(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம், ஆகவே, மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடையவராக நீர் அல்லாஹ்வை வணங்குவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கிறோம். ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வருவீராக.
IFT
(நபியே!) நாம் இந்த வேதத்தை உம்மீது சத்தியத்துடன் இறக்கியிருக்கின்றோம். எனவே, நீர் அல்லாஹ்வையே வழிபடும். தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நாமே உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை உமக்கு இறக்கிவைத்திருக்கின்றோம், ஆகவே, நீர் முற்றிலும் மார்க்கத்தை (வணக்கத்தை) அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவராக அல்லாஹ்வை வணங்குவீராக!
Saheeh International
Indeed, We have sent down to you the Book, [O Muhammad], in truth. So worship Allah, [being] sincere to Him in religion.
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை, தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ‘‘அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாம் இவற்றை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை.
IFT
அறிந்துகொள்ளுங்கள். தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். எவர்கள் அவனை விட்டுவிட்டு வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ, அவர்கள் (தம்முடைய இச்செயலுக்கு இப்படிக் காரணம் கூறுகிறார்கள்:) “எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவர்களை வணங்குகின்றோம்.” எவற்றில் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றார்களோ, அவை அனைத்திலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாகவும், சத்தியத்தை நிராகரிப்பவனாகவும் இருக்கும் எவனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே உரித்தானது என்பதை அறிந்துகொள்வீராக! இன்னும், அவனையன்றி (மற்றவர்களைப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களே அத்தகையவர்கள், “எங்களை அவர்கள் நெருக்கத்தால் அல்லாஹ்வுக்கு சமீபமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவேயன்றி அவர்களை நாங்கள் வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்), எதில் அவர்கள் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அது பற்றி, நிச்சயமாக அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எவன் (உண்மையை) மிக்க மறுக்கிறவனாக, பொய்யனாக இருக்கிறானோ அவனை நேர் வழியில் செலுத்தமாட்டான்.
Saheeh International
Unquestionably, for Allah is the pure religion. And those who take protectors besides Him [say], "We only worship them that they may bring us nearer to Allah in position." Indeed, Allah will judge between them concerning that over which they differ. Indeed, Allah does not guide he who is a liar and [confirmed] disbeliever.
அல்லாஹ் (தனக்கு) ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், அவன் படைத்துள்ளவர்களிலிருந்து தான் விரும்பியவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான்; (எனினும் இத்தகையவற்றிலிருந்து) அவன் பரிசுத்தமானவன். அவனே (யாவரையும்) அடக்கியாளும் வல்லமை மிக்கவனாகிய ஏகனான அல்லாஹ்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவற்றில் அவன் விரும்பிய (மேலான)வற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும், இத்தகைய விஷயங்களிலிருந்து) அவன் மிக பரிசுத்தமானவன். அல்லாஹ் ஒரே ஒருவன்தான். (அவனுக்குச் சந்ததி இல்லை. அனைவரையும்) அவன் அடக்கி ஆளுகிறான்.
IFT
அல்லாஹ் எவரையேனும் மகனாக எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், தன்னுடைய படைப்புகளிலிருந்து தான் நாடுபவரைத் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் இதனை (எவரையேனும் தனக்கு மகனாக ஆக்கிக்கொள்வதை) விட்டுத் தூய்மையானவன்! அவன்தான் அல்லாஹ்! தனித்தவனும், யாவற்றையும் அடக்கி ஆளுபவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் (தனக்கொரு) பிள்ளையை எடுத்துகொள்ள வேண்டுமென்று நாடியிருந்தால், அவன் படைத்தவற்றிலிருந்து அவன் நாடியதைத் தேர்ந்தெடுத்துகொண்டிருப்பான், அவன் மிகப் பரிசுத்தமானவன், அவனே (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற (வல்லமை மிக்க)வனாகிய, தனித்தவனாகிய அல்லாஹ்.
Saheeh International
If Allah had intended to take a son, He could have chosen from what He creates whatever He willed. Exalted is He; He is Allah, the One, the Prevailing.
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கிறான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை விரிக்கிறான். அவனே பகலைச் சுருட்டி இரவை விரிக்கிறான். சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கிறான். இவை ஒவ்வொன்றும், அவற்றுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே!) அறிந்துகொள்வீராக: நிச்சயமாக அவன் தான் அனைவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.
IFT
அவன் வானங்களையும், பூமியையும் சத்தியத்தோடு படைத்திருக்கின்றான். அவனே இரவைச் சுருட்டி பகலை விரிக்கின்றான்; பகலைச் சுருட்டி இரவை விரிக்கின்றான்; சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அறிந்து கொள்ளுங்கள். அவன் வலிமை மிக்கவனும், மன்னித்து அருள்பவனுமாவான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் வானங்களை மற்றும் பூமியை உண்மையைக் கொண்டு படைத்திருக்கின்றான், அவன் இரவைப் பகலின் மீது மூடிக்கொள்ளச் செய்கின்றான், இன்னும், பகலை இரவின் மீது மூடிக்கொள்ள செய்கின்றான், சூரியனையும், சந்திரனையும் (தன் ஆதிக்கத்தில்) அவன் வசப்படுத்தியும் வைத்திருக்கின்றான், (இவை) ஒவ்வொன்றும், (குறிப்பிடப்பட்ட எல்லைக்குள்) குறிப்பிடப்பட்ட தவணை வரை நடக்கின்றது, அறிந்து கொள்ளுங்கள், அவனே (யாவரையும்) மிகைத்தவன், மிகுதியாக மன்னிக்கிறவன்.
Saheeh International
He created the heavens and earth in truth. He wraps the night over the day and wraps the day over the night and has subjected the sun and the moon, each running [its course] for a specified term. Unquestionably, He is the Exalted in Might, the Perpetual Forgiver.
அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்,
அப்துல் ஹமீது பாகவி
அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதரிலிருந்து தான் படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கிறான்.) மேலும், (உங்கள் நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கிறான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். இந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கே உரியன. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
IFT
அவனே உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். பின்னர் அவனே அந்த உயிரிலிருந்து அதன் துணையை உண்டாக்கினான். அவனே உங்களுக்காக எட்டு கால்நடைகளை இணைகளாகப் படைத்தான். அவன் உங்கள் அன்னையரின் வயிற்றில், மூன்று இருட்திரைகளினுள் ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். (இந்தக் காரியங்கள் செய்கின்ற) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவனாவான். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறகு, நீங்கள் எங்கிருந்து திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆரம்பத்தில்) ஒரே ஆத்மாவிலிருந்து அவன் உங்களைப் படைத்தான், பின்னர், அதிலிருந்து அதனுடைய மனைவியை ஆக்கினான், இன்னும், கால்நடைகளில் எட்டு(வகை)ஜோடிகளை இறக்கி (அருளி)யிருக்கின்றான், உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒரு படைப்புக்குப்பின், மற்றொரு படைப்பாக மூன்று இருள்களில் (அவைகளுக்கிடையில்) உங்களைப் படைக்கின்றான், அவன்தான் உங்களுடைய இரட்சகனாகிய அல்லாஹ், ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. ஆகவே, (அவனுக்கு வணக்கம் செலுத்துவதைவிட்டும்) நீங்கள் எவ்வாறு (மற்றவற்றை வணங்கத்) திருப்பப்படுகிறீர்கள்?
Saheeh International
He created you from one soul. Then He made from it its mate, and He produced for you from the grazing livestock eight mates. He creates you in the wombs of your mothers, creation after creation, within three darknesses. That is Allah, your Lord; to Him belongs dominion. There is no deity except Him, so how are you averted?
(அவனை) நீங்கள் நிராகரித்தாலும் (அவனுக்குக் குறையேதுமில்லை) - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்; எனினும் தன் அடியார்களின் (நன்றி மறக்கும்) நிராகரிப்பை - குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், உங்களைப் பற்றி அவன் திருப்தி கொள்வான். அன்றியும், (தன் பாவச் சுமையைச்) சுமக்கிறவன், மற்றொருவன் (பாவச்) சுமையைச் சுமக்க மாட்டான்; பின்னர் நீங்கள் திரும்பிச் செல்லுதல் உங்களுடைய இறைவனிடமே யாகும்; நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்; நெஞ்சங்களிலிருப்பதை அவன் நிச்சயமாக நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவனை நீங்கள் நிராகரித்துவிட்ட போதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தேவையற்றவனாக இருக்கிறான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்.
IFT
நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக விரும்புகின்றான். சுமை சுமப்பவர் எவரும் பிறரின் சுமையைச் சுமக்கமாட்டார். இறுதியில், உங்கள் இறைவனின் பக்கமே நீங்கள் எல்லோரும் திரும்ப வேண்டியுள்ளது. அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அவன் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அவன் உள்ளங்களின் நிலைமைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனை) நீங்கள் நிராகரித்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ், உங்களைவிட்டும் தேவையற்றவன், இன்னும், தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை அவன் பொருந்திக்கொள்வதில்லை, மேலும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் திருப்தியடைவான், (பாவத்தைச் சுமக்கின்ற) எந்த ஆத்மாவும் மற்ற ஆத்மாவின் (பாவச்) சுமையை சுமக்காது, பின்னர், உங்கள் மீளுமிடம் உங்கள் இரட்சகனின் பக்கமேயாகும், அப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான், நெஞ்சங்களிலுள்ளவற்றை நிச்சயமாக அவன் நன்கறிகிறவன்.
Saheeh International
If you disbelieve - indeed, Allah is Free from need of you. And He does not approve for His servants disbelief. And if you are grateful, He approves [i.e., likes] it for you; and no bearer of burdens will bear the burden of another. Then to your Lord is your return, and He will inform you about what you used to do. Indeed, He is Knowing of that within the breasts.
இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக: “உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே.”
அப்துல் ஹமீது பாகவி
மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கிறான். இறைவன் தன்னிடமிருந்து ஓர் அருளை அவனுக்குப் புரியும் சமயத்தில், இதற்கு முன்னர், தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அவனையே மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு (பொய்யான தெய்வங்களை) இணைகளாக்கி மற்றவர்களையும் அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுக்கிறான். (நபியே! அவனை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘நீ (இவ்வாறு இறைவனை) நிராகரித்த வண்ணமே சிறிது காலம் சுகமனுபவி. (முடிவில்) நிச்சயமாக நீ நரகவாசிதான்.''
