48. ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)

மதனீ, வசனங்கள்: 29

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِیْنًا ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்فَتَحْنَاவெற்றி வழங்கினோம்لَكَஉமக்குفَتْحًا مُّبِيْنًا ۙ‏தெளிவானவெற்றியாக
இன்னா Fபதஹ்னா லக Fபத்ஹம் முBபீனா
முஹம்மது ஜான்
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உமக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்.
IFT
(நபியே!) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கிறோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றியை அளித்தோம்.
Saheeh International
Indeed, We have given you, [O Muhammad], a clear conquest
لِّیَغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَمَا تَاَخَّرَ وَیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَیَهْدِیَكَ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ
لِّيَـغْفِرَமன்னிப்பதற்காக(வும்)لَكَஉமக்குاللّٰهُஅல்லாஹ்مَا تَقَدَّمَமுந்தியதையும்مِنْ ذَنْۢبِكَஉமது பாவத்தில்وَ مَا تَاَخَّرَபிந்தியதையும்وَيُتِمَّமுழுமைப்படுத்துவதற்காகவும்نِعْمَتَهٗஅவனது அருளைعَلَيْكَஉம்மீதுوَيَهْدِيَكَஉமக்கு வழி காண்பிப்பதற்காகவும்صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏நேரான பாதையை
லியக்Fபிர லகல் லாஹு மா தகத்தம மின் தன்Bபிக வமா த அக்கர வ யுதிம்ம னிஃமதஹூ 'அலய்க வ யஹ்தியக ஸிராதன் முஸ்தகீமா
முஹம்மது ஜான்
உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்காக நீர் உமது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக! அதனால்,) உமது முன் பின் தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து தனது அருட்கொடையையும் உம் மீது முழுமைப்படுத்தி வைத்து, உம்மை அவன் நேரான வழியிலும் நடத்துவான்.
IFT
உம்முடைய முந்திய, பிந்திய குறைகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருட்கொடையை உம்மீது நிறைவு செய்து, உமக்கு நேர்வழியைக் காட்டுவதற்காகவும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் உமக்கு, உமது தவறில் முந்தியதையும், பிந்தியதையும் மன்னித்து தனது அருட்கொடையையும் உம்மீது பூர்த்தியாக்கி வைத்து, உம்மை அவன் நேரான வழியில் நடத்துவதற்காகவும்_
Saheeh International
That Allah may forgive for you what preceded of your sin [i.e., errors] and what will follow and complete His favor upon you and guide you to a straight path
وَّیَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِیْزًا ۟
وَّ يَنْصُرَكَஉமக்கு உதவி செய்வதற்காகவும்اللّٰهُஅல்லாஹ்نَصْرًاஉதவிعَزِيْزًا‏மிக கம்பீரமான
வ யன்ஸுரகல் லாஹு னஸ்ரன் 'அZஜீZஜா
முஹம்மது ஜான்
மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) மேலும் (தொடர்ந்து) அல்லாஹ் உமக்குப் பலமான உதவி புரிந்தே வருவான்.
IFT
இன்னும் மகத்தான உதவியை அவன் உமக்கு வழங்குவதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) அல்லாஹ், உமக்கு வல்லமை மிக்க உதவியாக உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்).
Saheeh International
And [that] Allah may aid you with a mighty victory.
هُوَ الَّذِیْۤ اَنْزَلَ السَّكِیْنَةَ فِیْ قُلُوْبِ الْمُؤْمِنِیْنَ لِیَزْدَادُوْۤا اِیْمَانًا مَّعَ اِیْمَانِهِمْ ؕ وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟ۙ
هُوَஅவன்தான்الَّذِىْۤஎப்படிப்பட்டவன்اَنْزَلَஇறக்கினான்السَّكِيْنَةَஅமைதியைفِىْ قُلُوْبِஉள்ளங்களில்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களின்لِيَزْدَادُوْۤاஅவர்கள் அதிகரிப்பதற்காகاِيْمَانًاநம்பிக்கையால்مَّعَ اِيْمَانِهِمْ‌ ؕஅவர்கள் தங்கள் நம்பிக்கையுடன்وَلِلّٰهِஅல்லாஹ்விற்கு உரியனவேجُنُوْدُஇராணுவங்கள்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியின்وَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلِيْمًاநன்கறிந்தவனாகحَكِيْمًا ۙ‏மகா ஞானவானாக
ஹுவல் லதீ அன்Zஜலஸ் ஸகீனத Fபீ குலூBபில் மு'மினீன லியZஜ்தாதூ ஈமானம்ம'அ ஈமானிஹிம்; வ லில்லாஹி ஜுனூதுஸ் ஸமவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
முஹம்மது ஜான்
அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கோன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டவர்களுடைய உள்ளங்களில் அவன்தான் சாந்தியையும், ஆறுதலையும் அளித்து, அவர்களுடைய நம்பிக்கை மேலும் அதிகரிக்கும்படி செய்தான். வானங்கள், பூமி முதலியவற்றிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (அவற்றைக்கொண்டு அவன் விரும்பியவர்களுக்கு உதவி புரிவான்.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனாக ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் ‘ஸகீனத்’ நிம்மதியை இறக்கியருளினான்; அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் யாவும் அல்லாஹ்வின் வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிகவும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், விசுவாசங்கொண்டவர்களுடைய இதயங்களில் அவர்களுடைய விசுவாசத்துடன் (பின்னும்) விசுவாசத்தை அவர்கள் அதிமாக்கிக் கொள்வதற்காக அமைதியை அவன் இறக்கிவைத்தான், மேலும் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியனவாகும், மேலும், அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
It is He who sent down tranquility into the hearts of the believers that they would increase in faith along with their [present] faith. And to Allah belong the soldiers of the heavens and the earth, and ever is Allah Knowing and Wise.
لِّیُدْخِلَ الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَیُكَفِّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ ؕ وَكَانَ ذٰلِكَ عِنْدَ اللّٰهِ فَوْزًا عَظِیْمًا ۟ۙ
لِّيُدْخِلَஅவன் நுழைப்பதற்காக(வும்)الْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களையும்وَالْمُؤْمِنٰتِநம்பிக்கை கொண்ட பெண்களையும்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்فِيْهَاஅதில்وَيُكَفِّرَஅகற்றுவதற்காகவும்عَنْهُمْஅவர்களை விட்டும்سَيِّاٰتِهِمْ‌ؕஅவர்களின் பாவங்களைوَكَانَஇருக்கின்றதுذٰ لِكَஇதுதான்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்فَوْزًاவெற்றியாகعَظِيْمًا ۙ‏மகத்தான
லியுத்கிலல் மு'மினீன வல்மு'மினாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா வ யுகFப்Fபிர 'அன்ஹும் ஸய்யி ஆதிஹிம்; வ கான தாலிக 'இன்தல் லாஹி Fபவ்Zஜன் 'அளீமா
முஹம்மது ஜான்
முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காக (இவ்வாறு அருளினான்); அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி விடுவான் - இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கைகொண்ட ஆண்களையும், பெண்களையும் (அல்லாஹ்) சொர்க்கங்களில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கி விடுவார்கள். அவர்களின் பாவங்களையும், அவர்களிலிருந்து நீக்கிவிடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கிறது.
IFT
(அவன் எதற்காக இவ்வாறெல்லாம் செய்துள்ளானெனில்) இறைநம்பிக்கையாளர்களான ஆண்களையும், பெண்களையும் நிரந்தரமாக வாழச் செய்வதற்காக! கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் நுழையச் செய்வதற்காகவும் மேலும், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டு களைவதற்காகவும்தான். அல்லாஹ்விடத்தில் இது மகத்தான வெற்றியாக இருக்கிறது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன், விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வதற்காகவும் (இவ்வாறு செய்தான்) அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், நிரந்தரமாக அவற்றில் அவர்கள் (தங்கி) இருப்பவர்கள், அவர்களின் தீயவைகளையும், அவர்களை விட்டு நீக்கிவிடுவதற்காகவும் (இவ்வாறு அமைதியை இறக்கினான்). இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான ஒரு வெற்றியாக இருந்தது.
Saheeh International
[And] that He may admit the believing men and the believing women to gardens beneath which rivers flow to abide therein eternally and remove from them their misdeeds - and ever is that, in the sight of Allah, a great attainment
وَّیُعَذِّبَ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ الظَّآنِّیْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِ ؕ عَلَیْهِمْ دَآىِٕرَةُ السَّوْءِ ۚ وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟
وَّيُعَذِّبَவேதனை செய்வதற்காகவும்الْمُنٰفِقِيْنَநயவஞ்சக ஆண்களை(யும்)وَالْمُنٰفِقٰتِநயவஞ்சக பெண்களையும்وَالْمُشْرِكِيْنَஇணைவைக்கின்ற ஆண்களையும்وَ الْمُشْرِكٰتِஇணைவைக்கின்ற பெண்களையும்الظَّآنِّيْنَஎண்ணுகின்றனர்بِاللّٰهِஅல்லாஹ்வின் விஷயத்தில்ظَنَّ السَّوْءِ‌ؕகெட்ட எண்ணம்عَلَيْهِمْஅவர்கள் மீதுதான்دَآٮِٕرَةُசுழற்சி இருக்கிறதுالسَّوْءِ‌ ۚகெட்டوَ غَضِبَகோபப்படுகின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَعَنَهُمْஇன்னும் அவர்களை சபிக்கின்றான்وَاَعَدَّஇன்னும் தயார் செய்துள்ளான்لَهُمْஅவர்களுக்குجَهَنَّمَؕநரகத்தைوَسَآءَتْ مَصِيْرًا‏அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்
வ யு'அத்திBபல் முனாFபிகீன வல்முனாFபிகாதி வல் முஷ்ரிகீன வல்முஷ்ரிகாதிள் ளான்னீன Bபில்லாஹி ளன்னஸ் ஸவ்'; 'அலய்ஹிம் தா'இரதுஸ் ஸவ்'இ வ களிBபல் லாஹு 'அலய்ஹிம் வ ல'அனஹும் வ அ'அத்த லஹும் ஜஹன்னம வ ஸா' அத் மஸீரா
முஹம்மது ஜான்
அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது; இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வைப் பற்றிக் கெட்ட எண்ணம் கொள்கின்ற நயவஞ்சகமுள்ள ஆண்களையும் பெண்களையும், இணைவைத்து வணங்குகின்ற ஆண்களையும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்தே தீருவான். வேதனை அவர்கள் (தலைக்கு) மேல் சூழ்ந்துகொண்டு இருக்கிறது. அல்லாஹ் அவர்கள் மீது கோபப்பட்டு, அவர்களைச் சபித்து, அவர்களுக்காக நரகத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது.
