எனினும்: அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்; ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்: “இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.”
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் (-முஹம்மதாகிய நீர்) அவர்களில் இருந்தே (இறைத்தூதராக) அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, இந்நிராகரிப்பவர்கள் ‘‘இது மிக அற்புதமான விஷயமென்று'' கூறுகின்றனர்.
IFT
உண்மை யாதெனில், இவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் இவர்களிலிருந்தே வந்திருப்பது பற்றி இவர்கள் வியப்படைந்துள்ளார்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் கூறத் தொடங்கினார்கள்: “இது வியப்புக்குரிய விஷயம்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
என்றாலும் அவர்களிலிருந்தே அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வந்ததைப்பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர், ஆகவே, இது ஆச்சரியமான விஷயம் என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
Saheeh International
But they wonder that there has come to them a warner from among themselves, and the disbelievers say, "This is an amazing thing.
“நாம் மரணமடைந்து மண்ணாகி விட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? இப்படி மீள்வது (சாத்தியமில்லாத) தொலைவானது” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
அப்துல் ஹமீது பாகவி
(மேலும், ‘‘இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப் போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீட்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு தூரம். (அது நிகழப்போவதில்லை'' என்றும் கூறுகின்றனர்.)
IFT
நாங்கள் மரணமடைந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலுமா (மீண்டும் எழுப்பப்படுவோம்?) மீண்டும் எழுப்பப்படுவது எனும் இவ்விஷயம் அறிவுக்குப் புறம்பானதாகும்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாம் இறந்து (உக்கி) மண்ணாகிவிட்டாலும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா? (அது இயற்கைக்கு மாற்றமானதாகும் ஆகவே,) அது தூரமான மீட்சியாகும்” (என்றும் கூறுகின்றனர்).
Saheeh International
When we have died and have become dust, [we will return to life]? That is a distant [i.e., unlikely] return."
(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(மரணித்த)பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பிவிடுவோம்.) மேலும், (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கிறது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது.)
IFT
(உண்மை யாதெனில்) பூமி, இவர்களின் உடம்பிலிருந்து எவற்றைத் தின்கிறது என்பதையெல்லாம் நாம் அறிந்து வைத்துள்ளோம். மேலும், அனைத்தும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இறந்தபின்) அவர்களிலிருந்து (அவர்களின் உடலை எந்த அளவு) பூமி (தின்று) குறைத்திருக்கிறது என்பதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கிறோம், மேலும், (அவர்களின் செயல்கள் பதியப்பட்டு) பாதுகாக்கப்பட்ட புத்தகம் நம்மிடத்தில் இருக்கின்றது.
Saheeh International
We know what the earth diminishes [i.e., consumes] of them, and with Us is a retaining record.
இருப்பினும், சத்திய (வேத)த்தை -அது தம்மிடம் வந்த போது பொய்ப்பிக்(க முற்படு)கிறார்கள்; அதனால், அவர்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறிருந்தும் அவர்களிடம் வந்த உண்மையான (வேதத்)தை அவர்கள் பொய்யாக்கி வெறும் குழப்பத்திற்குள்ளாகி விட்டனர்.
IFT
ஆயினும், சத்தியம் இவர்களிடம் வந்தபோது அதனை இவர்கள் வெளிப்படையாகப் பொய்யெனக் கூறிவிட்டார்கள். இதனால்தான் இப்போது இவர்கள் குழப்பத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மாறாக, உண்மையை_அது அவர்களிடம் வந்தபோது அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, அவர்கள் குழப்பமான காரியத்தில் இருக்கிறார்கள்.
Saheeh International
But they denied the truth when it came to them, so they are in a confused condition.
