபFபு 'அன்ஹும் மின் 'அதாBபிஹா; கதாலிக னஜ்Zஜீ குல்ல கFபூர்
முஹம்மது ஜான்
எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) மேலும், அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்.
IFT
மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புதான் இருக்கிறது. அவர்கள் மரணம் அடையும் வகையில் அவர்களுடைய கதை முடிக்கபடவுமாட்டாது; நரகத்தின் வேதனையில் ஒரு சிறிதும் அவர்களுக்குக் குறைக்கப்படவுமாட்டாது. இவ்வாறே நிராகரிக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நாம் கூலி கொடுக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_அவர்களுக்கு நரக நெருப்பு உண்டு. அவர்களுக்கு (இறப்பு ஏற்படவேண்டுமென) தீர்ப்புச் செய்யப்படமாட்டாது, (அவ்வாறு தீர்ப்புச் செய்யப்பட்டால்தானே) அவர்கள் இறப்பெய்துவார்கள், அதன் வேதனையிலிருந்து அவர்களுக்கு (ஒரு சிறிதும்) குறைக்கப்படவுமாட்டாது; இவ்வாறே ஒவ்வொரு நிராகரிப்போருக்கும் நாம் கூலி கொடுப்போம்.
Saheeh International
And for those who disbelieve will be the fire of Hell. [Death] is not decreed for them so they may die, nor will its torment be lightened for them. Thus do We recompense every ungrateful one.
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டு ‘‘எங்கள் இறைவனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்த (தீய) காரியங்களை விட்டுவிட்டு நற்செயல்களையே செய்வோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான காலம் வரை நாம் உங்களை(ப் பூமியில்) உயிரோடு விட்டு வைக்கவில்லையா? (இவ்வேதனையைப் பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருக்கிறார். (அவரை நீங்கள் நிராகரித்து விட்டீர்கள்.) ஆதலால், (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர் ஒருவருமில்லை'' (என்று கூறுவான்).
IFT
அவர்கள் அங்கு கூக்குரலிட்டுக் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை இங்கிருந்து வெளியேற்று; நாங்கள் முன்பு செய்துகொண்டிருந்த செயல்களுக்கு மாறுபட்டநல்ல செயல்களைப் புரிவதற்காக!” (அவர்களுக்குப் பதிலளிக்கப்படும்:) “ஒருவன் படிப்பினை பெற வேண்டுமென்று நினைத்தால் படிப்பினை பெறுவதற்குப் போதுமான ஆயுளை நாம் உங்களுக்கு வழங்கிடவில்லையா? மேலும், எச்சரிப்பவரும் உங்களிடம் வந்திருந்தாரே! இப்போது நன்கு சுவையுங்கள். கொடுமையாளர்களுக்கு (இங்கு) உதவி செய்வார் யாருமில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ந்நரகத்)தில் அவர்கள், “எங்கள் இரட்சகனே! (இதிலிருந்து) எங்களை வெளியேற்றிவிடு, (இனி) நாங்கள் செய்து கொண்டிருந்ததல்லாத நற்செயலையே செய்வோம்” என்று பெரும் சப்தமிடுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “நல்லுணர்ச்சி பெறக்கூடியவன் நல்லுணர்ச்சி பெறுவதற்குப் போதுமான நீண்ட காலம் வரை, நாம் அதில் உங்களை (வாழ) விட்டுவைத்திருக்கவில்லையா? மேலும், (இது பற்றி) உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருந்தார், ஆதலால் (நரக வேதனையை) நீங்கள் சுவைத்துக்கொண்டிருங்கள், அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளருமில்லை” (என்று கூறுவான்).
Saheeh International
And they will cry out therein, "Our Lord, remove us; we will do righteousness - other than what we were doing!" But did We not grant you life enough for whoever would remember therein to remember, and the warner had come to you? So taste [the punishment], for there is not for the wrongdoers any helper.
அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் உங்களை இப்புவியில் (உங்களுக்கு முன்னிருந்தவர்களின்) பிரதிநிதிகளாக அமைத்தான். ஆகவே, (உங்களில்) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களின் நிராகரிப்பின் கேடு அவர்கள் மீதேசாரும். இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு கோபத்தை தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை. இந்த நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுக்கு நஷ்டத்தையே தவிர (வேறெதனையும்) அதிகப்படுத்தவில்லை.
IFT
அவனே பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாய் ஆக்கியிருக்கின்றான். இனி, எவன் நிராகரித்தாலும் அவனுடைய நிராகரிப்பின் தீயவிளைவு அவனையே சாரும். மேலும், நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனின் கோபத்தை அவர்கள் மீது அதிகப்படுத்துமே தவிர வேறெந்த முன்னேற்றத்தையும் அவர்களுக்கு அளிக்காது. நிராகரிப்பாளர்களுக்கு இழப்பு அதிகமாவதைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்களை இப்புவியில் (முந்தையவர்களுக்கு) பின்தோன்றல்களாக ஆக்கினான், ஆகவே, (உங்களில்) எவர் நிராகரிக்கின்றாரோ அவரின் நிராகரி(ப்பின் பாதிப்)பு அவர் மீதேயாகும்; மேலும், நிராகரிப்போருக்கு அவர்களுடைய நிராகரிப்பு, அவர்களுடைய இரட்சகனிடத்தில் கோபத்தைத் தவிர (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை. நிராகரிப்போருக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர (வேறெதனையும்) அதிகரிக்கச் செய்வதில்லை.
Saheeh International
It is He who has made you successors upon the earth. And whoever disbelieves - upon him will be [the consequence of] his disbelief. And the disbelief of the disbelievers does not increase them in the sight of their Lord except in hatred; and the disbelief of the disbelievers does not increase them except in loss.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) அழைப்பவற்றைப் பற்றி நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதையும் படைத்திருக்கின்றனவா? அதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவற்றுக்குப் பங்குண்டா? அல்லது (அவற்றைத் தெய்வங்களெனக் கூறுவதற்குத்) தெளிவான ஆதாரமாக இருக்கின்ற ஒரு வேதத்தையாவது நாம் அவற்றுக்குக் கொடுத்திருக்கின்றோமா? (இவை ஒன்றுமே) இல்லை. (இந்தத் தெய்வங்கள் பாதுகாத்துக் கொள்ளுமென்று) இந்த அநியாயக்காரர்கள் சிலர் சிலருக்குச் செய்யும் வாக்குறுதியெல்லாம் வெறும் ஏமாற்றுதலே தவிர வேறில்லை.
IFT
(நபியே!) இவர்களிடம் கேளும்: “இறைவனை விடுத்து நீங்கள் பிரார்த்திக்கின்ற உங்களுடைய இணைத் தெய்வங்களைப் பற்றி எப்போதேனும் நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? பூமியில் எதைத்தான் அவர்கள் படைத்திருக்கின்றார்கள்? அல்லது வானங்களில் அவர்களுக்கு உரிய பங்கு என்ன என்பதை எனக்குக் காண்பியுங்கள். (அவர்களால் இதைக் காண்பிக்க முடியாவிட்டால், அவர்களிடம் கேளுங்கள்:) “நாம் ஏதேனும் எழுத்து மூலம் இவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கின்றோமா? அதன் அடிப்படையில் (தம் இணைவைப்புச் செயல்களுக்கு) ஏதேனும் தெளிவான சான்றுகளை இவர்கள் வைத்திருக்கின்றார்களா?” இல்லை! மாறாக, இந்த அக்கிரமக்காரர்கள் ஒருவருக்கொருவர் அளிக்கும் வாக்குறுதி ஏமாற்றுதலேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக:” அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் கூட்டுகாரர்களை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் பூமியிலிருந்து எதைப் படைத்திருக்கிறார்கள் என்பதை எனக்குக் காண்பியுங்கள், அல்லது அவர்களுக்கு வானங்களில் (_அங்கு நடந்தேறும் காரியங்களில்) கூட்டு உண்டா? அல்லது (அவர்களை இணையாளர்களெனக் கூறுவதற்கு) இவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்து அதிலிருந்து அப்போது அவர்கள் தெளிவான ஆதாரத்தின் மீது இருக்கிறார்களா?” இல்லை, அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் மற்ற சிலருக்கு ஏமாற்றுதலைத் தவிர (வேறு எதையும்) வாக்களிப்பதில்லை.
