எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
அப்துல் ஹமீது பாகவி
(உமது) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (ஒரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி முற்றிலும்) கவலையற்று இருக்கின்றனர். ஆகவே, இவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.
IFT
தம் மூதாதையர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாததால் எந்தச் சமுதாயம் அலட்சியமாக இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களின் மூதாதையர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாத ஒரு சமூகத்தார்க்கு, நீர் எச்சரிக்கை செய்வதற்காக (இவ்வேதம் இறக்கியருளப்பட்டது), அவர்கள் (அலட்சியமாக) மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
Saheeh International
That you may warn a people whose forefathers were not warned, so they are unaware.
لَقَدْதிட்டமாகحَقَّஉறுதியாகிவிட்டதுالْقَوْلُவாக்குعَلٰٓى اَكْثَرِஅதிகமானவர்கள் மீதுهِمْஅவர்களில்فَهُمْஆகவே, அவர்கள்لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
லகத் ஹக்கல் கவ்லு 'அலா அக்தரிஹிம் Fபஹும் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள்தான் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக உறுதியாகி விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
அவர்களில் பெரும்பாலோர் தண்டனைக்குரிய தீர்ப்புக்கு ஆளாகிவிட்டனர். எனவே அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இவர்களில் அநேகர் மீது (அவர்களுக்கு வேதனை உண்டு என்ற அல்லாஹ்வின்) வாக்கு உண்மையாகிவிட்டது, ஆகவே, அவர்கள் விசுவாசங்கொள்ளமாட்டர்கள்.
Saheeh International
Already the word [i.e., decree] has come into effect upon most of them, so they do not believe.
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரை விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன.
IFT
நாம் அவர்களின் கழுத்துகளில் விலங்குகளைப் பூட்டியுள்ளோம். அவை அவர்களின் முகவாய்க் கட்டைகள் வரை நெருக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் விலங்குச் சங்கிலிகளை ஆக்கிவிட்டோம், அவை மோவாய்க் கட்டைகள் வரையில் இருக்கின்றன. ஆகவே, (குனிய முடியாதவாறு) அவர்கள் தலை உயர்த்தப்பட்டவர்கள்.
Saheeh International
Indeed, We have put shackles on their necks, and they are to their chins, so they are with heads [kept] aloft.
வ ஜ'அல்னா மின் Bபய்னி அய்தீஹிம் ஸத்த(ன்)வ்-வ மின் கல்Fபிஹிம் ஸத்தன் Fப அக்ஷய் னாஹும் Fபஹும் லா யுBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதையும்) பார்க்க முடியாது.
IFT
மேலும் நாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் எழுப்பி, அவர்களை மூடி விட்டிருக்கின்றோம். இனி அவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் ஆக்கி விட்டோம், பின்னர், அவர்களை மூடிவிட்டோம், ஆதலால், அவர்கள் (எதனையும்) பார்க்க(ச்சக்திபெற) மாட்டார்கள்.
Saheeh International
And We have put before them a barrier and behind them a barrier and covered them, so they do not see.
وَسَوَآءٌசமம் தான்عَلَيْهِمْஅவர்கள் மீதுءَاَنْذَرْتَهُمْநீர் அவர்களை எச்சரித்தாலும்اَمْஅல்லதுلَمْ تُنْذِرْهُمْஅவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும்لَا يُؤْمِنُوْنَஅவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
வ ஸவா'உன் 'அலய்ஹிம் 'அ-அன்தர்தஹும் அம் லம் துன்திர்ஹும் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். நீர் அவர்களை அச்சமூட்டி எச்சரித்தாலும் சரி; எச்சரிக்காவிட்டாலும் சரி; அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்குச் சமமே! ஆகவே, அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
And it is all the same for them whether you warn them or do not warn them - they will not believe.
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்குத்தான். ஆகவே, இவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக்கொண்டும் நீர் நற்செய்தி கூறுவீராக.
IFT
யார் அறிவுரையைப் பின்பற்றி நேரில் காணாமலே ரஹ்மானுக்கு கருணை மிக்க இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவருக்குத்தான் நீர் எச்சரிக்கை செய்ய முடியும். அத்தகையோருக்கு மன்னிப்பும், சிறப்பான கூலியும் இருக்கின்றதென்று நற்செய்தி கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், (குர் ஆனாகிய) நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவில் அர்ரஹ்மானை அஞ்சுகின்றாரே அவருக்குத்தான். ஆகவே, அ(த்தகைய)வருக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமாக கூலியைக் கொண்டும் நீர் நன்மாரயாம் கூறுவீராக!
Saheeh International
You can only warn one who follows the message and fears the Most Merciful unseen. So give him good tidings of forgiveness and noble reward.
اِنَّا نَحْنُநிச்சயமாக நாம்தான்نُحْىِஉயிர்ப்பிக்கின்றோம்الْمَوْتٰىஇறந்தவர்களைوَنَكْتُبُஇன்னும் பதிவு செய்வோம்مَا قَدَّمُوْاஅவர்கள் முன்னர் செய்தவற்றையும்وَاٰثَارَகாலடிச் சுவடுகளைهُمْؕؔஅவர்களின்وَكُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்اَحْصَيْنٰهُஅதைப் பதிவு செய்துள்ளோம்فِىْۤ اِمَامٍபதிவேட்டில்مُّبِيْنٍதெளிவான
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகிறோம். இவை ஒவ்வொன்றையும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கிறோம்.