IFT
மேலும், நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், இணை வைப்பாளர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவன் தண்டனை அளிப்பதற்காகவும்தான்! அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தீய எண்ணம் கொண்டிருக்கிறார்கள். தீமையின் சுழற்சியில் தாமே வீழ்ந்து விட்டார்கள். அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீது இறங்கியது. மேலும், அவன் அவர்களைச் சபித்தான். நரகத்தை அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அல்லாஹ்வைப்பற்றி கெட்ட எண்ணம் எண்ணுகின்றவர்களான (வேஷதாரிகளாகிய) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் (அல்லாஹ்வாகிய) அவன் வேதனை செய்வான், வேதனையின் சுழற்சி அவர்களின் மீதிருக்கின்றது, அல்லாஹ் அவர்கள் மீது கோபமும் கொண்டான், அவர்களைச் சபித்தும் விட்டான், அவர்களுக்காக நரகத்தை தயார்படுத்தியும் வைத்திருக்கின்றான், அது செல்லுமிடத்தால் மிகக் கெட்டதாகியும்விட்டது.
Saheeh International
And [that] He may punish the hypocrite men and hypocrite women, and the polytheist men and polytheist women - those who assume about Allah an assumption of evil nature. Upon them is a misfortune of evil nature; and Allah has become angry with them and has cursed them and prepared for them Hell, and evil it is as a destination.
وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
وَلِلّٰهِஅல்லாஹ்விற்கேجُنُوْدُஇராணுவங்கள்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியின்وَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَزِيْزًاமிகைத்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
வ லில்லாஹி ஜுனூதுஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
முஹம்மது ஜான்
அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கு சொந்தம்; மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள் பூமியிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக. ஞானமுடையவனுமாக இருக்கிறான்.
IFT
வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுடைய வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிக வல்லமைமிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்கள் மற்றும் பூமியின் படைகள் (அனைத்தும்) அல்லாஹ்விற்கே உரியன, இன்னும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And to Allah belong the soldiers of the heavens and the earth. And ever is Allah Exalted in Might and Wise.
اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِیْرًا ۟ۙ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنٰكَஉம்மை அனுப்பினோம்شَاهِدًاசாட்சியாளராக(வும்)وَّمُبَشِّرًاநற்செய்தி கூறுபவராகவும்وَّنَذِيْرًا ۙ‏எச்சரிப்பவராகவும்
இன்னா அர்ஸல்னாக ஷாஹி த(ன்)வ் வ முBபஷ்ஷிர(ன்)வ் வ னதீரா
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அனுப்பியிருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுபவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பி வைத்தோம்.
IFT
(நபியே!) நாம் உம்மைச் சான்று வழங்குபவராகவும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக, நாம் உம்மை (உம்சமூகத்தார்க்கு) சாட்சி கூறுபவராகவும், (அவர்களில் விசுவாசிகளுக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (விசுவாசம் கொள்ளாதவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்தோம்.
Saheeh International
Indeed, We have sent you as a witness and a bringer of good tidings and a warner
لِّتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ ؕ وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِیْلًا ۟
لِّـتُؤْمِنُوْاநீங்கள் நம்பிக்கை கொள்வதற்காக(வும்)بِاللّٰهِஅல்லாஹ்வைوَ رَسُوْلِهٖஅவனது தூதரையும்وَتُعَزِّرُوْهُஅவரை கண்ணியப்படுத்துவதற்காகவும்وَتُوَقِّرُوْهُ ؕஅவரை மதிப்பதற்காகவும்وَتُسَبِّحُوْهُஅவனைப் புகழ்ந்து துதிப்பதற்காகவும்بُكْرَةًகாலை(யிலும்)وَّاَصِيْلًا‏மாலையிலும்
லிது மினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ து'அZஜ்Zஜிரூஹு வதுவக்கிரூஹு வதுஸBப்Bபி ஹூஹு Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
முஹம்மது ஜான்
(ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, (தூதராகிய) அவருக்கு (சன்மார்க்கத்தில்) உதவிபுரிந்தும், அவரை கண்ணியபடுத்தியும், காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வாகிய) அவனை துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்!.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி வைத்து, காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்து வாருங்கள்.
IFT
(எதற்காகவெனில் மக்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்வதற்காகவும், அவருக்கு (தூதருக்கு) உறுதுணையாய் இருப்பதற்காகவும், அவரைக் கண்ணியப்படுத்துவதற்காகவும் மேலும், காலையிலும் மாலையிலும் நீங்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருப்பதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
காரணம்_(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசித்து, (தூதராகிய) அவருக்கு (சன்மார்க்கத்தில்) உதவி புரிந்தும், அவரை கண்ணியப்படுத்தியும், (அல்லாஹ்வாகிய) அவனை, நீங்கள் காலையிலும், மாலையிலும் துதி செய்வதற்காகவே (நபியே! நாம் உம்மை அனுப்பி வைத்தோம்).
Saheeh International
That you [people] may believe in Allah and His Messenger and honor him and respect him [i.e., the Prophet (ﷺ] and exalt Him [i.e., Allah] morning and afternoon.
اِنَّ الَّذِیْنَ یُبَایِعُوْنَكَ اِنَّمَا یُبَایِعُوْنَ اللّٰهَ ؕ یَدُ اللّٰهِ فَوْقَ اَیْدِیْهِمْ ۚ فَمَنْ نَّكَثَ فَاِنَّمَا یَنْكُثُ عَلٰی نَفْسِهٖ ۚ وَمَنْ اَوْفٰی بِمَا عٰهَدَ عَلَیْهُ اللّٰهَ فَسَیُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟۠
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்يُبَايِعُوْنَكَஉம்மிடம் விசுவாச உறுதிமொழி செய்கின்றார்கள்اِنَّمَا يُبَايِعُوْنَஅவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம்اللّٰهَ ؕஅல்லாஹ்விடம்தான்يَدُகைاللّٰهِஅல்லாஹ்வின்فَوْقَமேல் இருக்கிறதுاَيْدِيْهِمْ‌ ۚஅவர்களின் கைகளுக்குفَمَنْ نَّكَثَஆகவேயார் முறிப்பாரோفَاِنَّمَا يَنْكُثُஅவர்முறிப்பதெல்லாம்عَلٰى نَفْسِهٖ‌ۚதனக்கு எதிராகத்தான்وَمَنْ اَوْفٰىயார் நிறைவேற்றுவாரோبِمَاஎதைعٰهَدَஒப்பந்தம் செய்தாரோعَلَيْهُஅதன் மீதுاللّٰهَஅல்லாஹ்விடம்فَسَيُؤْتِيْهِஅவருக்குக்اَجْرًاகூலியைعَظِيْمًا‏மகத்தான(து)
இன்னல் லதீன யுBபாயி'ஊனக இன்னமா யுBபாயி'ஊனல் லாஹ யதுல் லாஹி Fபவ்க அய்தீஹிம்; Fபமன் னகத Fப-இன்னமா யன்குது 'அலா னFப்ஸிஹீ வ மன் அவ்Fபா Bபிமா 'ஆஹத 'அலய்ஹுல்லாஹ Fபஸ யு'தீஹி அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்கள் (தங்கள் உடல், பொருள், உயிரை தியாகம் செய்து உமக்கு உதவி புரிவதாக ஹுதைபிய்யாவில் உமது கையைப் பிடித்து) உம்மிடம் வாக்குறுதி செய்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர். அவர்கள் கை மீது அல்லாஹ்வுடைய கைதான் இருக்கிறது. ஆகவே, (அவ்வாக்குறுதியை) எவன் முறித்து விடுகிறானோ, அவன் தனக்குக் கேடாகவே அதை முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அந்த வாக்குறுதியை முழுமைப்படுத்தி வைக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் மகத்தான கூலியை அதிசீக்கிரத்தில் கொடுப்பான்.
IFT
(நபியே!) எவர்கள் உம்மிடம் உறுதிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்கள் உண்மையில் அல்லாஹ்விடம் உறுதிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தவர்களாவர். அவர்களுடைய கைகள் மீது அல்லாஹ்வின் கை இருந்தது. ஆகவே யாரேனும் இந்த உறுதிப் பிரமாணத்தை முறித்தால், அதை முறித்ததன் கேடு அவரையே சூழும். மேலும், எவர் அல்லாஹ்விடம் தான் செய்திருந்த உறுதிப் பிரமாணத்தை நிறைவேற்றுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் அதிவிரைவில் மகத்தான கூலியை வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக (ஹூதைபிய்யா உடன்படிக்கையின் போது குரைஷியரின் தாக்குதலை எதிர்த்து போர் செய்வதற்காக) உம்மிடம் (பைஅத்) வாக்குறுதி செய்கின்றார்களே அத்தகையோர்_ அவர்கள் (பைஅத்) வாக்குறுதி செய்வதெல்லாம் அல்லாஹ்விடம்தான், அல்லாஹ்வின் கரம் அவர்களின் கரங்களுக்கு மேல் இருக்கின்றது, ஆகவே, எவர் (அவ்வாக்குறுதியை) முறித்துவிடுகின்றரோ, அவர் தனக்குக் கேடாகவே (அதனை) முறித்து விடுகின்றார், இன்னும், எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியைப் பூர்த்தியாக்கி வைக்கின்றாரோ அப்பொழுது அவருக்கு அல்லாஹ் மகத்தான (நற்) கூலியை (நிச்சயமாகக்) கொடுப்பான்.
Saheeh International
Indeed, those who pledge allegiance to you, [O Muhammad] - they are actually pledging allegiance to Allah. The hand of Allah is over their hands. So he who breaks his word only breaks it to the detriment of himself. And he who fulfills that which he has promised Allah - He will give him a great reward.
سَیَقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَتْنَاۤ اَمْوَالُنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَنَا ۚ یَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ قُلْ فَمَنْ یَّمْلِكُ لَكُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ؕ بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
سَيَـقُوْلُகூறுவார்(கள்)لَكَஉமக்குالْمُخَلَّفُوْنَபின்தங்கியவர்கள்مِنَ الْاَعْرَابِகிராம அரபிகளில்شَغَلَـتْنَاۤஎங்களைஈடுபடுத்தினاَمْوَالُـنَاஎங்கள்செல்வங்களும்وَاَهْلُوْنَاஎங்கள் குடும்பங்களும்فَاسْتَغْفِرْஆகவே, நீர் பாவமன்னிப்புக் கோருவீராக!لَـنَا‌ ۚஎங்களுக்காகيَقُوْلُوْنَஅவர்கள் கூறுகின்றனர்بِاَلْسِنَتِهِمْதங்கள் நாவுகளினால்مَّا لَـيْسَஇல்லாதவற்றைفِىْ قُلُوْبِهِمْ‌ؕதங்கள் உள்ளங்களில்قُلْகூறுவீராக!فَمَنْயார்?يَّمْلِكُஉரிமை பெறுவார்لَـكُمْஉங்களுக்காகمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடம்شَيْـٴًــــاஎதற்கும்اِنْ اَرَادَநாடினால்بِكُمْஉங்களுக்குضَرًّاதீங்கைاَوْஅல்லதுاَرَادَநாடினால்بِكُمْஉங்களுக்குنَفْعًا ؕநன்மையைبَلْமாறாகكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைخَبِيْرًا‏ஆழ்ந்தறிபவனாக
ஸ யகூலு லகல் முகல் லFபூன மினல்-அஃராBபி ஷய்கலத்னா அம்வாலுனா வ அஹ்லூனா Fபஸ்தக்Fபிர் லனா; யகூலூன Bபி அல்ஸினதிஹிம் மா லய்ஸ Fபீ குலூBபிஹிம்; குல் Fபம(ன்)ய் யம்லிகு லகும் மினல் லாஹி ஷய்'அன் இன் அராத Bபிகும் ளர்ரன் அவ் அராத Bபிகும் னFப்'ஆ; Bபல் கானல் லாஹு Bபிமா தஃமலூன கBபீரா
முஹம்மது ஜான்
(நபியே!) போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின்தங்கி விட்ட நாட்டுப் புறத்து அரபிகள்: “எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பங்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி விட்டன; எனவே, நீங்கள் எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!” எனக் கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள்; “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்” எனக் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! போர் செய்ய உம்முடன் வராது) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகள் உம்மிடம் வந்து ‘‘நாங்கள் உம்முடன் வர எங்கள் பொருள்களும் எங்கள் குடும்பங்களும் எங்களுக்கு அவகாசமளிக்கவில்லை'' என்று (பொய்யாகக்) கூறி, ‘‘(இறைவனிடம்) நீர் எங்களுக்கு மன்னிப்புக் கோருவீராக!'' என்று கூறுவார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தங்கள் நாவுகளால் கூறுகின்றனர். ஆகவே, (நபியே!) (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீமை செய்ய நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மை செய்ய நாடினாலும் அதில் எதையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக உங்களுக்குத் தடுத்து விடக்கூடியவன் யார்? மாறாக, நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
(நபியே!) பின்தங்கியிருந்துவிட்ட நாட்டுப்புற அரபிகள் திண்ணமாக இப்போது உம்மிடம் வந்து சொல்வார்கள்: “எங்களுடைய செல்வங்கள், மனைவி மக்கள் பற்றிய கவலைகள்தாம் எங்களை முற்றிலும் ஈர்த்து விட்டிருந்தன. எனவே, தாங்கள் எங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்.” இவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் நாவுகளால் கூறுகிறார்கள். அவர்களிடம் நீர் கேளும்: “சரி, அவ்வாறெனில் உங்கள் விவகாரத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பை அல்லாஹ் உங்களுக்கு ஏதேனும் நஷ்டத்தை அளிக்க அல்லது நன்மையை வழங்க நாடினால் அதைத் தடுத்திடும் அளவுக்கு சிறிதேனும் அதிகாரம் பெற்றவர் யாரேனும் உண்டா?” ஆனால், உங்களின் செயல்களை அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அரபிகளிலுள்ள) நாட்டுப்புறத்து வாசிகளில் (நபியே! உம்முடன் போர் செய்ய வராது) பின் தங்கிவிட்டவர்கள் உம்மிடம் (வந்து “நாங்கள் உங்களுடன் போருக்குவராமல்) எங்களுடைய செல்வங்களும், எங்களுடைய குடும்பமும் எங்களைப் பராக்காக்கிவிட்டன, எனவே (அல்லாஹ்விடம்) நீர் எங்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக!” என்று கூறுவார்கள், தங்கள் இதயங்களில் இல்லாதவைகளைத் தங்கள் நாவுகளினால் அவர்கள் கூறுகின்றனர், (ஆகவே, நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உங்களுக்கு ஒரு இடரை நாடினால் அல்லது அவன் உங்களுக்கு ஒரு பலனை நாடினால் (அதில்) எதையும் அல்லாஹ்விலிருந்து உங்களுக்கு(த் தடுத்துவிடக்கூடிய) அதிகாரம் பெற்றிருப்பவர் யார்? (ஒருவரும்) இல்லை! நீங்கள் செய்பவற்றை, அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
Those who remained behind of the bedouins will say to you, "Our properties and our families occupied us, so ask forgiveness for us." They say with their tongues what is not within their hearts. Say, "Then who could prevent Allah at all if He intended for you harm or intended for you benefit? Rather, ever is Allah, of what you do, Aware.
بَلْ ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّنْقَلِبَ الرَّسُوْلُ وَالْمُؤْمِنُوْنَ اِلٰۤی اَهْلِیْهِمْ اَبَدًا وَّزُیِّنَ ذٰلِكَ فِیْ قُلُوْبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ ۖۚ وَكُنْتُمْ قَوْمًا بُوْرًا ۟
بَلْமாறாகظَنَـنْـتُمْநீங்கள் எண்ணினீர்கள்اَنْ لَّنْ يَّـنْقَلِبَஅறவே திரும்ப மாட்டார்(கள்) என்றுالرَّسُوْلُதூதரும்وَالْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்களும்اِلٰٓى اَهْلِيْهِمْதங்கள் குடும்பங்களுக்குاَبَدًاஒருபோதும்وَّزُيِّنَஇன்னும் அலங்கரிக்கப்பட்டு விட்டதுذٰ لِكَஇதுفِىْ قُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களில்وَظَنَنْتُمْ(இன்னும் நீ) எண்ணினீர்கள்ظَنَّஎண்ணம்السَّوْءِ ۖۚகெட்டوَكُنْـتُمْநீங்கள் இருக்கின்றீர்கள்قَوْمًا ۢமக்களாகبُوْرًا‏அழிந்து போகின்ற
Bபல் ளனன்தும் அல் ல(ன்)ய் யன்கலிBபர் ரஸூலு வல்மு'மினூன இலா அஹ்லீஹிம் அBபத(ன்)வ் வ Zஜுய்யின தாலிக Fபீ குலூBபிகும் வ ளனன்தும் ளன்ன்னஸ் ஸவ்'இ வ குன்தும் கவ்மம் Bபூரா
முஹம்மது ஜான்
“(நீங்கள் கூறுவது போல்) அல்ல; (அல்லாஹ்வின்) தூதரும், முஃமின்களும், தங்கள் குடும்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி விட்டீர்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
மாறாக, (அல்லாஹ்வுடைய) தூதரும் அவரை நம்பிக்கை கொண்டவர்களும் (போரிலிருந்து) தங்கள் குடும்பத்தார்களிடம் ஒரு காலத்திலும் திரும்பி வரவே மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (ஆதலால்தான் போருக்கு நீங்கள் வரவில்லை.) இதுவே உங்கள் மனதில் அழகாக்கப்பட்டது. ஆதலால், நீங்கள் கெட்ட எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள்தான் அழிந்து போகும் மக்களாக இருந்தீர்கள்.''
IFT
(உண்மை நிலவரம் நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பதன்று.) மாறாக, இறைத்தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தங்களின் இல்லத்தாரிடம் ஒருபோதும் திரும்பி வரமாட்டார்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்தீர்கள். இந்தக் கருத்து உங்கள் உள்ளங்களுக்கு அழகாகத் தென்பட்டது. மேலும், நீங்கள் மிகப்பெரிய தீய எண்ணம் கொண்டுவிட்டீர்கள். நீங்கள் மிகவும் கொடிய உள்ளம் படைத்த மக்களாவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்கள் கூற்றைபோல்) அல்ல! (அல்லாஹ்வுடைய) தூதரும், (அவரை) விசுவாசங்கொண்டவர்களும் (யுத்தத்திலிருந்து) தங்கள் குடும்பத்தினரிடம் ஒரு போதும் திரும்பி வரவே மாட்டார்களென்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்கள், (ஆதலால்தான் யுத்தத்திற்கு நீங்கள் வரவில்லை) அ(வ்வாறு எண்ணிய)து உங்களுடைய இதயங்களில் அலங்கரமாக்கபட்டுமிருந்தது, நீங்கள் கெட்ட எண்ணத்தையே எண்ணிக் கொண்டுமிருந்தீர்கள், (அதனால்,) நீங்கள் தாம் அழிந்து விடும் சமூகத்தவராகவும் ஆகிவிட்டீர்கள் (என்று நபியே! நீர் கூறுவீராக!).
Saheeh International
But you thought that the Messenger and the believers would never return to their families, ever, and that was made pleasing in your hearts. And you assumed an assumption of evil and became a people ruined."
وَمَنْ لَّمْ یُؤْمِنْ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ فَاِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَعِیْرًا ۟
وَمَنْஎவர்(கள்)لَّمْ يُؤْمِنْۢநம்பிக்கை கொள்ளவில்லையோبِاللّٰهِஅல்லாஹ்வை(யும்)وَرَسُوْلِهٖஅவனது தூதரையும்فَاِنَّاۤநிச்சயமாக நாம்اَعْتَدْنَاதயார் செய்துள்ளோம்لِلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குسَعِيْرًا‏கொழுந்து விட்டெரியும் நரகத்தை
வ மல் லம் யு'மிம் Bபில்லாஹி வ ரஸூலிஹீ Fப-இன்னா அஃதத்னா லில்காFபிரீன ஸ'ஈரா
முஹம்மது ஜான்
அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளவில்லையோ - நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் உண்மையாகவே நம்பிக்கை கொள்ளவில்லையோ (அவன் நிராகரிப்பவன்தான். ஆகவே,) அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வை மற்றும் அவன் தூதரை விசுவாசங் கொள்ளவில்லையே அவர், (நிராகரிப்பவர்தான், ஆகவே,) அத்தகைய நிராகரிப்போருக்கு நரகத்தையே நிச்சயமாக நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.
Saheeh International
And whoever has not believed in Allah and His Messenger - then indeed, We have prepared for the disbelievers a Blaze.
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
وَلِلّٰهِஅல்லாஹ்விற்கேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕபூமியின்يَغْفِرُமன்னிக்கின்றான்لِمَنْ يَّشَآءُதான் நாடுகின்றவர்களைوَيُعَذِّبُஇன்னும் வேதனை செய்கின்றான்مَنْ يَّشَآءُ‌ ؕதான் நாடுகின்றவர்களைوَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏மகாகருணையாளனாக
வ லில்லாஹிஇ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; யக்Fபிரு லிம(ன்)ய் யஷா'உ வ யு'அத்திBபு ம(ன்)ய் யஷா'; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
முஹம்மது ஜான்
மேலும் வானங்களிடையவும், பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே! தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான்; தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான் - அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகிறான். அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, கருணையுடையவனாக இருக்கிறான்.