IFT
மனிதனுக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்துவிட்டால், அவன் தன் இறைவனின் பக்கம் திரும்பி அவனை அழைக்கின்றான். பிறகு அவனுடைய இறைவன் அவன் மீது தன் அருட்கொடையை வழங்கினால், முன்பு எந்தத் துன்பத்தை நீக்கும்படி இறைஞ்சிக் கொண்டிருந்தானோ அந்தத் துன்பத்தை அவன் மறந்து விடுகின்றான்; மேலும், அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குகின்றான்; அவனுடைய வழியைவிட்டுத் தவறச் செய்வதற்காக! (நபியே!) அந்த மனிதனிடம் கூறும்: “நீ உனது நிராகரிப்பின் மூலம் சிறிது நாட்கள் இன்பம் அனுபவித்துக்கொள். திண்ணமாக நீ நரகத்திற்குச் செல்பவன் ஆவாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மனிதனை ஏதேனும் ஒரு சங்கடம் தீண்டுமானால் அவன் தன் இரட்சகனை _ அவன்பால் (தவ்பாச்செய்து) மீண்டவனாக_ அழை(த்துப் பிரார்த்தி)க்கிறான், பின்னர் அவன் தன்னிடமிருந்து (மகத்தான) ஓர் அருட்கொடையை அவனுக்குக் கொடுத்தானாகில், இதற்கு முன்னர் அவன் எதற்காகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தானோ அதனையே அவன் மறந்துவிடுகிறான், இன்னும், அல்லாஹ்வுக்கு இணைகளை அவன் ஆக்குகிறான், (மற்றவர்களை) அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுப்பதற்காக, (நபியே! அவனுக்கு,) “உன் நிராகரிப்பைக் கொண்டு சிறிது காலம் சுகம் அனுபவித்துக்கொள், (முடிவில்) நிச்சயமாக நீ, நரகவாசிகளில் உள்ளவனாவாய்” என்று நீர் கூறுவீராக!
Saheeh International
And when adversity touches man, he calls upon his Lord, turning to Him [alone]; then when He bestows on him a favor from Himself, he forgets Him whom he called upon before, and he attributes to Allah equals to mislead [people] from His way. Say, "Enjoy your disbelief for a little; indeed, you are of the companions of the Fire."
எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”
அப்துல் ஹமீது பாகவி
எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்பவனா (நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவான்)? (நபியே!) நீர் கேட்பீராக: கல்வி அறிவுடையவரும், கல்வி அறிவில்லாதவரும் சமமாவார்களா? (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தான்.
IFT
(இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா அல்லது அந்த மனிதனின் நடத்தையா?) அவனோ கீழ்ப்படிந்தவனாயிருக்கின்றான்; இரவு நேரங்களில் நின்று வணங்குகின்றான், மேலும், சிரம் பணிகின்றான்; மறுமையையும் அஞ்சுகின்றான்; மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசைப்படுகின்றான். இவர்களிடம் கேளும்: “அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் சிறந்தவனா?) அல்லது, எவர், மறுமையைப் பயந்து தன் இரட்சகனின் அருளை ஆதரவுவைத்து, இரவு காலங்களில் சிரம் பணிந்தவராகவும், நின்றவராகவும் (அல்லாஹ்வை) வணங்கிகொண்டிருக்கின்றாரோ அவரா?” அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? (இதனைக்கொண்டு) நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே “என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Is one who is devoutly obedient during periods of the night, prostrating and standing [in prayer], fearing the Hereafter and hoping for the mercy of his Lord, [like one who does not]? Say, "Are those who know equal to those who do not know?" Only they will remember [who are] people of understanding.
(நபியே!) நீர் கூறும்: “ஈமான் கொண்ட நல்லடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு பயபக்தியாக இருங்கள்; இவ்வுலகில் அழகாய் நன்மை செய்தோருக்கு அழகிய நன்மையே கிடைக்கும் - அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது; பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘நம்பிக்கைகொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே கொடுக்கப்படும்.
IFT
(நபியே!) கூறுவீராக: “நம்பிக்கைக்கொண்டிருக்கின்ற என் அடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு அஞ்சுங்கள். எவர்கள் இவ்வுலகில் நன்னடத்தையைக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு நன்மை இருக்கிறது. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“விசுவாசங்கொண்டோரான என்னுடைய (நல்) அடியார்களே! உங்கள் இரட்சகனை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், இவ்வுலகத்தில் நன்மை செய்தோருக்கு நன்மையுண்டு, இன்னும், அல்லாஹ்வுடைய பூமி விசாலமானது, பொறுமையாளர்கள், தங்களுடைய கூலியை நிறைவு செய்யப்படுதெல்லாம் கணக்கின்றியேதான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "O My servants who have believed, fear your Lord. For those who do good in this world is good, and the earth of Allah is spacious. Indeed, the patient will be given their reward without account [i.e., limit]."
وَاُمِرْتُநான் கட்டளையிடப் பட்டுள்ளேன்لِاَنْ اَكُوْنَநான் இருக்க வேண்டும்اَوَّلَமுதலாமவனாகالْمُسْلِمِيْنَமுஸ்லிம்களில்
வ உமிர்து லி அன் அகூன அவ்வலல் முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
“அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நீர் கூறுவீராக).
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்''
IFT
மேலும், நானே எல்லோருக்கும் முதலில் முஸ்லிமாக (இறைவனுக்கு அடிபணிந்தவனாக) இருக்க வேண்டும் என எனக்குப் பணிக்கப்பட்டுள்ளது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து நடப்போரில் முதன்மையானவனாக நான் இருக்கவேண்டுமென்றும் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக!)
Saheeh International
And I have been commanded to be the first [among you] of the Muslims."
“ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக: “தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கியாம நாளில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள் தாம் நிச்சயமாகப் பெரும் நஷ்டவாளிகள்; அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்க.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள். (ஆகவே, அதற்குரிய தண்டனையை அடைவீர்கள்.)'' “மெய்யாகவே நஷ்டமடைந்தவர்கள் யாரென்றால், (இறைவனுக்கு மாறுசெய்து) தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமையில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள்தான். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் தெளிவான நஷ்டம் என்று (நபியே) கூறுவீராக.
IFT
நீங்கள் அவனை விடுத்து யார் யாரையெல்லாம் விரும்புகின்றீர்களோ அவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக: “மறுமை நாளில் யார் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் இழப்பிற்குள்ளாக்கினார்களோ, அவர்கள்தாம் உண்மையில் திவால் ஆனவர்கள்.” நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்! இதுதான் அப்பட்டமான திவால் ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அவனையன்றி நீங்கள் நாடியவற்றை நீங்கள் வணங்கிக் கொள்ளுங்கள், (அதற்குரிய வேதனைப் பெறுவீர்கள்,) “நிச்சயமாக நஷ்டவாளிகள், கியாமத்து நாளில் தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டார்களே அத்தகையவர்கள் தாம், அதுவே தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
So worship what you will besides Him." Say, "Indeed, the losers are the ones who will lose themselves and their families on the Day of Resurrection. Unquestionably, that is the manifest loss."
லஹும் மின் Fபவ்கிஹிம் ளுலலும் மினன் னாரி வ மின் தஹ்திஹிம் ளுலல்; தாலிக யுகவ் விFபுல் லாஹு Bபிஹீ 'இBபாதஹ்; யா 'இBபாதி Fபத்தகூன்
முஹம்மது ஜான்
(மறுமை நாளில்) இவர்களுக்கு மேலே நெருப்பிலான தட்டுகளும், இவர்களின் கீழும் (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும்; இவ்வாறு அதைக்கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான்; “என் அடியார்களே! என்னிடம் நீங்கள் பயபக்தியுடன் இருங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(மறுமை நாளில்) ‘‘இவர்களின் (தலைக்கு) மேல் இருந்தும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின்) கீழ் இருந்தும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்'' இதைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை பயமுறுத்துகிறான். ‘‘என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்''
IFT
அவர்கள் மீது நெருப்புக்குடைகள் மேலிருந்தும், கீழிருந்தும் மூடியிருக்கும். இத்தகைய முடிவைக் குறித்துதான் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகின்றான். எனவே, என் அடியார்களே! என் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமை நாளில்) அவர்களுக்கு, அவர்களின் மேலிருந்து நெருப்பிலான தட்டுகளும், அவர்களுக்குக் கீழிலிருந்து (நெருப்பிலான) தட்டுகளும் இருக்கும், (நரகத்தின் நிலை பற்றிக்கூறப்பட்ட) அது, அதனைக் கொண்டு, அல்லாஹ் தன் அடியார்களை பயமுறுத்துகிறான், என் அடியார்களே! (பாவங்களைத் தவிர்ப்பதன்மூலம்) என்னை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.
Saheeh International
They will have canopies [i.e., layers] of fire above them and below them, canopies. By that Allah threatens [i.e., warns] His servants. O My servants, then fear Me.
எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே,) ‘‘எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே முன்னோக்குகிறார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. (ஆகவே,) (நபியே!) நீர் எனது (நல்ல) அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக.''
IFT
ஆனால் (இதற்கு மாறாக) எவர்கள் தாஃகூத்துக்கு* அடிபணிவதைத் தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட்டார்களோ அவர்களுக்கு நற்செய்தி இருக்கிறது. எனவே அந்த அடியார்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி அறிவித்து விடுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஷைத்தான்களை_அவர்களை வணங்குவதைத் தவிர்த்து_(விலகி முற்றிலும்) அல்லாஹ்வின் (வணக்கத்தின்)பால் திரும்பிவிட்டார்களே அத்தகையோர்_அவர்களுக்குத் தான் நன்மாராயம் உண்டு, ஆகவே, (நபியே!) என் அடியார்களுக்கு நீர் நன்மாராயம் கூறுவீராக!