IFT
திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக் கொண்டேயிருக்கின்றோம். அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாமே, மரணித்தோரை (மறுமையில்) உயிர்ப்பிக்கிறோம், அவர்கள் முற்படுத்தியவற்றையும், (அவர்கள் மரணித்த பின்னும் நன்மையைச் சேர்த்து வைக்கின்ற) அவர்களின் (நற்செயல்களான) அடிச்சுவடுகளையும் நாம் எழுதுகிறோம், ஒவ்வொரு பொருளை(ப்பற்றி)யும், (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான ஏட்டில் அதைக்கணக்கெடுத்து (பதிந்து) வைத்திருக்கின்றோம்.
Saheeh International
Indeed, it is We who bring the dead to life and record what they have put forth and what they left behind, and all things We have enumerated in a clear register.
وَاضْرِبْஎடுத்துச் சொல்வீராக!لَهُمْஅவர்களுக்குمَّثَلًاஉதாரணமாகاَصْحٰبَ الْقَرْيَةِ ۘஅந்த ஊர் வாசிகளைاِذْ جَآءَهَاஅவர்களிடம் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!الْمُرْسَلُوْنَۚதூதர்கள்
வள்ரிBப் லஹும் மதலன் அஸ்ஹாBபல் கர்யதிஹ்; இத் ஜா'அஹல் முர்ஸலூன்
முஹம்மது ஜான்
(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம் தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக.
IFT
மேலும், ஓர் ஊர் மக்களிடம் தூதர்கள் வந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (நபியே!) ஓர் ஊர்வாசிகளை _ அவ்வூராரிடம் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்கள் வந்த(போது நடந்த)தை _ உதாரணமாக அவர்களுக்குக் கூறுவீராக!
Saheeh International
And present to them an example: the people of the city, when the messengers came to it -
இத் அர்ஸல்னா இலய்ஹிமுத்னய்னி Fபகத்தBபூஹுமா Fப'அZஜ்ZஜZஜ்னா Bபிதாலிதின் Fபகாலூ இன்னா இலய்கும் முர்ஸலூன்
முஹம்மது ஜான்
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்'' என்று கூறினார்கள்.
IFT
நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம்மக்களை நோக்கி) “உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவரையும்) நாம் வலுப்படுத்தினோம், ஆகவே, இவர்கள் “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட (அல்லாஹ்வின் தூது)வர்களாவோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
When We sent to them two but they denied them, so We strengthened [them] with a third, and they said, "Indeed, we are messengers to you."
காலூ மா அன்தும் இல்லா Bபஷரும் மித்லுனா வ மா அன்Zஜலர் ரஹ்மானு மின் ஷய்'இன் இன் அன்தும் இல்லா தக்திBபூன்
முஹம்மது ஜான்
(அதற்கு அம்மக்கள்:) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.
IFT
“நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள்” என்று அந்த ஊர் மக்கள் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை, அர்ரஹ்மான் (உங்கள் மீது) யாதொன்றையும் இறக்கிவைக்கவுமில்லை, நீங்கள் பொய் சொல்கிறீர்களே தவிர வேறில்லை” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "You are not but human beings like us, and the Most Merciful has not revealed a thing. You are only telling lies."
(அதற்கு அம்மக்கள்:) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.”
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் “நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கிறோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். மேலும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவ்வூர் மக்கள், “நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுனமாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக்கொள்ளாவிட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். மேலும், நீங்கள் எங்களிடமிருந்து அவசியம் துன்பமிகு தண்டனை பெறுவீர்கள்!” எனக் கூறலானார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “நிச்சயமாக, நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம், நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில், உங்களைத் திட்டமாக நாம் கல்லால் எறிவோம், அன்றியும், எம்மிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Indeed, we consider you a bad omen. If you do not desist, we will surely stone you, and there will surely touch you, from us, a painful punishment."
அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்: “உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது; உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தான் வரம்புமீறிய மக்கள்'' என்று கூறினார்கள்.
IFT
(அதற்கு) அத்தூதர்கள், “உங்களுடைய அபசகுனம் உங்களோடுதான் இருக்கிறது. உங்களுக்கு நல்லுரை கூறப்பட்டதற்காகவா (நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்!) உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிய மக்களாவீர்!” எனப் பதிலளித்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு நம் தூதர்கள்,) “உங்களுடைய துர்ச்சகுனம் உங்களுடன் தான் இருக்கின்றது, (எங்கள் மூலம் அல்லாஹ்வைப் பற்றி) நீங்கள் (நற்போதனை செய்யப்பட்டு) நினைவூட்டப்பட்டீர்களானாலுமா? (துர்ச்சகுனமென்று கூறுவீர்கள்?) அவ்வாறல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தார்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Your omen [i.e., fate] is with yourselves. Is it because you were reminded? Rather, you are a transgressing people."
வ ஜா'அ மின் அக்ஸல் மதீனதி ரஜுலு(ன்)ய் யஸ்'ஆ கால யா கவ்மித் தBபி'உல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக் கோடியிலிருந்து ‘(ஹபீபுந் நஜ்ஜார்' என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: “என் மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.
IFT
(இதற்கிடையில்) நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து கூறினார்: “என் சமூகத்தவரே! இறைத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அப்பட்டணத்தின் கடைக் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டணவாசிகளிடம்) “என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
Saheeh International
And there came from the farthest end of the city a man, running. He said, "O my people, follow the messengers.