IFT
வானங்கள் மற்றும் பூமியினுடைய ஆட்சிக்கு உரிமையாளன் அல்லாஹ்வே ஆவான். அவன் நாடுகின்றவர்களை மன்னிக்கின்றான்; நாடுகின்றவர்களுக்குத் தண்டனை அளிக்கின்றான். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது! அவன் நாடியவர்களை மன்னித்து விடுகிறான், அவன் நாடியவர்களை வேதனையும் செய்கிறான், மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக இருக்கிறான்.
Saheeh International
And to Allah belongs the dominion of the heavens and the earth. He forgives whom He wills and punishes whom He wills. And ever is Allah Forgiving and Merciful.
سَیَقُوْلُ الْمُخَلَّفُوْنَ اِذَا انْطَلَقْتُمْ اِلٰی مَغَانِمَ لِتَاْخُذُوْهَا ذَرُوْنَا نَتَّبِعْكُمْ ۚ یُرِیْدُوْنَ اَنْ یُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ ؕ قُلْ لَّنْ تَتَّبِعُوْنَا كَذٰلِكُمْ قَالَ اللّٰهُ مِنْ قَبْلُ ۚ فَسَیَقُوْلُوْنَ بَلْ تَحْسُدُوْنَنَا ؕ بَلْ كَانُوْا لَا یَفْقَهُوْنَ اِلَّا قَلِیْلًا ۟
سَيَـقُوْلُகூறுவார்(கள்)الْمُخَلَّفُوْنَபின்தங்கியவர்கள்اِذَا انْطَلَقْتُمْநீங்கள் சென்றால்اِلٰى مَغَانِمَகனீமத்துகளை நோக்கிلِتَاْخُذُوْهَاஅவற்றை நீங்கள் எடுப்பதற்காகذَرُوْنَاஎங்களை விடுங்கள்نَـتَّبِعْكُمْ‌ ۚநாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்يُرِيْدُوْنَஅவர்கள் நாடுகின்றனர்اَنْ يُّبَدِّلُوْاஅவர்கள் மாற்றிவிடكَلٰمَபேச்சைاللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்قُلْநீர் கூறுவீராக!لَّنْ تَتَّبِعُوْنَاஅறவே நீங்கள் எங்களை பின்பற்ற மாட்டீர்கள்كَذٰلِكُمْஇப்படித்தான்قَالَகூறி இருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்مِنْ قَبْلُ‌ ۚஇதற்கு முன்னரேفَسَيَقُوْلُوْنَஅவர்கள் கூறுவார்கள்بَلْஇல்லைتَحْسُدُوْنَـنَا‌ ؕநீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்بَلْமாறாகكَانُوْاஇருக்கின்றனர்لَا يَفْقَهُوْنَவிளங்காதவர்களாகاِلَّاதவிரقَلِيْلًا‏குறைந்த விஷயங்களை
ஸ யகூலுல் முகல்ல Fபூன இதன் தலக்தும் இலா மகானிம லிதா'குதூஹா தரூனா னத்தBபிஃகும் யுரீதூன அ(ன்)ய் யுBபத்திலூ கலாமல்லாஹ்; குல் லன் தத்தBபி'ஊனா கதாலிகும் காலல் லாஹு மின் கBப்லு Fபஸ யகூலூன Bபல் தஹ்ஸுதூனன; Bபல் கானூ லா யFப்கஹூன இல்லா கலீலா
முஹம்மது ஜான்
போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின், (போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கி விட்டவர்கள், “நாங்களும் உங்களைப் பின்பற்றி வர அனுமதி கொடுங்கள்” என்று கூறுவார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட நாடுகிறார்கள்; “நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்” என்று (நபியே! அவர்களிடம்) நீர் சொல்லி விடுவீராக; ஆனால், அவர்கள்: “அல்ல! நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்” எனக் கூறுவார்கள்; அப்படியல்ல! அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி (பெரும்பாலானதை) அறிந்துணராமலே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! முன்னர் போருக்கு உம்முடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில், (உங்களை நோக்கி) ‘‘நாங்களும் உங்களைப் பின்பற்றிவர எங்களை (அனுமதித்து) விடுங்கள்'' என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றிவிடவே கருதுகிறார்கள். ஆகவே, நீர் அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களைப் பின்பற்றி வர வேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்'' என்றும் கூறுவீராக. அதற்கவர்கள், (‘‘அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை;'') மாறாக, நீங்கள்தான் நம்மீது பொறாமைகொண்டு (இவ்வாறு) கூறுகிறீர்கள் என்று கூறுவார்கள். மாறாக, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
IFT
போர்ச் செல்வங்களை (கனீமத்) கைப்பற்றுவதற்காக நீங்கள் செல்லும்போது, போருக்குச் செல்லாமல் பின்தங்கியிருந்த இவர்கள் உங்களிடம் திண்ணமாகக் கூறுவார்கள்: “எங்களையும் உங்களுடன் வருவதற்கு அனுமதியுங்கள்.” இவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மாற்றிவிட நினைக்கின்றார்கள். இவர்களிடம் நீர் தெளிவாகக் கூறிவிடும்: “எங்களுடன் வருவதற்கு உங்களால் ஒருபோதும் இயலாது. இதனை அல்லாஹ் முன்னரே கூறிவிட்டான்.” இதற்கு அவர்கள் கூறுவார்கள்: “இல்லை, நீங்கள்தாம் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்.” (ஆனால், விஷயம் பொறாமையைப் பற்றியதல்ல.) மாறாக, இவர்கள் உண்மை நிலையைக் குறைவாகவே புரிந்து கொள்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) பின்தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த வெற்றிப் பொருட்களின் பால்_அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் செல்லும்போது, “எங்களை விடுங்கள், நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்” என்று கூறுவார்கள், இவர்கள், அல்லாஹ்வுடைய வாக்குறுதியை மாற்றி விடவே நாடுகின்றார்கள், (ஆகவே, அவர்களிடம்,) “நீங்கள் எங்களைப் பின்பற்றி வர வேண்டாம், (இதற்கு) முன்னர் இவ்வாறே அல்லாஹ் கூறிவிட்டான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அதற்கு) அவர்கள், “இல்லை, நீங்கள் தான் நம்மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்” என்று கூறுவார்கள், அன்று! அவர்கள் சொற்பமாகவே அன்றி விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர்.
Saheeh International
Those who remained behind will say when you set out toward the war booty to take it, "Let us follow you." They wish to change the words of Allah. Say, "Never will you follow us. Thus did Allah say before." So they will say, "Rather, you envy us." But [in fact] they were not understanding except a little.
قُلْ لِّلْمُخَلَّفِیْنَ مِنَ الْاَعْرَابِ سَتُدْعَوْنَ اِلٰی قَوْمٍ اُولِیْ بَاْسٍ شَدِیْدٍ تُقَاتِلُوْنَهُمْ اَوْ یُسْلِمُوْنَ ۚ فَاِنْ تُطِیْعُوْا یُؤْتِكُمُ اللّٰهُ اَجْرًا حَسَنًا ۚ وَاِنْ تَتَوَلَّوْا كَمَا تَوَلَّیْتُمْ مِّنْ قَبْلُ یُعَذِّبْكُمْ عَذَابًا اَلِیْمًا ۟
قُلْகூறுவீராக!لِّلْمُخَلَّفِيْنَபின்தங்கியவர்களை நோக்கிمِنَ الْاَعْرَابِகிராமவாசிகளில்سَتُدْعَوْنَஅழைக்கப்படுவீர்கள்اِلٰى قَوْمٍகூட்டத்தின் பக்கம்اُولِىْ بَاْسٍபலமுடைய(வர்கள்)شَدِيْدٍகடுமையான(து)تُقَاتِلُوْنَهُمْஅவர்களிடம் நீங்கள் சண்டை செய்வதற்காகاَوْ يُسْلِمُوْنَ‌ ۚஅல்லது/அவர்கள் பணிந்து விடுவதற்காகفَاِنْ تُطِيْـعُوْاநீங்கள் கீழ்ப்படிந்தால்يُـؤْتِكُمُஉங்களுக்கு கொடுப்பான்اللّٰهُஅல்லாஹ்اَجْرًاகூலியைحَسَنًا‌ ۚஅழகிய(து)وَاِنْ تَتَـوَلَّوْاநீங்கள் விலகினால்كَمَا تَوَلَّيْـتُمْநீங்கள் விலகியதை போன்றுمِّنْ قَبْلُஇதற்கு முன்புيُعَذِّبْكُمْஉங்களை தண்டிப்பான்عَذَابًاதண்டனையால்اَ لِيْمًا‏வலி தரக்கூடிய(து)
குல் லில்முகல்லFபீன மினல் அஃராBபி ஸதுத்'அவ்ன இலா கவ்மின் உலீ Bபாஸின் ஷதீதின் துகாதி லூனஹும் அவ் யுஸ்லிமூன Fப இன் துதீ'ஊ யு'திகுமுல் லாஹு அஜ்ரன் ஹஸன(ன்)வ் வ இன் ததவல்லவ் கமா தவல்லய்தும் மின் கBப்லு யு'அத்திBப்கும் 'அதாBபன் அலீமா
முஹம்மது ஜான்
பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்: “நீங்கள் சீக்கிரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால், அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்; ஆனால் இதற்கு முன் நீங்கள் (போரிடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) பின்தங்கிய நாட்டுப்புறத்து அரபிகளை நோக்கி நீர் கூறுவீராக: ‘‘மிக பலசாலிகளான மக்களுடன் (போர்புரிய) அதிசீக்கிரத்தில் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவர்கள் முற்றிலும் கட்டுப்படும் வரை, நீங்கள் அவர்களுடன் போர்புரிய வேண்டியதிருக்கும். (இதில்) நீங்கள் (எனக்கு) கட்டுப்பட்டு நடப்பீர்களாயின், அல்லாஹ் உங்களுக்கு அழகான கூலியைக் கொடுப்பான். இதற்கு முன்னர் நீங்கள் (போர் செய்யாது) திரும்பிவிட்டபடி (அச்சமயம் போர் புரியாது) நீங்கள் திரும்பி விடுவீர்களாயின், அவன் உங்களை மிகக் கடினமாகத் துன்புறுத்தி வேதனை செய்வான்.”
