41. ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா

மக்கீ, வசனங்கள்: 54

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
حٰمٓ ۟ۚ
حٰمٓ‌ ۚ‏ஹா மீம்
ஹா மீம்
முஹம்மது ஜான்
ஹா, மீம்.
அப்துல் ஹமீது பாகவி
ஹா மீம்.
IFT
ஹாமீம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஹாமீம்.
Saheeh International
ha, Meem.
تَنْزِیْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۚ
تَنْزِيْلٌஇறக்கப்பட்ட வேதமாகும்مِّنَ الرَّحْمٰنِபேரன்பாளனிடமிருந்துالرَّحِيْمِ‌ۚ‏பேரருளாளன்
தன்Zஜீலும் மினர்-ரஹ்மானிர்-ரஹீம்
முஹம்மது ஜான்
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது;
அப்துல் ஹமீது பாகவி
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் (ஆகிய அல்லாஹ்) இடமிருந்து இது இறக்கப்பட்டுள்ளது.
IFT
இது அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் உடைய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடமிருந்து இறக்கப்பட்டுள்ளது.
Saheeh International
[This is] a revelation from the Entirely Merciful, the Especially Merciful -
كِتٰبٌ فُصِّلَتْ اٰیٰتُهٗ قُرْاٰنًا عَرَبِیًّا لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟ۙ
كِتٰبٌவேதமாகும்فُصِّلَتْவிவரிக்கப்பட்டனاٰيٰتُهٗஇதன் வசனங்கள்قُرْاٰنًاகுர்ஆன்عَرَبِيًّاஅரபி மொழியிலானلِّقَوْمٍமக்களுக்காகيَّعْلَمُوْنَۙ‏அறிகின்றார்கள்
கிதாBபுன் Fபுஸ்ஸிலத் ஆயாதுஹூ குர்ஆனன் 'அரBபிய்யல் லிகவ்மி(ன்)ய் யஃலமூன்
முஹம்மது ஜான்
அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
இது குர்ஆன் என்னும் வேதமாகும். அறிவுள்ள மக்களுக்காக இதன் வசனங்கள் அரபி மொழியில் விவரிக்கப்பட்டுள்ளன.
IFT
இது எத்தகைய வேதமெனில், அதனுடைய வசனங்கள் நன்கு விவரிக்கப்பட்டிருக்கின்றன; அரபி மொழியிலுள்ள குர்ஆன் ஆகவும் இருக்கின்றது; அறிவுள்ள மக்களுக்கு
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது) வேதமாகும், அறிந்து கொள்ளும் சமூகத்தாருக்காக அரபி (மொழி)க் குர் ஆனாக அதனுடைய வசனங்கள் தனித்தனியாக்கப்பட்டு (தெளிவு செய்யப்பட்டு)ள்ளன.
Saheeh International
A Book whose verses have been detailed, an Arabic Qur’an for a people who know,
بَشِیْرًا وَّنَذِیْرًا ۚ فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
بَشِيْرًاநற்செய்தி கூறக்கூடியதுوَّنَذِيْرًا‌ ۚஅச்சமூட்டி எச்சரிக்கக் கூடியதுفَاَعْرَضَபுறக்கணித்தனர்اَكْثَرُஅதிகமானோர்هُمْஅவர்களில்فَهُمْஇன்னும் அவர்கள்لَا يَسْمَعُوْنَ‏செவியேற்பதில்லை
Bபஷீர(ன்)வ் வ னதீரன் Fப-அஃரள அக்தருஹும் Fபஹும் லா யஸ்ம'ஊன்
முஹம்மது ஜான்
நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நல்லோருக்கு இது) நற்செய்தி கூறுகிறதாகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறதாகவும் இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதைப்) புறக்கணித்து விட்டனர். ஆதலால், அவர்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை.
IFT
நற்செய்தி சொல்லக்கூடியதும், எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகும். ஆனால், இந்த மக்களில் பெரும்பாலோர் (இதனைப்) புறக்கணித்து விட்டனர். மேலும், அவர்கள் செவிமடுப்பதுமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளுக்கு இது) நன்மாராயம் கூறுகின்றதாகவும், (நிராகரித்தோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றதாகவும்_(இருக்கின்றது) பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் (இதனைப்) புறக்கணித்து விட்டனர்_(ஆகவே,) அவர்கள் (இதற்குச்) செவிசாய்க்கமாட்டார்கள்.
Saheeh International
As a giver of good tidings and a warner; but most of them turn away, so they do not hear.
وَقَالُوْا قُلُوْبُنَا فِیْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ وَفِیْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْ بَیْنِنَا وَبَیْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ ۟
وَقَالُوْاஅவர்கள் கூறினார்கள்قُلُوْبُنَاஎங்கள் உள்ளங்கள்فِىْۤ اَكِنَّةٍதிரைகளில்தான்مِّمَّاஎதில்تَدْعُوْنَاۤநீர் எங்களை அழைக்கின்றீர்களோاِلَيْهِஅதன் பக்கம்وَفِىْۤ اٰذَانِنَاஇன்னும் எங்கள்செவிகளில்وَقْرٌசெவிட்டுத்தனம்وَّمِنْۢ بَيْنِنَاஇன்னும் எங்களுக்கு மத்தியிலும்وَبَيْنِكَஉமக்கு மத்தியிலும்حِجَابٌஒரு திரைفَاعْمَلْஆகவே நீர் செய்வீராக!اِنَّنَاநிச்சயமாக நாங்கள்عٰمِلُوْنَ‏செய்வோம்
வ காலூ குலூBபுனா Fபீ அகின்னதிம் மிம்மா தத்'ஊனா இலய்ஹி வ Fபீ ஆதானினா வக்ரு(ன்)வ் வ மிம் Bபய்னினா வ Bபய்னிக ஹிஜாBபுன் Fபஃமல் இன்னனா 'ஆமிலூன்
முஹம்மது ஜான்
மேலும் அவர்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன; எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீர்களோ (அதைக் கவனிக்க முடியாதபடி) எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (நீர் கூறுவதைச் செவியுற முடியாதவாறு) எங்கள் செவிகள் செவிடாகி விட்டன. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் திரையிட(ப்பட்டுத் தடுக்க)ப்பட்டு விட்டது. ஆகவே, நீர் (விரும்பியதைச்) செய்து கொண்டிருப்பீராக. நாங்களும் (நாங்கள் விரும்பியதையே) செய்து கொண்டிருப்போம்'' என்றும், (இவ்வேதத்தை நிராகரிப்பவர்கள்) கூறுகின்றனர்.
IFT
அவர்கள் கூறுகின்றார்கள்; “எதன் பக்கம் நீர் எங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றீரோ, (அதன் பக்கம் நோக்காதபடி) எங்கள் உள்ளங்கள் உறையிடப்பட்டிருக்கின்றன. எங்கள் காதுகள் செவிடாகிவிட்டிருக்கின்றன. மேலும், எங்களுக்கும் உமக்கும் இடையே ஒரு திரை விழுந்து விட்டிருக்கின்றது. நீர் உமது பணியைச் செய்யும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், “நீர் எதன்பால் எங்களை அழைக்கின்றீரோ அதைவிட்டும் எங்களுடைய இதயங்கள் திரைகளில் இருக்கின்றன, எங்களுடைய செவிகளில் அடைப்பும் இருக்கிறது, எங்களுக்கும், உமக்குமிடையே திரை இருக்கிறது, ஆகவே, நீர் (உம் காரியத்தைச்) செய்து கொண்டிருப்பீராக! நிச்சயமாக, நாங்களும் (எங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருப்போம்” என்றும் (நிராகரிப்போர்) கூறுகின்றனர்.
Saheeh International
And they say, "Our hearts are within coverings [i.e., screened] from that to which you invite us, and in our ears is deafness, and between us and you is a partition, so work; indeed, we are working."
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَاسْتَقِیْمُوْۤا اِلَیْهِ وَاسْتَغْفِرُوْهُ ؕ وَوَیْلٌ لِّلْمُشْرِكِیْنَ ۟ۙ
قُلْகூறுவீராக!اِنَّمَاۤ اَنَاநான் எல்லாம்بَشَرٌஒரு மனிதர்தான்مِّثْلُكُمْஉங்களைப் போன்றيُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَىَّஎனக்குاَنَّمَاۤ اِلٰهُكُمْஉங்கள் கடவுள் எல்லாம்اِلٰـهٌ وَّاحِدٌஒரே ஒருகடவுள்தான்فَاسْتَقِيْمُوْۤاஆகவே, நீங்கள் நேர்வழி நடங்கள்!اِلَيْهِஅவன் பக்கமேوَاسْتَغْفِرُوْهُ‌ ؕஇன்னும் அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்!وَوَيْلٌ لِّلْمُشْرِكِيْنَ ۙ‏நாசம்தான்/இணைவைப்பவர்களுக்கு
குல் இன்னமா அன Bபஷரும் மித்லுகும் யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹிதுன் Fபஸ்தகீமூ இலய்ஹி வஸ்தக்Fபிரூஹ்; வ வய்லுல் லில் முஷ்ரிகீன்
முஹம்மது ஜான்
“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது; நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: மெய்யாகவே நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். ஆயினும், உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நில்லுங்கள். அவனிடம் நீங்கள் பாவ மன்னிப்பும் கேளுங்கள். அவனுக்கு இணைவைப்பவர்களுக்குக் கேடுதான்.
IFT
(நபியே! இவர்களிடம்) கூறும்: நான் ஒரு மனிதன்தான், உங்களைப் போன்று! வஹியின்* மூலம் எனக்கு அறிவிக்கப்படுகின்றது, உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; எனவே, நீங்கள் அவனுடைய திசையிலேயே நேராக நிலைகொள்ளுங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள். இணைவைப்பாளர்களுக்கு அழிவுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே நபியே!) நீர் கூறுவீராக: “நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், (ஆனால்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே ஒரு நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது, ஆதலால், (செயல்களைக் கலப்பற்றதாக்கி) அவனளவிலேயே நீங்கள் உறுதியாக நில்லுங்கள், அவனிடம் நீங்கள் பிழை பொறுக்கவும் தேடுங்கள், இன்னும், (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருப்போருக்குக் கேடுதான்.
Saheeh International
Say, [O Muhammad], "I am only a man like you to whom it has been revealed that your god is but one God; so take a straight course to Him and seek His forgiveness." And woe to those who associate others with Allah
الَّذِیْنَ لَا یُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟
الَّذِيْنَ لَا يُؤْتُوْنَஎவர்கள்/அவர்கள் கொடுப்பதில்லைالزَّكٰوةَஸகாத்தைوَهُمْஇன்னும் அவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைهُمْஅவர்கள்كٰفِرُوْنَ‏நிராகரிக்கின்றனர்
அல்லதீன லா யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் Bபில்ஆகிரதிஹும் காFபிரூன்
முஹம்மது ஜான்
அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் ஜகாத்து கொடுப்பதில்லை. அவர்கள்தான் மறுமையை நிராகரிப்பவர்கள்.
IFT
அவர்களோ, ஜகாத் வழங்குவதில்லை; இன்னும் மறுமையை நிராகரிக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், ஜகாத்தைக் கொடுக்கமாட்டார்கள், இன்னும், அவர்கள் தாம் மறுமையை நிராகரிக்கக்கூடியவர்கள்.
Saheeh International
Those who do not give zakah, and in the Hereafter they are disbelievers.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைلَهُمْஅவர்களுக்கு உண்டுاَجْرٌநற்கூலிغَيْرُ مَمْنُوْنٍ‏முடிவற்ற(து)
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.”  
அப்துல் ஹமீது பாகவி
(ஆயினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ (அவர்கள்தான் மறுமையை நம்பக்கூடியவர்கள்.) அவர்களுக்கு நிச்சயமாக (ஒரு காலத்திலும்) முடிவுறாத (நிலையான) கூலியுண்டு.
IFT
ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, விசுவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்கு முடிவில்லாத (நிலையான) கூலியுண்டு.
Saheeh International
Indeed, those who believe and do righteous deeds - for them is a reward uninterrupted.
قُلْ اَىِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِیْ خَلَقَ الْاَرْضَ فِیْ یَوْمَیْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا ؕ ذٰلِكَ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۚ
قُلْகூறுவீராக!اَٮِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَநீங்கள் நிராகரிக்கின்றீர்களா?بِالَّذِىْ خَلَقَபடைத்தவனைالْاَرْضَபூமியைفِىْ يَوْمَيْنِஇரண்டு நாள்களில்وَتَجْعَلُوْنَஇன்னும் ஏற்படுத்துகின்றீர்களா?لَهٗۤஅவனுக்குاَنْدَادًا‌ؕஇணைகளைذٰلِكَஅவன்தான்رَبُّஇறைவன்الْعٰلَمِيْنَ‌ۚ‏அகிலங்களின்
குல் அ'இன்னகும் லதக்Fபுரூன Bபில்லதீ கலகல் அர்ள Fபீ யவ்மய்னி வ தஜ்'அலூன லஹூ அன்தாதா; தாலிக ரBப்Bபுல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
“பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: “(இவ்வளவு பெரிய) பூமியை இரண்டே நாள்களில் படைத்தவனை நீங்கள் நிராகரித்துவிட்டு (மற்றவற்றை) அவனுக்கு இணையாக்குகிறீர்களா? அவன்தான் உலகத்தார் அனைவரையும் படைத்த இறைவன்.''
IFT
(நபியே! இவர்களிடம்) கேளும்: “நீங்கள் பூமியை இரண்டு நாட்களில் படைத்த இறைவனை நிராகரிக்கின்றீர்களா? மேலும், மற்றவர்களை அவனுக்கு இணையாக்குகின்றீர்களா?” அவன்தானே அகில உலகங்களுக்கும் இறைவன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக: “பூமியை இரண்டே நாட்களில் படைத்தானே அத்தகையவனைத் திட்டமாக நீங்கள் நிராகரித்துவிட்டு, அவனுக்குச் சமமானவர்களையும் நீங்கள் ஆக்குகிறீர்களா? அவன் (தான்) அகிலத்தாரின் இரட்சகனாவான்.”
Saheeh International
Say, "Do you indeed disbelieve in He who created the earth in two days and attribute to Him equals? That is the Lord of the worlds."
وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِیْهَا وَقَدَّرَ فِیْهَاۤ اَقْوَاتَهَا فِیْۤ اَرْبَعَةِ اَیَّامٍ ؕ سَوَآءً لِّلسَّآىِٕلِیْنَ ۟
وَجَعَلَஇன்னும் ஏற்படுத்தினான்فِيْهَاஅதில்رَوَاسِىَமலைகளைمِنْ فَوْقِهَاஅதற்கு மேலாகوَبٰرَكَஇன்னும் அருள்வளம் புரிந்தான்فِيْهَاஅதில்وَقَدَّرَஇன்னும் திட்டமிட்டு நிர்ணயித்தான்فِيْهَاۤஅதில்اَقْوَاتَهَاஅதன் உணவுகளைفِىْۤ اَرْبَعَةِநான்குاَيَّامٍؕநாள்களில்سَوَآءًசரியான பதிலாகلِّلسَّآٮِٕلِيْنَ‏விசாரிப்பவர்களுக்கு
வ ஜ'அல Fபீஹா ரவா ஸிய மின் Fபவ்கிஹா வ Bபாரக Fபீஹா வ கத்தர Fபீஹா அக்வாதஹா Fபீ அர்Bப'அதி அய்யாமின் ஸவா'அல் லிஸ்ஸா'இலீன்
முஹம்மது ஜான்
அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
அப்துல் ஹமீது பாகவி
அவனே பூமியின் மீது பெரும் மலைகளை அமைத்து, அதில் எல்லா விதமான பாக்கியங்களையும் புரிந்தான். மேலும், அதில் (வசிப்பவர்களுக்கு) வேண்டிய உணவுகளையும் நான்கு நாள்களில் நிர்ணயம் செய்தான். (அதுவும் நல்லவர்கள் தீயவர்கள் என்ற வித்தியாசமின்றி) கேட்பவர்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்குமாறும் செய்தான்.
IFT
அவன் (பூமியைப் படைத்த பிறகு) அதன் மேல் மலைகளை அமைத்தான். மேலும், அதில் பாக்கியங்களை அருளினான். கேட்பவர்கள் அனைவருக்காகவும் அவரவரின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சரியான அளவில் அதனுள் உணவுப் பொருட்களை செய்து வைத்தான். இந்த அனைத்துப் பணிகளும் நான்கு நாட்களில் நிறைவேறின.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனே அதில்_ அதன் மேல் (பகுதியில்) இருந்து உறுதியான மலைகளை அமைத்தான், அதில் அபிவிருத்தியை நல்கினான், மேலும், அதில் அதன் உணவுகளை நான்கு நாட்களில் நிர்ணயம் செய்தான், (இவ்வாறு செய்ததைப் பற்றிக்) கேட்போருக்கு (பதில்) நிறைவாகி விட்டது.
Saheeh International
And He placed on it [i.e., the earth] firmly set mountains over its surface, and He blessed it and determined therein its [creatures'] sustenance in four days without distinction - for [the information of] those who ask.
ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ وَهِیَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِیَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ قَالَتَاۤ اَتَیْنَا طَآىِٕعِیْنَ ۟
ثُمَّபிறகுاسْتَـوٰۤىஅவன் உயர்ந்தான்اِلَى السَّمَآءِவானத்திற்கு மேல்وَهِىَஅது (இருந்தது)دُخَانٌஓர் ஆவியாகفَقَالَஅவன் கூறினான்لَهَاஅதற்கு(ம்)وَلِلْاَرْضِபூமிக்கும்ائْتِيَاநீங்கள் இருவரும் வாருங்கள்طَوْعًاவிருப்பத்துடன்اَوْஅல்லதுكَرْهًا ؕவெறுப்புடன்قَالَتَاۤஅவை இரண்டும்اَتَيْنَاநாங்கள் வந்தோம்طَآٮِٕعِيْنَ‏விருப்பமுள்ளவர்களாகவே
தும்மஸ் தவா இலஸ்-ஸமா'இ வ ஹிய துகானுன் Fபகால லஹா வ லில் அர்ளி'தியா தவ்'அன் அவ் கர்ஹன் காலதா அதய்னா தா'இ'ஈன்
முஹம்மது ஜான்
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது ஒரு வகை புகையாக இருந்தது. அதையும் பூமியையும் நோக்கி ‘‘நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி (கீழ்ப்படிந்து) என்னிடம் வாருங்கள்'' என்று கூறினான். அதற்கு அவை, ‘‘இதோ நாங்கள் விருப்பத்துடனேயே வந்தோம்'' என்று கூறின.
IFT
பிறகு, அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தினான். அப்போது அது வெறும் புகையாய் இருந்தது. அவன் வானத்திடமும், பூமியிடமும் கூறினான்: “உருவாகி வாருங்கள்; நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்!” அவை இரண்டும், “நாங்கள் கீழ்ப்படிந்த வண்ணமே வந்துவிட்டோம்” எனக் கூறின.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் வானத்தை_அது புகையாக இருக்கும் நிலையில் அவன் நாடினான், பின்னர், அவன் அதற்கும், பூமிக்கும் “நீங்களிருவரும் கீழ்ப்படிந்தோ, அல்லது நிர்ப்பந்தமாகவோ வாருங்கள்” என்று கூறினான், (அதற்கு) அவை இரண்டும் “நாங்கள் கீழ்ப்படிந்தவர்களாகவே வந்தோம்” என்று கூறின.
Saheeh International
Then He directed Himself to the heaven while it was smoke and said to it and to the earth, "Come [into being], willingly or by compulsion." They said, "We have come willingly."
فَقَضٰىهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِیْ یَوْمَیْنِ وَاَوْحٰی فِیْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا ؕ وَزَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ ۖۗ وَحِفْظًا ؕ ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟
فَقَضٰٮهُنَّஆக, முடித்தான்/அவற்றைسَبْعَஏழுسَمٰوَاتٍவானங்களாகفِىْ يَوْمَيْنِஇரண்டு நாள்களில்وَاَوْحٰىஇன்னும் அறிவித்தான்فِىْ كُلِّஒவ்வொருسَمَآءٍவானத்திலும்اَمْرَهَا‌ ؕஅதன் காரியத்தைوَزَ يَّـنَّـاஇன்னும் அலங்கரித்தோம்السَّمَآءَவானத்தைالدُّنْيَاசமீபமான(து)بِمَصَابِيْحَநட்சத்திரங்களால்ۖ  وَحِفْظًا ؕஇன்னும் பாதுகாப்பதற்காகذٰ لِكَ تَقْدِيْرُஇது/ஏற்பாடாகும்الْعَزِيْزِமிகைத்தவன்الْعَلِيْمِ‏நன்கறிந்தவன்
Fபகளாஹுன்ன ஸBப்'அ ஸமாவாதின் Fபீ யவ்மய்னி வ அவ்ஹா Fபீ குல்லி ஸமா'இன் அமரஹா; வ Zஜய்யன்னஸ்ஸ மா'அத் துன்யா BபிமஸாBபீஹ வ ஹிFப்ளா; தாலிக தக்தீருல் 'அZஜீZஜில் 'அலீம்
முஹம்மது ஜான்
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்ய திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் நடைபெறவேண்டிய விஷயங்களை (அவற்றுக்கு) அறிவித்தான். பின்னர், (இவ்வளவும் செய்த) நாமே (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்து, (அதை அவற்றுக்குப்) பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இவையெல்லாம், (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனுடைய ஏற்பாடுதான்.
IFT
எனவே, அவன் இரண்டு நாட்களுக்குள் ஏழு வானங்களையும் அமைத்தான். மேலும், ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய நியதியை அறிவித்தான். உலகத்தின் அருகில் உள்ள வானத்தை விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். அதனை நன்கு பாதுகாத்து வைத்தோம். இவையனைத்தும் பேரறிவாளனும், வல்லமை மிக்கவனுமான இறைவன் நிர்ணயித்த அமைப்பாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவன் அவைகளை இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சமப்படுத்திமுடித்தான், ஒவ்வொரு வானத்திலும் அதனுடைய காரியத்தை அறிவித்தான், மேலும், நாமே தாழ்வாக உள்ள (முதல்) வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம், (அதனை ஷைத்தான்களை விட்டும்) பாதுகாக்கப்பட்டதாகவும் (ஆக்கினோம்), இது (யாவரையும்) மிகைத்தோன், (யாவையும்) நன்கு அறிந்தோனின் ஏற்பாடாகும்.
Saheeh International
And He completed them as seven heavens within two days and inspired [i.e., made known] in each heaven its command. And We adorned the nearest heaven with lamps [i.e., stars, for beauty] and as protection. That is the determination of the Exalted in Might, the Knowing.
فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۟ؕ
فَاِنْ اَعْرَضُوْاஅவர்கள் புறக்கணித்தால்فَقُلْகூறுவீராக!اَنْذَرْتُكُمْஉங்களுக்கு எச்சரிக்கிறேன்صٰعِقَةًஒரு பேரழிவைمِّثْلَபோன்றصٰعِقَةِ(ஏற்பட்ட) பேரழிவைعَادٍஆது உடையوَّثَمُوْدَ ؕ‏இன்னும் ஸமூது
Fப-இன் அஃரளூ Fபகுல் அன்தர்துகும் ஸா'இகதம் மித்ல ஸா'இகதி 'ஆதி(ன்)வ் வ தமூத்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், “ஆது, ஸமூது (கூட்டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) போன்ற வேதனையைப் போல் (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே! இவ்வளவு தூரம் அறிவித்த பின்னும்) அவர்கள் (நம்பிக்கை கொள்ளாது) புறக்கணித்தால், நீர் கூறுவீராக: ‘‘ஆது, ஸமூது என்னும் மக்களுக்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்றதொரு இடி முழக்கத்தையே நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.''
IFT
இனி, இவர்கள் புறக்கணித்தால் (இவர்களிடம்) கூறிவிடும்: ‘திடீரெனத் தாக்கும் வேதனை குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன்; ஆத் சமுதாயத்தினர் மீதும், ஸமூத் சமுதாயத்தினர் மீதும் இறங்கிய வேதனை போன்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) அவர்கள் (பின்னும் விசுவாசங்கொள்ளாது) புறக்கணித்து விடுவார்களாயின் அப்போது, “ஆது, ஸமூதுடைய (சமூகத்தார்க்கு ஏற்பட்ட) இடி முழக்கம் போன்றதோர் இடி முழக்கத்தையே, நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக!
Saheeh International
But if they turn away, then say, "I have warned you of a thunderbolt like the thunderbolt [that struck] ʿAad and Thamūd.
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰٓىِٕكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُஅவர்களிடம் வந்தபோது/தூதர்கள்مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னிருந்து(ம்)وَمِنْ خَلْفِهِمْஇன்னும் அவர்களுக்குப் பின்னிருந்துاَلَّا تَعْبُدُوْۤاவணங்காதீர்கள்اِلَّاதவிரاللّٰهَ‌ؕஅல்லாஹ்வைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَوْ شَآءَநாடியிருந்தால்رَبُّنَاஎங்கள் இறைவன்لَاَنْزَلَஇறக்கி இருப்பான்مَلٰٓٮِٕكَةًவானவர்களைفَاِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤ اُرْسِلْتُمْஎதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோبِهٖஅதைكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்தான்
இத் ஜா'அத் ஹுமுர் ருஸுலு மிம் Bபய்னி அய்தீஹிம் வ மின் கல்Fபிஹிம் அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ காலூ லவ் ஷா'அ ரBபுனா ல அன்Zஜல மலா 'இகதன் Fப இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடத்தில் (நமது பல) தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாக வந்து, (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்ற எதையும் வணங்காதீர்கள்'' என்று கூறினர். அதற்கு அவர்கள், ‘‘எங்கள் இறைவன் (மெய்யாகவே எங்களுக்கு ஒரு தூதரை அனுப்ப) விரும்பியிருந்தால், வானவர்களையே (தூதர்களாக) இறக்கி வைத்திருப்பான். ஆகவே, நிச்சயமாக நாங்கள், நீங்கள் கொண்டு வந்த (இத்தூ)தை நிராகரிக்கிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
இறைவனின் தூதர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னுமாய் ஒவ்வொரு திசையிலிருந்தும் அவர்களிடம் வந்தார்கள். ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாதீர்கள்’ என அவர்களுக்கு விளக்கினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பானே! எனவே நீங்கள் கொண்டு வந்திருக்கும் தூதுச் செய்தியை நாங்கள் ஏற்பது இல்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வைத் தவிர (மற்ற) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” என்று (கூறி நம்முடைய) தூதர்கள் அவர்களுக்கு முன்பாகவும், அவர்களுக்குப் பின்பாகவும் அவர்களிடத்தில் வந்தபோது, (அத்தூதர்களிடம்) அவர்கள் “எங்கள் இரட்சகன் நாடியிருந்தால், அவன் மலக்குகளை (த்தூதர்களாக) திட்டமாக இறக்கி வைத்திருப்பான், ஆகவே, நிச்சயமாக, நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதை நாங்கள் நிராகரிக்கக் கூடியவர்கள் தாம்” என்று கூறினார்கள்.
Saheeh International
[That occurred] when the messengers had come to them before them and after them, [saying], "Worship not except Allah." They said, "If our Lord had willed, He would have sent down the angels, so indeed we, in that with which you have been sent, are disbelievers."
فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ؕ اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ؕ وَكَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
فَاَمَّا عَادٌஆக, ஆது சமுதாயம்فَاسْتَكْبَرُوْاபெருமை அடித்தனர்فِى الْاَرْضِபூமியில்بِغَيْرِ الْحَقِّஅநியாயமாகوَقَالُوْاஇன்னும் கூறினார்கள்مَنْயார்اَشَدُّமிக பலசாலி(கள்)مِنَّاஎங்களை விடقُوَّةً  ؕவலிமையால்اَوَلَمْ يَرَوْاஇவர்கள் கவனிக்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்الَّذِىْ خَلَقَهُمْஎவன்/படைத்தான்/அவர்களைهُوَஅவன்اَشَدُّமிக பலசாலிمِنْهُمْஅவர்களை விடقُوَّةً  ؕவலிமையால்وَكَانُوْاஅவர்கள் இருந்தனர்بِاٰيٰتِنَاநமது வசனங்களைيَجْحَدُوْنَ‏மறுப்பவர்களாக
Fப அம்மா 'ஆதுன் Fபஸ்தக் Bபரூ Fபில் அர்ளி Bபிகய்ருல் ஹக்கி வ காலூ மன் அஷத்து மின்னா குவ்வதன் அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஹும் ஹுவ அஷத்து மின்ஹும் குவ்வத(ன்)வ் வ கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
முஹம்மது ஜான்
அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, “எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?” என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆது என்னும் மக்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமைகொண்டு, எங்களைவிட பலசாலியாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? (எனினும்,) அவர்கள் நமது (இத்தகைய) அத்தாட்சிகளையும் (தர்க்கித்து) நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்.
