5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)

மதனீ, வசனங்கள்: 120

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ۬ اُحِلَّتْ لَكُمْ بَهِیْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا یُتْلٰی عَلَیْكُمْ غَیْرَ مُحِلِّی الصَّیْدِ وَاَنْتُمْ حُرُمٌ ؕ اِنَّ اللّٰهَ یَحْكُمُ مَا یُرِیْدُ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاَوْفُوْاநிறைவேற்றுங்கள்بِالْعُقُوْدِ‌ ؕஉடன்படிக்கைகளைاُحِلَّتْஆகுமாக்கப்பட்டனلَـكُمْஉங்களுக்குبَهِيْمَةُ الْاَنْعَامِகால்நடைகள்اِلَّاதவிரمَاஎவைيُتْلٰىஓதிக்காட்டப்படுகிறதுعَلَيْكُمْஉங்கள் மீதுغَيْرَ مُحِلِّىஆகுமாக்காதீர்கள்الصَّيْدِவேட்டையாடுவதைوَاَنْـتُمْநீங்கள்حُرُمٌ‌ ؕஇஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَحْكُمُசட்டமாக்குகிறான்مَاஎதைيُرِيْدُ‏நாடுகிறான்
யா அய்யுஹல் லதீன ஆமனூ அவ்Fபூ Bபில்'உகூத்; உஹில்லத் லகும் Bபஹீமதுல் அன்'ஆமி இல்லா மா யுத்லா 'அலய்கும் கய்ர முஹில்லிஸ் ஸய்தி வ அன்தும் ஹுரும்; இன்னல் லாஹ யஹ்குமு மா யுரீத்
முஹம்மது ஜான்
முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். மேலும், உங்களுக்கு (பின்வரும் 3ஆம் வசனத்தில்) ஓதி காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டிருக்கின்றன. (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம்; வேட்டையாடலாம். எனினும்) நீங்கள் இஹ்ராம் (ஹஜ், உம்ராவில்) உடையவர்களாக இருக்கும் சமயத்தில் (இவற்றை) வேட்டையாடுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்குக்) கட்டளையிடுகிறான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுங்கள். பின்னால் உங்களுக்குக் கூறப்படுபவை தவிர கால்நடை வகையைச் சேர்ந்த அனைத்து பிராணிகளும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதென்று கருதிவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவதைக் கட்டளையிடுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளே! நீங்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளை(ப் பூரணமாக) நிறைவேற்றுங்கள், (அன்றி) உங்களுக்கு (இனி) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர, (மற்ற ஆடு, மாடு, ஒட்டகை முதலிய) கால் நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருக்கின்றன, (அவற்றை எந்நேரத்திலும் புசிக்கலாம், வேட்டையாடலாம், எனினும் உம்ரா, ஹஜ்ஜு யாத்திரையின் நிமித்தம்) நீங்கள் இஹ்ராமுடைய நிலையிலிருக்கும் சமயத்தில் (இவைகளை) வேட்டையாடுவதை, உங்களுக்கு ஆகுமாக்கிக் கொள்ளாதவர்களாக (இருப்பது கடமையாகும்). நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதை (உங்களுக்கு)க் கட்டளையிடுகிறான்.
Saheeh International
O you who have believed, fulfill [all] contracts. Lawful for you are the animals of grazing livestock except for that which is recited to you [in this Qur’an] - hunting not being permitted while you are in the state of ihram. Indeed, Allah ordains what He intends.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآىِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْیَ وَلَا الْقَلَآىِٕدَ وَلَاۤ آٰمِّیْنَ الْبَیْتَ الْحَرَامَ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ؕ وَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ؕ وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ اَنْ تَعْتَدُوْا ۘ وَتَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَالتَّقْوٰی ۪ وَلَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَالْعُدْوَانِ ۪ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تُحِلُّوْاஆகுமாக்காதீர்கள்شَعَآٮِٕرَஅடையாளங்களைاللّٰهِஅல்லாஹ்வின்وَلَا الشَّهْرَஇன்னும் மாதத்தைالْحَـرَامَபுனிதமானதுوَلَا الْهَدْىَஇன்னும் குர்பானியைوَلَا الْقَلَٓاٮِٕدَஇன்னும் மாலையிடப்பட்ட குர்பானிகளைوَلَاۤ آٰمِّيْنَஇன்னும் நாடுபவர்களைالْبَيْتَ(கஅபா)ஆலயத்தைالْحَـرَامَபுனிதமானதுيَبْـتَغُوْنَதேடியவர்களாகفَضْلًاஅருளைمِّنْ رَّبِّهِمْதங்கள் இறைவனிடமிருந்துوَرِضْوَانًا ؕஇன்னும் பொருத்தத்தைوَاِذَا حَلَلْتُمْநீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால்فَاصْطَادُوْا‌ ؕவேட்டையாடுங்கள்وَلَا يَجْرِمَنَّكُمْஉங்களை தூண்ட வேண்டாம்شَنَاٰنُதுவேஷம்قَوْمٍசமுதாயத்தின்اَنْ صَدُّوஅவர்களை தடுத்த காரணத்தால்كُمْஉங்களைعَنِ الْمَسْجِدِமஸ்ஜிதை விட்டுالْحَـرَامِபுனிதமானதுاَنْ تَعْتَدُوْا‌ ۘநீங்கள் வரம்புமீறுவதுوَتَعَاوَنُوْاஒருவருக்கொருவர் உதவுங்கள்عَلَى الْبِرِّநன்மைக்குوَالتَّقْوٰى‌இன்னும் இறையச்சம்وَلَا تَعَاوَنُوْاஒருவருக்கொருவர் உதவாதீர்கள்عَلَى الْاِثْمِபாவத்திற்குوَالْعُدْوَانِ‌இன்னும் அநியாயம்وَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‏தண்டனை
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துஹில்லூ ஷ'ஆ 'இரல் லாஹி வ லஷ் ஷஹ்ரல் ஹராம வ லல் ஹத்ய வ லல் கலா'இத வலா ஆம்மீனல் Bபய்தல் ஹராம யBப்தகூன Fபள்லம் மிர் ரBப்Bபிஹிம் வ ரிள்வானா; வ இதா ஹலல்தும் Fபஸ்தாதூ; வலா யஜ்ரிமன்னகும் ஷன ஆனு கவ்மின் அன் ஸத்தூகும் 'அனில் மஸ்ஜிதில்-ஹராமி அன் தஃததூ; வ த'ஆவனூ 'அலல்Bபிர்ரி வத்தக்வா; வலா த'ஆவனூ 'அலல் இத்மி வல்'உத்வான்; வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
முஹம்மது ஜான்
முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும், குர்பானிகளையும், குர்பானிக்காக அடையாளம் கட்டப்பெற்றவைற்றையும், தங்களுடைய இறைவனின் அருளையும் திருப்பொருத்தத்தையும் நாடி கண்ணியமான (அவனுடைய) ஆலயத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்து விட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம்; இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களையும் (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற புனித மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (குர்பானிகளுக்காக) மாலை கட்டப்பட்டவற்றையும், தங்கள் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் அடையக்கருதி கண்ணியமான அவனுடைய ஆலயத்தை நாடிச் செல்பவர்களையும் (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் இஹ்ராமை நீக்கிவிட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம். கண்ணியமான மஸ்ஜிதை விட்டு உங்களைத் தடுத்த வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்கள்மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டாதிருக்கவும். மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவழிபாட்டுக்குரிய சின்னங்களை அவமதிக்காதீர்கள். சங்கைக்குரிய எந்த மாதத்தையும் போர் புரிவதற்கு அனுமதிக்கப்பட்டதாய் கொள்ளாதீர்கள்! இன்னும் குர்பானிக்குரிய பிராணிகளையும், இறைவனுக்காக நேர்ந்துவிடப்பட்டவை என்பதற்கு அறிகுறியாக கழுத்தில் பட்டை கட்டப்பட்ட பிராணிகளையும் துன்புறுத்தாதீர்கள்! இன்னும் தன்னுடைய இறைவனின் திருவருளையும், திருப்பொருத்தத்தையும் பெற எண்ணி புண்ணியத்தலம் (கஅபா) நோக்கிச் செல்வோரை சிரமத்திற்குள்ளாக்காதீர்கள்! ஆனால், இஹ்ராமின் நிலையிலிருந்து விலகி விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். மேலும் பாருங்கள்: மஸ்ஜிதுல் ஹராமுக்குள் செல்ல முடியாதவாறு உங்கள் வழியினை அடைத்துவிட்ட கூட்டத்தார் மீதுள்ள வெறுப்பு, அவர்களுக்கு எதிராக நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் அளவுக்கு உங்களைக் கொதித்தெழும்படிச் செய்துவிடக்கூடாது. எப்பணி நல்லதாகவும் இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள்! ஆனால் எது பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். மேலும், இறைவனை அஞ்சுங்கள்! நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக் கடுமையானது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வின் (மார்க்க) அடையாளங்களையும், (ரஜப்,துல்கஅதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிப் பிராணியையும், (குர்பானிகளுக்காக கழுத்தில்) அடையாளம் கட்டப்பட்டவைகளையும் தங்கள் இரட்சகனின் அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக கண்ணியமான (அவன்) இல்லத்தை நாடிச் செல்வோரையும் (தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். இன்னும், நீங்கள் (உங்கள்) இஹ்ராமை களைந்து விட்டால், அப்பொழுது (முன்னர் தடுக்கப்பட்டவைகளை) நீங்கள் வேட்டையாடிக் கொள்ளுங்கள், கண்ணியமான மஸ்ஜிதுக்குச் செல்லவிடாது, உங்களைத் தடுத்துக் கொண்ட சமூகத்தார் மீது (உங்களுக்கு)ள்ள பகைமை (அவர்கள் மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டிவிடவும் வேண்டாம். இன்னும், நன்மைக்கும், (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள், பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம், இன்னும் அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடினமானன்.
Saheeh International
O you who have believed, do not violate the rites of Allah or [the sanctity of] the sacred month or [neglect the marking of] the sacrificial animals and garlanding [them] or [violate the safety of] those coming to the Sacred House seeking bounty from their Lord and [His] approval. But when you come out of ihram, then [you may] hunt. And do not let the hatred of a people for having obstructed you from al-Masjid al-haram lead you to transgress. And cooperate in righteousness and piety, but do not cooperate in sin and aggression. And fear Allah; indeed, Allah is severe in penalty.
حُرِّمَتْ عَلَیْكُمُ الْمَیْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّیَةُ وَالنَّطِیْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّیْتُمْ ۫ وَمَا ذُبِحَ عَلَی النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ؕ ذٰلِكُمْ فِسْقٌ ؕ اَلْیَوْمَ یَىِٕسَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ دِیْنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ؕ اَلْیَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِیْنَكُمْ وَاَتْمَمْتُ عَلَیْكُمْ نِعْمَتِیْ وَرَضِیْتُ لَكُمُ الْاِسْلَامَ دِیْنًا ؕ فَمَنِ اضْطُرَّ فِیْ مَخْمَصَةٍ غَیْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍ ۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
حُرِّمَتْவிலக்கப்பட்டனعَلَيْكُمُஉங்களுக்குالْمَيْتَةُசெத்ததுوَالدَّمُஇன்னும் இரத்தம்وَلَحْمُஇன்னும் இறைச்சிالْخِنْزِيْرِபன்றிوَمَاۤஇன்னும் எதுاُهِلَّபெயர் கூறப்பட்டதுلِغَيْرِஅல்லாதவற்றிற்காகاللّٰهِஅல்லாஹ்بِهٖஅதைوَالْمُنْخَنِقَةُஇன்னும் கழுத்து நெருக்கிச் செத்ததுوَالْمَوْقُوْذَةُஇன்னும் அடிப்பட்டுச் செத்ததுوَالْمُتَرَدِّيَةُஇன்னும் விழுந்து செத்ததுوَالنَّطِيْحَةُஇன்னும் கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததுوَمَاۤஇன்னும் எதைاَكَلَதின்றதுالسَّبُعُமிருகங்கள்اِلَّاதவிரمَاஎதைذَكَّيْتُمْஅறுத்தீர்கள்وَمَا ذُ بِحَஇன்னும் எது/அறுக்கப்பட்டதுعَلَىமீதுالنُّصُبِநடப்பட்டவை, சிலைகள்وَاَنْ تَسْتَقْسِمُوْاஇன்னும் பாகம் பிரித்துக் கொள்வதுبِالْاَزْلَامِ‌ ؕஅம்புகளைக்கொண்டுذٰ لِكُمْஇவைفِسْقٌ‌ ؕ اَلْيَوْمَபாவம்/இன்றுيَٮِٕسَநம்பிக்கை இழந்தனர்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْவிட்டுدِيْـنِكُمْஉங்கள் மார்க்கம்فَلَا تَخْشَوஆகவே பயப்படாதீர்கள்هُمْஅவர்களைوَاخْشَوْنِ‌ ؕஎன்னை பயப்படுங்கள்اَ لْيَوْمَஇன்றுاَكْمَلْتُமுழுமையாக்கினேன்لَـكُمْஉங்களுக்குدِيْنَكُمْஉங்கள் மார்க்கத்தைوَاَ تْمَمْتُஇன்னும் முழுமையாக்கினேன்عَلَيْكُمْஉங்கள் மீதுنِعْمَتِىْஎன் அருளைوَرَضِيْتُஇன்னும் திருப்தியடைந்தேன்لَـكُمُஉங்களுக்குالْاِسْلَامَஇஸ்லாமைدِيْنًا‌ ؕமார்க்கமாகفَمَنِஆகவே எவர்اضْطُرَّநிர்ப்பந்திக்கப்பட்டார்فِىْ مَخْمَصَةٍகடுமையான பசியில்غَيْرَ مُتَجَانِفٍசாயாதவராகلِّاِثْمٍ‌ۙபாவத்தின் பக்கம்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏‏மகா கருணையாளன்
ஹுர்ரிமத் 'அலய்குமுல் மய்தது வத்தமு வ லஹ்முல் கின்Zஜீரி வ மா உஹில்ல லிகிரில் லாஹி Bபிஹீ வல்முன் கனி கது வல் மவ்கூதது வல் முதரத் தியது வன்ன தீஹது வ மா அகலஸ் ஸBபு'உ இல்லா மா தக்கய்தும் வமா துBபிஹ 'அலன் னுஸுBபி வ அன் தஸ்தக்ஸிமூ Bபில் அZஜ்லாம்; தாலிகும் Fபிஸ்க்; அல்யவ்ம ய'இஸல் லதீன கFபரூ மின் தீனிகும் Fபலா தக்-ஷவ்ஹும் வக் ஷவ்ன்; அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து 'அலய்கும் னிஃமதீ வ ரளீது லகுமுல் இஸ்லாம தீனா; Fபமனிள்துர்ர Fபீ மக்மஸதின் கய்ர முதஜானிFபில் லி இத்மின் Fப இன்னல்லாஹ கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
 (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! தானாக) செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவையும், அடிப்பட்டுச் செத்ததும், (மேலிருந்து) விழுந்து செத்ததும், கழுத்து நெருக்கிச் செத்ததும், கொம்பால் குத்தப்பட்டுச் செத்ததும், (சிங்கப் பல்லும், வீர நகமுமுள்ள மாமிசம் தின்னும் மிருகங்களாகிய சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) ஐவாய் மிருகங்கள் கடித்(துச் செத்)தவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன. (எனினும், இம்மிருகங்கள் வேட்டையாடிய) அவற்றில் (உயிரோடிருப்பவற்றில்) முறைப்படி (பிஸ்மில்லாஹ் சொல்லி) அறுக்கப்பட்டவற்றைத் தவிர. (அவ்வாறு அறுக்கப்பட்டவற்றைப் புசிக்கலாம். பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (ஸ்தம்பம், கொடி, பாவட்டா, சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவையும், அம்பு எய்து (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன). இவை அனைத்தும் பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்றைய தினம் இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (ஒரு சிறிதும்) பயப்பட வேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன் (அங்கீகரித்துக் கொண்டேன்). எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது. ஏனென்றால்), நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னிப்பவன், (அவர் மீது) பெரும் கருணை காட்டுபவன் ஆவான்.
IFT
செத்த பிராணியும், இரத்தமும், பன்றி இறைச்சியும், இறைவனல்லாத மற்றவர் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியும், கழுத்து நெரிக்கப்பட்டும், அடிபட்டும், உயரத்திலிருந்து வீழ்ந்தும், மோதப்பட்டும் இறந்த பிராணிகளும் உங்களுக்குத் தடுக்கப்பட்டவையாகும். மேலும், கொடிய விலங்குகளால் கடித்துக் குதறப்பட்ட பிராணிகளும் (தடுக்கப்பட்டவையாகும்.) எவற்றை உயிருடன் நீங்கள் அறுத்துவிட்டீர்களோ அவற்றைத் தவிர! இன்னும் பலி பீடங்கள் மீது அறுக்கப்பட்ட பிராணியும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறி பார்ப்பதன் மூலம் விதிகளை நிர்ணயிப்பதும் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பாவமான செயல்களாகும். இன்று உங்களுடைய தீன்வாழ்க்கை நெறி குறித்து நிராகரிப்போர் முற்றிலும் நிராசை அடைந்துவிட்டிருக்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். மாறாக எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்களுடைய தீனை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட் கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய தீன்வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு விட்டேன். (எனவே, உங்கள் மீது விதிக்கப்பட்ட ஹலால், ஹராமெனும் வரம்புகளைப் பேணி நடந்து வாருங்கள்.) ஆயினும் கடும் பசியினால் நிர்பந்திக்கப்பட்டு பாவம் செய்யும் நாட்டமின்றி ஒருவர் அவற்றில் ஏதாவதொன்றைப் புசித்து விட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பெருங்கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! தானாகச்) செத்ததும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும் அல்லாஹ்வை அல்லாதவருக்காக (அறுப்புப்பிராணிகளில்) எதற்கு பெயர் கூற(ப்பட்டு விட)ப் பட்டதோ, அதுவும் கழுத்து நெறிபட்டுச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், (மேலிருந்து) கீழே விழுந்து செத்ததும், கொம்பால் குத்திக் கொண்டு செத்ததும், (சிங்கம், புலி, சிறுத்தை போன்ற)வன விலங்குகள் தின்றவையும் உங்களுக்கு விலக்கப் பட்டிருக்கின்றன, (உண்ண அனுமதிக்கப்பட்டவற்றில் அவை உயிரோடிருந்து “பிஸ்மில்லாஹ்” சொல்லி) நீங்கள் அறுத்தவைகளைத் தவிர, (அவற்றை உண்ணலாம், இதர வணக்கங்கள் செய்வதற்காக) நடப்பட்டவைகளுக்காக அறுக்கப் பட்டவைகளும், அம்புகள் மூலம் (அவற்றை எய்துகுறி கேட்டு) நீங்கள் பாகம் பிரித்துக் கொள்வதும்- பாவமாகும், இன்றையத்தினம் நிராகரிப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டனர், ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம், எனக்கே பயப்படுங்கள், இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன், ஆகவே, எவர் பாவத்தின்பால் சாயாதவராக, பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப் பட்டவைகளைப் புசித்து) விட்டால்- (அது குற்றமாகாது). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Prohibited to you are dead animals, blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allah, and [those animals] killed by strangling or by a violent blow or by a head-long fall or by the goring of horns, and those from which a wild animal has eaten, except what you [are able to] slaughter [before its death], and those which are sacrificed on stone altars, and [prohibited is] that you seek decision through divining arrows. That is grave disobedience. This day those who disbelieve have despaired of [defeating] your religion; so fear them not, but fear Me. This day I have perfected for you your religion and completed My favor upon you and have approved for you Islam as religion. But whoever is forced by severe hunger with no inclination to sin - then indeed, Allah is Forgiving and Merciful.
یَسْـَٔلُوْنَكَ مَاذَاۤ اُحِلَّ لَهُمْ ؕ قُلْ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ۙ وَمَا عَلَّمْتُمْ مِّنَ الْجَوَارِحِ مُكَلِّبِیْنَ تُعَلِّمُوْنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ ؗ فَكُلُوْا مِمَّاۤ اَمْسَكْنَ عَلَیْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَیْهِ ۪ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
يَسْأَلُوْنَكَகேட்கின்றனர்/உம்மிடம்مَاذَاۤஎவைاُحِلَّஆகுமாக்கப்பட்டனلَهُمْ‌ؕஅவர்களுக்குقُلْகூறுவீராகاُحِلَّஆகுமாக்கப்பட்டனلَـكُمُஉங்களுக்குالطَّيِّبٰتُ‌ ۙநல்லவைوَمَاஇன்னும் எவைعَلَّمْتُمْகற்றுக் கொடுத்தீர்கள்مِّنَ الْجَـوَارِحِமிருகங்களில்مُكَلِّبِيْنَவேட்டையாட பயிற்சி அளியுங்கள்تُعَلِّمُوْنَهُنَّகற்று கொடுங்கள்/அவற்றுக்குمِمَّاஎவற்றிலிருந்துعَلَّمَكُمُகற்பித்தான்/உங்களுக்குاللّٰهُ‌அல்லாஹ்فَكُلُوْاஆகவே புசியுங்கள்مِمَّاۤஎவற்றிலிருந்துاَمْسَكْنَஅவை தடுத்தனعَلَيْكُمْஉங்களுக்காகوَاذْكُرُواஇன்னும் கூறுங்கள்اسْمَபெயரைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْهِ‌அவற்றின் மீதுوَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَرِيْعُதீவிரமானவன்الْحِسَابِ‏கணக்கிடுவதில்
யஸ்'அலூனக மாதா உஹில்ல லஹும்; குல் உஹில்ல லகுமுத்தய்யிBபாது வ மா'அல்லம்தும் மினல் ஜவாரிஹி முகல்லிBபீன து'அல்லிமூனஹுன்னமிம்மா 'அல்லமகுமுல் லாஹு Fபகுலூ மிம்மா அம்ஸக்ன 'அலய்கும் வத்குருஸ் மல் லாஹி 'அலய்ஹ்; வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்கள் (உண்பதற்குத் ) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட)வை எவை என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: உங்களுக்கு ஹலாலானவை, சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! புசிக்க) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘(சுத்தமான) நல்லவை அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் (நாய், சிறுத்தை போன்ற) மிருகங்களுக்கு(ம், ராஜாளி போன்ற பறவைகளுக்கும்) நீங்கள் வேட்டையாடக் கற்பித்து அவை (வேட்டையாடி,) உங்களுக்காகத் தடுத்(து வைத்)திருப்பவற்றை, (அவை இறந்துவிட்டபோதிலும்) நீங்கள் புசிக்கலாம். (அவையும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன.) (எனினும், அவற்றை வேட்டைக்கு விடும் பொழுது ‘பிஸ்மில்லாஹ்' என்று) அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்.
IFT
மக்கள் எவை தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன என்று உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “தூய்மையான அனைத்துப் பொருட்களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.” மேலும் எந்த வேட்டைப் பிராணிகளுக்கு நீங்கள் வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கின்றீர்களோ அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அறிவைக் கொண்டு அவற்றுக்கு வேட்டையாடக் கற்றுத் தந்திருக்கிறீர்கள் பிறகு அந்த வேட்டைப் பிராணிகள் உங்களுக்காகப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம். ஆயினும் அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரை உச்சரியுங்கள்! இன்னும் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு மாறு செய்ய அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உண்ணுவதற்கு) தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டவை எவை, என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறுவீராக! (சுத்தமான) நல்ல பொருட்கள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன, இன்னும், வேட்டையாட நீங்கள் பயிற்சி அளித்தவர்களாக இருக்க – அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்தவற்றிலிருந்து அவைகளுக்கு நீங்கள் (வேட்டையாட) கற்றுக் கொடுப்பவர்களாக இருக்க (நாய், சிறுத்தை, ராஜாளி போன்ற) வேட்டைப் பிராணிகளில் நீங்கள் கற்றுக்கொடுத்த(வைகள் வேட்டையாடிய)தும் (உங்களுக்கு உண்ணுவது ஆகுமாக்கப்பட்டுள்ளது). எனவே, அவை வே(ட்டையாடி, தாம் புசிக்காமல்) உங்களுக்காகப் பிடித்து வைத்திருப்பவற்றிலிருந்து (அவை இறந்து விட்டபோதிலும்) நீங்கள் புசியுங்கள்; (எனினும், வேட்டைக்கு அனுப்பும்பொழுது, ‘பிஸ்மில்லாஹ்’ என்று) அவற்றின்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்; இன்னும், அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ், கேள்வி கணக்குக் கேட்பதில் மிக துரிதமானவன்.
Saheeh International
They ask you, [O Muhammad], what has been made lawful for them. Say, "Lawful for you are [all] good foods and [game caught by] what you have trained of hunting animals which you train as Allah has taught you. So eat of what they catch for you, and mention the name of Allah upon it, and fear Allah." Indeed, Allah is swift in account.
اَلْیَوْمَ اُحِلَّ لَكُمُ الطَّیِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ حِلٌّ لَّكُمْ ۪ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ؗ وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ وَلَا مُتَّخِذِیْۤ اَخْدَانٍ ؕ وَمَنْ یَّكْفُرْ بِالْاِیْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ ؗ وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟۠
اَلْيَوْمَஇன்றுاُحِلَّஆகுமாக்கப்பட்டனلَـكُمُஉங்களுக்குالطَّيِّبٰتُ‌ ؕநல்லவைوَطَعَامُஇன்னும் உணவும்الَّذِيْنَஎவர்களின்اُوْتُوْاகொடுக்கப்பட்டார்கள்الْكِتٰبَவேதம்حِلٌّஆகுமானதுلَّـکُمْஉங்களுக்குوَطَعَامُكُمْஇன்னும் உங்கள் உணவுحِلٌّஆகுமானதுلَّهُمْ‌அவர்களுக்குوَالْمُحْصَنٰتُகற்புள்ள பெண்கள்مِنَஇருந்துالْمُؤْمِنٰتِஈமான் கொண்ட பெண்கள்وَالْمُحْصَنٰتُஇன்னும் கற்புள்ள பெண்கள்مِنَ الَّذِيْنَஎவர்களில்اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْـكِتٰبَவேதம்مِنْ قَبْلِكُمْஉங்களுக்குமுன்னர்اِذَاۤ اٰتَيْتُمُوநீங்கள்கொடுத்தால்هُنَّஅவர்களுக்குاُجُوْرமணக்கொடைகளைهُنَّஅவர்களுடையمُحْصِنِيْنَகற்புள்ளவர்களாகغَيْرَஅன்றிمُسَافِحِيْنَவிபச்சாரர்களாகوَلَا مُتَّخِذِىْۤஇன்னும் ஆக்காதவர்களாகاَخْدَانٍ‌ؕஇரகசிய தோழிகளைوَمَنْஎவர்يَّكْفُرْமறுக்கிறார்بِالْاِيْمَانِநம்பிக்கை கொள்ளفَقَدْதிட்டமாகحَبِطَஅழிந்து விடும்عَمَلُهٗஅவருடைய செயல்وَهُوَஅவர்فِى الْاٰخِرَةِமறுமையில்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
அல்யவ்ம உஹில்ல லகுமுத் தய்யிBபாது வ த'ஆமுல் லதீன ஊதுல் கிதாBப ஹில்லுல் லகும் வ த'ஆமுகும் ஹில்லுல் லஹும் வல் முஹ்ஸனாது மினல் மு'மினாதி வல்முஹ்ஸனாது மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் இதா ஆதய்துமூஹுன்ன உஜூரஹுன்ன முஹ்ஸினீன கய்ர முஸாFபிஹீன வலா முத்தகிதீ அக்தான்; வ மய் யக்Fபுர் Bபில் ஈமானி Fபகத் ஹBபித 'அமலுஹூ வ ஹுவ Fபில் ஆகிரதி மினல் காஸிரீன்
முஹம்மது ஜான்
இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) இன்றுமுதல் நல்லவை அனைத்தும் உங்களுக்கு (உண்பதற்கு) ஆகுமாக்கப்பட்டு விட்டன. வேதத்தை உடையவர்களின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே! உங்கள் உணவும் அவர்களுக்கு ஆகுமானதே! நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்ட கற்புடைய பெண்களையும், விபச்சாரிகளாகவோ வைப்பாட்டிகளாகவோ கொள்ளாமல், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் கொடுத்து (திருமணம் செய்து) கொள்வது (உங்களுக்கு ஆகும்). எவன் நம்பிக்கை கொண்டதன் பின்னர் (இந்த சட்டங்களை) நிராகரிக்கிறானோ அவனுடைய நற்செயல்கள் நிச்சயமாக அழிந்துவிடும். மறுமையிலோ அவன் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில்தான் இருப்பான்.
IFT
இன்று உங்களுக்குத் தூய்மையான பொருட்கள் அனைத்தும் அனுமதிக்க (ஹலாலாக்க)ப்பட்டிருக்கின்றன. வேதம் அருளப்பட்டவர்களின் உணவு உங்களுக்கும், உங்களது உணவு அவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், நல்லொழுக்கமுள்ள பெண்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களே; அவர்கள் ஈமான் இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி; உங்களுக்கு முன்னர் வேதம் அருளப்பட்டவர்களின் சமுதாயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஆனால், அவர்களுக்குரிய மஹ்ரைக் கொடுத்து, அவர்களைத் திருமணம் செய்துகொண்டு அவர்களின் பாதுகாவலர்களாய் நீங்கள் திகழவேண்டுமே தவிர, அவர்களுடன் விபச்சாரத்திலோ கள்ளக் காதலிலோ ஈடுபடக்கூடாது. மேலும், எவன் ஈமானின் வழியில் செல்ல மறுக்கின்றானோ அவனது வாழ்வின் அனைத்துச் செயல்களும் வீணாகிவிடும். மேலும், அவன் மறுமையில் பேரிழப்புக்கு ஆளாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசங் கொண்டோரே!) இன்று (முதல், உணவுவகைகளில்) நல்லவைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டார்களே அத்தகையோரின் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்; உங்களுடைய உணவும் அவர்களுக்கு ஆகுமானதாகும்; விசுவாசங்கொண்ட கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களையும், நீங்கள் விபச்சாரம் செய்யாதவர்களாகவும், வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்கும் நிலையில், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மஹர்களையும் அவர்களுக்கு, நீங்கள் கொடுத்துவிட்டால் (திருமணம் செய்துகொள்வதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது), மேலும், எவர் விசுவாசம் கொண்டதன் பின்னர், (இவற்றை) நிராகரிக்கின்றாரோ அவருடைய நற்செயல் திட்டமாக அழிந்துவிடும், மேலும் அவர் மறுமையில் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் (உள்ளவராக) இருப்பார்.
Saheeh International
This day [all] good foods have been made lawful, and the food of those who were given the Scripture is lawful for you and your food is lawful for them. And [lawful in marriage are] chaste women from among the believers and chaste women from among those who were given the Scripture before you, when you have given them their due compensation, desiring chastity, not unlawful sexual intercourse or taking [secret] lovers. And whoever denies the faith - his work has become worthless, and he, in the Hereafter, will be among the losers.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَی الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَیْدِیَكُمْ اِلَی الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَی الْكَعْبَیْنِ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ مِّنْهُ ؕ مَا یُرِیْدُ اللّٰهُ لِیَجْعَلَ عَلَیْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰكِنْ یُّرِیْدُ لِیُطَهِّرَكُمْ وَلِیُتِمَّ نِعْمَتَهٗ عَلَیْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِذَا قُمْتُمْநீங்கள் நின்றால்اِلَى الصَّلٰوةِதொழுகைக்குفَاغْسِلُوْاகழுகுங்கள்وُجُوْهَكُمْஉங்கள் முகங்களைوَاَيْدِيَكُمْஇன்னும் கைகளை/உங்கள்اِلَىவரைالْمَرَافِقِமுழங்கைகள்وَامْسَحُوْاஇன்னும் தடவுங்கள்بِرُءُوْسِكُمْஉங்கள் தலைகளில்وَاَرْجُلَكُمْஇன்னும் உங்கள் கால்களைاِلَىவரைالْـكَعْبَيْنِ‌ ؕஇரு கணுக்கால்கள்وَاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்جُنُبًاமுழுக்காளிகளாகفَاطَّهَّرُوْا‌ ؕநன்கு சுத்தமாகுங்கள்وَاِنْ كُنْتُمْஇன்னும் நீங்கள் இருந்தால்مَّرْضَىٰۤநோயாளிகளாகاَوْஅல்லதுعَلٰى سَفَرٍபயணத்தில்اَوْஅல்லதுجَآءَவந்தார்اَحَدٌஒருவர்مِّنْكُمْஉங்களில்مِّنَஇருந்துالْغَآٮِٕطِமலஜல பாதைاَوْஅல்லதுلٰمَسْتُمُஉறவு கொண்டீர்கள்النِّسَآءَபெண்களுடன்فَلَمْ تَجِدُوْاபெறவில்லைمَآءًதண்ணீரைفَتَيَمَّمُوْاநாடுங்கள்صَعِيْدًاமண்ணைطَيِّبًاசுத்தமானதுفَامْسَحُوْاஇன்னும் தடவுங்கள்بِوُجُوْهِكُمْமுகங்களை/உங்கள்وَاَيْدِيْكُمْஇன்னும் கைகளை/உங்கள்مِّنْهُ‌ ؕஅதில்مَا يُرِيْدُநாடமாட்டான்اللّٰهُஅல்லாஹ்لِيَجْعَلَஆக்குவதற்குعَلَيْكُمْஉங்கள் மீதுمِّنْ حَرَجٍசிரமத்தைوَّلٰـكِنْஎனினும்يُّرِيْدُநாடுகிறான்لِيُطَهِّرَكُمْஉங்களைபரிசுத்தமாக்கوَ لِيُتِمَّஇன்னும் முழுமையாக்கنِعْمَتَهٗதன் அருளைعَلَيْكُمْஉங்கள் மீதுلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கும்தும் இலஸ் ஸலாதி Fபக்ஸிலூ வுஜூஹகும் வ அய்தியகும் இலல் மராFபிகி வம்ஸஹூ Bபிரு'ஊஸிகும் வ அர்ஜுலகும் இலல் கஃBபய்ன்; வ இன் குன்தும் ஜுனுBபன் Fபத்தஹ்ஹரூ; வ இன் குன்தும் மர்ளா அவ்'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன்னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம்மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும் மின்ஹ்; ம யுரீதுல் லாஹு லியஜ்'அல 'அலய்கும் மின் ஹரஜி(ன்)வ் வலாகி(ன்)ய் யுரீது லியுதஹ்ஹிரகும் வ லியுதிம்ம னிஃமதஹூ 'அலய்கும் ல'அல்லகும் தஷ்குரூன்
முஹம்மது ஜான்
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். (உங்கள் கையில் நீரைத் தொட்டு) உங்கள் தலையை(த் தடவி) ‘மஸஹு' செய்துகொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் (கை கால்களை மட்டும் கழுவினால் போதாது. உடல் முழுவதையும் கழுவி) தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜல பாதைக்குச் சென்று வந்திருந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதை)க்கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குக் கஷ்டத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும், அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகிறான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்களுடைய கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்; இன்னும் உங்களுடைய தலைகளை (நீரால்) தடவிக் கொள்ளுங்கள்! மேலும், உங்கள் கால்களை இரு கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் ஜுனுபாளியாக* இருந்தால் (குளித்துத்) துப்புரவாகி விடுங்கள். ஆனால், நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்துவிட்டு வந்திருந்தால், அல்லது பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்! அதில் உங்கள் கைகளைப் பதித்து முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! உங்கள் வாழ்க்கையில் எந்தச் சிரமத்தையும் உண்டு பண்ண அல்லாஹ் விரும்பவில்லை. ஆயினும் உங்களைத் தூய்மை செய்யவும் உங்கள் மீது தனது அருட்பேற்றை நிறைவு செய்யவுமே அவன் விரும்புகின்றான். இதனால் நீங்கள் நன்றி செலுத்தக்கூடியவர்களாய்த் திகழக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால், (அதற்கு முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (‘மஸ்ஹு’ செய்து) கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்.) அன்றியும், நீங்கள் குளிக்கக் கடமைப்பட்டோராக இருந்தால் குளித்துப் பரிசுத்தமாகிக் கொள்ளுங்கள், இன்னும், நீங்கள் நோயாளிகளாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜலம் கழிக்கச் சென்று வந்திருந்தாலும் அல்லது நீங்கள் பெண்களை (உடலுறவின் மூலம்) தீண்டியிருந்தாலும், அப்பொழுது (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை நீங்கள் பெறாவிடில், பரிசுத்தமான மண்ணை நாடுங்கள், பின்னர், அதிலிருந்து உங்களுடைய முகங்களையும், உங்களது கைகளையும் தடவி (தயம்மும் செயது)க் கொள்ளுங்கள், அல்லாஹ் உங்களுக்கு நெருக்கடியைத் தர நாடவில்லை, எனினும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள்மீது பூரணமாக்கி வைக்கவுமே நாடுகின்றான்.
Saheeh International
O you who have believed, when you rise to [perform] prayer, wash your faces and your forearms to the elbows and wipe over your heads and wash your feet to the ankles. And if you are in a state of janabah, then purify yourselves. But if you are ill or on a journey or one of you comes from the place of relieving himself or you have contacted women and do not find water, then seek clean earth and wipe over your faces and hands with it. Allah does not intend to make difficulty for you, but He intends to purify you and complete His favor upon you that you may be grateful.
وَاذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ وَمِیْثَاقَهُ الَّذِیْ وَاثَقَكُمْ بِهٖۤ ۙ اِذْ قُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا ؗ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
وَاذْکُرُوْநினைவு கூறுங்கள்انِعْمَةَஅருளைاللهِஅல்லாஹ்வின்عَلَیْکُمْஉங்கள் மீதுوَمِیْثَاقَهُஇன்னும் அவனுடைய உறுதிமொழியைالَّذِیْ وَاثَقَکُمْஎது/உங்களிடம் உறுதி மொழி வாங்கினான்بِهۤ ۙஅதைاِذْபோதுقُلْتُمْகூறினீர்கள்سَمِعْنَاசெவிமடுத்தோம்وَاَطَعْنَاஇன்னும் கீழ்ப்படிந்தோம்وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللهَ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللهَஅல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளவற்றைالصُّدُوْرِ‏நெஞ்சங்களில்
வத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் வ மீதாகஹுல் லதீ வாதககும் Bபிஹீ இத் குல்தும் ஸமிஃனா வ அதஃனா வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
முஹம்மது ஜான்
மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் உங்களிடம் வாக்குறுதி வாங்கிய பொழுது நீங்கள் அதை உறுதிப்படுத்தி, “நாங்கள் செவி மடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்” என்று நீங்கள் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) இருதயங்களிலுள்ள (இரகசியங்களை) யெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளையும், அவன் (உங்களிடம்) வாக்குறுதி வாங்கிய பொழுது அதை நீங்கள் உறுதிப்படுத்தி ‘‘நாங்கள் செவிசாய்த்தோம். (உனக்கு) கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் ஞாபகப்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
இன்னும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேற்றினை நினைத்துப் பாருங்கள். மேலும் உங்களிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட உறுதிமொழியை மறந்து விடாதீர்கள். அப்பொழுது நீங்கள் “செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்” என்று கூறியிருந்தீர்கள். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ், இதயங்களில் மறைந்திருப்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யூதர்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் கொடைகளையும், இன்னும் “நாங்கள் செவிசாய்த்தோம், நாங்கள் (உனக்குக் கீழப்படிந்தோம்” என்று நீங்கள் கூறிய சமயத்தில், எதைக் கொண்டு அவன் உங்களிடம் உறுதிமொழி எடுத்துள்ளானோ அத்தகைய அவனுடைய உறுதிமொழியையும் நினைவுகூருங்கள், இன்னும் அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள், நிச்சயமாக அல்லாஹ் (அனைவரின்) நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிகிறவன்.
Saheeh International
And remember the favor of Allah upon you and His covenant with which He bound you when you said, "We hear and we obey"; and fear Allah. Indeed, Allah is Knowing of that within the breasts.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ ؗ وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰۤی اَلَّا تَعْدِلُوْا ؕ اِعْدِلُوْا ۫ هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰی ؗ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேكُوْنُوْاஇருங்கள்قَوَّا امِيْنَநிலைநின்றவர்களாகلِلّٰهِஅல்லாஹ்வுக்காகشُهَدَآءَசாட்சி கூறுபவர்களாகبِالْقِسْطِ‌நீதிக்குوَلَا يَجْرِمَنَّكُمْஉங்களை தூண்ட வேண்டாம்شَنَاٰنُதுவேஷம்قَوْمٍஒரு சமுதாயத்தின்عَلٰٓىமீதுاَ لَّا تَعْدِلُوْا‌ ؕநீங்கள் நீதமாக நடக்காதிருக்கاِعْدِلُوْاநீதமாக இருங்கள்هُوَஅதுاَقْرَبُமிக நெருக்கமானதுلِلتَّقْوٰى‌இறையச்சத்திற்குوَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்خَبِيْرٌۢஆழ்ந்தறிந்தவன்بِمَاஎதைتَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமானூ கூனூ கவ்வா மீன லில்லாஹி ஷுஹதா'அ Bபில்கிஸ்த், வலா யஜ்ரிமன்னகும் ஷன ஆனு கவ்மின் 'அலா அல்லா தஃதிலூ; இஃதிலூ; ஹுவ அக்ரBபு லித்தக்வா வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ கBபீரும் Bபிமா தஃமலூன்
முஹம்மது ஜான்
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதிவான்களாக நீதத்திற்கு சாட்சி சொல்பவர்களாக இருங்கள். ஒரு வகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (பகைமை இருந்தாலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருங்கியது. (எப்போதும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள்! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சிச் செயலாற்றுங்கள். நீங்கள் செய்வனவற்றை முழுமையாக அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காக நீதியைக் கொண்டு சாட்சி கூறுகிறவர்களாக (உண்மையின் மீது) நிலைத்தவர்களாக ஆகிவிடுங்கள், எந்த சமூகத்தவரின் விரோதமும், நீங்கள் நீதமாக நடந்து கொள்ளாதிருக்க உங்களைத் திண்ணமாக தூண்டிவிட வேண்டாம், (எவ்வளவு விரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதி செலுத்துங்கள், அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும், இன்னும், (எல்லா நிலைகளிலும்) நீங்கள் அல்லாஹ்வை பயப்படுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்கின்றான்.
Saheeh International
O you who have believed, be persistently standing firm for Allah, witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just; that is nearer to righteousness. And fear Allah; indeed, Allah is [fully] Aware of what you do.
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِیْمٌ ۟
وَعَدَவாக்களித்தான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَஎவர்களுக்குاٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِ‌ ۙநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّاَجْرٌஇன்னும் கூலிعَظِيْمٌ‏மகத்தானது
வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் 'அளீம்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பும், மகத்தான (நற்) கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமென்றும் மகத்தான நற்கூலி அவர்களுக்கு உண்டு என்றும் அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உண்மையாகவே) விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே, அத்தகையோர் -அவர்களுக்கு பாவமன்னிப்பும் மகத்தான (நற்)கூலியும் உண்டு, என அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
Saheeh International
Allah has promised those who believe and do righteous deeds [that] for them there is forgiveness and great reward.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟
وَالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِنَاۤநம் வசனங்களைاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُவாசிகள்الْجَحِيْمِ‏நரக
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுல் ஜஹீம்
முஹம்மது ஜான்
எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.
IFT
மேலும், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிராகரித்து இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர்-அவர்களே நரகவாசிகளாவர்.