اَ فَلَمْ يَنْظُرُوْۤاஅவர்கள் பார்க்கவில்லையா?اِلَى السَّمَآءِவானத்தைفَوْقَهُمْதங்களுக்கு மேல் உள்ளكَيْفَ بَنَيْنٰهَاநாம் அதை எப்படி படைத்தோம்?وَزَ يَّـنّٰهَاஇன்னும் அதை எப்படி அலங்கரித்தோம்?وَمَا لَهَاஅதில் இல்லைمِنْ فُرُوْجٍபிளவுகள்
அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
தங்களுக்கு மேலிருக்கும் வானத்தை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? நாம் அதை எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பாக அமைத்து, அதை (நட்சத்திரங்களைக் கொண்டு) அலங்காரமாக்கி வைத்திருக்கிறோம். அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லை. (ஓட்டை உடைசலும் இல்லை!)
IFT
சரி, இவர்கள் தங்களுக்கு மேலுள்ள வானத்தை எப்பொழுதுமே பார்த்ததில்லையா, என்ன? அதனை நாம் எவ்வாறு அமைத்துள்ளோம்; எவ்வாறு அலங்கரித்துள்ளோம் என்று! அதில் எங்கும் எந்த ஒரு பிளவும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்களுக்கு மேல் (இருக்கும்) வானத்தின் பால், அதனை நாம் எவ்வாறு (ஒரு கட்டுக்கோப்பாக) அமைத்து, அதனை (நட்சத்திரங்களால்) அலங்காரமாக்கி வைத்துள்ளோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? அதில் எத்தகைய வெடிப்புகளும் இல்லை.
Saheeh International
Have they not looked at the heaven above them - how We structured it and adorned it and [how] it has no rifts?
மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், நாமே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும் அமைத்து அழகான புற்பூண்டுகள் அனைத்தையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாக முளைப்பித்தோம்.
IFT
மேலும், பூமியை நாம் விரித்தோம். இன்னும் அதில் மலைகளை நாட்டினோம். மேலும், எல்லாவிதமான அழகிய தோற்றமுடைய தாவரங்களையும் முளைக்கச் செய்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் பூமியை_ நாமே அதை (விரிவாக்கி) விரித்திருக்கிறோம், அதில் உறுதியான மலைகளையும் நாமே அமைத்தோம், அழகான (புற்பூண்டுகளை) ஒவ்வொரு வகையிலிருந்தும் நாம் அதில் முளைப்பித்தோம்.
Saheeh International
And the earth - We spread it out and cast therein firmly set mountains and made grow therein [something] of every beautiful kind,
(இது இறைவன் பக்கம்) திரும்பும் அடியார்கள் எல்லோருக்கும் (அகப்) பார்வை அளிப்பதாகவும், (நினைவூட்டும்) நல்லுபதேசமாகவும் உள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
(இது) நம்மை நோக்கி நிற்கும் எல்லா அடியார்களுக்கும் நல்ல உபதேசங்களாகவும் ஒரு படிப்பினையாகவும் (இருக்கிறது).
IFT
மேலும், இவை அனைத்தும் (சத்தியத்தின் பக்கம்) திரும்பக்கூடிய ஒவ்வொரு அடியானுக்கும் அகப்பார்வையையும் படிப்பினையையும் வழங்கக்கூடியதாய் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது (அல்லாஹ்வுக்குப்) பணிந்து அவன் பக்கம் அதிகமாக) மீளக்கூடிய ஒவ்வொரு அடியாருக்கும் பார்(த்துப்படிப்பினை பெறுப)வையாகவும், நினைவூட்டக்கூடியதாகவும் இருக்கின்றது.
Saheeh International
Giving insight and a reminder for every servant who turns [to Allah].
وَنَزَّلْنَاஇன்னும் நாம் இறக்கினோம்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًநீரைمُّبٰـرَكًاஅருள் நிறைந்த(து)فَاَنْۢبَـتْـنَاமுளைக்க வைத்தோம்بِهٖஅதன் மூலம்جَنّٰتٍதோட்டங்களை(யும்)وَّحَبَّதானியங்களையும்الْحَصِيْدِ ۙஅறுவடை செய்யப்படும்
அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதைக்கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி செய்கிறோம்.