ءَاَ تَّخِذُநான் எடுத்துக் கொள்வேனா!مِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاٰلِهَةً(வேறு) தெய்வங்களைاِنْ يُّرِدْنِஎனக்கு நாடினால்الرَّحْمٰنُபேரருளாளன்بِضُرٍّஒரு தீங்கைلَّا تُغْنِதடுக்காதுعَنِّىْஎன்னை விட்டும்شَفَاعَتُهُمْஅவற்றின் சிபாரிசுشَيْئًاஎதையும்وَّلَا يُنْقِذُوْنِۚஇன்னும் அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்
'அ-அத்தகிது மின் தூனிஹீ ஆலிஹதன் இ(ன்)ய்-யுரித்னிர் ரஹ்மானு Bபிளுர்ரில்-லா துக்னி 'அன்னீ ஷFபா 'அதுஹும் ஷய் 'அ(ன்)வ்-வ லா யுன்கிதூன்
முஹம்மது ஜான்
“அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
அவனையன்றி, (மற்ற எதையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கொரு தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு எதையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது.
IFT
அவனை விடுத்து மற்றவர்களை அடி பணிவதற்குரியவர்களாய் நான் எடுத்துக் கொள்வேனா? உண்மையில், கருணைமிக்க இறைவன் எனக்கு ஏதேனும் தீங்கினை ஏற்படுத்த நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்கு எவ்விதப் பலனையும் அளிக்காது. அவர்களால் என்னை விடுவிக்கவும் முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவனையன்றி வேறு வணங்கப்படுபவர்களை (என் வணக்கதிற்குரியவர்களாக) நான் எடுத்துக் கொள்வேனோ? அர்ரஹ்மான் யாதொரு இடரை எனக்கு நாடினால் இவர்களின் பரிந்துரை எதற்கும் எனக்குப் பயனளிக்காது, (அதிலிருந்து) என்னை இவர்கள் விடுவிக்கவும் மாட்டார்கள்.”
Saheeh International
Should I take other than Him [false] deities [while], if the Most Merciful intends for me some adversity, their intercession will not avail me at all, nor can they save me?
قِيْلَகூறப்பட்டதுادْخُلِநீர் நுழைவீராக!الْجَـنَّةَ ؕசொர்க்கத்தில்قَالَஅவர் கூறினார்يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙஎன் மக்கள் (இதை) அறியவேண்டுமே!
கீலத் குலில் ஜன்னத கால யா லய்த கவ்மீ யஃலமூன்
முஹம்மது ஜான்
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
அப்துல் ஹமீது பாகவி
(எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!'' எனக் கூறப்பட்டது.
IFT
(இறுதியில் அம்மக்கள் அவரைக் கொன்று விட்டார்கள். பிறகு) அவரிடம் “சுவனம் புகுவீராக!” என்று கூறப்பட்டது. அவர் கூறினார்: “ஆஹா! என் சமூகத்தவர் அறிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனினும், அச்சமூகத்தார் அவரைக் கொலை செய்துவிட்டனர், ஆகவே,) “நீர் சுவனபதியில் நுழைவீராக!” என (அவருக்கு)க் கூறப்பட்டது, (சுவனபதி நுழைந்த) அவர், “என்னுடைய சமூகத்தார் (எனக்குக் கிடைத்த இப்பாக்கியத்தை) அறிந்துகொள்ள வேண்டுமே” என்று கூறினார்.
Saheeh International
It was said, "Enter Paradise." He said, "I wish my people could know
بِمَا غَفَرَமன்னிப்பு வழங்கியதையும்لِىْஎனக்குرَبِّىْஎன் இறைவன்وَجَعَلَنِىْஎன்னை அவன் ஆக்கியதையும்مِنَ الْمُكْرَمِيْنَகண்ணியமானவர்களில்
Bபிமா கFபர லீ ரBப்Bபீ வ ஜ'அலனீ மினல் முக்ரமீன்
முஹம்மது ஜான்
“என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்” (என்பதை).
அப்துல் ஹமீது பாகவி
(சொர்க்கத்தில் நுழைந்த) அவர் “என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.
IFT
என் இறைவன் எக்காரணத்தால் என்னை மன்னித்து, கண்ணியமிக்கவர்களில் ஒருவனாய் என்னை ஆக்கினான் என்பதனை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகன் என்னை மன்னித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டான்” என்பதை (அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே என்று கூறினார்).
Saheeh International
Of how my Lord has forgiven me and placed me among the honored."
தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து ஒரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை.
IFT
அவருக்குப் பின்னர் அவருடைய சமூகத்தினர் மீது வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை. அவ்வாறு இறக்குவதற்கான அவசியமும் நமக்கு இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர், அவருடைய சமூகத்தவர் மீது வானத்திலிருந்து (அவர்களை அழிக்க) யாதொரு படையையும் நாம் இறக்கிவைக்கவில்லை, (அவ்வாறு) இறக்கிவைப்பவர்களாகவும் நாம் இல்லை.
Saheeh International
And We did not send down upon his people after him any soldiers from the heaven, nor would We have done so.
“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்து விட்டோம் என்பதையும் அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
IFT
இவர்களுக்கு முன்பு (வாழ்ந்த) எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். (பிறகு) அவர்கள் ஒருபோதும் இவர்களிடம் திரும்பிவர மாட்டார்கள் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலை முறையினரை நாம் அழித்திருக்கிறோம், நிச்சயமாக (அழிந்துவிட்ட) அவர்கள் இவர்கள் பால் திரும்பமாட்டார்கள்” என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
Saheeh International
Have they not considered how many generations We destroyed before them - that they to them will not return?
அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகிறோம். அவற்றை இவர்கள் புசிக்கிறார்கள்.
IFT
உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாம் அதற்கு உயிர்கொடுத்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்தினோம்; அதிலிருந்து அவர்கள் புசிக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இறந்த (பொட்டலான) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும், அதனை நாம் (மழையைக் கொண்டு) உயிர்ப்பிக்கிறோம், இன்னும், அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம், அப்போது அதிலிருந்து(தான்) அவர்கள் உண்ணுகின்றார்கள்.
Saheeh International
And a sign for them is the dead earth. We have brought it to life and brought forth from it grain, and from it they eat.
மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கிறோம்.
IFT
மேலும், நாம் இதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினோம்; மேலும், இதில் நீரூற்றுகளைப் பீரிட்டெழச் செய்தோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அதில் நாம் பேரீச்சை, திராட்சைகளிலிருந்து தோட்டங்களை அமைத்தோம், அதில் நீரூற்றுகளைப் பீறிட்டு ஓடவும் செய்கின்றோம்.
Saheeh International
And We placed therein gardens of palm trees and grapevines and caused to burst forth therefrom some springs -
لِيَاْكُلُوْاஅவர்கள் புசிப்பதற்காகمِنْ ثَمَرِهٖ ۙஅவனுடைய கனிகளில் இருந்துوَمَا عَمِلَـتْهُஇவற்றை செய்யவில்லைاَيْدِيْهِمْ ؕஅவர்களின் கரங்கள்اَفَلَا يَشْكُرُوْنَஅவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
லி ய'குலூ மின் தமரிஹீ வமா 'அமிலத்-ஹு அய்தீஹிம்; அFபலா யஷ்குரூன்
முஹம்மது ஜான்
அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமே தவிர) இவர்களுடைய கைகள் அதை செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
IFT
இதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக! இவையனைத்தும் அவர்களுடைய கைகள் உருவாக்கியவை அல்லவே! பிறகு ஏன், அவர்கள் நன்றி செலுத்துவதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் கனி(வர்க்கங்)களிலிருந்து அவர்கள் உண்ணுவதற்காக (இவைகளைப் படைத்தோம்), அவர்களுடைய கைகள் அதைச் செய்யவில்லை, ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
Saheeh International
That they may eat of His fruit. And their hands have not produced it, so will they not be grateful?
ஸுBப்ஹானல் லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா மிம்மா தும்Bபிதுல் அர்ளு வ மின் அன்Fபுஸிஹிம் வ மிம்மா லா யஃலமூன்
முஹம்மது ஜான்
பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்.
IFT
மிகவும் தூய்மையானவன்; எல்லா வகையான ஜோடிகளையும் படைத்திருப்பவன்! அவை பூமி முளைக்கச் செய்யக்கூடியவையானாலும் சரி; அவர்களுடைய இனத்திலிருந்தானாலும் சரி; அவர்கள் அறிந்திராத மற்ற பொருள்களிலிருந்தானாலும் சரியே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமி முளைப்பித்தவற்றிலிருந்தும், (மனிதர்களாகிய) அவர்கள் தம்மிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகளை_அவை ஒவ்வொன்றையும் படைத்தானே அவன் மிகத் தூய்மையானவன்.
Saheeh International
Exalted is He who created all pairs - from what the earth grows and from themselves and from that which they do not know.
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
அப்துல் ஹமீது பாகவி
தன் வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (அனைவரையும்) மிகைத்தவன் நன்கறிந்தவனுடைய அமைப்பாகும்.
IFT
மேலும், சூரியனும் (பிறிதொரு சான்றாகும்). அது தனக்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனுமான இறைவனின் நிர்ணயமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின்பால் அது சென்று கொண்டிருக்கிறது, இது (யாவரையும்) மிகைத்தவன், நன்கறிந்தவன் ஏற்படுத்தியதாகும்.
Saheeh International
And the sun runs [on course] toward its stopping point. That is the determination of the Exalted in Might, the Knowing.
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.
IFT
மேலும், சந்திரன் (இன்னொரு சான்றாகும்). அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது (அவற்றையெல்லாம் கடந்து) உலர்ந்து வளைந்துபோன பேரீச்சங்காம்பு போல் மீண்டும் ஆகி விடுகிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், சந்திரனை_(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்சங்குலையின் குச்சி போல் அது மீண்டுவிடும் வரையில், அதற்கு நாம் பல தங்குமிடங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
Saheeh International
And the moon - We have determined for it phases, until it returns [appearing] like the old date stalk.
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
IFT
சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சூரியன்_அதற்குச் சந்திரனை (அணுகி)ப்பிடிக்கமுடியாது, இரவு, பகலை முந்தவும் முடியாது. (இவ்வாறே கிரகங்கள், நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் (தனது) வட்டத்துக்குள் நீந்திச் செல்கின்றன.
Saheeh International
It is not allowable [i.e., possible] for the sun to reach the moon, nor does the night overtake the day, but each, in an orbit, is swimming.