Saheeh International
But those who disbelieve and deny Our signs - those are the companions of Hellfire.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ یَّبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ فَكَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ ۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟۠
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களேاذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَتَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுاِذْபோதுهَمَّநாடினர்قَوْمٌஒரு சமுதாயம்اَنْ يَّبْسُطُوْۤاஅவர்கள் நீட்டுவதற்குاِلَيْكُمْஉங்கள் பக்கம்اَيْدِيَهُمْதங்கள் கரங்களைفَكَفَّதடுத்தான்اَيْدِيَهُمْஅவர்களுடைய கரங்களைعَنْكُمْ‌ۚஉங்களை விட்டுوَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைوَعَلَى اللّٰهِஅல்லாஹ் மீதுفَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுத் குரூ னிஃமதல்லாஹி 'அலய்கும் இத் ஹம்ம கவ்முன் அய் யBப்ஸுதூ இலய்கும் அய்தியஹும் FபகFப்Fப அய்தியஹும் 'அன்கும் வத்தகுல்லாஹ்; வ'அலல் லாஹி Fபல் யதவகலில் மு'மினூன்
முஹம்மது ஜான்
முஃமின்களே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்(டி உங்களைக் கொன்று வி)டத் தீர்மானித்த போது, உங்களை விட்டு அவர்கள் கைகளை தடுத்து அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூறுங்கள் - ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் அல்லாஹ்வின் மீதே முஃமின்கள் (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! ஒரு வகுப்பார் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்து தங்கள் கைகளை உங்களளவில் நீட்டியபொழுது, அல்லாஹ் அவர்களது கைகளை உங்களை விட்டுத் தடுத்து உங்களுக்குப் புரிந்த அருளை நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். மேலும், நம்பிக்கைகொண்டவர்கள் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு (அண்மையில்) செய்த பேருதவியை நினைத்துப் பாருங்கள்! ஒரு கூட்டத்தார் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்டிட நாடியிருந்தபோது, அல்லாஹ் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும் தடுத்து நிறுத்தினான். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் வாழுங்கள்! நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்து நிற்க வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! ஒரு கூட்டத்தினர் உங்களுக்குத் தீங்கிழைக்கத் தீர்மானித்துத் தங்கள் கைகளை உங்கள் அளவில் நீட்டியபொழுது அவர்கள் கைகளை உங்களைவிட்டுத் தடுத்து அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள், இன்னும், அல்லாஹ்வையே பயப்படுங்கள், அன்றியும் விசுவாசிகள் (யாவரும்) அல்லாஹ் (ஒருவன்) மீதே (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.
Saheeh International
O you who have believed, remember the favor of Allah upon you when a people determined to extend their hands [in aggression] against you, but He withheld their hands from you; and fear Allah. And upon Allah let the believers rely.
وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۚ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَیْ عَشَرَ نَقِیْبًا ؕ وَقَالَ اللّٰهُ اِنِّیْ مَعَكُمْ ؕ لَىِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَیْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِیْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَلَاُدْخِلَنَّكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
وَلَقَدْதிட்டமாகاَخَذَவாங்கினான்اللّٰهُஅல்லாஹ்مِيْثَاقَஉறுதிமொழிبَنِىْۤ اِسْرآءِيْلَ‌ۚஇஸ்ரவேலர்களின்وَبَعَثْنَاஇன்னும் அனுப்பினோம்مِنْهُمُஅவர்களிலிருந்துاثْنَىْ عَشَرَபன்னிரெண்டுنَقِيْبًا‌ ؕதலைவரைوَقَالَஇன்னும் கூறினான்اللّٰهُஅல்லாஹ்اِنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْ‌ؕஉங்களுடன்لَٮِٕنْ اَقَمْتُمُநீங்கள் நிலைநிறுத்தினால்الصَّلٰوةَதொழுகையைوَاٰتَيْتُمُஇன்னும் நீங்கள் கொடுத்தீர்கள்الزَّكٰوةَஸகாத்தைوَاٰمَنْتُمْஇன்னும் நம்பிக்கை கொண்டீர்கள்بِرُسُلِىْஎன் தூதர்களைوَعَزَّرْتُمُوْهُمْஇன்னும் அவர்களுக்கு உதவிபுரிந்தீர்கள்وَاَقْرَضْتُمُஇன்னும் நீங்கள் கடன் கொடுத்தால்اللّٰهَஅல்லாஹ்விற்குقَرْضًاகடன்حَسَنًاஅழகியதுلَّاُكَفِّرَنَّநிச்சயமாக அகற்றிடுவேன்عَنْكُمْஉங்களைவிட்டுسَيِّاٰتِكُمْஉங்கள் பாவங்களைوَلَاُدْخِلَـنَّكُمْஇன்னும் நிச்சயமாக நுழைப்பேன்/உங்களைجَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅதன் கீழேالْاَنْهٰرُ‌ۚநதிகள்فَمَنْஎவர்كَفَرَநிராகரிப்பார்بَعْدَபின்னர்ذٰ لِكَஇதற்குمِنْكُمْஉங்களில்فَقَدْதிட்டமாகضَلَّவழி தவறிவிட்டார்سَوَآءَநடு (நேரான)السَّبِيْلِ‏வழி
வ லகத் அகதல் லாஹு மீதாக Bபனீ இஸ்ரா'ஈல வ Bப'அத்னா மின்ஹுமுத் னய் 'அஷர னகீBப(ன்)வ் வ காலல் லாஹு இன்னீ ம'அகும் ல'இன் அகம்துமுஸ் ஸலாத வ ஆதய்துமுZஜ் Zஜகாத வ ஆமன்தும் Bபி ருஸுலீ வ'அZஜ்Zஜர்துமூஹும் வ அக்ரள்துமுல் லாஹ கர்ளன் ஹஸனல் ல உகFப்Fபிரன்ன 'அன்கும் ஸய்யிஆதிகும் வ ல உத்கிலன் னகும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; Fபமன் கFபர Bபஃத தாலிக மின்கும் Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகளிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருக்கிறான். இன்னும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு தலைவர்களை (அப்போஸ்தலர்களை) நாம் அனுப்பி இருக்கிறோம். (அவ்வாறு உறுதிமொழி வாங்கிய சமயத்தில் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்(காக சிரமத்தில் இருப்பவர்களுக்)கு அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவற்றை) உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் உங்களை நுழைய வைப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார்.
IFT
இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் அல்லாஹ் வலுவான உறுதிமொழி வாங்கியிருந்தான். மேலும் அவர்களில் பன்னிரண்டு பேரைக் கண்காணிப்பாளராய் நியமித்திருந்தான். இன்னும் அல்லாஹ் அவர்களிடம் கூறினான்: “திண்ணமாக, நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நிறுத்தியும் ஜகாத்தை அளித்தும், என்னுடைய தூதர்களை ஏற்று அவர்களுக்கு உதவி புரிந்தும், உங்களுடைய இறைவனுக்கு அழகிய கடன் அளித்தும் வந்தீர்களாயின் திண்ணமாக நான் உங்களுடைய தீமைகளைப் போக்கிவிடுவேன். மேலும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் உங்களை நுழைவிப்பேன். ஆனால் இதன் பின்னரும் உங்களில் எவரேனும் நிராகரிப்புப் போக்கை மேற்கொண்டால் நிச்சயமாக அவர் “ஸவாவுஸ் ஸபீலை” இராஜபாட்டையை விட்டுப் பிறழ்ந்தவராவார்”.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் திட்டமாக உறுதிமொழி வாங்கியிருக்கின்றான், மேலும், அவர்களிலிருந்தே பன்னிரண்டு (நம்பிக்கைக்குரிய) பொருப்பாளர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம், (அவ்வாறு உறுதிமொழி வாங்கியபோது அவர்களிடம்) “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்” என அல்லாஹ் கூறினான், “நீங்கள் தொழுகையைத் தவறாது நிறைவேற்றி ஜகாத்தும் கொடுத்து என் தூதர்களையும் விசுவாசித்து அவர்களுக்கு உதவியும் புரிந்து (சிரமத்திலிருப்பவர்களுக்கு) அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடனும் கொடுத்தீர்களானால், நிச்சயமாக நான் (இவைகளை) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கிக் வைத்து சுவனபதிகளிலும் உங்களைப் பிரவேசிக்கச் செய்வேன், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், ஆகவே, உங்களில் இதற்குப் பின்னர் எவர் நிராகரித்து விட்டாரோ, அப்பொழுது நிச்சயமாக அவர் நேர் வழியிலிருந்து தவறிவிட்டார் (என்று அல்லாஹ் கூறினான்).
Saheeh International
And Allah had already taken a covenant from the Children of Israel, and We delegated from among them twelve leaders. And Allah said, "I am with you. If you establish prayer and give zakah and believe in My messengers and support them and loan Allah a goodly loan, I will surely remove from you your misdeeds and admit you to gardens beneath which rivers flow. But whoever of you disbelieves after that has certainly strayed from the soundness of the way."
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِیَةً ۚ یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ ۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
فَبِمَا نَقْضِهِمْஆகவே அவர்கள் முறித்த காரணத்தால்مِّيْثَاقَهُمْஉறுதி மொழியை/தங்கள்لَعَنّٰهُمْசபித்தோம்/அவர்களைوَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்قُلُوْبَهُمْஉள்ளங்களை/அவர்களுடையقٰسِيَةً‌ ۚஇறுக்கமானதாகيُحَرِّفُوْنَபுரட்டுகிறார்கள்الْـكَلِمَவசனங்களைعَنْஇருந்துمَّوَاضِعِهٖ‌ۙஅதன் இடங்கள்وَنَسُوْاஇன்னும் மறந்தார்கள்حَظًّاஒரு பாகத்தைمِّمَّاஎதிலிருந்துذُكِّرُوْاஉபதேசிக்கப்பட்டார்கள்بِهٖۚஅதைوَلَا تَزَالُ تَطَّلِعُகண்டுகொண்டே இருப்பீர்عَلٰى خَآٮِٕنَةٍமோசடியைمِّنْهُمْஅவர்களிடமிருந்துاِلَّاதவிரقَلِيْلًاசிலரைمِّنْهُمْ‌அவர்களில்فَاعْفُஆகவே மன்னிப்பீராகعَنْهُمْஅவர்களைوَاصْفَحْ‌ ؕஇன்னும் புறக்கணிப்பீராகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِيْنَ‏நற்பண்பாளர்களை
FபBபிமா னக்ளிஹிம் மீதா கஹும் ல'அன்னாஹும் வ ஜ'அல்னா குலூBபஹும் காஸியதய் யுஹர்ரிFபூனல் கலிம 'அம்மவாளி'இஹீ வ னஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹ்; வலா தZஜாலு தத்தலி'உ 'அலா கா'இனதிம் மின்ஹும் இல்லா கலீலம் மின்ஹும் FபஃFபு 'அன்ஹும் வஸ்Fபஹ்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டுகிறார்கள். (நமது இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீர் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர். ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து வருவீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கிறான்.
IFT
பிறகு அவர்கள் தாம் செய்த வாக்குறுதியை முறித்ததற்காக நாமும் அவர்களை நமது அருளிலிருந்து தூர எறிந்துவிட்டோம். மேலும், அவர்களுடைய நெஞ்சங்களை இறுகச் செய்துவிட்டோம். இப்பொழுது அவர்களுடைய நிலை என்னவெனில் வேத வாக்குகளை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டியும் திரித்தும் விதவிதமாகப் பொருள் கொள்கின்றனர். இன்னும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட உயர் அறிவுரைகளில் பெரும்பாலானவற்றை மறந்தே போயினர். நாள்தோறும் அவர்களுடைய மோசடிச் செயல்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்களில் மிகச் சிலரே இத்தகைய இழி செயலிலிருந்து விலகி இருக்கிறார்கள். (அவர்கள் இவ்வளவு மோசமான நிலைக்கு இறங்கி வந்தபின் அவர்கள் எத்தகைய குறும்புத்தனங்கள் புரிந்தாலும் அவை எதிர்பார்க்கப்பட்டவைதாம்) எனவே, அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்களின் தவறான செயல்களைப் பொருட்படுத்தாதீர்கள். நன்னடத்தையை மேற்கொள்பவர்களையே திண்ணமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் தங்களுடைய உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களை சபித்துவிட்டோம், அவர்களுடைய இதயங்களை கல் நெஞ்சங்களாகவும் ஆக்கிவிட்டோம், (அவர்கள் தங்கள் வேத) வசனங்களை அவற்றின் சரியான இடங்களிலிருந்து மாற்றி விடுகிறார்கள், அன்றியும் அவர்கள் எதனைக் கொண்டு உபதேசிக்கப்பட்டனரோ அதிலிருந்து ஒரு பாகத்தை (இந்நபியைப் பற்றி அதில் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டிருந்ததை) மறந்தும் விட்டார்கள், இன்னும், நபியே! அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோர் ஏதேனுமொரு மோசடியின் மீது இருப்பதை நீர் சதா கண்டு கொண்டிருப்பீர், ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக, நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.
Saheeh International
So for their breaking of the covenant We cursed them and made their hearts hardened. They distort words from their [proper] places [i.e., usages] and have forgotten a portion of that of which they were reminded. And you will still observe deceit among them, except a few of them. But pardon them and overlook [their misdeeds]. Indeed, Allah loves the doers of good.
وَمِنَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰۤی اَخَذْنَا مِیْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۪ فَاَغْرَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ وَسَوْفَ یُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
وَمِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினர்اِنَّاநிச்சயமாக நாங்கள்نَصٰرٰٓىகிறிஸ்த்தவர்கள்اَخَذْنَاவாங்கினோம்مِيْثَاقَهُمْஅவர்களுடைய உறுதிமொழியைفَنَسُوْاமறந்தார்கள்حَظًّاஒரு பகுதியைمِّمَّاஎதிலிருந்துذُكِّرُوْاஉபதேசிக்கப்பட்டார்கள்بِهٖஅதைக் கொண்டுفَاَغْرَيْنَاஆகவே மூட்டினோம்بَيْنَهُمُஅவர்களுக்கு மத்தியில்الْعَدَاوَةَபகைமையைوَالْبَغْضَآءَஇன்னும் வெறுப்பைاِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ؕவரை/மறுமை நாள்وَسَوْفَ يُنَبِّئُهُمُஅவர்களுக்கு அறிவிப்பான்اللّٰهُஅல்லாஹ்بِمَاஎதைكَانُوْاஇருந்தார்கள்يَصْنَعُوْنَ‏செய்கிறார்கள்
வ மினல் லதீன காலூ இன்னா னஸாரா அகத்னா மீதாகஹும் Fபனஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹீ Fப அக்ரய்னா Bபய்னஹுமுல் 'அதாவத வல்Bபக்ளா'அ இலா யவ்மில் கியாமஹ்; வ ஸவ்Fப யுனBப்Bபி'உஹுமுல் லாஹு Bபிமா கானூ யஸ்ன'ஊன்
முஹம்மது ஜான்
அன்றியும் எவர்கள் தங்களை, “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தங்களை ‘‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்'' எனக் கூறுகிறார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கிறோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரை (நீங்காதிருக்கும்படி) மூட்டிவிட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான்.
IFT
“நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தவர்களிடமும் இவ்வாறே நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். அவர்களும்கூட தங்களுக்கு நினைவூட்டப்பட்ட நல்லுரைகளில் பெரும்பகுதியை மறந்தே போயினர். இறுதியில் நாம் அவர்களுக்கிடையே மறுமைநாள் வரை பகைமையையும், காழ்ப்புணர்ச்சியையும் விதைத்து விட்டோம். மேலும், அவர்கள் உலகில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை அல்லாஹ் காண்பித்துத் தருகின்ற ஒரு நேரமும் நிச்சயமாக வரத்தான் போகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் தங்களை “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” எனக் கூறுகின்றார்களே, அத்தகையோர்களிடமிருந்து அவர்களின் உறுதிமொழியை நாம் வாங்கியிருக்கின்றோம், (ஆனாலும்) அவர்கள் எதைக் கொண்டு உபதேசிக்கப்பட்டனரோ அதிலிருந்து ஒரு பாகத்தை (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில் தங்களுக்கு நினைவுபடுத்தப்பட்டதை) மறந்து விட்டார்கள், ஆதலால் அவர்களிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மறுமை நாள் வரையில் (நீங்காதிருக்கும்படி) நாம் மூட்டி விட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களென்பதையும் (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குத் தெரிவிப்பான்.
Saheeh International
And from those who say, "We are Christians" We took their covenant; but they forgot a portion of that of which they were reminded. So We caused among them animosity and hatred until the Day of Resurrection. And Allah is going to inform them about what they used to do.
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ كَثِیْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ؕ۬ قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِیْنٌ ۟ۙ
يٰۤـاَهْلَ الْكِتٰبِவேதக்காரர்களேقَدْ جَآءَதிட்டமாக வந்து விட்டார்كُمْஉங்களிடம்رَسُوْلُـنَاநம் தூதர்يُبَيِّنُதெளிவுபடுத்துவார்لَـكُمْஉங்களுக்குكَثِيْرًاபலவற்றைمِّمَّاஎதிலிருந்துكُنْتُمْஇருந்தீர்கள்تُخْفُوْنَமறைக்கிறீர்கள்مِنَ الْكِتٰبِவேதத்தில்وَيَعْفُوْاஇன்னும் விட்டுவிடுவார்عَنْ كَثِيْرٍ‌ ؕபலவற்றைقَدْதிட்டமாக வந்து விட்டதுجَآءَكُمْஉங்களிடம்مِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துنُوْرٌஓர் ஒளிوَّكِتٰبٌஇன்னும் ஒரு வேதம்مُّبِيْنٌ ۙ‏தெளிவானது
யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் கதீரம் மிம்ம்மா குன்தும் துக்Fபூன மினல் கிதாBபி வ யஃFபூ 'அன் கதீர்; கத் ஜா'அகும் மினல் லாஹி னூரு(ன்)வ் வ கிதாBபும் முBபீன்
முஹம்மது ஜான்
வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம் தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவற்றைக் கூறாது) விட்டுவிடுகிறார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் மிகத்தெளிவான ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது.
IFT
வேதம் அருளப்பட்டவர்களே! நம்முடைய தூதர் உங்களிடம் வருகை தந்துள்ளார். இறைவேதத்தில் நீங்கள் மூடிமறைத்துக் கொண்டிருந்த பல விஷயங்களைத் தெள்ளத் தெளிவாய் அவர் விளக்குகின்றார். இன்னும் பல விஷயங்களை மன்னித்தும் விடுகின்றார். அல்லாஹ்விடமிருந்து பேரொளி மிக்க, சத்தியத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற திருமறை உங்களிடம் வந்துள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கின்றார், வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக விளக்கிக் கூறுகிறார், (வேதத்தைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள்) பலவற்றை மறைத்து வெளியிடாது விட்டும் விடுகின்றார், திட்டமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவுமுள்ள ஒரு வேதமும் இப்போது (உங்களிடம்) வந்திருக்கின்றது.
Saheeh International
O People of the Scripture, there has come to you Our Messenger making clear to you much of what you used to conceal of the Scripture and overlooking much. There has come to you from Allah a light and a clear Book [i.e., the Qur’an]
یَّهْدِیْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَیُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ بِاِذْنِهٖ وَیَهْدِیْهِمْ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
يَّهْدِىْநேர்வழி காட்டுகிறான்بِهِஅதன் மூலமாகاللّٰهُஅல்லாஹ்مَنِஎவர்கள்اتَّبَعَபின்பற்றினார்(கள்)رِضْوَانَهٗஅவனின் பொருத்தத்தைسُبُلَபாதைகளைالسَّلٰمِஈடேற்றத்தின்وَيُخْرِجُهُمْஇன்னும் வெளியேற்றுகிறான்/அவர்களைمِّنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَىபக்கம்النُّوْرِஒளிبِاِذْنِهٖதன் கட்டளைப்படிوَيَهْدِيْهِمْஇன்னும் அவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான்اِلٰىபக்கம்صِرَاطٍவழிمُّسْتَقِيْمٍ‏நேர்
யஹ்தீ Bபிஹில் லாஹு மனித் தBப'அ ரிள்வானஹூ ஸுBபுலஸ் ஸலாமி வ யுக்ரிஜுஹும் மினள் ளுலுமாதி இலன் னூரி Bபி இத்னிஹீ வ யஹ்தீஹிம் இலா ஸிராதிம் முஸ்தகீம்
முஹம்மது ஜான்
அல்லாஹ் இதைக் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர் வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(உங்களில்) எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகிறார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான். இன்னும், இருள்களில் இருந்தும் வெளியேற்றித் தன் அருளைக் கொண்டு ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். மேலும், அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கிறான்.
IFT
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு அல்லாஹ் அதன் மூலம் சாந்திக்கான வழிகளைக் காண்பிக்கின்றான். மேலும், அவன் தனது கட்டளையைக் கொண்டு இருள்களிலிருந்து அவர்களை வெளியாக்கி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். இன்னும் அவர்களை நேர்வழியின் பக்கம் வழிகாட்டவும் செய்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்-அதன் மூலம் தன்னுடைய பொருத்தத்தைப் பின்பற்றுகின்றவர்களை சமாதானத்திற்குரிய வழிகளில் அவன் செலுத்துகின்றான், அன்றியும் தன் அனுமதி கொண்டு இருள்களிலிருந்து அவர்களைப் பிரகாசத்தின் பால் வெளிப்படுத்துகிறான்; இன்னும் அவர்களை நேரான வழியின்பால் அவன் செலுத்துகிறான்.
Saheeh International
By which Allah guides those who pursue His pleasure to the ways of peace and brings them out from darknesses into the light, by His permission, and guides them to a straight path.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ قُلْ فَمَنْ یَّمْلِكُ مِنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ اَنْ یُّهْلِكَ الْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ وَاُمَّهٗ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
لَـقَدْதிட்டவட்டமாகكَفَرَநிராகரித்தனர்الَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினர்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்الْمَسِيْحُமஸீஹ்தான்ابْنُமகன்مَرْيَمَ‌ؕமர்யமுடையقُلْகூறுவீராகفَمَنْயார்يَّمْلِكُசக்தி பெறுவான்مِنَஇடம்اللّٰهِஅல்லாஹ்شَيْـٴًـــــاஒரு சிறிதும்اِنْ اَرَادَநாடினால்اَنْ يُّهْلِكَஅவன் அழிப்பதைالْمَسِيْحَமஸீஹைابْنَமகன்مَرْيَمَமர்யமுடையوَاُمَّهٗஇன்னும் அவருடைய தாயைوَمَنْயார்فِى الْاَرْضِபூமியில்جَمِيْعًا‌ ؕஅனைவரையும்وَلِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَا‌ ؕஇன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்يَخْلُقُபடைக்கிறான்مَا يَشَآءُ‌ ؕஎதை/நாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதும்كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம்; குல் Fபம(ன்)ய்-யம்லிகு மினல் லாஹி ஷய்'அன் இன் அராத அய் யுஹ்லிகல் மஸீஹBப் ன மர்யம வ உம்மஹூ வ மன் Fபில் அர்ளி ஜமீ'ஆ, வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; யக்லுகு மா யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
முஹம்மது ஜான்
திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள், மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், உலகத்திலுள்ள (மற்ற) அனைவரையும் அல்லாஹ் அழித்துவிடக் கருதினால் (அவனைத் தடுக்க) எவன்தான் சிறிதேனும் சக்தி பெறுவான்? (ஏனென்றால்,) வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியதை (விரும்பியபடி) படைக்கிறான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன்.
IFT
திண்ணமாக “மர்யத்தின் குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள், நிச்சயமாக நிராகரித்தவர்களாவார்கள். (நபியே!) அவர்களிடம் நீர் கூறும்: “மர்யத்தினுடைய மகன் மஸீஹையும் அவருடைய அன்னையையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்திட நாடினால் அவனைத் தடுத்திட யாருக்குத் துணிவு உண்டு? வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே இருக்கும் அனைத்தின் மீதும் உள்ள அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியவற்றைப் படைக்கின்றான். மேலும், அவனது வலிமை அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் மர்யமுடைய குமாரர் மஸீஹ் என்று கூறினார்களே அத்தகையோர் திட்டமாக நிராகரிப்பவர்களாகிவிட்டனர், (ஆகவே, நபியே) மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், (பூமியிலுள்ள மற்ற) யாவரையும், அவன் அழித்து விட நாடிவிட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து (அதனைத் தடுக்க) சிறிதேனும் எவர் சக்தி பெறுவார்? என நீர் கேட்பீராக! ஏனென்றால்) வானங்களுடைய மற்றும் பூமியுடைய இன்னும் இவை இரண்டிற்கு மத்தியிலிருப்பவைகளுடைய ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, அவன் நாடியதைப் படைக்கின்றான், இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
They have certainly disbelieved who say that Allah is Christ, the son of Mary. Say, "Then who could prevent Allah at all if He had intended to destroy Christ, the son of Mary, or his mother or everyone on the earth?" And to Allah belongs the dominion of the heavens and the earth and whatever is between them. He creates what He wills, and Allah is over all things competent.
وَقَالَتِ الْیَهُوْدُ وَالنَّصٰرٰی نَحْنُ اَبْنٰٓؤُا اللّٰهِ وَاَحِبَّآؤُهٗ ؕ قُلْ فَلِمَ یُعَذِّبُكُمْ بِذُنُوْبِكُمْ ؕ بَلْ اَنْتُمْ بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ؕ یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؗ وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
وَقَالَتِகூறினர்الْيَهُوْدُயூதர்கள்وَالنَّصٰرٰىஇன்னும் கிறித்தவர்கள்نَحْنُநாங்கள்اَبْنٰٓؤُاபிள்ளைகள்اللّٰهِஅல்லாஹ்வுடையوَاَحِبَّآؤُهٗ‌ ؕஇன்னும் அவனுடைய நேசர்கள்قُلْகூறுவீராகفَلِمَ يُعَذِّبُكُمْஅவ்வாறாயின் ஏன்/வேதனை செய்கிறான்/உங்களைبِذُنُوْبِكُمْ‌ؕஉங்கள் குற்றங்களுக்காகبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்بَشَرٌமனிதர்கள்مِّمَّنْஎவர்களில்خَلَقَ‌ ؕபடைத்தான்يَغْفِرُமன்னிக்கிறான்لِمَنْஎவர்களைيَّشَآءُநாடுகிறான்وَيُعَذِّبُஇன்னும் வேதனை செய்கிறான்مَنْ يَّشَآءُ‌ ؕஎவர்களை/நாடுகிறான்وَلِلّٰهِஅல்லாஹ்விற்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَا‌இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின்وَاِلَيْهِஅவனளவில்தான்الْمَصِيْرُ‏மீளுமிடம்
வ காலதில் யஹூது வன் னஸாரா னஹ்னு அBப்னா'உல் லாஹி வ அஹிBப்Bபா'உஹ்; குல் Fபலிம யு'அத்திBபுகும் BபிதுனூBபிகும் Bபல் அன்தும் Bபஷரும் மிம்மன் கலக்; யக்Fபிரு லிமய் யஷா'உ வ யு'அத்திBபு மய் யஷா'; வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ இலய்ஹில் மஸீர்
முஹம்மது ஜான்
யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்; அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
அப்துல் ஹமீது பாகவி
யூதர்களும், கிறிஸ்தவர்களும் ‘‘நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுடைய அன்பிற்குரியவர்கள்'' என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறாயின், உங்கள் குற்றங்களுக்காக (இறைவன்) உங்களை ஏன் (அடிக்கடி துன்புறுத்தித்) தண்டிக்கிறான்? (உண்மை) அவ்வாறன்று. நீங்களும் அவனால் படைக்கப்பட்ட (மற்ற) மனிதர்கள் (போன்று)தான். (நீங்கள் அவனுடைய பிள்ளைகளல்ல. ஆகவே, உங்களிலும்) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான். வானங்கள், பூமி இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக் குரியதே! அவனளவில்தான் (அனைவரும்) செல்ல வேண்டியதாக இருக்கிறது.
IFT
“நாங்கள் அல்லாஹ்வின் புதல்வர்கள்; மேலும், அவனது அன்பிற்குரியவர்கள்” என்றெல்லாம் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூறுகின்றார்கள். அவர்களிடம் நீர் கேளும்: “அவ்வாறாயின் உங்களின் பாவச் செயல்களுக்காக அவன் ஏன் உங்களுக்குத் தண்டனை அளிக்கின்றான்?” உண்மையில், அவன் படைத்த மற்ற மனிதர்களைப்போல் நீங்களும் மனிதர்கள்தானே! தான் நாடுபவர்களை அவன் மன்னிக்கின்றான். மேலும் தான் நாடுபவர்களைத் தண்டிக்கின்றான். பூமி, வானங்கள் மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கே உரியன. மேலும், அவனிடமே எல்லாரும் செல்ல வேண்டியிருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், யூதர்களும், கிறிஸ்தவர்களும், “நாங்கள் அல்லாஹ்வுடைய குமாரர்கள், அவனது நேசர்கள்” என்று கூறுகின்றனர், “அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் வேதனை செய்கிறான், (உண்மை) அவ்வாறன்று! நீங்களும் அவன் படைத்த (மற்ற) மனிதர்கள் (போன்று)தாம் (என்று நபியே!) நீர் கூறுவீராக! (ஆகவே, உங்களிலும்) அவன் நாடியவர்களை, மன்னிக்கிறான், இன்னும், அவன் நாடியவர்களை வேதனை செய்கிறான்” வானங்களுடைய மற்றும் பூமியுடைய இன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் இருப்பவைகளுடைய ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, அவனளவில்தான் (யாவரும்) மீண்டும் செல்ல வேண்டியதிருக்கிறது.
Saheeh International
But the Jews and the Christians say, "We are the children of Allah and His beloved." Say, "Then why does He punish you for your sins?" Rather, you are human beings from among those He has created. He forgives whom He wills, and He punishes whom He wills. And to Allah belongs the dominion of the heavens and the earth and whatever is between them, and to Him is the [final] destination.
یٰۤاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُنَا یُبَیِّنُ لَكُمْ عَلٰی فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْ بَشِیْرٍ وَّلَا نَذِیْرٍ ؗ فَقَدْ جَآءَكُمْ بَشِیْرٌ وَّنَذِیْرٌ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
يٰۤـاَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்களேقَدْ جَآءَவந்துவிட்டார்كُمْஉங்களிடம்رَسُوْلُـنَاநம் தூதர்يُبَيِّنُதெளிவுபடுத்துகிறார்لَـكُمْஉங்களிடம்عَلٰى فَتْرَةٍஇடைவெளியில்مِّنَ الرُّسُلِதூதர்களின்اَنْ تَقُوْلُوْاநீங்கள் கூறாதிருக்கمَا جَآءَவரவில்லைنَاஎங்களுக்குمِنْۢஎவரும்بَشِيْرٍநற்செய்தி கூறுபவர்وَّلَاஇன்னும் இல்லைنَذِيْرٍ‌எச்சரிப்பவர்فَقَدْஉறுதியாகجَآءَவந்துவிட்டார்كُمْஉங்களிடம்بَشِيْرٌநற்செய்தி கூறுபவர்وَّنَذِيْرٌ‌ؕஇன்னும் எச்சரிப்பவர்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰىமீதும்كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் 'அலா Fபத்ரதிம் மினர் ருஸுலி அன் தகூலூ மா ஜா'அனா மிம் Bபஷீரி(ன்)வ் வலா னதீரின் Fபகத் ஜா'அகும் Bபஷீரு(ன்)வ் வ னதீர்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
முஹம்மது ஜான்
வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர் இதுவரை) தூதர்கள் வராது தடைப்பட்டிருந்த காலத்தில் ‘‘நற்செய்தி கூறுபவர், அச்சமூட்டி எச்சரிப்பவர் எங்களிடம் வரவேயில்லை'' என்று நீங்கள் (குறை) கூறாதிருக்க, (மார்க்கக் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக அறிவிக்கக்கூடிய நமது (இத்)தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். ஆகவே, அச்சமூட்டி எச்சரிப்பவர், நற்செய்தி கூறுபவர் உங்களிடம் வந்திருக்கிறார். அல்லாஹ், அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
IFT
வேதம் அருளப்பட்டவர்களே! தூதர்களின் வருகைத் தொடர் சிறிது காலம் வரை நின்று போயிருந்த சமயத்தில் எம்முடைய இந்தத் தூதர் உங்களிடம் வந்துள்ளார். மேலும், இறைநெறியின் தெளிவான அறிவுரைகளை உங்களுக்குக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றார். எதற்காகவெனில், நற்செய்தி கூறக்கூடிய, அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய எவரும் எங்களிடம் வரவில்லையே என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக! (இதோ பாருங்கள்:) இப்போது நற்செய்தி கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். மேலும், அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதத்தையுடையவர்களே! (ஈஸாவுக்குப் பின்னர்,) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரோ, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரோ எங்களிடம் வரவேயில்லை,” என்று நீங்கள் (குறை) கூறாதிருப்பதற்காக (அல்லாஹ்வின் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்ற நம்முடைய (இத்)தூதர் திட்டமாக உங்களிடம் வந்து விட்டார் – நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் திட்டமாக உங்களிடம் வந்து விட்டார் - இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
O People of the Scripture, there has come to you Our Messenger to make clear to you [the religion] after a period [of suspension] of messengers, lest you say, "There came not to us any bringer of good tidings or a warner." But there has come to you a bringer of good tidings and a warner. And Allah is over all things competent.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ جَعَلَ فِیْكُمْ اَنْۢبِیَآءَ وَجَعَلَكُمْ مُّلُوْكًا ۖۗ وَّاٰتٰىكُمْ مَّا لَمْ یُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟
وَاِذْ قَالَகூறிய சமயத்தை...مُوْسٰىமூஸாلِقَوْمِهٖதன் சமுதாயத்திற்குيٰقَوْمِஎன் சமுதாயமேاذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَةَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுاِذْஅந்நேரத்தில்جَعَلَஆக்கினான்فِيْكُمْஉங்களில்اَنْۢـبِيَآءَநபிமார்களைوَجَعَلَـكُمْஆக்கினான்/உங்களைمُّلُوْكًاஅரசர்களாகۖ  وَّاٰتٰٮكُمْஇன்னும் கொடுத்தான்/உங்களுக்குمَّاஎவற்றைلَمْ يُؤْتِகொடுக்கவில்லைاَحَدًاஒருவருக்கும்مِّنَ الْعٰلَمِيْنَ‏உலகத்தாரில்
வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மித் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் ஜ'அல Fபீகும் அம்Bபியா'அ வ ஜ'அலகும் முலூக(ன்)வ் வ ஆதாகும் மா லம் யு'தி அஹதம் மினல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்” என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
மூஸா தன் சமூகத்தாரை நோக்கி ‘‘என் சமூகத்தாரே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குள் (மூஸா, ஹாரூன் போன்ற) நபிமார்களை ஏற்படுத்தி (எகிப்தியரிடம் அடிமைகளாய் இருந்த) உங்களை அரசர்களாகவும் ஆக்கி, உலகத்தில் மற்ற எவருக்குமே அளிக்காத (அற்புதங்களாகிய கடலைப் பிளந்து செல்லுதல், ‘மன்னு ஸல்வா' என்ற உணவு போன்ற)வற்றையும் உங்களுக்கு அளித்திருக்கிறான்'' என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
IFT
மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூருங்கள்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான். உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான். மேலும், உலக மக்களில் எவர்க்கும் வழங்கப்படாதவற்றையெல்லாம் உங்களுக்கு வழங்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் மூஸா தன் சமூகத்தாரிடம், “என் சமூகத்தினரே, அவன் உங்களில் நபிமார்களை ஆக்கிய நேரத்தில் உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் நினைத்துப் பாருங்கள், மேலும், (ஃபிர் அவ்னிடம் அடிமைகளாயிருந்த) உங்களை அரசர்களாகவும் அவன் ஆக்கினான். இன்னும், அகிலத்தாரில் மற்றெவருக்குமே கொடுக்காதவற்றையும், உங்களுக்கு அவன் கொடுத்திருக்கிறான், என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக).
Saheeh International
And [mention, O Muhammad], when Moses said to his people, "O my people, remember the favor of Allah upon you when He appointed among you prophets and made you possessors and gave you that which He had not given anyone among the worlds.
یٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِیْ كَتَبَ اللّٰهُ لَكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِكُمْ فَتَنْقَلِبُوْا خٰسِرِیْنَ ۟
يٰقَوْمِஎன் சமுதாயமேادْخُلُواநுழையுங்கள்الْاَرْضَபூமியில்الْمُقَدَّسَةَபரிசுத்தமானதுالَّتِىْஎதுكَتَبَவிதித்தான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குوَلَا تَرْتَدُّوْاஇன்னும் திரும்பிவிடாதீர்கள்عَلٰٓى اَدْبَارِபின் புறங்களில்كُمْஉங்கள்فَتَـنْقَلِبُوْاதிரும்புவீர்கள்خٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளாக
யா கவ்மித் குலுல் அர்ளல் முகத்தஸதல் லதீ கதBபல் லாஹு லகும் வலா தர்தத்தூ 'அலா அத்Bபாரிகும் Fபதன்கலிBபூ காஸிரீன்ன்
முஹம்மது ஜான்
(தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(தவிர, அவர்) ‘‘என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் போர் புரிந்து அதில்) நுழையுங்கள். (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறம் காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்'' (என்றும் கூறினார்.)
IFT
என் சமூகத்தாரே! உங்களுக்காகவே அல்லாஹ் விதித்துவிட்ட தூய பூமியில் நுழைந்து விடுங்கள்! இன்னும் புறங்காட்டி ஓடாதீர்கள்! நீங்கள் அவ்வாறு செய்தால் பேரிழப்புக்கு ஆளாவீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேலும்,) “என் சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (எதிரியுடன் யுத்தம் செய்து அதில்) பிரவேசியுங்கள், இன்னும், (அவர்களுக்கு) நீங்கள் புறமுதுகிட்டுத் திரும்பாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” (என்றும் அவர் கூறினார்.)
Saheeh International
O my people, enter the blessed land [i.e., Palestine] which Allah has assigned to you and do not turn back [from fighting in Allah's cause] and [thus] become losers."
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّ فِیْهَا قَوْمًا جَبَّارِیْنَ ۖۗ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰی یَخْرُجُوْا مِنْهَا ۚ فَاِنْ یَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دٰخِلُوْنَ ۟
قَالُوْاகூறினர்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنَّநிச்சயமாகفِيْهَاஅதில்قَوْمًاஒரு சமுதாயம்جَبَّارِيْنَ ۖ பலசாலிகளானوَاِنَّاநிச்சயமாக நாங்கள்لَنْமாட்டோம்نَّدْخُلَهَاஅதில் நுழையحَتّٰىவரைيَخْرُجُوْاவெளியேறுவார்கள்مِنْهَا‌ ۚஅதிலிருந்துفَاِنْ يَّخْرُجُوْاஅவர்கள் வெளியேறினால்مِنْهَاஅதிலிரு ந்துفَاِنَّاநிச்சயமாக நாங்கள்دَاخِلُوْنَ‏நுழைவோம்
காலூ யா மூஸா இன்னா Fபீஹா கவ்மன் ஜBப்Bபாரீன வ இன்னா லன் னத்குலஹா ஹத்தா யக்ருஜூ மின்ஹா Fப-இ(ன்)ய் யக்ருஜூ மின்ஹா Fப இன்னா தாகிலூன்
முஹம்மது ஜான்
அதற்கு அவர்கள், “மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்” எனக் கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான மக்கள் இருக்கின்றனர். அவர்கள், அதைவிட்டு வெளியேறும் வரை நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால் நாங்கள் தவறாமல் நுழைந்துவிடுவோம்'' என்றனர்.
IFT
அதற்கவர்கள், “மூஸாவே...! அப்பூமியில் மிக்க வலிமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்; அதிலிருந்து அவர்கள் வெளியேறாத வரை நாங்கள் அங்குச் செல்லவே மாட்டோம். ஆயினும் அவர்கள் அதிலிருந்து வெளியேறிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நுழையத் தயாராய் உள்ளோம்” என்று பதில் தந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “மூஸாவே! நிச்சயமாக அதில் மிக்க பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றனர், அவர்கள் அதைவிட்டு வெளியேறும் வரையில் நாங்கள் அதனுள் நுழையவே மாட்டோம், அவர்கள் அதைவிட்டு வெளியேறி விட்டால், நிச்சயமாக நாங்கள் நுழைந்துவிடக் கூடியவர்கள்” என்றனர்.
Saheeh International
They said, "O Moses, indeed within it is a people of tyrannical strength, and indeed, we will never enter it until they leave it; but if they leave it, then we will enter."
قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِیْنَ یَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمَا ادْخُلُوْا عَلَیْهِمُ الْبَابَ ۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ۬ وَعَلَی اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
قَالَகூறினார்(கள்)رَجُلٰنِஇருவர்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்يَخَافُوْنَபயப்படுகிறார்கள்اَنْعَمَஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمَاஅவ்விருவர் மீதும்ادْخُلُوْاநுழையுங்கள்عَلَيْهِمُஅவர்களைஎதிர்த்துالْبَابَ‌ۚவாசலில்فَاِذَا دَخَلْتُمُوْهُஅதில் நீங்கள் நுழைந்தால்فَاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்غٰلِبُوْنَ‌  ۚவெற்றி பெறுவீர்கள்وَعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதேفَتَوَكَّلُوْۤاநம்பிக்கை வையுங்கள்اِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
கால ரஜுலானி மினல் லதீன யகாFபூன அன்'அமல் லாஹு 'அலய்ஹிமத் குலூ 'அலய்ஹிமுல் BபாBப், Fப இதா தகல்துமூஹு Fப இன்னகும் காலிBபூன்; வ 'அலல் லாஹி Fபதவக்கலூ இன் குன்தும் மு'மினீன்
முஹம்மது ஜான்
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி:) “அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர்மீது அல்லாஹ் அருள்புரிந்திருந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (அவர்கள் பலத்தைப்பற்றி பயப்படவேண்டாம்.) அவர்களை எதிர்த்து (அந் நகரத்தின்) வாயில் வரை சென்றுவிடுங்கள். அதில் நீங்கள் நுழைந்து விட்டால் நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை சாட்டுங்கள்'' என்று கூறினார்கள்.
IFT
அவ்வாறு (நுழைய) அஞ்சிக் கொண்டிருந்த மக்களின் மத்தியில் அல்லாஹ்வின் அருளைப் பெற்றிருந்த இருவர் இருந்தனர். அவர்கள் கூறினார்கள்: “வலிமை வாய்ந்தவர்களைப் பொருட்படுத்தாமல் வாயிலினுள் நுழைந்து விடுங்கள்! அவ்வாறு உள்ளே நுழைந்து விடுவீர்களாயின் நீங்கள்தாம் வெற்றியாளர்களாய்த் திகழ்வீர்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வை) பயந்தோர்களிலிருந்த இரு மனிதர்கள் அவ்விருவரின் மீது அல்லாஹ் அருள் புரிந்திருந்தான், அவர்கள் (மற்றவர்களிடம்) “நீங்கள் (அவர்கள் பலத்தைப் பற்றிப் பயப்பட வேண்டாம்) அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாயில் வரையில் சென்று விடுங்கள், பின்னர், நீங்கள் அதில் நுழைந்து விட்டால் அப்போது நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்றவர்கள், நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
Said two men from those who feared [to disobey] upon whom Allah had bestowed favor, "Enter upon them through the gate, for when you have entered it, you will be predominant. And upon Allah rely, if you should be believers."
قَالُوْا یٰمُوْسٰۤی اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِیْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قٰعِدُوْنَ ۟
قَالُوْاகூறினர்يٰمُوْسٰٓىமூஸாவே!اِنَّاநிச்சயமாக நாங்கள்لَنْமாட்டோம்نَّدْخُلَهَاۤஅதில் நுழையاَبَدًاஅறவேمَّا دَامُوْاஅவர்கள் இருக்கும் காலமெல்லாம்فِيْهَا‌அதில்فَاذْهَبْஆகவே செல்اَنْتَநீوَرَبُّكَஇன்னும் உன் இறைவன்فَقَاتِلَاۤஇருவரும் போரிடுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்هٰهُنَاஇங்கேதான்قَاعِدُوْنَ‏உட்கார்ந்திருப்போம்
காலூ யா மூஸா இன்னா லன் னத்குலஹா அBபதம் மா தாமூ Fபீஹா Fபத்ஹBப் அன்த வ ரBப்Bபுக Fபகாதிலா இன்னா ஹாஹுனா கா'இதூன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரை ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீரும், உமது இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்'' என்று கூறினார்கள்.
IFT
ஆனால் அவர்கள் மீண்டும் இவ்வாறே கூறினார்கள்: “மூஸாவே! அவர்கள் அங்கு இருக்கும் வரை நாங்கள் ஒருபோதும் அங்குப் போகமாட்டோம். வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதன் பிறகும், அவர்கள்) மூஸாவே அவர்கள் அதில் இருந்துகொண்டிருக்கும் காலமெல்லாம் ஒருக்காலும் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம், ஆகவே, நீரும் உம்முடைய இரட்சகனும் சென்று (அவர்களுடன்) நீங்கள் இருவரும் யுத்தம் புரியுங்கள், நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "O Moses, indeed we will not enter it, ever, as long as they are within it; so go, you and your Lord, and fight. Indeed, we are remaining right here."