Saheeh International
But those who have avoided ṭaghūt, lest they worship it, and turned back to Allah - for them are good tidings. So give good tidings to My servants
அவர்கள் சொல்லை - நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் எத்தகையவர்கள் என்றால், (குர்ஆனாகிய இப்)பேச்சை செவியுற்று, அதில் மிக அழகியதை பின்பற்றி நடக்கின்றனர். இவர்களையே, அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகிறான். இவர்கள்தான் (உண்மையில்) அறிவுடையவர்கள் ஆவார்கள்.
IFT
அவர்கள் எத்தகையவர்கள் எனில், சொல்வதை ஆழ்ந்து கவனமாகக் கேட்டு அவற்றின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுகின்றவர்கள். இத்தகையவர்களுக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கிறான். அவர்களே விவேகம் உடையவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், சொல்லை செவியுறுவார்கள், பின்னர் அதில் மிக அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் அவர்களை நேர் வழியில் செலுத்திவிட்டான், இன்னும் அவர்கள் தாம் அறிவுடையோர்.
Saheeh International
Who listen to speech and follow the best of it. Those are the ones Allah has guided, and those are people of understanding.
(நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டதோ, நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடமுடியுமா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘‘எவன் (பாவம் செய்து அவன்) மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டதோ அவனா (நேர்வழி பெற்றவர்களுக்கு சமமாவான்)? (அவன் நரகம் சென்றே தீருவான்.) நரகத்திலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடுவீரா?''
IFT
(நபியே!) எவன் மீது தண்டனைக்கான தீர்ப்பு உறுதியாகிவிட்டதோ அவனை யாரால் காப்பாற்ற முடியும்? நெருப்பில் வீழ்ந்துவிட்டிருப்பவனை உம்மால் காப்பாற்ற முடியுமா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகிவிட்டதோ அவனா? (இரட்சகனை பயந்தவனைப் போன்றவன்?) (நரக) நெருப்பில் (செல்ல) இருக்கும் அவனை நீர் காப்பாற்றிவிடுவீரா?
Saheeh International
Then, is one who has deserved the decree of punishment [to be guided]? Then, can you save one who is in the Fire?
லாகினில் லதீனத் தகவ் ரBப்Bபஹும் லஹும் குரFபும் மின் Fபவ்கிஹா குரFபும் மBப்னிய்யதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; வஃதல் லாஹ்; லா யுக்லிFபுல் லாஹுல் மீ'ஆத்
முஹம்மது ஜான்
ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடக்கிறார்களோ அவர்களுக்கு, (சொர்க்கத்தில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாறமாட்டான்.
IFT
ஆயினும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்காக கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், தங்கள் இரட்சகனுக்கு அஞ்சி நடக்கின்றார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு (சுவனபதியில் அடுக்கடுக்காக) மாளிகைகள் உண்டு, அவைகளுக்கு மேலும் கட்டப்பட்ட மாளிகைகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதியாகும், அல்லாஹ் (தன்னுடைய) வாக்குறுதியில் மாறமாட்டான்.
Saheeh International
But those who have feared their Lord - for them are chambers, above them chambers built high, beneath which rivers flow. [This is] the promise of Allah. Allah does not fail in [His] promise.
நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் - நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘‘நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான். பின்னர், அதைக் கொண்டு பல நிறங்களையுடைய (பலவகைப்) பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர், அவை (கருக்கொண்டு) மஞ்சள் நிறமாக இருக்கக் காண்கிறீர்கள். பின்னர், அதைக் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நல்ல படிப்பினை இருக்கிறது.''
IFT
நீங்கள் காணவில்லையா என்ன? அல்லாஹ் வானத்திலிருந்து நீரைப் பொழிந்து அதனை அருவிகளாகவும், ஊற்றுகளாகவும், நதிகளாகவும் பூமியில் ஓடச் செய்தான். பின்னர் அந்த நீரின் வாயிலாக பல்வேறுபட்ட பயிர் வகைகளை விதவிதமான நிறங்களில் அவன் வெளிப்படுத்துகின்றான். பிறகு, அந்தப் பயிர்கள் முதிர்ந்து காய்ந்து விடுகின்றன. அப்போது அவை மஞ்சளித்துப் போவதை நீர் காண்கிறீர். இறுதியில் அல்லாஹ் அவற்றைப் பதராக்கிவிடுகின்றான். உண்மையில் விவேகம் உடையவருக்கு இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ், வானத்திலிருந்து (மழை) நீரை இறக்கி அதனைப் பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான், பின்னர், அதனைக் கொண்டு பல வேளாண்மை(ப்பயிர்)களை_ அதன் நிறங்கள் மாறுபட்டவையாக இருக்க அவன் வெளிப்படுத்துகின்றான், பின்னர் உளர்ந்து, அவை மஞ்சள் நிறமடைவதை நீர் காண்கின்றீர், பின்னர், அதனை(க்காய்ந்த) சருகுகளாக்கிவிடுகின்றான், நிச்சயமாக இதில், அறிவுடையோர்களுக்கு படிப்பினை இருக்கிறது.
Saheeh International
Do you not see that Allah sends down rain from the sky and makes it flow as springs [and rivers] in the earth; then He produces thereby crops of varying colors; then they dry and you see them turned yellow; then He makes them [scattered] debris. Indeed in that is a reminder for those of understanding.
அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்; (ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை - நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் - இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவருடைய உள்ளத்தை இஸ்லாமை ஏற்க அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கிறார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் (இறுகி) கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
IFT
எவருடைய நெஞ்சத்தை அல்லாஹ் இஸ்லாத்திற்காகத் திறந்துவிட்டிருக்கின்றானோ, மேலும் எவர் தன்னுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ஒளியில் நடந்து கொண்டிருக்கின்றாரோ (அவர் இவற்றிலிருந்து எந்தப் படிப்பினையும் பெறாத மனிதனைப் போன்று ஆக முடியுமா?) அல்லாஹ்வின் நல்லுரைகளுக்கு எதிராக எவர்களுடைய உள்ளம் இன்னும் அதிகமாக இறுகிவிட்டதோ, அவர்களுக்குக் கேடுதான்! அத்தகையவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ் எவருடைய இதயத்தை இஸ்லாத்திற்காக (அதை ஏற்பதற்கு) விசாலமாக்கி வைத்திருக்கின்றானோ அவரா? (எவருடைய இதயம் அதை ஏற்பதிலிருந்து சுருங்கி இறுகிவிட்டதோ அவரைப் போன்று ஆவார்?) அவர் (அதன் காரணமாக) தன் இரட்சகனிடமிருந்துள்ள பிரகாசத்தின் மீது இருக்கிறார், ஆகவே, அல்லாஹ்வை நினைவு கூருவதைவிட்டும் (விலகி) எவர்களின் இதயங்கள் (இறுகி) கடினமாகிவிட்டனவோ அவர்களுக்குக் கேடுதான், அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்(தான்) இருக்கின்றனர்.
Saheeh International
So is one whose breast Allah has expanded to [accept] Islam and he is upon [i.e., guided by] a light from his Lord [like one whose heart rejects it]? Then woe to those whose hearts are hardened against the remembrance of Allah. Those are in manifest error.
அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன; தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து - விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன - இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் மிக அழகான விஷயங்களையே (இந்த வேதத்தில்) இறக்கி இருக்கிறான். (இதிலுள்ள வசனங்களுக்கிடையில் முரண்பாடில்லாமல்)ஒன்றை மற்றொன்று ஒத்ததாகவும் (மனதில் பதிவதற்காக ஒரே விஷயத்தை) திரும்பத் திரும்பவும் கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ, (அவர்கள் அதைக் கேட்ட உடன்) அவர்களுடைய தோல்கள் சிலிர்த்து விடுகின்றன. பின்னர், அவர்களுடைய தோல்களும் உள்ளங்களும் அல்லாஹ்வுடைய வேதத்தின் பக்கம் இளகி அதன்படி செயல்படுகின்றன. இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தான் விரும்பியவர்களை இதன் மூலம் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விட்டானோ அவனை நேர்வழி செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
IFT
அல்லாஹ் மிக அழகிய உரைகளை இறக்கியிருக்கின்றான்; ஒரு வேதத்தை! அதன் எல்லாப் பகுதிகளும் ஒரே சீராக உள்ளன. மேலும், அதில் கருத்துகள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கிறது. பின்னர், அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன. இது அல்லாஹ்வின் வழிகாட்டுதலாகும். அவன், தான் நாடுவோரை இதனைக் கொண்டு நேரிய வழியில் செலுத்துகின்றான். இனி எவருக்கு அல்லாஹ்வே நேர்வழி காட்டவில்லையோ, அவருக்கு நேர்வழி காட்டுவோர் வேறு எவரும் இலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் மிக்க அழகான செய்தியை வேதமாக (குர் ஆனாக) இறக்கி இருக்கின்றான், (இதிலுள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல்) ஒன்றை மற்றொன்று ஒத்ததாக திரும்பத் திரும்பக் கூறப்படுவதாக உள்ளன, தங்கள் இரட்சகனுக்குப் பயப்படுகிறார்களே அத்தகையோரின் தோல்(களின் உரோமங்)கள் (அதனை கேட்ட மாத்திரத்தில்) சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களுடைய தோல்களும், இதயங்களும் அல்லாஹ்வை நினைவு கூர்வதின்பால் இளகுகின்றன. அதுவே அல்லாஹ்வுடைய நேர் வழியாகும், தான் நாடியவர்களை அவன் இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான், எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ, அவரை நேர் வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனும் இல்லை.
Saheeh International
Allah has sent down the best statement: a consistent Book wherein is reiteration. The skins shiver therefrom of those who fear their Lord; then their skins and their hearts relax at the remembrance [i.e., mention] of Allah. That is the guidance of Allah by which He guides whom He wills. And one whom Allah sends astray - for him there is no guide.
எவன் கியாம நாளின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக்கொண்டேனும் தடுத்துக் கொள்ள முற்படுகிறானோ அவன் (சுவர்க்க வாசியாக முடியுமா?) மேலும், அநியாயக் காரர்களுக்கு “நீங்கள் சம்பாதித்துக் கொண்டதை (தீவினைப் பயனை) அனுபவியுங்கள்” என்று கூறப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
எவன், மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக் கொண்டேனும் தடுத்துக் கொள்ளப் பிரயாசைப்படுபவனா (சொர்க்கவாசிக்கு சமமாவான்)? அநியாயக்காரர்களை நோக்கி நீங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலைச் சுவைத்துப் பாருங்கள் என்றுதான் கூறப்படும்.