IFT
பின்தங்கியிருந்து விட்ட இந்த நாட்டுப்புற அரபிகளிடம் நீர் கூறும்: “நீங்கள் மிக அதிக வலிமை கொண்ட மக்களுடன் போரிடுமாறு விரைவில் அழைக்கப்படுவீர்கள் நீங்கள் அவர்களுடன் போரிட வேண்டியிருக்கும். அல்லது அவர்கள் அடிபணிந்து விடுவார்கள். அப்போது ஜிஹாதுக்கான கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால், அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவான். அவ்வாறின்றி நீங்கள் முன்னர் செய்தது போன்று மீண்டும் புறக்கணித்தால், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அரபிகளிலுள்ள) நாட்டுப்புறத்து வாசிகளில் பின் தங்கிவிட்டவர்களிடம் “யுத்தம் புரிவதில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தார் பால் (யுத்தம் புரிய) நீங்கள் அடுத்து அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போர் செய்வீர்கள், அல்லது அவர்கள் (யுத்தம் செய்யாது) இஸ்லாத்திற்கு வந்து விடுவார்கள், ஆகவே, (இதில்) நீங்கள் எனக்குக் கீழ்ப்பட்டு நடப்பீர்களாயின் அல்லாஹ் உங்களுக்கு அழகான கூலியை வழங்குவான், இதற்கு முன்னர் நீங்கள் (யுத்தம் செய்யாது) புறக்கணித்தது போன்று புறக்கணித்தும் விடுவீர்களாயின், அவன் உங்களைத் துன்புறுத்தும் வேதனையாக வேதனை செய்வான்” என்று (நபியே! நீர்) கூறுவீராக!
Saheeh International
Say to those who remained behind of the bedouins, "You will be called to [face] a people of great military might; you may fight them, or they will submit. So if you obey, Allah will give you a good reward; but if you turn away as you turned away before, He will punish you with a painful punishment."
لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ ؕ وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ وَمَنْ یَّتَوَلَّ یُعَذِّبْهُ عَذَابًا اَلِیْمًا ۟۠
لَيْسَஇல்லைعَلَى الْاَعْمٰىகுருடர் மீதுحَرَجٌசிரமம்وَّلَاஇன்னும் இல்லைعَلَى الْاَعْرَجِஊனமானவர் மீதுحَرَجٌசிரமம்وَّلَاஇல்லைعَلَى الْمَرِيْضِநோயாளி மீதுحَرَجٌ‌ ؕசிரமம்وَمَنْஎவர்يُّطِعِகீழ்ப்படிவாரோاللّٰهَஅல்லாஹ்விற்கு(ம்)وَرَسُوْلَهٗஅவனது தூதருக்கும்يُدْخِلْهُஅவரை நுழைப்பான்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ‌ۚநதிகள்وَمَنْஎவர்يَّتَوَلَّவிலகுவாரோيُعَذِّبْهُஅவரை தண்டிப்பான்عَذَابًاதண்டனையால்اَلِيْمًا‏வலி தரக்கூடிய
லய்ஸ 'அலல் அஃமா ஹரஜு(ன்)வ் வலா 'அலல் அஃரஜி ஹரஜு(ன்)வ் வலா 'அலல் மரீளி ஹரஜ்' வ ம(ன்)ய் யுதில்'இல் லாஹ வ ரஸூலஹூ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ ம(ன்)ய் யதவல்ல யு'அத்திBப்ஹு 'அதாBபன் அலீமா
முஹம்மது ஜான்
(ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) குருடர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை; அன்றியும், எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.  
அப்துல் ஹமீது பாகவி
(போருக்கு வராததைப் பற்றிக்) குருடர் மீது ஒரு குற்றமுமில்லை; நொண்டி மீதும் ஒரு குற்றமுமில்லை; நோயாளி மீதும் ஒரு குற்றமுமில்லை. எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மெய்யாகவே கீழ்ப்படிந்து (போருக்கு உம்முடன்) வருகிறாரோ, அவரை (அல்லாஹ்) சொர்க்கங்களில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். எவர் (உமக்கு கீழ்ப்படியாமல் போருக்கு உம்முடன் வராது) புறக்கணிக்கிறாரோ, அவரை மிகக் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வான்.
IFT
ஆம்! குருடர், முடவர் மற்றும் நோயாளி ஆகியோர் (போருக்கு வரவில்லையென்றால் அவர்கள்) மீது குற்றமேதும் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் கீழ்ப்படிந்தால் அவரை அல்லாஹ் சுவனங்களில் புகுத்துவான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், எவரேனும் புறக்கணித்தால் அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(போர் செய்யாது தங்களிடங்களில் தங்கிவிடுவது) குருடர் மீது குற்றமில்லை, முடவரின் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை, எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவரை (அல்லாஹ்வாகிய) அவன் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், இன்னும், எவர் புறக்கணிக்கின்றரோ அவரை, (அல்லாஹ்வாகிய) அவன் துன்புறுத்தும் வேதனையாக வேதனை செய்வான்.
Saheeh International
There is not upon the blind any guilt or upon the lame any guilt or upon the ill any guilt [for remaining behind]. And whoever obeys Allah and His Messenger - He will admit him to gardens beneath which rivers flow; but whoever turns away - He will punish him with a painful punishment.
لَقَدْ رَضِیَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِیْنَ اِذْ یُبَایِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِیْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِیْنَةَ عَلَیْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِیْبًا ۟ۙ
لَـقَدْதிட்டவட்டமாகرَضِىَதிருப்தி அடைந்தான்اللّٰهُஅல்லாஹ்عَنِ الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களைاِذْ يُبَايِعُوْنَكَஉம்மிடம் அவர்கள் விசுவாச வாக்குறுதி செய்தபோதுتَحْتَ الشَّجَرَةِமரத்தின் கீழ்فَعَلِمَஅவன் அறிந்தான்مَا فِىْ قُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களில் உள்ளதைفَاَنْزَلَஆகவே, இறக்கினான்السَّكِيْنَةَஅமைதியைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَاَثَابَهُمْஇன்னும் வெகுமதியாக கொடுத்தான்فَتْحًاஒரு வெற்றியை(யும்)قَرِيْبًا ۙ‏சமீபமான(து)
லகத் ரளியல் லாஹு 'அனில் மு'மினீன இத் யுBபாயி 'ஊனக தஹ்தஷ் ஷஜரதி Fப'அலிம மா Fபீ குலூBபிஹிம் Fப அன்Zஜலஸ் ஸகீனத 'அலய்ஹிம் வ அதா Bபஹும் Fபத் ஹன் கரீBபா
முஹம்மது ஜான்
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.
அப்துல் ஹமீது பாகவி
அந்த மரத்தினடியில் உம்மிடம் (கைகொடுத்து) வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்.
IFT
இறைநம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) திட்டமாக அல்லாஹ் விசுவாசிகளை_அவர்கள் மரத்தடியில் அவர்களின் வாக்குறுதி செய்தபோது பொருந்திக்கொண்டான், பின்னர், அவர்களின் இதயங்களிலிருந்ததை நன்கறிந்து, அவர்கள் மீது அமைதியை இறக்கிவைத்தான், அன்றியும், சமீபமான வெற்றியையும் அவர்களுக்கு (அருட்கொடையாக)க் கொடுத்தான்.
Saheeh International
Certainly was Allah pleased with the believers when they pledged allegiance to you, [O Muhammad], under the tree, and He knew what was in their hearts, so He sent down tranquility upon them and rewarded them with an imminent conquest
وَّمَغَانِمَ كَثِیْرَةً یَّاْخُذُوْنَهَا ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟
وَّمَغَانِمَஇன்னும் கனீமத்துகளைكَثِيْرَةًஅதிகமானيَّاْخُذُوْنَهَا ؕஅவர்கள் அவற்றை பெறுவார்கள்وَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَزِيْزًاமிகைத்தவனாகحَكِيْمًا‏மகா ஞானவானாக
வ மகானிம கதீர த(ன்)ய் யாகுதூனஹா; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
முஹம்மது ஜான்
இன்னும் ஏராளமான போர்ப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(அந்த போரில்) ஏராளமான பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படி செய்தான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
ஏராளமான போர்ச்செல்வங்களையும் அவர்களுக்கு வழங்கினான். அவற்றை அவர்கள் (விரைவில்) பெற்றிடுவார்கள். அல்லாஹ் மிக வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (எதிரிகளிடமிருந்து வெற்றியின் மூலம் கிடைக்கும்) ஏராளமான வெற்றிப் பொருட்களை (அவர்களுக்கு அவன் அளித்தான்), அவற்றை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள், மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And much war booty which they will take. And ever is Allah Exalted in Might and Wise.
وَعَدَكُمُ اللّٰهُ مَغَانِمَ كَثِیْرَةً تَاْخُذُوْنَهَا فَعَجَّلَ لَكُمْ هٰذِهٖ وَكَفَّ اَیْدِیَ النَّاسِ عَنْكُمْ ۚ وَلِتَكُوْنَ اٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ وَیَهْدِیَكُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ۙ
وَعَدَவாக்களித்தான்كُمُஉங்களுக்குاللّٰهُஅல்லாஹ்مَغَانِمَகனீமத்துகளைكَثِيْرَةًஅதிகமானتَاْخُذُوْنَهَاஅவற்றை நீங்கள் பெறுவீர்கள்فَعَجَّلَவிரைவாக கொடுத்தான்لَكُمْஉங்களுக்குهٰذِهٖஇதைوَكَفَّஇன்னும் அவன் தடுத்தான்اَيْدِىَகரங்களைالنَّاسِமக்களின்عَنْكُمْ‌ۚஉங்களை விட்டும்وَلِتَكُوْنَஇருப்பதற்காகவும்اٰيَةًஇறை அத்தாட்சியாகلِّلْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குوَيَهْدِيَكُمْஉங்களை வழி நடத்துவதற்காகவும்صِرَاطًاபாதையில்مُّسْتَقِيْمًاۙ‏நேரான
வ'அதகுமுல் லாஹு ம கானிம கதீரதன் தா'குதூ னஹா Fப'அஜ்ஜல லகும் ஹாதிஹீ வ கFப்Fப அய்தியன் னாஸி 'அன்கும் வ லிதகூன ஆயதல் லில்மு'மினீன வ யஹ்தியகும் ஸிராதம் முஸ்தகீமா
முஹம்மது ஜான்
ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).
அப்துல் ஹமீது பாகவி
ஏராளமான பொருள்களை (போரில்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான். (அவற்றில்) இதை உங்களுக்கு அதிசீக்கிரத்திலும் கொடுத்துவிட்டான். (உங்களுக்கு எதிரான) மனிதர்களின் கைகளையும் உங்களைவிட்டுத் தடுத்துவிட்டான். இது நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஏற்பட்டது. அவனே உங்களை நேரான பாதையில் நடத்துவான்.
IFT
ஏராளமான போர்ச்செல்வங்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருக்கின்றான்; அவற்றை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்! மிக விரைவாக இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான். மேலும், மக்களின் கைகள் உங்களுக்கெதிராக உயர்வதைத் தடுத்துவிட்டான்; இது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்வதற்காகவும், அல்லாஹ், நேர்வழியின் பக்கம் செல்லும் பேற்றினை உங்களுக்கு வழங்குவதற்காகவும்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“யுத்தத்தில் (எதிரிகளிடமிருந்து வெற்றியின் மூலம் கிடைக்கும்) ஏராளமான வெற்றிப் பொருட்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான், நீங்கள் அதைக் கைப்பற்றுவீர்கள், ஆகவே, இதனை உங்களுக்குத் துரிதமாக்கிவிட்டான், மேலும், (உங்களுக்கு விரோதிகளான) மனிதர்களின் கைகளை உங்களை விட்டும் தடுத்தும் விட்டான், இது விசுவாசிகளுக்கு ஓர் அத்தாட்சியாக ஆவதற்காகவும், உங்களை நேரான பாதையில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்.)
