4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)

மதனீ, வசனங்கள்: 176

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِیْرًا وَّنِسَآءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَیْكُمْ رَقِیْبًا ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமனிதர்களே!اتَّقُوْاஅஞ்சுங்கள்رَبَّكُمُஉங்கள் இறைவனைالَّذِىْஎவன்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْ نَّفْسٍஓர் ஆன்மாவிலிருந்துوَّاحِدَةٍஒரேوَّخَلَقَஇன்னும் படைத்தான்مِنْهَاஅதிலிருந்துزَوْجَهَاஅவருடைய மனைவியைوَبَثَّஇன்னும் பரப்பினான்مِنْهُمَاஅவ்விருவரிலிருந்துرِجَالًاஆண்களைكَثِيْرًاஅதிகமானوَّنِسَآءً‌ ۚஇன்னும் பெண்களைوَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِىْஎவன்تَسَآءَلُوْنَஉங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள்بِهٖஅவனைக்கொண்டுوَالْاَرْحَامَ‌ ؕஇன்னும் இரத்தபந்தங்களைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلَيْكُمْஉங்கள் மீதுرَقِيْبًا‏கண்காணிப்பாளனாக
யா அய்யுஹன் னாஸுத் தகூ ரBப்Bபகுமுல் லதீ கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததி(ன்)வ் வ கலக மின்ஹா Zஜவ்ஜஹா வ Bபத் த மின்ஹுமா ரிஜாலன் கதீர(ன்)வ் வ னிஸா'ஆ; வத்தகுல் லாஹல்லதீ தஸா 'அலூன Bபிஹீ வல் அர்ஹாம்; இன்னல் லாஹ கான 'அலய்கும் ரகீBபா
முஹம்மது ஜான்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான்.
IFT
மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள், அவன் எத்தகையவனென்றால், உங்களை (யாவரையும்) ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான், இன்னும் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் பரவச்செய்தான், இன்னும், அல்லாஹ்வை-அவனை-க்கொண்டு (தமக்குரிய உரிமைகளை) நீங்கள் (ஒருவருக்கொருவர்) கேட்டுக்கொள்கிறீர்களே அத்தகையவனையும், மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களை (த்துண்டித்து விடுவதை)யும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
Saheeh International
O mankind, fear your Lord, who created you from one soul and created from it its mate and dispersed from both of them many men and women. And fear Allah, through whom you ask one another, and the wombs. Indeed Allah is ever, over you, an Observer.
وَاٰتُوا الْیَتٰمٰۤی اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِیْثَ بِالطَّیِّبِ ۪ وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ اِلٰۤی اَمْوَالِكُمْ ؕ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِیْرًا ۟
وَاٰ تُواஇன்னும் கொடுங்கள்الْيَتٰمٰٓىஅநாதைகளுக்குاَمْوَالَهُمْ‌செல்வங்களை/அவர்களுடையوَلَا تَتَبَدَّلُواமாற்றி விடாதீர்கள்الْخَبِيْثَகெட்டதைبِالطَّيِّبِநல்லதிற்கு பதிலாகوَلَا تَاْكُلُوْۤاவிழுங்காதீர்கள்اَمْوَالَهُمْ‌செல்வங்களை/அவர்களுடையاِلٰٓى اَمْوَالِكُمْ‌ؕஉங்கள்/செல்வங்கள்/உடன்اِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருக்கிறதுحُوْبًاபாவமாகكَبِيْرًا‏‏பெரும்
வ ஆதுல் யதாமா அம்வாலஹும் வலா ததBபத் தலுல் கBபீத Bபித்தய்யிBபி வலா த'குலூ அம்வாலஹும் இலா அம்வாலிகும்; இன்னஹூ கான ஹூBபன் கBபீரா
முஹம்மது ஜான்
நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்கள் பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
IFT
அநாதைகளுக்கு அவர்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள்; மேலும், அவர்களின் பொருள்களை உங்களின் பொருள்களோடு கலந்து உண்ணாதீர்கள்; திண்ணமாக இது பெரும் பாவமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நீங்கள் அநாதைகளுக்கு அவர்களுடைய பொருட்களை (அவர்கள் பிராயமடைந்த பின், குறைவின்றி அவர்களுக்கு)க் கொடுத்து விடுங்கள், (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் விடாதீர்கள், அவர்களுடைய பொருட்களையும் உங்களுடைய பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டும் விடாதீர்கள், நிச்சயமாக அது பெரும்பாவமாக இருக்கிறது.
Saheeh International
And give to the orphans their properties and do not substitute the defective [of your own] for the good [of theirs]. And do not consume their properties into your own. Indeed, that is ever a great sin.
وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِی الْیَتٰمٰی فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَلَّا تَعُوْلُوْا ۟ؕ
وَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்اَلَّا تُقْسِطُوْاநீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதைفِى الْيَتٰمٰىஅநாதைகள் விஷயத்தில்فَانْكِحُوْاமணம் புரியுங்கள்مَاஎவளைطَابَவிருப்பமாகி விட்டார்لَـكُمْஉங்களுக்குمِّنَ النِّسَآءِபெண்களிலிருந்துمَثْنٰىஇரண்டிரண்டாகوَثُلٰثَஇன்னும் மும்மூன்றாகوَرُبٰعَ‌ ۚஇன்னும் நான்கு நான்காகفَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்اَلَّا تَعْدِلُوْاநீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதைفَوَاحِدَةًஒருத்தியைاَوْஅல்லதுمَاஎவளைمَلَـكَتْசொந்தமாக்கியதுاَيْمَانُكُمْ‌ ؕஉங்கள் வலக்கரங்கள்ذٰ لِكَஇதுவேاَدْنٰٓىசுலபமாகும்اَلَّا تَعُوْلُوْاؕ‏நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு
வ இன் கிFப்தும் அல்லா துக்ஸிதூ Fபில் யதாமா Fபன்கிஹூ மா தாBப லகும் மினன் னிஸா'இ மத்னா வ துலாத வ ருBபா'அ Fப'இன் கிFப்தும் அல்லா தஃதிலூ Fபவாஹிததன் அவ் மா மலகத் அய்மானுகும்; தாலிக அத்னா அல்லா த'ஊலூ
முஹம்மது ஜான்
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாகவே நடந்துகொள்ள வேண்டும்.) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்). அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
IFT
அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்றப்) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளுங்கள், அவர்களுக்கிடையில், நீங்கள் நீதமாக நடக்க முடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணை (திருமணம் செய்து கொள்ளுங்கள்) அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க்கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்). நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு, இதுவே சுலப(மான வழியா)கும்.
Saheeh International
And if you fear that you will not deal justly with the orphan girls, then marry those that please you of [other] women, two or three or four. But if you fear that you will not be just, then [marry only] one or those your right hands possess [i.e., slaves]. That is more suitable that you may not incline [to injustice].
وَاٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً ؕ فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَیْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِیْٓـًٔا مَّرِیْٓـًٔا ۟
وَاٰ تُواகொடுங்கள்النِّسَآءَபெண்களுக்குصَدُقٰتِهِنَّமணக்கொடைகளை /அவர்களுடையنِحْلَةً‌  ؕகடமையாகفَاِنْ طِبْنَஅவர்கள் விரும்பினால்لَـكُمْஉங்களுக்குعَنْ شَىْءٍஒரு சிறிதைمِّنْهُஅதிலிருந்துنَفْسًاமனதால்فَكُلُوْهُஅதைப் புசியுங்கள்هَنِيْٓــٴًـــاஇன்பமாகمَّرِیْٓـــٴًﺎ‏மகிழ்ச்சியாக
வ ஆதுன் னிஸா'அ ஸது காதிஹின்ன னிஹ்லஹ்; Fப இன் திBப்ன லகும் 'அன் ஷய்'இம் மின்ஹு னFப்ஸன் Fபகுலூஹு ஹனீ'அம் மரீ'ஆ
முஹம்மது ஜான்
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை' (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம்.
IFT
மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமணக்கொடைகளை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள், அதிலிருந்து ஒரு சிறிதை, அவர்கள், (தங்கள்) மனமார உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதனை நீங்கள் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்.
Saheeh International
And give the women [upon marriage] their [bridal] gifts graciously. But if they give up willingly to you anything of it, then take it in satisfaction and ease.
وَلَا تُؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَكُمُ الَّتِیْ جَعَلَ اللّٰهُ لَكُمْ قِیٰمًا وَّارْزُقُوْهُمْ فِیْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟
وَلَا تُؤْتُواகொடுக்காதீர்கள்السُّفَهَآءَபுத்திக் குறைவானவர்களுக்குاَمْوَالَـكُمُசெல்வங்களை/உங்கள்الَّتِىْஎதுجَعَلَஆக்கினான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குقِيٰمًاவாழ்வாதாரமாகوَّارْزُقُوْهُمْஉணவளியுங்கள்فِيْهَاஅதில்/அவர்களுக்குوَاكْسُوْهُمْஇன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்குوَقُوْلُوْاகூறுங்கள்لَهُمْஅவர்களுக்குقَوْلًاசொல்லைمَّعْرُوْفًا‏நல்லது
வ லா து'துஸ் ஸுFபஹா'அ அம்வாலகுமுல் லதீ ஜ'அலல் லாஹு லகும் கியாம(ன்)வ்-வர்Zஜுகூஹும் Fபீஹா வக்ஸூஹும் வ கூலூ லஹும் கவ்லம் மஃரூFபா
முஹம்மது ஜான்
(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அநாதைகளின் பொருளுக்குப் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக!
IFT
மேலும், உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள பொருள்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள்; ஆனால், அப்பொருள்களிலிருந்து அவர்களுக்கு உண்ணவும், உடுக்கவும் அளியுங்கள்! மேலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிவுறுத்துங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அநாதைகளின் பொருளுக்குக் காரியஸ்தராக ஏற்பட்ட நீங்கள் அவர்களின்) வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமிருக்கும் (அவர்களுடைய) பொருட்களை, புத்திக் குறைவானவர்க(ளாக அவர்கள் இருந்தால், அவர்க)ளிடம் கொடுத்துவிட வேண்டாம், இன்னும் அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடை(களை)யும் அணிவியுங்கள், அவர்களுக்கு நல்ல வார்த்தைகளையே கூறுங்கள்.
Saheeh International
And do not give the weak-minded your property, which Allah has made a means of sustenance for you, but provide for them with it and clothe them and speak to them words of appropriate kindness.
وَابْتَلُوا الْیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَیْهِمْ اَمْوَالَهُمْ ۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ یَّكْبَرُوْا ؕ وَمَنْ كَانَ غَنِیًّا فَلْیَسْتَعْفِفْ ۚ وَمَنْ كَانَ فَقِیْرًا فَلْیَاْكُلْ بِالْمَعْرُوْفِ ؕ فَاِذَا دَفَعْتُمْ اِلَیْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَیْهِمْ ؕ وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟
وَابْتَلُواசோதியுங்கள்الْيَتٰمٰىஅநாதைகளைحَتّٰىۤஇறுதியாகاِذَا بَلَغُواஅவர்கள் அடைந்தால்النِّكَاحَ‌ ۚதிருமணத்தைفَاِنْ اٰنَسْتُمْநீங்கள் கண்டால்مِّنْهُمْஅவர்களிடம்رُشْدًاதெளிவான அறிவைفَادْفَعُوْۤاஒப்படையுங்கள்اِلَيْهِمْஅவர்களிடம்اَمْوَالَهُمْ‌ۚசெல்வங்களை/ அவர்களுடையوَلَا تَاْكُلُوْهَاۤசாப்பிடாதீர்கள் / அவற்றைاِسْرَافًاஅளவு கடந்துوَّبِدَارًاஇன்னும் அவரை அவசரமாகاَنْ يَّكْبَرُوْا‌ ؕஅவர்கள் பெரியவர்களாகுவதைوَمَنْஎவர்كَانَஇருக்கிறார்غَنِيًّاசெல்வந்தராகفَلْيَسْتَعْفِفْ‌ ۚஅவர் தவிர்க்கவும்وَمَنْஇன்னும் எவர்كَانَஇருக்கிறார்فَقِيْرًاஏழையாகفَلْيَاْكُلْபுசிக்கவும்بِالْمَعْرُوْفِ‌ ؕமுறையுடன்فَاِذَا دَفَعْتُمْநீங்கள் ஒப்படைத்தால்اِلَيْهِمْஅவர்களிடம்اَمْوَالَهُمْசெல்வங்களை/ அவர்களுடையفَاَشْهِدُوْاசாட்சியாக்குங்கள்عَلَيْهِمْ‌ ؕஅவர்கள் மீதுوَكَفٰىஇன்னும் போதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்حَسِيْبًا‏துல்லியமாக கணக்கெடுப்பவனாக
வBப்தலுல் யதாமா ஹத்தா இதா Bபலகுன் னிகாஹ Fப இன் ஆனஸ்தும் மின்ஹும் ருஷ்தன் Fபத் Fப'ஊ இலய்ஹிம் அம்வாலஹும் வலா த' குலூஹா இஸ்ராFப(ன்)வ் வ Bபிதாரன் அய் யக்Bபரூ; வ மன் கான கனிய்யன் Fபல்யஸ்தஃ FபிFப் வ மன் கான Fபகீரன் Fபல் ய' குல் Bபில்மஃரூFப்; Fப இதா தFபஃதும் இலய்ஹிம் அம்வாலஹும் Fப அஷ்-ஹிதூ 'அலய்ஹிம்; வ கFபா Bபில்லாஹி ஹஸீBபா
முஹம்மது ஜான்
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அநாதை(ச் சிறுவர்களுக்கு நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து அவர்)களைச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக்கூடிய) அறிவை (திறமையை) அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய செல்வங்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு அழித்து விடாதீர்கள். (அநாதைகளின் பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (அநாதையின் செல்வங்களிலிருந்து தனக்காக எதையும் பயன்பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவன். (ஆகவே, அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்.)
IFT
மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை சோதித்து வாருங்கள்! அவர்களிடம் (பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால், அவர்களுக்குரிய உடைமைகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்களின் உரிமைகளைக் கேட்டு)விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்! அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவோடு உண்ணலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கணக்கு கேட்பதற்கு அல்லாஹ் போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அநாதை(ச் சிறுவர்)களை அவர்கள் திருமண வயதையடையும் வரை (தொழில் முதலியவற்றில் ஈடுபடுத்தி, பழக்கிக், கல்வியும் கற்பித்துச்) சோதித்து வாருங்கள், (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள், அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருட்களையும் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்று (எண்ணி), அவர்களுடைய பொருட்களை அவசர அவசரமாகவும் அளவு கடந்தும் நீங்கள் தின்றுவிடாதீர்கள், இன்னும் (அநாதையின் பொருட்களையுடைய காரியஸ்தனாகிய) அவர் செல்வந்தனாக இருந்தால் (அதை நிர்வகிப்பதற்காக எதையும் தனக்காக எடுத்துக் கொள்ளாது!) தவிர்த்துக் கொள்ளவும், அவர் ஏழையாக இருந்தாலோ நியாயமான அளவு (அதிலிருந்து) அவரும் புசிக்கவும், மேலும், அவர்களுடைய பொருட்களை, நீங்கள் அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களுக்காகச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவன், (ஆகவே, அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்).
Saheeh International
And test the orphans [in their abilities] until they reach marriageable age. Then if you perceive in them sound judgement, release their property to them. And do not consume it excessively and quickly, [anticipating] that they will grow up. And whoever, [when acting as guardian], is self-sufficient should refrain [from taking a fee]; and whoever is poor - let him take according to what is acceptable. Then when you release their property to them, bring witnesses upon them. And sufficient is Allah as Accountant.
لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ۪ وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ؕ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟
لِلرِّجَالِஆண்களுக்குنَصِيْبٌஒரு பாகம்مِّمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்الْوَالِدٰنِபெற்றோர்وَالْاَقْرَبُوْنَஇன்னும் நெருங்கிய உறவினர்கள்وَلِلنِّسَآءِஇன்னும் பெண்களுக்குنَصِيْبٌஒரு பாகம்مِّمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்الْوَالِدٰنِபெற்றோர்وَالْاَقْرَبُوْنَஇன்னும் நெருங்கிய உறவினர்கள்مِمَّاஎதிலிருந்துقَلَّகுறைந்ததுمِنْهُஅதில்اَوْஅல்லதுكَثُرَ ؕஅதிகமானதுنَصِيْبًاபாகமாகمَّفْرُوْضًا‏கடமையாக்கப்பட்டது
லிர்ரிஜாலி னஸீBபும் மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன வ லின் னிஸா'இ னஸீBபும் மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன மிம்மா கல்ல மின்ஹு அவ் கதுர்; னஸீBபம் மFப்ரூளா
முஹம்மது ஜான்
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வான்ற) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்.
IFT
(மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்துக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இறந்துபோன) பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்றவை(களான பொருட்)களிலிருந்து ஆண்களுக்குப் பாகமுண்டு, (அவ்வாறே) பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்றவை(களான பொருட்)களிலிருந்து பெண்களுக்குப் பாகமுண்டு, (அவர்கள் விட்டுச்சென்ற சொத்து) குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருப்பினும் சரியே., (இது அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
Saheeh International
For men is a share of what the parents and close relatives leave, and for women is a share of what the parents and close relatives leave, be it little or much - an obligatory share.
وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟
وَاِذَا حَضَرَவந்தால்الْقِسْمَةَபங்கு வைக்கும்போதுاُولُوا الْقُرْبٰىஉறவினர்கள்وَالْيَتٰمٰىஇன்னும் அனாதைகள்وَالْمَسٰكِيْنُஇன்னும் ஏழைகள்فَارْزُقُوகொடுங்கள்هُمْஅவர்களுக்குمِّنْهُஅதிலிரு ந்துوَقُوْلُوْاஇன்னும் கூறுங்கள்لَهُمْஅவர்களுக்குقَوْلًاசொல்லைمَّعْرُوْفًا‏நல்லது
வ இதா ஹளரல் கிஸ்மத உலுல் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனு Fபர்Zஜுகூஹும் மின்ஹு வ கூலூ லஹும் கவ்லம் மஃரூFபா
முஹம்மது ஜான்
பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி)விடுங்கள்.
IFT
மேலும், பங்கீடு செய்யும்போது (வாரிசு அல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, வறியவர்களோ வந்தால் அச்சொத்திலிருந்து அவர்களுக்கும் சிறிது வழங்குங்கள்! மேலும், அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (பாகப்)பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (சொத்துக்கு உரிமையற்ற) உறவினரோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தையையும் கொண்டு ஆறுதல் கூறுங்கள்.
Saheeh International
And when [other] relatives and orphans and the needy are present at the [time of] division, then provide for them [something] out of it [i.e., the estate] and speak to them words of appropriate kindness.
وَلْیَخْشَ الَّذِیْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّیَّةً ضِعٰفًا خَافُوْا عَلَیْهِمْ ۪ فَلْیَتَّقُوا اللّٰهَ وَلْیَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟
وَلْيَخْشَபயப்படட்டும்الَّذِيْنَஎவர்கள்لَوْ تَرَكُوْاஅவர்கள் விட்டுச் சென்றால்مِنْஇருந்துخَلْفِهِمْஅவர்களுக்குப் பின்ذُرِّيَّةًஒரு சந்ததியைضِعٰفًاபலவீனர்கள்خَافُوْاபயப்படுவார்கள்عَلَيْهِمْஅவர்கள் மீதுفَلْيَتَّقُواஆகவே அவர்கள் அஞ்சட்டும்اللّٰهَஅல்லாஹ்வைوَلْيَقُوْلُواஇன்னும் அவர்கள் சொல்லட்டும்قَوْلًاசொல்லைسَدِيْدًا‏நேர்மையானது
வல்யக்-ஷல் லதீன லவ் தரகூ மின் கல்Fபிஹிம் துர்ரிய்யதன் ளி'ஆFபன் காFபூ 'அலய்ஹிம் Fபல்யத்தகுல் லாஹ வல்யகூலூ கவ்லன் ஸதீதா
முஹம்மது ஜான்
தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்; மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும்.
IFT
மக்கள் தங்களுக்குப் பின்னால் ஒன்றுக்கும் இயலாத குழந்தைகளை விட்டுவிட்டு மரணமடைய நேரிட்டால், அப்பொழுது தம் குழந்தைகள் குறித்து எந்த அச்சங்களுக்கு அவர்கள் ஆளாவார்களோ அதனைக் கருத்தில் கொண்டு (இவர்கள் விஷயத்திலும் இப்பொழுது) அவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்; எனவே அவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து வாழட்டும்; மேலும் நேர்மையான வார்த்தைகளையே பேசட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களுக்குப்பின், (தங்கள் காரியத்தை நிர்வகிக்கச்) சக்தியற்ற சந்ததிகளைவிட்டுச் சென்றால் அவர்களை(க் குறித்து) பயப்படுகிறார்களே அத்தகையோர்-(அனாதைகள், சிறுவர்கள் சொத்துப் பங்கீடு விஷயத்தில்) பயந்து கொள்ளவும், ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி (அவர்களுக்கு) நேர்மையான வார்த்தையே கூறவும்.
Saheeh International
And let those [executors and guardians] fear [injustice] as if they [themselves] had left weak offspring behind and feared for them. So let them fear Allah and speak words of appropriate justice.
اِنَّ الَّذِیْنَ یَاْكُلُوْنَ اَمْوَالَ الْیَتٰمٰی ظُلْمًا اِنَّمَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ نَارًا ؕ وَسَیَصْلَوْنَ سَعِیْرًا ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَاْكُلُوْنَவிழுங்குகிறார்கள்اَمْوَالَசெல்வங்களைالْيَتٰمٰىஅநாதைகளின்ظُلْمًاஅநியாயமாகاِنَّمَاஎல்லாம்يَاْكُلُوْنَவிழுங்குகிறார்கள்فِىْ بُطُوْنِهِمْவயிறுகளில் / அவர்களுடையنَارًا‌ ؕநெருப்பைوَسَيَـصْلَوْنَஇன்னும் எரிவார்கள்سَعِيْرًا‏நரக ஜுவாலையில்
இன்னல் லதீன ய'குலூன அம்வாலல் யதாமா ளுல்மன் இன்னமா ய'குலூன Fபீ Bபுதூனிஹிம் னார(ன்)வ்-வ ஸயஸ்லவ்ன ஸ'ஈரா
முஹம்மது ஜான்
நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள்.
IFT
அநாதைகளின் சொத்துகளை யார் அநியாயமாக உண்கிறார்களோ, அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், அதிவிரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அநாதைகளின் பொருட்களை அநியாயமாக தின்கின்றார்களே அத்தகையோர்-அவர்கள் தங்கள் வயிறுகளில் (நிரப்பித்) தின்னுவதெல்லாம் நெருப்பையேதான், இன்னும், அவர்கள் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பினுள் நுழைவார்கள்.
Saheeh International
Indeed, those who devour the property of orphans unjustly are only consuming into their bellies fire. And they will be burned in a Blaze [i.e., Hellfire].
یُوْصِیْكُمُ اللّٰهُ فِیْۤ اَوْلَادِكُمْ ۗ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَیْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَبَوَیْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ یَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَیُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ؕ فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟
يُوْصِيْكُمُஉங்களுக்கு உபதேசிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்فِىْۤ اَوْلَادِكُمْ‌பிள்ளைகளில் / உங்கள்لِلذَّكَرِஆணுக்குمِثْلُபோன்றுحَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚபங்கு/இருபெண்கள்فَاِنْ كُنَّஅவர்கள் இருந்தால்نِسَآءًபெண்களாகفَوْقَமேல்اثْنَتَيْنِஇரு பெண்கள்فَلَهُنَّஅவர்களுக்கு உண்டுثُلُثَاமூன்றில் இரண்டுمَا تَرَكَ‌ ۚஎது/விட்டுச் சென்றார்وَاِنْ كَانَتْஇருந்தால்وَاحِدَةًஒருத்தியாகفَلَهَاஅவளுக்குالنِّصْفُ‌ ؕபாதிوَلِاَ بَوَيْهِஇன்னும் அவருடைய தாய் தந்தைக்குلِكُلِّ وَاحِدٍஒவ்வொருவருக்கும்مِّنْهُمَاஅவ்விருவரிலிருந்துالسُّدُسُஆறில் ஒன்றுمِمَّاஎதிலிருந்துتَرَكَவிட்டுச் சென்றார்اِنْ كَانَஇருந்தால்لَهٗஅவருக்குوَلَدٌ ۚபிள்ளைفَاِنْ لَّمْ يَكُنْஇல்லையெனில்لَّهٗஅவருக்குوَلَدٌபிள்ளைوَّوَرِثَهٗۤஇன்னும் அவருக்கு வாரிசானார்اَبَوٰهُஅவருடைய தாய் தந்தைفَلِاُمِّهِஅவருடைய தாய்க்குالثُّلُثُ‌ ؕமூன்றில் ஒன்றுفَاِنْ كَانَஇருந்தால்لَهٗۤஅவருக்குاِخْوَةٌசகோதரர்கள்فَلِاُمِّهِஅவருடைய தாய்க்குالسُّدُسُஆறில் ஒன்றுمِنْۢ بَعْدِபின்னர்وَصِيَّةٍமரண சாசனம்يُّوْصِىْமரண சாசனம் கூறுகிறார்بِهَاۤஅதைاَوْ دَيْنٍ‌ ؕஅல்லது கடன்اٰبَآؤُكُمْஉங்கள் தந்தைகள்وَاَبْنَآؤُكُمْ ۚபிள்ளைகள் / உங்கள்لَا تَدْرُوْنَஅறியமாட்டீர்கள்اَيُّهُمْஅவர்களில் யார்اَقْرَبُநெருங்கியவர்لَـكُمْஉங்களுக்குنَفْعًا‌ ؕபலனளிப்பதில்فَرِيْضَةًசட்டமாகும்مِّنَஇருந்துاللّٰهِ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
யூஸீகுமுல் லாஹு Fபீ அவ்லாதிகும் லித் தகரி மித்லு ஹள்ளில் உன்தயய்ன்; Fப இன் குன்ன னிஸா'அன் Fபவ்கத் னதய்னி Fபலஹுன்ன துலுதா மா தரக வ இன் கானத் வாஹிததன் Fபலஹன் னிஸ்Fப்; வ லி அBபவய்ஹி லிகுல்லி வாஹிதிம் மின்ஹுமஸ் ஸுதுஸு மிம்ம்ம தரக இன் கான லஹூ வலத்; Fப இல் லம் யகுல் லஹூ வலது(ன்)வ் வ வரிதஹூ அBபவாஹு Fபலி உம்மிஹித் துலுத்; Fப இன் கான லஹூ இக்வதுன் Fபலி உம்மிஹிஸ் ஸுதுஸ்; மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸீ Bபிஹா அவ் தய்ன்; ஆBபா'உகும் வ அBப்னா'உகும் லா தத்ரூன அய்யுஹும் அக்ரBபு லகும் னFப்'ஆ; Fபரீளதம் மினல்லாஹ்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
முஹம்மது ஜான்
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஓர் ஆணுக்கு இரு பெண்க ளுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆண் இன்றி) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே ஒரு பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்). உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.)
IFT
உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகின்றான்: ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானது. (இறந்து போனவருக்கு) இரண்டுக்கு மேற்பட்ட பெண் மக்கள் இருந்தால், இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு அவர்களுக்குரியதாகும். மேலும், ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில்) பாதி அவளுக்குரியதாகும். இறந்துபோனவருக்குக் குழந்தைகள் இருப்பின், அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு. மேலும், அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே வாரிசுகளாக இருப்பின், தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்; அவருக்கு சகோதர சகோதரிகளுமிருந்தால் தாய் ஆறிலொரு பங்கிற்கு உரிமை பெறுவாள். இறந்து போனவர் செய்த வஸிய்யத் (மரண சாசனம்) நிறைவேற்றப்பட்ட பின்பும், (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்). உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான். திண்ணமாக, அல்லாஹ் (எல்லா உண்மை நிலைகளையும்) நன்கறிந்தவனாகவும் (பயன்களை) நன்கு புரிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்கள் மக்கள் விஷயத்தில், (சொத்துப்பங்கீட்டில், ஓர்) ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான், ஆகவே, அவர்கள் (ஆணின்றி) இருவருக்கும் அதிகமாக பெண்களாக இருந்தால், அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு பாகம் (அப்பெண்களாகிய) அவர்களுக்குண்டு. மேலும் ஒருத்தியாக அவள் இருந்தால், அவளுக்கு பாதி உண்டு, இன்னும் (உங்களில் இறந்த) அவருக்குப் பிள்ளை இருந்தால், அவருடைய தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற) (சொத்)தில் ஆறிலொன்று உண்டு, (இறந்த அவருக்குப் பிள்ளை இல்லாமலிருந்தால், பெற்றோர் (மட்டும்) அவருக்கு அனந்தரக்காரர்களானால் அப்பொழுது அவருடைய தாய்க்கு மூன்றிலொன்று உண்டு, மற்ற இருபாகமும் தகப்பனுக்குரியதாகும், (இறந்த) அவருக்குப் (பல)சகோதரர்கள் இருந்தால், அப்பொழுது எதனை அவர் (மரண) சாசனம் செய்தாரோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ப் பின்னர் அவரின் தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு, உங்கள் தந்தைகளோ இன்னும் உங்கள் ஆண்மக்களோ இவர்களில் உங்களுக்குப் பயனளிப்பதில் மிக நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கபபட்டுள்ள கட்டளையாகும், நிச்சயமாக அல்லாஹ் மிக்க அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
Allah instructs you concerning your children [i.e., their portions of inheritance]: for the male, what is equal to the share of two females. But if there are [only] daughters, two or more, for them is two thirds of one's estate. And if there is only one, for her is half. And for one's parents, to each one of them is a sixth of his estate if he left children. But if he had no children and the parents [alone] inherit from him, then for his mother is one third. And if he had brothers [and/or sisters], for his mother is a sixth, after any bequest he [may have] made or debt. Your parents or your children - you know not which of them are nearest to you in benefit. [These shares are] an obligation [imposed] by Allah. Indeed, Allah is ever Knowing and Wise.
وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْ بَعْدِ وَصِیَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ یُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِی الثُّلُثِ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصٰی بِهَاۤ اَوْ دَیْنٍ ۙ غَیْرَ مُضَآرٍّ ۚ وَصِیَّةً مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَلِیْمٌ ۟ؕ
وَلَـكُمْஉங்களுக்குنِصْفُபாதிمَاஎதுتَرَكَவிட்டுச் சென்றاَزْوَاجُكُمْஉங்கள் மனைவிகள்اِنْ لَّمْ يَكُنْஇல்லையென்றால்لَّهُنَّஅவர்களுக்குوَلَدٌ ۚபிள்ளைفَاِنْ كَانَஇருந்தால்لَهُنَّஅவர்களுக்குوَلَدٌபிள்ளைفَلَـكُمُஉங்களுக்குالرُّبُعُகால்مِمَّا تَرَكْنَ‌அவர்கள் விட்டுச் சென்றمِنْۢ بَعْدِபின்னர்وَصِيَّةٍமரண சாசனம்يُّوْصِيْنَமரண சாசனம் செய்கின்றனர்بِهَاۤஅதைاَوْ دَ يْنٍ‌ ؕஅல்லது கடன்وَلَهُنَّஇன்னும் அவர்களுக்குالرُّبُعُகால்مِمَّا تَرَكْتُمْநீங்கள் விட்டுச் சென்றاِنْ لَّمْ يَكُنْஇல்லையென்றால்لَّكُمْஉங்களுக்குوَلَدٌ ۚபிள்ளைفَاِنْ كَانَஇருந்தால்لَـكُمْஉங்களுக்குوَلَدٌபிள்ளைفَلَهُنَّஅவர்களுக்குالثُّمُنُஎட்டில் ஒன்றுمِمَّاஎதிலிருந்துتَرَكْتُمْ‌விட்டுச் சென்றீர்கள்مِّنْۢ بَعْدِபின்னர்وَصِيَّةٍமரண சாசனம்تُوْصُوْنَமரண சாசனம் கூறுகிறீர்கள்بِهَاۤஅதைاَوْ دَ يْنٍ‌ ؕஅல்லது கடன்وَاِنْ كَانَஇருந்தால்رَجُلٌஓர் ஆண்يُّوْرَثُவாரிசாக்கப்படுவான்كَلٰلَةًவாரிசு இல்லாதவர்اَوِ امْرَاَةٌஒரு பெண்وَّلَهٗۤஇன்னும் அவருக்குاَخٌசகோதரன்اَوْஅல்லதுاُخْتٌசகோதரிفَلِكُلِّ وَاحِدٍஒவ்வொருவருக்கும்مِّنْهُمَاஅவ்விருவரில்السُّدُسُ‌ ۚஆறில் ஒன்றுفَاِنْ كَانُوْۤاஅவர்கள் இருந்தால்اَكْثَرَஅதிகமாகمِنْ ذٰ لِكَஅதை விடفَهُمْஅவர்கள்شُرَكَآءُபங்குதாரர்கள்فِى الثُّلُثِமூன்றில் ஒன்றில்مِنْۢ بَعْدِபின்னர்وَصِيَّةٍமரண சாசனம்يُّوْصٰىமரண சாசனம் கூறப்படுகிறதுبِهَاۤஅதைاَوْ دَ يْنٍ ۙஅல்லது கடன்غَيْرَஅல்லாதمُضَآرٍّ‌ ۚநஷ்டம் ஏற்படுத்துபவர்وَصِيَّةًநல்லுபதேசம்مِّنَஇருந்துاللّٰهِ‌ ؕஅல்லாஹ்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَلِيْمٌ ؕ‏மகா சகிப்பாளன்
வ லகும் னிஸ்Fபு மா தரக அZஜ்வாஜுகும் இல் லம் யகுல் லஹுன்ன வலத்; Fப இன் கான லஹுன்ன வலதுன் Fபலகுமுர் ருBப்'உ மிம்மா தரக்ன மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸீன Bபிஹா அவ் தய்ன்; வ லஹுன்னர் ருBபு'உ மிம்மா தரக்தும் இல் லம் யகுல் லகும் வலத்; Fப இன் கான லகும் வலதுன் Fபலஹுன்னத் துமுனு மிம்மா தரக்தும்; மிம் Bபஃதி வஸிய்யதின் தூஸூன Bபிஹா அவ் தய்ன்; வ இன் கான ரஜுலு(ன்)ய் யூரது கலாலதன் அவிம் ர அது(ன்)வ் வ லஹூ அகுன் அவ் உக்துன் Fபலிகுல்லி வாஹிதிம் மின்ஹுமஸ் ஸுதுஸ்; Fப இன் கானூ அக்தர மின் தாலிக Fபஹும் ஷுரகா'உ Fபித்துலுத்; மிம் Bபஃதி வஸிய்யதி(ன்)ய் யூஸா Bபிஹா அவ் தய்னின் கய்ர முளார்ர்; வஸிய்யதம் மினல் லாஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹலீம்
முஹம்மது ஜான்
இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் மனைவி(கள் இறந்து அவர்)களுக்குப் பிள்ளைகளும் இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் பாகம்தான் (கிடைக்கும்). அதுவும் அவர்களுடைய மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாத நிலைமையில் (நீங்கள் இறந்து விட்டாலோ) உங்கள் மனைவிகளுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் கால் பாகம்தான் (கிடைக்கும்). உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் எட்டில் ஒரு பாகம்தான் அவர்களுக்கு உண்டு. அதுவும் (உங்கள்) மரண சாசனத்தையும், கடனையும் நீங்கள் கொடுத்த பின்னரே! (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து, (அவர்களுக்கு) ஒரே ஒரு சகோதரன் அல்லது ஒரே ஒரு சகோதரி இருந்தால், ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆறில் ஒரு பாகமுண்டு. இதற்கு அதிகமாக (அதாவது ஒருவருக்கு மேற்பட்டு சகோதரனும், சகோதரியும் அல்லது இரண்டு சகோதரர்கள், சகோதரிகள்) இருந்தால் (சொத்தில்) மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் அனைவரும் சமமான பங்குதாரர்கள். இதுவும் (அவருடைய) மரண சாசனம், கடன் ஆகியவற்றைக் கொடுத்த பின்னரே! எனினும், (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தால் வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்கவேண்டும். (இது) அல்லாஹ்வுடைய நல்லுபதேசமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன், பொறுமையுடையவன் ஆவான்.
IFT
மேலும் (மரணமடைந்த) உங்களுடைய மனைவியர் விட்டுச் சென்ற சொத்தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப்பங்கு உங்களுக்குரியது; அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் உங்களுக்குரியது. அவர்கள் செய்த மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அவர்கள் விட்டுச் சென்ற கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு உங்களுக்கு உரியதாகும்). உங்களுக்குக் குழந்தைகள் இல்லையானால், நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் மனைவியர்க்குரியது; ஆனால், உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து எட்டில் ஒரு பாகம் அவர்களுக்குரியதாகும். நீங்கள் செய்கின்ற வஸிய்யத் மரண சாசனம் நிறைவேற்றப்பட்ட பிறகும் உங்களுடைய கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு அவர்களுக்குரியதாகும்). தாய்தந்தையரும் பிள்ளைகளும் இல்லாத (நிலையில், இறந்து போன) ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணுடைய சொத்து பங்கிடப்பட வேண்டியிருந்தால், அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருப்பின் அந்தச் சகோதரர் அல்லது சகோதரிக்கு ஆறில் ஒரு பாகம் கிட்டும். உடன்பிறப்புகள் ஒருவருக்கு மேற்பட்டவர்களாயிருந்தால் முழுச் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் எல்லோரும் பங்கு பெறுவார்கள். ஆனால், இது இறந்து போனவர் செய்திருந்த வஸிய்யத் மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவருடைய) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (அந்தப் பங்கை அவர்கள் பெறுவார்கள். ஆனால் ஒரு நிபந்தனை:) அந்த மரண சாஸனம் யாருக்கும் கேடு விளைவிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். இது அல்லாஹ் இட்ட கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், மென்மையான இயல்புடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உங்கள் மனைவிகள் விட்டுச் சென்ற (சொத்தில் அவர்களுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் உங்களுக்குப் பாதி(பாகம்) உண்டு, ஆனால் அவர்களுக்குப் பிள்ளை இருந்தாலோ எதனை அவர்கள் (மரண) சாசனம் செய்தார்களோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு – அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ம் பின்னர், அவர்கள் விட்டுச் சென்ற (சொத்தில்) உங்களுக்கு நான்கில் ஒன்று உண்டு, மேலும் உங்களுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் நான்கில் ஒன்று உண்டு, உங்களுக்குப் பிள்ளை இருந்தாலோ எதனை நீங்கள் (மரண) சாசனம் செய்தீர்களோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதைக் கொடுக்கப்பட்டதற்கு)ம் பின்னர் நீங்கள் விட்டுச்சென்றதில் எட்டில் ஒன்று அவர்களுக்குண்டு, அனந்தரங்கொள்ளப்படுகின்ற வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால் அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆறில் ஒன்று உண்டு, பின்னர், அவர்கள் அதைவிட அதிகமாக இருந்தால், (சொத்தில்) எதனைக்கொண்டு மரணசாசனம் செய்யப்பட்டதோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ம் பின்னர், மூன்றிலொன்றில் அவர்கள் (யாவரும்) கூட்டானவர்களாவார்கள், எனினும், (மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) கஷ்டத்தை உண்டு பண்ணாதவராக இருக்க வேண்டும், (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும், இன்னும், அல்லாஹ் நன்கறிகிறவன், சகிப்புத் தன்மையுடையவன்.
Saheeh International
And for you is half of what your wives leave if they have no child. But if they have a child, for you is one fourth of what they leave, after any bequest they [may have] made or debt. And for them [i.e., the wives] is one fourth if you leave no child. But if you leave a child, then for them is an eighth of what you leave, after any bequest you [may have] made or debt. And if a man or woman leaves neither ascendants nor descendants but has a brother or a sister, then for each one of them is a sixth. But if they are more than two, they share a third, after any bequest which was made or debt, as long as there is no detriment [caused]. [This is] an ordinance from Allah, and Allah is Knowing and Forbearing.
تِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
تِلْكَஇவைحُدُوْدُசட்டங்கள்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்وَمَنْஎவர்يُّطِعِகீழ்ப்படிகிறார்اللّٰهَஅல்லாஹ்விற்குوَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதருக்குيُدْخِلْهُநுழைப்பான்/அவரைجَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُஆறுகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَا‌ ؕஅதில்وَذٰ لِكَ الْفَوْزُஇதுதான்/வெற்றிالْعَظِيْمُ‏மகத்தானது
தில்க ஹுதூதுல் லாஹ்; வ மய் யுதி'இல் லாஹ வ ரஸூலஹூ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஹம்மது ஜான்
இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
IFT
இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும், எவர் (இவ் விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவரை சுவனபதிகளில் அவன் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள், மேலும், இது மகத்தான வெற்றியாகும்.
Saheeh International
These are the limits [set by] Allah, and whoever obeys Allah and His Messenger will be admitted by Him to gardens [in Paradise] under which rivers flow, abiding eternally therein; and that is the great attainment.
وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَتَعَدَّ حُدُوْدَهٗ یُدْخِلْهُ نَارًا خَالِدًا فِیْهَا ۪ وَلَهٗ عَذَابٌ مُّهِیْنٌ ۟۠
وَمَنْஇன்னும் எவர்يَّعْصِமாறு செய்கிறார்اللّٰهَஅல்லாஹ்விற்குوَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதருக்குوَيَتَعَدَّஇன்னும் மீறுகிறார்حُدُوْدَهٗஅவனுடைய சட்டங்களைيُدْخِلْهُநுழைப்பான்/அவரைنَارًاநரகத்தில்خَالِدًاநிரந்தரமானவன்فِيْهَاஅதில்وَلَهٗஇன்னும் அவனுக்குعَذَابٌவேதனைمُّهِيْنٌ‏இழிவுபடுத்தக்கூடியது
வ மய் யஃஸில் லாஹ வ ரஸூலஹூ வ யத'அத்த ஹுதூதஹூ யுத்கில்ஹு னாரன் காலிதன் Fபீஹா வ லஹூ 'அதாBபும் முஹீன்
முஹம்மது ஜான்
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்து, அவன் ஏற்படுத்திய சட்டவரம்புகளை மீறுகிறானோ அவனை நரகத்தில் புகுத்தி விடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கி விடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு.
IFT
மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய மறுத்து அவனுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்களை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான்! அதில் அவர்கள் நிலையாக விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு (அங்கு) இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் எவர், (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, (அல்லாஹ்வாகிய) அவன் (ஏற்படுத்திய) வரம்புகளை மீறி விடுகின்றாரோ அவரை (அல்லாஹ்வாகிய) அவன் நரகத்தில் புகுத்தி விடுவான், அதில் அவர் நிரந்தரமாக (த்தங்கி)இருப்பவர், இன்னும் அவருக்கு இழிவுபடுத்தும் வேதனையும் (அதில்) உண்டு.
Saheeh International
And whoever disobeys Allah and His Messenger and transgresses His limits - He will put him into the Fire to abide eternally therein, and he will have a humiliating punishment.
وَالّٰتِیْ یَاْتِیْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآىِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَیْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِی الْبُیُوْتِ حَتّٰی یَتَوَفّٰهُنَّ الْمَوْتُ اَوْ یَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِیْلًا ۟
وَالّٰتِىْஎவர்கள்يَاْتِيْنَசெய்கிறார்கள்/ வருகிறார்கள்الْفَاحِشَةَமானக்கேடானதிற்குمِنْஇருந்துنِّسَآٮِٕكُمْபெண்கள்/உங்கள்فَاسْتَشْهِدُوْاசாட்சியாக கொண்டு வாருங்கள்عَلَيْهِنَّஅவர்கள் மீதுاَرْبَعَةًநான்கு (நபர்களை)مِّنْكُمْ‌ ۚஉங்களில்فَاِنْ شَهِدُوْاஅவர்கள் சாட்சியளித்தால்فَاَمْسِكُوْهُنَّதடுத்து வையுங்கள்/ அவர்களைفِى الْبُيُوْتِவீடுகளில்حَتّٰى يَتَوَفّٰٮهُنَّவரை/கைப்பற்றும்/அவர்களைالْمَوْتُமரணம்اَوْஅல்லதுيَجْعَلَஆக்குவான்اللّٰهُஅல்லாஹ்لَهُنَّஅவர்களுக்குسَبِيْلًا‏ஒரு வழியை
வல்லாதீ ய'தீனல் Fபாஹிஷத மின் னிஸா'இகும் Fபஸ்தஷ்-ஹிதூ 'அலய்ஹின்ன அர்Bப'அதம் மின்கும் Fப இன் ஷஹிதூ Fப அம்ஸிகூஹுன்ன Fபில் Bபுயூதி ஹத்தா யதவFப்Fபா ஹுன்னல் மவ்து அவ் யஜ்'அலல் லாஹு லஹுன்ன ஸBபீலா
முஹம்மது ஜான்
உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் பெண்களில் எவளேனும் விபசாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரை அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும்.
IFT
உங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சியமளித்துவிட்டால், அப்பெண்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்கள் பெண்களில் மானக்கேடான செயலைச் செய்தோர்-அவர்கள்மீது (அதை நிரூபிக்க) உங்களிலிருந்து நான்கு நபரை சாட்சிகளாகக் கொண்டு வாருங்கள், அவர்கள் (அதற்கு) சாட்சியம் கூறினால் அப்பொழுது அவர்களை மரணம் கைப்பற்றிவிடும் வரையில் அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒருவழியை ஏற்படுத்தும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
Saheeh International
Those who commit immorality [i.e., unlawful sexual intercourse] of your women - bring against them four [witnesses] from among you. And if they testify, confine them [i.e., the guilty women] to houses until death takes them or Allah ordains for them [another] way.
وَالَّذٰنِ یَاْتِیٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِیْمًا ۟
وَالَّذٰنِஇன்னும் இரு ஆண்கள்يَاْتِيٰنِهَاஅதைச் செய்தால்مِنْكُمْஉங்களிலிருந்துفَاٰذُوதுன்புறுத்துங்கள்هُمَا‌ ۚஅவ்விருவரையும்فَاِنْ تَابَاஅவ்விருவரும் மன்னிப்புக் கோரினால்وَاَصْلَحَاஇன்னும் திருத்திக் கொண்டால்فَاَعْرِضُوْاபுறக்கணித்துவிடுங்கள்عَنْهُمَا‌ ؕஅவ்விருவரை விட்டுاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்تَوَّابًاபிழை பொறுப்பவனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வல்லதானி ய'தியானிஹா மின்கும் Fப ஆதூஹுமா Fப இன் தாBபா வ அஸ்லஹா Fப அஃரிளூ 'அன்ஹுமா; இன்னல் லாஹ கான தவ்வாBபர் ரஹீமா
முஹம்மது ஜான்
உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் ஆண்களில் இருவர் மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (நிந்தித்து, அல்லது அடித்துத்) துன்புறுத்துங்கள். அவ்விருவரும் (தங்கள் குற்றத்திற்காக) வருத்தப்பட்டு (அதிலிருந்து விலகி) ஒழுங்காக நடந்துகொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
IFT
அதே செயலை உங்களில் இருவர் செய்துவிட்டால், அவ்விருவருக்கும் தண்டனை அளியுங்கள். பிறகு அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடித் தம்மைத் திருத்திக் கொண்டார்களாயின் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களில் இருவர், அ(ம்மானக்கேடான)தைச் செய்துவிட்டால், அவ்விருவரையும். துன்புறுத்துங்கள், அவ்விருவரும் பச்சாதாபப்பட்டு, (அதிலிருந்து விலகி) இருவரும் ஒழுங்காக நடந்து கொண்டால் அவர்களை விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And the two who commit it [i.e., unlawful sexual intercourse] among you - punish [i.e., dishonor] them both. But if they repent and correct themselves, leave them alone. Indeed, Allah is ever Accepting of Repentance and Merciful.
اِنَّمَا التَّوْبَةُ عَلَی اللّٰهِ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ یَتُوْبُوْنَ مِنْ قَرِیْبٍ فَاُولٰٓىِٕكَ یَتُوْبُ اللّٰهُ عَلَیْهِمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
اِنَّمَا التَّوْبَةُமன்னிப்பெல்லாம்عَلَى اللّٰهِஅல்லாஹ்விடம்لِلَّذِيْنَஎவர்களுக்குيَعْمَلُوْنَசெய்கிறார்கள்السُّوْٓءَதீமையைبِجَهَالَةٍஅறியாமையினால்ثُمَّபிறகுيَتُوْبُوْنَதிருந்தி திரும்புகின்றனர்مِنْ قَرِيْبٍஅதிசீக்கிரத்தில்فَاُولٰٓٮِٕكَஅவர்கள்يَتُوْبُபிழை பொறுப்பான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْ‌ؕஅவர்கள் மீதுوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
இன்னமத் தவ்Bபது 'அலல்லாஹி லில்லதீன யஃமலூனஸ் ஸூ'அ Bபிஜஹாலதின் தும்ம யதூBபூன மின் கரீBபின் Fப உலா'இக யதூBபுல் லாஹு 'அலய்ஹிம்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
முஹம்மது ஜான்
எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகிறார்களோ அவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலைச் செய்துவிட்டாலும் உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகாரமாவதெல்லாம், அறியாமையினால் தீமை செய்துவிட்டுப் ,பின்னர், (அதிலிருந்து) சமீபத்தில் (பாவமன்னிப்புத்தேடி) தவ்பாச் செய்கிறார்களே அத்தகையவர்களுக்குத்தான், ஆகவே, அத்தகையோர்-அவர்களின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், மேலும், அல்லாஹ் அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
The repentance accepted by Allah is only for those who do wrong in ignorance [or carelessness] and then repent soon [after]. It is those to whom Allah will turn in forgiveness, and Allah is ever Knowing and Wise.
وَلَیْسَتِ التَّوْبَةُ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ۚ حَتّٰۤی اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّیْ تُبْتُ الْـٰٔنَ وَلَا الَّذِیْنَ یَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ؕ اُولٰٓىِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
وَلَيْسَتِஇன்னும் இல்லைالتَّوْبَةُபிழை பொறுப்புلِلَّذِيْنَஎவர்களுக்குيَعْمَلُوْنَசெய்கிறார்கள்السَّيِّاٰتِ‌ ۚகெட்டவைகளைحَتّٰۤىவரைاِذَا حَضَرَவந்தால்اَحَدَهُمُஅவர்களில்ஒருவருக்குالْمَوْتُமரணம்قَالَகூறினார்اِنِّىْநிச்சயமாக நான்تُبْتُதிருந்தி விடுகிறேன்الْـــٰٔنَஇப்போதுوَلَاகிடையாதுالَّذِيْنَஎவர்கள்يَمُوْتُوْنَஇறக்கிறார்கள்وَهُمْஅவர்களோكُفَّارٌ ؕநிராகரிப்பாளர்களாகاُولٰٓٮِٕكَஅவர்கள்اَعْتَدْنَاஏற்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனையைاَ لِيْمًا‏துன்புறுத்தக்கூடியது
வ லய்ஸதித் தவ்Bபது லில்லதீன யஃமலூனஸ் ஸய்யிஆதி ஹத்தா இதா ஹளர அஹதஹுமுல் மவ்து கால இன்னீ துBப்துல் 'ஆன வ லல்லதீன யமூதூன வ ஹும் குFப்Fபார்; உலா'இக அஃதத்னா லஹும் 'அதாBபன் அலீமா
முஹம்மது ஜான்
இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது ‘‘இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்துவிட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
எவர்கள் தீய செயல்கள் புரிந்தவாறு இருந்து மரணம் நெருங்கும்போது ‘நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்’ என்று கூறுகின்றார்களோ அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது. மேலும் இறுதி மூச்சுவரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தீயவற்றைச் செய்து கொண்டேயிருப்போருக்கு, -முடிவில் அவர்களில் ஒருவருக்கு மரணம் (சம்பவிக்க) ஆஜரானபோது “இப்போது நான் (என் பாவங்களுக்குப்) பச்சாதாபப்படுகிறேன்” என்று கூறுகின்றாரே! அவருக்கு-மற்றும் (விசுவாசம் கொள்ளாது நிராகரித்து விட்டு) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகிறார்களே, அவர்களுக்கும் தவ்பா (பாவமன்னிப்பு) அங்கீகாரமில்லை, அத்தகையோர்-(மன்னிக்கப்படுவதில்லை) அவர்களுக்காகத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.
Saheeh International
But repentance is not [accepted] of those who [continue to] do evil deeds up until, when death comes to one of them, he says, "Indeed, I have repented now," or of those who die while they are disbelievers. For them We have prepared a painful punishment.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا ؕ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّیَجْعَلَ اللّٰهُ فِیْهِ خَیْرًا كَثِیْرًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا يَحِلُّஹலால் ஆகாதுلَـكُمْஉங்களுக்குاَنْ تَرِثُواநீங்கள்அனந்தரம் கொள்வதுالنِّسَآءَபெண்களைكَرْهًا‌ ؕபலவந்தமாகوَلَا تَعْضُلُوதடுக்காதீர்கள்هُنَّஅவர்களைلِتَذْهَبُوْاநீங்கள் செல்வதற்காகبِبَعْضِசிலதைக் கொண்டுمَاۤஎதைاٰتَيْتُمُوகொடுத்தீர்கள்هُنَّஅவர்களுக்குاِلَّاۤதவிரاَنْ يَّاْتِيْنَஅவர்கள் செய்வதுبِفَاحِشَةٍஒரு மானக்கேடானதைمُّبَيِّنَةٍ‌ ۚபகிரங்கமானதுوَعَاشِرُوஇன்னும் வாழுங்கள்هُنَّஅவர்களுடன்بِالْمَعْرُوْفِ‌ ۚநல்ல முறையில்فَاِنْ كَرِهْتُمُوநீங்கள் வெறுத்தால்هُنَّஅவர்களைفَعَسٰۤى اَنْ تَكْرَهُوْاநீங்கள் வெறுக்கலாம்شَيْــٴًـــاஒன்றைوَّيَجْعَلَஇன்னும் ஆக்குவான்اللّٰهُஅல்லாஹ்فِيْهِஅதில்خَيْرًاநன்மையைكَثِيْرًا‏அதிகமான
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா யஹில்லு லகும் அன் தரிதுன் னிஸா'அ கர்ஹன் வலா தஃளுலூஹுன்ன லிதத்ஹBபூ BபிBபஃளி மா ஆதய்துமூஹுன்ன இல்லா அய் ய'தீன BபிFபாஹிஷதிம் முBபய்யினஹ்; வ 'ஆஷிரூ ஹுன்ன Bபில்மஃரூFப்; Fப இன் கரிஹ்துமூஹுன்ன Fப'அஸா அன் தக்ரஹூ ஷய்'அ(ன்)வ் வ யஜ்'அலல் லாஹு Fபீஹி கய்ரன் கதீரா
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது; பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! ஒரு பெண்ணை (அவள் உங்களை விரும்பாது வெறுக்க, இறந்தவனுடைய பொருளாக மதித்து அவளைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல. மேலும், பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி (உங்கள் மனைவியாக வந்த) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களை (உங்கள் வீட்டில்) நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள். மேலும், அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! விதவைப் பெண்களுக்கு பலவந்தமான வாரிசுதாரர்களாய் நீங்கள் திகழ்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! மேலும், அவர்களுக்கு நீங்கள் அளித்த மஹ்ரின் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைக் கஷ்டப்படுத்துவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல; அவர்கள் ஏதேனும் வெளிப்படையான இழிசெயலைச் செய்தாலேயன்றி! அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! பெண்களை (இறந்தவருடைய சொத்தாக மதித்து அவர்களைப்) பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல, இன்னும், பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்தாலன்றி (உங்கள்) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை (எடுத்துக்)கொண்டு போவதற்காக அவர்களை நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள், மேலும், அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள், அவர்களை நீங்கள் வெறுத்துவிடுவீர்களானால் - நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும், (அவ்வாறு வெறுக்கக்கூடிய) அதில் அல்லாஹ் அநேக நன்மைகளை ஆக்கக்கூடும்.