IFT
இனி மறுமைநாளில் வேதனையின் கடும் தாக்குதலைத் தன் முகத்தில் தாங்கிக்கொள்ள வேண்டிய மனிதனுடைய மோசமான நிலையைக் குறித்து நீங்கள் என்ன கணிக்கிறீர்கள்? அப்படிப்பட்ட கொடுமைக்காரர்களிடம் அப்பொழுது கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர், மறுமை நாளில் தீய வேதனையைத் தம் முகத்தைக் கொண்டேனும் (தன்னைவிட்டு) தடுத்துக்கொள்ள முற்படுகிறாரோ அவரா? (சுவன வாசிக்குச் சமமாவார்?) இன்னும் அநியாயக்காரர்களிடம், “நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றை (அதன் தீய பலனை)ச் சுவைத்துப் பாருங்கள்” என்று கூறப்படும்.
Saheeh International
Then is he who will shield with his face the worst of the punishment on the Day of Resurrection [like one secure from it]? And it will be said to the wrongdoers, "Taste what you used to earn."
كَذَّبَபொய்ப்பித்தனர்الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும்فَاَتٰٮهُمُஆகவே, அவர்களுக்கு வந்ததுالْعَذَابُவேதனைمِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَஅவர்கள் உணராத விதத்தில்
கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fப அதாஹுமுல் 'அதாBபு மின் ஹய்து லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம் வசனங்களைப்) பொய்யாக்கினார்கள். ஆதலால், (வேதனை வருமென்பதை) அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில், வேதனை அவர்களை வந்தடைந்தது.
IFT
இவர்களுக்கு முன்பும் பலர் இதே போன்று பொய்யென வாதிட்டிருக்கிறார்கள். இறுதியில், அவர்கள் நினைத்தும் பார்த்திராத திசையிலிருந்து அவர்கள் மீது வேதனை வந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தோர் (நம் தூதர்களைப்) பொய்யாக்கினார்கள், ஆகவே, அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்துகொள்ளாத விதத்தில் வேதனை அவர்களை வந்தடைந்தது.
Saheeh International
Those before them denied, and punishment came upon them from where they did not perceive.
இவ்வாறு, இவ்வுலகில் அவர்களை இழிவை அனுபவிக்கும்படி அல்லாஹ் செய்தான்; (அவர்களுக்கு) மறுமையின் வேதனையோ மிகப்பெரிதாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
அப்துல் ஹமீது பாகவி
இவ்வுலக வாழ்க்கையிலும் இழிவையே அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்தான். மறுமையிலுள்ள வேதனையோ மிகப் பெரிது. (இதை) அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
IFT
பின்னர், அல்லாஹ் உலக வாழ்விலேயே இழிவினை அவர்கள் சுவைக்கச் செய்தான். மறுமையின் வேதனையோ, இதனைவிடக் கடுமையானதாகும்; அந்தோ! இந்த மக்கள் அறிந்திருந்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், இவ்வுலக வாழ்க்கயில் இழிவைச் சுவைக்குமாறு அவர்களை அல்லாஹ் செய்தான் அவர்கள், அறிந்துகொண்டிருப்பார்களாயின் மறுமையிலுள்ள வேதனை(யோ) மிகப் பெரிது (என்பதை அறிந்து கொள்வார்கள்).
Saheeh International
So Allah made them taste disgrace in worldly life. But the punishment of the Hereafter is greater, if they only knew.
அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்: ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கே அவன் வேலை செய்யவேண்டுமென்று) இழுபறி செய்து கொள்கின்றனர். மற்றொரு மனிதன் (அடிமைதான்; ஆனால், அவன்) ஒருவனுக்கு மட்டும் சொந்தமானவன். இவ்விருவரும் தன்மையால் சமமாவார்களா? (ஆகமாட்டார்கள் என்பதை அறிவீர்கள். ஆகவே, இதற்காக) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே (என்று துதி செய்வோமாக! இவ்வாறே பல தெய்வங்களை வணங்கும் ஒருவன், ஒரே அல்லாஹ்வை வணங்குபவனுக்கு சமமாக மாட்டான். எனினும்,) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை கூட) அறிந்து கொள்ளவில்லை.
IFT
அல்லாஹ் ஓர் உதாரணம் சொல்கின்றான்; ஒரு மனிதன் இருக்கின்றான். அவன் மீது உரிமை கொண்டாடுவதில் துர்குணமுடைய மனிதர்கள் பங்காளிகளாய் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவனைத் தத்தம் பக்கமாக இழுக்கின்றனர். மற்றொரு மனிதன் முழுக்க முழுக்க ஒரே உரிமையாளனுக்கே அடிமையாக இருக்கின்றான். என்ன, இவ்விருவரின் நிலையும் சமமாக முடியுமா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறியாமையில் கிடக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கருத்து வேற்றுமையுள்ள (தீய குணங்களைக் கொண்ட) பல கூட்டுக்காரர்களை கொண்ட ஒரு மனிதனையும், (எந்த கூட்டுக்காரர்களும் இல்லாது கலப்பற்றவாறு) ஒரே மனிதனுக்குச் சொந்தமான வேறு ஒரு மனிதனையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான், உதாரணத்தால் அவ்விருவரும் சமமாவார்களா? (சமமானவர்கள் அல்லர்!) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும், எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
Saheeh International
Allah presents an example: a man [i.e., slave] owned by quarreling partners and another belonging exclusively to one man - are they equal in comparison? Praise be to Allah! But most of them do not know.
எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் மீது பொய் கூறி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
IFT
எவன் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தானோ மேலும், உண்மை தன் எதிரில் வந்தபோது அதனையும் பொய்ப்படுத்தினானோ, அவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? என்ன, இத்தகைய நன்றி கொன்றவர்களுக்கு நரகில் தங்குமிடம் எதுவும் இல்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து, இன்னும் உண்மையை(யாகிய வேதத்தை)_அது தன்னிடம் வந்தபோது பொய்யாக்கியவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
Saheeh International
So who is more unjust than one who lies about Allah and denies the truth when it has come to him? Is there not in Hell a residence for the disbelievers?
وَالَّذِىْ جَآءَவந்தவரும்بِالصِّدْقِஉண்மையைக் கொண்டுوَصَدَّقَஇன்னும் உண்மை என்று ஏற்றார்بِهٖۤஅதைاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُتَّقُوْنَஇறையச்சம் உள்ளவர்கள்
அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உண்மையைக் கொண்டுவந்தவ(ராகிய நம் தூத)ரும், அதை உண்மை என்றே நம்பியவரும் ஆகிய இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்.
IFT
ஆனால், எந்த மனிதர் உண்மையைக் கொண்டு வந்தாரோ, மேலும், எவர்கள் அவரை உண்மையாளர் என்று ஏற்றுக்கொண்டார்களோ அப்படிப்பட்டவர்கள்தாம், வேதனையிலிருந்து தப்பிக்கக் கூடியவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உண்மையைக் கொண்டு வந்தவ(ராகிய நமது தூத)ரும், அதனை உண்மையென்றே (ஒப்புக்கொண்டு) ஏற்பவர்களும் (ஆகிய அத்தகையவர்கள் தாம் பயபக்தியாளர்கள்.
Saheeh International
And the one who has brought the truth [i.e., the Prophet (ﷺ] and [they who] believed in it - those are the righteous.
لِيُكَفِّرَஅகற்றி விடுவதற்காகاللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஅவர்களை விட்டும்اَسْوَاَகெட்டசெயல்களைالَّذِىْ عَمِلُوْاஅவர்கள் செய்தவற்றில்وَيَجْزِيَهُمْஇன்னும் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காகاَجْرَهُمْஅவர்களின் கூலியைبِاَحْسَنِமிக அழகிய முறையில்الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَஅவர்கள் செய்து வந்ததை விட
அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்த குற்றங்களையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்ததைவிட மிக அழகான விதத்தில் கொடுப்பான்.
IFT
அவர்கள் செய்து கொண்டிருந்த மிகத் தீமையான செயல்களை அல்லாஹ் அவர்களின் கணக்கிலிருந்து நீக்கிவிட வேண்டும்; மேலும், அவர்கள் ஆற்றிவந்த மிகச் சிறந்த செயல்களைக் கவனித்து அவர்களுக்குக் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏனெனில், அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயதை அல்லாஹ் அவர்களை விட்டும் நீக்கி (மன்னித்து) விட்டு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு மிக அழகானவற்றையும் (நற்) கூலியாக அவர்களுக்குக் கொடுப்பான்.
Saheeh International
That Allah may remove from them the worst of what they did and reward them their due for the best of what they used to do.
அலய்ஸல் லாஹு BபிகாFபின் 'அBப்தஹூ வ யுகவ்வி Fபூனக Bபில்லதீன மின் தூனிஹ்; வ மய் யுள்லிலில் லாஹு Fபமா லஹூ மின் ஹாத்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர்; மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவற்றைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீர் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
IFT
(நபியே!) அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவனில்லையா, என்ன? இவர்கள் அவனல்லாதவர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகிறார்கள். உண்மை யாதெனில், அல்லாஹ் எவனை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றானோ, அவனுக்கு வழிகாட்டக்கூடியவர் எவருமிலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தன் அடியாருக்கு அல்லாஹ் (ஒருவனே சகலவற்றிற்கும்) போதுமானவனாக இல்லையா? இன்னும், (நபியே!) அவர்கள் அவனல்லாத (அவர்களின் தெய்வங்களான)வற்றைக் கொண்டு உம்மை பயமுறுத்துகின்றனர், இன்னும், எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ அவரை, நேர் வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
Saheeh International
Is not Allah sufficient for His Servant [i.e., Prophet Muhammad (ﷺ]? And [yet], they threaten you with those [they worship] other than Him. And whoever Allah leaves astray - for him there is no guide.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக: “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்: அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். மேலும், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா)? (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக்கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்.''