Saheeh International
Allah has promised you much booty that you will take [in the future] and has hastened for you this [victory] and withheld the hands of people from you - that it may be a sign for the believers and [that] He may guide you to a straight path.
وَّاُخْرٰی لَمْ تَقْدِرُوْا عَلَیْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرًا ۟
وَّاُخْرٰىஇன்னும் வேறு பலلَمْ تَقْدِرُوْاநீங்கள் ஆற்றல் பெறவில்லைعَلَيْهَاஅவற்றின் மீதுقَدْதிட்டமாகاَحَاطَசூழ்ந்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்بِهَا‌ؕஅவற்றைوَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதும்قَدِيْرًا‏பேராற்றலுடையவனாக
வ உக்ரா லம் தக்திரூ 'அலய்ஹா கத் அஹாதல் லாஹு Bபிஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீரா
முஹம்மது ஜான்
மற்றொரு - (வெற்றியும்) இருக்கிறது; அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை; ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(பாரசீகம், ரோம் முதலிய தேசங்களில் உங்களுக்கு) மற்றொரு வெற்றி (இருக்கிறது.) அதற்கு நீங்கள் இன்னும் தகுதியுடையவர்களாகவில்லை; எனினும், அல்லாஹ் அதை சூழ்ந்து கொண்டிருக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவனாகவே இருக்கிறான்.
IFT
(இவை தவிர) இப்போது உங்களால் சாதிக்க முடியாத வேறு பல கனீமத் போர்ச் செல்வங்களையும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்துள்ளான். அல்லாஹ் அவற்றை முழுமையாகச் சூழ்ந்திருக்கின்றான். மேலும், அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பாரசீகம், ரோமாபுரி முதலிய நாடுகளில் வெற்றியாக) மற்றொன்றும் (உங்களுக்கு இருக்கிறது) அதற்கு நீங்கள் சக்தி பெறவில்லை, திட்டமாக, அல்லாஹ் அதனைச் சூழ்ந்து (அறிந்து) கொண்டிருக்கின்றான், மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
Saheeh International
And [He promises] other [victories] that you were [so far] unable to [realize] which Allah has already encompassed. And ever is Allah, over all things, competent.
وَلَوْ قٰتَلَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا لَوَلَّوُا الْاَدْبَارَ ثُمَّ لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟
وَلَوْ قَاتَلَـكُمُஉங்களிடம் போருக்கு வந்தால்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்لَوَلَّوُا الْاَدْبَارَபுறமுதுகு காட்டியிருப்பார்கள்ثُمَّபிறகுلَا يَجِدُوْنَகாணமாட்டார்கள்وَلِيًّاபாதுகாவலரையும்وَّلَا نَصِيْرًا‏உதவியாளரையும்
வ லவ் காதலகுமுல் லதீன கFபரூ ல வல்லவுல் அத்Bபார தும்ம லா யஜிதூன வலிய(ன்)வ்-வ லா னஸீரா
முஹம்மது ஜான்
நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின்வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்கள் (இச்சமயம்) உங்களுடன் போர் புரிவார்களாயின், அவர்களே புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர், தங்களுக்கு ஒரு பாதுகாவலனையும் உதவி செய்பவனையும் காணமாட்டார்கள்.
IFT
இந்த இறைநிராகரிப்பாளர்கள் (இந்த நேரத்தில்) உங்களுடன் போரிட்டிருந்தால் நிச்சயம் புறங்காட்டி ஓடியிருப்பார்கள். மேலும், எந்தப் பாதுகாவலரையும் உதவியாளரையும் பெற்றிருக்க மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிராகரிப்போர் உங்களுடன் போரிடுவார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின்வாங்கியிருப்பார்கள், பின்னர், அவர்கள், தங்களுக்குப் பாதுகாவலரையோ, உதவி செய்பவரையோ காணமாட்டார்கள்.
Saheeh International
And if those [Makkans] who disbelieve had fought you, they would have turned their backs [in flight]. Then they would not find a protector or a helper.
سُنَّةَ اللّٰهِ الَّتِیْ قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖۚ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِیْلًا ۟
سُنَّةَநடைமுறைப்படிதான்اللّٰهِஅல்லாஹ்வின்الَّتِىْ قَدْ خَلَتْஎது/சென்றுவிட்டதுمِنْ قَبْلُ ۖۚஇதற்கு முன்னர்وَلَنْ تَجِدَநீர் காணமாட்டீர்لِسُنَّةِநடைமுறைக்குاللّٰهِஅல்லாஹ்வின்تَبْدِيْلًا‏மாற்றத்தை(யும்)
ஸுன்னதல் லாஹில் லதீ கத் கலத் மின் கBப்லு வ லன் தஜித லிஸுன்னதில் லாஹி தBப்தீலா
முஹம்மது ஜான்
இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.
அப்துல் ஹமீது பாகவி
(நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படுகிற) அல்லாஹ்வுடைய வழிமுறை இதுதான். இதற்கு முன்னரும் (இவ்வாறே) நடந்திருக்கின்றன. ஆகவே, அல்லாஹ்வுடைய வழிமுறையில் நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.
IFT
முன்பிருந்தே நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் நியதியாகும் இது. மேலும், அல்லாஹ்வின் நியதியில் எந்த மாறுதலையும் நீர் காண மாட்டீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதற்கு) முன்னர் சென்றுவிட்டதாகிய வழிமுறை (நிராகரிப்போர் விஷயத்தில் இதுதான்) அல்லாஹ்வுடைய வழி முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காணவேமாட்டீர்.
Saheeh International
[This is] the established way of Allah which has occurred before. And never will you find in the way of Allah any change.
وَهُوَ الَّذِیْ كَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ وَاَیْدِیَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَیْهِمْ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟
وَهُوَ الَّذِىْஅவன்தான்كَفَّதடுத்தான்اَيْدِيَهُمْஅவர்களின்கரங்களைعَنْكُمْஉங்களை விட்டும்وَاَيْدِيَكُمْஇன்னும் உங்கள் கரங்களைعَنْهُمْஅவர்களை விட்டும்بِبَطْنِநடுப்பகுதியில்مَكَّةَமக்காவின்مِنْۢ بَعْدِ اَنْ اَظْفَرَஅவன் வெற்றி கொடுத்த பின்னர்كُمْஉங்களுக்குعَلَيْهِمْ‌ؕஅவர்கள் மீதுوَكَانَஇருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்பவற்றைبَصِيْرًا‏உற்று நோக்கியவனாக
வ ஹுவல் லதீ கFப்Fப அய்தியஹும் 'அன்கும் வ அய்தியகும் 'அன்ஹும் BபிBபத்னி மக்கத மிம் Bபஃதி அன் அள்Fபரகும் 'அலய்ஹிம்; வ கானல் லாஹு Bபிமா தஃமலூன Bபஸீரா
முஹம்மது ஜான்
இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
மக்காவின் சமீபமாக அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்துக் கொண்டான். (அவ்வாறே) உங்கள் கைகளையும் அவர்களை விட்டுத் தடுத்துக் கொண்டான். ஏனென்றால், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாகவே இருந்தான்.
IFT
அவனே, மக்காவின் பள்ளத்தாக்கில், அவர்களின் கைகளை உங்களை விட்டும், உங்களின் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான். அந்நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு வெற்றியையும் கொடுத்திருந்தான். மேலும், நீங்கள் செய்துகொண்டிருந்தவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், “மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், (அவ்வாறே) உங்களுடைய கைகளை அவர்களை விட்டும் அவனே தடுத்துவிட்டான், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்க்கிறவனாக இருக்கிறான்.
Saheeh International
And it is He who withheld their hands from you and your hands from them within [the area of] Makkah after He caused you to overcome them. And ever is Allah, of what you do, Seeing.
هُمُ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْیَ مَعْكُوْفًا اَنْ یَّبْلُغَ مَحِلَّهٗ ؕ وَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَآءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَـُٔوْهُمْ فَتُصِیْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ بِغَیْرِ عِلْمٍ ۚ لِیُدْخِلَ اللّٰهُ فِیْ رَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ۚ لَوْ تَزَیَّلُوْا لَعَذَّبْنَا الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
هُمُஅவர்கள்தான்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்وَصَدُّوْكُمْஇன்னும் உங்களைத் தடுத்தார்கள்عَنِ الْمَسْجِدِமஸ்ஜிதை விட்டுالْحَـرَامِபுனித(மானது)وَالْهَدْىَபலிப் பிராணியையும்مَعْكُوْفًاவழிபாட்டுக்காக கொண்டு வரப்பட்டاَنْ يَّبْلُغَஅது சேருவதை விட்டுمَحِلَّهٗ‌ ؕஅதனுடைய இடத்திற்குوَلَوْلَاஇல்லாமல் இருந்தால்رِجَالٌஆண்களும்مُّؤْمِنُوْنَநம்பிக்கை கொண்ட(வர்கள்)وَنِسَآءٌபெண்களும்مُّؤْمِنٰتٌநம்பிக்கை கொண்ட(வர்கள்)لَّمْ تَعْلَمُوْநீங்கள் அறியாமல்هُمْஅவர்களைاَنْ تَطَئُوْநீங்கள் தாக்கிவிடهُمْஅவர்களைفَتُصِيْبَكُمْஉங்களுக்கு ஏற்பட்டு விடும்مِّنْهُمْ مَّعَرَّةٌ ۢஅவர்களினால்/பழிப்புبِغَيْرِ عِلْمٍ ۚஅறியாமல்لِيُدْخِلَநுழைப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்فِىْ رَحْمَتِهٖதனது அருளில்مَنْ يَّشَآءُ‌ ۚநாடுகின்றவர்களைلَوْ تَزَيَّلُوْاஅவர்கள் நீங்கியிருந்தால்لَعَذَّبْنَاதண்டித்திருப்போம்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்களைمِنْهُمْஅவர்களில்عَذَابًاதண்டனையால்اَ لِيْمًا‏வலி தரக்கூடிய(து)
ஹுமுல் லதீன கFபரூ வ ஸத்தூகும் 'அனில்-மஸ்ஜிதில்-ஹராமி வல்ஹத்ய மஃகூFபன் அ(ன்)ய் யBப்லுக மஹில்லஹ்; வ லவ் லா ரிஜாலும் மு'மினூன வ னிஸா'உம் மு'மினாதுல் லம் தஃலமூஹும் அன் தத'ஊஹும் FபதுஸீBபகும் மின்ஹும் ம'அர்ரதும் Bபிகய்ரி 'இல்மின் லியுத் கிலல் லாஹு Fபீ ரஹ்மதிஹீ ம(ன்)ய் யஷா'; லவ் தZஜய்யலூ ல'அத்தBப்னல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபன் அலீமா
முஹம்மது ஜான்
“மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்த காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை; அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(நீங்கள் வெற்றிகொண்ட) இந்த மக்காவாசிகள்தான் (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து விட்டதுடன், உங்களையும் சிறப்புற்ற மஸ்ஜிது (என்னும் கஅபாவு)க்குச்செல்லாதும், குர்பானியையும் அது செல்ல வேண்டிய எல்லைக்குச் செல்லாதும் தடுத்து நிறுத்தியவர்கள். ஆயினும், அங்கு அவர்களுடன் நீங்கள் அறியாத நம்பிக்கைகொண்ட ஆண்களும், பெண்களும் இருந்தனர். (அச்சமயம் உங்கள் எதிரிகளை நீங்கள் வெட்டினால்,) இந்த நம்பிக்கையாளர்களும் (நீங்கள் அறியாமல்) உங்கள் காலில் மிதிபட்டு, அதன் காரணமாக நீங்கள் அறியாது உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்பது இல்லாதிருந்தால், (அச்சமயம் அவர்களுடன் போர்புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து, மக்காவில் நீங்கள் நுழையும்படியும் செய்திருப்பான். அப்பொழுது நீங்கள் மக்காவில் நுழையாது உங்களை அவன் தடுத்துக் கொண்டதெல்லாம், ஹுதைபியா உடன்படிக்கையின் மத்திய காலத்தில்) அல்லாஹ், தான் நாடியவர்களை (இஸ்லாம் என்னும்) தன் அருளில் புகுத்துவதற்காகவே ஆகும். (நீங்கள் அறியாத மக்காவிலுள்ள நம்பிக்கையாளர்கள்) அவர்களிலிருந்து விலகி இருப்பார்களேயானால், (அவர்கள் மீது போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து) அவர்களில் உள்ள நிராகரிப்பவர்களை நாம் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்திருப்போம்.