قَالَ رَبِّ اِنِّیْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِیْ وَاَخِیْ فَافْرُقْ بَیْنَنَا وَبَیْنَ الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟
قَالَகூறினார்رَبِّஎன் இறைவாاِنِّىْநிச்சயமாக நான்لَاۤ اَمْلِكُஅதிகாரம் பெற மாட்டேன்اِلَّاதவிரنَفْسِىْஎனக்குوَاَخِىْ‌இன்னும் என் சகோதரர்فَافْرُقْஆகவே பிரித்திடுبَيْنَـنَاஎங்களுக்கு மத்தியில்وَبَيْنَஇன்னும் மத்தியில்الْقَوْمِசமுதாயம்الْفٰسِقِيْنَ‏பாவிகளான
கால ரBப்Bபி இன்னீ லா அம்லிகு இல்லா னFப்ஸீ வ அகீ FபFப்ருக் Bபய்னனா வ Bபய்னல் கவ்மில் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
“என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில் நீ தீர்ப்பளிப்பாயாக!” என்று மூஸா கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு மூஸா) ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் மீதும், என் சகோதரர் மீதும் தவிர, (மற்ற எவர் மீதும்) எனக்கு அதிகாரம் இல்லை. ஆகவே, பாவிகளான (இந்த) மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக!'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
IFT
அதற்கு மூஸா, “என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் தவிர நிச்சயமாக வேறு யாரும் என்னுடைய அதிகாரத்தில் இல்லை; எனவே, கீழ்ப்படியாத இம்மக்களிடமிருந்து எங்களைப் பிரித்துவிடுவாயாக!” எனக் கூறினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு மூஸா) “என் இரட்சகனே” நிச்சயமாக நான் என்னையும், என் சகோதரரையும் தவிர மற்றெவரையும் நான் உதவிக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை, ஆகவே, எங்களுக்கிடையிலும் தீயவர்களான இக்கூட்டத்தினருக்கிடையிலும் பிரித்து விடுவாயாக” என்று பிரார்த்தித்துக் கூறினர்.
Saheeh International
[Moses] said, "My Lord, indeed I do not possess [i.e., control] except myself and my brother, so part us from the defiantly disobedient people."
قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَیْهِمْ اَرْبَعِیْنَ سَنَةً ۚ یَتِیْهُوْنَ فِی الْاَرْضِ ؕ فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْفٰسِقِیْنَ ۟۠
قَالَகூறினான்فَاِنَّهَاஆகவே நிச்சயமாக அதுمُحَرَّمَةٌதடுக்கப்பட்டதாகும்عَلَيْهِمْ‌அவர்கள் மீதுاَرْبَعِيْنَநாற்பதுسَنَةً‌  ۚஆண்டு(கள்)يَتِيْهُوْنَதிக்கற்றலைவார்கள்فِى الْاَرْضِ‌ ؕபூமியில்فَلَا تَاْسَஆகவே கவலைப்படாதீர்عَلَى الْقَوْمِசமுதாயத்தின் மீதுالْفٰسِقِيْنَ‏பாவிகளான
கால Fப இன்னஹா முஹர் ரமதுன் 'அலய்ஹிம் அர்Bப'ஈன ஸனஹ்; யதீஹூன Fபில் அர்ள்; Fபலா தாஸ 'அலல் கவ்மில் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
(அதற்கு அல்லாஹ்) “அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள்; ஆகவே நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) ‘‘அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, (இந்தப்) பாவிகளான மக்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்!'' என்று (மூஸாவுக்குக்) கூறினான்.
IFT
அதற்கு அல்லாஹ் மறுமொழி பகர்ந்தான்: “அப்படியென்றால் நாற்பதாண்டு காலம் வரைஅந்நாடு அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டதாகும். அவர்கள் பூமியில் அலைக்கழிந்து திரிவார்கள். கீழ்ப்படியாத அந்த மக்களுக்காக நீர் அனுதாபப்படாதீர்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறாயின் நிச்சயமாக (அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பலஸ்தீன் என்ற) அந்த இடமானது நாற்பது ஆண்டுகள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது, (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழிவார்கள், ஆகவே, இத்தீய கூட்டத்தாரைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்” என்று (மூஸாவுக்கு அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
Saheeh International
[Allah] said, "Then indeed, it is forbidden to them for forty years [in which] they will wander throughout the land. So do not grieve over the defiantly disobedient people."
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ ابْنَیْ اٰدَمَ بِالْحَقِّ ۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ یُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِ ؕ قَالَ لَاَقْتُلَنَّكَ ؕ قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِیْنَ ۟
وَاتْلُஓதுவீராகعَلَيْهِمْஅவர்கள் முன்نَبَاَசெய்தியைابْنَىْஇரு மகன்களின்اٰدَمَஆதமுடையبِالْحَـقِّ‌ۘஉண்மையில்اِذْபோதுقَرَّبَاகுர்பானி கொடுத்தனர்قُرْبَانًاஒரு குர்பானியைفَتُقُبِّلَஏற்றுக் கொள்ளப்பட்டதுمِنْஇருந்துاَحَدِهِمَاஅவ்விருவரில் ஒருவர்وَلَمْ يُتَقَبَّلْஏற்கப்படவில்லைمِنَஇருந்துالْاٰخَرِؕமற்றவர்قَالَஎன்றார்لَاَقْتُلَـنَّكَ‌ؕநிச்சயமாக உன்னைக்கொல்வேன்قَالَகூறினார்اِنَّمَا يَتَقَبَّلُஏற்பதெல்லாம்اللّٰهُஅல்லாஹ்مِنَ الْمُتَّقِيْنَ‏அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்
வத்லு 'அலய்ஹிம் னBப அBப்னய் ஆதம Bபில்ஹக்க்; இத் கர்ரBபா குர்Bபானன் FபதுகுBப்Bபில மின் அஹதிஹிமா வ லம் யுதகBப்Bபல் மினல் ஆகரி கால ல அக்துலன்ன்னக கால இன்னமா யதகBப்Bபலுல் லாஹு மினல் முத்தகீன்
முஹம்மது ஜான்
(நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார். அதற்கு (முன்னவர்) “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஆதமுடைய (ஹாபீல், காபீல் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக. இருவரும் ‘‘குர்பானி' (பலி) கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருத்தருடைய (குர்பானி யான)து ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால், ‘‘நிச்சயம் நான் உன்னைக் கொன்றுவிடுவேன்'' என்றார். உடனே (குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லவர்) ‘‘அல்லாஹ் (குர்பானியை) ஏற்றுக் கொள்வதெல்லாம் இறையச்சமுள்ளவர்களிடமிருந்துதான்'' என்று பதில் கூறினார்.
IFT
(நபியே!) இனி, அவர்களுக்கு ஆதமுடைய இரு மகன்களின் வரலாற்றைக் கூடுதல் குறைவின்றி எடுத்துரைப்பீராக! அவர்கள் இருவரும் குர்பானி கொடுத்தபோது அவர்களில் ஒருவருடைய குர்பானி ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மற்றொருவருடையது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இரண்டா மவர், “திண்ணமாக நான் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று கூறினார். அதற்கு முதலாமவர் கூறினார்: “இறையச்சமுடையோரின் வழிபாடுகளை மட்டுமே அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) ஆதமுடைய (ஹாபில், காபில் என்னும்) இரு குமாரர்களின் செய்தியை உண்மையைக் கொண்டு நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக! அவ்விருவரும் குர்பானி (பலி)யை (அல்லாஹ்வின் பால் சமர்ப்பித்து) நெருக்கமாக்கி வைத்த சமயத்தில் அவ்விருவரில் ஒருவரிலிருந்து அது அங்கீகரிக்கப்பட்டது, மேலும், மற்றவரிலிருந்து அது அங்கீகரிக்கப்படவில்லை, ஆகவே, “நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று (அங்கீகரிக்கப்படாதவர்) கூறினார், (அதற்கு அங்கீகரிக்கப் பெற்ற) அவர் “அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் பயபக்தியுடையவர்களில் இருந்துதான்” என்று கூறினார்.
Saheeh International
And recite to them the story of Adam's two sons, in truth, when they both made an offering [to Allah], and it was accepted from one of them but was not accepted from the other. Said [the latter], "I will surely kill you." Said [the former], "Indeed, Allah only accepts from the righteous [who fear Him].
لَىِٕنْۢ بَسَطْتَّ اِلَیَّ یَدَكَ لِتَقْتُلَنِیْ مَاۤ اَنَا بِبَاسِطٍ یَّدِیَ اِلَیْكَ لِاَقْتُلَكَ ۚ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟
لَٮِٕنْۢ بَسَطْتَّநீங்கள் நீட்டினால்اِلَىَّஎன்னளவில்يَدَكَஉன் கரத்தைلِتَقْتُلَنِىْநீ என்னைக் கொல்வ தற்காகمَاۤ اَنَاநான் இல்லைبِبَاسِطٍநீட்டுபவனாகيَّدِىَஎன் கரத்தைاِلَيْكَஉன்னளவில்لِاَقْتُلَكَ‌ ۚநான் கொல்வதற்காக / உன்னைاِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اللّٰهَஅல்லாஹ்வைرَبَّஇறைவனாகியالْعٰلَمِيْنَ‏அகிலத்தாரின்
ல'இம் Bபஸத்த இலய்ய யதக லிதக்துலனீ மா அன BபிBபாஸிதி(ன்)ய் யதிய இலய்க லி அக்துலக இன்னீ அகாFபுல் லாஹ ரBப்Bபல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அன்றியும், “நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டு வாயானால் நான் உன்னை வெட்டுவற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றன்.
IFT
நீ என்னைக் கொல்வதற்குக் கை நீட்டினாலும் நான் உன்னைக் கொல்வதற்குக் கை நீட்ட மாட்டேன். நான் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே அஞ்சுகிறேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேலும்) “நீ என்னைக் கொலை செய்வதற்காக உன் கையை என்னளவில் நீட்டினாலும் நான் உன்னை கொலை செய்வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டுபவன் அல்ல, (ஏனென்றால்) நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்)
Saheeh International
If you should raise your hand toward me to kill me - I shall not raise my hand toward you to kill you. Indeed, I fear Allah, Lord of the worlds.
اِنِّیْۤ اُرِیْدُ اَنْ تَبُوْٓاَ بِاِثْمِیْ وَاِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۚ وَذٰلِكَ جَزٰٓؤُا الظّٰلِمِیْنَ ۟ۚ
اِنِّىْۤநிச்சயமாக நான்اُرِيْدُநாடுகிறேன்اَنْ تَبُوْٓءَاநீ திரும்புவதைبِاِثْمِىْஎன் பாவத்துடன்وَ اِثْمِكَஉன் பாவம்فَتَكُوْنَஆகிவிடுவாய்مِنْஇருந்துاَصْحٰبِவாசிகள்النَّارِ‌ۚநரகம்وَذٰ لِكَஇதுجَزٰٓؤُاகூலிالظّٰلِمِيْنَ‌ۚ‏‏அநியாயக்காரர்களின்
இன்னீ உரீது அன் தBபூ'அ Bபி இத்மீ வ இத்மிக Fபதகூன மின் அஸ்-ஹாBபின் னார்; வ தாலிக ஜZஜா'உள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய். இது தான் அநியாயக்காரர்களின் கூலியாகும் (என்றும் கூறினார்),
அப்துல் ஹமீது பாகவி
என் பாவச் சுமையையும், உன் பாவச் சுமையுடன் நீ சுமந்துகொண்டு (இறைவனிடம்) வருவதையே நான் விரும்புகின்றன். அவ்வாறு நீ வந்தால் நரகவாசியாகி விடுவாய் இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்'' (என்று கூறினார்.)
IFT
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்தையும் நீயே சேகரித்துக் கொண்டு நீ நரகவாசியாகி விடுவதை நான் விரும்புகின்றேன். இதுதான் அக்கிரமக்காரர்கள் புரிந்த கொடுமைக்குச் சரியான கூலியாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய பாவத்தையும், உன்னுடைய பாவத்தையும் நீ சுமந்து கொண்டு (அல்லாஹ்விடம்) வருவதையே நிச்சயமாக நான் நாடுகிறேன், அவ்வாறாயின் நீ நரகவாசிகளில் உள்ளவனாகிவிடுவாய், இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்”, எனவும் கூறினார்.
Saheeh International
Indeed, I want you to obtain [thereby] my sin and your sin so you will be among the companions of the Fire. And that is the recompense of wrongdoers."
فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَتْلَ اَخِیْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِیْنَ ۟
فَطَوَّعَتْதூண்டியதுلَهٗஅவரைنَفْسُهٗஅவருடைய மனம்قَـتْلَகொல்வதற்குاَخِيْهِதன் சகோதரரைفَقَتَلَهٗஆகவே அவரைக் கொன்றார்فَاَصْبَحَஆகவே ஆகினார்مِنَ الْخٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளில்
Fபதவ்வ'அத் லஹூ னFப்ஸு ஹூ கத்ல அகீஹி Fபகதலஹூ Fப அஸ்Bபஹ மினல் காஸிரீன்
முஹம்மது ஜான்
(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
(இதன் பின்னரும்) அவர் தன் சகோதரரை வெட்டிவிடும்படியாக அவருடைய மனம் அவரைத் தூண்டவே, அவர் அவரை வெட்டிவிட்டார். அதனால் அவர் நஷ்டமடைந்தவரானார்.
IFT
இறுதியில் தன்னுடைய சகோதரரைக் கொலை செய்யும்படி அவனுடைய மனம் அவனைத் தூண்டியது. அதனால் அவன் அவரைக் கொலை செய்து பேரிழப்பிற்கு ஆளாகிவிட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதன் பின்னரும்) அவர், தன் சகோதரரைக் கொலை செய்துவிடுவதையே அவருடைய மனம் அவருக்கு எளிதாகக்காட்டியது, ஆகவே, அவர் அவரைக் கொலை செய்து விட்டார், அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் (உள்ளவராக) ஆகிவிட்டார்.
Saheeh International
And his soul permitted to him the murder of his brother, so he killed him and became among the losers.
فَبَعَثَ اللّٰهُ غُرَابًا یَّبْحَثُ فِی الْاَرْضِ لِیُرِیَهٗ كَیْفَ یُوَارِیْ سَوْءَةَ اَخِیْهِ ؕ قَالَ یٰوَیْلَتٰۤی اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِیَ سَوْءَةَ اَخِیْ ۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِیْنَ ۟
فَبَـعَثَஆகவே அனுப்பினான்اللّٰهُஅல்லாஹ்غُرَابًاஒரு காகத்தைيَّبْحَثُதோண்டுகிறதுفِىْ الْاَرْضِபூமியில்لِيُرِيَهٗகாட்டுவதற்காக/ அவனுக்குكَيْفَஎவ்வாறுيُوَارِىْமறைப்பான்سَوْءَةَசடலத்தைاَخِيْهِ‌ؕதன் சகோதரனின்قَالَகூறினான்يَاوَيْلَتٰٓىஎன் நாசமேاَعَجَزْتُஇயலாமலாகி விட்டேனா?اَنْ اَكُوْنَநான் ஆகمِثْلَபோன்றுهٰذَاஇந்தالْغُرَابِகாகம்فَاُوَارِىَமறைத்திருப்பேனேسَوْءَةَசடலத்தைاَخِىْ‌ۚஎன் சகோதரனின்فَاَصْبَحَஆகிவிட்டான்مِنَ النّٰدِمِيْنَۛ ۚ ۙ‏‏‏துக்கப்படுபவர்களில்
FபBப'அதல் லாஹு குராBபய் யBப்ஹது Fபில் அர்ளி லியுரியஹூ கய்Fப யுவாரீ ஸவ்'அத அகீஹ்; கால யா வய்லதா அ'அஜZஜ்து அன் அகூன மித்ல ஹாதல் குராBபி Fப உவாரிய ஸவ் அத அகீ Fப அஸ்Bபஹ மினன் னாதிமீன்
முஹம்மது ஜான்
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பிவைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற்காகப்) பூமியைத் தோண்டிற்று. (இதைக் கண்ட) அவர் ‘‘அந்தோ! இந்தக் காகத்தைப்போல் (சொற்ப அறிவுடையவனாக) நான் இருந்தாலும் என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேனே! (அதுவும்) என்னால் முடியாமல் போய் விட்டதே!'' என்று (அழுது) கூறித் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
IFT
பிறகு அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டிற்று; அவனுடைய சகோதரனின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்பதனை அவனுக்குக் காண்பிப்பதற்காக! இதனைக் கண்ணுற்ற அவன், “அந்தோ, என் துயரமே! இந்த காகத்தைப் போன்றுகூட நான் இல்லையே! (அவ்வாறு இருந்திருந்தால்) என்னுடைய சகோதரருடைய சடலத்தை அடக்கம் செய்வதற்கான முறை எனக்குப் புலப்பட்டிருக்குமே! எனப் புலம்பினான். பின்னர், தான் செய்தது குறித்து அவன் பெரிதும் வருந்தினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், பூமியைத் தோண்டக்கூடிய ஒரு காக்கையை தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு அவர் மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அது காண்பிப்பதற்காக அல்லாஹ் அனுப்பி வைத்தான், (அது பூமியைத் தோன்றிற்று, இதனைக் கண்ட) அவர் “என்னுடைய கேடே இந்தக் காகத்தைப் போல் ஆவதற்குகூட இயலாதவனாக நான் ஆகிவிட்டேனா? அவ்வாறு (நான் இருந்திருந்தாலும்) என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேன்” என்று (அழுது) கூறி கைசேதப்படக்கூடியவர்களில் ஒருவராக அவர் ஆகிவிட்டார்.
Saheeh International
Then Allah sent a crow searching [i.e., scratching] in the ground to show him how to hide the disgrace of his brother. He said, "O woe to me! Have I failed to be like this crow and hide the disgrace [i.e., body] of my brother?" And he became of the regretful.
مِنْ اَجْلِ ذٰلِكَ ؔۛۚ كَتَبْنَا عَلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًا بِغَیْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِی الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِیْعًا ؕ وَمَنْ اَحْیَاهَا فَكَاَنَّمَاۤ اَحْیَا النَّاسَ جَمِیْعًا ؕ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَیِّنٰتِ ؗ ثُمَّ اِنَّ كَثِیْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰلِكَ فِی الْاَرْضِ لَمُسْرِفُوْنَ ۟
مِنْ اَجْلِகாரணமாகذٰ لِكَ ۛ ؔ ۚஅதன்كَتَبْنَاவிதித்தோம்عَلٰىமீதுبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்கள்اَنَّهٗநிச்சயமாகمَنْஎவன்قَتَلَகொன்றார்نَفْسًۢاஓர் உயிரைبِغَيْرِ نَفْسٍஓர் உயிரைக் கொலை செய்ததற்கு அல்லாமல்اَوْஅல்லதுفَسَادٍவிஷமம் செய்தல்فِى الْاَرْضِபூமியில்فَكَاَنَّمَاபோலாவான்قَتَلَகொன்றான்النَّاسَமக்கள்جَمِيْعًا ؕஅனைவரையும்وَمَنْஎவர்اَحْيَاهَاவாழவைத்தார்/அதைفَكَاَنَّمَاۤபோலாவார்اَحْيَاவாழவைத்தார்النَّاسَமக்கள்جَمِيْعًا ؕஅனைவரையும்وَلَـقَدْதிட்டமாகجَآءَتْهُمْவந்தார்கள்/அவர்களிடம்رُسُلُنَاநம் தூதர்கள்بِالْبَيِّنٰتِஅத்தாட்சிகளுடன்ثُمَّபிறகுاِنَّநிச்சயமாகكَثِيْرًاஅதிகமானவர்கள்مِّنْهُمْஅவர்களில்بَعْدَ ذٰ لِكَஅதன் பின்னர்فِى الْاَرْضِபூமியில்لَمُسْرِفُوْنَ‏வரம்புமீறுகிறார்கள்
மின் அஜ்லி தாலிக கதBப்னா 'அலா Bபனீ இஸ்ரா'ஈல அன்னஹூ மன் கதல னFப்ஸம் Bபிகய்ரி னFப்ஸின் அவ் Fபஸாதின் Fபில் அர்ளி Fபக அன்னம்மா கதலன் னாஸ ஜமீ'அ(ன்)வ் வ மன் அஹ்யாஹா Fபக அன்னமா அஹ்யன் னாஸ ஜமீ'ஆ; வ லகத் ஜா'அத் ஹும் ருஸுலுனா Bபில்Bபய்யினாதி தும்ம இன்ன கதீரம் மின்ஹும் Bபஃத தாலிக Fபில் அர்ளி லமுஸ்ரிFபூன்
முஹம்மது ஜான்
இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர்.
IFT
இதன் காரணமாகவே, இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு நாம் கட்டளை பிறப்பித்தோம்: “எவனொருவன் ஒரு மனிதனைக் கொலை செய்ததற்குப் பகரமாக அன்றி அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காக அன்றி வேறு காரணத்திற்காக மற்றவனைக் கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான்.” ஆனால் அவர்களின் நிலை என்னவெனில், நம்முடைய தூதர்கள் (தொடர்ச்சியாக) அவர்களிடம் தெள்ளத் தெளிவான கட்டளைகள் கொண்டு வந்த பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு மீறிய செயல்கள் புரிபவர்களாகவே இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதன் காரணமாகவே “எவரொருவர் மற்றோர் ஆத்மாவின் கொலைக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் (உண்டாகும்) குழப்பத்தி(னைத் தடை செய்த)ற்காகவோ தவிர, (அநியாயமாக மற்றொருவரை) கொலை செய்கின்றாரோ அவர், மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவர் போலாவார் என்றும் எவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழவைக்கின்றாரோ அவர், மனிதர்கள் யாவரையுமே வாழவைத்தவர் போலாவார்” என்றும் இஸ்ராயீலின் மக்களின் மீது நாம் விதியாக்கப்பட்டு விட்டோம், மேலும், நம்முடைய தூதர்கள் பலர் அவர்களிடம் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள், அப்பால் நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர், இதற்குப்பின்னரும் பூமியில் வரம்பு கடந்தவர்களகவே இருந்தனர்.
Saheeh International
Because of that, We decreed upon the Children of Israel that whoever kills a soul unless for a soul or for corruption [done] in the land - it is as if he had slain mankind entirely. And whoever saves one - it is as if he had saved mankind entirely. And Our messengers had certainly come to them with clear proofs. Then indeed many of them, [even] after that, throughout the land, were transgressors.
اِنَّمَا جَزٰٓؤُا الَّذِیْنَ یُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا اَنْ یُّقَتَّلُوْۤا اَوْ یُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ یُنْفَوْا مِنَ الْاَرْضِ ؕ ذٰلِكَ لَهُمْ خِزْیٌ فِی الدُّنْیَا وَلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
اِنَّمَا جَزٰٓؤُاதண்டனையெல்லாம்الَّذِيْنَஎவர்கள்يُحَارِبُوْنَபோரிடுவார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்وَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதர்وَيَسْعَوْنَஇன்னும் முயற்சிக்கின்றனர்فِى الْاَرْضِபூமியில்فَسَادًاகுழப்பம் செய்யاَنْ يُّقَتَّلُوْۤاஅவர்கள் கொல்லப்படுவதுاَوْஅல்லதுيُصَلَّبُوْۤاஅவர்கள் சிலுவையில் அறையப்படுவதுاَوْஅல்லதுتُقَطَّعَவெட்டப்படுவதுاَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்وَاَرْجُلُهُمْஇன்னும் அவர்களின் கால்கள்مِّنْ خِلَافٍமாற்றமாகاَوْஅல்லதுيُنْفَوْاஅவர்கள் கடத்தப்படுவதுمِنَஇருந்துالْاَرْضِ‌ؕநாடுذٰ لِكَஇதுلَهُمْஅவர்களுக்குخِزْىٌஇழிவுفِى الدُّنْيَا‌இவ்வுலகத்தில்وَ لَهُمْஇன்னும் அவர்களுக்குفِى الْاٰخِرَةِமறுமையில்عَذَابٌவேதனைعَظِيْمٌ ۙ‏பெரியது
இன்னமா ஜZஜா'உல் லதீன யுஹாரிBபூனல் லாஹ வ ரஸூலஹூ வ யஸ்'அவ்ன Fபில் அர்ளி Fபஸாதன் அய் யுகத்தலூ அவ் யுஸல்லBபூ அவ் துகத்த'அ அய்தீஹிம் வ அர்ஜுலுஹும் மின் கிலாFபின் அவ் யுன்Fபவ் மினலர்ள்; தாலிக லஹும் கிZஜ்யுன் Fபித் துன்யா வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் 'அளீம்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகிறார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்றுவிடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். மேலும், மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு.
IFT
எவர்கள் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்க தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களுடைய மாறுகை, மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும். இது அவர்களுக்கு உலகில் கிடைக்கும் இழிவாகும். மேலும், மறுமையில் அவர்களுக்கு இதைவிடக் கடுமையான தண்டனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் தொடுத்து பூமியில் குழப்பம் செய்து கொண்டும் திரிகின்றவர்களுக்குரிய தண்டனையெல்லாம் (அவர்கள்) கொல்லப்பட வேண்டும் அல்லது சிலுவையில் அறையப்பட வேண்டும், அல்லது அவர்களின் கைகளும், அவர்களின் கால்களும் மாறாக (ஒரு பக்கத்துக்கையும், மறு பக்கத்துக்காலுமாக)த் துண்டிக்கப்பட வேண்டும், அல்லது நாடுகடத்தப்படுதல் வேண்டும், இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும், இன்னும், மறுமையில் மகத்தான வேதனை அவர்களுக்குண்டு.
Saheeh International
Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and strive upon earth [to cause] corruption is none but that they be killed or crucified or that their hands and feet be cut off from opposite sides or that they be exiled from the land. That is for them a disgrace in this world; and for them in the Hereafter is a great punishment,
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَیْهِمْ ۚ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
اِلَّاதவிரالَّذِيْنَஎவர்கள்تَابُوْا(மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பினார்கள்مِنْ قَبْلِமுன்னர்اَنْ تَقْدِرُوْاநீங்கள் ஆற்றல்பெறுவதுعَلَيْهِمْ‌ۚஅவர்கள் மீதுفَاعْلَمُوْۤاஆகவே அறிந்துகொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
இல்லல் லதீன தாBபூ மின் கBப்லி அன் தக்திரூ 'அலய்ஹிம் Fபஃலமூ அன்ன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்திக் கொள்கிறார்களே அவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக்கொண்)டவர்களைத் தவிர நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னிப்பவன் பெரும் கருணை புரிபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
IFT
எனினும் உங்கள் பிடியில் நீங்கள் அவர்களைக் கொண்டு வருவதற்கு முன் எவர்கள் பாவமன்னிப்புக் கோரினார்களோ நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனும், மிகுந்த கருணை உள்ளவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(எனினும்,) பிடித்து தண்டிக்க அவர்கள் மீது நீங்கள் சக்தி பெறுவதற்கு முன்னதாக (அவர்களில்) பச்சாதாபப்பட்டவர்களைத்தவிர, அப்போது நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
Except for those who return [repenting] before you overcome [i.e., apprehend] them. And know that Allah is Forgiving and Merciful.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَیْهِ الْوَسِیْلَةَ وَجَاهِدُوْا فِیْ سَبِیْلِهٖ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களே!اتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَابْتَغُوْۤاஇன்னும் தேடுங்கள்اِلَيْهِஅவனளவில்الْوَسِيْلَةَநன்மையைوَجَاهِدُوْاஇன்னும் போரிடுங்கள்فِىْ سَبِيْلِهٖஅவனுடைய பாதையில்لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றியடைவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வBப்தகூ இலய்ஹில் வஸீலத வ ஜாஹிதூ Fபீ ஸBபீலிஹீ ல'அல்லகும் துFப்லிஹூன்
முஹம்மது ஜான்
முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவன் பக்கம் நெருங்கிச் செல்வதற்கான வழி வகையினைத் தேடுங்கள்; மேலும், அவனுடைய வழியில் கடுமையாகப் பாடுபடுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், மேலும் அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை (வணக்க வழிபாடுகளின் மூலம்) தேடிக்கொள்ளுங்கள், மேலும், அவனுடைய பாதையில் யுத்தம் செய்யுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றியடையலாம்.
Saheeh International
O you who have believed, fear Allah and seek the means [of nearness] to Him and strive in His cause that you may succeed.
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لِیَفْتَدُوْا بِهٖ مِنْ عَذَابِ یَوْمِ الْقِیٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்لَوْ اَنَّ لَهُمْநிச்சயமாக அவர்களுக்கு இருந்தால்مَّاஎவைفِى الْاَرْضِஇப்பூமியில்جَمِيْعًاஅனைத்தும்وَّمِثْلَهٗஇன்னும் அவை போன்றதுمَعَهٗஅத்துடன்لِيَـفْتَدُوْاஅவர்கள் பினை கொடுப்பதற்காகبِهٖஅதைக் கொண்டுمِنْஇருந்துعَذَابِவேதனைيَوْمِ الْقِيٰمَةِமறுமை நாளின்مَا تُقُبِّلَஅங்கீகரிக்கப்படாதுمِنْهُمْ‌ۚஅவர்களிடமிருந்துوَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
இன்னல் லதீன கFபரூ லவ் அன்ன லஹும் மா Fபில் அர்ளி ஜமீ'அ(ன்)வ் வ மித்லஹூ ம'அஹூ லியFப்ததூ Bபிஹீ மின் 'அதாBபி யவ்மில் கியாமதி மா துகுBப்Bபில மின்ஹும் வ லஹும் அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா; மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை அனைத்தையும் தாங்கள் மறுமை நாளின் வேதனையிலிருந்து தப்பிக்க பிரதியாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும்.
IFT
நன்கு தெரிந்து கொள்ளுங்கள்: எவர்கள் நிராகரிக்கும் போக்கினை மேற்கொள்கின்றார்களோ அவர்களிடம் பூமி முழுவதிலும் உள்ள செல்வம் அனைத்தும், அத்துடன் அதேபோல் இன்னொரு பங்கும் இருந்து அவற்றை மறுமைநாளின் வேதனையிலிருந்து (தாங்கள்) விடுபட ஈடாகக் கொடுக்க விரும்பினாலும் அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை கிடைத்தே தீரும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நிராகரித்துவிட்டவர்கள் - அவர்களுக்கு மறுமை நாளில் (அவர்கள்) படும் வேதனையிலிருந்து (தங்களை விடுவித்துக் கொள்ள) இழப்பீடாகக் கொடுப்பதற்காக இப்பூமியில் உள்ள யாவும் இன்னும், அத்துடன் அதுபோன்றதும் நிச்சயமாக(ச் சொந்தமாக) இருந்தாலும் அவர்களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
Saheeh International
Indeed, those who disbelieve - if they should have all that is in the earth and the like of it with it by which to ransom themselves from the punishment of the Day of Resurrection, it will not be accepted from them, and for them is a painful punishment.
یُرِیْدُوْنَ اَنْ یَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنْهَا ؗ وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟
يُرِيْدُوْنَநாடுவார்கள்اَنْ يَّخْرُجُوْاஅவர்கள் வெளியேறمِنَஇருந்துالنَّارِநரகம்وَمَاஇல்லைهُمْஅவர்கள்بِخَارِجِيْنَவெளியேறுபவர்களாகمِنْهَا‌அதிலிருந்துوَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابٌவேதனைمُّقِيْمٌ‏நிலையானது
யுரீதூன அய் யக்ருஜூ மினன் னாரி வமா ஹும் Bபிகாரி ஜீன மின்ஹா வ லஹும் 'அதாBபும் முகீம்
முஹம்மது ஜான்
அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியேறுகிறவர்களாக இல்லை; அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறவே விரும்புவார்கள். எனினும், அதிலிருந்து வெளியேற அவர்களால் (முடியவே) முடியாது. அவர்களுக்கு வேதனை (என்றென்றுமே) நிலைத்திருக்கும்.
IFT
அவர்கள் நரகத்தை விட்டு ஓட நினைப்பார்கள். ஆனால் அவர்கள் அதை விட்டு வெளியேற முடியாது. மேலும், அவர்களுக்கு நிலையான வேதனை தரப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறிவிட நாடுவார்கள், (ஆனால்) அதைவிட்டு அவர்கள் வெளியேறுகிறவர்களாகவுமில்லை, மேலும் அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.
Saheeh International
They will wish to get out of the Fire, but never are they to emerge therefrom, and for them is an enduring punishment.
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَیْدِیَهُمَا جَزَآءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَالسَّارِقُதிருடன்وَالسَّارِقَةُஇன்னும் திருடிفَاقْطَعُوْۤاவெட்டுங்கள்اَيْدِيَهُمَاஅவ்விருவரின் கரங்களைجَزَآءًۢகூலியாகبِمَا كَسَبَاஅவ்விருவர் செய்ததன் காரணமாகنَـكَالًاதண்டனையாகمِّنَ اللّٰهِ ؕஅல்லாஹ்விடமிருந்துوَاللّٰهُஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
வஸ்ஸாரிகு வஸ்ஸாரிகது Fபக்த'ஊ அய்தியஹுமா ஜZஜா'அம் Bபிமா கஸBபா னகாலம் மினல் லாஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
முஹம்மது ஜான்
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அவர்களுடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்களுடைய சம்பாதனைக்கான கூலியாகும். மேலும், அல்லாஹ் வழங்கும் படிப்பினைமிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும் நுண்ணறிவுள்ளோனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திருடனும், திருடியும் அவ்விருவரும் சம்பாதித்ததற்குக் கூலியாக, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவ்விருவரின் கைகளைத் துண்டித்து விடுங்கள், மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
Saheeh International
[As for] the thief, the male and the female, amputate their hands in recompense for what they earned [i.e., committed] as a deterrent [punishment] from Allah. And Allah is Exalted in Might and Wise.
فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ یَتُوْبُ عَلَیْهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
فَمَنْஎவர்تَابَதிருந்தி திரும்பினார்مِنْۢ بَعْدِபின்னர்ظُلْمِهٖதன் தீமைوَاَصْلَحَஇன்னும் திருத்திக் கொண்டார்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَتُوْبُபிழை பொறுப்பான்عَلَيْهِؕஅவர் மீதுاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
Fபமன் தாBப மிம் Bபஃதி ளுல்மிஹீ வ அஸ்லஹ Fப இன்னல் லாஹ யதூBபு 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
எவரேனும், தம் தீச்செயலுக்காக மனம் வருந்தித் தம்மைச் சீர் திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர் தவ்பாவை ஏற்று) மன்னிக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எவரேனும் தன் (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
IFT
எனவே, யாரேனும் அநீதி இழைத்தபின் பாவ மன்னிப்புக்கோரி, தன்னைச் சீர்திருத்திக் கொண்டால் அல்லாஹ்வின் கருணைப் பார்வை அவன் பக்கம் மீண்டும் திரும்புகிறது. நிச்சயமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும் அளப்பரிய கருணையுள்ளவனுமாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, எவர், தம்முடைய அநீதத்திற்குப் பின்னர் பச்சாதாபப்பட்டு, (தன்னைச்) சீர் திருத்தியும் கொண்டாரோ, அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய தவ்பாவை அங்கீகரிக்கின்றான், (காரணம்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிக்க கிருபையுடையவன்.
Saheeh International
But whoever repents after his wrongdoing and reforms, indeed, Allah will turn to him in forgiveness. Indeed, Allah is Forgiving and Merciful.
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَلَمْ تَعْلَمْநீர் அறியவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَهٗஅவனுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِؕஇன்னும் பூமியின்يُعَذِّبُவேதனை செய்வான்مَنْஎவரைيَّشَآءُநாடுகிறான்وَيَغْفِرُஇன்னும் மன்னிப்பான்لِمَنْஎவரைيَّشَآءُ‌ ؕநாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாப் பொருள்கள் மீதும்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
அலம் தஃலம் அன்னல் லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யு'அத் திBபு ம(ன்)ய்-யஷா'உ வ யக்Fபிரு லிம(ன்)ய்-யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? ஆகவே, அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பளிப்பான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ் வானங்கள், பூமி இவற்றின் ஆட்சிக்கு உரியவன் என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடுபவர்களை அவன் தண்டிப்பான்; மேலும் நாடுபவர்களை மன்னிப்பான்; அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் - அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? (ஆகவே) அவன் நாடியவர்களை வேதனை செய்வான், அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பும் அளிப்பான், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
Do you not know that to Allah belongs the dominion of the heavens and the earth? He punishes whom He wills and forgives whom He wills, and Allah is over all things competent.
یٰۤاَیُّهَا الرَّسُوْلُ لَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ مِنَ الَّذِیْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِیْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِیْنَ ۙ لَمْ یَاْتُوْكَ ؕ یُحَرِّفُوْنَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهٖ ۚ یَقُوْلُوْنَ اِنْ اُوْتِیْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ یُّرِدِ اللّٰهُ فِتْنَتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَمْ یُرِدِ اللّٰهُ اَنْ یُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ ۖۚ وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُதூதரேلَا يَحْزُنْكَஉமக்குக் கவலையூட்ட வேண்டாம்الَّذِيْنَஎவர்கள்يُسَارِعُوْنَதீவிரம்காட்டுகிறார்கள்فِى الْكُفْرِநிராகரிப்பில்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاَ فْوَاهِهِمْதங்கள் வாய்களால்وَلَمْ تُؤْمِنْஇன்னும் நம்பிக்கை கொள்ளவில்லைقُلُوْبُهُمْ‌ ‌ۛۚஅவர்களுடைய உள்ளங்கள்وَمِنَஇன்னும் இருந்துالَّذِيْنَஎவர்கள்هَادُوْا ۛۚயூதராகி விட்டார்கள்سَمّٰعُوْنَஅதிகம் செவிமடுக்கிறார்கள்لِلْكَذِبِபொய்யைسَمّٰعُوْنَஅதிகம் செவிமடுக்கிறார்கள்لِقَوْمٍகூட்டத்திற்காகاٰخَرِيْنَۙமற்றொருلَمْ يَاْتُوْكَ‌ؕஅவர்கள் வரவில்லை / உம்மிடம்يُحَرِّفُوْنَமாற்றுகின்றனர்الْـكَلِمَவசனங்களைمِنْۢ بَعْدِஇருந்துمَوَاضِعِهٖ‌ۚஅவற்றின் இடங்கள்يَقُوْلُوْنَகூறுகின்றனர்اِنْ اُوْتِيْتُمْநீங்கள் கொடுக்கப்பட்டால்هٰذَاஇதைفَخُذُوْهُஅதை எடுங்கள்وَاِنْ لَّمْ تُؤْتَوْهُநீங்கள் கொடுக்கப்படவில்லையெனில்/அதைفَاحْذَرُوْا‌ ؕஎச்சரிக்கையாக இருங்கள்وَمَنْஎவர்يُّرِدِநாடினான்اللّٰهُஅல்லாஹ்فِتْنَـتَهٗசோதிக்க/அவரைفَلَنْ تَمْلِكَஉரிமை பெறமாட்டீர்لَهٗஅவருக்காகمِنَவிடம்اللّٰهِஅல்லாஹ்شَيْــٴًـــا‌ؕஎதையும்اُولٰٓٮِٕكَஅவர்கள்الَّذِيْنَஎவர்கள்لَمْ يُرِدِநாடவில்லைاللّٰهُஅல்லாஹ்اَنْ يُّطَهِّرَஅவன்பரிசுத்தமாக்கقُلُوْبَهُمْ‌ ؕஉள்ளங்களை / அவர்களுடையلَهُمْஅவர்களுக்குفِىْ الدُّنْيَاஇம்மையில்خِزْىٌ ۚۖஇழிவுوَّஇன்னும்لَهُمْஅவர்களுக்குفِىْ الْاٰخِرَةِமறுமையில்عَذَابٌவேதனைعَظِيْمٌ‏பெரிய
யா அய்யுஹர் ரஸூலு லா யஹ்Zஜுன்கல் லதீன யுஸா ரி'ஊன Fபில் குFப்ரி மினல் லதீன காலூ ஆமன்னா Bபி அFப்வாஹிஹிம் வ லம் து'மின் குலூBபுஹும்; வ மினல் லதீன ஹாதூ ஸம்மா'ஊன லில்கதிBபி ஸம்மா'ஊன லிகவ்மின் ஆகரீன லம் ய'தூக யுஹர்ரிFபூனல் கலிம மிம் Bபஃதி மவாளி'இஹீ யகூலூன இன் ஊதீதும் ஹாதா Fபகுதூஹு வ இல் லம் து'தவ்ஹு Fபஹ்தரூ; வ ம(ன்)ய்-யுரிதில் லாஹு Fபித்னதஹூ Fபலன் தம்லிக லஹூ மினல் லாஹி ஷய்'ஆ; உலா 'இகல் லதீன லம் யுரிதில் லாஹு அ(ன்)ய்-யுதஹ்ஹிர குலூBபஹும்; லஹும் Fபித் துன்யா கிZஜ்யு(ன்)வ் வ லஹும் Fபில் ஆகிரதி'அதாBபுன் 'அளீம்
முஹம்மது ஜான்
தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்; மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி “இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; அதை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள்; மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர்; இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
(நம்) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உமக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் ‘‘நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர்(களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். மேலும், (இதுவரை) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவற்றை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்'' என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அவருக்காக அல்லாஹ்விடம் எதையும் செய்ய நீர் ஆற்றல் பெறமாட்டீர். இவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு.
IFT
தூதரே! நிராகரிப்பில் முனைப்புடன் இருக்கின்றவர்கள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று வாயளவில் கூறிவிட்டு, உள்ளத்தில் நம்பிக்கை கொள்ளாதவர்களாயினும் சரி, அல்லது யூதர்களைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும் சரி! அவர்களின் நிலை எவ்வாறு உள்ளதென்றால் பொய்யுரைகளை அதிகமாகச் செவிமடுக்கின்றார்கள்; உங்களிடம் என்றுமே வந்திராத மற்றவர்களுக்காக இரகசியங்களைத் துப்பறிந்து கொண்டு திரிகின்றார்கள். இறைவேதத்தின் சொற்களை அவற்றிற்குரிய சரியான இடங்கள் வரையறுக்கப்பட்டிருக்க, அவற்றின் உண்மையான பொருளிலிருந்து மாற்றுகின்றார்கள். மேலும், அவர்கள் மக்களிடம் “உங்களுக்கு இன்ன கட்டளை கொடுக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லாவிடில் ஏற்க மறுத்து விடுங்கள்” என்று கூறுகின்றார்கள். ஒருவனைக் குழப்பத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று அல்லாஹ் நாடிவிட்டானாகில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவனைக் காப்பாற்ற உம்மால் முடியாது. இவர்களுடைய உள்ளங்களைத் தூய்மை செய்ய அல்லாஹ் நாடவில்லை. இவர்களுக்கு இவ்வுலகிலும் இழிவுதான்; மறுமையிலும் கடும் தண்டனைதான் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய தூதரே) அவர்களது இதயங்கள் விசுவாசங் கொள்ளாதிருக்க தங்களது வாய்களால் விசுவாசங்கொண்டோம் என்று கூறியோர்களிலிருந்தும், இன்னும் யூதர்களாகி விட்டவர்களிலிருந்தும் நிராகரிப்பில் விரைந்து சென்று கொண்டிருப்போர்கள் உமக்குக் கவலையைத்தர வேண்டாம், (அத்தகையோர்) பொய்யானவற்றையே (ஆவலோடு அதிகமாகக் கேட்கின்றார்கள், (இதுவரையில்) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்கு இவைகளை அறிவிப்பதற்காகவும் அதிகமாக (செவிகொடுத்து)க் கேட்கின்றவர்கள், அவர்கள் (வேத) வசனங்களை, அவற்றின் உரிய இடங்களிலிருந்து மாற்றி (விட்டு இவர்களிடம்) “உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன)துகொடுக்கப்பட்டால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், அது உங்களுக்குக் கொடுக்கப்படாவிடில், (அதிலிருந்து விலகி) எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்” என்று கூறுகின்றனர், மேலும், அல்லாஹ் எவருடைய வழிகேட்டை நாடுகிறானோ அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் சக்திபெறமாட்டீர், இத்தகையோர்தான் - அவர்களின் இதயங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் நாடவில்லை, இவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு, மறுமையில் இவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.
