44. ஸூரத்துத் துகான் (புகை)

மக்கீ, வசனங்கள்: 59

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
حٰمٓ ۟ۚۛ
حٰمٓ ۛ‌ۚ‏ஹா மீம்
ஹா மீம்
முஹம்மது ஜான்
ஹா, மீம்.
அப்துல் ஹமீது பாகவி
ஹா மீம்.
IFT
ஹாமீம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஹாமீம்.
Saheeh International
ha, Meem.
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
وَالْكِتٰبِஇந்த வேதத்தின் மீது சத்தியமாக!الْمُبِيْنِ  ۛ‌ۙ‏தெளிவான(து)
வல் கிதாBபில் முBபீன்
முஹம்மது ஜான்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
IFT
தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
Saheeh International
By the clear Book,
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِیْنَ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்فِىْ لَيْلَةٍஓர் இரவில்مُّبٰـرَكَةٍ‌அருள்நிறைந்த(து)اِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருந்தோம்مُنْذِرِيْنَ‏அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக
இன்னா அன்Zஜல்னாஹு Fபீ லய்லதிம் முBபாரகஹ்; இன்னா குன்னா முன்திரீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்.
IFT
நாம் இதனை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில், நாம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம், இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாம் (இவ்வேதத்தின் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியோராய் இருந்து கொண்டிருக்கிறோம்.
Saheeh International
Indeed, We sent it down during a blessed night. Indeed, We were to warn [mankind].
فِیْهَا یُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِیْمٍ ۟ۙ
فِيْهَاஇதில்தான்يُفْرَقُமுடிவு செய்யப்படுகின்றனكُلُّ اَمْرٍஎல்லாக்காரியங்களும்حَكِيْمٍۙ‏ஞானமிக்க(து)
Fபீஹா யுFப்ரகு குல்லு அம்ரின் ஹகீம்
முஹம்மது ஜான்
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
அப்துல் ஹமீது பாகவி
உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம் கட்டளையின்படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
IFT
அது எத்தகைய இரவு எனில், அதில்தான் ஒவ்வொரு விவகாரத்துக்கும் விவேக மிக்க தீர்ப்பு நம்முடைய கட்டளையினால் பிறப்பிக்கப்படுகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்த இரவில் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் (பிரித்துத்) தெளிவு செய்யப்படுகிறது.
Saheeh International
Therein [i.e., on that night] is made distinct every precise matter -
اَمْرًا مِّنْ عِنْدِنَا ؕ اِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟ۚ
اَمْرًاகட்டளையின்படிمِّنْ عِنْدِنَا‌ؕநம்மிடமிருந்துاِنَّاநிச்சயமாக நாம்كُنَّاஇருந்தோம்مُرْسِلِيْنَ‌ۚ‏தூதராக அனுப்பக்கூடியவர்களாகவே
அம்ரம் மின் 'இன்தினா; இன்னா குன்னா முர்ஸிலீன்
முஹம்மது ஜான்
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம் தூதராக) அனுப்புகிறோம்.
IFT
நாம் ஒரு தூதரை அனுப்புகிறவர்களாய் இருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்மிடமிருந்துள்ள கட்டளையாக (அது நடந்தேறும்) நிச்சயமாக நாம் (தூதர்களை) அனுப்புகிறவர்களாக இருந்தோம்.
Saheeh International
[Every] matter [proceeding] from Us. Indeed, We were to send [a messenger]
رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ۙ
رَحْمَةًஓர் அருளாகمِّنْ رَّبِّكَ‌ؕஉமது இறைவனிடமிருந்துاِنَّهٗநிச்சயமாகهُوَஅவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُۙ‏நன்கறிந்தவன்
ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
முஹம்மது ஜான்
(அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அது) உமது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனும் ஆவான்.
IFT
உம் இறைவனுடைய கருணையின் அடிப்படையில்! திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்கக்கூடியவனாகவும், அறியக்கூடியவனாகவும் இருக்கின்றான்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உமதிரட்சகனிடமிருந்துள்ள அருளாக (இதை இறக்கினோம்) நிச்சயமாக அவனே (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
Saheeh International
As mercy from your Lord. Indeed, He is the Hearing, the Knowing,
رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
رَبِّஇறைவனாவான்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَا‌ۘஇன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால்
ரBப்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; இன் குன்தும் மூகினீன்
முஹம்மது ஜான்
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (உண்மையை) உறுதி கொள்பவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்).
IFT
நீங்கள் உண்மையில் உறுதியான நம்பிக்கையுடையவர்களாய் இருந்தால்! அவன் வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகவும் அவ்விரண்டிற்கிடையே உள்ள அனைத்திற்கும் அதிபதியாகவும் இருக்கின்றான் (என்பதைக் காண்பீர்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வேதத்தை இறக்கிவைத்தவனாகிய அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளுக்கும் இரட்சகன் (என்பதை) நீங்கள் உறுதியுடையவர்களாக இருப்பின் (அறிவீர்கள்).
Saheeh International
Lord of the heavens and the earth and that between them, if you would be certain.
لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ؕ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைيُحْىٖஉயிர்ப்பிக்கின்றான்وَيُمِيْتُ‌ؕஇன்னும் மரணிக்க வைக்கிறான்رَبُّكُمْஉங்கள் இறைவனும்وَرَبُّஇறைவனும்اٰبَآٮِٕكُمُஉங்கள் மூதாதைகளின்الْاَوَّلِيْنَ‏முன்னோர்களான
லா இலாஹ இல்லா ஹுவ யுஹ்யீ வ யுமீது ரBப்Bபுகும் வ ரBப்Bபு ஆBபா'இகுமுல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்.
IFT
அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. வாழ்வளிப்பவன் அவனே; மரணத்தை அளிப்பவனும் அவனே! அவனே உங்களுக்கும் அதிபதி; முன்னர் வாழ்ந்து சென்ற உங்கள் முன்னோர்களுக்கும் அதிபதி.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே இறக்குமாறும் செய்கிறான், (அவனே) உங்களின் இரட்சகனும், முன்னோர்களான உங்கள் மூதாதையரின் இரட்சகனுமாவான்.
Saheeh International
There is no deity except Him; He gives life and causes death. [He is] your Lord and the Lord of your first forefathers.
بَلْ هُمْ فِیْ شَكٍّ یَّلْعَبُوْنَ ۟
بَلْமாறாகهُمْஅவர்கள்فِىْ شَكٍّசந்தேகத்தில்يَّلْعَبُوْنَ‏விளையாடுகின்றனர்
Bபல் ஹும் Fபீ ஷக்கி(ன்)ய் யல்'அBபூன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்!
