அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாகவே இருந்தார்கள்.
IFT
அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள், தங்களிரட்சகன் அவர்களுக்குக் கொடுத்ததை (திருப்தியுடன்) எடுத்துக் கொண்டோராக (இருப்பர்), நிச்சயமாக, அவர்கள் அதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தார்கள்.
Saheeh International
Accepting what their Lord has given them. Indeed, they were before that doers of good.
فَوَرَبِّஅதிபதியின் மீது சத்தியமாகالسَّمَآءِ وَالْاَرْضِவானம், பூமியுடையاِنَّهٗநிச்சயமாக இதுلَحَـقٌّஉண்மைதான்مِّثْلَபோன்றேمَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَநிச்சயமாக நீங்கள் பேசுவது
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக்கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இது, (உங்கள் வார்த்தைகளை) நீங்கள்தான் கூறுகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லாதிருப்பதைப் போல் (இந்த குர்ஆனில் உள்ள அனைத்தும்) உண்மையானதாகும்.
IFT
வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, வானம், மற்றும் பூமியுடைய இரட்சகன் மீது சத்தியமாக, (உங்கள் வார்த்தைகளை) நிச்சயமாக நீங்கள் தாம் கூறுகின்றீர்கள் என்ப(தில் சந்தேகமில்லாதிருப்ப)தைப்போல, நிச்சயமாக இது_(இந்த குர் ஆனில் உள்ள யாவும்) உண்மையானதாகும்.
Saheeh International
Then by the Lord of the heaven and earth, indeed, it is truth - just as [sure as] it is that you are speaking.
இத் தகலூ 'அலய்ஹி Fபகாலூ ஸலாமன் கால ஸலாமுன் கவ்மும் முன்கரூன்
முஹம்மது ஜான்
அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார். “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று எண்ணிக் கொண்டார்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் அவரிடம் வந்தபோது (அவரை நோக்கி “உமக்கு) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறினார்கள். அதற்கு (இப்ராஹீம், “உங்களுக்கும்) ஸலாம் (ஈடேற்றம்) உண்டாவதாக!'' என்று கூறி, (இவர்கள் நாம்) அறியாத மக்களாக இருக்கின்றனரே! (என்று தன் மனத்தில் எண்ணினார்.)
IFT
அவர்கள் அவரிடம் வந்தபோது, “உம்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: “உங்கள் மீதும் சாந்தி நிலவுக! அறிமுகமில்லாத ஆட்களாக இருக்கிறார்களே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள், அவரிடம் நுழைந்தபொழுது “சாந்தி உண்டாவதாக!” என்று கூறினார்கள். (அதற்கு இப்றாஹீம் உங்களுக்கும்)” சாந்தி உண்டாவதாக!” என்று கூறி (இவர்கள் நமக்கு) அறிமுகமில்லாத சமூகத்தார் (என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு,)
Saheeh International
When they entered upon him and said, "[We greet you with] peace." He answered, "[And upon you] peace; [you are] a people unknown."
فَاَوْجَسَஆகவே, உணர்ந்தார்مِنْهُمْஅவர்களினால்خِيْفَةً ؕபயத்தைقَالُوْاகூறினார்கள்لَا تَخَفْ ؕபயப்படாதீர்وَبَشَّرُوْهُஇன்னும் அவருக்கு நற்செய்தி கூறினார்கள்بِغُلٰمٍஓர் ஆண் குழந்தையைக்கொண்டுعَلِيْمٍகல்வியாளரான
(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
(இருப்பினும், அவர்கள் புசிக்காமலிருப்பதைக் கண்ட) அவர், அவர்களைப் பற்றி பயந்தார். (இதை அறிந்த அவர்கள் ‘‘இப்ராஹீமே!) பயப்படாதீர்'' என்று கூறி, (இஸ்ஹாக் என்னும்) மிக்க ஞானமுள்ள மகனை அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.
IFT
பின்னர், அவர்களைக் குறித்து அவர் மனத்திற்குள் அஞ்சினார். அவர்களோ, “அஞ்சாதீர்!” என்று கூறினார்கள். மேலும், அறிவுள்ள ஒரு மகன் பிறக்கப் போவதாக அவருக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னும் புசிக்காமல் இருந்ததால் தன் மனதில்) அவர்கள் பற்றிய பயத்தை உணர்ந்தார். அப்போது “(இப்ராஹீமே! நீர் பயப்படாதீர்,” என்று அவர்கள் கூறினர், மேலும், (இஸ்ஹாக் என்னும்) அறிவார்ந்த ஆண் குழந்தை (அவருக்குப் பிறக்குமென்ற செய்தி)யைக் கொண்டு அவருக்கு நன்மாராயம் கூறினார்கள்.
Saheeh International
And he felt from them apprehension. They said, "Fear not," and gave him good tidings of a learned boy.
பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) கூச்சலுடன் அவர்கள் முன்வந்து, தன் முகத்தில் அறைந்துகொண்டு ‘‘(நானோ) தள்ளாடிய கிழவி; அதிலும் மலடி. (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?)'' என்று கூறினார்.
IFT
(அதனைக் கேட்டு) அவருடைய மனைவி கூச்சலிட்டவாறு முன்னே வந்தாள்; தன் முகத்தில் அறைந்து கொண்டு கிழவி, மலடி என்று கூறினாள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (இதனைச் செவியுற்ற) அவருடைய மனைவி (ஸாரா) உரத்த சப்தத்தில் அவர்கள் எதிரில் வந்து, தன் முகத்தில் அடித்துக் கொண்டு, “(நானோ) மலட்டுக்கிழவி (எவ்விதம் எனக்குக் குழந்தை பிறக்கும்?”) என்று கூறினார். (அதற்கவர்கள்),
Saheeh International
And his wife approached with a cry [of alarm] and struck her face and said, "[I am] a barren old woman!"
அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து: “இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, ‘‘இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்'' என்று கூறினான்.
IFT
அவன் தன் வலிமையின் காரணமாக செருக் குற்றுப் புறக்கணித்தான். மேலும், “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் தன்னுடைய (பக்கபலமென்று நினைத்த படைகள், அதிகாரம் ஆகியவற்றின்) பலத்தால் (அவரைப்) புறக்கணித்தான், இன்னும் (இவர்) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று அவன் கூறினான்.
Saheeh International
But he turned away with his supporters and said, "A magician or a madman."
அவர்கள் தங்கள் இறைவனுடைய கட்டளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறினார்கள். ஆகவே, அவர்கள் (தங்களை அழிக்க வந்த மேகத்தைப்) பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை ஓர் இடி முழக்கம் பிடித்துக் கொண்டது.
IFT
(இந்த எச்சரிக்கைக்குப் பிறகும்) அவர்கள் தங்கள் அதிபதியின் கட்டளையை ஆணவத்துடன் மீறினார்கள். இறுதியில், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று உடைந்துவிழும் வேதனை ஒன்று அவர்களைப் பிடித்துக் கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தங்கள் இரட்சகனின் கட்டளையை அவர்கள் மீறினார்கள், ஆகவே, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக்கொண்டது.
Saheeh International
But they were insolent toward the command of their Lord, so the thunderbolt seized them while they were looking on.
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கிறோம்.
IFT
வானத்தை நாம் நம் வலிமையினால் படைத்துள்ளோம்.மேலும், நாம் அதற்கான ஆற்றல் உடையவராக இருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வானத்தை (எவருடைய உதவியுமின்றி) நம்முடைய சக்தியைக் கொண்டே அதை நாம் அமைத்தோம், நிச்சயமாக நாம் (படைக்கின்ற காரியத்தில்) மிக்க விசாலத்தை உடையோராக இருக்கிறோம் (யாவும் நம் சக்திக்குட்பட்டதே).
Saheeh International
And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander.
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
IFT
எனவே, ஓடி வாருங்கள், அல்லாஹ்வின் பக்கம்! நான் அவனுடைய சார்பாக உங்களுக்குத் தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, “(நிராகரிப்பு, பாவம் ஆகியவற்றிலிருந்து விலகி), அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் விரைந்து செல்லுங்கள், நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்குக் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவ(னாக இருக்கிறே)ன்,
Saheeh International
So flee to Allah. Indeed, I am to you from Him a clear warner.
மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை ஆக்காதீர்கள். நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு (இதைப் பற்றியும்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராக இருக்கிறேன்.
IFT
அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனுடைய சார்பில் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வுடன் வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயனை ஆக்காதீர்கள், நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் (என்று நபியே! நீர் கூறுவீராக!).
Saheeh International
And do not make [as equal] with Allah another deity. Indeed, I am to you from Him a clear warner.
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், அவர்களிடம் எந்தத் தூதர் வந்தபோதிலும், அவரை சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமலிருக்கவில்லை.
IFT
இப்படித்தான் நடந்துகொண்டு வருகின்றது. இவர்களுக்கு முன்னிருந்த சமூகத்தாரிடம் எந்த ஓர் இறைத்தூதர் வந்தாலும் அவரை அம்மக்கள் “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்றுதான் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறே அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களுக்கு எந்த தூதரும் வந்ததில்லை, (அவர்களிடம் வந்த அத்தூதரை) சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறியே தவிர
Saheeh International
Similarly, there came not to those before them any messenger except that they said, "A magician or a madman."
இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம்பரை பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! இல்லை, அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக் கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர்.
IFT
இவர்கள் அனைவரும் இது தொடர்பாக தமக்குள் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இவர்கள் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவ்வாறு (கூறுமாறே) அவர்கள் (தங்களுக்குள் பரம்பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனரா? இல்லை! அவர்கள் (இயற்கையிலேயே) அட்டூழியம் செய்யும் கூட்டத்தாராவர்.
Saheeh International
Did they suggest it to them? Rather, they [themselves] are a transgressing people.
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு; ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
அப்துல் ஹமீது பாகவி
இவ்வக்கிரமக்காரர்களின் நண்பர்களுக்கு இருந்த (நன்மை, தீமையை அளக்கக்கூடிய) அளவுப் படிகளைப் போலவே, நிச்சயமாக இவர்களுக்கும் அளவுப் படிகளுண்டு. (அவை நிறைந்ததும் வேதனையைக் கொண்டு இவர்களைப் பிடித்துக் கொள்வோம்.) ஆதலால், அவர்கள் அவசரப்பட வேண்டாம்.
IFT
இவர்களுக்கு முன்னிருந்த கொடுமைக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனையின் பங்கு போலவே, இந்தக் கொடுமைக்காரர்களுக்கும், அவர்களுடைய வேதனை தயாராக இருக்கின்றது. அதற்காக இவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, நிச்சயமாக அநியாயம் செய்து விட்டார்களே, அவர்களுக்கு (முன் வாழ்ந்த) அவர்களுடைய சிநேகிதர்களுக்கிருந்த பங்கைப்போன்று (வேதனையில்) பங்குண்டு ஆகவே, அவர்கள் (தண்டனைக்காக என்னிடம்) அவசரப்படவேண்டாம்.
Saheeh International
And indeed, for those who have wronged is a portion [of punishment] like the portion of their companions [i.e., predecessors], so let them not impatiently urge Me.