வ இன் னஷா னுக்ரிக்ஹும் Fபலா ஸரீக லஹும் வலா ஹும் யுன்கதூன்
முஹம்மது ஜான்
அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்பவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
IFT
மேலும், நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்துவிடுவோம். அப்போது அவர்களுடைய முறையீடுகளைக் கேட்பவர் எவரும் இருக்கமாட்டார். அவர்கள் (எந்த வகையிலும்) மீட்கப்படவும் மாட்டார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் நாடினால், அவர்களை(க் கடலில்) மூழ்கடித்துவிடுவோம், அதுசமயம் (அபயக் குரலிடும்) அவர்களைக் காப்பற்றுவோர் ஒருவருமிரார், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
Saheeh International
And if We should will, We could drown them; then no one responding to a cry would there be for them, nor would they be saved
اِلَّاஎனினும்رَحْمَةًகருணையினாலும்مِّنَّاநமதுوَمَتَاعًاசுகம் அனுபவிப்பதற்காகவும்اِلٰى حِيْنٍசில காலம் வரை
இல்லா ரஹ்மதம் மின்னா வ மதா'அன் இலா ஹீன்
முஹம்மது ஜான்
நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),
அப்துல் ஹமீது பாகவி
எனினும் நமது கருணையினாலும் சிறிது காலம் (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்).
IFT
ஆயினும் நம்முடைய கருணையே அவர்களைக் காப்பாற்றுகிறது; மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை அனுபவிக்க அவர்களுக்கு அவகாசம் அளிக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என்றாலும் நம்மிடமிருந்துள்ள அருளால் (கடலிலும் கரையிலும் நாம் நடத்திச் செல்கிறோம்) இன்னும் ஒரு காலம் வரை அவர்கள் சுகமனுபவிப்பதற்காக (விட்டும் வைக்கிறோம்).
Saheeh International
Except as a mercy from Us and provision for a time.
“இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும் -
அப்துல் ஹமீது பாகவி
“உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கருணையை நீங்கள் அடையலாம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை).
IFT
மேலும், “உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பவற்றின் விளைவுகளிலிருந்தும், உங்களைக் கடந்து சென்று விட்டவற்றின் விளைவுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள்; உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், (அவர்கள் கேட்டும் கேளாதவர்கள் போல் இருந்து விடுகின்றார்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும், நீங்கள் கிருபைசெய்யப்படுவதற்காக, உங்களுக்கு முன் இருப்பதையும், உங்களுக்குப் பின் இருப்பதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை).
Saheeh International
But when it is said to them, "Beware of what is before you and what is behind you; perhaps you will receive mercy..."
“அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக்கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
IFT
மேலும், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேறுகளிலிருந்து (இறைவழியிலும் பிறருக்கு) செலவழியுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் இறைநிராகரிப்பாளர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கிக் கூறுகின்றார்கள்: “நாங்கள் அவர்களுக்கு உணவளிப்பதா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு அவனே உணவளித்திருப்பானே! திண்ணமாக, நீங்கள் முற்றிலும் வழிபிறழ்ந்து விட்டிருக்கிறீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றிலிருந்து செலவு செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறபட்டால், அல்லாஹ் நாடியிருந்தால் எவர்களுக்கு அவன் உணவளித்துவிடுவானோ, அவர்களுக்கு நாங்கள் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலன்றி வேறில்லை” என்று விசுவாசிகளிடம் நிராகரிப்போர் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
Saheeh International
And when it is said to them, "Spend from that which Allah has provided for you," those who disbelieve say to those who believe, "Should we feed one whom, if Allah had willed, He would have fed? You are not but in clear error."
وَيَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறுகின்றனர்مَتٰىஎப்போது நிகழும்هٰذَاஇந்தالْوَعْدُவாக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَஉண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?” என்று.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) “தண்டனை எப்பொழுது வரும்?'' என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
IFT
மேலும் அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மை கூறுவோராயின், (மறுமைநாளைப் பற்றிய உங்களின்) இந்த அச்சுறுத்தல் எப்போது நிறைவேறப் போகிறது? (என்பதை அறிவியுங்களேன்)”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் (நீங்கள் கூறும் தண்டனை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்)” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Saheeh International
And they say, "When is this promise, if you should be truthful?"
அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
IFT
அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒரேயொரு பயங்கர ஓசையேயன்றி வேறில்லை. அவர்கள் (உலக விவகாரங்கள் குறித்து) தர்க்கித்துக் கொண்டிருக்கும்போதே (திடீரென்று) அது அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒரே ஒரு (பெரும்) சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிபார்(த்திரு)க்கவில்லை! (இதனை பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் நிலையில் அது அவர்களைப் பிடித்துகொள்ளும்.
Saheeh International
They do not await except one blast which will seize them while they are disputing.
فَلَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்تَوْصِيَةًமரண சாசனம் கூறுவதற்குوَّلَاۤ اِلٰٓى اَهْلِهِمْஇன்னும் தங்கள் குடும்பத்தாரிடம்يَرْجِعُوْنَதிரும்பி வர மாட்டார்கள்
Fபலா யஸ்ததீ'ஊன தவ் ஸியத(ன்)வ்-வ லா இலா அஹ்லிஹிம் யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்து விடுவார்கள்.)
IFT
அப்போது அவர்களால் மரண சாஸனம் அளிக்கவோ, தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லவோ முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது அவர்கள் (தங்களுக்குரிய சாதக, பாதகம் பற்றிய) மரணோபதேசம் கூற சக்தியும் பெறமாட்டார்கள், தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள் (அதற்குள் அழிந்துவிடுவார்கள்).