IFT
(ஆனால், உண்மையில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை.) ஏனெனில், இவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனினும், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
Saheeh International
But they are in doubt, amusing themselves.
فَارْتَقِبْ یَوْمَ تَاْتِی السَّمَآءُ بِدُخَانٍ مُّبِیْنٍ ۟ۙ
فَارْتَقِبْஆகவே, எதிர்ப்பார்ப்பீராக!يَوْمَநாளைتَاْتِىவருகின்ற(து)السَّمَآءُவானம்بِدُخَانٍபுகையைக் கொண்டுمُّبِيْنٍۙ‏தெளிவான(து)
Fபர்தகிBப் யவ்ம த'திஸ் ஸமா'உ Bபி துகானின் முBபீன்
முஹம்மது ஜான்
ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக.
IFT
சரி, இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) வானம் தெளிவானதொரு புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பார்ப்பீராக!
Saheeh International
Then watch for the Day when the sky will bring a visible smoke
یَّغْشَی النَّاسَ ؕ هٰذَا عَذَابٌ اَلِیْمٌ ۟
يَغْشَىஅது சூழ்ந்துகொள்ளும்النَّاسَ‌ؕமக்களைهٰذَاஇதுعَذَابٌவேதனையாகும்اَلِيْمٌ‏வலி தரக்கூடிய(து)
யக்ஷன் னாஸ ஹாதா 'அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; “இது நோவினை செய்யும் வேதனையாகும்.”
அப்துல் ஹமீது பாகவி
மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்து கொள்ளும். அது ஒரு துன்புறுத்தும் வேதனையாகும்.
IFT
அது மக்கள் மீது மூடிக்கொள்ளும். இது துன்புறுத்தக்கூடிய தண்டனையாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதர்களை அ(ப்புகையான)து சூழ்ந்து கொள்ளும், “இது துன்புறுத்தும் வேதனையாகும்”.
Saheeh International
Covering the people; this is a painful torment.
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ ۟
رَبَّنَاஎங்கள் இறைவா!اكْشِفْஅகற்றி விடுவாயாகعَنَّاஎங்களை விட்டுالْعَذَابَவேதனையைاِنَّاநிச்சயமாக நாங்கள்مُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
ரBப்Bபனக் ஷிFப் 'அன்னல் 'அதாBப இன்னா மு'மினூன்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்” (எனக் கூறுவர்).
அப்துல் ஹமீது பாகவி
(அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம்'' (என்று கூறுவார்கள்).
IFT
(அப்போது கூறுவார்கள்:) “எங்கள் அதிபதியே! எங்களை விட்டு இந்த வேதனையை நீக்கி அருள். நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்கள் இரட்சகனே! நீ எங்களைவிட்டும் இவ்வேதனையை நீக்கி விடுவாயாக, நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசங்கொண்டவர்களாக இருக்கின்றோம்” (என்று அந்நாளில் மனிதர்கள், அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்).
Saheeh International
[They will say], "Our Lord, remove from us the torment; indeed, we are believers."
اَنّٰی لَهُمُ الذِّكْرٰی وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِیْنٌ ۟ۙ
اَنّٰىஎப்படி?لَهُمُஅவர்களுக்குالذِّكْرٰىநல்லறிவு பெறுவதுوَقَدْதிட்டமாகجَآءَவந்தார்هُمْஅவர்களிடம்رَسُوْلٌஒரு தூதர்مُّبِيْنٌۙ‏தெளிவான(வர்)
அன்னா லஹுமுத் திக்ரா வ கத் ஜா'அஹும் ரஸூலும் முBபீன்
முஹம்மது ஜான்
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கிறார்.
IFT
இவர்களின் உணர்வில்லாத நிலை எங்கே மாறப்போகிறது? வெளிப்படையான இறைத்தூதர் இவர்களிடம் வந்தும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நேரத்தில்) அவர்களுக்கு நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்? நிச்சயமாக (சத்தியத்தை) விளக்குபவரான (நம்முடைய) தூதர் (இதற்குமுன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார்.
Saheeh International
How will there be for them a reminder [at that time]? And there had come to them a clear Messenger.
ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ ۟ۘ
ثُمَّபிறகுتَوَلَّوْاஅவர்கள் விலகிவிட்டனர்عَنْهُஅவரை விட்டுوَقَالُوْاஇன்னும் , கூறினர்مُعَلَّمٌகற்பிக்கப்பட்டவர்مَّجْنُوْنٌ‌ۘ‏பைத்தியக்காரர்
தும்மா தவல்லவ் 'அன்ஹு வ காலூ மு'அல்லமும் மஜ்னூன்
முஹம்மது ஜான்
அவர்கள் அவரை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) “கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” எனக் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து, (அவரைப்பற்றி ‘‘இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்'' என்று கூறினர்.
IFT
இவர்கள் அவர் பக்கம் கவனம் செலுத்தவில்லை என்பதுதானே இவர்களின் நிலை! “இவர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பைத்தியக்காரர்!” என்று சொன்னார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் அவர்கள் அவரைப் புறக்கணித்தனர், (அவரைப் பற்றி, “இவர் பிறரால்) கற்றுக்கொடுக்கப்பட்டவர், பைத்தியக்காரர்” என்றும் கூறினர்.
Saheeh International
Then they turned away from him and said, "[He was] taught [and is] a madman."
اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِیْلًا اِنَّكُمْ عَآىِٕدُوْنَ ۟ۘ
اِنَّاநிச்சயமாக நாம்كَاشِفُواநீக்குவோம்الْعَذَابِஇந்த வேதனையைقَلِيْلًاகொஞ்சம்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்عَآٮِٕدُوْنَ‌ۘ‏திரும்புவீர்கள்
இன்னா காஷிFபுல் 'அதாBபி கலீலா; இன்னகும் 'ஆ'இதூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
அப்துல் ஹமீது பாகவி
(மெய்யாகவே நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்கள் என்று) அவ்வேதனையை மேலும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகிறீர்கள்.
IFT
நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். அப்போது நீங்கள் முன்னர் செய்து கொண்டிருந்ததைத்தான் மீண்டும் செய்வீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவ்வேதனயை(ப் பின்னும்) சிறிது (காலத்திற்கு) நாம் நீக்குவோராய் இருக்கிறோம், (எனினும்) நிச்சயமாக நீங்கள், (நிராகரிப்பின்பாலே) மீளக்கூடியவர்களாக இருக்கிறீர்கள்.
Saheeh International
Indeed, We will remove the torment for a little. Indeed, you [disbelievers] will return [to disbelief].
یَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰی ۚ اِنَّا مُنْتَقِمُوْنَ ۟
يَوْمَநாளில்نَبْطِشُதாக்குவோம்الْبَطْشَةَதாக்குதல்الْكُبْـرٰى‌ۚபெரியاِنَّاநிச்சயமாக நாம்مُنْتَقِمُوْنَ‏பழிவாங்குவோம்
யவ்ம னBப்திஷுல் Bபத்ஷ தல் குBப்ரா இன்னா முன்தகிமூன்
முஹம்மது ஜான்
ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
மிக்க பலமாக (அவர்களை) நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம்.
IFT
நாம் பலத்த அடி கொடுக்கும் நாளில் நாம் உங்களிடம் பழி வாங்கியே தீருவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மிகப் பெரும்பிடியாக அவர்களை நாம் பிடிக்கும் (அந்) நாளில் நிச்சயமாக (அவர்களைத்) தண்டிப்போராய் இருக்கிறோம்.
Saheeh International
The Day We will strike with the greatest assault, indeed, We will take retribution.
وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُوْلٌ كَرِیْمٌ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகفَتَنَّاசோதித்தோம்قَبْلَهُمْஇவர்களுக்கு முன்னர்قَوْمَமக்களைفِرْعَوْنَஃபிர்அவ்னுடையوَ جَآءَهُمْஅவர்களிடம் வந்தார்رَسُوْلٌஒரு தூதர்كَرِيْمٌۙ‏கண்ணியமான(வர்)
வ லகத் Fபதன்னா கBப்லஹும் கவ்ம Fபிர்'அவ்ன வ ஜா'அஹும் ரஸூலுன் கரீம்
முஹம்மது ஜான்
அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்) தூதர் ஒருவர் வந்தார்.
IFT
திண்ணமாக, நாம் இவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமூகத்தை சோதித்திருக்கிறோம். அவர்களிடம் கண்ணியமான ஓர் இறைத்தூதர் வந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இவர்களுக்கு முன்னர் ஃபிர் அவ்னுடைய சமூகத்தவரை திட்டமாக நாம் சோதித்தோம் அவர்களிடம் கண்ணியமான (நம்முடைய) தூதரும் வந்தார்.
Saheeh International
And We had already tried before them the people of Pharaoh, and there came to them a noble messenger [i.e., Moses],
اَنْ اَدُّوْۤا اِلَیَّ عِبَادَ اللّٰهِ ؕ اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
اَنْ اَدُّوْۤاஒப்படைத்துவிடுங்கள்!اِلَىَّஎன்னிடம்عِبَادَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின் அடியார்களைاِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குرَسُوْلٌதூதர்اَمِيْنٌۙ‏நம்பிக்கைக்குரிய(வர்)
அன் அத்தூ இலய்ய 'இBபாதல் லாஹி இன்னீ லகும் ரஸூலுன் அமீன்
முஹம்மது ஜான்
அவர் (கூறினார்:) “என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான தூதர் ஆவேன்.
IFT
மேலும், அவர் கூறினார்: “அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் உங்களுக்காக அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய இறைத்தூதராவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்) “அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் மக்)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு (அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள) நம்பிக்கைக்குரிய ஒரு தூதனாவேன் (என்றும்),
Saheeh International
[Saying], "Render to me the servants of Allah. Indeed, I am to you a trustworthy messenger,"
وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَی اللّٰهِ ؕ اِنِّیْۤ اٰتِیْكُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۚ
وَّاَنْ لَّا تَعْلُوْاஅழிச்சாட்டியம் செய்யாதீர்கள்عَلَى اللّٰهِ‌ۚஅல்லாஹ்விற்கு முன்اِنِّىْۤநிச்சயமாக நான்اٰتِيْكُمْஉங்களிடம் வருவேன்بِسُلْطٰنٍஆதாரத்தைக் கொண்டுمُّبِيْنٍ‌ۚ‏தெளிவான(து)
வ அல் லா தஃலூ 'அலல் லாஹி இன்னீ ஆதீகும் Bபிஸுல்தானிம் முBபீன்
முஹம்மது ஜான்
அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்கு (முன் ஆணவம் கொள்ளாதீர்கள், அவனுக்கு) நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார். (அதற்கவர்கள் ‘‘நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்'' என்று கூறினார்கள்.)
IFT
மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். நான் உங்களிடம் (என்னுடைய நியமனம் பற்றிய) தெளிவான ஒரு சான்றினைக் கொண்டு வந்திருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வின் (கட்டளைகளுக்குக் கீழ்ப் படிவதை விட்டுவிடுவதன் மூலம் அவன்) மீது உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளாதீர்கள், நிச்சயமாக நான், உங்களிடம் தெளிவான ஒரு சான்றைக் கொண்டுவந்திருக்கிறேன்” (என்றும் கூறினார்.)
Saheeh International
And [saying], "Be not haughty with Allah. Indeed, I have come to you with clear evidence.
وَاِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۟ؗ
وَاِنِّىْநிச்சயமாக நான்عُذْتُபாதுகாவல் தேடினேன்بِرَبِّىْஎனது இறைவனிடம்وَرَبِّكُمْஇன்னும் உங்கள் இறைவனிடம்اَنْ تَرْجُمُوْنِ ۚநீங்கள் என்னை கொல்வதில் இருந்து
வ இன்னீ 'உத்து Bபி ரBப்Bபீ வ ரBப்Bபிகும் அன் தர்ஜுமூன்
முஹம்மது ஜான்
அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு மூஸா) ‘‘என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்வதை விட்டும் எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றார்.
IFT
நீங்கள் என்மீது தாக்குதல் தொடுப்பதைவிட்டு என்னுடையவும் உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னை நீங்கள் கல்லாலெறிந்து (கொன்று) விடுவதைவிட்டும் என் இரட்சகனும், உங்கள் இரட்சகனுமாகியவனிடம் நிச்சயமாக, நான் பாதுகாவல் தேடிக்கொண்டுவிட்டேன்” (என்றும்),
Saheeh International
And indeed, I have sought refuge in my Lord and your Lord, lest you stone me.
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِیْ فَاعْتَزِلُوْنِ ۟
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْநீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்فَاعْتَزِلُوْنِ‏என்னை விட்டு விலகிவிடுங்கள்
வ இல் லம் து'மினூ லீ FபஃதZஜிலூன்
முஹம்மது ஜான்
“மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்'' (என்றும் கூறி),
IFT
நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் என் மீது கைவைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நீங்கள் என்னை (அல்லாஹ்வின்) நபியென) நம்பிக்கைக் கொள்ளவில்லையாயின், என்னை விட்டு நீங்கிவிடுங்கள் (என்றும் கூறினார்.)