Saheeh International
O you who have believed, it is not lawful for you to inherit women by compulsion. And do not make difficulties for them in order to take [back] part of what you gave them unless they commit a clear immorality [i.e., adultery]. And live with them in kindness. For if you dislike them - perhaps you dislike a thing and Allah makes therein much good.
وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَیْتُمْ اِحْدٰىهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَیْـًٔا ؕ اَتَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟
وَاِنْ اَرَدْتُّمُநீங்கள் நாடினால்اسْتِبْدَالَமாற்றுவதற்குزَوْجٍஒரு மனைவியைمَّكَانَஇடத்தில்زَوْجٍ ۙஒரு மனைவிوَّاٰتَيْتُمْநீங்கள் கொடுத்தீர்கள்اِحْدٰٮهُنَّஅவர்களில்ஒருத்திக்குقِنْطَارًاகுவியலைفَلَا تَاْخُذُوْاஎடுக்காதீர்கள்مِنْهُஅதிலிருந்துشَيْئًا‌ ؕஎதையும்اَ تَاْخُذُوْنَهٗஅதை எடுக்கிறீர்களா?بُهْتَانًاஅபாண்டமாகوَّاِثْمًاஇன்னும் பாவமாகمُّبِيْنًا‏பகிரங்கமானது
வ இன் அரத்துமுஸ்திBப் தால Zஜவ்ஜிம் மகான Zஜவ்ஜின் வ ஆதய்தும் இஹ்தாஹுன்ன கின்தாரன் Fபலா த'குதூ மின்ஹு ஷய்'ஆ; அத'குதூனஹூ Bபுஹ்தான்ன(ன்)வ் வ இத்மம் முBபீனா
முஹம்மது ஜான்
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா?
IFT
நீங்கள் ஒரு மனைவிக்குப் பதிலாக வேறு ஒருத்தியை மனைவியாகக் கொண்டு வர நாடினால் நீங்கள் அவளுக்கு பணக்குவியலையே (மஹ்ராக) கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து கொஞ்சம் கூட திரும்பப் பெறாதீர்கள். நீங்கள் அவதூறு கூறியும், வெளிப்படையாக கொடுமை இழைத்தும் அதனைத் திரும்பப் பெறுவீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவள்) இடத்தில் மற்றொரு மனைவியை மாற்றி (மணந்து)க்கொள்ள நீங்கள் நாடினால் (நீக்கிவிட விரும்பும்) அவர்களில் ஒருத்திக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்தபோதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள், அபாண்டமாகவும், பகிரங்கப் பாவமாகவும் அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள்(திருப்பி) எடுக்கிறீர்களா?
Saheeh International
But if you want to replace one wife with another and you have given one of them a great amount [in gifts], do not take [back] from it anything. Would you take it in injustice and manifest sin?
وَكَیْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰی بَعْضُكُمْ اِلٰی بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟
وَ كَيْفَஎவ்வாறு ?تَاْخُذُوْنَهٗஅதை எடுப்பீர்கள்وَقَدْதிட்டமாகاَفْضٰىகலந்து விட்டார்بَعْضُكُمْஉங்களில் சிலர்اِلٰى بَعْضٍசிலருடன்وَّاَخَذْنَ(அப்பெண்கள்) வாங்கி இருக்கிறார்கள்مِنْكُمْஉங்களிடம்مِّيْثَاقًاவாக்குறுதியைغَلِيْظًا‏உறுதியானது
வ கய்Fப த'குதூனஹூ வ கத் அFப்ளா Bபஃளுகும் இலா Bபஃளி(ன்)வ் வ அகத்ன மின்கும் மீதாகன் கலீளா
முஹம்மது ஜான்
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
அப்துல் ஹமீது பாகவி
அதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை (பலரும் அறிய) பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே!
IFT
சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! (அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்களில் சிலர் மற்ற சிலருடன் திட்டமாக (சேர்ந்து) கலந்து விட்டீர்கள், உங்களிடமிருந்து உறுதியான வாக்குறுதியை (அப்பெண்களாகிய) அவர்கள் எடுத்தும் இருக்கிறார்கள், (இந்நிலையில்) அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வீர்கள்?
Saheeh International
And how could you take it while you have gone in unto each other and they have taken from you a solemn covenant?
وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِیْلًا ۟۠
وَلَا تَنْكِحُوْاமணம் புரியாதீர்கள்مَاஎவர்களைنَكَحَமணம் புரிந்தார்اٰبَآؤُكُمْஉங்கள் தந்தைகள்مِّنَஇருந்துالنِّسَآءِபெண்கள்اِلَّاதவிரمَا قَدْ سَلَفَ‌ ؕஎது/முன்னர் நடந்து விட்டதுاِنَّهٗநிச்சயமாக இதுكَانَஇருக்கிறதுفَاحِشَةًமானக்கேடானதாகوَّمَقْتًا ؕஇன்னும் வெறுக்கப்பட்டதாகوَسَآءَஇன்னும் கெட்டுவிட்டதுسَبِيْلًا‏பழக்கம்
வ லா தன்கிஹூ மா னகஹ ஆBபா'உகும் மினன் னிஸா'இ இல்லா மா கத் ஸலFப்; இன்னஹூ கான Fபாஹிஷத(ன்)வ் வ மக்த(ன்)வ் வ ஸா'அ ஸBபீலா
முஹம்மது ஜான்
முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக்கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
IFT
மேலும், உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளாதீர்கள்! முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக்க செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, முன்னர் (அறியாமைக்காலத்தில்) நடந்துவிட்டதைத் தவிர உங்கள் தந்தைகள் (இறப்பிற்குப்பின் அவர்கள்) மணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும், நீங்கள் மணம் செய்து கொள்ளாதீர்கள், நிச்சயமாக இது மானக்கேடானதாகவும் (அல்லாஹ்வின்) கோபத்திற்குரியதாகவும் இருக்கிறது, இன்னும் வழியால் அதுமிகக் கெட்டதுமாகும்.
Saheeh International
And do not marry those [women] whom your fathers married, except what has already occurred. Indeed, it was an immorality and hateful [to Allah] and was evil as a way.
حُرِّمَتْ عَلَیْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِیْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَاُمَّهٰتُ نِسَآىِٕكُمْ وَرَبَآىِٕبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآىِٕكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ ؗ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ ؗ وَحَلَآىِٕلُ اَبْنَآىِٕكُمُ الَّذِیْنَ مِنْ اَصْلَابِكُمْ ۙ وَاَنْ تَجْمَعُوْا بَیْنَ الْاُخْتَیْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۙ
حُرِّمَتْதடுக்கப்பட்டுள்ளதுعَلَيْكُمْஉங்கள் மீதுاُمَّهٰتُكُمْஉங்கள் தாய்கள்وَبَنٰتُكُمْஇன்னும் உங்கள் மகள்கள்وَاَخَوٰتُكُمْஇன்னும் உங்கள்சகோதரிகள்وَعَمّٰتُكُمْஇன்னும் உங்கள் மாமிகள்وَخٰلٰتُكُمْஇன்னும் உங்கள் தாயின் சகோதரிகள்وَبَنٰتُஇன்னும் மகள்கள்الْاَخِசகோதரனின்وَبَنٰتُஇன்னும் மகள்கள்الْاُخْتِசகோதரியின்وَاُمَّهٰتُكُمُஇன்னும் உங்கள் தாய்கள்الّٰتِىْۤஎவர்கள்اَرْضَعْنَكُمْபாலூட்டினர்/ உங்களுக்குوَاَخَوٰتُكُمْஇன்னும் உங்கள்சகோதரிகள்مِّنَ الرَّضَاعَةِபால்குடியினால்وَ اُمَّهٰتُதாய்கள்نِسَآٮِٕكُمْஉங்கள்மனைவிகளின்وَرَبَآٮِٕبُكُمُஇன்னும் உங்கள் வளர்ப்புப் பிள்ளைகள்الّٰتِىْஎவர்கள்فِىْ حُجُوْرِكُمْஉங்கள் மடிகளில்مِّنْஇருந்துنِّسَآٮِٕكُمُஉங்கள் மனைவிகள்الّٰتِىْஎவர்கள்دَخَلْتُمْஉறவு கொண்டீர்கள்بِهِنَّஅவர்களுடன்فَاِنْ لَّمْ تَكُوْنُوْاநீங்கள் இல்லையென்றால்دَخَلْتُمْஉறவு கொண்டீர்கள்بِهِنَّஅவர்களுடன்فَلَا جُنَاحَகுற்றமே இல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுوَحَلَاۤٮِٕلُஇன்னும் மனைவிகள்اَبْنَآٮِٕكُمُஉங்கள் மகன்களின்الَّذِيْنَஎவர்கள்مِنْஇருந்துاَصْلَابِكُمْۙஉங்கள் முதுகந்தண்டுوَاَنْ تَجْمَعُوْاஇன்னும் நீங்கள் ஒன்று சேர்ப்பதுبَيْنَமத்தியில்الْاُخْتَيْنِஇரு சகோதரிகள்اِلَّاதவிரمَاஎதுقَدْ سَلَفَ‌ؕமுன்னர் நடந்ததுاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கின்றான்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا ۙ‏பெரும் கருணையாளனாக
ஹுர்ரிமத் 'அலய்கும் உம்ம ஹாதுகும் வ Bபனாதுகும் வ அகவாதுகும் வ 'அம்மாதுகும் வ காலாதுகும் வ Bபனாதுல் அகி வ Bபனாதுல் உக்தி வ உம்மஹாது குமுல் லாதீ அர்ளஃ னகும் வ அகவாதுகும் மினர்ரளா'அதி வ உம்மஹாது னிஸா'இகும் வ ரBபா'இ Bபுகுமுல் லாதீ Fபீ ஹுஜூரிகும் மின் னிஸா'இகுமுல் லாதீ தகல்தும் Bபிஹின்ன Fப இல் லம் தகூனூ தகல்தும் Bபிஹின்ன Fபலா ஜுனாஹ 'அலய்கும் வ ஹலா'இலு அBப்னா'இகுமுல் லதீன மின் அஸ்லாBபிகும் வ அன் தஜ்ம'ஊ Bபய்னல் உக்தய்னி இல்லா மா கத் ஸலFப்; இன்னல்லாஹ கான கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் தாய்மார்களும், உங்கள் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரியின் பெண்பிள்ளைகளும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் நீங்கள் வீடு கூடிவிட்டால் அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளையும் (நீங்கள் திருமணம் செய்வது கூடாது). அவளைத் திருமணம் செய்த பின்னர் அவளுடன் வீடு கூடாதிருந்தாலோ (அவளை நீக்கிவிட்டு அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளை திருமணம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவிகளையும் (நீங்கள் திருமணம் செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது). இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் கூடாது. இதற்கு முன்னர் நடந்துவிட்டவற்றைத் தவிர (அறியாத நிலைமையில் முன்னர் நீங்கள் செய்துவிட்டதை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
(பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள் மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன் பிறந்த சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள்; மேலும், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், மேலும், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகையக் குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத் தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவிய ராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.) ஆனால் முன்னால் நடந்தது நடந்துவிட்டது. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்), சகோதரனுடைய புதல்விகளும், (உங்கள்), சகோதரியுடைய புதல்விகளும், உங்களுக்குப் பாலூட்டிய உங்கள் (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடிச் சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும், உங்கள்மீது (அவர்களைத் திருமணம் செய்வது) விலக்கப்பட்டுள்ளது, இன்னும் நீங்கள் உடலுறவு கொண்டு விட்டீர்களே, அத்தகைய உங்கள் மனைவியரிலிருந்து (முந்தைய கணவனிடத்துப் பிறந்து) உங்கள் மடிகளில் வளர்ந்துவரும் பெண்மக்களையும் (நீங்கள் திருமணம் செய்வது விலக்கப்பட்டிருக்கிறது). ஆனால், (நீங்கள் மணம் செய்து,) அவர்களுடன் உடலுறவு கொள்ளவில்லையானால், (அவளை விலக்கிவிட்டு அவளுடைய மகளை மணம்செய்து கொள்வதில்,) உங்கள்மீது குற்றமில்லை, இன்னும், உங்களுடைய முதுகந்தண்டுகளிலிருந்து உண்டான உங்கள் புதல்வர்களின் மனைவியர்களையும் (நீங்கள் மணம் செய்துகொள்வது விலக்கப்பட்டிருக்கிறது.) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்த்துக்கொள்வதும் (விலக்கப்பட்டிருக்கிறது). இதற்கு முன்னர் நடந்துவிட்டவைகளைத் தவிர, (அவற்றை) நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
Prohibited to you [for marriage] are your mothers, your daughters, your sisters, your father's sisters, your mother's sisters, your brother's daughters, your sister's daughters, your [milk] mothers who nursed you, your sisters through nursing, your wives' mothers, and your step-daughters under your guardianship [born] of your wives unto whom you have gone in. But if you have not gone in unto them, there is no sin upon you. And [also prohibited are] the wives of your sons who are from your [own] loins, and that you take [in marriage] two sisters simultaneously, except for what has already occurred. Indeed, Allah is ever Forgiving and Merciful.
وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ۚ كِتٰبَ اللّٰهِ عَلَیْكُمْ ۚ وَاُحِلَّ لَكُمْ مَّا وَرَآءَ ذٰلِكُمْ اَنْ تَبْتَغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِیْضَةً ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا تَرٰضَیْتُمْ بِهٖ مِنْ بَعْدِ الْفَرِیْضَةِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟
وَّالْمُحْصَنٰتُமணமானவர்கள்مِنَஇருந்துالنِّسَآءِபெண்களில்اِلَّاதவிரمَاஎவர்கள்مَلَـكَتْசொந்தமாக்கிக் கொண்டதுاَيْمَانُكُمْ‌ۚஉங்கள் வலக்கரங்கள்كِتٰبَசட்டம்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْ‌ۚஉங்கள் மீதுوَاُحِلَّஅனுமதிக்கப்பட்டதுلَـكُمْஉங்களுக்குمَّاஎவர்கள்وَرَآءَதவிரذٰ لِكُمْஇவர்(கள்)اَنْ تَبْتَـغُوْاநீங்கள் தேடுவதுبِاَمْوَالِكُمْஉங்கள் செல்வங்கள் மூலம்مُّحْصِنِيْنَஒழுக்கமுள்ளவர்களாகغَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕவிபச்சாரர்களாக இல்லாமல்فَمَاஎவள்اسْتَمْتَعْتُمْசுகம்அனுபவித்தீர்கள்بِهٖஅவளிடம்مِنْهُنَّஅவர்களில்فَاٰ تُوகொடுங்கள்هُنَّஅவர்களுக்குاُجُوْرமஹர்களைهُنَّஅவர்களுடையفَرِيْضَةً‌ ؕகடமையாகوَلَا جُنَاحَகுற்றமில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுفِيْمَاஎதில்تَرٰضَيْـتُمْவிரும்பினீர்கள்بِهٖஅதில்مِنْۢ بَعْدِபின்னர்الْـفَرِيْضَةِ‌ ؕகடமைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِيْمًاநன்கறிபவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வல்முஹ்ஸனாது மினன் னிஸா'இ இல்லா மா மலகத் அய்மானுகும் கிதாBபல் லாஹி 'அலய்கும்; வ உஹில்ல லகும் மா வரா'அ தாலிகும் அன் தBப்தகூ Bபி'அம்வாலிகும் முஹ்ஸினீன கய்ர முஸா Fபிஹீன்; Fபமஸ்தம்தஃதும் Bபிஹீ மின்ஹுன்ன Fப ஆதூஹுன்ன உஜூரஹுன்ன Fபரீளஹ்; வலா ஜுனாஹ 'அலய்கும் Fபீமா தராளய்தும் Bபிஹீ மிம் Bபஃதில் Fபரீளஹ்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
முஹம்மது ஜான்
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
கணவனுள்ள பெண்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்வது விலக்கப் பட்டுள்ளது). (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வங்களின் மூலம் (திருமணக் கட்டணமாகிய ‘மஹரைக்' கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவர்களோடு வீடு கூடிவிட்டீர்களோ அவர்களுக்கு குறிப்பிட்ட ‘மஹரை' அவர்களிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்துவிடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதைக் குறைக்கவோ கூட்டவோ) நீங்கள் இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது ஒரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்றப் பெண்களை உங்கள் செல்வத்தின் வாயிலாக (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; (ஆனால் இந்த நிபந்தனையுடன்:) திருமண வரையறைக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் நீங்கள் தகாத உறவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவர்களிடம் அனுபவித்த இன்ப சுகத்திற்குப் பதிலாக அவர்களின் மஹ்ரை கடமை என உணர்ந்து அதனைக் கட்டாயம் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! ஆயினும் மஹ்ரை நிர்ணயம் செய்த பின்பு ஒருவருக்கொருவர் மனநிறைவோடு நீங்கள் ஏதேனும் உடன்பாடு செய்துகொண்டால் உங்கள் மீது தவறேதுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பெண்களில் கணவனுள்ளவர்களும் (திருமணம் செய்து கொள்ளப்படுவதற்கு விலக்கப்பட்டுள்ளனர், நிராகரிப்போருடன் நிகழ்ந்த யுத்தத்தில் பிடிக்கப்பட்டு) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்) பெண்களைத் தவிர, (இவ்வாறு) உங்கள் மீது அல்லாஹ்வின் கட்டளையாக (இது விதியாக்கப்பட்டுள்ளது.) இவர்களைத் தவிர மற்ற பெண்களைத் திருமணம் செய்பவர்களாக விபச்சாரம் செய்யாதவர்களாக (திருமண அன்பளிப்பாக) உங்கள் செல்வங்களைக்கொண்டு (மஹரைக்குறிப்பிட்டு சட்டரீதியாக திருமணத்தின் மூலம்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டும் உள்ளது, ஆகவே, (இவ்வாறு மணமுடித்த பெண்களாகிய) அவர்களிடமிருந்து எதை நீங்கள் சுகமனுபவித்தீர்களோ, (அதற்காக) அவர்களுக்குக் குறிப்பிட்ட மஹரைக் கட்டாயக் கடமையாக அவர்களுக்கு (க்குறைவின்றி) நீஙகள் கொடுத்து விடுங்கள், மேலும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர், (அதனைக் குறைக்கவோ, கூட்டவோ) நீங்கள் ஒருவருக்கொருவர் பொருந்திக்கொள்வதில் உங்கள் மீது யாதொரு குற்றமுமில்லை, நிச்சயமாக (உங்கள் செயலை) அல்லாஹ் மிக்க அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
And [also prohibited to you are all] married women except those your right hands possess. [This is] the decree of Allah upon you. And lawful to you are [all others] beyond these, [provided] that you seek them [in marriage] with [gifts from] your property, desiring chastity, not unlawful sexual intercourse. So for whatever you enjoy [of marriage] from them, give them their due compensation as an obligation. And there is no blame upon you for what you mutually agree to beyond the obligation. Indeed, Allah is ever Knowing and Wise.
وَمَنْ لَّمْ یَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ یَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ مِّنْ فَتَیٰتِكُمُ الْمُؤْمِنٰتِ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِكُمْ ؕ بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَیْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ ۚ فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ اَتَیْنَ بِفَاحِشَةٍ فَعَلَیْهِنَّ نِصْفُ مَا عَلَی الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِیَ الْعَنَتَ مِنْكُمْ ؕ وَاَنْ تَصْبِرُوْا خَیْرٌ لَّكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
وَمَنْஎவர்لَّمْ يَسْتَطِعْசக்தி பெறவில்லைمِنْكُمْஉங்களில்طَوْلًاபொருளாதாரம்اَنْ يَّنْكِحَமணம் முடிப்பதற்குالْمُحْصَنٰتِசுதந்திர பெண்களைالْمُؤْمِنٰتِநம்பிக்கைகொண்ட பெண்களைفَمِنْஆகவே, இருந்துمَّاஎவர்கள்مَلَـكَتْசொந்தமாக்கினاَيْمَانُكُمْஉங்கள் வலக்கரங்கள்مِّنْஇருந்துفَتَيٰـتِكُمُஉங்கள் அடிமைப் பெண்கள்الْمُؤْمِنٰتِ‌ ؕநம்பிக்கைகொண்ட பெண்கள்وَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِاِيْمَانِكُمْ‌ ؕஉங்கள் நம்பிக்கையைبَعْضُكُمْஉங்களில் சிலர்مِّنْۢ بَعْضٍ‌ ۚசிலரைச் சேர்ந்தவரேفَانْكِحُوஆகவே மணமுடியுங்கள்هُنَّஅவர்களைبِاِذْنِஅனுமதியுடன்اَهْلِهِنَّஅவர்களின் உரிமையாளரின்وَاٰ تُوْهُنَّகொடுங்கள் / அவர்களுக்குاُجُوْرَهُنَّஅவர்களுடைய மஹர்களைبِالْمَعْرُوْفِநல்ல முறையில்مُحْصَنٰتٍபத்தினிகளாகغَيْرَ مُسٰفِحٰتٍவிபச்சாரிகளாக இல்லாமல்وَّلَا مُتَّخِذٰتِஆக்கிக் கொள்ளாதவர்களாகاَخْدَانٍ‌ ؕரகசிய நண்பர்களைفَاِذَاۤ اُحْصِنَّஅல்லது மணமுடிக்கப்பட்டால்فَاِنْ اَ تَيْنَஅவர்கள் செய்தால்بِفَاحِشَةٍமானக்கேடானதைفَعَلَيْهِنَّஅவர்கள் மீதுنِصْفُபாதிمَاஎதுعَلَىமீதுالْمُحْصَنٰتِசுதந்திரமானபெண்கள்مِنَஇருந்துالْعَذَابِ‌ ؕதண்டனைذٰ لِكَஇதுلِمَنْஎவருக்குخَشِىَபயந்தார்الْعَنَتَபாவத்தைمِنْكُمْ‌ ؕஉங்களில்وَاَنْ تَصْبِرُوْاநீங்கள்சகித்திருப்பதுخَيْرٌநன்றுلَّكُمْ‌ ؕஉங்களுக்குوَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏மகா கருணையாளன்
வ மல் லம் யஸ்ததிஃ மின்கும் தவ்லன் அய் யன்கிஹல் முஹ்ஸனாதில் மு'மினாதி Fபமிம்மா மலகத் அய்மானுகும் மின் Fபதயாதிகுமுல் மு'மினாத்; வல்லாஹு அஃலமு Bபி ஈமானிகும்; Bபஃளுகும் மிம் Bபஃள்; Fபன்கிஹூஹுன்ன Bபி இத்னி அஹ்லிஹின்ன வ ஆதூஹுன்ன உஜூரஹுன்ன Bபில்மஃரூFபி முஹ்ஸனாதின் கய்ர முஸா Fபிஹாதி(ன்)வ் வலா முத்தகிதாதி அக்தான்; Fப இதா உஹ்ஸின்ன Fப இன் அதய்ன BபிFபாஹி ஷதின் Fப'அலய்ஹின்ன்ன னிஸ்Fபு மா 'அலல் முஹ்ஸனாதி மினல் 'அதாBப்; தாலிக லிமன் கஷியல் 'அனத மின்கும்; வ அன் தஸ்Bபிரூ கய்ருல் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் எவருக்குச் சுதந்திரமான முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கிறான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே, (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்க வேண்டும். விபசாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபசாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகிறாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
மேலும், ஈமான் இறைநம்பிக்கை கொண்ட அடிமைகளல்லாத பெண்களைத் திருமணம் செய்து கொள்ள உங்களில் எவர் வசதி வாய்ப்புப் பெறவில்லையோ அவர் உங்கள் ஆதிக்கத்தில் இருக்கின்ற இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளட்டும்! அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறியக்கூடியவன். நீங்கள் ஒருவர் இன்னொருவரிலிருந்து தோன்றியிருக்கிறீர்கள். எனவே அவ்வடிமைப் பெண்களை, அவர்களைப் பராமரிப்போரின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்! மேலும் அவர்களுக்குரிய மஹ்ரை நல்ல முறையில் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அப்பெண்கள் திருமண வரையறைக்கு உட்பட்டவர்களாகவும், தகாத உறவில் ஈடுபடாதவர்களாகவும், மற்றும் கள்ளக் காதலர்களை வைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக (இந்த வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன!) மேலும் அவ்வடிமைப் பெண்கள் திருமண வரம்புக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு ஒழுக்கக்கேடான செயல் எதனையும் செய்து விட்டால் அடிமைகளல்லாத பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு. திருமணம் முடிக்காத காரணத்தால் இறையச்சமுடைய வாழ்விலிருந்து பிறழ்ந்து விடுவோமோ என்ற அச்சமுடையவர்க்கே (அடிமைப் பெண்களை மணந்து கொள்ளலாம் எனும்) இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. ஆயினும், நீங்கள் பொறுமையை மேற்கொள்வதே உங்களுக்குச் சிறந்ததாகும். மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உங்களில் எவர் சுதந்திரமுள்ள விசுவாசியான பெண்களைத் திருமணம் செய்து கொள்ள (பொருளாதார) வசதியால் சக்தி பெறவில்லையோ, அவர், விசுவாசமுள்ள உங்களுடைய அடிமைப் பெண்களில், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டதிலிருந்து (திருமணம் செய்து கொள்ளலாம்). இன்னும் அல்லாஹ் உங்களுடைய விசுவாசத்தை நன்கு அறிந்து இருக்கின்றான், உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்களாவர், ஆகவே (அப்பெண்கள், பத்தினித்தனமான) பரிசுத்தமானவர்களாக விபச்சாரம் செய்யாதவர்களாக, மேலும் கள்ள நட்புக் கொள்ளாதவர்களாக இருக்கும் நிலையில் - அவர்களுடைய எஜமானனின் அனுமதி பெற்று மணம் முடித்துக் கொள்ளுங்கள், அவர்களுக்குரிய மஹரையும் அறியப்பட்ட (நியாயமான) முறையில் அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள், ஆகவே, (இவ்வாறு) திருமணம் செய்யப்பட்டால் (அதற்குப்)பின் (அடிமைப்பெண்களான) அவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் (அடிமையல்லாத) திருமணமான உரிமைப் பெண்களுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அவர்கள்மீது உண்டு, (அடிமைப் பெண்ணை திருமணம் செய்யும்) இது உங்களில் எவர், (மனைவியின்றி இருந்து) விபச்சாரத்தை பயந்தாரோ அவருக்குத்தான், இன்னும், நீங்கள் பொறுத்திருப்பது உங்களுக்கு நன்று, மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
Saheeh International
And whoever among you cannot [find] the means to marry free, believing women, then [he may marry] from those whom your right hands possess of believing slave girls. And Allah is most knowing about your faith. You [believers] are of one another. So marry them with the permission of their people and give them their due compensation [i.e., mahr] according to what is acceptable. [They should be] chaste, neither [of] those who commit unlawful intercourse randomly nor those who take [secret] lovers. But once they are sheltered in marriage, if they should commit adultery, then for them is half the punishment for free [unmarried] women. This [allowance] is for him among you who fears affliction [i.e., sin], but to be patient is better for you. And Allah is Forgiving and Merciful.
یُرِیْدُ اللّٰهُ لِیُبَیِّنَ لَكُمْ وَیَهْدِیَكُمْ سُنَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ وَیَتُوْبَ عَلَیْكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
يُرِيْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்لِيُبَيِّنَதெளிவுபடுத்துவதற்குلَـكُمْஉங்களுக்குوَيَهْدِيَكُمْஇன்னும் நேர்வழி நடத்துவதற்கு/உங்களைسُنَنَவழிகளைالَّذِيْنَஎவர்களின்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்وَيَتُوْبَஇன்னும் பிழை பொறுப்பதற்குعَلَيْكُمْ‌ ؕஉங்கள் மீதுوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
யுரீதுல் லாஹு லியுBபய் யின லகும் வ யஹ்தியகும் ஸுனனல் லதீன மின் கBப்லிகும் வ யதூBப 'அலய்கும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
முஹம்மது ஜான்
அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி உங்கள் குற்றங்களை மன்னிப்பதை(யும் உங்கள் மீது அன்பு செலுத்துவதையும்) விரும்புகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மிக ஞானமுடையவன் ஆவான்.
IFT
உங்களுக்கு முன்சென்ற உத்தமர்களின் வழிமுறைகளை உங்களுக்கு விளக்கிடவும், அவ்வழிகளிலே உங்களை நடத்திச் செல்லவும் அல்லாஹ் விரும்புகின்றான் அவன் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்ப நாட்டம் கொண்டுள்ளான். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ், (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி உங்களது தவ்பாக்களை (பாவமன்னிப்பை) அங்கீகரித்து விடவும் நாடுகிறான், மேலும், அல்லாஹ் நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்
Saheeh International
Allah wants to make clear to you [the lawful from the unlawful] and guide you to the [good] practices of those before you and to accept your repentance. And Allah is Knowing and Wise.
وَاللّٰهُ یُرِیْدُ اَنْ یَّتُوْبَ عَلَیْكُمْ ۫ وَیُرِیْدُ الَّذِیْنَ یَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِیْلُوْا مَیْلًا عَظِیْمًا ۟
وَاللّٰهُஅல்லாஹ்يُرِيْدُநாடுகிறான்اَنْ يَّتُوْبَபிழைபொறுக்கعَلَيْكُمْஉங்கள் மீதுوَيُرِيْدُநாடுகிறார்(கள்)الَّذِيْنَஎவர்கள்يَتَّبِعُوْنَபின்பற்றுகிறார்கள்الشَّهَوٰتِஅற்ப ஆசைகளைاَنْ تَمِيْلُوْاநீங்கள் சாய்வதைمَيْلًاசாய்வதுعَظِيْمًا‏முற்றிலும்
வல்லாஹு யுரீது அய் யதூBப 'அலய்கும் வ யுரீதுல் லதீன யத்தBபி 'ஊனஷ் ஷஹவாதி அன் தமீலூ மய்லன் 'அளீமா
முஹம்மது ஜான்
மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வோ, (நீங்கள் பாவத்திலிருந்து மீண்ட பின்) உங்களை மன்னிப்பதையே விரும்புகிறான். (எனினும்) முற்றிலும் (சரீர) இச்சைகளை பின்பற்றி நடப்பவர்களோ (நேரான வழியிலிருந்து) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (பாவத்தில் ஆழ்ந்து) விடுவதையே விரும்புகின்றனர்.
IFT
ஆம்! அல்லாஹ் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்பவே விரும்புகிறான். ஆனால், தம் மன இச்சைகளைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்களோ நேரிய வழியிலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகிச் சென்றிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் உங்களது தவ்பாவை (பாவமன்னிப்பை) நாடுகின்றான், இன்னும், (முற்றிலும்) மன இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ, நீங்கள் (நேர்வழியிலிருந்து) முற்றிலும் சாய்ந்து விடுவதையே நாடுகின்றனர்.
Saheeh International
Allah wants to accept your repentance, but those who follow [their] passions want you to digress [into] a great deviation.
یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّخَفِّفَ عَنْكُمْ ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِیْفًا ۟
يُرِيْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْ يُّخَفِّفَஇலகுவாக்கعَنْكُمْ‌ۚஉங்களுக்குوَخُلِقَஇன்னும் படைக்கப்பட்டுள்ளான்الْاِنْسَانُமனிதன்ضَعِيْفًا‏பலவீனனாக
யுரீதுல் லாஹு அய் யுகFப்FபிFப 'அன்கும்; வ குலிகல் இன்ஸானு ள'ஈFபா
முஹம்மது ஜான்
அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
IFT
அல்லாஹ் உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த விரும்புகின்றான். ஏனென்றால், மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான்.
Saheeh International
And Allah wants to lighten for you [your difficulties]; and mankind was created weak.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ ۫ وَلَا تَقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِیْمًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَاْكُلُوْۤاபுசிக்காதீர்கள்اَمْوَالَـكُمْஉங்கள் செல்வங்களைبَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்بِالْبَاطِلِதவறான முறையில்اِلَّاۤதவிரاَنْ تَكُوْنَஇருப்பதுتِجَارَةًவர்த்தகமாகعَنْ تَرَاضٍபரஸ்பர விருப்பத்துடன்مِّنْكُمْ‌உங்களின்وَلَا تَقْتُلُوْۤاஇன்னும் கொல்லாதீர்கள்اَنْـفُسَكُمْ‌ؕஉங்கள் உயிர்களைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِكُمْஉங்கள் மீதுرَحِيْمًا‏பெரும் கருணையாளனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா த'குலூ அம்வாலகும் Bபய்னகும் Bபில்Bபாதிலி 'இல்லா அன் தகூன திஜாரதன் 'அன் தராளிம் மின்கும்; வலா தக்துலூ அன்Fபுஸகும்; இன்னல் லாஹ கான Bபிகும் ரஹீமா
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக்கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகக் கருணையாளனாக இருக்கிறான்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவர் மற்றொரு வரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! (பொருளீட்டுவதற்கு) உங்களுக்கிடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல்வாங்கல் இருக்க வேண்டும். உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்கள்மீது அளப்பரிய கருணை புரிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி (உங்களுடைய) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள், அன்றியும் (இதற்காக) உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ், உங்களிடம் மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்.
Saheeh International
O you who have believed, do not consume one another's wealth unjustly but only [in lawful] business by mutual consent. And do not kill yourselves [or one another]. Indeed, Allah is to you ever Merciful.
وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِیْهِ نَارًا ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
وَمَنْஎவர்يَّفْعَلْசெய்வாரோذٰ لِكَஅதைعُدْوَانًاவரம்பை மீறிوَّظُلْمًاஇன்னும் அநியாயமாகفَسَوْفَவிரைவில்نُصْلِيْهِஅவரை எரிப்போம்نَارًا‌ ؕநரகத்தில்وَكَانَஇருக்கிறதுذٰ لِكَஅதுعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்يَسِيْرًا‏சுலபமாக
வ மய் யFப்'அல் தாலிக 'உத்வான(ன்)வ் வ ளுல்மன் Fபஸவ்Fப னுஸ்லீஹி னாரா; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
முஹம்மது ஜான்
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதாக இருக்கிறது!
IFT
எவன் வரம்பு மீறியும் அநீதியாகவும் இவ்வாறு செய்கின்றானோ அவனை நாம் நெருப்பில் வீசியே தீருவோம்! மேலும், இது அல்லாஹ்வுக்கு இலகுவானதாக உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எவரேனும், வரம்புமீறி அக்கிரமமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (விரைவில்) நரகத்தில் நுழையச் செய்து விடுவோம், இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க இலகுவானதாகவே இருக்கிறது.
Saheeh International
And whoever does that in aggression and injustice - then We will drive him into a Fire. And that, for Allah, is [always] easy.
اِنْ تَجْتَنِبُوْا كَبَآىِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَنُدْخِلْكُمْ مُّدْخَلًا كَرِیْمًا ۟
اِنْ تَجْتَنِبُوْاநீங்கள் விலகிக் கொண்டால்كَبٰٓٮِٕرَபெரும் பாவங்களைمَاஎதுتُنْهَوْنَதடுக்கப்படுகிறீர்கள்عَنْهُஅதை விட்டுنُكَفِّرْஅகற்றி விடுவோம்عَنْكُمْஉங்களை விட்டுسَيِّاٰتِكُمْசிறு பாவங்களை/உங்கள்وَنُدْخِلْـكُمْஇன்னும் நுழைப்போம்/உங்களைمُّدْخَلًاஇடத்தில்كَرِيْمًا‏கண்ணியமான
இன் தஜ்தனிBபூ கBபா'இர மா துன்ஹவ்ன 'அன்ஹு னுகFப்Fபிர் 'அன்கும் ஸய்யிஆதிகும் வ னுத்கில்கும் முத்கலன் கரீமா
முஹம்மது ஜான்
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக்கொண்டால், உங்கள் (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்.
IFT
உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எதை விட்டும் நீங்கள் விலக்கப்பட்டிருக்கிறீர்களோ அத்தகைய பெரும்பாவ(மான காரிய)ங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற சிறிய) தீயவைகளை உங்களை விட்டும் நாம் போக்கிவிடுவோம் , இன்னும், சங்கையான நுழைவிடத்தில் உங்களை நாம் நுழைவிப்போம்.
Saheeh International
If you avoid the major sins which you are forbidden, We will remove from you your lesser sins and admit you to a noble entrance [into Paradise].
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰی بَعْضٍ ؕ لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ؕ وَسْـَٔلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟
وَلَا تَتَمَنَّوْاஏங்காதீர்கள்مَاஎதைفَضَّلَமேன்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்بِهٖஅதைக் கொண்டுبَعْضَكُمْஉங்களில் சிலரைعَلٰىவிடبَعْضٍ‌ ؕசிலர்لِلرِّجَالِஆண்களுக்குنَصِيْبٌஒரு பங்குمِّمَّاஎதிலிருந்துاكْتَسَبُوْا ؕசம்பாதித்தார்கள்وَلِلنِّسَآءِஇன்னும் பெண்களுக்குنَصِيْبٌஒரு பங்குمِّمَّاஎதி லிருந்துاكْتَسَبْنَ‌ ؕசம்பாதித்தார்கள்وَسْئَـلُواகேளுங்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்مِنْஇருந்துفَضْلِهٖ ؕஅவனின் அருள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمًا‏நன்கறிந்தவனாக
வ லா ததமன்னவ் மா Fபள்ளலல் லாஹு Bபிஹீ Bபஃளகும் 'அலா Bபஃள்; லிர்ரிஜாலி னஸீBபும் மிம்மக் தஸBபூ வ லின்னிஸா'இ னஸீBபும் மிம்மக் தஸBப்ன்; வஸ்'அலுல்லாஹ மின் Fபள்லிஹ்; இன்னல் லாஹ கான Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
முஹம்மது ஜான்
மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
அல்லாஹ் உங்களில் சிலருக்கு சிலரைவிட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும், பெண்களுக்கு அவர்கள் சம்பாதித் ததற்கேற்ப பங்கு உண்டு. இருப்பினும் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கோரிய வண்ணம் இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் உங்களில் சிலரைக்காண சிலரை, அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதைப் பற்றி நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்தவற்றில் உரிய பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்தவற்றில் (உரிய) பங்குண்டு, மேலும், (நற்செயல்களின் மூலம்) அல்லாஹ்விடத்தில் அவனின் பேரருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
And do not wish for that by which Allah has made some of you exceed others. For men is a share of what they have earned, and for women is a share of what they have earned. And ask Allah of His bounty. Indeed Allah is ever, of all things, Knowing.
وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِیَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ؕ وَالَّذِیْنَ عَقَدَتْ اَیْمَانُكُمْ فَاٰتُوْهُمْ نَصِیْبَهُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدًا ۟۠
وَلِكُلٍّஒவ்வொருவருக்கும்جَعَلْنَاஆக்கினோம்مَوَالِىَவாரிசுகளைمِمَّاஎதில்تَرَكَவிட்டுச்சென்றார்الْوَالِدٰنِதாய், தந்தைوَالْاَقْرَبُوْنَ‌ ؕஇன்னும் நெருங்கிய உறவினர்கள்وَالَّذِيْنَஎவர்கள்عَقَدَتْஒப்பந்தம் செய்தனاَيْمَانُكُمْஉங்கள் சத்தியங்கள்فَاٰ تُوْهُمْகொடுத்து விடுங்கள் / அவர்களுக்குنَصِيْبَهُمْ‌ؕபங்கை/அவர்களின்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلٰىமீதுكُلِّஎல்லாம்شَىْءٍபொருள்شَهِيْدًاசாட்சியாளனாக
வ லிகுல்லின் ஜ'அல்னா ம வாலிய மிம்மா தரகல் வாலிதானி வல் அக்ரBபூன்; வல்லதீன 'அகதத் அய்மானுகும் Fப ஆதூஹும் னஸீBபஹும்; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீதா
முஹம்மது ஜான்
இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்; அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கிறோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் (நன்கறிந்த) சாட்சியாளனாக இருக்கிறான்.
IFT
தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்துக்களிலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்துவிடுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், ஒவ்வொருவருக்கும் (அவருடைய) பெற்றோர், நெருங்கிய சுற்றத்தார் (ஆகியோர்) விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து (அதை அடையக்கூடிய) வாரிஸுகளை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம், இன்னும், உங்களுடைய வலக்கரங்கள் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டனவோ அத்தகையோர்-அவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்து விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
And for all, We have made heirs to what is left by parents and relatives. And to those whom your oaths have bound [to you] - give them their share. Indeed Allah is ever, over all things, a Witness.
اَلرِّجَالُ قَوّٰمُوْنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَیْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ؕ وَالّٰتِیْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِی الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَیْهِنَّ سَبِیْلًا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیًّا كَبِیْرًا ۟
اَلرِّجَالُஆண்கள்قَوَّامُوْنَநிர்வகிப்பவர்கள்عَلَى النِّسَآءِபெண்களைبِمَاஎதன் காரணமாகفَضَّلَமேன்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்بَعْضَهُمْஅவர்களில் சிலரைعَلٰىவிடبَعْضٍசிலர்وَّبِمَاۤஎதன் காரணமாகاَنْفَقُوْاசெலவழித்தார்கள்مِنْஇருந்துاَمْوَالِهِمْ‌ ؕதங்கள் செல்வங்கள்فَالصّٰلِحٰتُநல்லபெண்கள்قٰنِتٰتٌபணிந்தவர்கள்حٰفِظٰتٌபாதுகாப்பவர்கள்لِّلْغَيْبِமறைவில்بِمَاஎதைக் கொண்டுحَفِظَபாதுகாத்தான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَالّٰتِىْஎவர்கள்تَخَافُوْنَபயப்படுகிறீர்கள்نُشُوْزَهُنَّஅவர்கள் மாறுபாடு செய்வதைفَعِظُوஉபதேசியுங்கள்هُنَّஅவர்களுக்குوَاهْجُرُوஅப்புறப்படுத்துங்கள்هُنَّஅவர்களைفِى الْمَضَاجِعِபடுக்கைகளில்وَاضْرِبُوஇன்னும் அடியுங்கள்هُنَّ‌ ۚஅவர்களைفَاِنْ اَطَعْنَكُمْஅவர்கள் கீழ்ப்படிந்தால் / உங்களுக்குفَلَا تَبْغُوْاதேடாதீர்கள்عَلَيْهِنَّஅவர்கள் மீதுسَبِيْلًا‌ஒரு வழியைؕاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِيًّاஉயர்ந்தவனாகكَبِيْرًا‏பெரியவனாக
அர்ரிஜாலு கவ்வாமூன 'அலன் னிஸா'இ Bபிமா Fபள் ளலல்லாஹு Bபஃளஹும் 'அலா Bபஃளி(ன்)வ் வ Bபிமா அன்Fபகூ மின் அம்வாலிஹிம்; Fபஸ்ஸாலிஹாது கானிதாதுன் ஹாFபிளாதுல் லில் கய்Bபி Bபிமா ஹFபிளல் லாஹ்; வல்லாதீ தகாFபூன னுஷூ Zஜஹுன்ன Fப 'இளூஹுன்ன வஹ்ஜுரூஹுன்ன Fபில் மளாஜி'இ வள்ரிBபூஹுன்ன Fப இன் அதஃனகும் Fபலா தBப்கூ 'அலய்ஹின்ன ஸBபீலா; இன்னல்லாஹ கான 'அலிய்யன் கBபீரா
முஹம்மது ஜான்
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆண், பெண் இரு பாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக்கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் திருந்தாவிட்டால்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) ஒரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேலானவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான்.
IFT
ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்! மேலும் அவர்களை அடியுங்கள்! ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், பிறகு அவர்களுக்கு எதிராகக் கை நீட்ட எந்த சாக்குபோக்குகளையும் தேடாதீர்கள்! திண்ணமாக நம்புங்கள்: அல்லாஹ் மேலே இருக்கின்றான்; அவன் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்களாவர், ஏனெனில், அவர்களில் சிலரைக்காண (மற்ற) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலுமாகும், ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள், (என்போர் அல்லாஹ்வுக்குப் பயந்து தங்கள் கணவனுக்கு) பணிந்து நடப்பவர்கள் (கற்பு மற்றும் தங்கள் கணவனது உடைமைகள் ஆகிய) மறைவானதை அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிக்காத்துக் கொள்பவர்கள், இன்னும், (அப்பெண்களாகிய) அவர்களில் (தம் கணவனுக்கு) எவர்களின் மாறுபாட்டை அஞ்சுகிறீர்களோ, அப்போது அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள், (அவர்கள் திருந்தாவிடில்) படுக்கைகளிலும் அவர்களை வெறுத்து (ஒதுக்கி) விடுங்கள், (அதிலும் அவர்கள் சீர்திருந்தாவிடில்) அவர்களை (காயமேற்படாது) அடியுங்கள், அதனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்பட்டுவிட்டால், அவர்கள் மீது (இதர குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்வானவனாக, மிகப் பெரியவனாக இருக்கின்றான்.
Saheeh International
Men are in charge of women by [right of] what Allah has given one over the other and what they spend [for maintenance] from their wealth. So righteous women are devoutly obedient, guarding in [the husband's] absence what Allah would have them guard. But those [wives] from whom you fear arrogance - [first] advise them; [then if they persist], forsake them in bed; and [finally], strike them [lightly]. But if they obey you [once more], seek no means against them. Indeed, Allah is ever Exalted and Grand.
وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَیْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا ۚ اِنْ یُّرِیْدَاۤ اِصْلَاحًا یُّوَفِّقِ اللّٰهُ بَیْنَهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا خَبِیْرًا ۟
وَاِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்شِقَاقَபிளவைبَيْنِهِمَاஅந்த இருவருக்குள்فَابْعَثُوْاஏற்படுத்துங்கள்حَكَمًاஒரு தீர்ப்பாளரைمِّنْஇருந்துاَهْلِهٖஅவனின் உறவினர்وَحَكَمًاஇன்னும் ஒரு தீர்ப்பாளரைمِّنْஇருந்துاَهْلِهَا‌ ۚஅவளின் உறவினர்اِنْ يُّرِيْدَاۤஇருவரும் நாடினால்اِصْلَاحًاசீர்திருத்தத்தைيُّوَفِّـقِஒற்றுமை ஏற்படுத்துவான்اللّٰهُஅல்லாஹ்بَيْنَهُمَا‌ ؕஅந்த இருவருக்கிடையில்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلِيْمًاநன்கறிந்தவனாகخَبِيْرًا‏ஆழ்ந்தறிந்தவனாக
வ இன் கிFப்தும் ஷிகாக Bபய்னி ஹிமா FபBப்'அதூ ஹக மம் மின் அஹ்லிஹீ வ ஹகமம் மின் அஹ்லிஹா; இ(ன்)ய்-யுரீதா இஸ்லாஹ் அய்-யுவFப்Fபிகில் லாஹு Bபய்னஹுமா; இன்னல் லாஹ கான 'அலீமன் கBபீரா
முஹம்மது ஜான்
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவனுடைய உறவினர்களில் ஒருவரையும், அவளுடைய உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனாக, நன்கு கவனிப்பவனாக இருக்கிறான்.
IFT
மேலும், கணவன், மனைவிக்கிடையே உறவு முறியுமோ என நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும், மனைவியரின் உறவினரிலிருந்து மற்றொரு நடுவரையும் நியமியுங்கள். அவ்விருவரும் உறவைச் சீர்படுத்த நாடினால், அல்லாஹ்வும் அவ்விருவருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். திண்ணமாக, அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (கணவன் மனைவியாகிய) இருவருக்கும், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால் அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள், அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டுபண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் தெரிந்தவனாக, நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.
Saheeh International
And if you fear dissension between the two, send an arbitrator from his people and an arbitrator from her people. If they both desire reconciliation, Allah will cause it between them. Indeed, Allah is ever Knowing and Aware.
وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّبِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَالْجَارِ ذِی الْقُرْبٰی وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِیْلِ ۙ وَمَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۟ۙ
وَاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَلَا تُشْرِكُوْاஇன்னும் இணையாக்காதீர்கள்بِهٖஅவனுக்குشَيْــٴًـــا‌ ؕஎதையும்وَّبِالْوَالِدَيْنِஇன்னும் தாய் தந்தைக்குاِحْسَانًاநன்மை செய்யுங்கள்وَّبِذِى الْقُرْبٰىஇன்னும் உறவினருக்குوَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகள்وَ الْمَسٰكِيْنِஇன்னும் ஏழைகள்وَالْجَـارِஇன்னும் அண்டைவீட்டார்ذِى الْقُرْبٰىஉறவினர்وَالْجَـارِஇன்னும் அண்டைவீட்டார்الْجُـنُبِஅந்நியர்وَالصَّاحِبِஇன்னும் நண்பர்بِالْجَـنْۢبِஅருகில் இருக்கும்وَابْنِ السَّبِيْلِ ۙஇன்னும் பயணி(கள்)وَمَاஇன்னும் எவர்مَلَـكَتْசொந்தமாக்கினاَيْمَانُكُمْ‌ ؕஉங்கள் வலக்கரங்கள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்مَنْஎவன்كَانَஇருக்கிறான்مُخْتَالًاகர்வமுடையவனாகفَخُوْرَا ۙ‏பெருமையுடையவனாக
வஃBபுதுல் லாஹ வலா துஷ்ரிகூ Bபிஹீ ஷய்'அ(ன்)வ் வ Bபில்வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ Bபிதில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வல்ஜாரி தில்குர்Bபா வல்ஜாரில் ஜுனுBபி வஸ்ஸாஹிBபி Bபில்ஜம்Bபி வBப்னிஸ் ஸBபீலி வமா மலகத் அய்மானுகும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபு மன் கான முக்தாலன் Fபகூரா
முஹம்மது ஜான்
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
IFT
மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள், பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள், (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டினருக்கும், அந்நியரான அண்டை வீட்டினருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொணடவர்களுக்கும் (அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.) கர்வங்கொண்டவனாக, பெருமையாளனாக இருப்போரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
Saheeh International
Worship Allah and associate nothing with Him, and to parents do good, and to relatives, orphans, the needy, the near neighbor, the neighbor farther away, the companion at your side, the traveler, and those whom your right hands possess. Indeed, Allah does not like those who are self-deluding and boastful,
لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَیَكْتُمُوْنَ مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟ۚ
اۨلَّذِيْنَஎவர்கள்يَـبْخَلُوْنَகருமித்தனம் செய்கிறார்கள்وَيَاْمُرُوْنَஇன்னும் ஏவுகிறார்கள்النَّاسَமக்களுக்குبِالْبُخْلِகருமித்தனத்தைوَيَكْتُمُوْنَஇன்னும் மறைக்கிறார்கள்مَاۤஎதைاٰتٰٮهُمُகொடுத்தான்/அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖ‌ ؕதன் அருளிலிருந்துوَ اَعْتَدْنَاதயார்படுத்தினோம்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பவர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِيْنًا‌இழிவான
அல்லதீன யBப்கலூன வ ய'முரூனன் னாஸ Bபில்Bபுக்லி வ யக்துமூன மா ஆதாஹு முல்லாஹு மின் Fபள்லிஹ்; வ அஃதத்னா லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
முஹம்மது ஜான்
அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (தாங்கள்) கஞ்சத்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கிறார்கள். அந்த நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
அவர்கள் தாமும் உலோபிகளாயிருந்து பிற மக்களையும் உலோபித்தனம் புரியுமாறு ஏவுவார்கள். மேலும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களை மறைப்பார்கள். (இத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.) இத்தகைய நன்றி கெட்ட ஈனர்களுக்கு நாம் இழிவு தரும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகைய (பெருமை குடி கொண்ட)வர்கள் உலோபித்தனம் செய்வார்கள், (மற்ற) மனிதர்களை உலோபித்தனம் செய்யும்படியும் தூண்டுவார்கள், அல்லாஹ் தன் பேரருளிலிருந்து தங்களுக்குக் கொடுத்ததை (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்தும் கொள்வார்கள், இன்னும் (நன்றி செய்யாத) நிராகரிப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
Saheeh International
Who are stingy and enjoin upon [other] people stinginess and conceal what Allah has given them of His bounty - and We have prepared for the disbelievers a humiliating punishment -
وَالَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ ؕ وَمَنْ یَّكُنِ الشَّیْطٰنُ لَهٗ قَرِیْنًا فَسَآءَ قَرِیْنًا ۟
وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்يُنْفِقُوْنَதர்மம் செய்கிறார்கள்اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைرِئَآءَகாண்பிப்பதற்காகالنَّاسِமக்களுக்குوَلَا يُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ‌ؕஇன்னும் இறுதி நாளைوَمَنْஎவருக்குيَّكُنِஆகிவிட்டான்الشَّيْطٰنُஷைத்தான்لَهٗஅவனுக்குقَرِيْنًاநண்பனாகفَسَآءَகெட்டுவிட்டான்قَرِيْنًا‏நண்பனால்
வல்லதீன யுன்Fபிகூன அம்வாலஹும் ரி'ஆ'அன் னாஸி வலா யு'மினூன Bபில்லாஹி வலா Bபில் யவ்மில் ஆகிர்; வ மய் யகுனிஷ் ஷய்தானு லஹூ கரீனன் Fபஸா'அ கரீனா
முஹம்மது ஜான்
இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்); எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான்.
IFT
மேலும், எவர்கள் தம் பொருளை பிறர் மெச்சுவதற்காகச் செலவழிக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றார்களோ அத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. உண்மை என்னவெனில், ஷைத்தான் யாருக்குத் தோழனாகின்றானோ அவர் மிகவும் கெட்ட தோழனையே அடையப் பெற்றவராவார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அத்தகைய பெருமை குடி கொண்டவர்கள் (பெருமையைநாடி) மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகத் தங்கள் செல்வங்களைச் செலவு செய்வார்கள், அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசங்கொள்ளவுமாட்டார்கள், மேலும், எவனுக்கு ஷைத்தான் தோழனாக இருக்கின்றானோ, அவன் தோழனால் மிகக் கெட்டவன்.
Saheeh International
And [also] those who spend of their wealth to be seen by the people and believe not in Allah nor in the Last Day. And he to whom Satan is a companion - then evil is he as a companion.
وَمَاذَا عَلَیْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ ؕ وَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِیْمًا ۟
وَمَاذَاஎன்னதான்عَلَيْهِمْஅவர்கள் மீதுلَوْ اٰمَنُوْاஅவர்கள் நம்பிக்கை கொண்டால்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِஇன்னும் நாளைالْاٰخِرِஇறுதிوَاَنْفَقُوْاஇன்னும் தர்மம் செய்தனர்مِمَّاஎதிலிருந்துرَزَقَهُمُவழங்கினான்/அவர்களுக்குاللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِهِمْஅவர்களைعَلِيْمًا‏நன்கறிந்தவனாக
வ மாதா 'அலய்ஹிம் லவ் ஆமனூ Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ அன்Fபகூ மிம்மா ரZஜகஹுமுல் லாஹ்; வ கானல்லாஹு Bபிஹிம் 'அலீமா
முஹம்மது ஜான்
இவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால் இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது? அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் இவர்களுக்கு அளித்தவற்றையும் தானம் செய்து வந்தால் அதனால் இவர்களுக்கு என்னதான் நஷ்டமேற்பட்டு விடும்? அல்லாஹ் இவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
இவர்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் தமக்கு அளித்தவற்றிலிருந்து செலவும் செய்தால் இவர்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? (இவ்வாறு செய்திருந்தால்) இவர்கள் புரிந்த நன்மை அல்லாஹ்வைவிட்டு மறைந்துவிடாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசங்கொண்டு அல்லாஹ் அவர்களுக்களித்தவற்றிலிருந்து (தர்மமாக) செலவும் செய்து வந்தால், அதனால் அவர்களுக்கு என்ன(தான் நஷ்டம்) ஏற்பட்டுவிடப்போகிறது? இன்னும் அல்லாஹ் இவர்களை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
And what [harm would come] upon them if they believed in Allah and the Last Day and spent out of what Allah provided for them? And Allah is ever, about them, Knowing.
اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۚ وَاِنْ تَكُ حَسَنَةً یُّضٰعِفْهَا وَیُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِیْمًا ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَظْلِمُஅநியாயம் செய்ய மாட்டான்مِثْقَالَ ذَرَّةٍ‌ ۚஓர் அணு அளவுوَاِنْ تَكُஇருந்தால்حَسَنَةًநன்மையாகيُّضٰعِفْهَاஅதை பன்மடங்காக்குவான்وَيُؤْتِஇன்னும் கொடுப்பான்مِنْ لَّدُنْهُதன்னிடமிருந்துاَجْرًاகூலியைعَظِيْمًاؔ‏மகத்தான
இன்னல் லாஹ லா யள்லிமு மித்கால தர்ரதி(ன்)வ் வ இன் தகு ஹஸனத(ன்)ய் யுளா'இFப்ஹா வ யு'தி மில் லதுன்ஹு அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதை இரட்டிப்பாக்கித் தன் அருளால் மேலும், அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கிறான்.
IFT
திண்ணமாக, அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அல்லாஹ் அதனை இரட்டிப்பாக்குகின்றான். தன்னிடமிருந்து மாபெரும் கூலியையும் வழங்குகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான், இன்னும், (ஓர் அணுவளவுள்ள) அது நன்மையாக இருந்தால் அதனை இரட்டிப்பாக்கி தன்னிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுக்கின்றான்.
Saheeh International
Indeed, Allah does not do injustice, [even] as much as an atom's weight; while if there is a good deed, He multiplies it and gives from Himself a great reward.
فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍ بِشَهِیْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا ۟ؕؔ
فَكَيْـفَஎவ்வாறிருக்கும்?اِذَا جِئْـنَاநாம் வந்தால்مِنْஇருந்துكُلِّஒவ்வொருاُمَّةٍ ۭசமுதாயம்بِشَهِيْدٍஒரு சாட்சியைக் கொண்டுوَّجِئْـنَاஇன்னும் நாம் வந்தோம்بِكَஉம்மை கொண்டுعَلٰىமீதுهٰٓؤُلَاۤءِஇவர்கள்شَهِيْدًا ؕ‏சாட்சியாக
Fபகய்Fப இதா ஜி'னா மின் குல்லி உம்மதிம் Bபிஷஹீதி(ன்)வ் வ ஜி'னாBபிக 'அலா ஹா'உலா 'இ ஷஹீதா
முஹம்மது ஜான்
எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உம்மை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எப்படி இருக்கும்?
IFT
(முஹம்மதே!) நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சாட்சியாளர் ஒருவரைக் கொண்டு வந்து, உம்மையும் இவர்கள் மீது சாட்சியாளராகக் கொண்டு வரும் வேளையில் இவர்கள் என்ன செய்வார்கள் (என்று சிந்தியுங்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டுவரும்போது இவர்களுக்கு (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொண்டும் வந்தால் (நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எவ்வாறிருக்கும்?
Saheeh International
So how [will it be] when We bring from every nation a witness and We bring you, [O Muhammad], against these [people] as a witness?
یَوْمَىِٕذٍ یَّوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰی بِهِمُ الْاَرْضُ ؕ وَلَا یَكْتُمُوْنَ اللّٰهَ حَدِیْثًا ۟۠
يَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّوَدُّவிரும்புவர்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَعَصَوُاஇன்னும் மாறு செய்தார்கள்الرَّسُوْلَதூதருக்குلَوْ تُسَوّٰىசமமாக்கப்பட வேண்டுமே?بِهِمُஅவர்களுடன்الْاَرْضُ ؕபூமிوَلَا يَكْتُمُوْنَமறைக்க மாட்டார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்حَدِيْـثًا‏ஒரு செய்தியை
யவ்ம'இதி(ன்)ய் யவத் துல்லதீன கFபரூ வ'அஸவுர் ரஸூல லவ் துஸவ்வா Bபிஹிமுல் அர்ளு வலா யக்துமூனல் லாஹ ஹதீதா
முஹம்மது ஜான்
அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்; ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறுசெய்தவர்கள், பூமி தங்களை ஜீரணித்துவிட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு விஷயத்தையும் மறைத்துவிட முடியாது.
IFT
எவர்கள் இறைத்தூதரின் சொல்லைக் கேட்காமலும், அவருக்கு மாறு செய்து கொண்டும் இருந்தார்களோ அவர்கள் பூமி பிளந்து தங்களை விழுங்கியிருக்கக் கூடாதா என அந்நாளில் ஏங்குவார்கள். அங்கு அவர்கள் (தம்முடைய) எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்திட முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரித்து (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் மாறு செய்தோர், (அவ்வாறு நாம் கொண்டுவரும்) நாளில் பூமி அவர்கள் மீது (தங்களை விழுங்கி தன்னுள்) சமமாக்கப்பட்டிருக்க வேண்டுமே, என்று விரும்புவார்கள், மேலும், இவர்கள் அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்தையும் மறைத்து விட முடியாது.
Saheeh International
That Day, those who disbelieved and disobeyed the Messenger will wish they could be covered by the earth. And they will not conceal from Allah a [single] statement.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْتُمْ سُكٰرٰی حَتّٰی تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِیْ سَبِیْلٍ حَتّٰی تَغْتَسِلُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَقْرَبُواநெருங்காதீர்கள்الصَّلٰوةَதொழுகைக்குوَاَنْـتُمْநீங்கள் இருக்கும்போதுسُكَارٰىபோதைஏறியவர்களாகحَتّٰىவரைتَعْلَمُوْاநீங்கள் அறிவதுمَا تَقُوْلُوْنَஎதை கூறுகிறீர்கள்وَلَا جُنُبًاமுழுக்காளிகளாகاِلَّاதவிரعَابِرِىْ سَبِيْلٍபயணிகளாகحَتّٰىவரைتَغْتَسِلُوْا‌ ؕகுளிக்கிறீர்கள்وَاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مَّرْضٰۤىநோயாளிகளாகاَوْஅல்லதுعَلٰى سَفَرٍபயணத்தில்اَوْஅல்லதுجَآءَவந்தால்اَحَدٌஒருவர்مِّنْكُمْஉங்களில்مِّنَஇருந்துالْغَآٮِٕطِமலஜலம்اَوْஅல்லதுلٰمَسْتُمُஉறவு கொண்டீர்கள்النِّسَآءَபெண்களிடம்فَلَمْ تَجِدُوْاநீங்கள் பெற்றுக் கொள்ளவில்லைمَآءًதண்ணீரைفَتَيَمَّمُوْاநாடுங்கள்صَعِيْدًاமண்ணைطَيِّبًاசுத்தமானفَامْسَحُوْاதடவுங்கள்بِوُجُوْهِكُمْஉங்கள் முகங்களைوَاَيْدِيْكُمْ‌ ؕஇன்னும் உங்கள் கைகளைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَفُوًّاபிழை பொறுப்பவனாகغَفُوْرًا‏அதிகம் மன்னிப்பவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தக்ரBபுஸ் ஸலாத வ அன்தும் ஸுகாரா ஹத்தா தஃலமூ ம தகூலூன வலா ஜுனுBபன் இல்லா 'ஆBபிரீ ஸBபீலின் ஹத்தா தக்தஸிலூ; வ இன் குன்தும் மர்ளா அவ் 'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன் னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம் மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும்; இன்னல் லாஹ கான 'அFபுவ்வன் கFபூரா
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். தவிர, நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). ஆயினும், பிரயாணத்தில் இருந்தாலே தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாகவோ, பிரயாணத்திலோ, மலஜல உபாதைக் கழித்தோ, பெண்களைத் தீண்டி(ச் சேர்ந்து) இருந்தோ, (பிறகு, சுத்தம் செய்துகொள்ள) நீங்கள் தண்ணீரையும் பெற்றுக்கொள்ளாத சமயத்தில் (தொழுகையின் நேரம் வந்துவிடுமேயானால் அதற்காக நீங்கள் தொழுகையைப் பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் துடைத்து ‘‘தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (பிறகு, தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாக, குற்றங்களை மன்னிப்பவனாக இருக்கிறான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்; நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்ற போதுதான் தொழ வேண்டும். மேலும், நீங்கள் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் நிலையில், குளிக்கின்ற வரை தொழுகையை நெருங்காதீர்கள்! பாதையைக் கடப்பவர்களாக இருந்தாலே தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் கழித்துவிட்டு வந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், பிறகு தண்ணீர் உங்களுக்குக் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணைக் கொண்டு உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அதாவது (அதனை) உங்களின் முகங்களிலும் கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் கனிவு உடையவனாகவும், மன்னிப்பு வழங்குபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் போதையுடையோராகயிருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்து கொள்ளும் வரை, தொழுகைக்கு நெருங்காதீர்கள், அன்றியும், நீங்கள் (முழுக்காளி) குளிப்பு கடமையானவராயிருந்தால், குளிக்கும் வரையிலும் (தொழுகைக்கு நெருங்காதீர்கள், ஆனால்) பள்ளியைக் கடந்து செல்பவர்களாகவே தவிர, இன்னும் நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ, அல்லது மலஜலம் கழித்தோ. அல்லது பெண்ணைத்தீண்டி (தாம்பத்திய உறவு கொண்டு) இருந்தோ, (சுத்தம் செய்து கொள்ள) நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாவிடில், பரிசுத்தமான மண்ணை நாடுங்கள், (அதைத் தொட்டு) உங்களுடைய முகங்களையும், கைகளையும் (தயம்மும் செய்து) தடவிக் கொள்ளுங்கள், (பிறகு தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (பிழைகளை) மிகப் பொறுப்பவனாக (குற்றங்களை) மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்.
Saheeh International
O you who have believed, do not approach prayer while you are intoxicated until you know what you are saying or in a state of janabah, except those passing through [a place of prayer], until you have washed [your whole body]. And if you are ill or on a journey or one of you comes from the place of relieving himself or you have contacted women [i.e., had sexual intercourse] and find no water, then seek clean earth and wipe over your faces and your hands [with it]. Indeed, Allah is ever Pardoning and Forgiving.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَیُرِیْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِیْلَ ۟ؕ
اَلَمْ تَرَபார்க்கவில்லையா?اِلَىபக்கம்الَّذِيْنَஎவர்கள்اُوْتُوْاகொடுக்கப்பட்டார்கள்نَصِيْبًاஒரு பாகம்مِّنَஇருந்துالْكِتٰبِவேதம்يَشْتَرُوْنَவிலைக்கு வாங்குகிறார்கள்الضَّلٰلَةَவழிகேட்டைوَيُرِيْدُوْنَஇன்னும் நாடுகின்றனர்اَنْ تَضِلُّواநீங்கள் தவறுவதைالسَّبِيْلَ ؕؕ‏வழி
அலம் தர இலல் லதீன ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யஷ்தரூனள் ளலாலத வ யுரீதூன அன் தளில்லுஸ் ஸBபீல்
முஹம்மது ஜான்
(நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்கள், வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டதுடன் நீங்களும் வழிகெட்டுவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர்.
IFT
வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டிருப்பவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள், வழிகேட்டினை விலைக்கு வாங்குகின்றார்கள்; நீங்களும் வழிதவறிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் (தாம்) வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர், நீங்களும் வழி கெட்டுவிட வேண்டுமென்றே அவர்கள் நாடுகின்றனர்.
Saheeh International
Have you not seen those who were given a portion of the Scripture, purchasing error [in exchange for it] and wishing you would lose the way?
وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآىِٕكُمْ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَلِیًّا ؗۗ وَّكَفٰی بِاللّٰهِ نَصِیْرًا ۟
وَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِاَعْدَآٮِٕكُمْ‌ؕஉங்கள் எதிரிகளைوَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்தான்وَلِيًّاபாதுகாவலனாகوَّكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்தான்نَصِيْرًا‏பேருதவியாளனாக
வல்லாஹு அஃலமு Bபி அஃதா'இ-கும்; வ கFபா Bபில்லாஹி வலிய்ய(ன்)வ் வ கFபா Bபில்லாஹி னஸீரா
முஹம்மது ஜான்
மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக அறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி செய்யவும் அல்லாஹ் போதுமானவன்.
IFT
அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிபவனாயிருக்கின்றான். மேலும் உங்களுக்கு ஆதர வளிக்கவும், உதவி செய்யவும் அல்லாஹ்வே போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ், உங்களுடைய (இவ்)விரோதிகளை மிக்க அறிகிறவன், (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன், (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
Saheeh International
And Allah is most knowing of your enemies; and sufficient is Allah as an ally, and sufficient is Allah as a helper.
مِنَ الَّذِیْنَ هَادُوْا یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَیَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَیْنَا وَاسْمَعْ غَیْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَیًّا بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِی الدِّیْنِ ؕ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
مِنَஇருந்து (சிலர்)الَّذِيْنَஎவர்கள்هَادُوْاயூதராகி விட்டார்கள்يُحَرِّفُوْنَபுரட்டுகின்றனர்الْـكَلِمَவசனங்களைعَنْஇருந்துمَّوَاضِعِهٖஅதன் இடங்கள்وَ يَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்سَمِعْنَاசெவியுற்றோம்وَعَصَيْنَاஇன்னும் மாறுசெய்தோம்وَاسْمَعْகேட்பீராகغَيْرَ مُسْمَعٍகேட்கப்படாதவராகوَّرَاعِنَاஇன்னும் ராயினாلَـيًّۢاவளைத்துبِاَ لْسِنَتِهِمْதங்கள் நாவுகளைوَطَعْنًاஇன்னும் குற்றம் சொல்வதற்காகفِىْ الدِّيْنِ‌ ؕமார்க்கத்தில்وَلَوْ اَنَّهُمْ قَالُوْاநிச்சயமாக அவர்கள் கூறினால்سَمِعْنَاசெவியுற்றோம்وَاَطَعْنَاஇன்னும் கீழ்ப்படிந்தோம்وَاسْمَعْஇன்னும் கேட்பீராகوَانْظُرْنَاஇன்னும் எங்களை பார்ப்பீராகلَـكَانَஇருந்திருக்கும்خَيْرًاநன்றாகلَّهُمْஅவர்களுக்குوَاَقْوَمَ ۙஇன்னும் மிக நேர்மையாகوَ لٰـكِنْஎனினும்لَّعَنَهُمُஅவர்களை சபித்தான்اللّٰهُஅல்லாஹ்بِكُفْرِهِمْஅவர்களின் நிராகரிப்பின் காரணமாகفَلَا يُؤْمِنُوْنَஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்اِلَّاதவிரقَلِيْلًا‏சிலரை
மினல் லதீன ஹாதூ யுஹர்ரிFபூனல் கலிம 'அம் மவாளி'இஹீ வ யகூலூன ஸமிஃனா வ 'அஸய்னா வஸ்மஃ கய்ர முஸ்ம'இ(ன்)வ் வ ரா'இனா லய்யம் Bபி அல்ஸினதிஹிம் வ தஃனன் Fபித்தீன்; வ லவ் அன்னஹும் காலூ ஸமிஃனா வ அதஃனா வஸ்மஃ வன்ளுர்னா லகான கய்ரல் லஹும் வ அக்வம வ லாகில் ல' அ'னஹுமுல் லாஹு BபிகுFப்ரிஹிம் Fபலா யு'மினூன இல்லா கலீலா
முஹம்மது ஜான்
யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்'' என்று கூறி (உமது) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி (‘‘நபியே! நாம் சொல்வதை) நீர் கேட்பீராக. (இனி வேறு எதையும்) நீர் கேட்காதீர்'' என்றும் கூறி ‘ராயினா' என்று நாவைக் கோணி உளறுகின்றனர். (‘ராயினா' என்னும் பதத்திற்கு அரபி மொழியில் ‘எங்களைக் கவனிப்பீராக' என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ ‘மூடனே!' என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உம்மை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உமக்கு) நாம் கட்டுப்பட்டோம். (நாம் சொல்வதை) நீர் கேட்பீராக (என்று கூறி ‘ராயினா' என்னும் பதத்திற்குப் பதிலாக ‘உன்ளுர்னா') ‘எங்களை அன்பாக நோக்குவீராக' என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால், அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
யூதர்களில் சிலர் (வேதத்தின்) சொற்களை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். சத்திய நெறியைப் பழித்துரைத்தவாறு தம் நாவுகளைச் சுழற்றி ‘ஸமிஃனா, வ அஸய்னா’ என்றும் ‘இஸ்மஃ கைர முஸ்மயின்’ என்றும் ‘ராயினா’ என்றும் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ‘ஸமிஃனா வ அதஃனா’ என்றும் ‘இஸ்மஃ’ என்றும் ‘உன்ளுர்னா’ என்றும் கூறியிருப்பார்களேயானால் அது அவர்களுக்கு நன்மையானதாகவும், மிக நேர்மையான வழிமுறையாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களின் அசத்தியப் போக்கின் காரணமாக அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டுவிட்டது. எனவே, அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
யூதர்களில் சிலர், (வேத) வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து (அவற்றின் கருத்து வேறுபடும்படியான விதத்தில்) புரட்டுகின்றனர், (நபியே! உம்மை நோக்கி, நீர் சொன்னதை) நாம் செவியுற்றோம், இன்னும் நாம் (அதற்கு) மாறு செய்வோம், “(என்று கூறி உம்) மார்க்கத்தில் குற்றம் சொல்ல (“நபியே! இதுவரை) நீர் கேட்க முடியாததை நீர் கேளும்) என்றும் ‘ராயினா’ என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டும் சன்மார்க்கத்தைப் பழித்தும் கூறுகின்றனர், ‘(நபியே நீர் சொன்னதற்கு)’ நாம் செவி சாய்த்தோம், இன்னும் (உமக்கு) நாம் கீழ்ப்படிந்தோம், (நாம் சொல்வதை) நீர் கேளும்” என்று கூறி ராயினா என்னும் பதத்திற்குப் பதிலாக) ‘உள்ளுர்னா’ (எங்களை அன்பாக நோக்குவீராக!) என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்மையாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும், எனினும் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான், ஆதலால், (அவர்கள்) குறைவாகவேயன்றி விசுவாசங்கொள்ளமாட்டார்கள்.
Saheeh International
Among the Jews are those who distort words from their [proper] places [i.e., usages] and say, "We hear and disobey" and "Hear but be not heard" and "Raʿina," twisting their tongues and defaming the religion. And if they had said [instead], "We hear and obey" and "Wait for us [to understand]," it would have been better for them and more suitable. But Allah has cursed them for their disbelief, so they believe not, except for a few.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰۤی اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்களே!الْكِتٰبَவேதம்اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِمَاஎதைنَزَّلْنَاஇறக்கினோம்مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதாகلِّمَاஎதைمَعَكُمْஉங்களுடன்مِّنْ قَبْلِமுன்னர்اَنْ نَّـطْمِسَநாம் மாற்றுவதுوُجُوْهًاமுகங்களைفَنَرُدَّهَاஅவற்றை திருப்பி விடுவோம்عَلٰٓىமீதுاَدْبَارِهَاۤஅவற்றின்பின்புறங்கள்اَوْஅல்லதுنَلْعَنَهُمْஅவர்களை சபிப்போம்كَمَاபோல்لَعَنَّاۤசபித்தோம்اَصْحٰبَ السَّبْتِ‌ؕசனிக்கிழமையில் வரம்பு மீறியோரைوَكَانَஆகும்اَمْرُகட்டளையிட்டதுاللّٰهِஅல்லாஹ்مَفْعُوْلًا‏நிறைவேற்றப்பட்டே
யா அய்யுஹ ல்லதீன ஊதுல் கிதாBப ஆமினூ Bபிமா னZஜ்Zஜல்னா முஸதிகல்லிமா ம'அகும் மின் கBப்லி அன் னத்மிஸ வுஜூஹன் Fபனருத்தஹா 'அலா அத்Bபாரிஹா அவ் னல்'அனஹும் கமா ல'அன்னா அஸ்ஹாBபஸ் ஸBப்த்; வ கான அம்ருல் லாஹி மFப்'ஊலா
முஹம்மது ஜான்
வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.
அப்துல் ஹமீது பாகவி
வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இன்றேல் (உங்கள்) முகங்களை மாற்றி அதைப் பின்புறமாகத் திருப்பிவிடுவோம். அல்லது (சனிக்கிழமைகளில் வரம்பு மீறியவர்களான) ‘அஸ்ஹாபுஸ் ஸப்த்தை' நாம் சபித்தவாறு உங்களையும் நாம் சபித்து விடுவோம். அல்லாஹ்வுடைய கட்டளை நடைபெற்றே தீரும்.
IFT
வேதம் வழங்கப்பட்டவர்களே! (இப்போது) நாம் இறக்கி வைத்துள்ள (வேதத்)தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது (முன்பு) உங்களிடம் இருந்த (வேதத்)தை மெய்ப்படுத்தக்கூடியதாய் இருக்கின்றது! நாம் முகங்களை உருக்குலைத்து அவற்றைப் பின்புறமாய்த் திருப்பி விடுவதற்கு முன்பே அல்லது அஸ்ஹாபுஸ் ஸப்த்தை சபித்தது போல நாம் சபிப்பதற்கு முன்பே! (நம்பிக்கை கொண்டு விடுங்கள்.) இன்னும் அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும் (என்பதை நினைவில் வையுங்கள்.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதம் கொடுக்கப்பட்டோரே! உங்கள் முகங்களை மாற்றி, பின்னர் அவைகளை அவைகளின் பின்புறமாக நாம் திருப்பிவிடுவதற்கு முன்பே உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துகின்ற நாம் இறக்கிவைத்த இ(வ்வேதத்தை) விசுவாசங்கொள்ளுங்கள், அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறியோரான) அஸ்ஹாபுஸ்ஸப்தினரை நாம் சபித்த பிரகாரம் அவர்களையும் நாம் சபித்துவிடுவோம், மேலும் அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேற்றப்பட்டதாக ஆகிவிடும்.
Saheeh International
O you who were given the Scripture, believe in what We have sent down [to Prophet Muhammad (ﷺ], confirming that which is with you, before We obliterate faces and turn them toward their backs or curse them as We cursed the sabbath-breakers. And ever is the matter [i.e., decree] of Allah accomplished.
اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ۚ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَرٰۤی اِثْمًا عَظِیْمًا ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَغْفِرُமன்னிக்க மாட்டான்اَنْ يُّشْرَكَஇணை வைக்கப்படுவதைبِهٖஅவனுக்குوَيَغْفِرُஇன்னும் மன்னிப்பான்مَاஎதுدُوْنَதவிரذٰ لِكَஇதுلِمَنْஎவருக்குيَّشَآءُ‌ ۚநாடுகிறான்وَمَنْஎவர்يُّشْرِكْஇணைவைப்பார்بِاللّٰهِஅல்லாஹ்விற்குفَقَدِதிட்டமாகافْتَـرٰۤىபுனைந்து விட்டார்اِثْمًاபாவத்தைعَظِيْمًا‏பெரும்
இன்னல் லாஹ லா யக்Fபிரு அய் யுஷ்ரக Bபிஹீ வ யக்Fபிரு மா தூன தாலிக லிமய் யஷா'; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி FபகதிFப் தரா இத்மன் 'அளீமா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்.
IFT
திண்ணமாக, தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள், திண்ணமாக பெரும் பொய்யைப் புனைந்தவராவர்; மேலும் பாவத்தைப் புரிந்தவராவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான், இதனைத் தவிர (மற்ற) எதனையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான், எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார்.
Saheeh International
Indeed, Allah does not forgive association with Him, but He forgives what is less than that for whom He wills. And he who associates others with Allah has certainly fabricated a tremendous sin.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُزَكُّوْنَ اَنْفُسَهُمْ ؕ بَلِ اللّٰهُ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ وَلَا یُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَى الَّذِيْنَஎவர்களைيُزَكُّوْنَபரிசுத்தப்படுத்துகிறார்கள்اَنْفُسَهُمْ‌ ؕதங்களைبَلِமாறாகاللّٰهُஅல்லாஹ்தான்يُزَكِّىْபரிசுத்தமாக்குகிறான்مَنْஎவரைيَّشَآءُநாடுகிறான்وَلَا يُظْلَمُوْنَஅநீதி செய்யப்பட மாட்டார்கள்فَتِيْلًا‏வெள்ளை நூலளவும்
அலம் தர இலல் லதீன யுZஜக்கூன அன்Fபுஸஹும்; Bபலில் லாஹு யுZஜக்கீ மய் யஷா'உ வலா யுள்லமூன Fபதீலா
முஹம்மது ஜான்
(நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைத்தான் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுவளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.
IFT
தம்மைத் தாமே தூய்மையானவர்கள் எனப் பெருமையடித்துக் கொள்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? உண்மை என்னவெனில், தான் நாடுகின்றவர்களையே அல்லாஹ் தூய்மையாக்குகிறான். (அவர்கள் தூய்மைப்படுத்தப்படவில்லை எனில் அதற்கு யார் பொறுப்பு?) மேலும் அவர்கள் யார் மீதும் அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) தமக்குத் தாமே பரிசுத்தத்தைக் கற்பிப்போரை நீர் காணவில்லையா? (அவர்கள் கூறுவது சரி) அல்ல, அல்லாஹ், தான் நாடிய (நல்ல)வர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கிறான், (இவ்விஷயத்தில்) ஓர் அணுவளவும் அவர்கள் அநீதி செய்யப்படமாட்டார்கள்.
Saheeh International
Have you not seen those who claim themselves to be pure? Rather, Allah purifies whom He wills, and injustice is not done to them, [even] as much as a thread [inside a date seed].
اُنْظُرْ كَیْفَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ وَكَفٰی بِهٖۤ اِثْمًا مُّبِیْنًا ۟۠
اُنْظُرْபார்ப்பீராகكَيْفَஎவ்வாறுيَفْتَرُوْنَகற்பனை செய்கின்றனர்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுالْـكَذِبَ‌ؕபொய்யைوَكَفٰىபோதுமாகும்بِهٖۤஇதுவேاِثْمًاபாவத்திற்குمُّبِيْنًا‏பகிரங்கமான
உன்ளுர் கய்Fப யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப், வகFபா Bபிஹீ இத்மம்ம் முBபீனா
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீர் கவனிப்பீராக. பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமா(ன உதாரணமா)க இருக்கிறது.
IFT
பாருங்கள்! இவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்க சற்றும் தயங்குவதில்லையே! மேலும், வெளிப்படையான பாவியாவதற்கு இது ஒன்றே போதுமானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அல்லாஹ்வின் மீது அவர்கள் (அபாண்டமான) பொய்யை எவ்வாறு கற்பனை செய்கின்றனர் என்பதை நீர் கவனிப்பீராக! பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமானதாக இருக்கின்றது.
Saheeh International
Look how they invent about Allah untruth, and sufficient is that as a manifest sin.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَیَقُوْلُوْنَ لِلَّذِیْنَ كَفَرُوْا هٰۤؤُلَآءِ اَهْدٰی مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا سَبِیْلًا ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَى الَّذِيْنَஎவர்களைاُوْتُوْاகொடுக்கப்பட்டார்கள்نَصِيْبًاஒரு பாகம்مِّنَ الْكِتٰبِவேதத்தில்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கின்றனர்بِالْجِبْتِஷைத்தானைوَالطَّاغُوْتِஇன்னும் சிலையைوَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்لِلَّذِيْنَஎவர்களை நோக்கிكَفَرُوْاநிராகரித்தார்கள்هٰٓؤُلَۤاءِஇவர்கள்اَهْدٰىமிக நேர்வழியாளர்(கள்)مِنَவிடالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்سَبِيْلًا‏பாதையால்
அலம் தர இலல் லதீன 'ஊதூ னஸீBபம் மினல் கிதாBபி யு'மினூன Bபில் ஜிBப்தி வத் தாகூதி வ யகூலூன லில்லதீன கFபரூ ஹா உலா'இ அஹ்தா மினல் லதீன ஆமனூ ஸBபீலா
முஹம்மது ஜான்
(நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான்களையும் நம்பிக்கைகொண்டு (மற்ற) நிராகரிப்பவர் களைச் சுட்டிக் காண்பித்து ‘‘இவர்கள்தான் உண்மை நம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றனர்.
IFT
வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ ஜிப்தையும்*, தாஃகூத்தையும் ஏற்றுக்கொள்கின்றார்கள். மேலும் நம்பிக்கையற்றவர்களைக் குறித்து, “இவர்கள்தாம் இறை நம்பிக்கை கொண்டவர்களைவிட மிகவும் நேர்வழியிலிருக்கின்றார்கள்” என்று கூறுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
((நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப் பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா?, அவர்கள் விக்கிரகங்களையும் தாகூத்தை(-ஷைத்தானையும் விசுவாசிக்கின்றனர், மேலும், (இணை வைப்போராகிய குறைஷியர்களைச் சுட்டிக்காண்பித்து) “இவர்கள்தாம் உண்மை விசுவாசிகளைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்” என்று காஃபிர்களுக்கு கூறுகின்றனர்.
Saheeh International
Have you not seen those who were given a portion of the Scripture, who believe in jibt [superstition] and ṭaghūt [false objects of worship] and say about the disbelievers, "These are better guided than the believers as to the way"?
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ ؕ وَمَنْ یَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِیْرًا ۟ؕ
اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்لَعَنَهُمُஅவர்களை சபித்தான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَمَنْஎவரைيَّلْعَنِசபிப்பான்اللّٰهُஅல்லாஹ்فَلَنْ تَجِدَகாணவே மாட்டீர்لَهٗஅவருக்குنَصِيْرًا ؕ‏உதவியாளரை
உலா'இகல் லதீன ல'அன ஹுமுல் லாஹு வ மய் யல்'அனில் லாஹு Fபலன் தஜித லஹூ னஸீரா
முஹம்மது ஜான்
இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான். எவர்களை அல்லாஹ் சபித்து விடுகிறானோ அவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரையும் நீர் காணமாட்டீர்.
IFT
இத்தகையோரைத்தான் அல்லாஹ் சபித்துள்ளான். மேலும், யாரை அல்லாஹ் சபித்துவிட்டானோ அத்தகையவருக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால்-அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான், எவரை அல்லாஹ் சபித்துவிட்டானோ அவருக்கு உதவி செய்பவரை நீர் காணவே மாட்டீர்.
Saheeh International
Those are the ones whom Allah has cursed; and he whom Allah curses - never will you find for him a helper.
اَمْ لَهُمْ نَصِیْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا یُؤْتُوْنَ النَّاسَ نَقِیْرًا ۟ۙ
اَمْஅல்லதுلَهُمْஇவர்களுக்குنَصِيْبٌபங்குمِّنَ الْمُلْكِஆட்சியில்فَاِذًاஅவ்வாறிருந்தால்لَّا يُؤْتُوْنَகொடுக்க மாட்டார்கள்النَّاسَமக்களுக்குنَقِيْرًاகீறல் அளவும்
அம் லஹும் னஸீBபும் மினல் முல்கி Fப இதல் லா யு'தூனன் னாஸ னகீரா
முஹம்மது ஜான்
இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு இவ்வுலக ஆட்சியில் சொற்ப பங்காவது இருக்கிறதா? அவ்வாறிருந்தால் மனிதர்களுக்கு ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
IFT
ஆட்சி அதிகாரத்தில் இவர்களுக்கு ஏதாவது பங்குண்டா? அப்படி இருக்குமாயின் இவர்கள் மற்றவர்களுக்கு அற்பப் பொருளைக்கூட கொடுக்க மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வுலக) ஆட்சியில் ஏதேனும்) ஒரு பங்கு (பாத்தியதை) அவர்களுக்கு சொற்ப பாகமாவது இருக்கின்றதா? (இல்லை) அவ்வாறிருந்தால், அவர்கள் (அதிலிருந்து மற்ற) மனிதர்களுக்கு இம்மியேனும் கொடுக்க மாட்டார்கள்.
Saheeh International
Or have they a share of dominion? Then [if that were so], they would not give the people [even as much as] the speck on a date seed.
اَمْ یَحْسُدُوْنَ النَّاسَ عَلٰی مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۚ فَقَدْ اٰتَیْنَاۤ اٰلَ اِبْرٰهِیْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَیْنٰهُمْ مُّلْكًا عَظِیْمًا ۟
اَمْஅல்லதுيَحْسُدُوْنَபொறாமைப்படுகி றார்கள்النَّاسَமக்களைعَلٰىமீதுمَاۤ اٰتٰٮهُمُஎது/கொடுத்தான்/ அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖ‌ۚதன் அருளிலிருந்துفَقَدْதிட்டமாகاٰتَيْنَاۤகொடுத்தோம்اٰلَகுடும்பத்தாருக்குاِبْرٰهِيْمَஇப்ராஹீமுடையالْـكِتٰبَவேதத்தைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَاٰتَيْنٰهُمْஇன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்குمُّلْكًاஆட்சியைعَظِيْمًا‏பெரிய
அம் யஹ்ஸுதூனன் னாஸ 'அலா மா ஆதாஹுமுல் லாஹு மின் Fபள்லிஹீ Fபகத் ஆதய்னா ஆல இBப்ராஹீமல் கிதாBப வல் ஹிக்மத வ ஆதய்னாஹும் முல்கன் 'அளீமா
முஹம்மது ஜான்
அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு தன் அருளை வழங்கியுள்ளதைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் இப்ராஹீமுடைய சந்ததிகளுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்து, அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
IFT
மேலும், இவர்கள் அல்லாஹ் தன் அருளினால் மக்களுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு அவர்கள்மீது பொறாமை கொள்கின்றார்களா? அப்படியென்றால் நாம் இப்ராஹீமின் வழித்தோன்றல்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கொடுத்து மாபெரும் அரசாட்சியையும் வழங்கியிருக்கிறோமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (நல்லடியார்களான) மனிதர்களை(ப் பற்றி) அவர்களுக்கு அல்லாஹ் தன் பேரருளால் கொடுத்தவற்றின்மீது (யூதர்களாகிய) அவர்கள் பொறாமைப்படுகிறார்களா? அவ்வாறாயின், இப்றாஹீமுடைய குடும்பத்தினருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்திருந்தோம். (அத்துடன்) மகத்தான அரசாங்கத்தையும் அவர்களுக்கு நாம் கொடுத்திருந்தோம்.
Saheeh International
Or do they envy people for what Allah has given them of His bounty? But We had already given the family of Abraham the Scripture and wisdom and conferred upon them a great kingdom.
فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ؕ وَكَفٰی بِجَهَنَّمَ سَعِیْرًا ۟
فَمِنْهُمْஅவர்களில் உண்டுمَّنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்بِهٖஅதைوَمِنْهُمْஇன்னும் அவர்களில்مَّنْஎவர்صَدَّதடுத்தார்عَنْهُ‌ ؕஅதை விட்டுوَكَفٰىபோதுமாகும்بِجَهَـنَّمَநரகமேسَعِيْرًا‏கொழுந்து விட்டெரியும் நெருப்பால்
Fபமின்ஹும் மன் ஆமன Bபிஹீ வ மின்ஹும் மன் ஸத்த 'அன்ஹ்; வ கFபா Bபி ஜஹன்னம ஸ'ஈரா
முஹம்மது ஜான்
(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்; (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்.
IFT
ஆனால், இவர்களில் சிலர் அதனை நம்பினார்கள்; மற்றும் சிலர் புறக்கணித்தார்கள். மேலும், (புறக்கணிப்பவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறிருந்தும்) அவர்களிலிருந்து அதை விசுவாசித்தவரும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து அதை விட்டும் விலகிக் கொண்டவரும் உண்டு, (நிராகரித்த அவர்களுக்குக்) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமாகிவிட்டது.
Saheeh International
And some among them believed in it, and some among them were averse to it. And sufficient is Hell as a blaze.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا سَوْفَ نُصْلِیْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَیْرَهَا لِیَذُوْقُوا الْعَذَابَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِیْزًا حَكِیْمًا ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்بِاٰيٰتِنَاநம் வசனங்களைسَوْفَ نُصْلِيْهِمْஅவர்களை எரிப்போம்نَارًا ؕநரக நெருப்பில்كُلَّمَاபோதெல்லாம்نَضِجَتْகனிந்து விட்டதுجُلُوْدُهُمْஅவர்களின் தோல்கள்بَدَّلْنٰهُمْஅவர்களுக்கு மாற்றுவோம்جُلُوْدًاதோல்களைغَيْرَهَاஅவை அல்லாதلِيَذُوْقُواஅவர்கள் சுவைப்பதற்குالْعَذَابَ‌ ؕவேதனையைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَزِيْزًاமிகைத்தவனாகحَكِيْمًا‏ஞானவானாக
இன்னல் லதீன கFபரூ Bபி ஆயாதினா ஸவ்Fப னுஸ்லீஹிம் னாரன் குல்லமா னளிஜத் ஜுலூதுஹும் Bபத்தல்னாஹும் ஜுலூதன் கய்ரஹா லியதூகுல் 'அதாBப்; இன்னல்லாஹ கான 'அZஜீZஜன் ஹகீமா
முஹம்மது ஜான்
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம் (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கருகி விடும்போதெல்லாம் வேறு புதிய தோல்களை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
எவர்கள் நம் சான்றுகளை மறுக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் நாம் நரகில் வீசி எறிவோம்! அவர்களுடைய உடலின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம்; வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக் கொண்டேயிருப்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் மிகையான ஆற்றல் உள்ளவனாகவும் (தன் முடிவுகளைச் செயல்படுத்தும் நுட்பத்தை) நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நம்முடைய (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோர்-அவர்களை, (விரைவில்) நாம் நரகத்தில் புகுத்தி விடுவோம், (அதில்) அவர்கள், வேதனையைச் (சதா) அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கருகி விடும்போதெல்லாம், அவையல்லாத (வேறு புதிய) தோல்களை நாம் மாற்றிக் கொண்டே இருப்போம், நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
Indeed, those who disbelieve in Our verses - We will drive them into a fire. Every time their skins are roasted through, We will replace them with other skins so they may taste the punishment. Indeed, Allah is ever Exalted in Might and Wise.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ لَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ؗ وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِیْلًا ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواசெய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகள்سَنُدْخِلُهُمْஅவர்களை நுழைப்போம்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤ اَبَدًا‌ ؕஅவற்றில்/என்றும்لَـهُمْஅவர்களுக்குفِيْهَاۤஅவற்றில்اَزْوَاجٌமனைவிகள்مُّطَهَّرَةٌ பரிசுத்தமானوَّنُدْخِلُهُمْஇன்னும் அவர்களை நுழைப்போம்ظِلًّاநிழலில்ظَلِيْلًا‏அடர்ந்தது
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸனுத் கிலுஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா, லஹும் Fபீஹா அZஜ்வாஜும் முதஹ்ஹரதுன் வ னுத்கிலுஹும் ளில்லன் ளலீலா
முஹம்மது ஜான்
(அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு; அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்கிறார்களோ அவர்களை சொர்க்கங்களில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அடர்ந்த (நீங்காத) நிழலிலும் அவர்களை நாம் அமர்த்துவோம்.
IFT
மேலும் எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அங்கு அவர்களுக்கு மிகத் தூய்மையான துணைவியர் இருப்பர். மேலும் அவர்களை நாம் அடர்ந்த நிழலில் அமரச் செய்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (அவர்களில்) விசுவாசங்கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-அவர்களைக் சுவனபதிகளில் நாம் பிரவேசிக்கச் செய்வோம், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்.
Saheeh International
But those who believe and do righteous deeds - We will admit them to gardens beneath which rivers flow, wherein they abide forever. For them therein are purified spouses, and We will admit them to deepening shade.
اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰۤی اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَیْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا یَعِظُكُمْ بِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِیْعًا بَصِیْرًا ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَاْمُرُكُمْஉங்களுக்குக் கட்டளையிடுகிறான்اَنْ تُؤَدُّواநீங்கள் ஒப்படைத்து விடுவதுالْاَمٰنٰتِஅமானிதங்களைاِلٰٓىஇடம்اَهْلِهَا ۙஅதன் சொந்தக்காரர்وَاِذَا حَكَمْتُمْஇன்னும் நீங்கள் தீர்ப்பளித்தால்بَيْنَஇடையில்النَّاسِமக்கள்اَنْ تَحْكُمُوْاநீங்கள் தீர்ப்பளிப்பதுبِالْعَدْلِ‌ ؕநீதமாகاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்نِعِمَّاஎது மிக சிறந்தது?يَعِظُكُمْஉங்களுக்கு உபதேசிக்கிறான்بِهٖ‌ ؕஅதைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்سَمِيْعًۢاசெவியுறுபவனாகبَصِيْرًا‏உற்று நோக்குபவனாக
இன்னல் லாஹ ய'முருகும் அன் து'அத்துல் அமானாதி இலா அஹ்லிஹா வ இதா ஹகம்தும் Bபய்னன் னாஸி அன் தஹ்குமூ Bபில்'அத்ல்; இன்னல் லாஹ னி'இம்மா ய'இளுகும் Bபிஹ்; இன்னல் லாஹ கான ஸமீ'அம் Bபஸீரா
முஹம்மது ஜான்
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
IFT
(முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் அடைக்கலப் பொருள்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்ளுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான், நிச்சயமாக அல்லாஹ் எதனை உங்களுக்கு உபதேசிக்கிறானோ அது மிக்க நல்லதாகும். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவனாக பார்க்கிறவனாக இருக்கின்றான்.
Saheeh International
Indeed, Allah commands you to render trusts to whom they are due and when you judge between people to judge with justice. Excellent is that which Allah instructs you. Indeed, Allah is ever Hearing and Seeing.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاُولِی الْاَمْرِ مِنْكُمْ ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِیْ شَیْءٍ فَرُدُّوْهُ اِلَی اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟۠
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاَطِيْـعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்விற்குوَاَطِيْـعُواகீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَதூதருக்குوَاُولِى الْاَمْرِஇன்னும் அதிகாரிகளுக்குمِنْكُمْ‌ۚஉங்களில்فَاِنْ تَنَازَعْتُمْஉங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டால்فِىْ شَىْءٍஒரு விஷயத்தில்فَرُدُّوْهُஅதைத் திருப்புங்கள்اِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்وَالرَّسُوْلِதூதர்اِنْ كُنْـتُمْநீங்கள் இருந்தால்تُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறீர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕஇன்னும் இறுதி நாள்ذٰ لِكَஇதுதான்خَيْرٌசிறந்ததுوَّاَحْسَنُஇன்னும் மிக அழகானதுتَاْوِيْلًا‏முடிவால்
யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வ உலில் அம்ரி மின்கும் Fப இன் தனாZஜஃதும் Fபீ ஷய்'இன் Fபருத்தூஹு இலல் லாஹி வர் ரஸூலி இன் குன்தும் து'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; தாலிக கய்ரு(ன்)வ் வ அஹ்ஸனு த'வீலா
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையும், அழகான முடிவும் ஆகும்.
IFT
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்.) பின்னர், ஏதேனும் விவகாரத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் திருப்பி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டோராயின் இதுதான் சரியான வழிமுறையாகும்; இறுதி விளைவின் கோணத்திலிருந்து பார்த்தாலும் இதுவே சிறந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், (அவனது) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலைவர்களுக்கும்) கீழ்ப்படியுங்கள், ஆனால் யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் திருப்பி ஒப்படைத்து விடுங்கள், (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்.
Saheeh International
O you who have believed, obey Allah and obey the Messenger and those in authority among you. And if you disagree over anything, refer it to Allah and the Messenger, if you should believe in Allah and the Last Day. That is the best [way] and best in result.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ یُرِیْدُوْنَ اَنْ یَّتَحَاكَمُوْۤا اِلَی الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ یَّكْفُرُوْا بِهٖ ؕ وَیُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّضِلَّهُمْ ضَلٰلًا بَعِیْدًا ۟
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اِلَىபக்கம்الَّذِيْنَஎவர்கள்يَزْعُمُوْنَஎண்ணுகின்றனர்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்بِمَاۤஎதைاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉம் பக்கம்وَمَاۤஎவற்றைاُنْزِلَஇறக்கப்பட்டனمِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்يُرِيْدُوْنَநாடுகின்றனர்اَنْ يَّتَحَاكَمُوْۤاஅவர்கள் தீர்ப்பு தேடிச்செல்லاِلَى الطَّاغُوْتِதீயவனிடம்وَقَدْ اُمِرُوْۤاகட்டளையிடப் பட்டுள்ளனர்اَنْ يَّكْفُرُوْاஅவர்கள் புறக்கணிக்க வேண்டும்بِهٖ ؕஅவனைوَيُرِيْدُநாடுகிறான்الشَّيْـطٰنُ اَنْ يُّضِلَّهُمْஷைத்தான்/அவர்களை வழிகெடுக்கضَلٰلًاۢவழிகேடுبَعِيْدًا‏வெகு தூரம்
அலம் தர இலல் லதீன யZஜ்'உமூன அன்னஹும் அமனூ Bபிமா உன்Zஜிலா இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக யுரீதூன அய் யதஹாகமூ இலத் தாகூதி வ கத் உமிரூ அய் யக்Fபுரூ Bபிஹி, வ யுரீதுஷ் ஷய்தானு அய் யுளில்லஹும் ளலாலம் Bப'ஈதா
முஹம்மது ஜான்
(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாகத் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின்றனரோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட ஒரு விஷமியையே அவர்கள் (தங்களுக்குத்) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய) அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகிறான்.
IFT
(நபியே!) நீர் இவர்களைப் பார்க்கவில்லையா? “உமக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் இறக்கியருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பினோம்” எனக் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாஃகூத்திடம் கொண்டு செல்லவே விரும்புகின்றார்கள். ஆயினும் தாஃகூத்தை நிராகரிக்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப் பட்டிருந்தார்கள். ஷைத்தான் அவர்களை முற்றிலும் வழிகெடுத்து வெகுதூரம் கொண்டு செல்ல விரும்புகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உம்மீது இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்தையும், உமக்கு முன்னர் இறக்கிவைக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே தாங்கள் விசுவாசிப்பதாக எண்ணிக் கொண்டிருப்போர்பால் நீர் பார்ககவில்லையா? அவர்கள் தாகூத்தை (ஷைத்தானை) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்க நாடுகிறார்கள், (ஆனால்) அவர்களோ, அவனை நிராகரித்து விடவேண்டுமெனத் திட்டமாகக் கட்டளையிடப்பட்டுள்ளார்கள், அந்த ஷைத்தானோ, அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுத்துவிடவே நாடுகின்றான்.
Saheeh International
Have you not seen those who claim to have believed in what was revealed to you, [O Muhammad], and what was revealed before you? They wish to refer legislation to ṭaghūt, while they were commanded to reject it; and Satan wishes to lead them far astray.
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ رَاَیْتَ الْمُنٰفِقِیْنَ یَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا ۟ۚ
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குتَعَالَوْاவாருங்கள்اِلٰىபக்கம்مَاۤஎதைاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்وَاِلَىஇன்னும் பக்கம்الرَّسُوْلِதூதர்رَاَيْتَகாண்பீர்الْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களைيَصُدُّوْنَபுறக்கணிக்கிறார்கள்عَنْكَஉம்மை விட்டுصُدُوْدًا‌ ۚ‏புறக்கணித்தல்
வ இதா கீல லஹும் த'ஆலவ் இலா மா அன்Zஜலல்லாஹு வ இலர் ரஸூலி ர அய்தல் முனாFபிகீன யஸுத்தூன 'அன்க ஸுதூதா
முஹம்மது ஜான்
மேலும் அவர்களிடம்: “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்கள் உம்மை விட்டு முற்றிலும் விலகி விடுவதையே நீர் காண்பீர்.
IFT
மேலும், ‘அல்லாஹ் இறக்கிவைத்த (சட்டத்)தின் பக்கமும், தூதரின் பக்கமும் வாருங்கள்’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வராமல் விலகிச் செல்வதையே நீர் பார்க்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நியாயம் பெற) “அல்லாஹ் இறக்கியருளிய (வேதத்)தின் பாலும் - அவனது தூதரின்பாலும் நீங்கள் வாருங்கள்” (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகளை (வேஷதாரிகளை)-அவர்கள் உம்மைவிட்டு முற்றிலும் புறக்கணித்து விடுவதையே நீர் காண்பீர்.
Saheeh International
And when it is said to them, "Come to what Allah has revealed and to the Messenger," you see the hypocrites turning away from you in aversion.
فَكَیْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ثُمَّ جَآءُوْكَ یَحْلِفُوْنَ ۖۗ بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًا وَّتَوْفِیْقًا ۟
فَكَيْفَஎவ்வாறுاِذَاۤ اَصَابَتْهُمْஅவர்களுக்கு ஏற்பட்டால்مُّصِيْبَةٌ ۢஒரு கஷ்டம்بِمَاஎதன் காரணமாகقَدَّمَتْமுற்படுத்தியனاَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்ثُمَّபிறகுجَآءُوْكَஉம்மிடம் வந்தனர்يَحْلِفُوْنَ‌ۖசத்தியம் செய்கின்றனர்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுاِنْ اَرَدْنَاۤநாங்கள் நாடவில்லைاِلَّاۤஅன்றிاِحْسَانًـاநன்மையைوَّتَوْفِيْقًا‏இன்னும் ஒற்றுமையை
Fபகய்Fப இதா அஸாBபத்ஹும் முஸீBபதும் Bபிமா கத்தமத் அய்தீஹிம் தும்ம ஜா'ஊக யஹ்லிFபூன Bபில்லாஹி இன் அரத்னா இல்லா இஹ்ஸான(ன்)வ் வ தவ்Fபீகா
முஹம்மது ஜான்
அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து “நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை” என்று கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழிநிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக)! பின்னர், அவர்கள் உம்மிடமே வந்து ‘‘(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் விரும்பியே தவிர, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை'' என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர்.
IFT
பின்னர் அவர்களின் கைகள் செய்த தீவினைகளின் காரணத்தால் அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது நிலைமை என்னவாகும்? பிறகு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும், இரு பிரிவினரிடையே உடன்பாடு ஏற்படுத்து வதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்துகொண்டு உம்மிடம் வருவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தின் காரணமாக அவர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், (அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழிநிலைமை) எவ்வாறு இருக்கும்?(என்பதை நீர் பார்ப்பீராக) பின்னர், அவர்கள் - நன்மையையும் - ஒற்றுமையையும் தவிர (வேறெதையும்) நாங்கள் நாடவில்லை என்று அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்பவர்களாக உம்மிடம் வருகின்றனர்.
Saheeh International
So how [will it be] when disaster strikes them because of what their hands have put forth and then they come to you swearing by Allah, "We intended nothing but good conduct and accommodation."
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یَعْلَمُ اللّٰهُ مَا فِیْ قُلُوْبِهِمْ ۗ فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِیْۤ اَنْفُسِهِمْ قَوْلًا بَلِیْغًا ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்الَّذِيْنَஎவர்கள்يَعْلَمُஅறிவான்اللّٰهُஅல்லாஹ்مَاஎதைفِىْ قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்களில்فَاَعْرِضْஆகவே புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களைوَعِظْهُمْஇன்னும் உபதேசிப்பீராக/அவர்களுக்குوَقُلْகூறுவீராகلَّهُمْஅவர்களுக்குفِىْۤ اَنْفُسِهِمْஅவர்களுடைய உள்ளங்களில்قَوْلًاۢகூற்றைبَلِيْغًا‏தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய
உலா'இகல் லதீன யஃல முல்லாஹு மா Fபீ குலூBபிஹிம் Fப அஃரிள் 'அன்ஹும் வ 'இள்ஹும் வ குல் லஹும் Fபீ அன்Fபுஸிஹிம் கவ்லம் Bபலீகா
முஹம்மது ஜான்
அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். ஆகவே, (நபியே!) நீர் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வீராக. மேலும், (அவர்களிடம் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுவீராக.
IFT
இத்தகையவர்களின் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். எனவே, நீர் அவர்களின் நடத்தையைப் புறக்கணித்து விடுவீராக! அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! மேலும் அவர்களின் உள்ளங்களில் பதியக்கூடிய நல்லுரையை நீர் அவர்களுக்குக் கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால்-அவர்களின் இதயங்களில் இருப்பவைகளை அல்லாஹ் அறிவான், ஆகவே (நபியே! நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! மேலும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வீராக! மேலும், அவர்களின் உள்ள கெடுதல்களை அவர்களுக்கு அவர்களது மனங்களில் படும்படித் தெளிவாக எடுத்துக்கூறுவீராக!
Saheeh International
Those are the ones of whom Allah knows what is in their hearts, so turn away from them but admonish them and speak to them a far-reaching [i.e., effective] word.
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِیُطَاعَ بِاِذْنِ اللّٰهِ ؕ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِیْمًا ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைمِنْ رَّسُوْلٍஎந்த தூதரையும்اِلَّاதவிரلِـيُـطَاعَஅவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்بِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِ ؕஅல்லாஹ்வுடையوَلَوْஇருந்தால்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்اِذْபோதுظَّلَمُوْۤاதீங்கிழைத்தார்கள்اَنْفُسَهُمْதங்களுக்குجَآءُوْكَஉம்மிடம் வந்தனர்فَاسْتَغْفَرُواஇன்னும் பாவமன்னிப்பு கோரினர்اللّٰهَஅல்லாஹ்விடம்وَاسْتَغْفَرَஇன்னும் பாவமன்னிப்பு கோரினார்لَـهُمُஅவர்களுக்குالرَّسُوْلُதூதர்لَوَجَدُواகண்டிருப்பார்கள்اللّٰهَஅல்லாஹ்வைتَوَّابًاபிழை பொறுப்பவனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வமா அர்ஸல்னா மிர் ரஸூலின் இல்லா லியுதா'அ Bபி இத்னில் லாஹ்; வ லவ் அன்னஹும் 'இத் ளலமூ அன்Fபுஸஹும் ஜா'ஊக Fபஸ்தக்Fபருல் லாஹ வஸ்தக்Fபர லஹுமுர் ரஸூலு ல வஜதுல் லாஹ தவ்வாBபர் ரஹீமா
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் பிழைபொறுத்தலை அங்கீகரிப்பவனாக மிகக் கருணையாளனாக அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.
IFT
மேலும் (அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக:) அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை. தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில், உம்மிடம் அவர்கள் வந்திருந்தால், இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால், அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால், திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப கீழ்ப்படியப் படுவதற்காகவே தவிர, (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பி வைக்கவில்லை, இன்னும், நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டு, உம்மிடம் வந்து, பின்னர், அல்லாஹ்விடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காக (அல்லாஹ்வுடைய) தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாக, மிகக் கிருபையுடையோனாக அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பபார்கள்.