Saheeh International
O Messenger, let them not grieve you who hasten into disbelief of those who say, "We believe" with their mouths, but their hearts believe not, and from among the Jews. [They are] avid listeners to falsehood, listening to another people who have not come to you. They distort words beyond their [proper] places [i.e., usages], saying, "If you are given this, take it; but if you are not given it, then beware." But he for whom Allah intends fitnah - never will you possess [power to do] for him a thing against Allah. Those are the ones for whom Allah does not intend to purify their hearts. For them in this world is disgrace, and for them in the Hereafter is a great punishment.
سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَكّٰلُوْنَ لِلسُّحْتِ ؕ فَاِنْ جَآءُوْكَ فَاحْكُمْ بَیْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ ۚ وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ یَّضُرُّوْكَ شَیْـًٔا ؕ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَیْنَهُمْ بِالْقِسْطِ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
سَمّٰعُوْنَஅதிகம் செவிமடுக்கிறார்கள்لِلْكَذِبِபொய்யைاَ كّٰلُوْنَஅதிகம் விழுங்குகிறார்கள்لِلسُّحْتِ‌ؕஆகாத செல்வத்தைفَاِنْ جَآءُوْكَஇவர்கள் உம்மிடம் வந்தால்فَاحْكُمْதீர்ப்பளிப்பீராகبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்اَوْஅல்லதுاَعْرِضْபுறக்கணிப்பீராகعَنْهُمْ‌ ۚஅவர்களைوَاِنْ تُعْرِضْநீர் புறக்கணித்தால்عَنْهُمْஅவர்களைفَلَنْஒருபோதும் முடியாதுيَّضُرُّوْكَஅவர்கள் உமக்கு கெடுதி செய்யشَيْــٴًـــا‌ ؕகொஞ்சமும்وَاِنْ حَكَمْتَநீர் தீர்ப்பளித்தால்فَاحْكُمْதீர்ப்பளிப்பீராகبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِالْقِسْطِ‌ ؕநீதமாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُقْسِطِيْنَ‏நீதவான்களை
ஸம்மா'ஊன லில்கதிBபி அக்காலூன லிஸ்ஸுஹ்த்; Fப இன் ஜா'ஊக Fபஹ்கும் Bபய்னஹும் அவ் அஃரிள் அன்ஹும் வ இன் துஃரிள் 'அன்ஹும் Fபல(ன்)ய்-யளுர்ரூக ஷய்'அ(ன்)வ் வ இன் ஹகம்த Fபஹ்கும் Bபய்னஹும் Bபில்கிஸ்த்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
முஹம்மது ஜான்
அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் (ஒரு நியாயத்திற்காக) உம்மிடம் வரும் சமயத்தில் அவர்களுக்கிடையில் நீங்கள் (நீதமாக) தீர்ப்பளிப்பீராக அல்லது (தீர்ப்பளிக்காது) அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. நீர் அவர்களைப் புறக்கணித்து விட்டாலும், அவர்கள் உமக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அவர்களுக்கு இடையில் நீர் தீர்ப்பளித்தால், நீதமாகவே தீர்ப்பளிப்பீராக. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கிறான்.
IFT
அவர்கள், பொய்யுரைகளைச் செவியேற்பவர்களும் தடுக்கப்பட்ட பொருள்களை அதிகம் உண்பவர்களுமாவார்கள். எனவே, அவர்கள் உம்மிடம் (தமது வழக்குகளைச் சமர்ப்பிக்க) வந்தால் விரும்பினால் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கும், அல்லது மறுத்து விடுவதற்கும் உமக்கு உரிமை உண்டு; நீர் மறுத்து விட்டால் அவர்களால் எந்தத் தீங்கும் ஒருபோதும் உமக்குச் செய்து விட முடியாது. மேலும், தீர்ப்பு வழங்குவீராயின் அவர்களிடையே நீதியைக் கொண்டே தீர்ப்பு வழங்குவீராக! திண்ணமாக, அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி இவர்கள்) பொய்யையே அதிகமாக செவிமடுக்கின்றார்கள் – பாவமான (தடுக்கப்பட்ட)தையே அதிகமாக உண்பவர்கள், ஆகவே, அவர்கள் (தீர்ப்புத்தேடி) உம்மிடம் வந்தார்களானால், அவர்களுக்கிடையில், தீர்ப்பளிப்பீராக! அல்லது அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! நீர், அவர்களைப் புறக்கணித்துவிட்டாலும் அவர்கள் யாதொரு தீங்கும் ஒருபோதும் உமக்குச் செய்ய முடியாது, இன்னும், நீர் தீர்ப்பளித்தால் நீதியைக்கொண்டு அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக! (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களை நேசிக்கின்றான்.
Saheeh International
[They are] avid listeners to falsehood, devourers of [what is] unlawful. So if they come to you, [O Muhammad], judge between them or turn away from them. And if you turn away from them - never will they harm you at all. And if you judge, judge between them with justice. Indeed, Allah loves those who act justly.
وَكَیْفَ یُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰىةُ فِیْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ یَتَوَلَّوْنَ مِنْ بَعْدِ ذٰلِكَ ؕ وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟۠
وَكَيْفَஎவ்வாறுيُحَكِّمُوْنَكَதீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்/உம்மைوَعِنْدَஇருக்க / இடம்هُمُஅவர்கள்التَّوْرٰٮةُதவ்றாத்فِيْهَاஅதில்حُكْمُசட்டம்اللّٰهِஅல்லாஹ்வின்ثُمَّபிறகுيَتَوَلَّوْنَதிரும்புகின்றனர்مِنْۢ بَعْدِபின்னர்ذٰ لِكَ‌ ؕஅதற்குوَمَاۤஇல்லைاُولٰٓٮِٕكَஇவர்கள்بِالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ கய்Fப யுஹக்கிமூனக வ 'இன்தஹுமுத் தவ்ராது Fபீஹா ஹுக்முல் லாஹி தும்ம யதவல்லவ்ன மிம் Bபஃதி தாலிக்; வ மா உலா'இக Bபில்மு'மினீன்
முஹம்மது ஜான்
எனினும், இவர்கள் உம்மை தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேத) முள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும் அதைப் பின்னர் புறக்கணித்து விடுவார்கள்; இவர்கள் முஃமின்களே அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும் நபியே!) இவர்கள் உம்மை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ தவ்றாத் என்னும் வேதம் இருக்கிறது. அதில் அல்லாஹ்வுடைய கட்டளையும் இருக்கிறது. அவ்வாறிருந்தும் அதை இவர்கள் புறக்கணித்துவிட்டனர். ஆகவே, (அதையும்) இவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.
IFT
மேலும், உம்மை நீதிபதியாக அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவர்களிடமோ அல்லாஹ்வின் சட்டங்கள் அடங்கிய தவ்ராத் இருந்த போதிலும் அவர்கள் அதனைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அவர்களுக்கு நம்பிக்கை என்பதே இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே!) அவர்கள் உம்மைத் தங்களுக்கு)த் தீர்ப்புக் கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? அவர்களிடத்திலோ, ‘தவ்றாத்’ என்னும் வேதம் இருக்கின்றது. அதில் அல்லாஹ்வுடைய சட்டமும் இருக்கின்றது; (அவ்வாறிருந்தும்) பின்னர் அதனை அதற்குப்பிறகு அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள், மேலும், (அதனை) அவர்கள் விசுவாசிக்கின்றவர்களல்லர்.
Saheeh International
But how is it that they come to you for judgement while they have the Torah, in which is the judgement of Allah? Then they turn away, [even] after that; but those are not [in fact] believers.
اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰىةَ فِیْهَا هُدًی وَّنُوْرٌ ۚ یَحْكُمُ بِهَا النَّبِیُّوْنَ الَّذِیْنَ اَسْلَمُوْا لِلَّذِیْنَ هَادُوْا وَالرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَیْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰیٰتِیْ ثَمَنًا قَلِیْلًا ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنَاஇறக்கினோம்التَّوْرٰٮةَதவ்றாத்தைفِيْهَاஅதிலேهُدًىநேர்வழிوَّنُوْرٌ‌ ۚஇன்னும் ஒளிيَحْكُمُதீர்ப்பளிப்பார்(கள்)بِهَاஅதைக் கொண்டேالنَّبِيُّوْنَநபிமார்கள்الَّذِيْنَஎவர்கள்اَسْلَمُوْاமுற்றிலும் பணிந்தனர்لِلَّذِيْنَஎவர்களுக்குهَادُوْاயூதராகி விட்டனர்وَ الرَّبَّانِيُّوْنَஇன்னும் குருமார்கள்وَالْاَحْبَارُஇன்னும் பண்டிதர்கள்بِمَاஎதன் காரணமாகاسْتُحْفِظُوْاகாக்கும்படி கோரப்பட்டார்கள்مِنْ كِتٰبِவேதத்தைاللّٰهِஅல்லாஹ்வின்وَكَانُوْاஇன்னும் இருந்தார்கள்عَلَيْهِஅதன் மீதுشُهَدَآءَ‌ ۚசாட்சியாளர்களாகفَلَا تَخْشَوُاஆகவே அஞ்சாதீர்கள்النَّاسَமக்களுக்குوَاخْشَوْنِஎனக்கு அஞ்சுங்கள்وَلَا تَشْتَرُوْاவாங்காதீர்கள்بِاٰيٰتِىْஎன் வசனங்களுக்குப் பகரமாகثَمَنًاகிரயத்தைقَلِيْلًا‌ ؕசொற்பமானதுوَمَنْஎவர்لَّمْ يَحْكُمْதீர்ப்பளிக்கவில்லைبِمَاۤ اَنْزَلَஇறக்கியதைக்கொண்டுاللّٰهُஅல்லாஹ்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்
இன்னா அன்Zஜல்னத் தவ்ராத Fபீஹா ஹுத(ன்)வ் வ னூர்; யஹ்குமு Bபிஹன் னBபிய்யூனல் லதீன அஸ்லமூ லில்லதீன ஹாதூ வர் ரBப்Bபானிய்யூன வல் அஹ்Bபாரு Bபிமஸ் துஹ்Fபிளூ மின் கிதாBபில் லாஹி வ கானூ 'அலய்ஹி ஷுஹதா'; Fபலா தக்-ஷவுன் னாஸ வக்-ஷவ்னி வலா தஷ்தரூ Bபி ஆயாதீ தமனன் கலீலா; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுல் காFபிரூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.
அப்துல் ஹமீது பாகவி
‘தவ்றாத்' (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் இருக்கிறது; ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ்வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். மேலும், அவர்கள்)அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே!
IFT
திண்ணமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழி காட்டுதலும் ஒளியும் இருந்தது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் அடிபணிந்த நபிமார்கள் அனைவரும் அதைக் கொண்டே இந்த யூதர்(களின் விவகாரங்)களுக்குத் தீர்ப்பளித்து வந்தனர். அவ்வாறே ரப்பானிகளும், அஹ்பாரும்* (அதனைக் கொண்டே தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்)! ஏனெனில், அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். மேலும், அதற்கு அவர்கள் சாட்சிகளாகவுமிருந்தார்கள். எனவே (யூதக் கூட்டத்தாரே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்! மேலும், என்னுடைய திருவசனங்களை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள்! எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்பத் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் தவ்றாத்தை இறக்கி வைத்தோம், அதில் நேர்வழியும் பிரகாசமுமிருக்கின்றது, (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க நபிமார்களும், (யூதர்களுடைய பண்டிதர்களாகிய) ‘ரிப்பிய்யூன்’களும், (குருமார்களாகிய) ‘அஹ்பார்’ களும், அல்லாஹ்வுடைய வேதத்தைப் பாதுகாக்க பொறுப்புக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதாலும், அதற்கு சாட்சிகளாக அவர்கள் இருந்தார்கள் என்பதாலும் அதனைக் கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளித்து வந்தார்கள், எனவே, (விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் மனிதர்களுக்கு பயப்பட வேண்டாம், எனக்கே பயப்படுங்கள், என் வசனங்களுக்குப் பகரமாக சொற்பக் கிரயத்தையும் வாங்காதீர்கள், மேலும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் தாம் நிராகரிப்பவர்களாவர்.
Saheeh International
Indeed, We sent down the Torah, in which was guidance and light. The prophets who submitted [to Allah] judged by it for the Jews, as did the rabbis and scholars by that with which they were entrusted of the Scripture of Allah, and they were witnesses thereto. So do not fear the people but fear Me, and do not exchange My verses for a small price [i.e., worldly gain]. And whoever does not judge by what Allah has revealed - then it is those who are the disbelievers.
وَكَتَبْنَا عَلَیْهِمْ فِیْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِ ۙ وَالْعَیْنَ بِالْعَیْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ ۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ ؕ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟
وَكَتَبْنَاஇன்னும் விதித்தோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுفِيْهَاۤஅதில்اَنَّநிச்சயமாகالنَّفْسَஉயிர்بِالنَّفْسِۙஉயிருக்குப் பதிலாகوَالْعَيْنَஇன்னும் கண்بِالْعَيْنِகண்ணுக்குப் பதிலாகوَالْاَنْفَஇன்னும் மூக்குبِالْاَنْفِமூக்குக்குப் பதிலாகوَالْاُذُنَஇன்னும் காதுبِالْاُذُنِகாதுக்குப் பதிலாகوَالسِّنَّஇன்னும் பல்بِالسِّنِّۙபல்லுக்குப் பதிலாகوَالْجُرُوْحَஇன்னும் காயங்கள்قِصَاصٌ‌ؕபழிவாங்கப்படும்فَمَنْஎவர்تَصَدَّقَமன்னிப்பார்بِهٖஅதைفَهُوَஅதுكَفَّارَةٌபரிகாரமாகும்لَّهٗ ؕஅவருக்குوَمَنْஎவர்கள்لَّمْ يَحْكُمْதீர்ப்பளிக்கவில்லைبِمَاۤ اَنْزَلَஇறக்கியதைக்கொண்டுاللّٰهُஅல்லாஹ்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الظّٰلِمُوْنَ‏அநியாயக்காரர்கள்
வ கதBப்னா 'அலய்ஹிம் Fபீஹா அன்னன் னFப்ஸ Bபின்னFப்ஸி வல்'அய்ன Bபில்'அய்னி வல் அன்Fப Bபிலன்Fபி வல் உதுன Bபில் உதுனி வஸ்ஸின்ன Bபிஸ்ஸின்னி வல்ஜுரூஹ கிஸாஸ்; Fபமன் தஸத்தக Bபிஹீ Fபஹுவ கFப்Fபாரதுல் லஹ்; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
முஹம்மது ஜான்
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: ‘‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்கும் (காயமாக) நிச்சயமாக பழி வாங்கப்படும்'' என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) நன்மைக்காக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக்கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்!
IFT
அ(த் தவ்ராத்)தில் யூதர்கள் மீது “உயிருக்குப் பதில் உயிரும், கண்ணுக்குப் பதில் கண்ணும், மூக்குக்குப் பதில் மூக்கும், காதுக்குப் பதில் காதும், பல்லுக்குப் பதில் பல்லும் (இதே போன்று) காயங்களுக்கும் சமமான முறையில் பழிவாங்கப்படும்” என்று நாம் விதியாக்கியிருந்தோம். ஆயினும், யாரேனும் பழிவாங்காமல் மன்னித்து விட்டுவிடுவாராகில், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உயிருக்குப் பதிலாக உயிரும், கண்ணுக்குப் பதிலாக கண்ணும், மூக்குக்குப் பதிலாக மூக்கும், காதுக்குப் பதிலாக காதும், பல்லுக்குப் பதிலாகப் பல்லும் எனவும், காயங்களுக்கும் (அதற்கு நிகரான) பழி வாங்குதல் உண்டு என்பதாகவும், அவர்கள்மீது அவர்களுடைய வேதமாகிய ‘தவ்றாத்’தில் நாம் விதித்திருந்தோம், பின்னர், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) தானமாக விட்டுவிட்டால் அது அவருடைய தீவினைக்குப் பரிகாரமாகிவிடும், இன்னும், எவர் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர்தாம் அநியாயக்காரர்கள் ஆவர்.
Saheeh International
And We ordained for them therein a life for a life, an eye for an eye, a nose for a nose, an ear for an ear, a tooth for a tooth, and for wounds is legal retribution. But whoever gives [up his right as] charity, it is an expiation for him. And whoever does not judge by what Allah has revealed - then it is those who are the wrongdoers [i.e., the unjust].
وَقَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِعِیْسَی ابْنِ مَرْیَمَ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ ۪ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ فِیْهِ هُدًی وَّنُوْرٌ ۙ وَّمُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ التَّوْرٰىةِ وَهُدًی وَّمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟ؕ
وَقَفَّيْنَاதொடரச்செய்தோம்عَلٰٓى اٰثَارِهِمْஅவர்களுடைய அடிச்சுவடுகளில்بِعِيْسَىஈஸாவைابْنِமகன்مَرْيَمَமர்யமுடையمُصَدِّقًاஉண்மைப்படுத்துபவராகلِّمَاஎதைبَيْنَ يَدَيْهِதனக்கு முன்مِنَஇருந்துالتَّوْرٰٮةِ‌தவ்றாத்وَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்குக் கொடுத்தோம்الْاِنْجِيْلَஇன்ஜீலைفِيْهِஅதில்هُدًىநேர்வழிوَّنُوْرٌ ۙஇன்னும் ஒளிوَّ مُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதுلِّمَا بَيْنَ يَدَيْهِஎதை/தனக்கு முன்مِنَ التَّوْرٰٮةِதவ்றாத்திலிருந்துوَهُدًىநேர்வழியாகوَّمَوْعِظَةًஇன்னும் ஓர் உபதேசமாகلِّـلْمُتَّقِيْنَ ؕ‏அஞ்சுபவர்களுக்கு
வ கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி 'ஈஸBப் னி மர்யம முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஆதய்னாஹுல் இன்ஜீல Fபீஹி ஹுத(ன்)வ் வ னூரு(ன்)வ் வ முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஹுத(ன்)வ் வ மவ்'இளதல் லில்முத்தகீன்
முஹம்மது ஜான்
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
(முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தன்முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அவருக்கு ‘இன்ஜீல்' என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கிறது. இறையச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கிறது.
IFT
பிறகு அந்த நபிமார்களின் அடிச்சுவடுகளில் மர்யம் உடைய குமாரர் ஈஸாவை நாம் பின்தொடரச் செய்தோம். தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அவர்முன் (எஞ்சி) இருந்தனவோ அவற்றை அவர் மெய்ப்படுத்துபவராய் இருந்தார். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. இன்னும் தவ்ராத்தி(ன் அறிவுரைகளி)ல் எவை அப்போது எஞ்சியிருந்தனவோ அவற்றை மெய்யென உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அது திகழ்ந்தது. மேலும், இறையச்சமுடையவர்களுக்கு முற்றிலும் நேர்வழி காட்டக் கூடியதாகவும், நல்லுரை யாகவும் அது இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (முன்சென்ற நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளின் மீதே மர்யமுடைய மகன் ஈஸாவையும், அவருக்கு முன்பிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக நாம் தொடரச் செய்தோம், அன்றியும், அவருக்கு இன்ஜீலை நாம் கொடுத்தோம், அதிலும் நேர்வழியும், பிரகாசமும் இருந்தன, அது அவருக்கு முன்பிருந்த தவ்றாத்தை உண்மையாக்குவதாகவும், பயபக்தியுடையோருக்கு அது ஒரு நேர் வழி(காட்டி)யாகவும், நல்லுபதேசமாகவும் இருந்தது.
Saheeh International
And We sent, following in their footsteps, Jesus, the son of Mary, confirming that which came before him in the Torah; and We gave him the Gospel, in which was guidance and light and confirming that which preceded it of the Torah as guidance and instruction for the righteous.
وَلْیَحْكُمْ اَهْلُ الْاِنْجِیْلِ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فِیْهِ ؕ وَمَنْ لَّمْ یَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
وَلْيَحْكُمْதீர்ப்பளிக்கவும்اَهْلُ الْاِنْجِيْلِஇன்ஜீலுடையவர்கள்بِمَاۤஇறக்கியதைக்கொண்டுاَنْزَلَ اللّٰهُஅல்லாஹ்فِيْهِ‌ؕஅதில்وَمَنْஎவர்கள்لَّمْ يَحْكُمْதீர்ப்பளிக்கவில்லைبِمَاۤஎதைக் கொண்டுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْفٰسِقُوْنَ‏பாவிகள்
வல்யஹ்கும் அஹ்லுல் இன்ஜீலி Bபிமா அன்Zஜலல் லாஹு Fபீஹ்; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
முஹம்மது ஜான்
(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் இறக்கிய (கட்டளைகளின்)படி தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான்.
IFT
மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கட்டும் (என்பதே நம் கட்டளையாக இருந்தது)! மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள்தாம் ஃபாஸிக்கள் பாவிகளாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (உண்மையான) இன்ஜீலையுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு, தீர்ப்பளிக்கவும், இன்னும் எவர், அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு, தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் - அவர்கள் பாவிகளாவர்.
Saheeh International
And let the People of the Gospel judge by what Allah has revealed therein. And whoever does not judge by what Allah has revealed - then it is those who are the defiantly disobedient.
وَاَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَیْمِنًا عَلَیْهِ فَاحْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَقِّ ؕ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ لِّیَبْلُوَكُمْ فِیْ مَاۤ اٰتٰىكُمْ فَاسْتَبِقُوا الْخَیْرٰتِ ؕ اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟ۙ
وَاَنْزَلْنَاۤஇன்னும் இறக்கினோம்اِلَيْكَஉமக்குالْكِتٰبَஇவ்வேதத்தைبِالْحَـقِّஉண்மையுடன் கூடியمُصَدِّقًاஉண்மைப்படுத்தக் கூடியதாகلِّمَا بَيْنَ يَدَيْهِதனக்கு முன்னுள்ளதைمِنَஇருந்துالْكِتٰبِவேதம்وَمُهَيْمِنًاஇன்னும் பாதுகாக்கக் கூடியதாகعَلَيْهِ‌அதைفَاحْكُمْஆகவே தீர்ப்பளிப்பீராக!بَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِمَاۤ اَنْزَلَஇறக்கியதைக் கொண்டேاللّٰهُஅல்லாஹ்وَلَا تَتَّبِعْபின்பற்றாதீர்اَهْوَآءவிருப்பங்களைهُمْஅவர்களுடையعَمَّاஎதைவிட்டுجَآءَكَவந்தது/உமக்குمِنَ الْحَـقِّ‌ؕஉண்மையிலிருந்துلِكُلٍّஒவ்வொருவருக்கும்جَعَلْنَاஏற்படுத்தினோம்مِنْكُمْஉங்களில்شِرْعَةًஒரு மார்க்கத்தைوَّمِنْهَاجًا ؕஇன்னும் ஒரு வழியைوَلَوْ شَآءَநாடி இருந்தால்اللّٰهُஅல்லாஹ்لَجَـعَلَـكُمْஉங்களை ஆக்கியிருப்பான்اُمَّةًஒரு சமுதாயமாகوَّاحِدَةًஒரேوَّلٰـكِنْஎனினும்لِّيَبْلُوَكُمْஅவன் உங்களை சோதிப்பதற்காகفِىْ مَاۤ اٰتٰٮكُمْஉங்களுக்கு அவன் கொடுத்தவற்றில்فَاسْتَبِقُواஆகவே முந்துங்கள்الْخَـيْـرٰتِ‌ؕநன்மைகளில்اِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்مَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்جَمِيْعًاஅனைவரும்فَيُنَبِّئُكُمْஅறிவிப்பான்/உங்களுக்குبِمَاஎதைكُنْتُمْஇருந்தீர்கள்فِيْهِஅதில்تَخْتَلِفُوْنَۙ‏முரண்படுகிறீர்கள்
வ அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி முஸத்திகல்லிமா Bபய்ன யதய்ஹி மினல் கிதாBபி வ முஹய்மினன் 'அலய்ஹி Fபஹ்கும் Bபய்னஹும் Bபிமா அன்Zஜலல் லாஹு வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் 'அம்மா ஜா'அக மினல் ஹக்க்; லிகுல்லின் ஜ'அல்னா மின்கும் ஷிர்'அத(ன்)வ் வ மின்ஹாஜா; வ லவ் ஷா'அல் லாஹு லஜ'அலகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ லாகில் லியBப்லுவகும் Fபீ மா ஆதாகும் Fபஸ்தBபிகுல் கய்ராத்; இலல் லாஹி மர்ஜி'உகும் ஜமீ'அன் FபயுனBப் Bபி'உகும் Bபிமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
முஹம்மது ஜான்
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உம் மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கிறது. அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. ஆகவே, (நபியே!) நீர் அல்லாஹ் (உமக்கு) இறக்கிய இதைக்கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய மண விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் (எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, (இவற்றில் உயர்வான இஸ்லாம் கூறுகின்ற) நன்மைகளுக்கு விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கிறது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களோ அதை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான்.
IFT
பிறகு (நபியே!) சத்தியத்தைத் தாங்கி வந்திருக்கும் இவ்வேதத்தை உம்மளவில் நாம் அனுப்பினோம். இது, அல்கிதாபின் அறிவுரைகளில் தன் முன்னே எவை எஞ்சி நிற்கின்றனவோ அவற்றை உறுதிப்படுத்தக்கூடியதாயும், அவற்றைப் பாதுகாக்கக் கூடியதாயுமிருக்கின்றது; எனவே, நீர் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப மக்களின் விவகாரங்களில் தீர்ப்பளிப்பீராக! மேலும், உம்மிடம் வந்திருக்கும் சத்தியத்தைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர் நாம் (மனிதர்களாகிய) உங்களில் ஒவ்வொரு சமூகத்தாருக்கும் ஷரீஅத்தையும் ஒரு செயல்வழியையும் அமைத்துத் தந்தோம். அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயமாகவும் ஆக்கியிருக்க முடியும்! ஆனால் அவன் உங்களுக்கு அளித்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காகத்தான் (இவ்வாறு செய்தான்). எனவே நன்மைகளில் ஒருவரையொருவர் முந்துவதற்கு முயற்சி செய்யுங்கள்! இறுதியில் நீங்கள் எல்லாரும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கின்றது. பிறகு நீங்கள் எவற்றைக் குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அவற்றின் உண்மை நிலையை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கிவைத்துள்ளோம், இது வேதத்திலிருந்து தனக்கு முன்னுள்ளவற்றை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்பதாகவுமிருக்கின்றது, ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கிவைத்ததைக் கொண்டு அவர்களுக்கிடையில் (நபியே!) நீர் தீர்ப்பளிப்பீராக!) இன்னும் உண்மையிலிருந்து உம்மிடம் வந்ததை புறக்கணித்துவிட்டு, அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றாதீர், உங்களில் ஒவ்வொருவ(குப்பா)ருக்கும், மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஆக்கினோம், அல்லாஹ் நாடினால், உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான், எனினும் உங்களுக்கு அவன் கொடுத்ததில், எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு அவன் செய்திருக்கின்றான்). ஆகவே நன்மைகளின் பக்கம் முந்திக்கொள்ளுங்கள், அல்லாஹ்வின் பக்கமே உங்களனைவரின் திரும்பிச் செல்லுதலுமிருக்கின்றது, அப்பொழுது நீங்கள் எதில் மாறுபட்டுக் கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான்.
Saheeh International
And We have revealed to you, [O Muhammad], the Book [i.e., the Qur’an] in truth, confirming that which preceded it of the Scripture and as a criterion over it. So judge between them by what Allah has revealed and do not follow their inclinations away from what has come to you of the truth. To each of you We prescribed a law and a method. Had Allah willed, He would have made you one nation [united in religion], but [He intended] to test you in what He has given you; so race to [all that is] good. To Allah is your return all together, and He will [then] inform you concerning that over which you used to differ.
وَاَنِ احْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ یَّفْتِنُوْكَ عَنْ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَیْكَ ؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّصِیْبَهُمْ بِبَعْضِ ذُنُوْبِهِمْ ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ ۟
وَاَنِ احْكُمْதீர்ப்பளிப்பீராகبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்بِمَاۤ اَنْزَلَஇறக்கியதைக்கொண்டுاللّٰهُஅல்லாஹ்وَلَا تَتَّبِعْபின்பற்றாதீர்اَهْوَآءَهُمْஅவர்களின் விருப்பங்களைوَاحْذَرْهُمْஅவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராகاَنْ يَّفْتِنُوْكَஉம்மை அவர்கள் திருப்பிவிடுவதுعَنْۢ بَعْضِசிலவற்றிலிருந்துمَاۤஎதுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்اِلَيْكَ‌ؕஉமக்குفَاِنْ تَوَلَّوْاஅவர்கள் திரும்பினால்فَاعْلَمْஅறிந்து கொள்வீராகاَنَّمَاஎல்லாம்يُرِيْدُநாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْ يُّصِيْبَهُمْஅவர்களை சோதிப்பதைத்தான்بِبَـعْضِசிலவற்றின்ذُنُوْبِهِمْ‌ؕஅவர்களுடைய பாவங்கள்وَاِنَّ كَثِيْرًاநிச்சயமாக அதிகமானோர்مِّنَ النَّاسِமனிதர்களில்لَفٰسِقُوْنَ‏பாவிகள்தான்
வ அனிஹ் கும் Bபய்னஹும் Bபிமா அன்Zஜலல் லாஹு வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் வஹ்தர்ஹும் அய் யFப்தினூக 'அம் Bபஃளி மா அன்Zஜலல் லாஹு இலய்க Fப இன் தவல்லவ் Fபஃலம் அன்னமா யுரீதுல் லாஹு அய் யுஸீBபஹும் BபிBபஃளி துனூBபிஹிம்; வ இன்ன கதீரம் மினன் னாஸி லFபாஸிகூன்
முஹம்மது ஜான்
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்தவற்றைக் கொண்டே நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக. நீர் அவர்களுடைய மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்தவற்றில் எதிலிருந்தும் உம்மை அவர்கள் திருப்பிவிடாதபடியும் நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருப்பீராக. (உமது தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீர் அறிந்துகொள்வீராக, அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகிறான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகள்தான்.
IFT
எனவே (நபியே!) அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப அவர்களுடைய விவகாரங்களில் தீர்ப்பளியுங்கள்; அவர்களுடைய ஆசாபாசங்களைப் பின்பற்றாதீர்கள்! அவர்கள் உம்மைக் குழப்பத்திலாழ்த்தி, அல்லாஹ் உம்மீது இறக்கியருளிய அறிவுரைகள் சிலவற்றிலிருந்து (உம்மை) இம்மியளவும் நழுவச் செய்திடா வண்ணம் நீர் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! பிறகும் அவர்கள் இதனைப் புறக்கணித்தார்களாயின், அல்லாஹ் அவர்களுடைய சில பாவங்களின் காரணமாக அவர்களைத் துன்பத்திலாழ்த்திடவே நாடிவிட்டான் என்று அறிந்து கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக அந்த மக்களில் பெரும்பாலோர் வரம்பு மீறியவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு, நீர் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பீராக! நீர் அவர்களுடைய மனஇச்சைகளைப் பின்பற்றியும் விடாதீர், அன்றியும், உமக்கு அல்லாஹ் இறக்கிவைத்ததில் சிலவற்றைவிட்டும் அவர்கள் உம்மைத் திருப்பி விடாதபடியும் நீர் அவர்களைப்பற்றி எச்சரிக்கையாக இருப்பீராக! (உம்முடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் அப்போது அல்லாஹ் நாடுவதெல்லாம் அவர்களின் சில பாவங்களின் காரணமாக, அவர்களை அவன் (தண்டிக்க) பிடிப்பதைத்தான் என்பதை நீர் அறிந்து கொள்வீராக, மேலும், நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.
Saheeh International
And judge, [O Muhammad], between them by what Allah has revealed and do not follow their inclinations and beware of them, lest they tempt you away from some of what Allah has revealed to you. And if they turn away - then know that Allah only intends to afflict them with some of their [own] sins. And indeed, many among the people are defiantly disobedient.
اَفَحُكْمَ الْجَاهِلِیَّةِ یَبْغُوْنَ ؕ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟۠
اَفَحُكْمَசட்டத்தையா?الْجَـاهِلِيَّةِஅறியாமைக்காலத்தின்يَـبْغُوْنَ‌ؕதேடுகின்றனர்وَمَنْயார்اَحْسَنُமிக அழகானவன்مِنَவிடاللّٰهِஅல்லாஹ்வைحُكْمًاசட்டத்தால்لِّـقَوْمٍசமுதாயத்திற்குيُّوْقِنُوْنَ‏உறுதி கொள்கின்றனர்
அFபஹுக்மல் ஜாஹிலிய்யதி யBப்கூன்; வ மன் அஹ்ஸனு மினல் லாஹி ஹுக்மல் லிகவ்மி(ன்)ய் யூகினூன்
முஹம்மது ஜான்
அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
அப்துல் ஹமீது பாகவி
அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, (மறுமையை) உறுதி கொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?
IFT
(அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்களென்றால்) பிறகு ஜாஹிலியத்தின்* தீர்ப்பினையா அவர்கள் விரும்புகிறார்கள்! ஆயினும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, அல்லாஹ்வைவிட நல்ல தீர்ப்பு வழங்கக்கூடியவன் யார்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அறியாமை காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர்? உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்தார்க்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வைவிடவும் மிக்க அழகானவன் யார்?
Saheeh International
Then is it the judgement of [the time of] ignorance they desire? But who is better than Allah in judgement for a people who are certain [in faith].
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْیَهُوْدَ وَالنَّصٰرٰۤی اَوْلِیَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ وَمَنْ یَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَتَّخِذُواஆக்காதீர்கள்الْيَهُوْدَயூதர்களைوَالنَّصٰرٰۤىஇன்னும் கிறித்தவர்களைاَوْلِيَآءَநண்பர்களாகبَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِيَآءُநண்பர்கள்بَعْضٍ‌ؕசிலரின்وَمَنْஎவர்يَّتَوَلَّهُمْநட்புகொள்வார்/அவர்களுடன்مِّنْكُمْஉங்களில்فَاِنَّهٗநிச்சயமாக அவர்مِنْهُمْ‌ؕஅவர்களைச் சார்ந்தவர்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَமக்களைالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் யஹூத வன் னஸாரா அவ்லியா'; Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; வ மய் யதவல்லஹும் மின்கும் Fப இன்னஹூ மின்ஹும்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்த மாட்டான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உங்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்களில் சிலர் சிலருக்கு நெருங்கிய நண்பர்களாய் இருக்கின்றனர். மேலும், உங்களில் எவரேனும் அவர்களைத் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொண்டால், அவரும் அவர்களைச் சார்ந்தவராகவே கணிக்கப்படுவார். திண்ணமாக, அல்லாஹ் அக்கிரமக்காரர்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்களில் சிலர், சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர், உங்களில் எவரேனும் அவர்களைத் (தனக்கு)ப் பாதுகாவலராக்கிக் கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும், அவர்களில் உள்ளவர்தாம், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார சமூகத்தார்க்கு நேர்வழிகாட்ட மாட்டான்.
Saheeh International
O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people.
فَتَرَی الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یُّسَارِعُوْنَ فِیْهِمْ یَقُوْلُوْنَ نَخْشٰۤی اَنْ تُصِیْبَنَا دَآىِٕرَةٌ ؕ فَعَسَی اللّٰهُ اَنْ یَّاْتِیَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَیُصْبِحُوْا عَلٰی مَاۤ اَسَرُّوْا فِیْۤ اَنْفُسِهِمْ نٰدِمِیْنَ ۟ؕ
فَتَـرَىகாண்பீர்الَّذِيْنَஎவர்களைفِىْ قُلُوْبِهِمْதங்கள் உள்ளங்களில்مَّرَضٌநோய்يُّسَارِعُوْنَவிரைபவர்களாகفِيْهِمْஅவர்களில்يَقُوْلُوْنَகூறுகின்றனர்نَخْشٰٓىபயப்படுகிறோம்اَنْ تُصِيْبَـنَاஎங்களைஅடைவதைدَآٮِٕرَةٌ‌ ؕஆபத்துفَعَسَىஆகலாம்اللّٰهُஅல்லாஹ்اَنْ يَّاْتِىَவருவதுبِالْفَتْحِவெற்றியைக் கொண்டுاَوْஅல்லதுاَمْرٍஒரு காரியம்مِّنْஇருந்துعِنْدِهٖதன்னிடம்فَيُصْبِحُوْاஆகிவிடுவார்கள்عَلٰىமீதுمَاۤஎதுاَسَرُّوْاமறைத்தார்கள்فِىْۤ اَنْفُسِهِمْதங்கள் உள்ளங்களில்نٰدِمِيْنَ ؕ‏துக்கப்பட்டவர்களாக
Fபதரல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)ய் யுஸாரி'ஊன Fபீஹிம் யகூலூன னக்-ஷா அன் துஸீBபனா தா'இரஹ்; Fப'அஸல்லாஹு அய் யாதிய Bபில்Fபத்ஹி அவ் அம்ரிம் மின் 'இன்திஹீ Fப யுஸ்Bபிஹூ 'அலா மா அஸர்ரூ Fபீ அன்Fபுஸிஹிம் னாதிமீன்
முஹம்மது ஜான்
எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) “எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்” என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உள்ளங்களில் (நயவஞ்சக) நோய் உள்ளவர்கள் அவர்களிடம் (தோழமை கொள்ளவே) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! மேலும், ‘‘(நாங்கள் அவர்களை பகைத்துக் கொண்டால்) எங்களுக்கு ஓர் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதிசீக்கிரத்தில் உங்களுக்கு) அளிக்கக் கூடும். அது சமயம் அவர்கள் தங்கள் உள்ளங்களுக்குள் மறைத்து வைத்திருந்த (மோசமான என்னத்)தைப் பற்றி கவலை அடைவார்கள்.
IFT
எவருடைய உள்ளங்களில் நயவஞ்சகப் பிணி உள்ளதோ அத்தகையோர் அவர்களிடையிலேயே முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காண்கின்றீர். “ஏதேனுமொரு துன்பம் எங்களைப் பிடித்து விடுமோ என்று நாங்கள் அஞ்சுகின்றோம்” என்றும் அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ் தன்னிடமிருந்து (தீர்க்கமான) வெற்றியையோ ஏதேனுமோர் உதவியையோ அளித்துவிடக்கூடும்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்த (நயவஞ்சகத்)தைக் குறித்து வருந்துவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (நபியே!) எவர்களுடைய இதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கின்றதோ அத்தகையவர்களை-அவர்களிடம் (நட்புகொள்ள) அவர்கள் விரைந்து செல்வதை நீர் காண்பீர், (அன்றி “நாங்கள் அவர்களை விரோதித்துக் கொண்டால் எங்களுக்கு யாதோர் ஆபத்து ஏற்பட்டுவிடுமென்று நாங்கள் பயப்படுகின்றோம்” என்று அவர்கள் கூறுகின்றனர், ஆகவே, அல்லாஹ் தன்னிடமிருந்து வெற்றியையோ அல்லது ஒரு (நற்)காரியத்தையோ (அதி சீச்கிரத்தில் உங்களுக்கு) கொண்டு வந்துவிடலாம், அது சமயம் அவர்கள் தங்கள் மனங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதப்படுகிறவர்களாக ஆகிவிடுவார்கள்.
Saheeh International
So you see those in whose hearts is disease [i.e., hypocrisy] hastening into [association with] them, saying, "We are afraid a misfortune may strike us." But perhaps Allah will bring conquest or a decision from Him, and they will become, over what they have been concealing within themselves, regretful.
وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَهٰۤؤُلَآءِ الَّذِیْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ ۙ اِنَّهُمْ لَمَعَكُمْ ؕ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِیْنَ ۟
وَيَقُوْلُஇன்னும் கூறுவார்(கள்)الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்கள்اَهٰٓؤُلَاۤءِஇவர்கள்தானாالَّذِيْنَஎவர்கள்اَقْسَمُوْاசத்தியம்செய்தார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுجَهْدَஉறுதியாகاَيْمَانِهِمْ‌ۙதங்கள் சத்தியங்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَمَعَكُمْ‌ ؕஉங்களுடன்தான்حَبِطَتْஅழிந்து விட்டனاَعْمَالُهُمْஅவர்களுடைய (நல்ல)செயல்கள்فَاَصْبَحُوْاஆகவே ஆகிவிட்டனர்خٰسِرِيْنَ‏நஷ்டவாளிகளாக
வ யகூலுல் லதீன ஆமனூ அஹா'உலா'இல் லதீன அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் இன்னஹும் லம'அகும்; ஹBபிதத் அஃமாலுஹும் Fப அஸ்Bபஹூ காஸிரீன்
முஹம்மது ஜான்
(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?” என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன; இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து ‘‘நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?'' என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து விட்டன. ஆகவே, (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர்.
IFT
அவ்வேளை இறைநம்பிக்கை கொண்டவர்கள் வினவுவார்கள்: “நாங்களும் உங்களோடுதான் இருக்கின்றோம் என்று பேரார்வத்துடன் கூறி, அல்லாஹ்வைக் கொண்டு மிக உறுதியான முறையில் சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தாமா?” (இறுதியில்) அந்நயவஞ்சகர்களுடைய எல்லாச் செயல்களும் வீணாகி விட்டன. மேலும், அவர்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “நிச்சயமாக தாங்களும் உங்களுடன் இருப்பதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியமாக சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?” என விசுவாசிகள் (மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்துக்) கூறுவார்கள், இவர்களுடைய செயல்கள் அழிந்துவிட்டன, ஆகவே, (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிட்டனர்.
Saheeh International
And those who believe will say, "Are these the ones who swore by Allah their strongest oaths that indeed they were with you?" Their deeds have become worthless, and they have become losers.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا مَنْ یَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَسَوْفَ یَاْتِی اللّٰهُ بِقَوْمٍ یُّحِبُّهُمْ وَیُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَی الْمُؤْمِنِیْنَ اَعِزَّةٍ عَلَی الْكٰفِرِیْنَ ؗ یُجَاهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَخَافُوْنَ لَوْمَةَ لَآىِٕمٍ ؕ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேمَنْஎவரும்يَّرْتَدَّமாறுவார்مِنْكُمْஉங்களிலிருந்துعَنْவிட்டுدِيْـنِهٖதன் மார்க்கம்فَسَوْفَ يَاْتِىகொண்டு வருவான்اللّٰهُஅல்லாஹ்بِقَوْمٍஒரு சமுதாயத்தைيُّحِبُّهُمْநேசிப்பான்/அவர்களைوَيُحِبُّوْنَهٗۤ ۙஇன்னும் நேசிப்பார்கள் / அவனைاَذِلَّةٍபணிவானவர்கள்عَلَىஇடம்الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்கள்اَعِزَّةٍகண்டிப்பானவர்கள்عَلَى الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களிடம்يُجَاهِدُوْنَபோரிடுவார்கள்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَلَا يَخَافُوْنَபயப்பட மாட்டார்கள்لَوْمَةَபழிப்பைلَاۤٮِٕمٍ‌ ؕபழிப்பவனின்ذٰ لِكَஇதுفَضْلُஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்يُؤْتِيْهِஅதை கொடுக்கின்றான்مَنْ يَّشَآءُ‌ ؕஎவருக்கு/நாடுகிறான்وَاللّٰهُஅல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ மய் யர்தத்த மின்கும் 'அன் தீனிஹீ Fபஸவ்Fப ய'தில்லாஹு Bபிகவ்மி(ன்)ய் யுஹிBப்Bபுஹும் வ யுஹிBப்Bபூனஹூ அதில்லதின் 'அலல் மு'மினீன அ'இZஜ்Zஜதின் 'அலல் காFபிரீன யுஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி வலா யகாFபூன லவ்மத லா'இம்; தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
முஹம்மது ஜான்
முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப் போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதை அளிக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவரேனும் தனது தீனை நெறியை விட்டுத் திரும்பி விடுவாராயின் (திரும்பிப் போகட்டும்.) அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைத் தோற்றுவிப்பான். (அவர்கள் எத்தகையவர்களாய் இருப்பார்களெனில்) அல்லாஹ் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாகவும், நிராகரிப்போரிடம் கடுமையாகவும் இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் கடும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்; நிந்திப்பவர்களின் எந்த நிந்தனைக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் அருளுகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த வளங்களின் உரிமையாளனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்களிலிருந்து எவர் தன் மார்க்கத்தைவிட்டும் மாறிவிடுவாரானால் (அப்பொழுது அவர்களுக்குப் பகரமாக) வேறு சமூகத்தாரை அல்லாஹ் கொண்டு வருவான் .. அவன் அவர்களை நேசிப்பான், அவர்களும் அவனை நேசிப்பார்கள், அவர்கள், விசுவாசங் கொண்டவர்களிடம் இரக்கம் காட்டுபவர்கள், நிராகரிப்பவர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறவர்கள், அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவார்கள், இன்னும் பழிப்பவரின் பழிப்புக்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள், இது அல்லாஹ்வின் பேரருளாகும், அவன் நாடியவர்களுக்கு இதனை அவன் கொடுக்கின்றான், மேலும், அல்லாஹ் மிக விசாலமானவன், (யாவரையும்) நன்கறிகிறவன்.