IFT
வானங்களையும், பூமியையும் படைத்தது யார் என்று இவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று இவர்கள் பதிலுரைப்பார்கள். (இவர்களிடம்) கேளும். (உண்மை இதுவாயின்) அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கும் தெய்வங்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? அல்லாஹ் எனக்கு ஏதேனும் தீங்கு இழைக்க நாடினால் அந்தத் தீங்கிலிருந்து என்னை அவை காப்பாற்றி விடுமா? அல்லது அல்லாஹ் என்மீது கருணைபொழிய நாடினால் அந்தத் தெய்வங்களால் அவனுடைய கருணையைத் தடுத்து நிறுத்த முடியுமா? (சரி, இவர்களிடம்) கூறிவிடும்: “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; சார்ந்திருப்பவர்கள் அனைவரும் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று (நபியே!)) நீர் அவர்களைக் கேட்பீராயின், “அல்லாஹ்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள், (பின்னும் நபியே! அவர்களிடம்) “அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை பார்த்தீர்களா? அல்லாஹ் எனக்கு ஏதேனும் இடரை (உண்டாக்க) நாடினால், அவைகள் அவனது (நாட்டத்தால் எனக்கு ஏற்பட்ட) இடரை நீக்கிவிடக்கூடியவையா? அல்லது எனக்கு ஏதேனும் ஓர் அருளை அவன் நாடினால், அவனுடைய அருளை அவை தடுத்துவிடக்கூடியவையா?” என்று நீர் கேட்பீராக!” அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், (சகல காரியங்களையும் அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பவர்கள் அவன்மீதே முழுமையாக நம்பிக்கை வைப்பார்கள்” என்று கூறுவீராக!
Saheeh International
And if you asked them, "Who created the heavens and the earth?" they would surely say, "Allah." Say, "Then have you considered what you invoke besides Allah? If Allah intended me harm, are they removers of His harm; or if He intended me mercy, are they withholders of His mercy?" Say, "Sufficient for me is Allah; upon Him [alone] rely the [wise] reliers."
“என்னுடைய சமூகத்தாரே! உங்கள் நிலைமைக்குத் தக்கவாறு நீங்கள் (செய்ய வேண்டியதைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் (என் நிலைமைக்குத் தக்கவாறு செயல்) செய்து வருபவன் - ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், நபியே!) கூறுவீராக: ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் நிலைமையில் இருந்து கொண்டு நீங்கள் (செய்யக்கூடியதைச்) செய்து கொண்டிருங்கள். நானும் (என் நிலையிலிருந்து கொண்டு, நான் செய்யக் கூடியதை) செய்து வருவேன். (எவருடைய செயல் தவறு என்பதைப்) பின்னர், நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.''
IFT
(இவர்களிடம் தெளிவாகக்) கூறும்: “என் சமூகத்தாரே! நீங்கள் உங்கள் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருங்கள். நான் (என்னுடைய) பணியைச் செய்து கொண்டிருப்பேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய சமூகத்தாரே! உங்களுடைய வழி முறையின் மீதே நீங்கள் (செய்யக்கூடியதை) நீங்கள் செய்துகொண்டிருங்கள். (என்னுடைய வழியின் மீது) நிச்சயமாக நான்) செய்து வருபவன், ஆகவே, (எவருடைய செயல் சரியானது என்பதை அடுத்து) நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "O my people, work according to your position, [for] indeed, I am working; and you are going to know
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் மனிதர்களின் நன்மைக்காகவே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம் மீது இறக்கி வைத்தோம். ஆகவே, எவன் இதைப் பின்பற்றி நடக்கிறானோ, அது அவனுக்கே நன்று; எவன் (இதிலிருந்து) வழிதவறி விடுகிறானோ அவன், வழி தவறியது அவனுக்கே தீங்காக முடியும். (நபியே!) நீர் அவர்கள் மீது பொறுப்பாளர் அல்ல.
IFT
(நபியே!) நாம் மனிதர்கள் அனைவருக்காகவும் சத்தியத்துடனான இந்த வேதத்தை உம்மீது இறக்கியிருக்கின்றோம். இனி, யாரேனும் நேரிய வழியில் நடந்தால் அது அவருக்கே நன்மை தரும். யாரேனும் வழி தவறினாலும், வழி தவறியதன் தீயவிளைவு அவரையே சாரும். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நாம், மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டுள்ள (இவ்)வேதத்தை உம் மீது இறக்கினோம், ஆகவே, எவர் நேர்வழி பெற்று விடுகின்றாரோ அது அவருக்கே (நன்மை) ஆகும், எவர் (அதிலிருந்து) வழிகெட்டுவிடுகின்றரோ அவர் வழிகெடுவதெல்லாம் அவரின் மீதே (கேடாக) ஆகும், (நபியே!) நீர் அவர்களுக்காகப் பொறுப்பேற்றுக்கொள்பவரும் அல்லர்.
Saheeh International
Indeed, We sent down to you the Book for the people in truth. So whoever is guided - it is for [the benefit of] his soul; and whoever goes astray only goes astray to its detriment. And you are not a manager [i.e., authority] over them.
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம்வரை வாழ அவன் அவர்களிடமே அனுப்பிவிடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
IFT
அல்லாஹ்தான் மரணத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகின்றான். (அவ்வாறே) இதுவரை மரணிக்காதவர்களின் உயிர்களைத் தூக்கத்தின்போது கைப்பற்றுகின்றான். பிறகு, எவர்கள் மீது மரணத்தை விதிக்கின்றானோ, அவர்களின் உயிரைத் தடுத்து வைத்துக்கொள்கின்றான். மற்றவர்களின் உயிர்களை, ஒரு குறிப்பிட்ட தவணைவரை திருப்பி அனுப்புகின்றான்; சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் மாபெரும் சான்றுகள் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உயிர்களை_ அவை இறக்கும் பொழுதும், தம் நித்திரையிலும் இறப்பெய்யாதவற்றையும்_ அல்லாஹ்வே கைப்பற்றுகிறான், பின்னர், எதன் மீது மரணத்தை அவன் விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடமே) அவன் நிறுத்திக்கொள்கின்றான், மேலும், மற்றவற்றை குறிப்பிட்ட காலம் வரை (வாழ்வதற்காக) அவன் அனுப்பிவிடுகின்றான், சிந்தித்துப் பார்க்கக்கூடிய சமூத்தார்க்கு, நிச்சயமாக இதில் படிப்பினைகள் இருக்கின்றன.
Saheeh International
Allah takes the souls at the time of their death, and those that do not die [He takes] during their sleep. Then He keeps those for which He has decreed death and releases the others for a specified term. Indeed in that are signs for a people who give thought.
அமித் தகதூ மின் தூனில்லாஹி ஷுFப'ஆ'; குல் அவலவ் கானூ லா யம்லிகூன ஷய்'அவ் வலா யஃகிலூன்
முஹம்மது ஜான்
அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?” (என்று.)
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குச்) சிபாரிசு செய்பவர்கள் என்று (எண்ணி) எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? ‘‘அவை எதற்கும் சக்தி அற்றதாக, எதையும் அறியக்கூடிய உணர்ச்சி அற்றதாக இருந்தாலுமா (அவற்றை நீங்கள் உங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எடுத்துக் கொள்வீர்கள்)?'' என்று (நபியே!) அவர்களைக் கேட்பீராக.
IFT
என்ன, இவர்கள் இத்தகைய இறைவனை விட்டுவிட்டு மற்றவர்களைப் பரிந்துரையாளர்களாக எடுத்துக் கொண்டார்களா? அவர்களிடம் கேளும்: “அவர்களிடம் எந்த அதிகாரமும் இல்லை என்றாலும், அவர்கள் எதையும் புரியாமலிருந்தாலுமா பரிந்துரை செய்யப்போகிறார்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்கு)ப் பரிந்துரையாளர்களாக எடுத்துக் கொண்டார்களா? “அவர்கள் (காரியத்தில்) எதையும் சொந்தமாக்கிக் கொள்ளாதவர்களாகவும், (எதையும்) விளங்காதவர்களாகவும் இருந்தாலுமா?” என்று (நபியே! அவர்களை) நீர் கேட்பீராக!
Saheeh International
Or have they taken other than Allah as intercessors? Say, "Even though they do not possess [power over] anything, nor do they reason?"
“பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(மேலும் நபியே!) கூறுவீராக: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
IFT
கூறுவீராக: ஷஃபாஅத் பரிந்துரை முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன். பிறகு, நீங்கள் அவனிடமே திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னும் நபியே!) நீர் கூறுவீராக; ”பரிந்துரைகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.” (ஆகவே, அவனுடைய அனுமதியும், அவன் பொருத்தமுமின்றி அவனிடத்தில் ஒருவரும் பரிந்துரை செய்ய முடியாது) வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி (முழுவதும்) அவனுக்கே உரியது, பின்னர் (மறுமையில்) அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
Saheeh International
Say, "To Allah belongs [the right to allow] intercession entirely. To Him belongs the dominion of the heavens and the earth. Then to Him you will be returned."
மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன; மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்கள்) கூறப்பட்டாலோ, அவர்கள் சந்தோஷப்படுகின்றனர்.
IFT
ஏக அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்படுமாயின் மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் குமைய ஆரம்பிக்கின்றன. ஆனால், அவனை விடுத்து மற்றவர்களைப் பற்றிக் கூறப்படுமாயின் உடனே அவர்கள் மகிழ்ச்சியினால் பூரிப்படைகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (இவர்களின் கூட்டுக்காரர்களன்றி) அல்லாஹ்(வைமட்டும்)_ அவன் தனித்தவனாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையே அத்தகையோரின் இதயங்கள் (கோபத்தால்) சுருங்கிவிடுகின்றன, இன்னும், அவனையன்றி மற்றோர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால் அது சமயம் அவர்கள் மகிழ்வடைகின்றனர்.
Saheeh International
And when Allah is mentioned alone, the hearts of those who do not believe in the Hereafter shrink with aversion, but when those [worshipped] other than Him are mentioned, immediately they rejoice.
“அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: ‘‘எங்கள் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையில் நீ தீர்ப்பளிப்பாயாக!''
IFT
நீர் கூறும்: “இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிபவனே! நீயே உன்னுடைய அடிமைகளுக்கிடையே அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே! உன் அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் எதில் வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ, அதில் நீயே தீர்ப்பு வழங்குவாய்” (என்று நபியே!) நீர் கூறிவீராக!