Saheeh International
But if you do not believe me, then leave me alone."
فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ ۟
فَدَعَاஅவர் அழைத்தார்رَبَّهٗۤதனது இறைவனைاَنَّநிச்சயமாகهٰۤؤُلَاۤءِஇவர்கள்قَوْمٌமக்கள்مُّجْرِمُوْنَ‏‏குற்றம் செய்கின்றவர்கள்
Fபத'ஆ ரBப்Bபஹூ அன்ன ஹா'உலா'இ கவ்மும் முஜ்ரிமூன்
முஹம்மது ஜான்
(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). “நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
தன் இறைவனை அழைத்து ‘‘நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கிறார்கள்'' என்று கூறினார்.
IFT
இறுதியில், “இவர்கள் குற்றம் புரியக்கூடிய மக்களாய் இருக்கின்றனர்” என்று அவர் தம் இறைவனிடம் முறையிட்டார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தவராகவே இருக்கிறார்கள் என தன் இரட்சகனை அவர் அழைத்துப் பிரார்த்தித்தார்.
Saheeh International
And [finally] he called to his Lord that these were a criminal people.
فَاَسْرِ بِعِبَادِیْ لَیْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟ۙ
فَاَسْرِநீங்கள் அழைத்துச் செல்லுங்கள்بِعِبَادِىْஎன் அடியார்களைلَيْلًاஇரவில்اِنَّكُمْநிச்சயமாக நீங்கள்مُّتَّبَعُوْنَۙ‏பின்தொடரப்படுவீர்கள்
Fப அஸ்ரி Bபி'இBபாதீ லய்லன் இன்னகும் முத்தBப'ஊன்
முஹம்மது ஜான்
“என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” (என்று இறைவன் கூறினான்.)
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன்) ‘‘நீர் (இஸ்ரவேலர்களாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்.
IFT
(பதிலளிக்கப்பட்டது:) “என் அடியார்களை இரவோடிரவாக அழைத்துச் சென்றுவிடும்! திண்ணமாக, நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அல்லாஹ்,) “நீர் (இஸ்ராயீலீன் மக்களாகிய) என்னுடைய அடியார்களை (அழைத்து)க்கொண்டு இரவில் செல்வீராக, நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்_
Saheeh International
[Allah said], "Then set out with My servants by night. Indeed, you are to be pursued.
وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ ۟
وَاتْرُكِவிட்டுவிடுங்கள்!الْبَحْرَகடலைرَهْوًا‌ؕஅமைதியாகاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்جُنْدٌராணுவம்مُّغْرَقُوْنَ‏மூழ்கடிக்கப்படுகின்ற
வத்ருகில் Bபஹ்ர ரஹ்வன் இன்னஹும் ஜுன்தும் முக்ரகூன்
முஹம்மது ஜான்
“அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
அப்துல் ஹமீது பாகவி
(நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும்'' (என்று கூறி, அவ்வாறே மூழ்கடித்தான்.)
IFT
கடலினை அதன் பிளந்த நிலையிலேயே விட்டுவிடும். திண்ணமாக, இந்தப் படையினர் அனைவரும் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்களாவர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும், (பிளந்த) அக்கடலை பிளவுபட்டதாக விட்டு (நீங்கள் அதை கடந்து) விடுங்கள், நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராக இருக்கிறார்கள் (என்று கூறி, அவ்விதமே மூழ்கடித்தான்).
Saheeh International
And leave the sea in stillness. Indeed, they are an army to be drowned."
كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
كَمْஎத்தனையோتَرَكُوْاவிட்டுச் சென்றார்கள்مِنْ جَنّٰتٍதோட்டங்களையும்وَّعُيُوْنٍۙ‏ஊற்றுகளையும்
கம் தரகூ மின் ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
முஹம்மது ஜான்
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும் விட்டுச் சென்றனர்.
IFT
எத்தனையோ தோட்டங்களையும், நீரூற்றுகளையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எத்தனை(யோ) தோட்டங்களையும், நீரூற்றுகளையும், அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர்.
Saheeh International
How much they left behind of gardens and springs
وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
وَّزُرُوْعٍவிவசாய நிலங்களையும்وَّمَقَامٍஇடங்களையும்كَرِيْمٍۙ‏கண்ணியமான
வ Zஜுரூ'இ(ன்)வ் வ மகா மின் கரீம்
முஹம்மது ஜான்
இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
இன்னும் எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).
IFT
வயல்களையும், மிகச்சிறப்பான இல்லங்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (எத்தனையோ) விவசாய (நில)ங்களையும், (அழகுமிகுந்த) மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).
Saheeh International
And crops and noble sites
وَّنَعْمَةٍ كَانُوْا فِیْهَا فٰكِهِیْنَ ۟ۙ
وَّنَعْمَةٍவசதிகளையும்كَانُوْاஇருந்த(னர்)فِيْهَاஅவற்றில்فٰكِهِيْنَۙ‏இன்புற்றவர்களாக
வ னஃமதின் கானூ Fபீஹா Fபாகிஹீன்
முஹம்மது ஜான்
இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்).
IFT
அவர்கள் பயன்படுத்தி மகிழ்ந்த எத்தனையோ வாழ்க்கைச் சாதனங்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் எதில் இன்பம் அனுபவித்துக்கொண்டிருந்தனரோ அத்தகைய (எத்தனையோ) சுகானுபவப் பொருளையும் (விட்டுச் சென்றனர்).
Saheeh International
And comfort wherein they were amused.
كَذٰلِكَ ۫ وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
كَذٰلِكَ‌இப்படித்தான்وَاَوْرَثْنٰهَاஇவற்றை சொந்தமாக்கினோம்قَوْمًاமக்களுக்குاٰخَرِيْنَ‏வேறு
கதாலிக வ அவ்ரத்னாஹா கவ்மன் ஆகரீன்
முஹம்மது ஜான்
அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே (நடைபெற்றது). அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம்.
IFT
இதுவே அவர்கள் அடைந்த கதி. மேலும், இந்தப் பொருள்களுக்கு வேறு மக்களை நாம் வாரிசுகளாக்கினோம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே_(நடந்தேறியது), அவற்றிக்கு வேறு சமூகத்தாரையும் அனந்தரக்காரர்களாக்கினோம்.
Saheeh International
Thus. And We caused to inherit it another people.
