37. ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)

மக்கீ, வசனங்கள்: 182

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالصّٰٓفّٰتِ صَفًّا ۟ۙ
وَ الصّٰٓفّٰتِஅணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாகصَفًّاۙஅணிவகுத்து
வஸ்ஸாFப்Fபாதி ஸFப்Fபா
முஹம்மது ஜான்
அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக!
IFT
அணியணியாய் நிற்போர் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அணியாக அணிவகுத்து நிற்போர் மீது சத்தியமாக,
Saheeh International
By those [angels] lined up in rows
فَالزّٰجِرٰتِ زَجْرًا ۟ۙ
فَالزّٰجِرٰتِபின்னர் விரட்டுபவர்கள் மீதுزَجْرًاۙவிரட்டுதலாக
FபZஜ்Zஜாஜிராதி Zஜஜ்ரா
முஹம்மது ஜான்
பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
(தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக!
IFT
பின்னர், கண்டித்து விரட்டுவோர் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தீவிரமாக விரட்டுவோர் மீது சத்தியமாக,
Saheeh International
And those who drive [the clouds]
فَالتّٰلِیٰتِ ذِكْرًا ۟ۙ
فَالتّٰلِیٰتِபின்னர் ஓதுபவர்கள்ذِكْرًاۙநினைவூட்டலை
Fபத்தாலியாதி திக்ரா
முஹம்மது ஜான்
(நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
(இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
IFT
பின்னர், நல்லுரையை எடுத்தியம்புவோர் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வின்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
Saheeh International
And those who recite the message,
اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ۟ؕ
اِنَّநிச்சயமாகاِلٰهَكُمْஉங்கள் இறைவன்لَوَاحِدٌؕஒருவனே
இன்ன இல்லாஹகும் ல வாஹித்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான்.
IFT
உங்களுடைய உண்மையான இறைவன் ஒருவன்தான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய நாயன் ஒரே ஒருவன் தான்.
Saheeh International
Indeed, your God is One,
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ۟ؕ
رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமேலும் எவற்றிற்கும்بَیْنَهُمَاஅவையிரண்டிற்கும் இடையில்وَ رَبُّமேலும் இறைவன்الْمَشَارِقِؕகிழக்குத் திசைகளின்
ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ ரBப்Bபுல் மஷாரிக்
முஹம்மது ஜான்
வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமி இன்னும் அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன் அவனே. கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே.
IFT
அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் அதிபதியும் கிழக்குகளின் உரிமையாளனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களுக்கும், பூமிக்கும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றிற்கும் (அவனே) இரட்சகன், (மேல்திசை) கீழ்த்திசைகளுக்கும் (அவனே) இரட்சகன்.
Saheeh International
Lord of the heavens and the earth and that between them and Lord of the sunrises.
اِنَّا زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِزِیْنَةِ لْكَوَاكِبِ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்زَیَّنَّاஅலங்கரித்தோம்السَّمَآءَவானத்தைالدُّنْیَاஉலகبِزِیْنَةِஅலங்காரத்தைக் கொண்டுِ۟الْكَوَاكِبِۙநட்சத்திரங்களின்
இன்னா Zஜய்யன்னஸ் ஸமா 'அத் துன்யா BபிZஜீனதினில் கவாகிBப்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம்.
IFT
அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு நாம் அலங்கரித்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம், (இந்தப் பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு அலங்கரித்துள்ளோம்.
Saheeh International
Indeed, We have adorned the nearest heaven with an adornment of stars
وَحِفْظًا مِّنْ كُلِّ شَیْطٰنٍ مَّارِدٍ ۟ۚ
وَ حِفْظًاமேலும் பாதுகாப்பாகمِّنْஇருந்துكُلِّஒவ்வொருشَیْطٰنٍஷைத்தான்مَّارِدٍۚகலகக்கார
வ ஹிFப்ளம் மின் குல்லி ஷய்தானிம் மாரித்
முஹம்மது ஜான்
(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).
அப்துல் ஹமீது பாகவி
மிக்க விஷமிகளான ஷைத்தான்களுக்கு ஒரு தடையாகவும் (ஆக்கி வைத்தோம்).
IFT
மேலும், மூர்க்கத்தனம் கொண்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் அதனை நாம் பாதுகாத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் பாதுகாப்பதற்காக (நாம் ஆக்கினோம்).
Saheeh International
And as protection against every rebellious devil
لَا یَسَّمَّعُوْنَ اِلَی الْمَلَاِ الْاَعْلٰی وَیُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍ ۟ۗۖ
لَاமாட்டார்கள்یَسَّمَّعُوْنَசெவிமடுக்கاِلَیநோக்கிالْمَلَاِசபையினரைالْاَعْلٰیமேலானوَ یُقْذَفُوْنَமேலும் அவர்கள் எறியப்படுவார்கள்مِنْஇருந்துكُلِّஒவ்வொருجَانِبٍۗۖபக்கத்திலிருந்தும்
லா யஸ்ஸம்ம 'ஊன இலல் மல 'இல் அஃலா வ யுக்தFபூன மின் குல்லி ஜானிBப்
முஹம்மது ஜான்
(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளிகளால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்.
IFT
ஷைத்தான்களால் ‘மலா அஃலா’வின்* செய்திகளைச் செவியுற முடியாது. எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் எறியப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களின் பேச்சுக்களை மறைந்திருந்து ஷைத்தான்களாகிய) இவர்கள் செவியேற்கமாட்டார்கள், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரி கொள்ளிகளால்) எறியப்படுவார்கள்.
Saheeh International
[So] they may not listen to the exalted assembly [of angels] and are pelted from every side,
دُحُوْرًا وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ ۟ۙ
دُحُوْرًاவிரட்டப்பட்டவர்களாகوَّ لَهُمْமேலும் அவர்களுக்குعَذَابٌவேதனைوَّاصِبٌۙநிலையான
துஹூர(ன்)வ் வ லஹும் 'அதாBபு(ன்)வ் வாஸிBப்
முஹம்மது ஜான்
(அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
IFT
அவர்களுக்குத் தொடர்ச்சியான வேதனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விரட்டப்படுவதற்காக (எறியப்படுவார்கள்), அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
Saheeh International
Repelled; and for them is a constant punishment,
اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ ۟
اِلَّاதவிரمَنْஎவன்خَطِفَபறிக்கிறானோالْخَطْفَةَஒரு செய்தியைفَاَتْبَعَهٗஅவனைப் பின்தொடரும்شِهَابٌஒரு தீப்பந்துثَاقِبٌதுளைத்துச் செல்லும்
இல்லா மன் கதிFபல் கத்Fபத Fப அத்Bப'அஹூ ஷிஹாBபுன் தாகிBப்
முஹம்மது ஜான்
(ஏதேனும் செய்தியை) இறாய்ஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.
அப்துல் ஹமீது பாகவி
(தப்பித் தவறி ஒரு வார்த்தையை) பறித்துச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்து விட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது.
IFT
ஆயினும், அந்த ஷைத்தான்களில் யாரேனும் ஒருவன் எதையேனும் இறாஞ்சிக்கொண்டு செல்ல முயன்றால் பிரகாசமான தீச்சுவாலை ஒன்று அவனைப் பின்தொடர்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(திருட்டுத்தனமாக ஏதேனும்) செய்தியை இராய்ஞ்சிச் செல்பவனைத் தவிர _ அப்போது பிரகாசமான தீப்பந்தம் அவனைப் பின் தொடரும்.
Saheeh International
Except one who snatches [some words] by theft, but they are pursued by a burning flame, piercing [in brightness].
فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِیْنٍ لَّازِبٍ ۟
فَاسْتَفْتِهِمْஎனவே அவர்களிடம் கேளும்اَهُمْஅவர்களாاَشَدُّமிகக் கடினமானவர்கள்خَلْقًاபடைப்பால்اَمْஅல்லதுمَّنْஎவர்களைخَلَقْنَا ؕநாம் படைத்தோமோاِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنٰهُمْஅவர்களைப் படைத்தோம்مِّنْஇருந்துطِیْنٍகளிமண்لَّازِبٍஒட்டும் தன்மையுள்ள
Fபஸ்தFப்திஹிம் அஹும் அஷத்து கல்கன் அம் மன் கலக்னா; இன்னா கலக்னாஹும் மின் தீனில் லாZஜிBப்
முஹம்மது ஜான்
ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவற்றைப் படைப்பது சிரமமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கிறோம்.
IFT
இப்போது அவர்களிடம் கேளும்: எது அதிகக் கடினமானது? இவர்களைப் படைத்திருப்பதா? அல்லது இப்பொருள்களை நாம் படைத்திருப்பதா? திண்ணமாக, நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே “படைப்பால் அவர்கள் மிகக் கடினமானவர்களா? அல்லது நாம் படைத்திருப்பைவைகளா?” என இவர்களிடம் (நபியே! நீர்) விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணால் படைத்திருக்கின்றோம்.
Saheeh International
Then inquire of them, [O Muhammad], "Are they a stronger [or more difficult] creation or those [others] We have created?" Indeed, We created them [i.e., men] from sticky clay.
بَلْ عَجِبْتَ وَیَسْخَرُوْنَ ۪۟
بَلْமாறாகعَجِبْتَநீர் ஆச்சரியப்படுகிறீர்وَ یَسْخَرُوْنَ۪அவர்களோ பரிகசிக்கிறார்கள்
Bபல்'அஜிBப்த வ யஸ்கரூன்
முஹம்மது ஜான்
(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
மாறாக, (நபியே!) நீர் (அல்லாஹ்வின் வல்லமையைக்கண்டு) ஆச்சரியப்படுகிறீர்; அவர்களோ (அதைப்) பரிகசிக்கின்றனர்.
IFT
உண்மையில் (அல்லாஹ்வுடைய வியத்தகு ஆற்றல்களைப் பற்றி) நீர் வியப்புறுகின்றீர். ஆனால் இவர்களோ அவனைப் பரிகாசம் செய்துகொண்டு இருக்கிறார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், (நபியே!) நீர் ஆச்சரியப்படுகின்றீர்; அவர்களோ, (அதனைப்) பரிகசிக்கின்றனர்.
Saheeh International
But you wonder, while they mock,
وَاِذَا ذُكِّرُوْا لَا یَذْكُرُوْنَ ۪۟
وَ اِذَاமேலும் எப்போதுذُكِّرُوْاஅவர்களுக்கு நினைவூட்டப்பட்டால்لَاஇல்லைیَذْكُرُوْنَ۪அவர்கள் நினைவு கூர்வார்கள்
வ இதா துக்கிரூ லா யத்குரூன்
முஹம்மது ஜான்
அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்களுக்கு நல்லுபதேசம் கூறிய போதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை.
IFT
விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்கள் உபதேசிக்கப்பட்டால், அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள்.
Saheeh International
And when they are reminded, they remember not.
وَاِذَا رَاَوْا اٰیَةً یَّسْتَسْخِرُوْنَ ۪۟
وَ اِذَاமேலும் எப்போதுرَاَوْاஅவர்கள் கண்டால்اٰیَةًஓர் அத்தாட்சியைیَّسْتَسْخِرُوْنَ۪பரிகாசம் செய்கிறார்கள்
வ இதா ர அவ் ஆயத(ன்)ய் யஸ்தஸ்கிரூன்
முஹம்மது ஜான்
அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
IFT
ஏதேனும் சான்றினை அவர்கள் பார்த்தால் அதனை ஏளனம் செய்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் அளவு கடந்து பரிகாசம் செய்கின்றனர்.
Saheeh International
And when they see a sign, they ridicule.
وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟ۚۖ
وَ قَالُوْۤاமேலும் அவர்கள் கூறினார்கள்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்مُّبِیْنٌۚۖதெளிவான
வ காலூ இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
முஹம்மது ஜான்
“இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘ இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்றும் கூறுகின்றனர்.
IFT
மேலும், கூறுகின்றார்கள்: “இது அப்பட்டமான சூனியமே;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இது பகிரங்கமான சூனியமே தவிர (வேறு) இல்லை” என்றும் கூறுகின்றனர்.
Saheeh International
And say, "This is not but obvious magic.
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ ۟ۙ
ءَاِذَاஎன்ன! ... போதுمِتْنَاநாம் மரணித்துوَ كُنَّاமேலும் நாம் ஆகிتُرَابًاமண்ணாகوَّ عِظَامًاமேலும் எலும்புகளாகءَاِنَّاநிச்சயமாக நாங்களா?لَمَبْعُوْثُوْنَۙஎழுப்பப்படுபவர்கள்?
அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ இன்னா லமBப்'ஊதூன்
முஹம்மது ஜான்
“நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)
அப்துல் ஹமீது பாகவி
‘‘நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும், போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்),
IFT
நாம் இறந்து மண்ணாகி, எலும்புக்கூடாகி விட்டாலும் மீண்டும் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், (பின்னர்) நிச்சயமாக நாம் எழுப்பப்படுவோர்களா? (என்றும் கேட்கின்றனர்).
Saheeh International
When we have died and become dust and bones, are we indeed to be resurrected?
اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ ۟ؕ
اَوَ اٰبَآؤُنَاஎங்கள் மூதாதையர்களுமாالْاَوَّلُوْنَؕமுந்தையவர்கள்
அவ ஆBபா'உனல் அவ்வலூன்
முஹம்மது ஜான்
“அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே) நம் மூதாதைகளுமா? (எழுப்பப்படுவார்கள்'' என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.)
IFT
முன்பு வாழ்ந்து சென்ற நம்முடைய மூதாதையர்களும்கூட எழுப்பப்படுவார்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எம்முடைய முன்னோர்களான மூதாதையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்)” என்றும் கேட்கின்றனர்.
Saheeh International
And our forefathers [as well]?"
قُلْ نَعَمْ وَاَنْتُمْ دَاخِرُوْنَ ۟ۚ
قُلْகூறுவீராகنَعَمْஆம்وَ اَنْتُمْமேலும் நீங்கள்دَاخِرُوْنَۚசிறுமையடைந்தவர்களாக
குல் ன'அம் வ அன்தும் தாகிரூன்
முஹம்மது ஜான்
“ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் எழுப்பப்படுவது) உண்மைதான். அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்.
IFT
இவர்களிடம் நீர் கூறும்: “ஆம்! (அல்லாஹ்வுக்கு எதிராக) நீங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாவீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக:”ஆம்! நீங்களும் சிறுமைப்பட்டவர்களாக (எழுப்பப்படுவீர்கள்).
Saheeh International
Say, "Yes, and you will be [rendered] contemptible."
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ یَنْظُرُوْنَ ۟
فَاِنَّمَاநிச்சயமாகهِیَஅதுزَجْرَةٌபேரொலிوَّاحِدَةٌஒரே ஒருفَاِذَاஉடனேهُمْஅவர்கள்یَنْظُرُوْنَபார்ப்பார்கள்
Fப இன்னமா ஹிய Zஜஜ்ர து(ன்)வ் வாஹிததுன் Fப இதா ஹும் யன்ளுரூன்
முஹம்மது ஜான்
ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அது ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து நின்று திருதிருவென்று) விழிப்பார்கள்.
IFT
ஒரே ஒரு பேரிரைச்சல்தான்! உடனே அவர்கள் (தங்களுக்குக் கூறப்பட்டு வரும் விஷயங்கள் அனைத்தையும் திடீரென்று தம் கண்களால்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதுவெல்லாம் ஒரே ஒரு சப்தம்தான், உடனே அவர்கள் (எழுந்து மறுமை நாள் நிலைபெற்றுவிட்டதைப்) பார்ப்பார்கள்.
Saheeh International
It will be only one shout, and at once they will be observing.
وَقَالُوْا یٰوَیْلَنَا هٰذَا یَوْمُ الدِّیْنِ ۟
وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறுவார்கள்یٰوَیْلَنَاஎங்களுக்கு வந்த கேடேهٰذَاஇதுیَوْمُநாள்الدِّیْنِதீர்ப்பு
வ காலூ யா வய்லனா ஹாதா யவ்முத்-தீன்
முஹம்மது ஜான்
(அவ்வேளை) “எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே” என்று அவர்கள் கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
நாங்கள் கெட்டோம்! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே'' என்றும் அவர்கள் கூறுவார்கள்.
IFT
அவ்வேளை அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! எங்கள் துர்ப்பாக்கியமே! இது கூலி கொடுக்கப்படும் நாளாயிற்றே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கப்படும் நாள் (ஆயிற்றே!)” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
Saheeh International
They will say, "O woe to us! This is the Day of Recompense."
هٰذَا یَوْمُ الْفَصْلِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟۠
هٰذَاஇதுیَوْمُநாள்الْفَصْلِதீர்ப்புالَّذِیْஎதனைكُنْتُمْநீங்கள்بِهٖஅதனைتُكَذِّبُوْنَ۠பொய்ப்பித்தீர்களோ
ஹாதா யவ்முல் Fபஸ்லில் லதீ குன்தும் Bபிஹீ துகதிBபூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)  
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த தீர்ப்பு நாள் இதுதான்'' (என்றும் கூறப்படும்).
IFT
எதனை நீங்கள் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அதே தீர்ப்புநாள்தான் இது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எதை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
Saheeh International
[They will be told], "This is the Day of Judgement which you used to deny."
اُحْشُرُوا الَّذِیْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا یَعْبُدُوْنَ ۟ۙ
اُحْشُرُواஒன்று திரட்டுங்கள்الَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْاஅநீதி இழைத்தார்களோوَ اَزْوَاجَهُمْமேலும் அவர்களின் கூட்டாளிகளையும்وَ مَاமேலும் எவற்றைكَانُوْاஅவர்கள்یَعْبُدُوْنَۙவணங்கிக் கொண்டிருந்தார்களோ
உஹ்ஷுருல் லதீன ளலமூ வ அZஜ்வாஜஹும் வமா கானூ யஃBபுதூன்
முஹம்மது ஜான்
“அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் நீங்கள் ஒன்று சேர்த்து,
IFT
(இவ்வாறு கட்டளையிடப்படும்:) “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் மற்றும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று திரட்டிக் கொண்டு வாருங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அநியாயம் செய்தார்களே அவர்களையும், (அநியாயம் செய்வதில் அவர்களுக்கு நிகரானவர்களான) அவர்களின் துணைவர்களையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தார்களே அவர்களையும் ஒன்று திரட்டுங்கள்”.