Saheeh International
And We did not send any messenger except to be obeyed by permission of Allah. And if, when they wronged themselves, they had come to you, [O Muhammad], and asked forgiveness of Allah and the Messenger had asked forgiveness for them, they would have found Allah Accepting of Repentance and Merciful.
فَلَا وَرَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَیُسَلِّمُوْا تَسْلِیْمًا ۟
فَلَاஆகவே, இல்லைوَرَبِّكَஉம் இறைவன் மீது சத்தியமாகلَا يُؤْمِنُوْنَநம்பிக்கையாளராக ஆகமாட்டார்கள்حَتّٰى يُحَكِّمُوْكَவரை/அவர்கள் தீர்ப்பாளராக்குவது/உம்மைفِيْمَاஎதில்شَجَرَசச்சரவு ஏற்பட்டதுبَيْنَهُمْஅவர்களுக்கிடையில்ثُمَّபிறகுلَا يَجِدُوْاகாணமாட்டார்கள்فِىْۤ اَنْفُسِهِمْதங்கள் உள்ளங்களில்حَرَجًاஅதிருப்திمِّمَّا قَضَيْتَநீர் தீர்ப்பளித்ததில்وَيُسَلِّمُوْاபணிவார்கள்تَسْلِيْمًا‏முழுமையாக பணிதல்
Fபலா வ ரBப்Bபிக லா யு'மினூன ஹத்தா யுஹக்கிமூக Fபீ மா ஷஜர Bபய்னஹும் தும்ம லா யஜிதூ Fபீ அன்Fபுஸிஹிம் ஹரஜம் மிம்மா களய்த வ யுஸல் லிமூ தஸ்லீமா
முஹம்மது ஜான்
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலுமாக ஏற்காதவரை அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.
IFT
இல்லை! (முஹம்மதே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும், அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால், உமதிரட்சகன்மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத வரையில் அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள்.
Saheeh International
But no, by your Lord, they will not [truly] believe until they make you, [O Muhammad], judge concerning that over which they dispute among themselves and then find within themselves no discomfort from what you have judged and submit in [full, willing] submission.
وَلَوْ اَنَّا كَتَبْنَا عَلَیْهِمْ اَنِ اقْتُلُوْۤا اَنْفُسَكُمْ اَوِ اخْرُجُوْا مِنْ دِیَارِكُمْ مَّا فَعَلُوْهُ اِلَّا قَلِیْلٌ مِّنْهُمْ ؕ وَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا یُوْعَظُوْنَ بِهٖ لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِیْتًا ۟ۙ
وَلَوْஇருந்தால்اَنَّاநிச்சயமாக நாம்كَتَبْنَاவிதித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுاَنِ اقْتُلُوْۤاகொல்லுங்கள்اَنْفُسَكُمْஉங்களைاَوِஅல்லதுاخْرُجُوْاவெளியேறுங்கள்مِنْஇருந்துدِيَارِكُمْஉங்கள் இல்லங்கள்مَّاமாட்டார்கள்مَّا فَعَلُوْهُஅதை செய்திருக்கاِلَّاதவிரقَلِيْلٌகுறைவானவர்مِّنْهُمْ‌ ؕஅவர்களில்وَلَوْஇருந்தால்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்فَعَلُوْاசெய்தார்கள்مَاஎதைيُوْعَظُوْنَஉபதேசிக்கப்படுகிறார்கள்بِهٖஅதைلَـكَانَஆகி இருக்கும்خَيْرًاமிக நன்றாகلَّهُمْஅவர்களுக்குوَاَشَدَّஇன்னும் மிக வலுவானதுتَثْبِيْتًا ۙ‏உறுதிப்படுத்துவதில்
வ லவ் அன்னா கதBப்னா 'அலய்ஹிம் அனிக்துலூ அன்Fபுஸகும் அவ் இக்ருஜூ மின் தியாரிகும் மா Fப'அலூஹு இல்லா கலீலும் மின்ஹும் வ லவ் அன்னஹும் Fப'அலூ மா யூ'அளூன Bபிஹீ லகான கய்ரல் லஹும் வ அஷத்த தத்Bபீதா
முஹம்மது ஜான்
மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) “நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று கட்டளைவிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களை நோக்கி ‘‘(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது உங்கள் இல்லங்களை விட்டு (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டுவிடுங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். மேலும், (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும்.
IFT
உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுங்கள் என்றோ, உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்றோ நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களில் சிலர்தான் அதன் படி செயல்பட்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி செயலாற்றுவார்களேயானால், அது அவர்களுக்கு மிக நன்மை அளிப்பதாகவும் (சத்தியத்தில்) அவர்களை நன்கு உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருந்திருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளுங்கள், அல்லது நீங்கள் உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நிச்சயமாக நாம் அவர்களின்மீது விதித்திருந்தால், அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) இதனைச் செய்திருக்கவே மாட்டார்கள். மேலும், அவர்கள் எதை உபதேசிக்கப்பட்டார்களோ, அதை அவர்கள் செய்திருப்பார்களேயானால், அது அவர்களுக்கு மிக்க நன்மையாகவும், (விசுவாசத்தில் அவர்களை) உறுதிபடுத்துவதில் மிக்க வலுவாகவும் இருந்திருக்கும்.
Saheeh International
And if We had decreed upon them, "Kill yourselves" or "Leave your homes," they would not have done it, except for a few of them. But if they had done what they were instructed, it would have been better for them and a firmer position [for them in faith].
وَّاِذًا لَّاٰتَیْنٰهُمْ مِّنْ لَّدُنَّاۤ اَجْرًا عَظِیْمًا ۟ۙ
وَّاِذًاஇன்னும் அப்போதுلَّاٰتَيْنٰهُمْகொடுத்திருப்போம்/அவர்களுக்குمِّنْஇருந்துلَّدُنَّاۤநம்மிடம்اَجْرًاகூலியைعَظِيْمًا ۙ‏மகத்தானது
வ இதல் ல ஆதய்னாஹும் மில் லதுன்னா அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
அது சமயம் அவர்களுக்கு நம்மிடமிருந்து மேலும், மகத்தான கூலியை நிச்சயமாக நாம் கொடுத்திருப்போம்.
IFT
மேலும், அவ்வாறு செயல்பட்டிருந்தால் நம்மிடமிருந்து அவர்களுக்கு மகத்தான கூலியைக் கண்டிப்பாக நாம் வழங்கியிருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அது சமயம் அவர்களுக்கு, நம்மிடமிருந்து (மேற்கொண்டும்) மகத்தான ஒரு கூலியை நாம் கொடுத்திருப்போம்.
Saheeh International
And then We would have given them from Us a great reward.
وَّلَهَدَیْنٰهُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟
وَّلَهَدَيْنٰهُمْஇன்னும் நேர்வழி செலுத்தியிருப்போம்/அவர்களைصِرَاطًاபாதையில்مُّسْتَقِيْمًا‏நேரானது
வ ல ஹதய்னாஹும் ஸிராதம் முஸ்தகீமா
முஹம்மது ஜான்
மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியிருப்போம்.
IFT
மேலும், அவர்களுக்கு நாம் நேரான வழியைக் காட்டியுமிருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்கு நேரான வழியை நாம் காட்டி இருப்போம்.
Saheeh International
And We would have guided them to a straight path.
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِیْنَ ۚ وَحَسُنَ اُولٰٓىِٕكَ رَفِیْقًا ۟ؕ
وَمَنْஎவர்(கள்)يُّطِعِகீழ்ப்படிகிறார்(கள்)اللّٰهَஅல்லாஹ்வுக்குوَالرَّسُوْلَஇன்னும் தூதருக்குفَاُولٰٓٮِٕكَஅவர்கள்مَعَஉடன்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمَஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்கள் மீதுمِّنَஇருந்துالنَّبِيّٖنَநபிமார்கள்وَالصِّدِّيْقِيْنَஇன்னும் சத்தியவான்கள்وَالشُّهَدَآءِஇன்னும் உயிர்நீத்த தியாகிகள்وَالصّٰلِحِيْنَ‌ ۚஇன்னும் நல்லவர்கள்وَحَسُنَஅழகியاُولٰٓٮِٕكَஇவர்கள்رَفِيْقًا ؕ‏தோழர்கள்
வ ம(ன்)ய்-யுதி'இல் லாஹ வர் ரஸூல Fப உலா'இக ம'அல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன வஸ்ஸித்தீகீன வஷ்ஷுஹதா'இ வஸ்ஸாலிஹீன்; வ ஹஸுன உலா'இக ரFபீகா
முஹம்மது ஜான்
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப் போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தான் மிக அழகான தோழர்கள்.
IFT
எவர்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்கள் மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள்-நபிமார்கள், சத்தியவான்கள், (அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த) ஷஹீதுகள், நல்லடியார்கள் ஆகியோர்களிலிருந்து எவர்கள் மீது அல்லாஹ் அருள் செய்திருக்கிறானோ அத்தகையோருடன் (சுவனத்தில்) இருப்பார்கள், தோழமைக்கு இவர்கள் அழகானவர்கள்.
Saheeh International
And whoever obeys Allah and the Messenger - those will be with the ones upon whom Allah has bestowed favor of the prophets, the steadfast affirmers of truth, the martyrs and the righteous. And excellent are those as companions.
ذٰلِكَ الْفَضْلُ مِنَ اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ عَلِیْمًا ۟۠
ذٰ لِكَஇதுالْـفَضْلُஅருள்مِنَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்விடமிருந்துوَكَفٰىபோதுமாகி விட்டான்بِاللّٰهِஅல்லாஹ்வேعَلِيْمًا‏நன்கறிபவனாக
தாலிகல் Fபள்லு மினல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி 'அலீமா
முஹம்மது ஜான்
இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். அல்லாஹ்தான் நிறைவான அறிஞனாக இருக்கிறான்.
IFT
இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும் (இந்த மக்களுடைய) உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இப்பேரருள் அல்லாஹ்விடமிருந்துள்ளதாகும், இன்னும், (இவர்கள் செயலை) நன்கறிகிறவனாக இருக்க அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
Saheeh International
That is the bounty from Allah, and sufficient is Allah as Knower.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِیْعًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேخُذُوْاபற்றிப் பிடியுங்கள்حِذْرَكُمْஎச்சரிக்கையை/உங்கள்فَانْفِرُوْاபுறப்படுங்கள்ثُبَاتٍசிறு கூட்டங்களாகاَوِஅல்லதுانْفِرُوْاபுறப்படுங்கள்جَمِيْعًا‏அனைவருமாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ குதூ ஹித்ரகும் Fபன்Fபிரூ துBபாதின் அவின் Fபிரூ ஜமீ'ஆ
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! (எதிரிகளிடம் எப்பொழுதும்) எச்சரிக்கையாகவே இருங்கள் உங்களின் தற்காப்பு சாதனங்களை உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு சிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ போருக்கு புறப்படுங்கள்.
IFT
நம்பிக்கையுடையவர்களே! (போராடுவதற்காக எந்நேரமும்) நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள்! பிறகு (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப) தனித்தனிப் பிரிவுகளாகக் கிளம்புங்கள்! அல்லது எல்லோரும் சேர்ந்து புறப்படுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (யுத்தத்திற்குச் சென்றால்) உங்கள் எச்சரிக்கையை (முதல் ஆயுதமாக) எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு, அணி அணியாகவோ, அல்லது அனைவரும் (கூட்டாக) இணைந்தோ செல்லுங்கள்.
Saheeh International
O you who have believed, take your precaution and [either] go forth in companies or go forth all together.
وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّیُبَطِّئَنَّ ۚ فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَیَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِیْدًا ۟
وَاِنَّநிச்சயமாகمِنْكُمْஉங்களில்لَمَنْதிட்டமாக எவர்لَّيُبَطِّئَنَّ‌ۚநிச்சயமாக பின்தங்கிவிடுகிறான்فَاِنْ اَصَابَتْكُمْஏற்பட்டால் / உங்களுக்குمُّصِيْبَةٌஒரு சோதனைقَالَகூறுகிறான்قَدْதிட்டமாகاَنْعَمَஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَىَّஎன் மீதுاِذْஏனெனில்لَمْ اَكُنْநான் இருக்கவில்லைمَّعَهُمْஅவர்களுடன்شَهِيْدًا‏பிரசன்னமாகி இருப் பவன்
வ இன்ன மின்கும் லமல் ல யுBபத்தி'அன்ன Fப இன் அஸாBபத்கும் முஸீBபதுன் கால கத் அன்'அமல் லாஹு 'அலய்ய இத் லம் அகும் ம'அஹும் ஷஹீதா
முஹம்மது ஜான்
(போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்; உங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், “அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்” என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(போருக்கு வராது) பின்தங்கி விடுபவர்களும் நிச்சயமாக உங்களில் சிலர் இருக்கின்றனர். (அவர்கள் நயவஞ்சகர்களே! ஏனெனில், போருக்குச் சென்ற) உங்களுக்கு ஒரு கஷ்டமேற்பட்டாலோ (அவர்கள்) ‘‘நாங்கள் உங்களுடன் வராமல் இருந்தது அல்லாஹ் எங்கள் மீது புரிந்த அருள்தான்'' என்று கூறுகிறார்கள்.
IFT
உண்மையில், போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுபவனும் உங்களில் இருக்கின்றான். பிறகு உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அவன் “திண்ணமாக, அல்லாஹ் என் மீது கருணை புரிந்துள்ளான். ஏனெனில், நான் அவர்களுடன் கலந்து கொள்ளவில்லை” என்று கூறுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (யுத்தத்திற்கு வராது) பின் தங்கியவர்களும் நிச்சயமாக உங்களில் (சிலர்) இருக்கின்றனர், (அவர்கள் முனாஃபிக்குகளே! ஏனெனில் யுத்தத்திற்குச் சென்ற) உங்களுக்கு யாதொரு கஷ்டமேற்பட்டாலோ, அ(வர்களில் ஒரு)வன் நான் அவர்களுடன் (அங்கு) பிரசன்னமாகி இல்லாதிருந்தபோது நிச்சயமாக அல்லாஹ் என்மீது அருள் புரிந்துவிட்டான்” என்று கூறுகின்றான்.
Saheeh International
And indeed, there is among you he who lingers behind; and if disaster strikes you, he says, "Allah has favored me in that I was not present with them."
وَلَىِٕنْ اَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللّٰهِ لَیَقُوْلَنَّ كَاَنْ لَّمْ تَكُنْ بَیْنَكُمْ وَبَیْنَهٗ مَوَدَّةٌ یّٰلَیْتَنِیْ كُنْتُ مَعَهُمْ فَاَفُوْزَ فَوْزًا عَظِیْمًا ۟
وَلَٮِٕنْ اَصَابَكُمْஅடைந்தால் / உங்களைفَضْلٌஓர் அருள்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்لَيَـقُوْلَنَّநிச்சயமாக கூறுகிறான்كَاَنْபோன்றுلَّمْ تَكُنْۢஇருக்கவில்லைبَيْنَكُمْஉங்களுக்கிடையில்وَبَيْنَهٗஇன்னும் அவனுக்கிடையில்مَوَدَّةٌநட்புيّٰلَيْتَنِىْ كُنْتُநான் இருந்திருக்க வேண்டுமேمَعَهُمْஅவர்களுடன்فَاَ فُوْزَவெற்றிபெற்றிருப்பேன்فَوْزًاவெற்றிعَظِيْمًا‏மகத்தானது
வ ல'இன் அஸாBபகும் Fபள்லும் மினல் லாஹி ல யகூலன்ன க அல் லம் தகும் Bபய்னகும் வ Bபய்னஹூ மவத்தது(ன்)ய் யா லய்தனீ குன்து ம'அஹும் Fப அFபூZஜ Fபவ்Zஜன் 'அளீமா
முஹம்மது ஜான்
அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; “நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்குக் கிடைத்தாலோ ‘‘நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இருந்திருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே!'' என்று உங்களுடன் நட்பு(ம் நேசமும்) இல்லாதவர்கள் கூறுவதைப்போல் அவர்கள் கூறுகின்றனர்.
IFT
ஆனால், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு நல்லருள் கிடைத்தால் உங்களுக்கும் அவனுக்கும் இடையே எவ்வித நட்பும் இல்லாததுபோல் “அய்யகோ! நானும் அவர்களுடன் இருந்திருக்கலாமே; அதன் மூலம் மாபெரும் வெற்றியை நான் அடைந்திருப்பேனே!” என்று புலம்புவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைத்தால் “நானும் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே, அவ்வாறிருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே! என்று உங்களுக்கும் அவனுக்கும் இடையில் எத்தகைய நட்பும் இல்லாமலிருந்ததைப் போல் நிச்சயமாக அவன் கூறுகிறான்.
Saheeh International
But if bounty comes to you from Allah, he will surely say, as if [i.e., showing that] there had never been between you and him any affection, "Oh, I wish I had been with them so I could have attained a great attainment."
فَلْیُقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یَشْرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا بِالْاٰخِرَةِ ؕ وَمَنْ یُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَیُقْتَلْ اَوْ یَغْلِبْ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟
فَلْيُقَاتِلْபோரிடட்டும்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்الَّذِيْنَஎவர்கள்يَشْرُوْنَவிற்கிறார்கள்الْحَيٰوةَவாழ்க்கையைالدُّنْيَاஇவ்வுலகம்بِالْاٰخِرَةِ‌ ؕமறுமைக்குப் பகரமாகوَஇன்னும்مَنْஎவர்يُّقَاتِلْபோரிடுவாரோفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்فَيُقْتَلْஅவர் கொல்லப்பட்டாலும்اَوْஅல்லதுيَغْلِبْவெற்றி பெற்றாலும்فَسَوْفَவிரைவாகنُـؤْتِيْهِகொடுப்போம் / அவருக்குاَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தானது
Fபல்யுகாதில் Fபீ ஸBபீலில் லாஹில் லதீன யஷ்ரூனல் ஹயாதத் துன்யா Bபில் ஆகிரஹ்; வ மய்-யுகாதில் Fபீ ஸBபீலில் லாஹி Fப யுக்தல் அவ் யக்லிBப் Fபஸவ்Fப னு'தீஹி அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வெட்டப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவருக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம்.
IFT
(இத்தகையோர்க்கு இவ்வுண்மை தெரிந்திருக்க வேண்டுமே:) இவ்வுலக வாழ்வை விற்று மறுமையைப் பெற விரும்புவோர் அல்லாஹ்வின் வழியில் போர் புரியட்டும்! பிறகு, யார் அல்லாஹ்வின் வழியில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றி பெற்றாலும் சரி, அவருக்கு உறுதியாக மகத்தான கூலியை நாம் வழங்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்யவும், இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்து (அதில்) அவர் கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவருக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.
Saheeh International
So let those fight in the cause of Allah who sell the life of this world for the Hereafter. And he who fights in the cause of Allah and is killed or achieves victory - We will bestow upon him a great reward.
وَمَا لَكُمْ لَا تُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْقَرْیَةِ الظَّالِمِ اَهْلُهَا ۚ وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۙۚ وَّاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِیْرًا ۟ؕ
وَمَا لَـكُمْஉங்களுக்கு என்னلَا تُقَاتِلُوْنَநீங்கள் போரிடாமல் இருக்கفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَالْمُسْتَضْعَفِيْنَபலவீனர்கள்مِنَஇருந்துالرِّجَالِஆண்கள்وَالنِّسَآءِஇன்னும் பெண்கள்وَالْوِلْدَانِஇன்னும் சிறுவர்கள்الَّذِيْنَஎவர்கள்يَقُوْلُوْنَகூறுகின்றனர்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَخْرِجْنَاவெளியேற்று/ எங்களைمِنْஇருந்துهٰذِهِஇந்தالْـقَرْيَةِஊர்الظَّالِمِஅநியாயக்காரர்(கள்)اَهْلُهَا‌ ۚஇந்த ஊர் வாசிகள்وَاجْعَلْஇன்னும் ஏற்படுத்துلَّـنَاஎங்களுக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன் புறம்وَلِيًّا ۙۚஒரு பாதுகாவலரைوَّاجْعَلْஇன்னும் ஏற்படுத்துلَّـنَاஎங்களுக்குمِنْஇருந்துلَّدُنْكَஉன் புறம்نَصِيْرًا ؕ‏ஓர் உதவியாளரை
வமா லகும் லா துகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி வல்முஸ்தள்'அFபீன மினர் ரிஜாலி வன்னிஸா'இ வல்வில்தானில் லதீன யகூலூன ரBப்Bபனா அக்ரிஜ்னா மின் ஹாதிஹில் கர்யதிள் ளாலிமி அஹ்லுஹா வஜ்'அல் லனா மில் லதுன்க வலிய(ன்)வ் வஜ்'அல் லனா மில் லதுன்க னஸீரா
முஹம்மது ஜான்
பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்று! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்து! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்து!'' என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்.
IFT
மேலும், பலவீனர்களாக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரில் பலவீனமானவர்களின் (பாதுகாப்பு) விஷயத்திலும், நீங்கள் யுத்தம் செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ, எங்கள் இரட்சகனே! இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிவிடுவாயாக! அதை (அவ்வூரை)யுடையவர்கள், அநியாயக்காரர்களாக இருக்கின்றனர். நீ எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஆக்குவாயாக! நீ எங்களுக்கு உன் புறத்தால் ஓர் உதவியாளரையும் அளித்தருள்வாயாக” என்று (பிரார்த்தனை செய்து) கூறுகின்றனர்.
Saheeh International
And what is [the matter] with you that you fight not in the cause of Allah and [for] the oppressed among men, women, and children who say, "Our Lord, take us out of this city of oppressive people and appoint for us from Yourself a protector and appoint for us from Yourself a helper"?
اَلَّذِیْنَ اٰمَنُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ وَالَّذِیْنَ كَفَرُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِیَآءَ الشَّیْطٰنِ ۚ اِنَّ كَیْدَ الشَّیْطٰنِ كَانَ ضَعِیْفًا ۟۠
اَلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்கள்يُقَاتِلُوْنَபோரிடுவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ‌ ۚஅல்லாஹ்வின்وَالَّذِيْنَ كَفَرُوْاஇன்னும் நிராகரிப்பாளர்கள்يُقَاتِلُوْنَபோரிடுவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்الطَّاغُوْتِஷைத்தானின்فَقَاتِلُوْۤاஆகவே போரிடுங்கள்اَوْلِيَآءَநண்பர்களிடம்الشَّيْطٰنِ‌ۚஷைத்தானின்اِنَّ كَيْدَநிச்சயமாக சூழ்ச்சிالشَّيْطٰنِஷைத்தானின்كَانَஇருக்கிறதுضَعِيْفًا‏பலவீனமாக
அல்லதீன ஆமனூ யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன கFபரூ யுகாதிலூன Fபீ ஸBபீலித் தாகூத் Fபகாதிலூ அவ்லியா'அஷ் ஷய்தான்; இன்ன கய்தஷ் ஷய்தானி கான ள'ஈFபா
முஹம்மது ஜான்
நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களிடம் நீங்கள் போர்புரியுங்கள். (அவர்களின் என்னிக்கையைப் பார்த்து தயங்கி விடாதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகவே இருக்கிறது.
IFT
இறைநம்பிக்கையுடைய நடத்தையை மேற்கொண்டவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர்புரிவார்கள். நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டவர்கள் தாஃகூத்தின் வழியில் போர்புரிவார்கள். எனவே ஷைத்தானின் தோழர்களுடன் போர் புரியுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே இது போன்ற சமயத்தில்) விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர்-அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வார்கள், இன்னும், நிராகரித்தார்களே அத்தகையோர்-அவர்கள் (இவர்களுக்கு எதிராக) தாகூத்துடைய (ஷைத்தானுடைய) பாதையில் யுத்தம் செய்வார்கள், ஆகவே, ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராக போர் செய்யுங்கள், நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாக இருக்கிறது.
Saheeh International
Those who believe fight in the cause of Allah, and those who disbelieve fight in the cause of ṭaghūt. So fight against the allies of Satan. Indeed, the plot of Satan has ever been weak.
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ قِیْلَ لَهُمْ كُفُّوْۤا اَیْدِیَكُمْ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ۚ فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ یَخْشَوْنَ النَّاسَ كَخَشْیَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْیَةً ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَیْنَا الْقِتَالَ ۚ لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ؕ قُلْ مَتَاعُ الدُّنْیَا قَلِیْلٌ ۚ وَالْاٰخِرَةُ خَیْرٌ لِّمَنِ اتَّقٰی ۫ وَلَا تُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اِلَى الَّذِيْنَஎவர்களைقِيْلَகூறப்பட்டதுلَهُمْஅவர்களுக்குكُفُّوْۤاதடுத்துக் கொள்ளுங்கள்اَيْدِيَكُمْஉங்கள் கரங்களைوَاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰ تُواஇன்னும் கொடுங்கள்الزَّكٰوةَ ۚஸகாத்தைفَلَمَّا كُتِبَவிதிக்கப்பட்ட போதுعَلَيْهِمُஅவர்கள் மீதுالْقِتَالُபோர்اِذَاஅப்போதுفَرِيْقٌஒரு பிரிவினர்مِّنْهُمْஅவர்களில்يَخْشَوْنَபயப்படுகின்றனர்النَّاسَமக்களைكَخَشْيَةِபயப்படுவதுபோல்اللّٰهِஅல்லாஹ்வைاَوْஅல்லதுاَشَدَّமிகக் கடுமையாகخَشْيَةً‌ ۚபயத்தால்وَقَالُوْاஇன்னும் கூறினார்கள்رَبَّنَاஎங்கள் இறைவாلِمَ كَتَبْتَஏன் விதித்தாய்عَلَيْنَاஎங்கள் மீதுالْقِتَالَ ۚபோரைلَوْلَاۤ اَخَّرْتَنَاۤஎங்களை நீ பிற்படுத்த வேண்டாமா?اِلٰٓىவரைاَجَلٍஒரு தவணைقَرِيْبٍ‌ ؕசமீபமாகقُلْகூறுவீராகمَتَاعُஇன்பம்الدُّنْيَاஉலகத்தின்قَلِيْلٌ‌ ۚஅற்பமானதுوَالْاٰخِرَةُமறுமைخَيْرٌமேலானதுلِّمَنِஎவருக்குاتَّقٰىஅஞ்சினார்وَلَا تُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்فَتِيْلًا‏ஒரு நூலும்
அலம் தர இலல் லதீன கீல லஹும் குFப்Fபூ அய்தியகும் வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத Fபலம்மா குதிBப 'அலய்ஹிமுல் கிதாலு இதா Fபரீகும் மின்ஹும் யக்-ஷவ் னன் னாஸ ககஷ்யதில் லாஹி அவ் அஷத்த கஷ்யஹ்; வ காலூ ரBப்Bபனா லிம கதBப்த 'அலய்னல் கிதால லவ் லா அக்கர்தனா இலா அஜலின் கரீBப்; குல் மதா'உத் துன்யா கலீலு(ன்)வ் வல் ஆகிரது கய்ருல் லிமனித் தகா வலா துள்லமூன Fபதீலா
முஹம்மது ஜான்
“உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் கைகளைத் (தற்சமயம் போர்புரியாது) தடுத்துக் கொள்ளவும், தொழுகையை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், ஜகாத்தைக் கொடுத்துவரவும் என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? போர்புரிய அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயந்து ‘‘எங்கள் இறைவனே! ஏன் எங்கள் மீது போரைக் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலத்திற்கு இதைப் பிற்படுத்த வேண்டாமா?'' என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். (இதற்கு நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! எவன் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கிறானோ அவனுக்கு மறுமை(யின் வாழ்க்கை)தான் மிக மேலானது. (உங்கள் நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஒரு நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
IFT
(போர் புரியாமல்) உங்கள் கரங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்; மேலும் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள் என்று எவர்களிடம் கூறப்பட்டதோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? இப்பொழுது போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதைப் போல ஏன் அதைவிட அதிகமாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றார்கள்! “எங்கள் இறைவனே! போர் புரிவதை எங்கள் மீது ஏன் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்குத் தவணை அளித்திருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: இவ்வுலக வாழ்வின் இன்பமனைத்தும் அற்பமானதே! மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி வாழ்பவர்க்கு மறுமை மிகவும் சிறந்ததாகும். இன்னும் உங்களுக்கு இம்மியளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களுடைய கைகளைத் (தற்சமயம் யுத்தம் செய்யாது) தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையையும் (உறுதியாக) நிறைவேற்றுங்கள், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ, அத்தகையோர்பால் (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (பின்னர்) யுத்தம் செய்வது அவர்கள்மீது விதிக்கப்பட்ட பொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ, அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் அதைவிட கடினமாக (எதிரிகளான) மனிதர்களுக்குப் பயந்தார்கள், மேலும், எங்கள் இரட்சகனே! ஏன் எங்கள் மீது யுத்தத்தை விதியாக்கினாய்?, இன்னும் சிறிது காலம் எங்களுக்காக இதனைப் பிற்படுத்தி இருக்க வேண்டாமா?” என்றும் கூறினார்கள், (இதற்கு, நபியே!) நீர் கூறுவீராக! இவ்வுலக சுகம் அற்பமானதே, (அல்லாஹ்வை) பயந்து நடப்பவருக்கு மறுமை(யின் வாழ்க்கை) தான் மிக்க மேலானது (உங்களுடைய நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஒரு நூல் அளவும் அநீதம் செய்யப்பட மாட்டீர்கள்.
Saheeh International
Have you not seen those who were told, "Restrain your hands [from fighting] and establish prayer and give zakah"? But then when battle was ordained for them, at once a party of them feared men as they fear Allah or with [even] greater fear. They said, "Our Lord, why have You decreed upon us fighting? If only You had postponed [it for] us for a short time." Say, "The enjoyment of this world is little, and the Hereafter is better for he who fears Allah. And injustice will not be done to you, [even] as much as a thread [inside a date seed]."
اَيْنَمَا تَكُوْنُوْا یُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِیْ بُرُوْجٍ مُّشَیَّدَةٍ ؕ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ ؕ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ فَمَالِ هٰۤؤُلَآءِ الْقَوْمِ لَا یَكَادُوْنَ یَفْقَهُوْنَ حَدِیْثًا ۟
اَيْنَ مَا تَكُوْنُوْاநீங்கள் எங்கிருந்தாலும்يُدْرِكْكُّمُஅடையும்/உங்களைالْمَوْتُமரணம்وَلَوْ كُنْتُمْநீங்கள் இருந்தாலும்فِىْ بُرُوْجٍகோபுரங்களில்مُّشَيَّدَةٍ‌ ؕபலமானوَاِنْ تُصِبْهُمْஅவர்களை அடைந்தால்حَسَنَةٌஒரு நன்மைيَّقُوْلُوْاகூறுகின்றனர்هٰذِهٖஇதுمِنْஇருந்துعِنْدِ اللّٰهِ‌ ۚஅல்லாஹ்விடம்وَاِنْ تُصِبْهُمْஅவர்களை அடைந்தால்سَيِّئَةٌஒரு தீங்குيَّقُوْلُوْاகூறுகின்றனர்هٰذِهٖஇதுمِنْஇருந்துعِنْدِكَ‌ ؕஉம்மிடம்قُلْகூறுவீராகكُلٌّஎல்லாம்مِّنْஇருந்துعِنْدِ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்விடம்فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِஇந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது?لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَஅவர்கள் விரைவாக விளங்குவதில்லையேحَدِيْثًا‏ஒரு பேச்சை
அய்ன மா தகூனூ யுத்ரிக்குமுல் மவ்து வ லவ் குன்தும் Fபீ Bபுரூஜிம் முஷய் யதஹ்; வ இன் துஸிBப்ஹும் ஹஸனது(ன்)ய் யகூலூ ஹாதிஹீ மின் இன்தில் லாஹி வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அது(ன்)ய் யகூலூ ஹாதிஹீ மின் 'இன்திக்; குல் குல்லும் மின் 'இன்தில்லாஹி Fபமா லிஹா 'உலா'இல் கவ்மி லா யகாதூன யFப்கஹூன ஹதீதா
முஹம்மது ஜான்
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!”
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உமது கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை ஒரு நன்மை அடையும் பட்சத்தில் ‘‘இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டு விட்டாலோ ‘‘(நபியே!) இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)'' எனக் கூறுகின்றனர். (ஆகவே,) நீர் கூறுவீராக: ‘‘(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்வதில்லையே!
IFT
நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே! மேலும், அவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின், “(முஹம்மதே!) இது உம்மிடமிருந்து வந்தது” எனக் கூறுகிறார்கள். நீர் கூறுவீராக: அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன. இம்மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதில்லையே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் எங்கிருந்தபோதிலும், மரணம் உங்களை அடைந்தே தீரும், மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்களில் நீங்கள் இருந்தபோதிலும் சரியே! மேலும், (நபியே! உம்முடைய கட்டளைப்படி யுத்தத்திற்குச் சென்ற அவர்களுக்கு யாதொரு நன்மையும் ஏற்பட்டால், இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது எனக் கூறுகின்றனர், (ஆனால்) அவர்களுக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டுவிட்டாலோ (நபியே! இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது) எனக் கூறுகின்றனர், (ஆகவே) நீர் கூறுவீராக, (இவை) ஒவ்வொன்றும் அல்லாஹ்விடமிருந்தே உள்ளது, இந்த சமூகத்தவர்க்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் விளங்கிக் கொள்ள நெருங்கமாட்டார்கள்.
Saheeh International
Wherever you may be, death will overtake you, even if you should be within towers of lofty construction. But if good comes to them, they say, "This is from Allah"; and if evil befalls them, they say, "This is from you." Say, "All [things] are from Allah." So what is [the matter] with those people that they can hardly understand any statement?
مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ ؗ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَیِّئَةٍ فَمِنْ نَّفْسِكَ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟
مَاۤஎதுاَصَابَكَஅடைந்தது/உம்மைمِنْஇருந்துحَسَنَةٍநன்மைفَمِنَஇருந்துاللّٰهِ‌அல்லாஹ்وَمَاۤஇன்னும் எதுاَصَابَكَஅடைந்தது/உம்மைمِنْஇருந்துسَيِّئَةٍதீமைفَمِنْ نَّـفْسِكَ‌ ؕஉன்னிலிருந்துوَاَرْسَلْنٰكَஅனுப்பினோம்/உம்மைلِلنَّاسِமக்களுக்குرَسُوْلًا‌ ؕதூதராகوَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்شَهِيْدًا‏சாட்சியாளனாக
மா அஸாBபக மின் ஹஸனதின் Fபமினல் லாஹி வ மா அஸாBபக மின் ஸய்யி'அதின் Fபமின் னFப்ஸிக்; வ அர்ஸல்னாக லின்னாஸி ரஸூலா; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
முஹம்மது ஜான்
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், (இவ்வாறு கூறுகின்றவனை நோக்கி) ‘‘உனக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது'' என்றும் ‘‘உனக்கு ஒரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது'' (என்றும் கூறுவீராக. நபியே!) நாம் உம்மை ஒரு தூதராகவே மனிதர்களுக்கு அனுப்பியிருக்கிறோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்.
IFT
(மனிதனே!) உனக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின் அது அல்லாஹ்வின் அருளால்தான் கிடைக்கின்றது. ஆனால் உனக்கு ஏதேனும் கேடு ஏற்பட்டால் அது உன் வினையினால்தான் விளைகிறது. (முஹம்மதே!) மக்களுக்காக உம்மைத் தூதராய் நாம் அனுப்பியுள்ளோம். மேலும், இதற்கு அல்லாஹ்வின் சாட்சியே போதுமானது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி, இவ்வாறு கூறுகின்றவனுக்கு) “உமக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வினால் ஏற்பட்டது? என்றும் உமக்கு யாதொரு தீமை ஏற்பட்டால், (அது நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் (வந்தது)” என்றும் (கூறுவீராக!) இன்னும், (நபியே!) நாம் உம்மை ஒரு தூதராகவே மனிதர்களிடம் அனுப்பியிருக்கின்றோம், இன்னும் (இதற்கு) சாட்சியாளனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்.
Saheeh International
What comes to you of good is from Allah, but what comes to you of evil, [O man], is from yourself. And We have sent you, [O Muhammad], to the people as a messenger, and sufficient is Allah as Witness.
مَنْ یُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰی فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۟ؕ
مَنْஎவர்يُّطِعِகீழ்ப்படிகிறார்الرَّسُوْلَதூதருக்குفَقَدْதிட்டமாகاَطَاعَகீழ்ப்படிந்தார்اللّٰهَ ۚஅல்லாஹ்விற்குوَمَنْஇன்னும் எவர்(கள்)تَوَلّٰىதிரும்பினார்(கள்)فَمَاۤஇல்லைاَرْسَلْنٰكَஉம்மை அனுப்பعَلَيْهِمْஅவர்கள் மீதுحَفِيْظًا ؕ‏பாதுகாவலராக
ம(ன்)ய் யுதி'இர் ரஸூல Fபகத் அதா'அல் லாஹ வ மன் தவல்லா Fபமா அர்ஸல்னாக 'அலய்ஹிம் ஹFபீளா
முஹம்மது ஜான்
எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்பட்டு நடக்கிறாரோ அவர்தான் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டார்.ஆகவே, (நபியே! உம்மை) எவர்களும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை.
IFT
யார், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ அவர் உண்மையில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவராவார். மேலும் யாரேனும் புறக்கணித்துவிட்டால், அவர்களின் பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர், நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கீழப்படிந்து விட்டார், இவ்வாறு கீழ்ப்படிவதை எவரும் புறக்கணித்தால், (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். ஏனெனில்) உம்மை அவர்கள் மீது கண்காணிப்பவராக நாம் அனுப்பவில்லை.
Saheeh International
He who obeys the Messenger has obeyed Allah; but those who turn away - We have not sent you over them as a guardian.
وَیَقُوْلُوْنَ طَاعَةٌ ؗ فَاِذَا بَرَزُوْا مِنْ عِنْدِكَ بَیَّتَ طَآىِٕفَةٌ مِّنْهُمْ غَیْرَ الَّذِیْ تَقُوْلُ ؕ وَاللّٰهُ یَكْتُبُ مَا یُبَیِّتُوْنَ ۚ فَاَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَيَقُوْلُوْنَகூறுகின்றனர்طَاعَةٌகீழ்ப்படிதல்فَاِذَا بَرَزُوْاஅவர்கள் வெளியேறினால்مِنْஇருந்துعِنْدِكَஉம்மிடம்بَيَّتَசதி செய்கின்றனர்طَآٮِٕفَةٌஒரு கூட்டம்مِّنْهُمْஅவர்களில்غَيْرَமாறாகالَّذِىْஎதுتَقُوْلُ‌ ؕகூறுகிறீர்وَاللّٰهُஅல்லாஹ்يَكْتُبُபதிவு செய்கிறான்مَا يُبَيِّتُوْنَ‌ ۚஎதை/சதிசெய்கிறார்கள்فَاَعْرِضْஆகவே புறக்கணிப்பீராகعَنْهُمْஅவர்களை விட்டுوَتَوَكَّلْஇன்னும் நம்பிக்கை வைப்பீராகعَلَى اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின் மீதுوَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளனாக
வ யகூலூன தா'அன்துன் Fப இதா BபரZஜூ மின் 'இன்திக Bபய்யத தா'இFபதும் மின்ஹும் கய்ரல் லதீ தகூலு வல்லாஹு யக்துBபு மா யுBபய்யிதூன Fப அஃரிள் 'அன்ஹும் வ தவக்கல் 'அலல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
முஹம்மது ஜான்
(நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;; உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்; அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்; ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ‘‘உமக்கு நாம் முற்றிலும்) கட்டுப்பட்டோம்'' என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர். (எனினும்,) அவர்கள் உமது சமூகத்தில் இருந்து சென்றுவிட்டாலோ அவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் வாயால்) கூறியதற்கு மாறாக இரவெல்லாம் சதி ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் இரவெல்லாம் சதி ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ் பதிவு செய்து கொள்கிறான். ஆதலால், நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே நம்புவீராக. (உங்களுக்கு) பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.
IFT
‘நாங்கள் கீழ்ப்படிகிறோம்’ என (நேரில்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், உம்மை விட்டு வெளியேறிவிட்டால், அவர்களில் ஒரு பிரிவினர் இரவில் கூடி நீர் கூறுகின்றவற்றிற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களின் இந்த இரகசி யப் பேச்சுக்களையெல்லாம் அல்லாஹ் பதிவு செய்து வைக்கிறான். எனவே நீர் அவர்களைப் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! சார்ந்திருப்பதற்கு அல்லாஹ் போதுமானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! “உம்மிடமிருக்கும்போது உமக்கு முற்றிலும்) கீழ்ப்படிதலாகும்” என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர், பிறகு, அவர்கள் உம்மிடத்திலிருந்து வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்மிடம்) தாம் கூறியதற்கு மாறாக இரவெல்லாம் (சதி) ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றனர், அவர்கள் இரவெல்லாம் (சதி) ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ்பதிவு செய்து கொள்கின்றான், ஆதலால் நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (சகல காரியங்களையும் ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக! உம்மைப் பாதுகாப்பதற்கு) பொறுப்பேற்பவனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்.
Saheeh International
And they say, "[We pledge] obedience." But when they leave you, a group of them spend the night determining to do other than what you say. But Allah records what they plan by night. So leave them alone and rely upon Allah. And sufficient is Allah as Disposer of affairs.
اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَیْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِیْهِ اخْتِلَافًا كَثِیْرًا ۟
اَفَلَا يَتَدَبَّرُوْنَஅவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா?الْقُرْاٰنَ‌ؕகுர்ஆனைوَلَوْ كَانَஇருந்திருந்தால்مِنْஇருந்துعِنْدِஇடம்غَيْرِஅல்லாதவர்اللّٰهِஅல்லாஹ்لَوَجَدُوْاகண்டிருப்பார்கள்فِيْهِஇதில்اخْتِلَافًاமுரண்பாட்டைكَثِيْرًا‏பல
அFபலா யததBப்Bபரூனல் குர்'ஆன்; வ லவ் கான மின் 'இன்தி கய்ரில் லாஹி ல வஜதூ Fபீ இக்திலாFபன் கதீரா
முஹம்மது ஜான்
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் கண்டிருப்பார்கள்.
IFT
அவர்கள் குர்ஆனைப் பற்றிச் சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இந்தக்குர்ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இது இருந்தால் இதில் அநேக முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
Saheeh International
Then do they not reflect upon the Qur’an? If it had been from [any] other than Allah, they would have found within it much contradiction.
وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَوْفِ اَذَاعُوْا بِهٖ ؕ وَلَوْ رَدُّوْهُ اِلَی الرَّسُوْلِ وَاِلٰۤی اُولِی الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِیْنَ یَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّیْطٰنَ اِلَّا قَلِیْلًا ۟
وَاِذَا جَآءَவந்தால்هُمْஅவர்களிடம்اَمْرٌஒரு செய்திمِّنَபற்றிالْاَمْنِபாதுகாப்புاَوِஅல்லதுالْخَـوْفِபயம்اَذَاعُوْاபரப்புகின்றனர்بِهٖ‌ ۚஅதைوَلَوْ رَدُّوْهُஅவர்கள் கொண்டு சென்றால் / அதைاِلَى الرَّسُوْلِதூதரிடம்وَاِلٰٓى اُولِى الْاَمْرِஇன்னும் அதிகாரிகளிடம்مِنْهُمْஅவர்களில்لَعَلِمَهُஅதை நன்கறிந்து கொள்வார்கள்الَّذِيْنَஎவர்கள்يَسْتَنْۢبِطُوْنَهٗயூகிப்பார்கள்/அதைمِنْهُمْ‌ؕஅவர்களில்وَلَوْلَاஇல்லையென்றால்فَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுوَرَحْمَتُهٗஇன்னும் அவனுடைய கருணைلَاتَّبَعْتُمُபின்பற்றி இருப்பீர்கள்الشَّيْطٰنَஷைத்தானைاِلَّاதவிரقَلِيْلًا‏சிலரை
வ இதா ஜா'அஹும் அம்ரும் மினல் அம்னி அவில் கவ்Fபி அதா'ஊ Bபிஹீ வ லவ் ரத்தூஹு இலர் ரஸூலி வ இலா உலில் அம்ரி மின்ஹும் ல'அலிமஹுல் லதீன யஸ்தம்Bபிதூனஹூ மின்ஹும்; வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்கும் வ ரஹ்மதுஹூ லத்தBபஃதுமுஷ் ஷய்தான இல்லா கலீலா
முஹம்மது ஜான்
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பயத்தையோ (பொது மக்களின்) பாதுகாப்பையோ பற்றிய ஒரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், தங்கள் அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால் அவர்களில் ஊகிக்கக்கூடிய (ஆராயக்கூடிய அ)வர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள்மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.
IFT
அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால், அதனை அவர்கள் பரப்பி விடுகின்றார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும், தம்மில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அச்செய்தியின் உண்மை நிலையை நன்கு அறிந்திருப்பார்கள். (உங்களிடம் எந்த அளவுக்குப் பலவீனங்கள் இருந்தன என்றால்) உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாமல் போயிருந்தால், உங்களில் சிலரைத் தவிர அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (யுத்த) அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே, அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர், (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள், மேலும் (விசுவாசிகளே!) அல்லாஹ்வுடைய பேரருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், (உங்களில்) குறைவானவர்களைத் தவிர நீங்கள் யாவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.
Saheeh International
And when there comes to them something [i.e., information] about [public] security or fear, they spread it around. But if they had referred it back to the Messenger or to those of authority among them, then the ones who [can] draw correct conclusions from it would have known about it. And if not for the favor of Allah upon you and His mercy, you would have followed Satan, except for a few.
فَقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ لَا تُكَلَّفُ اِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِیْنَ ۚ عَسَی اللّٰهُ اَنْ یَّكُفَّ بَاْسَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ وَاللّٰهُ اَشَدُّ بَاْسًا وَّاَشَدُّ تَنْكِیْلًا ۟
فَقَاتِلْஆகவே போரிடுவீராகفِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ‌ ۚஅல்லாஹ்வின்لَا تُكَلَّفُபணிக்கப்பட மாட்டீர்اِلَّا نَـفْسَكَ‌உம்மைத் தவிரوَحَرِّضِஇன்னும் தூண்டுவீராகالْمُؤْمِنِيْنَ‌ ۚநம்பிக்கையாளர்களைعَسَىகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْ يَّكُفَّஅவன் தடுக்கبَاْسَஆற்றலைالَّذِيْنَ كَفَرُوْا‌ ؕநிராகரிப்பாளர்களின்وَاللّٰهُஅல்லாஹ்اَشَدُّமிக கடுமையானவன்بَاْسًاஆற்றலால்وَّاَشَدُّஇன்னும் கடுமையானவன்تَـنْكِيْلًا‏தண்டிப்பதால்
Fபகாதில் Fபீ ஸBபீலில் லாஹி லா துகல்லFபு இல்லா னFப்ஸக வ ஹர்ரிளில் மு'மினீன்; 'அஸல்லாஹு அய் யகுFப்Fப Bப'ஸல்லதீன கFபரூ; வல்லாஹு அஷத்து Bப'ஸ(ன்)வ் வ அஷத்து தன்கீலா
முஹம்மது ஜான்
எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை; எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக; நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவீராக. நீர் உம்மைத் தவிர (மற்றெவரையும் போருக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போருக்குச் செல்ல) தூண்டுவீராக. நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர் செய்வதில் மிக வல்லவன், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
IFT
எனவே, (நபியே!) நீர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிவீராக! உம்மைத் தவிர வேறு யாருக்கும் நீர் பொறுப்பாளியல்லர். ஆயினும், இறைநம்பிக்கையாளர்களுக்கு(ப் போர் புரியும்படி) ஆர்வமூட்டுவீராக! அல்லாஹ் இறைமறுப்பாளர்களின் பலத்தை முறியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ் அனைவரையும்விட வலிமை மிக்கவன். மேலும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வீராக! நீர் உம்மைத் தவிர (வேறெவரும்) கட்டாயப்படுத்தப்படுவதற்கில்லை, இன்னும் விசுவாசிகளை (போர் செய்ய)த் தூண்டுவீராக! நிராகரிப்போரின் யுத்தத்தை உங்களை விட்டும் அல்லாஹ் தடுத்து விடக்கூடும், (ஏனென்றால்) அல்லாஹ் யுத்தம் செய்வதில் மிக வல்லவன், தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்.
Saheeh International
So fight, [O Muhammad], in the cause of Allah; you are not held responsible except for yourself. And encourage the believers [to join you] that perhaps Allah will restrain the [military] might of those who disbelieve. And Allah is greater in might and stronger in [exemplary] punishment.
مَنْ یَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً یَّكُنْ لَّهٗ نَصِیْبٌ مِّنْهَا ۚ وَمَنْ یَّشْفَعْ شَفَاعَةً سَیِّئَةً یَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ مُّقِیْتًا ۟
مَنْஎவர்يَّشْفَعْசிபாரிசு செய்வார்شَفَاعَةًசிபாரிசுحَسَنَةًநல்லيَّكُنْஇருக்கும்لَّهٗஅவருக்குنَصِيْبٌஒரு பங்குمِّنْهَا‌ ۚஅதிலிருந்துوَمَنْஇன்னும் எவர்يَّشْفَعْசிபாரிசு செய்வார்شَفَاعَةًசிபாரிசுسَيِّئَةًதீயதுيَّكُنْஇருக்கும்لَّهٗஅவருக்குكِفْلٌகுற்றம்مِّنْهَا‌ ؕஅதிலிருந்துوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதுمُّقِيْتًا‏கண்காணிப்பவனாக
மய் யஷ்Fபஃ ஷFபா'அதன் ஹஸனதய் யகுல் லஹூ னஸீBபும் மின்ஹா வ மய் யஷ்Fபஃ ஷFபா'அதன் ஸய்யி'அத(ன்)ய்-யகுல் லஹூ கிFப்லும் மின்ஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இம் முகீதா
முஹம்மது ஜான்
எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவரேனும் ஒரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) ஒரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் இருந்தும் அவருக்கொரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கிறான்.
IFT
யார் நன்மைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அந்நன்மையில் பங்கு பெறுவார்; மேலும், யார் தீமைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அத்தீமையில் பங்கு பெறுவார். மேலும், அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவரேனும் (யாதொரு) நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் அவருக்கும் ஒரு பங்கு இருக்கும், (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு எவரேனும் பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு இருக்கும், மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
Saheeh International
Whoever intercedes for a good cause will have a share [i.e., reward] therefrom; and whoever intercedes for an evil cause will have a portion [i.e., burden] therefrom. And ever is Allah, over all things, a Keeper.
وَاِذَا حُیِّیْتُمْ بِتَحِیَّةٍ فَحَیُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ حَسِیْبًا ۟
وَاِذَا حُيِّيْتُمْஉங்களுக்கு முகமன் கூறப்பட்டால்بِتَحِيَّةٍஒரு முகமனைக் கொண்டுفَحَيُّوْاமுகமன் கூறுங்கள்بِاَحْسَنَமிக அழகியதைக்கொண்டுمِنْهَاۤஅதைவிடاَوْஅல்லதுرُدُّوْهَا‌ ؕதிரும்பக் கூறுங்கள் / அதையேاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதுحَسِيْبًا‏பாதுகாவலனாக
வ இதா ஹுய்யீதும் Bபிதஹய்ய்யதின் Fபஹய்யூ Bபி அஹ்ஸன மின்ஹா அவ் ருத்தூஹா; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஹஸீBபா
முஹம்மது ஜான்
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(எவரேனும்) உங்களுக்கு ‘ஸலாம்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
IFT
மேலும், உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்துக் கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எவராலும்) உங்களுக்கு முகமன் (“ஸலாம்”) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள், அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப்பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான்.
Saheeh International
And when you are greeted with a greeting, greet [in return] with one better than it or [at least] return it [in a like manner]. Indeed Allah is ever, over all things, an Accountant.
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَیَجْمَعَنَّكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِیْثًا ۟۠
اللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَ‌ؕ لَيَجْمَعَنَّكُمْஅவன்/நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களைاِلٰى يَوْمِ الْقِيٰمَةِமறுமை நாளில்لَا رَيْبَஅறவே சந்தேகம் இல்லைفِيْهِ‌ؕஅதில்وَمَنْயார்اَصْدَقُமிக உண்மையானவன்مِنَவிடاللّٰهِஅல்லாஹ்حَدِيْثًا‏பேச்சால்
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ல யஜ்ம'அன்னகும் இலா யவ்மில் கியாமதி லா ரய்Bப Fபீஹ்; வ மன் அஸ்தகு மினல்லாஹி ஹதீதா
முஹம்மது ஜான்
அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை; மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்?
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?
IFT
அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் உங்கள் அனைவரையும் மறுமைநாளில் திண்ணமாக ஒன்று திரட்டுவான். அ(ந் நாள் வருவ)தில் எவ்வித ஐயமும் இல்லை. மேலும், அல்லாஹ்வைவிட உண்மை பேசுபவர் வேறு எவருமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் – அவனைத் தவிர (வேறு) வணங்கப்படுபவன் இல்லை. அவன் நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான், இதில் சந்தேகமேயில்லை, இன்னும், வார்த்தையால் (அதை அறிவிப்பதில்) அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?
Saheeh International
Allah - there is no deity except Him. He will surely assemble you for [account on] the Day of Resurrection, about which there is no doubt. And who is more truthful than Allah in statement.
فَمَا لَكُمْ فِی الْمُنٰفِقِیْنَ فِئَتَیْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا ؕ اَتُرِیْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟
فَمَا لَـكُمْஉங்களுக்கு என்ன?فِىْ الْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களில்فِئَـتَيْنِஇரு பிரிவினராகوَاللّٰهُஅல்லாஹ்اَرْكَسَهُمْதாழ்த்தினான்/அவர்களைبِمَاஎதன் காரணமாகكَسَبُوْا‌ؕசெய்தார்கள்اَ تُرِيْدُوْنَநாடுகிறீர்களா?اَنْ تَهْدُوْاநீங்கள் நேர்வழிப்படுத்தمَنْஎவரைاَضَلَّவழிகெடுத்தான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَمَنْஇன்னும் எவரைيُّضْلِلِவழிகெடுப்பான்اللّٰهُஅல்லாஹ்فَلَنْ تَجِدَஅறவே காணமாட்டீர்لَهٗஅவருக்குسَبِيْلًا‏ஒரு வழியை
Fபமா லகும் Fபில் முனாFபிகீன Fபி'அதய்னி வல்லாஹு அர்கஸஹும் Bபிமா கஸBபூ; அ' துரீதூன அன் தஹ்தூ மன் அளல்லல் லாஹு வ ம(ன்)ய் யுள்லி லில்லாஹு Fபலன் தஜித லஹூ ஸBபீலா
முஹம்மது ஜான்
நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் ஏன் இருவகை கருத்துக் கொள்கிறீர்கள்? அவர்கள் செய்த தீங்கின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை குனியும்படி செய்தான். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டுவிட்டானோ அவர்களை நீங்கள் நேரான வழியில் செலுத்த விரும்புகிறீர்களோ? (அது முடியாத காரியம்! ஏனென்றால் நபியே!) எவரை அல்லாஹ் வழிதவற விட்டு விட்டானோ அவருக்கு (மீட்சி பெற்றுத் தர) ஒரு வழியையும் நீர் காணமாட்டீர்!