Saheeh International
Say, "Have you considered your 'partners' whom you invoke besides Allah? Show me what they have created from the earth, or have they partnership [with Him] in the heavens? Or have We given them a book so they are [standing] on evidence therefrom? [No], rather, the wrongdoers do not promise each other except delusion."
நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.
IFT
உண்மையில் அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் விலகிவிடாமல் தடுத்து வைத்திருக்கின்றான். அப்படி அவை விலகிவிட்டால் அல்லாஹ்வுக்குப் பிறகு அவற்றைத் தடுத்து நிறுத்துவோர் வேறு யாருமில்லை. திண்ணமாக, அல்லாஹ் மிகவும் சகிப்புத்தன்மையுடையவனும் பெரிதும் மன்னிப்பவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியை அவையிரண்டும் அதனதன் இடத்திலிருந்து நீங்கி விடாதபடி தடுத்து வைத்திருக்கின்றான், அவ்விரண்டும் அதனிடத்திலிருந்து நீங்கிவிடுமாயின், அதற்குப்பிறகு அவ்விரண்டையும் நீங்கி விடாதபடி தடுத்து நிறுத்த (அவனையன்றி) எவருமில்லை, நிச்சயமாக அவன், சகித்துக் கொள்ளக்கூடியவனாக, மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்.
Saheeh International
Indeed, Allah holds the heavens and the earth, lest they cease. And if they should cease, no one could hold them [in place] after Him. Indeed, He is Forbearing and Forgiving.
அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிரமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்'' என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
IFT
எச்சரிக்கை செய்பவர் எவரேனும் அவர்களிடம் வந்திருந்தால் (உலகிலுள்ள) ஏனைய சமூகத்தாரைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் நேர்வழி நடப்பவர்களாகி விடுவார்கள் என்று இந்த மக்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தார்கள். ஆயினும், எச்சரிக்கை செய்பவர் இவர்களிடம் வந்துவிட்டபோது, அவருடைய வருகை இவர்களில் சத்தியத்தைவிட்டு விரண்டோடுவதைத் தவிர வேறெதையும் அதிகமாக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், தங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தால் நிச்சயமாக தாங்கள், (அல்லாஹ்வின் தூதர்களைப் பொய்ப்படுத்திய மற்ற) சமூகங்களில் உள்ள எந்த ஒரு சமுதாயத்தாரையும் விட மிக்க நேர் வழியில் ஆகிவிடுவார்கள் என அவர்கள் அல்லாஹ்வின் மீது மிக்க உறுதியான சத்தியம் செய்தார்கள். பின்னர், அவர்களிடம் (நம் தூதரான) அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்த பொழுது, அவர்களுக்கு அது வெருண்டோடுவதைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தவில்லை.
Saheeh International
And they swore by Allah their strongest oaths that if a warner came to them, they would be more guided than [any] one of the [previous] nations. But when a warner came to them, it did not increase them except in aversion
(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்,) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர் பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீர் காண மாட்டீர். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீர் காணமாட்டீர்.
