43. ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)

மக்கீ, வசனங்கள்: 89

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
حٰمٓ ۟ۚۛ
حٰمٓ  ۛ‌ۚ‏ஹா மீம்
ஹா-மீம்
முஹம்மது ஜான்
ஹா, மீம்.
அப்துல் ஹமீது பாகவி
ஹா மீம்.
IFT
ஹாமீம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஹாமீம்.
Saheeh International
ha, Meem.
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
وَالْكِتٰبِவேதத்தின் மீது சத்தியமாக!الْمُبِيْنِ  ۛ‌ۙ‏தெளிவான
வல் கிதாBபில் முBபீன்
முஹம்மது ஜான்
விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
அப்துல் ஹமீது பாகவி
தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
IFT
இந்தத் தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக,
Saheeh International
By the clear Book,
اِنَّا جَعَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟ۚ
اِنَّاநிச்சயமாக நாம்جَعَلْنٰهُஇதை ஆக்கினோம்قُرْءٰنًاகுர்ஆனாகعَرَبِيًّاஅரபி மொழிلَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ‌ۚ‏நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக
இன்னா ஜ'அல்னாஹு குர்'ஆனன் 'அரBபிய்யல் ல'அல்லகும் தஃகிலூன்
முஹம்மது ஜான்
நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(மக்காவாசிகளே!) நீங்கள் (எளிதில்) அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வேதத்தை (நீங்கள் பேசும் உங்கள்) அரபி மொழியில் அமைத்தோம்.
IFT
நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக அமைத்துள்ளோம். நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம், இதனை நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபி மொழியிலான குர் ஆனாக ஆக்கியிருக்கிறோம்.
Saheeh International
Indeed, We have made it an Arabic Qur’an that you might understand.
وَاِنَّهٗ فِیْۤ اُمِّ الْكِتٰبِ لَدَیْنَا لَعَلِیٌّ حَكِیْمٌ ۟ؕ
وَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக இதுفِىْۤ اُمِّ الْكِتٰبِதாய் புத்தகத்தில் உள்ளதும்لَدَيْنَاநம்மிடம் உள்ளلَعَلِىٌّமிக உயர்ந்ததும்حَكِيْمٌؕ‏மகா ஞானமுடையதும்
வ இன்னஹூ Fபீ உம்மில் கிதாBபி லதய்னா ல'அலிய்யுன் ஹகீம்
முஹம்மது ஜான்
இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும், ஞானம் மிக்கதுமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும்.
IFT
மேலும், உண்மையில் இது ‘உம்முல் கிதாபில்’* பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்மிடம் உயர் அந்தஸ்துடையதும் ஞானம் நிறைந்ததுமான வேதமாகும் அது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தாய் நூலில் (பாதுகாக்கப்பட்டு) இருக்கிறது, (இது வேதங்களில்) மிக்க உயர்வான, ஞானம் நிறைந்ததாகும்.
Saheeh International
And indeed it is, in the Mother of the Book with Us, exalted and full of wisdom.
اَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا اَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِیْنَ ۟
اَفَنَضْرِبُவிட்டுவிடுவோமாعَنْكُمُஉங்களைப் பற்றிالذِّكْرَகூறுவதைصَفْحًاமன்னித்துاَنْ كُنْتُمْநீங்களோ இருக்கقَوْمًاமக்களாகمُّسْرِفِيْنَ‏வரம்பு மீறுகின்ற(வர்கள்)
அFப னள்ரிBபு 'அன்குமுத் திக்ர ஸFப்ஹன் அன் குன்தும் கவ்மன் முஸ்ரிFபீன்
முஹம்மது ஜான்
நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகி விட்டீர்கள் என்பதற்காக, இந்த உபதேசத்தை உங்களைவிட்டு நாம் அகற்றி விடுவோமா?
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் வரம்பு மீறிய மக்களாகிவிட்டீர்கள் என்பதற்காக, உங்களுக்கு நல்லுபதேசம் செய்வதை விட்டு முற்றிலும் நாம் உங்களைப் புறக்கணித்து விடுவோமா?
IFT
நீங்கள் வரம்புமீறிச் சென்றுவிட்டிருக்கின்றீர்கள் என்பதற்காக நாம் உங்கள் மீது வெறுப்படைந்து இந்த அறிவுரையை உங்களிடம் அனுப்பாமல் நிறுத்திவிடுவோமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தவராகி விட்டீர்கள் என்பதற்காக, (வேதத்தின்) நினைவுருத்தலை உங்களை விட்டு முற்றாக நாம் தடுத்துவிடுவோமா?
Saheeh International
Then should We turn the message away, disregarding you, because you are a transgressing people?
وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِیٍّ فِی الْاَوَّلِیْنَ ۟
وَكَمْஎத்தனையோاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْ نَّبِىٍّநபிமார்களைفِى الْاَوَّلِيْنَ‏முந்தியவர்களில்
வ கம் அர்ஸல்னா மின் னBபிய்யின் Fபில் அவ்வலீன்
முஹம்மது ஜான்
அன்றியும், முன்னிருந்தோர்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(உங்களைப் போன்று சென்றுபோன உங்கள்) முன்னோர்களுக்கும் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பியிருக்கிறோம்.
IFT
முன்பு வாழ்ந்து சென்ற சமூகங்களில் எத்தனையோ தூதர்களை நாம் அனுப்பியிருந்தோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்களுக்கு) முன்னிருந்த (சமூகத்த)வர்களிலும், நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பி இருக்கின்றோம்.
Saheeh International
And how many a prophet We sent among the former peoples,
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ نَّبِیٍّ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
وَمَا يَاْتِيْهِمْஅவர்களிடம் வருவதில்லைمِّنْ نَّبِىٍّஎந்த ஒரு நபியும்اِلَّاதவிரكَانُوْاஅவர்கள் இருந்தேبِهٖஅவரைيَسْتَهْزِءُوْنَ‏அவர்கள் பரிகாசம் செய்கின்றவர்களாக
வமா யா'தீஹிம் மின் னBபிய்யின் இல்லா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
முஹம்மது ஜான்
ஆனால் அவர்களிடம் வந்த நபி ஒவ்வொருவரையும் அவர்கள் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) அவர்களிடம் எந்த நபி வந்தபோதிலும், அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.
IFT
அவர்களிடம் வந்த எந்தத் தூதரையும் அவர்கள் பரிகாசம் செய்யாமல் இருந்ததில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்த நபியும்_அவரை அவர்கள் பரிகசிக்கக்கூடியவர்களாக இருந்தே தவிர_ அவர்களிடம் வருவதில்லை.
Saheeh International
But there would not come to them a prophet except that they used to ridicule him.
فَاَهْلَكْنَاۤ اَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَّمَضٰی مَثَلُ الْاَوَّلِیْنَ ۟
فَاَهْلَـكْنَاۤஆகவேஅழித்தோம்اَشَدَّமிக பலமானவர்களைمِنْهُمْஇவர்களைவிடبَطْشًاவலிமையால்وَّمَضٰىசென்றிருக்கிறதுمَثَلُஉதாரணம்الْاَوَّلِيْنَ‏முந்தியவர்களின்
Fப அஹ்லக்னா அஷத்த மின்ஹும் Bபத்ஷ(ன்)வ் வ மளா மதலுல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
எனினும் இவர்களை விட மிக்க பலசாலிகளான அவர்களைப் பிடியாகப் பிடித்து நாம் அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு) முன்னிருந்தோரின் உதாரணம் நடந்தேறியிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களை விட மிக பலசாலிகளான அவர்களையெல்லாம் (அவர்களின்பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். இதற்கு முன் சென்றவர்களின் (இத்தகைய) உதாரணம் (இதில் பல இடங்களில் கூறப்பட்டு முன்னர்) சென்றுவிட்டது.
IFT
ஆக, எந்த மக்கள் இவர்களைவிட பன்மடங்கு வலிமை மிக்கவர்களாய் இருந்தார்களோ அவர்களை நாம் அழித்துவிட்டோம். முன்பு வாழ்ந்த சமூகங்களின் முன்னுதாரணங்கள் சென்றுவிட்டிருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் இவர்களைவிட மிக்க பலசாலி(களான அவர்)களை நாம் அழித்துவிட்டோம், (இதற்கு) முன்னிருந்தோரின் உதாரணம் (படிப்பினையாகச்) சென்றே உள்ளது.
Saheeh International
And We destroyed greater than them in [striking] power, and the example of the former peoples has preceded.
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ خَلَقَهُنَّ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۙ
وَلَٮِٕنْ سَاَلْتَهُمْநீர் அவர்களிடம் கேட்டால்مَّنْ خَلَقَயார் படைத்தான்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்لَيَقُوْلُنَّநிச்சயமாக கூறுவார்கள்خَلَقَهُنَّஅவற்றைப் படைத்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْعَلِيْمُۙ‏நன்கறிந்தவன்
வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள ல யகூலுன்ன கலக ஹுன்னல் 'அZஜீZஜுல் 'அலீம்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்டால் (அனைத்தையும்) மிகைத்தவனும், மிக்க ஞானமுடையவனும்தான் அவற்றை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (இதை அறிந்திருந்தும் அவனுக்கு மாறு செய்கின்றனர்.)
IFT
நீர் அவர்களிடம் “வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்தவன் யார்?” என்று கேட்பீராயின், “வல்லமையும் பேரறிவும் கொண்டவன்தான் அவற்றைப் படைத்தான்” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்களிடம், “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று நீர் கேட்டால், (யாவையும்) மிகைத்தவன், நன்கறிகிறவன் (ஆகிய அல்லாஹ்) தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள்.
Saheeh International
And if you should ask them, "Who has created the heavens and the earth?" they would surely say, "They were created by the Exalted in Might, the Knowing,"
الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّجَعَلَ لَكُمْ فِیْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۚ
الَّذِىْஎப்படிப்பட்டவன்جَعَلَஅவன் ஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைمَهْدًاவிரிப்பாகوَّ جَعَلَஇன்னும் ஏற்படுத்தினான்لَكُمْஉங்களுக்குفِيْهَاஅதில்سُبُلًاபாதைகளைلَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ‌ۚ‏நீங்கள் சரியான பாதையில் செல்வதற்காக
அல்லதீ ஜ'அல லகுமுல் அர்ள மஹ்த(ன்)வ் வ ஜ'அல லகும் Fபீஹா ஸுBபுலன் ல'அல்லகும் தஹ்ததூன்
முஹம்மது ஜான்
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் அமைத்தான்.
IFT
அவன்தான் உங்களுக்காக இந்த பூமியைத் தொட்டில் ஆக்கினான் அதிலே உங்களுக்காக பாதைகளை அமைத்தான்; நீங்கள் (நாடிய இடங்களுக்கான) வழியை அடைவதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்களுக்கு பூமியை (உறுதியான) விரிப்பாக ஆக்கினான், நீங்கள் (பிரயாணத்தில்) வழிபெறுவதற்காக அதில் பல பாதைகளையும் உங்களுக்காக அவன் அமைத்தான்.
Saheeh International
[The one] who has made for you the earth a bed and made for you upon it roads that you might be guided
وَالَّذِیْ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ ۚ فَاَنْشَرْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ۚ كَذٰلِكَ تُخْرَجُوْنَ ۟
وَالَّذِىْஇன்னும் எப்படிப்பட்டவன்نَزَّلَஇறக்கினான்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًۢமழையைبِقَدَرٍ‌ۚஓர் அளவோடுفَاَنْشَرْنَاஆக, நாம் உயிர்ப்பிக்கின்றோம்بِهٖஅதன் மூலம்بَلْدَةًபூமியைمَّيْتًا‌ ۚஇறந்து போனكَذٰلِكَஇவ்வாறுதான்تُخْرَجُوْنَ‏நீங்கள் வெளியாக்கப்படுவீர்கள்
வல்லதீ னZஜ்Zஜல மினஸ் ஸமா'இ மா'அம் Bபிகதரின் Fப அன்ஷர்னா Bபிஹீ Bபல்ததம் மய்தா' கதாலிக துக்ரஜூன்
முஹம்மது ஜான்
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கிறான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தான், பின்னர் (மழையை பொழியச் செய்து) அதைக்கொண்டு வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளியேற்றப்படுவீர்கள்.
IFT
மேலும், வானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நீரை இறக்கினான். அதன் மூலம் இறந்த பூமிக்கு உயிர் கொடுத்தெழுப்பினான். இவ்வாறே (ஒருநாள் பூமிக்குள்ளிருந்து) நீங்கள் வெளிக்கொணரப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவன் எத்தகையவனென்றால், அவன் வானத்திலிருந்து தண்ணீரை அளவோடு இறக்கி வைக்கிறான், (அல்லாஹ்வாகிய) நாமே, பின்னர் அதனைக்கொண்டு, இறந்துபோன ஊரை (பூமியை) உயிர்ப்பிக்கின்றோம், இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் உயிர் கொடுத்து) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
Saheeh International
And who sends down rain from the sky in measured amounts, and We revive thereby a dead land - thus will you be brought forth -
وَالَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمْ مِّنَ الْفُلْكِ وَالْاَنْعَامِ مَا تَرْكَبُوْنَ ۟ۙ
وَالَّذِىْஇன்னும் எப்படிப்பட்டவன்خَلَقَஅவன் படைத்தான்الْاَزْوَاجَஜோடிகள்كُلَّهَاஎல்லாவற்றையும்وَجَعَلَஇன்னும் ஏற்படுத்தினான்لَكُمْஉங்களுக்குمِّنَ الْفُلْكِகப்பல்களிலும்وَالْاَنْعَامِகால்நடைகளிலும்مَا تَرْكَبُوْنَۙ‏நீங்கள் பயணம் செய்கின்றவற்றை
வல்லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா வ ஜ'அல லகும் மினல் Fபுல்கி வல்-அன்'ஆமி மா தர்கBபூன்
முஹம்மது ஜான்
அவன் தான் ஜோடிகள் யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான் -
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் சகலவற்றையும் (ஆணும் பெண்ணும் கலந்த) ஜோடி ஜோடியாக படைத்து, நீங்கள் வாகனித்து செல்லக்கூடிய கால் நடைகளையும் கப்பல்களையும் அமைத்தான்.
IFT
அவனே அனைத்து ஜோடிகளையும் படைத்தான். மேலும், உங்களுக்காகக் கப்பல்களையும், கால்நடைகளையும் வாகனங்களாய் அமைத்தவனும் அவனே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவன் எத்தகையவனென்றால், அவன்தான் (படைப்பினங்களின்) வகைகளை_அவை ஒவ்வொன்றையும் (மனிதனுக்குப் பயனளிக்கும் வகையில்) படைத்தான், அன்றியும் கப்பல்களிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் நீங்கள் ஏறிச் செல்பவைகளை உங்களுக்காக உண்டாக்கினான்.
Saheeh International
And who created the species, all of them, and has made for you of ships and animals those which you mount
لِتَسْتَوٗا عَلٰی ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَیْتُمْ عَلَیْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِیْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِیْنَ ۟ۙ
لِتَسْتَوٗاநீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்عَلٰى ظُهُوْرِهٖஅவற்றின்முதுகுகளில்ثُمَّபிறகுتَذْكُرُوْاநீங்கள் நினைவு கூர்வதற்காகவும்نِعْمَةَஅருட்கொடையைرَبِّكُمْஉங்கள் இறைவனின்اِذَا اسْتَوَيْتُمْநீங்கள் ஸ்திரமாக அமரும்போதுعَلَيْهِஅவற்றின் மீதுوَتَقُوْلُوْاஇன்னும் நீங்கள் கூறுவதற்காகسُبْحٰنَமகா தூயவன்الَّذِىْ سَخَّرَவசப்படுத்தி தந்தவன்لَنَاஎங்களுக்குهٰذَاஇதைوَمَا كُنَّاநாங்கள் இருக்கவில்லைلَهٗஇதைمُقْرِنِيْنَۙ‏கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக
லிதஸ்தவூ 'அலா ளுஹூரிஹீ தும்ம தத்குரூ னிஃமத ரBப்Bபிகும் இதஸ்தவய்தும் 'அலய்ஹி வ தகூலூ ஸுBப்ஹானல் லதீ ஸக்கர லன ஹாத வமா குன்னா லஹூ முக்ரினீன்
முஹம்மது ஜான்
அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவற்றின் முதுகுகள் மீது நீங்கள் (ஏறி அமர்ந்து கொள்ளுங்கள்.) திருப்தியாக அதன் மீது நீங்கள் அமர்ந்து கொண்டால், உங்கள் இறைவன் புரிந்த இவ்வருளை நினைத்து, (இதற்காக நீங்கள் அவனை நினைவு கூர்ந்து) ‘‘இதன் மீது (ஏற) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதை வசப்படுத்தித்தந்தவன் மிக்க பரிசுத்தவான்'' என்றும்,
IFT
நீங்கள் அவற்றின் முதுகுகளின் மீது ஏறி அமர்வதற்காகவும், அவற்றின் மீது அமர்ந்த பிறகு உங்கள் இறைவனின் பேருதவியை நீங்கள் நினைவுகூர்ந்து இவ்வாறு பிரார்த்திப்பதற்காகவும்தான்: “தூய்மையானவன்; மேலும், இவற்றையெல்லாம் எங்களுக்கு வசப்படுத்தித் தந்தவன்! இவற்றை அவன் வசப்படுத்தித் தராவிட்டால் அவற்றை வசப்படுத்தும் ஆற்றல் எங்களிடம் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஏறிச்செல்பவைகளான) அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் சரியாக அமர்ந்து கொள்வதற்காக, அவற்றின் மீது நீங்கள் அமர்ந்து விட்டால், பின்னர் உங்கள் இரட்சகனின் அருளை நீங்கள் நினைவு கூர்ந்து,” எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்தவனாகிய அவன் மிக்க பரிசுத்தமானவன், (இதன் மீது பிரயாணிக்க அவன் வசப்படுத்தித் தந்திராவிட்டால்) இதற்கு சக்திபெற்றவர்களாக நாங்கள் இருக்கவில்லை” என்று நீங்கள் கூறுவதற்காகவும்_
Saheeh International
That you may settle yourselves upon their backs and then remember the favor of your Lord when you have settled upon them and say, "Exalted is He who has subjected this to us, and we could not have [otherwise] subdued it.
وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ ۟
وَاِنَّاۤஇன்னும் நிச்சயமாக நாங்கள்اِلٰىபக்கம்رَبِّنَاஎங்கள் இறைவனின்لَمُنْقَلِبُوْنَ‏திரும்புகின்றவர்கள்
வ இன்னா இலா ரBப்Bபினா லமுன்கலிBபூன்
முஹம்மது ஜான்
“மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும் அவ்வாறு செய்தான்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம்'' என்றும் கூறுவீர்களாக!
IFT
மேலும், நாங்கள் எங்கள் இறைவனிடம் ஒருநாள் திரும்பிச் செல்லக்கூடியவர்களாவோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம்” (என்றும் நீங்கள் பிரார்த்தித்துக் கூறுவதற்காகவும் அவற்றை உங்களுக்குப் பிரயாணம் செய்ய வசதியாக ஆக்கியுள்ளான்).
Saheeh International
And indeed we, to our Lord, will [surely] return."
وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا ؕ اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ مُّبِیْنٌ ۟ؕ۠
وَجَعَلُوْاஅவர்கள் ஆக்கிவிட்டனர்لَهٗஅவனுக்குمِنْ عِبَادِهٖஅவனது அடியார்களில்جُزْءًا‌ ؕசிலரைاِنَّ الْاِنْسَانَநிச்சயமாக மனிதன்لَـكَفُوْرٌமகா நன்றி கெட்டவன்مُّبِيْنٌ ؕ‏மிகத் தெளிவான
வ ஜ'அலூ லஹூ மின் 'இBபாதிஹீ ஜுZஜ்'ஆ; இன்னல் இன்ஸான ல கFபூருன் முBபீன்
முஹம்மது ஜான்
இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.  
அப்துல் ஹமீது பாகவி
(இணைவைத்து வணங்கும்) அவர்கள் இறைவனுடைய அடியார்க(ளில் உள்ள வானவர்க)ளை அவனுடைய (பெண்) சந்ததி என்று கூறுகிறார்கள். நிச்சயமாக (இவ்வாறு கூறுகின்ற) மனிதன் பகிரங்கமாகவே பெரும் நன்றி கெட்டவனாவான்.
IFT
இவர்கள் (இவை அனைத்தையும் அறிந்து ஏற்றுக் கொண்ட பிறகும்) அவனுடைய அடியார்களில் சிலரை அவனுடைய ஓர் அம்சமாக ஆக்கிவிட்டார்கள். உண்மையாதெனில், மனிதன் வெளிப்படையாக நன்றி கொன்றவனாயிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களோ, அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை (மலக்குகளை) அவனுக்கு(ப் பெண் சந்ததியினராக) ஆக்குகின்றார்கள், நிச்சயமாக மனிதன் பகிரங்கமாக நிராகரிப்பவன்.
Saheeh International
But they have attributed to Him from His servants a portion. Indeed, man is clearly ungrateful.
اَمِ اتَّخَذَ مِمَّا یَخْلُقُ بَنٰتٍ وَّاَصْفٰىكُمْ بِالْبَنِیْنَ ۟
اَمِ اتَّخَذَஎடுத்துக்கொண்டானாمِمَّا يَخْلُقُதான் படைத்தவற்றில்بَنٰتٍபெண் பிள்ளைகளைوَّاَصْفٰٮكُمْஇன்னும் உங்களுக்கு தேர்தெடுத்(துக் கொடுத்)தானா?بِالْبَنِيْنَ‏ஆண் பிள்ளைகளை
அமித் தகத மிம்மா யக்லுகு Bபனாதி(ன்)வ் வ அஸ்Fபாகும் Bபில்Bபனீன்
முஹம்மது ஜான்
அல்லது, தான் படைத்ததிலிருந்து அவன் தனக்கென பெண்மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் மக்களை தேர்ந்தெடுத்து விட்டானா?
அப்துல் ஹமீது பாகவி
(இறைவன்) தான் படைத்தவற்றில் தனக்கு மகள்களை எடுத்துக் கொண்டு (தன்னைவிட உங்களை கௌரவப்படுத்துவதற்காக) உங்களுக்கு மட்டும் மகன்களை அளித்தானோ?
IFT
என்ன, இறைவன் தன்னுடைய படைப்புகளிலிருந்து தனக்காகப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு உங்களுக்கு ஆண்மக்களை வழங்கியிருக்கின்றானா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (அல்லாஹ்) தான் படைத்ததிலிருந்து (தனக்கென) அவன் பெண் மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண்மக்களை தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
Saheeh International
Or has He taken, out of what He has created, daughters and chosen you for [having] sons?
وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ ۟
وَاِذَا بُشِّرَநற்செய்தி கூறப்பட்டால்اَحَدُஒருவருக்குهُمْஅவர்களில்بِمَاஎதைضَرَبَஅவர் விவரித்தாரோلِلرَّحْمٰنِரஹ்மானுக்குمَثَلًاதன்மையாகظَلَّமாறிவிடுகிறதுوَجْهُهٗஅவரது முகம்مُسْوَدًّاகருப்பாகوَّهُوَஅவர்كَظِيْمٌ‏துக்கப்படுகிறார்
வ இதா Bபுஷ்ஷிர அஹதுஹும் Bபிமா ளரBப லிர் ரஹ்மானி மதலன் ளல்ல வஜ்ஹுஹூ முஸ்வத்த(ன்)வ் வ ஹுவ களீம்
முஹம்மது ஜான்
அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்கு (அவனுடைய சந்ததி என்று) அவர்கள் கற்பனை செய்யும் (பெண்) மக்கள் அவர்களில் எவருக்கும் (பிறந்ததாக) நற்செய்தி கூறப்பட்டால், (பெண் மக்களை இழிவாகக் கருதும்) அவருக்கு ஏற்படும் கோபத்தால் அவருடைய முகம் கருத்து விடுகிறது.
IFT
மேலும் (இவர்களுடைய நிலைமை என்னவெனில்) எந்தப் பிள்ளைகளைக் கருணைமிக்க அந்த இறைவனோடு இவர்கள் பாவித்துச் சொல்கின்றார்களோ அந்தப் பிள்ளைகள் இவர்களில் எவரேனும் ஒருவருக்குப் பிறந்திருப்பதாக நற்செய்தி சொல்லப்பட்டால், அவருடைய முகத்தில் இருள் சூழ்ந்து விடுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அர்ரஹ்மானுக்கு அவர்கள் எதை உதாரணமாகக் கூறினார்களோ அதை(_பெண் மகவை)க் கொண்டு (அது பிறந்து விட்டதாக) அவர்களில் ஒருவனுக்கு நன்மாராயம் கூறப்பட்டால், (பெண் மக்களை விரும்பாத) அவன் (கவலையினால்) கடுங்கோபம் கொண்டவனாக இருக்கும் நிலையில் அவன் முகம் கறுத்துவிடுகிறது.
Saheeh International
And when one of them is given good tidings of that which he attributes to the Most Merciful in comparison [i.e., a daughter], his face becomes dark, and he suppresses grief.
اَوَمَنْ یُّنَشَّؤُا فِی الْحِلْیَةِ وَهُوَ فِی الْخِصَامِ غَیْرُ مُبِیْنٍ ۟
اَوَمَنْ يُّنَشَّؤُاயார் வளர்க்கப்படுகிறாரோ ?فِى الْحِلْيَةِஆபரணங்களில்وَهُوَஇன்னும் அவர்فِى الْخِصَامِவாதிப்பதில்غَيْرُ مُبِيْنٍ‏தெளிவற்றவராக
அவ மய் யுனஷ்ஷ'உ Fபில் ஹில்யதி வ ஹுவ Fபில் கிஸாமி கய்ரு முBபீன்
முஹம்மது ஜான்
ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்).
அப்துல் ஹமீது பாகவி
என்னே! தன் விவகாரத்தைத் தெளிவாக எடுத்துக் கூற சக்தியற்று ஆபரணத்தில், (சிங்காரிப்பில்) வளர்க்கப்படுபவரையா (-பெண்களையா அவனுக்குச் சந்ததி என்று கூறுகின்றனர்?)
IFT
மேலும், அவர் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறார். என்ன, ஆபரணங்களில் வளர்க்கப்படுகின்ற, விவாதத்தில் தன் கருத்தை முழுமையாகத் தெளிவுபடுத்த முடியாத பிள்ளைதான் அல்லாஹ்வின் பங்கில் வரவேண்டுமா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆபரணத்திலும் (சிங்காரிப்பிலும்) வளர்க்கப்பட்டு தன் (சொந்த) விவகாரத்தில் (கூட தனது நிலையை) தெளிவாக எடுத்துக்கூற சக்தியற்ற ஒன்றையா? (பெண்களையா? அவனுக்குச் சந்ததிகள் என்று ஆக்குகிறார்கள்).
Saheeh International
So is one brought up in ornaments while being during conflict unevident [attributed to Allah]?
وَجَعَلُوا الْمَلٰٓىِٕكَةَ الَّذِیْنَ هُمْ عِبٰدُ الرَّحْمٰنِ اِنَاثًا ؕ اَشَهِدُوْا خَلْقَهُمْ ؕ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَیُسْـَٔلُوْنَ ۟
وَجَعَلُواஇவர்கள் ஆக்கிவிட்டனர்الْمَلٰٓٮِٕكَةَவானவர்களைالَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்عِبَادُஅடியார்களாகியالرَّحْمٰنِபேரருளாளனின்اِنَاثًا‌ ؕபெண்களாகاَشَهِدُوْاபார்த்தார்களா?خَلْقَهُمْ‌ ؕஅவர்கள் படைக்கப்பட்டதைسَتُكْتَبُபதியப்படும்شَهَادَتُهُمْஇவர்களின் சாட்சிوَيُسْــٴَـــلُوْنَ‏இன்னும் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்
வ ஜ'அலுல் மலா'இகதல் லதீன ஹும் 'இBபாதுர் ரஹ்மானி இனாதா; 'அ ஷஹிதூ கல்கஹும்; ஸதுக்தBபு ஷஹாததுஹும் வ யுஸ்'அலூன்
முஹம்மது ஜான்
அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களைப் பெண்கள் என்று கூறுகின்றனரே! (நாம்) அவர்களைப் படைக்கும் போது இவர்கள் (நம்முடன் இருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்கள் (பொய்யாகக் கற்பனை செய்து) கூறுகின்ற இவையெல்லாம் (நம் பதிவுப் புத்தகத்தில்) எழுதப்பட்டு (அதைப் பற்றிக்) கேள்வி கேட்கப்படுவார்கள்.
IFT
இவர்கள் கருணைமிக்க இறைவனின் சிறப்புக்குரிய அடியார்களான வானவர்களைப் பெண்களெனத் தீர்மானித்துக் கொண்டனர். அவர்களுடைய உடலமைப்பை இவர்கள் பார்த்ததுண்டா? இவர்களின் சாட்சியம் எழுதி வைக்கப்படும். அதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், மலக்குகளை_எவர்கள் அர்ரஹ்மானின் அடியார்களாக இருக்கிறார்களோ அத்தகையோரை_அவர்கள் பெண்களாக ஆக்கிவிட்டனர், (நாம்) அவர்களைப் படைக்கும் பொழுது இவர்கள் (உடனிருந்து) பார்த்துக் கொண்டிருந்தனரா? இவர்களில் சாட்சி (நம்மிடத்தில்) எழுதப்படும், (அதனை பற்றி விசாரித்து மறுமையில்) கேள்வியும் கேட்கப் படுவார்கள்.
Saheeh International
And they described the angels, who are servants of the Most Merciful, as females. Did they witness their creation? Their testimony will be recorded, and they will be questioned.
وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْ ؕ مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۗ اِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟ؕ
وَقَالُوْاஇன்னும் கூறுகின்றனர்لَوْ شَآءَநாடியிருந்தால்الرَّحْمٰنُபேரருளாளன்مَا عَبَدْنٰهُمْ‌ؕநாம் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம்.مَا لَهُمْஇவர்களுக்கு இல்லைبِذٰلِكَஇதைப் பற்றிمِنْ عِلْمٍ‌எந்த அறிவும்اِنْ هُمْஇவர்கள் இல்லைاِلَّاதவிரيَخْرُصُوْنَؕ‏கற்பனை செய்கின்றவர்களே
வ காலூ லவ் ஷா'அர் ரஹ்மானு மா 'அBபத்னாஹும்; மா லஹும் Bபிதாலிக மின் 'இல்மின் இன் ஹும் இல்லா யக்ருஸூன்
முஹம்மது ஜான்
மேலும், “அர் ரஹ்மான் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை; அவர்கள் பொய்யே கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, ரஹ்மான் (அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) நாடியிருந்தால் அவனையன்றி நாம் (வானவர்களை) வணங்கியே இருக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு வீண் தர்க்க வாதம் செய்பவர்களேதவிர, அவர்களுக்கு ஓர் அறிவும் இல்லை.
IFT
மேலும், இவர்கள் கூறுகின்றார்கள்: “(நாங்கள் அவர்களை வணங்கக்கூடாது என) கருணைமிக்க இறைவன் நாடியிருந்தால், ஒருபோதும் நாங்கள் அவர்களை வணங்கியிருக்கமாட்டோம்.” இந்த விவகாரத்தின் யதார்த்த நிலையை இவர்கள் உறுதியாக அறிந்திருக்கவில்லை. இவர்கள் வெறும் ஊகங்களிலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் “அர்ரஹ்மான் நாடியிருந்தால், நாம் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம்” என்று அவர்கள் கூறுகின்றனர், அவர்களுக்கு இதைப் பற்றி எவ்வித அறிவுமில்லை, அவர்கள் (பொய்க்) கற்பனை செய்பவர்களே தவிர (வேறு) இல்லை.
Saheeh International
And they said, "If the Most Merciful had willed, we would not have worshipped them." They have of that no knowledge. They are not but misjudging.
اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ ۟
اَمْ اٰتَيْنٰهُநாம் அவர்களுக்குக் கொடுத்தோம் ?كِتٰبًاஒரு வேதத்தைمِّنْ قَبْلِهٖஇதற்கு முன்னர்فَهُمْஅவர்கள்بِهٖஅதைمُسْتَمْسِكُوْنَ‏பற்றிப் பிடித்திருக்கின்றார்கள்
அம் ஆதய்னாஹும் கிதாBபன் மின் கBப்லிஹீ Fபஹும் Bபிஹீ முஸ்தம்ஸிகூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்கள் ஆதாரமாகக் கொள்வதற்காக இதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது ஒரு வேதத்தை இதற்கு முன்னர் நாம் அவர்களுக்குக் கொடுத்திருந்து, அதை அவர்கள் (இதற்கு ஆதாரமாக வைத்து) பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனரா?
IFT
அல்லது இதற்கு முன்பு இவர்களுக்கு நாம் ஏதாவது வேதத்தை வழங்கியிருக்கின்றோமா? அந்த ஆதாரத்தை (தம்முடைய ‘வானவர் வழிபாட்டுக்கான’ அடிப்படையாக) இவர்கள் பெற்றிருக்கிறார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது இதற்கு முன்னர் ஏதேனும் ஒரு வேதத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்து, அதனை அவர்கள் (இதற்கு ஆதராமாக) பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்களா?
Saheeh International
Or have We given them a book before it [i.e., the Qur’an] to which they are adhering?
بَلْ قَالُوْۤا اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّهْتَدُوْنَ ۟
بَلْமாறாகقَالُـوْۤاஅவர்கள் கூறுகின்றனர்اِنَّاநிச்சயமாக நாம்وَجَدْنَاۤகண்டோம்اٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைعَلٰٓى اُمَّةٍஒரு கொள்கையில்وَّاِنَّاநிச்சயமாக நாங்கள்عَلٰٓى اٰثٰرِهِمْஅவர்களின் அடிச்சுவடுகள் மீதேمُّهْتَدُوْنَ‏நேர்வழி நடப்போம்
Bபல் காலூ இன்னா வஜத்னா ஆBபா'அனா 'அலா உம்மதி(ன்)வ் வ இன்னா 'அலா ஆதாரிஹிம் முஹ்ததூன்
முஹம்மது ஜான்
அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.”
அப்துல் ஹமீது பாகவி
மாறாக! இவர்கள் (தங்களுக்கு ஆதாரமாகக்) கூறுவதெல்லாம் ‘‘நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நாங்கள் நடக்கிறோம்'' என்பதுதான்.
IFT
இல்லவே இல்லை! மாறாக, இவர்கள் கூறுகின்றார்கள்: “எங்கள் முன்னோர் ஒரு வழிமுறையில் செல்வதைக் கண்டோம்; அவர்களின் அடிச்சுவட்டில் நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மாறாக, இவர்கள் “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு வழியில் (மார்க்கத்தில் இருக்கக்) கண்டோம், இன்னும் நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச் சுவடுகளின் மீது நேர் வழி பெறக்கூடியவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
Rather, they say, "Indeed, we found our fathers upon a religion, and we are in their footsteps [rightly] guided."