Saheeh International
And they will not be able [to give] any instruction, nor to their people can they return.
“எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) “ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்'' (என்று கூறுவார்கள்).
IFT
அவர்கள் (திகிலடைந்தவாறு) கேட்பார்கள்: “அந்தோ, எங்கள் பரிதாபமே! நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” (அப்போது), “கருணைமிக்க இறைவன் வாக்களித்திருந்தது இதுவேயாகும்! இறைத்தூதர்களின் வாக்கும் உண்மையாகிவிட்டது!” (என்று பதில் சொல்லப்படும்)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நாளின் அமளியைக் கண்டு மதியிழந்து)” எங்களுடைய நாசமே! எங்களை, எங்கள் (சமாதிகளாகிய) தூங்குமிடங்களிலிருந்து எழுப்பியவர் யார்?” என்று கேட்பார்கள், (அதற்கு மலக்குகள் அவர்களிடம்) “அர்ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், தூதர்கள் (உங்களுக்கு) உண்மை (என எடுத்துக்) கூறியதும் இது தான் “ (என்று கூறுவார்கள்).
Saheeh International
They will say, "O woe to us! Who has raised us up from our sleeping place?" [The reply will be], "This is what the Most Merciful had promised, and the messengers told the truth."
இன் கானத் இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fப-இதா ஹும் ஜமீ'உல் லதய்னா முஹ்ளரூன்
முஹம்மது ஜான்
ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது; உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அது ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டுவரப்பட்டு விடுவார்கள்.
IFT
அது ஒரே ஓர் உரத்த ஓசையாகத்தான் இருக்கும். அக்கணம் அவர்கள் அனைவருமே நம்முன் கொண்டு வரப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது ஒரே ஒரு (பெரும்) சப்தத்தைத் தவிர_(வேறொன்றுமாக) இருக்காது, அப்பொழுது அவர்கள் அனைவரும் நம்மிடம் (ஒன்றுதிரட்டப்பட்டு கேள்வி கணக்கிற்காக) முன்னிலைப்படுத்தப்பட்டு விடுபவர்களாவர்.
Saheeh International
It will not be but one blast, and at once they are all brought present before Us.
فَالْيَوْمَஇன்றைய தினம்لَا تُظْلَمُ نَفْسٌஅநீதி இழைக்கப்படாது/எந்த ஓர் ஆன்மாவும்شَيْئًاசிறிதளவும்وَّلَا تُجْزَوْنَகூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَநீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர
Fபல்-யவ்ம லா துள்லமு னFப்ஸுன் ஷய்'அ(ன்)வ்-வ லா துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது.
IFT
இன்று எவர் மீதும் இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. நீங்கள் எத்தகைய செயல்கள் புரிந்து கொண்டு இருந்தீர்களோ அவற்றிற்குத் தகுந்தாற்போல்தான் உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அந்நாளில், எந்த ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது, இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளுக்கன்றி (வேறு எதற்கும்) நீங்கள் கூலிகொடுக்கப்படமாட்டீர்கள்.
Saheeh International
So today [i.e., the Day of Judgement] no soul will be wronged at all, and you will not be recompensed except for what you used to do.
“ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
IFT
ஆதத்தின் மக்களே, நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவன் என்றும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதி” என்று நான் உங்களிடம் உறுதி மொழி வாங்கவில்லையா?
Saheeh International
Did I not enjoin upon you, O children of Adam, that you not worship Satan - [for] indeed, he is to you a clear enemy -
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
அப்துல் ஹமீது பாகவி
அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிடுவோம். அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.
IFT
இன்று, அவர்களுடைய வாய்களுக்கு நாம் முத்திரை வைத்து விடுவோம். (உலகில்) அவர்கள் எவற்றைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களின் கைகள் நம்மிடம் சொல்லும்; அவர்களின் கால்களும் சாட்சி பகரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்றையத் தினம் நாம் அவர்களுடைய வாய்களின் மீது முத்திரையிட்டுவிடுவோம், அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவகளைப்பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும், அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.
Saheeh International
That Day, We will seal over their mouths, and their hands will speak to Us, and their feet will testify about what they used to earn.
நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கிவிடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் (எதைத்தான்) எப்படி அவர்களால் பார்க்க முடியும்?
IFT
மேலும், நாம் நாடினால் அவர்களுடைய கண்களை அவித்து விடுவோம். பிறகு, அவர்கள் பாதையை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால், எவ்வாறு அவர்களுக்குப் (பாதை) புலப்படும்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் நாடியிருந்தால் அவர்களுடைய கண்களைப் போக்கி (குருடாக்கி)யிருப்போம், பின்னர் (தப்பித்துகொள்ளும்) வழியின்பால் (அதைக்கடக்க) முந்தியிருப்பார்கள், அப்போது (அவர்கள் உண்மைவழியை) எவ்வாறு பார்ப்பார்கள்?
Saheeh International
And if We willed, We could have obliterated their eyes, and they would race to [find] the path, and how could they see?
وَلَوْ نَشَآءُநாம் நாடியிருந்தால்لَمَسَخْنٰهُمْஅவர்களை உட்கார வைத்திருப்போம்عَلٰى مَكَانَتِهِمْஅவர்களின் இடத்திலேயேفَمَا اسْتَطَاعُوْاஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள்مُضِيًّاநடப்பதற்கு(ம்)وَّلَا يَرْجِعُوْنَதிரும்பி வரவும் மாட்டார்கள்
வ லவ் னஷா'உ லமஸக்னாஹும் 'அலா மகானதிஹிம் Fபமஸ்-ததா'ஊ முளிய்ய(ன்)வ்-வ லா யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது.