IFT
ஆத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: அவர்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டு திரிந்தார்கள். “எங்களைவிட வலிமை மிக்கவர் யார்?” அவர்களைப் படைத்த இறைவன் அவர்களைவிட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்குப் புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, ஆது (கூட்டத்தார்) பற்றிய விளக்கமாவது, அவர்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள், எங்களைவிட பலத்தால் மிக்கவர் யார்? என்றும் கூறினார்கள், அவர்களை படைத்தானே அத்தகைய அல்லாஹ்_அவன் நிச்சயமாக, அவர்களைவிட பலத்தால் மிக்கவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளை மறுப்பவர்களாகவும் இருந்தார்கள்.
Saheeh International
As for ʿAad, they were arrogant upon the earth without right and said, "Who is greater than us in strength?" Did they not consider that Allah who created them was greater than them in strength? But they were rejecting Our signs.
فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْۤ اَیَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِیْقَهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰی وَهُمْ لَا یُنْصَرُوْنَ ۟
فَاَرْسَلْنَاஆகவே அனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுرِيْحًاகாற்றைصَرْصَرًاகடும் குளிர்(ந்தது)فِىْۤ اَيَّامٍநாள்களில்نَّحِسَاتٍதுரதிர்ஷ்டமானلِّـنُذِيْقَهُمْநாம் அவர்களுக்கு சுவைக்க வைப்பதற்காகعَذَابَவேதனையைالْخِزْىِகேவலமானفِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕஇவ்வுலகில்وَلَعَذَابُவேதனையோالْاٰخِرَةِமறுமையின்اَخْزٰى‌மிக கேவலமானதுوَهُمْ لَا يُنْصَرُوْنَ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்
Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹன் ஸர்ஸரன் Fபீ அய்யாமின் னஹிஸாதில் லினுதீகஹும் 'அதாBபல் கிZஜ்யி Fபில் ஹயாதித் துன்யா வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Zஜா வ ஹும் லா யுன்ஸரூன்
முஹம்மது ஜான்
ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நாம் அவர்கள் மீது (வந்த வேதனையின்) கெட்ட நாள்களில் கொடிய புயல் காற்றை அனுப்பி, இழிவு தரும் வேதனையை இந்த உலகத்திலேயே அவர்கள் சுவைக்கும்படி செய்தோம். (அவர்களுக்கு) மறுமையிலுள்ள வேதனையோ, (இதைவிட) இழிவு தரக்கூடியதாகும். (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
IFT
இறுதியில், அபசகுனமுடைய சில நாட்களில் கடும் புயற்காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை அவர்கள் சுவைக்கச் செய்திட வேண்டும் என்பதற்காக! மேலும், மறுமையின் வேதனை இதைவிடவும் இழிவு தரக்கூடியதாகும். அங்கு அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர் எவரும் இருக்கமாட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, இவ்வுலக வாழ்வில் இழிவு தரும் வேதனையை அவர்களுக்கு நாம் சுவைக்கச் செய்வதற்காக, துர்ச்சகுனமான நாட்களில் அவர்களின் மீது கொடிய புயல் காற்றை நாம் அனுப்பிவைத்தோம், மறுமையின் வேதனையோ, (இதனைவிட) மிக இழிவு தரக்கூடியதாகும், (அங்கு எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவுமாட்டார்கள்.
Saheeh International
So We sent upon them a screaming wind during days of misfortune to make them taste the punishment of disgrace in the worldly life; but the punishment of the Hereafter is more disgracing, and they will not be helped.
وَاَمَّا ثَمُوْدُ فَهَدَیْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰی عَلَی الْهُدٰی فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ۚ
وَاَمَّا ثَمُوْدُஆக, ஸமூது சமுதாயம்فَهَدَيْنٰهُمْஅவர்களுக்கு நேர்வழிகாட்டினோம்فَاسْتَحَبُّوا(ஆனால்) அதிகம் விரும்பினார்கள்الْعَمٰىகுருட்டுத் தனத்தைத்தான்عَلَى الْهُدٰىநேர்வழியை விடفَاَخَذَتْهُمْஆகவே, அவர்களைப் பிடித்ததுصٰعِقَةُபேரழிவுالْعَذَابِவேதனையின்الْهُوْنِஇழிவானبِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‌ۚ‏அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக
வ அம்மா தமூது Fபஹதினாஹும் Fபஸ்தஹBப்Bபுல் 'அம 'அலல் ஹுத Fப அகதத்ஹும் ஸா'இகதுல் 'அதாBபில் ஹூனி Bபிமா கானூ யக்ஸிBபூன்
முஹம்மது ஜான்
ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஸமூது என்னும் மக்களோ, அவர்களுக்கும் நாம் (நம் தூதரை அனுப்பி) நேரான வழியை அறிவித்தோம். எனினும், அவர்களும் நேரான வழியில் செல்லாது குருடராய் இருப்பதையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக இழிவான வேதனையைக் கொண்டுள்ள இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
IFT
ஸமூத் சமூகத்தாரின் நிலைமை இதுவே: நாம் அவர்களுக்கு எது நேர்வழி என்பதை எடுத்துக் காட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியைப் பார்ப்பதற்குப் பதிலாக குருடர்களாய் இருக்க விரும்பினார்கள்! இறுதியில், அவர்கள் செய்த தீவினைகளின் காரணமாக இழிவான வேதனை அவர்களைத் திடீரெனத் தாக்கியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் ஸமூது (கூட்டத்தார்) பற்றிய விளக்கமாவது அவர்களுக்கு நாம் நேர்வழியைக் காண்பித்தோம், எனினும், அவர்கள் நேர்வழியைவிட குருட்டுத்தனத்தையே விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்டதன் காரணமாக இழிவான, வேதனையான இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
Saheeh International
And as for Thamūd, We guided them, but they preferred blindness over guidance, so the thunderbolt of humiliating punishment seized them for what they used to earn.
وَنَجَّیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠
وَ نَجَّيْنَاநாம் பாதுகாத்தோம்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கைகொண்டனர்وَكَانُوْاஇன்னும் இருந்தார்கள்يَتَّقُوْنَ‏அஞ்சுபவர்களாக
வ னஜ்ஜய்னல் லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
முஹம்மது ஜான்
ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.  
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
இறைநம்பிக்கை கொண்டு வழிகேட்டிலிருந்தும், தீய செயலில் இருந்தும் விலகியிருந்தவர்களை நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் விசுவாசங்கொண்டு, பயந்துகொண்டிருந்தார்களே, அத்தகையோரை நாம் காப்பாற்றினோம்.
Saheeh International
And We saved those who believed and used to fear Allah.
وَیَوْمَ یُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَی النَّارِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَيَوْمَநாளில்يُحْشَرُஒன்று திரட்டப்படுகின்றார்(கள்)اَعْدَآءُஎதிரிகள்اللّٰهِஅல்லாஹ்வின்اِلَى النَّارِநரகத்தின் பக்கம்فَهُمْஆகவே, அவர்கள்يُوْزَعُوْنَ‏நிறுத்தி வைக்கப்படுவார்கள்
வ யவ்ம யுஹ்ஷரு அஃதா'உல் லாஹி இலன் னாரி Fபஹும் யூZஜ'ஊன்
முஹம்மது ஜான்
மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக குழுக்கள் குழுக்களாக) பிரித்து நிறுத்தப்படுவார்கள்.
IFT
அந்த நேரத்தை சற்று நினைவுகூருங்கள்: அப்போது அல்லாஹ்வின் இந்தப் பகைவர்கள் நரகின் பக்கம் கொண்டு செல்வதற்காக ஒன்று திரட்டப்படுவார்கள். அவர்களில் முன்னோர்கள், பின்னோர்கள் வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வுடைய விரோதிகள் நரகத்தின்பால் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அவர்கள் தொடக்கம் முதல் கடைசி வரையில் உள்ளோரை வரிசைப்படுத்தி ஒருவரையொருவர் முந்திவிடாது மலக்குகளால்) அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
Saheeh International
And [mention, O Muhammad], the Day when the enemies of Allah will be gathered to the Fire while they are [driven], assembled in rows,
حَتّٰۤی اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَیْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا مَا جَآءُوْهَاஅவர்கள் அதனிடம் வரும் போதுشَهِدَசாட்சி கூறும்عَلَيْهِمْஅவர்களுக்கு எதிராகவேسَمْعُهُمْஅவர்களுடைய செவி(யும்)وَاَبْصَارُهُمْஅவர்களுடைய பார்வைகளும்وَجُلُوْدُهُمْஅவர்களுடைய தோல்களும்بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி
ஹத்தா இதா மா ஜா'ஊஹா ஷஹித 'அலய்ஹிம் ஸமு'உஹும் வ அBப்ஸாருஹும் வ ஜுலூதுஹும் Bபிமா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவர்கள் (அவற்றின் மூலம்) செய்தவற்றைப் பற்றி சாட்சி கூறும்.
IFT
இறுதியில், அனைவரும் அங்கு சென்றடையும்போது அவர்களின் காதுகளும், அவர்களின் கண்களும், அவர்களுடைய உடம்பின் தோல்களும் உலகில் அவை என்னென்ன செயல்களைச் செய்து கொண்டிருந்தன என்று அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இறுதியாக (நரகமாகிய) அதன் பால் அவர்கள் வந்தடைந்து விடுவார்களானால், (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவியும், அவர்களுடைய பார்வைகளும், அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
Saheeh International
Until, when they reach it, their hearing and their eyes and their skins will testify against them of what they used to do.
وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَیْنَا ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِیْۤ اَنْطَقَ كُلَّ شَیْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
وَقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்لِجُلُوْدِهِمْதங்களுடைய தோல்களிடம்لِمَ شَهِدْتُّمْஏன் சாட்சிகூறினீர்கள்عَلَيْنَا‌ ؕஎங்களுக்கு எதிராகقَالُوْۤاஅவை கூறும்اَنْطَقَنَاஎங்களை(யும்) பேச வைத்தான்اللّٰهُஅல்லாஹ்الَّذِىْۤஎவன்اَنْطَقَபேசவைத்தான்كُلَّ شَىْءٍஎல்லாவற்றையும்وَّهُوَஅவன்தான்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்اَوَّلَ مَرَّةٍமுதல் முறையாகوَّاِلَيْهِஇன்னும் அவன் பக்கம்தான்تُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
வ காலூ லிஜுலூதிஹிம் லிம ஷஹித்தும் 'அலய்னா காலூ அன்தகனல் லாஹுல் லதீ அன்தக குல்ல ஷய்'இ(ன்)வ் வ ஹுவ கலககும் அவ்வல மர்ரதி(ன்)வ் வ இலய்ஹி துர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, ‘‘எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?'' என்று கேட்பார்கள். அதற்கு அவை, ‘‘எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்'' என்றும் அவை கூறும்.
IFT
அவர்கள் தங்கள் தோல்களைப் பார்த்துக் கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி சொன்னீர்கள்?” அதற்கு அவை பதிலளிக்கும்: “ஒவ்வொன்றையும் பேச வைத்த இறைவனாகிய அல்லாஹ்தான் எங்களையும் பேச வைத்தான். அவனே உங்களை முதன் முறையாகப் படைத்தான். மேலும், இப்போது அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், தங்களின் தோல்களிடம், “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்றும் கேட்பார்கள், அதற்கு அவைகள், ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்தவனாகிய அல்லாஹ்தான் எங்களைப் பேசவைத்தான், அவன் தான் உங்களை முதல் தடவையும் படைத்தான், (இறந்த பின்னரும்) நீங்கள் அவனிடமே திருப்பப்பட்டிருகின்றீர்கள்” என்று கூறும்.
Saheeh International
And they will say to their skins, "Why have you testified against us?" They will say, "We were made to speak by Allah, who has made everything speak; and He created you the first time, and to Him you are returned.
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ یَّشْهَدَ عَلَیْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا یَعْلَمُ كَثِیْرًا مِّمَّا تَعْمَلُوْنَ ۟
وَمَا كُنْتُمْநீங்கள் இருக்கவில்லைتَسْتَتِرُوْنَமறைப்பவர்களாகاَنْ يَّشْهَدَசாட்சி கூறிவிடும் என்பதற்காகعَلَيْكُمْஉங்களுக்கு எதிராகسَمْعُكُمْஉங்கள் செவியும்وَلَاۤ اَبْصَارُكُمْஉங்கள் பார்வைகளும்وَلَا جُلُوْدُكُمْஉங்கள் தோல்களும்وَلٰكِنْஎன்றாலும்ظَنَنْتُمْநீங்கள் எண்ணினீர்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَعْلَمُஅறியமாட்டான்كَثِيْرًاஅதிகமானதைمِّمَّا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்வதில்
வமா குன்தும் தஸ்ததிரூன அய்-யஷ்ஹத 'அலய்கும் ஸம்'உகும் வ லா அBப்ஸாருகும் வலா ஜுலூதுகும் வ லாகின் ளனன்தும் அன்னல் லாஹ லா யஃலமு கதீரம் மிம்மா தஃமலூன்
முஹம்மது ஜான்
“உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் செவிகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்கள் பாவங்களை அவற்றை விட்டும்) மறைக்க முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்.
IFT
உலகில் நீங்கள் குற்றங்களை இரகசியமாக செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய காதுகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் எனும் எண்ணமே உங்களுக்கு இருந்ததில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்களுடைய செவிப்புலனும், உங்களுடைய பார்வைகளும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கெதிராக சாட்சியங்கூறாமலிருக்க, நீங்கள் (உங்களுடைய செயல்களை அவைகளுக்கு) மறைத்துக்கொள்ளக் கூடியவர்களாக நீங்கள் இருந்திருக்கவில்லை, எனினும், நீங்கள் செய்பவற்றிலிருந்து அநேகவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்கள்.
Saheeh International
And you were not covering [i.e., protecting] yourselves, lest your hearing testify against you or your sight or your skins, but you assumed that Allah does not know much of what you do.