وَكَذٰلِكَ مَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ قَرْیَةٍ مِّنْ نَّذِیْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ ۙ اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ ۟
وَكَذٰلِكَஇவ்வாறுمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பியதில்லைمِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்فِىْ قَرْيَةٍஓர் ஊரில்مِّنْ نَّذِيْرٍஎந்த ஓர் எச்சரிப்பாளரையும்اِلَّا قَالَகூறியே தவிரمُتْرَفُوْهَاۤஅதன் செல்வந்தர்கள்اِنَّا وَجَدْنَاۤநிச்சயமாக நாம் கண்டோம்اٰبَآءَنَاஎங்கள் மூதாதைகளைعَلٰٓى اُمَّةٍஒரு கொள்கையில்وَّاِنَّاநிச்சயமாக நாங்கள்عَلٰٓى اٰثٰرِهِمْஅவர்களின் அடிச்சுவடுகளைمُّقْتَدُوْنَ‏பின்பற்றி நடப்போம்
வ கதாலிக மா அர்ஸல்னா மின் கBப்லிக Fபீ கர்யதிம் மின் னதீரின் இல்லா கால முத்ரFபூஹா இன்னா வஜத்னா ஆBபா'அனா 'அலா உம்மதி(ன்)வ் வ இன்னா 'அலா ஆதாரிஹிம் முக்ததூன்
முஹம்மது ஜான்
இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே, உங்களுக்கு முன்னரும் எச்சரிக்கும் தூதரை ஓர் ஊராரிடம் நாம் அனுப்பிவைத்தால், அங்குள்ள தலைவர்கள் ‘‘நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம்; அவர்களின் அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றிச் செல்வோம்'' என்று கூறாமல் இருக்கவில்லை.
IFT
இவ்வாறு உமக்கு முன்பு எந்த ஊரில் எந்த எச்சரிப்பாளரை நாம் அனுப்பினாலும் அவ்வூரின் சுகபோகிகள் "எங்கள் முன்னோர் ஒரு வழிமுறையில் செல்வதைக் கண்டோம்; அவர்களின் அடிச்சுவட்டில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்" என்று தான் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே எந்த ஊருக்கும், அதில் வசதியுடன் வாழ்ந்தவர்கள், “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு வழியில் (இருக்கக்) கண்டோம், நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளின் மீதே பின்பற்றிச் செல்பவர்கள்” என்று கூறியே தவிர நாம் உமக்கு முன்னர் (நம்முடைய) எச்சரிக்கையாளரை அனுப்பவில்லை.
Saheeh International
And similarly, We did not send before you any warner into a city except that its affluent said, "Indeed, we found our fathers upon a religion, and we are, in their footsteps, following."
قٰلَ اَوَلَوْ جِئْتُكُمْ بِاَهْدٰی مِمَّا وَجَدْتُّمْ عَلَیْهِ اٰبَآءَكُمْ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
قٰلَகூறினார்اَوَلَوْ جِئْتُكُمْநான் உங்களிடம் கொண்டு வந்தாலுமாبِاَهْدٰىமிகச் சிறந்த நேர்வழியைمِمَّاஎதைவிடوَجَدْتُّمْகண்டீர்களோعَلَيْهِஅதன் மீதுاٰبَآءَكُمْ‌ ؕஉங்கள் மூதாதைகளைقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤ اُرْسِلْـتُمْநீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோبِهٖஅதைكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
கால அவ லவ் ஜி'துகும் Bபி அஹ்தா மிம்மா வஜத்த்தும் 'அலய்ஹி ஆBபா'அகும் காலூ இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
முஹம்மது ஜான்
(அப்பொழுது அத்தூதர்,) “உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்” என்று சொல்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு, அத்தூதர் அவர்களை நோக்கி) ‘‘உங்கள் மூதாதைகளை நீங்கள் எதில் கண்டீர்களோ அதைவிட நேரான வழியை நான் கொண்டு வந்திருந்த போதிலுமா? (உங்கள் மூதாதைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்)'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘(ஆம்! அவர்களையே நாங்கள் பின்பற்றுவதுடன்) நீங்கள் கொண்டு வந்ததையும் நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்றும் கூறினார்கள்.
IFT
ஒவ்வொரு தூதரும் அந்த மக்களிடம் இதைத்தான் கேட்டார்: “உங்கள் முன்னோர் எந்த வழியில் செல்வதைக் கண்டீர்களோ அதைவிடச் சரியான வழியை நான் காண்பித்தாலுமா நீங்கள் அந்த வழியில் சென்று கொண்டிருப்பீர்கள்?” அவர்கள் எல்லா இறைத்தூதர்களுக்கும் அளித்து வந்த பதில் இதுவே: “நீங்கள் எந்த தீனின் (மார்க்கத்தின்) பக்கம் அழைப்பதற்காக அனுப்பப்பட்டீர்களோ அந்த மார்க்கத்தை நாங்கள் நிராகரிக்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“உங்கள் மூதாதையரை எதன் மீதிருக்க நீங்கள் கண்டீர்களோ அதைவிட மிக்க நேர் வழியை நான் உங்களுக்குக் கொண்டுவந்தாலுமா?” என்று (எச்சரிக்கையாளர்கள்) கேட்டார்கள், அ(தற்க)வர்கள், “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கக்கூடியவர்களே” என்று கூறினார்கள்.
Saheeh International
[Each warner] said, "Even if I brought you better guidance than that [religion] upon which you found your fathers?" They said, "Indeed we, in that with which you were sent, are disbelievers."
فَانْتَقَمْنَا مِنْهُمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟۠
فَانْتَقَمْنَاஆகவே, நாம் பழிவாங்கினோம்مِنْهُمْ‌அவர்களிடம்فَانْظُرْஆக, நீர் கவனிப்பீராக!كَيْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பித்தவர்களின்
Fபன்தகம்னா மின்ஹும் Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முகத்திBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், நாம் அவர்களை பழி வாங்கினோம். (நபியே! நம் தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீர் கவனித்துப் பார்ப்பீராக.
IFT
இறுதியில், அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். பொய்யென வாதிட்டவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்துக்கொள்ளும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆதலால், நாம் அவர்களைத் தண்டித்தோம், ஆகவே, (நபியே! நம்மால் அனுப்பப்பட்ட தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை நீர் (கவனித்துப்) பார்ப்பீராக!
Saheeh International
So We took retribution from them; then see how was the end of the deniers.
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِیْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَ ۟ۙ
وَاِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!اِبْرٰهِيْمُஇப்ராஹீம்لِاَبِيْهِதனது தந்தைக்கு(ம்)وَقَوْمِهٖۤதனது மக்களுக்கும்اِنَّنِىْ بَرَآءٌநிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்مِّمَّا تَعْبُدُوْنَۙ‏நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும்
வ இத் கால இBப்ராஹீமு லிஅBபீஹி வ கவ்மிஹீ இன்னனீ Bபரா'உம் மிம்மா தஃBபுதூன்
முஹம்மது ஜான்
அன்றியும், இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;
அப்துல் ஹமீது பாகவி
இப்ராஹீம் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக. ‘‘நிச்சயமாக நான் நீங்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிக்கொண்டேன்.
IFT
இப்ராஹீம் தம்முடைய தந்தையிடமும், தம்முடைய சமூகத்தாரிடமும் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் எவற்றை வணங்குகின்றீர்களோ அவற்றுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) இப்றாஹீம் தம் தந்தை மற்றும் தம் சமூகத்தாரிடம் நிச்சயமாக நான் நீங்கள் வணங்குபவைகளை விட்டும் நீங்கிக்கொண்டேன் என்று கூறியதை(யும் நினைவு கூர்வீராக!)
Saheeh International
And [mention, O Muhammad], when Abraham said to his father and his people, "Indeed, I am disassociated from that which you worship
اِلَّا الَّذِیْ فَطَرَنِیْ فَاِنَّهٗ سَیَهْدِیْنِ ۟
اِلَّا الَّذِىْ فَطَرَنِىْஎன்னைப் படைத்தவனைத் தவிரفَاِنَّهٗநிச்சயமாக அவன்سَيَهْدِيْنِ‏எனக்கு நேர்வழி காட்டுவான்
இல்லல் லதீ Fபதரனீ Fப இன்னஹூ ஸ யஹ்தீன்
முஹம்மது ஜான்
“என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்” (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக)!
அப்துல் ஹமீது பாகவி
எனினும் எவன் என்னை படைத்தானோ (அவனையே நான் வணங்குவேன்). நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான்'' (என்றும் கூறினார்).
IFT
"என் தொடர்போ என்னைப் படைத்த வனுடன் மட்டும்தான் இருக்கின்றது. அவனே எனக்கு வழி காட்டுவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவன் என்னைப் படைத்தானோ அத்தகையவனைத் தவிர, (வேறு யாரையும் வணங்கமாட்டேன்) ஆகவே, நிச்சயமாக அவனே எனக்கு நேர் வழி காட்டுவான்.
Saheeh International
Except for He who created me; and indeed, He will guide me."
وَجَعَلَهَا كَلِمَةً بَاقِیَةً فِیْ عَقِبِهٖ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ جَعَلَهَاஇதை ஆக்கினார்كَلِمَةًۢஒரு வாக்கியமாகبَاقِيَةًநீடித்து இருக்கின்ற(து)فِىْ عَقِبِهٖதனது சந்ததிகளில்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக
வ ஜ'அலஹா கலிமதன் Bபாகியதன் Fபீ 'அகிBபிஹீ ல 'அல்லஹும் யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளும் நம்மிடமே) அவர்கள் திரும்பவரும் பொருட்டு, அவர் தன் சந்ததிகளில் இக்கொள்கையை நிலையான வாக்குறுதியாக அமைத்தார்.
IFT
மேலும், இப்ராஹீம் தமக்குப் பின், தம் வழித்தோன்றல்களிடம் இதே வார்த்தைகளை விட்டுச் சென்றார்; அவர்கள் அவன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக! (அத்துடன் இவர்கள் மற்றவர்களை வழிபடத் தொடங்கிய போதும் நான் இவர்களை அழித்துவிடவில்லை.)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (“லாயிலாஹ இல்லல்லாஹு“ எனும் ஏகத்துவக் கூற்றான) அதனை அவர் தன்னுடைய சந்ததியில் நிலைத்திருக்கும் வாக்காக ஆக்கிவிட்டார், அக்கூற்றின் பால் அவர்கள் திரும்புவதற்காகவே (அவ்வாறு செய்தோம்).
Saheeh International
And he made it a word remaining among his descendants that they might return [to it].
بَلْ مَتَّعْتُ هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی جَآءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِیْنٌ ۟
بَلْமாறாகمَتَّعْتُநாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம்هٰٓؤُلَاۤءِஇவர்களுக்கு(ம்)وَاٰبَآءَமூதாதைகளுக்கும்هُمْஇவர்களின்حَتّٰىஇறுதியாகجَآءَவந்ததுهُمُஅவர்களிடம்الْحَقُّஉண்மையான வேதம்وَرَسُوْلٌதூதரும்مُّبِيْنٌ‏தெளிவான
Bபல் மத்தஃது ஹா'உலா'இ வ ஆBபா'அஹும் ஹத்தா ஜா'அ ஹுமுல் ஹக்கு வ ரஸூலுன் முBபீன்
முஹம்மது ஜான்
எனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆயினும், அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளோ, தங்கள் மூதாதையாகிய இப்ராஹீமின் நல்லுபதேசத்தை மறந்து, விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு விட்டனர். அவ்வாறிருந்தும்) இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் அவர்களிடம் மெய்யான (இந்த) வேதமும், தெளிவான (நமது இந்தத்) தூதரும் வருகின்றவரை, அவர்களை(த் தண்டிக்காது இவ்வுலகில்) சுகமனுபவிக்கும்படியே நான் விட்டு வைத்தேன்.
IFT
ஆயினும், இவர்களுக்கும் இவர்களின் முன்னோருக்கும் நான் வாழ்க்கை வசதிகளை வழங்கிக் கொண்டிருந்தேன் எதுவரையெனில் இவர்களிடம் சத்தியமும், தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு தூதரும் வரும் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆயினும், அவர்களிடம் உண்மையும், தெளிவான தூதரும் வரும் வரையில், அவர்களையும் அவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்கச் செய்தேன்.
Saheeh International
However, I gave enjoyment to these [people of Makkah] and their fathers until there came to them the truth and a clear Messenger.
وَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ قَالُوْا هٰذَا سِحْرٌ وَّاِنَّا بِهٖ كٰفِرُوْنَ ۟
وَلَمَّا جَآءَவந்த போதுهُمُஅவர்களிடம்الْحَقُّஉண்மையான வேதம்قَالُوْاகூறினார்கள்هٰذَا سِحْرٌஇது சூனியம்وَّاِنَّاநிச்சயமாக நாங்கள்بِهٖஇதைكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
வ லம்மா ஜா'அஹுமுல் ஹக்கு காலூ ஹாதா ஸிஹ்ரு(ன்)வ் வ இன்னா Bபிஹீ காFபிரூன்
முஹம்மது ஜான்
ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது “இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கின்றோம்” என்று அவர்கள் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிடம் இந்தச் சத்திய வேதம் வரவே, அவர்கள் (இதை) ‘‘இது சூனியம்தான். நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கிறோம்'' என்று கூறுகின்றனர்.
IFT
ஆனால், அந்த சத்தியம் இவர்களிடம் வந்தபோது “இதுவோ சூனியம்; இதனை நாங்கள் ஏற்க மறுக்கின்றோம்” என்று இவர்கள் கூறிவிட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் அவர்களிடம் உண்மை வந்தபோது, “இது சூனியமே, நிச்சயமாக நாங்கள் இதனை நிராகரிக்கக்கூடியவர்களே” என்று அவர்கள் கூறிவிட்டனர்.
Saheeh International
But when the truth came to them, they said, "This is magic, and indeed we are, concerning it, disbelievers."
وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰی رَجُلٍ مِّنَ الْقَرْیَتَیْنِ عَظِیْمٍ ۟
وَقَالُوْاஅவர்கள் கூறுகின்றனர்لَوْلَا نُزِّلَஇறக்கப்பட வேண்டாமா!هٰذَا الْقُرْاٰنُஇந்த குர்ஆன்عَلٰى رَجُلٍமனிதர் மீதுمِّنَ الْقَرْيَتَيْنِஇந்த இரண்டு ஊர்களில் உள்ளعَظِيْمٍ‏ஒரு பெரிய(வர்)
வ காலூ லவ் லா னுZஜ்Zஜில ஹாதல் குர்'ஆனு 'அலா ரஜுலின் மினல் கர்யதய்னி 'அளீம்
முஹம்மது ஜான்
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”
அப்துல் ஹமீது பாகவி
மேலும் (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள ஒரு பெரிய மனிதன் மீது இந்த குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர்.
IFT
மேலும், இவர்கள் கூறுகின்றனர்: “இந்தக் குர்ஆன் இவ்விரு ஊர்களிலுமுள்ள பெரிய மனிதர்களில் எவரேனும் ஒருவர் மீது ஏன் இறக்கியருளப்படவில்லை?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(“தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள (யாதொரு) பெரிய மனிதரின் மீது இந்தக் குர் ஆன் இறக்கி வைக்கப்படிருக்க வேண்டாமா?” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Saheeh International
And they said, "Why was this Qur’an not sent down upon a great man from [one of] the two cities?"
اَهُمْ یَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَ ؕ نَحْنُ قَسَمْنَا بَیْنَهُمْ مَّعِیْشَتَهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّیَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِیًّا ؕ وَرَحْمَتُ رَبِّكَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
اَهُمْ يَقْسِمُوْنَஅவர்கள் பங்கு வைக்கின்றனரா?رَحْمَتَஅருளைرَبِّكَ‌ ؕஉமது இறைவனின்نَحْنُநாம்தான்قَسَمْنَاபங்குவைத்தோம்.بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்مَّعِيْشَتَهُمْஅவர்களது வாழ்க்கையைفِى الْحَيٰوةِ الدُّنْيَاஇவ்வுலக வாழ்வில்وَرَفَعْنَاஇன்னும் உயர்வாக்கினோம்بَعْضَهُمْஅவர்களில் சிலரைفَوْقَமேலாகبَعْضٍசிலருக்குدَرَجٰتٍதகுதிகளால்لِّيَـتَّخِذَஎடுத்துக் கொள்வதற்காகبَعْضُهُمْஅவர்களில் சிலர்بَعْضًاசிலரைسُخْرِيًّا‌ ؕபணியாளராகوَرَحْمَتُஅருள்தான்رَبِّكَஉமது இறைவனின்خَيْرٌமிகச் சிறந்ததாகும்مِّمَّا يَجْمَعُوْنَ‏அவர்கள் சேகரிப்பதைவிட
'அ ஹும் யக்ஸிமூன ரஹ்மத ரBப்Bபிக்; னஹ்னு கஸம்னா Bபய்னஹும் ம'ஈஷதஹும் Fபில் ஹயாதித் துன்யா வ ரFபஃனா Bபஃளஹும் Fபவ்க Bபஃளின் தரஜாதின் லி யத்தகித Bபஃளுஹும் Bபஃளன் ஸுக்ரிய்யா; வ ரஹ்மது ரBப்Bபிக கய்ருன் மிம்மா யஜ்ம'ஊன்
முஹம்மது ஜான்
உமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்.” இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள்தானா? இவ்வுலகத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டு, அவர்களில் சிலருடைய பதவியை சிலரை விட நாம்தான் உயர்த்தினோம். அவர்களில் சிலர், சிலரை (வேலைக்காரர்களாக) ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர். (நபித்துவம் என்னும்) உமது இறைவனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் பொருளைவிட மிக மேலானதாகும். (அதை அவன் விரும்பியவருக்குத்தான் கொடுப்பான்.)
IFT
என்ன, இவர்கள் உம் இறைவனிடம் அருட்கொடையைப் பங்கிடுகின்றார்களா? உலக வாழ்வில் இவர்களுக்குத் தேவையான வாழ்க்கை வசதிகளை நாம்தானே இவர்களிடையே பகிர்ந்தளிக்கின்றோம். மேலும், நாம் இவர்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்பதவியை அளித்தோம்; இவர்களில் சிலர் வேறு சிலருடைய ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக! மேலும், உன் இறைவனின் அருட்கொடை (அதாவது தூதுத்துவம்) இவர்(களுடைய தலைவர்)கள் குவித்துக் கொண்டிருக்கும் செல்வத்தைவிட மதிப்பு வாய்ந்ததா கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) உமதிரட்சகனின் அருளை அவர்களா பங்கிடுகிறார்கள்? இவ்வுலக வாழ்வில் அவர்களுடைய வாழ்க்கை(த் தேவை)யை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டிருக்கிறோம், அவர்களில் சிலர் சிலரை பணியாளர்களாக வைத்துக்கொள்வதற்காக, அவர்களில் சிலரை (மற்ற) சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தியுமிருக்கிறோம், உமதிரட்சகனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருப்பதைவிட மிக்க மேலானதாகும்.