IFT
அவர்கள்தாம் இறைவனை நிராகரித்தவர்களும் புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது)! அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து, சிறப்புற்ற (கஅபா என்னும்) மஸ்ஜிதை விட்டு உங்களையும், குர்பானியையும்-அது செல்லவேண்டிய இடத்திற்குச் செல்லாது நிறுத்திவைக்கப்பட்டதாகயிருக்கும் நிலையில் _தடுத்தார்கள், இன்னும், அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாத விசுவாசங்கொண்ட ஆண்களும் விசுவாசங்கொண்ட பெண்களும் (எதிரியின் மத்தியில்) இருக்க அறியாதவர்களாக இருக்கும் நிலையில் நீங்கள் அவர்களை மிதித்து, அதனால் அவர்களின் மூலம் ஏதேனும் சிரமம் உங்களுக்கு ஏற்பட்டுவிடும் என்பது இல்லையானால், (போர் செய்ய உங்களுக்கு அனுமதி வழங்கியிருப்பான், அவ்வாறு போர்செய்ய அனுமதிக்காதது ஏனெனில்) அல்லாஹ் தான் நாடியவர்களை தன் அருளில் புகச் செய்வதற்காகவேயாகும்; அவர்கள் (நிராகரிப்போரிலிருந்து) பிரிந்திருப்பார்களேயானால் (அவர்கள் மீது யுத்தம் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து) அவர்களிலுள்ள நிராகரிப்போரை மிகத் துன்புறுத்தும் வேதனையாக நாம் வேதனை செய்திருப்போம்.
Saheeh International
They are the ones who disbelieved and obstructed you from al-Masjid al-haram while the offering was prevented from reaching its place of sacrifice. And if not for believing men and believing women whom you did not know - that you might trample [i.e., kill] them and there would befall you because of them dishonor without [your] knowledge - [you would have been permitted to enter Makkah]. [This was so] that Allah might admit to His mercy whom He willed. If they had been apart [from them], We would have punished those who disbelieved among them with painful punishment
اِذْ جَعَلَ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ قُلُوْبِهِمُ الْحَمِیَّةَ حَمِیَّةَ الْجَاهِلِیَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلٰی رَسُوْلِهٖ وَعَلَی الْمُؤْمِنِیْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰی وَكَانُوْۤا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟۠
اِذْ جَعَلَஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்!الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்فِىْ قُلُوْبِهِمُதங்கள் உள்ளங்களில்الْحَمِيَّةَதிமிரைحَمِيَّةَதிமிரைالْجَـاهِلِيَّةِஅறியாமைக்காலفَاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்سَكِيْنَـتَهٗதன் அமைதியைعَلٰى رَسُوْلِهٖதனது தூதர் மீதும்وَعَلَىமீதும்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்وَاَلْزَمَهُمْஇன்னும் அவர்களுக்கு அவசியமாக்கினான்كَلِمَةَவார்த்தையைالتَّقْوٰىஇறையச்சத்தின்وَ كَانُوْۤاஇன்னும் இருந்தார்கள்اَحَقَّமிகத் தகுதியுடைவர்களாகبِهَاஅதற்குوَاَهْلَهَا‌ؕஇன்னும் அதற்கு சொந்தக்காரர்களாகوَكَانَ اللّٰهُஅல்லாஹ் இருக்கின்றான்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمًا‏நன்கறிந்தவனாக
இத் ஜ'அலல் லதீன கFபரூ Fபீ குலூBபிஹிமுல் ஹமிய்யத ஹமிய்யதல் ஜாஹிலிய்யதி Fப அன்Zஜலல் லாஹு ஸகீனதஹூ 'அலா ரஸூலிஹீ வ 'அலல் மூமினீன வ அல்Zஜமஹும் கலிமதத் தக்வா வ கானூ அஹக்க Bபிஹா வ அஹ்லஹா; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம
முஹம்மது ஜான்
(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் - அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட வேண்டுமென்ற) மூடத்தனமான வைராக்கியத்தை நிலை நிறுத்திக்கொண்ட சமயத்தை நினைத்துப் பாருங்கள். அச்சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும், தன் ஆறுதலையும், உறுதியையும் இறக்கி வைத்துப் பரிசுத்த வாக்கியத்தின் மீது அவர்களை உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாகவும், அதை அடைய வேண்டியவர்களாகவும் இருந்தார்கள். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
IFT
(இதே நோக்கத்திற்காக) இந்த இறைநிராகரிப்பாளர்கள் தங்களின் உள்ளங்களில் வைராக்கியத்தை மூட வைராக்கியத்தை ஏற்படுத்திக் கொண்டபோது அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் நிம்மதியை இறக்கியருளினான். மேலும், நம்பிக்கையாளர்களை இறையச்சமுள்ள வாக்கைப் பேணி நடப்போராய் விளங்கச் செய்தான். அவர்கள்தாம் அதற்கு மிகவும் அருகதையுடையோராயும், உரிமையுடையோராயும் இருந்தார்கள். அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரித்தோர் தங்களுடைய இதயங்களில் (உங்களை வேருடன் அழித்துவிட வேண்டுமென்ற) வைராக்கியத்தை _அறியாமைக் காலத்து மூடத்தனமான வைராக்கியத்தை _ஆக்கி கொண்ட சமயத்தில் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், விசுவாசங்ககொண்டவர்கள் மீதும், தன்னுடைய அமைதியை இறக்கி வைத்தான், பயபக்தியுடைய வார்த்தையை (லா இலாஹ இல்லல்லாஹ்வை) அவர்களுக்கு நிலையாக்கியும் வைத்தான், அவர்கள் அதற்கு மிக உரியவர்களாகவும், அதை உடையவர்களாகவும் இருந்தார்கள், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Saheeh International
When those who disbelieved had put into their hearts chauvinism - the chauvinism of the time of ignorance. But Allah sent down His tranquility upon His Messenger and upon the believers and imposed upon them the word of righteousness, and they were more deserving of it and worthy of it. And ever is Allah, of all things, Knowing.
لَقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْیَا بِالْحَقِّ ۚ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۙ مُحَلِّقِیْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِیْنَ ۙ لَا تَخَافُوْنَ ؕ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِیْبًا ۟
لَـقَدْதிட்டவட்டமாகصَدَقَஉண்மையாக நிகழ்த்தினான்اللّٰهُஅல்லாஹ்رَسُوْلَهُதனது தூதருக்குالرُّءْيَاகனவைبِالْحَـقِّ‌ ۚயதார்த்தத்தில்لَـتَدْخُلُنَّநிச்சயமாக நீங்கள் நுழைவீர்கள்الْمَسْجِدَமஸ்ஜிதில்الْحَـرَامَபுனிதமான(து)اِنْ شَآءَநாடினால்اللّٰهُஅல்லாஹ்اٰمِنِيْنَۙபாதுகாப்பு பெற்றவர்களாகمُحَلِّقِيْنَசிரைத்தவர்களாகرُءُوْسَكُمْஉங்கள் தலை(முடி)களைوَمُقَصِّرِيْنَۙஇன்னும் குறைத்தவர்களாகلَا تَخَافُوْنَ‌ؕபயப்பட மாட்டீர்கள்فَعَلِمَஅவன் அறிவான்مَا لَمْ تَعْلَمُوْاநீங்கள் அறியாதவற்றைفَجَعَلَஏற்படுத்தினான்مِنْ دُوْنِ ذٰلِكَஅதற்கு முன்பாகفَتْحًاஒரு வெற்றியைقَرِيْبًا‏சமீபமான
லகத் ஸதகல் லாஹு ரஸூலஹுர் ரு'யா Bபில்ஹக்க், லதத்குலுன்னல் மஸ்ஜிதல்-ஹராம இன் ஷா'அல் லாஹு ஆமினீன முஹல்லிகீன ரு'ஊஸகும் வ முகஸ்ஸிரீன லா தகாFபூன Fப'அலிம மா லம் தஃலமூ Fபஜ'அல மின் தூனி தாலிக Fபத்ஹன் கரீBபா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும்;, (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்,
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்து விட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர்களாகவும், உங்கள் தலை முடிகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்படமாட்டீர்கள். (அப்போது) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான்.