فَمَا بَكَتْ عَلَیْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِیْنَ ۟۠
فَمَا بَكَتْஅழவில்லைعَلَيْهِمُஅவர்கள் மீதுالسَّمَآءُவானமும்وَالْاَرْضُபூமியும்وَمَا كَانُوْاஅவர்கள் இருக்கவில்லைمُنْظَرِيْنَ‏தவணைத் தரப்படுபவர்களாக(வும்)
Fபமா Bபகத் 'அலய்ஹிமுஸ் ஸமா'உ வல் அர்ளு வமா கானூ முன்ளரீன்
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை; (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.  
அப்துல் ஹமீது பாகவி
(அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட வில்லை.
IFT
பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை, பூமியும் அழவில்லை. இன்னும் சிறிதளவு அவகாசம் கூட அவர்களுக்குத் தரப்படவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அழிந்துபோன) அவர்களுக்காக வானமும், பூமியும் (துக்கித்து) அழவில்லை, (தப்பிச் செல்ல) அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.
Saheeh International
And the heaven and earth wept not for them, nor were they reprieved.
وَلَقَدْ نَجَّیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنَ الْعَذَابِ الْمُهِیْنِ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகنَجَّيْنَاநாம் காப்பாற்றினோம்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களைمِنَ الْعَذَابِவேதனையிலிருந்துالْمُهِيْنِۙ‏இழிவுபடுத்தும்
வ லகத் னஜ்ஜய்னா Bபனீ இஸ்ரா'ஈல மினல்'அதாBபில் முஹீன்
முஹம்மது ஜான்
நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) இழிவு தரும் வேதனையில் இருந்து இஸ்ராயீலின் சந்ததிகளை பாதுகாத்துக் கொண்டோம்.
IFT
இவ்வாறு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நாம் கடும் இழிவுபடுத்தும் வேதனையிலிருந்து அதாவது ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (ஃபிர் அவ்ன் இழைத்த) இழிவுதரும் வேதனையிலிருந்து இஸ்ராயீலின் மக்களை நாம் திட்டமாகக் காப்பாற்றினோம்.
Saheeh International
And We certainly saved the Children of Israel from the humiliating torment -
مِنْ فِرْعَوْنَ ؕ اِنَّهٗ كَانَ عَالِیًا مِّنَ الْمُسْرِفِیْنَ ۟
مِنْ فِرْعَوْنَ‌ؕஃபிர்அவ்னிடமிருந்துاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்عَالِيًاஅழிச்சாட்டியம் செய்பவனாக(வும்)مِّنَ الْمُسْرِفِيْنَ‏வரம்புமீறிகளில்
மின் Fபிர்'அவ்ன்; இன்னஹூ கான 'ஆலியம் மினல் முஸ்ரிFபீன்
முஹம்மது ஜான்
ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்); நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.
அப்துல் ஹமீது பாகவி
ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் வரம்பு மீறிகளில் ஓர் ஆணவம் கொண்டவனாக இருந்தான்.
IFT
உண்மையில், அவன் வரம்பு மீறுவோரில் அனைவரையும்விட மிகக் கொடியவனாக இருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஃபிர் அவ்னைவிட்டும் (காப்பாற்றிவிட்டோம்), நிச்சயமாக, அவன் (அடக்கி ஆளுதல், ஆணவம் கொள்ளுதல் ஆகியவற்றில்) உயர்ந்தவனாக (நிராகரிப்பில்) வரம்பு மீறியவர்களில் (உள்ளவனாக) இருந்தான்.
Saheeh International
From Pharaoh. Indeed, he was a haughty one among the transgressors.
وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰی عِلْمٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ
وَلَقَدِ اخْتَرْنٰهُمْதிட்டவட்டமாக அவர்களை நாம் தேர்ந்தெடுத்தோம்عَلٰى عِلْمٍஅறிந்தேعَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏அகிலத்தாரை விட
வ லகதிக் தர்னாஹும் 'அலா 'இல்மின் 'அலல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு ஃபிர்அவ்னை மூழ்கடித்த பின்னர்) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் தன்மையை அறிந்தே உலகத்தார் அனைவரிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
IFT
மேலும், அவர்களின் நிலைமையை அறிந்தே உலகின் பிற சமுதாயங்களைவிட அவர்களுக்கு முன்னுரிமை அளித்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இஸ்ராயீலின் மக்களாகிய) அவர்களை நன்கு அறிந்தே அகிலத்தாரை விடவும் அவர்களை நாம் திட்டமாகத் தெரிவு செய்தோம்.
Saheeh International
And We certainly chose them by knowledge over [all] the worlds.
وَاٰتَیْنٰهُمْ مِّنَ الْاٰیٰتِ مَا فِیْهِ بَلٰٓؤٌا مُّبِیْنٌ ۟
وَاٰتَيْنٰهُمْஅவர்களுக்கு நாம் கொடுத்தோம்مِّنَ الْاٰيٰتِஅத்தாட்சிகளில்مَاஎதுفِيْهِஅதில்بَلٰٓؤٌاசோதனைمُّبِيْنٌ‏தெளிவான(து)
வ ஆதய்னாஹும் மினல் ஆயாதி மா Fபீஹி Bபலா'உம் முBபீன்
முஹம்மது ஜான்
அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், அவர்களுக்கு (மன்னு ஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவற்றில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது.
IFT
மேலும், அவர்களுக்கு எத்தகைய அத்தாட்சிகளை காண்பித்தோம் எனில் அவற்றில் வெளிப்படையான சோதனை இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எதில் தெளிவான சோதனை இருந்ததோ அத்தகைய அத்தாட்சிகளை (மன்னு, ஸல்வா என்னும் உணவை இறக்கிவைத்தது, கடலை பிளக்கவைத்தது போன்றவற்றை) அவர்களுக்கு நாம் கொடுத்தோம்.
Saheeh International
And We gave them of signs that in which there was a clear trial.
اِنَّ هٰۤؤُلَآءِ لَیَقُوْلُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகهٰٓؤُلَاۤءِஇவர்கள்لَيَقُوْلُوْنَۙ‏கூறுகின்றனர்
இன்ன ஹா'உலா'இ ல யகூலூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்:
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்,) நிச்சயமாக (நிராகரிப்பாளர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:
IFT
இந்த மக்கள் கூறுகின்றார்கள்:
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (காஃபிர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்.
Saheeh International
Indeed, these [disbelievers] are saying,
اِنْ هِیَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُنْشَرِیْنَ ۟
اِنْ هِىَஇது இல்லைاِلَّا مَوْتَتُنَاநமது மரணமே தவிரالْاُوْلٰىமுதல்وَمَا نَحْنُஇன்னும் நாங்கள் இல்லைبِمُنْشَرِيْنَ‏எழுப்பப்படுபவர்களாக
இன் ஹிய இல்லா மவ்ததுனல் ஊலா வமா னஹ்னு Bபிமுன் ஷரீன்
முஹம்மது ஜான்
“எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை; நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்.”