Saheeh International
[The angels will be ordered], "Gather those who committed wrong, their kinds, and what they used to worship
مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰی صِرَاطِ الْجَحِیْمِ ۟
مِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைفَاهْدُوْهُمْஎனவே அவர்களுக்கு வழிகாட்டுங்கள்اِلٰیநோக்கிصِرَاطِபாதையைالْجَحِیْمِநரகத்தின்
மின் தூனில் லாஹி Fபஹ்தூஹும் இலா ஸிராதில் ஜஹீம்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்'' (என்றும்),
IFT
பிறகு அவர்கள் அனைவருக்கும் நரகத்துக்கான வழியினைக் காட்டுங்கள்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வையன்றி (வணங்கிக் கொண்டிருந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்) பின்னர் அவர்களுக்கு நரகத்தின் பாதையின்பால் வழிகாட்டுங்கள்.
Saheeh International
Other than Allah, and guide them to the path of Hellfire
وَقِفُوْهُمْ اِنَّهُمْ مَّسْـُٔوْلُوْنَ ۟ۙ
وَ قِفُوْهُمْமேலும் அவர்களை நிறுத்துங்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مَّسْـُٔوْلُوْنَۙவிசாரிக்கப்பட வேண்டியவர்கள்
வ கிFபூஹும் இன்னஹும் மஸ்'ஊலூன்
முஹம்மது ஜான்
“இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)
அப்துல் ஹமீது பாகவி
‘‘அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கிறது'' (என்றும் கூறப்படும்).
IFT
சற்றே அவர்களை நிறுத்தி வையுங்கள்! அவர்களிடம் கொஞ்சம் விசாரிக்க வேண்டியிருக்கிறது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அங்கு) அவர்களை நிறுத்தியும் வையுங்கள், நிச்சயமாக அவர்கள் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள் (என்றும் கூறப்படும்).
Saheeh International
And stop them; indeed, they are to be questioned."
مَا لَكُمْ لَا تَنَاصَرُوْنَ ۟
مَاஎன்னلَكُمْஉங்களுக்குلَاஇல்லைتَنَاصَرُوْنَஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறீர்கள்
மா லகும் லா தனாஸரூன்
முஹம்மது ஜான்
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை'' (என்றும் கேட்கப்படும்).
IFT
உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? இப்போது ஏன் ஒருவருக்கொருவர் நீங்கள் உதவி புரிந்து கொள்வதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் உதவி செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை? (என்றும் கேட்கப்படும்).
Saheeh International
[They will be asked], "What is [wrong] with you? Why do you not help each other?"
بَلْ هُمُ الْیَوْمَ مُسْتَسْلِمُوْنَ ۟
بَلْமாறாகهُمُஅவர்கள்الْیَوْمَஇன்றுمُسْتَسْلِمُوْنَசரணடைந்தவர்கள்
Bபல் ஹுமுல் யவ்ம முஸ்தஸ்லிமூன்
முஹம்மது ஜான்
ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்தவர்களாக இருப்பார்கள்.
IFT
அடே! இன்று அவர்கள் தங்களையும் (ஒருவருக்கொருவர் மற்றவர்களையும் இறைவனிடம்) சரணடையச் செய்து கொண்டிருக்கின்றார்களே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இல்லை, இன்றையத்தினம் அவர்கள் (அல்லாஹ்வுக்கு) சரணடைந்தவர்களாக இருப்பார்கள்.
Saheeh International
But they, that Day, are in surrender.
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
وَ اَقْبَلَமேலும் முன்னோக்குவார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیநோக்கிبَعْضٍசிலரைیَّتَسَآءَلُوْنَஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வார்கள்
வ அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா'அலூன்
முஹம்மது ஜான்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்குவார்கள்; ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்யத் தொடங்குவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களில் சிலர் சிலரை முன்னோக்க்கிக் (கேள்விகளைக்) கேட்டுக் கொள்வார்கள்.
Saheeh International
And they will approach one another asking [i.e., blaming] each other.
قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْیَمِیْنِ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறுவார்கள்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்كُنْتُمْஇருந்தீர்கள்تَاْتُوْنَنَاஎங்களிடம் வருபவர்களாகعَنِஇருந்துالْیَمِیْنِவலப்புறம்
காலூ இன்னகும் குன்தும் தா'தூனனா 'அனில் யமீன்
முஹம்மது ஜான்
(தம் தலைவர்களை நோக்கி:) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு, (சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு கீழ்ப்படியும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
(பின்பற்றி வாழ்ந்த மக்கள் தம்முடைய தலைவர்களை நோக்கி) கூறுவார்கள்: “சரியான திசையில் வருவது போல் எங்களிடம் நீங்கள் வந்தீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வலப்பக்கத்திலிருந்து எங்களிடம் (உங்கள் பலத்தால் நல்லவற்றைச் செய்வதிலிருந்து தடுத்தும், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதிலிருந்து எங்களைத் திருப்பி விட்டும்) வருபவர்களாகவும் இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
Saheeh International
They will say, "Indeed, you used to come at us from the right."
قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟ۚ
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்بَلْமாறாகلَّمْஇல்லைتَكُوْنُوْاநீங்கள் இருந்தீர்கள்مُؤْمِنِیْنَۚநம்பிக்கையாளர்களாக
காலூ Bபல் லம் தகூனூ மு'மினீன்
முஹம்மது ஜான்
(“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அ(த்தலை)வர்கள் ‘‘அவ்வாறல்ல. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தான் நம்பிக்கை கொள்ளவில்லை.''
IFT
அதற்கவர்கள் பதிலளிப்பார்கள்: “இல்லை, நீங்கள்தான் நம்பிக்கை கொள்வோராய் இருக்கவில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) “அவ்வாறல்ல! நீங்கள் தாம் விசுவசங்கொண்டவர்களாக இருக்கவில்லை” என்று அ(த்தலை)வர்கள் கூறுவார்கள்.
Saheeh International
They [i.e., the oppressors] will say, "Rather, you [yourselves] were not believers,
وَمَا كَانَ لَنَا عَلَیْكُمْ مِّنْ سُلْطٰنٍ ۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِیْنَ ۟
وَ مَاமேலும் இல்லைكَانَஇருந்ததுلَنَاஎங்களுக்குعَلَیْكُمْஉங்கள் மீதுمِّنْஎந்தسُلْطٰنٍ ۚஅதிகாரமும்بَلْமாறாகكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்قَوْمًاஒரு சமூகமாகطٰغِیْنَவரம்பு மீறியவர்களாக
வமா கான லனா 'அலய்கும் மின் ஸுல்தானிம் Bபல் குன்தும் கவ்மன் தாகீன்
முஹம்மது ஜான்
“அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை; எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்களுக்கு உங்கள் மீது ஓர் அதிகாரமும் இருக்கவில்லை. நீங்கள் தான் பொல்லாத மக்களாக இருந்தீர்கள்.
IFT
எங்களுக்கு உங்கள்மீது எந்த அதிகாரமும் இருந்ததில்லை. நீங்களே வரம்புமீறிய மக்களாய் வாழ்ந்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எங்களுக்கு உங்கள் மீது யாதோர் அதிகாரமும் இருக்கவில்லை எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்த கூட்டத்தாராக இருந்தீர்கள்.
Saheeh International
And we had over you no authority, but you were a transgressing people.
فَحَقَّ عَلَیْنَا قَوْلُ رَبِّنَاۤ ۖۗ اِنَّا لَذَآىِٕقُوْنَ ۟
فَحَقَّஎனவே உறுதியாகிவிட்டதுعَلَیْنَاஎங்கள் மீதுقَوْلُவாக்குرَبِّنَاۤ ۖۗஎங்கள் இறைவனின்اِنَّاநிச்சயமாக நாம்لَذَآىِٕقُوْنَசுவைப்பவர்களே
Fபஹக்க 'அலய்னா கவ்லு ரBப்Bபினா இன்னா லதா'இகூன்
முஹம்மது ஜான்
ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது; நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே.
IFT
இறுதியில், ‘நாங்கள் வேதனையைச் சுவைத்தே ஆக வேண்டும்’ எனும் எங்கள் இறைவனின் தீர்ப்புக்கு உரித்தானவர்களாகிவிட்டோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆதலால், எங்கள் இரட்சகனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது, நிச்சயமாக நாம் (வேதனையச்) சுவைக்க வேண்டியவர்கள்தாம்.
Saheeh International
So the word [i.e., decree] of our Lord has come into effect upon us; indeed, we will taste [punishment].
فَاَغْوَیْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِیْنَ ۟
فَاَغْوَیْنٰكُمْஎனவே உங்களை வழிகெடுத்தோம்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்غٰوِیْنَவழிகெட்டவர்களாக
Fப அக்வய்னாகும் இன்னா குன்னா காவீன்
முஹம்மது ஜான்
“(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள்.
IFT
ஆகவே, நாங்கள் உங்களை வழிதவறச்செய்தோம். ஏனெனில், நாங்களே வழிதவறிப்போயிருந்தோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(ஆம்!) உங்களை நாங்கள் வழிகெடுத்தோம்: (ஏனென்றால்) நிச்சயமாக நாங்களும் வழிகெட்டுப் போயிருந்தோம்” (என்று கூறுவார்கள்).
Saheeh International
And we led you to deviation; indeed, we were deviators."
فَاِنَّهُمْ یَوْمَىِٕذٍ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
فَاِنَّهُمْஆகவே நிச்சயமாக அவர்கள்یَوْمَىِٕذٍஅந்நாளில்فِیஇல்الْعَذَابِவேதனைمُشْتَرِكُوْنَபங்கு கொள்பவர்கள்
Fப இன்னஹும் யவ்ம'இதின் Fபில்'அதாBபி முஷ்தரிகூன்
முஹம்மது ஜான்
ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
முடிவில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அன்றைய தினம் வேதனையில் (சம) பங்காளிகள்தான்.
IFT
இவ்வாறு அந்நாளில் அவர்கள் அனைவரும் வேதனையில் பங்கு பெறுபவர்களாய் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, நிச்சயமாக அவர்கள் அந்நாளில் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பர்.
Saheeh International
So indeed they, that Day, will be sharing in the punishment.
اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَفْعَلُசெய்வோம்بِالْمُجْرِمِیْنَகுற்றவாளிகளுக்கு
இன்னா கதாலிக னFப்'அலு Bபில் முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம், குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம்.
IFT
திண்ணமாக, நாம் குற்றவாளிகளை இவ்வாறுதான் நடத்துகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் குற்றவாளிகளை இவ்வாறே செய்வோம்.
Saheeh International
Indeed, that is how We deal with the criminals.
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِیْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ یَسْتَكْبِرُوْنَ ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْۤاஇருந்தார்கள்اِذَاபொழுதுقِیْلَகூறப்படும்لَهُمْஅவர்களுக்குلَاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரاللّٰهُ ۙஅல்லாஹ்یَسْتَكْبِرُوْنَۙபெருமையடிப்பவர்களாக
இன்னஹும் கானூ இதா கீல லஹும் லா இலாஹ இல்லல் லாஹு யஸ்தக்Bபிரூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் அறவே இல்லை (ஆகவே, அவனையே வணங்குங்கள்)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொள்கின்றனர்,
IFT
இவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்களெனில், “உண்மையான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்கள் தற்பெருமை கொண்டார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வைத் தவிர வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயன் இல்லை!” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள், பெருமையடிப்பவர்களாக இருந்தனர்.
Saheeh International
Indeed they, when it was said to them, "There is no deity but Allah," were arrogant
وَیَقُوْلُوْنَ اَىِٕنَّا لَتَارِكُوْۤا اٰلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُوْنٍ ۟ؕ
وَ یَقُوْلُوْنَமேலும் அவர்கள் கூறுகிறார்கள்اَىِٕنَّاநிச்சயமாக நாமாلَتَارِكُوْۤاவிட்டுவிடுபவர்கள்اٰلِهَتِنَاஎங்கள் தெய்வங்களைلِشَاعِرٍஒரு கவிஞனுக்காகمَّجْنُوْنٍؕபைத்தியம் பிடித்த
வ யகூலூன அ'இன்னா லதாரிகூ ஆலிஹதினா லிஷா'இரிம் மஜ்னூன்
முஹம்மது ஜான்
“ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை மெய்யாகவே விட்டுவிடுவோமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
IFT
மேலும், கூறினார்கள்: ‘பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கைவிட்டு விடுவோமா என்ன?’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாங்கள் பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்களுடைய வணக்கத்துக்குரியவர்(களான தெய்வங்)களை நிச்சயமாக விட்டுவிடுகின்றவர்களா?” என்றும் அவர்கள் கூறுபவர்களாக இருந்தனர்.
Saheeh International
And were saying, "Are we to leave our gods for a mad poet?"
بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِیْنَ ۟
بَلْமாறாகجَآءَஅவர் வந்தார்بِالْحَقِّசத்தியத்துடன்وَ صَدَّقَமேலும் அவர் மெய்ப்பித்தார்الْمُرْسَلِیْنَதூதர்களை
Bபல் ஜா'அ Bபில்ஹக்கி வ ஸத்தகல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(அவர் பைத்தியக்காரர் அல்ல.) மாறாக, அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.)
IFT
அவரோ உண்மையில் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தார்; மேலும், ஏனைய இறைத்தூதர்களை மெய்ப்படுத்திக் கொண்டுமிருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் பைத்தியக்காரர்) அல்ல! அவர் உண்மையான(மார்க்கத்)தையே கொண்டு வந்தார், (தனக்கு முன்சென்ற) தூதர்களையும் அவர் உண்மைப்படுத்தினார்.
Saheeh International
Rather, he [i.e., the Prophet (ﷺ] has come with the truth and confirmed the [previous] messengers.
اِنَّكُمْ لَذَآىِٕقُوا الْعَذَابِ الْاَلِیْمِ ۟ۚ
اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَذَآىِٕقُواசுவைப்பவர்களேالْعَذَابِவேதனையைالْاَلِیْمِۚதுன்புறுத்தும்
இன்னகும் லதா'இகுல் 'அதாBபில் அலீம்
முஹம்மது ஜான்
(இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான்.
IFT
(இப்போது அவர்களிடம் கூறப்படும்:) ‘துன்புறுத்தும் வேதனையின் இன்பத்தை நீங்கள் சுவைக்கப் போவது திண்ணம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையச் சுவைக்க வேண்டியவர்கள்தாம்.
Saheeh International
Indeed, you [disbelievers] will be tasters of the painful punishment,
وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைتُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுவீர்கள்اِلَّاதவிரمَاஎதைكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَعْمَلُوْنَۙசெய்து கொண்டிருந்தீர்களோ
வமா துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை'' (என்றும் கூறப்படும்).
IFT
உங்களுக்கு எவ்விதக் கூலி கொடுக்கப்பட்டாலும் நீங்கள் செய்துகொண்டிருந்த அதே செயல்களுக்குப் பதிலாகத்தான் அது கொடுக்கப்படும்.’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் செய்துகொண்டிருந்தவைகளுக்கல்லாமல் (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள் (என்றும் கூறப்படும்).
Saheeh International
And you will not be recompensed except for what you used to do -
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَஅடியார்கள்اللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்கள்
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-
அப்துல் ஹமீது பாகவி
கலப்பற்ற, மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.
IFT
ஆயினும், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் இந்தத் தீயகதியிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வால்) தேர்ந்தேடுக்கப்பட்டோரான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர,
Saheeh International
But not the chosen servants of Allah.
اُولٰٓىِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌ ۟ۙ
اُولٰٓىِٕكَஅத்தகையோர்لَهُمْஅவர்களுக்குرِزْقٌவாழ்வாதாரம்مَّعْلُوْمٌۙஅறியப்பட்ட
உலா'இக லஹும் ரிZஜ்கும் மஃலூம்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு (அல்லாஹ்வின் புறத்திலிருந்து உயர்ரக) பழக்கமான உணவு தயார் செய்யப்பட்டிருக்கும்.
IFT
நன்கு அறியப்பட்ட அருட்பேறுகள் அவர்களுக்கு இருக்கின்றன;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர்_அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு உண்டு.
Saheeh International
Those will have a provision determined -
فَوَاكِهُ ۚ وَهُمْ مُّكْرَمُوْنَ ۟ۙ
فَوَاكِهُ ۚகனிகள்وَ هُمْமேலும் அவர்கள்مُّكْرَمُوْنَۙகண்ணியப்படுத்தப்பட்டவர்கள்
Fப வாகிஹு வ ஹும் முக்ரமூன்
முஹம்மது ஜான்
கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
அப்துல் ஹமீது பாகவி
(இன்னும், சுவையான) கனிவர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்கள் (இவ்வாறு) கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
IFT
எல்லாவகையான சுவையான பொருள்களும்! அவர்கள் கண்ணியத்தோடு அமர்த்தப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது)கனி(வகை)கள், இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுபவர்கள்.
Saheeh International
Fruits; and they will be honored
فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟ۙ
فِیْஇல்جَنّٰتِசுவனங்களில்النَّعِیْمِۙஇன்பம் நிறைந்த
Fபீ ஜன்னாதின் ன'ஈம்
முஹம்மது ஜான்
இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
அப்துல் ஹமீது பாகவி
இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்.
IFT
அருள் நிறைந்த சுவனப்பூங்காக்களில்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்பம் தரும் சுவனபதிகளில்_
Saheeh International
In gardens of pleasure
عَلٰی سُرُرٍ مُّتَقٰبِلِیْنَ ۟
عَلٰیமீதுسُرُرٍகட்டில்கள்مُّتَقٰبِلِیْنَஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக
'அலா ஸுருரிம் முதகா Bபிலீன்
முஹம்மது ஜான்
ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
கட்டில்களில் ஒருவர் மற்றொருவரை முகம் நோக்கி (உல்லாசமாகப் பேசிக்கொண்டு) உட்கார்ந்திருப்பார்கள்.
IFT
மஞ்சங்களில் எதிரெதிரே உட்கார்ந்திருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கட்டில்கள் மீது (அமர்ந்து) ஒருவர் மற்றொருவரை முன் நோக்கியவர்களாக (உல்லாசமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்).
Saheeh International
On thrones facing one another.
یُطَافُ عَلَیْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِیْنٍ ۟ۙ
یُطَافُசுற்றிக் கொண்டுவரப்படும்عَلَیْهِمْஅவர்களுக்குبِكَاْسٍகிண்ணத்தைக் கொண்டுمِّنْஇருந்துمَّعِیْنٍۭۙதெளிந்த நீரோடையின்
யுதாFபு 'அலய்ஹிம் Bபிகாஸிம் மிம் ம'ஈன்
முஹம்மது ஜான்
தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.