IFT
உண்மை யாதெனில், அல்லாஹ் தன் தூதருக்கு உண்மையான கனவையே காட்டியிருந்தான். அதுவோ முற்றிலும் சத்தியத்திற்கு ஏற்பவே இருந்தது. அல்லாஹ் நாடினால் நிச்சயம் நீங்கள் சங்கைமிகு பள்ளிவாசலில் முழு அமைதியுடன் நுழைவீர்கள்; உங்கள் தலைமுடியை மழிப்பீர்கள் அல்லது குறைப்பீர்கள்; மேலும், உங்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. நீங்கள் எதை அறியாதிருந்தீர்களோ அதை அவன் அறிந்திருந்தான். எனவே அந்தக் கனவு நிறைவேறுவதற்கு முன்பாக அண்மையிலுள்ள இந்த வெற்றியை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக அல்லாஹ் உண்மையைக் கொண்டு தன்னுடைய தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மைப்படுத்தி விட்டான், அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் (மஸ்ஜிதுல் ஹராமாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர்களாகவும், உங்களுடைய தலை(முடி)களைச் சிரைத்துக்கொண்டவர்களாகவும், (முடியை) குறைத்துக்கொண்டவர்களாகவும் நுழைவீர்கள், (அச்சமயம்) நீங்கள் (எவருக்கும்) பயப்படமாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருந்ததை (முன்னதாகவே அல்லாஹ்) அறிந்திருந்தான், பின்னர், இதனையன்றி சமீபத்தில் ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கினான்.
Saheeh International
Certainly has Allah showed to His Messenger the vision [i.e., dream] in truth. You will surely enter al-Masjid al-haram, if Allah wills, in safety, with your heads shaved and [hair] shortened, not fearing [anyone]. He knew what you did not know and has arranged before that a conquest near [at hand].
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ
هُوَ الَّذِىْۤஅவன்தான்اَرْسَلَஅனுப்பினான்رَسُوْلَهٗதனது தூதரைبِالْهُدٰىநேர்வழியைக் கொண்டுوَدِيْنِஇன்னும் மார்க்கத்தைالْحَـقِّஉண்மையானلِيُظْهِرَهٗஅதை மேலோங்க வைப்பதற்காகعَلَى الدِّيْنِமார்க்கங்களை விடكُلِّهٖ‌ؕஎல்லாوَكَفٰىபோதுமான(வன்)بِاللّٰهِஅல்லாஹ்வேشَهِيْدًا ؕ‏சாட்சியாவான்
ஹுவல் லதீ அர்ஸல ரஸூலஹூ Bபில்ஹுதா வ தீனில் ஹக்கி லியுள்ஹிரஹூ 'அலத் தீனி குல்லிஹ்; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
முஹம்மது ஜான்
அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.
அப்துல் ஹமீது பாகவி
அவனே, தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்தியமான மார்க்கத்தைக் கொண்டும் அதை எல்லா மார்க்கங்களைவிட மேலோங்க வைப்பதற்காக அனுப்பி வைத்தான். இதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான்.
IFT
அல்லாஹ்தான் தன்னுடைய தூதரை வழிகாட்டுதலுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். அவர், அந்த மார்க்கத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக! இந்த உண்மைக்கு அல்லாஹ்வின் சாட்சி போதுமானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால் தன்னுடைய தூதரை நேர் வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான், சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (தன் தூதரை அனுப்பி வைத்தான்), இன்னும் (இதற்கு) சாட்சியாக இருக்க அல்லாஹ் போதுமானவன்.
Saheeh International
It is He who sent His Messenger with guidance and the religion of truth to manifest it over all religion. And sufficient is Allah as Witness.
مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ ؕ وَالَّذِیْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَی الْكُفَّارِ رُحَمَآءُ بَیْنَهُمْ تَرٰىهُمْ رُكَّعًا سُجَّدًا یَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا ؗ سِیْمَاهُمْ فِیْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ ؕ ذٰلِكَ مَثَلُهُمْ فِی التَّوْرٰىةِ ۛۖۚ وَمَثَلُهُمْ فِی الْاِنْجِیْلِ ۛ۫ۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْـَٔهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰی عَلٰی سُوْقِهٖ یُعْجِبُ الزُّرَّاعَ لِیَغِیْظَ بِهِمُ الْكُفَّارَ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِیْمًا ۟۠
مُحَمَّدٌமுஹம்மதுرَّسُوْلُ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின் தூதர்وَالَّذِيْنَ مَعَهٗۤஅவருடன் இருக்கின்றவர்கள்اَشِدَّآءُகடினமானவர்கள்عَلَى الْكُفَّارِநிராகரிப்பாளர்கள்மீதுرُحَمَآءُகருணையாளர்கள்بَيْنَهُمْதங்களுக்கு மத்தியில்تَرٰٮهُمْநீர் அவர்களைக்காண்பீர்رُكَّعًاருகூஃசெய்தவர்களாகسُجَّدًاசுஜூது செய்தவர்களாகيَّبْتَغُوْنَஅவர்கள் விரும்புகிறார்கள்فَضْلًاஅருளை(யும்)مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَرِضْوَانًا‌பொருத்தத்தையும்سِيْمَاهُمْஅவர்களின் தோற்றம்فِىْ وُجُوْهِهِمْஅவர்களின் முகங்களில்مِّنْ اَثَرِஅடையாளமாகالسُّجُوْدِ‌ ؕசுஜூதின்ذٰ لِكَஇதுمَثَلُهُمْஅவர்களின் தன்மையாகும்فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚதவ்றாத்தில் கூறப்பட்டوَمَثَلُهُمْஇன்னும் அவர்களின் தன்மையாவதுفِى الْاِنْجِيْلِ ۛۚஇன்ஜீலில் கூறப்பட்டكَزَرْعٍஒரு விளைச்சலைப் போலாகும்اَخْرَجَவெளியாக்கியதுشَطْئَـهٗதனது காம்பைفَاٰزَرَهٗஇன்னும் அதை பலப்படுத்தியதுفَاسْتَغْلَظَபிறகு அது தடிப்பமாக ஆனதுفَاسْتَوٰىஅது உயர்ந்து நின்றுعَلٰى سُوْقِهٖதனது தண்டின் மீதுيُعْجِبُகவர்கிறதுالزُّرَّاعَவிவசாயிகளைلِيَـغِيْظَஅவன் ரோஷமூட்டுவதற்காகبِهِمُஅவர்கள் மூலமாகالْكُفَّارَ‌ ؕநிராகரிப்பாளர்களைوَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களுக்குوَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைمِنْهُمْஅவர்களில்مَّغْفِرَةًமன்னிப்பை(யும்)وَّاَجْرًا عَظِيْمًا‏மகத்தானகூலியையும்
முஹம்மதுர் ரஸூலுல் லாஹ்; வல்லதீன ம'அஹூ அஷித்தா'உ 'அலல் குFப்Fபாரி ருஹமா'உ Bபய்னஹும் தராஹும் ருக்க'அன் ஸுஜ்ஜத(ன்)ய் யBப்தகூன Fபள்லம் மினல் லாஹி வ ரிள்வான ஸீமாஹும் Fபீ வுஜூஹிஹிம் மின் அதரிஸ் ஸுஜூத்; தாலிக மதலுஹும் Fபித் தவ்ராஹ்; வ மதலுஹும் Fபில் இன்ஜீலி கZஜர்'இன் அக்ரஜ ஷத் 'அஹூ Fப 'ஆZஜரஹூ Fபஸ்தக்லள Fபஸ்தவா 'அலா ஸூகிஹீ யுஃஜிBபுத் Zஜுர்ரா'அ லியகீள Bபிஹிமுல் குFப்Fபார்; வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மின்ஹும் மக்Fபிரத(ன்)வ் வ அஜ்ரன் 'அளீமா
முஹம்மது ஜான்
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய திருத்தூதராவார்கள். (அவரும்)அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள்.குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீர் காண்பீர். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் (எந்த நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம் பணி(ந்து வணங்கு)வதின் அடையாளம் இருக்கும். இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கிறது. அப்பயிர் (பசுமையாகி, வளர்ந்து) உறுதிப்படுகிறது. பின்னர், அது தடித்துக் கனமாகிறது. பின்னர், விவசாயிகளுக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து,) அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கிறது. இவர்களைக் கொண்டு நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பொருட்டு (அந்த நம்பிக்கையாளர்களை படிப்படியாக அபிவிருத்திக்குக் கொண்டுவருகிறான்). அவர்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கிறான்.
IFT
முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்களைப் பொறுத்துக் கடினமானவர்களும் தங்களுக்கிடையே கருணைமிக்கவர்களுமாவர். அவர்கள் ருகூவு, ஸுஜூது செய்பவர்களாயும், அல்லாஹ்வின் அருளையும், திருப்தியையும் தேடுபவர்களாயும் இருப்பதை நீர் காண்பீர். அவர்களின் முகங்களில் ஸுஜூதின் அடையாளங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் அவர்கள் அறிந்து கொள்ளப்படுகிறார்கள். இது தவ்ராத்தில் காணப்படுகின்ற அவர்களின் தன்மையாகும். மேலும், இன்ஜீலில் அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள உவமை வருமாறு: ஒரு பயிர்; அது முதலில் குருத்தை வெளிப்படுத்தியது. பின்னர் அதை வலுப்படுத்தியது; பின்னர் அது பருத்தது. பிறகு, அது தன்னுடைய தண்டின் மீது செவ்வனே நின்றது. விவசாயிகளை அது மகிழ்விப்பதற்காகவும், அவர்கள் பூத்துக் குலுங்குவதைக் கண்டு நிராகரிப்பாளர்கள் பொறாமை அடைவதற்காகவும்தான்! இக்குழுவினரில் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முஹம்மது, அல்லாஹ்வின் தூதராவார்; அவருடன் இருப்பவர்களோ, நிராகரிப்போர் மீது மிகக் கண்டிப்பானவர்கள். தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள், (குனிந்து) ருகூஉ செய்பவர்களாகவும், (சிரம் பணிந்து) ஸுஜுது செய்கிறவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர், அல்லாஹ்விடமிருந்து பேரருளையும், (அவனுடைய) பொருத்தத்தையும் தேடுவார்கள், அவர்களுடைய அடையாளம், சிரம் பணிவதன் அடையாளத்தினால் அவர்களுடைய முகங்களில் இருக்கும், இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் உதாரணமாகும், இன்னும், இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றதாகும், அது தன் முளையை வெளிப்படுத்தி, பின்னர் அதை பலப்படுத்துகின்றது, பின்னர், அது (தடித்து) கனமாகின்றது பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது, விவசாயிகளை ஆச்சரியமடையச் செய்கிறது, இவர்களைக் கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதற்காக (இவ்வாறு உதாரணங்கள் கூறுகிறான்), அவர்களில் விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான்.
Saheeh International
Muhammad is the Messenger of Allah; and those with him are forceful against the disbelievers, merciful among themselves. You see them bowing and prostrating [in prayer], seeking bounty from Allah and [His] pleasure. Their sign is in their faces from the effect of prostration [i.e., prayer]. That is their description in the Torah. And their description in the Gospel is as a plant which produces its offshoots and strengthens them so they grow firm and stand upon their stalks, delighting the sowers - so that He [i.e., Allah] may enrage by them the disbelievers. Allah has promised those who believe and do righteous deeds among them forgiveness and a great reward.