அப்துல் ஹமீது பாகவி
‘‘இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) நாம் உயிர் கொடுத்து எழுப்பப்பட மாட்டோம்''
IFT
“எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அதன் பிறகு நாங்கள் மீண்டும் எழுப்பப்பட மாட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அது (இவ்வுலகில்) எங்களுக்கு ஏற்படும் முதல் மரணத்தைத் தவிர வேறில்லை, இன்னும், (மரணித்த பின்னர்) நாங்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்களுமல்லர்.”
Saheeh International
"There is not but our first death, and we will not be resurrected.
فَاْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤஎங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்!اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
Fப'தூ Bபி ஆBபா'இனா இன்குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்'' (என்றனர்).
IFT
நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், எங்களுடைய முன்னோரை எழுப்பிக் கொண்டு வாருங்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(என்று கூறுவதுடன் விசுவாசிகளிடம்) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இறந்துபோன) எங்கள் மூதாதையரைக் கொண்டுவாருங்கள்” (என்றனர்).
Saheeh International
Then bring [back] our forefathers, if you should be truthful."
اَهُمْ خَیْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍ ۙ وَّالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ اَهْلَكْنٰهُمْ ؗ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟
اَهُمْ خَيْرٌஇவர்கள் சிறந்தவர்களாاَمْ قَوْمُமக்களா?تُبَّعٍۙதுப்பஃ உடையوَّ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕஇன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா?اَهْلَكْنٰهُمْ‌அவர்களை நாம் அழித்துவிட்டோம்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தனர்مُجْرِمِيْنَ‏குற்றவாளிகளாக
அஹும் கய்ருன் அம் கவ்மு துBப்Bப'இ(ன்)வ் வல்லதீன மின் கBப்லிஹிம்; அஹ்லக்னாஹும் இன்னஹும் கானூ முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது ‘துப்பஉ' என்னும் மக்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் மேலானவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தனர்.
IFT
இவர்கள் சிறந்தவர்களா? ‘துப்பஃஉ’ சமூகத்தாரும் அவர்களுக்கு முந்தியவர்களும் சிறந்தவர்களா? நாம் அவர்களை அழித்தோம். அவர்கள் குற்றம் புரிவோராய் இருந்த காரணத்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்கள் மிகச் சிறந்தவர்களா? அல்லது “துப்பஃஉ“ சமூகத்தாரும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? அவர்களை(யும்) நாம் அழித்துவிட்டோம், (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்.
Saheeh International
Are they better or the people of Tubbaʿ and those before them? We destroyed them, [for] indeed, they were criminals.
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
وَمَا خَلَقْنَاநாம் படைக்கவில்லைالسَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்وَمَا بَيْنَهُمَاஅவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும்لٰعِبِيْنَ‏விளையாட்டாக
வமா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்ன ஹுமா லா'இBபீன்
முஹம்மது ஜான்
மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
IFT
இந்த வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் விளையாடுவோராய் நாம் படைக்கவில்லை.
Saheeh International
And We did not create the heavens and earth and that between them in play.
مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
مَا خَلَقْنٰهُمَاۤஅவ்விரண்டையும் நாம் படைக்கவில்லைاِلَّا بِالْحَقِّஉண்மையான காரணத்திற்கே தவிரوَلٰكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
மா கலக்னாஹுமா இல்லா Bபில்ஹக்கி வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
முஹம்மது ஜான்
இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே தவிர, இவற்றை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்துகொள்வதில்லை.
IFT
அவற்றைச் சத்தியத்துடன் படைத்திருக்கின்றோம். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நிச்சயமாக) அவ்விரண்டையும் உண்மையைக்கொண்டே தவிர_நாம் படைக்கவில்லை, எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள்.
Saheeh International
We did not create them except in truth, but most of them do not know.
اِنَّ یَوْمَ الْفَصْلِ مِیْقَاتُهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
اِنَّ يَوْمَ الْفَصْلِநிச்சயமாக தீர்ப்பு நாள்مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَۙ‏இவர்கள் அனைவரின் நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்
இன்ன யவ்மல் Fபஸ்லி மீகாதுஹும் அஜ்ம'ஈன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
IFT
இவர்கள் அனைவரையும் எழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் காலம் தீர்ப்பளிக்கும் நாளாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள் அவர்கள் அனைவருக்கும் (குறிப்பிடப்பட்ட) தவணையாகும்.
Saheeh International
Indeed, the Day of Judgement is the appointed time for them all -
یَوْمَ لَا یُغْنِیْ مَوْلًی عَنْ مَّوْلًی شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ۙ
يَوْمَஅந்நாளில்لَا يُغْنِىْதடுக்க மாட்டான்مَوْلًىநண்பன்عَنْ مَّوْلًىநண்பனை விட்டுشَيْــٴًــاஎதையும்وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ‏இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
யவ்ம லா யுக்னீ மவ்லன் 'அம் மவ்லன் ஷய்'அ(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
முஹம்மது ஜான்
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது.
IFT
அந்நாளில் எந்த நண்பரும் தன்னுடைய நெருங்கிய எந்த நண்பருக்கும் எந்தப் பயனையும் அளிக்கமாட்டார். மேலும், அவர்களுக்கு எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைக்காது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய (உதவியும் புரிந்து) பயனும் அளிக்கமாட்டான், அன்றியும், அவர்கள் (மற்றவர்களிடமிருந்து) உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
Saheeh International
The Day when no relation will avail a relation at all, nor will they be helped -
اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
اِلَّاதவிரمَنْஎவர்கள் (மீது)رَّحِمَகருணை புரிந்தான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُ‏மகா கருணையாளன்
இல்லா மர் ரஹிமல் லாஹ்' இன்னஹூ ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
முஹம்மது ஜான்
(எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.  
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்). நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
IFT
ஆனால், அல்லாஹ்வே யாருக்காவது கருணை புரிந்தாலே தவிர! திண்ணமாக, அவனோ மிக வலிமை வாய்ந்தவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆயினும்) அல்லாஹ் அருள் புரிந்தோர் தவிர (அவர்களுக்கு சகல உதவியும் கிடைக்கும்) நிச்சயமாக அவனே (யாவரையும்) மிகைத்தவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Except those [believers] on whom Allah has mercy. Indeed, He is the Exalted in Might, the Merciful.
اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِ ۟ۙ
اِنَّ شَجَرَتَநிச்சயமாக மரம்الزَّقُّوْمِۙ‏ஸக்கூம்
இன்ன ஷஜரதZஜ் Zஜக்கூம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (நரகத்திலிருக்கும்)கள்ளி மரம்தான்
IFT
‘ஸக்கூம்’ மரம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (நரகத்திலிருக்கும்) கள்ளிமரம்.
Saheeh International
Indeed, the tree of zaqqūm
طَعَامُ الْاَثِیْمِ ۟
طَعَامُஉணவாகும்الْاَثِيْمِ ۛۚ   ۖ‏பாவிகளின்
த'ஆமுல் அதீம்
முஹம்மது ஜான்
பாவிகளுக்குரிய உணவு;
அப்துல் ஹமீது பாகவி
பாவியின் உணவு.
IFT
பாவியின் உணவாக இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதுவே) பாவிகளின் ஆகாரமாகும்.
Saheeh International
Is food for the sinful.
كَالْمُهْلِ ۛۚ یَغْلِیْ فِی الْبُطُوْنِ ۟ۙ
كَالْمُهْلِ ۛۚஉருக்கப்பட்ட செம்பைப் போல் இருக்கும்يَغْلِىْஅது கொதிக்கும்فِى الْبُطُوْنِۙ‏வயிறுகளில்
கல்முஹ்லி யக்லீ Fபில்Bபுதூன்
முஹம்மது ஜான்
அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(அது) உருகிய செம்பைப்போல் அவனுடைய வயிற்றில் கொதிக்கும்.
IFT
அது எண்ணெய்க் கசடு போலிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது) உருகிய செம்பைப்போல் (அவர்களுடைய) வயிறுகளில் கொதிக்கும்.
Saheeh International
Like murky oil, it boils within bellies
كَغَلْیِ الْحَمِیْمِ ۟
كَغَلْىِகொதிப்பதைப் போல்الْحَمِيْمِ‏கொதிக்கின்ற தண்ணீர்
ககல்யில் ஹமீம்
முஹம்மது ஜான்
வெந்நீர் கொதிப்பதைப் போல்.
அப்துல் ஹமீது பாகவி
சூடான தண்ணீர் கொதிப்பதைப் போல் (அது கொதித்துப் பொங்கி வரும்).
IFT
சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் அது கொதிக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கடுமையாகக் காய்ச்சப்பட்ட நீர் கொதிப்பதைபோல் (அது கொதித்துப் பொங்கிவரும்).
Saheeh International
Like the boiling of scalding water.
خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰی سَوَآءِ الْجَحِیْمِ ۟ۗۖ
خُذُوْهُஅவனைப் பிடியுங்கள்!فَاعْتِلُوْهُஅவனை இழுத்து வாருங்கள்!اِلٰى سَوَآءِநடுவில்الْجَحِيْمِ   ‏நரகத்தின்
குதூஹு Fபஃதிலூஹு இலா ஸவா'இல் ஜஹீம்
முஹம்மது ஜான்
“அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள்.
IFT
“பிடியுங்கள் அவனை! நரகத்தின் நடுப்பகுதியில் இழுத்துச் செல்லுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(குற்றவாளியான) அவனைப் பிடியுங்கள்; பின்னர், நரகத்தின் மையத்திற்கு இழுத்துக்கொண்டு செல்லுங்கள்.
Saheeh International
[It will be commanded], "Seize him and drag him into the midst of the Hellfire,
ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِیْمِ ۟ؕ
ثُمَّபிறகுصُبُّوْاஊற்றுங்கள்فَوْقَமேல்رَاْسِهٖஅவனது தலைக்குمِنْ عَذَابِவேதனையைالْحَمِيْمِؕ‏கொதிக்கின்ற நீரின்
தும்ம ஸுBப்Bபூ Fபவ்க ர'ஸிஹீ மின் 'அதாBபில் ஹமீம்
முஹம்மது ஜான்
“பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, அவனுடைய தலைக்குமேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்'' (என்று கூறப்படுவதுடன், அவனை நோக்கி ஏளனமாக,)
IFT
அவனது தலைமீது கொதிக்கும் நீரை ஊற்றி வேதனைப்படுத்துங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவனுடைய தலைக்கு மேல், கொதித்த நீரின் வேதனையிலிருந்து ஊற்றுங்கள், (என்று நரகக்காவலாளிகளுக்குக் கூறப்படுவதுடன், அதிலிருக்கும் பாவிகளிடம்.)
Saheeh International
Then pour over his head from the torment of scalding water."
ذُقْ ۙۚ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْكَرِیْمُ ۟
ذُقْ ۖۚநீ சுவை!اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْعَزِيْزُகண்ணியமானவன்الْكَرِيْمُ‏மதிப்பிற்குரியவன்
துக் இன்னக அன்தல் 'அZஜீZஜுல் கரீம்
முஹம்மது ஜான்
“நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நீ மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவன். ஆதலால், நீ (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பார்'' (என்றும் கூறப்படும்)
IFT
நீ சுவைத்துப் பார், இதன் சுவையை! பெரும் வல்லமை படைத்த கண்ணியமிக்கவனல்லவா நீ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நீ (இவ்வேதனையைச்) சுவைத்துப்பார், நிச்சயமாக, நீ தான் மிக்க கண்ணியமும் மரியாதையுமுடையவன், (என்று ஏளனமாகக் கூறப்படும்).
Saheeh International
[It will be said], "Taste! Indeed, you are the honored, the noble!
اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ ۟
اِنَّ هٰذَاநிச்சயமாக இதுதான்مَاஎதுكُنْتُمْஇருந்தீர்கள்بِهٖஅதைتَمْتَرُوْنَ‏சந்தேகிப்பவர்களாக
இன்ன ஹாதா மா குன்தும் Bபிஹீ தம்தரூன்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தவை.
IFT
நீங்கள் எதன் வருகையை சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இது எதை நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுவேயாகும் (என்றும் கூறப்படும்).
Saheeh International
Indeed, this is what you used to dispute."
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ مَقَامٍ اَمِیْنٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِيْنَஇறையச்சமுள்ளவர்கள்فِىْ مَقَامٍஇடத்தில்اَمِيْنٍۙ‏பாதுகாப்பான
இன்னல் முத்தகீன Fபீ மகாமின் அமீன்
முஹம்மது ஜான்
பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இறையச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில்,
IFT
இறையச்சமுடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் அச்சமற்ற இடத்திலிருப்பார்கள்.