IFT
பிறகு உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு கருத்துடையவர்களாய் ஆகிவிட்டீர்கள்! ஆயினும் அல்லாஹ் அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தீவினைகளின் காரணமாக அவர்களைத் தலைகீழாகப் புரட்டி விட்டிருக்கின்றான். அல்லாஹ் எவருக்கு நேர்வழி வழங்கவில்லையோ, அவருக்கு நேர்வழிகாட்ட நீங்கள் விரும்புகின்றீர்களா? எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்தானோ அவர்களுக்கு எவ்வித வழியையும் நீர் காணமாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! வேஷதாரிகளான) முனாஃபிக்குகளைப்பற்றி நீங்கள் இருவகை (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினர்களாக இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த (தீ)வினையின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை கீழாக்கி விட்டான், எவரை அல்லாஹ் தவறான பாதையில் செல்ல விட்டு விட்டானோ அவரை, நீங்கள் நேரான வழியில் செலுத்த நாடுகின்றீர்களா? எவரை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டானோ அவருக்கு யாதொரு வழியையும் நீர் காணவே மாட்டீர்!
Saheeh International
What is [the matter] with you [that you are] two groups concerning the hypocrites, while Allah has made them fall back [into error and disbelief] for what they earned. Do you wish to guide those whom Allah has sent astray? And he whom Allah sends astray - never will you find for him a way [of guidance].
وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً فَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ اَوْلِیَآءَ حَتّٰی یُهَاجِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ فَاِنْ تَوَلَّوْا فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ ۪ وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۙ
وَدُّوْاவிரும்புகிறார்கள்لَوْ تَكْفُرُوْنَநீங்கள் நிராகரிப்பதைكَمَاபோன்றுكَفَرُوْاநிராகரித்தார்கள்فَتَكُوْنُوْنَஆகிவிடுவீர்கள்سَوَآءً‌ فَلَا تَتَّخِذُوْاசமமாக/ ஆகவே எடுத்துக் கொள்ளாதீர்கள்مِنْهُمْஅவர்களில்اَوْلِيَآءَபொறுப்பாளர்களைحَتّٰىவரைيُهَاجِرُوْاஹிஜ்ரா செல்வார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்فَاِنْ تَوَلَّوْاஅவர்கள் விலகினால்فَخُذُوபிடியுங்கள்هُمْஅவர்களைوَاقْتُلُوஇன்னும் கொல்லுங்கள்هُمْஅவர்களைحَيْثُஇடம்وَجَدْتُّمُوْகண்டீர்கள்هُمْ‌அவர்களைوَلَا تَتَّخِذُوْا مِنْهُمْஇன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்/அவர்களில்وَلِيًّاபொறுப்பாளரைوَّلَا نَصِيْرًا ۙ‏இன்னும் உதவியாளரை
வத்தூ லவ் தக்Fபுரூன கமா கFபரூ Fபதகூனூன ஸவா'அன் Fபலா தத்தகிதூ மின்ஹும் அவ்லியா'அ ஹத்தா யுஹாஜிரூ Fபீ ஸBபீலில் லாஹ்; Fப இன் தவல்லவ் Fப குதூஹும் வக்துலூஹும் ஹய்து வஜத் துமூஹும் வலா தத்தகிதூ மின்ஹும் வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டபடியே நீங்களும் நிராகரிப்பவர்களாகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, (தங்கள் இல்லங்களைவிட்டு) அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் வெளியே புறப்படும் வரை நீங்கள் அவர்களை நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (இல்லங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் கண்ட இடமெல்லாம் அவர்களை(க் கைதியாக)ப் பிடித்துக்கொள்ளுங்கள்; (கைதியாகாது தப்ப முயற்சிப்பவரை) கொல்லுங்கள். தவிர, அவர்களில் எவரையுமே (உங்களுக்கு) நண்பர்களாகவும், உதவியாளர்களாகவும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
IFT
அவர்கள் நம்பிக்கை கொள்ளாததைப் போலவே நீங்களும் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்; (இவ்வகையில்) நீங்களும் அவர்களும் சமமாகிவிட வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்* செய்யும் வரையில், அவர்களில் எவரையும் நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், அவர்கள் (ஹிஜ்ரத்தைப்) புறக்கணித்துவிட்டால், அவர்களை நீங்கள் எங்குக் கண்டாலும் பிடித்துக் கொன்று விடுங்கள். மேலும், அவர்களில் எவரையும் உங்களின் நண்பராகவோ, உதவியாளராகவோ ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) அவர்கள் நிராகரிப்போராகிவிட்டதைப் போல் நீங்கள் நிராகரிப்போராகி பின்னர் நீங்கள் (அவர்களுக்குச்) சமமாகிவிடுவதை அவர்கள் நாடுகிறார்கள், ஆகவே, அவர்கள் (தங்கள்) இல்லங்களைவிட்டு அல்லாஹ்வுடைய பாதையில் (ஹிஜ்ரத்துச்செய்து) புறப்படும் வரையில், நீங்கள் அவர்களிலிருந்து எவர்களையும் நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம், (ஹிஜ்ரத்துச்செய்து புறப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அவர்களை (க்கைதியாக)ப் பிடித்துக் கொள்ளுங்கள், (எதிர்த்துப் போரிடும்) அவர்களைக் கண்டவிடமெல்லாம் கொன்று விடுங்கள், தவிரவும், அவர்களிலிருந்து (யாரையும்) நண்பராகவும், உதவியாளராகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Saheeh International
They wish you would disbelieve as they disbelieved so you would be alike. So do not take from among them allies until they emigrate for the cause of Allah. But if they turn away [i.e., refuse], then seize them and kill them [for their betrayal] wherever you find them and take not from among them any ally or helper,
اِلَّا الَّذِیْنَ یَصِلُوْنَ اِلٰی قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ اَوْ جَآءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ یُّقَاتِلُوْكُمْ اَوْ یُقَاتِلُوْا قَوْمَهُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَیْكُمْ فَلَقٰتَلُوْكُمْ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ یُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَیْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَكُمْ عَلَیْهِمْ سَبِیْلًا ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்يَصِلُوْنَசேருகிறார்கள்اِلٰى قَوْمٍۢசமுதாயத்திடம்بَيْنَكُمْஉங்களுக்கிடையில்وَبَيْنَهُمْஇன்னும் அவர்களுக்கு இடையில்مِّيْثَاقٌஉடன்படிக்கைاَوْஅல்லதுجَآءُوْكُمْஉங்களிடம் வந்தனர்حَصِرَتْநெருக்கடிக்குள்ளாகினصُدُوْرநெஞ்சங்கள்هُمْஅவர்களுடையاَنْ يُّقَاتِلُوஅவர்கள் போரிடுவதுكُمْஉங்களிடம்اَوْஅல்லதுيُقَاتِلُوْاஅவர்கள் போரிடுவதுقَوْمَهُمْ‌ ؕதங்கள் சமுதாயத்திடம்وَلَوْ شَآءَநாடியிருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَسَلَّطَهُمْ عَلَيْكُمْசாட்டியிருப்பான்/அவர்களை/உங்கள் மீதுفَلَقٰتَلُوபோரிட்டிருப்பார்கள்كُمْ‌ ۚஉங்களிடம்فَاِنِ اعْتَزَلُوஅவர்கள் விலகினால்كُمْஉங்களைفَلَمْ يُقَاتِلُوஅவர்கள் போரிடவில்லைكُمْஉங்களிடம்وَاَلْقَوْاஇன்னும் சமர்ப்பித்தார்கள்اِلَيْكُمُஉங்கள் முன்السَّلَمَ ۙசமாதானத்தைفَمَا جَعَلَஆக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குعَلَيْهِمْஅவர்கள் மீதுسَبِيْلًا‏ஒரு வழியை
இல்லல் லதீன யஸிலூன இலா கவ்மிம் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாகுன் அவ் ஜா'ஊகும் ஹஸிரத் ஸுதூருஹும் அய் யுகாதிலூகும் அவ் யுகாதிலூ கவ்மஹும், வ லவ் ஷா'அல் லாஹு லஸல்லதஹும் 'அலய்கும் Fபலகாதலூகும்; Fப இனிஃ தZஜலூகும் Fபலம் யுகாதிலூகும் வ அல்கவ் இலய்குமுஸ் ஸலம Fபமா ஜ'அலல் லாஹு லகும் 'அலய்ஹிம் ஸBபீலா
முஹம்மது ஜான்
ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(ஆயினும்) உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்டவர்களிடம் சென்று விட்டவர்களையும், உங்களை எதிர்த்து போர்புரிய மனம் ஒப்பாது (உங்கள் எதிரிகளை விட்டுப்பிரிந்து) உங்களிடம் வந்தவர்களையும், தங்கள் இனத்தாரை எதிர்த்துச் சண்டை செய்(ய மனம் ஒப்பாது உங்களிடமிருந்து பிரிந்)தவர்களையும் (வெட்டாதீர்கள்; சிறை பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடினால் உங்களை அவர்கள் வெற்றிகொண்டு (அவர்கள்) உங்களை வெட்டும்படிச் செய்திருப்பான். ஆகவே, (இவர்கள்) உங்களுடன் போர்புரியாது விலகியிருந்து சமாதானத்தைக் கோரினால் (அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போர்புரிய) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் வைக்கவில்லை.
IFT
ஆனால், எந்தச் சமுதாயத்திடம் நீங்கள் உடன் படிக்கை செய்துள்ளீர்களோ அந்தச் சமுதாயத்தோடு சேர்ந்துகொள்ளும் நயவஞ்சகர்கள் (இந்தக் கட்டளையிலிருந்து) விதிவிலக்கானவர்கள்! அதேபோல், உங்களுடன் போர் புரியவோ, தம் கூட்டத்தாருடன் போர் புரியவோ மனமில்லாமல் உங்களிடம் வருகின்ற நயவஞ்சகர்களும் விதிவிலக்கானவர்கள்! அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களின் ஆதிக்கத்தைத் திணித்திருப்பான். அவர்களும் உங்களுக்கு எதிராகப் போர் புரிந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் உங்களோடு போர் புரியாமல், உங்களை விட்டு விலகியிருந்தால், மேலும் அவர்கள் உங்களிடம் சமாதானக் கரம் நீட்டினால் அவர்களுக்கெதிராக கை நீட்டிட அல்லாஹ் உங்களுக்கு வழியேதும் வைத்திடவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை இருக்கிறதோ அந்த சமூகத்தவர் பால் சென்று சேர்ந்து விட்டவர்களையும், அல்லது உங்களை எதிர்த்து யுத்தம் புரியவோ, தங்கள் இனத்தாரை) எதிர்த்து யுத்தம் புரியவோ, அவர்களின் மனங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்து சேர்ந்தவர்களையும் தவிர – (இத்தகையோரைக் கொல்லாதீர்கள், சிறையும் பிடிக்காதீர்கள்! ஏனென்றால்) மேலும், அல்லாஹ் நாடியிருந்தால். அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான், அப்போது உங்களை எதிர்த்து அவர்கள் போர் செய்திருப்பார்கள், ஆகவே, அவர்கள் உங்களை விட்டு விலகி இருந்து உங்களிடம் யுத்தம் புரியாமல், உங்களிடம் சமாதானத்தைக் கோரினால் (அதனை அங்கீகரித்துக் கொள்ளுங்கள்., (ஏனெனில்) அவர்களுக்கெதிராக (யுத்தம் புரிய) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு வழியையும் ஆக்கவில்லை.
Saheeh International
Except for those who take refuge with a people between yourselves and whom is a treaty or those who come to you, their hearts strained at [the prospect of] fighting you or fighting their own people. And if Allah had willed, He could have given them power over you, and they would have fought you. So if they remove themselves from you and do not fight you and offer you peace, then Allah has not made for you a cause [for fighting] against them.
سَتَجِدُوْنَ اٰخَرِیْنَ یُرِیْدُوْنَ اَنْ یَّاْمَنُوْكُمْ وَیَاْمَنُوْا قَوْمَهُمْ ؕ كُلَّ مَا رُدُّوْۤا اِلَی الْفِتْنَةِ اُرْكِسُوْا فِیْهَا ۚ فَاِنْ لَّمْ یَعْتَزِلُوْكُمْ وَیُلْقُوْۤا اِلَیْكُمُ السَّلَمَ وَیَكُفُّوْۤا اَیْدِیَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ ؕ وَاُولٰٓىِٕكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَیْهِمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟۠
سَتَجِدُوْنَகாண்பீர்கள்اٰخَرِيْنَமற்றவர்களைيُرِيْدُوْنَநாடுகிறார்கள்اَنْ يَّاْمَنُوْஅவர்கள் பாதுகாப்புப்பெறவும்كُمْஉங்களிடம்وَيَاْمَنُوْاஅல்லது பாதுகாப்புப்பெறவும்قَوْمَهُمْ ؕதங்கள் சமுதாயத்திடம்كُلَّمَاஎல்லாம்رُدُّوْۤاதிருப்பப்பட்டார்கள்اِلَى الْفِتْنَةِகுழப்பம் விளைவிப்பதற்கு (இணைவைத்தல்)اُرْكِسُوْاகுப்புற விழுந்து விடுகிறார்கள்فِيْهَا‌‌ ۚ فَاِنْ لَّمْ يَعْتَزِلُوْஅதில்/அவர்கள் விலகவில்லையென்றால்كُمْஉங்களைوَيُلْقُوْۤاஇன்னும் சமர்ப்பிக்காமல்اِلَيْكُمُஉங்கள் முன்السَّلَمَசமாதானத்தைوَيَكُفُّوْۤاஇன்னும் அவர்கள் தடுக்காமல்اَيْدِيَهُمْதங்கள் கைகளைفَخُذُوْபிடியுங்கள்هُمْஇவர்களைوَاقْتُلُوْஇன்னும் கொல்லுங்கள்هُمْஅவர்களைحَيْثُஎங்கெல்லாம்ثَقِفْتُمُوْபெறுகிறீர்கள்هُمْ‌ ؕ وَاُولٰٓٮِٕكُمْஅவர்கள்/இவர்கள்جَعَلْنَاஆக்கி விட்டோம்لَـكُمْஉங்களுக்குعَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகسُلْطٰنًاஆதாரத்தைمُّبِيْنًا‏தெளிவானது
ஸதஜிதூன ஆகரீன யுரீதூன அய் ய'மனூகும் வ ய'மனூ கவ்மஹும் குல்லமா ருத்தூ இலல் Fபித்னதி உர்கிஸூ Fபீஹா; Fப இல் லம் யஃதZஜிலூகும் வ யுல்கூ இலய் குமுஸ் ஸலம வ யகுFப்Fபூ அய்தியஹும் Fபகுதூஹும் வக்துலூஹும் ஹய்து தகிFப் துமூஹும்; வ உலா'இகும் ஜ'அல்னா லகும் 'அலய்ஹிம் ஸுல்தானம் முBபீனா
முஹம்மது ஜான்
வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்; எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்; இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப் பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) வேறுசிலரையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்பு பெற்றுக்கொள்வதுடன் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் பாதுகாப்பு பெற்றிருக்க விரும்புவார்கள். எனினும், விஷமத்திற்கு இவர்கள் அழைக்கப்பட்டால் அதில் (கண்மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள். இவர்கள் உங்களை எதிர்ப்பதிலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் (சிறை பிடியுங்கள். தப்பி ஓடுகிறவர்களை) வெட்டிசாயுங்கள். இவர்களிடம் (போர்புரிய) உங்களுக்குத் தெளிவான அனுமதி கொடுத்துவிட்டோம்.
IFT
மற்றொரு வகை நயவஞ்சகர்களையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடமும் பாதுகாப்புப் பெற வேண்டும்; தமது சமுதாயத்திலும் பாதுகாப்புப் பெற வேண்டும் என விரும்புகின்றார்கள். ஆனால், குழப்பத்திற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதில் அவர்கள் குதித்து விடுவார்கள்! இத்தகையோர் உங்களோடு மோதுவதிலிருந்து விலகி உங்களிடம் சமாதானத்திற்கு வரவில்லையாயின், மேலும் தம் கைகளைத் தடுத்துக் கொள்ளவில்லையாயின், அப்போது அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் பிடித்துக் கொன்றுவிடுங்கள்! அவர்களுக்கெதிராக கைநீட்டிட உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை நாம் அளித்துவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே!) வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள், அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்வதுடன், (உங்களுடைய விரோதிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் அபயம் பெற்றுக்கொள்ளவும் நாடுகிறார்கள், குழப்பம் செய்வதின் பக்கம் அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம், அதில் (கண் மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள்! ஆகவே, அவர்கள் உங்கள் விரோதத்திலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், அவர்களை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள், (பிடித்த அவர்களைச் சிறையாக்குங்கள், எதிர்த்துப் போரிடும்) அவர்களைக் கண்டவிடமெல்லாம் கொன்றுவிடுங்கள், இன்னும் அத்தகையோர் - அவர்களுக்கு எதிராக (யுத்தம் புரிய) உங்களுக்குத் தெளிவான அதிகாரத்தை நாம் ஆக்கிவிட்டோம்.
Saheeh International
You will find others who wish to obtain security from you and [to] obtain security from their people. Every time they are returned to [the influence of] disbelief, they fall back into it. So if they do not withdraw from you or offer you peace or restrain their hands, then seize them and kill them wherever you overtake them. And those - We have made for you against them a clear authorization.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ یَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـًٔاۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـًٔا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ یَّصَّدَّقُوْا ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۭ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ فَدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖ وَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ ؗ تَوْبَةً مِّنَ اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
وَمَا كَانَஆகுமானதல்லلِمُؤْمِنٍஒரு நம்பிக்கையாளருக்குاَنْ يَّقْتُلَஅவர் கொல்வதுمُؤْمِنًاஒரு நம்பிக்கையாளரைاِلَّاதவிரخَطَـــٴًــا‌ ۚதவறுதலாகوَمَنْஎவராவதுقَتَلَகொன்றால்مُؤْمِنًاஒரு நம்பிக்கையாளரைخَطَـــٴًــاதவறுதலாகவேفَتَحْرِيْرُஉரிமையிடவேண்டும்رَقَبَةٍஓர் அடிமையைمُّؤْمِنَةٍநம்பிக்கையாளரானوَّدِيَةٌஇன்னும் நஷ்டஈடுمُّسَلَّمَةٌஒப்படைக்கப்பட்டதுاِلٰٓىஇடம்اَهْلِهٖۤஅவருடைய குடும்பத்தார்اِلَّاۤதவிரاَنْ يَّصَّدَّقُوْا‌ ؕஅவர்கள் தானமாக்குவதுفَاِنْ كَانَஇருந்தால்مِنْ قَوْمٍஒரு சமுதாயம் சேர்ந்தவராகعَدُوٍّஎதிரிلَّـكُمْஉங்கள்وَهُوَஅவர்مُؤْمِنٌநம்பிக்கையாளர்فَتَحْرِيْرُஉரிமையிடவேண்டும்رَقَبَةٍஓர் அடிமைمُّؤْمِنَةٍ‌ ؕநம்பிக்கையாளரானوَاِنْ كَانَஇருந்தால்مِنْ قَوْمٍۢஒரு சமுதாயத்தை சேர்ந்தவராகبَيْنَكُمْஉங்களுக்கிடையில்وَبَيْنَهُمْஇன்னும் அவர்களுக்கு இடையில்مِّيْثَاقٌஉடன்படிக்கைفَدِيَةٌநஷ்டஈடுمُّسَلَّمَةٌஒப்படைக்கப்பட்டதுاِلٰٓى اَهْلِهٖஅவருடைய குடும்பத்தாரிடம்وَ تَحْرِيْرُஇன்னும் உரிமையிடுவது வேண்டும்رَقَبَةٍஓர் அடிமைمُّؤْمِنَةٍ‌ ۚநம்பிக்கையாளரானفَمَنْஎவர்لَّمْ يَجِدْபெறவில்லைفَصِيَامُநோன்பிருத்தல்شَهْرَيْنِஇரண்டு மாதங்கள்مُتَتَابِعَيْنِதொடர்ந்துتَوْبَةًமன்னிப்புக் கோரிمِّنَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்விடம்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வமா கான லிமு'மினின் அய் யக்துல மு'மினன் இல்லா கத'ஆ; வமன் கதல மு'மினன் கத'அன் Fப தஹ்ரீரு ரகBபதிம் மு'மினதி(ன்)வ் வ தியதும் முஸல்லமதுன் இலா அஹ்லிஹீ இல்லா அய் யஸ்ஸத்தகூ; Fப இன் கான மின் கவ்மின் 'அதுவ்வில் லகும் வ ஹுவ மு'மினுன் Fப தஹ்ரீரு ரகBபதிம் மு'மினஹ்; வ இன் கான மின் கவ்மிம் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாகுன் Fபதியதும் முஸல்லமதுன் இலா அஹ்லிஹீ வ தஹ்ரீரு ரகBபதிம் மு'மினஹ்; Fபமல் லம் யஜித் Fப ஸியாமு ஷஹ்ரய்னி முததாBபி'அய்னி தவ்Bபதன் மினல் லாஹ்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
முஹம்மது ஜான்
தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
தவறுதலாகவே தவிர, ஓர் இறை நம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது வேறு எந்த இறை நம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (உங்களில்) எவரேனும் ஓர் இறை நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொலை செய்து விட்டால் (அதற்குப் பரிகாரமாக) இறை நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் இறந்தவருடைய வாரிசுகள் (மன்னித்துத்) தானமாக விட்டாலே தவிர, அதற்குரிய நஷ்ட ஈட்டையும் அவர்களிடம் செலுத்த வேண்டும். (இறந்த) அவன் உங்கள் எதிரி இனத்தவனாக இருந்து நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும். (நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதில்லை. இறந்த) அவன் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வகுப்பாரில் உள்ளவனாக இருந்தால் அவனுடைய வாரிசுகளுக்கு நஷ்டஈட்டைச் செலுத்துவதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (இவ்வாறு பரிகாரம் செய்வதற்குரிய பொருளை) எவரேனும் அடையாவிட்டால் அவன் அல்லாஹ்விடம் (தன் குற்றத்தை) மன்னிக்கக் கோரி இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு மற்றோர் இறை நம்பிக்கையாளரைக் கொல்வது என்பது ஏற்ற செயல் அல்ல; தவறாகக் கொன்றுவிட்டாலே தவிர! ஒருவர் ஓர் இறைநம்பிக்கையாளரைத் தவறாகக் கொலை செய்துவிட்டால் (அதற்குரிய பாவப் பரிகாரம்) இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்வதாகும். மேலும், கொல்லப்பட்ட வரின் வாரிசுகளுக்கு உயிரீட்டுத் தொகையைக் கொடுத்துவிட வேண்டும்; அவர்கள் அதனை மன்னித்துவிட்டாலே தவிர! ஆனால் கொல்லப்பட்டவர் உங்களோடு பகைமை கொண்ட சமுதாயத்தைச் சார்ந்த இறைநம்பிக்கையாளராய் இருந்தால், (அதற்குரிய பரிகாரம்) ஓர் இறைநம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வதாகும். மேலும், கொல்லப்பட்டவர் உங்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட (முஸ்லிமல்லாத) சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தால் (அதற்குரிய பரிகாரம்) அவருடைய வாரிசுகளுக்கு உயிரீட்டுத் தொகையை அளிப்பதுடன், இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும். ஆனால், அடிமை கிடைக்கப் பெறாதவன் தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இவை பாவமன்னிப்புக்காக, அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட முறைகளாகும். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தவறுதலாக அன்றி ஒரு விசுவாசிக்கு மற்றொரு விசுவாசியைக் கொலை செய்வது, ஆகுமானதல்ல; இன்னும் (உங்களில்) எவர் யாதொரு விசுவாசியைத் தவறுதலாகக் கொலை செய்து விட்டால், (அதற்கு நஷ்ட ஈடாக) விசுவாசியாகிய ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; இன்னும் அவர் குடும்பத்தார்பால் ஒப்படைக்கப்படும் நஷ்ட ஈடுமாகும். அ(க்குடும்பத்த)வர்கள் (மன்னித்து அதை) தர்மமாக விட்டுவிட்டாலன்றி, ஆகவே (இறந்த) அவர், உங்களுக்கு விரோதமுள்ள சமூகத்தாரில் உள்ளவராக இருந்து, விசுவாசியாகவும் அவர் இருந்தால் அப்போது, விசுவாசியாகிய ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும். இன்னும் உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை இருக்கிறதோ அந்த சமூகத்தாரில் உள்ளவராக அவர் இருந்தால், அவருடைய குடும்பத்தார்பால் ஒப்படைக்கப்படும் நஷ்டஈடும், விசுவாசியான ஓர் அடிமையை விடுதலை செய்தலுமாகும், (இவ்வாறு செய்யும் வசதியை) யார் பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் பாவ மீட்சி பெறுவதற்காக (மன்னிக்கக் கோரி) இரண்டு மாதம் தொடராக நோன்பு நோற்க வேண்டும். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாக; தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And never is it for a believer to kill a believer except by mistake. And whoever kills a believer by mistake - then the freeing of a believing slave and a compensation payment [diyah] presented to his [i.e., the deceased's] family [is required], unless they give [up their right as] charity. But if he [i.e., the deceased] was from a people at war with you and he was a believer - then [only] the freeing of a believing slave; and if he was from a people with whom you have a treaty - then a compensation payment presented to his family and the freeing of a believing slave. And whoever does not find [one or cannot afford to buy one] - then [instead], a fast for two months consecutively, [seeking] acceptance of repentance from Allah. And Allah is ever Knowing and Wise.
وَمَنْ یَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَنَّمُ خٰلِدًا فِیْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِیْمًا ۟
وَمَنْஎவர்يَّقْتُلْகொல்வார்مُؤْمِنًاஒரு நம்பிக்கையாளரைمُّتَعَمِّدًاநாடியவராகفَجَزَآؤُهٗஅவருடைய கூலிجَهَـنَّمُநரகம்خَالِدًاநிரந்தரமானவராகفِيْهَاஅதில்وَغَضِبَஇன்னும் கோபிப்பான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِஅவர் மீதுوَلَعَنَهٗஇன்னும் சபிப்பான்/அவரைوَاَعَدَّஇன்னும் தயார்படுத்துவான்لَهٗஅவருக்குعَذَابًاவேதனையைعَظِيْمًا‏பெரிய
வ மய் யக்துல் மு'மினம் முத'அம்மிதன் FபஜZஜா'உஹூ ஜஹன்னமு காலிதன் Fபீஹா வ களிBபல் லாஹு' அலய்ஹி வ ல'அனஹூ வ அ'அத்த லஹூ 'அதாBபன் 'அளீமா
முஹம்மது ஜான்
எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எவனேனும் ஒரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் நீண்ட காலம் தங்கி விடுவான். அவன்மீது அல்லாஹ் கோபம்கொண்டு அவனை சபித்துவிடுவான். இன்னும் மகத்தான வேதனையையும் அவனுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால், அவனுக்குரிய கூலி நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்துகிடப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் திணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எவர், விசுவாசியை, வேண்டுமென்றே கொலை செய்தால், அவருக்குரிய கூலி நரகமாகும், அதில் அவர் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர், இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு அவரைச் சபித்தும் விடுவான், மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான்.
Saheeh International
But whoever kills a believer intentionally - his recompense is Hell, wherein he will abide eternally, and Allah has become angry with him and has cursed him and has prepared for him a great punishment.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَتَبَیَّنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰۤی اِلَیْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا ۚ تَبْتَغُوْنَ عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِیْرَةٌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَیْكُمْ فَتَبَیَّنُوْا ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِذَا ضَرَبْتُمْநீங்கள் பயணித்தால்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்فَتَبَـيَّـنُوْاதெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்وَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்لِمَنْ اَ لْقٰٓىஎவருக்கு/கூறினார்اِلَيْكُمُஉங்கள் முன்السَّلٰمَஸலாம்لَسْتَநீர் இல்லைمُؤْمِنًا‌ ۚநம்பிக்கையாளராகتَبْـتَـغُوْنَதேடுகிறீர்கள்عَرَضَபொருளைالْحَيٰوةِவாழ்க்கையின்الدُّنْيَاஇவ்வுலகம்فَعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்مَغَانِمُசெல்வங்கள்كَثِيْرَةٌ‌ ؕஏராளமானكَذٰلِكَஇவ்வாறேكُنْتُمْஇருந்தீர்கள்مِّنْ قَبْلُ(இதற்கு) முன்னர்فَمَنَّஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْكُمْஉங்கள் மீதுفَتَبَـيَّـنُوْا‌ ؕஆகவே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்خَبِيْرًا‏ஆழ்ந்தறிந்தவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா ளரBப்தும் Fபீ ஸBபீலில் லாஹி FபதBபய்யனூ வலா தகூலூ லிமன் அல்கா இலய்குமுஸ் ஸலாம லஸ்த மு'மினன் தBப்தகூன 'அரளல் ஹயாதித் துன்யா Fப'இன்தல் லாஹி மகானிமு கதீரஹ்; கதாலிக குன்தும் மின் கBப்லு Fபமன்ன்னல் லாஹு 'அலய்கும் FபதBபய்யனூ; இன்னல்லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
முஹம்மது ஜான்
முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு “ஸலாம்” சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு “நீ முஃமினல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி ‘‘நீ நம்பிக்கையாளரல்ல'' என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக் கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளராக ஆனீர்கள்.) ஆகவே, (போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? இல்லையா? என்பதைத் தீர விசாரித்துத்) தெரிந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழியில் (ஜிஹாத் செய்யப்) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு ஸலாம் (சாந்தி உண்டாகட்டும் என்று) சொன்னவரைப் பார்த்து, “நீ இறை நம்பிக்கை கொண்டவன் அல்லன்” எனக் கூறாதீர்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களைத்தான் தேடுகிறீர்கள் என்றால், அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன்பு நீங்களும் இதே நிலையில்தான் இருந்தீர்கள். பிறகு அல்லாஹ் உங்களுக்குப் பேருதவி புரிந்தான். எனவே, நீங்கள் தெளிவாகப் புரிந்து செயல்படுங்கள்! நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் திண்ணமாகத் தெரிந்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (வழியில் எதிர்ப்படுவோர் யார் என்பதைத்) தெளிவு படுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஸலாம் கூறியவரை இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் தேடியவர்களாக, “நீ விசுவாசியல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள், அல்லாஹ்விடத்தில் ஏராளமான போர்ப்பரிசுகள் இருக்கின்றன, இதற்கு முன்னர், நீங்களும் இவ்வாறே (பயந்து கொண்டு) இருந்தீர்கள், அப்போது அல்லாஹ் உங்கள் மீது பேருபகாரம் செய்தான், ஆகவே, (உங்கள் முன் இருப்பவர்கள், விசுவாசிகளா அல்லவா என்பதைத்) தெளிவு படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்பவனாக இருக்கின்றான்.
Saheeh International
O you who have believed, when you go forth [to fight] in the cause of Allah, investigate; and do not say to one who gives you [a greeting of] peace, "You are not a believer," aspiring for the goods of worldly life; for with Allah are many acquisitions. You [yourselves] were like that before; then Allah conferred His favor [i.e., guidance] upon you, so investigate. Indeed Allah is ever, of what you do, Aware.
لَا یَسْتَوِی الْقٰعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ غَیْرُ اُولِی الضَّرَرِ وَالْمُجٰهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَی الْقٰعِدِیْنَ دَرَجَةً ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ عَلَی الْقٰعِدِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟ۙ
لَا يَسْتَوِىசமமாக மாட்டார்(கள்)الْقَاعِدُوْنَதங்கியவர்கள்مِنَ الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களில்غَيْرُஅல்லாதவர்اُولِى الضَّرَرِகுறையுடையோர்وَالْمُجَاهِدُوْنَஇன்னும் போரிடுபவர்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வுடையبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டுوَاَنْفُسِهِمْ‌ ؕஇன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டுفَضَّلَஇன்னும் மேன்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்الْمُجٰهِدِيْنَபோரிடுபவர்களைبِاَمْوَالِهِمْதங்கள் செல்வங்களைக் கொண்டுوَاَنْفُسِهِمْஇன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டுعَلَىவிடالْقٰعِدِيْنَதங்கியவர்கள்دَرَجَةً‌  ؕபதவியால்وَكُلًّاஎல்லோருக்கும்وَّعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الْحُسْنٰى‌ؕசொர்க்கத்தைوَفَضَّلَஇன்னும் மேன்மையாக்கினான்اللّٰهُஅல்லாஹ்الْمُجٰهِدِيْنَபோராளிகளைعَلَى الْقٰعِدِيْنَதங்கியவர்களை விடاَجْرًا عَظِيْمًا ۙ‏கூலி/மகத்தானது
லா யஸ்தவில் கா'இதூன மினல் மு'மினீன கய்ரு உலிள்ளரரி வல்முஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம்; Fபள்ளலல் லாஹுல் முஜாஹிதீன Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் 'அலல்கா'இதீன தரஜஹ்; வ குல்ல(ன்)வ் வ'அதல் லாஹுல் ஹுஸ்னா; வ Fபள்ளலல் லாஹுல் முஜாஹிதீன 'அலல் கா'இதீன அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களில் நோய் போன்ற (சரியான) காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும், உயிர்களையும், அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து போர்புரிபவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிந்தவர்களின் பதவியை (போருக்குச் செல்லாது) தங்கி விட்டவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். எனினும் இவர்கள் அனைவருக்கும் (இவர்களிடம் இறைநம்பிக்கை இருப்பதால்) நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். ஆயினும், போர் செய்தவர்களுக்கு மகத்தான கூலியையும் அருள்புரிந்து, தங்கி விட்டோரைவிட மேன்மையாக்கி வைக்கிறான்.
IFT
இறைநம்பிக்கையாளர்களில் எவர்கள் தக்க காரணம் எதுவுமின்றி ஜிஹாதில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் தங்கி விடுகின்றார்களோ அவர்களும், எவர்கள் தங்களுடைய உயிராலும் பொருளாலும், அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களும் சமமாக மாட்டார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களை விட தங்களுடைய உயிராலும் பொருளாலும் ஜிஹாத் செய்பவர்களுக்கு அல்லாஹ் சிறப்பான அந்தஸ்தை வைத்திருக்கின்றான். ஒவ்வொருவருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். எனினும் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களைவிட கலந்து கொண்டவர்களின் கூலி அவனிடம் மிக அதிகமானதாக இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளில், தங்கடம் உடையவர்களைத் தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச் சென்று) தங்களுடைய செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்குச் சமமாக மாட்டார்கள், (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் (வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களைவிட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கின்றான், இன்னும் (இவ்விரு பிரிவினரும் விசுவாசிகளாகவே இருப்பதனால்) இவர்கள் யாவருக்கும், நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான், இன்னும், அறப்போர் செய்வோரை (அதில் கலந்து கொள்ளாது) உட்கார்ந்திருப்போரைவிட மகத்தான நற்கூலியால் அல்லாஹ் சிறப்பாக்கியிருக்கிறான்.
Saheeh International
Not equal are those believers remaining [at home] - other than the disabled - and the mujahideen, [who strive and fight] in the cause of Allah with their wealth and their lives. Allah has preferred the mujahideen through their wealth and their lives over those who remain [behind], by degrees. And to all [i.e., both] Allah has promised the best [reward]. But Allah has preferred the mujahideen over those who remain [behind] with a great reward -
دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
دَرَجٰتٍ(பல) பதவிகளைمِّنْهُதன்னிடமிருந்துوَمَغْفِرَةًஇன்னும் மன்னிப்பைوَّرَحْمَةً‌ ؕஇன்னும் கருணையைوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
தரஜாதிம் மின்ஹு வ மக்Fபிரத(ன்)வ் வ ரஹ்மஹ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
(இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்; ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இன்னும், அவர்களுக்குத்) தன்னிடமுள்ள (மகத்தான) பதவிகளையும், மன்னிப்பையும், அன்பையும் அருளுகிறான். (ஏனெனில்) அல்லாஹ், மிக மன்னிப்பவனாக மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த பதவிகளும் மன்னிப்பும் பேரருளும் இருக்கின்றன. மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், அருளிரக்கம் உடையவனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்) தன்னிடமிருந்து பதவிகளையும், மன்னிப்பையும் அருளையும் (அவர்களுக்கு அளிக்கிறான்.) இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக (இத்தகையோர் மீது) மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
Degrees [of high position] from Him and forgiveness and mercy. And Allah is ever Forgiving and Merciful.
اِنَّ الَّذِیْنَ تَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ظَالِمِیْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِیْمَ كُنْتُمْ ؕ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِیْنَ فِی الْاَرْضِ ؕ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِیْهَا ؕ فَاُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟ۙ
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்تَوَفّٰٮهُمُஉயிர் வாங்கினார்(கள்)/அவர்களைالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்ظَالِمِىْۤதீங்கிழைத்தவர்களாகاَنْفُسِهِمْதங்களுக்குقَالُوْاகூறினர்فِيْمَ كُنْتُمْ‌ؕஎவ்வாறுஇருந்தீர்கள்?قَالُوْاகூறினார்கள்كُنَّاஇருந்தோம்مُسْتَضْعَفِيْنَபலவீனர்களாகفِىْ الْاَرْضِ‌ؕஇந்த பூமியில்قَالُوْۤاகூறினார்கள்اَلَمْ تَكُنْஇருக்கவில்லையா?اَرْضُபூமிاللّٰهِஅல்லாஹ்வின்وَاسِعَةًவிசாலமானதாகفَتُهَاجِرُوْاஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?فِيْهَا‌ؕஅதில்فَاُولٰٓٮِٕكَஇவர்கள்مَاْوٰٮهُمْஇவர்களின் ஒதுங்குமிடம்جَهَـنَّمُ‌ؕநரகம்وَسَآءَتْகெட்டுவிட்டதுمَصِيْرًا ۙமீளுமிடத்தால்
இன்னல் லதீன தவFப்Fபா ஹுமுல் மலா'இகது ளாலிமீ அன்Fபுஸிஹிம் காலூ Fபீம குன்தும் காலூ குன்னா முஸ்தள்'அFபீன Fபில்-அர்ள்; காலூ அலம் தகுன் அர்ளுல் லாஹி வாஸி'அதன் Fபதுஹாஜிரூ Fபீஹா; Fப உலா'இக ம'வாஹும் ஜஹன்னமு வ ஸா'அத் மஸீரா
முஹம்மது ஜான்
(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்து கொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும்பொழுது (அவர்களை நோக்கி ‘‘மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் ‘‘அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்'' என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?'' என்று கேட்பார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது!
IFT
தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, அவர்களிடம் “நீங்கள் எந்நிலையில் இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள் “பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்” என பதிலளிப்பார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?” என வானவர்கள் வினவுவார்கள். இவர்களுக்குரிய இருப்பிடம் நரகம்தான்! மேலும் அது மிகக் கொடிய இருப்பிடமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தமக்குத்தாமே அநீதமிழைத்துக் கொண்டவர்களாக இருக்க அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் பொழுது (அவர்களிடம்) “நீங்கள் எதில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “இப்பூமியில் நாங்கள் பலவீனமாக்கப்பட்டவர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறுவார்கள், (அதற்கு மலக்குகள்) “அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதாக இல்லையா? நீங்கள் (இருந்த) இவ்விடத்தைவிட்டு ஹிஜ்ரத்துச் செய்து புறப்பட்டிருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள், இத்தகையோர், அவர்கள் தங்குமிடம் நரகந்தான், செல்லுமிடத்தால் அது மிக்க கெட்டது.
Saheeh International
Indeed, those whom the angels take [in death] while wronging themselves - [the angels] will say, "In what [condition] were you?" They will say, "We were oppressed in the land." They [the angels] will say, "Was not the earth of Allah spacious [enough] for you to emigrate therein?" For those, their refuge is Hell - and evil it is as a destination.
اِلَّا الْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ لَا یَسْتَطِیْعُوْنَ حِیْلَةً وَّلَا یَهْتَدُوْنَ سَبِیْلًا ۟ۙ
اِلَّاதவிரالْمُسْتَضْعَفِيْنَபலவீனர்கள்مِنَஇருந்துالرِّجَالِஆண்கள்وَالنِّسَآءِஇன்னும் பெண்கள்وَالْوِلْدَانِஇன்னும் சிறுவர்கள்لَا يَسْتَطِيْعُوْنَஇயலமாட்டார்கள்حِيْلَةًஓர் ஆற்றலைوَّلَا يَهْتَدُوْنَஇன்னும் வழி காணமாட்டார்கள்سَبِيْلًا ۙ‏ஒரு வழியையும்
இல்லல் முஸ்தள் 'அFபீன மினர் ரிஜாலி வன்னிஸா'இ வல்வில்தானி லா யஸ்ததீ'ஊன ஹீலத(ன்)வ் வலா யஹ்ததூன ஸBபீலா
முஹம்மது ஜான்
(ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் ஒரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால்...
IFT
ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல், உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்) ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்களிலும் பலவீனமாக்கப்பட்டவர்களைத் தவிர, (இவர்கள்) யாதொரு உபாயம் செய்துகொள்ள சக்திபெற மாட்டார்கள், (அதை விட்டு வெளியேற) எந்த வழியையும் அறியமாட்டார்கள்.
Saheeh International
Except for the oppressed among men, women, and children who cannot devise a plan nor are they directed to a way -
فَاُولٰٓىِٕكَ عَسَی اللّٰهُ اَنْ یَّعْفُوَ عَنْهُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا ۟
فَاُولٰٓٮِٕكَஇவர்கள்عَسَىகூடும்اللّٰهُஅல்லாஹ்اَنْ يَّعْفُوَஅவன் மன்னிக்கعَنْهُمْ‌ؕஇவர்களைوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَفُوًّاமன்னிப்பாளானாகغَفُوْرًا‏பாவங்களை மறைப்பவனாக
Fப உலா'இக 'அஸல் லாஹு அய் யஃFபுவ 'அன்ஹும்; வ கானல் லாஹு 'அFபுவ்வன் கFபூரா
முஹம்மது ஜான்
அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, பிழை பொறுப்பவனாக இருக்கிறான்.
IFT
அவர்களை அல்லாஹ் பிழை பொறுக்கக்கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், மன்னிப்பு வழங்குபவனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் மன்னித்துவிடக் கூடும், இன்னும், அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக, (பிழைகளை) மிகப் பொறுப்பவனாக இருக்கிறான்.
Saheeh International
For those it is expected that Allah will pardon them, and Allah is ever Pardoning and Forgiving.
وَمَنْ یُّهَاجِرْ فِیْ سَبِیْلِ اللّٰهِ یَجِدْ فِی الْاَرْضِ مُرٰغَمًا كَثِیْرًا وَّسَعَةً ؕ وَمَنْ یَّخْرُجْ مِنْ بَیْتِهٖ مُهَاجِرًا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ یُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
وَمَنْஎவர்يُّهَاجِرْஹிஜ்ரா செல்கிறார்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வுடையيَجِدْபெறுவார்فِى الْاَرْضِபூமியில்مُرٰغَمًاஅடைக்கலங்களைكَثِيْرًاபலوَّسَعَةً‌ ؕஇன்னும் வசதியைوَمَنْஎவர்يَّخْرُجْவெளியேறுவார்مِنْۢஇருந்துبَيْتِهٖதன் இல்லம்مُهَاجِرًاஹிஜ்ரா செல்பவராகاِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்وَرَسُوْلِهٖஇன்னும் அவனின் தூதர்ثُمَّபிறகுيُدْرِكْهُஅடையும்/அவரைالْمَوْتُமரணம்فَقَدْதிட்டமாகوَقَعَகடமையாகிவிடுகிறதுاَجْرُهٗஅவனுடைய கூலிعَلَى اللّٰهِ‌ ؕஅல்லாஹ் மீதுوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகாமன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வ மய் யுஹாஜிர் Fபீ ஸBபீலில் லாஹி யஜித் Fபில் அர்ளி முராகமன் கதீர(ன்)வ் வ ஸ'அத்; வ மய் யக்ருஜ் மிம் Bபய்திஹீ முஹாஜிரன் இலல் லாஹி வ ரஸூலிஹீ தும்ம யுத்ரிக்-ஹுல் மவ்து Fபகத் வக'அ அஜ்ருஹூ 'அலல் லாஹ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகிறாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது. (ஏனெனில்,) அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மிகக் கருணையாளனாக இருக்கிறான்.
IFT
எவர் அல்லாஹ்வின் வழியில் ஹிஜ்ரத் செய்கின்றாரோ, அவர் பூமியில் எண்ணற்ற தங்குமிடங்களையும் வாழ்வதற்கான பெரும் வசதி வாய்ப்பையும் காண்பார். மேலும் ஒருவர் அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்காகத் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய பிறகு (வழியிலேயே) அவருக்கு மரணம் ஏற்பட்டுவிட்டால், திண்ணமாக அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அல்லாஹ் மிகவும் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் எவர் ஹிஜ்ரத்துச் செய்து) வெளியேறிவிடுகின்றாரோ அவர் பூமியில் வசதியான அநேக புகலிடங்களையும், (பொருளாதார) வசதியையும் அடைவர், இன்னும், எவர் அல்லாஹ்வின்பாலும், அவனுடைய தூதரின்பாலும், ஹிஜ்ரத்துச் செய்தவராக தன் இல்லத்திலிருந்து புறப்பட்டுப்பின்னர் (வழியிலேயே) அவரை மரணம் வந்தடைந்து விட்டால் அப்போது அவருடைய (நற்)கூலி திட்டமாக அல்லாஹ்வின் மீது கடமையாக ஆகிவிடுகின்றது, மேலும், (இத்தகையோருக்கு) அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And whoever emigrates for the cause of Allah will find on the earth many [alternative] locations and abundance. And whoever leaves his home as an emigrant to Allah and His Messenger and then death overtakes him - his reward has already become incumbent upon Allah. And Allah is ever Forgiving and Merciful.
وَاِذَا ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلٰوةِ ۖۗ اِنْ خِفْتُمْ اَنْ یَّفْتِنَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ اِنَّ الْكٰفِرِیْنَ كَانُوْا لَكُمْ عَدُوًّا مُّبِیْنًا ۟
وَاِذَا ضَرَبْتُمْநீங்கள் பயணித்தால்فِى الْاَرْضِபூமியில்فَلَيْسَஇல்லைعَلَيْكُمْஉங்கள் மீதுجُنَاحٌகுற்றம்اَنْ تَقْصُرُوْاநீங்கள் சுருக்குவதுمِنَ الصَّلٰوةِதொழுகையைۖ اِنْ خِفْتُمْநீங்கள் பயந்தால்اَنْஉங்களைيَّفْتِنَكُمُதுன்புறுத்துவதைالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْا‌ ؕநிராகரித்தார்கள்اِنَّ الْـكٰفِرِيْنَநிச்சயமாக நிராகரிப்பாளர்கள்كَانُوْاஇருக்கின்றனர்لَـكُمْஉங்களுக்குعَدُوًّاஎதிரிகளாகمُّبِيْنًا‏பகிரங்கமான
வ இதா ளரBப்தும் Fபில் அர்ளி Fபலய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் அன் தக்ஸுரூ மினஸ் ஸலாதி இன் கிFப்தும் அய் யFப்தினகுமுல் லதீன கFபரூ; இன்னல் காFபிரீன கானூ லகும் அதுவ்வம் முBபீனா
முஹம்மது ஜான்
நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணம் செய்தால் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் நீங்கள் தொழுகையை ‘கஸ்ர்' செய்வது (சுருக்கிக் கொள்வது) உங்கள் மீது குற்றமாகாது. ஏனெனில், நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.
IFT
மேலும், நீங்கள் பயணம் புறப்பட்டுச் சென்றால் சில தொழுகைகளைச் சுருக்கிக் கொள்வதில் உங்கள் மீது தவறேதுமில்லை. (குறிப்பாக) இறைநிராகரிப்பாளர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால் (சுருக்கிக் கொள்ளலாம்). ஏனென்றால், திண்ணமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு வெளிப்படையான பகைவர்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் பூமியில் பிரயாணம் செய்தால் நிராகரிப்போர் உங்களைத் துன்புறுத்துவர் எனப் பயந்தால் நீங்கள் (கஸர் தொழுவது, அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது, (ஏனென்றால்) நிச்சயமாக நிராகரிப்போர் உங்களுக்குப் பகிரங்கமான விரோதிகளாகவே இருக்கின்றனர்.
Saheeh International
And when you travel throughout the land, there is no blame upon you for shortening the prayer, [especially] if you fear that those who disbelieve may disrupt [or attack] you. Indeed, the disbelievers are ever to you a clear enemy.
وَاِذَا كُنْتَ فِیْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْیَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ ۫ فَاِذَا سَجَدُوْا فَلْیَكُوْنُوْا مِنْ وَّرَآىِٕكُمْ ۪ وَلْتَاْتِ طَآىِٕفَةٌ اُخْرٰی لَمْ یُصَلُّوْا فَلْیُصَلُّوْا مَعَكَ وَلْیَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۚ وَدَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَیَمِیْلُوْنَ عَلَیْكُمْ مَّیْلَةً وَّاحِدَةً ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًی مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰۤی اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ ۚ وَخُذُوْا حِذْرَكُمْ ؕ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟
وَاِذَا كُنْتَநீர் இருந்தால்فِيْهِمْஅவர்களில்فَاَقَمْتَஇன்னும் நிலைநிறுத்தினால்لَهُمُஅவர்களுக்குالصَّلٰوةَதொழுகையைفَلْتَقُمْநிற்கவும்طَآٮِٕفَةٌஒரு பிரிவுمِّنْهُمْஅவர்களில்مَّعَكَஉம்முடன்وَلْيَاْخُذُوْۤاஅவர்கள் எடுக்கவும்اَسْلِحَتَهُمْஆயுதங்களை/தங்கள்فَاِذَا سَجَدُوْاஅவர்கள் சஜ்தா செய்து விட்டால்فَلْيَكُوْنُوْاஅவர்கள் இருக்கவும்مِنْ وَّرَآٮِٕكُمْஉங்களுக்குப் பின்னர்وَلْتَاْتِஇன்னும் வரவும்طَآٮِٕفَةٌஒரு பிரிவுاُخْرٰىமற்றلَمْ يُصَلُّوْاஅவர்கள் தொழவில்லைفَلْيُصَلُّوْاஅவர்கள் தொழவும்مَعَكَஉம்முடன்وَلْيَاْخُذُوْاஅவர்கள் எடுக்கவும்حِذْرَهُمْதங்கள் தற்காப்பைوَاَسْلِحَتَهُمْ‌ ۚஇன்னும் தங்கள் ஆயுதங்களைوَدَّவிரும்பினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لَوْ تَغْفُلُوْنَநீங்கள் கவனமற்று விடுவதைعَنْஇருந்துاَسْلِحَتِكُمْஉங்கள் ஆயுதங்கள்وَاَمْتِعَتِكُمْஇன்னும் உங்கள் பொருள்கள்فَيَمِيْلُوْنَஅவர்கள் பாய்ந்து விடுவார்கள்عَلَيْكُمْஉங்கள் மீதுمَّيْلَةًபாய்ச்சல்وَّاحِدَةً‌ ؕஒரே பாய்ச்சல்وَلَا جُنَاحَகுற்றமில்லைعَلَيْكُمْஉங்கள் மீதுاِنْ كَانَஇருந்தால்بِكُمْஉங்களுக்குاَ ذًىசிரமம்مِّنْகாரணமாகمَّطَرٍமழைاَوْஅல்லதுكُنْـتُمْஇருந்தீர்கள்مَّرْضٰۤىநோயாளிகளாகاَنْ تَضَعُوْۤاநீங்கள் வைப்பதுاَسْلِحَتَكُمْ‌ ۚஉங்கள் ஆயுதங்களைوَ خُذُوْاஇன்னும் எடுங்கள்حِذْرَكُمْ‌ ؕஉங்கள் தற்காப்பைاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்اَعَدَّஏற்படுத்தினான்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِيْنًا‏இழிவான
வ இதா குன்த Fபீஹிம் Fப அகம்த லஹுமுஸ் ஸலாத Fபல்தகும் தா'இFபதும் மின்ஹும் ம'அக வல் ய'குதூ அஸ்லிஹதஹும் Fப இதா ஸஜதூ Fபல் யகூனூ மி(ன்)வ் வரா'இகும் வல் த'தி தா'இFபதுன் உக்ரா லம் யுஸல்லூ Fபல்யுஸல்லூ ம'அக வல் ய'குதூ ஹித்ரஹும் வ அஸ்லிஹதஹும்; வத்தல் லதீன கFபரூ லவ் தக்Fபுலூன 'அனஸ்லிஹதிகும் வ அம்தி'அதிகும் Fப யமீலூன 'அலய்கும் மய்லத(ன்)வ் வாஹிதஹ்; வலா ஜுனாஹ 'அலய்கும் இன் கான Bபிகும் அதம் மிம்மதரின் அவ் குன்தும் மர்ளா அன் தள'ஊ அஸ்லிஹதகும் வ குதூ ஹித்ரகும்; இன்னல் லாஹ அ'அத்த லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
முஹம்மது ஜான்
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! போர் முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு தொழ வைக்க நீர் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கைகளில்) தங்கள் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) ‘ஸஜ்தா' செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கைகளில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள்களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டுமென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினால் அல்லது நீங்கள் நோயாளிகளாகவோ இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் (கைகளில் பிடிக்க முடியாவிட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
மேலும், (நபியே!) நீர் முஸ்லிம்களிடையே இருக்கும்போது (போர் நிலையில்) அவர்களுக்குத் தொழ வைப்பீராயின் அவர்களில் ஒரு குழுவினர் தங்களுடைய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு உம்மோடு நின்று கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் ஸுஜூது செய்து முடித்துவிட்டால் பின்னால் சற்று விலகிச் சென்றுவிட வேண்டும். தொழாமல் இருக்கும் மற்றொரு குழுவினர் வந்து உம்மோடு தொழ வேண்டும். அத்துடன் அவர்களும் முன்னெச்சரிக்கையோடு தம் ஆயுதங்களை ஏந்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் ஆயுதங்களிலும் பொருள்களிலும் நீங்கள் கவனக் குறைவாக இருந்துவிட்டால், உங்கள் மீது ஒரேயடியாக திடீர் தாக்குதல் நடத்த நிராகரிப்போர் தக்க தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாய் இருந்தால், ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் நிராகரிப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயார் செய்து வைத்துள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! யுத்த முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நீர் தொழவைக்க (இமாமாக முன்) நின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (தொழ) நிற்கட்டும், மேலும் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், உம்முடன் இவர்கள் ஸஜ்தா செய்து முடித்துவிட்டால் அவர்கள் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும் (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் (சேர்ந்து) தொழவும், அவர்கள் தம் எச்சரிக்கையையும் தம் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளவும், (ஏனென்றால்,) நீங்கள் உங்கள் பொருட்களிலிருந்தும் உங்கள் ஆயுதங்களிலிருந்தும் கவனக்குறைவாக இருந்துவிட்டால், உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து தாக்க வேண்டுமென்று அந்நிராகரிப்போர் விரும்புகின்றனர், இந்நிலைமையில் மழையின் காரணமாக உங்களுக்கு சங்கடமிருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தாலோ, உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை, இன்னும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாராக்கி வைத்திருக்கின்றான்.
Saheeh International
And when you [i.e., the commander of an army] are among them and lead them in prayer, let a group of them stand [in prayer] with you and let them carry their arms. And when they have prostrated, let them be [in position] behind you and have the other group come forward which has not [yet] prayed and let them pray with you, taking precaution and carrying their arms. Those who disbelieve wish that you would neglect your weapons and your baggage so they could come down upon you in one [single] attack. But there is no blame upon you, if you are troubled by rain or are ill, for putting down your arms, but take precaution. Indeed, Allah has prepared for the disbelievers a humiliating punishment.