அப்துல் ஹமீது பாகவி
மிகத் தெளிவான ஊற்றுக்களின் பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றிக்கொண்டே இருக்கும்.
IFT
மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சுத்தமான (மது) பானம் நிறைந்த குவளை (சிறார்கள் மூலம்) அவர்களைச் சுற்றி கொண்டுவரப்படும்.
Saheeh International
There will be circulated among them a cup [of wine] from a flowing spring,
بَیْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۟ۚۖ
بَیْضَآءَவெண்மையானلَذَّةٍசுவையானلِّلشّٰرِبِیْنَۚۖஅருந்துவோருக்கு
Bபய்ளா'அ லத் ததில் லிஷ் ஷாரிBபீன்
முஹம்மது ஜான்
(அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
அப்துல் ஹமீது பாகவி
(அது) மிக்க வெண்மையானதாகவும், குடிப்பவர்களுக்கு மிக்க இன்பமானதாகவும் இருக்கும்.
IFT
ஒளிரக்கூடிய மது அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மிக்க வெண்மையானது (அதை) அருந்துவோருக்கு மதுரமளிக்கக் கூடியதாகும்.
Saheeh International
White and delicious to the drinkers;
لَا فِیْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا یُنْزَفُوْنَ ۟
لَاஇல்லைفِیْهَاஅதில்غَوْلٌதலைவலிوَّ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்عَنْهَاஅதனால்یُنْزَفُوْنَமதிமயங்குவார்கள்
லா Fபீஹா கவ்லு(ன்)வ் வலா ஹும் 'அன்ஹா யுன்ZஜFபூன்
முஹம்மது ஜான்
அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் போதையே இருக்காது; அதனால், அவர்களுடைய அறிவும் நீங்கிவிடாது.
IFT
(அவர்களின் உடல்களுக்கு) அதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது; அவர்களின் மதியும் கெட்டுப்போகாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் கெடுதியும் இருக்காது, அதனால் (போதையுற்று) அவர்கள் மதிமயக்கப்படவும் மாட்டார்கள்.
Saheeh International
No bad effect is there in it, nor from it will they be intoxicated.
وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِیْنٌ ۟ۙ
وَ عِنْدَهُمْமேலும் அவர்களிடத்தில்قٰصِرٰتُதாழ்த்தியவர்கள்الطَّرْفِபார்வையைعِیْنٌۙஅகன்ற கண்களையுடையவர்கள்
வ 'இன்தஹும் காஸிராதுத் தர்Fபி 'ஈன்
முஹம்மது ஜான்
இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடத்தில் கீழ் நோக்கிய, அடக்கமான பார்வையையுடைய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழகிகளும் இருப்பார்கள்.
IFT
மேலும், தாழ்த்திய பார்வை உடைய அழகிய கண்களைக்கொண்ட நங்கையரும் அவர்களிடம் இருப்பர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிடத்தில் பார்வை தாழ்த்திய (ஹுருல் ஈன் என்னும்) கண்ணழிகிகளும் இருப்பார்கள்.
Saheeh International
And with them will be women limiting [their] glances, with large, [beautiful] eyes,
كَاَنَّهُنَّ بَیْضٌ مَّكْنُوْنٌ ۟
كَاَنَّهُنَّஅவர்கள் போன்றிருப்பார்கள்بَیْضٌமுட்டைகள்مَّكْنُوْنٌமறைத்து வைக்கப்பட்ட
க அன்னஹுன்ன Bபய்ளும் மக்னூன்
முஹம்மது ஜான்
(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களின் நிறம் (இறக்கைகளில்) மறைக்கப்பட்ட (நெருப்புக் கோழியின் இலேசான மஞ்சள் வர்ணமுடைய) முட்டைகளைப் போலிருக்கும்.
IFT
அப்பெண்கள் முட்டை ஓட்டின் கீழே மறைந்திருக்கும் மெல்லிய தோலைப் போன்று மென்மையாய் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (கறைபடாது) மறைக்கப்பட்ட முட்டைக(ளின் உள்ளிருக்கும் வெள்ளைத் தொளிக)ளைப் போன்று (பாதுகாக்கப்பட்டு)இருப்பர்.
Saheeh International
As if they were [delicate] eggs, well-protected.
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
فَاَقْبَلَஅப்போது முன்னோக்குவார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰیநோக்கிبَعْضٍசிலரைیَّتَسَآءَلُوْنَஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வார்கள்
Fப அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா 'அலூன்
முஹம்மது ஜான்
(அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி, (இம்மையில் நடைபெற்றவற்றைப் பற்றி மகிழ்ச்சியுடன்) பேசிக் கொண்டிருப்பார்கள்.
IFT
பிறகு, அவர்கள் ஒருவர் மற்றவரின் பக்கம் முன்னோக்கி நிலைமைகளை விசாரிப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கியவாறு (உலகத்தில் இருந்த அவர்களின் நிலைபற்றி) ஒருவரை ஒருவர் கேட்டு) (விசாரித்து)க் கொள்வார்கள்.
Saheeh International
And they will approach one another, inquiring of each other.
قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ اِنِّیْ كَانَ لِیْ قَرِیْنٌ ۟ۙ
قَالَகூறுவான்قَآىِٕلٌகூறுபவர்مِّنْهُمْஅவர்களில்اِنِّیْநிச்சயமாகكَانَஇருந்தான்لِیْஎனக்குقَرِیْنٌۙஒரு தோழன்
கால கா'இலும் மின்ஹும் இன்னீ கான லீ கரீன்
முஹம்மது ஜான்
அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் ஒருவர் கூறுவார்: ‘‘(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான்.
IFT
அவர்களில் ஒருவர் கூறுவார் “(உலகில்) எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களில் சொல்லக்கூடிய ஒருவர், “நிச்சயமாக நான்_ எனக்கு (இம்மையில்) ஒரு நண்பன் இருந்தான்” எனக் கூறுவார்.
Saheeh International
A speaker among them will say, "Indeed, I had a companion [on earth].
یَّقُوْلُ اَىِٕنَّكَ لَمِنَ الْمُصَدِّقِیْنَ ۟
یَّقُوْلُஅவன் கூறுவான்اَىِٕنَّكَமெய்யாகவே நீயும்لَمِنَநிச்சயமாக சேர்ந்தவன்தானாالْمُصَدِّقِیْنَஉண்மைப்படுத்துபவர்களில்
யகூலு 'அ இன்னக லமினல் முஸத்திகீன்
முஹம்மது ஜான்
(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் என்னை நோக்கி ‘‘நிச்சயமாக நீ இதை நம்புகிறாயா?'' என்று கேட்டான்.
IFT
‘என்ன, உண்மை என ஏற்றுக்கொள்பவரில் நீயும் ஒருவனா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் (என்னிடம் மறுமையை) உண்மைப்படுத்தக்கூடியவர்களில் நிச்சயமாக நீயுமா? எனக்கூறுவான்.
Saheeh International
Who would say, 'Are you indeed of those who believe
ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِیْنُوْنَ ۟
ءَاِذَاஎன்ன! நாம்مِتْنَاமரணித்துوَ كُنَّاமேலும் நாம் ஆகிவிட்டால்تُرَابًاமண்ணாகوَّ عِظَامًاஎலும்புகளாகவும்ءَاِنَّاநிச்சயமாக நாமாلَمَدِیْنُوْنَநிச்சயமாக கூலி கொடுக்கப்படுபவர்கள்
'அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ இன்னா லமதீனூன்
முஹம்மது ஜான்
“நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
அப்துல் ஹமீது பாகவி
என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?'' என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தான்.
IFT
நாம் இறந்து மண்ணோடு மண்ணாகி எலும்புக் கூடுகளாய் ஆன பின்னரும் திண்ணமாக நமக்குக் கூலியும், தண்டனையும் வழங்கப்படுமா?’ என்றெல்லாம் அவன் என்னிடம் வினவிக்கொண்டிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும், ஆகிவிட்டாலும் (உயிர்ப்பித்து) நாம் கூலி வழங்கப்படுவோரா? (என்றும் கூறுபவனாக இருந்தான்).
Saheeh International
That when we have died and become dust and bones, we will indeed be recompensed?'"
قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ ۟
قَالَஅவர் கூறுவார்هَلْஎன்னاَنْتُمْநீங்கள்مُّطَّلِعُوْنَஎட்டிப் பார்ப்பவர்கள்
கால ஹல் அன்தும் முத்தலி'ஊன்
முஹம்மது ஜான்
(அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கூறி,
IFT
(இப்போது அவன் எங்கிருக்கின்றான் என்பதை) நீங்கள் காண விரும்புகின்றீர்களா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே அவனை) நீங்கள் எட்டிப்பார்க்(கவிரும்பு)கின்றீர்களா? என்று கேட்டார்.
Saheeh International
He will say, "Would you [care to] look?"
فَاطَّلَعَ فَرَاٰهُ فِیْ سَوَآءِ الْجَحِیْمِ ۟
فَاطَّلَعَபின்னர் அவர் எட்டிப்பார்த்தார்فَرَاٰهُஅவர் அவனைக் கண்டார்فِیْஇல்سَوَآءِமத்தியில்الْجَحِیْمِநரகத்தின்
Fபத்தல'அ Fபர ஆஹு Fபீ ஸவா'இல் ஜஹீம்
முஹம்மது ஜான்
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
அப்துல் ஹமீது பாகவி
அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு,
IFT
இவ்வாறு கூறிக்கொண்டே அவர் குனிவார். அப்போது நரகின் ஆழத்தில் அவனைக் கண்டு கொள்வார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு அவர் எட்டிப் பார்க்கிறார்: அப்போது அவனை நரகத்தின் மத்தியில் அவர் காண்கிறார்.
Saheeh International
And he will look and see him in the midst of the Hellfire.
قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِیْنِ ۟ۙ
قَالَஅவன் கூறினான்تَاللّٰهِஅல்லாஹ்வின் மீது சத்தியமாகاِنْநிச்சயமாகكِدْتَّநீ நெருங்கிவிட்டாய்لَتُرْدِیْنِۙஎன்னை அழித்துவிட
கால தல்லாஹி இன் கித்த லதுர்தீன்
முஹம்மது ஜான்
(அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
அப்துல் ஹமீது பாகவி
(அவனை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்.''
IFT
மேலும், அவனை நோக்கிக் கூறுவார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயம் நீ என்னை அழித்துவிடவே முனைந்திருந்தாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனிடம்) “அல்லாஹ்வின்மீது சத்தியமாக, நீ என்னை (உலகில் இருக்கும் போது வழி கெடுத்து நரகக்) குழியில் தள்ளிவிடவே எத்தனித்தாய்” என்று கூறுவார்.
Saheeh International
He will say, "By Allah, you almost ruined me.
وَلَوْلَا نِعْمَةُ رَبِّیْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِیْنَ ۟
وَ لَوْ لَاஇல்லாவிட்டால்نِعْمَةُஅருட்கொடைرَبِّیْஎன் இறைவனின்لَكُنْتُநிச்சயமாக நான் ஆகியிருப்பேன்مِنَஒருவனாகالْمُحْضَرِیْنَகொண்டுவரப்பட்டவர்களில்
வ லவ் லா னிஃமது ரBப்Bபீ லகுன்து மினல் முஹ்ளரீன்
முஹம்மது ஜான்
“என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன்.
IFT
என் இறைவனின் அருள் என்னை அரவணைக்காதிருந்தால், பிடித்துக் கொண்டு வரப்பட்டிருப்பவர்களில் நானும் ஒருவனாகி இருந்திருப்பேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகனுடைய அருள் (என்மீது) இல்லாதிருந்தால், நானும், (நரகத்திற்கு) ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ஒருவனாக இருந்திருப்பேன்” (என்றும் கூறுவார்).
Saheeh International
If not for the favor of my Lord, I would have been of those brought in [to Hell].
اَفَمَا نَحْنُ بِمَیِّتِیْنَ ۟ۙ
اَفَمَاஅப்படியானால் இல்லையாنَحْنُநாம்بِمَیِّتِیْنَۙமரணிக்கக்கூடியவர்கள்
அFபமா னஹ்னு Bபிமய்யிதீன்
முஹம்மது ஜான்
“(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா?
அப்துல் ஹமீது பாகவி
(இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா?
IFT
சரி, இனி நாம் மரணிக்கக்கூடியவர் அல்லவே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர் சுவர்க்கவாசிகளிடம்,) “நாம் (மற்றொரு முறையும்) இறந்து விடுபவர்கள் இல்லையே? (என்பார்).
Saheeh International
Then, are we not to die
اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟
اِلَّاதவிரمَوْتَتَنَاநமது மரணத்தைالْاُوْلٰیமுதலாவதுوَ مَاமேலும் இல்லைنَحْنُநாம்بِمُعَذَّبِیْنَதண்டிக்கப்படுபவர்களாக
இல்லா மவ்ததனல் ஊல வமா னஹ்னு Bபிமு'அத்தBபீன்
முஹம்மது ஜான்
“(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சொர்க்கத்தில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்'' (என்றும் கூறுவார்).
IFT
நமக்கு வரவேண்டிய மரணமோ முன்பே வந்துவிட்டதே! இனி நமக்கு எவ்வித வேதனையும் ஏற்படப்போவதில்லை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நம்முடைய முந்தைய மரணத்தைத் தவிர (வேறில்லை), நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர் (என்றும் சுவனவாசிகள் கூறுவர்).
Saheeh International
Except for our first death, and we will not be punished?"
اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَهُوَஅதுவேالْفَوْزُவெற்றிالْعَظِیْمُமகத்தானது
இன்ன ஹாதா லஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதுதான் மகத்தான பாக்கியமாகும்.
IFT
திண்ணமாக, இதுவே மகத்தான வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இதுவே மகத்தானதொரு வெற்றியாகும்!
Saheeh International
Indeed, this is the great attainment.
لِمِثْلِ هٰذَا فَلْیَعْمَلِ الْعٰمِلُوْنَ ۟
لِمِثْلِபோன்றதற்காகவேهٰذَاஇதைفَلْیَعْمَلِஉழைக்கட்டும்الْعٰمِلُوْنَஉழைப்பவர்கள்
லிமித்லி ஹாத Fபல்யஃம லில் 'ஆமிலூன்
முஹம்மது ஜான்
எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
அப்துல் ஹமீது பாகவி
ஏதும் நன்மை செய்யக்கூடியவர்கள் எல்லோரும் இதைப் போன்ற (நற்பேறுகளை பெறுவ)தற்காகவே பாடுபடவும்.
IFT
செயல்படுவோர் இத்தகைய வெற்றிக்காகவே செயல்பட வேண்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது போன்றதற்காகவே, செயல்படக்கூடியவர்கள் செயல்படவும்.
Saheeh International
For the like of this let the workers [on earth] work.
اَذٰلِكَ خَیْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ ۟
اَذٰلِكَஅதுவாخَیْرٌசிறந்ததுنُّزُلًاவிருந்தாகاَمْஅல்லதுشَجَرَةُமரம்الزَّقُّوْمِஜக்கூம்
அதாலிக கய்ருன் னுZஜுலன் அம் ஷஜரதுZஜ் Zஜக்கூம்
முஹம்மது ஜான்
அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?
அப்துல் ஹமீது பாகவி
(சொர்க்கத்தில் கிடைக்கும்) இது மேலான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரம் மேலான விருந்தா?
IFT
இந்த விருந்து சிறந்ததா? அல்லது ‘ஜக்கூம்’ மரமா? (என்பதை நீங்கள் கூறுங்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்) விருந்துபசாரத்தால் அது சிறந்ததா? அல்லது (நரகத்திலிருக்கும்) கள்ளி மரமா?
Saheeh International
Is that [i.e., Paradise] a better accommodation or the tree of zaqqūm?
اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰهَاஅதனை ஆக்கினோம்فِتْنَةًஒரு சோதனையாகلِّلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்கு
இன்னா ஜ'அல்னாஹா Fபித்னதல் லிள்ளாலிமீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை வேதனை செய்வதற்காகவே அதை உண்டு பண்ணி இருக்கிறோம்.
IFT
நாம் அந்த மரத்தை அக்கிரமக்காரர்களுக்கு ஒரு சோதனையாக ஆக்கியிருக்கிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அதனை, அநியாயகாரர்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியிருக்கின்றோம்.
Saheeh International
Indeed, We have made it a torment for the wrongdoers.
اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِیْۤ اَصْلِ الْجَحِیْمِ ۟ۙ
اِنَّهَاநிச்சயமாக அதுشَجَرَةٌஒரு மரம்تَخْرُجُமுளைக்கும்فِیْۤஇல்اَصْلِஅடிப்பகுதிالْجَحِیْمِۙநரகத்தின்
இன்னஹா ஷஜரதுன் தக்ருஜு Fபீ அஸ்லில் ஜஹீம்
முஹம்மது ஜான்
மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு மரமாகும்.
IFT
அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து முளைத்து வருகின்ற ஒரு மரம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அது, நரகத்தின் அடித் தளத்திலிருந்து வெளிப்படும் ஒரு மரமாகும்.
Saheeh International
Indeed, it is a tree issuing from the bottom of the Hellfire,
طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّیٰطِیْنِ ۟
طَلْعُهَاஅதன் பாளைகள்كَاَنَّهٗஅது போன்றிருக்கும்رُءُوْسُதலைகள்الشَّیٰطِیْنِஷைத்தான்களின்
தல்'உஹா க அன்னஹூ ரு'ஊஸுஷ் ஷயாதீன்
முஹம்மது ஜான்
அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அதன் கிளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும்.
IFT
அதன் பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குழைகளுக்கொப்பான) அதன் பழங்கள், நிச்சயமாக ஷைத்தான்களின் தலைகளைப்போலிருக்கும்.
Saheeh International
Its emerging fruit as if it was heads of the devils.
فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ؕ
فَاِنَّهُمْஆகவே நிச்சயமாக அவர்கள்لَاٰكِلُوْنَநிச்சயமாக உண்பார்கள்مِنْهَاஅதிலிருந்துفَمَالِـُٔوْنَபிறகு நிரப்புவார்கள்مِنْهَاஅதைக் கொண்டுالْبُطُوْنَؕவயிறுகளை
Fப இன்னஹும் ல ஆகிலூன மின்ஹா Fபமாலி'ஊன மின்ஹல் Bபுதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர்கள் (தங்கள் பசிக் கொடுமையினால்) அதை புசிப்பார்கள்! இன்னும், (வேறு உணவின்றி) அதிலிருந்தே (தங்கள்) வயிறுகளை நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.