وَذٰلِكُمْ ظَنُّكُمُ الَّذِیْ ظَنَنْتُمْ بِرَبِّكُمْ اَرْدٰىكُمْ فَاَصْبَحْتُمْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟
وَذٰلِكُمْஅந்தظَنُّكُمُஉங்கள் எண்ணம்தான்الَّذِىْஎதுظَنَنْتُمْஎண்ணினீர்கள்بِرَبِّكُمْஉங்கள் இறைவனைப் பற்றிاَرْدٰٮكُمْஉங்களை நாசமாக்கியதுفَاَصْبَحْتُمْஆகவே, நீங்கள் ஆகிவிட்டீர்கள்مِّنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
வ தாலிகும் ளன்னுகுமுல் லதீ ளனன்தும் Bபி-ரBப்Bபிகும் அர்தாகும் Fப அஸ்Bபஹ்தும் மினல் காஸிரீன்
முஹம்மது ஜான்
ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி எண்ணிய உங்கள் (இத்தவறான) எண்ணம்தான் உங்களை அழித்துவிட்டது. ஆதலால், நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகிவிட்டீர்கள்.
IFT
உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களுடைய இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்தி விட்டது. அதே காரணத்தால் நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகிவிட்டீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அதுதான் உங்கள் இரட்சகனைப்பற்றி நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த உங்களுடைய (தீய) எண்ணமாகும், அது உங்களை அழித்துவிட்டது, ஆதலால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள்” (என்று அவை கூறும்).
Saheeh International
And that was your assumption which you assumed about your Lord. It has brought you to ruin, and you have become among the losers."
فَاِنْ یَّصْبِرُوْا فَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۚ وَاِنْ یَّسْتَعْتِبُوْا فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِیْنَ ۟
فَاِنْ يَّصْبِرُوْاஅவர்கள் பொறுமையாக இருந்தாலும்فَالنَّارُநரகம்தான்مَثْوًىதங்குமிடமாகும்لَّهُمْ‌ؕஅவர்களுக்குரியوَاِنْ يَّسْتَعْتِبُوْاஅவர்கள் தங்களைத் திருப்புமாறு கோரினால்فَمَا هُمْ مِّنَ الْمُعْتَبِيْنَ‏அப்படி அவர்கள் திருப்பப்பட மாட்டார்கள்
Fப-இ(ன்)ய் யஸ்Bபிரூ Fபன் னாரு மத்வல் லஹும் வ இ(ன்)ய்-யஸ்தஃதிBபூ Fபமா ஹும் மினல் முஃதBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் (ஏதும் பேசாது சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களுக்கு தங்குமிடம் நரகம்தான். அவர்கள் மன்னிப்புக் கோரியபோதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.
IFT
இந்நிலையில் அவர்கள் பொறுமையுடனிருந்தாலும் (இல்லாவிட்டாலும்) நரகமே அவர்களின் இருப்பிடமாகும். மேலும், அவர்கள் திரும்பிச் செல்வதற்கு ஒரு வாய்ப்பை விரும்பினாலும் எந்த வாய்ப்பும் அவர்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்கள் பொருத்துக் கொள்வார்களானால், அவர்கள் தங்குமிடம் நரகம்தான், இன்னும், அவர்கள் (நற்செயல்கள் செய்து அல்லாஹ்வைத்) திருப்திப்படுத்தத் தேடினால், (அல்லாஹ்வைத் திருத்திப்படுத்தும் எச்செயலையும் செய்ய) அவர்கள் சிரமப்படுத்தப் படுபவர்களில் உள்ளவர்களல்லர்.
Saheeh International
So [even] if they are patient, the Fire is a residence for them; and if they ask to appease [Allah], they will not be of those who are allowed to appease.
وَقَیَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَیَّنُوْا لَهُمْ مَّا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۚ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟۠
وَقَيَّضْنَاநாம் இலகுவாக்கி அமைத்துக் கொடுத்தோம்لَهُمْஅவர்களுக்குقُرَنَآءَசில நண்பர்களைفَزَيَّنُوْاஅலங்கரித்துக் காட்டினார்கள்لَهُمْஅவர்களுக்குمَّا بَيْنَ اَيْدِيْهِمْஅவர்களுக்கு முன்னுள்ளதை(யும்)وَمَا خَلْفَهُمْஅவர்களுக்கு பின்னுள்ளதையும்وَحَقَّஇன்னும் உறுதியாகிவிட்டதுعَلَيْهِمُஇவர்கள் மீதும்الْقَوْلُவிதிக்கப்பட்ட அதே விதிفِىْۤ اُمَمٍசமுதாயங்களுக்குقَدْ خَلَتْசென்று விட்டனர்مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னர்مِّنَ الْجِنِّஜின்களில்وَالْاِنْسِ‌ۚமற்றும் மனிதர்களில்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்كَانُوْاஇருக்கின்றனர்خٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளாக
வ கய்யள்னா லஹும் குரனா'அ FபZஜய்யனூ லஹும் மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் வ ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிஹிம் மினல் ஜின்னி வல் இன்ஸி இன்னஹும் கானூ காஸிரீன்
முஹம்மது ஜான்
நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம்; ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள்; அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாகிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.  
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களுக்கு, இணைபிரியாத (சில கெட்ட) தோழர்களை இணைத்து விட்டோம். அவர்கள், அவர்களுக்கு முன்னும் பின்னுமுள்ள (தீய காரியங்கள்) அனைத்தையும் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டார்கள். ஆகவே, இவர்கள் மீதும், இவர்களுக்கு முன்சென்ற (இவர்களைப் போன்ற பல) மனித, ஜின் கூட்டத்தினர் மீதும் (அவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்ற) நம் வாக்கு உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) நஷ்டமடைந்து விட்டனர்.
IFT
அவர்கள் மீது சில நண்பர்களை நாம் சாட்டியிருந்தோம். அவர்களோ அவர்களுக்கு முன்னாலும் பின்னாலுமுள்ள ஒவ்வொன்றையும் அழகுபடுத்திக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் அவர்களுக்கு முன்பு வாழ்ந்த ஜின் இனத்தின் மீதும் மனித இனத்தின் மீதும் விதிக்கப்பட்ட வேதனையின் தீர்ப்பு அவர்கள் மீதும் விதிக்கப்பட்டு விட்டது. திண்ணமாக, அவர்கள் இழப்புக்குரியவர்களாகி விட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் அவர்களுக்கு (ஷைத்தான்களிலிருந்து) தோழர்களை இணைத்துவிட்டோம், ஆகவே, (அத்தோழர்கள்) அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னிருப்பதையும் அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்தார்கள், இன்னும், இவர்களுக்கு முன் சென்று போன ஜின்கள், மனிதர்கள், ஆகிய சமூகத்தவர்களுடன் நம்முடைய (வேதனையின்) வாக்கு இவர்களின் மீது உறுதியாகிவிட்டது, நிச்சயமாக இவர்கள் (யாவரும்) நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிட்டனர்.
Saheeh International
And We appointed for them companions who made attractive to them what was before them and what was behind them [of sin], and the word [i.e., decree] has come into effect upon them among nations which had passed on before them of jinn and men. Indeed, they [all] were losers.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِیْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ ۟
وَقَالَகூறினார்கள்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்لَا تَسْمَعُوْاசெவியுறாதீர்கள்لِهٰذَا الْقُرْاٰنِஇந்த குர்ஆனைوَالْغَوْاகூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்!فِيْهِஅதில்لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ‏நீங்கள்வெற்றி பெறுவீர்கள்
வ காலல் லதீன கFபரூ லா தஸ்ம'ஊ லிஹாதல் குர்'ஆனி வல்கவ் Fபீஹி ல'அல்லகும் தக்லிBபூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள். (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்” என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் ‘‘இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர் அதை ஓதியபோதிலும் நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு) அதில் குழப்பம் உண்டு பண்ணுங்கள். அதனால், நீங்கள் (அவர்களை) வென்று விடுவீர்கள்'' என்றும் கூறினார்கள்.
IFT
சத்தியத்தை நிராகரிக்கும் இவர்கள் கூறுகிறார்கள்: “இந்தக் குர்ஆனை அறவே செவியேற்காதீர்கள். இது ஓதப்பட்டால், அதற்கு இடையூறு செய்யுங்கள்; இதன் மூலம் நீங்கள் வென்றுவிடலாம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_(மற்றவர்களிடம்) “நீங்கள் இந்தக் குர் ஆனை கேட்காதீர்கள், (அது ஓதப்படும் போது மற்றவர்கள் கேட்காதிருக்க) அதில் (கூச்சலிடுவது போன்ற) வீணானவற்றையும் செய்யுங்கள், நீங்கள் (அதனால்) மிகைத்துவிடலாம்” என்று கூறினர்.
Saheeh International
And those who disbelieve say, "Do not listen to this Qur’an and speak noisily during [the recitation of] it that perhaps you will overcome."
فَلَنُذِیْقَنَّ الَّذِیْنَ كَفَرُوْا عَذَابًا شَدِیْدًا ۙ وَّلَنَجْزِیَنَّهُمْ اَسْوَاَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟
فَلَـنُذِيْقَنَّஆகவே, நிச்சயமாக சுவைக்க வைப்போம்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுக்குعَذَابًاவேதனையைشَدِيْدًاۙகடுமையானوَّلَنَجْزِيَنَّهُمْஇன்னும் அவர்களுக்கு நிச்சயமாக கூலி கொடுப்போம்اَسْوَاَமிகக் கெட்ட செயலுக்குالَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில்
Fபலனுதீகன்னல் லதீன கFபரூ 'அதாBபன் ஷதீத(ன்)வ் வ லனஜ்Zஜியன்னஹும் அஸ்வல்லதீ கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நிச்சயமாக இந்நிராகரிப்பவர்கள் கடினமான வேதனையைச் சுவைக்கும்படி செய்வோம். நிச்சயமாக நாம் இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களைவிட மிக தீய (கொடிய) வேதனையைக் கூலியாக அவர்களுக்குக் கொடுத்தே தீருவோம்.
IFT
நாம் இந்த நிராகரிப்பாளர்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்தே தீருவோம். அவர்கள் செய்து கொண்டிருந்த மிக மோசமான செயல்களுக்குரிய முழுக்கூலியையும் அவர்களுக்கு நாம் கொடுப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நாம் நிச்சயமாக நிராகரித்துவிட்டோரை கடினமான வேதனையைச் சுவைக்குமாறு செய்வோம். இன்னும், நிச்சயமாக, நாம் அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில் மிகத்தீயதை அவர்களுக்குக் கூலியாக் கொடுப்போம்.
Saheeh International
But We will surely cause those who disbelieve to taste a severe punishment, and We will surely recompense them for the worst of what they had been doing.
ذٰلِكَ جَزَآءُ اَعْدَآءِ اللّٰهِ النَّارُ ۚ لَهُمْ فِیْهَا دَارُ الْخُلْدِ ؕ جَزَآءً بِمَا كَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟
ذٰ لِكَஇதுதான்جَزَآءُகூலியாகும்اَعْدَآءِஎதிரிகளுக்குரியاللّٰهِஅல்லாஹ்வின்النَّارُ‌ ۚநரகம்தான்لَهُمْஅவர்களுக்குفِيْهَاஅதில்دَارُ الْخُـلْدِ‌ ؕநிரந்தரமாக தங்கும் இல்லம்جَزَآءًۢகூலியாகبِمَا كَانُوْاஅவர்கள் இருந்ததற்குبِاٰيٰتِنَاநமது வசனங்களைيَجْحَدُوْنَ‏மறுப்பவர்களாக
தாலிக ஜZஜா'உ அஃதா'இல் லாஹின் னாரு லஹும் Fபீஹா தாருல் குல்த், ஜZஜா'அம் Bபிமா கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
முஹம்மது ஜான்
அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம்; நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய (இந்த) எதிரிகளுக்கு, (இத்தகைய) நரகம்தான் கூலி ஆகும். நம் வசனங்களை இவ்வாறு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாக இவர்களுக்கு நிலையான வீடு நரகத்தில்தான் இருக்கிறது.
IFT
அது நரகமாகும். அல்லாஹ்வின் பகைவர்களுக்கு அது கூலியாகக் கிடைக்கும். அதிலேயே அவர்களுக்கு நிரந்தரமான இருப்பிடம் இருக்கும். நம் சான்றுகளை நிராகரித்து வந்த குற்றத்திற்கான தண்டனை இதுதான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதுவே, அல்லாஹ்வுடைய விரோதிகளுக்குரிய கூலி(யான) நரகமாகும், நம்முடைய வசனங்களை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டிருந்ததன் கூலியாக, அவர்களுக்கு நிலையான வீடு அ(ந்நரகத்)தில் இருக்கிறது.
Saheeh International
That is the recompense of the enemies of Allah - the Fire. For them therein is the home of eternity as recompense for what they, of Our verses, were rejecting.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا رَبَّنَاۤ اَرِنَا الَّذَیْنِ اَضَلّٰنَا مِنَ الْجِنِّ وَالْاِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ اَقْدَامِنَا لِیَكُوْنَا مِنَ الْاَسْفَلِیْنَ ۟
وَقَالَகூறுவார்(கள்)الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பவர்கள்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَرِنَاஎங்களுக்குக் காண்பிالَّذَيْنِ اَضَلّٰنَاஎவர்கள்/வழிகெடுத்தனர்/எங்களைمِنَ الْجِنِّ وَالْاِنْسِஜின் மற்றும் மனிதர்களில்نَجْعَلْهُمَاஅ(வ்விரு)வர்களை ஆக்கிக் கொள்கிறோம்تَحْتَ اَقْدَامِنَاஎங்கள் பாதங்களுக்குக் கீழ்لِيَكُوْنَاஆகிவிடுவதற்காகمِنَ الْاَسْفَلِيْنَ‏மிகக் கீழ்த்தரமானவர்களில்
வ காலல் லதீன கFபரூ ரBப்Bபனா அரினல் லதய்னி அளல் லானா மினல் ஜின்னி வல் இன்ஸி னஜ்'அல்ஹுமா தஹ்த அக்தாமினா லியகூனா மினல் அஸ்Fபலீன்
முஹம்மது ஜான்
(அந்நாளில்:) காஃபிர்கள்: “எங்கள் இறைவா! ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக! அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)” எனக் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரித்தவர்கள் அந்நாளில் (இறைவனை நோக்கி,) ‘‘எங்கள் இறைவனே! எங்களை வழிகெடுத்த மனிதர்களையும், ஜின்களையும் எங்களுக்கு நீ காண்பி. அவர்கள் இழிவுக்குள்ளாகும் பொருட்டு, நாங்கள் அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழாக்கி மிதிப்போம்'' என்று கூறுவார்கள்.