IFT
இவர்கள் பூமியில் இன்னும் அதிகம் இறுமாப்புக் கொள்ளவும், தீய சூழ்ச்சிகளைச் செய்யவும்தான் தலைப்பட்டார்கள். உண்மையில், தீயசூழ்ச்சிகள் அவற்றைச் செய்பவர்களையே தாக்கும். முந்தைய சமூகத்தார்களுடன் அல்லாஹ்வின் நியதி எதுவாக இருந்ததோ அதுவே இவர்கள் விஷயத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவர்கள் இப்பொழுது எதிர்பார்க்கின்றார்களா? (அப்படியென்றால்) அல்லாஹ்வின் நியதியில் யாதொரு மாற்றத்தையும் எப்போதும் நீர் காணமாட்டீர். மேலும், அல்லாஹ்வின் நியதியை (அதற்கென நிர்ணயிக்கப்பட்ட வழியிலிருந்து ஏதேனும் ஒரு சக்தியால்) திருப்பிவிட முடியும் என்பதையும் நீர் காணமாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியில் பெருமையடிப்பதையும், தீய சூழ்ச்சியையும் (தவிர வேறு எதையும் அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை, ஆகவே, நம் தூதரை விட்டும் தூரமானார்கள்). மேலும் தீய சூழ்ச்சி, அந்த சூழ்ச்சிக்காரரைத் தவிர (மற்றெவரையும்) சூழ்ந்து கொள்ளாது, ஆகவே முந்தியவர்களின் வழியைத் தவிர, (வேறு எவ்வழியையும்) இவர்கள் எதிபார்க்கின்றனரா? (இல்லை) ஆகவே, அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் யாதொரு மாற்றத்தை நீர் காணவே மாட்டீர், (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் யாதொரு திருப்பத்தையும் நீர் காணவேமாட்டீர்.
Saheeh International
[Due to] arrogance in the land and plotting of evil; but the evil plot does not encompass except its own people. Then do they await except the way [i.e., fate] of the former peoples? But you will never find in the way [i.e., established method] of Allah any change, and you will never find in the way of Allah any alteration.
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால்,) வானத்திலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, பெரும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.
IFT
இவர்கள், பூமியில் சுற்றித் திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விடவும் அதிக வலிமையுடையவர்களாய் இருந்தார்கள்! அல்லாஹ்வை தோல்வியுறச் செய்யக்கூடிய எந்தப் பொருளும் இல்லை. வானத்திலும் இல்லை, பூமியிலும் இல்லை. அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியில் அவர்கள் சுற்றித்திரிந்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அவர்கள் காணவில்லையா? மேலும், அவர்கள் இவர்களைவிட பலத்தால் மிகக் கடினமானவர்களாக இருந்தனர், (அவ்வாறிருந்தும், அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து அவர்களால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.) மேலும், அல்லாஹ்_அவனை இயலாமையில் ஆக்குவதற்கு வானங்களிலோ, பூமியிலோ எப்பொருளும் இருக்கவில்லை, நிச்சயமாக அவன் (யாவையும்) நன்கறிந்தவனாக, மிக்க ஆற்றலுடையோனாக இருக்கிறான்.
Saheeh International
Have they not traveled through the land and observed how was the end of those before them? And they were greater than them in power. But Allah is not to be caused failure [i.e., prevented] by anything in the heavens or on the earth. Indeed, He is ever Knowing and Competent.
மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக்குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் ஓர் உயிரையும் விட்டு வைக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரை விட்டுவைக்கிறான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
IFT
அல்லாஹ் மக்களை அவர்கள் செய்யும் தீய செயல்களுக்காகத் தண்டிப்பானாகில், பூமியின் மீது எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவன் அவகாசம் அளித்துக் கொண்டிருக்கின்றான். பிறகு, அவர்களுக்குரிய காலம் பூர்த்தியானால் திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளைப் பார்த்துக் கொள்வான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மனிதர்களை அவர்கள் சம்பாதித்துக் கொண்டவைக்காக வேண்டி அல்லாஹ் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால், (பூமியாகிய) அதன் முதுகின் மீது யாதொரு ஊர்ந்து திரிபவற்றையும் அவன் விட்டுவைத்திருக்க மாட்டான். எனினும், குறிப்பிடப்பட்ட தவணைவரை அவர்களை அவன் பிற்படுத்துகிறான், ஆகவே அவர்களுடைய தவணை வந்து விட்டால் (அவர்களைப் பிடித்துவிடுவான்). எனவே நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான்.
Saheeh International
And if Allah were to impose blame on the people for what they have earned, He would not leave upon it [i.e., the earth] any creature. But He defers them for a specified term. And when their time comes, then indeed Allah has ever been, of His servants, Seeing.