Saheeh International
O you who have believed, whoever of you should revert from his religion - Allah will bring forth [in place of them] a people He will love and who will love Him [who are] humble toward the believers, strong against the disbelievers; they strive in the cause of Allah and do not fear the blame of a critic. That is the favor of Allah; He bestows it upon whom He wills. And Allah is all-Encompassing and Knowing.
اِنَّمَا وَلِیُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَیُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رٰكِعُوْنَ ۟
اِنَّمَاஎல்லாம்وَلِيُّكُمُஉங்கள் நண்பன்اللّٰهُஅல்லாஹ்وَرَسُوْلُهٗஇன்னும் அவனுடைய தூதர்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்கள்الَّذِيْنَஎவர்கள்يُقِيْمُوْنَநிலை நிறுத்துகின்றனர்الصَّلٰوةَதொழுகையைوَيُؤْتُوْنَஇன்னும் கொடுக்கின்றனர்الزَّكٰوةَஸகாத்தைوَهُمْ رَاكِعُوْنَ‏அவர்கள் தலைகுனிவார்கள்
இன்னமா வலிய்யுகுமுல் லாஹு வ ரஸூலுஹூ வல் லதீன ஆமனுல் லதீன யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் ராகி'ஊன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலை சாய்த்தும் வருகின்றனரோ இவர்கள்தான் நிச்சயமாக உங்கள் (உண்மையான) தோழர்கள் ஆவர்.
IFT
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இறை நம்பிக்கையாளர்களும்தாம் உண்மையிலேயே உங்களுக்கு உற்ற நண்பர்கள். (அந்த இறைநம்பிக்கையாளர்கள் எத்தகையோர் எனில்,) தொழுகையை நிலைநாட்டுவார்கள்; மேலும், ஜகாத்தை அளிப்பார்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுடைய நண்பனெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் விசுவாசங்கொண்டார்களே அவர்களும்தான், அவர்கள் எத்தகையவரெனில் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிந்தவர்களாக தொழுகையை நிறைவேற்றுவார்கள், ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.
Saheeh International
Your ally is none but Allah and [therefore] His Messenger and those who have believed - those who establish prayer and give zakah, and they bow [in worship].
وَمَنْ یَّتَوَلَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالَّذِیْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ ۟۠
وَمَنْஎவர்يَّتَوَلَّநேசிக்கிறார்اللّٰهَஅல்லாஹ்வைوَ رَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதரைوَالَّذِيْنَ اٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டவர்களைفَاِنَّநிச்சயமாகحِزْبَபடையினர்اللّٰهِஅல்லாஹ்வின்هُمُஅவர்கள்தான்الْغٰلِبُوْنَ‏வெற்றியாளர்கள்
வ மய் யதவல்லல் லாஹ வ ரஸூலஹூ வல்லதீன ஆமனூ Fப இன்ன ஹிZஜ்Bபல் லாஹி ஹுமுல் காலிBபூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கிறார்களோ (அவர்கள்தான் நிச்சயமாக ‘ஹிஸ்புல்லாக்கள்' என்னும்) அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஆவார்கள்). அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.
IFT
எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் தம் உற்ற நண்பர்களாய் ஆக்கிக் கொள்கின்றாரோ அவர் தெரிந்து கொள்ளட்டும்: ‘அல்லாஹ்வின் குழுவினர்தாம் வெற்றியாளர்கள்.’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டவர்களையும், (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ – அப்பொழுது (அவர்கள்தாம், - அல்லாஹ்வின் கூட்டத்தினர் ஆவார்கள்). நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர், அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
Saheeh International
And whoever is an ally of Allah and His Messenger and those who have believed - indeed, the party of Allah - they will be the predominant.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْكُفَّارَ اَوْلِیَآءَ ۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَـتَّخِذُواஎடுத்துக் கொள்ளாதீர்கள்الَّذِيْنَஎவர்கள்اتَّخَذُوْاஎடுத்துக்கொண்டார்கள்دِيْنَكُمْஉங்கள் மார்க்கத்தைهُزُوًاபரிகாசமாகوَّلَعِبًاஇன்னும் விளையாட்டாகمِّنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْكِتٰبَவேதம்مِنْ قَبْلِكُمْஉங்களுக்குமுன்னர்وَالْـكُفَّارَஇன்னும் நிராகரிப்பவர்களைاَوْلِيَآءَ‌ ۚநண்பர்களாகوَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் லதீனத் தகதூ தீனகும் ஹுZஜுவ(ன்)வ் வ ல'இBபம் மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வல்குFப்Fபார அவ்லியா'; வத்தகுல் லாஹ இன் குன்தும் முஉ'மினீன்
முஹம்மது ஜான்
முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டவர்களில், எவர்கள் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்களையும், நிராகரிப்பவர்களையும் (உங்களுக்குத்) தோழர்களாக(வும், பாதுகாவலர் களாகவும்) எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து)கொள்ளுங்கள். (இவர்களில் எவருக்கும் அஞ்சாதீர்கள்.)
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் உங்களுடைய தீனை (நெறியை) கேலிக்கும் விளையாட்டுக்கும் உரித்தாக்கிக் கொண்டார்களோ அவர்களையும், மற்ற நிராகரிப்பாளர்களையும் உங்களின் உற்ற நண்பர்களாய் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும் (வீண்) விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அத்தகையவர்களையும், நிராகரிப்போர்களையும் (உங்களுக்கு)த் தோழர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம், நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வுக்கே பயந்து (நடந்து) கொள்ளுங்கள்.
Saheeh International
O you who have believed, take not those who have taken your religion in ridicule and amusement among the ones who were given the Scripture before you nor the disbelievers as allies. And fear Allah, if you should [truly] be believers.
وَاِذَا نَادَیْتُمْ اِلَی الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟
وَ اِذَا نَادَيْتُمْநீங்கள் அழைத்தால்اِلَى الصَّلٰوةِதொழுகைக்குاتَّخَذُوْهَاஅதை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்هُزُوًاபரிகாசமாகوَّلَعِبًا‌ ؕஇன்னும் விளையாட்டாகذٰ لِكَஅதுبِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்قَوْمٌமக்கள்لَّا يَعْقِلُوْنَ‏புரிய மாட்டார்கள்
வ இதா னாதய்தும் இலஸ் ஸலாதித் தகதூஹா ஹுZஜு வன்'வ் வ ல'இBபா; தாலிக Bபிஅன்ன்னஹும் கவ்முல் லா யஃகிலூன்
முஹம்மது ஜான்
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் (மக்களைத்) தொழுகைக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்கு)அழைத்தால் அதை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்!
IFT
மேலும், நீங்கள் தொழுகைக்கு அழைப்பு விடுத்தால், அதனை இவர்கள் கேலிக்கும் விளையாட்டுக்கும் உரியதாக எடுத்துக் கொள்கின்றார்கள். இதற்குக் காரணம்: அவர்கள் அறியாத மக்களாய் இருப்பதேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், நீங்கள் (அவர்களைத்) தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர், அது (ஏனெனில்) நிச்சயமாகவே அவர்கள் முற்றிலும் அறிவில்லாத சமூகத்தினர் என்பதினால் தான்.
Saheeh International
And when you call to prayer, they take it in ridicule and amusement. That is because they are a people who do not use reason.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ هَلْ تَنْقِمُوْنَ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلُ ۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ ۟
قُلْகூறுவீராகيٰۤـاَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்களேهَلْ تَـنْقِمُوْنَநீங்கள் வெறுக்கிறீர்களா? (பழிக்கிறீர்களா?)مِنَّاۤஎங்களைاِلَّاۤதவிரاَنْ اٰمَنَّاநாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவேبِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைاِلَـيْنَاஎங்களுக்குوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைمِنْ قَبْلُ ۙமுன்னர்وَاَنَّ اَكْثَرَநிச்சயமாக அதிகமானவர்கள்كُمْஉங்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
குல் யா அஹ்லல் கிதாBபி ஹல் தன்கிமூன மின்னா இல்லா அன் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வமா உன்Zஜில மின் கBப்லு வ அன்ன்ன அக்தரகும் Fபாஸிகூன்
முஹம்மது ஜான்
“வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக இருக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
‘‘வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவா நீங்கள் எங்களை தண்டிக்கிறீர்கள்? (என்று நபியே! நீர் அவர்களைக் கேட்டு) நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள் (உங்களுக்குத் தகுதியான கூலி நரகம்தான்)'' என்று கூறுவீராக.
IFT
நீர் அவர்களிடம் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்களுக்கு இறக்கியருளப்பட்ட அறிவுரைகள் மீதும், இன்னும் எங்களுக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகத்தான் எங்கள் மீது நீங்கள் வெறுப்புக் காட்டுகின்றீர்கள். மேலும், உங்களில் பெரும்பாலோர் தீயவர்களாகவே இருக்கின்றீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் இதற்கு முன் (உங்களுக்கு) இறக்கி வைக்கப்பட்டவைகளையும் நாங்கள் விசுவாசங் கொண்டுள்ளோம் என்பதைத் தவிர வேறு எதற்காகவும், எங்களை (இழித்துப் பழித்து) தண்டிக்கிறீர்களா? (என்று நபியே! நீர் அவர்களைக் கேட்டு,) “நிச்சயமாக உங்களில் பெரும்பாலோர் பாவிகள்” என்று கூறுவீராக.!
Saheeh International
Say, "O People of the Scripture, do you resent us except [for the fact] that we have believed in Allah and what was revealed to us and what was revealed before and because most of you are defiantly disobedient?"
قُلْ هَلْ اُنَبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰلِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ؕ مَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَیْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِیْرَ وَعَبَدَ الطَّاغُوْتَ ؕ اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟
قُلْகூறுவீராகهَلْ اُنَـبِّئُكُمْநான் உங்களுக்கு அறிவிக்கவா?بِشَرٍّமிகக் கெட்டவனைمِّنْவிடذٰ لِكَஇதைمَثُوْبَةًதண்டனையால்عِنْدَ اللّٰهِ‌ ؕஅல்லாஹ்விடம்مَنْஎவர்لَّعَنَهُசபித்தான்/அவரைاللّٰهُஅல்லாஹ்وَغَضِبَஇன்னும் கோபித்தான்عَلَيْهِஅவர்(கள்) மீதுوَجَعَلَஆக்கினான்مِنْهُمُஅவர்களில்الْقِرَدَةَகுரங்குகளாகوَالْخَـنَازِيْرَஇன்னும் பன்றிகளாகوَعَبَدَஇன்னும் வணங்கினார்(கள்)الطَّاغُوْتَ‌ ؕஷைத்தானைاُولٰٓٮِٕكَஅவர்கள்தான்شَرٌّமிகக் கெட்டவர்கள்مَّكَانًاதகுதியால்وَّاَضَلُّஇன்னும் மிகவும் வழிதவறியவர்கள்عَنْஇருந்துسَوَآءِநேரான (நடு)السَّبِيْلِ‏பாதை
குல் ஹல் உனBப்Bபி'உகும் Bபிஷர்ரிம் மின் தாலிக மதூBபதன் 'இன்தல் லாஹ்; மல்ல'அன ஹுல் லாஹு வ களிBப 'அலய்ஹி வ ஜ'அல மின்ஹுமுல் கிரதத வல் கனாZஜீர வ 'அBபதத் தாகூத்; உலா'இக ஷர்ரும் மகான(ன்)வ் வ அளல்லு 'அன் ஸவா'இஸ் ஸBபீல்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோபமுங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் - அவர்கள்தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
“அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை அடைந்தவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' (என்று நபியே! நீர் அவர்களிடம் கேட்டு) அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும்; எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த ரகத்தினர். நேரான வழியிலிருந்து முற்றிலும் வழி தவறியவர்கள்'' என்று நீர் கூறுவீராக.
IFT
மேலும், கூறுங்கள்: “அல்லாஹ்விடத்தில் இ(த்தீய)வர்களின் கதியைவிட இன்னும் மோசமான கதியுடையோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” எவர்களை அல்லாஹ் சபித்தானோ, எவர்கள் மீது கோபம் கொண்டானோ, மேலும் எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றினானோ மேலும் எவர்கள் தாஃகூத்துக்கு அடிபணிந்தார்களோ அத்தகையவர்கள்தாம் அவர்களைவிட மிகவும் தரங்கெட்டவர்கள்; மேலும், அவர்கள் செம்மையான பாதையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றவர்கள் ஆவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்விடம் இருக்கும் தண்டனையால் இதைவிடக் கெட்டவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் எவரை சபித்து அவர் மீது கோபமும் கொண்டு அவர்களில் (சிலரைக்) குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவரும் (அவர்களில்) ஷைத்தானை வணங்கியவரும் ஆவர், அத்தகையோர் தகுதியால் கெட்டவர்கள், அன்றியும் நேரான வழியிலிருந்தும் மிகத் தவறியவர்கள்” என்று நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "Shall I inform you of [what is] worse than that as penalty from Allah? [It is that of] those whom Allah has cursed and with whom He became angry and made of them apes and pigs and slaves of ṭaghūt. Those are worse in position and further astray from the sound way."
وَاِذَا جَآءُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا وَقَدْ دَّخَلُوْا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوْا بِهٖ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا كَانُوْا یَكْتُمُوْنَ ۟
وَاِذَا جَآءُوْஅவர்கள் வந்தால்كُمْஉங்களிடம்قَالُوْۤاகூறினர்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்وَقَدْதிட்டமாகدَّخَلُوْاநுழைந்தார்கள்بِالْكُفْرِநிராகரிப்பைக் கொண்டேوَهُمْஇன்னும் அவர்கள்قَدْதிட்டமாகخَرَجُوْاவெளியேறினார்கள்بِهٖ‌ؕஅதனுடன்وَاللّٰهُஅல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைكَانُوْاஇருந்தார்கள்يَكْتُمُوْنَ‏மறைக்கிறார்கள்
வ இதா ஜா'ஊகும் காலூ ஆமன்னா வ கத் தகலூ Bபில்குFப்ரி வ ஹும் கத் கரஜூ Bபிஹ்; வல்லாஹு அஃலமு Bபிமா கானூ யக்துமூன்
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் “நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்!” என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் குஃப்ருடன் (நிராகரிப்புடன்)தான் வந்தார்கள்; இன்னும் அதனுடனேயே வெளியேறினார்கள், (நிச்சயமாக) அவர்கள் மறைத்து வைத்திருப்பதை அல்லாஹ் மிகவும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) இவர்கள் உங்களிடம் வந்தால் ‘‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறுகின்றனர். எனினும் நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பை (மனதில் வைத்து)க் கொண்டே (உங்களிடம்) வந்தார்கள். நிச்சயமாக அத்துடனேயே (உங்களிடமிருந்து) அவர்கள் வெளியேறினார்கள். அவர்கள் (தங்கள் உள்ளங்களுக்குள்) மறைத்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ்தான் நன்கறிவான்.
IFT
அவர்கள் உங்களிடம் வரும்போது “நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று கூறுகிறார்கள். ஆயினும் அவர்களோ இறைநிராகரிப்புடன்தான் வந்தார்கள்; இறைநிராகரிப்புடன்தான் திரும்பியும் சென்றார்கள். மேலும், (தம் உள்ளங்களில்) அவர்கள் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், விசுவாசங்கொண்டோரே! இத்தகையோராகிய (அவர்கள் உங்களிடம் வந்தால் “நாங்கள் விசுவாசங்கொண்டோம்” என்று கூறுகின்றனர், இன்னும், நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பை (மனதில் வைத்துக்) கொண்டே (உங்களிடம்) வந்தார்கள், நிச்சயமாக அதனுடனேயே (உங்கள் முன்னிருந்து) அவர்கள் வெளியேறியும் விட்டார்கள், அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பவைகளை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
Saheeh International
And when they come to you, they say, "We believe." But they have entered with disbelief [in their hearts], and they have certainly left with it. And Allah is most knowing of what they were concealing.
وَتَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یُسَارِعُوْنَ فِی الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَتَرٰىகாண்பீர்كَثِيْرًاஅதிகமானவர்களைمِّنْهُمْஅவர்களில்يُسَارِعُوْنَவிரைபவர்களாகفِى الْاِثْمِபாவத்தில்وَالْعُدْوَانِஇன்னும் அநியாயம்وَاَكْلِهِمُஇன்னும் விழுங்குவதுالسُّحْتَ‌ ؕஆகாத செல்வத்தைلَبِئْسَகெட்டுவிட்டதுمَاஎதுكَانُوْاஇருந்தார்கள்يَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
வ தரா கதீரம் மின்ஹும் யுஸாரி'ஊன Fபில் இத்மி வல்'உத்வானி வ அக்லிஹிமுஸ் ஸுஹ்த்; லBபி'ஸ மா கானூ யஃமலூன்
முஹம்மது ஜான்
அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்பவை மிகத் தீயவையே!
IFT
மேலும், அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், வரம்பு மீறிய செயல்களிலும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீர் காணுகிறீர். அவர்கள் செய்து கொண்டிருக்கும் செயல்கள் எத்துணைத் தீமையானவை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்களில் அதிகமானோரை பாவத்திலும், பகைமையிலும் விலக்கப்பட்டதை அவர்கள் உண்ணுவதிலும், விரைந்து செல்வோராக நீர் காண்பீர்! அவர்கள் செய்துகொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகிவிட்டது.
Saheeh International
And you see many of them hastening into sin and aggression and the devouring of [what is] unlawful. How wretched is what they have been doing.
لَوْلَا یَنْهٰىهُمُ الرَّبّٰنِیُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
لَوْلَا يَنْهٰٮهُمُஅவர்களை தடை செய்ய வேண்டாமா?الرَّبَّانِيُّوْنَகுருமார்கள்وَالْاَحْبَارُஇன்னும் பண்டிதர்கள்عَنْ قَوْلِهِمُஅவர்களுடைய பேச்சிலிருந்துالْاِثْمَபாவமானوَاَكْلِهِمُஇன்னும் அவர்கள் விழுங்குவதுالسُّحْتَ‌ؕவிலக்கப்பட்டதைلَبِئْسَகெட்டுவிட்டதுمَاஎதுكَانُوْاஇருந்தார்கள்يَصْنَعُوْنَ‏செய்கிறார்கள்
லவ் லா யன்ஹாஹுமுர் ரBப்Bபானிய்யூன வல் அஹ்Bபாரு 'அன் கவ்லிஹிமுல் இத்மா வ அக்லிஹிமுஸ் ஸுஹ்த்; லBபி'ஸ மா கானூ யஸ்ன'ஊன்
முஹம்மது ஜான்
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும், விலக்கபட்டப் பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும், (அவர்களுடைய) மேதைகளும் குருமார்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவற்றை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் தடை செய்ய வேண்டாமா? இவர்களுடைய செயலும் மிகக் கெட்டதுவே.
IFT
தீய வார்த்தைகளைப் பேசுவதிலிருந்தும், விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலிருந்தும் அவர்களின் குருமார்களும் அறிஞர்களும் அவர்களை ஏன் தடுப்பதில்லை? வாழ்நாள் முழுவதும் இவர்கள் புரிந்து வரும் செயல்கள் எத்துணை மோசமானது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பாவமான அவர்களின் கூற்றிலிருந்தும், விலக்கப்பட்டவைகளை அவர்கள் உண்பதிலிருந்தும் (அவர்களுடைய பண்டிதர்களாகிய வணக்கசாலிகளான) மேதைகளும் (அஹ்பார்களான) அறிஞர்களும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகிவிட்டது
Saheeh International
Why do the rabbis and religious scholars not forbid them from saying what is sinful and devouring what is unlawful? How wretched is what they have been practicing.
وَقَالَتِ الْیَهُوْدُ یَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ؕ غُلَّتْ اَیْدِیْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ یَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ یُنْفِقُ كَیْفَ یَشَآءُ ؕ وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ؕ وَاَلْقَیْنَا بَیْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ؕ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙ وَیَسْعَوْنَ فِی الْاَرْضِ فَسَادًا ؕ وَاللّٰهُ لَا یُحِبُّ الْمُفْسِدِیْنَ ۟
وَقَالَتِகூறினர்الْيَهُوْدُயூதர்கள்يَدُகைاللّٰهِஅல்லாஹ்வின்مَغْلُوْلَةٌ‌ ؕகட்டப்பட்டிருக்கிறதுغُلَّتْகட்டப்பட்டனاَيْدِيْهِمْஅவர்களுடைய கைகள்وَلُعِنُوْاசபிக்கப்பட்டனர்بِمَاஎதன் காரணமாகقَالُوْا‌ ۘகூறினர்بَلْமாறாகيَدٰهُஅவனுடைய இரு கைகள்مَبْسُوْطَتٰنِ ۙவிரிக்கப்பட்டுள்ளனيُنْفِقُதர்மம் புரிகிறான்كَيْفَஎவ்வாறுيَشَآءُ‌ ؕஅவன் நாடுகிறான்وَلَيَزِيْدَنَّநிச்சயமாக அதிகப்படுத்தும்كَثِيْرًاஅதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்مَّاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்طُغْيَانًاவரம்பு மீறுவதைوَّكُفْرًا‌ ؕஇன்னும் நிராகரிப்பைوَاَ لْقَيْنَاஏற்படுத்தினோம்بَيْنَهُمُஅவர்களுக்கு மத்தியில்الْعَدَاوَةَபகைமையைوَالْبَغْضَآءَஇன்னும் வெறுப்பைاِلٰىவரைيَوْمِ الْقِيٰمَةِ‌ ؕமறுமை நாள்كُلَّمَاۤஎல்லாம்اَوْقَدُوْاமூட்டினார்கள்نَارًاநெருப்பைلِّلْحَرْبِபோருக்குاَطْفَاَهَاஅணைத்து விட்டான்/அதைاللّٰهُ‌ ۙஅல்லாஹ்وَيَسْعَوْنَஇன்னும் விரைகிறார்கள்فِى الْاَرْضِபூமியில்فَسَادًا‌ ؕகலகம் செய்வதற்காகوَاللّٰهُஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُفْسِدِيْنَ‏கலகம் செய்பவர்களை
வ காலதில் யஹூது யதுல்லாஹி மக்லூலஹ்; குல்லத் அய்தீஹிம் வ லு'இனூ Bபிமா காலூ; Bபல் யதாஹு மBப்ஸூ ததானி யுன்Fபிகு கய்Fப யஷா'; வ ல யZஜீதன்ன கதீரம்ம் மின்ஹும் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக துக்யான(ன்)வ் வ குFப்ரா; வ அல்கய்னா Bபய்னஹுமுல் 'அதாவத வல் Bபக்ளா அ' இலா யவ்மில் கியாமஹ்; குல்லமா அவ்கதூ னாரல் லில்ஹர்Bபி அத் Fப-அஹல் லாஹ்; வ யஸ்'அவ்ன Fபில் அர்ளி Fபஸாதா; வல் லாஹு லா யுஹிBப்Bபுல் முFப்ஸிதீன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது'' என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். மாறாக, அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கிறான். உமது இறைவனால் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகிறது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையை, வெறுப்பை இறுதிநாள் வரை (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கையாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விடுகிறான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகிறார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை.
IFT
யூதர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது.” கட்டப்பட்டிருப்பவை அவர்களுடைய கைகள்தாம். அவர்கள் பேசிக் கொண்டிருந்த இந்தப் பேச்சின் காரணமாக சாபத்திற்குள்ளானார்கள். அல்லாஹ்வின் கைகளோ விரிந்திருக்கின்றன. தான் நாடும் விதத்தில் அவன் அள்ளி வழங்குகின்றான். (உண்மை யாதெனில்) உம்முடைய இறைவனிடமிருந்து உம்மளவில் இறக்கிவைக்கப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், அசத்தியப்போக்கையும் இன்னும் அதிகப்படுத்திவிட்டது. மேலும் (இதற்குத் தண்டனையாக) மறுமைநாள் வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பு உணர்ச்சியையும் நாம் விதைத்து விட்டோம். போர் நெருப்பை அவர்கள் மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். அவர்கள் பூமியில் குழப்பத்தைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். (ஆனால்) இத்தகைய குழப்பவாதிகளை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகின்றனர், அவர்களுடைய கைகள் தாம் கட்டப்பட்டிருக்கின்றன, அன்றியும் இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர், எனினும் அல்லாஹ்வுடைய இரு கைகளும் விரிக்கப்பட்டே இருக்கின்றன, அவன் நாடியவாறெல்லாம், செலவு செய்கிறான், இன்னும், உம் இரட்சகனால் உமக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதமான)து அவர்களில் பெரும்பான்மையினருக்கு அட்டூழியத்தையும், நிராகரித்தலையுமே நிச்சயமாக அதிகப்படுத்துகிறது, இன்னும், அவர்களுக்கிடையில் விரோதத்தையும், வெறுப்பையும் மறுமை நாள் வரையில் (இருக்கும்படி) நாம் போட்டுவிட்டோம், அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகிறான், இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே அலைகின்றார்கள், மேலும், அல்லாஹ் குழப்பம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
Saheeh International
And the Jews say, "The hand of Allah is chained." Chained are their hands, and cursed are they for what they say. Rather, both His hands are extended; He spends however He wills. And that which has been revealed to you from your Lord will surely increase many of them in transgression and disbelief. And We have cast among them animosity and hatred until the Day of Resurrection. Every time they kindled the fire of war [against you], Allah extinguished it. And they strive throughout the land [causing] corruption, and Allah does not like corrupters.
وَلَوْ اَنَّ اَهْلَ الْكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
وَلَوْ اَنَّஇருந்தால்اَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَاتَّقَوْاஇன்னும் அஞ்சினார்கள்لَـكَفَّرْنَاநிச்சயமாக அகற்றிடுவோம்عَنْهُمْஅவர்களை விட்டுسَيِّاٰتِهِمْபாவங்களை அவர்களுடையوَلَاَدْخَلْنٰهُمْஇன்னும் நுழைத்திடுவோம்/அவர்களைجَنّٰتِசொர்க்கங்களில்النَّعِيْمِ‏இன்பம் நிறைந்த
வ லவ் அன்ன அஹ்லல் கிதாBபி ஆமனூ வத்தகவ் லகFப்Fபர்னா 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ ல அத்கல்னாஹு ஜன்னாதின் ன'ஈம்
முஹம்மது ஜான்
வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதை) அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, எல்லா இன்பங்களுமுள்ள சொர்க்கங்களில் நிச்சயமாக நாம் அவர்களை நுழைவிப்போம்.
IFT
வேதம் அருளப்பட்டவர்கள் (இவ்வரம்பு மீறிய போக்கினைக் கைவிட்டு) இறைநம்பிக்கை கொண்டு, மேலும் இறையச்சத்துடன் செயல்பட்டிருந்தால், அவர்களின் தீமைகளை அவர்களை விட்டு நாம் அகற்றியிருப்போம். மேலும் அருட்கொடை நிரம்பிய சுவனங்களில் அவர்களை நுழையச் செய்திருப்போம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வேதத்தையுடைய இவர்கள் (உண்மையாகவே) விசுவாசங்கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து)ம் இருந்தால் அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் நாம் போக்கிவிட்டிருப்போம், மேலும், சகல இன்பங்களும் உள்ள சுவனபதிகளில் அவர்களை நிச்சயமாக நாம் பிரவேசிக்கச் செய்வோம்.
Saheeh International
And if only the People of the Scripture had believed and feared Allah, We would have removed from them their misdeeds and admitted them to Gardens of Pleasure.
وَلَوْ اَنَّهُمْ اَقَامُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ مِّنْ رَّبِّهِمْ لَاَكَلُوْا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ ؕ مِنْهُمْ اُمَّةٌ مُّقْتَصِدَةٌ ؕ وَكَثِیْرٌ مِّنْهُمْ سَآءَ مَا یَعْمَلُوْنَ ۟۠
وَلَوْ اَنَّهُمْஅவர்கள் இருந்தால்اَقَامُواநிலைநிறுத்தினார்கள்التَّوْرٰٮةَதவ்றாத்தைوَالْاِنْجِيْلَஇன்னும் இன்ஜீலைوَمَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْهِمْஅவர்களுக்குمِّنْஇருந்துرَّبِّهِمْஅவர்களுடைய இறைவன்لَاَ كَلُوْاஇன்னும் புசித்திருப்பார்கள்مِنْஇருந்துفَوْقِهِمْஅவர்களுக்கு மேல்وَمِنْ تَحْتِஇன்னும் கீழிருந்துاَرْجُلِهِمْ‌ؕஅவர்களுடைய கால்கள்مِنْهُمْஅவர்களில்اُمَّةٌஒரு கூட்டம்مُّقْتَصِدَةٌ‌  ؕநேர்மையானதுوَكَثِيْرٌஇன்னும் அதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்سَآءَகெட்டு விட்டனمَاஎதுيَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
வ லவ் அன்னஹும் அகாமுத் தவ்ராத வல் இன்ஜீல வ மா உன்Zஜில இலய்ஹிம் மிர் ரBப்Bபிஹிம் ல அகலூ மின் Fபவ்கிஹிம் வ மின் தஹ்தி அர்ஜுலிஹிம்; மின்ஹும் உம்மதும் முக்த ஸிதது(ன்)வ் வ கதீரும் மின்ஹும் ஸா'அ மா யஃமலூன்
முஹம்மது ஜான்
இன்னும்: அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) அவர்கள் பின்பற்றி நிலைநிறுத்தி வந்தால் (எவ்விதக் கஷ்டமுமின்றி,) அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசிப்பார்கள். ஆனால், அவர்களில் சிலர்தான் நேர்மையான கூட்டத்தினராக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் செய்யும் காரியங்கள் (மிகக்) கெட்டவையாக இருக்கின்றன.
IFT
மேலும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் மற்றும் தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கியருளப்பட்ட இதர வேதங்களையும் அவர்கள் முழுமையாக நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்காக ஆகாரம் மேலிருந்தும் பொழிந்திருக்கும்; கீழிருந்தும் பொங்கிப் பெருகியிருக்கும். ஆயினும் அவர்களில் சிலர் நேர்மையாளர்களாய் இருக்கின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தீய செயல்கள் புரிபவர்கள் ஆவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நிச்சயமாக தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவர்களுடைய இரட்சகனிடமிருந்து அவர்களுக்கு இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் நிலைநாட்டியிருந்தால் அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசித்திருப்பார்கள், (ஆனால்) அவர்களில் சிலர் நேர்மையான சமுதாயத்தினராக இருக்கின்றனர், இன்னும் அவர்களில் பெரும்பான்மையினர்-அவர்கள் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாக இருக்கின்றன.
Saheeh International
And if only they had upheld [the law of] the Torah, the Gospel, and what has been revealed to them from their Lord [i.e., the Qur’an], they would have consumed [provision] from above them and from beneath their feet. Among them are a moderate [i.e., acceptable] community, but many of them - evil is that which they do.
یٰۤاَیُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهٗ ؕ وَاللّٰهُ یَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُதூதரேبَلِّغْஎடுத்துரைப்பீராகمَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَ‌ ؕஉம் இறைவன்وَاِنْ لَّمْ تَفْعَلْநீர் செய்யவில்லையென்றால்فَمَا بَلَّغْتَநீர் எடுத்துரைக்கவில்லைرِسٰلَـتَهٗ‌ ؕதூதை/அவனுடையوَاللّٰهُஅல்லாஹ்يَعْصِمُكَகாப்பாற்றுவான்/உம்மைمِنَ النَّاسِ‌ ؕமக்களிடமிருந்துاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَசமுதாயத்தைالْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
யா அய்யுஹர் ரஸூலு Bபல்லிக் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக வ இல் லம் தFப்'அல் Fபமா Bபல்லக்த ரிஸாலதஹ்; வல்லாஹு யஃஸிமுக மினன் னாஸ்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
முஹம்மது ஜான்
தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்) தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை எல்லாம் (ஒரு குறைவுமின்றி அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக!. நீர் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக ஆக மாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.
IFT
தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! நீர் அவ்வாறு செய்யாவிடில் அவன் வழங்கிய தூதுத்துவப் பொறுப்பை நிறைவேற்றியவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களின் தீங்கிலிருந்து காப்பாற்றுபவனாக இருக்கின்றான். (உங்களுக்கு எதிராக) நிராகரிப்போருக்கு வெற்றிக்கான பாதையை அல்லாஹ் ஒருபோதும் காண்பிக்க மாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய) தூதரே! உம் இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டதை (மனிதர்களுக்கு) எத்திவைத்துவிடுவீராக! நீர் (அவ்வாறு) செய்யாவிடில், அவனுடைய தூதை (முற்றிலும்) நீர் எத்திவைக்கவில்லை, மனிதர்(களின் தீங்கு)களிலிருந்து அல்லாஹ்வோ உம்மைக்காப்பாற்றிக் கொள்வான், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
Saheeh International
O Messenger, announce that which has been revealed to you from your Lord, and if you do not, then you have not conveyed His message. And Allah will protect you from the people. Indeed, Allah does not guide the disbelieving people.
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَسْتُمْ عَلٰی شَیْءٍ حَتّٰی تُقِیْمُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ ؕ وَلَیَزِیْدَنَّ كَثِیْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ طُغْیَانًا وَّكُفْرًا ۚ فَلَا تَاْسَ عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟
قُلْகூறுவீராகيٰۤـاَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்களேلَسْتُمْநீங்கள் இல்லைعَلٰى شَىْءٍஒரு விஷயத்திலும்حَتّٰىவரைتُقِيْمُواநிலைநிறுத்துவீர்கள்التَّوْرٰٮةَதவ்றாத்தைوَالْاِنْجِيْلَஇன்ஜீலைوَمَاۤஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْهِمْஉங்களுக்குمِّنْஇருந்துرَّبِّكُمْ‌ ؕஉங்கள் இறைவன்وَلَيَزِيْدَنَّநிச்சயமாக அதிகப்படுத்துகிறதுكَثِيْرًاஅதிகமானவர்களுக்குمِّنْهُஅவர்களில்مَّاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْكَஉமக்குمِنْஇருந்துرَّبِّكَஉம் இறைவன்طُغْيَانًاவரம்பு மீறுவதைوَّكُفْرًا‌ۚஇன்னும் நிராகரிப்பைفَلَا تَاْسَஆகவே கவலைப்படாதீர்عَلَىமீதுالْقَوْمِசமுதாயம்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்கள்
குல் யா அஹ்லல் கிதாBபி லஸ்தும் 'அலா ஷய்'இன் ஹத்தா துகீமுத் தவ்ராத வல் இன்ஜீல வ மா உன்Zஜில இலய்கும் மிர் ரBப்Bபிகும்; வ லயZஜீதன்ன கதீரம் மின்ஹும் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக துக் யான(ன்)வ் வ குFப்ரன் Fபலா தாஸ 'அலல் கவ்மில் காFபிரீன்
முஹம்மது ஜான்
“வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை” என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடிக்காதவரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்ல'' என்று நீர் கூறுவீராக. உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டவை அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வரும். ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்.
IFT
“வேதம் அருளப்பட்டவர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட இதர வேதங்களையும் முழுமையாகச் செயல்படுத்தாதவரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று (நபியே!) தெளிவாய்க் கூறிவிடுங்கள். உம்மீது இறக்கி வைக்கப்பட்ட இந்த வேதக் கட்டளை அவர்களில் பெரும்பாலோரிடம் வரம்பு மீறலையும், நிராகரிப்பையுமே இன்னும் அதிகப்படுத்தி விட்டது. ஆயினும் நிராகரிப்போரின் நிலை குறித்துச் சிறிதும் நீர் வருந்தாதீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களிடம்) “வேதத்தையுடையோர்களே! நீங்கள் தவ்றாத்தையும் இன்ஜீலையும் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்டதையும் (உண்மையாகவே) நீங்கள் (கடைப்பிடித்தொழுகி) நிலைநிறுத்தும்வரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! உமதிரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு அட்டூழியத்தையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது, ஆகவே, இந்நிராகரிக்கும் மக்களுக்காக நீர் கவலை கொள்ள வேண்டாம்!
Saheeh International
Say, "O People of the Scripture, you are [standing] on nothing until you uphold [the law of] the Torah, the Gospel, and what has been revealed to you from your Lord [i.e., the Qur’an]." And that which has been revealed to you from your Lord will surely increase many of them in transgression and disbelief. So do not grieve over the disbelieving people.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالصّٰبِـُٔوْنَ وَالنَّصٰرٰی مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்هَادُوْاயூதர்கள்وَالصَّابِــٴُــوْنَஇன்னும் சாபியீன்கள்وَالنَّصٰرٰىஇன்னும் கிறித்தவர்கள்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளைوَعَمِلَஇன்னும் செய்தார்صَالِحًـاநன்மையைفَلَا خَوْفٌஒரு பயமுமில்லைعَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَا هُمْஇன்னும் அவர்கள் இல்லைيَحْزَنُوْنَ‏கவலைப்படுவார்கள்
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வஸ் ஸாBபி'ஊன வன் னஸாரா மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ 'அமில ஸாலிஹன் Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
முஹம்மது ஜான்
முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் (இந்த தூதர் கூறுகிறபடி) அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு (அவர் கற்பித்த வழியில்) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
IFT
(இங்கு யாருக்கும் எதிலும் ஏகபோக உரிமை கிடையாது என்பதனை நன்கறிந்து கொள்ளுங்கள்.) முஸ்லிம்கள், யூதர்கள், ஸாபிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரில், யார் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாகி விட்டார்களே அவர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும் (அவர்களில்) எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து நற்கருமத்தையும் செய்தாரோ-அவர்களுக்கு (மறுமையைப்பற்றி) எவ்வித பயமுமில்லை, இன்னும், (உலகில் எதை விட்டுச் செல்கிறார்களோ அதைப்பற்றி) கவலையும் அடையமாட்டார்கள்
Saheeh International
Indeed, those who have believed [in Prophet Muhammad (ﷺ] and those [before him (ﷺ] who were Jews or Sabeans or Christians - those [among them] who believed in Allah and the Last Day and did righteousness - no fear will there be concerning them, nor will they grieve.
لَقَدْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَاَرْسَلْنَاۤ اِلَیْهِمْ رُسُلًا ؕ كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُهُمْ ۙ فَرِیْقًا كَذَّبُوْا وَفَرِیْقًا یَّقْتُلُوْنَ ۟ۗ
لَقَدْதிட்டமாகاَخَذْنَاவாங்கினோம்مِيْثَاقَஉறுதிமொழியைبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களின்وَاَرْسَلْنَاۤஇன்னும் அனுப்பினோம்اِلَيْهِمْஅவர்களிடம்رُسُلًا ؕதூதர்களைكُلَّمَا جَآءَهُمْஅவர்களிடம் வந்தபோதெல்லாம்رَسُوْلٌ ۢஒரு தூதர்بِمَاஎதை கொண்டுلَا تَهْوٰٓىவிரும்பாதுاَنْفُسُهُمْۙஅவர்களுடைய மனங்கள்فَرِيْقًاஒரு வகுப்பாரைكَذَّبُوْاபொய்ப்பித்தனர்وَفَرِيْقًاஇன்னும் ஒரு வகுப்பாரைيَّقْتُلُوْنَ‏கொல்கின்றனர்
லகத் அகத்னா மீதாக Bபனீ இஸ்ரா'ஈல வ அர்ஸல்னா இலய்ஹிம் ருஸுலன் குல்லமா ஜா'அஹும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுஹும் Fபரீகன் கத்தBபூ வ Fபரீக(ன்)ய் யக்துலூன்
முஹம்மது ஜான்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம், அவர்களிடம் தூதர்களையும் அனுப்பி வைத்தோம்; எனினும் அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவாரைப் பொய்ப்பித்தும்; இன்னும் ஒரு பிரிவாரைப் கொலை செய்தும் வந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம் தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம் பல தூதர்களை அனுப்பிவைத்தோம். (எனினும்) அவர்களுடைய மனம் விரும்பாத ஒன்றை (கட்டளையை நம்) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறியும், சிலரைக் கொலை செய்து கொண்டுமே இருந்தார்கள்.
IFT
உண்மையில் நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் (வலுவான) வாக்குறுதி வாங்கினோம். மேலும், அவர்களிடம் இறைத்தூதர்கள் பலரையும் அனுப்பினோம். (ஆயினும்) யாரேனும் ஒரு தூதர் அவர்களின் மனம் விரும்பாதவற்றை அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (தூதர்களில்) சிலரை அவர்கள் பொய்யர் எனத் தூற்றினர்; சிலரைக் கொலை செய்தனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் மக்களிடம் உறுதிமொழி வாங்கினோம், இன்னும், அவர்களிடம் தூதர்களை நாம் அனுப்பி வைத்தோம், அவர்களுடைய மனங்கள் விரும்பாததை (நம்முடைய) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) ஒரு சாராரைப் பொய்யாக்கினார்கள், ஒரு சாராரை கொலையும் செய்தார்கள்.
Saheeh International
We had already taken the covenant of the Children of Israel and had sent to them messengers. Whenever there came to them a messenger with what their souls did not desire, a party [of messengers] they denied, and another party they killed.
وَحَسِبُوْۤا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَیْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِیْرٌ مِّنْهُمْ ؕ وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟
وَحَسِبُوْۤاஇன்னும் எண்ணினர்اَلَّا تَكُوْنَஏற்படாதுفِتْنَةٌதண்டனைفَعَمُوْاஆகவே குருடாகினர்وَصَمُّوْاஇன்னும் செவிடாகினர்ثُمَّபிறகுتَابَபிழைபொறுத்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்கள் மீதுثُمَّபிறகும்عَمُوْاகுருடாகினர்وَصَمُّوْاஇன்னும் செவிடாகினர்كَثِيْرٌஅதிகமானோர்مِّنْهُمْ‌ؕஅவர்களில்وَاللّٰهُஅல்லாஹ்بَصِيْرٌۢஉற்று நோக்குபவன்بِمَاஎதைيَعْمَلُوْنَ‏செய்கிறார்கள்
வ ஹஸிBபூ அல்லா தகூன Fபித்னதுன் Fப'அமூ வ ஸம்மூ தும்ம தாBபல் லாஹு 'அலய்ஹிம் தும்ம 'அமூ வ ஸம்மூ கதீரும் மின்ஹும்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
முஹம்மது ஜான்
(இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆகவே அவர்கள் (உண்மையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்; இதற்குப் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான்; எனினும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும் செவிடர்களாகவுமே இருந்தனர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதனால் தங்களுக்கு) ஓர் ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆதலால், அவர்கள் (உண்மையைக் காண முடியாத) குருடர்களாகவும், (அதைக் கேட்க முடியாத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர். இதன் பின்னரும், அல்லாஹ் அவர்களை மன்னித்தான். எனினும், அவர்களில் பெரும்பான்மையினர் பிறகும் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
IFT
இதனால் எந்த ஃபித்னாவும் (குழப்பமும்) ஏற்படாது என்றும் தாங்களாகவே எண்ணிக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் குருடர்களாயும், செவிடர்களாயும் ஆகிவிட்டார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களை மன்னித்தபோது அவர்களில் பெரும்பாலோர் இன்னும் அதிகமாக குருடர்களாயும் செவிடர்களாயும் ஆகிவிட்டனர். அவர்கள் செய்கின்ற எல்லாச் செயல்களையும் அல்லாஹ் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு செய்தால்) எந்தவிதமான கடும் வேதனையும் தங்களுக்கு ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர், ஆதலால், அவர்கள் (உண்மையை உணராத) குருடர்களாகவும், (அதனைக் கேட்காத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர், பின்னரும் அல்லாஹ் அவர்களின் தவ்பாவை ஏற்றுக் கொண்டான், (இதன்) பின்னரும் அவர்களில் பெரும்பான்மையினர் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே ஆகிவிட்டனர், மேலும், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை பார்க்கின்றவன்.