IFT
நரகவாசிகள்தாம் அதனைத் தின்பார்கள். மேலும் அதனைக் கொண்டே வயிறுகளை நிரப்புவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, நிச்சயமாக அவர்கள், திட்டமாக அதிலிருந்து உண்ணக் கூடியவர்கள், பின்னர் அதிலிருந்து வயிறுகளை நிரப்பிக் கொள்ளக் கூடியவர்கள்.
Saheeh International
And indeed, they will eat from it and fill with it their bellies.
ثُمَّ اِنَّ لَهُمْ عَلَیْهَا لَشَوْبًا مِّنْ حَمِیْمٍ ۟ۚ
ثُمَّபிறகுاِنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குعَلَیْهَاஅதன் மீதுلَشَوْبًاஒரு கலவைمِّنْஇருந்துحَمِیْمٍۚகொதிக்கும் நீர்
தும்ம இன்ன லஹும் 'அலய்ஹா லஷவ்Bபம் மின் ஹமீம்
முஹம்மது ஜான்
பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அதற்கு மேலும் நரகத்தில் கொதித்து சூடேறி இருக்கும் (சீழ் கலந்த) தண்ணீரே நிச்சயமாக அவர்களுக்கு பானமாக கொடுக்கப்படும்.
IFT
பிறகு, அத்துடன் அவர்களுக்கு கொதிக்கும் நீர் குடிக்கக் கிடைக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிச்சயமாக அதற்குமேல் கடுமையாகக் கொதிக்கவைக்கப்பட்டுள்ள நீரிலிருந்து கலப்பு (பானமு)ம் அவர்களுக்கு உண்டு.
Saheeh International
Then indeed, they will have after it a mixture of scalding water.
ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَاۡاِلَی الْجَحِیْمِ ۟
ثُمَّபின்னர்اِنَّநிச்சயமாகمَرْجِعَهُمْஅவர்கள் திரும்புமிடம்لَاۡاِلَیநிச்சயமாகالْجَحِیْمِநரகத்தின் பால்
தும்ம இன்ன மர்ஜி'அஹும் ல இலல் ஜஹீம்
முஹம்மது ஜான்
அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
அப்துல் ஹமீது பாகவி
(இவற்றைப் புசித்துக் குடித்த) பின்னர், நிச்சயமாக ‘ஜஹீம்' என்ற நரகத்திற்கே திருப்பப்படுவார்கள்.
IFT
பின்னர் அதே நரகத்திற்குத்தான் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிச்சயமாக அவர்கள் திரும்பிச் செல்லுமிடம் நரகத்தின் பாலாகும்.
Saheeh International
Then indeed, their return will be to the Hellfire.
اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّیْنَ ۟ۙ
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்اَلْفَوْاகண்டார்கள்اٰبَآءَهُمْதங்கள் மூதாதையர்களைضَآلِّیْنَۙவழிதவறியவர்களாக
இன்னஹும் அல்Fபவ் ஆBபா'அஹும் ளால்லீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் தங்கள் மூதாதைகளை மெய்யாகவே வழி கெட்டவர்களாகக் கண்டு கொண்டார்கள்.
IFT
இவர்கள் எப்படிப்பட்ட மக்களென்றால், தம் முன்னோர்கள் நெறிதவறிச் செல்பவர்களாய் இருக்கக் கண்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, இவர்கள் தங்கள் மூதாதையரை வழிகெட்டவர்களாகக் கண்டார்கள்.
Saheeh International
Indeed they found their fathers astray.
فَهُمْ عَلٰۤی اٰثٰرِهِمْ یُهْرَعُوْنَ ۟
فَهُمْஆகவே அவர்கள்عَلٰۤیமீதுاٰثٰرِهِمْஅவர்களுடைய அடிச்சுவடுகளின்یُهْرَعُوْنَவிரைந்தோடுகின்றனர்
Fபஹும் 'அலா ஆதாரிஹிம் யுஹ்ர'ஊன்
முஹம்மது ஜான்
ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறிருந்தும், அவர்களுடைய அடிச்சுவட்டையே இவர்கள் பின்பற்றி ஓடினார்கள்.
IFT
மேலும், அவர்களுடைய அடிச்சுவட்டிலேயே விரைந்து சென்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்களுடைய அடிச்சுவடுகளின் மீதே இவர்கள் விரைந்து செல்ல தூண்டப்பட்டார்கள்.
Saheeh International
So they hastened [to follow] in their footsteps.
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِیْنَ ۟ۙ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகضَلَّவழிதவறினர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்اَكْثَرُபெரும்பாலோர்الْاَوَّلِیْنَۙமுன்னோர்களில்
வ லகத் ளல்ல கBப்லஹும் அக்தருல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னிருந்த பெரும்பாலானவர்களும் (இவ்வாறே) தவறான வழியில் சென்றனர்.
IFT
உண்மையில் அவர்களுக்கு முன்னர் பெரும்பாலோர் வழிகெட்டுப் போயிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முன்னோர்களில் பெரும்பாலோர் (இவ்வாறே) அவர்களுக்கு முன்னரும் திட்டமாக வழி கெட்டிருந்தனர்.
Saheeh International
And there had already strayed before them most of the former peoples,
وَلَقَدْ اَرْسَلْنَا فِیْهِمْ مُّنْذِرِیْنَ ۟
وَ لَقَدْநிச்சயமாகவேاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்فِیْهِمْஅவர்களிடையேمُّنْذِرِیْنَஎச்சரிப்பவர்களை
வ லகத் அர்ஸல்னா Fபீஹிம் முன்திரீன்
முஹம்மது ஜான்
மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கும் (நம்) தூதர்களை அனுப்பியே வைத்தோம்.
IFT
மேலும், அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர்களையும் நாம் அனுப்பியிருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்கிடையே அச்சமூட்டி எச்சரிக்கக்கூடியவர்களை திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம்.
Saheeh International
And We had already sent among them warners.
فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟ۙ
فَانْظُرْஎனவே பார்ப்பீராகكَیْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُنْذَرِیْنَۙஎச்சரிக்கப்பட்டவர்களின்
Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முன்தரீன்
முஹம்மது ஜான்
பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட இவர்களுடைய முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) பார்ப்பீராக.
IFT
இப்போது பாருங்கள்: அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் கதி என்னவாயிற்று?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, “அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டவர்களுடைய முடிவு எப்படி இருந்தது” என்பதை (நபியே!) நீர் காண்பீராக!
Saheeh International
Then look how was the end of those who were warned -
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟۠
اِلَّاதவிரعِبَادَஅடியார்களைاللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَ۠தூய்மையாக்கப்பட்ட
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
முஹம்மது ஜான்
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.  
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய பரிசுத்த எண்ணமுள்ள அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் எல்லோரும்) நம் வேதனைக்கு ஆளாகி விட்டார்கள்.
IFT
ஆனால், இத்தீய கதியிலிருந்து தப்பித்தவர்கள், அல்லாஹ்வின் வாய்மையான அடியார்கள் மட்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.
Saheeh International
But not the chosen servants of Allah.
وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِیْبُوْنَ ۟ؗۖ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகنَادٰىنَاநம்மை அழைத்தார்نُوْحٌநூஹ்فَلَنِعْمَஆகவே எவ்வளவு மேலானவர்கள்الْمُجِیْبُوْنَؗۖபதிலளிப்பவர்கள்
வ லகத் னாதானா னூஹுன் Fபலனிஃமல் முஜீBபூன்
முஹம்மது ஜான்
அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
அப்துல் ஹமீது பாகவி
நூஹ் (நபி) நம்மிடம் (உதவி கோரி) பிரார்த்தனை செய்தார். (நாமோ) பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவர்களில் மிக்க சிறந்தவர்கள்.
IFT
(இதற்கு முன்னர்) நூஹ் நம்மை அழைத்திருக்கின்றார்; அப்போது எத்துணைச் சிறந்த முறையில் அவருக்கு நாம் பதிலளித்தோம் (என்பதைப் பாருங்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நூஹ் நம்மைத் திட்டமாக அழைத்தார், (நாமே) பதிலளிப்போரில் மிக நல்லோர் (ஆவோம்).
Saheeh International
And Noah had certainly called Us, and [We are] the best of responders.
وَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ؗۖ
وَ نَجَّیْنٰهُமேலும் நாம் அவரைக் காப்பாற்றினோம்وَ اَهْلَهٗமேலும் அவருடைய குடும்பத்தினரையும்مِنَஇருந்துالْكَرْبِதுன்பத்தில்الْعَظِیْمِؗۖபெரும்
வ னஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
முஹம்மது ஜான்
ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடுமையான சிரமத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் கடும் துன்பத்திலிருந்து நாம் காப்பாற்றிக்கொண்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் மகத்தான (மிகப்பெரும்) கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.
Saheeh International
And We saved him and his family from the great affliction.
وَجَعَلْنَا ذُرِّیَّتَهٗ هُمُ الْبٰقِیْنَ ۟ؗۖ
وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்ذُرِّیَّتَهٗஅவருடைய சந்ததியினரைهُمُஅவர்களையேالْبٰقِیْنَؗۖஎஞ்சியிருப்பவர்களாக
வ ஜ'அல்னா துர்ரிய்யதஹூ ஹும்முல் Bபாகீன்
முஹம்மது ஜான்
மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய சந்ததிகளைப் பிற்காலத்தில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.
IFT
இன்னும் அவருடைய சந்ததிகளையே நிலைத்திருக்கும்படிச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவருடைய சந்ததியையே எஞ்சியுள்ளோராய் நாம் ஆக்கினோம்.
Saheeh International
And We made his descendants those remaining [on the earth]
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ؗۖ
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டு வைத்தோம்عَلَیْهِஅவர் மீதுفِیமத்தியில்الْاٰخِرِیْنَؗۖபிற்காலத்தவர்கள்
வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
முஹம்மது ஜான்
மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவருடைய கீர்த்தியையும், பின்னுள்ளோர்களில் என்றுமே நிலைத்திருக்கும்படி செய்தோம்.
IFT
மேலும், பின்னர் தோன்றிய சந்ததிகளில் அவருடைய புகழையும் நற்பெயரையும் விட்டு வைத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவருக்காக (அவருடைய கீர்த்தியை,) பின்னுள்ளோர்களில் (நிலைத்திருக்க) விட்டுவைத்தோம்.
Saheeh International
And left for him [favorable mention] among later generations:
سَلٰمٌ عَلٰی نُوْحٍ فِی الْعٰلَمِیْنَ ۟
سَلٰمٌசாந்திعَلٰیமீதுنُوْحٍநூஹ்فِیஇல்الْعٰلَمِیْنَஅகிலத்தார்
ஸலாமுன் 'அலா னூஹின் Fபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ஸலாம்'' ஈடேற்றம் நூஹுக்கு உண்டாவதாக! என்று உலகம் முழுவதிலுமே கூறப்படுகிறது.
IFT
சாந்தியும் சமாதானமும் பொழியட்டும் நூஹ் மீது உலக மக்கள் மத்தியில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அகிலத்தார் அனைத்திலும் நூஹ்மீது ஸலாம் (சாந்தி) உண்டாவதாக.
Saheeh International
"Peace upon Noah among the worlds."
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیகூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்பவர்களுக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே நன்மை செய்தவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
IFT
நன்மை புரிவோர்க்கு இவ்வாறே நாம் கூலி வழங்கி வருகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்கிறவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
Saheeh International
Indeed, We thus reward the doers of good.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْஒருவராவார்عِبَادِنَاநமது அடியார்களில்الْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களில்
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
அப்துல் ஹமீது பாகவி
(நூஹ் நபி) நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் ஒருவராகவே இருந்தார்.
IFT
உண்மையில், நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் விளங்கினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர் விசுவாசிகளான நம் அடியார்களில் உள்ளவராவார்.
Saheeh International
Indeed, he was of Our believing servants.
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟
ثُمَّபின்னர்اَغْرَقْنَاநாம் மூழ்கடித்தோம்الْاٰخَرِیْنَமற்றவர்களை
தும்ம அக்ரக்னல் ஆகரீன்
முஹம்மது ஜான்
பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, அவரையும் அவரைப் பின்பற்றியவர்களையும் தவிர,) மற்றவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) நாம் மூழ்கடித்து விட்டோம்.
IFT
பிறகு, மற்ற கூட்டத்தார்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், மற்றவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம்.
Saheeh International
Then We drowned the others [i.e., disbelievers].
وَاِنَّ مِنْ شِیْعَتِهٖ لَاِبْرٰهِیْمَ ۟ۘ
وَ اِنَّமேலும் நிச்சயமாகمِنْநின்றும்شِیْعَتِهٖஅவருடைய வழியைப் பின்பற்றியவர்களில்لَاِبْرٰهِیْمَۘநிச்சயமாக இப்ராஹீம்
வ இன்ன மின் ஷீ'அதிஹீ ல இBப்ராஹீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நூஹ் (நபி) உடைய வழியைப் பின்பற்றியவர்தான் இப்ராஹீம்.
IFT
மேலும், நூஹின் வழியில் செல்பவராகவே இப்ராஹீம் இருந்தார்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக அவருடைய வழியைப் பின் பற்றியவர்களில் உள்ள (ஒரு)வர் தாம் இப்றாஹீம்.
Saheeh International
And indeed, among his kind was Abraham,
اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِیْمٍ ۟
اِذْபோதுجَآءَஅவர் வந்தرَبَّهٗதன் இறைவனிடம்بِقَلْبٍஓர் இதயத்துடன்سَلِیْمٍதூய்மையான
இத் ஜா'அ ரBப்Bபஹூ Bபி கல்Bபின் ஸலீம்
முஹம்மது ஜான்
அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
அப்துல் ஹமீது பாகவி
அவர் (பண்பட்ட) நேரான உள்ளத்துடன் தன் இறைவனிடம் வந்த சமயத்தில்,
IFT
தம் இறைவனிடம் பண்பட்ட தூய உள்ளத்துடன் அவர் வந்தபோது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தன் இரட்சகனிடம் தூய (பண்பட்ட) இதயத்துடன் வந்த சமயத்தை (நபியே! நினைவு கூர்வீராக!)
Saheeh International
When he came to his Lord with a sound heart
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ ۟ۚ
اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِاَبِیْهِதன் தந்தையிடம்وَ قَوْمِهٖதன் சமூகத்தாரிடமும்مَا ذَاஎதனைتَعْبُدُوْنَۚநீங்கள் வணங்குகிறீர்கள்?
இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மாதா தஃBபுதூன்
முஹம்மது ஜான்
அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
அப்துல் ஹமீது பாகவி
அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டார்,
IFT
தம் தந்தையிடமும் தம் சமூகத்திடமும் இவ்வாறு கூறியபோது: “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தம் தந்தை மற்றும் தம் சமூகத்தாரிடம் “எதனை நீங்கள் வணங்குகிறீர்கள்” என்று கூறியபோது.
Saheeh International
[And] when he said to his father and his people, "What do you worship?
اَىِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِیْدُوْنَ ۟ؕ
اَىِٕفْكًاபொய்யாகவாاٰلِهَةًதெய்வங்களைدُوْنَஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைتُرِیْدُوْنَؕநாடுகிறீர்கள்
அ'இFப்கன் ஆலிஹதன் தூனல் லாஹி துரீதூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையே விரும்புகிறீர்களா?
IFT
அல்லாஹ்வை விடுத்துப் பொய்யாக உருவாக்கப்பட்ட கடவுளையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீங்கள் அல்லாஹ்வையன்றி (வணக்கத்திற்குரிய) பொய்யான தெய்வங்களை நாடுகிறீர்களா?”
Saheeh International
Is it falsehood [as] gods other than Allah you desire?
فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
فَمَاஅப்படியானால் என்னظَنُّكُمْஉங்கள் எண்ணம்بِرَبِّஇறைவனைப் பற்றிالْعٰلَمِیْنَஅகிலங்களின்
Fபமா ளன்னுகும் Bபி ரBப்Bபில்'ஆலமீன்
முஹம்மது ஜான்
“அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” (என்று கேட்டார்.)
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறாயின், உலகத்தாரைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?'' (என்று கேட்டார்).
IFT
பிறகு அகில உலகங்களின் அதிபதி பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறாயின், “அகிலத்தாரின் இரட்சகனைப்பற்றி உங்கள் எண்ணமென்ன?” (என்றும் கேட்டார்)
Saheeh International
Then what is your thought about the Lord of the worlds?"
فَنَظَرَ نَظْرَةً فِی النُّجُوْمِ ۟ۙ
فَنَظَرَபின்னர் அவர் பார்த்தார்نَظْرَةًஒரு பார்வைفِیநோக்கிالنُّجُوْمِۙநட்சத்திரங்களை
Fபனளர னள்ரதன் Fபின்னுஜூம்
முஹம்மது ஜான்
பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘பின்னர், நட்சத்திரங்களைக் கூர்ந்து பார்த்தார்.
IFT
பிறகு, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை செலுத்தினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நட்சத்திரங்களில் (ஆழ்ந்த சிந்தனையோடு) ஒரு பார்வை பார்த்தார்.
Saheeh International
And he cast a look at the stars.
فَقَالَ اِنِّیْ سَقِیْمٌ ۟
فَقَالَஅவர் கூறினார்اِنِّیْநிச்சயமாக நான்سَقِیْمٌநோயுற்றிருக்கிறேன்
Fபகால இன்னீ ஸகீம்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நான் நோயாளியாக இருக்கிறேன்” என்றும் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எனக்கு ஒரு நோய் ஏற்படும் (போல் இருக்கிறது)'' என்று கூறினார்,
IFT
மேலும் கூறினார்: “நான் நோயுற்றிருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிச்சயமாக நான் நோயுற்றிருக்கிறேன் எனக்கூறினார்.
Saheeh International
And said, "Indeed, I am [about to be] ill."