Saheeh International
Do they distribute the mercy of your Lord? It is We who have apportioned among them their livelihood in the life of this world and have raised some of them above others in degrees [of rank] that they may make use of one another for service. But the mercy of your Lord is better than whatever they accumulate.
وَلَوْلَاۤ اَنْ یَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَعَلْنَا لِمَنْ یَّكْفُرُ بِالرَّحْمٰنِ لِبُیُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَیْهَا یَظْهَرُوْنَ ۟ۙ
وَلَوْلَاۤஇல்லையெனில்اَنْ يَّكُوْنَஆகிவிடுவார்கள் என்றுالنَّاسُமக்கள்اُمَّةًசமுதாயமாகوَّاحِدَةًஒரே ஒருلَّجَـعَلْنَاஆக்கியிருப்போம்لِمَنْ يَّكْفُرُநிராகரிப்பவர்களுக்குبِالرَّحْمٰنِரஹ்மானைلِبُيُوْتِهِمْஅவர்களின் வீடுகளுக்குسُقُفًاமுகடுகளை(யும்)مِّنْ فِضَّةٍவெள்ளியினால் ஆனوَّمَعَارِجَஏணிகளையும்عَلَيْهَاஅவற்றின் மீதுيَظْهَرُوْنَۙ‏ஏறுவார்கள்
வ லவ் லா அ(ன்)ய் யகூனன் னாஸு உம்மத(ன்)வ் வாஹிததன் லஜ'அல்னா லிம(ன்)ய் யக்Fபுரு Bபிர் ரஹ்மானி லி Bபுயூதிஹிம் ஸுகுFபன் மின் Fபிள்ளதி(ன்)வ் வ ம'ஆரிஜ 'அலய்ஹா யள்ஹரூன்
முஹம்மது ஜான்
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(இந்நிராகரிப்பவர்களின் செல்வ செழிப்பைக் கண்டு, ஆசை கொண்ட மற்ற) மனிதர்கள் அனைவருமே (அவர்களைப் போல் நிராகரிக்கின்ற) ஒரே வகுப்பினராக ஆகிவிடுவார்கள் என்று இல்லாதிருப்பின் ரஹ்மானை (அல்லாஹ்வை), நிராகரிப்பவர்களின் வீட்டு முகடுகளையும் அதன்மீது அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் கூட நாம் வெள்ளியினால் ஆக்கிவிடுவோம்.
IFT
மனிதர்கள் அனைவரும் (தீய) வழிமுறைகளை கடைப்பிடிக்கும் ஒரே சமுதாயத்தினராகி விடுவார்கள் எனும் நிலை இல்லாதிருந்தால் கருணைமிக்க இறைவனை நிராகரிப்பவர்களின் வீட்டு முகடுகளையும், அவர்கள் ஏறிச்செல்கின்ற படிக்கட்டுகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நிராகரிப்போருக்கு நாம் வழங்கியதை கண்டு மற்ற) மனிதர்கள் (யாவரும் நிராகரிக்கும்) ஒரே சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லையென்றால், (அல்லாஹ்வாகிய) அர்ரஹ்மானை நிராகரிப்போருக்கு_ அவர்களின் வீடுகளுக்குரிய முகடுகளையும், எவற்றின் மீது அவர்கள் ஏறிச்செல்வார்களோ அந்தப்படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
Saheeh International
And if it were not that the people would become one community [of disbelievers], We would have made for those who disbelieve in the Most Merciful - for their houses - ceilings and stairways of silver upon which to mount.
وَلِبُیُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَیْهَا یَتَّكِـُٔوْنَ ۟ۙ
وَلِبُيُوْتِهِمْஇன்னும் அவர்களின் வீடுகளுக்குاَبْوَابًاகதவுகளையும்وَّسُرُرًاகட்டில்களையும்عَلَيْهَاஅவற்றின் மீதுيَتَّكِـــٴُـوْنَۙ‏அவர்கள் சாய்ந்து படுப்பார்கள்
வ லி Bபுயூதிஹிம் அBப்வாBப(ன்)வ் வ ஸுருரன் 'அலய்ஹா யத்தகி'ஊன்
முஹம்மது ஜான்
அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய வீடுகளின் வாயில்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் கூட (வெள்ளியினால்) ஆக்கி இருப்போம்.
IFT
அவர்களுடைய வீட்டுக் கதவுகளையும், அவர்கள் சாய்ந்திருக்கின்ற மஞ்சங்களையும் அனைத்தையும் வெள்ளியாகவும் நாம் ஆக்கியிருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய வீடுகளுக்குரிய வாயில்களையும், எதன் மீது அவர்கள் சாய்ந்து கொண்டிருப்பார்களோ அத்தகைய கட்டில்களையும் (வெள்ளியினால் ஆக்கிருப்போம்).
Saheeh International
And for their houses - doors and couches [of silver] upon which to recline
وَزُخْرُفًا ؕ وَاِنْ كُلُّ ذٰلِكَ لَمَّا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِیْنَ ۟۠
وَزُخْرُفًا‌ ؕஇன்னும் தங்கத்தையும்وَاِنْ كُلُّஎல்லாம் இல்லைذٰ لِكَஇவைلَمَّا مَتَاعُஇன்பங்களே தவிரالْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕஉலக வாழ்க்கையின்وَالْاٰخِرَةُமறுமைعِنْدَ رَبِّكَஉமது இறைவனிடம்لِلْمُتَّقِيْنَ‏இறையச்சமுள்ளவர்களுக்கு
வ Zஜுக்ருFபா; வ இன் குல்லு தாலிக லம்மா மதா'உல் ஹயாதித் துன்யா; வல் ஆகிரது 'இன்த ரBப்Bபிக லில்முத்தகீன்
முஹம்மது ஜான்
தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்.  
அப்துல் ஹமீது பாகவி
(வெள்ளி என்ன! இவற்றைத்) தங்கத்தாலேயே (அலங்கரித்தும் விடுவோம்). ஏனென்றால், இவை அனைத்துமே இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (அழிந்துவிடக்கூடிய) அற்ப இன்பங்களே தவிர வேறில்லை. உங்கள் இறைவனிடம் இருக்கும் மறுமை(யின் நிலையான இன்ப வாழ்க்கையோ, மிக மேலானதும் நிலையானதுமாகும். அது) இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களுக்குத்தான் சொந்தமானது.
IFT
தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); இவை அனைத்தும் உலக வாழ்வுக்குரிய அற்ப சாதனங்களே அன்றி வேறில்லை. மறுமையோ உம் அதிபதியிடத்தில் இறையச்சமுடையவர்களுக்கே உரியதாகும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், தங்கமாகவும் (ஆக்கியிருப்போம், ஆனால்,) இவை ஒவ்வொன்றும், இவ்வுலக வாழ்க்கையிலுள்ள சுகங்களே தவிர வேறில்லை, உமதிரட்சகனிடத்தில் மறுமையோ பயந்து நடப்பவர்களுக்கு உரியதாகும்.
Saheeh International
And gold ornament. But all that is not but the enjoyment of worldly life. And the Hereafter with your Lord is for the righteous.
وَمَنْ یَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَیِّضْ لَهٗ شَیْطٰنًا فَهُوَ لَهٗ قَرِیْنٌ ۟
وَمَنْ يَّعْشُயார் புறக்கணிப்பாரோعَنْ ذِكْرِநினைவு கூர்வதைالرَّحْمٰنِபேரருளாளனைنُقَيِّضْநாம் சாட்டிவிடுவோம்لَهٗஅவருக்குشَيْطٰنًاஒரு ஷைத்தானைفَهُوَ لَهٗஅவன் அவருக்குقَرِيْنٌ‏நண்பனாக
வ மய் யஃஷு 'அன் திக்ரிர் ரஹ்மானி னுகய்யிள் லஹூ ஷய்தானன் Fபஹுவ லஹூ கரீன்
முஹம்மது ஜான்
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக் கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாக) சாட்டி விடுவோம். அவன் அவனுக்கு இணை பிரியாத தோழனாகி விடுகிறான்.
IFT
எந்த மனிதன், கருணைமிக்க இறைவனின் அறிவுரையை விட்டு விட்டு அலட்சியமாக இருக்கின்றானோ அவன் மீது ஒரு ஷைத்தானை நாம் ஏவிவிடுகின்றோம். அவன் இவனுக்கு நண்பனாகி விடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் அர்ரஹ்மானுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணித்து விடுகின்றாரோ, அவருக்கு நாம், ஒரு ஷைத்தானை (நண்பனாக)ச் சாட்டிவிடுவோம், அவன் அவருக்கு இணை பிரியாத தோழனாகி விடுகிறான்.
Saheeh International
And whoever is blinded from remembrance of the Most Merciful - We appoint for him a devil, and he is to him a companion.
وَاِنَّهُمْ لَیَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِیْلِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
وَاِنَّهُمْநிச்சயமாக இவர்கள்لَيَصُدُّوْنَهُمْஅவர்களை தடுக்கின்றனர்عَنِ السَّبِيْلِபாதையிலிருந்துوَيَحْسَبُوْنَஇன்னும் எண்ணுகிறார்கள்اَنَّهُمْநிச்சயமாக தாங்கள்مُّهْتَدُوْنَ‏நேர்வழி நடப்பவர்கள்தான்
வ இன்னஹும் ல யஸுத்தூ னஹும் 'அனிஸ் ஸBபீலி வ யஹ்ஸBபூன அன்னஹும் முஹ்ததூன்
முஹம்மது ஜான்
இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (அந்த ஷைத்தான்கள்தான்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். எனினும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள்.
IFT
அந்த ஷைத்தான்கள் இப்படிப்பட்டவர்களை நேர்வழியில் வரவிடாமல் தடுக்கின்றன. ஆனால் அவர்களோ தாம் சரியான வழியில் சென்றுகொண்டிருப்பதாக எண்ணிக் கொள்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, (ஷைத்தான்களாகிய) அவர்கள், அவர்களை (அல்லாஹ்வின்) நேரான பாதையிலிருந்து தடுத்தும்விடுகின்றனர், மேலும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பவர்கள் என எண்ணிக் கொள்வார்கள்.
Saheeh International
And indeed, they [i.e., the devils] avert them from the way [of guidance] while they think that they are [rightly] guided
حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیْتَ بَیْنِیْ وَبَیْنَكَ بُعْدَ الْمَشْرِقَیْنِ فَبِئْسَ الْقَرِیْنُ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَا جَآءَஅவன் வரும் போதுنَاநம்மிடம்قَالَகூறுவான்يٰلَيْتَஇருக்க வேண்டுமே!بَيْنِىْஎனக்கு மத்தியிலும்وَبَيْنَكَஉனக்கு மத்தியிலும்بُعْدَஇடைப்பட்ட தூரம்الْمَشْرِقَيْنِகிழக்கிற்கும் மேற்கிற்கும்فَبِئْسَ الْقَرِيْنُ‏அவன் மிகக் கெட்ட நண்பன்
ஹத்தா இதா ஜா'அனா கால யா லய்த Bபய்னீ வ Bபய்னக Bபுஃதல் மஷ்ரிகய்னி FபBபி'ஸல் கரீன்
முஹம்மது ஜான்
எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்):- “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்மிடம் (வரும் வரைதான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘எனக்கும் உமக்கும் இடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலை தூரம் இருந்திருக்க வேண்டாமா?'' என்றும், ‘‘(எங்களை வழிகெடுத்த எங்கள்) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்'' என்றும் கூறுவார்கள்.
IFT
இறுதியில் இந்த மனிதன் நம்மிடம் வந்து சேரும்போது (தனது ஷைத்தானை நோக்கிச்) சொல்வான்: “அந்தோ! எனக்கும் உனக்குமிடையே கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையிலான இடைவெளி இருந்திருக்க வேண்டுமே! நீயோ மிக மோசமான நண்பனாய் இருந்திருக்கின்றாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முடிவாக, (ஷைத்தானை நண்பனாக இணைக்கப்பட்ட) அவன் (மறுமையில்) நம்மிடம் வந்து விடுவானேயானால், “எனக்கும், உனக்குமிடையில் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் உள்ள தொலை தூரமாக இருந்திருக்க வேண்டுமே? என்றும், (என்னை வழிகெடுத்த) இந்தத் தோழன் மிகக் கெட்டவன்” என்றும் கூறுவான்.
Saheeh International
Until, when he comes to Us [at Judgement], he says [to his companion], "How I wish there was between me and you the distance between the east and west; and what a wretched companion."
وَلَنْ یَّنْفَعَكُمُ الْیَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
وَلَنْ يَّنْفَعَكُمُஉங்களுக்கு அறவே பலனளிக்காதுالْيَوْمَஇன்றைய தினம்اِذْ ظَّلَمْتُمْநீங்கள் அநியாயம் செய்த காரணத்தால்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்فِى الْعَذَابِவேதனையில்مُشْتَرِكُوْنَ‏இணைந்திருப்பது
வ லய் யன்Fப'அகுமுல் யவ்ம இத் ளலம்தும் அன்னகும் Fபில் 'அதாBபி முஷ்தரிகூன்
முஹம்மது ஜான்
(அப்போது) “நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தான்'' (என்றும் கூறப்படும்).
IFT
அந்நேரம் அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் கொடுமைகளை புரிந்துவிட்ட பின் இன்று இந்தப் பேச்சு உங்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்காது. நீங்களும் உங்களுடைய ஷைத்தான்களும் வேதனையில் பங்காளிகளாவீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உலகில் இருந்தபோது) நீங்கள் அநியாயம் செய்துவிட்டதற்காக, இன்றையத் தினம் உங்களுக்கு (எதுவும்) பயனளிக்கவே செய்யது, நிச்சயமாக நீங்கள் வேதனையில் கூட்டானவர்களாக இருப்பீர்கள் (என்று கூறப்படும்).
Saheeh International
And never will it benefit you that Day, when you have wronged, that you are [all] sharing in the punishment.
اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِی الْعُمْیَ وَمَنْ كَانَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
اَفَاَنْتَ تُسْمِعُநீர் செவி ஏற்க வைக்க முடியுமா?الصُّمَّஅந்த செவிடர்களைاَوْஅல்லதுتَهْدِىநீர் நேர்வழி நடத்திட முடியுமா?الْعُمْىَஅந்த குருடர்களைوَمَنْ كَانَஇன்னும் இருப்பவர்களைفِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
அFப அன்த துஸ்மி'உஸ் ஸும்ம அவ் தஹ்தில் 'உம்ய வ மன் கான Fபீ ளலாலின் முBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் செவிடர்களைக் கேட்கும்படி செய்து விடுவீரா? அல்லது குருடர்களை (அல்லது மன முரண்டாகவே) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்களை நேரான வழியில் நீர் செலுத்திவிடுவீரா?
IFT
(நபியே!) நீர் செவிடர்களைக் கேட்கச் செய்வீரா? அல்லது குருடர்களுக்கும், வெளிப்படையான வழிகேட்டில் கிடப்பவர்களுக்கும் வழிகாட்டி விடுவீரா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் செவிடனை கேட்கச் செய்வீரா? அல்லது நீர் குருடனையும், பகிரங்கமான வழிகேட்டிலிருப்பவனையும் நேர்வழியில் செலுத்துவீரா?
Saheeh International
Then will you make the deaf hear, [O Muhammad], or guide the blind or he who is in clear error?
فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَ ۟ۙ
فَاِمَّاஆகவே, ஒன்றுنَذْهَبَنَّநிச்சயமாக நாம் மரணிக்கச் செய்வோம்بِكَஉம்மைفَاِنَّاநிச்சயமாக நாம்مِنْهُمْஅவர்களிடம்مُّنْتَقِمُوْنَۙ‏பழிவாங்குவோம்
Fப இம்மா னத்ஹBபன்ன Bபிக Fப இன்னா மின்ஹும் முன்தகிமூன்
முஹம்மது ஜான்
எனவே உம்மை நாம் (இவ்வுலகை விட்டும்) எடுத்துக் கொண்ட போதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி தீர்ப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களுக்கு மத்தியிலிருந்து) உம்மை நாம் எடுத்துக் கொண்டபோதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம்.
IFT
இப்போது நாம் இவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டியுள்ளது; நாம் உம்மை உலகிலிருந்து எடுத்துக் கொண்டாலும் சரி
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் (நபியே!) உம்மை நாம் (மரணிக்கச் செய்து இவ்வுலகிலிருந்து) கொண்டு செல்வோமாயின், அப்போது நிச்சயமாக நாம் அவர்களைத் தண்டிக்ககூடியவர்கள்தாம்_
Saheeh International
And whether [or not] We take you away [in death], indeed, We will take retribution upon them.
اَوْ نُرِیَنَّكَ الَّذِیْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَیْهِمْ مُّقْتَدِرُوْنَ ۟
اَوْஅல்லதுنُرِيَنَّكَநாம் உமக்கு காண்பிப்போம்الَّذِىْ وَعَدْنٰهُمْஅவர்களுக்கு நாம் வாக்களித்ததைفَاِنَّاநிச்சயமாக நாம்عَلَيْهِمْஅவர்கள் மீதுمُّقْتَدِرُوْنَ‏முழு ஆற்றல் உள்ளவர்கள்
அவ் னுரியன்னகல் லதீ வ'அத்னாஹும் Fப இன்னா 'அலய்ஹிம் முக்ததிரூன்
முஹம்மது ஜான்
அல்லது நாம் அவர்களுக்கு (எச்சரித்து) வாக்களித்துள்ளதை (வேதனையை) நீர் காணும் படிச் செய்வோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது நாம் அவர்களுக்கு வாக்களித்த தண்டனையை நீர் (உயிருடன் இருக்கும்போதே) உமது கண்ணால் காணும்படி செய்வோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றல் உடையவர்களாகவே இருக்கிறோம்.