IFT
மேலும், நாம் வானத்திலிருந்து அருள்மிக்க நீரினை இறக்கினோம். பின்னர், அதன் மூலம் தோட்டங்களையும், அறுவடைத் தானியங்களையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்திலிருந்து, மிக்க பாக்கியமுள்ள (மழை) நீரையும் நாம் இறக்கிவைத்தோம், பின்னர், அதனைக்கொண்டு (பல) சோலைகளையும் அறுவடை செய்யப்படும் தானிய மணிகளையும் முளைக்கச் செய்தோம்.
Saheeh International
And We have sent down blessed rain from the sky and made grow thereby gardens and grain from the harvest
(அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அதை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவற்றைக்கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே (மரணித்தவர்கள் சமாதிகளில் இருந்து) வெளியாகுவதும் ஏற்படும்.
IFT
இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான ஏற்பாடாகும். இறந்து கிடக்கும் ஒரு பூமிக்கு நாம் இந்த நீரினால் உயிரூட்டுகின்றோம். (இறந்துவிட்ட மனிதர்கள் பூமியிலிருந்து) வெளிப்படுவதும் இவ்விதமேயாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதனை நம்) அடியார்களுக்கு ஆகாரமாக (ஆக்கினோம்), இன்னும், அதைக் கொண்டு இறந்துகிடந்த ஊரை (வறண்டபூமியை) நாம் உயிர்ப்பிக்கின்றோம், இவ்வாறே (மரணித்தோர் உயிர்பெற்று) வெளியேறுதலும் (நடந்தேறும்).
Saheeh International
As provision for the servants, and We have given life thereby to a dead land. Thus is the emergence [i.e., resurrection].
وَّاَصْحٰبُ الْاَيْكَةِதோட்டக்காரர்களும்وَقَوْمُமக்களும்تُبَّعٍؕதுப்பஃ உடையكُلٌّஎல்லோரும்كَذَّبَபொய்ப்பித்தனர்الرُّسُلَதூதர்களைفَحَقَّஆகவே, உறுதியாகிவிட்டதுوَعِيْدِஎன் எச்சரிக்கை
(அவ்வாறே மத்யன்) தோப்புவாசிகளும், துப்பவுடைய கூட்டத்தாரும் ஆக எல்லோரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டனர்; எனவே (அவர்களைப் பற்றிய) என்னுடைய எச்சரிக்கை உண்மையாயிற்று.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், தோப்பில் வசித்தவர்களும், ‘துப்பஉ' என்னும் மக்களும் (பொய்யாக்கினர்). இவர்கள் ஒவ்வொருவரும் (எனது) தூதர்களைப் பொய்யாக்கினர். ஆகவே, (அவர்களை அழிப்போமென்ற) எனது வாக்கு பூர்த்தியாயிற்று.
IFT
மற்றும் ‘அய்கா’ வாசிகள், ‘துப்பஃவு’ சமுதாயத்தார் ஆகிய யாவரும் பொய்யெனத் தூற்றிவிட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், எனது எச்சரிக்கை அவர்களின் மீது உண்மையாகிவிட்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் (மத்யன்) தோப்பு வாசிகளும், துப்பஉ வின் சமூகத்தினரும்_ஒவ்வொருவரும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினர், ஆகவே, (வேதனையைப்பற்றிய) எனது அச்சுறுத்தல் உண்மையாயிற்று.
Saheeh International
And the companions of the thicket and the people of Tubbaʿ. All denied the messengers, so My threat was justly fulfilled.
எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா? (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குச் சிரமமெனக் கூறுவதற்கு!) எனினும், (மீண்டும் இவர்களை) புதிதாகப் படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
IFT
முதல் முறையாய்ப் படைப்பதற்கு நாம் இயலாதவர்களாயிருந்தோமா, என்ன? ஆனால், மீண்டும் புதிதாய்ப் படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(படைப்புகள் யாவற்றையும்) முதலாவதாகப் படைத்ததில் நாம் இயலாமலாகி விட்டோமோ? அவ்வாறன்று! (இறந்தபின் உயிர் கொடுத்து நாம்) புதிதாகப்படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்திலிருக்கின்றனர்.