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِیْنَ ۟
فَتَوَلَّوْاஎனவே அவர்கள் விலகிச் சென்றார்கள்عَنْهُஅவரை விட்டுمُدْبِرِیْنَபுறங்காட்டியவர்களாக
Fபதவல்லவ் 'அன்ஹு முத்Bபிரீன்
முஹம்மது ஜான்
எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் அவரை விட்டுவிட்டு (திருநாள் கொண்டாடச்) சென்று விட்டனர்.
IFT
எனவே, அம்மக்கள் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் அவரை (ஊரில்) விட்டு விட்டு (திருவிழாவிற்கு)ச் சென்று விட்டனர்.
Saheeh International
So they turned away from him, departing.
فَرَاغَ اِلٰۤی اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ۚ
فَرَاغَபின்னர் அவர் சென்றார்اِلٰۤیபக்கம்اٰلِهَتِهِمْஅவர்களின் தெய்வங்களின்فَقَالَபின்னர் கூறினார்اَلَاஏன்تَاْكُلُوْنَۚஉண்ண மாட்டீர்கள்?
Fபராக இலா ஆலிஹதிஹிம் Fபகால அலா த'குலூன்
முஹம்மது ஜான்
அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர்) அவர், (அவர்களுடைய கோயிலுக்குள்) அவர்களுடைய தெய்வங்களிடம் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) ‘‘நீங்கள் இவற்றை ஏன் புசிப்பதில்லை?
IFT
பின்னர் அவர் அவர்களுடைய கடவுளரின் கோயிலுக்குள் இரகசியமாக நுழைந்து (அவற்றை நோக்கிக்) கூறினார்: “நீங்கள் ஏன் சாப்பிடுவதில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர் அவர்களுடைய வணக்கத்துக்குரியவர்(களான தெய்வங்)களின் பால் (மறைவாகச்) சென்று (அங்கு அவர்களுக்கென படைக்கப் பட்டிருந்தவற்றைச் சுட்டிக்காட்டி) “நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கேட்டார்.
Saheeh International
Then he turned to their gods and said, "Do you not eat?
مَا لَكُمْ لَا تَنْطِقُوْنَ ۟
مَاஎன்னلَكُمْஉங்களுக்குلَاஏன்تَنْطِقُوْنَபேசமாட்டுகிறீர்கள்
மா லகும் லா தன்திகூன்
முஹம்மது ஜான்
“உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?” (என்றும் கேட்டார்.)
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?'' என்று கேட்டார். (ஆனால், அவை பதில் அளிக்கவில்லை.)
IFT
நீங்கள் பேசாமலிருக்கிறீர்களே? உங்களுக்கு நேர்ந்ததென்ன?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களுக்கென்ன (நேர்ந்தது?) நீங்கள் (ஏன்) பேசுவதில்லை?”(என்று கேட்டார்).
Saheeh International
What is [wrong] with you that you do not speak?".
فَرَاغَ عَلَیْهِمْ ضَرْبًا بِالْیَمِیْنِ ۟
فَرَاغَபின்னர் அவர் திரும்பினார்عَلَیْهِمْஅவற்றின் மீதுضَرْبًۢاஓங்கி அடித்துبِالْیَمِیْنِவலது கையால்
Fபராக 'அலய்ஹிம் ளர்Bபம் Bபில்யமீன்
முஹம்மது ஜான்
பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவற்றைப் பலமாக அடித்து (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார்.
IFT
அதன் பிறகு அவர் அவற்றின் மீது பாய்ந்து வலக்கரத்தால் தாக்கினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவற்றின் பால் சென்று தன் வலக்கையினால் அவைகளை அடித்து (உடைத்து) விட்டார்.
Saheeh International
And he turned upon them a blow with [his] right hand.
فَاَقْبَلُوْۤا اِلَیْهِ یَزِفُّوْنَ ۟
فَاَقْبَلُوْۤاஎனவே அவர்கள் வந்தார்கள்اِلَیْهِஅவனிடம்یَزِفُّوْنَவிரைந்தவர்களாக
Fப அக்Bபலூ இலய்ஹி யZஜிFப்Fபூன்
முஹம்மது ஜான்
(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதைக் கண்டதும் அதைப் பற்றிக் கேட்கவே) இப்ராஹீமிடம் ஓடி வந்தனர்.
IFT
பின்னர், அம்மக்கள் (திரும்பி வந்ததும்) அவரிடம் ஓடிவர,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(திருவிழாவிலிருந்து திரும்பி வந்து) அவர்பால் அவர்கள் விரைந்து (ஓடி) வந்தனர்.
Saheeh International
Then they [i.e., the people] came toward him, hastening.
قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَ ۟ۙ
قَالَகூறினார்اَتَعْبُدُوْنَநீங்கள் வணங்குகிறீர்களாمَاஎவற்றைتَنْحِتُوْنَۙநீங்கள் செதுக்குகிறீர்களோ
கால அதஃBபுதூன மா தன்ஹிதூன்
முஹம்மது ஜான்
அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”
அப்துல் ஹமீது பாகவி
அவர், (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா?
IFT
அவர் கேட்டார்: “என்ன, நீங்களாகவே செதுக்கிய பொருள்களையா நீங்கள் பூஜை செய்கிறீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் (அவர்களிடம்) “நீங்கள் செதுக்கியவைகளை நீங்களே வணங்குகிறீர்களா?” என்று கேட்டார்.
Saheeh International
He said, "Do you worship that which you [yourselves] carve,
وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ ۟
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்وَ مَاஇன்னும் எவற்றைتَعْمَلُوْنَநீங்கள் செய்கிறீர்களோ
வல்லாஹு கலககும் வமா தஃமலூன்
முஹம்மது ஜான்
“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”
அப்துல் ஹமீது பாகவி
உங்களையும், நீங்கள் சித்தரித்த அவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்'' என்றார்.
IFT
உண்மையில் அல்லாஹ்தானே உங்களையும் படைத்தான்; நீங்கள் உருவாக்கிய அப்பொருள்களையும் படைத்தான்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” (என்றார்).
Saheeh International
While Allah created you and that which you do?"
قَالُوا ابْنُوْا لَهٗ بُنْیَانًا فَاَلْقُوْهُ فِی الْجَحِیْمِ ۟
قَالُواஅவர்கள் கூறினார்கள்ابْنُوْاகட்டுங்கள்لَهٗஅவனுக்காகبُنْیَانًاஒரு கட்டிடத்தைفَاَلْقُوْهُபின்னர் அவனை எறியுங்கள்فِیஇல்الْجَحِیْمِமூண்டெரியும் நெருப்பில்
காலுBப் னூ லஹூ Bபுன் யானன் Fப அல்கூஹு Fபில் ஜஹீம்
முஹம்மது ஜான்
அவர்கள் கூறினார்கள்: “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு அவர்கள் பதில்கூற வகையறியாது கோபம் கொண்டு,) ‘‘இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.
IFT
அவர்கள் தமக்கிடையே கூறிக்கொண்டார்கள். “இவருக்காக ஒரு நெருப்புக் குண்டத்தை உருவாக்குங்கள்; கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இவரை வீசிவிடுங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள் கோபங் கொண்டு) இவருக்காக ஒரு கிடங்கை எழுப்புங்கள், பின்னர், (அதில் நெருப்பை உண்டாக்கி) அந்நெருப்பில் அவரைப்போட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "Construct for him a structure [i.e., furnace] and throw him into the burning fire."
فَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِیْنَ ۟
فَاَرَادُوْاஎனவே அவர்கள் நாடினார்கள்بِهٖஅவருக்குكَیْدًاஒரு சூழ்ச்சியைفَجَعَلْنٰهُمُஆகவே நாம் அவர்களை ஆக்கினோம்الْاَسْفَلِیْنَமிகத் தாழ்ந்தவர்களாக
Fப அராதூ Bபிஹீ கய்தன் Fபஜ 'அல்னாஹுமுல் அஸ்Fபலீன்
முஹம்மது ஜான்
(இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக்கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவானவர்களாக ஆக்கி விட்டோம்.
IFT
அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் திட்டமிட்டனர். எனினும், நாம் அவர்களையே தோல்வியுறச்செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் அவருக்குச் சதிசெய்ய நாடினார்கள், ஆனால், நாம் அவர்களை இழிவடைந்தோராய் ஆக்கிவிட்டோம்.
Saheeh International
And they intended for him a plan [i.e., harm], but We made them the most debased.
وَقَالَ اِنِّیْ ذَاهِبٌ اِلٰی رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
وَ قَالَமேலும் அவர் கூறினார்اِنِّیْநிச்சயமாக நான்ذَاهِبٌசெல்கிறேன்اِلٰیநோக்கிرَبِّیْஎன் இறைவனைسَیَهْدِیْنِஅவன் எனக்கு வழிகாட்டுவான்
வ கால இன்னீ தாஹிBபுன் இலா ரBப்Bபீ ஸ யஹ்தீன்
முஹம்மது ஜான்
மேலும், அவர் கூறினார்: “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) ‘‘நான் என் இறைவனிடமே செல்கிறேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்'' என்று கூறினார்.
IFT
இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் செல்கின்றேன்; அவனே எனக்கு வழிகாட்டுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர், இப்றாஹீம்) “நிச்சயமாக நான், என் இரட்சகனின்பால் செல்லுகிறேன், அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்” என்றும் கூறினார்.
Saheeh International
And [then] he said, "Indeed, I will go to [where I am ordered by] my Lord; He will guide me.
رَبِّ هَبْ لِیْ مِنَ الصّٰلِحِیْنَ ۟
رَبِّஎன் இறைவாهَبْதந்தருள்வாயாகلِیْஎனக்குمِنَஇருந்துالصّٰلِحِیْنَநல்லோர்களில்
ரBப்Bபி ஹBப் லீ மினஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!'' (என்றார்.)
IFT
என் இறைவா! ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாகத்) தந்தருள் புரிவாயாக” (என்றார்).
Saheeh International
My Lord, grant me [a child] from among the righteous."
فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِیْمٍ ۟
فَبَشَّرْنٰهُஎனவே நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்بِغُلٰمٍஓர் ஆண் குழந்தையைக் கொண்டுحَلِیْمٍமிக்க பொறுமையுடைய
FபBபஷ்ஷர்னாஹு Bபிகுலாமின் ஹலீம்
முஹம்மது ஜான்
எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் என்னும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.
IFT
(இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு) சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற்செய்தி அறிவித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், மிகுந்த சகிப்புத்தன்மையுடைய (இஸ்மாயீல் எனும்) மகனைக் கொண்டு அவருக்கு நன்மாராயம் கூறினோம்.
Saheeh International
So We gave him good tidings of a forbearing boy.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْیَ قَالَ یٰبُنَیَّ اِنِّیْۤ اَرٰی فِی الْمَنَامِ اَنِّیْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰی ؕ قَالَ یٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ؗ سَتَجِدُنِیْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِیْنَ ۟
فَلَمَّاபின்னர் எப்போதுبَلَغَஅவர் அடைந்தாரோمَعَهُஅவருடன்السَّعْیَநடமாடும் வயதைقَالَஅவர் கூறினார்یٰبُنَیَّஎன் அருமை மகனேاِنِّیْۤநிச்சயமாக நான்اَرٰیகாண்கிறேன்فِیஇல்الْمَنَامِகனவில்اَنِّیْۤநான்اَذْبَحُكَஉன்னை அறுப்பதாகفَانْظُرْஎனவே சிந்தித்துப்பார்مَا ذَاஎன்னتَرٰی ؕநீ கருதுகிறாய்قَالَஅவர் கூறினார்یٰۤاَبَتِஎன் அருமைத் தந்தையேافْعَلْசெய்யுங்கள்مَاஎதைتُؤْمَرُ ؗநீங்கள் ஏவப்படுகிறீர்களோسَتَجِدُنِیْۤஎன்னை நீங்கள் காண்பீர்கள்اِنْஎனின்شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்مِنَஇருந்துالصّٰبِرِیْنَபொறுமையாளர்களில்
Fபலம்மா Bபலக ம'அ ஹுஸ் ஸஃய கால யா Bபுனய்ய இன்னீ அரா Fபில் மனாமி அன்னீ அத்Bபஹுக Fபன்ளுர் மாதா தரா; கால யா அBபதிFப் 'அல் மா து'மரு ஸதஜிதுனீ இன் ஷா'அல்லாஹு மினஸ் ஸாBபிரீன்
முஹம்மது ஜான்
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(அவருடைய அந்த மகன் அவருடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தன் மகனை நோக்கி) ‘‘என் அருமை மைந்தனே! நான் உன்னை (என் கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?'' என்று கேட்டார். அதற்கவர், ‘‘என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள் புரிந்தால் (அதைச் சகித்துக் கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்'' என்று கூறினார்.
IFT
அம்மகன் அவருடன் சேர்ந்து உழைக்கும் வயதினை அடைந்தபோது இப்ராஹீம் (ஒருநாள்) அவரிடம் கூறினார்: “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவு கண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (இஸ்மாயீல்) அவருடன் சேர்ந்து உழைக்ககூடிய பருவத்தை அவர் அடைந்தபொழுது, அவர் (தன் மகனிடம்) ”என் அருமை மகனே! நிச்சயமாக நான், உன்னை அறு(த்து)ப் ப(லியிடுவ)தாக, நிச்சயமாக நான் கனவில் கண்டேன், (இதைப் பற்றி) நீ என்ன அபிப்ராயப்படுகிறாய்?” என்று கேட்டார், அ(தற்க)வர், “என் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள், அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகக் காண்பீர்கள்” என்று கூறினார்.
Saheeh International
And when he reached with him [the age of] exertion, he said, "O my son, indeed I have seen in a dream that I [must] sacrifice you, so see what you think." He said, "O my father, do as you are commanded. You will find me, if Allah wills, of the steadfast."
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ
فَلَمَّاۤபின்னர் எப்பொழுதுاَسْلَمَاஅவ்விருவரும் அடிபணிந்தார்களோوَ تَلَّهٗமேலும் அவரை அவர் கிடத்தினாரோلِلْجَبِیْنِۚநெற்றிப்பொட்டில்
Fபலம்மா அஸ்லமா வ தல்லஹூ லில்ஜBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவ்விருவரும் (இறைவனின் விருப்பத்திற்கு) முற்றிலும் பணிந்து, (இப்ராஹீம் தன் மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட) அவரை முகங்குப்புறக் கிடத்தினார்.
IFT
இறுதியில் அவ்விருவரும் இறைவனுக்கு முன்னால் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்கள். மேலும், இப்ராஹீம் மகனை முகங்குப்புறக் கிடத்தினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவ்விருவரும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து, (இப்றாஹீமாகிய) அவர், (இஸ்மாயிலாகிய) அவரை (அறுத்துப் பலியிட) முகங்குப்புறக் கிடத்தியபோது,
Saheeh International
And when they had both submitted and he put him down upon his forehead,
وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ
وَ نَادَیْنٰهُமேலும் நாம் அவரை அழைத்தோம்اَنْஎன்றுیّٰۤاِبْرٰهِیْمُۙஇப்ராஹீமே!
வ னாதய்னாஹு அய் யா இBப்ரஹீம்
முஹம்மது ஜான்
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அச்சமயம் நாம் ‘‘இப்ராஹீமே!'' என அழைத்தோம்:
IFT
அப்போது நாம் அவரை அழைத்துக் கூறினோம்: “இப்ராஹீமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அச்சமயம்) நாம் அவரை “இப்றாஹீமே!” என அழைத்தோம்.
Saheeh International
We called to him, "O Abraham,
قَدْ صَدَّقْتَ الرُّءْیَا ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
قَدْநிச்சயமாகصَدَّقْتَமெய்ப்பித்துவிட்டீர்الرُّءْیَا ۚகனவைاِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
கத் ஸத்தக்தர் ரு'யா; இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
உண்மையாகவே நீர் உமது கனவை மெய்யாக்கி வைத்து விட்டீர் என்றும், நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்'' (என்றும் கூறி,)
IFT
நீர் கனவை நனவாக்கி விட்டீர். நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி வழங்குகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நீர் (உம்முடைய) கனவை உண்மையாக்கி வைத்துவிட்டீர் நிச்சயமாக, நன்மை செய்கிறவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
Saheeh International
You have fulfilled the vision." Indeed, We thus reward the doers of good.
اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِیْنُ ۟
اِنَّநிச்சயமாகهٰذَاஇதுلَهُوَஉறுதியாக அதுவேالْبَلٰٓؤُاசோதனைالْمُبِیْنُதெளிவான
இன்ன ஹாதா லஹுவல் Bபலா'உல் முBபீன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக இதுதான் மாபெரும் சோதனையாகும்'' (என்றும் கூறினோம்).
IFT
திண்ணமாக, இது ஒரு தெளிவான சோதனையாய் இருந்தது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக இது_இதுவே தெளிவான பெரும் சோதனையாகும் (என்றும் கூறினோம்).
Saheeh International
Indeed, this was the clear trial.
وَفَدَیْنٰهُ بِذِبْحٍ عَظِیْمٍ ۟
وَ فَدَیْنٰهُமேலும் நாம் அவரை மீட்டோம்بِذِبْحٍஒரு பலியைக் கொண்டுعَظِیْمٍமகத்தான
வ Fபதய்னாஹு BபிதிBப்ஹின் 'அளீம்
முஹம்மது ஜான்
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
IFT
மேலும், ஒரு பெரும் பலியை ஈடாகக் கொடுத்து அக்குழந்தையை நாம் விடுவித்துக் கொண்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அவருக்கு பதிலாக) ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவரைப் பகரமாக்கினோம்.
Saheeh International
And We ransomed him with a great sacrifice,
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۖ
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டுவைத்தோம்عَلَیْهِஅவர் மீதுفِیமத்தியில்الْاٰخِرِیْنَۖபிற்காலத்தவர்கள்
வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
முஹம்மது ஜான்
இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
அப்துல் ஹமீது பாகவி
அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்.
IFT
பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் விட்டு வைத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவருக்காக (அவரின் கீர்த்தியைப்) பின்னுள்ளோர்களில் (நிலைத்திருக்க) விட்டுவைத்தோம்.
Saheeh International
And We left for him [favorable mention] among later generations:
سَلٰمٌ عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟
سَلٰمٌசாந்திعَلٰۤیமீதுاِبْرٰهِیْمَஇப்ராஹீம்
ஸலாமுன் 'அலா இBப்ராஹீம்
முஹம்மது ஜான்
“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, உலகத்திலுள்ள அனைவருமே) ‘‘இப்ராஹீமுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக' (என்றும் கூறுகின்றனர்).