IFT
அல்லது நாம் இவர்களுக்கு வாக்களித்திருக்கும் தீயகதியை உம் கண்களுக்குக் காண்பித்துக் கொடுத்தாலும் சரி; திண்ணமாக, நாம் இவர்களின் மீது முழுஆற்றல் உடையவர்களாக இருக்கிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது நாம் அவர்களுக்கு வாக்களித்திருந்தோமே அத்தகையதை (_தண்டனையை) நிச்சயமாக நாம் உமக்குக் காண்பிப்போம், ஏனெனில் நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராவோம்.
Saheeh International
Or whether [or not] We show you that which We have promised them, indeed, We are Perfect in Ability.
فَاسْتَمْسِكْ بِالَّذِیْۤ اُوْحِیَ اِلَیْكَ ۚ اِنَّكَ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
فَاسْتَمْسِكْஆகவே, உறுதியாக பற்றிப்பிடிப்பீராக!بِالَّذِىْۤ اُوْحِىَவஹீ அறிவிக்கப்பட்டதைاِلَيْكَ‌ ۚஉமக்குاِنَّكَநிச்சயமாக நீர்عَلٰى صِرَاطٍபாதையில்مُّسْتَقِيْمٍ‏நேரான(து)
Fபஸ்தம்ஸிக் Bபில்லதீ ஊஹிய இலய்க இன்னக 'அலா ஸிராதின் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக. நிச்சயமாக நீர் நேரான பாதையில்தான் இருக்கிறீர்.
IFT
ஆகவே, வஹியின் மூலம் உமக்கு அறிவிக்கப் பட்டிருக்கும் வேதத்தை நீர் உறுதியாய்ப் பற்றிப் பிடிப்பீராக! திண்ணமாக, நீர் நேரிய வழியில் இருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டதே அத்தகையதைப் பலமாகப் பிடித்துகொள்வீராக! நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீது இருக்கின்றீர்.
Saheeh International
So adhere to that which is revealed to you. Indeed, you are on a straight path.
وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۚ وَسَوْفَ تُسْـَٔلُوْنَ ۟
وَاِنَّهٗநிச்சயமாக இதுلَذِكْرٌஒரு சிறப்பாகும்لَّكَஉமக்கு(ம்)وَلِقَوْمِكَ‌ ۚஉமது மக்களுக்கும்وَسَوْفَ تُسْأَلُوْنَஉங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்
வ இன்னஹூ ல திக்ருன் லக வ லிகவ்மிக வ ஸவ்Fப துஸ்'அலூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இது உமக்கும், உமது மக்களுக்கும் ஒரு நல்லுபதேசமாகும். (அதிலுள்ளபடி நடந்து கொண்டீர்களா என்பதைப் பற்றி) பின்னர் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.
IFT
உண்மையில், இந்த வேதம் உமக்கும் உம் சமுதாயத்தினருக்கும் ஒரு மாபெரும் சிறப்பாகும். மேலும், விரைவில் நீங்கள் இதற்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக (குர் ஆனாகிய) இது உமக்கும், உம்முடைய சமூகத்தார்க்கும் ஒரு நல்லுபதேசமாகும், (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
Saheeh International
And indeed, it is a remembrance for you and your people, and you [all] are going to be questioned.
وَسْـَٔلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَاۤ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً یُّعْبَدُوْنَ ۟۠
وَسْــٴَــلْஇன்னும் நீர் விசாரிப்பீராக!مَنْ اَرْسَلْنَاநாம் அனுப்பியவர்களைمِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்مِنْ رُّسُلِنَاۤநமது தூதர்களில்اَجَعَلْنَاஏற்படுத்தி இருக்கின்றோமா?مِنْ دُوْنِ الرَّحْمٰنِரஹ்மானை அன்றிاٰلِهَةًகடவுள்களைيُّعْبَدُوْنَ‏வணங்கப்படுகின்ற(னர்)
வஸ்'அல் மன் அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ருஸுலினா 'அ ஜ'அல்னா மின் தூனிர் ரஹ்மானி ஆலிஹத(ன்)ய் யுஃBபதூன்
முஹம்மது ஜான்
நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை “அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா?” என்று நீர் கேட்பீராக.  
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம் தூதர்களைப் பற்றி நீர் கேட்பீராக, ‘‘ரஹ்மானையன்றி வணங்கப்படுகின்ற வேறு கடவுள்களை நாம் ஏற்படுத்தினோமா?''
IFT
உமக்கு முன்னர் நாம், நம்முடைய எத்தனை தூதர்களை அனுப்பியிருந்தோமோ அவர்கள் அனைவரிடத்திலும் நீர் கேட்டுப் பாரும்; கருணைமிக்க ஏக இறைவனைத் தவிர வழிபடுவதற்கு வேறு கடவுளரை நாம் நியமித்திருந்தோமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நம்முடைய தூதர்களாகிய உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்தவர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று நீர் கேட்பீராக!
Saheeh International
And ask those We sent before you of Our messengers; have We made besides the Most Merciful deities to be worshipped?
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَقَالَ اِنِّیْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مُوْسٰىமூசாவைبِاٰيٰتِنَاۤநமது அத்தாட்சிகளுடன்اِلٰى فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்وَمَلَا۫ٮِٕهஇன்னும் அவனது பிரமுகர்களிடம் فَقَالَஅவர் கூறினார்اِنِّىْநிச்சயமாக நான்رَسُوْلُதூதர் ஆவேன்رَبِّஇறைவனுடையالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபகால இன்னீ ரஸூலு ரBப்Bபில் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி:) “நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக மூஸாவை, நாம் நமது (பல) அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரின் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் ''என்று கூறினார்.
IFT
நாம் மூஸாவை நம்முடைய சான்றுகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அரசவைப் பிரதானிகளிடமும் அனுப்பினோம். அவர் சென்று கூறினார்: “நான் உலக மக்கள் அனைவருடைய இறைவனின் தூதராய் இருக்கின்றேன்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர் அவ்னிடமும், அப்பொழுது சமுதாயத் தலைவர்களிடமும் நாம் அனுப்பி வைத்தோம், அப்பொழுது அவர் (அவர்களிடம்) “நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனுடைய தூதன்” (ஆவேன்) என்று கூறினார்.
Saheeh International
And certainly did We send Moses with Our signs to Pharaoh and his establishment, and he said, "Indeed, I am the messenger of the Lord of the worlds."
فَلَمَّا جَآءَهُمْ بِاٰیٰتِنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَضْحَكُوْنَ ۟
فَلَمَّا جَآءَஅவர் வந்த போதுهُمْஅவர்களிடம்بِاٰيٰتِنَاۤநமது அத்தாட்சிகளுடன்اِذَاஅப்போதுهُمْஅவர்கள்مِّنْهَاஅவற்றைப் பார்த்துيَضْحَكُوْنَ‏சிரித்தார்கள்
Fபலம்ம ஜா'அஹும் Bபி ஆயாதினா இதா ஹும் மின்ஹா யள்ஹகூன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றைக் கொண்டு (பரிகசித்துச்) சிரித்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர், அவர்களிடம் நம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றை (ஏளனம் செய்து) நகைக்க ஆரம்பித்தார்கள்.
IFT
பின்னர் அவர் நம்முடைய சான்றுகளை அவர்கள் முன் சமர்ப்பித்தபோது, அவற்றை அவர்கள் ஏளனம் செய்து சிரித்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு அவர் வந்த போது, உடனே அவர்கள் அ(தை ஏற்றுகொள்வ)தை விட்டு (ஏளனம் செய்து) சிரித்தனர்.
Saheeh International
But when he brought them Our signs, at once they laughed at them.
وَمَا نُرِیْهِمْ مِّنْ اٰیَةٍ اِلَّا هِیَ اَكْبَرُ مِنْ اُخْتِهَا ؗ وَاَخَذْنٰهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَمَا نُرِيْهِمْஅவர்களுக்கு நாம் காண்பிக்க மாட்டோம்مِّنْ اٰيَةٍஓர் அத்தாட்சியைاِلَّاதவிரهِىَஅதுاَكْبَرُபெரியதாக இருந்தேمِنْ اُخْتِهَا‌அதன் சகோதரியை விடوَ اَخَذْنٰهُمْஇன்னும் நாம் அவர்களைப் பிடித்தோம்بِالْعَذَابِவேதனையால்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏அல்லது திரும்புவதற்காக
வமா னுரீஹிம் மின் ஆயதின் இல்லா ஹிய அக்Bபரு மின் உக்திஹா வ அகத்னாஹும் Bபில்'அதாBபி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
முஹம்மது ஜான்
ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டிய ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது; எனினும் அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே பிடித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களுக்குக் காண்பித்த ஒவ்வோர் அத்தாட்சியும், மற்றொன்றை விடப் பெரிதாகவே இருந்தது. அவர்கள் (பாவத்திலிருந்து) திரும்பி விடுவதற்காக (உடனே அழித்து விடாமல் இலேசான) வேதனையைக் கொண்டு (மட்டும்) அவர்களைப் பிடித்தோம்.
IFT
ஒன்றன் பின் ஒன்றாக நாம் அவர்களுக்கு எப்படிப்பட்ட சான்றுகளைக் காண்பித்து வந்தோமெனில், அதில் ஒவ்வொன்றும் அதற்கு முந்திய சான்றைவிடக் கடினமானதாக இருந்தது! மேலும், அவர்களை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; அவர்கள் தங்களுடைய நடத்தையிலிருந்து விலகிவிட வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் எந்த அத்தாட்சியையும், அது அதற்கு முந்தியதைவிட மிகப்பெரியதாகவே தவிர நாம் அவர்களுக்கு காண்பிக்கவில்லை, மேலும், அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக (இலேசான) வேதனையைக் கொண்டு நாம் அவர்களைப் பிடித்தோம்.
Saheeh International
And We showed them not a sign except that it was greater than its sister, and We seized them with affliction that perhaps they might return [to faith].
وَقَالُوْا یٰۤاَیُّهَ السّٰحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ اِنَّنَا لَمُهْتَدُوْنَ ۟
وَقَالُوْاஅவர்கள் கூறினர்يٰۤاَيُّهَ السَّاحِرُஓ சூனியக்காரரே!ادْعُநீர் பிரார்த்திப்பீராக!لَنَاஎங்களுக்காகرَبَّكَஉமது இறைவனிடம்بِمَا عَهِدَஅவன் வாக்களித்ததைعِنْدَكَ‌ۚஉம்மிடம்اِنَّنَاநிச்சயமாக நாங்கள்لَمُهْتَدُوْنَ‏நேர்வழி பெறுவோம்
வ காலூ யா அய்யுஹஸ் ஸாஹிருத்'உ லனா ரBப்Bபக Bபிமா 'அஹித 'இன்தக இன்னனா லமுஹ்ததூன்
முஹம்மது ஜான்
மேலும், அவர்கள்: “சூனியக்காரரே (உம் இறைவன்) உம்மிடம் அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை பெற்று விடுவோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அச்சமயம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘சூனியக்காரரே! (உமது இறைவன் உமது பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வதாக) உமக்களித்த வாக்குறுதியைக் கொண்டு (இவ்வேதனையை நீக்கி) எங்களுக்கு அருள் புரிய உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு நீக்கிவிட்டால்) நிச்சயமாக நாங்கள் (உமது) நேரான வழிக்கு வந்து விடுவோம்'' என்று கூறினார்கள்.
IFT
(வேதனையில் ஆழ்த்திய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்) அவர்கள் கூறினார்கள்: “சூனியக்காரரே! உம் அதிபதியிடமிருந்து உமக்குக் கிடைத்திருக்கும் அந்தஸ்தின் அடிப்படையில் எங்களுக்காக அவனிடம் இறைஞ்சும். நாங்கள் திண்ணமாக நேரியவழிக்கு வந்துவிடுவோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் அவர்கள் (மூஸாவிடம்,) “சூனியக்காரரே! உமதிரட்சகனிடம் அவன் உமக்களித்த வாக்குறுதியைக் கொண்டு எங்களுக்(கு அருள் புரிவதற்)காக நீர் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு செய்தால்) நிச்சயமாக நாங்கள் (உம்முடைய) நேர் வழியை அடைந்தவர்களாவோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
And they said [to Moses], "O magician, invoke for us your Lord by what He has promised you. Indeed, we will be guided."
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟
فَلَمَّا كَشَفْنَاநாம் அகற்றும்போதுعَنْهُمُஅவர்களை விட்டும்الْعَذَابَவேதனையைاِذَا هُمْஅப்போது அவர்கள்يَنْكُثُوْنَ‏முறித்து விடுகின்றனர்
Fபலம்மா கஷFப்னா 'அன்ஹுமுல் 'அதாBப இதா ஹும் யன்குதூன்
முஹம்மது ஜான்
எனினும், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்து விட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு மூஸாவும் பிரார்த்தனை செய்தார்.) ஆகவே, நாம் அவர்களுடைய வேதனையை நீக்கிய சமயத்தில், அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விட்டார்கள்.
IFT
ஆனால், அவ்வாறே அவர்களைவிட்டுத் தண்டனையை நாம் விலக்கியபோது அவர்கள் வாக்கு மீறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மூஸாவின் பிரார்த்தனைக்குப்) பின்னர், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியபொழுது, அச்சமயத்தில் அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) மீறிவிட்டார்கள்.
Saheeh International
But when We removed from them the affliction, at once they broke their word.
وَنَادٰی فِرْعَوْنُ فِیْ قَوْمِهٖ قَالَ یٰقَوْمِ اَلَیْسَ لِیْ مُلْكُ مِصْرَ وَهٰذِهِ الْاَنْهٰرُ تَجْرِیْ مِنْ تَحْتِیْ ۚ اَفَلَا تُبْصِرُوْنَ ۟ؕ
وَنَادٰىஅழைத்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்فِىْ قَوْمِهٖதனது மக்களைقَالَகூறினான்يٰقَوْمِஎன் மக்களே!اَلَيْسَஇல்லையா?لِىْஎனக்கு சொந்தமானதுمُلْكُஆட்சிمِصْرَஎகிப்துடையوَهٰذِهِஇந்தالْاَنْهٰرُஆறுகள்تَجْرِىْஓடுகின்றனمِنْ تَحْتِىْ‌ۚஎனக்கு முன்னால்اَفَلَا تُبْصِرُوْنَؕ‏நீங்கள் உற்று நோக்கவில்லையா?
வ னாதா Fபிர்'அவ்னு Fபீ கவ்மிஹீ கால யா கவ்மி அலய்ஸ லீ முல்கு மிஸ்ர வ ஹாதிஹில் அன்ஹாரு தஜ்ரீ மின் தஹ்தீ அFபலா துBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்: “என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்ரு (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், ஃபிர்அவ்ன் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! இந்த ‘மிஸ்ர்' தேசத்தின் ஆட்சி எனதல்லவா? (அதிலிருக்கும்) இந்த (நைல்) நதி(யின் கால்வாய்)கள் என் கட்டளைப்படி செல்வதை நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று பறை சாற்றினான்.
IFT
(ஒருநாள்) ஃபிர்அவ்ன் தன் சமூகத்தினரை நோக்கிக் கூறினான்: “என் மக்களே! எகிப்தின் அரசாட்சி என்னுடையதல்லவா? இந்த ஆறுகள் எனக்குக் கீழேயல்லவா ஓடிக் கொண்டிருக்கின்றன? என்ன, உங்களுக்குத் தெரியவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், ஃபிர் அவ்ன் தன்னுடைய சமூத்தாரை விளித்து, “என்னுடைய சமூகத்தாரே! (இந்த) மிஸ்ரின் (_எகிப்து நாட்டின்) ஆட்சி என்னுடையதில்லையா? இந்த ஆறுகள் எனக்குக் கீழ் (என் காலடியில்) ஓடுகின்றனவே, (இதை) நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறினான்.
Saheeh International
And Pharaoh called out among his people; he said, "O my people, does not the kingdom of Egypt belong to me, and these rivers flowing beneath me; then do you not see?
اَمْ اَنَا خَیْرٌ مِّنْ هٰذَا الَّذِیْ هُوَ مَهِیْنٌ ۙ۬ وَّلَا یَكَادُ یُبِیْنُ ۟
اَمْ?اَنَاநான்خَيْرٌசிறந்தவன்مِّنْ هٰذَاஇவரை விடالَّذِىْஎவர்هُوَஅவர்مَهِيْنٌ ۙபலவீனமானவர்وَّلَا يَكَادُ يُبِيْنُ‏இன்னும் தெளிவாகப் பேசமாட்டார்
அம் அன கய்ருன் மின் ஹாதல் லதீ ஹுவ மஹீனு(ன்)வ் வலா யகாது யுBபீன்
முஹம்மது ஜான்
“அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா?
அப்துல் ஹமீது பாகவி
‘‘தவிர, நான் இந்த இழிவான மனிதரை விட சிறந்தவனாயிற்றே! தெளிவாகப் பேசவும் அவரால் முடியவில்லையே!'' (என்றும்,)
IFT
நான் சிறந்தவனா? அல்லது கேவலமானவனும் (தன்னுடைய கருத்தைத்) தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாதவனுமான இந்த மனிதன் சிறந்தவனா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது இழிவானவரும், இன்னும், தெளிவாகப் பேச இயலாதவருமான (மூஸாவாகியா) இவரைவிட நான் மேலானவனல்லவா? (என்றும்).
Saheeh International
Or am I [not] better than this one [i.e., Moses] who is insignificant and hardly makes himself clear?