فَاِذَا قَضَیْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِكُمْ ۚ فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَی الْمُؤْمِنِیْنَ كِتٰبًا مَّوْقُوْتًا ۟
فَاِذَا قَضَيْتُمُநீங்கள் முடித்தால்الصَّلٰوةَதொழுகையைفَاذْكُرُواநினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைقِيَامًاநின்றவர்களாகوَّقُعُوْدًاஇன்னும் உட்கார்ந்தவர்களாகوَّعَلٰىஇன்னும் மீதுجُنُوْبِكُمْ ۚؕஉங்கள் விலாக்கள்فَاِذَا اطْمَاْنَنْتُمْநீங்கள் நிம்மதியடைந்தால்فَاَقِيْمُواநிலை நிறுத்துங்கள்الصَّلٰوةَ‌ ۚதொழுகையைاِنَّ الصَّلٰوةَநிச்சயமாக தொழுகைكَانَتْஇருக்கிறதுعَلَىமீதுالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்كِتٰبًاகடமையாகمَّوْقُوْتًا‏நேரம் குறிக்கப்பட்டது
Fப இதா களய்துமுஸ் ஸலாத Fபத்குருல் லாஹ கியாம(ன்)வ் வ கு'ஊத(ன்)வ் வ 'அலா ஜுனூBபிகும்; Fப இதத்ம'னன்தும் Fப அகீமுஸ் ஸலாஹ்; இன்னஸ் ஸலாத கானத் 'அலல் மு'மினீன கிதாBபம் மவ்கூதா
முஹம்மது ஜான்
நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! இவ்வாறு) நீங்கள் (தொழுது) தொழுகையை முடித்துக் கொண்டால் உங்கள் நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறி ‘திக்ரு' செய்துகொண்டே இருங்கள். (எதிரியின் தாக்குதலிலிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால் (முறைப்படி) தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கிறது.
IFT
நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மேலும், எதிரிகள் குறித்து அச்சம் நீங்கிவிட்டால் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுங்கள்! உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங் கொண்டோரே! இவ்வாறு) நீங்கள் தொழுகையை முடித்துக்கொண்டால், பின்னர் நின்ற நிலையிலும் இருப்பிலும், உங்களுடைய விலாப்புறங்களின் மீது படுத்திருக்கும் நிலையிலும், அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள், (விரோதிகளின் எதிர்ப்பிலிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால், அப்பொழுது (முறைப்படி) தொழுங்கள், ஏனென்றால், நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.
Saheeh International
And when you have completed the prayer, remember Allah standing, sitting, or [lying] on your sides. But when you become secure, re-establish [regular] prayer. Indeed, prayer has been decreed upon the believers a decree of specified times.
وَلَا تَهِنُوْا فِی ابْتِغَآءِ الْقَوْمِ ؕ اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ یَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ ۚ وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا یَرْجُوْنَ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟۠
وَلَا تَهِنُوْاசோர்வடையாதீர்கள்فِى ابْتِغَآءِதேடுவதில்الْقَوْمِ‌ ؕகூட்டத்தைاِنْ تَكُوْنُوْاநீங்கள் இருந்தால்تَاْلَمُوْنَவேதனைப் படுபவர்களாகفَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்يَاْلَمُوْنَவேதனைப்படுகிறார்கள்كَمَاபோன்றுتَاْلَمُوْنَ‌ ۚவேதனைப் படுபவர்களாகوَتَرْجُوْنَஇன்னும் ஆதரவு வைக்கிறீர்கள்مِنَ اللّٰهِ مَاஅல்லாஹ்விடம்/எதுلَا يَرْجُوْنَ‌ ؕஅவர்கள் ஆதரவு வைக்க மாட்டார்கள்وَ كَانَ اللّٰهُஇருக்கிறான்/அல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வ லா தஹினூ FபிBப்திகா'இல் கவ்மி இன் தகூனூ தஃலமூன Fப இன்னஹும் யஃலமூன கமா தஃலமூன வ தர்ஜூன மினல் லாஹி மா லா யர்ஜூன்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
முஹம்மது ஜான்
மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எதிரிகளைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள். (அதனால்) உங்களுக்கு வலி ஏற்பட்டால் (பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால்) நீங்கள் வலியை அனுபவிப்பதைப் போலவே அவர்களும் வலியை அனுபவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்க்க முடியாத (வெற்றி, நற்கூலி அனைத்)தையும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
அந்தக் கூட்டத்தைத் துரத்திச் செல்வதில் தளர்ந்து விடாதீர்கள்! நீங்கள் கஷ்டப்படுகிறீர்களென்றால், உங்களைப் போன்று அவர்களும்தான் கஷ்டப்படுகிறார்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காதவற்றை நீங்கள் விரும்பி எதிர்பார்க்கின்றீர்கள். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (பகைவரின்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள், நீங்கள் (போரில் காயமடைந்து) துன்பமடைந்திருப்பீர்களானால், நீங்கள் துன்பம் அடைந்தது போன்று நிச்சயமாக அவர்களும் துன்பம் அடைவர், மேலும், அவர்கள் ஆதரவு வைக்காததை (நற்கூலியை) அல்லாஹ்விடமிருந்து நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள், மேலும், அல்லாஹ் நன்கறிகிறவனாக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And do not weaken in pursuit of the enemy. If you should be suffering - so are they suffering as you are suffering, but you expect from Allah that which they expect not. And Allah is ever Knowing and Wise.
اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَیْنَ النَّاسِ بِمَاۤ اَرٰىكَ اللّٰهُ ؕ وَلَا تَكُنْ لِّلْخَآىِٕنِیْنَ خَصِیْمًا ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாமேاَنْزَلْنَاۤஇறக்கினோம்اِلَيْكَஉம்மீதுالْكِتٰبَஇவ்வேதத்தைبِالْحَـقِّஉண்மையுடன்لِتَحْكُمَநீர் தீர்ப்பளிப்பதற்காகبَيْنَமத்தியில்النَّاسِமக்கள்بِمَاۤஎதைக்கொண்டுاَرٰٮكَஉமக்கு அறிவித்தான்اللّٰهُ‌ ؕஅல்லாஹ்وَلَا تَكُنْஆகிவிடாதீர்لِّـلْخَآٮِٕنِيْنَமோசடிக்காரர்களுக்குخَصِيْمًا ۙ‏தர்க்கிப்பவராக
இன்னா அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி லிதஹ்கும Bபய்னன் னாஸி Bபிமா அராகல் லாஹ்; வலா தகுல் லில்கா'இனீன கஸீமா
முஹம்மது ஜான்
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கினோம். (ஆகவே,) நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக இருக்காதீர்!.
IFT
(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்துத் தந்த நேரிய வழியின்படி மக்களிடையே நீர் தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதற்காகவே உம்மீது இத்திருமறையை சத்தியத்துடன் நாம் இறக்கி வைத்தோம். நீர் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு வாதாடுபவராய் இருக்க வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக, நிச்சயமாக (நபியே!) முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை, நாமே உம்மீது இறக்கி வைத்திருக்கின்றோம், மேலும் சதிகாரர்களுக்கு(சார்பாக) வாதாடுபவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
Saheeh International
Indeed, We have revealed to you, [O Muhammad], the Book in truth so you may judge between the people by that which Allah has shown you. And do not be for the deceitful an advocate.
وَّاسْتَغْفِرِ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ
وَّاسْتَغْفِرِஇன்னும் மன்னிப்புக் கோருவீராகاللّٰهَ‌ ؕஅல்லாஹ்விடம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‌பெரும் கருணையாளனாக
வஸ்தக்Fபிரில் லாஹ இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதில் ஏதும் தவறேற்பட்டுவிட்டால் அதற்காக) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழைபொறுப்பவனாக மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக! திண்ணமாக அல்லாஹ், மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நீர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And seek forgiveness of Allah. Indeed, Allah is ever Forgiving and Merciful.
وَلَا تُجَادِلْ عَنِ الَّذِیْنَ یَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِیْمًا ۟ۚۙ
وَلَا تُجَادِلْஇன்னும் வாதிடாதீர்عَنِசார்பாகالَّذِيْنَஎவர்கள்يَخْتَانُوْنَமோசடி செய்கிறார்கள்اَنْفُسَهُمْ‌ ؕதங்களுக்கேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்مَنْஎவன்كَانَஇருக்கிறான்خَوَّانًاசதிகாரனாகاَثِيْمًا ۙ‌பாவியாக
வ லா துஜாதில் 'அனில் லதீன யக்தானூன அன்Fபுஸஹும்; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுமன் கான கவ்வானன் அதீமா
முஹம்மது ஜான்
(நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்கள் (மனிதர்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே சதி செய்துகொண்டார்களோ அவர்களுக்காக (என்னிடம் மன்னிப்பைக் கோரி) நீர் தர்க்கிக்க வேண்டாம். ஏனென்றால், எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
IFT
தமக்குத் தாமே வஞ்சகம் செய்து கொள்கின்றவர்களுக்காக நீர் வாதாடாதீர்! திண்ணமாக, நம்பிக்கைத் துரோகம் செய்பவனையும் பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண்டவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! பிறருக்குத் தீங்கிழைத்து) தமக்குத்தாமே மோசடி செய்து கொண்டுள்ளார்களே அத்தகையவர்களுக்காக, நீர் வாதாட வேண்டாம், (ஏனென்றால்,) கொடிய பாவியான மிக மோசக்காரனாக இருக்கிறவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
Saheeh International
And do not argue on behalf of those who deceive themselves. Indeed, Allah loves not one who is a habitually sinful deceiver.
یَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا یَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ یُبَیِّتُوْنَ مَا لَا یَرْضٰی مِنَ الْقَوْلِ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطًا ۟
يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِமறைக்கத் தேடுகிறார்கள்/மக்களிடம்وَلَا يَسْتَخْفُوْنَஅவர்கள் மறைக்கத் தேடுவதில்லைمِنَ اللّٰهِஅல்லாஹ்விடம்وَهُوَஅவன்مَعَهُمْஅவர்களுடன்اِذْபோதுيُبَيِّتُوْنَசதித்திட்டம் செய்கின்றனர்مَاஎதைلَا يَرْضٰىவிரும்பமாட்டான்مِنَ الْقَوْلِ‌ؕபேச்சில்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைيَعْمَلُوْنَசெய்கிறார்கள்مُحِيْطًا‏சூழ்ந்தவனாக
யஸ்தக்Fபூன மினன்னாஸி வலா யஸ்தக் Fபூன மினல் லாஹி வ ஹுவ ம'அஹும் இத் யுBபய்யிதூன மா லா யர்ளா மினல் கவ்ல்; வ கானல் லாஹு Bபிமா யஃமலூன முஹீதா
முஹம்மது ஜான்
இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் (சதி செய்யும் தங்கள் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கிறார்கள். எனினும், (அதை) அல்லாஹ்வுக்கு மறைத்துவிட முடியாது. (அல்லாஹ்) விரும்பாத விஷயங்களைக்கொண்டு இவர்கள் இரவெல்லாம் பேசி சதி ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன்தான் இருக்கிறான். அல்லாஹ் அவர்களுடைய (சதிச்) செயலை(த் தன் ஞானத்தால்) சூழ்ந்துகொண்டும் இருக்கிறான்.
IFT
அவர்கள் (தம் இழிசெயல்களை) மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. அவனோ அவனுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் சதியாலோசனை செய்து கொண்டிருக்கும்போது கூட அவர்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் அவர்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் (தங்கள் மோசடிகளை) மனிதர்களிடமிருந்து மறைக்கின்றார்கள், அவர்கள் (அதனை) அல்லாஹ்விடமிருந்து மறைத்துவிடவே முடியாது, (ஏனெனில்) அவன் பேச்சால் பொருந்திக்கொள்ளாததைக் கொண்டு இவர்கள் இரவெல்லாம் (சதிசெய்ய) ஆலோசனை செய்யும்போது அவன் அவர்களுடன்தான் இருக்கின்றான், மேலும், அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை (தன் அறிவால்) சூழ்ந்து கொண்டவனாக இருக்கின்றான்.
Saheeh International
They conceal [their evil intentions and deeds] from the people, but they cannot conceal [them] from Allah, and He is with them [in His knowledge] when they spend the night in such as He does not accept of speech. And ever is Allah, of what they do, encompassing.
هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ جٰدَلْتُمْ عَنْهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۫ فَمَنْ یُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ یَوْمَ الْقِیٰمَةِ اَمْ مَّنْ یَّكُوْنُ عَلَیْهِمْ وَكِیْلًا ۟
هٰۤاَنْتُمْநீங்கள்هٰٓؤُلَۤاءِஇவர்கள்جَادَلْـتُمْவாதிடுகிறீர்களா?عَنْهُمْஇவர்கள் சார்பாகفِى الْحَيٰوةِவாழ்க்கையில்الدُّنْيَاஇவ்வுலகம்فَمَنْயார்يُّجَادِلُவாதிடுவார்اللّٰهَஅல்லாஹ்விடம்عَنْهُمْஇவர்கள் சார்பாகيَوْمَ الْقِيٰمَةِமறுமை நாளில்اَمْஅல்லதுمَّنْயார்يَّكُوْنُஇருப்பார்عَلَيْهِمْஇவர்கள் மீதுوَكِيْلًا‏பொறுப்பாளராக
ஹா அன்தும் ஹா'உலா'இ ஜாதல்தும் 'அன்ஹும் Fபில் ஹயாதித் துன்யா Fபமய் யுஜாதிலுல் லாஹ 'அன்ஹும் யவ்மல் கியாமதி அம் மய் யகூனு 'அலய்ஹிம் வகீலா
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கிறீர்கள்? மறுமைநாளில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவன் யார்? இன்னும், (அந்நாளில்) இவர்களுக்குப் பரிந்து பேசுபவன் யார்?
IFT
சரி! இக்குற்றவாளிகளின் சார்பில் உலக வாழ்க்கையின்போது நீங்கள் வாதாடிவிட்டீர்கள். ஆனால், மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்காக வாதாடுபவர் யார்? அல்லது அவர்களுக்காக பொறுப்பேற்பவர் யார்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் தானே அவர்கள், அவர்களுக்காக உலகவாழ்வில் நீங்கள் வாதாடுகிறீர்கள், கியாமத்து நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுபவர் யார்? அல்லது எவர் இவர்களுக்கு பொறுப்பேற்பவராக இருப்பார்?
Saheeh International
Here you are - those who argue on their behalf in [this] worldly life - but who will argue with Allah for them on the Day of Resurrection, or who will [then] be their representative?
وَمَنْ یَّعْمَلْ سُوْٓءًا اَوْ یَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ یَسْتَغْفِرِ اللّٰهَ یَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
وَ مَنْ يَّعْمَلْஎவர்/செய்வார்سُوْٓءًاஒரு தீமையைاَوْஅல்லதுيَظْلِمْஅநீதியிழைப்பார்نَفْسَهٗதனக்குثُمَّபிறகுيَسْتَغْفِرِமன்னிப்புக் கேட்பார்اللّٰهَஅல்லாஹ்விடம்يَجِدِகாண்பார்اللّٰهَஅல்லாஹ்வைغَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வ மய் யஃமல் ஸூ'அன் அவ் யள்லிம் னFப்ஸஹூ தும்ம யஸ்தக்Fபிரில் லாஹ யஜிதில் லாஹ கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
அப்துல் ஹமீது பாகவி
எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத் துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான்.
IFT
மேலும் ஒருவர் தீய செயல்புரிந்து, அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்துக்கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையாளனாகவும் இருப்பதை அவர் காண்பார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எவர் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தனக்குத் தானே அநீதமிழைத்துவிட்டு பின்னர் (பச்சாதாபப்பட்டு) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக அவர் காண்பார்.
Saheeh International
And whoever does a wrong or wrongs himself but then seeks forgiveness of Allah will find Allah Forgiving and Merciful.
وَمَنْ یَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا یَكْسِبُهٗ عَلٰی نَفْسِهٖ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
وَمَنْஇன்னும் எவர்يَّكْسِبْசம்பாதிப்பார்اِثْمًاஒரு பாவத்தைفَاِنَّمَاஎல்லாம்يَكْسِبُهٗசம்பாதிப்பார்/அதைعَلٰى نَفْسِهٖ‌ؕதனக்கெதிராகத்தான்وَكَانَ اللّٰهُஅல்லாஹ் இருக்கின்றான்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வ மய் யக்ஸிBப் இத்மன் Fப இன்னமா யக்ஸிBபுஹூ 'அலா னFப்ஸிஹ்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
முஹம்மது ஜான்
எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதைச் சம்பாதிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
ஆனால், ஒருவன் பாவத்தைச் சம்பாதிப்பானாகில் தனக்குக் கேடாகவே அவன் அதைச் சம்பாதித்துக் கொள்கின்றான். அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர் பாவத்தைச் சம்பாதிக்கின்றாரோ, அவர் அதனைச் சம்பாதிப்பதெல்லாம் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே (தான்), இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And whoever earns [i.e., commits] a sin only earns it against himself. And Allah is ever Knowing and Wise.
وَمَنْ یَّكْسِبْ خَطِیْٓئَةً اَوْ اِثْمًا ثُمَّ یَرْمِ بِهٖ بَرِیْٓـًٔا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟۠
وَمَنْஎவர்يَّكْسِبْசம்பாதிப்பார்خَطِيْٓــٴَــةًஒரு குற்றத்தைاَوْஅல்லதுاِثْمًاஒரு பாவத்தைثُمَّபிறகுيَرْمِஎறிகிறார்بِهٖஅதைبَرِيْٓــٴًـــاஒரு நிரபராதியைفَقَدِதிட்டமாகاحْتَمَلَசுமந்து கொண்டார்بُهْتَانًاஅவதூறைوَّاِثْمًاஇன்னும் பாவத்தைمُّبِيْنًا‏பகிரங்கமான
வ மய் யக்ஸிBப் கதீ'அதன் அவ் இத்மன் தும்ம யர்மி Bபிஹீ Bபரீ'அன் Fபகதிஹ் தமல Bபுஹ்தான(ன்)வ் வ இத்மம் முBபீனா
முஹம்மது ஜான்
மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவரேனும், ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான்.
IFT
மேலும், ஒருவன் ஒரு தவறை அல்லது ஒரு பாவத்தைச் செய்துவிட்டு ஒரு நிரபராதியின் மீது அதைச் சுமத்திவிட்டால் அவன் பெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தையும் நிச்சயம் சுமந்து கொள்பவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் எவர், யாதொரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்து பின்னர் நிரபராதியான (மற்றொரு)வர்மீது அதனைச் சுமத்தினால் அப்போது நிச்சயமாக அவர் அவதூரையும், பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொண்டவராவார்.
Saheeh International
But whoever earns an offense or a sin and then blames it on an innocent [person] has taken upon himself a slander and manifest sin.
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ اَنْ یُّضِلُّوْكَ ؕ وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَضُرُّوْنَكَ مِنْ شَیْءٍ ؕ وَاَنْزَلَ اللّٰهُ عَلَیْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ ؕ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَیْكَ عَظِیْمًا ۟
وَلَوْلَا فَضْلُஅருளும் இல்லாதிருந்தால்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكَஉம்மீதுوَرَحْمَتُهٗஅவனின் கருணைلَهَمَّتْதிட்டமாக நாடியிருக்கும்طَّآٮِٕفَةٌஒரு பிரிவுمِّنْهُمْஅவர்களில்اَنْ يُّضِلُّوْஅல்லது வழிகெடுத்துவிடكَ ؕஉம்மைوَمَا يُضِلُّوْنَஅவர்கள் வழிகெடுக்க மாட்டார்கள்اِلَّاۤதவிரاَنْفُسَهُمْ‌தங்களையேوَمَاமாட்டார்கள்يَضُرُّوْنَكَதீங்கிழைக்க / உமக்குمِنْ شَىْءٍ ؕஎதையும்وَاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْكَஉம்மீதுالْكِتٰبَஇவ்வேதத்தைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَعَلَّمَكَஇன்னும் உமக்குக் கற்பித்தான்مَاஎவற்றைلَمْ تَكُنْநீர் இருக்கவில்லைتَعْلَمُ‌ؕஅறிகிறீர்وَكَانَஇருக்கிறதுفَضْلُ اللّٰهِஅல்லாஹ்வின்அருள்عَلَيْكَஉம்மீதுعَظِيْمًا‏மகத்தானது
வ லவ் லா Fபள்லுல் லாஹி 'அலய்க வ ரஹ்மதுஹூ லஹம்மத் தா'இFபதும் மின்ஹும் அய் யுளில்லூக வமா யுளில்லூன இல்லா அன்Fபுஸஹும் வமா யளுர்ரூனக மின் ஷய்'; வ அன்Zஜலல் லாஹு 'அலய்கல் கிதாBப வல் ஹிக்மத வ 'அல்லமக மா லம் தகுன் தஃலம்; வ கான Fபள்லுல் லாஹி 'அலய்க 'அளீமா
முஹம்மது ஜான்
(நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனது கிருபையும் உம் மீது இல்லாதிருந்தால் (நீர் தவறிழைத்திருக்கக் கூடும். ஏனென்றால், எந்தவிதத்திலும்) உம்மை வழி கெடுத்துவிட வேண்டுமென்று அவர்களில் ஒரு கூட்டத்தினர் முடிவு கட்டியிருந்தனர். எனினும், அவர்கள் தங்களையே அன்றி (உம்மை) வழிகெடுக்கவில்லை. அவர்கள் உமக்கு கொஞ்சமும் தீங்கிழைத்துவிட முடியாது. அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம் மீது இறக்கி நீங்கள் அறியாத அனைத்தையும் உமக்குக் கற்பித்திருக்கிறான். உம் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாகவே இருக்கிறது.
IFT
(நபியே!) அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருளும் உம்மீது பொழிந்திராவிட்டால் (உம்மை அவர்கள் வழி தவறச் செய்திருப்பார்கள். ஏனெனில்) அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மைத் தவறான கருத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று முடிவு கட்டியிருந்தார்கள். உண்மையில், அவர்கள் தங்களை அன்றி வேறெவரையும் தவறான கருத்தில் ஆழ்த்திக்கொள்ளவில்லை. மேலும், அவர்களால் உமக்கு யாதொரு தீங்கையும் இழைக்க முடியாது. அல்லாஹ் உமக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் அருளினான். மேலும், நீர் அறியாதவற்றையும் உமக்குக் கற்றுத் தந்தான். அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடையோ மகத்தானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (நபியே!) உம்மீது அல்லாஹ்வின் பேரருளும், அவனது கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தினர் உம்மை வழி தவறச் செய்ய முயன்றிருப்பர், இன்னும், அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்க முடியாது, அவர்கள் உமக்கு யாதொரு தீங்கிழைத்துவிடவும் முடியாது, மேலும், அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான், இன்னும், நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான், மேலும், உம்மீது அல்லாஹ்வுடைய பேரருள் மகத்தானதாகவே இருக்கின்றது.
Saheeh International
And if it was not for the favor of Allah upon you, [O Muhammad], and His mercy, a group of them would have determined to mislead you. But they do not mislead except themselves, and they will not harm you at all. And Allah has revealed to you the Book and wisdom and has taught you that which you did not know. And ever has the favor of Allah upon you been great.
لَا خَیْرَ فِیْ كَثِیْرٍ مِّنْ نَّجْوٰىهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍ بَیْنَ النَّاسِ ؕ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟
لَاஅறவே இல்லைخَيْرَநன்மைفِىْ كَثِيْرٍஅதிகமானவற்றில்مِّنْஇருந்துنَّجْوٰٮهُمْஅவர்களின் ரகசியம்اِلَّاதவிரمَنْஎவர்اَمَرَஏவினார்بِصَدَقَةٍதர்மத்தைاَوْஅல்லதுمَعْرُوْفٍநன்மையைاَوْஅல்லதுاِصْلَاحٍۢசமாதானத்தைبَيْنَஇடையில்النَّاسِ‌ ؕமக்கள்وَمَنஎவர்يَّفْعَلْசெய்வார்ذٰ لِكَஅதைابْتِغَآءَநாடிمَرْضَاتِபொருத்தம்اللّٰهِஅல்லாஹ்வின்فَسَوْفَதருவோம்نُـؤْتِيْهِஅவர்களுக்குاَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தானது
லா கய்ர Fபீ கதீரிம் மின் னஜ்வாஹும் இல்லா மன் அமர Bபிஸதகதின் அவ் மஃரூFபின் அவ் இஸ்லாஹிம் Bபய்னன் னாஸ்; வ மய் யFப்'அல் தாலிகBப் திகா'அ மர்ளாதில் லாஹி Fப ஸவ்Fப னு'தீஹி அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் (உம்முடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் ஒரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, நன்மையானவற்றைப் பற்றியோ, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர. ஆகவே, எவரேனும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியைத் தருவோம்.
IFT
மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுக்களைத் தவிர! (அவற்றில் நன்மை உண்டு.) மேலும் எவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடுவதற்காக இவ்வாறு செய்கின்றாரோ அவருக்கு நாம் விரைவில் மகத்தான கூலியை வழங்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தர்மத்தைப்பற்றி, அல்லது நன்மையானவற்றைப்பற்றி, அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப்பற்றி ஏவியவரைத் தவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை, மேலும், அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அதைச் செய்தால் நாம் அவர்களுக்கு மகத்தான (நற்)கூலியைத் தருவோம்.
Saheeh International
No good is there in much of their private conversation, except for those who enjoin charity or that which is right or conciliation between people. And whoever does that seeking means to the approval of Allah - then We are going to give him a great reward.
وَمَنْ یُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُ الْهُدٰی وَیَتَّبِعْ غَیْرَ سَبِیْلِ الْمُؤْمِنِیْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰی وَنُصْلِهٖ جَهَنَّمَ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟۠
وَمَنْஎவர்يُّشَاقِقِமுரண்படுகிறார்الرَّسُوْلَதூதருக்குمِنْۢ بَعْدِபின்னர்مَا تَبَيَّنَதெளிவானதுلَـهُதனக்குالْهُدٰىநேர்வழிوَ يَـتَّبِعْபின்பற்றுவார்غَيْرَஅல்லாததுسَبِيْلِபாதைالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களின்نُوَلِّهٖதிருப்பி விடுவோம்/ அவரைمَاஎதுتَوَلّٰىதிரும்பினார்وَنُصْلِهٖஇன்னும் நுழைப்போம்/ அவரைجَهَـنَّمَ‌ ؕநரகத்தில்وَسَآءَتْகெட்டுவிட்டதுمَصِيْرًا‏மீளுமிடத்தால்
வ மய் யுஷாகிகிர் ரஸூல மிம் Bபஃதி மா தBபய்யன லஹுல் ஹுதா வ யத்தBபிஃ கய்ர ஸBபீலில் மு'மினீன னுவல்லிஹீ ம தவல்லா வ னுஸ்லிஹீ ஜஹன்னம வ ஸா'அத் மஸீரா
முஹம்மது ஜான்
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கிறாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது.
IFT
மேலும், தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், எவன் இறைத்தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப்பாக இருக்கின்றானோ, இறைநம்பிக்கையாளர்களின் நடத்தைக்கு மாறான பாதையில் செல்கின்றானோ, அவனை அவன் திரும்பிவிட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம்; பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம்! அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து விசுவாசிகளின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம், (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம், அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.
Saheeh International
And whoever opposes the Messenger after guidance has become clear to him and follows other than the way of the believers - We will give him what he has taken and drive him into Hell, and evil it is as a destination.
اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ؕ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟
اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَغْفِرُமன்னிக்க மாட்டான்اَنْ يُّشْرَكَ بِهٖஇணைவைக்கப்படுவதை/அவனுக்குوَيَغْفِرُஇன்னும் மன்னிப்பான்مَا دُوْنَ ذٰ لِكَஅது அல்லாததைلِمَنْஎவருக்குيَّشَآءُ‌ ؕநாடுவான்وَمَنْஎவர்يُّشْرِكْஇணைவைப்பார்بِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَقَدْதிட்டமாகضَلَّவழிகெட்டார்ضَلٰلًاۢவழிகேடுبَعِيْدًا‏தூரமானது
இன்னல் லாஹ லா யக்Fபிரு அய் யுஷ்ரக Bபிஹீ வயக்Fபிரு மா தூன தாலிக லிமய் யஷா'; வ மய் யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ளல்ல ளலாலம் Bப'ஈதா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்.
IFT
திண்ணமாக தனக்கு இணைவைப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்; இது தவிர அனைத்தையும் தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னித்து விடுவான். எனவே, யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவன் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான், மேலும் இதல்லாத (குற்றத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான், இன்னும் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ, அவர் திட்டமாக வெகு தூரமான வழிகேடாக வழி கெட்டுவிட்டார்.
Saheeh International
Indeed, Allah does not forgive association with Him, but He forgives what is less than that for whom He wills. And he who associates others with Allah has certainly gone far astray.
اِنْ یَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اِنٰثًا ۚ وَاِنْ یَّدْعُوْنَ اِلَّا شَیْطٰنًا مَّرِیْدًا ۟ۙ
اِنْ يَّدْعُوْنَஅவர்கள் பிரார்த்திப்பதில்லைمِنْ دُوْنِهٖۤஅவனையன்றிاِلَّاۤதவிரاِنٰـثًـا‌ ۚபெண்(சிலை)களைوَاِنْ يَّدْعُوْنَஅவர்கள் பிரார்த்திப்பதில்லைاِلَّاதவிரشَيْـطٰنًاஷைத்தானிடம்مَّرِيْدًا ۙ‏கீழ்ப்படியாதவன்
இ(ன்)ய் யத்'ஊன மின் தூனிஹீ இல்லா இனாத(ன்)வ் வ இ(ன்)ய் யத்'ஊன இல்லா ஷய்தானம் மரீதா
முஹம்மது ஜான்
அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்லை; இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடையவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை.
IFT
அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தேவதைகளை வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக்கொள்கின்றார்கள்! மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தானை அவர்கள் வணக்கத்திற்கு உரியவனாக எடுத்துக் கொள்கிறார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனைத்தவிர்த்து, அவர்கள் பெண் (தெய்வங்)களைத் தவிர (வணக்கத்தில்) (வேறெதனையும்) அழைக்கவில்லை, மூர்க்கத்தனம் கொண்டவனான ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவுமில்லை.
Saheeh International
They call upon instead of Him none but female [deities], and they [actually] call upon none but a rebellious Satan,
لَّعَنَهُ اللّٰهُ ۘ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟ۙ
لَّـعَنَهُசபித்தான்/அவனைاللّٰهُ‌ ۘஅல்லாஹ்وَقَالَகூறினான்لَاَ تَّخِذَنَّநிச்சயமாக எடுத்துக்கொள்வேன்مِنْஇருந்துعِبَادِكَஅடியார்கள்/உன்نَصِيْبًاஒரு தொகையைمَّفْرُوْضًا ۙ‏குறிப்பிட்டது
ல'அனஹுல் லாஹ்; வ கால ல அத்தகிதன்ன மின் 'இBபாதிக னஸீBபம் மFப்ரூளா
முஹம்மது ஜான்
அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்” என்றும்,
அப்துல் ஹமீது பாகவி
அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான். அதற்கவன் ‘‘உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்'' என்று கூறினான்.
IFT
அவனையோ அல்லாஹ் சபித்திருக்கின்றான். (இவர்கள் பின்பற்றும் ஷைத்தான் எத்தகையவன் எனில்) அவன் அல்லாஹ்வை நோக்கிக் கூறினான்: “உன் அடிமைகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கினை திண்ணமாக நான் வாங்கியே தீருவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தீய வழி நடத்தும் ஷைத்தானாகிய) அவனை அல்லாஹ் சபித்தான், அ(தற்க)வன், “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்” என்று கூறினான்.
Saheeh International
Whom Allah has cursed. For he had said, "I will surely take from among Your servants a specific portion.
وَّلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّیَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُغَیِّرُنَّ خَلْقَ اللّٰهِ ؕ وَمَنْ یَّتَّخِذِ الشَّیْطٰنَ وَلِیًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِیْنًا ۟ؕ
وَّلَاُضِلَّـنَّهُمْஇன்னும் நிச்சயம் வழிகெடுப்பேன்/அவர்கû ளوَلَاُمَنِّيَنَّهُمْஇன்னும் நிச்சயமாக வீண் நம்பிக்கையூட்டுவேன்/அவர்களுக்குوَلَاٰمُرَنَّهُمْஇன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்குفَلَيُبَـتِّكُنَّஆகவே நிச்சயம் அறுப்பார்கள்اٰذَانَகாதுகளைالْاَنْعَامِகால்நடைகளின்وَلَاٰمُرَنَّهُمْஇன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்குفَلَيُغَيِّرُنَّநிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்خَلْقَபடைப்புகளைاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَمَنْஎவன்يَّتَّخِذِஎடுத்துக் கொள்வான்الشَّيْطٰنَஷைத்தானைوَلِيًّاநண்பனாக, பாதுகாவலனாகمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிفَقَدْ خَسِرَதிட்டமாகநஷ்டமடைந்தான்خُسْرَانًاநஷ்டம்مُّبِيْنًا ؕ‏பகிரங்கமானது
வ ல உளில்லன்னஹும் வ ல உமன்னி யன்ன்னஹும் வ ல ஆமுரன்னஹும் Fபல யுBபத் திகுன்ன ஆதானல் அன்'ஆமி வ ல ஆமுரன்னஹும் Fபல யுகய் யிருன்ன கல்கல் லாஹ்; வ மய் யத்தகிதிஷ் ஷய்தான வலிய்யம் மின் தூனில் லாஹி Fபகத் கஸிர குஸ்ரானம் முBபீனா
முஹம்மது ஜான்
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
அப்துல் ஹமீது பாகவி
அன்றி ‘‘நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்துவிடுவான்.
IFT
மேலும், நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்; ஆசைகளில் அவர்களை உழலவைப்பேன். இன்னும், நான் அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; (அதன்படி) அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுத்து விடுவார்கள். மேலும், நான் அவர்களுக்கு ஆணை பிறப்பிப்பேன்; (அதன்படி) அல்லாஹ் படைத்த ஒழுங்கமைப்பில் அவர்கள் மாற்றங்கள் செய்வார்கள்.” எவன் அல்லாஹ்வை விட்டுவிட்டு, இந்த ஷைத்தானைத் தன்னுடைய நண்பனாகவும், பாதுகாவலனாகவும் எடுத்துக் கொள்கின்றானோ அவன் அப்பட்டமான இழப்புக் குரியவன் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன், அவர்களுக்கு வீணாண ஆசைகளையும் உண்டாக்குவேன், நிச்சயமாக அவர்களுக்கு நான் கட்டளையும் இடுவேன், அப்போது (அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்து விடப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளின் காதுகளை அவர்கள் அறுத்து விடுவர், இன்னும், அவர்களை நிச்சயமாக நான் ஏவுவேன், அப்போது அல்லாஹ்வின் சிருஷ்டி(களுடைய கோலங்)களை நிச்சயமாக அவர்கள் மாற்றிவிடுவர், (என்றும் ஷைத்தான் கூறினான்.) மேலும் எவர் அல்லாஹ்வையன்றி, (இத்தகைய) ஷைத்தானை (தனக்குப்) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றாரோ, நிச்சயமாக அவர் தெளிவான நஷ்டத்தையே அடைந்துவிடுவார்.
Saheeh International
And I will mislead them, and I will arouse in them [sinful] desires, and I will command them so they will slit the ears of cattle, and I will command them so they will change the creation of Allah." And whoever takes Satan as an ally instead of Allah has certainly sustained a clear loss.
یَعِدُهُمْ وَیُمَنِّیْهِمْ ؕ وَمَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا ۟
يَعِدவாக்களிக்கிறான்هُمْஅவர்களுக்குوَيُمَنِّيْهِمْ‌ ؕஇன்னும் வீண்நம்பிக்கையூட்டுகிறான் / அவர்களுக்குوَمَاமாட்டான்يَعِدُهُمُஅவர்களுக்கு வாக்களிக்கالشَّيْـطٰنُஷைத்தான்اِلَّا غُرُوْرًا‏ஏமாற்றத்தைத் தவிர
ய'இதுஹும் வ யுமன் னீஹிம் வமா ய'இதுஹுமுஷ் ஷய்தானு இல்லா குரூரா
முஹம்மது ஜான்
ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகிறான். எனினும், ஏமாற்றுவதற்கே தவிர ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
IFT
அவன் அவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றான்; ஆசையூட்டுகின்றான். ஆனால், ஷைத்தான் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஷைத்தானாகிய) அவன் அவர்களுக்கு வாக்களிக்கின்றான், அவர்களுக்கு வீணாண ஆசைகளையும் ஊட்டுகின்றான், மேலும், ஏமாற்றத்தைத் தவிர (வேறு எதையும்) ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
Saheeh International
He [i.e., Satan] promises them and arouses desire in them. But Satan does not promise them except delusion.
اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؗ وَلَا یَجِدُوْنَ عَنْهَا مَحِیْصًا ۟
اُولٰٓٮِٕكَஅவர்கள்مَاْوٰٮهُمْஅவர்களுடைய ஒதுங்குமிடம்جَهَـنَّمُநரகம்وَلَا يَجِدُوْنَபெறமாட்டார்கள்عَنْهَاஅதை விட்டுمَحِيْصًا‏ஒரு மீளுமிடத்தை
உலா'இக ம'வாஹும் ஜஹன்னமு வலா யஜிதூன 'அன்ஹா மஹீஸா
முஹம்மது ஜான்
இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும்; அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களின் செல்லுமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து தப்ப ஒரு வழியையும் காணமாட்டார்கள்.
IFT
இத்தகையோர் தங்குமிடம் நரகம்தான்! அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழி எதனையும் அவர்கள் காணமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இத்தகையோர் - அவர்கள் தங்குமிடம் நரகந்தான், அவர்கள் அதை விட்டும் தப்பி ஓடும் இடத்தையும் காண மாட்டார்கள்.
Saheeh International
The refuge of those will be Hell, and they will not find from it an escape.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِیْلًا ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநன்மைகளைسَنُدْخِلُهُمْஅவர்களை நுழைப்போம்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤஅவற்றில்اَبَدًا‌ ؕஎன்றென்றும்وَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வுடையحَقًّا‌ ؕஉண்மையானوَمَنْயார்اَصْدَقُமிக உண்மையானவன்مِنَ اللّٰهِஅல்லாஹ்வை விடقِيْلًا‏சொல்லில்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸனுத் கிலுஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; வஃதல் லாஹி ஹக்கா; வ மன் அஸ்தகு மினல் லாஹி கீலா
முஹம்மது ஜான்
மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (ஷைத்தானை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை (மறுமையில்) நாம் சொர்க்கங்களில் புகுத்துவோம். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?
IFT
யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடும் சுவனப்பூங்காக்களில் நுழைய வைப்போம்; அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். தம் சொல்லில், அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் வேறு யார் உளர்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையோர் - அவர்களை நாம் (மறுமையில்) சுவனபதிகளில், பிரவேசிக்கச் செய்வோம், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அதில் நிரந்தரமாக என்றென்றும் (தங்கி) இருப்பவர்கள், அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே, மேலும், அல்லாஹ்வைவிட சொல்லால் மிக்க உண்மையானவர் யார்?
Saheeh International
But the ones who believe and do righteous deeds - We will admit them to gardens beneath which rivers flow, wherein they will abide forever. [It is] the promise of Allah, [which is] truth, and who is more truthful than Allah in statement.
لَیْسَ بِاَمَانِیِّكُمْ وَلَاۤ اَمَانِیِّ اَهْلِ الْكِتٰبِ ؕ مَنْ یَّعْمَلْ سُوْٓءًا یُّجْزَ بِهٖ ۙ وَلَا یَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
لَـيْسَஇல்லைبِاَمَانِيِّكُمْஉங்கள் விருப்பங்களைக் கொண்டுوَلَاۤஇன்னும் இல்லைاَمَانِىِّவிருப்பங்கள்اَهْلِ الْـكِتٰبِ‌ؕவேதக்காரர்களின்مَنْஎவன்يَّعْمَلْசெய்வான்سُوْٓءًاஒரு தீமையைيُّجْزَகூலி கொடுக்கப்படுவான்بِهٖۙஅதற்குوَ لَا يَجِدْஇன்னும் பெறமாட்டான்لَهٗதனக்குمِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்وَلِيًّاபாதுகாவலரைوَّلَا نَصِيْرًا‏இன்னும் உதவியாளரை
லய்ஸ Bபி அமானிய்யிகும் வ லா அமானிய்யி அஹ்லில் கிதாBப்; மய் யஃமல் ஸூ'அய் யுஜ்Zஜ Bபிஹீ வலா யஜித் லஹூ மின் தூனில் லாஹி வலிய(ன்)வ் வலா னஸீரா
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப்படியோ, வேதத்தையுடை யவர்களின் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கிறானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவரையோ அல்லது துணை புரிபவரையோ (அங்கு) காணமாட்டான்.
IFT
இறுதி விளைவு, நீங்கள் ஆசைப்படுவது போலவோ, வேதம் அருளப்பட்டவர்கள் ஆசைப்படுவது போலவோ ஏற்படப்போவதில்லை. எவன் தீமை செய்தாலும் அவன் அதற்குரிய விளைவை அடைவான். அல்லாஹ்வைத் தவிர தனக்கு வேறெந்த காப்பாளனையும், உதவியாளனையும் அவன் காணமாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே மறுமையில்) உங்கள் வீண் ஆசைப் படியோ வேதத்தையுடையோர் வீண் ஆசைப்படியோ (சுவனம் பிரவேசிப்பதென்பது) இல்லை, எவர் தீமை செய்கின்றாரோ அவர் அதற்குரிய தண்டனையைக் கொடுக்கப்படுவார், அவர் அல்லாஹ்வையன்றித் தனக்குப்பாதுகாவலனையோ அல்லது உதவி புரிவோரையோ (அங்கு)காணமாட்டார்.
Saheeh International
It [i.e., Paradise] is not [obtained] by your wishful thinking nor by that of the People of the Scripture. Whoever does a wrong will be recompensed for it, and he will not find besides Allah a protector or a helper.
وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ نَقِیْرًا ۟
وَمَنْஇன்னும் எவர்يَّعْمَلْசெய்வார்مِنَஇருந்துالصّٰلِحٰتِநன்மைகள்مِنْஇருந்துذَكَرٍஓர் ஆண்اَوْஅல்லதுاُنْثٰىஒரு பெண்وَهُوَஅவர் இருக்கمُؤْمِنٌநம்பிக்கையாளராகفَاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்يَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்وَلَا يُظْلَمُوْنَஇன்னும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்نَقِيْرًا‏கீறல் அளவும்
வ மய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன னகீரா
முஹம்மது ஜான்
ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
IFT
மேலும் நற்செயல்கள் புரிவோர் அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின், அவர்கள்தாம் சுவனத்தில் நுழைவார்கள். மேலும் இம்மியளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், ஆணாயினும் அல்லது பெண்ணாயினும், எவர் உண்மையாகவே விசுவாசங்கொண்டவராக இருக்க நற்கருமங்களைச் செய்வாராயின் - அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள், அவர்கள் அற்ப அளவு அநீதியும் செய்யப்படமாட்டார்கள்.
Saheeh International
And whoever does righteous deeds, whether male or female, while being a believer - those will enter Paradise and will not be wronged, [even as much as] the speck on a date seed.
وَمَنْ اَحْسَنُ دِیْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِیْمَ خَلِیْلًا ۟
وَمَنْயார்اَحْسَنُமிக அழகானவர்دِيْنًاமார்க்கத்தால்مِّمَّنْஎவரைவிடاَسْلَمَபணியவைத்தார்وَجْهَهٗதன் முகத்தைلِلّٰهِஅல்லாஹ்விற்குوَهُوَஅவர் இருக்கمُحْسِنٌநற்குணமுடையவராகوَّاتَّبَعَஇன்னும் பின்பற்றினார்مِلَّةَமார்க்கத்தைاِبْرٰهِيْمَஇப்ராஹீமுடையحَنِيْفًا‌ ؕஉறுதியுடையவராகوَاتَّخَذَஇன்னும் எடுத்துக்கொண்டான்اللّٰهُஅல்லாஹ்اِبْرٰهِيْمَஇப்ராஹீமைخَلِيْلًا‏நண்பராக
வ மன் அஹ்ஸனு தீனம் மிம்ம்மன் அஸ்லம வஜ்ஹஹூ லில்லாஹி வ ஹுவ முஹ்ஸினு(ன்)வ் வத்தBப'அ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வத்தகதல் லாஹு இBப்ராஹீம கலீலா
முஹம்மது ஜான்
மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்முகத்தை பணியவைத்து இஸ்லாமில் உறுதியானவராக இருந்து, நன்மையும்செய்து, இப்றாஹீமுடைய (நேரான) மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்றாஹீமை(த் தன்) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கிறான்.
IFT
மேலும், எவர் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு ஒருமனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறி உடையவர் யார்? இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்துவிட்டு, அவர் நன்மை செய்தவராக இருக்க (அசத்தியத்திலிருந்து நீங்கி)சத்தியத்தைச் சார்ந்த இப்ராஹீமுடைய மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? மேலும் அல்லாஹ் இப்றாஹீமைத் (தன்னுடைய) உற்ற தோழராக எடுத்துக் கொண்டான்.
Saheeh International
And who is better in religion than one who submits himself to Allah while being a doer of good and follows the religion of Abraham, inclining toward truth? And Allah took Abraham as an intimate friend.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطًا ۟۠
وَلِلّٰهِஅல்லாஹ்வுக்குمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் பூமியிலுள்ளவைوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்مُّحِيْـطًا‏சூழ்ந்தறிபவனாக
வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இம் முஹீதா
முஹம்மது ஜான்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
IFT
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; மேலும் அல்லாஹ் யாவற்றையும் சூழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் சூழ்(ந்தறிப)வனாக இருக்கின்றான்.
Saheeh International
And to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And ever is Allah, of all things, encompassing.
وَیَسْتَفْتُوْنَكَ فِی النِّسَآءِ ؕ قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِیْهِنَّ ۙ وَمَا یُتْلٰی عَلَیْكُمْ فِی الْكِتٰبِ فِیْ یَتٰمَی النِّسَآءِ الّٰتِیْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الْوِلْدَانِ ۙ وَاَنْ تَقُوْمُوْا لِلْیَتٰمٰی بِالْقِسْطِ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِیْمًا ۟
وَيَسْتَفْتُوْنَكَமார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர்/உம்மிடம்فِى النِّسَآءِ ؕபெண்களைப் பற்றிقُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்يُفْتِيْكُمْதீர்ப்பளிக்கிறான்فِيْهِنَّ ۙஅவர்களைப் பற்றிوَمَا يُتْلٰىஇன்னும் எது ஓதப்படுகிறதோعَلَيْكُمْஉங்களுக்குفِى الْكِتٰبِவேதத்தில்فِىْ يَتٰمَىஅனாதைகளில்النِّسَآءِபெண்கள்الّٰتِىْஎவர்கள்لَاஇல்லைتُؤْتُوْنَهُنَّநீங்கள் அவர்களுக்கு கொடுப்பதுمَاஎதுكُتِبَவிதிக்கப்பட்டதுلَهُنَّஅவர்களுக்குوَتَرْغَبُوْنَவிரும்புகிறீர்கள்اَنْ تَـنْكِحُوநீங்கள் மண முடிப்பதுهُنَّஅவர்களைوَالْمُسْتَضْعَفِيْنَபலவீனர்கள்مِنَஇருந்துالْوِلْدَانِ ۙசிறுவர்கள்وَاَنْ تَقُوْمُوْاஇன்னும் நீங்கள் நிற்பதுلِلْيَتٰمٰىஅனாதைகளுக்குبِالْقِسْطِ‌ ؕநீதத்தைக் கொண்டுوَمَاஎதுتَفْعَلُوْاசெய்வீர்கள்مِنْஇருந்துخَيْرٍநன்மைفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِهٖஅதைعَلِيْمًا‏நன்கறிந்தவனாக
வ யஸ்தFப்தூனக Fபின்னிஸா'இ குலில் லாஹு யுFப்தீகும் Fபீஹின்ன வமா யுத்லா 'அலய்கும் Fபில் கிதாBபி Fபீ யதாமன் னிஸா'இல் லாதீ லா து'தூனஹுன்ன மா குதிBப லஹுன்ன்ன வ தர்கBபூன அன் தன்கிஹூஹுன்ன வல் முஸ்தள்'அ Fபீன மினல் வில்தானி வ அன் தகூமூ லில்யதாமா Bபில்கிஸ்த்; வமா தFப்'அலூ மின் கய்ரின் Fப இன்னல் லாஹ கான Bபிஹீ 'அலீமா
முஹம்மது ஜான்
(நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி (மார்க்கக் கட்டளைக்) கேட்கிறார்கள்; அதற்கு நீர், “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்புக் கூறுவான்” என்று சொல்லும்; தவிர: வேதத்தில் உங்ளுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும்; குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும்; ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு (அடுத்த வசனத்திலிருந்து) கட்டளையிடுகிறான். இதற்கு முன்னர் (பெண்களைப் பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டது அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். அவர்களுக்குக் குறிப்பிட்டுள்ள மஹரை நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதைப் பற்றியும் (அவர்களிலுள்ள) விவரமறியா குழந்தைகளைப் பற்றியும் (அதில் கூறி) ‘‘அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, (அவர்களுக்கு) நீங்கள் என்ன நன்மை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்தவனாக இருக்கிறான்.
IFT
பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்குமாறு அவர்கள் உம்மிடம் கோருகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்: “அவர்கள் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும் (நினைவுபடுத்துகின்றான்). அதாவது எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதுமில்லையோ (அல்லது பேராசையின் காரணமாக நீங்களே அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களோ) அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் மற்றும் பலவீனமான குழந்தைகள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகிறான்). மேலும், அநாதைகள் விஷயத்தில் நீதியைக் கடைப்பிடியுங்கள் என்றும் அல்லாஹ் உங்களுக்கு ஏவுரை வழங்குகின்றான். மேலும், நீங்கள் செய்யும் எந்த ஒரு நன்மையையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தே இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உம்மிடம் அவர்கள் பெண்கள் பற்றிய மார்க்கத்தீர்ப்பைக் கேட்கின்றார்கள், அவர்கள் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்புக் கூறுவான் என்று நீர் கூறுவீராக! மேலும், (இதற்கு முன்னர் பெண்களைப்பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுவது எந்தப் பெண்களுக்கு அவர்களை நீங்கள் திருமணம் முடிக்க ஆசித்தவர்களாக இருக்க அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்கமாட்டீர்களோ அத்தகைய அனாதைப் பெண்களைப் பற்றியதும், சிறார்களில் பலவீனமாக்கப்பட்டவர்கள் பற்றியதும், இன்னும் அனாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்துவது பற்றியதுமாகும், இன்னும், (அவர்களுக்கு) நீங்கள் நன்மையில் எதைச் செய்கின்றீர்களோ அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
And they request from you, [O Muhammad], a [legal] ruling concerning women. Say, "Allah gives you a ruling about them and [about] what has been recited to you in the Book concerning the orphan girls to whom you do not give what is decreed for them - and [yet] you desire to marry them - and concerning the oppressed among children and that you maintain for orphans [their rights] in justice." And whatever you do of good - indeed, Allah is ever Knowing of it.
وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یُّصْلِحَا بَیْنَهُمَا صُلْحًا ؕ وَالصُّلْحُ خَیْرٌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
وَاِنِ امْرَاَةٌ خَافَتْஒரு பெண் பயந்தால்مِنْۢஇருந்துبَعْلِهَاதனது கணவன்نُشُوْزًاவெறுப்பைاَوْஅல்லதுاِعْرَاضًاபுறக்கணிப்பைفَلَا جُنَاحَகுற்றமே இல்லைعَلَيْهِمَاۤஅவ்விருவர் மீதுاَنْ يُّصْلِحَاஅவ்விருவரும் சமாதானம் செய்வதுبَيْنَهُمَاஅவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில்صُلْحًا‌ ؕஒரு சமாதான ஒப்பந்தத்தைوَالصُّلْحُ خَيْرٌ‌ ؕசமாதானம்/சிறந்ததுوَاُحْضِرَتِஅமைக்கப்பட்டுள்ளனالْاَنْفُسُஆன்மாக்கள்الشُّحَّ‌ ؕகஞ்சத்தனம் மீதுوَاِنْ تُحْسِنُوْاநீங்கள் நன்மைசெய்தால்وَتَتَّقُوْاஇன்னும் நீங்கள் அஞ்சினால்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்خَبِيْرًا‏ஆழ்ந்தறிந்தவனாக
வ இனிம்ர அதுன் காFபத் மிம் Bபஃலிஹா னுஷூZஜன் அவ் இஃராளன் Fபலா ஜுனாஹ 'அலய்ஹி மா அய் யுஸ்லிஹா Bபய்னஹுமா ஸுல்ஹா; வஸ்ஸுல்ஹு கய்ர்; வ உஹ்ளிரதில் அன்Fபுஸுஷ் ஷுஹ்ஹ்; வ இன் துஹ்ஸினூ வ தத்தகூ Fப இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
முஹம்மது ஜான்
ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் (தனக்கு) கடுமையாக இடையூறளிப்பான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. (எவ்விதத்திலும் இருவரும் சம்மதித்த) சமாதானமே மிக மேலானது. (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏதும் பொருள் கொடுக்கும்படி நேரிட்டால் பொதுவாக) ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகிறது. ஆகவே, நீங்கள் (கஞ்சத்தனத்திற்கு உட்படாமல்) ஒவ்வொருவரும் மற்றவருக்கு நன்மை செய்பவராக இருந்து அல்லாஹ்வுக்கும் பயந்து நடந்து கொண்டால் (அது மிக நல்லது.) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன்மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை; எந்நிலையிலும் சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும். மனித உள்ளங்கள் குறுகிய எண்ணத்திற்கும் உலோபித்தனத்திற்கும் (விரைவாக) உட்பட்டுவிடுகின்றன. ஆனால், நீங்கள் இஹ்ஸான் நன்முறையில் வாழ்ந்து, இறையச்சத்தோடு செயல்படுவீர்களானால் திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தாளானால், அவர்களிவரும் தங்களிருவருக்கிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அவ்விருவர் மீதும் குற்றமில்லை, சமாதானமே மிக மேலானது, (பொதுவாக) மனங்கள் உலோபித்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றன, இன்னும் நீங்கள் (ஒவ்வொருவரும் மற்றவருக்கு) உபகாரியாயிருந்து (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்ந்து கொண்டவனாக இருக்கின்றான்.
Saheeh International
And if a woman fears from her husband contempt or evasion, there is no sin upon them if they make terms of settlement between them - and settlement is best. And present in [human] souls is stinginess. But if you do good and fear Allah - then indeed Allah is ever, of what you do, Aware.