IFT
சாந்தி உண்டாகட்டும், இப்ராஹீம் மீது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இப்றாஹீமின் மீது சாந்தி உண்டாவதாக.
Saheeh International
"Peace upon Abraham."
كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநாம் கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே, நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
IFT
நன்மை புரிவோருக்கு நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே நன்மை செய்கிறவர்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
Saheeh International
Indeed, We thus reward the doers of good.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْஇருந்துعِبَادِنَاஎமது அடியார்களில்الْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களில்
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர் மிக்க நம்பிக்கையுள்ள நம் அடியார்களில் இருந்தார்.
IFT
திண்ணமாக, நம்மீது நம்பிக்கைகொண்ட அடியார்களுள் ஒருவராக அவர் திகழ்ந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர், விசுவாசிகளான நமது அடியார்களில் உள்ளவர்.
Saheeh International
Indeed, he was of Our believing servants.
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَ بَشَّرْنٰهُமேலும் நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்بِاِسْحٰقَஇஸ்ஹாக்கைக் குறித்துنَبِیًّاஒரு நபியாகمِّنَஇருந்துالصّٰلِحِیْنَநல்லோர்களில்
வ Bபஷ்ஷர்னாஹு Bபி இஷ்ஹாக னBபியம் மினஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் பின்னர், நல்லடியார்களிலுள்ள இஸ்ஹாக் நபியை அவருக்கு (மற்றுமொரு மகனாகத் தருவதாக) நற்செய்தி கூறினோம்.
IFT
மேலும், இஸ்ஹாக் பற்றியும் அவருக்கு நாம் நற்செய்தி அறிவித்தோம். அவர் ஒரு நபியாகவும் சான்றோர்களுள் ஒருவராகவும் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நல்லோர்களிலுள்ளவரான இஸ்ஹாக்கை நபியாக அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.
Saheeh International
And We gave him good tidings of Isaac, a prophet from among the righteous.
وَبٰرَكْنَا عَلَیْهِ وَعَلٰۤی اِسْحٰقَ ؕ وَمِنْ ذُرِّیَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِیْنٌ ۟۠
وَ بٰرَكْنَاமேலும் நாம் பாக்கியம் அளித்தோம்عَلَیْهِஅவர் மீதுوَ عَلٰۤیமேலும் மீதும்اِسْحٰقَ ؕஇஸ்ஹாக்وَ مِنْமேலும்ذُرِّیَّتِهِمَاஅவ்விருவரின் சந்ததியினரில்مُحْسِنٌநன்மை செய்பவரும்وَّ ظَالِمٌமேலும் அநியாயம் செய்பவரும்لِّنَفْسِهٖதமக்குத்தாமேمُبِیْنٌ۠தெளிவாக
வ Bபாரக்னா 'அலய்ஹி வ 'அலா இஸ்ஹாக்; வ மின் துர்ரிய்ய திஹிமா முஹ்ஸினு(ன்)வ் வ ளாலிமுல் லினFப்ஸிஹீ முBபீன்
முஹம்மது ஜான்
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நம் நற்பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர்.
IFT
மேலும், அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் அருட்பாக்கியங்களைப் பொழிந்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் சிலர் நன்னடத்தை கொண்டவர்களாகவும் இன்னும் சிலர் தமக்குத் தாமே வெளிப்படையாக கொடுமை புரிபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நமது பாக்கியங்களை நல்கினோம். அவ்விருவரின் சந்ததியரில் நன்மை செய்பவரும், பகிரங்கமாகத் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொள்பவரும் இருக்கின்றனர்.
Saheeh International
And We blessed him and Isaac. But among their descendants is the doer of good and the clearly unjust to himself [i.e., sinner].
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகவேمَنَنَّاநாம் அருள் புரிந்தோம்عَلٰیமீதுمُوْسٰیமூஸாوَ هٰرُوْنَۚமற்றும் ஹாரூன்
வ லகத் மனன்ன அலா மூஸா வ ஹாரூன்
முஹம்மது ஜான்
மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் அருள் புரிந்தோம்.
IFT
மேலும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் பேருபகாரம் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் மூஸா, இன்னும் ஹாரூன் மீதும் பேருபகாரம் புரிந்தோம்.
Saheeh International
And We did certainly confer favor upon Moses and Aaron.
وَنَجَّیْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
وَ نَجَّیْنٰهُمَاமேலும் அவ்விருவரையும் நாம் காப்பாற்றினோம்وَ قَوْمَهُمَاஇன்னும் அவ்விருவருடைய சமூகத்தாரையும்مِنَஇருந்துالْكَرْبِதுன்பத்தில்الْعَظِیْمِۚமகத்தான
வ னஜ்ஜய்னாஹுமா வ கவ்மஹுமா மினல் கர்Bபில் 'அளீம்
முஹம்மது ஜான்
அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்விருவரையும், அவர்களுடைய மக்களையும் கடுமையான துன்பத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
அவர்களையும் அவர்களின் சமூகத்தார்களையும் மாபெரும் துன்பத்திலிருந்து விடுவித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்விருவரையும், அவ்விருவரின் சமூகத்தாரையும் மகத்தானதொரு துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
Saheeh International
And We saved them and their people from the great affliction,
وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟ۚ
وَ نَصَرْنٰهُمْமேலும் நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்فَكَانُوْاஅதனால் அவர்கள் ஆனார்கள்هُمُஅவர்களேالْغٰلِبِیْنَۚவெற்றியாளர்கள்
வ னஸர்னாஹும் Fபகானூ ஹுமுல் காலிBபீன்
முஹம்மது ஜான்
மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு உதவிபுரிந்தோம். ஆகவே, அவர்கள் (தங்கள் எதிரிகளை) வெற்றி கொண்டார்கள்.
IFT
அவர்களுக்கு உதவி வழங்கினோம். அதன் காரணமாக அவர்களே வெற்றி கொள்வோராகத் திகழ்ந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் அவர்களுக்கு உதவிசெய்தோம், ஆகவே, (தங்கள் விரோதிகளின் மீது) அவர்கள்தாம் வெற்றிபெற்றோராக இருந்தனர்.
Saheeh International
And We supported them so it was they who overcame.
وَاٰتَیْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِیْنَ ۟ۚ
وَ اٰتَیْنٰهُمَاமேலும் அவ்விருவருக்கும் நாம் வழங்கினோம்الْكِتٰبَவேதத்தைالْمُسْتَبِیْنَۚதெளிவான
வ ஆதய்னாஹுமல் கிதாBபல் முஸ்தBபீன்
முஹம்மது ஜான்
அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.
IFT
மிகத் தெளிவான வேதத்தை அவர்களுக்கு வழங்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.
Saheeh International
And We gave them the explicit Scripture [i.e., the Torah],
وَهَدَیْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۚ
وَ هَدَیْنٰهُمَاமேலும் அவ்விருவருக்கும் நாம் வழிகாட்டினோம்الصِّرَاطَபாதையைالْمُسْتَقِیْمَۚநேரான
வ ஹதய்னாஹுமுஸ் ஸிராதல் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம்.
IFT
மேலும், அவர்களுக்கு நேரிய வழியையும் காண்பித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்விருவருக்கும் நேர்வழியையும் நாம் காண்பித்தோம்.
Saheeh International
And We guided them on the straight path.
وَتَرَكْنَا عَلَیْهِمَا فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டு வைத்தோம்عَلَیْهِمَاஅவ்விருவர் மீதும்فِیமத்தியில்الْاٰخِرِیْنَۙபிற்காலத்தவர்கள்
வ தரக்னா 'அலய்ஹிமா Fபில் ஆகிரீன்
முஹம்மது ஜான்
இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
அப்துல் ஹமீது பாகவி
பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
IFT
பின்னர் தோன்றிய தலைமுறைகளில் அவருடைய புகழையும், நற்பெயரையும் நிலைத்திருக்கச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவ்விருவருக்காக (அவ்விருவரின் கீர்த்தியை) பின்னோர்களில் (நிலைத்திருக்க) விட்டு வைத்தோம்.
Saheeh International
And We left for them [favorable mention] among later generations:
سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟
سَلٰمٌசாந்திعَلٰیமீதுمُوْسٰیமூஸாوَ هٰرُوْنَமற்றும் ஹாரூன்
ஸலாமுன் 'அலா மூஸா வ ஹாரூன்
முஹம்மது ஜான்
“ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்).
IFT
சாந்தி உண்டாகட்டும், மூஸா மற்றும் ஹாரூன் மீது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மூஸா, இன்னும் ஹாரூன் மீதும் சாந்தி உண்டாவதாக.
Saheeh International
"Peace upon Moses and Aaron."
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநற்கூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கிறோம்.
IFT
நன்மை செய்வோருக்கு நாம் இத்தகைய நற்கூலியையே வழங்குகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் நன்மை செய்கிறவர்களுக்கு இவ்வாறே கூலி கொடுக்கின்றோம்.
Saheeh International
Indeed, We thus reward the doers of good.
اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهُمَاநிச்சயமாக அவர்கள் இருவரும்مِنْஇருந்துعِبَادِنَاஎமது அடியார்களில்الْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்கள்
இன்னஹுமா மின் 'இBபாதினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் இருந்தனர்.
IFT
உண்மையில் அவ்விருவரும் நம் மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் உள்ளவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவ்விருவரும் விசுவாசங் கொண்டவர்களான நமது அடியார்களில் உள்ளவர்களாவர்.
Saheeh International
Indeed, they were of Our believing servants.
وَاِنَّ اِلْیَاسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَ اِنَّமேலும் நிச்சயமாகاِلْیَاسَஇல்யாஸ்لَمِنَநிச்சயமாகالْمُرْسَلِیْنَؕதூதர்களில்
வ இன்ன இல்யாஸ லமினல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இல்யாஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
IFT
மேலும், இல்யாஸும் திண்ணமாக இறைத்தூதர்களில் ஒருவராய் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இல்யாஸும் (நமது தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.
Saheeh International
And indeed, Elias was from among the messengers,
اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ ۟
اِذْஅப்போதுقَالَஅவர் கூறினார்لِقَوْمِهٖۤதன் சமூகத்தாரிடம்اَلَاநீங்கள்تَتَّقُوْنَஅஞ்சமாட்டீர்களா
இத் கால லிகவ்மிஹீ அலா தத்தகூன்
முஹம்மது ஜான்
அவர் தம் சமூகத்தவரிடம்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
அப்துல் ஹமீது பாகவி
அவர் தன் மக்களை நோக்கி, ‘‘நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?'' என்று கூறிய சமயத்தில்,
IFT
அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் தம் சமூகத்தாரிடம், நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படமாட்டீர்களா? என்று கூறிய சமயத்தை (நினைவு கூர்வீராக!)
Saheeh International
When he said to his people, "Will you not fear Allah?
اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِیْنَ ۟ۙ
اَتَدْعُوْنَநீங்கள் அழைக்கின்றீர்களா?بَعْلًاபஃலைوَّ تَذَرُوْنَமேலும் நீங்கள் விட்டுவிடுகிறீர்களா?اَحْسَنَமிகச் சிறந்தவனைالْخَالِقِیْنَۙபடைப்பாளர்களில்
அதத்'ஊன Bபஃல(ன்)வ் வ ததரூன அஹ்ஸனல் காலிகீன்
முஹம்மது ஜான்
“நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
‘‘படைப்பவர்களில் மிக அழகானவனை நீங்கள் புறக்கணித்து விட்டு, ‘பஅலு' என்னும் சிலையை வணங்குகிறீர்களா?
IFT
‘பஅலை’* அழைக்கின்றீர்கள். படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்தவனை விட்டுவிடுகின்றீர்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“படைப்பவர்களில் மிகச் சிறந்தவனை நீங்கள் விட்டு விட்டு ‘பஅல்’ (என்னும்) விக்ரகத்தை நீங்கள் அழைக்கின்றீர்களா?
Saheeh International
Do you call upon Baʿl and leave the best of creators -
اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
اللّٰهَஅல்லாஹ்வைرَبَّكُمْஉங்கள் இறைவனைوَ رَبَّமேலும் இறைவனைاٰبَآىِٕكُمُஉங்கள் முன்னோர்களின்الْاَوَّلِیْنَமுந்தையவர்களான
அல்லாஹ ரBப்Bபகும் வ ரBப்Bப ஆBபா'இகுமுல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் இறைவனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவனுமான அல்லாஹ்வை விட்டு விடுகிறீர்களா?''
IFT
அதாவது, உங்களின் அதிபதியும், உங்களுக்கு முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் அதிபதியுமான அல்லாஹ்வை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்கள் இரட்சகனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இரட்சகனுமான அல்லாஹ்வை(விட்டு விடுகிறீர்களா என்று கூறினார்).
Saheeh International
Allah, your Lord and the Lord of your first forefathers?"
فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَاِنَّهُمْஎனவே நிச்சயமாக அவர்கள்لَمُحْضَرُوْنَۙநிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள்
Fபகத்தBபூஹு Fப இன்ன ஹும் லமுஹ்ளரூன்
முஹம்மது ஜான்
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்.
IFT
ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால், திண்ணமாக அவர்கள் இப்போது தண்டனைக்காகக் கொண்டுவரப்படுபவர்களாய் உள்ளனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள், ஆதலால், நிச்சயமாக அவர்கள் (நம்மிடம் தண்டனைக்காக) முன்னிலைப் படுத்தபடுகிறவர்களாவர்.
Saheeh International
And they denied him, so indeed, they will be brought [for punishment],
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَஅடியார்களைاللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களை
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களைத் தவிர, (நல்லடியார்களுக்கு நல்ல சன்மானமுண்டு.)
IFT
ஆனால், வாய்மையாளர்களாய் ஆக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தேர்ந்தெடுக்கப்பட்டோரான அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர (இவர்களுக்கு நல்ல சன்மானமுண்டு).
Saheeh International
Except the chosen servants of Allah.
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
وَ تَرَكْنَاமேலும் நாம் விட்டு வைத்தோம்عَلَیْهِஅவர் மீதுفِیமத்தியில்الْاٰخِرِیْنَۙபிற்காலத்தவர்கள்
வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
முஹம்மது ஜான்
மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
அப்துல் ஹமீது பாகவி
பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
IFT
மேலும், பின் தோன்றிய தலைமுறைகளில் இல்யாஸுடைய நற்புகழை நிலைப்படுத்தினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவருக்காக (அவருடைய கீர்த்தியை)ப் பின்னுள்ளோர்களில் (நிலைக்க) விட்டுவைத்தோம்.
Saheeh International
And We left for him [favorable mention] among later generations:
سَلٰمٌ عَلٰۤی اِلْ یَاسِیْنَ ۟
سَلٰمٌசாந்திعَلٰۤیமீதுاِلْیَاسِیْنَஇல்யாஸீன்
ஸலாமுன் 'அலா இல்யாஸீன்
முஹம்மது ஜான்
“ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) ‘‘இல்யாஸுக்கு ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாவதாகுக!'' (என்று கூறுகின்றனர்).
IFT
சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ் மீது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இல்யாஸீன் மீது சாந்தி உண்டாவதாக!”
Saheeh International
"Peace upon Elias."
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
اِنَّاநிச்சயமாக நாம்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیகூலி வழங்குகிறோம்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோருக்கு
இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.
IFT
நன்மை செய்வோருக்குத் திண்ணமாக நாம் இத்தகைய கூலியையே வழங்குகின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நன்மை செய்கிறவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.
Saheeh International
Indeed, We thus reward the doers of good.
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
اِنَّهٗநிச்சயமாக அவர்مِنْஒருவராவார்عِبَادِنَاஎமது அடியார்களில்الْمُؤْمِنِیْنَநம்பிக்கை கொண்டவர்களில்
இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)அடியார்களில் நின்றுமுள்ளவர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் ஒருவராக இருந்தார்.
IFT
உண்மையில் நம்மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராய் அவர் திகழ்ந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர் விசுவாசங் கொண்டவர்களான நமது அடியார்களில் உள்ளவராவர்.
Saheeh International
Indeed, he was of Our believing servants.
وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَ اِنَّமேலும் நிச்சயமாகلُوْطًاலூத்தும்لَّمِنَநிச்சயமாகالْمُرْسَلِیْنَؕதூதர்களில் ஒருவராவார்
வ இன்ன லூதல் லமினல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக லூத்தும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
IFT
மேலும், இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டவர்களுள் லூத்தும் ஒருவராய்த் திகழ்ந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக ‘லூத்’தும் (நமது தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.
Saheeh International
And indeed, Lot was among the messengers.
اِذْ نَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
اِذْஅப்போதுنَجَّیْنٰهُநாம் அவரைக் காப்பாற்றினோம்وَ اَهْلَهٗۤஅவருடைய குடும்பத்தாரையும்اَجْمَعِیْنَۙஅனைவரையும்
இத் னஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -
அப்துல் ஹமீது பாகவி
அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
அந்தச் சந்தர்ப்பத்தை நினைவு கூருங்கள்: லூத்தையும், அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவரையும், அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் நாம் காப்பாற்றியதை (நினைவு கூர்வீராக!)
Saheeh International
[So mention] when We saved him and his family, all,
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟
اِلَّاதவிரعَجُوْزًاஒரு கிழவிفِیஇல்الْغٰبِرِیْنَபின்தங்கியவர்கள்
இல்லா 'அஜூZஜன் Fபில் காBபிரீன்
முஹம்மது ஜான்
பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர, அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள்.
IFT
பின்தங்கியவர்களோடு சேர்ந்துவிட்ட ஒரு கிழவியைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கிவிட்டோர்களில் இருந்துவிட்ட (அவருடைய) கிழ (மனை)வியைத் தவிர (அவள் வேதனை செய்யப்படுபவர்களுடன் தங்கிவிட்டாள்).
Saheeh International
Except an old woman [i.e., his wife] among those who remained [with the evildoers].
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟
ثُمَّபின்னர்دَمَّرْنَاநாம் அழித்தோம்الْاٰخَرِیْنَமற்றவர்களை
தும்ம தம்மர்னல் ஆகரீன்
முஹம்மது ஜான்
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
(பிறகு பாவம் செய்த) மற்றவர்களையும் நாம் அழித்து விட்டோம்.
IFT
பின்னர், எஞ்சியிருந்த மற்றவர்கள் அனைவரையும் அடியோடு அழித்துவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், மற்றவர்களை நாம் அழித்துவிட்டோம்.