فَلَوْلَاۤ اُلْقِیَ عَلَیْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَآءَ مَعَهُ الْمَلٰٓىِٕكَةُ مُقْتَرِنِیْنَ ۟
فَلَوْلَاۤ اُلْقِىَபோடப்பட வேண்டாமா?عَلَيْهِஅவர் மீதுاَسْوِرَةٌகாப்புகள்مِّنْ ذَهَبٍதங்கத்தின்اَوْஅல்லதுجَآءَவர வேண்டாமா!مَعَهُஅவருடன்الْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்مُقْتَرِنِيْنَ‏சேர்ந்தவர்களாக
Fபலவ் லா உல்கிய 'அலய்ஹி அஸ்விரதுன் மின் தஹBபின் அவ் ஜா'அ ம'அஹுல் மலா'இகது முக்தரினீன்
முஹம்மது ஜான்
“(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா?”
அப்துல் ஹமீது பாகவி
‘‘(அவர் நம்மைவிட மேலானவராக இருந்தால், பரிசாக) அவருக்குப் பொற்காப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருடன் வானவர்கள் ஒன்று சேர்ந்து பரிவாரங்களாக வரவேண்டாமா?'' (என்றும் கூறி,)
IFT
ஏன், இவனுக்குத் தங்கக் காப்புகள் இறக்கித் தரப்படவில்லை? அல்லது வானவர்களின் ஒரு குழு இவனுடன் ஏன் வரவில்லை?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(அவர் என்னைவிட மேலானவராக இருப்பின்,) பொன்னாலான கடகங்கள் அவருக்கு அணிவிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அவருடன் மலக்குகள் (அவருக்கு சேவை செய்ய) இணைந்தவர்களாக வரவேண்டாமா?” (என்றும் கூறினான்).
Saheeh International
Then why have there not been placed upon him bracelets of gold or come with him the angels in conjunction?"
فَاسْتَخَفَّ قَوْمَهٗ فَاَطَاعُوْهُ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
فَاسْتَخَفَّஅற்பமாகக் கருதினான்قَوْمَهٗதனது மக்களைفَاَطَاعُوْهُ‌ؕஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்قَوْمًاமக்களாகفٰسِقِيْنَ‏பாவிகளான
Fபஸ்தகFப்Fப கவ்மஹூ Fப அதா'ஊஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
(இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் தன் மக்களை மயக்கி விட்டான். ஆதலால், அவர்களும் அவனுக்கு கீழ்ப்படிந்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக பாவம் செய்யும் (சுபாவமுடைய) மக்களாக இருந்தனர்.
IFT
அவன் (ஃபிர்அவ்ன்) தன்னுடைய சமூகத்தாரைச் சாதாரணமாகக் கருதினான். அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள். உண்மையில் அவர்கள் பாவம் புரியும் மக்களாகவே இருந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் தன்னுடைய சமூகத்தாரை (குறைமதியுடையோராகக்கருதி) இலேசாக மதித்தான். ஆதலால், அவர்களும் அவனுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்கள், நிச்சயமாக அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை ஏற்காது அதை மீறிய) பாவிகளான சமூகத்தினராக இருந்தனர்.
Saheeh International
So he bluffed his people, and they obeyed him. Indeed, they were [themselves] a people defiantly disobedient [of Allah].
فَلَمَّاۤ اٰسَفُوْنَا انْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
فَلَمَّاۤ اٰسَفُوْنَاஅவர்கள் நமக்கு கோபமூட்டவேانْتَقَمْنَاநாம் பழிவாங்கினோம்مِنْهُمْஅவர்களிடம்فَاَغْرَقْنٰهُمْமூழ்கடித்தோம்/அவர்கள்اَجْمَعِيْنَۙ‏அனைவரையும்
Fபலம்மா ஆஸFபூனன் தகம்னா மின்ஹும் Fப அக்ரக்னாஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு அவர்கள்) நமக்குக் கோபமூட்டவே, அவர்களிடம் நாம் பழிவாங்கும் பொருட்டு, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்.
IFT
இறுதியில், அவர்கள் நம்மைக் கோபமடையச் செய்தபோது நாம் அவர்களிடம் பழி வாங்கினோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு அவர்கள்) நம்மை கோபப்படுத்தியபோது, அவர்களை நாம் தண்டனை செய்தோம், பின்னர் அவர்கள் அனைவரையும் மூழ்கடித்துவிட்டோம்.
Saheeh International
And when they angered Us, We took retribution from them and drowned them all.
فَجَعَلْنٰهُمْ سَلَفًا وَّمَثَلًا لِّلْاٰخِرِیْنَ ۟۠
فَجَعَلْنٰهُمْநாம் ஆக்கினோம்سَلَفًاமுன்னோடிகளாக(வும்)وَّمَثَلًاபடிப்பினையாகவும்لِّلْاٰخِرِيْنَ‏மற்றவர்களுக்கு
Fபஜ'அல்னாஹும் ஸலFப(ன்)வ் வ மதலன் லில் ஆகிரீன்
முஹம்மது ஜான்
இன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்.  
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், அவர்களை (அழித்து) சென்றுபோன மக்களாக்கி (அவர்களுடைய சரித்திரத்தை) பிற்காலத்தில் உள்ளவர்களுக்கு உதாரணமாக்கினோம்.
IFT
பிற்கால மக்களுக்கு முன்னோடிகளாகவும், படிப்பினையூட்டும் முன்னுதாரணங்களாகவும் அவர்களை ஆக்கி வைத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்களை (படிப்பினையால்) முந்தியவர்களாகவும், பிற்காலத்திலுள்ளோருக்கு உதாரணமாகவும் நாம் ஆக்கினோம்.
Saheeh International
And We made them a precedent and an example for the later peoples.
وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْیَمَ مَثَلًا اِذَا قَوْمُكَ مِنْهُ یَصِدُّوْنَ ۟
وَلَمَّا ضُرِبَவிவரிக்கப்பட்டபோதுابْنُமகன்مَرْيَمَமர்யமின்مَثَلًاஓர் உதாரணமாகاِذَا قَوْمُكَஅப்போது உமது மக்கள்مِنْهُஅதனால்يَصِدُّوْنَ‏கூச்சல்போடுகின்றனர்
வ லம்மா ளுரிBபBப் னு மர்யம மதலன் இதா கவ்முக மின்ஹு யஸித்தூன்
முஹம்மது ஜான்
இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) மர்யமுடைய மகனை உதாரணமாகக் கூறப்பட்ட சமயத்தில், அதைப்பற்றி உமது மக்கள் (கொக்கரித்துக்) கைதட்டி, நகைக்க ஆரம்பித்து விட்டனர்.
IFT
மேலும், மர்யத்தின் குமாரர் உதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்ட உடனேயே உம் சமூக மக்கள் ஆர்ப்பரித்தெழுந்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்டபோது, அதைப்பற்றி உம்முடைய சமூகத்தார் (சிரித்தும், கேலியாகவும்) அது சமயம் கூச்சலிட்டார்கள்.
Saheeh International
And when the son of Mary was presented as an example, immediately your people laughed aloud.
وَقَالُوْۤا ءَاٰلِهَتُنَا خَیْرٌ اَمْ هُوَ ؕ مَا ضَرَبُوْهُ لَكَ اِلَّا جَدَلًا ؕ بَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ ۟
وَقَالُـوْٓاஅவர்கள் கூறினார்கள்ءَاٰلِهَتُنَا?/எங்கள் கடவுள்கள்خَيْرٌசிறந்த(வர்களா)اَمْஅல்லதுهُوَ‌ؕஅவர்مَا ضَرَبُوْهُஅவரை உதாரணமாக அவர்கள் பேசவில்லைلَكَஉமக்குاِلَّاதவிரجَدَلًا ؕதர்க்கம் செய்வதற்காகவேبَلْமாறாகهُمْஅவர்கள்قَوْمٌமக்கள்خَصِمُوْنَ‏தர்க்கம் செய்கின்ற(வர்கள்)
வ காலூ 'அஆலிஹதுனா கய்ருன் அம் ஹூ; மா ளரBபூஹு லக இல்லா ஜதலா; Bபல்ஹும் கவ்முன் கஸிமூன்
முஹம்மது ஜான்
மேலும்: “எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?'' என்று கேட்கத் தலைப்பட்டனர். வீண் விதண்டாவாதத்திற்கே தவிர உமக்கு அவர்கள், அவரை உதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இவர்கள் வீண் தர்க்கம் செய்யும் மக்கள்தான்.
IFT
“எங்கள் கடவுள்கள் சிறந்தவையா அல்லது அவரா?” என்று கேட்டனர். அவர்கள் இந்த உதாரணத்தை முன்வைத்தது வெறும் வீண் வாதத்திற்குத்தான். உண்மையில் இவர்கள் குதர்க்கம் செய்யும் மக்களேயாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் எங்களுடைய தெய்வங்கள் மிகச் சிறந்தவையா? அல்லது அவரா? என்றும் கேட்கிறார்கள் (வீண்)தர்க்கத்திற்காகவே தவிர உம்மிடம் அவர்கள், அவரை உதாரணமாகக் கூறவில்லை, மாறாக இவர்கள் வீண் தர்க்கம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.
Saheeh International
And they said, "Are our gods better, or is he?" They did not present it [i.e., the comparison] except for [mere] argument. But, [in fact], they are a people prone to dispute.
اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَیْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
اِنْ هُوَஅவர் இல்லைاِلَّاதவிரعَبْدٌஓர் அடியாராகவேاَنْعَمْنَاஅருள் புரிந்தோம்عَلَيْهِஅவர்மீதுوَجَعَلْنٰهُஅவரை ஆக்கினோம்مَثَلًاஓர் அத்தாட்சியாகلِّبَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏இஸ்ரவேலர்களுக்கு
இன் ஹுவ இல்லா 'அBப்துன் அன்'அம்னா 'அலய்ஹி வ ஜ'அல்னாஹு மதலன் லி Bபனீ இஸ்ரா'ஈல்
முஹம்மது ஜான்
அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஈஸாவோ, நமது அடிமையே தவிர வேறில்லை. (அவர் கடவுளல்ல; நமது பிள்ளையுமல்ல; அவர் இவ்வாறு கூறவுமில்லை; மாறாக, இதை மறுத்தே கூறியிருக்கிறார்.) அவர் மீது நாம் அருள்புரிந்து, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அவரை நாம் ஓர் உதாரணமாக்கினோம்.
IFT
மர்யத்தின் குமாரரைப் பொறுத்த வரையில், அவர் ஓர் அடியாரேதான். அவர் மீது நாம் அருள்புரிந்திருந்தோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நமது ஆற்றலின் முன்னுதாரணமாக அவரை நாம் ஆக்கி இருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஈஸாவாகிய) அவர், (நம்முடைய) அடியாரே அன்றி (அவர் தெய்வம்) இல்லை, அவர் மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம்.
Saheeh International
He [i.e., Jesus] was not but a servant upon whom We bestowed favor, and We made him an example for the Children of Israel.
وَلَوْ نَشَآءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَّلٰٓىِٕكَةً فِی الْاَرْضِ یَخْلُفُوْنَ ۟
وَلَوْ نَشَآءُநாம் நாடினால்لَجَـعَلْنَاஆக்கியிருப்போம்مِنْكُمْஉங்களுக்குப் பதிலாகمَّلٰٓٮِٕكَةًவானவர்களைفِى الْاَرْضِஇந்த பூமியில்يَخْلُفُوْنَ‏வழித்தோன்றி வருவார்கள்
வ லவ் னஷா'உ லஜ'அல்னா மின்கும் மலா'இகதன் Fபில் அர்ளி யக்லுFபூன்
முஹம்மது ஜான்
நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பினால் (உங்களை அழித்து விட்டு பிறகு,) உங்களுக்குப் பதிலாக வானவர்களை படைத்து, பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கி விடுவோம்.
IFT
நாம் நாடியிருந்தால் உங்களிலிருந்து வானவர்களைப் படைத்திருப்போம்; அவர்கள் உங்களின் பிரதிநிதிகளாய்ப் பூமியில் திகழ்ந்திருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் நாடினால், உங்களுக்குப்பகரமாக பூமியில் மலக்குகளை நாம் ஆக்கி இருப்போம், (உங்களது அழிவிற்குப்பின்) அவர்கள் (உங்களுக்குப்) பின் தோன்றல்களாக (ஆகி) இருப்பர்.
Saheeh International
And if We willed, We could have made [instead] of you angels succeeding [one another] on the earth.
وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
وَاِنَّهٗநிச்சயமாக அவர்لَعِلْمٌஅடையாளமாவார்لِّلسَّاعَةِமறுமையின்فَلَا تَمْتَرُنَّ بِهَاஆகவே அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள்وَاتَّبِعُوْنِ‌ؕஇன்னும் என்னை பின்பற்றுங்கள்!هٰذَاஇதுதான்صِرَاطٌநேரான(து)مُّسْتَقِيْمٌ‏பாதையாகும்
வ இன்னஹூ ல 'இல்முன் லிஸ் ஸா'அதி Fப லா தம்தருன்ன Bபிஹா வத்தBபி'ஊன்; ஹாதா ஸிராதுன் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவிராக!)
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (வரவிருக்கும்) மறுமைக்குரிய அத்தாட்சிகளில் அவரும் ஓர் அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம். என்னையே பின்பற்றி நடங்கள். இதுவே நேரான வழி.
IFT
மேலும், அவர் (மர்யத்தின் குமாரர்) உண்மையில் மறுமையின் ஓர் அறிகுறியாகத் திகழ்கின்றார். எனவே, நீங்கள் அதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே நேரிய வழியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிச்சயமாக அவர், (ஈஸா அலைஹிஸ்ஸலாம் வானத்திலிருந்து இறங்குவது கொண்டு) மறுமை நாளின் (அடையாளம் நெருங்கிவிட்டது என அறியப்படும் ஓர்) அத்தாட்சியாவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகிக்க வேண்டாம், நீங்கள் என்னையே பின்பற்றுங்கள், இதுவே நேரான வழியாகும் (என்று நபியே! நீர் கூறுவீராக!).
Saheeh International
And indeed, he [i.e., Jesus] will be [a sign for] knowledge of the Hour, so be not in doubt of it, and follow Me. This is a straight path.
وَلَا یَصُدَّنَّكُمُ الشَّیْطٰنُ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
وَلَا يَصُدَّنَّكُمُஉங்களை தடுத்துவிட வேண்டாம்الشَّيْطٰنُ‌ ۚஷைத்தான்اِنَّهٗநிச்சயமாக அவன்لَكُمْஉங்களுக்குعَدُوٌّஎதிரிمُّبِيْنٌ‏தெளிவான
வ லா யஸுத்தன் னகுமுஷ் ஷய்தானு இன்னஹூ லகும் 'அதுவ்வுன் முBபீன்
முஹம்மது ஜான்
அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விட்டும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களை ஷைத்தான் (நேர்வழியைவிட்டு) தடுத்து விட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்.''
IFT
ஷைத்தான் உங்களை இதிலிருந்து தடுத்துவிட வேண்டாம். அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களை ஷைத்தான் (நேர் வழியில் செல்வதைவிட்டும்) தடுத்து விடவும் வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாவான்.
Saheeh International
And never let Satan avert you. Indeed, he is to you a clear enemy.
وَلَمَّا جَآءَ عِیْسٰی بِالْبَیِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَیِّنَ لَكُمْ بَعْضَ الَّذِیْ تَخْتَلِفُوْنَ فِیْهِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟
وَ لَمَّا جَآءَவந்த போதுعِيْسٰىஈஸாبِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்قَالَஅவர் கூறினார்قَدْ جِئْتُكُمْதிட்டமாக நான் உங்களிடம் வந்துள்ளேன்بِالْحِكْمَةِஞானத்துடன்وَلِاُبَيِّنَவிவரிப்பதற்காகவும்لَكُمْஉங்களுக்குبَعْضَசிலவற்றைالَّذِىْஎதில்تَخْتَلِفُوْنَகருத்து வேற்றுமை கொள்கிறீர்களோفِيْهِ‌ ۚஅதில்فَاتَّقُوا اللّٰهَஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!وَاَطِيْعُوْنِ‏இன்னும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!
வ லம்மா ஜா'அ 'ஈஸா Bபில்Bபய்யினாதி கால கத் ஜி'துகும் Bபில் ஹிக்மதி வ லி-உBபய்யின லகும் Bபஃளல் லதீ தக்தலிFபூன Fபீஹி Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
ஈஸா தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபொழுது (தன் மக்களை நோக்கி) ‘‘மெய்யாகவே ஞானத்தை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றில் சிலவற்றை உங்களுக்கு விவரித்தும் கூறுவேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்றும்,
IFT
மேலும், ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது கூறினார்: “நான் உங்களிடம் ஞானத்தைக் கொண்டு வந்திருக்கின்றேன்; மேலும், நீங்கள் என்னென்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றீர்களோ அவற்றில் சிலவற்றின் உண்மை நிலையை உங்களிடம் விளக்கிக் காட்டுவதற்காகவும் வந்திருக்கின்றேன். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் ஈஸா (அத்தாட்சிகளில்) தெளிவானவைகளைக் கொண்டு வந்தபொழுது, “உங்களிடம் திட்டமாக ஞானத்தை (நபித்துவத்தை) நான் கொண்டு வந்திருக்கிறேன், எதில் நீங்கள் (தர்க்கித்து) கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறீர்களோ அத்தகைய சிலவற்றை உங்களுக்கு விளக்கிக்கூறுவதற்காகவும் (நான் வந்துள்ளேன்) ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று (தன் சமூகத்தாரிடம்) கூறினார்.
Saheeh International
And when Jesus brought clear proofs, he said, "I have come to you with wisdom [i.e., prophethood] and to make clear to you some of that over which you differ, so fear Allah and obey me.