IFT
அங்கு இந்நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை வழிகெடுத்த ஜின்களையும், மனிதர்களையும் சற்று எங்களுக்குக் காண்பிப்பாயாக! அவர்களை எங்கள் கால்களுக்குக் கீழே போட்டு மிதித்து விடுகின்றோம், பெரும் கேவலத்தில் அவர்களை ஆழ்த்துவதற்காக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போர் (அந்நாளில் அல்லாஹ்விடம்) “எங்கள் இரட்சகனே! ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும், எங்களை வழிகெடுத்த இரு சாராரையும் எங்களுக்கு காண்பிப்பாயாக! அவ்விருவரும் தாழ்ந்தோரில் ஆகிவிடுவதற்காக அவ்விருவரையும் நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்குவோம்” என்று கூறுவார்கள்.
Saheeh International
And those who disbelieved will [then] say, "Our Lord, show us those who misled us of the jinn and men [so] we may put them under our feet that they will be among the lowest."
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَیْهِمُ الْمَلٰٓىِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்قَالُوْاகூறினார்கள்رَبُّنَاஎங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்தான்ثُمَّபிறகுاسْتَقَامُوْاஉறுதியாக இருந்தார்கள்تَتَنَزَّلُஇறங்குவார்கள்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்اَلَّا تَخَافُوْاநீங்கள் பயப்படாதீர்கள்!وَلَا تَحْزَنُوْاஇன்னும் கவலைப்படாதீர்கள்!وَاَبْشِرُوْاநற்செய்தி பெறுங்கள்!بِالْجَـنَّةِசொர்க்கத்தைக் கொண்டுالَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏எது/வாக்களிக்கப்பட்டவர்களாக இருந்தீர்கள்
இன்னல் லதீன காலூ ரBப்Bபுனல் லாஹு தும்மஸ் தகாமூ ததனZஜ்Zஜலு 'அலய்ஹிமுல் மலா 'இகது அல்லா தகாFபூ வலா தஹ்Zஜனூ வ அBப்ஷிரூ Bபில் ஜன்ன்னதில் லதீ குன்தும் தூ'அதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள்: “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, “நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்” (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும்,
IFT
எவர்கள் “அல்லாஹ் எங்கள் இறைவன்” என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ திண்ணமாக, அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்: “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனினும்) நிச்சயமாக “எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர், (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத்தகையோர்_அவர்களின் மீது மலக்குகள் (மரண வேளையில்) இறங்கி (செல்ல இருக்கும் மறுமையைப் பற்றி) நீங்கள் பயப்படாதீர்கள், (நீங்கள் இவ்வுலகில் விட்டுச் செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகம் யாவற்றையும் பற்றி) கவலையும்படாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே, அத்தகைய சுவனபதியைக் கொண்டு நன்மாராயம் பெறுங்கள்” (எனக் கூறுவார்கள்).
Saheeh International
Indeed, those who have said, "Our Lord is Allah" and then remained on a right course - the angels will descend upon them, [saying], "Do not fear and do not grieve but receive good tidings of Paradise, which you were promised.
نَحْنُ اَوْلِیٰٓؤُكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ وَلَكُمْ فِیْهَا مَا تَشْتَهِیْۤ اَنْفُسُكُمْ وَلَكُمْ فِیْهَا مَا تَدَّعُوْنَ ۟ؕ
نَحْنُ اَوْلِيٰٓـؤُکُمْநாங்கள் உங்கள் பொறுப்பாளர்கள்فِى الْحَيٰوةِவாழ்க்கையிலும்الدُّنْيَاஇந்த உலகوَفِى الْاٰخِرَةِ ۚமறுமையிலும்وَلَـكُمْஉங்களுக்கு உண்டுفِيْهَاஅதில்مَاஎதைتَشْتَهِىْۤவிரும்புகின்றதுاَنْفُسُكُمْஉங்கள் மனங்கள்وَلَـكُمْஉங்களுக்கு உண்டுفِيْهَاஅதில்مَا تَدَّعُوْنَ ؕ‏எதை/கேட்கின்றீர்கள்
னஹ்னு அவ்லியா'உகும் Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரதி வ லகும் Fபீஹா மா தஷ்தஹீ அன்Fபுஸுகும் வ லகும் Fபீஹா ம தத்த'ஊன்
முஹம்மது ஜான்
“நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள்; மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு நண்பர்களாக இருந்தோம்; மறுமையிலும் (நாங்கள் உங்களுக்கு நண்பர்களே). சொர்க்கத்தில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்''
IFT
நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்; இந்த உலக வாழ்விலும் மறுமையிலும்! அங்கு நீங்கள் விரும்புகின்றவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்கக்கூடிய ஒவ்வொன்றும் உங்களுடையதாகிவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள், அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு, இன்னும், அதில் நீங்கள் தேடுகின்றவை உங்களுக்குண்டு.
Saheeh International
We [angels] were your allies in worldly life and [are so] in the Hereafter. And you will have therein whatever your souls desire, and you will have therein whatever you request [or wish]
نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِیْمٍ ۟۠
نُزُلًاவிருந்தோம்பலாகمِّنْஇருந்துغَفُوْرٍமகா மன்னிப்பாளன்رَّحِيْمٍ‏மகா கருணையாளன்
னுZஜுலம் மின் கFபூரிர் ரஹீம்
முஹம்மது ஜான்
“மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்” (இது என்று கூறுவார்கள்).  
அப்துல் ஹமீது பாகவி
‘‘பாவங்களை மன்னித்து மகா கருணை செய்பவனின் விருந்தாளியாக (அதில் தங்கி) இருங்கள்'' என்றும் (வானவர்கள்) கூறுவார்கள்.
IFT
பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும் இது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பாவங்களை) மிகவும் மன்னிப்பவனான, பெருங்கிருபையுடையோனிடமிருந்துள்ள விருந்தாக_(இது உங்களுக்குண்டு என்று மலக்குகள் கூறுவார்கள்).
Saheeh International
As accommodation from a [Lord who is] Forgiving and Merciful."
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَی اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَمَنْயார்?اَحْسَنُமிக அழகானவர்قَوْلًاபேச்சால்مِّمَّنْஒருவரைவிடدَعَاۤஅழைத்தார்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்وَعَمِلَஇன்னும் செய்தார்صَالِحًاநல்லதைوَّقَالَஇன்னும் கூறுகின்றார்اِنَّنِىْநிச்சயமாக நான்مِنَ الْمُسْلِمِيْنَ‏முஸ்லிம்களில் உள்ளவன்
வ மன் அஹ்ஸனு கவ்லம் மிம்மன் த'ஆ இலல் லாஹி வ 'அமில ஸாலிஹ(ன்)வ் வ கால இன்னனீ மினல் முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
அப்துல் ஹமீது பாகவி
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் ஒருவன்'' என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்?
IFT
எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும், நான் முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரைவிட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் அல்லாஹ் அளவில் (மனிதர்களை) அழைத்து(த் தாமும்) நற்கருமங்களையும் செய்து, நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களில் உள்ளேன் என்றும் கூறுகின்றாரோ, அவரைவிடச் சொல்லால் மிக்க அழகானவர் யார்?
Saheeh International
And who is better in speech than one who invites to Allah and does righteousness and says, "Indeed, I am of the Muslims."
وَلَا تَسْتَوِی الْحَسَنَةُ وَلَا السَّیِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ فَاِذَا الَّذِیْ بَیْنَكَ وَبَیْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِیٌّ حَمِیْمٌ ۟
وَلَا تَسْتَوِىசமமாகாதுالْحَسَنَةُநன்மையும்وَ لَا السَّيِّئَةُ ؕதீமையும்اِدْفَعْதடுப்பீராக!بِالَّتِىْ هِىَ اَحْسَنُமிக அழகியதைக் கொண்டுفَاِذَاஅப்போதுالَّذِىْஎவர்بَيْنَكَஉமக்கு இடையில்وَبَيْنَهٗஒருவருக்கும்عَدَاوَةٌபகைமைكَاَنَّهٗபோல்/அவர்وَلِىٌّஓர் உறவுக்காரரைحَمِيْمٌ‏நெருக்கமான
வ லா தஸ்தவில் ஹஸனது வ லஸ் ஸய்யி'அஹ்; இத்Fபஃ Bபில்லதீ ஹிய அஹ்ஸனு Fப'இதல் லதீ Bபய்னக வ Bபய்னஹூ 'அதாவதுன் க'அன்னஹூ வலியுன் ஹமீம்
முஹம்மது ஜான்
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.
அப்துல் ஹமீது பாகவி
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீர் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அவ்வாறாயின், உமது கொடிய எதிரியை அதே சமயத்தில் உமது உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர்.
IFT
(நபியே!) நன்மையும் தீமையும் சமமாகமாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நன்மையும் தீமையும் சமமாகிவிடாது (ஆதலால், நபியே!) எது மிக அழகானதோ அதைக்கொண்டு (தீமையை) தடுத்துக்கொள்வீராக! அப்பொழுது எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ அவர், உம்முடைய உற்ற சிநேகிதரைப் போல் ஆகிவிடுவார்.
Saheeh International
And not equal are the good deed and the bad. Repel [evil] by that [deed] which is better; and thereupon, the one whom between you and him is enmity [will become] as though he was a devoted friend.
وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا ۚ وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
وَمَا يُلَقّٰٮهَاۤஇதை கொடுக்கப்பட மாட்டார்கள்اِلَّاதவிரالَّذِيْنَ صَبَرُوْا‌ۚபொறுமையாளர்கள்وَمَا يُلَقّٰٮهَاۤஇன்னும் இதை கொடுக்கப்பட மாட்டார்கள்اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ‏பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர
வமா யுலக்காஹா இல்லல் லதீன ஸBபரூ வமா யுலக்காஹா இல்லா தூ ஹள்ளின் 'அளீம்
முஹம்மது ஜான்
பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள். மேலும், பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள்.
IFT
பொறுமை கொள்வோரைத் தவிர வேறெவர்க்கும் இந்தக் குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத் தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பொறுமையாய் இருந்தார்களே அத்தகையோரைத் தவிர, (வேறு) எவரும் அதனை அடையமாட்டார்கள், மேலும், மகத்தான பாக்கியத்தையுடையோரைத் தவிர, (மற்ற) எவரும் அதனை அடையமாட்டார்கள்.
Saheeh International
But none is granted it except those who are patient, and none is granted it except one having a great portion [of good].
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَاِمَّا يَنْزَغَنَّكَநிச்சயமாக உம்மைத் தூண்டினால்مِنَ الشَّيْطٰنِஷைத்தானிடமிருந்துنَزْغٌதீய எண்ணம்فَاسْتَعِذْபாதுகாவல் தேடுவீராக!بِاللّٰهِ‌ؕஅல்லாஹ்விடம்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
வ இம்மா யன்Zஜகன்னக மினஷ் ஷய்தானி னZஜ்குன் Fபஸ்த'இத் Bபில்லாஹி இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
முஹம்மது ஜான்
உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஷைத்தானுடைய ஓர் ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீர் கோருவீராக! நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன். (ஆதலால், அவன் உம்மை பாதுகாத்துக் கொள்வான்.)
IFT
மேலும், ஷைத்தானின் தரப்பிலிருந்து ஏதேனும் தூண்டுதலை நீர் உணர்ந்தால் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோரும். திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) ஷைத்தானிலிருந்து ஏதேனுமொரு ஊசாட்டம் உம்மைத் தொட்டுவிடுமாயின் தாமதமின்றி அல்லாஹ்விடத்தில் நீர் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவனே, (யாவரையும்) செவியேற்பவன், நன்கறிபவன்.
Saheeh International
And if there comes to you from Satan an evil suggestion, then seek refuge in Allah. Indeed, He is the Hearing, the Knowing.
وَمِنْ اٰیٰتِهِ الَّیْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ؕ لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
وَمِنْ اٰيٰتِهِஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்الَّيْلُஇரவுوَالنَّهَارُபகல்وَالشَّمْسُசூரியன்وَالْقَمَرُ‌ؕசந்திரன்لَا تَسْجُدُوْاசிரம் பணியாதீர்கள்!لِلشَّمْسِசூரியனுக்கும்وَلَا لِلْقَمَرِசந்திரனுக்கும்وَاسْجُدُوْاசிரம் பணியுங்கள்لِلّٰهِஅல்லாஹ்விற்குالَّذِىْ خَلَقَهُنَّஇவற்றைப் படைத்தவன்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்اِيَّاهُஅவனைتَعْبُدُوْنَ‏வணங்குபவர்களாக
வ மின் ஆயாதிஹில் லய்லு வன்னஹாரு வஷ்ஷம்ஸு வல்கமர்; லா தஸ்ஜுதூ லிஷ்ஷம்ஸி வலா லில்கமரி வஸ்ஜுதூ லில்லாஹில் லதீ கல கஹுன்ன இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
முஹம்மது ஜான்
இரவும், பகலும்; சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய (வல்லமையை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளில் உள்ளவை. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும் (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவற்றை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்'' (என்று நபியே! கூறுவீராக.)
IFT
இந்த இரவும் பகலும், சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளுள் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். மாறாக, அவற்றைப் படைத்த இறைவனுக்கே சிரம் பணியுங்கள், நீங்கள் உண்மையில் அவனையே வணங்குபவர்களாய் இருந்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் (அல்லாஹ்வைப்பற்றி அறிவிக்கக்கூடிய) அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும், நீங்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸஜ்தா செய்யவேண்டாம், நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால், அவற்றை படைத்தவனாகிய அல்லாஹ்விற்கே ஸஜ்தா செய்யுங்கள்.
Saheeh International
And of His signs are the night and day and the sun and moon. Do not prostrate to the sun or to the moon, but prostrate to Allah, who created them, if it should be Him that you worship.
فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِیْنَ عِنْدَ رَبِّكَ یُسَبِّحُوْنَ لَهٗ بِالَّیْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا یَسْـَٔمُوْنَ ۟
فَاِنِ اسْتَكْبَرُوْاஅவர்கள் பெருமையடித்து விலகினால்فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَஉமது இறைவனிடம் இருக்கின்றவர்கள்يُسَبِّحُوْنَதுதிக்கின்றனர்لَهٗஅவனைبِالَّيْلِஇரவிலும்وَالنَّهَارِபகலிலும்وَهُمْஅவர்கள்لَا يَسْــٴَــمُوْنَ۩‏சோர்வடைய மாட்டார்கள்
Fப இனிஸ்-தக்Bபரூ Fபல்லதீ ன 'இன்த ரBப்Bபிக யுஸBப்Bபிஹூன லஹூ Bபில்லய்லி வன்ன்னஹாரி வ ஹும் லா யஸ்'அமூன்
முஹம்மது ஜான்
ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே (நபியே!) இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.) உங்கள் இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய வானவர்)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை.
IFT
ஆனால், இவர்கள் கர்வம் கொண்டு தம் போக்கிலேயே பிடிவாதமாய் இருந்தால் பரவாயில்லை; உம் இறைவனிடம் நெருக்கமாய் உள்ள வானவர்கள் அல்லும் பகலும் அவனைத் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் களைப்படைவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) பின்னும், இவர்கள் பெருமையடித்துக் (கொண்டு அல்லாஹ்வை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், அப்போது உமதிரட்சகனிடத்தில் உள்ளவர் (களாகிய மலக்கு)கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதிசெய்து (புகழ்ந்து) கொண்டேயிருக்கின்றனர், அவர்கள் (அதில்) சோர்வடையவும் மாட்டார்கள்.
Saheeh International
But if they are arrogant - then those who are near your Lord [i.e., the angels] exalt Him by night and by day, and they do not become weary.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنَّكَ تَرَی الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ ؕ اِنَّ الَّذِیْۤ اَحْیَاهَا لَمُحْیِ الْمَوْتٰی ؕ اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَمِنْ اٰيٰتِهٖۤஇன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்اَنَّكَநிச்சயமாக நீர்تَرَىபார்க்கின்றீர்الْاَرْضَபூமியைخَاشِعَةًகாய்ந்ததாகفَاِذَاۤ اَنْزَلْنَاபிறகு, நாம் இறக்கினால்عَلَيْهَاஅதன் மீதுالْمَآءَநீரைاهْتَزَّتْசெழிப்படைகிறதுوَرَبَتْ‌ؕஇன்னும் அது வளர்கிறதுاِنَّநிச்சயமாகالَّذِىْۤ اَحْيَاهَاஎவன்/உயிர்ப்பித்தான்/அதைلَمُحْىِஉயிர்ப்பிப்பவன்الْمَوْتٰى ؕமரணித்தவர்களை(யும்)اِنَّهٗநிச்சயமாக அவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வ மின் ஆயாதிஹீ அன்னக தரல் அர்ள காஷி'அதன் Fப இதா அன்Zஜல்ன 'அலய்ஹல் மா'அஹ் தZஜ்Zஜத் வ ரBபத்; இன்னல் லதீ அஹ்யாஹா லமுஹியில் மவ்தா; இன்னஹூ 'அலா குல்லி ஷய்-இன் கதீர்
முஹம்மது ஜான்
பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீர்காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன் மீது நாம் மழையை இறக்கினால், அது (செடி கொடிகளால்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்து போன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன்தான் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) பேராற்றலுடையவன்.
IFT
பூமி வறண்டு கிடப்பதையும் நீர் காண்கிறீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர்பெறு வதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கின்றீர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். திண்ணமாக, இறந்துவிட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிரூட்டினானோ அந்த இறைவன், இறந்தவர்களுக்கும் உயிரூட்டக் கூடியவன் ஆவான். திண்ணமாக, அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) காய்ந்து விட்டதாக பூமியை நிச்சயமாக நீர் காண்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும், அதன் மீது நாம் நீரை இறக்கி வைத்தால், அது செழிப்படைந்து வளர்கிறது, அதை நிச்சயமாக உயிர்ப்பித்தானே அத்தகையவன் மரணித்தோரையும் உயிர்ப்பிக்கக் கூடியவனாவான், நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
Saheeh International
And of His signs is that you see the earth stilled, but when We send down upon it rain, it quivers and grows. Indeed, He who has given it life is the Giver of Life to the dead. Indeed, He is over all things competent.
اِنَّ الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اٰیٰتِنَا لَا یَخْفَوْنَ عَلَیْنَا ؕ اَفَمَنْ یُّلْقٰی فِی النَّارِ خَیْرٌ اَمْ مَّنْ یَّاْتِیْۤ اٰمِنًا یَّوْمَ الْقِیٰمَةِ ؕ اِعْمَلُوْا مَا شِئْتُمْ ۙ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ يُلْحِدُوْنَதடம் புரளுபவர்கள்فِىْۤ اٰيٰتِنَاநமது வசனங்களில்لَا يَخْفَوْنَமறைந்துவிட மாட்டார்கள்عَلَيْنَا ؕநம்மீதுاَفَمَنْ يُّلْقٰىபோடப்படுபவர் ?فِى النَّارِநரகத்தில்خَيْرٌசிறந்தவராاَمْஅல்லதுمَّنْ يَّاْتِىْۤவருகின்றவரா?اٰمِنًاநிம்மதி பெற்றவராகيَّوْمَ الْقِيٰمَةِ‌ ؕமறுமை நாளில்اِعْمَلُوْاசெய்துகொள்ளுங்கள்!مَا شِئْتُمْ‌ ۙநீங்கள் நாடியதைاِنَّهٗநிச்சயமாக அவன்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைبَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
இன்னல் லதீன யுல்ஹிதூன Fபீ ஆயாதின லா யக்Fபவ்ன 'அலய்னா' அFபமய் யுல்கா Fபின் னாரி கய்ருன் அம் மய் யாதீ ஆமினய் யவ்மல் கியாமஹ்; இஃமலூ ம ஷி'தும் இன்னஹூ Bபிமா தஃமலூன Bபஸீர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக்கிறார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்குமறைந்து விடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது பயமற்றவனாக(ச் சொர்க்கத்திற்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அவன் உற்று நோக்குகிறான்.
IFT
எவர்கள் நம் வசனங்களுக்கு மாறுபட்ட பொருள் கற்பிக்கின்றார்களோ அவர்கள் நம்மைவிட்டு மறைந்திருப்பவர் அல்லர். நீங்களே சிந்தியுங்கள். நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமைநாளில் நிம்மதியாக வருகைதருபவன் சிறந்தவனா? செய்து கொண்டிருங்கள் நீங்கள் விரும்பியவற்றை! உங்கள் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நம்முடைய வசனங்களில் (அனர்த்தம் கூறி பிழை சேர்க்க பொய்யின்பால்) சாய்ந்து விடுகின்றார்களே அத்தகையோர்_நம்மிலிருந்து அவர்கள் மறைந்து விடமாட்டார்கள், ஆகவே, (மறுமையில்) நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமை நாளில் எத்தகைய பயமுமற்றவனாக வருப(வன் மேலான)வனா (மனிதர்களே!) நீங்கள் நாடியதைச் செய்துகொண்டிருங்கள், நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக, அவன் பார்க்கக் கூடியவன்.
Saheeh International
Indeed, those who inject deviation into Our verses are not concealed from Us. So, is he who is cast into the Fire better or he who comes secure on the Day of Resurrection? Do whatever you will; indeed, He is Seeing of what you do.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَآءَهُمْ ۚ وَاِنَّهٗ لَكِتٰبٌ عَزِیْزٌ ۟ۙ
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْاநிச்சயமாக நிராகரித்தவர்கள்بِالذِّكْرِஇந்த வேதத்தைلَمَّا جَآءَஅது வந்த போதுهُمْ‌ۚஅவர்களிடம்وَاِنَّهٗநிச்சயமாக இதுلَـكِتٰبٌவேதமாகும்عَزِيْزٌۙ‏மிக கண்ணியமான
இன்னல் லதீன கFபரூ Bபித் திக்ரி லம்மா ஜா'அஹும் வ இன்னஹூ ல கிதாBபுன் 'அZஜீZஜ்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்); ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கிறார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்.
IFT
இவர்கள் தங்களிடம் அறவுரை வந்தபோது அதனை நிராகரித்துவிட்டவர்கள்! ஆனால், உண்மையில் இது ஓர் ஆற்றல் மிக்க வேதமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, (குர் ஆனாகிய) நல்லுபதேசத்தை_அது அவர்களிடம் வந்தபோது நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_(அவர்கள் மறுமையில் தங்கள் நிலையை அறிந்துகொள்வார்கள்,) மேலும், நிச்சயமாக இது, மிக்க கண்ணியமானதொரு வேதமாகும்.
Saheeh International
Indeed, those who disbelieve in the message [i.e., the Qur’an] after it has come to them... And indeed, it is a mighty Book.
لَّا یَاْتِیْهِ الْبَاطِلُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَلَا مِنْ خَلْفِهٖ ؕ تَنْزِیْلٌ مِّنْ حَكِیْمٍ حَمِیْدٍ ۟
لَّا يَاْتِيْهِஅதனிடம் வரமாட்டார்(கள்)الْبَاطِلُபொய்யர்(கள்)مِنْۢ بَيْنِ يَدَيْهِஅதற்கு முன்னிருந்தும்وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕஅதற்குப் பின்னிருந்தும்تَنْزِيْلٌஇறக்கப்பட்ட வேதம்مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ‏மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து
லா யாதீஹில் Bபாதிலு மிம் Bபய்னி யதய்ஹி வலா மின் கல்Fபிஹீ தன்Zஜீலும் மின் ஹகீமின் ஹமீத்
முஹம்மது ஜான்
அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது; (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான ஒரு விஷயமும் (திரு குர்ஆனாகிய) இதை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது.
IFT
அசத்தியம் இதன் முன்னாலிருந்தும் வர முடியாது; பின்னாலிருந்தும் வர முடியாது. நுண்ணறிவாளனும், மிகுந்த புகழுக்குரியவனுமான இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும் இது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குர் ஆனாகிய இதில்) இதற்கு முன்னிருந்தோ, இதற்குப் பின்னிருந்தோ பொய் இதனிடம் வராது, தீர்க்கமான அறிவுடைய, மிக்க புகழுக்குரியவனிடமிருந்து (இது) இறக்கப் பட்டுள்ளதாகும்.
Saheeh International
Falsehood cannot approach it from before it or from behind it; [it is] a revelation from a [Lord who is] Wise and Praiseworthy.
مَا یُقَالُ لَكَ اِلَّا مَا قَدْ قِیْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ؕ اِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَلِیْمٍ ۟
مَا يُقَالُசொல்லப்படாதுلَـكَஉமக்குاِلَّاதவிரمَاஎதுقَدْதிட்டமாகقِيْلَசொல்லப்பட்டதோلِلرُّسُلِதூதர்களுக்குمِنْ قَبْلِكَ ؕஉமக்கு முன்னர்اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَذُوْ مَغْفِرَةٍமன்னிப்புடையவன்وَّذُوْ عِقَابٍஇன்னும் தண்டனைஉடையவன்اَ لِيْمٍ‏வலி தரக்கூடியது
மா யுகாலு லக இல்லா மா கத் கீல லிர் ருஸுலி மின் கBப்லிக்; இன்ன ரBப்Bபக லதூ மக்Fபிரதி(ன்)வ் வ தூ 'இகாBபின் அலீம்
முஹம்மது ஜான்
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதைத் தவிர (வேறொன்றும் புதிதாக) உமக்குக் கூறப்படவில்லை. (ஆகவே, இவர்கள் கூறும் நிந்தனைகளைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.) நிச்சயமாக உமது இறைவன் (நல்லவர்களுக்கு) மிக மன்னிப்புடையவன், (தீயவர்களுக்கு) துன்புறுத்தும் வேதனையளிப்பவன்.
IFT
(நபியே!) உமக்கு முன் சென்ற தூதர்களுக்குக் கூறப்படாத எந்த ஒன்றும் இதில் இல்லை. ஐயமின்றி உம்முடைய இறைவன் பெரிதும் பிழை பொறுப்பவன் ஆவான். (அத்துடன்) துன்புறுத்தும் தண்டனை அளிக்கக்கூடியவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமக்கு முன் (வந்த) தூதர்களுக்குத் திட்டமாகக் கூறப்பட்டதைத் தவிர (வேறெதுவும்) உமக்குக் கூறப்படவில்லை, நிச்சயமாக, உமதிரட்சகன் மன்னிப்புடையவன், துன்புறுத்தும் தண்டனையுடையவன்.
Saheeh International
Nothing is said to you, [O Muhammad], except what was already said to the messengers before you. Indeed, your Lord is a possessor of forgiveness and a possessor of painful penalty.
وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِیًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰیٰتُهٗ ؕ ءَؔاَعْجَمِیٌّ وَّعَرَبِیٌّ ؕ قُلْ هُوَ لِلَّذِیْنَ اٰمَنُوْا هُدًی وَّشِفَآءٌ ؕ وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ فِیْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَیْهِمْ عَمًی ؕ اُولٰٓىِٕكَ یُنَادَوْنَ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟۠
وَلَوْ جَعَلْنٰهُநாம் இதை ஆக்கி இருந்தால்قُرْاٰنًاகுர்ஆனாகاَعْجَمِيًّاஅரபி அல்லாத மொழிلَّقَالُوْاகூறியிருப்பார்கள்لَوْلَا فُصِّلَتْவிவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா?اٰيٰتُهٗ ؕஇதன் வசனங்கள்ءَؔاَعْجَمِىٌّஅரபி அல்லாத ஒரு மொழியிலா!وَّعَرَبِىٌّ‌  ؕஇன்னும் அரபி ஆயிற்றே !قُلْகூறுவீராக!هُوَஇதுلِلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களுக்குهُدًىநேர்வழி(யும்)وَشِفَآءٌ‌  ؕநிவாரணமும்وَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَஎவர்கள்/நம்பிக்கை கொள்ளவில்லையோفِىْۤ اٰذَانِهِمْஅவர்களின் காதுகளில்وَقْرٌசெவிட்டுத்தனம்وَّهُوَஅதுعَلَيْهِمْஅவர்கள் மீதுعَمًى‌ ؕமறைந்திருக்கிறதுاُولٰٓٮِٕكَஅவர்கள்يُنَادَوْنَஅழைக்கப்படுவார்கள்مِنْ مَّكَانٍۢஇடத்தில் இருந்துبَعِيْدٍ‏மிக தூரமான
வ லவ் ஜ'அல்னாஹு குர்ஆனன் அஃஜமிய்யல் லகாலூ லவ் லா Fபுஸ்ஸிலத் ஆயாதுஹூ 'அ அஃஜமிய்யு(ன்)வ் வ 'அரBபிய்ய்; குல் ஹுவ லில்லதீன ஆமனூ ஹுத(ன்)வ் வ ஷிFபா'உ(ன்)வ் வல்லதீன ல யு'மினூன Fபீ ஆதானிஹிம் வக்ரு(ன்)வ் வ ஹுவ 'அலய்ஹிம் 'அமா; உலா'இக யுனாதவ்ன மிம் மாகானிம் Bப'ஈத்
முஹம்மது ஜான்
நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).  