وَلَنْ تَسْتَطِیْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَیْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِیْلُوْا كُلَّ الْمَیْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ ؕ وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
وَلَنْ تَسْتَطِيْعُوْۤاஅறவே இயலமாட்டீர்கள்اَنْ تَعْدِلُوْاநீங்கள் நீதமாக நடப்பதற்குبَيْنَஇடையில்النِّسَآءِபெண்கள்,மனைவிகள்وَلَوْ حَرَصْتُمْ‌நீங்கள் ஆசைப்பட்டாலும்فَلَا تَمِيْلُوْاஆகவே சாய்ந்து விடாதீர்கள்كُلَّ الْمَيْلِமுற்றிலும் சாய்தல்فَتَذَرُوவிட்டு விடுவீர்கள்هَاஅவளைكَالْمُعَلَّقَةِ‌ ؕதொங்கவிடப்பட்டவளைப் போன்றுوَاِنْ تُصْلِحُوْاநீங்கள் சமாதானம் செய்து கொண்டால்وَتَتَّقُوْاஇன்னும் அல்லாஹ்வை அஞ்சினால்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்كَانَஇருக்கிறான்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
வ லன் தஸ்ததீ'ஊ அன் தஃதிலூ Bபய்னன் னிஸா'இ வ லவ் ஹரஸ்தும் Fபலா தமீலூ குல்லல் மய்லி Fபததரூஹா கல்மு'அல் லகஹ்; வ இன் துஸ்லிஹூ வ தத்தகூ Fப இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் அன்புகாட்டுவதில் நீதமாக நடக்க வேண்டுமென்று விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கியவளாக விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கருணை புரிபவனாக இருக்கிறான்.
IFT
மனைவியருக்கு இடையே முழுக்க முழுக்க நீதியாக நடந்துகொள்ள நீங்கள் விரும்பினாலும், அது உங்களால் முடியாது. எனவே, நீங்கள் (ஒரு மனைவியின் பக்கமே) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விடப்பட்டவள் போல் ஒதுக்கிவிடாதீர்கள். (இதுவே இறைச்சட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யப் போதுமானதாகும்.) நீங்கள், உங்கள் நடத்தையைச் சீராக்கிக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தால் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நீங்கள் (உங்கள்) மனைவியருக்கிடையில் எவ்வளவு விரும்பிய போதிலும் நீதமாக நடக்க நீங்கள் சக்திபெறவே மாட்டீர்கள், ஆனால், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (மற்ற) அவளை (அந்தரத்தில்) தொங்கவிடப் பட்டவளைப்போல் விட்டுவிடாதீர்கள், இன்னும் நீங்கள் சமாதானமாக நடந்துகொண்டு (அல்லாஹ்வையும்) பயந்து கொண்டால் அப்போது நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்களை) மிக்க மன்னிப்பவனாக மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And you will never be able to be equal [in feeling] between wives, even if you should strive [to do so]. So do not incline completely [toward one] and leave another hanging. And if you amend [your affairs] and fear Allah - then indeed, Allah is ever Forgiving and Merciful.
وَاِنْ یَّتَفَرَّقَا یُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖ ؕ وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِیْمًا ۟
وَاِنْ يَّتَفَرَّقَاஅவ்விருவரும் பிரிந்து விட்டால்يُغْنِநிறைவடையச் செய்வான்اللّٰهُஅல்லாஹ்كُلًّاஒவ்வொருவரையும்مِّنْ سَعَتِهٖ‌ ؕதன் கொடையினால்وَكَانَஇன்னும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்وَاسِعًاவிசாலமானவனாகحَكِيْمًا‏ஞானவானாக
வ இ(ன்)ய்-யதFபர்ரகா யுக்னில் லாஹு குல்லம் மின் ஸ'அதிஹ்; வ கானல் லாஹு வாஸி'அன் ஹகீமா
முஹம்மது ஜான்
(சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(சமாதானத்துடன் சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையைக் கொண்டு (ஒவ்வொருவரையும் மற்றவரிலிருந்து) முற்றிலும் தேவையற்றவராக ஆக்கிவிடுவான். (வழங்குவதில்) அல்லாஹ் மிக விசாலமானவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
ஆனால் கணவன் மனைவியரில் ஒருவர் மற்றவரை விட்டுப் பிரிந்து போவார்களானால், அல்லாஹ், தனது பரந்த ஆற்றலினால் அவர்களை ஒருவர் மற்றவரின் பக்கம் தேவையற்றவராய் ஆக்கிவிடுவான். அல்லாஹ் பரந்த ஆற்றலுடையவனும் அறிவார்ந்தவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டால் அல்லாஹ், தன் தாராளத்தினால் (அவர்களில்) ஒவ்வொருவரையும் முற்றிலும் தேவையற்றவராக ஆக்கி விடுவான், (கொடையளிப்பதில்) அல்லாஹ் மிக விசாலமானவானக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
But if they separate [by divorce], Allah will enrich each [of them] from His abundance. And ever is Allah Encompassing and Wise.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَلَقَدْ وَصَّیْنَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِیَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ غَنِیًّا حَمِیْدًا ۟
وَلِلّٰهِஅல்லாஹ் விற்குரியனவேمَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَمَاஇன்னும் எவைفِى الْاَرْضِ ؕபூமியில்وَلَـقَدْதிட்டவட்டமாகوَصَّيْنَاஉபதேசித்தோம்الَّذِيْنَஎவர்களுக்குاُوْتُواகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்وَاِيَّاكُمْஇன்னும் உங்களுக்குاَنِ اتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைوَاِنْ تَكْفُرُوْاநீங்கள் நிராகரித்தால்فَاِنَّ لِلّٰهِநிச்சயமாக அல்லாஹ்விற்குمَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَمَاஇன்னும் எவைفِى الْاَرْضِ‌ؕபூமியில்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَنِيًّاநிறைவானவனாக, மகா செல்வனாகحَمِيْدًا‏புகழுக்குரியவனாக
வ லில்லாஹி மாFபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ லகத் வஸ்ஸய்னல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வ இய்யாகும் அனித் தகுல் லாஹ்; வ இன்தக்Fபுரூ Fப இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கானல் லாஹு கனிய்யன் ஹமீதா
முஹம்மது ஜான்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஏனென்றால்) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்குரியனவே! (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் ‘‘அல்லாஹ் ஒருவனையே பயப்படுங்கள்'' என்றே நல்லுபதேசம் செய்திருக்கிறோம். ஆகவே, (அவனுக்கு) நீங்கள் மாறுசெய்தால் (அதனால் அவனுக்கொன்றும் நஷ்டமில்லை.) நிச்சயமாக வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்குரியனவே. அல்லாஹ் தேவையற்றவனாக, (அனைவராலும்) புகழப்பட்டவனாக இருக்கிறான்.
IFT
வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் செயல்படுங்கள் என்றே உங்களுக்கு முன்னால் வேதம் வழங்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவுறுத்தியிருந்தோம். இப்போது உங்களுக்கும் (அதனையே அறிவுறுத்துகின்றோம்.) நீங்கள் நம்பவில்லையெனில் நம்பாதிருங்கள்! வானங்களிலுள்ள வையும், பூமியிலுள்ளவையும் திண்ணமாக அல்லாஹ்வுக்கே உரியன (என்பதை நினைவில் வையுங்கள்!) அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும், அனைத்துப் புகழுக்கும் உரியவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், இன்னும் உங்களுக்கும் அல்லாஹ்வையே பயந்து கொள்ளுங்கள் என்று நிச்சயமாக நாம் (நல்) உபதேசம் செய்தோம், நீங்கள் அவனை நிராகரித்து விட்டால் நிச்சயமாக, வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ் எவருடைய தேவையும் அற்றவனாக (யாவரின்) புகழுக்குரியவனாக இருக்கின்றான்.
Saheeh International
And to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And We have instructed those who were given the Scripture before you and yourselves to fear Allah. But if you disbelieve - then to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And ever is Allah Free of need and Praiseworthy.
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
وَلِلّٰهِஅல்லாஹ்விற்கே உரியனمَاஎவைفِى السَّمٰوٰتِவானங்களில்وَمَا فِىஇன்னும் எவைالْاَرْضِ ؕபூமியில்وَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளனாக
வ லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
முஹம்மது ஜான்
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (இவற்றிலுள்ள எதைக் கொண்டும் உங்களுக்கு உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமான பொறுப்பாளனாக இருக்கிறான்.
IFT
ஆம்! வானங்கள் பூமியிலுள்ள அனைத்திற்கும் அல்லாஹ்வே உரிமையாளன் ஆவான். அவற்றின் பொறுப்புகளை ஏற்க அவனே போதுமானவன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, (உங்களின் எல்லாக்காரியங்களையும்) பொறுப்பேற்றுக் கொள்வதில் அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
Saheeh International
And to Allah belongs whatever is in the heavens and whatever is on the earth. And sufficient is Allah as Disposer of affairs.
اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ اَیُّهَا النَّاسُ وَیَاْتِ بِاٰخَرِیْنَ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی ذٰلِكَ قَدِیْرًا ۟
اِنْ يَّشَاْஅவன் நாடினால்يُذْهِبْكُمْபோக்கி விடுவான்/உங்களைاَيُّهَا النَّاسُமனிதர்களேوَيَاْتِஇன்னும் வருவான்بِاٰخَرِيْنَ‌ؕமற்றவர்களைக் கொண்டுوَكَانَஇன்னும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதுذٰلِكَஅதுقَدِيْرًا‏பேராற்றலுடையவனாக
இ(ன்)ய்-யஷ' யுத்ஹிBப்கும் அய்யுஹன் னாஸு வ ய'தி Bபி ஆகரீன்; வ கானல் லாஹு 'அலா தாலிக கதீரா
முஹம்மது ஜான்
மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! அவன் விரும்பினால் உங்களை அழித்து (உங்களுக்குப் பதிலாக) வேறு மனிதர்களைக் கொண்டுவந்து விடுவான். அல்லாஹ் இவ்வாறு செய்ய பேராற்றலுடையவனாகவே இருக்கிறான்.
IFT
மனிதர்களே, அவன் நினைத்தால் உங்களை அகற்றிவிட்டு (உங்களுக்குப் பகரமாக) மற்றவர்களைக் கொண்டு வருவான். இவ்வாறு செய்ய அல்லாஹ் முழு வலிமை பெற்றவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! அவன் நாடினால் உங்களை அழித்து (உங்கள் இடத்தில்) மற்றவர்களை கொண்டு வருவான், இன்னும் அல்லாஹ் இவ்வாறு செய்ய பேராற்றலுடையோனாகவே இருக்கின்றான்.
Saheeh International
If He wills, He can do away with you, O people, and bring others [in your place]. And ever is Allah competent to do that.
مَنْ كَانَ یُرِیْدُ ثَوَابَ الدُّنْیَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَكَانَ اللّٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟۠
مَنْஎவர்كَانَஇருந்தார்يُرِيْدُநாடுகிறார்ثَوَابَபலனைالدُّنْيَاஇவ்வுலகத்தின்فَعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்ثَوَابُபலன்الدُّنْيَاஇவ்வுலகத்தின்وَالْاٰخِرَةِ‌ ؕஇன்னும் மறுமையின்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்سَمِيْعًاۢநன்கு செவியுறுபவனாகبَصِيْرًا‏உற்று நோக்குபவனாக
மன் கான யுரீது தவாBபத் துன்யா Fப'இன்தல்லாஹி தவாBபுத் துன்யா வல் ஆகிரஹ்; வ கானல் லாஹு ஸமீ'அம் Bபஸீரா
முஹம்மது ஜான்
எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கிறது. அல்லாஹ் (ஒவ்வொருவரின் பிரார்த்தனையையும்) செவியுறுபவனாக, (ஒவ்வொருவரின் உள்ளத்தையும்) உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
IFT
இம்மைக்குரிய பயனை மட்டும் விரும்புகின்றவர், அல்லாஹ்விடத்தில் இம்மை, மறுமை இரண்டிற்குரிய நற்பயன்களும் இருக்கின்றன என்பதனைத் தெரிந்து கொள்ளட்டும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! எவர், இம்மையின் பலனை (மட்டும் அடைய) நாடுபவராக இருப்பின் (அவர் அறிந்து கொள்ளட்டும்) அல்லாஹ்விடத்திலோ, இம்மை இன்னும் மறுமையின் பலன் இருக்கின்றது, மேலும் அல்லாஹ் செவியேற்கிறவனாக, பார்க்கிறவனாக இருக்கின்றான்.
Saheeh International
Whoever desires the reward of this world - then with Allah is the reward of this world and the Hereafter. And ever is Allah Hearing and Seeing.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰۤی اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ ۚ اِنْ یَّكُنْ غَنِیًّا اَوْ فَقِیْرًا فَاللّٰهُ اَوْلٰی بِهِمَا ۫ فَلَا تَتَّبِعُوا الْهَوٰۤی اَنْ تَعْدِلُوْا ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேكُوْنُوْاஆகிவிடுங்கள்قَوَّامِيْنَநிலைநிறுத்துபவர்களாகبِالْقِسْطِநீதத்தைشُهَدَآءَசாட்சி கூறுபவர்களாகلِلّٰهِஅல்லாஹ்விற்காகوَلَوْஇருப்பினும்عَلٰٓىஎதிராகاَنْفُسِكُمْஉங்களுக்குاَوِஅல்லதுالْوَالِدَيْنِபெற்றோருக்குوَالْاَقْرَبِيْنَ‌ ؕஇன்னும் உறவினர்களுக்குاِنْ يَّكُنْஅவர் இருந்தால்غَنِيًّاஒரு செல்வந்தனாகاَوْஅல்லதுفَقِيْرًاஓர் ஏழையாகفَاللّٰهُஅல்லாஹ்اَوْلٰىமிக ஏற்றமானவன்بِهِمَا‌அவ்விருவருக்கும்فَلَا تَتَّبِعُواபின்பற்றாதீர்கள்الْهَوٰٓىஆசைகளைاَنْ تَعْدِلُوْا ۚநீங்கள் நீதி செலுத்துவதில்وَاِنْ تَلْوٗۤاநீங்கள் மாற்றினால்اَوْஅல்லதுتُعْرِضُوْاபுறக்கணித்தால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِمَاஎதைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்خَبِيْرًا‏ஆழ்ந்தறிந்தவனாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ கூனூ கவ்வ அமீன Bபில்கிஸ்தி ஷுஹதா'அ லில்லாஹி வ லவ் 'அலா அன்Fபுஸிகும் அவில் வாலிதய்னி வல் அக்ரBபீன் இ(ன்)ய் யகுன் கனிய்யன் அவ் Fபகீரன் Fபல்லாஹு அவ்லா Bபிஹிமா Fபலா தத்தBபி'உல் ஹவா அன் தஃதிலூ; வ இன் தல்வூ அவ் துஃரிளூ Fப இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
முஹம்மது ஜான்
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) ஆசை (அபிலாஷை)களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு) நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் (இத்தவறான) செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும் அல்லாஹ்வுக்காக சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! (நீங்கள் செலுத்தும் நீதியும், வழங்கும் சாட்சியும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கள் யாருக்காக சாட்சி சொல்கின்றீர்களோ) அவர் செல்வந்தராகவோ ஏழையாகவோ இருந்தாலும் சரியே! அல்லாஹ் அவர்களின் நலனில் உங்களைவிட அதிக அக்கறை உள்ளவனாக இருக்கின்றான். எனவே, மன இச்சையைப் பின்பற்றி நீதி தவறி விடாதீர்கள். நீங்கள் உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ, சாட்சியளிக்காமல் விலகிச் சென்றாலோ திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! (நீங்கள் சாட்சி கூறினால், அது உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதிலும், நீதியை நிலைநிறுத்தியவர்களாக அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள், (சாட்சி கூறப்படும்) அவர் பணக்காரராக இருந்தாலும் சரி, அல்லது ஏழையாக இருந்தாலும் சரி (உண்மையையே கூறுங்கள்.) அல்லாஹ் அவ்விருவருக்கும் (அவர்களைக் காப்பாற்றுவதற்கு) மிக உரியவன், இன்னும், நீங்கள் நியாயம் வழங்குவதில் (உங்கள் மனோ) இச்சையைப் பின்பற்றாதீர்கள், நீங்கள் (சாட்சியத்தை) மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறாது) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கின்றான்.
Saheeh International
O you who have believed, be persistently standing firm in justice, witnesses for Allah, even if it be against yourselves or parents and relatives. Whether one is rich or poor, Allah is more worthy of both. So follow not [personal] inclination, lest you not be just. And if you distort [your testimony] or refuse [to give it], then indeed Allah is ever, of what you do, Aware.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْ نَزَّلَ عَلٰی رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ ؕ وَمَنْ یَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْیَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اٰمِنُوْاநம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرَسُوْلِهٖஇன்னும் அவனின் தூதரைوَالْكِتٰبِஇன்னும் வேதத்தைالَّذِىْஎதுنَزَّلَஇறக்கினான்عَلٰىமீதுرَسُوْلِهٖதன் தூதர்وَالْكِتٰبِஇன்னும் வேதத்தைالَّذِىْۤஎதுاَنْزَلَஇறக்கினான்مِنْ قَبْلُ‌ؕமுன்னர்وَمَنْஎவர்يَّكْفُرْநிராகரிப்பார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَمَلٰٓٮِٕكَتِهٖஇன்னும் அவனின் வானவர்களைوَكُتُبِهٖஇன்னும் அவனின் வேதங்களைوَرُسُلِهٖஇன்னும் அவனின் தூதர்களைوَالْيَوْمِஇன்னும் நாளைالْاٰخِرِமறுமைفَقَدْதிட்டமாகضَلَّவழிகெட்டார்ضَلٰلًاۢவழிகேடாகبَعِيْدًا‏தூரமானது
யா அய்யுஹல் லதீன ஆமனூ ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வல் கிதாBபில் லதீ னZஜ்Zஜல 'அலா ரஸூலிஹீ வல் கிதாBபில் லதீ அன்Zஜல மின் கBப்ல்; வ மய் யக்Fபுர் Bபில்லாஹி வ மலா'இகதிஹீ வ குதுBபிஹீ வ ருஸுலிஹீ வல் யவ்மில் ஆகிரி Fபகத் ளல்ல ளலாலம் Bப'ஈதா
முஹம்மது ஜான்
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கிறானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்தான் செல்கிறான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும், அவன் தன்னுடைய தூதர் மீது இறக்கி அருளிய வேதத்தின் மீதும், இதற்கு முன்னால் அவன் இறக்கி வைத்த வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், மறுமைநாளையும் மறுக்கின்றானோ அவன் வழி கேட்டிலே உழன்று வெகுதூரம் சென்றுவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது இறக்கிவைத்த இவ்வேதத்தையும் (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதங்களையும் விசுவாசியுங்கள், இன்னும் எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நிராகரிக்கின்றாரோ, நிச்சயமாக அவர் மிக தூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டார்.
Saheeh International
O you who have believed, believe in Allah and His Messenger and the Book that He sent down upon His Messenger and the Scripture which He sent down before. And whoever disbelieves in Allah, His angels, His books, His messengers, and the Last Day has certainly gone far astray.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ سَبِیْلًا ۟ؕ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்ثُمَّபிறகுكَفَرُوْاநிராகரித்தனர்ثُمَّபிறகுاٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்ثُمَّபிறகுكَفَرُوْاநிராகரித்தனர்ثُمَّபிறகுازْدَادُوْاஅதிகப்படுத்தினார்கள்كُفْرًاநிராகரிப்பைلَّمْ يَكُنِஇருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்لِيَـغْفِرَஅவன் மன்னிப்பதற்குلَهُمْஅவர்களைوَلَاஇன்னும் இல்லைلِيَـهْدِيَهُمْநேர்வழிகாட்டுவதற்கு/அவர்களைسَبِيْلًا ؕ‏ஒரு வழியை
இன்னல் லதீன ஆமனூ தும்ம கFபரூ தும்ம ஆமனூ தும்ம கFபரூ தும்மZஜ் தாதூ குFப்ரல் லம் யகுனில் லாஹு லியக்Fபிர லஹும் வலா லியஹ்தியஹும் ஸBபீலா
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) நிராகரிப்பையே மென்மேலும் அதிகரிக்கிறார்களோ அவர்(களின் குற்றங்)களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அன்றி, (அவர்களின் தீயசெயல்களின் காரணமாக) அவர்களை நேரான பாதையில் செலுத்தவுமாட்டான்.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரித்தார்களோ, மறுமுறையும் நம்பிக்கை கொண்டு அதற்குப் பின்பும் நிராகரித்தார்களோ பிறகு தம் நிராகரிப்பில் தீவிரமாக மூழ்கிக்கொன்டே சென்றார்களோ அத்தகையோரை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்; மேலும், அவர்களுக்கு நேர்வழி காட்டவும் மாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் அவர்கள் விசுவாசங்கொண்டு, பின்னரும், நிராகரித்து, பின்னரும் நிராகரிப்பை அதிகப்படுத்திக் கொண்டனரே அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை; இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டுபவனாகவும், இல்லை.
Saheeh International
Indeed, those who have believed then disbelieved, then believed then disbelieved, and then increased in disbelief - never will Allah forgive them, nor will He guide them to a way.
بَشِّرِ الْمُنٰفِقِیْنَ بِاَنَّ لَهُمْ عَذَابًا اَلِیْمَا ۟ۙ
بَشِّرِநற்செய்தி கூறுவீராகالْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களுக்குبِاَنَّநிச்சயமாக/என்றுلَهُمْஅவர்களுக்குعَذَابًاவேதனைاَلِيْمًاۙ‏துன்புறுத்துகின்ற
Bபஷ்ஷிரில் முனாFபிகீன Bபி அன்ன லஹும் 'அதாBபன் அலீமா
முஹம்மது ஜான்
(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு “நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு” என்று நன்மாராயங் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘‘நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக உண்டு'' என்று நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
IFT
நயவஞ்சகர்களுக்கு திண்ணமாக துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது எனும் நற்செய்தியை அறிவிப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! வேஷதாரிகளாகிய) முனாஃபிக்குகளுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனை உண்டென்று நீர் அவர்களுக்கு நன்மாராயங் கூறுவீராக.
Saheeh International
Give tidings to the hypocrites that there is for them a painful punishment -
لَّذِیْنَ یَتَّخِذُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ اَیَبْتَغُوْنَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَاِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۟ؕ
ۨالَّذِيْنَஎவர்கள்يَتَّخِذُوْنَஎடுத்துக் கொள்கிறார்கள்الْـكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களைاَوْلِيَآءَபாதுகாவலர்களாகمِنْ دُوْنِஅன்றிالْمُؤْمِنِيْنَ‌ ؕநம்பிக்கையாளர்களைاَيَبْتَغُوْنَதேடுகின்றார்களா?عِنْدَهُمُஅவர்களிடம்الْعِزَّةَகண்ணியத்தைفَاِنَّ الْعِزَّةَநிச்சயமாக கண்ணியம்لِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதேجَمِيْعًا ؕ‏அனைத்தும்
அல்லதீன யத்தகிதூ னல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன்; அ-யBப்த கூன 'இன்தஹுமுல் 'இZஜ்Zஜத Fப இன்ன்னல் 'இZஜ்Zஜத லில்லாஹி ஜமீ'ஆ
முஹம்மது ஜான்
இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களையே (தங்கள்) நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை (பெற) விரும்புகிறார்களா? நிச்சயமாக கண்ணியங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அவர்களுக்குரியவை அல்ல.)
IFT
இவர்கள் இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்போரைத் தம் நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்நிராகரிப்போரிடம் கண்ணியத்தை தேடிச் செல்கின்றார்களா? உண்மையில் எல்லாவிதமான கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர் விசுவாசிகளைத் தவிர்த்து நிராகரிப்போரையே (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்கிறார்கள், இவர்கள், அவர்களிடத்தில் கண்ணியத்தை அடையத் தேடுகிறார்களா? (அது அவர்களுக்கில்லை, ஏனெனில்) நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
Saheeh International
Those who take disbelievers as allies instead of the believers. Do they seek with them honor [through power]? But indeed, honor belongs to Allah entirely.
وَقَدْ نَزَّلَ عَلَیْكُمْ فِی الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰیٰتِ اللّٰهِ یُكْفَرُ بِهَا وَیُسْتَهْزَاُ بِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰی یَخُوْضُوْا فِیْ حَدِیْثٍ غَیْرِهٖۤ ۖؗ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ ؕ اِنَّ اللّٰهَ جَامِعُ الْمُنٰفِقِیْنَ وَالْكٰفِرِیْنَ فِیْ جَهَنَّمَ جَمِیْعَا ۟ۙ
وَقَدْ نَزَّلَஇறக்கி விட்டான்عَلَيْكُمْஉங்கள் மீதுفِى الْـكِتٰبِவேதத்தில்اَنْஎன்றுاِذَا سَمِعْتُمْநீங்கள் செவியுற்றால்اٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்يُكْفَرُநிராகரிக்கப்படுகிறதுبِهَاஅவற்றைوَيُسْتَهْزَاஇன்னும் பரிகசிக்கப்படுகிறதுبِهَاஅவற்றைفَلَا تَقْعُدُوْاஉட்காராதீர்கள்مَعَهُمْஅவர்களுடன்حَتّٰىவரைيَخُوْضُوْاஈடுபடுவார்கள்فِىْ حَدِيْثٍபேச்சில்غَيْرِهٖۤ‌ ۖஅது அல்லாத வேறுاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்اِذًاஅப்போதுمِّثْلُهُمْ‌ؕஅவர்களைப் போன்றுاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்جَامِعُஒன்று சேர்ப்பான்‌الْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்களைوَالْكٰفِرِيْنَஇன்னும் நிராகரிப்பவர்களைفِىْ جَهَـنَّمَநரகத்தில்جَمِيْعَاۨ ۙ‏அனைவரையும்
வ கத் னZஜ்Zஜல 'அலய்கும் Fபில் கிதாBபி அன் இதா ஸமிஃதும் ஆயாதில் லாஹி யுக்Fபரு Bபிஹா வ யுஸ்தஹ்Zஜ உ Bபிஹா Fபலா தக்'உதூ ம'அஹும் ஹத்தா யகூளூ Fபீ ஹதீதின் கய்ரிஹ்; இன்னகும் இதம் மித்லுஹும்; இன்னல் லாஹ ஜாமி'உல் முனாFபிகீன வல் காFபிரீன Fபீ ஜஹன்னம ஜமீ'ஆ
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரை நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்). நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.
IFT
எங்காவது (சிலரால்) அல்லாஹ்வின் திருவசனங்கள் மறுத்துரைக்கப்படுவதையும் அவை ஏளனம் செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும் வரை (அங்கு) அவர்களுடன் நீங்கள் உட்காராதீர்கள் என்று (முன்பே) இவ்வேதத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். இனி அவ்வாறு செய்வீர்களாயின் நீங்களும் அவர்களைப் போன்றவராவீர்கள். உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் நயவஞ்சகர்களையும், நிராகரிப்பவர்களையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வுடைய வசனங்களை – அவற்றை நிராகரிக்கப்படுவதையோ-அல்லது பரிகசிக்கப்படுவதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம் என நிச்சயமாக அல்லாஹ்வாகிய அவன் (இவ்)வேதத்தில் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கிறான், (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்), நிச்சயமாக அல்லாஹ் (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் இன்னும் நிராகரிப்போர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடக்கூடியவன்.
Saheeh International
And it has already come down to you in the Book [i.e., the Qur’an] that when you hear the verses of Allah [recited], they are denied [by them] and ridiculed; so do not sit with them until they enter into another conversation. Indeed, you would then be like them. Indeed, Allah will gather the hypocrites and disbelievers in Hell all together -
لَّذِیْنَ یَتَرَبَّصُوْنَ بِكُمْ ۚ فَاِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللّٰهِ قَالُوْۤا اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ۖؗ وَاِنْ كَانَ لِلْكٰفِرِیْنَ نَصِیْبٌ ۙ قَالُوْۤا اَلَمْ نَسْتَحْوِذْ عَلَیْكُمْ وَنَمْنَعْكُمْ مِّنَ الْمُؤْمِنِیْنَ ؕ فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَلَنْ یَّجْعَلَ اللّٰهُ لِلْكٰفِرِیْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ سَبِیْلًا ۟۠
الَّذِيْنَஎவர்கள்يَتَرَ بَّصُوْنَஎதிர்பார்க்கின்றனர்بِكُمْ‌ ۚஉங்களுக்குفَاِنْ كَانَஇருந்தால்لَـكُمْஉங்களுக்குفَتْحٌஒரு வெற்றிمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துقَالُـوْۤاகூறினர்اَلَمْ نَـكُنْநாங்களும் இருக்க வில்லையா?مَّعَكُمْ ۖஉங்களுடன்وَاِنْ كَانَஇருந்தால்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குنَصِيْبٌۙஓர் அளவுقَالُـوْۤاகூறினர்اَلَمْ نَسْتَحْوِذْநாங்கள் வெற்றி கொள்ளவில்லையேعَلَيْكُمْஉங்கள் மீதுوَنَمْنَعْكُمْஇன்னும் உங்களைப் பாதுகாக்க(வில்லையா)مِّنَஇருந்துالْمُؤْمِنِيْنَ‌ ؕநம்பிக்கையாளர்கள்فَاللّٰهُஅல்லாஹ்يَحْكُمُதீர்ப்பளிப்பான்بَيْنَكُمْஉங்களுக்கிடையில்يَوْمَ الْقِيٰمَةِ ؕமறுமை நாளில்وَلَنْ يَّجْعَلَஆக்கவே மாட்டான்اللّٰهُஅல்லாஹ்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَلَىமீதுالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்سَبِيْلًا‏ஒரு வழியை
அல்லதீன யதரBப் Bபஸூன Bபிகும் Fப இன் கான லகும் Fபத்ஹும் மினல் லாஹி காலூ அலம் னகும் ம'அகும் வ இன் கான லில்காFபிரீன னஸீBபுன் காலூ அலம் னஸ்தஹ் வித் 'அலய்கும் வ னம்ம்னஃகும் மினல் மு'மினீன்; Fபல்லாஹு யஹ்குமு Bபய்னகும் யவ்மல் கியாமஹ்; வ லய் யஜ்'அலல் லாஹு லில்காFபிரீன 'அலல் மு'மினீன ஸBபீலா
முஹம்மது ஜான்
(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர்; அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றனர்; மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று: அவர்களுடன் சேர்ந்து) “உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?” என்று கூறுகின்றனர்; எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்; மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நயவஞ்சகர்களாகிய) இவர்கள் உங்களைக் கவனித்த வண்ணம் இருக்கின்றனர். அல்லாஹ்வி(ன் உதவியி)னால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால் (உங்களிடம் வந்து) நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பவர்களுக்கு ஏதும் வெற்றி கிடைத்துவிட்டால் (அவர்களிடம் சென்று) ‘‘நாங்கள் (நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவி புரிந்து) உங்களை வெற்றி கொள்ளக் கூடுமாயிருந்தும் நம்பிக்கைகொண்ட அவர்களிடமிருந்து நாம் உங்களைப் பாதுகாக்கவில்லையா?'' என்று கூறுகின்றனர். உங்களுக்கும் அ(ந்நய)வ(ஞ்சக)ர்களுக்கும் இடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை வெற்றிகொள்ள அல்லாஹ் ஒரு வழியையும் வைக்கமாட்டான்.
IFT
இந்நயவஞ்சகர்கள் உங்களுக்கு என்ன நேரப் போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு வெற்றி கிட்டினால், “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுவார்கள். நிராகரிப்போரின் கை ஓங்கியிருந்தால், “உங்களுக்கு எதிராகப் போரிட நாங்கள் சக்தி பெற்றிருக்கவில்லையா? (இருந்தும்) இறை நம்பிக்கையாளரிடமிருந்து நாங்கள் உங்களைக் காப்பாற்றவில்லையா?” என்று (அவர்களிடம்) கூறுவார்கள். உங்களுக்கும் அவர்களுக்குமிடையே இதைக் குறித்து மறுமைநாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். (அத்தீர்ப்பில்) இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக, நிராகரிப்பவர்கள் மேலோங்க எவ்வழியும் அல்லாஹ் ஒரு போதும் வைத்திடமாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வேஷதாரிகளாகிய) இத்தகையோர் - உங்களைப்பற்றி எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர், அல்லாஹ்வின் உதவியினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர், நிராகரிப்போருக்கு பங்கேதும் கிடைத்துவிட்டால் “நாங்கள் உங்களை வெற்றி கொள்ளக் கூடிய நிலையிலிருந்தும், விசுவாசங் கொண்ட அவர்களிடமிருந்து நாங்கள் உங்களைத் தடுக்கவில்லையா?” என்று கூறுகின்றனர், ஆகவே, உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமைநாளில் தீர்ப்பளிப்பான், இன்னும், விசுவாசிகளுக்கு எதிராக அந்நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் யாதொரு வழியையும் ஆக்கவே மாட்டான்.
Saheeh International
Those who wait [and watch] you. Then if you gain a victory from Allah, they say, "Were we not with you?" But if the disbelievers have a success, they say [to them], "Did we not gain the advantage over you, but we protected you from the believers?" Allah will judge between [all of] you on the Day of Resurrection, and never will Allah give the disbelievers over the believers a way [to overcome them].
اِنَّ الْمُنٰفِقِیْنَ یُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَی الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰی ۙ یُرَآءُوْنَ النَّاسَ وَلَا یَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِیْلًا ۟ؗۙ
اِنَّநிச்சயமாகالْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்கள்يُخٰدِعُوْنَவஞ்சிக்கின்றனர்اللّٰهَஅல்லாஹ்வைوَهُوَஅவன்خَادِعُوْهُمْ‌ ۚவஞ்சிப்பவன்/அவர்களைوَاِذَا قَامُوْۤاஅவர்கள் நின்றால்اِلَى الصَّلٰوةِதொழுகைக்குقَامُوْاநிற்கின்றனர்كُسَالٰى ۙசோம்பேறிகளாகيُرَآءُوْنَகாண்பிக்கின்றனர்النَّاسَமனிதர்களுக்குوَلَا يَذْكُرُوْنَநினைவு கூரமாட்டார்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِلَّاதவிரقَلِيْلًا ۙ‏குறைவாகவே
இன்னல் முனாFபிகீன யுகாதி'ஊனல் லாஹ வ ஹுவ காதி'உஹும் வ இதா காமூ இலஸ் ஸலாதி காமூ குஸாலா யுரா'ஊனன் னாஸ வலா யத்குரூனல் லாஹ இல்லா கலீலா
முஹம்மது ஜான்
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகிறான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கிறார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே தவிர அல்லாஹ்வை தியானிப்பதில்லை.
IFT
இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகின்றார்கள். உண்மையில் அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும், அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவுகூருகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் அல்லாஹ்வை வஞ்சிக்க கருதுகின்றனர், இன்னும், அவனோ அவர்களை வஞ்சிக்க்ககூடியவனாக இருக்கின்றான், இன்னும், அவர்கள் தொழுகைக்காகத் தயாரானால் சோம்பேறிகளாகவே நிற்கிறார்கள், மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள், இன்னும், அவர்கள் வெகு சொற்பமாகத் தவிர அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
Saheeh International
Indeed, the hypocrites [think to] deceive Allah, but He is deceiving them. And when they stand for prayer, they stand lazily, showing [themselves to] the people and not remembering Allah except a little,
مُّذَبْذَبِیْنَ بَیْنَ ذٰلِكَ ۖۗ لَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ وَلَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟
مُّذَبْذَبِيْنَதடுமாறியவர்களாகبَيْنَ ۖஇடையில்ذٰ لِكَஅதற்குلَاۤஇல்லைاِلٰى هٰٓؤُلَاۤءِஇவர்களுடன்وَلَاۤஇல்லைاِلٰىஉடன்هٰٓؤُلَاۤءِ‌ ؕஇவர்கள்وَمَنْஎவரைيُّضْلِلِவழிகெடுப்பான்اللّٰهُஅல்லாஹ்فَلَنْ تَجِدَஅறவே பெறமாட்டீர்لَهٗஅவருக்குسَبِيْلًا‏ஒரு வழியை
முதBப்தBபீன Bபய்ன தாலிக லா இலா ஹா' உலா'இ வ லா இலா ஹா'உலா'; வ மய் யுள்லி லில்லாஹு Fபலன் தஜித லஹூ ஸBபீலா
முஹம்மது ஜான்
இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுடனுமில்லை. (வஞ்சகர்களாகிய) இவர்களுடனுமில்லை. மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எவர்களை அல்லாஹ் வழிதவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு நீர் ஒரு வழியையும் காணமாட்டீர்.
IFT
(முழுமையாக இவர்களோடுமில்லாமல், அவர்களோடுமில்லாமல்), இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடையில் தடுமாறி நிற்கிறார்கள். அல்லாஹ் எவனை வழிகெடுக்கின்றானோ அவனை (நேர்வழிப் படுத்த) வேறு எந்த வழிவகையும் நீர் காணமாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ந்த முனாஃபிக்குகள் இறை நிராகரிப்பு, விசுவாசம் ஆகிய)வற்றிற்கு மத்தியில் தத்தளித்தவர்களாக இருக்கின்றனர். (இவர்கள் மூமின்களாகிய) அவர்களுடனுமில்லை; (காஃபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. இன்னும் அல்லாஹ் எவரை வழிதவறவிட்டுவிடுகிறானோ அவருக்கு(நபியே!) நீர் யாதொரு வழியைக் காணவேமாட்டீர்
Saheeh International
Wavering between them, [belonging] neither to these [i.e., the believers] nor to those [i.e., the disbelievers]. And whoever Allah sends astray - never will you find for him a way.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ اَتُرِیْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَیْكُمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَتَّخِذُواஆக்காதீர்கள்الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களைاَوْلِيَآءَபொறுப்பாளர்களாகمِنْ دُوْنِஅன்றிالْمُؤْمِنِيْنَ‌ ؕநம்பிக்கையாளர்கள்اَ تُرِيْدُوْنَநாடுகிறீர்களா?اَنْ تَجْعَلُوْاநீங்கள் ஆக்குவதுلِلّٰهِஅல்லாஹ்விற்குعَلَيْكُمْஉங்களுக்கு எதிராகسُلْطٰنًاஒரு சான்றைمُّبِيْنًا‏தெளிவானது
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் காFபிரீன அவ்லியா'அ மின் தூனில் மு'மினீன்; அதுரீ தூன அன் தஜ்'அலூ லில்லாஹி 'அலய்கும் ஸுல்தானம் முBபீனா
முஹம்மது ஜான்
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகிறீர்களா?
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்போரை உங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான ஆதாரத்தை நீங்களே அல்லாஹ்விடம் கொடுத்திட விரும்புகின்றீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விசுவாசிகளையல்லாமல், நிராகரிப்போரை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (இதன் மூலம் உங்களுக்கெதிராக அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான சான்றை ஏற்படுத்திவிட நீங்கள் நாடுகின்றீர்களா?
Saheeh International
O you who have believed, do not take the disbelievers as allies instead of the believers. Do you wish to give Allah against yourselves a clear case?
اِنَّ الْمُنٰفِقِیْنَ فِی الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِیْرًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُنٰفِقِيْنَநயவஞ்சகர்கள்فِى الدَّرْكِஅடுக்கில்الْاَسْفَلِமிகக் கீழ்مِنَ النَّارِ‌ ۚநரகத்தின்وَلَنْ تَجِدَகாணமாட்டீர்لَهُمْஅவர்களுக்குنَصِيْرًا ۙ‏ஓர் உதவியாளரை
இன்னல் முனாFபிகீன Fபித்தர்கில் அஸ்Fபலி மினன் னாரி வ லன் தஜித லஹும் னஸீரா
முஹம்மது ஜான்
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காணமாட்டீர்.
IFT
திண்ணமாக, நயவஞ்சகர்கள் நரகத்தின் மிக அடித்தட்டிற்கே செல்வார்கள். மேலும், அவர்களுக்கு உதவி செய்வோர் எவரையும் நீர் காணமாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (இவ்வேஷதாரிகளாகிய) முனாஃபிக்குகள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில் இருப்பார்கள், இன்னும் (அங்கு) அவர்களுக்கு உதவியாளரை நீர் காணவே மாட்டீர்.
Saheeh International
Indeed, the hypocrites will be in the lowest depths of the Fire - and never will you find for them a helper -
اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِیْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓىِٕكَ مَعَ الْمُؤْمِنِیْنَ ؕ وَسَوْفَ یُؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்تَابُوْاதிருந்தி பாவமன்னிப்புக் கோரினார்وَاَصْلَحُوْاஇன்னும் சீர்திருத்தினர்وَاعْتَصَمُوْاஇன்னும் பற்றிப் பிடித்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَاَخْلَصُوْاஇன்னும் தூய்மைப்படுத்தினர்دِيْنَهُمْதங்கள் வழிபாட்டைلِلّٰهِஅல்லாஹ்விற்குفَاُولٰٓٮِٕكَஅவர்கள்مَعَஉடன்الْمُؤْمِنِيْنَ‌ ؕநம்பிக்கையாளர்கள்وَسَوْفَ يُـؤْتِகொடுப்பான்اللّٰهُஅல்லாஹ்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குاَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தானது
இல்லல் லதீன தாBபூ வ அஸ்லஹூ வஃதஸமூ Bபில்லாஹி வ அக்லஸூ தீனஹும் லில்லாஹி Fபஉலா'இக ம'அல் மு'மினீன வ ஸவ்Fப யு'தில் லாஹுல் மு'மினீன அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும் எவர்கள் (தங்கள் பாவத்திற்காக கைசேதப்பட்டு அதிலிருந்து) விலகி, நற்செயல்களையும் செய்து, அல்லாஹ்வை (அவனுடைய கட்டளைகளை) உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகக் கலப்பற்றதாகவும் ஆக்கி வைக்கிறார்களோ அவர்கள் உண்மை நம்பிக்கையாளர்களுடன்தான் (நேசமாக) இருப்பார்கள். உண்மை நம்பிக்கையாளர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் மகத்தான (நற்)கூலியை அளிப்பான்.
IFT
ஆயினும், (இவர்களில்) யார் பாவமன்னிப்புக் கோருபவராக விளங்கி, தம் செயல்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ, மேலும், அல்லாஹ்வின் வேதத்தை இறுகப் பற்றிக்கொண்டு தமது தீனை நெறியை அல்லாஹ்வுக்கே உரித்தானதாக்கிக் கொள்கின்றார்களோ, அத்தகையோர் இறைநம்பிக்கையாளர்களுடன் இருப்பர். மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை விரைவில் வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால் அவர்களில்) தங்கள் பாவத்திற்காகப் பச்சாதாபப்பட்டு (அதிலிருந்து விலகி தங்கள் செயல்களை) சீர்திருந்தி அல்லாஹ்வை (அவனுடைய வேதத்தை) உறுதியாகப் பிடித்துக்கொண்டு தங்கள் மார்க்கத்தை (-வணக்கத்தை) அல்லாஹ்வுக்காகக் கலப்பற்றதாக்கிக் கொள்கின்றார்களே அத்தகையோர் தவிர, அவர்கள் விசுவாசிகளுடன் (மறுமையில்) இருப்பார்கள், இத்தகைய விசுவாசிகளுக்கு அல்லாஹ் மகத்தான (நற்)கூலியை வழங்குவான்.
Saheeh International
Except for those who repent, correct themselves, hold fast to Allah, and are sincere in their religion for Allah, for those will be with the believers. And Allah is going to give the believers a great reward.
مَا یَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ ؕ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِیْمًا ۟
مَاஎன்ன?يَفْعَلُசெய்வான்اللّٰهُஅல்லாஹ்بِعَذَابِكُمْஉங்களை வேதனை செய்வது கொண்டுاِنْ شَكَرْتُمْநீங்கள் நன்றி செலுத்தினால்وَاٰمَنْتُمْ‌ ؕஇன்னும் நீங்கள் நம்பிக்கை கொண்டால்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்شَاكِرًاநன்றியாளனாகعَلِيْمًا‏நன்கறிந்தவனாக
மா யFப்'அலுல் லாஹு Bபி 'அதாBபிகும் இன் ஷகர்தும் வ ஆமன்தும்; வ கானல் லாஹு ஷாகிரன் 'அலீமா
முஹம்மது ஜான்
நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப்போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலிகொடுப்பவனாக, யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
நீங்கள் நன்றி செலுத்துபவர்களாய் இருந்து இறைநம்பிக்கையின் வழியில் நடப்பீர்களாயின் உங்களை ஏன் அல்லாஹ் தண்டிக்கப் போகின்றான்? மேலும், அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டும் (அவனை) விசுவாசம் கொண்டுமிருப்பின் உங்களை வேதனை செய்து அவன் என்ன செய்யப்போகிறான்? இன்னும் அல்லாஹ்வோ நன்றி பாராட்டுகிறவனாக, யாவையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
What would Allah do with [i.e., gain from] your punishment if you are grateful and believe? And ever is Allah Appreciative and Knowing.
لَا یُحِبُّ اللّٰهُ الْجَهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ ؕ وَكَانَ اللّٰهُ سَمِیْعًا عَلِیْمًا ۟
لَا يُحِبُّவிரும்ப மாட்டான்اللّٰهُஅல்லாஹ்الْجَــهْرَபகிரங்கப்படுத்தி பேசுவதைبِالسُّوْٓءِதீமையைمِنَ الْقَوْلِபேச்சில்اِلَّاதவிரمَنْஎவர்ظُلِمَ‌ؕஅநீதி இழைக்கப்பட்டார்وَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்سَمِيْعًاநன்குசெவியுறுபவனாகعَلِيْمًا‏நன்கறிபவனாக
லா யுஹிBப்Bபுல்லாஹுல் ஜஹ்ர Bபிஸ் ஸூ'இ மினல் கவ்லி இல்லா மன் ளுலிம்; வ கானல்லாஹு ஸமீ'அன் 'அலீமா
முஹம்மது ஜான்
அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனாக நன்கறிபவனாக, இருக்கிறான்.
IFT
அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அநீதமிழைக்கப்பட்டவரைத் தவிர வார்த்தையில் தீயதை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான், அல்லாஹ் (யாவையும்) செவியேற்கிறவனாக நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
Allah does not like the public mention of evil except by one who has been wronged. And ever is Allah Hearing and Knowing.
اِنْ تُبْدُوْا خَیْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْٓءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِیْرًا ۟
اِنْ تُبْدُوْاநீங்கள்வெளிப்படுத்தினால்خَيْرًاநன்மையைاَوْஅல்லதுتُخْفُوْهُநீங்கள் மறைத்தால்/அதைاَوْஅல்லதுتَعْفُوْاநீங்கள் மன்னித்தால்عَنْ سُوْٓءٍஒரு கெடுதியைفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்عَفُوًّاபெரிதும் பிழை பொறுப்பவனாகقَدِيْرًا‏பேராற்றலுடையவனாக
இன் துBப்தூ கய்ரன்ன் அவ் துக்Fபூஹு அவ் தஃFபூ 'அன் ஸூ'இன் Fப இன்னல் லாஹ கான 'அFபுவ்வன் கதீரா
முஹம்மது ஜான்
நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் (அது உங்களுக்கே மிக நன்று. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிக மன்னிப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
IFT
(அநீதி இழைக்கப்பட்ட நிலையில், தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேச உங்களுக்கு அனுமதியுண்டு.) ஆனால், நீங்கள் வெளிப்படையாகவும் மறைவாகவும் நற்செயலை செய்தவண்ணம் இருங்கள்; அல்லது குறைந்தபட்சம் (அநீதியாளர்களின் தீங்கை) மன்னித்துவிடுங்கள். அவ்வாறு செய்தால் (தண்டனை வழங்க) அவன் முழு ஆற்றல் பெற்றிருக்கின்றான். (ஆயினும்) அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
செய்யும் நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது ஒருவர் உங்களுக்குச் செய்த யாதொரு தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், (குற்றங்களை) மிக்க மன்னிப்போனாக, (தண்டிக்கப்) பேராற்றலுடையோனாக இருக்கின்றான்.
Saheeh International
If [instead] you show [some] good or conceal it or pardon an offense - indeed, Allah is ever Pardoning and Competent.
اِنَّ الَّذِیْنَ یَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَیُرِیْدُوْنَ اَنْ یُّفَرِّقُوْا بَیْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَیَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍ ۙ وَّیُرِیْدُوْنَ اَنْ یَّتَّخِذُوْا بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۙ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يَكْفُرُوْنَநிராகரிக்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرُسُلِهٖஇன்னும் அவனுடைய தூதர்களைوَيُرِيْدُوْنَஇன்னும் நாடுகிறார்கள்اَنْ يُّفَرِّقُوْاஅவர்கள் பிரிவினை செய்வதுبَيْنَஇடையில்اللّٰهِஅல்லாஹ்وَرُسُلِهٖஇன்னும் அவனுடைய தூதர்களைوَيَقُوْلُوْنَஇன்னும் கூறுகின்றனர்نُؤْمِنُநம்பிக்கை கொள்வோம்بِبَعْضٍசிலரைوَّنَكْفُرُஇன்னும் நிராகரிப்போம்بِبَعْضٍۙசிலரைوَّيُرِيْدُوْنَஇன்னும் நாடுகிறார்கள்اَنْ يَّتَّخِذُوْاஅவர்கள் ஏற்படுத்தبَيْنَமத்தியில்ذٰ لِكَஅதற்குسَبِيْلًا ۙ‏ஒரு பாதையை
இன்னல் லதீன யக்க்Fபுரூன Bபில்லாஹி வ ருஸுலிஹீ வ யுரீதூன அய் யுFபர்ரிகூ Bபய்னல் லாஹி வ ருஸுலிஹீ வ யகூலூன னு'மினு BபிBபஃளி(ன்)வ் வ னக்Fபுரு BபிBபஃ ளி(ன்)வ் வ யுரீதூன அய் யத்தகிதூ Bபய்ன தாலிக ஸBபீலா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர்களில்) ‘‘சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகிறார்களோ,
IFT
எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் வேற்றுமையை ஏற்படுத்த விரும்புகின்றார்களோ, மேலும் நாங்கள் இறைத்தூதர்களில் சிலரை ஏற்றுக்கொள்வோம்; சிலரை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்றார்களோ, மேலும், இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடைப்பட்ட ஒரு வழியினை அமைத்திட விரும்புகின்றார்களோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பாகுபாடு செய்வதை நாடி, “தூதர்களில் சிலரை நாம் விசுவாசிப்போம், இன்னும் சிலரை நாம் நிராகரிப்போம் எனவும் கூறி, (நிராகரிப்பு, விசுவாசம் ஆகிய) இவற்றிற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்தவும் நாடுகின்றார்களே அத்தகையோர்,
Saheeh International
Indeed, those who disbelieve in Allah and His messengers and wish to discriminate between Allah and His messengers and say, "We believe in some and disbelieve in others," and wish to adopt a way in between -
اُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ حَقًّا ۚ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟
اُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْـكٰفِرُوْنَநிராகரிப்பாளர்கள்حَقًّا‌ ۚஉண்மையில்وَ اَعْتَدْنَاஇன்னும் ஏற்படுத்தியுள்ளோம்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குعَذَابًاவேதனையைمُّهِيْنًا‏இழிவு தரும்
உலா'இக ஹுமுல் காFபிரூன ஹக்காவ்; வ அஃதத்னா லில்காFபிரீன 'அதாBபம் முஹீனா
முஹம்மது ஜான்
இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள்தான் உண்மையில் நிராகரிப்பவர்கள். நாம் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
அவர்கள்தாம் உண்மையில் அப்பட்டமான நிராகரிப்போர் ஆவர். இந்நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள்தான் உண்மையாகவே நிராகரிப்போராவர், இன்னும், நிராகரிப்போருக்கு, நாம் இழிவுதரும் வேதனையையே தயார் படுத்தியும் வைத்திருக்கின்றோம்.
Saheeh International
Those are the disbelievers, truly. And We have prepared for the disbelievers a humiliating punishment.
وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ یُفَرِّقُوْا بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰٓىِٕكَ سَوْفَ یُؤْتِیْهِمْ اُجُوْرَهُمْ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرُسُلِهٖஇன்னும் அவனுடைய தூதர்களைوَلَمْ يُفَرِّقُوْاஇன்னும் பிரிவினை செய்யவில்லைبَيْنَஇடையில்اَحَدٍஒருவர்مِّنْهُمْஅவர்களில்اُولٰٓٮِٕكَஅவர்கள்سَوْفَவிரைவில் يُؤْتِيْهِمْஅவர்களுக்கு கொடுப்பான்اُجُوْرَகூலிகளைهُمْ ‌ؕஅவர்களுடையوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏மகாகருணையாளனாக
வல்லதீன ஆமனூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வ லம் யுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் உலா'இக ஸவ்Fப யு'தீஹிம் உஜூரஹும்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கிடையில் பிரிவினை செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளை (அல்லாஹ் மறுமையில்) கொடுப்பான். அல்லாஹ் மிக்க பிழைபொறுப்பவனாக, மிகக் கருணை காட்டுபவனாக இருக்கிறான்.
IFT
(ஆனால்) எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்கள் அனைவரையும் நம்பி தூதர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டவுமில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலிகளை நிச்சயம் வழங்குவோம். மேலும், அல்லாஹ் அதிக மன்னிப்பு வழங்குபவனும் கருணை நிறைந்தோனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் விசுவாசித்து அவர்களில் எவருக்கிடையிலும் பிரிவினை செய்யவில்லையோ அத்தகையோர் - அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலிகளை விரைவில் அல்லாஹ் (மறுமையில்) கொடுப்பான், இன்னும் அல்லாஹ் மிக்க (பிழை) பொறுப்போனாக மிகக் கிருபையுடையோனாக இருக்கின்றான்.
Saheeh International
But they who believe in Allah and His messengers and do not discriminate between any of them - to those He is going to give their rewards. And ever is Allah Forgiving and Merciful.
یَسْـَٔلُكَ اَهْلُ الْكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَیْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ فَقَدْ سَاَلُوْا مُوْسٰۤی اَكْبَرَ مِنْ ذٰلِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰلِكَ ۚ وَاٰتَیْنَا مُوْسٰی سُلْطٰنًا مُّبِیْنًا ۟
يَسْأَلُكَகேட்கிறார்(கள்)/உம்மிடம்اَهْلُ الْـكِتٰبِவேதக்காரர்கள்اَنْ تُنَزِّلَநீர் இறக்கும்படிعَلَيْهِمْஅவர்கள் மீதுكِتٰبًاஒரு வேதத்தைمِّنَ السَّمَآءِ‌வானத்திலிருந்துفَقَدْதிட்டமாகسَاَ لُوْاகேட்டனர்مُوْسٰٓىமூஸா(விடம்)اَكْبَرَமிகப் பெரியதைمِنْ ذٰ لِكَஇதை விடفَقَالُوْۤاகூறினர்اَرِنَاஎங்களுக்குக் காண்பிاللّٰهَஅல்லாஹ்வைجَهْرَةًகண்கூடாகفَاَخَذَتْهُمُஆகவே, அவர்களைப் பிடித்ததுالصّٰعِقَةُஇடிமுழக்கம்بِظُلْمِهِمْ‌ ۚஅவர்களின் அநியாயத்தினால்ثُمَّபிறகுاتَّخَذُواஎடுத்துக் கொண்டனர்الْعِجْلَகாளைக் கன்றைمِنْۢ بَعْدِபின்னர்مَا جَآءَتْهُمُஅவர்களிடம் வந்த(து)الْبَيِّنٰتُதெளிவான அத்தாட்சிகள்فَعَفَوْنَاமன்னித்தோம்عَنْ ذٰ لِكَ‌ ۚஅதைوَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்مُوْسٰىமூஸாவிற்குسُلْطٰنًاசான்றைمُّبِيْنًا‏தெளிவான(து)
யஸ்'அலுக அஹ்லுல் கிதாBபி அன் துனZஜ்Zஜில 'அலய்ஹிம் கிதாBபம் மினஸ் ஸமா'இ Fபகத் ஸ அலூ மூஸா அக்Bபர மின் தாலிக Fபகாலூ அரினல் லாஹ ஜஹ்ரதன் Fப அகதத் ஹுமுஸ் ஸா'இகது Bபிளுல்மிஹிம்; தும்மத் தகதுல் 'இஜ்ல மிம் Bபஃதி மா ஜா'அத் ஹுமுல் Bபய்யினாது Fப'அFபவ்னா 'அன்ன் தாலிக்; வ ஆதய்னா மூஸா ஸுல்தானம் முBபீனா
முஹம்மது ஜான்
(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வேதத்தையுடையவர்கள் (அவர்கள் விரும்புகிறபடி) வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக இதைவிடப் பெரியதொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டு ‘‘அல்லாஹ்வை எங்களுக்குக் கண்கூடாகக் காண்பிப்பீராக'' என்று கூறினார்கள்.ஆகவே, அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடி முழக்கம் பிடித்துக்கொண்டது. (இதுமட்டுமா?) அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னரும் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். இதையும் நாம் மன்னித்து (அவர்களுடைய நபி) மூஸாவுக்கு தெளிவான அத்தாட்சியைக் கொடுத்தோம்.