اِنَّ اللّٰهَ هُوَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَ هُوَஅல்லாஹ்தான்رَبِّىْஎனது இறைவனும்وَرَبُّكُمْஉங்கள் இறைவனும்فَاعْبُدُوْهُ‌ؕஆகவே, அவனையே வணங்குங்கள்!هٰذَاஇதுதான்صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏நேரான பாதையாகும்
இன்னல் லாஹ ஹுவ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாத ஸிராதும் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். (நான் இறைவன் அல்ல.) ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (வேறு எதையும், எவரையும் என்னையும் வணங்காதீர்கள்.) இதுதான் நேரான வழி'' என்றும் கூறினார்.
IFT
உண்மையில், அல்லாஹ்தான் என்னுடைய அதிபதி; உங்களுடையவும் அதிபதி. ஆகவே, அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுவே நேரிய வழியாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அல்லாஹ்தான் என்னுடைய இரட்சகனும், உங்களுடைய இரட்சகனுமாவான், ஆதலால், அ(வன் ஒரு)வனையே நீங்கள் வணங்குங்கள், இதுதான் நேரான வழி” (என்றும் கூறினார்).
Saheeh International
Indeed, Allah is my Lord and your Lord, so worship Him. This is a straight path."
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ فَوَیْلٌ لِّلَّذِیْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ یَوْمٍ اَلِیْمٍ ۟
فَاخْتَلَفَதர்க்கித்தனர்الْاَحْزَابُகூட்டங்கள்مِنْۢ بَيْنِهِمْ‌ۚதங்களுக்கு மத்தியில்فَوَيْلٌநாசம் உண்டாகட்டும்لِّلَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்களுக்குمِنْ عَذَابِவேதனையின்يَوْمٍநாளில்اَلِيْمٍ‏வலி தரக்கூடியது
Fபக்தலFபல் அஹ்ZஜாBபு மின் Bபய்னிஹிம் Fப வய்லுன் லில் லதீன ளலமூ மின் 'அதாBபி யவ்மின் அலீம்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவருடைய கூட்டத்தினர் (அவரைப் பற்றித்) தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) அவருக்கு மாறுசெய்ய முற்பட்டனர். ஆகவே, இந்த அநியாயக்காரர்களுக்கு கடிண துன்பமுடைய வேதனையின் கேடுதான்!
IFT
ஆனால், (அவர் இந்தத் தெளிவான அறிவுரையை வழங்கியும்) அந்தக் கூட்டத்தினர் தமக்குள் வேறுபட்டனர். எனவே, கொடுமை புரிந்தவர்களுக்கு அழிவுதான்; துன்புறுத்தக்கூடிய ஒருநாளின் தண்டனையின் வாயிலாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பிறகு அவர்களுக்கு மத்தியிலிருந்து (உருவான) பல்வேறு கூட்டத்தினர் மாறுபட்டனர், ஆகவே, அநியாயம் செய்தார்களே அவர்களுக்குத் துன்புறுத்தும் நாளுடைய வேதனையின் கேடுதான் இருக்கிறது.
Saheeh International
But the denominations from among them differed [and separated], so woe to those who have wronged from the punishment of a painful Day.
هَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
هَلْ يَنْظُرُوْنَஅவர்கள் எதிர்பார்க்கின்றனரா?اِلَّاதவிரالسَّاعَةَமறுமைاَنْ تَاْتِيَهُمْஅவர்களிடம் வருவதைبَغْتَةًதிடீரென்றுوَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
ஹல் யன்ளுரூன இல்லஸ் ஸா'அத அன் த'தியஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
முஹம்மது ஜான்
தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா?
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென இவர்களிடம் மறுமை வருவதைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
IFT
என்ன, இவர்கள் அறியாதிருக்கும் நிலையில் திடீரென மறுமைநாள் தங்களிடம் வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் உணர்ந்து கொள்ளாத விதத்தில் திடீரென அவர்களிடம் மறுமை நாள் (விசாரணைக்காலம்) வருவதையன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
Saheeh International
Are they waiting except for the Hour to come upon them suddenly while they perceive not?
اَلْاَخِلَّآءُ یَوْمَىِٕذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِیْنَ ۟ؕ۠
اَلْاَخِلَّاۤءُநண்பர்கள் எல்லாம்يَوْمَٮِٕذٍۢஅந்நாளில்بَعْضُهُمْஅவர்களில் சிலர்لِبَعْضٍசிலருக்குعَدُوٌّஎதிரிகள்اِلَّاதவிரالْمُتَّقِيْنَ ؕ ‏இறையச்சமுள்ளவர்களை
அல் அகில்லா'உ யவ்ம'இதின் Bபஃளுஹும் லிBபஃளின் 'அதுவ்வுன் இல்லல் முத்தகீன்
முஹம்மது ஜான்
பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகி விடுவர். ஆனால், இறை அச்சமுடையவர்களைத் தவிர.
IFT
அந்த நாள் வந்துவிடும்பொழுது, இறையச்சத்துடன் வாழ்ந்தவர் தவிர ஏனைய நண்பர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பயபக்தியுடையோர்களைத் தவிர (உலகிலிருந்த) உற்ற நண்பர்கள் அந்நாளில், அவர்களில் சிலர் சிலருக்கு எதிரிகளாவார்கள்.
Saheeh International
Close friends, that Day, will be enemies to each other, except for the righteous
یٰعِبَادِ لَا خَوْفٌ عَلَیْكُمُ الْیَوْمَ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟ۚ
يٰعِبَادِஎன் அடியார்களே!لَا خَوْفٌபயமில்லைعَلَيْكُمُஉங்களுக்குالْيَوْمَஇன்றுوَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ‌ۚ‏இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்
யா 'இBபாதி லா கவ்Fபுன் 'அலய்குமுல் யவ்ம வ லா அன்தும் தஹ்Zஜனூன்
முஹம்மது ஜான்
“என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்).
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில் இறையச்சமுடையவர்களை நோக்கி) ‘‘என் அடியார்களே! இன்றைய தினம் உங்களுக்கு ஒரு பயமும் இல்லை. நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்'' (என்று கூறப்படும்).
IFT
அந்நாளில், கூறப்படும்: “என் அடியார்களே! இன்று உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை; உங்களுக்கு எவ்விதத் துயரமும் ஏற்படாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நாளில் பயபக்தியுடையவர்களிடம்) “என் அடியார்களே! இன்றையத் தினம் உங்களுக்கு எவ்விதமான பயமுமில்லை, (எதைப் பற்றியும்) நீங்கள் கவலையும் அடையமாட்டீர்கள்” (என்று கூறப்படும்).
Saheeh International
[To whom Allah will say], "O My servants, no fear will there be concerning you this Day, nor will you grieve,
اَلَّذِیْنَ اٰمَنُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا مُسْلِمِیْنَ ۟ۚ
اَلَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்بِاٰيٰتِنَاநமது வசனங்களைوَكَانُوْاஇன்னும் இருந்தார்கள்مُسْلِمِيْنَ‌ۚ‏முஸ்லிம்களாக
அல்லதீன ஆமனூ Bபி ஆயாதினா வ கானூ முஸ்லிமீன்
முஹம்மது ஜான்
இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள்தான் நம் வசனங்களை நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் பணிந்து வழிபட்டு நடப்பவர்கள்.
IFT
இவர்கள்தாம் நம் வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் கீழ்ப்படிந்தவர்களாகவும் விளங்கினர்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரேன்றால், அவர்கள் தாம் நம்முடைய வசனங்களை விசுவாசித்து, நமக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தவர்களாகவும் இருந்தனர்.
Saheeh International
[You] who believed in Our verses and were Muslims.
اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ ۟
اُدْخُلُواநுழையுங்கள்الْجَنَّةَசொர்க்கத்தில்اَنْتُمْநீங்களும்وَاَزْوَاجُكُمْஉங்கள் மனைவிகளும்تُحْبَرُوْنَ ‌‏நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!
உத்குலுல் ஜன்னத அன்தும் வ அZஜ்வாஜுகும் துஹ்Bபரூன்
முஹம்மது ஜான்
நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மறுமையில் இவர்களை நோக்கி) ‘‘நீங்களும் உங்கள் மனைவிகளும் மகிழ்ச்சியடைந்தவர்களாக சொர்க்கத்திற்குச் சென்று விடுங்கள்'' (என்று கூறப்படும்).
IFT
நுழைந்துவிடுங்கள் சுவனத்தில்; நீங்களும் உங்கள் மனைவியரும்! அங்கு நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, மறுமையில் இவர்களிடம்) “நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்விக்கப்படுபவர்களாக சுவனபதிக்குள் நுழைந்துவிடுங்கள்” (என்று கூறப்படும்).
Saheeh International
Enter Paradise, you and your kinds, delighted."
یُطَافُ عَلَیْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ ۚ وَفِیْهَا مَا تَشْتَهِیْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْیُنُ ۚ وَاَنْتُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟ۚ
يُطَافُசுற்றி வரப்படும்عَلَيْهِمْஅவர்களைبِصِحَافٍதட்டுகளுடனும்مِّنْ ذَهَبٍதங்கத்தினாலானوَّاَكْوَابٍ‌ۚகுவளைகளுடனும்وَفِيْهَاஇன்னும் அதில்مَا تَشْتَهِيْهِவிரும்புகின்றவையும்الْاَنْفُسُமனங்கள்وَتَلَذُّ الْاَعْيُنُ‌ۚஇன்னும் கண்கள் இன்புறுகின்றவையும்وَاَنْتُمْ فِيْهَاநீங்கள் அதில்خٰلِدُوْنَ‌ۚ‏நிரந்தரமாக இருப்பீர்கள்
யுதாFபு 'அலய்ஹிம் Bபிஸிஹா Fபிம் மின் தஹBபி(ன்)வ் வ அக்வாBப், வ Fபீஹா மாதஷ்தஹீஹில் அன்Fபுஸு வ தலத்துல் அஃயுனு வ அன்தும் Fபீஹா காலிதூன்
முஹம்மது ஜான்
பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.)
அப்துல் ஹமீது பாகவி
(பலவகை உணவுகளும் பானங்களும் நிறைந்த) தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருக்கும். அங்கு, அவர்கள் மனம் விரும்பியவையும், அவர்களுடைய கண்களுக்கு ரம்மியமானவையும் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களை நோக்கி) ‘‘இதில் என்றென்றும் நீங்கள் வசித்திருங்கள்'' (என்றும் கூறப்படும்.)
IFT
தங்கத்தட்டுகளும், கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றி வந்து கொண்டிருக்கும். மனங்கள் விரும்பக்கூடிய கண்களுக்கு இன்பம் அளிக்கக்கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும். (அவர்களிடம் கூறப்படும்:) “இங்கு நீங்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பொற்தட்டுகளையும், பிடி இல்லாத கிண்ணங்களையும் கொண்டு (சிறார்கள் மூலம்) அவர்கள் மீது சுற்றி வரப்படும், அவர்கள் மனங்கள் எதை விரும்புகின்றனவோ அதுவும், கண்கள் இன்பமடையுமே அதுவும் அதில் உள்ளன, மேலும், (அவர்களிடம்) “நீங்கள் இதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள் (என்றும் கூறப்படும்.)”
Saheeh International
Circulated among them will be plates and vessels of gold. And therein is whatever the souls desire and [what] delights the eyes, and you will abide therein eternally.
وَتِلْكَ الْجَنَّةُ الَّتِیْۤ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
وَتِلْكَஇதுதான்الْجَنَّةُஅந்த சொர்க்கம்الَّتِىْۤஎதுاُوْرِثْتُمُوْநீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள்هَاஅதைبِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மைகளினால்
வ தில்கல் ஜன்னதுல் லதீ ஊரித்துமூஹா Bபிமா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாகவே, இச்சொர்க்கத்திற்கு நீங்கள் வாரிசாக ஆனீர்கள்.
IFT
நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களின் காரணத்தால், இந்தச் சுவனத்திற்கு வாரிசுகளாய் ஆக்கப்பட்டிருக்கின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், “அச்சுவனபதி_எத்தகையதென்றால் அதை_நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்தவை(களான நன்மை)களுக்குப் பகரமாக அனந்தரக்காரர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள் (என்றும்).”
Saheeh International
And that is Paradise which you are made to inherit for what you used to do.
لَكُمْ فِیْهَا فَاكِهَةٌ كَثِیْرَةٌ مِّنْهَا تَاْكُلُوْنَ ۟
لَكُمْஉங்களுக்குفِيْهَاஅதில்فَاكِهَةٌபழங்கள்كَثِيْرَةٌஅதிகமானمِّنْهَاஅவற்றில் இருந்துتَاْكُلُوْنَ‏நீங்கள் உண்பீர்கள்
லகும் Fபீஹா Fபாகிஹதுன் கதீரதுன் மின்ஹா த'குலூன்
முஹம்மது ஜான்
“உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் புசிக்கக்கூடிய (விதவிதமான) பல கனிவர்க்கங்களும் அதில் உங்களுக்கு உள்ளன'' (என்றும் கூறப்படும்).
IFT
உங்களுக்காக இங்கு ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் உண்பீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அதில் உங்களுக்கு அனேகக் கனிவகைகள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நீங்கள் புசிப்பீர்கள் (என்றும் கூறப்படும்).”
Saheeh International
For you therein is much fruit from which you will eat.
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۟ۚۖ
اِنَّநிச்சயமாகالْمُجْرِمِيْنَகுற்றவாளிகள்فِىْ عَذَابِவேதனையில்جَهَنَّمَநரகத்தின்خٰلِدُوْنَ ۚ ۖ‏நிரந்தரமாக இருப்பார்கள்
இன்னல் முஜ்ரிமீன Fபீ 'அதாBபி ஜஹன்னம காலிதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆயினும் பாவம் செய்த) குற்றவாளிகள் நிச்சயமாக நரக வேதனையில் என்றென்றும் நிலைபெற்று விடுவார்கள்.
IFT
குற்றவாளிகளோ நரக வேதனையில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (பாவம் செய்த) குற்றவாளிகள் நரக வேதனையில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
Indeed, the criminals will be in the punishment of Hell, abiding eternally.
لَا یُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِیْهِ مُبْلِسُوْنَ ۟ۚ
لَا يُفَتَّرُ(வேதனை) இலேசாக்கப்படாதுعَنْهُمْஅவர்களை விட்டும்وَهُمْஅவர்கள்فِيْهِஅதில்مُبْلِسُوْنَ‌ۚ‏நம்பிக்கை இழந்திருப்பார்கள்
லா யுFபத்தரு 'அன்ஹும் வ ஹும் Fபீஹி முBப்லிஸூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது; அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய (வேதனையில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. அதில் அவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
IFT
அவர்களின் வேதனை கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது. அவர்கள் அதில் நிராசையுற்றிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களை விட்டும் (வேதனை)_ஒரு சிறிதும் குறைக்கப்படமாட்டாது, அதில் அவர்கள் நம்பிக்கையும் இழந்தவர்களாகி விடுவார்கள்.
Saheeh International
It will not be allowed to subside for them, and they, therein, are in despair.
وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِیْنَ ۟
وَمَا ظَلَمْنٰهُمْநாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லைوَ لٰـكِنْஎனினும்كَانُوْاஇருந்தார்கள்هُمُஅவர்கள்தான்الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
வமா ளலம்னாஹும் வ லாகின் கானூ ஹுமுள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.
அப்துல் ஹமீது பாகவி
நாம் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைத்துவிடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
IFT
நாம் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை. மாறாக, அவர்கள் தமக்குத் தாமே கொடுமை இழைத்துக் கொண்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்கு நாம் அநியாயம் செய்து விடவில்லை, எனினும், அவர்களே அநியாயக்காரர்களாக இருந்தனர்.
Saheeh International
And We did not wrong them, but it was they who were the wrongdoers.
وَنَادَوْا یٰمٰلِكُ لِیَقْضِ عَلَیْنَا رَبُّكَ ؕ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ ۟
وَنَادَوْاஅவர்கள் அழைப்பார்கள்يٰمٰلِكُமாலிக்கே!لِيَقْضِஅழித்துவிடட்டும்!عَلَيْنَاஎங்களைرَبُّكَ‌ؕஉமது இறைவன்قَالَஅவர் கூறுவார்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مّٰكِثُوْنَ‏தங்குவீர்கள்
வ னாதவ் யா மாலிகு லியக்ளி 'அலய்னா ரBப்Bபுக கால இன்னகும் மாகிதூன்
முஹம்மது ஜான்
மேலும், அவர்கள் (நரகத்தில்) “யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
(இந்நிலையில் அவர்கள் நரகத்தின் அதிபதியை நோக்கி) ‘‘மாலிக்கே! உமது இறைவன் எங்கள் காரியத்தை முடித்து விடட்டும். (மரணத்தின் மூலமாயினும் எங்களுக்கு விடுதலை கிடைக்கட்டும்)'' என்று சப்தமிடுவார்கள். அதற்கவர் ‘‘(முடியாது!) நிச்சயமாக நீங்கள் இதே நிலைமையில் (வேதனையை அனுபவித்துக் கொண்டே மரணிக்காது) இருக்க வேண்டியதுதான்'' என்று கூறுவார்.
IFT
அவர்கள் மன்றாடுவார்கள்: “மாலிகே!* உம் அதிபதி எங்கள் பிரச்னையை முடித்துவிட்டால் நன்றாய் இருந்திருக்குமே!” அவர் பதிலளிப்பார்: “நீங்கள் இப்படியே கிடப்பீர்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நரகத்தின் பொறுப்பாளரிடம்) “மாலிக்கே! உமதிரட்சகன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்” என்று சப்தமிடுவார்கள், அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில், மரணிக்காது) தங்கியிருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார்.
Saheeh International
And they will call, "O Malik, let your Lord put an end to us!" He will say, "Indeed, you will remain."
لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ۟
لَقَدْதிட்டவட்டமாகجِئْنٰكُمْஉங்களிடம் வந்தோம்بِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டுوَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்كُمْஉங்களில்لِلْحَقِّஅந்த சத்தியத்தைكٰرِهُوْنَ‏வெறுக்கின்றீர்கள்
லகத் ஜி'னாகும் Bபில்ஹக்கி வ லாகின்ன அக்தரகும் லில் ஹக்கி காரிஹூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(நிராகரிப்பாளர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையான வேதத்தை கொண்டுவந்தோம். எனினும், உங்களில் பெரும்பாலானவர்கள் அந்த உண்மையை வெறுக்கின்றனர்.
IFT
நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்திருந்தோம். ஆனால், உங்களில் பெரும்பாலோருக்குச் சத்தியமே வெறுப்பாக இருந்தது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டுவந்தோம், எனினும் உங்களில் பெரும்பாலோர் அவ்வுண்மையை வெறுக்கின்றவர்களாக இருந்தீர்கள்.
Saheeh International
We had certainly brought you the truth, but most of you, to the truth, were averse.
اَمْ اَبْرَمُوْۤا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَ ۟ۚ
اَمْ اَبْرَمُوْۤاஅவர்கள் முடிவு செய்து விட்டார்களா?اَمْرًاஒரு காரியத்தைفَاِنَّا مُبْرِمُوْنَ‌ۚ‏நிச்சயமாக நாங்கள்தான் முடிவு செய்வோம்
அம் அBப்ரமூ அம்ரன் Fபய்ன்னா முBப்ரிமூன்
முஹம்மது ஜான்
அல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா? ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவு கட்டுகிறது நாம் தான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உமக்குச் சதி செய்ய) அவர்கள் ஏதும் முடிவு கட்டிக் கொண்டிருக்கின்றனரா? அவ்வாறாயின், (அதற்குரிய பரிகாரத்தை) நாமும் முடிவு கட்டித்தான் வைத்திருக்கிறோம்.
IFT
என்ன, இவர்கள் ஏதேனும் திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கின்றார்களா? அப்படியானால் நாமும் உரிய நடவடிக்கை எடுத்தே தீருவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் ஏதேனும் ஒரு காரியத்தை (உமக்கெதிராக) முடிவு கட்டிக் கொண்டிருக்கின்றனரா? அவ்வாறாயின், (அதற்குரிய பரிகாரத்தை) நிச்சயமாக நாமும் முடிவு செய்கிறவர்கள்.
Saheeh International
Or have they devised [some] affair? But indeed, We are devising [a plan].
اَمْ یَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ ؕ بَلٰی وَرُسُلُنَا لَدَیْهِمْ یَكْتُبُوْنَ ۟
اَمْ يَحْسَبُوْنَஅவர்கள் எண்ணுகின்றனரா?اَنَّا لَا نَسْمَعُநாம் செவியுற மாட்டோம்سِرَّஇரகசிய பேச்சை(யும்)هُمْஅவர்களின்وَنَجْوٰٮهُمْ‌ؕஅவர்கள் கூடிப் பேசுவதையும்بَلٰىமாறாகوَرُسُلُنَاநமது தூதர்கள்لَدَيْهِمْஅவர்களிடம் இருந்துيَكْتُبُوْنَ‏பதிவு செய்கின்றனர்
அம் யஹ்ஸBபூன அன்னா லா னஸ்ம'உ ஸிர்ரஹும் வ னஜ்வாஹும்; Bபலா வ ருஸுலுனா லதய்ஹிம் யக்துBபூன்
முஹம்மது ஜான்
அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல: மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்து வைத்திருப்பதும் அல்லது (தங்களுக்குள்) இரகசியமாகப் பேசுவதையும் நாம் செவியேற்க மாட்டோம் என்று அவர்கள் நினைக்கின்றனரா? அவ்வாறில்லை! அவர்களிடத்தில் இருக்கும் நம் வானவர்கள் (ஒவ்வொன்றையும்) பதிவு செய்துகொண்டே வருகின்றனர்.
IFT
என்ன, இவர்களின் இரகசியங்களையும், கிசு கிசுப்புகளையும் நாம் கேட்பதில்லை என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்களா? நாம் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். நம் வானவர்கள் அவர்களின் அருகில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது அவர்களின் இரகசியத்தையும், அவர்களின் இரகசிய ஆலோசனையையும் நிச்சயமாக நாம் செவியேற்பதில்லை என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனரா? அல்ல! அவர்களிடதிலிருக்கும் (மலக்குகளாகிய) நம்முடைய தூதர்கள் எழுதிக் கொள்கிறார்கள்.
Saheeh International
Or do they think that We hear not their secrets and their private conversations? Yes, [We do], and Our messengers [i.e., angels] are with them recording.
قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖۗ فَاَنَا اَوَّلُ الْعٰبِدِیْنَ ۟
قُلْகூறுவீராக!اِنْ كَانَஇருந்தால்لِلرَّحْمٰنِரஹ்மானுக்குوَلَدٌ ۖகுழந்தைفَاَنَاநான்தான்اَوَّلُமுதலாமவன்الْعٰبِدِيْنَ‏வணங்குபவர்களில்
குல் இன் கான லிர் ரஹ்மானி வலத்; Fப-அன அவ்வலுல் 'ஆBபிதீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறும்: “அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘ரஹ்மானுக்கு சந்ததி இருந்தால் (அதை) வணங்குபவர்களில் நானே முதன்மையானவனாக இருப்பேன்''
IFT
அவர்களிடம் கூறும்: “உண்மையில் கருணைமிக்க இறைவனுக்கு ஏதேனும் பிள்ளைகள் இருந்திருக்குமானால் அனைவரையும்விட முதலில் வணங்குபவனாக நான் இருந்திருப்பேன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அர்ரஹ்மானுக்கு பிள்ளை இருக்குமானால் (அதனை) வணங்குவோரில் நானே முதன்மையானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, [O Muhammad], "If the Most Merciful had a son, then I would be the first of [his] worshippers."
سُبْحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
سُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்رَبِّஅதிபதிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமியின்رَبِّஅதிபதிالْعَرْشِஅர்ஷுடையعَمَّا يَصِفُوْنَ‏அவர்கள் வர்ணிக்கின்ற வர்ணிப்புகளை விட்டும்
ஸுBப்ஹான ரBப்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ரBப்Bபில் அர்ஷி 'அம்மா யஸிFபூன்
முஹம்மது ஜான்
வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசுத்தமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள் இன்னும் பூமியின் இறைவன், அர்ஷுடைய இறைவன் இவர்கள் கூறும் (பொய்யான) வர்ணிப்புகளை விட்டும் மிக்க பரிசுத்தமானவன்.
IFT
தூய்மையானவன், வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் அர்ஷின் • உரிமையாளனுமான இறைவன், இவர்கள் அவனோடு சேர்த்துச் சொல்கின்ற அனைத்தையும்விட்டு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகன், அர்ஷுடைய இரட்சகன் அவர்கள் வர்ணிப்பவற்றை விட்டும் மிக்க தூயவன்.
Saheeh International
Exalted is the Lord of the heavens and the earth, Lord of the Throne, above what they describe.
فَذَرْهُمْ یَخُوْضُوْا وَیَلْعَبُوْا حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟
فَذَرْهُمْஆகவே அவர்களை விடுங்கள்!يَخُوْضُوْاஅவர்கள் மூழ்கட்டும்وَيَلْعَبُوْاஇன்னும் விளையாடட்டும்!حَتّٰىஇறுதியாகيُلٰقُوْاஅவர்கள் சந்திப்பார்கள்يَوْمَهُمُஅவர்களது நாளைالَّذِىْஎதுيُوْعَدُوْنَ‏அவர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள்
Fபதர்ஹும் யகூளூ வ யல்'அBபூ ஹத்தா யுலாகூ யவ்மஹுமுல் லதீ யூ'அதூன்
முஹம்மது ஜான்
ஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்களை (வீண் விவாதத்தில்) மூழ்கியிருக்கவும், விளையாட்டில் கழிக்கவும் (நபியே!) நீர் விட்டு விடும்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையின்) நாளை இவர்கள் சந்திக்கும் வரை, வீண் தர்க்கத்தில் மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கும் படி இவர்களை விட்டுவிடுவீராக.
IFT
சரி, இவர்களை நீர் விட்டுவிடும், அவர்கள் தங்களின் வீண் கற்பனைகளில் மூழ்கியிருக்கட்டும், தங்களின் விளையாட்டில் இலயித்திருக்கட்டும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நாளை அவர்கள் சந்திக்கும் வரை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) “இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அந்த (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் (வீண் தர்க்கத்தில்) மூழ்கிக் கொண்டிருக்கவும், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் அவர்களை நீர் விட்டு விடுவீராக!
Saheeh International
So leave them to converse vainly and amuse themselves until they meet their Day which they are promised.
وَهُوَ الَّذِیْ فِی السَّمَآءِ اِلٰهٌ وَّفِی الْاَرْضِ اِلٰهٌ ؕ وَهُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்فِى السَّمَآءِவானத்திலும்اِلٰـهٌவணங்கப்படுபவன்وَّفِى الْاَرْضِபூமியிலும்اِلٰـهٌ‌ ؕவணங்கப்படுபவன்وَهُوَஅவன்தான்الْحَكِيْمُமகா ஞானவான்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
வ ஹுவல் லதீ Fபிஸ்ஸமா'இ இலாஹு(ன்)வ் வ Fபில் அர்ளி இலாஹ்; வ ஹுவல் ஹகீமுல் 'அலீம்
முஹம்மது ஜான்
அன்றியும், அவனே வானத்தின் நாயனும் பூமியின் நாயனும் ஆவான்; மேலும், அவனே ஞானம் மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானத்திலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன்; பூமியிலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன். (ஈஸாவும் அல்ல, வேறு எவரும் அல்ல.) அவன்தான் மிக்க ஞானமுடையவன், நன்கறிந்தவன்.
IFT
அவன் ஒருவனே வானத்திலும் இறைவன்; பூமியிலும் இறைவன்! மேலும் அவனே நுண்ணறிவாளன்; யாவும் அறிந்தவன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்திலும் அவன் தான் (வணக்கத்திற்குரிய) நாயன், பூமியிலும் அவன் தான் (வணக்கத்திற்குரிய) நாயன், அவனோ தீர்க்கமான அறிவுடையவன், (யாவரையும்) நன்கறிந்தவன்.
Saheeh International
And it is He [i.e., Allah] who is [the only] deity in the heaven, and on the earth [the only] deity. And He is the Wise, the Knowing.
وَتَبٰرَكَ الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۚ وَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
وَتَبٰـرَكَமிக்க பாக்கியமுடையவன்الَّذِىْஎவன்لَهٗஅவனுக்கு உரியதோمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَا‌ ۚஇன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின்وَعِنْدَهٗஅவனிடமேعِلْمُஅறிவு இருக்கிறதுالسَّاعَةِ‌ ۚமறுமையின்وَاِلَيْهِஅவன் பக்கமேتُرْجَعُوْنَ‏நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
வ தBபாரகல் லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ 'இன்தஹூ 'இல்முஸ் ஸா'அதி வ இலய்ஹி துர்ஜ'ஊன்
முஹம்மது ஜான்
அவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி அவனுக்குடையதே, அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கிறது; மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி (ரஹ்மானாகிய) அவனுக்குரியதே. அவன் பெரும் பாக்கியம் உடையவன். அவனிடத்தில்தான் மறுமையின் ஞானம் இருக்கிறது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு போகப்படுவீர்கள்.
IFT
மேலும், வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்கும் இடையிலுள்ள அனைத்தினுடையவும் ஆட்சி எவனுடைய பிடியில் உள்ளதோ அவன் மிக உயர்ந்தவன். மேலும், மறுமை எப்போது வரும் எனும் ஞானம் அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானங்கள் மற்றும் பூமி, இன்னும் இவையிரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளின் ஆட்சி எவனுக்குரியதோ அத்தகையவன் பெரும் பாக்கியமுடையவன், அவனிடத்தில் தான் மறுமை நாள் பற்றிய அறிவும் இருக்கின்றது, மேலும் அவன் பக்கமே நீங்கள் திரும்பக்கொண்டு போகப்படுவீர்கள்.
Saheeh International
And blessed is He to whom belongs the dominion of the heavens and the earth and whatever is between them and with whom is knowledge of the Hour and to whom you will be returned.
وَلَا یَمْلِكُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
وَلَا يَمْلِكُஉரிமை பெற மாட்டார்(கள்)الَّذِيْنَஎவர்களைيَدْعُوْنَஅவர்கள் அழைக்கின்றார்கள்مِنْ دُوْنِهِஅவனையன்றிالشَّفَاعَةَசிபாரிசு செய்வதற்குاِلَّاஆனால்مَنْஎவர்கள்شَهِدَசாட்சிகூறினார்(களோ)بِالْحَـقِّஉண்மைக்குوَهُمْஅவர்கள்يَعْلَمُوْنَ‏நன்கு அறிந்தவர்களாக
வ லா யம்லிகுல் லதீன யத்'ஊன மின் தூனிஹிஷ் ஷFபா'அத இல்லா மன் ஷஹித Bபில்ஹக்கி வ ஹும் யஃலமூன்
முஹம்மது ஜான்
அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசுவர்).
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வையன்றி எவற்றை இவர்கள் (இறைவனென) அழைக்கிறார்களோ அவை (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்து பேசவும் சக்தி பெறாது. ஆயினும், எவர்கள் உண்மையை அறிந்து அதைப் பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்களுக்கு அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் அவர்கள் பரிந்து பேசுவார்கள்.)
IFT
அவனை விட்டுவிட்டு இவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ, அவர்கள் பரிந்துரைக்கும் எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை. ஆனால், எவர்கள் ஞானத்தின் அடிப்படையில் சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்களோ அவர்களைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அல்லாஹ்வாகிய) அவனையன்றி இவர்கள் (தெய்வங்களாக) அழைக்கின்றார்களே அத்தகையவர்கள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்துரை செய்ய அதிகாரம் உள்ளவர்கள் அல்லர், ஆயினும், அவர்கள் அறிந்தோராக இருக்க சத்தியத்தைக் கொண்டு சாட்சியம் கூறினார்களே, அவர்களைத் தவிர (வேறு எவரும் பரிந்துரை செய்பவர்களல்லர்).
Saheeh International
And those they invoke besides Him do not possess [power of] intercession; but only those who testify to the truth [can benefit], and they know.
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَیَقُوْلُنَّ اللّٰهُ فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟ۙ
وَلَٮِٕنْ سَاَلْـتَهُمْநீர் அவர்களிடம் கேட்டால்مَّنْயார்خَلَقَهُمْஅவர்களைப் படைத்தான்لَيَقُوْلُنَّநிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்اللّٰهُ‌அல்லாஹ்فَاَنّٰىஎப்படிيُؤْفَكُوْنَۙ‏திருப்பப்படுகின்றார்கள்
வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஹும் ல யகூலுன் னல்லாஹு Fப அன்னா யு'Fபகூன்
முஹம்மது ஜான்
மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களை படைத்தவன் யார் என்று நீர் அவர்களிடம் வினவினால் (ஈஸாவும் அல்ல, வேறு எவரும் அல்ல.) அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், (அவனைவிட்டு) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?
IFT
“இவர்களைப் படைத்தவன் யார்?” என்று நீர் இவர்களிடம் கேட்டால், “அல்லாஹ்” என்று இவர்களே கூறுவார்கள். பிறகு, எங்கிருந்து இவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) அவர்களைப் படைத்தவன் யார் என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அல்லாஹ் தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள், அவ்வாறாயின், (அவனை விட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்.
Saheeh International
And if you asked them who created them, they would surely say, "Allah." So how are they deluded?
وَقِیْلِهٖ یٰرَبِّ اِنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ لَّا یُؤْمِنُوْنَ ۟ۘ
وَقِيْلِهٖஇன்னும் அவருடைய கூற்றின்يٰرَبِّஎன் இறைவா!اِنَّநிச்சயமாகهٰٓؤُلَاۤءِஇவர்கள்قَوْمٌமக்கள்لَّا يُؤْمِنُوْنَ‌ۘ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
வ கீலிஹீ யா ரBப்Bபி இன்ன ஹா'உலா'இ கவ்முல் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
“என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்” என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் இறைவனே! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள்'' என்று (தூதராகி) அவர் கூறுவது நமக்குத் தெரியும்.
IFT
“என் அதிபதியே! இவர்கள் ஏற்றுக்கொள்ளாத மக்களாய் இருக்கின்றனர்” எனும் இறைத்தூதரின் இந்த வார்த்தையின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகனே! நிச்சயமாக இவர்கள் விசுவாசங் கொள்ளாத சமூகத்தாரேயாகும்” என்று அவர்(_நபி) கூறுவதையும் (அவன் அறிகிறான்.)
Saheeh International
And [Allah acknowledges] his saying, "O my Lord, indeed these are a people who do not believe."
فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ ؕ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟۠
فَاصْفَحْஆகவே, புறக்கணிப்பீராக!عَنْهُمْஅவர்களைوَقُلْஇன்னும் கூறிவிடுவீராக!سَلٰمٌ‌ؕஸலாம்فَسَوْفَ يَعْلَمُوْنَ‏அவர்கள் விரைவில் அறிவார்கள்
Fபஸ்Fபஹ் 'அன்ஹும் வ குல் ஸலாம்; Fபஸவ்Fப யஃலமூன்
முஹம்மது ஜான்
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (உங்களுக்கு) 'சாந்தி' என்று கூறிவிடும். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டு ‘ஸலாம்' என்று கூறி வருவீராக. பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.
IFT
சரி, (நபியே!) இவர்களுடைய செயல்களைப் பொறுத்துக்கொள்ளும். ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்’ என்று கூறும்! விரைவில் இவர்கள் அறிந்து கொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டு ஸலாமுன் (_சாந்தி) என்று கூறிவிடுவீராக! பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.
Saheeh International
So turn aside from them and say, "Peace." But they are going to know.