Saheeh International
Did We fail in the first creation? But they are in confusion over a new creation.
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கிறோம்.
IFT
நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக, நாம்தான் மனிதனைப் படைத்தோம், (நன்மை, தீமை ஆகியவற்றிலிருந்து) அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது (பேசுகிறது) என்பதையும் நாம் நன்கறிவோம், இன்னும், நாம் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாகவே இருக்கின்றோம்.
Saheeh International
And We have already created man and know what his soul whispers to him, and We are closer to him than [his] jugular vein.
மா யல்Fபிளு மின் கவ்லின் இல்லா லதய்ஹி ரகீBபுன் 'அதீத்
முஹம்மது ஜான்
கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது.)
IFT
எந்தச் சொல்லையும் அவன் சொல் வதில்லை; அதனைப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர் அவனிடத்தில் இல்லாத நிலையில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனிடம் (அதை) எழுத எதிர்பார்த்து தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் இருந்தே தவிர சொல்லால் எதையும் அவன் மொழிவதில்லை; (அவன் கூறுபவை அனைத்தும் பதியப்படுகின்றது.)
Saheeh International
He [i.e., man] utters no word except that with him is an observer prepared [to record].
“நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
அவனை நோக்கி, ‘‘நிச்சயமாக நீ இதைப் பற்றிக் கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னை விட்டும் நாம் நீக்கி விட்டோம். இன்றைய தினம் உன் பார்வை கூர்மையாயிருக்கிறது. (ஆகவே, நீ மறுத்துக் கொண்டிருந்ததை உன் கண் திறந்து பார்'' என்று கூறப்படும்.)
IFT
இந்த விஷயத்தைப் பற்றி நீ அலட்சியத்தில் இருந்தாய்! உனக்கு முன்பாக இருந்த திரையை நாம் அகற்றிவிட்டோம். மேலும், இன்று உனது பார்வை நன்கு கூர்மையாய் உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதனிடம்) திட்டமாக நீ இதனைப்பற்றி மறதியில் இருந்தாய், ஆகவே, (மறுமையில் நடந்தேறும் காரியங்கள் பற்றி மறைத்துக்கொண்டிருந்த) உன்திரையை உம்மை விட்டும் நாம் நீக்கிவிட்டோம், எனவே, உன்னுடைய பார்வை இன்று கூர்மையாயிருக்கின்றது (ஆகவே, நீ இதனைப் பார் என்று கூறப்படும்).
Saheeh International
[It will be said], "You were certainly in unmindfulness of this, and We have removed from you your cover, so your sight, this Day, is sharp."
“அவன் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை ஏற்படுத்தினான். ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்” (என்றும் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘இவன் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தினான் என்றும், ஆகவே, நீங்களிருவரும் இவனைக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள்'' (என்றும் கூறப்படும்).
IFT
அல்லாஹ்வுடன் இதர கடவுளை ஏற்படுத்துபவனாகவும் இருந்தான். எனவே, வீசுங்கள் அவனை, கடுமையான வேதனையில்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், அல்லாஹ்வுடன் வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயனை (இணையாக) ஆக்கினான். ஆகவே, நீங்களிருவரும் இவனை மிகக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள் (என்றும் கூறப்படும்).
Saheeh International
Who made [as equal] with Allah another deity; then throw him into the severe punishment."
(அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்: “எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை; ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-”
அப்துல் ஹமீது பாகவி
(அச்சமயம்) இவனுடைய இணை பிரியாத சினேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நான் இவனை வழிகெடுக்கவில்லை. தானாகவே அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்'' என்று கூறுவான்.