Saheeh International
Say, "O Allah, Creator of the heavens and the earth, Knower of the unseen and the witnessed, You will judge between your servants concerning that over which they used to differ."
மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்த போதிலும் மறுமையின் கொடிய வேதனையில் இருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்து விடவே நிச்சயமாக விரும்புவார்கள். (எனினும், அது ஆகக்கூடியதல்ல) மேலும், அவர்கள் எதிர்பார்க்காததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்.
IFT
இந்தக் கொடுமைக்காரர்களிடம் பூமியிலுள்ள அனைத்துச் செல்வங்களும் இருந்த போதிலும், அவற்றுடன் இன்னும் அதே அளவு செல்வம் இருந்தாலும், மறுமைநாளில் கொடிய தண்டனையிலிருந்து தப்புவதற்காக அவை அனைத்தையும் ஈடாகக் கொடுத்திட அவர்கள் தயாராகிவிடுவார்கள். அவர்கள் என்றுமே நினைத்து கூடப் பார்க்காதவை அங்கு அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு முன்னால் வெளிப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அநியாயம் செய்துவிட்டார்களே அத்தகையோருக்கு பூமியிலுள்ள அனைத்துமிருந்து, அத்துடன் அது போன்றதும் (சொந்தமாக) இருந்திருந்தால், கொடிய வேதனையிலிருந்து (விடிவுதேடி தப்பித்துக் கொள்வதற்கு) மறுமை நாளில் அதை ஈடாகக் கொடுத்துவிடுவார்கள், அன்றியும், (அப்பொழுது) அவர்கள் எண்ணிப்பார்த்திராததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்.
Saheeh International
And if those who did wrong had all that is in the earth entirely and the like of it with it, they would [attempt to] ransom themselves thereby from the worst of the punishment on the Day of Resurrection. And there will appear to them from Allah that which they had not taken into account.
அன்றியும் அவர்கள் சம்பாதித்த தீமைகள் அவர்களுக்கு வெளியாகும், மேலும், எதைக் கொண்டு அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயல்களின் தீமைகள் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனையும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
IFT
அவர்களுடைய சம்பாதனையின் தீயவிளைவுகள் அனைத்தும் (அங்கு) அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதனைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கின்றார்களோ அது அவர்களை முழுமையாகச் சூழ்ந்துகொள்ளும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் சம்பாதித்தவற்றின் தீயவைகளும் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும், அன்றியும் அவர்கள் எதனைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
Saheeh International
And there will appear to them the evils they had earned, and they will be enveloped by what they used to ridicule.
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதனை ஏதும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கிறான். (அதை நீக்கி) அவனுக்கு நாம் ஒரு அருள் புரிந்தாலோ, ‘‘தான் அதை அடைந்ததெல்லாம் தன் அறிவின் சாமர்த்தியத்தால்தான்'' என்று கூறுகிறான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அதிகமானோர் இதை அறிந்து கொள்வதில்லை.
IFT
இதே மனிதனைக் கொஞ்சம் துன்பம் தொட்டுவிட்டால் அவன் நம்மை அழைக்கின்றான். பிறகு, நாம் அவனுக்கு நம் சார்பிலிருந்து அருட்கொடையை அளி(த்து மகிழ்வி)க்கும்போது, இது எனக்கு என்னுடைய அறிவின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றான். உண்மையில் இது ஒரு சோதனையாகும். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, மனிதனை ஏதேனும் துன்பம் தொட்டுவிடுமானால் (அதனை நீக்கிவிடுமாறு பிரார்த்தித்து) அவன் நம்மை அழைக்கின்றான், (அதனை நீக்கிய பின் நம்மிடமிருந்து) அவனுக்கு யாதோர் அருட்கொடையை நாம் கொடுத்தால், “இதை நான் கொடுக்கப்பட்டதெல்லாம் (என்) அறிவினால் தான்” என்று அவன் கூறுகிறான், அவ்வாறல்ல! அது (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும், எனினும், அவர்களில் பெரும்பாலனோர் (இதனை) அறியமாட்டார்கள்.
Saheeh International
And when adversity touches man, he calls upon Us; then when We bestow on him a favor from Us, he says, "I have only been given it because of [my] knowledge." Rather, it is a trial, but most of them do not know.
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறுதான் கூறிக்கொண்டிருந்தார்கள்; ஆயினும் அவர்கள் சம்பாதித்தது எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறுதான் கூறிக்கொண்டு இருந்தார்கள். எனினும், அவர்கள் சம்பாதித்து வந்ததில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்காமல் போய்விட்டது.
IFT
இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்களும் இதையே கூறினார்கள். ஆயினும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன்னிருந்தார்களே அத்தகையோரும் இதனைத் திட்டமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள், பின்னர், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தார்களே, அது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
Saheeh International
Those before them had already said it, but they were not availed by what they used to earn.
ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது; இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீமைகள்தான் அவர்களை வந்தடைந்தன. (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கிறார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீமைகள் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது.
IFT
பின்னர், தங்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் அவர்களைப் பீடித்துக்கொள்ளும். மேலும், அவர்களில் யார் கொடுமை புரிந்தார்களோ அவர்களையும் அவர்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் பிடித்துக் கொள்ளும்! அவர்கள் நம்மைத் தோல்வியுறச் செய்யக்கூடியவர்களல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் சம்பாதித்த தீயவைகள் அவர்களைப்பீடித்தன, மேலும், இவர்களில் அநியாயம் செய்தார்களே அத்தகையோர்_அவர்கள் சம்பாதித்ததன் தீயவைகள் அவர்களை வந்தடையும், அவர்கள் (அல்லாஹ்வை எதிலும்) இயலாமல் ஆக்ககூடியவர்களும் அல்லர்.
Saheeh International
And the evil consequences of what they earned struck them. And those who have wronged of these [people] will be struck [i.e., afflicted] by the evil consequences of what they earned; and they will not cause failure.
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவு (சம்பத்து)களை விசாலமாக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? ஈமான் கொள்ளும் மக்கள் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் திடமான அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
IFT
அல்லாஹ் தான் நாடுகின்றவர்க்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்க்குக் குறைவாகக் கொடுக்கின்றான் என்பதை இவர்கள் அறியவில்லையா? இதில் சான்றுகள் உள்ளன; நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு உணவை (சம்பத்துகளை) விரிவாக்குகின்றான், (தான் நாடியவர்களுக்கு) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? விசுவாசங்கொண்ட சமூத்தார்க்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
Saheeh International
Do they not know that Allah extends provision for whom He wills and restricts [it]? Indeed in that are signs for a people who believe.
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை உடையவன் ஆவான்.
IFT
(நபியே!) கூறுவீராக: “தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையற்றோராக நீங்கள் ஆகிவிடவேண்டாம், நிச்சயமாக அல்லாஹ்_(உங்களுடைய) பாவங்கள் யாவையும்_(நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்,) அவன் மன்னித்துவிடுவான், (ஏனென்றால்) நிச்சயமாக அவன் தான் மிக்க மன்னிகிறவன், மிகக்கிருபையுடையவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "O My servants who have transgressed against themselves [by sinning], do not despair of the mercy of Allah. Indeed, Allah forgives all sins. Indeed, it is He who is the Forgiving, the Merciful."
وَاَنِيْبُوْۤاஇன்னும் திரும்புங்கள்!اِلٰى رَبِّكُمْஉங்கள் இறைவன் பக்கம்وَاَسْلِمُوْاஇன்னும் முற்றிலும் பணிந்து விடுங்கள்لَهٗஅவனுக்குمِنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِيَكُمُஉங்களுக்கு வருவதற்குالْعَذَابُவேதனைثُمَّபிறகுلَا تُنْصَرُوْنَநீங்கள் உதவப்பட மாட்டீர்கள்
வ அனீBபூ இலா ரBப்Bபிகும் வ அஸ்லிமூ லஹூ மின் கBப்லி அ(ன்)ய் யா'தியகுமுல் 'அதாBபு தும்ம லா துன்ஸரூன்
முஹம்மது ஜான்
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
IFT
திரும்பி விடுங்கள், உங்கள் இறைவனின் பக்கம்! மேலும், அடிபணிந்து விடுங்கள் அவனுக்கு உங்கள்மீது வேதனை வருவதற்கு முன்பாகவே! பிறகு, எங்கிருந்தும் உங்களுக்கு உதவி கிடைக்காது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக உங்கள் இரட்சகன்பால் (தவ்பாச்செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள், அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்ப்படிந்தும் விடுங்கள், (வேதனை வந்துவிட்டால்,) பின்னர் (எவராலும்) நீங்கள் உதவி செய்யப்படமாட்டீர்கள்.
Saheeh International
And return [in repentance] to your Lord and submit to Him before the punishment comes upon you; then you will not be helped.
وَاتَّبِعُوْۤاஇன்னும் பின்பற்றுங்கள்اَحْسَنَமிக அழகியவற்றைمَاۤ اُنْزِلَஇறக்கப்பட்ட(து)اِلَيْكُمْஉங்களுக்குمِّنْ رَّبِّكُمْஉங்கள் இறைவனிடமிருந்துمِّنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِيَكُمُஉங்களுக்கு வருவதற்குالْعَذَابُவேதனைبَغْتَةًதிடீரெனوَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَۙநீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
வத்தBபி'ஊ அஹ்ஸன மா உன்Zஜில இலய்கும் மிர் ரBப்Bபிகும் மின் கBப்லி அய்யாதியகுமல் 'அதாBபு Bபக்தத(ன்)வ் வ அன்தும் லா தஷ்'உரூன்
முஹம்மது ஜான்
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான (இ)தைப் பின்பற்றுங்கள்.