IFT
மேலும், நாம் நாடியிருந்தால் முன்னோக்கிச் செல்லவும், பின்னோக்கித் திரும்பவும் அவர்களால் முடியாதவாறு தம் இருப்பிடத்திலேயே அவர்களை உருமாற்றி விட்டிருப்போம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நாம் நாடியிருந்தால், அவர்கள் இருந்த இடத்திலேயே அவர்கள் உருவத்தை மாற்றி (கல்லாகவோ, மற்ற ஜடப் பொருளாகவோ ஆக்கி)யிருப்போம். அது சமயம், அவர்கள் முன் செல்லவும் சக்திபெறமாட்டார்கள், பின் திரும்பவும் மாட்டார்கள்.
Saheeh International
And if We willed, We could have deformed them, [paralyzing them] in their places so they would not be able to proceed, nor could they return.
மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
மேலும், நாம் எவருக்கேனும் நீண்ட ஆயுளைக் கொடுத்தால், அவருடைய அமைப்பை அடியோடு மாற்றிவிடுவோம். (இவை அனைத்தையும் பார்த்து) அவர்களுக்கு அறிவு வர வேண்டாமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவரை நாம் (வயோதிகராக்கி) வயதை நீட்டிவிடுகிறோமோ அவரை, படைப்பில் (வாலிபத்திற்குப்பிறகு முதுமையும், பலத்திற்குப்பிறகு பலவீனத்தையும் கொடுத்து), தலைகீழாக மாற்றிவிடுகின்றோம் (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்களா?
Saheeh International
And he to whom We grant long life We reverse in creation; so will they not understand?
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நம் தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசமும் தவிர வேறில்லை.
IFT
மேலும், (நபியாகிய) இவருக்கு நாம் கவிதை கற்றுக்கொடுக்கவில்லை; அது (கவிதை புனைதல்) அவருக்கு ஏற்றதுமன்று. திண்ணமாக இது ஒரு நல்லுரையாகவும், தெளிவாக ஓதப்படுகின்ற வேதமாகவும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதையை (இயற்ற)க் கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமானதுமல்ல, இது நல்லுபதேசமும் தெளிவான குர் ஆனுமே தவிர (வேறு) இல்லை.
Saheeh International
And We did not give him [i.e., Prophet Muhammad (ﷺ] knowledge of poetry, nor is it befitting for him. It is not but a message and a clear Qur’an
(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
அப்துல் ஹமீது பாகவி
உயிரோடு இருப்பவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (மரணித்தவர்களை போன்றுள்ள) நிராகரிப்பவர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாவதற்காகவும் (இதை நாம் இறக்கினோம்).
IFT
இதன் வாயிலாக உயிரோடிருக்கின்ற (ஒவ்வொரு) மனிதனையும் எச்சரிப்பதற்காகவும், நிராகரிப்பவர்களுக்கு எதிரான ஆதாரம் நிறைவு பெறுவதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(க்குர் ஆனான)து, உயிரோடு (_உண்மையை ஏற்று பொய்யை மறுக்கும் உள்ளத்துடன்) இருப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நிராகரிப்போர் மீது (தண்டனையைப் பற்றிய) வாக்கை உறுதிப்படுத்துவதற்காகவும் (இறக்கப்பட்டது).
Saheeh International
To warn whoever is alive and justify the word [i.e., decree] against the disbelievers.
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம் கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.
IFT
அவர்கள் கவனிக்கவில்லையா, என்ன? திண்ணமாக, நம் கைகள் உருவாக்கியவற்றிலிருந்து அவர்களுக்காகக் கால்நடைகளை நாம் படைத்துள்ளோம். இப்போது அவர்கள் அவற்றிற்கு உரிமையாளர்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக நாம் அவர்களுக்காக (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் காணவில்லையா? பின்னர், அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள்.
Saheeh International
Do they not see that We have created for them from what Our hands have made, grazing livestock, and [then] they are their owners?
وَذَلَّـلْنٰهَاநாம் அவற்றை பணியவைத்தோம்لَهُمْஅவர்களுக்குفَمِنْهَاஅவற்றில்رَكُوْبُهُمْஅவர்களின் வாகனங்களும்وَمِنْهَاஇன்னும் அவற்றில் இருந்துيَاْكُلُوْنَஅவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்
மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவற்றை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன; (அறுத்து) புசிக்கக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன.
IFT
மேலும் அவற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். அவற்றில், சிலவற்றின்மீது அவர்கள் சவாரி செய்கின்றார்கள். மேலும், சிலவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவைகளை, (இலகுவான முறையில்) அவர்களுக்குக் கீழ்படியும்படியும் நாம் செய்தோம், அவைகளில் அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவைகளும் இருக்கின்றன, அவர்கள் அவற்றிலிருந்து உண்ணவும் செய்கிறார்கள்.
Saheeh International
And We have tamed them for them, so some of them they ride, and some of them they eat.
وَاتَّخَذُوْاஅவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்مِنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاٰلِهَةًபல கடவுள்களைلَّعَلَّهُمْ يُنْصَرُوْنَؕதாங்கள் உதவி செய்யப்படுவதற்காக
வத்தகதூ மின் தூனில் லாஹி ஆலிஹதல் ல'அல்லஹும் யுன்ஸரூன்
முஹம்மது ஜான்
எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அல்லாஹ் அல்லாதவற்றாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவற்றை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்!