அப்துல் ஹமீது பாகவி
இதை அரபி அல்லாத (வேறு) மொழியில் உள்ள குர்ஆனாக இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நமது அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத (வேறு) மொழி (நாமோ அதை அறியாத அரபிகள்) என்றும் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக: ‘‘இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கிறது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் (உமது சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுகிறார்கள் (போல் இருக்கின்றது).
IFT
நாம் இதனை அரபி மொழியல்லாத குர்ஆனாக ஆக்கி அனுப்பியிருந்தால் இவர்கள் கூறியிருப்பார்கள்: “இதன் வசனங்கள் ஏன் தெளிவாக விவரிக்கப்படவில்லை? வசனங்களோ அரபியல்லாத மொழியில்! அவை எடுத்துரைக்கப்படுவதோ அரபிகளிடம்! என்ன விந்தை இது!” இவர்களிடம் கூறும்: “இந்த குர்ஆன் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு வழிகாட்டியும் அருமருந்தும் ஆகும். ஆனால், எவர்கள் இறைநம்பிக்கை கொள்ளவில்லையோ, இது அவர்களின் காதுகளுக்கு அடைப்பும் கண்களுக்குத் திரையுமாகும். ஆகையால் அவர்களின் நிலைமை தொலைவிலிருந்து அழைக்கப்படுபவர்கள் போன்று இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “அரபி அல்லாத (மொழியின்) குர் ஆனாக இதனை நாம் ஆக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நம் மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமோ? (வேதம்) அரபி அல்லாத (மொழியுடைய)தும், (நபியோ) அரபியருமா? என்று கூறுவார்கள். (நபியே!) நீர் கூறுவீராக, இது (அரபி மொழிவேதமாக இருப்பதுடன்) விசுவாசங்கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும், (உடல் மற்றும் மனநோய்களை) குணப்படுத்துவதாகவும் இருக்கின்றது, இன்னும் விசுவாசங்கொள்ளவில்லையே அவர்களுடைய காதுகளில் அடைப்பு இருக்கின்றது, இது அவர்கள் விஷயத்தில் குருட்டுத்தனத்தையுடையதாகவும் இருக்கிறது (ஆகவே, அவர்கள் இதன் உண்மையைப் பார்க்கமாட்டார்கள்) அவர்கள் வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படு(பவர்கள் போன்று கேட்காதவர்களாக இருக்)கின்றனர்.
Saheeh International
And if We had made it a foreign [i.e., non-Arabic] Qur’an, they would have said, "Why are its verses not explained in detail [in our language]? Is it a foreign [recitation] and an Arab [messenger]?" Say, "It is, for those who believe, a guidance and cure." And those who do not believe - in their ears is deafness, and it is upon them blindness. Those are being called from a distant place.
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் கொடுத்தோம்مُوْسَىமூஸாவிற்குالْكِتٰبَவேதத்தைفَاخْتُلِفَஆனால் முரண்பாடு செய்யப்பட்டதுفِيْهِ‌ؕஅதில்وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால்مِنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துلَـقُضِىَதீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்بَيْنَهُمْ‌ؕஅவர்களுக்கு மத்தியில்وَاِنَّهُمْஇன்னும் நிச்சயமாக அவர்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مِّنْهُஇதில்مُرِيْبٍ‏மிக ஆழமான
வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீ; வ லவ்லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன; அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்களால்) அதில் பல பிரிவுகள் உண்டு பண்ணப்பட்டது. (‘‘அவர்களை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவது மறுமையில்தான்' என்று) உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிந்தே போயிருக்கும். நிச்சயமாக இவர்களும் அதில் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.
IFT
இதற்கு முன்னால் நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கியிருந்தோம். அதுபற்றியும் இதே கருத்துவேறுபாடு தான் ஏற்பட்டிருந்தது. உம் இறைவன் முன்பே ஒரு விஷயத்தை முடிவு செய்திராவிட்டால், கருத்து வேறுபாடு கொண்ட அம்மக்களிடையே தீர்ப்பு எப்பொழுதோ வழங்கப்பட்டிருக்கும். நிச்சயமாக இம்மக்கள் அதுபற்றி கடும் மனக் குழப்பத்தைத்தரும் சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டுவிட்டன, (அவர்களின் விசாரணை மறுமையில்தான் என்று) உமதிரட்சகனிடமிருந்து வாக்கு முந்தியிருக்காவிடில், அவர்களுக்கிடையில் (இம்மையில்) திட்டமாக தீர்ப்பளிப்பக்கப்பட்டிருக்கும், நிச்சயமாக அவர்களும் (_குர் ஆனாகிய) இதில் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்தில் இருக்கிறார்கள்.
Saheeh International
And We had already given Moses the Scripture, but it came under disagreement. And if not for a word [i.e., decree] that preceded from your Lord, it would have been concluded between them. And indeed they are, concerning it [i.e., the Qur’an], in disquieting doubt.
مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؕ وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟
مَنْ عَمِلَயார் செய்வாரோصَالِحًـاநல்லதைفَلِنَفْسِهٖ‌அது அவருக்குத்தான் நன்மையாகும்وَمَنْஇன்னும் யார்اَسَآءَதீயதை செய்வாரோفَعَلَيْهَا‌ؕஅது அவருக்குத்தான் கேடாகும்وَمَاஇல்லைرَبُّكَஉமது இறைவன்بِظَلَّامٍஅநியாயம் செய்பவனாகلِّلْعَبِيْدِ‏அடியார்களுக்கு
மன் 'அமில ஸலிஹன் FபலினFப்ஸிஹீ வ மன் அஸா'அ Fப'அலய்ஹா; வமா ரBப்Bபுக Bபிளல்லாமில் லில் 'அBபீத்
முஹம்மது ஜான்
எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.  
அப்துல் ஹமீது பாகவி
எவர் நன்மைகள் செய்கிறாரோ, அது அவருக்கே நன்று. எவர் பாவம் செய்கிறாரோ, அது அவருக்கே கேடாகும். உமது இறைவன் (தன்) அடியார்கள் எவருக்கும் அறவே தீங்கு செய்வதில்லை. (அவர்கள்தான் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.)
IFT
யாரேனும் நற்செயல் புரிந்தால் அவர் தனக்கே நன்மை செய்து கொள்கின்றார். மேலும், யாரேனும் தீமை செய்தால் அதன் தீய விளைவு அவரையே சாரும். உம் இறைவன் தன் அடிமைகளுக்கு கொடுமை இழைப்பவன் அல்லன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் நல்ல செயல் செய்கிறாரோ, (அது) அவருக்கே (நன்மையாகும்), எவரேனும் தீமை செய்தால் அவருக்கே (அது) கேடாகும், மேலும், உமதிரட்சகன் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்பவன் அல்லன்!
Saheeh International
Whoever does righteousness - it is for his [own] soul; and whoever does evil [does so] against it. And your Lord is not ever unjust to [His] servants.
اِلَیْهِ یُرَدُّ عِلْمُ السَّاعَةِ ؕ وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ وَیَوْمَ یُنَادِیْهِمْ اَیْنَ شُرَكَآءِیْ ۙ قَالُوْۤا اٰذَنّٰكَ ۙ مَا مِنَّا مِنْ شَهِیْدٍ ۟ۚ
اِلَيْهِஅவன் பக்கமேيُرَدُّதிருப்பப்படுகிறதுعِلْمُஅறிவுالسَّاعَةِ‌ؕமறுமையைப் பற்றியوَمَا تَخْرُجُவெளிவருவதில்லைمِنْ ثَمَرٰتٍபழங்களில் எதுவும்مِّنْ اَكْمَامِهَاஅவற்றின் பாலைகளில் இருந்துوَمَا تَحْمِلُகர்ப்பமடைவதுமில்லைمِنْ اُنْثٰىபெண்களில் எவரும்وَلَا تَضَعُஇன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லைاِلَّا بِعِلْمِهٖ‌ؕஅவனது ஞானமில்லாமல்وَيَوْمَநாளில்يُنَادِيْهِمْஅவர்களை அவன் அழைக்கின்றاَيْنَஎங்கேشُرَكَآءِىْۙஎனது இணைகள்قَالُـوْۤاஅவர்கள்கூறுவார்கள்اٰذَنّٰكَۙநாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்مَا مِنَّاஎங்களில் இல்லைمِنْ شَهِيْدٍ‌ۚ‏சாட்சி சொல்பவர் யாரும்
இலய்ஹி யுரத்து 'இல்முஸ் ஸா'அஹ்; வமா தக்ருஜு மின் தமராதிம் மின் அக்மாமிஹா வமா தஹ்மிலு மின் உன்ஸா வலா தள'உ இல்லா Bபி'இல்மிஹ்; வ யவ்ம யுனாதீஹிம் அய்ன ஷுரகா'ஈ காலூ ஆதன்னாக மா மின்னா மின் ஷஹீத்
முஹம்மது ஜான்
(இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது; இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை; (அவன் அறியாது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை; பிரசவிப்பதுமில்லை; (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் “எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே?” என்று அவர்களிடம் கேட்பான்; அப்போது அவர்கள் “எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை” என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ‘‘விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?'' என அவர்கள் அடிக்கடி உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் கூறுவீராக:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் ஒரு கனி அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை; ஒரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்கு இணையாக்கியவை(யாகிய பொய்யான தெய்வங்கள்) எங்கே?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் (எங்கள் இறைவனே!) அவ்வாறு சாட்சி கூறுபவர்கள் ‘‘எங்களில் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று உனக்கு அறிவித்து விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
IFT
அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே சொந்த மானது. மொட்டுக்களிலிருந்து வெளிவருகின்ற கனிகள் பற்றியெல்லாம் அவன்தான் அறிகின்றான். எந்தப் பெண் கருவுற்றிருக்கிறாள், எவள் குழந்தை பெறுகின்றாள் என்பதையும் அவன் அறிகின்றான். இறைவன் இம்மக்களை அழைத்து, “எனக்கு இணையாக ஏற்படுத்தப்பட்டவை (கடவுளர்) எங்கே?” என்று கேட்கும் நாளில் இவர்கள் கூறுவார்கள்: “எங்களில் (இதற்கு) சாட்சியம் அளிப்பவர் எவரும் இலர் என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) மறுமை நாள் பற்றிய அறிவு அவன் பக்கமே திருப்பப்படும், அவன் அறிவில் இல்லாது, கனிகளில் எதுவும் அதன் பாளைகளிலிருந்து வெளியாவதுமில்லை, யாதொரு பெண்ணும் கர்ப்பமாவதுமில்லை, அவள் பிரசவிப்பதுமில்லை, மேலும் என்னுடைய இணையாளர்கள் எங்கே? என்று அவன் அவர்களை அழைக்கும் நாளில், “எங்களில் (அதற்கு) சாட்சி கூறுவோர் ஒருவருமே இல்லையென்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகின்றோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
Saheeh International
To Him [alone] is attributed knowledge of the Hour. And fruits emerge not from their coverings nor does a female conceive or give birth except with His knowledge. And the Day He will call to them, "Where are My 'partners'?" they will say, "We announce to You that there is [no longer] among us any witness [to that]."
وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟
وَضَلَّஇன்னும் மறைந்துவிடும்عَنْهُمْஅவர்களை விட்டும்مَّا كَانُوْا يَدْعُوْنَஅவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவைمِنْ قَبْلُ‌இதற்கு முன்னர்وَظَنُّوْاஇன்னும் அறிந்து கொள்வார்கள்مَا لَهُمْதங்களுக்கு இல்லைمِّنْ مَّحِيْصٍ‏தப்பிப்பதற்குரிய இடம் எதுவும்
வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யத்'ஊன மின் கBப்லு வ ளன்னூ மா லஹும் மிம் மஹீஸ்
முஹம்மது ஜான்
அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னர் அவர்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்தவையெல்லாம் அவர்களை விட்டும் மறைந்து போய்விடும். தங்களுக்குத் தப்ப வழியில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள்.
IFT
அப்பொழுது இதற்கு முன்பு இவர்கள் அழைத்துக் கொண்டிருந்த கடவுளர் அனைவரும் இவர்களை விட்டுக் காணாமல் போய்விடுவார்கள். மேலும் அப்பொழுது தங்களுக்கு இப்போது எந்தப் புகலிடமும் இல்லை என்பதை இந்த மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (இதற்கு) முன்னர் அவர்கள் (வணக்கத்திற்குரிய தெய்வங்களென) அழைத்துக் கொண்டிருந்தவை(யாவும்) அவர்களை விட்டு மறைந்து விடும், தங்களுக்கு(த் தப்பி) ஓடுமிடமும் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
Saheeh International
And lost from them will be those they were invoking before, and they will be certain that they have no place of escape.
لَا یَسْـَٔمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَیْرِ ؗ وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَیَـُٔوْسٌ قَنُوْطٌ ۟
لَا يَسْــٴَــمُசடைவடையமாட்டான்الْاِنْسَانُமனிதன்مِنْ دُعَآءِபிரார்த்திப்பதில்الْخَيْرِநன்மைக்காகوَاِنْ مَّسَّهُஅவனுக்கு நிகழ்ந்தால்الشَّرُّதீமைகள்فَيَــٴُــوْسٌநிராசை அடைந்தவனாகقَنُوْطٌ‏நம்பிக்கை இழந்தவனாக
லா யஸ்'அமுல் இன்ஸானு மின் து'ஆ'இல் கய்ரி வ இம் மஸ்ஸ ஹுஷ் ஷர்ரு Fப ய'ஊஸுன் கனூத்
முஹம்மது ஜான்
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை ஒரு தீங்கு அணுகினால் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்து விடுகிறான்.