IFT
அவனுடைய தோழன் கூறினான்: “எங்கள் இறைவா! இவனை வரம்புமீறக் கூடியவனாக நான் ஆக்கவில்லை. ஆயினும், அவனேதான் வழிகேட்டில் எல்லையைக் கடந்து விட்டிருந்தான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அச்சமயம்) இவனுடைய (இணை பிரியாத) சிநேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் அல்லாஹ்விடம்), “எங்கள் இரட்சகனே! நான் இவனை வழிகெடுக்க வில்லை, ஆனால், (தானாக) அவனே வெகுதூரமான வழிகேட்டில் இருந்து விட்டான்!” என்று கூறுவான்.
Saheeh International
His [devil] companion will say, "Our Lord, I did not make him transgress, but he [himself] was in extreme error."
கால லா தக்தஸிமூ லதாய்ய வ கத் கத்தம்து இலய்கும் Bபில்வ'ஈத்
முஹம்மது ஜான்
“என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, இறைவன் அவர்களை நோக்கி,) ‘‘என் முன்பாக நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏற்கனவே (இதைப் பற்றி) உங்களுக்கு (எச்சரித்துப்) பயமுறுத்தியிருந்தேன்.
IFT
(பதில் கூறப்பட்டது:) “என் முன்னிலையில் தர்க்கம் செய்யாதீர்கள். தீயகதியைப் பற்றி முன்பே நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே அல்லாஹ் அவர்களிடம், கணக்கு நாளாகிய இன்று) “என்னிடம் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம், (இது பற்றிய) அச்சுறுத்தலை நிச்சயமாக உங்களின் பால் (நீங்கள் உலகிலிருந்தபோதே என் தூதர்கள் மூலமாக) நான் முற்படுத்தியும் விட்டேன்” என்று கூறுவான்.
Saheeh International
[Allah] will say, "Do not dispute before Me, while I had already presented to you the threat [i.e., warning].
நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் நரகத்தை நோக்கி, ‘‘உன் வயிறு நிறைந்துவிட்டதா?'' என்று நாம் கேட்போம். அதற்கு அது ‘‘இன்னும் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்கும்.
IFT
அந்த நாளில் நாம் நரகத்திடம், “உனக்கு நிரம்பிவிட்டதா?” என்று கேட்போம். அது கூறும், “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நரகத்திடம், “நீ நிரம்பிவிட்டாயா?” என்று நாம் கேட்கும் நாளில் அ(ந்நரகமான)து “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும்.
Saheeh International
On the Day We will say to Hell, "Have you been filled?" and it will say, "Are there some more,"
هٰذَاஇதுதான்مَاஎதுتُوْعَدُوْنَவாக்களிக்கப்படுகிறதுلِكُلِّஎல்லோருக்கும்اَوَّابٍஅல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய(வர்)حَفِيْظٍۚபேணக்கூடிய(வர்)
ஹாத மா தூ'அதூன லிகுல்லி அவ்வாBபின் ஹFபீள்
முஹம்மது ஜான்
“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).”
அப்துல் ஹமீது பாகவி
‘‘இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது'' (என்றும்,) ‘‘எப்பொழுதும் இறைவனையே நோக்கி இருந்து (இறைவனுடைய கட்டளைகளைப்) பேணி நடந்து கொண்ட அனைவருக்கும் இது கிடைக்கும்'' (என்றும்,)
IFT
(கூறப்படும்:) “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது. அதிகம் மீளக்கூடியவராகவும் மிகவும் பேணுதலுடன் வாழக்கூடியவராகவும் இருந்த ஒவ்வொருவருக்கும் உரியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இது தான் நீங்கள் வாக்களிக்கபட்டீர்களே அதுவாகும், (இரட்சகனின்பால் தவ்பாச் செய்து) அதிகமாக மீளக்கூடிய, (அல்லாஹ்வுடைய கட்டளைகளைப்) பேணி நடந்து கொண்ட ஒவ்வொருவருக்கு(மாகு)ம்.