IFT
(இவ்வாறெல்லாம் இருந்தும்) அல்லாஹ்வை விடுத்து பிற கடவுள்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், தாம் உதவி செய்யப்படலாமென்று ஆசை கொள்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்வையன்றி (அவற்றால்) தங்களுக்கு உதவிசெய்யப்படக்கூடும் என்பதற்காக, அவர்கள் (வணக்கத்திற்குரிய வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Saheeh International
But they have taken besides Allah [false] deities that perhaps they would be helped.
لَا يَسْتَطِيْعُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்نَصْرَஉதவுவதற்குهُمْۙஅவர்களுக்குوَهُمْஇன்னும் அவர்கள்لَهُمْஅவர்கள் முன்جُنْدٌராணுவமாகمُّحْضَرُوْنَதயாராக இருக்கின்ற
லா யஸ்ததீ'ஊன னஸ்ரஹும் வ ஹும் லஹும் ஜுன்தும் முஹ்ளரூன்
முஹம்மது ஜான்
ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
அவற்றால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவை இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
IFT
அவற்றால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது! (இதற்கு நேர்மாறாக) அம்மக்கள், அவற்றிற்காக தயார் நிலையிலிருக்கும் சேனையாக விளங்குகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்) அவர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றல் பெற மாட்டார்கள், (ஆயினும் மறுமையில்) அவர்கள் இவர்களுக்கு (எதிராகச் சாட்சிகூற) முன்னிலைப்படுத்தப்படும் படையினராவர்.
Saheeh International
They are not able to help them, and they [themselves] are for them soldiers in attendance.
(நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ‘நீர் பொய்யர்' என) அவர்கள் உம்மைப் பற்றிக் கூறுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்.
IFT
(இட்டுக்கட்டிப் பேசும்) அவர்களின் பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவை அனைத்தையும் திண்ணமாக நாம் அறிகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உமக்கு விரோதமாகக் கூறப்படும்) அவர்களுடைய கூற்று உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம், நிச்சயமாக அவர்கள் (தங்கள் இதயங்களில்) மறைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நாம் நன்கறிவோம்.
Saheeh International
So let not their speech grieve you. Indeed, We know what they conceal and what they declare.
மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகிறான்.
IFT
திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதன்_அவனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நிச்சயமாக நாம் படைத்தோம் என்பதை_அவன் பார்க்கவில்லையா? பின்னர் திடீரென அவன், பகிரங்கமாகத் தர்க்கிக்கக் கூடியவனாக இருக்கிறான்.
Saheeh International
Does man not consider that We created him from a [mere] sperm-drop - then at once he is a clear adversary?
மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
அப்துல் ஹமீது பாகவி
(மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகிறான். அவன், தான் படைக்கப்பட்ட (விதத்)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கிறான்.
IFT
மேலும், அவன் நமக்கு உவமையைப் பொருத்துகின்றான். ஆனால் தான் படைக்கப்பட்ட விதத்தை மறந்துவிடுகின்றான். மக்கிப் போய்விட்ட நிலையிலுள்ள இந்த எலும்புகளை உயிர்ப்பிப்பவர் யார்? என்று அவன் கேட்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவன் தன்னுடைய படைப்பை (தான் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதை) மறந்துவிட்டு, ஓர் உதாரணத்தையும் நமக்காக அவன் கூறுகிறான், “எலும்புகளை, அவை மக்கிப்போன நிலையில் உயிரூட்டுபவன் யார்?” என்று அவன் கேட்கிறான்.
Saheeh International
And he presents for Us an example and forgets his [own] creation. He says, "Who will give life to bones while they are disintegrated?"
“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அதற்கு நீர் கூறுவீராக: “முதல் முறையில் அதைப் படைத்தவன் எவனோ அவனே அதை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்.
IFT
அவனிடம் கூறுங்கள்: “எவன் முதலில் அவற்றைப் படைத்தானோ அவனே அவற்றை உயிர்ப்பிப்பான். மேலும், அவன் படைப்பு நுட்பம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அதற்கு) நீர் கூறுவீராக: “முதன்முறையில் அதனைப்படைத்தானே அத்தகையவனே அதனை உயிர்ப்பிப்பான், அவன் ஒவ்வொரு படைப்பைப்பற்றியும் நன்கறிகிறவன்.”
Saheeh International
Say, "He will give them life who produced them the first time; and He is, of all creation, Knowing."
“பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கிறீர்கள்.
IFT
அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பைப் படைத்தான். இப்போது நீங்கள் அதன் மூலம் (தீ) பற்றவைத்துக் கொள்கின்றீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக பசுமையான மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கினான், அப்போது அதிலிருந்து நீங்கள் (நெருப்பை) மூட்டுகிறீர்கள்.
Saheeh International
[It is] He who made for you from the green tree, fire, and then from it you ignite.
فَسُبْحٰنَஆக, அவன் மகா பரிசுத்தமானவன்الَّذِىْஎவன்بِيَدِهٖஅவனுடைய கரத்தில்مَلَـكُوْتُபேராட்சிكُلِّ شَىْءٍஎல்லாவற்றின்وَّاِلَيْهِஅவன் பக்கம்தான்تُرْجَعُوْنَநீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்