Saheeh International
And they thought there would be no [resulting] punishment, so they became blind and deaf. Then Allah turned to them in forgiveness; then [again] many of them became blind and deaf. And Allah is Seeing of what they do.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ ؕ وَقَالَ الْمَسِیْحُ یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَیْهِ الْجَنَّةَ وَمَاْوٰىهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ اَنْصَارٍ ۟
لَقَدْதிட்டவட்டமாகكَفَرَநிராகரித்தார்الَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்هُوَஅவன்தான்الْمَسِيْحُமஸீஹ்தான்ابْنُமகன்مَرْيَمَ‌ ؕமர்யமுடையوَقَالَகூறினார்الْمَسِيْحُமஸீஹ்يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களே!اعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبِّىْஎன் இறைவன்وَرَبَّكُمْ‌ ؕஇன்னும் உங்கள் இறைவன்اِنَّهٗநிச்சயமாக செய்திمَنْஎவர்يُّشْرِكْஇணைவைக்கிறார்بِاللّٰهِஅல்லாஹ்வுக்குفَقَدْதிட்டமாகحَرَّمَதடுத்து விடுகிறான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِஅவர் மீதுالْجَـنَّةَசொர்க்கத்தைوَمَاْوٰٮهُஇன்னும் அவருடைய தங்குமிடம்النَّارُ‌ ؕநரகம்தான்وَمَاஇல்லைلِلظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குمِنْ اَنْصَارٍ‏உதவியாளர்களில் எவரும்
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம வ காலல் மஸீஹு யா Bபனீ இஸ்ரா'ஈல உஃBபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும் இன்ன்னஹூ ம(ன்)ய்-யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ஹர்ரமல் லாஹு 'அலய்ஹில் ஜன்னத வமா வாஹுன் னாரு வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
முஹம்மது ஜான்
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்'' என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
IFT
திண்ணமாக, “மர்யம் உடைய குமாரர் மஸீஹ்தான் அல்லாஹ்” என்று கூறியவர்கள் சந்தேகமின்றி நிராகரித்தவர்களாகிவிட்டார்கள். உண்மையில் மஸீஹ் இப்படித்தான் கூறியிருந்தார்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!” எவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ, அவனுக்குத் திண்ணமாக அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்திருக்கின்றான். மேலும், அவனுடைய இருப்பிடம் நரகமாகும். மேலும், இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
”நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் மர்யமுடைய மகன் மஸீஹ்” என்று கூறியவர்கள் திட்டமாக நிராகரிப்போராகி விட்டார்கள், (எனினும்) அந்த மஸீஹோ, “இஸ்ராயீலின் மக்களே! என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்றே கூறினார், நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்துவிடுகின்றான், மேலும், அவர் தங்குமிடம் நரகம்தான், இன்னும், (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையிலும்) உதவி செய்வோர் இல்லை.
Saheeh International
They have certainly disbelieved who say, "Allah is the Messiah, the son of Mary" while the Messiah has said, "O Children of Israel, worship Allah, my Lord and your Lord." Indeed, he who associates others with Allah - Allah has forbidden him Paradise, and his refuge is the Fire. And there are not for the wrongdoers any helpers.
لَقَدْ كَفَرَ الَّذِیْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰهٌ وَّاحِدٌ ؕ وَاِنْ لَّمْ یَنْتَهُوْا عَمَّا یَقُوْلُوْنَ لَیَمَسَّنَّ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
لَـقَدْதிட்டவட்டமாகكَفَرَநிராகரித்தார்(கள்)الَّذِيْنَஎவர்கள்قَالُوْۤاகூறினார்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்ثَالِثُ ثَلٰثَةٍ‌ ۘமூவரில் ஒருவன்وَمَاஇல்லைمِنْஇருந்துاِلٰهٍவணக்கத்திற்குரியவன்اِلَّاۤதவிரاِلٰـهٌஒரு வணக்கத்திற்குரியவன்وَّاحِدٌ  ؕஒரேوَاِنْ لَّمْ يَنْتَهُوْاஅவர்கள் விலகவில்லையெனில்عَمَّاஎதிலிருந்துيَقُوْلُوْنَகூறுகிறார்கள்لَيَمَسَّنَّநிச்சயமாக அடையும்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْهُمْஅவர்களில்عَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக்கூடியது
லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ தாலிது தலாதஹ்; வமா மின் இலாஹின் இல்லா இலாஹு(ன்)வ் வாஹித்; வ இல்லம் யன்தஹூ 'அம்மா யகூலூன லயமஸ் ஸன்னல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்'' என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். ஏனென்றால், ஒரே ஓர் இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. (ஆகவே, இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும்.
IFT
நிச்சயமாக, அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்களும் திண்ணமாக நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். உண்மையில் ஒரே இறைவனைத் தவிர வேறு எந்த இறைவனு மில்லை. தாம் இவ்வாறு கூறுவதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளவில்லையாயின், இத்தகைய நிராகரிப்பாளர்கள் அனைவர்க்கும் துன்புறுத்தும் தண்டனை கொடுக்கப்பட்டே தீரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அல்லாஹ் (பரிசுத்த ஆவி, பிதா, சுதன் ஆகிய இம்) மூவரில் மூன்றாவதான (ஒரு)வன்தான்” என்று கூறியவர்கள், திட்டமாகவே நிராகரிப்போராகிவிட்டார்கள், ஏனென்றால் (வணக்கத்திற்குரிய) ஒரே நாயனைத்தவிர வேறு நாயன் (இல்லவே) இல்லை, ஆகவே, (மூவரில் மூன்றாமவன் என்று) அவர்கள் கூறுவதைவிட்டும் விலகிக் கொள்ளாவிடில், அவர்களிலுள்ள நிராகரிப்போர்களைத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக பிடித்துக்கொள்ளும்.
Saheeh International
They have certainly disbelieved who say, "Allah is the third of three." And there is no god except one God. And if they do not desist from what they are saying, there will surely afflict the disbelievers among them a painful punishment.
اَفَلَا یَتُوْبُوْنَ اِلَی اللّٰهِ وَیَسْتَغْفِرُوْنَهٗ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
اَفَلَا يَتُوْبُوْنَதிருந்தி திரும்ப மாட்டார்களா?اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்وَيَسْتَغْفِرُوْنَهٗ‌ؕஇன்னும் மன்னிப்புக் கோரமாட்டார்களா/அவனிடம்وَஇன்னும்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
அFபலா யதூBபூன இலல் லாஹி வ யஸ்தக்Fபிரூனஹ்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக மன்னிப்பவன் மிகக் கருணையுடையவன் ஆவான்.
IFT
(அவ்வாறிருக்க) அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு அவனிடத்தில் பாவமன்னிப்புக் கோரிட வேண்டாமா? மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனும், மாபெரும் கருணையாளனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் மீண்டு (தவ்பா செய்து) இன்னும் அவனிடம் (தங்கள் குற்றத்திற்காகப்) பாவமன்னிப்புத்தேட மாட்டார்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
Saheeh International
So will they not repent to Allah and seek His forgiveness? And Allah is Forgiving and Merciful.
مَا الْمَسِیْحُ ابْنُ مَرْیَمَ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ ؕ وَاُمُّهٗ صِدِّیْقَةٌ ؕ كَانَا یَاْكُلٰنِ الطَّعَامَ ؕ اُنْظُرْ كَیْفَ نُبَیِّنُ لَهُمُ الْاٰیٰتِ ثُمَّ انْظُرْ اَنّٰی یُؤْفَكُوْنَ ۟
مَا الْمَسِيْحُமஸீஹ் இல்லைابْنُமகன்مَرْيَمَமர்யமுடையاِلَّاதவிரرَسُوْلٌ‌ ۚஒரு தூதரேقَدْ خَلَتْசென்றுவிட்டனர்مِنْ قَبْلِهِஇவருக்கு முன்னர்الرُّسُلُؕதூதர்கள்وَاُمُّهٗஇன்னும் அவருடைய தாய்صِدِّيْقَةٌ‌  ؕஒரு மகாஉண்மையாளர்كَانَاஇருந்தனர்يَاْكُلٰنِசாப்பிடுவார்கள்الطَّعَامَ‌ؕஉணவுاُنْظُرْகவனிப்பீராகكَيْفَஎவ்வாறுنُبَيِّنُதெளிபடுத்துகிறோம்لَهُمُஅவர்களுக்குالْاٰيٰتِஅத்தாட்சிகளைثُمَّபிறகுانْظُرْகவனிப்பீராகاَ نّٰىஎவ்வாறுيُؤْفَكُوْنَ‏திருப்பப்படுகின்றனர்
மல் மஸீஹுBப் னு மர்யம இல்லா ரஸூலுன் கத் கலத் மின் கBப்லிஹிர் ருஸுலு வ உம்முஹூ ஸித்தீகதுன் கானா யா குலானித் த'ஆம்; உன்ளுர் கய்Fப னுBபய்யினு லஹுமுல் ஆயாதி தும்மன் ளுர் அன்னா யு'Fபகூன்
முஹம்மது ஜான்
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
அப்துல் ஹமீது பாகவி
மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே! தவிர (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். அவருடைய தாயும் (கடவுள் அல்ல. அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். இவ்விருவரும் (இவ்வுலகிலிருந்த காலமெல்லாம் மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டு (வாழ்ந்து) வந்தனர். (ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு இறைவனாக ஆவார்கள்? இதை) நாம் பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்கி வைத்திருக்கிறோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (உண்மையில் இருந்து) அவர்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுவிட்டனர் என்பதையும் நீர் கவனிப்பீராக.
IFT
மர்யத்தின் குமாரர் மஸீஹ் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் இறைத்தூதர்கள் பலர் சென்றிருக்கிறார்கள். மேலும், அவருடைய அன்னை வாய்மையுள்ள ஒரு பெண்மணியாவார். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தார்கள். பாருங்கள்! நாம் (சத்தியத்திற்கான) சான்றுகளை எவ்வாறெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக்குகின்றோம். மீண்டும் பாருங்கள்; அவர்கள் எவ்வாறெல்லாம் உண்மையை விட்டுப் பிறழ்ந்து செல்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மர்யமுடைய மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி (அல்லாஹ்வோ, அல்லாஹ்வுடைய குமாரரோ) இல்லை, இவருக்கு முன்னரும் (இவரைப்போல்) தூதர்கள் பலர் (வந்து) சென்று விட்டனர், அவருடைய தாயும் அல்லாஹ் அல்ல, அவர் மிக்க உண்மையானவர், இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டே (வாழ்ந்து) வந்தனர், ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு வணக்கத்திற்குரியவர்களாக ஆவார்கள்? இதனை பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு நாம் எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! பின்னர், (உண்மையிலிருந்து) இவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் நீர் கவனிப்பீராக.
Saheeh International
The Messiah, son of Mary, was not but a messenger; [other] messengers have passed on before him. And his mother was a supporter of truth. They both used to eat food. Look how We make clear to them the signs; then look how they are deluded.
قُلْ اَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ؕ وَاللّٰهُ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
قُلْகூறுவீராகاَ تَعْبُدُوْنَவணங்குகிறீர்களா?مِنْ دُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்مَاஎவைلَا يَمْلِكُஉரிமைபெறாதுلَـكُمْஉங்களுக்குضَرًّاதீங்களிப்பதற்குوَّلَا نَفْعًا ؕஇன்னும் பலனளிப்பதற்குوَاللّٰهُஅல்லாஹ்هُوَ السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏மிக அறிந்தவன்
குல் அதஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யம்லிகு லகும் ளர்ர(ன்)வ் வலா னFப்'ஆ; வல்லாஹு ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்த தீங்கையோ, நன்மையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(அன்றி அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு ஒரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள் ?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஆவான்.
IFT
நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு இழப்பையோ லாபத்தையோ அளிப்பதற்கு சக்தியில்லாதவற்றையா நீங்கள் வணங்குகின்றீர்கள்? ஆனால் அல்லாஹ்தான் யாவற்றையும் செவியேற்பவனும் நன்கு அறிபவனும் ஆவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி அவர்களிடம்) “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு இடரையோ, நன்மையையோ செய்யச் சக்தியற்றவற்றை நீங்கள் வணங்குகின்றீர்களா? என்று (நபியே!) நீர் கேட்பீராக! இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் செவியுறுவோன், யாவற்றையும்) நன்கறிந்தோன்.
Saheeh International
Say, "Do you worship besides Allah that which holds for you no [power of] harm or benefit while it is Allah who is the Hearing, the Knowing?"
قُلْ یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ غَیْرَ الْحَقِّ وَلَا تَتَّبِعُوْۤا اَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِیْرًا وَّضَلُّوْا عَنْ سَوَآءِ السَّبِیْلِ ۟۠
قُلْகூறுவீராகيٰۤـاَهْلَ الْـكِتٰبِவேதக்காரர்களேلَا تَغْلُوْاவரம்பு மீறாதீர்கள்فِىْ دِيْـنِكُمْஉங்கள் மார்க்கத்தில்غَيْرَமுரணாகالْحَـقِّஉண்மைக்குوَلَا تَتَّبِعُوْۤاஇன்னும் பின்பற்றாதீர்கள்اَهْوَآءَவிருப்பங்களைقَوْمٍசமுதாயத்தின்قَدْ ضَلُّوْاவழிதவறி விட்டனர்مِنْ قَبْلُமுன்புوَاَضَلُّوْاஇன்னும் வழி கெடுத்தனர்كَثِيْرًاபலரைوَّضَلُّوْاஇன்னும் வழி தவறினர்عَنْஇருந்துسَوَآءِநேரானالسَّبِيْلِ‏பாதை
குல் யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் கய்ரல் ஹக்கி வலா தத்தBபி'ஊ அஹ்வா'அ கவ்மின் கத் ளல்லூ மின் கBப்லு வ அளல்லூ கதீர(ன்)வ் வ ளல்லூ 'அன் ஸவா'இஸ் ஸBபீல்
முஹம்மது ஜான்
“வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!
அப்துல் ஹமீது பாகவி
‘‘வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். மேலும், இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்'' என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
IFT
நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர் களே! உங்கள் தீனில் (நெறியில்) அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்! மேலும், உங்களுக்கு முன்னர் தாமும் வழிகெட்டு, பலரையும் வழிகெடுத்து மேலும், நேரிய வழியிலிருந்து தடம்புரண்டு போன மக்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையல்லாததைக் (கூறுவது) கொண்டு வரம்பு மீறாதீர்கள், அன்றியும் (இதற்கு)முன்னர், (இவ்வாறு) திட்டமாக வழிதவறிவிட்ட கூட்டத்தாரின் மனோ இச்சைகளையும் நீங்கள் பின்பற்றாதீர்கள், (ஏனென்றால், முன்பே அவர்களும் வழிகெட்டு) இன்னும் அனேகரை வழி தவறவும் செய்துவிட்டனர், மேலும், அவர்கள் நேரான வழியைவிட்டும் முற்றிலும் தவறிவிட்டனர்.
Saheeh International
Say, "O People of the Scripture, do not exceed limits in your religion beyond the truth and do not follow the inclinations of a people who had gone astray before and misled many and have strayed from the soundness of the way."
لُعِنَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیْسَی ابْنِ مَرْیَمَ ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟
لُعِنَசபிக்கப்பட்டார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களில்عَلٰى لِسَانِநாவினால்دَاوٗدَதாவூதுடையوَعِيْسَىஇன்னும் ஈஸாவின்ابْنِமகன்مَرْيَمَ‌ ؕமர்யமின்ذٰ لِكَஅதுبِمَاஎதன் காரணமாகعَصَوْاமாறுசெய்தனர்وَّكَانُوْاஇன்னும் இருந்தனர்يَعْتَدُوْنَ‏மீறுபவர்களாக
லு'இனல் லதீன கFபரூ மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா லிஸானி தாவூத வ 'ஈஸBப் னி மர்யம்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
முஹம்மது ஜான்
இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர்.
IFT
இஸ்ராயீலின் வழித்தோன்றலில் எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்கள் தாவூது மற்றும் மர்யத்தின் குமாரர் ஈஸா ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் (இறைக்கட்டளைக்கு) மாறு செய்தார்கள். மேலும், இறைவரம்புகளை மீறியவாறு இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இஸ்ராயீலின் மக்களில் நிராகரித்தார்களே அத்தகையவர்கள், தாவூத், மர்யமுடைய மகன் ஈஸா, ஆகியோரின் நாவினால் சபிக்கப்பட்டு விட்டனர், அது ஏனென்றால், அவர்கள் மாறுசெய்து கொண்டும், இன்னும் வரம்பு மீறுபவர்களாக இருந்தார்கள் என்பதினாலாகும்.
Saheeh International
Cursed were those who disbelieved among the Children of Israel by the tongue of David and of Jesus, the son of Mary. That was because they disobeyed and [habitually] transgressed.
كَانُوْا لَا یَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ لَبِئْسَ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟
كَانُوْاஇருந்தனர்لَا يَتَـنَاهَوْنَஒருவர் மற்றவரைத் தடுக்காதவர்களாகعَنْவிட்டுمُّنْكَرٍதீமைفَعَلُوْهُ ؕசெய்தனர் / அதைلَبِئْسَகெட்டுவிட்டதுمَاஎதுكَانُوْاஇருந்தனர்يَفْعَلُوْنَ‏செய்வார்கள்
கானூ லா யதனாஹவ்ன 'அம் முன்கரின் Fப'அலூஹ்; லBபி'ஸ மா கானூ யFப'லூன்
முஹம்மது ஜான்
இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே!
IFT
தாம் செய்து கொண்டிருந்த தீய செயலிலிருந்து அவர்கள் ஒருவரையொருவர் தடுக்காமல் இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்கள் யாவும் மிகவும் தரங்கெட்டவையாய் இருந்தன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எதனை அவர்கள் செய்து கொண்டிருந்தார்களோ அந்த வெறுக்கப்பட்ட (செயலானதை) விட்டும் ஒருவரையொருவர் தடுக்காதவர்களாக இருந்தனர், அவர்கள் செய்து கொண்டிருந்தது நிச்சயமாக மிகக்கெட்டதாகும்.
Saheeh International
They used not to prevent one another from wrongdoing that they did. How wretched was that which they were doing.
تَرٰی كَثِیْرًا مِّنْهُمْ یَتَوَلَّوْنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَیْهِمْ وَفِی الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ ۟
تَرٰىகாண்பீர்كَثِيْرًاஅதிகாமானோரைمِّنْهُمْஅவர்களில்يَتَوَلَّوْنَநட்பு வைக்கிறார்கள்الَّذِيْنَஎவர்களிடம்كَفَرُوْا‌ؕநிராகரித்தார்கள்لَبِئْسَகெட்டுவிட்டதுمَاஎதுقَدَّمَتْமுற்படுத்தியனلَهُمْஅவர்களுக்குاَنْفُسُهُمْஅவர்களுடைய ஆன்மாக்கள்اَنْ سَخِطَகோபிக்கும்படியாகاللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَفِى الْعَذَابِஇன்னும் வேதனையில்தான்هُمْஅவர்கள்خٰلِدُوْنَ‏நிரந்தரமாக இருப்பார்கள்
தரா கதீரம் மின்ஹும் யதவல்லவ்னல் லதீன கFபரூ; லBபி'ஸ மா கத்தமத் லஹும் அன்Fபுஸுஹும் அன் ஸகிதல் லாஹு 'அலய்ஹிம் வ Fபில் 'அதாBபி ஹும் காலிதூன்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும்; ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது; மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்.
IFT
இன்று அவர்களில் பெரும்பாலோர் (இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்பாளர்களுக்கு ஆதரவாளர்களாயும், உற்ற நண்பர்களாயுமிருப்பதை நீர் காண்கிறீர். சந்தேகமின்றி அவர்கள் தமக்காக சம்பாதித்தவை எத்துணைத் தரங்கெட்டவை! இதனாலேயே அல்லாஹ் அவர்கள் மீது கோபங் கொண்டான். மேலும் நிரந்தரமான வேதனைக்கு அவர்கள் பலியாவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரித்துவிட்டார்களே, அத்தகையோரை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்வோராக அவர்களில் அநேகரை (நபியே!) நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொள்ளுமாறு தங்களுக்காக அவர்கள் முற்படுத்தி வைத்திட்ட (செயலான)து மிகக் கெட்டதாகிவிட்டது; இன்னும் நரக வேதனையில் அவர்கள் நிரந்தரமாக (தங்கி) இருப்பவர்கள்.
Saheeh International
You see many of them becoming allies of those who disbelieved [i.e., the polytheists]. How wretched is that which they have put forth for themselves in that Allah has become angry with them, and in the punishment they will abide eternally.
وَلَوْ كَانُوْا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِیَآءَ وَلٰكِنَّ كَثِیْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟
وَلَوْ كَانُوْاஅவர்கள் இருந்திருந்தால்يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்பவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வைوَالنَّبِىِّஇன்னும் நபியைوَمَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْهِஅவருக்குمَا اتَّخَذُوْஎடுத்திருக்க மாட்டார்கள்هُمْஅவர்களைاَوْلِيَآءَநண்பர்களாகوَلٰـكِنَّஎன்றாலும்كَثِيْرًاஅதிகமானோர்مِّنْهُمْஅவர்களில்فٰسِقُوْنَ‏பாவிகள்
வ லவ் கானூ யு'மினூன Bபில்லாஹி வன் னBபிய்யி வ மா உன்Zஜில இலய்ஹி மத்தகதூஹும் அவ்லியா'அ வ லாகின்ன கதீரம் மின்ஹும் Fபாஸிகூன்
முஹம்மது ஜான்
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால் (நிராகரித்த) அவர்களைத் (தங்களுக்குத்) தோழர்களாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களில் பெரும்பான்மையினர் பாவிகள் ஆவர்.
IFT
உண்மையிலேயே அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறைத்தூதரின் மீதும் அவருக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின் (நம்பிக்கையாளர்களுக்கு எதிராக) நிராகரிப்போரை தம் உற்ற நண்பர்களாய் ஒருபோதும் ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும் அவருக்கு இறக்கிவைக்கப்பட்ட (வேதத்)தையும் (உண்மையாகவே) விசுவாசங்கொள்பவர்களாக இருந்திருப்பார்களானால் (நிராகரித்த) அவர்களை(த் தங்களுக்கு) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள், எனினும் அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாவர்.
Saheeh International
And if they had believed in Allah and the Prophet and in what was revealed to him, they would not have taken them as allies; but many of them are defiantly disobedient.
لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الْیَهُوْدَ وَالَّذِیْنَ اَشْرَكُوْا ۚ وَلَتَجِدَنَّ اَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِیْنَ اٰمَنُوا الَّذِیْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰی ؕ ذٰلِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّیْسِیْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
لَـتَجِدَنَّ(நீர்) காண்பீர்اَشَدَّகடுமையானவர்களாகالنَّاسِமக்களில்عَدَاوَةًபகைமையினால்لِّـلَّذِيْنَஎவர்களுக்குاٰمَنُواநம்பிக்கை கொண்டார்கள்الْيَهُوْدَயூதர்களைوَالَّذِيْنَஇன்னும் எவர்களைاَشْرَكُوْا‌ ۚஇணைவைத்தனர்وَلَـتَجِدَنَّஇன்னும் நிச்சயமாக காண்பீர்اَ قْرَبَهُمْஅவர்களில் மிக நெருங்கியவர்களாகمَّوَدَّةًநேசத்தில்لِّـلَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களுக்குالَّذِيْنَஎவர்களைقَالُوْۤاகூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்نَصٰرٰى‌ ؕகிறித்தவர்கள்ذٰ لِكَஅதுبِاَنَّகாரணம்/நிச்சயமாகمِنْهُمْஅவர்களில்قِسِّيْسِيْنَகுருக்கள்وَرُهْبَانًاஇன்னும் துறவிகள்وَّاَنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَا يَسْتَكْبِرُوْنَ‏பெருமை கொள்ள மாட்டார்கள்
லதஜிதன்ன அஷத் தன் னாஸி 'அதாவதல் லில்லதீன ஆமனுல் யஹூத வல்லதீன அஷ்ரகூ வ லதஜிதன்ன அக்ரBபஹும் மவத்ததல் லில் லதீன ஆமனுல் லதீன காலூ இன்னா னஸாரா; தாலிக Bபி அன்ன மின்ஹும் கிஸீஸீன வ ருஹ்Bபான(ன்)வ் வ அன்னஹும் லா யஸ்தக்Bபிரூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) யூதர்களும், இணைவைத்து வணங்குபவர்களும் நம்பிக்கையாளர்களுக்கு மனிதர்கள் அனைவரிலும் கொடிய எதிரிகளாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! எவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறுகின்றனரோ அவர்களை நம்பிக்கையாளர்களுக்கு (மற்றவர்களை விட) நட்பில் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர்! ஏனென்றால், அவர்களில் (கற்றறிந்த) குருக்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், நிச்சயமாக அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை.
IFT
திண்ணமாக யூதர்களும், இணைவைப்பவர்களும் மற்ற அனைத்து மக்களையும் விட இறைநம்பிக்கையாளர்களுக்குக் கடும் பகைவர்களாக இருப்பதை (நபியே!) நீர் காண்பீர். நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களே என்று சொல்பவர்கள்தாம் மற்ற அனைவரையும்விட இறைநம்பிக்கையாளர்களுடன் நேசம் கொண்டிருப்பதை நீர் காண்பீர். இதற்குக் காரணம் அவர்களுள் வணக்கத்தில் திளைத்த அறிஞர்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும், அவர்கள் அகந்தை கொண்டவர்களாகவும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) விசுவாசங்கொண்டோருக்கு விரோதத்தால், மனிதர்களில் மிகக் கொடியவர்களாக யூதர்களையும் இணை வைப்பவர்களையும் நிச்சயமாக நீர் காண்பீர், மேலும், அவர்களில் (அம்மனிதர்களில்) “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறுகின்றனரே, அத்தகையோரை விசுவாசங்கொண்டிருந்தோருக்கு, அன்பால் மிக்க நெருக்கமானவர்களாக நீர் காண்பீர், அது (ஏனென்றால்) அவர்களில் (கற்றறிந்த) குருக்களும் துறவிகளும் இருக்கின்றனர், மேலும், நிச்சயமாக அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள் என்பதினாலாகும்.
Saheeh International
You will surely find the most intense of the people in animosity toward the believers [to be] the Jews and those who associate others with Allah; and you will find the nearest of them in affection to the believers those who say, "We are Christians." That is because among them are priests and monks and because they are not arrogant.
وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَی الرَّسُوْلِ تَرٰۤی اَعْیُنَهُمْ تَفِیْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَقِّ ۚ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟
وَاِذَا سَمِعُوْاஅவர்கள் செவியுற்றால்مَاۤஎதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَىபக்கம்الرَّسُوْلِதூதர்تَرٰٓىகாண்பீர்اَعْيُنَهُمْஅவர்களின் கண்களைتَفِيْضُநிரம்பி வழியக்கூடியதாகمِنَ الدَّمْعِகண்ணீரால்مِمَّاஎதன் காரணமாகعَرَفُوْاஅறிந்தனர்مِنَ الْحَـقِّ‌ۚஉண்மையைيَقُوْلُوْنَகூறுகின்றனர்رَبَّنَاۤஎங்கள் இறைவாاٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்فَاكْتُبْنَاஆகவே பதிவு செய்/எங்களைمَعَஉடன்الشّٰهِدِيْنَ‏சாட்சியாளர்கள்
வ இதா ஸமி'ஊ மா உன்Zஜில இலர் ரஸூலி தரா அஃயுனஹும் தFபீளு மினத் தம்'இ மிம்ம்மா 'அரFபூ மினல்ஹக்க்; யகூலூன ரBப்Bபனா ஆமன்னா Fபக்துBப்னா ம'அஷ் ஷாஹிதீன்
முஹம்மது ஜான்
இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர் “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, (இவர்களில் பலர் நம்) தூதர் மீது அருளப்பட்டவற்றை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர் “எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர்.
IFT
இறைத்தூதர் மீது இறக்கியருளப்பட்ட இவ் வேதத்தை அவர்கள் செவியுறும்போது சத்தியத்தை அவர்கள் அறிந்து கொண்டதன் விளைவாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்கிறீர். மேலும், அவர்கள் இறைஞ்சுகின்றார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம். எனவே சாட்சி வழங்குபவர்களில் எங்கள் பெயர்களையும் எழுதி வைப்பாயாக!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் (நபி) தூதர்மீது இறக்கப்பட்டதைச் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்து கொண்டதன் காரணமாக அவர்களின் கண்களை – அவை கண்ணீரால் நிரம்பி வடிப்பதை நீர் காண்பீர்! “எங்கள் இரட்சகனே! இவ்வேத்தை) நாங்கள் விசுவாசித்தோம், ஆகவே, (இவ்வேதம் உண்மையான தெனச்) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக” என்று பிரார்த்தித்துக் கூறுகின்றனர்.
Saheeh International
And when they hear what has been revealed to the Messenger, you see their eyes overflowing with tears because of what they have recognized of the truth. They say, "Our Lord, we have believed, so register us among the witnesses.
وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَآءَنَا مِنَ الْحَقِّ ۙ وَنَطْمَعُ اَنْ یُّدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِیْنَ ۟
وَمَاஎன்னلَـنَاஎங்களுக்குلَا نُؤْمِنُநாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்கبِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاஇன்னும் எதுجَآءَவந்ததுنَاநமக்குمِنَ الْحَـقِّۙசத்தியம்وَنَطْمَعُநாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும்اَنْ يُّدْخِلَـنَاஎங்களை / அவன் சேர்ப்பதைرَبُّنَاஎங்கள் இறைவன்مَعَஉடன்الْقَوْمِமக்கள்الصّٰلِحِيْنَ‏நல்லவர்கள்
வமா லனா லா னு'மினு Bபில்லாஹி வமா ஜா'அனா மினல் ஹக்கி வ னத்ம'உ அய் யுத்கிலனா ரBப்Bபுனா ம'அல் கவ்மிஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
மேலும், “அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்” (என்றும் அவர்கள் கூறுவர்).
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது? (நற்செயல்கள் செய்த) நல்லவர்களுடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசைப்படுகிறோம்'' என்றும் (கூறுகின்றனர்.)
IFT
மேலும், அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுடைய இறைவன் எங்களை ஒழுக்க நலமுடையவர்களோடு இணைத்தருள வேண்டுமென்று நாங்கள் பேராவல் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்த சத்தியத்தின் மீதும் எவ்வாறு நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்போம்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அல்லாஹ்வையும்) அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்திய (வேத)த்தையும் நாங்கள் விசுவாசங் கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (தடை) இருக்கிறது? மேலும், எங்கள் இரட்சகன் (நற்கருமங்கள் செய்த) நல்லோருடன் எங்களையும் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை கொள்கின்றோம்” என்றும் (கூறுகின்றனர்)
Saheeh International
And why should we not believe in Allah and what has come to us of the truth? And we aspire that our Lord will admit us [to Paradise] with the righteous people."
فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ جَزَآءُ الْمُحْسِنِیْنَ ۟
فَاَثَابَهُمُஆகவே பிரதிபலனாகஅளித்தான்/அவர்களுக்குاللّٰهُஅல்லாஹ்بِمَاஎதன் காரணமாகقَالُوْاகூறினார்கள்جَنّٰتٍசொர்க்கங்களைتَجْرِىْஓடுகிறதுمِنْஇருந்துتَحْتِهَاஅதன் கீழேالْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَا‌ ؕஅதில்وَذٰ لِكَஇதுجَزَآءُகூலிالْمُحْسِنِيْنَ‏நல்லறம்புரிபவர்களுடைய
Fப அதாBபஹுமுல் லாஹு Bபிமா காலூ ஜன்ன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிக ஜZஜா'உல் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான், அவர்கள் அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவருக்குரிய நற்கூலியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவே நன்மை செய்பவர்களுக்குரிய கூலியாகும்.
IFT
அவர்கள் இவ்வாறு கூறியதால் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோட்டங்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே நன்மை புரிவோருக்கான கூலியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அவர்கள் இவ்வாறு கூறியதன் காரணமாக, அல்லாஹ் அவர்களுக்குச் சுவனபதிகளைப் பிரதிபலனாகக் கொடுப்பான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்; இன்னும் இதுவே நன்மை செய்வோருக்கு(ரிய நற்)கூலியுமாகும்
Saheeh International
So Allah rewarded them for what they said with gardens [in Paradise] beneath which rivers flow, wherein they abide eternally. And that is the reward of doers of good.
وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்وَكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தனர்بِاٰيٰتِنَاۤநம் வசனங்களைاُولٰٓٮِٕكَஅவர்கள்اَصْحٰبُ الْجَحِيْمِ‏நரகவாசிகள்தான்
வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுல் ஜஹீம்
முஹம்மது ஜான்
ஆனால், எவர் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நரகவாசிகளே!
IFT
மேலும் எவர்கள் நம் திருவசனங்களை நிராகரித்து, அவற்றைப் பொய்யானவை என வாதிட்டார்களோ அத்தகையோர் நரகவாசிகளே ஆவர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிராகரித்து நம் வசனங்களையும் பொய்யாக்கினார்களே அத்தகையோர் - அவர்கள் நரகவாசிகள்.
Saheeh International
But those who disbelieved and denied Our signs - they are the companions of Hellfire.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَیِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْمُعْتَدِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تُحَرِّمُوْاஆகாதவையாக ஆக்காதீர்கள்طَيِّبٰتِநல்லவற்றைمَاۤஎவைاَحَلَّஆகுமாக்கினான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குوَلَا تَعْتَدُوْا‌ ؕஇன்னும் வரம்புமீறாதீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْمُعْتَدِيْنَ‏வரம்புமீறிகளை
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துஹர்ரிமூ தய்யிBபாதி மா அஹல்லல் லாஹு லகும் வலா தஃததூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் மு'ததீன்
முஹம்மது ஜான்
முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் ஆகாதவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், வரம்பு மீறுபவர்களை நேசிப்பதேயில்லை.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூய பொருள்களை ஹராமானவை விலக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், வரம்பு மீறாதீர்கள்! திண்ணமாக வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு, ஆகுமாக்கி வைத்திருக்கும் நல்லவற்றை நீங்கள் விலக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், இன்னும் நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்.
Saheeh International
O you who have believed, do not prohibit the good things which Allah has made lawful to you and do not transgress. Indeed, Allah does not like transgressors.
وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
وَكُلُوْاஇன்னும் புசியுங்கள்مِمَّاஎதிலிருந்துرَزَقَكُمُவழங்கினான்/ உங்களுக்குاللّٰهُஅல்லாஹ்حَلٰلًاஅனுமதிக்கப்பட்டதைطَيِّبًا‌நல்லதுوَّ اتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِىْۤஎவன்اَنْـتُمْநீங்கள்بِهٖஅவனைمُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கிறீர்கள்
வ குலூ மிம்மா ரZஜககுமுல் லாஹு ஹலாலன் தய்யிBபா; வத்தகுல் லாஹல்லதீ அன்தும் Bபிஹீ மு'மினூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்; நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (நீங்கள் புசிக்க) அனுமதிக்கப்பட்ட நல்லவற்றையே புசியுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்.
IFT
அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள பொருள்களில் அனுமதிக்கப்பட்டதும், தூய்மையானதுமான பொருள்களை உண்ணுங்கள் (பருகுங்கள்)! மேலும், எந்த இறைவன்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டு இருக்கின்றீர்களோ அவனுக்கு மாறு செய்வதிலிருந்து விலகி வாழுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (நீங்கள் புசிக்க) ஆகுமான நல்லவற்றைப் புசியுங்கள், நீங்கள் யாரை விசுவாசித்திருக்கிறீர்களோ, அத்தகைய அல்லாஹ்வைப் பயந்தும் கொள்ளுங்கள்.
Saheeh International
And eat of what Allah has provided for you [which is] lawful and good. And fear Allah, in whom you are believers.
لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَیْمَانَ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِیْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِیْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِیْرُ رَقَبَةٍ ؕ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ ؕ ذٰلِكَ كَفَّارَةُ اَیْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ وَاحْفَظُوْۤا اَیْمَانَكُمْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
لَاமாட்டான்يُؤَاخِذُكُمُஉங்களை தண்டிக்கاللّٰهُஅல்லாஹ்بِاللَّغْوِவீணானதற்காகفِىْۤஇல்اَيْمَانِكُمْஉங்கள் சத்தியங்கள்وَلٰـكِنْஎனினும்يُّؤَاخِذُكُمْஉங்களைத் தண்டிப்பான்بِمَاஎதற்காகعَقَّدْتُّمُஉறுதிப்படுத்தினீர்கள்الْاَيْمَانَ‌ ۚசத்தியங்களைفَكَفَّارَتُهٗۤஅதற்குப் பரிகாரம்اِطْعَامُஉணவளிப்பதுعَشَرَةِபத்துمَسٰكِيْنَஏழைகளுக்குمِنْஇருந்துاَوْسَطِநடுத்தரமானதுمَاஎதுتُطْعِمُوْنَஉணவளிக்கிறீர்கள்اَهْلِيْكُمْஉங்கள் குடும்பத்திற்குاَوْஅல்லதுكِسْوَتُهُمْஅவர்களுக்கு ஆடையளிப்பதுاَوْஅல்லதுتَحْرِيْرُவிடுதலையிடுவதுرَقَبَةٍ‌ ؕஓர் அடிமைفَمَنْஎவர்لَّمْ يَجِدْபெறவில்லையெனில்فَصِيَامُநோன்பிருத்தல்ثَلٰثَةِமூன்றுاَيَّامٍ‌ ؕநாட்களுக்குذٰ لِكَஇதுكَفَّارَةُபரிகாரம்اَيْمَانِكُمْஉங்கள் சத்தியங்களின்اِذَا حَلَفْتُمْ‌ ؕநீங்கள் சத்தியம் செய்தால்وَاحْفَظُوْۤاகாப்பாற்றுங்கள்اَيْمَانَكُمْ‌ ؕஉங்கள் சத்தியங்களைكَذٰلِكَஇவ்வாறுيُبَيِّنُவிவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்لَـكُمْஉங்களுக்குاٰيٰتِهٖதன் வசனங்களைلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
லா யு'ஆகிதுகுமுல் லாஹு Bபில்லக்வி Fபீ அய்மானிகும் வ லாகி(ன்)ய் யு'ஆகிதுகுமுல் Bபிமா 'அக்கத்துமுல் அய்மான அ கFப்Fபார துஹூ இத்'ஆமு 'அஷரதி மஸாகீன மின் அவ்ஸதி மா துத்'இமூன அஹ்லீகும் அவ் கிஸ்வதுஹும் அவ் தஹ்ரீரு ரகBபதின் Fபமல்லம் யஜித் Fப ஸியாமு தலாததி அய்யாம்; தாலிக கFப்Fபாரது அய்மானிகும் இதா ஹலFப்தும்; வஹ்Fபளூ அய்மானகும்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஷ்குரூன்
முஹம்மது ஜான்
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (எதையும்) உறுதிப்படுத்த நீங்கள் செய்கின்ற சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவற்றில் எதையும்) எவர் பெறவில்லையோ அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான்.
IFT
நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிப்பதில்லை. ஆயினும் நீங்கள் உறுதிப்படுத்திச் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான். (முறித்துவிட்ட) சத்தியத்திற்கான குற்றப்பரிகாரம் (இதுதான்): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து வறியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இவற்றில்) எதற்கும் சக்தி பெறாதவர்கள் மூன்று நாட்களுக்கு நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்து விட்டால், இதுதான் அவற்றுக்குரிய குற்றப்பரிகாரமாகும். எனவே உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள்! இவ்வாறு தன்னுடைய சட்ட திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்; நீங்கள் நன்றி செலுத்துபவராய்த் திகழக் கூடும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்கமாட்டான், எனினும், (ஏதெனுமொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப்பற்றி (அதில் தவறினால்) உங்களைப் பிடிப்பான், எனவே, (அதில் தவறி அந்த சத்தியத்தை முறித்துவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு உண்ணக் கொடுக்கும் ஆகாரத்தில் மத்தியதரமான (ஆகாரத்)திலிருந்து பத்து ஏழைகளுக்கு உண்ணக் கொடுப்பதாயிருக்கும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவித்தலாயிருக்கும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்தலாயிருக்கும், ஆகவே, எவர் (பரிகாரத்திற்குரிய எதையும்) பெறவில்லையோ அப்போது மூன்று நாட்களுடைய நோன்பு (நோற்பது அதற்குப் பரிகாரம்) ஆகும், இதுதான் உங்களுடைய சத்தியங்களுக்கு, நீங்கள் சத்தியம் செய்து (முறித்து) விட்டால்-பரிகாரமாகும், இன்னும் நீங்கள் உங்கள் சத்தியங்களை (பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக, அவன் தன்னுடைய வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விளக்குகின்றான்.
Saheeh International
Allah will not impose blame upon you for what is meaningless in your oaths, but He will impose blame upon you for [breaking] what you intended of oaths. So its expiation is the feeding of ten needy people from the average of that which you feed your [own] families or clothing them or the freeing of a slave. But whoever cannot find [or afford it] - then a fast of three days [is required]. That is the expiation for oaths when you have sworn. But guard your oaths. Thus does Allah make clear to you His verses [i.e., revealed law] that you may be grateful.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَیْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّیْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِنَّمَا الْخَمْرُநிச்சயமாக மதுوَالْمَيْسِرُஇன்னும் சூதுوَالْاَنْصَابُஇன்னும் சிலைகள்وَالْاَزْلَامُஇன்னும் அம்புகள்رِجْسٌஅருவருக்கத்தக்கவைمِّنْ عَمَلِசெயல்களில்الشَّيْطٰنِஷைத்தானின்فَاجْتَنِبُوْهُஆகவே, விட்டு விலகுங்கள்/இவற்றைلَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்னமல் கம்ரு வல்மய்ஸிரு வல் அன்ஸாBபு வல் அZஜ்லாமு ரிஜ்ஸும் மின் 'அமலிஷ் ஷய்தானி Fபஜ்தனிBபூஹு ல'அல் லகும் துFப்லிஹூன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
IFT
இறை நம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும் (சூதாட்ட) அம்புகளும் (ஆகிய இவையாவும்) ஷைத்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும் - ஆகவே, இவைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
Saheeh International
O you who have believed, indeed, intoxicants, gambling, [sacrificing on] stone alters [to other than Allah], and divining arrows are but defilement from the work of Satan, so avoid it that you may be successful.
اِنَّمَا یُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّوْقِعَ بَیْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِی الْخَمْرِ وَالْمَیْسِرِ وَیَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ ۚ فَهَلْ اَنْتُمْ مُّنْتَهُوْنَ ۟
اِنَّمَاஎல்லாம்يُرِيْدُநாடுகிறான்الشَّيْطٰنُஷைத்தான்اَنْ يُّوْقِعَஅவன் உண்டுபண்ணுவதுبَيْنَكُمُஉங்களுக்குமத்தியில்الْعَدَاوَةَபகைமைوَالْبَغْضَآءَஇன்னும் வெறுப்பைفِى الْخَمْرِமதுவினால்وَالْمَيْسِرِஇன்னும் சூதாட்டத்தினால்وَيَصُدَّكُمْஇன்னும் அவன் தடுப்பது/உங்களைعَنْ ذِكْرِஞாபகத்திலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَعَنِ الصَّلٰوةِ‌ ۚஇன்னும் தொழுகையிலிருந்துفَهَلْஆகவே ?اَنْـتُمْநீங்கள்مُّنْتَهُوْنَ‏விலகுபவர்கள்
இன்னமா யுரீதுஷ் ஷய்தானு அய் யூகி'அ Bபய்னகுமுல் 'அதாவத வல் Bபக்ளா'அ Fபில் கம்ரி வல் மய்ஸிரி வ யஸுத்தகும் 'அன் திக்ரில் லாஹி வ 'அனிஸ் ஸலாதி Fபஹல் அன்தும் முன்தஹூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே, அவற்றிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?)
IFT
மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவிலும், சூதாட்டத்திலும் (அதன் மூலம்) உங்களுக்கிடையில் விரோதத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணவும், அல்லாஹ்வை நினைவு கூருவதை விட்டும், தொழுகையை (நிறைவேற்றுவதை) விட்டும் உங்களை அவன் தடுப்பதையுமேயாகும். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்கிறீர்களா?
Saheeh International
Satan only wants to cause between you animosity and hatred through intoxicants and gambling and to avert you from the remembrance of Allah and from prayer. So will you not desist?
وَاَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚ فَاِنْ تَوَلَّیْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰی رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
وَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்الرَّسُوْلَதூதருக்குوَاحْذَرُوْا‌ ۚஇன்னும் எச்சரிக்கையாக இருங்கள்فَاِنْ تَوَلَّيْتُمْநீங்கள்திரும்பினால்فَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاநிச்சயமாகعَلٰى رَسُوْلِنَاநம் தூதர் மீதுالْبَلٰغُஎடுத்துரைப்பதுالْمُبِيْنُ‏தெளிவாக
வ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வஹ்தரூ; Fப இன் தவல் லய்தும் Fபஃலமூ அன்னமா 'அலா ரஸூலினல் Bபலாகுல் முBபீன்
முஹம்மது ஜான்
இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்; (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்யாது) எச்சரிக்கையாக இருங்கள். (இதை) நீங்கள் புறக்கணித்து விட்டால் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
IFT
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் (மாறு செய்வதிலிருந்து) விலகியிருங்கள். இதனை (ஆணையை) நீங்கள் புறக் கணித்து விட்டால் (நமது தூதைத்) தெள்ளத் தெளிவாய் எடுத்துரைப்பது மட்டுமே நமது தூதர் மீது கடமையாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (மாறு செய்யாது) எச்சரிக்கையாகவுமிருங்கள், எனவே, (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், அப்போது நிச்சயமாக நம் தூதர் மீது கடமையெல்லாம் (நம் கட்டளைகளை உங்களுக்குத்) தெளிவாக எத்தி வைப்பது தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்,
Saheeh International
And obey Allah and obey the Messenger and beware. And if you turn away - then know that upon Our Messenger is only [the responsibility for] clear notification.
لَیْسَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠
لَـيْسَஇல்லைعَلَىமீதுالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைجُنَاحٌகுற்றம்فِيْمَاஎதில்طَعِمُوْۤاபுசித்தார்கள்اِذَا مَا اتَّقَواதவிர்ந்து கொண்டால்وَّاٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைثُمَّபிறகுاتَّقَواஅஞ்சினார்கள்وَّاٰمَنُوْاஇன்னும் நம்பிக்கை கொண்டார்கள்ثُمَّபிறகுاتَّقَواஅஞ்சினார்கள்وَّاَحْسَنُوْا ؕஇன்னும் நல்லறம் செய்தார்கள்وَاللّٰهُஅல்லாஹ்يُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِيْنَ‏நல்லறம்புரிவோரை
லய்ஸ 'அலல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜுனாஹுன் Fபீமா த'இமூ இதா மத் தகவ் வ ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி தும்மத் தகவ் வ ஆமனூ தும்மத் தகவ் வ அஹ்ஸனூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறவர்கள் (தடுக்கப்பட்ட உணவில்) எதையும் (அது தடை செய்யப்படுவதற்கு முன்னர்) புசித்திருந்தால் (அது) அவர்களின் மீது குற்றமாகாது, (தடுக்கப்பட்டபின் அவற்றிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கையின் மீதே உறுதியாக இருந்து, நற்செயல்களையும் செய்து, (மற்ற பாவங்களிலிருந்தும்) விலகி, நம்பிக்கையை உறுதிப்படுத்தி, (அல்லாஹ்வுக்குப்) பயந்து, (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (போதுமானது. ஆகவே, தடுக்கப்பட்டவற்றை முன்னர் புசித்துவிட்டது பற்றிக் குற்றம் பிடிக்கப்பட மாட்டாது.) அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கிறான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள், (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை. (ஆனால் இனி) தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும், இன்னும் எந்த எந்தப் பொருள்களைவிட்டு தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாகவும், மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும் இன்னும் இறையச்சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் நன்னடத்தையுடையோரை நேசிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தவர்கள் மீது அவர்கள் பயந்து விசுவாசங்கொண்டு (அதன்மீது நிலைத்திருந்து) நற்செயல்கள் புரிந்து பின்னர், அவர்கள் (அல்லாஹ்வை) பயந்து விசுவாசங்கொண்டு பிறகும் (அல்லாஹ்வை) பயந்து (பிறருக்கு) நன்மையும் செய்து கொண்டிருந்தால் (தடுக்கப்பட்டவற்றிலிருந்து முன்னர்) அவர்கள் சாப்பிட்டதில் எவ்வித குற்றமுமில்லை, அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கிறான்.!
Saheeh International
There is not upon those who believe and do righteousness [any] blame concerning what they have eaten [in the past] if they [now] fear Allah and believe and do righteous deeds, and then fear Allah and believe, and then fear Allah and do good; and Allah loves the doers of good.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَیَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَیْءٍ مِّنَ الصَّیْدِ تَنَالُهٗۤ اَیْدِیْكُمْ وَرِمَاحُكُمْ لِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّخَافُهٗ بِالْغَیْبِ ۚ فَمَنِ اعْتَدٰی بَعْدَ ذٰلِكَ فَلَهٗ عَذَابٌ اَلِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَيَبْلُوَنَّكُمُநிச்சயமாக சோதிப்பான் / உங்களைاللّٰهُஅல்லாஹ்بِشَىْءٍசிலதைக் கொண்டுمِّنَ الصَّيْدِவேட்டைகளில்تَنَالُـهٗۤஅடைந்து விடுகின்றன/அதைاَيْدِيْكُمْஉங்கள் கரங்கள்وَ رِمَاحُكُمْஇன்னும் ஈட்டிகள் / உங்கள்لِيَـعْلَمَஅறிவதற்காகاللّٰهُஅல்லாஹ்مَنْஎவர்يَّخَافُهٗபயப்படுகிறார்/தன்னைبِالْـغَيْبِ‌ ۚமறைவில்فَمَنِஎவர்اعْتَدٰىமீறினார்بَعْدَ ذٰ لِكَஇதற்குப் பின்புفَلَهٗஅவருக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக்கூடியது
யா அய்யுஹல் லதீன ஆமனூ ல யBப்லுவன்ன்னகுமுல் லாஹு Bபிஷய்'இம் மினஸ் ஸய்தி தனாலுஹூ அய்தீகும் வ ரிமாஹுகும் லியஃலமல் லாஹு மய் யகாFபுஹூ Bபில்கய்Bப்; Fபமனிஃ ததா Bபஃத தாலிக Fபலஹூ 'அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனை அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறி(வித்து விடு)வதற்காக (நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில்) உங்கள் கைகளும், அம்புகளும் (எளிதில்) அடையக்கூடிய ஒரு வேட்டைப் பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்னர் எவரேனும் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினால் அவருக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! (இஹ்ராமுடைய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகள் ஏதாவதொன்றின் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். மறைவான நிலையிலும் தன்னை அஞ்சக்கூடியவர்கள் யார் என்று அல்லாஹ் அறிந்து கொள்வதற்காக! இவ்வாறு எச்சரித்த பிறகு யார் (அல்லாஹ் நிர்ணயித்த) வரம்பை மீறுகின்றாரோ அவருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! (நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில்) உங்களுடைய கரங்களும், உங்களுடைய ஈட்டிகளும், எதனை எளிதில் அடையுமோ, அத்தகைய வேட்டைப்பிராணிகளில் ஏதாவதொன்றைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான், மறைவில் அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர் யார் என்பதை அவன் அறிவித்து விடுவதற்காகவே (இவ்வாறு செய்கிறான்), ஆகவே, இதற்குப் பின்னர் எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுகிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
Saheeh International
O you who have believed, Allah will surely test you through something of the game that your hands and spears [can] reach, that Allah may make evident those who fear Him unseen. And whoever transgresses after that - for him is a painful punishment.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّیْدَ وَاَنْتُمْ حُرُمٌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ یَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْیًا بٰلِغَ الْكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِیْنَ اَوْ عَدْلُ ذٰلِكَ صِیَامًا لِّیَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ وَمَنْ عَادَ فَیَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَقْتُلُواகொல்லாதீர்கள்الصَّيْدَவேட்டையைوَاَنْـتُمْநீங்கள்حُرُمٌ‌ ؕஇஹ்ராமுடையவர்கள்وَمَنْஎவர்قَتَلَهٗகொன்றார்/அதைمِنْكُمْஉங்களில்مُّتَعَمِّدًاவேண்டுமென்றே (நாடியவராக)فَجَزَآءٌதண்டனைمِّثْلُஒப்பானதுمَاஎதுقَتَلَகொன்றார்مِنَஇருந்துالنَّعَمِகால்நடைகள்يَحْكُمُதீர்ப்பளிப்பர்بِهٖஅதற்குذَوَا عَدْلٍநேர்மையான இருவர்مِّنْكُمْஉங்களில்هَدْيًاۢபலியாகبٰلِغَஅடையக் கூடியதுالْـكَعْبَةِகஅபாاَوْஅல்லதுكَفَّارَةٌபரிகாரம்طَعَامُஉணவளிப்பதுمَسٰكِيْنَஏழைகள்اَوْஅல்லதுعَدْلُசமமானதுذٰ لِكَஅதுصِيَامًاநோன்பால்لِّيَذُوْقَஅவன் அனுபவிப்பதற்காகوَبَالَகெட்ட முடிவைاَمْرِهٖ‌ ؕசெயல் / தனதுعَفَاமன்னித்தான்اللّٰهُஅல்லாஹ்عَمَّا سَلَفَ‌ ؕமுன் நடந்தவற்றைوَمَنْஎவன்عَادَமீண்டான்فَيَنْتَقِمُதண்டிப்பான்اللّٰهُஅல்லாஹ்مِنْهُ‌ ؕஅவனைوَاللّٰهُஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்ذُو انْتِقَامٍ‏தண்டிப்பவன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தக்துலுஸ் ஸய்த வ அன்தும் ஹுரும்; வ மன் கதலஹூ மின்கும் முத்'அம் மிதன் FபஜZஜா'உம் மித்லு மா கதல மினன்ன'அமி யஹ்குமு Bபிஹீ தவா 'அத்லிம் மின்கும் ஹத்யம் Bபாலிகல் கஃBபதி அவ் கFப்Fபாரதுன் த'ஆமு மஸாகீன அவ் 'அத்லு தாலிக ஸியாமல் லியதூக வBபால அம்ரிஹ்; 'அFபல் லாஹு 'அம்மா ஸலFப்; வ மன் 'ஆத Fபயன்த கிமுல் லாஹு மின்ஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் துன்திகாம்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் வேட்டையாடி மிருகங்களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவரேனும், அதை வேண்டுமென்ன்ற கொன்றுவிட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் அதற்குச் சமமானதை (பரிகாரமாக) ஈடு கொடுக்க வேண்டும். உங்களில் நேர்மையான இருவர் நீங்கள் (ஈடாகக்) கொடுக்கும் பொருள் அதற்குச் சமமெனத் தீர்ப்பளிக்க வேண்டும். இதைக் காணிக்கையாக கஅபாவுக்கு அனுப்பிவிட வேண்டும். அல்லது (அதன் மதிப்புக்கு) ஏழைகளுக்கு உணவு அளிப்பது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். (பரிகாரமளிக்கப் பொருள் இல்லாதவன்) தான் செய்த குற்றத்தின் பலனை அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும். (இதற்கு) முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவரேனும் (இத்தகைய குற்றம் செய்ய) மீண்டும் திரும்பி விட்டால் அல்லாஹ் அவனை தண்டிப்பான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (குற்றவாளிகளை) தண்டிப்பவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! மேலும், உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி)ப் பிராணியைக் கொன்றுவிட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியைக் கால்நடைகளிலிருந்து பலி கொடுக்க வேண்டும். உங்களில் இரு நீதியாளர்கள் அதனைத் தீர்மானிக்க வேண்டும். அந்தப் பலிப் பிராணி கஅபாவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அல்லது (அச்செயலுக்கு) குற்றப்பரிகாரமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமாக அவர் நோன்பு நோற்க வேண்டும். தான் செய்த தீய செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவே (இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது). முன்பு செய்தவற்றையெல்லாம் அல்லாஹ் மன்னித்து விட்டான். எனவே யாரேனும் மீண்டும் அச்செயலைப் புரிந்தால், அல்லாஹ் அவரைப் பழிவாங்குவான். மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிவாங்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; மேலும், உங்களில் எவரேனும், வேண்டுமென்றே அதனைக் கொன்றுவிட்டால், (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) பிராணிகளிலிருந்து அவர் கொன்றுவிட்டதற்குச் சமமானது (அதற்கு) தண்டனையாகும்; உங்களில் நீதியுடைய இருவர் அதற்குத் தீர்ப்பளி(க்கும் பொருளை நீங்கள் ஈடாகக் கொடு)க்க வேண்டும், (அது) ‘கஅபா’வை அடையவேண்டிய குர்பானியாகும்; அல்லது (அதன் கிரயத்தில்,) ஏழைகளுக்கு ஆகாரமளிப்பது அதற்கு பரிகாரமாகும், அல்லது தான் செய்த காரியத்தின் தண்டனையை அவன் அனுபவிப்பதற்காக (எண்ணிக்கையில்) அதற்குச் சமமான நோன்புகள் நோற்க வேண்டும், முன் நடந்தவைகளை அல்லாஹ் மன்னித்து விட்டான், (இத்தகைய குற்றம் செய்ய) எவரும் (பின்னும்) மீண்டால் அப்போது, அல்லாஹ் அவரை தண்டனை செய்வான்; இன்னும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன், தண்டித்தலையுடையவன்.
Saheeh International
O you who have believed, do not kill game while you are in the state of ihram. And whoever of you kills it intentionally - the penalty is an equivalent from sacrificial animals to what he killed, as judged by two just men among you as an offering [to Allah] delivered to the Kaʿbah, or an expiation: the feeding of needy people or the equivalent of that in fasting, that he may taste the consequence of his matter [i.e., deed]. Allah has pardoned what is past; but whoever returns [to violation], then Allah will take retribution from him. And Allah is Exalted in Might and Owner of Retribution.
اُحِلَّ لَكُمْ صَیْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّكُمْ وَلِلسَّیَّارَةِ ۚ وَحُرِّمَ عَلَیْكُمْ صَیْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
اُحِلَّஅனுமதிக்கப்பட்டுள்ளதுلَـكُمْஉங்களுக்குصَيْدُவேட்டையாடுவதுالْبَحْرِகடலில்وَطَعَامُهٗஇன்னும் அதை புசிப்பதுمَتَاعًاபயனளிப்பதற்காகلَّـكُمْஉங்களுக்குوَلِلسَّيَّارَةِ‌ ۚஇன்னும் பயணிகளுக்குوَحُرِّمَவிலக்கப்பட்டுள்ளதுعَلَيْكُمْஉங்களுக்குصَيْدُவேட்டையாடுவதுالْبَـرِّதரையில்مَا دُمْتُمْஇருக்கும்போதெல்லாம்حُرُمًا‌ ؕஇஹ்ராமுடைய வர்களாகوَاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைالَّذِىْۤஎவன்اِلَيْهِஅவன் பக்கம்تُحْشَرُوْنَ‏நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
உஹில்ல லகும் ஸய்துல் Bபஹ்ரி வ த'ஆமுஹூ மதா'அல் லகும் வ லிஸ்ஸய்யாரதி வ ஹுர்ரிம 'அலய்கும் ஸய்துல் Bபர்ரி மா தும்தும் ஹுருமா; வத்தகுல் லாஹல் லதீ இலய்ஹி துஹ்ஷரூன்
முஹம்மது ஜான்
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நீரில் வேட்டையாடுவதும், அதை இன்பமாக புசிப்பதும் (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும் (மற்ற) பிரயாணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் வரை (நீர் நிலையில்லாமல்) தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நட(ந்து கொள்ளு)ங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
IFT
(இஹ்ராமுடைய நிலையில்) நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கும் பயணக்கூட்டத்தாருக்கும் பயன் தருவதற்காக கடல் வேட்டையும் அதனை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆயினும், நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் வரை தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது. யார் முன்னிலையில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றீர்களோ அந்த இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில்) உங்களுக்கும் (இதரப்) பிரயாணிகளுக்கும் பயன் பெறுவதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளது, இன்னும், நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் இருக்கும் போதெல்லாம் கரையில் வேட்டையாடுவது, உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது, இன்னும், எவனின்பால் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்களோ அத்தகைய அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
Saheeh International
Lawful to you is game from the sea and its food as provision for you and the travelers, but forbidden to you is game from the land as long as you are in the state of ihram. And fear Allah to whom you will be gathered.
جَعَلَ اللّٰهُ الْكَعْبَةَ الْبَیْتَ الْحَرَامَ قِیٰمًا لِّلنَّاسِ وَالشَّهْرَ الْحَرَامَ وَالْهَدْیَ وَالْقَلَآىِٕدَ ؕ ذٰلِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
جَعَلَஆக்கினான்اللّٰهُஅல்லாஹ்الْـكَعْبَةَகஅபாவைالْبَيْتَவீடுالْحَـرَامَபுனிதமானதுقِيٰمًاஅபயமளிக்கக்கூடியது,لِّـلنَّاسِமக்களுக்குوَالشَّهْرَஇன்னும் மாதத்தைالْحَـرَامَபுனிதமானதுوَالْهَدْىَஇன்னும் பலியைوَالْقَلَاۤٮِٕدَ‌ ؕஇன்னும் மாலைகளைذٰ لِكَஅதுلِتَعْلَمُوْۤاநீங்கள் அறிந்து கொள்வதற்காகاَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَعْلَمُஅறிகிறான்مَا فِى السَّمٰوٰتِஎவை/வானங்களில்وَمَاஇன்னும் எதுفِى الْاَرْضِபூமியில்وَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
ஜ'அலல் லாஹுல் கஃBபதல் Bபய்தல் ஹராம கியாமல் லின்னாஸி வஷ் ஷஹ்ரல் ஹராம வல்ஹத்ய வல்கலா'இத்; தாலிக லிதஃலமூ அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி வ அன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
முஹம்மது ஜான்
அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமாக்கியிருக்கிறான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும், (குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட கால்நடைகளையும் (பாதுகாப்பு பெற்றவையாக ஆக்கியிருக்கிறான்). வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிபவன் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்).
IFT
அல்லாஹ், கண்ணியமிக்க ஆலயமாகிய கஅபாவை மக்களுக்கு (அவர்களின் கூட்டு வாழ்க்கைக்கான) கேந்திரமாய் அமைத்தான். மேலும், சங்கைக்குரிய மாதத்தையும், பலி பிராணிகளையும் (அவற்றின் கழுத்தில் இடப்பட்ட) அடையாள மாலைகளையும் இதற்குத் துணை புரியக் கூடியனவாய் ஆக்கினான். எதற்கு எனில் நீங்கள் இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக! வானங்களில் உள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் அல்லாஹ் திண்ணமாக நன்கு அறிகின்றான்; மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு (இம்மை, மறுமையின்) ஜீவிய ஆதாரமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், (அவ்வாறே) சிறப்புற்ற மாதங்களையும் (ஹஜ்ஜில் அறுக்கப்படும்) அறுப்புப் பிராணிகளையும் (அறுத்துப்பலியிடுவதற்காக) அடையாளம் காட்டப்பட்ட கால்நடைகளையும், (அபயம் பெற்றவையாக ஆக்கியிருக்கின்றான்.) அ(வ்வாறு செய்த)து வானங்களிலுள்ளவற்றை மற்றும் பூமியிலுள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான் என்பதையும் நீங்கள் அறிவதற்காகவேதான், இன்னும் நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன்.
Saheeh International
Allah has made the Kaʿbah, the Sacred House, standing for the people and [has sanctified] the sacred months and the sacrificial animals and the garlands [by which they are identified]. That is so you may know that Allah knows what is in the heavens and what is in the earth and that Allah is Knowing of all things.
اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ؕ
اِعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِதண்டனைوَاَنَّ اللّٰهَஇன்னும் நிச்சயமாக அல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ ؕ‏பெரும் கருணையாளன்
இஃலமூ அன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBபி வ அன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
முஹம்மது ஜான்
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்,
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்; (அத்துடன்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்து பெரும் கருணை காட்டுபவன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
IFT
இன்னும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் தண்டனையளிப்பதில் கடுமையானவன்; மேலும், அல்லாஹ் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாகவும் மாபெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன், இன்னும் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக்கிருபையுடையவன், என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
Saheeh International
Know that Allah is severe in penalty and that Allah is Forgiving and Merciful.
مَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟
مَاகடமை இல்லைعَلَىமீதுالرَّسُوْلِதூதர்اِلَّاதவிரالْبَلٰغُ‌ ؕஎடுத்துரைப்பதுوَاللّٰهُஅல்லாஹ்يَعْلَمُநன்கறிவான்مَاஎதைتُبْدُوْنَவெளிப்படுத்துகிறீர்கள்وَمَاஇன்னும் எதைتَكْتُمُوْنَ‏மறைக்கிறீர்கள்
மா 'அலர் ரஸூலி இல்லல் Bபலாக்; வல்லாஹு யஃலமு மா துBப்தூன வமா தக்துமூன்
முஹம்மது ஜான்
(இறைவன் கட்டளைகளை) எடுத்துக் கூறுவதே அன்றி இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
நம் தூதருடைய கடமை (நம்) தூதை எடுத்துரைப்பதே தவிர (அவ்வாறே நடக்கும்படி உங்களை நிர்ப்பந்திப்பது) அல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
IFT
தூதுச் செய்தியை எடுத்துரைப்பதே தூதரின் பொறுப்பாகும்; நீங்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும், மூடி மறைக்கின்றவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம் தூதை) எத்திவைப்பதைத் தவிர இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை, இன்னும் நீஙகள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் அல்லாஹ் அறிவான்.
Saheeh International
Not upon the Messenger is [responsibility] except [for] notification. And Allah knows whatever you reveal and whatever you conceal.
قُلْ لَّا یَسْتَوِی الْخَبِیْثُ وَالطَّیِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِیْثِ ۚ فَاتَّقُوا اللّٰهَ یٰۤاُولِی الْاَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠
قُلْகூறுவீராகلَّا يَسْتَوِىசமமாகாதுالْخَبِيْثُதீயதுوَالطَّيِّبُஇன்னும் நல்லதுوَلَوْ اَعْجَبَكَஉம்மை ஆச்சரியப்படுத்தினாலும்كَثْرَةُஅதிகமாக இருப்பதுالْخَبِيْثِ‌ ۚ فَاتَّقُواதீயது/ஆகவேஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைيٰۤاُولِى الْاَ لْبَابِஅறிவாளிகளேلَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
குல் லா யஸ்தவில் கBபீது வத்தய்யிBபு வ லவ் அஃஜBபக கத்ரதுல் கBபீத்; Fபத்தகுல் லாஹ யா உலில் அல்BபாBபி ல'அல்லகும் துFப்லிஹூன்
முஹம்மது ஜான்
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “தீயதும், நல்லதும் சமமாகாது; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நீர் அவர்களை நோக்கி ‘‘எங்கும்) தீயவை அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்திய போதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்'' என்று கூறுவீராக.
IFT
(நபியே!) நீர் அவர்களிடம் கூறிவிடும்: “தூய்மையானவையும், தூய்மையற்றவையும் ஒரு போதும் சமமாகமாட்டா. தூய்மையில்லாதவை பெருகிக்கிடப்பது உம்மை வியப்பில் ஆழ்த்தினாலும் சரியே! எனவே அறிவுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டு விலகியே வாழுங்கள்; நீங்கள் வெற்றி பெறக்கூடும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கெட்டது அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “கெட்டதும், நல்லதும் சமமாகாது” என (நபியே!) நீர் கூறுவீராக! ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகி)க் கொள்ளுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
Saheeh International
Say, "Not equal are the evil and the good, although the abundance of evil might impress you." So fear Allah, O you of understanding, that you may be successful.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَسْـَٔلُوْا عَنْ اَشْیَآءَ اِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ ۚ وَاِنْ تَسْـَٔلُوْا عَنْهَا حِیْنَ یُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَكُمْ ؕ عَفَا اللّٰهُ عَنْهَا ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَسْـٴَــلُوْاகேள்வி கேட்காதீர்கள்عَنْ اَشْيَآءَபல விஷயங்கள் பற்றிاِنْ تُبْدَ لَـكُمْஅவை வெளியாக்கப்பட்டால்/உங்களுக்குتَسُؤْكُمْ‌ۚவருத்தமளிக்கும்/உங்களுக்குوَاِنْ تَسْـٴَــلُوْاநீங்கள் கேள்வி கேட்டால்عَنْهَاஅவற்றைப் பற்றிحِيْநேரத்தில்يُنَزَّلُஇறக்கப்படும்الْقُرْاٰنُகுர்ஆன்تُبْدَ لَـكُمْ ؕவெளியாக்கப்படும்/உங்களுக்குعَفَاமன்னித்தான்اللّٰهُ عَنْهَا‌ ؕஅல்லாஹ்/அவற்றைوَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்حَلِيْمٌபெரும் சகிப்பாளன்
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தஸ்'அலூ 'அன் அஷ்யா'அ இன் துBப்த லகும் தஸு'கும் வ இன் தஸ்'அலூ 'அன்ஹா ஹீன யுனZஜ்Zஜலுல் குர்'ஆனு துBப்த லகும்; 'அFபல்லாஹு 'அன்ஹா; வல்லாஹு கFபூருன் ஹலீம்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும்; மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான்; அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! (நபியிடம் அவசியமின்றி) ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். (பல விஷயங்கள்) உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும். அதிலும் இந்தக் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில், அத்தகைய விஷயங்களைப் பற்றி நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டு (கடமையாகி)விடும். (அதனால் நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விடலாம். எனினும், இதுசமயம்) அதைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், அதிகம் சகித்துக்கொள்பவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்கள் உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி நீங்கள் வினவாதீர்கள். ஆயினும் குர்ஆன் இறக்கியருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டு விடும். நீங்கள் (இதுவரை) கேட்டவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! (நபியிடம்) பல விஷயங்களைப் பற்றிக் கேட்காதீர்கள், (அவைகள்) உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால், (அவை) உங்களுக்கு வருத்தம் தரக்கூடும் மேலும், இந்தக் குர் ஆன் இறக்கப்படுகின்ற சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்கு தெளிவாக்கப்பட்டுவிடும், (வீணாகக் கேட்டுக்கொண்டிருந்த) அதனைப் பற்றி அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான், மேலும், அல்லாஹ்வோ மிக்க மன்னிக்கிறவன், மிகுந்த சகிப்புத்தன்மையுடையவன்.
Saheeh International
O you who have believed, do not ask about things which, if they are shown to you, will distress you. But if you ask about them while the Qur’an is being revealed, they will be shown to you. Allah has pardoned it [i.e., that which is past]; and Allah is Forgiving and Forbearing.
قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِیْنَ ۟
قَدْதிட்டமாகسَاَ لَهَاகேட்டார்(கள்) / அவற்றைப் பற்றிقَوْمٌசில மக்கள்مِّنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்புثُمَّபிறகுاَصْبَحُوْاமாறிவிட்டனர்بِهَاஅவற்றைكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களாக
கத் ஸ அலஹா கவ்மும் மின் கBப்லிகும் தும்ம அஸ்Bபஹூ Bபிஹா காFபிரீன்
முஹம்மது ஜான்
உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறிவிட்டார்கள்.
IFT
உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு கூட்டத்தார் இத்தகைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பிறகு அவற்றின் காரணமாகவே அவர்கள் நிராகரிப்பில் ஆழ்ந்து விட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு கூட்டத்தார் அவற்றை (அவர்களுடைய நபியிடம் இவ்வாறே) திட்டமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர், (அவை பற்றி அவர்களுக்கு தெளிவு செய்யப்பட்ட) பின்னர், அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டனர்.
Saheeh International
A people asked such [questions] before you; then they became thereby disbelievers.
مَا جَعَلَ اللّٰهُ مِنْ بَحِیْرَةٍ وَّلَا سَآىِٕبَةٍ وَّلَا وَصِیْلَةٍ وَّلَا حَامٍ ۙ وَّلٰكِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ وَاَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟
مَا جَعَلَஏற்படுத்தவில்லைاللّٰهُஅல்லாஹ்مِنْۢஎதையும்بَحِيْرَةٍபஹீராوَّلَا سَآٮِٕبَةٍஸாயிபாوَّلَا وَصِيْلَةٍவஸீலாوَّلَا حَامٍ‌ ۙஹறாம்وَّلٰـكِنَّஎனினும்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்يَفْتَرُوْنَகற்பனை செய்கின்றனர்عَلَى اللّٰهِஅல்லாஹ் மீதுالْـكَذِبَ‌ ؕபொய்யைوَاَكْثَرُهُمْஅவர்களில் அதிகமானவர்கள்لَا يَعْقِلُوْنَ‏புரிய மாட்டார்கள்
மா ஜ'அலல் லாஹு மிம் Bபஹீரதி(ன்)வ் வலா ஸா'இBபதி(ன்)வ் வலா வஸீலதி(ன்)வ் வலா ஹாமி(ன்)வ் வ லாகின்னல் லதீன கFபரூ யFப்தரூன 'அலல்லாஹில் கதிBப்; வ அக்தருஹும் லா யஃகிலூன்
முஹம்மது ஜான்
பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுயேச்சையாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்) ஹாமி (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுயேச்சையாகத் திரியும்படி விடப்பபடும் ஆண் ஒட்டகம்) என்பவை (போன்ற சடங்குகளை) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை - ஆனால் காஃபிர்கள்தாம் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர் மேலும் அவர்களில் பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத் தியவையல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவை அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர்.
IFT
‘பஹீரா’, ஸாயிபா, வஸீலா, ஹாம்,* என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆயினும் நிராகரிப்போர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். மேலும், அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பஹீரா (காது கிழிக்கபபட்ட பெண் ஒட்டகம்) ஸாயிபா (சுதந்திரமாக மேயவிடப்படும் பெண் ஒட்டகம்) வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதால் விக்ரகங்களுக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆடுகள்), ஹாம் (வேலைக்கு பயன்படுத்தப்படாது வீணடிக்கப்பட்ட ஆண் ஒட்டகம் முதலிய) இவைகளெல்லாம், அல்லாஹ் ஏற்படுத்தியவைகளல்ல, எனினும், நிராகரிப்போர் தாம் (இவைகள் அல்லாஹ் ஏற்படுத்தியவைகளென) அல்லாஹ்வின் மீது, பொய்யைக் கற்பனை செய்(து கூறு)கின்றனர், மேலும், அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
Saheeh International
Allah has not appointed [such innovations as] bahīrah or sa’ibah or waṣīlah or ham. But those who disbelieve invent falsehood about Allah, and most of them do not reason.
وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْلَمُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களுக்குتَعَالَوْاவாருங்கள்اِلٰىபக்கம்مَاۤஎதுاَنْزَلَஇறக்கினான்اللّٰهُஅல்லாஹ்وَاِلَىஇன்னும் பக்கம்الرَّسُوْلِதூதர்قَالُوْاகூறினர்حَسْبُنَاஎங்களுக்குப் போதும்مَاஎதுوَجَدْنَاகண்டோம்عَلَيْهِஅதன் மீதுاٰبَآءَنَا‌ ؕஎங்கள் மூதாதைகளைاَوَلَوْ كَانَஇருந்தாலுமா?اٰبَآؤُமூதாதைகள்هُمْஅவர்களுடையلَا يَعْلَمُوْنَஅறியமாட்டார்கள்شَيْــٴًـــاஎதையும்وَّلَا يَهْتَدُوْنَ‏இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
வ இதா கீல லஹும் த'ஆலவ் இலா மா அன்Zஜலல்லாஹு வ இலர் ரஸூலி காலூ ஹஸ்Bபுனா மா வஜத்னா 'அலய்ஹி ஆBபா'அனா; அவ லவ் கான ஆBபா'உஹும் லா யஃலமூன ஷய்'அ(ன்)வ் வலா யஹ்ததூன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)
அப்துல் ஹமீது பாகவி
“அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகள் எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்கு போதும்'' எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறிந்து கொள்ளாமலும், நேரான வழியில் இல்லாமலும் இருந்தாலுமா (அவர்கள் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றுவார்கள்)!
IFT
“மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த சட்டத்தின் பக்கமும், இறைத்தூதரின் பக்கமும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படுமாயின் “எங்கள் மூதாதையர் எவ்வழியில் வாழக்கண்டோமோ அவ்வழியே எங்களுக்குப் போதுமானது” என்று பதில் கூறுகிறார்கள். இவர்களின் மூதாதையர் எதையும் புரியாதவர்களாகவும், நேர்வழியைக் குறித்து எதையும் அறியாதவர்களாகவும் இருந்தாலுமா அவர்களை இவர்கள் பின்பற்றிச் செல்வார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தின்பாலும் (அவனுடைய) இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், எங்களுடைய மூதாதையர்களை எதன் மீதிருக்க நாங்கள் கண்டோமோ அதுவே (நாங்கள் பின்பற்ற) எங்களுக்குப் போதும்” எனக் கூறுகின்றனர், அவர்களுடைய மூதாதையர்கள் யாதொன்றையும் அறியாதவர்களாவும், நேரான வழியில் இல்லாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்கள் தங்கள் மூதாதையர்களைப் பின்பற்றுவார்கள்?,)
Saheeh International
And when it is said to them, "Come to what Allah has revealed and to the Messenger," they say, "Sufficient for us is that upon which we found our fathers." Even though their fathers knew nothing, nor were they guided?
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا عَلَیْكُمْ اَنْفُسَكُمْ ۚ لَا یَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَیْتُمْ ؕ اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِیْعًا فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேعَلَيْكُمْகாத்துக்கொள்ளுங்கள்اَنْفُسَكُمْ‌ۚஉங்களைلَاமாட்டார்يَضُرُّكُمْஉங்களுக்கு தீங்கிழைக்கمَّنْஎவர்ضَلَّவழிகெட்டார்اِذَا اهْتَدَيْتُمْ‌ ؕநீங்கள் நேர்வழி சென்றால்اِلَىபக்கம்اللّٰهِஅல்லாஹ்مَرْجِعُكُمْஉங்கள் மீளுமிடம்جَمِيْعًاஅனைவரும்فَيُـنَـبِّـئُكُمْஆகவே அறிவிப்பான்/உங்களுக்குبِمَاஎதைكُنْتُمْஇருந்தீர்கள்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனூ 'அலய்கும் அன்Fபுஸகும் லா யளுர்ருகும் மன் ளல்ல இதஹ் ததய்தும்; இலல் லாஹி மர்ஜி'உகும் ஜமீ'அன் FபயுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது. நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படுங்கள்! நீங்கள் நேர்வழியில் இருந்தால் மற்றவர்களின் வழிகேடு உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்திடாது. அல்லாஹ்விடமே நீங்கள் அனைவரும் திரும்பிச் செல்லவேண்டியுள்ளது. பின்னர் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவித்து விடுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறியவர் உங்களுக்கு எவ்வித தீங்கும் செய்ய மாட்டார், அல்லாஹ்வின் பக்கமே உங்கள் யாவரின் மீட்சி இருக்கிறது, நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவித்துவிடுவான்.
Saheeh International
O you who have believed, upon you is [responsibility for] yourselves. Those who have gone astray will not harm you when you have been guided. To Allah is your return all together; then He will inform you of what you used to do.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَیْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِیْنَ الْوَصِیَّةِ اثْنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرٰنِ مِنْ غَیْرِكُمْ اِنْ اَنْتُمْ ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِیْبَةُ الْمَوْتِ ؕ تَحْبِسُوْنَهُمَا مِنْ بَعْدِ الصَّلٰوةِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِیْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ۙ وَلَا نَكْتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِیْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேشَهَادَةُசாட்சியாக இருக்க வேண்டும்بَيْنِكُمْஉங்கள் மத்தியில்اِذَا حَضَرَசமீபித்தால்اَحَدَكُمُஉங்களில் ஒருவருக்குالْمَوْتُமரணம்حِيْنَநேரத்தில்الْوَصِيَّةِமரண சாஸனம்اثْـنٰنِஇருவர்ذَوَا عَدْلٍநீதமான இருவர்مِّنْكُمْஉங்களில்اَوْஅல்லதுاٰخَرَانِவேறிருவர்مِنْசேர்ந்தغَيْـرِكُمْநீங்கள் அல்லாதاِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْநீங்கள் பயணித்தால்فِى الْاَرْضِபூமியில்فَاَصَابَتْكُمْஅடைந்தால்/உங்களைمُّصِيْبَةُசோதனைالْمَوْتِ‌ ؕமரணம்تَحْبِسُوْنَهُمَاதடுத்து வையுங்கள்/அவ்விருவரைمِنْۢ بَعْدِபின்னர்الصَّلٰوةِதொழுகைفَيُقْسِمٰنِஅவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுاِنِ ارْتَبْتُمْநீங்கள் சந்தேகித்தால்لَا نَشْتَرِىْவாங்கமாட்டோம்بِهٖஅதற்குப் பகரமாகثَمَنًاஓர் ஆதாயத்தைوَّلَوْ كَانَஅவர் இருந்தாலும்ذَا قُرْبٰى‌ ۙஉறவினராகوَلَا نَـكْتُمُஇன்னும் மறைக்க மாட்டோம்شَهَادَةَ ۙசாட்சி கூறியதில்اللّٰهِஅல்லாஹ்விற்காகاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِذًاஅப்போதுلَّمِنَ الْاٰثِمِيْنَ‏பாவிகளில்
யா அய்யுஹல் லதீன ஆமனூ ஷஹாதது Bபய்னிகும் இதா ஹளர அஹதகுமுல் மவ்து ஹீனல் வஸிய்யதித் னானி தவா 'அத்லிம் மின்கும் அவ் ஆகரானி மின் கய்ரிகும் இன் அன்தும் ளரBப்தும் Fபில் அர்ளி Fப அஸாBபத்கும் முஸீBபதுல் மவ்த்; தஹ்Bபி ஸூனஹுமா மிம் Bபஃதிஸ் ஸலாதி Fப யுக்ஸிமானி Bபில்லாஹி இனிர்தBப்தும் லா னஷ்தரீ Bபிஹீ தமன(ன்)வ் வ லவ் கான தா குர்Bபா வலா னக்துமு ஷஹாததல் லாஹி இன்னா இதல் லமினல் ஆதிமீன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் “நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்“ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து (அவர் மரண சாசனம் கூற விரும்பினால்) அவர் மரண சாசனம் (வஸீயத்) கூறும் சமயத்தில் உங்களில் நம்பிக்கைக்குரிய (நேர்மையான) இருவர் சாட்சியாக இருக்கவேண்டும். அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்துகொண்டு இருக்கும்பொழுது மரணம் சமீபித்தால் (அது சமயம் சாசனத்தின் சாட்சிக்காக முஸ்லிம்களாகிய இருவர் கிடைக்காவிடில்) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கவும். (இந்தச் சாட்சிகள் கூறும் விஷயத்தில்) உங்களுக்குச் சந்தேகமேற்பட்டால் அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப்பின் தடுத்து வைத்துக்கொள்ளவும். அவ்விருவரும் ‘‘நாங்கள் கூறிய (சாட்சியத்)தைக் கொண்டு ஒரு பொருளையும் அதற்காக நாங்கள் அடையவிரும்பவில்லை. அவர்கள் எங்கள் உறவினர்களாக இருந்தபோதிலும் நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்கவே இல்லை. அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் எவருக்கேனும் மரண வேளை நெருங்கி விட்டால், அவர் வஸிய்யத் மரண சாசனம் தரும் நேரத்தில் அதைப் பற்றிச் சாட்சியம் அளிப்பதற்கான விதிமுறை இதுவே; உங்களிடையே நீதமுள்ள இருவர் சாட்சிகளாக்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது மரண வேதனை உங்களுக்கு வந்துவிட்டால் உங்களைத் தவிர வேறு இருவரைச் சாட்சிகளாய் ஆக்கிக்கொள்ள வேண்டும். அவர்களைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொள்வீர்களாயின் தொழுகைக்குப் பிறகு (பள்ளியில்) அவர்களை நீங்கள் தடுத்து வையுங்கள்! அவ்விருவரும் இறைவன் மீது ஆணையிட்டு (இவ்வாறு) கூறவேண்டும்: “நாங்கள் சொந்த லாபத்திற்காக சாட்சியத்தை விற்கமாட்டோம். மேலும், யாருக்காக சாட்சி சொல்கிறோமோ அவர் எங்கள் உறவினராக இருந்தாலும் சரியே! (அதற்காக அவருக்கு எந்தச் சலுகையும் காட்ட மாட்டோம்.) மேலும், அல்லாஹ்வுக்காக கூறும் சாட்சியத்தில் நாங்கள் எதையுமே மறைக்க மாட்டோம். அவ்வாறு செய்வோமாயின் திண்ணமாக நாங்கள் பாவிகளாகி விடுவோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் (சம்பவிக்க) (அதன் அடையாளங்கள் காணப்பட்டு) ஆஜராகிவிட்டால் அவர் (மரண) சாசனம் செய்யும் சமயத்தில் உங்களுக்கிடையில் சாட்சி உங்களின் சுற்றத்தாரிலிருந்து நீதியுடைய இருவர் இருத்தல் வேண்டும், அல்லது நீங்கள் பூமியில் பிரயாணம் செய்து அப்பொழுது மரணத்துன்பம் உங்களைப்பீடித்துவிட்டால், உங்களையல்லாத வேறு இருவர் சாட்சிகளாக இருத்தல் வேண்டும், (அந்த சாட்சிகளைப்பற்றி வாரிசுதாரர்களாகிய) நீங்கள் சந்தேகப்பட்டால் தொழுகைக்குப்பின் அவ்விருவரையும் நீங்கள் தடுத்து வைப்பீர்கள், அப்போது, அவ்விருவரும் அல்லாஹ்வைக் கொண்டு அதனை (நீதியாக சாட்சி கூறுவதன்மூலம் எங்களுக்கு அல்லாஹ்விடம் கிடைக்க இருக்கும் பாக்கியத்தை பொய்சாட்சி கூறுவதைக் கொண்டு இவ்வுலகில் எங்களுக்குக் கிடைக்கும்) சொற்ப கிரயத்திற்கு விற்று விடமாட்டோம், (எவருக்கு சாட்சியம் கூறுகிறோமோ) அவர் சுற்றத்தாராக இருந்தாலும் சரியே, இன்னும், அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவுமாட்டோம், (அவ்வாறு மறைத்தால்) நிச்சயமாக நாங்கள் அப்பொழுது குற்றவாளிகளில் ஆகிவிடுவோம் என்று (கூறி அவ்விருவரும்) அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வர்.
Saheeh International
O you who have believed, testimony [should be taken] among you when death approaches one of you at the time of bequest - [that of] two just men from among you or two others from outside if you are traveling through the land and the disaster of death should strike you. Detain them after the prayer and let them both swear by Allah if you doubt [their testimony, saying], "We will not exchange it [i.e., our oath] for a price [i.e., worldly gain], even if he should be a near relative, and we will not withhold the testimony of [i.e., ordained by] Allah. Indeed, we would then be of the sinful."