Saheeh International
[It will be said], "This is what you were promised - for every returner [to Allah] and keeper [of His covenant].
مَنْஎவர்خَشِىَபயந்தாரோالرَّحْمٰنَபேரருளாளனைبِالْغَيْبِமறைவில்وَجَآءَஇன்னும் வந்தாரோبِقَلْبٍஉள்ளத்துடன்مُّنِيْبِۙஅல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய(து)
எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள், மறைவிலும் ரஹ்மானுக்குப் பயந்து நடந்து (ரஹ்மானையே முற்றிலும்) நோக்கிய மனதுடன் வருகிறார்களோ...
IFT
அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார்.
அன்றியும், (நிராகரிப்போரான) அவர்களைவிட பலசாலிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை அவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் (அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள) பல ஊர்களிலும் (துளைத்துச்) சென்றனர்; ஆனால் அவர்கள் தப்பித்துக் கொள்ள புகலிடம் இருந்ததா?
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் இவர்களைவிட மிக பலசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் (தப்பித்துக்கொள்ள) பல தேசங்களில் சுற்றித் திரிந்தார்கள். (அப்போது அவர்களுக்கு) தப்ப இடம் கிடைத்ததா? (இல்லை, கிடைக்காமல் அழிந்து விட்டனர்.)
IFT
நாம் இவர்களுக்கு முன் இவர்களை விட அதிக வலிமை உடைய எத்தனையோ சமுதாயங்களை அழித்து விட்டிருக்கின்றோம். மேலும் அவர்கள் உலக நாடுகளில் (அக்கிரமம் செய்து கொண்டு) சுற்றித் திரிந்தார்கள். இருந்தும் அவர்களால் ஏதேனும் புகலிடத்தைப் பெறமுடிந்ததா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களைவிட மிக்க பலசாலிகளாக இருந்த எத்தனையோ தலைமுறையினரை இவர்களுக்கு முன்னர் நாம் அழித்திருக்கின்றோம், அவர்கள் (தப்பித்துக்கொள்ளும் இடத்தை தேடி) பல ஊர்களிலும் சுற்றித்திரிந்தனர், (ஆயினும்) அவர்களுக்குத் தப்பி ஓடுமிடம் இருந்ததா?
Saheeh International
And how many a generation before them did We destroy who were greater than them in [striking] power and had explored throughout the lands. Is there any place of escape?
எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கிறது.
IFT
இதயமுள்ள அல்லது கவனத்தோடு செவிமடுக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் திண்ணமாக, இந்த வரலாற்றில் படிப்பினையூட்டும் பாடம் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவருக்கு (அவர்களை அழித்தது பற்றி சிந்தித்துணரும்) உள்ளமிருக்கிறதோ அவருக்கு, அல்லது மனமுவந்தவராக செவிசாய்க்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக இதில் (நல்ல) படிப்பினை இருக்கின்றது.
Saheeh International
Indeed in that is a reminder for whoever has a heart or who listens while he is present [in mind].
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம்தான் வானங்களையும், பூமியையும் அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாட்களில் படைத்தோம். அதனால் நமக்கு ஒரு களைப்பும் (சோர்வும்) ஏற்பட்டு விடவில்லை.
IFT
நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்குக் களைப்பேதும் ஏற்படவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், திட்டமாக வானங்களையும், பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம், (அதனால்) எவ்வித களைப்பும் நம்மை தீண்டவில்லை.
Saheeh International
And We did certainly create the heavens and earth and what is between them in six days, and there touched Us no weariness.
எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக; இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹு செய்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப் பற்றி (கவலைப்படாதீர்;) நீர் பொறுமையாக அதைச் சகித்துக் கொண்டிருந்து, சூரிய உதயத்திற்கும், அது மறைவதற்கும் முன்னர் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துவருவீராக!