Saheeh International
Indeed, the righteous will be in a secure place:
فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚۙ
فِىْ جَنّٰتٍசொர்க்கங்களில்وَّعُيُوْنٍ ۙ ۚ‏இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்
Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
முஹம்மது ஜான்
சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
அதுவும் சொர்க்கச் சோலைகளில், ஊற்றுகளின் சமீபமாக,
IFT
தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சுவனபதி(யின் சோலை)களிலும், நீர் ஊற்றுக்களிலே (அவற்றினிடையே)யும் (இருப்பார்கள்).
Saheeh International
Within gardens and springs,
یَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِیْنَ ۟ۚۙ
يَّلْبَسُوْنَஅணிவார்கள்مِنْ سُنْدُسٍமென்மையான பட்டுوَّاِسْتَبْرَقٍஇன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளைمُّتَقٰبِلِيْنَۚ ۙ‏ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
யல்Bபஸூன மின் ஸுன்துஸி(ன்)வ் வ இஸ்தBப்ரகிம் முதகாBபிலீன்
முஹம்மது ஜான்
ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.
IFT
தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகளை அணிந்து கொண்டு எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஒருவரையொருவர் முன் நோக்கியவர்களாக மெல்லியதும், திடமானதுமான பட்டாடைகளை அணிந்து கொண்டிருப்பார்கள்.
Saheeh International
Wearing [garments of] fine silk and brocade, facing each other.
كَذٰلِكَ ۫ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟ؕ
كَذٰلِكَஇவ்வாறுதான்وَزَوَّجْنٰهُمْஇன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்بِحُوْرٍவெண்மையான கண்ணிகளைعِيْنٍؕ‏கண்ணழகிகளான
கதாலிக வ Zஜவ்வஜ்னாஹும் Bபிஹூரின் 'ஈன்
முஹம்மது ஜான்
இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). மேலும், ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளாகிய கன்னி)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.
IFT
இதுதான் அவர்களின் நிலைமையாகும். மேலும், நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே (அது நடைபெறும்), மேலும், “ஹூருல்ஈன்” (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்போம்.
Saheeh International
Thus. And We will marry them to fair women with large, [beautiful] eyes.
یَدْعُوْنَ فِیْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِیْنَ ۟ۙ
يَدْعُوْنَகேட்பார்கள்فِيْهَاஅதில்بِكُلِّஎல்லாفَاكِهَةٍபழங்களையும்اٰمِنِيْنَۙ‏நிம்மதியானவர்களாக
யத்'ஊன Fபீஹா Bபிகுல்லி Fபாகிஹதின் ஆமினீன்
முஹம்மது ஜான்
அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்.
IFT
அங்கு அவர்கள் மன நிம்மதியுடன் எல்லாவிதமான சுவைமிகு பொருட்களையும் கேட்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அச்சமற்றவர்களாக கனி வர்க்கங்கள் ஒவ்வொன்றையும், அங்கு கேட்டுக் கொண்டும் இருப்பார்கள்.
Saheeh International
They will call therein for every [kind of] fruit - safe and secure.
لَا یَذُوْقُوْنَ فِیْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰی ۚ وَوَقٰىهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟ۙ
لَا يَذُوْقُوْنَசுவைக்க மாட்டார்கள்فِيْهَاஅதில்الْمَوْتَமரணத்தைاِلَّا الْمَوْتَةَமரணத்தை தவிரالْاُوْلٰى‌ ۚமுதல்وَوَقٰٮهُمْஇன்னும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்عَذَابَவேதனையை விட்டும்الْجَحِيْمِۙ‏நரகத்தின்
லா யதூகூன Fபீஹல் மவ்தா இல்லல் மவ்ததல் ஊலா வ வகாஹும் 'அதாBபல் ஜஹீம்
முஹம்மது ஜான்
முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு ஒரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்.
IFT
ஏற்கனவே உலகில் அடைந்த மரணம் தவிர, மறு மரணத்தை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். மேலும், உம் இறைவன் தன்னுடைய கருணையினால் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முந்திய மரணத்தைத் தவிர, அவற்றில் அவர்கள் (வேறு யாதொரு) மரணத்தையும் சுவைக்கமாட்டார்கள், மேலும், நரக வேதனையை விட்டும் அவர்களை (அல்லாஹ்வாகிய) அவன் காத்துக்கொண்டான்.
Saheeh International
They will not taste death therein except the first death, and He will have protected them from the punishment of Hellfire
فَضْلًا مِّنْ رَّبِّكَ ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
فَضْلًاஅருளினால்مِّنْ رَّبِّكَ ؕஉமது இறைவனின்ذٰ لِكَ هُوَஇதுதான்الْفَوْزُ الْعَظِيْمُ‏மகத்தான வெற்றி
Fபள்லம் மிர் ரBப்Bபிக்; தாலிக ஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஹம்மது ஜான்
(இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இது) உமது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும்.
IFT
இதுவே மாபெரும் வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! இது) உமதிரட்சகனின் பேரருளாக (வழங்கப்படுகிறது), அதுதான் மகத்தான வெற்றியாகும்.
Saheeh International
As bounty from your Lord. That is what is the great attainment.
فَاِنَّمَا یَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَஇதை நாம் இலேசாக்கினோம்/உமது மொழியில்لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
Fப இன்னமா யஸ்ஸர்னாஹு Bபிலிஸானிக ல'அல்லஹும் யததக்கரூன்
முஹம்மது ஜான்
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உமது மொழியில் (இறக்கி அதை) எளிதாக்கி வைத்தோம்.
IFT
(நபியே!) இவர்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் எளிமையாக்கித் தந்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (வேதமாகிய) இதனை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கி வைத்திருப்பதெல்லாம், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான்.
Saheeh International
And indeed, We have eased it [i.e., the Qur’an] in your tongue that they might be reminded.
فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ ۟۠
فَارْتَقِبْஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக!اِنَّهُمْநிச்சயமாக அவர்களும்مُّرْتَقِبُوْنَ‏எதிர்பார்க்கின்றார்கள்
Fபர்தகிBப் இன்னஹும் முர்த கிBபூன்
முஹம்மது ஜான்
ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  
அப்துல் ஹமீது பாகவி
(இதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்.
IFT
இனி நீரும் எதிர்பாரும்! இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நல்லுபதேசம் பெறாவிடில், அதனால் ஏற்படும் தீயமுடிவை) நீர் எதிர்பார்த்திரும், நிச்சயமாக, அவர்களும் எதிர்ப்பார்க்கக் கூடியவர்கள்தாம்.
Saheeh International
So watch, [O Muhammad]; indeed, they are watching [for your end].