IFT
நன்மையை வேண்டுவதில் மனிதன் எப்போதும் சோர்வுறுவதில்லை. ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டு விட்டால், நம்பிக்கை இழந்தவனாகவும் மனம் நொந்தவனாகவும் ஆகிவிடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பிரார்த்தித்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒரு பொழுதும்) சோர்வடையமாட்டான், இன்னும், அவனை (ஒரு) தீமை தொடுமானால் அப்பொழுது அவன் நம்பிக்கையிழந்தவன், நிராசையானவன்.
Saheeh International
Man is not weary of supplication for good [things], but if evil touches him, he is hopeless and despairing.
وَلَىِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ هٰذَا لِیْ ۙ وَمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ وَّلَىِٕنْ رُّجِعْتُ اِلٰی رَبِّیْۤ اِنَّ لِیْ عِنْدَهٗ لَلْحُسْنٰی ۚ فَلَنُنَبِّئَنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْا ؗ وَلَنُذِیْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟
وَلَٮِٕنْ اَذَقْنٰهُநாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்رَحْمَةًஓர் அருளைمِّنَّاநம் புறத்தில் இருந்துمِنْۢ بَعْدِபின்னர்ضَرَّآءَதீங்குக்குمَسَّتْهُஅவனுக்கு நிகந்தததுلَيَقُوْلَنَّஇன்னும் கூறுகிறான்هٰذَاஇதுلِىْ ۙஎனக்குரியதுوَمَاۤ اَظُنُّநான் எண்ணவில்லைالسَّاعَةَமறுமைقَآٮِٕمَةً  ۙநிகழும்وَّلَٮِٕنْ رُّجِعْتُநான் திரும்பக் கொண்டு வரப்பட்டாலும்اِلٰى رَبِّىْۤஎன் இறைவனிடம்اِنَّ لِىْநிச்சயமாக எனக்குعِنْدَهٗஅவனிடம்لَـلْحُسْنٰى‌ ۚசொர்க்கம் உண்டுفَلَـنُنَـبِّـئَنَّநாம் நிச்சயமாக அறிவிப்போம்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களுக்குبِمَا عَمِلُوْاஅவர்கள் செய்ததைوَلَـنُذِيْقَنَّهُمْஇன்னும் நிச்சயமாக அவர்களுக்கு சுவைக்க வைப்போம்مِّنْ عَذَابٍ غَلِيْظٍ‏கடுமையான வேதனையை
வ ல இன் அதக்னாஹு ரஹ்மதம் மின்னா மிம் Bபஃதி ளர் ரா'அ மஸ்ஸத் ஹு ல யகூலன்ன ஹாதா லீ வ மா அளுன்னுஸ் ஸா'அத கா'இமத(ன்)வ் வ ல'இன் ருஜிஃது இலா ரBப்Bபீ இன்ன லீ 'இன்தஹூ லல்ஹுஸ்னா; Fபலனு னBப்Bபி'அன்னல் லதீன கFபரூ Bபிமா 'அமிலூ வ லனுதீகன் னஹும் மின் 'அதாBபின் கலீள்
முஹம்மது ஜான்
எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் “இது எனக்கு உரியதே யாகும்; அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்” என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம்; மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதனைப் பிடித்திருந்த துன்பத்தை நீக்கிய பின்னர், நம் அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ இது எனக்கு வரவேண்டியதாக இருந்ததே வந்துள்ளது. மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. அவ்வாறே (மறுமை ஏற்பட்டு) எனது இறைவனிடம் நான் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்திலும் நிச்சயமாக எனக்கு நன்மையே கிடைக்கும் என்று கூறுகிறான். ஆனால், எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள் செய்த (தீய) காரியங்களை அந்நாளில் நாம் நிச்சயமாக அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்போம். கடினமான வேதனையை அவர்கள் சுவைக்கும்படியும் நிச்சயமாக நாம் செய்வோம்.
IFT
ஆனால், அவனைப் பீடித்திருந்த துன்பம் அவனைவிட்டு நீங்கிய பிறகு நாம் நம்முடைய அருளை அவனுக்குச் சுவைக்கக் கொடுத்தால் அப்போது அவன் கூறுகின்றான்: “நான் இதற்கு அருகதையுள்ளவன் ஆவேன். மேலும், மறுமைநாள் எப்பொழுதேனும் வரும் என்று நான் நினைக்கவில்லை. இனி, உண்மையில் என் அதிபதியிடம் நான் திரும்பக் கொண்டு செல்லப்பட்டாலோ அங்கேயும் எனக்கு இன்பம்தான் கிடைக்கும்!” எனினும் நிராகரிப்போருக்கு அவர்கள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அவசியம் நாம் காண்பித்துத் தருவோம். மேலும், அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனைத் தொட்டிருந்த கெடுதிக்குப் பின்னர், நம்மிடமிருந்து அருளை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்தால் இது எனக்குரியதே என்றும், மறுமை நாள் நிலைபெறக்கூடியது என நான் எண்ணவில்லை என்றும், (அவ்வாறு மறுமை ஏற்பட்டு) என் இரட்சகனிடம் நான் திருப்பிக் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்தில் நிச்சயமாக எனக்கே நன்மை உண்டு என்றும் திடமாகக் கூறுகிறான், எனவே, நிராகரித்தோர்க்கு அவர்கள் செய்தவற்றை (அந்நாளில்) நிச்சயமாக நாம் தெரிவிப்போம், அன்றியும், கடினமான வேதனையிலிருந்து அவர்களை நிச்சயமாக நாம் சுவைக்கச் செய்வோம்.
Saheeh International
And if We let him taste mercy from Us after an adversity which has touched him, he will surely say, "This is [due] to me, and I do not think the Hour will occur; and [even] if I should be returned to my Lord, indeed, for me there will be with Him the best." But We will surely inform those who disbelieved about what they did, and We will surely make them taste a massive punishment.
وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِیْضٍ ۟
وَاِذَاۤ اَنْعَمْنَاநாம் அருள் புரிந்தால்عَلَى الْاِنْسَانِமனிதன் மீதுاَعْرَضَபுறக்கணித்து செல்கிறான்وَنَاٰ بِجَانِبِهٖ‌ۚதூரமாகி விடுகிறான்وَاِذَا مَسَّهُஇன்னும் அவனுக்குநிகழ்ந்தால்الشَّرُّதீங்குفَذُوْ دُعَآءٍபிரார்த்தனை உடையவனாகعَرِيْضٍ‏மிக அதிகமான
வ இதா அன்'அம்னா 'அலல் இன்ஸானி அஃரள வ னஆ Bபிஜானி Bபிஹீ வ இதா மஸ்ஸஹுஷ் ஷர்ரு Fபதூ து'ஆ'இன் 'அரீள்
முஹம்மது ஜான்
அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீண்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதனுக்கு நாம் (ஒரு) அருள் புரிந்தால், அவன் (நமக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மையும் நம் கட்டளைகளையும்) புறக்கணித்து (நம்மை விட்டும்) விலகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு தொடர்ந்தாலோ, வெகு அகல-நீளமான பிரார்த்தனை செய்(து அதை நீக்குமாறு நம்மிடம் கோரு)கிறான்.
IFT
மனிதனுக்கு நாம் அருட்பேறுகளை வழங்கும்போது அவன் புறக்கணிக்கின்றான். கர்வத்துடன் நடந்து கொள்கின்றான். ஆனால், அவனை ஏதேனும் ஆபத்து தீண்டிவிடும்போது நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நாம் அருட்கொடையை மனிதனுக்கு நல்கினால் (நம்மை) அவன் புறக்கணித்து, தன் பக்கமே (திரும்பி முற்றிலும் நன்றி செய்யாது) தூரமாகி விடுகிறான். மேலும், அவனை (ஏதும்) கெடுதி தொட்டால், வெகு நீண்ட பிரார்த்தனையுடையவனாகின்றான்.
Saheeh International
And when We bestow favor upon man, he turns away and distances himself; but when evil touches him, then he is full of extensive supplication.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟
قُلْகூறுவீராக!اَرَءَيْتُمْநீங்கள் அறிவியுங்கள்اِنْ كَانَஇருந்தால்مِنْ عِنْدِ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துثُمَّபிறகுكَفَرْتُمْநீங்கள் நிராகரித்து விட்டால்بِهٖஅதைمَنْயார்?اَضَلُّமிகப் பெரிய வழிகேடன்مِمَّنْஒருவனைவிடهُوَஅவன்فِىْ شِقَاقٍۢமுரண்பாட்டில்بَعِيْدٍ‏வெகு தூரமான
குல் அராஇதும் இன் கான மின் 'இன்தில் லாஹி தும்ம கFபர் தும் Bபிஹீ மன் அளல்லு மிம்மன் ஹுவ Fபீ ஷிககிம் Bப'ஈத்
முஹம்மது ஜான்
“(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும்; தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று (நபியே!) நீர் கேளும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(உண்மையான வேதமாகிய) இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதை நீங்கள் நிராகரித்து விட்டால் (அதன் மீது) கடினமான விரோதத்திலிருக்கும் உங்களைவிட வெகுதூரமான வழிகேட்டிலிருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?'' என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்பீராக.
IFT
(நபியே! இவர்களிடம்) கூறும்: “நீங்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லையா? இந்தக் குர்ஆன் உண்மையில் இறைவனிடமிருந்து வந்திருந்தும், இன்னும் இதனை நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்களெனில், இதனை எதிர்ப்பதில் வெகுதூரம் சென்றுவிட்டவனைவிட அதிகம் வழிதவறிய மனிதன் வேறு யார் இருக்க முடியும்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(வ் வேதமான)து அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்து, பின்னர் இதை நீங்கள் நிராகரித்துவிட்டால், (உங்கள் நிலை என்னவாகும் இவ்வாறு) தூரமான பிரிவினையில் இருக்கும் அவனைவிட மிக வழிகெட்டவன் யார் என்பதை எனக்குத் தெரிவியுங்கள் என்று (நபியே!) நீர் கேட்பீராக!
Saheeh International
Say, "Have you considered: if it [i.e., the Qur’an] is from Allah and you disbelieved in it, who would be more astray than one who is in extreme dissension?"
سَنُرِیْهِمْ اٰیٰتِنَا فِی الْاٰفَاقِ وَفِیْۤ اَنْفُسِهِمْ حَتّٰی یَتَبَیَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّ ؕ اَوَلَمْ یَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
سَنُرِيْهِمْவிரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம்اٰيٰتِنَاநமது அத்தாட்சிகளைفِى الْاٰفَاقِபல பகுதிகளிலும்وَفِىْۤ اَنْفُسِهِمْஅவர்களிலும்حَتّٰىஇறுதியாகيَتَبَيَّنَதெளிவாகிவிடும்لَهُمْஅவர்களுக்குاَنَّهُநிச்சயமாக இதுதான்الْحَـقُّ‌ ؕஉண்மைاَوَلَمْ يَكْفِபோதாதா?بِرَبِّكَஉமது இறைவனுக்குاَنَّهٗநிச்சயமாக தான்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்شَهِيْدٌ‏நன்கு பார்ப்பவனாக
ஸனுரீஹிம் ஆயாதினா Fபில் ஆFபாகி வ Fபீ அன்Fபுஸிஹிம் ஹத்தா யதBபய்யன லஹும் அன்னஹுல் ஹக்க்; அவ லம் யக்Fபி Bபி ரBப்Bபிக அன்னஹூ 'அலா குல்லி ஷய்-இன் ஷஹீத்
முஹம்மது ஜான்
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம் அத்தாட்சிகளை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (நமது அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது (உமக்கு) போதாதா?
IFT
அதிவிரைவில் நாம் இவர்களுக்கு நம்முடைய சான்றுகளை அனைத்துத் திசைகளிலும் அவர்களுக்குள்ளேயும் காண்பித்துக் கொடுப்போம் இந்தக் குர்ஆன் சத்தியமானது எனும் உண்மை இவர்களுக்குத் தெளிவாகிவிடும் வரையில்! உம் இறைவன் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான் என்பது போதுமானதா, இல்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் வரையில், (உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம், (நபியே!) உமதிரட்சனுக்கு, நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?
Saheeh International
We will show them Our signs in the horizons and within themselves until it becomes clear to them that it is the truth. But is it not sufficient concerning your Lord that He is, over all things, a Witness?
اَلَاۤ اِنَّهُمْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ ؕ اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطٌ ۟۠
اَلَاۤஅறிந்துகொள்ளுங்கள்!اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்فِىْ مِرْيَةٍசந்தேகத்தில் இருக்கின்றனர்مِّنْ لِّقَآءِசந்திப்பதில்رَبِّهِمْ‌ؕதங்கள் இறைவனைاَلَاۤஅறிந்து கொள்ளுங்கள்!اِنَّهٗநிச்சயமாக அவன்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்مُّحِيْطٌ‏சூழ்ந்தவன்
அலா இன்னஹும் Fபீ மிர்யதிம் மில் லிகா'இ ரBப்Bபிஹிம்; அலா இன்னஹூ Bபிகுல்லி ஷய்'இம் முஹீத்
முஹம்மது ஜான்
அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதைப் பற்றியும் சந்தேகத்தில் இருக்கிறார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக. அவன் எல்லாவற்றையும் (தன் ஞானத்தால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுமிருக்கிறான் என்பதையும் நிச்சயமாக (நபியே! நீர்) அறிந்துகொள்வீராக.
IFT
பாருங்கள்! இந்த மக்கள் தங்கள் இறைவனை சந்திக்கும் விஷயத்தில் ஐயம் கொண்டிருக்கின்றார்கள். கேட்டுக் கொள்ளுங்கள். திண்ணமாக, அவன் ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்கள், தங்கள் இரட்சகனை சந்திப்பதைப்பற்றி சந்தேகத்தில் இருக்கிறார்கள் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அவன், ஒவ்வொரு பொருளைப்பற்றியும் (தன் அறிவால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்து கொள்வீராக!
Saheeh International
Unquestionably, they are in doubt about the meeting with their Lord. Unquestionably He is, of all things, encompassing.