IFT
(நபியே!) இவர்கள் புனைந்துரைக்கும் பேச்சுகள் குறித்து பொறுமையை மேற்கொள்ளும். உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதிப்பீராக; சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும்! மேலும், இரவு நேரத்திலும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே (நபியே!) அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப் பற்றி (பொருட்படுத்தாது) நீர் பொறுமையுடனிருப்பீராக! இன்னும் சூரிய உதயத்திற்கு முன்னரும், (அதன்) அஸ்தமனத்திற்கு முன்னரும் உமதிரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்து கொண்டுமிருப்பீராக!
Saheeh International
So be patient, [O Muhammad], over what they say and exalt [Allah] with praise of your Lord before the rising of the sun and before its setting,
அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(வானவர்கள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் அந்நாளில் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள்.
IFT
எந்நாளில் மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி எழுப்புவதன் ஓசையை மிகச் சரியாகச் செவியுற்றுக் கொண்டிருப்பார்களோ அந்நாள்தான் பூமியிலிருந்து இறந்தவர்கள் வெளிப்படும் நாளாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பெரும் சப்தத்தை உண்மையாகவே, அவர்கள் கேட்கும் நாள், அதுதான் (மரணித்தோர் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள் ஆகும்.
Saheeh International
The Day they will hear the blast [of the Horn] in truth. That is the Day of Emergence [from the graves].
பூமி பிளந்து, அவர்கள் வேகமாக (வெளியே) வரும் நாள்; இவ்வாறு (அவர்களை) ஒன்று சேர்ப்பது நமக்கு எளிதானதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(மரணித்தவர்களை மூடிக்கொண்டிருக்கும்) பூமி வெகு தீவிரமாக (வெடித்து) அவர்களை விட்டு விலகும் நாளை (நினைவு கூருவீராக). அதுதான் (விசாரணைக்காக அனைவரையும்) ஒன்று சேர்க்கும் நாள். இ(வ்வாறு செய்வ)து நமக்கு மிக்க எளிதானதே.
IFT
அன்று பூமி வெடிக்கும்; மக்கள் (அதனுள்ளிருந்து வெளிப்பட்டு) விரைவாக ஓடிக்கொண்டிருப்பார்கள். இவ்வாறு எழச்செய்வது நமக்கு மிக எளிதானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமி, அவர்களை விட்டும் பிளந்து விடும்நாளில், (அவர்களின் கப்ருகளிலிருந்து வெளியேறி அழைப்பாளரின்பால்) விரைந்தவர்களாக (வருவார்கள்) அது (படைப்பினங்களை) ஒன்று திரட்டுவதாகும், (அது) நமக்கு எளிதானதாகும்.
Saheeh International
On the Day the earth breaks away from them [and they emerge] rapidly; that is a gathering easy for Us.
அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம் - நீர் அவர்கள் மீது நிர்ப்பந்தம் செய்பவரல்லர், ஆகவே (நம்) அச்சுறுத்தலை பயப்படுவோருக்கு, இந்த குர்ஆனை கொண்டு நல்லுபதேசம் செய்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. எனது வேதனையைப் பயப்படுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!
IFT
(நபியே!) இந்த மக்கள் பேசும் பேச்சுகளை நாம் நன்கு அறிகின்றோம். இவர்களை நிர்ப்பந்தப்படுத்தி ஏற்கச் செய்வது உமது பணியல்ல. என் எச்சரிக்கைக்கு அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் நீர் இந்தக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்மைப்பற்றி) அவர்கள் கூறுவதை நாம் மிக அறிவோம், மேலும், நீர் அவர்களை அடக்கியாள்பவரல்லர், ஆகவே, (நம்முடைய) அச்சுறுத்தலைப்பயப்படுவோரை இந்த குர் ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!
Saheeh International
We are most knowing of what they say, and you are not over them a tyrant. But remind by the Qur’an whoever fears My threat.