Saheeh International
Then We destroyed the others.
وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَیْهِمْ مُّصْبِحِیْنَ ۟ۙ
وَ اِنَّكُمْமேலும் நிச்சயமாக நீங்கள்لَتَمُرُّوْنَகடந்து செல்கிறீர்கள்عَلَیْهِمْஅவர்கள் மீதுمُّصْبِحِیْنَவிடியற்காலையில்
வ இன்னகும் லதமுர்ரூன 'அலய்ஹிம் முஸ்Bபிஹீன்
முஹம்மது ஜான்
இன்னும், நீங்கள் காலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்காக ஷாம் தேசம் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களை கடந்து செல்கிறீர்கள்.
IFT
நீங்கள் (இப்போது இரவிலும், பகலிலும்) அழிந்து போன அவர்களின் நகரங்களின் அருகே கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் வர்த்தகத்திற்குச் சென்று திரும்புகின்ற போது) காலைப் பொழுதை அடைந்தவர்களாக நிச்சயமாக நீங்கள் அவர்களின் (ஊரின்) மீதே நடந்து செல்கின்றீர்கள்.
Saheeh International
And indeed, you pass by them in the morning
وَبِالَّیْلِ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠
وَ بِالَّیْلِ ؕமற்றும் இரவிலும்اَفَلَاஆகவே நீங்கள்تَعْقِلُوْنَ۠சிந்திக்க மாட்டீர்களா?
வ Bபில்லய்ல்; அFபலா தஃகிலூன்
முஹம்மது ஜான்
இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?  
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெறவேண்டாமா?
IFT
நீங்கள் அறிவு பெறமாட்டீர்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவிலும் (அவ்வூர்ப்பக்கம் செல்கின்றீர்கள்). இதனைக்கொண்டு நீங்கள் நல்லறிவு பெறமாட்டீர்களா?
Saheeh International
And at night. Then will you not use reason?
وَاِنَّ یُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
وَ اِنَّமேலும் நிச்சயமாகیُوْنُسَயூனுஸ்لَمِنَநிச்சயமாக ஒருவராவார்الْمُرْسَلِیْنَؕதூதர்களில்
வ இன்ன யூனுஸ லமினல் முர்ஸலீன்
முஹம்மது ஜான்
மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக யூனுஸும் நம் தூதர்களில் ஒருவர்தான்.
IFT
திண்ணமாக, யூனுஸும் இறைத்தூதர்களுள் ஒருவராய் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக யூனுஸும் (நம் தூதர்களாக) அனுப்பப்பட்டவர்களில் உள்ளவராவர்.
Saheeh International
And indeed, Jonah was among the messengers.
اِذْ اَبَقَ اِلَی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۙ
اِذْபோதுاَبَقَஅவர் தப்பியோடியاِلَیநோக்கிالْفُلْكِகப்பலைالْمَشْحُوْنِۙசுமையேற்றப்பட்ட
இத் அBபக இலல் Fபுல்கில் மஷ் ஹூன்
முஹம்மது ஜான்
நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
அப்துல் ஹமீது பாகவி
(மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்).
IFT
அவர் ஒரு நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய நேரத்தை நினைத்துப் பாருங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிரப்பப்பட்ட கப்பலின் பக்கம் அவர் வெருண்டோடிய சமயத்தில் (அவர் சோதனைக்குள்ளாக்கப்பட்டு அதில் அவர் ஏறிக்கொண்டார்).
Saheeh International
[Mention] when he ran away to the laden ship.
فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِیْنَ ۟ۚ
فَسَاهَمَஅவர் சீட்டுப் போட்டார்فَكَانَஆகவே அவர் ஆனார்مِنَஒருவராகالْمُدْحَضِیْنَۚதோற்றவர்களில்
Fபஸாஹம Fபகான மினல் முத்ஹளீன்
முஹம்மது ஜான்
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
அப்துல் ஹமீது பாகவி
அ(க்கப்பலில் உள்ள)வர்கள் சீட்டு (குலுக்கி)ப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்.
IFT
பிறகு, சீட்டுக் குலுக்கலில் கலந்து கொண்டார். அதில் தோற்றுப் போனார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுப்போட்டனர், (அதில் அவர் பெயர்வரவே கடலில் எறியப்பட வேண்டிய) தோல்வியுற்றோரில் அவர் ஆகிவிட்டார்.
Saheeh International
And he drew lots and was among the losers.
فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِیْمٌ ۟
فَالْتَقَمَهُபின்பு அவரை விழுங்கியதுالْحُوْتُஒரு பெரிய மீன்وَ هُوَஅந்நிலையில் அவர்مُلِیْمٌபழிக்குரியவர்
Fபல்தகமஹுல் ஹூது வ ஹுவ முலீம்
முஹம்மது ஜான்
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கி விட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்.
IFT
இறுதியில் மீன் ஒன்று அவரை விழுங்கியது; அவரோ பழிப்புக்குரியவராய் இருந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (இவரை அவர்கள் கடலில் எறியவே) அவர் நிந்தனைக்கு ஆளானவராகயிருக்க, (ஒரு) மீன் அவரை விழுங்கிற்று.
Saheeh International
Then the fish swallowed him, while he was blameworthy.
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِیْنَ ۟ۙ
فَلَوْ لَاۤஇல்லையென்றால்اَنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருந்திருக்கمِنَஒருவராகالْمُسَبِّحِیْنَۙதுதிப்பவர்களில்
Fபலவ் லா அன்னஹூ கான மினல் முஸBப்Bபிஹீன்
முஹம்மது ஜான்
ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால்,
IFT
அவர் இறைவனைத் துதிப்பவர்களுள் ஒருவராய் இல்லாதிருந்தால்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர் (மீன் வயிற்றினுள் நம்மைத்) துதி செய்து கொண்டிருப்பவர்களில் இல்லாமலிருந்திருந்தால்,
Saheeh International
And had he not been of those who exalt Allah,
لَلَبِثَ فِیْ بَطْنِهٖۤ اِلٰی یَوْمِ یُبْعَثُوْنَ ۟ۚ
لَلَبِثَதங்கியிருந்திருப்பார்فِیْஉள்ளேبَطْنِهٖۤஅதன் வயிற்றில்اِلٰیவரைیَوْمِநாள்یُبْعَثُوْنَۚஎழுப்பப்படுவார்கள்
லலBபித Fபீ Bபத்னிஹீ இலா யவ்மி யுBப்'அதூன்
முஹம்மது ஜான்
(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
(மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
IFT
மறுமை நாள் வரை அந்த மீனின் வயிற்றிலேயே இருந்திருப்பார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமைக்காக படைப்பினங்களாகிய) அவர்கள் எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில், அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.
Saheeh International
He would have remained inside its belly until the Day they are resurrected.
فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِیْمٌ ۟ۚ
فَنَبَذْنٰهُஎனவே நாம் அவரை எறிந்தோம்بِالْعَرَآءِவெட்டவெளியில்وَ هُوَஅவர்سَقِیْمٌۚநோயுற்றவராக
FபனBபத்னாஹு Bபில்'அரா'இ வ ஹுவ ஸகீம்
முஹம்மது ஜான்
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.
IFT
இறுதியில் அவர் பெரிதும் நோயுற்றிருந்த நிலையில் ஒரு பாலைவெளியில் அவரை நாம் எறிந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் துதி செய்ததன் காரணமாக) அவர் நோயுற்றவராக இருந்தநிலையில் வெட்டவெளியில், (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறிந்தோம்.
Saheeh International
But We threw him onto the open shore while he was ill.
وَاَنْۢبَتْنَا عَلَیْهِ شَجَرَةً مِّنْ یَّقْطِیْنٍ ۟ۚ
وَ اَنْۢبَتْنَاமேலும் நாம் முளைக்கச் செய்தோம்عَلَیْهِஅவர் மீதுشَجَرَةًஒரு மரத்தைمِّنْஇருந்துیَّقْطِیْنٍۚசுரைக்காய்
வ அம்Bபத்னா 'அலய்ஹி ஷஜரதம் மி யக்தீன்
முஹம்மது ஜான்
அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச்செடியை முளைப்பித்தோம்.
IFT
பிறகு படர்கின்ற கொடியை அவர் மீது (நிழலிட) முளைக்கச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவரின் மீது (நிழல்தருவதற்காக) ஒரு சுரைக்கொடியை நாம் முளைப்பித்தோம்.
Saheeh International
And We caused to grow over him a gourd vine.
وَاَرْسَلْنٰهُ اِلٰی مِائَةِ اَلْفٍ اَوْ یَزِیْدُوْنَ ۟ۚ
وَ اَرْسَلْنٰهُமேலும் நாம் அவரை அனுப்பினோம்اِلٰیநோக்கிمِائَةِநூறுاَلْفٍஆயிரம்اَوْஅல்லதுیَزِیْدُوْنَۚஅதிகமானோர்
வ அர்ஸல்னாஹு இலா மி'அதி அல்Fபின் அவ் யZஜீதூன்
முஹம்மது ஜான்
மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம் தூதராக அனுப்பி வைத்தோம்.
IFT
பின்னர், அவரை நாம் ஓர் இலட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் அனுப்பினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நாம் அவரை ஒரு நூறாயிரம், அல்லது (அதற்கு) அதிகமானவர்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்தோம்.
Saheeh International
And We sent him to [his people of] a hundred thousand or more.
فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰی حِیْنٍ ۟ؕ
فَاٰمَنُوْاஆகவே அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள்فَمَتَّعْنٰهُمْஎனவே நாம் அவர்களை சுகமனுபவிக்கச் செய்தோம்اِلٰیவரைحِیْنٍؕஒரு காலம்
Fப ஆமனூ Fபமத்தஃ னாஹும் இலா ஹீன்
முஹம்மது ஜான்
ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள்;ஆகையால் நாம் அவர்களை ஒரு காலம் வரை சுகிக்கச் செய்தோம்.  
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரை சுகமாக வாழவைத்தோம்.
IFT
அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். பிறகு ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்களை வாழவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் விசுவாசங்கொண்டார்கள், ஆகவே, நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரையில் சுகமாக வாழவைத்தோம்.
Saheeh International
And they believed, so We gave them enjoyment [of life] for a time.
فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَ ۟ۙ
فَاسْتَفْتِهِمْஎனவே அவர்களிடம் கேளும்اَلِرَبِّكَஉமது இறைவனுக்காالْبَنَاتُபெண் பிள்ளைகள்وَ لَهُمُமேலும் அவர்களுக்குالْبَنُوْنَۙஆண் பிள்ளைகள்
Fபஸ்தFப்திஹிம் அலி ரBப்Bபிகல் Bபனாது வ லஹுமுல் Bபனூன்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்களிடம் கேளும்: உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களை கேட்பீராக: ‘‘(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகிறீர்கள்.)
IFT
பின்னர், இவர்களிடம் சற்று வினவுவீராக: உம் இறைவனுக்குப் பெண்மக்கள்; இவர்களுக்கு ஆண் மக்களா? (இந்தப் பேச்சு இவர்களின் மனதுக்கு சரியெனப் படுகிறதா என்ன?)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இணைவைப்பவர்களான) அவர்களிடம், “உமது இரட்சகனுக்கு பெண்மக்களும், அவர்களுக்கு ஆண்மக்களுமா” என்று நீர் விளக்கம் கேட்பீராக!
Saheeh International
So inquire of them, [O Muhammad], "Does your Lord have daughters while they have sons?
اَمْ خَلَقْنَا الْمَلٰٓىِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ ۟
اَمْஅல்லதுخَلَقْنَاநாம் படைத்தோமாالْمَلٰٓىِٕكَةَவானவர்களைاِنَاثًاபெண்களாகوَّ هُمْஅவர்கள்شٰهِدُوْنَசாட்சிகளாக
அம் கலக்னல் மலா'இ கத இனாத(ன்)வ் வ ஹும் ஷாஹிதூன்
முஹம்மது ஜான்
அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது நாம் வானவர்களைப் பெண்களாக படைத்த(தாகக் கூறுகின்றனரே அ)தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
IFT
அல்லது உண்மையில், நாம் வானவர்களைப் பெண் மக்களாகவே படைத்திருக்கின்றோமா? கண்ணால் பார்த்தவற்றைத்தான் இவர்கள் கூறுகின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது மலக்குகளைப் பெண்களாக, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க நாம் படைத்தோமா?
Saheeh International
Or did We create the angels as females while they were witnesses?"
اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَیَقُوْلُوْنَ ۟ۙ
اَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்مِّنْஇருந்துاِفْكِهِمْதங்கள் இட்டுக்கட்டின்لَیَقُوْلُوْنَۙநிச்சயமாகக் கூறுகின்றனர்
அலா இன்னஹும் மின் இFப்கிஹிம் ல யகூலூன்
முஹம்மது ஜான்
“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
IFT
நன்கு கேட்டுக்கொள்ளுங்கள். தாமாகப் புனைந்துதான் அவர்கள் கூறுகின்றார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அறிந்து கொள்வீராக! நிச்சயமாக இவர்கள் தங்கள் பொய்யினால் கூறுகின்றனர்,
Saheeh International
Unquestionably, it is out of their [invented] falsehood that they say,
وَلَدَ اللّٰهُ ۙ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
وَلَدَபெற்றெடுத்தான்اللّٰهُ ۙஅல்லாஹ்وَ اِنَّهُمْமேலும் நிச்சயமாக அவர்கள்لَكٰذِبُوْنَநிச்சயமாகப் பொய்யர்களே
வலதல் லாஹு வ இன்னஹும் லகாதிBபூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று'' இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீர் அறிந்து கொள்வீராக. நிச்சயமாக இவர்கள் பொய்யர்களே!
IFT
அல்லாஹ் குழந்தைகளைப் பெற்றெடுத்தான் என்று. மேலும், உண்மையில் இவர்கள் பொய்யர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் (என்று)_ நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
Saheeh International
"Allah has begotten," and indeed, they are liars.
اَصْطَفَی الْبَنَاتِ عَلَی الْبَنِیْنَ ۟ؕ
اَصْطَفَیஅவன் தேர்ந்தெடுத்துக் கொண்டானாالْبَنَاتِபெண்மக்களைعَلَیவிடالْبَنِیْنَؕஆண்மக்களை
அஸ்தFபல் Bபனாதி 'அலல் Bபனீன்
முஹம்மது ஜான்
(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
அப்துல் ஹமீது பாகவி
(அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்?
IFT
ஆண்மக்களை விட்டு விட்டு பெண்மக்களை அல்லாஹ் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதிலும்) ஆண்(மக்)களைவிட பெண்(மக்)களை அவன் தெரிவு செய்து கொண்டானா?
Saheeh International
Has He chosen daughters over sons?
مَا لَكُمْ ۫ كَیْفَ تَحْكُمُوْنَ ۟
مَاஎன்னلَكُمْ ۫உங்களுக்குكَیْفَஎப்படிتَحْكُمُوْنَதீர்ப்பளிக்கிறீர்கள்
மா லகும் கய்Fப தஹ்குமூன்
முஹம்மது ஜான்
உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நியாயம் (இருக்கிறது.) ஏன் இவ்வாறு (பொய்யாக) தீர்மானிக்கிறீர்கள்?
IFT
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எப்படிப்பட்ட முடிவை நீங்கள் எடுக்கிறீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு கூற) உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இதைப் பற்றி) எவ்வாறு நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்?
Saheeh International
What is [wrong] with you? How do you make judgement?
اَفَلَا تَذَكَّرُوْنَ ۟ۚ
اَفَلَاஎனவேتَذَكَّرُوْنَۚநீங்கள் சிந்திக்க மாட்டீர்களா
அFபலா ததக்கரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் இதை கவனித்துச் சிந்திக்க வேண்டாமா?
IFT
நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் (என்ன கூறுகிறீர்களென்று) சிந்திக்கமாட்டீர்களா?
Saheeh International
Then will you not be reminded?
اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
اَمْஅல்லதுلَكُمْஉங்களுக்குسُلْطٰنٌஆதாரம்مُّبِیْنٌۙதெளிவான
அம் லகும் ஸுல்தானும் முBபீன்
முஹம்மது ஜான்
அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது உங்களுக்கு (இதற்காக ஒரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா?
IFT
அல்லது (உங்களின் வாதங்களுக்கு) தெளிவான ஆதாரம் உங்களிடம் இருக்கின்றதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது உங்களுக்கு (இதற்காக ஏதேனும்) தெளிவான சான்று உண்டா?
Saheeh International
Or do you have a clear authority?
فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
فَاْتُوْاஅப்படியானால் கொண்டு வாருங்கள்بِكِتٰبِكُمْஉங்கள் வேதத்தைاِنْஎன்றால்كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
Fபா'தூ Bபி கிதாBபிகும் இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(கிறிஸ்தவர்களே! அவ்வாறு) நீங்கள் கூறுவது உண்மையாகவே இருப்பின், அதற்கு உங்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வாருங்கள்.
IFT
நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் அத்தகைய உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் (அதற்கு) உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டுவாருங்கள்.
Saheeh International
Then produce your scripture, if you should be truthful.
وَجَعَلُوْا بَیْنَهٗ وَبَیْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
وَ جَعَلُوْاஅவர்கள் ஏற்படுத்தினார்கள்بَیْنَهٗஅவனுக்கும்وَ بَیْنَமற்றும் இடையேالْجِنَّةِஜின்களுக்கும்نَسَبًا ؕவம்ச உறவைوَ لَقَدْமேலும் நிச்சயமாகعَلِمَتِஅறிந்துள்ளனالْجِنَّةُஜின்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَمُحْضَرُوْنَۙஆஜராக்கப்படுவார்கள்
வ ஜ'அலூ Bபய்னஹூ வ Bபய்னல் ஜின்னதி னஸBபா; வ லகத் 'அலிமதில் ஜின்னது இன்னஹும் லமுஹ்ளரூன்
முஹம்மது ஜான்
அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்கும் இடையில் பந்துத்துவத்தைக் கற்பனை செய்கின்றனர். ஆயினும், ஜின்களோ (தாங்கள் குற்றம் செய்தால் தண்டனைக்காக) நிச்சயமாக அவனிடம் கொண்டு வரப்படுவோம் என்று திட்டமாக அறிந்து இருக்கின்றனர்.