IFT
(நபியே!) வேதம் அருளப்பட்டவர்கள் (எழுதப்பட்ட நிலையில்) ஒரு வேதத்தை வானத்திலிருந்து தங்கள் மீது இறக்கி வைக்குமாறு இன்று உம்மிடம் கேட்கின்றார்கள் எனில், உண்மையில் இவர்கள் மூஸாவிடம் இதைவிடக் கொடூரமான கோரிக்கை விடுத்திருந்தார்கள். அவரிடமோ அவர்கள், “அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டுவீராக!” என்று கூறியிருந்தனர். இவ்வாறு அவர்கள் அக்கிரமமாக நடந்து கொண்டதால், திடீரென அவர்களை ஒரு பேரிடி தாக்கியது. பிறகு அவர்களுக்குத் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் பசுவின் கன்றைத் தங்களுடைய தெய்வமாக்கிக் கொண்டார்கள். அதனையும் நாம் மன்னித்தோம். நாம் மூஸாவிற்குத் தெளிவான கட்டளையை வழங்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) வேதத்தையுடையவர்கள், (தாங்கள் விரும்புகின்ற பிரகாரம்) வானத்திலிருந்து தங்கள் மீது ஒரு வேதத்தை நீர் இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர், நிச்சயமாக இதைவிடப் பெரிய தொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டார்கள், ஆகவே, அல்லாஹ்வை எங்களுக்குப் பகிரங்கமாகக் காண்பிப்பீராக” என்று கூறினார்கள், பின்னர் அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை பெரும் சப்தம் (நெருப்பு வடிவில்) தாக்கியது., பின்னர் அவர்களிடம் அத்தாட்சிகள் வந்ததன் பின்னும் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர், அப்பொழுது(ம்) அதனை நாம் மன்னித்தோம், இன்னும் மூஸாவுக்குத் தெளிவான சான்றையும் கொடுத்தோம்.
Saheeh International
The People of the Scripture ask you to bring down to them a book from the heaven. But they had asked of Moses [even] greater than that and said, "Show us Allah outright," so the thunderbolt struck them for their wrongdoing. Then they took the calf [for worship] after clear evidences had come to them, and We pardoned that. And We gave Moses a clear authority.
وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِیْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِی السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟
وَرَفَعْنَاமேலும் உயர்த்தினோம்فَوْقَهُمُஅவர்களுக்கு மேல்الطُّوْرَமலையைبِمِيْثَاقِهِمْஅவர்களுடைய வாக்குறுதியின் காரணமாகوَقُلْنَاஇன்னும் கூறினோம்لَهُمُஅவர்களுக்குادْخُلُواநுழையுங்கள்الْبَابَவாசலில்سُجَّدًاதலை குணிந்தவர்களாகوَّقُلْنَاஇன்னும் கூறினோம்لَهُمْஅவர்களுக்குلَا تَعْدُوْاவரம்பு மீறாதீர்கள்فِى السَّبْتِசனிக்கிழமையில்وَاَخَذْنَاஇன்னும் எடுத்தோம்مِنْهُمْஅவர்களிடம்مِّيْثَاقًاவாக்குறுதியைغَلِيْظًا‏உறுதியானது
வ ரFபஃனா Fபவ்கஹுமுத் தூர Bபிமீதாகிஹிம் வ குல்னா லஹுமுத் குலுல் BபாBப ஸுஜ்ஜத(ன்)வ் வ குல்னா லஹும் லா தஃதூ Fபிஸ் ஸBப்தி வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
முஹம்மது ஜான்
மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; இன்னும் “இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்” என்று சொன்னோம்; மேலும் “(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்கு கூறினோம்; இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடம் வாக்குறுதி வாங்குவதற்காகத் ‘தூர்' (ஸீனாய்) என்னும் மலையை அவர்கள் மீது உயர்த்திய சமயத்தில் ‘‘(இந்நகரத்தின்) வாயிலில் தலைகுனிந்து வணங்கியவர்களாகவே செல்லுங்கள்'' என்று நாம் அவர்களுக்கு கூறினோம். (மீன் வேட்டையாட) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறி (இவற்றிற்காகவும்) உறுதியான வாக்குறுதியை நாம் அவர்களிடம் பெற்றிருந்தோம். (எனினும் அவர்கள் மாறிவிட்டனர்.)
IFT
இன்னும், தூர்மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தி (இக்கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு) அவர்களிடம் வாக்குறுதி வாங்கினோம். “தலை தாழ்த்தியவாறு வாயிலில் நுழையுங்கள்!” என்று நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டோம். ஸப்த் சனிக்கிழமை விதியை மீறாதீர்கள் என்றும் நாம் அவர்களுக்குக் கூறினோம்; மேலும், இவ்விஷயத்தில் திடமான வாக்குறுதியையும் அவர்களிடம் நாம் வாங்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களிடம் உடன்படிக்கை வாங்குவதற்காக தூர்(ஸினாய் மலையை) அவர்களின் மீது உயர்த்தினோம், அன்றியும் “அந்நகரத்தின் (வாயிலில் தலைகுனிந்தவர்களாக பிரவேசியுங்கள்” என்று நாம் அவர்களுக்குக் கூறினோம், மேலும் (மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் நாம் அவர்களுக்குக் கூறினோம், (இன்னும் இவற்றிற்காக) உறுதியான வாக்குறுதியையும் நாம் அவர்களிடம் வாங்கினோம்., (எனினும்) அவர்கள் வாக்குறுதியை மீறி விட்டனர்.
Saheeh International
And We raised over them the mount for [refusal of] their covenant; and We said to them, "Enter the gate bowing humbly"; and We said to them, "Do not transgress on the sabbath"; and We took from them a solemn covenant.
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰیٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَیْهَا بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۪۟
فَبِمَا نَقْضِهِمْஆகவே, அவர்கள் முறித்ததாலும்مِّيْثَاقَهُمْதங்கள் வாக்குறுதியைوَكُفْرِهِمْஇன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَقَتْلِهِمُஇன்னும் அவர்கள் கொலை செய்ததாலும்الْاَنْۢبِيَآءَநபிமார்களைبِغَيْرِ حَقٍّநியாயமின்றிوَّقَوْلِهِمْஇன்னும் அவர்கள் கூறியதாலும்قُلُوْبُنَاஎங்கள் உள்ளங்கள்غُلْفٌ ؕதிரையிடப்பட்டுள்ளனبَلْமாறாகطَبَعَமுத்திரையிட்டான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهَاஅவற்றின் மீதுبِكُفْرِهِمْஅவர்களுடைய நிராகரிப்பின் காரணமாகفَلَا يُؤْمِنُوْنَஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்اِلَّا قَلِيْلًا‏சிலரைத் தவிர
FபBபிமா னக்ளிஹிம் மீதாகஹும் வ குFப்ரிஹிம் Bபி ஆயாதில் லாஹி வ கத்லிஹிமுல் அம்Bபியா'அ Bபிகய்ரி ஹக்கி(ன்)வ் வ கவ்லிஹிம் குலூBபுனா குல்Fப்; Bபல் தBப'அல் லாஹு 'அலய்ஹா BபிகுFப்ரிஹிம் Fபலா யு'மினூன இல்லா கலீலா
முஹம்மது ஜான்
அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், “எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.” (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு மாறு செய்ததினாலும், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டிருந்ததாலும், ‘‘எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (ஆகவே, எவருடைய உபதேசமும் பலனளிக்காது) என்று அவர்கள் கூறிவந்ததாலும் (நாம் அவர்களைச் சபித்து விட்டோம்). அவர்கள் கூறியதைப் போல் அல்ல! மாறாக, அல்லாஹ்தான் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். ஆதலால், (அவர்களில் நல்லோர்) சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
IFT
அவர்கள் தம் வாக்குறுதியை மீறியதாலும், அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததாலும், இறைத்தூதர்கள் பலரை நியாயமின்றி அவர்கள் கொலை செய்ததாலும், மற்றும் எங்களுடைய உள்ளங்கள் உறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்று கூறியதாலும் அவர்களை நாம் சபித்தோம் உண்மை என்னவெனில், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவே அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரை வைத்துவிட்டான். எனவே, அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை முறித்ததன் காரணமாகவும் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும் நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும் இன்னும் ‘எங்களுடைய இதயங்கள் திரையிடப் பட்டுவிட்டன” என்று அவர்கள் கூறியதாலும் (அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான், அதுமட்டும்) அல்ல, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான், ஆதலால் (அவர்கள்) குறைவாகவேயன்றி விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
Saheeh International
And [We cursed them] for their breaking of the covenant and their disbelief in the signs of Allah and their killing of the prophets without right and their saying, "Our hearts are wrapped" [i.e., sealed against reception]. Rather, Allah has sealed them because of their disbelief, so they believe not, except for a few.
وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰی مَرْیَمَ بُهْتَانًا عَظِیْمًا ۟ۙ
وَّبِكُفْرِهِمْஇன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்وَقَوْلِهِمْஇன்னும் அவர்கள் கூறியதாலும்عَلٰىமீதுمَرْيَمَமர்யம்بُهْتَانًـاஅவதூறைعَظِيْمًا ۙ‏மாபெரும்
வ BபிகுFப்ரிஹிம் வ கவ்லிஹிம் 'அலா மர்யம Bபுஹ் தானன் 'அளீமா
முஹம்மது ஜான்
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்).
IFT
மேலும், அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், (அவர்களை நாம் சபித்தோம்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூரை அவர்கள் கூறியதாலும் (அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்.)
Saheeh International
And [We cursed them] for their disbelief and their saying against Mary a great slander
وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِیْحَ عِیْسَی ابْنَ مَرْیَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ؕ وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ لَفِیْ شَكٍّ مِّنْهُ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوْهُ یَقِیْنًا ۟ۙ
وَّقَوْلِهِمْஇன்னும் அவர்கள் கூறியதாலும்اِنَّاநிச்சயமாக நாம்قَتَلْنَاகொன்றோம்الْمَسِيْحَமஸீஹைعِيْسَىஈஸாابْنَமகன்مَرْيَمَமர்யமுடையرَسُوْلَதூதர்اللّٰهِ‌ ۚஅல்லாஹ்வின்وَمَاஇல்லைقَتَلُوْهُஅவர்கள் அவரை கொன்றார்கள்وَمَاஇன்னும் இல்லைصَلَبُوْهُஅவரை அவர்கள் சிலுவையில் அறையوَلٰـكِنْஎனினும்شُبِّهَதோற்றமாக்கப்பட்டான்لَهُمْ‌ ؕஅவர்களுக்குوَاِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اخْتَلَـفُوْاமுரண்பட்டனர்فِيْهِஅவர் விஷயத்தில்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مِّنْهُ‌ ؕஅதில்مَا لَهُمْஅவர்களுக்கு இல்லைبِهٖஅதில்مِنْ عِلْمٍஓர் அறிவும்اِلَّاதவிரاتِّبَاعَபின்பற்றுவதுالظَّنِّ‌ ۚசந்தேகத்தைوَمَاஇன்னும் இல்லைقَتَلُوْهُஅவர்கள் அவரை கொல்லيَقِيْنًا ۢ ۙ‏உறுதியாக
வ கவ்லிஹிம் இன்னா கதல் னல் மஸீஹ 'ஈஸBப்-ன-மர்யம ரஸூலல் லாஹி வமா கதலூஹு வமா ஸலBபூஹு வ லாகின் ஷுBப்Bபிஹ லஹும்; வ இன்னல் லதீனக் தலFபூ Fபீஹீ லFபீ ஷக்கிம் மின்ஹ்; மா லஹும் Bபிஹீ மின் 'இல்மின் இல்லத் திBபா'அள் ளன்ன்; வமா கதலூஹு யகீனா
முஹம்மது ஜான்
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை.
IFT
மேலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா மஸீஹை நாங்கள்தாம் கொன்றோம் என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை! மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை மஸீஹை கொலை செய்யவேயில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம்” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான்), அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும், அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவனை ஒப்பாக்கிக் காண்பிக்கப்பட்டது, இன்னும் நிச்சயமாக இவ்விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர், வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது, மேலும், உறுதியாக அவர்கள் அவரை கொலை செய்யவே இல்லை.
Saheeh International
And [for] their saying, "Indeed, we have killed the Messiah, Jesus the son of Mary, the messenger of Allah." And they did not kill him, nor did they crucify him; but [another] was made to resemble him to them. And indeed, those who differ over it are in doubt about it. They have no knowledge of it except the following of assumption. And they did not kill him, for certain.
بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَیْهِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
بَلْமாறாகرَّفَعَهُஉயர்த்தினான்/அவரைاللّٰهُஅல்லாஹ்اِلَيْهِ‌ ؕதன்னளவில்وَكَانَஇன்னும் இருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَزِيْزًاமிகைத்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
Bபர் ரFப'அஹுல் லாஹு இலய்ஹ்; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
முஹம்மது ஜான்
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
மாறாக, அல்லாஹ் அவரைத் தன் பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மாறாக, அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான், இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
Rather, Allah raised him to Himself. And ever is Allah Exalted in Might and Wise.
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَیُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ یَكُوْنُ عَلَیْهِمْ شَهِیْدًا ۟ۚ
وَاِنْஇல்லை (இருக்கமாட்டார்)مِّنْ اَهْلِ الْكِتٰبِவேதக்காரர்களில் எவரும்اِلَّاதவிரلَيُـؤْمِنَنَّநிச்சயமாக நம்பிக்கை கொள்வார்بِهٖஅவரைقَبْلَமுன்னர்مَوْتِهٖ‌ ۚஅவர் இறப்பதற்குوَيَوْمَ الْقِيٰمَةِஇன்னும் மறுமை நாளில்يَكُوْنُஇருப்பார்عَلَيْهِمْஇவர்களுக்கு எதிராகشَهِيْدًا‌ ۚ‏சாட்சி கூறுபவராக
வ இம் மின் அஹ்லில் கிதாBபி இல்லா லயு'மினன்ன Bபிஹீ கBப்ல மவ்திஹீ வ யவ்மல் கியாமதி யகூனு 'அலய்ஹிம் ஷஹீதா
முஹம்மது ஜான்
வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடையவர்களில் ஒவ்வொருவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. எனினும், மறுமை நாளில் இவர்களுக்கு எதிராகவே அவர் சாட்சியம் கூறுவார்.
IFT
வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமைநாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை, இன்னும், மறுமைநாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார்.
Saheeh International
And there is none from the People of the Scripture but that he will surely believe in him [i.e., Jesus] before his death. And on the Day of Resurrection he will be against them a witness.
فَبِظُلْمٍ مِّنَ الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَیْهِمْ طَیِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِیْلِ اللّٰهِ كَثِیْرًا ۟ۙ
فَبِظُلْمٍஅநியாயத்தின் காரணமாகمِّنَ الَّذِيْنَ هَادُوْاயூதர்களின்حَرَّمْنَاவிலக்கினோம்عَلَيْهِمْஅவர்களுக்குطَيِّبٰتٍநல்லவற்றைاُحِلَّتْஅனுமதிக்கப்பட்டனلَهُمْஅவர்களுக்குوَبِصَدِّهِمْஇன்னும் அவர்கள் தடுப்பதுعَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்كَثِيْرًاஅதிகமானவர்களை
FபBபிளுல்மின் மினல் லதீன ஹாதூ ஹர்ரம்னா 'அலய்ஹிம் தய்யிBபாதின் உஹில்லத் லஹும் வ Bபிஸதிஹிம் 'அன் ஸBபீலில் லாஹி கதீரா
முஹம்மது ஜான்
எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையை விட்டு பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தவற்றில் நல்லவற்றை நாம் அவர்களுக்கு விலக்கிவிட்டோம்.
IFT
யூதர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாகவும், அல்லாஹ்வின் வழியிலிருந்து அதிகமான மனிதர்களை அவர்கள் தடுத்துக் கொண்டிருப்பதாலும், (முன்பு) அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்துவிட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, யூதர்களாக இருந்த அவர்களின் அநியாயத்தின் காரணமாகவும், இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (அதில் செல்லவிடாது) தடுத்துக் கொண்டதன் காரணமாகவும் அவர்களுக்கு (முன்னர்) அனுமதிக்கப் பட்டவைகளில் நல்லவைகளை நாம் அவர்களுக்குத் தடுத்து (ஹராமாக்கி) விட்டோம்.
Saheeh International
For wrongdoing on the part of the Jews, We made unlawful for them [certain] good foods which had been lawful to them, and for their averting from the way of Allah many [people],
وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
وَّاَخْذِهِمُஇன்னும் அவர்கள் வாங்குவதுالرِّبٰواவட்டியைوَقَدْ نُهُوْاஅவர்களுமோ தடுக்கப்பட்டிருக்கعَنْهُஅதிலிருந்துوَاَكْلِـهِمْஇன்னும் அவர்கள் சாப்பிடுவதுاَمْوَالَசெல்வங்களைالنَّاسِமக்களின்بِالْبَاطِلِ‌ ؕதப்பான வழியில்وَاَعْتَدْنَـاஇன்னும் ஏற்படுத்தினோம்لِلْـكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குمِنْهُمْஅவர்களில்عَذَابًاவேதனையைاَ لِيْمًا‏துன்புறுத்தக் கூடிய(து)
வ அக்திஹிமுர் ரிBபா வ கத் னுஹூ 'அன்ஹு வ அக்லிஹிம் அம்வாலன் னாஸி Bபில்Bபாதில்; வ அஃதத்னா லில்காFபிரீன மின்ஹும் 'அதாBபன் அலீமா
முஹம்மது ஜான்
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை மறுமையில் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
மேலும் வட்டி அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்க அதனை அவர்கள் வாங்கிக் கொண்டிருப்பதாலும், மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் அவர்கள் விழுங்கிக் கொண்டிருப்பதாலும் (முன்பு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்து விட்டோம்). மேலும் அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார்செய்து வைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வட்டியை அதைவிட்டும் அவர்கள் தடுக்கப்பட்டவர்களாக இருந்தும் (அதனை) வாங்கி வந்ததன் காரணமாகவும், மனிதர்களின் செல்வங்களை அவர்கள் நியாயமின்றி உண்டு வந்ததன் காரணமாகவும், அவர்களில், (இத்தகைய) நிராகரிப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்தும் வைத்திருக்கிறோம்.
Saheeh International
And [for] their taking of usury while they had been forbidden from it, and their consuming of the people's wealth unjustly. And We have prepared for the disbelievers among them a painful punishment.
لٰكِنِ الرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَالْمُقِیْمِیْنَ الصَّلٰوةَ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ اُولٰٓىِٕكَ سَنُؤْتِیْهِمْ اَجْرًا عَظِیْمًا ۟۠
لٰـكِنِஎனினும்الرّٰسِخُوْنَதேர்ச்சி பெற்றவர்கள்فِى الْعِلْمِகல்வியில்مِنْهُمْஅவர்களில்وَالْمُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கையாளர்கள்يُـؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கின்றனர்بِمَاۤஎதைاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குوَمَاۤஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுمِنْ قَبْلِكَ‌உமக்கு முன்னர்وَالْمُقِيْمِيْنَஇன்னும் நிலை நிறுத்துபவர்கள்الصَّلٰوةَ‌தொழுகையைوَالْمُؤْتُوْنَஇன்னும் கொடுப்பவர்கள்الزَّكٰوةَஸகாத்தைوَ الْمُؤْمِنُوْنَஇன்னும் நம்பிக்கை கொண்டவர்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِ ؕஇன்னும் மறுமை நாளைاُولٰٓٮِٕكَஇவர்கள்سَنُؤْتِيْهِمْகொடுப்போம்/இவர்களுக்குاَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தானது
லாகினிர் ராஸிகூன Fபில்'இல்மி மின்ஹும் வல்மு'மினூன யு'மினூன Bபிமா உன்Zஜில இலய்க வ மா உன்Zஜில மின் கBப்லிக வல்முகீமீனஸ் ஸலாத வல்மு'தூனZஜ் Zஜகாத வல்மு 'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிர்; உலா'இக ஸனு'தீஹிம் அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உம் மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம்.
IFT
ஆனால், அவர்களில் அறிவுத்திறன் மிக்கவர்கள் மற்றும் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் (நபியே!) உம்மீதும், உமக்கு முன்னரும் இறக்கியருளப்பட்ட அறிவுரைகளை நம்புகின்றார்கள்! (இவ்வாறு நம்பிக்கை கொண்டு) தொழுகையையும், ஜகாத்தையும் முறையாகப் பேணுபவர்கள், மேலும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் உறுதியாக நம்புபவர்கள் ஆகியோருக்கு அதிவிரைவில் மகத்தான கூலியை நாம் நிச்சயமாக வழங்குவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும் இன்னும் விசுவாசிகளும் உம்மீது இறக்கிவைக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கி வைக்கப்பட்டிருந்தவற்றையும் விசுவாசிக்கிறார்கள், இன்னும் (அவர்கள்) தொழுகையை (முறையாக) நிறைவேற்றுபவர்களாகவும், ஜகாத்தை கொடுப்பவர்களாகவும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள், அத்தகையோருக்கு மறுமையில் மகத்தான நற்கூலியை நாம் கொடுப்போம்.
Saheeh International
But those firm in knowledge among them and the believers believe in what has been revealed to you, [O Muhammad], and what was revealed before you. And the establishers of prayer [especially] and the givers of zakah and the believers in Allah and the Last Day - those We will give a great reward.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَهٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமான்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
முஹம்மது ஜான்
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தவாறே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். மேலும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, ஐயூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். தாவூதுக்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம்.
IFT
(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததுபோல திண்ணமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் ஸுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஜபூரை வழங்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும நாம் வஹீ அறிவித்தவாறே, உமக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம், அன்றியும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும் (அவர்களுடைய) சந்ததிகளுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸூலைமான் முதலியவர்களுக்கும் (இவ்வாறே நாம் வஹீ அறிவித்தோம்), இன்னும், தாவூதுக்கு ஜபூர் (என்னும்) வேதத்தை நாம் கொடுத்தோம்.
Saheeh International
Indeed, We have revealed to you, [O Muhammad], as We revealed to Noah and the prophets after him. And We revealed to Abraham, Ishmael, Isaac, Jacob, the Descendants, Jesus, Job, Jonah, Aaron, and Solomon, and to David We gave the book [of Psalms].
وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَیْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَیْكَ ؕ وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰی تَكْلِیْمًا ۟ۚ
وَرُسُلًاஇன்னும் தூதர்களைقَدْதிட்டமாகقَصَصْنٰهُمْ عَلَيْكَவிவரித்தோம்/அவர்களை/உமக்குمِنْ قَبْلُமுன்னர்وَرُسُلًاஇன்னும் தூதர்களைلَّمْ نَقْصُصْهُمْவிவரிக்கவில்லை / அவர்களைعَلَيْكَ‌ ؕஉமக்குوَكَلَّمَபேசினான்اللّٰهُஅல்லாஹ்مُوْسٰىமூஸாவுடன்تَكْلِيْمًاபேசுதல்
வ ருஸுலன் கத் கஸஸ் னாஹும் 'அலய்க மின் கBப்லு வ ருஸுலல் லம் னக்ஸுஸ்ஹும் 'அலய்க்; வ கல்லமல்லாஹு மூஸா தக்லீமா
முஹம்மது ஜான்
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இவர்களைப்போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்). அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கிறோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹ்யி அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கிறான்.
IFT
மேலும், முன்னரே உம்மிடம் நாம் எந்த இறைத்தூதர்கள் பற்றி எடுத்துரைத்துள்ளோமோ அந்த இறைத்தூதர்களுக்கும் உம்மிடம் எடுத்துரைக்கப்படாத இறைத்தூதர்களுக்கும் (வஹி அறிவித்திருக்கின்றோம்). அல்லாஹ் மூஸாவிடம் நேரடியாகப் பேசியும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் தூதர்கள் பலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் முன்னர் நாம் திட்டமாக உமக்குக் கூறியிருக்கின்றோம், வேறு தூதர்கள் பலரையும் (நாம் அனுப்பியிருக்கின்றோம், எனினும்,) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை, இன்னும், அல்லாஹ் மூஸாவுடன் உறுதியாக பேசியுமிருக்கின்றான்.
Saheeh International
And [We sent] messengers about whom We have related [their stories] to you before and messengers about whom We have not related to you. And Allah spoke to Moses with [direct] speech.
رُسُلًا مُّبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَی اللّٰهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
رُسُلًاதூதர்களைمُّبَشِّرِيْنَநற்செய்தி கூறுபவர்களாகوَمُنْذِرِيْنَஇன்னும் எச்சரிப்பவர்களாகلِئَلَّا يَكُوْنَஇல்லாதிருக்கلِلنَّاسِமக்களுக்குعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுحُجَّةٌ ۢஓர் ஆதாரம்بَعْدَபின்னர்الرُّسُلِ‌ ؕதூதர்கள்وَكَانَ اللّٰهُஅல்லாஹ் இருக்கின்றான்عَزِيْزًاமிகைத்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
ருஸுலம் முBபஷ்ஷிரீன வ முன்திரீன லி'அல்லா யகூன லின்னாஸி 'அலல் லாஹி ஹுஜ்ஜதும் Bபஃதர் ருஸுல்; வ கானல்லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
முஹம்மது ஜான்
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சொர்க்கத் தைக்கொண்டு) நற்செய்தி கூறுகிறவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கிறவர்களாகவும் (நாம் அனுப்பிவைத்தோம்). அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
இறைத்தூதர்கள் அனைவரும் நற்செய்தி அறிவிப்பவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஏனெனில், அத்தூதர்கள் அனுப்பப்பட்ட பிறகு அல்லாஹ்விடம் முறையிட மக்களுக்கு ஆதாரம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காக! மேலும், எந்நிலையிலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (சாதகமாக) யாதொரு ஆதாரமும் இல்லாதிருப்பதற்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும், தூதர்கள் பலரை, (சுவர்க்கத்தைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றவர்களாகவும் (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்). மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
[We sent] messengers as bringers of good tidings and warners so that mankind will have no argument against Allah after the messengers. And ever is Allah Exalted in Might and Wise.
لٰكِنِ اللّٰهُ یَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَیْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ ۚ وَالْمَلٰٓىِٕكَةُ یَشْهَدُوْنَ ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ
لٰـكِنِஎன்றாலும்اللّٰهُஅல்லாஹ்يَشْهَدُசாட்சி கூறுகிறான்بِمَاۤ اَنْزَلَஇறக்கியதற்குاِلَيْكَ‌உமக்குاَنْزَلَهٗஇறக்கினான்/அதைبِعِلْمِهٖ‌ ۚஅவனுடைய அறிவைக் கொண்டேوَالْمَلٰٓٮِٕكَةُஇன்னும் வானவர்கள்يَشْهَدُوْنَ‌ ؕசாட்சி கூறுகின்றனர்وَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேشَهِيْدًا ؕ‏சாட்சியாளனாக
லாகினில் லாஹு யஷ்ஹது Bபிமா அன்Zஜல இலய்க அன்Zஜலஹூ Bபி'இல்மிஹீ வல் மலா'இகது யஷ்ஹதூன்; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
முஹம்மது ஜான்
(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இவர்கள் உம்மை நிராகரித்து விட்டதனால் ஆவதென்ன?) உம்மீது அருளப்பட்ட வேதம் உண்மையானதென்றும் (உமது மேலான தகுதியை) அறிந்தே அதை (உம்மீது அவன்) இறக்கிவைத்தான் என்றும் அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ்வே போதுமான சாட்சி ஆவான்.
IFT
(இவர்கள் நம்பினாலும் சரி; நம்பாவிட்டாலும் சரி) ஆனால் (நபியே!) அல்லாஹ் உம்மீது இறக்கியருளியவற்றை தன் பேரறிவைக்கொண்டே இறக்கியருளினான் என்பதற்கு தானே சான்று வழங்குகின்றான்; வானவர்களும் சாட்சி வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வின் சான்றே முற்றிலும் போதுமானது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், அவன் உமக்கு இறக்கிவைத்த (குர் ஆனாகிய இ)தற்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகின்றான், அ(வ்வேதத்)தை தன் அறிவுகொண்டே (உம்மீது) இறக்கிவைத்தான், (இதற்கு) மலக்குகளும் சாட்சி கூறுகின்றனர், மேலும் சாட்சியால் அல்லாஹ் போதுமானவன்.
Saheeh International
But Allah bears witness to that which He has revealed to you. He has sent it down with His knowledge, and the angels bear witness [as well]. And sufficient is Allah as Witness.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًا بَعِیْدًا ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَ صَدُّوْاஇன்னும் தடுத்தார்கள்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வுடையقَدْ ضَلُّوْاதிட்டமாக வழி கெட்டனர்ضَلٰلًاۢவழிகேடாகبَعِيْدًا‏தூரமான(து)
இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி கத் ளல்லூ ளலாலம் Bப'ஈதா
முஹம்மது ஜான்
நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மை) எவர்கள் நிராகரித்து (மற்றவர்களையும்) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து மக்களை தடுத்தார்களோ அவர்கள் நிச்சயமாக வெகுதூரமான ஒரு வழிகேட்டில்தான் சென்று விட்டனர்.
IFT
எவர்கள் (இவற்றை) தாமும் ஏற்க மறுத்து, அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மற்றவர்களையும் தடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக வழிகேட்டில் (மூழ்கி, சத்தியத்தைவிட்டு) வெகுதூரம் சென்றுவிட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் தடுத்தார்களே அத்தகையோர் - அவர்கள் - திட்டமாக வெகு தூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர்.
Saheeh International
Indeed, those who disbelieve and avert [people] from the way of Allah have certainly gone far astray.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ طَرِیْقًا ۟ۙ
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَظَلَمُوْاஇன்னும் அநியாயம் செய்தார்கள்لَمْ يَكُنِஇல்லைاللّٰهُஅல்லாஹ்لِيَـغْفِرَமன்னிப்பவனாகلَهُمْஅவர்களைوَلَاஇன்னும் இல்லைلِيَـهْدِيَهُمْஅவர்களுக்கு வழிகாட்டுபவனாகطَرِيْقًا ۙ‏ஒரு வழியை
இன்னல் லதீனகFபரூ வ ளலமூ லம் யகுனில்லாஹு லியக்Fபிர லஹும் வலா லியஹ்தியஹும் தரீகா
முஹம்மது ஜான்
நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரித்துவிட்டு அநியாயம் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. (நேரான) ஒரு வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான்.
IFT
எவர்கள் இவ்வாறு நிராகரிப்பை அல்லாஹ்வை எதிர்க்கும் போக்கை மேற்கொண்டு, அக்கிரமம் புரிந்தார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நிராகரித்துவிட்டு, அநியாயமும் செய்தார்களே அத்தகையவர்கள்-அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை, அல்லாஹ் இன்னும் (நேரான) வழியில் அவன் அவர்களைச் செலுத்துபவனாகவும் இல்லை.
Saheeh International
Indeed, those who disbelieve and commit wrong [or injustice] - never will Allah forgive them, nor will He guide them to a path,
اِلَّا طَرِیْقَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
اِلَّاதவிரطَرِيْقَவழிجَهَـنَّمَநரகத்தின்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤஅதில்اَبَدًا‌ ؕஎன்றென்றும்وَكَانَ ذٰ لِكَஆகிவிட்டது/இதுعَلَى اللّٰهِஅல்லாஹ்வுக்குيَسِيْرًا‏சுலபமாக
இல்லா தரீக ஜஹன்னம்ம காலிதீன Fபீஹா அBபதா; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
முஹம்மது ஜான்
நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நரகத்தின் வழியைத்தவிர (அதில்தான் அவர்களை செலுத்துவான்.) அ(ந்த நரகத்)தில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமே!
IFT
அவர்களுக்கு நரகத்திற்கான வழியினைத் தவிர வேறெந்த வழியையும் காட்டவும் மாட்டான். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்து கிடப்பார்கள்! இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக எளிதான செயலே ஆகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நரகத்தின் வழியைத் தவிர-அதில்தான் அவர்கள் நிரந்தரமாக என்றென்றும் (தங்கி) இருப்பவர்கள். இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக எளிதாக இருக்கிறது.
Saheeh International
Except the path of Hell; they will abide therein forever. And that, for Allah, is [always] easy.
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَیْرًا لَّكُمْ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமக்களேقَدْ جَآءَவந்து விட்டார்كُمُஉங்களிடம்الرَّسُوْلُஇத்தூதர்بِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டுمِنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்فَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்خَيْرًاமிக்க நன்றுلَّـكُمْ‌ ؕஉங்களுக்குوَاِنْ تَكْفُرُوْاநீங்கள் நிராகரித்தால்فَاِنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்விற்குمَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَالْاَرْضِ‌ ؕஇன்னும் பூமிوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகுமுர் ரஸூலு Bபில்ஹக்கி மிர் ரBப்Bபிகும் Fப ஆமினூ கய்ரல் லகும்; வ இன் தக்Fபுரூ Fப இன்ன லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அலீமன்ன் ஹகீமா
முஹம்மது ஜான்
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! உங்கள் இறைவனால் முற்றிலும் உண்மையைக் கொண்டே அனுப்பப்பட்ட தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் அவரை நம்பிக்கைகொள்ளுங்கள். (அது) உங்களுக்கே மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்துவிட்டால் (அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
மனிதர்களே! இந்தத் தூதர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். எனவே, நம்பிக்கை கொள்ளுங்கள். அது உங்களுக்கே நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் நிராகரித்தால் வானங்கள், பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உண்மையானவற்றுடன் ஒரு தூதர் திட்டமாக உங்களிடம் வந்துவிட்டார், ஆகவே, நீங்கள் (அவர் கொண்டுவந்ததை) விசுவாசியுங்கள், (அது) உங்களுக்கு மிக்க நன்று, நீங்கள் நிராகரித்தும் விட்டால் வானங்கள், மற்றும் பூமியில் உள்ளவை நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ்வோ, (யாவரையும்) நன்கறிந்தவனாக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
O mankind, the Messenger has come to you with the truth from your Lord, so believe; it is better for you. But if you disbelieve - then indeed, to Allah belongs whatever is in the heavens and earth. And ever is Allah Knowing and Wise.
یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேلَا تَغْلُوْاஅளவு கடக்காதீர்فِىْ دِيْـنِكُمْஉங்கள் மார்க்கத்தில்وَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்عَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِلَّا الْحَـقَّ‌ ؕஉண்மையைத் தவிரاِنَّمَاஎல்லாம்الْمَسِيْحُமஸீஹ்عِيْسَىஈஸாابْنُ مَرْيَمَமர்யமுடைய மகன்رَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வுடையوَكَلِمَتُهٗ‌ ۚஇன்னும் அவனுடைய வார்த்தைاَ لْقٰٮهَاۤசேர்ப்பித்தான்/அதைاِلٰى مَرْيَمَமர்யமின் பக்கம்وَرُوْحٌஇன்னும் உயிர்مِّنْهُ‌அவன் புறத்திலிருந்துفَاٰمِنُوْاஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَرُسُلِهٖ‌ ۚஇன்னும் அவனுடைய தூதர்களைوَلَا تَقُوْلُوْاஇன்னும் கூறாதீர்கள்ثَلٰثَةٌ‌ ؕமூவர்اِنْتَهُوْاவிலகுங்கள்خَيْرًاமிக நன்றுلَّـكُمْ‌ ؕஉங்களுக்குاِنَّمَا اللّٰهُஅல்லாஹ் எல்லாம்اِلٰـهٌஒரு கடவுள்وَّاحِدٌ‌ ؕஒரேسُبْحٰنَهٗۤஅவன் மிக பரிசுத்தமானவன்اَنْ يَّكُوْنَஇருப்பதைவிட்டுلَهٗஅவனுக்குوَلَدٌ‌ ۘகுழந்தைلَهٗஅவனுக்கேمَاஎவைفِى السَّمٰوٰتِவானங்களில்وَمَا فِى الْاَرْضِ‌ؕஇன்னும் எவை/பூமியில்وَكَفٰىபோதுமானவன்بِاللّٰهِஅல்லாஹ்வேوَكِيْلًا‏பொறுப்பாளனாக
யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் வலா தகூலூ 'அலல் லாஹி இல்லல்ஹக்க்; இன்னமல் மஸீஹு 'ஈஸBப்-னு-மர்யம ரஸூலுல் லாஹி வ கலிமதுஹூ அல்காஹா இலா மர்யம வ ரூஹும் மின்ஹும் Fப ஆமினூ Bபில்லாஹி வ ருஸுலிஹீ வலா தகூலூ தலாதஹ்; இன்தஹூ கய்ரல்லகும்; இன்னமல் லாஹு இலாஹு(ன்)வ் வாஹித், ஸுBப்ஹானஹூ அ(ன்)ய் யகூன லஹூ வலத்; லஹூ மா Fபிஸ்ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வ கFபா Bபில்லாஹி வகீலா
முஹம்மது ஜான்
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அவனுடைய (‘குன்' என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கிறார். அல்லாஹ் (தன்) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) ‘மூவர்' என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை.)
IFT
வேதம் அருளப்பட்டவர்களே! உங்களுடைய தீனில் மார்க்கத்தில் (எதையும்) மிகைப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறாதீர்கள். திண்ணமாக, மர்யமின் மகன் ஈஸாஅல்மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார். மேலும், அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு ரூஹும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.) எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், மூன்று (கடவுள்) எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்! இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்; தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். மேலும் (அவை அனைத்தையும் பராமரித்துப் பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போதுமானவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள், நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதரும், அவனுடைய வாக்கும் ஆவார், அல்லாஹ், மர்யமின் பால் அ(ந்த வாக்கான)தைப் போட்டான், (மற்ற ஆன்மாக்களைப் போன்று அவரும்,) அவனிடமிருந்து (படைக்கப்பட்ட) ஓர் ஆன்மாவே, ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள், இன்னும் (வணக்கத்திற்குரிய தெய்வங்கள்) மூன்று என்று கூறாதீர்கள், (இவ்வாறு கூறுவதை விட்டு விலகி விடுங்கள், (அது) உங்களுக்குத்தான் மிக்க நன்று, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் ஒரே நாயன்தான், அவனுக்கு மக்கள் இருப்பதைவிட்டும் அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களில் உள்ளவை மற்றும் பூமியில் உள்ளவை அவனுக்கே உரியன- (உங்கள் யாவரின் காரியங்களை) பொறுப்பேற்றுக் கொள்ள அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
Saheeh International
O People of the Scripture, do not commit excess in your religion or say about Allah except the truth. The Messiah, Jesus the son of Mary, was but a messenger of Allah and His word which He directed to Mary and a soul [created at a command] from Him. So believe in Allah and His messengers. And do not say, "Three"; desist - it is better for you. Indeed, Allah is but one God. Exalted is He above having a son. To Him belongs whatever is in the heavens and whatever is on the earth. And sufficient is Allah as Disposer of affairs.
لَنْ یَّسْتَنْكِفَ الْمَسِیْحُ اَنْ یَّكُوْنَ عَبْدًا لِّلّٰهِ وَلَا الْمَلٰٓىِٕكَةُ الْمُقَرَّبُوْنَ ؕ وَمَنْ یَّسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهٖ وَیَسْتَكْبِرْ فَسَیَحْشُرُهُمْ اِلَیْهِ جَمِیْعًا ۟
لَنْ يَّسْتَـنْكِفَதிமிரு கொள்ளமாட்டார்(கள்)الْمَسِيْحُஈஸா (மஸீஹ்)اَنْ يَّكُوْنَஇருப்பதைவிட்டுعَبْدًஅடிமையாகالِّلّٰهِஅல்லாஹ்விற்குوَلَاஇன்னும் இல்லைالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்الْمُقَرَّبُوْنَ‌ؕநெருக்கமானவர்கள்وَمَنْஎவர்(கள்)يَّسْتَـنْكِفْதிமிரு கொள்வார்(கள்)عَنْவிட்டுعِبَادَ تِهٖஅவனைவணங்குவதுوَيَسْتَكْبِرْஇன்னும் பெருமை கொள்வார்(கள்)فَسَيَحْشُرُஒன்று திரட்டுவான்هُمْஅவர்கள்اِلَيْهِதன் பக்கம்جَمِيْعًا‏அனைவரையும்
லய் யஸ்தன்கிFபல் மஸீஹு அய் யகூன 'அBப்தல் லில்லாஹி வ லல் மலா'இகதுல் முகர்ரBபூன்; வ மய் யஸ்தன்கிFப் 'அன் இBபாததிஹீ வ யஸ்தக்Bபிர் Fபஸ யஹ்ஷுருஹும் இலய்ஹி ஜமீ'ஆ
முஹம்மது ஜான்
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
ஈஸாவும், சிறப்பு வாய்ந்த வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைப்பற்றி குறைவாகக் கருத மாட்டார்கள். எவர்கள் கர்வம் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் காண்கின்றனரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன்னிடமே கொண்டுவரச் செய்வான்.
IFT
தான் அல்லாஹ்வின் அடிமையாக இருப்பதை மஸீஹ் எப்போதுமே இழிவாகக் கருதியதில்லை. இறையண்மை பெற்ற வானவர்களும் அதனை இழிவாகக் கருதுவதில்லை. எவர்கள் அல்லாஹ்வுக்குப் பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதி, தற்பெருமையும் கொள்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் விரைவில் அல்லாஹ் ஒன்று திரட்டித் தன்முன் கொண்டுவருவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மஸீஹும், அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளும், அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ளவே மாட்டார்கள், எவர்கள் அவனுக்கு வணக்கம் செலுத்துவதைவிட்டும் குறைவாகக்கருதி, கர்வமும் கொள்வார்களோ அவர்கள் யாவரையும் (மறுமையில் எழுப்பி) அவன் தன் பக்கமே ஒன்று திரட்டுவான்.
Saheeh International
Never would the Messiah disdain to be a servant of Allah, nor would the angels near [to Him]. And whoever disdains His worship and is arrogant - He will gather them to Himself all together.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ۚ وَاَمَّا الَّذِیْنَ اسْتَنْكَفُوْا وَاسْتَكْبَرُوْا فَیُعَذِّبُهُمْ عَذَابًا اَلِیْمًا ۙ۬ وَّلَا یَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
فَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைفَيُوَفِّيْهِمْமுழுமையாக நிறைவேற்றுவான்/ அவர்களுக்குاُجُوْرَهُمْகூலிகளை/அவர்களுடையوَ يَزِيْدُஇன்னும் அதிகப்படுத்துவான்هُمْஅவர்களுக்குمِّنْ فَضْلِهٖ‌ۚதன் அருளிலிருந்துوَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்اسْتَـنْكَفُوْاதிமிரு பிடித்தார்கள்وَاسْتَكْبَرُوْاஇன்னும் பெருமையடித்தார்கள்فَيُعَذِّبُهُمْவேதனை செய்வான்/அவர்களைعَذَابًاவேதனையால்اَ لِيْمًا  ۙதுன்புறுத்தும்وَّلَا يَجِدُوْنَஇன்னும் காணமாட்டார்கள்لَهُمْதங்களுக்குمِّنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைوَلِيًّاபாதுகாவலரைوَّلَا نَصِيْرًا‏இன்னும் உதவியாளரை
Fப அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fப யுவFப்Fபீஹிம் உஜூரஹும் வ யZஜீதுஹும் மின் Fபள்லிஹீ வ அம்மல் லதீனஸ் தன்கFபூ வஸ்தக்Bபரூ Fப யு'அத்திBபுஹும் 'அதாBபன் அலீம வலா யஜிதூன லஹும் மின் தூனில் லாஹி வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
முஹம்மது ஜான்
ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற் செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து, தன் அருளால் மென்மேலும், அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாகக் காண்கின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குத் துணை புரிபவர்களையும் உதவி புரிபவர்களையும் (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்.
IFT
(அவ்வேளையில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு அவன் அவர்களுடைய கூலிகளை நிறைவாகக் கொடுப்பான். மேலும், தனது அருளால் இன்னும் அதிகம் (கூலி) வழங்குவான். மேலும், எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதித் தற்பெருமையும் கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும், அல்லாஹ்வை அன்றி (தாம் நம்பிக்கை கொண்டிருந்த) பாதுகாவலர் மற்றும் உதவியாளர் எவரையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே (உண்மையாகவே) விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்குப் பூரணமாக அளிப்பான், இன்னும் தன் பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவான், மேலும் (அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக்) குறைவாகக் கண்டு கர்வமும் கொண்டார்களே அத்தகையோர்-அவர்களை துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவன் வேதனை செய்வான், அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் தங்களுக்கு காரியஸ்தனாகவோ, இன்னும் உதவிபுரிபவனாகவோ (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்.
Saheeh International
And as for those who believed and did righteous deeds, He will give them in full their rewards and grant them extra from His bounty. But as for those who disdained and were arrogant, He will punish them with a painful punishment, and they will not find for themselves besides Allah any protector or helper.
یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَیْكُمْ نُوْرًا مُّبِیْنًا ۟
يٰۤـاَيُّهَا النَّاسُமனிதர்களே!قَدْதிட்டமாகجَآءَவந்துள்ளதுكُمْஉங்களிடம்بُرْهَانٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்وَاَنْزَلْنَاۤஇன்னும் இறக்கினோம்اِلَيْكُمْஉங்களுக்குنُوْرًاஓர் ஒளியைمُّبِيْنًا‏தெளிவானது
யா அய்யுஹன் னாஸு கத் ஜா'அகும் Bபுர்ஹானும் மிர் ரBப்Bபிகும் வ அன்Zஜல்னா இலய்கும் னூரம் முBபீனா
முஹம்மது ஜான்
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சியாளர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். (அவருடன்) மிகத்தெளிவான (வேதமென்னும்) ஒளியை நாம் உங்களுக்கு இறக்கியிருக்கிறோம்.
IFT
மனிதர்களே! உங்களுடைய அதிபதியிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்று வந்துள்ளது. தெள்ளத் தெளிவாய் வழிகாட்டும் ஒளியையும் நாம் உங்களுக்கு அனுப்பியிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து (போதுமான) சான்று திட்டமாக உங்களிடம் வந்துவிட்டது, இன்னும், தெளிவான பேரொளியையே நாம் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கின்றோம்.
Saheeh International
O mankind, there has come to you a conclusive proof from your Lord, and We have sent down to you a clear light.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَیُدْخِلُهُمْ فِیْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ ۙ وَّیَهْدِیْهِمْ اِلَیْهِ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ؕ
فَاَمَّاஆகவேالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்بِاللّٰهِஅல்லாஹ்வைوَاعْتَصَمُوْاஇன்னும் பற்றிப்பிடித்தார்கள்بِهٖஅவனைفَسَيُدْخِلُهُمْநுழைப்பான்/ அவர்களைفِىْ رَحْمَةٍகருணையில்مِّنْهُதன் புறத்திலிருந்துوَفَضْلٍۙஇன்னும் அருள்وَّيَهْدِيْهِمْஇன்னும் வழிகாட்டுவான்/அவர்களுக்குاِلَيْهِதன் பக்கம்صِرَاطًاவழியைمُّسْتَقِيْمًا ؕ‏நேரானது
Fப அம்மல் லதீன ஆமனூ Bபில்லாஹி வஃதஸமூ Bபிஹீ Fபஸ யுத்கிலுஹும் Fபீ ரஹ்மதிம் மின்ஹு வ Fபள்லி(ன்)வ் வ யஹ்தீஹிம் இலய்ஹி ஸிராதம் முஸ்தகீமா
முஹம்மது ஜான்
ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நேர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹ்மத்திலும், அருளிலும் புகச் செய்கிறான்; இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அ(ந்த வேதத்)தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்களோ அவர்களை அவன் தன் அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகிறான். தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகிறான்.
IFT
(இனி) எவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும் அவனிடம் புகலிடம் தேடுகின்றார்களோ அவர்களை அதிவிரைவில் தனது கருணையிலும் அருளிலும் அல்லாஹ் நுழையச் செய்வான். மேலும், தன் பக்கம் வருவதற்கான நேரான வழியையும் அவர்களுக்குக் காண்பிப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அல்லாஹ்வை (உண்மையாகவே) விசுவாசித்து அவனைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களே, அத்தகையோர்-அவர்களை, அவன் தன்னிடமிருந்துள்ள அன்பிலும், பேரருளிலும் பிரவேசிக்கச் செய்வான், அன்றியும் தன்பக்கம் (வருவதற்குரிய) நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
Saheeh International
So those who believe in Allah and hold fast to Him - He will admit them to mercy from Himself and bounty and guide them to Himself on a straight path.
یَسْتَفْتُوْنَكَ ؕ قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِی الْكَلٰلَةِ ؕ اِنِ امْرُؤٌا هَلَكَ لَیْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ یَرِثُهَاۤ اِنْ لَّمْ یَكُنْ لَّهَا وَلَدٌ ؕ فَاِنْ كَانَتَا اثْنَتَیْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ ؕ وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ؕ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اَنْ تَضِلُّوْا ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
يَسْتَفْتُوْنَكَ ؕதீர்ப்பு கேட்கின்றனர் / உம்மிடம்قُلِகூறுவீராகاللّٰهُஅல்லாஹ்يُفْتِيْكُمْஉங்களுக்கு கட்டளையிடுகிறான்فِى الْـكَلٰلَةِ‌ ؕவாரிசு அற்றவர் பற்றிاِنِ امْرُؤٌا(ஆண்) மனிதன்هَلَكَஇறந்து விட்டான்لَـيْسَஇல்லைلَهٗஅவனுக்குوَلَدٌசந்ததிوَّلَهٗۤஇன்னும் அவனுக்குاُخْتٌஒரு சகோதரிفَلَهَاஅவளுக்குنِصْفُபாதிمَا تَرَكَ‌ ۚஎது/விட்டுச்சென்றான்وَهُوَஅவன்يَرِثُهَاۤவாரிசாக ஆவான்/அவளுக்குاِنْ لَّمْ يَكُنْஇல்லையென்றால்لَّهَاஅவளுக்குوَلَدٌ‌  ؕசந்ததிفَاِنْ كَانَـتَاஇருந்தால்اثْنَتَيْنِஇரு பெண்களாகفَلَهُمَاஅவ்விருவருக்கும்الثُّلُثٰنِமூன்றில் இரண்டுمِمَّاஎதிலிருந்துتَرَكَ‌ ؕவிட்டுச் சென்றான்وَاِنْ كَانُوْۤاஅவர்கள் இருந்தால்اِخْوَةًஉடன் பிறந்தவர்கள்رِّجَالًاஆண்களாகوَّنِسَآءًஇன்னும் பெண்களாகفَلِلذَّكَرِஆணுக்குمِثْلُபோன்றுحَظِّபங்குالْاُنْثَيَيْنِ‌ ؕஇரு பெண்களின்يُبَيِّنُவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குاَنْ تَضِلُّوْا‌ ؕநீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காகوَاللّٰهُஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
யஸ்தFப்தூனக குலில்லாஹு யFப்தீகும் Fபில் கலாலஹ்; இனிம்ரு'உன் ஹலக லய்ஸ லஹூ வலது(ன்)வ் வ லஹூ உக்துன் Fபலஹா னிஸ்Fபு மா தரக்; வ ஹுவ யரிதுஹா இல் லம் யக்குல் லஹா வலத்; Fப இன் கானதத் னதய்னி Fபலஹுமத் துலுதானி மிம்ம்மா தரக்; வ இன் கானூ இக்வதர் ரிஜால(ன்)வ் வ னிஸா'அன் Fபலித் தகரி மித்லு ஹள்ளில் உன்தயய்ன்; யுBபய்யினுல்லாஹு லகும் அன் தளில்லூ; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
முஹம்மது ஜான்
(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘கலாலா' பற்றிய (அதாவது தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத பொருளைப் பற்றிய) மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் பாதி கிடைக்கும். (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்குச் சந்ததி இல்லாமலிருந்(து ஒரே ஒரு சகோதரன் மட்டும் இருந்)தால் அவள் விட்டுச்சென்ற அனைத்தையும் அவன் அடைவான். ஆணின்றி இரு பெண்கள் (மட்டும்) இருந்தால், அவள் விட்டுச் சென்றதில் மூன்றில் இரு பாகத்தை இவ்விருவரும் அடைவார்கள். மேலும், ஆணும் பெண்ணும் (ஆகப் பலர்) சகோதரர்களாயிருந்தால், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆணுக்குப் பெண்ணுக்கிருப்பதைப் போல இரண்டு பங்கு உண்டு. (அதாவது பெண்ணுக்கு ஒரு பங்கும் ஆணுக்கு இரு பங்குகளும் கிடைக்கும்.) நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவற்றை) அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
IFT
(நபியே!) மக்கள் உம்மிடம் கலாலா பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு கலாலா பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன், ஒரு சகோதரி அவனுக்கு இருக்கும் நிலையில் இறந்துவிட்டால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் பாதி அவளுக்கு உரியதாகும். குழந்தை இல்லாமல் அந்தச் சகோதரி இறந்துவிட்டால் சகோதரன் அவளுக்கு வாரிசாவான். இறந்து போனவருக்கு இரு சகோதரிகள் இருந்தால், அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு உரியதாகும். சகோதர சகோதரிகள் பலர் இருந்தால், அவர்களில் ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானதாகும். அல்லாஹ் உங்களுக்குச் சட்ட திட்டங்களைத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
‘கலாலா’ (-தாய், தகப்பன், பாட்டன் பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை (நபியே!) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) ‘கலாலா’ பற்றி அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான் என்று (நபியே!) நீர் கூறுவீராக! எவரேனுமொரு மனிதன் இறந்து அவனுக்கு குழந்தையில்லாது, ஒரு சகோதரி இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச்சென்ற (சொத்)தில் பாதி உண்டு, (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்கு குழந்தையில்லாதிருந்தால் அவன், அவள் விட்டுச் சென்றவைகளுக்கு வாரிசு ஆகி விடுவான், (சகோதரிகளான) அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு (பாகங்கள்) அவ்விருவருக்கும் உண்டு, அன்றியும், ஆண்களும் பெண்களுமான சகோதரர்களாயிருந்தால் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆணுக்கு பெண்ணுக்கிருப்பதைப் போல் இரண்டு பங்குண்டு, நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவைகளை) அல்லாஹ், உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கின்றான், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன்.
Saheeh International
They request from you a [legal] ruling. Say, "Allah gives you a ruling concerning one having neither descendants nor ascendants [as heirs]." If a man dies, leaving no child but [only] a sister, she will have half of what he left. And he inherits from her if she [dies and] has no child. But if there are two sisters [or more], they will have two thirds of what he left. If there are both brothers and sisters, the male will have the share of two females. Allah makes clear to you [His law], lest you go astray. And Allah is Knowing of all things.