فَاِنْ عُثِرَ عَلٰۤی اَنَّهُمَا اسْتَحَقَّاۤ اِثْمًا فَاٰخَرٰنِ یَقُوْمٰنِ مَقَامَهُمَا مِنَ الَّذِیْنَ اسْتَحَقَّ عَلَیْهِمُ الْاَوْلَیٰنِ فَیُقْسِمٰنِ بِاللّٰهِ لَشَهَادَتُنَاۤ اَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَمَا اعْتَدَیْنَاۤ ۖؗ اِنَّاۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟
فَاِنْ عُثِرَகண்டுபிடிக்கப்பட்டால்عَلٰٓىமீதுاَنَّهُمَاநிச்சயமாக அவ்விருவரும்اسْتَحَقَّاۤஉரியவர்களாகி விட்டனர்اِثْمًاபாவத்திற்குفَاٰخَرٰنِவேறு இருவர்يَقُوْمٰنِநிற்பார்கள்مَقَامَهُمَاஅவ்விருவருடைய இடத்தில்مِنَஇருந்துالَّذِيْنَஎவர்கள்اسْتَحَقَّஉரிமை ஏற்பட்டதுعَلَيْهِمُஅவர்களுக்குالْاَوْلَيٰنِநெருங்கிய இரு வாரிசுகள்فَيُقْسِمٰنِஅவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَشَهَادَتُنَاۤநிச்சயமாக எங்கள்சாட்சியம்اَحَقُّமிக உண்மையானதுمِنْ شَهَادَتِهِمَاஅவ்விருவரின் சாட்சியத்தைவிடوَ مَا اعْتَدَيْنَاۤ‌ ۖ நாங்கள்வரம்புமீறவில்லைاِنَّاۤ‌நிச்சயமாக நாங்கள்اِذًاஅப்போதுلَّمِنَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களில்தான்
Fப இன் 'உதிர 'அலா அன்னஹுமஸ் தஹக்கா இத்மன் Fப ஆகரானி யகூமானி மகாமஹுமா மினல் லதீனஸ் தஹக்க 'அலய்ஹிமுல் அவ்லயானி Fப யுக்ஸிமானி Bபில்லாஹி லஷஹாததுனா அஹக்கு மின் ஷஹாததிஹிமா வ ம'ததய்னா இன்னா இதல் லமினள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவ்விருவரும் பாவத்திற்குரியவர்களாகி விட்டார்கள் என்று கண்டு கொள்ளப்பட்டால், அப்போது உடைமை கிடைக்க வேண்டும் எனக் கோருவோருக்கு நெருங்கிய உறவினர் இருவர் (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று: “அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்பு மீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக் காரர்களாகி விடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூற வேண்டும்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியதிலும்) அவர்கள் பொய்யே கூறினார்கள் என்று நிச்சயமாக தெரியவந்தால் (இந்தப் பொய் சாட்சியத்தினால்) எவருக்கு நஷ்டமேற்பட்டதோ அவர் சார்பில் வேறு இருவர், (முன்பு சத்தியம் செய்த) அவர்களுடைய இடத்தில் நின்று, ‘‘அவர்களுடைய சாட்சியத்தை விட எங்கள் சாட்சியம்தான் உண்மையானது (என உறுதி கூறுகிறோம்), நாங்கள் தவறாக ஏதும் கூறவில்லை. அவ்வாறு கூறினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்.
IFT
ஆனால் அவ்விருவரும் (பொய் சாட்சியம் கூறி) பாவத்திற்கு ஆளாகி விட்டார்கள் என்று திண்ணமாக அறியப்பட்டால் உரிமை பாதிக்கப்பட்டவர்களிலிருந்து அதிகத் தகுதி வாய்ந்த வேறு இருவர் அவ்விருவருடைய இடத்தில் (சாட்சிகூற) நிற்க வேண்டும். மேலும், “எங்களுடைய சாட்சியம் திண்ணமாக அவ்விருவருடைய சாட்சியத்தை விட வாய்மையானது. நாங்கள் (சாட்சியங் கூறுவதில்) வரம்பு மீறவில்லை. அவ்வாறு வரம்பு மீறியிருந்தால் திண்ணமாக நாங்கள் கொடுமைக்காரர்களாகி விடுவோம்” என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூற வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவ்விருவரும், (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்து கூறியபின் சாட்சியத்தில் அல்லது சத்தியத்தில் பொய் கூறி மோசடி செய்திருப்ப(தன் மூலம்) பாவத்திற்குரியவர்களாகி விட்டார்களென்று கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், எவர்களுக்கு சாசனம் செய்யப்பட்ட பொரு)ள் மீது உரிமை இருக்கிறதோ, அத்தகையோரிலிருந்து (மரண சாசனம் செய்வித்தவர்க்கு) மிக உரியவர்களான வேறு இருவர், அவ்விருவரின் இடத்தில் நின்று கொண்டு திட்டமாக எங்களின் சாட்சியம் அவ்விருவரின் சாட்சியத்தைவிட மிக்க உண்மையானதாகும், நாங்கள் (இவ்வாறு சத்தியம் செய்வதில்) வரம்பு மீறவுமில்லை, (அவ்வாறு மீறி இருப்பின்) அப்போது நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களில் உள்ளோராகிவிடுவோம் என்று அல்லாஹ்வைக் கொண்டு அவ்விருவரும் சத்தியம் செய்வர்.
Saheeh International
But if it is found that those two were guilty of sin [i.e., perjury], let two others stand in their place [who are] foremost [in claim] from those who have a lawful right. And let them swear by Allah, "Our testimony is truer than their testimony, and we have not transgressed. Indeed, we would then be of the wrongdoers."
ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یَّاْتُوْا بِالشَّهَادَةِ عَلٰی وَجْهِهَاۤ اَوْ یَخَافُوْۤا اَنْ تُرَدَّ اَیْمَانٌ بَعْدَ اَیْمَانِهِمْ ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
ذٰ لِكَ اَدْنٰٓىஅது/மிக்கசுலபமானதுاَنْ يَّاْتُوْاஅவர்கள் வருவதற்குبِالشَّهَادَةِசாட்சியத்தைக் கொண்டுعَلٰى وَجْهِهَاۤஅதற்குரிய முறையில்اَوْஅல்லதுيَخَافُوْۤاஅவர்கள் பயப்படுவதுاَنْ تُرَدَّமறுக்கப்படும்اَيْمَانٌۢசத்தியங்கள்بَعْدَபின்னர்اَيْمَانِهِمْ‌ؕஅவர்களுடைய சத்தியங்கள்وَاتَّقُواஇன்னும் அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاسْمَعُوْا‌ ؕசெவிசாயுங்கள்وَاللّٰهُஅல்லாஹ்لَا يَهْدِىநேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَகூட்டத்தைالْفٰسِقِيْنَ‏பாவிகளான
தாலிக அத்னா அய் ய'தூ Bபிஷ்ஷஹாததி 'அலா வஜ்ஹிஹா அவ் யகாFபூ அன் துரத்த அய்மானும் Bபஃத அய்மானிஹிம்; வத்தகுல் லாஹ வஸ்ம'ஊ; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
முஹம்மது ஜான்
இ(வ்வாறு செய்வ)து அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி, கொண்டு வருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து (அவன் கட்டளைகளை) கவனமாய்க் கேளுங்கள் - ஏனென்றால் அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழியாகும், அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் இது மிக்க சுலபமான வழி. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்.
IFT
மக்கள் சரியான முறையில் சாட்சியம் அளிப்பதற்கு அல்லது (குறைந்தபட்சம்) தம் சாட்சியங்களுக்குப் பிறகு (பிறர் சாட்சியம் அளித்து) தம் சாட்சியங்கள் மறுக்கப்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சி, (உண்மையாக) சாட்சி அளிப்பதற்கு இந்த வழிமுறைதான் அதிகப் பொருத்தமானதாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழுங்கள்! அவனுக்கே செவிசாயுங்கள்! அல்லாஹ் (தனது கட்டளைக்கு) கீழ்ப்படியாதவர்களை நேர்வழிப்படுத்துவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேற்கூறப்பட்ட) அ(ம்முறையான)து சாட்சியத்தை அதன் சரியான முறைப்படி (மாற்றாது, மோசடி செய்யாது) அவர்கள் கொண்டு வருவதற்கும், அல்லது (உண்மை கூறும்) அவர்களின் சத்தியங்களுக்குப் பின் (பொய் கூறிய இவர்களின்) சத்தியங்கள் மறுக்கப் பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் மிக நெருக்கமானதாகும், மேலும், (பொய்சத்தியம் கூறும் விஷயத்தில்) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், (அவனின் கட்டளைகளுக்கு) செவியும் சாயுங்கள், இன்னும் அல்லாஹ் பாவிகளான சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
Saheeh International
That is more likely that they will give testimony according to its [true] objective, or [at least] they would fear that [other] oaths might be taken after their oaths. And fear Allah and listen [i.e., obey Him]; and Allah does not guide the defiantly disobedient people.
یَوْمَ یَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَیَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ ؕ قَالُوْا لَا عِلْمَ لَنَا ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
يَوْمَநாளில்يَجْمَعُஒன்று சேர்ப்பான்اللّٰهُஅல்லாஹ்الرُّسُلَதூதர்களைفَيَقُوْلُகூறுவான்مَاذَاۤஎன்ன?اُجِبْتُمْ‌ ؕபதில் கூறப்பட்டீர்கள்قَالُوْاகூறுவார்கள்لَا عِلْمَஅறவே ஞானமில்லைلَـنَا ؕஎங்களுக்குاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்عَلَّامُமிக மிக அறிந்தவன்الْغُيُوْبِ‏மறைவானவற்றை
யவ்ம யஜ்ம'உல் லாஹுர் ருஸுல Fப யகூலு மாதா உஜிBப்தும் காலூ லா 'இல்ம லனா இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
முஹம்மது ஜான்
(நபியே!) அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (ஒரு) நாளில் அவர்களிடம் “(நீங்கள் மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: “அதுபற்றி எங்களுக்கு எந்த அறிதலும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?'' என்று கேட்பான். அதற்கவர்கள், (‘‘நாங்கள் உயிருடன் இருந்த வரை அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான அனைத்தையும் நன்கறிந்தவன்'' என்று கூறுவார்கள்.
IFT
அல்லாஹ் எல்லா இறைத்தூதர்களையும் ஒன்று சேர்த்து, “உங்களு(டைய அழைப்பு)க்கு அளிக்கப்பட்ட மறுமொழி என்ன?” என்று கேட்கும் நாளில், “எங்களுக்கு எதுவும் தெரியாது. மறைவான உண்மைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவன் நீயே!” என்று அவர்கள் (பணிந்து) கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ் (தன்)தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில் (நீங்கள் எனது தூதை மக்களுக்கு எடுத்துரைத்த சமயத்தில்) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான், (அதற்கவர்கள் அதுபற்றி) “எங்களுக்கு எவ்வித அறிவுமில்லை, நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை நன்கறிந்தவன்” என்று கூறுவார்கள்.
Saheeh International
[Be warned of] the Day when Allah will assemble the messengers and say, "What was the response you received?" They will say, "We have no knowledge. Indeed, it is You who is Knower of the unseen" -
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ اذْكُرْ نِعْمَتِیْ عَلَیْكَ وَعَلٰی وَالِدَتِكَ ۘ اِذْ اَیَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ ۫ تُكَلِّمُ النَّاسَ فِی الْمَهْدِ وَكَهْلًا ۚ وَاِذْ عَلَّمْتُكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰىةَ وَالْاِنْجِیْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّیْنِ كَهَیْـَٔةِ الطَّیْرِ بِاِذْنِیْ فَتَنْفُخُ فِیْهَا فَتَكُوْنُ طَیْرًا بِاِذْنِیْ وَتُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِیْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰی بِاِذْنِیْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
‌اِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையاذْكُرْநினைவு கூர்வீராகنِعْمَتِىْஎன் அருளைعَلَيْكَஉம்மீதுوَعَلٰى وَالِدَتِكَ‌ ۘஇன்னும் மீது/உம் தாய்اِذْசமயம்اَيَّدْتُّكَபலப்படுத்தினேன்/உம்மைبِرُوْحِஆத்மாவைக்கொண்டுالْقُدُسِபரிசுத்தமானتُكَلِّمُபேசுவீர்النَّاسَமக்களிடம்فِىْ الْمَهْدِதொட்டிலில்وَكَهْلًاஇன்னும் வாலிபராக‌ ۚوَاِذْஇன்னும் சமயம்عَلَّمْتُكَகற்பித்தேன்/உமக்குالْـكِتٰبَஎழுதுவதைوَالْحِكْمَةَஇன்னும் ஞானத்தைوَالتَّوْرٰٮةَஇன்னும் தவ்றாத்தைوَالْاِنْجِيْلَ‌ ۚஇன்னும் இன்ஜீலைوَاِذْஇன்னும் சமயம்تَخْلُقُபடைப்பீர்مِنَஇருந்துالطِّيْنِகளிமண்كَهَيْـــٴَــةِ ‏உருவத்தைப் போல்الطَّيْرِபறவையின்بِاِذْنِىْஎன் அனுமதியினால்فَتَـنْفُخُஊதுவீர்فِيْهَاஅதில்فَتَكُوْنُஅது/ஆகிவிடும்طَيْرًۢاபறவையாகبِاِذْنِىْ‌என் அனுமதியினால்وَ تُبْرِئُஇன்னும் சுகமளிப்பீர்الْاَكْمَهَபிறவிக் குருடரைوَالْاَبْرَصَஇன்னும் வெண்குஷ்டரைبِاِذْنِىْ‌ ۚஎன் அனுமதியினால்وَاِذْஇன்னும் சமயம்تُخْرِجُவெளியாக்குவீர்الْمَوْتٰىமரணித்தவர்களைبِاِذْنِىْ ۚஎன் அனுமதியினால்وَاِذْஇன்னும் சமயம்كَفَفْتُதடுத்தேன்بَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களைعَنْكَஉம்மைவிட்டுاِذْபோதுجِئْتَهُمْவந்தீர்/அவர்களிடம்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுفَقَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்مِنْهُمْஅவர்களில்اِنْஇல்லைهٰذَاۤஇதுاِلَّاதவிரسِحْرٌசூனியம்مُّبِيْنٌ‏தெளிவானது
இத் காலல் லாஹு யா 'ஈஸBப்-ன-மர்யமத் குர் னிஃமதீ 'அலய்க வ 'அலா வாலிததிக; இத் அய்யத்துக Bபி ரூஹில் குதுஸி துகல்லிமுன் னாஸ Fபில் மஹ்தி வ கஹ்ல(ன்)வ் வ இத் 'அல்லம்துகல் கிதாBப வல் ஹிக்மத வ தவ்ராத வல் இன்ஜீல வ இத் தக்லுகு மினத் தீனி கஹய் 'அதித் தய்ரி Bபி இத்னீ Fபதன்Fபுகு Fபீஹா Fபதகூனு தய்ரம் Bபி இத்னீ வ துBப்ரி'உல் அக்மஹ வல் அBப்ரஸ Bபி இத்னீ வ இத் துக்ரிஜுல் மவ்தா Bபி இத்னீ வ இத் கFபFப்து Bபனீ இஸ்ரா'ஈல 'அன்க இத் ஜி'தஹும் Bபில் Bபய்யினாதி Fப காலல் லதீன கFபரூ மின்ஹும் இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
முஹம்மது ஜான்
அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு அல்லாஹ் (ஈஸாவை நோக்கிக்) கூறுவான்: ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உமது தாய் மீது(ம் நான் புரிந்து)ள்ள என் அருளை நினைத்துப் பார்ப்பீராக. பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு உமக்கு உதவி புரிந்து (உமது தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றி) நீர் தொட்டில் குழந்தையாக இருந்த சமயத்திலும் (உமது தீர்க்க தரிசனத்தைப் பற்றி) வாலிபத்திலும் உம்மைப் பேசச் செய்ததையும், (நினைத்துப் பார்ப்பீராக.) வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). மேலும், நீர் என் கட்டளைப்படி களிமண்ணால் பறவையின் உருவத்தைப் போல் செய்து அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் கட்டளையைக் கொண்டு பறவையாக மாறியதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உதவியினால் நீர் சுகமாக்கியதையும் (நினைத்துப் பார்ப்பீராக). நீர் என் அருளைக்கொண்டு மரணித்தவர்களை (கல்லறையிலிருந்து உயிர்கொடுத்து) புறப்படச் செய்ததையும் (நினைத்துப் பார்ப்பீராக). இஸ்ராயீலின் சந்ததிகளிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள் நிச்சயமாக இது சந்தேகமற்ற சூனியத்தைத் தவிர வேறல்ல என்று கூறிய(துடன் உமக்குத் தீங்கிழைக்க முயற்சித்த) சமயத்தில் அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மை தடுத்துக் கொண்டதையும் நினைத்துப் பார்ப்பீராக.
IFT
அல்லாஹ், இவ்வாறு கூறும் சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! நான் உமக்கும் உம்முடைய அன்னைக்கும் வழங்கியிருந்த அருட்கொடைகளை நினைவுகூரும். பரிசுத்த ஆன்மாவின் மூலம் உமக்கு நான் உதவி செய்திருந்தேன். (அதனால்) நீர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் உரையாடினீர்; மேலும், நான் உமக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுத் தந்திருந்தேன். மேலும், நீர் எனது கட்டளைப்படி களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதினீர். அது எனது கட்டளைப்படி (உயிருள்ள) பறவையாகிவிட்டது. நீர் பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் எனது கட்டளைப்படி குணப்படுத்தினீர். நீர் மரணித்தவர்களை எனது கட்டளைப்படி வெளிக்கொணர்ந்தீர். மேலும், நீர் இஸ்ராயீலின் வழித்தோன்றலிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுசென்ற போது, அவர்களில் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருந்தவர்கள் “இச்சான்றுகள் தெளிவான சூனியமே அன்றி வேறில்லை” என்று கூறிய வேளையில், அவர்களை விட்டும் நான் உம்மைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தையும் நினைத்துப் பாரும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்மீதும், உம் தாய்மீதும் (நான் புரிந்து) உள்ள என்னுடைய அருளை நீர் நினைவுகூர்வீராக!” பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு, உம்மை நான் பலப்படுத்திய பொழுது நீர் தொட்டிலிலும், பக்குவ வயதிலும் (மனிதர்களிடத்தில்) பேசினீரென்பதையும் (நினைவு கூர்வீராக!) மேலும், வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்ததையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்றுக்கொடுத்ததையும், நினைவுகூர்வீராக!) இன்னும், நீர் என் உத்தரவைக் கொண்டு, களிமண்ணால் பறவையின் உருவத்தைப்போல் செய்து, அதில் நீர் ஊதிய சமயத்தில், அது என் உத்தரவு கொண்டு பறவையானதையும், பிறவிக் குருடனையும், வெண் குஷ்டரோகியையும் என் உத்தரவைக்கொண்டு நீர் சுகப்படுத்தியதையும் (நினைவு கூர்வீராக!) நீர் என் உத்தரவைக் கொண்டு இறந்தோரை(க் கல்லரையிலிருந்து உயிர்ப்பித்து) நீர் வெளியேற்றியதையும் (நினைவு கூர்வீராக!) இன்னும், இஸ்ராயீலின் மக்களிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது அவர்களில் நிராகரித்தவர்கள், “நிச்சயமாக இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று கூறிய சமயத்தில், அவர்(களுடைய தீங்கு)களிலிருந்து நான் உம்மைத் தடுத்துக் கொண்டதையும் நினைவுகூர்வீராக! என்று (ஈஸாவை அழைத்து) அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக!)
Saheeh International
[The Day] when Allah will say, "O Jesus, Son of Mary, remember My favor upon you and upon your mother when I supported you with the Pure Spirit [i.e., the angel Gabriel] and you spoke to the people in the cradle and in maturity; and [remember] when I taught you writing and wisdom and the Torah and the Gospel; and when you designed from clay [what was] like the form of a bird with My permission, then you breathed into it, and it became a bird with My permission; and you healed the blind [from birth] and the leper with My permission; and when you brought forth the dead with My permission; and when I restrained the Children of Israel from [killing] you when you came to them with clear proofs and those who disbelieved among them said, "This is not but obvious magic."
وَاِذْ اَوْحَیْتُ اِلَی الْحَوَارِیّٖنَ اَنْ اٰمِنُوْا بِیْ وَبِرَسُوْلِیْ ۚ قَالُوْۤا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّنَا مُسْلِمُوْنَ ۟
وَ اِذْசமயத்தை நினைவு கூர்வீராகاَوْحَيْتُவஹீ அறிவித்தேன்اِلَىபக்கம்الْحَـوَارِيّٖنَசிஷ்யர்கள்اَنْ اٰمِنُوْا بِىْநம்பிக்கை கொள்ளுங்கள் என்று/என்னைوَبِرَسُوْلِىْ‌ۚஇன்னும் என் தூதரைقَالُوْۤاகூறினார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்وَاشْهَدْஇன்னும் சாட்சியளிப்பீராகبِاَنَّـنَاநிச்சயமாக நாங்கள்مُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
வ இத் அவ்ஹய்து இலல் ஹவாரிய்யீன அன் ஆமினூ Bபீ வ Bபி ரஸூலீ காலூ ஆமன்னா வஷ்ஹத் Bபி அன்னனா முஸ்லிமூன்
முஹம்மது ஜான்
“என் மீதும் என் தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்” என்று நான் ஹவாரிய்யூன் (சீடர்)களுக்கு தெரிவித்தபோது, அவர்கள், “நாங்கள் ஈமான் கொண்டோம்: நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் (அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
என்னையும், என் தூதரையும் (அதாவது உம்மையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சியாக இருக்கவும்! என்று கூறியதையும் நினைத்துப் பார்ப்பீராக (என்றும் அந்நாளில் கூறுவான்).
IFT
மேலும், “என்மீதும், என்னுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்!” என்று திருத்தொண்டர்களாகிய ஹவாரிகளுக்கு நான் உணர்த்தியபோது அவர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், நாங்கள் முஸ்லிம்கள் (முற்றிலும் அடிபணிந்தவர்கள்) என்பதற்கு நீ சாட்சியாக இருப்பாயாக!” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும் என்னையும் என்னுடைய தூதரையும் விசுவாசியுங்கள் என (உமது) சீடர்களுக்கு, நான் அறிவித்த சமயத்தில், (அவ்வாறே) “நாங்கள் விசுவாசித்தோம், நிச்சயமாக நாங்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லீம்கள் என்பதற்கு நீரே சாட்சியாகவும் இருப்பீராக!” என்று அவர்கள் கூறினார்கள் (என்பதையும் நினைவுகூர்வீராக! என்றும் அந்நாளில் கூறுவான்).
Saheeh International
And [remember] when I inspired to the disciples, "Believe in Me and in My messenger [i.e., Jesus]." They said, "We have believed, so bear witness that indeed we are Muslims [in submission to Allah]."
اِذْ قَالَ الْحَوَارِیُّوْنَ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ هَلْ یَسْتَطِیْعُ رَبُّكَ اَنْ یُّنَزِّلَ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
اِذْ قَالَகூறிய சமயம்الْحَـوَارِيُّوْنَசிஷ்யர்கள்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையهَلْ يَسْتَطِيْعُஇயலுவானா?رَبُّكَஉம் இறைவன்اَنْ يُّنَزِّلَஅவன் இறக்குவதற்குعَلَيْنَاஎங்கள் மீதுمَآٮِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَ السَّمَآءِ‌ ؕவானத்திலிருந்துقَالَகூறினார்اتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்مُّؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
இத் காலல் ஹவாரிய்யூன யா 'ஈஸBப் ன மர்யம ஹல் யஸ்ததீ'உ ரBப்Bபுக அய் யுனZஜ் Zஜில அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ காலத் தகுல் லாஹ இன் குன்தும் மு'மினீன்
முஹம்மது ஜான்
“மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவு மரவையை (ஆகாரத் தட்டை) இறக்கி வைக்க முடியுமா?” என்று ஹவாரிய்யூன் (சீடர்)கள் கேட்டபோது அவர், “நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்த சிஷ்யர்கள் (ஈஸாவை நோக்கி) ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! உமது இறைவன், வானத்திலிருந்து எங்களுக்காக ஓர் உணவு(ப் பொருள்கள் நிரம்பிய) தட்டை இறக்கி வைக்க முடியுமா?'' என்று கேட்டதற்கு (ஈஸா, அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.
IFT
ஹவாரிகள் (இவ்வாறு) கேட்டதையும் நினைவு கூரும்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! உம்முடைய இறைவனால் வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு இறக்கி வைக்க முடியுமா?” அதற்கு ஈஸா “நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பின், அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று பதில் தந்தார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தவிர, நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூர்வீராக!) அச்சீடர்கள் (ஈஸாவிடம்,) மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்முடைய இரட்சகன் வானத்திலிருந்து எங்களுக்காக (உணவுப் பொருள்கள் நிறைந்த) ஒரு மரவையை இறக்கி வைக்க ஆற்றல் பெறுவானா?” என்று கேட்டபோது (ஈஸா, அவர்களிடம்) “நீங்கள் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் இத்தகைய கேள்வி கேட்பதைப் பற்றி அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், என்று அவர் கூறினார்.
Saheeh International
[And remember] when the disciples said, "O Jesus, Son of Mary, can your Lord send down to us a table [spread with food] from the heaven?" [Jesus] said, "Fear Allah, if you should be believers."
قَالُوْا نُرِیْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَىِٕنَّ قُلُوْبُنَا وَنَعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُوْنَ عَلَیْهَا مِنَ الشّٰهِدِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்نُرِيْدُநாடுகிறோம்اَنْ نَّاْكُلَநாங்கள் புசிப்பதற்குمِنْهَاஅதிலிருந்துوَتَطْمَٮِٕنَّஇன்னும் திருப்தியடைவதற்குقُلُوْبُنَاஎங்கள் உள்ளங்கள்وَنَـعْلَمَஇன்னும் நாங்கள் அறிவதற்குاَنْஎன்றுقَدْஉறுதியாகصَدَقْتَـنَاஉண்மைகூறினீர்/எங்களிடம்وَنَكُوْنَநாங்கள் ஆகிவிடுவதற்குعَلَيْهَاஅதன் மீதுمِنَ الشّٰهِدِيْنَ‏சாட்சியாளர்களில்
காலூ னுரீது அன் னாகுல மின்ஹா வ ததம 'இன்ன குலூ Bபுனா வ னஃலம அன் கத் ஸதக்தன வ னகூன 'அலய்ஹா மினஷ் ஷாஹிதீன்
முஹம்மது ஜான்
அதற்கவர்கள், “நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்து கொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘அதிலிருந்து நாங்கள் புசித்து, எங்கள் உள்ளங்கள் திருப்தியடையவும், நீர் (உமது தூதைப் பற்றி) மெய்யாகவே உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொண்டு அதற்கு நாங்களும் சாட்சியாக இருக்கவுமே விரும்புகிறோம்'' என்று கூறினார்கள்.
IFT
அதற்கு அவர்கள் “நாங்கள் விரும்புவது இவற்றை மட்டுமே: நாங்கள் அத்தட்டிலிருந்து புசிக்க வேண்டும். அதன் மூலம் எங்கள் உள்ளங்கள் நிம்மதி அடைய வேண்டும்; மேலும் நீர் எங்களிடம் கூறியவை அனைத்தும் உண்மையானவை என்று நாங்கள் அறிந்து அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் அதிலிருந்து நாங்கள் உண்பதையும், எங்கள் இதயங்கள் திருப்தியடைவதையும், இன்னும், நீர் (உம்முடைய தூதைப்பற்றி) திட்டமாக எங்களிடம் உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிந்து கொள்வதையும், அதற்கு நாங்கள் சாட்சியாளர்களாக ஆகிவிடுவதையுமே நாடுகின்றோம்” என்று கூறினார்கள்.
Saheeh International
They said, "We wish to eat from it and let our hearts be reassured and know that you have been truthful to us and be among its witnesses."
قَالَ عِیْسَی ابْنُ مَرْیَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَیْنَا مَآىِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَنَا عِیْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَةً مِّنْكَ ۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
قَالَகூறினார்عِيْسَىஈஸாابْنُமகன்مَرْيَمَமர்யமுடையاللّٰهُمَّஅல்லாஹ்வேرَبَّنَاۤஎங்கள் இறைவாاَنْزِلْஇறக்குعَلَيْنَاஎங்கள் மீதுمَآٮِٕدَةًஓர் உணவுத் தட்டைمِّنَஇருந்துالسَّمَآءِவானம்تَكُوْنُஅது இருக்கும்لَـنَاஎங்களுக்குعِيْدًاஒரு பெருநாளாகلِّاَوَّلِنَاஎங்கள் முன் இருப்பவர்களுக்குوَاٰخِرِنَاஇன்னும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்குوَاٰيَةًஇன்னும் ஓர் அத்தாட்சியாகمِّنْكَ‌ۚஉன்னிடமிருந்துوَارْزُقْنَاஇன்னும் எங்களுக்கு உணவளிوَاَنْتَ خَيْرُநீ மிகச் சிறந்தவன்الرّٰزِقِيْنَ‏உணவளிப்பவர்களில்
கால 'ஈஸBப் னு மர்யமல் லாஹும்ம ரBப்Bபனா அன்Zஜில் 'அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ தகூனு லனா 'ஈதல் லி அவ்வலினா வ ஆகிரினா வ ஆயதம் மின்க வர்Zஜுக்னா வ அன்த கய்ருர் ராZஜிகீன்
முஹம்மது ஜான்
மர்யமுடைய மகன் ஈஸா, “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக; அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக; நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா ‘‘எங்கள் இறைவனே! வானத்தில் இருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு நீ இறக்கிவைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன் இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன் (வல்லமைக்கு) ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். ஆகவே, (அவ்வாறே) எங்களுக்கும் உணவை அளிப்பாயாக! நீயோ உணவளிப்பதில் மிகச் சிறந்தவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
IFT
மர்யத்தின் குமாரர் ஈஸா “அல்லாஹ்வே! எங்கள் அதிபதியே! வானத்திலிருந்து எங்களுக்கு ஓர் உணவுத்தட்டை இறக்கி வைப்பாயாக! அது, எங்களுக்கும் எங்கள் காலத்தில் வாழ்பவர்களுக்கும் இனி வரக்கூடியவர்களுக்கும் மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பாகவும் மேலும், உன்னிடமிருந்து ஒரு சான்றாகவும் திகழட்டும்! மேலும், எங்களுக்கு ஆகாரம் வழங்குவாயாக! வழங்குவோரில் மிகச் சிறந்தவன் நீயே!” என்று இறைஞ்சினார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு மர்யமுடைய மகன் ஈஸா, “யா அல்லாஹ்! எங்கள் இரட்சகனே! வானத்திலிருந்து ஒரு (உணவு நிறைந்த) மரவையை எங்களுக்கு நீ இறக்கி வைப்பாயாக! எங்களுக்கும், எங்கள் முன்னவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் அது ஆகிவிடும், மேலும், (அவ்வாறே) எங்களுக்கும் உணவளிப்பாயாக! நீயோ, உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்” என்று பிரார்த்தித்துக் கூறினார்.
Saheeh International
Said Jesus, the son of Mary, "O Allah, our Lord, send down to us a table [spread with food] from the heaven to be for us a festival for the first of us and the last of us and a sign from You. And provide for us, and You are the best of providers."
قَالَ اللّٰهُ اِنِّیْ مُنَزِّلُهَا عَلَیْكُمْ ۚ فَمَنْ یَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّیْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِیْنَ ۟۠
قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்اِنِّىْநிச்சயமாக நான்مُنَزِّلُهَاஅதை இறக்குவேன்عَلَيْكُمْ‌ۚஉங்கள் மீதுفَمَنْஆகவே எவர்يَّكْفُرْநிராகரிப்பாரோبَعْدُபின்னர்مِنْكُمْஉங்களில்فَاِنِّىْۤநிச்சயமாக நான்اُعَذِّبُهٗவேதனை செய்வேன்/ அவருக்குعَذَابًاவேதனையால்لَّاۤமாட்டேன்اُعَذِّبُهٗۤஅதைக்கொண்டு தண்டிக்கاَحَدًاஒருவரையும்مِّنَ الْعٰلَمِيْنَ‏உலகத்தாரில்
காலல் லாஹு இன்னீ முனZஜ் Zஜிலுஹா 'அலய்கும் Fபமய் யக்Fபுர் Bபஃது மின்கும் Fப இன்னீ உ'அத்திBபுஹூ 'அதாBபல் லா உ'அத்திBபுஹூ அஹதம் மினல் 'ஆலமீன்
முஹம்மது ஜான்
அதற்கு அல்லாஹ், “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அல்லாஹ் ‘‘நிச்சயமாக நான் (நீங்கள் கேட்டவாறு) அதை உங்களுக்கு இறக்கிவைப்பேன். (எனினும்) இதற்குப் பின்னர் உங்களில் எவரேனும் (என் கட்டளைக்கு) மாறு செய்தால், அவரை உலகத்தில் எவருக்கும் செய்திராத அவ்வளவு கொடியதொரு வேதனையைக் கொண்டு நிச்சயமாக நான் தண்டிப்பேன்'' என்று கூறினான்.
IFT
அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்கு அதனை இறக்கித் தருகிறேன். ஆனால், அதன் பின்னர் உங்களில் யாரேனும் நிராகரித்தால், அகிலத்தாரில் இதுவரை யாரையும் தண்டிக்காத அளவுக்கு அவரை நான் மிகவும் கடுமையாகத் தண்டிப்பேன்” என பதில் அளித்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) அல்லாஹ் “நிச்சயமாக நான் அதனை உங்களுக்கு இறக்கி வைக்கிறவனாக உள்ளேன்; ஆனால் இதற்குப் பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பாரோ, அப்பொழுது நிச்சயமாக நான், அவரை அகிலத்தாரில் எவரையுமே நான் வேதனை செய்திராதக் கொடியதொரு வேதனையைக் கொண்டு நான் வேதனை செய்வேன்” என்று கூறினான்.
Saheeh International
Allah said, "Indeed, I will send it down to you, but whoever disbelieves afterwards from among you - then indeed will I punish him with a punishment by which I have not punished anyone among the worlds."
وَاِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسَی ابْنَ مَرْیَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِیْ وَاُمِّیَ اِلٰهَیْنِ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالَ سُبْحٰنَكَ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اَقُوْلَ مَا لَیْسَ لِیْ ۗ بِحَقٍّ ؔؕ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ ؕ تَعْلَمُ مَا فِیْ نَفْسِیْ وَلَاۤ اَعْلَمُ مَا فِیْ نَفْسِكَ ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُیُوْبِ ۟
وَاِذْசமயம்قَالَகூறினான்اللّٰهُஅல்லாஹ்يٰعِيْسَىஈஸாவேابْنَமகன்مَرْيَمَமர்யமுடையءَاَنْتَநீர்قُلْتَகூறினீர்لِلنَّاسِமக்களுக்குاتَّخِذُوْنِىْஎடுத்துக் கொள்ளுங்கள்/என்னைوَاُمِّىَஇன்னும் என் தாயைاِلٰهَيْنِவணங்கப்படும் (இரு) தெய்வங்களாகمِنْ دُوْنِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வையன்றிقَالَகூறுவார்سُبْحٰنَكَநீ மிகப்பரிசுத்தமானவன்مَا يَكُوْنُஆகாதுلِىْۤஎனக்குاَنْ اَقُوْلَநான் கூறுவதுمَاஎதைلَـيْسَஇல்லைلِىْஎனக்குبِحَقٍّ‌ؕؔதகுதிاِنْ كُنْتُநான் இருந்தால்قُلْتُهٗஅதைக் கூறினேன்فَقَدْ عَلِمْتَهٗ‌ؕதிட்டமாக நீ அதை அறிந்திருப்பாய்تَعْلَمُநன்கறிவாய்مَا فِىْ نَفْسِىْஎதை/என் உள்ளத்தில்وَلَاۤ اَعْلَمُ مَاஇன்னும் அறிய மாட்டேன்/எதைفِىْ نَفْسِكَ‌ؕஉன் உள்ளத்தில்اِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்عَلَّامُமிக மிக அறிந்தவன்الْغُيُوْبِ‏மறைவானவற்றை
வ இத் காலல் லாஹு யா 'ஈஸBப் ன மர்யம 'அ-அன்த குல்த லின்னாஸித் தகிதூனீ வ உம்மிய இலாஹய்னி மின் தூனில் லாஹி கால ஸுBப்ஹானக மா யகூனு லீ அன் அகூல மா லய்ஸ லீ Bபிஹக்க்; இன் குன்து குல்துஹூ Fபகத் 'அலிம்தஹ்; தஃலமு மா Fபீ னFப்ஸீ வ லா அ'அலமு மா Fபீ னFப்ஸிக்; இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
முஹம்மது ஜான்
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன்.
IFT
(ஆக இப்பேருதவிகளையெல்லாம் நினைவுபடுத்தி) அல்லாஹ் இவ்வாறு வினவுவான்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! ‘அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் அன்னையையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” (அப்போது) அவர் பணிந்து கூறுவார்: “தூய்மை அனைத்தும் உனக்கே! எனக்கு உரிமையில்லாதவற்றைக் கூறுவது என்னுடைய பணியல்ல. அவ்வாறு நான் கூறி இருந்தால் அதனை நிச்சயம் நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பவற்றை நீ அறிவாய்; ஆனால் உன் உள்ளத்திலிருப்பவற்றை நான் அறியமாட்டேன். திண்ணமாக மறைவான உண்மைகள் அனைத்தையும் நீ நன்கறிந்தவனாகவே இருக்கின்றாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவிடம்) “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வைத் தவிர என்னையும், என்னுடைய தாயையும் இரண்டு வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா?” என்று கேட்பான். (அதற்கு) “நீ மிகப்பரிசுத்தமானவன், எனக்கு ஒரு சிறிதும் உரிமை இல்லாததை நான் (ஒருபோதும்) கூறுவதற்கு எனக்குத் தகுதி இல்லை, அவ்வாறு நான் கூறியிருந்தால், நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய், என் உள்ளத்தில் உள்ளதை நீ நன்கறிவாய், உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன், நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக்க அறிந்தவன்” என்று கூறுவார்.
Saheeh International
And [beware the Day] when Allah will say, "O Jesus, Son of Mary, did you say to the people, 'Take me and my mother as deities besides Allah?'" He will say, "Exalted are You! It was not for me to say that to which I have no right. If I had said it, You would have known it. You know what is within myself, and I do not know what is within Yourself. Indeed, it is You who is Knower of the unseen.
مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِیْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّیْ وَرَبَّكُمْ ۚ وَكُنْتُ عَلَیْهِمْ شَهِیْدًا مَّا دُمْتُ فِیْهِمْ ۚ فَلَمَّا تَوَفَّیْتَنِیْ كُنْتَ اَنْتَ الرَّقِیْبَ عَلَیْهِمْ ؕ وَاَنْتَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
مَا قُلْتُநான் கூறவில்லைلَهُمْஅவர்களுக்குاِلَّا مَاۤ اَمَرْتَنِىْதவிர/எதை/நீ ஏவினாய்/எனக்குبِهٖۤஅதைاَنِஎன்பதைاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைرَبِّىْஎன் இறைவன்وَرَبَّكُمْ‌ۚஇன்னும் உங்கள் இறைவன்وَكُنْتُஇருந்தேன்عَلَيْهِمْஅவர்கள் மீதுشَهِيْدًاசாட்சியாளனாகمَّا دُمْتُநான் இருந்தவரைفِيْهِمْ‌ۚஅவர்களுடன்فَلَمَّاபோதுتَوَفَّيْتَنِىْநீ என்னை கைப்பற்றியكُنْتَஇருந்தாய்اَنْتَநீالرَّقِيْبَகண்கானிப்பவனாகعَلَيْهِمْ‌ؕஅவர்கள் மீதுوَاَنْتَநீعَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாவற்றின்شَهِيْدٌ‏சாட்சியாளன்
மா குல்து லஹும் இல்லா மா அமர்தனீ Bபிஹீ அனி'Bபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும்; வ குன்து 'அலய்ஹிம் ஷஹீதம் மா தும்து Fபீஹிம் Fபலம்மா தவFப்Fபய்தனீ குன்த அன்தர் ரகீBப 'அலய்ஹிம்; வ அன்த 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
முஹம்மது ஜான்
“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);
அப்துல் ஹமீது பாகவி
நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி.
IFT
“என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே அடிபணியுங்கள்!” என்று நீ எனக்குக் கட்டளையிட்டதைத் தவிர வேறெதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய்! மேலும் நீ அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய இரட்சகனும் உங்களுடைய இரட்சகனுமான அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று மக்களுக்கு நான் கூறவேண்டும்) என்று நீ எதை எனக்குக் கட்டளையிட்டாயோ அதைத் தவிர (வேறு) எதையும் நான் அவர்களுக்கு கூறவில்லை, நான் அவர்களுடன் (உலகில்) இருந்தவரையில், அவர்களின் செயலைத் தெரிந்து கொண்டிருந்தேன், பின்னர், நீ என்னைக் கைப்பற்றியபொழுது, நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்”(,என்றும்)
Saheeh International
I said not to them except what You commanded me - to worship Allah, my Lord and your Lord. And I was a witness over them as long as I was among them; but when You took me up, You were the Observer over them, and You are, over all things, Witness.
اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَ ۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
اِنْ تُعَذِّبْهُمْநீ வேதனை செய்தால் / அவர்களைفَاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عِبَادُكَ‌ۚஉன் அடியார்கள்وَاِنْ تَغْفِرْநீ மன்னித்தால்لَهُمْஅவர்களைفَاِنَّكَ اَنْتَநிச்சயமாக நீதான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏ஞானவான்
இன் து'அத்திBப்ஹும் Fப இன்னஹும் இBபாதுக வ இன் தக்Fபிர் லஹும் Fப இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
முஹம்மது ஜான்
(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை நீ வேதனை செய்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்களே! (உன் அடியார்களை உன் இஷ்டப்படிச் செய்ய உனக்கு உரிமையுண்டு.) அவர்களை நீ மன்னித்துவிட்டாலோ (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது. ஏனென்றால்,) நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், மிக்க ஞானமுடையவன்'' (என்று கூறுவார்.)
IFT
(இப்போது) நீ அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடிமைகளே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இரட்சகா) “அவர்களை நீ வேதனை செய்தால், நிச்சயமாக அவர்கள் உன்னுடைய அடியார்களே! அன்றியும், அவர்களை நீ மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.” என்றும் கூறுவார்.
Saheeh International
If You should punish them - indeed they are Your servants; but if You forgive them - indeed it is You who is the Exalted in Might, the Wise."
قَالَ اللّٰهُ هٰذَا یَوْمُ یَنْفَعُ الصّٰدِقِیْنَ صِدْقُهُمْ ؕ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
قَالَகூறுவான்اللّٰهُஅல்லாஹ்هٰذَاஇதுيَوْمُநாள்يَـنْفَعُபலனளிக்கும்الصّٰدِقِيْنَஉண்மையாளர்களுக்குصِدْقُهُمْ‌ؕஅவர்களுடைய உண்மைلَهُمْஅவர்களுக்குجَنّٰتٌசொர்க்கங்கள்تَجْرِىْஓடும்مِنْஇருந்துتَحْتِهَاஅதன் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்கள்فِيْهَاۤ اَبَدًا‌ ؕஅதில்/என்றென்றும்رَضِىَமகிழ்ச்சியடைவான்اللّٰهُஅல்லாஹ்عَنْهُمْஅவர்களைப் பற்றிوَرَضُوْاஇன்னும் மகிழ்ச்சியடைவார்கள்عَنْهُ‌ ؕஅவனைப் பற்றிذٰ لِكَஇதுதான்الْـفَوْزُவெற்றிالْعَظِيْمُ‏மகத்தான
காலல் லாஹு ஹாத யவ்மு யன்Fப'உஸ் ஸாதிகீன ஸித்குஹும்; லஹும் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹ்; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
முஹம்மது ஜான்
அப்போது அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு அல்லாஹ் “உண்மை சொல்லும் சத்தியவான்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாள் இதுதான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் அவர்களுக்கு உண்டு. அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்'' என்று கூறுவான். (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சியடைவார்கள். இது மிக்க மகத்தான பெரும் பாக்கியம் ஆகும்.
IFT
அப்போது அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மை பயனளிக்கக்கூடிய நாளாகும் இது. இத்தகையோருக்கு, கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்கள் உண்டு. அங்கு அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) அல்லாஹ் “இது உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கக்கூடிய நாளாகும், அவர்களுக்கு சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள் என்று கூறுவான், (அந்நாளில்) அவர்களைப் பற்றி அல்லாஹ்வும் திருப்தியடைவான், அவர்களும் அவனைப் பற்றித் திருப்தியடைவார்கள், அது மகத்தான வெற்றியாகும்.
Saheeh International
Allah will say, "This is the Day when the truthful will benefit from their truthfulness." For them are gardens [in Paradise] beneath which rivers flow, wherein they will abide forever, Allah being pleased with them, and they with Him. That is the great attainment.
لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِیْهِنَّ ؕ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠
لِلّٰهِஅல்லாஹ்வுக்குரியதேمُلْكُஆட்சிالسَّمٰوٰتِவானங்களின்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا فِيْهِنَّ‌ ؕஇன்னும் அவற்றிலுள்ளவைوَهُوَஅவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றின் மீதுقَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Fபீஹின்ன்; வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன்ன் கதீர்
முஹம்மது ஜான்
வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அவன் (இவை) அனைத்தின் மீதும் மிக்க பேராற்றலுடையவன்.
IFT
வானங்கள், பூமி மற்றும் அவற்றில் உள்ள அனைத்துப் படைப்புகளின் பேராட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும், அவன் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களுடைய, மற்றும் பூமியுடைய இன்னும் இவைகளிலுள்ள யாவற்றினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, அவனோ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
Saheeh International
To Allah belongs the dominion of the heavens and the earth and whatever is within them. And He is over all things competent.