IFT
அல்லாஹ்வுக்கும் வானவர்களுக்கும் இடையே இவர்கள் உறவுமுறையை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். உண்மையில் இவர்கள் குற்றவாளிகளாய் கொண்டு வரப்படுவார்கள் என்பதை வானவர்கள் நன்கறிந்துள்ளார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) இவர்கள், அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் வம்சா வழி உறவை (கற்பனையாக) ஆக்குகின்றனர், ஜின்கள் (தண்டனைக்காக) நிச்சயமாக தாம் (அல்லாஹ்விடம்) கொண்டுவரப்படுபவர்கள் என்று திட்டமாக அறிந்தும் இருகின்றனர்.
Saheeh International
And they have made [i.e., claimed] between Him and the jinn a lineage, but the jinn have already known that they [who made such claims] will be brought [to punishment].
سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ
سُبْحٰنَதூயவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّاஎதைவிட்டும்یَصِفُوْنَۙவர்ணிக்கிறார்கள்
ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யஸிFபூன்
முஹம்மது ஜான்
எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
IFT
(மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்:) அல்லாஹ் தூய்மை வாய்ந்தவன், அந்தத் தன்மைகளை விட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் வர்ணிக்கின்றவைகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
Saheeh International
Exalted is Allah above what they describe,
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
اِلَّاதவிரعِبَادَஅடியார்களைاللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்களை
இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
முஹம்மது ஜான்
அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் கலப்பற்ற நம்பிக்கையுள்ள அடியார்களைத் தவிர, (அவர்கள் தண்டனைக்குள்ளாக மாட்டார்கள்.)
IFT
அதாவது, அவனுடைய வாய்மையான அடியார்களைத் தவிர மற்றவர்கள் (அவனைக் குறித்து) கற்பிக்கின்ற தன்மைகளை விட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர, (மற்றவர்கள் தண்டனைக்குரியவர்களாவர்).
Saheeh International
Except the chosen servants of Allah [who do not share in that sin].
فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ ۟ۙ
فَاِنَّكُمْஎனவே நிச்சயமாக நீங்கள்وَ مَاமேலும் எவற்றைتَعْبُدُوْنَۙநீங்கள் வணங்குகிறீர்களோ
Fப இன்னகும் வமா தஃBபுதூன்
முஹம்மது ஜான்
ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
IFT
ஆக, நீங்களும் நீங்கள் வணங்கி வருகின்ற இந்தத் தெய்வங்களும் ,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவைகளும்,
Saheeh International
So indeed, you [disbelievers] and whatever you worship,
مَاۤ اَنْتُمْ عَلَیْهِ بِفٰتِنِیْنَ ۟ۙ
مَاۤஇல்லைاَنْتُمْநீங்கள்عَلَیْهِஅவனுக்கு எதிராகبِفٰتِنِیْنَۙவழிகெடுப்பவர்கள்
மா அன்தும் 'அலய்ஹி Bபி Fபாதினீன்
முஹம்மது ஜான்
(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவையும் ஒன்று சேர்ந்தபோதிலும், (எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிட முடியாது.
IFT
அல்லாஹ்வை விட்டு எவரையும் திசைதிருப்பிவிட முடியாது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஒன்று சேர்ந்தபோதிலும் எவரையும் அல்லாஹ்வாகிய) அவனுக்கு விரோதமாக நீங்கள் வழி கெடுத்து விடுபவர்களல்லர்_
Saheeh International
You cannot tempt [anyone] away from Him
اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِیْمِ ۟
اِلَّاதவிரمَنْஎவர்هُوَஅவர்صَالِநுழைபவரோالْجَحِیْمِநரக நெருப்பில்
இல்லா மன் ஹுவ ஸாலில் ஜஹீம்
முஹம்மது ஜான்
நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
அப்துல் ஹமீது பாகவி
நரகம் செல்லக்கூடியவனைத் தவிர.
IFT
ஆனால், கொழுந்துவிட்டு எரியும் நரக நெருப்பில் எரிந்து கரிந்து போகக் கூடியவனைத்தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நரகத்தில் புக இருக்கிறானே அவனை தவிர.
Saheeh International
Except he who is to [enter and] burn in the Hellfire.
وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைمِنَّاۤஎங்களில்اِلَّاதவிரلَهٗஅவருக்குمَقَامٌஓர் இடம்مَّعْلُوْمٌۙஅறியப்பட்ட
வமா மின்னா இல்லா லஹூ மகாமுன் மஃலூம்
முஹம்மது ஜான்
(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்:) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
(வானவர்கள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு;
IFT
மேலும், எங்களுடைய நிலைமை என்னவெனில், எங்களில் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஓர் இடம் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (மலக்குகளாகிய) எங்களில் எவருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் (வானத்தில்) அவருக்கில்லாமலில்லை (என்றும்),
Saheeh International
[The angels say], "There is not among us any except that he has a known position.
وَّاِنَّا لَنَحْنُ الصَّآفُّوْنَ ۟ۚ
وَّ اِنَّاமேலும் நிச்சயமாக நாங்கள்لَنَحْنُநாங்களேالصَّآفُّوْنَۚஅணிவகுத்து நிற்பவர்கள்
வ இன்னா லனஹ் னுஸ் ஸாFப்Fபூன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் (கட்டளையை நிறைவேற்ற அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) அணிவகுத்து நின்ற வண்ணமாகவே இருக்கிறோம்.
IFT
மேலும், திண்ணமாக, நாங்களே அணிவகுத்து நின்று பணிபுரிபவர்களாய் இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே இருக்கின்றோம் (என்றும்),
Saheeh International
And indeed, we are those who line up [for prayer].
وَاِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُوْنَ ۟
وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَنَحْنُநிச்சயமாக நாமேالْمُسَبِّحُوْنَதுதிப்பவர்கள்
வ இன்னா லனஹ் னுல் முஸBப்Bபிஹூன்
முஹம்மது ஜான்
“மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் அவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருக்கிறோம்.
IFT
இன்னும் திண்ணமாக, நாங்களே துதி செய்பவர்களாய் இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாங்கள் (அவனைப் புகழ்ந்து) துதிசெய்பவர்களாகவும் இருக்கிறோம் (என்றும் மலக்குகள் கூறுகிறார்கள்).
Saheeh International
And indeed, we are those who exalt Allah."
وَاِنْ كَانُوْا لَیَقُوْلُوْنَ ۟ۙ
وَ اِنْமேலும் நிச்சயமாகكَانُوْاஅவர்கள் இருந்தார்கள்لَیَقُوْلُوْنَۙஉறுதியாகக் கூறுவார்கள்
வ இன் கானூ ல யகூலூன்
முஹம்மது ஜான்
(நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்:
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இதற்குமுன் மக்காவாசிகளாகிய) அவர்கள் கூறிக் கொண்டிருந்ததாவது:
IFT
திண்ணமாக, இவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்தார்கள்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) இதற்கு முன் மக்காவாசிகளாகிய) அவர்கள் உறுதியாக கூறக்கூடியவர்களாக இருந்தனர் (அதாவது)
Saheeh International
And indeed, they [i.e., the disbelievers] used to say,
لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
لَوْஇருந்திருந்தால்اَنَّநிச்சயமாகعِنْدَنَاஎங்களிடம்ذِكْرًاஒரு போதனைمِّنَஇருந்துالْاَوَّلِیْنَۙமுன்னோர்களின்
லவ் அன்ன 'இன்தனா திக்ரம் மினல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
“முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
அப்துல் ஹமீது பாகவி
‘‘முன்சென்றவர்களிடம் இருந்த வேதத்தைப் போன்று ஒரு வேதம் எங்களிடம் இருந்தால்,
IFT
“முந்தைய சமுதாயங்களுக்குக் கிடைத்திருந்த அறிவுரை எங்களுக்கும் கிடைத்திருந்தால்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“முன்னுள்ளோர்களிடமிருந்து, (அல்லாஹ்வை) நினைவூட்டும் (வேதம்) ஏதேனுமொன்று நிச்சயமாக எங்களிடமிருந்திருந்தால்_
Saheeh International
"If we had a message from [those of] the former peoples,
لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
لَكُنَّاநிச்சயமாக நாம் ஆகியிருப்போம்عِبَادَஅடியார்கள்اللّٰهِஅல்லாஹ்வின்الْمُخْلَصِیْنَதூய்மையாக்கப்பட்டவர்கள்
லகுன்ன 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்'' என்றார்கள்.
IFT
நாங்களும் அல்லாஹ்வின் வாய்மை மிக்க அடியார்களாக விளங்கி இருப்போம்” என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வையே வணங்குவதற்கென) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களான அல்லாஹ்வுடைய அடியார்களாக இருந்திருப்போம்.
Saheeh International
We would have been the chosen servants of Allah."
فَكَفَرُوْا بِهٖ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
فَكَفَرُوْاஆனால் அவர்கள் நிராகரித்தார்கள்بِهٖஅதனைفَسَوْفَஎனவே விரைவில்یَعْلَمُوْنَஅவர்கள் அறிந்து கொள்வார்கள்
FபகFபரூ Bபிஹீ Fபஸவ்Fப யஃலமூன்
முஹம்மது ஜான்
ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
அப்துல் ஹமீது பாகவி
எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் முடிவை) இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
IFT
ஆயினும் (அது வந்துவிட்டபோது) இவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள்! இனி (தமது நடத்தைக்கான விளைவை) அதிவிரைவில் இவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அப்போது (இவ்வேதம் வரவே,) இதை அவர்கள் நிராகரித்துவிட்டனர், அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
Saheeh International
But they disbelieved in it, so they are going to know.
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
وَ لَقَدْமேலும் நிச்சயமாகவேسَبَقَتْமுந்திவிட்டதுكَلِمَتُنَاநம்முடைய வாக்குلِعِبَادِنَاநம்முடைய அடியார்களுக்குالْمُرْسَلِیْنَۚۖதூதர்களான
வ லகத் ஸBபகத் கலிமதுனா லி'இBபாதினல் முர்ஸ லீன்
முஹம்மது ஜான்
தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம் வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது.
IFT
நம்மால் தூதர்களாக அனுப்பப்பட்ட நம்முடைய அடியார்களுக்கு நாம் முன்னரே இவ்வாறு வாக்குறுதி அளித்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நம்முடைய தூதர்களாகிய அடியார்களுக்கு நம்முடைய வாக்கு முந்திவிட்டது.
Saheeh International
And Our word [i.e., decree] has already preceded for Our servants, the messengers,
اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ۪۟
اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَهُمُஅவர்கள்தாம்الْمَنْصُوْرُوْنَ۪உதவி செய்யப்படுபவர்கள்
இன்னா ஹும் லஹுமுல் மன்ஸூரூன்
முஹம்மது ஜான்
(அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள்.
IFT
நிச்சயமாய், அவர்கள் உதவி செய்யப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்கள்_அவர்களே தான் உதவி செய்யப்படுபவர்கள்.
Saheeh International
[That] indeed, they would be those given victory
وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ ۟
وَ اِنَّமேலும் நிச்சயமாகجُنْدَنَاஎமது படையினர்لَهُمُஅவர்களேالْغٰلِبُوْنَவெற்றியாளர்கள்
வ இன்ன ஜுன்தன லஹுமுல் காலிBபூன்
முஹம்மது ஜான்
மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நம் படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்)தான் வெற்றி பெறுவார்கள்.
IFT
மேலும், திண்ணமாக நமது படையினர்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் நிச்சயமாக, நம்முடைய படையினர்கள் தான், அவர்களே திட்டமாக மிகைத்தவர்களாக இருப்பர்.
Saheeh International
And [that] indeed, Our soldiers [i.e., the believers] will be those who overcome.
فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
فَتَوَلَّஎனவே நீர் விலகியிருப்பீராகعَنْهُمْஅவர்களிடமிருந்துحَتّٰیவரைحِیْنٍۙசிறிது காலம்
Fபதவல்ல 'அன்ஹும் ஹத்தா ஹீன்
முஹம்மது ஜான்
(ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரை (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீர் விலகியிரும்.
IFT
ஆகவே, (நபியே!) இவர்களை இவர்களுடைய நிலையிலேயே சிறிது காலம் விட்டுவிடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஒரு குறிப்பிட்ட) நேரம் வரை அவர்களைவிட்டும் (சிறிதுகாலம்) புறக்கணித்துவிடுவீராக!
Saheeh International
So, [O Muhammad], leave them for a time.
وَّاَبْصِرْهُمْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
وَّ اَبْصِرْهُمْமேலும் அவர்களைப் பார்ப்பீராகفَسَوْفَபின்னர் விரைவில்یُبْصِرُوْنَஅவர்கள் காண்பார்கள்
வ அBப்ஸிர்ஹும் Fபஸவ்Fப யுBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக. அதிசீக்கிரத்தில் அவர்களும் அதைக் கண்டு கொள்வார்கள்.
IFT
மேலும், பார்த்துக் கொண்டிரும்! மிக விரைவில் இவர்களும் தாங்களாகவே கண்டு கொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர்களைப் பார்த்திரும், (அவர்களுக்கு நேர இருப்பதை) அடுத்து அவர்களும் பார்ப்பார்கள்.
Saheeh International
And see [what will befall] them, for they are going to see.
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
اَفَبِعَذَابِنَاஎமது வேதனையையாیَسْتَعْجِلُوْنَஅவர்கள் அவசரப்படுகிறார்கள்
அFபBபி'அதாBபினா யஸ்தஃஜிலூன்
முஹம்மது ஜான்
நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
(என்னே!) நம் வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?
IFT
என்ன, இவர்கள் நம்முடைய தண்டனைக்காக அவசரப்படுகின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
Saheeh International
Then for Our punishment are they impatient?
فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِیْنَ ۟
فَاِذَاஎனவே எப்போதுنَزَلَஅது இறங்கினால்بِسَاحَتِهِمْஅவர்களின் முற்றத்தில்فَسَآءَஅப்போது மிகக் கெட்டதாகிவிடும்صَبَاحُகாலைப்பொழுதுالْمُنْذَرِیْنَஎச்சரிக்கப்பட்டவர்களின்
Fப இதா னZஜல Bபிஸாஹதிஹிம் Fபஸா'அ ஸBபாஹுல் முன்தரீன்
முஹம்மது ஜான்
(அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(நம் வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும் சமயத்தில், அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும்.
IFT
அது அவர்களின் முற்றத்தில் இறங்கிவிடுமாயின், எவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு விட்டதோ அவர்களுக்கு அந்நாள் மிகவும் கெட்டதொரு நாளாகிவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் (நம்முடைய வேதனை) அவர்களது முற்றத்தில் இறங்கிவிடுமானால், அப்போது எச்சரிக்கப்பட்டவர்களின் காலை(ப்பொழுது) மிகக் கெட்டதாக இருக்கும்.
Saheeh International
But when it descends in their territory, then evil is the morning of those who were warned.
وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
وَ تَوَلَّமேலும் புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களை விட்டும்حَتّٰیவரைحِیْنٍۙசிறிது காலம்
வ தவல்ல 'அன்ஹும் ஹத்தா ஹீன்
முஹம்மது ஜான்
ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களை நீர் சிறிது காலம் புறக்கணித்து விடுவீராக.
IFT
எனவே, சிறிது காலத்திற்கு இவர்களை விட்டுவிடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை அவர்களை விட்டும் புறக்கணித்து விடுவீராக!
Saheeh International
And leave them for a time.
وَّاَبْصِرْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
وَّ اَبْصِرْமேலும் பார்ப்பீராகفَسَوْفَவிரைவில்یُبْصِرُوْنَ அவர்கள் காண்பார்கள்
வ அBப்ஸிர் Fபஸவ்Fப யுBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களுக்கு வேதனை வருவதை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. அவர்களும் (அதை) நிச்சயமாகக் காண்பார்கள்.
IFT
மேலும், பார்த்துக் கொண்டிரும்; மிக விரைவில் இவர்களும் தாமாகவே கண்டு கொள்வார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேதனை வருவதை எதிர்) பார்ப்பீராக! (தங்களுக்கு ஏற்படப்போவதை) அவர்கள் அடுத்துப்பார்ப்பார்கள்.
Saheeh International
And see, for they are going to see.
سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا یَصِفُوْنَ ۟ۚ
سُبْحٰنَதூயவன்رَبِّكَஉமது இறைவன்رَبِّஇறைவன்الْعِزَّةِகண்ணியத்திற்குரியعَمَّاஅவர்கள் கூறுவதை விட்டும்یَصِفُوْنَۚஅவர்கள் வர்ணிக்கிறார்கள்
ஸுBப்ஹான ரBப்Bபிக ரBப்Bபில் 'இZஜ்Zஜதி 'அம்ம யஸிFபூன்
முஹம்மது ஜான்
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய (தப்பான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க கண்ணியத்திற்குரிய உமது இறைவன் மிகப் பரிசுத்தமானவன்.
IFT
தூய்மையானவன் உம் இறைவன்; கண்ணியத்திற்கு உரித்தானவன்; இவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கும் அனைத்தையும் விட்டு (அவன் தூய்மையானவன்!)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் வர்ணிப்பதைவிட்டும் கண்ணியத்திற்குரியவனாகிய உமது இரட்சகன் (மிகத்) தூயவன்.
Saheeh International
Exalted is your Lord, the Lord of might, above what they describe.
وَسَلٰمٌ عَلَی الْمُرْسَلِیْنَ ۟ۚ
وَ سَلٰمٌமேலும் சாந்திعَلَیமீதுالْمُرْسَلِیْنَۚஇறைத்தூதர்கள்
வ ஸலாமுன் 'அலல்முர்ஸலீன்
முஹம்மது ஜான்
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
அப்துல் ஹமீது பாகவி
(அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் (அனைவர்) மீதும் (அவனுடைய) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!
IFT
மேலும், சாந்தி உண்டாகட்டும்; இறைத்தூதர்கள் அனைவர் மீதும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட (அவனின் தூது)வர்கள் மீது சாந்தி உண்டாவதாக.
Saheeh International
And peace upon the messengers.
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
وَ الْحَمْدُமேலும் புகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேرَبِّஇறைவனானالْعٰلَمِیْنَ۠அகிலங்களின்
வல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).
அப்துல் ஹமீது பாகவி
புகழ் அனைத்தும் உலகத்தாரின் இறைவனான அல்லாஹ்வுக்கு உரித்தானது.
IFT
இன்னும் புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரித்தானது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் புகழ் அனைத்தும் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்விற்கே (உரியதாகும்).
Saheeh International
And praise to Allah, Lord of the worlds.