IFT
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்பட்ட வேதத்தின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுங்கள்; நீங்கள் உணராதிருக்கும் நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்களிரட்சகனிடமிருந்து உங்களின் பக்கம் இறக்கிவைக்கப்பட்ட மிக்க அழகானவற்றையும் பின்பற்றுங்கள்:
Saheeh International
And follow the best of what was revealed to you from your Lord [i.e., the Qur’an] before the punishment comes upon you suddenly while you do not perceive,
“அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;
அப்துல் ஹமீது பாகவி
(உங்களில்) எவரும், ‘‘அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவற்றைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என் கேடே! நான் (இவற்றைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
IFT
இனி, “ஐயகோ! அல்லாஹ்வின் விஷயத்தில் நான் குறைபாடு செய்துவிட்டேனே! அது மட்டுமின்றி நான் பரிகாசம் செய்தவர்களுடனும் சேர்ந்துவிட்டேனே!” என்று புலம்பக்கூடிய அல்லது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்விற்கு நான் செலுத்தவேண்டியவற்றில் குறை செய்துவிட்டதன் மீது என்னுடைய கைசேதமே! இன்னும் நான் (உலகில்) பரிகாசம் செய்கிறவர்களில் இருந்தேனே” என்று எந்த ஒரு ஆத்மாவும் கூறாமலிருப்பதற்காகவும்.
Saheeh International
Lest a soul should say, "Oh, [how great is] my regret over what I neglected in regard to Allah and that I was among the mockers."
அவ் தகூல லவ் அன்னல் லாஹ ஹதானீ லகுன்து மினல் முத்தகீன்
முஹம்மது ஜான்
அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களில் - ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
அப்துல் ஹமீது பாகவி
அல்லது (உங்களில் எவரும்) ‘‘அல்லாஹ் எனக்கு நேரான வழியை அறிவித்திருந்தால், நானும் இறையச்சமுடையவர்களில் ஒருவனாகி இருப்பேன்!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
IFT
“அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் நானும் இறையச்சமுள்ளவர்களில் ஒருவனாக இருந்திருப்பேனே!” என்று புலம்பக்கூடிய,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது “அல்லாஹ் எனக்கு நேர் வழிகாட்டியிருந்தால் நான் பயபக்தியுடையவர்களில் (ஒருவனாக) ஆகி இருப்பேன்!” என்று கூறாமலிப்பதற்காகவும்_
Saheeh International
Or [lest] it say, "If only Allah had guided me, I would have been among the righteous."
اَوْஅல்லதுتَقُوْلَஅது சொல்லாமல் இருப்பதற்காகحِيْنَ تَرَىஅது கண்ணால் பார்க்கும் நேரத்தில்الْعَذَابَவேதனையைلَوْ اَنَّ لِىْ كَرَّةًநிச்சயமாக எனக்கு திரும்பி வரமுடிந்தால்فَاَكُوْنَநானும் ஆகிவிடுவேன்مِنَ الْمُحْسِنِيْنَநல்லவர்களில்
அவ் தகூல ஹீன தரல் 'அதாBப லவ் அன்ன லீ கர்ரதன் Fப அகூன மினல் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
அல்லது: வேதனையைக் கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
அப்துல் ஹமீது பாகவி
அல்லது, (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் ‘‘(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நல்லவர்களில் ஆகிவிடுவேன்'' என்று கூறாமல் இருப்பதற்காகவும் (உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவன் இறக்கிய வேதத்தை பின்பற்றுங்கள்).
IFT
அல்லது, வேதனையைப் பார்க்கும் நேரத்தில் “அந்தோ! மற்றொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தால் நானும் நற்செயல் புரிவோர்களில் ஒருவனாய் ஆகிவிடுவேனே!” என்று புலம்பக்கூடிய நிலை எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது வேதனையை அது காணும் சமயத்தில், “நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பிச் செல்லுதல் இருக்குமானால், நான் நன்மை செய்வோரில் உள்ளவனாகி விடுவேன்” என்று கூறாமலிருப்பதற்காகவும்_
Saheeh International
Or [lest] it say when it sees the punishment, "If only I had another turn so I could be among the doers of good."
بَلٰىஇல்லைقَدْதிட்டமாகجَآءَتْكَஉன்னிடம் வந்தனاٰيٰتِىْஎனது வசனங்கள்فَكَذَّبْتَஆனால், நீ பொய்ப்பித்தாய்بِهَاஅவற்றைوَاسْتَكْبَرْتَஇன்னும் பெருமை அடித்தாய்وَكُنْتَஇன்னும் நீ ஆகி இருந்தாய்مِنَ الْكٰفِرِيْنَநிராகரிப்பவர்களில்
(பதில் கூறப்படும்:) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.”
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) ‘‘ஆம்! மெய்யாகவே என் வசனங்கள் உன்னிடம் வந்தன, நீ அவற்றைப் பொய்யாக்கினாய், கர்வம் கொண்டாய், அதை நிராகரிப்பவர்களில் இருந்தாய்.'' (என்று கூறுவான்.)
IFT
(அப்பொழுது அவனுக்கு இந்தப் பதில் கிடைக்கும்:) “அவ்வாறல்ல...! என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்திருந்தன அல்லவா? அவற்றை நீ பொய் என்று கூறினாய். மேலும், தற்பெருமை கொண்டாய்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏன் இல்லை, “திட்டமாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன, பின்னர் நீ அவற்றைப் பொய்யாக்கினாய்; கர்வமும் கொண்டாய், (அதனை) நிராகரிப்பவர்களில் உள்ளவனாகவும் இருந்தாய்” (என்று அல்லாஹ் கூறுவான்).
Saheeh International
But yes, there had come to you My verses, but you denied them and were arrogant, and you were among the disbelievers.
அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். கர்வம் கொண்ட இவர்கள் செல்லுமிடம் நரகத்தில் இல்லையா?
IFT
(இன்று) எவர்கள் இறைவன் மீது பொய் புனைந்துரைக்கின்றார்களோ, அவர்களின் முகங்கள் மறுமைநாளில் கறுத்துப்போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்தவர்களுக்கு நரகம் போதிய தங்குமிடமாக இல்லையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே அத்தகையோரை_அவர்களுடைய முகங்கள் மறுமை நாளில் கறுப்பாக்கப்பட்டவையாக (இருப்பதை) நீர் காண்பீர், கர்வங்கொண்டிருந்தவர்களுக்குத் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
Saheeh International
And on the Day of Resurrection you will see those who lied about Allah [with] their faces blackened. Is there not in Hell a residence for the arrogant?
எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு ஈடேற்றுகிறான்; அவர்களைத் தீங்கும் தொடாது; அவர்கள் துக்கமடையவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (பாவங்களிலிருந்து) முற்றிலும் (முழுமையாக) விலகிக் கொண்டார்களோ அவர்களை ஒரு தீங்கும் அணுகாது அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
IFT
(இதற்கு மாறாக) எவர்கள் இங்கு இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ, அதன் விளைவாய் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி வாய்ப்புகள் நிமித்தம் அவர்களுக்கு அல்லாஹ் ஈடேற்றம் அளிப்பான். அவர்களை எந்தத் தீங்கும் அணுகாது. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அல்லாஹ்வை) பயந்து (பாவம் செய்வதிலிருந்து விலகிக்) கொண்டார்களே அத்தகையோரை_ அவர்களின் வெற்றியைக் கொண்டு அல்லாஹ் ஈடேற்றுவான், தீமை அவர்களைத் தொடாது, அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள்.
Saheeh International
And Allah will save those who feared Him by their attainment; no evil will touch them, nor will they grieve.
வானங்களினுடையவும், பூமியினுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன; ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை, நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தாம் நஷ்டவாளிகள்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமியிலுள்ள (பொக்கிஷம் முதலிய)வற்றின் சாவிகள் அவனிடமே இருக்கிறது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களை எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்கள்!
IFT
வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இழப்புக்குரியவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்கள் மற்றும் பூமியின் (களஞ்சியங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன, இன்னும் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_அவர்கள் தாம் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாவர்.
Saheeh International
To Him belong the keys of the heavens and the earth. And they who disbelieve in the verses of Allah - it is those who are the losers.
வ லகத் ஊஹிய இலய்க வ இலல் லதீன மின் கBப்லிக ல இன் அஷ்ரக்த ல யஹ்Bபதன்ன 'அமலு க வ லதகூனன்ன மினல் காஸிரீன்
முஹம்மது ஜான்
அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், “நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்” (என்பதுவேயாகும்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கும், (நபிமார்களின்) உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது: (அது என்ன வென்றால், அல்லாஹ்வுக்கு) நீர் இணைவைத்தால், உமது நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்.
IFT
(நீர் இவ்விஷயத்தை இவர்களுக்குத் தெளிவுபடக்கூறிவிட வேண்டும்:) உமக்கும், உமக்கு முன் வாழ்ந்து சென்ற அனைத்து நபிமார்களுக்கும் இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டுள்ளது; நீர் இறைவனுக்கு இணைவைத்தால், உம்முடைய செயல் வீணாகிப் போய்விடும்; நீர் நிச்சயமாக நஷ்டமடைந்தவராகி விடுவீர்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) “நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்துவிடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர்” என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது.
Saheeh International
And it was already revealed to you and to those before you that if you should associate [anything] with Allah, your work would surely become worthless, and you would surely be among the losers.
وَمَا قَدَرُوْاஅவர்கள் கண்ணியப்படுத்தவில்லைاللّٰهَஅல்லாஹ்வைحَقَّமுறையில்قَدْرِهٖஅவனை கண்ணியப்படுத்தவேண்டியۖ وَالْاَرْضُபூமிجَمِيْعًاஅனைத்தும்قَبْضَتُهٗஅவனது கைப்பிடியில்يَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்وَالسَّمٰوٰتُஇன்னும் வானங்கள்مَطْوِيّٰتٌۢசுருட்டப்பட்டதாக இருக்கும்بِيَمِيْنِهٖ ؕஅவனதுவலக்கையில்سُبْحٰنَهٗஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَتَعٰلٰىஇன்னும் அவன் மிக உயர்ந்தவன்عَمَّا يُشْرِكُوْنَஅவர்கள் இணைவைப்பதை விட்டு
அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன்.
IFT
இந்த மக்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவேயில்லை. (அவனுடைய நிறைவான வல்லமையின் நிலை என்னவெனில்) மறுமைநாளில் பூமி முழுவதும் அவனின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனுடைய வலக்கையில் சுருட்டப்பட்டு இருக்கும். அவன் தூய்மையானவன்; உயர்ந்தவன்; இம்மனிதர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களை விட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அல்லாஹ்வை_அவனுடைய கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் மதிப்பளிக்கவில்லை, இன்னும், பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனுடைய (ஒரு கைப்) பிடியிலும், வானங்கள் (அனைத்தும்) அவனுடைய வலக்கையிலும் சுருட்டபட்டவையாயிருக்கும், அவன் தூயவன், இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
Saheeh International
They have not appraised Allah with true appraisal, while the earth entirely will be [within] His grip on the Day of Resurrection, and the heavens will be folded in His right hand. Exalted is He and high above what they associate with Him.
ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள்.
IFT
மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மடிந்து வீழ்வார்கள். ஆனால், அல்லாஹ் யாரை உயிருடன் விட்டு வைக்க நாடியிருந்தானோ அவர்களைத் தவிர! பின்னர் மற்றொரு எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஸுர்(குழல்) ஊதப்படும், பின்னர் வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும்_ அல்லாஹ் நாடியவர்களைத் தவிர_ மூர்ச்சித்துச் சித்தமிழந்து விழுந்து) விடுவார்கள், பிறகு அதில் மறுமுறை ஊதப்படும், அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்) பார்ப்பவர்களாக (யாவரும் உயிர் பெற்று) எழுந்து நிற்பார்கள்.
Saheeh International
And the Horn will be blown, and whoever is in the heavens and whoever is on the earth will fall dead except whom Allah wills. Then it will be blown again, and at once they will be standing, looking on.
மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்; இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங்களையும் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
IFT
பூமி தன் இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும்; வினைச் சுவடிகள் கொண்டு வந்து வைக்கப்படும்; இறைத்தூதரும் அனைத்துச் சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள். மக்கள் மத்தியில் முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமி, தன் இரட்சகனின் “ஒளி”யைக் கொண்டு பிரகாசித்தும்விடும், குறிப்பேடு வைக்கப்பட்டும்விடும், நபிமார்களும், (அவர்களுடைய மற்ற) சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள், அவர்களுக்கிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
Saheeh International
And the earth will shine with the light of its Lord, and the record [of deeds] will be placed, and the prophets and the witnesses will be brought, and it will be judged between them in truth, and they will not be wronged.
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில்) நிராகரித்தவர்கள் அனைவரும், கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டி வரப்படுவார்கள். (அதன் சமீபமாக) அவர்கள் வந்தவுடன், அதன் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்களில் இருந்து அல்லாஹ்வுடைய தூதர்கள் உங்களிடம் வரவில்லையா? உங்கள் இறைவனுடைய வசனங்களை அவர்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கவில்லையா? இந்நாளை நீங்கள் சந்திக்க வேண்டியதைப் பற்றி, அவர்கள் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (வந்தார்கள்)'' என்றே சொல்வார்கள். (ஆயினும், அது பயன் அளிக்காது. ஏனென்றால்,) நிராகரிப்பவர்களுக்கு வேதனையைப் பற்றிய தீர்ப்பு உறுதியாகி விட்டது.
IFT
(இந்தத் தீர்ப்புக்குப் பிறகு) நிராகரித்தவர்களாய் இருந்தவர்கள் நரகத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய் ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவ்வாறாக, அவர்கள் அந்நரகத்தை நெருங்கியதும், அதன் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்: “உங்களுடைய இறைவனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டக்கூடியவர்களும், நீங்கள் இந்த நாளைச் சந்திக்க வேண்டிய ஒரு நேரம் வரும் என்று உங்களை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களுமான இறைத்தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கவர்கள், “ஆம்! வந்திருந்தார்கள். ஆயினும், வேதனையின் தீர்ப்பு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது” என்று பதிலளிப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அந்நாளில்) நிராகரித்துக்கொண்டிருந்தார்களே அத்தகையோர் கூட்டங்கூட்டமாக நரகத்தின் பால் இழுத்துக்கொண்டு வரப்படுவார்கள், இறுதியாக அங்கு அவர்கள் வந்தடைந்தால் அதன் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும், அதன் காவலாளர்கள் அவர்களிடம், “உங்களிலிருந்து (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) தூதர்கள், உங்கள் இரட்சகனுடைய வசனங்களை அவர்கள் உங்களுக்கு ஓதிக்காண்பிப்பவர்களாகவும், இந்த உங்களுடைய நாளின் சந்திப்பைப்பற்றி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்றும் கேட்பார்கள். அ(தற்க)வர்கள், “ஆம் (வந்தார்கள்). எனினும், நிராகரிப்போரின் மீது வேதனை பற்றிய வாக்கு உறுதியாகி விட்டது” என்றே கூறுவார்கள்.
Saheeh International
And those who disbelieved will be driven to Hell in groups until, when they reach it, its gates are opened and its keepers will say, "Did there not come to you messengers from yourselves, reciting to you the verses of your Lord and warning you of the meeting of this Day of yours?" They will say, "Yes, but the word [i.e., decree] of punishment has come into effect upon the disbelievers."
“நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘‘நரகத்தின் வாயில்களில் நீங்கள் நுழைந்து விடுங்கள். என்றென்றுமே நீங்கள் அதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறப்படும். ஆகவே, கர்வம்கொண்ட (இ)வர்கள் தங்குமிடம் மகா கெட்டது.
IFT
அப்போது கூறப்படும்: “நுழையுங்கள் நரகத்தின் வாயில்களில்! நீங்கள் என்றென்றும் இங்குதான் கிடக்க வேண்டியுள்ளது! பெருமையடிப்பவர்களுக்கு இது எத்துணைக் கெட்ட தங்குமிடமாகும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே) “நரகவாயில்களில்_அவற்றில் நிரந்தரமானவர்களாகத் தங்கியிருக்கும் நிலையில் நீங்கள் நுழைந்து விடுங்கள்” என்று கூறப்படும், ஆகவே, பெருமையடித்துக்கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
Saheeh International
[To them] it will be said, "Enter the gates of Hell to abide eternally therein, and wretched is the residence of the arrogant."
எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் (அந்நாளில்) கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மீது ஸலாம் உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழ்ந்தார்களோ அவர்கள் சுவனத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய்க் கொண்டு செல்லப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: உங்கள் மீது ஸலாம் சாந்தி உண்டாகட்டும்! நீங்கள் நல்ல விதமாக இருங்கள். என்றென்றும் தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் இரட்சகனுக்குப் பயந்து (நடந்து) கொண்டிருந்தார்களே அத்தகையோர், (அந் நாளில்) கூட்டங் கூட்டமாகச் சுவர்க்கத்தின் பால் அழைத்துக்கொண்டு)ம் வரப்படுவார்கள். இறுதியாக அதன் வாயில்கள் (அவர்கள் வரும் முன்பே) திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு அவர்கள் வந்தடைந்து விட்டால் (மகிழ்ச்சியடைவார்கள்), மேலும், அதன் காவலாளர்கள் அவர்களிடம் “உங்களுக்கு சாந்தி உண்டாவதாக! நீங்கள் நல்லவர்களாகி விட்டீர்கள் ஆகவே, நீங்கள் இதில் நிரந்தரமானவர்களாகத் தங்கியிருக்கும் நிலையில் நுழைந்து விடுங்கள்” என்று கூறுவார்கள்.
Saheeh International
But those who feared their Lord will be driven to Paradise in groups until, when they reach it while its gates have been opened and its keepers say, "Peace be upon you; you have become pure; so enter it to abide eternally therein," [they will enter].
அதற்கு (சுவர்க்கவாசிகள்): “அல்ஹம்து லில்லாஹ்! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்து, சுவர்க்கத்தில் நாம் விரும்பும் இடமெல்லாம் சென்றிருக்க (அப்) பூமியை எங்களுக்கு உரிமையாக்கி வைத்தான்” என்று கூறுவார்கள். எனவே நன்மை செய்தோரின் கூலி (இவ்வாறு) நன்மையாகவே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பிய இடமெல்லாம் சென்றிருக்க அதன் பூமியை எங்களுக்குச் சொந்தமாக்கி வைத்தான்'' என்று கூறுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலி இவ்வாறு நன்மையாகவே முடியும்.
IFT
அப்போது அவர்கள் கூறுவார்கள்: “இறைவனுக்கே புகழ் அனைத்தும்! அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மைப்படுத்திக் காட்டினான். மேலும் எங்களை பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆகா! எத்தனை சிறந்த கூலி இருக்கிறது, செயல்படக்கூடியவர்களுக்கு!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான், சுவனபதியில் நாங்கள் நாடிய இடத்தில் நாங்கள் குடியிருக்க (அதன்) பூமியை எங்களுக்கு அனந்தரமாக்கியும் கொடுத்தான்” என்றும் கூறுவார்கள், எனவே நன்மைசெய்தோர்களின் கூலி, (இவ்வாறு) மிக நல்லதாகவே இருக்கிறது.
Saheeh International
And they will say, "Praise to Allah, who has fulfilled for us His promise and made us inherit the earth [so] we may settle in Paradise wherever we will. And excellent is the reward of [righteous] workers."
இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அந்நாளில்) வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து, துதி செய்தவண்ணம் ‘அர்ஷை' சூழ்ந்து நிற்பதை நீர் காண்பீர். அச்சமயம் அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்பட்டு, ‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சொந்தமானது'' என்று (அனைவராலும் துதி செய்து புகழ்ந்து) கூறப்படும்.
IFT
மேலும், நீர் காண்பீர்; அர்ஷைச்* சூழ்ந்த வண்ணம் வானவர்கள் தம் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள். மேலும், மக்களிடையே முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். புகழ் அனைத்தும் அகிலத்தார் அனைவரையும் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “அர்ஷை” சுற்றிச் சூழ்ந்தவர்களாக மலக்குகளை (நபியே! அந்நாளில்) நீர் காண்பீர், அவர்கள் தங்கள் இரட்சகனின் புகழைக் கொண்டு துதித்துக் கொண்டிருப்பார்கள், (சிலரை சுவனத்திற்கும், பலரை நரகத்திற்கும் செல்லுமாறு கட்டளையிட்டு) அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். “அகிலத்தார்க்கெல்லாம் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியவை” என்று கூறப்படும்.
Saheeh International
And you will see the angels surrounding the Throne, exalting [Allah] with praise of their Lord. And it will be judged between them in truth, and it will be said, "[All] praise to Allah, Lord of the worlds."